Everything posted by ஏராளன்
-
வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து - வைத்திய நிபுணர்
Published By: DIGITAL DESK 3 12 FEB, 2025 | 03:06 PM வளி மாசடைவு கர்ப்பிணித் தாய்மார்களின் கருவில் பாதிப்பை ஏற்படுத்தும் என பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பேராசிரியரும் சுவாச ஆரோக்கியம் வைத்தியர் நிபுணருமான துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். மாசடைந்த வளியை சுவாசிப்பதால் கருவில் உள்ள சிசுவின் எடை குறைவதற்கு வழிவகுப்பதோடு, பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளது. சுவாச ஆரோக்கியத்தில் வளி மாசடைவின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக பேராதனை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் உதவியுடன் ஒரு புதிய ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு (OPDs) வருகை தரும் நோயாளிகளில் 40 சதவீதமானவர்கள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் யசரத்ன குறிப்பிட்டார். சுவாசிப்பதில் சிரமம், தடிமல் மற்றும் வைரஸ் தொற்று நிமோனியா போன்ற கடுமையான நிலைகள் வரை இருக்கும். நீண்ட கால சுகாதார பாதிப்புக்களை தடுக்க வளி மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/206501
-
பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!
இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய நினைவுகள் நிழலாடி மனம் வேதனைக்குள்ளாகிறது - சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் மறைவுக்கு தமிழக இயக்குநர் கௌதமன் இரங்கல் 12 FEB, 2025 | 02:49 PM இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பல முறை மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்துடன் பேசிய நினைவுகள் வந்து நிழலாடி மனம் வேதனைக்குள்ளாவதாக தமிழக இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ. கௌதமன் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தியினை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் வ. கௌதமன், மூத்த பத்திரிகையாளர் ஐயா பாரதி அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும். தமிழ்நாடு அம்பத்தூரில் அவரை ஒருமுறை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வும் இனம் சார்ந்தும் ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்தும் பல முறை பகிரியில் பேசியதும் வந்து வந்து நிழலாடி மனம் வேதனைக்கு உள்ளாகிறது. ஈழத்தின் பாலும் தமிழினத்தின் பாலும் அடங்காப்பற்று கொண்டு அறத்தோடு இயங்கிய ஐயா பாரதி அவர்களுக்கு மீண்டும் அழியாப் புகழ் வணக்கத்தை என் சார்பிலும் எனது தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206498
-
பணயக் கைதிகளை விடுவிக்கக் காலக்கெடு விதித்த ட்ரம்ப் - இல்லையேல் போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்து?
'சனிக்கிழமைக்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால்..' - இஸ்ரேல் எச்சரிக்கை; ஹமாஸ் கூறுவது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் ராணுவத்தைக் குவிக்குமாறு இஸ்ரேலிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறினார் கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 56 நிமிடங்களுக்கு முன்னர் "பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், வரும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) பணயக்கைதிகளை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்'' என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, காஸாவில் மீண்டும் போர் தொடங்கக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது. மூன்று வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றம்சாட்டியது. 'மறு அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாகவும் ஹமாஸ் அறிவித்திருந்தது. இதையடுத்து பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்று கூடியது. மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்க நெதன்யாகு கோருகிறாரா அல்லது இந்த சனிக்கிழமை விடுவிக்கப்படவிருந்த மூவரை மட்டும்தான் கோருகிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்? இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்? காஸாவில் டிரம்ப் செய்ய நினைப்பது என்ன? காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா? சௌதி, பாலத்தீனம் பற்றிய இஸ்ரேல் பிரதமர் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு - என்ன பேசினார்? இதற்கு பதிலளித்த ஹமாஸ், 'போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இதில் சிக்கல்கள் அல்லது தாமதங்கள் ஏற்பட்டால், அதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு' என்றும் கூறியது. இஸ்ரேலுக்கு எதிரான புகார்களின் பட்டியலை மத்தியஸ்தர்கள் குழு பரிசீலிக்க வேண்டும் என்று ஹமாஸ் கோரியுள்ளது. இந்தப் புகார்களில் 'கூடாரங்கள் போன்ற முக்கிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுக்கிறது' போன்றவை அடங்கும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரபு நாடுகள் ஹமாஸுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. மோதி - டிரம்ப் நாளை சந்திப்பு: டிரம்பை சமாதானப்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் எஃகு, அலுமினியம் இறக்குமதிக்கு 25% வரி - டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'காஸாவில் மோதல் முடிவுக்கு வந்ததும், அது இஸ்ரேலால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும்' என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியது என்ன? காஸாவின் மறுகட்டமைப்புக்கான 'ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வையை' முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது. ஆனால் அது அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தைப் போலல்லாமல், அதாவது மக்களை வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தாமல் காஸாவை சீரமைப்பது ஆகும். ஹமாஸின் முடிவு, இந்த வார இறுதியில் நிகழவிருந்த பணையக்கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்தியுள்ளது. "சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படாவிட்டால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும். அதனால் பேரழிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று நடைபெற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையின் நான்கு மணி நேர கூட்டத்திற்கு பிறகு, ''அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை வரவேற்பதாக'' ஒரு காணொளி வாயிலாக தெரிவித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. "ஹமாஸ் நமது பணயக்கைதிகளை விடுவிக்கப் போவதில்லை என்றும் அறிவித்ததை அடுத்து, நேற்று இரவு காஸா பகுதிக்குள் மற்றும் அதைச் சுற்றி படைகளை குவிக்குமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு நான் அறிவுறுத்தினேன்." என்றும் அவர் கூறினார். "தற்போது மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மிக விரைவில் நிறைவடையும்." என்றார் நெதன்யாகு. பின்னர் அவர் ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டார். பாதுகாப்பு அமைச்சரவையின் ஒருமித்த ஒப்புதலுடன் இது வெளியிடப்படுவதாகவும் கூறினார். "சனிக்கிழமை (பிப்ரவரி 15) நண்பகலுக்குள் ஹமாஸ் எங்களது பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவில்லை என்றால், போர்நிறுத்தம் முடிவுக்கு வரும். ஹமாஸின் முழுமையான வீழ்ச்சி நிகழும் வரை நீடிக்கக்கூடிய, ஒரு தீவிரமான சண்டையை இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தொடங்கும்." என்று அவர் எச்சரித்தார். பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?8 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா, சூடான்: போரால் பள்ளிகள் சிதைந்தாலும் கல்விக் கனவை விடாமல் துரத்தும் குழந்தைகள்11 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, 16 மாத கால போரில் காஸா நகருக்கு வடக்கே உள்ள ஜபாலியாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று நெதன்யாகு விரும்புகிறாரா இல்லையா என்பது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து முரண்பட்ட செய்திகள் வந்தன. திட்டமிட்டபடி சனிக்கிழமை அன்று மூன்று பணயக்கைதிகள் கொண்ட அடுத்த குழு விடுவிக்கப்பட்டால், போர் நிறுத்தத்தைத் தொடரத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸிடம் ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதமுள்ள ஒன்பது பணயக் கைதிகளை (உயிருடன் உள்ளவர்கள்) விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக பின்னர் செய்திகள் வெளியாகின. ஆனால், இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சரும் போர் அமைச்சரவை உறுப்பினருமான மிரி ரெகேவ் தனது எக்ஸ் தள பதிவில், "நாங்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்துள்ளோம். பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். சனிக்கிழமைக்குள், அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்" என்று அவர் தெரிவித்தார். இலங்கைக்கான நிதியை நிறுத்தும் அமெரிக்கா, என்ன பாதிப்பு?10 பிப்ரவரி 2025 டிரம்ப் இந்தியர்களை விலங்கிட்டு அனுப்பியது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கூறுவதென்ன?10 பிப்ரவரி 2025 'இஸ்ரேல் சாமர்த்தியமாக செயல்பட முயற்சிக்கிறது' பட மூலாதாரம்,REUTERS இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவம், அதன் தெற்கு கட்டுப்பாட்டு தளத்தை தயார்நிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த தளமே காஸா செயற்பாடுகளுக்கு பொறுப்பு என்பதால், இருப்புப் படையினர் உட்பட கூடுதல் துருப்புகள் மூலம் இது வலுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. சில இஸ்ரேலிய ஆய்வாளர்கள், இஸ்ரேல் சாமர்த்தியமாக செயல்பட முயற்சிக்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, வெள்ளை மாளிகைக்கு தங்களது விசுவாசத்தைக் காட்டுவது மற்றும் ஒப்பந்தத்தையும் பின்பற்றுவது. இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஒரு சமரசம் எட்டப்பட இப்போதும் சாத்தியம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலும் ஹமாஸும், மத்தியஸ்தர்கள் மூலமாக இதைச் செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா காஸாவை கைப்பற்றி, அங்கு வசிக்கும் 2 மில்லியன் பாலத்தீனர்களை நிரந்தரமாக இடமாற்றம் செய்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய முன்மொழிவை ஹமாஸ் செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் நிராகரித்தது 1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போருக்கு முன்னரும் போரின் போதும் நூறாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் தப்பி ஓடினர் அல்லது தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டனர். அது போன்ற 'நக்பா' (பேரழிவு)மீண்டும் நிகழுமோ என்று பாலத்தீனியர்கள் அஞ்சுகின்றனர். ஐ.நா தகவலின்படி, அந்த பாலத்தீன அகதிகளில் பலர் காஸா போய் சேர்ந்தனர். அங்கு அவர்களும் அவர்களுடைய சந்ததியினரும், மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்காக உள்ளனர். மேலும் 9,00,000 பதிவு செய்யப்பட்ட அகதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வாழ்கின்றனர். 3.4 மில்லியன் பேர் ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் வாழ்கின்றனர். 'டிரம்பின் கருத்து இன சுத்திகரிப்புக்கான அழைப்பு'- ஹமாஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்பின் கருத்துக்கள் 'இனவெறி மற்றும் பாலத்தீனிய அடிப்படையை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இன சுத்திகரிப்புக்கான அழைப்பு' என்று ஹமாஸ் விவரித்தது. ஐ.நா, அரேபிய நாடுகள் மற்றும் பிற உலகத் தலைவர்களும், மனித உரிமைக் குழுக்களும், பாலத்தீன ஆணையமும் அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர். 'எந்தவொரு கட்டாய இடப்பெயர்வும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும் என்றும், அது இன சுத்திகரிப்புக்கு சமமானதாகும்' என்று ஐ.நா. எச்சரித்தது. ''காஸா குறித்த அமெரிக்க அதிபரின் புரட்சிகர பார்வையை பாராட்டுவதாக'' நெதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று, ஹமாஸின் மூத்த அதிகாரி பசிம் நயீம் பிபிசியிடம் பேசியபோது, "அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்கள் தலையிட்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வழி இன்னும் திறந்திருக்கிறது" என்று கூறினார். "இந்த ஒப்பந்தம் தோல்வியடைவதை நாங்கள் விரும்பவில்லை. இதில் எந்தவொரு தடைகளையும், சவால்களையும் தவிர்க்க நாங்கள் அதிகபட்சமாக முயற்சி செய்கிறோம். எனவே மத்தியஸ்தர்கள் மூலம் நிலைமை சரிசெய்யப்பட்டால், அடுத்த சனிக்கிழமை கைதிகளை ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்றும் அவர் கூறினார். வடக்கு காஸாவில் உள்ள பகுதிகளுக்கு பாலத்தீனியர்கள் திரும்புவதை பலமணிநேரங்கள் தாமதப்படுத்தியது முதல் உணவு, மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்ற அவசர உதவிகளின் விநியோகங்களை தடுத்தது உட்பட, இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து மீறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு?9 பிப்ரவரி 2025 டீப்சீக்: உயர் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுக்கு சீனா சவால் விட அடிகோலிய பத்தாண்டு திட்டம் பற்றி தெரியுமா?8 பிப்ரவரி 2025 இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை. முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இன்னும் விடுவிக்கப்பட உள்ளனர். அந்த 17 பேரில் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. மற்றொரு ஒப்பந்ததின்படி தாய்லாந்தை சேர்ந்த 5 பேரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு இணையாக 1900 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும். அதில் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலையாகியுள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கியது. இந்த தாக்குதலில் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்தது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயந்தனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7d94z47ezo
-
தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள் போராட்டம்! 12 FEB, 2025 | 02:19 PM யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் புதன்கிழமை (12) தொடர்கிறது. காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். “பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழிவிடு”, “சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று”, “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/206496
-
அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும், இரவில் குளிராகவும் இருக்கும்
Published By: DIGITAL DESK 3 12 FEB, 2025 | 02:21 PM நாளை வியாழக்கிழமை (13) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பகல் வேளையில் வெப்பமாகவும் இரவு வேளையில் குளிராகவும் வெப்பநிலையில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் நிபுணர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும். திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழை எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சீரான வானிலை நீடிக்கும். கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் வீசுவதுடன் மணிக்கு 35 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/206495
-
மோதி - டிரம்ப் நாளை சந்திப்பு: டிரம்பை சமாதானப்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன?
பட மூலாதாரம்,@NARENDRAMODI படக்குறிப்பு, ஜனவரி 27 அன்று நடந்த தொலைபேசி உரையாடலில் மோதியை அமெரிக்காவுக்கு அழைத்தார் டிரம்ப் 12 பிப்ரவரி 2025, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவரை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜோர்டான் அரசர் அப்துல்லா ஆகியோர் சந்தித்துள்ளனர். இப்போது, டிரம்பை சந்திக்கவுள்ள நான்காவது சர்வதேச தலைவராகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. அதிபரானவுடன் டிரம்ப் பல நாடுகளின் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய கூடுதல் வரிகளை அறிவித்தார். இந்தியா மீது இதுவரை தனியாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால், எஃகு மற்றும் அலுமினியம் மீது இறக்குமதி வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்தியாவும் அவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. டிரம்ப் பல வழிகளில் இந்தியாவை சங்கடப்படுத்தியுள்ளார். ஆனால், மோதி அரசு அவற்றுக்கு மிக எச்சரிக்கையாகவே எதிர்வினையாற்றி வருகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை 'வரி மன்னன்' என டிரம்ப் அழைத்தார். இந்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் ஆவணங்களின்றி, சட்ட விரோதமாக இருந்ததாக 104 இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் அமிர்தசரஸுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுடைய கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது. எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்? 'ரூ.40 லட்சம் செலவு, 6 மாத கடும் பயணம்' - அமெரிக்கா சென்ற 11 நாட்களில் நாடு கடத்தப்பட்ட இந்தியர் டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு? சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான புகாரை இந்தியாவிடம் டிரம்ப் ஏற்கெனவே எழுப்பியிருந்தார். பொருளாதாரம் சார்ந்தும் இரு நாடுகளுக்கிடையே தீவிரமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்காவுடனான இருதரப்பு வணிகத்தில் இந்தியா வர்த்தக உபரியுடன் இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை. ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதைவிட அதிகளவில் ஏற்றுமதி செய்வதைத்தான் வர்த்தக உபரி என்கிறோம். அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்க வேண்டும் என்றும் டிரம்ப் விரும்புகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் மெதுவான வேகத்தில் வளர்ந்துவரும் சூழலில், டிரம்ப் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அமெரிக்காவுடன் வர்த்தக உபரியில் இருப்பது இந்தியாவுக்கு முக்கியம். அமெரிக்க முதலீடுகளும் இந்தியாவுக்கு தேவை. ஒரு சவரன் தங்கத்தின் விலை இந்தாண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை எட்டுமா? 10 கேள்விகளும் பதில்களும்9 மணி நேரங்களுக்கு முன்னர் பிகார்: ரயிலில் ஏ.சி. பெட்டியின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைய முயற்சி - இன்றைய முக்கிய செய்திகள்8 மணி நேரங்களுக்கு முன்னர் மோதி - டிரம்ப் சந்திப்புக்கு முன் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன? தேர்தல் சமயத்தில் இந்தியா மீது இறக்குமதி வரி குறித்து டிரம்ப் எச்சரித்திருந்தாலும், அதிபரானவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விதித்தது போன்று இந்தியாவுக்கு செய்யவில்லை. அமெரிக்காவுக்கான தன் பயணத்துக்கு முன்பே நரேந்திர மோதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். உதாரணத்துக்கு, அமெரிக்க இருசக்கர வாகனம் ஹார்லி டேவிட்சன் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அமெரிக்க விஸ்கி மற்றும் இன்னும் சில பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா குறைக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் எனும் நிறுவனத்தின் அஜய் ஸ்ரீவஸ்தவா புளூம்பெர்க் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "பிரீமியம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் விஸ்கி ஆகியவற்றை விடுத்து, 75 சதவிகித அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா 5% இறக்குமதி வரிதான் விதித்துள்ளது. இந்தியா வரி மன்னன் இல்லை என்பதை மோதி டிரம்புக்கு விளக்க வேண்டும். வர்த்தகத்தைத் தாண்டி இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் பார்க்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, அமேசான் முதல் ஓபன் ஏஐ உள்ளிட்ட அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்காக இந்தியா தன் சந்தையை வழங்கியுள்ளது. இந்த வசதி அமெரிக்காவுக்கு சீனாவில் இல்லை" என கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES அத்துடன், சமீப ஆண்டுகளில் ரஷ்ய ஆயுதங்களை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது. அமெரிக்காவுடன் பாதுகாப்பு தொடர்பான கூட்டுறவை இந்தியா அதிகரித்துள்ளது. இந்த உறவு, மோதியின் பயணத்துக்குப் பின் அதிகரிக்கலாம். அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. 100 ஜிகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ள இந்தியா, அந்த இலக்கை எட்டும் நோக்கில் அணுசக்தி விபத்து இழப்பீட்டுச் சட்டத்தில் (Nuclear Liability Act) திருத்தம் செய்யயும் முடிவு செய்துள்ளது. இது அமெரிக்க நிறுவனங்களுக்கும் பலனளிக்கும் என கூறப்படுகிறது. டிரம்பை மோதி சந்திப்பதற்குள் நேர்மறையான சூழலை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?11 பிப்ரவரி 2025 காதலர் தினத்தன்று பௌர்ணமி: முழு நிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? புனைவுகளும் உண்மையும்7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா எதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்? ஆவணங்களின்றி அமெரிக்காவில் இருந்த இந்தியர்களை அந்நாடு அனுப்பிய விதம் அவமானகரமானது என, எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஆனால், இந்த விமர்சனத்துக்கு மோதி அரசாங்கம் மிகுந்த பொறுமையுடன் பதிலளித்தது. தி புரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷன் எனும் சிந்தனை மையத்தின் மூத்த ஆய்வு மாணவர் தான்வி மதன் தன் எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்கா இந்தியர்களை அனுப்பிய விதம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. ஆனால், மோதி அரசாங்கம் அதனை விமர்சிக்கவில்லை. டிரம்பின் முதல் ஆட்சியைவிட இரண்டாம் ஆட்சியை மோதி அரசாங்கம் வித்தியாசமாக அணுகுகிறது. இந்தியா பொதுவாகவே எந்த நாட்டையும் பொதுவெளியில் விமர்சிக்காது. பொதுவெளியில் விமர்சிப்பது பிரச்னையை தீர்க்காமல் மேலும் சிக்கலாக்கும் என்பதே இந்தியாவின் வியூகமாக உள்ளது. டிரம்புடன் குழப்பத்தில் ஈடுபடுவது நல்லதல்ல என இந்தியா நினைக்கிறது. அமெரிக்காவுடன் பிரச்னைகள் குறித்து எழுப்புவோம் என்றே இந்தியா கூறுகிறது." என பதிவிட்டிருந்தார். இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டிரம்பை கையாள்வதே நரேந்திர மோதிக்கு இருக்கும் மிகப்பெரும் சவால். கடந்தாண்டு இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 45 பில்லியன் டாலராக இருந்தது. இதன் அர்த்தம், இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா எதிர்கொள்கிறது என்பதல்ல. இந்த வரிசையில், அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியா 11வது இடத்தில் உள்ளது. ஆனால் டிரம்ப் எதையும் ஒருதலைபட்சமாக அனுமதிக்கும் மனநிலையில் இல்லை. டிரம்பின் வரி அச்சுறுத்தல் தொடர்பாக இந்திய வெளியுறவு முன்னாள் செயலாளர் கன்வால் சிபல், "இந்தியா மீது டிரம்ப் வரி விதித்தால், அது அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தைக் காட்டுவதாகும். அமெரிக்காவின் பொருளாதாரம் இந்தியாவை விட மிகவும் பெரியது. அமெரிக்க பொருளாதாரம் 29 டிரில்லியன் டாலர் மதிப்புடையது, அதேசமயம் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு வெறும் 4 டிரில்லியன் டாலர்களே." என பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிக அளவில் ராணுவ தளவாடங்களை வாங்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார் 'இந்தியா-அமெரிக்காவை ஒப்பிடுவது நியாயமல்ல' சிபல் தன் பதிவில், "அமெரிக்காவில் தனிநபர் வருமானம் 66 ஆயிரம் டாலராக உள்ளது, அதுவே இந்தியாவில் 2,400 டாலராக உள்ளது. உலகின் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. சர்வதேச வர்த்தகம் அனைத்தும் டாலரில் தான் நடைபெறுகிறது, இதுவும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அதிகரிக்கிறது." என தெரிவித்துள்ளார். மேலும், "அமெரிக்காவின் கொள்கைகள் ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. அமெரிக்கா இந்தியாவை தன்னுடன் ஒப்பிடாது. சரிசமமாக உள்ள இருவரிடையே நடப்பதுதான் போட்டி. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதிகளவில் சீனாவுடன் தான் உள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை சீனாவுடன் 30%, ஐரோப்பிய ஒன்றியத்துடன் 16%, கனடாவுடன் 15% என்கிற அளவில் உள்ளது. அதேசமயம், இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 3.2 சதவிகிதம்தான்" என கூறியுள்ளார். ஜனவரி 27-ஆம் தேதி, டிரம்ப் இந்திய பிரதமர் மோதியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, மோதியை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் டிரம்ப். அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிகளவில் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார். இருநாட்டு வர்த்தகத்தை சமநிலையில் வைக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார். காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?11 பிப்ரவரி 2025 கடல் நடுவே உள்ள சிறிய தீவை ஆயிரக்கணக்கான மக்கள் காலி செய்ய என்ன காரணம்?9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பை அமெரிக்க தேச பற்றாளர் என அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்தார் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிரம்பை 'அமெரிக்க தேச பற்றாளர்' என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அழைத்தார். மோதியின் கொள்கைகள் வெளிநாட்டுச் சார்பைக் குறைக்கும் தேசியவாதத்தின் அம்சத்தையும் வலியுறுத்துகின்றன. அமெரிக்காவிடம் இருந்து முடிந்தளவுக்கு பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார். மற்றொருபுறம், பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்க மோதி விரும்புகிறார். இம்மாதிரியான சூழலில் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மூத்த இயக்குநர் லிசா கர்ட்டிஸ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "மோதியின் 'மேக் இன் இந்தியா' கொள்கைக்கும் டிரம்பின் 'அமெரிக்காவுக்கு முன்னுரிமை' (America First) கொள்கைக்கும் நேரடி மோதல் நடப்பதாக நான் நினைக்கிறேன். குறிப்பாக, பாதுகாப்பு வர்த்தகத்தில் மோதல் இருக்கிறது. முதல் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு ஆயுதங்களுடன் கூடிய ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான தடைகளை டிரம்ப் நீக்கினார். ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதியாக ஏழு ஆண்டுகளாகின. நிச்சயமாக, டிரம்ப் இந்த முறை தாமதத்தை விரும்ப மாட்டார்." என்றார். "இந்தியாவை பொருத்தவரை அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவாலாக உள்ளது. அமெரிக்க ஆயுதங்களை இந்தியா வாங்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார். இந்தியாவிலேயே அதை உற்பத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகின்றன. ஆனால், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா தொடர்ந்து வாங்க வேண்டும் என்றும் டிரம்ப் எதிர்பார்ப்பார்." ஆனால், டிரம்பை இதில் சமாதானம் செய்வது எளிதானது இல்லை என்றும், அதற்கு முடிவே இல்லை என்றும் பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான நிபுணரும் பொருளாதார நிபுணருமான அமிடெண்டு பலிட் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "டிரம்பை சமாதானப்படுத்த முயற்சிப்பதில் இந்தியாவுக்கு உள்ள சவால்களுக்கு எல்லையே இல்லை. எதிர்காலத்தில் டிரம்ப் பல விவகாரங்களில் அழுத்தம் தரலாம். டிரம்புடன் ஒரு விஷயத்தில் ஒருமுறை ஒப்புக்கொண்டால், அதுவே இறுதி அல்ல என்பதே டிரம்பின் வழக்கமாக உள்ளது. இது, இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70ql7l4555o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம் 11 FEB, 2025 | 03:20 PM ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட 86 வயது இஸ்ரேலியர் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சொலொமோ மன்சுர் என்ற இஸ்ரேலிய பணயக்கைதி உயிரிழந்துவிட்டார் எனஇஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார். ஈராக்கில் பிறந்தவரான இவர் இஸ்ரேலின் கிபுட்ஸ் கிஸிபும் பகுதியில் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டார். ஹமாஸ் அமைப்பு முதல்கட்டமாக விடுதலைசெய்யவுள்ள 33 பணயக்கைதிகளின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இதேவேளை சமீபத்தில் பெறப்பட்ட புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் 86 வயது பணயக்கைதி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/206415
-
காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன தினம் தெரியுமா? அன்றைய தினம் என்ன செய்வார்கள்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரக்ஷனா.ரா பதவி, பிபிசி தமிழுக்காக 11 பிப்ரவரி 2025, 08:47 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் காதல்.... உலகெங்கும் உள்ள புராண, இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களில் வெவ்வேறு பெயர்களில் விரவிக் கிடக்கிறது. காதலின் தொடக்கம் என்னவென்பதை அறுதியிட்டு கூற முடியாது. சங்க கால 'தலைவன் தலைவிக்கு விடும் தூது' முதல் இந்த காதல் கதைகள் காலத்திற்கேற்ப புது வடிவம் பெற்றுள்ளன. ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் இந்த அளப்பரிய அன்பை அங்கீகரிக்கும் வகையிலும் அதை போற்றும் வகையிலும் கொண்டாடப்படும் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் அது ஏன் வாலண்டைன் தினம் என்று அழைக்கப்படுகிறது என்றும் அது ஏன் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்றும் தெரியுமா? கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர் உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்? ஏ.ஐ. உலகில் புதிய அலை: ஒரே செயலி மூலம் அமெரிக்க நிறுவனங்களை மிரளச் செய்த சீன நிறுவனம் நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா? காதலர் தினம் வரலாறு வரலாற்றின் பக்கங்களை திரும்பி பார்த்தால், காதலர் தினம் கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. இந்த தினத்தின் பெயர் காரணத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர் வாலண்டைன். ஆனால் இவர் யார் என்று தெளிவான தரவுகள் இல்லாத போதும் வாலண்டைன் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மத போதகர் என்று பரவலான நம்பிக்கை ஒன்று நிலவுகிறது. காதல் மனைவியையும் குடும்பத்தையும் தனியே விட்டு, போருக்கு செல்ல வீரர்கள் தயக்கம் காட்டியதால் பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் திருமணத்திற்கு தடை விதித்தார். இதை எதிர்த்த வாலண்டைன், அங்கு இருந்தவர்களுக்கு ரகசியமாக திருமணங்களை செய்து வைத்தார். இதை அறிந்த மன்னர், வாலண்டைனுக்கு மரண தண்டனை விதித்தார். அப்பொழுது சிறையில் இருந்த வாலண்டைன், அந்த சிறை பாதுகாவலரின் மகளை விரும்பியதாகவும், மரண தண்டனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்ட போது, 'ஃப்ரம் யுவர் வாலண்டைன்' அதாவது உன்னுடைய வாலண்டைனிடமிருந்து என்ற வரியைக் கொண்ட காதல் கடிதத்தை கொடுத்ததாகவும் கதைகள் உள்ளன. பிப்ரவரி 14ஆம் தினத்தன்று காதலுக்காக தன்னுடைய உயிரை நீத்த வாலன்டைனின் நினைவாகவே அந்த நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது பரவலான நம்பிக்கை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டப்ளின் நகர தேவாலயத்தில் உள்ள வாலண்டைன் சிலை மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதி - விவசாய சேதம் குறையுமா? அல்லது காடுகளுக்குப் பாதிப்பா?9 பிப்ரவரி 2025 காதலர் வாரம் காதலர் தினமாக தொடக்கத்தில் கொண்டாடப்பட்ட இந்த தினம் தற்போது பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை காதலர் வாரமாகவே கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் எந்த தினமாக கொண்டாடப்படுகிறது? அதன் பின்னணி என்ன? பிப்ரவரி 7: ரோஸ் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES காதலர் வாரம் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. காதலர் வாரத்தின் முதல் நாளாக ரோஸ் தினம் உள்ளது. ரோம புராணக் கதைகளில் காதலின் கடவுளாக இருக்கும் வீனசுடன் தொடர்புடையதாக இந்த மலர் சொல்லப்படுகிறது. இந்த தினத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் ஒவ்வொரு நிற ரோஜா மலருக்கும் ஒவ்வொரு தனித்துவமான அர்த்தங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சிவப்பு ரோஜா, காதல் உறவையும், காதலர்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான பரிமாற்றங்களையும் குறிக்கிறது. மஞ்சள் ரோஜா, இரு நண்பர்களுக்கிடையே உள்ள நட்பையும் தூய நேயத்தையும் குறிக்கிறது என்றும் வெள்ளை ரோஜா மலர்கள் புதிய தொடக்கங்களையும், மாசற்ற அன்பையும் வெளிப்படுத்துகிறது என்றும் இன்றைய தலைமுறையினர் கூறுகின்றனர். 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 டீப்சீக்: உயர் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுக்கு சீனா சவால் விட அடிகோலிய பத்தாண்டு திட்டம் பற்றி தெரியுமா?8 பிப்ரவரி 2025 பிப்ரவரி 8 - ப்ரபோஸ் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES காதலர்கள் தங்களுடைய காதல் உறவை வெளிப்படையாக தங்களுடைய துணைக்கும், இந்த உலகத்திற்கும் கூறும் ஒரு நாளாக இந்த ப்ரபோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. மறக்க முடியாத பரிசுகளுடனோ அல்லது எதிர்பாராத வியக்கத்தக்க ஏற்படுகளுடனோ காதலை வெளிப்படுத்துவது இந்த நாளின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. மேற்கூறிய படி இந்த நாளுக்கான வரலாற்று தரவுகள் இல்லையென்றாலும், இந்த தினம் கொண்டாடப்பட்டதற்கான உறுதி செய்யப்படாத தகவல்கள் உள்ளன. அதில் 1477ஆம் ஆண்டு முதலாம் மாக்சிமிலியன் என்பவர் வைர மோதிரத்துடன் தன்னுடைய காதலியான மேரி ஆஃப் பர்கன்டிக்கு காதலை ப்ரபோஸ் செய்துள்ளார் என்று நம்பப்படுகிறது. இந்திய வரலாற்றையே மாற்றிய 'நாகா சாதுக்கள்' - கையில் வாளுடன் நிர்வாண கோலத்தில் வலம் வரும் இவர்கள் யார்?8 பிப்ரவரி 2025 புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?7 பிப்ரவரி 2025 பிப்ரவரி 9 - சாக்லேட் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாக கொண்டாடப்படுவது சாக்லேட் தினம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த சாக்லேட், அதை உண்பவரின் மனதை மகிழ்விக்கும். அதாவது சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தியோப்ரோமைன், ட்ரிப்டோஃபான் போன்ற கூறுகள் அதை உட்கொள்பவரின் மனதை அமைதியாக்கி மகிழ்விக்கின்றன. சாக்லேட் தருவது அன்பையும் காதலையும் எடுத்துரைப்பதாக கருதப்படுகிறது. பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்7 பிப்ரவரி 2025 மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 பிப்ரவரி 10 - டெடி தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நாளன்று தன்னுடைய காதலருக்கோ அல்லது நண்பருக்கோ அன்பின் அடையாளமாக வழங்கப்படுவது தான் இந்த டெடி பியர் பொம்மைகள். மிகவும் நெருக்கமான நபருக்கு இதை கொடுப்பது என்பது நாம் அவர்களுடன் என்றுமே இருப்போம் என்ற எண்ணத்தையும், அதை கொடுப்பவரின் ஞாபகத்தையும் அவர்களுக்கு கொடுக்கும். இந்த நாள் கொண்டாடப்பட்டதற்கான வரலாறு இல்லை என்றாலும் இந்த பொம்மைகள் தோன்றியதற்கான வரலாறு உள்ளது. 1902 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட், மிஸிஸிப்பி என்ற இடத்தில் வேட்டையாட சென்றிருந்த போது அங்கிருந்த கரடியை சுட்டுக்கொல்ல மறுத்துவிட்டார். இவரின் இந்த செயலையும் இரக்கத்தையும் பாராட்டி, முதல் முதலாக உருவாக்கப்பட்டதே இந்த டெடி பியர். ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நேயத்தின் அடையாளமாக திகழ்கிறது இந்த பொம்மைகள். பல ஆண்டுகளாக வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பிடித்தமான ஒரு பரிசாக இந்த பொம்மை இருந்துவருகிறது. பிப்ரவரி 11 - பிராமிஸ் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES காதலர் வாரத்தில் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுவது இந்த வாக்குறுதி தினம். இந்த நாளன்று மக்கள் தங்கள் உறவை மேம்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை எடுத்துக்கொள்வர். ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையை வளர்க்கும் இந்த நாள் அவர்களின் வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான நாளாக பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும் ஒருவரை ஒருவரை விட்டு விலகாமல் உடன் நிற்போம் என்ற சத்தியத்தை காதலர்கள், நண்பர்கள் என அனைத்து உறவுமுறைகளும் ஏற்றுக்கொள்வர் . ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 பிப்ரவரி 12 - ஹக் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES தொடுதல் என்பது ஒரு மொழி. அன்புக்குரியவர்களுக்கு காதலை வெளிப்படுத்தும் ஒரு செயலாக கட்டிப்பிடிப்பது இந்த தினத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பிப்ரவரி 13 - கிஸ் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES அன்பின் வெளிப்பாடான முத்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நாள் தான் இந்த கிஸ் தினம். இந்த தினத்தன்று ஒருவருக்கொருவர் முத்தத்தை பகிர்ந்து கொள்வது அவர்களிடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கிறது. காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் முத்தத்துடன் தங்களது நேசத்தையும் பகிர்கின்றனர். இதற்கு பின்னர் பிப்ரவரி 14 ஆம் தேதி வரும் காதலர் தினம் உலக நாடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்கு குறிப்பிடப்பட்ட எந்த டிரஸ் கோடும் இல்லையென்றாலும், இந்த நாளன்று காதலிப்பவர், காதலை எதிர்பார்த்து காத்திருப்பவர், காதலித்துப் பிரிந்தவர் என ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு நிறத்தில் ஆடைகளை அணிந்துகொள்வர். காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களை இந்த உலகம் சந்தித்துக்கொண்டு வருவது போல, இந்த காதலர் தினம் கொண்டாடப்படும் விதமும் மாறிக் கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்பொழுது சிங்கிளாக இருக்கும் இளைஞர்களும் காதலித்து பிரிந்தவர்களும் ஆன்டி வாலன்டைன் என்ற ஒரு புதிய வாரத்தை கொண்டாடுகின்றனர். வாலன்டைன் தினத்திற்கு அடுத்த நாளிலிருந்து கொண்டாடப்படும் இந்த வாரம், ஸ்லாப் தினம் (Slap day), கிக் தினம் (Kick Day), பெர்ஃப்யூம் தினம் (Perfume day), ஃப்ளர்ட் தினம் (Flirt Day), கன்ஃபெஷன் தினம் (Confession Day), மிஸ்ஸிங் தினம் (Missing Day) மற்றும் பிரேக் அப் தினம் (Breakup Day) என்று காதலுக்கு மாறான செயல்களை உள்ளடக்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m17ev8mm7o
-
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்!
கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார் ஜப்பானியத் தூதுவர் 11 FEB, 2025 | 02:50 PM ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை முகமாலைப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் நிறுவவனப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டுள்ளார். அந்தப் பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் இந்தப்பகுதியில் மீள் குடியேற்றத்திற்குப் பின்னர் வெடிபொருட்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முகமாலைப் பகுதியில் ஜப்பான் நிதிப்பங்களிப்புடன் டாஸ், கலோரெஸ்ட் மற்றும் சாப் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை யப்பானிய தூதுவர் பார்வையிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206409
-
பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்!
Published By: DIGITAL DESK 2 11 FEB, 2025 | 02:21 PM சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பொதுத்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கை முயற்சிகளை வலியுறுத்தி, அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி, நிகழ்ச்சி நிரலையும் பிரதமர் இதன்போது கோடிட்டுக் காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிர்வாக இயக்குனர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திராவும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றார். https://www.virakesari.lk/article/206402
-
டுபாயில் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு ஆரம்பம்
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார். எதிர்கால நோக்கிலான பிரவேசங்கள், தொழில்நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும் கருத்தாடலை ஏற்படுத்த உலகத் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்துவதே உலகத் தலைவர்கள் மாநாட்டில் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டில் மனித சமூகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால முன்னேற்றங்கள், புதிய வாய்ப்புகள் தொடர்பில் நாடுகளுக்கிடையில் கருத்து பரிமாறிக்கொள்ளப்படவுள்ளது. இதில் 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 4000 ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பும் இதன்போது நடைபெறவுள்ளதுடன், அதனூடாக இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயிக் மொஹமட் பின் ரஷீட் அல் மக்டூமையும் சந்திக்கவுள்ளார். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வலுசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணியில் உள்ள உலக நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பலருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார். வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந் விஜயத்தில் இணைந்து கொண்டார். https://tamil.adaderana.lk/news.php?nid=199970
-
அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள் ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
11 FEB, 2025 | 05:22 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளுக்கமைய 7,456 பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அது தொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, அக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நிலவும் 3,000 பதவி வெற்றிடங்களையும், பாதுகாப்பு அமைச்சில் நிலவும் 9 பதவி வெற்றிடங்களையும், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சில் நிலவும் 179 பதவி வெற்றிடங்களையும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் நிலவும் 132 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400 பதவி வெற்றிடங்களையும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நிலவும் 161 பதவி வெற்றிடங்களையும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நிலவும் 3,519 பதவி வெற்றிடங்களையும், மேல் மற்றும் கிழக்கு மாகாணசபைகளில் நிலவும் 39 பதவி வெற்றிடங்களையும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிலவும் 17 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/206436
-
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு
துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கிடையில், சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை, கல்கிஸ்ஸ பொலிஸை சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் தனது சேவை துப்பாக்கியுடன் காணாமல் போன சம்பவம் பதிவாகியிருந்தது. முதற்கட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் டுபாய்க்கு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வரும் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு, குறித்த கான்ஸ்டபிளின் பெற்றோரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=199966
-
பணயக் கைதிகளை விடுவிக்கக் காலக்கெடு விதித்த ட்ரம்ப் - இல்லையேல் போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்து?
காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சனிக்கிழமை ஹமாஸ் விடுவித்த பணயக்கைதிகளின் உடல்நிலை மோசமாக இருந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் பணயக்கைதிகளின் அடுத்த குழு இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்பட இருந்த நிலையில், பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்? "ஆக்கிரமிப்பாளர் (இஸ்ரேல்) தன் கடமைகளைச் செய்ய அழுத்தம் கொடுப்பதற்காக போதுமான நேரம் மத்தியஸ்தர்களுக்கு வழங்கப்படுகிறது" இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுப்பதாகக் கூறி ஹமாஸ் அமைப்பினர் தங்களின் டெலிகிராம் பக்கத்தில் விடுத்துள்ள அறிக்கை இது. வரும் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட அடுத்தக்கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை குறிப்பிட்டுள்ள ஹமாஸ், "கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன" என குறிப்பிட்டுள்ளது. பிரச்னையில் முட்டுக்கட்டையாக இருக்கும் சிலவற்றை சுமூகமாக தீர்க்க இந்த குழு நேரம் கொடுப்பதாகத் தோன்றுகிறது. காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும் குரங்கு காரணமா? இலங்கையில் இன்று முதல் மின் தடை அமலாகும் என்று அறிவிப்பு இந்தியாவின் வரி குறைப்பு நடவடிக்கைகள் டிரம்பின் வரி அச்சுறுத்தலை தவிர்க்க போதுமா? ஆனால் அந்த முட்டுக்கட்டை என்ன? ஹமாஸ் அமைப்பு தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இடம் பெயர்ந்த மக்கள் வாழ்விடங்களுக்கு திரும்புவதில் இருக்கும் தாமதம், அவர்கள் மீது இன்னமும் தாக்குதல்கள் தொடர்வது மற்றும் சில மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க மறுப்பது உள்ளிட்டவை இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுக்களாக உள்ளன. ஹமாஸ் உடன் தொடர்பில் இல்லாத சில பாலத்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரும் எண்ணிக்கையிலான பாலத்தீனர்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்தநிலையில் மக்கள் வசிப்பதற்கு தேவையான கேரவன்களை காஸாவுக்கு உள்ளே அனுமதிக்க இஸ்ரேல் மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. காஸாவிலிருந்து வெளியேற மக்களை ஊக்கப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இஸ்ரேலிய அரசு வெளிப்படையாக விவாதிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், தற்காலிக குடியேற்றத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் அனுமதிக்க மறுப்பது, பாலத்தீனர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?9 மணி நேரங்களுக்கு முன்னர் காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன தினம் தெரியுமா? அன்றைய தினம் என்ன செய்வார்கள்?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS அச்சத்தை அதிகரிக்கும் டிரம்ப்பின் வார்த்தைகள் டிரம்பால் ஒவ்வொரு நாளும் காஸாவில் அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. தொடக்கத்தில், காஸாவை மறு கட்டமைப்பு செய்ய பெரும்பாலான பாலத்தீனர்கள் வெளியேற வேண்டும் என டிரம்ப் கூறினார். பின்னர் அவரது கருத்து மாற்றம் பெற்று, "அனைவரும் வெளியேற வேண்டும், அமெரிக்கா காஸாவை கைப்பற்றி, சொந்தமாக்கிக்கொள்ளும்" என்பதாக மாறியது. டிரம்ப்பின் தீ மூட்டும் பேச்சுகள் தொடரும் நிலையில், இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை பயன்தரக் கூடியதா? என்ற கேள்வி ஹமாஸுக்கு ஏற்படலாம். டிரம்ப்பின் வார்த்தைகள் உண்மையிலேயே தீவிரத்தன்மை உடையதாக இருந்தால் காஸாவை பொதுமக்கள் அற்றதாக மாற்றித் தரும் வேலை இஸ்ரேலின் தலையில் விழும் என்பது பாலத்தீனர்களுக்கு தெரியும். அந்த சூழலில், அவர்களுக்கு வசிப்பிடம் கிடைப்பதை தடுப்பது மட்டும் போதுமானதாக இருக்காது. பலப் பிரயோகமும் கண்டிப்பாக தேவைப்படலாம். தற்போது டிரம்ப் கூறுவது என்னவென்றால் சனிக்கிழமைக்குள்ளாக காஸாவில் இருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் திரும்பவில்லை என்றால், போர் நிறுத்தத்தை ரத்து செய்ய தான் பரிந்துரைப்பேன் என எச்சரிக்கிறார். ஆனால், ''இது என்னுடைய கருத்துதான், இஸ்ரேல் தன்னுடைய முடிவை எடுக்கலாம்'' எனவும் கூறுகிறார் டிரம்ப். மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதி - விவசாய சேதம் குறையுமா? அல்லது காடுகளுக்குப் பாதிப்பா?9 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,AFP மீண்டும் போருக்கான முகாந்திரம் இருக்கும் சூழலில், எஞ்சிய பணயக் கைதிகளையும் விடுவிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என ஹமாஸ் நினைக்கலாம். "ஒவ்வொரு அறிக்கையும், பேச்சுக்களும் ஹமாஸின் பிடிவாதத்தை அதிகரிக்கும்" என பிபிசியிடம் கூறுகிறார் இஸ்ரேலைச் சேர்ந்த சல்மானோவிக் . இவருடைய மனைவியின் உறவினரான ஓமர் ஷெம் டோவ் , இன்னமும் ஹமாஸின் பிடியில் உள்ளார். "அவர் (டிரம்ப்) தனது அதீத செயல்பாட்டை கொஞ்சம் குறைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என கூறுகிறார் சல்மானோவிக் . ஹமாஸின் தாமதம் குறித்து இஸ்ரேல் தனக்கேயான சந்தேகங்களைக் கொண்டுள்ளது. கடந்த வார இறுதியில் உடல் மெலிந்த நிலையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், மற்ற பணயக்கைதிகளின் இன்னும் மோசான உடல்நிலையை உலக மக்கள் பார்ப்பதை ஹமாஸ் விரும்பாமல் இருக்கலாம். பட்டப்பகலில் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் குழுவினரின் அணிவகுப்பு காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் போரில் இழந்தவர்களை விடவும், அதிக எண்ணிக்கையில் நபர்கள் ஹமாஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் எச்சரிக்கை ஆகியவற்றால் போர் நிறுத்தம் தொடரலாம் அல்லது தொடரும் என்பதை அனைத்து இஸ்ரேலியர்களும் நம்பவில்லை. மிகக்கவனமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்யப்பட்ட இந்த ஏற்பாடு உடையப்போகிறது என கூறுவதற்கு இது சரியான நேரமாக இருக்காது. ஆனால் பெரும்பாலானோர் யூகித்ததைப் போன்று ஆரம்பம் நன்றாக இருந்தாலும், தற்போது அழுத்தம் அதிகரிக்கிறது என்பது தான் உண்மை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5y7dn8542yo
-
கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 203 பேர் பலி
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்ததாக அவர் தெரிவித்தார். 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விபத்துக்கள் அனைத்தும் 2025 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை பதிவாகியுள்ளன. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆகும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=199958
-
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு
மின் வெட்டு குறித்து மின்சார சபை விசேட அறிவிப்பு தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துக் கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து அல்லது மின்சார சபையின் கைப்பேசி செயலி மூலம் அல்லது 1987 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அதை அறிந்துக் கொள்ள முடியும் என்று சபை தெரிவித்துள்ளது. இதற்கு, பின்வரும் முறைமைகள் ஊடாக குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். 1. Power Cut Schedule in CEB Website URL: https://dm.ceb.lk Check updates and schedules under the Power Cut Schedule page 2. CEBCare Outage Map o URL: https://cebcare.ceb.lk/Incognito/OutageMap o Customer can check interruption schedules specific to their areas 3. CEBCare Web Customer Portal o URL: https://cebcare.ceb.lk CEBAssist Mobile App (Android Only) 5. SMS Request to 1987Send an SMS to 1987 with the following format to receive your interruption schedule: INT [electricity account number] 6. SMS Notifications Receive SMS alerts with demand management schedules specific to your area. https://tamil.adaderana.lk/news.php?nid=199955
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால் வென்றது அவுஸ்திரெலியா; தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது; திமுத் கருணாரட்ன ஓய்வு பெற்றார் 09 FEB, 2025 | 04:26 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இரண்டாவது வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் இலங்கையை வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா தொடரை 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாகக் கைப்பற்றியது. இதன் மூலம் இலங்கையில் 2013க்குப் பின்னர் அவுஸ்திரேலியா முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் முழுமையான வெற்றியை ஈட்டியுள்ளது. இந்தப் போட்டியுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 -25 சுழற்சிக்கான டெஸ்ட் போட்டிகள் நிறைவுக்கு வந்தன. காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, அதே மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றியீட்டியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது. தனது இன்னிங்ஸை 48 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ் இப் போட்டியில் தனது இரண்டாவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். குசல் மெண்டிஸின் பிடியை எடுத்த ஸ்டீவன் ஸ்மித், 200 டெஸ்ட் பிடிகளை எடுத்த முதலாவது அவுஸ்திரேலிய வீரரானார். நேற்றைய தினம் ஏஞ்சலோ மெத்யூஸ் 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவர்கள் இருவரைவிட தனஞ்சய டி சில்வா (23) மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார். பந்துவீச்சில் மெத்யூ குனேமான் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் போ வெப்ஸ்டர் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 75 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரு விக்கெட்டை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இப் போட்டி முடிவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இறுதி அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா 67.54% புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் ஆபிரிக்கா 69.44% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 38.46% புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திமுத் விடைபெற்றார் இது இவ்வாறிருக்க, திமுத் கருணாரட்ன தனது கடைசி இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபட்டபோது அவரை கௌரவிக்கும் வகையில் தனஞ்சய டி சில்வா தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருந்தார். போட்டி முடிவில் தனது பிரியாவிடை உரையை உணர்ச்சிபூர்வமாக ஆற்றிய திமுத் கருணாரட்ன, 'நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, 100 டெஸ்ட்களைப் பூர்த்தி செய்யவேண்டும், 10,000 ஓட்டங்களைக் கடக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்து. அதில் ஒரு பகுதியை (100 டெஸ்ட்கள்) நிறைவெற்றிவிட்டேன். ஆனால் மற்றைய பகுதியை (10,000 ஓட்டங்கள்) நிறைவு செய்யாதது மனதுக்கு சங்கடத்தைக் கொடுக்கிறது. மேலும் எனது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடுவதை நான் தவறவிட்டேன். இனியும் தவறவிடமாட்டேன்' திமுத் கருணாரட்ன, 'இது ஒரு நீண்ட கிரிக்கெட் பயணம். நான் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் அரங்கில் அதிக நேரத்தை செலவிட்டேன். ஆகையால் அவர்களிடம் இருந்து (கிரிக்கெட் அரங்கிலிருந்து) பிரிவதால் நான் உணர்ச்சிவசப்படுகிறேன். ஆனால் நான் எங்கு சென்றாலும், எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்;. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை ஆதரித்து உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' எனவும் திமுத் கருணாரட்ன கூறினார். எண்ணிக்கை சுருக்கம் இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 257 (குசல் மெண்டிஸ் 85 ஆ.இ., தினேஷ் சந்திமால் 74, திமுத் கரணாரட்ன 36, ரமேஷ் மெண்டிஸ் 28, மிச்செல் ஸ்டார்க் 27 - 3 விக்., மெத்யூ குனேமான் 63 - 3 விக்., நேதன் லயன் 96 - 3 விக்.), அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 414 (அலெக்ஸ் கேரி 156, ஸ்டீவன் ஸ்மித் 131, உஸ்மான் கவாஜா 36, போ வெப்ஸ்டர் 31, ப்ரபாத் ஜயசூரிய 151 - 5 விக்., நிஷான் பீரிஸ் 94 - 3 விக்., ரமேஷ் மெண்டிஸ் 81 - 2 விக்.) இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 231 (ஏஞ்சலோ மெத்யூஸ் 76, குசல் மெண்டிஸ் 50, தனஞ்சய டி சில்வா 23, மெத்யூ குனேமான் 63 - 4 விக்., நேதன் லயன் 84 - 4 விக்., போ வெப்ஸ்டர் 6 - 2 விக்.) அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 75 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 75 - 1 விக். (உஸ்மான் கவாஜா 27 ஆ.இ., மானுஸ் லபுஷேன் 26 ஆ.இ., ட்ரவிஸ் ஹெட் 20, ப்ரபாத் ஜயசூரிய 20 - 1 விக்.) ஆட்டநாயகன்: அலெக்ஸ் கேரி, தொடர்நாயகன்: ஸ்டீவன் ஸ்மித். https://www.virakesari.lk/article/206243
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிர ஆர்வமாக உள்ளேன் - டிரம்ப் 10 FEB, 2025 | 03:56 PM கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தான் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து அவர் தெரிவித்துவரும் விடயங்கள் உண்மையா என்ற பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கு ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் வருடாந்தம் 200 பில்லியன் டொலரை கனடாவிடம் இழக்கின்றோம் என தெரிவித்துள்ள டிரம்ப் அது தொடர்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையாகவே கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க விரும்புகின்றார் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வர்த்தக சமூகத்தினர் மத்தியில் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்பின் ஆசை உண்மையானது என ட்ரூடோ தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டை கைப்பற்றி அமெரிக்காவுடன் இணைப்பது இலகுவான விடயம் என டிரம்ப் எண்ணுகின்றார் என ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒலிவாங்கி செயற்பட்டுக் கொண்டிருந்ததை அறியாமல் கனடா பிரதமர் இதனை தெரிவித்தார், பின்னர் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிரம்ப் கனடாவின் கனிமவளங்கள் மீது கண்வைத்துள்ளார். அவர்களிற்கு எங்கள் வளங்களை பற்றி தெரியும் எங்களிடம் என்ன உள்ளது என்பது தெரியும், இதன் காரணமாகவே அவர்கள் எங்களை தங்களுடன் இணைந்து 51வது மாநிலமாக மாற்றுவது குறித்து பேசுகின்றனர் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206326
-
விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?
கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை, கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 10) ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பிரசாந்த் கிஷோர் முன்பு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் தொடங்கிய நிறுவனம் தற்போதும் தேர்தல் வியூக பணிகளை செய்து வருகிறது. பிரசாந்த் கிஷோரின் வருகையால் த.வெ.க-வுக்குள் குழப்பம் ஏற்படவே வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். த.வெ.க தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது ஏன்? தமிழக அரசியல் களத்தில் ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா? விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டாக என்ன செய்தது? தாக்கம் ஏற்படுத்தியதா? ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி? 'ஏதோ ஒரு லாபம் இருக்கிறது' - பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜய் பேசியது என்ன? விஜய் வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் என்ன நடக்கிறது? 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக பணிகளை ஜான் ஆரோக்கியசாமி கவனித்து வருகிறார். அண்மையில் வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பின் நிறுவனரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா, த.வெ.க-வில் இணைந்தார். தேர்தல் வியூக வகுப்பாளராகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜூனாவுக்கு த.வெ.க-வில் தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவர், ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, த.வெ.க தலைமை அறிவித்தது. காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?5 மணி நேரங்களுக்கு முன்னர் எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏன் சந்திப்பு விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு மூன்று மணிநேரம் நடந்ததாகக் கூறுகிறார், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய த.வெ.க நிர்வாகி ஒருவர். "மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது நடந்தது. அப்போது தமிழக அரசியல் சூழல்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்" எனக் கூறினார். இந்த சந்திப்பின் பின்னணியில் ஆதவ் அர்ஜூனா இருப்பதாகக் கூறும் அவர், "2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வுக்கு சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "புதிய கட்சியாக இருந்தாலும் த.வெ.க-வுக்கு மிகப் பெரிய தொண்டர்கள் பலம் உள்ளது. இதனை தேர்தல்ரீதியாக பலப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. த.வெ.க மீது நம்பிக்கை இருப்பதால் நேரடியாக விஜயை சந்திப்பதற்கு பிரசாந்த் கிஷோர் வந்துள்ளார்" என்கிறார். த.வெ.க-வின் தேர்தல் வியூக சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறினாலும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் அக்கட்சித் தலைமை இதுவரை வெளியிடவில்லை. த.வெ.க-வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணியிடம் இதுகுறித்து கேட்டபோது, "இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமை வெளியிடும். அதற்கு முன்னதாக யூகத்தின் அடிப்படையில் கூறுவது சரியாக இருக்காது" என்று மட்டும் பதில் அளித்தார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றியுள்ளார். ஆனால், தேர்தல் வியூக வகுப்பாளர் தொழிலில் இருந்து விலகுவதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலின்போது பிரசாந்த் கிஷோர் கூறினார். அவரது ஐபேக் (IPAC) நிறுவனத்தை தனது கம்பெனி ஊழியர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார் காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன தினம் தெரியுமா? அன்றைய தினம் என்ன செய்வார்கள்?6 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, சமீபத்தில் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க-வில் இணைந்தார். த.வெ.க-வுக்கு பலன் தருமா? "அரசியல் களத்தில் பிரசாந்த் கிஷோர் பிராண்டாக இருக்கிறார். அவர் வெற்றியை நோக்கி, கொண்டு செல்வார் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால், களத்தில் ஒரு கட்சி வலுவாக இருந்தால்தான் அது சாத்தியம்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "கட்சிக் கட்டமைப்பு எதுவும் இல்லாத த.வெ.க-வை எந்தளவுக்கு அவரால் உயரத்துக்குக் கொண்டு செல்ல முடியும் எனத் தெரியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஈடுபட்டிருந்ததையும் அவர் பட்டியலிட்டார். 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் வியூக பணிகளை மேற்கொண்டது. 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், 2021 ஆம் ஆண்டு தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் பணிகளை மேற்கொண்டது. "இவர்கள் எல்லாம் அந்தந்த காலகட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்தனர். அவர்களுடன் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றினார். மற்றபடி, பூஜ்ஜியமாக உள்ளதை பத்தாக மாற்றுவதற்கு அவரால் முடியாது" எனக் கூறுகிறார் ப்ரியன். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் மூன்று ஆலோசகர்கள் - த.வெ.க-வுக்குள் குழப்பம் வருமா? அதேநேரம், பிரசாந்த் கிஷோர் வருகையால் த.வெ.க-வுக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் ப்ரியன். "அக்கட்சியில் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேர்தல் வியூக வகுப்பாளர்களாக உள்ளனர். தற்போது பிரசாந்த் கிஷோர் வந்தால் அது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும். மூன்று தேர்தல் ஆலோசகர்கள் ஒரேநேரத்தில் ஒரு கட்சிக்கு வேலை பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. இதில், யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் முடிவை எடுக்கப் போகிறார் என்பது முக்கியம்" என்கிறார் அவர். ஆனால், "இது எந்தவகையிலும் குழப்பத்தை ஏற்படுத்தாது" எனக் கூறுகிறார் த.வெ.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் அவர் சில தகவல்களைத் தெரிவித்தார். "ஒவ்வொருவரும் அவரவருக்கான வேலைகளைப் பிரித்துக் கொண்டு செயல்படுவார்கள். தேர்தல் என்பது மிகப் பெரிய வேலை. அரசியல் பணி, பூத் கமிட்டி, தேர்தல் வியூகம் என தனித்தனி வேலைகள் உள்ளன. இதில் எந்தவித சிக்கலும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார். இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்? காஸாவில் டிரம்ப் செய்ய நினைப்பது என்ன?11 பிப்ரவரி 2025 வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?10 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் தி.மு.க-வுக்கு பாதிப்பா? 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வேலை பார்த்தது. "இதனால் தி.மு.க குறித்த தரவுகள் அந்நிறுவனத்திடம் இருக்கும்" எனக் கூறும் ஷ்யாம். "இது த.வெ.க-வுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த உதவும்'' என்கிறார் ஆனால், இந்தக் கருத்தை மறுத்துப் பேசுகிறார் திமுக முன்னாள் எம்.பி-யும் அக்கட்சியின் செய்தித் தொடர்பு தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தல் வியூகங்களை ஐபேக் நிறுவனம் மேற்கொண்டாலும், ஒரு கட்சிக்கு அடிப்படைக் கட்டமைப்பு, அக்கட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு போன்றவை மிக முக்கியமானவை" எனக் கூறுகிறார். தி.மு.க-வின் கட்சிக் கட்டமைப்பு மிக வலுவாக உள்ளதாக கூறும் அவர், "அனைத்து கிராமங்களிலும் தி.மு.க-வுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் உள்ளனர். த.வெ.க-வுக்கு தேர்தல் வியூகங்களைக் கணக்கிட்டு சொல்ல முடியுமே தவிர, தி.மு.க-வை போன்று வலுவாக உள்ள கட்சிக்கு ஆபத்தை உண்டாக்க வாய்ப்பில்லை" என்கிறார். காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்7 பிப்ரவரி 2025 கேரளா: 15 வயது தனியார் பள்ளி மாணவர் தற்கொலையில் நீடிக்கும் மர்மம் - கொடூரமான ரேகிங் காரணமா?6 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, முன்னாள் எம்.பி-யும், திமுக செய்தித் தொடர்பு தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவன். " தி.மு.க-வுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது" என்று குறிப்பிட்டார் டி.கே.எஸ்.இளங்கோவன் "கட்சியைத் தொடங்கிய உடனே தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை" எனக் கூறிய டி.கே.எஸ்.இளங்கோவன், "கட்சியை வளர்ப்பது என்பது மிகப் பெரிய வேலை. மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டும்.'' "அந்தவகையில், நடிகர் விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பை தாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என டி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cg5y9826ypyo
-
‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
சொன்னபடி பெயரை மாற்றும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். இவர், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். பதவியேற்பதற்கு முன்னதாக, ”மெக்சிகோ வளைகுடாவின் பெயரை, ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றப் போகிறேன். இது நிறைய பிரதேசங்களை உள்ளடக்கியது. அமெரிக்க வளைகுடா என்பது எவ்வளவு அழகான பெயர்? அது மிகவும் பொருத்தமானது” என்று கூறியிருந்தார். இது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், ”மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளை, ’மெக்சிகன் அமெரிக்கா’ என்று பெயர் மாற்றலாம். அந்தப் பெயரும் நன்றாக இருக்கிறது. உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர், 17ஆம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, ட்ரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” என தக்க பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில், மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என மாற்றம் செய்யப்படுமென அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கூகுள் மேப்பில், அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டும் இந்த மாற்றம் செய்யப்படுமென கூகுள் நிறுவனமும் தெரிவித்திருந்தது. அதாவது மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என்று தெரியும் என அது அறிவுறுத்தியுருந்தது. இந்த நிலையில், மெக்சிகோ பெயர் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஒன் விமானத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகருக்குப் பயணித்தபோது, இதற்கான ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்ட வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. https://thinakkural.lk/article/315192
-
தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் 11 FEB, 2025 | 05:04 PM யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் நாளை புதன்கிழமை (12) மாலை 6 மணி வரை தொடரும் என கூறப்படுகிறது. இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கூறுகையில், இப்போராட்டத்துக்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்டத்துக்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206434
-
பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?
கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு சீனிவாஸ் பதவி, பிபிசி 11 பிப்ரவரி 2025, 05:46 GMT பாம்பை கையில் பிடித்தால், ஒருவரின் உடலில் விஷம் ஏறிவிடும், பாம்பு தன் சட்டையை உரிக்கும் போது பாம்பை பார்த்தால், அது நம்மை தாக்கும் என்றெல்லாம் கூறுவதை கேட்கிறோம். இதில் எது உண்மை? உலகில் உள்ள எல்லா வகை பாம்புகளும் தங்கள் சட்டையை உரிக்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தோலை உரிக்கும்? எதனால் தோலை உரிக்கிறது? தோலை உரிக்காவிட்டால் பாம்புகளுக்கு என்னவாகும்? இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள ஆந்திரா பல்கலையில் உள்ள பேராசிரியர் சி. மஞ்சுலதா, மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை வன உயிரியல் அமைப்பை சேர்ந்த மூர்த்தி காந்திமஹந்தி ஆகியோரை பிபிசி தொடர்பு கொண்டது. பாம்பு தன் தோலை உரிப்பது மிக இயல்பான நடவடிக்கை என்று கூறுகிறார் பேராசிரியர் மஞ்சுலதா. "இது மனிதர்களிலும் நடைபெறுகிறது. ஆனால் நாம் தினமும் குளிப்பதால், தோல் உரிவதை நாம் கவனிப்பதில்லை. ஆனால் பாம்புகளில் பழைய தோல் உரிந்து புதிய தோல் வருவது ஒரே நேரத்தில் நடைபெறுவதாகும். பழைய தோலுக்கு அடியில் புதிய தோல் உருவாகிய பின் பழைய தோல் உரிந்துவிடும்" என்கிறார். நாம் சற்று வளர்ந்த உடன், நாம் ஏற்கனவே அணிந்திருந்த ஆடைகள் நமக்கு பத்தாமல் போகும். அப்போது நமக்கு ஏற்ற புதிய ஆடைகளை நாம் தைத்துக் கொள்வது போல தான் இதுவும் என்கிறார் அவர். "பாம்பு உடல் மீது இருக்கும் தோல் இறுக ஆரம்பிக்கும் போது, அதற்கு அடியில் புதிய தோல் உருவாகும். பின்னர் பழைய தோல் உரிந்துவிடும்." என்கிறார். இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா? உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்? ஏ.ஐ. உலகில் புதிய அலை: ஒரே செயலி மூலம் அமெரிக்க நிறுவனங்களை மிரளச் செய்த சீன நிறுவனம் நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா? பாம்பு தோலை உரிப்பது எப்படி? பாம்பு தன் தோலை உரிக்க நினைக்கும் போது, ஒரு சொரசொரப்பான இடத்தில் தனது தலையை தேய்க்க தொடங்கும். அப்போது தோலில் விரிசல் உண்டாகும். அதிலிருந்து பாம்பு தன் உடலை வெளியே கொண்டு வரும். பழைய தோலை முற்றிலும் உரித்து, புதிய தோலை அது கொண்டிருக்கும். "பாம்பு உயிர் வாழும் வரை அது சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே இருக்கும். அதன் உடல் வளரும் போது, அதன் தோல் இயல்பாக இறுக தொடங்கும். இது மனிதர்களிலும் நடைபெறும். இறுகிப்போன தோலை பாம்பு தன் உடலிலிருந்து உரித்துக் கொள்ளும்" என்று பேராசிரியர் மஞ்சுலதா கூறுகிறார். தோல் உரிக்காத பாம்பு வகைகள் உலகில் இல்லை என்றும் தற்போது உலகில் உள்ள 3 ஆயிரம் வகை பாம்புகள் தங்கள் தோலை உரித்துக் கொள்கின்றன என்றும் அவர் கூறுகிறார். நுண்ணுயிரிகள் மற்றும் மாசு காரணமாக அடர்த்தியாகியுள்ள தோலை அகற்றுவது தான் தோல் உரித்தல் எனப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில், ஒரே நேரத்தில் பாம்பு தன் முழு தோலையும் உரித்துக் கொள்ளும். இந்த நடைமுறை, பாம்புகளுக்கு நுண்ணுயிரிகள் மற்றும் மாசு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது என்று பேராசிரியர் மஞ்சுலதா கூறுகிறார். படக்குறிப்பு, பேராசிரியர் மஞ்சுலதா. குரங்கு காரணமா? இலங்கையில் இன்று முதல் மின் தடை அமலாகும் என்று அறிவிப்பு11 பிப்ரவரி 2025 வன்முறை முதல் முதல்வரின் ராஜினாமா வரை! ஒன்றரை ஆண்டில் மணிப்பூரில் நடந்தது என்ன?10 பிப்ரவரி 2025 பாம்பு தோல் உரிப்பது ஏன்? பாம்பு தன் உடலில் புதிய தோல் உருவாகியுள்ளது என்று உணரும் போது, அது உடனே பழைய தோலை உரித்துக் கொள்ள முயலும் என்கிறார் மூர்த்தி காந்திமஹந்தி. "ஏனென்றால் புதிய தோல் அதன் கண்களுக்கு அருகிலும் உருவாகியிருக்கும். இதன் காரணமாக பாம்பினால் சரியாக பார்க்க இயலாது. அதன் கண்கள் நீல நிறமாக மாறிவிடும். உடனே தனது பழைய தோலை அகற்றிட பாம்பு நினைக்கும்." என்கிறார். அதன் பொந்திலிருந்து வெளியே வரும் போது, பாம்பு ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம். பொந்தை விட்டு வெளியே வந்த பிறகு, பாம்பு உற்சாகமாக காணப்படும். பொந்திலிருந்து வெளிவரும் பாம்பு சாப்பாடு இல்லாமல் இருக்கும், எனவே உணவு தேடி அவசரஅவசரமாக அலைந்துக் கொண்டிருக்கும். படக்குறிப்பு, கிழக்குத் தொடர்ச்சி மலை வன உயிரியல் அமைப்பை சேர்ந்த மூர்த்தி காந்திமஹந்தி தோல் உரிக்கும் போது பார்த்தால் பாம்பு தாக்குமா? பாம்பு தோல் உரிக்கும் போது அதை பார்த்தால், பாம்பு தாக்குமா என்று கேள்விக்கு பதிலளிக்கிறார் மூர்த்தி காந்தி மஹந்தி. "ஒரு பாம்பு தன் உடலில் பழைய தோல் இருக்கும் போது அசௌகர்யமாக கருதும். ஒரு இருட்டான இடத்தில் இருந்துக் கொள்ளும். யாரையும் தாக்காது. அந்த நேரத்தில் அதை தொந்தரவு செய்தால், பாம்பு தாக்க முற்படும். தோல் உரியும் போது அதன் கண்களுக்கு அருகில் தோல் சரியாக உரியாமல் போனால், அது பாம்புக்கு மேலும் சிக்கலாகிவிடும். எனவே, பாம்பு தன் தோலை உரிக்கும் போது, ஏதாவது சத்தம் கேட்டால், இயல்பாகவே பாம்பு தாக்க முயலும். இதை தான் அனைவரும் கூறுகிறார்கள்" என்று மூர்த்தி காந்தி மஹந்தி. பட மூலாதாரம்,GETTY IMAGES காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்7 பிப்ரவரி 2025 கிரீன்லாந்து: பனி சூழ்ந்த மலைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது? எதற்காக இந்த போட்டி?30 ஜனவரி 2025 பாம்பு எத்தனை முறை தோல் உரிக்கும்? உலகில் உள்ள அனைத்து பாம்பு வகைகளும் தங்கள் தோலை உரிக்கும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆன பாம்பு மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை தன் தோலை உரிக்கும். சற்று வயதான பாம்புகள் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தோலை உரிக்கும். "பாம்புகள் எத்தனை முறை தோலை உரிக்கும் என்று குறிப்பிட்ட எண்ணிக்கை எதுவும் கிடையாது. பாம்பு சாப்பிடும் உணவு, அதன் இருப்பிடம், அங்குள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில் எத்தனை முறை தோலை உரிக்கும் என்பது மாறுபடும். எந்த வகை பாம்பு என்பதும் இதில் முக்கிய காரணியாகும்." என்கிறார் மூர்த்தி காந்தி மஹந்தி. கண்கள் முதல் வால் வரை உடம்பில் உள்ள தோலை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் உரித்துக் கொள்ளும் ஒரே உயிரினம் பாம்பு என்று அவர் கூறுகிறார். எப்போது தோலை உரிக்க வேண்டும் என்று பாம்புக்கு எப்படி தெரியும்? தோல் பழையதாகும் போது பாம்புக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தும். உடனே தோலை அகற்றவிட வேண்டும் என்ற சமிக்ஞையை அதன் உடல் பாம்புக்கு வழங்கும். உடனே அதை உரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை பாம்பு மேற்கொள்ளும். "பாம்பு தோலை உரிப்பது மிகவும் இயல்பான நடைமுறை. ஒரு பாம்பு தோலை உரிக்கவில்லை என்றால், அதற்கு உடல் நலம் சரியில்லை என்று புரிந்து கொள்ளலாம். தோல் உரியாமல் பாம்பு சுறுசுறுப்பாக இருக்காது. பாம்புக்கு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சரியாக உணவு சாப்பிடாது. இப்படியே தொடர்ந்தால், பாம்பின் உயிருக்கு கூட ஆபத்தாக இருக்கலாம். பாம்பு தோல் உரிக்கும் போது, அதற்கு உதவி செய்யும் எண்ணத்தில் அருகே சென்றாலும், பாம்பு நம்மை தாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று மூர்த்தி காந்தி மஹந்தி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியதா?10 பிப்ரவரி 2025 பெங்களூரு சாலையோரம் பாடிய எட் ஷீரன், தடுத்து நிறுத்திய காவலர் - என்ன நடந்தது?9 பிப்ரவரி 2025 பாம்பை தொட்டால் விஷம் ஏறுமா? பாம்பை தொட்டாலே விஷம் என்று கூறுவது தவறு என்கிறார் பேராசிரியர் மஞ்சுலதா. "பாம்பு உடலை தொடுவதால் எந்த தீங்கும் ஏற்படாது. அது உயிரற்ற செல்களை கொண்டது. அதில் விஷம் கிடையாது." என்கிறார். ஒரு இடத்திலிருந்து பாம்பு வெளியேறினாலும், அந்த இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மஞ்சுலதா. "ஏனென்றால், பாம்பு இருந்த இடம், அதன் வாழ்விடமாகும். எனவே, அந்த இடத்தில் பாம்பு நீண்ட காலத்துக்கு இருக்க வாய்ப்புண்டு. ஒரு பாம்பை பார்த்தால், அந்த இடத்தில் புகையை மூட்டி வேறு இடத்துக்கு அதை அனுப்பிவிடலாம்." என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyjrze8g0xo
-
சி.ஐ.டி.யின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள்!
புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை அமைக்க நடவடிக்கை Published By: DIGITAL DESK 3 11 FEB, 2025 | 04:45 PM பல்வேறு குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் ஒன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் அமைக்கவுள்ளது. இந்த மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளாராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும், பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவவும் செயற்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/206420
-
சுழற்சி முறையில் இனி நாடெங்கும் மின்வெட்டு!
நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - இலங்கை மின்சார சபை 11 FEB, 2025 | 03:52 PM நாடளாவிய ரீதியில் நாளை புதன்கிழமை (12) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி பெளர்ணமியை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு பல பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சாரசபை தீர்மானித்திருந்தது. அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (10) மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதுடன் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206417
-
நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவன் ஹம்தியின் மரணம்; நீதிகோரி மௌனப் போராட்டம் முன்னெடுப்பு
கடந்த 2021 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது நிரம்பிய சிறுவனின் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கோரி இன்றைய தினம்(11) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம் ஒன்று இடம் பெற்றது. சிறுவனின் உறவுகள், மற்றும் அப்பகுதி பெற்றோர்கள் இன்று காலை நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக அளுத்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி அமைதியாக முறையில் கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த சிறுவனுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக நோய் காரணமாக வைத்தியரிடம் அவரை பெற்றோர்கள் கொண்டு சென்றுள்ளனர். வைத்திய பரிசோதனையினை மேற்கொண்ட வைத்தியர், குறித்த சிறுவனுக்கு இடது புற சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாகவும், சிகிச்சை செய்வதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்வாங்கப்படுவதாகவும் தெரிவித்தனர் பின்னர் குறித்த சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சிகிச்சையின் பின்னர் இயந்திரத்தின் உதவியுடன் சிறுவன் வைத்தியசாலையில் இருந்த போது, திடீரென சிறுவனின் உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பித்தன. இதனை அவதானித்த வைத்தியர்கள் உடனடியாக சிறுவனை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிறுவனின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடினர். அதேவேளை குறித்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் மேற்படி வழக்கு விசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த போதும், இன்றைய தினம் அந்த தீர்ப்பு நீதிமன்றினால் அறிவிக்கப்படாத நிலையில் மீண்டும் இம்மாதம் 21 ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315195