Everything posted by ஏராளன்
-
ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும் நோக்கில் ஜப்பான் தூதரகம் நடத்திய ஓரிகமி பயிற்சிப் பட்டறை
11 FEB, 2025 | 05:21 PM இலங்கையர்களிடையே பாரம்பரிய ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிப்பதற்காக இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் ஓரிகமி பட்டறையை கடந்த 7ஆம் திகதி தூதரகத்தில் நடத்தியது. ஜப்பானிய ஓரிகமி நிபுணர் ஹிகாஷி கட்சுகாவா இந்தப் பட்டறையின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்தார். இந்தப் பட்டறையில் இலங்கை ஓரிகமி கோப்புறைகள் சங்கத்தின் (OFASL) நிறுவனர் மற்றும் தலைவர் ரெசா தில்ஷார்ட் கரீம் (Reza Dilshard Kareem) உட்பட பல பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் சிக்கலான ஓரிகமி நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இந்த பாரம்பரிய ஜப்பானிய கலை வடிவத்தின் அழகை ஆராய்வதற்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த முயற்சி ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் மேலும் ஒரு படியாக அமைந்தது. அதேவேளை, இது ஓரிகமி மீதான உள்ளூர் ஆர்வத்தையும் ஊக்குவிக்கிறது. ஜப்பானிய தூதரகம் கலாசார போற்றுதலை ஊக்குவிப்பதிலும் உறுதியாக உள்ளதுட ன் எதிர்காலத்தில் மேலும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஆவலுடன் உள்ளது. https://www.virakesari.lk/article/206440
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி - இடித்து சமப்படுத்தப்படவேண்டிய பகுதி - டிரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்து 10 FEB, 2025 | 11:01 AM காசாவை கையகப்படுத்தும் தனது திட்டத்தை மீண்டும் உறுதி செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காசாவை பெரும் ரியல் எஸ்டேட் என வர்ணித்துள்ளார். மீண்டும் காசா மக்களை அல்லது பாலஸ்தீனியர்களை அந்த பகுதிக்கு செல்வதற்கு அனுமதிப்பது பெரும் தவறு என கருதுவதாக தெரிவித்துள்ள டிரம்ப் ஹமாஸ் மீண்டும் அங்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். காசாவை மிகப்பெரிய ரியல் எஸ்டேட்டாக நினையுங்கள்! காசாவை அமெரிக்கா நிச்சயமாக கையகப்படுத்தப்போகின்றது, மெதுவாக மெதுவாக ஆனால் நிச்சயமாக என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அவசரப்படமாட்டோம், ஆனால் அபிவிருத்தி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் மத்தியகிழக்கிற்கு மீண்டும் ஸ்திரதன்மையை கொண்டுவரப்போகின்றோம் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் வர்த்தகரான டிரம்ப் காசாவை இடிக்கப்படவேண்டிய பகுதி, என வர்ணித்துள்ளதுடன் அது சமப்படுத்தப்படும், சரி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகள் இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனிய மக்களை அழகான இடங்களில் மீளகுடியமர்த்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/206286
-
விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு
இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு - காரணம் என்ன? பட மூலாதாரம்,EPA 31 நிமிடங்களுக்கு முன்னர் 'அடுத்த அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது. "கடந்த மூன்று வாரங்களாக, ஹமாஸ் குழுவின் தலைமை, எதிரி படைகளின் வீதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதையும் கண்காணித்து வருகிறது. வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, அந்த பகுதியில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கத் தவறுதல் ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்.'' என ஹமாஸ் தெரிவித்துள்ளது ஆனால் ''ஹமாஸ் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடித்து வருகிறது. அதன்படி, வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இஸ்ரேலிய பணையகைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது", என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் பதில் "இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாகும். காஸாவில் எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும், அதற்காக அதிக எச்சரிக்கையுடன் தயாராக இருக்கவும் இஸ்ரேல் மக்களை பாதுகாக்கவும் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். அக்டோபர் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலை போல மீண்டும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம்", என்று இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,REUTERS இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை. முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இன்னும் விடுவிக்கப்பட உள்ளனர். அந்த 17 பேர் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. மற்றொரு ஒப்பந்ததின்படி தாய்லாந்தை சேர்ந்த 5 பேரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு இணையாக 1900 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும்.அதில் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலையாகியுள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கியது. இந்த தாக்குதலில் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்தது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயந்தனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cg45dnr4eydo
-
யுஎஸ்எயிட் சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது- மூடுவதற்கு தீர்மானம்- எலொன் மஸ்க்
டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட் ஊழியர்களை நீக்கும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்: அமெரிக்க நீதிபதி அதிரடி உத்தரவு 09 FEB, 2025 | 02:04 PM யுஎஸ்எயிட்டின் வெளிநாடுகளில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் ஜனாதிபதி டிரம்பின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அந்நாட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உலக நாடுகளுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற மனிதாபிமான உதவிகளை செய்ய அமெரிக்க அரசு யுஎஸ்எயிட்அமைப்பை கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த அமைப்பிற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதி ஒதுக்குகிறது. அந்த நிதியின் மூலம் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பலன் அடைகின்றன. ஆனால் இந்த நிதி உதவி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தவறான நோக்கங்களுக்கு செலவிடப்படுவதாகவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி நிதி உதவியை நிறுத்தி உள்ளது. மேலும் உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான அரசின் செயல்திறன் குழு யுஎஸ்எய்டை முழுமையாக மூட பரிந்துரைத்தது. அதற்கு டிரம்ப் ஒப்புதல் வழங்கிய நிலையில் அதற்கான பணிகள் வேகமாக நடக்கின்றன. அதன் ஒரு கட்டமாக யுஎஸ்எய்டு அமைப்பிற்காக வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிர்வாக விடுப்பு வழங்கப்படுவதாகவும் அவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அமெரிக்கா திரும்ப வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவு அரசு தரப்பில் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து யுஎஸ்எயிட் ஊழியர்கள் தரப்பில் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்ல் நிக்கோலஸ் நிர்வாக விடுப்பு மற்றும் 30 நாள் கெடு உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் யுஎஸ்எயிட் அமைப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்திய டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இந்த 2 உத்தரவாலும் வெளிநாடுகளில் பணியாற்றும் சுமார் 2200 ஊழியர்களை டிரம்ப் நிர்வாகம் பணிநீக்கம் செய்வது தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. இதே போல மஸ்க்கின் செயல்திறன் குழு அமெரிக்காவின் நிதி விவகாரங்களை கவனிக்கும் கருவூலத் துறையின் முக்கிய ஆவணங்களை அணுகுவதற்கு தற்காலிக தடை விதித்து நீதிபதி பால் என்ஜெல்மேயர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக வருமான வரி ரீபண்ட்கள் சமூக பாதுகாப்பு பயனாளிகள் முதியோர் நிதி உதவி உள்ளிட்ட கோடிக்கணக்கான கணக்கு வழக்குகள் அரசின் திட்டங்கள் மூலம் பலனடையும் பயனாளிகளின் விவரங்களை மஸ்க் குழு பார்வையிட டிரம்ப் நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்க மஸ்க் தலைமையில் அதிபர் டிரம்ப் குழு அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் தங்கி உள்ள சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் பணியில் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளுக்கு உள்ளூர் போலீசாரும் உதவலாம் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் உள்ளூர் காவல் அதிகாரிகள் நேரடியாக சந்தேகிக்கப்படும் நபரை நடுரோட்டில் நிறுத்தி குடியேற்ற ஆவணங்களை சரிபார்த்து கைது செய்ய முடியும். நிறவெறிக்கு எதிரான பிரச்னையை தூண்டியதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நடைமுறையை டிரம்ப் மீண்டும் கொண்டு வந்திருப்பது அமெரிக்காவில் பிரச்னைகளை அதிகரிக்க வழிவகுக்கும். https://www.virakesari.lk/article/206226
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது உண்மை - வெறும் வாய் வார்த்தையில்லை - கனடா பிரதமர் தெரிவிப்பு 09 FEB, 2025 | 10:38 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையாகவே கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க விரும்புகின்றார் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வர்த்தக சமூகத்தினர் மத்தியில் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்பின் ஆசை உண்மையானது என ட்ரூடோ தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டை கைப்பற்றி அமெரிக்காவுடன் இணைப்பது இலகுவான விடயம் என டிரம்ப் எண்ணுகின்றார் என ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒலிவாங்கி செயற்பட்டுக்கொண்டிருந்ததை அறியாமல் கனடா பிரதமர் இதனை தெரிவித்தார், பின்னர் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிரம்ப் கனடாவின் கனிமவளங்கள் மீது கண்வைத்துள்ளார். அவர்களிற்கு எங்கள் வளங்களை பற்றி தெரியும் எங்களிடம் என்ன உள்ளது என்பது தெரியும். இதன் காரணமாகவே அவர்கள் எங்களை தங்களுடன் இணைந்து 51வது மாநிலமாக மாற்றுவது குறித்து பேசுகின்றனர் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206203
-
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு
நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீள இயங்க 4 நாட்கள் செல்லும்; சில பிரதேசங்களில் வரையறைகளுடன் மின் விநியோகம் - மின்சார சபை 10 FEB, 2025 | 02:19 PM (எம்.மனோசித்ரா) நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையால் செயலிழந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின் உற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு சுமார் 4 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமான சில பிரதேசங்களில் மின் விநியோகத்தை சில வரையறைகளுடன் முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது. பாணந்துரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) நாடு முழுவதும் சில மணித்தியாலங்கள் மின் தடை ஏற்பட்டது. சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் படிப்படியாக மின் விநியோகம் வழமைக்கு திரும்பிய போதிலும், சில பிரதேசங்களில் மீண்டும் இடைக்கிடை மின்தடை ஏற்பட்டது. இந்நிலையிலேயே நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன. இதன் காரணமாக தேசிய மின் உற்பத்தியில் 900 மெகா வோல்ட் மின்சாரம் இழக்கப்பட்டது. எனவே இந்த இயந்திரங்கள் மீள இயங்கும் வரை சில பிரதேசங்களில் வரையறைகளுடன் மின் விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை மின்சார சபை தலைவரும் மின்சக்தி அமைச்சரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதத்தை அனுப்பி வைத்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் குறைகளை அறிந்து தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். எனவே முன்னைய ஆட்சியாளர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/206304
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - மின்சக்தி அமைச்சரிடம் பிரதான எதிர்க்கட்சி கேள்வி 10 FEB, 2025 | 05:44 PM (எம்.மனோசித்ரா) தேசிய மின் கட்டமைப்பில் இவ்வாறு சமநிலையற்ற நிலை ஏற்படுவதாக கடந்த 8 வாரங்களாக மின்சாரசபை பொறியியலாளர்களால் மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு அபாகரமான நிலைமை ஏற்படவிருந்தமையை அறிந்திருந்தும் அமைச்சரால் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கேள்வியெழுப்பினார். இன்று திங்கட்கிழமை (10) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு குரங்குகள் தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையே காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. இறுதியில் நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகளின் செயலிழப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மின்சக்தி அமைச்சர் இவை அனைத்துக்கும் அப்பால் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவித்தார். அவ்வாறெனில் இவ்வாறான நிலைமை ஏற்படும் வகையில் கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன? தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் சூரிய மின் உற்பத்தியின் ஊடாக 1,300 மெகாவோல்ட் மின்சாரத்தை இணைத்தமை தவறான தீர்மானமா? கடந்த ஆட்சி காலங்களில் இந்த துறையில் பொறுப்புக்களை வகித்தவர்கள் என்ற ரீதியில் எம்மால் கேட்கப்படும் இந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும். கடந்த 8 வாரங்களாக தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. ஒருபுறும் ஞாயிற்றுக்கிழமை மின்சாரப் பாவனை குறைவடைந்து காணப்பட்டதோடு, மறுபுறம் சூரிய மின் உற்பத்தி அதிகபட்சமாகக் காணப்பட்டது. தேசிய மின் கட்டமைப்பில் இவ்வாறு சமநிலையற்ற நிலை ஏற்படுவதாக அது குறித்து நாளாந்தம் கண்காணித்து வந்த பொறியியலாளர்கள் அமைச்சருக்கு புதுப்பிக்கப்பட்ட நிலைமைகளை தெளிவுபடுத்தியிருக்கின்றனர். அந்த வகையில் இரு மாதங்களாக இது தொடர்பில் மின் சக்தி அமைச்சரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முன்னரே அறிந்திருந்த தகவல்களின் அடிப்படையில் மக்களை அறிவுறுத்தியிருந்தால் அசௌகரியங்களையாவது குறைத்திருக்கலாம். ஆனால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திகளை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்தமையை தேசிய குற்றமாக்கும் வகையிலேயே இவர்களது கருத்துக்கள் காணப்படுகின்றன. தொடர்ச்சியாக 8 ஞாயிற்றுக்கிழமைகளாக தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையற்ற நிலை ஏற்படுவதை அறிந்திருந்தும் ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்மையில் இந்த பிரச்சினைக்கு அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் தேவையில்லை. மின்சார பொறியியலாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/206330
-
வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?
படக்குறிப்பு, பாராலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற முதல் பார்வை மாற்றுத் திறனாளி இந்திய பெண் ரக்ஷிதா கட்டுரை தகவல் எழுதியவர், திவ்யா ஆர்யா பதவி, பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "என் இளம் வயதில் என் கிராமத்தில் உள்ள அனைவரும் 'இவளுக்கு கண் பார்வை இல்லை, இவள் வீண்' என்று கூறுவார்கள்," என்கிறார் ரக்ஷிதா ராஜு. இப்போது 24 வயதான அவர் இந்தியாவின் சிறந்த இடைநிலை (middle distance) பாரா தடகள வீரர்களில் ஒருவர் ஆவார். "இது என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது," என்று அவர் கூறுகிறார். ரக்ஷிதா தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் பார்வை மாற்றுத் திறனாளியாகப் பிறந்தார். 10 வயதுக்குள் தனது பெற்றோர் இருவரையும் அவர் இழந்துவிட்டார். கேட்கும் குறைபாடு மற்றும் பேச்சுக் குறைபாடுள்ள தனது பாட்டியால் அவர் வளர்க்கப்பட்டார். "நாங்கள் இருவருமே மாற்றுத் திறனாளிகள். எனவே என் பாட்டி என்னைப் புரிந்துகொண்டார். அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறுவார்," என்று ரக்ஷிதா குறிப்பிட்டார். ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன? விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா? கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை ரக்ஷிதாவுக்கு சுமார் 13 வயது இருக்கும்போது அவரது பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அவரை அழைத்து 'ஒரு சிறந்த தடகள வீராங்கனையாக' இருக்கும் திறன் அவருக்கு இருப்பதாகக் கூறினார். "எப்படி என்னால் முடியும்? நான் பார்வையற்றவள், பார்க்க முடியாத என்னால் எப்படி ஓட முடியும் என யோசித்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். பார்வைக் குறைபாடுள்ள ஓட்டப்பந்தய வீரர்கள் ஒரு வழிகாட்டியை வைத்துக் கொள்ளலாம். அந்த வழிகாட்டியின் உதவியுடன் ஓட முடியும் என்று அவருடைய ஆசிரியர் அவரிடம் விளக்கினார். அதாவது, பார்வை மாற்றுத்திறனாளி தடகள வீரரும் அவருக்கு உதவும் கைட் ரன்னரும் (ஓடுவதற்கு வழிகாட்டியாக உதவுபவர்), டிராக்கில் ஓடுவார்கள். அவர்கள் ஒரு நெகிழிக் கயிறு ஒன்றின் மூலம் இணைக்கப்படுவார்கள். அந்தக் குறுகிய கயிற்றின் இரு முனைகளிலும் இருக்கும் வளையங்களை, பாரா தடகள வீரரும் அவருக்கு உதவும் கைட் ரன்னரும் பிடித்துக் கொள்வார்கள். இது ரக்ஷிதாவுக்கு புதிதாக இருந்தது. Play video, "பார்வை மாற்றுத்திறனாளிகள் ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுக்க உதவும் கைட் ரன்னர்கள்", கால அளவு 11,14 11:14 காணொளிக் குறிப்பு, டென்மார்க்கின் 'கருணை' மிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்து கிரீன்லாந்து விடுபடுமா? சுதந்திர தாகத்திற்கு புது வெளிச்சம் பாய்ச்சிய டிரம்ப்9 பிப்ரவரி 2025 மஞ்சள் கரு, வெள்ளை கரு ஆகிய இரண்டையும் சாப்பிட ஏதுவாக முட்டையை மிகச்சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 கேலி செய்த கிராமவாசிகளை கொண்டாட வைத்த ரக்ஷிதா படக்குறிப்பு, விளையாட்டு வீரர்கள் மத்தியில் பார்வைக் குறைபாடுகள் மாறுபடும். எனவே சில நிகழ்வுகளில் சில வீரர்கள் சமநிலையை உறுதிப்படுத்த தங்கள் கண்களை மறைக்கும் பட்டைகளை அணிந்துகொள்வார்கள். சிறிது காலம் மற்ற நபர்கள் ரக்ஷிதாவுக்கு கைட் ரன்னர்களாக செயல்பட்டனர். பின்னர் 2016இல், தனது 15 வயதில் ரக்ஷிதா தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். அங்கு ராகுல் பாலகிருஷ்ணா என்ற நபர் அவரைக் கண்டார். ராகுல் ஒரு இடைநிலை தொலைவு ஓடும் தடகள வீரர். அதற்கு முன்பு அவர்1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் மீண்டு வந்துகொண்டிருந்தபோது, இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ) பயிற்சியாளரால் அவருக்கு பாரா தடகளம் அறிமுகமானது. வழிகாட்டிகள் (கைட் ரன்னர்கள்) மற்றும் பயிற்சியாளர்களின் பற்றாக்குறை இருந்ததால் ராகுல் அந்த இரண்டு பொறுப்புகளையும் தாமே ஏற்க முடிவு செய்தார். அவரது பயிற்சிப் பணிக்கான சம்பளத்தை அரசு அவருக்கு வழங்குகிறது. ஆனால் வழிகாட்டி ஓட்ட வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இருப்பினும் பார்வையற்ற ஓட்டப் பந்தய வீரர் ஒருவர் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்றால், அவரது வழிகாட்டிக்கும் பதக்கம் கிடைக்கும். ராகுல் தனது சொந்த ஓட்டப் பந்தய வாழ்க்கையில் சாதிக்காத ஒன்று அது. "எனக்காகவும் என் நாட்டிற்காகவும் இதைச் செய்ய முடிந்ததில் நான் பெருமைப்பட்டேன்," என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு, ராகுலும் ரக்ஷிதாவும் சுமார் எட்டு ஆண்டுகளாக ஒன்றாகப் பயிற்சி செய்து வருகின்றனர் ரக்ஷிதாவுக்கு உதவ அவர் தனது சொந்த நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்தார். ரக்ஷிதா 2018இல் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து சிறந்த பயிற்சி வசதிகளைப் பெற உதவினார். அரசால் நடத்தப்படும் விடுதியில் ரக்ஷிதா வசிக்கிறார், ராகுலுடன் தினமும் பயிற்சி செய்கிறார். அவர்கள் ஓடும்போது, "சிறிய விஷயங்களே முக்கியமானவை" என்று ராகுல் கூறுகிறார். "ஒரு வளைவை நெருங்கும்போது வழிகாட்டி, தடகள வீரரை எச்சரிக்க வேண்டும். அல்லது ஒரு போட்டியாளர் முந்திச் செல்லும்போது அவர் தடகள வீரரிடம் சொல்ல வேண்டும். தடகள வீரர் இன்னும் வேகமெடுத்து ஓட முயல்வதற்கு இது உதவும்." என்கிறார் அவர். போட்டி விதிகளின்படி அவர்கள் கைகளைப் பிடித்துக் கொள்ள முடியாது. இறுதிக்கோட்டைக் கடக்கும் வரை அவர்களை இணைக்கு நெகிழிக் கயிற்றை மட்டுமே பிடித்துக் கொள்ள முடியும். கூடுதலாக வழிகாட்டி வீரர், பார்வைக் குறைபாடுள்ள தடகள வீரரைத் தள்ளவோ, இழுக்கவோ அல்லது உந்தவோ அனுமதியில்லை. காலப்போக்கில் இந்த ஜோடி ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கியுள்ளது. "இப்போது நான் என்னைவிட என் வழிகாட்டியை அதிகம் நம்புகிறேன்" என்று ரக்ஷிதா கூறுகிறார். அவர்களின் பயிற்சி பலனளித்தது. 2018 மற்றும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். ரக்ஷிதாவின் கிராமத்தில் அவர்களுக்கு அமர்க்களமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னைக் கேலி செய்த அதே கிராமவாசிகள் தனக்காக ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்து, ஆரவாரத்துடன் கொடிகளை அசைத்ததை விவரிக்கும்போது ரக்ஷிதாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது. தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதி - விவசாய சேதம் குறையுமா? அல்லது காடுகளுக்குப் பாதிப்பா?9 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 கைட் ரன்னரை தேர்வு செய்வதில் உள்ள சவால்கள் படக்குறிப்பு, ரக்ஷிதாவின் பாட்டி (இடமிருந்து இரண்டாவது), ரக்ஷிதா (இடமிருந்து மூன்றாவது) மற்றும் ராகுல் (வலது) கிராமத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்டனர் ரக்ஷிதா பாராலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தகுதி பெற்ற முதல் பார்வையற்ற இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு அவர் ராகுலுடன் இணைந்து 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் போட்டியிட்டார். பிரான்சில் அவர் பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனால் பாரிஸ் பாராலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்தியாவின் மற்றொரு பார்வைக் குறைபாடுள்ள பெண் தடகள வீராங்கனையான சிம்ரன் ஷர்மா வெண்கலப் பதக்கம் வென்றார். சிம்ரனுக்கு ஓரளவு பார்வைக் குறைபாடு இருந்தது. அவர் தடகளத்தில் ஈடுபடத் தொடங்கியபோது தனியாகவே ஓடினார். ஆனால் 2021இல் சிம்ரன் டோக்கியோ பாராலிம்பிக்கில் போட்டியிட்டபோது ஓடும் பாதையில் உள்ள கோடுகளைப் பார்க்க முடியாமல் தனது பாதையை விட்டு விலகிச் சென்றார். தான் தொடர்ந்து ஓட வேண்டுமானால் தனக்கு ஒரு வழிகாட்டி தேவை என்பதை அவர் அப்போது உணர்ந்தார். சிம்ரன் டெல்லியில் வசித்தாலும்கூட தனக்கான கைட் ரன்னரை தேடுவது சவால் மிகுந்ததாக இருந்தது. "அவர் ஏதோவொரு விளையாட்டு வீரராக இருக்க முடியாது. நீங்கள் பங்கெடுக்கும் அதே பிரிவில் திறன் பெற்றவராகப் பொருந்தியிருக்க வேண்டும், உங்களைப் போலவே வேகமாக ஓடும் ஒருவர் உங்களுக்குத் தேவை," என்று சிம்ரன் விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரிஸில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் தனது வழிகாட்டி ஓட்டப் பந்தய வீரர் அபய் (இடது) உடன் சிம்ரன் (வலது) சிம்ரனின் வேகம் அல்லது ஸ்டைலுடன் சரியாகப் பொருந்தாத சிலருடன் சில தவறான தொடக்கங்கள் அவருக்கு இருந்தன. ஆனால், இறுதியாக அபே குமார் என்ற இளம் தடகள வீரரைக் கண்டார். சிம்ரன் பயிற்சி பெறும் அதே இடத்தில் அபயும் பயிற்சி செய்து வந்தார். பல போட்டிகளில் பங்கெடுத்திருந்த, 18 வயதான அபயுக்கு , சிம்ரனுக்கு கைட் ரன்னராக இருப்பது சர்வதேச போட்டிகளின் அனுபவத்தைப் பெறும் வாய்ப்பாக அமைந்தது. "அவர்கள் எனக்கு வீடியோக்களை அனுப்பினார்கள். நான் வேகமாகக் கற்றுக் கொள்பவன், இது எளிதாகவே இருக்கும் என்று அவற்றைப் பார்த்த பிறகு நினைத்தேன். ஆனால் நான் முதல் முறையாக ஓடியபோது அது மிகவும் கடினமாக இருந்தது," என்கிறார் அபே. "நான் ஒரு வளைவில் ஓடும்போது உள்பக்கமாக இருக்கும் கை குறைவாகவும், வெளிப்புறம் இருக்கும் கை அதிகமாகவும் நகரும் என்பதை உணர்ந்தேன். ஆனால் நான் அவருடன் ஓடும்போது நான் வெளிப்புறமாக இருப்பேன். அவருடைய ஓட்டத்தைத் தடுக்காமல் இருக்க அல்லது அவருடைய அசைவில் தலையிடுவதைத் தவிர்க்க என் உள்புற கை அவரது வெளிப்புறக் கையைப் போலவே நகரும் வகையில் நான் ஓடுவதைச் சரிசெய்ய வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார். பார்வைக் குறைபாடுள்ள தடகள வீரர் தங்கள் வழிகாட்டிக்கு முன்பாக இறுதிக் கோட்டை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது வரை, என்பது போல ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும் ஒத்திசைவு இருக்க வேண்டும். ஜப்பானில் நடந்த 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிதான் சிம்ரனும் அபயும் கலந்துகொண்ட முதல் சர்வதேச போட்டி. அவர்கள் சந்தித்து சில வாரங்கள் மட்டுமே ஆகியிருந்ததால் ஒன்றாகப் பயிற்சி செய்ய அவர்களுக்கு அதிக நேரம் இருக்கவில்லை. புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?7 பிப்ரவரி 2025 பேட் கேர்ள் டீசர்: கலாசாரம், சாதி சர்ச்சைகள் கிளம்புவது ஏன்? படத்தின் இயக்குநர் கூறியது என்ன?31 ஜனவரி 2025 அனுபவம் தந்த வெற்றி படக்குறிப்பு, சிம்ரனும் அபயும் பந்தயத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒத்திசைவாக இருப்பதை உறுதி செய்யப் பயிற்சி செய்கிறார்கள் அவர்களது முதல் பந்தயமான 100 மீட்டர் ஓட்டம் படுதோல்வியில் முடிந்தது. "எங்கள் இருவருக்கும் விதிகள் சரியாகத் தெரியாது. நான் முதலில் கோட்டைக் கடக்க ஏதுவாக அபய் ஓடுவதை நிறுத்திவிட்டார். அவர் தொடர்ந்து ஓடி என் பின்னால் கோட்டைக் கடந்திருக்க வேண்டும்," என்றார் சிம்ரன். இதன் காரணமாக அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டதால், அவர்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடியபோது தங்கம் வென்றனர். சிம்ரன் T12 பிரிவில் உலக சாம்பியன் ஆனார். பிறகு பாரிஸில் நடந்த பாராலிம்பிக்கிற்கும் அவர்கள் சென்றனர். அங்கு 100 மீட்டர் ஓட்டத்தில் நான்காவது இடத்தைப் பிடித்தனர். அதே நேரம் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றனர். மேலும் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பார்வைக் குறைபாடுள்ள இந்திய பெண் என்ற பெருமையை சிம்ரன் பெற்றார். "நாங்கள் பதக்கம் வென்றுவிட்டோம் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் பதக்கம் வென்றது மட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவுக்கு எனது குறைவான சாதனை நேரத்தில் ஓடியுள்ளேன் என்று என் வழிகாட்டி அபய் என்னிடம் கூறினார்," என்று சொல்லியபடி சிம்ரன் புன்னகைக்கிறார். இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதை சிம்ரன் பெற்றார். பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. ஆனால் 100 மீட்டர் ஓட்டத்தில் தோல்வி என்பது ஒரு வேதனையான விஷயம். மேலும் அபே தனது விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர் தன்னுடைய வழிகாட்டியாக எவ்வளவு காலம் நீடிப்பார் என்றும் சிமரன் கவலைப்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரிஸில் நடந்த 200 மீட்டர் ஓட்டத்தில் சிம்ரனும் அபயும் (முன்னால்) மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். ஒரு ஜோடி வெற்றி பெறும்போது வழிகாட்டி ஓட்டப்பந்தய வீரர்கள் பதக்கம் பெற்றாலும்கூட, அவர்களுக்கு சம்பளம், ரொக்கப் பரிசுகள் அல்லது அவர்களின் விளையாட்டு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்று இந்திய பாராலிம்பிக் குழு (PCI) கூறுகிறது. "அவர்களின் உணவு, தங்குமிடம், போக்குவரத்து, பயிற்சி வசதிகள் போன்ற குறுகிய கால தேவைகளை மட்டுமே எங்களால் பூர்த்தி செய்ய முடியும்," என்று இந்திய பாராலிம்பிக் குழுவின் தேசிய தடகளப் பயிற்சியாளர் சத்யநாராயணா கூறுகிறார். ரக்ஷிதா, சிம்ரன் இருவருக்குமே இப்போது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் உள்ளன. அவர்களின் பயிற்சிக்கு நிதியளிக்க அவை உதவுகின்றன. தங்கள் வழிகாட்டிகளுக்கு அவர்களே பணம் கொடுக்கிறார்கள். தாங்கள் வெல்லும் எந்தவொரு பரிசுத் தொகையிலும் ஒரு பங்கை அவர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால் ராகுலும் அபயும் அரசிடம் இருந்து கூடுதல் ஆதரவை விரும்புகிறார்கள். விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பொதுத்துறை வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தாங்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். அபய் உடன் தனது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் சிம்ரன் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் அடுத்த பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். "இந்தப் பதக்கத்தின் நிறத்தை மாற்றும் வரை நான் ஓயமாட்டேன்," என்று அவர் கூறுகிறார். அடுத்த முறை தங்கம் வெல்லும் உத்வேகத்துடன் அவர் உள்ளார். ராகுலுடன் சேர்ந்து அடுத்த முறை பதக்கம் வெல்லும் நம்பிக்கையில் ரக்ஷிதாவும் உள்ளார். "ரக்ஷிதா கண்டிப்பாக பதக்கம் வெல்ல வேண்டும். கிராமங்களில் அவரைப் போல பலர் இருக்கிறார்கள். விளையாட்டு மற்றும் வாய்ப்புகள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. ரக்ஷிதா அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குவார்," என்று ராகுல் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crr08y9j9x9o
-
ரணில் - சஜித் விரைவாக ஒரு மேசைக்கு வரவேண்டும் - வெலிபன தம்மாராம தேரர்
10 FEB, 2025 | 05:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ரணில், சஜித் இரண்டு பேரும் விரைவாக ஒரு மேசைக்கு வரவேண்டிய காலம் வந்துள்ளது. இல்லாவிட்டால் மக்கள் அவர்களின் புதைகுழிக்கும் சாபமிடும் நிலை ஏற்படும். அதிகாரம் மற்றும் வரப்பிரசாதங்களை பார்க்காமல் மக்களின் நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெலிபன தம்மாராம தேரர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படவேண்டியதன் தேவைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை கீழ் மட்டத்தில் இடம்பெற்று வருகிறது. என்றாலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டிருக்க முடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரண்டு தலைவர்களும் விரைவாக ஒரு மேசைக்கு வந்து கலந்துரையாட வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. இல்லாவிட்டால் அவர்கள் மரணித்தால் அவர்களின் புதைகுழிக்கும் மக்கள் சாபமிடும் நிலை ஏற்படும். ரணில் விக்ரமசிங்க இந்த நாடு, சர்வதேசம் ஏற்றுக்கொண்ட தலைவர். அவரின் ஆலோசனை இந்த நாட்டுக்கு தேவை. அதேபோன்று சஜித் பிரேமதாச இந்த நாட்டு மக்களின் மனதை வெற்றிகொண்ட தலைவர். அவரின் தேவைப்பாடு நாட்டுக்கு இருக்கிறது. இவர்கள் இருவரின் இணக்கப்பாடு மூலம் நாட்டின் அபிவிருத்தி, வெற்றியை மக்களால் அடைந்துகொள்ள முடியும். அத்துடன் இந்த பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதற்கு இரண்டு தரப்பில் உள்ளவர்களுக்கும் சிறு சிறு சிக்கல்கள் இருக்கலாம். அதனை விரைவில் அவிழ்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அவிழ்த்துவிடுவார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஒரு கட்சியில் இருந்த தலைவரும் உப தலைவருமாகும். அதனால் அதிகாரங்கள் வரப்பிரசாதங்களை பார்க்காமல் ஒரு அடி பின்னுக்கு சென்று அர்ப்பணிக்க வேண்டும். மக்களின் நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு, தேசம் ஆதரவாளர்களை பாதுகாக்கும் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும், 76 வருட சாபத்தை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேல் போடமுடியாது. இந்த சாபத்துக்கு தோள் கொடுத்தது மக்கள் விடுதலை முன்னணியாகும். சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்துகொண்டு 39 அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள். இன்று இவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்கள் கைசேதப்படுகின்றனர். 76 வருட சாபத்துக்கும் மக்கள் விடுதலை முன்னணியே காரணமாகும் என்றார். https://www.virakesari.lk/article/206337
-
போட்டியின்போது காயமடைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மரணம்!
ufc போன்ற அதிக பணம் கொழிக்கும் விளையாட்டில் கவசக் கையுறைகள் மெல்லியதாகக் காணப்படுவதுடன் வெற்றிபெற கழுத்தைத் திருகுவது, கையை காலை கடுமையாக வளைப்பது வரை முயல்கிறார்கள். முழங்கை முழங்கால்களால்களால் மிகமோசமாக தலைப்பகுதியில் தாக்குகிறார்கள். ஆபத்தென தெரிந்தே எல்லாம் நடைபெறுகிறது. ஒப்பீட்டளவில் பழைய குத்துச்சண்டைப் போட்டிகளில் விதிமுறைகள் கடுமையானது, பாதுகாப்பு கூடிய கையுறைகள் பயன்படுத்தப்படுகிறது. அங்கும் ஆபத்துகள் உண்டு.
- தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்? - நிலாந்தன்
-
மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - சந்தேக நபர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு 10 FEB, 2025 | 05:54 PM மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார் கைதான 7 சந்தேக நபர்களில் முன்னதாக ஐவர் ஆள் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்டனர். ஏனைய இருவருக்கு ஆள் அடையாள அணிவகுப்பு இன்று நடத்தப்படவிருந்த நிலையில் அடையாளத்தை காண்பிப்பதற்காக வருகை தரவிருந்த இருவரும் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகவில்லை. இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்தவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு பெண் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின்போது பிரதான சந்தேக நபர்கள் உள்ளடங்கலாக 7 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் இராணுவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் அடங்குகின்றனர். இந்த 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (10) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இன்று நடத்தப்பட்ட விசாரணைகளின்போது நீதவான் 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/206342
-
தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன, மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர்
Published By: VISHNU 10 FEB, 2025 | 05:33 PM தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (9) சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த அவர் அதன்பின்னர் தையிட்டி விகாரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள். தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா? தையிட்டி விகாரை விடயம் இனவாதத்தினை, மதவாத்தினை தூண்டக்கூடியது. இனவாதத்தினையும், மதவாத்தினையும் மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்தி வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே அதுபற்றிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த வகையில் மதவாத்தினை இலகுவாகத் தூண்டி அதன் மூலமாக அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே பார்க்கின்றார்கள். எவ்வாறாக இருந்தாலும் எமது அரசாங்கத்தின் கீழேயே இந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை எட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் பரிந்துரைக்கும் தீர்மானத்துக்கு செல்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம். விகாரை அமைக்கப்பட்டமை சட்டவிரேதமானதா இல்லையா என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க முடியும். ஆனால், விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலமானது மக்களுடையது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதனால் அந்தக் நிலத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணிகளை அல்லது நட்டஈட்டை வழங்க வேண்டிய தேவையுள்ளது. விகாரையை உடைத்து நொருக்குவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே சுமூகமான தீர்வொன்றிணை மேற்கொள்ள வேண்டும். இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/206339
-
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு
இலங்கையில் இன்று முதல் மின் தடை - மக்களை இருளில் தள்ளியதா குரங்கு? பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு மின்சார தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 10) மற்றும் நாளை (பிப்ரவரி 11) ஆகிய இரு தினங்களில் ஒன்றரை மணிநேர சுழற்சி முறையில் மின்சாரத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் (பிப்ரவரி 09) ஏற்பட்ட முழு மின் தடையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மின்சார தடையுடனான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற நிலைமையை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சார தடையுடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன. இந்த மின்பிறப்பாக்கிகளை மீண்டும் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைப்பதற்கு சில தினங்கள் தேவை என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தை இலங்கை மின்சார சபை எட்டியுள்ளது. இலங்கை மின்சார சபை எட்டிய தீர்மானத்திற்கு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று பிற்பகல் 3.30 முதல் இரவு 9.30 வரையான கால எல்லைக்குள் ஒன்றரை மணிநேர மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களின் கீழ் இந்த மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு? தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு - நடுக்கடலில் என்ன நடந்தது? இலங்கை : நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது - நடந்தது என்ன? யாழ்ப்பாணத்தில் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என்ற பெயருக்கு எதிர்ப்பு ஏன்? புதிய பெயர் என்ன? நாடு முழுவதும் மின்சார தடை இலங்கை முழுவதும் நேற்றைய தினம் திடீரென மின்சார தடை ஏற்பட்டது. நேற்று (பிப்ரவரி 09) முற்பகல் 11.30 அளவில் ஏற்பட்ட இந்த திடீர் மின் விநியோக தடையானது, மாலை 4.30 அளவில் வழமைக்கு கொண்டு வரப்பட்டது. பாணந்துறை உப மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பில் குரங்கு பாய்ந்தமையே இந்த மின்சார தடைக்கான காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஊடகங்களுக்கு நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். ''பாணந்துறை பகுதியிலுள்ள மின் பிறப்பாக்கி ஒன்றில் குரங்கொன்று மோதியுள்ளதை அடுத்து, ஏற்பட்ட கோளாறே இதற்கான காரணமாகியுள்ளது. அதனாலேயே நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.'' என மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார். குரங்கு பாய்ந்தமையே மின்சாரம் தடைப்பட காரணம் என மின்சக்தி அமைச்சர் கூறிய நிலையில், பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதனை மறுத்துள்ளார். மின் பிறப்பாக்கி கட்டமைப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே இவ்வாறு இதனை நிராகரித்துள்ளார். ''வழமையாக குரங்குகள் பாயும். குரங்குகள் பாயும் போது செயலிழந்து மீண்டும் வழமைக்கு திரும்பி விடும். ஆனால் குரங்கு பாயவில்லை. அப்படியென்றால் குரங்கின் உடல் இருக்க வேண்டும் அல்லவா? குரங்கை காணவில்லை. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மூன்று குரங்குகள் பாய்ந்தன. உடனே இறந்து விட்டன. அதைவிடுத்து, இந்த இடத்தில் பாயவில்லை. குரங்கு பாயும் நேரங்கள் இருக்கின்றன. எனினும், இன்று பாயவில்லை.'' என பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சாலையில் பாடிய எட் ஷீரனை தடுத்து நிறுத்திய காவலர் - எட் ஷீரன் கூறியதென்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பதி லட்டில் கலப்பட நெய் சர்ச்சை: தமிழ்நாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது - என்ன நடக்கிறது?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MINISTRY OF ENERGY படக்குறிப்பு, மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தேசிய மின்சார கட்டமைப்பை சமநிலையாக நடத்திச் செல்வது தொடர்பில் தெளிவின்றி கடந்த கால அரசாங்கங்கள் செயற்பட்டமையே இதற்கான காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவிக்கின்றார். அறிக்கையொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ''பாணந்துறை உப மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட சமநிலையற்ற நிலைமையே நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட காரணம். தேசிய மின்சார கட்டமைப்பை சமநிலையாக நடத்தச்செல்வது தொடர்பில் தெளிவின்றி கடந்த கால அரசாங்கங்கள் செயல்பட்டன. தொழில்நுட்பம் தொடர்பில் தெளிவற்ற வழிகாட்டல் இந்த நிலைமை ஏற்பட காரணம் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் மிக ஆழமாக ஆராய்ந்து மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். மின்சார தடையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்", என மின்சக்தி அமைச்சர் குறிப்பிடுகின்றார். இந்த மின்சார தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காஸாவில் டிரம்ப் செய்ய நினைக்கும் இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன? இனப் படுகொலையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?5 மணி நேரங்களுக்கு முன்னர் கைட் ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் இலங்கையின் மின்சார தடை சர்ச்சை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாத காலம் தொடர் மின்சார தடையை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, 2022ம் ஆண்டு காலப் பகுதியில் நாளொன்றிற்கு சுமார் 12 மணிநேரத்திற்கு அதிக மின்சார தடை அந்த காலப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டமையினால், நாடு முழுவதும் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை அடுத்து, மின்சார தடை படிப்படியாக குறைக்கப்பட்டு, மீண்டும் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்கு கொண்டு வரப்பட்டது. எவ்வாறாயினும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ம் தேதி கொத்மலை முதல் பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கியதை அடுத்து, நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cde9w348w4wo
-
யாழில் மீனவ அமைப்பை சந்தித்த சீன உதவித் தூதுவர்
10 FEB, 2025 | 10:30 AM யாழ். மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதிகளை, யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) சந்தித்தார். குறித்த சந்திப்பில் சீனா நாட்டினால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் மற்றும் உணவுப் பொதிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் வடக்கு மீனவ சமூகத்துக்கு சீனாவின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மீனவர்கள் முன்வைத்தனர். https://www.virakesari.lk/article/206276
-
வெள்ளத்தால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் பொதி வழங்கி வைப்பு
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனாவின் உதவி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான நிவாரணப்பொருட்களை இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்கள் வழங்கி வைத்தார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=199914
-
ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம் இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது. இந்த விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார். மேலும், மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத்துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=199937
-
அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய
அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் 09 FEB, 2025 | 07:55 PM (எம்.வை.எம்.சியாம்) அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (09) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஆசிரியர் அதிபர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கல்வித்துறையில் முககொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு உரிய தீர்வினைப்பெற்றுத்தருமாறும் தொழிற் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே இந்த சந்திப்பின் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த நாட்டில் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிபர்களும் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் நாம் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். குறிப்பாக பதவி உயர்வு தொடர்பில் விடயங்களை முன்வைத்தோம். இது குறித்து அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய சுற்றுநிருபம் வெளியிட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடம் முதல் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் எமக்கு வாக்குறுதியளித்தார். எனவே எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நாம் நம்புகிறோம். அதேபோன்று இதன்போது ஆசிரியர் அதிபர் ஆசிரிய ஆலோசகர்கள் கல்வித்துறையில் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுத்தருவதாக பிரதமர் எமக்க உறுதியளித்தார் என்றார் இந் நிலையில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்காக சுமார் 07கிலோமீற்றர் தூரத்திலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலவன் பாடசாலைக்கும், சுமார் 09 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்திற்கும், சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்குமே செல்லவேண்டிய அவலநிலை காணப்படுவதால் குறித்த மன்னாகண்டல் பாடசாலையை தரம்-09 வரையாவது தரமுயர்ததித்தருமாறும் இதன்போது கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. இவ்வாறு தரமுயர்த்தினால் கனகரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் மன்னாகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்பதற்காக வருகை தருவார்கள் எனவும் கிராமமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைவிட மன்னாகண்டல் கிராமத்திற்கான வீதிச் சீரமைப்பு, பொதுப்போக்குவரத்தை ஏற்படுத்தல், மன்னாகண்டல் கமக்கார அமைப்பிற்குட்பட்ட மூன்றாம் கண்டம் பகுதியில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 150ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்தல், எம்.பி கமம் விவசாய நிலங்களில் சுமார் 200ஏக்கரில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு உரமானியம் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல், முன்பள்ளியை இயங்கச்செய்தல், வனவளத்திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நீர்ப்பாசன வாய்க்கால்களை விடுவிப்புச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும், குறைபாடுகளும் மக்களால் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் மன்னாகண்டல் கிராமத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இதுதொடர்பான மகஜர்களையும் பெற்றுக்கொண்டார். அதேவேளை மக்களால் முன்வைக்கப்பட்ட குறித்த கோரிக்கைகள்தொடர்பால் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206253
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
305 ரன் இலக்கை ஊதித் தள்ளிய இந்தியா - இங்கிலாந்தை சிதறடித்து புதிய மைல்லை எட்டிய ரோஹித் சர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இங்கிலாந்தை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது. கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகலிரவாக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 305 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 33 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 10-வது சர்வதேச தொடரை வென்றுள்ளது. ரோஹித் சர்மா அதிரடி சதத்தால் மிகப்பெரிய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது எப்படி? அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம் கோலி, ரோஹித்துக்கு கடைசி வாய்ப்பு - இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் என்னென்ன? இந்தியா VS இங்கிலாந்து: இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற மூவர் கூட்டணி சொதப்பிய இங்கிலாந்து அணி டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட், பில் சால்ட் அருமையான தொடக்கம் அளித்தனர். பவர்ப்ளே முடிவில் 80 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். சால்ட் 26 ரன்களில் வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பென் டக்கெட் அரைசதம் அடித்து 65 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், ஹேரி ப்ரூக் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹேரி ப்ரூக் 31 ரன்னில் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் பட்லர், ஜோ ரூட்டுடன் சேர்ந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஜோ ரூட் 60 பந்துகளில் அரைசதம் எட்டினார். பட்லர் 34 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ததைப் பார்த்தபோது 330 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 85 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்களில் ஆட்டமிழந்தது. லிவிங்ஸ்டன் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 32 பந்துகளில் 2 பெரிய சிக்ஸர்கள் உள்பட 41 ரன்கள் சேர்த்தார். IND vs ENG: கோலி வருகையால் ஸ்ரேயாஸ் நீக்கம்? - ஆடுகளம் யாருக்கு சாதகம்?9 பிப்ரவரி 2025 ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன?5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோ ரூட் 60 பந்துகளில் அரைசதம் எட்டினார். இந்திய அணியும் பல வாய்ப்புகளை இழந்தது. பில் சால்ட் 12 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை அக்ஸர் படேல் நழுவவிட்டார், ரூட் 16 ரன்களில் இருந்த போது அக்ஸர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கினார், இதற்கு அப்பீல் செய்திருந்தால் அவுட் கிடைத்திருக்கும். ஆனால், கேப்டன் ரோஹித் டிஆர்எஸ் முடிவை எடுக்கவில்லை. இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தும் அதை இங்கிலாந்து பயன்படுத்தவில்லை. 30 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தம் இந்திய அணி சேஸிங்கில் ஈடுபட்டு நல்ல ஃபார்மில் இருந்தது. 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்திருந்தது இந்திய அணி. அப்போது மின்விளக்கில் திடீரென பழுது ஏற்பட்டு, ஒருபகுதி மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ரோஹித் சர்மா, தன் ஃபார்ம் மீது இதுவரை சந்தேகம் எழுப்பியவர்களை, இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் அமைதி ஆக்கிவிட்டார். அடுத்த வாரம் தொடங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அணியை வழிநடத்த தனக்கு தகுதி இருக்கிறது என்பதை ரோஹித் சர்மா ஒரே ஆட்டத்தில் நிரூபித்தார். கடந்த ஆட்டத்தில் பேட்டில் எட்ஜ் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில், தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து அட்கின்சன் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் ரோஹித் பவுண்டரி அடித்தபின் இயல்பான ஆட்டத்தை ஆடத் தொடங்கினார். மெஹ்மூத் முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய நிலையில் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மாவின் பேட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் சிக்ஸர்களை வாரிக்கொடுத்துச் சென்றார். அதில் ரஷித் ஓவரில் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளை விளாசி 30 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். அதன்பின் பொறுமையாக பேட் செய்யத் தொடங்கினார். 30 பந்துகளில் அரைசதம் எட்டிய ரோஹித், அடுத்த 50 ரன்களை 46 பந்துகளில் நிதானமாகச் சேர்த்து 32வது சதத்தை நிறைவு செய்தார். ரோஹித் சர்மா இழந்த ஃபார்மை மீட்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகி இருப்பது மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, சவாலாகவும் இருக்கும். அடுத்ததாக இந்திய அணிக்கு மிகப்பெரிய கவலை விராட் கோலியின் ஃபார்ம்தான். IND vs SA: 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது எப்படி?3 பிப்ரவரி 2025 டி20 தொடரை வென்ற இந்தியா; அபிஷேக் சர்மாவின் ரன்களை கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து தோற்றது எப்படி?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மா, தன் ஃபார்ம் மீது இதுவரை சந்தேகம் எழுப்பியவர்களை, இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் அமைதி ஆக்கிவிட்டார். கில், ஸ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டம் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கிய சுப்மான் கில் மிகுந்த பொறுப்பான ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து 2வது அரை சதத்தைப் பதிவு செய்தார். 45 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்- கில் கூட்டணி 136 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஸ்ரேயாஸ் அய்யர், அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று சந்தேகங்கள் எழுப்பிய நிலையில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். ரோஹித் சர்மாவுடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஸ்ரேயாஸ் ஏற்படுத்தி 6 ரன்களில் 2வது அரைசதத்தை தவறவிட்டார். ஸ்ரேயாஸ் 44 ரன்களில் ரன்அவுட் ஆனார். இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கும் மெல்ல ஸ்திரப்பட்டு வருகிறது. இரு ஆட்டங்களிலும் ஸ்ரேயாஸ் பேட்டிங் அதற்கான நம்பிக்கையை அளித்து வருகிறது. பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதில் ரஷீத் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. வேகப்பந்துவீச்சில் அட்கின்சன், மார்க்உட் இருவருமே ரன்களை வழங்கினர். லிவிங்ஸ்டன் மட்டும் 7 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி சிக்கனமாகப் பந்துவீசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித்- கில் கூட்டணி 136 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஆல்ரவுண்டராக மாறும் அக்ஸர் படேல் அக்ஸர் படேல் சுழற்பந்துவீச்சு மட்டுமல்ல, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்று தன்னை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆட்டத்தில் முதல் அரைசதத்தை நிறைவு செய்த அக்ஸர், இந்தப் போட்டியில் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு பந்துவீச்சாளராக அறிமுகமாகிய அக்ஸர் படேல் ஆல்ரவுண்டராக மாறிவருவது இந்திய அணிக்கு பெரிய பலமாகும். விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா?31 ஜனவரி 2025 கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை27 ஜனவரி 2025 ரோஹித் சர்மா- புதிய மைல்கல் இந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் அரைசதத்தையும், 76 பந்துகளில் சதம் அடித்து, 90 பந்துகளில் 119 ரன்கள் (7 சிக்ஸர், 12 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்த கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா தனது ஒருநாள் போட்டி வாழ்க்கையில் 32-வது சதத்தை இன்று பதிவு செய்தார். கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பின் ரோஹித் சர்மா பங்கேற்ற 5வது ஒருநாள் போட்டியாகும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2 அரைசதங்களை அடித்திருந்தாலும், சதம் அடிக்கவில்லை. உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்தபின், ஏறக்குறைய ஒன்றறை ஆண்டுகளுக்குப்பின் தற்போது சதம் அடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்டர்கள் வரிசையில் கிறிஸ் கெயில் (331) சாதனையை முறியடித்து 338 சிக்ஸர்கள் விளாசி, ரோஹித் சர்மா 2வது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய இந்திய பேட்டர்களில் ரோஹித் சர்மா 32 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கோலி 50 சதங்களுடனும், 2வது இடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடனும் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் விளாசினார். வருணின் முதிர்ந்த அறிமுகம் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தற்போது வருணுக்கு 33 வயது 164 நாட்களாகிறது. அதிகமான வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய 2வது வீரர் என்ற பெருமையை வருண் பெற்றார். இதற்கு முன், பரூக் எஞ்சினியர் 36-வது வயது 138 நாட்களாக இருந்தபோது ஒருநாள் தொடரில் அறிமுகமாகினார். மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?4 மணி நேரங்களுக்கு முன்னர் 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 இந்தியப் பந்துவீச்சு - பலவீனம் இந்திய வேகப்பந்துவீச்சின் சுமை முகமது ஷமி மீது விழுந்துள்ளது. ஷமிக்கு துணையாக பந்துவீச ஹர்சித் ராணா கொண்டுவரப்பட்டாலும் அவரால் துல்லியத் தன்மையை கொண்டுவர முடியவில்லை. அர்ஷ்த்தீப் வந்தால் ஷமியின் சுமை குறையலாம். மற்றவகையில் பும்ரா உடல்நலன் சாம்பியன்ஸ் டிராபிக்குள் தேறினால், பந்துவீச்சில் இந்திய அணி முழுவலிமையைப் பெறும். சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தியின் அறிமுகம் சிறப்பாக இருந்தது. டி20 போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராக இருக்கும் வருண், சாம்பியன்ஸ் டிராபிக்கும் தேர்ந்தெடுக்கப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 73 வினாடிகளில் ஒரு ஓவர் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியபின் ஜடேஜாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 10 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டன் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். துல்லியத்தன்மை, வேகமாகப் பந்துவீசுவது என ஜடேஜாவின் பந்துவீச்சு மிரட்டலாக இருக்கிறது. ஜடேஜா 24-வது ஓவரை வெறும் 73 வினாடிகளில் வீசி முடித்தார். ஹேரி ப்ரூக்கிற்கு எதிராக ஒரு ரன்கூட வழங்காமல் அந்த ஓவரை மெய்டன் ஓவராக ஜடேஜா மாற்றினார். ஜடேஜாவின் பந்துவீச்சில் இருக்கும் வேகம், துல்லியத்தன்மை சாம்பியன்ஸ் டிராபியில் மிரட்டலாக இருக்கும். இந்தியத் தரப்பில் ஜடேஜா தவிர்த்து, ஷமி, ராணா, வருண், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய வரலாற்றையே மாற்றிய 'நாகா சாதுக்கள்' - கையில் வாளுடன் நிர்வாண கோலத்தில் வலம் வரும் இவர்கள் யார்?8 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜடேஜா 24-வது ஓவரை வெறும் 73 வினாடிகளில் வீசி முடித்தார். நடுப்பகுதி ஓவர்கள் முக்கியம் வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா பேசுகையில், "அணிக்காக சிறப்பாக ஆடியது, ரன்கள் சேர்த்துக் கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒருநாள் தொடரில் மிக முக்கியமான ஆட்டம் இது என்பதால், நான் எவ்வாறு பேட் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். டி20 போட்டியைவிட பெரியது, டெஸ்ட் போட்டியைவிட சிறியது ஒருநாள் போட்டி என்பதால் அதற்கு ஏற்றார்போல் விளையாட நினைத்தேன். நீண்டநேரம் களத்தில் நின்று பேட் செய்வது என் நோக்கமாக இருந்தது." என்றார். "கருப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் பந்து பேட்டை நோக்கி வேகமாக வரும், இந்த ஆடுகளத்தில் நாம் வேகமாகவும், பேட்டை இறுக்கமாகவும் பிடித்து பேட் செய்தால்தான் நினைத்த ஷாட்களை ஆட முடியும்." என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா, "நான் பேட் செய்தபோது என் உடம்புக்கும், ஸ்டெம்புக்கும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். அவர்களின் நுட்பத்தை புரிந்து கொண்டு, திட்டத்தைத் தெரிந்து என் திட்டத்தை வகுத்தேன். கில், ஸ்ரேயாஸிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. கில்லுடன் பேட்டிங் செய்தது நல்ல அனுபவம்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "நான் பேட் செய்தபோது என் உடம்புக்கும், ஸ்டெம்புக்கும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்." "நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியம், இதுதான் ஆட்டத்தை எந்தப் பக்கம் கொண்டு செல்லும் என்பதை தீர்மானிக்கும். நடுப்பகுதி ஓவர்களை வெளுத்து வாங்கினாலே, டெத் ஓவர்கள் குறித்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. நாக்பூர் ஆட்டத்தில் கூட நடுப்பகுதி ஓவர்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம், விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் டெத் ஓவர்களில் ரன் சேர்ப்பது கடினமாகிவிடும்." "ஒவ்வொரு வீரரும் சிறப்பாக ஆட வேண்டும், அணியாக முழுமையாக பங்களிப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அதை சிறப்பாகச் செய்தோம். அணியில் உள்ள வீரர்களும் தங்களின் திட்டத்தை சிறப்பாகச் செய்து முடித்தனர்" என ரோஹித் சர்மா தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm29g902lw3o
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
குடும்பத்தில் ஒருவரையும் விடாது அழிக்க வேற ஒரு அதிகாரத்தரப்பு கேட்டுக்கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு.
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
இப்போது இரவு 8.30 மணியில் இருந்து தற்போது வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. இரவு 9.30 மணிக்கு வழமைக்குத் திரும்பும் என மின்சாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு 9.26 ற்கு மின்சாரம்வந்துவிட்டது.
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதிகாலையில் வந்த தொலைபேசிச் செய்தி... மேலும் தெரிவிக்கையில், பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. பிரபாகரனின் இளைய மகன் போரில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல. தவறுதலாக(க்ரோஸ் பயரிங்) நடந்தது. பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல. இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது. போர் காலத்தின் போது எனது தந்தை மிகவும் மனம் வருந்திய சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/balachandran-prabhakaran-cause-of-death-1739072133?itm_source=article
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
மின்வெட்டு தொடர்பில் நாளை வௌியாகவுள்ள தகவல் நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு ஊடாக விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மின்சக்தி அமைச்சும் விரிவான விசாரணையை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறு மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது, இறுதியாக 2023 டிசம்பர் 9ஆம் திகதி மின்வெட்டு ஏற்பட்டது, மேலும் மின்சாரத்தை மீட்டெடுக்க சுமார் 6 மணிநேரம் சென்றது. கொத்மலையிலிருந்து பியகம வரையிலான மின்சார விநியோகக் கம்பியில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இதேபோன்று, 2016 மார்ச், 2020 ஓகஸ்ட் மற்றும் 2021 டிசம்பர் மாதமும் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=199913
-
டென்மார்க்கின் 'கருணை' மிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்து கிரீன்லாந்து விடுபடுமா? சுதந்திர தாகத்திற்கு புது வெளிச்சம் பாய்ச்சிய டிரம்ப்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த படத்தில் பூர்வகுடி ஆணும் பெண்ணும் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் , இது 1865ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் ஹார்ம்சன் பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது. 1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக கிரீன்லாந்திற்கு வந்த அவர், கிரீன்லாந்து தீவை வடக்கு ஐரோப்பாவுடன் மீண்டும் இணைக்க உதவினார். அவரது பணியால், கிரீன்லாந்தை டென்மார்க் கட்டுப்படுத்தும் முறை எளிதானது. அதனைத் தொடர்ந்து, கிரீன்லாந்து டென்மார்க்கின் முக்கிய காலனி ஆனது. வரலாற்றில் ஹான்ஸ் எகெடேவின் பங்கை, அவரது சிலை இன்றும் மக்களுக்கு நினைவூட்டுகிறது. ஆனால் அவரது பாரம்பரியம் விவாதத்திற்கு உரிய பொருளாக உள்ளது. சிலர் அவரை ஒரு நல்ல தலைவராக பார்க்கிறார்கள். ஆனால், கிரீன்லாந்தில் டென்மார்க்கின் காலனித்துவ ஆட்சி நடைபெற ஹான்ஸ் எகெடே உதவினார் என மற்றவர்கள் நினைக்கிறார்கள். 1970களின் பிற்பகுதியில் ஒரு நாள், அவரது வெண்கல சிலை திடீரென்று சிவப்பு வண்ணம் பூசப்பட்டு காணப்பட்டது. நான் பள்ளிக்குச் செல்லும் வழியில், அந்தச் சிலையை தினமும் கடந்து செல்வேன். அதனால் அந்த நாள் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. என் தந்தை நூக் நகரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் புவியியல் கற்பித்து வந்த போது, நான் இரண்டு ஆண்டுகள் கிரீன்லாந்தில் வாழ்ந்தேன். அப்போது, வட அமெரிக்காவின் ஆர்க்டிக் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட பல பூர்வகுடி மக்கள், 250 ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்தில் எகேட் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது . பெரும்பாலும், டென்மார்க் மக்களை விட மிகச் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த பூர்வகுடி மக்கள், அவர்களது வீட்டிற்கு பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வர். அதிலிருந்து கேட்கும் பீர் பாட்டில்களின் சத்தம், அங்கு இருந்த பரவலான குடிப்பழக்கத்தின் சான்றாக இருந்தது. டென்மார்க் கிரீன்லாந்திற்கு கொண்டு வந்த தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அதே சமயம், நவீன சுகாதாரம் மற்றும் நல்ல கல்வி போன்ற மறுக்க முடியாத பல நல்ல விஷயங்களையும் டென்மார்க் கிரீன்லாந்து மக்களுக்கு அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலை மீது சிவப்பு வண்ணம் பூசப்பட்டது எதிர்ப்பின் அடையாளத்தைக் குறித்தது. ஆனால் கிரீன்லாந்தின் சுதந்திர இயக்கம், அப்போது ஆரம்ப கட்டத்தில்தான் இருந்தது. என் பள்ளிக்கு அடுத்ததாக இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், கிரீன்லாந்தில் தீவிர மாணவர் இயக்கம் ஒன்று வளர்ந்து வருவதைக் கண்டேன். சில இளம் மாணவர்கள் டேனிஷ் மொழிக்குப் பதிலாக தங்கள் சொந்த மொழியான கிரீன்லாண்டிக்கில் கற்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து, இரண்டு நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ பெயரான கோதாப்பைக் கைவிட்டு, 1970 களின் பிற்பகுதியில், கிரீன்லாந்தின் தலைநகரின் பெயர் நூக் என மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுவதால், தற்போது மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதம் கிரீன்லாந்து (டென்மார்க் தன்னாட்சிப் பகுதி) அல்லது பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டைப் பெற ராணுவ அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு, "இல்லை, இரண்டு விஷயங்களைப் பற்றியும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அவை தேவை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என டிரம்ப் பதிலளித்தார். பின்னர், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அளித்த பேட்டியில், "நாங்கள் அதைப் (கிரீன்லாந்தை) பெறப் போகிறோம் என்று நினைக்கிறேன்," என செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார். கிரீன்லாந்து தீவின் 57,000 குடியிருப்பாளர்கள் "எங்களுடன் இருக்க விரும்புகிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார். கேள்வி என்னவென்றால், அந்த மக்கள் விரும்புகிறார்களா? என்பது தான். இதற்கிடையில், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்ற கருத்தை வலியுறுத்தினார். "கிரீன்லாந்து மக்களுக்கு சொந்தமானது தான் கிரீன்லாந்து" என்றும் அவர் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி, "கிரீன்லாந்து மக்களே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்"என்றும் மெட்டே பிரெடெரிக்சன் கூறினார் . எனவே, கிரீன்லாந்து மக்கள் எப்படிப்பட்ட எதிர்காலத்தை விரும்புகிறார்கள்? அவர்கள் டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? என்பதை விளக்குகிறது இத்தொகுப்பு. டீப்சீக் வெற்றி எதிரொலி: சீனா குறி வைத்த 10 உயர் தொழில்நுட்பங்களில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது?8 பிப்ரவரி 2025 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்கிழக்கு கிரீன்லாந்தில் கிங் ஃபிரடெரிக் VI கடற்கரையில் உள்ள ஸ்கின்ஃபாக்ஸ் பனிப்பாறையின் படம். டென்மார்க் மக்களுடன் உள்ள பதற்றமான உறவு கிரீன்லாந்து மக்களின் கருத்துக் கணிப்பில், 6 சதவீத மக்கள் மட்டுமே தங்கள் நாடு அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், 9 சதவீத மக்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், 85 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனாலும், கிரீன்லாந்து மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது ஒரு நுட்பமான கேள்வி என்பதை ஃபிரடெரிக்சன் அறிவார். 1720 களில் கிரீன்லாந்தில் தனது காலனித்துவத்தைத் தொடங்கியதிலிருந்து, டென்மார்க் தன்னை உலகின் கருணை மிகுந்த ஏகாதிபத்தியவாதியாக பல காலமாக வெளிக்காட்டி வருகின்றது. இருப்பினும், கடந்த காலங்களில் கிரீன்லாந்து மக்களிடம் சர்வாதிகார முறையில் அவர்கள் நடந்துகொண்ட விதம் வெளிப்பட்டதால், இந்த பிம்பம் சமீபத்திய ஆண்டுகளில் பலவீனமடைந்துள்ளது. குறிப்பாக, கிரீன்லாந்து மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடுமையான அநீதிகள் வெளிவந்துள்ளன. இந்த அநீதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தவை அல்ல, தற்போதும் உயிருடன் உள்ள மக்களின் காலத்தில் நடந்தவை தான். பெரிய அளவில் நடந்த, சர்ச்சைக்குரிய கருத்தடை நடவடிக்கையும் இவற்றுள் அடங்கும். கிரீன்லாந்தைச் சேர்ந்த பெண்களின் ஒப்புதல் இல்லாமல் அல்லது அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் உடலில் IUD கள் (ஒரு வகையான குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டுக் கருவி) வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் இணைந்து விசாரித்து வருகின்றனர். 1966 மற்றும் 1970க்கு இடையில், கிரீன்லாந்தில் உள்ள பருவமடைந்த பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு அவர்களின் அனுமதியின்றி குழந்தை பிறப்பு கட்டுப்பாடுக் கருவிகள் ( IUD ) வைக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன. கடந்த டிசம்பரில், கிரீன்லாந்து பிரதமர் முட் எகெட் இதனை "கிரீன்லாந்து மக்களுக்கு எதிராக டென்மார்க் அரசால் நடத்தப்பட்ட நேரடி இனப்படுகொலை" என்று விவரித்தார். கிரீன்லாந்துக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான உறவுகளைப் பற்றி பொதுவாக விவாதித்த டென்மார்க் தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசிய போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். கூடுதலாக, 1960கள் மற்றும் 1970களில், கிரீன்லாந்து நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள், அவர்களின் சொந்த தாய்மார்களிடமிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அதாவது வளர்ப்பு பெற்றோரால் டென்மார்க்கில் வளர்க்கப்படுவதற்காக கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்பது போன்ற சந்தேகம் எழுந்தது. ஒருபுறம், சில குழந்தைகளுடைய சொந்த தாய்மார்களின் சம்மதமின்றி இவ்வாறு நடந்துள்ளது. மறுபுறம், இத்துடன் தங்கள் குழந்தைகளுடனான அனைத்து தொடர்புகளையும் நிரந்தரமாக இழக்க நேரிடும் என்று மற்ற தாய்மார்களிடம் கூறப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள், பல ஆண்டுகள் கழித்தும் ஆறாத ஒரு ஆழமான காயத்தை விட்டுச் சென்றுள்ளது. தத்தெடுக்கப்பட்ட கிரீன்லாந்து குழந்தைகள் சிலரால் பின்னாளில் தங்களது சொந்த பெற்றோரைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இன்னும் பலரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக, ஒரு சிறிய குழு 2024 ஆம் ஆண்டில் டென்மார்க் அரசிடமிருந்து இழப்பீடு கோரியுள்ளது. இது வெற்றி பெற்றால், தத்தெடுக்கப்பட்டவர்கள் பலராலும் இதேபோன்று ஏராளமான கோரிக்கைகளை முன் வைக்கமுடியும். கிரீன்லாந்தில் வளர்ந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் இபென் மாண்ட்ரூப், இந்த சமீபத்திய நிகழ்வுகளை டென்மார்க் மக்களுக்கான கடுமையான எச்சரிக்கை மணியாகக் கருதுகிறார். அவர்கள் நீண்ட காலமாக கிரீன்லாந்தில் நேர்மறையான மற்றும் நல்ல செல்வாக்கைக் கொண்டவர்களென தங்களைப் பார்க்க பழகிவிட்டனர். "டென்மார்க் எதையும் திரும்பப் பெறாமல் கிரீன்லாந்திற்கு உதவி செய்து கொண்டிருந்தது என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு முழு உறவும் கட்டப்பட்டது" என்று அவர் கூறுகிறார். "கிரீன்லாந்தை பாதுகாத்து, அதன் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொடுத்த தாய்நாடாக நாங்கள் டென்மார்க்கை விவரித்துள்ளோம். டென்மார்க் ஒரு ஆசிரியர் அல்லது பெற்றோர் என்றும், கிரீன்லாந்தை ஒரு மாணவர் அல்லது குழந்தை என்றும், கிரீன்லாந்துடனான டென்மார்க்கின் உறவை மக்கள் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்" எனக் கூறி தொடர்ந்து பேசிய இபென், "டென்மார்க் எந்த நன்மையும் எதிர்பார்க்காமல் கிரீன்லாந்திற்கு உதவுகிறது என்று இந்த உறவு எப்போதும் விவரிக்கப்படுகிறது" என்றும் கூறுகிறார். மேலும், "ஏதோ கிரீன்லாந்து எங்களுக்கு கடன்பட்டிருப்பது போல, கிரீன்லாந்து எங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று டென்மார்க் மக்களாகிய நாங்கள் அடிக்கடி நம்புகிறோம்." எனவும் அவர் விவரிக்கிறார். மேற்குவங்கம்: விரட்ட வந்த ஜேசிபி வாகனத்தை முட்டித்தூக்கிய யானை5 பிப்ரவரி 2025 இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஏன்?5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1853 ஆம் ஆண்டு தெற்கு கிரீன்லாந்தில் ஒரு டென்மார்க் குடியிருப்பை இது காட்டுகிறது. "கிரீன்லாந்து ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது" சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள், கிரீன்லாந்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், கிரீன்லாந்து சுதந்திரமாக இருக்க விரும்புவதாக தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கிரீன்லாந்து சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு, கிரீன்லாந்து மக்களிடையே 67.7 சதவீத ஆதரவு இருப்பதாக தெரியவந்தது. "என்னுடைய பார்வையில், கிரீன்லாந்து ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற நாடுகளுடன் சமமான நிலையில், நமது சொந்த முடிவுகளை நாமே எடுக்கத் தொடங்க வேண்டும் என்பதை நமது சுய மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை உணர்வு வெளிப்படுத்துகிறது" என்று நூக்கில் உள்ள சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனமான ஓஷன்ஸ் நார்த் கலாஅல்லிட் நுனாட்டின் இயக்குனர் ஜென்சீராக் பவுல்சன் கூறுகிறார். தொடர்ந்து பேசிய ஜென்சீராக், "ஒரு நாடு தனது சொந்த முடிவுகளை எடுக்க சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். மற்றொரு தேசத்தால் கட்டுப்படுத்தப்பட கூடாது" என்றும் குறிப்பிடுகிறார். மேலும், "நாம் எதையும் செய்ய அனுமதி கேட்க வேண்டியதில்லை, (ஒரு குழந்தையாக) உங்கள் பெற்றோரிடம் ஏதாவது கேட்க வேண்டியிருக்கும் போது, அவர்கள் உங்களால் முடியாது என்று கூறினால், அப்போது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படித்தான் இதுவும்"என்று விளக்குகிறார் ஜென்சீராக் பவுல்சன். ஆனால், "சுதந்திரம்" என்பது கிரீன்லாந்திற்கு ஒரு எளிய விஷயம் அல்ல, கடினமான சவால்கள் மற்றும் முடிவுகளை எதிர்காலத்தில் கிரீன்லாந்து சமாளிக்க வேண்டியிருக்கும் என்று போல்சன் கருதுகிறார். ஏனென்றால், "இன்றைய உலகில் அனைத்து நாடுகளும் ஒருவரையொருவர் நம்பியிருப்பதால், உண்மையான சுதந்திரம் சிக்கலானது" என்றும் ஜென்சீராக் குறிப்பிடுகிறார். இதுகுறித்து தொடர்ந்து விளக்கிய அவர், "டென்மார்க் கூட, ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கிறது. எனவே, நான் 'சுதந்திரம்' என்பதற்குப் பதிலாக 'அரசுரிமை' என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்புகிறேன்"என்கிறார். தோல் புற்றுநோய்: ஏற்படுவது ஏன்? தடுப்பதற்கான வழி என்ன? மருத்துவர்கள் விளக்கம்5 பிப்ரவரி 2025 பனாமா: கடலுக்கு அடியில் 11 மீட்டர் ஆழத்தில் வீடு கட்டி 120 நாட்கள் வாழ்ந்த மனிதர்5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரும்பாலான கிரீன்லாந்து மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். சுதந்திரத்திற்கான முக்கியக் கூறுகள் கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் எப்படி திட்டமிட்டார் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. 2019ஆம் ஆண்டு அவர் இந்த யோசனையை முதன் முதலில் பரிந்துரைத்த போது, அது "அடிப்படையில் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக" இருக்கும் என்று கூறினார். அமெரிக்க ஆட்சியின் கீழ் கிரீன்லாந்து எந்த அளவுக்கு தன்னாட்சி கொண்ட நாடாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்களின் சமூக நலன்கள் அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. கிரீன்லாந்தை பெறுவதற்கான அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, டிரம்ப் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தினார். அதனையடுத்து, வடக்கு அட்லாண்டிக்கில் அமெரிக்கப் பகுதியை விரிவுபடுத்தும் தனது இலக்கை அடைய ராணுவத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் வெளிப்டையாகப் பகிர்ந்துள்ளார். டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் மற்றும் டிரம்ப் குழுவினரின் வருகை, தீவை கையகப்படுத்தும் தனது யோசனையில் டிரம்ப் தீவிரமாக இருப்பதாக, அவரது கருத்துகளுக்கு வலு சேர்த்தது. ஆனால் கிரீன்லாந்தில் உள்ள பலர் அவர்களின் வருகையால் ஈர்க்கப்படவில்லை. "அது எங்களை அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்த்து உறுதியாக நிற்க வைக்கிறது. மேலும்,'தயவுசெய்து உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று சொல்ல வைக்கிறது," என்கிறார் கிரீன்லாந்து அரசாங்கத்தின் ஐடி அதிகாரி ஜானஸ் கெம்னிட்ஸ் க்ளீஸ்ட். மேலும், "அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பற்றி முன்னர் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்த சிலர் தங்களது கருத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்" என்றும் குறிப்பிடுகிறார் கெம்னிட்ஸ். இடதுசாரி இனுயிட் அட்டாகாடிகிட் கட்சியைச் சேர்ந்த டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினரான ஆஜா கெம்னிட்ஸ், சுதந்திரம் எப்படி கிடைத்தாலும் சரி, ஆனால் சுதந்திரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது சொந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார். முதலாவதாக, திறமையான இளைஞர்கள் கிரீன்லாந்திலிருந்து வெளியேறுவதை நிறுத்த வேண்டியது முக்கியம் என்கிறார் கெம்னிட்ஸ். அவர் இதை 'அறிவு இழப்பு' எனக் குறிப்பிடுகிறார். அதாவது பல திறமையான நபர்கள், கிரீன்லாந்திலிருந்து கல்விக்காக வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள் ஆனால் அவர்கள் திரும்பி வருவதில்லை. அவரது கூற்றுப்படி, டென்மார்க் மற்றும் பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளம் கிரீன்லாந்து மக்களில் 56 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் படிப்பை முடித்த பிறகு திரும்பி வருகிறார்கள். "இந்த எண்ணிக்கை அதிகமில்லை. அதனால், இளைஞர்கள் கிரீன்லாந்துக்குத் திரும்பி வந்து, இந்த பகுதியை மேம்படுத்த உதவும் முக்கியமான வேலைகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். பிபிசி செய்தி அறைக்குள் நுழைய விருப்பமா? - மெட்டாவெர்ஸ் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்3 பிப்ரவரி 2025 மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் ஒரு பரந்த பொருளாதார பிரச்னையும் உள்ளது என சுட்டிக்காட்டுகிறார் கெம்னிட்ஸ். "அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது" எனக் கருதுகிறார் கெம்னிட்ஸ். மேலும் கிரீன்லாந்தில் வணிகத்தை வளர்ப்பதில் டென்மார்க் அரசுடன் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம், அதேபோல் மூலப்பொருட்களைப் பிரித்தெடுப்பதிலும் சுற்றுலா வளர்ச்சியிலும் அமெரிக்க அரசுடன் ஒத்துழைப்பதும் மிக முக்கியம்" என்றும் விளக்குகிறார். தற்போது, டென்மார்க் அரசாங்கத்தால் தரப்படும் "பிளாக் கிராண்ட்ஸ்" எனும் மானியத்தை கிரீன்லாந்து பொருளாதாரம் பெரிதும் சார்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், டென்மார்க் அரசாங்கம் கிரீன்லாந்திற்கு ஆண்டுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 610 மில்லியன் டாலர்கள்) மானியமாக வழங்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த மானியம் கிடைக்காமல் போகும் என்பதால், அதனை மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதும் கிரீன்லாந்து மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது என நூக்கில் உள்ள கிரீன்லாந்து பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் சேவியர் அர்னாட் கூறுகிறார். "சுதந்திரத்தை நோக்கிய நகர்வுகளைத் தடுத்து நிறுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று பொருளாதாரம்" என்றும் குறிப்பிடுகிறார் சேவியர் . "கிரீன்லாந்தின் பொருளாதாரம் டென்மார்க் வழங்கும் "நிதி ஆதரவை பெரிதும் நம்பியுள்ளது". டென்மார்க், நிதி வழங்குவதை நிறுத்தினால், கிரீன்லாந்தின் நிதி ஆதாரத்தில் ஏற்படும் பெரும் பின்னடைவை சரி செய்ய வேண்டி வரலாம்" என்பதையும் விளக்குகிறார் சேவியர் அர்னாட். ஆனால், அது "எப்படி என்பதுதான் கேள்வி. எடுத்துக்காட்டாக, புதிய கூட்டணிகளுடன் சுரங்கத் திட்டங்களை உருவாக்கி, அதில் கிடைக்கும் வரியின் மூலம் வருவாயை அதிகரிக்கும் போது, இந்த இடைவெளியை நிரப்ப முடிந்தால், பொருளாதார சுதந்திரத்திற்கான தெளிவான பாதை வெளிப்படும்"என விவரிக்கிறார் சேவியர். இராசகேசரி பெருவழி: முதலாம் ஆதித்த சோழன் வணிகர்களுக்காக அமைத்த நிழல் படை என்ன செய்தது?2 பிப்ரவரி 2025 தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா?1 பிப்ரவரி 2025 நல்வாழ்வுக்கான காரணி பொருளாதாரத்தின் பெரும்பகுதியைக் அரசாங்கம் கட்டுப்படுத்தும் நோர்டிக் பாணியிலான (ஸ்காண்டிநேவியா, பின்லாந்து அல்லது ஐஸ்லாந்துக்கு தொடர்புடைய) மக்கள் நல அரசில் மற்றொரு கேள்வியும் முக்கியமானது. அதாவது, டென்மார்க்குடனான உறவின் விளைவாக கிரீன்லாந்து தற்போது பெறும் அனைத்து சுகாதார மற்றும் சமூக நன்மைகளுக்கும் என்ன நடக்கும்? என்பது தான் அக்கேள்வி. தற்போது, டென்மார்க் வழங்கும் நன்மைகளின் ஒரு பகுதியாக கிரீன்லாந்து நாட்டு மக்கள், டென்மார்க் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அனுமதியும் அடங்கும். கிரீன்லாந்து மக்களிடம் டென்மார்க்கிலிருந்து பிரிந்து செல்ல விரும்புகிறீர்களா என்று கேளுங்கள், பெரும்பாலானவர்கள் ஒரு எச்சரிக்கையுடன் ஆம் என்று கூறுகிறார்கள். ஆனால் நலத்திட்டங்களை இழக்காவிட்டால் மட்டுமே அவர்கள் ஆம் என்று கூறுவார்கள். மேலும், கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுத்துக் கொண்டால், அதன் மக்கள் நல அமைப்புகள் (சுகாதாரம் மற்றும் சமூக நலன்கள் போன்ற அரசாங்க நிதியுதவி சேவைகள்) என்னவாகும் என்பதில் தீவிரமான கவலைகள் ஏற்படும். ஏனென்றால், நார்டிக் நாடுகள் மற்றும் பல மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது அமெரிக்கா குறைவான சலுகைகளையே வழங்குகிறது. ஆனால், கிரீன்லாந்து சுதந்திரமடைந்தால், அதன் மக்கள் புற்றுநோய் சிகிச்சை போன்ற மருத்துவ வசதிகளை இழக்க நேரிடும் என்ற கருத்துகளை சிலர் நம்புவதில்லை. கிரீன்லாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்போதைய நலெராக் அரசியல் கட்சியின் தலைவருமான பீலே ப்ரோபெர்க், 1944 இல் டேனிஷ் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறிய ஐஸ்லாந்தை இதற்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். அதாவது, "ஐஸ்லாந்து தொடர்ந்து தனது நோயாளிகளை டென்மார்க்கிற்கு அனுப்புகிறது" என்று உதாரணத்தை விளக்குகிறார் ப்ரோபெர்க். தொடர்ந்து பேசிய அவர், "டென்மார்க்கில் ஐஸ்லாந்து மாணவர்கள் இன்னும் படிக்கிறார்கள், அதேபோல் டென்மார்க் மாணவர்கள் ஐஸ்லாந்திலும் படிக்கிறார்கள். நாங்கள் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற முடிவு செய்தால் டென்மார்க் எந்த வகையில் தடை விதிக்க விரும்பும் என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு கடினமாக உள்ளது" என்றும் ப்ரோபெர்க் தெரிவித்தார். "சுதந்திரம் பற்றி விவாதிப்பதிலிருந்து நம்மை பயமுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கருத்துகள் அவை" என்றும் அவர் வாதிடுகிறார். மறுபுறம், இதுபோன்ற கவலைகளின் காரணமாக ஒருபோதும் உண்மையான சுதந்திரம் கிடைக்காது என்று சில கிரீன்லாந்து மக்கள் நம்புகிறார்கள். "டென்மார்க், பெல்ஜியம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் காணப்படும் சுதந்திரம் இங்கு ஒருபோதும் நடக்காது" என்று கெம்னிட்ஸ் க்ளீஸ்ட் வாதிடுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "இவ்வளவு சிறிய மக்கள் தொகையுடன், அதிலும் நன்கு படிக்காத ஒரு பகுதியினருடன், நாங்கள் பராமரிக்க விரும்பும் ஒரு சிக்கலான மக்கள் நல அமைப்புகளுடன், சுதந்திரம் என்ற சொல் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படும் அர்த்தத்தை நாம் ஒருபோதும் அடைய முடியாது" என விவரிக்கிறார். டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?1 பிப்ரவரி 2025 பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் என்ன ஆகும்?4 பிப்ரவரி 2025 டிரம்பின் தந்திரோபாயங்கள் இந்தப் பிரச்னைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற டிரம்ப் வெளிப்படையாக முயன்றதன் மூலம், அவை திடீரென்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அமெரிக்க அதிபராக யார் இருந்தாலும், கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பதன் மூலம் பயன்பெறுவார்களா? அப்படியானால், எந்த அளவிற்கு பயன்பெறுவார்கள் என்பதுதான் கேள்வி. "மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் கிரீன்லாந்தின் சார்புநிலையை விரிவுபடுத்தி, முடிந்தவரை பல வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருப்பது தான், கிரீன்லாந்தின் தேசிய திட்டம்" என டேனிஷ் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிபுணருமான உல்ரிக் பிராம் காட் கூறுகிறார். இந்த சூழலில், சில கிரீன்லாந்து மக்கள் டென்மார்க் அல்லது அமெரிக்காவுடனான "சுதந்திர கூட்டணி" மாதிரியை ஆதரிக்கின்றனர். அமெரிக்காவிற்கும் சில பசிபிக் தீவுகளுக்கும் இடையில் உள்ள இதேபோன்ற முறையை இந்த கருத்து பிரதிபலிக்கிறது. ஆனால் "பிரச்னை என்னவென்றால், கிரீன்லாந்து டென்மார்க்கால் அதிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறது," என்கிறார் பிரம் காட். தொடர்ந்து பேசிய அவர், "கிரீன்லாந்தின் குறிக்கோள், குறைவான கட்டுப்பாட்டோடு, எந்தவொரு நாட்டையும் அதிகமாகக் சார்ந்திருப்பதைக் குறைப்பதாகும். சுதந்திரமான கூட்டுறவு என்பது 'கூட்டணி' பற்றியது அல்ல, மாறாக 'சுதந்திரம்' பற்றியது. இது ஒரு நாட்டின் சொந்த இறையாண்மையைப் பற்றியது" என்றும் விளக்குகிறார். கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தது ஆச்சரியமாக இருந்திருக்கலாம். ஆனால், இது ஒரு முக்கியமான பிரச்னை என்பதை அவரது குழு அறிந்திருந்தது. குறிப்பாக பல கிரீன்லாந்து மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தனர். கிரீன்லாந்தில் செல்வாக்கு செலுத்துவதற்கு இதை ஒரு வாய்ப்பாக அவர்கள் கருதினர். "சமீபத்திய ஆண்டுகளில், இந்தக் கதைகள் அனைத்தும் வெளிவந்து, நவீனமயமாக்கல் சார்ந்து சொல்லப்பட்ட கதைக்கு புத்தொளி பாய்ச்சியுள்ளது. டென்மார்க் கிரீன்லாந்திற்கு நற்பண்புடன் உதவியது என்ற கருத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டது," என்கிறார் இபென் மாண்ட்ரூப். மேலும், "கிரீன்லாந்து மக்களின் நலனுக்காகவே என்று கூறப்பட்ட திட்டம் உண்மையில் அவர்களுக்கு நல்லதல்ல. இந்தச் சூழல் டென்மார்க் மண்டலத்தில் உள்ள கிரீன்லாந்து மக்களின் நிலையைப் பற்றிய பல சிந்தனைகளைத் தூண்டுகிறது. டென்மார்க்குடன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சுற்றி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், சமீப ஆண்டுகளில் கிரீன்லாந்தில் எழுந்துள்ள விமர்சனத்தை இது தீவிரப்படுத்துகிறது." என்கிறார் மாண்ட்ரூப். மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?1 பிப்ரவரி 2025 சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனவரி தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தீவுக்கு பயணம் செய்தார். நார்வே, ஐஸ்லாந்து மற்றும் கனடா ஆனால் டென்மார்க்கும், அமெரிக்காவும் இல்லையென்றால், கிரீன்லாந்து வேறு யாருடன் இணைய முடியும்? பெரும்பாலான கிரீன்லாந்து மக்கள், கனடா மற்றும் ஐஸ்லாந்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நலேரக் கட்சித் தலைவர் ப்ரோபெர்க் இந்த யோசனையை வரவேற்கிறார். இந்தக் கருத்துக் கணிப்பில் வெளிவந்துள்ள முடிவுகளில் நார்வேயையும் அவர் சேர்க்கிறார். "டென்மார்க்கை விட நார்வே மற்றும் ஐஸ்லாந்துடன் எங்களுக்கு பொதுவான விஷயங்கள் அதிகம் உள்ளன" என்று அவர் குறிப்பிடுகிறார். "டென்மார்க்கைப் போலல்லாமல், ஆர்க்டிக்கில் நாங்கள் அனைவரும் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளோம். சுதந்திரத்திற்குப் பிறகும் டென்மார்க்குடன் ஒருவித தொடர்பைப் பேண வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வெளிப்படையாக இருக்க ஒரே காரணம், அது சில கிரீன்லாந்து மக்களுக்கு உறுதியளிக்கக்கூடும் என்பதால்தான். ஏனெனில் அவர்கள் டென்மார்க்குடனான உறவுக்குப் பழகிவிட்டனர்."எனத் தெரிவித்தார் ப்ரோபெர்க். இன்னும், ஒரு கேள்வி எஞ்சியுள்ளது. அதாவது, கிரீன்லாந்து மக்கள் விரும்பும் சமூக நலன்களை வழங்குவதற்கு கனடாவும் ஐஸ்லாந்தும் பொறுப்பேற்கத் தயாராகுமா? என்பது தான் அக்கேள்வி. ஆனால், நிச்சயமாக இல்லை என்பதாகவே கிட்டத்தட்ட அந்தக் கேள்விக்கான பதிலாக இருக்கும். இதனால் ஒருபுறம், புதிய வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான சாத்தியங்களுடனும், மறுபுறம், அவர்களைத் தடுக்கக் கூடிய சவால்களுடனும் கிரீன்லாந்து மக்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைக் கொண்ட எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9vm2rgmrr3o
-
வெள்ளத்தால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் பொதி வழங்கி வைப்பு
வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் பொதி வழங்கி வைப்பு 09 FEB, 2025 | 05:29 PM வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றது. சீனத்தூரகத்தின் பிரதிப் பிரதானி சூ.யன்வெய் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 350 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன. வடமாகாணத்தில் 2470 குடும்பங்களுக்கு 6490ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன் அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 350 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர , மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன் மற்றும் சீன தூதரக இடைக்கால பொறுப்பாளர் ஜுயானுவேல், சீன தூதரக அரசியல் பிரிவுத் தலைவர் குயின் லிகோங், மற்றும் சீன தூதரக அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகள் , கிராம சேவையாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/206242