Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. மேர்வினுடன் கைதுசெய்யப்பட்ட மேலும் ஆறு பேர் களனி பிரதேச சபைக்குச் சொந்தமான 0.2137 ஹெக்டேயர் நிலத்திற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ. 75 மில்லியன் மோசடி செய்ததற்காக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா, பத்தரமுல்லையில் உள்ள பெலவத்தை பகுதியில் வைத்து புதன்கிழமை (05) இரவு கைது செய்யப்பட்டார். இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. https://thinakkural.lk/article/315765
  2. நான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாசின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்கமுடியாது - சமூக ஊடக பதிவில் டிரம்ப் மிரட்டல் Published By: Rajeeban 06 Mar, 2025 | 08:02 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் நான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாஸ் அமைப்பின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தனது வேலையை முடிப்பதற்காக நான் தேவைiயான அனைத்தையும் அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நான் சொல்வதை செய்யாவிட்டால் ஹமாசின் ஒரு உறுப்பினர் கூட பாதுகாப்பாகயிருக்கமுடியாது என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்யுங்கள், நீங்கள் கொலை செய்தவர்களின் உடல்களை திருப்பிதாருங்கள் இல்லாவிட்டால் உங்கள் கதை முடிவிற்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளார். காசா பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி காசா மக்களே உங்களிற்கு மிகவும் அழகான எதிர்காலம் காத்திருக்கின்றது, பணயக்கைதிகளை வைத்திருந்தால் நீங்கள் மரணிக்கவேண்டிய நிலையேற்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208407
  3. மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் பெண்களின் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுசாரத்தையும், புகைப்பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுசார நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்க்களில் முயற்சித்து வருகின்றன. மேலும் பெண்களின் மதுசார பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் மதுசாரத்தினால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பெண்கள் முகங்கொடுக்கின்றனர். இவற்றை வெளிக்கொணரும் வகையிலும், ஏனையோரின் மதுசார பாவனையினால் பெண்கள் முகங்கொடுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் 2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது ஆய்வொன்றினை மேற்கொண்டது. 25 மாவட்டங்களிலிருந்தும் 15 வயதிற்கும் மேற்பட்ட 1000 பெண்களிடம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது மதுசார பாவனையினால் பெண்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர், மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? என்பனவற்றை ஆராயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். ஆய்வின் சாரம்சம் 54 வீதமான பெண்கள் மதுசார பாவனையினால் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் 42 வீதமான பெண்கள் உள ரீதியாக பாதிப்படைகின்றனர் 69 வீதமான பெண்கள் பொது இடங்களில் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் பெண்களின் உரிமைகளுடன் இணைத்து மதுசார நிறுனங்கள் அதிகமான விளம்பரங்களை மேற்கொள்ளுகின்றன. எனினும் 37 வீதமான பெண்கள் இன்னமும் அது தொடர்பாக அறிந்திருக்கவில்லை. மதுசார நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருளை விற்பனை செய்வதற்கு பெண்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன என 64 வீதமான பெண்கள் குறிப்பிட்டனர். 54 வீதமான பெண்கள் மதுசார பாவனையினால் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்பது எமது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பல்வேறு தரப்பினர்களின் மதுசார பாவனையால் பெண்கள் பாதிப்படைகின்றனர். குறிப்பாக 27.4 வீதமான பெண்கள் அயலவர்களின் பாவனையாலும், 27 வீதமான பெண்கள் இணந்தெரியாதோர்களின் பாவனையாலும், 20 வீதமான பெண்கள் உறவினர்களின் பாவனையாலும் பிரச்சினைகளுக்கு ஆளாகுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மதுசார பாவனையின் காரணமாக 42 வீதமான பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். 38.2 வீதமான பெண்கள் தமது மகிழ்ச்சி சீர்குழைவதாக குறிப்பிட்டுள்ளனர், 24 வீதமானோர் தமது சுதந்திரம் மட்டுப்படுவதாகவும், 27.3 வீதமானார் பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பதாகவும், 12 வன்முறைகளுக்கு ஆளாகுவதாகவும், 18 வீதமான பெண்களின் கல்விக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. மதுசார பாவனையின் காரணமாக பொது இடங்களில் 69 பெண்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர், மேலும் தாங்கள் உட்பட தங்களது நண்பிகளும் இவ்வாறான அசௌகரியங்களுக்கு ஆளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதுசார பாவனையின் காரணமாக பொது இடங்களில் அசௌகரியப்படும் பெண்களில் அதிகமானோர் அவற்றிற்கான பிரதிபலிப்புக்களை வழங்குவதில்லை. 61 வீதமான பெண்கள் பொது இடங்களில் அசௌகரியத்திற்கு ஆளாகினாலும் அதற்கான பிரதிபலிப்புக்களை வழங்குவதில்லை என குறிப்பிட்டிருந்தனர். 11 வீதமான பெண்கள் அது தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களை மதுசார பாவனைக்கு ஈர்ப்பதற்காக மதுசார நிறுவனங்கள் வெவ்nவுறு வழிகளிலும் முயற்சிப்பதாக 40 வீதமான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. பெண்களின் உரிமையுடன் இணைத்து மதுசாரத்தை விளம்பரப்படுத்துவதாக 29 வீதமான பெண்கள் குறிப்பிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது, மேலும் 34 வீதமானோர் இது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகக் காணப்பட்டமை ஆய்விலிருந்து தெரிய வருகின்றது. மதுசார நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை விளம்பரப்படுத்துவதற்காக பெண்களை விளம்பர நாமமாக பயன்படுத்துவதால் பெண்களின் உரிமை மீறப்படுவதாக 64 வீதமான பெண்கள் கூறியிருந்தனர். பெண்களை இலக்கு வைத்து திரைப்படங்களில் மதுசார விளம்பரங்கள் இடம்பெறுவதாக 54 பெண்கள் குறிப்பிட்டதோடு, 43 வீதமானோர் முகப்புத்தகங்களில் விளம்பரங்கள் இடம்பெறுவதாகவும், 29.3 வீதமானோர் டிக்டொக் மூலம் விளம்பரம் இடம்பெறுவதாகவும், வெவ்வேறு சமூக வலைதளங்களின் ஊடாக இலக்கு வைக்கப்பட்டு விளம்பரங்கள் இடம்பெறுவதாகவும், விளம்பரங்கள் 24.2 வீதமானோர் நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் இம்பெறுவதாகவும், 23.6 வீதமானோர் ஒன்றுகூடல்களின் போது விளம்பரப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். பெண்கள் உடல், உள ரீதியாக சமூகத்தில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்ற மிகவும் முக்கியமான தரப்பினராகும். ஆகவே ஆண்கள் ஏற்கனவே சிக்கியிருக்கின்ற மதுசாரம் எனும் பிரயோசனமற்ற வலையில் பெண்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை குறைப்பதற்காகவும் பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் விளப்பரங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமான கீழ்வரும் பரிந்துரைகளை முன்வைக்கின்றது. மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்திற்கமைய பெண்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பினரையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மதுசாரம் மற்றும் புகைப்பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் விளம்பரங்கள் இன்னமும் வெவ்வேறு வலைதளங்களில் மேற்கொள்ப்படுகின்றது. ஆகவே Nயுவுயு சட்டத்தை வலுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும். மதுசாரம் என்பது பிரயோசனமற்ற ஒன்று என்கின்ற விழிப்புணர்வை பெண்கள் ஏற்படுத்த வேண்டும். மதுசாரம் எனும் போர்வையில் மேற்கொள்ளுகின்ற தொந்தரவுகளுக்கு பிரதிபலிப்புக்களை வழங்குவதற்கு பெண்களை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எமது நாடானது மிகவும் கலாச்சாரம் பொருந்திய நாடாகும் “அம்மா”எனும் பதம் அதிலுள்ள அன்பு, அரவணைப்பு, மதிப்பு ஆகியவை அனைத்து பெண்களிடத்திலும் செறிந்து காணப்படுகின்ற அழகிய பெறுமதியான சமூகம் வாழும் நாடாகும். ஆகவே இப்பெறுமதியை சீர்குழைப்பதற்கு மதுசார நிறுவனங்கள் பெரிதும் முயற்சிக்கின்றன. ஆகவே பெண்களை இலக்கு வைத்து மதுசார நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை வெளிக்கொணர்ந்து, அதற்கு ஏமாறாமல், அவறறை முற்றுமுழுதாக கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். பெண்களின் சுதந்திரம், உரிமை என்பன தொடர்பான தெளிவு மற்றும் இவற்றை காரணமாகக்கொண்டு எமது கலாச்சாரத்தை அழிப்பதற்கு எவ்வாறு மதுசாரம், மற்றும் புகையிலை நிறுவனங்கள் திட்டமிடுகின்றன என்கின்ற தெளிவும் சிறு வயதிலிருந்தே பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும். https://thinakkural.lk/article/315737
  4. Published By: Digital Desk 2 06 Mar, 2025 | 09:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விநியோகம், பாவனைகளில் இராணுவத்தினர்,பொலிஸாருக்கு நேரடித்தொடர்புகள் உண்டு. அவர்கள் தான் போதைப் பொருளுக்கு முழுக் காரணம் என்பதனை புரிந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டினர். வடக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை தடுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி. ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கட்சிகளின் எம்.பி.க்கள் இவ்வாறுசுட்டிக்காட்டினர். வடக்கில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையை தடுப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எம். பி. உரையாற்றுகையில், எமது இளைஞர்களிடையே போதைப் பொருள் பாவனை சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள், வன்முறைகள் சமுகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன . பெண்கள், பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையங்கள் இல்லாமை இதற்கு பெரும் காரணியாக இருக்கின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இதனால் புனர்வாழ்வளித்தல், சிறுவர்கள், பெண்களை பாதுகாத்தல் என்பனவும் அவசியமாகும். இதில் மாவட்ட செயலாளர்கள், பொலிஸார், கிராமிய தலைவர்கள் ஆகியோர்களை உள்ளடக்கியதாக குழுவை அமைத்து அந்த குழுவின் செயற்பாடுகளை ஆராய்ந்து சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு போதைப் பொருள் பாவனையையும் மற்றும் அதன் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த பிரேரணையை வழிமொழிந்து தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி ஸ்ரீபவானந்தராஜா உரையாற்றுகையில், நான் இந்த பிரேரணையை வரவேற்கின்றேன். 2009இற்கு முன்பிருந்த நிலைமை வேறு, இப்போதுள்ள நிலைமை வேறாகும். ஏ9 வீதி திறக்கப்பட்ட பின்னர் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சமுக சீர்கேடுகள் நடக்கின்றன. இதனால் இளம் சமூதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை ஏடுக்கப்பட வேண்டும் என்றார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில், இந்தப் பிரேரணை எதிர்க்கட்சி உறுப்பினரால் கொண்டு வரப்பட வேண்டியது. ஆனால் இதனை அரசாங்க கட்சியை சேர்ந்த ஒருவர் கொண்டு வந்துள்ளமை ஆச்சரியத்துக்குரியது. இந்த பிரேரணையை பார்க்கும் போது அறைக்குள் இருக்கும் யானையை நாங்கள் கண்டும் காணாமலும் இருப்பதை போன்றே உள்ளது. வடக்கு, கிழக்கை எடுத்துக்கொண்டால் இராணுவத்தின் 20 பிரிவுகளில் 16 பிரிவுகள் இந்த மாகாணங்களில் உள்ளன. குறிப்பாக வடக்கில் மாத்திரம் 14 பிரிவுகள் உள்ளன. கரையோரம் முழுவதும் ஒரு கிலோ மீற்றர் இடைவெளியில் பொதுமக்களின் காணிகளை பிடித்து கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற ரீதியில் படையினர் இருப்பதுடன் யாழ்ப்பாணத்தில் 14 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற வகையிலும் வன்னியில் 10 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற ரீதியிலும் படையினர் இருக்கின்றனர். போரை வென்றெடுத்தவர்கள் என்றும் தமது புலனாய்வு பலமாக இருக்கின்றது என்றெல்லாம் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் இதுபோன்ற மோசமான நிலைமை இருக்கின்றதென்றால் இராணுத்தினரின் முழுப் பங்களிப்பு இன்றி இது நடக்கும் என்று நினைக்கின்றீர்களா? கிரீஸ் பூதம் போன்ற விடயங்கள் நடந்த போது தப்பியோடியவர்கள் இராணுவ முகாம்களுக்குள் ஒளிந்தமை தெரியவந்தது. அத்துடன் ஆவா குழுவினர் பொலிஸாரால் வழிநடத்தப்படுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இன்று போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் இப்போது ஓடி ஒளிவது இராணுவ முகாம்கள் மற்றும் கடற்படை முகாம்களுக்குள்ளேயே ஆகும். இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அதே இராணுவம், அதே முப்படையினரை வைத்துக்கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க முடியுமென்று கனவு காண வேண்டாம். பிரச்சினை எங்கே இருக்கின்றது என்று சரியாக விளங்கிக்கொள்ளுங்கள். இந்த இராணுவம் இப்போதும் தமிழர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர் என்பதே உண்மை. இவர்களின் மனோநிலையை மாற்றாமல் ஒருபோதும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இதனை கோபத்திலோ, எரிச்சலிலோ, வெறுப்பு காரணமாகவோ, இனவாதத்திலோ கூறவில்லை. போர் முடிவடைந்த பின்னர் மனோநிலை மாற்றங்கள் நடக்காது வட, கிழக்கில் உள்ள இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. கடந்த கால அரசாங்கங்களை விடவும் நீங்கள் வித்தியாசமானவர்களாக இருக்க விரும்பினால் இந்த உண்மைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் பேசுகையில், போதையினால் நாடுமட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கின்றன . இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன். இருப்பினும் சக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமுர்த்தியால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்புவேளைப் பிரேரணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயமாக மிகவும் பொருத்தமான ஒத்திவைப்புவேளைப் பிரேரணையாகும். நாட்டின் அதியுயர்பீடமாகக் காணப்படும் பாராளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப்பொருட்களால் சீரழிந்துகொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்த போதைப்பொருள் ஊடுருவல்கள் பாடசாலைகளில்கூட இடம்பெற்றுவருவதை தற்போது நாம் அவதானித்து வருகின்றோம். போதைப்பொருள் பாவனையால் எமது சந்ததிகள், ஒருதொகுதி எதிர்கால தலைமுறையினர் அழிந்துவருகின்றனர். இந்தப் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் பொலிஸாருக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுத்துங்கள். இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்றார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சிறிநேசன் பேசுகையில், யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை, அதன் விநியோகம் மற்றும் வியாபாரம் என்பன பரந்துபட்டு காணப்படுகின்றன. விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் பரிபாலனம் செய்த காலங்களில் அங்கு போதைப்பொருள் பாவனை என்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.போர் முடிந்த பின்னர் போதைப்பொருள் விநியோகம் என்பது முழு மூச்சாக நடைபெறுகிறது. யுத்தம் முடிந்த பின்னரே வடக்கில் ஆவா குழு உருவாக்கப்பட்டுள்ளது.கிரீஸ் மனிதர்கள் உருவாக்கப்பட்டார்கள்.வாள்வெட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மக்கள் மத்தில் அவர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை உடைத்து சிதைப்பதற்கேற்ற வகையில் இந்த விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஆட்சிக்கு வந்து சிறிது காலமே ஆகியுள்ளது. இனிவரும் நாட்களில் நீங்கள் வடக்கு,கிழக்கில் இந்த போதைவஸ்து என்னும் அரக்கனை அழிப்பதற்கு முழுமையான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.வடக்கு ஆளுநர் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து நடவடிவக்கை எடுத்தால் இதனை அழிக்க முடியும். வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் போதைப்பொருள் விநியோகம் அதிகரித்துள்ளது .கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. மதுபான சாலைகள் அதிகரித்து வருகின்றன எனவே போதைப்பொருள் விநியோகம், பாவனையை தடுக்க வேண்டுமாக இருந்தால் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை இறுக்கமாக முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறான வேலைகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற இராணுவத்தினர்,பொலிஸார் கைது செய்யப்பட வேண்டும் . சுயேச்சைக் குழு 17 இன் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான இ.அர்ச்சுனா பேசுகையில், மக்களை பாதுகாப்போம் எனக் கூறி அரசாங்கத்தை பொறுப்பேற்றவர்களே வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கூறுவது வேடிக்கையானது, யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொள்ளுமாம். அந்த வகையிலேயே இந்தப் பிரேரணையும் உள்ளது. அரசாங்கம் உங்களிடமே இருக்கின்றது. மக்களை பாதுகாப்போம். என்று கூறி அரசாங்கத்தை பெற்றுக்கொண்டு நீங்களே பாதுகாப்பு தொடர்பில் பிரேரணையை கொண்டுவந்து வடக்கு, கிழக்கில் போதை இருக்கின்றது என்று கூறுவது கேவலமானதே. இதேவேளை நாட்டின் நீதிமன்றம் சுயமாக இயங்காவிடின் அந்த நாட்டில் நீதி நியாயம் ஒருபோதும் நிலைநாட்டப்படாது. வடக்கின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் நீதிபதிகளுக்கே நீதிபதியான இளஞ்செழியனை தமிழன் என்ற காரணத்தினால் பதவி உயர்வு வழங்காது இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. அந்தளவுக்கு கேவலமான வேலைசெய்யும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் வடக்கு, கிழக்கில் போதைப் பொருளை குறைக்கலாம் என்று பிரேரணையை கொண்டுவருவது கேவலமான செயலே. உங்களுக்கு கீழே இயங்கும் கடற்படையின் கீழேயே கேரள கஞ்சா கொண்டுவரப்படுகிறது. வல்வெட்டித்துறையில் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரை அமைச்சர் ஒருவர் தமது பிராந்திய இணைப்பாளராக தேசிய மக்கள் சக்திக்கு இணைத்துள்ளார் என்றார். இந்த பிரேணைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பதிலளித்து உரையாற்றுகையில், வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைவான போக்கில் இருப்பதை காண முடிகிறது.இருப்பினும் ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் வடக்கில் விசேட மத்திய நிலையத்தை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்களில் வடக்கில் மாத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை 174 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க 14 விசேட மையங்களை ஸ்தாபிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புனர்வுகள் வழங்கப்படும். 2025 .01.01 முதல் 2025.03.01 வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 168 ஹெரோயின் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, 279 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது . 2140 கிலோ கேரள கஞ்சா, 423 கிராம் ஐஸ் போதைப்பொருள், 41048 போதைப்பொருள் குளிசைகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல் யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ், 650 கிலோ கேரள கஞ்சா, 26915 போதைப்பொருள் குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/208478
  5. 06 Mar, 2025 | 05:45 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைந்து ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. எனவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட மத்திய நிலையத்தை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) மாலை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்ந்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்களில் வடக்கில் மாத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை 174 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக 14 விசேட மையங்களை ஸ்தாபி பிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புனர்வுகள் வழங்கப்படும். 2025 .01.01 முதல் 2025.03.01 வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 168 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, 279 கிராம் ஹெரோயின், 2,140 கிராம் கேரள கஞ்சா, 423 கிராம் ஐஸ் போதைப்பொருள், 4,1048 போதைப்பொருள் குழிசைகள் கைப்பற்றபட்டன. அதேபோல் யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ், 650 கிராம் கேரள கஞ்சா, 2,6915 போதைப்பொருள் குழிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைவான போக்கில் இருப்பதை காண முடிகிறது.இருப்பினும் ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட மத்திய நிலையத்தை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/208467
  6. பட மூலாதாரம்,NASA 6 மார்ச் 2025, 12:24 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் போயிங் தயாரித்த ஸ்டார்‍லைனர் பரிசோதனை விண்கலத்தில் கடந்த ஜூன் மாதம் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டார்‍லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இரு விண்வெளி வீரர்களும் பூமிக்குத் திரும்புவது குறித்து செய்தியாளர்களிடம் பேசினர். நாசாவின் மற்றொரு விண்வெளி வீரரான நிக் ஹாகும் இந்த சந்திப்பில் இணைந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர். கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது? - 5 அரிய தகவல்கள் பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி மூலம் இரவை பகலாக்க முடியுமா? ரஷ்யாவின் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? விண்வெளி நிலைய செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய தருணங்கள் முன்னதாகவே வீடு திரும்ப விரும்புகிறீர்களா என்று அவர்களிடம் கேட்டதற்கு, குறுகிய காலத்திற்கு மட்டுமே திட்டமிட்டிருந்தாலும், நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகவே வந்ததாக புட்ச் வில்மோர் கூறினார். மேலும் மனித விண்வெளி பயணம் "எதிர்பாராத சூழ்நிலைகளுக்கான திட்டமிடலை அடிப்படையாக கொண்டது" என்றும் அவர் தெரிவித்தார். கீழே உள்ள குடும்பங்களுக்கு இது ஒரு "ரோலர்கோஸ்டர்" அனுபவமாக இருந்ததாகவும், ஏனெனில் தாங்கள் எப்போது திரும்பி வருவோம் என்பது அவர்களுக்கு தெரியாது, இதுதான் கடினமான பகுதி என்றும் கூறினார் சுனிதா வில்லியம்ஸ். முரண்பாடுகளைக் கையாள்வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது எதிர்கால பயணங்களை எளிதாக்கும் என்று நம்புகிறோம் என்றும் விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர். செவ்வாய் மற்றும் நிலாவில் மனிதன் குடியேற சென்னை ஐஐடியின் இந்த ஆய்வு எவ்வாறு உதவும்?19 பிப்ரவரி 2025 பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?18 பிப்ரவரி 2025 பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்17 பிப்ரவரி 2025 வயதுக்கு ஏற்ப விண்வெளிப் பயணம் கடினமாகிறதா? பட மூலாதாரம்,NASA/BOEING அந்த குழுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, வயதாகும்போது விண்கலனின் ஏதேனும் அம்சங்கள் கடினமாகிவிடுமா என்பதுதான். விண்வெளியில் இருக்கும் போது வலிகள் போய்விடுகின்றன என்று புட்ச் வில்மோர் கூறினார். சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் தூங்குவது உண்மையில் எளிதானது என்று கூறினார். இந்தப் பணியின் மிக உற்சாகமான பகுதி என்னவென்று கேட்கப்பட்டபோது, விண்வெளி உடையில் உள்ள மற்றொரு நபரை, விண்கலத்தின் நுழைவாயிலைத் திறந்து உள்ளே கொண்டு வருவது என்பது மிகப்பெரிய பொறுப்பு என்றும், அதுவே பெருமையான தருணம் என்றும் வில் மோர் கூறினார். அவரைத் தொடர்ந்து, குழு ஒன்பதை பூமிக்கு அழைத்து வர ஆவலுடன் இருப்பதாக ஹேக் கூறுகிறார். விண்வெளியைப் பார்ப்பது மிகவும் உற்சாகமான விஷயம் என்று சுனிதா கூறினார். "சூரியன் உண்மையில் சுறுசுறுப்பாக உள்ளது. பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை நீங்கள் உணர்வீர்கள்." என்றும் தெரிவித்தார் சுனிதா வில்லியம்ஸ். இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 பனாமா: கடலுக்கு அடியில் 11 மீட்டர் ஆழத்தில் வீடு கட்டி 120 நாட்கள் வாழ்ந்த மனிதர்5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,"நாங்கள் குறுகிய காலம் இருக்க திட்டமிட்டிருந்தாலும், நீண்ட காலம் தங்குவதற்கு தயாராக வந்துவிட்டோம்," என்று நிருபரின் கேள்விக்கு பதிலளித்தார் வில்மோர் . சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வயதாகிவிட்டதாகத் தெரிகிறது என்று ஈலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதன் நிலை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. "விண்வெளி நிலையத்தில் எவ்வளவு அறிவியல் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்" என்று கூறினார் சுனிதா வில்லியம்ஸ். "தற்போது நாம் நமது உச்சத்தில் இருக்கின்றோம் என்று நான் கூறுவேன்," என்றார் சுனிதா. மேலும், "ஒப்பந்தங்களின் அடிப்படையில் 2030 வரை இது செயல்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதுவே மிகச் சரியானது என நினைக்கின்றேன்." என்றும் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தார். வில்மோரிடம் அவரது ஒன்பது மாத விண்வெளி அனுபவத்தில் முக்கியமான பாடம் என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும்போது, அவரது நம்பிக்கை மிக முக்கியமாக இருந்ததாக கூறினார். சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 அடுத்து நடக்கப்போவது என்ன ? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து பதில் அளித்த ஹேக், "சில குறுகிய நாட்களில்" க்ரூ 10 விண்வெளி வீரர்கள் வருவார்கள் என்றும், "ஒரு வெற்றிகரமான, நீண்ட காலப் பணியின் முடிவில்" இவர்கள் பூமிக்குத் திரும்புவதற்கு முன், க்ரூ 10 விண்வெளி வீரர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள் என்றார் ஆனால், இவர்கள் பூமி திரும்பும் நாள் பற்றி அவர் குறிப்பிடவில்லை. "மார்ச் 12க்கு முன்பாக இல்லை'' என்றாலும் மாற்று விண்கலமான ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமிக்கு திரும்ப உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் இருந்து எரிந்தபடி விழுந்த 'ராட்சத வளையம்' - எங்கிருந்து வந்தது?19 ஜனவரி 2025 ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ வரலாற்று சாதனை - 'டாக்கிங்' செயல்முறை வெற்றி என அறிவிப்பு16 ஜனவரி 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளி வீரர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது இதுவே முதல் முறை அல்ல. கடந்த ஜூன் மாதத்திலிருந்து அவர்கள் பல பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர். முன்னாள் அதிபர் ஜோ பைடன் இவர்கள் இருவரையும் "கிட்டத்தட்ட விண்வெளியில் கைவிட்டதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் உரிமையாளரான ஈலோன் மஸ்க் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். வழக்கத்துக்கு மாறாக நீண்ட விண்வெளிப் பயணம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 272 நாட்கள் இருந்துள்ளனர். பெரும்பாலான விண்வெளி பயணங்கள் சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும். ஆனால் வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் தாங்கள் அங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், அனைத்து விண்வெளி வீரர்களும் பங்களிக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் துளிர் விட்ட தட்டைப்பயறு - இஸ்ரோ சாதித்தது எப்படி?5 ஜனவரி 2025 வானியல் அதிசயம்: 2025ஆம் ஆண்டின் சிறந்த எரிகல் பொழிவை எங்கு, எப்போது பார்க்கலாம்?2 ஜனவரி 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனிதா "சுனி" வில்லியம்ஸ் மற்றும் பாரி "புட்ச்" வில்மோர் சுனிதா வில்லியம்ஸ் 1998 இல் நாசாவால் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு இரண்டு விண்வெளிப் பயணங்களில் அனுபவம் வாய்ந்தவர் சுனிதா என்று நாசா கூறுகிறது. மேலும் விண்வெளி நிலையத்திற்கான ரஷ்யாவின் பங்களிப்பு குறித்து ரஷ்ய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து மாஸ்கோவில் பணியாற்றினார் சுனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், அவர் ரோபோடிக்ஸ் பிரிவில் பணிபுரியத் தொடங்கினார். சுனிதா வில்லியம்ஸ் தனது முந்தைய இரண்டு பயணங்களின் போது மொத்தம் 322 நாட்களை விண்வெளியில் கழித்தார். மேலும் 50 மணிநேரம் மற்றும் 40 நிமிடங்கள் என்ற அளவுடன் விண்வெளியில் அதிக நேரம் நடந்தவர் என்ற பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். வில்மோர் புட்ச் இரண்டு விண்வெளிப் பயணங்களில் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் விண்வெளியில் 178 நாட்கள் கழித்துள்ளார் என்று நாசா கூறுகிறது, இருப்பினும் அவரது சமீபத்திய பயணம் இன்னும் முழுமையாகக் கணக்கிடப்படாததால் இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம். மேலும், ஜூலை 2000 இல் நாசாவால் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஓய்வு பெற்ற அமெரிக்க கடற்படை கேப்டன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2rxkerzg7o
  7. Published By: Vishnu 05 Mar, 2025 | 10:56 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் வருடாந்த 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென சீரற்ற காலநிலை நிலவியதால் பிற்போடப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குபட்ட ஆசிய கிண்ண இளையோர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இருவர் இந்த இரண்டு கல்லூரி அணிகளிலும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சென். ஜோன்ஸ் அணியில் இடம்பெறும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், யாழ். மத்திய கல்லூரி அணியில் இடம்பெறும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகிய இருவரே இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர்கள் ஆவர். இரண்டு கல்லூரிகளினதும் இந்த வருட பெறுபேறுககளை நோக்கும்போது இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் கொண்டவையாகத் தெரிகிறது. இதன் காரணமாக இந்த வருடப் போட்டி மிகவும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இரண்டு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அதாவது மூன்றுக்கும் மேற்பட்ட வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெறுவது போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது. சென். ஜோன்ஸ் கல்லூரி இந்த வருடம் விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றிகளை ஈட்டியதுடன் இரண்டில் தோல்வி அடைந்துள்ளது. யாழ். மத்திய கல்லூரி விளையாடிய 9 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்றதுடன் 2இல் தோல்வி அடைந்துள்ளது. கடந்த வருடம் வரை நடைபெற்ற 117 வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி 39 - 29 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 41 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளதுடன் 7 போட்டிகள் தொடர்பான விபரங்கள் இல்லை. ஒரு போட்டி கைவிடப்பட்டது. கடந்த 4 அத்தியாயங்களில் இரண்டு கல்லூரிகளும் மாறிமாறி வெற்றிபெற்றுவந்துள்ளதால் இந்த வருடமும் வடக்கின் சமரில் முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென். ஜொன்ஸ் கல்லூரி கடந்த வருடம் நேசகுமார் எபநேசர் ஜெய்சால் தலைமையில் 10 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. யாழ். மத்திய கல்லூரி 2023இல் ஆனந்தன் கஜன் தலைமையில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. சென். ஜோன்ஸ் அணிக்கு இம்முறை 6ஆம் வருட வர்ண வீரர் ஜெயச்சந்திரன் அஷ்நாத் தலைவராகவம் 4ஆம் வருட வர்ண வீரர் முர்பின் ரெண்டியோ உதவித் தலைவராகவும் விளையாடுகின்றனர். அவர்களைவிட 3ஆம் வருட வர்ண வீரர்களான அபிஜோய்ஷாந்த், குகதாஸ் மாதுளன் ஆகியோரும் அணியில் இடம்பெறுகின்றனர். யாழ். மத்திய கல்லூரிக்கு இம் முறை 5ஆம் வருட வர்ண வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் தலைவராகவும் 5ஆம் வருட வீரர் சதாகரன் சிமில்டன், 3ஆம் வருட வர்ண வீரர் தகுதாஸ் அபிலாஷ் ஆகியோர் இணை உதவித் தலைவர்களாகவும் விளையாடுகின்றனர். அவர்களைவிட விக்னேஸ்வரன் பாருதி, முரளி திசோன், கணேசலிங்கம் மதுசுதன் ஆகியோர் 3ஆம் வருட வீரர்களாவர். வடக்கின் சமரில் தனி ஒருவருக்கான அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவர் சென். ஜோன்ஸ் வீரர் எஸ். சுரேன்குமார் ஆவார். இவர் 1990இல் நடைபெற்ற வடக்கின் சமரில் 145 ஓட்டங்களைக் குவித்தார். அரவது மகள் அமுருதா சுரேன்குமார், 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார். ஓர் இன்னிங்ஸில் 26 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்கள் என்ற அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை 1951இல் பதிவு செய்தவர் யாழ். மத்திய கல்லூரியின் வி. சண்முகம் ஆவார். சென். ஜோன்ஸ் அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: ஏ. சஞ்சயன் (பயிற்றுநர்), எஸ். திலீபன் (பொறுப்பாசிரியர்), உதயணன் அபிஜோய்ஷாந்த், ஜெயச்சந்திரன் அஷ்நாத் (தலைவர்), வி.எஸ்.பி. துசீதரன் (அதிபர்), முர்பின் ரெண்டியோ (உதவித் தலைவர்), குகதாஸ் மாதுளன், சி. ஏ. அரவிந்தன் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), மத்திய வரிசை: சிவகுமார் ஜோன் நதேனியா, இளங்கோ வெண்டட் மரியோ, சற்குணராஜா வினுக்ஷன், ரேமண்ட் அனுஷாந்த், சௌந்தரராஜன் ஆதர்ஷ், விஜயராஜா சஞ்சய், யோகசீலன் சாருஜன், கிருபாகரன் சஞ்சுதன், தினேஷ் லருன், பின்வரிசை: நாகேஸ்வரன் கிரிஷான், கஜந்தன் மிதுன், சிவசங்கர் கிரிஷான், ஜோன் ஸ்டபர்ட் ஆர்னல்ட், ராஜ்குமார் நிதுர்சிஜன். யாழ். மத்திய கல்லூரி அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: வி. பாருதி, கே. பாலகுமார் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), ரஞ்சித் குமார் நியூட்டன் (தலைவர்), எஸ். இந்திரகுமார் (அதிபர்), தகுதாஸ் அபிலாஷ் (இணை உதவித் தலைவர்), எவ். குலேந்திரன் ஷெல்டன் (பயிற்றுநர்), சதாகரன் சிமில்டன் (இணை உதவித் தலைவர்), எஸ். மணிமாறன் (பொறுப்பாசிரியர்), மத்திய வரிசை: செல்வராசா திசோன், மதீஸ்வரன் கார்த்திகன், சயந்தன் நியந்தன், நாகராசா சஜித், கணேசலிங்கம் மதுசுதன், தவராசா வேனுஜன், ரஞ்சித் குமார் அக்ஷயன், முரளி திசோன், ஏ. அபிஷேக், பி. நவிந்தன், ஏ. ஷாராளன், அன்டோநேசன் தனுஷன், பின்வரிசை: உதயராசா வோல்டன், ஜெயசீலன் ஜெனோஷன், வெலன்டைன் ஹரிஷ், ஸ்ரீதரன் சாருஜன். https://www.virakesari.lk/article/208394
  8. Published By: Rajeeban 06 Mar, 2025 | 03:06 PM யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார் அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற் நீதி வழங்கப்பட்டுவிட்டதா என மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் சிக்குண்டிருந்தவர்களிற்கான மனிதாபிமான உதவி தடுக்கப்பட்டது, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஆனால் இது திட்டமிடப்பட்ட விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன, இதற்காக அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க ஆனால் இது பெருமளவில் இடம்பெற்றதா? நான் அப்படி சொல்ல மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மெஹ்டி ஹசன் ஐக்கியநாடுகளின் குழு இலங்கை படையினர் யுத்தத்தில் சிக்குண்டவர்களிற்கான மனிதாபிமான உதவிகளை தடுத்தனர் என குறிப்பிட்டுள்ளனரே என கேள்வி எழுப்பியுள்ளார். நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன் என அவ்வேளை எதிர்கட்சி தலைவராகயிருந்த ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208445
  9. பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,சஜித் ஹுசைன் பதவி,பிபிசி ஹிந்திக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் முன்பெல்லாம் உடல் பருமன் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் பிரச்னையாக பார்க்கப்பட்டது, ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் பிரச்னையாக மாறியுள்ளது. இதை எதிர்கொள்ளும் பொருட்டு, உடல் பருமனுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். "ஆரோக்கியமான நாடாக மாறுவதற்கு நாம் உடல் பருமனை சமாளிக்க வேண்டும். அதிக உடல் எடை பல வித பிரச்னைகள் மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கிறது," என்றும் அந்நிகழ்ச்சியில் மோதி பேசினார். உடல் பருமன்: எடை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் - தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை உடல் பருமன்: பி.எம்.ஐ கணக்கீடு ஆரோக்கியம் பற்றி தெளிவாக உணர்த்துகிறதா? உங்கள் ஆரோக்கியத்தைக் காட்டும் இடுப்புச் சுற்றளவு - எப்படி அறியலாம்? எடைக் குறைப்பு அறுவை சிகிச்சையில் என்ன ஆபத்து? சென்னை இளைஞர் இறந்தது ஏன்? ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது என்ன? 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஓர் ஆய்வின்படி, எட்டு பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. "குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. உலக சுகாதார மைய தரவுகளின்படி, 2022-ல் உலகளவில் சுமார் 250 கோடி பேர் உடல் எடை அதிகமாக உள்ளனர். அதாவது, சரியான எடையை விட அவர்கள் அதிக எடையுடன் உள்ளனர்," என்றார். 2024-ம் ஆண்டில் 'தி லேன்செட்' ஆய்விதழ் ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-ம் ஆண்டில் இந்தியாவில் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுள் ஒரு கோடியே 25 லட்சம் குழந்தைகள் அதிக எடையுடன் உள்ளனர். அவர்களுள் 73 லட்சம் ஆண் குழந்தைகள். 52 லட்சம் பெண் குழந்தைகள் 1990-ல் இந்த எண்ணிக்கை வெறும் 4 லட்சமாக இருந்தது. குழந்தைகள் மட்டுமல்லாமல் வயது வந்தோரிடையேயும் உடல் பருமன் கவலைக்குரிய பிரச்னையாக மாறியுள்ளது. எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?5 மார்ச் 2025 அந்த ஆய்வறிக்கையின்படி, 2022-ல் இந்தியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட 4.4 கோடி பெண்கள் மற்றும் 2.6 கோடி ஆண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990-ல், இந்த எண்ணிக்கை 24 லட்சம் பெண்களாகவும் 11 லட்சம் ஆண்களாகவும் இருந்தது. ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வும் இந்தியாவில் உடல் பருமன் பிரச்னையை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட 23% ஆண்கள் மற்றும் 24% பெண்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 2015-16ல் இந்த எண்ணிக்கை 20.6% பெண்கள் மற்றும் 18.9% ஆண்கள் என இருந்தது. எண்ணெய் எப்படி பங்காற்றுகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எண்ணெய் பயன்பாடும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது நொறுக்குத் தீனிகள் மற்றும் உடல் உழைப்பில்லாத வாழ்வியல் முறை போன்றவை உடல் பருமன் பிரச்னைக்கு முக்கிய காரணங்களாக பெரும்பாலும் கூறப்படுகின்றன. ஆனால், நம்முடைய உணவில் நாள் முழுவதும் சேர்த்துக் கொள்ளப்படும் எண்ணெய் உடல் பருமனை அதிகரிப்பது குறித்து புறந்தள்ளிவிடுகிறோம். அனைத்து இந்திய மேம்பட்ட ஆய்வு மற்றும் உடல் பருமன் சங்கத்தின் தலைவர் டாக்டர் மகேந்திர நர்வாரியா, "இந்திய உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எண்ணெய் ஆகியவை அதிகளவில் உள்ளன. எந்தவொரு உணவையும் சுவையானதாக மாற்ற எண்ணெய் மற்றும் நெய் பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக, நமது உடலில் கொழுப்பு அதிகமாகிறது. நாம் அதிகமாக உடற்பயிற்சி செய்யாததால், உடலில் உள்ள கொழுப்பு கரைவதில்லை." என்கிறார். "நம் உணவில் அதிகமாக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடலில் நுழைந்ததும் கொழுப்பாக மாறுகின்றன. மேலும், கொழுப்பும் நம் உடலில் சேருகிறது. இதனால் உடல் பருமன் அதிகரிப்பதற்கான ஆபத்து ஏற்படுகிறது." "நமது உடலில் கொழுப்பின் அளவு எப்போதும் அதிகமாக இருக்கும். உடல் மெலிந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் அவருடைய உடலிலும் 30-40% கொழுப்பு இருக்கும், அதுவே மிக அதிகம். மற்றொருபுறம், விளையாட்டு வீரர்களின் உடலில் 7-8% கொழுப்பு இருக்கும்." "நமது உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால், நம்முடைய வளர்சிதை மாற்றம் குறையும். இதனால், நமது உடல் எடை அதிகமாகும்." கிரிப்டோ ரிசர்வ்: டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?5 மார்ச் 2025 திருவண்ணாமலை, ராஜபாளையத்தில் பூமிக்கடியில் தங்கம்: ஆய்வில் தகவல் - இன்றைய முக்கிய செய்திகள்5 மார்ச் 2025 டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் டாக்டர் பர்மீத் கௌர் கூறுகையில், "பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எண்ணெயை எடுத்துக்கொண்டால், நம்முடைய வளர்சிதை மாற்றம் குறையும். இதனால், நம் உடலில் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமனும் அதிகமாகும். மேலும், இது நமக்கு நார்ச்சத்து, தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தராமல், கூடுதல் கலோரிகளையே தரும்." என்றார். மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையின் பேரியாட்ரிக் (உடல் பருமனுக்கான சிகிச்சை) அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமன் கோயல், "எண்ணெயில் பொதுவாகவே கொழுப்பு அதிகமாக இருக்கும். நமது உடல் பெரும்பாலான கலோரிகளை கொழுப்பிலிருந்து தான் பெறும். புரதச் சத்திலிருந்து நான்கு கலோரிகளை பெற்றால், கொழுப்பிலிருந்து 9 கலோரிகளை நாம் பெறுவோம். எனவே, அதிகமான கலோரிகளுடன் நாம் உண்ணும் எதுவாக இருந்தாலும், உடல் பருமனுக்கு வழிவகுக்கும், குறிப்பாக ஏற்கெனவே உடல் பருமனாக உள்ளவர்களுக்கு எடை மேலும் அதிகமாகும்." என தெரிவித்தார். எண்ணெய் எந்தளவு எடுக்க வேண்டும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எண்ணெயை அதிகமாக சூடுபடுத்துவது அதன் தரத்தை பாதிக்கிறது எண்ணெயை குறைவாக உபயோகிப்பதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் மகேந்திர நர்வாரியா. அதிகளவு எண்ணெயை மக்கள் பயன்படுத்துவதால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. டாக்டர் பர்மீத் கௌர் கூறுகையில், "நம் உடலில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ, கே ஆகிய வைட்டமின்களை ஜீரணிக்க கொழுப்பு நமக்கு உதவுகிறது. எனவே, நம் உடலுக்கு குறிப்பிட்ட அளவு கொழுப்பு தேவை." என்றார். மேலும், "வயதுக்கேற்ப மக்கள் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதிக உடலுழைப்பு இல்லாத ஒருவர் ஒரு நாளைக்கு 4-5 தேக்கரண்டி எண்ணெய் தான் எடுக்க வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு 20-25 கிராம் எண்ணெய். இதுவே ஒருவருக்கு அதிகமான அளவுதான்." என கூறுகிறார். எனினும், உடல் பருமனுக்கு எண்ணெய் மட்டுமே காரணம் அல்ல. டாக்டர் ராமன் கோயல் கூறுகையில், "உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் எந்தளவுக்கு இனிப்புகள் உட்கொள்ளப்படுகின்றன தெரியுமா? இனிப்புகளும் உடல் பருமனை அதிகரிக்கும்" என்றார். என்ன எண்ணெய் பயன்படுத்த வேண்டும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எண்ணெய் தரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் பர்மீத் கௌர் கூறுகையில், "இந்தியாவில் அந்தந்த பிராந்தியங்களில் கிடைக்கும் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டாலான எண்ணெய் (rice bran oil) ஆகியவை தென்னிந்தியாவில் கிடைக்கும். கடலை எண்ணெய் குஜராத்திலும் மற்ற மாநிலங்களில் கடுகு எண்ணெயும் கிடைக்கும்." என்கிறார். அவரைப் பொறுத்தவரை, பொறிப்பதற்கு பயன்படுத்திய எண்ணெயை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மேலும், ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களையும் நாம் தவிர்க்க வேண்டும். மேலும், எண்ணெயின் தரமும் முக்கியமானது. சமையல் எண்ணெயை நாம் அதிகமாக சூடுபடுத்துவது உடலுக்கு நல்லதல்ல. தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?5 மார்ச் 2025 ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள்5 மார்ச் 2025 ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) கூறுகிறது. ஏனெனில், அந்த எண்ணெயில் கெட்ட கொழுப்புகள் (trans fat) அதிகமாக இருக்கும். ஹார்வர்டு பொது சுகாதார பள்ளியின் இணையதளத்தில், இத்தகைய கெட்ட கொழுப்புகள் உடலுக்கு மோசமானவை என குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கொழுப்புகள் எல்.டி.எல் போன்ற தீய கொழுப்புகளை அதிகரித்து ஹெச்.டி.எல் போன்ற நல்ல கொழுப்புகளை குறைக்கும். இதனால், உடலில் வீக்கம் அதிகரித்து, இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்பு, நோயெதிர்ப்பு ஆகியவற்றை பாதிக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cevx0m0dww7o
  10. பெருங்குடல் புற்றுநோயார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ; விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் Published By: Digital Desk 3 06 Mar, 2025 | 01:31 PM நாட்டில் பெருங்குடல் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தளவில் அதிகரித்து வரும் நிலையில், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பெருங்குடல் புற்றுநோயால் 1.9 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 900,000க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக குளோபோகன் 2022 சர்வதேச புற்றுநோய் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தலாம். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் 50 வயதிற்குப் பின்னர் நோயின் ஆபத்து அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார். பெருங்குடல் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் வசந்த விஜேநாயக்க, 2040 ஆம் ஆண்டுக்குள் சுமார் 3.5 மில்லியன் பேர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். 40 வயதிற்குப் பின்னர் 50 சதவீதமானவர்களுக்கு பெருங்குடல் அல்லது மலக்குடலில் பாலிப்கள் வளர்ச்சி அடைவதால் புற்றுநோய் ஏற்படலாம். ஆனால் எல்லா பாலிப்களும் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை. அவற்றில் சுமார் 4 சதவீதமானவை மட்டுமே புற்றுநோயாக மாறக்கூடும். புற்றுநோயாக மாறுவதற்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை செல்லும். எனவே ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டவற்றை அகற்றி நோயைக் கட்டுப்படுத்த முடியும். அத்துடன், 23 ஆண்களில் ஒருவருக்கும் 26 பெண்களில் ஒருவருக்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208430
  11. Published By: Digital Desk 3 06 Mar, 2025 | 01:41 PM வடகிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது. எனவே நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காகவும் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர் அருட்தந்தை ஜீவநந்த பீரிஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரையும் இன்று வியாழக்கிழமை (06) நீதிக்கான நடை பயணத்தின் 1030 வது நாள் போராட்டத்தில் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காலிமுகத்திடல் அரகலைய போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் நீதிக்கான பயணம் தொடர்ந்து 1030 வது நாளாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் வடக்கு கிழக்கில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி அவர்களுக்கான இடங்கள் அன்று முதல் இன்றுவரை கிடைக்கப்படவில்லை அனைத்து மக்களையும் விட அதிகமாக வடகிழக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும். எனவே அந்த மக்களின் நோக்கத்தை கூட தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது. எனவே, அந்த மக்களின் நோக்கத்துக்காக மக்கள் பேரவைக்கான இயக்கமாகிய நாங்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து பேராடிவருகின்றோம் அதை வலியுறுத்துவதற்காக இந்த தொடர்ச்சியான நடைபாதை போராட்டங்கள் கோரிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த அசாதாரண நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காக உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக மக்களாகிய நாங்கள் ஒன்றுபடவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/208437
  12. நெடுந்தீவில் பாடசாலை நேரத்தை மாற்ற ஆராய்வு Published By: Digital Desk 3 06 Mar, 2025 | 01:17 PM நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை (05) மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பில் நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய பற்றாக்குறை தொடர்பிலும், அவற்றினை நிவர்த்தி செய்வது தொடர்பில் புதிய ஆசிரிய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதன்போது, படகுச் சேவையின் நேரத்தை கருத்தில் கொண்டு நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/208435
  13. 06 Mar, 2025 | 04:13 PM தத்தெடுத்த குழந்தையை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பதிக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி தத்தெடுக்கப்பட்ட 02 வயதுடைய குழந்தை ஒன்று சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை தத்தெடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதவான் சுஜீவ நிஷாங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்ட வைத்தியரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட வைத்திய அறிக்கையில், உயிரிழந்த குழந்தையின் உடலில் சுமார் 90 காயங்கள் காணப்பட்டதாகவும் குழந்தை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதவான் சுஜீவ நிஷாங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/208452
  14. பந்தலந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில் Published By: Rajeeban 06 Mar, 2025 | 11:19 AM பந்தலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ; அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதைகள் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார். அரசாங்க விசாரணை அறிக்கை பந்தலந்த வீடமைப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய முக்கிய சூத்திரதாரி ரணில்விக்கிரமசிங்க என தெரிவித்திருந்ததுடன் அங்கு மீறல்கள் இடம்பெறுவது குறித்து குறைந்தபட்சம் அவருக்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளது. அல்ஜசீரா செய்தியாளர் தன்வசம் வைத்திருந்த அரசாங்க விசாரணை அறிக்கையின் நகல்வடிவத்தை காண்பித்து கேள்விஎழுப்பியவேளை முதலில் அவ்வாறான அறிக்கையொன்று உள்ளதையே மறுத்த ரணில்விக்கிரமசிங்க பின்னர் அந்தஅறிக்கை செல்லுபடித்தன்மை வாய்ந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208420
  15. அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தாம் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கும் வரி விதிப்புகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரிவிதிப்பு மூலமாகவோ வர்த்தக போர் மூலமாகவோ அல்லது எவ்வித போர் மூலமாகவோ அதற்காக எதிராக இறுதி வரை போராட தாம் தயாராகவுள்ளதாக அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள சீன தூதுரகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 10 முதல் 15 வீத வரி விதிப்பதாக நேற்று அறிவித்தது. இதனிடையே, சீனாவில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதியை 7.2 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://thinakkural.lk/article/315723
  16. Published By: Vishnu 06 Mar, 2025 | 04:01 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருப்பதானது, கடந்தகால மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே அவர்கள் செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் செவ்வாய்கிழமை (4) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றியதுடன், இவ்வாரம் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். அவை இலங்கையில் மனித உரிமைககள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தடையேற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகப் பதவிவகித்த காலப்பகுதியில் மாத்திரம் தான் விதிவிலக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணையனுசரணையுடன் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இம்முறை பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக நாட்டில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் 2015 செப்டெம்பரில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரால் மீள்நிகழாமைக்கான உத்தரவாதமாகவும், தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டது. இருப்பினும் தற்போது அமைச்சர் விஜித்த ஹேரத்தினால் குறித்துரைக்கப்பட்ட மூன்று கட்டமைப்புக்களுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் அவர்கள் கூறுவதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்போகிறார்களா என்பது தெரியவரும். அதேபோன்று முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இப்போது அதனைப் பதிலீடு செய்வதற்குப் பிறிதொரு சட்டத்தைக் கொண்டுவரப்போவதாகக் கூறுகிறது. மேலும் இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை தாம் முற்றாக நிராகரிப்பதாக கடந்த திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி குறிப்பிட்டிருக்கிறார். எனவே கடந்தகால மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. நல்லிணக்கம் என்பது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்படவேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு ஆணை அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம் அம்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையை இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதன்று என்றார். https://www.virakesari.lk/article/208401
  17. பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (06/03/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலை கிராமத்தில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவியது என்றும் இந்த விவகாரத்தில் போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர் என்றும் தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள அஞ்செட்டிக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். அந்த சிறுமிக்கும், காலிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ் (30) என்பவருக்கும் கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் திருணம் நடந்தது. பின்னர் இன்று அந்த சிறுமியை, மலை கிராமத்தில் உள்ள மாதேஸின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஆனால், உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிக்கொண்டு சென்று மாதேஸின் வீட்டில் மீண்டும் விட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்த புகாரில் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தாயார் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா? தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? என்ன நடந்தது? அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன? பழநி முருகன் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: வல்லுநர் குழு தலைவர் பட மூலாதாரம்,Getty Images பழநி முருகன் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என, வல்லுநர் குழு தலைவர் பொங்கியப்பன் தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "முருகன் கோவில் மூலவர் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று, பழநி கோவில் மூலவர் சிலை பாதுகாப்புக் குழுத் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான பொங்கியப்பன் தெரிவித்தார். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. போகர் சித்தர் மூலவர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார். மூலவர் சிலையைப் பாதுகாப்பது, பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி, ஆதீனங்கள், ஸ்தபதிகள் அடங்கிய 15 பேர் கொண்ட மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது மூலவர் சிலையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி, பழநி தேவஸ்தான அலுவலகத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், பழநி எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் இணை ஆணையர் நடராஜன், தற்போதைய இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஐஐடி பேராசரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின்னர், குழுத் தலைவர் பொங்கியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பழநி முருகன் கோவில் மூலவர் சிலை உறுதித்தன்மையுடன் இருக்கும். சிலை பாதுகாப்பாக இருக்கிறது. மூலவர் சிலை குறித்த ஐஐடி குழுவினரின் ஆய்வு முடிவை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது" என்றார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி?4 மார்ச் 2025 பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 நடிகர் சிங்கமுத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் பட மூலாதாரம்,தினமணி நடிகா் சிங்கமுத்துக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகா் வடிவேலு புதன்கிழமை ஆஜரானார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகா் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, வடிவேலுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யும்படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகா் வடிவேலு சாட்சியம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சிங்கமுத்து தரப்பு வழக்குரைஞா் முறையிட்டார். மேலும், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தாளில் இட்லியை வேக வைத்தால் என்ன ஆபத்து?மருத்துவர்கள் தகவல்3 மார்ச் 2025 இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றம் பட மூலாதாரம்,Getty Images ஐக்கிய அரபு அமீரகத்தில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 2 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் கண்ணூரைச் சேர்ந்த முகமது ரினாஷ் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அல் அய்னில் ஒரு பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சக இந்தியக் குடியேறி ஒருவரைக் கொலை செய்ததற்காக முரளீதரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை குறித்து பிப்ரவரி 28 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்திய தூதரகத்துக்கு தகவல் அளித்தது, அதன் பின்னர் தூதரகம் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டது. தூதரகம் இருவருக்கும் சாத்தியமான அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் கருணை மனுக்கள் மற்றும் மன்னிப்பு கோரிக்கைகளை சமர்ப்பித்ததாகவும், ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரகம் இப்போது இறுதி சடங்குகளில் குடும்பங்களின் பங்கேற்பை ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?28 பிப்ரவரி 2025 கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது? - 5 அரிய தகவல்கள்26 பிப்ரவரி 2025 வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்துக: இலங்கை எம்.பி இலங்கையின் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் என வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோர மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கை என சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ மக்களுடைய குறித்த வாழ்வாதார ஆதாரத்தை சுரண்டுகின்ற வகையில் செயல்படுவதாக இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில் செயற்படும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தத் தவறினால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படுமெனவும், அத்தகைய நிலையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2025 வரவுசெலவுத்திட்ட கடற்றொழில் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd92jqgx9wjo
  18. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முக்கியமான தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கான உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்தி அமெரிக்கா அதிரடி காட்டியது. போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனாலும் டிரம்பின் இந்த செயல் போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2024 வரை உக்ரைனுக்கு வழங்கிய உதவிகளை விரிவாகப் பார்க்கலாம். நிதி, மனிதாபிமானம், ராணுவம் ஆகியவற்றில் உக்ரனைக்கு அமெரிக்கா அதிக உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ராணுவத்தில் 64.1 பில்லியன் யூரோக்களை வழங்கியிருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஐரோப்பிய யூனியன் நிதி உதவியாக 46.4 பில்லியன் யூரோக்களையும், மனிதாபிமான உதவியாக 2.6 பில்லியன் யூரோக்களையும் வழங்கியிருக்கிறது. ஆனால் ராணுவ உதவி எதுவும் வழங்கவில்லை. இதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், கனடா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன், பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு அதிக உதவிகளை புரிந்துள்ளன. உக்ரைனுக்கு கிடைத்திருக்கும் 267 பில்லியன் யூரோ உதவி வழங்கியவர்களில், ஐரோப்பா மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. மொத்தம் 132 பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது. அமெரிக்கா 114 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ உதவி என்று பார்த்தால் 129.8 பில்லியன் யூரோக்கள் கிடைத்துள்ளன. இதில் அமெரிக்கா 64 பில்லியன் யூரோக்களுடன் முதலிடத்திலும், ஐரோப்பா 62 பில்லியன் யூரோக்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. போரின் காரணமாக உக்ரைன் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி ஐரோப்பா முழுவதும் சுமார் 63 லட்சம் உக்ரேனிய அகதிகளும், உலகளவில் 68 லட்சம் உக்ரேனிய அகதிகளும் பிறநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஜெர்மனி, ரஷ்யா, போலந்து, பிரிட்டன், ஸ்பெயின் நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நாடு நிதி(பில்லியன் யூரோ) மனிதாபிமானம் ராணுவம் அமெரிக்கா: 46.6 – 3.4 – 64.1 ஐரோப்பிய யூனியன்: 46.4 – 2.6 ஜெர்மனி: 1.4 - 3.2 - 12.6 பிரிட்டன்: 3.8 – 0.9 – 10.1 ஜப்பான்: 9.2 – 1.3 – 0.1 கனடா: 5.2 – 0.5 – 2.6 டென்மார்க்: 0.1 – 0.4 – 7.5 நெதர்லாந்து: 0.7 – 0.8 – 5.9 ஸ்வீடன்: 0.3 – 0.4 – 4.7 பிரான்ஸ்: 0.8 – 0.6 – 3.5 போலந்து: 0.9 – 0.5 – 3.6 நாடுகள் – உக்ரைன் அகதிகள் ஜெர்மனி: 12.4 லட்சம் ரஷ்யா: 10.22 லட்சம் போலந்து: 10 லட்சம் பிரிட்டன்: 2,53,535 ஸ்பெயின்: 2,16,975 https://thinakkural.lk/article/315708
  19. 05 Mar, 2025 | 09:38 PM வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோரமக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கை என சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ மக்களுடைய குறித்த வாழ்வாதார ஆதாரத்தை சுரண்டுகின்ற வகையில் செயற்படும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். மீனவமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில் செயற்படும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த தவறினால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் வீதிகளில் இறங்கிப்போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும், அத்தகைய நிலையை ஏற்படுத்தவேண்டாம் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்தார். பாராளுமன்றில் புதன்கிழமை ( 05) இடம்பெற்ற 2025 வரவுசெலவுத்திட்ட கடற்றொழில் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சர் அவர்களே, இந்திய இழுவைப்படகுகள் செய்யும் அத்துமீறிய செயல்களினால் எமது வடக்கு மீனவர்கள் தொழில் செய்யமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எமது மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றது. வடக்கு மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்படுகின்றது. இந்திய விசைப்படகுகள் மீன்பிடியில் மிகவும் அழிவுகரமான முறைகளிலொன்றாகக் கருதப்படும் அடித்தள இழுவை வலை பிரயோகத்தை மேற்கொள்கின்றன. ஆழ்விசைப்படகுகள் "கடலின் ஹூவர்ஸ் (hoovers of ocean) என்றும், புல்டோசர்கள் போன்று மீன் மற்றும் பிறஅடித்தாள மீன் இனங்களை அழித்தொழிக்கின்றன. இலங்கைப் பெருங்கடலில் இந்த புல்டோசிங் அடித்தள விசைப்படகுகளின் செயற்பாடுகள் தொடர்ந்தால் விரைவில் எந்தமீனும் கடலில் பிடிக்க இயலாதநிலை ஏற்படும். அடித்தள இழுவைவிசைப்படகு கடல் தளத்தை சிதைத்து, கடல்சூழலை சீர்குலைத்து பழைய பவளப் பாறைகளை சேதப்படுத்துகின்றது. பிளாங்கடன்களின் வளர்ச்சியை பாதிக்கின்றது. மற்றும் இறுதியாக ஆழ்கல் இனங்களில்உள்ள கடல் பாறைமீன் (Reef Fish) இறால் மற்றும் பிறவகைகளை பாதிக்கின்றது. இது வாழ்விட சீரழிவுக்கு வழிவகுக்கும். கூடுதலாக இழுவைவிசை இழுத்தல் உண்மையில் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத முறையாகும். ஏனெனில் இலக்கு அல்லாத உயிரனங்களும் பிடிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலும் அழிக்கப்படுகின்றது. இவ்வாறான இழுவைவலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் கரைக்குவந்தபிறகும், கடலிலும் தாங்கள் விற்கக்கூடிய மீன்களை கரைக்கு வந்த பிறகும் தாங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு இலக்கு இல்லாத கடல் உயிரினங்களை, மீன் இனங்களை அப்புறப்படுத்துகின்றார்கள். இலங்கையின் கடலோரமக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளனர். அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கையாகும். அந்தவாழ்வாதார ஆதாரம் அழிக்கப்பட்டால், மனித பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான மிகப்பெரிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விளைவுகள் ஏற்படும். எல்லையைக்கடக்கும் மீன்பிடிக்கப்பல்/படகுகள் தவறுதலாக ஒரு சிறிய சதவீத நிகழ்வுகளை மட்டுமே உள்ளடக்கியது என்பது அனைவரும் அறிந்த உண்மை. பெரும்பாலான எல்லைக்கடப்புகள் வேண்டுமென்றே இலங்கைக்கடல் எல்லைகளுக்குள் ஆழமாகப் பயணிப்பதை உள்ளடக்கியது. ராமேஸ்வரம் மீன்பிடிப் படகுகள் இலங்கைப்பகுதியில் மட்டுமே நல்ல மீன்பிடி மைதானங்களை காண்கின்றன. எனவே அவற்றின் பெரும்பாலான மீன்பிடித்தல் அந்தப்பக்கத்தால் இடம்பெறுகின்றதென்பது வெளிப்படையான ரகசியமும், உண்மையுமாகும். இலங்கைக் கடற்பரப்பில் பிரதானமாக இறால் பெறப்படுவதால், பெரும்பாலான விசைப்படகுகள் பெலாஜிக் அல்லது விரிகடலுக்குரிய இழுவை வலைகளுடன் ஜோடியாக இழுவைசெய்யும் இந்திய விசைப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பை அடைகின்றன. ஒன்றை விட்ட ஒவ்வொரு நாளும், கிட்டத்தட்ட 500 இழுவைப் படகுகள் இலங்கைக்கடற்பரப்புக்குள் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. பல பாதுகாவலர்களும், சர்வதேச விஞ்ஞானிகளும் இழுவை வலைகள் கண்மூடித்தனமாக அனைத்து கடல் வளங்களையும் அழிப்பதால் அவற்றை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். மீன்வள விஞ்ஞானிகளின் ஆலோகனைகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இலங்கை கடற்பரப்பில் அடித்தள இழுவைப் படகுகளை இயக்கத்தடை விதித்தது. இலங்கையின் வடக்குப்பகுதியில் ஐந்து மாவட்டங்களில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஆகிய நான்கு மாவட்டங்களில் மீன்பிடியாளர்கள் தமது முழுமையான வாழ்வாதாரமாக மீன்பிடியையே நம்பியுள்ளனர். நீங்கள் சற்று சிந்தித்துப்பாருங்கள் இந்தக் குடும்பங்களின் உணவுத்தேவைகள், பிள்ளைகளின் கல்வித்தேவை உட்பட, அத்தியாவசியத் தேவைகள் இந்தக்கடலையே நம்பி, இதனால் கிடைக்கும் வருமானத்தை தமது வாழ்வாதாரமாக எண்ணி இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கொடூரமான வகையில், மிகவும் கொடூரமானமுறையில் சட்டவிரோதத் தொழில்கள் செய்து, இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டதாக அறியத்தந்திருக்கும் தொழில்களைக் கொள்ளையர்களைப்போல செய்துகொண்டிருக்கும், திருட்டுக்கும்பலை பிடிக்காமல் சட்டத்தின்முன் நிறுத்தாமல் இருக்க காரணம்தான் என்ன? உங்களுடைய மீன்பிடியாளர் சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம். வயிற்றில் அடிக்ககேண்டாம். எமது மீனவர்களை வாழவிடுங்கள். என்று தான் கேட்கின்றோம். சட்டவிரோத கடற்றொழில்களைச் செய்து மீனவர் சமூகத்தை அழித்துக்கொண்டிருக்கும் இலங்கையிலுள்ள சட்டவிரோதிகளையும், எல்லைதாண்டிவந்து எமது கடல்வளங்களை அழிக்கும் அயல்நாட்டு சட்டவிரோதிகளையும் தண்டியுங்கள். எமது மக்களை மேலும், மேலும் காயப்படுத்தாமல் கடற்படை, பொலிசார், கடற்றொழில் திணைக்களப்பணியாளர்கள் தங்களுடைய கடமைகளைச் சீராகச் செய்தால் நிலமைகள் சீராகும் எனத் தெரிவித்துக்கொள்கின்றேன். மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தால் இந்தப் பிரச்சனைகள் தீர்ந்து விடும். சட்டங்களை உருவாக்கி வைத்துக்கொண்டு, அதனை முழுமையாக செயற்படுத்தாமல் எமது மீனவமக்களின் வாழ்வை அழித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். கடற்றொழில் அமைச்சர் அவர்களே, எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாங்களும் அறிவீர்கள். இந்தியஇழுவைப்படகுகள் தமது எல்லைகளைத்தாண்டி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைகின்ற விவகாரத்தில் இந்திய அரசாங்கம், இந்திய கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினரும் பிழையான விதத்தில் செயற்படுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன். இந்திய கடல்எல்லைரைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும். அதேபோல் இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர். அண்மையில் மியன்மார் நாட்டு அகதிகள் படகொன்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு வருகைதந்தது. குறித்த அகதிகள்படகு முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு வருகைதரும்வரை கடற்படையினருக்குத் தெரியாது. அவ்வாறெனில் கடற்படையினர் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றனர் இலங்கைக் கடற்பரப்பினைப் பாதுகாக்கவேண்டியது இலங்கைக் கடற்படையின் பொறுப்பாகும். அகவே இந்தவிடயத்தில் கடற்றொழில் அமைச்சரே நீங்கள் தலையீடுசெய்யுங்கள். மீனவமக்களைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் மீனவமக்கள் வீதியில் இறங்கிப்போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள் என்றார். https://www.virakesari.lk/article/208377
  20. மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. அகில இலங்கை ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு சிறார்கள் முகம்கொடுத்து வருவதை அவ்வப்போது அறியக்கிடைக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில், சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் இடம்பெற்ற பிரதேசங்களாக வாகரை, மண்முனை வடக்கு மற்றும் கிரான் போன்ற பிரதேசங்கள் காணப்படுகின்றது. மேலும், சிறுவர் உரிமைமீறல் துஷ்பிரயோகம் இடம்பெறும் போது எமது சமூகமானது பார்வையாளராக செயற்படாது உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது எமது பொறுப்பாகும். சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு சட்டத்தின் மூலம் புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் தற்போது காணப்படுகின்றமை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலை மட்டம் சமுதாய மட்டத்தில் பலமான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தும் பங்குதாரர்களினால் 100 வீதம் பங்களிப்பை வழங்கி வினைத்திறனான செயற்பாட்டை வழங்குமிடத்து சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க முடியும். மேலும் இக்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. சமூகத்தில் சிறார்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அவதானிக்கப்படுமிடத்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்வதனால் பாதிப்பில் இருந்து சிறார்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/315734
  21. Published By: Rajeeban 06 Mar, 2025 | 10:52 AM தென்கொரிய போர்விமானங்கள் தவறுதலாக வீடுகள் மீது வீசிய குண்டுகள் காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர். போர்விமான ஒத்திகையின் போது பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர், நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ள பொச்சியோன் என்ற நகரத்தின் குடியிருப்புகள் மீது விமானப்படையின் கேஎவ் 16 விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியுள்ளன. இதில் ஒரு குண்டு வெடித்துள்ளது, ஏனைய குண்டுகளை பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளில் குண்டு செயல்இழக்கவைக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இருவருக்கு கழுத்திலும் தோளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுகள் விழுந்து வெடித்தபோது வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த 60 வயது பெண்ணொருவரின் கழுத்தை குண்டு சிதறல்கள் தாக்கியுள்ளன. வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த வேளை பாரிய சத்தம் கேட்டது, நான் கண்விழித்தவேளை அம்புலன்சில்இருந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். எங்கள் விமானங்கள் தவறுதலாக எம்கே 82 குண்டுகளின் 8 எறிகணைகளை வீசியுள்ளன. அவை சூட்டு எல்லைக்கு வெளியே விழுந்துள்ளன என தென்கொரிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்காக மன்னிப்பு கோரியுள்ள விமானப்படை விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தினால்ஒரு தேவாலயமும் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவேளை வெடிப்பு சத்தங்கள் கேட்டன என இடிபோலயிருந்தது, வீடு அதிர்ந்தது என யொன்காப்பிற்கு ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208417
  22. தென்னகோன் இன்று சரணடைவார்? பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள வீடு உட்பட நான்கு வீடுகள் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அவர் குறித்த வீடுகள் எவற்றிலும் இருக்கவில்லை. இந்நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையையும் விதித்துள்ள நிலையில், இன்று அவர் தனது சட்டத்தரணிகளுடன் சரணடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/315702
  23. சாம்பியன்ஸ் டிராஃபி: 25 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மோதும் இந்தியா-நியூசிலாந்து; தென் ஆப்பிரிக்கா தோல்வி ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது. லாகூரில் நேற்று (மார்ச் 5) நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் சேர்த்தது. சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 363 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராஃபியில் அடிக்கப்பட்ட அதிகபட்சமாகவும் நியூசிலாந்து ஸ்கோர் அமைந்தது. இதையடுத்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, வரும் ஞாயிறன்று (மார்ச் 9) துபையில் நடக்கும் ஃபைனலில் இந்திய அணியுடன் மோதுகிறது. 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்? ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த இந்தியா - இந்த வெற்றியின் சிறப்பு என்ன? கோலி அசத்தல், ஷமி அற்புதம்! 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா 2வது முறை மோதல் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் இந்திய அணியை 2வது முறையாக நியூசிலாந்து அணி சந்திக்கிறது. ஏற்கெனவே 2000ம் ஆண்டில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நினைவிருக்கும். அதன்பின், 25 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியை ஃபைனலில் நியூசிலாந்து சந்திக்கிறது. ஆனால், 2009ம் ஆண்டில் 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இப்போது, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராஃபிக்கு தகுதி பெற்றுள்ளது. டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு கெடு விதித்தது ஏன்? நாடாளுமன்ற உரையின் 7 முக்கிய அம்சங்கள்5 மார்ச் 2025 தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?5 மார்ச் 2025 7-வது ஐசிசி ஃபைனல் ஒட்டுமொத்தத்தில் ஐசிசி ஒருநாள் ஃபார்மெட்டில் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 5வது இறுதிப்போட்டியாகும். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 2015, 2019 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000, 2009, 2025 ஆகிய ஆண்டுகளிலும், டி20 உலகக் கோப்பையில் 2021ம் ஆண்டில் இறுதிப்போட்டியிலும், 2021ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்றது. நியூசிலாந்து அணி இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000-ம் ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் மட்டும்தான் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது. ரவீந்திரா 5வது சதம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார் நியூசிலாந்து அணி மிகப்பெரிய வெற்றிக்கு ரச்சின் ரவீந்திரா(108), கேன் வில்லியம்ஸன்(102) ஆகியோரின் சதம்தான் முக்கியக் காரணம். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோருக்கு வித்திட்டனர். சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் ரவீந்திரா அடிக்கும் 2வது சதமாகும், ஒட்டுமொத்தமாக 5வது சதமாகும். ரவீந்திரா அடித்த 5 சதங்களும் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட தொடர்களில் அடிக்கப்பட்டவை. அதாவது, 2023 உலகக் கோப்பையில் 3 சதங்களும், இந்த தொடரில் 2 சதங்களும் ரவீந்திரா அடித்துள்ளார். இதுநாள் வரை, எந்த கிரிக்கெட் வீரரும் தனது முதல் 5 சதங்களை ஐசிசி தொடர்களில் மட்டும் அடித்தது இல்லை. வங்கதேசத்தின் மகமதுல்லா 4 சதங்கள் மட்டுமே ஐசிசி தொடர்களில் அடித்தநிலையில் அதையும் ரவீந்திரா முறியடித்துவிட்டார். அது மட்டுமல்லாமல், ஐசிசி தொடர்களான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபியில் மட்டும் ரவீந்திராவின் சராசரி 67 ஆக இருக்கிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நேற்று 3வது சதத்தை வில்லியம்ஸன் பதிவுசெய்தார் வில்லியம்ஸனின் ஹாட்ரிக் சதங்கள் கேன் வில்லியம்ஸன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் சதத்தை பதிவுசெய்தார். ஏற்கெனவே 2019ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் முதல் சதத்தையும் (109), பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் 2வது சதத்தையும் (133), நேற்று 3வது சதத்தையும் வில்லியம்ஸன் பதிவுசெய்தார். அது மட்டுமல்லாமல், வில்லியம்ஸன் இந்த போட்டியில் முதல் 57 பந்துகளில் மெதுவாக பேட் செய்து 3 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் மட்டுமே சேர்த்து 70 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஆனால், அடுத்த 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்கள் சேர்த்து 167 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து சதம் விளாசினார். இது தவிர, நடுவரிசை பேட்டர்கள் டேரல் மிட்ஷெல்(49), கிளென் பிலிப்ஸ்(49) இருவரும் கேமியோ ஆடியதால் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. பந்துவீச்சில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் லாகூரின் தட்டையான மைதானத்தை நன்கு பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேப்டன் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும், ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிலும், கேப்டன் சான்ட்னர், முக்கிய விக்கெட்டுகளான பவுமா, வேன்டர் டூ சென், கிளாசன் விக்கெட்டுகளைச் சாய்த்து தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன?5 மார்ச் 2025 ரமலான் நோன்பு இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு முறை என்ன?5 மார்ச் 2025 நியூசி-தெ. ஆப்ரிக்கா பந்துவீச்சு ஒப்பீடு நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நேற்று 28 ஓவர்களை வீசி, 143 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு பயன்படுத்திய அளவு தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்களால் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் 14 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டைகூட சாய்க்கவில்லை, 93 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணி 3 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளர்கள் உள்பட 4 வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசி 269 ரன்களை வாரி வழங்கினர். இதில், 3 ஸ்பெசலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் மட்டும் தலா 70 ரன்களுக்கு மேல் வழங்கினர். தென் ஆப்ரிக்க அணியின் டாப்ஆர்டர் பவுமா(56), வேன்டர் டூசென்(69) ஆகியோர் தவிர, நடுவரிசையில் ஒரு பேட்டர்கூட நிலைத்து பேட் செய்யாதது தோல்விக்கு முக்கியக் காரணம். 21-வது ஓவரிலிருந்து 40-வது ஓவருக்குள் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்தது, 116 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால் அதேசமயம், இதே ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்து, டெத் ஓவர்களை அருமையாகப் பயன்படுத்தியது. ஆறுதல் தந்த மில்லர் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு நேற்று ஒரே ஆறுதலான அம்சம், டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் இருந்து 67 பந்துகளில் சதம் அடித்தது மட்டும்தான். சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த பேட்டர் என்ற பெருமையை மில்லர் பெற்றார். இதற்கு முன் சேவாக் 77 பந்துகளில் சதம் அடித்த நிலையில் அதை மில்லர், இதற்கு முன் ஜோஸ் இங்கிலிஸ் முறியடித்தனர். டெய்லெண்டர் லுங்கி இங்கிடியை வைத்துக்கொண்டுதான் மில்லர் தனது சதத்தில் 96 சதவிகித ரன்களையும் சேர்த்தார். 10-வது விக்கெட்டுக்கு இங்கிடி, மில்லர் 56 ரன்கள் சேர்த்தனர். மில்லர் 54 ரன்கள் சேர்த்தபோது இங்கிடி ஒரு ரன் சேர்த்தார். மில்லர் தனது கடைசி 26 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் இருந்து 67 பந்துகளில் சதம் அடித்தார் தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு காரணம் என்ன? தென் ஆப்பிரிக்க அணியும், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் தோல்வியும் பிரிக்க முடியாததாகவிட்டது. இதுவரை பல ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்றிருந்தாலும், அரையிறுதி கடந்தது மிகச்சிலமுறைதான். அரையிறுதியோடு தென் ஆப்பிரிக்கா தனது போராட்டத்தை, பயணத்தை முடித்துக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இதுவரை 11 முறை ஐசிசி நாக்அவுட் சுற்றுக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்று அதில் 2 முறைதான் வென்றுள்ளது. 1998ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை வென்றது இதைக் கடந்து பெரிதாக கோப்பையை வெல்லவில்லை. 2வது கோப்பையை நோக்கிய பயணம் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் தொடர்கிறது. கடைசி 5 அரையிறுதிகளில் ஒன்றில்கூட தென் ஆப்பிரிக்கா வெல்லவில்லை. வலிமையான வேகப்பந்துவீச்சு, விதவிதமான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்திருந்தும் இதுபோன்ற முக்கியத்துவமான போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணியால் வெற்றியை பெற முடியவில்லை. ஆடுகளத்தைப் பயன்படுத்தி நேற்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்யவில்லை, லைன் லென்த்தில்கூட பெரும்பாலும் வீசவில்லை, தட்டையான ஆடுகளத்தில் வேகத்தை அதிகப்படுத்தி, பவுன்ஸராக வீசியது நியூசிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க எளிதானது. தென் ஆப்பிரிக்க பேட்டிங்கும் தொடக்கத்தில் சிறப்பாகவே இருந்தது, வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் கேப்டன் பவுமா, வேண்டர் டூ சென் ஆடினர். 143 ரன்களுக்கு 2 விக்கெட் என, நியூசிலாந்து ரன்ரேட்டுக்கு இணையாகத்தான் தென் ஆப்பிரிக்கா இருந்தது. ஆனால், டூசென் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் தொடர்நது விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. குறிப்பாக 161 ரன்களில் இருந்து 218 ரன்களுக்குள், அதாவது 57 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு பெரிய காரணம். நடுவரிசை நம்பிக்கை பேட்டர்கள் மார்க்ரம் (31), கிளாசன்(3), முல்டர்(8), யான்சென்(3) ரன்கள் சேர்த்து ஏமாற்றினர். லாகூர் ஆடுகளம் தட்டையானது. இந்த ஆடுகளத்தில் 350 ரன்களுக்கு மேல் அடித்தால்கூட நல்ல பார்ட்னர்ஷிப் மட்டும் இருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். இதே மைதானத்தில்தான் இங்கிலாந்தின் 352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது. தென் ஆப்பிரி்க்காவின் கிளாசன், மார்க்கரம் ஆகிய இரு பெரிய பேட்டர்களும் நிலைத்து பேட் செய்திருந்தால் அடுத்தடுத்து அழுத்தத்தைக் கொடுத்து ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு திருப்பி இருக்கலாம். க்ளோயி ஸாவ்: 'நான் மனிதனாக நடத்தப்பட வேண்டும்' - ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கூறுவது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? என்ன நடந்தது?5 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிளாசன் 'பார்ட்னர்ஷிப் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம்' தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கூறுகையில், "நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கு சற்று அதிகம்தான். நாங்களும் சிறப்பாகவே பேட் செய்தோம் என நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் 350 என்பது அடிக்கக்கூடிய ஸ்கோர்தான். இன்னும் இரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், டூசென், எனக்கும் தவிர வேறு பார்ட்னர்ஷிப் அமையவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். 35 ஓவர்கள் வரை நானும், டூசெனும் பேட் செய்திருக்க வேண்டும். ஆனால், முடியவில்லை. பேட்டிங்கில் நடுவரிசை ஏமாற்றமளித்தது" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vydkwx8ezo
  24. பிகேகே துருக்கி மோதல் - அப்துல்லா ஒகாலன் - எங்களிற்கு தெரிந்திருக்கவேண்டிய விடயங்கள் என்ன? Published By: Rajeeban 03 Mar, 2025 | 12:47 PM By Ben Hubbard newyork times முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் குர்திஸ் இனத்தவர்களிற்கான நாடு குறித்து வாக்குறுதிகளை வழங்கின.ஆனால் இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. பல தசாப்தகால போராட்டத்தின் பின்னர் குர்திஸ் போராளிகள் அமைப்பு யுத்தநிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறுதனது அமைப்பினரை கேட்டுக்கொண்டார். சுமார் 4 தசாப்தங்களாக குர்திஸ்தான் தொழில்கட்சியான பிகேகேவுடன் துருக்கி மோதலில் ஈடுபட்டிருந்தது. பிகேகே துருக்கியின் குர்திஸ் சிறுபான்மை இனத்தவர்களிற்கு அதிகளவு உரிமைகளை கோரி போராடும் அமைப்பு. தசாப்தகால மோதலில் இதுவரை 40000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பிகேகே அமைப்பு பொதுமக்கள் மற்றும் துருக்கியின் இராணுவ இலக்குகள் மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவும், குர்திஸ் போராளிகள் மற்றும் அவர்களிற்கு ஆதரவளிக்கும் குர்திஸ் மக்கள் மீதான துருக்கியின் இராணுவ தாக்குதல்கள் காரணமாகவும் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. துருக்கியும் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் பிகேகே அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றன. தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள அந்த அமைப்பின் தலைவர் அப்துல்லா ஒகலான் தனது போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், இதனைதொடர்ந்து அந்த அமைப்பு யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. எனினும் 40 வருடகால யுத்தம் முடிவிற்கு வருமா என்பது உறுதியாக தெரிவிக்கப்பட முடியாத விடயமாக காணப்படுகின்றது, யுத்த நிறுத்தத்திற்கு பதில் துருக்கி அரசாங்கம் போராளிகளிற்கு எதனை வழங்குவதற்கு முன்வந்துள்ளது என்பதும் தெளிவாக தெரியவில்லை. பிகேகே குறித்தும் துருக்கிக்கு எதிரான அதன் போராட்டம் குறித்தும் அறிந்துகொள்ளவேண்டிய விடயங்கள் பிகேகேயின் பின்னணி என்ன? இந்த அமைப்பு துருக்கிக்கு எதிராக 1980களின் பிற்பகுதியில் போரிட ஆரம்பித்தது, துருக்கியின் சனத்தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானவர்களாக உள்ள குர்திஸ் மக்களிற்கு சுதந்திரத்தை கோரியது. துருக்கியின் கிழக்கு தெற்கு மலைப்பகுதியிலிருந்து தங்கள் தாக்குதல்களை பிகேகே போராளிகள் ஆரம்பித்தனர். அவர்கள் துருக்கியின் தளங்கள் பொலிஸ் நிலையங்கள் போன்றவற்றை தாக்கினர். துருக்கி அரசாங்கம் கடுமையான பதில் தாக்குதலை மேற்கொண்டது, இதன் காரணமாக மோதல்கள் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கும் பரவின. பிகேகே அமைப்பு துருக்கியின் பல நகரங்கள் மீது குண்டுதாக்குதல்களை மேற்கொண்டது இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். எனினும் கடந்த ஒரு தசாப்தகாலமாக துருக்கி இராணுவம் துருக்கியின் தென்கிழக்கில் உள்ள முக்கிய குர்திஸ் நகரங்களில் இருந்து பிகேகே அமைப்பினரை பின்வாங்க செய்துள்ளது. ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி பிகேகே அமைப்பின் தலைவர்களையும் போராளிகளையும் கொலை செய்துள்ளது. இதன் காரணமாக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான போராளிகளின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இந்த மோதல் மிகப்பெரிய வன்முறையாக மாறாத ஒன்றாக காணப்படுகின்றது, எனினும் பிகேகே அவ்வப்போது மேற்கொண்ட தாக்குதல்கள் பரந்துபட்ட யுத்தம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. கடந்த வருடம் ஆயுதமேந்திய சிறிய எண்ணிக்கையிலான போராளிகள் துருக்கியின் விமானதயாரிப்பு நிறுவனமொன்றிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் ஐவர் கொல்லப்பட்டனர். குர்திஸ் இனத்தவர்கள் 40 மில்லியன் சனத்தொகையை கொண்ட இனக்குழுவே குர்திஸ்கள். அவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு புள்ளிவிபரங்கள் உள்ளன. ஈரான் ஈரான் சிரியா துருக்கியில் இவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் குர்திஸ் மொழியின் பல பேச்சுவழக்குகளை பேசுகின்றனர். அவர்களின் மொழி அராபிய, துருக்கி மொழிகளுடன் நேரடியாக தொடர்பில்லாதது. மேலும் இவர்கள் சுனி முஸ்லீம்கள். முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் குர்திஸ் இனத்தவர்களிற்கான நாடு குறித்து வாக்குறுதிகளை வழங்கின. ஆனால் இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. அதன் பின்னர் பல நாடுகளில் குர்திஸ் மக்களின் கிளர்ச்சிகளும் இடம்பெற்றன. குர்திஸ் மக்கள் தங்களின் மொழி கலாச்சாரம் தொடர்பில் அரச ஒடுக்குமுறைகளை அனுபவித்துள்ளனர். சிரியாவில் குர்திஸ் இனத்தவர்கள் 2014 இல் சிரியாவின் வடக்கில் ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயற்பட்டவேளை குர்திஸ் மக்கள் அங்கிருந்து தப்பியோடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லையை கடந்து துருக்கிக்குள் நுழைந்த இவர்கள் அகதி முகாமகளை சென்றடைந்தனர். சிரியாவில் குர்திஸ் இனத்தவர்களின் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணியினர் நாட்டின் வடகிழக்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர், இவர்களின் வேர்கள் பிகேகேயுடன் தொடர்புபட்டவை இவர்கள் பிகேகே தலைவர் அப்துல்லா ஒகலானின் கொள்கையை பின்பற்றுகின்றனர். அவர்களிற்கு அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரவளித்து வந்தது, ஐஎஸ் அமைப்பினை தோற்கடிப்பதில் இவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினார்கள். எனினும் சிரியாவின் சர்வாதிகாரி பசார்அல் அசாத்தின் வீழ்ச்சி இவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இவர்கள் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதுடன் டமஸ்கஸில் உள்ள சிரியாவின் புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளனர். https://www.virakesari.lk/article/208145

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.