Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலர்பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இதேவேளை, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். முதலாம் இணைப்பு பதவி விலகல்கள் நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தநிலையில், தற்போது இரண்டு மாகாணங்களின் ஆளுநர்கள் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இதன்படி, இதன்படி வடமத்திய மாகாண ஆளுநர் மகிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். முன்னதாக நேற்றைய தினம் தென் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஆளுநர் பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பதவி விலகிய பிரதமர் இதேவேளை, பிரதமர் தினேஸ் குணவர்தன தான் பதவி விலகலை இன்று காலை அறிவித்துள்ளார். இந்த நிலையில், புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்க தரப்பின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://tamilwin.com/article/two-governors-have-resigned-from-their-positions-1727069192#google_vignette
  2. தேர்தலுக்குப் பின் இதுவரை எந்த முறைப்பாடுகளும் இல்லை - பெப்ரல் 23 SEP, 2024 | 07:52 PM (எம்.ஆர்.எம்.வசீம்) தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டின் (பெப்ரல்) நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான முறைப்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வராலாற்றில் இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. தேர்தல் இடம்பெற்ற பின்னர் பல்வேறு சட்ட மீறல்கள், வன்முறைகள் தொடர்பில் கடந்த காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகி இருக்கிறன்ற போதும் இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இதுவரை எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை. அதனால் தேர்தலுக்கு பின்னரான இந்த காலப்பகுதியில் தொடர்ந்தும் அமைதியாக செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். ஒட்டுமொத்த தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் பயமுறுத்தல், அச்சுறுத்தல்கள் என எமது பெப்ரல் நிறுவனத்துக்கு 1800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகளில் அரச அதிகாரம், அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் சமூக வலைத்தலங்கள் ஊடாக இடம்பெற்ற சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவானது, தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியிலிருந்து தேர்தல் தினத்தன்று வரைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடம் காணப்பட்டாலும், தேர்தல் செயன்முறை முழுவதும் சட்டம் ஒழுங்கை வினைத்திறனாகப் பேணுவதற்கும், பக்கச்சார்பற்ற வகையில் செயலாற்றுவதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஏற்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் ஒத்துழைப்புடன் செயலாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதித் தேர்தலை ஒழுங்குபடுத்தல், தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதைக் குறைத்தல், வன்முறைகளைக் குறைத்தல் மற்றும் பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாத்தமைக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கும், இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும் பெப்ரல் அமைப்பு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அமைதியான தேர்தலை நடத்துவதற்கு, குறிப்பாக ஜனநாயகத்தின் மீது ஆழ்ந்த அர்ப்பணிப்புக் கொண்டு ஒத்துழைப்பு நல்கிய பிரஜைகளுக்கு எமது நன்றிகளை தெவித்துக்கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/194643
  3. இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானம் - இன்று விசேட கூட்டம் Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 08:44 PM பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டமொன்றில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்டதலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும் என பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைப்பதற்கு ஏனைய கட்சிகளிற்கு அழைப்பு விடுப்பதற்கும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. https://www.virakesari.lk/article/194644
  4. ஜனாதிபதி அநுரகுமார கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் 23 SEP, 2024 | 05:22 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், மகாநாயக்க தேரர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/194637
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி பதவி, பிபிசி செய்தியாளர் 23 செப்டெம்பர் 2024, 10:58 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் நம் தோலின் மேற்பரப்பில் பல நூறு கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்கள் வாழ்கின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நலனில் அவை வகிக்கும் முக்கிய பங்கை சமீப காலமாக தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம். நமது தோலின் மேற்பரப்பின் ஒரு சதுர சென்டிமீட்டரை எங்கு ஸூம் செய்து பார்த்தாலும் அங்கு 10,000 முதல் 10 லட்சம் பாக்டீரியாக்கள் வரை இருக்கும். உங்கள் உடல் முழுவதும் ஒரு செழிப்பான நுண்ணுயிரிகளின் உலகமே உள்ளது. இது மிகவும் அருவருப்பானது என்று கூட தோன்றலாம். ஆனால் இதில் அருவருப்படைய ஒன்றுமேயில்லை. ஏன் தெரியுமா? நமது தோல் ‘மைக்ரோபயோட்டா’ நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதற்கான ஆய்வு ரீதியான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே ஆன்டி-பாக்டீரியா சோப்புகளின் பக்கமே போகாதீர்கள். உங்கள் குடலில் வசிக்கும் நுண்ணுயிரிகள் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள், மற்றும் பிற ஒற்றை செல் உயிரினங்களின் இந்தக் குழுவின் பன்முகத்தன்மை, நீரிழிவு நோய் முதல் ஆஸ்துமா மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட நோய்களின் வரம்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நமது தோல் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு வாழ்விடத்தை வழங்குகிறது நோய்க்கிருமிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்புக் கவசம் இதே போன்று நமது தோலில் சவாரி செய்யும் நுண்ணுயிரிகள் நமக்கு நன்மை பயக்கும். இது நமது தோலின் மேற்பரப்பு வழியாக ஊடுருவி தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளுக்கு எதிராக முதல் பாதுகாப்பு கவசமாக விளங்குகின்றன. அதுமட்டுமின்றி, அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சில ரசாயனங்களை உடைக்கவும், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கவும் அவை உதவுகின்றன. நமது குடலுக்கு அடுத்தபடியாகத், தோலில் பாக்டீரியாக்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இது ஆச்சர்யமளிக்கும் விஷயம் தான். நமது வாய் அல்லது குடல் பகுதியில் பாதுகாப்பான, சூடான மற்றும் ஈரமான சூழல் இருக்கும். அதனை ஒப்பிடும்போது, நமது தோல், பாக்டீரியாக்களுக்கு உகந்த இடமாக இருக்காது என்று தோன்றலாம். “உடலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பாக்டீரியாக்களுக்கு தோல் உகந்த சூழலாக இருக்காது,” என்று பிரிட்டனில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் ஹுலிங் விரிவுரையாளர் ஹோலி வில்கின்சன் கூறுகிறார். “தோல் பகுதி வறண்ட, தரிசு பகுதியாக இருக்கும். வெளிச்சூழல்களுக்கு அதிகம் வெளிப்படும். தோலில் வாழும் பாக்டீரியாக்கள் இந்த அழுத்தங்களைச் சமாளிக்க பல லட்சம் ஆண்டுகளாகத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு தங்கள் தன்மையை மாற்றிக் கொண்டு உருவாகியுள்ளன," என்று அவர் விளக்குகிறார். மேலும், இந்தப் பரிணாமம் நமக்கு பல நன்மைகளை தந்துள்ளது. அதே சமயம், நமது தோலின் அனைத்துப் பகுதிகளிலும் பாக்டீரியாக்கள் சமமாக வசிப்பதில்லை. பாக்டீரியாக்களுக்கு வசிக்க மிகவும் குறிப்பிட்ட விருப்பத்தேர்வுகள் உள்ளன. உங்கள் நெற்றி, மூக்கு, அல்லது முதுகில் பஞ்சை வைத்து சாம்பிள் எடுத்து ஆய்வு செய்து பாருங்கள். இந்தப் பகுதிகளில் க்யூட்டிபாக்டீரியம் (Cutibacterium) என்ற வகை பாக்டீரியா நிறைந்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். க்யூட்டிபாக்டீரியம் என்ற பாக்டீரியா இனம், நமது சரும செல்களால் உருவாக்கப்பட்ட எண்ணெயை உண்பதற்காக உருவாகியுள்ளது. இது, நமது உடலின் வெளிப்புற அடுக்கை ஈரப்பதமாக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் உதவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சில பாக்டீரியாக்கள் நமது சரும செல்களைத் தூண்டி, நீர் இழப்பைத் தடுக்கும் `sebum' உற்பத்தி செய்யத் தூண்டுகிறது மனித-பாக்டீரியா உறவு வெப்பத்தன்மை கொண்ட, வியர்வை அதிகம் சேரும் அக்குளில் பஞ்சை ஸ்வாப்பை பயன்படுத்தி ஒரு மாதிரியை எடுத்துப் பார்த்தால், அங்கு ஸ்டேஃபிளோகோகஸ், மற்றும் கோரினேபாக்டீரியம் ஆகிய பாக்டீரியாக்களைக் காணலாம். கால்விரல்களுக்கு இடையில் ப்ரோபியோனி பாக்ட்ரியம் என்ற இனத்தைச் சேர்ந்த பாக்டீரியா ஏராளமாக இருப்பதைக் காணலாம். அவற்றில் சில பரந்த அளவிலான பூஞ்சைகளுடன் சீஸ் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. கைகள் மற்றும் கால்கள் போன்ற தோலின் வறண்ட பகுதிகள், பாக்டீரியாக்கள் வாழ உகந்த சூழலாக இருக்காது. எனவே, இங்கு வாழும் நுண்ணுயிரி இனங்கள் இங்கு அதிக காலம் தங்க முனைவதில்லை. இந்த நுண்ணுயிரிகளும் மனிதர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு வகையான கூட்டுவாழ்வு தொடர்புகளை உருவாக்கியுள்ளனர். நமது தோலில் வசிக்கும் பாக்டீரியா, பூஞ்சை, மற்றும் ‘மைட்’ எனும் சிறு பூச்சிகள் தோலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலம் உயிர் வாழ்கின்றன. அதே சமயம் நாமும் இந்த நுண்ணுயிரிகளின் இருப்பை சார்ந்துள்ளோம். அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிடுகின்றன. அவை பெருகுவதைத் தடுக்க உதவுகின்றன. இளமையான தோற்றத்தைத் தரும் பாக்டீரியாக்கள் "இந்த பாக்டீரியாக்கள் அனைத்தும் ஏற்கனவே நம் தோலில் இருப்பதால், நோய்க்கிருமிகள் ஊடுருவுவது மிகவும் கடினம்," என்று வில்கின்சன் கூறுகிறார். தோல் பாக்டீரியாக்கள் நோய் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் ரசாயனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவற்றுக்கு எதிராக போரை நடத்தும், அல்லது அவற்றை நேரடியாகக் கொல்லும். எடுத்துக்காட்டாக, ஸ்டஃபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் (Staphylococcus epidermidis) மற்றும் ஸ்டஃபைலோகாக்கஸ் ஹோமினிஸ் (Staphylococcus hominis) ஆகிய பாக்டீரியா இனங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் சார்ந்திருக்கக் கூடியவை. தோல் நோய்த்தொற்றுகளின் பொதுவான காரணியான ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) என்ற பாக்டீரியா இனத்தைத் தடுக்க இந்த இரண்டு பாக்டீரியா இனங்களும் நுண்ணுயிர எதிர்ப்பு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. சில விஞ்ஞானிகள், நமது குடல் நுண்ணுயிரியைப் போலவே, தோல் நுண்ணுயிரிகளும் குழந்தை பருவத்தில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் ‘பயிற்சி’ செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும், எந்த நுண்ணியிரியைத் தாக்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைக் கற்பிப்பதாகவும் நம்புகிறார்கள். என்வே தோலில் உள்ள சில பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையால் ஒவ்வாமைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தோல் நுண்ணுயிரிகள் மற்ற முக்கியச் செயல்பாடுகளையும் கொண்டுள்ளன. உதாரணமாக, சில பாக்டீரியாக்கள் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, நமது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதன் மூலம் இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவும் என்று கருதப்படுகிறது. நச்சுப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் உள்ளே வருவதைத் தடுக்கவும், நீர்ச் சத்து வெளியேறுவதைத் தடுக்கவும், நமது தோல் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதன் மேல்புறம் எளிதில் ஊடுருவக்கூடிய வகையில் உள்ளது. மேல் அடுக்கு ‘ஸ்ட்ராட்டம் கார்னியம்’ (stratum corneum) என்று அழைக்கப்படுகிறது. கார்னியோசைட்டுகள் எனப்படும் இறந்த செல்களில் உருவாகிறது. இது லிப்பிடுகள் எனப்படும் கொழுப்பு மூலக்கூறுகளுடன் அமைந்துள்ளது. "தோலின் மேல் அடுக்கு மிகவும் கடினமானது, நீர் புகாதது. அதனால் தான் நாம் மழையில் செல்லும்போது நம் தோல் கரைவதில்லை," என்கிறார் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தோல் மருத்துவத்தின் பேராசிரியரான கேத்தரின் ஓ'நீல். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழல் அனைத்தும் நமது தோலின் நுண்ணுயிரியை பாதிக்கும் ஸ்ட்ராட்டம் கார்னியத்திற்கு அடியில், கெரடினோசைட்டுகள் எனப்படும் நேரடி தோல் செல்கள் அடுக்கடுக்காக இருக்கும். இந்தத் தோல் செல்களுக்கு இடையே சிறிய இடைவெளிகள் உள்ளன. இவற்றின் மூலம் நீர் கசியும். இதைத் தடுக்க, கெரடினோசைட்டுகள் லிப்பிட்களை (கொழுமியம்) உருவாக்குகின்றன. இது ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. "இது ஒரு செங்கல், சிமெண்ட் அமைப்பை போன்றது," என்று வில்கின்சன் கூறுகிறார். "உங்கள் செல்களுக்கு இடையில் இந்த லிப்பிடுகள் இருக்கும். அவை எல்லாவற்றையும் ஒன்றாக வைத்திருக்கும் பசை போல செயல்படுகின்றன," என்கிறார் அவர். இந்தத் தோல் அமைப்பில் பாக்டீரியாக்களின் பங்கு என்ன? நமது தோலில் வாழும் சில பயனுள்ள பாக்டீரியாக்கள் லிப்பிட்களை தாங்களே உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், அதிகக் கொழுப்புகளை உற்பத்தி செய்ய நமது சரும செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன. எடுத்துக்காட்டாக, க்யூட்டிபாக்டீரியம், லிப்பிட் நிறைந்த சருமத்தை உற்பத்தி செய்ய தோலைத் தூண்டுகிறது. இது நீர் இழப்பைக் குறைக்கிறது, ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. முகப்பரு முதல் பொடுகுத் தொல்லை வரை ஒருவேளை தோல் நுண்ணுயிரியின் மென்மையான சமநிலை சீர்குலைந்தால் என்ன நடக்கும்? இந்த நிலையை தோல் ‘டிஸ்பயோசிஸ்’ என்பார்கள். இதனால் அடோபிக் டெர்மடிடிஸ் (ஒரு வகை எக்ஸீமா - eczema - எரிச்சல், வறண்ட தோல் ஆகிய பிரச்னைகள்) முதல் ரோசாசியா என்ற முகப்பரு மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற தோல் பிரச்னைகள் ஏற்படும். உச்சந்தலையில் பொடுகு இருப்பது கூட ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சை இனத்துடன் தொடர்புடையது. Malassezia furfur மற்றும் Malassezia globosa ஆகிய பூஞ்சை இனங்கள் ‘ஒலிக் அமிலம்’ எனப்படும் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இது உச்சந்தலையில் உள்ள ஸ்ட்ராட்டம் கார்னியம் செல்களைத் தொந்தரவு செய்கிது, அரிப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இதுபோன்ற சந்தர்பங்களில், நோய் நிலை தோல் நுண்ணுயிரிகளால் உண்டாகிறதா அல்லது நோயின் விளைவாக தோல் நுண்ணுயிரி மாறியதா என்பதை நிறுவுவது கடினம். நமக்கு வயதான தோற்றம் ஏற்படுவது ஏன்? பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு மோசமான விளைவு, தோல் வயதான தோற்றம் பெறுவது. நமக்கு வயதாகும்போது, தோலில் வாழும் பாக்டீரியாக்களின் வகைகள் மாறுகின்றன. நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் மற்றும் சருமத்தை ஈரப்பதமாகவும் நீர் வற்றாமலும் வைத்திருக்க உதவும் ‘நல்ல’ பாக்டீரியா இனங்கள் குறையும். அவற்றுக்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் சருமத்தில் அதிக அளவில் உருவாகும். இவை தோலின் குணப்படுத்தும் தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்தும். "பொதுவாக, வயதானவர்கள் வறண்ட சருமத்தைக் கொண்டுள்ளனர். இது கொழுப்பு உற்பத்திக்கு உதவும் பாக்டீரியா வகைகள் குறைவதால் ஏற்படும் நிலை," என்று வில்கின்சன் கூறுகிறார். "இது தோலில் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது. ஏனெனில், இது தோலின் இறுக்கமான நிலையை மாற்றி, அதனைத் தளர்வடைய வைக்கிறது. வயதானவர்கள் சருமத்தின் உறுதியான தன்மையை இழக்க நேரிடுவதால், தன்னிச்சையான காயம் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்கிறார் அவர். துரதிருஷ்டவசமாக, தீங்கு விளைவிக்கும் தோல் பாக்டீரியாக்கள் காயம் ஆறுவதைத் தாமதப்படுத்தக் கூடும். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தோல் மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியல் பேராசிரியரான எலிசபெத் க்ரைஸின் ஆராய்ச்சியில், காயமடைந்த எலிகளின் தோலில் நல்ல நுண்ணுயிரி இல்லாத பட்சத்தில் அவை குணமடைய அதிக நேரம் எடுக்கும் என்பதைக் காட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தோலில் உள்ள பாக்டீரியா இனங்களின் சமநிலை, சருமத்தின் தோற்றத்தை பாதிக்கிறது இதற்கிடையில், ஹல் யார்க் மருத்துவப் பள்ளியில் வில்கின்சனின் சக ஊழியர்களின் ஆய்வு, ஒரு நபரின் நாள்பட்ட காயம் குணமாகுமா இல்லையா என்பது தோல் பாக்டீரியாக்களை சார்ந்திருப்பதாக காட்டுகிறது. தோலின் பாக்டீரியா அளவை வைத்து இதனை கணித்து விட முடியும் என்கின்றனர். நாள்பட்ட, குணமடையாத காயங்கள் உயிருக்கு ஆபத்தான தோலின் நிலையாகும். இந்தப் பிரச்னை நான்கு நீரிழிவு நோயாளிகளில் ஒருவரையும், 65 வயதுக்கு மேற்பட்ட 20 பேரில் ஒருவரையும் பாதிக்கிறது. "எதிர்காலத்தில் எந்த நோயாளிகளுக்கு குணமடையாத காயங்களை உருவாகும் அபாயம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும், அது வருவதற்கு முன்பே வருமுன் காக்கும் தலையீட்டை வழங்குவதற்கும் இதுபோன்ற உத்திகளைப் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறோம். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் கால் நீக்கப்பட வேண்டிய நிலை அல்லது மிகவும் மோசமான தொற்று நோயை உருவாக்கும் சூழலில் இருந்து மீட்கலாம்," என்று வில்கின்சன் கூறுகிறார். புற ஊதா கதிர்வீச்சு அபாயத்தை பாக்டீரியாக்கள் தடுக்குமா? சில ஆய்வுகள் தோல் நுண்ணுயிரிகள் உண்மையில் தோலின் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கின்றன என்று கண்டறிந்துள்ளன. புற ஊதா கதிர்வீச்சின் (ultraviolet radiation) சில தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து தோல் நுண்ணுயிரி நம்மைப் பாதுகாக்கும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. புற ஊதா கதிர்வீச்சு, தோலைத் தாக்கும் போது அது டி.என்.ஏ-வைச் சேதப்படுத்தும். இருப்பினும், தோல் செல்கள் ஒரு உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு பொறிமுறையைக் கொண்டுள்ளன. "புற ஊதா கதிர்வீச்சு தோலைத் தாக்கும் போது. நுண்ணுயிரிகள் பெருகுவதை நிறுத்திவிடுகின்றன. சேதமடைந்த செல்களை அவை சரிசெய்ய முனைகின்றன," என்று ஓ'நீல் கூறுகிறார். "அதைச் சரிசெய்ய முடியாவிட்டால், செல்கள் தாமாகவே அழிந்துவிடும்," என்கிறார் அவர். இதற்கு நேர்மாறாக, ஒரு ஆய்வில், தோலில் இருந்து நுண்ணுயிர் நீக்கப்பட்டால், சேதமடைந்த டி.என்.ஏ-வைக் கொண்டுள்ள செல்கள் தொடர்ந்து பெருகிகின்றன என்று கண்டறியப்பட்டது என்கிறார் ஓ'நீல். "இந்தச் செயல்முறை தான் புற்றுநோய் போன்ற கட்டிகளுக்கு எதிரான மிகவும் முக்கியமான பாதுகாப்பு பொறிமுறை," என்று ஓ'நீல் கூறுகிறார். "மேலும் இதில் தெளிவாக நுண்ணுயிர் ஒரு பெரிய பகுதியாக செயல்படுகிறது," என்கிறார். குடல் ஆரோக்கியம் தோலின் தோற்றத்தை பாதிக்குமா? தோல் நுண்ணுயிரிகள் குடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தோல் காயங்கள் குடல் நுண்ணுயிரியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும், சமீபத்திய ஆய்வின்படி, இது ஒரு நபருக்கு குடல் அழற்சியை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. தோல் நுண்ணுயிரிகளின் பூஞ்சை இனமான 'Malassezia restricta’, ‘கிரோன்’ என்னும் குடல் அழற்சி நோயுடன் தொடர்புடையது மற்றும் பெருங்குடல் அழற்சியை அதிகரிக்கலாம் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. "குடல்-தோல் இரண்டுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, மோசமான உணவுப் பழக்கம் கொண்டிருப்பவர்கள் மோசமான சருமத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் நமது சரும நுண்ணுயிரியில் ஏதேனும் சமநிலை பாதிக்கப்பட்டால் அது நமக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்ற எண்ணம் முற்றிலும் தவறு," என்கிறார் பெர்ன்ஹார்ட் பேட்ஸோல்ட். இவர் எஸ்-பயோமெடிக் என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி. இந்த நிறுவனம் தோல் நுண்ணுயிரியை மீட்டெடுப்பதன் மூலம் முகப்பரு போன்ற நிலைகளுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "இருப்பினும், மிக சமீபத்தில், தோல்-குடல் தொடர்பு உண்மையில் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தோம்," என்கிறார் அவர். தோல் நுண்ணுயிர்கள் பற்றியும் ஆரோக்கியம் மற்றும் நமது நலனில் அவற்றின் பங்கு பற்றியும் மேலும் அறிந்து கொண்டதால் விஞ்ஞானிகளிடையே உற்சாகம் அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ மாணவர்களில் ஆறில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி - என்ன காரணம்?17 ஆகஸ்ட் 2024 சிகிச்சை முறைகள் நமது தோலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் கொண்டு மாற்றுவதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா என்று பலருக்கு சந்தேகம் எழலாம். நீங்கள் விரும்பினால், ஒரு வகையான நுண்ணுயிர் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இருப்பினும், அவ்வாறு செய்வது உங்கள் உடலில் ஏற்கனவே இருக்கும் மைக்ரோ பயோட்டாவை அழிக்க நேரிடும். இது ஆண்டிபயாடிக் தன்மையின் வளர்ச்சி போன்ற பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். நமது தோல் நுண்ணுயிரிகளும் நமது சுற்றுச்சூழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே நம் உடலில் உள்ள பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்களின் பன்முகத்தன்மைக்கு நம்மைச் சுற்றியுள்ள சூழல் எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் கூட, நமது சரும நுண்ணுயிரிகளின் தன்மையை மாற்றியமைக்க முடியும். சில நிறுவனங்கள் ‘ஆரோக்கியமான’ நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு ‘ப்ரீபயாடிக்குகள்’ மற்றும் ‘ப்ரோபயாடிக்குகள்’ மூலம் நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிப்பதன் மூலம் அல்லது உங்கள் முகத்தில் பாக்டீரியா புரதங்கள் அல்லது லிப்பிட்களை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும் என்று நம்புகின்றன. இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு சிறிய அளவில் வெளியிடப்பட்ட சில சான்றுகள் உள்ளன. ஆனால், இது பல்வேறு தோல் பாக்டீரியாக்களின் சமநிலையை மாற்றும் அபாயம் உள்ளது. பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்கள் ‘பாக்டீரியோபேஜ்கள்’ என அறியப்படுகிறன. அவை நல்ல நுண்ணுயிரிகளுக்குத் தீங்கு விளைவிக்காமல், ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுமா என்று கூட வில்கின்சன் ஆராய்ந்து வருகிறார். "நோய்க்கிருமி பாக்டீரியாவைக் குறைப்பதன் மூலமும், இயற்கையான மைக்ரோபயோட்டாவை மீட்டெடுக்க அனுமதிப்பதன் மூலமும், நீங்கள் காயத்தை சரிசெய்வதை துரிதப்படுத்தலாம்," என்று அவர் கூறுகிறார். "எனவே, இது எங்களுக்கு மிகவும் உற்சாகமானது. மேலும் இது இறுதியில் இந்த நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் விதத்தில் ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்கும்," என்கிறார். [இது பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு] https://www.bbc.com/tamil/articles/cdrl3g02x0do
  6. அநுர குமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு; மன்னாரில் வெற்றிக் கொண்டாட்டம் Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 04:30 PM இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையில், மன்னாரில் இன்று திங்கட்கிழமை (23) காலை 11.30 மணியளவில் ஆதரவாளர்களினால் வெற்றிக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பஜார் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) மன்னார் மாவட்ட கிளையினால் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது பொங்கல் பொங்கி மக்களுக்கு வழங்கப்பட்டு தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடினர். இதன்போது அவர் வாக்குறுதி வழங்கிய மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர். குறித்த நிகழ்வில் ஆதரவாளர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194630
  7. இடைக்கால அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார்..! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நாளைய(24) தினம் இடைக்கால அமைச்சரவையை நியமிப்பார் என தேசிய மக்கள் சக்தியின்(npp) மூத்த தலைவர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். நாடாளுமன்றம்(parliament) விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நவம்பர் மாத இறுதியில் தேர்தலை இலக்காகக் கொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை புதிய அமைச்சரவை பதவியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜித ஹேரத் மற்றும் ஹரிணி அமரசூரிய தற்போது விஜித ஹேரத்(vijitha herath) மற்றும் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) ஆகியோர் நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களாக உள்ளனர். அவர்களுடன் விரைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிடமான ஆசனத்திற்கு லக்ஸ்மன் நிபுணராச்சியும் இணைந்து கொள்ளவுள்ளார். தேசிய மக்கள் சக்தி ஆரம்பத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட அமைச்சரவையுடன் ஆட்சியமைக்குமா அல்லது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதன் பின்னர், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படலாம் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். வடக்கு, கிழக்கு, மலையக பிரதிநிதிகள் அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமரசிங்க, வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக விளக்கினார். சமரசிங்க தனது உரையின் போது, 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார். அநுர உட்பட நான்கு பேர் அமைச்சரவையில் “ஆரம்பத்தில், தோழர் அநுர உட்பட நான்கு பேர் எமது அமைச்சரவையில் இருப்பார்கள். மேலும் கலந்துரையாடலுக்கு பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களாக அமைச்சரவை விரிவுபடுத்தப்படலாம்,” என்றார். இதேவேளை, புதிய ஜனாதிபதி அரசாங்கத்தை நிர்வகிப்பதற்கு அமைச்சுச் செயலாளர்களை நியமிப்பார் என தேசிய மக்கள் சக்தியின் சமந்த வித்யாரத்ன நேற்று ஆதரவாளர்களுக்கு அறிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளராக முன்னாள் சுங்க அதிகாரியான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/who-will-be-in-npps-interim-cabinet-1727089789#google_vignette
  8. சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய மக்கள் சக்தி(SJB) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவை ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம், தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சாகர காரியவசம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா என பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம்(sagara kariyawasam) கொழும்பு ஊடகமொன்று வினவியபோது, அவர் அவ்வாறு செய்ய மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார். “அவர்களை ஆதரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கட்சியாக, நாங்கள் ஒரு தனித்துவமான கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் எங்களுடைய கொள்கைகளிலிருந்து வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டுள்ளன. வேறு சிலரைப் போலல்லாமல், அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமே அவர்களை ஆதரிக்க நாங்கள் தயாராக இல்லை என்றார். மகிந்த அமரவீர தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருமான மகிந்த அமரவீரவிடம்(mahinda amaraweea), தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவது பற்றி அவர்கள் பரிசீலிப்பார்களா கேட்டபோது, "நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று நம்பவில்லை."என்றார். திஸ்ஸ அத்தநாயக்க இதே கேள்விக்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க(tissa attanayake), ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க திட்டமிடவில்லை அல்லது தேசிய மக்கள் சக்தி எந்த நோக்கத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால், கூட்டணி அரசாங்கத்தைப் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று கூறினார். “ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த ஆணைகள் வேறுபட்டவை. திஸாநாயக்கவுடன் முன்னோக்கிச் செல்ல நாங்கள் தயாரா என்று யாராவது எங்களிடம் கேட்டால், அவ்வாறான தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி அத்தகைய திட்டம் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” என்றார். https://ibctamil.com/article/slpp-sjb-slfp-veto-backing-npp-1727077375
  9. புதிய ஜனாதிபதி அநுர பதவியேற்பு; மட்டு.மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 03:51 PM இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவிப் பிரமாணம் செய்த வைபவத்தை யொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சமய தலைவர்களும் பங்கு கொண்டிருந்தனர். தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு ஏற்பாடு செய்ததாக சாந்தி குளிர்பானம் வழங்கும் வைபவம் மட்டக்களப்பு நாவற்குடா பிரதான வீதி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற வடிவத்தில் மாவட்ட நிறைவேற்றிச் செயற்குழு உறுப்பினர் என். சுசாகரன் உட்பட பல தேசிய மக்கள் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் பெரும் வரட்சியினால் மக்கள் அவதிப்படுகின்ற சூழ்நிலையில் வீதியால் பயணிக்கும் பயணிகளுக்கு தேசிய மக்கள் சக்தியினர் குளிர்பானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/194624
  10. முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் புதிய ஜனாதிபதி அநுர! இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து முப்படைகளின் தளபதிகளை சந்தித்துள்ள புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பது தொடர்பில் அவர்களுடன் விசேட கலந்துரையாடலில் அநுர ஈடுபட்டுள்ளார். முப்படைகளின் தளபதி மேலும், அநுர குமார திஸாநாயக்கவின் பாதுகாப்பிற்காக விசேட கமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம் (22) தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/sl-new-president-anura-meets-military-chiefs-force-1727074011#google_vignette
  11. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 04:39 PM இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ரவி செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அவர், விசேட அதிரடிப் படையின் ஆரம்பகால உறுப்பினராகவும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளராகவும், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் முதல் செயலாளராகவும், இன்டர்போல் இலங்கைக் கிளையின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/194615
  12. ஜனாதிபதித் தேர்தல் பிரிவினைகளை ஊக்குவிக்காத அமைதியான தேர்தலாக அமைந்திருந்தது - ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 02:55 PM இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன, மதபேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு நாட்டுக்கு வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டருந்த நிலையில், தேர்தல் நிறைவடைந்ததையடுத்து ஊடகவியலாளர் மாநாடொன்றை இன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமை அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் இன, மதபேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது. தேர்தல் ஆணைக்குழு வெளிப்படைத்தன்மை, செயற்திறன்மிக்க தன்மையுடன், எவ்வித சந்தேகங்களையும் தோற்றுவிக்காத வகையில் செயற்பட்டது. ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட 39 பேரில் பெண் வேட்பாளர்கள் எவரும் உள்ளடங்காமை மிகுந்த கரிசனைக்குரியது. எதிர்வருங்காலத்தில் இதுகுறித்து அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம். 39 வேட்பாளர்களில் சிலர் பிரசார நடவடிக்கைகளைக்கூட முன்னெடுக்கவில்லை. அவர்களுக்காக அரச நிதி செலவிடப்படுவது கரிசனைக்குரிய விடயமாகும். இதனை சீரமைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் அமைதியான தேர்தல் இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கூறப்பட்ட அதே தினத்தில், திடீரென ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை ஒன்றுக்கொன்று முரணான தன்மையைக் காண்பிக்கிறது. தேர்தல் பிரசாரங்களின்போது சம்பள உயர்வு, வட்டி அற்ற கடன் போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கும் போக்கு ஏற்புடையதல்ல. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவுக்கு தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் 5000 முறைப்பாடுகளும், தேர்தல் தினத்தன்று 600 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அதிகாரி மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194613
  13. தென்னிலங்கை மக்கள் தமது தேசத்தின் தலைவனாக தற்பொழுது தேர்ந்தெடுத்துள்ள அணுரகுமாரவுக்கு வயது 55. அனுரவுக்கு அடுத்த நிலையில் அதிக வாக்குப்பெற்ற சஜித் பிரேமதாசவுக்கு வயது 57. அரசியல் களத்தைப் பொறுத்தவரையில் இவர்கள் இருவருமே இளைஞர்கள்தான். ஒப்பீட்டளவில் தென்னிலங்கை மக்கள் தங்களைத் தலைமைதாங்கும் பொறுப்புக்களை இளைஞர்களிடம் ஒப்படைக்க முன்வந்திருப்பது அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப் பெரிய மாற்றத்தின் அடையாளமாக நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது. இலங்கையில் பொருளாதார சீரழிவுகள், ஊழல்கள் போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டபோது, தென்னிலங்கை இளைஞர்களே முன்வந்து அதற்கான தீர்வை நோக்கி நாட்டை இட்டுச்சென்றிருந்தார்கள். இன்றைக்கு நாட்டையும், நாட்டின் எதிர்காலத்தையும் இளைஞர்கள் கைகளிலேயே தென்னிலங்கை ஒப்படைத்தும் இருக்கின்றது. தமிழர்களும் அதனையே செய்யவேண்டும். தமிழர் தாயகத்தின் எதிர்காலத்தை, தமிழ் மக்களின் எதிர்காலத்தை இளைஞர்களிடம் ஒப்படைக்க முன்வரவேண்டும். தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவர்களாக இளைஞர்களையே முன்நிறுத்த வேண்டும். ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் மாவை சேனாதிராஜா எடுத்த நிலைப்பாடும், ஆடியிருந்த கூத்தும் ஒன்றே போதும் உதாரணத்துக்கு. எம்மை வழிநடாத்திய எமது புதல்வர்கள் நாம் கனவில் கூட நினைப்பார்க்காத சாதனைகளையெல்லதாம் புரிந்ததை நேரில் கண்டுவிட்டும் கூட, எமது இளைஞர்களை நம்பாது வயது முதிர்ந்தவர்களிடமே திரும்பவும் எமது தலைமை ஒப்படைத்துவிட்டு, எமது அரசியல் எதிர்காலத்தை நோக்கிய பாதையில் ஒரு அங்குலம் கூட நகரமுடியாபடிக்கு கடந்த 15 வருடங்களாகத் தடுமாறிக்கொண்டிருக்கின்றோம். தலைவர் பிரபாகரன் தமிழ் இனத்தின் தேசியத் தலைவராக பரினாமம் பெற்றபோது அவருக்கு வயது வெறும் 35 மாத்திரம்தான். சூசையும், பொட்டம்மாணும், தமிழ்செல்வனும், பால்ராஜும், தீபனும் பிராந்தியத் தளபதிகளாக நியமிக்கப்பட்டு, பெரும் பெரும் வல்லரசு தேசங்களையேல்லாம் வியப்பில் ஆழத்தியபோது அவர்களுக்கு வயது வெறும் 21, 22தான். ஒரு இனத்தைத் தலைமைதாங்கி நடத்தக்கூடிய தகுதியும், பொறுப்புணர்வும், வல்லமையும், தமிழ் இளைஞர்களிடம் தாராளமாகவே இருக்கின்றது என்பதற்கு இவை வெறும் உதாரணங்கள் மாத்திரம்தான். தமிழ் இனம் தமது தம்மை தலைமைதாங்கி நடாத்துகின்ற பொறுப்பை, உணர்வை மறுபடியும் தமிழ் இளைஞர்களிடம் ஒப்படைக்க முன்வரவேண்டும். பெரியவர்கள், அனுபவஸ்தர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி, அவர்களுக்கு வழிகாண்பிக்கின்ற வகிபாகத்தை வகிக்கவேண்டும். தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு ‘அறகல’ நடக்கும்வரை காத்திராமல் உடனடியாக அதனைச் செய்தாகவேண்டும். https://ibctamil.com/article/yousters-need-to-lead-1727079860
  14. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 23 செப்டெம்பர் 2024, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா ஆகிய இருதரப்பும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் எல்லை தாண்டிய தாக்குதல்களை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவியது. போரிலிருந்து பின்வாங்குமாறு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்றுப்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சுமார் 150 ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் பிற எறிகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள் லெபனானில் இருந்து வந்தவை. சில ஏவுகணைகள் முந்தைய தாக்குதல்களை விட அதிக தூரத்தை எட்டின. இதனால் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்பு தேடி பதுங்கு குழிகளுக்குச் சென்றனர். ஹைஃபா நகருக்கு அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்து விட்டன. இதையடுத்து தெற்கு லெபனானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் மேற்கொண்டது. இந்த தாக்குதல் ஆயிரக்கணக்கான ஹெஸ்பொலாவின் ராக்கெட் லாஞ்சர்களை அழித்ததாக இஸ்ரேல் தரப்பு கூறியது. லெபனானில் ஹெஸ்பொலாவின் நிலைகளைக் குறிவைத்து தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தரிவித்துள்ளது. ஹெஸ்பொலா ராணுவ நோக்கத்திற்காக பயன்படுத்தும் இடங்களை விட்டு உடனே வெளியேறுமாறு லெபனான் மக்களை இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, "நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்" என்றார். "இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறினார். ஹெஸ்பொலா நினைத்துப் பார்க்க முடியாத பல தாக்குதல்களை அதன் மீது இஸ்ரேல் நடத்தியிருப்பதாக அவர் கூறினார். ஹெஸ்பொலா குழுவின் துணைத் தலைவர் நைம் காசிம், "அச்சுறுத்தல்கள் எங்களைத் தடுக்காது. அனைத்து சாத்தியமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட மூத்த தளபதியின் இறுதிச் சடங்கில் ஹெஸ்பொலா துணைத் தலைவர் ஷேக் நைம் காசிம். கொல்லப்பட்ட இப்ராஹிம் அகில் யார்? லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலாவின் உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில் என்பவரின் இறுதிச் சடங்கில் அவர் கூறுகையில் : "நாங்கள் ஒரு புதிய கட்டத்தில் இருக்கிறோம். இஸ்ரேல் செய்த எல்லாவற்றிருக்கும் திருப்பி கொடுக்க வேண்டிய நேரம் இது” என்றார். ஷேக் நதீம் காசிம் துக்கம் அனுசரிப்பவர்களிடம், "இஸ்ரேல் அதன் நோக்கங்களில் எதையும் நிறைவேற்றவில்லை. கடந்த மூன்று நாட்களாக, ஹெஸ்பொலா தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது" என்றார். இஸ்ரேல் குடியிருப்பாளர்கள், நாட்டின் வடக்கில் உள்ள அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிய அவர், ஹெஸ்பொலாவின் எதிர்ப்பையும் காஸாவுடனான தொடர்பையும் உடைக்க இஸ்ரேல் தவறிவிட்டது என்றும் கூறினார். இப்ராஹிம் அகில் இறுதிச் சடங்கின் போது, பெரியளவில் திரண்ட மக்கள் சவப்பெட்டியை ஏற்றி சென்ற டிரக்கை பின் தொடர்ந்தார்கள். இறுதிச் சடங்கில் துக்கம் மற்றும் கோபத்திற்கு மத்தியில், அமெரிக்கா எதிர்ப்பு உள்ளிட்ட முழக்கங்களை ஹெஸ்பொலா ஆதரவாளர்கள் எழுப்பினர். பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் ஒரு சதுக்கத்தில் இறுதி சடங்கு நடந்தது. இப்ராஹிம் அகில் மற்றும் அவருக்கு கீழ் இயங்கிய 15 பேர் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர். அகில் தலைக்கு $7 மில்லியன் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. 1980 களில் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்கள் மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. லெபனானை போருக்குள் இழுக்கும் இஸ்ரேல்? வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குடும்பங்கள் உட்பட சுமார் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது சம்பவம் நடந்த இடத்தில், உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என்று நம்பி ஒரு பெரிய பள்ளத்தின் விளிம்பில் இறந்தவர்களின் உறவினர்கள் காத்திருக்கின்றனர். ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய லெபனான் பொதுப்பணித்துறை அமைச்சர் அலி ஹாமி - இஸ்ரேல் எங்கள் பிராந்தியத்தை போருக்குள் இழுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர் "லெபனான் போரை நாடவில்லை," என்றார். “லெபனான் மக்களும் கூட போரை விரும்பவில்லை. ஆனால் இஸ்ரேல் போருக்கு வாருங்கள் என்று எங்களை அழைக்கிறது” என்றார். போர் மூளும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "எனக்குத் தெரியாது. பார்ப்போம்" என்று பதிலளித்தார். ஹெஸ்பொலா லெபனானில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் ராணுவ அமைப்பு ஆகும். இந்த ஷியா முஸ்லீம் அமைப்பு சிறந்த ஆயுத பலம் கொண்டது. இது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் 2023-ஆம் ஆண்டு 8 அக்டோபர் 8-ஆம் தேதி அதிகரித்தது. காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய மறுநாள், ஹெஸ்பொலா இஸ்ரேலிய நிலைகளை தாக்கியது. தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் 60,000 பேர் ஹெஸ்பொலாவின் தினசரி ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹைஃபாவின் பிரதான மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர் சர்வதேச தலைவர்கள் எச்சரிக்கை சமீபத்திய எல்லை தாண்டிய தாக்குதல்கள் சர்வதேச அளவில் புதிய கலக்கத்தை தூண்டியுள்ளது. சிஎன்என் ஊடகத்திடம் பேசிய ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், "லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ்-பிளாஷேர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய கிழக்கு தற்போது `பேரழிவின் விளிம்பில்’ இருப்பதாக பதிவிட்டுள்ளார். "இரு தரப்பிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எந்த ராணுவ தீர்வும் தற்போதைக்கு இல்லை" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு பெரியளவிலான போர் வெடிக்காமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அமெரிக்கா செய்யும்" என்றார். ஐரோப்பிய ஒன்றியம் இது "மிகவும் கவலைக்குரியது" என்று கூறியது. பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி "உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தார். அதிகரித்து வரும் மோதல் இராக்கில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் உட்பட பல எறிகணைகள் சனிக்கிழமை ஒரே இரவில் இஸ்ரேல் மீது ஏவப்பட்டவை என்று அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது. இரான் ஆதரவு குழுவான இராக் இஸ்லாமிய எதிர்ப்பு குழு, இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியதாக கூறியது. பள்ளிகள் மூடப்பட்டு மருத்துவமனைகள் நோயாளிகளை நிலத்தடி தளங்களுக்கு நகர்த்தி வருகின்றனர். வடக்கு இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. பத்து நபர்களுக்கு மேல் வெளியில் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்த உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹைஃபாவின் புறநகரில் உள்ள கிராய்ட் பியாலிக்கில் வசிக்கும் ஒருவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், "சுமார் 06:30 மணியளவில் ஒரு அலாரம் கேட்டது, பின்னர் உடனடியாக ஒரு மிகப் பெரிய வெடிப்பு நிகழ்ந்தது. இங்கிருந்து மூன்று அல்லது நான்கு வீடுகள் தள்ளி இது நிகழ்ந்தது. எங்கள் வீட்டில் பிரதான அறையில் ஜன்னல்கள் முற்றிலும் நாசமாயின" என்றார். இந்த வார தொடக்கத்தில், லெபனான் முழுவதும் இரண்டு நாட்களில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். வியாழன் அன்று, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, தாக்குதல்களுக்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டினார், இஸ்ரேல் "எல்லா சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டதாகக் கூறி இனி அவர்களுக்கு தண்டனை மட்டுமே பதில் சொல்லும்" என்றும் அவர் கூறினார். ஆனால் இஸ்ரேல் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. இந்த மோதல் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது லெபனானில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய பயண ஆலோசனையை வழங்கியது. பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம், "வணிக விமான சேவைகள் இருக்கும் போதே லெபனானை விட்டு வெளியேற வேண்டும்" என்று தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது. அண்டை நாடான ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் அதன் குடிமக்களுக்கு இதேபோன்ற ஆலோசனையை வழங்கியுள்ளது. லெபனானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் வெளியேறுமாறு அது வலியுறுத்தியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4g5944vxz7o
  15. Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 03:11 PM புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று திங்கட்கிழமை (23) வழங்கிவைக்கப்பட்டது. இவரை தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது. சம்பத் துயகொண்டா இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் விமானியாக செயற்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194614
  16. புதிய ஜனாதிபதி அநுரகுமாரவின் வெற்றியை வவுனியாவில் கொண்டாடிய ஆதரவாளர்கள் 23 SEP, 2024 | 02:51 PM நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (23) அவர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து, வவுனியாவில் கட்சி ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, வவுனியா இரட்டை பெரியகுளத்தில் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்களுக்கு பால் சோறு வழங்கி புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை கொண்டாடினர். https://www.virakesari.lk/article/194609
  17. ஜனாதிபதிக்கு புதிய செயலாளர் நியமனம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். https://thinakkural.lk/article/309813
  18. 23 SEP, 2024 | 03:11 PM இலங்கை தனது இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்துள்ளது என ஜேவிபியின் மத்தியகுழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு பின்னர் நீங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை பார்க்கமாட்டீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் அரசியல் உறுதிப்பாடுடைய ஒருவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார், இந்த நோக்கத்திற்கு மக்கள் தங்களின் ஆதரவை தரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ள சுனில் ஹந்துநெத்தி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். https://www.virakesari.lk/article/194619
  19. நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல்? Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 01:08 PM இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் வெற்றி உரையின் போது அனுரகுமாரதிசநாயக்க நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோடிட்டுக்காட்டியுள்ள போதிலும் எப்போது தேர்தல் இடம்பெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அனுரகுமாரதிசநாயக்க தனது முன்னைய அறிவிப்புகளிற்கு ஏற்ப நாடாளுமன்றத்தை இந்த வாரம் கலைத்தால் நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறலாம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றம் கலைப்பு,தேர்தல் குறித்த அறிவிப்பு 25ம் திகதி வெளியாகலாம் என தேர்தல் கண்காணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். வேட்பு மனுகாலம்,ஒக்டோபர் 4ம் திகதிக்குள் -அறிவிப்பு வெளியாகி பத்து நாட்களிற்குள்- வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏழு நாட்கள் தேர்தல் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பு -ஒக்டோபர் ஏழாம் திகதிக்குள் வெளியாகலாம். தேர்தல் வாக்களிப்பு திகதி -நவம்பர் 22 லிருந்து 30ற்க்குள் - நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 66 நாட்களிற்குள் தேர்தலை நடத்தவேண்டும். https://www.virakesari.lk/article/194603
  20. Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 01:28 PM புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194602
  21. இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா வாழ்த்து இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayaka) அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று (22) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வாக்களிக்கும் உரிமையை அமைதியான முறையில் பயன்படுத்திய இலங்கை மக்களை நாங்கள் பாராட்டுகிறோம். அமெரிக்கா ஒத்துழைப்பு இந்த தேர்தல் இலங்கையின் ஜனநாயக அமைப்பின் பலம், அமைதி மற்றும் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் குடிமக்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். ஒரு நிலையான, வளமான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூகத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் தேசிய இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் அடிப்படையிலான எமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து செயற்பட நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். நமது நாடுகளுக்கு இடையே பொருளாதார, பாதுகாப்பு மற்றும் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/united-states-congratulates-president-anura-kumara-1727072952
  22. யாழில் ஜனாதிபதி அநுரவிற்கு பொங்கல் Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 01:11 PM புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவியேற்றுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். https://www.virakesari.lk/article/194598
  23. Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 11:22 AM சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நீதிவழங்கவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு எதிராக உண்மையை பேசியமைக்காக நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எனது தந்தையின் உயிருக்காக நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது குடும்பமும் உறுதியாக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தின் முன்னால் உண்மைய பேசியமைக்காக 15 வருடங்களிற்கு முன்னர் நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எங்களின் தந்தைக்கு உயிருக்கு நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது குடும்பமும் தளராத உறுதியுடன் காணப்படுகின்றோம் என அறிக்கையொன்றில் அவர் தெரிவித்துள்ளார். 15வருடங்களாகின்ற போதிலும் அந்த வலி வேதனை தொடர்கின்றது, ஆனால் உண்மை பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவது குறித்து நான் மிகவும் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது இது நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தேர்தல் முடிவுகள் எனது நம்பிக்கையை புதுப்பித்துள்ளன. ஜேவிபி வரலாற்றுரீதியில் அதிகாரவர்க்கத்தினை கடுமையாக விமர்சித்து வந்துள்ளது, இலங்கையின் சமீபத்தைய மனித உரிமை வரலாற்றில் இடம்பெற்ற அநீதிகளிற்கு தீர்வை காண்பதில் இந்த புதிய தலைமைத்துவம் புதிய நோக்கத்தினை கொண்டுவரும் என நான் நம்புகின்றேன். எங்களின் துணிச்சலான திறமை மிக்க சிஐடி அதிகாரிகள் சானி அபயசேகர, நிசாந்த டி சில்வா போன்றவர்களிடம் பெருமளவு ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும், கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது. இது நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் தங்கள் எண்ணத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள், ராஜபக்சவின் பயங்கர ஆட்சியின் கீழ் பயங்கரமான இழப்புகளை சந்தித்த எனது தந்தைக்கும் ஏனைய குடும்பங்களிற்கும் நீதியை வழங்குவேன் என உறுதியளித்துள்ள அனுரகுமார திசநாயக்கவை நாங்கள் வாழ்த்துக்கின்றோம். இலங்கையில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்காக நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமாகவுள்ளோம். நீதிக்கான பாதை நீண்டமானது கடினமானது என்ற போதிலும் எனது தந்தைக்கான எனது போராட்டத்தில் அவரது பாரம்பரியத்தை கௌரவிப்பதில் நான் உறுதியாகயிருக்கின்றேன். https://www.virakesari.lk/article/194584
  24. நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் - இலங்கை 63 ஓட்டங்களால் வெற்றி 23 SEP, 2024 | 10:50 AM காலியில் இடம்பெற்ற நியுசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெறுவதற்கு 274 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 211 ஓட்டங்களிற்கு தனது இரண்டாவது இனிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 208 ஓட்டங்களிற்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரச்சின் ரவீந்திர 92 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பிரபாத் ஜெயசூரிய ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். https://www.virakesari.lk/article/194579
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி இந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1965-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 22 நாட்கள் நடந்த போரில் ஒரு நிச்சயமான முடிவு ஏற்படவில்லை. இந்தியாவின் கை நிச்சயமாக மேலோங்கி இருந்தது. ஆனால் பாகிஸ்தானிடம் எந்த அளவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை உள்ளது என்ற ரகசிய தகவல் இந்தியாவிடம் இல்லை. உண்மை என்னவென்றால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 22-ஆம் தேதி பாகிஸ்தானிடம் ஏறக்குறைய எல்லா ஆயுதங்களும் தீர்ந்துபோயிருந்தன. பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா தடை விதித்திருந்ததால் ஆயுதங்கள் மீண்டும் சப்ளை செய்யப்பட எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. முன்னாள் ரா தலைவர் சங்கரன் நாயர், 'இன்சைட் ஐபி அண்ட் ரா: தி ரோலிங் ஸ்டோன் தட் கேதர்ட் மாஸ்' (Inside IB and RAW: The Rolling Stone that Gathered Moss) என்ற புத்தகத்தில், ”அப்போதைய ராணுவ தளபதி ஜெனரல் ஜே.என்.சௌத்ரி, பாதுகாப்பு அமைச்சர் யஷ்வந்த் ராவ் சவானிடம் அறிக்கை சமர்ப்பித்தார். "பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவம் ஒரு உறுதியான வெற்றியை பெறமுடியவில்லை. எங்களிடம் துல்லியமான உளவுத் தகவல்கள் இருக்கவில்லை. இதற்குக் காரணம் இந்தத் தகவல்களைச் சேகரிக்கும் பொறுப்பு திறமையற்ற ஐ.பி. உளவாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது’ என்று சொன்னார்,” என்று எழுதியுள்ளார். இந்த குறைபாட்டை களையும் பொருட்டு இந்தியா ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு(RAW) என்ற பெயரில் புதிய உளவுத்துறை அமைப்பை நிறுவ முடிவு செய்தது. நாட்டிற்கு வெளியே உளவுத்தகவல்களை சேகரிப்பது இதன் பொறுப்பாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லியில் உள்ள ரா தலைமையகம் ‘உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் நலச் சங்கம்’ 'ரா' அமைப்பு 1968 செப்டம்பர் 21 ஆம் தேதி நிறுவப்பட்டது. ராமேஷ்வர் நாத் காவ் அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். சங்கரன் நாயர் துணை தலைவராக ஆக்கப்பட்டார். இவர்கள் இருவரைத் தவிர 250 பேர் புலனாய்வுப் பிரிவில் இருந்து 'ரா' பிரிவுக்கு மாற்றப்பட்டனர். 1971-க்குப் பிறகு ராம்நாத் காவ், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இருந்து நேரடியாக ரா ஏஜெண்டுகளைத் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைத் தொடங்கினார். ராவில் பணிபுரிந்த பலரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அந்த அமைப்பில் வேலை கிடைத்ததன. இதன் விளைவாக அது ‘உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் நலச் சங்கம்’ என்று நகைச்சுவையாக அழைக்கப்பட்டது. ஆனால், 1973-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மரபு மாறியது. ரா அமைப்பில் சேர விரும்பிய விண்ணப்பதாரர்கள் பல்வேறு கடுமையான தேர்வுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “முதல் டெஸ்ட் ஒரு உளவியல் சோதனை. வேட்பாளர்கள் அதிகாலை 3 மணிக்கு ஓரிடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்கள் அங்கு சென்றவுடன் அவர்களுக்கு அப்ஜெக்டிவ் டெஸ்ட் (multiple choice questions) நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இணைச் செயலாளரால் நடத்தப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்," என்று நிதின் கோகலே தனது ‘ஆர்என் காவ், ஜென்டில்மேன் ஸ்பைமாஸ்டர்’ புத்தகத்தில் எழுதுகிறார். பட மூலாதாரம்,MANAS PUBLICATIONS படக்குறிப்பு, 'ரா' முன்னாள் தலைவர் சங்கரன் நாயரின் புத்தகம் 'Inside IB and RAW: The Rolling Stone that Gathered Moss' 1973 இல் RAWக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கூடுதல் செயலாளராக ஓய்வு பெற்ற ஜெய்தேவ் ரானடே “அடுத்த சுற்று நேர்காணலை மூத்த RAW அதிகாரிகள் என்.என். சந்தூக் மற்றும் சங்கரன் நாயர் நடத்தினர். அதன் பிறகு வெளியுறவுச் செயலாளர், ரா தலைவர் ஆர்.என். காவ் மற்றும் ஒரு உளவியலாளர் உட்பட ஆறு பேர் கொண்ட தேர்வுக் குழுவை நாங்கள் எதிர்கொண்டோம். எனது நேர்காணல் 45 நிமிடங்கள் நீடித்தது,” என்று குறிப்பிடுகிறார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் 'ரா' அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக ரானடேவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவருடன் பிரதாப் ஹெப்ளிகர், சக்ரு சின்ஹா மற்றும் பிதான் ராவல் ஆகிய 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். “அதன் பிறகு, 1985 மற்றும் 1990-க்கு இடையில் மேலும் சிலர் இந்த வழியில் பணியமர்த்தப்பட்டனர். இது சிறப்பு சேவை உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. பின்னர் அறியப்படாத காரணங்களால் இந்த தேர்வு முறை நிறுத்தப்பட்டது. இப்போது 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியக் காவல் சேவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சிலர் சுங்கம் மற்றும் வருமான வரிச் சேவைகளில் இருந்து பொருளாதார நுண்ணறிவுப் பணிகளைக் கவனிக்க இங்கு சேர்க்கப்படுகிறார்கள்,” என்று 'ரா' சிறப்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ராணா பானர்ஜி குறிப்பிட்டார். படக்குறிப்பு, 'ரா' அமைப்பின் முன்னாள் சிறப்பு செயலாளர் ராணா பானர்ஜியுடன் ரெஹான் ஃபசல் ஐபிஎஸ் அதிகாரிகளில் இருந்து ஆள் சேர்ப்பு பற்றி எழுப்பப்படும் கேள்வி இந்த தேர்வு செயல்முறை 'ரா'வின் சில பிரிவுகளில் விமர்சிக்கப்பட்டுள்ளது. “ஒரு நபர் காவல் துறையில் அதிகாரியாக ஆவதற்குள் அவருக்கு சராசரியாக 27 வயது இருக்கும். மூன்று வருடங்களுக்குப் பிறகு 'ரா'வுக்கு வந்தால், அவருக்கு 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயது இருக்கும். இந்த வயதில் ஒரு புதிய வேலைக்கு தன்னை மாற்றிக் கொள்வது மிகவும் கடினம். இந்த நேரத்தில் அவர் அதிக ரிஸ்க் எடுக்கும் நிலையில் இருக்கமாட்டார்,” என்று முன்னாள் RAW தலைவர் விக்ரம் சூட் தனது (தி அன்எண்டிங் கேம்' (The Unending Game) என்ற புத்தகத்தில் எழுதுகிறார். “உளவு அமைப்புகளுக்கு போலீஸ் சேவையில் இருந்து ஆட்களை எடுப்பது இப்போது அவ்வளவு பயனுள்ளதாக இல்லை. இங்கு மொழியியல் திறன்கள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் கலை ஆகியவை மிகவும் முக்கியம். இதற்காக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை. இந்த அமைப்பில் உள்ளவர்கள் பொருளாதாரம், இணையம், அறிவியல் மற்றும் செயல் உத்தி ஆகிய துறைகளில் நிபுணர்களாக இருக்க வேண்டும். இவை ஒரு ஐபிஎஸ் அதிகாரியிடம் இருக்காது,” என்று அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,PENGUIN படக்குறிப்பு, முன்னாள் ரா தலைவர் விக்ரம் சூட் எழுதிய புத்தகம் 'The Unending Game' 'ரா' அதிகாரிகளுக்கு பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு புலனாய்வுத் தகவல்களைப் பெற அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் ஒரு வெளிநாட்டு மொழியில் புலமை பெற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அடிப்படைப் பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் புலனாய்வுப் பணியகத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு கடுமையான குளிரில் எவ்வாறு வேலை செய்வது என்பது கற்பிக்கப்படுகிறது. எப்படி ஊடுருவுவது, பிடிபடாமல் இருப்பது எப்படி, கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது மற்றும் புதிய தொடர்புகளை உருவாக்குவது எப்படி என்பதும் சொல்லித் தரப்படுகிறது. களத்திற்குச் செல்வதற்கு முன், அவர்களுக்கு ‘கிராவ்மகா’வில் தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது ஒரு வகையான இஸ்ரேலிய தற்காப்புக் கலையாகும். இதில் சண்டையிடும் எதிராளியை வெற்றி கொள்ள பாரம்பரியமான தந்திரோபாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. “வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன் அவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. அது பின்னர் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு காலத்தில் 'டெட் லெட்டர் பாக்ஸ்' என்ற பேச்சு இருந்தது. நீங்கள் ஒரு மரத்தின் அடிப்பகுதியில் காகிதத்தை வைப்பீர்கள். மற்றவர்கள் அங்கிருந்து எடுத்துச் செல்வார்கள். வைக்கும் மற்றும் எடுக்கும் செயல்பாட்டில் அடையாளங்கள் வைக்கப்பட வேண்டும். குறியீட்டு மொழியை எழுதுவதும் கற்பிக்கப்படுகிறது," என ராணா பானர்ஜி விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் ரா ஏஜெண்டுகள் அடிக்கடி பணியமர்த்தப்படுகின்றனர். தூதரகங்களில் 'அண்டர் கவராக' பணியமர்த்தல் உலக நாடுகள் அனைத்தும் வெளிநாட்டில் உள்ள தங்கள் தூதரகங்களை உளவாளிகளின் தளமாக பயன்படுத்துகின்றன. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் ரா ஏஜெண்டுகள் அடிக்கடி பணியமர்த்தப்படுகின்றனர். பல சமயங்களில் போலியான பெயர்களில் அவர்கள் அனுப்பப்படுகின்றனர். “இதற்குப் பின்னால் உள்ள காரணம் அவர்களின் உண்மையான பெயர்கள் சிவில் சர்வீசஸ் பட்டியலில் இருப்பதுதான். ஒருமுறை 'ரா'வில் பணிபுரிந்த விக்ரம் சிங், விஷால் பண்டிட் என்ற போலி பெயரில் மாஸ்கோ செல்ல வேண்டியிருந்தது. அவரது குடும்ப உறுப்பினர்களும் தங்கள் பெயர்களை மாற்ற வேண்டி இருந்தது. ஒரு வெளிநாட்டு பணியின்போது அவர்களுக்கு குழந்தை பிறந்தால் குழந்தையின் குடும்பப் பெயரும் போலியாக வைக்கப்படுகிறது. அது அவர்களது வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும்,” என்று புலனாய்வு பத்திரிக்கையாளர் யதீஷ் யாதவ் தனது 'ரா எ ஹிஸ்டரி ஆஃப் இந்தியா'ஸ் கோவர்ட் ஆபரேஷன்ஸ்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார். ரா முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலத் ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார், “எனக்கு ஒரு காஷ்மீரி நண்பர் இருக்கிறார். அவர் பெயர் ஹஷிம் குரேஷி. அவர் என்னை ஏதோ ஒரு வெளிநாட்டில் சந்தித்தார். நாங்கள் கைகுலுக்கியபோது என் பெயர் துலத் என்றேன். அது பரவாயில்லை, தயவுசெய்து உங்கள் உண்மையான பெயரைச் சொல்லுங்கள் என்றார். நான் சிரித்துக்கொண்டே எங்கிருந்து கொண்டுவருவது? இதுதான் என் உண்மையான பெயர் என்று சொன்னேன். உண்மையான பெயரைச் சொன்னது நீங்கள் ஒருவர்தான் என்று அவர் கூறினார்,” என்று குறிப்பிட்டார். படக்குறிப்பு, ராவின் தலைவராக இருந்த அமர்ஜீத் சிங் துலத்துடன் ரெஹான் ஃபசல். அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவோமோ என்ற பயம் இதையெல்லாம் மீறி அடையாளம் காணப்படும் பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. தொழில்முறை உளவாளிகள் மிக விரைவாக அடையாளம் காணப்படுகிறார்கள். “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு தூதாண்மை நெறிமுறை உள்ளது. உளவுத்தொழிலில் உள்ளவர்களின் பெயர்கள் பரஸ்பரம் அனுப்பப்படும். அந்த நாட்டிற்கு முன்கூட்டியே பெயர்கள் தெரிவிக்கப்படும். ஒருவருக்கொருவர் தவறாக நடந்து கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. யாராவது வரம்பு மீறி வேலை செய்தால், அவர் திரும்ப அழைக்கப்படுவார்,” என்று ராணா பானர்ஜி விளக்கினார். “பணி நீக்கம் செய்யப்படுவோமோ என்ற பயம் எப்போதும் உள்ளது. யாரேனும் மூன்று வருட போஸ்டிங்கில் போனால் பிள்ளைகளின் படிப்புக்கு அவர் ஏற்பாடு செய்கிறார். ஆனால் ஆறு மாதம் கழித்து நாட்டை விட்டு வெளியேறச் சொன்னால் சிரமமான சூழல் உருவாகிவிடும்” என்று அவர் மேலும் கூறினார். 'ரா' மற்றும் ஐஎஸ்ஐ இன் ஒப்பீடு ஐஎஸ்ஐ பாகிஸ்தானின் உளவு அமைப்பாகும். எனவே 'ரா'வை அதனுடன் ஒப்பிடுவது இயற்கையான ஒன்றே. “இரண்டு அமைப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த ஒரு கைதும் செய்ய 'ரா'வுக்கு உரிமை இல்லை. நள்ளிரவில் சென்று கதவை தட்டுவதில்லை. 'ரா' அமைப்பு நாட்டிற்குள்ளும் உளவு பார்ப்பதில்லை. அதேசமயம், ISI இதையெல்லாம் செய்கிறது. 'ரா' நாட்டின் பிரதமருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. அதே வேளையில் ஐஎஸ்ஐ, ராணுவ தளபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது. ஆனால் அந்த அமைப்பு பிரதமரிடம் அறிக்கை அளிக்கிறது என்று காகிதத்தில் காட்டப்படுகிறது," என்று முன்னாள் RAW தலைவர் விக்ரம் சூட் தனது ‘The Unending Game’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார். ஐஎஸ்ஐயின் வரலாறு 'ரா'வை விட மிகவும் பழமையானது. இது 1948 இல் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த ஆஸ்திரேலிய அதிகாரியான மேஜர் ஜெனரல் வால்டர் ஜோசப் என்பவரால் நிறுவப்பட்டது. “உங்கள் 'ரா' ஆட்கள் எங்களை விட புத்திசாலிகள் என்று ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அசத் துரானி கூறுவார். எங்கள் அமைப்புக்கு வருபவர்கள் பெரும்பாலும் ராணுவ வீரர்கள். அதிகமாக கூச்சல் எழுப்புவார்கள். ஐ.எஸ்.ஐ.யை விட நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்று நானும் கருதுகிறேன். பாகிஸ்தானிலும் இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. நாங்கள் சிறந்தவர்கள் என்று துரானி அவர்கள் சொன்னால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிலளித்தேன். ஆனால் ஐஎஸ்ஐ மிகப் பெரிய ஏஜென்சி, இவ்வளவு பெரிய ஏஜென்சிக்கு நான் தலைவனாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் நான் சொன்னேன். அதைக்கேட்டு அனைவரும் சிரித்தார்கள்,” என்று ராவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலத் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐஎஸ் ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் அசத் துரானி ரா - ஐஎஸ்ஐ இடையே போட்டி ரா மற்றும் ஐஎஸ்ஐ இடையேயான போட்டியில் பல கதைகள் பிரபலமானவை. “நான் 1984 முதல் 1988 வரை பாகிஸ்தானில் பணியமர்த்தப்பட்டேன். ஐஎஸ்ஐ ஆட்கள் எப்போதும் எங்களுடன் இருப்பார்கள். எங்கள் வீட்டின் முன் அவர்கள் உட்காருவது வழக்கம். அவர்களது ஷிப்ட் காலை 7:30 முதல் இரவு 8 மணி வரை இருக்கும்,” என்று ராணா பானர்ஜி நினைவு கூர்ந்தார், “உங்களை கண்காணிப்பவர்களிடையே உள்ள குறைகளைப் பார்த்து அதற்கேற்ப உங்கள் வேலையைச் செய்ய வேண்டும் என்று எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் ஒரு முறை என்னை பின்தொடர்ந்தனர். நான் மற்றொரு பாதையில் சென்று எனது காரை நிறுத்தினேன். என் கார் தெரியவில்லை என்று பார்த்ததும் காரை என் வீட்டை நோக்கி அவர்கள் ஓட்டினார்கள். நான் அங்கு இல்லை என்று தெரிந்தது. அவர்கள் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது எதிரில் நான் என் காரில் வருவதை அவர்கள் கண்டனர். அவர்களை கிண்டல் செய்வதற்காக நான் கையை அசைத்தேன். இதைப் பார்த்து அவர்கள் வெட்கத்துடன் தலைகுனிந்தனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். படக்குறிப்பு, 'ரா'வின் முன்னாள் செயலர் ராணா பானர்ஜி 'ரா' அதிகாரியை கோபன்ஹேகன் வரை பின்தொடர்ந்தனர் “1960கள் மற்றும் 70களில் கான் அப்துல் கஃபர் கானின் மகன் வலி கான் நாடு கடந்து லண்டனில் வாழ்ந்து வந்தார். அவர் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பதவியேற்ற பூட்டோவின் தீவிர எதிர்ப்பாளர் ஆவார். அரசியல் மற்றும் தார்மீக ஆதரவுக்காக இந்திரா காந்திக்கு ஒரு செய்தி அனுப்ப அவர் விரும்பினார். அவரை சந்திக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்,” என்று முன்னாள் 'ரா' தலைவர் சங்கரன் நாயர் தனது ‘Inside IB and RAW, The Rolling Stone that Gathered Moss’ புத்தகத்தில் எழுதுகிறார். “லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும் அவர்களை கண்காணித்ததால் இந்த சந்திப்பு வேறொரு நாட்டில் நடக்க நேர்ந்தது. முதலில் லண்டனுக்கும், அங்கிருந்து டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு சென்றேன். நான் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்குப் பின்னால் இருந்த மேஜையில் சிலர் உருது பேசுவதைக் கேட்டேன். அந்த நபர்கள் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் என்று சந்தேகப்பட்டேன். அவர்கள் உணவை விட்டுவிட்டு என்னையும் வலிகானையும் தெருக்களில் தேட ஆரம்பித்ததும் என் சந்தேகம் உறுதியானது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாயர் உடனடியாக சந்திப்புக்கான இடத்தை மாற்றினார். வலி கானுக்கு கே.சி.தாஸின் ரஸகுல்லா டின்னை பரிசாக அளித்தார். அது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. இந்தியா திரும்பிய பிறகு பிரதமர் இந்திரா காந்தியிடம் வலிகானின் செய்தியை நாயர் வழங்கினார். பட மூலாதாரம்,MANAS PUBLICATIONS படக்குறிப்பு, 'ரா'வின் முன்னாள் தலைவர் சங்கரன் நாயர் உரையாடலை ஒட்டு கேட்க முயற்சி பாகிஸ்தானில் 'ரா' உளவாளிகளின் போன்கள் எப்போதும் ஒட்டு கேட்கப்படுகின்றன. அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இடையே தொலைபேசியில் நடக்கும் ஒவ்வொரு உரையாடலும் ஒட்டு கேட்கப்பட்டது. ராணா பானர்ஜி மற்றொரு கதையைச் சொல்கிறார். “எங்களுக்கு இஸ்லாமாபாத்தில் ஒரு பணியாளர் இருந்தார். அவர் ஒரு ஆங்கிலோ-இந்திய கிறிஸ்தவர். அவருக்கு ஒரு பலவீனம் இருந்தது. அவர் மதுபானங்களை பரிமாறும் போதெல்லாம், அவற்றை பரிமாறும் முன் சிறிதளவு அவரும் அருந்துவார். அதைத் தடுக்க ’விருந்து முடிந்ததும், உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் பாட்டில் தருகிறோம் என்று நாங்கள் கூறுவோம், ஆனால் அவர் சம்மதிக்க மாட்டார்,” என்றார். இதன் காரணமாக பானர்ஜி அவர் மீது ஒரு கண் வைத்திருந்தார். “ஒருமுறை அவர் வித்தியாசமான முறையில் நின்றுகொண்டு மேசைக்கு அடியில் எதையோ கால்களால் தள்ளிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஏதோ சிறிய தீப்பெட்டி போல இருந்ததை பார்த்தேன். உண்மையில், அவர் சாப்பாட்டு அறையில் ஒரு 'ஹியரிங் டிவைஸ்' பொருத்திக் கொண்டிருந்தார். நான் அந்த சாதனத்தை அணைத்துவிட்டேன். எதுவும் நடக்காதது போல் பார்ட்டி தொடர்ந்து நடந்தது. மறுநாள் நமது தூதர் இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் புகார் அளித்தார்.” என்று அவர் கூறினார். 'விமர்சனம் உண்டு, பாராட்டு இல்லை' 1999-ஆம் ஆண்டில் காந்தஹார் விமானக் கடத்தலுக்குப் பிறகு இந்தியா மூன்று தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டியிருந்த போது 'ரா' மீது பெரும் விமர்சனம் எழுந்தது. மசூத் அசார் மற்றும் முஷ்டாக் அகமது சர்கர் ஆகியோரை அப்போதைய 'ரா' தலைவர் ஏ.எஸ்.துலத், ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்து வந்தார். அங்கிருந்து அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அவர்களை காந்தஹாருக்கு அழைத்துச் சென்றார். கடத்தப்பட்ட ஐசி-814 விமானம் அமிர்தசரஸில் இருந்து லாகூருக்கு பறக்க அனுமதிக்கப்பட்ட விதமும் நிறைய விமர்சிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காந்தஹார் விமான கடத்தலுக்குப் பிறகு, இந்தியா மூன்று தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டியிருந்தது. 'ரா' உளவாளிகளின் மார்பில் பதக்கங்கள் குத்தப்படுவதில்லை. கார்கில் போரின் போது, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்களுக்கு எதிரான முதல் வெற்றிகரமான நடவடிக்கை, எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த 'ரா'வின் 80 பேரால் நடத்தப்பட்டது என்பது மிகச் சிலருக்குத் தெரியும். இவர்களில் சிலர் உயிருடன் திரும்பவில்லை. ஆனால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. “கார்கில் போருக்குப் பிறகு, இந்த போரில் தங்கள் நண்பர்களையும் தோழர்களையும் இழந்த 'ரா' அமைப்பினர் அமைதியாக நின்றனர். 'ரெஹ்மான்' என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட உளவாளி ஒருவர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் தியாகத்தை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுமாறு 'ரா'வின் உயர்மட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார், அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் பிரதமரின் முதன்மை செயலாளருமான பிரஜேஷ் மிஷ்ராவிடம் இந்த முன்மொழிவு வந்தபோது, அவர் அதை எதிர்த்தார்," என்று யதீஷ் யாதவ் தனது ‘RAW A History of Covert Operations’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார். “எப்படியோ இந்தச் செய்தி அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் காதுகளை எட்டியது. அந்த 18 'ரா'அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் கார்கில் போரில் அவர்கள் செய்த சாதனைகள் பிரதமர் இல்லத்தின் மூடிய மண்டபத்தில் உரக்க வாசிக்கப்பட்டன. 'ரா' வரலாற்றில் முதன்முறையாக, இந்த வீரர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டன. வாஜ்பாய், 'ரா' உயர் அதிகாரிகளுடன் கைகுலுக்கி, இந்த புகழ் பெற்ற நாயகர்களின் தியாகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த விழா குறித்து எந்த பதிவும் வைக்கப்படவில்லை. மறுநாள் செய்தித்தாள்களிலும் அது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை,” என்று யதீஷ் யாதவ் எழுதுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4g4mp6pvq6o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.