Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா 19 SEP, 2024 | 11:21 AM ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. ஒருவருடத்திற்குள் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உறுப்பு நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. 124 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன,14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன,43 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன. பிரிட்டனும் அவுஸ்திரேலியாவும் வாக்கெடுப்பை தவிர்த்துள்ள அதேவேளை அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்டபகுதிகளில் தனது சட்டவிரோத பிரசன்னத்தை விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் குடியேற்றங்களை நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சில மாதங்களின் பின்னர் ஐநா இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. https://www.virakesari.lk/article/194074
  2. கமிந்து மெண்டிஸின் துடுப்பாட்ட ஆற்றல் தொடர்கிறது, 7ஆவது டெஸ்டில் 4ஆவது சதம் குவித்தார்; பலமான நிலையில் இலங்கை Published By: VISHNU 18 SEP, 2024 | 06:22 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்துள்ளது. மிகத் திறமையாகவும் உறுதியாகவும் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் தனது 7ஆவது டெஸ்டில் 8ஆவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்று 4ஆவது சதத்தைப் பூர்திசெய்தார். கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 114 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டம் இழந்தார். இன்றைய போட்டியில் ஆட்காட்டி விரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதால் சிறிது நேரம் ஓய்வு பெற்ற ஏஞ்சலோ மெத்யூஸ், 4ஆவதாக தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழந்த பின்னர் மீண்டும் களம் புகுந்து துடுப்பெடுத்தாடினார். மெத்யூஸுடன் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ், தொடர்ந்து குசல் மெண்டிஸுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார். கமிந்து மெண்டிஸைவிட குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 36 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களையும் பெற்றனர். ரமேஷ் மெண்டிஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் வில்லியம் ஓ'ரூக் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/194049
  3. Published By: DIGITAL DESK 7 19 SEP, 2024 | 04:14 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமது குடும்பத்தை கருத்திற் கொண்டு அவதானத்துடன் செயற்படுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாகவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். போலிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்காதீர்கள். எதிர்வரும் 22ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.ஆணைக்குழு மீது நம்பிக்கை வையுங்கள். தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகஸ்தர்கள் கட்டாயம் சேவையில் ஈடுபட வேண்டும். கடமைக்கு சமூகமளிக்காவிடின் தாபன விதிக்கோவைக்கமைய அது ஒரு குற்றமாக கருதப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானவுடன் ஊடக நெறிக்கோவையை வெளியிட்டோம். அனைத்து ஊடகங்களும் முறையாக செயற்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வெளியிடல் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். பல்கலைக்கழக பணியாட் குழுவினருக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கல் அரச சேவையிலும், தனியார் துறையிலும் பணி புரிபவர்களுக்கு சம்பளம் இல்லது சொந்த விடுமுறை இரத்தாகாத வகையில் விடுமுறை வழங்குவது குறித்து 2024.09.04 ஆம் திகதி அறிவித்திருந்தோம். ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பின் போது அரச பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும், மாணவர்களுக்கும் வாக்களிக்க செல்லும் வகையில் விடுமறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதியுடையோர். வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், நிலைய பணியாட்குழுவினர், வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள், வேட்பாளர்களினால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒவ்வொரு வேட்பாளர் சார்பாக முறைப்படி நியமிக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலைய முகவர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுமதிப் பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காணிப்பு ஒழுங்கமைப்புக்களின் முகவர்கள், தெரிவத்தாட்சி அலுவலரின் அனுமதிபெற்ற அலுவலர்கள் ஆகியோர் மாத்திரமே வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்கெடுப்பு நிலைய , வாக்கெண்ணும் நிலைய தகாத செயற்பாடுகள் வாக்கெடுப்பு மத்திய நிலையத்திலும், வாக்கெண்ணும் நிலையங்களிலும் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்தல், நிழற்படமெடுத்தல், காணொளி பதிவேற்றம் செய்தல், ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருள் பாவித்து விட்ட வருகை தருதல் என்பன தகாத செயற்பாடுகளாக கருதப்படும். தடை செய்யப்பட்ட இச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். உறுதிப்படுத்தப்படுதலுக்கான ஆவணங்கள் காலை 7 மணிமுதல் 4 மணி வரை வாக்களிப்பதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்களிக்க செல்பவர்கள் வாக்குச்சீட்டுடன் தேசிய அடையாள அட்டையை கொண்டுச் செல்ல வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாதவிடத்து தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வாரள் அடையாள அட்டை, சிரேஷ்ட பிரஜைக்கான அடையாள அட்டை, தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள தற்காலிய அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றினை வாக்களிப்பு நிலைய உத்தியோகஸ்தர்களிடம் காண்பித்து வாக்களிக்க முடியும். வாக்களிக்கும் முறைமை வாக்காளர்கள் தமது வாக்கினை வேட்பாளர் ஒருவருக்கு 1 என்று இலக்கமிட்டோ அல்லது ( ) புள்ளடியிட்டோ வழங்க முடியும். 1 என்று இலக்கமிட்டு வாக்களித்ததன் பின்னர் 2 , 3 என்று விருப்பு வாக்கினை அளிக்க முடியும் . புள்ளடியிட்டு வேட்பாளருக்கு வாக்களித்திருந்தால் விருப்பு வாக்களிக்க முடியாது. பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களித்து விட்டு வீடு செல்ல வேண்டும். ஏதேனும் வாக்களிப்பு மத்திய நிலையத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்று அதனால் வாக்களிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிப்பு செயற்பாடுகள் முற்றாக இடைநிறுத்தப்படும். பிறிதொரு தினத்தில் அந்த தொகுதிக்கு வாக்களிப்பை நடத்த நேரிடும். அவ்வாறு நேர்ந்தால் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவது தாமதமாகும். ஆகவே பொது மக்கள் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும். பிரச்சார அலுவலகங்கள் நீக்கம். நேற்று புதன்கிழமை (18) நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நிறைவடைந்துள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. வாக்களிப்பு மத்திய நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் வேட்பாளரின் இல்லம் காணப்படுமாயின் அதில் தேர்தல் பதாதைகள் மற்றும் பிரச்சார சுவரொட்டிகளை காட்சிப்படுத்த முடியாது. வாக்கு எண்ணும் பணிகள். நாடளாவிய ரீதியில் 13423 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் 1713 மத்திய நிலையங்கள் ஊடாக எண்ணப்படும். சனிக்கிழமை (21) பி.ப. 4.15 மணிக்கு தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். தபால் மூல வாக்குகள் எண்ணப்படும் போது ஒரு வேட்பாளர் சார்பில் அவரது 2 பிரதிநிதிகளும், ஏனைய வாக்குகள் எண்ணப்படும் போது ஒரு வேட்பாளர் சார்பில் அவரது 5 பிரதிநிதிகளும் கலந்துக் வாக்கு எண்ணல் மத்திய நிலையத்துக்கு வருகை தர முடியும். வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் தொலைபேசிகளை பாவிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. விருப்பு வாக்கு எண்ணல். தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கினை எவரேனும் வேட்பாளர் பெறாத சந்தர்ப்பத்தில் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படவில்லை. இம்முறை விருப்பு வாக்குகளை எண்ணும் சாத்தியம் காணப்படுகிறது. பொது இடங்கள், வீடுகளில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். கூட்டம் கூட்டமாக வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்லுங்கள். பொது இடங்களில் ஒன்று கூடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னர் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடும் போது வீடுகளில் இருங்கள். தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்று இழப்புக்கள் ஏற்பட்டால் அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பாதிக்கப்படுவார்கள். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.ஆகவே தமது குடும்பத்தை கருத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்படுங்கள். பொலிஸ், முப்படையினர் தயார் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் தேர்தலை நடத்த பாதுகாப்பு தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள். தேர்தல் சட்டத்துக்கும், பொதுச்சட்டத்துக்கும் முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக செயற்படுவபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உத்தியோகபூர்வ அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாகவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். எதிர்வரும் 22 ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். ஆணைக்குழு மீது நம்பிக்கை வையுங்கள். தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள். உங்கள் வாக்கு உங்களின் உரிமை அதனை ஜனநாயக முறையில் வெளிப்படுத்துங்கள். பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிமைகளை கொண்டாடுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/194109
  4. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா? வினாக்களுக்கு புள்ளிகளை வழங்குவதா? - விசாரணைகளின் பின் தீர்மானம் என்கிறார் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் Published By: DIGITAL DESK 7 19 SEP, 2024 | 06:43 PM (எம்.ஆர்.எம்.வசீம்) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினா பத்திரத்தில் மூன்று வினாக்களை நீக்கிவிட்டு அதற்கான புள்ளிகளை வழங்குவதா அல்லது பரீட்சையை மீண்டும் நடத்துவதா என்ற இறுதித் தீர்மானம் இடம்பெறும் விசாரணைகளின் பின்னரே எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாப்பத்திரம் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதா என தேடிப்பார்ப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் தற்போது பூரண விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாப்பத்திரம் என தெரிவித்து, போலி வினா பத்திரம் ஒன்று சமூகவலைத்தலங்களில் பிரசுரமாகியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பாகவே ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன் பிரகாரம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வினாப்பத்திரம் தயாரித்த குழுவை அழைத்து, குறித்த போலி வினா பத்திரம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், குறித்த போலி வினா பத்திரத்தில், நிச்சயிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை வினா பத்திரத்தில் இருந்த 3 வினாக்களுக்கு நிகரான வகையிலான 3வினாக்கள் மாத்திரம் இருந்ததாக அவர்களால் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் குறித்த மூன்று வினாக்களையும் நீக்கிவிட்டு, பதிப்பீடு செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. என்றாலும் நேற்று புதன்கிழமை (19) புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பரீட்சை திணைக்களத்துக்கு முன்னால் முன்னெடுத்த ஆர்ப்பட்டத்தைத்தொடர்ந்து, ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை முன்னெடுப்பதா அல்லது பரீட்சையை மீண்டும் நடத்துவதா என்ற இறுதித் தீர்மானம், தற்போது இடம்பெற்றுவரும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194117
  5. Published By: VISHNU 19 SEP, 2024 | 08:26 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி சுமார் 17.5 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கியுடன் 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைப்பதற்கான இணக்கப்பாடு இலங்கையால் எட்டப்பட்டுள்ள நிலையில், சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு, வர்த்தகக் கடன்வழங்குனர்கள், சர்வதேச பிணைமுறிதாரர்கள் ஆகியோருடன் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் மூலம் இலங்கையால் சுமார் 17 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைக்கமுடியும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வட்டிவீதங்களைக் குறைப்பதற்கும், நாட்டின் நிதியியல் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும் முடியும் என ஜனாதிபதி செயலகம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜுன் 21 - ஜுலை 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்கம் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. இப்பேச்சுவார்த்தைகளில் சட்ட மற்றும் நிதியியல் ஆலோசகர்களான க்ளிஃபோர்ட் சான்ஸ் எல்.எல்.பி, லிஸார்ட், வைட் அன்ட் கேஸ் மற்றும் ரொத்ஸ்சைல்ட் அன்ட் கோ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். அதேபோன்று இலங்கையின் பிணைமுறிகளில் 50 சதவீத பிணைமுறிகளின் உரித்தாளர்களான 10 முக்கிய தரப்பினரை உள்ளடக்கியிருக்கும் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவின் நிர்வாகக்குழு கடந்த ஜுன் 27 - 28 ஆம் திகதிகளில் பாரிஸில் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது. அதனையடுத்து கடந்த ஜுலை மாத முற்பகுதியில் கடன் ஸ்திரத்தன்மை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கைக்கும் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவினருக்கும் இடையில் 37 பில்லியன் டொலர் பெறுமதியுடைய மொத்த சர்வதேச கடன்களில் 12.5 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194129
  6. இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம் : 6 மாதங்களின் பின் டெஸ்ட் அரங்கில் இந்தியா Published By: DIGITAL DESK 7 19 SEP, 2024 | 10:11 AM (நெவில் அன்தனி) ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 68.52 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, அதனைத் தக்கவைக்கும் முனைப்புடன் பங்களாதேஷுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஆறு மாதங்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்துவரும் இந்தியா, இந்த டெஸ்ட் தொடருடன் அடுத்த மூன்றரை மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில்தானும் வெற்றிபெறாமல் இருந்த பங்களாதேஷ், அண்மையில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் தடவையாக வெற்றிபெற்ற சூட்டோடு இந்தியாவை வீழ்த்தும் குறிக்கோளுடன் இந்தத் தொடரை எதிர்கொள்கிறது. அதேவேளை, சில கால இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ள இந்தியா, தனது வெற்றிக் கணக்கை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான 14ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது வெற்றியை ஈட்டிய பங்களாதேஷ், இந்தியாவுக்கு எதிராகவும் 14ஆவது போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுவரை இந்தியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அவற்றில் 11 டெஸ்ட்களில் தோல்விகளைத் தழுவியுள்ளது. மற்றைய 2 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இந்தியாவில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் தோல்விகளையே தழுவியுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்தியாவுக்கு சாதகமான முடிவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்தியா கடந்த 10 வருடங்களில் சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இந்த காலப்பகுதியில் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரிலும் இந்தியா தோல்வி அடையவில்லை. இந்தத் தொடரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு இந்தியா முயற்சிக்கும் அதேவேளை, பங்களாதேஷ் பலத்த சவாலாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி முழு பலத்துடன் இந்தத் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரை முன்னிட்டு விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரிஷாப் பான்ட் ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். விராத் கோஹ்லி கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடியிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் ராகுல் விளையாடியிருந்தார். 2022இல் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷாப் பான்ட், கிட்டத்தட்ட 2 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாட தயாராகிறார். இதனிடையே இந்த வருடம் ஐபிஎல், சர்வதேச ரி20, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இவர்கள் மூவரும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் இடம்பெறுவதன் மூலம் அணி மேலும் பலமடையும் என நம்பப்படுகிறது. அணிகள் இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா. பங்களாதேஷ்: ஷத்மான் இஸ்லாம், ஸக்கிர் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), மொமினுள் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அஹ்மத், ஹசன் மஹ்முத், நாஹித் ரானா அல்லது தய்ஜுல் இஸ்லாம். https://www.virakesari.lk/article/194065
  7. 18 SEP, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கும் சகாப்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் உதயமாகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிலேயே இருபாலாருக்கும் சம பரிசுத் தொகையை வழங்குவதென ஐசிசி முடிவுசெய்திருந்தது. ஆனால் இப்போது 6 வருடங்களுக்கு முன்னரே அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதென ஐசிசி முடிவுசெய்துள்ளது. இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒட்டுமொத்த பணப்பரிசாக 7.95 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 240 கோடியே 42 இலட்சத்து, 97,000 ரூபா) வழங்கப்படும். சம்பினாகும் அணிக்கு 2.34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 70 கோடியே 76 இலட்சத்து, 80,000 ரூபா) பணிப்பரிசாக வழங்கப்படும். இது கடந்த வருடம் சம்பியனான அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட 134 வீதம் அதிகமாகும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 1.17 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 35 கோடியே 38 இலட்சத்து, 40,000 ரூபா) பரிசுத் தொகை வழங்கப்படும். இதுவும் 134 வீத அதிகரிப்பாகும். அரை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 675,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 20 கோடியே 41 இலட்சத்து, 38,000 ரூபா) பணப் பரிசாக கிடைக்கும். இதேவேளை, குழுநிலைப் போட்டிகளில் (முதல் சுற்று) ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 31,154 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 94 இலட்சத்து, 21,000 ரூபா) வழங்கப்படும். அரை இறுதிக்கு முன்னேறத் தவறும் ஆறு அணிகளுக்கு 1.35 மில்லியன் டொலர்கள் (இலங்கை நாணயப்படி 40 கோடியே 82 இலட்சத்து, 76,000 ரூபா) பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் அந்த அணிகளின் தரவரசைப்படியே பரிசுத் தொகை அமையும். அதேவேளை, ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் பத்து அணிகளுக்கும் 112,500 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 3 கோடியே 40 இலட்சத்து, 23,000 ரூபா) கிடைப்பது நிச்சயம். பங்களாதேஷுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் அக்டோபர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் ஆரம்பாகவுள்ளது. ஷார்ஜாவில் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைய இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும். தொடரும் போட்டியில் பங்களாதேஷ் - இங்கிலாந்து அணிகள் மோதும். துபாய் மற்றும் ஷார்ஜா விளையாட்டரங்குகளில் நடைபெறவுள்ள இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மொத்தம் 10 அணிகள் இரண்டு குழுக்களில் மோதவுள்ளன. மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் அக்டோபர் 20ஆம் திகதி நடைபெறும். 21ஆம் திகதி ஒதுக்கப்பட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194026
  8. நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது இலங்கை 88 - 2 விக் 18 SEP, 2024 | 12:34 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, மதிய போசன இடைவேளையின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. திமுத் கருணாரட்ன 2 ஓட்டங்களுடனும் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (33 - 2 விக்.) மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ், ஆட்காட்டி விரலில் வலி தாங்க முடியாதவராக களம் விட்டு வெளியேறினார். அவர் அப்போது 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ஆட்டம் பகல்போசன இடைவேளைக்கு நிறுத்தப்பட்டபோது தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். சுழல் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ'ரூக் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். https://www.virakesari.lk/article/194005
  9. டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கியில் கிடைத்த கடைசி தகவல் என்ன? விபத்து எப்படி நடந்தது? பட மூலாதாரம்,OCEAN GATE கட்டுரை தகவல் எழுதியவர், சாம் கப்ரால் பதவி, பிபிசி செய்தியாளர் 19 செப்டெம்பர் 2024, 04:25 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் டைட்டன் நீர்மூழ்கியில் இருந்த குழுவினர் கடைசியாக வெளியிட்ட தகவல் என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு, விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வெளியிட்ட இறுதிச் செய்திகளில் ஒன்று, "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்பதுதான். இது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க கடலோரக் காவல் படையின் ஆய்வாளர்கள், டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலுக்கும் (mother ship) இடையிலான இறுதி தகவல் தொடர்புகளில் ஒன்றாக இந்த செய்தி இருந்ததாகக் கூறினர். டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து வெடிப்பு (implosion) நிகழ்ந்ததைத் தொடர்ந்து டைட்டனின் பின்புற வால் கூம்புப் பகுதி கடல் அடி மட்டத்தில் தங்கியது. இந்தப் படங்கள் முதல்முறையாக ஆய்விற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. ஆய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணை டைட்டானிக் கப்பல் 111 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலைப் பற்றி ஆய்வு செய்வதற்காக டைட்டன் நீர்மூழ்கி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டது. டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை நெருங்குவதற்கு இரண்டு மணிநேரம் இருந்த நிலையில் கடலின் உள்ளேயே அது விபத்துக்குள்ளானது. கடலோர காவல்படை அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 16) இதற்காக இரண்டு வார கால ஆய்வைத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், எதிர்காலத்தில் இதேபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பரிந்துரைகளை வழங்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வுக்காக இதேபோன்ற நீர்மூழ்கியின் பயணத்தை ஆய்வாளர்கள் மறுபடியும் மேற்கொண்டனர். டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலான போலார் பிரின்ஸ்க்கும் இடையில் பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளையும் வெளியிட்டனர். டைட்டன் நீர்மூழ்கி உள்ளூர் நேரப்படி 09:17க்கு ஆழ்கடல் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. மூலக்கப்பலில் இருந்த உதவிப் பணியாளர்கள் நீர்மூழ்கியின் ஆழம், எடை, மூலக் கப்பலைப் பார்க்க முடிகிறதா போன்றவற்றைக் கண்காணித்து வந்தனர். முதலில் தகவல் தொடர்புகள் மோசமாக இருந்தன. ஆனால் சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, டைட்டன் "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்று செய்தி அனுப்பியது. அதன் கடைசி செய்தி, உள்ளூர் நேரப்படி 10:47க்கு, 3,346மீ ஆழத்தில் இருக்கும்போது வந்தது. அதன்பின், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. டைட்டன் நீர்மூழ்கி பற்றிய கண்டுபிடிப்புகள் பட மூலாதாரம்,US COAST GUARD படக்குறிப்பு, டைட்டனின் பின்புறப் பகுதி கடல் அடிமட்டத்தில் இருக்கும் காட்சி டைட்டனை பற்றிய அவர்களின் கண்டுபிடிப்புகளை முன்வைத்தனர். அது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், திறந்த வானிலை மற்றும் பிற கூறுகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்தது என்றும், அதன் பாகங்கள் மூன்றாம் தரப்பினரின் சோதனைக்கு உள்ளாகவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த விபத்துக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பயணங்களில், இதுபோன்ற நீர்மூழ்கிகள் எதிர்கொண்ட கடுமையான சிக்கல்களையும் அவர்கள் குறிப்பிட்டனர். 2021, 2022 ஆகிய ஆண்டுகளில், டைட்டானிக் இடிபாடுகளை நோக்கி நீர்மூழ்கி 13 முறை பயணித்தது. அப்போது 118 முறை உபகரணங்களில் சிக்கல்கள் ஏற்பட்டது. ஒரு பயணத்தின்போது, கடலில் இருந்து வெளியே கொண்டு வருகையில் நீர்மூழ்கியின் முன் பகுதி கடல் அடிமட்டத்தில் விழுந்தது. 3,500 மீட்டர் ஆழத்தில் அதன் த்ரஸ்டர்கள் (thrusters) செயலிழந்தன. மற்றொரு பயணத்தின்போது அதன் பேட்டரிகள் செயலிழந்து 27 மணிநேரம் அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதை உற்பத்தி செய்த ஓஷன் கேட் (OceanGate) நிறுவனம், ஒரு நீர்மூழ்கியைத் தயாரிக்க மேற்கொள்ளும் வடிவமைப்புத் தேர்வுகள், பாதுகாப்புத் திறன் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவது குறித்து முன்பு சிக்கல்களைச் சந்தித்திருக்கிறது. ஓஷன் கேட் நிறுவனம்தான் இதற்கு காரணமா? பட மூலாதாரம்,SUPPLIED VIA REUTERS / AFP படக்குறிப்பு, ஸ்டாக்டன் ரஷ், ஹமிஷ் ஹார்டிங், ஷாஜதா தாவூத், அவரது மகன் சுலேமான் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் டைட்டனில் இருந்தனர். நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர் டோனி நிசென், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் "தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தன்னைக் கஷ்டப்படுத்தியதாக" கூறினார். டைட்டனில் பயணித்த ஓஷன் கேட் நிறுவனத்தின் மறைந்த தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பெரும்பாலான பொறியியல் முடிவுகளை எடுத்ததாக நிசென் கூறினார். அவருடன் பணிபுரிவது கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டார். "ஸ்டாக்டன் தான் விரும்பியதை நிறைவேற்றப் போராடுவார், என்ன நடந்தாலும் அதில் இருந்து பின்வாங்கமாட்டார்” என்று அவர் கூறினார். "பெரும்பான்மையான ஊழியர்கள் எப்போதும் ஸ்டாக்டன் சொல்வதை ஒப்புக்கொள்வார்கள்; அது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்." இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஓஷன் கேட் நிறுவனம், தான் நடத்திய அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியது. நிறுவனத்தில் தற்போது முழுநேர ஊழியர்கள் இல்லை, ஆனால் விசாரணைக்கு ஒரு வழக்கறிஞர் ஒத்துழைப்பார் என்று அது கூறியது. ஏற்கெனவே நடந்த 15 மாத விசாரணையின் முதல் பொது விசாரணை திங்கட்கிழமையன்று தொடங்கியது. தனியார் நிறுவனங்கள் ஆழ்கடலில் மேற்கொள்ளும் ஆய்வுகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய நீடித்த விவாதத்தை டைட்டனின் விபத்து குறித்த பதிலளிக்கப்படாத கேள்விகள் எழுப்பியுள்ளன. பட மூலாதாரம்,OCEAN GATE பத்து முன்னாள் ஓஷன்கேட் ஊழியர்கள், அதன் இணை நிறுவனர் கில்லர்மோ சோன்லீன், கடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடல் ஆய்வு நிபுணர்கள் ஆகியோரிடம் கடலோர காவல்படையின் மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் (எம்பிஐ) விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் என்பது அமெரிக்க கடல்சார் விபத்துகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மிகவும் முக்கிய அமைப்பு. இது வருடத்திற்கு ஒரு விசாரணையை மட்டுமே நடத்துகிறது என்று அதன் தலைவர் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார். "இதுவரை நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான விசாரணைகளில், ஒரு வழக்கு மட்டுமே இந்த நிலையை எட்டுகிறது" என்று ஜேசன் நியூபாவர் கூறினார். "இந்த விசாரணையின் மூலம் இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, இது போல எதுவும் நடக்காமல் தடுக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்." உயர்மட்ட கடலோர காவல்படை மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (NTSB) அதிகாரிகளின் குழுவிற்கு, சிவில் தண்டனைகளைப் பரிந்துரைக்க அதிகாரம் உள்ளது. மேலும் கிரிமினல் வழக்குக்கான தண்டனையை அமெரிக்க நீதித்துறையிடம் பரிந்துரை செய்யவும் அதிகாரம் உள்ளது. டைட்டன் நீர்மூழ்கி ஜூன் 18, 2023 அன்று அதன் மூலக் கப்பலான போலார் பிரின்ஸ் உடனான தொடர்பை இழந்தது. அதன் பிறகு நான்கு அரசாங்கங்கள் இதைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளரான ஹமிஷ் ஹார்டிங், மூத்த பிரெஞ்சு டைவர் பால் ஹென்றி நர்கோலெட், பிரிட்டிஷ்-பாகிஸ்தாதான் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது 19 வயது மகன் சுலேமான் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy94j3q14gwo
  10. இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி! 18 SEP, 2024 | 05:14 PM (எம்.மனோசித்ரா) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருக்கின்றனர். நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவருக்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பம்பலப்பிட்டியில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை மக்களுக்கு பொதுவாகக் காணப்படும் சவால்களைப் பற்றியே பேசுகின்றனர். அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் அந்த மக்களை பாதுகாப்பதற்கான சட்டங்களையும் அறிமுகப்படுத்துவோம். ஏனையயோரைப் போன்று அவர்களும் கன்னியத்துடன் வாழ வேண்டும். அனைத்து இன மக்களது தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இன பேதமின்றி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே. சில விடயங்களுக்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டாலும், அவர் துணிச்சலுடன் தீர்மானங்களை எடுக்கின்றார். இதற்கு முன்பிருந்த தலைவர்கள் ஏனையோருக்கு பயந்து சிறுபான்மை மக்களுக்கான தீர்மானங்களை எடுப்பதற்கு பின்வாங்குவார்கள். மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அது நன்மைக்கான மாற்றமாகவே இருக்க வேண்டும். மாறாக வீழ்ச்சிக்கான மாற்றமாக இருக்கக் கூடாது. மக்களை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலேயே இன்று பங்களாதேஷில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் தற்போதுள்ள நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/194037
  11. அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த பரப்புரையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இருமுறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நியூயோர்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், அங்கிருந்த வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் அவர் மீது நடந்த அந்த கொலை முயற்சிக்கு கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோரது பேச்சுக்களே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309543
  12. 18 SEP, 2024 | 07:38 PM (எம்.நியூட்டன்) காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (18) நடைபெற்றது. உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவுள்ள ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆளுநரிடம் தெரிவித்தனர். இந்திய முதலீட்டில் மேற்கொள்ளவுள்ள சீமெந்து தொழிற்சாலையில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும், இதனூடாக உள்ளூர் மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். நிதி மூலம், தொழிற்சாலையை நிறுவுவதற்கான காணி கோரிக்கை, மூலப்பொருட்களின் இறக்குமதி, விற்பனை செயற்பாடுகள், செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான கால எல்லை, சுற்றாடல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அடங்கிய முழுமையான முன்மொழிவு திட்டத்தை விரைவாக சமர்பிக்குமாறு தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், உரிய நடைமுறைகளை பின்பற்றி அதனை சாதகமான முறையில் பரிசீலிக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். https://www.virakesari.lk/article/194043
  13. தென்னிலங்கை அரசியல்வாதிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வரும் தமிழ் அரசியல்வாதிகள் ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டை தொகுதி கிளை நேற்றையதினம்(17) ஏற்பாடு செய்த பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு தேர்தல்கள் வருகிற பொழுது நாங்கள் சொல்லுகின்ற வார்த்தைகள் தேர்தல் முடிவுற்றதும் எங்களுக்கு ஒரு பயனையும் தரவில்லை என 2009 பின் பல தடவைகள் கூறியிருக்கிறோம். காரணம் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு இனம். இதே வட்டுக்கோட்டை மண்ணில் நாங்கள் எல்லோரும் இருந்து பேசுகின்ற இந்த மைதானம் சூழ்ந்து இருக்கின்ற தேசிய விடுதலை மண்ணில் 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்து இருந்தோம். மக்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என. காரணம் நாங்கள் தொடர்ந்து இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுது எங்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து எங்கள் உயிர்களை குடித்த பொழுது வேறு வழியின்றி நாங்கள் அறவழியிலே போராடி இனம் ஆயுதம் தூக்கத் துணிக்கப்பட்டது. பல பேச்சு வார்த்தைகளை நடத்தினோம் பல விட்டுக்கொடுப்புகளை செய்தோம் எல்லாவற்றிலும் ஏமாற்றப்பட்டோம். தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் வைத்து சொன்னார் நான் எல்லா வழிகளிலும் முயற்சித்து பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை. இழந்து போதும் நாங்கள் ஒரு இறைமையுள்ள இனமாக இருந்திருக்கிறோம். எங்களுடைய இறைமையை மீட்டெடுக்கும் எங்களுடைய இறுதி தருணமாக அறவெளிப் போராட்டம் என்றார். அவருடைய கருத்து எங்களுக்கு முழுமையான இலக்கு தமிழினம் தான் என்ற செய்தியைச் சொன்ன மண் இந்த மண். அதனால் தான் இந்த மண்ணுக்குரிய மகிமை வித்தியாசமானது . 1977 தேர்தலில் 24 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தோம் 18 தொகுதிகளில் எங்களுடைய மக்கள் எங்களை வெல்ல வைத்து மிகப்பெரிய ஆணையை வழங்கிய காலம். ஆனால் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாகவும் 1983 இல் எங்கள் மீது ஏவப்பட்ட இனப்படுகொலைகள் நாங்கள் இந்த மண்ணிலே அனாதைகள் ஆக்கப்பட்டோம் . நாங்கள் அழிக்கப்படும் அனாதைகள் ஆக்கப்பட்டதை தொடர்ந்து தமிழினம் தன்னைக் காப்பதற்காக ஆயுதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை சிங்கள ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்டது. அதனைத் தான் 1985 ஆம் ஆண்டு இந்தியாவினுடைய இந்தியா டுடே பத்திரிகைக்கு தலைவர் பிரபாகரன் அவர்களை செவ்வியில் நாங்கள் விரும்பி ஆயுதத்தை தூக்கவில்லை எங்கள் பாதுகாப்புக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காக நாங்கள் ஆயுதங்களை தூக்க வேண்டி நிர்பந்திக்கப்பட்டோம் என்றார். தலைவரின் கருத்தின் ஊடாக ஆயுதங்களை தேடி நாங்கள் போகவில்லை என்ற செய்தியை மிகத் தெளிவாகச் சொல்லி இருந்தார். உலகத்தினுடைய வரலாற்றிலேயே இரண்டு செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன ஒன்று1947 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கி தமிழர்கள் உரிமையுள்ள இனம் . அவர்களுக்குரிய சுய நிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வுதான் இந்த மண்ணில் அவர்களுக்கு தனியரசாக தனித்துவமான இனமாக அடையாளப்படுத்தும் என கொழும்பு எழுதும் இளைஞர் சங்கத்தில் தந்தை செல்வா ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாழ்ந்த உரையாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா டுடே ஊடகத்துக்கு வழங்கிய செவ்வி தமிழர்கள் ஏன் ஆயுதம் தூக்கினார்கள் என்பதற்கான உண்மையைக் கூறியுள்ளார். அதனால் தான் அன்புக்குரிய சகோதரர்களே சகோதரிகளே நாங்கள் விரும்பி ஆயுதம் தூக்கவில்லை. எங்களுக்கு முன்னாள் இருக்கும் செழியன் காயப்பட்டு நடக்க முடியாமல் மேடையிலே ஏற முடியாமல் இருக்கிறார். இந்த மண்ணிலே மக்களுக்காக போராடி இரத்தம் சிந்தியதால் விழிப்புண் அடைந்தவர்களாக எங்களுடைய தேசிய விடுதலை நேசித்த இனம் அதனால்தான் எங்கள் வீட்டினுடைய ஒவ்வொரு கதவுகளையும் தட்டிப் பாருங்கள். வட்டுக்கோட்டை தொகுதியில் இருக்கின்ற கதவுகள் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இருக்கிற தமிழ் மக்களுடைய ஒவ்வொருவருடைய வீட்டு கதவுகளையும் தட்டிப் பாருங்கள் யாரோ ஒரு போராளிகளுடைய வீர சாவு யாரோ ஒரு போராளியின் விழிப்புண் காயங்கள் இருக்கும். அதனால் தான் யுத்தம் முடிவுக்கு வந்த பிற்பாடு எங்கள் மீதான யுத்தம் மொளனிக்கப்பட்ட பிற்பாடு நாங்கள் இந்த மண்ணிலே நடக்கிற ஒவ்வொரு தேர்தல்களையும் ஒரு போர்க்களமாக பார்க்கிறோம் . அது ஒரு யுத்த களமாக பார்க்கிறோம் அதனால்தான் போர்க்களத்தில் நாங்கள் பாவிக்கின்ற ஆயுதம் வெடி மருந்துகள் அல்ல பீரங்கிக் குண்டுகள் அல்ல துப்பாக்கிகள் அல்ல உங்கள் கைகளுக்கு கிடைத்துள்ள வாக்குச் சீட்டு. 21 ஆம் திகதி வாக்கு சீட்டுகள் தான் உங்களுடைய அந்த மிகப்பெரிய ஆயுதம் அதனை நாங்கள் இனத்துக்காக ப் பயன்படுத்துகிறோமா அல்லது பணத்திற்காக தெற்கு அரசியல் வாதிகளுக்கும் பயன்படுத்தப்போகிறோமா? எல்லா சிந்தனையும் எண்ணமும் எங்களுடைய கைகளில் எங்களுடைய மனங்கள் தான் இருக்கிறது நாங்க வழமையாக 1978 ஆம் ஆண்டிலிருந்து யாரோ ஒரு சிங்களம் வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு கைய கட்டி நின்ற இனம். ஒரு அடிமையாக அது ஒரு சிங்கள வேட்பாளருக்கு ஒரு தென்பகுதி வேட்பாளருக்கு அளிக்கிற வாக்குத்தானே என பேசாமலே இருந்து விட்டுப் போன இனம் இன்று எமக்கான வேட்பாளரை களமிறங்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டு எங்கள் மீது யார் குற்றம் புரிந்தார்களோ எங்கள் மீது யார் குண்டுகளை வீசினார்களோ எங்கள் மீது யார் கொத்துக் குண்டுகளை வீசினார்களோ எங்கள் மீது யார் பொஸ்பரஸ் குண்டுகளை வீசினார்களோ அந்த வீசிய இராணுவத்தினுடைய தளபதியாக இருந்த பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு எங்களுடைய கட்சி கேட்டிருந்தது. நாங்களும் மறுக்கவில்லை போய் வாக்களிப்போம் காரணம் எய்தவன் இருக்க அம்பை நோவதா என எங்களை நாங்கள் ஆறுதல் படுத்திச் சொல்லிக் கொண்டோம். மஹிந்த ராஜபக்ஷ என்கிற இனப்படுகொலையாளியை அகற்றுவதற்காக நாங்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்தோம் என்ற செய்தியை சொன்னோம் அவர் தோற்றுப் போனார். 2015 ஆம் ஆண்டு மகிந்த எதிரி மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்றோம் எங்களுடைய மக்கள் வாக்களித்தார்கள் அவர் வென்றவுடன் சொன்னார் நான் இந்த தேர்தலில் தோற்று இருந்தால் ஆறடி நிலம் கூட எனக்கு மிஞ்சியிருக்காது. அவரை திருகோணமலையில் மாலை சூடி வரவேற்ற சம்பந்தன் ஐயா மண்டேலாவாக வந்திருக்கிறார் என வாழ்த்தினார். ஆனால் நான்கு வருடங்களில் மீண்டும் அதே கோர முகத்தை மைத்திரிபால சிறிசேன காட்டினார். எந்த வழியில் வந்தாரோ என்ன அரசியல் தீர்வை செய்வேன் என சொன்னாரோ அவற்றையெல்லாம் விட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார். 2020 ஆம் ஆண்டு நாங்கள் திரும்ப நடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு எங்களுடைய கட்சி வாக்களிப்பதாக நாங்கள் மக்களிடம் கேட்டோம் மக்கள் வாக்களித்தார்கள். அவரும் தோற்றுப் போனார் தமிழ் மக்கள் வாக்களித்ததற்காக 2009 ஆம் ஆண்டடு இறுதி யுத்தத்திலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு மன்னிப்பு கேட்கக் கூட அவருக்கு மனம் வரவில்லை. 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் கோட்டபாய ராஜபக்ஷ ஓட ஓட விரட்டப்பட்ட பொழுது அந்த இடத்திற்கு ரணில் விக்கிரமசிங்கமும் டக்ளஸ் அழகப்பெருமாவும் போட்டியிட்டார்கள். அழகப் பெருமாவை ஆதரித்தோம். அவரும் தோற்றுப் போனார் வரலாற்று ரீதியாக அவர்களுக்கு வாக்களித்து வாக்களித்து தோற்றுப்போன இனம் நாங்கள் எதையுமே அடைய முடியவில்லை. ஒருவரை வெல்ல வைத்தோம். அவரும் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே அன்புக்குரியவர்களே இப்பொழுது வரலாற்றை திரும்பிப் பாருங்கள். நாங்கள் எவ்வளவு தூரம் மனம் திறந்து செய்திருந்தோம் ஆனால் அவர்கள் எங்களுக்கு எதையுமே செய்யவில்லை அதனால் தான் இப்பொழுது முடிவுக்கு வந்தோம். பொது வேட்பாளரை ஆதரித்து எங்கள் செய்தியை உலகிற்கு கூறுவதற்கு. வடக்கு கிழக்கில் இருக்கின்ற 14,40,000 தமிழ் வாக்காளர்களை நோக்கி தமிழ் பொது வேட்பாளர் நகர்ந்து கொண்டிருக்கிறது. தெற்கு பயப்படுகிறது. தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க போகிறார்கள். அதனால் தான் கடைசி நேரத்திலும் கூட அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள் . அவர்களுக்கு பின்னால் தமிழ அரசியல்வாதிகள் சிலர் ஆளுநர் பதவி தருவார். அமைச்சுப் பதவி தருவார் பேரம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ஆகவே, எமது மக்கள் பொது வேட்பாளருக்கு வழங்கும் வாக்குகள் தெற்கு மட்டும் அல்ல. பதவிக்கும் பணத்துக்கும் விலை போகும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309530
  14. Published By: VISHNU 18 SEP, 2024 | 08:06 PM வவுனியா ஓமந்தை பகுதியில் புதன்கிழமை (18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்…. ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவர் ஓமந்தை எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் நின்ற ஒருவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியை சேர்ந்த சங்கீதன் வயது 40 மற்றும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யோகராசா 42 ஆகியோரே மரணமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/194055
  15. 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களிலுள்ளும் தடைவிதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் இன்றையதினம்(18) விசேட ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களினுள்ளும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதும், அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்ந்துகொள்வது அத்தியாவசியமானது என்பதும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் வலியுறுத்தப்படுகிறது. கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்தல் நிழற்படமெடுத்தல் வீடியோ செய்தல் ஆயுதங்களை தம் வசம் வைத்திருத்தல் புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் மற்றும் வேறு போதைப்பொருள்களைப் பாவித்தல். மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்களைப் பாவித்துவிட்டு வருகை தருதல் என்பன தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/309532
  16. என்ன நடக்கிறது லெபனானில்? லெபனான் நாட்டில் நேற்று பேஜர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினரின் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியுள்ளது. பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பைப் போன்று லெபனானில் இயங்கி வரும் அமைப்பு ஹிஸ்புல்லா எனும் பெயர் கொண்ட அமைப்பாகும். கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு எதிராக பல தாக்குதல்களை ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வந்தது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த செய்தி பரிமாற்ற பேஜர்கள் நேற்றைய தினம் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேஜர் வெடிப்பில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் 3000 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். தைவானில் உள்ள GO APPOLO நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்து பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்ட இந்த பேஜர்கள் இந்த வருட தொடக்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் பேஜர் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பேஜர்கள் தயாரிக்கப்படும்போதே அதில் 3 கிராம் வெடிபொருள் வைக்கப்பட்டது என்றும் இதற்கு பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத்தின் சூழ்ச்சி உள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சினிமாவில் வருவது போல் இதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலை ஹேக்கிங் மூலம் செய்ய முடியும் என்று நிரூபணமாகியுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் கைகளிலும் உள்ள ஸ்மார்ட் போன்களை இதுபோன்ற ஹேக்கிங் மூலம் அடுத்தடுத்து வெடிக்க செய்ய முடியுமா என்ற கேள்வியே பலரை அச்சமூட்டியுள்ளது. இந்த சம்பவங்கள் நடைபெற்று பரபரப்புகளும் அதிர்ச்சியும் அடங்குவதற்குள் அடுத்ததாக ஹிஸ்புல்லா அமைப்பினரின் வாக்கிடாக்கிகள் வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லெபனான் தெற்கு பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/309537
  17. மரண அறிவித்தல் திரு வீரகத்தி நடராஜா ஓய்வு பெற்ற பிரதி அதிபர் மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம் மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லுங்கள். https://ripbook.com/veerakathy-natarajah-66ead4d99d114/notice/obituary-66ead7cfc3679
  18. லெபனானில் நூற்றுக்கணக்கில் வெடித்த பேஜர்கள் தயாரானது எங்கே? வெடிக்கச் செய்தது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் லெபனானில் தலைநகர் பெய்ரூட் உள்பட நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பேஜர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், காயமடைந்த சுமார் 2,750 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களால் லெபனான் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோர் இரான், சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று தெரிகிறது. நவீன தகவல் தொடர்பு யுகத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெஸ்பொலா இன்னும் பேஜர்களையே பயன்படுத்துகிறது. அதனை குறிவைத்தே இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் ரகசிய தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஹெஸ்பொலாவும் இஸ்ரேலையே கைகாட்டுகிறது. ஆனால், இஸ்ரேலோ இதுவரை எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறது. அந்த பேஜர் எங்கே தயாரானது? அதனை வெடிக்கச் செய்தது யார்? பேஜர் சிதைவுகளில் தெரியவந்தது என்ன? லெபனானில் பல இடங்களில் வெடித்துச் சிதறிய பேஜர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன. அந்த பேஜர் புகைப்படங்களை ஆய்வு செய்யும் போது, 2 பேஜர்களின் பின்புறம் தெரிகிறது. அதில் ஒட்டப்படும் லேபிள்களில் பொதுவாக, விநியோகஸ்தர், மாடல் எண், இயங்கும் அதிர்வெண், போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த புகைப்படத்தில் உள்ள பேஜர் சேதமடைந்த நிலையில் இருந்ததால் அந்த விவரம் தெரியவில்லை. ஆனால், இரு பேஜர்களின் பாகங்களிலும் GOLD என்ற வார்த்தையை தெளிவாகப் பார்க்க முடிகிறது. மாடல் எண் ஒரு பகுதியளவு தெரிகிறது. அது AR-9 அல்லது AP-9 போல் தெரிகிறது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்யும் போது, அந்த பேஜர்கள், ரக்கட் பேஜர் AR-924 என்ற மாடலைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. அந்தமாடல் தைவானைச் சேர்ந்த கோல்ட் அப்பொலோ என்ற நிறுவனத்தின் தயாரிப்பாகும். பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, வெடித்துச் சிதறிய பேஜர் (சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது) வெடிக்காத பேஜர்கள் ஆய்வு - கூறுவது என்ன? லெபனானில் பல நூறு பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்ததைத் தொடர்ந்து, ஹெஸ்பொலாவின் வெடிக்காத பேஜர்களில் இருந்து ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக வெடிமருந்து வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு கிட்டத்தட்ட 6 அல்லது அதற்கும் மேற்பட்ட இடங்களை தொடர்புபடுத்துகிறது. லெபனான், சிரியா, இரான், தைவான், ஹங்கேரி வரிசையில அந்த பட்டியல் இஸ்ரேல் வரை நீள்கிறது. லெபனான், சிரியாவில் பேஜர்கள் வெடித்தன. இரான், ஹெஸ்பொலாவுக்கு புரவலராக இருக்கிறது. அந்த பேஜர் கோல்ட் அப்பொலோ நிறுவனத்தின் லோகோவைக் கொண்டிருந்ததால் தைவானில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. தற்போது அது ஹங்கேரியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இறுதியாக வரும் இஸ்ரேலே இந்த வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் உளவு அமைப்பான மொசாட்டே இதற்கு காரணம் என்பது பல நிபுணர்களின் கூற்றாக உள்ளது. இஸ்ரேல் இதுகுறித்து கருத்து ஏதும் கூறாவிட்டாலும் கூட, இதனை செய்வதற்கான தொழில்நுட்பத் திறனும், ஹெஸ்பொலாவுக்கு பலத்த அடி கொடுக்கும் நோக்கமும் வேறு எந்த நாட்டிற்கோ அல்லது அமைப்புக்கோ இல்லை என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கூற்று. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பே காரணம் - ராய்ட்டர்ஸ் ஹெஸ்பொலா ஆர்டர் செய்திருந்த, தைவானில் தயாராகும் 5 ஆயிரம் பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்திருந்ததாக லெபனானி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் லெபனானில் மருத்துவமனைகள் காயமடைந்தவளால் நிரம்பியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பார்வையிழந்துள்ளனர், வேறு சிலர் உறுப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திட்டமிட்டதைவிட முன்பே பேஜர்களை இஸ்ரேல் வெடிக்கச் செய்ததா? ஹெஸ்பொலா ஆர்டர் செய்த போதே, ஆயிரக்கணக்கான பேஜர்களில் அதிஉயர் வெடிமருந்துகளை இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு ரகசியமாக வைத்துவிட்டது என்று லெபனான் பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது. அதேவேளையில், ஹெஸ்பொலாவுக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலின் தொடக்கமாகவே இதனைச் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக ஆக்ஸியோஸ் மற்றும் அல்-மானிட்டர் ஊடகத்திடம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தனித்தனியே தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த திட்டம் ஹெஸ்பொலாவுக்கு தெரியவந்திருக்கலாம் என்று இஸ்ரேலுக்கு சமீப நாட்களில் சந்தேகம் வந்துவிட்டதாகவும், அதனால், முன்கூட்டியே பேஜர்களை வெடிக்கச் செய்துவிட்டதாகவும் அந்த தகவல் கூறுகிறது. "பயன்படுத்த வேண்டும் அல்லது அவற்றை இழக்க வேண்டும் என்ற நிலையில் இஸ்ரேல் இருந்தது" என்று ஆக்ஸியோஸ் ஊடகத்திடம் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சூ சிங்-குவாங், கோல்ட் அப்பொலோ நிறுவனர் எங்களுக்கு தொடர்பு இல்லை - தைவான் நிறுவனம் நாம் ஏற்கனவே கூறியபடி, லெபனானில் வெடித்த பேஜர்கள் "கோல்ட் ஏஆர்-924" மாடல் போல் தோன்றுகிறது. ஆனால், லெபனானில் பேஜர்கள் வெடித்ததற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தைவானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கோல்ட் அப்பொலோவின் நிறுவனர் சூ சிங்-குவாங் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவைச் சேர்ந்த BAC என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஜர் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அவர் கூறினார். "எங்களது லோகோவை பயன்படுத்த மட்டுமே அங்கீகாரம் தந்துள்ளோம். மற்றபடி, அந்த பேஜரின் வடிமைப்பிலோ அல்லது தயாரிப்பிலோ எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் கூறுகிறார். கோல்ட் அப்பொலோ சுட்டிக்காட்டும் BAC நிறுவனம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை மையமாகக் கொண்டது. லெபனானில் நடந்தது குறித்து அதிர்ச்சி தெரிவித்த அவர், தங்கள் நிறுவனமும் அதனால் பாதிக்கப்பட்ட ஒன்றுதான் என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தைவானில் கோல்ட் அப்பல்லோ அலுவலகத்தில் காவல்துறையினர் உள்ளனர். தைவான் அரசு கூறுவது என்ன? தைவானில் இருந்து லெபனானுக்கு நேரடியாக இதுபோன்று ஏற்றுமதி நடந்ததாக எந்தவொரு ஆவணமும் இல்லை என்று தைவானின் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார். கோல்ட் அப்பொலோ நிறுவனம் 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு 2.6 லட்சம் பேஜர்களை ஏற்றுமதி செய்திருப்பதாக அவர் கூறினார். ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்களை பார்க்கையில், தாங்கள் ஏற்றுமதி செய்த பேஜர்கள் அதன் பிறகு மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த நிறுவனம் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கோல்ட் அப்பல்லோ அலுவலகத்தில் சோதனை தைவான் தலைநகர் தைபேயில் உள்ள பிபிசி குழு, பேஜர் தாக்குதலை தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்துள்ள தைவானிய நிறுவனமான கோல்ட் அப்பல்லோவின் அலுவலகங்களுக்குச் சென்றுள்ளது. போலீஸ் அதிகாரிகள் தற்போது வரை அந்த வளாகத்திற்குள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து ஊழியர்களை விசாரித்து ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். நிறுவன வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்கள் குவிந்துள்ளனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலுக்கு லெபனான் எச்சரிக்கை இதுவரை இந்த பேஜர் வெடிப்பு சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. லெபனான் பிரதமரும் ஹெஸ்பொலாவும் இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவங்கள் "லெபனான் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல். அனைத்து தரநிலைகளின் படியும் இது ஒரு குற்றம்" என்று பிரதமர் நஜிப் மிகாட்டி கூறினார். தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹெஸ்பொலா தனது அறிக்கையில், "பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றச் சம்பவத்துக்கு அந்த நாடே முழுப் பொறுப்பு" என்று கூறியது. "இந்த துரோகச் சம்பவத்தை நிகழ்த்திய `கிரிமினல்’ எதிரி நிச்சயமாக இந்த பாவச் செயலுக்கு நியாயமான தண்டனையைப் பெறுவார். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தண்டனை கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது. ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா நாளை உரையாற்றுவார் என்று அந்த குழு தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மரியா ஜகரோவா, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரஷ்யா கண்டனம் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "இந்த உயர்-தொழில்நுட்ப தாக்குதலை திட்டமிட்டவர்கள் வேண்டுமென்றே மத்திய கிழக்கில் ஒரு பெரிய போரைத் தூண்டும் வகையில் பெரிய அளவிலான ஆயுத மோதலை தூண்டிவிட முயற்சி செய்கின்றனர்.” குற்றம்சாட்டியுள்ளார். லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி உடனான தொலைபேசி அழைப்பின் போது, துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இந்த தாக்குதல் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவலை துருக்கியின் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை ஜெனிவா ஒப்பந்தத்தை மீறிய செயலாக கருதுவதாக அயர்லாந்து துணை பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார். "இது ஒரு புதிய போர் முறை. எனவே இது குறித்து நாம் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், மேலும் சர்வதேச சமூகம் தாக்குதலின் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தலைநகர் டப்ளினில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மைக்கேல் மார்ட்டின் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr54m9rp961o
  19. விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 7 18 SEP, 2024 | 08:52 PM ( அபி லெட்சுமண் ) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படுவதுடன் கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக வாக்களிக்க, வாக்குச் சீட்டினை தொட்டுணரக்கூடிய வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை, தேர்தலன்று வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட விரோதமானது. இயலாமையுடையவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாயின் அதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் “வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ” இன்று புதன்கிழமை (18) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எஸ். அச்சுதன் மற்றும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ். மாதவ ஆகியோரின் தலைமையின் கீழ் இடம்பெற்றது. இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் எவ்வாறு தமது வாக்குகளை இடவேண்டும் எனவும் வாக்காளர்களுக்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்தும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர். எஸ் அச்சுதன் ஆகியோரினால் எடுத்துரைக்கப்பட்டது. அதன்படி,இன்று 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைவதுடன் அமைதி காலம் பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். எனவே இதனைக் கருத்திற்கொண்டு அச்சு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் தேர்தல் தொடர்பான செய்தி வெளியீட்டு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டனர். வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பில் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகச் சுவரொட்டி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இலகுவாக வாக்களிப்பதற்காகவும் இலகுவாக வாக்குச் சாவடிகளை அணுகுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமது வாக்குரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதா ? எனவும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமது வாக்குரிமை தொடர்பில் கிராம சேவகரைச் சந்தித்துத் தேர்தல் தொடர்பிலான தகவலினை பெற்றுக்கொள்ள முடியும். வாக்களிப்பதற்காக அடையாள அட்டை ,சாரதி அனுமதிப் பத்திரம் ,கடவுச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கப்பட்ட பத்திரம் , மத குருமார்களுக்கான அடையாள அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கமுடியும். அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவை அணுகி தற்காலிக அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வசதி வாய்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை கிடைக்காவிடில் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி விநியோகிக்காமல் இருக்கும் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது www.elections.gov.lk என்ற இனையத்தளத்திற்குள் உட்பிரவேசித்து தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்காளர் அட்டை மாதிரியைப் பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கு மேலதிகமாக இயலாமை கொண்டவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக வாக்களிப்பதுடன் வாக்குச் சீட்டினை தொட்டுணரக்கூடிய வகையில் ஏற்பாடுகளும் செவிப்புலனற்றவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் போது சைகை மொழி பிரயோகம் போன்ற ஏற்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது முறைமைகள் நாடளாவிய ரீதியில் உள்ள 13423 வாக்குச் சாவடிகளிலும் பின்பற்றப்படும். வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையத்தில் பின்பற்றக்கூடியவை எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கமுடியும். எனவே கால தாமதமின்றி வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். வாக்களிக்கச் செல்லும் போது அயலவர்கள் , நண்பர்கள் என்பவர்களோடு வாக்குச் சாவடிக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும் . வாக்காளர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் தான் வாக்களிக்க முடியும். எனவே நேர்த்தியான முறையில் தனது வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் வாக்குகளை அளித்த பின்னர் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். வாக்களிக்கும் முறைமை தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் போது வேட்பாளரின் பெயருடன் காணப்படும் வாக்குச் சீட்டில் வாக்களிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள கூட்டுக்குள் வாக்கினை அளிக்க வேண்டும். தனது முதல் வாக்கினை அளிக்கும் போது 1 எனவும் விருப்பு வாக்குகளை அளிக்கும் போது 2,3 எனவும் வாக்களிக்க முடியும். அதற்கு மேலதிகமாக தேர்தல் ஆணைக்குழுவின் சட்டதிட்டத்துக்கு அமைய விருப்பத் தெரிவினை இடுவதற்காக புள்ளடி இட முடியும் என்பதுடன் மேலதிக கோடுகள் காணப்படும் போது வாக்கு நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர். எஸ் அச்சுதன் ஆகியோர் குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/194048
  20. ஹெஸ்பொலா ஆர்டர் செய்த 5,000 பேஜர்களில் மொசாட் ரகசியமாக வெடிமருந்து வைத்ததா? புதிய தகவல்கள் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, பேஜர் வெடிப்புகளை தொடர்ந்து, மூன்று பெண்கள் பெய்ரூட்டில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்களை பார்க்க வருகிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், மாட் மர்பி, ஜோ டைடி பதவி, பிபிசி செய்தியாளர் மற்றும் சைபர் நிருபர் 18 செப்டெம்பர் 2024, 08:08 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் லெபனானில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். செவ்வாயன்று நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறின. இதில் ஒன்பது பேர் பலியாகினர். 2,800 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்த சம்பவத்தில் ஹெஸ்பொலா இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி இதுவரை நாம் அறிந்த தகவல்கள் இதோ. பேஜர் வெடிப்பு எப்போது, எங்கு நடந்தது? செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 15:45 மணியளவில் (13:45 BST) லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேஜர்கள் வெடிக்கத் தொடங்கின. பட்டாசுகள் போன்றும் துப்பாக்கிச்சூடு போன்றும் சிறிய வெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னதாக, சிலரில் பாக்கெட்டுகளில் இருந்து புகை வருவதைக் கண்டதாக சாட்சிகள் தெரிவித்தனர். ஒரு சிசிடிவி காணொளியில் கடையின் நின்று கொண்டிருக்கும் ஒரு நபரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேஜர் வெடித்தது. ஆரம்பத்தில் சிறியளவில் வெடிக்கத் தொடங்கியது, பின்னர் சுமார் ஒரு மணி நேரம் இது தொடர்ந்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. அதன் பின்னர் ஏராளமான மக்கள் லெபனான் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி, குழப்பமான சூழல் நிலவியதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,SOCIAL MEDIA பேஜர்கள் வெடித்தது எப்படி? செவ்வாய் கிழமை நடந்த தாக்குதலின் அளவை குறிப்பிட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பேஜர் பேட்டரிகள் அதிக வெப்பமடைவதற்கு `ஹேக்கிங்’ காரணமாக இருக்கலாம், இதனால் சாதனங்கள் வெடித்திருக்கலாம் என்று சிலர் கூறினர். இதுபோன்ற செயல் முன்னெப்போதும் நிகழாத ஒன்று. ஆனால் பல வல்லுநர்கள் இது சாத்தியமற்றது என்கின்றனர். பேஜர் வெடித்த காட்சிகளை பார்க்கும் போது பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து அது நிகழ்ந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறினர். மாற்றாக, பிற ஆராய்ச்சியாளர்கள் பேஜர்கள் தயாரிப்பு அல்லது விநியோகத்தின் போது தாக்குதல் நடக்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கும் என்று வாதிடுகின்றனர். ’சப்ளை செயின்’ தாக்குதல்கள் இணைய பாதுகாப்பு உலகில் வளர்ந்து வரும் பிரச்னையாக உள்ளது, சமீபத்தில் ஹேக்கர்கள் சில சாதனங்களை அவற்றின் தயாரிப்பின் போதே அணுகி அவற்றை மாற்றி அமைக்கின்றனர். இதன் மூலம் பல உயர்மட்ட சம்பவங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த தாக்குதல்கள் பொதுவாக மென்பொருள் சார்ந்து இருக்கும். வன்பொருள் சார்ந்த விநியோகச் சங்கிலி தாக்குதல்கள் மிகவும் அரிதானவை, ஏனெனில் சாதனத்தில் நேரடியாக மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். இது விநியோகச் சங்கிலி தாக்குதலாக இருக்கும் பட்சத்தில், பேஜர்களை ரகசியமாக சேதப்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கை நிகழ்ந்திருக்கும். ஒரு முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ ஆயுதங்கள் நிபுணர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) பிபிசியிடம், இந்த சாதனங்கள் ஒவ்வொன்றிலும் 10 முதல் 20 கிராம் வரை ராணுவ உயர்தர வெடிமருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருக்கலாம். போலி மின் சாதனக் கூறுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்" என்றார். ஒரு எண்ணெழுத்து (alphanumeric) குறுஞ்செய்தி இதற்கு ஒரு சமிக்ஞையாக செயல்பட்டிருக்கும் என்று நிபுணர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பாதிக்கப்பட்டவர்கள் யார்? இந்த தாக்குதலில் உயிரிழந்த இருவர் ஹெஸ்பொலா எம்.பி.க்களின் மகன்கள் என்று ஹெஸ்பொலாவுக்கு நெருக்கமான வட்டாரம் ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையிடம் தெரிவித்தது. ஹெஸ்பொலா உறுப்பினர் ஒருவரின் மகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானியும் அடங்குவார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக இரானிய ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இந்த தாக்குதலில் காயமடையவில்லை என்று ராய்ட்டர்ஸ் முகமை, ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. லெபனான் பொது சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் கூறுகையில், பெரும்பாலானவர்களுக்கு கைகள் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றார். பிபிசியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "பெரும்பாலான காயங்கள் முகம், கண்கள் மற்றும் கைகளில் ஏற்பட்டன. சிலருக்கு விரல் அல்லது கைகள் துண்டிக்கப்பட்டன. ” என்றார். அவர் மேலும் கூறியதாவது: "அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் பெரும்பான்மையான மக்கள் சிவில் உடையில் உள்ளனர், எனவே அவர்கள் ஹெஸ்பொலா போன்ற ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம். அதே சமயம் படுகாயமடைந்தவர்களில் வயதானவர்கள், சிறிய குழந்தைகள் ஆகியோரும் அடக்கம். துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்ததையும் பார்க்க முடிந்தது. காயமடைந்தவர்களில் சிலர் சுகாதாரப் பணியாளர்களாக உள்ளனர்" என்று அமைச்சர் கூறினார். லெபனானுக்கு வெளியே, அண்டை நாடான சிரியாவில் இதேபோன்ற வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட `மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. யார் பொறுப்பு? இதுவரை இந்த பேஜர் வெடிப்பு சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. லெபனானின் பிரதமரும் ஹெஸ்பொலாவும் இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவங்கள் "லெபனான் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல். அனைத்து தரநிலைகளின் படியும் இது ஒரு குற்றம்" என்று பிரதமர் நஜிப் மிகாட்டி கூறினார். தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹெஸ்பொலா தனது அறிக்கையில், "பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றச் சம்பவத்துக்கு அந்த நாடே முழுப் பொறுப்பு" என்று கூறியது. "இந்த துரோகச் சம்பவத்தை நிகழ்த்திய `கிரிமினல்’ எதிரி நிச்சயமாக இந்த பாவச் செயலுக்கு நியாயமான தண்டனையைப் பெறுவார். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தண்டனை கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்கள் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளின் தலைவரான பேராசிரியர் சைமன் மாபோன் பிபிசியிடம் கூறுகையில்: "இஸ்ரேல் தனது இலக்கை கண்காணிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக உள்ளது. இதனை நாங்கள் அறிவோம். ஆனால் இந்த தாக்குதலின் அளவு முன்னெப்போதும் இல்லாதது" என்று அவர் குறிப்பிட்டார் ஹெஸ்பொலாவின் "தகவல் தொடர்பு வலையமைப்பில் இஸ்ரேல் ஆழமாக ஊடுருவியுள்ளதை இந்தத் தாக்குதல் பிரதிபலிக்கிறது” என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சத்தம் ஹவுஸைச் சேர்ந்த லினா காதிப் கூறினார். இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காரணமா? ஹெஸ்பொலா ஆர்டர் செய்திருந்த, தைவானில் தயாராகும் 5 ஆயிரம் பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்திருந்ததாக லெபனானின் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் லெபனானில் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பார்வையிழந்துள்ளனர், வேறு சிலர் உறுப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பேஜர்களை ஹெஸ்பொலா பயன்படுத்துவது ஏன்? இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தப்ப பேஜர்களை ஹெஸ்பொலா பயன்படுத்துகிறது. இதை ஒரு குறைந்த-தொழில்நுட்பம் கொண்ட தகவல் தொடர்பு வழிமுறையாக ஹெஸ்பொலா பெரிதும் நம்பியுள்ளது. பேஜர் என்பது வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனம். இது எழுத்து அல்லது குரல் செய்திகளை காண்பிக்கும். நீண்டகாலம் முன்பே மொபைல் போன்கள் மிகவும் எளிதாக கண்காணிப்புக்கு இலக்காகக் கூடியவை என்று கருதப்பட்டு கைவிடப்பட்டுள்ளன. காரணம் 1996 ஆம் ஆண்டு, ஹமாஸ் வெடிகுண்டு நிபுணரான யாஹியா அய்யாஷை இஸ்ரேல் மொபைல் போன் மூலம் படுகொலை செய்தது. அவரது செல்பேசி அவரது கையில் இருந்த போது வெடித்து சிதறியது. ஆனால், ஒரு ஹெஸ்பொலா செயற்பாட்டாளர் ஏபி செய்தி முகமையிடம், இந்த பேஜர்கள் ஹெஸ்பொலா குழு இதற்கு முன்பு பயன்படுத்தாத புதிய பிராண்ட் என்று கூறினார். சிஐஏவின் முன்னாள் ஆய்வாளர் எமிலி ஹார்டிங், பாதுகாப்பு அத்துமீறல் நடந்திருப்பது ஹெஸ்பொலாவுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார். "இத்தகைய சம்பவங்கள் மக்களுக்கு உடல் ரீதியாக ஆபத்தானது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் முழு பாதுகாப்பு அமைப்பையும் சந்தேகிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவர்" என்று அவர் பிபிசியிடம் கூறினார். "இஸ்ரேலுடனான மோதலில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்கள் ஒரு முழுமையான உள் விசாரணையைத் தொடங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்." என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பேஜர் வெடிப்பால் காயமடைந்த நபர் சிகிச்சை பெறுகிறார். ஹெஸ்பொலா-இஸ்ரேல் மோதல் அதிகரிக்குமா? ஹெஸ்பொலா இஸ்ரேலின் எதிரியான இரானுடன் கூட்டணி வைத்துள்ளது. தெஹ்ரானின் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, ஹெஸ்பொலா அமைப்பும் இஸ்ரேலும் பல மாதங்களாக அவ்வப்போது சிறிய அளவிலான மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளன. இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை நாட்டின் வடக்கே குடியிருப்பவர்களை பாதுகாப்பாக திரும்பச் செய்தது. அப்பகுதி அதிகாரப்பூர்வ போர் இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் பாதுகாப்பாக திரும்பிய சில மணி நேரங்களுக்கு பிறகு பேஜர் வெடிப்புகள் நிகழ்ந்தன. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிகாரியிடம் இஸ்ரேல் "அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையானதைச் செய்யும்" என்று கூறினார். முன்னதாக திங்கட்கிழமை, இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, முன்னாள் அதிகாரி ஒருவரைக் கொல்ல ஹெஸ்பொலா முயற்சி செய்ததாகவும், அதனை முறியடித்ததாகவும் கூறியது. செவ்வாய் நடந்த பேஜர் வெடிப்புகளுக்கு பதிலடி கொடுக்கப் போவதாக ஹெஸ்பொலா ஏற்கனவே அச்சுறுத்தி வருவதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறலாம் என்ற அச்சம் உள்ளது. கூடுதல் அறிக்கை : பிரான்சிஸ் மாவோ - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c748lvg3v92o
  21. 18 SEP, 2024 | 01:26 PM - இலங்கை குடியரசில் மூவினத்தவர்களுக்கும் சமவுரிமை - போரினால் சகலருக்கும் ஒரே விதமான பாதிப்பு - மன்னித்து முன்னோக்கிச் செல்வோம் முப்­பது வரு­ட­கால போரில் தமி­ழர்கள் மாத்­தி­ர­மன்றி சிங்­க­ள­வர்­களும், முஸ்­லிம்­களும் உயி­ரி­ழந்­தனர். அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழப்­ப­தனால் ஏற்­படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்­கிறேன். இருப்­பினும் அந்த வலி இரு­த­ரப்­புக்­கு­மா­னது என்­பதை நீங்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். நாம் அனை­வரும் ஒரே வித­மான பாதிக்­கப்­பட்டோம். நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்­ப­ளித்து முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும். அதே­போன்று இந்த மண்ணில் பிறி­தொரு போர் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்கக்கூடாது என்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். அதே­போன்று இலங்கை குடி­ய­ரசின் அதி­கா­ரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. நீங்கள் சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலே, கிறிஸ்­தவ, சமூ­கங்­களில் எதனை சார்ந்­தி­ருப்­பினும் இந்­நாட்டில் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சம­மான உரி­மைகள் உண்டு. அவ்­வா­றி­ருக்­கையில் யாருக்கும் எம்மால் விசேட அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். வீர­கே­ச­ரியின் 'ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­களால் தொடுக்­கப்­பட்ட வினாக்­களில் முக்­கிய வினாக்­க­ளுக்கு பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­பக்ஷ அளித்­துள்ள பதில்கள் வரு­மாறு, கேள்வி இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு தமிழ் சமூகம் நீண்­ட­கா­ல­மாக முயற்­சித்து வரு­கின்­றது. இனங்­க­ளுக்கு இடையில் நிலை­யான அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உங்கள் நிர்­வாகம் எவ்­வா­றான முயற்­சி­களை மேற்­கொள்ளும்? குறிப்­பாக, சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்வை ஏற்­றுக்­கொள்­வது தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன? பதில் இக்­கு­டி­ய­ரசின் அதி­கா­ரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. நீங்கள் சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலே, கிறிஸ்­தவ, சமூ­கங்­களில் எதனை சார்ந்­தி­ருப்­பினும் இந்­நாட்டில் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சம­மான உரி­மைகள் உண்டு. அவ்­வா­றி­ருக்­கையில் யாருக்கும் எம்மால் விசேட அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது. இப்­பின்­ன­ணியில் இன சமூ­கங்­களை பெரும்­பான்மை அல்­லது சிறு­பான்மை என முத்­தி­ரைக்­குத்­து­வது தவ­றாகும்.இது ஒரு மேற்­குல சிந்­த­னை­யாகும். நாம் சகல பிர­ஜை­க­ளுக்­கு­மான சமத்­துவ இறை­யாண்­மையை கொண்ட ஒரு­மித்த குடி­ய­ர­சாவோம். வடக்கில் வாழும் ஒரு தமிழ் பிர­ஜைக்கு சிங்­கள அல்­லது முஸ்லிம் பிர­ஜைக்­குள்ள அதே சிவில் உரி­மைகள் உண்டு. இருப்­பினும் அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான அர­சாங்கம் என்ற ரீதியில் நாம் அனைத்து இன குழு­மங்­க­ளி­னதும் கலாச்­சார அடை­யா­ளங்­களை பாது­காப்­ப­துடன் மாத்­தி­ர­மன்றி, எமது நாட்டின் பல்­லி­னத்­தன்­மையை கொண்­டா­டுவோம்.வடக்கில் வாழும் மக்­களின் உண்­மை­யான கரி­ச­ணைகள் தெற்கில் வாழும் மக்­களின் கரி­ச­ணை­களை ஒத்­த­வை­யாகும். ஆவர்கள் அவர்கள் அனை­வ­ருக்கும் பொரு­ளா­தார வளர்ச்சி, சமூக மேம்­பாடு, மற்றும் நிலை­பே­றான சூழல் என்­பவே தேவை­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.அவை எவ்­வித இன­பா­கு­பா­டு­க­ளு­மின்றி சக­ல­ருக்கும் கிடைப்­பதை நாம் உறு­திப்­ப­டுத்­துவோம். கேள்வி இறு­திக்­கட்­டப்­ போரில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­ப­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டி­ருக்கும் பொறுப்­புக்­கூறல் குறித்த உங்­க­ளது நிலைப்­பாடு என்ன? நீங்கள் ஆட்­சி­பீ­ட­மேறும் பட்­சத்தில் மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான மிக­மோ­ச­மான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்­ட­வி­ரோத படு­கொ­லைகள் பற்­றிய குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வாறு அணு­கப்­போ­கின்­றீர்கள்? பதில் சுமார் 30 வரு­ட­காலம் நீடித்த போரில் இறு­திக்­கட்ட யுத்­தத்தை பற்றி மாத்­திரம் ஒரு­வரால் பேச முடி­யாது அது இலங்கை அர­சாங்­கத்­துக்கும் ஆயு­த­மேந்­திய பயங்­க­ர­வாத குழு­வுக்­கு­மி­டையில் நடைப்­பெற்ற போராகும். அந்­நீண்­ட­கால பகு­தியில் ஆயி­ர­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­தனர். அவர்­களில் தமி­ழர்கள் மாத்­தி­ர­மன்றி, சிங்­க­ள­வர்­களும், முஸ்­லிம்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இருப்­பினும் நாம் தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள், துப்­பாக்கிச் சூடு, கொலைகள், மற்றும் விடு­தலை புலிகள் இயக்­கத்­தி­னரால் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட தற்­கொலை குண்­டு­தா­ரிகள், சிறுவர் போரா­ளிகள் என சக­ல­வற்­றையும் முடி­வுக்கு கொண்டு வந்தோம்.அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழப்­ப­தனால் ஏற்­படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்­கிறேன்.இருப்­பினும் அந்த வலி இரு­த­ரப்­புக்­கு­மா­னது என்­பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.நாம் அனை­வரும் ஒரே வித­மான பாதிக்­கப்­பட்டோம். ஒரு நாடு என்ற ரீதியில் நாம் பெரு­ம­ளவு உயிர்­களை இழந்து விட்டோம்.நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்­ப­ளித்து முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும்.அதே­போன்று இந்த மண்ணில் பிறி­தொரு போர் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்க கூடாது. கேள்வி நாட்டில் போர் சூழ்­நிலை இல்­லாத பின்­ன­ணி­யில், வரவு செலவுத் திட்­டத்தில் பாது­காப்­புத்­து­றைக்­கான செல­வி­னத்தை குறைப்­ப­தற்கு உங்­க­ளது நிர்­வாகம் நட­வ­டிக்கை எடுக்­கு­மா? பதில் எமது நாட்­டுக்கு எதி­ரான உள்­ளக மற்றும் சர்­வ­தேச சக்­தி­களின் அச்­சு­றுத்­தல்கள் இன்­னமும் தொடர்­கின்­றன. ரஷ்ய – உக்ரைன் மோதல், இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் மற்றும் ஐரோப்­பாவில் வன்­முறை எழுச்சி என்­பன உள்­ள­டங்­க­ளாக உல­க­ளா­விய ரீதியில் பல்­வேறு வன்­முறை மோதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­வ­தனை பார்க்க முடி­கி­றது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மிகப் பாரிய இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.அதே­போன்று 2022 இல் உள்­ளக பாது­காப்பு பொறி­மு­றையின் தோல்­வியின் கார­ண­மாக வன்­முறை எழுச்சி ஒன்று உரு­வா­னதை பார்த்தோம். எனவே பாது­காப்பு துறைக்­கான செல­வி­னத்தை எம்மால் குறைக்க முடி­யாது. இருப்­பினும் பாது­காப்பு வீரர்­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­துடன், எமது பாது­காப்பு துறைசார் தொழில்­நுட்­பங்­களை மேம்­ப­டுத்­து­வதை முன்­னி­றுத்தி பணி­யாற்றி வரு­கிறோம்.அது அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் பாது­காப்­பினை இலக்­காகக் கொண்­ட­தாகும் அதனை நாம் தொடர்ந்து முன்­னெ­டுப்போம். கேள்வி அர­ச­துறை செல­வி­னங்கள் மற்றும் வரி­களைக் குறைப்­பதை இலக்­கா­கக்­கொண்டு அரச ஊழி­யர்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­பது தொடர்பில் நீங்கள் கொண்­டி­ருக்கும் நிலைப்­பாடு என்ன? 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ­சியம் என்று நீங்கள் கரு­து­கி­றீர்­களா? அல்­லது இந்த எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்­கான நகர்­வு­களை நீங்கள் மேற்­கொள்­வீர்­களா? பதில் பிர­ஜை­களின் எண்­ணிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிப்­பது என்­பது நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு உகந்­த­தாகும். பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வாகும் உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­களின் தொகு­தியை மாத்­தி­ர­மன்றி நாட்டின் சகல பிர­ஜை­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு உண்டு. ஒரு சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறேன்.ஒரு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அத­னையே செய்ய வேண்டும். இந்த இன மைய அர­சி­யலை விடுத்து ஒட்­டு­மொத்த நாட்­டி­னதும் அபி­வி­ருத்­திக்­காக அனை­வரும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற வேண்டும். ஏனைய வேட்­பா­ளர்­களை போன்று வரிக்­கு­றைப்பு தொடர்பில் நாம் இலக்­கி­டப்­பட்ட தொகை­களை அறி­விக்­க­வில்லை. அவர்கள் மக்­களை ஏமாற்­று­கி­றார்கள். நாம் 2019இல் வரிக்­கு­றைப்பு தொடர்பில் இலக்­கங்­களை அறி­வித்து இத­னையே செய்தோம். இருப்­பினும் பின்னர் அது எமக்கு எதி­ராக பயன்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே அதன்­மூலம் நாம் பாடம் படித்­தி­ருக்­கிறோம். எவ்­வா­றி­ருப்­பினும் மக்­க­ளுக்கு நியா­ய­மான நிவா­ர­ணத்தை வழங்­கு­வ­தாக நாம் உறு­தி­ய­ளிக்­கிறோம். பல்­வேறு வித­மாக பெய­ரி­டப்­பட்­டி­ருக்கும் வரி­களை நாம் நிச்­ச­ய­மாக குறைப்போம். அது வரி செலுத்­து­ப­வர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும். தற்­போது அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­வற்றில் 'நாமல் இலக்கு' மாத்­தி­ரமே நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மான கொள்கைத் திட்­ட­மாகும். கேள்வி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கி, மீண்டும் பாரா­ளு­மன்ற ஆட்சி முறைமைக் கொண்­டு­வ­ரு­வது குறித்த உங்கள் நிலைப்­பாடு என்ன? பதில் நாம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்தால், அந்த நிறை­வேற்­ற­தி­கார வகி­பா­கத்தை வழங்கக் கூடிய பிறி­தொரு கட்­ட­மைப்பு எமக்கு தேவைப்­படும். பாரா­ளு­மன்றம் என்­பது சட்­டங்கள் என்ற வடி­வத்தில் தீர்­மானம் எடுக்கும் ஒரு கட்­ட­மைப்­பாகும். அதனை நாம் சட்­ட­வாக்கம் என கூறு­கிறோம். அவ்­வா­றெனில் அந்த சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி, அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் மற்றும் நிறை­வேற்று பொதுச்­சேவை ஆகிய மூன்று கட்­ட­மைப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு சட்­ட­வாக்­கத்­துக்கும் நிறை­வேற்­ற­தி­கா­ரத்­துக்கும் இடையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும். இல்­லா­விடின் ஒரே கட்­ட­மைப்பே அவை விரும்­பி­யது போன்று சட்­டங்­களை இயற்றி அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்தும். அது எதேர்ச்­ச­தி­கா­ர­மா­னது. தற்­போ­தைய நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறைமை அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்­துடன் பினைந்­துள்­ளது. எனவே நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்தால் மாகாண சபை முறை­மையும் ஒழிக்­கப்­படும். எனவே இது சாதா­ர­ண­மாக கலந்­து­ரை­யா­டப்­பட முடி­யாத ஒரு பார­து­ர­மான விட­ய­மாகும். எனவே தற்­போது அர­சி­ய­ல­மைப்பில் தலை­யீடு செய்­வ­தற்கு நான் முன்­னு­ரி­மை­ய­ளிப்­ப­தில்லை. மாறாக அத­னூ­டாக நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கே முயற்­சிக்­கிறேன். கேள்வி நீங்கள் வெற்­றி­யீட்­டினால் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் செயற்­திட்­டத்­தின்கீழ் தொடர்ந்து செயற்­ப­டு­வீர்­களா? பொது­மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான நிவா­ர­ணங்­களை வழங்கும் அதே­வே­ளைஇ சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­க­ளையும் பூர்த்­தி­செய்­வதில் எவ்­வாறு சம­நி­லையைப் பேணு­வீர்கள்? மின்­சா­ரம், நீர் மற்றும் எரி­வாயு போன்ற பயன்­பாட்டு சேவை­கள் இலா­ப­மீட்ட வேண்­டும் அல்­லது செல­வு­களை ஈடு­கட்ட வேண்டும் ஆகிய இரண்டில் உங்­க­ளது அபிப்­பி­ராயம் என்ன? மேலும், பொதுப்­போக்­கு­வ­ரத்து சேவை மற்றும் ஸ்ரீலங்கன் விமா­ன­சேவை என்­ப­வற்றின் முறை­யற்ற நிர்­வா­கத்தை எவ்­வாறு சீர­மைக்­கப்­போ­கின்­றீர்கள்? பதில் சர்­வ­தேச நாணய நிதியம் பெரு­ம­ள­வுக்கு அர­சாங்க வரு­மா­னத்­திலும், செல­வி­னத்­தி­லுமே கவனம் செலுத்­து­கி­றது. இருப்­பினும் அத­னூ­டாக மாத்­திரம் பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது. நாம் இவ்­வொட்­டு­மொத்த செயற்­திட்­டத்தை மாற்­றி­ய­மைப்­பது குறித்து மீளக் கலந்­து­ரை­யா­ட­மாட்டோம். அர­சாங்க வரு­மானம், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் கடன் வீதம் போன்ற முக்­கிய இலக்­குகள் வர­வேற்­கத்­தக்­க­தாகும். எமக்கும் அவ்­வி­லக்­குகள் உண்டு. இருப்­பினும் அவ்­வி­லக்­கு­களை அடை­வ­தற்­கான எமது அணு­கு­முறை வேறுப்­பட்­ட­தாகும். உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வரி­களை அதி­க­ரித்தல், தோல்­வி­ய­டைந்த உத்­தி­யாகும். நல்­லாட்சி அர­சாங்கம் அதனை செய்­த­துடன் பொரு­ளா­தா­ரத்தை அழித்­தது. அதே விடயம் தற்­போது மீண்டும் நடை­பெ­று­கி­றது. பொரு­ளா­தார வளர்ச்சி இல்­லாத போது அங்கு வரு­மானம் குறை­வ­டை­வ­துடன் அது வரி வரு­மா­னத்­திலும் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும். எனவே இவற்றில் ஒரு சம­னி­லையை பேண வேண்டும். அதுவே எமது உத்­தி­யாகும் .இதனை நாம் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தசாப்­த­கால ஆட்­சியில் செய்தோம். அதனை எம்மால் மீண்டும் செய்ய முடியும். அர­சுக்கு சொந்­த­மான கட்­ட­மைப்­புக்கள் உள்­ள­டங்­க­ளாக அரச சொத்­துக்­களை நாம் விற்­பனை செய்­ய­மாட்டோம். மாறாக அவற்­றுக்கு பொருத்­த­மான தலை­மைத்­து­வத்தை நிய­மிப்­பதன் ஊடா­கவும் சர்­வ­தேச முகா­மைத்­துவ செயன்­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் ஊடா­கவும் அவற்றை செயற்­திறன் மிக்க சொத்­துக்­க­ளாக மாற்­றி­ய­மைப்போம். அதனை எம்மால் செய்ய முடியும் என நிரூ­பித்­தி­ருக்­கிறோம். செவ­ன­கல சீனித் தொழிற்­சாலை அதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும். கோட்­ட­பய ராஜ­ப­க்ஷவின் வெறும் இரு­வ­ருட ஆட்­சியில், அதிலும் குறிப்­பாக கொவிட் தொற்­றுக்கு மத்­தியில் நாம் அதனை இலா­ப­மீட்டும் கைத்­தொ­ழி­லாக மாற்­றினோம். அக்­கா­லப்­ப­கு­தியில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வன கடன்­க­ளையும் குறிப்­பி­டத்­தக்க அளவில் குறைத்தோம் எனவே எம்மால் இதனை செய்ய முடியும். எமது முயற்­சி­யாண்­மை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு அனு­பவம் வாய்ந்த இளம் தொழில் படை அவ­சி­ய­மாகும். நான் அத்­தகு நபர்­களின் ஆத­ர­வினை பெற்­றி­ருக்­கிறேன். கேள்வி மலை­யக தமிழ் சமூகம் குறிப்­பி­டத்­தக்க சமூக பொரு­ளா­தார சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. அவர்­களின் சம்­ப­ளம், நில உரி­மை­கள், வீடு­கள், சுகா­தாரம் மற்றும் கல்வி மேம்­பாடு போன்ற அடிப்­படை வச­தி­க­ளுக்­கான அணு­கலை மேம்­ப­டுத்த உங்கள் நிர்­வாகம் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும்? பதில் எமது கொள்கை பிர­க­ட­னத்தில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளு­டைய வேதன விட­யத்­துக்கு பரஸ்­பர உடன்­பாட்டின் அடிப்­ப­டையில் முக்­கி­யத்­துவம் கொடுப்போம். சம்­பள அதி­க­ரிப்பின் ஊடாக மாத்­திரம் அவர்­க­ளது வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்த முடி­யாது. அதே­நரம் உற்­பத்திச் செலவை அதி­க­ரிக்கும் பட்­சத்தில் உலக சந்­தையில் தேயி­லைக்­கான கேள்வி வீழ்ச்­சி­ய­டையும். இது தேயிலை உற்­பத்தி துறையில் வேலை­வாய்ப்­பின்மை ஏற்­படும். இதனால் தொழி­லா­ளர்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள். எனவே இந்த விட­யத்தில் ஒருங்­கி­ணைந்த இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் தீர்வு காண வேண்டும். நாட்டின் ஏனைய மக்­களை போன்று இந்த மக்­க­ளு­டைய வரு­மான மூலங்­களை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யு­மென நம்­பு­கிறேன். அதே­நேரம் பெருந்­தோட்­டத்­து­றை­களில் சகல வச­தி­க­ளையும் கொண்ட பாட­சா­லை­களை உரு­வாக்­குவோம். தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு தேவை­யான தொழில்­நுட்ப தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். மேலும் உயர் தொழில் தகை­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­ரிய பயிற்­சிளை வழங்கி தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொ­டுப்போம். கேள்வி நாட்டில் பல்­வேறு துறை­களில் ஊழல் மோச­டிகள் மேலோங்­கி­யி­ருக்­கின்­றன. அதனை எதிர்த்­துப்­ போ­ராட உங்கள் நிர்­வாகம் எத்­த­கைய வழி­மு­றை­களை கையாளும்? பொது­நி­தியை முறை­கே­டாகப் பயன்­ப­டுத்தி பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு வித்­திட்ட அர­சி­யல்­வா­திகள் மற்றும் அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? மேலும் இது­போன்ற பொரு­ளா­தாரக் குற்­றங்­களில் ஈடு­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? பதில் ஒவ்­வொரு பிர­ஜையும் குற்றம் நிரூ­பிக்­கப்­படும் வரை நிர­ப­ரா­தி­களே. குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன்­பாக ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிக்­கப்­பட வேண்டும். அந்­த­வ­கையில் எனது குடும்­பத்தார் மீது இது­வரை எந்த குற்­றச்­சாட்­டுக்­களும் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. இவை அனைத்தும் எமது எதி­ரா­ளி­க­ளது கீழ்­த­ர­மான செயற்­பா­டுகள். என்­னு­டைய நகர்­வுகள் பிழை­யென்றால் இன்று ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­கு­ரிய ஆத­ரவை பெற்­றி­ருக்க முடி­யுமா? மக்கள் எம்மை நன்கு அறிந்­து­வைத்­துள்­ளார்கள். நாம் ஊழலை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான பொறி­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­துவோம். தனித்­துவ அடை­யாள அட்டை முறை­மையை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம். வெளிப்­ப­டை­யான கணனி தொழில்­நுட்ப முறை­மையை கொண்­டு­வ­ருவோம். இந்த தொழில்­நுட்­பங்கள் ஆரம்­பத்தில் பயன்­பாட்டில் இருக்­க­வில்லை. என்­னு­டைய அர­சாங்­கத்தில் எந்த குற்­றச்­சாட்­டுக்­களும் எழு­வதை நான் விரும்­ப­வில்லை. என்­னு­டைய அர­சாங்­கத்தில் தவ­றான செயற்­பா­டு­க­ளுக்கு கண்­டிப்­பான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சர்­வ­தேச ரீதி­யி­லான தட­வியல் கணக்­காய்­வுகள் இறுக்­க­மாக முன்­னெ­டுக்­கப்­படும். குறித்த அறிக்­கைகள் வெளிப்­ப­டை­யாக மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­படும். இது­போன்ற காலத்­துக்­கேற்ற வாக்­கு­று­தி­களை வழங்கும் ஒரே­வேட்­பா­ள­ராக நானே காணப்­ப­டு­கிறேன். காரணம் என்­னு­டைய குடும்­பமே 30 ஆண்­டு­கால யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­ட­வந்­தது. அதே­போன்று நானும் மூன்­றாண்­டு­க­ளுக்குள் ஊழலை நவீன தொழில்­நுட்ப உத­வி­யோடு முடி­வுக்­கட்­டுவேன். கேள்வி மத சிறு­பான்­மை­யினர் திட்­ட­மிட்டு ஓரங்­கப்­ப­டு­வ­து­டன், பல்­வேறு ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்­ளனர். உங்கள் நிர்­வாகம் மத நல்­லி­ணக்­கத்தை வலுப்­ப­டுத்தும் என்றும் எதிர்­கா­லத்தில் இது­போன்ற சம்­ப­வங்கள் நடை­பெ­றாமல் தடுக்கும் என்றும் உங்­களால் உத்­த­ர­வாதம் அளிக்க முடி­யுமா? பதில் நான் இத­னுடன் உடன்­ப­ட­வில்லை. உல­க­ளா­விய ரீதியில் உயர் வரு­மானம் பெறும் சில நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் உயர் மத சுதந்­தி­ரத்தைக் கொண்­டி­ருக்கும் நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருக்­கி­றது. பௌத்­தர்­களும் இந்­துக்­களும் பல நூற்­றாண்டு கால­மாக அமை­தி­யாக ஒரு­மித்து வாழ்ந்து வரு­கின்­றனர். பௌத்த விகா­ரை­களை பாருங்கள் அவற்­றுக்குள் இந்து வழி­பாட்டு பகு­திகள் உள்­ளன. தெற்கில் உள்ள இந்து கோயில்­களில் அவர்­க­ளது பண்­டி­கை­களை கொண்­டா­டு­வ­தற்­கான சுதந்­திரம் உள்­ளன. மோதல்கள் தொடர்பில் ஆங்­காங்கே சில சம்­ப­வங்கள் எப்­போதும் இருக்கும் சட்­டங்கள் மற்றும் தண்­ட­னை­களின் ஊடாக மாத்­திரம் எம்மால் ஒரு முழு நிறை­வான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. மத தலை­வர்­க­ளுக்கு அவர்­களை பின்­பற்­றுவோர் மத்­தியில் நம்­பிக்­கைகள் சார்ந்த பரஸ்­பர புரிந்­து­ணர்வு மற்றும் சகிப்புத் தன்­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பொறுப்­புண்டு வடக்கை பாருங்கள். அங்கே சாதி ஒடுக்­கு­மு­றைமை கார­ண­மாக இந்­துக்­களை உள்ளே அனு­ம­திக்­காத சில கோயில்கள் இருக்­கின்­றன. அது அர­சாங்க முறை­மை­யினால் ஏற்­பட்ட பிர்­சி­ச­னை­யல்ல மாறாக அது வடக்கின் கலாச்­சார ரீதி­யி­லான பிரச்­சி­னை­யாகும். அதனை இந்து மத தலை­வர்­களே தீர்க்க வேண்டும். அதில் அர­சாங்கம் தலை­யிட்டால் அவர்கள் தமது மத சுதந்­திரம் பறிக்­கப்­ப­டு­வ­தாக கூறு­வார்கள். நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ள­வாறு அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான மத சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்தி பாது­காப்போம். இது குறித்த தனித்த பிரிவு எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளது. கேள்வி சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பயன்­பாடு என்­பன அதி­க­ரித்து வரு­வது நாட்டின் சிறுவர் மற்றும் இளைஞர் சமு­தா­யத்­துக்குப் பாரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­தி­ருக்­கி­றது. பாதாள உல­கக்­கு­ழுக்­க­ளும், அர­சி­யல்­வா­தி­களும் இத­னுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாகப் பொது­மக்கள் நம்­பு­கின்­றனர். எனவே இவற்றைத் தடுப்­ப­தற்­கும், சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டவும் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பீர்கள்? பதில் அரச பாது­காப்பை குறைக்க முடி­யாது என்­ப­தற்கு இது சிறந்த உதா­ரணம். திக­மான சட்­ட­வி­ரோ­த­மான போதைப்­பொருள் வர்த்­தகம் சர்­வ­தேச வர்த்­த­கர்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.இவற்றை முறி­ய­டிப்­ப­தற்கு பாது­காப்பு படை­களை பலப்­ப­டுத்த வேண்டும். இதனை நாம் செய்ய முற்­ப­டும்­போது தமிழ் அர­சி­யல்­வா­திகள் நாம் வடக்கை இரா­ணுவ மயப்­ப­டுத்­து­வ­தாக முறை­யி­டு­கின்­றனர்.இது இலங்கை முழு­வதும் உள்ள கரி­ச­னை­யாகும்.நங்கள் பாதாள உலக செயற்­பா­டுகள் போதைப்­பொருள் மற்றும் பயங்­க­ர­வாதம் ஆகி­யவை தொடர்பில் நாம் பொறுமை காக்க மாட்டோம் என்­பதை எனது விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ளேன். கேள்வி இலத்­தி­ர­னி­யல், மருத்­து­வ­மனை மற்றும் பிளாஸ்டிக் கழி­வுகள் உள்­ளிட்ட வெளி­நாட்டு கழி­வு­களை கொட்டும் இட­மாக மாறு­வது உட்­பட கடு­மை­யான சுற்­றுச்­சூழல் நெருக்­க­டியை இலங்கை எதிர்­கொண்­டுள்­ளது. இந்த சூழ­லியல் சவால்­களை எதிர்­கொள்­ள­வும்இ கால­நிலை மாற்­றத்தின் தாக்­கங்­களைக் குறைக்­கவும் உங்கள் நிர்­வாகம் கொண்­டி­ருக்கும் உறு­தி­யான திட்­டங்கள் என்ன? பதில் சுற்­றாடல் நிலை­பேண்­தகு என்­பது எமது அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்தின் மிக­முக்­கி­ய­மாக கருத்­திட்­ட­மாகும்.நாம் நாட்டின் இயற்கை அழகை தொடர்ந்தும் பாது­காப்போம்.ஆனால் மக்கள் மிக விரை­வான பொரு­ளா­தார வளர்ச்­சியை கோரு­கின்­றனர் என்­பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார வளர்ச்சி எனும் போது அங்கு சுற்­றாடல் ரீதி­யான விலை ஏற்­ப­டக்­கூடும்.அதிக பொரு­ளா­தார வளர்ச்சி உள்ள நாடு­களில் சுற்­றாடல் மாசு­டைவு மிகப்­பா­ரி­ய­ளவில் உள்­ளது.நாம் எமது விவ­சா­யத்தில் நூறு சேத­ன­ப­சளை திட்­டத்­துக்கு செல்ல முற்­பட்டோம்.ஆனால் விவ­சா­யிகள் அதற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.எனவே மஹிந்த சிந்­தனை திட்­டத்தில் உள்­ள­வாறு நாம் இர­சாய உர நிகழ்ச்சித் திட்­டத்தை தொடர தீர்­மா­னித்­துள்ளோம்.ஆனால் எமது நாட்டை வேறு நாடு­களின் கழி­வு­களை கொட்டும் மைதா­ன­மாக உரு­வா­கு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். கேள்வி இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­க­ளை, குறிப்­பாக உயர் திற­மை­யான வேலை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான உங்கள் நீங்கள் உத்­திகள் எவை? இளை­ஞர்கள் மத்­தியில் எத்­த­கைய திறன்கள் அவ­சி­ய­மா­னவை என நீங்கள் கரு­து­கின்­றீர்கள்? அவற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பீர்கள்? பதில் மஹிந்த ராஷ­ப­க்ஷவின் யுகத்தில் இலங்கை சுதந்­தி­ரத்தின் பின்னர் மிகப்­பெ­ரிய மற்றும் விரை­வான பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­பட்­டது. 24 பில்­லியன் டொலர்­க­ளாக இருந்த மொத்த தேசிய உற்­பத்தி 80 பில்­லியன் டொலர்­க­ளாக 9 வரு­டங்­களில் உயர்­வ­டைந்­தது. மஹிந்த சிந்­தனை தசாப்­தத்­தி­லேயே இலங்கை ஐக்­கிய நாடுகள் மனித அபி­வி­ருத்தி சுட்­டெண்ணில் இலங்கை மிகப்­ பெ­ரிய இடத்தை பிடித்­தது. நீங்கள் எந்த சர்­வ­தேச தர நிலை­களை பார்த்­தாலும் இதுதான் கதை­யாகும். இது ஏன்? காரணம் நாம் மஹிந்த சிந்­த­னையின் கீழ் தேசிய விட­யங்­களை நோக்­க­மா­கக்­கொண்டு நவீ­ன­தொ­ழி­நுட்­பங்­களின் அடிப்­ப­டை­யி­லான செயற்­பாட்டு ரீதி­யான கொள்­கை­களை பின்­பற்­றினோம். 2015ஆம் ஆண்டு பின்னர் இது தொடர்ந்­தி­ருந்தால் எமது நாடு அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடாக அடைந்­தி­ருக்கும்.அந்­த­வி­டயம் நிறுத்­தப்­பட்­டி­ருந்த இடத்­தி­லி­ருந்து நவீன தொழிற்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி இந்த பொரு­ள­தாh­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது எனது இலக்­காகும்.பாரம்­ப­ரிய ஏற்­று­ம­தி­க­ளுக்கு நாம் ஆத­ர­வ­ளிப்­ப­து­டன சர்­வ­தேச சேவைத்­து­றை­களான் கல்வி மற்றும் சுகா­தா­ரத்­துறை போன்­ற­வற்றில் புதிய முத­லீ­டு­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மி­டு­கிறேன். புதிய தொழில்­வாய்­பு­களை உரு­வாக்க­வேண்டும். இலங்­கையில் உயர்­மட்ட தொழில்­நுட்ப உற்­பத்­தி­களை முன்­னெ­டுப்­பது தொடர்பில் நான் ஏற்­க­னவே சர்­வ­தேச பங்­க­ளார்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்ளேன்.நவீன தொழில் நுட்­பத்தை பயன்­பத்தி பொரு­ள­தா­ரத்தை வளல'ச'சஜ­யடை செய்­வதை தவிர எமக்கு வேறு­வ­ழி­யில்லை.எந்­த­வொரு பிரச்­சி­னையும் தீர்ப்­ப­தற்கும் அதன் தன்மை நீங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். இலங்­கையை பொருத்­த­மட்டில் பிர­தான பிரச்­சி­னை­யாக இருப்­பது வெளி­நாட்டு கடன்­க­ளாகும்.பல்­த­ரப்பு கடன்­களை நாம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கிறோம். 2027ஆம் ஆண்டு வரை இரு­த­ரப்பு கடன்கள் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.பிணை­முறி கடன்கள் மீள செலுத்தப்படு­வ­தில்லை. அவை இன்னும் மறு­சீ­ர­மைக்­கப்­ப­டவும் இல்லை. எனவே, நாடு இன்னும் நெருக்­க­டியில் இருக்­கி­றது.பிணை­முறி கடன்­களில் அதி­க­ளவு பெறு­ம­தியை யார் பெற்­றது.நல்­லாட்சி அர­சாங்­கமே 12.5 பில்­லியன் டொலர்­களை பெற்­றுள்­ளது. இங்கு தான் நெருக்­க­டியே இருக்­கி­றது.தற்­போது இதற்கு என்ன தீர்வு? நாம் மற்­ற­வர்­களை குறைக் கூறிக் கொண்­டி­ருக்க முடி­யாது. நாம் அந்த கடன்­களை மிக­வி­ரை­வாக மீள செலுத்த ஆரம்­பிக்க வேண்டும்.வெளி­நாட்டு வரு­மா­னத்தை பெறு­வதே அதற்கு இருக்கும் ஒரே வழி­யாகும். இதற்கு நாம் சுற்­று­லாத்­து­றையை விரி­வுப்­ப­டுத்­து­வ­துடன் வரு­ட­மொன்­றுக்கு 80 மில்­லியன் சுற்­றுலா பய­ணி­களை வர­வ­ழைக்க வேண்டும்.அந்­நிய செலா­வணி வரு­மா­னத்தை அதி­க­ரிக்­க­செய்ய வேண்டும்.பெரிய மற்றும் நடுத்­தர அள­வி­லான முத­லீ­டு­களை அதி­க­ரிப்­ப­த­துடன் புதிய வர்த்­த­கங்­க­ளு­ட­னான ஏற்­று­ம­தி­களை அதி­க­ரிப்­பது அவ­சி­ய­மாகும். அதே­நேரம் ரூபா வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­துடன் உள்­நாட்டு கடன்­களை செலுத்­தவும் வெளி­நாட்டு நாண­யங்­களை கொள்­வ­னவு செய்­யவும் ரூபா வரு­மா­னத்தை அதி­க­ரித்துக் கொள்ள வேண்டும்.சுருக்­க­மாக இதுவே எமது பொரு­ளா­தார கொள்­கை­யாகும். மேல­திக விரி­வான விட­யங்­களை எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கேள்வி வேலை­வாய்ப்பு மேம்­பாடு மற்றும் தொழில்­நுட்ப - நடை­முறை திறன்­களை உள்­ள­டக்­கிய நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட கல்­வித்­திட்­டத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான உங்கள் திட்டம் என்ன? பதில் இரண்டு பிர­தான கோணங்­களில் நாம் கல்­வித்­து­றையை பார்க்­கிறோம்.முத­லா­வது மக்கள் சேவைக்­கான அர­சாங்க கல்வி மற்றும் சர்­வ­தேச சேவைக்­கான கல்­வி­யாகும்.மஹிந்த சிந்­தனை யுகத்­தி­லேயே இலங்­கையின் கல்­வித்­து­றையில் மிகப்­பெ­ரிய வளர்ச்சி ஏற்­பட்­டது.நாம் உள்­நாட்டு பாட­சா­லை­களை தொடர்ந்தும் அபி­வி­ருத்தி செய்வோம். அதே­ச­மயம் சமூ­கத்­துக்கும் சந்­தைக்கும் தற்­போது தேவை­யான வகையில் ஒரு வரு­டத்­துக்குள் சகல பாடத்­திட்­டங்­க­ளையும் மீளாய்வு செய்வோம். கற்­பிப்­ப­வர்­க­ளுக்­காக நாம் செய­லாக்க முகா­மைத்­துவ முறை ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­துவோம். அதன் ஊடாக அவர்­க­ளது ஊக்­கு­விப்­புகள் அவர்­க­ளது செய­லாக்­கத்தின் ஊடாக தீர்­மா­னிக்­கப்­படும். இலங்­கையை அமை­தி­யான சர்­வ­தேச கல்வி நிலை­ய­மாக முன்­னேற்­று­வ­தற்கு எம்­மிடம் விரி­வான திட்டம் உள்­ளது. கேள்வி கர்ப்­பி­ணித்­தாய்­மார் மற்றும் குழந்­தை­களின் ஊட்­டச்­சத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நீங்கள் முன்­னெ­டுக்­க­வுள்ள நட­வ­டிக்­கைகள் எவை? குழந்­தைகள் மத்­தியில் அதி­க­ரித்­தி­ருக்கும் மந்­த­போ­சணை மற்றும் வளர்ச்சி குன்றல் ஆகி­ய­வற்றை சீர்­செய்­வ­தற்கு எத்­த­கைய திட்­டங்­களை வைத்­தி­ருக்­கின்­றீர்கள்? பதில் சிறு­வர்­களே நாட்டின் எதிர்­காலம். அவர்கள் எமது நாட்டின் எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்­கி­றார்கள். எனவே சிறு­வர்­க­ளுக்கு சம­நி­லை­யான போசாக்கு வெற்­றிக்­கொள்ளும் ஆளுமை மற்றும் ஒலி இசை­வாக்கம் போன்­ற­வற்றை வழங்­கு­வதே எமது பொறுப்­பாக இருக்­கி­றது.கிராம சிறுவர் பிர­சவ சிகிச்சை நிலை­யங்கள் ஊடாக கர்ப்­பி­ணித்­தாய்­மார்­க­ளுக்கும் பிறந்த குழந்­தை­க­ளுக்கு திரி­போஷ விட்­டமின் உண­வு­க­ளையும் வழங்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சமுர்த்தி திட்டம் ஊடாக குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­களின் பிள்­ளை­க­ளுக்கு ஆரம்ப பாட­சாலை கல்­விக்கு மானியம் வழங்­கப்­படும். இலங்­கையில் தாய்­மார்கள் வெளி­நா­டு­களில் பணி­பு­ரிதல், தந்தைமார் குடி மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமைஇ பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்தல், பிள்ளை­களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளுவது என்பது மிக வேகமாக அதிகரிக்கும் சோக நிலைமையாக இருக்கி­றது. அவ்வாறான குழந்தைகளுக்கு முறையான பெற்றோருக்குரிய பாதுகாப்பு முறை ஒன்று அறிமுக்கப்படுத்தப்படுவதுடன் அதன் ஊடாக தேவையான வசதிகளும் கவனிப்பும் வழங்கப்படும். அவ்வாறான குழந்தைகளுக்கு மாதாந்தம் உதவிகளை வழங்குவதற்கு உள்நாட்டில் உள்ள மற்றும் வெளிநாட்டில் உள்ள பரோபகாரிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். அந்த உதவிகளின் ஊடாக மிக நெருக்கமாக கண்காணிக்கப்படும் ஒரு தொழில் செயற்பாடு அமுல்படுத்தப்படும். அதாவது இந்த குழந்தைகளுக்கு உணவு தயாரித்தல் மற்றும் கவனிப்புகளை செய்வதற்காக சமுர்த்தி உதவிப்பெறும் தாய்மார்கள் தொண்டர்களாக செயற்படுவார்கள். கேள்வி விவசாயத்தை இலாபகரமான மற்றும் நிலைபேறான துறையாக மாற்ற உங்கள் திட்டங்கள் என்ன? தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா, மிளகு, வெற்றிலை உள்ளிட்ட ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பீர்கள்? பதில் விவசாயத்துக்கு தேவையான நீர், விதைகள் மற்றும் உரம் என்பன உத்தரவாத விலைக்கேற்ப, தேவைக்கேற்ப விளைநிலங்களுக்கு விநியோகிக்கப்படும். இதன் ஊடாக விவசாயிகளின் முதலீட்டுக்குரிய வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும். நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். இதன் ஊடாக உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பில் விவசாய கூட்டுறவு வலுபெறும். இதனால் சிறிய மற்றும் பாரியளவிலான ஏற்றுமதி இனங்காணப்பட்ட வேறுபாட்டை தவிர்க்கலாம். காரணம் தற்போது கறுவா, மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற உற்பத்திகள் பாரிய உற்பத்திகளான தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் உற்பத்தியோடு சந்தையில் போட்டியிடுகின்றன. கேள்வி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் ஒடுக்குமுறைத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு உங்கள் நிர்வாகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? பாதிக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் குற்ற­வாளிகளுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றை எவ்வாறு உறுதிசெய்வீர்கள்? பதில் இந்த உதவிகள் பெண் தலைமைதாங்கும் குடும்­பங்கள் பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட பெண்க­ளுக்கு வழங்கப்படும். இதன் ஊடாக பெண்கள் சிறிய­விலான மற்றும் நடுத்தர வர்த்தகத்­தில் ஈடு­படக்கூடிய வாய்ப்பு கிட்டும். மேலும் பெண்களுக்கான சமஉரிமை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படுகிறது.அதேவேளை பெண்களது பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உதவியளிக்கும் வகையில் விசேட துரித எண்கள் மற்றும் தொலைபேசி பயன்பாடு என்பன ஏற்படுத்திக்கொடுக்கப்படும். கேள்வி பால்புதுமையின சமூகத்தினரின் உரிமைகள்இ கருக்கலைப்பு மற்றும் தெரிவுசெய்வதற்கான உரிமை என்பன தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்? பதில் இரண்டாயிரம் ஆண்டுகளில் நாமே நாகரிகமான வரலாற்றை ஏற்படுத்துகிறோம். நாம் முதுமை கலா­சாரத்தை மதிக்க வேண்டும். மேலைத்தேய சித்தாந்­தங்­களை போன்று எமது கலாசாரத்தை மாற்றியமைக்க முடியாது.ஆனால் நாம் வேறுபட்ட மத கலாசாரங்களை மதிக்கி­றோம். ஆகவே எமது நாட்டின் சட்டத்திட்டத்­துக்­கேற்ப சமத்துவம் நிலைநாட்டப்படும் என்பதை நம்புகிறோம். https://www.virakesari.lk/article/194012
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிட்செல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்த திரிபால் மனிதர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கோவிட் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களுக்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான என்.ஹெச்.எஸ் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குகிறது. சமீப கால புதிய கொரோனா திரிபுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. XEC எனும் இந்த புதிய திரிபு, முந்தைய ஒமிக்ரான் திரிபிலிருந்து உருவானதாகும். லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் மரபியல் மையத்தின் இயக்குநராக உள்ள பேராசிரியர் ஃபிராங்காயிஸ் பால்லாக்ஸ் பிபிசியிடம் கூறுகையில், “கோவிட் வைரஸின் முந்தைய திரிபுகளைவிட இந்த புதிய திரிபு வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் இதற்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றும்” என்றார். இந்த புதிய திரிபு குளிர்காலத்தில் அதிகளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்தார். அலையாக மாறுமா? கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் டிரான்ஸ்லேஷனல் மையத்தின் இயக்குநர் எரிக் டோபோல், “இந்த புதிய திரிபு தற்போதுதான் தொடங்கியுள்ளது” என கூறினார். “இது ஓர் அலையாக மாறுவதற்கு பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகலாம்,” என அவர் LA டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பரிசோதனைகள் குறைந்துள்ளதால் தொற்று பாதிப்பை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது (சித்தரிப்புப் படம்) அறிகுறிகள் என்ன? முந்தைய திரிபுகளை போன்றே சளி அல்லது காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாக உள்ளன. அதிக உடல் வெப்பம் உடல் வலி சோர்வு இருமல் அல்லது வறண்ட தொண்டை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வைரஸ்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு புதிய திரிபு ஏற்படுவது சாதாரணமானதுதான் என்கின்றனர் நிபுணர்கள் (சித்தரிப்புப் படம்) பாதிப்பு ஏற்பட்ட சில வாரங்களில் பெரும்பாலானோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் நீண்ட நாட்களுக்கு பிறகே குணமடைவர். இந்த புதிய திரிபின் தாக்கம் டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் அதிகம் இருப்பதாக, எக்ஸ் பக்கத்தில் கோவிட் தரவுகள் குறித்து ஆராய்ந்துவரும் மைக் ஹனி தெரிவித்துள்ளார். முன்பைவிட தற்போது குறைவான பரிசோதனைகளே செய்யப்படும் நிலையில், எவ்வளவு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமை (UKHSA) கூறுகையில், வைரஸ்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு, புதிய திரிபுகள் தோன்றுவது வழக்கமானதுதான் என தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என என்.ஹெச்.எஸ் கூறியுள்ளது (சித்தரிப்புப் படம்) பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் துணை இயக்குநர் டாக்டர் காயத்ரி அமிர்தலிங்கம் கூறுகையில், “மரபியல் ரீதியாக வைரஸ்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறுவது சாதாரணமானதுதான். பிரிட்டன் மற்றும் உலகளவில் பரவும் கோவிட்டின் திரிபுகள் குறித்து UKHSA அனைத்து தரவுகளையும் கண்காணித்து வருகிறது, எங்களிடம் உள்ள தரவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். கோவிட் 19 தொற்றுக்கு எதிராக தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து தடுப்பூசிகள் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7xnjg7v4wo
  23. வாக்காளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது. காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார். வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். அதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309487
  24. ஹெஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்து சிதறிய சம்பவத்திற்கு இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு – 9 பேர் பலி – 3000 பேர் காயம் - அதிர்ச்சியில் லெபனான் Published By: RAJEEBAN 18 SEP, 2024 | 07:41 AM ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் திடீரென வெடித்துச்சிதறியதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் குழந்தையொன்று உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3000 பேர் காயமடைந்துள்ளனர். பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளிலும் லெபானின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பல பேஜர்கள் வெடித்துச் சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் தரையில் அமர்ந்திருப்பதையும் ஏனையவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கடைகளில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2800 பேர் காயமடைந்துள்ளனர் என லெபனானிற்கான ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார். ஹெஸ்புல்லா அமைப்பு தனது பல பிரிவுகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. இஸ்ரேலே இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள ஹெஸ்புல்லா அமைப்பு பதில் நடவடிக்கை குறித்து எச்சரித்துள்ளது. செவ்வாய்கிழமை சம்பவம் காரணமாக லெபனான் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னொருபோதும் இடம்பெற்றிராத இத்தைகைய சம்பவத்தை நம்பமுடியாத நிலையில் லெபனான் மக்கள் காணப்படுகின்றனர். கையடக்க தொலைபேசிகள் ஹக் செய்யப்படலாம் அல்லது கண்டுபிடிக்கப்படலாம் என்பதற்காக தங்கள் உறுப்பினர்கள் பயன்படுத்திவரும் பேஜர்கள் பெருமளவில் வெடித்துச்சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. வணிக வளாகத்தில் நபர் ஒருவரிடமிருந்த பேஜர் வெடித்துச் சிதறுவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன. அவர் நிலத்தில் விழுந்து கிடந்து வலியால் துடிக்கின்றார், ஏனையவர்கள் அங்கிருந்து விலகி ஓடுகின்றனர். காயமடைந்த பெருமளவானவர்களை ஏற்றிக்கொண்டு அம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளிற்கு விரைந்தன. காயமடைந்தவர்களில் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பெய்ரூட்டின் அஷ்ரபீஹ் மாவட்டத்தில் உள்ள LAU மருத்துவ மையம் அதன் பிரதான வாயிலை மூடி உள்ளே வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது. "இவை மிகவும் உணர்வுபூர்வமான பயங்கரமான காட்சிகள் என இது மிகவும் உணர்திறன் மற்றும் சில காட்சிகள் பயங்கரமானவை" என்று ஒரு ஊழியர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். பெரும்பாலான காயங்கள் இடுப்பு முகம் கண்கள் மற்றும் கைகளில் காணப்பட்டன என அவர் கூறினார். "நிறைய உயிரிழப்புகள் விரல்களை இழந்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் அவை அனைத்தும்". ஈரானிய தூதர் மொஜ்தாபா அமானியின் மனைவி வெடிப்புகளால் காயமடைந்துள்ளார் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எட்டு போராளிகள் கொல்லப்பட்டதாக ஹெஸ்பொல்லாவின் ஊடக அலுவலகம் அறிவித்தது. அந்த இடங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்த விவரங்களை அது வழங்கவில்லை அவர்கள் "ஜெருசலேமுக்கு செல்லும் வழியில் உயிர்த்தியாகம் செய்தனர்" என்று மட்டுமே கூறியது. கொல்லப்பட்டவர்களில் ஹெஸ்பொல்லா எம். பி. அலி அம்மரின் மகனும் பெக்கா பள்ளத்தாக்கில் ஹெஸ்பொல்லா உறுப்பினரின் 10 வயது மகளும் அடங்குவதாக குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. பின்னர் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான ஹசன் ஃபட்லல்லாவின் மகன் காயமடைந்ததாகவும் அவர் இறந்துவிட்டதாக ஆரம்பத்தில் தெரிவித்ததாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகத்தின் கூற்றுப்படி நாட்டின் உள்நாட்டுப் போரில் ஹெஸ்பொல்லா அரசாங்கப் படைகளுடன் இணைந்து போராடும் அண்டை நாடான சிரியாவில் பேஜர்கள் வெடித்ததில் பதினான்கு பேர் காயமடைந்தனர். https://www.virakesari.lk/article/193975

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.