Everything posted by ஏராளன்
-
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன! 01 MAR, 2025 | 03:56 PM இரணைமடு குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (01) திறக்கப்பட்டன. தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கத்தில், இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் இன்றைய தினம் திறக்கப்பட்டன. இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/207989
-
புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து
கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் மற்றும் ஹாரியட் வைட்ஹெட் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று, பின்லாந்து நாட்டை எஸ்டோனியாவுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் முக்கிய மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்திருந்ததை ஃபிங்ரிட் (Fingrid) என்ற மின்சார நிறுவனத்தின் தொழிலாளர்கள் கண்டறிந்தனர். இதனால் அதன் அண்டை நாடுகளுக்கு மின்சார விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. "இது எவ்வாறு ஏற்பட்டது என்று அறிய நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். யாரேனும் செய்த நாசவேலையா என்பது முதல் தொழில்நுட்ப கோளாறா என்பது வரை அனைத்து விதமான சாத்தியக்கூறுகள் பற்றியும் விசாரணை நடந்து வருகின்றது. இதுவரை நாங்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை", என்று ஃபிங்ரிட் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் ஆர்டோ பாக்கின் பின்லாந்து அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். "இந்த சம்பவம் நடந்த போது குறைந்தது இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கேபிளுக்கு அருகில் இருந்தன" என்றும் அவர் கூறினார். சில மணி நேரத்திற்குப் பிறகு, பின்லாந்து கடலோர காவல்படையை சேர்ந்த ஒருவர், 'ஈகிள் எஸ்' என்ற ரஷ்ய கப்பலில் ஏறி பின்லாந்து கடற்பகுதிக்கு சென்றார். முக்கியமான மின்சார கேபிள்களில் ஒன்றான 'எஸ்ட்லிங்க் 2'-வுக்கு வேண்டுமென்றே சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள குக் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த கப்பல் உண்மையில் ரஷ்ய நிழற்படையின் ஒரு பகுதி என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இந்த கப்பல், தடை செய்யப்பட்ட ரஷ்யாவின் பெட்ரோலியப் பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. 'ஈகிள் எஸ்' கப்பல் அதன் நங்கூரத்தை கடலுக்கடியில் இழுத்துச் சென்றதால் மின்சார கேபிள் சேதமடைந்திருக்கலாம் என்று பின்லாந்து காவல்துறை கருதுகிறது. உண்மையில், 'ஈகிள் எஸ்' கப்பல் பயணித்த பகுதியில் சுமார் 80 மீட்டர் ஆழத்தில் ஒரு நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் அதன் இரண்டு நங்கூரங்களில் ஒன்றை இழந்ததைக் காட்டும் புகைப்படங்களும் இருக்கின்றன. இதுதொடர்பான குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாக 9 பேரை சந்தேகத்திற்குரியவர்களாக அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்24 பிப்ரவரி 2025 பில் கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது? அவர் நன்கொடைகளை அள்ளி வழங்குவது ஏன்?23 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த டிசம்பரில் நடந்ததாகக் கூறப்படும் நாசவேலையைத் தொடர்ந்து, கடலுக்கடியில் உள்ள கேபிள்களைப் பாதுகாக்க எஸ்டோனியா கடற்படை ரோந்துப் பணிகளைத் தொடங்கியுள்ளது. சேதம் ஏற்பட்ட இந்த கேபிளின் நீளம் 170 கிலோமீட்டர் ஆகும். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து பால்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ள கடலடி கேபிள்களுக்கு ஒரு பகுதியாகவோ அல்லது நிரந்தர சேதத்தையோ ஏற்படுத்திய தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இந்த சம்பவம் சமீபமாக நடந்துள்ளது. 'எஸ்ட்லிங்க் 2' கேபிள் சம்பவத்திற்குப் பிறகு, நேட்டோ அமைப்பு பால்டிக் கடலில் அதன் படைகளின் இருப்பை அதிகரிக்க கோரிக்கை விடுத்தது. அதே நேரத்தில் எஸ்டோனியா கடலுக்கு அடியில் செல்லும் மற்றொரு முக்கிய கேபிளான 'எஸ்ட்லிங்க் 1' செல்லும் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொள்ள ஒரு கப்பலை அனுப்பியது. கடலுக்கு அடியில் உள்ள கேபிளுக்கு ஏற்பட்ட சேதம் "முக்கியமான உள் கட்டமைப்புகள் மீதான தொடர்ச்சியான சந்தேகத்திற்கிடமான தாக்குதல்களில் சமீபமாக நடந்த ஒன்று", என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உலகின் பெருங்கடல்கள் வழியாக மின்சார சப்ளை மற்றும் தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்காக கடலுக்கு அடியில் சுமார் 600 கேபிள்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் ரகசியமாக வைக்கப்பட்ட கரைப் பகுதியில் மட்டுமே கடலை விட்டு மேலே வருகின்றன. சுமார் 1.4 மில்லியன் கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கேபிள்கள் உலகம் முழுவதையும் இணைக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை தரவு பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. குறிப்பாக உலக அளவில் இணையவழி தகவல் பரிமாற்றத்திற்காக இவை உதவுகின்றன. விபத்துகளும் மனிதத் தவறுகளும் தவிர்க்க முடியாதவை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டாலும், இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் போது, கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் நாச வேலைக்கு ஆளாகக் கூடும் என்ற கேள்வியை எழுப்புகிறது. போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா23 பிப்ரவரி 2025 இந்திய அணிக்கு 242 ரன்கள் இலக்கு - பாகிஸ்தான் பவுலர்களை திணற வைக்கும் சுப்மன் கில்24 பிப்ரவரி 2025 மேற்கத்திய நாடுகள் ஏன் கவலைப்படுகின்றன? ரஷ்யாவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவுகள் சிறந்ததாக இல்லை என்பது தெரிந்த ஒன்றே. கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவின் உதவியுடன் நடந்த கிளர்ச்சி மற்றும் 2014ஆம் ஆண்டு கிரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்குப் பிந்தைய ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன. 2022-ஆம் ஆண்டில், 200,000 ரஷ்ய துருப்புகள் யுக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடங்கின. இந்த போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இரு தரப்பிலும் சுமார் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். உலக நாடுகளுக்கு அறிவிக்காமல், ரஷ்யா மற்றொரு போரை நடத்தி வருவதாக நேட்டோ நம்புகிறது. அதை நேட்டோ ஒரு "கலப்புப் போர்" என்று குறிப்பிடுகிறது. யுக்ரேனுக்கு ராணுவ உதவிகளை வழங்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதே இந்த போரின் நோக்கம் ஆகும். எதிரிப்படை ஒரு அநாமதேய தாக்குதலை நடத்தும் போது, மிகவும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளில் அது புறக்கணிக்கப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். இதுவே 'கலப்பு போர்' அல்லது 'கிரே ஸோன் போர்' என்று அழைக்கப்படுகின்றது. இது போர் நடவடிக்கையாக கருதப்படும் அளவுக்கு தீவிரமானது அல்ல, ஆனால் எதிரிப்படைக்கு குறிப்பாக அவர்களின் உள் கட்டமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு தீவிரமானது. காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 12 வாரம், 15 சாட்சிகள்: சீமான் கைது செய்யப்படுவாரா? நடிகை வழக்கின் அடுத்தக் கட்டம் என்ன?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "அதிக திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் ஆழத்திற்கு சென்று இந்த கேபிள்களை சேதப்படுத்த முடியும். அதனை பழுது பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்", என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூடை (ருசி) சேர்ந்த ஆராய்ச்சியாளர் சித்தார்த் கௌஷல் பிபிசியிடம் தெரிவித்தார். நேட்டோவுடனான ஒரு மோதலில், நிலத்தில் உள்ள, கட்டமைப்புடன் சேர்த்து, கடலில் உள்ள உள் கட்டமைப்புக்கும் சேதம் விளைவிப்பது ரஷ்யாவுக்கு உத்தி ரீதியாக பலன் அளிக்கும். இதனால் மேற்குலகில் யுக்ரேனுக்கான மக்கள் ஆதரவு படிப்படியாக குறையும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ரஷ்யா மறுப்பு கடந்த ஆண்டில் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போலந்தில் உள்ள கொரியர் நிறுவனங்களின் பார்சல் பொட்டலங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் கலப்புப் போர் தாக்குதலுக்கான மற்ற எடுத்துக்காட்டாகும். இந்த சம்பவங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான விமானங்களை நாசப்படுத்துவதற்கான ஒத்திகை என்று போலந்து புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனர். இந்த நாச வேலைகளுக்குப் பின்னால் தாங்கள் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்வீடன் மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள சேமிப்புக் கிடங்குகள் மற்றும் ரயில் பாதைகள் மீதான பிற தாக்குதல்களுக்கு ரஷ்யா பொறுப்பாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகள் ரஷ்ய ராணுவத்தின் உளவுத்துறை யுக்ரேனை ஆதரிக்கும் நாடுகள் மீது அநாமதேய மற்றும் ரகசிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் முடிவெடுக்க வழிவகுக்கின்றன. இந்த தாக்குதல் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதால், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2017 ஆம் ஆண்டில் பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கியை மையமாக கொண்டு ஐரோப்பிய சிறப்பு மையம் என்ற அமைப்பை உருவாக்கின. சில நாடுகள் இந்த வகையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் காமினோ கவனாக் சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில் அவை "அவை மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன", என்றும் அவர் கூறினார். கடலுக்கடியில் உள்ள உள்கட்டமைப்புகளைப் பொருத்தவரை, எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டையும் அடையாளம் காண, நாடுகளுக்கு அவற்றின் சொந்த பிராந்தியத்தின் கடல் பரப்பில் என்ன நடக்கிறது என்பது பற்றிய உறுதியான புரிதல் தேவைப்படுகின்றது. "இந்த போரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்கு பிறகு, மற்ற நாடுகள் சிறப்பாக செயல்படுகின்றன", என்று காமினோ கவனாக் கூறினார். கடலுக்கடியில் ரஷ்யாவின் வலிமை என்ன? ரஷ்ய ராணுவத்தின் கட்டமைப்பு பல அடுக்குகளை கொண்டது என்று கௌஷல் விவரிக்கிறார். ஆழமற்ற நீரில், ஸ்பெட்ஸ்நாஸ் (சிறப்புப் படைகள்), ஜி.ஆர்.யு (ராணுவ புலனாய்வுத்துறை) மற்றும் ரஷ்ய கடற்படையிடமே பொறுப்பு இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், ஆழ்கடலில் தகவல் சேகரித்தல் மற்றும் நாச வேலைகளைத் திட்டமிடுதல் ஆகியவை கடலடி ஆராய்ச்சி இயக்குநரகம் (Underwater Research Directorate - GUGI) என்ற அமைப்பிடம் உள்ளது. இது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய அதிபர் புதினின் கீழ் நேரடியாக செயல்படுகிறது. இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தானின் 5 வீரர்கள் - இந்தியாவின் துருப்புச் சீட்டு எது?23 பிப்ரவரி 2025 சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இரு பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்22 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கடல் காற்றாலைகள் அல்லது கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களை நிலத்துடன் இணைக்கும் இடங்களைக் கண்டறிதல் போன்ற புலனாய்வு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக கடலின் மேற்பரப்பில் கப்பல்களை GUGI அமைப்பு பயன்படுத்துகிறது என்று கௌஷல் கூறுகிறார். "டைட்டானியம்-ஹல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட பல்வேறு வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவிடம் இருக்கின்றன. அவை அதிக கடல் ஆழத்திற்குச் செல்வதுடன், பல பணிகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்களைக் கொண்டுள்ளன", என்று கௌஷல் கூறுகிறார். இந்த கப்பல்கள் 3 பேர் கொண்ட குழுவினரால் இயக்கப்படுகின்றன. முன்னாள் கடற்படை உறுப்பினர்களாகவும், விண்வெளி வீரர்களைப் போல கடினமான பயிற்சியை மேற்கொண்டவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இந்த ஆழத்தில், கடலின் அடித்தளத்தில் என்ன வைக்கப்பட்டுள்ளது அல்லது அங்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் என்ன செய்கின்றன என்பதை கண்டறிவது அமெரிக்க கடற்படைக்கு கூட மிகவும் கடினம் ஆகும். இந்த கேபிள்களின் நாச வேலையை இறுதியில் "ஒரு தனியான நிகழ்வாக" பார்க்கக் கூடாது. மாறாக "தகவல் தொடர்பு மற்றும் உள் கட்டமைப்பை அச்சுறுத்தும் ரஷ்யாவின் விரிவான திட்டத்தின்" ஒரு அங்கமாகவே பார்க்க வேண்டும் என்று சாத்தம் ஹவுஸ் மையத்தில் ரஷ்ய நிபுணரும் எழுத்தாளருமான கெய்ர் கில்ஸ் கூறுகிறார். கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் தொலைத்தொடர்புகள் மீது ரஷ்யா செலுத்தும் முக்கியத்துவம் "தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான அதன் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது தகவல்கள் மீதான கட்டுப்பாடுகளாகவும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்". என்கிறார் அவர். டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா?21 பிப்ரவரி 2025 மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா?19 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள சமூகங்களை பிற தகவல்கள் கிடைக்க விடாமல் தனிமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதனால் அவர்கள் ரஷ்யாவிலிருந்து வரும் தகவல்களை மட்டுமே பெறுவார்கள். "இது கிரைமியாவை கைப்பற்றுவதில் கருவியாக இருந்ததால் இது ஒரு முக்கியமான நோக்கமாக பார்க்கப்படுகிறது", என்று கெய்ர் கில்ஸ் கூறுகிறார். உள் கட்டமைப்பு ரஷ்யா மற்றும் கடலுக்கடியில் இருக்கும் உள் கட்டமைப்புகளில் அதன் தலையீடு பற்றிய சந்தேகங்கள் பின்லாந்து அதிகாரிகளுக்கு மட்டும் வரவில்லை. 2024 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், ரஷ்ய கண்காணிப்புக் கப்பலான யான்டார் "பிரிட்டனின் முக்கிய கட்டமைப்புகள் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பதாக" தெரியவந்ததாக பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், யான்டாரின் நகர்வுகளை பிரிட்டன் கடற்படை கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. "புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கவும், பிரிட்டனின் கடலடியில் உள்ள உள் கட்டமைப்பை வரைபடமாக்கவும்" இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வை "வளர்ந்து வரும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு" என்று ஜான் ஹீலி விவரித்தார். பிரிட்டன் கடல்பரப்புக்கு அடியில் மட்டும் சுமார் 60 கேபிள்கள் இருக்கின்றன. அவை அதன் கடற்கரையில் இருந்து வெவ்வேறு பகுதிகளில் நிலத்தை அடைகின்றன. உடல் பருமன்: எடை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் - தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை20 பிப்ரவரி 2025 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டனுக்கு அருகே கடலுக்கடியில் உள்ள உள் கட்டமைப்புகள் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அது அந்நாட்டில் உள்ள பிரச்னைகளுடன் சேர்ந்து இன்னும் ஒரு பிரச்னையாக மாறும் என்று கெய்ர் கில்ஸ் கூறினார். லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், யான்டார் கப்பல் சம்பந்தப்பட்ட பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை "முற்றிலும் தவறானது" என்று விவரித்துள்ளது. இது "பால்டிக் மற்றும் வட கடல் பிராந்தியங்களில் பதற்றங்களை வேண்டுமென்றே தீவிரப்படுத்த" பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வரும் ரஷ்ய எதிர்ப்பின் விளைவு என்று அது கூறுகிறது. அப்பாவித்தனமான நம்பிக்கை இந்த ஆண்டு, தேசிய பாதுகாப்பு உத்திக்கான பிரிட்டனின் கூட்டுக் குழு, கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மீதான தாக்குதல்கள் அந்நாட்டை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த விசாரணையைத் தொடங்கியது. "ரஷ்யர்கள் ஏற்கனவே கடலுக்கு அடியில் செயல்படும் டிரோன்களை வைத்திருக்கலாம், கேபிள்கள் மற்றும் குழாய்கள் மீது தாக்குதல் நடத்த அவை உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் - அவை வரலாம் அல்லது வராமலும் போகலாம்," என்று எழுத்தாளரும் ரஷ்ய நிபுணருமான எட்வர்ட் லூகாஸ் கூறுகிறார். "ரஷ்யாவின் கண்காணிப்பு கப்பலான யான்டர், யாருக்கும் தெரியாத கடலின் அடியில் பல ஆண்டுகளாக என்ன இருக்கிறது என்பது குறித்து நோட்டமிட்டு வருகின்றது" என்றும் அவர் கூறுகிறார். "கடலடி கேபிள்கள் எதிரிப்படையின் இலக்காக மாறும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இப்போது பல தசாப்தங்களாக மெத்தனமாக இருந்ததன் பலனை அனுபவித்து வருகிறோம். கடலுக்கடியில் இருக்கும் நமது உள் கட்டமைப்புகளை சேதப்படுத்தினால், அதற்கு ரஷ்யா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று நாம் உணர்த்த வேண்டும்" என்றார் அவர். துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன?13 பிப்ரவரி 2025 பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?20 பிப்ரவரி 2025 பிரிட்டன், அதன் உள் கட்டமைப்பை நன்றாக வைத்துள்ளது, அந்நாடு பழுது பார்ப்பு பணிகளை மிக விரைவாக செய்ய முடியும் என்று கவானாக் கூறுகிறார். கூடுதலாக கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களின் வடிவமைப்பு, எப்போதாவது ஒரு கட்டத்தில் சேதமடையப் போகிறது, என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் ஒரு நாட்டின் தனிப்பட்ட கேபிள்களுக்கு ஏற்படும் சேதம் ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கிய போது இருந்த அதே தாக்கத்தை இப்போது ஏற்படுத்தாது என்று கில்ஸ் விவரிக்கிறார் ஏனென்றால், ஒரே நாடுகளை பல்வேறு வழிகளில் இணைக்கும் பல கேபிள்கள் இருக்கின்றன. பழுதுபார்க்கும் வலையமைப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்வதே இதன் குறிக்கோள் என்று கவானாக் கூறுகிறார். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஏன் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்?22 பிப்ரவரி 2025 வெடிக்கும் எரிமலைக்கு அருகில் செல்லும் சுற்றுலா பயணிகள் - எங்கே?22 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இது ஒரு அபாய எச்சரிக்கை இந்த விஷயத்தில் அந்நாட்டுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா கூறினாலும், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இந்த சம்பவங்கள் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தன. "எப்போதும் அச்சுறுத்தல்கள் இருக்கும். தற்போதைய சூழலில், அச்சுறுத்தல் விடுக்கும் நாடுகள் உண்மையிலேயே முயற்சி செய்து தற்போதைய சூழலில் என்ன நடவடிக்கைகள் வேலை செய்கிறது என்பதைப் பார்க்க அதிக வாய்ப்புகளை பெற்றதாக உணர்கிறார்கள்", என்று கில்ஸ் விளக்குகிறார். கலப்பு போர்முறை ரஷ்யாவிற்கு ஒரு பாடமாகவும் அமைகின்றது. "இதன் தாக்கம் என்ன என்பதை அவர்கள் பார்க்கிறார்கள், அவர்கள் தாக்குதல் நடத்திய நாடுகளின் பதில் என்ன, புலனாய்வுத் திறன், நீதியுடன் கூடிய செயல்முறை போன்றவற்றை அவர்கள் பார்க்கிறார்கள்." என்று அவர் கூறுகிறார். "இது கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களைப் பற்றியது மட்டுமல்ல, ரஷ்யாவில் இருந்து தொலைதூரத்தில் உள்ள மக்களையும் பாதிக்கும் வழிகளை பற்றியது" என்று கில்ஸ் கூறுகிறார். "இது பயணிகள் விமானங்களில் வெடிக்கும் பொருட்களை நிறுவுவது போன்றதாகும். இறுதியில், போர் அல்லது எச்சரிக்கை இல்லாமல் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. ஏனென்றால் ரஷ்யா அதன் விவகாரங்களை அவ்வாறுதான் செய்து வருகிறது", என்று அவர் குறிப்பிட்டார். கடலுக்கடியில் கேபிள்களை சேதப்படுத்தும் அச்சுறுத்தலை ஐரோப்பா எவ்வாறு கையாள்கிறது என்பது விளாதிமிர் புதினின் ரஷ்யாவை மேற்கு நாடுகள் சமாளிக்க முயற்சிக்கும் பல முனைகளில் ஒன்றாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdel71wy132o
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
Published By: DIGITAL DESK 2 01 MAR, 2025 | 03:59 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், நடைபெற உள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பாக தங்கள் மூவருடனும் கலந்துரையாடியது. இக்கலந்துரையாடல் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தங்களது கட்சிகளும் எமது கட்சியும் இணைந்து ஒன்றாகப் போட்டியிட்டது போல இந்தத் தேர்தலிலும் சில இடங்களிலாவது ஒன்றாக போட்டியிடுவது பற்றி ஆராய்வதற்கே ஆனது. இது சம்பந்தமாக கலந்துரையாட எதிர்வரும் 3ஆம் திகதியை செல்வம் அடைக்கலநாதன் உடன் நிர்ணயித்திருந்தோம். எனினும் அந்த முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது தாங்கள் எமது கட்சி யைத் தவிர்த்து வேறு ஒரு கூட்டணியை கடந்த 23 ஆம் திகதி உருவாக்கியமை ஏமாற்றம் அளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் அமைந்தது. இது எமக்கு தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியமை இயல்பானதும் தவிர்க்க முடியாதாதமாகும். நாம் இந்த முயற்சியை மேற்கொண்டது தனிய தேர்தலுக்காக அல்ல. எமது முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய இந்த நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே ஆகும் என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த முயற்சியை மேலும் தொடரவே விரும்புகிறேன் இதற்கான தங்களது இணக்கம் இருக்குமானால் நாம் தொடர்ந்து பேசலாம். அதேநேரம் நாம் தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் இணைந்து வடக்கு - கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் நாம் கைப்பற்றும் முகமாக தேர்தலுக்குப் பின் செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன் னரே ஏற்பாடு செய்தல். இதற்கும் தங்களது உடன்பாடு இருக்கும் என்றால் நாம் தொடர்ந்து பேசலாம். தங்களது துரித பதிலுக்கு நன்றி உடையவராவோம் - என்றுள்ளது. https://www.virakesari.lk/article/207990
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
ஆப்கானிஸ்தானுடனான போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறியது Published By: VISHNU 01 MAR, 2025 | 01:20 AM (நெவில் அன்தனி) லாகூர் கடாபி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டி சீரற்ற காலநிலை காரணமாக இடையில் கைவிடப்பட்டதால் பி குழுவிலிருந்து அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இதனை அடுத்து அவுஸ்திரேலியா 4 புள்ளிகளைப் பெற்று அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது. ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால், தென் ஆபிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாளைய போட்டி முடிவிலேயே ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறுமா இல்லையா என்பது தெரியவரும். பி குழுவில் இடம்பெறும் தென் ஆபிரிக்காவும் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 274 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 109 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. மழையினால் ஆட்டம் தடைப்பட்டால் டக்வேர்க் லூயிஸ் முறைமை அமுலுக்கு வரும் என்பதை அறிந்திருந்த அவுஸ்திரேலியா அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது. மெத்யூ ஷோர்ட் 15 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதல் விக்கெட்டில் 27 பந்துகளில் 44 ஓட்டங்களை ட்ரவிஸ் ஹெட்டுடன் பகிர்ந்தார். தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. ட்ரவிஸ் ஹெட் 40 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 59 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். மழை விட்ட போதிலும் மைதானம் ஈரலிப்பாக இருந்ததால் ஆட்டத்தைத் தொடர முடியாது எனத் தீர்மானித்த மத்தியஸ்தர்கள் இரவு 9.00 மணியளவில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது. சிதிக்குல்லா அத்தல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து ஆப்கானிஸ்தானை கௌரவமான நிலையில் இட்டனர். ஆனால் மழை பெய்ததால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. சிதிக்குல்லா அத்தல் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட இப்ராஹிம் ஸத்ரான் 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதி 20 ஓட்டங்களையும் பெற்றனர். ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கையில் 17 வைட்கள் உட்பட 37 உதிரிகள் அடங்கியிருந்தன. பந்துவீச்சில் பென் த்வார்ஷுய்ஸ் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/207957
-
அடுத்த கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் !
Published By: DIGITAL DESK 2 01 MAR, 2025 | 09:27 AM நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலரை உள்ளடக்கிய 4 ஆவது தவணைக்கான கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று வெள்ளிக்கிழமை (28) ஆராய்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் கடனுதவி 1.34 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கின்றது. https://www.virakesari.lk/article/207966
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் 'நேட்டோ' ராணுவ கூட்டணிக்கான நெருக்கடியின் அறிகுறியா? ஓர் அலசல்
பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,லாட்வியாவில் நேட்டோ பயிற்சியின் போது பயிற்சி பெறும் ஸ்வீடன் நாட்டு வீரர்கள் . கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெர்மி போவன் பதவி,சர்வதேச ஆசிரியர், பிபிசி செய்திகள் 36 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதத்திற்கு முன்பே டொனால்ட் டிரம்புக்கும் விளாதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்தது. முன்னதாக, ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்திருந்த அதிபர் டிரம்ப், யுக்ரேன் போரைத் தொடங்கியது அவர் தான் என்றும் தவறான தகவலைக் கூறினார். மேலும் ஜோ பைடனின் ஆட்சியில் வலுப்பெற்ற அமெரிக்க-யுக்ரேன் கூட்டணி தற்போது உடைந்துவிட்டது. இந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள முறிவு, ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு பெரிய நெருக்கடி உருவாகி வருவதையும் குறிக்கிறது. யுக்ரேன் மட்டுமின்றி, பிற ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் உறுதிப்பாடு குறித்து இன்னும் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழும். நேட்டோ கூட்டாளியின் மீதான தாக்குதலை அமெரிக்காவின் மீதான தாக்குதலாகக் கருதுவதாக 1949-இல் ஹாரி ட்ரூமன் அளித்த வாக்குறுதியை அதிபர் டிரம்ப் காப்பாற்றுவாரா என்பது மிகப்பெரிய கேள்வி. இந்த கவலைகள், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் வலுவான உறவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற டிரம்பின் தீர்மானத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. டிரம்ப் யுக்ரேனுக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்து, புதினுக்கு பெரிய சலுகைகளை வழங்கியுள்ளார். ஆனால் அவற்றின் விளைவுகளை யுக்ரேனியர்களே ஏற்க வேண்டும். யுக்ரேனின் பாதுகாப்பு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஐரோப்பியர்களும் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள். யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப் - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது? டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பு: யுக்ரேன் அதிபர் மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்கிய டிரம்ப் காஸா குறித்து ஏஐ வீடியோவை வெளியிட்ட டிரம்ப் - சமூக ஊடகங்களில் எழும் விவாதங்கள் என்ன? மறுபுறம், ரஷ்யாவுக்கு சலுகை வழங்கக் கூடாது என்ற ஜெலன்ஸ்கியின் வாதம் டிரம்பை கோபப்படுத்தியுள்ளது. ஜெலன்ஸ்கி கையெழுத்திட மறுத்தது, கனிம ஒப்பந்தத்தில் மட்டுமல்ல. ஏனென்றால், யுக்ரேனியர்கள் தங்களது தேசத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போரில் இருப்பதாக நம்புகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக புதின் எந்தவொரு வாக்குறுதிகளை அளித்தாலும், கட்டுப்பாடுகள் இல்லையெனில் அவர் அவற்றை மீறுவார் என்றும் யுக்ரேனியர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை தொடர்ந்து கேட்டு வருகிறார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலையிட்ட பிறகு, அந்தக் சந்திப்பில் மோதல் ஏற்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு ராஜ தந்திர பார்வையாளர் குறிப்பிட்டபடி, பொதுவெளியில் நடந்துள்ள இந்த மோதல் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் இப்போது எழுந்துள்ளன. அமெரிக்கா எதிர்பார்க்கும் வகையில் ஜெலன்ஸ்கியை செயல்பட வைக்க அல்லது அடுத்து என்ன நடந்தாலும் அவரையே குற்றம்சாட்டும் வகையிலான ஒரு குழப்ப நிலையை உருவாக்க செய்யப்பட்ட சூழ்ச்சியாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ராணுவ உதவி நிறுத்தி வைக்கப்பட்டாலும், யுக்ரேன் தொடர்ந்து போராடும். ஆனால், யுக்ரேன் எத்தனை காலத்திற்கு, எவ்வளவு திறம்படப் போராடும் என்பதே கேள்வி. அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் உதவி நிறுத்தப்பட்டால், யுக்ரேனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் யுக்ரேனுக்கு உதவ வேண்டிய அழுத்தமும் அதிகரிக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy87qgv7q89o
-
புதிய கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள்; மேலதிக செலவும் ஏற்பட்டுள்ளதாக முஜிபுர் எம்.பி குற்றச்சாட்டு
Published By: VISHNU 01 MAR, 2025 | 02:44 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்றும் தொடர்ந்து வருகிறது. கடந்த அரசாங்க காலத்தில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5மாதங்கள் கடந்துள்ளபோதும் இந்தப் பிரச்சினை தொடர்ந்து செல்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பாரிய முயற்சி மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை கடந்த 24 வருடங்களாக குறிப்பிட்ட ஒரு நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. எந்த கேள்வி கோரலும் இல்லாமலேயே இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. என்றாலும் கடந்த வருடம் மே மாதம் இலத்திரணியல் கடவுச்சீட்டு கொண்டுவர அப்போதைய அரசாங்கம் கேள்விக்கோரல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதில் 8மாதங்களில் 5மில்லியன் கடவுச்சீட்டு இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்கிறது. என்றாலும் குறித்த நிறுவனம் 5மில்லியன் கடவுச்சீட்டுக்களையும் 2025 ஜுன் மாதத்திலேயே வழங்க முடியும் என தெரிவித்திருந்தது. அரசாங்கம் தெரிவித்துள்ள காலப்பகுதியில் 71/2 இலட்சம் வழங்க முடியும் என குறித்த நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன் பிரகாரம் அமைச்சரவையி்ன் அனுமதியுடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை காலமும் கடவுச்சீட்டு ஒன்றுக்கு அரசாங்கத்துக்கு 1926 ரூபாவே செலவாகியது.அதேநேரம் இதற்கு முன்னர் இருந்த நிறுவனமே கடவுச்சீட்டில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய பக்கத்தை தயாரித்து வருகிறது. அதற்காக அரசாங்கம் 1.45 டொலர் வழங்குகிறது. கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு புதிய நிறுவனத்துக்கு 4.97 டொலரை வழங்குகிறது.அப்படியானால் எமது கடவுச்சீட்டு தயாரிப்பை இரண்டு கம்பனிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் அரசாங்கம் 53 சதம் டொலரை மேலதிகமாக செலுத்தி வருகிறது. அதாவது 7அரை இலட்சம் கடவுச்சீட்டுகளுக்கு அரசாங்கம் மேலதிகமாக 3இலட்சத்தி 97ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டி இருக்கிறது. அதாவது 1190 இலட்சம் அரசாங்கத்துக்கு நட்டமாகிறது. அத்துடன் ஆரம்ப காலத்தில் சிவப்பு நிர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நாங்கள் 20ஆயிரம் ரூபா செலுத்தி வந்தோம். அதில்64 பக்கங்கள் இருக்கின்றன. ஆனால் நீல நிரத்தில் விநியோகிக்கப்படும் புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களே இருக்கின்றன. 16 பக்கங்கள் குறைவு. அதற்கும் மக்கள் 20ஆயிரம் ரூபா செலுத்த வேண்டி இருக்கிறது. அதன் பிரகாரம் எமது மக்கள் புதிய கடவுச்சீட்டுக்காக 6697ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த பிரச்சினைக்கும் அரசாங்கத்தினால் தீர்க்க முடியாமல் இருக்கிறது. இந்தியாவில் கடவுச்சீட்டு ஒன்றை விநியோகிக்க 13,560 ரூபா பா அறவிடப்படுகிறது. அதில் 60 பக்கங்கள் இருக்கின்றன. பங்களாதேஷில் இலத்திரணியல் கடவுச்சீட்டே விநியோகிக்கப்படுகின்றன. அதில் 65 பக்கங்கள் இருக்கின்றன. 10 வருடம் செல்லுபடி காலம். 3,885 ரூபா அறவிடப்படுகிறது. பாகிஸ்தானில் 12ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது. 100 பக்கங்கள் இருக்கின்றன. 5 வருட செல்லுபடியான காலம் இருக்கிறது. ஒருநாள் சேவைக்கே இவ்வாறு அறவிடப்படுகிறது. எமது கடவுச்சீடே வெளிநாடுகளில் எமது நாட்டின் கெளரவம் தங்கியிருக்கிறது. ஆனால் புதிய கடவுச்சீட்டில் 30 மற்றும் 31ஆம் பக்கங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களில் எழுத்து பிழை இருக்கிறது. இதனைக்கூட அவதானிக்காமல் இந்த கடவுச்சீட்டு அச்சிடப்பட்டிருக்கிறது. பழைய கடவுச்சீட்டில் முதலாம் பக்கத்தில் பாதுகாப்பு இலக்கம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது அச்சிடப்படும்போதே அந்த இலக்கம் அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் புதிய கடவுச்சீட்டில் அந்த பாதுகாப்பு இலக்கம் கடவுச்சீட்டின் தனிப்பட்ட தகவல் அடங்கி இருக்கும் பக்கத்திலேயே இருக்கிறது. அதனால் குறித்த பக்கத்தை மாற்றியமைத்து யாருக்கு வேண்டுமானாலும் மோசடிகளில் ஈடுபட இடமிருக்கிறது. இது பாரிய பிரச்சினை. இதுதொடர்பில் யாராவது நீதிமன்றம் சென்றால், அரசாங்கத்துக்கு இந்த கடவுச்சீட்டுக்களை நீக்க வேண்டிவரும். இவ்வாறு இன்னும் பல குறைபாடுகள் புதிய கடவுச்சீட்டில் காணப்படுகின்றன. கடந்த அரசாங்கம்தான் இந்தனை மேற்கொண்டாலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5மாதமாகியும் இந்த தவறிகளை கண்டறிந்து திருத்த முடியாமல் போயிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/207963
-
ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!
ஜனாதிபதி அநுரவின் வெளிநாட்டுப்பயண செலவுக்குறைப்பை கேள்விக்குள்ளாக்குபவர்கள் மஹிந்தவின் செலவினத்தை பேசுவதில்லை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Published By: VISHNU 01 MAR, 2025 | 02:38 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்காக ஜனாதிபதி செயலகம் விமானச்சீட்டு உட்பட இதர தேவைகளுக்காக 12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை செலவு செய்தது. சீனா, துபாய் ஆகிய நாடுகளுக்காக 5 இலட்சத்து 8,8571 ரூபா செலவிப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்குமான விமான பயணச்சீட்டுக்கான செலவுகளை அந்நாடுகளே பொறுப்பெற்றன. ஜனாதிபதியின் செலவு குறைப்பே கேள்விக்குள்ளாக்குபவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் 3,572 மில்லியன் ரூபாவை கேள்விக்குள்ளாக்கவில்லை என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணம் பற்றி தற்போது பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இறுதி பதவி காலத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நான்காண்டு பதவி காலத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்காக 384 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 126 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 533 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் ஜனாதிபதி செயலகம் செலவழித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக இதுவரையில் 1.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி எவ்வாறு குறைந்த விலையில் மூன்று நாடுகளுக்கு சென்றார், விமானத்தில் தொங்கிக் கொண்டு சென்றாரா என்று ஒருசிலர் கேள்விக்கேட்கிறார்கள். ஆனால் 3,572 மில்லியன் ரூபாய் செலவழித்த மஹிந்த ராஜபக்ஷ பற்றி எவரும் கேள்வியெழுப்பவில்லை. ஏனெனில் அனைவரும் நண்பர்களே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு முதலாவதாக அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்தார். விமான பயணச்சீட்டு உட்பட இதர செலவுகளுக்காக ஜனாதிபதி செயலகம் மொத்தமாக 12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை செலவழித்துள்ளது. அதேபோல் ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு சென்றார். விமானபயணச் சீட்டுக்கான செலவை சீன அரசாங்கமே பொறுப்பேற்றிருந்தது. ஜனாதிபதி செயலகம் 3 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாவை செலவழித்தது. அதேபோல் இந்த மாதம் துபாய்க்கு சென்றிருந்தார். அதற்கான விமான பயணச்சீட்டுக்கான செலவை துபாய் அரசாங்கம் ஏற்றிருந்தது. ஜனாதிபதி செயலகம் 2 இலட்சத்து 97,791 ரூபாவையே செலவு செய்தது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களை போன்று குடும்ப உறுப்பினர்களுடனும், பரிவாரங்களுடனும் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. இவ்வாறான விஜயத்தின் போது நாள் கொடுப்பனவு என்றதொரு தொகை கிடைக்கப்பெறும். சீன விஜயத்தின்போது கிடைக்கப்பெற்ற 2,055 டொலரையும், துபாய் விஜயத்தின் போது கிடைக்கப்பெற்ற 960 டொலரையும் ஜனாதிபதி செயலகத்துக்கு ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கிடைக்கப்பெற்ற நாள் கொடுப்பனவு டொலரை ஜனாதிபதி செயலகத்துக்கு ஒப்படைத்தாரா என்பதை தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஆராய வேண்டும். மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்து, அட்டைப்பூச்சிகளை போன்று வாழ்ந்தவர்கள் ஜனாதிபதியின் செலவு குறைப்புக்களை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இவர்களின் அரசியல் கலாசாரம் அவ்வாறானதே என்றார். https://www.virakesari.lk/article/207962
-
‘1,131,818 வழக்குகள் நிலுவையில் உள்ளன
நீதிமன்றக் கட்டமைப்புக்குள் 11,31,818 வழக்குகள் நிலுவையில்; நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அவதானம் Published By: VISHNU 01 MAR, 2025 | 02:33 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நீதிமன்றக் கட்டமைப்பில் 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல்நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும், மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வழக்கு விசாரணைகளை நெறிப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் நீதிபதிகளுக்கு பயிற்சியளிக்கும் செயற்றிட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை நீதிபதிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். பத்தாவது பாராளுமன்றத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு முதல் தடவையாக அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தத் தகவல்கள் முன்வைக்கப்பட்டன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகள் தொடர்பில் பாரிய காலதாமதம் இருப்பதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் பிரிவுகளிலிருந்து கிடைக்கும் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவில் 70 அரச சட்டத்தரணிகளே இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும், ஒதுக்கப்பட்ட வழக்குகளைக் கையாள ஒரு அரசாங்க சட்டத்தரணி பல வருட அனுபவமும் நிபுணத்துவமும் இருக்கவேண்டும் என்றும், சேவை மூப்பு ஒரு முக்கிய காரணியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் வகிபாகம் மற்றும் காலதாமதம் தொடர்பில் சில காலங்களாகப்பேசப்பட்டு வருவதாகவும், திணைக்களத்தில் உள்ள சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். https://www.virakesari.lk/article/207961
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 1 மார்ச் 2025, 03:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், பி பிரிவில் ஆஸ்திரேலியா தவிர, அரையிறுதிக்கு முன்னேறும் இன்னொரு அணி எது என்பதற்கான கோதாவில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இருக்கின்றன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபையில் நடக்கின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும் எந்த அணி முதலிடம் பெறுவது என்பதில் இன்னும் போட்டி நீடிக்கிறது. பி பிரிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பதில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து போட்டித் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. அதேசமயம், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா ஆட்டத்தின் முடிவில்தான் தெரியும். ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முழுமையாக நடந்திருந்தால் உறுதியான நிலை கிடைத்திருக்கும். ஆனால், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி தரப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால், தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியும் 3 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட்டில் தென் ஆப்ரிக்க அணியைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது. ஜெலன்ஸ்கியை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப் - என்ன நடந்தது? இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு இந்தியாவிடம் தோல்வி - பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? லாகூரில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 274 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேரத்திருந்த போது மழை குறுக்கிட்டது. டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நீண்ட நேரமாகியும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மழை நின்றபின் போட்டியை நடத்தும் சாத்தியங்கள் குறித்து நடுவர்கள் பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர். ஆனால், மைதானத்தில் மழைநீர் வடியவில்லை என்பதால், ஆட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, போட்டி ரத்து கைவிடப்படுவதாக போட்டி நடுவர் அறிவித்தார். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவுக்கு என்ன வாய்ப்பு? தென் ஆப்ரிக்க அணிக்கு பி பிரிவில் இங்கிலாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் மட்டும் இருக்கிறது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், 5 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்வதுடன் பி பிரிவில் முதலிடத்தையும் தென் ஆப்ரிக்கா பிடிக்கும். தோல்வி அடைந்தாலும் மோசமான தோல்வியாக இல்லாமல் இருந்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு தென் ஆப்ரிக்காவுக்கு உண்டு. ஒருவேளை இங்கிலாந்து - தென்ஆப்ரிக்க ஆட்டமும் மழையால் ரத்தானால், தென் ஆப்ரிக்க அணி 4 புள்ளிகள் மற்றும் வலுவான நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி முன்னேறும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆப்கானிஸ்தானுக்கு நூலிழை வாய்ப்பு பி பிரிவில் 3 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி -0.99 நிகர ரன்ரேட்டுடன் 3வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல வேண்டுமானால், அது இங்கிலாந்து அணியின் கரங்களில்தான் இருக்கிறது. அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 301 ரன்களை சேஸிங் செய்யும் போது, 207 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் தென் ஆப்ரிக்க அணி நிர்ணயிக்கும் 300 ரன்கள் இலக்கை 12 ஓவர்களுக்குள் சேஸிங் செய்ய வேண்டும். இந்தியா அரையிறுதிக்கு தகுதி, பாகிஸ்தான் வெளியேற்றம்: நியூசிலாந்து - வங்கதேசம் ஆட்டத்தில் என்ன நடந்தது?25 பிப்ரவரி 2025 சச்சின் சாதனை தகர்ந்தது: ஷோயிப் அக்தர் வார்த்தைகளை நிஜமாக்கிய 'சேஸிங் மாஸ்டர்'24 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆகவே, ஏதேனும் ஆச்சர்யம் நிகழ்ந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது தற்போதைய நிலை. இல்லாவிட்டால் தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். பி பிரிவில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏ பிரிவைப் பொருத்தவரை, இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டன. எனினும், அந்த இரு அணிகளும் மோதும் போட்டிக்குப் பிறகு ஏ பிரிவில் எந்த அணி முதலிடம் என்பது தெரியவரும் . அதன் பிறகே, அரையிறுதியில் எந்த அணி, எந்த அணியுடன் மோதும் என்ற விவரம் தெரியவரும். https://www.bbc.com/tamil/articles/c5y0ll3xye7o
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தயார் – ஜனாதிபதி
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க Published By: VISHNU 01 MAR, 2025 | 04:16 AM புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமோ, பொதுமக்கள் கிளர்ச்சியை உருவாக்குவதன் மூலமோ, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காணும் கனவுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். தற்போதைய அரசாங்கம் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது என்றும், முடிந்தால் தற்போதைய அரசாங்கத்தின் நாகரிகத்தை மிஞ்சிச் செல்லுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சவால் விடுத்தார். அவ்வாறு இல்லாமல் பழைய அரசியலிலே இருந்தால் அரசியலை விட்டு விலகுவதை தடுக்க முடியாதெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். பாதாள உலகின் குற்ற குழுக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினரினதும் ஆசிர்வாதம் கிடைக்காதெனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். இலங்கை இராணுவத்தையும் பொலிஸையும் தொழில்சார்புடைய இராணுவமாகவும் பொலிஸாகவும் மாற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, பாதுகாப்பு துறையின் எந்தவொரு இடமாற்றத்தையும் நட்பு மற்றும் அரசியல் அடிப்படையில் செய்யப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு ஏழு தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் நியமனங்களை வழங்குவதால் புதிய பயணத்தை செல்ல முடியாது என்பதால் புதியவர்களுக்கு நியமனங்கள் வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நபரொருவருக்கு பக்கச் சார்பான இராணுவத்திற்கு பதிலாக நாட்டுக்கு சார்பான இராணுவம் ஒன்றை உருவாக்கவும் தொழில்சார்பு தன்மையை மேம்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். காலத்தால் மறைந்திருக்கும் குற்றச்செயல்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் எடுக்குமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு துறையின் கட்மைப்பின் மீதான நம்பிகையின் அடிப்படையிலேயே ஒழுக்கம் கட்டியெழுப்பப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுக்கயீனத்தின் பாதாளம் வரையில் சென்றுள்ள இந்த நாட்டை மீண்டும் ஒழுக்கத்தை நோக்கி கொண்டுச் செல்ல தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் எதிர்க்கட்சியின் கனவு தற்போது முற்றுப்பெற்றுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு தொடர்பில் நெருக்கடியிருப்பதாக காண்பித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் எதிர்கட்சி தற்போது இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறினார். இம்மாதத்தில் நடந்த ஐந்து குற்றச் செயல்களை விசாரணை செய்யும்போது ஐந்து குழுக்களினால் அந்த குற்றச் செயல்கள் செய்யப்பட்டுள்ளதெனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது தமது பக்கம் விசாரணைகள் வருவதை குற்றச் செயல்களை செய்வோர் அறிந்துகொள்வதாகவும், அவ்வாறு பல குற்றக் குழுக்கள் ஒரே சமயத்தில் இயங்குவது சூழ்ச்சியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சூழ்ச்சியை அறிந்துகொண்டு அதனை முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் சூழ்ச்சிகளால் ஆட்சி மாற்றம் செய்த காலம் முடிந்துவிட்டதாகவும், ஒழுக்கத்தினால் அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகார தரப்பை குற்ற குழுக்கள் அற்றதாக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு துறையினரின் வெளிநாட்டு பயிற்சிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமானப்படை மற்றும் கடற்படைக்கு அவசியமான ஊர்திகளை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், பொலிஸ் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், விமானப்டைக்கும் பொலிஸூக்கும் தலா 10,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய இம்முறை வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/207964
-
மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப் - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மைரோஸ்லாவா பெட்ஸா மற்றும் டேனியல் விட்டென்பர்க் பதவி, பிபிசி யுக்ரேனியன், ஓவல் மாளிகை 1 மார்ச் 2025, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் ஏற்பாடுகளுடன் ஒரு வழக்கமான நாளாக தொடங்கியது. யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெஸ்ட் விங் வாசலில் மரியாதையுடன் வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். யுக்ரேன் ஊடகக் குழுவில் நாங்கள் ஓவல் அலுவலகத்தில் இருந்தோம். முன்பே திட்டமிடப்பட்டிருந்த வழக்கமான சம்பிரதாயங்களையும் சுமார் அரை மணி நேர கண்ணியமான பேச்சையும் கண்டோம். ஜெலன்ஸ்கி டிரம்பிற்கு யுக்ரேனிய குத்துச்சண்டை வீரர் ஒலெக்சாண்டர் உசிக்கின் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வழங்கினார். ஜெலன்ஸ்கியின் உடையை டிரம்ப் பாராட்டினார். இதுவரை, எல்லாமே இராஜ தந்திர ரீதியில் அமைதியாக நகர்ந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறியது. அன்பான தொனி கோபமாகவும் குழப்பமாகவும் மாறியது. உரத்த குரல்களையும், கோபம் கொப்பளிக்கும் கண்களையும், எதிர்பார்ப்புகளுடன் இருந்த முகத்தையும் உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் படம் பிடித்தன. கோல்டன் கார்டு விசா: கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா? டிரம்ப் முன்மொழிவது என்ன? தாலிபன் அரசு காபூல் மக்களைக் கண்காணிக்க அவர்களிடமே பணம் கேட்டு நிர்பந்திக்கிறதா? உண்மை என்ன? சிரியா: பஷர்-அல்-அசத் வீழ்ச்சிக்கு பிறகும் குர்து மக்கள் தொடர்ந்து போரிடுவது ஏன்? உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் முன்பாகவே, அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் யுக்ரேன் அதிபரை கண்டித்தனர், யுக்ரேனின் போர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று அவர்கள் இருவரும் குற்றம் சாட்டினர். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், போரை ராஜ தந்திர நகர்வுகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஜெலன்ஸ்கியிடம் கூறிய போது பதற்றம் அதிகரித்தது. எப்படிப்பட்ட ராஜ தந்திரம்? என்று ஜெலன்ஸ்கி கேட்டார். ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்பாகவே வாதிடுவது அவமரியாதை என்று யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறினார். டிரம்பின் தலைமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுததினார். Play video, "யுக்ரேனிய - அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு: வார்த்தைப் போரில் இறங்கிய இரு நாட்டுத் தலைவர்கள்!", கால அளவு 1,24 01:24 காணொளிக் குறிப்பு,யுக்ரேனிய - அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு: வார்த்தைப் போரில் இறங்கிய இரு நாட்டுத் தலைவர்கள்! அறையில் இருந்த பத்திரிகையாளர்கள் ஒரு அசாதாரண நிகழ்வை தொடர்ந்து அதிர்ச்சி மேலிட பார்த்துக் கொண்டிருந்தனர். "நீங்கள் போதும் போதும் எனும் அளவுக்கு பேசிவிட்டீர்கள். நீங்கள் இதில் வெல்லவில்லை," என்று ஒரு கட்டத்தில் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார். "நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து நீடித்திருக்க உங்களிடம் ஏதும் இல்லை." என்றார் டிரம்ப். "நான் விளையாடவில்லை," ஜெலன்ஸ்கி பதிலளித்தார். "நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே. நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்" என்றார் ஜெலன்ஸ்கி. "நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் விளையாடுகிறீர்கள்," என்று டிரம்ப் பதிலளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "நீங்கள் செய்வது நாட்டிற்கு, இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது." என்றார் டிரம்ப். "இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறையாவது 'நன்றி' என்று சொன்னீர்களா? இல்லை" என்று வான்ஸ் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அங்கே சூழல் முற்றிலுமாக மாறியிருந்தது. இதுபோன்ற எதையும் நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த சக ஊடக நண்பர்கள் எங்களிடம் தெரிவித்தனர். "வெள்ளை மாளிகையில் இதுபோன்ற ஒரு காட்சியை கற்பனை செய்து பார்க்கவே முடியாது," என்று ஒருவர் என்னிடம் கூறினார். செய்தியாளர்கள் ஓவல் அலுவலகத்தை விட்டு வெளியேறியதும், பலர் அதிர்ச்சியில் அசையாமல் நின்றிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தலைவர்களின் சந்திப்பில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை முழுமையாக வெள்ளை மாளிகையில் உள்ள பத்திரிகையாளர் அறையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு குழப்பம் ஏற்பட்டது. திட்டமிடப்பட்டபடி, செய்தியாளர் சந்திப்பு நடக்குமா அல்லது அமெரிக்காவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே கனிம வளங்கள் தொடர்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது குறித்து உடனடி கேள்விகள் எழுந்தன. சாம்பியன்ஸ் டிராபி: துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியா பயனடைகிறதா?27 பிப்ரவரி 2025 ஆப்கானிஸ்தான்: 90,000 கேமராக்கள் மூலம் காபூல் மக்களைக் கண்காணிக்கும் தாலிபன்கள்28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சில நிமிடங்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் ஜெலன்ஸ்கி "அமைதிக்குத் தயாராக இருக்கும் போது திரும்பி வரலாம்" என்று பதிவிட்டார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. ஜெலன்ஸ்கி வெளியே வந்து, அங்கே காத்திருந்த ஒரு எஸ்.யூ.வி. காரில் ஏறிய சிறிது நேரத்திலேயே, அவரது தூதர் அவரை பின்தொடர்ந்தார். உலகம் ஒரு அசாதாரண தருணத்தை ஜீரணிக்கத் தொடங்கியிருந்த போது அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். முழு வீச்சிலான ஒரு வாக்குவாதம் நடந்துவிட்ட போதிலும், விரைவிலோ அல்லது சற்று கால தாமதமாகவோ ஒரு கனிம ஒப்பந்தத்திற்கான சாத்தியம் இருக்கவே செய்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஜெலன்ஸ்கியின் இந்த அமெரிக்க வருகை முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக நினைவுகூரப்படும். டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பு: யுக்ரேன் அதிபர் மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்கிய டிரம்ப்28 பிப்ரவரி 2025 உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு நடக்கின்றன என்பதை உலகம் நேரடியாகவே கண்டது. அவை கடினமானவை, உணர்ச்சிப்பூர்வமானவை மற்றும் பதற்றமானவை. இது இரு தரப்பினருக்குமே கடினமான பேச்சுவார்த்தை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஜெலன்ஸ்கி பரிசளித்த யுக்ரேனிய குத்துச்சண்டை வீரர் ஒலெக்சாண்டர் உசிக்கின் பெல்ட் நிச்சயமாக அங்கிருந்த பதற்றமான சூழலை மாற்றவில்லை. வெள்ளை மாளிகையில் நடந்த இந்த நேரடி மோதலுக்குப் பிறகு, யுக்ரேன் போருக்கும், ஜெலன்ஸ்கியின் சொந்த எதிர்காலத்திற்கும் இது என்ன அர்த்தம் தருகிறது என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. https://www.bbc.com/tamil/articles/cwygnn10xq2o
-
பதற்றம் வேண்டாம்! எரிபொளுருக்கு தட்டுப்பாடு ஏற்படாது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
28 FEB, 2025 | 09:53 PM நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லையெனவும், எரிபொருள் போக்குவரத்து செயற்பாடுகள் வழமையான முறையில் இடம்பெறுவதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தலைவர் குறிப்பிட்டார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207955
-
சென்னை நீர்நிலைகளில் நச்சுக் கழிவுகளா? ஐஐடி ஆய்வும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மறுப்பும்
படக்குறிப்பு,அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை நீர்நிலைகளில் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பி.எஃப்.ஏ.எஸ் எனப்படும் நிரந்தர ரசாயனங்கள், அனுமதிக்கத்தக்க அளவைவிட அதிகளவில் இருப்பதாக, சென்னை ஐஐடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆய்வறிக்கை ஒன்றை சர்வதேச ஆய்விதழில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை நீர்நிலைகளின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த ரசாயனங்கள் குறிப்பிடத்தக்க அளவு இல்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது. ஐஐடி நிறுவனம் தன் ஆய்வில் இத்தகைய ரசாயனங்கள் புற்றுநோய் வரையிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள நிலையில், அந்த ஆய்வை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது. ஆனால், இந்த ஆய்வை மேற்கொண்ட ஐஐடி ஆய்வுக்குழுவில் ஒருவரான பேராசிரியர் இந்துமதி பிபிசி தமிழிடம் பேசியபோது, "நாங்கள் எந்தெந்த இடங்களில் ஆய்வை மேற்கொண்டோமோ அதே இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுகளை மேற்கொண்டால் மட்டுமே சரியாக இருக்கும்" என்றார். நீர்நிலைகளில் பி.எஃப்.ஏ.எஸ் மாசுபாடு இருப்பதாகக் கூறும் ஐஐடி ஆய்வு முடிவுகளை மறுத்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியம், அதே நேரம் இரும்பு, ஃப்ளோரைடு போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் கண்ணன். குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி? பாலைவன பூமியில் 850 அடி ஆழத்தில் இருந்து வெடித்துக் கிளம்பிய நீரூற்று - வேத, புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதியா? அமேசானின் இந்த 'கொதிக்கும் நதி' சூடாவது எப்படி? மனித குலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன? பி.எஃப்.ஏ.எஸ் என்பது என்ன? பாலிஃப்ளோரோல்கைல் சப்ஸ்டன்சஸ் (polyfluoroalkyl substances) என்பதன் சுருக்கமே பி.எஃப்.ஏ.எஸ் . கரிம ரசாயனங்களை இது உள்ளடக்கியுள்ளது. இந்த ரசாயனம், நீரில் எளிதில் உடையாது, அழியாது என்பதால், 'நிரந்தர ரசாயனங்கள்' (Forever Chemicals) என இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரசாயனம் நீரில் எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதை நிர்ணயிப்பதற்கான தர நிர்ணய அளவீடு இந்தியாவில் இல்லை. "பி.எஃப்.ஏ.எஸ்-ஐ பொறுத்தவரை இந்தியாவில் அதற்கான தர நிர்ணயம் இல்லை. அமெரிக்கா அல்லது உலக சுகாதார மையம் என்ன வகுத்துள்ளதோ அதைத்தான் பின்பற்ற வேண்டியுள்ளது," என்கிறார், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் பிரபாகரன் வீரஅரசு. இந்த ரசாயனங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நான்-ஸ்டிக் பாத்திரங்கள், சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தும் பொருட்கள், ரெயின்கோட், உணவு பேக்கேஜிங் செய்வதற்கான பொருட்கள், ஏரோஸ்பேஸ், வாகனம், கட்டுமானம் மின் உபகரணங்கள் போன்ற துறைகளின் உற்பத்திகள் ஆகியவற்றில் இந்த ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. "இந்த ரசாயனங்கள், பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளுடன் நீர்நிலைகளில் கலந்து நீரை மாசுப்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள், சுத்திகரிக்கப்பட்ட நீரிலும் கண்டறியப்பட்டுள்ளன" என்று ஐஐடி ஆய்வு கூறுகிறது. ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா - டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் பேசியது என்ன?25 பிப்ரவரி 2025 கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்26 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,MADRAS IIT படக்குறிப்பு,சென்னை ஐஐடியின் இந்த ஆய்வு கடந்தாண்டு ஏப்ரலில் வெளியானது ஆய்வில் தெரியவந்தது என்ன? சென்னை ஐஐடி, சென்னை நீர்நிலைகளில் நடத்திய இந்த ஆய்வின் அறிக்கை கடந்தாண்டு ஏப்ரல் மாதம், என்விரான்மென்டல் சயின்சஸ் யூரோப் ' எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியானது. சென்னையின் முக்கிய நீர்நிலைகளான அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி போன்ற நீர்நிலைகளில் மாதிரிகளை எடுத்து ஐஐடி சோதித்தது. இதுதவிர, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பெருங்குடி குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள நீர் மாதிரிகளையும் பரிசோதித்தது. அந்த மாதிரிகளில், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) குறிப்பிடும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனங்கள் மிக அதிகமாக இருப்பதாக தெரியவந்தது என ஐஐடி குறிப்பிட்டுள்ளது. நெல்லை சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில் ஓட்டுநர் பற்றாக்குறை காரணமா? ரயில்வே துறை சொல்வது என்ன?25 பிப்ரவரி 2025 செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா?25 பிப்ரவரி 2025 சுகாதார பாதிப்புகள் இந்த ரசாயனங்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பேசிய சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர், "இதனால், சரும நோய்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பிராங்கடீஸ், சளி, இருமல், வீசிங் உள்ளிட்டவை ஏற்படலாம். எந்த ரசாயனமாக இருந்தாலும் நீண்ட காலத்துக்கு நுகரும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிரந்தரமான ரசாயனங்கள் இவை. ஃபுளோரோ கலந்திருக்கும் எந்த ரசாயனமாக இருந்தாலும் சரும நோய் முதல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும். பிசிஓடி, ஹார்மோன் பிரச்னைகளை பெண்களுக்கு ஏற்படுத்தும்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது என்ன? சென்னையின் நீர்நிலைகளில் குறிப்பிடத்தக்க அளவு பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனங்கள் இல்லை என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்தது. அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் 30 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அளவிடத்தக்க அளவை விட குறைவாகவே அந்த ரசாயனங்கள் இருப்பதாக வாரியம் (Below Limit of Quantification) தெரிவித்துள்ளது. எனினும், சில பகுதிகளில், இரும்பு மற்றும் ஃபுளோரைடு ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இருங்காட்டுகோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?26 பிப்ரவரி 2025 டிரம்பின் முடிவுகள் அமெரிக்கா - அரபு நாடுகளுக்கு இடையே இந்தியாவை சிக்க வைத்துவிட்டதா?25 பிப்ரவரி 2025 தண்ணீரில் இருக்கக்கூடிய இத்தகைய ரசாயனங்கள் குறித்து பேசிய 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு, "அடிப்படையான சில ரசாயனங்களின் அளவுகளை மட்டுமே பரிசோதிப்பார்கள். கன உலோகங்களை தொடர்ச்சியாக பரிசோதனை செய்ய மாட்டார்கள். எனவே, இத்தகைய பரிசோதனைகளை வைத்து குடிநீர் பாதுகாப்பானது என சொல்ல முடியாது. இந்த ரசாயனங்கள் குறைவான அளவில் இருந்தாலும் பிரச்னைதான்" என்றார். பி.எஃப்.ஏ.எஸ் போன்ற ரசாயனங்கள் வீட்டு உபயோக பொருட்களில் இருந்தாலும் அவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்தே அவை அதிகம் கலப்பதாக கூறுகிறார் அவர். "தொழிற்சாலைகளில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை ஆய்வுக்கு சென்றாலும் இணையம் வாயிலாகவும் கண்காணித்தாலும் விதி மீறல்கள் நடைபெறுகின்றன. பாதுகாப்பாக சேமித்து வைக்காதது, மழை காலங்களில் திறந்துவிடுவது போன்றவை நீர்நிலைகளில் அவை கலப்பதற்கான காரணங்களாக உள்ளன." என்கிறார், பிரபாகரன். பட மூலாதாரம்,PRABHA PK/FACEBOOK படக்குறிப்பு,பாதுகாப்பாக சேமித்து வைக்காதது, மழை காலங்களில் திறந்துவிடுவது போன்றவை முக்கிய காரணங்கள் என்கிறார், பிரபாகரன் இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் கண்ணன், "எந்தவொரு கழிவும் நீர்நிலைகளில் கலக்காமல் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தொழிற்சாலைகள் Zero liquid discharge முறை மூலம் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும், இல்லையெனில், கழிவுகளை அவர்களின் ஆலைகளிலேயே வைத்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறோம்" என தெரிவித்தார். வீடுகளிலிருந்து உருவாகும் கழிவுநீரை தடுத்து அதை சுத்திகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐஐடி மேற்கொண்ட ஆய்வில் சில இடங்களில் குறைவான செறிவுடன் ரசாயனங்கள் இருக்கலாம் என்றும் இரண்டுக்குமான முடிவுகளில் சில வித்தியாசங்கள் இருக்கும் என்றும் கூறினார். எனினும், தாங்கள் ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் மாதிரிகளை எடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கிறார், ஐஐடி பேராசிரியர் இந்துமதி. "எந்தெந்த இடங்களில் மாதிரிகளை எடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதித்தது என்பது தெரியவில்லை. நாங்கள் மாதிரிகளை எடுத்த இடங்களை பரிசோதித்து ஒப்பிட்டார்களா என்பது தெரியவில்லை. ஒரேமாதிரியான ஆய்வு முறைமைகள், அதிஉயர் உபகரணங்களை பயன்படுத்தியிருந்தால் மட்டுமே சரியான தரவுகள் கிடைக்கும். மற்ற கருவிகள், குறைந்தளவிலான அளவீடுகளை காட்டாது, அதிகமாக உள்ளவற்றை மட்டும்தான் காண்பிக்கும். அவற்றை, அளவிட முடியாத அளவில் இருப்பதாகக் காட்டிவிடும்" என்றார். இதற்கு பதிலளித்த கண்ணன், "அதி உயர் கருவிகளையே நாங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தினோம். வருங்காலத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து ஒரே இடங்களில் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய தயாராக இருக்கிறோம்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9q4jjxdj9do
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ஆஜராகும் சீமான்; வளசரவாக்கத்தில் குவிந்த நாதக-வினர்... 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்க திட்டம் வளசரவாக்கம் காவல் நிலையம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் தாக்கல் செய்த பாலியல் புகார் வழக்கில், சீமானிடம் விசாரணை நடத்துமாறு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டின் கேட்டில் போலீஸார் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர், அந்த நோட்டீஸ் கிழிக்கப்பட்ட விவகாரம் பிரச்சனையானது. அதில், சீமான் வீட்டின் பாதுகாவலரை போலீஸார் காரில் ஏற்றிச் சென்றனர். சீமான் அதைத்தொடர்ந்து, தருமபுரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``அந்தப் பெண் பாலியல் புகார் அளித்தால் குற்றம் செய்ததாகிவிடுமா? உதவி வேண்டும் எனக் கேட்டதால் அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் கொடுக்க சொன்னேன். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று கூறினார். பிறகு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக சேலத்திலிருந்து இன்று சென்னை வந்திறங்கினார். சென்னை வந்ததும், வடபழனி தனியார் ஹோட்டலில் வழக்கறிஞர்களுடன் சீமான் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்ததும், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக மாலை 7:30 மணியளவில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து காரில் புறப்பட்டார். மறுபக்கம், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் குவிந்த நாம் தமிழர் கட்சியினரை தடுக்கும் வண்ணம், காவல் நிலையத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சீமான் ஆஜரான பிறகு விசாரணையில் அவரிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இன்று நள்ளிரவு தாண்டி விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமானின் மனைவியும் வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.vikatan.com/government-and-politics/seeman-in-valasaravakkam-police-station-for-actress-complaint-case-investigation
-
விமானதாக்குதல் - விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார் டிரம்ப் - யாரை இலக்குவைப்பது என்பதை தளபதிகளே தீர்மானிக்கலாம்
Published By: RAJEEBAN 28 FEB, 2025 | 11:36 AM cbs news அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் காலத்தில் விமானதாக்குதல் இராணுவநடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தளர்த்தியுள்ளார். வான்தாக்குதல்கள் விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க தளபதிகள் உத்தரவிடுவது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள டிரம்ப் யாரை இலக்குவைக்கலாம் என்ற பட்டியலை விரிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் இது பாரிய கொள்கை மாற்றம் என குறிப்பிட்டுள்ளனர். அமைதியான ஆனால் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த மாற்றம் ஜோபைடன் காலத்தின் உத்தரவுகளை செயல் இழக்கச்செய்துள்ளது. மேலும் டிரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்தில் வெளிப்படுத்திய கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு திரும்பியுள்ளார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத் சமீபத்தில் தனது முதலாவது வெளிநாட்டுபயணத்தினை மேற்கொண்டவேளை ஜேர்மனியில் உள்ள அமெரிக்காவின் ஆபிரிக்காவிற்கான கட்டளைத் தலைமையின் சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்தார், அவ்வேளை வான்வழித்தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினரை பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆவணத்தில் அவர் கைசாத்திட்டார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் காலத்தில் வான்தாக்குதல்கள் அமெரிக்காவின் விசேட படையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளை அகற்றியுள்ளது நெகிழ்ச்சி தன்மையை வழங்கியுள்ளது, என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், யாரை இலக்குவைப்பது என தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை தளபதிகளிற்கு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அனுமதியில்லை என்பதால் தங்கள் பெயர் விபரங்களை வெளியிடாமல் அமெரிக்க அதிகாரிகள் இதனை சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர். ஜோபைடனின் யுத்தகால கொள்கைள் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தின் கொள்கைகளே என அதிகாரியொருவர் தெரிவித்தார். பைடனின் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் சிரேஸ்ட தலைவர்களை இலக்குவைத்தே தாக்குதல் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/207892
-
திட்டமிட்டபடி நாளை தொடர் உண்ணாவிரதம் - தமிழக மீனவர்கள் அறிவிப்பு
இலங்கையில் கைதான இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்! 28 FEB, 2025 | 04:39 PM எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சி மடத்தில் அனைத்து மீனவர்களும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரும் இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து, இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, படகு அரசுடைமையாக்கப்பட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து வந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து படகுகளையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அந்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வெலிக்கடை சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை கைதிகளாக தண்டனை அனுபவித்து வருவதோடு, 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். “மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்துக்கு அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உண்ணாவிரத போராட்டம் இரவு பகலாக நடைபெறும் எனவும் மத்திய அரசு படகையும் மீனவர்களையும் விடுதலை செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே இந்த போராட்டம் கைவிடப்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். தங்கச்சி மடத்தில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தங்கச்சிமடம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207917
-
யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு !
செம்மணியில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே! - நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு 28 FEB, 2025 | 04:10 PM யாழ். செம்மணியில் மீட்கப்பட்டவை எச்சங்கள் தொடர்பான வழக்கு இரண்டாவது முறையாக நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றைய தினம் (28) இரண்டாவது முறையாக நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து முதற்கட்ட ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். அத்துடன், 2 அடி ஆழத்துக்கு கீழேதான் இந்த மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக மனித எச்சங்களால் நிறைந்த பகுதியாக உள்ளதா அல்லது தனிப்பட்ட புதைகுழியாக உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வினை தொடர வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா இந்த ஆய்வினை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளதாகவும், ராஜ் சோமதேவா கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வினையும் மேற்கொள்வதாக கூறினார். இவற்றை கருத்தில் கொண்ட நீதவான், முதற்கட்ட ஆய்வானது ஸ்கேன் மூலம் செய்யப்படும் என்றும் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கலந்துரையாடல் மன்றில் நடைபெறும் எனவும் காலநிலையை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207911
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
சீமான் வீட்டில் நடந்ததே வேற? சம்மன் விவகாரத்தின் பின்னணி.. ரகசியம் உடைக்கும் ராஜாராம்! Seeman | NTK அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருக்கலாம் என கூறுகிறார். காவலாளிகள் கைத்துப்பாக்கி அனுமதியோடு இருந்தால் சம்பளம் கூடவாம்!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
INNINGS BREAK 10th Match, Group B (D/N), Lahore, February 28, 2025, ICC Champions Trophy Afghanistan (50 ov) 273 Australia Afghanistan chose to bat Current RR: 5.46 • Last 5 ov (RR): 43/3 (8.60) Win Probability:AFG 36.35% • AUS 63.65%
-
தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு: தென்னிந்திய மாநிலங்கள் எந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும்? பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால், அப்படி அபாயம் ஏதும் இல்லை என்கிறது பா.ஜ.க. தமிழ்நாடு அமைச்சரவையின் கூட்டம் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக, அமைச்சரவைக் கூட்டங்களுக்குப் பிறகு மூத்த அமைச்சர் ஒருவர், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிப்பார். ஆனால், இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சரே செய்தியாளர்களைச் சந்திப்பார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்மொழிக் கொள்கை சர்ச்சை: ஸ்டாலினுக்கு எழுதிய 3 பக்கக் கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியது என்ன? இருமொழி கொள்கை முன்னேற தடையாக இருந்ததா? தமிழ், ஆங்கிலம் படித்து வாழ்வில் சாதித்தவர்கள் கூறுவது என்ன? தமிழ்நாட்டில் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதா? 5 கேள்விகளும் பதில்களும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு அதன்படி, அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தென்னிந்தியாவின் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறிப் பேச ஆரம்பித்தார். "தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இது குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு 2026ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக இவையெல்லாம், மக்கள் தொகையைக் கணக்கிட்டுத்தான் செய்யப்படும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது" என்று அவர் கூறினார். இப்போது நாடு முழுவதும் இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும் என்று கூறிய அவர், "அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்" என்றார். மேலும், "வேறொரு முறையில் கணக்கிட்டால், ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும், நமக்கான (தமிழ்நாட்டிற்கான) பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்," என்று குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க, மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?27 பிப்ரவரி 2025 தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா?26 பிப்ரவரி 2025 அரசியல் கட்சிகளுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் பட மூலாதாரம்,@SANSAD_TV படக்குறிப்பு,'இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்' என செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்குப் பிறகு, இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்படி தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளையும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். "தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் பல நியாயமான கோரிக்கைகளைப் பெற இயலவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு இதையடுத்து இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்த பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து யாரும் பேசாத நிலையில், முதலமைச்சர் கபட நாடகம் நடத்துவதாகக் குறிப்பிட்டார். புதன்கிழமையன்று கோயம்புத்தூரில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினார். "தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தென்னிந்திய மாநிலங்கள் உள்பட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்துள்ளார். திமுக முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தெரிவித்து மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறார்" என்று தனது உரையில் குறிப்பிட்டார் அமித் ஷா. 'தமிழ்நாட்டிற்கு அநீதி' பட மூலாதாரம்,SANSAD.IN படக்குறிப்பு,இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில், "நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிப்பதைக் காணவுள்ளோம்" என்று மோதி குறிப்பிட்டார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, எந்த விகிதாச்சாரத்தின் அடிப்படையில் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டார். "மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதிகள் உயரும். இது தொடர்பாக முதல்வர் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு அமித் ஷா பதிலளிக்கும்போது, விகிதாச்சார அடிப்படையில்தான் மறு சீரமைப்பு அமையும். தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதிகூடக் குறையாது எனக் கூறியிருக்கிறார். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும்போது Pro-rata எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகிதாச்சார உயர்வு இப்போதுள்ள தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டதா அல்லது இப்போதுள்ள மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டதா என்பதற்கு எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க குழப்பமாக இருக்கிறது. எங்களுக்கு (தமிழ்நாடு) தொகுதிகளைக் குறைக்காமல், வட மாநிலங்களுக்கு அதிகமாகக் கொடுத்தாலும் அது அநீதிதான்" என்றார். "எண்ணிக்கையை உயர்த்துவது பிரச்னையல்ல, ஆனால் எதன் அடிப்படையில் என்பதுதான் பிரச்னை. மக்கள் தொகையின் அடிப்படையிலா அல்லது இடங்களின் அடிப்படையிலா?" என்று கேள்வி எழுப்பினார் ஆ.ராசா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதாக இருந்தால், இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து அப்படியே உயர்த்த வேண்டும் என்றார் ராசா. ஆ.ராசா சுட்டிக்காட்டுவதைப் போல 2026க்குப் பிறகு இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்பதை மத்திய அரசு பல தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணமாக, புதிய நாடாளுமன்றக் கட்டடம் பற்றி அறிவிக்கப்பட்டபோதே, எதிர்காலத்தை மனதில் கொண்டு கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களவை அரங்கில் 888 இருக்கைகளும் மாநிலங்களவை அரங்கில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேர் வரை அமர்ந்து அவை நிகழ்வில் பங்கெடுக்க முடியும். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழா, 2023ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை வருங்காலத்தில் அதிகரிப்பதைக் காணவிருக்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பது காலத்தின் தேவையாக இருந்தது," என்று குறிப்பிட்டார். தேநீர் அருந்த ரயிலில் இருந்து இறங்கியவர் 20 ஆண்டுகளுக்கு மேல் கொத்தடிமையாக இருந்த துயரம் - அதிகாரிகள் மீட்டது எப்படி?27 பிப்ரவரி 2025 சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2002இல் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பு, 84வது திருத்தத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 வலியுறுத்துகிறது. இப்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காகப் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை Delimitaion Commission அமைக்கப்பட்டு, தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும். இதற்கென 1952ஆம் ஆண்டில் Delimitation Commission Act இயற்றப்பட்டது. இதற்குப் பிறகு இந்தியாவில் மூன்று முறை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது 489 தொகுதிகள்தான் இருந்தன. 1952இல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 494ஆக உயர்ந்தது. அப்போது மக்கள் தொகை 36.1 கோடியாக இருந்தது. இதற்குப் பிறகு, இரண்டாவது முறையாக 1963இல் தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு, தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக உயர்த்தப்பட்டது. அந்தத் தருணத்தில் மக்கள் தொகை 43.9 கோடியாக உயர்ந்திருந்தது. இதற்குப் பிறகு 1973இல் மூன்றாவது முறையாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது மக்கள் தொகை எண்ணிக்கை, 54.8 கோடி. இதேபோல, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாநிலத்திலும் திருத்தப்பட்டது. இந்நிலையில், 1975இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டதால், அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலங்கள் இதனால் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2001இல் இந்த 25 ஆண்டு கால வரையறை முடிவுக்கு வந்தது. இதனால் 2002இல் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டது. கடந்த 2000வது ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கொள்கையின்படி, 2026க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆகவேதான், அந்த ஆண்டுக்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம்போல நடந்திருந்தால், 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031ஆம் ஆண்டில்தான் நடந்திருக்கும். ஆனால், 2021ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், அந்தக் கணக்கெடுப்பை 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தி, அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளிலேயே தொகுதிகளை மறுவரையறை செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தொகுதிகளை ஏன் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இப்போது பல தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சம் வரைகூட இருக்கிறது. (கோப்புப் படம்) அரசியலமைப்புச் சட்டத்தின் 81வது பிரிவின் 2வது விதி, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கும் அந்த மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கிறது. ஆகவே, கூடுதல் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் கூடுதலான எம்.பிக்களை பெற்றிருக்கும். குறைவான மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் குறைவான உறுப்பினர்களைப் பெற்றிருக்கும். இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, எவ்வளவு பேருக்கு ஒரு மக்களவைத் தொகுதி என்பது வரையறுக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 81(1)(b)இன் படி ஒரு மக்களவைத் தொகுதியில் ஐந்து லட்சம் முதல் ஏழரை லட்சம் வரை மக்கள் தொகை இருக்கலாம். ஆனால், இந்தப் பிரிவு விரைவிலேயே திருத்தப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தத்தின்படி, ஏழரை லட்சம் பேருக்கு ஒரு மக்களவைத் தொகுதி என்ற வரையறை நீக்கப்பட்டது. இப்போது பல தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சம் வரைகூட இருக்கிறது. தெலங்கானாவில் உள்ள மல்கஜ்கிரி தொகுதியில் அதிகபட்சமாக 31,50,303 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பான 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டும் சேர்ந்து இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேரை, அதாவது 48.6 சதவீதம் பேரைக் கொண்டிருக்கின்றன. ஆகவே, மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை அதிகரித்தால், இந்த ஐந்து மாநிலங்களிலேயே இந்தியாவின் பாதி மக்களவை இடங்கள் இடம்பெறும். இந்த நிலையில்தான் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரித்தாலோ, குறைத்தாலோ தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும். இது பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும். குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?28 பிப்ரவரி 2025 தாலிபன் அரசு காபூல் மக்களைக் கண்காணிக்க அவர்களிடமே பணம் கேட்டு நிர்பந்திக்கிறதா? உண்மை என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு யாருக்கு இழப்பு, யாருக்கு ஆதாயம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றமே வரையறுக்கிறது இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றமே வரையறுக்கிறது. இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் 543 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இப்போதைய சூழலில் இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறதா, எவ்வளவு அதிகரிக்கப் போகிறது அல்லது எண்ணிக்கையை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டு மாநிலங்களுக்குள் அவை வேறு விதமாகப் பகிர்ந்தளிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை மத்திய அரசு வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆகவே, எவ்வளவு தொகுதிகள் அதிகரிக்கும், எந்த மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் இடம் கிடைக்கும் என்பவை குறித்து எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் கிடையாது. ஆனால், சில ஆய்வாளர்கள் இது தொடர்பாகச் சில கணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2000களின் துவக்கத்தில் பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளரான ஆலிஸ்டர் மெக்மில்லன் இந்த விவகாரம் தொடர்பாக எழுதிய ஒரு கட்டுரையில், மக்களவை இடங்களை அதிகரிக்காமல் 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 தொகுதிகளுக்குப் பதிலாக 32 தொகுதிகளே இருக்கும் எனக் குறிப்பிட்டார். அதேபோல, ஆந்திரா + தெலங்கானாவில் 42க்குப் பதிலாக 39ஆகவும் கேரளாவில் 20க்குப் பதிலாக 17 ஆகவும் கர்நாடகாவில் 28க்குப் பதிலாக 27ஆகவும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றார் அவர். இதற்கு மாறாக, உத்தர பிரதேசத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 80இல் இருந்து 87 ஆகவும் பிகாரில் 40இல் இருந்து 43 ஆகவும் ராஜஸ்தானில் 25இல் இருந்து 29 ஆகவும் அதிகரிக்கும் என்றார். அதேநேரம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப 647ஆக அதிகரித்தால், உத்தர பிரதேசத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 103 ஆகவும் பிகாரில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 51ஆகவும் ராஜஸ்தானில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 35ஆகவும் உயரும் என்று ஆலிஸ்டர் மெக்மில்லன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆந்திரா - தெலங்கானாவில் தொகுதிகளின் எண்ணிக்கை 47 ஆக உயரும். ஆனால், தமிழ்நாடு, கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே நீடிக்கும் என்றார். இப்படி நடந்தாலும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறையும். பட மூலாதாரம்,SANSAD.IN படக்குறிப்பு,இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் 543 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் இதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் மிலன் வைஷ்ணவ், ஜாமி ஹின்ட்ஸோன் ஆகியோர் இணைந்து India's Emerging Crisis of Representation என்ற கட்டுரையை எழுதினர். அதில், மக்களவை இடங்களின் எண்ணிக்கை மாறாமல் இருந்தால், 2026இல் தமிழ்நாட்டில் 31 இடங்கள் இருக்குமென்றும் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் சேர்ந்து 34 இடங்களும் கேரளாவில் 12 இடங்களும் இருக்குமெனவும் குறிப்பிட்டனர். அதேவேளையில், இதற்கு மாறாக உத்தர பிரதேசத்தில் 91 இடங்களும் பிகாரில் 50 இடங்களும் ராஜஸ்தானில் 31 இடங்களும் மத்திய பிரதேசத்தில் 33 இடங்களும் இருக்குமெனக் குறிப்பிட்டனர். அதாவது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்கள் 17 இடங்களை இழக்கும் நிலையில் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மொத்தமாக 22 இடங்களைக் கூடுதலாகப் பெறும். மாறாக, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றபடி இடங்கள் அதிகரிக்கப்பட்டால், இதே விகிதத்தில் இடங்களின் எண்ணிக்கை பகிர்ந்தளிக்கப்படும். இவர்களது கருத்துப்படி மக்கள் தொகை அடிப்படையில் 2026இல் மக்களவை இடங்களை அதிகரித்தால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 இடங்களாக உயரும். அப்போது உத்தர பிரதேசத்தில் 143 இடங்களும் பிகாரில் 79 இடங்களும் மத்திய பிரதேசத்தில் 52 இடங்களும் மேற்கு வங்கத்தில் 60 இடங்களும் இருக்கும். தமிழ்நாட்டில், ஆந்திரா - தெலங்கானாவில் 54 இடங்களும் கேரளாவில் 20 இடங்களும் இருக்கும். டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன?14 பிப்ரவரி 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 'தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும்' பட மூலாதாரம்,@DMK_RAJA படக்குறிப்பு,சில மாநிலங்களுக்கு மட்டும் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் செய்தால், அது அந்த மொழியை மட்டும் உயர்த்தும் என்கிறார் ஆ. ராசா இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, "இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டுக்கான இடங்கள் குறையாது என்கிறார். இது என்ன வாதம்? தமிழ்நாட்டுக்கான இடங்களைக் குறைக்காமல் உத்தர பிரதேசத்திற்கான இடங்களை அதிகரித்தால்கூட எங்கள் பிரதிநிதித்துவம் குறையும்" என்றார். மேலும், "மத்திய அரசுதான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தச் சொன்னது. அதனால், ஒரு சமமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கொள்கையைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு பாதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. இத்தகைய சூழலில், தமிழ்நாட்டின் நலன்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தான் உண்டு. ஏனென்றால், மத்திய அரசின் கொள்கையைச் செயல்படுத்தியதால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்" என்றார். இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம் என்று கூறிய அவர், "இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன. அந்த மொழிவாரி மாநிலங்கள் சரியான வகையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு பண்பாட்டுக் கூறுகள் இருக்கின்றன. ஒரே ஒரு மொழி மட்டும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நாடாளுமன்றம் உருவானால், இந்தியா பல்வேறு மொழி, கலாசாரங்களை உள்ளடக்கிய ஒரு துணைக் கண்டமாக இருக்காது. இந்தியா உடைய ஆரம்பிக்கும். ஏனென்றால், இந்தியாவின் அடிப்படை, மொழி அடிப்படையிலான மாநிலங்கள்தான்" என்று அவர் கூறினார். "சில மாநிலங்களுக்கு மட்டும் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் செய்தால், அது அந்த மொழியை மட்டும் உயர்த்தும். இது பிற மாநிலங்களையும் மொழிகளையும் பாதிக்கும். இது இந்தியாவுக்கு நல்லதல்ல" என்கிறார் ஆ.ராசா. விமானத்தில் சக பயணி மரணம்: பக்கத்து இருக்கையில் சடலத்தை கிடத்திய விமான நிறுவனம்27 பிப்ரவரி 2025 ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பாஜக சொல்வது என்ன? பட மூலாதாரம்,@NARAYANANTBJP படக்குறிப்பு,தி.மு.க. அரசு தேவையில்லாத அச்சத்தைக் கிளப்புகிறது என்கிறார் நாராயணன் திருப்பதி ஆனால், தி.மு.க. அரசு தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க இதுபோன்ற இல்லாத பிரச்னைகளை எழுப்புவதாகச் சொல்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி. "முதலில் மொழிப் பிரச்னையை எழுப்பிப் பார்த்தார்கள். அதில் ஏதும் நடக்கவில்லை. அடுத்ததாக இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பகிர்ந்தளித்தால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என பிரதமர் மோதி 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே பேசியிருக்கிறார். அந்தப் பேச்சிலேயே அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிட்டார்" என்கிறார் நாராயணன் திருப்பதி. நாராயணன் திருப்பதி சுட்டிக்காட்டும் பேச்சு, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிஜாமாபாதில் பிரதமர் மோதியால் பேசப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துவதற்காக Jitni aabadi, utna haq (எவ்வளவு மக்கள் வலுவோ அவ்வளவு உரிமை) என்று குறிப்பிட்டார். இதைச் சுட்டிக்காட்டி தெலங்கானாவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "நாடு இப்போது தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசுகிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. ஆனால் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உரிமைகள் என்ற காங்கிரஸின் புதிய யோசனை செயல்படுத்தப்பட்டால் தென் மாநிலங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். தென்னிந்தியா 100 மக்களவை இடங்களை இழக்கும். தென்னிந்தியா இதை ஏற்குமா?" எனக் கேள்வி எழுப்பினார். "ஆகவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள தொகுதிகளை அடிப்படையாக வைத்து, அதே விகிதத்தில்தான் உயர்த்தப்படும். அதைத்தான் உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார். ஆனால் தேவையில்லாத அச்சத்தைக் கிளப்புகிறார்கள்" என்கிறார் நாராயணன் திருப்பதி. ஊடகங்களில் வெளிவராத வரைபடம்: பாலத்தீனம் தனி நாட்டுடன் 2008-ல் புதிய தீர்வை முன்வைத்த இஸ்ரேலிய பிரதமர்26 பிப்ரவரி 2025 யுக்ரேனில் உள்ள அரிய கனிமங்களுக்கு அமெரிக்கா குறி வைப்பது ஏன்? அவற்றின் முக்கியத்துவம் என்ன?26 பிப்ரவரி 2025 இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநரான கோபால கிருஷ்ணகாந்தி தனது கட்டுரையில் இதற்கு ஒரு தீர்வை முன்வைக்கிறார். இப்போதைக்கு இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வே கிடையாது என்கிறார் North vs South: India's Great Divide நூலின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டன். "தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் அப்படியே வைத்திருந்தால், வட மாநிலங்களைப் பார்த்து நீங்கள் செய்த தவறுக்கான பலனை அனுபவியுங்கள் என்று சொல்வதைப் போலத்தான் இருக்கும். தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் அதிகரித்தால், தென் மாநிலங்களின் பிரநிதிதித்துவம் குறையும். ஆகவே, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வே கிடையாது" என்கிறார் நீலகண்டன். மாறாக இந்த விவகாரத்தை வேறு விதமாக அணுகலாம் என்று கூறும் அவர், "மத்திய அரசின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும். பெரும்பாலான முடிவுகள் மாநில மட்டத்திலும் பஞ்சாயத்து மட்டத்திலும் எடுக்கும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கான முக்கியத்துவம் குறையும். இப்போதைய சூழலில் அப்படிச் செய்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்" என்கிறார். மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநரான கோபால கிருஷ்ணகாந்தி Delimitation fallout needs no political forecasting என்ற தனது கட்டுரையில், ஒரு தீர்வை முன்வைக்கிறார். அதாவது, எல்லா மாநிலங்களிலும் மக்கள் தொகை நிலைபெறும் வரை, தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். அதற்குப் பிறகு அதிகரிக்கும்போது, மக்கள் தொகை மட்டுமல்லாமல், வேறு சில கணக்கீடுகளையும் உள்ளடக்கி தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்கிறார் அவர். ஆனால், மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி வரையறை செய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்வதால், இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg11p08yr0o
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
பொலிஸ் அழைப்பாணையை கிழித்ததாக பணியாளர் கைது: சீமான் வீட்டின் பாதுகாவலரை இழுத்து சென்றது பொலிஸ் - 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு 28 FEB, 2025 | 01:09 PM சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட பொலிஸ் அழைப்பாணையை கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் சென்னை வளசரவாக்கம் பொலிஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால் வழக்கை இரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்இ 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இது தொடர்பாக அனுப்பிய பொலிஸ் அழைப்பாணையில் குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் அழைப்பாணையில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில் பிப். 28-ம் திகதி (இன்று) ஆஜராகத் தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த அழைப்பாணையை கிழித்தெறிந்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் பொலிஸார் நேற்று பிற்பகல் சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ் பொலிஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. துப்பாக்கி பறிமுதல்: இதையடுத்து அமல்ராஜை பொலிஸார் கைது செய்ய முயன்றதால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆய்வாளர் உள்ளிட்ட 3 பொலிஸார் அமல்ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று காவல் துறை ஜீப்பில் ஏற்றினர். இதற்கிடையில் பாதுகாவலர் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர். கயல்விழி முறையீடு: இந்த சம்பவம் நடந்தபோது சீமான் மனைவி கயல்விழி வீட்டிலிருந்து வெளியே வந்து காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடுமாறு முறையிட்டார். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாவலர் மற்றும் சீமான் உதவியாளர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினர் பொலிஸார் அத்துமீறி நுழைந்ததாகப் புகார் தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமல்ராஜின் மனைவி கூறும்போது “25 ஆண்டுகளாக எனது கணவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தார். அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சீமானிடம் பணிபுரிந்து வருகிறார். அவர் பொலிஸாரை தாக்கவில்லை. அவர்கள்தான் எனது கணவரை தாக்கினர். மேலும்இ பொலிஸாரிடம் துப்பாக்கியை ஒப்படைக்கவே முயன்றார். அவரை கிரிமினல் குற்றவாளி போல இழுத்துச் சென்றது நியாயமா?” என்றார். அரசியல் காரணங்கள்… சீமான் வழக்கறிஞர் ரூபன் செய்தியாளர்களிடம் கூறும்போது “சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் வந்ததால்தான் பாதுகாவலர் துப்பாக்கி வைத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காகத்தான் சீமானுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது” என்றார். சீமான் வழக்கறிஞர் சங்கர், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த கடிதத்தில் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது “உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. வெளியூர் நிகழ்ச்சிகளில் சீமான் பங்கேற்றதால்தான் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை” என்றார். https://www.virakesari.lk/article/207899
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
அண்ணை, சம்மனை கிழித்த பின் கேற்றைத் திறந்து உள்ள போன பொலீஸ் அதிகாரி, சிவில் உடை அதிகாரிகள் சம்மனை வீட்டில் சென்று வழங்கி இருக்கலாம்/கட்சி அலுவலகத்தில் வழங்கி இருக்கலாம்! இது பரபரப்பிற்காக அல்லது வேறொன்றை திசைதிருப்ப செய்ததாக இருக்கலாம்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
Arms Act of 1959 allows citizens of India to get Non-Prohibited Bore (NPB) guns. NPB licenses can be issued to anyone of Indian Nationality who can claim a licensee status under the following: Self Defence - Individuals who could be prone to being attacked for reasons including being wealthy, being under threat, etc. General Security - which includes the provision of security for Banks, Institutions, etc. This can also cover the gunmen and protection squad of VVIPs and politicians. Crop Protection - Those who have agricultural or similar lands which need protection from Non-Scheduled pests and vermin, like boars, etc. Sports Shooting - Those under sports shooting discipline who need guns for sports purposes. Returning NRI - Any Indian who is returning to India and has owned a gun in his foreign residence for over 2 years, can apply for an Indian license and bring back the gun they owned abroad. Foreign National Status - Any foreign National is allowed to own and bear arms for a maximum period of 6 months during their stay in Tamil Nadu, given valid reasons. Eligibility Criteria to get gun license (firearm license) in Tamil Nadu The following are the eligibility criteria for getting gun license in Tamil Nadu. The applicant should not have any past records of any kind of criminal activity. Police will gather a lot of information about the applicant such as asking the people in the surroundings or neighborhood if they see any kind of malicious treatment or if they have seen the person getting involved in fights due to anger or burst out. An interview will be conducted with the applicant to check if the person is mentally or physically ill or not. Documents Required to get gun license (firearm license) in Tamil Nadu The following are the documents required for getting gun license in Tamil Nadu. Two passport size copies of the latest photograph of the applicant (in white background):- to be submitted at the time of appointment Proof of date of birth Proof of identification -Aadhar Card or in case the applicant does not have Aadhar Card, a written declaration to be submitted in the form of an Affidavit along with an alternative identification proof which may include-Passport;Voter identification Card, PAN Card or Identity Card issued to the employees. Residence Proof: In case the applicant does not possess Aadhar Card or Passport, which may include Voter ID Card or Electircity bill or Landline telephone bill or Rent deed or Lease deed or property documents or any other documents to the setisfaction of the Licensing Athority. Firearm training certificate in form S-1 (whenever made applicable by the Central Government by passing a general or special order); Safe use and storage of firearms undertaking in(Form S-2). Self attested copies of the educational and professional qualification certificates from professional category applicants as specified in clause (a) of sub-rule (3) of rule 12 of the Arms Rules, 2016. Medical certificates about mental health and physical fitness in form S-3, issued by a registered MBBS Doctor on prescribed proforma. Self attested copy of the proof of date of birth (e.g. Matriculation certificate or School leaving certificate, Passport etc). in case of protection for destruction of wild animals which do injury to human beings or cattle and damage to crops, permit from the authority empowered under the Wild Life (Protection ) Act, 1972 (53 of 1972). How to apply for a gun license (firearm license) in Tamil Nadu? The applicant should clearly mention the purpose(s) for which the licence is required; such as use, self protection, acquisition, possession, carrying, sport, display, destruction of wild animals which cause injury to human beings or cattle and damage to crops etc. as per the category of licence applied (Form II, III or IV). Instructions for filing gun license (firearm license) Before applying online, keep the scanned copy of every required documents in pdf format (each pdf not exceeding 1 mb) and photograph in JPG format ( each JPG not exceeding 50 KB). After successful online registration of the application, upload the photograph and take the printout of the application. The signed application form along with the required documents are to be submitted in the concerned issuing authority for want of processing. Please note your online registration number for record and future reference. Concealing any material facts and/ or submitting false information will lead to cancellation of such application. Procedure Follow the below steps to apply for gun license in Tamil Nadu. Visit Arms License Online website. https://www.tesz.in/guide/gun-license-firearm-tamil-nadu எனது புரிதலின்படி சுயபாதுகாப்பிற்கு என அனுமதி எடுத்து வைத்திருக்கலாம் என்றுள்ளது போல அண்ணை. எதற்கும் எனக்கு வாசித்து தெளிவுபடுத்துங்கோ.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
LIVE 10th Match, Group B (D/N), Lahore, February 28, 2025, ICC Champions Trophy Afghanistan (36.6/50 ov) 186/6 Australia Afghanistan chose to bat Current RR: 5.02 • Last 5 ov (RR): 26/2 (5.20) Live Forecast:AFG 266