Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 26 FEB, 2025 | 10:21 AM இந்தோனேசியாவில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவில் பதிவாகி இருப்பாகவும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு சுலவேசியை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். https://www.virakesari.lk/article/207701
  2. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி 26 FEB, 2025 | 09:19 AM உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும், வாழ்விலும் "மாயை இருளை" வெற்றிகொள்ளவதை குறிக்கிறது. எனவே,மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும்' என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மகா சிவராத்திரி நாளில் வாழ்வில் சுபீட்சம் கிட்ட பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. சிவன், பார்வதியின் சங்கமம் ஞானம் மற்றும் ஆற்றலின் சங்கமாகும். அது கண்களை மறைத்திருக்கும் மாயையின் திரைகளை கிழித்து யதார்த்தத்தின் வெளிச்சத்திற்கு கண்களை திறக்கிறது. பல யுகங்களாக எம்மை சகோதரத்துவத்திலிருந்து ஒதுக்கி வைத்த பிரிவு - பிளவுகளை உருவாக்கிய இருள் திரையைக் கிழித்து, ஒற்றுமையை கட்டியெழுப்பி இந்த பூமியில் ஒரு புதிய யுகத்தின் உதயத்தை காணும் வேளையில் இந்த தருணம் வந்திருக்கிறது. இது, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை முன்பை விடவும் வரவேற்று, பாதுகாத்து நாட்டின் அனைத்து மக்கள் குழுக்களும் ஒருவருக்கொருவர் மத்தியில் கௌரவம் - அன்பை முன்னிலைப்படுத்தி எமது தாய்நாட்டின் சுபீட்சத்துக்காக அர்ப்பணிக்கும் தருணமாகும். இந்த வலுவான களத்திலிருந்து சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக்கொள்ள ஒரே தேசமாக நாம் அனைவரும் முன்னோக்கி செல்ல வேண்டும். அனைவரும் கோரும் நல்லதொரு அரசியல் கலாசாரத்துடன் கூடிய வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பல புதிய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பலவற்றுடன் தற்போது நாம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். மஹா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கை இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்ல எண்ணங்களும், விருப்பங்களும் நிறைவேறி அவர்களின் வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். https://www.virakesari.lk/article/207666
  3. அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் - யுக்ரேன் அதிகாரிகள் தகவல் பட மூலாதாரம்,BLOOMBERG VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அப்துஜலில் அப்துராசுலோவ், ஜரோஸ்லாவ் லுகிவ், அந்தோணி சுர்சர் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு யுக்ரேன் ஒப்புக் கொண்டுள்ளது என்று கீவில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். "நாங்கள் உண்மையில் பல நல்ல திருத்தங்களுடன் அதை ஒப்புக் கொண்டுள்ளோம். இதை ஒரு நேர்மறையான முடிவாக பார்க்கிறோம்" என்றும் தெரிவித்தார். அந்த அதிகாரி இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் எந்த விவரத்தையும் வழங்கவில்லை. இந்தியாவின் 'புதிய குடிமக்கள்' சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பிபிசி கள ஆய்வு ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா - டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் பேசியது என்ன? 'யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் பதவி விலக தயார்' - ஸெலன்ஸ்கி டிரம்பின் திடீர் அணுகுமுறையால் அதிர்ந்து போன யுக்ரேன் - போர் முனையில் நடப்பது என்ன? ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமான வருவாயில் 500 பில்லியன் டாலர் (£395 பில்லியன்) உரிமைக்காக ஆரம்பத்தில் வைத்த கோரிக்கைகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் யுக்ரேனுக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கவில்லை. இது யுக்ரேன் முன் வைத்த முக்கிய கோரிக்கையாகும். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட நிலையில், இந்த வாரம் வாஷிங்டனில் யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். ஓர் உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தாமல் பேசிய டிரம்ப், இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக யுக்ரேன் "போராடுவதற்கான உரிமையை" பெறும் என்று தெரிவித்திருந்தார். "அவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் "அமெரிக்காவும் அதன் நிதியும் ராணுவ தளவாடங்களும் இல்லாவிட்டால், இந்த போர் மிகக் குறுகிய காலத்தில் முடிந்திருக்கும்" என்றார். 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?4 மணி நேரங்களுக்கு முன்னர் பூமியை நெருங்கிய பிரமாண்ட விண்கல் நிலவின் மீது மோதுமா?நாசா புதிய தகவல்4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுக்கு அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளின் விநியோகம் தொடருமா என்று கேட்டதற்கு, "ஒருவேளை ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்யும் வரை... நாம் ஒரு உடன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும், இல்லாவிட்டால் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்," என்றார். எந்தவொரு சமாதான ஒப்பந்தம் போடப்பட்டாலும், அதை தொடர்ந்து யுக்ரேனில் "ஒருவித அமைதி காத்தல்" தேவைப்படும், ஆனால் அது "அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக" இருக்க வேண்டும் என்று டிரம்ப் மேலும் கூறினார். கடந்த வாரம், டிரம்ப் ஜெலன்ஸ்கியை ஒரு "சர்வாதிகாரி" என்று வர்ணித்தார். ஜெலன்ஸ்கி, அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் கனிம வளத்திற்கான ஒப்பந்த கோரிக்கைகளை நிராகரித்திருந்தார். இதன் பின்னர், போரைத் தொடங்கியதற்கு யுக்ரேனை குற்றம் சாட்டியிருந்தார் டிரம்ப். பட மூலாதாரம்,GETTY IMAGES நிதியுதவிக்கு ஈடாக கனிம உரிமை கோரும் அமெரிக்கா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து யுக்ரேனுக்கு வழங்கிய முந்தைய ராணுவ மற்றும் பிற உதவிகளுக்கு ஈடாக யுக்ரேனின் கனிமங்களை தருமாறு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அந்த அளவுக்கு அமெரிக்க உதவிகள் வழங்கப்படவில்லை என்று வாதிடும் ஜெலன்ஸ்கி, "எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது" என்று கூறினார். அமெரிக்கா யுக்ரேனுக்கு 300 பில்லியன் டாலர் முதல் 350 பில்லியன் டாலர் வரை வழங்கியதாக டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறினார். "நாங்கள் அந்த பணத்தை திரும்பப் பெற விரும்புகிறோம்," என்று டிரம்ப் கூறினார். "ஒரு நாட்டின் ஒரு மிகப் பெரிய பிரச்னையை எதிர்கொள்ள உதவிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் வரி செலுத்தும் மக்கள் இப்போது தங்கள் பணத்தை மீண்டும் பெறப் போகிறார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார். யுக்ரேன் துணைப் பிரதமர் ஸ்டெபானிஷினா செவ்வாய்க்கிழமை கனிம ஒப்பந்தம் குறித்து முதலில் செய்தி வெளியிட்ட பைனான்சியல் டைம்ஸ் ஊடகத்திடம் இந்த ஒப்பந்தம் "பெரிய திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே" என்று கூறினார். "இது ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என்று அமெரிக்க நிர்வாகம் கூறுவதை நாங்கள் பல முறை கேட்டுள்ளோம்" என்று பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய ஸ்டெபானிஷினா கூறினார். யுக்ரேனிய வட்டார தகவல்களின் படி, போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேனுடனான ஒப்பந்தத்தில் அமெரிக்கா அதன் சில கடுமையான நிபந்தனைகளில் இருந்து பின்வாங்க வேண்டியிருந்தது. கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்25 பிப்ரவரி 2025 முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை எவ்வளவு குறைவு? எப்படிப்பட்ட மருந்துகள் இங்கு கிடைக்கும்?24 பிப்ரவரி 2025 உதவிகள் வழங்குவதில் கொள்கை மாற்றம் ஆரம்பம்? எவ்வாறாயினும், ஒரு முன்னுதாரணம் உருவாகியுள்ளது. டிரம்ப் காலத்தில் அமெரிக்க உதவிகள் முன்பை போல கிடைக்கப் போவதில்லை. திருப்பித் தர வேண்டியிராத நல்லலெண்ண உதவிகள் என்பது முடிந்து போன விஷயமாகிவிட்டது. அவை மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி அல்லது மூலோபாய காரணங்களுக்காக வழங்கப்படும் உதவியாக இருந்தாலும் சரி. இது மார்ஷல் திட்டம் முதல் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றம் குறிக்கிறது. யுக்ரேன் ஒரு தொடக்கம்தான். டிரம்பும் அவரது வெளியுறவுக் கொள்கை குழுவும் அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகெங்கிலும் அவர்களின் "அமெரிக்காவுக்கு முன்னுரிமை" கோட்பாடுகளை செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். யுக்ரேன் செய்தி இணையதளமான யுக்ரேன்ஸ்கா பிராவ்தா, கனிம வள ஒப்பந்தத்தில் யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் கையெழுத்திட இருப்பதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் புனரமைப்பு முதலீட்டு நிதியம் ஒன்றை அமைக்க உடன்பட்டுள்ளதாக செய்தி தளத்தின் பொருளாதார பிரிவு கூறுகிறது. லித்தியம் மற்றும் டைட்டானியம் உட்பட முக்கிய கனிமங்களின் பெரும் இருப்புகளை யுக்ரேன் கொண்டுள்ளது. அத்துடன் கணிசமான நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் மற்றும் யுரேனிய இருப்புகள் உள்ளன. இவை பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை. கடந்த ஆண்டு, ஜெலன்ஸ்கி யுக்ரேன் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளிடம் "ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை" முன்வைத்தார். அது போரின் முடிவில் வெளிநாட்டு நிறுவனங்கள் யுக்ரேனின் சில கனிம வள ஒப்பந்தங்களைப் பெற முடியும் என்று முன்மொழிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடுமையான வார்த்தைப்போர் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், இந்த கனிம ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய பறக்கும் கார் சோதனை24 பிப்ரவரி 2025 காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 செவ்வாயன்று, ரஷ்ய அதிபர் புதின் அரிய கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக கூறினார். இதில் யுக்ரேனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளும் அடங்கும். யுக்ரேனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் கடந்த வாரம் சௌதி அரேபியாவில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உட்பட, அமெரிக்கா - ரஷ்யா இடையே சமீப காலமாக நிலவும் சுமூக உறவுகள் குறித்து அதிக எச்சரிக்கை கொண்டுள்ளன. யுக்ரேனிலும் ஐரோப்பா முழுவதிலும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கம் கொண்ட எந்தவொரு பேச்சுவார்த்தைகளில் இருந்தும் அவர்கள் ஒதுக்கப்படலாம் என்ற கவலை நிலவுகிறது. ஐரோப்பிய கண்டத்தின் எதிர்கால பாதுகாப்பு ஒட்டுமொத்தமாக அவர்களே இடம் பெறாத பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர். யுக்ரேனில் உள்ள தாதுக்கள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளில் 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனிம வளங்கள் உள்ளன என்று யுக்ரேன் கூறுகிறது. உலகின் "முக்கியமான மூலப்பொருட்களில்" சுமார் 5% யுக்ரேனில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க பயன்படும் கிராபைட்டின் நிரூபிக்கப்பட்ட இருப்பு 19 மில்லியன் டன் ஆகும். ஐரோப்பாவில் அனைத்து லித்தியம் இருப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, இவை தற்கால பேட்டரிகளில் முக்கிய அங்கமாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்குவதற்கு முன்பு, யுக்ரேன் உலகின் 7% டைட்டானியத்தை உற்பத்தி செய்தது. இது விமானங்கள் முதல் மின் நிலையங்கள் வரை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. யுக்ரேனில் அரிய உலோகங்களின் குறிப்பிடத்தக்க இருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை, நவீன உலகில் முக்கியமான ஆயுதங்கள், காற்றாலைகள் , மின்னணுவியல் மற்றும் பிற தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் 17 கனிமங்களின் தொகுப்பாகும். சில கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. யுக்ரேனின் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்வைரிடென்கோ, 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள வளங்கள் இன்று ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ளன என்று கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kg54wz47no
  4. 26 FEB, 2025 | 06:29 AM (நா.தனுஜா) சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர்திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் புதன்கிழமை (25) அமர்வில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த தேர்தல்களின் ஊடாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த மக்கள் பெரும்பான்மை வாக்குகள் ஊடாக எம்மைத் தெரிவுசெய்தனர். அதனையடுத்து இலங்கை வரலாற்றிலேயே எம்மால் கட்டமைக்கப்பட்ட பாராளுமன்றமே மலையகத்தைச்சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக அதிகளவு பெண் பிரதிநிதிகளையும், மாற்றுத்திறனாளி ஒருவரையும் உள்ளடக்கிய சகல தரப்பினருக்குமான பிரதிநிதித்துவத்துடன்கூடிய பாராளுமன்றமாகத் திகழ்கிறது. தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருப்பதுடன், அதனை சகலருக்குமான சமபங்கீட்டை உறுதிப்படுத்தக்கூடிய பொருளாதாரமாக நிலைமாற்றமடையச்செய்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம். அதேபோன்று எமது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் ஊடாக நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்கியிருக்கிறோம். அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், வீடமைப்பு மற்றும் நட்டஈடு வழங்கல் ஆகியவற்றுக்கு அவசியமான நிதியொதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை நாம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்தின் ஊடாக நேர்மைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறத்தக்கதுமான ஆட்சிநிர்வாக முறைமையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு உத்தேசித்துள்ளோம். அடுத்ததாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு உறுதிபூண்டிருக்கிறது. அதன்பிரகாரம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட உள்ளகப்பொறிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், அவை சுயாதீனமானதும், நம்பகத்தன்மை வாய்ந்த முறைமையிலும் இயங்குவது உறுதிசெய்யப்படும். அதேபோன்று சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும். மேலும் எமது நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களிலும், உபகுழுக்களிலும் அங்கம் வகிக்கின்றது. அக்குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கூட்டங்கள் மற்றும் மீளாய்வுகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பங்கேற்கிறது. நாட்டின் தேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/207694
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி செய்தியாளர் 25 பிப்ரவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த வாரம், 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய விண்கல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் கவலைப்பட்டனர், ஆனால் பின்னர் அது பாதுகாப்பானது என்று அறிவித்தனர். இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் மதிப்பிட்டனர். ஆனால், இந்த விண்கல் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே என்று சமீபத்தில் தெரிய வந்தது. அதே விண்கல் நிலவைத் தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா இப்போது மதிப்பிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, 2024 YR4 என்ற விண்கல் சிலியில் உள்ள ஒரு பாலைவனத்தில் தொலைநோக்கி மூலம் விண்வெளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் பத்து வான் பொருட்கள் பூமியை நெருங்கி வருவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வானியல் ரீதியாகப் பார்த்தால், இவை மிகச் சிறிய விண்கற்கள். அவற்றில் பெரும்பாலானவை பூமிக்கு அருகில் வந்திருக்கலாம் அல்லது பூமியுடன் மோதியிருக்கலாம். சில விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு எரிந்திருக்கலாம். அவை அனைத்தும் மனிதர்களின் கண்ணில் தென்படாமலேயே நடந்திருக்கும். டைனோசரை அழித்ததை விட 200 மடங்கு பெரிய விண்கல் மோதிய பிறகு பூமியில் உயிர்கள் செழித்தது எப்படி? வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் - சுவாரசிய தகவல்கள் அபோபிஸ் விண்கல் - நெருங்கி வந்த ஆபத்து; அடுத்த 100 ஆண்டுகளுக்கு கவலை இல்லை என கூறிய நாசா விண்வெளி: சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் 'வினோத விண்கல்' பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்கள் பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் விண்வெளியில் பயணிக்கும் விண்கற்கள் ஃப்ளை-பைஸ் (fly-bys) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான விண்கற்களால் ஆபத்து இல்லை. இருப்பினும், பிரபஞ்சத்தில் மனிதனால் தீர்க்கப்படாத பல மர்மங்களை அவை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. அவை விண்வெளி குறித்த நிறைய அறிவையும் தகவல்களையும் வழங்குகின்றன. இந்தக் கற்கள் சில நேரங்களில் சிறிய கோள்களாகவும் அடையாளம் காணப்படுகின்றன. மேலும், அவை 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய மண்டலம் உருவாக்கப்பட்டபோது உருவான எச்சங்கள் எனவும் கூறப்படுகின்றன. இந்த விண்கல் துண்டுகள் கோள்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டவை மற்றும் பூமிக்கு நெருக்கமாகச் சுற்றி வரக்கூடியவை. இப்போது வரை, ஒரு பெரிய விண்கல் பூமிக்கு எவ்வளவு அருகில் வரும், அது எவ்வளவு கடினமாகத் தாக்கும் என்பதை மனிதர்களால் சரியாக அறிய முடியவில்லை. நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் போஸ்லாஃப் கூறுகையில், பூமிக்கு அருகிலுள்ள பொருட்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியதாகவும் அதற்கு முன்பு யாரும் அவற்றை அதிகம் கவனிக்கவில்லை என்றும் கூறினார். நாற்பது மீட்டர் அகலம் அல்லது அதைவிடப் பெரிய வான் பொருட்கள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒவ்வோர் ஆண்டும் பலமுறை கடந்து செல்வதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வருகின்றனர். கடந்த 1908ஆம் ஆண்டில் சைபீரியா மீது அத்தகைய பெரிய விண்கல் ஒன்று வெடித்தது. இது 500 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள கட்டடங்களைச் சேதப்படுத்தியது, மக்கள் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் - பாலத்தீனம்: அமைதிக்காக உருவாக்கப்பட்ட திட்டம் காணாமல் போனது ஏன்?25 பிப்ரவரி 2025 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு வணிக நோக்கில் பரபரப்பு கூட்டப்படுகிறதா?2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்கல் நகரத்தைத் தாக்கினால் என்ன ஆகும்? பட மூலாதாரம்,DRS. BILL AND EILEEN RYAN, MAGDALENA RIDGE OBSERVATORY 2.4M TELESCOPE, NEW MEXICO TECH முன்னதாக, 2004ஆம் ஆண்டில் அபோபிஸ் என்ற விண்கல்லும் YR4-ஐ போலவே பூமிக்கு அருகில் வருவதாக அடையாளம் காணப்பட்டது. இது 375 மீட்டர் அகலம் மற்றும் ஒரு பயணக் கப்பல் போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கருதப்பட்டது. பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (சி.என்.ஆர்.எஸ்) பேராசிரியர் பேட்ரிக் மைக்கேல், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களில் இது மிகவும் ஆபத்தான விண்கல் என்று கூறினார். அதை அவதானித்த பிறகு, கடந்த 2013ஆம் ஆண்டு வரை அது பூமியைத் தாக்காது என்பதை விஞ்ஞானிகளால் தீர்மானிக்க முடிந்தது. இவ்வளவு பெரிய விண்கல் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கியிருந்தால், அது பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். YR4 விண்கல் எவ்வளவு பெரியது என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் சில மதிப்பீடுகள் அதன் மேல்முனை 90 மீட்டர் அகலமாக இருந்தால், அது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது சேதமடையால் வரக்கூடும் என்று கூறுகின்றன. "இத்தகைய விண்கற்களால் பூமியில் ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்க முடியும். அவை பூமியில் மோதக்கூடிய பகுதிக்கு அருகிலுள்ள கட்டமைப்புகள் சேதமடையும். ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்குக் கடுமையான காயம் ஏற்படும் அபாயம் உள்ளது," என்று லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் பேராசிரியர் கேத்தரின் குனமோட்டோ கூறினார். இது நடந்தால், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாகக் கூறினார் அவர். அபோபிஸ் விண்கல் பற்றி அறிந்ததில் இருந்து விஞ்ஞானிகள் பூமியை விண்கற்களில் இருந்து பாதுகாப்பதுல் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். பேராசிரியர் மைக்கேல் சர்வதேச விண்வெளி மிஷன் திட்டமிடல் ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாகவும் உள்ளார். விண்கல் தாக்கங்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து அவர்கள் அரசுகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். அது நேரடியாகத் தாக்கும்போது என்ன தாக்கம் இருக்கும் என்பதை அறிய அவர்கள் ஒத்திகை பார்க்கிறார்கள். 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் புதிய பறக்கும் கார் சோதனை24 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,NASA ஒரு விண்கல் ஒரு நகரத்தைத் தாக்கினால், அதன் தாக்கம் ஒரு பெரிய சூறாவளியைப் போலவே இருக்கும் என்று மார்க் போஸ்லாஃப் கூறுகிறார். உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறுகிறார். YR4 பற்றி என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க விண்வெளிப் பணி திட்டமிடல் ஆலோசனைக் குழு ஏப்ரல் மாதம் மீண்டும் கூடும். நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை ஆபத்தான விண்கற்களைத் தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. டிமோர்போஸ் என்ற விண்கல்லின் பாதையை திசை திருப்ப இரட்டை விண்கல் திசை திருப்பல் சோதனையில் (Double Asteroid Redirection Test) ஒரு விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இருப்பினும், YR4 விஷயத்தில் இது செயல்படுமா என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. அதை வெற்றிகரமாகத் திசை திருப்பிவிட மிகக் குறைந்த நேரமே உள்ளது. அன்டார்டிகாவில் சுமார் 50,000 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது ALH84001. இது செவ்வாய் கோளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இதில், கோள்களின் வரலாற்றுக்கான முக்கியத் தடயங்களும் கனிமங்களும் உள்ளன. இது மிகவும் சூடாக இருந்ததாகவும், அதன் மேற்பரப்பில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விஞ்ஞானிகள் 2023இல், விண்வெளியில் 33 பாலிஹிம்னியா என்ற விண்கல்லைக் கண்டுபிடித்தனர். பூமியில் காணப்படும் அனைத்துக் கனிமங்களையும்விட கனமான கனிமங்கள் அதில் நிரம்பியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பூமிக்கு முற்றிலும் புதியது. 33 பாலிஹிம்னியா, குறைந்தது 170 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. இந்த விண்கற்கள் அறிவியலை மேலும் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளன. இரண்டு பாண்டா குட்டிகளை காண வரும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்24 பிப்ரவரி 2025 இந்தியாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும் 'செகண்ட் இயர் சிண்ட்ரோம்' பற்றி தெரியுமா?22 பிப்ரவரி 2025 விண்வெளியை அவதானிக்க பெரிய டிஜிட்டல் கேமரா பட மூலாதாரம்,GETTY IMAGES சில விஞ்ஞானிகள் YR4இன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் அது சந்திரனைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது. லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் கரேத் காலின்ஸ் கூறுகையில், "நிஜ வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து கிடைக்கும் தரவுகளுக்கு அதிக பயன்பாடு உள்ளது" என்கிறார். விண்கல் மோதலுக்குப் பிறகு எவ்வளவு பொருள் வெளியேற்றப்படும்? அது எவ்வளவு வேகமாகப் பயணிக்கும்? அது எவ்வளவு தூரம் பயணிக்கும்? பூமியில் விண்கற்களின் தாக்கங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இதுவரை உருவாக்கிய கருவிகளைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும். சிறந்த கணிப்புகளைச் செய்வதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். சூரிய குடும்பம் முழுவதும் சிதறிக் கிடக்கும் பாறைச் சிதைவுகள் ஒரு கட்டத்தில் பூமியைத் தாக்கும் என்பதை YR4 மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு பெரிய விண்கல் எப்போது மனித உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை அறிவது முக்கியம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது வரவிருக்கும் ஆண்டுகளில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் வரவிருக்கும் நூற்றாண்டுகளில் அபாயங்களைக் கணிக்க உதவும். மேலும், மனிதர்கள் விண்வெளியைக் கண்காணிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இந்த ஆண்டின் பிற்பகுதியில், மிகப் பெரிய அளவிலான டிஜிட்டல் கேமரா கிடைக்கும். அது சிலியில் உள்ள வேரா ராபின் ஆய்வகத்தில் இருந்து செயல்படும். இரவு வானத்தின் பல அதிசயங்களை அந்த டிஜிட்டல் கேமரா படம்பிடிக்கும். நாம் எவ்வளவு அதிகமாக விண்வெளியைக் கவனிக்கிறோமோ, அவ்வளவு அதிகமான விண்கற்களை பூமிக்கு அருகில் கண்டறிய முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2013j5rn7xo
  6. அவுஸ்திரேலியா - தென் ஆபிரிக்க போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது; பி குழுவில் அரை இறுதிக்கு நான்கு அணிகளும் போட்டி Published By: VISHNU 25 FEB, 2025 | 08:58 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெறவிருந்த பி குழுவுக்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக நாணய சுழற்சி நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய இப் போட்டி மழை காரணமாக கைவிடப்படுவதாக மாலை 5.30 மணிக்கு உத்தியோகபூர்மாக அறிவிக்கப்பட்டது. இப் போட்டி கைவிடப்பட்டதால் இக் குழுவிலிருந்து நான்கு அணிகளும் அரை இறுதிக்கு செல்வதற்கான வாயில் திறந்த வண்ணம் இருக்கிறது. ஏ குழுவில் இருந்து இந்தியாவும் நியூஸிலாந்தும் ஏற்கனவே அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுவிட்டன. பி குழுவில் இன்றைய போட்டி கைவிடப்பட்ட நிலையில் தென் ஆபிரிக்கா 3 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக வித்தியாச அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவும் 3 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்தும் ஆப்கானிஸ்தானும் தலா ஒரு தோல்வியுடன் முறையே 3ஆம், 4ஆம் இடங்களில் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் லாகூரில் நாளை மோதவுள்ளன. அப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு சற்று அதிகரிப்பதுடன் தோல்வி அடையும் அணி முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிவரும். இதேவேளை, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் தங்களது கடைசிப் போட்டிகளில் முறையே இங்கிலாந்தையும் ஆப்கானிஸ்தானையும் வெற்றிகொண்டால் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும், தோல்வி அடைந்தால் புள்ளிகளும் நிகர ஓட்ட வேகமும் அரை இறுதிக்கு செல்லும் அணிகளைத் தீர்மானிக்கும். ஏ குழுவில் இந்தியாவும் நியூஸிலாந்தும் தலா 2 வெற்றிகளுடன் அணிகள் நிலையில் 4 புள்ளிகளைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. https://www.virakesari.lk/article/207690
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES 26 பிப்ரவரி 2025, 02:25 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் இன்றைய ( 26/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. உணவு, சம்பளம் வழங்காமல் சித்ரவதை செய்ததாகக் கூறி ஓமனில் இருந்து படகில் தப்பி வந்த தமிழ்நாடு மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பே மீன்பிடித் துறைமுகத்தின் அருகே கடல்பரப்பில் செயிண்ட் மேரீஸ் தீவு உள்ளது. இந்த தீவுப்பகுதியில் ஓமன் நாட்டுப்படகு டீசல் இன்றி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும். இதனைப் பார்த்த உள்ளூர் மீனவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. கடலோர காவல்படையினர் படகில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது, இவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிராங்கிளின் மோசஸ் (50), டெரோஸ் அல்போன்சோ (38), மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த ராபின்ஸ்டன் (50) என்பது தெரிய வந்ததாகவும். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி அவர்களின் ஓமன் நாட்டு உரிமையாளர் மூன்று பேருக்கும் சம்பளம் மற்றும் உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்ததாகவும், மூன்று பேரின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கி வைத்துக் கொண்டு திரும்ப கொடுக்காமல் மிரட்டியும் வந்தாகவும் மீனவர்கள் தெரிவித்ததாக தினத்தந்தி செய்தி கூறுகிறது. "இதனால் மூன்று மீனவர்களும் மீன்பிடிப்பதற்காக சென்ற போது உரிமையாளரின் படகுடன் ஓமனில் இருந்து கடல் மார்க்கமாகவே தப்பி வந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடல் வழியாக பயணித்த அவர்கள் இந்தியக் கடல் பகுதியை அடைந்துள்ளனர். கார்வாரைக் கடந்து மல்பே அருகே செயின்ட் மேரீஸ் தீவுப் பகுதியில் வந்த போது படகில் டீசல் தீர்ந்துள்ளது. இதனால் நடுக்கடலில் தவித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது" என தினத்தந்தி செய்தி குறிப்பிடுகிறது. "கடலோர காவல்படையினர் ஓமன் நாட்டுப்படகை பறிமுதல் செய்ததோடு, பாஸ்போர்ட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டுப் படகில் எல்லையைத் தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து மூன்று மீனவர்களையும் கைது செய்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்." எனவும் தினத்தந்தி கூறியுள்ளது. செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா? டிரம்பின் முடிவுகள் அமெரிக்கா - அரபு நாடுகளுக்கு இடையே இந்தியாவை சிக்க வைத்துவிட்டதா? முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை எவ்வளவு குறைவு? எப்படிப்பட்ட மருந்துகள் இங்கு கிடைக்கும்? போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் பட மூலாதாரம்,GETTY IMAGES கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டிடம் கட்ட கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி டி ஆர் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்ததாக கூறும் அந்த செய்தியில், "சோமநாதசுவாமி கோயிலுக்கு நிலத்தை குத்தகைக்கு விட ரூ.3.19 லட்சம் மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ரூ.5.12 லட்சம் வாடகையாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதனால் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டி ஆர் ரமேஷ் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என் ஆர் ஆர் அருண் நடராஜன், கோயில் நிலத்தை குத்தகைக்கு விடுவது என 2022-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அப்போது என்ன வழிகாட்டி மதிப்பீடு இருந்ததோ அதன் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை மாற்றியமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் வாடகை மறுநிர்ணயம் செய்யப்படும் என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் இந்த முடிவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்25 பிப்ரவரி 2025 காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 சாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் ஆணையம் பரிந்துரை பட மூலாதாரம்,GETTY IMAGES பள்ளிகளில் சாதி உணர்வை ஒழிப்பதற்காகவும், மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்பதற்காகவும் தமிழ்நாடு போலீஸ் ஆணையம், மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 5வது போலீஸ் ஆணையம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அந்த செய்தியில்," அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சாதி பாகுபாடு நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுவதால் பள்ளிகல்வித்துறை நுட்பமாக செயல்பட வேண்டும். இத்தகைய பிரச்னை இருக்கும் பள்ளிகளில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருக்கக் கூடாது. சாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தொலைதூரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்களை சரியான திசையில் வழி நடத்துவதில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது" என போலீஸ் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. "அரசுப் பள்ளிகளில் சாதியுடன் தொடர்புடைய வண்ணப்பட்டைகளை மாணவர்களும், ரிப்பன்களை மாணவிகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளை அல்லது கறுப்பு நிற ரிப்பன்களையே சீருடைகளில் அனுமதிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு, சக மாணவர்களை துன்புறுத்துபவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்" என்ற பரிந்துரைகளையும் போலீஸ் ஆணையம் வழங்கியுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான இந்த 5 வது போலீஸ் ஆணையம் பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் உள்ளடக்கியது. வருவாய், காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் இதில் அங்கம் வகிக்கின்றனர். பள்ளிகள் மட்டுமல்லாது சாதி ரீதியாக ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க கிராம வாரியான நடவடிக்கைகளை எடுக்க போலீஸ் ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழின் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?4 மணி நேரங்களுக்கு முன்னர் பூமியை நெருங்கிய பிரமாண்ட விண்கல் நிலவின் மீது மோதுமா?நாசா புதிய தகவல்4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை: பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பை உருவாக்கி தர கோரிக்கை பட மூலாதாரம்,FACEBOOK/KATHIRAVEELU SHANMUGAM KUGATHASAN இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 92 ஆயிரம் பெண் தலைமை குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் குகதாசன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதாக இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "வடக்கு மற்றும் கிழக்கில் 92,000 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் நிலையான வருமான வழிமுறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேடத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க புதிய திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.குகதாசன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwynp1dkyxxo
  8. அண்ணை, திரு அப்துல் ஹமீட் அவர்களின் உரையில் 3 - 4 நிமிடங்களை அவதானித்துப் பாருங்கள்.
  9. Germany-ல் திடீரென தீவிர வலதுசாரிகளுக்கு இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமானது ஏன்? யார் இந்த AfD Party? கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் அடுத்த சான்சிலர் ஆக உள்ளார். 28.6% வாக்குகளுடன், பழமைவாத கட்சியான CDU நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. அதேசமயம் தீவிர வலதுசாரியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கட்சியும் தற்போது மிகப்பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் ஒரு தீவிர வலதுசாரி கட்சி அடைந்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
  10. தெலுங்கானா சுரங்க விபத்து: 72 மணி நேரம் கடந்தும் சிக்கியவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் 25 FEB, 2025 | 05:13 PM தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் சுரங்க விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி 72 மணிநேரமாக நீண்டுவரும் நிலையில் உள்ளே சிக்கியிருப்பவர்களை தொடர்பு கொள்வதில் இன்னும் சிரமம் நீடிக்கிறது. சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளன. தெலுங்கானாமாநிலம் நாகர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கப்பாதை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளின்படி எஸ்எல்பிசி சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை வேலை நடந்து வரும் நாகர்னூல் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கூறுகையில் “சுரங்கத்துக்குள்ளே சிக்கியிருப்பவகளை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று வருகிறோம். தண்ணீரை வெளியேற்றி மீட்புக்குழுவினர் முன்னேறியுள்ளனர். ஆனால் கடைசி 40 மற்றும் 50 மீட்டர் வரை எங்களால் செல்லமுடியவில்லை. தற்போது ஜிஎஸ்ஐஇ என்சிஆர்ஐ நிபுணர்களின் ஆலேசானையைப் பெற்று வருகின்றோம். எல்அண்ட்டி நிபுணர்களும் இங்கு வந்துள்ளனர்.” என்று தெரிவித்தார். இந்நிலையில் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள ஜார்க்கண்டைச் சேர்ந்த நான்கு தொழிலாலர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெலங்கானா புறப்பட்டுள்ளதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் என போலீஸ் அதிகாரிகளுடன் தெலங்கானா கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜார்க்கண்ட்டின் சில்கியாரா சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்ட எலி வலை சுரங்கத் தொழிலாளர்கள் இந்த மீட்பு பணியிலும் நேற்று இணைந்துள்ளனர். உள்ளே இருக்கும் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்பு செயல்திட்டம் வகுக்கப்படும்.” என்று எலிவலை தொழிலாளர்களில் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே உள்ளே சிக்கியிருப்பவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207661
  11. படக்குறிப்பு, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட் 2008ஆம் ஆண்டில் இரு நாடுகள் தீர்வை முன்வைத்தார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி சர்வதேச செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் இப்போது உங்களுக்கு முன்மொழிவதைப் போல, அடுத்த 50 ஆண்டுகளில் எந்தவொரு இஸ்ரேலிய தலைவரும் உங்களுக்கு முன்மொழிவதை நீங்கள் காண முடியாது." "கையெழுத்திடுங்கள்! கையெழுத்திடுவதன் மூலம் வரலாற்றை மாற்றுவோம்!" அது 2008ஆம் ஆண்டு. அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரக்கூடும் என்று தான் நம்பிய ஓர் ஒப்பந்தத்தை ஏற்குமாறு பாலத்தீன தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். இன்று சாத்தியமற்றதாகத் தோன்றும், இரு நாடுகள் எனும் தீர்வை முன்வைப்பதாக அந்த ஒப்பந்தம் இருந்தது. அது செயல்படுத்தப்பட்டிருந்தால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 94 சதவீதத்துக்கும் அதிகமான பகுதிகளில் ஒரு பாலத்தீன நாடு உருவாகியிருக்கும். ஒல்மெர்ட் வரைந்த அந்த வரைபடம் தற்போது கிட்டத்தட்ட ஒரு கற்பனை நிலையை அடைந்துள்ளது. அந்த வரைபடம் குறித்துக் கடந்த ஆண்டுகளில் பல்வேறு விளக்கங்கள் வெளியாகியிருந்தாலும், அதை அவர் இப்போது வரை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியதில்லை. படக்குறிப்பு, அருகருகே இஸ்ரேலிய மற்றும் பாலத்தீனிய அரசுகள் உள்ள தனது இரு நாடுகள் தீர்வுக்கான ஒல்மெர்ட்டின் வரைபடம் ஆவணப்படத் தயாரிப்பாளர் நார்மா பெர்சியின், சமீபத்திய தொடரான "இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்கள்: அக்டோபர் 7க்கான பாதை" திங்கள்கிழமை முதல் ஐப்ளேயரில் (iPlayer) கிடைக்கிறது. இதில், 2008 செப்டம்பர் 16ஆம் தேதி ஜெருசலேமில் நடந்த சந்திப்பில் மஹ்மூத் அப்பாஸுக்கு காட்டியதாக அவர் கூறும் வரைபடத்தை ஒல்மெர்ட் முதல் முறையாக வெளிப்படுத்துகிறார். "இந்த வரைபடத்தை நான் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை" என்று அதில் கூறுகிறார். மேற்குக் கரையின் 4.9 சதவீத பிரதேசத்தை இஸ்ரேலுடன் இணைக்க ஒல்மெர்ட் முன்மொழிந்த திட்டம் இந்த வரைபடத்தில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல்: 2 குழந்தைகள் உள்பட பணயக் கைதிகளின் உடல்களை அனுப்பிய ஹமாஸ், துக்கத்தில் மூழ்கிய மக்கள் இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்? காஸாவில் டிரம்ப் செய்ய நினைப்பது என்ன? காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும் வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை கடந்த 1990களின் இறுதி காலத்திலிருந்து முன்மொழியப்பட்ட முந்தைய திட்டங்களைப் போலவே, ஒல்மெர்ட்டின் திட்டத்திலும் முக்கிய யூதக் குடியேற்றப் பகுதியும் இணைந்திருக்கும். அதற்குப் பதிலாக, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியின் ஓரங்களில் உள்ள இஸ்ரேலிய பகுதியை, இஸ்ரேல் விட்டுக்கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட் கூறினார். இரண்டு பாலத்தீன பிரதேசங்களும் ஒரு சுரங்கப்பாதை அல்லது நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்படும். இதுவும் முன்பே விவாதிக்கப்பட்ட ஒரு யோசனையாகும். சிபிஎஸ்இ பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லையா? - யாருக்கு பலன்?24 பிப்ரவரி 2025 ஜெர்மனி தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி வெற்றி - ஈலோன் மஸ்க் ஆதரித்த கட்சி என்ன ஆனது?24 பிப்ரவரி 2025 ஆவணப்படத்தில், இதற்கு பாலத்தீன தலைவர் தெரிவித்த பதிலை நினைவு கூர்ந்தார் ஒல்மெர்ட். "பிரதமர் அவர்களே, இது மிகவும் தீவிரமானது. மிக, மிக, மிகத் தீவிரமானது" என்று அந்த பாலத்தீனத் தலைவர் கூறியதை நினைவுகூர்ந்தார் ஒல்மெர்ட். முன்மொழிந்த திட்டமும் தீர்வும் என்ன? முக்கியமாக, ஒல்மெர்ட் முன்மொழிந்த திட்டத்தில் ஜெருசலேமை சுற்றியுள்ள நுணுக்கமான பிரச்னைக்கான ஒரு தீர்வும் அடங்கியிருந்தது. இரு தரப்பும் நகரத்தின் சில பகுதிகளைத் தங்களது தலைநகரமாக அறிவிக்கக் கூடும். அதே நேரத்தில், பழைய நகரம், அதன் புனித தலங்கள் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் உட்பட 'புனித பகுதி'யின் நிர்வாகம், இஸ்ரேல், பாலத்தீனம், சௌதி அரேபியா, ஜோர்டான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பொறுப்பாளர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்படும். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த வரைபடம் யூத குடியேற்றங்களுக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். மேலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், மேற்குக் கரை மற்றும் ஜோர்டான் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியிருந்த பல்வேறு குடியிருப்புகள் அகற்றப்பட்டிருக்கும். முந்தைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷாரோன், 2005ஆம் ஆண்டு காஸா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான யூத குடியேறிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியபோது, இஸ்ரேல் வலதுசாரி தரப்பினரால் இதுவொரு தேசியத் துயரமாகக் கருதப்பட்டது. மேற்குக் கரையின் பெரும்பகுதியை வெளியேற்றுவது மிகவும் கடினமானது மற்றும் சிக்கலானது. பல்லாயிரக்கணக்கான குடியேறிகளை இடம் மாற்றும்போது, வன்முறை அபாயமும் அதிகம். ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாததால் அப்படியான ஒரு சிக்கல் எழவில்லை. அவர்களது சந்திப்பின் முடிவில், பாலத்தீன தலைவர் கையெழுத்திடும் வரை வரைபடத்தின் நகலை மஹ்மூத் அப்பாஸிடம் ஒப்படைக்க ஒல்மெர்ட் மறுத்துவிட்டார். ஆனால் தனது நிபுணர்களிடம் அந்த வரைபடத்தைக் காட்டி, அதிலுள்ள முன்மொழிவை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி, மஹ்மூத் அப்பாஸ் அதை நிராகரித்துவிட்டார். இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவதென்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் கும்பமேளா: சாதுக்களின் தங்குமிடம், திரிவேணி சங்கமம் எப்படி இருக்கிறது? புகைப்படத் தொகுப்பு24 பிப்ரவரி 2025 திட்டத்தைத் தொடர முடியாதது ஏன்? ஆகையால், அடுத்த நாள் வரைபட நிபுணர்களுடன் சந்திக்க இருவரும் ஒப்புக்கொண்டதாக ஒல்மெர்ட் தெரிவித்தார். "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வை முன்னெடுக்கத் தயாராவதைப் போல் உணர்ந்தவாறு, அன்று நாங்கள் பிரிந்தோம்," என்று ஒல்மர்ட் கூறினார். ஆனால் அதன் பிறகு வரைபட நிபுணர்களுடனான அந்தச் சந்திப்பு நடக்கவே இல்லை. அன்றிரவு அவர்கள் ஜெருசலேமில் இருந்து புறப்பட்டபோது காரில் இருந்த சூழல் குறித்து அதிபர் மஹ்மூத் அப்பாஸின் தலைமை அதிகாரி ரஃபிக் ஹுசைனி நினைவுகூர்ந்தார். "நிச்சயமாக, நாங்கள் சிரித்தோம்," என்று அவர் ஆவணப் படத்தில் கூறுகிறார். இந்தத் திட்டம், இனி தொடர முடியாத நிலைக்கு வந்துவிட்டதாக பாலத்தீனர்கள் நம்பினர். மறுபுறம், தனக்குத் தொடர்பில்லாத ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொண்டிருந்ததோடு, தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக ஒல்மெர்ட் அறிவித்திருந்தார். ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா - டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் பேசியது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்5 மணி நேரங்களுக்கு முன்னர் தோல்விக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,AFP "ஒல்மெர்ட் எவ்வளவு நல்லவர் என்றாலும், அவர் ஒரு அதிகாரமற்ற தலைவர் என்பதில் சந்தேகமில்லை," என்று கூறிய ஹுசைனி, "அதனால், இந்தத் திட்டத்தை எந்தவிதத்திலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது" என்றும் தெரிவித்தார். காஸாவின் சூழலும் சிக்கலாக இருந்தது. ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இருந்து மாதக்கணக்கில் நடந்த ராக்கெட் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, டிசம்பர் இறுதியில் ஆபரேஷன் காஸ்ட் லீட் எனப்படும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உத்தரவிட்டார் ஒல்மெர்ட். இதன் விளைவாக மூன்று வாரங்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது. ஆனால், அப்பாஸ் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தால் "மிகவும் புத்திசாலித்தனமான முடிவாக" இருந்திருக்கும் என்கிறார் ஒல்மெர்ட். ஏனெனில், எதிர்காலத்தில் எந்தவொரு இஸ்ரேல் பிரதமரும் அதை ரத்து செய்ய முயன்றால், இதன் "தோல்விக்கு இஸ்ரேல்தான் காரணம்" என்று அப்பாஸ் உலகுக்குத் தெரிவித்திருக்கலாம்" என்றும் கூறுகிறார். படக்குறிப்பு, பாலத்தீன தலைவரின் தலைமை அதிகாரி ரஃபிக் ஹுசைனி, ஒல்மெர்ட்டை 'அதிகாரமற்ற தலைவர்' என்று வர்ணித்தார். பின்னர், பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேல் தேர்தல்கள் நடைபெற்றன. பாலத்தீன அரசுரிமைக்கு எதிராகக் குரல் கொடுத்த லிகுட் கட்சியின் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமரானார். பிறகு, ஒல்மெர்ட்டின் திட்டமும் வரைபடமும் செயல்படுத்தப்படவில்லை. முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட், அப்பாஸின் பதிலுக்காக இப்போதும் காத்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவரது திட்டமும் இஸ்ரேல்-பாலத்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போன பல்வேறு திட்டங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது. கடந்த 1973ஆம் ஆண்டில், முன்னாள் இஸ்ரேலிய ராஜதந்திரி அப்பா எபான், "பாலத்தீனர்கள் வாய்ப்புகளைத் தவறவிடுவதில் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அதன் பிறகு, இந்தச் சொற்றொடரை இஸ்ரேலிய அதிகாரிகள் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 1993ஆம் ஆண்டு இரு தரப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து பிரச்னை இன்னும் சிக்கலாக மாறியது. வெள்ளை மாளிகை தோட்டத்தில் யிட்ஸாக் ரபீன் மற்றும் யாசர் அராஃபத் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியதன் மூலம் தொடங்கிய அமைதி முயற்சி, சில நேரங்களில் உண்மையாகவே நம்பிக்கை அளித்தாலும், அதற்கிடையில் பெரும் துயரங்களும் நிகழ்ந்தன. இறுதியில், அது தோல்வியில்தான் முடிந்தது. அதற்கான காரணங்கள் மிகவும் சிக்கலானவை என்பதோடு அதற்கான பொறுப்பைப் பல்வேறு தரப்பினரும் ஏற்க வேண்டும். உண்மையில், சூழ்நிலையும் ஒருபோதும் சரியாக அமையவில்லை. கேரளா: இஸ்லாமிய பெண் பனியுடன் விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியது ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்: பைலேட்டரல் நிமோனியா பாதிப்பு யாருக்கு வரும்? அறிகுறி, சிகிச்சைகள் என்ன?24 பிப்ரவரி 2025 நான், 24 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக அமையாத இந்தச் சூழலை நேரில் கண்டேன். 2001ஆம் ஆண்டு ஜனவரியில், எகிப்திய ஓய்வு நகரமான தபாவில், இஸ்ரேல் மற்றும் பாலத்தீன பேச்சுவார்த்தையாளர்கள் மீண்டும் ஓர் ஒப்பந்தத்திற்கான வடிவத்தைக் கண்டறிந்தார்கள். பாலத்தீன பிரதிநிதி ஒருவர், ஒரு காகிதத்தில் மேலோட்டமான வரைபடம் ஒன்றை வரைந்து, சாத்தியமான பாலத்தீன அரசின் தோராயமான தோற்றத்தை அவர்கள் முதன்முறையாக பார்ப்பதாக என்னிடம் கூறினார்கள். ஆனால் மேற்குக் கரை மற்றும் காஸா தெருக்களில் வன்முறை வெடித்ததால் பேச்சுவார்த்தைகள் பலனற்றதாகி விட்டன. இந்த வன்முறையானது முந்தைய செப்டம்பரில் தொடங்கிய "இன்டிபாடா" எனப்படும் இரண்டாவது பாலத்தீன எழுச்சியின் ஒரு பகுதியாகும். மீண்டும், இஸ்ரேல் ஒரு அரசியல் மாற்றத்தின் மையத்தில் இருந்தது. பிரதமர் எகுட் பராக் ஏற்கெனவே ராஜினாமா செய்திருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு ஏரியல் ஷாரோன் அவரை எளிதாகத் தோற்கடித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒல்மெர்ட் உருவாக்கிய வரைபடத்தைப் போலவே, காகிதத்தில் வரையப்பட்ட அந்த வரைபடமும், அது என்ன தீர்வை முன்வைத்திருக்கும் என்பதை வெளிப்படுத்தியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1d430dngywo
  12. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம் Published By: VISHNU 25 FEB, 2025 | 07:34 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று பாராளுமன்றத்தில் எழாவது தினமாக இடம்பெற்றது. காலை 10 மணி முதல் இடம்பெற்ற விவாதத்தின் போது ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பாக விமர்சன ரீதியாகவும் ஆக்கபூர்வமான வகையிலும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மாலை 6.10 மணி அளவில் விவாதம் முடிவுக்கு வந்த நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை சபை அனுமதிக்கின்றதா என கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறடா கயந்த கருணாதிலக்க வாக்கெடுப்பை கோரினார். அதன் பிரகாரம் வாக்கெடுப்புக்கு செல்லுமாறு சபாநாயகர் கோரியதை அடுத்து கோரம் மணி ஒலிக்கப்பட்டு,வாக்கெடுப்பு இலத்திரணியல் முறையில் இடம்பெற்றது. அதன் பிரகாரம் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 109 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 46 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. ஜனநாய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். இந்த வாக்கெடுப்பில் சுயாதீன உறுப்பினர் இராமனாதன் அர்சுனா, ப.திகாம்பரம், தயாசிறி ஜயசேகர இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 பேர் கலந்துகொள்ளவில்லை. அதனடிப்படையில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். வரவு செலவுத்திட்டத்திற்கு ஆளும் கட்சியில் இருக்கும் 159 பேரில் 154 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். அமைச்சர் விஜித்த ஹேரத் வெளிநாடு சென்றுள்ளதால் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. வரவு செலவு திட்த்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டாமன் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ரவி கருணாநாயக்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, நாமல் ராஜபக்ஷ் தலைமையிலான ஸ்ரீலங்கா பாெதுஜன பெரமுன, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிராக வாக்களித்தன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/207687
  13. பட மூலாதாரம்,AP கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் லோஃப்டஸ் பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பண்டைய எகிப்தில் மம்மி ஆக்கப்பட்ட உடல்கள், 5,000 ஆண்டுகளாக சர்கோபாகஸ் எனப்படும் கல்லால் ஆன சவப்பெட்டியில் இன்னும் நல்ல வாசனையுடன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற 9 மம்மிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவற்றிலிருந்து வந்த வாசனையின் விதத்தில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும், அவற்றின் வாசனையை கண்டறிந்தனர். இந்த வாசனையை, வேதியியல் ரீதியாக மீண்டும் உருவாக்கினால், மற்றவர்களும் இந்த மம்மிகளின் வாசனையை அனுபவிக்கலாம் என்றும் உள்ளே இருக்கும் உடல்கள் எப்போது அழுக ஆரம்பிக்கும் என்பதை அறிய இது உதவும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். "மம்மி ஆக்கப்பட்ட உடல்களை முகர்ந்து பார்த்த அனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஆதலால் கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் இதேபோன்ற வாசனையை மீண்டும் உருவாக்கி வருகிறோம்", என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சிசிலியா பெம்பிப்ரே பிபிசியிடம் தெரிவித்தார். பிரான்சில் பிரிட்டிஷார் பிடியில் இருந்து தப்ப, கப்பலில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர் - என்ன நடந்தது? நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதியது ஏன்? அருண் ஷோரி புது தகவல் தாந்தியா தோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தியைப் பரப்பிய கிளர்ச்சியாளர் - ஆங்கிலேயர்களை திணற வைத்தது எப்படி? வரலாற்று செயல்முறை உடல்களை மம்மியாக மாற்றும் செயல்முறையின் போது, பண்டைய எகிப்தியர்கள் அந்த உடலை நல்ல மணம் மிக்க பொருட்களால் நிரப்புவர். இறந்த பிறகு மறுமைக்குள் நுழைய ஆன்மாவைத் தயார்படுத்துவதற்கான ஒரு முக்கிய பகுதியாக இதனை அவர்கள் செய்துவந்தனர். இதனால், அரசர்கள் மற்றும் பிற பிரபுக்களின் உடல்களை வாசனை தரும் எண்ணெய்கள், மெழுகுகள் மற்றும் தைலம் ஆகியவற்றால் நிரப்பினர். "திரைப்படங்களிலும் புத்தகங்களிலும், மம்மி செய்யப்பட்ட உடல்களை முகர்ந்து பார்ப்பவர்களுக்கு கெட்ட விஷயங்கள் நடப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கும்", என்று பெம்பிப்ரே கூறினார். "இந்த மம்மிகளிலிருந்து வந்த மணம் எவ்வளவு இனிமையாக இருந்தது என்பதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம்." சிபிஎஸ்இ பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லையா? - யாருக்கு பலன்?24 பிப்ரவரி 2025 ஜெர்மனி தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி வெற்றி - ஈலோன் மஸ்க் ஆதரித்த கட்சி என்ன ஆனது?24 பிப்ரவரி 2025 அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி இதழில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்ட ஆசிரியர்கள், கல்லால் ஆன அந்த சவப்பெட்டிக்குள் இருக்கும் மம்மிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு அந்த வாசனையை பெற வேண்டியிருந்தது. லண்டன் பல்கலைக் கழக கல்லூரி மற்றும் ஸ்லோவேனியாவில் உள்ள லுப்லஜானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு சிறிய குழாயை அந்த சவப்பெட்டிக்குள் செருகி இந்த செயல்பாட்டை செய்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களால் எந்த உடல் மாதிரிகளையும் எடுக்காமல் வாசனையை மட்டும் எடுக்க முடிந்தது. இந்த விஞ்ஞானிகள் எப்போதும் புதிய தகவல்களைக் கண்டறிய எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வழிகளைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள் என்று பெம்பிப்ரே விளக்கினார். பட மூலாதாரம்,AP அருங்காட்சியகங்களில் இறந்தவர்களின் உடல்களை (மம்மிகளை) முகர்ந்து பார்க்கும் பார்வையாளர்கள், பண்டைய எகிப்தையும் உடல்களை பாதுகாக்கும் அவர்களது செயல்முறையையும் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் அனுபவிக்க முடியும். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய மேற்பார்வையாளரான ஆலி லூக்ஸ், வாசனையின் அரசியல் குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை எழுதியுள்ளார். மம்மிகள் குறித்து அறிந்து கொள்வதற்கு "உண்மையிலேயே புதுமையான" வழி இது என்று விவரித்தார். "உங்கள் மூக்கைப் பயன்படுத்துவது ஒரு வலுவான உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான எதிர்வினையை உருவாக்குகிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "[பண்டைய எகிப்தில்] சமூக, மத மற்றும் தனிப்பட்ட நடைமுறைகளுக்கு வாசனைகள் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம்," என்று அவர் மேலும் கூறினார். ஏபி செய்தி முகமையிடம் பேசிய ஆய்வுக் குழுவின் மற்றொரு உறுப்பினரான மதிஜா ஸ்ட்ரிச், ஒரு 'மம்மி' எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தது என்பதைக் கூட வாசனைகள் குறிக்கலாம் என்று கூறினார். "இந்த அணுகுமுறை அருங்காட்சியக சேகரிப்புகளுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார். இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவதென்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 'புதிய குடிமக்கள்' சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பிபிசி கள ஆய்வு8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அருங்காட்சியக பார்வையாளர்களுக்கு மம்மிகள் பற்றிய புதிய உணர்வுப்பூர்வமான பார்வையை வழங்குவதோடு, இந்த கண்டுபிடிப்பு மம்மிகளைப் பாதுகாப்பவர்களுக்கு ஒரு சாத்தியமான திருப்புமுனையையும் அளிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் வாயு குரோமடோகிராபி எனப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தி, சர்கோபாகஸுக்குள் இருக்கும் பல்வேறு நாற்றங்களைப் பிரித்து, பின்னர் அவற்றை ஒன்றிணைந்து நறுமணத்தை உருவாக்குகின்றனர். எம்பாமிங் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் விலங்கு கொழுப்புகளின் சிதைவுடன் தொடர்புடைய நாற்றங்களை அவர்கள் கண்டறிந்தனர், இது உடல் சிதைவடையத் தொடங்கியுள்ளதைக் குறிக்கலாம். இதன் மூலம், உடல்களை பாதுகாத்து வைப்பதற்கு சிறந்த வழியைக் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சி கட்டுரை கூறுகிறது. "இந்த சேகரிப்பை கவனித்துக் கொள்ளும் பாதுகாவலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் [ஏனெனில்] இது எதிர்கால சந்ததியினரை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்ய முடியும்," என்று பெம்பிப்ரே கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0kgvevxlpzo
  14. 25 FEB, 2025 | 07:45 PM இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே, கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (25) வருகை தந்திருந்தார். அமைச்சருக்கும், பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி பேசப்பட்டாலும் மீனவர் பிரச்சினை குறித்த விரிவாக கலந்துரையாடப்பட்டன. இதன்போது இந்திய மீனவர்களின் இழுவை படகு உட்பட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அமைச்சர் எடுத்துரைத்தார். இலங்கை கடற்பரப்புக்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அணுக வேண்டும் என இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கூறும்போது, ஆம், மனிதாபிமான முறையிலேயே அணுகுகின்றோம், சம்பவ தினத்தன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாலேயே அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டினார். அதேபோல பெரும்பாலான மீனவர்கள் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தால் திரும்பி செல்கின்றனர் எனவும், ஒரு சிலரே அத்துமீறுகின்றனர் எனவும் அமைச்சர் எடுத்துரைத்தார். குறிப்பாக தமிழகத்திலுள்ள பணபலம் படைத்த முதலாளிமார், அரசியல்வாதிகள் மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்த முற்படுகின்றனர் எனவும், தமது வாழ்வாதாரம் பற்றி மட்டுமே அவர்கள் சிந்திக்கின்றனர் எனவும், வடக்கு மீனவர்களின் நிலை பற்றி சிந்திப்பதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதேவேளை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை வடக்கு மீனவர்களுக்கு தேசிய மக்கள் சக்தி வழங்கியது. அதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை மதித்து, நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பு தமது தரப்புக்கு உள்ள விடயத்தையும் அமைச்சர் மேற்படி சந்திப்பின்போது எடுத்துரைத்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், அவை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். https://www.virakesari.lk/article/207682
  15. அறிவியல் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் எண்ணற்ற அறிவியல் பொருட்கள் மனிதர்களின் கைகளுக்கு விருந்தாக அமைகின்றன. அதில் ஒன்றாக செல்போன் வளர்ச்சியும் இருக்கிறது. இன்றைய காலங்களில் செல்போன்கள் பேசுவதற்காக மட்டுமின்றி விளையாட்டு, பாடல்கள், வீடியோக்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அதனை உபயோகப்படுத்தப்படுகிறது. நொடிப் பொழுதில் மனிதனின் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மிகப்பெரிய அத்தியாவசிய பொருளாக செல்போன்கள் மாறி வருகின்றன. உள்ளங்கையில் செல்போனை வைத்தப்படி உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் பெறுகிறோம். கணினியின் பாதிச் சேவையையாற்றும் செல்போன்கள், மனிதர்களின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அதேநேரத்தில், இந்த செல்போன்களால் ஆபத்தும் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாகவும், தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் பல்வேறு தீமைகள் விளைகிறது. அந்த வகையில், செல்போனை தினசரி எவ்வளவு நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் என்ன ஆபத்து ஏற்படும் என்பது குறித்து ஜாமா நெட்வொர்க் நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் என டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. ’ஒருநாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சில ஆண்டுகளில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும்’ என எச்சரித்துள்ளது. மேலும் அதற்கு மேலான நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால் அது மூளை பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/315420
  16. கடும் குளிர் கொட்டும் மழையில் வத்திக்கானின் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாப்பரசருக்காக மக்கள் பிரார்த்தனை Published By: RAJEEBAN 25 FEB, 2025 | 02:06 PM cbs news உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் குணமடையவேண்டும் என வத்திக்கானின் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் கடும் குளிரின் மத்தியிலும்நூற்றுக்கணக்கானவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலைகுறித்து கவலை வெளியிட்டதுடன் அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கையும் வெளியிட்டனர். கத்தோலிக்க திருச்சபையை புதிய பாதையில் செலுத்தும் அவரது முயற்சிகளிற்காக அந்த மக்கள் நன்றி தெரிவித்தனர். மழைநாளில் கடும் குளிரின் மத்தியில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனைகளிற்கு வத்திக்கானின்; தலைமை தாங்கினார். வத்திக்கான் பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை குறித்து முன்னைய நாட்களை விட நம்பிக்கை அளிக்ககூடிய செய்தியை வெளியிட்ட போதிலும்,இருப்பினும் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் காணப்பட்டவர்களின் மனோநிலை பெரும்பாலும் சோகமானதாகவே காணப்பட்டது.அங்கு காணப்பட்ட 4000க்கும் அதிகமானவர்கள் தாங்கள் பாப்பரசரின் இறுதிநாட்களிற்காகவே ரோமிற்கு செல்லவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தனர். பாப்பரசர் துன்புறுவதை பார்ப்பது மனவேதனையை ஏற்படுத்துகின்றது என கர்தினால் பியட்டிரோ பரோலின் தெரிவித்தார்.அதேவேளை கிறிஸ்தவ திருச்சபைக்கு அவர் ஆற்றிய பணிகளிற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்கற்றுக்கொடுத்த விடயங்களிற்கு நன்றிதெரிவிப்பதற்காக அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விடயங்களிற்கு நன்றி தெரிவிப்பதற்காக தங்கள் சமூகத்தினர்அங்குவந்துள்ளனா என மெக்சிக்கோவை சேர்ந்த என மெக்சிக்கோவை சேர்ந்த மதகுரு ஒருவர் தெரிவித்தார். பலமொழிகளை பேசுபவர்கள் அங்கு திரண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபைக்கு பெரும் ஆறுதல் என கர்தினால் அஞ்சலோ பக்னாசோ தெரிவித்தார். ஆராதனை ஆரம்பமாவதற்கு முன்னர் குடைகளுடன் வந்த சிக்காக்கோவை சேர்ந்த கத்தோலிக்க சுற்றுலாப்பயணிகள் சென்பீட்டர்சில் நாளாந்த ஆராதனைகளில் பாப்பரசருக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்ததுடன் மீண்டும் வருவதற்கு தீர்மானித்ததாக குறிப்பிட்டனர். பாப்பரசரின் பிரான்சிஸின் இறுதி நாட்களிற்காக ரோமில் இருப்போம் என்பது ஏனைய பலரை போல தங்களுக்கும் தாங்கமுடியாத விடயமாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். நாள்; நேரம் குறித்து எவருக்கும் எதுவும் தெரியாது எனினும் இது வரலாற்றுதருணம் என எட்வேர்ட் பேர்ஜெக் என்பவர் தெரிவித்தார். பெருவை சேர்ந்த ஹட்சுமி வில்லானுவேவாவும் அதே உணர்வை வெளிப்படுத்தினார்.பரிசுத்த பாப்பரசர் ஜோன் போலை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்த அவர் ஆனால் பிரான்சிஸ் இலத்தீன் அமெரிக்க பாப்பரசர் என்பதால் நெருக்கமாக உணர்ந்ததாக தெரிவித்தார். நாங்கள் பாப்பரசருக்காக பிரார்த்தனை செய்யவந்தேன் அவர் விரைவில் குணமடைவார்,அவர் சமாதானத்தின் செய்தியை பகிர்ந்துகொள்ளும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்தார். குடியேற்றவாசிகள் குறித்து பாப்பரசர் வெளிப்படுத்திய கருணையை அவர் பாராட்டினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாப்பரசருக்காகதாங்கள் பிரார்த்திப்பதாக கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/207620
  17. Published By: DIGITAL DESK 2 25 FEB, 2025 | 03:52 PM கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் பரவுகின்ற வீதத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இதனை கட்டுப்படுத்த தொடர்ச்சியான வேலை திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொழுநோய் தொடர்பில் இலங்கையிலே இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் வகிக்கின்ற காரணத்தினால் பொதுமக்களுக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை அலுவலகத்தினால் முன்நெடுக்கப்பட்டுள்ளன. தேசிய தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு செவ்வாய்கிழமை (25) மட்டக்களப்பு நகரில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது. கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் பிரதான வீதிகளூடாக மட்டக்களப்பு நகரை சென்று பின்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை வந்தடைந்தது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக பணிப்பாளர் வைத்தியர் சு.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜயன் வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர் பாடசாலை மாணவிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் தொழு நோயைத் தடுக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/207633
  18. 2-வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் 25 FEB, 2025 | 03:08 PM ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண கோரி போராட்டம் நடத்தப்படுகிறது. இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்று (பிப் 25) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 22-ஆம் தேதி, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த மீனவர்களை மார்ச் 7-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அனைத்து தரப்பு மீனவர்களிடம் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை மீனவர்கள் அறிவித்தனர். இதனால், சுமார் 600-க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் ரூ. 6 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையினரின் இத்தகையை செயல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மீனவர் சங்கங்கள் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207627
  19. னகராசா சரவணன் இன்றைய நவீன யுகத்திலும் மலசலகூடம், நீர்,மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்கள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதில் இலங்கையின் சில பகுதி மக்களும் விதிவிலக்கல்ல. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்றுவரை மலசலகூடம், கிணறு, மின்சாரம் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் 30 குடும்பங்கள் வாழ்ந்துவரும் அவலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாலமீன் மடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மக்களே இந்த அவல வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய இந்த பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தொடக்கம் அரச அதிகாரிகள் வரை எவரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பற்றைக்காடுகளில் மலசலம் கழிக்க செல்லும் பெண்களை வீடீயோ எடுத்து முகநூலில் பதிவிட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தங்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக அப்பிரதேச பெண்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். மட்டுநகரில் இருந்து பார்வீதி ஊடாக முகத்துவாரம் வெளிச்ச வீட்டுக்கு அண்மித்த பகுதியில் சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பாலைமீன்மடு மீனவ கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில், கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இவர்களுக்காக சுவிஸ் கிராமத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டபோதும், சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணம் ஆகிய காரணத்தால் பெற்றோர்கள் அங்கிருக்க முடியாமல் வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டதுடன், சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணமாகி பெற்றோருடன் இருக்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழலில் தாங்கள் இருந்த மீனவர் கிராமத்தில் சென்று குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோது அங்கு ஓலைக் குடிசைகளை அமைத்து குடியேறியவர்களை வெளியேறுமாறும் அரச காணி என பிரதேச செயலகம் அறிவித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தனர். இருந்தபோதும் அவர்கள் எங்கும் செல்லமுடியாதால் தொடர்ந்து அங்கு குடிநீர் கிணறு மற்றும் மலசல கூடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் வாழ்ந்துவரும் அந்த மக்களுக்கு கடந்த 15 வருடத்துக்கு மேலாக காணிக்கான பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது. அதேநேரத்தில் அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள அரச காணிகளை 5 ஏக்கர் தொடக்கம் 50 ஏக்கர் வரை அந்த பகுதியை சேராத செல்வந்தர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பலர் அத்துமீறி ஏக்கர் கணக்கில் காணிகளை ஆக்கிரமித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்காது வீடு இன்றிய ஏழை மக்கள் தமது பூர்வீக காணியில் குடியேறியதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்துவரும் அந்த மக்கள் நிம்மதியாக மலம் கழிக்க கூட செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நவீன நூற்றாண்டில் ஒரு மாநகர எல்லைக்குள் இன்றுவரை மலசல கூடம், குடிநீர், மின்சாம் இன்றி வாழ்ந்துவரும் மக்களின் அவல நிலையை யார் தீர்க்கப் போகிறார்கள்? https://thinakkural.lk/article/315426
  20. 25 FEB, 2025 | 03:24 PM முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207632
  21. Published By: VISHNU 25 FEB, 2025 | 02:35 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எமது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் பில்லியன், ரில்லியன் கணக்கான நிதியை கொண்டு வருகின்றோம். பிச்சை போடுகின்றோம். தலதா மாளிகைக்கு குண்டுவைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல, ஆனால் எமது பிரபாகரனை பயங்கரவாதி என்பீர்கள் ஏனெனில் நாங்கள் தமிழர்கள் என யாழ் மாவட்ட சுயேட்சை உறுப்பினர் இராமநாதன் அச்சுனா கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கு ஏதோ பெரிதாக ஒதுக்கி விட்டதாகக் கூறுகின்றீர்கள். யாழ் நூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளீர்கள். இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.0076வீதமாகும். பிச்சைபோடுவதுபோன்று யாழ் நூலகத்திற்கு ஒதுக்கியுள்ளீர்கள். பரவாயில்லை அடுத்ததைப் பார்ப்போம், வடக்கு வீதிகள் அபிவிருத்திக்கென 5000 மில்லியன் ரூபாவையோ, ஒதுக்கியுள்ளீர்கள். இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.38 வீதம். இதுவும் ஒரு பிச்சை, தமிழனுக்கு நீங்கள் போட்ட பிச்சை, அதையும் விடுவோம். வடக்கு கிழக்கில் 35 ஆண்டுகள் பெரும் போர் இடம்பெற்றது. இந்தப் போரில் நான் உட்பட எனது உறவுகள் வீடுகளை இழந்தனர்.. ஆனால் வடக்கு, கிழக்கில் வீடுகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒ துக்கீட்டில் 0.01 வீதம் எமது வீடுகளை இடித்து எமது காணிகளைப் பிடித்து எங்களில் 45000 பேரை கொலை செய்துவிட்டு நீங்கள் எங்களுக்கு போடும் பிச்சை இது. இன்னொரு விடயத்தையும் கூறுகின்றேன். வட்டுவாகல் பாலம் அமைக்க 1000 மில்லியன் ரூபா தந்துள்ளதாக கதைக்கிறார்கள். இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.076 வீதமாகும். இந்தப் பிச்சைக்கும் நன்றி. அத்துடன் சுகாதாரத்துறையிலாவது எங்களுக்கு ஏதாவது பிச்சை போட்டுள்ளீர்களா என்று பார்த்தால் மொத்தமாக 382 பில்லியன் ரூபா ஒதுக்கிவிட்டு வடக்கிற்கு நீங்கள் தந்திருப்பது 0.66 வீதமாகும். உங்கள் பிச்சை எந்தளவுக்கு உள்ளது என்பதனை இதில் பார்த்துக்கொள்ளுங்கள். கிழக்கிற்கு நீங்கள் போட்டுள்ள பிச்சை 0.8 வீதமேயாகும். தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எனது சகோதர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். முடிந்தால் நீங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் உங்களுக்கு பில்லியன் , ரில்லியன் கணக்கான பணத்தை கொண்டுவருகின்றோம். நாங்கள் உங்களுக்கு பிச்சை போடுகின்றோம். சீனாவிடமும் இந்தியாவிடமும் நீங்கள் பிச்சை எடுத்துவிட்டு அதில் எங்களுக்கு 0.01 வீதத்தை பிச்சை போடுவீர்கள். ஜனாதிபதி வந்து நாங்கள் வடக்கிற்கு பெரும் நிதி ஒதுக்கியுள்ளோம் என்று கூறுவாராம். இது பிச்சையிலும் பிச்சை. எடுப்பானாம் ஆண்டி பிச்சை. அதற்கு பிறகு போடுவானாம் ஒரு பிச்சை. இது ஒரு கேவலமான செயல் என்றே குறிப்பிடுகிறேன். யாழ்ப்பாணத்தில் இண்டஸ்ரியல் பார்க் நிர்மாணிக்க போகின்றார்களாம்.. 3 இடங்களிலாம். அதில் 300 இருக்கின்றதாம். கைத்தொழில்துறைக்கு நீங்கள் மொத்தமாக ஒதுக்கிய மொத்த செலவீனத்தில் 1.54 வீதம். கே.கே.எஸ்.ஸை நாங்கள் கட்டுவோம். தமிழன் கட்டுகின்றான் கே.கே.எஸ்.ஸை. முடிந்தால் கே.கே.எஸ்.ஸை எங்களிடம் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு சீமெந்து தருகின்றோம். வடக்கு- கிழக்கிலிருந்து நான் உங்களுக்கு எல்லாம் தந்தோம் . ஆனால் நீங்கள் எமது உத்திரங்களை எடுத்துவிட்டு இப்போது 0.00 அளவில் பிச்சை போடுகின்றீர்கள். இந்தப் பிச்சைதான் உங்களின் பட்ஜெட். அதற்காகத்தான் நாம் வாக்களித்தோம். எனது தமிழ் மண் பிழையாகப்போட்ட 3 பேருக்கான வாக்குகளினால் பத்திரிகை வாசிக்கத்தெரியாதவர்கள் வந்துள்ளார்கள். ஏனெனில் 13 இல் அநுரகுமார திசாநாயக்க எங்களுக்கு ஏதாவது செய்வார் என்று எமது மக்கள் வைத்த நம்பிக்கை கொண்டார்கள். நான் சிங்களர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இங்கு என்னை எதிரியாகவே பார்த்தார்கள். ஆளும் தரப்புக்கும், எதிர்கட்சிக்குமான சண்டையில் நாங்கள் தான் அவதிப்படுகின்றோம். யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் அரச வாகனத்தை கொண்டுபோய் மோதி உடைத்துள்ளார். இந்நிலையில் அரசு அதிபர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியில் 56 மில்லியன் ரூபாவில் 35 மில்லியன் ரூபாவை எடுக்கப்போகின்றாராம். அப்படியானால் நாங்கள் என்ன தேங்காய்களா? அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை இருந்தால் பட்டியல் தாருங்கள் என்று கேட்கிறார். கேவலம். கேவலம், எமது தீவகத்தில் குடிப்பதற்கு நீரின்றி எமது சமூகம் இறந்து கொண்டிருக்கின்றது . ஆனால் தெற்கிற்கு 61234 மில்லியனை நீர் வழங்கலுக்கு ஒதுக்கியுள்ளீர்கள். அதனை விட மேலதிகமாகவும் 20000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளீர்கள். ஆனால் வடக்கிற்கு தண்ணீர் இல்லை. உங்களுக்கு எமது மக்களின் வலிகள் தெரியாது. தலதா குண்டு வைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல. பிரபாகரன் பயங்கரவாதி. இதுதான் உங்கள் சிந்தனை. அதற்கு காரணம் நாங்கள் தமிழர்கள் கிளீன் ஸ்ரீலங்கா செயலணியில் ஒரு தமிழன், முஸ்லிம் இருக்கின்றார்களா?. இல்லை இதுதான் உங்கள் நல்லிணக்கம். இவற்றை சொன்னால் நாங்கள் மோசமானவர்கள். அரசாங்கத்துடன் டீல் வைத்துக் கொள்ளும் தமிழ் பிரதிநிதிகள் நல்லவர்கள் என்பார்கள் என்று அரசாங்கத்தை கடுமையாக சாடினார். https://www.virakesari.lk/article/207582
  22. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்; உயர்ஸ்தானிகரின் தொடக்க உரையில் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படவில்லை Published By: VISHNU 25 FEB, 2025 | 02:03 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (22) ஆரம்பமான நிலையில், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் தொடக்க உரையில் இலங்கை குறித்து விசேடமாக எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்றைய தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இலங்கை தொடர்பில் குறிப்பாக எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. இருப்பினும் விசேடமாக இஸ்ரேல் - பலஸ்தீன மோதலால் மக்கள் மிகமோசமான துயரத்துக்கு முகங்கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இஸ்ரேலினால் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், ஹமால் உள்ளிட்ட ஏனைய பலஸ்தீன ஆயுதக்குழுக்களின் மீறல்கள் குறித்தும் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் நிலைவரம், உலகளாவிய ரீதியில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள், காலநிலை மாற்ற சவால்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பிரயோகம் என்பன உள்ளடங்கலாக உலகநாடுகள் மத்தியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்ல பொதுவான விடயங்கள் குறித்து வோல்கர் டேர்க் அவரது உரையில் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இக்கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், செவ்வாய்க்கிழமை (25) ஜெனிவா நேரப்படி பி.ப 3.40 மணிக்கு உரையாற்றவுள்ளார். இதன்போது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இலங்கை தற்போது நடைமுறையிலிருக்கும் தீர்மானத்தை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்து எதிர்வரும் 3 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வாய்மொழிமூல அறிக்கையை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207581
  23. பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்துடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியது; பாகிஸ்தானும் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேற்றம் Published By: VISHNU 25 FEB, 2025 | 12:05 AM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி தேசிய விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஏ குழுவுக்கான 4ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டி முடிவுடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியதுடன் வரவேற்பு நாடனான பாகிஸ்தானுடன் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றன. பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் மைக்கல் ப்றேஸ்வெல் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ரச்சின் ரவிந்த்ரா குவித்த சதமும் நியூஸிலாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 237 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. வில் யங் (9), கேன் வில்லியம்சன் (5) ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (15 - 2 விக்.) இந் நிலையில் டெவன் கொன்வே (30), ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர். தொடர்ந்து ரச்சின் ரவிந்த்ரா, டொம் லெதம் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். ரச்சின் ரவிந்த்ரா 105 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 112 ஓட்டங்களைக் குவித்தார். இந்த வருடம் இதுவரை நடைபெற்ற 6 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளிலும் சதம் குவிக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும். ரவிந்த்ராவைத் தொடர்ந்து டொம் லெதம் 55 ஓட்டங்களுடன் வெளியேறினார். (214 - 5 விக்.) அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட 23 ஓட்டங்களை க்லென் பிலிப்ஸ் (21 ஆ.இ), மைக்கல் ப்றேஸ்வெல் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. முன் வரிசையிலும் மத்திய வரிசையிலும் ஆறு வீரர்கள் துடுப்பாட்டத்தில் வழங்கிய சிறந்த பங்களிப்பு பங்களாதேஷுக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது. தன்ஸித் ஹசன் (24), அணித் தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தன்ஸித் ஹசன் ஆட்டம் இழந்ததுடன் சீரான இடைவெளியில் மெஹிதி ஹசன் மிராஸ் (13), தௌஹித் ரிதோய் (7), முஷ்பிக்குர் ரஹிம் (2) மஹ்முதுல்லா (4) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். இதனிடையே தௌஹித் ரிதோயுடன் 3ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்ளையும் ஜாக்கர் அலியுடன் 6ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களையும் பகிர்ந்த ஷன்டோ 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் ஜாக்கர் அலி 45 ஓட்டங்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 26 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் 10 ஓட்டங்களையும் பெற்றனர். ஜாக்கர் அலி 8ஆவது விக்கெட்டில் தஸ்கின் அஹ்மத்துடன் 35 ஓட்டங்களைப் பகிர்ந்தார். பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஓ'றூக் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மைக்கல் ப்றேஸ்வெல் https://www.virakesari.lk/article/207578
  24. பொலிஸ் காவலின் கீழான கொலைச் சம்பவங்களால் நீதிக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பு; பக்கச்சார்பற்ற உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 10:33 PM (நா.தனுஜா) நாட்டின் சட்டவாட்சி மீது வலுவான அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள அண்மைய பொலிஸ்காவலின் கீழான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இச்சம்பவங்கள் குறித்து உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் அண்மையில் பதிவான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர பி.மெத்தேகொட மற்றும் செயலாளர் சத்துர ஏ.கல்ஹென ஆகியோரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 19 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்குள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலின் கீழிருந்த சந்தேகநபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து 21 ஆம் திகதி இரவு பொலிஸ்காவலின் கீழிருந்த 2 சந்தேநபர்கள் தப்பிக்க முற்பட்டதாகக்கூறி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் அன்றைய தினம் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். நாட்டின் சட்டவாட்சி மீது வலுவான அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள இத்தொடர் சம்பவங்கள் குறித்து நாம் தீவிர கரிசனையடைகின்றோம். சட்டக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கக்கூடிய இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட சட்ட அமுலாக்கப்பிரிவினர் பெரும் அவதானத்துடனும், மிகுந்த பொறுப்புடனும் செயற்படவேண்டியது அவசியமாகும். அதேவேளை கடந்த காலங்களிலும் இதுபோன்ற பொலிஸ்காவலின் கீழான கொலைகள் இடம்பெற்றதுடன், அவை தொடர்பில் முறையான விசாரணைகளோ அல்லது குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்துவதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். இவ்விடயத்தில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் விளைவாக, தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு மேலோங்கியிருப்பதாக அரசின்மீது குற்றஞ்சுமத்தும் நிலை தோற்றம்பெற்றுள்ளது. அதுமாத்திரமன்றி இத்தகைய தோல்வி நாட்டின் நீதி நிர்வாகம் கேள்விக்கு உட்படுத்தப்படுவதற்கும், அதன் செயற்திறன் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கும் வழிகோலியுள்ளது. நீதிக்குப் புறம்பான சட்டவிரோத படுகொலைகள் ஒருபோதும் அதிகரித்துவரும் குற்றச்செயல்களுக்கான தீர்வாக அமையாது. மாறாக அரசு சட்டத்தின் ஆட்சிக்கு அமைவாக இயங்குவதன் ஊடாகவே குற்றங்களைக் கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட இரண்டாவது சம்பவத்தில் பொலிஸ்காவலின் கீழிருந்த இரண்டு சந்தேநபர்களும் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது குறித்து உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் பதில் பொலிஸ்மா அதிபரை வலியுறுத்துவதுடன், இத்தகைய மிகப்பாரதூரமான பொலிஸ்காவலின் கீழான கொலைச்சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் பொலிஸ்காவலின் கீழான கொலைகள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவருவதற்கு, அச்சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியமாகும். அது சட்டவாட்சியை வலுப்படுத்துவதற்கும், நீதிக்கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீளுறுதிப்படுத்துவதற்கும் இன்றியமையாததாகும். அதன்படி இச்சம்பவம் தொடர்பான விசாரணை செயன்முறைகளை நாம் உன்னிப்பாகக் கண்காணிக்கவிருப்பதுடன், நாட்டின் சட்ட அமுலாக்க செயன்முறையின் ஊடாக பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207569

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.