Everything posted by ஏராளன்
-
பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார் Published By: DIGITAL DESK 3 09 FEB, 2025 | 05:02 PM சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். சுமார் 40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரும் ஆவார். உயிரிழக்கும் போது இராஜநாயகம் பாரதி வீரகேசரியின் யாழ். பிராந்திய கிளையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/206247
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது Published By: DIGITAL DESK 2 09 FEB, 2025 | 05:20 PM நாட்டில் சுமார் 80 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க தேவையான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/206245
-
இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்த கும்பல்!
யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகவிருந்த இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபா வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதிக்குச் சென்ற இளைஞனை காரில் கடத்திச் சென்ற குறித்த குழு இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்த 80 இலட்சம் ரூபா பணத்தை மற்றுமொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டு இளைஞரை கோப்பாய் பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்கிற்கு உரித்தான பெண்ணொருவரை கைது செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட மேலும் மூவரை கைது செய்தனர். இந்நிலையில் குறித்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பணத்தை மீட்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைதான நான்கு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=199915
-
மஞ்சள் கரு, வெள்ளை கரு ஆகிய இரண்டையும் சாப்பிட ஏதுவாக முட்டையை மிகச்சரியாக வேக வைப்பது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் முட்டைகளை வேக வைப்பதற்கான சிறந்த முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இந்த புது செயல்முறையில் ஒரு முட்டையை வேக வைப்பதற்கு சுமார் அரை மணி நேரம் வரை ஆகலாம் என்று அந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையை சரியான பதத்தில் வேக வைப்பது என்பது மக்களின் தினசரி வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்று ஆகும். நீங்கள் காலை உணவுக்காக முட்டைகளை வேக வைப்பீர்கள். சில நிமிடங்கள் கழித்து, முட்டை சுவையாகவும் நன்றாகவும் வெந்திருக்கும் என்ற நம்பிக்கையில், வேக வைத்த முட்டையின் ஓடுகளை உடைத்து, ஒரு துண்டு பிரெட்டை எடுத்து முட்டையோடு சாப்பிட தயாராவீர்கள். ஆனால் முட்டையை உடைத்துப் பார்த்தால், அதன் மஞ்சள் கரு உடைந்திருக்கும். மறுபுறம், முட்டையின் வெள்ளைக்கரு கலங்கிய நீர் போல இருக்கும். இப்படித்தான் சரியாக வேகாத முட்டை தரும் ஏமாற்றத்தோடு காலைப் பொழுது தொடங்கும். இதற்கு என்ன காரணம் என்பதையும், மஞ்சள் கரு, வெள்ளை கரு ஆகிய இரண்டையும் சாப்பிட ஏதுவாக முட்டையை மிகச்சரியாக வேக வைப்பது எப்படி? என்பதற்கு ஆய்வாளர்கள் கூறும் புதிய வழிமுறைகளும் விளக்குகிறது இத்தொகுப்பு. புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அன்டார்டிக் கிரில்: இந்த 'குட்டி ஹீரோ' இல்லை என்றால் திமிங்கலத்துக்குக் கூட பிரச்னைதான் - ஏன்? இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஏன்? முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஆல்புமின் (முட்டையின் வெள்ளைப் பகுதி) ஆகிய இரு பகுதிகளும் வெவ்வேறு வெப்பநிலைகளில் வேகும் என்பதுதான், முட்டையை வேக வைப்பதில் உள்ள பெரிய சவால். மஞ்சள் கருவை சரியாக சமைக்க வெறும் 65 டிகிரி செல்சியஸ் (149°F) வெப்பநிலை போதுமானது. அதே சமயம் ஆல்புமினுக்கு (முட்டையின் வெள்ளைப் பகுதி) 85 டிகிரி செல்சியஸ் (185°F) அதாவது, மஞ்சள் கருவை விட சற்று அதிகமான வெப்பநிலை தேவைப்படுகிறது. முட்டைகளை வேக வைப்பதற்கான பாரம்பரிய முறைகள், இந்த இரண்டு முரண்பாடுகளுக்கு இடையிலான மையப்புள்ளியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றன. உதாரணமாக, நீங்கள் 100°C (212°F) வெப்பநிலையில் முட்டையை வேக வைக்கும் போது, முட்டையின் வெள்ளைக்கரு மென்மையாகவும், நன்றாகவும் வெந்திருக்கும். அதே சமயம், முட்டை நீண்ட நேரம் வேக வைக்கப்படும் போது, மஞ்சள் கரு திடமாகவும் உறுதியாகவும் மாறும். நீங்கள் திடமான மஞ்சள் கருவை விரும்பினால், உங்களுக்கு இந்த முறை மிகப் பொருத்தமானது. ஆனால், உங்களுக்கு மென்மையான மஞ்சள் கரு தான் பிடிக்குமென்றால், இப்படி நீண்ட நேரம் வேக வைத்த முட்டை உங்களுக்கு ஏமாற்றமளிக்கும். முட்டையை வேக வைப்பதில் உள்ள மற்றொரு அணுகுமுறை ஸூ விடே முறையாகும். அதில், முட்டையானது 60-70 டிகிரி செல்சியஸ் (140-158°F) வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீரில் வேக வைப்பதன் மூலம் சமைக்கப்படுகிறது. அவ்வாறு செய்தால் மஞ்சள் கரு உடைந்துவிடாமல் இருக்கும், அதைச் சுற்றி வெள்ளைக்கருவும் சரியாக வேகாமல் மென்மையாக இருக்கும். ஆனால், கவலை வேண்டாம். முட்டையை சரியாக வேக வைப்பதற்கான வழிமுறையை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?1 பிப்ரவரி 2025 உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஞ்சள் கருவை சரியாக சமைக்க வெறும் 65 டிகிரி செல்சியஸ் (149°F) வெப்பநிலை போதுமானது. இந்த புதிய முறையில் முட்டைகளை சமைக்கும் போது, முட்டை சரியாகவும், சுவையாகவும் வெந்திருப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருப்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். ஏனென்றால், இந்த புதிய முறையின் மூலம் சமைக்கப்படும் முட்டைகளில் அதிக பாலிஃபினால்கள் உள்ளன. இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கருதப்படுகின்றன. பஸ்வோலியில் உள்ள இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த விஞ்ஞானி பெல்லெக்ரினோ முஸ்டோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கணக்கீட்டுத் திரவ இயக்கவியலை (CFD - computational fluid dynamics) பயன்படுத்தி முட்டை சமைப்பதற்கான மாதிரியை உருவாக்கத் தொடங்கினர். அவர்களின் ஆராய்ச்சியின்போது, இந்த செயல்முறை ஒரு புதிய வழிமுறைக்கு இட்டுச்சென்றது. ஆனால் பெரும்பாலான சமையல்காரர்களுக்கும், வீட்டில் தினசரி சமைப்பவர்களுக்கும் அறிமுகமில்லாத இந்த முறை, சிறந்த முடிவுகளைத் தரும் எனக் கருதப்படுகிறது. அதாவது, இரண்டு வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு இடையில் மாறிமாறி முட்டையை வேக வைப்பது தான் இந்தச் செயல்முறை. இதனை குறிப்பிட்ட இடைவெளியில் சமைக்கும் முறை என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதாவது, முட்டை முதலில் 100 டிகிரி செல்சியசில் உள்ள (212 ° F) கொதிக்கும் நீரில் வேக வைக்கப்படுகிறது. பின்னர் அது 30 டிகிரி செல்சியஸ் (86 ° F) வெப்பநிலையில் உள்ள தண்ணீருடன் வேறு கிண்ணத்திற்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும், கொதிக்கும் நீர் (100°C) மற்றும் வெதுவெதுப்பான நீருக்கு (30°C) இடையே முட்டையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதேபோல் மொத்தம் 32 நிமிடங்களுக்கு இந்த செயல்முறையைத் தொடர வேண்டும். எனவே சமைக்கும் போது, முட்டையை ஒருபக்கம் வேக வைத்து விட்டு, மறுபுறம் வேறு வேலையை பார்க்கச் செல்பவர்களுக்கு இது பலனளிக்காது. ஆனால், அதிக நேரமெடுத்து, கவனமான முயற்சிகளுடன் முட்டையை சமைக்க நீங்கள் தயாராக இருந்தால் இந்த முறை உங்களுக்கு சிறந்த பலனளிக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்30 ஜனவரி 2025 உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?30 ஜனவரி 2025 கியான் பரே சின்ட்ரோம் : மகாராஷ்டிராவில் அரிய நோய்க்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - என்ன அறிகுறி?29 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டு வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு இடையில் மாறிமாறி வேகவைத்து சமைக்கப்பட்ட முட்டைகள் மென்மையான மஞ்சள் கருவைக் கொண்டிருந்தன. முட்டையின் அமைப்பு, சுவை மற்றும் அதன் ரசாயனச் சேர்க்கை ஆகியவற்றை ஆய்வு செய்து முட்டையின் தன்மையை ஆராய்ச்சியாளர்கள் சரிபார்த்தனர். அணு காந்த அதிர்வு (NMR) மற்றும் உயர் திறன் கொண்ட மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி போன்ற மேம்பட்ட அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி முட்டையை விரிவாக ஆய்வு செய்து அதன் உயர் தரத்தையும் உறுதிப்படுத்தினர். இரண்டு வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு இடையில் மாறிமாறி வேகவைத்து சமைக்கப்பட்ட முட்டைகள் மென்மையான மஞ்சள் கருவைக் கொண்டிருந்தன. அவை சூ விடே முறையைப் பயன்படுத்தி சமைக்கப்பட்ட முட்டைகளைப் போலவே இருந்தன. ஆனால், முழுவதும் சூ விடே முறையில் சமைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இல்லாமல் , வெள்ளைக்கரு முழுமையாக சமைக்கப்பட்டு, பாரம்பரியமாக, மென்மையாக வேக வைத்த முட்டையைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. இந்த புதிய முறையை பயன்படுத்தி சமைக்கும் போது, முட்டையில் உள்ள வெள்ளைக்கருவின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் (95°F) மற்றும் 100 டிகிரி செல்சியஸ் (212°F) வரை மாறுபடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அதே சமயம் மஞ்சள் கருவானது இந்தச் செயல்முறை முழுவதும் 67 டிகிரி செல்சியஸ் (153°F) எனும் ஒரே வெப்பநிலையில் தொடரும். இந்த வெப்பநிலை மாற்றம் தான் வேறுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என அறியப்படுகின்றது. சுவாரஸ்யமாக, பிற முறைகளைப் பயன்படுத்தி சமைத்த முட்டைகளுடன் வேதியியல் பகுப்பாய்வில் ஒப்பிடும்போது, இந்த முறையில் சமைக்கப்பட்ட முட்டையின் மஞ்சள் கருவில் அதிக பாலிஃபினால்கள் இருப்பது தெரியவந்தது. இந்த பாலிஃபினால்கள், அவற்றின் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக அறியப்படுகின்றன. புற ஊதா கதிர்வீச்சு, வறட்சி அல்லது பூச்சிகளின் தாக்குதல்கள் போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு எதிரான பாதுகாப்பு செயல்முறையாக தாவரங்கள் பாலிஃபினால்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் இந்த பாலிஃபினால்கள் மனிதர்களுக்கும் நன்மை பயக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, அதிகமான பாலிஃபினால்களை உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக, இதய நோய்கள், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அரியவகை நரம்புத் தளர்ச்சி நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் என தொற்றுநோயியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, மென்மையான வேக வைத்த முட்டைகளை காலை உணவாக நீங்கள் சாப்பிட விரும்பினால், நிச்சயமாக இந்த புதிய முறையை முயற்சித்துப் பார்க்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3w6z7kp7vo
-
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது. அதன்படி, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸ் மூலம் தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் வைத்திருந்த துப்பாக்கி இன்னும் மீட்கப்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.adaderana.lk/news.php?nid=199888
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய தேசிய மக்கள் சக்தியின் வரவு-செலவுத் திட்டம்
இலங்கையின் 2025 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் - சர்வதேச நாணய நிதியம் Published By: DIGITAL DESK 7 09 FEB, 2025 | 11:09 AM (லியோ நிரோஷ தர்ஷன்) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்தை பிரிதிநித்துவம் செய்ய அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஊழியர் மட்ட உடன்பாடுகள் எட்டப்பட்டது. இதன் போது 2025 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் உள்ளடக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன், மார்ச் மாதம் 21 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை இன்னும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த மாத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க உள்ளது. இந்த வரவு - செலவு திட்டத்தில் நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகள் அல்லது நிபந்தனைகள் எத்தகையதாக உள்ளது என்று கேள்வியெழுப்பியுள்ளீர்கள். 2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரகாரம் நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும். எவ்வாறாயினும் இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது. இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் பாராட்டத்தக்க விளைவுகளைத் ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது - மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. எனினும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது. இதனை அடுத்த வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படும். எனவே விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கும் வகையில், 2025 வரவு -செலவு திட்டத்தை சமர்ப்பது முக்கியமாகும் என குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/206207
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தமிழக மீனவர்கள் 14 பேர் இரண்டு மீன்பிடி படகுடன் கைது February 9, 2025 11:43 am ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்து இரணைத்தீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்கள் 14 பேரும் விசைப்படகுடன் கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=199890
-
லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம்
சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம் ஏற்புடையதல்ல - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டு 09 FEB, 2025 | 09:35 AM (நா.தனுஜா) ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் கூறுவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உதலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க சிபாரிசு செய்திருப்பது குறித்து கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் குறித்தவொரு குற்றவியல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள், அவ்விசாரணை அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கவேண்டும் எனச் சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், அவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா, இல்லையா எனும் தீர்மானத்தை சட்டமா அதிபரால் மேற்கொள்ளமுடியும் எனத் தெளிவுபடுத்தினார். அதேபோன்று சட்டமா அதிபர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, அதில் அரசாங்கம் தலையீடு செய்யக்கூடாது எனவும், மாறாக சட்டமா அதிபர் சுயாதீனமாக இயங்குவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார். இருப்பினும் சட்டமா அதிபரின் அண்மைய தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கூறுவது பொருத்தமானதல்ல என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். அத்தோடு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னமும் இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என விசனம் வெளியிட்ட அவர், இதுகுறித்த விசாரணைகளை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டியது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/206194
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை கூரைகளில் சூரிய சக்தி அமைப்புகள் பொருத்தப்பட்டவர்களுக்கு மின்க்தி அமைச்சு விசேட கோரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=199901
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் காலி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? 5 கேள்விகளும் பதில்களும் பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 9 பிப்ரவரி 2025, 01:29 GMT ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார். திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. அக்கட்சிக்கு கிட்டதட்ட 24 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பெரியார் மண்ணில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது? 'ஒரே இரவில் மாறிய வேட்பாளர்' - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்குப் பதிலாக திமுக போட்டி ஏன்? 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஈமு கோழி மோசடி: நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, 19 கோடி அபராதம் - இழந்த பணம் கிடைக்குமா? பிரசவத்தின்போது வயிற்றில் பேன்டேஜ்: பெண்ணுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு மேட்டுப்பாளையம்: தம்பி மற்றும் அவரின் மனைவியை ஆணவக் கொலை செய்த அண்ணனுக்கு மரண தண்டனை நாம் தமிழர் கட்சி மட்டுமே நேரடி போட்டியில் இருந்ததால், ஆளும்கட்சியின் அமைச்சர்கள் யாரும் கிழக்குத் தொகுதியில் பெரிதாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி, வேட்பாளர் சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) நடந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தி.மு.க வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியான இறுதி தரவுகளின்படி தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 6,109 வாக்குகளும் கிடைத்துள்ளன. 'இந்து மதத்தை மதிக்கவில்லை'; 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை - இன்றைய முக்கிய செய்திகள்6 பிப்ரவரி 2025 மேற்குவங்கம்: விரட்ட வந்த ஜேசிபி வாகனத்தை முட்டித்தூக்கிய யானை5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 1.பெரியார் மீதான விமர்சனம் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதைவிட கூடுதலான வாக்குகளை தற்போது அக்கட்சி பெற்றுள்ளது. பிரதான கட்சிகள் தேர்தலில் போட்டியிடாததால் நாம் தமிழர் கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரி 7 ஆம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே காலகட்டத்தில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்தார். பெண்ணிய உரிமை தொடர்பாக பெரியார் கூறியதாக சீமான் பேசிய பேச்சு, பெரியாரிய அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலும் பெரியார் மீது பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்தார். கடந்த தேர்தலைவிட13 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தாலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. அன்டார்டிக் கிரில்: இந்த 'குட்டி ஹீரோ' இல்லை என்றால் திமிங்கலத்துக்குக் கூட பிரச்னைதான் - ஏன்?7 பிப்ரவரி 2025 பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் 2. தேர்தல் உத்தி தவறா? "வரும் காலங்களில் தனது தேர்தல் உத்திகளை நாம் தமிழர் கட்சி மாற்றிக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்கு பெரியாரும் பிரபாகரனும் பயன்படுவதில்லை. பழைய சித்தாந்தங்கள் எதுவும் மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "பெரியார் மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவர் உயரத்தில் இருந்த காலத்தில்கூட வாக்கு அரசியலில் வெற்றி பெறும் நபராக தன்னை அவர் அடையாளப்படுத்தியதில்லை" எனக் கூறுகிறார். மேலும், "பெரியார் எதிர்ப்பு என்ற நிலையை எடுத்தால் அது பா.ஜ.க ஆதரவு என்ற நிலையாக மக்கள் பார்ப்பார்கள். தேர்தல் முடிவுகளின்படி மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவு இல்லை என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்" என்கிறார். "ஈரோடு கிழக்குத் தொகுதியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் பிரசாரம் அமையவில்லை" எனக் கூறும் ஷ்யாம், " கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை சீமான் பலப்படுத்த வேண்டும்" என்கிறார். இதனை மறுக்கும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, "கடந்த காலத்தைவிட கட்டமைப்பில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 2026 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் முகவர்களை நியமிப்பது எங்களின் இலக்காக உள்ளது" எனக் கூறினார். பொதுக்கூட்டங்களில், தொகுதி மக்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே சீமான் அதிகம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். "சித்தாந்த ரீதியாக பேசும்போதும் திராவிடம் குறித்துப் பேசும்போதும் பெரியார் குறித்தும் பேசினோம். அதிலும் 10 சதவீதம்தான் பெரியார் பற்றிப் பேசினோம்" என்கிறார் இடும்பாவனம் கார்த்தி. "திமுகவும் பெரியார் பெயரை சொல்லி வாக்குகளைக் கேட்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கியிலும் பெரியார் குறித்த விமர்சனம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை" எனக் கூறுகிறார் அவர். புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?7 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி 3. புறக்கணித்த எதிர்க்கட்சிகள்- யாருக்கு லாபம்? பிரதான அரசியல் கட்சிகள் போட்டியிடாத சூழலில் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "அதிமுக வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறவில்லை. அதற்கான வாய்ப்பு தொடக்கத்தில் இருந்தே இல்லை. ஆளும்கட்சி எதிர்ப்பு வாக்குகள் ஒன்று சேர்ந்திருந்தால் நாம் தமிழர் கட்சி, இன்னும் அதிக வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்" எனக் கூறுகிறார். "எதிர்கட்சிகள் போட்டியிட்டு தங்களின் வாக்குவங்கியைக் காட்டியிருக்க வேண்டும். அப்போது தான் திமுக எதிர்ப்பு வாக்குகளை அடையாளம் காண முடியும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது" என்கிறார். இதற்கு மாற்றான கருத்தை முன்வைக்கும் அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளருமான பாபு முருகவேல், "ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டபோதே என்ன நடக்கும் என்பதை அறிந்து தான் போட்டியிட்டோம். தற்போது போட்டியிடுவது என்பது தேவையில்லாத ஒன்று" எனக் கூறுகிறார் இடைத்தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதை சுட்டிக் காட்டும் பாபு முருகவேல், "ஆளும்கட்சியின் மீதான அதிருப்திக்கு இதுவே காரணம். 80 சதவீதத்துக்கும் வாக்குகள் பதிவாகியிருந்தால் அதிமுக வாக்குகள் மடை மாறியிருக்கும் என நம்பலாம்" எனக் கூறுகிறார். "கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் 25 சதவீத வாக்குகளை அதிமுக வாங்கியது. அப்படிப் பார்க்கும் போது அ.தி.மு.க வாக்குகள் வேறு கட்சிகளுக்கு திசை மாறிச் செல்லவில்லை" என கூறுகிறார் பாபு முருகவேல். 2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவர் 62,495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜாவுக்கு கிட்டதட்ட 56 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தென்னரசுவுக்கு 43,922 வாக்குகள் கிடைத்தன. அந்தவகையில், ''நாம் தமிழர் கட்சிக்கு எதிர்க்கட்சி வாக்குகள் பெரிதாக சென்று சேரவில்லை'' என ஷ்யாம் குறிப்பிட்டார். இந்திய வரலாற்றையே மாற்றிய 'நாகா சாதுக்கள்' - கையில் வாளுடன் நிர்வாண கோலத்தில் வலம் வரும் இவர்கள் யார்?8 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இன்னும் எத்தனை இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்? - மத்திய அரசு கூறியது என்ன?8 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@BABUMURUGAVEL படக்குறிப்பு, அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளருமான பாபு முருகவேல் 4. வழக்கமான இடைத்தேர்தலை போல இந்த முறையும் ஆளும் கட்சிக்கு ஆதரவா? தனது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், "ஆளும்கட்சி போட்டியிடும்போது கடந்த காலங்களில் பிரதான கட்சிகள் போட்டியிடாமல் இருந்துள்ளன. அப்போது யாராவது ஒருவர் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்குவார்கள். அதை விபத்தாக பார்க்க வேண்டும்" எனக் கூறினார். இதை எப்படி விபத்தாக பார்க்க முடியும் என செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் கூறியதை தவறாக திரிக்க வேண்டாம்" எனக் கூறிய சந்திரகுமார், "யாரைப் பார்த்தும் திமுக பயந்தது இல்லை. பயப்படுவதாக கூறினால் அது அவர்களின் அறியாமை" என்றார். ஆட்சியை மக்கள் ஆதரிப்பதால், எதிர்க்கட்சிக்கு விழக் கூடிய வாக்குகளும் தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறிய சந்திரகுமார், "அதன் வெளிப்பாடு தான் இவ்வளவு பெரிய வெற்றி" எனக் கூறினார். "இந்த தேர்தலால், நாம் தமிழர் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை" எனக் கூறுகிறார் அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த தேர்தலை விடவும் அதிக வாக்குகளை நாம் தமிழர் பெற்றுள்ளது" எனக் கூறினார். பெரியாரை விமர்சித்த காரணத்தால் வாக்குகள் குறையவில்லை எனக் கூறியுள்ள சீதாலட்சுமி, "நாம் தமிழர் கட்சி மீது புரிதல் உள்ளவர்கள், எங்களுக்கு வாக்களித்துள்ளனர். பணம், கள்ள ஓட்டு ஆகியவற்றைத் தாண்டி இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளோம்" எனக் கூறுகிறார். டீப்சீக் வெற்றி எதிரொலி: சீனா குறி வைத்த 10 உயர் தொழில்நுட்பங்களில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது?8 பிப்ரவரி 2025 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, திமுக செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் 5. தி.மு.க வெற்றி - எதைக் காட்டுகிறது? "இந்த வெற்றியின் மூலம் திமுக மகிழ்ச்சியடைவதற்கு எதுவும் இல்லை" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "இந்த வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்க முடியாது" என்கிறார். அதேநேரம், தேர்தல் களம் என்பது சரிசமமாக இல்லை எனக் கூறுகிறார் நாம் தமிழர் கட்சியியின் இடும்பாவனம் கார்த்தி. வீதிக் கூட்டம், தெருமுனைக் கூட்டம் என திமுக பிரசாரம் செய்யவில்லை எனக் கூறும் அவர், "பணத்தை நம்பி திமுக போட்டியிட்டது. கோடிக்கணக்கில் செலவு செய்து திமுக இந்த வெற்றியை விலைக்கு வாங்கியுள்ளது" என குற்றம்சாட்டினார். திமுகவின் வெற்றி குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, "யாரும் களத்தில் இல்லை. இது போலி வெற்றி. எங்கள் நிர்வாகிகள் ஓட்டைக் கூட அவர்களே பதிவு செய்துவிட்டனர். கள்ள ஓட்டுகளின் மூலம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் என்ன நடக்கப் போகிறது எனப் பாருங்கள்" எனக் கூறினார். ஆனால், இதை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பு செயலர் கான்ஸ்டன்டைன், " இது பெரியார் மண் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு இது" எனக் கூறுகிறார். கள்ள ஓட்டு, பண விநியோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த கான்ஸ்டன்டைன், "தோற்றவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறுவார்கள்" என்றார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆவடியில் பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "பெரியார் மண்ணில் மகத்தான வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். நம்மை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்" எனக் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0m1yrez971o
-
14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் நடைபெறவுள்ளது
14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை 64 ஓட்டங்களால் வெற்றிகொண்டது யாழ். இந்து; தொடரிலும் 4 - 3 என முன்னிலை Published By: VISHNU 08 FEB, 2025 | 09:05 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து (பம்பலப்பிட்டி) கல்லூரிக்கும் இடையில் யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (08) முடிவுக்கு வந்த 14ஆவது இந்துக்களின் சமரில் யாழ். இந்து கல்லூரி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. கொழும்பு இந்து கல்லூரியின் கடைசி 3 விக்கெட்ளை ஹெட் - ட்ரிக் முறையில் வீழ்த்தி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த யாழ். இந்து வீரர் சுதர்சன் சுபர்னன் தனது அணி வெற்றிபெறுவதை உறுதிசெய்தார். இந்த வெற்றியுடன் இந்துக்களின் சமரில் யாழ். இந்து கல்லூரி 4 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்துள்ளது. யாழ். இந்து கல்லூரியினால் நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. கொழும்பு இந்து கல்லூரி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்ததால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் கடைசி 7 விக்கெட்கள் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்ததால் யாழ். இந்து மகத்தான வெற்றியை ஈட்டியது. ஆரம்ப வீரர் சுரேஷ் குமார் மிதுஷிகன் மிகவும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி 144 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது பலனற்றுப் போனது. திவேந்திரன் யதுஷனுடன் ஆரம்ப விக்கெட்டில் 49 ஓட்டங்களையும் தவக்குமார் சந்தோஷுடன் இரண்டாவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும் மிதுஷிகன் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டார். மிதுஷிகனை விட மத்திய வரிசை வீரர் சுரேஷ் சர்விஷ் 39 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் திவேந்திரன் யதுஷன் 25 ஓட்டங்களையும் தவக்குமார் சந்தோஷ், பத்மநாதன் ஸ்ரீ நிதுசான் ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களையும் பெற்றனர். கொழும்பு இந்துவின் கடைசி 3 துடுப்பாட்ட வீரர்களான சுரேஷ் சர்விஷ், விஸ்வநாதன் யுவராஜ், அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் ஆகிய மூவரை ஹெட் - ட்ரிக் முறையில் சுபர்னன் ஆட்டம் இழக்கச் செய்து 58 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரை விட கனகராஜ் நிதீஸ் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். இந்து கல்லூரி 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை டிக்ளயார் செய்து நிறுத்திக்கொண்டது. அணித் தலைவர் கிருஷ்ணராஜ் பரஷித் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8 பவுண்டறிகளுடன் 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் சுதர்சன் சுபர்னனுடன் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தார். தொடர்ந்து சுபர்னன் (16), அன்டன் விமலதாஸ் விதுசன் (25) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 93 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால், 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் யாழ். இந்து கல்லூரி தடுமாற்றம் அடைந்தது. (110 - 8 விக்.) எனினும், இந்திரலிங்கம் ஸ்ரீவஸ்தன் (26), 10ஆம் இலக்க வீரர் சுதர்சன் அபிவர்ணன் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். கொழும்பு இந்து பந்துவீச்சில் ராமநாதன் தேஷ்கர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஸ்வநாதன் யுவராஜ் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான இந்த இரண்டு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. கொழும்பு இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விககெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. எண்ணிக்கை சுருக்கம் யாழ். இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (ஏ. விதுஷன் 49, கே. பரஷித் 20, வி. யுவராஜ் 27 - 4 விக்.) கொழும்பு இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 91 (ரீ. சந்தோஷ் 42, கே. நித்தீஸ் 12 - 4 விக்.), யாழ். இந்து 2ஆவது இன்: 170 - 9 விக். டிக்ளயார்ட் (கே. பரஷித் 39, எஸ். அபிவர்ணன் 27, ஆர். தேஷ்கர் 35 - 4 விக்., வி. யுவராஜ் 47 - 4 விக்.) கொழும்பு இந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 187 (சுரேஷ்குமார் மிதுசிகன் 72, எஸ். சர்விஷ் 39, சுதர்சன் சுபர்னன் 58 - 6 விக். விசேட விருதுகள் ஆட்டநாயகன்: சுதர்சன் சுபர்னன் (யாழ் இந்து) சிறந்த துடுப்பாட்ட வீரர்: சுரேஷ்குமார் மிதுசிகன் (கொழும்பு இந்து) சிறந்த பந்துவீச்சாளர்: விஸ்வநாதன் யுவராஜ் (யாழ். இந்து) சிறந்த களத்தடுப்பாளர்: தினேஷ்ராமன் பிரீத்திகன் (யாழ். இந்து) https://www.virakesari.lk/article/206181
-
சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது - உதய கம்மன்பில
Published By: DIGITAL DESK 2 08 FEB, 2025 | 04:54 PM (இராஜதுரை ஹஷான்) அரசியல் பழிவாங்கலுக்காக அரசாங்கம் நீதிக்கட்டமைப்பையும் பயன்படுத்துகிறது. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலங்களில் பலர் கைதாகலாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் மீது மக்களின் வெறுப்பு தீவிரமடையும் போது மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காக கடந்த அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயங்களை அரசாங்கம் வெளியிடும். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்கள், மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் விபரத்தை அரசாங்கம் வெளியிட்டது. தற்போது 2022 மே கலவரத்தின் போது வீடுகளை இழந்த அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்ட இழப்பீட்டுத் தொகை தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்ட அரசாங்கம் அந்த நிதியை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதேபோல் கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வியெழுப்பிய போது அந்த மதுபானசாலை பத்திரங்கள் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சட்ட சிக்கல் ஏற்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகிறார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களையும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்வதாகவும் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. மக்களை தூண்டிவிடுவதற்காக குறிப்பிட்ட விடயங்களை சட்டத்துக்கு முரணாக செயற்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் தற்போது விளங்கிக் கொண்டுள்ளது. அரசியல் பழிவாங்கலுக்காக அரசாங்கம் நீதிக்கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்கிறது. அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலப்பகுதியில் பலர் கைதாகலாம் என்றார். https://www.virakesari.lk/article/206163
-
டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த இலங்கை தலைவர்கள் இணக்கம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
08 FEB, 2025 | 04:53 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயமானது மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. அந்த வகையில் இந்திய உதவியுடன் 300 கோடி ரூபா மதிப்பிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்த இலங்கை தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போ தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, மக்களிடையே தொடர்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு நோக்கங்களை ஆராய்ந்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா வேகமாக டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கலை இணைப்புக்கான வழிமுறையாக மட்டுமல்லாமல் - சமத்துவம் மற்றும் வாய்ப்புக்கான ஊடகமாகவும் இந்தியா ஏற்றுக்கொண்டது. அதுவே எமது டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் சாராம்சமாகும். இந்தியா இன்று அதன் 1.3 பில்லியன் மக்களுக்கு டிஜிட்டல் அட்டைகளை வழங்கியுள்ளது. எம்மத்தியில் 1.2 பில்லியன் நவீன கையடக்க தொலைபேசி பயனர்கள், 950 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளனர். உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. கடந்த பத்தாண்டுகளில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட எட்டு மடங்கு அதிகமான ஒப்டிகல் பைபர்களை இந்தியா அமைத்துள்ளது. அந்த வகையில் முழு பிராந்தியத்துக்கும் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான விரைவான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயமானது இந்த மிக முக்கியமான ஒத்துழைப்புத் தூணான மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது. இந்திய உதவியுடன் 300 கோடி ரூபா மதிப்பிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்த இலங்கை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த கூட்டுப் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் டிஜிலொக்கரை செயல்படுத்துவது குறித்த தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணங்களை எளிதாக்குவதற்காக கடந்த ஆண்டு இலங்கையில் யு.பி.ஐ. கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட்டன. இரு நாடுகளின் நலனுக்காக யு.பி.ஐ. டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எமது ஒவ்வொரு நாடுகளின் டிஜிட்டல் பயணங்களுக்கும் உத்வேகமளிக்கவும், பிம்ஸ்டெக் பிராந்தியத்துக்கான முன்னேற்றத்துக்கான புதிய பாதைகளை மேலும் திறக்கவும் இந்த தளத்தைப் பயன்படுத்துவோம் என்று நம்புகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/206162
-
தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம் ; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு 08 FEB, 2025 | 03:49 PM மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை - பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர். குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு க.ஜெயகுமார்,பா.பாஷ்கரன், சுகுமாரி சாருஜன் ஆகியோர் மேலும் கூறுகையில், மக்களது காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம். அவை மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுர அண்மையில் யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறிய கருத்துக்கு முரணாக தையிட்டி விவகாரம் இருக்கின்றது. அகில இலங்கை பௌத்த மகாசபை ஒருபடி மேல் சென்று விகாரை கட்டப்பட்ட காணி நிலம் மட்டுமல்ல, அயலில் உள்ள காணி நிலங்களும் சுவீகரிக்கப்படும் என இறுமாப்புடன் கூறியுள்ளது. அதேநேரம் தேர்தல் கலங்களில் தேசிய மக்கள் சக்தியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூவரும் எம்முடன் இவ்விடையம் தொடர்பில் பேசி, கடந்த கால யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றல்லாது, கடந்த அரசுகள் போலல்லாது தாம் ஆட்சிக்கு வந்ததும் இவ்விடையம் தீர்க்கப்படும் என எமக்கு வாக்குறுதியும் வழங்கியிருந்தனர். ஆனால் இன்று இம் மூவரும் பொம்மைகள் போன்று வாய்பேசாதுள்ளனர். நாம் எமது பூர்வீக நிலங்களையே கேட்கின்றோம். ஆளுநர் கூட எம்முடன் பேசிய விடையத்தை வேறு திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து தவறான அர்த்தத்துடன் ஜனாதிபதிக்கு கூறியிருந்தார். ஆனாலும் அன்று கஜேந்திரகுமார் எம்.பி எமது பிரச்சினையை எடுத்திருந்தாலும் அவருக்கு பலமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைக்கொடுத்திருக்கவில்லை. இது வாக்களித்த எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம்திகதி மாலை 4 மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணிவரை எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம். காணி உரிமையாளர்களாகிய எமது போராட்டத்துக்கு பாரபட்சமற்ற வகையில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், போக்குவரத்து மற்றும் சிற்றூர்தி, முச்சக்கர வண்டி சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206150
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின் விளிம்பில் அவுஸ்திரேலியா Published By: VISHNU 08 FEB, 2025 | 08:46 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது வோர்னர் - முரளிதரன் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் உள்ள அவுஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட தொடரையும் முழுமையாக கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க, அவுஸ்திரேலியாவைவிட 54 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதால் இலங்கை தோல்வியைத் தவிர்க்கும் என எதிர்பார்க்க முடியாது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா, சகல விக்கெட்களையும் இழந்து 411 ஓட்டங்களைக் குவித்தது. மொத்த எண்ணிக்கை 350 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்டீவன் ஸ்மித் 131 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் 254 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸை விளாசி இருந்தார். தனது அறிமுகப் போட்டியில் சதம் குவித்த ஜொஷ் இங்லிஸ் (0) அதே மொத்த எண்ணிக்கையில் களம் விட்டகன்றார். அலெக்ஸ் கேரி நான்கரை மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி 188 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 156 ஓட்டங்களைப் பெற்றார். போ வெப்ஸ்டர் 31 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 151 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 81 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவைவிட 157 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. ஏஞ்சலோ மெத்யூஸ் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 149 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பெற்றார். முதல் இன்னிங்ஸில் அரைச் சதம் குவித்த குசல் மெண்டிஸ் 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 70 ஓட்டங்களே இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. அவர்கள் இருவரைவிட தனஞ்சய டி சில்வா (23), கமிந்து மெண்டிஸ் (14), திமுத் கருணாரட்ன (14), தினேஷ் சந்திமால் (12) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்து வீச்சில் மெத்யூ குனேமான் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நேதன் லயன் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும். https://www.virakesari.lk/article/206182
-
டீப்சீக் வெற்றி எதிரொலி: சீனா குறி வைத்த 10 உயர் தொழில்நுட்பங்களில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 8 பிப்ரவரி 2025, 15:37 GMT சீன ஏஐ சாட்பாட் டீப்சீக்கின் எழுச்சி உலகளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், சீனாவின் வளர்ச்சியை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால், 'மேட் இன் சீனா 2025' என்ற லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் தனது நிபுணத்துவத்தை சீனா மெதுவாக வளர்த்து வருகிறது. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, டீப்சீக்கின் வெற்றி என்பது பிரமாண்டமான ஒரு திட்டம் வெற்றியடைந்தது என்பதற்கான மற்றுமொரு சான்றாகும். 'மேட் இன் சைனா 2025' எனும் திட்டம் 2015-இல் சீன அரசால் பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கான அன்றாடப் பொருட்களின் அடியில் காணப்படும் பொதுவான லேபிளை மலிவான மற்றும் குறைவான தரம் கொண்ட உற்பத்தியின் அடையாளம் என்பதில் இருந்து, மேம்பட்ட, உயர்தர தொழில்நுட்பத்தின் அடையாளமாக மாற்றுவதே அத்திட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியில் சீனாவைவிட இந்தியா பின்தங்கி இருப்பது ஏன்? பிரபல முதலீட்டாளர் ருசிர் ஷர்மா கூறுவது என்ன? அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன? கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? டிரம்ப் அச்சுறுத்தல்: அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்க்க சீனா என்ன செய்கிறது? எப்படி தயாராகிறது? அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் சீனா ஆதிக்கம் செலுத்த வேண்டிய பகுதிகளாக பத்து தொழில்நுட்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், மின்சார கார்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரி தொழில்நுட்பம் போன்ற துறைகள், அந்த திட்டத்துக்கான விரிவான ஆவணங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த தொழில்நுட்பங்கள் பலவற்றில் சீனா ஒரு பெரிய சாதனையாளராக உருவாகி வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில தொழில்நுட்பங்களில் மிகுந்த நம்பிக்கை தரும் இலக்குகளையும் எட்டியுள்ளது. காஸா குறித்த டிரம்பின் பேச்சு இஸ்ரேல், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தில் தள்ளுமா?6 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 மேட் இன் சீனா 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிஒய்டி போன்ற மின்சார கார் தயாரிப்பாளர்கள் காரணமாக, மோட்டார் வாகன தொழில்களில், முன்னணி நாடுகளை சீனா முந்தியுள்ளது "'மேட் இன் சீனா 2025' எனும் திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்பது என் கருத்து. பல தொழில்களில் சீனா முன்னணி இடத்தை அடையும் போட்டியில் உள்ளது மற்றும் சில தொழில்களில் சீனா முன்னணி இடத்தில் உள்ளது," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் நிபுணர் டாக்டர் யுண்டன் காங் தெரிவித்தார். குறிப்பாக, பிஒய்டி போன்ற மின்சார கார் தயாரிப்பாளர்கள் காரணமாக, மோட்டார் வாகன தொழில்களில் முன்னணி இடங்களில் உள்ள நாடுகளை (ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா) சீனா முந்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பாளராக இருப்பது சீனாவிற்கு மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழில் துறையில் பெரும் நன்மையை அளித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், சர்வதேச எரிசக்தி ஏஜென்சியின் (IEA) படி, சோலார் பேனல்கள் தயாரிப்பின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் 80-95 சதவீதம் சீனாவின் வசம் உள்ளது. சீனா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையமாக இருப்பதாகவும், 2028 ஆம் ஆண்டுக்குள் உலகின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 60 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், ட்ரோன் தொழிலும் சீனா முன்னணியில் உள்ளது. ஷென்செனை தளமாகக் கொண்ட டிஜேஐ நிறுவனம், உலகளாவிய சந்தையில் 70 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. உலகின் முதல் 10 ட்ரோன் உற்பத்தியாளர்களில் மூவர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி ஆராய்ச்சியின் படி அறியப்படுகின்றது. முன்னதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நோக்கங்களை அடைவதற்காக, 250க்கும் மேற்பட்ட சிறு இலக்குகளைக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கியது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பகுப்பாய்வின்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 86 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மார்ஷல் ஃபண்ட் சிந்தனைக் குழுவின் நிர்வாக இயக்குநரும், அமெரிக்க அதிபர் பைடனின் முன்னாள் ஆலோசகருமான லிண்ட்சே கோர்மன் கூறுகையில், "அரசு ஆதரவு பெற்ற முதலாளித்துவத்தின் மாதிரியைப் பயன்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது" எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?6 பிப்ரவரி 2025 இந்தியாவின் வரி குறைப்பு நடவடிக்கைகள் டிரம்பின் வரி அச்சுறுத்தலை தவிர்க்க போதுமா?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'மேட் இன் சைனா 2025' எனும் திட்டம் 2015-ல் சீன அரசால் பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது வெளிநாட்டுத் திறன்களை ஈர்ப்பதிலும், கூட்டு முயற்சிகள் மூலம் சீன நிறுவனங்களுடன் ஒத்துழைக்க சர்வதேச நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் சீனா வெற்றிகரமாக உள்ளது என்பதை லிண்ட்சே கோர்மன் எடுத்துரைக்கிறார். அதற்காக பெரும் தொகையும் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வின்படி, சீன அரசாங்கம் 1.5 டிரில்லியன் டாலர்களை ஆராய்ச்சி, மேம்பாடு அல்லது வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதற்கு மானியமாக சேகரிக்க திட்டமிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் 627 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது என அறியப்படுகின்றது. 'மேட் இன் சீனா 2025' எனும் திட்டம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதனால் மற்ற நாடுகளுடன் பதற்றம் ஏற்பட்டதால், சில ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசாங்கம் இதனைப் பயன்படுத்துவதை நிறுத்தியது. ஆனால் அந்த நடவடிக்கை மிகவும் தாமதமாகத் தான் எடுக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் மேற்கில் உள்ள பல நாடுகள் தங்கள் தொழில்நுட்பம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு கடுமையான தடைகளை விதித்துள்ளன. அதாவது, சில தொழில்நுட்பங்களில் சீனாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே மேற்கத்திய நாடுகளின் திட்டம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசிப் கண்டுபிடிப்பில், இந்த உத்தி பயனுள்ளதாக இருக்கிறது என அறியப்படுகின்றது. வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை: ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு - ஷேக் ஹசீனா கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 'இந்து மதத்தை மதிக்கவில்லை'; 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை - இன்றைய முக்கிய செய்திகள்6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,CFOTO/FUTURE PUBLISHING VIA GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் முதல் 10 ட்ரோன் உற்பத்தியாளர்களில் மூவர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி ஆராய்ச்சியின் படி அறியப்படுகின்றது மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், இந்த தடை நடவடிக்கைகளின் மூலம், சில தொழில்நுட்பங்களில் கடினமாக முயற்சி செய்ய சீனா ஊக்கம் பெற்றதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, சீனா தற்சார்புடன் செயல்படத் தொடங்கியிருப்பது, 'மேட் இன் சீனா 2025' எனும் திட்டத்துக்கான முக்கிய உந்துதலாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. "சீனாவில் ஒரு பழைய பழமொழி உள்ளது. வாழ்க்கை எப்போதும் அதன் சொந்த வழியைக் கண்டுபிடிக்கும், என்பது தான் அந்தப் பழமொழி" என நினைவுகூருகிறார் கார்டிஃப் யுனிவர்சிட்டி பிசினஸ் ஸ்கூலின் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரான பெங் சோவ். "கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அதன் வேரை மட்டுமே மாற்றுகின்றன, அதன் திசையை அல்ல," என்றும் அவர் குறிப்பிடுகிறார். பேராசிரியர் சோவ் போன்ற வல்லுநர்கள் டீப்சீக் தொழில்நுட்பத்தை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடுகின்றனர். அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருப்பதால், மிகவும் சக்தி வாய்ந்த சிப்களை டீப்சீக் நிறுவனத்தால் பெற முடியவில்லை. அதற்குப் பதிலாக, பழைய மற்றும் சக்தி குறைந்தவற்றைக் கொண்டு டீப்சீக்கின் சிப்களைச் செய்ததாகவும், மிகக் குறைவான கிட் மூலம், மிகக் குறைந்த பணத்தில், கவனம் ஈர்க்கும் அதன் தொழில்நுட்பத்தை உருவாக்க புதிய திட்டங்களை கண்டுபிடித்ததாகவும் அந்நிறுவனம் கூறுகிறது. இந்த கூற்றுகள் சில போட்டியாளர்களால் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் டீப்சீக் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு "எச்சரிக்கை ஒலி" என்று அதனைக் குறிப்பிட்டுள்ளார். அலிபாபா மற்றும் பைட் டான்ஸ் போன்ற சீனாவின் தொழில்நுட்ப முன்னோடிகள் கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்றவற்றைப் போலவே அதிக முதலீடு செய்கின்றன. ஆனால், 'மேட் இன் சீனா 2025' திட்டம் இருந்த போதிலும், ஏஐ தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைமையாக, தற்போதும் அமெரிக்காவே கருதப்படுகிறது. உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்?5 பிப்ரவரி 2025 அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை?5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருப்பதால் மிகவும் சக்திவாய்ந்த சிப்களை டீப்சீக் நிறுவனத்தால் பெற முடியவில்லை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சீனா சீன விஞ்ஞானிகள் மற்ற எந்த நாட்டையும் விட குவாண்டம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை ஆண்டுதோறும் வெளியிட்டாலும், குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள் பெரும்பாலானவற்றில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. மறுபுறம், நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் மற்றும் பொதுப் பணத்தை மைக்ரோசிப் உற்பத்தி, அறிவியல் மற்றும் ஏஐ உட்கட்டமைப்பு ஆகியவற்றில் செலுத்துவதன் மூலம் சீனாவின் சவாலை எதிர்கொள்ள அமெரிக்காவும் முன்னேறி வருகிறது. ஆனால், தொழில்நுட்பத்தில் சீனா அடைந்துள்ள வேகமான முன்னேற்றங்கள் பிற நாடுகளில் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. அமெரிக்காவைச் சாராத உலகளவில் பிரபலமான முதல் சமூக வலைதள நிறுவனமாக டிக் டாக் அறியப்படுகின்றது. அதன் பெரும் வெற்றியானது, உளவு பார்க்க பயன்படுத்தப்படலாம் என்ற பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. அதன் எதிரொலியாக அமெரிக்கா விதித்துள்ள தடையின் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது சீனா. டீப்சீக்கின் வெற்றியைத் தொடர்ந்து, டெமு மற்றும் ஷீன் போன்ற சீன இணையவழி பயன்பாடுகளும் பாதுகாப்பு காரணங்களுக்கான தடை போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4504g67z5o
-
டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!
டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக - ஆம் ஆத்மி தோல்வி குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 8 பிப்ரவரி 2025, 01:49 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளின்படி, பாஜக ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2025 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 36 ஆம் ஆத்மி22Seat count of ஆம் ஆத்மி22 பாஜக+48Seat count of பாஜக+48 காங்கிரஸ்0Seat count of காங்கிரஸ்0 மற்ற கட்சிகள்0Seat count of மற்ற கட்சிகள்0 கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 9:00 pm சமீபத்திய முடிவுகளைக் காண இந்த பக்கத்தை புதுப்பிக்கவும். முழு முடிவுகளையும் பார்க்க ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினர். பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதன் முடிவுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும். பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோதி பேசியது என்ன? டெல்லி சட்டமன்றத்தில், 27 ஆண்டுகளுக்குப் பிறகூ பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "வளர்ச்சி வெற்றி பெற்றுள்ளதாக" கூறினார். "இன்று, டெல்லி மக்களிடையே டெல்லியை பேரழிவில் இருந்து விடுவித்த உற்சாகமும் அமைதியும் நிலவுகிறது. 21ஆம் நூற்றாண்டில் டெல்லியில் பணியாற்ற பாஜகவுக்கு வாய்ப்பளிக்குமாறு நான் ஒவ்வொரு டெல்லிவாசிக்கும் ஒரு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டேன்" என்று பிரதமர் மோதி கூறினார். "மோதியின் உத்தரவாதத்தை நம்பியதற்காக டெல்லியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நான் தலை வணங்குகிறேன். டெல்லி திறந்த மனதுடன் எங்கள் மீது அன்பைப் பொழிந்துள்ளது." பாஜக பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, பிரதமர் மோடி பாஜக தலைமையகத்தை அடைந்தார். அங்கு பேசிய பிரதமர் மோதி, "டபுள் எஞ்சின் அரசாங்கம் டெல்லியை விரைவாக மேம்படுத்துவதன் மூலம் நன்றிக்கடனை திருப்பிச் செலுத்தும். இன்றைய வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது சாதாரண வெற்றி அல்ல. டெல்லி மக்கள் பேரழிவை விரட்டியடித்துள்ளனர் " என்று கூறினார். அதோடு, "இன்று, டெல்லியில் வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வை மற்றும் நம்பிக்கை வெற்றி பெற்றுள்ளன. இன்று, அராஜகம், ஆணவம் மற்றும் டெல்லியை சூழ்ந்திருந்த பேரழிவு தோற்கடிக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் பேசினார். சென்னையில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஆழ்கடலில் 19,685 அடி ஆழத்திற்குச் செல்ல தயாராவது ஏன்?7 ஜனவரி 2025 சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?8 ஜனவரி 2025 முக்கிய தலைவர்களின் நிலை என்ன? டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மா வெற்றி பெற்றுள்ளார். கால்காஜி தொகுதியில் டெல்லி முதல்வர் ஆதிஷி, பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய், பாபர்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜகவின் அனில் குமார் வஷிஷ்தை எதிர்த்து போட்டியிட்டார். ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு தலைவரான சௌரப் பரத்வாஜ், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சிக்கா ராய் வெற்றி பெற்றுள்ளார். பத்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் ஆவாத் ஓஜா தேர்தலில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட ரவீந்திர் சிங் நெகி வெற்றி பெற்றுள்ளார். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குட முழுக்கை தமிழில் நடத்த அரசு அனுமதிக்காதது ஏன்? - பின்னணி என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்7 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, வெறிச்சோடிய ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் ஜங்பூராவில் தோல்வி அடைந்த சிசோடியா Play video, "டெல்லி சட்டமன்றத் தேர்தல்: கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்", கால அளவு 0,22 00:22 காணொளிக் குறிப்பு, டெல்லி சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள் ஜங்பூரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல் அமைச்சருமான மணீஷ் சிசோடியா 600 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியுற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். "ஜங்பூரா தொகுதியில் நாங்கள் கடுமையாக போட்டியிட்டோம். 600 வாக்குகள் வித்யாசத்தில் நாங்கள் தோல்வி அடைந்தோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்," என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு போட்டியிட்ட தொகுதியில் இருந்து மாறி முதல்முறையாக ஜங்பூராவில் போட்டியிட்டார் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா. அவரை எதிர்த்து பாஜக சார்பில் தர்விந்தர் சிங் களம் இறக்கப்பட்டார். பாஜக தற்போது வெற்றியை உறுதி செய்துள்ளது. அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?6 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் 4089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி சிறுத்தைகளின் உடலில் சிப் பொருத்தும் பெண் வனக் காவலர்8 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 ஆம் ஆத்மியின் தோல்வி பற்றி ஸ்வாதி மாலிவால் கூறுவது என்ன? படக்குறிப்பு, மணீஷ் சிசோடியா ஜங்பூராவில் 675 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், "பெருமையும் ஆணவமும் நீண்ட காலம் நீடிக்காது. ராவணனின் பெருமைகூட உடைக்கப்பட்டது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அதே நிலைதான்," என்றார். "வரலாற்றைப் பார்த்தால், ஒரு பெண்ணுக்கு எதிராக ஏதேனும் தவறு நடந்த போதெல்லாம், கடவுள் தண்டித்துள்ளார். மோசமான, சேதமடைந்த சாலைகள், மாசடைந்த குடிநீர் என டெல்லி முற்றிலும் குப்பைக் கிடங்காக மாறிவிட்டது" என்று ஸ்வாதி மாலிவால் கூறினார். "டெல்லி மக்கள் அனைத்துப் பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவால் தனது இடத்தை இழந்துள்ளார்," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,ANI ஆம் ஆத்மி தோல்வி குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது என்ன? டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜக-வுக்கு எனது வாழ்த்துகள். எங்களுக்கு வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்," என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார். "கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் எங்களுக்கு வழங்கிய வாய்ப்பில் நாங்கள் நிறைய பணிகளைச் செய்துள்ளோம். கல்வி, சுகாதாரம், நீர்வளத் துறை மற்றும் டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கல் பணியாற்றினோம். இப்போது மக்கள் எங்களுக்கு இந்த முடிவை வழங்கியுள்ளனர். நாங்கள் ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவது மட்டுமின்றி, சமூக சேவையையும் செய்வோம்," என்று தனது வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதோடு, "மக்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் உதவுவோம். நாங்கள் யாருக்கெல்லாம் தேவைப்படுகிறோமோ அவர்கள் அனைவருக்கும் உதவுவோம். ஏனெனில், நாங்கள் அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. அரசியலை மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களி சுக, துக்கங்களில் உதவவும் பயன்படும் ஓர் ஊடகமாகக் கருதுகிறோம்," என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா: USAID ஊழியர்களை விடுப்பில் அனுப்ப திட்டமிட்ட டிரம்ப் - நீதிமன்ற உத்தரவு என்ன?8 பிப்ரவரி 2025 புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ANI டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி பிரதமர் மோதி கூறுவது என்ன? முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, இதை வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் வெற்றி என்று கூறியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், "நல்லாட்சி வென்றுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ள அவர், "பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை வழங்கிய டெல்லியின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என வாழ்த்துகள். நீங்கள் அளித்த ஏராளமான ஆசீர்வாதங்களுக்கும் அன்புக்கும் மிக நன்றியுள்ளனவனாக இருக்கிறேன். டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அதன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இருக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார். ஊழலே தோல்விக்கு காரணம் - அன்னா ஹசாரே சமூக செயற்பாட்டாளரான அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளே இந்த தேர்தல் பின்னடைவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடும் இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய அவர், "ஆரம்ப காலம் தொட்டே நான் இதைக் கூறி வருகிறேன். தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் சுத்தமானவராக இருக்க வேண்டும். சுத்தமான எண்ணங்களும், கறைபடாத வாழ்க்கையையும், அவமானங்களை தாங்கிக் கொள்ளக் கூடியவராகவும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே, அந்த வேட்பாளர் நமக்கு ஏதேனும் செய்வார் என்ற நம்பிக்கை வாக்காளர்கள் மத்தியில் கிடைக்கும்," என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளரான அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளே இந்த தேர்தல் பின்னடைவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார் மேற்கொண்டு பேசிய அவர், "இதை நான் கூறிக் கொண்டே இருந்தேன். ஆனால் அது அவர்களின் மனதில் ஏறவில்லை. பிறகு ஒரு நாள் மதுபானம் தொடர்பான பேச்சு அடிபட்டது. மதுபானக் கொள்கைகள் காரணமாகவே கேஜ்ரிவாலுக்கு மோசமான பெயர் கிடைத்தது," என்றும் குறிப்பிட்டார். அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு பக்கம் குணாம்சம் குறித்து பேசுகிறார். மற்றொரு பக்கம் மதுபான ஊழலில் அவருடைய பெயர் அடிபடுகிறது என்பதை மக்கள் பார்த்தனர். அரசியலில் குற்றச்சாட்டுகள் எழுவது நிதர்சனம். ஒருவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் உண்மை என்றும் உண்மையாகவே இருக்கும். ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது, நான் கட்சியின் ஒரு அங்கமாக இருக்கமாட்டேன் என்பதை தெளிவுபடுத்தினேன். அதையே நான் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன், என்று அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மியிடம் இருந்து மக்கள் டெல்லியை விடுவித்துள்ளனர் - அமித் ஷா முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பொய்யான வாக்குறுதிகளின் மூலம் தங்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்த முடியாது என்பதை டெல்லி மக்கள் காட்டியுள்ளனர்," என்று கூறியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, "அசுத்தமான யமுனை, மாசுபட்ட குடிநீர், சேதமடைந்த சாலைகள், நிரம்பி வழியும் சாக்கடைகள், தெருவுக்குத் தெரு திறந்திருக்கும் மதுபானக் கடைகள் ஆகியவற்றுக்கு" பொதுமக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் பதிலளித்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார். டெல்லி மக்கள் பொய்கள், வஞ்சகம், ஊழல் நிறைந்த கண்ணாடி மாளிகையை அழித்து ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து டெல்லியை விடுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, "வாக்குறுதிகளை மீறுவோருக்கு டெல்லி பாடம் கற்பித்துள்ளது. இது நாடு முழுவதும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளிப்போருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். இது டெல்லியில் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ANI மத்திய வர்க்கத்தினர் ஆம் ஆத்மி மீது அதிருப்தியில் இருந்தனர் - காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உதித் ராஜ் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய போது, "தற்போது வெளியாகி வரும் முடிவுகள் பாஜகவே டெல்லியில் ஆட்சி அமைக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும் மோசமானதாகவே இருந்தது. அதனால் தான் ஆம் ஆத்மியின் வாக்குகள் எங்களுக்கு வந்து சேருவதற்கு பதிலாக பாஜகவின் வாக்குகளாக மாறிவிட்டன," என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர் மத்திய வர்க்கத்தினர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். ஏன் என்றால் அவர் பொய்யை பரப்புகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவரை ஒரு ஏமாற்றுக்காரராக மக்கள் பார்க்கின்றனர்," என்று கூறினார். "ஆம் ஆத்மி கொண்டு வந்த திட்டங்களுக்காகவே அவர்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளதே தவிர அவரின் கொள்கைகளுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. தொழில்முனைவோர்கள், நடுத்தர வர்க்கத்தினர், மேட்டுக்குடியினர், தலித்கள் உட்பட பலரும் அந்த கொள்கைகளை நிராகரித்துவிட்டனர்," என்று ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி குறித்து பேசினார். காங்கிரஸின் தோல்விக் குறித்து பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கேவை தவிர வேறு யாரும் சமூக நீதி குறித்து பேசுவதில்லை. கள அளவில் யாரும் இது குறித்து பேசவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரச்னைகள் இப்போதும் நிலவுகிறது என்றும் அவர் கூறினார். இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை - ஆம் ஆத்மி தோல்வி குறித்து திருமா பேச்சு மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒற்றுமையாக இல்லை என்றும், பாஜகவின் டெல்லி தேர்தல் வெற்றி தேசத்திற்கான பின்னடைவு என்றும் விமர்சித்துள்ளார். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் "டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஆம் ஆத்மி இந்த அளவு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால் அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகவே கருத வேண்டியதாக உள்ளது. நியாயமான முறையில் இந்த தேர்தல் நடைபெற்றிருக்குமா என்ற ஐயத்தை இது எழுப்புகிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்தத் தேர்தலை சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளை பின்னுக்குத்தள்ளி விட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் திசை வழியே சிந்திக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். விதி மாற்றத்தால் விலை போகும் பொது பயன்பாட்டு நிலங்கள்; 'வருங்கால சந்ததிக்கு ஆபத்து' - எச்சரிக்கும் ஆர்வலர்கள்6 பிப்ரவரி 2025 வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை: ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு - ஷேக் ஹசீனா கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 முந்தைய தேர்தல் டெல்லியில் 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2015ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களையும், 2020இல் 62 இடங்களையும் வென்றது. ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை இழந்தால், அது அக்கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமையும். கடந்த பத்தாண்டுகளில், டெல்லி மற்றும் பஞ்சாபில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததன் மூலம், ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி. அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 ஆவணமற்ற இந்திய குடியேறிகளை கைவிலங்கிட்டு திருப்பி அனுப்பியது பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார் 2025 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவும் பாஜகவே வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தன. ஆம் ஆத்மி இரண்டாம் இடத்திற்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவானது 60.4% மட்டுமே. கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான வாக்குப்பதிவு. 2013-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 66% வாக்குகள் பதிவாகியிருந்தது. 2015-ம் ஆண்டு தேர்தலில் 67% ஆக வாக்குகள் பதிவாகின. 2020-ம் ஆண்டு தேர்தலில் 63% ஆக வாக்குகள் பதிவாகின. தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் 60.4% வாக்குகளே பதிவாகியுள்ளன. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 தொகுதிகளில் 12 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். டெல்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 83.49 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள். 71.74 லட்சம் வாக்காளர்கள் பெண்களாவார்கள். டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடிக்குமா பாஜக? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?5 பிப்ரவரி 2025 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SONU MEHTA/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி முதல்வர் ஆதிஷி கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது என்ன? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக 2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரேவுடன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. அண்ணா ஹசாரேவுடன் அர்விந்த் கேஜ்ரிவாலும் அந்த போராட்டங்களில் பங்கேற்றார். மேலும் காங்கிரஸை வெளிப்படையாக அவர் விமர்சனம் செய்தார். 2013-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸை அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்தார். இருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் ஆதரித்தது. முதல்முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் முதல் அமைச்சரானார். 2013-ஆம் ஆண்டு தேர்தலில் தான் இறுதியாக பாஜக இரட்டை இலக்கங்களில் தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக அந்த தேர்தலில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் வெகு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2013-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி 2015 மற்றும் 2020 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 2013-ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி 29% வாக்கு வங்கியை கைப்பற்றியது. காங்கிரஸின் வாக்கு வங்கி அப்போது 25% ஆக இருந்தது. மேலும் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பாஜக டெல்லியில் 30%-க்கும் மேல் வாக்கு வங்கியை வைத்திருந்தது. 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2015-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெறும் மூன்றே தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அதன் வாக்கு வங்கியானது 30%க்கும் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று 50% வாக்கு வங்கியை தன் வசமாக்கியது. 2020-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அதன் வாக்கு வங்கி 50%க்கும் அதிகமாகவே இருந்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கூறிக் கொள்ளும்படியான வெற்றியைக் கூட பெறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy12ep8g0mo
-
'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?
நமது மண்ணிலும் வெளித்தெரியாமல் நடக்கலாம்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
உயிரோடு இருப்பவரை போட்டுத் தள்ளலாமா?! நீங்கள் சொல்பவர் சுப முத்துக்குமார் அண்ணை.
-
12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள், 154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்
08 FEB, 2025 | 12:18 PM (கனகராசா சரவணன்) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித்ரோகன ஆகியோர் உட்பட 12 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. குறித்த இடமாற்றங்களுக்கு அமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/206128
-
விண்வெளி பாய்ச்சல்; விண்வெளி ஆராய்ச்சியில் ஒட்சிசன், ரொக்கெட் எரிபொருளை உருவாக்கும் சீனா
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 05:21 PM சீனாவின் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் முதன்முறையாக ஒட்சிசன் மற்றும் ரொக்கெட்டுக்கு தேவையான எரிபொருளுக்கான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் விண்வெளியின் எதிர்கால ஆய்வுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. முதல் முறையாக பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பம், ஒட்சிசன் மற்றும் ரொக்கெட் எரிபொருளுக்கு தேவையான பொருட்களை உருவாக்கி டியாங்காங் விண்வெளி நிலையத்தில் உள்ள Shenzhou-19 குழுவினர் 2030 க்கு முன் நிலவில் தரையிறக்கம் உட்பட நீண்ட கால விண்வெளி ஆய்வுக்கு வழி வகுத்துள்ளனர். 12 பரிசோதனைகள் டிராயர் வடிவ சாதனத்திற்குள் நடத்தப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் வினையூக்கிகளைப் பயன்படுத்தி கார்பன் டை ஒக்சைட் மற்றும் தண்ணீரை ஒட்சிசனாக மாற்றுகிறது, அதேநேரத்தில் எத்திலீன், ஹைட்ரோகார்பனை உருவாக்குகிறது, இது விண்கல உந்துசக்திகளை உருவாக்க பயன்படுகிறது என சீனா மேன்ட் ஸ்பேஸ் (சிஎம்எஸ்) இணையதளம் தெரிவித்துள்ளது. மனித உயிர்வாழ்வதற்கும், விண்வெளியில் ஆய்வு செய்வதற்கும் முக்கியமான தொழில்நுட்ப ஆதரவை இந்த வேலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/206087
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் - தயாசிறி Published By: DIGITAL DESK 2 07 FEB, 2025 | 08:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பிரதமரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7 ) நடைபெற்ற தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல் தொடர்பான தனியார் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு நாங்கள் ரஷ்யாவுக்கு சென்று இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தோம். அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை பொறுப்பான அமைச்சர் இலங்கையர்கள் தொடர்பில் தவறான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இலங்கையர்கள் பலவந்தமான முறையில் ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இலங்கையர்களில் பெருமளவிலானோர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் உடல்களை இலங்கைக்கு அனுப்புவதாக ரஷ்ய அதிகாரிகள் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் செயற்படவில்லை.. ஆகவே ரஸ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன். நீர் சுத்திகரிப்பின் போது பயன்படுத்தப்படும் குரோமியம் இராசாயன பதார்த்தத்தின் மூலக்கூறின் அளவு 10 மி.கி அதிகமாகவே காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இதனால் மனித உடலுக்கு மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துங்கள். நாட்டில் இன்று குழாய் நீர் பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. நீர் சுத்திகரிப்பின் போது பயன்படுத்தப்படும் குரோமியத்தின் அளவு 10 மி.கி ஆக காணப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கிரீன் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த குரோமியத்தின் அளவு 10 மி.கி இற்கும் அதிகமாகவே காணப்படுகிறது. 10 மி.கி இற்கும் அதிகமானதாக அளவுடைய குரோமியத்தை நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் போது மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/206106
-
ஜோலார்பேட்டை: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம் - பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 7 பிப்ரவரி 2025 எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் "என் வயிற்றில் குழந்தை உள்ளது. நான் அந்த மாதிரி பெண் இல்லை. உனக்கும் அக்கா, தங்கை இருக்கும் என சத்தம் போட்டேன். ஆனால், அந்த நபர் எனது வலது கையை உடைத்து ரயிலில் இருந்து வெளியில் தள்ளிவிட்டான்" எனக் கூறி கலங்குகிறார் ஆந்திராவை சேர்ந்த அந்தப் பெண். வியாழக்கிழமையன்று காலை (பிப்ரவரி 6) கோவை-திருப்பதி இன்டெர்சிட்டி ரயிலில் வந்த பெண்ணுக்கு ஜோலார்பேட்டை அருகே நேர்ந்த துயரம் இது. இந்த வழக்கில் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்ற நபரை ரயில்வே போலீஸ் கைது செய்துள்ளது. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் கூறியது என்ன? கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி? இரவில் தனியாக பயணிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக போராட்டம் ஏன்? ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர், தனது கணவருடன் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தங்கி டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண், கடந்த 6ஆம் தேதி காலை கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டெர்சிட்டி ரயிலில் பயணிப்பதற்காக திருப்பூரில் ஏறியுள்ளார். சித்தூரில் உள்ள தனது தாயைப் பார்ப்பதற்காக அவர் இந்தப் பயணத்தைத் தனியாக மேற்கொண்டுள்ளார். ரயிலில் என்ன நடந்தது? ரயிலின் பின்பக்கத்தில் பெண்களுக்கான பொதுப் பெட்டியில் அவர் பயணித்துள்ளார். இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை நெருங்கும்போது அந்தப் பெண் மட்டுமே பெட்டியில் இருந்துள்ளார். "காலை 10.45 மணியளவில் ஜோலார்பேட்டைக்கு ரயில் வந்தபோது என்னுடன் பயணம் செய்த பெண்கள் அனைவரும் இறங்கிவிட்டனர். ரயில் கிளம்பும் நேரத்தில் அந்த நபர் ஏறினார். இது பெண்கள் பெட்டி எனக் கூறிவிட்டு உடனே இறங்குமாறு கூறினேன்," என்கிறார் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண். பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்7 பிப்ரவரி 2025 தலித் பெண் படுகொலை: 'பதவியை ராஜினாமா செய்வேன்' என கூறிய எம்.பி4 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,விசாரணையில், கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஹேமந்த் ராஜ் என்பது தெரிய வந்தது ஆனால், "அந்த நபரோ, 'தெரியமல் ஏறிவிட்டேன். ரயில் கார்டு கொடியைக் காட்டிவிட்டார். அடுத்து காட்பாடி ஸ்டேஷன் வரும்போது இறங்கிவிடுகிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். அதற்குள் ரயில் நகர்ந்துவிட்டது," என பாதிக்கப்பட்ட பெண் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசியுள்ள அவர், "ரயில் பெட்டியில் அங்கும் இங்கும் அவன் உலாவிக் கொண்டிருந்தான். பிறகு பாத்ரூமுக்குள் சென்று ஆடையைக் கழட்டிவிட்டு வந்தான். என்னுடைய ஆடையைக் கழட்ட முயற்சி செய்தான். 'என் வயிற்றில் குழந்தை உள்ளது. நான் அந்த மாதிரி பெண் இல்லை. உனக்கும் அக்கா, தங்கை இருக்கும். இப்படியெல்லாம் பண்ண வேண்டாம்' என சத்தம் போட்டேன். ரயிலை நிறுத்துவதற்காக செயினை இழுக்க முயன்றேன். அதற்குள் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்தான்" என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அந்த நபரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியாக கழிவறைக்குள் செல்லவும் அந்தப் பெண் முயன்றுள்ளார். "என்னை ரயில் படிக்கட்டுக்கு அருகில் வைத்து அடித்தான். வலது கையை உடைத்தான். அவனிடம் இருந்து தப்பிக்க பத்து நிமிடம் வரை பேராடினேன். திடீரென எட்டி உதைத்தான். அதன் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை" என அவர் கூறியுள்ளார். ஆவணமற்ற இந்திய குடியேறிகளை கைவிலங்கிட்டு திருப்பி அனுப்பியது பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?7 பிப்ரவரி 2025 அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகள் பிடிபடுவது எப்படி? அவர்களை நாடு கடத்தும் முடிவை எடுப்பது யார்?7 பிப்ரவரி 2025 'அரை மணிநேர போராட்டம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இதே தகவலை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்தப் பெண் கடுமையாகப் போராடியதாகவும் உதவி கேட்டு சத்தம் போட்டதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நபர் கீழே தள்ளிவிட்டதில் லத்தேரி என்ற ரயில் நிலையத்தில் அந்தப் பெண் விழுந்திருக்கிறார். தலை, கை, கால் என பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்து பொதுமக்கள் மீட்டுள்ளனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. "ஜோலார்பேட்டையில் ரயில் நகரத் தொடங்கிய நொடியில் இருந்து அரை மணிநேரம் அவனிடம் இருந்து தப்பிக்கப் போராடினேன். வேறு எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது. இப்படிப்பட்ட நபர்கள் வெளியிலேயே நடமாடக்கூடாது" என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். 'வழியில் சடலங்களைப் பார்த்தோம்' - காடு, மலை, கடலைத் தாண்டி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா சென்ற இந்தியர்கள்7 பிப்ரவரி 2025 டிரம்பின் அடுத்த உத்தரவு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதிக்கக் காரணம் என்ன?7 பிப்ரவரி 2025 தமிழ்நாடு அரசின் மீதான விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஆளும் கட்சியை அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. "கர்ப்பிணிப் பெண் என்றுகூடப் பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ரயிலில்கூட பெண்கள் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் காட்பாடியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்துள்ளனர். விசாரணை முடிவில் கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஹேமந்த் ராஜ் என்பது தெரிய வந்தது. அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். இந்த நபர் மீது, இளம்பெண் ஒருவரைத் தாக்கி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டது, பெண் ஒருவரைக் கொலை செய்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 கேரளா: 15 வயது தனியார் பள்ளி மாணவர் தற்கொலையில் நீடிக்கும் மர்மம் - கொடூரமான ரேகிங் காரணமா?6 பிப்ரவரி 2025 தேசிய மகளிர் ஆணையம் விசாரணை Twitter பதிவை கடந்து செல்ல NCW condemns the brutal sexual harassment of a pregnant woman on a moving train near Chennai. Despite traveling in the women’s compartment, she was attacked by a group of men—raising serious concerns about women’s safety in the state. Under the directions of NCW Chairperson, the… — NCW (@NCWIndia) February 7, 2025 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு கர்ப்பிணிப் பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், தமிழ்நாட்டில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாகக் கூறியுள்ளது. தமிழ்நாடு டிஜிபிக்கு இதுதொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதோடு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை உள்பட விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gz8yl0j58o
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்துச்செய்ய வேண்டும் ; ரவி கருணாநாயக்க
07 FEB, 2025 | 08:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே வழங்கப்படுகின்றது. ஆகவே இந்த நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் . அரசியல்வாதிகள் ஓய்வூதியம் பெறுவதை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மக்கள் மத்தியில் பெரும் விரக்தி ஏற்பட்டுள்ள விடயமொன்றை குறிப்பிடுகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் ஓய்வூதியம் பெறுவதை மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர் ஆகவே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வழங்கப்படுகின்றது என்ற விமர்சனங்கள் உள்ளன. இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும். அந்த நிதியை சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சேவைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று கேட்கின்றேன். இதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான மக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளது. இந்த நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றேன். மக்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகவே நாங்கள் இருக்கின்றோம். இதன்படி நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை செயற்படுத்த வேண்டும். 215 பேர் ஓய்வூதியத்தை பாராளுமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் நாட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓய்வூதியத்தை பெறுவது போன்றே காண்பிக்கப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த யோசனையை முன்வைக்க வேண்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குங்கள். அப்போது அவர்கள் மக்களுக்கான சேவையாளர்களாக இருப்பர். மலேசியா, இந்தியா போன்ற நாடுகளை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனூடாக புதிய கலாச்சாரத்தை உருவாக்கி பாராளுமன்றத்தை நம்பிக்கையுடனான கௌரவான இடமாக மாற்ற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/206095
-
இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் அசைக்க முடியாத ஆதரவு தொடரும் - பாதுகாப்பு செயலாளரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் உறுதி
Published By: DIGITAL DESK 2 07 FEB, 2025 | 08:01 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் இதன் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதோடு, பண்டைய வரலாற்றிலிருந்து பிணைந்திருக்கும் இந்திய - இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடல்சார் பாதுகாப்பு சவால்கள் மற்றும் அவசரகால பேரிடர் சூழ்நிலைகளுக்கு பதிலளிப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை இந்திய உயர் ஸ்தானிகர் உறுதிப்படுத்தினார். இந்தியா இன்றுவரை வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய பங்கையும் உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டார். https://www.virakesari.lk/article/206105