Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. உண்மை தான் அண்ணை. ஆனால் பல கட்சிகளாக சிதறுண்டுபோய் இருப்பவர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றாக்க ஒரு இறுதிச் சந்தர்ப்பம் இது என நான் நினைக்கிறேன்.
  2. புதிய இணைப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சற்று முன்னர் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் தற்போதைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுமார் 200க்கும் அதிகமான விமானப்படையினர் தற்போதைக்கு விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானநிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இணைப்பு எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காவல்துறை உத்தியோகத்தர்களும், கலகத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களும் தேவைக்கேற்ப கடமையாற்றியிருப்பதாலும், காவல்துறை வீதித் தடைகள் நடைமுறைப்படுத்த உள்ளதாலும், முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊர்வலம் செல்வது முற்றாக தடை இதேவேளை, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மற்றும் ஒரு வார காலத்திற்குள் எந்தவொரு நபரும் வாகனங்களிலோ அல்லது பாதயாத்திரையிலோ ஊர்வலம் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சகல மக்களும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். ஒரு பிரஜை என்ற வகையில், சட்டத்தை அமைதியாகக் கடைப்பிடித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை காவல்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். 119 118 107 (வடக்கு, கிழக்குக்கு) 011 202 7149 011 201 3243 111 239 9104 – (தொலைநகல் எண்) https://ibctamil.com/article/special-announcement-from-police-1726924868#google_vignette
  3. 21 SEP, 2024 | 05:58 PM அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பொதுமக்கள் அமைதியை பேணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் மக்களால் அவரின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என எதிர்பார்க்கின்றேன் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அதிகாரமாற்றத்தின் போது ஜனாதிபதி எந்த பிரச்சினையையும் உருவாக்குவார் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194304
  4. ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 ஆம் திகதியை (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார். விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் இதுவேளை, எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். காவல்துறை உத்தியோகத்தர்களும், கலகத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களும் தேவைக்கேற்ப கடமையாற்றியிருப்பதாலும், காவல்துறை வீதித் தடைகள் நடைமுறையில் உள்ளதாலும், முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் என்றும் அவர் கூறினார். https://ibctamil.com/article/govt-declares-sept-23-as-public-holiday-1726925802#google_vignette
  5. அண்ணை பல இடங்களில் பலமாக சங்கூதப்பட்டுள்ளது, பார்ப்போம் என்ன முடிவு என!
  6. அமரர் வீ.நடராஜா ஐயாவிற்கு அவர்களுக்கு யாழ் இணைய உறவுகள் சார்பாக கள உறவு ஒருவர் மலர்வளையம் வைத்துள்ளார்.
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களின் காட்சியை பிரதிபலிக்கும் கலைப்படைப்பு கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள், பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் ஆய்வுகளுக்கு இடையூறாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஈலோன் மஸ்கின் செயற்கைக்கோள் வலையமைப்பில் இருந்து வரும் ரேடியோ அலைகள், விஞ்ஞானிகளின் பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் செயல்முறைக்கு தடங்கலை ஏற்படுத்துகிறது. மஸ்க்கின் புதிய தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், உலகம் முழுவதும் வேகமாக இணையத்தை வழங்குகின்றன. இவை முந்தைய பதிப்புகளைக் காட்டிலும் அதிகளவில் ரேடியோ தொலைநோக்கிகளின் பாதையில் குறுக்கிடுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். நெதர்லாந்து ரேடியோ வானியல் நிறுவனத்தின் (ASTRON) கூற்றுபடி, சுற்றுப்பாதையில் வட்டமிட்டு வரும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள், ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் பிரபஞ்சத்தை உற்று நோக்குவதை தடுக்கின்றன. இது வானியல் ஆராய்ச்சிக்கு இடையூறாக இருக்கக் கூடும். ஸ்டார்லிங்க் உரிமையாளரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பிபிசியிடம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. நன்மைகளுடன் சிக்கல்களும் உள்ளன இந்த செயற்கைக்கோள்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பிராட்பேண்ட் இணைய வசதியை வழங்குகின்றன. குறிப்பாக தொலைதூர இடங்களுக்கும், யுக்ரேன் மற்றும் ஏமன் போன்ற சவாலான சூழல்களை கொண்ட நாடுகளுக்கும் இணைய சேவை அளிக்கின்றன. பிரிட்டனின் தொலைதூரப் பகுதிகளை வேகமான இணைய சேவை உதவியுடன் இணைக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன. டிஜிட்டல், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறையின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில், ஸ்டார்லிங்க் சராசரியை விட நான்கு மடங்கு வேகமாக இணைய சேவை வழங்க முடியும் என்று சோதனைகள் காட்டுகின்றன. ஆனால் வானியல் வல்லுநர்கள் கூற்றுப்படி இதனால் நன்மைகள் இருந்தாலும், சிக்கல்களும் இருக்கின்றன என்று கூறுகின்றனர். "ஒவ்வொரு முறையும் செயற்கைக்கோள்கள் அதிக திறனுடன் ஏவப்படும் போது, எங்களால் வானத்தை சரியாக பார்க்க முடியாமல் போகிறது" என்று ஆஸ்ட்ரோன் (ASTRON) நிறுவன இயக்குநர், பேராசிரியர் ஜெசிகா டெம்ப்சே பிபிசி செய்தியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை பொதுவாக இரவுநேர வானில் வெறும் கண்களால் எளிதாகப் பார்க்க முடியும் அதிக கதிர்வீச்சு உமிழும் V2 செயற்கைக்கோள் "விண்மீன் திரள்களின் மையத்தில் உள்ள கருந்துளை ஜெட் (black hole jets) போன்றவற்றைப் பார்க்க முயற்சிக்கிறோம். லட்சக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கோள்கள் மற்றும் பழமையான விண்மீன் திரள்கள் சிலவற்றையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம்" என்று அவர் கூறினார். செயற்கைக்கோள் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் பகுதிகளை அவர் சுட்டிக்காட்டி பேசினார். இரண்டாம் தலைமுறை அல்லது V2, செயற்கைக்கோள்களால் ஏற்படும் பாதிப்பு, முதல் தலைமுறையை விட 32 மடங்கு சக்தி வாய்ந்தது என்பதை ஆஸ்ட்ரோன் கண்டுபிடித்தது. பேராசிரியர் டெம்ப்சே தொடர்ந்து பேசுகையில், "இந்த கதிர்வீச்சு உமிழ்வு தொழில்துறை அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் நிறுவப்பட்ட வரம்புகளை மீறுகிறது." என்றார். பூமியிலிருந்து 342 மைல்கள் (550 கிமீ) தொலைவில் தற்போது 6,402 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருப்பதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இந்த செயற்கைக்கோள்கள் ஒப்பீட்டளவில் பெரியவை - 3 மீ பிளாட் பேனல்கள் மற்றும் 8 மீ சோலார் பேனல்களின் வரிசையையும் அவை கொண்டுள்ளன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பிரேசிலில் உள்ள தொலைதூர இடத்தில் படகு ஒன்றில் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கும் அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன 2030இல் 1,00,000 செயற்கைகோள்கள் புவி சுற்றுப்பாதையை ஆக்கிரமிக்கும் ஸ்பேஸ் எக்ஸின் முக்கிய போட்டியாளரான `ஒன் வெப்’ (OneWeb) 1,000க்கும் குறைவான செயற்கைக் கோள்களையே கொண்டுள்ளது. இருப்பினும், இந்த வணிகத் துறை விரிவடைகிறது. அமேசான் நிறுவனமும் அதன் சொந்த நெட்வொர்க்குகளை உருவாக்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3,000 செயற்கைக்கோள்கள் அந்நிறுவனம் ஏவ திட்டமிட்டுள்ளது. மேலும் அவற்றை தற்போது வடிவமைத்து வருகிறது. 2030-ஆம் ஆண்டு வாக்கில் புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 1,00,000 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்தில் உள்ள `LOFAR’ என்னும் ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொலைதூர விண்மீன்கள் மற்றும் கோள்கள் உட்பட விண்வெளியில் உள்ள பல பொருட்கள் மின்காந்த ஒளிக்கற்றையை (electromagnetic spectrum) வெளியிடுகின்றன. இந்த கதிர்வீச்சு, அலைகளைப் போல பயணிக்கிறது. இந்த அலைகளை ரேடியோ தொலைநோக்கிகளால் கண்டறிய முடியும். இது நம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை தொலைநோக்கி மூலம் பார்க்க அனுமதிக்கிறது. ஆனால் அந்த அலைகள் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களால் இடையூறை சந்திக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் விஞ்ஞானிகள் கவனித்த அனைத்து V2 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் இருந்தும் திட்டமிடப்படாத மின்காந்த கதிர்வீச்சு வெளியாவதை கண்டறிந்தனர். அடையாளம் காணப்பட்ட ஒளியின் பலவீனமான மூலங்களை (sources of light) விட இது சுமார் 10 மில்லியன் மடங்கு பிரகாசமாக இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். முன்னணி எழுத்தாளர் சீஸ் பாஸாவின் கூற்றுப்படி, இது வெறும் கண்ணுக்குத் தெரியும் மங்கலான நட்சத்திரங்களையும் முழு நிலவின் பிரகாசத்தையும்" ஒப்பிடுவது போன்றது. "ஸ்பேஸ் எக்ஸ் ஒவ்வொரு வாரமும் சுமார் 40 இரண்டாம் தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவுவதால், இந்த பிரச்னை மேலும் மோசமாகி வருகிறது" என்று அவர் கூறினார். பிரிட்டனில் உள்ள ராயல் அஸ்ட்ரோனமிகல் சொசைட்டியின் துணை நிர்வாக இயக்குநர் ராபர்ட் மாஸ்ஸி கூறுகையில் : "ஒரு பெரிய வானொலி ஆய்வகத்தின் செயல்பாட்டை இந்த அளவிற்கு பாதிக்கும் பிரகாசமான கதிர்வீச்சு இருப்பது ஆபத்தானது. எனவே நாம் ஏதாவது உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றார். விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்களின் ஒளி மாசுபாடு குறித்தும் கவலைப்படுகின்றனர். அதே சமயம் இது ஆப்டிகல் தொலைநோக்கிகளிலும் இடையூறு ஏற்படுத்துகிறது என்றும் அஞ்சுகின்றனர். முதல் தலைமுறை செயற்கைக்கோள்களின் கதிர்வீச்சு குறித்து ஸ்பேக்ஸ் எக்ஸ் உடன் பேசியதாகவும், தாங்கள் முன்வைத்த சிக்கல்களை நிறுவனம் கேட்டு கொண்டதாகவும் வானியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போதுள்ள மேம்படுத்தப்பட்ட V2 செயற்கைக்கோள்கள் மேலும் சக்திவாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது என்று ஆஸ்ட்ரோன் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் தீர்வு என்ன? "LOFAR தொலைநோக்கியை இயக்கும் போது, இந்த புதிய V2 மினி ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள்களில் இருந்து வந்த சக்தி வாய்ந்த உமிழ்வுகளை பார்த்த போது அதிர்ச்சி அளித்தது" என்று பேராசிரியர் டெம்ப்சே கூறுகிறார். "இது உண்மையில் நிலத்திலிருந்து நிகழும் வானியல் ஆய்வுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வெவ்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்துகிறது. இது தொடர்ந்தால், இந்த செயற்கைக்கோள்களின் உழிம்வை தடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல், நாம் செய்யும் வானியல் ஆய்வுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும்" என்று பேராசிரியர் டெம்ப்சே மேலும் கூறினார். விஞ்ஞானப் பணிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, செயற்கைக்கோள் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒரு தரநிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று அவர்கள் கூறினர். செயற்கைக்கோளில் பேட்டரியை ஷீல்ட் செய்வது போன்ற எளிய நடவடிக்கைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சு குறையும் என்று பேராசிரியர் டெம்ப்சே கூறினார். சில இடையூறுகள் தவறான மின்னணுவியலால் ஏற்படுகின்றன. அதனையும் கட்டுப்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சி செய்ய வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில், "மிக விரைவில் நாம் காணும் ஒரே விண்மீன் கூட்டம் மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கும்" என்று அவர் கூறினார். இந்த கண்டுபிடிப்புகள் வானியல் மற்றும் வானியற்பியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew1xdp7qgpo
  8. முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவு வெளியாகலாம் - தேர்தல் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 3 21 SEP, 2024 | 04:28 PM 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவு இன்று சனிக்கிழமை (21) நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முதலில் தபால் மூல வாக்கு முடிவுகளா அல்லது பதிவு வாக்கு முடிவுகளா வெளியாகும் என்பது வாக்கு எண்ணும் நிலையங்களில் உள்ள அதிகாரிகளின் திறமையைப் பொறுத்தே அமையும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எவ்வாறாயினும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இன்று நள்ளிரவில் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமானதுடன் 4 மணிளவில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194292
  9. யாழ். வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது 21 SEP, 2024 | 01:10 PM யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (21) வாக்களிக்கச் சென்ற இளைஞர், தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குச்சீட்டினை கைகளில் பெற்ற பின்னர், வாக்களிக்காமல், வாக்குச்சீட்டினை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து, பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்போது, அந்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/194268
  10. லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்டதளபதி பலி 21 SEP, 2024 | 07:00 AM லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது. லெபானின் புறநகரில் உள்ள இந்த ஹெஸ்புல்லாக்களின் வலுவிடம் என்பது குறிப்பிடதக்கது. தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194227
  11. நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது ஜனாதிபதி தேர்தல் இன்று Published By: VISHNU 21 SEP, 2024 | 10:05 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில் 13421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று 52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதேபோல் அத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41, 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்; வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/194220
  12. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, கடந்த ஆண்டு சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது. நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான் -4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 2040-ல் நிலவில் மனிதர்களை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது. “சந்திரயான் -3 திட்டம் நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்குவது சாத்தியம் என்று உணர்த்தியது. நிலவுக்கு பாதுகாப்பாக சென்று திரும்புவதே அடுத்தக்கட்ட திட்டமாகும். சந்திரயான்3 ஐ விட சிக்கலான தொழில்நுட்பங்கள் கொண்டது இத்திட்டம்” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறியுள்ளார். மனிதர்கள் இல்லாமல் ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நிலவின் மண் மாதிரிகளை எடுத்து வர வேண்டும் என்பதால் சவால்கள் அதிகமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சந்திரயான்-4 திட்டம் என்ன? சந்திரயான் -4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் கருவிகள் இரண்டு தொகுப்புகளாக, LMV-3 மற்றும் PSLV ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. விண்கலம் நிலவில் தரையிறங்கி, தேவையான மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஒரு பெட்டியில் அடைத்து, நிலவிலிருந்து புறப்பட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். அது வெற்றிகரமாக முடிந்தால், விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் இந்தியாவை அடுத்த நிலைக்கு இந்த திட்டம் கொண்டு செல்லும். இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செய்ய, தனித்தனி கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முதலில் நமக்கு கிடைத்த தகவல்கள், நிலவை சுற்றி வந்த விண்கலத்திடம் இருந்து வந்தன. அதன் பின், நிலவில் தரையிறங்கிய போது, ஏற்கெனவே கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நமது புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இப்போது அடுத்தக்கட்ட விரிவான ஆய்வுக்காக நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரிக்கவுள்ளோம்.” என்றார். நிலவின் மாதிரிகளை சேகரிப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்கிறார் அவர். “சர்வதேச அளவில், நிலவு ஒப்பந்தத்தின் படி (Moon Treaty 1967) நிலவை தனி ஒரு நாடு சொந்தம் கொண்டாட முடியாது. நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள், அந்த மாதிரிகளை ஆய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளிடையே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். காலாவதியாகவுள்ள இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, உலக நாடுகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாது. இந்நிலையில், இந்தியா தனது நிலவு ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்” என்றார். நிலவு மாதிரிகளை இதுவரை எடுத்த வந்த நாடுகள் எவை? நிலவை ஆராய்வது பல நாடுகளுக்கு முக்கியமான செயல். இது அறிவியல் ஆர்வத்தால், புதிய கண்டுபிடிப்புகளால், மற்றும் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வாழலாம் என்ற எண்ணத்தால் செய்யப்படுகிறது. சில நாடுகள் நிலவின் மேற்பரப்பிலிருந்து மண் மாதிரிகளை சேகரித்து வந்துள்ளன. இது நிலவு எப்படி உருவானது, அதன் உள்ளே என்ன இருக்கிறது மற்றும் அதன் வரலாறு பற்றி நமக்கு முக்கியமான தகவல்களைத் தருகிறது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இதில் முன்னோடிகள். அமெரிக்கா 1969 முதல் 1972 வரை நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நிறைய மண் மாதிரிகளை கொண்டு வந்தது. 1970களில் சோவியத் யூனியன் தனது லூனா திட்டங்கள் மூலம் ரோபோக்களை கொண்டு, நிலவின் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் 2020ல், Chang’e-5 என்ற விண்கலத்தைக் கொண்டு சீனா நிலவிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து வந்தது. இந்தியா மட்டுமல்லாமல், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் விரைவில் நிலவிலிருந்து மண் மாதிரிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் நிலவைப் பற்றி மேலும் புரிதல்களைப் பெற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் முதன் முதலாக தடம் பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும். நிலவின் மண், நிலவைப் பற்றி என்ன சொல்கிறது? ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட நிலவின் மண் மாதிரிகள் மூலம் நிலவின் வயது, அதன் உள்ளே என்னென்ன இருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்கள் மனிதர்களுக்கு தெரியவந்தன. நிலா ஒரு பெரிய மோதலால் உருவானது, அதில் எரிமலைகள் இருந்தன, அதன் துருவப் பகுதிகளில் உறைந்த நிலையில் நீர் இருக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தத் தகவல்கள் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு மிகவும் முக்கியம். நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி நமக்குச் சொல்கிறது. அங்கே பயனுள்ள பொருட்கள், கனிமங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்கவும் உதவலாம். அமெரிக்காவின் நாசா பூமிக்கு கொண்டு வந்த மண், பாறை மாதிரிகள் நிலவின் மேற்பரப்புக்கு எத்தனை வயதாகிறது என்பதை கணிப்பதில் முக்கிய பங்காற்றின. அமெரிக்காவின் அப்பொலோ திட்டங்களின் மூலம் கிடைத்த மாதிரிகளை ஆராய்ந்த போது, நிலவில் இருக்கும் Basalt, (எரிமலை வெடிப்பின் காரணமாக உருவான கரும்பாறைகள்) 3.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிய வந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39l1kmvp3vo
  13. 21 SEP, 2024 | 06:04 AM மட்டக்களப்பு கல்லடி - உப்போடை பேச்சி அம்மன் ஆலயம் வெள்ளிக்கிழமை ( 20 ) இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. கல்லடி உப்போடையில் அமைந்துள்ள சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. தீ பெரும் சுவாலையாக பிரகாசமாக எரியத் தொடங்கியதைaடுத்து, அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு படையினர் ஒன்றிணைந்து தீயை சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இருந்தபோதும் கோயில் மூலஸ்தானம் முற்றாக எரிந்து சாம்பலாகியது பேச்சி அம்மனின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக்குடிலில் வைக்கப்பட்டு மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வமாக பிரதேச மக்களால் போற்றப்படும் நிலையில், தீ பற்றியதை கேள்வியுற்ற அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து கோயிலை சூழ்ந்து கொண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் கோயில் மூலஸ்தானம் தீபற்றியதை கண்டுற்ற பல பக்தர்கள் கத்தி கதறி அழுது புலம்பியும் பெரும் கவலையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194224
  14. "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறந்து வைப்பு Published By: VISHNU 21 SEP, 2024 | 03:05 AM தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் வெள்ளிக்கிழமை (20 திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் வெள்ளிக்கிழமை (20) மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகத்தை மாவீரர்களின் பெற்றோரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். படங்கள் - ஐ. சிவசாந்தன் https://www.virakesari.lk/article/194219
  15. வாக்களிப்புக்கு பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றால் வாக்களிப்பு நிலையம் சூனியமாக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு Published By: VISHNU 21 SEP, 2024 | 02:00 AM வாக்களிப்பு நிலையங்களில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெற்று வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையம் முற்றாக செயலிழக்கப்பட்டு மீண்டும் வாக்களிப்பு நடத்தப்படும். அதுவரை தேர்தல் பெறுபேறு வெளியிடப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார். இன்று இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இரண்டு பேருக்கு அங்கு தங்கி இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாக்களிப்பு இடம்பெற்று முடியும்வரை அந்த இடத்திலிருந்து வெளியில் வரமுடியாது. அதேபோன்று வேறு பிரதிநிதிகளுக்கு அந்த நிலையங்களுக்கு செல்லவும் முடியாது. அதேபோன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் யாரும் கூடி இருக்கவேண்டாம். இதுதொடர்பில் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அதேபோன்று வாக்களிப்பு நிலையத்தில் ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் அல்லது வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நாசகார நடவடிக்கை ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையத்தை முற்றாக (சூன்யமாக்க) செயலிழக்கச்செய்ய நடவடிக்கை எடுப்போம். அவ்வாறு பல வாக்களிப்பு நிலையங்கள் செயலிழக்கச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதனால் மொத்த தேர்தல் பெறுபேற்றை வெளியிடுவதற்குப் பாதிப்பு ஏற்பட்டால், அந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு மீண்டும் வாக்களிப்பு நடத்திய பின்னரே தேர்தல் பெறுபேறு வெளியிட வேண்டிவரும். அதுவரை தேர்தல் பெறுபேற்றை வெளியிட எமக்கு முடியாமல் போகும். அதனால் வன்முறை, நாசகார சம்பவங்களுக்கு இடமளிக்காமல் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம். கிராமங்களின் வாக்குப்பெட்டியை பாதுகாப்பது அந்த கிராம மக்களின் பொறுப்பாகும். அதனால் வெளிநபர்கள் கிராமங்களுக்குள் வந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் பாதுகாத்துக்கொள்ள ஊர் மக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/194217
  16. மலைப்பாம்பு (Python) நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும்.[2] இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன. https://ta.wikipedia.org/wiki/மலைப்பாம்பு
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வாக்காளர் ஒருவர். 21 செப்டெம்பர் 2024, 01:23 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தலைநகர் கொழும்பில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. இதில் வெல்லப்போவது யார்? தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்? இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பொருளாதார நெருக்கடி இன்னும் முற்றிலுமாக தீராத நிலையில், அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தலைநகர் கொழும்பில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பெரிய அளவில் வரிசை ஏதும் இல்லை. வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் காத்திருக்காமல் உடனே வாக்களித்துவிட்டுச் செல்ல முடிவதாக அங்குள்ள நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். வாக்களித்துவிட்ட வாக்காளர்களுக்கு இடது கையின் சுண்டுவிரலில் அழியாத மை வைக்கப்படுகிறது. இதற்காக, பிரத்யேக பேனாவை வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்துகின்றனர். படக்குறிப்பு, கொழும்பில் டி.எஸ்.சேனநாயகா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடிக்கு வெளியே வந்த வாக்காளர் தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவு எப்படி? தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மக்கள் காத்திருப்பதை காண முடியவில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுதான் மிக நீளமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. களத்தில் 38 வேட்பாளர்கள் இருப்பதே இதற்குக் காரணம். படக்குறிப்பு, தலைநகர் கொழும்பில் உள்ள வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் படக்குறிப்பு, கொழும்பில் டி.எஸ்.சேனநாயகா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் இலங்கையில், காலை 7 மணிக்குத் துவங்கிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை துவங்கும். சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரலாம். இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலைநகர் கொழும்பில் உள்ள வாக்குச்சாவடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொழும்பு நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடி இந்த ஜனாதிபதி தேர்தலில் 1,71,40,354 பேர் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். இதில் 75 சதவீதம் பேர் சிங்கள மக்கள். மீதமுள்ள 25 சதவீதத்தில் தமிழர், இஸ்லாமியர், மலையகத் தமிழர் ஆகியோர் அடக்கம். இந்தத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 63,000 காவல்துரையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் நிஹகால் தல்துவ தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின்போது வன்முறை சம்பவங்கள் நடந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்திருக்கிறார். எந்த வாக்குச் சாவடியிலாவது வன்முறை சம்பவங்கள் நடந்தால், அங்கு வாக்குப்பதிவு ரத்துசெய்யப்படும் என்றும் மீண்டும் அங்கே வாக்கெடுப்பு நடந்த பிறகே, நாடு முழுவதற்குமான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிக்க முடியுமென செய்தியாளர் சந்திப்பில் ரத்நாயக்க தெரிவித்திருக்கிறார். படக்குறிப்பு, இந்த ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுதான் மிக நீளமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த முறை தேர்தலில் நிற்காமல் ரணில் ஜனாதிபதியானது எப்படி? இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமையான இன்று நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்திக்கும் முதல் தேர்தல் இது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் 52 சதவீத வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ, சுமார் 42 சதவீத வாக்குகளையே பெற்றார். கோட்டாபய பெற்ற இந்த வெற்றியின் மூலம் 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தனர். ஆனால், 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள ஆரம்பித்தது. இதன் உச்சகட்டமாக 2022-ஆம் ஆண்டில் பெட்ரோல் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். இதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். நாடாளுமன்றத்தின் மூலம் ஜூலை 21ஆம் தேதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி இலங்கையின் அரசமைப்புச் சட்டம் பிரிவு 40-இன் படி, இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பதவியேற்பவர் அந்தப் பதவிக் காலம் முடியும்வரைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆகவே, புதிய ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா. அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் நிற்கின்றனர். 2015-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியான மைத்திரி பால சிறிசேன, அதற்கடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போதைய ஜனாதிபதியான ரணில் மீண்டும் களத்தில் இறங்கியிருப்பதன் மூலம் 2015க்குப் பிறகு, மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் களத்தில் நிற்கிறார். படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ தமிழர்களின் வாக்கு யாருக்கு? இந்தத் தேர்தலில் பொருளாதார நெருக்கடியே மிக முக்கியமான பிரச்னையாக இருக்கக்கூடும். இலங்கையில் தற்போது பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிசை இல்லை என்றாலும் விலையேற்றம் மிகக் கடுமையாக இருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் உயர்த்தப்பட்ட அதன் விலை தற்போது சற்று குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், பிற பொருட்களின் விலை அப்படியே நீடிக்கிறது. சிறுபான்மையினரைப் பொருத்தவரை வேறு சில அம்சங்களும் அவர்களது வாக்குகளைத் தீர்மானிக்கலாம். குறிப்பாக, வடக்கில் வசிக்கும் தமிழர்களைப் பொருத்தவரை, போர் முடிந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ராணுவத்தாலும் தொல்பொருள் துறையாலும் காணிகள் அபகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மலையக மக்கள் மத்தியில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற தன்னால் மட்டுமே, சர்வதேச நிதியத்தின் விதிமுறைகளின் கீழ் நாட்டை மீட்டெடுக்க முடியுமெனக் கூறி ஆதரவைத் திரட்டினார் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க. சஜித் பிரேமதாஸவும் அனுர குமார திஸநாயக்கேவும் சில மாற்றங்களுடன் இதைச் செய்வோம் என்கிறார்கள். பாரம்பரிய கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை பலவீனமடைந்து காணப்படுகின்றன. ராஜபக்ஷக்களின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ களத்தில் இருந்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த பலர் ரணிலை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமிழர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் செல்வாக்குள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதாகச் சொன்னாலும் அதே கட்சியில் உள்ள சில தலைவர்கள், வேறு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பேசுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து இந்தத் தேர்தலை ஒரு சுவாரஸ்யமான, கவனிக்கத்தக்க தேர்தலாக்கியிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyejq7g1lko
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலீத் மிஷால், யஹ்யா அய்யாஷ், முகத்தை மறைத்தபடி இருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர் கட்டுரை தகவல் எழுதியவர், தௌபா கலிஃபி பதவி, பிபிசி நியூஸ் அராபிக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக ஹெஸ்பொலா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டன. இஸ்ரேலின் மேம்பட்ட கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஹெஸ்பொலா அமைப்பினர் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்ததன் காரணமாக டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இது இஸ்ரேல் நடத்திய "திட்டமிட்ட தாக்குதல்" என லெபனான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் இதற்காக "தகுந்த பதிலடி" கொடுக்கப்படும் என்று ஹெஸ்பொலா கூறியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு இஸ்ரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக சில இஸ்ரேல் ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் பொதுவாக ஹெஸ்பொலாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வரும். இந்த தாக்குதல் இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வெடிப்புகளுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்பது உண்மையானால், இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அதிக தாக்கத்தை ஏற்பத்திய ஒன்றாக இது இருக்கும். குறிப்பாக இஸ்ரேலின் தேசிய உளவு அமைப்பான மொசாட் முன்பு செய்த பணிகளை நினைவுக்கு கொண்டு வருவதாக இது அமையும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தகவல்தொடர்பு சாதனம் வெடித்ததால் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்த ஒருவரின் இறுதிச் சடங்கு மொசாட்டின் வெற்றிகள் மொசாட் பல வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது. மிகவும் குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலில் நடந்த விசாரணையின் போது அடால்ஃப் ஐக்மேன் நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை தேடி கண்டுபிடித்தது 1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் இருந்து நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை கடத்தியது மொசாட்டின் மிகவும் பிரபலமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும். இரண்டாம் உலகப் போரின்போது நாஜி வதை முகாம்களில் யூதர்கள் துன்புறுத்தப்பட்டு, அவர்களின் இனப்படுகொலைக்கான முக்கிய திட்டம் தீட்டியவராக ஐக்மேன் கருதப்படுகிறார். இதில் சுமார் அறுபது லட்சம் யூதர்கள் இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜெர்மனியால் கொல்லப்பட்டனர். தான் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக பல நாடுகளுக்கு தப்பி சென்று கொண்டே இருந்த ஐக்மேன் இறுதியில் அர்ஜென்டினாவில் குடியேறினார். 14 மொசாட் ஏஜென்டுகள் கொண்ட குழு அவரைக் கண்டுபிடித்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர் தூக்கிலிடப்பட்டார். எண்டெபி ஆபரேஷன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எண்டெபி பணயக்கைதிகள் ஒரு வார காவலுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர் உகாண்டாவில் நடந்த எண்டெபி ஆபரேஷன் இஸ்ரேலின் மிக வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ’மொசாட்’ அமைப்பு உளவுத் தகவல்களை வழங்கியது. டெல் அவிவிலிருந்து ஏதென்ஸ் வழியாக பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் இருந்து 100 பணயக்கைதிகளை இஸ்ரேலிய படைகள் வெற்றிகரமாக மீட்டன. விமானத்தில் 103 இஸ்ரேல் மக்கள் உட்பட சுமார் 250 பயணிகள் இருந்தனர். கடத்தல்காரர்களான பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் அவர்களது இரண்டு ஜெர்மன் கூட்டாளிகளும், இந்த விமானத்தை உகாண்டாவிற்கு திருப்பினார். இதில் மூன்று பணயக்கைதிகள், கடத்தல்காரர்கள், பல உகாண்டா வீரர்கள் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர் யோனாதன் நெதன்யாகு ஆகியோர் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் பிரதர்ஸ் பட மூலாதாரம்,RAFFI BERG படக்குறிப்பு, சூடானில் இருந்து கடத்தப்பட்ட எத்தியோப்பிய யூதர்கள் பயணித்த வாகனத்திற்கு அருகில் ஒரு மொசாட் ஏஜென்ட் நிற்கிறார். 1980களின் முற்பகுதியில் நடந்த ஒரு அசாதாரணமான ஏமாற்றுச் செயலில், பிரதமர் மெனகெம் பிகினின் அறிவுறுத்தலின் பேரில் மொசாட் அமைப்பு 7,000 க்கும் மேற்பட்ட எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த யூதர்களை சூடான் வழியாக இஸ்ரேலுக்கு கடத்தியது. இதற்காக ஒரு போலி டைவிங் ரிசார்ட்டை தங்கள் மறைவிடமாக அது பயன்படுத்தியது. அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சூடான், இஸ்ரேலுக்கு எதிரி நாடு. எனவே ரகசியமாக செயல்பட்ட மொசாட் ஏஜென்டுகளின் குழு சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு ரிசார்ட்டை அமைத்து அதை தங்கள் தளமாக பயன்படுத்தினர். அந்த ஏஜென்டுகள் பகலில் ஹோட்டல் ஊழியர்களாக பணிபுரிந்தனர். அண்டை நாடான எத்தியோப்பியாவிலிருந்து விமானம் மற்றும் கடல் வழியாக வந்த யூதர்களை இரவு நேரத்தில் அவர்கள் ரகசியமாக தங்கள் இடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த ஆபரேஷன் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அது கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொசாட் ஏஜென்டுகள் தப்பி ஓடிவிட்டனர். ம்யூனிக் ஒலிம்பிக் கடத்தலுக்கு பதிலடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலத்தீன ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ம்யூனிக் ஒலிம்பிக் மைதானத்தில் இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். 1972-ஆம் ஆண்டு பாலத்தீன ஆயுதக்குழுவான ’பிளாக் செப்டம்பர்’, ம்யூனிக் ஒலிம்பிக்கின் போது இஸ்ரேல் ஒலிம்பிக்ஸ் குழுவின் இரு உறுப்பினர்களை கொன்றது. ஒன்பது பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது. பின்னர் மேற்கு ஜெர்மன் காவல் படையினரின் மீட்பு முயற்சி தோல்வியடைந்ததால், பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1972-ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மஹ்மூத் ஹம்ஷாரி உட்பட பாலத்தீன விடுதலை அமைப்பின் பல உறுப்பினர்களை மொசாட் குறிவைத்தது. பாரிஸில் உள்ள அவரது வீட்டில் உள்ள தொலைபேசியில், வெடிக்கும் சாதனம் வைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். யஹ்யா அய்யாஷ் மற்றும் வெடித்த தொலைபேசி பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, யஹ்யா அய்யாஷின் படம் 1996-ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு நடவடிக்கையில், ஹமாஸின் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷ், 50 கிராம் வெடிமருந்து நிரப்பப்பட்ட கைபேசியால் படுகொலை செய்யப்பட்டார். ஹமாஸின் ராணுவப் பிரிவின் முக்கியத் தலைவரான அய்யாஷ், குண்டுகளை உருவாக்குவதிலும், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக சிக்கலான தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர். இது அவரை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளால் தேடப்படும் முக்கிய நபராக ஆக்கியது. அவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவரானார். 2019 இன் பிற்பகுதியில் இந்தக் கொலையின் சில விவரங்களை வெளியிடுவதற்கான தடைகளை இஸ்ரேல் நீக்கியது. இஸ்ரேலின் சேனல் 13 தொலைக்காட்சி, அய்யாஷின் கடைசி தொலைபேசி அழைப்பின் பதிவை ஒளிபரப்பியது. ஹம்ஷாரி மற்றும் அய்யாஷ் ஆகிய இருவரின் கொலைகளும், திட்டமிட்டு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு செய்யப்பட்ட கொலைகளுள் ஒன்றாகும். மஹ்மூத் அல்- மபூ: கழுத்தை நெரித்து கொலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஹ்மூத் அல்- மபூ மீது முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின்னர் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் 2010-ஆம் ஆண்டு, ஹமாஸின் மூத்த ராணுவத் தலைவரான மஹ்மூத் அல்-மபூ துபாயில் ஒரு ஹோட்டலில் கொலை செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இது ஒரு இயற்கை மரணமாகவே கருதப்பட்டது. ஆனால் துபாய் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு கொலை செய்த குழுவை அடையாளம் காண முடிந்தது. அல்-மபூ முதலில் மின்சாரத்தால் தாக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் என்பதை காவல்துறை பின்னர் கண்டறிந்தது. இந்த நடவடிக்கையை மொசாட் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டது. அதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதாண்மை மட்டத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. ஆயினும் மொசாட் அமைப்புதான் இந்த தாக்குதல் செய்தது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் கூறினர். இது போன்ற விவகாரங்களில் எப்போதும் தெளிவான கருத்தை தெரிவிக்காமல் இருக்கும் இஸ்ரேல், இந்த விஷயத்திலும் அதே நிலைப்பாட்டை கடைபிடித்தது. தோல்வியுற்ற கொலை முயற்சிகள் பல வெற்றிகரமான நடவடிக்கைகளை நடத்தியுள்ள போதிலும் மொசாட் பல தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மெஷால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலித் மெஷால் 1996 மற்றும் 2017 க்கு இடையில் ஹமாஸின் அரசியல் தலைவராக பணியாற்றினார். 1997-ஆம் ஆண்டு ஜோர்டனில், ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான காலித் மெஷாலை விஷம் கொடுத்து இஸ்ரேல் கொலை செய்ய முயற்சித்தது. மிகப் பெரிய தூதாண்மை நெருக்கடியைத் தூண்டிய நடவடிக்கைகளுள் இது ஒன்றாகும். இஸ்ரேலிய ஏஜெண்டுகள் பிடிபட்டபோது இந்த ஆபரேஷன் தோல்வியடைந்தது. மெஷாலின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு விஷமுறிவு மருந்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது. மொசாட்டின் அப்போதைய தலைவர் டேனி யாடோம், மெஷாலுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டன் சென்றார். இந்த கொலை முயற்சி ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை கணிசமாக மோசமாக்கியது. ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்- ஜஹர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மொசாட்டால் மிகவும் தேடப்படும் ஹமாஸ் தலைவர்களில் ஒருவர் மஹ்மூத் அல்-ஜஹர் 2003-ஆம் ஆண்டு காஸா நகரில் உள்ள ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் வீட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அல்-ஜஹர் தாக்குதலில் இருந்து தப்பிய போதிலும் அவரது மனைவி, மகன் காலித் மற்றும் பலர் இந்தத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் அவரது வீட்டை முற்றிலுமாக அழித்தது. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை அது எடுத்துக்காட்டியது. லவோன் சம்பவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூயஸ் கால்வாயை தேசியமயமாக்குவதாக அறிவிக்கும் எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர் 1954 இல் எகிப்திய அதிகாரிகள் ’ஆபரேஷன் சுசன்னா’ என அழைக்கப்படும் இஸ்ரேலிய உளவு நடவடிக்கையை முறியடித்தனர். சூயஸ் கால்வாயில் தனது படைகளை நிறுத்த பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எகிப்தில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நிலைகளில் குண்டுகள் வைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம். இந்த சம்பவம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பின்ஹாஸ் லாவோனின் பெயரால் ’லாவோன் சம்பவம்’ என்று அறியப்பட்டது. இந்த நடவடிக்கையை திட்டமிடுவதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. இதில் மொசாட் சில அதிர்ச்சிகரமான உளவுத்துறை தோல்விகளை சந்தித்ததாக அறியப்படுகிறது. யோம் கிப்பூர் போர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1973-ஆம் ஆண்டு அரபு இஸ்ரேலியப் போரின்போது இஸ்ரேலியப் படைகள் அக்டோபர் மாதம் சூயஸ் கால்வாயை கடந்தன. 1973 அக்டோபர் 6-ஆம் தேதி, சினாய் தீபகற்பம் மற்றும் கோலன் குன்றுகளை மீட்பதற்காக எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின. யோம் கிப்பூர் எனப்படும் யூதர்களின் பாவநிவிர்த்தி தினத்தன்று நடந்தப்பட்ட இந்தத்தாக்குதல் இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலை இரண்டு முனைகளில் தாக்கின. எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்தன. அதே நேரத்தில் சிரியப் படைகள் இஸ்ரேலிய நிலைகளைத் தாக்கி கோலன் குன்றுப்பகுதியில் நுழைந்தன. அந்த நேரத்தில் சோவியத் யூனியன் சிரியா மற்றும் எகிப்துக்கு பொருட்களை வழங்கியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசரகால உதவிகளை வழங்கியது. பின்னர் இஸ்ரேல் படைகள் எதிர்ப்பை முறியடிப்பதில் வெற்றி பெற்றன. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா தீர்மானத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 25-ஆம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது. 2023 அக்டோபர் 7 தாக்குதல் பட மூலாதாரம்,AFP ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் ஒரு திடீர் தாக்குதலால் ஆச்சரியமடைந்தது. இந்த முறை ஹமாஸ் 2023 அக்டோபர் 7-ஆம் தேதி காஸா எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்களைத் தாக்கியது. தாக்குதலை முன்னறிவிப்பதில் மொசாட்டின் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தடுப்புக் கொள்கையில் உள்ள பலவீனத்தை இது பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒரு போரைத் தொடங்கியது. இதன் விளைவாக 40,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1k7ekjewp8o
  19. 20 SEP, 2024 | 09:48 AM ரொபட் அன்டனி நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு நாளை 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி­ வரை நடை­பெ­ற­வுள்­ளது. நாடளாவிய ரீதியில் சுமார் 13 ஆயிரம் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்டுள்ள நிலையில் இம்­முறை தேர்தல் வாக்­க­ளிப்பை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நாடு முழுவதும் சுமார் 2 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எத்தனை ஆயிரம் பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இடாப்பு இம்முறை ஜனாதிபதித் தேர்­த­லா­னது 2024ஆம் ஆண்டின் வாக்­காளர் இடாப்­புக்கு அமைய நடை­பெ­ற­வுள்­ளது. தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்காக ஒரு கோடியே 71 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 354 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு புதிதாக சுமார் 10 இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்­க­ளிப்பு இம்மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திக­தி­களில் நடை­பெ­ற்றன. மேலும் கடந்த 12ஆம் திகதியும் தபால் மூலம் வாக்­க­ளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழு­வதும் 7 இலட்­சத்து 36 ஆயி­ரத்து 586 பேர் தகுதி பெற்­றிருந்தனர். அடுத்த 5 வரு­டங்­க­ளுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகின்ற, தலை­வி­தியைத் தீர்­மா­னிப்பதற்காக மக்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்களிக்க செல்லுங்கள் வாக்காளர்கள் காலை வேளையிலேயே தமக்குரிய வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிப்பில் ஈடுபடலாம். தேர்தலை மிகவும் அமைதியாகவும் சுயாதீனமாகவும் நடத்த சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்காளர்களைப் பொறுத்தவரையில் முதலில் வாக்களிப்பதற்கு தயாராக வேண்டும். வாக்­காளர் இடாப்பில் பெயர் உள்­ளதா? தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு மக்கள் முதலில் 2024 ஆம் ஆண்­டுக்­கான வாக்­காளர் இடாப்பில் தமது பெயர் இருக்­கின்­றதா என்­பதை பரீட்­சித்துப் பார்ப்பது அவசியம். அதனை தேர்தல் ஆணைக்­கு­ழுவின் இணை­­யத்­த­ளத்­துக்குள் பிர­வே­சித்து தேசிய அடை­யாள அட்டை இலக்­கத்தை சமர்ப்பிப்பதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமன்றி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் தேர்தல் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வாக்­காளர் அட்­டையில் மக்கள் வாக்­க­ளிக்க வேண்­டிய இடம் போன்ற விப­ரங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும். தேசிய அடை­யாள அட்டை கட்­டாயம் வாக்காளர்கள் வாக்­க­ளிக்க செல்லும் போது நிச்­ச­ய­மாக வாக்­காளர் அட்­டையை எடுத்துச் செல்­வது வாக்­க­ளிப்­ப­தற்கு இல­கு­வாக இருக்கும். அதே­நேரம் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு தேசிய அடை­யாள அட்டை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. எனவே மக்கள் மறக்காமல் அடையாள அட்டையை கொண்டு செல்வது அவசியமாகும். தேசிய அடை­யாள அட்­டை­யுடன் மேலும் பல ஆவ­ணங்கள் வாக்களிப்பதற்காக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. தேசிய அடை­யாள அட்டை, செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு, செல்­லு­ப­டி­யா­ன­ சா­ரதி அனு­ம­திப்­பத்­திரம், ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, முதி­யோர்­க­ளுக்­காக சமூ­க­ சேவை திணைக்­களம் வழங்­கு­கின்ற அடை­யாள அட்டை, மதத் தலை­வர்­க­ளுக்­கான ஆட்­ப­திவுத் திணைக்­க­ளத்­தினால் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள அடை­யாள அட்டை என்­ப­ன­வற்றை பயன்­ப­டுத்­தலாம். இவை எது­வுமே இல்­லா­விடின் தேர்தல் திணைக்­க­ளத்­தி­லி­ருந்துழ பெற்ற தற்­கா­லிக அடை­யாள அட்­டையைப் பயன்படுத்தலாம். ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அடை­யாள அட்டை இல்­லா­விடில் வாக்­க­ளிக்க முடி­யாது என்­பதை கருத்தில் கொள்­வது முக்­கியம். வாக்­க­ளிப்­பது எவ்­வாறு? ஜனாதிபதித் தேர்தலில் வாக்­க­ளிக்கும் போது மக்கள் மிகவும் கவ­ன­மாக வாக்­க­ளிக்க வேண்டும். வாக்­குச்­சீட்டில் வேட்­பா­ளர்­களின் பெயர்­களும் அவர்களது பெயர்­க­ளுக்கு முன்னே அவர்­க­ளுக்கு குறித்­தொ­துக்­கப்­பட்ட சின்­னமும் அதற்கு அருகில் வெற்றுப் பெட்­டியும் இருக்கும். வாக்­காளர் தான் வாக்­க­ளிக்க விரும்­பு­கின்ற ஒரு­வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்க முடியும். அவ்­வாறு வாக்­க­ளிக்கும் போது 1 என்ற இலக்­கத்தை வேட்­பா­ள­ருக்கு அரு­கி­லுள்ள பெட்­டியில் இட்­டு­வாக்­க­ளிக்க வேண்டும். அல்­லது புள்­ளடி இட்டும் வாக்­க­ளிக்­கலாம். மேலும் 38 வேட்­பா­ளர்­களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் இருப்­பதால் வாக்­காளர் தனது இரண்டாம் தெரி­வையும் மூன்றாம் தெரி­வையும் வெளிப்­ப­டுத்தும் வகையில் ஒன்­றுக்கும் மேற்­பட்ட வேட்­பா­ள­ருக்கு விருப்­பு­ வாக்­கு­க­ளையும் அளிக்­கலாம். அப்­ப­டி­யாயின் தனக்கு முத­லா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 1 என்ற இலக்­கத்தில் வாக்­க­ளித்­து­விட்டு இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 2 என்ற இலக்­கத்தில் வாக்­க­ளிக்­கலாம். மேலும் மூன்று வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மாயின் முத­லா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 1 என்றும் இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 2 என்றும் மூன்­றா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 3 என்றும் இலக்­கத்­தை­யிட்டு வாக்­க­ளிக்­கலாம். ஒன்­றுக்கும் மேற்­பட்ட வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­க­ வேண்டுமென்றால் இலக்­கங்­க­ளையே (அரபு இலக்­க­வ­ரிசை) பயன்­ப­டுத்­த­வேண்டும். மாறாக முத­லா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு புள்­ள­டி­யிட்­டு­விட்டு இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு இலக்­கத்தை இட்டால் அந்­த­வாக்கு நிரா­க­ரிக்­கப்­படும். ஆனால் ஒரு­வ­ருக்கு மட்டும் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்றால் 1 என்ற இலக்­கத்தை இட்டும் வாக்­க­ளிக்­கலாம். புள்­ளடி இட்டும் வாக்­க­ளிக்­கலாம். ஒன்­றுக்கு மேற்­பட்ட வேட்­பா­ளர்­க­ளுக்கு விருப்­பு­வாக்கின் மூலம்­வாக்­க­ளிக்க முற்­பட்டால் 1, 2, 3 என்று இலக்­கத்­தைத்தான் பயன்­ப­டுத்­த­வேண்டும். இதுதான் ஜனா­தி­பதி தேர்தல் வாக்­க­ளிப்பு முறை­யாகும். எப்­போது வாக்குகள் நிரா­க­ரிக்­கப்­படும்? அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­களைத்தவிர வாக்­குச்­சீட்டில் வேறு எத­னையும் குறிப்­பிடக்கூடாது. அவ்­வாறு குறிப்­பிடும் பட்­சத்தில் அவை நிரா­க­ரிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும். மேலும் ஒரு வாக்­கா­ள­ருக்கு ஒன்று என்ற இலக்­கத்தை இட்டு வாக்­க­ளித்து விட்டு இன்­னு­மொரு வேட்­பா­ள­ருக்கு புள்­ள­டி­யிட்டால் அது நிரா­க­ரிக்­கப்­பட்டு விடும். அதே­போன்று ஒரு­வ­ருக்கு புள்­ளடி இட்டு விட்டு மற்­று­மொ­ரு­வ­ருக்கு இலக்­கத்தை இட்டு வாக்­க­ளித்தால் அந்த வாக்கும் நிரா­க­ரிக்­கப்­படும். எனவே வாக்­காளர் தமது வாக்கைப் பயன்­ப­டுத்தும் போது துல்­லி­ய­மாக வாக்­க­ளிக்க வேண்டும். விருப்பு வாக்குகளின்போது மூன்றுக்கு மேற்பட்டோருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும். மேலும் இரண்டு அல்லது மூன்று என்ற இலக்கங்களை மட்டும் இட்டு வாக்களித்தாலும் நிராகரிக்கப்படும். அதாவது விருப்பு வாக்கை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் 1 என்ற இலக்கத்தை இடவேண்டும். 1 என்ற இலக்கத்தை இட்டு வாக்களிக்காமல் நேரடியாக 2 என்ற இலக்கத்தை இட்டு வாக்களித்தால் நிராகரிக்கப்படும். எனவே இங்கு மிக விழிப்புடன் சரியான முறையில் வாக்களிப்பது அவசியம். வெற்­றி­ பெறும் வேட்­பாளர் வாக்­க­ளிப்­புகள் முடிந்­ததும் வாக்­குகள் எண்­ணப்­பட்டு வெற்றி பெற்­றவர் தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் அறி­விக்­கப்­ப­டுவார். அளிக்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­களில் நிரா­க­ரிக்­கப்­பட்ட வாக்­குகள் கழிக்­கப்­பட்டு செல்­லு­ப­டி­யான வாக்­கு­களில் 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களை பெறு­கின்­றவர் ஜனா­தி­ப­தி­யாக அறி­விக்­கப்­ப­டுவார். ஒரு­வேளை எந்த வேட்­பா­ளரும் 50 வீத­மான வாக்­கு­களை பெறா­விடின் அதற்­கான அடுத்த கட்ட ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும். தவறாது வாக்களியுங்கள் இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தவறாமல் வாக்களிப்பது அவசியமாகும். மக்கள் இந்த ஜனநாயக செயற்பாட்டில் பங்­கெடுத்து தமது வாக்குகளை பயன்­படுத்த வேண்டும். அதாவது அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யப்போகின்ற தலை­­வரை தெரிவு செய்யும் ஜனநாயக செயற்­பாட்டில் மக்கள் தவறாமல் பங்கெடுப்பது தீர்க்க­மானதாக இருக்கின்றது. இலங்கையில் கடந்த 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்டுவரப்பட்டது. பின்னர் 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பிலும் அந்த முறை உள்ளடக்கப்பட்டது. 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இதன்று முன்னர் ஜனாதிபதித் தேர்தல்கள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பானது 9ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கானதாக அமைந்துள்ளது. மக்கள் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அமைதியான சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதற்கு தேவையான ஆவணங்களை கொண்டு செல்வது அவசியம். நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். முக்கியமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இம்முறை தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் தமது அறிக்கைகளை வெளியிடுவார்கள். பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் என பல்வேறு தரப்பினரும் கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமக்கு வேண்டிய தலைவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கிறது. அந்த ஜனநாயக உரிமையை அமைதியான முறையில் வன்முறைகளுக்கு இடமளிக்காமல் மக்கள் பயன்படுத்த வேண்டும். https://www.virakesari.lk/article/194152
  20. திமுத், சந்திமால், மெத்யூஸ், தனஞ்சய ஆகியோரின் துடுப்பாட்டங்களின் உதவியுடன் முன்னிலையில் இலங்கை; ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாளை ஓய்வு தினம் Published By: VISHNU 20 SEP, 2024 | 09:44 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோரின் பொறுமையான துடுப்பாட்டங்கள் என்பன இலங்கையை முன்னிலையில் இட்டுள்ளது. இரண்டு அணிகளினதும் முதலாவது இன்னிங்ஸ்கள் நிறைவில் 35 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை, போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் மீதம் இருக்க 202 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நாளை சனிக்கிழமை (21) நடைபெறுவதால் டெஸ்ட் போட்டியில் நாளைய தினம் ஓய்வு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் நாள் ஆட்டம் ஞாயிறன்று தொடரும். இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் பெத்தும் நிஸ்ஸன்க (2) மூன்றாவது ஓவரில் ஆட்டம் இழந்தார். திமுத் கருணாரட்னவும் தினேஷ் சந்திமாலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைக் குவித்தனர். அத்துடன் 2ஆவது விக்கெட்டில் 147 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 153 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன 83 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 61 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். இருவரும் தலா 6 பவுண்டறிகளை அடித்திருந்தனர். முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த கமிந்து மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். ஏஞ்சலோ மெத்யூஸ், அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி தலா 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். இலங்கை முதலாவது இன்னிங்ஸில் சகல விக்டெக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 2ஆம் நாளான வியாழக்கிழமை (19) ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்று உறுதியான நிலையில் இருந்தது. போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றது. டெரில் மிச்செல் 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் க்லென் பிலிப்ஸ் 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 136 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 101 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/194214
  21. பங்களாதேஷுக்கு பளோ ஒன் கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா 308 ஓட்டங்களால் முன்னிலை Published By: VISHNU 20 SEP, 2024 | 09:59 PM (நெவில் அன்தனி) சென்னை, சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்ளாதேஷஷை 149 ஓட்டங்களுக்கு சுருட்டிய போதிலும் பளோ ஒன் (follow-on) கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா 7 விக்கெட்கள் மீதம் இருக்க 308 ஓட்டங்களால் முன்னிலை பெற்று பலமான நிலையில் இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் மொத்தம் 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போதிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் இந்தியா, பெரும்பாலும் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ஓட்டங்களைக் குவித்தது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 6 விக்கெட் இழப்புக்கு 336 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா எஞ்சிய 4 விக்கெட்களை 40 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது. இதற்கு அமைய அதன் மொத்த எண்ணிக்கை 376 ஓட்டங்ளகாக இருந்தது. ரவிச்சந்திரன் அஷ்வின் 102 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 86 ஓட்டங்களுடனும் தமது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தபோது அவர்கள் இருவரும் மேலும் ஓட்டங்களைக் குவிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை இரண்டாவது புதிய பந்துடன் 81ஆவது ஓவரை ஆரம்பித்த பங்களாதேஷ், 83ஆவது ஓவரில் ரவிந்த்ர ஜடேஜாவை களம் விட்டகலச் செய்தது. ஜடேஜா முதல் நாள் பெற்றிருந்த 86 ஓட்டங்களுக்கு அப்பால் செல்லவில்லை. அஷ்வின் 113 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதியான 199 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின்வரிசையில் ஆகாஷ் தீப் 17 ஓட்டங்களைப் பெற்றார். இந்த மூவரையும் புதிய பந்தைக் கொண்டு தஸ்கின் அஹ்மத் ஆட்டம் இழக்கச் செய்தார். பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் கடும் சிரமத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்களையும் இழந்து 149 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷக்கிப் அல் ஹசன் (32), மெஹிதி ஹசன் மிராஸ் (27), லிட்டன் தாஸ் (22), அணித் தலைவர் நஜ்முல் ஹொசென் ஷன்டோ (20) ஆகிய நால்வரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். லிட்டன் தாஸும் ஷக்கிப் அல் ஹசனும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 51 ஓட்டங்களே பங்களாதேஷ் இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ், ரவிந்த்ர ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தனது 73ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிந்த்ர ஜடேஜா இன்று கைப்பற்றிய 2 விக்கெட்களுடன் தனது டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கையை 298 ஆக உயர்த்திக்கொண்டுள்ளார். இந்த மைதானத்தில் மேலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றி 300 விக்கெட்களைப் பூர்த்தி செய்ய ஆவலாக இருப்பதாக ஜடேஜா தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 227 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தபோதிலும் பங்களாதேஷுக்கு பளோ ஒன் கொடுக்க ரோஹித் ஷர்மா விரும்பவில்லை. இந்நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 81 ஒட்டங்களைப் பெற்றிருந்தது. ஷுப்மான் கில் 33 ஓட்டங்களுடனும் ரிஷாப் பான்ட் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். யஷஸ்வி ஜய்ஸ்வால் (10), ரோஹித் ஷர்மா (5), விராத் கோஹ்லி (17) ஆகிய மூவரே ஆட்டம் இழந்தவர்களாவர். https://www.virakesari.lk/article/194215
  22. யாழில் மனைவியின் கையை துண்டித்த கணவன்: விசாரணையில் வெளியான பின்னணி யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது, “சந்தேகநபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார். மேலதிக விசாரணை சம்பவ தினத்தன்று, சந்தேகநபரின் எச்சரிக்கைகளையும் மீறி மனைவி வீட்டின் அறைக்குள் இரகசியமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்துள்ள நிலையில் அதனை அவதானித்த சந்தேநபர் மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்த 41 வயதுடைய பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சந்தேகநபரும் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு கையை இழந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இதன் படி, மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். https://ibctamil.com/article/husband-arrested-cut-off-wife-s-hand-jaffna-1726792587?itm_source=parsely-top
  23. பட மூலாதாரம்,X படக்குறிப்பு, நந்தன் திரைப்படம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக ஊராட்சி பதவிகளை வகிக்கும் தலித் சமூகத்தினர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளையும் ஆதரவையும் பெற்று பதவிக்கு வரும் தலித் தலைவர்கள் எவ்வாறு கைபொம்மையாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நந்தன் படத்தின் ஒன்லைன். இந்த படத்தை ரா. சரவணன் இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஆர்.வி. சரண் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கதை என்ன? புதுக்கோட்டையில் உள்ள வணங்கான்குடி என்ற ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக அப்பகுதியில் இருக்கும் ஆதிக்க சாதியினரே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். கொப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) பல ஆண்டுகளாக அந்த பொறுப்பில் இருந்து வருகிறார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத சூழலில் அந்த ஊராட்சி ரிசர்வ் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த, அவர்களுடைய பேச்சை கேட்கும் ஒருவரை தலைவராக தேர்வு செய்வோம் என்று கொப்புலிங்கம் அவருடைய வீட்டில் வேலை செய்யும் அம்பேத்குமாரை (சசிகுமார்) அப்பதவிக்காக போட்டியிட வைக்கிறார். அம்பேத்குமார் கைபொம்மையாக பதவி வகிப்பாரா அல்லது சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுப்பாரா என்பதே படத்தின் கதை. நடிப்பும் இயக்கமும் எப்படி? "எந்த நேரமும் வெத்தலை குதப்பும் வாய், தோள்பட்டை வரை வளர்ந்த முடி, அழுக்கு பனியன், 'அய்யா என்ன செஞ்சாலும் நல்லதுக்குதான்' என வெள்ளந்தியாக நம்பக்கூடிய குணம் என கூழ்பானை (படத்தில் சசிகுமாரை அழைக்கும் பெயர்) கதாபாத்திரத்தில் அவர் ஆரம்பத்தில் வரும் காட்சிகளில் மீட்டர் மாறாமல் நடித்துள்ளார். ஆனால், பிரசிடெண்ட்ட் ஆன பிறகு அவருடைய குணாதிசயம் மாறவில்லை என்றாலும் சில இடங்களில் கூழ்பானையையும் மீறி சசிகுமார் நமக்கு தெரிவதை தவிர்க்க முடியவில்லை," என்று விமர்சனம் செய்துள்ளது தமிழ் இந்துவின் காமதேனு. "தென் மாவட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த கதாபாத்திரங்களிலேயே சசிகுமார் நடித்து வருகிறார் என அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தன. அதை உடைக்கும் விதமாக, நந்தனில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக நடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நந்தனில் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்," என்று விமர்சித்துள்ளது தினமணி. பாலாஜி சக்திவேல் நடிப்பு குறித்து கூறும் காமதேனு, சாதிய ஆணவத்தை சுமந்து திரியும் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தி போய் இருக்கிறார் என்று விமர்சித்துள்ளது. சசிகுமாரின் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி தேவையான பங்களிப்பை செலுத்துகிறார். சமுத்திரகனியின் சிறப்பு தோற்றம் கவனிக்க வைக்கிறது. கிராமத்து எளிய மனிதர்களை படத்துக்குள் கொண்டு வந்த நடிக்க வைத்திருப்பது யதார்த்தம் கூட்டுகிறது என்று விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை. பட மூலாதாரம்,X இயக்கம் எப்படி? "சாதிய ரீதியா ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்துக்கு வந்தால் தங்களுடைய மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என நம்புகிறார்கள். ஆனால், அந்த அதிகாரத்துக்கு வர எதிர்கொள்ளும் அவமானங்கள், பதவிக்கு வந்த பிறகும் அவர்கள் நடத்தப்படும் விதம் இதெல்லாம் ‘நந்தன்’ படத்தில் அசலாக கொண்டு வர நினைத்த இயக்குநர் இரா. சரவணனுக்கு வாழ்த்துகள். இந்தக் கதையை சினிமாவாக்க கமர்ஷியலாக எந்த விஷயங்களையும் கொண்டு வராமலும், திடீரென கதாநாயகனை சூப்பர் ஹீரோ போல சித்தரிக்காமல் இருப்பதும் ஆறுதலாக உள்ளது" என்றும் விமர்சனம் செய்துள்ளது காமதேனு. "படம் துவங்கும் போதே அழுத்தமான வசனங்களால் அந்த ஊரின் நிலை இதுதான் எனத் தெரிய வருகிறது. 'ஆள்வதற்கு அல்ல... வாழ்வதற்குக் கூட இங்கு அதிகாரம் தேவை,' என்கிற வசனம் நந்தனின் கதையை முழுமையடைய வைக்கிறது. அரசியல் ரீதியான கேலி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. போகிற போக்கில், இன்றைய சில அரசியல் தலைவர்களின் பேச்சுகளை, செயல்களையும் கிண்டல் செய்திருக்கிறார்," என்று விமர்சித்துள்ளது தினமணி. ''கூழ்ப்பானை பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும் தொடர்ந்து பல இடங்களில் அவரின் இடம் இதுதான் என்று கொப்புலிங்கம் மற்றும் அவரின் ஆட்கள் தொடர்ச்சியாக உறுதிப்படுத்துகின்றனர். இது நிறைய இடங்களில் வந்தாலும் கூட, உண்மையின் உரைக்கல்லாக திகழ்கிறது'' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த படத்தைப் பற்றி கூறியுள்ளது. பட மூலாதாரம்,X படக்குறிப்பு,தென் மாவட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த கதாபாத்திரங்களிலேயே சசிகுமார் நடித்து வருகிறார் என அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தன தடுமாறும் நந்தன் "அதிகாரமும் சாதியும் இவர்களை எந்த அளவுக்கு ஒடுக்குது, இதனால் அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல காட்சிகளில் காட்டியிருந்தாலும் அது போதுமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது. பல காட்சிகள் அடுத்து இதுதான் நடக்க இருக்கிறது என்பதையும் எளிதாக கணிக்க முடிகிறது. பல விஷயங்களை வலிந்து திணித்த உணர்வும் பார்வையாளர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். 'நந்தன்' பலவீனமான திரைக்கதையால் தடுமாறுகிறது," என்றும் காமதேனு விமர்சனம் செய்துள்ளது. "ஆனால், நந்தன் திட்டமிட்டபடி முழுமையான திரைப்படமாக உருவாகவில்லை. திரைக்கதையும் உருவாக்கமும் படத்தின் பெரிய பலவீனம். கத்துக்குட்டி, உடன் பிறப்பே போன்ற படங்களை இயக்கியவர் ஏன் நந்தனின் உருவாக்கத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்தார் எனத் தெரியவில்லை," என்று விமர்சனம் செய்துள்ளது தினமணி. நந்தனின் கதை முக்கியமானது என்றாலும் ஒரு திரைப்படமாக ஏமாற்றத்தையே தருகிறது என்கிறது தினமணி விமர்சனம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cew1xevpd7zo
  24. தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம்(20) திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள(nallur) தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (20) மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இந்த ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று ஆவணக் காட்சியகம் தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகம் மாவீரர்களின் பெற்றோரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://ibctamil.com/article/thiyaka-theepam-thileepan-nallur-1726848928

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.