Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மகள் ஐராவும், தானும் கூட்டுக் குடும்பச் சிகிச்சையில் இருப்பதாக அமீர் கான் கூறினார் எழுதியவர், அனகா பதக் பதவி, பிபிசி செய்தியாளர் "நான் என் தந்தையிடம் ஒருபோதும் பேசுவதில்லை, நான் சொல்வதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டர்." "முன்பு எங்களிடையே நல்ல உறவு இருந்தது. ஆனால், இப்போது இடைவெளி அதிகமாகிவிட்டது." என்ன உறவாக இருந்தாலும் இரு நபர்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுகிறது, அவர்களுக்குள் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. "நான் பல ஆண்டுகளாக எனது நண்பர்/சகோதரி/சகோதரர்/உறவினர்களுடன் பேசவில்லை," என்று மற்றவர்கள் கூறுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். தாயுடன் உடன்படவில்லை, தந்தையுடன் உடன்படவில்லை என இருப்பவர்கள் ஒரே வீட்டிலே ஒன்றாக வாழ்ந்து அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள விரும்பாத நபர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இடையிலான உறவு நாளுக்கு நாள் மோசமடைகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா? இதற்கு குடும்ப மனநல சிகிச்சை அல்லது கூட்டு மனநல சிகிச்சை தீர்வாக இருக்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் விவேக் மூர்த்திக்கு அளித்த பேட்டியில், தானும் தனது மகள் ஐராவும் கூட்டுக் குடும்ப மனநல சிகிச்சையில் இருப்பதாக அமீர் கான் கூறினார். அடிப்படையில், இத்தகைய தெரபி அல்லது மனநல மருத்துவரிடம் செல்வது ஒரு பலவீனமாக இன்னும் கருதப்படுகிறது. மனநோய் கொண்டவர்களே மனநல மருத்துவர்களிடம் செல்வார்கள் என்ற பார்வை உள்ளது. ஆனால் விவாகரத்து கட்டத்தை அடைந்த தம்பதிகள், மனநல ஆலோசகரிடம் சென்று தங்கள் உறவை மேம்படுத்தலாம், தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, விவாகரத்தை தவிர்க்கலாம் என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனநல மருத்துவரிடம் செல்வது இன்னும் பலவீனமாகக் கருதப்படுகிறது ஆனால், மற்ற உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், தொடர்பை மேம்படுத்தவும் வேறுபாடுகளைக் குறைக்கவும், நாம் எவ்வித சிகிச்சைகளையும் பரிந்துரைப்பதில்லை. இதற்கொரு தீர்வாக இருக்கும் குடும்ப மனநல சிகிச்சை அல்லது கூட்டு மனநல சிகிச்சை குறித்து இக்கட்டுரை விளக்குகிறது. குடும்ப மனநல சிகிச்சை என்பது பேச்சு சிகிச்சையின் ஒரு வடிவம். (அதாவது உரையாடுவதன் மூலமாக பிரச்னைகளை சரிசெய்யக் கூடிய சிகிச்சை, இதில் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.) இந்த சிகிச்சை, ஒரு குடும்பம் அல்லது குடும்பத்தின் ஒரு சில உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள உதவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த சிகிச்சையின் நோக்கம் இருவருக்கு இடையிலான கோபம் மற்றும் வெறுப்பைக் குறைப்பது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களிடையே தொடர்பை மேம்படுத்தி, அவர்களின் உறவை மேம்படுத்தி, கோபம் மற்றும் வெறுப்பைக் குறைப்பதுதான் இந்த சிகிச்சையின் நோக்கம். தங்களின் வாழ்க்கையில் நிகழும் எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தையோ அல்லது குடும்பத்தில் நிகழும் விஷயங்களையோ குற்றம் சாட்டும் போதோ அல்லது குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்களின் நடத்தை ஒருவரைத் தொந்தரவு செய்கிறது என்றாலோ, அல்லது அந்நபரின் நடத்தையாலேயே ஒட்டுமொத்த குடும்பமும் சூழப்பட்டிருக்கிறது என்றாலோ இந்த சிகிச்சை பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது. அப்படியிருக்கும்போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அவசியம். ஆனால், அர்த்தமில்லாத பேச்சுவார்த்தைகள் அல்லது குற்றச்சாட்டுகளை மட்டுமே பேசும் அளவுக்கு உறவில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அந்த நேரத்தில்தான் மனநல ஆலோசகரிடம் சென்று இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடும்பத்தின் உள் விவகாரங்களை எப்படி வெளியே கொண்டு செல்வது என மக்கள் இந்த சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள். நிகிதா சுலே மும்பையில் மருத்துவ உளவியல் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். அவர் கூறுகையில், "இந்தியாவில் குடும்பத்தை மையப்படுத்திய கலாசாரம் நிலவுகிறது. இதில், நீங்கள் ஒரே நேரத்தில் பல நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியிருக்கும். அவர்களுடன் உளரீதியாகவும், நிதி, சமூகரீதியாகவும் இணைக்கப்பட்டு இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது, இந்தியாவுக்கு இத்தகைய குடும்ப சிகிச்சை மிகவும் தேவையான ஒன்று" என்கிறார். "உணர்வுரீதியாகத் தொடர்புகொள்வதற்கான வழிகளோ, அந்த உணர்வுகளை மட்டுப்படுத்துவதற்கான வழிகளோ நம்மிடம் இல்லை. இரவு உணவு குறித்தோ அல்லது பணம் அல்லது தொலைக்காட்சியில் என்ன நடந்தது என்பது குறித்தோதான் நாம் பேசுகிறோம். ஒரே நேரத்தில் குடும்பத்தில் உள்ள பலர் காயப்பட்டிருப்பார்கள். பிரச்னைகளைப் பேசினாலோ அல்லது நிபுணரின் உதவியை நாடும்போதோ தீர்க்கப்பட்டுவிடும். ஆனால், வீட்டுக்கு வெளியே பிரச்னைகளைப் பேசுவதை அவர்கள் தவிர்க்கின்றனர்" என்கிறார் அவர். க்ளெவ்லேண்ட் கிளீனிக் (Cleveland Clinic) எனும் இணையதளம், வெவ்வேறு குடும்ப உறுப்பினர்கள் நிபுணரிடம் ஒன்றாகவோ அல்லது வெவ்வேறு குழுக்களாகவோ அமர்ந்து மேற்கொள்ளும் சிகிச்சை குறித்த தகவல்களை வழங்குகிறது. குழந்தைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள்கூட ஒன்றாக அமர்ந்து தங்கள் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டறியலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடும்ப விவகாரங்களை வெளியே சொல்ல முடியாமல் பலரும் தவிக்கின்றனர் இந்த சிகிச்சை மேலும் சில விஷயங்களில் பயனளிக்கும் என்று இந்த இணையதளம் கூறுகிறது. வீட்டில் யாராவது இறந்துவிட்டாலோ அல்லது ஒருவரையொருவர் குற்றம் சாட்டினாலோ என்ன செய்வது? வயதான பெற்றோர்கள், அவர்களின் நடுத்தர வயது குழந்தைகள் மற்றும் இளம் வயது பேரக் குழந்தைகள் இடையிலான தொடர்புப் பாலத்தை எவ்வாறு உருவாக்குவது? பெற்றோர்கள் பிரிவதால், குழந்தைகள் பாதிப்படையும்போது என்ன செய்வது? வீட்டில் யாராவது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது மன நோயுடன் போராடினால், அந்தக் குடும்பம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த சிகிச்சை மூலம் கற்றுக்கொள்ளலாம். சீரடியை சேர்ந்த மனநல மருத்துவர் ஓம்கர் ஜோஷி "ஒருவருக்கு மன அழுத்தமோ அல்லது மனச் சிதைவோ (schizophrenia) ஏற்பட்டால், அவர்களுடைய நடத்தை மிகவும் தொந்தரவை ஏற்படுத்தும். பல நேரங்களில் அவர்கள் ஆலோசனைக்குத் தயாராக இருக்க மாட்டார்கள்," என்கிறார். அப்படியிருக்கும்போது "அவர்களை எப்படிச் சமாளிப்பது என அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவுறுத்துவோம். ஒருவருடைய மனநல பிரச்னையை அவர்களின் குடும்பத்திற்கு விளக்குவதும் குடும்ப சிகிச்சையில் ஒன்றுதான்" என்கிறார் அவர். ஆனால், எத்தனை பேர் இத்தகைய குடும்ப மனநல சிகிச்சைக்குச் செல்வார்கள்? எத்தனை பேர் தங்களுக்குள் உறவு முறிந்துவிட்டதாக ஒப்புக்கொண்டு அதை சரிசெய்ய ஒப்புக்கொள்வார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருவருடைய மனநல பிரச்னையை அவரின் குடும்பத்திற்கு விளக்குவதும் இந்த சிகிச்சையின் ஒரு பகுதிதான் என்கிறார் மருத்துர் ஜோஷி "சிகிச்சை தேவை என்பதைப் பலரும் ஒப்புகொள்வதில்லை. சில தினங்களுக்கு முன்பு ஒரு தாயும் மகளும் வந்திருந்தனர். தாய்க்கு 70 வயதுக்கு மேல் இருக்கலாம், மகள் 40களில் இருக்கலாம். மகள் நன்றாகப் படித்துப் பெரிய பதவியில் உள்ளார். அவருக்கு விவாகரத்தாகி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்," என்றார் ஜோஷி. "மகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என அவரின் தாய் நினைக்கிறார். இதனால் இருவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. தனது தாய் இறந்தால்கூட தான் கவலைப்பட மாட்டேன் என மகள் கூறும் அளவுக்கு இது சென்றிருக்கிறது. தனக்கு உதவி தேவை என்பது நன்கு படித்த அவருக்குத் தெரியவில்லை. தனக்கு தாய்தான் பிரச்னை, அவருக்கு அறிவுரை கூறுங்கள் என்கிறார் மகள்." அடிப்படையில், "மகளின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு குடும்ப சிகிச்சை அளிக்கலாம். ஆனால், தங்களுக்கு சிகிச்சை வேண்டும் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்வதில்லை" என்கிறார் அவர். இதனால், சிகிச்சைக்கு வருபவர்களிடம் நிபுணர்கள் முதலில் சில மருத்துவப் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பதாகவும், அதன்பின் அவர்களின் மனநலன் குறித்துப் பரிசோதிப்பதாகவும் கூறுகிறார் ஜோஷி. மேலும், "ஒருவருடைய இயல்பு, பல்வேறு விஷயங்களுக்கு அவர் எப்படி எதிர்வினையாற்றுகிறார், அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுபவரா அல்லது தனக்குள்ளேயே வைத்துக் கொள்பவரா என்பதைப் பார்க்க வேண்டும். அந்தப் பரிசோதனைகளின் மூலம், அவர்களின் குணநலன்கள், குறைகள் அவருக்கு முன்பாக விளக்கப்படும். இந்த சிகிச்சையில் நாங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கூறுவோம். என்ன செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதைக் கூறுவோம்," என்றார். தலைமுறை அதிர்ச்சிக்கான தீர்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலைமுறை இடைவெளியால் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரே பதில் குடும்ப மனநல சிகிச்சைதான் என மருத்துவர் ஸ்ருத்தி கீர்த்தி ஃபட்னாவிஸ் கூறுகிறார் தலைமுறை இடைவெளியால் ஏற்படும் குழப்பமும் மனநல ரீதியிலானதுதான். உதாரணமாக, ஒரு தந்தை எப்போதும் கோபம் கொண்டு சிறு விஷயங்களுக்கு எல்லாம் தனது மகனை அடித்தால், அந்த மகனும் வளர்ந்து குழந்தை பெற்ற பிறகு இவ்வாறே செய்வார். ஒரு தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சிக்கு சிகிச்சை மேற்கொள்ளாமல், அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது. "இதற்கு இருக்கும் ஒரே தீர்வு குடும்ப மனநல சிகிச்சைதான். நம்முடைய கடந்த கால அனுபவங்களில் இருந்துதான் நம்முடைய நடத்தைகள் உருவாகின்றன. நாம் நினைப்பது தவறு என்பதை ஒருவர் கூற வேண்டும். சரியானது எது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த சிகிச்சையின் மூலம், இந்தத் தலைமுறை அதிர்ச்சியைக் குணப்படுத்தி, அடுத்த தலைமுறையுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும்," என்கிறார் புனேவை சேர்ந்த தெரபிஸ்ட் ஷ்ருதிகீர்த்தி பட்னாவிஸ். இதன் அடுத்த கட்டம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அனைத்து வல்லுநர்களும் சமூகத்தில் குடும்ப மனநல சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என ஒருமனதாக ஏற்றுக் கொள்கிறார்கள் குடும்ப உறவுகள் சிதைவதற்கு என்ன காரணம் என்பதை நிபுணர்கள் கண்டறிகின்றனர். ஏதாவதொரு விஷயம் நடக்கும்போது அதனால் ஏற்படும் கோபத்தைப் பல ஆண்டுகளாக மனதில் வைத்திருப்பதே பெரும்பாலும் இதற்குக் காரணம். பலரும் அந்தச் சம்பவங்களை மறப்பதில்லை. "அப்படிப்பட்ட நேரத்தில் அவற்றை ஏற்றுக்கொண்டு எப்படி உறவை நகர்த்துவது (Acceptance and Commitment Therapy) என்பதற்கான சிகிச்சை வழங்கப்படும். என்ன நடந்ததோ அதை ஏற்றுக்கொண்டு, பிரச்னைகளைத் தீர்ப்பதே இந்த சிகிச்சை" என்கிறார் ஷ்ருதிகீர்த்தி. "நம்மால் எந்தளவு பொறுத்துக்கொள்ள முடியும் என்பதற்கான எல்லையை வரையறுக்க வேண்டும்" என்கிறார் ஜோஷி. இதே கருத்தை வலியுறுத்தும் ஷ்ருதிகீர்த்தி, "நாம் எல்லைகளை நிர்ணயிப்பது இல்லை. முதலில் இது சுயநலமாக இருப்பது போன்று தோன்றும். ஆனால், அதன்மூலம் உறவு மேம்படும். ஏனெனில், ஒருவருக்கொருவர் உள்ள எதிர்பார்ப்புகள் கட்டுப்படுத்தப்படும்" என்கிறார் அவர். குடும்ப மனநல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் அவ்வளவாக இல்லை என அனைத்து நிபுணர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்கின்றனர். நிகிதா சுலே கூறுகையில், "குடும்ப விவகாரங்களை ஏன் வெளியே சொல்ல வேண்டும் எனப் பலரும் கருதுகின்றனர். சிகிச்சைக்காக நீங்கள் சந்திப்பவர்கள் நிபுணர்கள், அவர்கள் உங்களை மதிப்பிடுவதில்லை. பிரச்னைகளைத் தீர்க்க உதவுகின்றனர்." "உதவியை நாடாமல் உங்களுக்குள்ளேயே பிரச்னைகளைப் போட்டுக் கொண்டால் வாதங்களும் சண்டைகளும் தொடர்ந்து, உங்கள் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்துவிடும்" என்றார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gxydpmzyvo
  2. நீரின்றி அமையாது உலகு எனும் வள்ளுவன் வரியில் இருந்து பிறந்த கவிதை நன்று. மழையை நீலக்கண்ணீர் என்பதும் இம்மழைக்காலத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. பிரிவின் வலியும் உணர்த்தப்படுகிறது.
  3. 24 NOV, 2024 | 10:40 AM இந்த ஆண்டில் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்நாட்டு மீனவர்களின் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள், குறைபாடுகளை தீர்ப்பதற்கும் கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199521
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதுவரை இல்லாத அளவில், இந்த ஆண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்டது. எழுதியவர், நாகேந்திரசாயி குந்தவரம் பதவி, வணிக ஆய்வாளர், பிபிசிக்காக அமெரிக்கா தும்மினால், இந்தியாவுக்கு ஜலதோஷம் பிடிக்கும் என்று ஒரு கூற்று உண்டு. அது பங்குச் சந்தை விஷயத்திற்கும் பொருந்தும். அமெரிக்க பங்குச் சந்தையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது நேரடியாக நமது பங்குச் சந்தையைப் பாதிக்கும். அங்குள்ள முதலீட்டாளர்களின் திட்டங்கள் மாறினால், அதுவும் நமது பங்குச் சந்தைகளையே முதலில் பாதிக்கும். பத்து ஆண்டுகளாக இதுபோன்று நடப்பது குறைந்திருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக பங்குச் சந்தைக் குறியீடுகள் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவில், இந்த ஆண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்டது. அனைத்து சில்லறை முதலீட்டாளர்களும் ஒரு லட்சத்தை எட்டப் போகிறோம் என்று கொண்டாடுவதற்குள், வேகமாக ஏறுவது போல் ஏறி, சென்செக்ஸ் புள்ளிகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. தனிநபர் நிதி: நிரந்தர வைப்புத் தொகையில் அதிக வட்டி வழங்கும் திட்டங்கள் என்ன? டாடாவும் தமிழ்நாடு அரசும் சேர்ந்து 'டைட்டன்' நிறுவனத்தை தொடங்கிய கதை - அந்த பெயர் வந்தது எப்படி? வங்கியில் சேமிப்பதை விட்டு பங்குச் சந்தை முதலீட்டிற்கு மாறும் இந்தியர்கள் - லாபமும் அபாயமும் அமெரிக்கா தொடங்கி உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் சரிவு - இந்தியா தாக்குப் பிடிக்குமா? இதுவரை இல்லாத உச்சத்திற்குச் சென்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 10 சதவீதம் வரை சரிந்தன. இதன் விளைவாக, மொத்த பங்கு மதிப்பை (market capitalization) வைத்துப் பார்க்கும்போது, முதலீட்டாளர்கள் சுமார் 50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை இழந்துள்ளனர். இந்த இழப்பு இத்துடன் நின்றுவிடவில்லை. பங்குச் சந்தைகள் ஏன் இவ்வளவு வீழ்ச்சி அடைகின்றன? அப்படி என்ன மாற்றங்கள் நடந்தன? இதற்கான ஐந்து முக்கியக் காரணங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். கடந்த 4 ஆண்டுகளாக நமது சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. 2020 நிஃப்டி, கொரோனாவின் போது 8,084 புள்ளிகளுக்கு குறைந்தது. அதிலிருந்து 4 ஆண்டுகளில் அதிகபட்சமாக 26,178 புள்ளிகள் வரை ஏறியது. அங்கிருந்து 10% சரிந்தாலும், இந்த ஆண்டுக்கான லாபம் 8 சதவீதம் வரை இருந்தது. ஓராண்டில் 19 சதவீதமும், இரண்டு ஆண்டுகளில் 28 சதவீதமும், 3 ஆண்டுகளில் 32 சதவீதமும், நான்கு ஆண்டுகளில் 81 சதவீதமும் லாபம் கிடைத்துள்ளது. ஆறே நாட்களில் கோட்டை கட்டி ஆங்கிலேயருக்கு எதிராக சைகை மொழியில் படை நடத்திய 'ஊமைத்துரை'16 நவம்பர் 2024 சீனாவில் முதலீடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளதால், இந்திய சந்தைகளின் மதிப்பு அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சீனாவின் சந்தைகள் தேக்க நிலையில் இருந்தன. கொரோனாவுக்கு பிறகு சீன சந்தைகள் மீளவில்லை. சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீட்டு எண்(Composite Index) 2007இல் 5,818 புள்ளிகளை எட்டியது. அதன்பிறகு, அந்தச் சாதனையை மீண்டும் எட்டவில்லை. கொரோனா காலத்தில் பாதிக்கு மேல் சரிந்த ஷாங்காய் குறியீடு, அன்றிலிருந்து இந்த செப்டம்பர் வரை கிட்டத்தட்ட அதே அளவில்தான் உள்ளது. இப்போதுதான் 3,300 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்த நேரத்தில் நமது சந்தைகளின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. சீன அரசின் வளர்ச்சி அதிகரித்திருந்த போதும் பொருளாதாரம் பலவீனமாகவே உள்ளது. ஆனால், வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளதால், இந்திய சந்தைகளின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPIs- Foreign Portfolio Investor ) நமது சந்தைகளில் இருந்து லாபம் ஈட்டி, தங்கள் முதலீடுகளை சீனாவின் பக்கம் திருப்பினர். நமது பங்குச் சந்தை குறியீடுகள் நஷ்டம் அடைவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். புல்டோசர் நடவடிக்கைக்கு புதிய வழிகாட்டுதல்கள் - ஏற்கனவே இடிக்கப்பட்ட கட்டடங்கள் பற்றிய வழக்குகள் என்ன ஆகும்?17 நவம்பர் 2024 டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து வலுப்பெறும் டாலர் மதிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்க சந்தைகள் பெரும் ஏற்றம் கண்டன. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, நமது சந்தைகளில் சில மாற்றங்கள் தெரிந்தன. டிரம்பின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்க சந்தைகள் பெரும் ஏற்றம் கண்டன. அங்கு டாலரின் மதிப்பு கூடியது. அதிகப்படியான வட்டி விகிதங்களைக் கட்டுப்படுத்த டிரம்ப் தயங்க மாட்டார். அதற்கான அறிகுறிகள் தென்படுவதால், சில நிதிகள் நமது சந்தைகளில் இருந்து திருப்பி விடப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து 34வது அமர்வு வரை (நவம்பர் 14) நமது சந்தைகளில் நிகர விற்பனையாளர்களாக (Net Sellers) இருந்தனர். அதாவது தொடர்ந்து 34 நாட்களாக நமது சந்தைகளில் இருந்து தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை அக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.94,017 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச விற்பனை. நவம்பர் மாதத்தில் சந்தைகளில் இருந்து இதுவரை ரூ.22,420 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு முழுவதும் அவர்கள் எடுத்த தொகை ரூ.15,827 கோடி. இது, நிகர விற்பனையாளர்கள் ஒரே மாதிரியாகச் செயல்படுவதை குறிக்கிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024 நேரலை: முன்னணி வகிப்பது யார்?23 நவம்பர் 2024 மெக்கா: ஆயுதக்குழு கைப்பற்றிய முஸ்லிம்களின் புனித தலத்தை சௌதி மீட்டது எப்படி?23 நவம்பர் 2024 கார்ப்பரேட் லாபத்தில் சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரிய லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர் சந்தையின் உயர்வு மற்றும் வீழ்ச்சிக்கு, கார்ப்பரேட் முடிவுகள் மற்றொரு முக்கியக் காரணம். கார்ப்பரேட் முடிவுகள் சரியில்லை என்றால் எவ்வளவு பணம் வந்தாலும் பங்குகள் சரியும். இரண்டாம் காலாண்டு முடிவுகள் இப்பொது வெளிவந்துள்ளன. இந்த முடிவுகள் சந்தைப் பிரிவுகளை ஏமாற்றமடையச் செய்துள்ளன. இதனால், அதிகம் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் (Fast moving consumer goods, FMCG), பிற நுகர்வுப் பொருட்கள், சில்லறை விற்பனை, ரியல் எஸ்டேட், மைக்ரோ ஃபைனான்ஸ், கட்டடப் பொருட்கள், பெயின்ட், சிமென்ட், நகர எரிவாயு விநியோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, கெமிக்கல்ஸ் போன்ற பிற துறைகள் வலுவான தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. `ஜே.எம் பைனான்சியல்', 275 நிறுவனங்களை ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. 44 சதவீத நிறுவனங்கள் லாப எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன என அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது. வருவாய் வளர்ச்சி மற்றும் லாபம் கணிசமாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 66 சதவீத நிறுவனங்கள் தங்களது (Employee Pension Scheme) இபிஎஸ் தரத்தைக் குறைத்துள்ளன. இதனால் சந்தைகளும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. செளதி அரேபியாவில் நடந்த ஃபேஷன் ஷோவுக்கு எதிர்ப்பு - இஸ்லாமிய அறிஞர்கள் சீற்றம் ஏன்?19 நவம்பர் 2024 பிரிட்டன் செயற்கைக்கோளை நகர்த்தியது யார்? விண்வெளியில் நடந்தது என்ன? விடை தெரியாத மர்மம்19 நவம்பர் 2024 பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் தற்போது உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.21 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. அரசு மதிப்பிட்டதைவிட சந்தையில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் கணிப்புகளை மீறி பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதற்காக வட்டி விகிதத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி தயாராக இல்லை. மேலும் 2020 மே மாதத்தில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் தற்போது 6.5 சதவீதமாக உள்ளது. அடுத்த ஆண்டுதான் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தைகளைப் பொறுத்த வரை இதுவொரு மோசமான செய்தி. இவை தவிர, பதற்றமான அரசியல் சூழலும், (யுக்ரேன் - ரஷ்யா, இரான் - இஸ்ரேல்) கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும் சந்தைகளின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம். பிரிட்டனில் ஏலம் விடப்பட இருந்த இந்தியரின் மண்டை ஓடு - மீட்கப் போராடும் பழங்குடியினர்21 நவம்பர் 2024 இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்': யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?22 நவம்பர் 2024 உண்மையாகவே ரூ.50 லட்சம் கோடி சொத்து கரைந்துவிட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சந்தைகள் வாழ்நாள் உச்சத்திலிருந்து 10 சதவீதம் வரை சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. அந்த மதிப்பு, சந்தை மூலதனமாகக் கருதப்படுகிறது. பொதுவாக சந்தை வீழ்ச்சியடையும் போது பங்கு விலைகள் குறையும். அப்போது அவற்றின் சந்தை மதிப்பும் குறையும். ஆனால் முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவில் இழப்புகள் ஏற்படும்போது, அவை அனுமான இழப்பாகக் கருதப்பட வேண்டும். அது போலவே செப்டம்பர் 27 முதல், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.50 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்துள்ளனர். கடந்த 27 செப்டம்பர் 2024 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சந்தை மூலதனம் ரூ.478 லட்சம் கோடி. தற்போது ரூ.429 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது சந்தை மூலதனம் சுமார் ரூ.50 லட்சம் கோடி. அதில்தான் இழப்பும் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா - சீனா உறவு எப்படி இருக்கும்? ஓர் அலசல்20 நவம்பர் 2024 அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் - அணுசக்தி கொள்கையில் முக்கிய மாற்றம் செய்த புதின்19 நவம்பர் 2024 சந்தை நிலவரம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 6-7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டுவதில் இந்தியா வெற்றி பெற்று வருகிறது. அதனால்தான் சந்தைக் குறியீடுகளும் அதே அளவில் ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்தன. இதுதவிர, சில்லறை முதலீட்டாளர்களால், சந்தையில் அதிகளவு நிதி பெருகியதால் சந்தைக் குறியீடுகளும் பெருமளவில் அதிகரித்தன. உலகின் வளர்ச்சி விகிதம் இரண்டு அல்லது மூன்று சதவீதமாக மட்டுமே இருக்கும் நேரத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதைவிட இரண்டு மடங்காக இருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு மக்களின் பணப் பரிமாற்ற முறைகள் வியத்தகு முறையில் மாறியுள்ளன. வீடு, கார், உணவு, உடை, தங்கம் ஆகியவற்றின் விற்பனையிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் தெரிகின்றன. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வளர்ச்சியைப் பதிவு செய்த பொருளாதாரம், தற்போது மந்தமடைந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை 70 டாலராக உள்ளது (ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைவான கச்சா எண்ணெய் பெறுகிறது), வயது முதிர்ந்தோர் மக்கள் தொகை, அதிகரிக்கும் அவர்களின் பரிவர்த்தனை செலவு, சேமிப்பில் இருந்து செலவு செய்தலை நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கை, தனிநபர் நுகர்வு அதிகரிப்பு, அதிகரிக்கும் முதலீட்டாளர் முதிர்வு கணக்கு எண்ணிக்கை, பங்குச் சந்தையில் அதிகளவு வரவு நிதிகள், மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த மாறும் மக்களின் மனநிலை போன்று பல காரணிகள் இந்தியாவிற்கு உள்ளன. இலங்கை: தமிழர் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி - தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் எதிர்காலம் என்ன?20 நவம்பர் 2024 ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த மிகப்பெரிய வங்கி கொள்ளை - 53 ஆண்டுகளாகியும் விலகாத மர்மம்21 நவம்பர் 2024 இப்போது முதலீடு செய்யலாமா? நிதி ஆய்வாளர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இப்போதுள்ள சூழ்நிலையில் வருடத்திற்கு 10-12 சதவீத லாபம் கிடைத்தாலும் திருப்தியாக இருக்க வேண்டும். "சில்லறை முதலீட்டாளர்கள், மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய லாபத்தைப் போன்று அதே அளவிலான லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது. இப்போது உள்ள சூழ்நிலையில் வருடத்திற்கு 10-12 சதவிகித லாபம் கிடைத்தாலும் திருப்தியாக இருக்க வேண்டும்," என்று கூறுகிறார் மூத்த சந்தை ஆய்வாளர் பாலசுப்ரமணியம் பிரபாலா. ஜனவரி 2025இல் இருந்துதான், சந்தை நமக்கு சாதகமாக மாற முடியும் எனக் கூறும் அவர், ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவரது முடிவுகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும், "சில்லறை முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். தரமான பங்குகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். தரகு நிறுவனங்கள் வழங்கும் மார்ஜின் டிரேடிங் வசதியை (Margin Trading Facility - MTF) பயன்படுத்தும் நடைமுறையைக் குறைக்க வேண்டும். நம்மிடம் 10 ரூபாய் இருந்தால் 50 ரூபாய் வரை அதிகரிக்க, அவர்கள் வாய்ப்பு தருகிறார்கள். ஆனால், இதனால் சிறு இழப்பு ஏற்பட்டாலும், அதை மீட்கப் பல மாதங்கள் ஆகும்," என்றார். அதோடு, வட்டி அதிகமாகச் செலுத்த வேண்டும் எனக் கூறும் பிரபாலா, அதனால்தான் நீங்கள் முதலீடு செய்து உங்கள் நிதியில் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் மார்ஜின் டிரேடிங் வசதியை எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். அதேநேரம், இங்குள்ள சந்தை முதலீட்டாளர்களுக்கு இது எளிதானது இல்லை என்றும் கூறுகிறார் என்று மூத்த சந்தை ஆய்வாளர் பாலசுப்ரமணியம் பிரபாலா. பட மூலாதாரம்,GETTY IMAGES நிஃப்டி இங்கிருந்து பெரிதாக வீழ்ச்சியடையாமல் இருக்கலாம். ஆனால் பங்குகள் சரிய வாய்ப்புள்ளது. பங்குகள் சார்ந்த திருத்தம் வரவும் வாய்ப்புள்ளது. இங்கிருந்து படிப்படியாக சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கலாம். சேவை, சுகாதாரம் மற்றும் கட்டுமானத் துறைகள் சிறப்பாகச் செயல்பட்டன. அந்தத் துறைகளின் மீது கவனம் செலுத்துங்கள். அது ஓரளவு பாதுகாப்பானது. தரமான பங்குகள் இருந்தால் பதற்றம் தேவையில்லை. சரிவில் இருந்து சந்தை மீண்டு வரும்போது, அந்தப் பங்குகள்தான் முதலில் லாபம் பெறும். அதைக் கருத்தில் கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும். ஐபிஓ-க்களில் (Initial Public Offering) இருந்து விலகியிருப்பது நல்லது. இங்கு ஐபிஓ-க்களில் பெரியளவு லாபம் இருக்காது. சமீபத்திய ஐபிஓ-க்களில் பங்குகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்தால், அவற்றில் லாபத்தைப் பதிவு செய்வது நல்லது. மேலும், எஸ்ஐபி (SIP-Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்,'' என சந்தை ஆய்வாளர் ஏ.சேசு விளக்கினார். "பொதுவாகப் பல நாட்கள் வீழ்ச்சிக்குப் பிறகு பங்குகள் உயர வேண்டும். இப்போது அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. மேலும் பங்குகள் வீழ்ச்சியடையும்போது சராசரி லாபத்திற்காகக் காத்திருக்க வேண்டாம். மோசமான இரண்டாம் காலாண்டு முடிவுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் நல்ல முடிவுகளைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளை அடையாளம் காணுங்கள். பிறகு அவற்றில் மீண்டும் முதலீடு செய்யலாம். நீங்கள் ரூ.100 முதலீடு செய்ய விரும்பினால், இப்போது அதில் ரூ.20 மட்டும் முதலீடு செய்யுங்கள்” என்று படிப்படியாகப் பங்குகளை வாங்க, சந்தை ஆய்வாளர் சி.சேகர் பரிந்துரைக்கிறார். (குறிப்பு: இந்தத் தகவல்கள் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே. நிதி சார்ந்த எந்த முடிவுகளையும் நிதி நிபுணரிடம் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9nv97q9veo
  5. ஆர்.ராம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைக் காணுதல் உட்பட பத்தம்சங்களை முன்வைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ஜயசூரிய கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் வழங்கிய ஆணையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்பதோடு நாட்டில் தேசிய ஒற்றுமை, சாந்தி, சமாதானத்தினை நிலைபெறச்செய்து சுபீட்சமான நாட்டில் அனைவரும் அச்சமின்றி இலங்கையர்களாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதனடிப்படையில் பின்வரும் விடயங்களில் அதிகமான கவனத்தினைக் கொள்கின்றேன். குறித்த விடயங்கள் வருமாறு, 1. ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரசாங்கத்தின் முதற் செயல்பாடாக நாட்டின் ஜனரஞ்சக கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் சட்டத்தை மதிக்கும் திறமையான பொதுநிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். விசேடமாக இலங்கையில் 14 பேருக்கு ஒரு அரச ஊழியர் என்ற விகிதம் மாற்றயமைக்கப்பட வேண்டும். 2. நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகியவற்றை தாமமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். 3. புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பு தொடர்பில் எட்டாவது ஆவது பாராளுமன்றம் சிறப்பான பணியை செய்துள்ளது. லால் விஜேநாயக்க மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராக இருந்ததோடு மட்டுமன்றி அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தவராகவும் உள்ளார். அந்த வகையில் தற்போதைய தருணத்தில் அந்தச் செயற்பாட்டில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே முடிக்க வேணடியுள்ளதால் அந்த விடயத்திலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 4. தேசிய இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே இந்த சிறந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது எதிர்கால சந்ததியினரை கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். 5. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும்; என்பதோடு அதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுதல் முக்கியமானதாகின்றது. 6. அடுத்துவரும் காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் தேர்தல் முறைமைகள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் பிரியசாத் டெப் கமிஷன் தலைமையிலான தேர்தர்தல் சட்ட திருத்தத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வெளிப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது. 7. பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களை வலுவாகச் செயற்படுத்தப்படும். 8. அனைத்து சமூகத்தால் வெறுப்படைந்த கட்சி தாவுகின்ற செயற்பாடுகளைத் தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 9. நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இரத்து செய்தல். இந்த விடயத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தின் போது ஜனாதிபதியாகிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இறுதிக்கட்டமாக அமையும் என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொள்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி தற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். நிறைவேற்று அதிகாரத்தை திடீரென ஒழிக்க முடியாவிட்டாலும் அரசாங்கத்தின் இருப்பை ஒருகுறித்த திகதியை சாதாரண பொதுமக்களுக்கு வாக்குறுதியை வழங்கினால் அது அரசாங்கத்தின் கௌரவத்திற்கும் ஜனாதிபதியின் நற்பெயருக்கும் மேலும் வழிவகுக்கும். 10. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம். சம்பந்தமான கோவை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 8ஆவது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டு முறைமை தயாரிக்க முடிந்தது. பிமல் ரத்நாயக்க மிகவும் பெறுமதியான பணியை செய்தார். அதன் அடிப்படையில் ஒழுக்கக் கோவையின் சிலவிதிகளை உள்வாங்க முடியும். இல்லையேல் அவற்றை முழுமையாக அமுலாக்க முடியும். மேலும், 2015 ஆம் ஆண்டு வரை நிலவிய சர்வாதிகார ஆட்சியை மாற்றுவதற்கு வணக்கத்திற்குரிய மாதுலுவே சோபித தேரரின் தலைமையில் சமூகத்திற்கான தேசிய இயக்கம் பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தது. அந்த வகையில் தற்போதும் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும், அனைவரும் இலங்கையர்களாகவும் வாழ்வதற்காக நாம் எந்தவிதமான அரசியல் இணைந்து செயற்பட்டதை நாம் நினைவுகூருகின்றோம். எமக்கு எந்தவொரு அசரியல் நோக்கங்களும் இல்லை என்பதோடு இந்தப் பணியை முன்னெடுப்பது மிகவும் அசியமானது என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199518
  6. பட மூலாதாரம்,SENTHIL BALAJI /FACEBOOK எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி செய்தியாளர், சென்னை சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அதானி குழுமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக எந்த உறவும் இல்லை என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட சூரிய மின் சக்தி ஒப்பந்தத்துக்கும் அதானி குழுமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் பெயர் அடிபடுவது ஏன்? அதானி மோசடி வழக்கில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் - நிபுணர்கள் விளக்கம் அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்தாரா? அமெரிக்கா குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது ஏன்? - முழு விவரம் அதானி மீது குற்றச்சாட்டு - வெள்ளை மாளிகை கூறியது என்ன? அதானி தொடர்பான சர்ச்சை: தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் கூறுவது என்ன? அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்ன? கௌதம் அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் 8 ஜிகா வாட் சூரிய சக்தி மின்சாரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் (SECI) பெற்றுள்ளது. சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டின்படி, 2021-2022 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு மாநில மின் அதிகாரிகளை சந்தித்து மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட லஞ்சம் கொடுப்பதற்கான பேரத்தில் அதானி ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், மின்வாரியங்கள், மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை அதன் ஊடக தொடர்பாளர் மறுத்துள்ளார். "லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை" எனத் தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் தாங்கள் நிரபராதிகளாகவே கருதப்படுவதாக கூறியுள்ள அதானி குழும ஊடக தொடர்பாளர், வெளிப்படைத்தன்மை, தரமான நிர்வாகம், சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது ஆகியவற்றில் தாங்கள் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதானி குழுமம் மட்டுமின்றி, இந்த ஊழலில் அஸூர் பவர் என்ற நிறுவனத்தின் பெயரும் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது. "அதானி நிறுவனத்துக்கு துணை நின்ற அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் கைது செய்து சி.பி.ஐ விசாரணைக்கு இந்த வழக்கை உட்படுத்த வேண்டும்" என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். "கூடுதல் கட்டணத்தில் அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ள கே.பாலகிருஷ்ணன், "அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் இருப்பதால் முழு விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். என்ன நடந்தது? 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் (SECI) இருந்து சூரிய மின் சக்தி ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தைக் கொள்முதல் செய்ய வைப்பதற்காக அதானி பேசியதாகவும் அதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக விவாதித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019 - 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசின் SECI - இருந்து சூரிய மின் சக்திக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது யார் அந்த அரசு அதிகாரி? "ஆந்திராவில் 2200 மெகாவாட் அளவுக்கு சூரிய சக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் 650 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பெற ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது" என்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன். "அதானியிடம் இருந்து தமிழ்நாடு அரசு மின்சாரம் வாங்கியதா... இல்லையா என்பது தற்போதைய பிரச்னை இல்லை" எனக் கூறும் ஜெயராம், "மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷனுக்கு அதானி மின்சாரத்தை விநியோகம் செய்கிறார். அதை வாங்க வைப்பதற்காக மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் அதானியே ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது" என்கிறார் அவர். "2020-2021 ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. தற்போது தி.மு.க ஆட்சியில் இருக்கிறது. இங்குள்ள எந்த அரசு அலுவலரிடம் பேரம் பேசப்பட்டது என்பது விசாரிக்கப்பட வேண்டும்" என ஜெயராம் வெங்கடேசன் கூறுகிறார். பட மூலாதாரம்,JEYARAM VENKATESAN / FACEBOOK படக்குறிப்பு, இங்குள்ள எந்த அரசு அலுவலரிடம் பேரம் பேசப்பட்டது என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் ஜெயராம் வெங்கடேசன் ஒப்பந்தம் போடப்பட்டது எப்போது? இதே கருத்தை வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில், 'ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்திடமிருந்து (SECI)) சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் (Power Sale Agreement) மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆந்திர மின்வாரிய அதிகாரிக்கு 1750 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 2021 செப்டம்பர் 16-ஆம் தேதி அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை சோலார் பவர் கார்பரேஷன் மூலமாக பெறுவதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு கையெழுத்திட்டுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். யானைகளுக்கு மதம் பிடிப்பது ஏன்? பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காதா?22 நவம்பர் 2024 இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்': யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?22 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருப்பவர்கள் உட்பட பல தலைவர்களும் இதில் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் செந்தில் பாலாஜி சொன்னது என்ன? இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். "அதானி குழுமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வணிகரீதியில் எந்த உறவும் இல்லை" என செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில், பல மாநிலங்களைக் குறிப்பிட்டுக் கூறியதில் தமிழ்நாட்டின் பெயரையும் ஒரு வரியில் சேர்த்துவிட்டதாகத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டின் மின் தேவையைக் கணக்கில் கொண்டு மத்திய மின்வாரியத்துடன் 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார். இந்த ஒப்பந்தம் மத்திய அரசு நிறுவனமான சோலார் பவர் கார்பரேஷனுடன் மட்டுமே கையெழுத்தாகியுள்ளதாக, அவர் கூறினார். சூரிய மின்சக்தி கொள்முதல் குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, "யாருக்கெல்லாம் சூரிய மின்சக்தி தேவைப்படுகிறதோ, அவர்கள் சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் பேசி விலையை இறுதி செய்து ஒப்பந்தம் மேற்கொள்கின்றனர்" என்றார். அந்த வரிசையில், 1500 மெகாவாட் சூரிய சக்தியைப் பெறுவதற்கு 25 ஆண்டு காலத்துக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளதாக அவர் கூறினார். பட மூலாதாரம்,JAISANKAR / FACEBOOK படக்குறிப்பு, தமிழ்நாட்டில் மின்சார கொள்முதல் என்பது 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்ததாக கூறுகிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர் விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல் செந்தில்பாலாஜி கருத்தைச் சுட்டிக் காட்டி பிபிசி தமிழிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், "அ.தி.மு.க ஆட்சியில் சூரிய ஒளி மின்சக்தியை ஒரு யூனிட் 7.01 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டதாக அ.தி.மு.க அரசு கூறியது. தற்போதைய சந்தை விலை என்பது 2 ரூபாய் என்கின்றனர். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டதா என்பது ஒப்பந்த விவரங்களை ஆராய்ந்தால் தான் தெரியும்" என்கிறார் ஜெயராம் வெங்கடேசன். தமிழ்நாட்டில் மின்சார கொள்முதல் என்பது 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்ததாக கூறுகிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர். "தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் இயங்குகிறது. இதற்கு, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதுதான் காரணமா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqj0xvrr1x8o
  7. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளுங்கள் - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு 23 NOV, 2024 | 09:10 PM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்த புலம்பெயர் தமிழரான நிருஜன் ஞானகுணாலனால் தயாரிக்கப்பட்டு, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் பரந்துபட்டு வாழும் புலம்பெயர் தமிழர்கள் 636 பேர் கையெழுத்திட்டிருக்கும் ஈ-5058 இலக்க முன்மொழிவையே பாராளுமன்ற உறுப்பினர் ஷான் சென், கடந்த வாரம் (20) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இலங்கையில் தமது பாரம்பரிய தாயகமான தமிழீழத்தில் 75 வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இனவழிப்புக்கு முகங்கொடுத்திருக்கும் ஈழத்தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் 'புலம்பெயர்ந்தோரின் வீடாக' கனடா திகழ்வதாகவும், இலங்கை அரசினால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் அம்முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி '1956 இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்திலிருந்து 2009 மேமாதம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட 'இனவழிப்பு' யுத்தம் வரை தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன்கூடிய இனப்படுகொலை பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டுவந்திருக்கிறது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும், சுதந்திர தமிழீழ உருவாக்கம் தொடர்பில் இலங்கைவாழ் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடனான பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் அந்த முன்மொழிவில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199508
  8. ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குங்கள் - தேர்தல் பிரசார வாக்குறுதியை நடைமுறைப்படுத்துமாறு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் 23 NOV, 2024 | 09:09 PM (நா.தனுஜா) பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படவேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஊடக சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், தகவல் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸின் பாரிஸ் நகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்), ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தி வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டிருக்கிறது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உரியவாறு தண்டனை வழங்கப்படாததும், ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையிலான ஒடுக்குமுறைச்சட்டங்களைக் கொண்டதுமான நாட்டில் முறையான நிலைமாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது. அதற்கமைய இப்புதிய அரசாங்கமானது அவசியமான கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதுடன், தணிக்கைக்கு வழிகோலும் ஒடுக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தோடு குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின சமூகங்களைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக சகல ஊடகவியலாளர்களுக்குமான நியாயமான பாதுகாப்பு செயன்முறையை அறிமுகப்படுத்தவேண்டும். சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமான ஊடக இடைவெளியை உறுதிப்படுத்துவதாக தேர்தல் பிரசாரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய புதிய பாராளுமன்றத்தில் முன்னுரிமை அளிக்கவேண்டும். இலங்கையின் அண்மையகால வரலாற்றில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், அவை ஊடகங்கள் கொண்டிருக்கும் மிகமுக்கிய வகிபாகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் சார்ந்து தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்த வரலாற்று முக்கியத்தும் மிக்க வாய்ப்பை புதிய அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதேவேளை ஊடகங்களின் சுதந்திரமான இயங்குகைக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய சர்ச்சைக்குரிய சட்டங்கள் மற்றும் சட்டமூலங்கள் நீக்கப்படுவதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் என்பன ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் என அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/199510
  9. பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ராஜநாகம் குறித்த புதிய கண்டுபிடிப்பை ஊர்வன ஆய்வாளர் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் வெளிக்கொண்டு வந்துள்ளனர். எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ராஜநாகம்... பெயருக்கு ஏற்ப பிரமிக்க வைக்கும் நீளமான உருவமும், மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை படமெடுத்து நிற்கும் அதன் தோற்றமும் பார்ப்பவரை கதிகலங்கச் செய்துவிடும். அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் என்றாலும், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயமும் இருக்கிறது. அத்தகைய ஒரு சூழ்நிலையின் போது, ஊர்வன ஆராய்ச்சியாளர் முனைவர் கௌரி ஷங்கரை 2005இல் ராஜநாகம் கடித்தது. ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள இந்தப் பாம்பின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பிய அவர், அதன் பிறகு அதுகுறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். அதன் விளைவாகத் தற்போது, கடந்த 180 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் இருந்த ஓர் அறிவியல் ரகசியத்தை அவரது ஆய்வுக்குழு சமீபத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளது. முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரின் இந்தப் புதிய கண்டுபிடிப்பு வெளிக்கொண்டு வந்துள்ள உண்மை என்ன? ராஜநாகம் பற்றிய நமது புரிதலை இது எப்படி மாற்றுகிறது? உயிர் பிழைக்க நடந்த போராட்டம் இந்தியாவில் மனிதர்கள் மத்தியில், பாம்புக்கடி மரணங்கள் அதிகம் ஏற்படக் காரணமாக இருப்பவை நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே. நாகம், கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய இந்த நான்கு வகைப் பாம்புகளால்தான் அதிக உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்வதாகக் கூறுகிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நஞ்சுமுறி மருந்து குறித்த ஆய்வுத் திட்ட விஞ்ஞானியும் யுனிவெர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனருமான முனைவர் என்.எஸ்.மனோஜ். “இந்தியாவில் இந்த நான்கு பாம்புகளின் நஞ்சுக்கு மட்டுமே மருந்து உள்ளது. அதுவும், அனைத்துக்குமே கூட்டுமுறையில் (Polyvalent) பயன்படுத்தக் கூடிய நஞ்சுமுறி மருந்தே உள்ளது,” என்று கூறுகிறார் மனோஜ். இதுதவிர, இந்தியாவில் குறிப்பாக ராஜநாகக் கடிக்கென தனியாக நஞ்சுமுறி மருந்து இல்லை. அதற்கான மருந்து தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இருப்பினும், முனைவர் கௌரி ஷங்கர் கடிபட்ட போது அவரது உடல் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நஞ்சுமுறி மருந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், இந்தியாவில் கிடைக்கும் கூட்டுமுறை நஞ்சுமுறி மருந்தும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES நல்வாய்ப்பாக, “என்னைக் கடித்த பாம்பு முழு வீரியத்துடன் கடிக்கவில்லை. அதனால், நஞ்சின் அளவு குறைவாகவே என் உடலில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ராஜநாகத்தின் நஞ்சால் ஏற்படக்கூடிய நரம்பியல் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகத் தீவிரமாகவே இருந்தன.” என்று கௌரி ஷங்கர் கூறினார். நஞ்சுமுறி மருந்துகள் சரிவர வேலை செய்யாத நிலையில், பாம்புக் கடியால் ஏற்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சைகள் தோராயமாக வழங்கப்பட்டதாக கௌரி ஷங்கர் கூறுகிறார். அதுகுறித்துப் பேசிய அவர், கோவிட் பேரிடரின் ஆரம்பக் காலத்தில் உரிய மருந்து இல்லாத காரணத்தால், அறிகுறிகளின் அடிப்படையில் எப்படி சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அதேபோல ராஜநாகக் கடியால் தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பல இன்னல்களை எதிர்கொண்டு இறுதியாக உயிர் பிழைத்தார் கௌரி ஷங்கர். மற்ற நான்கு வகை நச்சுப் பாம்புகளுடன் ஒப்பிடுகையில், ராஜநாகத்தின் கடிக்கு மக்கள் ஆளாவதற்கான ஆபத்து குறைவுதான் என்றாலும், அதன்மீது மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தைப் போக்க அதன் குறிப்பிட்ட நஞ்சுக்கான நஞ்சுமுறி மருந்து (monovalent) அவசியம் என்று வலியுறுத்துகிறார். 180 ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த ‘ரகசியம்’ பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR முதன்முதலாக 1836ஆம் ஆண்டு டென்மார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தியோடோர் எட்வர்ட் கேன்டோர், ராஜநாகத்தை விவரித்து முதன் முறையாக அறிவியல் ரீதியாகப் பதிவு செய்தார். இதர பல வகைப் பாம்புகளில் ஆய்வுகள் நடந்த அளவுக்கு ஆழமாக ராஜநாகத்தில் ஆய்வுகள் நடக்காமல் இருந்ததாகக் கூறும் முனைவர் எஸ்.ஆர் கணேஷ், கடந்த 15 ஆண்டுகளில்தான் அத்தகைய ஆய்வுகள் நடக்கத் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். முனைவர் கணேஷ், கௌரி ஷங்கருடன் இணைந்து சமீபத்திய கண்டுபிடிப்புக்குக் காரணமான ஆய்வில் பங்கெடுத்தவர். அவரது கூற்றுப்படி, பல்லாண்டு காலமாக நடந்த ஆய்வுகள் அனைத்துமே காப்பிடங்களில் இருக்கும் ராஜநாகங்கள் மீது நடத்தப்பட்டவைதான். "ராஜநாகங்களை அவற்றின் இயல்பான வாழ்விடங்களில் அவதானித்து, ஆழமான ஆய்வுகள் பெரியளவில் மேற்கொள்ளப்படாமலேயே இருந்தது. அதுவே, இத்தனை ஆண்டுகளாக அதுகுறித்த அறிவியல்பூர்வ உண்மை வெளிவராமல் இருந்ததற்குக் காரணம்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் ஹன்னா, கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடக்கு, கிழக்கு இந்தியாவில் வாழக்கூடிய ராஜநாகம் கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினரின் ஆய்வு முடிவுகள், "உலகில் மொத்தம் நான்கு வகை ராஜநாகங்கள் உள்ளதை உறுதி செய்தன. அதிலும் குறிப்பாக, "இரண்டு வகை ராஜநாகங்களைப் புதிதாக வகைப்படுத்தி பெயரிட்டோம்,” என்று விளக்கினார் கௌரி ஷங்கர். இந்த ஆய்வுக்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ராஜநாகங்களின் மரபணுக்களை ஆய்வு செய்ததாகவும், அதில் இருந்த மாறுபாடுகளை வைத்து ஆதாரப்பூர்வமாக, ராஜநாகத்தில் மொத்தம் நான்கு வகைகள் இருப்பதை உறுதி செய்ததாகவும் கூறுகிறார் கணேஷ். மேலும், "கடந்த 1961ஆம் ஆண்டு வரை ராஜநாகங்களை வகைப் பிரிக்கும், பெயரிடும் முயற்சிகள் தொடர்ந்தன என்றாலும் அவற்றில் திருப்தி அளிக்கக் கூடிய முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த முறைதான் முழு தரவுகளுடன் ஆதாரப்பூர்வமாக இதை உறுதி செய்ய முடிந்தது" என்றார். இந்த வெவ்வேறு வகை ராஜநாகங்கள், ஒன்றுக்கொன்று இனப்பெருக்கம் செய்துகொள்வதில்லை. அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட ஒரு நிலவியல் அமைப்பில் ஒரேயொரு வகை ராஜநாகம் மட்டுமே வாழும் என்கிறார் கணேஷ். அதாவது, மேற்கு தொடர்ச்சி மலையில் இருவேறு வகைகளைச் சேர்ந்த ராஜநாகங்கள் வாழாது. ஒரே வகை ராஜநாகம்தான் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் தனித்துவமான ராஜநாகம் பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் காளிங்கா, மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் ராஜநாக வகை இத்தனை ஆண்டுகளாக ஓபியோஃபேகஸ் ஹன்னா என்ற அறிவியல் பெயரைக் கொண்ட ஒரேயொரு வகை ராஜநாகமே இந்தியா முழுக்க வாழ்வதாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது தனது பத்தாண்டு கால ஆய்வின் மூலம், அந்தக் குறிப்பிட்ட அறிவியல் பெயருக்குச் சொந்தமான ராஜநாக இனம், கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்வதையும், அந்த ராஜநாகமும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வாழும் ராஜநாகமும் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்தவை என்பதையும் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் வாழ்வது ஒரு தனி வகை என்பதும், இது உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படாத ஓரிடவாழ் உயிரினம் என்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமான ராஜநாகத்திற்கு ஓபியோஃபேகஸ் காளிங்கா என்றும் ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். “காளிங்கா என்பது கர்நாடகாவில் உள்ள பூர்வகுடி மக்கள் ராஜநாகத்திற்குக் குறிப்பிடும் ஒரு பெயர். அவர்களது மரபார்ந்த பெயரிலேயே அதன் அறிவியல் பெயரும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரைச் சூட்டினோம். இனி உலகம் முழுக்க அனைவரும் அந்த மக்கள் அழைக்கும் பெயரிலேயே ராஜநாகத்தை அழைப்பார்கள்,” என்கிறார் முனைவர் கௌரி ஷங்கர். பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் பங்காரஸ், இந்தோ-சீன பகுதிகளில் வாழக்கூடிய ராஜநாகம் “உத்தர கன்னடா போன்ற பகுதிகளைச் சுற்றி வாழக்கூடிய பூர்வகுடிச் சமூகங்கள் ராஜநாகங்களை அச்சமூட்டக் கூடிய உயிரினமாகப் பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவை மிகவும் அவசியமான, விரும்பத்தக்க உயிரினம்.” “ராஜநாகம் தங்கள் பகுதிகளில் இருப்பதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். நாகம், சாரை, வரையன், நீர்க்கோலி என இதர வகைப் பாம்புகளை அவை சாப்பிடுவதும் இதற்கொரு முக்கியக் காரணம். அதன்மூலம், மற்ற நச்சுப் பாம்புகளால் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். ஆகையால், ராஜநாகத்தின் இருப்பை அவர்கள் அவசியமானதாகக் கருதுகின்றனர்,” என்கிறார் கௌரி ஷங்கர். இந்த மரபார்ந்த சிந்தனை அனைவருக்கும் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே பிராந்திய பெயரைச் சூட்டியதாகவும், பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள லூஸான் தீவுக்கூட்டத்தில் உள்ள ராஜநாக வகைக்கும் அதேபோல், பிராந்திய மக்கள் குறிப்பிடும் பெயரான சால்வட்டானா என்பதையே சூட்டியதாகவும் அவர் தெரிவித்தார். நான்கு வகை ராஜநாகங்கள் பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் சால்வட்டானா, பிலிப்பைன்ஸில் உள்ள லூஸான் தீவுக் கூட்டத்தில் வாழக்கூடிய ராஜநாக வகை இந்த ஆய்வின்படி, மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் வகை - ஓபியோஃபேகஸ் காளிங்கா (Ophiophagus kaalinga) கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடக்கு, கிழக்கு இந்தியாவில் வாழக் கூடியவை – ஓபியோஃபேகஸ் ஹன்னா (Ophiophagus hannah) இந்தோ-சீன பகுதிகளில் வாழக்கூடியவை – ஓபியோஃபேகஸ் பங்காரஸ் (Ophiophagus bangarus) இந்தோ-மலேசிய பகுதிகளில் வாழக்கூடியவை மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள லூஸான் தீவுக் கூட்டத்தில் வாழக்கூடியவை – ஓபியோஃபேகஸ் சால்வட்டானா (Ophiophagus salvatana) இவற்றுக்கு இடையே உடல் தோற்றத்தில் சில வேறுபாடுகள் உள்ளதாகவும், குறிப்பாக அவற்றின் உடலில் இருக்கும் வெள்ளை நிறப் பட்டைகளை வைத்து ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி தனியாக அடையாளம் காண முடியும் என்றும் விளக்குகிறார் கௌரி ஷங்கர். உதாரணமாக, "காளிங்காவின் உடலில் வெள்ளை நிற பட்டைகள் அதிகபட்சமாக சுமார் 40 வரை இருக்கும். அதுவே ஹன்னாவில் 70 வரை இருக்கும். பங்காரஸில் இந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவும், சால்வட்டானா கிட்டத்தட்ட பட்டைகளே இல்லாத நிலையிலும் காணப்படுவதாக" விளக்கினார் அவர். ராஜநாகம் – நாகம் என்ன வேறுபாடு? பட மூலாதாரம்,GETTY IMAGES பெயரளவில் ராஜநாகம் என்று அழைக்கப்பட்டாலும், அவை அறிவியல் ரீதியாக நாகப் பாம்பு குடும்பத்தைச் சேர்ந்தவை இல்லை என்கிறார் ஊர்வன ஆராய்ச்சியாளர் ரமேஷ்வரன். இரண்டுக்குமான வாழ்விடம், வாழ்வுமுறை, நடத்தை ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். நாகப் பாம்புகள் நாஜா (Naja) என்ற பேரினத்தின்கீழ் வருகின்றன. ஆனால், ராஜநாகம் ஓபியோஃபேகஸ் (Opiophagus) என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உடல் அளவிலேயே இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உள்ளதாகக் கூறும் ரமேஷ்வரன், “நாகப்பாம்பு 6 முதல் 10 அடி வரை வளரும். ஆனால், ராஜநாகம் 18 அடி வரை வளரக்கூடியது” என்றார். “நாகப் பாம்பின் உடல் முழுக்க ஒரே நிறத்தில் இருக்கும். ஆனால், ராஜநாகத்தின் உடலில் சீரான இடைவெளியில் வெள்ளை நிறப் பட்டைகள் இருக்கும். அந்தப் பட்டைகளின் தன்மை ராஜநாக வகைகளுக்கு இடையே வேறுபட்டாலும் அவை இருக்கும்.” “நாகம் மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகம் தென்படும். ஆனால், ராஜநாகம் பெரும்பாலும் அடர்ந்த, உயரமான காடுகளில் வாழக் கூடியவை. இருப்பினும், அவை சில தருணங்களில் காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களிலும் அவ்வப்போது தென்படுகின்றன.” "நாகப் பாம்புகள் பல தருணங்களில் கூட்டமாகவும் தென்பட்டுள்ளன. ஆனால், ராஜநாகம் வாழ்விட எல்லைகளை வகுத்துத் தனிமையில் வாழக்கூடியது." பட மூலாதாரம்,GETTY IMAGES இவைபோக, இரண்டின் இனப்பெருக்கம், உணவுமுறை ஆகியவற்றிலும் வேறுபாடுகள் உள்ளதாகக் கூறுகிறார் ரமேஷ்வரன். அவரது கூற்றுப்படி, ராஜநாகம் தனது உடலால் சருகுகளைக் குவித்து, கூடு அமைத்து, அதில் முட்டையிடக்கூடிய பழக்கம் கொண்டவை. குட்டிகள் பிறக்கும்வரை, கூட்டில் இருந்து முட்டைகளைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை என்றும் அவர் விளக்கினார். நாகப் பாம்புகளும் முட்டைகளைப் பாதுகாப்பதை அவதானித்து இருந்தாலும், கூடு அமைக்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை என்கிறார் ரமேஷ்வரன். இவை போக, உணவுமுறையில் ஒரு முக்கியமான வித்தியாசம் இரண்டுக்கும் உள்ளது. எலி, பெருச்சாளி போன்றவற்றையும் பறவைகள், நீர்நில வாழ்விகளான தவளை, தேரை ஆகியவற்றையும் நாகப் பாம்புகள் உணவாக கொள்கின்றன. ஆனால், ராஜநாகம் மற்ற பாம்புகளையே தனது உணவுப் பட்டியலில் முதன்மையாக வைத்துள்ளது. சிறிய அளவு மலைப்பாம்பு, நாகம், பச்சைப் பாம்பு, சாரை, நீர்க்கோலி, விரியன் போன்ற பல வகைப் பாம்புகளை அவை அதிகம் உண்ணுகின்றன. ராஜநாக நஞ்சுக்கான மருந்து தயாரிப்பில் இதன் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES நஞ்சுமுறி மருந்து தயாரிக்கும் செயல்முறை மிகச் சிக்கலானதாகவும் செலவு மிக்கதாகவும் இருப்பதால், மிகவும் அவசியமான, அதிகம் தேவைப்படக் கூடிய மருந்துகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்குமாறு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் நஞ்சுமுறி மருந்து குறித்து ஆய்வு செய்துவரும் விஞ்ஞானியான முனைவர் மனோஜ். ராஜநாகத்தின் கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதும் இந்தியாவில் அதற்கான நஞ்சுமுறி மருந்துகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்படாதமைக்குக் காரணம் என்கிறார் அவர். அதேவேளையில், எதுவுமே இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக 80% தீர்வு தரக்கூடிய நஞ்சுமுறி மருந்து தாய்லாந்தில் இருந்து கிடைத்து வருவதை, இப்போதைக்கு நிலவும் நல்ல விஷயமாகப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தும் மனோஜ், குறிப்பிட்ட பாம்புகளின் நஞ்சுகளுக்குத் தனித்துவமான நஞ்சுமுறி மருந்துகளைத் (monovalent) தயாரிக்க, அதன் தயாரிப்பு முறை எளிதாக வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் ராஜநாகத்தின் கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், அவை சமீப காலமாக கிராமப் பகுதிகளிலும் அதிகம் தென்படுவதைக் கருத்தில் கொண்டு, நஞ்சுமுறி மருந்து தயாரித்துக் கொள்வது அவசியம் என்கிறார் கௌரி ஷங்கர். அதற்கு இந்த ஆய்வு முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் கருதுகிறார். காளிங்கா ராஜநாகத்தின் நஞ்சுக்கு, தாய்லாந்து நஞ்சுமுறி மருந்தோ, நம்மிடம் இருக்கும் கூட்டுமுறை மருந்தோ நூறு சதவீதம் தீர்வு கொடுப்பதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர். அப்படியிருக்கும் நிலையில், "காளிங்கா ராஜநாகத்தின் நஞ்சுக்கு நஞ்சுமுறி மருந்து தயாரித்து வைத்துக்கொள்வது அவசியம்." “மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்த மிகத் தீவிரமான பயம் நிலவுகிறது. அதுவே அவற்றை அடித்துக் கொல்லக் காரணமாக இருக்கிறது. ராஜநாகத்தைப் பொருத்தவரை, அவற்றின் நஞ்சை முற்றிலுமாக முறிக்கக்கூடிய மருந்து நம்மிடம் இருந்தால், அதுவே மக்களுக்கு தைரியத்தைக் கொடுக்கும். அதன்மூலம், பயத்தால் அவற்றைக் கொல்வதைத் தடுத்து, பாதுகாப்பில் கவனம் செலுத்த வைக்க முடியும்,” என்று நம்புகிறார் முனைவர் கௌரி ஷங்கர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6291vz5z30o
  10. விகிதாசார தேர்தல் முறைமைக்கமைய மாகாண சபை தேர்தலை நடத்துவது சிறந்தது - விஜித ஹேரத் (இராஜதுரை ஹஷான்) மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்த எதிர்பார்த்துள்ளோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து புதிதாக வேட்புமனுக்களை கோரி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் நடத்த உத்தேசித்துள்ளோம். அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களினால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்ததாக அமையும். மாகாண சபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் காலங்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பொது கொள்கையின் அடிப்படையில் நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டு வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது கட்டாயமாகும் என்றார். https://www.virakesari.lk/article/199486
  11. தமிழ்த்தேசியத்தை தமிழர்கள் கைவிட்டுவிடவில்லை; தமிழ்த்தேசிய ஆதரவு அரசியல்வாதிகள் பிரிந்து நின்றதன் விளைவே தேர்தல் முடிவுகள் - சி.வி.விக்கினேஸ்வரன் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாதத்துக்கொரு கேள்வி - பதில் பகுதியில் 'தமிழ்த்தேசியம் அழிந்துவிட்டதா? தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன அல்லவா?' என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழீழம் பெறமுடியாமல் போய்விடுமா என்று பிரபாகரனிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் 'தமிழீழத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. அது ஏற்கனவே இருக்கிறது. அதனைப் பாதுகாப்பதற்காகத் தான் நாங்கள் போராடுகின்றோம்' எனப் பதிலளித்தாராம். அதேபோன்று தமிழ்த்தேசம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. அதனைப் பாதுகாக்கும் மனோநிலையே தமிழ்த்தேசியம். அது அழிந்துவிடவில்லை. தேர்தலின் பின்னர் தமிழ்த்தேசத் தெருக்கள் பலவற்றில் இராணுவத்தடைகள் நீக்கப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள். ஒரே நாட்டுக்குள் தமிழ் பேசும் பிரதேசங்களில் மாத்திரம் ஏன் இந்தப் பாகுபாடு எனும் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழி பேசும் பிரதேசங்கள் என்ற உண்மையை உணர்ந்து செயலாற்றுபவர்களை தமிழ்த்தேசியத்தை அழிப்பவர்கள் என்று அடையாளம் காட்டமுடியாது. தமிழ்த்தேசிய சிந்தனையை வைத்து வியாபாரம் நடத்தியவர்கள் தேர்தலில் காணாமல்போயிருக்கிறார்கள். தமிழ்த்தேசிய சிந்தனையை ஏளனம் செய்து, கட்சிகளைப் பிரித்து சுயநல அரசியல் நடத்திய ஒருவர் காணாமல் போயிருக்கிறார். இருப்பினும் நடைபெற்று முடிந்த தேர்தலில் வட , கிழக்கில் அரசாங்கம் ஆசனங்களைப் பெற்றிருப்பதே உங்களது கேள்விக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்தத் தேர்தல் முடிவுகள் எமக்கு இறைவனால் தரப்பட்ட வரப்பிரசாதமாகும். கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்தை ஆதரித்தவர்கள் இன்னமும் தமிழ்த்தேசியத்துடன் தான் இருக்கிறார்கள். இருப்பினும் பல சுயேட்சைக்குழுக்களின் தோற்றம் மற்றும் பல வருடகால அரசியல் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளுக்கு இடம்கொடுக்காமை போன்றவற்றால் அவர்கள் செய்வதறியாது பிரிந்துநின்று வாக்களித்திருக்கிறார்கள். அதேவேளை தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளின் மொத்தத்தொகையைப் பார்த்தால், தமிழ்த்தேசியத்துக்கான எமது மக்களின் ஆதரவு குறையவில்லை என்ற விடயமே புலனாகிறது. ஆகவே தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை. அதேவேளை ஐ.நா சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் உறுப்புரை ஒன்றின்கீழ் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்த்தேசம் என்பதை எந்தவொரு இலங்கை அரசாங்கமும் ஏற்காதவரை, வட, கிழக்கு தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/199513
  12. க.பொ.த. உயர்தர பரீட்சை திங்கள் ஆரம்பம்! (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கள் ஆரம்பமாகும் பரீட்சை டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், வினாத்தாள்கள் அச்சிடுதல், பிராந்திய சேகரிப்பு மையங்களை நிறுவுதல், பரீட்சை மையங்களை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. உயர்தரப் பரீட்சை அட்டவணை கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பரீட்சைக்கு தயார்படுத்துவதற்கு போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் ஒரு மாற்றம், தேசிய தேர்வு நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக சாதாரண தர பரீட்சையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தற்போது உயர்தர பரீட்சையை காலம் தாழ்த்தி, பின்னர் மீண்டும் திட்டமிடுவது பரவலான தளவாடச் சிக்கல்களை உருவாக்கும் மற்றும் இலங்கையின் கல்வி முறையின் சுமூகமான செயல்பாட்டை பாதிக்கும். இந்தக் காரணிகளின் அடிப்படையில், உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/199485
  13. விரைவில் சுகாதார அமைச்சர் யாழ் வருவார் - அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சாத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார். அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196310
  14. 23 NOV, 2024 | 09:15 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோர் வெளியுறவுச் செயலாளர் ரணராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவரது நியமனத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர். இந்திய உயர்ஸ்தானிகர் தனது சந்திப்பின் போது வெளிவிவகார செயலாளர் அருணி ரணராஜாவின் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், பரந்தளவிலான இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பன்முகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சீன தூதுவர் தனது சந்திப்பில் வெளிவிவகாரச் செயலாளருக்கு வாழ்த்தியுள்ளதோடு, இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியை மேம்படுத்துதல், இரு நாடுகளுக்கு இடையே நடைமுறை ஒத்துழைப்பை ஆழமாக்குதல் மற்றும் பொதுவான அக்கறையுள்ள பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பும் ஆழமான கருத்துக்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சீன தூதுவர் புதிய சபாநாயகர் அசோக ரன்வாலாவைச் சந்தித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், இருநாட்டு சட்டமன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பரிமாற்றங்களை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199490
  15. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசஸ்தலங்களை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த வீடுகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (22) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் தங்களுடைய வாசஸ்தலங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, குறித்த வீடுகளை ஒப்படைக்காவிடின், நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்கும் வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மாதிவெலயில் உள்ள வீட்டுத் தொகுதி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வீடமைப்புத் தொகுதியில் இருந்து வீடுகளை பெற்றுத் தருமாறு சுமார் 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகள் தேவைப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற நிர்வாகம் முன்னர் அறிவித்தல் விடுத்திருந்தது. பாராளுமன்ற வளாகத்தில் இருந்து 40 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தில் வீடுகளைக் கொண்டவர்கள், இதற்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம். https://tamil.adaderana.lk/news.php?nid=196307
  16. வெயாங்கொடையில் புதையல் தேடும் பணி நிறைவு நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையல் தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன. பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல் அல்லது பெறுமதியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை. வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் இருப்பதாக வதந்தி பரவியதையடுத்து, கடந்த சில நாட்களாக பல்வேறு நபர்கள் இங்கு சட்டவிரோதமாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர். எனினும் குறித்த இடத்தில் தொடர்ந்து சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டன. இது தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, அத்தனகல்ல நீதவான் மேற்படி இடத்தில் புதையல் உள்ளதா என்பதை கண்டறியுமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி, தொல்பொருள் திணைக்களம், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீரிகம பிரதேச செயலகம் ஆகிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் மேற்பார்வையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில் புதையல் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் நாள் மழை குறுக்கிட்டதால் அகழ்வாராய்ச்சியில் எதுவும் கிடைக்காத நிலையில், 2ஆவது நாளான நேற்று நடந்த அகழ்வுப் பணியின் போது பெரிய கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மதியம் கல் உடைக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு, குறித்த கல்லை அகற்றியும் பணியை நிறைவு செய்ய முடியவில்லை. அகழ்வு பணிகளுக்கு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் இரண்டு நாட்களே அவகாசம் வழங்கியிருந்த நிலையில், அந்த கால அவகாசம் நேற்று பிற்பகல் நிறைவடைந்தது. எனினும், இது தொடர்பில் நீதிமன்றில் காரணங்களை முன்வைத்து மேலதிகமாக இன்றைய நாளையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, மூன்றாவது நாளாக இன்று காலை 9 மணிக்கு புதையல் தோண்டும் பணி தொடங்கியது. பாரிய கல்லை அகற்ற முடியாத பின்னணியில் அதை வெட்டி எடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் கல் துண்டுகளாக நொறுக்கப்பட்டன. அதன்படி, புதையல் அல்லது தொல்பொருள் மதிப்பு எதுவும் கிடைக்காததால், அங்கு கூடியிருந்த அனைத்து அரச அதிகாரிகளின் உடன்படிக்கையின்படி இன்று மாலை 4 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் காரணங்களை அறிக்கையிட்டு, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அங்கு திரண்டிருந்த மக்களும் கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த இடத்தில் தொல்பொருள் பெறுமதியான எதுவும் இல்லை என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=196305
  17. 7 கோடி ரூபா கொள்ளையர்கள் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள் மினுவாங்கொடை பகுதியில் ஏழரை கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 18ஆம் திகதி, மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கியின் சாரதி ஒருவர், வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது, 7 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார். குறித்த பணத்தில் 3 கோடிக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கம்பஹா பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் இது தொடர்பான பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் கட்டானை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான துஷார இந்திக சொய்சா எனவும், மற்றைய சந்தேக நபர் 40 வயதான உடுகம்பலை பிரதேசத்தை சேர்ந்த சமன் ரணசிங்க எனவும் தெரியவந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் இருவரும் மூன்றரை கோடி ரூபாவை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளதுடன், குறித்த நபர் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட பின்னர் இருவரும் குருநாகல் மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல CCTV காட்சிகளை சோதனை செய்ததில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் நடத்திய விசாரணையில் இருவரும் அங்கிருந்து வாடகை காரில் நாகதீபத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குருநாகல், கணேவத்த பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரும் வீதியில் காத்திருந்த ஒருவரிடமிருந்து தமக்கு அழைப்பு வரவிருப்பதாக தெரிவித்து கையடக்க தொலைபேசி ஒன்றை 10,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளனர். இது தொடர்பான CCTV காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின. பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நாகதீப கோவிலுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டவிட்டு, யாழ்ப்பாணம் நகருக்குத் திரும்பியதும் கடற்படைச் சிப்பாய்கள் குழுவுடன் உரையாடிய போதிலும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் ஒரு இலட்சத்து 50,000 ரூபாவை வாடகை வாகனத்திற்கு செலுத்தியுள்ளனர். பின்னர், சம்பந்தப்பட்ட காரின் சாரதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர்கள் இருவரைப் பற்றி கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார். பின்னர், சம்பந்தப்பட்ட சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்திற்கு இடமான இருவரையும் பொலிஸார் தேடுவதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் செல்லும் CCTV காட்சியும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதன்படி, அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://tamil.adaderana.lk/news.php?nid=196308
  18. 23 NOV, 2024 | 05:47 PM இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். நானும் பிரதமர் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரண்டு நாடுகளிற்கும் இடையில் எந்த எந்த துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து நாங்கள் தெரிவித்துள்ளோம், திசநாயக்க முன்னோக்கி செயற்படவேண்டும் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என நான் கருதுகின்றேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199509
  19. 23 NOV, 2024 | 07:32 PM மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வழமையான வெள்ள பாதிப்புகளை அதிகமாக அனுபவித்து வரும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சாந்திபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அப்பகுதி மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் எழுத்தூர் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தினால் முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 200 குடும்பங்களை சேர்ந்த 774 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். 107 குடும்பங்களை சேர்ந்த 351 பேர் பாதுகாப்பான 3 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் க.திலீபன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்தனர். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/199504
  20. வலுவான நிலையில் இந்தியா: ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை தகர்த்த ஜெய்ஸ்வால் - ராகுல் ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் - ராகுல் இணை எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் கை சற்று ஓங்கியுள்ளது. அனுபவம் குறைந்த வீரர்களை ஆஸ்திரேலிய மண்ணில் இறக்கியிருக்கிறது இந்திய அணி என்று விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடியை ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் கூட்டணி அளித்துள்ளது. முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 2வது நாளான இன்று 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன. இந்திய வீரர்களின் ஒரு விக்கெட்டைக் கூட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் சாய்க்க முடியவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழும் பெர்த் ஆடுகளத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை நெருங்கியுள்ளார். அவருக்கு துணையாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்துள்ளார். ராணாவை சீண்டிய ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை சேர்த்திருந்தது. அலெக்ஸ் கேரே 19, ஸ்டார்க் 6 ரன்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து அலெக்ஸ் கேரே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லயன், ஸ்டார்க்குடன் சேர்ந்தார். பும்ரா, ஹர்ஷித் ராணா வீசிய பந்துகள் பிட்சில் பட்டு பேட்ஸ்மேனை நோக்கி எகிறி, சீறிப்பாய்ந்தன. இதனால் ஒரு கட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. “உன்னைவிட நான் வேகமாக பந்துவீசுவேன். பார்க்கத்தானே போகிறாய்” என்று ராணாவை வம்புக்கு இழுத்தார் மிட்செல் ஸ்டார்க். ஆனால், ராணா எந்தவித பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஸ்டார்க் நிதானமாக ஆடி 26 ரன்களைச் சேர்த்து, ஆஸ்திரேலிய அணியை 100 ரன்களைக் கடக்க உதவி செய்தார். நேதன் லயன் 5 ரன்கள் சேர்த்தநி லையில் ராணா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். ஸ்டார்க் 26 ரன்னில் ராணாவிடமே விக்கெட்டை இழந்து வெளியேறினார். 51.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்றைய ஆட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. 2வது குறைந்தபட்ச ஸ்கோர் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 1981ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 83 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆகி இருந்தது. அதேநேரத்தில், பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் 1985 ஆம் ஆண்டுக்குப்பின், மூன்றாவது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 2016-ல் ஹோபர்ட்டில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 85 ரன்களிலும், 2010ம் ஆண்டில் மெல்போர்னில் இங்கிலாந்து அணியிடம் 98 ரன்களுக்கும் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி சுருண்டது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர். டாப்-6 பேட்டர்கள் நிலை ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர். கடந்த 1978-ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய டாப்-6 பேட்டர்கள் 22 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் இப்போதுதான் டாப்-6 பேட்டர்கள் குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளனர். கபில்தேவ் சாதனையை சமன் செய்த பும்ரா இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ராணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேப்டன் பும்ரா டெஸ்ட் அரங்கில் வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியக் கண்டத்துக்கு வெளியே 9-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவ் சாதனையை சமன் செய்தார். 30 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் பந்துவீச்சு பெர்த் மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாகும். 2007-ஆம் ஆண்டில் மெல்போர்ன் டெஸ்டின்போது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இந்திய அணிக்கு பந்துவீச்சாளர் கேப்டனாக இருந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES நங்கூரமிட்ட ஜெய்ஸ்வால், ராகுல் முதன் இன்னிங்சில் கிடைத்த 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ராகுல், ஜெய்ஸ்வால் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை மிகவும் கவனமாக பந்துகளை எதிர்கொண்டனர். குறிப்பாக ஜெய்ஸ்வால், கிரீஸுக்கு உள்ளே நின்றே பந்துகளைச் சந்தித்ததால், எளிதாக பேக்ஃபுட் செய்து ஆட முடிந்தது. புதிய பந்தில் ஹேசல்வுட்டும், ஸ்டார்க்கும் ஆவேசமாகப் பந்துவீசியும் அதை ஜெய்ஸ்வால் லாவகமாக எதிர்கொண்டார். அவர் தேவையற்ற பந்துகளை தொடாமல் அப்படியே விக்கெட் கீப்பரிடம் விட்டுவிடவும் செய்தார். எந்த பந்தையும் வலுக்கட்டாயமாக அடிக்காமல், பந்து செல்லும் போக்கிலேயே தட்டிவிட்டு ஜெய்ஸ்வால் ரன் சேர்த்தார். சில நேரங்களில் கம்மின்ஸ் வீசிய பந்துகளை அப்பர்கட் ஷாட், ஸ்டார்க் பந்துவீச்சில் டீப் ஸ்குயர் லெக் திசையில் ஜெய்ஸ்வால் ஷாட் அடித்து பவுண்டரி அடித்தார். ராகுல் 124 பந்துகளில் அரைசதமும், ஜெய்ஸ்வால் 123 பந்துகளில் அரைசதத்தையும் எட்டி நங்கூரமிட்டனர். 2-வது செஷனில் ராகுல், ஜெய்ஸ்வால் ரன் சேர்க்கும் வேகம் அதிகரித்தது, இதைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர்களும் சோர்வடையத் தொடங்கினர். நேதன் லயன், டிராவிஸ் ஹெட் என சுழற்பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தினார். அவர்களின் ஓவர்களில் ஜெய்ஸ்வால் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார், சில பவுண்டரிகளையும் அவர் விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறல் பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுதான் ஓங்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை முற்றிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ராகுல் சிதைத்துவிட்டனர். முதல் இன்னிங்ஸில் ராகுல்,ஜெய்ஸ்வாலை எளிதாக ஆட்டமிழக்கச் செய்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், ஸ்ட்ராக், கம்மின்ஸ் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் பலவிதமான வித்தைகள் செய்தும் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. பெர்த் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது. கூக்கபுரா பந்தில் விரைவாக விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கருதி, ஜெய்ஸ்வாலும், ராகுலும் ரன் சேர்ப்பதில் கவனத்தைச் செலுத்தாமல் நீண்ட நேரம் களத்தில் நிற்கவும், விக்கெட்டை நிலைப்படுத்தவும் கவனம் செலுத்தினர். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இன்று முற்றிலும் தோல்வி அடைந்து, சோர்வடைந்தனர். அவர்கள் சோர்வடைந்த நேரத்தைப் பயன்படுத்தி ஜெய்ஸ்வால், ராகுல் இருவரும் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகப்படுத்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 218 ரன் முன்னிலை இருவரின் அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 38 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சாதனை 20 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பின் அரைசதம் அடித்துள்ளனர். கடைசியாக 1986்-ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர்-கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தொடக்க ஜோடியாக களமிறங்கி இருவரும் அரைசதம் அடித்திருந்தனர். அதன்பின் எந்த இந்த தொடக்க ஜோடியும் அரைசதம் அடிக்கவில்லை. 38 ஆண்டுகளுக்குப்பின் இப்போது ஜெய்ஸ்வால், ராகுல் அடித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx287emzngmo
  21. வடக்கில் இடர்களை எதிர்கொள்ள தயார்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளனர். பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று(22.11.2024) இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இடர் நிலைமை அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லையாயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும். பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் - செப்டெம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவாக்கப்பட்டிருக்கவேண்டும். சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை சட்டரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின் காவல்துறையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். அதேநேரம், பல இடங்களில் வாய்க்கால்களுக்குள், வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுதான் வழி. பல தடவைகள் விழிப்புணர்வுகளை செயற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரப் பணிப்பாளரின் கோரிக்கை அத்துடன், இடர் நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இடர் நிலைமைகளை எதிர்கொள்வதற்காக கடற்படையினரின் 16 குழுக்கள் படகுகளுடன் தயாராக இருப்பதாகவும் மேலதிகமாக தேவைப்பட்டால் அதையும் பெற்றுக் கொள்ளக்கூடிய தயார் நிலையில் தாம் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்வரும் இடர் நிலைமைகளின் போது பொதுமக்கள் இடர்முகாமைத்துவப் பிரிவின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 0773957894 என்ற இலக்கங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 021 228 5330, 0772320528 என்ற இலக்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023 211 7117 என்ற இலக்கத்துக்கும், வவுனியா மாவட்டத்தில் 0760994883 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/ready-to-face-the-dangers-in-the-north-1732345613
  22. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது : புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பில் நாணய நிதிய அதிகாரிகள் மகிழ்ச்சி! 23 NOV, 2024 | 02:24 PM இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதற்கு சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை அனுமதி அளித்ததன் பின்னர், இலங்கைக்கு 4ஆம் கட்டமாக 254 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்படும் எனவும் இன்றைய தினம் (23) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் கட்ட மீளாய்வு கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்றிட்டத்தின் இலக்குகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமைவது அவசியம் என இந்த கலந்துரையாடலின்போது சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதேவேளை, விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்றிட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்வதில் புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாடு தமது நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாகவும் நாணய நிதிய அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளமை முக்கிய விடயமாகிறது. (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/199475
  23. ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க பொலிஸார் ஆலோசனை 23 NOV, 2024 | 12:46 PM (துரைநாயகம் சஞ்சீவன்) நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார். நேற்றைய தினம் (22) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவால் நினைவேந்தல் செய்ய முடியாமல் போனது. இம்முறை பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை சம்பூர் பொலிஸார் வழங்கியுள்ளதாகவும், பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸார் உட்பட முப்படையினரின் கடமைகளுக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இது ஜனநாயக நாடாகும். இந்த நாட்டில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. இந்த விடயம் அரசியல் அமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை கூட கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மறுத்திருந்தார்கள். தற்போதைய புதிய அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் பெரும்பான்மை அதிகூடிய வாக்குகளை வழங்கியுள்ளமையானது மீண்டும் தமிழர் தேசம் ஜனநாயக ரீதியில் பயணிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், புதிதாக ஆட்சியை அமைத்திருக்கின்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைகள் ஏதும் விதிக்காது எமது உரிமைகளை மதித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், மாவீரர் நாள் நினைவேந்தல் தினத்தை காரணம் காட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில அரசியல் கட்சிகள் தமது அரசியல் இலாபத்துக்காக நிதி சேகரித்து வருவதாகவும் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது உள்நாட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி உதவி செய்ய விரும்புவோர் வெளிப்படையான எமது கணக்கிலக்கத்துக்கு உதவி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199478
  24. எல்லோரிடம் இருந்து எச்சரிக்கைகள் வருகின்றன. இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராவோம். 1) உலர் உணவு 2) தற்காலிக ஒளியமைப்பு(விளக்கு, மெழுகுதிரி) 3) நுளம்புவிரட்டி 4) போர்வை, பாய், மாற்று உடைகள் 5) உயர்ந்த முறிந்து வீடுகள் மேல் விழ வாய்ப்புள்ள மரக்கிளைகளை வெட்டிவிடுதல் மேலும் இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள உங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளை பினபற்றவும்.
  25. STUMPS India (57 ov) 150 & 172/0 Australia 104 Day 2 - India lead by 218 runs. Current RR: 3.01 • Last 10 ov (RR): 46/0 (4.60)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.