Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. James Waterhouse bbc தமிழில் ரஜீபன் தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும். கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்புகின்றோம் என்கின்றார் அவர். ரஸ்யாவின் குண்டு கடையின் ஜன்னல்களை சிதறடித்துள்ளது. ஜபோரிஜியாவில் இது வழமையான நிகழ்வு. வீதியில் பத்துமீற்றர் குழி காணப்படுகின்றது. தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவிக்கின்றார். 'நாங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்புகின்றோம்" என அவர் குறிப்பிடுகின்றார். போரில் வெற்றிபெறுவதற்கான மிகச்சிறிய வாய்ப்பையே கொண்டுள்ள உக்ரைனிற்கு அந்த வெற்றி அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது. இந்த பகுதியிலேயே 2023ம் ஆண்டு உக்ரைன் பதில்தாக்குதலை முன்னெடுத்தது, ரஸ்ய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என எண்ணியது. எனினும் அதில் வெற்றிபெறமுடியாத நிலையில் தற்போது உக்ரைனின் நிலை தப்பிழைத்தலில் கவனம் செலுத்துதல் என்பதற்கு மாறியுள்ளது. நாளாந்தம் குண்டுகளும் ஏவுகணைகளும் உக்ரைன் நகரங்களை தாக்குகின்றன. உக்ரைன் படையினர் ரஸ்ய படையினரின் தாக்குதல்களை நாளாந்தம் எதிர்கொள்கின்றனர். ஜனநாய கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் தேர்தலில் வெற்றிபெற்றால் உக்ரைனிற்கான இராணுவ உதவி தொடரும் என தெரிவித்துள்ள அதேவேளை குடியரசுக்கட்சியின் கரங்களில் உள்ள அமெரிக்க காங்கிரசினால் அவரது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படலாம். டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் உக்ரைனிற்கான தற்போதைய 50 பில்லியன் டொலர் இராணுவ உதவி தொடர்வது கடினம் . எவர் அமெரிக்க ஜனாதிபதியானாலும் அவர் உக்ரைன் எல்லைமீது கடும் தாக்கத்தை செலுத்துவார். உக்ரைனை நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு முன்வரிசைகளை முடக்கிவைக்குமாறு அமெரிக்க கேட்டுக்கொண்டால் ஜபோரிஜியா போன்ற பகுதிகள் வடகொரியா தென்கொரியா போன்று பிளவுபடலாம். யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக தான் முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ள டிரம்ப் உக்ரைன் சிறிதளவு நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்கின்றார். இரண்டாவதாக அமெரிக்கா தனது ஆதரவை முற்றாக விலக்கிக்கொண்டால், ரஸ்யா உக்ரைனை மாத்திரமல்ல அதற்கு அப்பால் உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றக்கூடும். மூன்றாவது சாத்தியப்பாடு உக்ரைன் தனது பகுதிகளை ரஸ்யாவிடமிருந்து முற்று முழுதாக விடுவிப்பது - இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன. அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தப்பட்டால் அந்த சுமையை உக்ரைனின் காலாட்படையினரே சுமக்கவேண்டியிருக்கும் என்கின்றார் உக்ரைனின் படைவீரர் ஆண்ட்ரி - இவர் போர் முன்னரங்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க தயாரிப்பான கவசவாகன பிரிவின் தளபதி. நாங்கள் எங்களிடம் உள்ளவற்றை வைத்துக்கொண்டு போரிடுவோம், ஆனால் உக்ரைனால் தனியாக போரிடமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்கின்றார் அவர். அவர்கள் நவம்பர் ஐந்தாம் திகதிக்காக பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிச்சயமற்ற தன்மை போர்க்கள எதிர்பார்ப்புகளிற்கும் அபிலாசைகளிற்கும் தடையாக காணப்படுகின்றது. மேலதிக உதவியை பெறுவதற்கான அரசியல் முயற்சிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. உக்ரைனின் யுத்த முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கும் போது அதன் மேற்குலக சகாக்கள் அமெரிக்காவையே முன்னுதாரணமாக பார்க்கின்றனர். எங்களிற்கு உதவும் விருப்பம் இல்லாத வேட்பாளர் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளார் என்பதை நாங்கள் கேள்விப்படும்போது அது ஏமாற்றமளிக்கின்றது, விரக்தியளிக்கின்றது என்கின்றார் ஆண்ட்ரி. உக்ரைன் இராணுவம் அதன் சமூகத்தை போல உறுதியாக காணப்படுகின்ற நிலையில் ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மையை நேரடியாக எதிர்கொண்ட ஒருவரை நாங்கள் எதிர்கொள்வது அவசியமாக காணப்பட்டது. ரஸ்யா முழு அளவிலான இராணுவநடவடிக்கையை ஆரம்பித்தவேளை லியுபோவின் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுவிட்டனர். இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாங்கள் அவரை அவரது கிராமமான கொமிசுவாகாவில் சந்தித்தோம். அவ்வேளை ரஸ்ய படையினரால் அவரது வீடு அழிக்கப்பட்டிருந்தது. போர் இடம்பெறும் பகுதிக்கு மிக அருகில் வசித்து வருகின்ற போதிலும் இம்முறை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார். அவரது புதிய தொடர்மாடியில் அவரை சந்தித்தவேளை உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டுமா என நாங்கள் அவரை கேட்டோம். அப்படியென்றால் தங்கள் உயிரை கொடுத்தவர்களின் கனவுகளிற்கு என்னாவது என அவர் எங்களிடம் கேட்டார். 1991 இல் எங்கள் எல்லைகளாக காணப்பட்ட பகுதிகளை நாங்கள் அடையும் வேளையே யுத்தம் முடிவிற்கு வரவேண்டும் என நான் விரும்புகின்றேன் , அவ்வேளை கிரிமியா லுகான்ஸ்க் டொனெட்ஸ்க் ஆகியன எங்களுடையவையாக காணப்பட்டன என அவர் தெரிவித்தார். கமலா ஹரிசே உக்ரைனின் விருப்பத்திற்குரிய வேட்பாளராக காணப்படுகின்றார். அவருக்கு எதிராக ரஸ்யா முன்னெடுக்கும் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு உக்ரைன் ஊடகவியலாளர்கள் முயல்கின்றனர். இதேவேளை உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கில் யுத்தம் விரைவில்முடிவிற்கு வரவேண்டும் என விரும்புபவர்கள் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவமே அதற்கான சிறந்த வாய்ப்பு என கருதுகின்றனர். ரஸ்ய படையினர் நெருங்கிக்கொண்டிருக்கும் போக்ரொவ்ஸ்க்கில் பலரை நாங்கள் சந்தித்து பேசினோம். ரஸ்யா தனது பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்ற உணர்வு இங்கு காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/197866
  2. Larry Elliott- guardian தமிழில் ரஜீபன் 1992 இல் அமெரிக்கா உலகில் அதிகாரத்தின் உச்சியில் காணப்பட்ட நாட்களில் கம்யுனிசம் தோற்கடிக்கப்பட்டது. பேர்ளின் சுவர் இடிக்கப்பட்டது. சோவியத்யூனியன் வீழ்ச்சியடைந்தது, திறந்தபொருளாதாரம் குறித்த அதிர்ச்சி வைத்தியத்திற்கான ஆய்வுகூடமாக பயன்படுத்தப்பட்டது. சீன பொருளாதாரம் தாரளமயப்படுத்தப்பட்டமை அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனங்கள் உற்பத்தியை வேலைகளை வெளியில் கொடுப்பதற்கான (அவுட்சோர்ஸ்) செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது. அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழான பூகோளமயமாக்கலின் யுகம்பிறந்தது. இரண்டு லிபரல் தாராளமயமாக்கவாதிகள் ஜோர்ஜ் எச்டபில்யூபுஷ் பில் கிளின்டன் ஆகிய இருவரும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டார்கள். இறுதியில் கிளின்டன் ஜனாதிபதி புஷ்சினை தோற்கடித்தார். பில்கிளின்டன் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து 32 வருடங்களாகின்ற நிலையில் பல விடயங்கள் இடம்பெற்றுவிட்டன. அமெரிக்கர்கள் செவ்வாய்கிழமை தேர்தலில் வாக்களிக்கவுள்ள நிலையில் தங்களது நாடே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மிகப்பெரிய இராணுவம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். ஆனால் முன்னர் போல மேலாதிக்கத்திற்கு சவால்கள் இல்லாமில்லை. 1991 இல் வளைகுடா யுத்தத்தின் இறுதியில் புஷ் பெருமையுடன் தெரிவித்த ஒற்றை துருவ உலகம் வீழ்ச்சியடைந்து கொண்டுள்ளது. 1990களில் பணம், பொருட்கள், மக்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக நடமாடக் கூடிய தேசங்கள் அற்ற உலகம் குறித்து பேசப்பட்டது. மூலதனத்தின் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டது சுயாதீனமான மத்திய வங்கிகள் வட்டிவீதங்களை அறிவித்தன. உலக வர்த்தக ஸ்தாபனம் வர்த்தக தடைகளை நீக்கியது ஆனால் விரைவில் எதிர்பார்த்த விடயங்கள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தன. நவதாரளவாதம் குறித்த அகமகிழ்ச்சி நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. மிகவும் குறைவான கட்டுப்பாடுகளுடன் மூலதனம் சுதந்திரமாக நாடுகள் மத்தியில் சென்றமையும் அது உள்ளுர் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தமையும் இறுதியில் உலகளாவிய வங்கிநெருக்கடியை தோற்றுவித்தது. அமெரிக்கா நினைத்ததை விட சீனா மிகப்பெரிய வலுவான பொருளாதாரமாக மாறியது. உலக வர்த்தக ஸ்தாபனத்தினால் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்க முடியவில்லை. வாக்காளர்கள் மந்தகதியிலான வளர்ச்சி குறித்தும் தொழில்மயமாக்கல் இன்மை பாரிய புலம்பெயர்வு குறித்தும் சீற்றத்தை வெளியிட்டனர். கொவிட்பெருந்தொற்று சர்வதேச விநியோக சங்கிலிகளின் பலவீனத்தை வெளிப்படுத்தியது. தேசியவாத அரசாங்கங்கள் மீண்டும் வந்தன. அதனுடன் செயற்பாட்டாளர்களின் கைத்தொழில்கொள்கைகளும்பாதுகாப்புவாதமும் வந்தன. அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப அணிவகுத்துச் செல்லும் உலகம் குறித்த புஷ்ஷின் எதிர்பார்ப்புகள் ஒரு தசாப்தகாலம் கூட நீடிக்கவில்லை. கடந்த மாதம் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நடத்திய பிரிக்ஸ் மாநாடு காலத்தின் அறிகுறி அடையாளம். பிரேசில், இந்தியா, சீனா, தென்ஆபிரிக்கா, ரஸ்யா ஆகிய ஐந்து நாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது நான்கு நாடுகள் இணைந்துகொண்டுள்ளன. மேலும் பல நாடுகள் பார்வையாளர்களாக கலந்துகொண்டுள்ளன இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளன. பிரிக்சினை விஸ்தரிப்பதற்கான புட்டின் நோக்கம் தெளிவானது இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் உக்ரைன் யுத்தத்தினை தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஸ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்பதே அந்த செய்தி. அமெரிக்காவின் டொலருக்கு போட்டியாக பிரிக்சினை உருவாக்கும் புட்டினின் முயற்சிகள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகின்றன. டொலர் உறுதியானதாக இலகுவில் மாற்றப்படக்கூடியதாக காணப்படுகின்றது. அதற்கு உடனடி ஆபத்துக்கள் எதுவுமில்லை. மேலும் இந்திய, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் உறவுகளை துண்டிக்க தயாரில்லை. மாறாக இரண்டு முகாம்களிலும் தங்கள் கால்களை வைத்திருக்க விரும்புகின்றன. எனினும் கசான் ( பிரிக்ஸ்மாநாடு) மூன்று காரணங்களிற்காக மிகவும் முக்கியமானது. முதலாவது – தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஸ்ய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவில்லை என்பதை அது வெளிப்படுத்தியுள்ளது. ஒருபோதும் அது இடம்பெறப்போவதில்லை. சீனாவும் இந்தியாவும் ரஸ்யாவின் எண்ணையை வாங்க தயாராக உள்ளன. ரஸ்யாவின் உள்நாட்டு பொருளாதாரம் மீள்எழுச்சி தன்மை மிக்கதாக காணப்படுகின்றது. மேற்குலக நாடுகளிற்கு இதனை ஏற்றுக்கொள்வது கடினம் என்றாலும் ரஸ்யாவால் நீண்டகாலமாக போரிட முடியும் அது யுத்தத்தில் வெல்கின்றது. கசான் புலப்படுத்தியுள்ள இரண்டாவது விடயம் - வளர்ந்துவரும் உலக பொருளாதாரங்கள் அமெரிக்காவின் மேற்குலகின் அழுத்தங்களிற்கு அடிபணிய தயாரில்லை. இது ரஸ்யாவிற்கு மாத்திரமில்லை சீனாவிற்கும் பொருந்தும். வரிகள் மற்றும் பிற கட்டணங்களால் மேற்குலகசந்தையிலிருந்து அகற்றப்படலாம் என சீனா அஞ்சுகின்றது. டொனால்ட் டிரம்ப் தான் வெற்றிபெற்றால் அமெரிக்காவிற்குள் வரும் சீன இறக்குமதிகள் அனைத்திற்கும் 60 வீத வரியை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியினரும் சீனா தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். கமலா ஹரிஸ் ஜோபைடன் காலத்தின் சீனா குறித்த மிகக்கடுமையற்ற ஆனால் வலுவான அணுகுமுறையை தொடருவார். பிரிக்ஸ் மாநாடு ஏன் முக்கியமானது என்பதற்கான மூன்றாவது இறுதி காரணம் - உலகின் தென்பகுதி நாடுகளின் அதிகரித்து வரும் செல்வாக்கும் அவர்களின் பொறுமையின்மையும். இந்த நாடுகள் உலகின் சனத்தொகையில் மிகப்பெரிய எண்ணிக்கையையும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் பங்கையும் கொண்டுள்ளன. புதிய உலக ஒழுங்கு என்பது அனைவருக்கும் செழிப்பை ஏற்படுத்தவேண்டும், ஆனால் அதனை சாதிக்க தவறிவிட்டது. யுத்தங்கள் அதிகரித்துவரும் கடன்கள், பெருந்தொற்று, காலநிலை மாற்றம் காரணமாக உலக வறுமைக்கு எதிரான போராட்டம் முடக்கப்பட்டுள்ளது என உலகவங்கி தெரிவித்துள்ளது. இந்த பல்நெருக்கடிகளிற்கு பதிலளிக்க முடியாத அல்லது தயாராகயில்லாத நிலையில் செல்வந்த நாடுகள் உள்ளன. 1944 இல் உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் ஆகியன பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்டதை போன்று மேற்குலக நாடுகள் இன்னமும் வலுவானவையாக காணப்படுகின்றன. ஆனால் தற்போது வேறுபட்ட உலக பொருளாதாரம் காணப்படுகின்றது. வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் யார் வென்றாலும் கடந்த 500 ஆண்டுகளாக இல்லாத வகையில் மேற்குலகின் ஆதிக்கம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197859
  3. மத்திய கிழக்கில் போர் பதற்றம்! அதிர்ச்சியூட்டும் வரலாறு காணாத தங்க விலை அதிகரிப்பு மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக உலகளவில் தங்கத்தின் விலையில் மிக வேகமான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்க விலை உயர்வு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தங்கம் ஒரு அவுன்சின் விலையானது, இலங்கை ரூபாவின் படி 802,401.19 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு சில நாட்களாக 200,000 ரூபாவை தாண்டியுள்ளது. ஒக்டோபர் 31ஆம் திகதி வரை செட்டித்தெரு தங்க விலை நிலவரப்படி 24 காரட்டின் விலை 220,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது புதிய உச்ச விலை நிலவரமாகும். அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலையும் 200,000 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது, 226,900 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 208,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 198,600 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/gold-price-in-sri-lanka-1730710297#google_vignette
  4. புதிய கடவுச்சீட்டை பெறவிரும்புபவர்களிற்கு ஆறாம் திகதி முதல் இணையவழி முன்பதிவு திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இணையவழி முன்பதிவு முறை மூலம் பொதுமக்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும் என குடிவரவுகுடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுசா பாலசூரிய தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் கடவுச்சீட்டை பெறுவதற்காக முன்பதிவை மேற்கொள்வதற்காக டோக்கன்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இடதுமூலையில் கடவுச்சீட்டுகளிற்கு விண்ணப்பிப்பதற்கான போர்ட்டல்களை காணமுடியும் என மேலும் தெரிவித்துள்ள அவர் குறிப்பிட்ட அளவிலான டோக்கன்களே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நாட்டின் தொலைதூர பகுதியிலிருந்து வருபவர்கள் நீண்ட நேரம்காத்திருக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில்கொண்டே இந்த முறையை நடைமுறைப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197879
  5. இந்திய நிதி உதவியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு திறப்பு இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி. மஹிபால ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்துள்ளனர். 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இந்திய நிதி உதவியின் கீழ் இந்த புதிய சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197871
  6. 130 ஆண்டு கால வரலாற்றில் ஜப்பானில்(japan) உள்ள பூஜி (Fuji )மலை சிகரத்தில் உள்ள பனி முழுவதுமாக உருகியுள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஜப்பானின் கண்கவரும் இயற்கை அழகுகளில் ஒன்றாக இருப்பது ஃபூஜி மலை சிகரம். சுமார் 12,460 அடி உயரம் கொண்ட ஃபூஜி சிகரமானது ஜப்பானின் மிக உயரமான சிகரம் மட்டுமல்லாது, ஜப்பானின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது உயரமான மலைச்சிகரம் மட்டுமல்ல உறக்கத்தில் இருக்கும் பெரிய எரிமலையும் ஆகும். எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும் இந்த ஃபூஜி சிகரத்தின் உச்சியில் எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும். ஆனால் அண்மைக்காலமாக ஜப்பானின் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை உயர்ந்த நிலையில், இந்த ஆண்டு வரலாறு காணாத விதமாக ஃபூஜியின் பனி மொத்தமாக உருகியுள்ளது. 130 ஆண்டுகளில் முதல்முறை 130 ஆண்டுகளில் ஃபூஜியின் பனி உருகுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. உறங்கும் நிலையில் உள்ள ஃபூஜி எரிமலையின் பனி மொத்தமாக உருகியுள்ளதை அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் பார்க்கின்றனர். https://ibctamil.com/article/fuji-s-ice-completely-melted-japan-in-fear-1730678275#google_vignette
  7. பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை 11 மணியளவில் மன்னாருக்கு விஜயம் செய்தார். பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார். இதில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் நகரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மக்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். https://www.virakesari.lk/article/197862
  8. மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். இதன்படி, குறித்த பிரேரணையை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது. அதில், மின் கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்தது. எவ்வாறெனினும், இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் பெற்ற இலாபத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மின்சார சபையினால் குறைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண வீதம் போதுமானதாக இல்லை என சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்கத்கது. https://thinakkural.lk/article/311544
  9. 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் நன்மைகளை இழந்தவர்கள் மற்றும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் சம்பந்தப்பட்ட அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவினால் பத்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய விசாரணைகளை நடத்தி அறிக்கையை தயாரித்து ஒப்படைக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன இக்குழுவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/197847
  10. இந்தியத் தூதரகத்தினால் திருமலையில் 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல. ஒரு வாழ்க்கை முறையாகும், இது பழங்கால பாரம்பரியமாக செய்துவரும் இத்தொழில் மூலம் பல்லாயிரம் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03 திருகோணமலை திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்கக்கட்டடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு மீனவர்களுக்கான உபகரணங்களை வழங்கிவைத்து உரையாற்றும்போதே அவர், இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பகுதி மக்களுக்கு உணவு, வருமானம் மற்றும் தேவைகளுக்கான நம்பிக்கையை கடலன்னை வழங்கியுள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கிய பெரிய அபிவிருத்தி ஒத்துழைப்பு உதவிகளின் வரிசையில், இந்த நாட்டின் மீனவ சமூகத்தை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதற்குமான எமது முயற்சி முக்கிய இடத்தில் உள்ளது. 2009- 2010 ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுத மோதலை அடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களுக்கு கடந்த காலங்களில் மீன்பிடி உபகரணங்களை வழங்கிய பல நிகழ்வுகளும் இதில் அடங்கும். கிழக்கு மாகாணத்தின் பல்துறைசார் மானிய உதவிகளுக்கென சுமார் 2.35 பில்லியன் இலங்கை ரூபாய்களை ஒதுக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான 33 திட்டங்களுக்கான, கட்டமைப்பு திட்டங்கள் இறுதி செய்யப்பட உள்ளன. இவற்றில், 7 மீன்பிடித் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், மீன்பிடி உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு, கடற்பாசி கூண்டு வளர்ப்பு, திலாப்பியா குளத்து மீன் வளர்ப்பு மற்றும் பருவகால தொட்டி மேம்பாடு போன்ற கருப்பொருள்கள் உள்ளடங்கியுள்ளன. இன்று உங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், கடின உழைப்பாளிகளான திருகோணமலை மீனவர்களுக்கு, அபிவிருத்தி உதவிப் பொதியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உதவித் தொகுதியில், படகுகளுக்கான வெளியிணைப்பு இயந்திரம், பிடித்த மீன்களை பாதுகாக்க கூடிய உறைவிக்கும் இயந்திரங்கள் மற்றும் உயிர்காப்பு அங்கிகள் ஆகியவை அடங்கும். இவை உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்த உதவும் அத்தியாவசியமான கருவிகள். ஆழமான உறைவிப்பான்கள் உங்களால் பிடிக்கப்பட்ட மீன்களை தரம்கெடாது பேணுவதை உறுதி செய்யும் அதேவேளையில், உங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கும் பங்களிக்கும். கடலில் சிக்கித்தவிக்கும் அல்லது விபத்துகளை சந்திக்கும் மீனவர்களையும் மற்றும் அவர்களது படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அதிக வலுகொண்ட வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் உயிர் காப்பு அங்கிகள் முக்கியமான ஆதரவை வழங்கும். இந்தியாவும் இலங்கையும் நமது கரையோரங்களை இணைக்கும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வேரூன்றிய ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. கடந்த வாரம், இந்தியா – இலங்கை மீன்வளத்துறையின் கூட்டுப் பணிக்குழுவின் 6வது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக ஆய்வு செய்தனர். இலங்கையில் மீன்பிடித் தொழிலின் முக்கியத்துவத்தையும், மீனவர்களாகிய நீங்கள், இயற்கையாலும், சந்தைப்படுத்துவதில் உள்ள விடயங்களாலும், நவீன உபகரணங்களை அணுகுவதன் மூலமும் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்தியாவில் உள்ள நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த நட்புறவு மற்றும் கூட்டாண்மையின் உணர்வில்தான் இந்தியா இலங்கைக்குத் தேவையான நேரங்களில் தொடர்ந்து துணை நின்றது. இனியும் நிற்கும். இன்றைய உதவி அந்த திசையில் பயணிப்பதற்கான மற்றொரு படியாகும். இந்தமுயற்சி பொருளுதவி வழங்குவது மட்டுமல்ல, திருகோணமலை மீனவ சமூகத்தின் நிலையான எதிர்கால சமூகங்களை வலுப்படுத்துவதும், அதற்கான முதலீடுகளை செய்வதுமாகும். வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் எங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தையும் உறவையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம். நமது பகிரப்பட்ட எதிர்காலம் செழிப்பு, அமைதி மற்றும் முன்னேற்றம் கொண்டதாக இருப்பதை உறுதிசெய்ய நமது அரசாங்கங்கள், நமது மக்கள் மற்றும் நமது சமூகங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படும். இந்த உதவி மூலம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த பிராந்தியத்தின் முதுகெலும்பு. உங்கள் வெற்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். உங்கள் வலைகள் எப்போதும் நிரம்பியிருக்கவும், கடலுக்கு செல்லும் எமது மீனவ உறவுகள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பவும் வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார். https://thinakkural.lk/article/311532
  11. லொஹானின் மனைவியும் விளக்கமறியலில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், கைது செய்யப்பட்டார். https://thinakkural.lk/article/311546
  12. இந்த 1 மணித்தியால காணொளியை கவனமாகப் பாருங்கோ. சுமந்திரன் ஐயா மட்டுமல்ல ஒரு நாடு இரு தேசமும் சிக்கல் தான் போல!
  13. தமிழ் தேசியம் பேசி, விஜய் தனது வாக்கு வங்கியைக் குறிவைப்பதாக நினைக்கிறாரா சீமான்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் ‘திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) மாநாட்டில் விஜய் பேசியதற்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறார். இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் என்ற தன்னுடைய தனித்த வாக்கு வங்கிக்கு விஜயின் தமிழ் தேசியம் குறித்த பேச்சால் ஆபத்து ஏற்படும் என்பதாலேயே சீமான் இப்படி விமர்சித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதேசமயம், “எங்களுடைய விமர்சனம் கோட்பாட்டு ரீதியிலானது மட்டுமே, வெற்றி குறித்ததோ, வாக்கு வங்கி குறித்ததோ அல்ல,” என்கின்றனர், நாம் தமிழர் கட்சியினர். இதற்கு, “எங்களுடைய எதிரிகள் தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தான், நாம் தமிழர் கட்சி எங்கள் எதிரி அல்ல,” என த.வெ.க தரப்பிலிருந்து பதில் வருகிறது. கடந்த அக்டோபர் 27-ஆம் த.வெ.க மாநாடு நடைபெற்ற திடலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ராணி வேலுநாச்சியார் என, நாம் தமிழர் முன்னெடுக்கும் மன்னர்களைப் போற்றும் அரசியலை விஜயும் முன்னெடுப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. மேடையில் ‘திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என விஜய் பேசியதிலிருந்து, தமிழ் தேசியத்தையும் அவர் தழுவிக்கொள்ள நினைத்தது தெளிவானதாக, அரசியல் ஆய்வாளர்கள் அச்சமயத்தில் கூறியிருந்தனர். இந்நிலையில் தான், தமிழ் தேசியம் குறித்த விஜயின் பேச்சைக் கடந்த இரு தினங்களாக விமர்சித்துவந்தார் சீமான். “வேலுநாச்சியார், மூவேந்தர்கள், அஞ்சலை அம்மாள் குறித்து விஜய்க்குத் தெரியாது,” என நேரடியாகவே விமர்சித்தார். “திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்றல்ல. கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்,” என்றார் சீமான். சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 01) நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டத்தில் தான் இவ்வாறு சீமான் பேசியிருந்தார். சீமானது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் எவ்வாறு பார்க்கப்படுகிறது? பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என பேசியிருந்தார் விஜய் வாக்கு வங்கி அரசியலா? கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தற்போது வரை நடந்திருக்கும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறது. முதல் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 1.1% ஆகும். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1% வாக்குகள் கிடைத்தன. இதன் காரணமாக, மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும் அந்தஸ்தை எட்டியது நாம் தமிழர் கட்சி. ஒவ்வொரு தேர்தலிலும் முதன்முதலாக வாக்களிக்க வரும் புதிய தலைமுறையினர், தி.மு.க-அ.தி.மு.க-வுக்கு எதிராக மாற்று அரசியலை நாடும் இளைஞர்கள் ஆகியோர்தான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை வாக்காளர்கள். தற்போது சீமான் பேசும் தமிழ் தேசிய ஆதரவை பெரியார் ஆதரவுடன் விஜய் முன்வைப்பதால், தன்னுடைய அடிப்படை வாக்காளர்கள் த.வெ.க பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதுவதால், சீமான் சற்று கலக்கம் அடைந்திருப்பதாக தெரிகிறது என்கின்றனர், மாநில அரசியலை உற்றுநோக்கும் அரசியல் நிபுணர்கள். எனினும், கணிசமாக அந்த வாக்குகள் குறையுமா என்பதைத் தற்போது சொல்ல முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “கொள்கை அடிப்படையிலான மோதல் என்பதைவிட இது வாக்கு வங்கி சம்மந்தப்பட்டது. விஜய் திராவிடம், பெரியாரை முன்னிறுத்தியது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும். விஜய் மாநாட்டுக்குக் கூடிய கூட்டம் சீமானுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்,” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். பட மூலாதாரம்,IDUMBAVANAM KARTHIK படக்குறிப்பு, விஜயை விமர்சிக்க வேண்டாம் என கட்சி சார்பில் முன்னர் முடிவெடுத்ததாக இடும்பாவனம் கார்த்திக் கூறுகிறார் சீமானின் விமர்சனம் அதீதமானதா? மாநாட்டுக்கு முன்னதாகப் பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் விஜயை ‘தம்பி’ என அழைத்துவந்தார் சீமான். ஆனால், தற்போது கொள்கை முரண் காரணமாக, “கொள்கை வேறாக ஆனபின் அண்ணன் என்ன, தம்பி என்ன?” என்றும் சீமான் பேசியிருந்தார். அதேபோன்று, மாநாட்டுக்கு முன்பாக தனக்கு ஒத்த கொள்கைகளை விஜய் அறிவிப்பார் என சீமான் எதிர்பார்த்திருக்கலாம் என ப்ரியன் கூறுகிறார். இரு கட்சிகளும் கூட்டணியாகக் கூடப் போட்டியிடலாம் என்ற யூகங்கள் கிளம்பியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். விஜயை விமர்சிக்க வேண்டாம் என்ற முடிவை மாநாட்டுக்கு முன்னதாகவே தங்களின் உயர்மட்டக் குழுவில் சீமான் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறுகிறார், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். “அவருடைய கொள்கை தெரிவதற்கு முன்பாகவே மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என விஜயை வாழ்த்தினோம். அவர் நம் தோழமை சக்தி என்ற நிலைப்பாட்டை சீமான் எடுத்தார்,” என்கிறார் கார்த்திக். திராவிடம், தமிழ் தேசியம் இரண்டையும் ஆதரித்திருக்கும் விஜயின் த.வெ.க-வை, அவற்றை ஏற்கெனவே பேசிவரும் இருவேறு கட்சிகளும் தங்களின் எதிரிகட்சியாக பார்க்கிறது. “திராவிடம் - தமிழ் தேசியம் இரண்டும் நெடுங்காலமாக வெவ்வேறு தளங்களில் பேசப்பட்டு வந்துள்ளன. இன்றும் அதுகுறித்த எதிரெதிர் விமர்சனப் பார்வைகள் தி.மு.க, நா.த.க-வுக்கு உண்டு. நடுநிலையான நிலைப்பாட்டை விஜய் எடுத்திருக்கிறார். சர்ச்சையில் சிக்க வேண்டாம் என நினைத்திருப்பார்,” என்கிறார் ப்ரியன். மாநாட்டுக்குப் பின்னர் சீமான் கட்சியிலிருந்து இளைஞர்கள் விஜய் கட்சிக்குச் செல்வார்கள் என பரவலாக அரசியல் மட்டத்தில் பேசப்படுவதை சீமான் ரசிக்கவில்லை, அதனாலேயே இத்தகைய எதிர்வினையை அவர் ஆற்றியிருப்பதாகவும் கூறுகிறார் ப்ரியன். “ஆனால், அவருடைய விமர்சனங்கள் செயற்கையாக இருக்கின்றன. மாநாட்டுக்கு முன்பு ஒருமாதிரியும் இப்போது ஒருமாதிரியும் பேசுகிறார். தேவையில்லாத வார்த்தைகளால் விமர்சிப்பது அதீதமாக இருக்கிறது,” என்கிறார் அவர். நாம் தமிழர் கட்சிக்குள் அதிருப்தியா? நாம் தமிழர் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் அக்கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியிருப்பதாக ப்ரியன் கூறுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதாக, கடந்த செப்டம்பர் மாதம் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். சீமான் ‘தவறான அணுகுமுறையை கையாள்வதாக’ அவர்கள் தெரிவித்திருந்தனர். “சீமானின் கட்சியில் 4-5 மாவட்டங்களில் உட்கட்சிப் பூசல் இருக்கிறது. தொடர்ச்சியாக நிர்வாகிகள் விலகுகின்றனர்,” என்கிறார் ப்ரியன். “தமிழ்நாட்டுக்குள்ளேயே தமிழர்களைப் பிரிக்கிறார் சீமான். ஆனால், எல்லா தமிழர்களுக்குமான உரிமை, நல்லிணக்கம் குறித்து விஜய் பேசுகிறார். வரும் காலங்களில் சீமானுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே இருப்பார் விஜய்,” என்று அவர் கூறுகிறார். ஆனால், இந்தக் கருத்தை மறுக்கும் நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக், “மொழியை சாதி, மதத்துடன் ஒப்பிடுகின்றனர். சாதி ரீதியான அரசியலை நாங்கள் செய்வதாகக் கூறும் குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன். தேர்தல் பரப்புரைகளில் நாங்கள் சாதியை எதிர்த்துப் பேசுகிறோம்,” என்றார். பட மூலாதாரம்,𝗧𝗩𝗞 𝗜𝗧 𝗪𝗜𝗡𝗚/X படக்குறிப்பு, மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த மூவேந்தர்களின் கட்-அவுட் தமிழ் தேசிய அரசியல் இரண்டு, மூன்று முறை தங்களுக்கு வாக்கு செலுத்தியவர்கள் கூட விஜய்க்கு செலுத்துவார்கள் என்ற பயம் சீமானுக்கு இருக்கிறது, என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். “அ.தி.மு.க, தி.மு.க வேண்டாம் என நினைப்பவர்கள், புதிதாக வரும் கட்சிக்கு வாய்ப்பளிக்கலாம் என நினைப்பார்கள். இம்முறை அது சீமானாக இல்லாமல் விஜய்க்கு ஆதரவாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்,” என்கிறார் அவர். எனினும், தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்திற்கு தற்போது எந்த இடமும் இல்லை என்றும், தமிழ் தேசியத்தைக் கையிலெடுத்த ஈ.வெ.க.சம்பத், மா.பொ.சி., பழ.நெடுமாறன் ஆகியோர் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். “சீமான் பேசும் தமிழ் தேசியம் நீர்த்துப்போன, தோற்றுப்போன கொள்கை. மாறாக, திராவிடமும் தமிழர் நலனைத்தானே பேசுகிறது. அதில் குறைகள் இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் திராவிடத்தால் ஒன்றும் நிகழவில்லை என கூறிவிட முடியாதுதானே,” என்கிறார் அவர். தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி எனப் பல கட்சிக் கொள்கைகளின் கலவையாக விஜய் தன் கொள்கையை அறிவித்திருக்கிறார் எனக்கூறும் குபேந்திரன், அது தன்னை மற்றக் கட்சிகளிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ளும் முயற்சி என்கிறார். தமிழ் தேசியம் குறித்த விளக்கத்தையோ, தமிழ் தேசியம் - திராவிடம் இரண்டு கண்கள் என கூறியதற்கான அர்த்தத்தையோ மாநாட்டில் விஜய் விளக்கவில்லை. தமிழ் தேசியம் தொடர்பாக தன்னுடைய முன்னோடி யார் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை என விமர்சனங்களையும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் நோக்கர்கள். பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, விஜயை பல இடங்களில் வெளிப்படையாக 'தம்பி' என அழைத்துவந்தார் சீமான் த.வெ.க., நா.த.க கட்சியினர் கூறுவது என்ன? சீமானின் விமர்சனம், விஜய் மீதான தனிப்பட்ட வன்மமோ, கோபமோ, காழ்ப்புணர்ச்சியோ அல்ல என்கிறார், நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக். “இது தத்துவார்த்த ரீதியான முரண் தான். சித்தாந்தப் போர் இது. நாம் தமிழரை விட நாங்கள்தான் மாற்று என்று சொல்லியிருந்தால் கூட கடந்துபோயிருப்போம், எதிர்வினையாற்றியிருக்க மாட்டோம். வாக்குகள் போய்விடும் என எந்தக் கணக்கும் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோதோ, கமல் கட்சி தொடங்கியபோதோ எங்கள் கட்சியிலிருந்து யாரும் அங்கு செல்லவில்லை, வாக்களிக்கவும் இல்லை. எங்கள் கட்சியினர் கொள்கைத் தெளிவு உள்ளவர்கள்,” என்கிறார் அவர். அதேசமயம், நா.த.க., எங்களின் எதிரி அல்ல என்கிறார், தமிழக வெற்றிக் கழகச் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி. “மதச்சார்பற்ற சமூக நீதிதான் எங்கள் கருத்தியல். திராவிடம், தமிழ்தேசியம் இரண்டுக்கும் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. அதை அனைத்துக் கட்சிகளும் நிரூபித்திருக்கின்றன. அனைத்து மக்களுக்குமான கட்சியாக வரும்போது எங்களுக்கு இரண்டும் வேண்டும். எல்லோருக்கும் பொதுவான தலைவர்தான் விஜய். நாங்கள் இனவாதம், தூய்மைவாதம் பேசும் தமிழ் தேசியத்தைப் பேசவில்லை. தமிழர்களின் வாழ்வியலைப் பேசுகிறோம்,” என்கிறார். மேலும், நாம் தமிழரும் நல்ல கட்சிதான், அவர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள், என்றும் எங்களின் பிரதான எதிரி பா.ஜ.க, தி.மு.க தானே தவிர நா.த.க அல்ல என்றும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cgl4xd303ero
  14. ரொய்ட்டர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு மோசமான விளைவான - டிரம்பின் வெற்றியை எதிர்கொள்வதற்கு ஈரானும் அதன் சகாக்களும் தயாராகிவருவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கமலா ஹரிஸுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்ற போதிலும், ஈரான் தலைவர்களும் லெபனான், யேமன் ஈராக்கில் உள்ள அவர்களின் சகாக்களும் நவம்பர் 5ஆம் திகதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெறுவார்; அதனால் தங்களிற்கு மேலும் நெருக்கடிகள் உருவாகும் என கருதுகின்றனர். ஈரானின் அணுநிலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கும் இலக்குவைக்கப்பட்ட படுகொலைகளில் ஈடுபடுவதற்கும் இஸ்ரேலின் பிரதமரை டிரம்ப் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஈரான் அதிக கரிசனை கொண்டுள்ளது என மேற்குலக ஈரானிய அராபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் ஈரானின் எண்ணெய் தொழில்துறைக்கு எதிராக தடைகளை விதிப்பதன் மூலம் அதிகளவு அழுத்தத்தை கொடுக்கும் கொள்கையை பின்பற்றலாம் என ஈரான் கருதுகின்றது. 2017 முதல் 2021 ம் ஆண்டு முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்த டிரம்ப் - இம்முறை தேர்தலில் வெற்றிபெற்றால் இஸ்ரேலும் தானும் முன்வைக்கும் அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனிக்கு கடும் அழுத்தங்களை கொடுப்பார் என ஈரான் எதிர்பார்க்கின்றது. அமெரிக்காவில் ஏற்படக்கூடிய தலைமைத்துவ மாற்றங்கள் மத்திய கிழக்கின் அதிகார சமநிலைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் ஈரானின் வெளிவிவகார கொள்கை மற்றும் பொருளாதார சாத்தியப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் பதவியேற்றாலும் ஈரான் முன்னர் போன்று செல்வாக்கு செலுத்த முடியாது என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் ஈரான் இராணுவத்தின் ஆதரவில் செயற்படும் ஆயுதகுழுக்களை அழிப்பதற்கு பலமிழக்க செய்வதற்கு இஸ்ரேல் கடந்த ஒருவருடமாக மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர். எனினும் இஸ்ரேலிற்கு நிபந்தனை எதுவுமற்ற வெளிப்படையான ஆதரவை டிரம்ப் வழங்குவதால் டிரம்பின் நிலைப்பாடே ஈரானிற்கு மிகவும் ஆபத்தானது தீங்குவிளைவிக்ககூடியது என்ற கருத்து காணப்படுகின்றது. டிரம்ப் ஈரான் மீது நிபந்தனைகளை விதிப்பார் அல்லது இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் மீது இலக்குவைக்கப்பட்ட தாக்குதலை மேற்கொள்வதற்கு அனுமதிப்பார் என வளைகுடா குறித்த புத்திஜீவிகள் அமைப்பின் இயக்குநர் அப்தெல்லாஜிஸ் அல் சகார் தெரிவித்துள்ளார். ஈரானிற்கு எதிரான இராணுவநடவடிக்கையை டிரம்ப் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார் அங்கீகாரம் வழங்குகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் என்பது பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கனவு என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளது என தெரிவித்த ஈரானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் தடைகளை கடந்து எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், வெள்ளை மாளிகையில் யார் இருந்தாலும் நாங்கள் ஏனைய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் வெற்றி என்பது கொடுங்கனவு என தெரிவித்துள்ள மற்றுமொரு ஈரான் அதிகாரி இஸ்ரேலை திருப்திப்படுத்துவதற்காக அவர் ஈரானிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பார், எண்ணெய் தடைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வார், இது எங்களின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் முடக்கும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197846
  15. 18 தொடர்களை வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் ‘ஒயிட்வாஷ்’ ஆகக் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ்.க பதவி, பிபிசி தமிழுக்காக கடந்த 12 ஆண்டுகளில் 18 டெஸ்ட் தொடர்கள் வெற்றி, உள்நாட்டில் அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற பெருமை, உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் நிகழ்த்தியிராத சாதனை என இந்திய அணி வலம் வந்தது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப் போடும் அளவுக்கு மோசமானதாக மாற்றும் என யாரும் நினைக்கவில்லை. இந்த மோசமான தோல்விக்குக் காரணம் என்ன? 147 ரன்களைக்கூட சேஸ் செய்ய முடியாமல்... 12 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரைத்தான் இந்திய அணி இழந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில் முதல்முறையாக டெஸ்ட் தொடரில் 24 ஆண்டுகளுக்குப்பின் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. அதிலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை முதல்முறையாக முற்றிலும் இழந்து வரலாற்றில் மிகப்பெரிய கறையை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற அனுபவமான வீரர்கள் இருந்தும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. அதிலும் சுப்மான் கில், ஜெய்ஸ்வால், ரிஷப்பந்த், வாஷிங்டன் சுந்தர் என அனைவரும் ஐ.பி.எல் லீக்கில் அதிரடியாக பேட் செய்யக்கூடிய திறமையான பேட்டர்கள், இவர்கள் இருந்தும் 147 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றது என்பது ஜீரணிக்கமுடியாததாக அமைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த தோல்வி ஆலோசிக்கப்பட்டு, சுயபரிசோதனை செய்யப்பட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர்கள் சாடல் இந்திய அணியின் இந்த வரலாற்றுத் தோல்வியை சீனியர் வீரர்கள் பலர் கடுமையாகச் சாடியுள்ளனர். “உள்நாட்டில் இந்திய அணியின் இந்த ஒயிட்வாஷ் வெட்கக்கேடாக இருக்கிறது,” என முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் வேதனை தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற அனுபவமான வீரர்கள் இருந்தும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது 'தரமான ஆடுகளங்களில் பயிற்சி தேவை' ஹர்பஜன் சிங், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பந்து திரும்பக்கூடிய ஆடுகளம், அதுவே நமக்குச் சொந்த எதிரியாக மாறிவிட்டது. தரமான சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் இந்திய அணி விளையாடி பயிற்சி எடுப்பது அவசியம் என தொடர்ந்து கூறிவருகிறோம். இதுபோன்ற டர்னிங் பிட்ச்கள் ஒவ்வொரு பேட்டரையும் சாதாரணமாக மாற்றிவிட்டது,” என்று இந்திய அணியின் உண்மையைான நிலையை அம்பலப்படுத்திவிட்டார். 'மாஸ்டர் பேட்டர்' சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இந்திய அணியின் ஒயிட்வாஷ் தோல்வியை ஜீரணிக்கக் கடினமாக இருக்கிறது. இந்தத் தோல்வி ஆலோசிக்கப்பட்டு, சுயபரிசோதனை செய்யப்பட வேண்டும். டெஸ்ட் தொடருக்குச் சரியாகத் தயாராகவில்லையா, மோசமான ஷாட்கள் தேர்வா, போதுமான பயிற்சி எடுக்கவில்லையா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஆடும் இந்திய பேட்டர்களின் திறனை உறுதியாக மேம்படுத்த வேண்டும், அதற்கு அதிக பயிற்சிகள் வழங்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தேவையில்லாத பரிசோதனைகள் மோசமான முடிவுகளை வழங்கிவிட்டன” எனச் சாடியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தது ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி ஆதிக்கம் செய்ய வழிவகுத்துவிட்டது என தெரிவித்துள்ளார் அணில் கும்ப்ளே 'சரியான பிட்ச் அமைத்திருக்கலாம்' இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் “இந்தத் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்து இந்திய அணியினர் எந்தவிதமான ஆடுகளத்தில் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்பதைப் புரிந்து, அறிந்து அதற்கு ஏற்றார்போல் பிட்ச் அமைத்திருக்க வேண்டும். பந்து நன்றாக திரும்பக்கூடிய முதல்தரமான சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தை அமைத்தது ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி ஆதிக்கம் செய்ய வழிவகுத்துவிட்டது,” என்றிருக்கிறார். மேலும், "சுழற்பந்துவீச்சில் மட்டும் இந்திய பேட்டர்கள் இந்த டெஸ்ட் தொடரில் 37 விக்கெட்டுகளை இழந்துள்ளனர். பெங்களூரு டெஸ்டில் 2வது இன்னிங்ஸ் தவிர்த்து, டாப்ஆர்டர் பேட்டர்கள் இந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக ஒரு செஷன் கூட பேட் செய்யவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை, வீரர்கள் களமிறங்கிய வரிசையில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனியர் பேட்டர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பேட் செய்தவிதம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது சீனியர் வீரர்களின் நிலை ஒட்டுமொத்தமாக இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்தவிதம், சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு, குறிப்பாக சீனியர் வீரர்களின் பேட்டிங் ஆகியவை பல கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களின் காலத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பி.சி.சி.ஐ ஆலோசிக்கும் என பல இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப்பின் இந்த சீனியர் வீரர்களின் டெஸ்ட் வாழ்க்கை குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏனென்றால், சீனியர் பேட்டர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பேட் செய்தவிதம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. பிரிட்டனில் பிறந்த குழந்தைகளை மாற்றிய மருத்துவமனை - 55 ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை2 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 10 இன்னிங்ஸ்களில் கேப்டன் ரோஹித் சர்மா 6 போட்டிகளில் 10க்கும் குறைவான ரன்களையே எடுத்துள்ளார் ரோகித், கோலியின் மோசமான பேட்டிங் குறிப்பாக ரோகித் சர்மா 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து உள்நாட்டு டெஸ்டில் 35 இன்னிங்ஸ்களில் பேட் செய்து 1,210 ரன்கள் சேர்த்துள்ளார். 4 சதங்கள் உள்பட 37 சராசரி டெஸ்ட் அரங்கில் வைத்துள்ளார். ஆனால் கடந்த 10 இன்னிங்ஸ்களில் கேப்டன் ரோகித் சர்மா 6 போட்டிகளில் 10-க்கும் குறைவான ரன்களையே எடுத்துள்ளார், 2 போட்டிகளில் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்துள்ளார், இரு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். விராட் கோலி இதே காலகட்டத்தில் உள்நாட்டில் 25 இன்னிங்ஸ்களில் 742 ரன்கள் சேர்த்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு சதம் மட்டுமே அடித்து, 30.91 சராசரி வைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் இரு சீனியர் வீரர்களும் தலா ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளனர். விராட் கோலி அதிகபட்சமாக 70 ரன்களும் ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் தொடரில் 93 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா அதைவிட மோசமாக இந்த டெஸ்ட் தொடரில் ஒட்டுமொத்தமாக 91 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், இதில் ஒரு அரைசதம் மட்டும் அடங்கும். சீனியர் பேட்டர்கள் இருவரின் சராசரி 15 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு டெஸ்ட் தொடரில் மோசமான சராசரி ரன்கள் என்பது இந்த டெஸ்ட் தொடர்தான். இந்த தொடரில் இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் ரோகித் சர்மா 6 இன்னிங்ஸ்களில் 4 முறை ஹென்றி, சவுத்தி வேகப்பந்துவீச்சில் தேவையற்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி ரன்கள் 42.29 ஆக இருக்கும்போது, இந்த தொடரின் மோசமான பங்களிப்பு அவருக்கு பெரிய கறையாக அமைந்துவிட்டது. விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மோசமான ரன் சராசரி இதுதான். கோலியின் டெஸ்ட் சராசரி 48 ரன்களாக இருந்தநிலையில் அது 47 ஆகக் குறைந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஸ்வின், ஜடேஜா இருவரின் பந்துவீச்சு வேகம் 90கிமீக்கு மேல்தான் இருந்தது அஸ்வின் திணறுகிறாரா? இந்தியாவில் கடந்த காலங்களில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் உலகத் தரத்துக்கு இணையில்லாத எளிதாக உடையக்கூடிய பிட்சுகளையே அமைத்து வந்தனர். உலகத்தரத்துக்கு இணையான சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து அதில் சீனியர் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பந்துவீசி இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. இதனால்தான், இந்த டெஸ்ட் தொடரில் தரமான டர்னிங் பிட்சுகளை அமைத்தபோது, இந்த ஆடுகளத்தில் பந்தை டர்ன் செய்யமுடியாமல் அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர். இதுபோன்ற தரமான டர்னிங் பிட்ச்களில் சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் வேகத்தைக் குறைத்து, பந்தை அதிகமாக 'டாஸ்' (வளைவாகத் தூக்கி வீசுதல்) செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற ஆடுகளத்தில் பந்து நன்றாக டர்ன் ஆகும். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு வேகம் மணிக்கு 85 கி.மீக்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால், அஸ்வின், ஜடேஜா இருவரின் பந்துவீச்சு வேகம் 90 கி.மீ.க்கு மேல்தான் இருந்தது. இதனால்தான் இருவரின் பந்துவீச்சும் இதுபோன்ற ஆடுகளத்தில் எடுபடவில்லை. ஆனால், வாஷிங்டன் சுந்தர் இந்த ஆடுகளத்தை எளிதாகக் கணித்து பந்துவீச்சு வேகத்தைக் குறைத்ததால் புனே டெஸ்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. இதுபோன்ற ஆடுகளத்தில் அஸ்வின், ஜடேஜா பந்துவீசிப் பழகியிருந்தால் வேகத்தைக் குறைத்து, ஆடுகளத்தைப் புரிந்து பந்துவீசியிருப்பார்கள். ஆனால், தரமற்ற ஆடுகளத்தில் பந்துவீசி, வேகத்தைக் குறைக்காமல் பந்துவீசியதால், அதை இந்த விக்கெட்டில் மாற்றமுடியாமல் சிரமப்பட்டனர். தரமான சுழற்பந்துவீச்சுக்கு இணையான ஆடுகளத்தில் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்ற இதே கருத்தைத்தான் ஹர்பஜன் சிங்கும் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆடுகளத்தில் பந்தை டர்ன் செய்யமுடியாமல் அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர் டாப் ஆர்டர் தோல்வி, நடுவரிசையை அதிகம் நம்பியது இந்த டெஸ்ட் தொடரில் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒரு இன்னிங்ஸில்கூட 100 ரன்களைக் கடக்கவில்லை. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, கில், கோலி என யாருமே சரியாக பங்களிப்பு செய்யவில்லை. இதனால் முழுமையாக நடுவரிசை பேட்டிங்கில் ரிஷப்பந்த், சர்ஃபிராஸ்கான், ஜடேஜா ஆகியோரைத்தான் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. டாப் ஆர்டர் பேட்டர்கள் ரன்கள் குவித்திருந்தால், நிச்சயமாக நடுவரிசைக்குச் சுமை இருந்திருக்காது. ஆனால் டாப் ஆர்டர்கள் தோல்வியால் ஒட்டுமொத்தச் சுமையும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்து, அவர்கள் ரன் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி பயிற்சியாளர் கம்பீருடன், கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டியின் தாக்கம் கடந்த 1980, 1990, 2000 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் இருந்த டெஸ்ட் கிரிக்கெட் முறை இப்போது இல்லை. பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் மெல்ல மறைந்து வருகிறது என்பதையே இந்த டெஸ்ட் தொடர் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. அதேநேரம், டி20 தாக்கத்திலிருந்து வீரர்கள் யாரும் மீளவில்லை. இந்திய பேட்டர்கள் சமீப காலங்களில் டி20 போட்டிகளில் விளையாடிய அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததன் விளைவாகத்தான், அவர்களால் தங்களை உடனடியாக டெஸ்ட் தொடருக்குத் தயார் செய்யமுடியவில்லை, தங்களின் பேட்டிங்கையும் மாற்றிக்கொள்ள முடியவில்லை. தரமான டர்னிங் பிட்சுகளில் டிஃபென்ஸ் முறை பேட்டிங் மிகவும் அவசியம். ஆனால், இந்திய பேட்டர்களில் ரிஷப் பந்த் தவிர வேறு எந்த பேட்டரும் இந்தத் தொடரில் டிஃபென்ஸ் முறை ஆட்டத்தைக் கையில் எடுக்கவில்லை, அந்த ஆயுதத்தை பயன்படுத்தவில்லை. ஒருவேளை அதைச் சரியாகக் கையாளவில்லையா அல்லது பிட்சைக் கண்டு அச்சப்பட்டார்களா, விக்கெட்டை இழந்துவிடுவோம் என அதீத கவனத்துடன் ஆடினார்களா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு ஷாட்டையும் டி20 போட்டியின் அணுகுமுறையில் ஆடத்தான் இந்திய பேட்டர்கள் முயன்றனர். எந்தப் பந்தில் டிஃபென்ஸ் ஆடுவது, எந்தப் பந்தை ஸ்வீப்ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப், ஃபுல்ஷாட் ஆடுவது, ஸ்ட்ரோக் வைப்பது எனத் தெரியாமல் தவறான ஷாட்கள் ஆடியுள்ளனர். இவை அனைத்தும் தீவிரமான சுயபரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது தெரியவரும். படக்குறிப்பு, எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனின் பயிற்சியாளர் ஜான் கென்னடி 'பரிசோதனைகள் தேவையற்றது' இந்திய அணியின் ஒயிட்வாஷ் குறித்து எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனின் பயிற்சியாளர் ஜான் கென்னடி பிபிசி-யிடம் பேசினார். “எந்த பேட்டரை எந்த இடத்தில் களமிறக்குவது எனத் தெரியாமல் களமிறக்கினர். ஒன்டவுனில் ஆடக்கூடிய கோலியை 4-வது டவுனில் ஆடவைத்தனர். இதுபோன்ற பரிசோதனைகள் தேவையற்றவை,” என்றார். “இதுபோன்ற டர்னிங் டிராக் (பிட்ச்) பற்றி அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு நன்கு தெரியும். இதில் அதிகமாகவும் ஆடிப் பயிற்சி எடுத்துள்ளனர். அதிலும் சென்னையில் இதுபோன்ற ஆடுகளம்தான் அதிகம் பயன்படுத்துவோம். அப்படியிருக்கும் போது சுந்தர், அஸ்வினை நடுவரிசையில் களமிறக்கி இருந்தால் சிறப்பாக பேட் செய்திருப்பார்கள். சுந்தர் டாப் ஆர்டரில் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர். அவரை 7-வது வரிசையில் களமிறக்கித் தவறு செய்துவிட்டனர்,” என்று கூறினார். 'அஸ்வினின் தவறான ஷாட்' தொடர்ந்து பேசிய ஜான் கென்னடி, “அது மட்டுமல்லாமல் இந்திய அணி வெற்றிக்கு 25 ரன்கள் இருக்கும்போது அஸ்வின் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மோசமான தேர்வு. இதுபோன்ற முக்கியமான கட்டத்தில் சுந்தர், அஸ்வின் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்திருக்கலாம். ஆனால், அஸ்வின் அடித்த ஷாட் அந்த நேரத்தில் தேவையற்று, தவறானது,” என்றார். 'டர்னிங் விக்கெட்டில் விளையாடவில்லை' இந்திய பேட்டர்கள் உண்மையில் இதுபோன்ற டர்னிங் டிராக்களில் பேட் செய்து பழகாதவர்கள் என்று கூறிய ஜான் கென்னடி, “உண்மையில் இப்போதுதான் தரமான ஆடுகளத்தை அமைத்துள்ளனர். அதனால்தான் பந்து நன்றாக டர்ன் ஆகியவுடன் அதை எவ்வாறு அணுகுவது எனத் தெரியாமல் இந்த பேட்டர்கள் திணறி விக்கெட்டை இழந்தனர்,” என்றார். “இதுபோன்ற டர்னிங் டிராக்குகளில் பேட்டர்கள் டிஃபென்ஸ் முறை ஆட்டத்தை முறையாக ஆட வேண்டும். ஆடிப் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் அல்லது ரிஷப் பந்த் ஆடியதைப் போல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்ய முடியாத வகையில் அதிரடியாக ஆடி அவர்களைக் குழப்பிவிட வேண்டும்,” என்றார். “அப்போது எப்படிப் பந்துவீசுவது எனத் தெரியாமல் பந்துவீச்சாளர்கள் குழப்படையும்போது பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால், இந்திய பேட்டர்கள் பந்து டர்ன் ஆகிவிடும் என பயந்து, அதீத கவனத்துடன் பந்தை எதிர்கொண்டு பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்ய வாய்ப்பளித்துவிட்டனர்,” என்றார். மேலும், “கிரிக்கெட்டில் பேட்டர்கள் பந்துவீச்சாளர்களின் கை அசைவு, அவர் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், தூஸ்ரா, கூக்ளி வீசுகிறாரா என்பதைப் பார்த்து விளையாட வேண்டும். ஆனால், இப்போதுள்ள பேட்டர்கள் பந்தைப் பார்த்து ஆடுகிறார்கள்,” என்றார். “ரோகித், கோலி என அனைவருமே தரமான பேட்டர்கள்தான். ஆனால், இதுபோன்ற தரமான சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் ஆடியதில்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது. இதுபோன்ற விக்கெட்டை அமைக்கும்போது, இந்திய பேட்டர்களால் விளையாட முடியுமா, பந்துவீச முடியுமா என்பதை அறிந்து அமைத்திருக்கலாம்,” எனத் தெரிவித்தார் ஜான் கென்னடி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxyv6e1w2lo
  16. சுமந்திரன் உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு; சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். நேற்று மன்னார் தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சாள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தான் மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார். இந்த கருத்தை அவர் கூறியபோது நான் இந்தியாவில் இருந்தமையினால் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்து வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன். புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரியபோது அவர்களின் தேவைகள் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன். அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது. நான் அண்மையில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன். ஆனால் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக்கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பொலிஸார் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதனால்தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகும். அது முற்றிலும் பொய் என்றும் 2020ஆம் ஆண்டில் இருந்தே கட்சியின் செயற்பாடுகளில் இருந்த அதிருப்தி காரணமாக உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா, இல்லையா? என்ற மனநிலை இருந்து வந்ததாகவும், அதேவேளை எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக சுமந்திரன், 2020ஆம் ஆண்டுக்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு எதிராக தான் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்கக்கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்பந்தன் ஐயாவுக்கு எழுதியிருந்தேன். அத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலின் போது வன்னியில் சுமந்திரன் ஏறும் எந்த அரசியல் மேடையிலும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன். அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் நான் ஏறவில்லை. அதன் காரணம் என்னவென்றால், சுமந்திரன் பிரசாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே. அவ்வாறான நிலையில், அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார். இருந்தாலும், வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன். அதேவேளை அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சுமந்திரன் தலைவராக வர முடியாமைக்கு நான் பெறும் பங்காற்றியிருந்தேன். அதுவும் அவருக்கு நன்றாக தெரியும். இப்படியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலைமை காரணமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தீர்மானித்திருந்தேன். சுமந்திரனுடன் 2020ஆம் ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன். இவ்வாறிருக்க, இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக வாக்கு கேட்க முடியாது. என்னை பொறுத்தவரையில், வன்னி மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், இந்த பகுதிகளில் சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், சுமந்திரனின் இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புகளும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன். அதேவேளை சுமந்திரனுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை. யாருக்கும் சிபாரிசு செய்யவுமில்லை. எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிருந்தால், அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதமும் கொடுக்கவில்லை. சுமந்திரனின் கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தேர்தல் நியமனத்துக்காக நான் வாக்கு கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை. அதேநேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாகத்தான் விலகினேன். சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன்... நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டுவந்தால் நான் அவர் சொல்வதை செய்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/197843
  17. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது உறுதிமொழியை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிறைவேற்றவேண்டும். அரசாங்கத்தின் சார்பில் அதன் அதிகாரி வெளியிட்ட அறிக்கை குறித்து எந்தவித தயக்கமின்றி தெளிவுபடுத்தவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தெளிவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும்.
  18. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது வாக்குறுதியை - அர்ப்பணிப்பை மதிக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான முயற்சிகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைவு கரிசனை வெளியிட்டுள்ளது. சட்டத்தரணிகள் ஒன்றிணைவு மேலும் தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் தக்கவைக்கப்படும் என சுட்டிக்காட்டும் வகையிலான அறிக்கைகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். 1979இல் நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச்சட்டம் பரந்துபட்ட அவசரநிலை போன்ற நிறைவேற்றதிகார அதிகாரங்களை கொண்ட ஆபத்தான சட்டம். ஆனால் இதனை சாதாரண தருணங்களிலும் பயன்படுத்தலாம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் விதிகள் கண்மூடித்தனமான கைதுகளில் இருந்து விடுதலை, சித்திரவதையிலிருந்து விடுதலை கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறியுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதல் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதால், சித்திரவதை, நீண்டகால தடுப்பு, அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றால் பெரும் மனித துயரங்களை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் ஆயுதமாக ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது, தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்களிற்கு எதிராக தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள நிலையில் பயன்படுத்தப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள் நாட்டிற்கு வெளியிலிருந்து மாத்திரமல்லாமல் சர்வதேச சமூகத்திலிருந்தும் வெளியாகியுள்ளது, கடந்த சில வருடங்களில் அரசியல் கட்சிகளிடமிருந்து இதற்கு அதிகரித்த ஆதரவு காணப்படுகின்றது. எனினும் தொடர்ந்து ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததும் அதனை தக்கவைத்துள்ளனர். 2024 ஒக்டோபர் 29ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் சட்டவிவகாரங்களிற்கான பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார அரசாங்கத்தினை பிரதிநிதித்துவம் செய்து வெளியிட்ட கருத்தின்போது பிரச்சினை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இல்லை, மாறாக அது சிவில் சமூகத்தினர் பத்திரிகையாளர்களை ஏனையவர்களை தடுத்துவைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது என தெரிவித்தார். அரசாங்கம் அவ்வாறு தவறாக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காது மாறாக நம்பகதன்மை மிக்க புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே அதனை பயன்படுத்தும், அரசியல் பழிவாங்கலிற்காக அதனை பயன்படுத்தாது என குறிப்பிட்டிருந்தார். அதேநாளில் கருத்துவெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து விவாதிக்கப்படுகின்றது, புதிய நாடாளுமன்றத்திலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தினை மாற்றுவது குறித்து ஆராயமுடியும், 2024 ஆகஸ்ட் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய மக்கள் சக்தி பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அனைத்து ஒடுக்குமுறை சட்டங்களும் நீக்கப்படும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களினதும் சிவில் உரிமைகள் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது. தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அதற்கு முன்னரும் தேசிய மக்கள்சக்தி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அதிகார துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல்கொடுத்ததுடன், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற ஏனைய ஒடுக்குமுறை சட்டங்களையும் எதிர்க்கின்றது. சமீபத்தைய ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான ஆணையை வழங்கிய பின்னர் தேசிய மக்கள் சக்தியின் சமீபத்தைய அறிக்கைகள் மக்களின் ஆணையை குறைமதிப்பிடும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது உறுதிமொழியை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிறைவேற்றவேண்டும். அரசாங்கத்தின் சார்பில் அதன் அதிகாரி வெளியிட்ட அறிக்கை குறித்து எந்தவித தயக்கமின்றி தெளிவுபடுத்தவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தெளிவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும். அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தனது அர்ப்பணிப்பு குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்த தெளிவுபடுத்தலும் தலைமைத்துவமும் அவசியம். https://www.virakesari.lk/article/197838
  19. (எம்.மனோசித்ரா) வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது. அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய பின்னரே இது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போது, 'வடக்கிலுள்ள முகாம்களை அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முகாம்களை அகற்றுவதாயின் அதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. அதற்கமைய முதலில் அச்சுறுத்தல் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அச்சுறுத்தல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இதன்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் காணப்பட்ட யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி சுமார் தசாப்தங்களின் பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக கடந்த முதலாம் திகதி முதல் திறக்கப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டின் பின்னரே அந்த வீதியைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையிலேயே முகாம்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முறையான வழிமுறையைப்பின்பற்றி எடுக்கப்படும். பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மிகுந்த கரிசணையுடன் முப்படையும் பொலிஸாரும் செயற்பட்டு வருகின்றனர் என்றார். இது தொடர்பில் இராணுப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு சேவை தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மீளாய்வு அறிக்கைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமையவே இந்த வீதி திறக்கப்பட்டது. இந்த வீதி அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் சென்றதால் மூடப்பட்டிருந்தது. தற்போது வீதி திறக்கப்பட்டுள்ளதே தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்படவில்லை. எனவே வீதிக்கு வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/197835
  20. காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமை மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுக்காப்பட வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள சகோதரமொழி பேசும் இளைஞர் அமைப்பின் பிரதிநிதியான திரு.அர்ஜுன தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் குறித்த இளைஞர் குழுவினர் சந்திப்புகளை நடாத்தி, அவர்களது கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்றும், இன்றும் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் சிங்கள மக்களுடைய கோரிக்கைகளையும் தமிழ் மக்களுடைய வேண்டுகோள்களையும் பற்றி கலந்துரையாடினோம். அவர்கள் காணி, பொலிஸ் பாதுகாப்பு போன்றவற்றை கோரியிருந்தனர். தமிழ் சிங்கள மக்கள் இணைந்தால் நாங்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். மேலும் சிங்கள மக்கள் நினைக்கிறார்கள் மாகாணசபை தேர்தல் என்பது தமிழ், சிங்களம் என நாட்டை இரண்டாக பிரித்து நடாத்துவது என்று. ஆனால் அவ்வாறு இல்லை என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துரைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311493
  21. புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பஹாவில் தேசிய மக்கள்சக்தியின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லங்கள் உட்பட ஏனைய வசதிகள் மட்டுப்படுத்தப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களின் பணியாளர்களாக நியமிக்க முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் ஏற்றுக்கொள்வதற்கு தாங்கிக்கொள்வதற்கு கடினமான விடயமாக ஊழலின் முடிவு காணப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197832
  22. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இன்றைய தினம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் இன்றையதினம் ஞாயிற்றுகிழமை மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் தான் மதுபான சாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புகொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார். இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையினால் இன்று நான் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன். புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகளின் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன். அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்பத்தி மதுபான சாலைகளை அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது. என்பதை நான் அன்மையில் ஒரு ஊடகவியளாலரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன். ஆனாலும் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக்கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் குறித்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதனால் தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகவும் அது முற்றிலும் பொய் எனவும் 2020 ஆண்டில் இருந்தே கட்சியில் செயற்பாடுகளில் இருந்த அதிருப்திகாரணமாக உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா இல்லையா என்ற மனநிலை இருந்து வந்ததாகவும் அதே நேரம் எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிகாட்டினார். குறிப்பாக சுமந்திரன் 2020 ஆண்டுக்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக தான் சம்மந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்க்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்க கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்மந்தன் ஐயாவுக்கு எழுதியிருதேன். அத்துடன் கடந்த 2020 ஆண்டு தேர்தலின் போது சுமந்திரன் வன்னியில் ஏறும் எந்த அரசியல் மேடைக்கும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன். அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் ஏறவில்லை, அதன் காரணம் என்ன என்றால் சுமந்திரன் பிரச்சாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே. அவ்வாறான நிலையில் அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார், இருந்தாலும் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன். அதே நேரம் அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்மந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிட கூடாது என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சுமந்திரன் தலைவராக வரமுடியாமைக்கு நான் பெறும் பங்காற்றியிருந்தேன் அதுவும் அவருக்கு நன்றாக தெரியும். இப்பிடியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலமைகாரணமாகவே இளைஞர்களுக்கு வாய்பு வழங்கு தேர்தலில் போட்டியிடவேண்டாம் என தீர்மானித்திருந்தேன். சுமந்திரனுடன் 2020 ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன். இவ்வாறு இருக்க இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக தேர்தல் கேட்க முடியாது. என்னை பொறுத்த வரையில் வன்னி மாவட்டம் திருகோணமலை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கபடவேண்டும் ஏன் என்றால் இந்த பகுதிகளில் சிங்கள முஸ்லீம் அரசியல் வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. ஆனாலும் சுமந்திரனின் இவ்வாறான தொடர்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன். அதே நேரம் சுமந்திரனுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்து கொள்கின்றேன், நான் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை யாருக்கும் சிபாரிசும் செய்யவில்லை. எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிறுந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விடயம் அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன் அவருடைய கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். அதே நேரம் தேர்தல் நியமனத்திற்காக நான் தேர்தல் கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை. அதே நேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி கொண்டு இருக்க முடியாது, என்பதால் தேர்தலில் இருந்து நானாக தான் விலகினேன். சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்தே முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டு வந்தால் நான் அவர் சொல்வதை செய்கின்றேன் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311491
  23. ரோஹித பொகொல்லாகமவை இலங்கைக்கு திருப்பி அழைத்துள்ளோம் - ஜனாதிபதி பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித பொகொல்லாகம இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டினை தொடர்ந்தே உயர்ஸ்தானிகரை இலங்கைக்கு மீள அழைத்துள்ளதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்கமாட்டோம், அரசியல் நியமனங்களை அனுமதிக்கமாட்டோம், தூதுவர், உயர்ஸ்தானிகர்கள் மாத்திரமல்லாமல் தூதரக பணியாளர்கள் பலரும் மீள அழைக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அனேகமானவர்கள் அரசியல்வாதிகளின் குடும்பத்தவர்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197840
  24. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது, அமெரிக்கர்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தங்களது ஜனாதிபதியை தெரிவு செய்கிறார்கள். குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுமே பிரதான வேட்பாளர்கள். இருவருக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இறுதி நேரம் வரை கூறமுடியாமல் இருக்கிறது. ஜனாதிபதி ஜோ பைடன் இரண்டாவது பதவிக்காலத்துக்கு போட்டியிடவிருந்தார். ஆனால் அவரது வயது மூப்பு மற்றும் வேறு காரணங்களினால் அவரை ட்ரம்ப் இலகுவாகத் தோற்கடித்துவிடக்கூடிய சாத்தியம் இருந்த நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹரிஸ் களமிறங்கினார். அதையடுத்து இலகுவாக வெற்றி பெறுவதற்கு ட்ரம்புக்கு இருந்த வாய்ப்பு பெரும்பாலும் இல்லாமல் போனது. பிரசாரங்களின் போது ட்ரம்புக்கு கமலா ஹரிஸுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுவதாகவே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின. குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் ஏறத்தாழ சம அளவிலான மக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகின்ற ஏழு மாநிலங்களில் (Swing States) அதிகமானவற்றில் வெற்றியடைபவரே தேர்தல் மன்ற ( Electoral College ) வாக்குகளில் அதிகமானவற்றைக் கைப்பற்றி ஜனாதிபதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த மாநிலங்களில் இருவருக்கும் இடையில் மிகவும் நெருக்கமான போட்டி நிலவுவதாகவே கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் சேர்த்து ஜனப்பிரதிநிதிகள் சபைக்கும் செனட்சபைக்கும் ( இரு வருடங்களுக்கு ஒரு தடவையான) தேர்தல்கள் நடைபெறும். நான்கு வருடங்களுக்கு பதவியில் இருக்கப் போகும் ஜனாதிபதியுடன் சேர்த்து ( ஆறு வருடங்களுக்கு பதவியில் இருக்கும் ) 100 செனட்டர்களில் மூன்றில் ஒரு பங்கினரையும் ( இரு வருடங்களுக்கு பதவியில் இருக்கும் ) சகல 435 ஜனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களையும் அமெரிக்கர்கள் தெரிவு செய்வார்கள். தனது முன்னைய பதவிக்காலத்தில் (2016 -- 20 ) தான்தோன்றித் தனமாக ட்ரம்ப் எடுத்த முடிவுகள் சர்வதேச அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. மீண்டும் அவர் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு வருவாரேயானால் சர்வதேச அரசியல் மிகவும் குழப்பநிலைக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது. அதுவும் குறிப்பாக மத்திய கிழக்கில் காசா போர் காரணமாக நிலவும் பதற்றம், ரஷ்ய - உக்ரெயின் போர் ஆகியவை காரணமாக ஏற்கெனவே சர்வதேச அரசியல் நிலைவரம் நெருக்கடி நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த நிலைவரங்களில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் லண்டன் கார்டியன் பத்திரிகை எழுதிய ஆசிரிய தலையங்கம் ஒன்று சிந்தனையை தூண்டுவதாக அமைந்திருக்கிறது. அதை கேசரி வாசக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். "ஐரோப்பா போர் ஒன்றுக்கு தயாராக வேண்டியிருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு விவகார தலைவர் ஜோசப் பொறெல் அண்மையில் வெளிப்படையாவே எச்சரிக்கை செய்திருந்தார்." வாஷிங்டனில் யார் ஆட்சி செய்யப்போகிறார் என்பதில் இது தங்கியிருக்கலாம். நாம் அமெரிக்க ஆதரவிலோ அல்லது எம்மை பாதுகாப்பதில் அமெரிக்காவின் ஆற்றலிலோ தங்கியிருக்க முடியாது" என்று அவர் கூறினார். அதற்கு சில வாரங்கள் முன்னதாக ட்ரம்ப் அமெரிக்காவுக்கு மிகவும் குறைந்தளவு பணத்தைச் செலுத்தும் வடஅத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளை ( நேட்டோ ) தாக்குமாறு ரஷ்யாவுக்கு ஊக்கங்கொடுக்கப் போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் பாதுகாப்பு செலவினங்கள் அதிகரித்துவிட்டன. வடகொரியாவிடமிருந்து வரக்கூடிய அணுவாயுத அச்சுறுத்தலை தடுப்பதற்கு இனிமேல் அமெரிக்காவில் தங்கியிருக்காமல் தங்களது சொந்தத்தில் சுயாதீனமாக அணுவாயுத அச்சுறுத்தல் ( Nuclear deterrent ) தடுப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் கோரிக்கை தென் கொரியாவில் அதிகரித்துவருகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையுமோ என்று அமெரிக்காவின் நேச நாடுகள் அமைதியிழந்துபோயிருக்கின்றன. ட்ரம்ப் பாராட்டும் எதேச்சாதிகாரிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் சமவளவு ஆதரவுடைய மாநிலங்களின் இலட்சக் கணக்கான மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது உலகின் ஏனைய பாகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது. ட்ரம்ப் வெற்றிபெறக் கூடும் என்ற ஊகம் உக்ரெயினில் கடுமையாக உணரப்படுகிறது. விளாடிமிர் புட்டின் மீதான ட்ரம்பின் அனுதாபம் வெளிவெளியாக தெரிந்த ஒன்று. ரஷ்யாவுடன் போரை ஆரம்பித்ததாக உக்ரெயின் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியை ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அவரின் துணை வேட்பாளரான ஜே.டி. வான்ஸ் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவிகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். மத்திய கிழக்கை நெருக்கடியை பொறுத்தவரை, கூடுதலான அளவுக்கு பாலஸ்தீனர்களுக்கு அனுதாபம் காட்டும் கமலா ஹரிஸ் ஜோ பைடனையும் விட இஸ்ரேலை குற்றம் காண்கிறவராக இருக்கிறார். ஆனால் கொள்கையில் பெருமளவுக்கு மாறுபடுவார் என்பதற்கான அறிகுறியைக் காணவில்லை. அராபிய அமெரிக்கர்கள் மத்தியிலான ஆதரவில் திடீரென்று ஏற்பட்ட குறைவு இஸ்ரேலுக்கு ஆயுதக்களை அனுப்புவது குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு உந்துதல் அளித்திருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும், தனக்கு வெகுமதி அளித்து இஸ்ரேலிய வலதுசாரிகளை ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் மீள் வருகைக்காக பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு ஆவலுடன் காத்திருக்கிறார். தனது முதலாவது பதவிக்காலத்தில் ஈரானுடனான அணு உடன்படிக்கையில் ( அதை ஈரான் ஒழுங்காக கடைப்பிடித்து வந்தது) இருந்து வெளியேறிய ட்ரம்ப் முடிவற்ற போர்கள் மீதான தனது வெறுப்பின் விளைவாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்தார். ஆனால் அதே நிலைப்பாடு இனிமலும் தொடருமா? ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது உலகம் பெருமளவுக்கு ஆபத்தானதாக இருந்தது. ஜனாதிபதி கிம் ஜொங் -- உன்னை ட்ரம்ப் வீம்புத்தனமாக தவறாக கையாண்டதால் வடகொரியா அதன் அணுவாயுத திட்டத்தை துரிதப்படுத்தியதுடன் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமாகவும் சென்றது. பைடன் நிருவாகம் ட்ரம்பின் பதவிக் காலத்தின் சகல அம்சங்களையும் நிராகரிக்கவில்லை. சீனா தொடர்பில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையில் இருந்த இருதரப்பு கருத்தொருமிப்பு தொடர்ந்து நிலவியது. முரட்டுத்தனமான முறையில் ட்ரம்ப் கடைப்பிடித்த பொருளாதார தேசியவாதத்தில் இருந்து பைடனின் அணுகுமுறை வேறுபட்டதாக இருந்தது. சீனாவுடனான வர்த்தப் போட்டியில் பைடன் குறிப்பிட்ட இலக்குகளை மையமாக வைத்தே நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், ட்ரம்ப் சீன உற்பத்திகள் மீது 60 சதவீத தீர்வையும் சகல இறக்குமதிகள் மீதும் 20 சதவீதம் வரையான தீர்வையையும் விதிக்கப்போவதாக அச்சுறுத்துகிறார். அதனால் உலகளாவிய வர்த்தகப் போர் ஒன்று மூளக்கூடும். தொடக்கத்தில் தாய்வானுக்கு ஆதரவாக நடந்துகொண்ட ட்ரம்ப் இப்போது பாதுகாப்புக்காக அமெராக்காவுக்கு அந்த நாடு பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். இது அவரது குறுகிய கால நலன்களை அடிப்படையாகக் கொண்டதும் அப்பட்டமான கொடுக்கல் வாங்கலின் அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டதுமான ஒரு வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிக்கிறது. அவர் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். ஜனநாயக கட்சியினரும் கமரா ஹரிஸும் குடிவரவை பொறுத்தவரை சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்ற அதேவேளை " பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பறித்த " ட்ரம்ப் பெருமளவில் ஆட்களை நாடுகடத்தப் போவதாக உறுதியளித்திருக்கிறார். குடியேற்றவாசிகள் அமெரிக்க " இரத்தத்தை நச்சாக்குகுகிறார்கள்" என்ற ட்ரம்பின் பாசிசத்தனமான பேச்சுக்கள் இனவெறியை நியாயப்படுத்தி பரப்புகின்றன. சர்வதேச ரீதியில் பெண் வெறுப்பாளர்களுக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் பலம்பொருந்திய எதேச்சாதிகாரிகளுக்கும் ட்ரம்ப் துணிச்சலைக் கொடுத்திருக்கிறார். பைடனைப் போன்று கமலா ஹரிஸ் இஸ்ரேலுடனோ அல்லது ஐரோப்பாவுடன் ஐரோப்பாவுடன் உணர்ச்சிபூர்வமான பிணைப்பைக் கொண்டவராகவோ அல்லது ஜனநாயக நாடுகளுக்கும் அவற்றின் எதிரிகளுக்கும் இடையிலான ஒரு நாகரிக மோதல் பற்றிய கருத்தைக் கொண்டராகவோ கருதப்படவில்லை. உக்ரெயினுடன் " உறுதியாக நிற்பேன் " என்று கூறும் அவர் ரஷ்ராவுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு செல்லுமாறு வற்றபுறுத்துவதில் பைடனைவிடவும் கூடுதலான அளவுக்கு நாட்டம் கொண்டவராக இருப்பார். கமலா ஹரிஸின் நிருவாகமும் பைடன் நிருவாகத்தின் ஒரு பரந்தளவிலான தொடர்ச்சியாக அமையும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கின்ற அதேவேளை, பதவிக்கு வந்ததும் ஒரு வேட்பாளர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை திட்டவட்டமாக எதிர்வு கூறுவது சாத்தியமில்லை. ஆனால், வெளியுறவு கொள்கையில் அவர் எப்போதும் சரியான நிலைப்பாடுகளை எடுக்கப்போவதில்லை என்கிற அதேவேளை அவர் ட்ரம்பின் நெறிபிறழ்ந்த, முரட்டுத்தனமான, தன்னையே முன்னிலைப்படுத்துகின்ற அணுகுமுறைக்கு முரணாக ஒரு உறுதிப்பாட்டை, பொறுப்பை, அர்ப்பணிப்பைக் கொண்டுவருவார் என்பது எமக்கு நிச்சயம். காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அவசியமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைளை போதுமானளவுக்கு கமலா ஹரிஸின் ஒரு நிருவாகம் எடுக்காமல் விடக்கூடும். ஆனால் ட்ரம்ப் தற்போதைய உலகளாவிய உடன்படிக்கைகளை வேண்டுமென்றே சீர்குலைத்துவிடுவார். இந்த சகல காரணங்களுக்குமாக, இரண்டாவது ட்ரம்ப் நிருவாகத்தை உலகம் தாங்கமாட்டாது. https://www.virakesari.lk/article/197820
  25. அறுகம் குடா சர்ச்சையின் பின்னணியில் இருக்கும் ஆப்கானிய முகவர் அறுகம் குடா மீது தாக்குதல் பின்னணயில் செயற்பட்ட ஆப்கானிஸ்தான் முகவர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளன. அறுகம் குடா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த நபர் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறிது. இந்த ஆப்கானிய முகவர் போதைப்பொருள் வியாபாரி என கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். பண பரிவர்த்தனைகள் அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொஹமட் பிலான் இவருடன் பாரிய பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி, குறித்த பண பரிவர்த்தனையுடன் தொடர்புடைய போதைப்பொருட்கள் அனைத்தும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை இதேவேளை, அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழுவினர் அறுகம் குடா பிரதேசத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவற்றை விற்பனை செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://ibctamil.com/article/arugam-bay-attack-threat-investigation-updates-1730631441

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.