Everything posted by ஏராளன்
-
அநுரகுமார திஸாநாயக்கவின் பிரம்மிக்கத்தக்க வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுவதுமாக மாற்றியமைத்திருக்கிறது - சாலிய பீரிஸ்
Published By: VISHNU 22 SEP, 2024 | 06:37 PM (நா.தனுஜா) அநுரகுமார திஸாநாயக்கவினதும், தேசிய மக்கள் சக்தியினதும் இந்த பிரம்மிக்கவைக்கும் வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது. இது நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு வாக்களித்த மக்களுக்குக் கிடைத்த பரிசாகும் எனத் தெரிவித்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தானே ஜனாதிபதி என்பதை அவர் உணர்ந்து செயற்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியிருக்கின்றார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்த வேளையில், அதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு வலியுறுத்தியிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஜனாதிபதித்தேர்தலின் இறுதி முடிவு இன்னமும் வெளியிடப்படாவிடினும், அநுரகுமார திஸாநாயக்கவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்பது தற்போது வெளிப்படையாகியிருக்கின்றது. அநுரகுமார திஸாநாயக்கவினதும், தேசிய மக்கள் சக்தியினதும் இந்த பிரம்மிக்கவைக்கும் வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது. அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி என்பது ஊழல் மோசடிகள், தன்னலம் கருதிய ஆதரவு போன்றவற்றிலிருந்து தாமும், தமது பிள்ளைகளும் விடுபட்டு, பாதுகாப்பானதும் நேர்த்தியானதுமான வாழ்க்கையை வாழவேண்டும் எனும் எண்ணத்துடன் நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு வாக்களித்த பல மில்லியன் மக்களுக்குக் கிடைத்த பரிசாகும். புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று, அரசாங்கம் அமைத்து, பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுதேர்தலுக்குச் செல்லவேண்டியிருக்கும் நிலையில், எதிர்வரும் நாட்களில், வாரங்களில், மாதங்களில் அவர் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும். இருப்பினும் இதுவரை காலமும் அவரது அரசியல் பயணத்திலும், தேர்தல் பிரசாரத்திலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட தெளிவும், யதார்த்தபூர்வ தன்மையும் அவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் காலப்பகுதியிலும் தொடரும் என எதிர்பார்க்கின்றேன். அதேவேளை அநுரகுமார திஸாநாயக்க நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையின் ஆபத்துக்களை உணர்ந்து செயற்படுவதுடன், அதன் பரந்துபட்ட அதிகாரங்களை மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்யும் வகையில் பயன்படுத்தவேண்டும். அதேபோன்று புதிய ஜனாதிபதி இந்நாட்டின் அரைவாசி வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை என்பதையும், இருப்பினும் தான் அவர்கள் அனைவரினதும் ஜனாதிபதியே என்பதையும் புரிந்து செயலாற்றவேண்டும். மேலும் 5 வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று பிரம்மிக்கத்தக்க விதத்தில் தெரிவுசெய்யப்பட்டு, பின்னர் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத் தவறியதன் விளைவாக பதவி விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விதியில் இருந்து அநுரகுமார திஸாநாயக்க அவசியமான பாடத்தைக் கற்றுக்கொண்டிருப்பார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194549
-
இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க
பட மூலாதாரம்,GETTY IMAGES 22 செப்டெம்பர் 2024, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தேர்தலில் வென்றுள்ளார். அவர் இந்தத் தேர்தலில் 57,40,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி, இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார பதவியேற்பார் என பிபிசி சிங்கள சேவை தெரிவிக்கிறது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்தத் தேர்தலில்தான் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. தான் அதிபராவது குறித்து அநுர குமார தெரிவித்துள்ள செய்தியில், “நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிகள் இன்று பலித்துள்ளது.” “அதற்காக உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், இது என்னுடைய முயற்சி மட்டுமல்ல, நம் அனைவருடைய கூட்டுப் பணியும்கூட. இந்த வெற்றி நம் எல்லோருக்குமானது.” “இந்த வெற்றிக்காக நாம் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ரத்தம், கண்ணீர், வியர்வை மற்றும் தங்கள் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் இந்தத் தியாகங்கள் வீண்போகவில்லை. அவர்களின் தியாகங்கள் வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். இலங்கையின் வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது.” “கனவை நனவாக்க, இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். இதன் அடிப்படையில்தான் மறுமலர்ச்சி தோன்றும். வாருங்கள், எல்லோரும் இதற்காகக் கைகோர்ப்போம்!” எனத் தெரிவித்துள்ளார். ரணில் என்ன சொன்னார்? இதுகுறித்து ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாகத் தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டு வந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டு வர முடியும் என நம்புவதாகவும் ரணில் அந்த தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். அவருக்கு 42.31% வாக்குகள் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவுக்கு 32.76% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.27% வாக்குகளும் பதிவாகியுள்ளது இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டவில்லை. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இரண்டாவது விருப்ப வாக்கை எண்ணுவது இதுவே முதல்முறையாகும். இரண்டாவது விருப்ப வாக்குகளை எண்ணும் நடைமுறையின்படி, ''அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்'' என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்னநாயக்க கூறியுள்ளார். ''இவ்வாறு போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய வேட்பாளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்குகள், போட்டியிலுள்ள வாக்காளர்களுக்கு சாதகமாக உள்ளதா என்பதை கணக்கிடப்படும்'' ''22 தேர்தல் மாவட்டங்களிலும் தற்போது போட்டியிலுள்ள வேட்பாளர்களுக்கு சாதகமாக கிடைத்த வாக்குகள் எண்ணப்பட்டு கிடைக்கப் பெறும் விருப்ப வாக்குகள், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்த்து அதில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'அநுர குமார வென்றதாக ஏற்கிறோம்' தேசிய மக்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க வென்றுவிட்டதாகக் கூறியுள்ள அக்கட்சியின் எம்.பி விஜிதா ஹேரத், அதனால் கட்சியினர் பதற்றமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். அக்கட்சியால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட காணொளியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டாலும், 50% வாக்குகள் இல்லாததால் விதிகளின்படி அநுர குமார திஸாநாயக்க வென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, அநுர குமார வென்றுவிட்டதாக தாங்கள் ஏற்றுக் கொள்வதாக சஜித் பிரேமதாசவின் கட்சியின் எம்.பி ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஜனநாயக ரீதியாக அநுரவின் வெற்றியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சில வாக்கு எண்ணும் நிலையங்களில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்புக்கு முன்னதாகவே விருப்ப வாக்குகளை எண்ணியதாகவும் அதுகுறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நிலையங்களில் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்திய நிலையில், அதை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதாக, பிபிசி தமிழின் இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நிலவரம் இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், நேற்றிரவே இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 1,703 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அநுர குமார திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்த தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே மக்களின் ஆதரவு அநுர குமார திஸாநாயக்கவுக்கு அதிகம் இருந்தது புலப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாக்கு எண்ணிக்கை நிலவரம் அநுர குமார திஸாநாயக்க - 56,34,915 (42.31%) சஜித் பிரேமதாச - 43,63,035 (32.76%) ரணில் விக்ரமசிங்க -22,99,767 (17.27%) இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அநுர குமார திஸாநாயக்கவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்தது. அதேநேரத்தில், சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்தது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் தொடர்கிறார். நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு வாக்குப்பதிவு நாளான நேற்று (செப்டம்பர் 21) இரவு 10 மணி முதல் இன்று (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக போலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது. பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டிலேயே நேரத்தைச் செலவிடுமாறு போலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை காலையிலும் தொடர்ந்த நிலையில் இலங்கை முழுவதும் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் இருந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjd5emz8v0mo
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
Published By: VISHNU 22 SEP, 2024 | 07:55 PM கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு உரையும் வருமாறு, வணக்கம் அன்புள்ள பிரஜைகளே, செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தீர்மானமொன்றை வழங்கியுள்ளனர். நாம் அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசின் நல்லிருப்பினை உறுதிப்படுத்த வேண்டும். இற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன். அந்த சவாலுக்கு முகங்கொடுக்கின்ற அளவிலான ஆத்ம சக்தி பெரும்பாலானோருக்கு இல்லாதிருந்த சந்தர்ப்பத்திலேயே நான் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன். வரலாறு எனக்கு வழங்கிய அந்தப் பொறுப்பினை நான் சிறப்பாக நிறைவேற்றினேன். இரண்டு வருட குறுகிய காலப்பகுதியினுள் என்னால் இந்த நாட்டினை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. எனது அரசியல் வாழ்வில் எனது நாட்டுக்காக செய்யக் கிடைத்த பெறுமதியான கடமைப் பொறுப்பு அதுவாகும் என நான் நம்புகிறேன். நான் நாட்டைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு எழுபது வீதமாகக் காணப்பட்ட பணவீக்கத்தினை பூச்சியம் தசம் ஐந்து (0.5%) வரை என்னால் குறைக்க முடிந்தது. இருபது மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பினை ஐந்து தசம் ஏழு பில்லியன் அமெரிக்க டொலராக என்னால் அதிகரிக்க முடிந்தது. அத்துடன் டொலருடன் ஒப்பிடுகையில் முன்னூற்று எண்பதாகக் காணப்பட்ட ரூபாயின் பெறுமதியை முன்னூறு ரூபாய் வரை குறைத்து, பலமான நிலையான பெறுமதிக்கு என்னால் அதனைக் கொண்டு வர முடிந்தது. அத்துடன் மறை ஏழு தசம் மூன்றாக (-7.3%) காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை நேர் இரண்டு தசம் மூன்று (2.3%) வரை அதிகரிப்பதற்கு நான் நடவடிக்கை மேற்கொண்டேன். அதுபற்றியும், எனது அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் கடமைப் பொறுப்பு பற்றியும் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் உரிய மதிப்பீடொன்றை வழங்குவார்கள் என நம்புகிறேன். இந்த நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் வரலாற்றில் எனக்கு உரித்தான இடம் இன்று அல்லாமல் எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பதை நான் அறிவேன். நான் சரியான பாதையில் சென்று மக்களின் துயரங்களை முடிந்தளவு நீக்கினேன். புதிய ஜனாதிபதி அவர்களும் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் சரியான பாதையினைத் தெரிவு செய்து மக்களின் துயரங்களை நீக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன். மிகவும் சவால் மிகுந்த தொங்குபாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன். தொங்குபாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பாசம் மிகுந்த குழந்தையினை அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர். அனுர ஜனாதிபதி அவர்களே, நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்தக் குழந்தையை நான் கொண்டு வந்தததை விடவும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் முடிவிடத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகளை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் இந்த நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை ஏற்புடைய சந்தர்ப்பங்களில் எந்தவிதமான தயக்கமும் இன்றி நான் நிறைவேற்றுவேன். அத்துடன், எனது ஆட்சிக் காலத்தினுள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய, வழங்காத அனைவருக்கும், இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194553
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தேர்தலில் புதிய திருப்பம்: முதல் சுற்றில் 15 மாவட்டங்களில் அநுர முன்னிலை 2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்றுள்ளார். இதேவேளை சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அந்தவகையில், சற்றுமுன் வெளியான முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு சஜித் பிரேமதாச 4,363,035 (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் மற்றும் பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர். இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையென தெரிவித்து இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://ibctamil.com/article/presidential-election-2024-sri-lanka-results-1727003951
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு புதிய இணைப்பு ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார். இரண்டாம் இணைப்பு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விருப்பு வாக்கு தேர்தவுக்காக அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டனர். நாட்டின் தேர்தல் விதிகளின்படி, வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெற மொத்த வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு தேர்விற்கு நகர்ந்துள்ளது. முன்னிலை வகிக்கும் இரண்டு வேட்பாளர்கள் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாத நிலையில் முன்னிலை வகிக்கும் முதல் இரண்டு வேட்பாளர்களான அநுர மற்றும் சஜித்தை தவிர்த்து ஏனைய வேட்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டிலிருந்து இரண்டாவது விருப்பத்தேர்வுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு முதல் இரு வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும். இரண்டாம் விருப்பு வாக்களிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், தேர்தல் அலுவலர்கள் இந்த செயன்முறையை கையாள்வதில் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதாக ரத்நாயக்க பொதுமக்களுக்கு உறுதியளித்தார். மேலும் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பட்சத்தில், மாவட்டம் ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் இறுதி முடிவுகள் இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. முதலாம் இணைப்பு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு, வெற்றியாளரின் அறிவிப்பு இன்று (22) பிற்பகல் அல்லது நாளை (23) முற்பகல் வரை தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் இந்தநிலையில், வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும். எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/srilanka-presidential-election-final-result-update-1726989972#google_vignette
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அநுரக்கு வெற்றி...! உறுதிப்படுத்தும் நாடாராளுமன்ற உறுப்பினர் 1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அநுர குமார வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். அநுரகுமார ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார் எனவும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுரகுமார வெற்றி வேட்பாளர்கள் எவரும் 50 சதவீதத்திற்கு மேல் பெறாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுவது இறுதி முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/presidential-election-2024-anura-kumara-won-1727001338
-
ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
தேர்தலில் செல்லுபடியற்றதாக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் வாக்குகள்! தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் காரணமாக எந்தவொரு வேட்பாளரும் 50 வீதம் வாக்குகளைப் பெற முடியாது என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. செல்லுபடியற்ற வாக்குகள் எனினும் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கான சரியான முறை குறித்த தெளிவு உரிய முறையில் வழங்கப்படாத காரணத்தினால் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வாக்குகள் சுமார் ஒன்றரை லட்சம் அளவில் இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/record-high-candidates-invalid-votes-election-2024-1726990193#google_vignette
-
தேர்தல் ஆணையகம் விடுத்த கோரிக்கை - நிராகரித்த சர்வதேச சமூக ஊடகங்கள்
புதிய இணைப்பு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படும் சில உள்ளடக்கங்களை நீக்குமாறு, தேர்தல் ஆணையகம் விடுத்த கோரிக்கையை சமூக ஊடக தளங்கள் நிராகரித்துள்ளன. தேர்தல் சட்டத்தை மீறிய 201 இடுகைகளை நீக்க, தேர்தல் ஆணையகம் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் Meta, YouTube, TikTok மற்றும் Google ஆகியவை அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டன. சுமார் 937 கேள்விக்குரிய இடுகைகள் தேர்தலுக்கு முன்னர், குறித்த தளங்களில் இடுகையிடப்பட்டிருந்தன எனினும், தேர்தல் சட்டங்களை மீறியதாக கூறி 872 பதிவுகள் சர்வதேச சமூக ஊடக நிறுவனங்களால் நீக்கப்பட்டன. முதலாம் இணைப்பு அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார் . ஜனாதிபதி தேர்தலில் சட்டத்தை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அனைவரும் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது போதுமானதாக இல்லாவிட்டாலும் இறுதி முடிவாக இவ்வாறானவர்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தள பாவனை இதற்கிடையில், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாரபட்சம் விளைவிக்கும் சட்டவிரோத விளம்பர திட்டங்களை நீக்குமாறு Meta, YouTube, Tiktok மற்றும் Google போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சுமார் ஆயிரம் சமூக ஊடக பதிவுகளில் தேர்தல் விதிமுறைகளை மீறப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/election-commission-warns-social-media-violators-1726918060
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
விருப்பு வாக்கிற்கு முந்தைய இறுதித் தேர்தல் முடிவுகள் என நினைக்கிறேன்.
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
இஸ்ரேல் - லெபனான்: பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பில் தொடரும் மர்மம் - விடை தெரியாத கேள்விகள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்து சிதறியதில் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பென்னட் பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் லெபனானில் இரண்டு வெவ்வேறு தொடர் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்து சிதறின. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். அத்தகைய நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விவரம் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகிறது. லெபனான், ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஹெஸ்பொலா இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இஸ்ரேல் இதுகுறித்து இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பிபிசி இந்த வழக்கை தைவானில் இருந்து ஜப்பான், ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் மீண்டும் லெபனானில் இருந்து நெருக்கமாக பின்தொடர்கிறது. பேஜர்கள், வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்தது தொடர்பாக நீடிக்கும் விடை தெரியாத கேள்விகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். பேஜர்கள் குறிவைக்கப்பட்டது எப்படி? இந்த சம்பவம் நடந்த பின்னர் ஆரம்பத்தில் எழுந்த சில ஊகங்களில், 'பேஜர்கள் ஒரு சிக்கலான ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் குறிவைக்கப்பட்டிருக்கலாம், இதனால் அவை வெடித்துச் சிதறி இருக்கலாம்' என்றனர். ஆனால் அந்த ஊகம் நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டது. அதிக சேதம் விளைவிப்பதற்காக, பேஜர்கள் ஹெஸ்பொலா கைகளில் சேரும் முன்பே அவற்றில் வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பேஜர்களின் உடைந்த பாகங்களில், `கோல்ட் அப்பல்லோ’ என்ற தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் லோகோவைக் காண முடிகிறது. தைவான் தலைநகர் தைபேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பெரிய வணிக பூங்காவில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. அதன் அலுவலகங்களை பிபிசி பார்வையிட்டது. `கோல்ட் அப்பல்லோ’ நிறுவனர் சூ சிங்-குவாங் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்றதாக கூறினார். இந்த நடவடிக்கைக்கும் அவர்களின் வணிகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பேஜர் வெடிப்பால் ஒரு போன் கடையில் இருந்து வரும் புகை (கோப்புப்படம்) "நீங்கள் லெபனானில் இருந்து வெளியான படங்களைப் பாருங்கள். வெடித்த பேஜர்களில் இது தைவானில் தயாரிக்கப்பட்டது என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை, நாங்கள் அந்த பேஜர்களை தயாரிக்கவில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஐரோப்பாவைச் சேர்ந்த பி.ஏ.சி என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஜர் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக சூ சிங்-குவாங் கூறினார். "எங்களது லோகோவை பயன்படுத்த மட்டுமே அங்கீகாரம் தந்துள்ளோம். மற்றபடி, அந்த பேஜரின் வடிமைப்பிலோ அல்லது தயாரிப்பிலோ எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் கூறினார். கோல்ட் அப்பல்லோ நிறுவனர் குறிப்பிட்ட பி.ஏ.சி. நிறுவனம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் செயல்படுகிறது. பி.ஏ.சி. நிறுவனத்திலிருந்து நடந்த பணப் பரிமாற்றங்கள் "மிகவும் விசித்திரமாக இருந்தன" என்றும் மத்திய கிழக்கிலிருந்து பணம் செலுத்தப்பட்டதால் சிக்கல்கள் இருந்ததாகவும் அவர் கூறினார். ஹங்கேரி நிறுவனத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பி.ஏ.சி. கன்சல்டிங் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திற்கு பிபிசி சென்றது. இந்த முகவரியில் 12 நிறுவனங்கள் இயங்குகின்றன. கட்டடத்தில் உள்ள எந்த நிறுவனமும் பி.ஏ.சி. நிறுவனத்தைப் பற்றி எங்களிடம் எதுவும் கூறவில்லை. இந்த நிறுவனம் முதன்முதலில் 2022 இல் ஹங்கேரியில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிறுவனம் அங்கே உற்பத்தியில் ஈடுபடவில்லை. செயல்பாட்டு தளம் இல்லாத வர்த்தக இடைத்தரகராக மட்டுமே செயல்படுகிறது. லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் வெளியிடப்பட்ட பி.ஏ.சி. க்கான ஒரு தகவல் குறிப்பில், எட்டு நிறுவனங்களுக்காக பணிகளை செய்வதாக கூறி, அந்நிறுவனகங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சிக்கான DfID துறையின் பெயரும் உள்ளது. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,வெடித்துச் சிதறிய பேஜர் (சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது) DfID துறையின் பெயர் இருப்பது குறித்து பிபிசியிடம் பேசிய பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தது. ஆனால் ஆரம்ப உரையாடல்களின் அடிப்படையில், DfID துறைக்கும் பி.ஏ.சி. கன்சல்டிங் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அது கூறியது. பி.ஏ.சி. இன் இணையதளம் அதன் தலைமை நிர்வாகி மற்றும் நிறுவனர் - கிறிஸ்டியானா பார்சோனி-ஆர்சிடியாகோனோ என ஒருவரை குறிப்பிட்டுள்ளது. பார்சோனி-ஆர்சிடியாகோனோவை தொடர்புகொள்ள பிபிசி பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் என்பிசி செய்தி ஊடகத்திடம் பேசியதாக கூறப்படுகிறது: "நான் பேஜர்களை உருவாக்கவில்லை. நான் இடைநிலை வேலைகளை மட்டுமே செய்து வருகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். பி.ஏ.சி நிறுவனத்தின் பின்னணியில் இருப்பது யார்? பிஏசி நிறுவனம் உண்மையில் இஸ்ரேலிய உளவுத்துறையின் கீழ் இயங்குவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. பேஜர்களை உருவாக்கும் பொறுப்பில் இருந்த இஸ்ரேலிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களின் அடையாளத்தை மறைக்க மேலும் இரண்டு ஷெல் நிறுவனங்கள் நிறுவப்பட்டதாக மூன்று இஸ்ரேலிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்த செய்தி கூறுகிறது. பிபிசியால் இந்த தகவல்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை - ஆனால் பி.ஏ.சி. உடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனத்தை பல்கேரிய அதிகாரிகள் இப்போது விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. லெபனானில் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய 1.6 மில்லியன் யூரோ ($1.8m; £1.3m) பணம் பல்கேரியா வழியாக ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டதாக பல்கேரிய ஊடகமான bTV வியாழனன்று தெரிவித்துள்ளது. ரேடியோ சாதனங்கள் குறிவைக்கப்பட்டது எப்படி? இரண்டாவது அலை தாக்குதல்களில் வெடித்த வாக்கி டாக்கிகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகளில் சில ஜப்பானிய நிறுவனமான ICOM தயாரித்த IC-V82 மாடல் என்பது மட்டும் தெரிய வந்தது. ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய காவல்துறை வட்டார அதிகாரி, அந்த சாதனங்கள் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹெஸ்பொலாவால் வாங்கப்பட்டவை என்றார். முன்னதாக, Icom இன் அமெரிக்க துணை நிறுவனத்தில் உள்ள விற்பனை நிர்வாகி அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையிடம், லெபனானில் வெடித்த ரேடியோ சாதனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை. அவை போலியான தயாரிப்புகள் (knockoff product) போலத் தோன்றுவதாகக் கூறினார். ஆன்லைனில் போலி பதிப்புகளை வாங்குவது எளிது என்று கூறினார். ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ள Icom IC-V82s-ஐ பிபிசி சில நொடிகளில் கண்டுபிடித்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 2014 இல், இந்த மாடலின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக ICOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதை இயக்கத் தேவையான பேட்டரிகளின் உற்பத்தியையும் நிறுத்திவிட்டதாகக் கூறியது. வெளிநாட்டில் உற்பத்தியை அவுட்சோர்ஸ் செய்வதில்லை என்று நிறுவனம் கூறியது. அதன் அனைத்து தயாரிப்புகளும் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. வெடித்த வாக்கி-டாக்கிகளின் பேட்டரியைச் சுற்றி ஏற்பட்டுள்ள சேதங்களை பார்க்கும் போது அவற்றில் வெடிமருந்து பொருத்தப்பட்டிருக்கலாம் என்று ஐகாம் இயக்குநர் யோஷிகி எனோமோயோ கூறியதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சாதனங்கள் வெடித்தது எப்படி? சாதனங்கள் வெடிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாக்கெட்டுகளில் இருக்கும் சாதனங்களை தொடுவது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் தெருக்கள், கடைகள் மற்றும் வீடுகளில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஐ.நா.வுக்கு லெபனான் தூதரகம் அனுப்பிய கடிதத்தின்படி, சாதனங்களுக்கு அனுப்பப்பட்ட "மின்னணு செய்திகள்" மூலம் சாதனங்கள் வெடித்தன என்று அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை பார்த்த ராய்ட்டர்ஸ் செய்தி முகமை இதுபற்றி செய்தி வெளியிட்டது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "வெடிப்பதற்கு முன், பேஜர்களுக்கு ஹெஸ்பொலாவின் தலைமையிலிருந்து செய்திகள் வந்தன. அதன் பின்னர் சாதனங்கள் வெடித்துச் சிதறின. அந்த செய்திகள் சாதனத்தை ட்ரிகர் செய்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்கி டாக்கி சாதனங்களுக்கு என்ன வகையான செய்தி அனுப்பப்பட்டது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. மற்ற சாதனங்களிலும் பிரச்னை உள்ளதா? லெபனானில் மக்கள் மத்தியில் எழும் மிகப்பெரிய கேள்வி இது தான். மற்ற சாதனங்கள், கேமராக்கள், தொலைபேசிகள் அல்லது மடிக்கணினிகளிலும் வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கலாம் என்று நினைப்பது வீண் கற்பனை. லெபனான் ராணுவம் பெய்ரூட்டின் தெருக்களில் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டு செயலிழக்கும் ரோபோவைப் பயன்படுத்துகிறது. லெபனானில் உள்ள பிபிசி குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் தொலைபேசிகளையோ கேமராக்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். "எல்லோரும் பீதியில் உள்ளனர். எங்கள் மடிக்கணினிகள், தொலைபேசிகளுக்கு அருகில் இருக்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கிறோம். எல்லா பக்கமும் ஆபத்து இருப்பது போல் தெரிகிறது, என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை" என்று கிடா என்ற பெண் பிபிசியிடம் கூறினார். சாதனங்கள் வெடிக்க என்ன காரணம்? குறிப்பாக, இந்த வாரம் சாதனங்கள் தூண்டப்பட்டு வெடித்தது ஏன் என்பதற்கு பல யூகங்கள் உள்ளன. அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு நாளுக்குப் பிறகு வடக்கு இஸ்ரேல் மீதும் அதைச் சுற்றியும் ஹெஸ்பொலா தாக்குதல்கள் மேற்கொண்டதை தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒரு வருடமாக எல்லை தாண்டிய பகைமை தொடர்கிறது. ஹெஸ்பொலாவுக்கு மோசமான செய்தியை அனுப்ப இஸ்ரேல் இந்தத் தருணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி இல்லையெனில், இஸ்ரேல் இந்த நேரத்தில் அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லாவிட்டாலும், சதித்திட்டம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். அமெரிக்க ஊடக நிறுவனமான ஆக்சியோஸ் கூற்றுப்படி, ஒரு மிகப்பெரிய போரின் தொடக்கமாக, ஹெஸ்பொலா அமைப்பை முற்றிலும் முடக்குவதற்கான ஒரு வழியாக பேஜர் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆனால், ஹெஸ்பொலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதை இஸ்ரேல் அறிந்து கொண்டதால், முன்கூட்டியே தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz7jegrg0z8o
-
திருப்பம் காணும் தமிழரசியல் புரிந்துகொள்ளுமா புதுடில்லி?
Published By: VISHNU 22 SEP, 2024 | 03:37 AM லோகன் பரமசாமி சர்வதேச நாடுகள் மத்தியில் இவ்வருடம் இடம்பெற்று வரும் தேர்தல்களின் பட்டியலில் இலங்கையில் இவ்வாரம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கைத் தேர்தல் அத்தீவின் தென்பகுதியில் வெறும் உதிரி வேட்பாளர்களின் தேர்தல் களமாக பார்க்கப்பட்டிருந்த போதிலும் ஒருதேசமாக தமிழ்பொது வேட்பாளரின் வருகை ஏற்கனவே பிராந்திய அரசியலில் தாக்கத்தை விளைவிக்க ஆரம்பித்துவிட்டது. பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அலகுகளையும் மீண்டுமொரு முறை ‘ஈழத்தமிழர்’ விவகாரத்தில் கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதற்கு முக்கிய ஆரம்பப்புள்ளியாக தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் தமிழ் நாட்டில் பிரபல்யமான சரித்திர முக்கியத்துவம் கொண்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் எதிரொலித்திருந்தமை கவனிக்க தக்தாகும். ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பால் ஒழுங்கு செய்யபட்டிருந்த இப்பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ் நாட்டு மக்களுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் ஒருபொது வேட்பாளரை போட்டியில் நிறுத்தியுள்ளனர் என்பதை அறிமுகம் செய்வதற்கும் அறிவிப்பதற்குமான கூட்டமாக இருந்தது. இலங்கையில் தமிழ் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டமையானது, தேர்தல் விவகாரமாக சில யாழ்பாண ஆய்வாளர்களும் கொழுப்பு ஆய்வாளாகளும் சித்தரிக்க முயலும் அதேவேளை சென்னையில் நடந்த செய்தியாளர் மாநாடு தமிழ் பொதுக் கட்டமைப்பானது அண்மைகால தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பமுனையாக பார்க்கப்படுகிறது. பொதுக்கட்டமைப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்வதற்கும் அப்பால் எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சி என்ற வேறுபாடுகளை கடந்து தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்தும் ஆதரவை வேண்டி நிற்கிறது. 2009ஆம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் வெளியகத் தலையீடுகள் பல தமிழ் மக்களின் தேசக் கட்டுமான நகர்வுகளைச் சிதைக்கும் செயற்பாடுகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன. குறிப்பாக போராடும் தேசிய இனமொன்றின் மீதான வெளியகத் தலையீடு என்பது மொழிப்பிரிவுகள் இனகுழுமப் பிரிவுகள், மதப் பிரிவுகள், வாழும் பிராந்தியங்களுக்கு இடையிலான பிரிவுகள் என்று பலதரப்பட்ட வகையில் அவரவர் உரிமைகளுக்காக பேசுவது போல் பாசாங்கு செய்து தனித்தனி அலகுகளாக பிரித்து விடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் செப்ரெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற சென்னை பத்திரிகையாளர் சந்திப்பானது. அனைவரையும் ஒரு தேசியமாக பார்த்த விவகாரம் கவனிக்க தக்கதாகும். இதற்கு தமிழகம் ஒரு தாய் நிலமாக ஊக்கம் விளைவிக்கும் சக்தியாக திரள வேண்டும் என்ற வேண்டுகோள் அங்கே விடுக்கபட்டது. அத்துடன் தமிழக அரசு நோக்கி விடுக்கப்பட்ட வேண்டுகோளில் இலங்கையில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவகாரங்களை தமிழக அரசு டில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் விவகாரங்களாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன் தமிழக முதலமைச்சர் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களிடையே ஒருபொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. சர்வதேச மன்னிப்பு சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் அனைத்திற்கும் இலங்கையில் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் இனஅழிப்பு விவகாரங்களை எடுத்து கூறக்கூடிய கடிதங்கள் எழுதும்படி தாம் ஏற்கனவே தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறபட்டது. அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் ஏற்பாட்டாளர்களான பெரியார் திராவிடர் கழக செயலர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலர் தோழர் தியாகு ஆகியோருடன் மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இலங்கை வாழ், தமிழ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு கோரி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் முன்முயற்சியில் சட்டசபை தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதனை புதுப்பிக்கும் வகையில் மீண்டுமொரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அந்த அமைப்பின் சார்பில் தோழர் தியாகுவினால் வேண்டுகோளாக முன்வைக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள் மீதான தமிழக மக்களின் சரியான புரிந்துணர்வு இந்திய மத்திய அரசுடனான கையாள்கைக்கு மிகவும் இன்றியமையாததாக தெரிகிறது. தோழர் தியாகு போன்றவர்கள் நடைமுறையிலும் சித்தாந்த ரீதியாகவும் சரியான, தெளிவான சிந்தனைப்போக்குக் கொண்டவாகளாக உள்ளனர். ஆயுதப் போராட்ட கால அணுகுமுறைகள் போல் அல்லாது தெற்காசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியாவை ஒரு கூட்டுச் சக்தியாக அணுகுவது என்பது பொதுக் கட்டமைப்பின் நகர்வில் தெரிகிறது. கடந்த காலங்களில் எத்தகைய அழுத்தங்களை பிரயோகித்த போதிலும். 2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்ட நிலையைக் கொண்டிருந்த போதிலும் தமிழ்த் தரப்பு சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் பிடியிலிருந்து விடுபட்டுவிட வேண்டும் என்ற நோக்கம் இன்னமும் மாறவில்லை. ஆயுதம் தாங்கிய போராட்டக் களத்திலும் சரி தற்போதைய ஜனநாயக போராட்ட களத்திலும் சரி கடந்த பதினைந்து வருடகால தமிழ் மிதவாத, சந்தர்ப்பவாத சக்திகள் வலுவிழந்துள்ள சமகாலத்தில் மீண்டும் பேரினவாத சக்திகளின் பிடியிலிருந்து விடுபட்டு தமது அடையாளங்களை பேண வேண்டும் என்ற அவா தமிழ் மக்களிடம் இன்னமும் மாறவில்லை. இதுவொரு தீர்வைக்காண விளையும் தரப்பிற்கான உருமாற்றமாகவே கருதப்பட வேண்டியுள்ளது என்பதை புதுடில்லி புரிந்து கொள்ளுமா என்பது தான் தற்போதைய கேள்வி. தெற்காசியப் பிராந்தியத்தில் தற்போது இந்திய சார்பு நாடுகள் என்று எதுவுமில்லை, சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கம் அந்தளவிற்கு ஆழ ஊடுருவியுள்ளது. இந்நிலையில் புதுடில்லி தமிழக உறவுகளை வலுவாகக் கொண்ட இலங்கைத்த தமிழ் மக்களை தமது சார்பாளர்களாக உறுதிப்படுத்தி கொள்வது மிக அவசியமானதாகத் தெரிகிறது. இலங்கையில் தமிழர் தரப்பு தமது நிழல் திணைக்களங்களை ஏற்கனவே அமைத்துக் கொள்வதற்குரிய வியூகங்களை கொண்டுள்ளது. பொதுக்கட்டமைப்பில் இனைந்துள்ள துறைசார் அமைப்புகள் 2009காலப்பகுதிக்கு முன்னரான சூழலின் அனுபவம் கொண்ட பாமர மக்களிடமிருந்தான தலைமைத்துவங்களை தன்னகத்தே கொண்டு மீண்டும் உயிர்துள்ள நிறுவன தன்மையை தமிழ் பொதுக் கட்டமைப்பில் காண முடிகிறது. இவ்வாறு மக்கள் மயபடுத்தப்பட்ட துறை சார்ந்த அனுபவஸ்தர்களையும் கல்வியாளர்களையும் புத்திதத்துவ ரீதியாக அணுகவல்ல கொள்கை வகுப்பாளர்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு கட்டமைப்பாக மீண்டும் தம்மை தகவமைத்து கொள்ள முடியும் என்பதை தமிழ் மக்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அந்த வகையில் தமிழர் சார்பு கொள்கை மாற்றம் ஊடாக பிராந்திய அளவில் இந்திய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்காதவொரு தேசமாக உருவாக்கி கொள்ளும் சந்தர்ப்பம் தற்பொழுது புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ளது. அண்மைய பங்களாதேஷ அனுபவத்தின் ஊடாக பார்க்கும் பொழுது தொடர்பாடலின் வளர்ச்சியும் உரிமைகளுக்கான தேவைகளும், தமிழ்த் தரப்பின் இருப்பிற்கான பாதுகாப்பும் மேலைத்தேய சார்பு தன்னார்வ நிறுவனங்களின் தலையீட்டை தவிர்க முடியாது. இவை தமிழக தலைவைர்கள் போல் ஈழத்தேசிய அரசியலுக்கு துணையாகவும் தேசக் கட்டுமானம் குறித்த சிந்தனை கொண்டவைகளாகவும் இருக்கும் என்று எதிர்பார்க முடியாது. பங்களாதேஷ் போல இலங்கைத் தீவை ஒட்டுமொத்தமாக தமது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கவே மேலைதேய அரச சார்பற்ற நிறுவனங்கள் முயலும் பொழுது இனங்களுக்கு இடையில் அரசியல் தீர்வற்ற இலங்கைத் தீவு, ஒரு பவீனமான அரசு கொண்ட நாடாக மேலும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. https://www.virakesari.lk/article/194352
-
தென் ஆபிரிக்காவை சர்வதேச கிரிக்கெட்டில் முதல் தடவையாக வெற்றிகொண்டு வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்
சச்சின், கோலி சாதனைக்கு ஆபத்து; தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை வென்று ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, 106 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க செய்து அபார வெற்றிபெற்றது. முதல்முறையாக ஒயிட்பால் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க செய்து வரலாற்றில் இடம்பிடித்தது ஆப்கானிஸ்தான். அதற்குபிறகு நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். குர்பாஸின் சதத்தால் 311 ஓட்டங்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 73 ஓட்டங்கள் வரை ஒருவிக்கெட்டை கூட இழக்காமல் அபாரமாக விளையாடியது. ஆனால் அதற்குபிறகு பந்துவீச வந்த மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் விக்கெட் வேட்டை நடத்தினார். 73 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா, அடுத்த 61 ஓட்டங்களுக்குள் மீதமிருக்கும் 9 விக்கெட்டையும் இழந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. அபாரமாக பந்துவீசிய ரஷித்கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 20 வயது சுழற்பந்துவீச்சாளரான நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டி மீதமிருக்கையில் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் படைத்த 5 சாதனைகள்.. 1. விராட் கோலியின் சாதனை சமன்: 22 வயதான ரஹ்மனுல்லா குர்பாஸ் 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 23 வயதை எட்டுவதற்குள் அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் (7 சதங்கள்) சாதனையை சமன்செய்துள்ளார் குர்பாஸ். முதலிடத்தில் 8 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் நீடிக்கிறார், நாளை நடைபெறவிருக்கும் 3வது போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்வார் ரஹ்மனுல்லா குர்பாஸ். 2. அதிக ஒருநாள் சதங்கள்: 7வது ஒருநாள் சதத்தை அடித்திருக்கும் குர்பாஸ், அதிக சர்வதேச ஒருநாள் சதங்கள் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். 3. மிகப்பெரிய ஒருநாள் வெற்றி: 311 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்ரிக்காவை 134 ரன்களில் ஆல்அவுட் செய்து 177 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் பெற்ற அதிக ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியாக பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பு 154 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது ஆப்கானிஸ்தான். 4. பிறந்தநாளில் சிறந்த பவுலிங்: நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய ரஷித் கான், பந்துவீச்சில் 9 ஓவருக்கு 19 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான நாளை கொண்டிருந்தார். இதன்மூலம் பிறந்தநாளில் சிறந்த பவுலிங்கை பதிவுசெய்த வீரராக மாறி வரலாறு படைத்தார் ரஷித்கான். 17 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் பிலாண்டர் (4/12) வைத்திருந்த சாதனையை பின்னுக்குதள்ளியுள்ளார் ரஷித் கான். 5. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறை வெற்றி: 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறையாக இதை செய்து சாதனை படைத்துள்ளது. https://thinakkural.lk/article/309749
-
சீனாவின் பொருளாதார வழித்தட திட்டத்திற்கு குறுக்கே நிற்கும் மியான்மர் உள்நாட்டுப் போர்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீன செய்தியாளர் 21 செப்டெம்பர் 2024 "ஒரே கிராமம், இரு நாடுகள்" இப்படித்தான் சீனாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள யின்ஜிங் கிராமம் அறியப்பட்டது. மியான்மருடனான எல்லை "மூங்கில் வேலிகள், சாக்கடைகள் மற்றும் மண் மேடுகள்" கொண்டது என்று பழைய சுற்றுலா பலகை ஒன்று குறிப்பிடுகிறது. பெய்ஜிங் தனது அண்டை நாட்டுடன் கட்டமைக்க முயன்ற எளிதான பொருளாதார உறவின் அடையாளம் இது. ஆனால் இப்போது, பிபிசி பார்வையிட்ட எல்லை யுனான் மாகாணத்தின் ருய்லி மாவட்டத்தில் உயர்ந்த உலோக வேலியால் குறிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த வேலி நெல் வயல்களை ஊடுருவி, ஒருகாலத்தில் இணைந்திருந்த தெருக்களைப் பிரிக்கிறது. சீனாவின் கடுமையான பெருந்தொற்று ஊரடங்கு முதலில் இந்தப் பிரிவினையைக் கட்டாயமாக்கியது. ஆனால் 2021இல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் தூண்டப்பட்ட மியான்மரின் தீர்க்க முடியாத உள்நாட்டுப் போரால் இது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சி இப்போது நாட்டின் பெரும் பகுதிகளில், குறிப்பாக சீன எல்லையோரமாக உள்ள ஷான் மாகாணத்தில் கட்டுப்பாட்டுக்காக போராடி வருகிறது. இங்குதான் அது தனது மிகப்பெரிய இழப்புகளில் சிலவற்றைச் சந்தித்துள்ளது. பட மூலாதாரம்,XIQING WANG/BBC தனது எல்லைக்கு அருகே, ஏறக்குறைய 2,000 கி.மீ. நீளமுள்ள எல்லைப் பகுதியில் இருக்கும் இந்த நெருக்கடி, சீனாவுக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. மியான்மரில் ஒரு முக்கியமான வர்த்தக வழித்தடத்திற்காக லட்சக்கணக்கான டாலர்களை சீனா முதலீடு செய்துள்ளது. இந்த மூலோபாய திட்டம் சீனாவின் நிலம் சூழ்ந்த தென்மேற்குப் பகுதியை மியான்மர் வழியாக இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் இலக்கை கொண்டது. ஆனால் இந்த வழித்தடம் இப்போது மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையிலான போர்க்களமாக மாறியுள்ளது. பெய்ஜிங்கிற்கு இரு தரப்பினர் மீதும் செல்வாக்கு உள்ளது, ஆனால் ஜனவரியில் சீனா ஏற்படுத்திய போர் நிறுத்தம் சிதைந்துவிட்டது. இப்போது எல்லையோர ராணுவப் பயிற்சிகள் மற்றும் கடுமையான எச்சரிக்கைகள் என சீனா இந்த விவகாரத்தை அணுகி வருகிறது. சமீபத்தில் மியான்மரின் தலைநகர் நேபிடாவிற்கு வருகை தந்த வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாட்டின் ஆட்சியாளர் மின் ஆங் லைங்கிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிக்கலான பின்னணி வறுமையில் வாடும் ஷான் மாகாணத்துக்கு மோதல்கள் புதிதல்ல. மியான்மரின் மிகப் பெரிய மாநிலமான இது அபின் மற்றும் மெத்தாம்பெட்டமின் உற்பத்தியில் உலகின் பெரும் மூலமாக உள்ளது. மேலும் மத்திய ஆட்சிக்கு நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் உள்ளூர் இனக்குழுக்களின் ராணுவங்களுக்கான இருப்பிடமாகவும் உள்ளது. ஆனால் சீன முதலீட்டால் உருவாக்கப்பட்ட பொருளாதார மண்டலங்கள் உள்நாட்டுப் போர் தொடங்கும் வரை இயங்கி வந்தன. இப்போது ருய்லியில் ஒரு ஒலிபெருக்கி, வேலிக்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கிறது. ஆனால் அதுவொரு சீன சுற்றுலாப் பயணியை நுழைவாயிலின் கம்பிகளுக்கு இடையே கையை நுழைத்து செல்ஃபி எடுப்பதைத் தடுக்கவில்லை. "தாத்தா, இங்கே பாருங்கள்!" என்று டிஸ்னி டி-ஷர்ட் அணிந்த இரண்டு சிறுமிகள் கம்பிகளுக்கு இடையே கத்துகின்றனர். அவர்கள் இளஞ்சிவப்பு நிற ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் வெறுங்காலுடன் நடந்து செல்லும் வயதான மனிதர் சற்றுகூடப் பார்க்காமல் திரும்பிச் செல்கிறார். வாழ்வாதாரம் பாதிப்பு பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, வாழ்க்கை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற கேள்வியுடன் சீன மியான்மர் எல்லையில் வியாபாரம் நடத்தி வருகிறார் லி. "பர்மிய மக்கள் நாய்களைப் போல வாழ்கின்றனர்," என்கிறார் லி மியான்ஷென். ருய்லி நகரில் எல்லை சோதனைச் சாவடிக்கு சில அடி தூரத்திலுள்ள ஒரு சிறிய சந்தையில் அவரது கடை உள்ளது. அங்கு அவர் மியான்மரின் உணவு மற்றும் பானங்களை - பால், தேநீர் போன்றவற்றை – விற்று வருகிறார். சுமார் 60 வயதுக்கு மேற்பட்டவராகத் தெரியும் லி, முன்பு சீனாவுடனான வர்த்தகத்தின் முக்கிய ஆதாரமான மூசேயில் (Muse) எல்லைக்கு அப்பால் சீன ஆடைகளை விற்று வந்தார். ஆனால் இப்போது தனது ஊரில் யாருக்கும் போதுமான பணம் இல்லை என்கிறார் அவர். மியான்மரின் ராணுவ சர்வாதிகாரம் இன்னும் அந்த நகரத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஷான் மாநிலத்தில் அதன் கடைசி கோட்டைகளில் இதுவும் ஒன்று. ஆனால் கிளர்ச்சிப் படைகள் மற்ற எல்லை கடவுப் பாதைகளையும், மூசேக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மண்டலத்தையும் கைப்பற்றியுள்ளன. இந்தச் சூழ்நிலை மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது என்கிறார் லி. அவர் அறிந்த சிலர், 10 யுவான் (ஏறக்குறைய ஒரு பவுண்ட் மற்றும் ஒரு டாலருக்கும் சற்று அதிகம்) சம்பாதிக்க எல்லையைக் கடந்து சென்று, பின்னர் மியான்மருக்கு திரும்புகின்றனர் என்றார். மியான்மருக்கு உள்ளேயும் வெளியேயுமான போக்குவரத்தை போர் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இப்போது பெரும்பாலான தகவல்கள் தப்பியோடியவர்களிடம் இருந்தோ அல்லது லி போன்று எல்லைகளைக் கடக்கும் வழிகளைக் கண்டறிந்தவர்களிடம் இருந்தோ வருகின்றன. சீனாவிற்குள் நுழையத் தேவைப்படும் வேலை அனுமதிப் பத்திரங்களைப் பெற முடியாமல், லியின் குடும்பத்தினர் மண்டலேயில் சிக்கித் தவிக்கின்றனர். கிளர்ச்சிப் படைகள் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரத்தை நெருங்கி வருகின்றனர். "நான் கவலையால் இறந்து கொண்டிருப்பது போல் உணர்கிறேன்," என்கிறார் லி. "இந்தப் போர் எங்களுக்கு மிகுந்த துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இவை எல்லாம் எப்போது முடிவுக்கு வரும்?" தப்பியோடியவர்களின் நிலை பட மூலாதாரம்,XIQING WANG/BBC அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒருவர், 31 வயதான ஜின் அவுங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ருய்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் பணிபுரிகிறார். அங்கு உலகெங்கிலும் அனுப்பப்படும் ஆடைகள், மின்னணு பொருட்கள் மற்றும் வாகனப் பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவரைப் போன்ற தொழிலாளர்கள், மலிவான உழைப்பைத் தேடும் சீன அரசு ஆதரவு நிறுவனங்களால் பெரும் எண்ணிக்கையில் மியான்மரில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகின்றனர். இவர்கள் மாதம் சுமார் 2,400 யுவான் ($450; £340) சம்பாதிக்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது, இது அவர்களின் சீன சக ஊழியர்களின் சம்பளத்தைவிடக் குறைவாகும். "போரின் காரணமாக மியான்மரில் எங்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை," என்கிறார் ஜின் அவுங். "அரிசி, சமையல் எண்ணெய் என எல்லாம் விலை உயர்ந்துவிட்டது. எங்கும் தீவிர போர் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் ஓட வேண்டியிருக்கிறது." அவரது பெற்றோர் மிகவும் வயதானவர்கள், ஓட முடியாது. எனவே அவர் ஓடினார். அவர் முடிந்தபோதெல்லாம் வீட்டிற்குப் பணம் அனுப்புகிறார். பட மூலாதாரம்,XIQING WANG/BBC ருய்லியில் உள்ள அரசு நிர்வகிக்கும் வளாகத்தின் சில சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஆண்கள் வாழ்ந்து வேலை செய்கின்றனர். அவர்கள் விட்டு வந்த சூழலுடன் ஒப்பிடுகையில் இது ஒரு ‘சரணாலயம்’ என்கிறார் ஜின் அவுங்: "மியான்மரில் நிலைமை நன்றாக இல்லை, எனவே நாங்கள் இங்கு அடைக்கலம் புகுந்துள்ளோம்." அவர் கட்டாய ராணுவ சேவையிலிருந்து தப்பித்து வந்துள்ளார். இதை மியான்மர் ராணுவம் பாதுகாப்புப் படைகளில் ருந்து ஏற்பட்ட விலகல்கள் மற்றும் போர்க்கள இழப்புகளை ஈடுகட்ட அமல்படுத்தி வருகிறது. மாலை வானம் சிவப்பாக மாறியபோது, ஜின் அவுங் வெறுங்காலுடன் ஒட்டும் சேற்றின் வழியே மழைக்காலத்து மைதானத்திற்கு வேறொரு வகையான போருக்குத் தயாராக ஓடினார். அது, கடுமையாக விளையாடப்படும் கால்பந்து ஆட்டம். பர்மிய, சீன மற்றும் உள்ளூர் யுனான் மொழி கலந்த உரையாடல்கள் பார்வையாளர்களிடையே கேட்டன. ஒவ்வொரு பாஸ், கிக் மற்றும் ஷாட்டுக்கும் உணர்ச்சிபூர்வமாக அவர்கள் எதிர்வினையாற்றினர். தவறவிடப்பட்ட ஒரு கோலின் வேதனை தெளிவாகத் தெரிந்தது. தொழிற்சாலை உற்பத்தி வரிசையில் 12 மணிநேர ஷிப்டுக்கு பிறகு, இது அவர்களின் புதிய, தற்காலிக வீட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு. பல தொழிலாளர்கள் ஷான் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான லாஷியோ மற்றும் சர்வாதிகார ஆதரவு குற்றக் குடும்பங்களின் இருப்பிடமான லௌக்கைங் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். லௌக்கைங், ஜனவரியில் கிளர்ச்சிப் படைகளிடம் வீழ்ந்தது, லாஷியோ சூழப்பட்டது, இந்தப் பிரசாரம் போரின் போக்கையும் அதில் சீனாவின் பங்கையும் மாற்றியது. பெய்ஜிங்கின் இக்கட்டான நிலை பட மூலாதாரம்,XIQING WANG/BBC இரு நகரங்களும் சீனாவின் மதிப்புமிக்க வர்த்தகப் பாதையில் அமைந்துள்ளன. பெய்ஜிங் ஏற்பாடு செய்த போர்நிறுத்தம் லாஷியோவை ஆட்சிக் குழுவின் கைகளில் விட்டது. ஆனால் சமீப வாரங்களில் கிளர்ச்சிப் படைகள் அந்த நகரத்திற்குள் நுழைந்துள்ளன. அவர்கள் இதுவரை பெற்றதிலேயே மிகப்பெரிய வெற்றி இது. ராணுவம் குண்டுவீச்சு மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுடன் பதிலடி தந்தது. இணையம் மற்றும் மொபைல் போன் நெட்வொர்க்குகளை கட்டுப்படுத்தியது. "லாஷியோவின் வீழ்ச்சி ராணுவத்தின் வரலாற்றில் மிகவும் அவமானகரமான தோல்விகளில் ஒன்று," என்கிறார் சர்வதேச நெருக்கடி குழுவின் மியான்மர் ஆலோசகர் ரிச்சர்ட் ஹோர்சி. "கிளர்ச்சிக் குழுக்கள் மூசேவுக்குள் நுழைய முயலவில்லை என்பதற்கான ஒரே காரணம், அது சீனாவை சங்கடப்படுத்தும் என்று அவர்கள் அஞ்சியிருக்கலாம்," என்கிறார் ஹோர்சி. "அங்கு போர் நடந்திருந்தால், சீனா பல மாதங்களாக மீண்டும் தொடங்கும் என நம்பியிருந்த முதலீடுகளைப் பாதித்திருக்கும். ஆட்சி குழு, ருயிலிக்கு அருகிலுள்ள மூசே பிராந்தியம் தவிர வடக்கு ஷான் மாகாணாத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் இழந்துவிட்டது." ருயிலி மற்றும் மூசே, இரண்டும் சிறப்பு வர்த்தக மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங் நிதியளித்த 1,700 கிமீ வர்த்தகப் பாதைக்கு இவை முக்கியமானவை. இது சீன-மியான்மர் பொருளாதார வழித்தடம் என்று அறியப்படுகிறது. இந்தப் பாதை ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கு முக்கியமான பூமியில் அரிதாகக் கிடைக்கும் கனிமங்களின் சுரங்கத் தொழிலில் சீன முதலீடுகளுக்கு உதவியாக இருக்கும். ஆனால் இதன் மையத்தில் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கை மியான்மரின் மேற்குக் கடற்கரையில் சீனர்கள் கட்டி வரும் ஆழ்கடல் துறைமுகமான கியோக்பியூவுடன் இணைக்கும் ரயில் பாதை உள்ளது. வங்காள விரிகுடா அருகே உள்ள இந்தத் துறைமுகம், ருயிலி மற்றும் அதற்கு அப்பாற்பட்டுள்ள தொழிலற்சாலைகளுக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான பாதையை வழங்கும். இந்தத் துறைமுகம், மியான்மர் வழியாக யுனானுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்களின் தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது. ஆனால், இந்தத் திட்டங்கள் இப்போது ஆபத்தில் உள்ளன. பட மூலாதாரம்,XIQING WANG/BBC மியான்மரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி பதவியில் இருந்து அகற்றப்பட்டபோது, சீன அதிபர் ஷி ஜின்பிங் வளம் நிறைந்த அண்டை நாட்டுடனான உறவுகளை வளர்ப்பதில் பல ஆண்டுகளைச் செலவிட்டிருந்தார். ஆட்சிக் கவிழ்ப்பை கண்டிக்க ஷி ஜின்பிங் மறுத்து, ராணுவத்திற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதைத் தொடர்ந்தார். ஆனால் அவர் மின் ஆங் ஹ்லைங்கை அரசுத் தலைவராக அங்கீகரிக்கவில்லை, அவரை சீனாவிற்கு அழைக்கவுமில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, போர் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, லட்சக்கணக்கானோரை இடம்பெயரச் செய்துள்ளது. ஆனால் முடிவு எதுவும் தெரியவில்லை. புதிய முனைகளில் போரிட கட்டாயப்படுத்தப்பட்ட ராணுவம், அதன் மியான்மரின் பாதி முதல் மூன்றில் இரண்டு பங்கு வரையிலான பகுதிகளை எதிர்ப்பு சக்திகளுக்கு இழந்துள்ளது. பெய்ஜிங் ஒரு முட்டுச்சந்தில் உள்ளது. அது "இந்தச் சூழ்நிலையை விரும்பவில்லை", மியான்மரின் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங்கை "திறமையற்றவர்" என்று கருதுவதாக ஹோர்சி சுட்டிக் காட்டுகிறார். "அவர்கள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர்கள் ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று நினைப்பதால் அல்ல, இதை ஒரு மாற்று வழி என்று கருதுவதால்" என்கிறார். இரட்டை வேடம் போடுகிறதா சீனா? படக்குறிப்பு,சீனா - மியான்மர் இடையே திட்டமிடப்பட்ட பொருளாதார வழித்தடம் பெய்ஜிங் இரு தரப்பிலும் விளையாடுவதாக மியான்மரின் ஆட்சி சந்தேகப்படுகிறது. ஆட்சிக்குழுவை ஆதரிப்பதாகத் தோற்றத்தை உருவாக்கி, ஷான் மாநிலத்தில் உள்ள இன ராணுவங்களுடனும் தொடர்ந்து உறவைப் பேணி வருகிறது. பல கிளர்ச்சிக் குழுக்கள் சீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சமீபத்திய போர்கள்கூட, கடந்த ஆண்டு மூன்று இன குழுக்களால் தொடங்கப்பட்ட தீவிர பிரசாரத்தின் விளைவாகும். அவை தங்களை சகோதரத்துவ கூட்டணி என்று அழைத்துக் கொண்டன. பெய்ஜிங்கின் மறைமுக ஒப்புதல் இல்லாமல் இந்தக் கூட்டணி இந்த நடவடிக்கையை எடுத்திருக்காது என்று கருதப்படுகிறது. போர்க்களத்தில் அவர்களின் வெற்றிகள் ஆயிரக்கணக்கான சீன தொழிலாளர்களைச் சிக்க வைத்திருந்த, மாஃபியா குடும்பங்களால் நடத்தப்பட்டு வந்த மோசடி மையங்களை முடிவுக்குக் கொண்டு வந்தன. தனது எல்லையில் அதிகரித்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகளால் நீண்ட காலமாக எரிச்சலடைந்து வந்த சீனா, அவர்களின் முடிவை வரவேற்றது. சந்தேகத்துக்கு இடமான பத்தாயிரக்கணக்கானவர்கள் கிளர்ச்சிப் படைகளால் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெய்ஜிங்கை பொறுத்தவரை மோசமான சூழ்நிலை என்பது உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாக நீடிப்பதாகும். ஆனால் ராணுவ ஆட்சி வீழ்வதும் சீனாவுக்கு கவலையைக் கொடுக்கும். அது மேலும் குழப்பத்தை உண்டாக்கும். இரண்டு சூழ்நிலைகளிலும் சீனா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இரு தரப்பினரையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதைத் தவிர பெய்ஜிங் இன்னும் என்ன செய்ய முடியும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் பட மூலாதாரம்,XIQING WANG/BBC பல கிலோமீட்டர் தொலைவுக்கு, ருயிலியில் கடைகள் மூடப்பட்டிருப்பது இந்த இக்கட்டான நிலையைத் தெளிவாக விளக்குகிறது. எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் ஒரு காலத்தில் பயனடைந்த நகரம் இப்போது மியான்மருக்கு அருகில் இருப்பதன் விளைவுகளை அனுபவித்து வருகிறது. சீனாவின் மிகக் கடுமையான ஊரடங்குகளால் பாதிக்கப்பட்ட வணிகங்கள், எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மீண்டெழாததால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன. அவை எல்லையின் மறுபக்கத்தில் இருந்து வரும் தொழிலாளர்களையும் நம்பியுள்ளன. அவர்கள் தற்போது வருவதில்லை என்று பர்மிய தொழிலாளர்களுக்கு வேலை தேடித் தரும் பல முகவர்கள் கூறுகின்றனர். எல்லைக்கு அப்பால் இருந்து தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான கட்டுப்பாடுகளை சீனா இறுக்கியுள்ளதாகவும், சட்டவிரோதமாக பணிபுரிந்ததாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கானோரை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஒரு சிறிய தொழிற்சாலையின் உரிமையாளர், தனது பெயரை வெளியிட விரும்பாமல், பிபிசியிடம் கூறுகையில், நாடு கடத்தல்கள் காரணமாக "எனது வியாபாரம் முற்றிலும் படுத்துவிட்டது. நான் எதையும் மாற்ற முடியாது" என்றார். சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள இடத்தில் குழந்தைகளுடன் கூடிய தாய்மார்கள் உட்பட இளம் தொழிலாளர்கள் பலர் கூடி நிற்கின்றனர். வேலை பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை அவர்கள் விரித்து வைத்து, காத்துக் கிடக்கின்றனர். உரிய ஆவணங்கள் இருப்பவர்களுக்கு ஒரு வாரம் வரை பணிபுரிய அனுமதிக்கும் அல்லது லி போல இரு நாடுகளுக்கும் இடையே வந்து செல்ல அனுமதிக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. "எல்லா தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு சில நல்ல மனிதர்கள் சொல்ல முடியும் என்று நம்புகிறேன். உலகில் எங்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை என்றால், அது மிகவும் சோகமானது," என்கிறார் லி. சீனாவுக்கு மிக அருகில் போர் வெடிக்காது என்று தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அடிக்கடி உறுதியளிப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அவர் அதை நம்பவில்லை: "எதிர்காலத்தை யாரும் கணிக்க முடியாது." இப்போதைக்கு, ருயிலி அவருக்கும் ஜின் ஆங்கிற்கும் பாதுகாப்பான இடமாக உள்ளது. சீனர்களின் கைகளில் தங்கள் எதிர்காலம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், சீனர்களும் அதைப் புரிந்துகொள்கிறார்கள். "உங்கள் நாட்டில் போர் நடக்கிறது. நான் கொடுப்பதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்," என்று சந்தையில் ஒரு மியான்மர் பச்சைக்கல் விற்பனையாளரிடம் பேரம் பேசும் ஒரு சீன சுற்றுலாப் பயணி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25p5w6xxqo
-
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா இராஜினாமா
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நாட்டின் சாத்தியக்கூறுகளால் தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309755
-
அரியநேத்திரனுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை மக்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்; ஜனநாயக போராளிகள் கட்சி
தமிழ் தேசியத்திற்காக ஓரணியில் திரள வேண்டும் என்பதை மக்கள் புகட்டியுள்ளனர் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான க. துளசி தெரிவித்தார். தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைத்த வாக்கு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை பறைசாற்றுவதோடு தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை ஜனாதிபதியாக தெரிவு செய்கின்றவர் வழங்க வேண்டும் என்பதை கூறுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி வெற்றி அளித்திருக்கின்றது. தமிழ் தேசிய வெற்றிக்காக ஒன்றுதிரள வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்கு தமிழ் மக்கள் ஒரு குறுகிய நாளில் ஒன்று திரண்டு சங்கு சின்னத்துக்கு வாக்களித்ததன் மூலமாக தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை அவர்கள் வலியுறுத்துகின்றார்கள். மக்கள் சங்கிற்கு பெருவாரியாக வாக்களித்ததன் மூலம் தமிழ் அரசியல் களத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை இடித்துரைத்துள்ளனர். ஒற்றுமையாக தேசியத்திற்காக செயற்படும்போது போராளிகள் ஆகிய நாங்களும் இங்கு இருந்தும் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் அவர்களுக்கான ஆதரவை வழங்கி வெற்றிக்காக உழைப்போம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்களிலும் அனைத்து தேர்தல்களிலும் இதே கூட்டணி ஒன்றுபட்டு செயல்படும். இதேபோல் தமிழ் தேசியத்தை சிதைவடையச் செய்து வெளியேறியவர்களும் ஒன்றாகி மீளவும் பலமான ஒரு கட்டமைப்பை உருவாக்கி எங்கள் தேசியத்தை வெளிப்படுத்த வேண்டும். சிங்கள தேசம் அப்போதெல்லாம் சிங்கள தேசியத்தை பெருவாரியாக வெளிப்படுத்தி இருக்கின்றதோ அப்போதெல்லாம் தமிழ் தேசியமும் பலம் அடைந்து உச்சம் பெற்று இருக்கின்றது. இந்த நிலையில் புதிய ஜனாதிபதிக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தமிழ் தேசிய இனத்தினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் கோரி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309737
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை - அமிதாப் முதல் ரஜினி, விஜய் வரை நட்சத்திரங்கள் அமைதி காப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெண் கலைஞர்கள் ஆதரவு அளித்து வரும் வேலையில் பிரபல ஆண் நடிகர்கள் பலரும் மௌனமாக இருந்து வருகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவில் வெளியிடப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொழுதுபோக்கு துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கையில் மலையாள திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மற்ற பெண் கலைஞர்கள் அரவணைப்பையும் ஆதரவையும் வழங்க, இந்திய திரைத்துறையில் உள்ள சூப்பர்ஸ்டார்கள் இந்த விவகாரத்தில் மௌனமாக இருந்து வருகின்றனர். மலையாள திரைத்துறையில் பணியாற்றிய 51 பெண் கலைஞர்களின் அனுபவங்களுடன், பல ஆண்டு காலமாக பெண்கள் எதிர்கொண்டு வரும் பாலியல் சுரண்டலை வெளிச்சப்படுத்தியுள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை. "கேட்கப்படும் நேரத்தில் பாலுறவுக்கு பெண்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வேலை வேண்டும் பட்சத்தில் தொடர் 'சமரசத்திற்கு' தயாராக இருக்க வேண்டும் என்றும் பெண் கலைஞர்களிடம் கூறப்பட்டது" என்று அந்த அறிக்கை கூறுகிறது. முன்வந்து பேசும் பாதிக்கப்பட்ட பெண்கள் 2017-ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து வுமென் இன் சினிமா கலெக்டிவ் (WCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கினார்கள். WCC-ன் வேண்டுகோளுக்கு இணங்க கேரள அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தது. மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடையாளம் காணவும் அவர்களுக்கு நீதி வழங்கவும் இந்த குழு அமைக்கப்பட்டது. பிரச்னைகள் குறித்து பேசிய பெண்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டு 290 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கடந்த மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 19-ஆம் தேதி அன்று இந்த அறிக்கை வெளியான பிறகு, பல பெண்கள் தாங்கள் மலையாள சினிமாவில் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை தாமாக முன்வந்து பகிர்ந்து கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்குகளை விசாரிக்க கேரள அரசு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இது மட்டுமின்றி, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவகாரங்களையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மலையாள சினிமா மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட இந்திய சினிமாவில் உள்ள பெண்கள் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வதாக தொடர்ச்சியாக புகார்களை முன்வைத்து வருகின்றனர். படங்களில் வாய்ப்பு கிடைக்க பாலியல் ரீதியான சமரசங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தங்கள் எழுவதை முக்கிய சவாலாக அவர்கள் தெரிவிக்கின்றனர். திரை விமர்சகரும் எழுத்தாளருமான சுப்ரா குப்தா பிபிசியிடம் பேசிய போது, "இந்த போக்கு இந்திய சினிமாவில் வேரூன்றி இருக்கிறது. இது போன்ற பிரச்னையை எதிர்கொள்ளாத ஒரு நடிகையும் இந்த துறையில் இல்லை," என்று கூறுகிறார். யாரேனும் புகார் அளிக்க நினைத்தால், அந்த விசாரணை பல ஆண்டுகளாக நீடிக்கும் என்று கூறினார். WCC-யின் உறுப்பினரான தீதி தாமோதரன் பிபிசியிடம் பேசிய போது, "இந்த போக்கு தலைப்பு செய்திகள் ஆனது. தொலைக்காட்சியில் விவாத பொருளானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது," என்று கூறினார். இது போன்ற இன்னல்களை சந்தித்ததன் காரணத்தினால், எவ்வாறு சினிமா துறையில் இருந்து வெளியேறினோம் என்று தற்போது பல பெண்களும் முன்வந்து பேசுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை நிரூபிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை. சமூக வலைதளங்களில் அவர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசப்பட்டாலும் கூட, அவர்கள் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்கள் வுமென் இன் சினிமா கலெக்டிவ் (WCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கினார்கள் அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திய அறிக்கை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியீடு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருக்கும் திரைத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரைத்துறையில் நடக்கும் விவகாரங்கள் குறித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெலுங்கானா அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கானா அரசு தெலுங்கு திரையுலகில் நிலவும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பணிச்சூழல் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அறிவித்தது. அதன் அறிக்கையை அந்த குழு 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி அரசிடம் சமர்பித்தது. அதனை தெலுங்கானா அரசு இதுவரை வெளியிடவில்லை. 2018ம் ஆண்டு, அறிமுக நடிகையான ஶ்ரீ ரெட்டி பெண்களுக்கு திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க பொது இடத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கு வங்க அரசும் இதுபோன்று ஒரு குழுவை அமைத்துள்ளது என்று கூறுகிறார் நடிகை ரீதாபாரி சக்கரவர்த்தி. திரைத்துறையை மோசமான ஆண்களின் பிடியில் இருந்து இந்த குழு விடுவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2008ம் ஆண்டு நடிகை தனுஶ்ரீ தத்தா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார் வெளிச்சத்திற்கு வந்த மலையாள சினிமாவின் அவலம் தமிழ், கன்னட திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தந்த மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பிரபல தமிழ் நடிகையான ராதிகா சரத்குமார் பிபிசியிடம் பேசிய போது, "ஹேமா கமிட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது ஆண்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தற்போது சினிமாத்துறையில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்," என்று குறிப்பிட்டார். WCC-யின் உறுப்பினரான தீதி தாமோதரன் இது குறித்து பேசும் போது, சினிமாத்துறையில் உள்ள ஆண்களிடம் இருந்து எந்தவிதமான ஆதரவும் இதுவரை கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார். மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி இருவரும் இந்த அறிக்கையை வரவேற்று உள்ளனர். ஆனால் குற்றச்சாட்டுகள் மீதான நடவடிக்கைகள் சினிமாத்துறைக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறியதாக தெரியவருகிறது. தீதி பிபிசியிடம் பேசும் போது, "இந்த நடிகர்களை நாம் அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றோம். ஆனால் இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக மாறி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்," என்று கூறினார். தமிழ் நடிகர்களும் அரசியல் தலைவர்களுமான கமல் ஹாசன் மற்றும் விஜய் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளிவந்து 10 நாட்கள் ஆன பிறகு பேசிய போதும் கூட, "அதுகுறித்து எனக்கு தெரியாது" என்று கூறியது பெரும் விமர்சனத்திற்கு வழிவகை செய்தது. ராதிகா மேற்கொண்டு பேசும் போது, "நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தனிப்பட்ட வாழ்க்கையில் சீண்டல்களை எதிர்கொண்டு வருகிறோம். ஆண்கள் இதனை ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கும் நடக்கின்ற நிகழ்வுகளுக்கும் தொடர்பில்லை என்று ஒதுக்கிவிடுகிறார்களா? அனைத்து நேரங்களிலும் பெண்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? இது மிகவும் மோசம்," என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலையாள சூப்பர் ஸ்டார்கள் இந்த அறிக்கையை வரவேற்றாலும் இது கலைத்துறையை பாதிக்கும் என்று கருத்து கூறியுள்ளனர் அமைதி காக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இது குறித்து அமைதியாக இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுப்ரா இது குறித்து பேசும் போது,"அமைதி காப்பது மிகவும் மோசமானது. ஆனால் இது தான் நடக்கும் என்று எதிர்பார்த்தது தான். அவர்கள் இந்த விவகாரத்தில் ஏதேனும் பேசியிருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். ஏன் என்றால் 2008ம் ஆண்டு நடிகை தனுஶ்ரீ தத்தா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார். பாலிவுட்டில் மீடூ இயக்கம் ஆரம்பித்த பிறகு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் அதன் பின்னர் நடந்தது என்ன என்பது நமக்கு தெரியும்," என்றார். பட மூலாதாரம்,KERALA CHIEF MINISTER'S OFFICE படக்குறிப்பு, ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அறிவித்தது கேரள அரசு "பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சிறிது காலம் கழித்து அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட நடிகர்களும் எதுவுமே நடக்காதது போன்று திரைத்துறையில் மீண்டும் நடிக்க வந்துவிட்டனர். ஆனால் குற்றம் சாட்டிய நடிகைகளுக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை," என்று கூறினார். "இதுவரை பாலிவுட்டில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து எந்த ஒரு முன்னணி நடிகையும் பேசவில்லை. நடிகை தனுஶ்ரீ தத்தா இதுபோன்ற அறிக்கையால் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை தேவையற்றது என்றும் கூறினார்," என்றும் மேற்கோள் காட்டினார் சுப்ரா. "இதைப் பற்றி பேசி கஷ்டப்படுவதை விட, இதில் விழுந்துவிடாமல் இருப்பது நல்லது என்று திரைத்துறையினர் நினைக்கின்றனர். இந்த துறையில் வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் இருக்கலாம்," என்றும் குறிப்பிடுகிறார் சுப்ரா. "சகிப்புத்தன்மை குறித்து பேசிய ஆமீர் கான், ஷாருக் கான் நிலை என்ன ஆனது என்று யோசியுங்கள். தீவிரமான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது," என்றும் கூறினார் சுப்ரா. அறிக்கையால் ஏற்பட உள்ள மாற்றம் குறித்து WCC-யின் உறுப்பினரான தீதி தாமோதரன் நம்பிக்கையுடன் இருக்கிறார். "இது நம்பிக்கை அளிக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் சினிமாத் துறையில் பாலின பாகுபாடு வேரூன்றி கிடக்கிறது. ஆனால் இனியும் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை பணியிடங்களில் எதிர்கொள்வதை சகித்துக் கொள்ள இயலாது. இதனை மாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறோம் என்றும்," கூறினார் தீதி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07nk4l2le5o
-
ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
யாழ் தேர்தல் மாவட்டத்தில் 25,353 வாக்குகள் நிராகரிப்பு யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளாக 3 இலட்சத்து 97 ஆயிரத்து 41வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், 25 ஆயிரத்து 353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 688 செல்லுபடியான வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களான சஜித் பிரேமதாச பிரேமதாச 1 இலட்சத்து 21 ஆயிரத்து 177 வாக்குகளும் , பா.அரியநேந்திரன் 1 இலட்சத்து 16 ஆயிரத்து 688 வாக்குகளும் ரணில் விக்ரமசிங்க 84 ஆயிரத்து 558 வாக்குகளும் அநுரகுமார திஸாநாயக்க 27 ஆயிரத்து 086 வாக்குகளையும் பெற்றனர். அதேவேளை, ஏனைய வேட்பாளர்கள் மொத்தமாக 22 ஆயிரத்து 179 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309752
-
ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க
தேர்தல் தோல்வியின் எதிரொலி - மனைவியுடன் வெளியேறிய ரணில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தனது பாரியார் சகிதம் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரும், அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வாசஸ்தலமான கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வெற்றி பெறும் வேட்பாளரிடம் அதிகாரத்தை சுமூகமாக கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி செயலாளருக்கு ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட கோவைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://ibctamil.com/article/ranil-wickremesinghe-leaves-official-residence-1726994260
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
விருப்ப வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்? இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் அதிக வாக்குகளைப் பெற்று, முதலிரு இடங்களில் பிடித்துள்ளனர். இனி, அனுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதாவது, மற்ற வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகளில் அதாவது அந்த வாக்குச் சீட்டுகளில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச இரண்டாவது முன்னுரிமை பெற்றுள்ளனரா என்பது சரிபார்க்கப்படும். அநுர குமார திஸநாயக்கவுக்கு இரண்டாவது முன்னுரிமை அளிக்கப்பட்டால், அநுர குமார திஸநாயக்க பெற்ற வாக்குகளுடன் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படும். சஜித் பிரேமதாசவுக்கு இரண்டாவது முன்னுரிமை என்றால், சஜித் பிரேமதாச பெற்ற வாக்கு எண்ணிக்கையில் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படும். மற்ற வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குச் சீட்டில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச இரண்டாவது முன்னுரிமையைப் பெறவில்லை என்றால், அந்த வாக்குச் சீட்டுகளில் இருக்கும் மூன்றாவது முன்னுரிமை பரிசீலிக்கப்படும். அதேபோல, அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச மூன்றாம் முன்னுரிமையைப் பெற்றிருந்தால், அவை அந்தந்த வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையோடு சேர்க்கப்படும். அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாசவுக்கு கூடுதல் விருப்பத் தேர்வுகள் இல்லை என்றால், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். சமநிலை ஏற்பட்டால், வெற்றியாளரைத் தேர்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
2.30 வரையான தேர்தல் முடிவுகள்.
-
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் - அநுர தரப்பு வெளியிட்ட தகவல்
தேர்தல் ஆணைக்குழுவின் கைகளில் அநுர குமாரவின் பதவியேற்பு 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார் என கணிக்கப்படும் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிப் பிரமாண நிகழ்வு குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake), தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். பதவியேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு விழாவை ஜனாதிபதி செயலகத்தில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்விற்கான திகதி மற்றும் நேரத்தை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சிக்கு இல்லை என தெரிவித்த ரத்நாயக்க, தேர்தல்களின் இறுதி முடிவுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார். பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறுமா அல்லது நாளை நடைபெறுமா என்பது தேசிய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக இறுதி முடிவுகளை அறிவித்த பிறகே முடிவு செய்யப்படும். பதவியேற்பு நேரம் தேசத்திற்கு மங்களகரமான நேரமாக இருக்கும்,'' என்றார். இறுதி முடிவு வெளிவந்த பின்னரே முடிவு வாக்கு எண்ணிக்கையின் வெளிப்படைத்தன்மை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகத் தெரிவித்த ரத்நாயக்க, தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுவது, இது வழக்கமான நடைமுறை என்பதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். https://ibctamil.com/article/bimal-rathnayake-speaks-akd-s-swearing-in-plans-1726991747
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
@ரசோதரன் அண்ணை உங்க ஆசை நிறைவேறிவிட்டது!! இரண்டாம் சுற்று எண்ணப்படுகிறது.....
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம் புதிய இணைப்பு ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணப்படுமென தோ்தல் ஆணையாளா் தொிவித்தாா். இதன் காரணமாக வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் நம்பப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது. அத்துடன் வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும். எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கிடல் எப்படி நடக்கும்? 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத்தேவையான ஐம்பது வீத வாக்குகளைப் பெறமுடியாது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அதன் காரணமாக தற்போதைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர மற்றவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் 50% ஐ எட்டாதபோது, முதல் 2 வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டு, நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டில் 2வது முன்னுரிமை எண்ணப்பட்டு, இரண்டு முன்னணி வேட்பாளர்களுடன் சேர்க்கப்படும். 2வது விருப்பத்தேர்வுகள் நீக்கப்பட்ட மற்றொரு வேட்பாளருக்குக் குறிக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பத்தேர்வுகள் கணக்கிடப்பட்டு, முதல் இரண்டில் ஒருவருக்குப் போட்டால் அவை சேர்க்கப்படும். இறுதி வெற்றியாளர் இருவரில் அதிக எண்ணிக்கையைப் பெற்ற வேட்பாளர் ஆவார். பத்து சதவீத இடைவெளியைக் கருத்தில் கொண்டு, விருப்பத்தேர்வு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமே. ஆனால் இறுதி அறிவிப்புக்கு முன் இதற்கான செயல்முறை முடிக்கப்பட வேண்டும். முதலாம் இணைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார் என்பது தொடர்பில், நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/election-total-voting-results-as-of-this-evening-1726982426
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தற்போதைய நிலை.
-
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் - அநுர தரப்பு வெளியிட்ட தகவல்
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பதவிப் பிரமாணம் இந்நிலையில் திட்டமிட்ட வகையில் அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் தோல்வி காலிமுகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தேர்தலில் போட்டியில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, சஜித் பிரேமதாஸவும் தோல்வி அடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/president-election-2024-anura-won-the-race-1726975591#google_vignette