Everything posted by ஏராளன்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள் Published By: DIGITAL DESK 3 22 SEP, 2024 | 11:16 AM மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 64,068 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றார். சுயேட்சையாக போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 41,538 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க 24,168 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் 12,758 வாக்குகளை பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/194448
-
ஜனாதிபதி தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் மாவை செய்த செயல்
ஓமண்ணை.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: குறையும் அனுரகுமார திஸநாயகே வாக்கு சதவீதம், சஜித் பிரேமதாசா ஏறுமுகம் - நேரலை 22 செப்டெம்பர் 2024, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸநாயகே முன்னணியில் இருக்கிறார். தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரகுமார திஸநாயகே தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் இருக்கிறார். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகள் உள்பட இலங்கை முழுவதுமே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 1.7 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின. வாக்கு எண்ணிக்கை வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், நேற்றிரவே இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 1,703 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்கே. சஜித் பிரேமதாசா ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்த தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே மக்களின் ஆதரவு அனுரகுமார திஸநாயகேவுக்கு அதிகம் இருந்தது புலப்பட்டது. தபால் வாக்குகள் மட்டுமின்றி, வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளிலுமே அனுரகுமார திஸநாயகே, மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES வாக்கு எண்ணிக்கை நிலவரம் அனுரகுமார திஸநாயகே - 15,70,412 (44.12%) சஜித் பிரேமதாசா - 10,76,029 (30.23%) ரணில் விக்ரமசிங்கே - 5,63,054 (15.82) இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. ஆனாலும், வெற்றி பெறத் தேவையான 50 சதவீத வாக்குகளுக்கு நெருக்கமாக அவரே இருக்கிறார். அதேநேரத்தில், சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிற. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் வாக்கு சதவீதம் குறைந்தே இருக்கிறது. ஒருவேளை, யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தீர்மானிக்கப்படும். நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு வாக்குப்பதிவு நாளான நேற்று (செப்டம்பர் 21) இரவு 10 மணி முதல் இன்று (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக போலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது. பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டிலேயே நேரத்தைச் செலவிடுமாறு போலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை காலையிலும் தொடர்ந்த நிலையில் இலங்கை முழுவதும் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் இருந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjd5emz8v0mo
-
ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார் - போரில் குயிலி என்ன ஆனார்?
பட மூலாதாரம்,TWITTER @VERTIGOWARRIOR படக்குறிப்பு, ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயர்களை தோற்கடித்தவர் ராணி வேலுநாச்சியார் கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தஃபா பதவி, பத்திரிக்கையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 22 செப்டெம்பர் 2024, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் கடல் வரை நீண்டிருந்த மைசூர் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக ஹைதர் அலி இருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ளன. 1773 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் தனது கணவர் முத்து வடுகநாத பெரிய உடைய தேவர் மற்றும் தங்கள் சமஸ்தானமான சிவகங்கையை இழந்த பின்னர் வேலு நாச்சியார் தனது இளம் மகள் வெள்ளச்சியுடன் அடைக்கலம் மற்றும் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தார். ஹைதர் அலி மற்றும் வேலு நாச்சியாரின் சந்திப்பு பரஸ்பர மரியாதை நிரம்பிய காலகட்டத்தின் தொடக்கமாக இருந்தது. அதை அடுத்த தலைமுறையில் திப்பு சுல்தானும் பின்பற்றினார். வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலியின் உதவி கிடைத்தபோது, என்றென்றும் மறக்க முடியாததாக மாறிய மதிப்பும் மரியாதையும் அவருக்கு கிடைத்தது. இந்த மதிப்பு மரியாதை என்ன என்ற கேள்வியை விட்டுவிட்டு, வேலு நாச்சியார் யார், என்னென்ன சவால்களை எதிர்கொண்டார் என்ற தகவலை நாம் முதலில் பெறுவோம். பட மூலாதாரம்,PAN MCMILLAN படக்குறிப்பு, ஷூபேந்திராவின் புத்தகம் 'வாரியர் க்வீன் ஆஃப் சிவகங்கா'. இளவரசியில் இருந்து மகாராணியாக ஆன கதை வேலு நாச்சியாரின் பெற்றோர், ராமநாதபுரம் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்கள். 1730 இல் பிறந்த தங்கள் ஒரே குழந்தையான வேலுவுக்கு அவர்கள் குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி அளித்தனர். ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உருது உட்பட பல மொழிகளில் அவருக்கு ஞானம் இருந்தது. வேலுநாச்சியாருக்கு 16 வயதான போது சிவகங்கை இளவரசருடன் அவருக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதியர் 1750 முதல் 1772 வரை அதாவது இருபதாண்டுகளுக்கும் மேலாக சிவகங்கையை ஆட்சி செய்தனர். கணவரின் கொலை மற்றும் ஹைதர் அலியுடன் சந்திப்பு 1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சிவகங்கையைத் தாக்கி 'காளையார் கோவில் போரில்' வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார். தாக்குதலின் போது ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப்பினர். வீரத்துடன் கூடவே விசுவாசமும் நிறைந்த மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வேலு நாச்சியாரால் தன் கணவரின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை. பட மூலாதாரம்,GOSHAIN படக்குறிப்பு, காடுகளிலும் கிராமங்களிலும் ஆதரவற்று அலைந்து திரிந்தார் ராணி வேலு நாச்சியார். பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ராணுவ வரலாற்றில் நிபுணரான ஷூபேந்திரா, ”வேலு நாச்சியார் பாதுகாப்பாக அங்கிருந்து தப்பிச்செல்ல ஏதுவாக, ராணியின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் உடையாள் மற்றும் பிற பெண் போராளிகள் அங்கேயே தங்கிவிட்டனர்,” என்று எழுதுகிறார். நவாபின் ஆட்கள் உடையாளை பிடித்தனர். அவரை துன்புறுத்திய போதிலும் ராணியின் இருப்பிடத்தை அவர் கூறவேவில்லை. இதனால், அவரது தலை துண்டிக்கப்பட்டது. காடுகளிலும் கிராமங்களிலும் ஆதரவற்று அலைந்து திரிந்த ராணி வேலு நாச்சியார், சிவகங்கையை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்க ஆதரவாளர்களும் உதவி செய்பவர்களும் தேவை என்பதை உணர்ந்தார். மருது சகோதரர்கள் விசுவாசிகளின் படையை உருவாக்கத் தொடங்கினர். ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள அது போதுமானதாக இருக்கவில்லை. மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு, ஆங்கிலேயர்களுடனோ அல்லது ஆற்காடு நவாபுடனோ நல்லுறவு இருக்கவில்லை. அதனால் ராணி வேலுநாச்சியார் அவரின் உதவியைப் பெற முடிவு செய்து மைசூர் வரை ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். சிவகங்கையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல்லில் ஹைதர் அலியைச் சந்தித்தார் வேலு நாச்சியார். அவர் ஹைதர் அலியிடம் உருது மொழியில் பேசி தன்னுடைய தைரியத்தாலும் உறுதியாலும் அவரைக் கவர்ந்தார். வேலுநாச்சியாரை திண்டுக்கல் கோட்டையில் தங்கும்படி ஹைதர் அலி கேட்டுக்கொண்டார். அங்கு ராணி போல் அவருக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. நட்பின் அடையாளமாக ஹைதர் அலி தனது அரண்மனைக்குள் வேலுநாச்சியாருக்காக ஒரு கோவிலையும் கட்டினார். திருச்சி கோட்டை முற்றுகை வேலு நாச்சியாருக்கும் ஹைதர் அலிக்கும் இடையிலான கூட்டணி பரஸ்பர தேவையால் பிறந்தது என்று வரலாற்றாசிரியர் ஆர். மணிகண்டன் குறிப்பிடுகிறார். தனது ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க வேலுநாச்சியாருக்கு ராணுவ உதவி தேவைப்பட்டது. அதேநேரத்தில், அந்தப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு சவால் விடுவதற்கான வாய்ப்பாக ஹைதர் அலி அதைக் கருதினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான வேலுநாச்சியாரின் போரில் கூட்டாளியாக மாற ஹைதர் அலி தீர்மானித்தார். அவர் வேலுநாச்சியாருக்கு மாதாந்திர உதவித்தொகையாக 400 பவுண்டுகள் மற்றும் ஆயுதங்களையும் கூடவே சையத் கர்க்கியின் தலைமையின் கீழ் 5,000 காலாட்படை மற்றும் குதிரைப்படையின் ஆதரவையும் வழங்கினார். "ராணி வேலு நாச்சியார், இந்தப் படையின் உதவியுடன் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையை 1781-இல் அவர் அடைந்தார்," என்று ஷூபேந்திரா எழுதுகிறார். "ஆங்கிலேயர்களுக்கு கூடுதல் ராணுவ உதவி கிடைக்காமல் ஹைதர் அலி தடுத்தார். ஆனால் ராணி வேலுநாச்சியாருக்கு கோட்டைக்குள் நுழைய வழி இருக்கவில்லை. உடையாளின் தியாகத்தின் நினைவாக, ராணி வேலுநாச்சியார் அவர் பெயரில் ஒரு மகளிர் படையை உருவாக்கினார். இந்த படையின் தளபதி குயிலி, கோட்டைக் கதவுகளைத் திறக்க ஒரு திட்டத்தை முன்வைத்தார்." என்கிறார் அவர். "விஜயதசமி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அருகில் உள்ள ஊர் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்வார்கள். அவர்களுடன் கலந்து நாங்களும் உள்ளே செல்கிறோம். நான் ஆயுதங்களை மறைத்து வைத்தபடி உடையாள் படையின் சிறிய பிரிவுக்கு தலைமையேற்று கோட்டைக்குள் நுழைவேன். பிறகு நாங்கள் கோட்டையின் கதவை உங்களுக்காக திறந்துவிடுகிறோம் என்று குயிலி சொன்னார்.” என்று அவர் குறிப்பிடுகிறார். ராணிவேலுவின் முகத்தில் புன்னகை பரவியது. "குயிலி, நீ எப்பொழுதும் ஏதோ ஒரு வழியை கண்டுபிடித்து விடுகிறாய். நீ உடையாளுக்கு பெருமை சேர்த்திருக்கிறாய் என்று வேலு நாச்சியார் கூறினார்." பட மூலாதாரம்,HISTORY LUST படக்குறிப்பு, உடையாளின் நினைவாக மகளிர் படை ஒன்றை அவருடைய பெயரில் உருவாக்கினார் போரில் குயிலி என்ன ஆனார்? விஜயதசமி நாள் வந்ததும் குயிலியும், அவருடைய குழுவும் சுற்றுவட்டார ஊர் பெண்களுடன் உள்ளே சென்று பெரிய கோவிலில் திரண்டனர். சடங்கு ஆரம்பித்தது. குறித்த நேரத்தில் குயிலி “சகோதரிகளே! எழுந்திருங்கள்” என்று குரல் எழுப்பினார். 'உடையாள்' பெண்கள் உடனே எழுந்து வாள்களை உருவி காவலுக்கு நின்றிருந்த ஆங்கிலேயர்களை கீழ்படிய வைத்து வாயிலை நோக்கி நகர்ந்தனர். வாயிலில் வைக்கப்பட்டிருந்த தீ பந்தத்தை எடுத்து தங்களுக்கு தாங்களே தீ வைத்துக்கொண்டு, வீரர்களைப் பிடித்தவாறு வெடிமருந்து கிடங்கிற்குள் நுழைந்தார்கள். திடீரென கோட்டையில் இருந்து பெரிய வெடிச் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. இரண்டு 'உடையாள்' பெண்கள் குதிரைகளில் ஏறி ராணி வேலுநாச்சியாரின் படை மறைந்திருந்த இடத்தை அடைந்தனர். "ராணி! கதவுகள் திறந்திருக்கின்றன. பிரிட்டிஷ் வெடிமருந்து கிடங்கு தகர்க்கப்பட்டுவிட்டது. தாக்குவதற்கு இதுவே சரியான நேரம்,” என்று ஒரு பெண் வேலுநாச்சியாரிடம் சொன்னாள். "அது சரி, என் மகள் குயிலி எங்கே?" என்று வேலு நாச்சியார் கேட்டார். 'உடையாள்' பெண்கள் கண்களைத் தாழ்த்தினர். "எங்கள் தளபதி பிரிட்டிஷ் வெடிமருந்துகளை அழிக்க உயிர் தியாகம் செய்துவிட்டார்," என்று அவர்கள் பதில் அளித்தனர். குதிரையில் அமர்ந்திருந்த ராணி வேலு நாச்சியார் இந்த செய்தியைக் கேட்டதும் உறைந்து போனார். அப்போது சையத் கர்க்கி அவரிடம், "அவரின் தியாகத்தை நாம் வீணடிக்க முடியாது. இப்போது தாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார். ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி ராணி வேலுநாச்சியார் மனதை திடப்படுத்திக் கொண்டு தாக்குதலுக்கு உத்தரவிட்டார். கோட்டையின் உள்ளே கர்னல் வில்லியம்ஸ் ஃப்ளேட்டர்டன் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம், பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றாக்குறையை எதிர்கொண்டது. 1781 ஆகஸ்ட் மாதம் வேலு நாச்சியார் மற்றும் ஹைதர் அலியின் கூட்டுப் படைகள் இறுதியாக கோட்டையைக் கைப்பற்றியதாக எழுத்தாளர் சுரேஷ் குமார் குறிப்பிடுகிறார். முதல் இந்திய சுதந்திரப் போருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் ராணி என்ற பெருமையை வேலு நாச்சியார் இதன் மூலம் பெற்றார். அடுத்த 10 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்ட அவர் தனது மகள் வெள்ளச்சியிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்தார். வேலு நாச்சியார், எதிரிகளின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவராக இருந்தார் என்று வரலாற்று ஆய்வாளர் மணிகண்டன் கூறுகிறார். ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுடன் கூட்டு சேர்ந்து பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு சவால் விட்டது அவரது உத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. வேலுநாச்சியார் ஒரு உக்கிரமான போர் வீரராக புகழ் பெற்றிருந்தாலும் தனது குடிமக்களிடம் அவர் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். அவர் தனது மக்களை நேசித்த ஒரு நேர்மையான மற்றும் நியாயமான ஆட்சியாளர் என்று வரலாற்றாசிரியர் வி.பத்மாவதி குறிப்பிடுகிறார். ஆளும் வர்க்கத்தால் துன்புறுத்தப்பட்ட தலித்துகளுக்கு அடைக்கலம் கொடுக்க அவர் எடுத்த முடிவு அவரது இரக்க குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. "பிறப்பிலேயே அவர் ஒரு நாயகி" என்கிறார் ஆர்.மணிகண்டன். போருக்குப் பிறகு என்ன நடந்தது? வெற்றிக்குப் பிறகு வேலு நாச்சியார் ஒரு தசாப்தம் ஆட்சி செய்தார். இக்கட்டான காலத்தில் உறுதுணையாக இருந்த தனது தோழர்களுக்கு ராஜ்ஜியத்தில் முக்கிய பதவிகளை வழங்கினார். வேலு நாச்சியார் ஹைதர் அலியின் வரம்பற்ற உதவியை கெளரவிக்கும் விதமாக சார்கானியில் ஒரு மசூதியைக் கட்டினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண்டாம் மைசூர் போரில் வேலு நாச்சியார் ஹைதர் அலியை ஆதரித்து அவருக்கு உதவியாக தனது ராணுவத்தை அனுப்பியதாக ஜே.ஹெச்.ரைஸ் 'தி மைசூர் ஸ்டேட் கெஃசட்டியர்' இதழில் எழுதியுள்ளார். ஹைதர் அலியின் மரணத்திற்குப் பிறகு வேலுநாச்சியார் அவரது மகன் திப்பு சுல்தானுடன் நட்புறவைப் பேணி, அவரை ஒரு சகோதரனைப் போல நேசித்தார். வேலு நாச்சியார் திப்பு சுல்தானுக்கு ஒரு சிங்கத்தை அன்பளிப்பாக அனுப்பினார். ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் குறித்த தனது புத்தகத்தில் முஹிப்புல் ஹசன், ”படையை வலுப்படுத்த திப்பு சுல்தான் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வேலு நாச்சியாருக்கு கொடுத்தார்,” என்று எழுதியுள்ளார். திப்பு சுல்தான் வேலு நாச்சியாருக்கு ஒரு வாளை அனுப்பினார். அதை அவர் பல போர்களில் பயன்படுத்தினார். வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார். வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு சிவகங்கையில் காலமானார். பட மூலாதாரம்,WIKIMEDIA COMMONS படக்குறிப்பு, தமிழ் கலாச்சாரத்தில் வேலு நாச்சியார் ’வீர மங்கை’ என்று அழைக்கப்படுகிறார் என்று ஹம்சத்வனி அழகர்சாமி எழுதுகிறார் தமிழ் கலாசாரத்தில் வேலு நாச்சியார் ’வீர மங்கை’ என்று அழைக்கப்படுகிறார் என்று ஹம்சத்வனி அழகர்சாமி எழுதுகிறார். 2008 ஆம் ஆண்டில் அவரது நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு சிவகங்கையில் வீர மங்கை வேலு நாச்சியார் நினைவிடத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ராணியின் 6 அடி வெண்கலச் சிலையும் அங்கு நிறுவப்பட்டது. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் வீரத்தை போற்றும் வகையில் ஜெயலலிதா ஆட்சியில், மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் கடந்த 5 ஆண்டுகளாக திண்டுக்கல் நகரில் ஒரு பிரபல சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. இதே திண்டுக்கல்லில்தான் ஹைதர் அலிக்கும் வேலு நாச்சியாரும் இடையிலான நீண்டகால நட்பு துளிர் விட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c70wknknw8ro
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
லெபனானில் இரண்டு நாட்களாகத் தொடரும் மனித வேட்டை! உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இஸ்ரேலிய உளவு அமைப்பு!! இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' என்றால் யார் என்பதை உலகிற்கு மறுபடியும் நிரூபித்த ஒரு தாக்குதல். 17ம் 18ம் திகதிகளில் லெபனானிலும், சிரியாவிலும் திடீர்திடீரென்று பேஜர்களும், தொலைத்தொடர்புச் சாதனங்களும் ஆயிரக்கணக்கில் வெடித்துச் சிதறியதில் 35 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு, 3500 பேர்வரையில் படுகாயம் அடைந்திருந்தார்கள். ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் பாவித்த தொலைத் தொடர்பு உபகரணங்களையே வெடிக்கவைத்து வித்தியாசமான ஒரு தாக்குதலை மேற்கொண்டிருந்தது இஸ்ரேலிய மொசாட் அமைப்பு. மொசாட்டினால் எப்படி இதனைச் செய்யமுடிந்தது? எப்படித் திட்டமிட்டார்கள்? எத்தனை காலத்து திட்டம் இது? இந்த விடயங்கள் பற்றிய தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவணம்: https://ibctamil.com/article/walkitalki-and-pager-ecploded-in-lebanan-by-mosad-1726738321
-
ஊரடங்கு - முக்கிய அறிவித்தல்
நீடிக்கப்பட்டது ஊரடங்கு.. புதிய இணைப்பு நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மதியம் 12 மணி வரையில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இணைப்பு தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று(22) காலையுடன் தளர்த்திக் கொள்ளப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு இல்லையெனில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது பற்றி அரச மேல்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் காலை ஆறுமணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டு, அதன் பின்னர் தேவையேற்படின் இன்று(22) மாலை தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது. இன்று மாலை ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டால் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெறும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. இரண்டாம் இணைப்பு நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் த ரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருதரப்பு இணக்கம் அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக மேலதிக தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது. https://tamilwin.com/article/curfew-implemented-in-sri-lanka-1726928000
-
வைரலாகும் அநுரவின் முகநூல் பதிவு!
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வெளியான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார். முகநூல் பதிவு அந்த பதிவில், "அவர்கள் எங்களை புதைக்க முயற்சித்தார்கள், நாங்கள் விதைகள் என்று அவர்களுக்கு தெரியாது." என பதிவிட்டுள்ளார். இந்த முகநூல் பதிவினை அநுரகுமாரவின் ஆதரவாளர்கள், தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://tamilwin.com/article/anurakumara-facebook-post-viral-1726954200#google_vignette
-
ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதியை கலைக்கும் உத்தரவு அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/ranil-accepted-defeat-of-the-presidential-election-1726961495#google_vignette
-
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறும் முக்கியஸ்தர்கள்
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டார். மேலும், 09/21 இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு புறப்பட்டார். அதன் பிரகாரம் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னதாகவே சமந்த பத்ர தேரர் தென் கொரியாவை நோக்கிப் பயணப்பட்டிருந்தார். நாட்டிலிருந்து வெளியேறிய நாமல் மனைவி மேலும், இத்தே கந்தவைச் சேர்ந்த சத்தாதிஸ்ஸ தேரர் 09/22 ஆம் திகதி நள்ளிரவு 12.50 மணியளவில் Cathay Pacific Airlines விமானமான CX-610 இல் ஹொங்கொங்கிற்குப் புறப்பட்டார். மேலும், ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் 09/22 அன்று காலை 03.30 மணியளவில் Emirates விமானமான EK-649 இல் டுபாய் நோக்கிப் புறப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/important-people-leaving-the-country-in-a-hurry-1726966605
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
அமரர் வீ.நடராஜா ஐயாவிற்கு அவர்களுக்கு யாழ் இணைய உறவுகள் சார்பாக கள உறவு ஒருவர் மலர்மாலை போட்டுள்ளார்.
-
நாளை அமெரிக்க தூதரகம் மூடப்படும்
Published By: DIGITAL DESK 3 22 SEP, 2024 | 10:17 AM நாளை 23ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194415
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தற்போது வரையான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் கீழுள்ள இணையத்தளத்தில் https://results.elections.gov.lk/
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! கோப்பாய் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12,639 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,410 வாக்குகளை பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,654 வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 2,541 வாக்குகளை பெற்றுள்ளார். இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 62,449 ஆகும். 2,817 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 37,287 ஆகும். மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 40,104 ஆகும். உடுப்பிட்டி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8,467 வாக்குகளை பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,996 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,259 வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 1,670 வாக்குகளை பெற்றுள்ளார். மானிப்பாய் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 11,609 வாக்குகளைப் பெற்றுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11, 587 வாக்குகளை பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,871 வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 2,886 வாக்குகளை பெற்றுள்ளார். வட்டுக்கோட்டை நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,170 வாக்குகளை பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 8,749 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,367 வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 1,887 வாக்குகளை பெற்றுள்ளார். ஊர்காவற்றுறை நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 5,726 வாக்குகளை பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,155 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 3,687 வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 593 வாக்குகளை பெற்றுள்ளார். பருத்தித்துறை நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8,658 வாக்குகளை பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 6,100 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,162 வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 1,806 வாக்குகளை பெற்றுள்ளார். காங்கேசன்துறை நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 8,708 வாக்குகளைப் பெற்றுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8,365 வாக்குகளை பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,587 வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 1,935 வாக்குகளை பெற்றுள்ளார். சாவகச்சேரி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 10,956 வாக்குகளைப் பெற்றுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 9,159 வாக்குகளை பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,160 வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 2,692 வாக்குகளை பெற்றுள்ளார். கிளிநொச்சி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 30571 வாக்குகளைப் பெற்றுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 20348 வாக்குகளை பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7182 வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 2805 வாக்குகளை பெற்றுள்ளார். தபால் மூல வாக்குகள் - யாழ்ப்பாணம் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9277 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7640 வாக்குகளைப் பெற்றுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4207 வாக்குகளை பெற்றுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 2250 வாக்குகளை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 7494 வாக்குகளை பெற்றுள்ளார். இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,080 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,058 வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,186 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 26,028 ஆகும். 1,242 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 24,786 ஆகும். மேலும், 37,355 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 10097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8804 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7464 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 3835 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். https://tamilwin.com/article/presidential-election-postal-results-jaffna-1726944188
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
2024 ஜனாதிபதி தேர்தல்! முதலாவது முடிவுகள் வெளியாகின..முன்னிலையில் அநுர குமார... நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,675 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 500 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். திலித் ஜயவீர 251 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். https://ibctamil.com/article/postal-vote-results-monaragala-1726942174#google_vignette
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை லங்காசிறியின் நேரலை ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம். மேலும் உங்கள் கருத்துக்களுடன் நீங்களும் நேரலையில் இணைந்துகொள்ளலாம். https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-live-updates-1726934857#google_vignette திருவுளச்சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாம் சுற்றுவாக்கு எண்ணப்படும் இவ்வாறு இரண்டாம் சுற்று வாக்கு எண்ணப்படும் போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குறிப்பாக இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச்சீட்டு முறையின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தால் அப்போதும் திருவுளச்சீட்டு முறைமை பின்பற்றப்பட உள்ளது. https://tamilwin.com/article/two-scenarios-where-a-tie-could-occur-in-1726924469#google_vignette
-
ஊரடங்கு - முக்கிய அறிவித்தல்
பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளது - ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 21 SEP, 2024 | 10:57 PM (எம்.மனோசித்ரா) நாட்டிலுள்ள சகல நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளது எனக் கருதுவதால் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சகல நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளதென நான் கருதுகின்றேன். அதனால் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 16ஆம் பிரிவின் கீழ் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிக்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பு செயலாளரினால், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அல்லது இவர்களால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் வழங்கப்பட்ட எழுத்திலான அனுமதிப்பத்திரமொன்றின் அதிகாரத்தின் கீழன்றி பொது இடங்களில் நடமாட முடியாது என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194328
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இலங்கை வரலாற்றை மாற்றும் தேர்தல் - ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்துள்ளார். அநுர குமார கொழும்பு - 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று (21) தனது வாக்கை அளித்தார். வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அநுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் மிக வலுவான திருப்புமுனை இந்தத் தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் என்று நான் நினைக்கிறேன். காலங்காலமாக, அரசாங்கங்களை அமைப்பதற்கும், அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும், அரசாங்கங்களை மாற்றுவதற்கும், தலைவர்களை மாற்றுவதற்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் மிக வலுவான திருப்புமுனை என்று நான் நினைக்கிறேன். அதேபோன்று வெற்றிக்குப் பிறகு அனைவரும் அமைதியாக இருக்கவும், ஜனநாயகத்தின் சிறப்பியல்பு அதுவாகும். எந்தவொரு நபரும் அவர்கள் விரும்பும் அரசியல் இயக்கத்திற்கு பணியாற்றலாம். அவர்கள் விரும்பும் அரசியல் இயக்கத்திற்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/presidential-candidate-anura-kumara-voted-1726919353
-
தமிழர் பகுதியில் திடீரென போடப்பட்ட இராணுவ வீதி தடை - அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திடீரென இராணுவத்தினர் வீதி தடையொன்றை அமைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கும் சூழ்நிலையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினரின் வீதி தடை ஒன்றை அமைத்துள்ளனர். வீதி தடை இந்தநிலையில், இன்று இரவு குறித்த வீதி தடை பகுதியில் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கடந்த காலங்களில் கொரோனா மற்றும் குண்டுவெடிப்பு காலங்களில் புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினர் வீதி தடை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுத்திருந்த நிலையில் நீண்ட காலமாக அகற்றப்பட்டு மக்களின் இயல்பு வாழ்வு திரும்பிக் கொண்டிருக்கையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் வீதி தடை கண்காணிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/a-sudden-military-roadblock-1726930509
-
ஊரடங்கு - முக்கிய அறிவித்தல்
பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாத்திரமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நம்புகின்றோம் - தேசிய மக்கள் சக்தி 21 SEP, 2024 | 10:39 PM (எம்.மனோசித்ரா) தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பொது ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்தில் மாத்திரமே ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி, முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் உரிய அதிகாரிகள் பணியாற்றுவர் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய மக்கள் சக்தி இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம். வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என்றும் நம்புகிறோம். இந்த நிலையில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பொது ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டுமே செய்யப்படுவதாக நாங்கள் நம்புகிறோம். https://www.virakesari.lk/article/194325
-
மக்களால் தெரிவு செய்யப்படுபவருக்கு ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என எதிர்பார்க்கின்றேன் - அனுரகுமார
அண்ணை, ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
-
ஊரடங்கு - முக்கிய அறிவித்தல்
விமானநிலையம் செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகளுக்கு - விசேட அறிவித்தல் 21 SEP, 2024 | 10:16 PM ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/194323
-
இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர்
இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் சேப்பாக்கம் விக்கெட் எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் 814 நாட்களுக்குப் பின் சதம் அடித்து தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்-இன் அற்புதமான ஆட்டம், சுப்மன் கில்லின் நேர்த்தியான சதம் ஆகியவற்றால் இந்திய அணி வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஏற்கெனவே 227 ரன்கள் முன்னிலை பெற்றதையுடம் சேர்த்து வங்கதேச அணி வெற்றி பெற 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி. சவாலான இலக்கு இரண்டரை நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பும் நோக்கில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. பெரிய இலக்கான 515 ரன்களை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி 2 நாட்களில் எட்டுவது வங்கதேசத்துக்கு கடும் சவாலாக இருக்கும். வங்கதேச அணி 515 இலக்குடன் களமிறங்கியது. 3வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் ஷான்டோ 51 ரன்கள், சஹிப் அல்ஹசன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் வங்கதேசம் கைகளில் 6 விக்கெட்டுகள் உள்ளன, வெற்றிக்கு 357 ரன்கள் சேர்க்க வேண்டியுள்ளது. மெஹதி ஹசன், லிட்டன் தாஸ் விக்கெட்டை இந்திய அணி விரைவாக எடுத்துவிட்டால், இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும். 814 நாட்களுக்குப் பின் ரிஷப் பந்த் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் விரைவாக ரன்கள் சேர்க்க ரிஷப் பந்த்(109), சுப்மான் கில்(119 நாட்-அவுட்) ஆகியோரின் சதம் மற்றும் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாக அமைந்தது. கார் விபத்தில் சிக்கி 634 நாட்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். டெஸ்ட் போட்டியில் ஏறக்குறைய 814 நாட்களுக்குப் பின் தனது 6வது சதத்தை 124 பந்துகளில் பந்த் நிறைவு செய்தார். இதில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். கடைசியாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 1ஆம் தேதி நடந்த டெஸ்டில் ரிஷப் பந்த் சதம் அடித்திருந்தார். அதன்பின் இந்த ஆட்டத்தில் சதம் அடித்துள்ளார். இன்னிங்ஸ் ஸ்கோர் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கும், வங்கதேசம் 149 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. 2வது நாளான நேற்று மட்டும் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்திருந்தது. கில் 33 ரன்களுடனும், பந்த் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய 3வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கில், பந்த் அரைசதம் தொடக்கத்தில் இருந்தே கில், ரிஷப் பந்த் இருவரும் வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அடித்து ஆடி ரன்களை சேர்த்தனர், இருவரின் பேட்டிங்கிலும் ஆக்ரோஷம் காணப்பட்டது. 79 பந்துகளில் சுப்மன் கில் அரைசதத்தை நிறைவு செய்தார். காலை தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பிறகு ரிஷப் பந்த் பேட்டிங் வேகெடுத்தது. சஹிப் அல்ஹசன், மிராஸ் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்த ரிஷப் பந்த் 88 பந்துகளில் அரைசதம் எட்டினார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 205 ரன்கள் சேர்த்திருந்தது. அஸ்வினும் டெஸ்ட் கிரிக்கெட்டும் - ஒரு காதல் கதை!19 செப்டெம்பர் 2024 தோனியின் சாதனை சமன் பட மூலாதாரம்,GETTY IMAGES அதன்பின் களத்துக்கு வந்த ரிஷப் பந்த் ஆட்டத்தில், மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என விளாசி, 124 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்து தோனி அடித்த 6 சதங்களையும் ரிஷப் பந்த் சமன் செய்தார். ரிஷப் பந்த் சதம் அடித்தபோது, அவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடக்கம். நிதானமாக ஆடிய சுப்மன் கில்லும் 161 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை எட்டினார். இருவரின் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்து சென்றது. கடந்த முதல் இன்னிங்ஸில் சாஃப்ட் டிஸ்மிசலில் ஆட்டமிழந்தது போல் இந்த முறை எந்தத் தவறையும் ரிஷப் பந்த் செய்யவில்லை. இதனால் இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடும் பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. சிக்ஸரில் சாதிக்கும் இந்திய அணி சுப்மான் கில் தனது 26வது டெஸ்ட் போட்டியில் 28வது சிக்ஸரை அடித்துள்ளார். அதேபோல ரிஷப் பந்த் 34 டெஸ்ட் போட்டிகளில் 59 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 2024ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டர்கள் மட்டும் 85 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். ஒரு காலண்டர் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை எட்ட இந்திய அணிக்கு இன்னும் 5 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ரிஷப் பந்த் 109 ரன்கள் சேர்த்த நிலையில் மிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு கில், பந்த் கூட்டணி, 167 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த கே.எல்.ராகுல் 22 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இன்னும் இரண்டரை நாட்கள் மீதமிருந்த நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணியித்தது இந்திய அணி. வலுவான தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேச அணி 515 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது. ஜாகிர் ஹசன், இஸ்லாம் இருவரும் முதல் இன்னிங்ஸைவிட சற்று ஆழமாகவே தங்கள் ஆட்டத்தை தொடங்கி ரன்களை சேர்த்தனர். பும்ரா, சிராஜ், ஆகாஷ் பந்துவீச்சை இருவரும் நன்கு சமாளித்து ஆடி ரன்களை சேர்த்தனர். மாலை தேநீர் இடைவேளைக்குப் பின் வங்கதேச அணி முதல் விக்கெட்டை இழந்தது. பும்ராவின் வேகப்பந்துவீச்சில் ஹசன் 33 ரன்கள் சேர்த்த நிலையில் கல்லி பாயின்டில் நின்றிருந்த ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஷான்டோ, இஸ்லாமுடன் சேர்ந்தார். அஸ்வினின் மாயாஜாலம் சென்னை விக்கெட் கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு பலன் அளிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு அஸ்வின் பந்து வீசினார். அதற்குப் பலன் கிடைத்து, இஸ்லாம் 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஷார்ட் மிட்விக்கெட்டில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த மோமினுல் ஹக் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். அதைத் தொடர்ந்து முஸ்பிகுர் ரஹ்மான் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாண்டோ இந்திய பந்துவீச்சை நன்கு சமாளித்து ஆடி அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் வங்கதேசம் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என வலுவாக இருந்தது, ஆனால் கடைசி 10 ஓவர்களில் சீரான இடைவெளையில் 3 விக்கெட்டுகளை இழந்தது. சஹிப் அல் ஹசன் 5, கேப்டன் ஷாண்டோ 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கடைசி 10 ஓவர்களில் அஸ்வின் வீழ்த்திய 3 விக்கெட்டுகள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 357 ரன்கள் தேவை. மீதமுள்ள விக்கெட்டுகளில் லிட்டன் தாஸ், மிராஸ் மட்டுமே ஓரளவு பேட் செய்யக் கூடியவர்கள். இவர்களை வீழ்த்தினால் நாளை இந்திய அணியின் வெற்றி எளிதாகும். சேப்பாக்கத்தில் திடீரென வெளிச்சக் குறைவு ஏற்பட்டதையடுத்து, 9 ஓவர்கள் முன்னதாகவே ஆட்டம் முடிக்கப்பட்டது. கடைசி 2 நாட்களில் சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES சேப்பாக்கம் விக்கெட் என்றாலே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும். ஆனால், இந்த முறை கறுப்பு மண் ஆடுகளத்துக்குப் பதிலாக சிவப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து நன்கு ஒத்துழைத்து ஸ்விங் ஆகும், பவுன்ஸ் ஆகும். வரும் நவம்பர் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்குத் தயாராகும் பொருட்டு இதுபோன்ற ஆடுகளத்தை பிசிசிஐ நிர்வாகம் தயாரித்துள்ளது. இந்த ஆடுகளத்தில் கடைசி 2 நாட்களில் பிளவு ஏற்பட்டு பந்து சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும். முதல் நாளில் வேகப்பந்துவீச்சில் 1.3 டிகிரி வரை ஸ்விங் ஆன நிலையில், 3வது நாளில் 0.4 டிகிரியாக குறைந்தது. ஆடுகளம் நன்கு காய்ந்திருக்கிறது ஆனால், எதிர்பார்த்த பிளவுகள் இன்னும் வரவில்லை. பிளவுகள் வந்தால் அடுத்த இரு நாட்கள் வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சுக்குத்தான் விக்கெட் ஒத்துழைக்கும். இதனால், அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு நன்கு எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியை போல் உதவிய பந்த் பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்றாம் நாள் ஆட்டமான இன்று ரிஷப் பந்த், கில் இருவரும் சிறப்பாக பேட் செய்த நிலையில், திடீரென வங்கதேசத்துக்கு உதவும் வகையில் பந்த் ஃபீல்டிங் செட் செய்து கொடுத்து கேப்டன் ஷாண்டோவுக்கு உதவினார். தோனியை போலவே ரிஷப் பந்த் வங்கதேச கேப்டனுக்கு ஃபீல்டிங் செட் செய்வதில் உதவினார். 22 யார்ட் வட்டத்தின் லெக் திசையில் எந்த பீல்டரும் நிறுத்தவில்லை, அங்கு பீல்டரை நிறுத்துங்கள் என்று வங்கதேச கேப்டனுக்கு பந்த் ஆலோசனை கூறினார். இதைக் கேட்ட கேப்டன் ஷாண்டோ மிட்விக்கெட் திசையில் ஒரு பீல்டரை நிறுத்தினார். ரிஷப் பந்தின் கிரிக்கெட் குருவான தோனியும் இதேபோல வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து உதவியுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, பேட் செய்த தோனி, வங்கதேச வீரர் சபிரீ ரஹ்மானை ஸ்குயர் லெக் திசையில் நிற்குமாறு கூறினார். வங்கதேச கேப்டன் மோர்தசாவிடம் கேட்காமல் தோனி ஃபீல்டிங் செட் செய்தார். தோனி கூறியவுடன், தனது கேப்டன் மோர்தசாவிடம்கூட ஆலோசனை கேட்காமல் தோனி கூறிய திசையில் சபீர் ரஹ்மான் ஃபீல்டிங் செய்ய நின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c148nmk8pzeo
-
ஊரடங்கு - முக்கிய அறிவித்தல்
21 SEP, 2024 | 09:55 PM இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தங்களது ஆவணங்கள், விமான பயணச் சீட்டுகளை தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் அலுவலக அனுமதிப்பத்திரம் மற்றும் ஊழியர் அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும். ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194319
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
வரலாற்றில் அமைதியான தேர்தல்: தமிழர் பகுதிகளின் வாக்குபதிவு நிலவரம் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கையில் இதுவரை நடைபெற்றவற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்ற வரலாற்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 69.47 சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி வன்னி தேர்தல் தொகுதியில் எவ்விதமான வன்முறை சம்பவங்களும் இன்றி சுமூகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவு பெற்றுள்ளது. வவுனியா மாவட்டத்தில் 72 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளது. வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை இன்னும் சில நேரங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். நுவரெலியா நுவரெலியா மாவட்டத்தில் 72 சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி செயலாளர் நந்தன கலபட குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரை 56.34 வீதமான வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்களிப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார். மன்னார் மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் மாலை 3 மணி வரை 59 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இது மொத்த வாக்குகளில் 65.92 வீதமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 73 .83 வீதம் வாக்குப்பதிவு. https://ibctamil.com/article/presidential-polls-close-with-70-turnout-1726919080#google_vignette
-
ஜனாதிபதி தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் மாவை செய்த செயல்
ஒரு தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சம்பந்தப்பட்ட பிரபல்யமான ஒரு நகைச்சுவை உண்டு. வாக்களித்துவிட்டு வருகின்ற ஒருவரை மறிந்து, ‘நீ யாருக்கு வாக்களித்தாய்’ என்று வடிவேல் கேட்பார். 'உங்களிடம் வாங்கின காசுக்கு தென்னை மரச்சின்னத்தில் ஒரு குத்து.. அவனிடம் வாங்கின காசுக்கு ஏணி சின்னத்தில ஒரு குத்து..’ என்று அவர் பதிலளிப்பார். இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மாவை சேனாதிராஜா வாக்களித்துவிட்டு திரும்பிவருகின்றபோது ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டபோது, கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு பதிலைத்தான் வழங்கி இருகின்றார். 'தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தின்படி சஜித்துக்கு ஒரு வாக்கையும், சங்குச் சின்னத்துக்கு இரண்டாவது வாக்கையும், ரணில் விக்ரமசிங்கவுக்கு மற்றொரு வாக்கையும் வழங்கியதாக அவர் கூறிய அந்தக் கண்கொள்ளாக் காட்சியை கீழே இணைத்திருக்கின்றோம். ரணிக்கு, சஜித்துக்கெல்லாம் வாக்களித்துவிட்டு பழக்கதோசத்தில் ‘தமிழின விடுதலைக்காக ஒன்றிணைவோம்' என்று வேறு கூறித்தொலைத்திருந்தார். https://ibctamil.com/article/mavai-voted-for-three-candidates-1726927077