Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை; ஓய்வை அறிவித்த மைத்திரி இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, புதிய ஜனாதிபதிக்கு பல பாரிய சவால்கள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக சுமார் நான்காயிரம் கோடி செலவிடப்படவுள்ளதாகவும், அவ்வாறான நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309806
  2. அனுரகுமாரவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து 23 SEP, 2024 | 12:19 PM இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. சீன அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பு அயல்நாடுகள், இருநாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி 67 வருடங்களாகின்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும், ஆதரவையும் வழங்கி வருகின்றன. இதன் மூலம் இருநாடுகளும் நட்புறவுமிக்க சகவாழ்வு வேவ்வேறு அளவிலான நாடுகளிடையிலான பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான சிறந்த உதாரணங்களாகும் நான் இலங்கை சீன உறவுகளிற்கு பெரும் முக்கியத்துவத்தை வழங்குகின்றேன். உங்களுடன் பாரம்பரிய நட்புறவை முன்னெடுப்பதற்கும், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் வெற்றிகரமான விடயங்கள சாதிப்பதற்கும்நான் ஆர்வமாக உள்ளேன். https://www.virakesari.lk/article/194595
  3. இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து 23 SEP, 2024 | 08:08 AM இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் உங்களின் வெற்றிக்கு எனது பாராட்டுக்கள், இந்தியாவின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை விசன் சாகர் கொள்கையில் இந்தியா இலங்கைக்கு முதலிடத்தை அளித்துள்ளது என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். எங்கள் மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக எங்களின் பல்தரப்பட்ட ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194569
  4. வடக்கு வாக்களிப்பில் நடந்த அதிர்ச்சியும் அதிசயமும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பட்டியலில் யாழ் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் பிரபல்யமல்லாத. முகவரியற்ற சிங்கள வேட்பாளர்களுக்கு கூட வாக்குகளை அள்ளிக்கொடுத்த மாவட்டமாகவும் பதிவாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 593,187 ஆகும். இவர்களில் 397,041வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் 198,146 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை .இதே வேளை வாக்களித்த 397,041வாக்காளர்களின் வாக்குகளில் 25,353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு 371,688 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக கணிக்கப்பட்டுள்ளன. இதேவேளை பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்கவுக்கு 84,558 வாக்குகளையும் .சஜித் பிரேமதாசவுக்கு 121,177வாக்குகளையும் ,அநுரகுமார திசாநாயக்கவுக்கு 27,086 வாக்குகளையும் ,அரியநேத்திரனுக்கு 116,688 வாக்குகளையும் அளித்துள்ள யாழ் மாவட்ட மக்கள் ஏனைய 34 வேட்பாளர்களுக்கும் 22179 வாக்குகளை அள்ளிவழங்கியுள்ளனர் இதில் நாமல் ராஜபக்ஸவுக்கு 800 வாக்குகளையும் சரத்பொன்சேகாவுக்கு 901 வாக்குகளையும் விஜேதாச ராஜபக்சவுக்கு 1019 வாக்குகளையும் மயில்வாகனம் திலகராஜாவுக்கு 226 வாக்குகளையும் விக்டர் பெரேரா என்பவருக்கு 1178 வாக்குகளையும் ஏனையவர்களுக்கு மிகுதி வாக்குகளையும் அளித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இதில் பியதாச என்பவருக்கு 6074 வாக்குகளை அளித்துள்ளமை அதிசயமாகவே பார்க்கப்படுகின்றது .. இதேவேளை வவுனியா ,முல்லைத்தீவு .மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் 306,081வாக்காளர்கள் உள்ள நிலையில் 226,650 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர் .79,431 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 226,650 வாக்காளர்களின் வாக்குகளில் 9,381 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு 217,269 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக கணிக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/309801
  5. அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் - ஜனாதிபதி அநுர உறுதி Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 10:37 AM அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. இதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றுகையில், தேர்தலை நடத்துவதும், அரச தலைவரை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல, எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன். சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194576
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க, இலங்கையின் புதிய ஜனாதிபதி (தேர்வு) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 23 செப்டெம்பர் 2024, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ஒரு இடதுசாரி கட்சியாக அறியப்பட்டதால், அவர் இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டுவாரா? இலங்கையின் முதல் இடதுசாரி ஜனாதிபதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் (Jathika Jana Balawegaya) வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். ஜனதா விமுக்தி பெரமுனவைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படுவார் என பத்தாண்டுகளுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், அதை ஒருவர்கூட நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் அரசியல் அதிசயங்களுக்கு பெயர் போன இலங்கையில் இப்படி நடப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு தலைமையேற்றுள்ள ஜனதா விமுக்தி பெரமுன கட்சித் தலைவரான அநுர குமார திஸாநாயக்க, இரண்டாவது இடம் பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைவிட, சுமார் 12 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். 38 பேர் களத்தில் நின்ற இந்தத் தேர்தலில், புதிய ஜனாதிபதியைத் தேர்வுசெய்ய விருப்ப வாக்குகளையும் எண்ணவேண்டி வந்தது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வந்த பிறகு, விருப்ப வாக்குகள் எண்ணப்படுவது இதுவே முதல் முறை. அதேபோல, இலங்கையின் வரலாற்றில் ஒரு இடதுசாரி தலைவர் ஜனாதிபதியாக பதவியேற்பதும் இதுவே முதல் முறை. இந்த நிலையில், இலங்கைக்கு அருகில் உள்ள பிராந்திய சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் புதிய ஜனாதிபதி எப்படி அணுகுவார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக சீன சார்பு கொண்டவரா? இடதுசாரி சாய்வு கொண்டவர் என்பதால், இயல்பாகவே இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கத்தைக் காட்டக்கூடும் என்பதுதான் பொதுவான புரிதல். இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கையை ஜனதா விமுக்தி பெரமுன நீண்ட காலமாக விமர்சித்து வருகிறது. ஒருவித ஆதிக்க மனோபாவத்துடனேயே இலங்கையை இந்தியா அணுகுவதாக குற்றம்சாட்டியும் வந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பேச்சுகள் இல்லை என்றாலும் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில், செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் இந்தியா பற்றிய அவரது பேச்சு கவனிக்கத்தக்கதாக இருந்தது. தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையில் அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். இவையெல்லாம் சேர்ந்து, அநுரவை இந்தியாவுக்கு சாதகமற்ற ஜனாதிபதி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் இந்தியத் தூதர் நேரில் வாழ்த்து இந்த விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்தே ஜாக்கிரதையாக இருந்துவருகிறது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்துவந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, "நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. புதிதாக தேர்வுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் பணியாற்ற நாங்கள் விருப்பத்துடன் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் புதிய ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்ட அநுர குமார திஸாநாயக்கவை, நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் சந்தோஷ் ஷா. Twitter பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் உடனடியாக தனது வாழ்த்தைப் பதிவுசெய்தார். அநுர குமாரவை டெல்லிக்கு அழைத்துப் பேசிய இந்தியா சமீபத்தில்தான் வங்கதேசத்தில், ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா ஜாக்கிரதையாகவே செயல்படவிரும்புகிறது. உண்மையில், சில மாதங்களுக்கு முன்பாகவே, அநுர குமாரவை தில்லிக்கு அழைத்து இந்திய அதிகாரிகள் சந்திப்புகளை நடத்தினார்கள், ஆகவே இந்தியாவின் கவனத்தில் அவர் எப்போதுமே இருந்தார் என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான கிளாட்ஸன் சேவியர். "இந்தியாவைப் பொருத்தவரை, அநுர குமார திஸாநாயக்கவை கண்டுகொள்ளாமல் விடவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார். முக்கியமான தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்று அங்கேயும் பலரை சந்தித்தார். பொதுவாக இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட கட்சியாக அறியப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவோடு தொடர்புகொண்டு இந்தியா செயல்பட்டது இதுவே முதல் முறையாகவும் இருந்தது" என்கிறார் கிளாட்ஸன் சேவியர். "முழுமையான இந்திய சாய்வு கொண்டவராக இருக்க மாட்டார்" 1980களில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு இந்தியா குறித்து இருந்த பார்வை தற்போது மாறிவிட்டது என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர். "ஜனதா விமுக்தி பெரமுனவைப் பொருத்தவரை, அது பழைய ஜே.வி.பி. இல்லை. அது ஒரு மையவாதக் கட்சியாக மாறிவிட்டது. ஆனால், ரணில் விக்ரமசிங்கவைப் போல முழுமையான இந்தியச் சாய்வு கொண்டவராக அவர் இருப்பார் என சொல்ல முடியாது. ஆனால், எந்த நாட்டிற்கும் மிகவும் நெருக்கமாகவோ, விரோதமாகவோ இல்லாத ஒரு நிலையைத்தான் அவர் எடுப்பார் எனக் கருதுகிறேன். இலங்கை இன்னமும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இந்தத் தருணத்தில் அதீதமான நிலைப்பாடுகளை எடுப்பது சரிவராது என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பார் எனக் கருதுகிறேன்." என்கிறார் அகிலன் கதிர்காமர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க, இலங்கையின் புதிய ஜனாதிபதி (தேர்வு) இலங்கையில் அதானி காற்றாலை திட்டம் என்னவாகும்? 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 442 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் காற்றாலைகளை அமைக்க, இந்தியாவைச் சேர்ந்த அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இலங்கையின் முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது. ஆனால், சுற்றுச்சூழல் பிரச்னைகள், இந்த காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் கூடுதல் விலைக்கு இலங்கை மின்வாரியத்திற்கு விற்கப்படும் என்ற கவலைகளால் ஆரம்பத்திலிருந்தே இந்தத் திட்டம் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது அதானியின் காற்றாலை மின்திட்டத்திற்கு எதிராகப் பேசியதை வைத்தே, அவர் இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. அது சரியான பார்வையல்ல என்கிறார் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கௌரவப் பேராசிரியர் ஜெயதேவா உய்யங்கொட. "அநுர குமார திஸாநாயக்கவைப் பொருத்தவரை இலங்கையில் இந்தியாவின் பங்கு குறித்த நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வார் எனக் கருதுகிறேன். மற்ற பிராந்திய சக்திகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டும். அதானி திட்டத்தைப் பொருத்தவரை, பொருளாதார ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் அது மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளான விவகாரம். மோதியும் அதானியும்தான் அந்தத் திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யவேண்டும்." என்கிறார் ஜெயதேவா உய்யங்கொட. இதே கருத்தையே முன்வைக்கிறார் அகிலன் கதிர்காமர். "அதானியின் காற்றாலை மின் திட்டத்தைப் பொருத்தவரை, அது இந்தியாவின் திட்டம் என்பதற்காக எதிர்க்கப்படவில்லை. இந்தத் திட்டம் தொடர்பாக ஜே.வி.பி. மட்டுமல்ல, மற்றவர்களாலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்தத் திட்டம் தொடர்பாக பல சூழலியல் ரீதியான, பொருளாதார ரீதியான விமர்சனங்கள் உள்ளன. அந்த ஒரு விவகாரத்தை வைத்து மட்டும் ஜே.வி.பி. - இந்தியா உறவை தீர்மானிக்க முடியாது. அவர் இந்தியாவுடன் அனுசரணையுடன் இருப்பார் என்றே கருதுகிறேன்" என்கிறார் அவர். படக்குறிப்பு,கோப்புப் படம் இந்தியா - சீனா இரண்டில் எந்த பக்கம் சாய்வார்? இலங்கையின் Department of External Resources அளிக்கும் தகவல்களின்படி பார்த்தால், இலங்கைக்கு கடன் அளித்த நாடுகளில் சீனா முதலிடத்திலும் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இம்மாதிரியான தருணத்தில் இந்தியாவை உதாசீனம் செய்வது போன்ற சிக்கலான சூழலை அவர் ஏற்படுத்த மாட்டார் என்கிறார் கிளாட்ஸன். "அநுரவைப் பொருத்தவரை இந்தியத் திட்டங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிறார். ஆனால், சீனாவைப் பற்றி விமர்சிப்பதில்லை. எனவே அவரிடம் ஒருவிதமான பாரபட்சம் இருக்கிறது என்று சொல்லலாம். இருந்த போதும் இலங்கை இன்னமும் பொருளாதார நெருக்கடியில்தான் இருக்கிறது. இந்தியா அளிக்கும் நிதியுதவி அந்நாட்டிற்குத் தொடர்ந்து தேவைப்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உடனடியாக நிதியுதவி செய்தது இந்தியாதான். இந்த விஷயங்களை புதிய ஜனாதிபதி மனதில் கொள்வார் என கருதுகிறேன். இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, ஒரு சிக்கலான சூழலுக்கு நாட்டை இட்டுச்செல்ல மாட்டார்" என்கிறார் கிளாட்ஸன் சேவியர். இந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் சஜித்திற்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டும் ஜெயதேவா, "தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிப்பது குறித்து அநுர குமார திஸாநாயக்க சிந்தித்தாக வேண்டும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7v6z10d3mro
  7. Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 07:58 AM அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதே முன்னுரிமைக்குரிய நடவடிக்கை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் காபாந்து அரசாங்கத்தை அமைப்பதே முக்கிய முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள கட்சி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் வரை நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடு;ப்பதற்கான காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. நான்கு உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் அனுரகுமாரதிசநாயக்கவும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பார்கள் மக்கள் வழங்கிய ஆணையை இந்த அமைச்சரவை பிரதிபலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகளுடன் இணையாமல் எங்கள் அரசாங்கத்தை அமைப்போம் மக்கள் வழங்கிய ஆணையை முன்னெடுப்பதே எங்களின் முக்கிய நோக்கம்,தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் யார் என்ற கேள்விக்கு ஹரிணி அமரசூரிய குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை, என தெரிவித்துள்ள அவர் காபந்து அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194568
  8. பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா; அமைச்சரவையும் கலைந்தது பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை, புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்நிலையில்,பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவை கலைந்தது. https://thinakkural.lk/article/309791
  9. ஜனாதிபதி அநுரவுக்கு எனது வாழ்த்துக்கள்; மக்கள் நலனை முன்னிறுத்திய சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு - சஜித் பிரேமதாஸ Published By: VISHNU 23 SEP, 2024 | 05:31 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்தினைக் கூறும் அதேவேளை, அவரால் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முன்னெடுக்கப்படக்கூடிய மக்கள் நலனை மையப்படுத்திய சகல ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொண்ட சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அங்கு தேர்தலில் வெற்றியீட்டி ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதனையடுத்து புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியதுடன், அவரைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தைப் பிடித்த சஜித் பிரேமதாஸ உரையாற்றினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 2024 ஜனாதிபதித்தேர்தலில் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு என்னுடைய வாழ்த்தினைக் கூறிக்கொள்கிறேன். எமது நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான சக்தியும், தைரியமும் அவருக்குக் கிட்டவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். இந்த நாட்டுமக்களின் எதிர்பார்ப்புக்கள் தற்போது உங்கள்வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மக்களை மையப்படுத்திய, ஜனநாயக ரீதியிலான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் உங்களுக்கு வழங்கத்தயாராக இருக்கின்றது. அதேபோன்று இந்த ஜனாதிபதித்தேர்தலில் என்மீதும், எமது தரப்பினர் மீதும், நாம் முன்வைத்த கொள்கையின் மீதும் நம்பிக்கைவைத்து எமக்காக வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். இத்தேர்தலை சுதந்திரமானதும், அமைதியானதுமான முறையில் நடாத்துவதற்குப் பங்களிப்புச்செய்த தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினர், சுயாதீன கண்காணிப்பாளர்கள் உள்ளடங்கலாக சகல தரப்பினருக்கும் நன்றி கூறுகின்றேன். நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது வெற்றிபெற்ற தரப்பினது மாத்திரமன்றி, நாட்டின் சகல தரப்பினரதும் பொறுப்பாகும். தேர்தல் செயன்முறை முடிவடைந்திருக்கிறது. அதனையடுத்து நாட்டை மீட்டெடுத்து, அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/194565
  10. வாக்களிக்காத 35,20,438 பேர்; 3,00,300 வாக்குகள் நிராகரிப்பு 9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சனிக்கிழமை நடந்த தேர்தலில் 35.20,438 பேர் வாக்களிக்காத அதேவேளை 300.300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தேர்தலில் வாக்களிக்க இம்முறை 1,71,40354 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர்.இவர்களில் 1,36,19916 வாக்காளர்களே வாக்களித்த நிலையில் 35.20,438 வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை. அதுமட்டுமன்றி வாக்களித்த 1,36,19916 வாக்காளர்களின் வாக்குகளில் 300.300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் 1,33,19616 வாக்குகளே இந்த ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/309808
  11. தமிழரசுக்கட்சி ஆதரித்த சஜித் பிரேமதாச; வட, கிழக்கின் சகல தேர்தல் மாவட்டங்களிலும் முதலிடம் - 5 தேர்தல் மாவட்டங்களில் சஜித்துக்கு மொத்தமாக 676,681 வாக்குகள் Published By: VISHNU 23 SEP, 2024 | 04:57 AM (நா.தனுஜா) இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களிலும்; மொத்தமாக 676,681 எனும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனும் விடயத்தில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்திருந்தன. அதன்படி இலங்கைத் தமிழரசுக்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்திருந்தது. அதற்கமைய இம்முறை தேர்தலில் வடக்கின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் 216,599 வாக்குகளையும், கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்லை தேர்தல் மாவட்டங்களில் 460,082 வாக்குகளையும் பெற்றதன் மூலம் சஜித் பிரேமதாஸ வட, கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 676,681 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். வட, கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாஸ பெற்ற வாக்குகளை தேர்தல் மாவட்ட ரீதியாக நோக்குகையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 121,177 வாக்குகளையும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 95,422 வாக்குகளையும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 120,588 வாக்குகளையும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 139,110 வாக்குகளையும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் 200,384 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். அவர் பெற்ற இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 32.60, 43.92, 50.36, 43.66, 47.33 சதவீதமாகும். இவ்வனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் சஜித் பிரேமதாஸ முன்னிலை வகிக்கும் அதேவேளை, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அரியநேத்திரன், ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க, அரியநேத்திரன், அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும் உள்ளனர். அதேபோன்று திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் அநுரகுமார திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, அரியநேத்திரன் ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க, அரியநேத்திரன் ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் அநுரகுமார திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, அரியநேத்திரன் ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும் இருக்கின்றனர். https://www.virakesari.lk/article/194562
  12. எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத சகலரையும் இலங்கையர்களாகக் கருதி ஒன்றிணைந்து பயணிப்பேன் - புதிய ஜனாதிபதி அநுர வேண்டுகோள்! Published By: VISHNU 22 SEP, 2024 | 11:49 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறுசில அரசியல் கட்சிகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது ஜனநாயகத்தின் சிறந்ததோர் குறியீடாகும். எது எவ்வாறெனினும் என்மீது நம்பிக்கை வைத்த மற்றும் எனக்கு வாக்களிக்காத சகல பிரஜைகளையும் இலங்கையர்களாகக் கருதி, எவ்வித மாறுபாடுகளுமின்றி, அனைவரையும் இணைத்துக்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பேன் என இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் ஞாயிற்றுக்கிழமை (22) கொழும்பிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அங்கு தேர்தலில் வெற்றியீட்டி ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதனையடுத்து உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகையில், இம்முறை ஜனாதிபதித்தேர்தலை நடத்தியதே ஒரு பெரும் வெற்றியாகும். மாகாணசபைத்தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளன. உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடத்தப்படாமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளியாகியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதித்தேர்தலை நடத்தியமையையே நான் இங்கு அடையப்பட்ட முதலாவது வெற்றியாகக் கருதுகின்றேன். அதேபோன்று மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கக்கூடியவாறான நியாயமான தேர்தலை நடத்துவதை முன்னிறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கடின முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் நன்றி கூறுகின்றேன். அடுத்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதைப்போன்று நியாயமான தேர்தல்க்ளை நடாத்துவதை முன்னுறுத்தி பல்வேறு பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவற்றை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்வது என்னுடைய தனிப்பட்ட பொறுப்பு மாத்திரமன்றி, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகலரதும் பொறுப்பாகும். எனவே அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் நான் விசேட அவதானம் செலுத்துவேன். தற்போது எமது நாடு சமூக, பொருளாதார, வெளிநாட்டுறவு என பல்வேறு பிரிவுகளிலும் பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மக்கள் ஆணையின் மூலம் தெரிவுசெய்யப்படும் அரசாங்கத்தின் ஊடாக மாத்திரமே முன்னெடுக்கமுடியும் என நாம் கருதினோம். எந்தவொரு ஆட்சி நிர்வாகத்துக்குமான பலத்தையும், அது பயணிக்கவேண்டிய திசையையும் மக்கள் ஆணையே வழங்குகின்றது. கடந்த காலங்களில் மக்கள் ஆணை பல்வேறு விதங்களில் திரிபுபடுத்தப்பட்டதைப் பார்த்தோம். ஆகவே அந்த மக்கள் ஆணையை நாட்டில் மீளவும் ஸ்தாபிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கமைய முதலில் ஜனாதிபதித்தேர்தலையும், அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தேர்தலையும் நடாத்தவேண்டும் என்ற பொது நிலைப்பாடு உள்ளது. எமது நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றைப்போன்று தேர்தல் நடாத்தப்படும் முறையும் மாறவேண்டும். தேர்தல்கள் முடிவடைந்ததன் பின்னர் அதனைக் கொண்டாடுவதும் நிறுத்தப்படவேண்டும். அதற்கேற்றவாறு தேர்தலின் பின்னர் வெடி கொளுத்துதல் போன்ற ஏனையோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நாம் எமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். அதற்கமைய வன்முறைகளற்ற அமைதியான தேர்தலாக இத்தேர்தல் நடைபெற்றுமுடிந்திருக்கிறது. இந்த நிலை தொடரவேண்டும் எனவும், எந்தவொரு பிரஜையும் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும் வலியுறுத்துகின்றோம். அடுத்ததாக எமது நாடு பல்வேறு பிரிவினைகளுக்கு முகங்கொடுத்திருந்தது. அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளையும் அனுபவித்திருந்தது. அப்பிரிவினைகளைக் களையவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். இந்த சவாலை தனிநபராலோ, தனியொரு கட்சியினாலோ அல்லது தனியொரு குழுவினாலோ கையாளமுடியாது. ஆகவே இந்நோக்கத்துக்காக சகலரையும் ஒன்றிணையுமாறு அழைப்புவிடுக்கின்றோம். அதுமாத்திரமன்றி இதுகுறித்து எதிர்வருங்காலங்களில் கட்டம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தி முன்நோக்கிப் பயணிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். நிறைவாக நாட்டு மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறுசில அரசியல் கட்சிகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது ஜனநாயகத்தின் சிறந்ததோர் குறியீடாகும். எது எவ்வாறெனினும் என்மீது நம்பிக்கை வைத்த மற்றும் எனக்கு வாக்களிக்காத சகல பிரஜைகளையும் இலங்கையர்களாகக் கருதி, எவ்வித மாறுபாடுகளுமின்றி, அனைவரையும் இணைத்துக்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/194556
  13. யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? தமிழர் விவகாரங்களில் அவரது நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க 22 செப்டெம்பர் 2024, 13:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அநுர குமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார். அவர் யார், அவரது பின்னணி என்ன? அநுராதபுரம் மாவட்ட தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்தார். தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பாடசாலை காலத்தில் இருந்தே அரசியலில் அநுர குமாரவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. தனது 19வது வயதில் இலங்கையின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்தார். ஒரு கட்டத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி, களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கடந்த 1995ஆம் ஆண்டு வாக்கில் அவரை சோஷலிச மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக ஜே.வி.பி. நியமித்தது. அக்கட்சியின் மத்திய பணிக் குழுவிலும் அவருக்கு இடமளிக்கப்பட்டது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனவின் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார் அநுர குமார. 2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, 1,53,868 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து ஆட்சி அமைத்தன. இந்த அரசாங்கத்தில் விவசாயம், கால்நடைகள், காணி, நீர்பாசனத் துறை அமைச்சராக அநுர குமார பதவியேற்றார். ஆனால், சுனாமிக்குப் பிறகு, வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா குமாரதுங்க அரசு முடிவு செய்தபோது, அதை எதிர்த்து ஜே.வி.பி. அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். அநுரவும் பதவி விலகினார். கடந்த தேர்தலில் மூன்றாம் இடம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுரவுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் அநுர குமார. அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார். வெறும் சுமார் 3 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார் அவர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ தேர்வான நிலையில், ஊழலுக்கு எதிராக அநுர குமார திஸாநாயக்க தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார். இதனால், அவருக்கான ஆதரவுத்தளம் வலுவடைய ஆரம்பித்தது. மேலும் பொருளாதார நெருக்கடியின்போது நடந்த போராட்டங்களிலும் அநுர குமார முன்னணியில் இருந்தார். இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அநுர குமார திஸாநாயக்க போட்டியிடுவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர். வன்முறைகளுக்கு மன்னிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார் அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் பெருமளவு கூட்டம் திரண்டது. கடந்த தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற ஒருவர், 2024 தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. தற்போது அவர் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் அவர் தலைமை வகிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவின் கடந்த காலம் வன்முறைகளால் நிறைந்தது. கடந்த 1971இல் பண்டாரநாயக அரசுக்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அதேபோல, 1987 - 89 காலப் பகுதியில் இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கலகத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனால், 2014இல் ஜே.வி.பியின் தலைவரான பிறகு பிபிசிக்கு அளித்த பேட்டியில், அக்கட்சியின் கடந்த கால வன்முறைகளுக்காக மன்னிப்பு கோரினார் அநுர. அக்கட்சி இலங்கையில் நிகழ்த்திய வன்முறைகளுக்கு மன்னிப்பு கோரியது அதுவே முதலும் கடைசியுமாக இருந்தது. தமிழர் பிரச்னையில் நிலைப்பாடு என்ன? இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிப்பதற்காக 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டது. நிலம், காவல் மற்றும் நிதி தொடர்பாகக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் மாகாண சபைகளுக்கு அளிக்கிறது. ஆனால், இதுவரை மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்குப் பயணம் செய்த அநுர குமார, யாழ்ப்பாணத்தில் பேசினார். அப்போது, "நான் 13வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துகிறேன். பதிலுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க நான் வரவில்லை. கூட்டாட்சி முறையை அளிக்கிறேன், எனக்கு வாக்களியுங்கள் எனக் கேட்க வரவில்லை" என்றார். இது அந்தத் தருணத்தில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தையே அளித்தது. ஆனால், தேர்தலுக்கு நெருக்கமாக அநுர குமார தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக்கொண்டார். ஜூன் மாதத்தில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் அநுர. அந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர், மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் எனக் கூறினார். ஆனால், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும், ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரை, அது நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது. ஆனால், தற்போதைய புதிய சூழலில் அக்கட்சி என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதானி திட்டத்திற்கு எதிர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்கவின் பிரசார கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் இரு நாட்டு உறவுகளைப் பொறுத்தவரை, இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுமே இலங்கைக்கு மிக முக்கியமானவை. இரு நாடுகளுமே இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடனுதவிகளைச் செய்திருக்கின்றன. ஜே.வி.பி ஒரு இடதுசாரி கட்சியாக இருப்பதால், இயல்பாகவே சீனாவுக்கு நெருக்கமாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. மேலும், மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது ஜே.வி.பி. இந்த ஒப்பந்தம் இலங்கை மீது இந்தியாவால் திணிக்கப்பட்டதாகவும் கருதுகிறது. செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அநுர, அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறினார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறினார். ஆனால், இந்தத் திட்டத்தில் கூடுதல் விலைக்கு மின்சாரம் இலங்கைக்கு விற்கப்படும் என்பதாலேயே அதற்கு எதிராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் பிராந்தியத்தில் உள்ள எந்த சக்திகளையும் பகைத்துக்கொள்ள மாட்டோம் என அக்கட்சியினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அநுர குமாரவும் இந்தியாவுக்கு வந்து சென்றார். ஆகவே, வரும் நாட்களில் இந்தியா தொடர்பான, அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பது தெரிய வரும். அநுரவை பொறுத்தவரை, ஒரு கடினமான உழைப்பாளி என்பதில் சந்தேகமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களைப் பிடித்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்னைகளையும் இதே தீவிரத்தோடு எதிர்கொள்வாரா என்பதைப் பார்க்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cg4q542l6zxo
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஜித் பிரேமதாஸவின் அரசியல் பயணம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை 53 நிமிடங்களுக்கு முன்னர் தந்தையின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் நுழைந்த சஜித் பிரேமதாஸ, இலங்கை அரசியலின் ஏற்ற இறக்கங்களில் 30 ஆண்டுகளாகப் பயணம் செய்தவர். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளை வகித்தவர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தோல்வியடைந்த சஜித், இந்த முறை கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கி இருந்தாலும், அவரால் வெற்றிபெற முடியவில்லை. சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு என்ன காரணம்? "திஸாநாயக்க ஜேவிபிக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கக்கூடாது. இலங்கையின் பாரம்பரிய, பழைய அரசியல் கட்சிகள் மீது, பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களிடையே ஒரு வெறுப்பு இருக்கிறது. அப்படியிருக்கும் சூழலில், அநுர குமார ஒரு நல்ல தேர்வாகத் தெரிகிறது. ஆகையால் அவருக்கு வாக்களிக்கிறார்கள். அதேநேரம், சஜித்தை பொறுத்தவரை, அவர் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியே வந்து, ஒரு புதிய கட்சியை உருவாக்கியிருந்தாலும், பழைய ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியே வந்தவர்கள்தான் இந்தப் புதிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலும் இருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இந்தக் கட்சியும் ஒரு பழைய அரசியல் சக்தியாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. ஆகையால், மக்கள் அவரைப் பெரியளவில் தேர்வு செய்யவில்லை,” என்கிறார் வீரகத்தி தனபாலசிங்கம். யார் இந்த சஜித் பிரேமதாஸ? பிற்காலத்தில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணசிங்க பிரேமதாஸ, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசின் தலைமைக் கொறடாவாகவும் இருந்த காலத்தில், அவருக்கும் ஹேமா விக்ரமதுங்கேவுக்கும் 1967 செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார் சஜித் பிரேமதாஸ. செயின்ட் தாமஸ் பிரிபரேட்டரி பள்ளி, கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரி, லண்டனில் உள்ள மில் ஹில் ஸ்கூல் ஆகியவற்றில் படித்தார் சஜித். இவருக்குப் பத்து வயதாக இருக்கும்போதே, இவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ, இலங்கையின் பிரதமராகிவிட்டார். இருந்தாலும் சஜித்தின் படிப்பு தொடர்ந்தது. லண்டன் பொருளாதாரப் பள்ளியிலும் லண்டன் பல்கலைக் கழகத்திலும் படித்த சஜித், மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பொது மேலாண்மையில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். இதற்கிடையில் ரணசிங்க பிரேமதாஸ இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே, 1993இல் ஒரு தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார் பிரேமதாஸ. இதையடுத்து அமெரிக்காவில் இருந்து சஜித் நாடு திரும்பினார். தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபட விரும்பிய சஜித், 1994இல் தனது தந்தை இருந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. சிறிய பொறுப்புதான் என்றாலும் சின்னச் சின்ன நிகழ்சிகளை நடத்தி விறுவிறுப்புடன் செயல்பட்டார் சஜித். அந்த மாவட்டத்தில் தருண சவிய என்ற இளைஞர் இயக்கத்தையும் வறுமை ஒழிப்பிற்காக சன சுவய போன்ற அமைப்புகளையும் கட்டியெழுப்பினார். தொடர் வெற்றிகளைக் குவித்த சஜித் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபடவிரும்பிய சஜித், 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார் கடந்த 2000வது ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் வாய்ப்பு சஜித்திற்கு அளிக்கப்பட்டது. அதில் பெரும் வெற்றி பெற்றார் சஜித். அதற்குப் பிறகு, 2001, 2004, 2010, 2015 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். கடந்த 2001இல் ரணில் விக்ரமசிங்க பிரதமரானபோது, அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2011இல் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்வானார் சஜித். கடந்த 2015இல் மைத்திரி பால சிறிசேன புதிய ஜனாதிபதியாகத் தேர்வானதும், சஜித் வீட்டு வசதி மற்றும் சமிர்தி திட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் கீழ் மத்தியதர மக்களுக்காகப் பல வீட்டு வசதித் திட்டங்களை முன்னெடுத்தார் சஜித். கடந்த 2010, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக பொது வேட்பாளர்களை ஆதரித்தது. 2015இல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால், விரைவிலேயே ரணிலுக்கும் சிறிசேனவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இது 2018இல் ஒரு மிகப்பெரிய அரசியல் சாஸன சிக்கலுக்கு இட்டுச் சென்றது. அந்தப் பிரச்சனை பிறகு தீர்க்கப்பட்டாலும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது தவறு எனக் கருதியது ஐக்கிய தேசியக் கட்சி. இதனால், 2019இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால், மங்கள சமரவீர, ஹரின் ஃபெர்னாண்டோ போன்றவர்கள் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட வேண்டும் எனக் கூறினர். சில நாட்கள் இழுபறிக்குப் பிறகு, சஜித்தை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஏற்க ரணில் விக்கிரமசிங்க ஒப்புக்கொண்டார். அந்தத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு 41 சதவீத வாக்குகளைப் பெற்றார் சஜித். எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2011ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார் விரைவிலேயே எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் சஜித். இந்நிலையில் அவரை பிரதமர் பதவிக்கான போட்டியில் நிறுத்த விரும்பியது ஐக்கிய தேசியக் கட்சி. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சமாகி ஜன பலவெகய என்ற முன்னணியை உருவாக்கினார் சஜித். இந்த முன்னணிக்கு அன்னப் பறவையின் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட ரணில் ஒப்புக்கொண்டார். ஆனால், இறுதி நேரத்தில் சஜித் ஆதரவாளர்கள், வேறு சின்னத்தில் போட்டியிட்டனர். இதனால், கட்சி பிளவடைந்தது. அந்தத் தேர்தலில் 54 இடங்களைப் பிடித்த சமாகி ஜன பலவெகயவின் சார்பில் சஜித் எதிர்க்கட்சித் தலைவரானார். 2020 ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த முன்னணியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட களத்தில் இறங்கினார் சஜித். "தந்தையின் நிழலில் அரசியலுக்கு வந்தவர் சஜித். அவருடைய பேச்சுகள், பேட்டிகள் ஆகியவை அவர் அந்த நிழலை விட்டு வெளியேறவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. 2022 நெருக்கடியின்போது ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்தார். பதவியை ஏற்றுக்கொண்டு, சிறப்பாகச் செயல்பட்டுக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை" என்கிறார் பிபிசி சிங்களப் பிரிவின் ஆசிரியரான இஷாரா தனசேகர. இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக அவருடைய செயல்பாடுகள் கவனிக்கத் தக்கவையாகவே இருந்தன. பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை, அவர் உலகமயமாக்கலுடன், உள்ளூர் மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும் கவனம் செலுத்த விரும்புகிறார். "பொருளாதாரத்தைச் சீர்திருத்தி, அதைப் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்டதாகவும் மாற்ற வேண்டும். இது மக்களிடையே செல்வத்தை உருவாக்கும். பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாப்பதற்காக இலக்கு வைக்கப்பட்ட மானியங்களுடன் கூடிய வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு மூலம் பொருளாதார நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்" என அவருடைய தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழர் விவகாரங்களில் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழர் பிரச்சனைக்கான தீர்வைப் பொறுத்தவரை, 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதையே முன்வைக்கிறார் சஜித். கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தலைவர்களைச் சந்தித்த பிறகு பேசிய அவர், தான் ஜனாதிபதியானால் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்தப் போவதாகத் தெரிவத்தார். 'சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் புலிகளைவிட சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பை உருவாக்கவே இது உதவும்' என பிவிதுரு ஹெல உருமய போன்ற அமைப்புகள் குற்றம் சாட்டியபோதும் அவர் அதிலிருந்து பின்வாங்கவில்லை. இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிப்பதாக அறிவித்தது. வடக்கிலும் கிழக்கிலும் மேலும் பல கட்சிகள் இவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தன. தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போதும், முதல் விருப்ப வாக்குகளில் இந்தப் பகுதிகளில் சஜித்திற்கு கூடுதலான ஆதரவு இருப்பது தெளிவாகவே தெரிந்தது. இந்தியாவை பொறுத்தவரை, எப்போதும் இந்தியாவை சந்தேகத்துடன் பார்க்கும் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்கவைவிட, ஆரம்பத்திலிருந்தே சீனாவைவிட இந்தியாவை நெருக்கமாகக் கருதும் சஜித்தை கூடுதலாக விரும்பக்கூடும். இந்த நிலையில், தோல்வி அடைந்திருந்தாலும், சஜித்திற்கு இதுவொரு முக்கியமான தேர்தல். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkdegee7x3o
  15. நாட்டுக்காக கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - புதிய ஜனாதிபதி அநுர வேண்டுகோள்! Published By: VISHNU 22 SEP, 2024 | 09:20 PM ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். சவால்களைத் தனி நபராலும், அணியாலும் வெற்றி கொள்ள முடியாது. நாட்டுக்காகக் கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். எனக்கு ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத அனைத்து பிரஜைகளையும் இலங்கையர் என்ற அடிப்படையில் பேதமற்ற வகையில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194556
  16. கோபம் இருக்கிற இடத்தில் தான் குணமிருக்கும் அண்ணை! நம்பிக்கை தானே வாழ்க்கை.
  17. 22 SEP, 2024 | 09:18 PM நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறவேண்டும் என்பது போன்ற விடயங்களை அவர் வெளியிடவில்லை. https://www.virakesari.lk/article/194555
  18. ஒன்பதாவது ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார் அநுரகுமார! 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்கிறார். ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்தைப் பெறாததால் தேர்தல் ஆணைக்குழு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ண வேண்டியிருந்தது. அனுர திஸாநாயக்க – 5,634,915 – 42.31% சஜித் பிரேமதாச – 4,363,035 – 32.76% https://ibctamil.com/article/sri-lanka-new-president-2024-1727004144
  19. இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் இதுவரை யாரும் எதிர்பாரா விதமாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ளார். இதுவரை நாட்களிலும் அரச தரப்பு மற்றும் எதிர்தரப்பில் இருந்து போட்டியிட்டு பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று வந்திருந்த நிலையில் தற்போது முதன்முறையாக யாரும் எதிர்பாரா விதமாக அநுரவின் இந்த வெற்றி பதிவாகியிருக்கின்றது. இலங்கை மாத்திரமல்லாமல் உலக நாடுகளும் வியந்து நோக்கும் அளவுக்கு இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. மாற்றத்தை நோக்கிய பயணம் மிக நேர்த்தியான ஒழுங்கமைப்பு, திட்டமிடல் போன்றவை அநுரவின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றது. இதற்கு முன்னரான நாட்களில் பரம்பரையாக நாங்கள் இந்த கட்சிக்கு ஆதரவு எனவே இந்த முறையும் அதே கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்ற மரபு மாற்றமடைந்திருந்ததை கண்கூடாக காண முடிந்துள்ளது இந்த தேர்தலில். குறிப்பாக மாற்றத்தை நோக்கிய அநுரவின் பயணம் என்ற கொள்கை நிறைவேறியுள்ளது என்று கூட கூறலாம். இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள முதியன்சேலாகே அநுர குமார திசாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு தொழிலாளி அவரது தாய் ஒரு இல்லத்தரசி. திசாநாயக்க, தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புதேகம மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்று, கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக பிரவேசத்தைப் பெற்ற முதல் மாணவராக அவர் இருந்திருக்கின்றார். பள்ளிப் பருவத்திலிருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டு குறித்த அணியில் இணைந்திருந்த அநுர குமார, 1987இல் ஜே.வி.பி.யில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறினார். ஒரு வருடம் கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். பின் 1995 இல் பௌதீக விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் பெற்றதோடு அதே ஆண்டில், அவர் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும் ஜேவிபியின் மத்திய செயற்குழுவிலும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஜேவிபி கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கீழ் பிரதான அரசியலில் மீண்டும் பிரவேசித்த ஜே.வி.பி, 1994 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவை ஆதரித்தது, இருப்பினும் விரைவில் குமாரதுங்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தது. 2000 ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், இன்று வரை எம்.பியாக இருக்கிறார். 2004 இல் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் , விவசாய அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். 2005இல் சந்திரிகா அரசில் இருந்து விலகினார். 2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார் அநுர குமார. அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது. 2015இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார். 2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார். ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும் 1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுனரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதன் பின்னர் 1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். 2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது. 2019இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க மூன்று வீத வாக்குகளை மட்டும் சுமார் நான்கு லட்சத்து எண்பத்து ஐயாயிரம் அளவிலான வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தார். அதன் பின்னரான நாடாளுமன்றத் தேர்தலிலும் 3 எம்பிக்களை மட்டுமே அவர் தரப்பால் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரமுடிந்தது. அதனையடுத்து, இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காலமும், அதனோடான போராட்டக் காலமும் இன்றைய அநுரவின் வெற்றிக்கு வித்திட்ட வித்து என்று கூட கூறலாம். கிட்டத்தட்ட, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் எப்படி கோட்டாபயவின் வெற்றிக்கு வழிவகுத்ததோ, அப்படியொரு நிலையையே அநுரவின் வெற்றிக்கு அரகலய காலம் வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத ஒன்று. குறிப்பாக, இம்முறை முதன்முறையாக வாக்களிக்கத் தகுதிப்பெற்ற இளையோர்களின் முதன்நிலை தெரிவாக அநுர இருந்திருக்கின்றார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. அத்தோடு, ரணில் இழைத்த தவறுகளும் கூட அநுரவின் வெற்றிக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தன. குறிப்பாக அரகலயவின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகள், ஒடுக்குறைகள் போன்றவை ரணில் மீதான அதிருப்திக்கும், அநுர மீதான ஈர்ப்புக்கும் காரணமாகியிருந்தன. அத்தோடு, அரச ஊழியர்கள் சம்பள பிரச்சினையின் போதும் போராட்டங்களின் போதும் அதனை கையாள்வதற்கு ரணில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ரணில் மீதான அரச ஊழியர்களின் வெறுப்புக்கு காரணமாகியதோடு, அது அநுரவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. எது எவ்வாறாயினும் மாற்றத்தை விரும்பிய பலருக்கு அநுரவின் வெற்றி சிறிய அல்ல மிகப்பெரிய மாற்றமாகவே அமைந்துள்ளது. https://tamilwin.com/article/sri-lanka-new-president-anura-1726963033
  20. சென்னை டெஸ்ட்: வங்கதேசத்திற்கு எதிராக வரலாறு படைத்த இந்தியா - அஸ்வின் சாதனைமேல் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் இந்தியா - வங்கதேசம் மோதிய முதல் டெஸ்டில் கோலியும் அஸ்வினும் கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் அஸ்வினின் மாயாஜாலம் மற்றும் ஜடேஜாவின் துல்லியமான சுழற்பந்துவீச்சால் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு வெற்றி கிட்டியது. 4வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 515 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 62.1 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களும், வங்கதேசம் 149 ரன்களும் சேர்த்தன. 227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ரிஷப் பந்த்(109), கில்(119) இருவரும் சதம் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர். இதையடுத்து 515 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி நேற்று பிற்பகல் தேநீர் இடைவேளைக்கு முன்பாக ஆட்டத்தைத் தொடங்கியது. 3வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி, 37.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ஷகிப் அல்ஹசன் 5, கேப்டன் ஷாண்டோ 51 ரன்களில் களத்தில் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜடேஜா வீசிய ஓவரில் ஹஸன் முகமது கிளீன் போல்டான காட்சி நான்காவது நாள் ஆட்டம் ஆடுகளத்தில் வெடிப்புகள் தென்பட்டதால், 4வது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்திருந்தனர். அதற்கேற்ப, இன்று காலை ஆட்டம் தொடங்கியது முதல் ஒரு மணிநேரம் பந்து வீசிய பும்ரா, சிராஜ் இருவருக்கும் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. சிராஜ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஷாண்டோ, ஒரு கட்டத்தில்அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார். காலை தேநீர் இடைவேளைக்குப் பின், சென்னை நாயகன் அஸ்வின், ஐ.பி.எல்.லில் சிஎஸ்கே அணி நட்சத்திரமான ஜடேஜா ஆகியோர் பந்துவீச வந்தபின், ஆட்டம் அப்படியே இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது. வங்கதேசத்தின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விழுந்தன. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் 25 ஓவர்களில் வங்கதேசம் இழந்தது. கடைசி 6 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் வங்கதேசம் இழந்தது. வங்கதேச கேப்டன் ஷாண்டோ 85 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் பும்ராவிடம் எக்ஸ்ட்ரா கவர் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்று காலை அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே அனுபவ வீரர் சஹிப் அல் ஹசன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த லிட்டன் தாஸ்(1), மெஹதி ஹசன் மிராஜ்(8), தஸ்கின் அகமது(5), ஹசன் மெஹ்மத்(7) என ஒற்றை இலக்க ரன்னில் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 2வது இன்னிங்ஸில் அஸ்வின் 6, ஜடேஜா 3 மற்றும் பும்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விக்கெட் வீழ்த்திய அஸ்வினை ரவீந்திர ஜடேஜா பாராட்டுகிறார். இந்திய அணி முன்னேற்றம் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான பாதை பிரகாசமாகியுள்ளது. தற்போது 10 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் முதலிடத்தில் இந்திய அணி இருக்கிறது. இந்திய அணிக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. புதிய மைல்கல் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளது. அதன்படி இந்திய அணி இதுவரை 581 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளைப் பெற்று இந்திய அணி சாதித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை இந்திய அணி 178 தோல்விகளையும், 179 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்துடன் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்று 12-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் ரோஹித் மற்றும் அஸ்வின் அஸ்வினுக்கு ரோஹித் புகழாரம் டெஸ்ட் வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “எங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. நீண்ட காலத்துக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் வந்து வென்றுள்ளோம், இதற்கு காரணம் குழுவாகச் செயல்பட்டதுதான். கடினமான நேரத்தில் ரிஷப் பந்தின் பேட்டிங் எப்போதும் அற்புதமாக இருக்கும் அதுபோல் இந்த முறையும் இருந்தது. ஐபிஎல், உலகக் கோப்பையிலும் பந்த் சிறப்பாகச் செயல்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட் அவருக்கு பிடித்த விளையாட்டு. அவர் அற்புதமாக விளையாடினார். துலிப் டிராபியில் விளையாடிவிட்டு இந்திய அணிக்குள் பந்த் வந்துள்ளார், அவர் செட்டிலாக போதுமான நேரம் வழங்கப்படும். எங்கள் பந்துவீச்சு வரிசையை வலிமைப்படுத்த விரும்புகிறோம். எந்த சூழலிலும், காலநிலையிலும், ஆடுகளத்திலும் பந்துவீச தயாராகி வருகிறோம். வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்கள் பொறுப்பெடுத்து செயல்பட்டதுதான்." என்றார். மேலும் தொடர்ந்த அவர், "அழகான ஆடுகளம், சிவப்பு மண் விக்கெட் எப்போதும் நல்ல முடிவுகளை வழங்கும், பொறுமையாக ஆட வேண்டும். பெரிய ஸ்கோருக்காகவும், விக்கெட்டுக்காகவும் காத்திருந்தோம். அஸ்வின் வந்து அதை செய்து கொடுத்தார். அவர் என்ன செய்கிறார் என்பதை செயலால் பதில் அளித்துவிடுவார். எங்களுடன் நீண்டகாலம் அஸ்வின் பயணிக்கிறார். இந்திய அணிக்காக அஸ்வின் என்ன செய்துள்ளார் என்பதை இங்கே பேசினால் அதுபோதுமானதாக இருக்குமா என எனக்குத் தெரியாது. ஒருபோதும் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஒதுங்கியதில்லை. ஐபிஎல் ஆடுகிறார், டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் கலக்குகிறார், இந்திய அணியிலும் இருக்கிறார். தேவைப்படும் நேரத்தில் அணிக்காக இதுபோல் அருமையாகவும் பேட் செய்கிறார்” என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷான்டோ விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை சக வீரர்களுடன் ஜடேஜா பகிர்ந்து கொள்கிறார் அஸ்வின் சாதனைமேல் சாதனை முதல் இன்னிங்ஸில் சதம்(113) அடித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை விரைவாக ஆல் அவுட் செய்யவும் காரணமாக இருந்த தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 750 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அது மட்டுமல்லாமல் 37-வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்ன் சாதனையை அஸ்வின் சமன் செய்து 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை நாயகனாக தொடர்கிறார். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் இயான் போத்தமுக்கு(5) அடுத்த இடத்தில் அஸ்வின் இருக்கிறார். அஸ்வின் 4 முறை சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 2வது முறையாக இதேபோன்று சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8-வது வீரராகக் களமிறங்கி 522 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்னி வால்ஷின் சாதனையை தகர்த்துள்ளார். வால்ஷ் 519 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரையிலும் சாதனையாக இருந்தது. சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் அஸ்வின் 8-வது இடத்தில் இருக்கிறார், ஆஸ்திரேலியாவின் நாதன் லயான் 530 விக்கெட்டுகளுடன் 7வது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை 522 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த வரிசையில், 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்கிறார். 37 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளையும், 10 முறை 10 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் 250, 300, 250 விக்கெட்டுகளை வேகமாக அடைந்ததும் அஸ்வின்தான். பேட்டிங் வரிசையில் 8-வது வீரராகக் களமிறங்கி 4 முறை சதம் அடித்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் அஸ்வின். (மேற்கூறிய புள்ளிவிவரங்கள் அனைத்தும் கிரிக்இன்ஃபோ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜடேஜா மற்றும் அஸ்வின் "சென்னை என்றாலே ஆனந்தம்தான்" ஆட்டநாயகன் விருது வென்றபின் அஸ்வின் அளித்த பேட்டியில்,“ஆட்டநாயகன் விருதையெல்லாம் நான் கருத்தில் வைப்பது இல்லை, அதை நோக்கி விளையாடுவதும் இல்லை. சென்னையில் ஒவ்வொரு முறை விளையாடும் போதும், அது எனக்குள் எழும் ஆனந்தமான உணர்ச்சி. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கேலரியில் ஒரு பார்வையாளராக அமர்ந்து ஏராளமான டெஸ்ட் போட்டிகளை இருந்து ரசித்துப் பார்த்துள்ளேன். பல அணி வீரர்கள், சக வீரர்கள் விளையாடுவதை நான் ரசித்திருக்கிறேன். எனக்கு பந்துவீச்சுதான் உயிர், அதுதான் என்னை வாழ வைக்கிறது. இயல்பாகவே நான் ஒரு பந்துவீச்சாளர் என நினைக்கிறேன், அதேசமயம், பேட்டிங்கிலும் நான் என் கவனத்தை செலுத்துகிறேன்.” எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cqjrdl8wn24o
  21. இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு Published By: VISHNU 22 SEP, 2024 | 08:46 PM நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தார். இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 4,363,035 ( 32.76% ) வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்தில் இருந்தார். ஜனாதிபதியும் சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க 2,299,767 ( 17.27%) வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்தில் இருந்தார். இந்நிலையில், எவரும் 50 சதவீதமான வாக்குகளைப் பெறாத நிலையில், விருப்பு வாக்கின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நிலை ஏற்பட்டது. இந்த விருப்பு வாக்கின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களை அடிப்படையாக வைத்து விருப்பு வாக்கு கணக்கெடுப்பு இடம்பெற்று இறுதியில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். இரண்டாம் விருப்பு வாக்கில் அகில இலங்கை ரீதியாக சஜித் பிரேமதாஸவுக்கு 167,867 வாக்குகளும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 105, 264 வாக்குகளும் கிடைத்தன. இறுதியில் 5,634,915 முதல் சுற்று வாக்குகளுடன் 105,183 விருப்பு வாக்குகளை சேர்த்து மொத்தமாக 5,740,098 (55.87%) வாக்குகளைப் பெற்று அநுரகுமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். சஜித் பிரேமதாஸ 4,363,035 முதல் சுற்றுவாக்குகளுடன் 170,867 விருப்பு வாக்குகளை சேர்த்து மொத்தமாக 4,533,902 (44.13% ) வாக்குகளைப் பெற்றார். https://www.virakesari.lk/article/194554
  22. நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, நாளை காலை இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நாளை நடைபெறவுள்ளது. அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். நிதியமைச்சர் நியமனம் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். அதற்கு மேலதிகமாக புதிய ஜனாதிபதியின் கீழ் 15 அமைச்சுப் பொறுப்புகளும் கொண்டுவரப்படவுள்ளன. சில அமைச்சுகளின் பொறுப்புகள் ஹரிணி மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. அதனையடுத்து இரண்டொரு நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அமைச்சுகளின் நிர்வாகம் அமைச்சு செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. https://tamilwin.com/article/anurakumara-as-president-tomorrow-morning-1727013782
  23. அநுரவின் வெற்றி பன்மைத்துவம் மற்றும் சமூகநீதியை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் - மனோகணேசன் Published By: VISHNU 22 SEP, 2024 | 07:23 PM (நா.தனுஜா) அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் முதலாவது வாக்குகள் எண்ணப்பட்டு வெளியான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்த வேளையில், அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கூறி தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்த மனோகணேசன், அப்பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: 'மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். அதேபோன்று சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக நாம் கடுமையாகப் பணியாற்றிய மத்திய, மேல், சப்ரகமுவ, ஊடக மாகாணங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நாம் நன்றி கூறுகின்றோம். ஜனநாயக செயன்முறை வெளிப்பட்டிருக்கிறது. அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார். https://www.virakesari.lk/article/194551
  24. 226,343 வாக்குகளைப் பெற்றார் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் Published By: VISHNU 22 SEP, 2024 | 07:41 PM (நா.தனுஜா) வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடம் ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்கள் ஒப்பீட்டளவில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது செல்லுபடியான வாக்குகளில் 1.70 சதவீதமாகும். மிகக்காத்திரமானதாகக் கருதப்பட்ட இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த சில தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கியிருந்தன. தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் அதேவேளை, தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதை சர்வதேச சமூகத்துக்குக் கூறும் நோக்கில் களமிறக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இப்பொதுவேட்பாளர் வட, கிழக்கு மாகாணங்களில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல், அதாவது சுமார் 700,000 வாக்குகளைப் பெறவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் போட்டித்தன்மை மிக அதிகமான இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதன்படி அவர் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 36,377 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கிறார். அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 31.39, 16.74 சதவீதம் ஆகும். அதேபோன்று அரியநேத்திரன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 18,524 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 36,905 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் 9.985 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும் இருக்கிறார். அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 7.74, 11.58, 2.36 சதவீதம் ஆகும். மேலும் அரியநேத்திரன் வட, கிழக்கு மாகாணங்களில் தொகுதிவாரியாகப் பெற்ற வாக்குகளை நோக்குகையில் வடக்கில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் 11,170 வாக்குகளையும், காங்கேசன்துறையில் 5,726 வாக்குகளையும், மானிப்பாயில் 11,587 வாக்குகளையும், கோப்பாயில் 11,410 வாக்குகளையும், உடுப்பிட்டியில் 8,467 வாக்குகளையும், பருத்தித்துறையில் 8,658 வாக்குகளையும், சாவகச்சேரியில் 9,159 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். அடுத்ததாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னாரில் 10,757 வாக்குகளையும், வவுனியாவில் 11,650 வாக்குகளையும், முல்லைத்தீவில் 12,810 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் சேருவிலில் 2,412 வாக்குகளையும், திருகோணமலையில் 11,300 வாக்குகளையும், மூதூரில் 4,381 வாக்குகளையும் பெற்றிருக்கும் அரியநேத்திரன், மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட்ததில் கல்குடாவில் 10,890 வாக்குகளையும், மட்டக்களப்பில் 12,758 வாக்குகளையும், பட்டிருப்பில் 12,356 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். மேலும் திகாமடுல்லை தேர்தல் மாவட்டததில் அம்பாறையில் 28 வாக்குகளையும், சம்மாந்துறையில் 2,299 வாக்குகளையும், கல்முனையில் 2,623 வாக்குகளையும், பொத்துவிலில் 4,802 வாக்குகளையும் அரியநேத்திரன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194550
  25. தேர்தல் இறுதி முடிவுகள் அண்ணை பிறகென்ன யாழிலையும் புதிய ஜனாதிபதியின் வகுப்புத் தோழன் இருக்கிறார் என நாங்களும் எழுதுவமெல்லோ!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.