Everything posted by ஏராளன்
-
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்
டிரம்புக்கு குவியும் வாழ்த்துகள் - யுக்ரேன், இஸ்ரேல், இந்தியா கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். வெற்றிமுகத்தில் இருக்கும் போதே ஃபுளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும். இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் வாழ்த்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற என் நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.” என்று கூறியுள்ளார். “நமது மக்களின் மேம்பாட்டிற்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.” என்று மோதி தனது பதிவில் கூறியுள்ளார். அந்தப் பதிவில் டொனால்ட் டிரம்ப் உடனான தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோதி. பட மூலாதாரம்,NARENDRAMODI/X படக்குறிப்பு, டிரம்பை வாழ்த்திய நரேந்திர மோதி இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் டிரம்புக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், "வரலாற்றின் மிகப்பெரிய மறுவரவிற்கு (Comeback) வாழ்த்துகள்! இதுவொரு மாபெரும் வெற்றி” என்று கூறியுள்ளார். “வரலாற்று சிறப்புமிக்க வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை நீங்கள் மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவிற்கு ஒரு வலிமையான மறுசீரமைப்பையும் வழங்குகிறது" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரும் என நெதன்யாகு கருத்து பிரிட்டன் பிரதமர் வாழ்த்து பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். மிக நெருக்கமான நட்பு நாடுகள் என்ற முறையில், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் ஒன்றாக, உறுதுணையாக நிற்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார். "வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு முதல் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் வரை, பிரிட்டன் -அமெரிக்கா சிறப்பு உறவு, வரவிருக்கும் ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்பதை நான் அறிவேன்." என்றும் கிய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். யுக்ரேன் அதிபர் வாழ்த்து யுக்ரேன் அதிபர் வொலொதிமிர் ஸெலென்ஸ்கி, டொனால்ட் டிரம்பை வாழ்த்தியுள்ளார். "சர்வதேச விவகாரங்களில் "வலிமை மூலம் அமைதி" என்ற கொள்கையைக் கொண்ட டிரம்பை நான் வாழ்த்துகிறேன். இது தான் யுக்ரேனுக்கும் அமைதியை வழங்கும். இதனை நாம் இருவரும் இணைந்து நடைமுறைப்படுத்துவோம்," என்று கூறி தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார் அவர். "டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ் வலிமையான அமெரிக்காவை நான் எதிர்பார்க்கிறேன். அமெரிக்காவின் இரு கட்சிகளும் யுக்ரேனுக்காக வழங்கிய வலிமையான ஆதரவை நாங்கள் நம்பியுள்ளோம். இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ஒன்றாக பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பாவில் ஒரு வலுவான ராணுவ சக்தியைக் கொண்ட யுக்ரேன் ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பிரதேசத்தில் உள்ள சமூகங்களுக்கான நீண்ட கால அமைதி மற்றும் பாதுகாப்பினை எங்கள் கூட்டணி நாடுகள் உதவியுடன் நிலை நிறுத்த உறுதி பூண்டுள்ளோம். அதிபர் டிரம்பை நேரில் பார்த்து வாழ்த்தவும், அமெரிக்காவுடனான யுக்ரேனின் மூலோபய கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவும் ஆவலுடன் இருக்கிறேன்," என்று அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூற ஆவலுடன் இருக்கிறேன் என யுக்ரேன் அதிபர் கூறியுள்ளார். ஹங்கேரி பிரதமர் வாழ்த்து டிரம்பின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்ட ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். "உலக நாடுகள் அனைத்திற்கும் தேவையான முக்கியமான வெற்றி இது," என்று குறிப்பிட்ட அவர், "அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மறுவரவு இது," என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக போட்டியிட முடிவு செய்த போது அதனை ஆர்பன் வெளிப்படையாக ஆதரித்தார். 2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகளில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு வழங்கிய முதல் மற்றும் ஒரே தலைவர் இவர் மட்டுமே. பட மூலாதாரம்,REUTERS/X படக்குறிப்பு, ஹங்கேரி பிரதமருடன் டொனால்ட் டிரம்ப் வாழ்த்திய இதர தலைவர்கள் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், டிரம்பை வாழ்த்தியுள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில், "அமைதிக்காகவும் செழுமைக்காகவும் மரியாதையுடனும் லட்சியத்துடனும்," முன்பு ஒன்றாக பணியாற்றியதைப் போன்று தொடர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார். நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே, டிரம்பின் தலைமை "எங்களின் கூட்டாளிகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். அவருடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்," என்று கூறியுள்ளார். நேட்டோவை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்திருக்கிறார். கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஐரோப்பிய உறுப்பு நாடுகள், பாதுகாப்பிற்காக போதுமான நிதியை வழங்குவதில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி , "இரு நாடுகளும் அசைக்க முடியாத கூட்டணி, பொது மதிப்புகள் (Common Values), வரலாற்று ரீதியிலான நட்பால் இணைந்திருக்கிறது. இது மூலோபாய கூட்டணி. வருங்காலத்தில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று கூறி வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார். சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "அமெரிக்க அதிபர் தேர்தலானது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம். அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம்," என்று கூறினார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜக்ரோவா, "அமெரிக்கா அதன் ஜனநாயகத்தை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் சொந்த தோல்விகளுக்கு மற்றவர்களை குற்றம் சொல்லக் கூடாது," என்று கூறினார். கடந்த முறை தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடு அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்தியது என்று குற்றம் சுமத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c207r1kr5pvo
-
மன்னாரில் கனிய வள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு அறிக்கை தயாரிப்புக்கு எதிர்ப்பு
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகளில் அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (06) காலை குறித்த பிரதேசத்தில் இடம் பெற இருந்த நிலையில் அப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைதொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனிய வள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கைக்காக மன்னார் மற்றும் தென் பகுதிகளில் உள்ள சுமார் 20 வரையிலான திணைக்கள அதிகாரிகள் பெருந் தொகையான வாகனங்களில் குறித்த பகுதிக்கு வருகை தந்தனர். குறித்த விடையத்திற்காக அதிகாரிகள் வருகை தருவதை அறிந்த அக்கிராம மக்கள்,பொது அமைப்புக்கள் உள்ளடங்களாக நூற்றுக்கணக்கான மக்களை ஒன்று திரண்டு வருகை தந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாது பாதையை தடுத்ததுடன் அதிகாரிகளுடன் முரண்பட்டனர். அத்துடன் இச் சம்பவத்தை அறிந்து மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,வேட்பாளர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் சம்பவ இடத்துக்குச் சென்று இப்பகுதிக்கு அதிகாரிகள் வந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில் அதிகாரிகள் பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கு இடை முரண்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் கனியவள மணல் அகழ்வதற்கான இடங்களை பார்வையிட்டுவதற்கு உட்செல்ல முயன்ற நிலையில் மக்கள் திரண்டு இதற்கான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த மணல் அகழ்வு மற்றும் காற்றாலை இப் பிரதேசம் எதிர் கொண்டு வரும் பாதிப்புகளை தெளிவாக வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தி குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களை செல்ல விடாது பாதையை மறித்து அவர்களை திருப்பி செல்ல கோரிய நிலையில் கள விஜயம் தற்காலிகமாக நிறுத்தி அரச பணிக்கு இடையூறு விளைவித்தமைக்காக நீதிமன்றத்தை பொலிஸார் நாடியுள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் குறித்த பகுதியிலே நீதி மன்ற நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை பிரதமர் ஹரினி தலைமையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் மன்னாரில் கனிய மணல் அகழ்வு தொடர்பில் அரசாங்க மீள் ஆய்வு செய்ய உள்ளது என தெரிவித்திருந்த நிலையில் அவர் கருத்து தெரித்து இரண்டு நாட்களில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமை கவலை ஏற்படுத்துவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/198039
-
கடவுச்சீட்டை பெற புதிய நடைமுறை - குடிவரவு குடியகல்வு திணைக்களம்
ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறை; இன்று முதல் அமுல் ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறை இன்று (06) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, www.immigration.gov.lk என்ற இணைப்பின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311777
-
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று இஸ்ரேலில் ராணுவ அமைச்சர் பதவிநீக்கம் - மக்கள் போராட்டம் ஏன்?
பட மூலாதாரம்,REUTERS எழுதியவர், ஜான் டொன்னிசன், ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி செய்திகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டை பதவியில் இருந்து நீக்கிய பிறகு போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக நெதன்யாகு அறிவித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக கேலண்ட் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் துவங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள இஸ்ரேல் கட்ஸ் பாதுகாப்பு அமைச்சராகிறார். மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது என்று கேலண்ட் கூறியிருக்கிறார். காஸாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை, சில தியாகங்கள் செய்வதன் மூலமாக மீட்டுவிடக் கூடும் என்ற அவரது நம்பிக்கையும் இந்த விவகாரத்தில் ஒன்று. இந்த சூழலில் நெதன்யாகு பதவி விலகவும், பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க முக்கியத்துவம் அளிக்கும் நபரை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கவும் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நெதன்யாகு - கேலண்ட் கருத்து முரண்பாடு நெதன்யாகுவும் கேலண்டும் மாறுபட்ட கருத்துகளோடு ஒன்றாக பணிபுரிந்த ஒரு வரலாற்றை கொண்டிருக்கின்றனர். கடந்த காலங்களில் இஸ்ரேலின் போர் யுத்திகள் குறித்த மாறுபட்ட கருத்துகள் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மத ரீதியாக தீவிரமான மரபுகளைப் பின்பற்றுகிற இஸ்ரேல் குடிமக்கள் ராணுவத்தில் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதை எதிர்த்தார் கேலண்ட். 2023-ஆம் ஆண்டு காஸாவில் போர் துவங்குவதற்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக கேலண்ட்டை நெதன்யாகு பதவியில் இருந்து நீக்கினார். பொதுமக்களின் போராட்டங்களுக்கு பிறகு அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று (நவம்பர் 06), "முன்பைக் காட்டிலும் போருக்கு மத்தியில் பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை தேவையாக இருக்கிறது," என்று கூறினார் நெதன்யாகு. "போரின் ஆரம்ப காலத்தில் அது பலனளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது, கடந்த சில மாதங்களாக அந்த நம்பிக்கை முழுமையாக தகர்ந்து போயுள்ளது" என்று கூறினார் நெதன்யாகு. அரசாங்கம் எடுத்த முடிவுகளுக்கு எதிர்மாறான அவரது கருத்துகளும் செயல்பாடுகளும் இந்த நம்பிக்கை இழப்புக்கு காரணமாக அமைந்தன என்றும் அவர் கூறினார். இந்த செய்தி வெளியான பிறகு, சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேலண்ட், "இஸ்ரேலின் பாதுகாப்பு தான் என்னுடைய வாழ்க்கையின் இலக்காக இருந்தது. அதுவே என் வாழ்நாள் முழுவதும் இலக்காக இருக்கும்," என்று குறிப்பிட்டிருந்தார். "மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள்," காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட முழுமையான அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார். ராணுவ சேவைகளில் யாருக்கும் விலக்கு அளிக்கக் கூடாது, காஸாவில் பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை உடனே அழைத்து வர வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். பிணைக்கைதிகள் குறித்து குறிப்பிட்ட போது, "இதில் வெற்றி பெற வலி மிகுந்த சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். இஸ்ரேலும், இஸ்ரேல் ராணுவப்படையும் அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும்," என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, போராட்டத்தில் இறங்கிய மக்கள் மக்கள் போராட்டம் இந்த அறிவிப்பு வெளியான பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரான யெய்ர் அமித், "நெதன்யாகு மொத்த நாட்டையும் அழிவின் பக்கம் இழுத்துச் செல்கிறார். அவர் உடனடியாக தன்னுடைய பதவியில் இருந்து விலக வேண்டும். மக்கள் நலனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நபர் தான் இஸ்ரேலை ஆட்சி செய்ய வேண்டும்," என்று கூறினார். அயலோன் நெடுஞ்சாலையில் சில போராட்டக்காரர்கள் தீயைப் பற்ற வைத்தனர் என்றும், இரு பக்கமும் போக்குவரத்துக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தினார்கள் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று ஹமாஸ் படையினரால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் உறவினர்கள் உருவாக்கியுள்ள குழுவும் பிரதமரின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ளது. கேலண்டை பதவியில் இருந்து நீக்கியது பிணைக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் அவர்கள். அவர்கள் உருவாக்கியிருக்கும் 'பிணைக்கைதிகள், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைப்பு' (Hostages and Missing Families Forum), புதிதாக வர இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரை முடிவுக்கு கொண்டு வரவும், பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்யவும் தன்னுடைய அர்ப்பணிப்பை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஹமாஸ் குழுவால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 251 நபர்களில் நூறு பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. புதிதாக பதவியேற்க இருக்கும் கட்ஸ், ராணுவ விவகாரங்களைப் பொருத்தவரை போருக்கான அதீத நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று அறியப்படுபவர். நெதன்யாகுவிற்கு நெருக்கமான கிடியோன் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். நெதன்யாகு முதல்முறையாக 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேலண்டை பதவியில் இருந்து நீக்கினார். நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் மறுசீரமைக்க எடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் இதற்கு எதிராக போராட்டங்கள் எழுந்த நிலையில் அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை அவர்கள் 'கேலண்ட் நைட்' என்று நினைவுகூர்கின்றனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நெதன்யாகுவும், கேலண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று இஸ்ரேலில் அமைச்சர் பதவிநீக்கம் இந்த ஆண்டு மே மாதம், காஸாவுக்கான போருக்கு பிந்தைய திட்டங்களை வகுக்காமல் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக கேலண்ட் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார். காஸாவின் நேரடியாக அதிகாரம் செலுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று இஸ்ரேல் மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்று நெதன்யாகுவை கேலண்ட் கேட்டுக் கொண்டார். ராணுவ நடவடிக்கை செல்லும் திசைக்கும் இஸ்ரேலின் போர் அமைச்சரவைக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிளவை வெளிப்படையாக்கியது அந்த வேண்டுகோள். "அக்டோபர் மாதத்தில் இருந்து இதுகுறித்து நான் கேள்வி எழுப்பி வருகிறேன். ஆனால் அரசிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை," என்று கேலண்ட் கூறினார். பாலத்தீன அமைப்புகளான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவை குறிப்பிட்டு, ஹமாஸ்தானுக்கு பதிலான ஃபத்தாஸ்தானை பெற நான் தயாராக இல்லை என்று பதில் கூறினார் நெதன்யாகு. நவம்பர் 5-ஆம் தேதி அன்று நெதன்யாகுவின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர். காஸாவுக்கு எதிரான இஸ்ரேல் போருக்கு ஆதரவு அளிக்கும் முக்கியமான நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நாளன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று சில இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. நெதன்யாகுவைக் காட்டிலும் கேலண்ட் வெள்ளை மாளிகையுடன் நல்ல உறவில் இருந்தவராக அறியப்பட்டார். இஸ்ரேல் பாதுகாப்பு விவகாரங்களில் முக்கியமான கூட்டாளியாக அமைச்சர் கேலண்ட் திகழந்தார் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதி ஒருவர் கூறினார். "நெருங்கிய கூட்டாளிகளாக இஸ்ரேலின் புதிய அமைச்சருடன் நாங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவோம்," என்று கூறினார் அவர். தீவிர யூத மரபுகளை பின்பற்றும் இஸ்ரேலியர்களுக்கு ராணுவத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கூடிய மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தீவிர வலதுசாரிகள் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு தீவிரமான எதிர்ப்பை பதிவு செய்து வந்தார் கேலண்ட். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czj7kegr8j7o
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியானார் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார். சர்வதேசத்தின் சக்தி மிகுந்த நாடான அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரிஸும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். தொடக்கம் முதலே இருவரும் கடுமையான பிரசார யுக்திகளை கையாண்டனா்.அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் கமலா ஹரிஸுக்கு ஆதரவாக இருந்தது. இதனால் டிரம்ப் தனது பிரச்சார முறையை மாற்றினார். டிரம்ப்பிற்கு ஆதரவாக உலக பணக்காரரான எலான் மஸ்க் களம் இறங்கி கடுமையாக பிரசாரம் செய்தார். இருவருக்கும் இடையே கடுமையான பிரசார போட்டி நிலவியது. இதற்கு இடையே நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதியான நிலையில், டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். தனது போட்டியாளர் கமலா ஹரிஸை விட அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் 2 வது முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். https://thinakkural.lk/article/311814
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
(எம்.மனோசித்ரா) பணம் அச்சிடப்படுவதால் மீண்டும் பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். வரிசை யுகம் உருவாகும். இதனை முன்னரே அறிந்ததால் தான் ஒன்றரை ஆண்டுகளில் முடியாவிட்டால் விட்டுச் செல்வதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறையில் இன்று செவ்வாய்கிழமை (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்குரோத்தடைந்த நாடொன்று மிகக் குறுகிய காலத்தில் அந்த நிலைமையிலிருந்து மீண்டிருக்கின்றது என்றால் அது இலங்கை மாத்திரமே. அதற்குரிய பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தையே சேரும். எவ்வாறிருப்பினும் அதனை மக்கள் மறந்து விட்டனர். தற்போது யார் வேண்டுமானாலும் நாட்டை நிர்வகித்துச் செல்லலாம் என்று மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் அது தவறாகும். இதனை நாம் தேர்தலுக்கு முன்னரே கூறினோம். எனினும் 42 சதவீத மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருக்கின்றார். செப்டெம்பர் 19ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் அவ்வாறே கையெழுத்திடப்படுகிறது. தற்போது நாடு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 14ஆம் திகதியாகும் போது மக்கள் படிப்படியாக இதை உணர்ந்து கொள்வார்கள். நாணய நிதியம் குறிப்பிட்டுள்ள இலக்கை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் அந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த அறிவு இந்த அரசாங்கத்துக்கு இல்லை. எனவே தான் 98 000 கோடி கடன் பெற்றுள்ளனர். ஒருபோதும் பிணைமுறி கடன் பெறப் போவதில்லை எனக் கூறியவர்கள் தான் இந்தளவு கடனைப் பெற்றிருக்கின்றனர். கடன் பெற்று நாட்டை நிர்வகிப்பதென்றால் அரசாங்கம் எதற்கு எனக் கேட்டனர். தற்போது அதையும் இவர்கள் செய்கின்றனர். பணம்அச்சிடப்படுவதால் மீண்டும் பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். வரிசை யுகம் உருவாகும். இதனை முன்கூட்டியே கணித்ததன் காரணமாகவே ஒன்றரை ஆண்டுகளுக்கு இதனை செய்வதாகவும், முடியாவிட்டால் விட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் அதைக் கூறினாலும் அவரது சகாக்கள் அதனை விரும்பவில்லை. தொழிற்சங்கங்கள் கலைக்கப்படும் என்று நிபுனாராச்சி கூறுகின்றார். கடந்த ஆட்சி காலங்களில் தொழிற்சங்கங்களை வீதிக்கிறக்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட இவர்கள் தற்போது தமது தேவை நிறைவேறிய பின்னர் அவற்றைக் கலைப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். மறுபுறம் ஜனாதிபதி மற்றும் ஹரிணி அமரசூரிய ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று பயந்து ஓடாமல் பலவந்தமாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வோம் என்பதே இவர்களது கொள்கையாகவுள்ளது. தற்போது கிடைத்துள்ள அனைத்தையும் இழக்கும் போது தான் மக்களுக்கு எமது ஆட்சியில் கிடைத்தவற்றின் பெறுமதி புரியும் என்றார். https://www.virakesari.lk/article/197958
-
தமிழ் மக்களின் தீர்வு முயற்சியில் புதிய ஆட்சியாளர்களின் போக்கு ஏற்படுத்தப்போகும் தாக்கம்
நடராஜ ஜனகன் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் கட்சியில் எதிர்பார்ப்புகளையும் எதிரணியின் விமர்சனங்களையும் மேற்படி தேர்தல் முடிவுகள் தீர்மானம் செலுத்தும் பிரதான காரணியாக அமையப்போகிறது. நடந்து முடிந்துள்ள எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பெரிய அளவில் சாதகமான கருத்துக்கணிப்பை வழங்கவில்லை. 48 விகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே அரசாங்கம் மேற்படி தேர்தலில் பெற்றிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 58 விகிதமான மக்கள் புதிய ஜனாதிபதிக்கு எதிராகவே தமது வாக்குகளை பதிவு செய்திருக்கும் நிலையில் எம்பிலிபிட்டிய தேர்தல் முடிவும் நம்பிக்கை தரும் முடிவாக அமையவில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட இருந்த வேதன உயர்வு தொடர்பான விடயத்தில் ஆட்சியாளர் பின்னடித்தமை எதிரணியினரின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் அமர்வதற்கு ஜனாதிபதி தேர்தலில் அரச ஊழியர்களின் வாக்குகள் பெரிய அளவில் உறுதுணையாக அமைந்திருந்தது. தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அரச ஊழியருக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேதன மறுபரிசீலனை செய்யப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்த நிலையில் அந்த வாக்குறுதியானது தற்போது முற்றாகவே கரைந்து போன நிலை காணப்படுகிறது. புதிய ஆட்சியாளர்களை தொழிற்சங்க தலைமைகள், மாணவ அமைப்புகள், சிவில் அமைப்புகளின் பிரதானிகள் அடுத்த வரவு – செலவு திட்டம் வரை பொறுமை காத்து நிற்கின்றனர். முன்னைய ஆட்சியின் போது தமக்கான கோரிக்கைகளை முன்வைத்து தினம் தினம் போராட்டங்களை முன்னெடுத்து வந்த இவர்கள் தற்போது கருத்துக்கள் எதனையும் பதிவு செய்யாமல் பொறுமை காத்து வருகின்றனர். ஆனாலும் புகையிரத சேவை அதிபர்கள் சங்கத்தினர் மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருக்கும் நிலை தோற்றம் பெற்றிருக்கிறது. எனவே நடைபெறப் போகும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினர் போதியளவு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது. இதேநேரம் மக்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான வேதன உயர்வுகள் வழங்கப்பட்டே ஆக வேண்டும். இவற்றுக்கான நிதி வருமானத்தை எப்படி பெற போகின்றார்கள் என்பது கேள்விக்குறியே. ஏற்கனவே பணத்தை அச்சடித்துள்ளார்கள், கடன்களைப் பெற்றுள்ளார்கள் என்ற விமர்சனங்கள் மேல் வந்திருக்கும் நிலையில், புதிய அரசாங்கத்தின் நிதியீட்டல் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது ஆய்வு அறிக்கை முழுமை பெற்ற பின்னரே நான்காம் கட்ட கடன் தொகையை பெற்றுக் கொள்ள முடியும். அந்த விடயம் இன்னமும் முற்றுப் பெறாத நிலையே காணப்படுகிறது. புதிய ஆட்சியாளர் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக உறவு முறையில் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொண்டாலும் ஈரான், மியன்மார், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்புகளை பேணுவதிலும் ஆர்வத்தை காட்டுவதால் சிக்கல் நிலைகள் உருவாகலாம். ரணில் விக்ரமசிங்க தலைமையிலிருந்த ஆட்சியில் ரணிலின் நகர்வுகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளாது. ஏன் என்றால் ரணில் விக்ரமசிங்க தமது பிரதானி என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் தேசிய மக்களின் சக்தி நிலை அதுவல்ல. பூகோள அரசியல் முகாம் இரண்டு அணியாக பிரிந்து நிற்கின்ற இந்தக் காலகட்டத்தில் அதிக பொருளாதார சவால்களை கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய தேசமான இலங்கை ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய நிலையில் காணப்படுகிறது. தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் தகரத் தொடங்கியுள்ளது. பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டு வரும் முன்னுரிமை கூடியிருக்கின்றதே தவிர குறையும் நிலை தென்படவில்லை. அவர்களது பிரச்சார மேடைகளில் கூட பௌத்த துறவிகளின் அதிக பிரசன்னத்தை காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும் அரசியலமைப்பின் 13 வது திருத்தம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர்களில் பிரதானமானவரான ரில்வின் சில்வா வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. மேலும் புதிய ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவை தீர்மானம் தொடர்பில் வெளிப்படுத்தியிருக்கும் நிலைப்பாடுகள் நம்பிக்கை எதனையும் வழங்காத நிலையே ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட மாட்டாது என்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அறிவிப்பு அவர்கள் மீதிருந்த சொற்ப நம்பிக்கையையும் துடைத்தெறிந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இவர்களின் ஆட்சியில் கூட மண்டதீவில் தனியார் காணியை அரசு தரப்பினர் தமதாக்க அளவீடு செய்யும் முயற்சிகளை மேற்கொண்டபோது தமிழ் அரசியல் பிரதானிகளும் மக்களும் தெரிவித்த கடும் எதிர்ப்பால் மேற்படி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே புதிய ஆட்சியில் நில விடுவிப்புக்கு தயாரில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை.காணாமல் போனோருகு பதிலில்லை இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் எட்டாக்கனியாகவே மாறியுள்ளது. இத்தகைய சவால் மிக்க தருணத்தில் ஒன்றிணைந்த செயற்பாட்டை நோக்கி தமிழர் தேசம் நகராமல் வெறும் பாராளுமன்ற ஆசனங்களை பெற அந்த முறைமையில் உள்ள வரப்பிரசாதங்களை அனுபவிக்க நூற்றுக்கணக்கானவர்கள் களத்தில் நிற்கின்றனர். இதற்காக ஊடகங்களில் இலட்சக்கணக்கில் செலவுகளை செய்து விளம்பரங்களை வெளிப்படுத்தி தமது வெற்றியை பெற பகிரத பிரயத்தனங்களை செய்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போரில் அனைத்தையும் இழந்த மக்கள் போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் எதனையும் பெற்றுக்கொள்ளாத வடக்கு கிழக்கு மக்களின் துயரத்தை துடைக்க எத்தகைய வழி வகைகளையும் செய்ய முன்வராத இவர்கள் வடக்கு, கிழக்கில் உள்ள 20 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்காக எண்ணற்றவர்கள் களத்தில் நிற்பது வேதனை தரும் நிலையாகும். தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் தலைமறைவாகிவிடுவார்கள் என்பது மட்டும் உண்மை நிலையாகும். https://thinakkural.lk/article/311585
-
அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
பாகிஸ்தானை பிரமிக்கவைத்த பெட் கமின்ஸின் துடுப்பாட்டம்; அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றி (நெவில் அன்தனி) மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியில் பெட் கமின்ஸின் திறமையான துடுப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமான முடிவைப் பெற்றுக்கொடுத்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் மொஹம்மத் ரிஸ்வான் 44 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 37 ஓட்டங்களையும் நசீம் ஷா 40 ஓட்டங்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலியா 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது. அவர்களில் மிச்செல் ஸ்டாக் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். எட்டாவது பந்துவீச்சாளராக அறிமுகப்படுத்தப்பட்ட மானுஸ் லபுஷேன் ஒரு ஓவரில் 5 ஓட்டங்களுக்கு ரிஸ்வானின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார். 204 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சற்று சிரமத்திற்கு மத்தியில் 33.3 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஸ்டீவ் ஸ்மித் (44), ஜொஷ் இங்லிஷ் (49) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர். ஆனால், 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிந்ததால் அவுஸ்திரேலியா தடுமாற்றம் அடைந்தது. (155 - 7 விக்.) எனினும், சோன் அபொட் (13), பெட் கமின்ஸ் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகமூட்டினர். தொடர்ந்து பெட் கமின்ஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக். https://www.virakesari.lk/article/197891
-
வங்கதேசம்: இடைக்கால அரசு பணம் செலுத்தாததால் மின் விநியோகத்தை குறைத்த அதானி நிறுவனம்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேசம் ஏற்கெனவே மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது எழுதியவர், அர்ச்சனா சுக்லா பதவி, பிபிசி நியூஸ் அதானி குழுமம் `அதானி பவர்’ நிறுவனம் வாயிலாக வங்கதேசத்தில் மின் விநியோகம் செய்து வந்தது. அங்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் 10% அதானி பவர் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. வங்கதேசம் செலுத்த வேண்டிய 800 மில்லியன் டாலர் தொகை நிலுவையில் இருப்பதால், அதானி பவர் நிறுவனம் தற்போது அதன் மின்சார விநியோகத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது. இதையடுத்து வங்கதேச அரசு நிலுவைத் தொகையைச் செலுத்தும் நடவடிக்கையை விரைவுப்படுத்தியுள்ளது. பிபிசியிடம் பேசிய இரண்டு மூத்த அரசு அதிகாரிகள், அதானியின் நிலுவைத் தொகையை ஓரளவு செலுத்துவதற்கான செயல்முறையை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகக் கூறியுள்ளனர். அதானி வங்கதேசத்திற்கு கிழக்கு இந்தியாவில் உள்ள அதன் 1600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கிறது. மின் பற்றாக்குறையால் அவதிப்படும் வங்கதேசத்திற்கான விநியோகத்தைக் குறைப்பது பற்றிய பிபிசி கேள்விகளுக்கு அதானி நிறுவனம் பதிலளிக்கவில்லை. வங்கதேச மின் மேம்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, "நாங்கள் ஏற்கெனவே அதானி குழுமத்திற்கு 170 மில்லியன் டாலருக்கு கடன் கடிதம் (Letter of Credit - விற்பனையாளருக்கு வாங்குபவர் பணம் செலுத்த உத்தரவாதம் அளிக்கும் ஓர் ஆவணம்) வழங்கியுள்ளோம்" என்றார். நவம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தாவிட்டால், அனைத்து விநியோகங்களையும் நிறுத்தி வைப்பதாக அதானி பவர் நிறுவனம் மிரட்டியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் வங்கதேச மின் மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில், "முழு விநியோகம் துண்டிக்கப்படும் நிலை ஏற்படாது” என்று தான் நம்புவதாகக் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேச அதிகாரிகள் பிபிசியிடம், தாங்கள் படிப்படியாகவும் முறையாகவும் பணம் செலுத்தி வருவதாகவும், பணம் செலுத்தும் நெருக்கடியை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தனர். "நாங்கள் பணம் செலுத்துவதை விரைவுபடுத்திய போதிலும், மின் விநியோகங்கள் குறைக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாங்கள் திருப்பிச் செலுத்தத் தயாராக இருக்கிறோம், மாற்று ஏற்பாடுகளைச் செய்வோம். ஆனால் எந்த மின் உற்பத்தியாளரும் எங்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கவோ மிரட்டவோ அனுமதிக்க மாட்டோம்” என்று இடைக்கால அரசின் மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆலோசகர் ஃபவுசுல் கபீர் கான் கூறினார். ``வங்கதேசம் ஜூலையில் நிலுவைத் தொகையில், 35 மில்லியன் டாலர் செலுத்தியது. செப்டம்பரில் அந்தத் தொகையை அதிகரித்து 68 மில்லியன் டாலராக செலுத்தியது, அக்டோபரில் 97 மில்லியன் டாலர் செலுத்தியது," என்று அவர் கூறினார். வங்கதேசத்தில் ஏற்கெனவே கிராமப்புறங்களில் மின் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது. அரசியல் குழப்பம் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசம் டாலர் நெருக்கடியில் உள்ளது. மின்சாரம், நிலக்கரி, எண்ணெய் போன்ற விலையுயர்ந்த அத்தியாவசிய இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்துவதற்கு டாலர் வருவாய் ஈட்டப் போராடி வருகிறது. ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களால் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்தது. அப்போது ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் போது வெளிநாட்டு நாணய கையிருப்பும் வீழ்ச்சியடைந்தது. அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் கோரியுள்ளது. அதன்படி, தற்போதுள்ள 4.7 பில்லியன் டாலர் கடனுடன் கூடுதலாக 3 பில்லியன் டாலர் கடனை கோரியுள்ளது. அதானி பவர் நிறுவனம் 2015இல் `வங்கதேச பவர் டெவலப்மெண்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஷேக் ஹசீனா ஒப்புதல் அளித்த பல ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று. தற்போதுள்ள இடைக்கால அரசு இந்த மின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தை வெளிப்படைத்தன்மை இல்லாத ஒப்பந்தம் என்று விமர்சித்துள்ளது. தற்போது ஒரு தேசியக் குழு 11 முந்தைய ஒப்பந்தங்களை மறுமதிப்பீடு செய்து வருகிறது. அதானி உடனான ஒப்பந்தம் உள்பட, பல ஒப்பந்தங்கள் பெரும்பாலும் அதிக விலையில் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. அதானி பவர் நிறுவனம் மட்டுமின்றி சில இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் வங்கதேசத்திற்கு மின்சாரத்தை விற்கின்றன. இதில் என்.டி.பி.சி லிமிடெட், பி.டி.சி இந்தியா லிமிடெட் ஆகியவை அடங்கும். மற்ற இந்திய மின் விநியோக நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையும் பகுதியளவு செலுத்தப்பட்டு வருவதை மின் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசம் சில எரிவாயு மற்றும் எண்ணெய் அடிப்படையிலான (gas-fired and oil-fired) மின் உற்பத்தி நிலையங்களை, விநியோகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும் இது மின்சார செலவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்காலம் நெருங்கி வருவதால், ஏ.சி தேவையும் குறையும் என்பதால், மின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. "மற்ற நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகள் 50% திறனில் இயங்குகின்றன. மேலும் டாலர் நெருக்கடி காரணமாக நாடு போதுமான நிலக்கரியை வாங்க முடியவில்லை. எனவே அதானி பவர் வழங்கும் மின் விநியோகம் முக்கியம். இது உள்ளூர் உற்பத்தியாளர்களைவிட சற்று விலை அதிகம் ஆனால் இது முக்கியம்” என எரிசக்தி நிபுணரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான முனைவர் அஜாஜ் ஹொசைன் கூறினார். வங்கதேசம் தனது முதல் அணுமின் நிலையத்தை டிசம்பரில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. ரஷ்ய உதவியுடன் கட்டப்படும் இந்த நிலையத்திற்கு 12.65 பில்லியன் டாலர் வரை செலவாகும். இந்தத் திட்டம் பெரும்பாலும் நீண்ட கால ரஷ்ய கடன் சேவையால் நிதியளிக்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4g2r54235yo
-
மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்! மருமகன் தலைமறைவு
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (4) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்…. 4ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/197979
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை மீள நீதிமன்றம் அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி குழாம் மேல் நீதிமன்ற நீதிபதி குழாமிற்கு இன்று அறிவித்தது. அவர்களை விடுப்பதற்கான உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதன் ஊடாக தெரிந்தே கடமையை புறக்கணித்தமை, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குழாம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் குறித்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி தரப்பை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. https://thinakkural.lk/article/311657
-
உலக சாதனை படைத்த பூசணிக்காய் படகு! (வீடியோ)
பூசணிக்காயில் படகு சவாரி செய்து கின்னஸ் சாதனை பூசணிக்காய் என்ற உடன் கறி சமைக்கவும், ரசம் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்துக்கள் இறை வழிபாடுகளில் பயன்படுகிறது. ஹாலோவீன் தினத்திற்கு பயன்படுகிறது என்று தான் நாம் கேட்டு அறிந்து இருப்போம். ஆனால் எங்காவது பூசணிக்காயில் படகு சவாரி செய்த சம்பவம் குறித்து அறிந்து இருக்கிறோமா இல்லை. ஆனால் தற்போது அந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. பூசணிக்காய் மீது அலாதி பிரியம் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் 555 கிலோ பூசணிக்காய் வளர்த்து அதை படகாக பயன்படுத்தி 73.5 கிலோ மீற்றர் பயணித்துகின்னஸ் சாதனை படைத்துள்ளார். கேரி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பெரிய பூசணிக்காய்களை வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் பூசணிக்காய் படகில் பயணம் செய்ய வேண்டும் என்ற அவரது கனவு 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் நடத்தப்படும் பெரிய பூசணிக்காய் படகு போட்டி நிகழ்வில் (Giant Pumpkin Regatta-an event) கலந்து கொண்டபோது தோன்றியுள்ளது. இந்நிகழ்வில் கடந்த நான்கு ஆண்டுகளாக கலந்துகொண்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவ் ஆண்டு சரியான அளவில் பூசணிக்காயை வளர்த்து சாதனை புரிய தீர்மானித்தார். கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் பூசணிக்காய் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுபத்தப்பட்டு அக்டோபர் தொடக்கத்தில் அறுவடை செய்யப்பட்டது. அதன் சுற்றளவு 429.26 சென்றி மீற்றரும் (169 அங்குலம்) நிறை 555.2 கிலோ கிராமும் இருந்துள்ளது. இது ஒரு பெரிய பெரிய பியானோ அல்லது ஒரு வயது ஒட்டகத்தின் நிறை என தெரிவிக்கப்படுகிறது. பூசணிக்காயை செதுக்கிய பின்னர் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அதற்கு "பங்கி லோப்ஸ்டர்" என்று பெயரிட்டார். பூசணிக்காயில் கமராவை பொருத்தி அவர் துடுப்பில் பயணம் செய்வதை காணொளியாக காட்டினார். கடந்த அக்டோபர் 12 முதல் 13 ஆம் திகதி வரை கொலம்பியா ஆற்றின் குறுக்கே 26 கடினமான மணிநேரங்களில் 73.50 கிலோ மீற்றர் தூரத்தை பூசணிக்காய் படகில் கடந்துள்ளார். அவருக்கு இந்த பயணம் மிகவும் கடினமாக இருந்தது. ஆரம்பத்தில் மணிக்கு 56 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதோடு, அலைகளிலும் சிக்குண்டுள்ளார். "பங்கி லோஃப்ஸ்டர்" நன்றாக மிதக்க வேண்டும் என்பதற்காக, கேரி இரவிலும் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். பாதுகாப்பாக நங்கூரமிடக்கூடிய இடத்தைத் தேடி ஹேடன் தீவை நோக்கி செல்வதற்காக இரவுமழுவதும் பயணம் செய்ததாக தெரிவித்துள்ளார். இறுதியாக வொஷிங்டனின் வான்கூவரில் தனது பூசணிக்காய் படகை நங்கூரம் இட்டார். அங்கு அவரை பத்திரிக்கையாளர் வரவேற்றுள்ளார். இதன்போது, நான் சாதனையை முறியடிக்கவில்லை என்றால், நான் நான் ஒரு நம்பமுடியாத சாகசத்தை செய்தேன் என தெரிவித்திருந்தார். கேரி இதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட 63.04 கிலோமீட்டர் பூசணிக்காய் படகு பயண சாதனையை 73.50 கிலோமீட்டர் பயணத்தில் முறியடித்துள்ளார். ஆர்வம், விடாமுயற்சி மற்றும் பூசணியின் ஒரு சிறிய மாய சக்தி ஆகியன தனது வெற்றிக்கு காரணம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197963 இதனை வைத்து வேறு கற்பனைகளை வளர்க்கவேண்டாம்!
-
திராவிடம், தமிழ்த் தேசியம் என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
பட மூலாதாரம்,NTK/TVK எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குப் பிறகு, திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றா, இல்லையா என்பது குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தமிழக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இரு தத்துவங்களின் துவக்கம் என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 'திராவிடமும் தமிழ்த் தேசியமும்' எனது இரு கண்கள் எனக் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு, நாம் தமிழர் கட்சியின் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. இதற்கு உடனடியாக பதிலடி தந்த சீமான், "திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல" என்று குறிப்பிட்டார். இதையடுத்து, பல தரப்பினரும் இந்த இரு தத்துவங்கள் குறித்தும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். 'திராவிடம்' என்ற சொல்லின் பின்னணி என்ன? இதில், திராவிடம் என்ற சொல் நீண்ட காலமாகவே இலக்கியங்களில், ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்த சமணர்களில் நந்தி கணம் என்ற பிரிவினர், திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தியதாகத் தன்னுடைய 'சமணமும் தமிழும்' நூலில் குறிப்பிடுகிறார் மயிலை. சீனி. வேங்கடசாமி. "வச்சிரநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526இல் (கி.பி. 470 திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார்" என தேவசேனர் எழுதிய தர்சனசாரம் என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி குறிப்பிடுகிறார் வேங்கடசாமி. இந்த சங்கம் மதுரையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, எட்டு - ஒன்பதாம் நூற்றாண்டுகளில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி, 'திராவிட வேதம்' எனக் குறிப்பிடப்பட்டது. வைணவ முன்னோடிகளில் ஒருவரான நாதமுனிகள் நம்மாழ்வார் குறித்த தனிப் பாடல் ஒன்றில், 'திராவிட வேத சாகரம்' என்ற சொற்களைப் பயன்படுத்தினார். ஆதிசங்கரர் தான் இயற்றிய சௌந்தர்ய லஹரியில் திருஞானசம்பந்தரைக் குறிப்பிட, 'திராவிட சிசு' என்ற சொற்களைப் பயன்படுத்தினார். ஆனால், இந்தக் காலகட்டங்களில் திராவிட என்ற சொல், தமிழைக் குறிக்கப் பயன்பட்டதா அல்லது தென்னிந்தியா என்ற பொருள்படப் பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. இப்படி திராவிடம் என்ற சொல் நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருந்தாலும், நவீன காலத்தில் திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சமயப் பரப்பாளரான கால்டுவெல்லிடம் (1814 – 1891) இருந்துதான் துவங்குகிறது என்கிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு. "கால்டுவெல் ஒரு மொழிக் குடும்பத்தின் பெயராக 'திராவிடம்' என்ற சொல்லை முன்வைத்தார். A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages என்ற அவரது புகழ்பெற்ற நூலில், சமஸ்கிருதத்தின் துணையின்றி இயங்கும் வல்லமை கொண்ட ஆற்றல் தமிழுக்கு உண்டு எனக் குறிப்பிட்டதோடு, அதேபோல, சமஸ்கிருதத்தின் ஆதரவின்றி இயங்கக்கூடிய மேலும் ஐந்து மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றை திராவிட மொழிக் குடும்பமாக அடையாளப்படுத்தினார்" என்கிறார் தியாகு. 'திராவிட' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ராபர்ட் கால்ட்வெல். "இந்தப் புத்தகத்தில் திராவிடம் என்ற சொற்றொடரின் கீழ் சேர்க்கப்பட்ட சொற்கள், தென்னிந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசக்கூடிய மொழிகளைக் குறிக்கிறது. ஒரிசா, மேற்கிந்திய மாவட்டங்கள், குஜராத்தியும் மராத்தியும் பேசப்படும் தக்காணம் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து விந்திய மலைகள், நர்மதா நதியிலிருந்து கன்னியாகுமரி வரை தீபகற்ப இந்தியா முழுவதும் ஒரே இனத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களே வசிக்கிறார்கள். ஒரே மொழியின் பல்வேறு வழக்குகளையே அவர்கள் பேசுகிறார்கள். அந்த மொழிக்கு ‘திராவிட (Dravidian)’ என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடுகிறார் ராபர்ட் கால்ட்வெல். திராவிடம் அரசியலாக்கப்பட்டது எப்போது? நவீன காலத்தில் மொழிகளின் தொகுப்பை, நிலப்பகுதியை திராவிடம் என்ற சொல்லால் குறிப்பிடுவது அப்போதுதான் துவங்கியது என்கிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு. "ராபர்ட் கால்ட்வெல் நூலுக்குப் பிறகுதான், இந்த மொழிகள் பேசப்படக் கூடிய பகுதிகள் திராவிட நாடு எனக் குறிப்பிடப்படுவது அதிகரித்தது. இந்தப் பகுதிகளும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் எனக் குறிப்பிடப்பட்ட பகுதிகளும் கிட்டத்தட்ட நிலவியல் ரீதியாக ஒன்றாக இருந்தன. ஆகவே அதை திராவிட நாடு எனக் கருதுவதும் இயல்பாக இருந்தது" என்கிறார் தியாகு. கடந்த 1892 செப்டம்பரில் சென்னையில் இருந்த பட்டியலினத்தினர், ஆதிதிராவிட ஜன சபா என்ற அமைப்பைத் துவங்கினர். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில், இந்தியர்களுக்கு வேலைகள் அளிக்கப்பட ஆரம்பித்தபோது, பிராமணர்களே எல்லா வாய்ப்புகளையும் பெறுவதாகவும் பிராமணரல்லாதார் புறக்கணிக்கப்படுவதாகவும் குரல்கள் எழுந்தன. இந்தக் காலகட்டத்தில் 'திராவிடன்' என்ற சொல் கூடுதல் கவனம் பெற ஆரம்பித்தது. "அதே தருணத்தில் டாக்டர் சி. நடேசனார், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க, 'திராவிடன் இல்லம்' என்ற இல்லத்தை உருவாக்கினார். பிறகு, 'தி திராவிடியன் அசோசியேஷனும்' உருவாக்கப்பட்டது. இதற்குப் பிறகு, பிராமணர் அல்லாதோருக்கான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது. இதற்கென வெளியிடப்பட்ட ஆங்கில இதழ் Justice என்ற பெயரிலும் தமிழ் நாளிதழ் திராவிடன் என்ற பெயரிலும் வெளியானது" என்கிறார் தி டிரவிடியன் மூவ்மென்ட் (The Dravidian Movement) என்ற நூலை எழுதிய ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ். "இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் திராவிடன் என்ற சொல், இனம் மற்றும் மொழியியல் சார்ந்த பொருளில் வழங்கப்பட்டது. நீதிக் கட்சி உருவாக்கப்பட்ட நேரத்தில் தென்னிந்தியாவில் உள்ள பிராமணரல்லாத வகுப்புகளை திராவிடன் என்ற ஒரே சொல்லைக் கொண்டு குறிப்பிட்டனர். இவ்வாறு பண்பாட்டு மறுசீரமைப்பு அடையாளத்தை உறுதிப்படுத்தவும் பிராமணர் அல்லாத வகுப்புகள் தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் திராவிட தேசியம் உருவானது. யார் திராவிட மொழிகளில் ஒன்றைப் பேசுகிறார்களோ, அவர்கள் பொதுவாக திராவிடர்கள் என்ற மரபுரிமையைப் பெறுகிறார்கள்" என்று தனது 'தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசியமும்' நூலில் குறிப்பிடுகிறார் கு. நம்பி ஆரூரன். இதற்குப் பிறகு, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறியது. அதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக, திராவிடம் என்ற சொல், அரசியல் ரீதியாக தமிழ்நாட்டில் நிலைபெற ஆரம்பித்தது. 'தமிழ்த் தேசியம்' என்ற சொல்லின் பின்னணி என்ன? இதேபோல, தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கமும் நீண்ட காலமாகவே இருக்கிறது என்கிறார் தியாகு. "சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற சொல் இரு இடங்களில் இடம் பெறுகிறது. பரிபாடலிலும் 'தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்' எனத் தமிழ்நாடு குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு 11ஆம் நூற்றாண்டில் உரையெழுதிய இளம்பூரணாரும் 'நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்' என்று குறிப்பிடுகிறார். இதற்குப் பிறகு, தமிழ் பேசும் நிலப்பரப்பை தமிழ்நாடு எனத் தனியாகப் பார்க்கும் போக்கு 1930களின் பிற்பகுதியில் உருவாகிறது. ராஜாஜி முதலமைச்சார் ஆனபோது, இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டது. அதை எதிர்த்து, கி.அ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராசர் உள்ளிட்டோர் கூட்டம் நடத்தினர். பெரியாரும் இதில் தீவிரமாகக் களமிறங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இதை தமிழ்த் தேசியத்தின் துவக்கமாகச் சொல்லலாம்," என்கிறார் தியாகு. தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றா? கடந்த 1938 செப்டம்பர் 11ஆம் தேதி சென்னை கடற்கரையில் நடந்த ஒரு கூட்டத்தில் சோமசுந்தர பாரதியார், பெரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும், அவர்கள் முதல் முறையாக தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்ததாகவும் குறிப்பிடுகிறார் தியாகு. "மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, பெரியார் தொடர்ந்து 'தமிழ்நாடு' என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த சி.என். அண்ணாதுரை தென்னிந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். அண்ணாவைப் பொறுத்தவரை, 'மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று சேர்வோம்' என்றார். பல திராவிட அரசுகளுடன் சேர்ந்து திராவிட கூட்டமைப்பை உருவாக்குவோம் என்றார். 1960களில்தான் இந்தக் கோரிக்கையை அவர் கைவிட்டார். அதற்குப் பிறகு, தமிழ்நாட்டை முன்னிறுத்தியே திராவிடக் கட்சிகள் செயல்படுகின்றன" என்கிறார் தியாகு. கடந்த 1930களில் மட்டுமின்றி, அதற்குப் பின்வந்த காலங்களிலும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கத்தைப் பல தலைவர்கள் உயர்த்திப் பிடித்தனர். "தமிழர் ஒரு தனி தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம்" என்ற முழக்கத்துடன் செயல்பட்ட ம.பொ.சிவஞானம், மாநிலங்கள் மொழிவழியில் பிரிக்கப்பட்டபோது, எல்லைகளைக் காப்பதற்காகப் போராட்டங்களை நடத்தினார். அதேபோல, சி.பா. ஆதித்தனாரும் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி, தனித் தமிழ்நாடு வரை பேசினார். இவர்கள் இருவரும் பிற்காலங்களில் திராவிடக் கட்சிகளோடு இணைந்து செயல்பட்டனர். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த ஈ.வெ.கி. சம்பத், 1961இல் திராவிட நாடு கொள்கையில் சி.என். அண்ணாதுரையுடன் முரண்பட்டு, அக்கட்சியிலிருந்து பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிச் செயல்பட்டார். பிறகு இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். நக்சல்பாரி இயக்கத்தின் தாக்கத்தில் செயல்பட்ட தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் தமிழரசன் போன்றவர்கள் திராவிட இயக்கம் முன்வைத்த சாதி ஒழிப்பை ஏற்றுக்கொண்டர். ஆனால், அதை தனித் தமிழ்நாடு மூலமே அடையமுடியுமெனக் கருதினர். தியாகுவைப் பொறுத்தவரை, திராவிடக் கொள்கையும் தமிழ்த் தேசியக் கொள்கையும் ஒன்றுக்கொன்டு இசைவானவை. "திராவிடத்தின் சமூக நீதி கொள்கை இல்லாமல் தமிழ்த் தேசியம் வெற்றி பெற முடியாது. தமிழ்நாடு சுயநிர்ணய உரிமையை அடைந்தால் சாதியை ஒழிக்க முடியும். ஆகவே, ஒன்றை வைத்துதான் மற்றொன்று இருக்கிறது" என்கிறார் அவர். 'தமிழ்த் தேசியமும் திராவிடமும் ஒன்றல்ல' பட மூலாதாரம்,GNANAM ஆனால், திராவிடமும் தமிழ்த் தேசியமும் முற்றிலும் வேறானவை என்றும் ஆரியக் கருத்தியலின் துணை சக்திதான் திராவிடம் என்றும் குறிப்பிடுகிறார் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் அருணபாரதி. "திராவிடம் என்றால் என்ன என்று இப்போதுவரை அவர்களாலேயே வரையறுக்க முடியவில்லை. சிலர் இனம் என்கிறார்கள், சிலர் நிலப்பகுதி என்கிறார்கள். சிலர் வாழ்வியல் என்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டைக் குறிக்க தமிழ் என்ற சொல்லையே பயன்படுத்துங்கள் என்கிறோம்." "திராவிடர் என்று சொன்னால், தமிழர்களிடம் ஓர் உளவியல் ஊனம் ஏற்படுகிறது. அக்கம்பக்கத்து மாநிலங்களுடன் உரிமைகளுக்காகப் போராட முடியவில்லை. தமிழ்நாடு என்று பேசியிருந்தால், தீவிரமாகப் போராடியிருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை திராவிடம் என்பதும் தமிழ்த் தேசியம் என்பதும் ஒன்றல்ல. திராவிடம் என்பதை ஆரியத்தின் துணை சக்தியாகவே கருதுகிறோம்" என்கிறார் அருணபாரதி. பெரியார் திராவிடம் எனக் குறிப்பிட்டது, தான் பிற மொழி பேசக் கூடியவர் என்ற சங்கடத்தால் வந்தது, அதை நாம் ஏற்கத் தேவையில்லை என்கிறார் அவர். "நீதிக் கட்சி பெரியாரின் பொறுப்பில் வந்தபோது, அதில் தெலுங்கு ஜமீன்தார்கள் அதிகம் இருந்தனர். ஆகவேதான், இயக்கத்தின் பெயரை மாற்றும்போது தமிழர் கழகம் என்பதற்குப் பதிலாக திராவிடர் கழகம் எனப் பெயர் சூட்டினார். தமிழ்நாடு தமிழருக்கே என்பதை மாற்றி, திராவிட நாடு திராவிடருக்கே எனப் பேச ஆரம்பித்தார். தான் சார்ந்திருக்கும் சமூகத்தால், தன்னைப் பிறர் புறக்கணித்துவிடலாம் எனக் கருதி அவர் அப்படிச் செய்தார்" என்கிறார் அருணபாரதி. ஆனால், இதை மறுக்கிறார் தியாகு. "அந்தத் தருணத்தில் சென்னை மாகாண அரசு என்பது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஆகவேதான் அதற்குப் பொருத்தமாக, 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று பெரியார் சொல்ல ஆரம்பித்தார்," என்கிறார் அவர். ஆனால், மொழி வழியில் மாநிலங்கள் பிரிந்தபோது, தமிழ்நாடு தமிழருக்கே என்பதைத்தான் அவர் முன்வைத்தார். கடைசி பொதுக் கூட்டம் வரை அதை வலியுறுத்தினார். அண்ணா திராவிட நாடு கேட்டபோதுகூட அதை பெரியார் விமர்சித்தார்" என்கிறார் அவர். திராவிட இயக்கங்களைப் பொருத்தவரை, திராவிடத்திற்கு எதிராக ஆரியம் என்ற கருத்தாக்கத்தை முன்வைப்பதோடு, பிராமணர்களையும் ஆரியர்களாகச் சொல்கிறது. ஆனால், நாங்கள் சொல்லக்கூடிய தமிழ்த் தேசியத்தில் பிராமணர்களும் அடங்குவார்கள் என்கிறார் அருணபாரதி. "தமிழை ஏற்கக்கூடிய பிராமணர்களும் தமிழ்த் தேசியத்தில் அடங்குவார்கள். ஆனால், அவர்கள் தமிழை ஆட்சி மொழி, வழிபாட்டு மொழியாக ஏற்க வேண்டும். 1956இல் மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, இங்கு வசிக்கும் பிற மொழியினரும் இதில் அடக்கம்தான்" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62l9y59re6o
-
அரசின் இலக்குகளை அடைய, இதுவரை அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும் - ஜனாதிபதி
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச அதிகாரிகளின் அனுபவமானது அதற்கு பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுவதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பணி எனவும், மோசடி மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாகச் செயற்படுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பிரதேச அபிவிருத்திக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் சேவைகளைக் குறைக்காமல் அரச சேவையில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில, செயலாளர் ஜயவீர பெர்னாண்டோ உட்பட குழு உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/197967
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று (நவம்பர் 5) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கர்களில், 8.1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏராளமான மக்கள் வாக்களிக்க உள்ளனர். ஓஹையோ, மேற்கு விர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் இந்த முறை அதிக வாக்குப் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 11 அமெரிக்க மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. முடிவுகளைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான வட கரோலினாவில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சமீபத்திய ஹெலென் சூறாவளியால் இந்த மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூறாவளிக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கையில் பாதிப் பேர் வட கரோலினாவை சேர்ந்தவர்கள். கடந்த 2020இல், டொனால்ட் டிரம்ப் 2 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றார். 2022இல், அமெரிக்காவில் வாக்களிக்க சுமார் 16.1 கோடி மக்கள் பதிவு செய்திருந்தனர். தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடிய மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பேரணியில் வாக்காளர்களுக்கான தனது இறுதி பிரசார உரையை வழங்கினார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ். தனது பிரசாரத்தை ‘ஆற்றல், நம்பிக்கை, மகிழ்ச்சியுடன்’ முடிக்க விரும்புவதாக அவர் கூறினார். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முடிவுகளைத் தீர்மானிக்க வல்ல மாகாணங்களில் மற்றொன்றான மிச்சிகனில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். அங்கு உரையாற்றியபோது, தனது எதிரியை (கமலா ஹாரிஸ்) ‘தீவிர இடதுசாரி பைத்தியம்’ என்று குற்றம் சாட்டினார். பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN வெள்ளை மாளிகைக்கு வேலி இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருவதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையைச் சுற்றி வேலிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை அதிபர் கமலா ஹாரிஸின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 00:41 காணொளிக் குறிப்பு, தேர்தல் குறித்த போலி வீடியோக்களை ரஷ்யர்கள் வெளியிட்டனரா? அரிசோனாவில் தேர்தல் மோசடிகள் நடந்ததாகக் கூறப்படும் போலி வீடியோவின் பின்னணியில் “ரஷ்ய நடிகர்கள்” இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் கூறுகின்றன. தற்போது இடைநிறுத்தப்பட்ட கிரெம்ளின் சார்பு எக்ஸ் பக்கத்தின் மூலம் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ 2 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்தது. அரிசோனா மாகாண செயலர் ஏட்ரியன் ஃபோன்டெஸின் உதவியாளர் எனக் கூறி, “டொனால்ட் டிரம்புக்கு எதிரான பெரிய மோசடிக்கான” ஆதாரங்களைத் தான் கண்டதாக அந்த வீடியோவில் ஒருவர் குற்றம் சாட்டினார். ஃபோன்டெஸ் இந்தக் கூற்றுகளை பொய் என்று நிராகரித்தார். வீடியோவில் உள்ள நபரின் முகம் பிக்சலேட்டாக உள்ளது மற்றும் அவரது குரல், ரோபோடிக்கான, சலிப்பான மற்றும் இயற்கைக்கு மாறான இடைநிறுத்தங்களைக் கொண்டுள்ளது. இது AI-உருவாக்கிய ஆடியோவுடன் இணக்கமான அடையாளங்களைக் காட்டுகிறது. இந்த வீடியோவை ஃபவுண்டேஷன் டு பேட்டல் இன்ஜஸ்டிஸ் என்ற ரஷ்ய அறக்கட்டளையால் தயாரிக்கப்பட்டது. இது மறைந்த யெவ்ஜெனி பிரிகோஜினால் 2021இல் அமைக்கப்பட்டது. அவர் இறப்பதற்கு முன் அமெரிக்க தேர்தலில் குறுக்கீடு செய்ததற்காகத் தடை செய்யப்பட்டிருந்தார். இந்த அமைப்பின் உள்ளடக்கம் பெரும்பாலும் ரஷ்ய ஆதரவு நடவடிக்கையான 'ஸ்டார்ம்-1516' மூலம் பெரிதாக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல சந்தேகத்திற்குரிய தேர்தல் போலிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிப்பது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கமலா ஹாரிஸ் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் பந்தயத்தில் நுழைந்ததில் இருந்து தேசிய கருத்துகணிப்புச் சராசரியில் டிரம்பை விட சிறிய அளவில் முன்னிலை வகிக்கிறார். மேலும் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இரண்டு வேட்பாளர்களின் சமீபத்திய தேசியக் கருத்துகணிப்புச் சராசரிகள் கீழே காட்டப்பட்டுள்ளன. புள்ளிகள், அருகிலுள்ள முழு எண்ணுக்குத் திருத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் தேர்தலில், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தோல்வி அடைவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது. ஏன்? ஏனென்றால், அமெரிக்காவில் அதிபர் என்பவர் நேரடியாக வாக்காளர்களால் (பொது மக்களால்) தேர்வு செய்யப்படுவதில்லை. மாறாக ‘தேர்வாளர் குழு’ (Electoral college) என்ற குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். யாருக்கு வெற்றி என்பதை மக்களின் வாக்குகள் நேரடியாகத் தீர்மானிக்காது. இந்த வாக்குப்பதிவு, தேசிய அளவிலான போட்டி என்பதற்குப் பதிலாக மாகாண அளவிலான போட்டியாக இருக்கும். ஒரு வேட்பாளர் அதிபர் பதவிக்கு வெற்றிபெற, பெரும்பான்மையான தேர்வாளர் குழு வாக்குகளைப் (270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை) பெற வேண்டும். வெற்றி பெற்றவரின் துணை அதிபர் வேட்பாளரே, துணை அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார். கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தின் முதல் சில வாரங்களில் தனது கருத்துகணிப்பு எண்ணிக்கையில் சற்று ஏற்றத்தைக் கண்டார். ஆகஸ்ட் மாத இறுதியில் சுமார் நான்கு சதவீத புள்ளிகளில் முன்னிலை பெற்றார். செப்டம்பர் 10ஆம் தேதி இரு வேட்பாளர்களுக்கிடையில் நடந்த அதிபர் தேர்தலுக்கான விவாதத்தை சுமார் 7 கோடி மக்கள் பார்வையிட்டனர். செப்டம்பர் மாதம் வரை இந்த எண்ணிக்கை நிலையானதாக இருந்தன. கடந்த சில நாட்களாக அவர்களின் புள்ளிவிவரங்களின் இடைவெளி மிகவும் நெருணக்கமானதாக இருக்கிறது. கீழே உள்ள கருத்துக்கணிப்பு டிராக்கர் விளக்கப்படம், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கருத்துக்கணிப்பின் சராசரிகளைக் காட்டும் போக்குக் கோடுகளுடன் தனிப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளைக் காட்டும் புள்ளிகள் இடம்பெற்றுள்ளன. பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN கமலா ஹாரிஸின் வெற்றிக்காக சிறப்பு பூஜை கமலா ஹாரிஸின் வெற்றிக்காக, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் இன்று அதிகாலை (நவம்பர் 5) சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டதாக பிபிசி செய்தியாளர் சாரதா தெரிவித்தார். கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தாவின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகே இருக்கும் துளசேந்திரபுரத்தில், தர்ம சாஸ்தா ஆலயத்தில் இந்தச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தர்மா சாஸ்தா கோவிலின் முன், ஊர் மக்கள் சார்பாக கமலா ஹாரிஸின் புகைப்படம் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. காலையில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி கோவிலில் பால் அபிஷேகம் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு துளசேந்திரபுரம் கவுன்சிலர் அருள்மொழி சுதாகரின் குடும்பத்தினர் சார்பாக அர்ச்சனை நடைபெற்றது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கமலா ஹாரிஸின் வெற்றிக்காக பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன இந்தச் சிறப்பு பூஜையின்போது, கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், சென்னையில் வாழும் அமெரிக்கர்கள் இருவரும், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவரும் பங்கேற்றனர். அமெரிக்காவில் சியாட்டில் பகுதியை சேர்ந்த டெவோனி எவான்ஸ், இந்தத் தேர்தலில்தான் முன்கூட்டியே வாக்களித்துவிட்டு வந்ததாக பிபிசி தமிழ் செய்தியாளர் சாரதாவிடம் பேசும்போது தெரிவித்தார். "இந்தத் தேர்தல் மிகவும் கடினமாக இருந்தது. நான் வாக்களித்து விட்டேன். எங்கள் வேலை முடிந்தது. இப்போது கமலாவின் இந்த ஊருக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது" என்றார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். ‘கமலா ஃப்ரீக்கிங் ஹாரிஸ்’ (Kamala Freaking Harris) என்று எழுதிய டி-ஷர்டுகளை அவரும் அவரது நண்பர்கள் இருவரும் அணிந்திருந்தனர். கமலா ஹாரிஸின் குடும்பத்தினர் சார்பாக கோவிலுக்கு இந்த முறை யாரும் வரவில்லை என்றாலும், ஊர் மக்கள் சார்பாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக சிறப்பு பூஜை நடத்தியதாக துளசேந்திரபுரம் கவுன்சிலர் அருள்மொழி சுதாகர் தெரிவித்தார். அவர், "கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது ஊர் மக்கள் அனைவருக்கும் முக்கியமானது. நாங்கள் அனைவரும் அவரது வெற்றிக்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்" என்றார். படக்குறிப்பு, டெவோனி எவான்ஸ் (இடதுபுறம் இருப்பவர்) இந்தத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்துவிட்டு வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் ஏழு முக்கிய மாகாணங்களில் முந்துவது யார்? அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகியவை வெள்ளை மாளிகை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் முக்கியமான மாகாணங்கள். இரு கட்சிகளின் பிரசாரக் குழுக்களும் இந்த மாகாணங்களில் பிரசாரங்களை வேகப்படுத்தின. இந்த மாகாணங்களில் முந்துவது யார்? இறுதி பிரசார உரையில் கமலா ஹாரிஸ் கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கமலா ஹாரிஸ், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது இறுதி பிரசார உரையை பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான பிலடெல்பியாவில் நிகழ்த்தியுள்ளார். ‘நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும், அனைத்து தரப்பு மக்களையும் தனது பிரசாரம் ஒன்றிணைத்தது’ என்று பல வாரங்கள் தொடர்ந்த தனது பிரசார பயணத்தை அவர் விவரித்திருந்தார். அத்தகைய பிரசார பயணத்தின் முடிவாக தனது உரையை அவர் வழங்கியுள்ளார். பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN "நாம் ஏதோவொன்றைப் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம், எதற்கும் எதிராக அல்ல. நமது பிரசாரத்தை எவ்வாறு தொடங்கினோமோ, அதே உற்சாகத்துடனும், நம்பிக்கை உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் முடிக்கிறோம்.” என்று கமலா ஹாரிஸ் கூறினார். இளம் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு அவர் ஒரு வழக்கமான வேண்டுகோளை விடுத்தார். "குறிப்பாக உங்களிடம் நான் சொல்கிறேன், நான் உங்கள் சக்தியைப் பார்க்கிறேன், உங்களைப் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்றார். இன்றைய தேர்தலில் அவர் வெற்றி பெற வேண்டுமானால் அவருக்கு அதிக எண்ணிக்கையில் ஆதரவளிக்க இளம் வாக்காளர்கள் தேவை என்பதை துணை அதிபர் கமலா ஹாரிஸ் நன்றாகவே அறிவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "நீங்கள் கமலாவுக்கு வாக்களித்தால், இன்னும் நான்கு ஆண்டுகள் துன்பம், தோல்வி மற்றும் பேரழிவு ஏற்படும்" என்று டிரம்ப் எச்சரித்தார் இறுதி பிரசார உரையில் டிரம்ப் கூறியது என்ன? டிரம்ப், மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் ராபிட்ஸில் உள்ள வான் ஆண்டெல் அரங்கத்தில், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது இறுதி பிரசார உரையை வழங்கினார். தனது பிரசார பயணத்தின் முக்கிய கருப்பொருளாக இருந்த பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் குறித்தே மீண்டும் டிரம்ப் வலியுறுத்தினார். ஒரு சட்ட அமலாக்க அதிகாரியை அல்லது ஒரு அமெரிக்க குடிமகனைக் கொல்லும் எந்தவொரு புலம்பெயர்ந்தவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது உட்பட அவரது சில தேர்தல் வாக்குறுதிகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார். முன்னாள் அதிபர் டிரம்ப், தனது உரையின் பெரும்பகுதியை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனை விமர்சிப்பதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் செய்ததைக் குறித்து விமர்சிப்பதிலும் செலவிட்டார். ‘அமெரிக்கா எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையையும் சரிசெய்வது’ என்ற தனது லட்சியத்தையும் அவர் மேற்கோள் காட்டி பேசினார். பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN "விரைவில் ஒரு சிறந்த தேர்தல் முடிவை நாம் பெறப் போகிறோம் என்று நினைக்கிறேன். மிச்சிகனில் நாம் வெல்லப் போகிறோம் என்று நினைக்கிறேன்." என்று அவர் கூடியிருந்த ஆதரவாளர்களிடம் கூறினார். பேரணியின் முடிவில், டிரம்பின் பிள்ளைகள் அவருடன் மேடையில் தோன்றினர். மக்கள் அனைவரும் டிரம்புக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர். "இறுதியில், உங்கள் வாக்குகளால் நாங்கள் கமலா ஹாரிஸை விரட்டப் போகிறோம், அமெரிக்காவைக் காப்பாற்றப் போகிறோம். நாங்கள் வரிகளையும் பணவீக்கத்தையும் குறைப்போம், விலைவாசியைக் குறைப்போம், உங்கள் ஊதியங்களை உயர்த்துவோம். ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை அமெரிக்காவிற்கும் மிச்சிகனுக்கும் மீண்டும் கொண்டு வருவோம். அதில் பெரும்பாலானவை எனக்கு பிடித்த வார்த்தையைப் பயன்படுத்தும் - ‘வரி’" என்று டிரம்ப் உற்சாகமாக கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் (கோப்புப் படம்) ‘அமெரிக்க தேர்தலுக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்' அமெரிக்கப் புலனாய்வுச் சமூகம் (The US intelligence community) திங்களன்று வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் “அமெரிக்காவின் தேர்தல் ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா மிகத் தீவிரமான ஒரு அச்சுறுத்தல்," என்று விவரித்துள்ளது. இது தேசியப் புலனாய்வு இயக்குநர் அலுவலகம் (ODNI), ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ - FBI) மற்றும் சைபர் செக்யூரிட்டி மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (CISA) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை. "குறிப்பாக ரஷ்யாவுடன் தொடர்புடையவர்கள், தேர்தலின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், தேர்தல் செயல்முறை குறித்து வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கும், அரசியல் வேறுபாடுகள் காரணமாக அமெரிக்கர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என பரப்புவதற்கும், வீடியோக்கள் மற்றும் போலி கட்டுரைகளை உருவாக்குவதாக,” புலனாய்வு சமூகம் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை 81,379,684 முன்கூட்டியே வாக்களித்த 8.1 கோடி அமெரிக்கர்கள் அமெரிக்காவின் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 8.1 கோடியைத் தாண்டியுள்ளது என்று புளோரிடா பல்கலைக்கழக தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இது மொத்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை 81,379,684 என்று கூறுகிறது. இதில், 44,402,375 பேர் (4.4 கோடி பேர்) நேரில் வாக்களித்துள்ளனர். 36,977,311 தபால் வாக்குகள் திருப்பி அனுப்பப்பட்டன கடந்த அதிபர் தேர்தலில் (2020), கொரோனா பெருந்தொற்று பலரை நெரிசலான வாக்குச் சாவடிகளிலிருந்து விலக்கி வைத்தபோது, இந்த ஆண்டின் முன்கூட்டியே பதிவான வாக்குகள் என்பது 2020-இல் பதிவான 10.15 கோடி வாக்குகளை விட மிகவும் குறைவு. இருப்பினும், 2016 (4.72 கோடி) அல்லது 2012ஆம் ஆண்டில் (4.62 கோடி) முன்கூட்டியே பதிவான வாக்குகளை (Early voting) விட அதிகமாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgkv33672ko
-
டியாகோகார்சீயாவில் 20 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் - 12 பேர் தற்கொலைக்கு முயற்சி
டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளை நாட்டிற்குள் அழைப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் தீர்மானம் - சட்டத்தரணிகள் தகவல் டியாகோர்கார்சியா தீவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனிற்குள் வருவதற்கு அனுமதிக்கும் திட்டமொன்றை பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ளது. சுமார் 60 இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த மூன்றுவருடங்களாக டியாகோகார்சியாவின் தற்காலிக கூடாரங்களில் வசித்துவருகின்றனர். இவர்கள் அங்கு புகலிடக்கோரிக்கையை பதிவுசெய்துள்ளனர். டியாகோகார்சியா தீவில் புகலிடக்கோரிக்கையை பதிவு செய்த முதலாவது புகலிடக்கோரிக்கையாளர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்ததீவில் அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் இரகசிய இராணுவதளம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தீவிலிருந்து இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளை பிரிட்டனிற்குள் கொண்டுவருவதற்கு பிரிட்டிஸ் அரசாங்கம் முன்னர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது - இந்த நிலையில் கொள்கை மாற்றமொன்றை செய்வதற்கு பிரிட்டன் அரசாங்கம் இணங்கியுள்ளது என அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் அனைத்து இந்தகுடியேற்றவாசிகளில் பெண்கள் சிறுவர்கள் அனைவரையும் நேரடியாக பிரிட்டனிற்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகளை எதிர்கொள்ளாத ஆண்களிற்கும் அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது அடுத்த 48 மணித்தியாலத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். டியாகோகார்சியாவில் உள்ள தமிழர்களை தொடர்புகொண்டு பேசியுள்ள பிரிட்டன் அதிகாரியொருவர் டியாகோகார்சிய தீவில் காணப்படும் வழமைக்கு மாறான சூழ்நிலை காரணமாக அவர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டியாகோர்கார்சியாவை சென்றடைந்த புலம்பெயர்ந்தோர் விடயத்தில் முன்னைய அரசாங்கத்தினால் தீர்க்கப்படாத ஆழமான சிக்கலான சூழ்நிலையை தற்போதைய அரசாஙகம் சுவீகரிக்க நேர்ந்தது என பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். டியாகோகார்சியா எப்போதும் புலம்பெயர்ந்தவர்களிற்கு நீண்டகாலத்திற்குரிய இடமாக விளங்கியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் நலன்களையும் பிரிட்டனின் பகுதியின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் உறுதி செய்யும் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் நீண்டகாலமாக முயற்சி செய்துவந்தது என அவர் தெரிவித்துள்ளார். தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் நீதிக்கான நீண்ட மோதலிற்கு கிடைத்த வரவேற்க தக்க நடவடிக்கை இதுவென தெரிவித்துள்ளனர். மூன்று வருடங்கள் மனிதாபிமானமற்ற சூழலில் வாழநேர்ந்த பின்னர், நீதிமன்றத்தில் பல அநீதிகளிற்கு எதிராக போரிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர், பிரிட்டன் அரசாங்கம் எங்கள் கட்சிக்காரர்கள் நேரடியாக பிரிட்டனிற்குள் வரலாம் என தீர்மானித்துள்ளது என டங்கன் லூவிஸ் என்ற பிரிட்டனின் சட்ட நிறுவனத்தின் சைமன் ரொபின்சன் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்றைய தீர்மானம் எங்கள் கட்சிக்காரர்களிற்கு பெரும் ஆதரவளிக்கும் ஒன்று, முகாம்களை மூடிவிட்டு தாமதமின்றிஎங்கள் வாடிக்கையாளர்களை கொண்டுவருமாறு உள்துறை அமைச்சினை கேட்டுக்கொள்கின்றோம் என லேய் டேயின் சட்டத்தரணி டொம் சோர்ட் தெரிவித்துள்ளார். இது கனவுபோல உள்ளது, எதனை சிந்திப்பது என தெரியவில்லை என தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197961
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
இரான்: பல்கலைக்கழகத்தில் ஆடைகளை களைந்த பெண் ஹிஜாபுக்கு எதிராகப் போராடினாரா? பட மூலாதாரம்,TELEGRAM படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகத்தில் வெளியானது. எழுதியவர், பர்ஹாம் கோபாடி பதவி, பிபிசி பாரசீகம் `கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆடைகளைக் களைந்த பெண்ணை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என இரானில் மனித உரிமை ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். சனிக்கிழமையன்று, டெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பிளாக் 1 பகுதியில் நடைபாதையில் ஒரு பெண் தனது உள்ளாடைகளுடன் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது. மற்றொரு காணொளியில், அந்தப் பெண் தனது உள்ளாடைகளைக் களைவது போலக் காட்டப்பட்டுள்ளது, சற்று நேரத்தில் சாதாரண உடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து காருக்குள் ஏற்றுகிறார்கள். அந்தப் பெண் "மனநலம் பாதிக்கப்பட்டு", "மனநல மருத்துவமனைக்கு" அழைத்துச் செல்லப்பட்டதாக ஆசாத் பல்கலைக்கழகம் கூறியது. பெண்கள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம் இயக்கத்தின் செயல்பாடா? சமூக ஊடகங்களில் பல இரானியர்கள் இந்தக் கூற்றை மறுத்தனர். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் பெண்ணின் செயலை, "பெண்கள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம்" (Women, Life, Freedom) இயக்கத்தின் ஒரு பகுதி என்று பலர் விவரித்தனர். இந்த இயக்கத்தில் இருக்கும் பல பெண்கள் தங்கள் தலைமுடியை மறைக்க வேண்டும், நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்ற கடுமையான சட்டங்களை பகிரங்கமாக மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாசா அமினி என்ற குர்திஷ் பெண் “சரியாக” ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இதையடுத்து நாடு தழுவிய போராட்டம் நடந்தது. அதில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக முந்தைய செய்தி அறிக்கைகள் தெரிவித்தன. டெலிகிராம் செயலியில் உள்ள அமீர் கபீர் செய்தி சேனல் (Amirkabir Newsletter) "இரானிய மாணவர் இயக்கத்திற்கான ஊடகம்" என்று தன்னை விவரிக்கிறது. இரானிய பெண் ஆடைகளைக் களைந்ததால் கைது செய்யப்பட்ட செய்தியை இந்த சேனல் தான் முதலில் வெளியிட்டது. அந்தச் செய்தியின்படி, ஹிஜாப் அணியாததால் அந்தப் பெண் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும் அந்தச் செய்தியில், ``அந்தப் பெண்ணை சாதாரண ஆடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் காருக்குள் ஏற்றினர். அப்போது அந்தப் பெண்ணின் தலை காரின் கதவு மீது மோதியது. இதனால் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் அந்தப் பெண்ணை அவர்கள் ஏதோ ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்” என்று எழுதப்பட்டுள்ளது. ``ஆசாத் பல்கலைக்கழகத்தில் வகுப்பறைக்குள் நுழைந்த அந்தப் பெண் மாணவர்களைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார் என்றும், விரிவுரையாளர் எதிர்த்தபோது, கூச்சலிட்டுக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்” என்றும் நேரில் பார்த்த ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் கூறினார். நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் மாணவர்களை நோக்கி "நான் உங்களைக் காப்பாற்ற வந்தேன்" என்று உரக்க கத்தினார். இதற்கிடையில், இரானிய ஊடகம் ஒரு நபரின் முகத்தை மறைத்து ஒரு வீடியோவை வெளியிட்டது. அவர் அந்தப் பெண்ணின் கணவர் என்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்காக அவரின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அந்த நபர் கூறியதாகவும் காணொளியில் உள்ளது. ஆனால் இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை பிபிசி பாரசீக சேவையால் சரிபார்க்க முடியவில்லை. கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கான எதிர்ப்பா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கனடாவில் வசிக்கும் பெண்கள் உரிமை ஆர்வலர் அஸ்ஸாம் ஜன்ஜாராஃபி, 2018இல் ஒரு போராட்டத்தின்போது ஹிஜாபை அகற்றிய பின்னர் ஈரானில் இருந்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடிவிட்டார்: “நான் கட்டாய ஹிஜாப் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தபோது கைது செய்யப்பட்டேன்." மேலும், "கட்டாய ஹிஜாப் சட்டத்தை எதிர்த்து நான் போராடியபோது, பாதுகாப்பு அதிகாரிகள் என்னைக் கைது செய்தனர். அதோடு, எனது குடும்பத்தினரை மிரட்டி, என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அறிவிக்கும்படி அழுத்தம் கொடுத்தனர்" என்று அஸ்ஸாம் ஜாங்ரவி கூறினார். அஸ்ஸாம் ஜாங்ரவி 2018இல் ஒரு போராட்டத்தின்போது, தனது ஹிஜாப்பை அகற்றியதற்காக இரானில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இரானில் இருந்து வெளியேறினார். இரான் "வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியை உடனடியாகவும் நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும்" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது. அந்த அமைப்பு, "அதிகாரிகள் அவரை இன்னும் விடுதலை செய்யவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்வதோ மோசமாக நடத்துவதோ கூடாது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழக்கறிஞரை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது. "அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு எதிராக வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதைச் சுயாதீனமாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்க வேண்டும். மேலும் இந்தச் செயல்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அம்னெஸ்டி இரான் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இரான் சிறையில் இருந்து அறிக்கை வெளியிட்ட நர்கஸ் முகமதி பட மூலாதாரம்,GETTY IMAGES ஐநா மனித உரிமைகள் பேரவையின் இரானுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஆகஸ்ட் மாதம் தனது பணியைத் தொடங்கிய மை சடோ தனது எக்ஸ் பக்கத்தில், "நான் இந்தச் சம்பவத்தையும், அதிகாரிகளின் பதிலையும் உன்னிப்பாகக் கவனிப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இரானில் சிறையில் உள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இரானியரான நர்கஸ் முகமதி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். "பெண்கள் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தாக்கப்படுகின்றனர். ஆனாலும் நாங்கள் அதிகாரத்திற்குத் தலை வணங்க மாட்டோம்" என்று அவர் கூறினார். "பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவி நீண்ட கால ஒடுக்குமுறைக்கான கருவியாக இருந்த தனது உடலை, எதிர்ப்பு தெரிவிக்கும் கருவியாகப் பயன்படுத்தினார். அவரது விடுதலை மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் அழைப்பு விடுக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1lgd1pp3gmo
-
அரசியல் சதிகள் அம்பலம்
2 தடவைக்கு மேல் பா.உ களாக இருந்தவர்கள் தாங்களாகவே விலகி இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.
-
"பாதுகாப்பை குறைத்துவிட்டனர் என்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம்" - சந்திரிகா
எனது பாதுகாப்பை குறைக்காதீர்கள்; கணவருக்கு நேர்ந்தது போல் என்னையும் கொலை செய்ய சதித்திட்டம் என்கிறார் சந்திரிக்கா அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி, ஒக்டோபர் 31 ஆம் திகதி வழங்கிய குறித்த கடிதத்தில், தனது மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கையை 50ல் இருந்து 30 ஆக குறைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முறையே 243 மற்றும் 200 மற்றும் 109 நபர்களை கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த அளவுகோலின்படி தனக்கு மட்டும் 30 மெய்ப்பாதுகாவலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது தனக்கு புதிராகவே இருப்பதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://thinakkural.lk/article/311588
-
ரவிசெனிவிரட்ண ஷானி அபயசேகரவிற்கு எதிராக அவதூறு சுமத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ரவிசெனிவிரட்ண ஷானி அபயசேகரவிற்கு எதிராக அவதூறு சுமத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - குற்றவாளிகளை காப்பாற்றவே முன்னைய அரசாங்கம் ஆணைக்குழுவை அமைத்தது என இருவரும் தெரிவிப்பு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவிரட்ண சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ஷானி அபயசேகர ஆகியோருக்கு எதிராக அவதூறுசுமத்தியோருக்கு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஅல்விசின் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த அறிக்கையில் இருவருக்கு எதிராகவும் முன்வைக்கப்ட்ட நியாயமற்ற பரிந்துரைகளை அங்கீகரிப்பதற்கு காரணமானவர்களிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் உள்நோக்கம் கொண்ட உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த அறிக்கையில் இருவருக்கும் எதிராக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஏன் இந்த குழுவை அவசர அவசரமாக நியமித்தார் என்ற அதிர்ச்சி தரும் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்தும் அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கும் நோக்கிலும் இந்த ஆணைக்குழுவை எற்படுத்தவில்லை - மாறாக ஜனாதிபதி தேர்தலின் போது தன்னுடன் இணைந்து பணிபுரியுமாறு முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பிரதானி விடுத்த வேண்டுகோளை ரவிசெனிவிரட்ண மறுத்தமைக்காக அவரை பழிவாங்குவதற்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ரவிசெனிவிரட்ண நிரகரித்துவிட்டு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்காக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பினை உருவாக்கினார். முன்னைய அரசாங்கத்தினை ஆதரிக்குமாறு அவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதா என செனிவிரட்ணவிடம் கேள்வி எழுப்பியவேளை அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். எனினும் தானும் ஷானிஅபயசேகரவும் தேசிய மக்கள் சக்தியில் இணைந்ததும் முன்னைய ஆட்சியாளர்கள் அதிருப்தியடைந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களை காப்பாற்றுவதற்காகவே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஜயஹி அல்விஸ் தலைமையிலான மூவர் கொண்ட குழுவை நியமித்தனர் என தெரிவித்துள்ள செனிவிரட்ணவும் அபயசேகரவும் குற்றவாளிகளை கண்டறியும் நோக்கில் இந்த ஆணைக்குழுவை நியமிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். 2024 ஜூன் 9ம் திகதி மகரஹமவில் தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் நாங்கள் மேடைஏறினோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை எப்படி தொடர்ந்து வந்த தலைவர்கள் ஆட்சியாளர்கள் சீர்குலைத்தனர் என்பதை வெளிப்படுத்தினோம் என செனிவிரட்ண தெரிவித்துள்ளார். daily mirror https://www.virakesari.lk/article/197929
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
தமிழ் அதிகாரியின் பதவியை பறித்த அநுரவிற்கு சர்வதேசத்தில் கடும் எச்சரிக்கை தேர்தல் காலங்களின் போது நியமனங்கள் வழங்கப்படக்கூடாது, புதிய திட்டங்கள் வகுக்கப்படக் கூடாது என டிரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா தேர்தல் ஆணைக்குழுவுக்கு (Election Commission) அறிவித்திருக்கின்றது. இந்நிலையில், பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸுக்கு (Selvin Irenias) பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த பதவியை பொறுப்பேற்று சிறிது நேரத்திற்குள் அவரது பதவி இரத்துச் செய்யப்பட்டது. ஆகவே, இந்த தேர்தல் விதிமீறல் குறித்து உடனடியாக கவனத்தில் எடுக்குமாறு சர்வதேச அமைப்பான டிரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா அறிவித்திருக்கின்றது. இந்தநிலையில், குறித்த விவகாரமானது குறிப்பாக அநுர அரசாங்கத்தினுடைய தமிழர்கள் மீதான பாரபட்சத்தைக் காட்டுகின்றது. அத்தோடு, சர்வதேசம் வரை மிக உன்னிப்பாக அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ் (Selvin Irenias) தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/warn-international-anura-taking-away-tamil-officer-1730801281
-
கூட்டமைப்புடன் புதிய கூட்டணி; அநுர தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி.யின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர். எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டை முன்வைத்ததாக எழுந்த கூற்றுகளை மறுத்த டில்வின் சில்வா, அத்தகைய கூற்றுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் தான் முன்வைக்கப்பட்டதாக கூறினார். கொள்கலன்களில் அமெரிக்க டொலர்கள் இங்கு அச்சிடப்பட்டு உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவே தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311573
-
டிசம்பர் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, புதிய இரத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் பயோ மெட்ரிக் (Biometric) அதாவது கைவிரல் அடையாளம், விழித்திரை, குருதி பிரிவு உள்ளடக்கப்படுமென்று ஆட்பதிவு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://tamilwin.com/article/electronic-national-identity-card-begin-december-1730789508
-
இதய நோய், பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறிய ஸ்மார்ட் வாட்ச்கள் உதவுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், டேவிட் காக்ஸ் பதவி, பிபிசி நமது உடல் இயக்கம் குறித்து ஏராளமான தரவுகளை ஸ்மார்ட் வாட்ச்கள் சேகரிக்கின்றன. தற்போது இந்தக் கருவியை நம்மில் பலரும் பயன்படுத்துகிறோம். ஸ்விட்சர்லாந்தின் சி.ஹெச்.யூ.வி பல்கலைக்கழக மருத்துவமனையில் (CHUV University Hospital) தலைமை மயக்கவியல் நிபுணராக இருக்கும் பேட்ரிக் ஸ்காய்டெக்கர், மயக்கமருந்து அளித்து நீண்ட நேரம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையின் அனைத்து விளைவுகள் குறித்தும் அறிந்திருக்கிறார். அதிகப்படியான ரத்தப்போக்கு நோயாளியை அதிர்ச்சியில் தள்ளும். இதனால், திடீரென மோசமான அளவில் ரத்த ஓட்டம் குறையும். மேலும், ஆழ்ந்த மயக்கம் காரணமாக நோயாளிகளுக்குத் தீவிரமான நுரையீரல் பிரச்னைகளும் ஏற்படலாம். இது, அறுவை சிகிச்சை முடிந்து முதல் ஆறு நாட்களுக்குள் நடக்கும் மொத்த இறப்புகளில் கால் பங்கு இறப்புகளுக்குக் காரணமாக அமைகிறது. இந்தப் பிரச்னை, நோயாளிகளின் உடலியலில் உள்ள பலவீனங்களால் ஏற்படுகிறது. இந்த பலவீனத்தைக் கண்டறிய இயலாது. ஆனால், இத்தகைய முக்கியமான சிகிச்சைகளுக்கு முன்பாக இதனை விரைவாகவும், குறைவான செலவிலும் மருத்துவமனைகளால் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும்? அனைத்து உடல் தரவுகளையும் தரும் ஸ்மார்ட் வாட்ச்கள் பேட்ரிக் ஸ்காய்டெக்கரும் அவருடைய சகாக்களும், அறுவைசிகிச்சைக்குப் பல வாரங்களுக்கு முன்பாகவே நோயாளிகளுக்கு மசிமோ டபிள்யூ1 (Masimo W1) எனும் ‘ஸ்மார்ட் வாட்சைப்’ (smart watch) பொருத்தி சோதனை செய்து வருகின்றனர். அந்த ஸ்மார்ட் வாட்ச் சேகரிக்கும் தரவுகளை வைத்து நோயாளியின் உடல்நலம் குறித்து மதிப்பீடு செய்கின்றனர். இந்த ஸ்மார்ட் வாட்ச் இதயத் துடிப்பு குறித்த தொடர் தரவுகள், சுவாசத்தின் அளவு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, மற்றும் உடலில் நீரின் அளவு (hydration) ஆகியவற்றை மருத்துவ தரத்திலான துல்லியத்துடன் தருகிறது. இந்தத் தரவுகள் ஒரு நோயாளியின் ‘டிஜிட்டல் இரட்டையர்’ எனும் விதத்தில் ஒத்த அளவாக உள்ளதாகவும் அவை உயிர்காக்க உதவும் என்றும் பேட்ரிக் ஸ்காய்டெக்கர் நம்புகிறார். “அறுவை சிகிச்சைக்கு முன்பாகவும் சிகிச்சைக்குப் பின்பாகவும் ஏற்படக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கவும் அதன் மூலம் அவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தத் தரவுகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் அவர். வளர்ந்துவரும் ஸ்மார்ட் வாட்ச் சந்தை, (உலகளவில் 2027-ஆம் ஆண்டுக்குள் 40 கோடி ஸ்மார்ட் வாட்ச்கள் விற்கப்படலாம் என சில ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்) உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கும் புதிய யுகத்தை எப்படித் திறந்துவிட்டுள்ளது என்பதற்கான ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. மசிமோ, ஆப்பிள், சாம்சங், வித்திங்ஸ் (Withings), ஃபிட்பிட் (FitBit) மற்றும் போலார் போன்ற நிறுவனங்கள், உறக்கம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாடுகள், மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு நிலை (இதயம் மற்றும் நுரையீரல் எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் அளவு) ஆகியவற்றின் நிகழ்நேர தரவுகளை அளிக்கும் விதத்திலான ஸ்மார்ட் வாட்ச்களை வடிவமைத்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பார்கின்சன் நோய் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதன் ஆரம்ப நிலை அறிகுறிகளை சில ஸ்மார்ட் வாட்ச்கள் கண்டறிகின்றன இதய நோய்களை முன்கூட்டியே தெரிவிக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள் லண்டனில் உள்ள மயோ க்ளீனிக் ஹெல்த்கேர் மருத்துவமனையில் இதய மருத்துவரான கோசியா வமில், சாத்தியமான உடல்நலப் பிரச்னைகள் குறித்து மருத்துவர்களுக்கு உணர்த்துவதிலும், அவர்கள் அதுதொடர்பாக விரைவாகச் செயலாற்றவும் இந்தத் தகவல்கள் ஏற்கெனவே உதவிவருவதாகக் கூறுகிறார். “அதிகமான நோயாளிகள் தங்கள் உடல்நலம் தொடர்பான தரவுகளைப் பெற்று, அதனைப் பிரதியாக எடுத்து, அந்த முடிவுகளை எங்களிடம் கொண்டு வருகின்றனர்,” என்கிறார் வமில். “அதை வைத்து மேலும் பரிசோதித்து, உடலில் ஏற்படும் அசாதாரணமான பிரச்னைகளை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்,” என்கிறார் அவர். இதுவரை பெரும்பாலான முக்கியமான ஸ்மார்ட் வாட்ச் செயலிகள் இதய நோய் தொடர்பானவையே. ஸ்மார்ட் வாட்சுடன் அமையப்பெற்ற இ.சி.ஜி அளவீடுகள், (இதயத்தின் மின்னணுச் செயல்பாடு குறித்த அளவீடுகள்) ஆரோக்கியமான 50-70 வயதுக்குட்பட்டவர்களில் மிகையான இதயத்துடிப்புகள் குறித்த நம்பகத்தன்மையான தரவுகளை வழங்குவதாக இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்தது. இதயத்தில் வழக்கத்திற்கு மாறான மற்றும் எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் கட்டுப்படுத்த முடியாத துடிப்புகளை ஏற்படுத்தும் ஏட்ரியல் ஃபைப்ரில்லேஷன் (atrial fibrillation) போன்ற தீவிரமான பிரச்னைகளுக்கான எச்சரிக்கை அறிகுறியாக இது இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்மார்ட் வாட்ச்களால் சேகரிக்கப்படும் தரவுகள், அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் ஆபத்துகளை குறைக்க விரைவில் உதவலாம் என நம்பப்படுகிறது செயற்கை நுண்ணறிவின் பங்கு மற்றொரு ஆய்வில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அல்காரிதம்கள் (AI algorithms), ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சின் இ.சி.ஜி அளவீடுகளைப் பயன்படுத்தி இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும் அது வெளியிடும் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதை (low ejection fraction) 88% துல்லியத்தன்மையுடன் கண்டறிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வித இதய நோய்களும் உள்ள நோயாளிகளிடையே இத்தகைய ஸ்மார்ட் வாட்ச் தரவுகளும் அதுகுறித்து அறிந்துகொள்ளும் தளங்களும் புரட்சியை ஏற்படுத்துபவையாக நிரூபித்துவருகின்றன. “இதயவியல் மருத்துவமனைகளில் படபடப்பாக இருப்பதாகக் கூறும் பல நோயாளிகளைப் பார்க்கிறோம். நாங்கள் அவர்களின் மார்புப்பகுதியில் டேப்களை பொருத்தி 24 மணிநேரமும் இ.சி.ஜி-யைப் பதிவுசெய்கிறோம்,” என்கிறார் வமில். “பெரும்பாலும் அந்த 24 மணிநேரத்தில் நோயாளிகளிடையே படபடப்பைக் கண்டறிய முடிவதில்லை. ஆனால், ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம் நோயாளிகளுக்கு எப்போதெல்லாம் அறிகுறி தோன்றுகிறதோ அவர்களது வாட்சில் பொத்தானை அழுத்தி அவர்களால் இ.சி.ஜி-யை எடுத்து, எங்களிடம் காட்ட முடியும்,” என்கிறார் அவர். நோய்த்தடுப்புச் சிகிச்சையில் இது ஏற்கெனவே வழிகாட்டியாக உள்ளதாகவும் இதன்மூலம் வழக்கத்திற்கு மாறான இதயத்துடிப்பு அறிகுறிகளைக் கண்டறிந்து பக்கவாதத்தைத் தடுக்கும் வகையிலான ரத்த உறைவுத் தடுப்பு மருந்துகளைப் (blood thinner tablets) பரிந்துரைக்க முடியும் எனவும் வமில் கூறுகிறார். இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி டைப் 2 நீரிழிவு நோயாளிகளிடையே ஏற்படும் இதய பிரச்னைகளையும் தடுக்க முடியுமா என்பதை கண்டறிய ஆர்வமாக இருப்பதாக அவர் கூறுகிறார். “நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஏன் குறைவான காலம் வாழ்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன,” என்கிறார் வமில். “எதிர்காலத்தில் இந்தத் தரவுகள் நோயாளிகளிடையே ஆரம்பநிலை அறிகுறிகள் குறித்து எச்சரித்து, அதன் மூலம் இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தை முன்கூட்டியே கண்டறியப் பயன்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதுவரை, பெரும்பாலான முக்கியமான ஸ்மார்ட் வாட்ச் செயலிகள் இதய நோய் தொடர்பானவையே. நரம்பியல் பிரச்னைகளைக் கண்டறிதல் ஆனால், இதயத்தைக் கண்காணிப்பதைத் தாண்டி ஸ்மார்ட் வாட்ச் செயலிகளை, வேறு பல விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒரு வாரத்திற்கு ஸ்மார்ட் வாட்ச் அளித்து அதன் தரவுகளை ஆராய்ந்து ஆய்வறிக்கை வெளியிட்டனர். அதன் முடிவுகள், பார்கின்சன் நோயின் அறிகுறிகள் கொண்டவர்களை, அவர்கள் மருத்துவ ரீதியாக பரிசோதிப்பதற்கு ஏழு ஆண்டுகள் முன்கூட்டியே அடையாளம் காண்பது சாத்தியம் என்பதைக் காட்டின. அவர்களது நடையில் ஏற்படும் மிக நுட்பமான அசாதாரணங்கள், ஸ்மார்ட் வாட்ச் மூலம் இயக்க சென்சார்கள் வாயிலாகக் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வை வழிநடத்திய சிந்தியா சாண்டர், இந்த அறிகுறிகளைக் குறிப்பாகக் கண்டறிந்து, ஸ்மார்ட் வாட்ச் மூலம் உறக்கம் போன்றவற்றின் அளவீடுகளை அறிந்து இதனைக் கூறுவது சாத்தியமானது என்கிறார். பார்கின்சன் நோய் உள்ளவர்களில் தூக்கம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. “இயக்கம் தொடர்பான நுட்பமான மாற்றங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னரே தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்,” என்கிறார் சாண்டர். “லேசான உடல் செயல்பாடுகளின்போது இயக்கம் மெதுவாதல் தான் நாங்கள் பெரும்பாலும் முன்கூட்டியே கண்டறியும் அறிகுறி. இது நோயாளிகளேளாலேயே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமானது,” என்கிறார் அவர். இத்தரவுகள் நோயாளிகள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள விரைவில் பயன்படுத்தப்படலாம் என சாண்டர் நம்புகிறார். குறிப்பிடத்தகுந்த அளவில் மூளை பாதிக்கப்பட்ட பின்னர் இந்நோய் கண்டுபிடிக்கப்படுவதாலேயே, திறன் வாய்ந்த சிகிச்சைகள் கூட பலனளிக்காமல் போவதாக ஒரு கருத்து உள்ளது. ஆரம்பகட்டத்திலேயே இதை கண்டறியும்போது பாதிப்புகளை மெதுவாக்கவோ அல்லது அந்நோயிலிருந்து குணமடைவதை எளிதாக்கிறது. “ஸ்மார்ட் வாட்ச் தரவுகள் மூலம் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். இதன்மூலம், நரம்பியல் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்,” என்கிறார் அவர். வலிப்பு நோய் உள்ளிட்ட நாள்பட்ட பிரச்னைகள் உள்ள நோயாளிகளிடையே, அவர்களுக்கு வலிப்பு ஏற்பட போவதாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதற்கும் விரைவில் ஸ்மார்ட் வாட்ச் தரவுகளைப் பயன்படுத்தப்படலாம் என நம்பப்படுகின்றது. வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்கள் வலிப்பு ஏற்பட்டு கீழே விழுதல் மற்றும் மோசமான விபத்துகளுக்கு ஆட்படுதல் ஆகியவை ஆபத்தானதாக கருதப்படுகின்றன. “எப்போது வலிப்பு ஏற்படும் என்பதைக் கண்டறிவது மிகக் கடினமானது என்பது, வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று,” என குயின்ஸ்லாந்து மூளை சிகிச்சை மையத்தில் ஐலீன் மெக்கோனிகல் கூறுகிறார். “எனினும், வலிப்பை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் முன்னேறவில்லை,” என்கிறார் அவர். ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்ட எம்பார்டிகா ஸ்மார்ட் வாட்சின் மாதிரி சாதனம், வலிப்பை முன்கூட்டியே கணிக்க உதவுமா என்பதைக் கண்டறிவதில் ஆர்வம் கொள்கிறார் ஐலீன். நடைபெற்றுவரும் ஆய்வு ஒன்றில், அவர் இதன் தரவுகளை செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்களுடன் பொருத்திப் பார்க்கிறார். இதயத் துடிப்பில் மாறுபாடுகள், தோலின் வெப்பநிலை, உடல் இயக்கங்கள் மற்றும் நரம்பியல் அமைப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான, வியர்வையால் ஏற்படும் மின்னணு கடத்துத் திறனில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும். இவற்றை ஸ்மார்ட் வாட்சால் அளவிட முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்மார்ட் வாட்ச்களை முழுமையாக நம்பலாமா? “வலிப்பு ஏற்படுவதற்கு முன்பானச் சில மணிநேர அளவீடுகளைக் கண்டறிவதுதான் எங்கள் இலக்கு,” என்கிறார் மெக்கோனிகல். “வலிப்புகள் எப்போது தோன்றும் என்பதை அதுகுறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் முன்கூட்டியே கண்டறிய வேண்டும். இதன்மூலம், மருந்துகளின் அளவு, கீழே விழுதல், வலிப்புடன் தொடர்பான காயங்களிலிருந்து தவிர்க்கும் வகையில் தினசரிச் செயல்பாடுகளைத் தழுவிகொள்ள முடியும்,” என்று குறிப்பிடுகிறார் அவர். ஆனால், இதில் தவறான முடிவுகளும் ஏற்படலாம் என மருத்துவர்கள் வேறுபட்ட கருத்தையும் முன்வைக்கின்றனர். ஸ்மார்ட் வாட்ச்களை அதிகப்படியாக பயன்படுத்துவது, நோயாளிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும், சுகாதார வளங்களை மேலும் வடிகட்டக்கூடும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சில ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம் இசிஜி அளவீடுகளை பெற முடியும் ஸ்மார்ட் வாட்ச்களின் எதிர்காலம் என்ன? “தொழில்நுட்பம் பல வழிகளில் மருத்துவத்திற்கு உதவியாக உள்ளது,” என்கிறார் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையின் ஆலோசனை நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணர் ஜெரிமி ஸ்மெல்ட். “பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிவது அதில் ஒன்று. அதன்மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஸ்மார்ட் வாட்ச்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தவறாக நோய்களைக் கண்டறிவது நோயாளிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும். இதனால், தேவையற்ற சமயங்களில் அவர்கள் பொது மருத்துவர்களை நாடுவார்கள்,” என்கிறார் அவர். “ஆனால் இதய நோய் உள்ளவர்களுக்கு இது தேவையானதாக உள்ளது, இதன்மூலம் உரிய நேரத்தில் பிரச்னைகளைக் கண்டறிய முடியும்,” என்கிறார் அவர். ஸ்மார்ட் வாட்ச்கள் இன்னும் அதிநவீனமாகி வருகின்றன. மேலும், மனித உடல் குறித்த இன்னும் அதிகப்படியான தகவல்களை வழங்கும் விதத்திலான ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இதனால், அதன் நோய்த்தடுப்புச் செயல்பாடுகள் இன்னும் அதிகமாகும். மசிமோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜோ கியானி, தங்கள் நிறுவனத்தின் அடுத்தகட்ட மேம்பட்ட ஸ்மார்ட் வாட்ச்களில் ஏற்கெனவே கவனம் செலுத்தி வருகிறார். அதாவது, அதன்மூலம், ஆஸ்துமாவைக் கண்டறிவது. “சுவாசம் சம்பந்தமான அளவீடுகள் இதில் இருக்கும்,” என்கிறார் கியானி. "சுவாச அளவீடுகள் மூலம், இதயத்துடிப்பு அதிகரிப்பதால் தான் உங்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக கூற முடியும்,” என்கிறார் அவர். “கடந்த 50-60 ஆண்டுகளில், நம் வீடுகளில் தெர்மோமீட்டர் மட்டும்தான் இருக்கும். ஆனால், இனி அவசரச் சிகிச்சைக்குச் செல்லாமலேயே சரியான கவனிப்பைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும் பலவித தகவல்களை நம்மிடம் இருக்கும்,” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2380kvy0vgo
-
தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால் இன்று பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் இயங்குவதில்லை - கே.டி லால்காந்த
உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால் இன்று பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் இயங்குவதில்லை - கே.டி லால்காந்த உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால் இன்று பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் இயங்குவதில்லை என கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தி முதன்மை வேட்பாளர் கே.டி லால்காந்த தெரிவித்தார். தெல்தெனிய, கும்புக்கந்துறை பிரதேசத்தில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இதுகாலவரை ஒரு மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனத்திற்கு தேர்தல் நடத்தும் போது பல மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது நாட்டை நிர்வகிக்க கூடிய பாராளுமன்றமோ, மாகாண சபையோ, உள்ளூராட்சி அமைப்புக்களோ இல்லை. எனவே அவற்றை உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது பாராளுமன்ற தேர்தல் நடக்கும் போது மாகாண சபையோ, உள்ளூராட்சி சபைகளோ இருந்து வந்துள்ளன. அல்லது உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடக்கும் போது மாகாண சபையோ, பாராளுமன்றமோ இருக்கும். இது இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு சந்தர்ப்பமாகும் ஏனெனில் கடந்த காலங்களிள் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாமையே அதற்குக் காரணமாகும். தற்போது இடம்பெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை அடுத்து ஏனைய தேர்தல்களும் நடத்தப்படும். கண்டி மாவட்ட வாக்காளர்கள் தமது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அபேட்சகருக்கு ஒரு விருப்பு வாக்கும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகக் கூடியவகையில் விருப்பு வாக்குகளை வழங்குவது நல்லது. அதில் பெண் பிரதிநிதித்துவமும் உள்ளடங்குமாயின் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார். https://www.virakesari.lk/article/197924