Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இயலாமைக்குள்ளான வாக்காளர்கள் வாக்களிக்க விசேட நடவடிக்கை! Published By: VISHNU 20 SEP, 2024 | 10:02 PM இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இயலாமைக்குள்ளான வாக்காளர்கள் வாக்களிக்க விசேட நடவடிக்கைகளை அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இயலாமைக்குள்ளான வாக்காளருடன் உதவியாளர் ஒருவரை உடன் அழைத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விசேட போக்குவரத்து வசதிகள் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல வசதிகள் தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194216
  2. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாரிஸின் (Paris) புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ் பெண் படுகொலை மேலும், 27 வயதான தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 23 வயதான மற்றுமொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். குடும்ப வன்முறையே கொலைக்கான காரணம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்த கொலை நடந்து சில நாட்கள் ஆகிய நிலையில் தற்போது இந்த விடயம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/young-tamil-woman-brutally-murdered-in-france-1726843212#google_vignette
  3. பசில் ராஜபக்ச திடீரென வெளிநாடு பறந்தது ஏன்..! வெளியானது காரணம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச(basil rajapaksa) மருத்துவ நோக்கங்களுக்காக டுபாய் சென்றுள்ளார் என்பதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(sagara kariyawasam) உறுதிப்படுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு செல்லவிருந்ததாகவும், ஆனால் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (namal rajapaksa)தேர்தல் நடவடிக்கைகளுக்காக கடைசி நேரம் வரை இரவு பகலாக உழைத்ததாகவும் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். கட்சிக்கு அறிவித்த பசில் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதாக கட்சிக்கு தெரிவித்திருந்தார். மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர் விரைவில் நாடு திரும்புவார். விரைவில் நாடு திரும்புவார் மேலும், வெளிநாடு சென்றுள்ள பசில் ராஜபக்ச விரைவில் திரும்பி வந்து கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/basil-left-country-for-medical-purposes-1726847488
  4. லெதம், வில்லியசன் அரைச் சதங்கள் குவிப்பு: பலமான நிலையை நோக்கி நகர்கிறது நியூஸிலாந்து Published By: VISHNU 19 SEP, 2024 | 07:51 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (20) டொம் லெதம், முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் நியூஸிலாந்து பலமான நிலையை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளது. இலங்கை முதல் இன்னிங்ஸில் பெற்ற 305 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்று உறுதியான நிலையில் இருந்தது. நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். கொன்வே 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் டொம் லெதம், கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டொம் லெதம் 70 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் 3ஆவது விக்கெட்டில் ரச்சின் ரவிந்த்ராவுடன் மேலும் 51 ஓட்டங்களை வில்லியம்சன் பகிர்ந்தார். வில்லியம்சன் 55 ஓட்டங்களையும் ரவிந்த்ரா 39 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெரில் மிச்செல் 41 ஓட்டங்களுடனும் டொம் ப்ளண்டெல் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இரண்டாம் நாளான நேற்றுக் காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, கடைசி 3 விக்கெட்களை 3 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது. 14 ஓட்டங்களுடன் தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த ரமேஷ் மெண்டிஸ் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் வில்லியம் ஓ'ரூக் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஜாஸ் பட்டேல் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வில்லியம் ஓ'ரூக் தனது 2ஆவது விக்கெட் குவியலை இன்று பதிவு செய்தார். https://www.virakesari.lk/article/194128
  5. Published By: DIGITAL DESK 3 20 SEP, 2024 | 04:50 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பன் பிரதேச வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலை தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு வைத்தியர்கள் பகலில் கடமையில் உள்ளனர். ஆனால் இரவு வேளைகளில் வைத்தியர்கள் எவரும் கடமையாற்றுவதில்லை. இரவு வேளைகளில் வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்கள் செல்லும் போது நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவது வழமையாகும். இந்நிலையில், நேற்றைய தினம் 19/09/2024 அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு நாகர்கோவில் பகுதியிலிருந்து வலிப்பு ஏற்பட்டு சிறுமி ஒருத்தியை அவரது பெற்றோர் இரவு 8:30 மணியளவில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையினுடைய நோயாளர் காவு வண்டி இல்லை. அது ஏங்கே என்று கேட்டபோது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியரும் இல்லாத நிலையில், நோயாளர் காசு வண்டியும் இல்லை அவசர நோயாளர்களின் நிலை என்ன என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தும் அம்பன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியை அழைத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இதனால் சுமார் 50 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194194
  6. பும்ரா புயலில் சுருண்ட வங்கதேசம் - சேப்பாக்கத்தில் நடந்த திடீர் மாற்றம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பும்ராவின் ‘மாஸ்டர் கிளாஸ்’ பந்துவீச்சு, அறிமுக வீரர் ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களில் சுருண்டது. ஃபாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 308 ரன்கள் முன்னிலையுடன் பேட் செய்து வருகிறது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது. சுப்மான் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கோலி, ரோஹித் சொதப்பல் 2வது இன்னிங்ஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்னில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் 5 ரன்னில் தஸ்கின் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். சேப்பாக்கமா இது! சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 4 விக்கெட், ஆகாஷ், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91.2 ஓவர்களில் 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. வங்கதேசம் அணி 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றது. 227 ரன்கள் முன்னிலை பெற்றாலும் வங்கதேசத்துக்கு ஃபாலோ ஆன் வழங்காமல் தொடர்ந்து இந்திய அணி 2வது இன்னிங்ஸிலும் பேட் செய்தது. 3வது நாளில் இருந்து மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். முதல்நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்திருந்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆனால் நீண்டநேரம் இந்திய பேட்டர்கள் நிலைக்கவில்லை. 10.2 ஓவர்கள் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். அனைத்துமே கேட்ச்தான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 10 பேருமே கேட்ச் பிடிக்கப்பட்டுதான் விக்கெட்டுகளை இழந்தனர். உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டர்கள் அனைவரும் ஒரு இன்னிங்ஸில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழப்பது இது 4வது முறையாகும். சமீபத்தில் 2021-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சேப்பாக்கில் 3வது 5 விக்கெட் வங்கதேசத் தரப்பில் ஹசன் மெஹமது 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 2012-ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியப் பயணத்துக்கு வந்த ஒரு அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுதான் முதல்முறையாகும். 2012 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரின் விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இதுவரை 2 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் வீழ்த்தியிருந்தனர். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஜேம்ஸ் பட்டின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இப்போது வங்கதேச வீரர் ஹசன் மெஹ்மது வீழ்த்தியுள்ளார். மிரட்டிய இந்திய பந்துவீச்சு பட மூலாதாரம்,GETTY IMAGES இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் மூவரும் சேர்ந்து தொடக்கத்திலிருந்தே வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறவிட்டனர். ஷத்மான் இஸ்லாம், ஜாகீர் ஹசன் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கிடைத்தது. அடுத்து கேப்டன் ஷான்டோ களமிறங்கி, ஹசனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அறிமுக வீரரான ஆகாஷ் தீப் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் இன்ஸ்விங், லெக் கட்டர் முறை பந்துவீச்சு வங்கதேச பேட்டர்களுக்கு புதிதாக இருந்ததால், ஆகாஷ் வீசிய பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். தவறிய ஹாட்ரிக் வாய்ப்பு ஆகாஷ் வீசிய 9-வதுஓவரில் ஜாகீர் ஹசன் 3 ரன்களில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மோமினுள் ஹக், ஆகாஷ் பந்துவீச்சில் ஸ்டெம்ப் தெறிக்க விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஆகாஷிற்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முஷ்பிகுர் ரஹிம் தடுத்துவிட்டார். வங்கதேச அணி நண்பகல் உணவு இடைவேளைக்குச் செல்லும்போது 9 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசி விக்கெட்டைான ராணாவை க்ளீன் போல்டாக்கி சிராஜ் விக்கெட் வீழ்த்தினார் விக்கெட் சரிவு உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேச அணி அடுத்தடுத்து ஷான்டோ(20) சிராஜ் பந்துவீச்சில், முஷ்பிகுர் ரஹ்மான்(8) பும்ரா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஆஃப்சைடில் பவுன்ஸ் ஆன பந்தை தடுத்து ஆட முஷ்பிகுர் ரஹ்மான் முயன்றபோது, 2வது ஸ்லிப்பில் இருந்த ராகுல் எளிதாக பந்தை கேட்ச் பிடித்தார். 6வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், ஷகிப் அல்ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 50 ரன்கள் சேர்த்தனர். லிட்டன் தாஸ்(22) விக்கெட்டையும், ஷகிப் அல்ஹசன்(32) விக்கெட்டையும் ஜடேஜா எடுத்து ஆட்டத்தில் ஸ்வாரஸ்யம் சேர்த்தார். ஹசன் மெஹ்மது(9), தஸ்கின் அகமது(11) விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தவே, 5 விக்கெட்டுகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டைான ராணாவை க்ளீன் போல்டாக்கி சிராஜ் வீழ்த்தியதால் பும்ராவுக்கு 5 விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c3wpewy697yo
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி 4 மணி நேரங்களுக்கு முன்னர் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது. குழுவின் பரிந்துரைகளின் படி இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இதன்கீழ் அரசியலமைப்பின் 83 மற்றும் 172-வது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு மோதி அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. எனவே இது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான கூட்டணி கட்சிகளோடு கூடவே வேறு சில கட்சிகளின் ஆதரவும் மோதி அரசுக்கு உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பல பிராந்திய கட்சிகளும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல் செய்யும் பொருட்டு அதற்கான மசோதாவை நிறைவேற்றுவதில் இருக்கும் பிரச்னையுடன் கூடவே பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் அரசுக்கு உள்ளன என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அரசியலமைப்பில் திருத்தம் செய்வது எளிதானதா? இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை 1983-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. ஆனால், அப்போது மத்தியில் இருந்த இந்திரா காந்தி அரசு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதன்பிறகு இந்தியாவின் சட்ட ஆணையம், 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. அப்போது மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்தது. 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த விஷயத்தை சேர்த்திருந்தது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதியும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மற்றும் மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகளும் அரசியல் ஆய்வாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கடந்த முறை ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. ஆனால், இந்த ஆண்டு இந்த இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடைபெறுகிறது. எதிர்கட்சிகள் இதனை ஒரு உதாரணமாக குறிப்பிடப்பட்டு வருகின்றனர். மூத்த வழக்கறிஞரும் அரசியல் சாசன நிபுணருமான சஞ்சய் ஹெக்டே,"இதை அமல்படுத்த அரசு, பல அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்ய வேண்டும். அதன் கூட்டணி கட்சிகள் இதை ஆதரிக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைக்கும் ஒன்றாக இருப்பதால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் உச்ச நீதிமன்ற பரிசீலனைக்காக செல்லும்" என்று குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு வகையான, அதிபர் முறை ஜனநாயகம் போல ஆகிவிடும். அதாவது ’உங்களுக்கு நரேந்திர மோதியை பிடிக்குமா, பிடிக்காதா அல்லது ராகுல் காந்தியை பிடிக்குமா, பிடிக்காதா’ என்பதுபோல தேர்தல் ஆகிவிடும் என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்தும் பொருட்டு அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை. ஏனெனில் இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது," என்று மக்களவையின் முன்னாள் செயலரும் அரசியலமைப்பு நிபுணருமான பிடிடி ஆச்சாரி கூறினார். "மாநில சட்டப்பேரவை தேர்தல், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலங்கள் பட்டியலில் வருகிறது. மாநில சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த உரிமையை மாநிலத்திடமிருந்து பறித்துவிடும். இது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானது. எனவே இது ஒருபோதும் நடக்க முடியாது,” என்றார் அவர். உதாரணமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பதவிக்காலம் முடிவடையாத மாநிலங்களின் சட்டப்பேரவைகளை கலைக்க வேண்டியிருக்கும். இது அமலானால் சட்டப்பேரவையை கலைக்கும் உரிமை மாநில அரசிடம் இருக்காது, அதன் கட்டுப்பாடு மத்திய அரசிடம் சென்றுவிடும். ''ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இன்று பேசப்படும் விஷயம் அல்ல. அதற்கான முயற்சிகள் 1983 -ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கப்பட்டன. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அதை நிராகரித்துவிட்டார்,” என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரதீப் சிங், பிபிசி செய்தியாளர் சந்தீப் ராயிடம் தெரிவித்தார். "தேர்தலில் கறுப்புப் பணம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அது கணிசமாகக் குறையும். இரண்டாவது, தேர்தல் செலவுகளின் சுமை குறையும், நேர விரயம் மற்றும் சுமை குறையும். கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதான செலவின் அழுத்தமும் குறையும்," என்று அவர் கூறினார். "கட்சிகளுக்கு மிகப்பெரிய சுமையாக இருப்பது தேர்தல் நிதி. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தனித்தனியாக பிரசாரம் செய்ய வேண்டியதில்லை என்பதால் சிறு கட்சிகள் பலன் பெறலாம்" என்று அவர் சுட்டிக்காட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு 47 அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை அனுப்பியிருந்தன. மாநிலங்களுடன் மோதல் தொடர்பான அச்சம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணை மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகிறது. இதில் மத்திய பட்டியலில் உள்ள விஷயங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு உரிமை உண்டு. மாநிலப் பட்டியல், மாநில அரசின் கீழ் வரும் அதிகாரங்களை குறிப்பிடுகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இரண்டுக்குமே அதிகாரம் உள்ள விஷயங்கள் பொதுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும். "கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பில் நீங்கள் எந்தத் திருத்தத்தையும் செய்யலாம், ஆனால் அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளது," என்று பிடிடி ஆச்சாரி கூறுகிறார். "ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு 47 அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை அனுப்பியிருந்தன. இது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்று அதில் 15 கட்சிகள் தெரிவித்துள்ளன,” என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறினார். இந்த விவகாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இன்னொரு நெருக்கடி உள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத்தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதாவது கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த பத்திரிக்கையாளரும், நாடாளுமன்ற விவகாரங்களை கூர்ந்து கவனிப்பவருமான அரவிந்த் சிங், ''தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் பல பணிகள் நின்றுவிடுவது உண்மைதான். இதற்கு தீர்வு காண தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றக் குழு கூறியிருந்தது,” என்று குறிப்பிட்டார். "தற்போதைய அரசு 100 நாட்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி பேசுகிறது. இது தவிர எந்த மாநிலத்தில் ஆட்சி கவிழ்கிறதோ அந்த மாநிலத்தில் மீண்டும் எஞ்சிய காலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.” ”அதாவது இது ஒரே நாடு ஒரே வரி என்று அழைக்கப்படும் ஜிஎஸ்டி போல இருக்கும். ஆனாலும் நாம் சுங்க வரி, வருமான வரி என பல வகையான வரிகளை செலுத்துகிறோம்," என்று அர்விந்த் சிங் சுட்டிக்காட்டினார். அரசின் வாதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது இந்தியாவில் ஒரு பெரிய அரசியலமைப்பு விவாதத்தைத் தூண்டக்கூடும். இந்தியா சுதந்திரம் அடைந்து அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு முதல் முறையாக, 1951-52-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 22 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. இந்த செயல்முறை சுமார் 6 மாதங்கள் நீடித்தது. இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் 489 மக்களவைத் தொகுதிகளுக்கு சுமார் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது. இந்தியாவில் 1957, 1962 மற்றும் 1967-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் மற்றும் பல மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. இருப்பினும், 1955-ஆம் ஆண்டு ஆந்திரா ராஷ்டிரத்திலும் (பின்னர் ஆந்திர பிரதேசமாக மாறியது) 1960-65-ஆம் ஆண்டு கேரளாவிலும், 1961 இல் ஒடிஷாவிலும் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு சில மாநிலங்களின் சட்டப் பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டன. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது தவிர 1972-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மக்களவைத் தேர்தலும் முன்கூட்டியே நடத்தப்பட்டது. 1983-ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை அப்போதைய இந்திரா காந்தி அரசிடம் வழங்கியது. ஆனால் அதற்கு பிறகு இதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் என்று கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் எந்த ஒரு புதிய திட்டத்தையும் அரசால் செயல்படுத்த முடியாது. நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள போது, புதிய திட்டங்கள், புதிய வேலைகள் அல்லது புதிய கொள்கைகளை அறிவிக்க முடியாது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது தேர்தலுக்கான செலவைக் குறைக்கும் என்றும் வாதிடப்படுகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் அடிக்கடி தேர்தல் பணிகள் செய்யவேண்டிய அவசியம் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் தேர்தல் செலவு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்குப் பின்னால் தேர்தல் செலவு குறையும் என்ற வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. ”உலகிலேயே குறைவான செலவில் இந்தியாவில்தான் தேர்தல்கள் நடைபெறுகிறன. இந்தியாவின் தேர்தல்களில் ஒரு வாக்காளருக்கு சுமார் ஒரு அமெரிக்க டாலர் (இன்றைய நிலவரப்படி சுமார் 84 ரூபாய்) செலவிடப்படுகிறது,” என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பிபிசியிடம் தெரிவித்தார். இதில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு, வாக்குச்சாவடியில் உள்ள பணியாளர்கள், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளுக்கான செலவுகள் அடங்கும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சுமார் 1.75 டாலர் செலவிடப்பட்டது. தேர்தல் செலவுகள் பற்றிய தரவுகள் கிடைக்கப்பெறும் நாடுகளில் பார்த்தால் கென்யாவில் இந்தச் செலவு ஒரு வாக்காளருக்கு 25 டாலராக உள்ளது. இது உலகிலேயே மிகவும் அதிக செலவு செய்யப்படும் பொதுத் தேர்தல்களில் அடங்கும் என்று ஓ.பி. ராவத் குறிப்பிட்டார். “இந்தியாவில் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 4,000 கோடி ரூபாய் செலவாகிறது. இது அவ்வளவு அதிகம் அல்ல,” என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறினார். ”இது தவிர அரசியல் கட்சிகள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். இதனால் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பணம் ஏழைகளை சென்றடைகிறது. இது ஒரு நல்ல விஷயம்தான்”, என்றார் அவர். மாறிவரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப இந்தியாவில் தேர்தல்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஆனாலும் கூட தேர்தல் நேரத்தில் பேனர்கள், போஸ்டர்கள், விளம்பரப் பொருட்களை தயாரித்து ஒட்டுவது முதல் ஆட்டோ, ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் வரை அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. இந்த வகையில் சாமானிய மக்களுக்கும் அவர்களின் பொருளாதாரத்திற்கும் தேர்தல்கள் பல வழிகளில் நல்லது செய்கிறது என்றும் கருதப்படுகிறது. மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்று எஸ்ஒய் குரேஷி கூறினார். இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றின் விலை சுமார் 17 ஆயிரம் ரூபாய் மற்றும் VVPAT இன் விலையும் ஏறக்குறைய இதே போலதான் இருக்கிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்காக சுமார் 15 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly62031d21o
  8. தோனி சாதனையை சமன் செய்த அஸ்வின் சென்னையில் நடந்து வரும் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சகலதுறை வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்தார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரிலும் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய வீரர்களில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, கில், விராட் கோலி, உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஆகியோர் சற்று நிலைத்து நின்று விளையாடினாலும் அவர்களும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஒரு கட்டத்தில் இந்திய அணி 144 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் நங்கூரமிட்டு இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜடேஜா ஒரு முனையில் நிலைத்து விளையாட, மறுபக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் 109 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் 6-ஆவது சதமாகும். இந்த சதத்தின் மூலம் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். https://thinakkural.lk/article/309621
  9. சென்னையில் பிறந்த அஷ்வினும் சென்னையுடன் ஒட்டிக்கொண்ட ஜடேஜாவும் இந்தியாவை பலமான நிலையில் இட்டனர்; அஷ்வின் சதம் குவித்து அசத்தல் Published By: VISHNU 19 SEP, 2024 | 07:47 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சென்னை, சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (19) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைக் குவித்துள்ளது. சென்னையில் பிறந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் சென்னையுடன் (சுப்பர் கிங்ஸ்) ஒட்டிக்கொண்ட ரவிந்த்ர ஜடேஜாவும் அற்புதமான துடுப்பாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி இந்தியாவை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து பலமான நிலையில் இட்டனர். இவர்கள் இருவரும் துடுப்பாட்டத்தில் அசத்தியிராவிட்டால் இந்தியா பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (6), ஷுப்மான் கில் (0), விராத் கோஹ்லி (6) ஆகிய மூவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்து சென்றனர். (34 - 3 விக்.) இந் நிலையில் யஷஸ்வி ஜய்ஸ்வாலும் ரிஷாப் பான்ட்டும் 4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் சரிவை சீர்செய்தனர். ரிஷாப் பான்ட் 39 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் யஷஸ்வி ஜய்ஸ்வாலும் கே.எல். ராகுலும் 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் இருவரும் 144 ஓட்டங்கள் என்ற ஓரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர். ஜய்ஸ்வால் 56 ஓட்டங்களையும் ராகுல் 16 ஓட்டங்களையும் பெற்றனர். இந் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பங்களாதேஷ் ஜமாய்க்கப் போகிறது என கருதப்பட்டது. ஆனால், வீழ்ச்ச்சியிலிருந்து மீண்டு எழுவதற்கு அதிரடியும் ஆக்ரோஷமுமே சிறந்தது என்பதை நன்கு புரிந்திருந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் ரவிந்த்ர ஜடேஜாவும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை பந்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலமான நிலையில் இட்டனர். தனது சொந்த மைதானத்தில் மிகவும் அபாராமாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடிய ரவிச்சந்திரன் அஷ்வின் 112 பந்துகளை எதிர்கொண்டு 10 சதங்கள், 2 சிக்ஸ்கள் உட்பட 102 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இது அவர் பெற்ற 6ஆவது டெஸ்ட் சதமாகும். மறுபக்கத்தில் நிதானமும் திறமையும் கலந்து துடுப்பெடுத்தாடிய ரவிந்த்ர ஜடேஜா 117 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 86 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/194127
  10. டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனை ஒன்றை சமன் செய்தார் கமிந்து : காலியில் பெற்ற சதம் சிறப்பு வாய்ந்தது என்கிறார் கமிந்து மெண்டிஸ் 19 SEP, 2024 | 05:08 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் தனது நான்காவது டெஸ்ட் சதத்தைக் குவித்து அசத்தினார். ஏழாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருவதுடன் மற்றொரு உலக சாதனையை சமப்படுத்தியுள்ளார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் கமிந்து மெண்டிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்கள் கடப்பதை உறுதிசெய்தார். கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 114 ஓட்டங்களைக் குவித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடிய முதல் 7 டெஸ்ட்களிலும் ஒரு இன்னிங்ஸிலாவது 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை 8 சந்தர்ப்பங்களில் பெற்று, பாகிஸ்தான் வீரர் சவூத் ஷக்கீல் கடந்த வருடம் ஏற்படுத்திய உலக சாதனையை சமப்படுத்தியுள்ளார். இதனிடையே சில்ஹெட் அரங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கமிந்து மெண்டிஸ் சதங்கள் குவித்ததுடன் மென்செஸ்டர், காலி ஆகிய அரங்குகளிலும் சதங்கள் குவித்துள்ளார். ஆனால், அவற்றில் காலியில் குவித்த சதமே சிறப்பு வாய்ந்தது என கமிந்து மெண்டிஸ் தெரிவித்துள்ளார். 'இது (காலி) எனது சொந்த ஊர். அத்துடன் நான் கல்வி கற்ற றிச்மண்ட் கல்லூரியும் இங்குதான் அமைந்துள்ளது' என முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் கமிந்து மெண்டிஸ் குறிப்பிட்டார். 'இங்கு சதம் குவிக்க வேண்டும் என எனது உள்மனம் கூறிக்கொண்டே இருந்தது. நேர்மையாகக் கூறுவதென்றால் 100 ஓட்டங்களுடன் மாத்திரம் சந்தோஷம் அடைந்துவிடக் கூடாது. அதற்கும் அப்பால் கடந்து செல்லவேண்டும். துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டம் இழந்துவிட்டேன்' என கமிந்து மெண்டிஸ் மேலும் குறிப்பிட்டார். இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள கமிந்து மெண்டிஸ் மொத்தமாக 809 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவரது சராசரி வியத்தகு 80.90 ஆக அமைந்துள்ளது. சேர் டொனல்ட் ப்றட்மனுக்கு அடுத்ததாக குறைந்த பட்சம் 10 இன்னிங்ஸ்களில் அதிசிறந்த சராசரியைக் கொண்டிருப்பவர் கமிந்து மெண்டிஸ் ஆவார். மேலும் தற்போதைய உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் 10 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் 748 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ள கமிந்து மெண்டிஸின் சராசரி 83.11 ஆகும். நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் ஜோ ரூட் மாத்திரமே 5 சதங்களைக் குறித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் 2022இல் விளையாடிய தனது அறிமுகப் போட்டியில் மத்திய வரசை வீரராக 6ஆம் இலக்கத்தில் 61 ஓட்டங்களைப் பெற்ற கமிந்த மெண்டிஸ், சுமார் 2 வருடங்களின் பின்னர் தனது மீள் வருகையில் 7ஆம் இலக்க வீரராக பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் அரங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் 7ஆம் இலக்கத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் (102 மற்றும் 164) குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து சட்டோக்ராம் அரங்கில் ஆட்டம் இழக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து மென்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 113 ஓட்டங்களைக் குவித்த கமிந்து மெண்டிஸ், லோர்ட்ஸ் அரங்கில் முதல் இன்னிங்ஸில் 74 ஓட்டங்களையும் ஓவல் அரங்கில் முதல் இன்னிங்ஸில் 64 ஓட்டங்களையும் பெற்றார். 7ஆம் இலக்கத்தில் இவ்வாறாக அசத்தி வந்த கமிந்து மெண்டிஸ் இப்போது 5ஆம் இலக்கத்தில் தனது முதல் முயற்சியில் சதம் குவித்து சாதித்துள்ளார். இந்த மாதம் 30ஆம் திகதி தனது 26ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள கமிந்த மெண்டிஸ், இலங்கை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பிரகாசித்து வரலாற்று நாயகனாக உயர்வார் என நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/194114
  11. 19 SEP, 2024 | 10:30 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடுநிலையான ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மிக இலகுவாக ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவை முதல் தடவையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. பஸால்ஹக் பறூக்கி, 18 வயதுடைய அல்லா மொஹமத் கஸன்பார் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். தென் ஆபிரிக்காவின் வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா சுகவீனமுற்றதால் பதில் தலைவராக ஏய்டன் மார்க்ராம் நியமிக்கப்பட்டிருந்தார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பத்து ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா 7 விக்கெட்களை இழந்து 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், வியான் முல்டர், 8அவது விக்கெட்டில் பிஜோன் போர்ச்சுய்னுடன் 39 ஓட்டங்களையும் 9ஆவது விக்கெட்டில் நண்ட்ரே பேர்கருடன் 30 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினார். வியான் முல்டர் 52 ஓட்டங்களையும் பிஜோன் போர்ச்சுய்ன் 16 ஓட்டங்களையும் டொனி டி ஸோர்ஸி 11 ஓட்டங்களையும் கய்ல் வெரின் 10 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களை விட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை. பந்துவீச்சில் பஸால்ஹக் பறூக்கி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 7 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அல்லா மொஹமத் கஸன்பார் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரஷித் கான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 26 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (25 ஆ.இ.), குல்பாதின் நய்ப் (34 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர். அவர்களைவிட ரியாஸ் ஹசன், அணித் தலைவர் ஹஸ்மத்துல்லா ஷஹிதி ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பிஜோன் போச்சுய்ன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/194067
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஆகஸ்ட் மாதம் கன்னிப்படல முக்கியத்துவம், கன்னித்தன்மை மற்றும் கன்னிகழிதல் போன்ற தலைப்புகளை தடயவியல் மருத்துவ பாடத் திட்டத்தில் இணைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சூழலில் பெண்களின் புனிதம், பாலியல் தூய்மை, ஒழுக்கப் பண்புகள் மீது கட்டமைக்கப்படும் எதிர்பார்ப்புகள் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் சூழலில், என்.எம்.சியின் இந்த சமீபத்திய நடவடிக்கை பல்வேறு மட்டங்களில் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மருத்துவ மற்றும் LGBTQ+ உரிமைகள் குழுக்களின் பெரும் அழுத்தத்தின் கீழ், தேசிய மருத்துவ ஆணையம் இந்த மாற்றங்களை செப்டம்பர் மாதம் திரும்பப் பெற்றது என்.எம்.சி. 2022ம் ஆண்டு நீக்கப்பட்ட சர்சைக்குரிய பாடப்பிரிவுகள் கன்னித்தன்மை என்பது பெண்ணின் புனிதம், பாலியல் தூய்மை அல்லது ஒழுக்கத்தின் குறியீடாகவே நீண்ட காலமாகக் கருதப்படுகிறது. இவை எப்போதுமே இப்படி இல்லை என்றாலும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகம் உருவாகும்போது கன்னித்தன்மை குறித்த பார்வையும் மாறியது. குலத்தின் தூய்மையைக் காப்பாற்றுதல் பெண்களின் கடமை என்று ஆக்கப்பட்டது. சாதி மற்றும் மத நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் அகமண முறையை முன்னிறுத்துகின்றன. அதில் பெண்ணின் கன்னித்தன்மையை வலியுறுத்துவதும் இணைந்துவிடுகிறது. பெண் உடலை போகத்திற்கான பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வையும் கன்னித்தன்மை பற்றிய கருத்துகளை உருவாக்குகிறது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பதிலளித்து, தேசிய மருத்துவ ஆணையம்(NMC) 2022இல் MBBS பாடத் திட்டத்தைத் திருத்தியது. தடயவியல் மருத்துவத்தில் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் என்ற பிரிவில் இருந்து "தன்பாலின ஈர்ப்பு” நீக்கப்பட்டது. கூடுதலாக, கன்னிப்படலம் மற்றும் கன்னித்தன்மையின் முக்கியத்துவம் போன்ற காலாவதியான கருத்துகள் அகற்றப்பட்டன. மேலும் இருவிரல் சோதனை "அறிவியலற்றது, மனிதாபிமானமற்றது மற்றும் பாரபட்சமானது" என்று கருதப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 2024இல், தேசிய மருத்துவ ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் முன்பு நிராகரிக்கப்பட்ட பல பிற்போக்கான கூறுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது. நிர்பயா வழக்குக்குப் பிறகு, குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளில் இருவிரல் பரிசோதனையைத் தடை செய்வதும் ஒன்று. பாலியல் வன்முறை நடைபெற்றுள்ளதா என்று கண்டறிய பெண்ணின் கன்னிப்படலத்தை இரு விரல்களால் சோதித்துப் பார்ப்பதே இந்தப் பரிசோதனை. இது பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் 2013ஆம் ஆண்டு கூறியது. இந்தியாவில் பெண்களின் பாலியல் பின்னணி எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பது குறித்த உரையாடலை தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய உத்தரவுகள் மீண்டும் தூண்டியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசியிடம் பேசிய பல பெண்கள் கன்னித்தன்மை பற்றிய தங்கள் எண்ணங்களை விளக்க முயன்றனர். கன்னித்தன்மைக்கு மருத்துவ அறிவியலில் இடம் இல்லை என்று கூறும் மருத்துவர், பெண்ணை சமூக ரீதியாக ஒடுக்கும் கருவியே கன்னித்தன்மை என்று கூறும் எழுத்தாளர், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத சமூகத்தில் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்று கூறும் ஐடி ஊழியர் எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்கள் பலவிதமான கருத்துகளை தங்கள் சொந்த அனுபவங்களில் இருந்து பிபிசியிடம் பகிர்ந்துள்ளனர். கன்னித்தன்மை குறித்த பிடிவாதங்கள் இளம்பெண்களைத் தொடர்ந்து பாதிப்பதாக பிபிசியிடம் பேசிய பெண்கள் தெரிவித்தனர். “தூய்மை” மீதான முக்கியத்துவம் பாலின பாகுபாடுகளை நீடிக்கச் செய்கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர். இந்திய சமூகத்தில் திருமணம் ஆகும் வரை பெண்கள் ‘கன்னித்தன்மையுடன்’ இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஆண்களுக்கு அதுபோன்ற கட்டுப்பாடுகள் கிடையாது. கன்னித்தன்மை பரிசோதனை போன்ற பழக்கங்கள் இன்னமும் பின்பற்றப்படும் சமூகத்தில், பாலியல் தூய்மை என்பது பெண்ணின் உடலை மட்டுமல்லாமல் அவளது பாலியல் நடத்தையையும் கண்காணிப்புக்கு உள்ளாக்குகிறது. சென்னை நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும்பிரபல மகப்பேறு மருத்துவர் ஜோஸ்பின் வில்சன், கன்னித்தன்மை என்பது “பழங்காலச் சொல்” என்கிறார். சமூக பரிணாமத்தின் மூலம் இந்தச் சொல் தற்போது அர்த்தமற்றதாகிவிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். கன்னித்தன்மைக்கு மருத்துவத்தில் அர்த்தம் இல்லை பட மூலாதாரம்,DR JOSEPHINE WILSON மருத்துவர் ஜோஸ்பின் வில்சன், “பெண்களுக்கு இடையிலான பாலியல் வாழ்க்கை இருக்கும் ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம், நீங்கள் எந்த கன்னித்தன்மையைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார். “பெண்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற பட்சத்தில் கன்னித்தன்மை என்ற வார்த்தையே இருக்க முடியாது. மருத்துவத்தில், பாலியல் வல்லுறுவு, துன்புறுத்தல் ஆகிய விவகாரங்களைப் பற்றிப் பேசும்போது, உறுப்புகளில் ஏதேனும் காயம் இருக்கிறதா என்று நாங்கள் பரிசோதிக்கும்போது மட்டுமே இந்தச் சொற்கள் பயன்பாட்டுக்கு வரும். இது கன்னித்தன்மையை வரையறுப்பதற்குச் சமமானதல்ல" என்று அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, கன்னித்தன்மையை வரையறுக்கக்கூடாது. "நான் ஹைமெனோபிளாஸ்டி (Hymenoplasty) பற்றிய ஒரு படிப்பை முடித்துள்ளேன். அதன் மூலம் என்னால் ஒரு கன்னிப்படலத்தை (hymen) மறு உருவாக்கம் செய்ய முடியும். அப்படியிருக்கும்போது இங்கு கன்னித்தன்மையின் வரையறையை எப்படி முடிவு செய்வது?” என்கிறார். “நான் வளர்ந்த காலத்தில் கன்னித்தன்மை என்றால் கற்பு, அதாவது திருமணத்திற்குப் பிறகுதான் பாலியல் வாழ்க்கை என்று அர்த்தம். என்னைப் பொறுத்தவரை, கன்னித்தன்மை ஒரு நபரின் குணத்தை வரையறுக்கிறது," என்று அவர் கூறினார். மேலும், “ஒரு மருத்துவராக அந்த உறுப்பைப் பார்க்கும்போது, அது என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியும். திருமணமாகி பல ஆண்டுகளாக பாலியல் உறவுகொள்ளாத பெண்களை, என்னால் ஒரு நொடியில் கண்டுபிடித்துவிட முடியும். அப்படிப்பட்ட தருணங்களில் பலர் என்னிடம் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்ள முன்வந்ததும் உண்டு. நான் ஒரு மருத்துவ மாணவராக இருந்தபோது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு அல்லாத வேறு எந்த உறவும் ஒரு குற்றம் என்றும் வியாதி என்றும் கற்றுத் தரப்பட்டது. எது பாவமாகப் பார்க்கப்பட்டதோ, அதுவே சமூகப் பரிணாமத்தின் காரணமாக இப்போது அப்படிப் பார்க்கப்படுவதில்லை. அவர்களை ஒதுக்கி வைப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பதை நாம் ஒரு சமூகமாகப் புரிந்துகொண்டுள்ளோம்” என்றார். கன்னித்தன்மை பற்றிய புரிதல் பட மூலாதாரம்,SALMA கன்னித்தன்மை பற்றிய புரிதல் மாறி வருகிறது. இது உடலியல் உண்மை அல்ல, சமூகம் உருவாக்கிய கருத்து மட்டுமே என்று பலரும் கருதுகின்றனர். ஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம் அவளின் மதிப்பை நிர்ணயிக்கும், வாழ்க்கையைப் புரட்டிபோடும் முக்கிய நிகழ்வாகும் என்ற பொய்யான நம்பிக்கையை உடைத்துப் பேசுகிறார் பிரபல தமிழ் எழுத்தாளர் சல்மா. பல்வேறு வயது குழுக்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிபிசியிடம் பேசினர். கன்னித்தன்மைக்கு மருத்துவ வரையறை வழங்குவது, கன்னிப்படல பரிசோதனை செய்வது போன்றவை பெண்களின் உடல் பற்றிய தவறான கருத்துகளைப் பரப்புகின்றன என்றனர். பெண்கள் தங்களின் பாலியல் பின்னணியைவிட மேலானவர்கள் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக பெண்கள் மற்றும் அவர்களின் உடலைச் சுற்றியுள்ள கருப்பொருள்களை ஆராய்வதில் தனது பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட சல்மா, 'கன்னித்தன்மை' என்ற வார்த்தையே பெண்ணை அடிமையாக்கும் ஒரு கருவி என்று கூறினார் சல்மா. "ஒரு பெண்ணின் உயிரைவிட உங்கள் கௌரவம், குறிப்பாக உங்கள் குடும்பத்தின் கௌரவம் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தைக்கு அடிமைத்தனம் என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை. நிலைமை இப்போதும் பெரிதாக மாறவில்லை, தங்கள் மனைவிகள் 'கன்னி' ஆக இருக்கிறார்களா என்று தங்கள் முதலிரவில் சரிபார்க்கும் ஆண்கள் இன்னும் உள்ளனர். ஒரு பெண் ஒரு ஆணிடம் நீ கன்னித்தன்மையுடன் இருக்கிறாயா என்று கேட்பது அவனை பாதிக்கப் போவதில்லை, ஏனென்றால் அது அவனது பொறுப்பு என்று சமூகம் அவனுக்கு சொல்லித் தரவில்லை," என்று சல்மா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கன்னித்தன்மை பற்றிய இளம் பெண்களின் எண்ணங்கள் பாலியல் தொடர்பாக இன்று அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றியதாக இருக்கிறது. நவீன சூழல்களில் கன்னித்தன்மை எவ்வாறு உணரப்படுகிறது? இந்த இளம் பெண்களில் பலர், கவிஞர் சல்மா கூறியதைப் போல, சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்காகப் போராடும் வேளையில், ‘கன்னி’யாக இருப்பதற்கான தொடர் சமூக அழுத்தம் குறித்த விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். தமிழ்நாடு ‘கன்னித்தன்மை’ குறித்த சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் புதிதல்ல. 2005ஆம் ஆண்டில், முன்னணி நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, "திருமணத்தின்போது, பெண்கள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து நம் சமூகம் வெளியே வரவேண்டும்" என்று கூறியது பெரும் சர்ச்சையானது. தமிழ் செய்தி இதழில் அவரது அறிக்கை வெளியானதை அடுத்து, அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார், அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் தலைமறைவாகச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வழக்குகளை எதிர்த்துப் போராட அவருக்குப் பல ஆண்டுகள் பிடித்தன. 2010இன் தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தால் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பிபிசியிடம், 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள பல பெண்கள், தங்கள் பெயர்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேசினர். அவர்கள் பாலியல் சுயாட்சி பற்றிய விரிவான புரிதலைப் பகிர்ந்து கொண்டனர். கன்னித்தன்மை பற்றிய உரையாடல்களில் இதுவொரு முக்கிய கருப்பொருளாக உள்ளது. (இங்கே, "பாலியல் சுயாட்சி" என்பது ஒருவர் தனது பாலியல் வாழ்க்கை குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையைக் குறிக்கிறது). கன்னித்தன்மையே ஒழுக்கம் என்று வலியுறுத்திய குடும்பத்தில் வளர்ந்த 40களின் பிற்பகுதியில் உள்ள பெண் ஒருவர், திருமணத்திற்காக "தன்னைக் காப்பாற்றிக் கொள்ள" மிகுந்த அழுத்தத்தை உணர்ந்ததாகக் கூறினார். தனது இருபதுகளின் மத்தியில் தனது கன்னித்தன்மையை இழந்த பிறகு, மிகுந்த குற்ற உணர்ச்சி கொண்டதாகவும், தனது மதிப்பை இழந்துவிட்டதாக நினைத்ததாகவும் கூறினார். "பாலியல் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, எனது முதல் பாலியல் அனுபவத்திற்குப் பிறகு ஒரு அவமானம் என்னைச் சூழ்ந்து கொண்டது" என்று அவர் நினைவுகூர்ந்தார். 'கன்னித்தன்மை கணவருக்கு அளிக்க வேண்டிய ‘பரிசு’ என்று நினைத்தேன்' இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, தனது 30களில் இருக்கும் ஒரு பெண், பாலியல் குறித்து எப்போதும் ஆர்வமாக இருந்ததாகவும் ஆனால் அவருக்கு பெண்ணின் கன்னித்தன்மை புனிதமானது என்று கற்றுத் தரப்பட்டதாகவும் கூறுகிறார். “நான் பாலியல் உறவில் ஈடுபடத் தொடங்கியபோது, ஒருபுறம் எனக்குப் பிடித்திருந்தது, ஆனால் மற்றொரு புறம் நான் என்னையே இழக்கிறேனோ என்ற பயம் இருந்தது. மனநல ஆலோசனை மற்றும் பிற உதவிகள் மூலம், எனது சுய மதிப்பு எனது பாலியல் அனுபவங்களின் அடிப்படையில் அமைவதல்ல என்று உணர்ந்தேன்” என்கிறார். மற்றொரு பெண், 4 வயது குழந்தையின் தாயார், தனது முதல் ஒருமித்த பாலியல் அனுபவத்திற்குப் பிறகு மிகுந்த அவமானத்தையும் வருத்தத்தையும் உணர்ந்ததாகக் கூறினார். "திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது பாவம் என்ற நம்பிக்கையுடன் வளர்க்கப்பட்டவள் நான். உடல்ரீதியான இன்பத்துக்கும் மனரீதியான குற்ற உணர்வுக்கும் இடையில் போராடினேன். ஒரு பதற்றத்தை உணர்ந்தேன்," என்று அவர் கூறினார். சென்னை நகரில் 30 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர், தனது முப்பதுகள் வரை கன்னியாக இருக்க முடிவு செய்ததாகவும், "சமூக அழுத்தம் காரணமாக அல்ல, தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக" என்றும் கூறினார். அந்த வயது வரை கன்னியாக இருப்பதும் ஒரு சவாலாக இருந்தது என்று அவர் கூறினார். 'நான் என் சொந்த விதிமுறைகளில் கன்னித்தன்மையை மீட்டெடுக்கிறேன்' என்று நான் நகைச்சுவையாகச் சொல்வேன். கன்னித்தன்மை உட்பட நமது பாலுணர்வை வரையறுக்க நமக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். சென்னையில் வசிக்கும் 30 வயதான பட்டய கணக்காளர் ஒருவர், “ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்த எனக்கு கன்னித்தன்மை "மிகவும் புனிதமானது" என்றும், திருமணம் செய்யும் நபருக்கு “பரிசாக” சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கற்பிக்கப்பட்டதாகக் கூறினார். “ஆனால், அப்படி இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. இது உடல் சார்ந்தது அல்ல என்று புரிந்தது. ‘கன்னி’ என்ற பேட்ஜை குத்திக் கொண்டால்தான் ஒருவர் விசுவாசமானவர் அல்லது விலைமதிப்பற்றவர் ஆக முடியும் என்று கருதுவது தவறு. திருமண வாழ்க்கை ஒரு பெண்ணின் கன்னிப்படலம் கிழிவதில் தொடங்குவதும் இல்லை, முடிவதுமில்லை. அது ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ய ஒரு காரணியாகவும் இருக்க முடியாது. ஒரு பெண்ணின் மதிப்பு அவளது பாலியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,PRASHANTI ASWANI தனது 30களின் முற்பகுதியில் இருக்கும் ஐடி துறையில் பணிபுரியும் ஒரு பெண், தனது உடல் தனது உரிமையே, அதே நேரத்தில் தனது பொறுப்பும்கூட என்கிறார். "என் உடல் என் உரிமை. என் அனுமதியின்றி அதை யாரும் தொட அனுமதிக்க மாட்டேன். ஒரு பெண் தன்னை மீறிய சூழ்நிலையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டால், நான் அவளுடன் நிற்கிறேன். ஆனால், அதே வேளையில் சமூகம் பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக மாறும் வரை, பெண்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுவேன்," என்று அவர் கூறினார். பாலியல் கல்வி என்பது பதின்ம வயதினருக்கு மட்டுமல்ல, அது வாழ்நாள் முழுவதும் கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். "முதலிரவு படுக்கையில் ஒரு பெண் 'கன்னி' தானா என்பதைச் சரிபார்க்க வெள்ளைத் துணியைப் பயன்படுத்தும் குடும்பங்கள் உள்ளன," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0lwg9xkd5jo
  13. 20 SEP, 2024 | 11:48 AM இரண்டு மணிநேரத்திற்கு மேல் 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர். தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் பிரகான் என்ற மாநிலத்தில் தனது வீட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டதாக அரோம் அருண்ரோஜ் என்ற 64 வயது பெண் தெரிவித்துள்ளார். ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்தபோது ஏதோ எனது காலில் தீண்டியது போல உணர்;ந்தேன் திரும்பிப்பார்த்தபோது அது பாம்பு என அவர் தெரிவித்துள்ளார். நான் அதனை எதிர்த்து போரட முயன்றேன்,உதவிக்காக கூக்குரலிட்டேன் ஆனால் எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஒருகட்டத்தில் அது விட்டுவிடும் என நினைத்து அதன் தலையை பிடித்தேன் ஆனால் அது என்னை மேலும் இறுக்கியது என அவர் தெரிவித்துள்ளார். அயலில் உள்ள ஒருவர் இறுதியாக எனது அலறலை செவிமடுத்து உதவியை கோரினார் என தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்ளேயிருந்த மெல்லிய அலறல் கேட்டதை தொடர்ந்து அரோமின் கதவை உடைத்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்,நீண்டநேரமாக அவரை மலைப்பாம்பு அவரது கழுத்தை நெரித்து வைத்திருக்கவேண்டும் ஏனென்றால் அவரின் உடலின் நிறம் மாறியிருந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அது பெரிய மலைப்பாம்பு,அவரது காலில் பாம்பு கடித்த அடையாளத்தை பார்த்தேன் வேறு பகுதிகளிலும் கடித்திருக்கலாம் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நான்கு அடி நீளமான 20 கிலோ எடையுடைய மலைப்பாம்பின் படங்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/194167
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2024, 03:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தின் தொல்லியல் வரலாற்றில், சிந்து சமவெளி கண்டறியப்பட்டது மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிந்து சமவெளி கண்டறியப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகி இன்றோடு நூறு ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவம் என்ன? கடந்த 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியன்று வெளிவந்த The Illustrated London News இதழின் முகப்புப் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தி, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு குறித்த புரிதலையே மாற்றியமைக்கப் போகிறதென அந்தத் தருணத்தில் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இந்திய தொல்லியல் கழகத்தின் (ஏஎஸ்ஐ) தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல், தாங்கள் ஹரப்பாவில் (தற்போதைய பாகிஸ்தான்) கண்டறிந்த புதிய தொல்லியல் தளத்தைப் பற்றிய தகவல்களை படத்துடன் வெளியிட்டிருந்தார். "ஒரு மறைந்துபோன நாகரீகத்தின் எச்சங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சும் வாய்ப்பு ஒரு தொல்லியலாளருக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால், இந்தத் தருணத்தில், சிந்துவின் சமவெளிப் பகுதிகளில் அம்மாதிரி ஒரு கண்டுபிடிப்புக்கு அருகில் இருக்கிறோம்" என்றார். "First Light on a Long - Forgotten Civilisation: New Discoveries of an unknown prehistoric past in India" என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியாகியிருந்தது. இதற்கு அடுத்த இதழிலேயே பிரிட்டனின் வரலாற்று நிபுணரான ஆர்ச்சிபால்ட் சாய்ஸ், இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஒரு முக்கியமான தகவலை முன்வைத்தார். அதாவது, சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளைப் போன்ற முத்திரைகள், இரானிலும் மெசபடோமியாவிலும் கிடைத்திருக்கின்றன. அகழாய்வில், வெண்கல காலகட்டத்தைக் குறிப்பிடும் மட்டத்தில் இந்த முத்திரைகள் கிடைத்தன. இந்த வெண்கலக் காலம் என்பது கி.மு.3300 - கி.மு.2500 வரையிலான காலப்பகுதியைக் குறிக்கிறது. ஆகவே, ஹரப்பாவில் கிடைத்தவையும் வெண்கல காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என யூகிக்க முடிந்தது. வரலாறு மாற்றி எழுதப்பட்ட தருணம் பட மூலாதாரம்,GETTY IMAGES இது ஒரு மிகப் பெரிய திருப்பம். 1924ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் வரை, கி.மு. 326ஆம் வருடம்தான் இந்திய வரலாற்றில் மிகப்பழைய வருடமாக இருந்தது. மகா அலெக்ஸாண்டர் காந்தகாரின் மீது படையெடுத்த வருடம் அது. மேலும் இந்திய பண்பாடு மற்றும் கலாசாரத்தின் தொடக்கப் புள்ளியாக, அதுவரை வேத காலத்தையே குறிப்பிட்டு வந்தனர். இந்தியாவின் நாகரீகம், அறிவு, பண்பாடு ஆகிய எல்லாமே அந்தக் காலகட்டத்தில்தான் துவங்கியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பு, இதையெல்லாம் மாற்றுவதற்கான ஓர் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. கிழக்கிந்திய கம்பெனியை விட்டு ஓடிப்போன சார்லஸ் மாசோன் என்பவர், 1829 வாக்கில் பஞ்சாப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்தப் பகுதியில் உளவுத் தகவல்களைச் சேகரித்து கம்பனிக்கு அளிப்பதன் மூலம், கிழக்கிந்திய கம்பனியோடு மீண்டும் சேர்ந்துகொள்ள நினைத்தார் அவர். அப்படிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சிந்து நதியின் துணை நதியான ராவி நதியின் சமவெளிப் பகுதியில், பல தொல்லியல் தடயங்கள் அவருக்குக் கிடைத்தன. அவருக்கு மகா அலெக்ஸாண்டர் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. அந்தப் பகுதி, அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்த பகுதியாகவும் இருந்ததால், இந்தத் தொல்லியல் தளம் அலெக்ஸாண்டர் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதினார் சார்லஸ். இதையெல்லாம் தன்னுடைய Narrative of Various Journeys in Baluchistan, Afghanistan, and the Punjab நூலில் பதிவு செய்தார் அவர். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு வந்த அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் என்பவரும் அங்கிருந்த தொல்லியல் தளத்தில் கிடைத்த சுட்ட செங்கற்கள் குறித்தும் அவை உள்ளூர் மக்களால் அள்ளிச் செல்லப்படுவது குறித்தும் குறிப்புகளை எழுதினார். 1848-49இல் பஞ்சாப் கிழக்கிந்திய கம்பனியின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகு, இந்தப் பகுதி மேலும் சூறையாடப்பட்டது. ரயில்வே பணிகளுக்கு இங்கிருந்து செங்கற்கள் அள்ளிச் செல்லப்பட்டன. இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பனியிடமிருந்து நேரடியாக பிரிட்டன் ஆட்சியின் கீழ் வந்த பிறகு தொல்லியல் துறை கூடுதல் கவனத்தைப் பெற ஆரம்பித்தது. 1861இந்தியத் தொல்லியல் கழகம் (Archaeological Survey of India - ASI) உருவாக்கப்பட்டது. அதன் முதல் இயக்குநர் ஜெனரலாக அலெக்ஸாண்டர் கன்னிகம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பே ஹரப்பாவை பார்த்திருந்த அவர், மீண்டும் அந்தப் பகுதிக்குச் சென்று ஆராய்ந்தார். ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட சீனப் பயணியான யுவான் சுவாங் குறிப்பிட்ட பௌத்த தலமாக அது இருக்கலாம் என அலெக்ஸாண்டர் கருதினார். ஹரப்பா, மொகஞ்சதாரோவில் தொடங்கிய தொல்லியல் ஆய்வு பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்குப் பிறகு, இந்தப் பகுதி மீது பெரிய கவனம் திரும்பவில்லை. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் புதிய வைசிராய் ஆக நியமிக்கப்பட்ட கர்ஸான், ஏஎஸ்ஐயின் இயக்குநர் ஜெனரலாக ஜான் மார்ஷலை நியமித்தார். இதற்கு சில ஆண்டுகள் கழித்து, ஏஎஸ்ஐயின் தொல்லியலாளரான ஹிரானந்த் சாஸ்திரியை அனுப்பி, ஹரப்பா தலத்தை ஆய்வு செய்யும்படி சொன்னார் ஜான் மார்ஷல். அந்தப் பகுதியை ஆய்வு செய்த ஹிரானந்த், அது பௌத்த தலமல்ல என்றும் அதனால் நாம் நினைத்திருப்பதைவிட பழமையான தலமாக அது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, தயா ராம் சஹானி என்ற தொல்லியலாளர் தலைமையில் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்டார் ஜான் மார்ஷல். இரண்டு மேடுகள் அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கிடையில் ஹரப்பாவுக்கு தெற்கே இருந்த மொஹஞ்சதாரோ பகுதியும் கவனத்தைக் கவர்வதாக இருந்தது. அந்தப் பகுதியில் ஆய்வு நடத்த ஆர்.டி.பந்தர்கர், ஆர்.டி.பானர்ஜி, எம்.எஸ்.வாட்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கடந்த 1923இல் ஆர்.டி. பானர்ஜி ஜான் மார்ஷலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். மொஹஞ்சதாரோ மிகப் பழமையான ஓர் இடம் எனக் குறிப்பிட்ட அவர், இங்கு கிடைத்த சில தொல்பொருட்கள் ஹரப்பாவில் கிடைத்த பொருட்களுடன் ஒத்துப் போவதாகக் குறிப்பிட்டார். பிறகு, எம்.எஸ்.வாட்ஸும் இரு இடங்களிலும் கிடைத்த சில முத்திரைகள், குறியீடுகள் ஆகியவை ஒத்துப்போவதாக ஜான் மார்ஷலுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, இரு இடங்களிலும் கிடைத்த தொல்பொருட்கள் குறித்த தகவல்களை, ஓரிடத்திற்குக் கொண்டுவரச் செய்து பானர்ஜி, சஹானி போன்றோரையும் இணைத்து விவாதித்தார். அந்த விவாதத்தில் சில விஷயங்கள் அவருக்குத் தெளிவாகப் புரிந்தன. அதாவது, ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் ஒரே தொல்லியல் தலத்தின் வெவ்வேறு இடங்கள். தவிர, இந்த இடங்கள் இந்தியாவில் இதுவரை கிடைத்த தொல்லியல் தலங்களிலேயே பழமையானவை, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அதையடுத்துத்தான் புகைப்படங்களோடு The Illustrated London Newsக்கு எழுதினார். அந்த முடிவுகள்தான் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இதழில் வெளியாயின. இதற்குப் பிறகு 1924 - 25 ஆண்டுகளில் முறைப்படியான அகழாய்வுகள் அங்கு துவங்கின. 1931க்குள் மொஹஞ்சதாரோவின் பெரும் பகுதியான தொல்லியல் தலங்கள் அகழாய்வு செய்யப்பட்டுவிட்டன. இந்த அகழாய்வு, இந்த வரலாற்றின் துவக்ககாலம் குறித்த காலக் கணிப்பை மாற்றியமைக்க ஆரம்பித்தது. சிந்து சமவெளியும் திராவிடப் பண்பாடும் பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்தக் கண்டுபிடிப்பு சிந்துவெளிப் பண்பாட்டின் ஆழத்தையும் அகலத்தையும் மதிப்பிடும்படியான தடயங்கள் பலவற்றை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரங்கள், அந்தப் பண்பாட்டின் பரந்த பகுதி முழுவதும் ஒரே நீள - அகல - பருமன் விகிதத்தில் இருந்த மிகத் துல்லியமான செங்கற்கள், விரிவான வடிகால் வசதிகள், பெரும் குளியல் இடம், தானியக் களஞ்சியம், மென் கற்களால் ஆன முத்திரைகள், செதுக்கப்பட்ட உருவங்கள், குறியீடுகள், மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட வரிவடிவங்கள் என்று பல்வேறு அகழாய்வுப் பொருட்களின் மூலமாக வெளிப்பட்ட சிந்துவெளிப் பண்பாடு பண்டைய காலத்தின் புதிய உலகம்" என இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைத் தனது Journey of a Civilization: Indus to Vaigai நூலில் குறிப்பிடுகிறார் சென்னையில் உள்ள Indus Research Centre-இன் ஆலோசகரும் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன். தற்போது சிந்து சமவெளி, திராவிடப் பண்பாட்டோடு இணைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. இதற்கான விதையை விதைத்தவர், வங்காளத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனிதி குமார் சாட்டர்ஜி. சிந்துவெளிப் பண்பாடு கண்டறியப்பட்ட சில ஆண்டுகளிலேயே, இந்தப் பண்பாட்டைக் குறிப்பிட 'ஆரியர் அல்லாத', 'ஆரியர் காலத்திற்கு முற்பட்ட' என்ற சொற்கள் பயன்பாட்டிற்கு வர ஆரம்பித்தது. சிந்து சமவெளி குறித்த தகவல்கள் வெளியான சில மாதங்களிலேயே சுனிதி குமார் சாட்டர்ஜி, தி மாடர்ன் ரிவ்யூ(The Mordern Review) இதழில், Dravidian Origin and the Beginnings of Indian Civilization என்ற கட்டுரையை எழுதினார். இந்தக் கட்டுரை சிந்து சமவெளி நாகரீகத்தையும் திராவிடர்களையும் தொடர்புபடுத்தியது. அதற்குப் பிறகு, மும்பை புனித சேவியர் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய ஹென்றி ஹீராஸ், சிந்து சமவெளி கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை ஆராய்ந்து, அதை திராவிட மக்களோடு தொடர்புபடுத்திக் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன், வேதகால நாகரீகமும் சிந்து வெளி நாகரீகமும் வேறுபட்டவை என்றதோடு, சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழியே என்று நிறுவப் பல சான்றுகளை முன்வைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "அதற்கு முன் இந்திய வரலாற்றின் துவக்கமாகக் கருதப்பட்டவற்றை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றியமைத்தது. அந்த வகையில் இது மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு. வேத காலத்திற்குப் பிந்தைய வரலாறு என்றால் பௌத்தத்தைப் பற்றி, அதன் கட்டடக் கலைகளைப் பற்றித்தான் பேசினார்கள். ஆனால், மிகப் பெரிய நாகரீகத்தைக் கண்டுபிடித்து, அந்த நாகரீகம் வேத நாகரீக காலத்திற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என நிறுவினார் ஜான் மார்ஷல். இது இந்திய வரலாறு புரிந்துகொள்ளப்படும் விதத்தையே மாற்றியது" என்கிறார் இந்திய தொல்லியல் கழகத்தின் இயக்குநரான அமர்நாத் ராமகிருஷ்ணா. சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டது, அதற்குப் பிறகு தொடர்ந்த ஆய்வுகள், விவாதங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஜான் மார்ஷலின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன். "சிந்து சமவெளி கண்டுபிடிப்பு, அதற்கு முன்பு நாம் அறிந்திருந்த வரலாற்றைப் புரட்டிப்போட்டது. சிந்து சமவெளியை ஜான் மார்ஷல் கண்டுபிடித்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்பதை வைத்துதான் இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஷெர்லக் ஹோம்ஸை போல ஜான் மார்ஷல் செயல்பட்டார். ஹரப்பாவுக்கும் மொஹஞ்சதாரோவுக்கும் இடையில் சுமார் 500 கி.மீ. தூரம் இருந்தது. ஆனால், இந்த இரு இடங்களும் தனித் தனியானவையல்ல, ஒரே கலாசாரத்தின் இருவேறு பகுதிகள் என்பதோடு இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையில், பொதுவான ஒரு வர்த்தக மொழி இருக்கிறது எனப் புரிந்துகொண்டார். இந்தப் புரிதலின் அடுத்த கட்டமாக, இது ஒரு நாகரீகம் என்ற முடிவுக்கு வந்தார். இந்தப் புரிதலின் மூலம்தான் அவர் வேறுபட்டு நிற்கிறார். அவர் அந்த முடிவுக்கு வந்திருக்காவிட்டால், சிந்துவெளிப் பண்பாடு என்பது கிடையாது. இந்தப் புரிதல் வந்ததால்தான் ஜான் மார்ஷல் நினைவுகூரத் தக்கவராக இருக்கிறார்," என்கிறார் அவர். சங்க இலக்கியத்தோடு ஒத்துப்போகும் சிந்து சமவெளி வாழ்க்கை பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது தமிழ்நாடு அரசு ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்பதாக அறிவித்திருக்கிறது. "இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்தியாவில் இப்போது ஏதாவது ஒரு இடத்தில் சிந்துவெளி நாகரீகத்தைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள், ஏதாவது ஒரு இடத்தில் ஜான் மார்ஷலின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்றால் அது தமிழ்நாடுதான். அந்த நாகரீகம் நம்முடையது என தமிழ்நாட்டில் நினைக்கிறார்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில், காட்டப்படும் வாழ்க்கை சிந்து சமவெளியில் இருந்த வாழ்க்கையல்ல. ஆனால், சங்க இலக்கியங்களில் காட்டப்படும் வாழ்க்கை சிந்து சமவெளி வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது. சிந்து சமவெளி ஒரு புதிர் என்றால், தமிழ்நாடு அதன் சாவி. தமது கலாசாரத்திற்கு பங்களிப்பு செய்த யாரையும் தமிழ்நாடு மறக்காது. ஜான் மார்ஷலை நினைவுகூர்வதன் மூலம் இந்திய துணைக் கண்ட வரலாற்றின் மீது தனக்குள்ள உரிமையை தமிழ்நாடு உறுதி செய்கிறது" என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன். சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்னும் சில தீராத புதிர்கள் இருக்கின்றன. அதாவது, சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதில் விவாதம் நீடிக்கிறது. அதேபோல, சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகள், ஒரு மொழியின் எழுத்துகளா அல்லது சித்திர எழுத்துகளா அல்லது வெறும் குறியீடுகளா என்ற கேள்விகள் இன்னமும் விவாதிக்கப்பட்டுவருகின்றன. பஹதா அங்கமாலி முகோபத்யாய் போன்றவர்கள், சிந்துவெளிக் குறியீடுகள் வர்த்தகக் குறியீடுகள் என்றும் அங்கு பேசப்பட்ட மொழி தொல் திராவிட மொழி என்றும் கருதுகிறார்கள். ஐராவதம் மகாதேவன் சிந்துவெளி வரிவடிவம் திராவிட மொழியின் ஒரு தொல்வடிவம் எனக் கருதினார். ஆனால், இந்தப் புதிர், எல்லோரும் ஏற்கும் வகையில் ஒரு முடிவுக்கு வரவில்லை. Deciphering the Indus Script என்ற நூலை எழுதியவரும் 50 ஆண்டுகளாக சிந்துவெளிக் குறியீடுகள் குறித்து ஆய்வு செய்தவருமான ஃபின்லாந்தை சேர்ந்த அஸ்கோ பர்போலா, 'முற்றிலும் வித்தியாசமான ஒரு தீவிர ஆதாரம் கிடைத்தால் தவிர, சிந்துவெளி எழுத்துகளை முழுவதுமாக வாசித்து அறிவது அனேகமாக முடிவு பெறாததாகவே' இருக்கும் என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy80928d9qdo
  15. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் மாதமே மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், மாநாடு தள்ளிப்போனது. தற்போது புதிய திகதியை தவெக தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் திகதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது. https://thinakkural.lk/article/309613
  16. Published By: DIGITAL DESK 3 20 SEP, 2024 | 11:23 AM யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரும் உயிர் மாய்க்க முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194165
  17. வெடித்துச் சிதறிய வாக்கி டோக்கிகள்; ஜப்பான் நிறுவனத்தின் விளக்கம் லெபனானில் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்து நூதன தாக்குதல் குறித்து ஜப்பான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இஸ்ரேலின் தாக்குதல் வளையத்திற்குள் சிக்கிவிடக்கூடாது என்று பல்வேறு யுத்திகளை கையாண்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு பேஜரை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று லெபனானில் இருக்கும் சில அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ஹமாஸ் அமைப்பைச் சேராத பலரும் பேஜர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 17 ஆம் தேதி மாலை 3 மணியளவில் லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மக்கள் பயன்படுத்திய பேஜர் வெடித்துச் சிதறியது. அதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகம் இருக்கும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ள நிலையில், 2,800 பேர் காயமடைந்துள்ளனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் வெடிக்கத் தொடங்கிய பேஜர், ஒரு மணிநேரம் தொடர்ந்திருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கினர். அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரும் பணிக்குத் திரும்பினர். உயிரிழந்த 12 பேரில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரும், அதேசமயம் பொதுமக்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று கூறி ஹிஸ்புல்லா அமைப்பு, பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு நிச்சயம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தண்டனை கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடக்குவதற்குள் 18 ஆம் தேதி லெபனானில் பல வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் 32 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாகவும், 450 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வாக்கி டாக்கி வெடிப்பால் ஆங்காங்கே தீப்பற்றி வீடுகள், வாகனங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குச் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கும் பின்னும் இஸ்ரேல் இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகளில் ஜப்பான் நிறுவனமான ஐகான் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப் பட்டிருந்ததால், அந்த நிறுவனம் இந்த வெடிப்பு சம்பவங்களைக் குறைத்து கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ஐகாம் நிறுவனம் இந்த வகையான வாக்கி டாக்கிகளை உற்பத்தி செய்வதை 2014ல் கைவிட்டதாகவும் இதை நாக்கள் தற்போது தயாரிப்பதில்லை எனவும், இவை 10 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை எனவும் விளக்கமளித்துள்ளது. https://thinakkural.lk/article/309610
  18. Published By: DIGITAL DESK 3 20 SEP, 2024 | 11:05 AM யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை ஊரவர்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை கணவன் - மனைவி இருவரும் சுன்னாகம் பகுதியிலும் கடந்த வாரம் நபர் ஒருவருடைய சங்கிலியை அறுத்ததாகவும், அதனை யாழ். நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்னர். விசாரணைகளின் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194160
  19. சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று வியாழக்கிழமை (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு வியாழக்கிழமை (19) உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர், படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபாய் செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமது தீவில் நீண்டகாலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில், ஆளுநருக்கு நெடுந்தீவு மக்கள் நன்றியை தெரிவித்தனர். ஆளுநரின் கடும் முயற்சியின் பயனாக நெடுந்தாரகை மீண்டும் தமது சேவையை ஆரம்பிப்பதாகவும் மக்கள் குறிப்பிட்டனர். நெடுந்தாரகை பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காக துரித நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும், துறைசார் அமைச்சுக்கும் இதன்போது ஆளுநர் நன்றியை தெரிவித்தார். தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார், பயணிகள் சேவையை வியாழக்கிழமை (19) ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் நெடுந்தீவில் இருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்குத்துறைக்கு பயணிக்க உள்ளது. நெடுந்தாரகை படகில் ஒரு தடவையில் 80 பேர் பயணிக்க முடியும் என்று ஊவாமாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/309596
  20. இந்திய அணியை அபார சதத்தால் அஸ்வின் காப்பாற்றியது எப்படி? - சதம் அடித்த பிறகு அவர் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து அணியை நெருக்கடியில் தள்ளினர். நண்பகல் உணவு இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளையும், பிற்பகல் தேநீர் இடைவேளைக்குள் அடுத்த 3 விக்கெட்டுகள் என 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி. ஆட்டத்தின் போக்கைப் பார்த்தபோது, இந்திய அணி 200 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டுவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஆபத்பாந்தனாக வந்த அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி இந்திய அணியை பாதாளத்திலிருந்து மீட்டது. தவறவிட்ட வங்கதேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசன் முகமது வங்கதேசத்தின் பந்துவீச்சாளர் ஹசன் முகமது சிறப்பாகப் பந்துவீசி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு மற்ற பந்துவீச்சாளர்களும் ஒத்துழைத்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாக திரும்பியிருக்கும். ஆனால், கிடைத்த வாய்ப்பை வங்கதேச அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் தவறவிட்டனர். உணவு இடைவேளைக்கு பிறகு வங்கதேச பந்துவீச்சாளர்கள் கூட்டுமுயற்சியுடன் பந்துவீசி இந்திய பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் அளித்தனர். வங்கதேச பந்துவீச்சாளர்கள் முயற்சிக்கு பலன் கிடைத்து 3 விக்கெட்டுகளை அள்ளினர். முழுநேர பேட்டர்களான ரோஹித், கோலி, கில் போன்றோர் களத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் அணியை மாபெரும் சரிவிலிருந்து மீட்டனர். 'சென்னை எப்போதுமே ஸ்பெஷல்தான்' பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு, சதம் அடித்த அஸ்வின் பெவிலியன் வந்தபின் அளித்த பேட்டியில் “சென்னையில் விளையாடுவது எப்போதுமே ஸ்பெஷலான தருணம். இதே மைதானத்தில்தான் கடந்தமுறை சதம் அடித்தேன். டி20 போட்டி விளையாடிவிட்டு அதிலிருந்து வந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகினேன். பழைய சென்னை விக்கெட்டில் பந்து பவுன்ஸ் ஆகும், எளிதாக விளையாடலாம், ஆனால், இந்த விக்கெட்டில் பேட் செய்வது கடினமாக இருந்தது. ஜடேஜா எனக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்து பேட் செய்து உதவினார். ஒரு கட்டத்தில் என்னால் ஓட முடியாத அசதி ஏற்பட்டபோது, ஜடேஜா ஸ்ட்ரைக்கை எடுத்து எனக்கு உதவினார். இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பேட்டர்களில் ஒருவர் ஜடேஜா. நாங்கள் எந்த 2 ரன்களையும் 3 ரன்களாக மாற்றவில்லை, இருவருக்கும் ஓய்வு தேவைப்பட்டது. பிட்ச், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஒத்துழைக்கும். புதியபந்து நாளை சற்று அதன் வேலையை காண்பிக்கும், சமாளித்து ஆட வேண்டும்” எனத் தெரிவித்தார். ரோஹித் ஏமாற்றம் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். . இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரிகளுக்கு பந்தை விரட்டி ரன் சேர்த்தார். ரோஹித் சர்மாவை தவறு செய்ய வைக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயன்றனர். பின்னர் ரோஹித் சர்மா 19 பந்துகளைச் சந்தித்தநிலையில் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். வங்கதேசத்துக்கு எதிராக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்ற பெயருடன் ரோஹித் வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு வந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். பெரும்பாலும் 3வது பேட்டராக விராட் கோலிதான் கடந்த காலங்களில் களமிறங்கி செயல்பட்டிருந்தார். ஆனால் இந்த முறை சுப்மான் கில் களமிறங்கினார். 8 பந்துகளைச் சந்தித்த சுப்மான் கில், ஒரு பந்தில் கூட தனது வலிமையான ஷாட்களை வெளிப்படுத்த முடியாமல் திணறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுப்மான் கில் டக்அவுட் ஹசன் மெஹ்மது லெக்திசையில் லேசாக விலக்கி வீசிய பந்தை கில் பவுண்டரிக்கு அடிக்க முயன்று தட்டிவிட்டார். ஆனால், அது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்சாகவே, கில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 8-வது ஓவரில் 2 விக்கெட்டை இழந்தது. 9 நிமிடங்களில் வெளியேறிய கோலி அடுத்ததாக விராட் கோலி களமிறங்கினார். 8 மாதங்களுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்பதால், பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. சென்னையில் சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் கோலி ஈடுபட்டதால், அவரின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இன்று அதிகளவில் வந்திருந்தனர். ஆனால், களத்தில் 9 நிமிடங்கள் மட்டுமே இருந்த கோலி 6 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ரிஷப்பந்த், ஜெய்ஸ்வால் நம்பிக்கை 4வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால்-ரிஷப் பந்த் கூட்டணி சேர்ந்தனர். 600 நாட்களுக்குப்பின் ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் இருவரும் சேர்ந்து ஓரளவு ரன்களைச் சேர்த்ததால் ரன்ரேட் சற்று உயர்ந்தது. இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை சற்று மேலே கொண்டு வந்தனர். இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிறிது சிரமப்பட்டு, பந்துவீச்சை மாற்றி, மாற்றி வீசினர். விக்கெட் சரிவு உணவு இடைவேளைக்குப்பின் ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் இருவரையும் பிரிக்கும் விதத்தில் வங்கதேச பந்துவீச்சாளர்கள் நெருக்கடியாக வீசினர். குறிப்பாக உணவு இடைவேளைக்குப் பின் தஸ்கின், ராணா இருவரும் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர். ரிஷப் பந்த் 52 பந்துகளில் 39 ரன்கள்(8பவுண்டரி) சேர்த்து வெளியேறினார். மறுபுறம் நிதானமாக பேட் செய்துவந்த ஜெய்ஸ்வால் 95 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். 5வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தனர். ராணா வீசிய பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 56 ரன்களில் பெவிலியின் திரும்பினார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார். தொடக்கத்திலிருந்தே கே.எல்.ராகுல் சற்று தடுமாற்றத்துடனே பேட் செய்தார். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டவிதமும் தடுமாற்றமாக இருந்தது, ரன்களைச் சேர்க்கும் விதமும் விறுவிறுப்பாக இல்லை. மெஹதி ஹசனின் சுழற்பந்துவீச்சில் ஷார்ட்லெக் திசையில் ஜாகிர் ஹூசேனிடம் கேட்ச் கொடுத்து ராகுல் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 7-வது விக்கெட்டுக்கு அஸ்வின் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். அஸ்வின் களமிறங்கியபோது, ரசிகர்கள் விசிலடித்தும், கரகோஷம் எழுப்பியும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அஸ்வினும் ரசிகர்களின் நம்பிக்கையை ஏமாற்றாத வகையில் தொடக்கத்திலிருந்தே பேட் செய்து ரசிகர்களின் சபாஷ் பெற்றார். மாலை தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 176 என்று வலுவான நிலையில் இருந்தது. அஸ்வின் 21, ஜடேஜா 15 ரன்கள் என இருவரும் நிதானமாக பேட் செய்தனர். 53வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. அஸ்வின், ஜடேஜா அமர்க்களம் பட மூலாதாரம்,GETTY IMAGES முழுநேர பேட்டர்கள் சென்னை விக்கெட்டில் சொதப்பிய நிலையில் அஸ்வின் வங்கதேச பந்துவீச்சை எதிர்கொண்டு ஷாட்களை ஆடினார். அஸ்வினுக்கு துணையாக ஆடிய ஜடேஜாவும் தன்னை ஆல்ரவுண்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஷாட்களை ஆடி ஸ்கோரை உயர்த்தினார். விரைவாக ரன்களைச் சேர்த்த அஸ்வின் 58 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 6பவுண்டரி, ஒரு சிக்ஸரும் அடங்கியது. ஜடேஜா, அஸ்வின் இருவரும் வேகமாக ரன்களைச் சேர்க்கவே ஸ்கோர் உயரத் தொடங்கியது. 53ஓவர்களில் 200 ரன்களை தொட்ட இந்திய அணி, அடுத்த 8 ஓவர்களில் 50 ரன்களை விரைவாக எட்டியது. 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, வங்கதேச பந்துவீச்சாளர்களை திணறிவிட்டனர். அஸ்வினைத் தொடர்ந்து ஜடேஜா 73 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் திணறினர். ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், மிராஸ் என மாறி மாறி பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை. அஸ்வின் சாதனை சதம் பட மூலாதாரம்,GETTY IMAGES அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அஸ்வின் 108 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இதில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். அஸ்வின் சதம் அடித்தவுடன் ஒரு கையில் ஹெல்மெட்டையும், மற்றொரு கையில் பேட்டையும் பிடித்து துள்ளிக் குதித்தார். அஸ்வினின் சதத்தை கண்டு ரசித்த சென்னை ரசிகர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும், தங்களின் பாராட்டுகளையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 5 சதங்களை டேனியல் வெட்டோரி மட்டுமே அடித்திருந்தார். அவரின் சாதனையை அஸ்வின் முறியடித்து 6-வது சர்வதேச டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து புதிய வரலாறு படைத்தார். அஸ்வின் களமிறங்கியபோது இந்திய 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ஜடேஜாவுடன் பார்டனர்ஷிப் அமைத்து, அணியை 400 ரன்களை நோக்கி அஸ்வின் நகர்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 7-வது மற்றும் அதன்கீழான பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களாக அஸ்வின், ஜடேஜா சாதனை படைத்தனர். இதற்கு முன் 2009ல் ஹேமில்டனில் ஜெஸி ரைடர், வெட்டோரி கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது,அதை அஸ்வின், ஜடேஜா முறியடித்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். உணவு இடைவேளை வரை சீராக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, கடைசி செஷனில் மட்டும் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 163 ரன்களைச் சேர்த்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgn8d0637xo
  21. Published By: RAJEEBAN 19 SEP, 2024 | 02:14 PM கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்தவருடம் குறைக்கப்போவதாக தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த விதிமுறைகளை இறுக்கமாக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது. கனடாவில் உள்ள தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இந்த வருடம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு கனடாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையிலேயே புதிய அறிவிப்பினை கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பெருமளவானவர்கள் குடியேறுவது நாட்டின் வீட்டு வசதிகள் தொழிற்சந்தை சமூக சேவைகளிற்க்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடாவிற்கு வருவது ஒருவரப்பிரசாதம், அது ஒரு உரிமையில்லை என கனடாவின் குடிவரவு துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் மாணவர்களிற்கு அனுமதி வழங்கினோம் 2025 இல் அதனை 437,000 ஆகக்குறைக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194098
  22. ஐ.நா பொது சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் - வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செப்டம்பர் 19 அன்று காஸாவின் புரேஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டடத்தின் முன் ஒரு பெண் தனது குழந்தையுடன் அழுது கொண்டு நிற்கிறார். கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 19 செப்டெம்பர் 2024, 11:56 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாலத்தீனத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 124 உறுப்பினர்களும், எதிராக 14 உறுப்பினர்களும் வாக்களித்தன, மேலும் இஸ்ரேல் உட்பட 43 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாமல் வெறும் பார்வையாளராக மட்டுமுள்ள பாலத்தீனத்தால் இதில் வாக்களிக்க முடியாது. சர்வதேச சட்டத்திற்கு எதிராக மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரத்துள்ளது என்று ஐ.நா-வின் உச்ச நீதிமன்றம் ஜூலை மாதமன்று கருத்து தெரிவித்தது. அதன் அடிப்படையிலே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, "சுதந்திரம் மற்றும் நீதிக்கான பாலத்தீனத்தின் போராட்டத்தில்" ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று பாலத்தீன தூதரக அதிகாரி கூறினார். ஆனால் இதனை "ராஜ்ஜிய பயங்கரவாதம்" எனக்கூறி இஸ்ரேல் தூதரக அதிகாரி கண்டனம் தெரிவித்தார். ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற விதி இல்லையென்றாலும், இது ஐநா-வின் அனைத்து 193 உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீடு ஆகும். மேலும் இது அரசியல் பலத்தை கொண்டவையாக உள்ளது. இந்தியா புறக்கணித்தது ஏன்? இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளில் வாக்களிக்காமல் புறக்கணித்த ஒரே நாடு இந்தியா மட்டும்தான். சர்வதேச விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் கூற்றுபடி, நேபாளத்தை தவிர்த்து தெற்காசியாவில் இந்தியா மட்டுமே வாக்களிப்பை புறக்கணித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பர்வதனேனி ஹரீஷ் கூறுகையில், “இந்த மோதலை 11 மாதங்களாக உலகமே கவனித்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த விஷயத்தில் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டிக்கிறோம். இந்த மோதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம். உடனடியாக போர் நிறுத்தம் செய்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோருகிறோம்.''என்றார். தீர்மானத்துக்கு வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகி இருப்பது குறித்து பர்வதனேனி ஹரீஷ் கூறுகையில், “இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா பங்கு பெறவில்லை. நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜிய உறவை மூலமான தீர்வை கோரி வருகிறோம். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேறு வழியில்லை என்று நம்புகிறோம். இந்த மோதலில் யாருமே வெற்றியாளர் இல்லை.” என்றார் ஐக்கிய நாடுகள் சபையில் அவர் ஆற்றிய உரையில், "இரு தரப்பையும் சமாதானமாக, நெருக்கமாக கொண்டு வருவதே எங்களது நோக்கம். நமது கூட்டு முயற்சி அதற்காக தான் இருக்க வேண்டும். நாம் அவர்கள் ஒன்றுபடுவதற்கு பாடுபட வேண்டும், பிளவுபடாமல் இருக்க வழிவகுக்க வேண்டும்” என்று கூறினார். பட மூலாதாரம்,INDIAINNNY/X படக்குறிப்பு, பர்வதனேனி ஹரீஷ் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்தது. இந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்னர் காஸாவில் இஸ்ரேல் போரை தொடங்கியது. போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போர் தொடங்கி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மேற்குக் கரையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதில், 680 பாலத்தீனர்கள் மற்றும் 22 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா கூறியுள்ளது. "பாலத்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது. மேலும் இங்கிருந்து இஸ்ரேல் முடிந்தவரை விரைவாக வெளியேற வேண்டும்", என்று ஐநா-வின் சர்வதேச நீதிமன்றத்தின் 15 பேர் கொண்ட நீதிபதிகள் குழு கருத்து தெரிவித்தது. "ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில், இஸ்ரேலில் இருந்து குடியேறியவர்கள் அனைவரையும் வெளியேற வேண்டும் மற்றும் அவர்கள் அங்கு செய்த சேதத்திற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடம் இழப்பீடு வழங்க வேண்டும்", என்றும் சர்வதேச நீதிமன்றம் கூறியது. இதனையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. 1967-ஆம் ஆண்டில் இருந்து, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் சுமார் 7 லட்சம் யூதர்கள் வசிக்கும், சுமார் 160 குடியிருப்புகளை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த குடியேற்றங்கள் "சர்வதேச சட்டத்திற்கு புறம்பானவை" என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது. இதற்காக இஸ்ரேல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. "சர்வதேச நீதிமன்றம் 'பொய்யான முடிவுகளை' எடுத்துள்ளன. தங்களது சொந்த இடத்தில் யூத மக்கள் இருப்பது ஒரு ஆக்கிரமிப்பு இல்லை", என்று இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார். புதன்கிழமை அன்று ஐநா பொது சபை சர்வதேச நீதிமன்றத்தின் இந்த கருத்தை வரவேற்றது. "இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள சட்ட விதிகளுக்கும் இஸ்ரேல் தாமதமின்றி இணங்க வேண்டும் என்றும்'' ஐ.நா திர்மானம் கோருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இது குறித்து இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் கூறுவது என்ன? "பாலத்தீனத்திற்கும் சர்வதேச சட்டத்திற்கும் இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணம்", என்று மேற்குக் கரையை சேர்ந்த பாலத்தீன அதிகாரசபையின் வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளது. "இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற வேண்டும் மற்றும் அதன் குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்பதற்கு ஆதரவாக ஐ.நா. உறுப்பு நாடுகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இருப்பது உலகளாவிய ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கிறது. மேலும் தற்போது பாலத்தீன மக்களிடம் இருந்து பறிக்கமுடியாத சுய ஆட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது" என்று அவர் கூறினார். "இது உண்மைக்கு புறம்பான, பயங்கரவாதத்தை ஊக்குவித்து, அமைதியை சீர்குலைக்க வழிவகுக்கும் ஒரு முடிவு'' என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் "ஹமாஸ் ஆயுதக்குழுவிற்கு வலு சேர்க்கும் விதமாகவும், பயங்கரவாதத்திற்கு பலனளிப்பதாகவும் இந்த தீர்மானம் உள்ளது. பாலத்தீன அதிகாரிகள் போரை நிறுத்துவதற்காக அல்லாமல் இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கவே ஒரு பிரசாரத்தை நடத்துகிறது" என்றும் அது குற்றம் சாட்டியது. இந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்தது. “இன்று இந்த தீர்மானத்தின் மூலம் முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்த தீர்மானம் பாலத்தீனர்களின் உயிரைக் காப்பாற்றாது, பணயக்கைதிகளை மீட்க உதவாது, இஸ்ரேல் அங்கு குடியேறுவதை முடிவுக்கு கொண்டு வார முடியாது. அமைதியை நிலைநாட்ட வழி வகுக்காது", என்று அமெரிக்க தூதரக அதிகாரி லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn7yrdg6mp5o
  23. 19 SEP, 2024 | 11:53 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தகவல்களை ஹக்செய்த ஈரான் அதனை ஜோபைடனின் பிரச்சார குழுவிற்கு அனுப்பியது என எவ்பிஐ தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபைடன் போட்டியிட்டவேளை ஈரானை சேர்ந்த ஹக்கர்கள் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரகுழுவின் தகவல்களை திருடி வேண்டுகோள் விடுக்கப்படாத மின்னஞ்சல்களை பைடனின் பிரச்சாரத்துடன் தொடர்புடையவர்களிற்கு அனுப்பினார்கள் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் பைடனின் பிரச்சார குழுவின் ஆர்வத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்தார்கள் 2024 ஜனாதிபதி தேர்தலில் தலையிட முயன்றார்கள் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. ஈரான் ஹக்கிங்கில் ஈடுபட்டு முக்கியமான தகவல்களை திருடியுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்த எவ்பிஐ இன்று ஈரானே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என உறுதி செய்துள்ளனர். ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பைடனின் பிரச்சார குழுவில் உள்ளவர்கள் பதிலளித்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானை சேர்ந்த ஹக்கர்கள் தங்களை தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ள பல ஊடக நிறுவனங்கள் தாங்கள் பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/194082
  24. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தரணி மணிவண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் திலீபனின் நினைவிடத்திற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன் போது சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியில் உள்ள வழக்கொன்றுக்காக சென்றதால் இந்த வழக்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அத்துடன் எதிராளிகள் தரப்பில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள் திருக்குமரன், மகிந்தன், றமணன், ரிசிகேசன், கௌதமன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையானார்கள். இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஏ.ஆனந்தராஜா, 2011ஆம் ஆண்டு புலிச் சின்னங்களைப் பயன்படுத்த தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது .எனினும் இறந்தவர்களின் நினைவேந்தல் நடத்த தடை இல்லை. இதன் பின்னர் 13 வருடங்களாக மக்கள் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். அவற்றைத் தடுப்பதற்கு ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சோ, பாராளுமன்றமோ எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்து வருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். இதேவேளை, தேர்தல் காலம் என்பதால், அதைக் கருத்திற்கொண்டு அஞ்சலிக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் பொலிஸார் கோரினார்கள்.இதற்கு, தேர்தல் காலத்தின்போது வாகனப் பேரணிகள் நடத்துவதற்கு மட்டுமே தடை விதிக்க முடியும் என்று தெரிவித்த நீதிவான் அவ்வாறு வாகனப் பேரணிகள் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதங்களை எதிர்த்தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் வழக்கை நீதிவான் முடிவுறுத்தினார். “மேலும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கும் அதிகாரம் பொலிஸாரிடம் இருப்பதால், இது தொடர்பில் பொலிஸாரே இறுதி முடிவை எடுக்கலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309557

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.