Everything posted by ஏராளன்
-
மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்துமாறு உத்தியோகபூர்வ சுற்று நிரூபத்தை வெளியிடுங்கள் - மலையக சிவில் அமைப்புக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
Published By: DIGITAL DESK 2 07 FEB, 2025 | 08:05 PM (எம்.மனோசித்ரா) மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ளன. சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் அவர்கள் 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், பிறப்புசான்றிதழ் உள்ளிட்டவற்றில் அவ்வாறு அடையாளப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே அந்த மக்களை சகல ஆவணங்களிலும் 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்துமாறு அரசாங்கம் சுற்று நிரூபத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி பி.முத்துலிங்கம் வலியுறுத்தினார். கண்டி - சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மலையக தமிழ் சமூகம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை என்பவற்றின் சமூக, பொருளாதார அந்தஸ்தை விருத்தி செய்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய, பெருந்தோட்ட அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்டோரு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன. அவை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக வெள்ளிக்கிழமை (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் கடந்துள்ளன. அதற்காக பல்வேறு நிகழ்வுகள் கூட ஏற்பாடு செய்யப்பட்டன. அதற்கமைய கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் மலையக மக்களின் 200 வருட வரலாற்றை நினைவு கூறும் வகையில் நுவரெலியாவில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்ததோடு, அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஏற்புரைகளையும் அரசாங்கத்திடம் கையளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்த முன்மொழிவுகளை தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமும் கட்சிகளிடமும் கையளித்திருந்தோம். இந்நிலையிலேயே கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து அந்த முன்மொழிவுகளில் நிறைவேற்றக் கூடிய சில பரிந்துரைகள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தோம். இந்த பரிந்துரைகள் பெருந்தோட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர்ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அந்த மக்களுக்காக சட்ட ரீதியில் இலகுவாக நிறைவேற்றக் கூடிய யோசனைகளையே பரிந்துரைத்துள்ளோம். அந்த வகையில் 200 ஆண்டுகள் இலங்கையில் வாழும் பிரஜைகள் என்ற அடிப்படையில் அந்த மக்கள் தம்மை 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர். கடந்த காலங்களில் பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டதற்கமைய தற்போதைய சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் 'இந்திய வம்சாவளி தமிழர்" என்ற சொற் பதத்துக்கு அருகில் 'மலையகத் தமிழர்" என்ற சொற்பதமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதும் மலையகப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்த பின்னர் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் போது 'மலையகத் தமிழர்" என்று அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டதைப் போன்று ஏனைய சகல அரச ஆவணங்களிலும் 'மலையகத் தமிழர்" என அடையாளப்படுத்துமாறு அரசாங்கம் சகல அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கும் சுற்றுநிரூபத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதற்கமைய பிறப்பு பதிவு மற்றும் திருமணப் பதிவு உள்ளிட்ட முக்கிய சந்தர்ப்பங்களில் அவர்களை 'மலையகத் தமிழர்" என அடையாளப்படுத்த வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். மேலும் தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 74 000 வீடுகளுக்கு இன்னும் உரித்து வழங்கப்படவில்லை. அவற்றை வழங்குவதற்கான சுற்று நிரூபத்தையும் வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேசசபையின் நிர்வாகம் தோட்டத் துறைக்கு செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டதன் விளைவாக 2018ஆம் ஆண்டு பிரதேசசபை திருத்தச்சட்டத்தின் ஊடாக அவற்றின் செயற்பாடுகளை தோட்டங்களில் முன்னெடுப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றோம். இவை தவிர மலையக மக்களின் சுகாதார பிரச்சினைகள், தோட்ட வைத்தியசாலைகளை கிராம வைத்தியசாலைகளாக்குதல், கல்வித்துறை மேம்பாடு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள லயன் அறைகளுக்கான மாற்று குடியிருப்புக்கள் என்பவை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் முன்மொழிவுகளைக் கையளித்திருக்கின்றோம். பிரதமர் மற்றும் அமைச்சர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதால் அவர்கள் இதனை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/206101
-
மலையகத்தில் கல்வி, வீடமைப்பு , வீதி போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்க நாம் நடவடிக்கை எடுப்போம் - கிட்ணன் செல்வராஜா
07 FEB, 2025 | 08:25 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கும் நாங்கள் மலையகத்தில் இருக்கின்ற கல்வி, வீடமைப்பு மற்றும் வீதி போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் முன்வைக்கப்பட்ட தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹேஷா விதானகே முன்வைத்த பிரேரணையை நாங்கள் ஆதரிக்கின்றோம். ஆனால் அவருடைய பிரேரணையானது முதலைக் கண்ணீர் வடிக்கும் பிரேரணை போன்றது. 1992ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள 449 பெருந்தோட்டங்களை தனியார் முதலாளிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே அடகு வைத்தது. அதன்போது எந்தவொரு வேலைத்திட்டங்களையும் முன்வைக்காத அமைப்பைச் சேர்ந்த ஒருவரே இன்று இந்த பிரேரணையை முன்வைத்திருக்கிறார். மலையகத்திலுள்ள தோட்டங்களை வகைப்படுத்தினாலும் அங்குள்ள வீதிகள் வகைப்படுத்தப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் ஏ, பி மற்றும் ஈ வகுப்பு சாலைகள் உள்ளன. இவ்வாறாக 12,567 கிலோ மீற்றர் தூர வீதிகள் உள்ளன. தோட்டங்களிலும் அவ்வாறான வீதிகள் உள்ளன. அவை வீதிகளாக அன்றி குன்றும் குழியுமாக காணப்படுகின்றன. இவ்வாறான நிலையிலேயே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. 76 வருடங்களாக நாட்டை ஆண்ட பிற்போக்குவாத ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, ஆட்சியாளர்களுக்கு தூணாகவும் துணையாகவும் வாளாகவும் இருந்த மலையகத்து ஜாம்பவான்கள் என கூறிக்கொள்கின்ற தமிழ் தலைவர்களும் இதற்கு வகை சொல்ல வேண்டும். எனவே ஜனாதிபதி தோழர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமத்தில் இருக்கும் நாங்கள் மலையகத்தில் இருக்கின்ற கல்வி, வீடமைப்பு மற்றும் வீதி போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து, மலையகத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/206093
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன? படக்குறிப்பு, திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர். 8 பிப்ரவரி 2025, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். நிலவரம் என்ன? முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது. திமுக - 7,961 வாக்குகள் நாதக - 1081 வாக்குகள் வித்தியாசம் - 6,880 வாக்குகள் இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர் என்றும், மொத்தம் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg5yp3pr9n6o
-
14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் நடைபெறவுள்ளது
14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில் யாழ். இந்து Published By: VISHNU 07 FEB, 2025 | 08:17 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான 14ஆவது இந்துக்களின் சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து கல்லூரி அணி பலமான நிலையில் இருக்கிறது. போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் யாழ். இந்து கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கே. பரஷித் 39 ஓட்டங்களையும் வி. விதுசன் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் எஸ். சுபர்ணன் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க, கொழும்பு இந்து கல்லூரி அணியை விட 152 ஓட்டங்களால் யாழ். இந்து கல்லூரி அணி முன்னிலையில் இருக்கிறது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ். இந்து அணி, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அறுவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். அவர்களில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மத்திய வரிசை வீரர் வி. விதுஷன் 9 பவுண்டறிகளுடன் 49 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட அணித் தலைவர் கே. பரஷித் (20), எஸ். சுபர்ணன் (16), ரி. பிரீத்திகன் (14), ரீ. பிரீமிகன் (12), ஜே. பவானன் (12), ஐ. ஸ்ரீவஸ்தன் (11) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். கொழும்பு இந்து பந்துவீச்சில் விஸ்வநாதன் யுவராஜ் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பத்மநாதன் ஸ்ரீ நிதுசன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராமநாதன் தேஸ்கர் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து (பம்பலப்பிட்டி) சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய தவகுமார் சந்தோஷ் 8 பவுண்டறிகளுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட சுரேஷ் குமார் மிதுஷிகன் (13) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். யாழ். இந்து பந்துவீச்சில் கே. நித்தீஸ் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வி. விதுசன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் எஸ். சுபரணன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும். இந்துக்களின் சமருக்கு ஜனசக்தி குழுமம் 3ஆவது வருடமாக அனுசரணை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/206111
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு கைகொடுத்தது; ஆனால், பலமான நிலையை நோக்கி அவுஸ்திரேலியா; ஸ்மித், கேரி ஆகியோர் சதங்கள் குவித்து அசத்தல் Published By: VISHNU 07 FEB, 2025 | 08:48 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் வோர்ன் - முரளிதரன் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அமோக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, இரண்டாவது போட்டியிலும் பிடியை தன்பக்கம் திருப்பிக்கொண்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் பதில் அனித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் குவித்த தொடர்ச்சியான இரண்டாவது சதம், அலெக்ஸ் கேரி குவித்த சதம் என்பன அவுஸ்திரேலியாவை பலமான நிலையை நோக்கி நகர வைத்துள்ளது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக் 229 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 257 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. தனது துடுப்பாட்டத்தை 59 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ், 139 பந்துகளை எதிர்கொண்டு 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் மொத்தமாக 3 மணித்தியாலங்கள் 34 நிமிடங்கள் களத்தில் இருந்தார். அவரது துடுப்பாட்டமே இலங்கை அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது. லஹிரு குமாரவுடன் கடைசி விக்கெட்டில் 33 ஓட்டங்களை குசல் மெண்டிஸ் பகிர்ந்தார். 44 நிமிடங்கள் தாக்குப் பிடித்த லஹிரு குமார 20 பந்துகளை எதிர்கொண்டு 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார். இலங்கையின் முதல் இன்னிங்ஸில் முதலாம் நாளன்று தினேஷ் சந்திமால் 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ குனேமான் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 96 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை முதல் இன்னிங்ஸில் பெற்ற 257 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை நோக்கி நகர்ந்துள்ளது. முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதமிருக்க இலங்கையை விட 73 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ட்ரவிஸ் ஹெட் (21), மானுஸ் லபுஷேன் (4) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். முதல் போட்டியில் இரட்டைச் சதம் குவித்து ஹீரோவான உஸ்மான் கவாஜா இந்தப் போட்டியில் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனால், 3ஆவது விக்கெட்டில் பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் கவாஜா 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார். தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் நிதானத்துட னும் சிறந்த நுட்பத்திறனுடனும் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 239 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை நல்ல நிலையில் இட்டனர். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிவரும் ஸ்டீவன் ஸ்மித் 239 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 120 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கேரி 156 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 139 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் நிஷான் பீரிஸ் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/206112
-
14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் நடைபெறவுள்ளது
இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில் வென்ற யாழ். இந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது 07 FEB, 2025 | 11:38 AM யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது “இந்துக்களின் சமர்” கிரிக்கெட் போட்டி யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று (7) காலை ஆரம்பமாகியுள்ள. இந்த இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. https://www.virakesari.lk/article/206047
-
கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ
இன்றும் சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ Published By: VISHNU 07 FEB, 2025 | 07:49 PM கொழும்பு கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தின் 35வது மாடியில் நேற்று 06ஆம் திகதி வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது, இன்று அதிகாலை தீயணைப்புத் துறையினர் அதை அணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206109
-
‘GovPay’ வசதி இன்று ஜனாதிபதியால் தொடக்கிவைக்கப்படுகிறது
GovPay மூலம் பணம் செலுத்துவது எப்படி தெரியுமா? அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 'GovPay' திட்டத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் Lanka Pay ஆகியவை இணைந்து ஆரம்பித்துள்ளன. இதன் கீழ் முதல் கட்டமாக, இன்று முதல் 16 முக்கிய அரச நிறுவனங்களில் பொது சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது பொது மக்கள் ஒன்லைனில் பணம் செலுத்த முடியும். இந்த நிறுவனங்களில் சில நகர சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா நகர சபை, யாழ்ப்பாண பிரதேச செயலகம், கேகாலை பிரதேச செயலகம், மஹர பிரதேச செயலகம், ரம்புக்கனை பிரதேச சபை, இரத்மலானை பிரதேச செயலகம் மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகம் ஆகியவை குறித்த நிறுவனங்களாகும். மேலும், துறைமுக அதிகாரசபை, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் நம்பிக்கை மேம்பாட்டுக் குழு, அணுசக்தி ஆணைக்குழு, நில அளவைத் திணைக்களம், மொரட்டுவ பல்கலைக்கழகம், ஆயுர்வேதத் திணைக்களம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் ஆகியவையும் 'GovPay' திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஜனாதிபதி நிதிய சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு விரிவுபடுத்தும் பணியும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1978 முதல் தற்போது வரை, ஜனாதிபதி நிதியத்துக்கான விண்ணப்பங்கள் கொழும்பு தலைமை அலுவலகத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 341 பிரதேச செயலகங்கள் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் ஒன்லைனில் பெறுவதற்கான EBMD வசதி ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது திட்டமாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=199839
-
இளம் வயதினரிடையே புற்றுநோய் அதிகரிப்பது ஏன்?
புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மருத்துவர் திலிப் நிகம் பதவி, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர், பாம்பே மருத்துவமனை, மும்பை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புற்றுநோய். இந்தப் பெயரைக் கேட்டாலே நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மட்டுமல்லாது, மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியிலும் அச்ச உணர்வும், விரக்தியும் தோன்றுகிறது. புற்றுநோயின் வரலாறு என்ன? எத்தனை வகையான புற்றுநோய்கள் மனிதகுலத்தைப் பாதித்துள்ளன? இவற்றை அழிப்பதற்கான முயற்சிகளின் பலன் என்ன? உலகத்தில் புற்றுநோயின் வரலாற்றைப் பார்த்தால், கிரேக்க, ரோமானிய புத்தகங்களில் அதுகுறித்த குறிப்புகளைப் பார்க்க முடிகிறது. கிமு 470 முதல் 370 வரை, கிரேக்க மருத்துவத்தின் தந்தை எனக் கருதப்படும் ஹிபோகிரேடஸ், புற்றுநோயைக் குறிப்பிட கார்சினோஸ் அல்லது கார்சினோமா என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். கார்சினோஸ் என்றால் கிரேக்க மொழியில் நண்டு எனப் பொருள். இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஏன்? தோல் புற்றுநோய்: ஏற்படுவது ஏன்? தடுப்பதற்கான வழி என்ன? மருத்துவர்கள் விளக்கம் மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன? தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா? பல புற்றுநோய் நோயாளிகளைப் பார்த்த பின்னர், அவர்களுக்கு கடினமான கட்டிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவை உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவுவதையும் கண்டுபிடித்தனர். நோயின் இறுதிக் கட்டங்களில் வலி பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். புற்றுநோய்க்கு நண்டின் பெயர் ஏன்? நண்டின் முதுகுப் பகுதி மிகவும் கடினமாக உள்ளதுடன் அது தனது கொடுக்கு மூலம் உங்களைக் கடித்தால், தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இந்த இரண்டு அறிகுறிகளும் புற்றுநோயாளிகளிடமும் காணப்படுகின்றன. அதனால்தான் இந்த நோய்க்கு கேன்சர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்7 பிப்ரவரி 2025 அன்டார்டிக் கிரில்: இந்த 'குட்டி ஹீரோ' இல்லை என்றால் திமிங்கலத்துக்குக் கூட பிரச்னைதான் - ஏன்?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரேக்க மருத்துவரான கேலன், ஆன்சோஸ் என்ற பதத்தைப் பிரபலப்படுத்தினார். கிரேக்க மொழியில் ஆன்சோஸ் என்றால் வீக்கம் எனப் பொருள். ரோமானிய மருத்துவரான செல்சஸ் முதல்முறையாக கேன்சர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். லத்தீன் மொழியில் நண்டு, கேன்சர் என அழைக்கப்படுகிறது. எனவே இந்த நோயைக் குறிக்க கேன்சர் என்ற சொல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. புற்றுநோய் புரிந்துகொள்ள முடியாத, குணப்படுத்த முடியாத நோயாகக் கருதப்பட்டது. புற்றுநோய் குறித்த உண்மையான ஆய்வு 17ஆம் நூற்றாண்டில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தொடங்கியது. கடந்த 19ஆம் நூற்றாண்டில் மருத்துவம் முன்னேற்றம் கண்டபோது, புற்றுநோய் குறித்த மர்மங்கள் விலகத் தொடங்கின. உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?30 ஜனவரி 2025 உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்30 ஜனவரி 2025 உடலில் புற்றுநோய் எப்படித் தொடங்குகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புற்றுநோய் குறித்த உண்மையான ஆய்வு 17ஆம் நூற்றாண்டில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தொடங்கியது ஆனால் உடலில் புற்றுநோய் எப்படித் தொடங்குகிறது? அது எப்படி வளர்கிறது? அது உடலின் மற்ற பகுதிகளுக்கு எப்படிப் பரவுகிறது? இவற்றையெல்லாம் கண்டுபிடித்தது, இதுவரை செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளிலேயே இதை மிக முக்கியமானதாக மாற்றுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் புற்றுநோய் குறித்த பல கட்டுக்கதைகளைச் சிதறடிக்கச் செய்துள்ளது. புற்றுநோய் குறித்து தெரிந்துகொள்வதற்கு முன், உடலின் வடிவம் குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மனித உடல் பல பில்லியன் உயிர் அணுக்களால் உருவானது, பல தசைகள் ஒன்றாக இணைந்து உடல் உறுப்புகளை உருவாக்குகின்றன. புதிய உயிரணுக்களின் உற்பத்தி, அவை தங்களது வேலைகளை முறையாகச் செய்வது, அவற்றின் வேலை முடிந்ததும் அழிக்கப்படுவது, புதிய உயிரணுக்கள் உருவாக்கப்படுவது என அனைத்து செயல்பாடுகளும் நமது உடலில் நமக்குத் தெரியாமலேயே நடைபெற்று வருகின்றன. இந்த உயிரணுக்களில் உள்ள மரபணு இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம். புற்றுநோயை உண்டாக்கக் கூடிய காரணிகளுடனான தொடர்பு, தொற்று பாதிப்பு, அல்லது பரம்பரைக் காரணங்களால் மரபணுக்களில் சீர்குலைவு ஏற்பட்டால், மேலே குறிப்பிட்ட கட்டுப்பாடு இழக்கப்படுகிறது. உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்குகின்றன. அவற்றின் அளவு மற்றும் இயல்பில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதுவே புற்றுநோய் எனப்படுகிறது. புற்றுநோய் அணுக்கள், சாதாரண அணுக்களைவிட குறைவான வேகமுடையவையாக இருப்பதுடன், கட்டுப்படுத்தப்படாத விகிதத்தில் வளரக் கூடியவை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் இறப்பதில்லை. அவை உடலின் தற்காப்பு அமைப்பில் இருந்து தப்பி, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரவுகின்றன. அங்கே அவை மற்ற உயிரணுக்களையும் உறுப்புகளையும் சேதப்படுத்துகின்றன. இதைத் தடுப்பது மிகவும் கடினம். இருப்பினும், உடலில் உருவாகும் அனைத்து கட்டிகளும் புற்றுநோயுடன் தொடர்புடையவை அல்ல. சில நேரங்களில், சாதாரண கட்டிகள்கூட உருவாகலாம். ஒரு சாதாரண கட்டி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரவுவதில்லை. ஆனால் ஒரு புற்றுநோய்க் கட்டி உடலின் எந்த உறுப்புக்கு வேண்டுமானாலும் பரவலாம். அது பரவுவதை வைத்து அது புற்றுநோயா இல்லையா என்பதைக் கூறமுடியும். கியான் பரே சின்ட்ரோம் : மகாராஷ்டிராவில் அரிய நோய்க்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - என்ன அறிகுறி?29 ஜனவரி 2025 புகைப் பிடிப்பதை நிறுத்தினால் சர்க்கரை, கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடத் தோன்றுவது ஏன்?24 ஜனவரி 2025 எத்தனை வகையான புற்றுநோய் பரவல் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் இறப்பதில்லை நேரடிப் பரவல்: புற்றுநோய் உயிரணுக்கள் நேரடியாக அடுத்துள்ள உயிரணுக்கள் அல்லது உறுப்புகளைத் தாக்குகின்றன. நிணநீர் பரவல்: புற்றுநோய் அணுக்கள் நிணநீர் அமைப்புக்குள் புகுந்து நிணநீர்க் கணுக்களில் வளர்கின்றன. ரத்தம் மூலம் பரவல்: புற்றுநோய் அணுக்கள் ரத்த நாளங்கள் மூலம் நுரையீரல், எலும்புகள், கல்லீரல் மற்றும் மூளைக்குப் பரவுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடலில் இருக்கும் அனைத்து கட்டிகளும் புற்றுநோயுடன் தொடர்புடையவை அல்ல எத்தனை வகையான புற்றுநோய்கள் உள்ளன? புற்று நோய்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உடல் உறுப்பு வகையைப் பொறுத்து வகைப்படுத்துதல்: புற்றுநோய் எந்த உறுப்பில் தொடங்குகிறதோ அதைப் பொறுத்து பெயரிடப்படும். உதாரணமாக நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை. உயிரணு அடிப்படையில் வகைப்படுத்துதல் கார்சினோமா: இது சாதாரணமான புற்றுநோய் வகை. இது எபிதீலியல் உயிரணுக்கள் அல்லது உடல் உறுப்புகளில் தோன்றுகிறது. கார்சினோமாவின் கீழ் அடினோகார்சினோமா (நுரையீரல், மார்பகம்), பேஸல் செல் கார்சினோமா (தோல்), டிரான்சிஸ்னல் (சிறுநீரகம்) உள்ளிட்டவை உள்ளன. சர்கோமா: இந்த வகைப் புற்றுநோய் இணைப்புத் திசுக்கள் மற்றும் உடலின் துணை உயிரணுக்களில் ஏற்படுகிறது. மெலனோமா: இந்தப் புற்றுநோய், தோலில் மெலனின் உற்பத்தி செய்யும் மெலனோடைப் அணுக்களில் ஏற்படுகிறது. இதுவே உடலில் மிக வேகமாகப் பரவும் புற்றுநோய் எனக் கருதப்படுகிறது. மூளைக்கட்டி: கிளியோபிளாஸ்டோமா மற்றும் அஸ்ட்ரோசைடோமா போன்ற புற்றுநோய்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. இது மூளையில் உள்ள பல்வேறு செல்களால் உருவாகிறது. காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்6 மணி நேரங்களுக்கு முன்னர் 'வழியில் சடலங்களைப் பார்த்தோம்' - காடு, மலை, கடலைத் தாண்டி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா சென்ற இந்தியர்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் ரத்தப் புற்றுநோய் வகைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு புற்றுநோய் கட்டி உடலின் எந்த உறுப்புக்கு வேண்டுமானாலும் பரவலாம் பல்வேறு வகையான ரத்தப் புற்றுநோய்கள் உள்ளன. அவை லுக்கீமியா, லிம்போமா மற்றும் மல்டிபிள் மைலோமா. லுக்கீமியா: எலும்பு மஜ்ஜை வெள்ளை ரத்த அணுக்களை முறையாக உருவாக்குவதில்லை. இதன் விளைவாக, முற்றிலும் வளர்ச்சியடையாத அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி ரத்த நாளங்கள் மூலம் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த நோயில் எந்தக் கட்டியும் காணப்படாமல் போகலாம். லிம்போமா: நிணநீர்க் கணுக்களில் (Lymph Node), நிணநீர் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து நிணநீர்கணுக் கட்டிகளை உருவாக்குகின்றன. மல்டிபிள் மைலோமா: நோய் எதிர்ப்பு அமைப்புக்குக் காரணமான எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து எலும்புகளைச் சேதப்படுத்தும் மைலோமா அணுக்களை உருவாக்குகின்றன. நண்டு போன்ற நோய் என்று ஹிபோகிரேட்டஸ் விவரித்ததில் தொடங்கிய புற்றுநோயின் பயணம் தற்போது உயர்தர அறிவியல் ஆய்வு மூலம் சிகிச்சையளிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. உலகம் முமுவதும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், புற்றுநோய் போன்ற நோய்கள் வெல்லக் கூடியவைதான் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkjp0lj8x1o
-
மாவையின் வீட்டில் பொலிஸார் விசாரணை!
மாவை சேனாதிராஜாவின் வீட்டில் பொலிஸார் விசாரணை 07 FEB, 2025 | 08:20 PM (எம்.நியூட்டன்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த அரசியல்குழுத் தலைவரும் மூத்த தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜாவின் குடும்பத்தவர்களிடத்தில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தருணத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்ட தச்சன்காடு இந்து மயானத்தில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் சார்பில் 'மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள்' என்னும் தலைப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அப்பதாகை காட்சிப்படுத்தப்பட்டமையின் காரணமாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்ட நிலையில் தன்னால் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க முடியாது போனதாகவும், ஆகவே குறித்த பதாகையை காட்சிப்படுத்தியவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சி.வி.கே.சிவஞானத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பதாகையில், சுமந்திரன், சேயோன், பீற்றர் இளஞ்செழியன், சாணக்கியன், ரஞ்சினி, கலையரசன், சத்தியலிங்கம், சயந்தன், குலநாயகம், துரைராஜசிங்கம், சாந்தி ஸ்ரீறிஸ்கந்தராசா, கமலேஸ்வரன், இரத்தினவேல், கண்ணதாசன், சேனாதிராசா, பரஞ்சோதி, செல்வராசா ஆகியோரின் பெயர்களே காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206084
-
ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையே விசேட சந்திப்பு
07 FEB, 2025 | 07:10 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி என்றும், அந்தத் திட்டத்திற்கு ஏற்ப கல்வியை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நாட்டின் மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பதாக நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா (Yohei Sasakawa) இதன்போது தெரிவித்தார். குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆதரவை வழங்க தனது அமைப்பு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இந்த நாட்டின் கிராமப்புற மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக விசேட திட்டங்களைத் தொடங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா (Akio ISOMATA), சசகாவா சுகாதார மன்றத்தின் தலைவர் கலாநிதி டகஹிரோ நன்ரி (Takahiro Nanri), நிப்பொன் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இசிரோ கபசாவா (Ichiro Kabasawa) முதலானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206104
-
கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ
கொழும்பு – கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 35ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ கட்டிடத்தின் 6 தளங்களுக்கும் பரவியுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடுமையாகப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/315164
-
மைத்திரி ஆட்சியில் அமைக்கப்பட்ட மருதங்கேணி - பருத்தித்துறை வீதி தொடர்பில் வழக்கு தொடரத் தீர்மானம் - வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர்
07 FEB, 2025 | 08:21 PM மருதங்கேணி - பருத்தித்துறை வீதியில், அண்ணளவாக ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட வீதியை புனரமைக்க 8 கோடியே 2 இலட்சத்து 92 ஆயிரம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இவ்வீதி தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடுக்கவிருப்பதாகவும் வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். முரளிதரன் தனது இல்லத்தில் நேற்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மருதங்கேணி தொடக்கம் அம்பன் வரையான 16 கி.மீ. தூரம் கொண்ட வீதி பயணிக்க முடியாத நிலையில் சிதைவடைந்து காணப்படுகிறது. வைத்திய தேவைகள், வியாபார நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்பட்ட தொடர் கோரிக்கைகளால் வீதி திருத்தும் பணிக்கு நிதி வந்ததாக தெரிவிக்கப்படும்போதும் வீதி இன்னும் புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை. நோயாளிகளை கொண்டுசெல்வதற்கு பெரும் சிரமம் காணப்படுவதாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி கூறுகிறார். பலதரப்பட்ட கடிதங்களை அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் தொடர்ந்து பணி செய்வதற்கு சிரமமாக உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். மருதங்கேணி - பருத்தித்துறை வீதியில் அண்ணளவாக ஒரு கிலோ மீட்டர் புனரமைப்பதற்கு 8 கோடியே 2இலட்சத்து 92 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 16 கி.மீ தூரம் கொண்ட வீதிக்கு பெருந்தொகையான பணத்தை செலவிட்டு தரம் குறைந்த வீதியாக புனர்நிர்மாணம் செய்துள்ளனர். வீதி படுமோசமாக பாதிக்கப்பட்டு பயணிக்க முடியாத நிலையில் உள்ளது. வீதியை புனர்நிர்மாணம் செய்யாவிடில் இதற்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். இந்த வழக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், பிரதேச சபையினர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்படுமென தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206083
-
காசாவில் இன அழிப்புக்கு எதிராக ட்ரம்புக்கு ஐ.நா.தலைவர் எச்சரிக்கை!
காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை Published By: RAJEEBAN 07 FEB, 2025 | 02:08 PM காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரித்துள்ளார். காசாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து கருத்துதெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இனச்சுத்திகரிப்பு குறித்து எச்சரித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை பயன்படுத்துவது என்பது பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் மனிதர்களாக வாழ்வதற்கான உரிமை பற்றியது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்த உரிமைகள் சாத்தியமாவது எட்டாத தூரத்தில் கைநழுவிகொண்டிருப்பதை பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளார். ஒரு இனக்குழுவை அச்சம்தரும்வகையில் ,திட்டமிட்ட முறையில் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துவதை பூதாகரமானவர்களாக சித்தரிப்பதை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காசாவில் போரை ஆரம்பித்துவைத்த ஹமாசின் தாக்குதலை எதுவும் நியாயப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பழிவாங்கும் விதத்தில் இஸ்ரேல் காசாவை இடைவிடாமல் தாக்கியபோது ஏற்பட்டுள்ள அழிவையும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பயங்கரங்களையும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை டிரம்பின் யோசனை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பிற்கு ஒப்பானது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206067
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை!
டிரம்பின் அடுத்த உத்தரவு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதிக்கக் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர் பதவி, பிபிசி நியூஸ், வெள்ளை மாளிகை 5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மீது தடை விதித்து நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அந்த உத்தரவில் "அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடான இஸ்ரேல் மீது ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை ஐசிசி சுமத்துவதாக" அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடிமக்கள் அல்லது அமெரிக்கக் கூட்டாளி நாடுகளில் உள்ளவர்கள் மீது ஐசிசி விசாரணை மேற்கொள்வதற்கு துணைபோகும் நபர்கள் மீது நிதி மற்றும் விசா தடையை அறிவித்துள்ளார் அவர். வாஷிங்டனுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகை தந்த பிறகு இப்படியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன? காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன? காஸா குறித்த டிரம்பின் பேச்சு இஸ்ரேல், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தில் தள்ளுமா? அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா? கடந்த நவம்பர் மாதம், ஐ.சி.சி. காஸாவில் போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் கூறி, நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோன்று, ஹமாஸ் அமைப்பின் தளபதிக்கும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் அறிக்கையில், நெதர்லாந்தின் ஹேக் எனும் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் ஐ.சி.சி. தார்மீக ரீதியில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு ஒரே நேரத்தில் வாரண்டை பிறப்பித்து சமமாக நடத்துவது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டிருந்தது. நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டிருந்தது என்ன? ஐ.சி.சியின் சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் முன்னேப்போதும் இல்லாத வகையில் அபாயகரமானதாக உள்ளது என்றும், 'துன்புறுத்தல், துஷ்பிரயோகம், மற்றும் சாத்தியமான கைதுக்கு' அமெரிக்கர்களை ஆளாக்கும் வகையிலும் அதன் செயல்பாடுகள் உள்ளது என்றும் டிரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இத்தகைய நடத்தை, அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட அதன் கூட்டணி நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் முக்கிய தேசிய பாதுகாப்பை குறைமதிப்புக்கு உள்ளாக்குகிறது," என்றும் அந்த நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு, "இரு நாடுகளும் (அமெரிக்காவும், இஸ்ரேலும்) வளர்ந்து வரும் ஜனநாயக நாடுகள். இவை முறையாக போர் விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?5 பிப்ரவரி 2025 டொனால்ட் டிரம்ப் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை எங்கு அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளார்?2 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் ஹமாஸுக்கு எதிராக நடைபெற்ற போரில், போர் குற்றங்களை நிகழ்த்தியதாகக் கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தொடர்ந்து விமர்சிக்கும் அமெரிக்கா அமெரிக்கா, ஐ.சி.சி.யில் உறுப்பினராக இல்லை. மேலும், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் தொடர்பாக வெளியாகும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா தொடர்ச்சியாக மறுத்துவருகிறது. தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமை மீது ஐ.சி.சி. கட்டுப்பாடுகள் விதிக்கிறது என்றும், இரான் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான குழுக்களை ஐ.சி.சி. கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் வெள்ளை மாளிகை குற்றம்சாட்டுகிறது. டிரம்ப் தொடர்ச்சியாக இந்த நீதிமன்றத்தை விமர்சனம் செய்து வந்தார். இதற்கு முன்பு அதிபராக பதவி வகித்த போதும் இந்த நீதிமன்றத்தின் மீது தடை விதிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்கானிஸ்தானில் போர்க் குற்றங்களில் அமெரிக்கா ஈடுபட்டதா என்பதை விசாரித்த ஐ.சி.சி. அதிகாரிகள் மீது அவர் தடை விதித்தார். ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அந்தத் தடைகள் நீக்கப்பட்டன. கடந்த மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஐ.சி.சிக்கு தடை விதிக்க வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால், அந்த மசோதா செனட் அவையில் தோல்வி அடைந்தது. யுகோஸ்லாவியா அரசு கலைப்பு, ருவாண்டா இனப்படுகொலை போன்ற நிகழ்வுகளைளைத் தொடர்ந்து, வன்முறை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையில் 2002-ம் ஆண்டு ஐ.சி.சி. உருவாக்கப்பட்டது. ஐ.சி.சியை உருவாக்கிய ரோம் உடன்படிக்கையை 120 நாடுகள் அங்கீகரித்துள்ளன. மேலும், 34 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எதிர்காலத்தில் அந்த நாடுகளும் ஐ.சி.சியை அங்கீகரிக்கலாம். ரோம் உடன்படிக்கையை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. இதுபோன்ற சர்வதேச விவகாரத்தில் ஐசிசி என்பது கடைசி முயற்சியாகும். இது தேசிய அளவிலான அதிகாரிகளால் வழக்குத் தொடர முடியாத நிலையோ, விசாரணை செய்ய முடியாத நிலையில் தான் ஐ.சி.சி வழக்கை விசாரிக்க முன்வரும். முன்னாள் அதிபர் பைடனும், நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக கருத்துகளை முன்வைத்தார். அவர் ஐ.சி.சியின் நடவடிக்கை மூர்க்கத்தனமாக உள்ளது என்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை சமமாக பாவிக்கக்கூடாது என்றும் கூறினார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான டிரம்பின் நட்பு இந்த ஆட்சியில் தொடருமா? சவால்கள் என்ன?31 ஜனவரி 2025 ஸ்வீடனில் குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொலை - வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டிரம்பும் நெதன்யாகுவும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தப் பிறகு ஐ.சி.சி. தொடர்பான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார் டிரம்ப் காஸாவை கைப்பற்றும் முனைப்பில் அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவும் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். அப்போது, காஸாவை அமெரிக்கா எடுத்துக்கொண்டு அங்கே பாலத்தீனர்களை மறுகுடியிருப்பு செய்து, மத்திய கிழக்கின் 'சொர்க்கபூமியாக' மாற்ற திட்டம் ஒன்று அமெரிக்காவிடம் உள்ளது என்று தெரிவித்தார் டிரம்ப். அதனைத் தொடர்ந்து, இந்த நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளின் தலைவர்களும், ஐக்கிய நாடுகளின் சபையும் அமெரிக்காவின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகு, டொனால்ட் டிரம்ப் அவரின் ட்ரூத் சோசியல் பக்கத்தில் மீண்டும் தன்னுடைய முடிவை உறுதி செய்யும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். "சண்டையின் முடிவில் காஸா கரையை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு வழங்கிவிடும்," என்று டிரம்ப் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார். அங்கே பாலத்தீனர்கள் மறுகுடியிருப்பு செய்யப்படுவார்கள் என்றும் அமெரிக்க ராணுவத்தினர் யாரும் அங்கே பணிக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் மீண்டும் உறுதி அளித்தார் டொனால்ட் டிரம்ப். வடக்கு காஸாவில் காணப்படும் 'பேரழிவு நிலை' - அங்கே என்ன நடக்கிறது?30 ஜனவரி 2025 அமெரிக்க அதிபரான பிறகு முதன் முறையாக மோதியுடன் பேச்சு - டிரம்ப் முன்வைத்த 2 விஷயங்கள் என்ன?29 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்மொழிதலின்படி, இந்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் காஸா மக்கள் அங்கிருந்து தற்காலிகமாக வேறொரு இடத்துக்கு செல்வார்கள் ஆனால் அங்கே வசித்து வந்த 2 மில்லியன் பாலத்தீனர்கள் அனைவரும் அங்கே மறுகுடியிருப்பு செய்யப்படுவார்களா என்பது தொடர்பான எந்த தகவலையும் அவர் தெளிவாக தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிகை ஊடகத்துறை செயலர் கரோலின் லிவிட் இது தொடர்பாக புதன்கிழமை பேசியபோது, எந்த ஒரு பணியமர்த்தலும் தற்காலிகமானதே என்று தெரிவித்தார். வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, முன்மொழிதலின்படி, இந்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் காஸா மக்கள் அங்கிருந்து தற்காலிகமாக வேறொரு இடத்துக்கு செல்வார்கள் என்று குறிப்பிட்டார். கேபிடல் ஹில்லுக்கு வந்த நெதன்யாகு அங்கே குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். டிரம்புடன் முக்கிய உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். நெதன்யாகு டிரம்புக்கு தங்கத்தால் ஆன 'பேஜர்' ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேஜர் கருவிகள் மூலம் ஹெஸ்பொலா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை குறிக்கும் வகையில் இந்த அன்பளிப்பு இருந்தது. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். சில ஆயிரம் மக்கள் காயம் அடைந்தனர். இஸ்ரேலோ, இரானால் ஆதரிக்கப்படும் ஹெஸ்பொலா உறுப்பினர்களை தாக்கும் நோக்கில் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறது. ஆனால், லெபனானில் பாதிக்கப்பட்டவர்களில் குடிமக்களும் இருந்தனர் என்று கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6p20565qdo
-
‘GovPay’ வசதி இன்று ஜனாதிபதியால் தொடக்கிவைக்கப்படுகிறது
டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 04:10 PM டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay) ,ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் லங்கா பே (Lanka Pay) ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், கொடுப்பனவு முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. "Govpay" மென்பொருள் மூலம் ஆரம்ப கட்டமாக 16 அரசு நிறுவனங்களின் அனைத்து விதமான கொடுப்பனவுகளை செய்ய முடியும் என்பதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மேலும் 30 அரச நிறுவனங்களில் இந்த மென்பொருளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தொழிநுட்பம் மற்றும் அறிவியலினால் ஏற்படும் முன்னேற்றங்கள் மக்களின் வாழ்வை இலகுவாக்குவதாகவும், இதன் மூலம் வினைத்திறனான, தரமான மற்றும் விரயம் குறைந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். தொழிநுட்பத்தின் வெற்றிகளின் காரணமாகவே உலக வரலாற்றில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு நிலைக்கு உயர்த்த விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் என்பன செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுவதாகவும், அதனால் தூர பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முதல் பிரதேச செயலக மட்டத்தில் குறித்த முறைமையை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். நீண்ட காலத்துக்கு முன்னரே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், சரியான நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையினால் மக்களின் வாழ்க்கையும் நாட்டின் பொருளாதாரமும் பின்னடைந்து காணப்படுவதோடு, இன்றைய தினம் டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளதால், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எமது நாட்டை தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல் எனவும், அதனால் மக்களின் தேவைகளை எந்தவிதமான அழுத்தம் மற்றும் அலைச்சல் இன்றி நிறைவேற்ற முடியும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இயந்திரமயமான வாழ்க்கை முறையினால் எமது நாட்டு மக்கள் பண்பாட்டு ரீதியான வாழ்க்கையை இழந்துள்ளதாகவும், பண்பாட்டு வாழ்வை உருவாக்கிகொள்ள டிஜிட்டல் மயமாக்கல் வசதியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். இந்த மாற்றங்கள் மிக விரைவாக செய்யப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை, வினைத்திறன், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான இடைவௌியை குறைத்து டிஜிட்டல் மயமாக்கல் என்பன எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் எனவும், அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் கடுமையாக பாடுபடுகிறோம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) தலைவரும், டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய உரையாற்றுகையில், வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான திறன்களில் 75% இலங்கை கொண்டிருப்பதாக கூறினார். எவ்வாறாயினும், அதன் அடிப்படையை முழுமையாக திறப்பதற்கு, நாடு எஞ்சியுள்ள இடைவெளியை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்த வேண்டும் என்றும் ஹான்ஸ் விஜேசூரிய கூறினார். பிரதேச செயலக மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்தை செயல்படுத்தும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டதுடன், அடையாளரீதியாக இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. புதிய டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை இலங்கையர்கள் தாம் வசிக்கும் நாடுகளின் தூதரகத்திலிருந்து பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு இணையவழி ஊடாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கான பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் அவர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளமை மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பாகும் என்பதுடன், இது அவர்களின் வாழ்க்கையைப் பல வழிகளில் இலகுபடுத்தும். பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்டமேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதிய செயலாளருமான ரொஷான் கமகே உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206081
-
கச்சதீவு திருவிழாவிற்கான திகதி அறிவிப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் 8 ஆயிரம் யாத்திரீகர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு - யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் 07 FEB, 2025 | 03:24 PM எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (07) யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கச்சதீவு பிரதேசத்தை பொது மக்களின் வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தல் குறித்தான நடவடிக்கைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளார்கள். இந்த திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. குடிநீர் விநியோகம் மற்றும் மலசலகூட வசதிகள் குறித்து ஆராயப்பட்டது. இவ்வருடம் இலங்கையை சேர்ந்த 4,000 யாத்திரீகர்களும் இந்தியாவை சேர்ந்த 4,000 யாத்திரீகர்களும் என 8 ஆயிரம் யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேலதிகமாக உத்தியோகத்தர்கள், ஏனையோர் என ஆயிரம்பேர் உள்ளடங்கலாக 9 ஆயிரம்பேர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்குரிய உணவு வசதிகள் குறித்து ஆராயப்பட்டது. அந்தவகையில் யாத்திரிகர்களுக்கு 14ஆம் திகதி இரவு உணவும், 15ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. போக்குவரத்துக்காக இ.போ.ச இன் பேருந்துகளும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேருந்துகளும் பயன்படுத்தப்படவுள்ளன. 14ஆம் திகதி காலை 4 மணிமுதல் 11.30 வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து அந்த பேருந்துகள் புறப்படும். அவர்களுக்குரிய போக்குவரத்து கட்டணமாக, நெடுந்தீவில் இருந்து கச்சதீவு செல்வதற்குரிய ஒருவழி கட்டணமாக ஆயிரம் ருபாவும், குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு செல்பவர்களுக்குரிய ஒருவழி கட்டணமாக ஆயிரத்து முந்நூறு ரூபாவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறு படகு சேவையில் ஈடுபடுகின்ற படகின் உரிமையாளர்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அதற்குரிய சான்றிதழ்களை கடற்படையினரிடம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் எம்மால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள யாத்திரிகர்கள் தங்களுடைய சுகாதார செயற்பாடுகளை பரிசீலிப்பதற்காக எங்களுடைய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டார். கடந்த வருடத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் அல்லது அதில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. சுங்கத் திணைக்களத்தின் பிரசன்னமும் இன்றைய கூட்டத்தில் இருந்தது. இந்தியாவில் இருந்து வருகின்ற யாத்திரிகர்களை, சரியான நடைமுறைகளுக்கு அமைவாக வரவேற்று அவர்களை ஆலய வழிபாட்டு செயற்பாடுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அடுத்தகட்ட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு, எடுக்கப்படவுண்டிய இறுதித் தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது என்றார். யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ். மறை மாவட்ட குருமுதல்வர், யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், கடற்படையின் பிரதி தளபதி, பொலிஸ் அதிகாரிகள் ஏனையோர் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206066
-
யாழ்.மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பில் சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 03:17 PM யாழ்.மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பாக சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (07) அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே இருந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டு அவை தற்போது மீளப் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வளி மாசுபடுதலின் தன்மைகள் குறித்து அவதானிக்கப்பட்டு அவர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/206074
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; நால்வருக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 04:35 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 பேர் விடுதலை செய்யப் பட்டதோடு, ஏனைய நால்வரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கபட்டிருந்தனர். கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (7) மீண்டும் வழக்கு விசாரணைகளுக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய மீனவர்களில் இரு மீனவர்களுக்கு கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் இரண்டு மீனவர்களையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும்,மேலும் இரண்டு மீனவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்திற்காக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஏனைய 13 பேருக்கும் தளா 50 ஆயிரம் ரூபாய் தண்ட பணத்துடன் கூடிய இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு 13 பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. https://www.virakesari.lk/article/206080
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
07 FEB, 2025 | 12:40 PM ரஸ்ய உக்ரைன் போர்முனையில் இதுவரை 56 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு ரஸ்ய தூதரக தகவல்களை அடிப்படையாக கொண்டு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை பணியகம் போன்றவற்றிற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்காக 554 இலங்கையர்களை ரஸ்யா சேர்த்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள விஜித ஹேரத் எவரையும் ரஸ்யா பலவந்தமாக சேர்த்துக்கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 2025 ஜனவரி 20 ம் திகதி வரை 59 இலங்கையர்கள் ரஸ்ய உக்ரைன் போர்முனையில் கொல்லப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ள அமைச்சர் இவர்கள் குறித்த விபரங்கள் என்னிடம் உள்ளன இவற்றை நாடாளுன்ற ஹன்சார்ட்டில் சேர்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206056
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இந்தியா VS இங்கிலாந்து: இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற மூவர் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் ஷ்ரேயாஸ் அய்யர் 7 பிப்ரவரி 2025, 02:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில், அக்ஸர் படேல் ஆகியோரின் அபாரமான அரை சதத்தால், நாக்பூரில் வியாழக்கிழமை (பிப். 06) பகலிரவாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு நடுவரிசை பேட்டர்கள் ஷ்ரேயாஸ் அய்யர் (59), சுப்மான் கில் (87), அக்ஸர் படேல் (52) ஆகியோரின் அரைசதம் முக்கியக் காரணமாக அமைந்தது. 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியபோது, 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ், சுப்மான் கில் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 94 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்தது. 4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றது, இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்த 3 பேரும் சேர்ந்து அமைத்த இரு பார்ட்னர்ஷிப்கள்தான் வெற்றியை எளிதாக்கியது. சாம்பியன்ஸ் டிராஃபி நெருங்கி வரும் நேரத்தில் நடுவரிசை பேட்டர்கள் வலுவாக பிரகாசிப்பது இந்திய அணிக்கு பலமாகும். 96 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோலி, ரோஹித்துக்கு கடைசி வாய்ப்பு - இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் என்னென்ன? ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன? அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம் IND vs SA: 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது எப்படி? விராட் கோலி இல்லை முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டிருந்தார். "ஒருவேளை கோலி ஆடியிருந்தால், எனக்கு அணியில் இடம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம், "என்று ஷ்ரேயாஸ் அய்யரே பேட்டியில் தெரிவித்தார். வெற்றிக்கு யார் காரணம்? வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "நீண்ட காலத்துக்குப் பின் ஒருநாள் போட்டியில் ஆடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவாக இந்த ஃபார்முக்கு மாற வேண்டும், புரிந்துகொண்டு ஆடவேண்டும் என நினைத்தேன். நல்ல தொடக்கத்தை நாங்கள் வழங்கவில்லை, இருப்பினும் நடுவரிசை பேட்டர்கள் அற்புதமாக ஆடினர். பந்துவீச்சாளர்கள்தான் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டினர். தொடர்ந்து கட்டுக்கோப்புடன் பந்துவீசியது, முக்கிய நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தியது, உத்வேகம் குறையாமல் இருந்தது வெற்றிக்கான காரணம். அக்ஸர் படேலை நடுவரிசையில் களமிறக்க விரும்பினோம், அவரும் சிறப்பாக பேட் செய்தார். கடந்த சில ஆண்டுகளில் அக்ஸர் பேட்டிங் மேம்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராஃபி வரும் நேரத்தில் நடுவரிசை பேட்டிங் வலுப்பெறுவது நல்ல அம்சம். ஒரு அணியாக சரியான திசையில் செல்கிறோம், பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார் இந்தியர்களை கைவிலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா - இதுவரை நடந்தது என்ன? முழு விவரம்5 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முக்கிய நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தியது வெற்றிக்கான காரணம் என ரோஹித் சர்மா கூறினார் அனுபவம், இளமை இந்திய பந்துவீச்சில் அனுபவமும், இளமையும் கலந்திருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும், அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிலும் ஜடேஜா 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். ஷமி 8 ஓவர்களில் ஒரு மெய்டன் 38 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்திய அணி பந்துவீச்சைப் பொருத்தவரை ராணா, ஷமி இருவருமே சிறப்பாகப் பந்துவீசினர். தொடக்கத்தில் ராணா பந்துவீச்சை இ்ங்கிலாந்து பேட்டர்கள் அடித்தாலும் அதன்பின் கட்டுக்கோப்பாக வீசினார். அதேநேரம், அறிமுகப் போட்டியில் ஒரே ஓவரில் 26 ரன்கள் கொடுத்த மோசமான சாதனையையும் ராணா பதிவு செய்தார். அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் என 3 பேருமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். சுழற்பந்துவீச்சுக்கு இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவது இந்த ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜோ ரூட், பெத்தல் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளும் ரஷித் விக்கெட்டும் வீழ்ந்தது. பவர்பிளே ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஓரளவுக்கு ரன்கள் கொடுத்தாலும், நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகியோரின் ஓவர்கள் இங்கிலாந்து ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தது. கேரளா: 15 வயது தனியார் பள்ளி மாணவர் தற்கொலையில் நீடிக்கும் மர்மம் - கொடூரமான ரேகிங் காரணமா?6 பிப்ரவரி 2025 காஸா குறித்த டிரம்பின் பேச்சு இஸ்ரேல், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தில் தள்ளுமா?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா, ஹர்சித் ராணா திறம்பட விளையாடாத ரோஹித் இந்திய பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா கூட்டணி ஏமாற்றம் அளித்தது. 19 ரன்களுக்குள் இருவருமே ஆட்டமிழந்து நெருக்கடியான சூழலை ஏற்படுத்தினர். கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், ரஞ்சிக் கோப்பைத் தொடர் இரண்டிலும் திறம்பட விளையாடாத நிலையில் இந்த ஒருநாள் தொடர் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடந்த 10 இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 70 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஷ்ரேயாஸின் அனல்பறக்கும் அரைசதம் 2 விக்கெட்டுகள் விரைவாக இழந்த நிலையில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் தொடர்ந்து 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ரன் ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். பவர்பிளேயை சரியாகப் பயன்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் அரைசத்தை ஷ்ரேயாஸ் அய்யர் நிறைவு செய்தார். ஷ்ரேயாஸ் களத்தில் இருந்தவரை அணியின் ரன்ரேட் 7-க்குக் குறையாமல் சென்றது. 36 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்த ஷ்ரேயாஸ் அய்யர், பெத்தல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் களத்தில் இருந்த 45 நிமிடங்களில் ஆட்டத்தில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்6 மணி நேரங்களுக்கு முன்னர் விடாமுயற்சி: இரண்டாம் பாதியால் வீண்முயற்சி ஆனதா? - ஊடக விமர்சனம்6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுப்மான் கில் கில், அக்ஸர் பொறுப்பான அரைசதம் 4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். அக்ஸர் படேல் வழக்கமாக 7-வது பேட்டராக களமிறங்கிய நிலையில், அவரை நடுவரிசையில் களமிறக்கினர். தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய அக்ஸர் படேல் கட்டுப்பாடின்றி, சுதந்திரமாக ஷாட்களை அடித்தார். சுப்மான் கில் 38 ரன்கள் சேர்த்திருந்தபோது லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் கால்காப்பில் டிஆர்எஸ் அப்பீல் சென்று தப்பித்தார். அதன்பின் விழித்துக்கொண்டு ஆடிய கில், மிகுந்த கவனத்துடன் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து ஆடி 14-வது அரைசதத்தையும், இங்கிலாந்துக்கு எதிராக முதல் அரைசதத்தையும் பதிவு செய்தார். கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?6 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர் மிகுந்த பொறுப்புடன் ஆடிய அக்ஸர் படேல் 46 பந்துகளில் தனது முதல் அரைசதத்தையும் நிறைவு செய்தார். 28 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. ரஷித் பந்துவீச்சில் அக்ஸர் படேல் 52 ரன்களில் க்ளீன்போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 2 ரன்னில் ரஷீத் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். சுப்மான் கில் 87 ரன்கள் சேர்த்திருந்தபோது மெஹ்மூத் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 221 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த இந்திய அணி, அடுத்த 14 ரன்களுக்குள் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்டியா (9), ஜடேஜா (12) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகுந்த பொறுப்புடன் ஆடிய அக்ஸர் படேல் 46 பந்துகளில் தனது முதல் அரைசதத்தையும் நிறைவு செய்தார் அதிரடி தொடக்கமும், திடீர் சரிவும் இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பில் சால்ட், டக்கெட் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். தொடக்கத்திலிருந்தே ராணாவின் திறமையாக பந்துவீசினார். ராணாவின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டர்கள் என 26 ரன்கள் சேர்த்து சால்ட் அதிரடியாக ஆடினார். இதனால் விரைவாகவே ராணாவின் ஓவரை நிறுத்திவிட்டு அக்ஸர் படேலை பந்துவீச கேப்டன் ரோஹித் அழைத்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 9-வது ஓவரில் அவுட்சைட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு சால்ட் ரன் ஓடினார். 2 ரன்கள் ஓடியநிலையில், 3வது ரன் ஓடத் தொடங்கும்போது, ஷ்ரேயாஸ் ஃபீல்டிங் செய்து பந்தை விக்கெட் கீப்பர் ராகுலிடம் எறிந்தார். ஆனால், சால்ட் ஓடிய வேகத்துக்கு, டக்கெட் ஒத்துழைக்கவில்லை. இதனால், பில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகினார். டக்கெட்டுடன் தகவல் பரிமாற்றம் சரியாக அமையாததால் சால்ட் விக்கெட்டை இழந்தார். ஒருவேளை சால்ட் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும். 75 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆடிய இங்கிலாந்து அணி, அடுத்த 2 ரன்கள் சேர்ப்பதற்குள் சால்ட், டக்கெட், ஹேரி ப்ரூக் விக்கெட்டுகளை பறிகொடுத்து 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனுபவ வீரர் ஜோ ரூட் 2023 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் விளையாடியதால், ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார் என கருதப்பட்டது. ரூட் 19 ரன் சேர்த்திருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து நிலைகுலைந்தது. அதன்பின், கேப்டன் பட்லர், ஜேக்கப் பெத்தல் இருவரும் நடுவரிசையில் விக்கெட்டை ஸ்திரப்படுத்தி, நிதானமாக பேட் செய்தனர். நிதானமாக ஆடிய பட்லர் 58 பந்துகில் அரைசதம் அடித்து (52), ரன்களில் அக்ஸர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்து பட்லர், பெத்தல் கூட்டணி பிரிந்தது. பொறுமையாக பேட் செய்த பெத்தல் 2வது அரைசதம் அடித்து (51) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின், இங்கிலாந்து அணியின் கடைநிலை பேட்டர்கள் லிவிங்ஸ்டோன் (5), பிரைடன் கார்ஸ் (10), ரஷித் (8), மெஹ்மூத் (2) என சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். 206 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 42 ரன்களில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20327ddq54o
-
அதிகரிக்கும் சீன - அமெரிக்க வர்த்தகப் போர்; வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போர் அச்சத்துக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக பீஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பாட் தங்கம் 02.53 GMT மணியளவில் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2 சதவீதம் உயர்ந்து 2,848.69 அமெரிக்க டொலர்களாக இருந்தது. முந்தைய நாள் அமர்வில் 2,853.97 அமெரிக்க டொலர்களை எட்டிய பின்னர் தங்கத்தின் விலையானது புதனன்று உச்சத்தை அடைந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.2 சதவீதம் அதிகரித்து 2,879.70 டொலர்களாக இருந்தது. உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பதட்டத்தைத் தணிக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தை இந்த வாரம் இடம்பெறாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். சீனா, அமெரிக்க இறக்குமதிகள் மீது புதிய வரிகளை விதித்தது மற்றும் ட்ரம்பின் கட்டணங்களுக்கான பதிலில் சாத்தியமான தடைகளுக்கு கூகுள் உட்பட பல நிறுவனங்களை பட்டியலிட்டது. இவ்வாறான பின்னணியில் இரு நாடுளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தால் தங்கத்தின் விலையானது 3,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மூன்று பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கட்டணங்களுக்கான திட்டங்கள் பணவீக்க அபாயங்களை முன்வைக்கின்றன என்று எச்சரித்தனர். இதனிடையே புதனன்று ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.5% உயர்ந்து $32.26 ஆகவும், பிளாட்டினம் 0.8% அதிகரித்து $970.95 ஆகவும் இருந்தது. இந்த விலை உயர்வுக்கு அமைவாக இலங்கையிலும் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் உச்சத்தை அடைந்துள்ளது. https://thinakkural.lk/article/315124
-
2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க மின்சார சட்டத்தை இரத்து செய்து, மின் பாவனையாளர்களின் உரிமையை உறுதிப்படுத்துங்கள்! - அரசுக்கு சஜித் வலியுறுத்தல்
07 FEB, 2025 | 11:13 AM 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக இரத்து செய்து, மின் பாவனையாளர்களின் உரிமையையும் மின்சாரத் துறையின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்துக்கு வலியுறுத்துகிறார். இன்று (07) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிறுவப்பட்டது. இது நாட்டின் மின்சார துறை, பெற்றோலிய துறை மற்றும் நீர் சேவை துறையை ஒழுங்குபடுத்துவதற்காக ஆகும். பின்னர் 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் அமுலுக்கு வந்த பின்னர், மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டன. மின்சாரத் துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் அன்றிலிருந்து ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் மற்றும் 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளின் கீழ் செயல்படும் பொறிமுறையின் கீழ், கொள்கை வகுத்தல் பணி அமைச்சிற்கும், ஒழுங்குபடுத்தல் பணி இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும், உரிமம் பெற்றவர்களின் பொறுப்புகள் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட உரிமம் பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், 2024 ஜூன் 27ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரத் துறை சட்டமானது, இதுவரை தெளிவாக செயல்பட்டு வந்த கொள்கை வகுத்தல் பணிகள், ஒழுங்குபடுத்தல் பணிகள் மற்றும் உரிமம் பெற்றவர்களின் பணிகளை குழப்பமான முறையில் சிக்கலாக்கி, மின்சார துறையின் ஒழுங்குபடுத்தலில் இதுவரை இருந்த தெளிவான செயல்முறையை சிக்கலான நிலைக்கு தள்ளும் சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், 2024 ஜூன் 27ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டம் 2025 ஜூன் மாதத்தில் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்போது நடைமுறையில் உள்ள 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தில் உள்ள துறையின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமான அம்சங்கள் நீக்கப்படும். 1. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான ஏற்கனவே இருந்த ஏற்பாடுகளை நீக்குதல். 2. தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கான ஏற்பாடுகளை நீக்குதல். 3. அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட குறைந்த செலவு உற்பத்தித் திட்டம் இந்த வரைவின் மூலம் நீக்கப்படும். அதன்படி உற்பத்தித் திட்டத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் அமைச்சுக்கு வழங்கப்படும். 4. புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யும் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரமும் அமைச்சுக்கு வழங்கப்படும். 5. மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் நியாயமான செலவின் அடிப்படையில் மின் கட்டணத்தை தீர்மானிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு இருந்த அதிகாரங்கள் அமைச்சருக்கும் அவரால் நியமிக்கப்படும் குழுவிற்கும் மாற்றப்படும். சமீபத்தில் தற்போதைய மின்வலு அமைச்சர் பாராளுமன்றத்தில் மின் கட்டணங்களை 37% உயர்த்த வேண்டும் என கூறினாலும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நாட்டின் மின் நுகர்வோருக்கு 20% கட்டணக் குறைப்பை மேற்கொண்டது 2009ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் கிடைத்த அதிகாரங்களின் காரணமாகும். எனினும், எதிர்காலத்தில் 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், இலங்கை மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சின் அதிகாரிகளின் விருப்பப்படி மின் கட்டணங்கள் தீர்மானிக்கப்படும். இதன் மூலம் மின் நுகர்வோரை சுரண்டும் முறைமை உருவாகும். தற்போதைய அரசாங்கத்தின் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' கொள்கை அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை இந்த தருணத்தில் நினைவுபடுத்துவது முக்கியம். மேற்கோள்: பக்கம் 167 "மின் கட்டண முறைமை, பெற்றோலியம், எரிவாயு விலை சூத்திரம் மற்றும் விலை திருத்த செயல்முறையை மிகவும் நியாயமான மற்றும் வெளிப்படையான முறைக்கு இற்றைவரைப்படுத்தல்" மேலும், தேசிய மக்கள் சக்தி 2024.08.15 அன்று வெளியிட்ட அவர்களின் 'தேசிய வலுசக்தி கொள்கை கட்டமைப்பில்' பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கோள்: "சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சார சட்டம் போதுமான பங்குதாரர் பங்களிப்புடன் செய்யப்படவில்லை. இந்த அழிவுகரமான சட்டத்தை மிகவும் முற்போக்கான சட்டமாக மாற்ற பல்வேறு தரப்பினர் முயற்சித்த போதிலும், தற்போதைய அரசாங்கம் இந்த சட்டத்தை ரகசியமாக வரைவு செய்தது. முறையான பொது ஆலோசனையுடன் மின்சார துறைக்கான புதிய சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்" எனவே, அவர்களே குற்றம் சாட்டிய இந்த அழிவுகரமான சட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்திற்கு நெறிமுறை உரிமை இல்லை. அதன்படி, 2024 ஜூன் 27 மின்சார சட்டத்தை இரத்து செய்வதற்கும், மின்சார துறைக்கான புதிய முற்போக்கான சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கும், மேலும் அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி பெற்றோலிய துறையை ஒழுங்குபடுத்த இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கும் புதிய துறை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்க்கட்சியாக நாம் அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இதன் மூலம் மின் பாவனையாளர்களின் உரிமையையும் மின்சார துறையின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206043
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
காரும் இரட்டிப்பு பவுண்சும் இரட்டிப்பு! அப்ப கணக்கு சரி தானே அண்ணை? அடிபட்ட வாகனங்களே வடிவாக மீளமைத்து விக்கிறாங்கள்! appreciating asset ற்கான காரணம் இறக்குமதி வரி அதிகம்(300%) என நினைக்கிறேன். கடந்த சில வருடங்கள் தான் வாகன இறக்குமதித் தடை உள்ளது என நினைக்கிறேன்.
-
தென்னாபிரிக்கா, பாக்கிஸ்தானுக்கு தூதுவர்களாக முன்னாள் கடற்படை தளபதிகள் ;வெளிநாட்டு தூதரகங்களிற்கு அரசியல் நியமனங்கள்
Published By: RAJEEBAN 07 FEB, 2025 | 10:55 AM முன்னைய அரசாங்கங்களைபோல தேசிய மக்கள் சக்தியும் வெளிநாட்டு தூதரகங்களிற்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் வெளிநாட்டு சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என கடந்தகாலங்களில் விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அரசியல் நியமனங்களில் ஈடுபடவுள்ளது. கடந்த வருடம் ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பதவியேற்ற பின்னர் அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்கவை தவிர அரசியல்ரீதியில் நியமிக்கப்பட்ட அனைத்து தூதுவர்களையும் அரசாங்கம் மீள அழைத்திருந்தது. இது குறித்து ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டுள்ள இராஜதந்திரிகள் மகிந்த சமரசிங்கவின் நியமனமும் அரசியல் நியமனமே ஏன் அவரை மீள அழைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் ஈடுபாட்டை பேணுவதற்கு மகிந்தசமரசிங்க அமெரிக்க தூதுவராக தொடர்ந்தும் பணிபுரிவது அவசியம் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை பேணுவதற்கு தூதுவரின் பங்களிப்பு அவசியமில்லை என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உலகநாடுகளின் தலைநகரங்கள் சிலவற்றிற்கு அரசியல் நியமனங்கள் சிலவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் ஜானக குமாரசிங்க நியமிக்கப்படவுள்ளார். தென்னாபிரிக்காவிற்கான தூதுவராக முன்னாள் கடற்படை தளபதி உதேனி ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை நியுயோக்கில் ஐக்கிய நாடுகளின் தூதுவராக சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்கவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கான தூதுவராக முன்னாள் கடற்படை தளபதி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் முன்னையஅரசாங்கங்கள் தூதுவர் பதவிகளிற்கு இலங்கை வெளிநாட்டு சேவை சாராதவர்களை நியமித்துவந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206041