Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஒரே நாளில் மாறிய ஆட்டம் - வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடியாக ரன்களைக் குவித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார். கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ். க பதவி, பிபிசி தமிழுக்காக 30 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் டிராவில் முடியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் எதிரொலியாக, இந்த வெற்றியை இந்திய அணி ருசித்துள்ளது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடியாக ரன்களைக் குவித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்தியா- வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்டின் கடைசி நாளான இன்று, சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால், வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் என்ற நேற்றைய ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடங்கியது. இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி இன்று கூடுதலாக 120 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியின் சரிவுக்கு வித்திட்டனர். வங்கதேச வீரர் ஷத்மன் இஸ்லாம் அதிகபட்சமாக 50 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியின் சரிவிற்கு உதவினர் இதையடுத்து, 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. கேப்டன் ரோகித் சர்மா - இளம் வீரர் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். முதலிரு ஓவர்களிலேயே அவர்கள் 18 ரன் சேர்த்தனர். ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால், இந்திய அணி வெற்றியை நோக்கி வேகமாக நடைபோட்டது. முதல் இன்னிங்சைப் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். 45 பதுகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 51 ரன் சேர்த்து அவர் அவுட்டானார். இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சென்னையில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கான்பூரில் நேற்று (திங்கள், செப்டம்பர் 30) இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் கண்ட ரசிகர்கள், நடப்பது டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என்று குழம்பியிருக்கலாம். ஏனென்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் ரோகித், ஜெய்ஸ்வால், கில், ராகுல், கோலி என அனைவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டு டி20 போட்டியைப் போல் பேட் செய்தனர். டெஸ்ட் போட்டிக்கென இருக்கும் தாத்பரியத்தை உடைத்து, தொடக்கத்திலிருந்தே இந்திய பேட்டர்கள் வங்கதேசப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நொறுக்கி, ரன்களைக் அள்ளிக் குவித்தனர். கான்பூரில் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதிலிருந்து கடந்த 3 நாட்களாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் 2-வது டெஸ்ட் எந்தவிதமான முடிவுமின்றி டிராவில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால், கடைசி இரு நாட்கள்(செப்டம்பர் 30, அக்டோபர் 1) ஆட்டத்தின் வெற்றியை வங்கதேசத்திடமிருந்து பறிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் வியூகம் அமைத்துச் செயல்பட்டனர். ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் எப்படியாவது வெற்றியை எட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் இந்திய அணியினர் பேட் செய்து வருகிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு குறைந்தபட்சம் 5 டெஸ்ட் வெற்றிகள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய பயணம் கடினமாக இருக்கும் என்பதால், வங்கதேசம், நியூசிலாந்திடம் இந்த 5 வெற்றிகளை பெறும் முயற்சியில் இந்திய அணியினர் திட்டமிட்டுள்ளனர். நேற்றைய 4-வது நாள் ஆட்டமும் சற்று தாமதமாகத் தொடங்கிய நிலையில், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 74.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி அதிகவேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. 8 என்ற ரன்ரேட்டில் விளையாடத் தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியைவிட 52 ரன்களை இந்திய அணி அதிகமாக குவித்து முன்னிலை வகித்தது. வங்கதேச அணி, 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய 4வது நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் சேர்த்திருந்தது. ஒரே நாளில் 18 விக்கெட்டுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது நேற்று ஒரே நாளில் மட்டும் 18 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் என 18 விக்கெட்டுகள் சரிந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது வங்கதேச அணியின் விக்கெட்டுகள் சரிவு வங்கதேச அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. மோமினுள் ஹக் 40, முஸ்பிகுர் ரஹ்மான் 6 ரன்களில் களத்தில் இருந்தனர். மழையால் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் நான்காவது நாளான இன்று தொடர்ந்தது. நேற்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பும்ராவின் வேகப்பந்துவீச்சில் முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 11 ரன்கள் சேர்த்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதன்பின் சீரான இடைவெளியில் வங்கதேச அணி விக்கெட்டைப் பறிகொடுத்தது. விக்கெட் சரிந்தாலும், மோமினுல் ஹக் ரன்களை வேகமாகச் சேர்த்தார். மதிய உணவு இடைவேளையின் போது வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேசம் அணி 28 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியின் பின்வரிசை பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணித் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர், ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அதிரடி துவக்கம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் இன்னிங்ஸை அதிரடியாகத் துவங்கினர். டி20 ஆட்டம் போல் துவக்கத்திலிருந்தே பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் துரத்தி, வங்கதேசத்தின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். ஜெய்ஸ்வால், ரோகித் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 2.6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. 31 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சுப்மான் கில் (39), ரிஷப் பந்த் (9) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து (2 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கடந்த டெஸ்டில் ஏமாற்றிய கோலி, இந்த ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 47 ரன்கள் சேர்த்து 3 ரன்களில் அரைசதத்தைத் தவறவிட்டார். அதிரடியாக பேட் செய்த கே.எல்.ராகுல், 33 பந்துகளில் அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணி புதிய சாதனை இந்திய அணி 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி புதிய சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் அதிவிரைவாக சதம் அடித்த அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி இன்று படைத்தது. இதற்கு முன் கடந்த ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 12.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியதுதான் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்த ஆட்டத்தில் இந்திய அணி முந்தி, 2.1 ஓவர்கள் குறைவாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 18.2 ஓவர்களில் 150 ரன்களையும், 24.2 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டி அதிவேகத்தில் 150 மற்றும் 200 ரன்களைச் சேர்த்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. இந்திய அணி 50 ரன்களை எட்டுவதற்கு 3 ஓவர்களே தேவைப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் ஆடவர் அணிப் பிரிவில் இந்திய அணி அதிவேகத்தில் 50 ரன்கள் எட்டியுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 23 பந்துகளில் அரைசதம் பார்ட்னர்ஷிப் அடித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார் ஜடேஜாவின் மைல்கல் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 3,000-க்கும் அதிகமான ரன்களையும் 300 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 11-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் அஸ்வின், கபில்தேவ் இருவரும் அந்த சாதனையைச் செய்திருந்தனர். 74 போட்டிகளில் ஜடேஜா இந்தச் சாதனையை நிகழ்த்தி இயான் போத்தம் (72) அடுத்தார்போல் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். உலகளவில் 300 விக்கெட்டுகளையும், டெஸ்டில் 3,000-க்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்த இரண்டாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி இந்த மைல்கல்லை அடைந்திருந்தார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yj3rwvdljo
  2. அப்படி ஒரு மாற்றத்திற்கான அறிகுறி தெரியவில்லை! ஆனாலும் பொறுத்திருந்து தான் பார்க்கவேணும்.
  3. 01 OCT, 2024 | 10:49 AM அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் உட்பட அனைத்து இந்திய இலங்கை இணைப்பு திட்டங்கள் குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீள ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் அதானி குழுமத்தின் மின்சக்தி திட்டம் உட்பட இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் அனைத்து திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுத்தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றம் அமைந்ததும் இந்தியாவுடனான திட்டங்கள் குறித்து அரசாங்கம் இறுதிமுடிவை எடுக்கும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவுடனான இணைப்பு திட்டங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன அந்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த மதிப்பீடுகளிற்காக இந்த மறு ஆய்வு இடம்பெறுகின்றது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்தேர்தலின் பின்னரே அவற்றை தொடர்ந்து எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து தீர்மானிப்போம், என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் தொடர்ந்தும் அந்த திட்டங்களை முன்னெடுப்பதா அல்லது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வதா? அல்லது நாங்கள் முன்வைக்கும் விடயங்களுடன் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா என்பதை தீர்மானிப்போம் என குறிப்பிட்டுள்ளன. பொதுத்தேர்தலிற்கு முன்னர் எந்த தீர்மானத்தையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/195200
  4. Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 10:16 AM யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட கண்புரை நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகள் வெற்றியளித்துள்ளன. எனவே, யாழ். மாவட்டத்திலோ அல்லது வடமாகாணத்திலோ கண்புரை நோயினால் பாதிக்கப்பட்ட பார்வைக் குறைபாடுடையோர் குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரேனும் இருப்பின் யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் சத்திர சிகிச்சைப்பிரிவை நாடுவதன் ஊடாக ஒரு மாத காலத்துக்குள் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/195193
  5. லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் - ஹெஸ்பொலா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வடக்கு இஸ்ரேலில் கவச வாகனத்துடன் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 1 அக்டோபர் 2024, 06:59 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் (IDF- ஐடிஎப்) எக்ஸ் தளப் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறோம். தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைப்போம். இந்த இராணுவ நடவடிக்கை வரம்புக்குட்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.” “இங்கிருந்து தான், வடக்கு இஸ்ரேலின் எல்லையில் வசிக்கும் மக்களை ஹெஸ்பொலா தாக்குகிறது. இந்த ராணுவ நடவடிக்கை, கடந்த சில மாதங்களாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் பகுதியாகும். இஸ்ரேலிய விமானப்படையுடன் இணைந்து இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.” என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வடக்கு இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் ரோந்து செல்லும் ஐடிஎப் வீரர்கள் ‘வான், கடல் மற்றும் நிலம் வழியாக தாக்குதல்’ இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யெஹோவ் கேலன்ட், செப்டம்பர் 30 அன்று லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேலிய வீரர்களை சந்தித்தார். அப்போது, ”இஸ்ரேலின் முழு பலத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம். இந்த போராட்டத்தில் நீங்களும் ஒரு அங்கம். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கேலன்ட் கூறினார். "செய்ய வேண்டியவை அனைத்தும் செய்யப்படும். வான், கடல் மற்றும் நிலம் வழியாக மூலம் நமது முழு பலத்தையும் நாம் பயன்படுத்துவோம்.” என்றும் அவர் கூறினார். பிபிசியின் சர்வதேச விவகாரங்களுக்கான நிருபர் பால் ஆடம்ஸின் கூற்றுப்படி, ‘தங்களால் தரை வழியாக தாக்குதல் நடத்த முடியும் என்பதை ஹெஸ்பொலா உணர வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது. இதற்கான அறிகுறிகள் பல நாட்களாக கொடுக்கப்பட்டு வருகின்றன.” ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசிம், "இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள ஹெஸ்பொலா தயாராக உள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடர்வோம்.'' என்று தெரிவித்துள்ளார். அதேசமயம், தனது உரையின் முடிவில் காசிம் 'பொறுமையைக் கடைபிடிப்பது’ குறித்தும் அவர் பேசினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசிம் நஸ்ரல்லாவின் இடத்தை நிரப்பப் போவது யார்? ஹசன் நஸ்ரல்லாவின் கொலைக்குப் பின்னர், ஹெஸ்பொலாவின் மூத்த தலைவரின் முதல் அறிக்கை செப்டம்பர் 30-ஆம் தேதியன்று வந்தது. ஹசன் நஸ்ரல்லாவின் இடத்தை அடுத்து யார் நிரப்புவார்? என்பது குறித்து, விரைவில் தீர்மானிக்கப்படும் என ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசிம் தெரிவித்தார். "போர் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். நமக்கான வழிகள் திறந்துள்ளன. தரைவழி தாக்குதலுக்கு எதிராக நாங்கள் தயாராக உள்ளோம், வெற்றி நமதே. லெபனான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி.” என்று காசிம் கூறினார். பெய்ரூட்டில் உள்ள பிபிசி பாரசீக சேவையின் மத்திய கிழக்கு நிருபர் நஃபிசா கோனாவர்ட் கூற்றுப்படி, “பெரும் பின்னடைவுகளை எதிர்கொண்டாலும், ஹெஸ்பொலா இன்னும் களத்தில் நிற்கிறது, இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது என்ற செய்தியை அவர் உலகிற்கு சொல்ல விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.” ‘இந்த போரில் யார் கொல்லப்பட்டாலும், அவரின் இடம் நிரப்பப்பட்டு, இயக்கம் வலுவாக இருக்கும்’ என்பதை ஹெஸ்பொலா தனது ஆதரவாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது. எவ்வாறாயினும், ஹெஸ்பொலாவின் சில ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு ஏமாற்றம் நிலவுகிறது. பெய்ரூட்டில் உள்ள ஒருவர் ஹசன் நஸ்ரல்லாவின் புகைப்படத்தைக் காட்டி, "இப்போது சொல்ல ஒன்றும் இல்லை. என்ன சொல்வது? எங்கள் தலைவர் போய்விட்டார். நாங்கள் அநாதைகளாகி விட்டோம்.” என்று கூறுகிறார். இருப்பினும், ஹசன் நஸ்ரல்லா உயிருடன் இருக்கிறார் என்று சிலர் நம்புகிறார்கள். 55 வயது பெண்ணான ஜிஹான், “இவை போர் தந்திரங்கள், ஹசன் இன்னும் உயிருடன் இருக்கிறார்.” என்று கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் கான் யூனிஸ் அகதிகள் முகாமில் தண்ணீர் தேடிச் செல்லும் ஒரு பெண் குழந்தை (மே 2024) இஸ்ரேல் ஹெஸ்பொலாவை தாக்குவது ஏன்? கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதைத் தொடர்ந்து, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியது. இஸ்ரேலின் நடவடிக்கையில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஏராளமான குழந்தைகளும் பெண்களும் அடங்குவர். பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் நிலைகளின் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் ஆங்காங்கே சண்டைகள் நடைபெற்று வந்தன. இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல்கள் மற்றும் பீரங்கிகள் மூலமாக லெபனானில் உள்ள ஹெஸ்பொலா நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. அதேநேரத்தில், இதுவரை வடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளை நோக்கி 8,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹெஸ்பொலா ஏவியுள்ளது. பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் இஸ்ரேல் படைக்கு எதிராக அந்த அமைப்பு பயன்படுத்தியுள்ளது. லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இதனால் லெபனான் எல்லைக்கு அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது குடிமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குத் திரும்புவதற்காக ஹெஸ்பொலாவை குறிவைப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேசமயம் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என்று ஹெஸ்பொலா கூறுகிறது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0r80z421kko
  6. 01 OCT, 2024 | 09:59 AM புதிய ஜனாதிபதியின் போக்கு திருப்திகரமாக இருக்கிறது. அவர் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்து செயற்பட்டால், அவருடன் இணைந்து பயணிப்போம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை (30) மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரவிற்கு நாடாளுமன்றில் எனக்கு அருகில் உள்ள ஆசனம் தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர் பேசுவதனை நான் ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருப்பேன். அவர் உற்சாகமாக பேசுவார். யாரவது குறுக்கிட்டால் அவர்களின் பின்னணி பற்றி கதைப்பார். அந்தளவுக்கு மற்றவர்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தவர். அவர் ஒரு தடவை என்னிடம் கேட்டார். எங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என ஏன் கூறினீர்கள் என, அதற்கு நான் சொன்னேன். வடக்கு கிழக்கை பிரித்தது நீங்கள் தான் என தமிழ் மக்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என, அதற்கு அவர் பார்ப்போம் என்றார். நான் சொன்ன மாதிரி தமிழ் மக்களின் வாக்குகள் குறைவாகவே கிடைத்தது. அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும் அவருக்கு வாழ்த்து கூறிய போது , நான் சொன்ன மாதிரி தமிழ் மக்கள் பெரியளவில் உங்களுக்கு வாக்கு போடவில்லை என கூறினேன். அதேநேரம், தமிழ் மக்களை நீங்கள் ஒரு தேசிய இனமாக, தேசியமாக கருதி செயற்பட்டால் நாமும் உங்களுடன் இணைந்து பயணிக்க முடியும் என கூறினேன். அவர் அதற்கு எதுவும் சொல்லவில்லை. இதுவரையில் அவரின் செயற்பாடு திருப்திகரமாக எனக்கு தெரிகிறது. எனது பாதுகாப்புக்கு இருந்த நாலு பொலிஸாரையும் திருப்பி எடுத்து விட்டார்கள். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. மனஸ்தாபமும் இல்லை. பதுளையில் நான் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த 1988ஆம் ஆண்டு கால பகுதியில் ஜே.வி.பி கிளர்ச்சி உக்கிரமடைந்திருந்த கால பகுதி. அப்போது எனக்கு பொலிஸ் பாதுகாப்பு தர கேட்டார்கள். நான் வேண்டாம் என மறுத்து விட்டேன். ஏனெனில் ஜே.வி.பி யினர் ஆயுதங்களுக்காக பொலிஸாருடன் சண்டை போடுவார்கள். அதனால் எனக்கு தான் தேவையில்லா பிரச்சனை அதனால் பொலிஸ் பாதுகாப்பு வேண்டாம் என கூறி தனிய இருந்தேன். அதனால் தற்போது எனக்கு இருந்த பாதுகாப்பு எடுக்கப்பட்டது தொடர்பில் எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/195190
  7. -நஜீப் பின் கபூர்- 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் நிறைய கட்டுரைகளை எழுதி மக்களைத் தெளிவுபடுத்தி வந்திருந்தோம். நமது கருத்துகள் அப்போது பக்கச்சார்பாக இருந்தது என்று சிலருக்கு யோசிக்க இடமிருந்தது. ஆனால் நாம் யதார்த்தத்தை தான் சொல்லி வந்திருக்கின்றோம் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம். இன்றும் அதேபோல கள நிலைவரங்களையும் யதார்த்தங்களையும் தான் எமது வாசகர்களுக்கு சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அனேகமான ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மக்களைக் கடந்த காலங்களில் பிழையான தகவல்களை-நம்பிக்கைகளைக் கொடுத்து ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் வலியுறுத்தி சொன்ன சில தகவல்களை மீண்டும் ஒருமுறை சுருக்கமாக இங்கு தொட்டுச் செல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரவை தோற்கடிப்பதாக இருந்தால் ரணில் – சஜித்- ராஜபக்ஸக்கள் ஒரு மெகா கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்று நமது வார இதழில் ஒரு நீண்ட கட்டுரையில் தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தோம். வடக்கு, கிழக்கு மற்றும் முஸ்லிம் வாக்குகள் சஜித், ரணில், அரியநேந்திரன், அனுர என்று பிரிவதால் அது சஜித்தின் வெற்றியைப் பாதிக்கும் என்றும் தேர்தலுக்கு முன்பே சொல்லி இருந்தோம். இது போன்று இன்னும் நிறையவே கதைகளை தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்கு நெருக்கமான நாட்களிலும் நாம் சொல்லி வந்தோம். 2024 நடந்து முடிந்த தேர்தல் என்.பி.பி. க்கு அதிர்ஸ்டவசமாகக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.நாம் குறிப்பிடுகின்ற இந்த சம்பவத்தை – கதையைச் சற்று எண்ணிப்பாருங்கள். அப்போது யதார்த்தம் புரியும். ஒரு அரசியல் ஆய்வாளர் என்ற வகையில் எல்லாக் கட்சிகளின் செயல்பாட்டாளர்களுடனும் நமக்கு ஒரு உறவு இருப்பது போல ஜே.வி.பி.-என்.பி.பி. யுடனும் நமக்கு மிக நெருக்கமான ஒரு உறவு இருந்து வருகின்றது. கடந்த மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற போது ஜே.வி.பி. கம்பளை அமைப்பாளர் ஹேரத் மற்றும் அவர்களுடன் நெருக்கமான உறவில் இருக்கும் பாஹிம் என்பவருடன் மஹியங்கனையில் அன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்கு நாமும் தகவல் சேகரிக்க போய் இருந்தோம். அன்று மதியநேரம் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் பலகே அவர்கள் வீட்டில் மதிய உணவுக்காக போயிருந்த போது இன்றைய ஜனாதிபதி அனுரகுமாரவும் பதுளை வெள்ளி நாக்கு என அழைக்கப்படும் சமந்த வித்தியாரத்ன அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்.அப்போது நாம் ஒரு தேர்தலில் பத்து சதவீத (10) வாக்கை எப்போது பெற்றுக் கொள்கின்றோமோ அதன் பின்னர் வருகின்ற பொதுத் தேர்தலில் நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வந்து விடுவோம். அதுவரைக்கும் நிறையவே உழைக்க வேண்டி இருக்கின்றது என்று சமந்த வித்தியாரத்ன நம்மிடம் சொல்லி இருந்தார். நாம் ஏன் இதனை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம் என்றால் அடுத்து வருகின்ற தேர்தல்களில் அந்த இலக்கிற்கு அருகில் கூட அவர்களினால் நெருங்க முடியவில்லை. அப்படியாக இருந்தால் அவர்கள் இன்று அதிரடியாக இந்த இலக்கை கடந்து ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று பார்த்தால் அதில் சில இரகசியங்கள் மறைந்திருக்கின்றன. ஆனாலும் இதுபற்றி எந்தவொரு ஊடகமும் இது தொடர்பாகப் பேசவில்லை என்பது நமது கணிப்பு. அதில் முதலாவதாக வரலாற்றில் மிகப் பெரிய வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ராஜபக்ஸக்களின் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை கடவுளே ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதிகாரத்துக்கு வந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவர்களை அதிகாரத்தில் இருந்து இறைவன் கவிழ்த்துவிட்டான். குறிப்பாக கோத்தாபய ராஜபக்ஸவின் அட்டகாசங்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் தண்டனை கிடைத்திருக்கின்றது. நாம் முன்பு சொன்னது போல அனுரவை எதிர்க்க ஒரு மெகா கூட்டணி கட்டாயம் தேவை என்று சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. சஜித் தரப்பினர் அதீத நம்பிக்கையில் இருந்து இன்று மூக்குடைபட்டிருக்கின்றார்கள். அடுத்து மொட்டுக் கட்சியின் கோட்பாதர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்குச் செல்வதுதான் அனுரவுடன் ஒரு நெருக்கமான நாடாளுமன்றத்தை வைத்திருக்க வாய்ப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார். பசிலின் அதே கருத்தை நாம் அன்று சொல்லி இருந்தோம். ரணில் அதற்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலை ரணில் முன்கூட்டி நடத்தியதால் அனுர சுலபமாக இலக்கை எட்டிவிட முடிந்தது. வருகின்ற பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி அனுர தரப்பினர் தனிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவார்கள் என்று நாம் அடித்துச் சொல்லி வைக்கின்றோம். இதனையும் நமது வாசகர்கள் பொறுத்திருந்து பார்க்க முடியும் என்பது நமது கணிப்பு. கோட்டாவின் அட்டகாசமான ஆட்சியும் ரணிலின் அரசியல் தீர்மானங்களும் அனுர தரப்பினர் அவர்கள் குறிப்பிட்ட பத்து சதவீதத்தைக் கூட எட்டாத ஒரு நிலையில் அதிரடியாக அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமாக இருந்தது. 2019 மற்றும் 2020 தேர்தல்களில் வெறும் நான்கு – மூன்று சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜே.வி.பி-என்.பி.பி வரலாற்றில் இப்படி ஒரு அதிரடிச் சாதனையை நிலைநாட்டி இருக்கின்றது என்றால் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மேற்கொண்ட அடக்குமுறைகளும் பிழையான தீர்மானங்களுமாகும் என்பது எமது கருத்து. இப்போது கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலும் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பது தொடர்பாக பார்ப்போம். நாம் இங்கு குறிப்பிடுகின்ற தகவல்களையும் கணிப்புகளையும் எமது வாசகர்கள் வருகின்ற பொதுத் தேர்தல் முடிவுகளுடன் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள முடியும். 2024 ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் முடிவுகள் ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்று இப்போது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இன்னும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் வரை இருக்கும் நிலையில், பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று இப்போது பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே 2024 ஜனாதிபதி தேர்தலில் அனுரவுக்கு அதிக வாய்ப்பு என்று நாம் ஊடகங்களில் சொன்ன போது எமது கணிப்பு மிகைப்பட்ட ஒரு கணிப்பு என்று சிலர் விமர்சித்தார்கள். அப்படி எமது கருத்தை ஜீரணித்துக் கொள்ளாத நமது நண்பர்களும் நெருக்கமானவர்களும் கூட இதில் இருந்தார்கள். மேலும் ஜனாதிபதித் தேர்லுக்கு இரண்டொரு நாட்கள் இருக்கும் போது வேட்பாளர்கள் பெறுகின்ற வாக்கு வீதத்தையும் நமது சகோதர ஊடகங்களுக்கு அதனைத் துல்லியமாகச் சொல்லி இருந்தோம். அதனை வாசகர்கள் பார்த்திருப்பார்கள். இப்போது வருகின்ற பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது தொடர்பாக எமது கணிப்பைத் தர இருக்கின்றோம். சஜித் மற்றும் ரணில் இணைந்தால் அனுரவை சுலபமாக வெற்றி கொள்ள முடியும் என்று இப்போது சிலர் கணக்குப் பார்க்கின்றார்கள்-கதை விடுகின்றார்கள். இது தமது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாக்குகளை பாதுகாக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சி. ஆனால் களநிலவரம் அப்படி இல்லை என்பதனை குடிமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து சஜித் – ரணில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் கதைகள் வருகின்றன.ஆனாலும் அதில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. சஜித் ரணிலுடன் கூட்டணி பற்றிய கருத்தை இப்போதே நிராகரித்திருக்கின்றார். ஆனால் கட்சியில் இருக்கின்ற சிலர் அதற்கு இசைவாக பேசுகின்றார்கள். கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் 55,64,239 வாக்குகளைப் பெற்ற சஜித் அதன் பின்னர் 2020ல் நடந்த பொதுத் தேர்தலில 27,71,984 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார். இது எந்தளவு வீழ்ச்சி என்று சிந்தித்துப் பாருங்கள். எனவே வருகின்ற பொதுத் தேர்தலில் அனுர தரப்பு தனிக்குதிரையாகத்தான் களத்தில் இருக்கப் போகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ் தரப்புக்கள் தனியாகத்தான் தேர்தலுக்கு வருவார்கள். அதேபோன்று இன்று சஜித்துடன் இருக்கின்ற மலையகக் கட்சிகளும் பெரும்பாலும் பொதுத் தேர்தலுக்கு முன்போ அல்லது பின்னரோ அனுரவுடன் இணைந்து போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான வியூகங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை நாம் உறுதியாக கூறி வைக்கின்றோம். முஸ்லிம் தனித்துவத் தலைவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரவுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட விஷமத்தன கதைகளினால் அனுர தரப்புடன் அவர்களுக்கு இணங்கிப் போக வாய்ப்புக்கள் இல்லை. பொதுத் தேர்தலில் அனுர தரப்பிலிருந்து புதிய பல முஸ்லிம் பிரதிநிதிகள் நிச்சயமாக நாடாளுமன்றத்துக்கு வருவார்கள். இந்தத் தேர்தலில்கூட அது தெளிவாகி விட்டது. கிழக்கில் கூட அனுர தரப்பு முஸ்லிம் வேட்பாளர்கள் பலர் ஆசனங்களை சுலபமாகப் பெற்றுக்கொள்வார்கள். இன்று அவர்களுக்கு கிடைத்திருக்கின்ற வாக்குகள் இரட்டிப்பாக மாறவும் அதிக வாய்ப்பிருக்கின்றன. ஹக்கீம், ரிசாட் , ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா இதற்குப் பின்னர் அனுரவுக்கு எதிராக விஷமத்தன பிரசாரங்களை மேற்கொள்ள வாய்ப்பில்லை. அவர்கள் ஏற்கனவே சரணாகதி அடைந்து விட்டார்கள். அலி சப்ரி அரசியலை விட்டே ஓடி விட்டார். ரணிலுக்கு கிடைத்த வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகளும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக வந்த வாக்குகளும்தான். இதில் மொட்டு வாக்குகள் 15 இலட்சம் வரை இருக்கும் என்பது நமது கணக்கு. ஆனால் அவர்கள் இதனை நிராகரிக்கின்றார்கள். சஜித்- ரணில் கூட்டணி அமைந்தாலும் அதனுடன் வேட்பாளர் பங்கீடு தொடர்பில் பெரும் இழுபறி வரும். அப்போது மேலும் பலர் அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள். இன்று ரணிலுடன் இருப்போர் திரும்ப மொட்டு அணிக்குத் தாவவும் இடமிருக்கின்றது. எனவே கூட்டல் – கழித்தல் கணக்குப்படி அனுர தரப்பை பொதுத் தேர்தலில் இலகுவாக வெற்றி கொள்ள முடியும் என்ற சஜித் – ரணில் கணக்கு மொண்டசூரி-பால்போத்தல் கணக்காகத்தான் இருக்கும். இது பற்றி தகவல்களை நாம் விரைவில் மாவட்ட ரீதியில் விரிவாகத் தர இருக்கின்றோம். நடந்து முடிந்த 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஆசனங்களை மாவட்ட ரீதியில் கணக்குப் பார்த்தால் அது ஏறக்குறைய பின்வருமாறு அமைகின்றது. அனுர 105 ஆசனங்கள் சஜித் 068 ஆசனங்கள் ரணில் 037 ஆசனங்கள் நாமல் 002 ஆசனங்கள் அரியநேந்திரன் 009 ஆசனங்கள் திலித் 001 ஆசனம் இதர 003 ஆசனங்கள் மொத்தம் 225 ஆசனங்கள் அதேபோன்று வருகின்ற 2024 பொதுத் தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமையவே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அனுர 140 ஆசனங்கள் சஜித் 046 ஆசனங்கள் ரணில் 009 ஆசனங்கள் தமிழ் தரப்பு 020 ஆசனங்கள் நாமல் 005 ஆசனங்கள் இதர 005 ஆசனங்கள் மொத்தம் 225 ஆசனங்கள் மொட்டுக் கட்சியில் இன்று ரணிலுடன் இருப்போரில் கணிசமானவர்கள் மீண்டும் மொட்டுக் கட்சிக்குத் தாவ இடமிருக்கின்றது. அப்படியான நிலையில் அது ரணில் தரப்பு எண்ணிக்கையில் மேலும் கடுமையான தாக்கங்களைச் செலுத்தும். ரணில் தனித்து நின்றால் 2020 தேர்தல் முடிவுதான் அவருக்கு மீண்டும் வரும். சஜித் கூட்டணியில் இருப்போரில் பெரும்பாலானவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அத்துடன் தற்போது அவர்கள் கூட்டணியில் இருப்போரில் பலர் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரவுடன் இணங்கிப் போகும் மன நிலையில் இருக்கின்றார்கள். கடந்த 2020 பொதுத் தேர்தலுடன் ஒப்பு நோக்குகின்ற போது யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களில் இருந்து குறைந்தபட்சம் ஒரு என்.பி.பி. வேட்பாளராவது வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கின்றது. அனுர வெற்றியைத் தொடர்ந்து அவர்களது வாக்கு மேலும் அதிகரிக்கும் ஒரு நிலையும் பிரகாசமாகத் தெரிகின்றது. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சஜித் கூட்டணியில் குழப்பங்களுக்கு இடமிருக்கின்றது என்று நாம் முன்பு சொல்லி இருந்தோம். இப்போது அங்கு அது நடந்து கொண்டிருக்கின்றது. சஜித் அணியில் இருந்து வெளியேற இருப்பவர்களுக்கும் இப்போது அதற்கு ஒரு கட்சி இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. ரணில் அரசியலை விட்டு வெளியே செல்வார் என்று எதிர்பார்ப்பதால் அவருடன் சென்ற மொட்டுக் கட்சிக்காரர்களின் நிலை இன்னும் தெளிவில்லாமல் இருக்கின்றது. அவர்கள் இப்போது ஏதாவது ஒரு கூட்டணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அல்லது பலர் தெருவில் நிற்க வேண்டி வரும். எப்படியும் தற்போது நாடாளுமன்றத்தில் இருப்போரில் மூன்றில் இரண்டு பங்கினர் வெளியே என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. https://thinakkural.lk/article/310044
  8. மக்களின் பலத்த எதிர்ப்பையடுத்து மன்னாரில் மதுபானசாலையை உடன் மூடுமாறு உத்தரவு Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 10:04 AM மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார். மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (30) ஒன்றுகூடிய மக்கள் பிரேதப் பெட்டி சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இந்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், காமன்ஸ், பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்றன. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி இங்கு மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேபோன்று கடந்த மாதம் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, இந்த மதுபானசாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கை அளித்திருந்தனர்.தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் மதுபான விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டது என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (30) பிரேதப் பெட்டியுடன் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் சென்று மக்களுடன் கலந்துரையாடினார். இந்தப் பிரச்சினையை அரச அதிபர் உடனடியாக மதுவரி திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நிலையில் குறித்த மதுபானசாலையை தற்காலிகமாக மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நிரந்தர தீர்வு கோரி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/195191
  9. Published By: VISHNU 01 OCT, 2024 | 04:08 AM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'கௌரவ' பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது நாட்டுமக்களின் கடமையாகும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் வழிகாட்டலின்கீழ் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கைகள் நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான ஒஸ்டின் பெர்னாண்டோ, அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், இலங்கையில் சேவையாற்றும் பன்னாட்டு இராஜதந்திரிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர். அதன்படி இந்நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தின் தலைவர் பாலித லிஹினியகுமார, நல்லாட்சியை முன்னிறுத்தி கரு ஜயசூரியவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்கொண்டு செல்வதே இந்த கற்கைள் நிறுவனத்தின் பிரதான நோக்கம் எனச் சுட்டிக்காட்டியதுடன், அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். அதேவேளை இக்கற்கைகள் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புப் பங்காளியாகத் தொழிற்படவுள்ள அரசியல் கற்கைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அகலங்க ஹெட்டியாராச்சி, இலங்கையில் வெளிப்படையானதும், பொறுப்புக்கூறத்தக்கதுமான ஆட்சி நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு தாபிக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தினால் வழங்கப்படும் கல்வியின் மூலம் ஆட்சியியல் மற்றும் அரச கொள்கை என்பவற்றின் தரத்தை மேம்படுத்தமுடியும் என நம்பிக்கை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கம் கரு ஜயசூரியவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன், அந்நிறுவனத்தின் தலைவர் பாலித லிஹினியகுமாரவுக்கும், அரசியல் கற்கைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அகலங்க ஹெட்டியாராச்சிக்கும் இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. அதனையடுத்து நிகழ்வில் உரையாற்றிய ஒஸ்டின் பெர்னாண்டோ, நேர்மறையான ஆட்சியியல் மாற்றம் ஏற்படவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், அதன் ஓரங்கமாக உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் எனவும், எதிர்வருங்காலங்களில் அரசியலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேவேளை உண்மையான தலைமைத்துவம் என்பது வெறுமனே சொற்களிலன்றி, செயல்களில் தென்படவேண்டும் எனவும், இதுவரை காலமும் தான் வகித்த சகல பதவிகளிலும் அதனை மனதிலிருத்தியே செயற்பட்டதாகவும் குறிப்பிட்ட 'தேசமான்ய' கரு ஜயசூரிய, நல்லாட்சி என்பது ஆடம்பரமல்ல எனவும், மாறாக அது அத்தியாவசியமானதொன்று எனவும் தெரிவித்தார். 'எமது நாட்டில் பொதுமக்களின் தேவைகளுக்கு அப்பால் ஊழல் மோசடிகளும், நிர்வாக முறைகேடுகளும் பெருகியிருப்பதை மிகுந்த கவலையுடன் பார்க்கிறேன். இவற்றை சீரமைத்து, ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் நோக்கிலேயே நாம் ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தை ஸ்தாபித்திருக்கிறோம்' எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார். மேலும் கடந்த 21 ஆம் திகதி அமைதியான முறையில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்றதாகவும், அதற்கு மறுதினம் தோல்வியடைந்த வேட்பாளர் அலுவலகத்தைவிட்டு வெளியேறியதுடன், வெற்றியடைந்த வேட்பாளர் ஆடம்பர நிகழ்வுகள் எவையுமின்றி அமைதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்த கரு ஜயசூரிய, ஜனநாயக ரீதியில் ஒரு ஆட்சி மாற்றம் மிக அமைதியான முறையில் நிகழமுடியும் என்பதற்காக மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்ததாகப் பெருமிதம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி உலகநாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணத்தை வழங்கிய இலங்கையின் தலைவர்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார். அதேபோன்று எதிர்வரவுள்ள பொதுத்தேர்தலில் 'கௌரவ' பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது நாட்டுமக்களின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/195183
  10. தகுதிப் பெற்றுள்ள சகல அரச உத்தியோகஸ்தர்களும் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு 30 SEP, 2024 | 05:40 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் பொதுத்தேர்தலுக்கும் தபால்மூல வாக்களிப்புக்கு கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். நாளை செவ்வாய்க்கிழமை (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இம்மாதம் 4 ஆம் திகதி முதல் 8ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கு தகுதிப் பெற்றுள்ள அரச உத்தியோககஸ்தர்கள் நாளை செவ்வாய்க்கிழமை (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த சகல அரச உத்தியோகத்தர்களும். பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகைமையுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களும் 2024.10.08 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்டத்தின் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்குக் (மாவட்டத் தேர்தல் அலுவலகம்) கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்தல் வேண்டுமென்பதுடன், அனைத்து தாபனத் தலைவர்கள், அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்காளர்களுக்கும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு 736, 586 பேர் விண்ணப்பிருத்திருந்த நிலையில் 24,286 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலில் 712321 அரச உத்தியோகஸ்தர்கள் தபால்மூலம் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195166
  11. Published By: VISHNU 01 OCT, 2024 | 01:57 AM கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாச்சாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தைத் தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எனவே தமிழர்களின் விகிதாச்சார அடிப்படையிலுள்ள 6 பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் அனைவரும் அணிதிரளுமாறு கரம் கூப்பி அழைக்கின்றோம் என ஈ.பி.ஆர். எல்.எப். கட்சியின் சிரேஸ் தலைவரும் முன்னாள் கிழக்குமாகாண உறுப்பினரான இரா. துரைரெட்ணம் அறைகூவல் விடுத்துள்ளார். மட்டக்களப்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடக மாநாடு நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அலுவலகத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது இதில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வீதாசார அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதியும். திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதி, மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதிநிதிகள் உட்பட 6 தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை ஏதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க முடியும். எனவே குறிப்பாக புதிய இளைஞர் சமூகம், படித்த சமூகம். சமூகசேவையில் நாட்டம் கொண்ட அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 குழுக்களுக்கு மேல் தேர்தலில் போட்டியிடப் போகின்றனர் அதில் தமிழ்த் தேசியத்தில் நாட்டமில்லாத அனைவரும் தமிழர்களின் விகிதாச்சாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தைத் தடுப்பதற்காக கைக்கூலிகளாகப் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அந்த கைக்கூலிகளின், ஏஜன்டுகளின் மாயவலையில் விழ்ந்துவிடாமல் 4 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதேவேளை தலைமைகளை வழங்கவும், எதிர்வரும் காலத்தில் தமிழ்த் தேசியத்தில் நாட்டமுள்ள கட்சிகளுடன் பொதுவான ஒரு இனக்கப்பாட்டிற்கு வருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவே எங்களுடன் அனைவரும் அணிதிரளவேண்டும். இன்று மாவட்டத்தை பொறுத்தளவில் தமிழர்களா? கட்சிகளா? என்ற விடையத்தில் மாவட்ட மக்கள் அதிகமாகத் தமிழர்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும் என மிகவும் அக்கறையாக இருக்கின்றனர் எனவே அனைவருக்கும் அறை கூவல் விடுக்கின்றோம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க நாங்கள் தயாரக இருக்கின்றோம் அனைவரும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/195180
  12. Published By: DIGITAL DESK 7 30 SEP, 2024 | 05:20 PM (இராஜதுரை ஹஷான்) எதிர்க்கட்சியில் இருக்கும் போது ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிரூபிக்க வேண்டும். போலியான குற்றச்சாட்டுக்களினால் அரசியலில் சற்று பின்னடைந்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எம் தலைவர்கள் மீது முன்வைக்கப்பட்ட போலியான குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் அவதானம் செலுத்தினார்கள். அதன் காரணமாகவே அரசியலில் பின்னடைந்துள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது ராஜபக்ஷர்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஊழல் மோசடிக்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டார். நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மற்றும் தத்துவங்கள் அவரிடம் உள்ளன. ஆகவே எதிர்க்கட்சியில் இருக்கும் போது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும். போலியான குற்றச்சாட்டுக்களை கவனத்திற் கொண்டு தான் எமக்கு ஆதரவளித்த மக்கள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பக்கம் சென்றுள்ளார்கள். ஆகவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மக்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டின் இறையாண்மையை முன்னிலைப்படுத்தி எடுக்கும் சிறந்த தீர்மானத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/195163
  13. இந்த திரியில் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இருக்கலாம் அண்ணை.
  14. அண்ணை இந்த நிதி பெரும்பாலும் பிரதேச செயலகம் அல்லது பிரதேச சபை ஊடாகத் தான் செலவழிக்கப்படுகிறது. அவர்களுடைய உத்தியோகத்தர்கள் நேரடியாகப் பார்த்து உறுதிப்படுத்திய பின்னரே நிதி விடுவிக்கப்படும். இதில் பா.உ கள் கையாடல் செய்வது கடினம்.
  15. பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகண்ணை, வளத்துடன் வாழ்க.
  16. @ரசோதரன் அண்ணை சிறிது காலம் அமைச்சரவையில் இடம்பிடித்தவர்கள் தானே?! நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஏதும் சில அதிரடி நடவடிக்கைகள் இடம்பெறலாம்! வாக்காளர்களைக் கவர மட்டுமில்லாது உண்மையாக தவறிழைத்த சிலராவது கைது செய்யப்படலாம். மேலதிகமாக உள்ள ஆடம்பர வாகனங்களை ஏலமிட்டு/விற்று அரசிற்கு வரவு வைக்கலாம்.
  17. தமக்கு வாக்களித்த அல்லது வாக்களிக்கக் கூடிய பகுதிகளை தேர்ந்தெடுத்து அல்லது அங்குள்ள பிரதேச சபை(அவர்களது கட்சி) உறுப்பினர் ஊடாக வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். அமைச்சர்கள் அரசு சார்ந்த பா.உ களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் அல்லது பெரிய திட்டங்களைப் போட்டு அதிக நிதியை ஒதுக்குவார்கள்.
  18. முன்னாள் பா.உ சொல்வது தவறு அண்ணை. எமது கிராமத்தில் முன்னாள் பா.உ சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வாசிகசாலைக் கூரை புனரமைப்பு நடைபெற்றது. முன்னாள் பா.உ கஜேந்திரகுமாரின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழக மதிற்சுவர் கட்ட கோரிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.
  19. லெபனானிற்குள் ஊடுருவி இன்று தரை தாக்குதல் - இஸ்ரேல் 30 SEP, 2024 | 09:24 PM இன்று லெபனானிற்குள் ஊடுருவி சிறிய அளவிலான தரை தாக்குதலொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளது. இன்று இந்த தாக்குதல் ஆரம்பமாகலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/195176
  20. A Member of Parliament will receive a salary of Rs 54,285 (with a proposed increased to 120,000 from January 2018) paid monthly by the parliament, while Ministers, Deputy Ministers and State Ministers will receive a salary applicable to their grade from their Ministries. The Act of Pensions to Parliamentarians was passed as per the Act of 1977 No. 01. An MP is entitled to enjoy a monthly pension of one-third of the monthly salary if he or she has completed a five-year term in Parliament. An MP who completes ten years is entitled to a monthly pension of two-thirds of the monthly salary.
  21. பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு - முக்கிய அறிவித்தலை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு 30 SEP, 2024 | 05:58 PM எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்காளர் இடாப்புகள் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து காட்சிப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் பின்வருமாறு ; 1. அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுதந்திர சதுக்கம் கொழும்பு 07 2. தொழில் திணைக்களம், தொழில் செயலகம், நாராஹென்பிட்டி கொழும்பு 05 3. கல்வி அமைச்சு , இசுருபாய, பத்தரமுல்ல 4. பதிவாளர் நாயகம் திணைக்களம், இல . 243/3A , டென்சில் கொப்பேகடுவ மாவத்தை , பத்தரமுல்ல 5. அஞ்சல் தலைமையகம், டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை, கொழும்பு 10 6. கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு , மாளிகாவத்தை 7. நகர அபிவிருத்தி அதிகார சபை தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து விண்ணப்பங்களை இலவசமாக பொற்றுக்கொள்ள முடியும் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் அந்தந்த மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிடம் ஒப்படைக்க வேண்டும். https://www.virakesari.lk/article/195169
  22. யாழில் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது! Published By: DIGITAL DESK 7 30 SEP, 2024 | 05:13 PM யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 02 கைக்குண்டுகள், 04 வாள்கள், 04 பெற்றோல் குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேநபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களிடமிருந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மானிப்பாய் பொலிஸார், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/195162
  23. கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி அதிவேக ரன் குவித்து புதிய வரலாறு, கடைசி நாளில் இந்தியாவின் திட்டம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கான்பூரில் இன்று (திங்கள், செப்டம்பர் 30) இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ்.க பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கான்பூரில் இன்று (திங்கள், செப்டம்பர் 30) இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் கண்ட ரசிகர்கள், நடப்பது டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என்று குழம்பியிருக்கலாம். ஏனென்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் ரோகித், ஜெய்ஸ்வால், கில், ராகுல், கோலி என அனைவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டு டி20 போட்டியைப் போல் பேட் செய்தனர். டெஸ்ட் போட்டிக்கென இருக்கும் தாத்பரியத்தை உடைத்து, தொடக்கத்திலிருந்தே இந்திய பேட்டர்கள் வங்கதேசப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நொறுக்கி, ரன்களைக் அள்ளிக் குவித்தனர். கான்பூரில் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதிலிருந்து கடந்த 3 நாட்களாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் 2-வது டெஸ்ட் எந்தவிதமான முடிவுமின்றி டிராவில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால், கடைசி இரு நாட்கள்(செப்டம்பர் 30, அக்டோபர் 1) ஆட்டத்தின் வெற்றியை வங்கதேசத்திடமிருந்து பறிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் வியூகம் அமைத்துச் செயல்பட்டனர். ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் எப்படியாவது வெற்றியை எட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் இந்திய அணியினர் பேட் செய்து வருகிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு குறைந்தபட்சம் 5 டெஸ்ட் வெற்றிகள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய பயணம் கடினமாக இருக்கும் என்பதால், வங்கதேசம், நியூசிலாந்திடம் இந்த 5 வெற்றிகளை பெறும் முயற்சியில் இந்திய அணியினர் திட்டமிட்டுள்ளனர். இன்றைய 4-வது நாள் ஆட்டமும் சற்று தாமதமாகத் தொடங்கிய நிலையில், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 74.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி அதிகவேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. 8 என்ற ரன்ரேட்டில் விளையாடத் தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியைவிட 52 ரன்களை இந்திய அணி அதிகமாக குவித்து முன்னிலை வகித்தது. வங்கதேச அணி, 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடி இன்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் சேர்த்திருந்தது. இன்னும் வங்கதேச அணி 26 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஒரே நாளில் 18 விக்கெட்டுகள் இன்று ஒரே நாளில் மட்டும் 18 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் என 18 விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி நாள் ஆட்டம் எப்படிச் செல்லும்? இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியோடுதான் அதிரடியான பேட்டிங் வியூகத்தைக் கையில் எடுத்தது. நாளை (அக்டோபர் 1) கடைசி நாள் ஆட்டத்தில் வங்கதேச அணியை இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்த ஓவருக்குள் வீழ்த்த வேண்டும் அல்லது வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிர்ணயிக்கும் இலக்கை எட்டி வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானிப்பது வங்கதேசத்தின் பேட்ஸ்மேன்கள் கையில் இருக்கிறது. வங்கதேச அணி ரன்களைப் பற்றிச் சிந்திக்காமல் டிஃபென்ஸ் ஆட்டத்தைக் கையில் எடுத்து விக்கெட் சரியாமல் பார்த்துக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை நகர்த்தினால், ஆட்டம் டிராவில் முடியும். ஒருவேளை வங்கதேசமும் இந்தியப் பந்துவீச்சில் நன்றாக விளையாடி, ரன்களைக் குவிக்க முயன்றால் இந்திய அணி விரித்த வலைக்குள் விழுந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவலாம். கான்பூர் ஆடுகளம் கடைசி நாளில் சுழற்பந்துவீச்சுக்குக் கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு முக்கியத் துருப்புச்சீட்டாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது வங்கதேசம் விக்கெட் சரிவு வங்கதேச அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. மோமினுள் ஹக் 40, முஸ்பிகுர் ரஹ்மான் 6 ரன்களில் களத்தில் இருந்தனர். மழையால் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் நான்காவது நாளான இன்று தொடர்ந்தது. இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பும்ராவின் வேகப்பந்துவீச்சில் முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 11 ரன்கள் சேர்த்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதன்பின் சீரான இடைவெளியில் வங்கதேச அணி விக்கெட்டைப் பறிகொடுத்தது. விக்கெட் சரிந்தாலும், மோமினுல் ஹக் ரன்களை வேகமாகச் சேர்த்தார். மதிய உணவு இடைவேளையின் போது வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேசம் அணி 28 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியின் பின்வரிசை பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணித் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர், ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அதிரடி துவக்கம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் இன்னிங்ஸை அதிரடியாகத் துவங்கினர். டி20 ஆட்டம் போல் துவக்கத்திலிருந்தே பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் துரத்தி, வங்கதேசத்தின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். ஜெய்ஸ்வால், ரோகித் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 2.6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. 31 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சுப்மான் கில் (39), ரிஷப் பந்த் (9) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து (2 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கடந்த டெஸ்டில் ஏமாற்றிய கோலி, இந்த ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 47 ரன்கள் சேர்த்து 3 ரன்களில் அரைசதத்தைத் தவறவிட்டார். அதிரடியாக பேட் செய்த கே.எல்.ராகுல், 33 பந்துகளில் அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணி புதிய சாதனை இந்திய அணி 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி புதிய சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் அதிவிரைவாக சதம் அடித்த அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி இன்று படைத்தது. இதற்கு முன் கடந்த ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 12.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியதுதான் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்த ஆட்டத்தில் இந்திய அணி முந்தி, 2.1 ஓவர்கள் குறைவாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 18.2 ஓவர்களில் 150 ரன்களையும், 24.2 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டி அதிவேகத்தில் 150 மற்றும் 200 ரன்களைச் சேர்த்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. இந்திய அணி 50 ரன்களை எட்டுவதற்கு 3 ஓவர்களே தேவைப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் ஆடவர் அணிப் பிரிவில் இந்திய அணி அதிவேகத்தில் 50 ரன்கள் எட்டியுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 23 பந்துகளில் அரைசதம் பார்ட்னர்ஷிப் அடித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார் ஜடேஜாவின் மைல்கல் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 3,000-க்கும் அதிகமான ரன்களையும் 300 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 11-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் அஸ்வின், கபில்தேவ் இருவரும் அந்த சாதனையைச் செய்திருந்தனர். 74 போட்டிகளில் ஜடேஜா இந்தச் சாதனையை நிகழ்த்தி இயான் போத்தம் (72) அடுத்தார்போல் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். உலகளவில் 300 விக்கெட்டுகளையும், டெஸ்டில் 3,000-க்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்த இரண்டாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி இந்த மைல்கல்லை அடைந்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/c5yj3rwvdljo
  24. பொதுத்தேர்தல் பிரச்சார காலம் - மானியம் குறித்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் 30 SEP, 2024 | 05:04 PM ஜனாதிபதியின் மானியம் குறித்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு தற்போது பொதுத்தேர்தல் பிரச்சார சூழலில் உள்ளதால் இந்த மானியங்கள் குறித்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு குறிப்பிட்ட அமைச்சுகளிற்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது என அதன் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் தங்களிற்கு ஏற்கனவே கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அதனை அறிவித்துள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம் நஜித் இன்டிக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மானியங்கள் வழங்குவதை இதே காரணத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியிருந்தது. https://www.virakesari.lk/article/195160
  25. ஹசன் நஸ்ரல்லா கொலையை இஸ்ரேல் அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2006இல் நடந்த போருக்குப் பிறகு நஸ்ரல்லா பொதுவெளியில் தோன்றுவதைப் பெரிதும் தவிர்த்து வந்தார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 15 நாட்களில், லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலா தனது அதிகாரக் கட்டமைப்பில் தொடர்ச்சியான இழப்புகளையும் பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளது. முதலில், செப்டம்பர் 17-18 ஆகிய தேதிகளில், ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்த 1500 பேர் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகள் மூலம் குறி வைக்கப்பட்டனர். அதில் சிலர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, இதுவரை இஸ்ரேலுக்கு எட்டாத தூரத்தில் இருந்த ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமையன்று பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்நிலையில், நஸ்ரல்லாவையும், ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகளையும் இஸ்ரேல் ராணுவம் எப்படிக் கண்காணித்து, குறி வைத்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஹெஸ்பொலாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு தோல்வியடைந்தது எப்படி? பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் இதுகுறித்து அலசினார். ஹசன் நஸ்ரல்லாவை குறிவைப்பது இஸ்ரேலின் ராஜ்ஜீய ரீதியிலான முடிவு என்றும், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து வந்த அவரை, இஸ்ரேல் நீண்டகாலமாகக் கண்காணித்து வந்தது என்றும் ஃபிராங்க் கார்ட்னர் கூறுகிறார். மேலும் அவர் “சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்தவர்களின் பேஜர்களும், வாக்கி-டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இதன் பின்னணியில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக ஊகிக்கப்பட்டது. மொசாட், ஹெஸ்பொலாவின் இந்த தொலைதொடர்பு சாதனங்களின் விநியோகச் சங்கிலியில் தலையிட்டு, அவற்றில் வெடிமருந்துகளை வைத்ததாக நம்பப்படுகிறது. இது சுமார் 15 நாட்களுக்கு முன்பு நடந்தது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது ஹெஸ்பொலாவின் அதிகார கட்டமைப்பில் இஸ்ரேல் எவ்வாறு ஆழமாக ஊடுருவ முடிந்தது என்பதைக் காட்டுகிறது. ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகள் அனைவரையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இஸ்ரேல் தனது நடவடிக்கைகளின் மூலம் எவ்வாறு ஹெஸ்பொலாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை இவ்வளவு திறம்படச் சீர்குலைக்க முடிந்தது என்பதே கேள்வி” என்கிறார். நஸ்ரல்லாவை இஸ்ரேல் கண்டுபிடித்தது எப்படி? பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, ஹெஸ்பொலாவின் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் நீண்டகாலமாகவே கண்காணித்து வந்தது. (கோப்புப் படம்) ஹசன் நஸ்ரல்லா கொல்லப்படுவதற்கு முன்பு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் ஒரு சிறப்பு செய்தி வெளியானது. இதற்காக லெபனான், இஸ்ரேல், இரான் மற்றும் சிரியாவில் உள்ள பல நபர்களுடன் பேசியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. அந்த உரையாடல்களின் மூலம், ஹெஸ்பொலாவின் விநியோகச் சங்கிலி மற்றும் அதிகாரக் கட்டமைப்பை இஸ்ரேல் எவ்வாறு அழித்தது என்பது தெரியவந்தது. இஸ்ரேல் 20 ஆண்டுகளாக நஸ்ரல்லாவையும் ஹெஸ்பொலாவையும் உளவு பார்த்து, அதன்பிறகே அவர்களின் தலைமையகத்தைத் தாக்கியது என்று இந்த விவகாரங்களை அறிந்த ஒரு நபர் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார். மேலும் அவர் இஸ்ரேலின் இந்த உளவு செயல்பாடு “புத்திசாலித்தனமானது” என்றும் விவரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது நெருக்கமான அமைச்சர்கள் குழுவும் புதன்கிழமையன்று தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்ததாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பல மைல்களுக்கு அப்பால், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நெதன்யாகு உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, இஸ்ரேல், ஹெஸ்பொலாவின் விநியோகச் சங்கிலியையும் அதிகாரக் கட்டமைப்பையும் தகர்த்தது. ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் ராணுவ சேவைகளின் இயக்குநர் மேத்யூ சாவில், இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகச் தீட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவதாக கூறியுள்ளார். “ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்புகளில் இஸ்ரேல் உளவுத்துறை குறுக்கீடு செய்திருப்பதையும் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. மேலும், செயற்கைக்கோள் படங்கள் அல்லது ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போன்ற பல புகைப்படங்ககளை பகுப்பாய்வு செய்தது முக்கியப் பங்கு வகித்துள்ளது. இவற்றுடன் அந்த மனித புத்திசாலித்தனத்திற்கும் முக்கியப் பங்கு இருந்தது என்று நிச்சயமாகச் சொல்லலாம்,” என்கிறார் மேத்யூ சாவில். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இது அடிமட்டத்தில் உளவாளிகளின் தீவிர ஈடுபாட்டை உள்ளடக்கிய ஒரு ஆபரேஷன் என்று மேத்யூ சாவில் குறிப்பிடுகிறார். கடந்த 2006இல் நடந்த இஸ்ரேல் - ஹெஸ்பொலா போருக்கு பிறகு நஸ்ரல்லா பொது வெளியில் தோன்றுவதைப் பெரிதும் தவிர்த்து வந்தார். ஹசன் நஸ்ரல்லாவின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அவரது மிக நெருக்கமான வட்டாரங்கள், நஸ்ரல்லா மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருவதாகவும் அவரது ஒவ்வோர் அசைவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அவர் ஒரு சிறிய குழுவை மட்டுமே சந்திக்கும் அளவிற்கு இருப்பதாகவும் முன்பு ராய்ட்டர்ஸிடம் தெரிவித்திருந்தனர். இஸ்ரேல் குண்டுகளை வீசியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடம் பற்றிப் பல மாதங்களாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தது என்று மூன்று மூத்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் கூறியதாக சனிக்கிழமையன்று தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது. இஸ்ரேலிய செய்திகளின்படி, நஸ்ரல்லாவை குறிவைக்கும் முடிவு நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காக அமெரிக்காவிற்கு தெரிவிக்காமலே உடனடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, செப்டம்பர் 17-ஆம் தேதியன்று பேஜர் வெடிப்புக்குப் பிறகு, ஹெஸ்பொலா தலைவர்கள் மிகவும் விழிப்புடன் இருந்தனர். இஸ்ரேல் தங்களைக் கொல்ல விரும்புவதாக அவர்களுக்குச் சந்தேகம் வலுத்து வந்தது. உயிரிழந்த தளபதிகளின் இறுதிச் சடங்குகளில் கூட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்களின் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உரைகள்தான் சில நாட்களுக்குப் பிறகு ஒளிபரப்பட்டது. தெற்கு பெய்ரூட்டில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் அடித்ததளத்தில் இருந்த நஸ்ரல்லாவின் தலைமையகத்தை குண்டுவீசித் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. நஸ்ரல்லா உட்பட ஒன்பது மூத்த ஹெஸ்பொலா தளபதிகள் கடந்த வாரத்தில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது ஹெஸ்பொலாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர்களின் உளவுத்துறை தோல்வி அடைந்திருப்பதாகவும் கூறுகிறார் ராய்ட்டர்ஸிடம் பேசிய ஸ்வீடிஷ் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஹெஸ்பொலா குறித்து ஆராய்ந்து வரும் மூத்த நிபுணர் மேக்னஸ் ரென்ஸ்டார்ப். “நஸ்ரல்லா ஒரு சந்திப்பை நடத்துகிறார் என்பதை இஸ்ரேல் அறிந்திருந்தது. அவர் மற்ற தளபதிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், இஸ்ரேல் அவரைத் தாக்கியது,” என்று மேக்னஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நஸ்ரல்லா உட்பட ஒன்பது மூத்த ஹெஸ்பொலா தளபதிகள் கடந்த வாரத்தில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி செய்தியாளர்களிடம் பேசியபோது, நஸ்ரல்லாவும் பிற தலைவர்களும் ஒன்றுகூடுவது பற்றிய உடனுக்குடன் தகவல் ராணுவத்திடம் இருந்ததாக கூறினார். இந்தத் தகவல் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதை ஷோஷானி கூறவில்லை. எப்படி இருப்பினும், இந்தத் தலைவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதற்காக ஒரு கூட்டத்தை நடத்தவிருந்ததாக ஷோஷானி கூறினார். இதையறிந்த அடுத்த சில நொடிகளில் டஜன் கணக்கான குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலின் ஹட்செரிம் விமான தளத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அமிச்சாய் லெவின் செய்தியாளர்களிடம் கூறினார். “இந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானது, நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டது,” என்று பிரிகேடியர் ஜெனரல் அமிச்சாய் லெவின் கூறினார். “இஸ்ரேல், ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடத்தைத் தீர்மானித்தவுடன், அதன் F-15 போர் விமானங்கள் பதுங்கு குழிகளை அழிக்கவல்ல 80 குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த குண்டுகள் தெற்கு பெய்ரூட் மற்றும் தஹியாவில் உள்ள நிலத்தடி தளங்களைக் குறிவைத்தன. அங்கு ஹசன் நஸ்ரல்லா உயர்நிலை தளபதிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார்,” என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் ராணுவ சேவைகளின் இயக்குநர் மேத்யூ கூறுகிறார். “இவையனைத்தும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், ஹெஸ்பொலாவின் பாதுகாப்பு அமைப்புக்குள் ஊடுருவியதைத் தெளிவாக்குகின்றன. நஸ்ரல்லாவின் இடத்திற்கு இதே கொள்கைகளைக் கொண்ட ஒருவர் கொண்டுவரப்படுவார். ஆனால், புதிய தலைவர் இத்தகைய உறுதிப்பாட்டை அமைப்புக்குள் உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகும். இருப்பினும், இப்போதைய சூழ்நிலையில், அதைச் செய்ய அவருக்கு அதிக நேரம் இருக்காது,” என்று மேத்யூ விளக்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyl5el8qeeo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.