Everything posted by ஏராளன்
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
விடுதலைப் புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிக்க செய்தமை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவு படுத்தியதற்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தான் அது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று மட்டக்களப்பு – கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் கொண்டுள்ளார். சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணமும் பங்கேற்றிருந்தனர். அத்துடன் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்களான வசந்தராஜா, எஸ்.சிவயோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இன்றைய கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309483
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியா கடும் ஆர்வம் - ஜனாதிபதி ரணில்
Published By: DIGITAL DESK 7 18 SEP, 2024 | 08:47 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கையாக உளள்ளது. எனவே முதலில் பாராளுமன்ற தேர்தலும் அடுத்தப்படியாக மாகாண சபை தேர்தலும் நடைப்பெறும். இலங்கையின் தேர்தல் குறித்து இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. ஏனெனில் பங்களதேசத்தின் நிலைமைகளின் பின்னர் இலங்கையின் அரசியல் ஸ்தீர நிலைமை குறித்து டெல்லி அக்கறையுடன் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிப்பெறுவது உறுதியான விடயமாகும். எனவே பிளான் ' பி ' குறித்து பேச வேண்டிய தேவையில்லை. சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் எதிர்காலத்தில் என்றோவொரு நாள் ஜனாதிபதியாவார்கள். ஆனால் இம்முறை சாத்தியமில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஊடகவியலாளர்களை சந்தித்து எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்தினார். இதன் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், ஜனாதிபதி முறைமை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்வது மற்றும் 13 ஆவது திருத்தம் போன்றவை குறித்து பேசி காலத்தை வீணடித்துள்ளோமே தவிர நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து யாரும் அவதானம் செலுத்த வில்லை. எனவே தான் எனது இலக்கை பொருளாதாரத்திற்குள் வைத்துள்ளேன். அதனை மையமாக கொண்டே கொள்கைகளை வகுத்துள்ளேன். குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த யாரும் அதனை செய்ய வில்லை. இந்த கதிரையில் அமர்ந்த யாரும் அதனை செய்ய மாட்டார்கள் என்று ஜே.ஆர். ஜயவர்தன அன்று எனக்கு கூறியமை இன்றும் நினைவில் உள்ளது. சர்வதேச நாணய நிதியம் நாட்டின் பொருளாதாரத்தை மையப்படுத்திய தேர்தலாகவே சனிக்கிழமை இடம்பெற கூடிய ஜனாதிபதி தேர்தல் அமைகின்றது. சிறந்த பொருளாதார கொள்கையுடன் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதன் அவசியம் குறித்து சிந்திக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பது எனது நிலைப்பாடாகும். ஆனால் ஏனைய வேட்பாளர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒன்றிணைந்து பயணிப்பதா ? இல்லையா ? என்பதை தீர்மானிக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட வரைபுக்குள் உட்பட்டதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவு இடைவெளியை எடுத்துக்கொண்டால் ஆயிரம் பில்லியனாகும். இதனை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் எமது மொத்த தேசிய வருமானத்திற்கு அமைவாக 5 வீதத்தை கடனாக பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் அனுமதியளிக்கிறது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வரவு - செலவு திட்டம் குறித்து பேச வில்லை. இருப்பினும் அவர்களது தேர்தல் வி ஞ்ஞாபணத்தை அடிப்படையாக கொண்டு ஜே.வி.பியின் வரவு - செலவு திட்டத்தை கணிப்பிட்டால் வரவு - செலுவு திட்ட இடைவெளி 4 பில்லியன் டொலர்களாகும். இத்தொகையினை மொத்த தேசிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், 11.2 வீதமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறும் வகையிலேயே இந்த எண்ணிக்கை உள்ளது. மீறி செயல்பட்டால் நாணய நிதியத்திலிருந்து வெளியேறும் நிலை உருவாகும். இதன் பின்னர் ஏற்பட கூடிய நாட்டின் பொருளாதார நிலைகள் டொலர் ஒன்றின் பெறுமதியை 500 ரூபாவுக்கு கொண்டு செல்லும். எனவே இது குறித்து விவாதத்திற்கு அழைத்தால் அவர்கள் யாரும் வருவதில்லை. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் அமையப்பெறும் புதிய ஆட்சி இதுவரையில் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் தெளிவாக கூறியுள்ளது. அனுரகுமார திசாநாயக்கவோ சஜித் பிரேமதாசவோ சர்வதேச நாணய நிதியத்துடன் தேர்தல் விஞ்ஞாபணத்தில் குறிப்பிட்டுள்ள விடங்கள் குறித்து பேச வில்லை என்பதே உண்மை. மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். பெறுமதி வரிசேர் வரியை இரத்து செய்வதாக அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார் என்றால், இன்றிலிருந்தே மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றை சேமித்து வைக்க வேண்டும். எனவே தற்போதைய பொருளாதார திட்டங்களில் இருந்து விலக இயலாது. இன்னும் இரு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளனர். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை அவர்களுக்கு கூற வேண்டும். ஊழல் ஒழிப்பு திட்டம் ஊழலை ஒழிக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊழல் மோசடி குறித்து 400 கோப்புகள் உள்ளன. அவற்றை விசாரிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதே போன்று மோடிகள் ஊடாக சம்பாதித்த சொத்துக்களை அரச உடைமையாக்குவதற்கு சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் ஊழல் மற்றும் மோசடி ஒழிப்புக்கான 5 ஆண்டுகால திட்டத்தை தயாரித்து வருகின்றோம். இவற்றை புதிய சட்டங்கள் ஊடாகவே முன்னெடுக்க வேண்டும். எனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். அப்போது தான் ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், புதிய சட்டங்களை நடைமுறைபடுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானித்துள்ளோம். ஆனால் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் சட்டங்கள் குறித்து பேசாது திருடர்களை பிடிப்பதாக கூறுகின்றனர். வரவு - செலவு திட்டத்திற்கு தேவையான நிதியை திருடர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் பெற்றுக்கொள்வதாக இருவருமே கூறுகின்றனர். அது சாத்தியமான விடயமல்ல. ஏனெனில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழங்கு தொடர்ந்து அவர்களிடம் மோடி செய்து பெற்றக்கொண்ட சொத்துக்களை பெற்றுக்கொள்ள குறைந்தது நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் சுமார் 10 வருடம் ஆகலாம். அது வரைக்கும் வரவு - செலவு திட்டம் இல்லாது எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும். மக்களை ஏமாற்ற கற்பணை கதைகளை கூறலாம். நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை அவர்கள் பேசுவதில்லை. புதிய சட்டங்களை நிறைவேற்றி திருடர்களை பிடிக்க யதார்த்தமான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள் சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுவதாக அனுரகுமார திசாநாயக்க கூறுகின்றார். அவ்வாறு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்க முடியாது. உதாரணமாக இந்தியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து வெளியில் வந்தால், அந்த நாடு இலங்கையுடன் சினம் கொள்ளும். நாடு அநாவசியமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதில் சிறந்த விடயம் யாதெனில் அனுரவோ சஜித்தோ அதிகாரத்திற்கு வர போவதில்லை. குறைப்பாடுகள் இருந்தால் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் தனித்து தீர்மானங்களை எடுக்க கூடாது. கோட்டாபய ராஜபக்ஷ தன்னிச்சையாக ஒப்பந்தங்களை இரத்து செய்து நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பை நினைவுப்படுத்த விரும்புகின்றேன். ஜப்பான் இலகு ரயில் திட்டத்திற்கான நிதி இலங்கைக்கு கிடைக்காமல் போனது. சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான திட்டங்களை நிறுத்தினால் பாதிக்கப்பட போவது நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நட்பு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் இலங்கைக்கு இல்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் புதிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட உத்தேசித்துள்ளோம். மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கை கடற்பரப்பிற்குள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எவ்விதமான மோதலும் ஏற்பட்டதில்லை. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில அதிகார போட்டி நிலை பிராந்தியத்தில் உள்ளது. எவ்வாறாயினும் அந்த நாடுகளுடன் நீண்ட காலமாக இராஜதந்திர நிலையில் தொடர்புகளை பேணி வருகின்றோம். இலங்கையின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படுகிறோம். https://www.virakesari.lk/article/193977
-
வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுக்கு சுமந்திரனின் தீர்மானம் பாதிப்பாகாது - ஜனாதிபதி ரணில்
Published By: DIGITAL DESK 7 18 SEP, 2024 | 08:46 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமையானது, வடக்கு கிழக்கு மக்களின் என்மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை ஏற்காத நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் விடுக்க வில்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகவியலாளர்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்த ஜனாதிபதி ரணில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இன மற்றும் மதவாத பிரச்சினைகள் இல்லாத சூழல் ஒன்றில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுகின்றது. 13 ஆவது அரசியலமைப்பில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. மாறாக அதன் அமுலாக்கம் குறித்தே சில சிக்கல்கள் உள்ளன. எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். எனவே எதிர்வரும் நாட்களில் 13 ஆவது அரசியலமைப்பு அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரையும் ஆதரிப்பதாக இதுவரையில் அறிவிக்கவில்லை. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தமிழரசுக் கட்சி. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக சுமந்திரன் மாத்திரம் கூறியுள்ளார். ஆனால் ஏனையவர்கள் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார பிரச்சினையை கருத்தில் கொண்டே தமிழரசுக் கட்சியின் பெரும்பாலானவர்கள் நடுநிலையாக உள்ளனர். எவ்வாறாயினும் சுமந்திரனின் தீர்மானம் எந்த வகையிலும் வடக்கு கிழக்கு மக்களின் என் மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது. அந்த மக்கள் ஏற்கனவே எனக்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டனர் என்றார். https://www.virakesari.lk/article/193976
-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி - முந்துவது யார்? தமிழர் ஆதரவு யாருக்கு?
படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை (எஸ்எல்பிபி) சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஸ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். ஆனால், 2022ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் (ஜனதா அரகலய) இறங்கினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியையடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகிக் கொள்ள, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 9வது ஜனாதிபதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி பதவியேற்றார். இலங்கையின் அரசமைப்புச் சட்டப் பிரிவு நாற்பதின் படி, இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பதவியேற்பவர் அந்தப் பதவிக் காலம் முடியும் வரைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த நிலையில்தான் புதிய ஜனாபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடக்கவிருக்கிறது. இலங்கையைப் பொருத்தவரை பலவிதங்களில் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. கடந்த சில தசாப்தங்களோடு ஒப்பிட்டால், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி ராஜபக்ஸ சகோதரர்கள் இந்தத் தேர்தலில் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர். அதேபோல, இலங்கையின் பாரம்பரிய கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) கிட்டத்தட்ட சிதைந்துபோய்விட்டன. ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (என்பிபி) ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் 39 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஏ. முகமது இலியாஸ் என்பவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி மரணமடைந்தார். ஆகவே தற்போது 38 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதான போட்டியென்பது எதிர்க் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸவுக்கும் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான அனுரகுமார திஸநயகேவுக்கும் தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஸ சகோதரர்கள் இந்தத் தேர்தலில் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவர்கள் யார்? தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜபக்ஸவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து ராஜபக்ஷ உருவாக்கிய கட்சி) அவருக்கு நாடாளுமன்றத்தில் பக்கபலமாக நின்றது. இப்போது ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தங்கள் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவைக் களத்தில் இறக்கியிருக்கிறது. ரணிலைப் பொருத்தவரை இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தாலும், சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார். அவருக்கு பொதுஜன பெரமுனவின் சிலரும் ஆதரவளித்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவையும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைப் பொறுத்தவரை, சமாகி ஜன பலவெகய (Samagi Jana Balawegaya) என்ற ஐக்கிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பில் போட்டியிடுகிறார். இஸ்லாமியக் கட்சிகளான ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகியவை சஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவரான அனுரகுமார திஸநாயக்கே தேசிய மக்கள் சக்தி என்ற முன்னணியின் சார்பில் களத்தில் நிற்கிறார். பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த முன்னணியில் மார்க்ஸிய - லெனினிய சார்பு கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன முக்கியமான கட்சியாக இருக்கிறது. 1970களிலும் 80களிலும் அரசுக்கு எதிராக உருவான சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சிகளின் பின்னணியில் இந்தக் கட்சியே இருந்தது. தற்போதைய நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சிக்கு மூன்று இடங்களே இருந்தாலும், இந்த தேர்தலில் ஒரு வலுவான வேட்பாளராக உருவெடுத்திருக்கிறார் அனுரகுமார திஸநாயக்கே. மகிந்த ராஜபக்ஸவின் மகனும் ஹம்பந்தோட்டா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். தங்கள் கட்சியில் பலர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கப் போவதாகச் சொன்னதும், தங்களுடைய வாக்கு வங்கியை மொத்தமாக இழந்துவிடாமல் இருக்க கடைசித் தருணத்தில் களமிறங்கியிருக்கிறார் அவர். இவர்கள் தவிர, தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில் சில தமிழ் அமைப்புகளும் சிவில் குழுக்களும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழர்களுக்கான பொது வேட்பாளராக களத்தில் இறக்கியுள்ளனர். இவருக்கு டெலோ, ஈபிஆர்எல்எப் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி, அதிகாரப் பகிர்வு போன்ற எதிலுமே தங்களுக்கு எவ்வித பங்களிப்பையும் தராத தென்பகுதி அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவை களம் இறக்கியுள்ளது எதைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள்? ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை, 'We can Srilanka' என்ற கோஷத்துடன், ஸ்திரத்தன்மையை முன்னிறுத்தி வாக்குகளை கோரி வருகிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்த நாட்டை, கடந்த இரு ஆண்டுகளில் மீட்சியை நோக்கி வழிநடத்தியதாகச் சொல்லி, தனக்கே மீண்டும் வாக்களிக்கும்படி கோருகிறார். எதிர்க்கட்சித் தலைவரான சஜித்தைப் பொருத்தவரை, எல்லோருக்குமான வளர்ச்சியைத் தருவேன் என்றும் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும் கூறி வாக்குகளை சேகரிக்கிறார். தான் வெற்றிபெற்றால், தன்னுடைய அரசு எல்லோருக்குமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார். அனுரகுமார திஸாநாயக்கவைப் பொறுத்தவரை, ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்கப் போவதாகக் சொல்கிறார். இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்தவர்கள்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணம் எனக் குறிப்பிடும் அனுரகுமார, மக்களை வைத்து தேச விடுதலை இயக்கத்தை உருவாக்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். இலங்கை தேர்தல் எப்படி நடக்கும்? இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதாவது, வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் 50 சதவிகித்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும். ஒரு கோடியே 70 லட்சம் பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர். இதில் சிங்களம் பேசும் மக்களின் வாக்குகள் 75 சதவிகிதம். வடக்கில் உள்ள தமிழர்கள், கிழக்கில் உள்ள இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய சிறுபான்மையினரின் வாக்குகள் மீதமுள்ள 25 சதவீதம். "இந்த முறை ரணில் விக்ரமசிங்க - சஜித் பிரேமதாஸ - அனுரகுமார திஸநாயகே என மும்முனைப் போட்டி நிலவுவதால் ஒருவருக்கும் 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்றுதான் கருதுகிறேன். ஆகவே, விருப்ப வாக்குகளை எண்ண வேண்டியிருக்கும். இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான ஜனாதிபதி தேர்தலாக இது இருக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான வீரகத்தி தனபாலசிங்கம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான ஜனாதிபதி தேர்தலாக இது இருக்கும் தாக்கம் செலுத்தும் பிரச்னைகள் என்னென்ன? 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்னை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு விலைவாசி வெகுவாக அதிகரித்திருப்பதால், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கின்றது. வாழ்க்கைத் தரம் மோசமடைந்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. "இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பொருளாதார நெருக்கடிதான் வாக்குகளை முடிவு செய்யக்கூடிய முக்கியப் பிரச்னையாக இருக்கும். புதிதாக வரும் ஜனாதிபதி இலங்கைக்கும் சர்வதேச நிதியத்திற்கும் இடையில் உள்ள ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. தமிழர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மக்களைப் பொருத்தவரை எதிர்காலத்தில் அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுமா, அதிகாரப்பகிர்வு கிடைக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றன. மேலும், யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் வடகிழக்கில் ராணுவம் மற்றும் தொல்பொருள்துறையின் காணி அபகரிப்பு காணப்படுகிறது. ஆனால், புதிய அரசு இவ்வாறான விஷயங்களைத் தீர்த்துவைக்குமா என்ற கேள்வியும் இருக்கவே செய்கிறது." என்கிறார், அரசியல் பொருளாதார ஆய்வாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்சனை இதே கருத்தையே எதிரொலிக்கிறார் தனபாலசிங்கம். "எல்லோருமே சர்வதேச நிதியம் வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை சீர்செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். அந்த சீர்திருத்தங்களை தான் மட்டுமே செய்ய முடியும் என்கிறார் ரணில். அனுரவும் சஜித்தும் சில மாற்றங்களுடன் அவற்றைச் செய்வோம் என்கிறார்கள். ஆனால், எல்லோருமே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊதியத்தைக் கூட்டுவோம் என்கிறார்கள். பாட சாலைகளில் மாணவர்களை அடிப்பதை நிறுத்துவோம் என்கிறார் ரணில். வறுமை ஒழிப்புக்கு பணம் கொடுப்போம் என்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமே இல்லாத வாக்குறுதிகள்" என்கிறார் அவர். இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவினாலும், அனுரகுமார திஸநாயகேவுக்கும் சஜித்திற்கும் இடையில்தான் உண்மையான போட்டி நிலவுகிறது என்கிறார் அகிலன் கதிர்காமர். "ரணில் ஏற்கனவே மக்கள் ஆதரவை இழந்துவிட்டார். மக்களிடம் ரணிலுக்கு எதிரான மனப்போக்குதான் இருக்கிறது. ஆகவே, அவருடைய ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பகுதி வாக்குகள் இந்த முறை சஜித்திற்குத்தான் செல்லும். மற்றொரு பக்கம், ராஜபக்ஷேக்களின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பகுதி வாக்குகள் அனுரகுமார திஸநாயக்கேவுக்கு செல்லும். இந்தத் தேர்தலில் அனுரகுமார திஸநாயக்கேவை நோக்கிய அலை ஒன்று காணப்படுகிறது. இளைஞர்கள், கிராமப்புறத்தினர் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு தென்படுகிறது" என்கிறார் அகிலன். ரணிலுக்கு ஆதரவு கிடைக்காமல் போக காரணம் என்ன? ஆனால், இந்தக் கருத்தில் மாறுபடுகிறார் தனபாலசிங்கம். கடந்த தேர்தலில் 3 சதவீத வாக்குகளையே பெற்ற அனுரகுமார, எப்படி 50 சதவீத வாக்குகளை நெருங்க முடியும் என்கிறார் அவர். "மக்கள் போராட்டத்திற்குப் பிறகு அவருக்கான செல்வாக்கு அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால், அது வெற்றியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார் தனபாலசிங்கம். இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. மிக நெருக்கடியான தருணத்தில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்று நடத்திய ரணிலுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கருதுவது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ரணில் சிக்கலான நேரத்தில் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்றாலும் அவருடைய பொருளாதார கொள்கைகள் எல்லாம் கொழும்பு நகரை மையமாகக் கொண்ட மேட்டுக் குடியினருக்குத்தான் சாதகமாக இருந்தன. ரணில் மின்சாரக் கட்டணத்தைக் கடுமையாக அதிகரித்தார். இதனால் 65 லட்சம் குடும்பங்களில் 13 லட்சம் குடும்பங்களால் மின் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அவர்களது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தவிர, வறுமையும் அதிகரித்திருக்கிறது. எனவே பொருளாதார சிக்கலை அவர் சிறப்பாக கையாண்டார் எனக் கூற முடியாது. ஆதரவு குறைந்ததற்குக் காரணம் அதுதான்" என்கிறார் அகிலன். ராஜபக்ஷேக்களைப் பாதுகாக்கிறார், மேட்டுக்குடிகளுக்கான ஆட்சி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமடைந்திருப்பதும் ரணிலுக்கு எதிராக இருக்கிறது என்கிறார் தனபாலசிங்கம். "ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை, ராஜபக்ஸ ஆட்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறார். பொருளாதார நெருக்கடிக்கு அவர்களை பொறுப்புக்கூற வைக்காமல் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வலுவாக இருக்கிறது. அதேபோல, அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது. ஆகவே, தன்னுடைய கட்சியை நம்பி தேர்தலில் நிற்பது சரியல்ல என்பதை அவர் புரிந்துகொண்டிருக்கிறார். தற்போது பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தாலும் தட்டுப்பாடு ஏதும் இல்லை. ஆகவே, மேல் நடுத்தர வர்க்கம் திருப்தியடைந்திருக்கிறது. ஆனால், விலை உயர்வினால் கீழ்தட்டு மக்களுக்கு பிரச்னைதான். ஆகவே அவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்" என்கிறார் தனபாலசிங்கம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜபக்ஸக்களைப் பாதுகாக்கிறார், மேட்டுக்குடிகளுக்கான ஆட்சி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் ரணிலுக்கு எதிராக இருக்கிறது சிறுபான்மையினரின் வாக்குகள் யாருக்கு? சிறுபான்மையினரைப் பொருத்தவரை, எல்லாப் பிரிவினருமே பிரிந்துகிடப்பதால் அவர்களது வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என கணிப்பது கடினம். இந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழர் அரசியல் சிதறும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார் அகிலன் கதிர்காமர். "இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழர் அரசியல் குழப்பமான நிலையில் இருக்கிறது. சில தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டில் இருக்கும் சக்திகளின் நிதியுதவியுடன் ஒரு பொது தமிழ் வேட்பாளரை முன்வைத்துள்ளனர். தெற்குடன் இணைந்து போகாமல் பிளவுபடுத்தும் அரசியலை முன்வைப்பதுதான் அதன் நோக்கம். என்னைப் பொருத்தவரை, ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசும் சக்தியாக தமிழர் அரசியல் உருப்பெற வேண்டும். ஆனால், தற்போதுள்ள தமிழ் அரசியல் சக்திகள் தமிழர்களுக்கு என ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்துவது அல்லது தேர்தலைப் புறக்கணிப்பது ஆகிய இரு வாய்ப்புகளையே முன்வைக்கின்றனர். வடக்கில் தமிழ் தேசியவாதத்தையும் தெற்கில் சிங்கள பௌத்தவாதத்தையும் இவர்கள் உருவாக்க நினைக்கிறார்கள்." என்கிறார் அவர். மேலும் தொடர்ந்த அவர், "சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த தேசியம் பெரிய அளவில் தாக்கம் செலுத்தப் போவதில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது வடக்கில் இவ்வாறான தேசியவாதத்தை முன்னெடுப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தைத் தூண்டிவிடும் செயலாகத்தான் இருக்கும். தமிழர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் சஜித்திற்கும் அனுரகுமார திஸநாயகேவுக்கும்தான் வாக்களிப்பார்கள் என்று கருதுகிறேன். யாழ்ப்பாணத்தில் இருக்கும் சில நடுத்தர வர்க்கத்தினர் மட்டும் பொது வேட்பாளர் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், பொதுவாகவே இலங்கை தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்பம் இருக்கிறது. இதனால், தேர்தலுக்குப் பிறகு தமிழர் அரசியல் சிதறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இஸ்லாமியர்களைப் பொருத்தவரை பல முஸ்லிம் கட்சிகளும் மலையக கட்சிகளும் சஜித்திற்கு ஆதரவாக இருக்கின்றன." என்கிறார் அகிலன் கதிர்காமர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த தேசியம் பெரிய அளவில் தாக்கம் செலுத்தப்போவதில்லை தமிழர் அரசியல் இப்போதே சிதறிப் போய்தான் கிடக்கிறது என்கிறார் தனபாலசிங்கம். "கடந்த மூன்று தேர்தல்களாக தமிழர்கள் பொதுவாக ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்தார்கள். இந்த முறை தமிழ் பொது வேட்பாளர் என ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தாலும், கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற 3,30,000 வாக்குகளை இவர் பெற்றாலே அதிகம். தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்கிறது. அதே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான மாவை சேனாதிராஜாவும் ஸ்ரீதரனும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது? ஆகவே, தமிழரசுக் கட்சி சொல்வதை மக்கள் கேட்க மாட்டார்கள். தங்கள் விருப்பத்தின்படியே வாக்களிப்பார்கள்" என்கிறார் அவர். ஆனால், இந்தத் தேர்தலில் இனவாதப் பிரசாரம் சுத்தமாக இல்லை என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது என்கிறார் அவர். "மூன்று பிரதான வேட்பாளர்கள் இருப்பதால், தென்னிலங்கையின் வாக்குகள் மூன்றாகப் பிரியும். ஆகவே வெற்றிபெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் மிக முக்கியம். ஆகவே, எந்த பிரதான வேட்பாளரும் இனவாதப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. நாமல் ராஜபக்ஸ மட்டும் வடக்கிற்கு அதிகாரத்தை பகிர மாட்டோம் எனப் பேசுகிறார். மற்றவர்கள் அப்படி எதுவும் பேசுவதில்லை" என்கிறார் தனபாலசிங்கம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு புதிதாக வரும் ஜனாதிபதிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சில தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி சபை தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. அதேபோல, மாகாண சபை தேர்தல்களும் காலவரையின்றி ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியாக வேண்டும். வேறு சில சவால்களும் இருக்கின்றன. "பொருளாதார நெருக்கடியின்போது வாங்கிய கடனை இன்னும் திருப்பிக் கட்டத் துவங்கவில்லை. 2028க்குப் பிறகு கடனைக் கட்ட ஆரம்பிக்கும்போது நெருக்கடி ஆரம்பிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதையெல்லாம் புதிய ஜனாதிபதி சமாளித்தாக வேண்டும்" என்கிறார் தனபாலசிங்கம். இந்தத் தேர்தலில் ராஜபக்ஷேக்களின் சார்பில் நாமல் ராஜபக்ஸ போட்டியிடுகிறார். தேர்தலுக்குப் பிறகு, ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்விக்கு, "ராஜபக்ஸக்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு. ஆனால், புதிதாக வரும் ஆட்சி பொருளாதார நிலையை சரியாகக் கையாளாவிட்டால், அவர்கள் மீண்டும் செல்வாக்குப் பெறலாம். பிலிப்பைன்ஸில் இமெல்டா மார்கோஸின் மகன் மீண்டும் அதிபராகியிருப்பதைப் போல இங்கேயும் நடக்கலாம். அவர்களைப் பொருத்தவரை அரசியலுக்குள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே கருதுகிறார்கள்" என்கிறார் அகிலன் கதிர்காமர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2546j35zqo
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; தேசிய அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பகுத்தாராய்ந்து வாக்களியுங்கள் - 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல் Published By: VISHNU 18 SEP, 2024 | 07:21 AM நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலாநிதி ஏ.அந்தோனிராஜன், கலாநிதி எஸ்.அறிவழகன், பேராசிரியர் பி.ஐங்கரன், கலாநிதி எஸ்.ஜீவசுதன், கலாநிதி ஏ.கதிர்காமர், பேராசிரியர் ஆர்.கபிலன், கலாநிதி என்.ராமரூபன், கலாநிதி எம்.சர்வானந்தன், என்.சிவகரன், பேராசிரியர் ஆர்.ஸ்ரீகரன், கலாநிதி ஆர்.தர்ஷன், கலாநிதி எம்.திருவரங்கன், கலாநிதி என்.வரதன், பேராசிரியர் கே.விக்னரூபன் மற்றும் எஸ்.விமல் ஆகிய 15 புத்திஜீவிகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக உருவான மக்கள் எழுச்சிப்போராட்டங்களின் பின்னர் நாடு சந்திக்கும் முதலாவது மிகமுக்கிய தேர்தல் இதுவாகும். கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்நாட்டில் வாழ்க்கைச்செலவு கடந்த இரு வருடங்களில் பன்மடங்காக உயர்வடைந்திருக்கிறது. வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகிறது. உரம் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான மானியக்குறைப்பின் காரணமாக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வட்டிவீத அதிகரிப்பு சிறு முயற்சியாளர்களின் வருமானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. கட்டடத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் நகர்ப்புற முறைசாரா மற்றும் கிராமப்புற மக்களின் தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, எரிபொருள், மின்கட்டண அதிகரிப்பினால் சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகளை நாம் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான வாழும் நாட்டின் வட, கிழக்குப் பகுதிகளிலும் அவதானிக்கிறோம். போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆயுதக்கலாசாரம், வன்முறைகள், இந்திய இழுவைப்படகுப் பிரச்சினை போன்றனவும் வடக்கை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இவ்வாறு நிலைமை மோசமடைந்து செல்கையில் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஊழலில் ஈடுபட்டு நாட்டின் வளங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட்டவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றால் மக்கள் வெகுவாக அதிருப்தியுற்றிருக்கிறார்கள். இத்தகு பின்னணியில் 2022 இல் மக்கள் எழுச்சியின் அடிப்படையாகக் காணப்பட்ட 'கட்டமைப்பு மாற்றம்' என்ற கோஷம் தற்போது குறிப்பாக தென்னிலங்கையில் ஓங்கி ஒலிப்பதனைக் காணமுடிகிறது. போராட்டத்தின் மூலம் ஏற்படாத மாற்றங்களைத் தேர்தலின் மூலமாகவேனும் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தெற்கு மக்கள் ஆர்வமாக இருப்பதை உணரமுடிகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் மிகக்கவனமாகவும், புத்திசாதுரியமாகவும் கையாளவேண்டியது அவசியமாகும். தென்னிலங்கையில் பல தசாப்தங்களின் பின்னர் இனவாதத்தினை முன்னிறுத்தாத தேர்தல் பிரசாரத்தினை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்துவருவதாக அறிகிறோம். மக்களின் நலனை முன்னிறுத்தும் பொருளாதார ரீதியான மாற்றங்கள், ஆட்சி முறைமையில் மாற்றம், ஊழல் ஒழிப்பு போன்ற கோஷங்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் பின்னால் தென்னிலங்கை மக்கள் பெருமளவில் திரள்வதையும் நாம் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பார்க்கிறோம். எனவே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் மாற்றத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் மக்களுடன் இம்முறைத்தேர்தலில் பயணிப்பது குறித்து ஆராயவேண்டும். அதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளியவர்களைத் தோற்கடிப்பதும் அவசியம். இனப்பிரச்சினைக்கான தீர்வு, மதச்சார்பற்ற அரசினை உருவாக்குதல், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பிரதான வேட்பாளர்கள் முற்போக்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாமை குறித்து நாம் சுட்டிக்காட்டுகின்றோம். அதேவேளை பொருளாதார நெருக்கடியும், ஊழலினால் ஏற்படும் பொருளாதார, அரசியல் சீர்கேடுகளும் சிறுபான்மை சமூகங்களையும் மோசமாகப் பாதித்துள்ளன என்பதை மனதிலிருத்தி இம்முறைத் தேர்தலில் நாம் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது அவசியம். சர்வதேசத்தினால் தான் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை குறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நாம் எமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக உள்நாட்டில் எம்மை மேலும் பலவீனப்படுத்தக்கூடும். இவ்வாறான காரணங்களால் தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது சமூகங்களும், ஊழல் மற்றும் ஏனைய சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள எமது பொது நிறுவனங்களும் முன்னேறுவதற்கு இந்தத் தேர்தல் ஏதாவதொரு வழியில் சந்தர்ப்பங்களைத் திறக்குமா என நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். தென்னிலங்கையில் இனவாதம் சற்று அடங்கியிருக்கும் இவ்வேளையிலே, ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனநாயகத்தன்மை மிக்க, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இந்தத் தேர்தலை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும் என நாம் கருதுகின்றோம். அதன்படி தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், பொருளாதார மீட்சியில் அக்கறை கொண்டதும், முற்போக்கான அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கான கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியதும், நம்பகத்தன்மை வாய்ந்ததும், இனங்களை ஒற்றுமைப்படுத்தக்கூடியதுமான ஒரு வேட்பாளருக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/193969
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யானையின் அறிவு?! மின்சாரவேலியின் கீழால் நகரும் நுட்பம்!! கீழுள்ள முகப்புத்தக இணைப்பூடாக கண்டு மகிழுங்கள். https://www.facebook.com/reel/989220152644256http://<iframe
-
காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
யார் இந்த பெரியார்? 3 முக்கிய குறிப்புகள்
-
அரச சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை; நாட்டுக்கு சேவையாற்றியுள்ளோம் - நாமல்!
17 SEP, 2024 | 08:15 PM (இராஜதுரை ஹஷான்) அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை. குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபித்து உலகில் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தாலும் அதை எதிர்க்கொள்வோம். எம்மீதான குற்றச்சாட்டுக்கள் வெறும் அரசியல் சேறுபூசலாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இரத்தினபுரி நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்கொண்ட சவால்களை இன்றும் எதிர்க் கொள்கிறோம். நாட்டுக்கு சிறந்த சேவையாற்றியதன் பின்னரே மக்களாணையை மீண்டும் கோருகிறோம். தேசிய விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு உரிய வசதிகளை வழங்கினோம். இறக்குமதி உற்பத்திகளுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கவில்லை. தேசிய உற்பத்திகளை மேம்படுத்தினால் மாத்திரமே விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். எமது அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தி கருத்திட்டங்களையே நல்லாட்சி அரசாங்கம் நிறைவு செய்தது, தற்போதைய அரசாங்கமும் நிறைவு செய்கிறது. பிரதேசங்களுக்கு பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களையே நாங்கள் முன்னெடுத்தோம். வெளிநாட்டு முதலீடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கிடைக்கும் முதலீடுகளினால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும் பயன் என்னவென்பது பற்றி மாத்திரமே ஆராய்வோம். தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கியே செயற்படுவோம். எம்மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது . சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை திரட்டி அவற்றை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. குற்றச்சாட்டுக்களை நிரூபித்து உலகில் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயார். எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் ஒரு பகுதி கோப்பு அநுர குமார திஸாநாயக்கவிடம் உள்ளது, பிறிதொரு பகுதி கோப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளது. ஆதாரம் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதுவரை நிரூபிக்கவில்லை. ஆகவே எம்மீதான குற்றச்சாட்டுக்கள் வெறும் அரசியல் சேறு பூசலாகவே காணப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/193961
-
டெல்லியின் அடுத்த முதல்வராகிறார் அதிஷி: பெயரை முன்மொழிந்தார் கேஜ்ரிவால்
அதிஷி: கேஜ்ரிவால் அரசில் அமைச்சர் பதவி கிடைக்காதவர் தற்போது டெல்லி முதல்வரானது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி 5 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க இருக்கிறார். இந்த அறிவிப்பை ஆம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தெரிவித்தார். "நான் முதல்வராக இருக்கும் வரை, அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லியின் முதல்வராக்க வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கமாக இருக்கும். டெல்லி மக்களை பாதுகாக்க முயற்சிப்பேன். மேலும் கேஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவேன்", என்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதிஷி கூறினார். அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமா குறித்து அதிஷி பேசுகையில், "அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இன்று டெல்லியில் உள்ள இரண்டு கோடி மக்கள் சார்பாக நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், டெல்லிக்கு எப்போதும் ஒரே முதல்வர்தான், அது அரவிந்த் கேஜ்ரிவால் மட்டும்தான்", என்றார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான் அதிஷி டெல்லியின் முதல்வராக இருக்கிறார் என்று கோபால் ராய் முன்னர் கூறியிருந்தார். "பாஜக, ஆம் ஆத்மி கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்றது, ஆனால் நாங்கள் அவர்களது ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்துவிட்டோம்", என்று கோபால் ராய் தெரிவித்தார். அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷியை புதிய முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கட்சியின் அந்த கூட்டத்தில், அரவிந்த் கேஜ்ரிவாலே அடுத்த முதல்வராக அதிஷியின் பெயரை முன்மொழிந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களிடம் அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை அன்று பேசியபோது, முதல்வர் பதவிக்கான போட்டியில் அதிஷியின் பெயரும் இடம்பெற்றது. அதிஷியை தவிர கோபால் ராய், கைலாஷ் கெலாட் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் ஆகியோரின் பெயர்களும் இந்த பதவிக்கான போட்டியில் விவாதிக்கப்பட்டன. தற்போது அதில் 43 வயதான அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த முதல்வராக இருக்கிறார். டெல்லியில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும்வரை அதிஷி முதல்வராக இருப்பார். இது அதிஷிக்கு சாதகமாக நடந்ததா? திங்கட்கிழமை அன்று நடந்த கட்சியின் கூட்டத்திற்குப் பிறகு, அதிஷி முதல்வர் பதவி போட்டிக்கான தேர்வில் முன்னணியில் இருப்பதாகக் கருதப்பட்டார். அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, அதிஷியின் கட்டுப்பாட்டில் அதிகபட்ச அமைச்சகங்கள் மற்றும் இலாகாக்கள் இருந்தன. மணீஷ் சிசோடியா கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையில் பல முக்கியப் பணிகளை அதிஷி செய்துள்ளார். மேலும் மணீஷ் சிசோடியா இல்லாத நேரத்தில் கல்வித் துறையின் பொறுப்பையும் அவர் வகித்தார். அரவிந்த் கேஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரியவராக அதிஷி கருதப்படுகிறார். தற்போதைய சூழ்நிலையில் அதிஷி முன்னணியில் இருப்பதாக கட்சியை சேர்ந்த பல நபர்கள் பிபிசியிடம் குறிப்பிட்டனர். அதிஷிக்கு ஏன் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை? 2020-ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவையில் அதிஷி உட்பட எந்தப் பெண் உறுப்பினருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. அதிஷிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படாததற்கு, அக்கட்சியின் சில தலைவர்கள் அப்போது விமர்சனங்களை முன்வைத்தனர். அந்த தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அதில் 8 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், இதற்கு பிறகும் அரவிந்த் கேஜ்ரிவால் தனது அமைச்சரவையில் ஒரு பெண் உறுப்பினருக்கு கூட அமைச்சர் பொறுப்பை வழங்கவில்லை. காலப்போக்கில் டெல்லியின் அரசியல் நிலையும் மாறியது. மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங்க்கு பிறகு அரவிந்த் கேஜ்ரிவாலும் சிறைக்கு சென்றார். ஆட்சி முதல் கட்சி வரை என பல விஷயங்களை அதிஷி கையாண்டார். 2023-ஆம் ஆண்டு, கேஜ்ரிவால் ஆட்சியில் அதிஷி முதல் முறையாக கல்வி அமைச்சர் ஆனார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2023-ஆம் ஆண்டு, அதிஷி முதல் முறையாக அமைச்சரானார் அதிஷிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குமான உறவு எப்படி தொடங்கியது? டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் விஜய் குமார் சிங் மற்றும் திரிப்தா வாஹி ஆகியோருக்கு அதிஷி பிறந்தார் என இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு செய்தி கூறுகிறது. அவர் டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் படித்தார். மேலும் புனித ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு படிப்பு படித்துள்ளார். அதிஷி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர் செவனிங் ஸ்காலர்ஷிப் எனும் கல்விக்கான உதவித்தொகையைப் பெற்றார். ஆந்திராவில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் அதிஷி குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தார். அவர் இயற்கை விவசாயம் மற்றும் கல்வி தொடர்பான பணிகளை செய்வதில் தீவிரமாக இருந்தார். அதன் பின்பு, அதிஷி போபாலுக்கு வந்தார். இங்கே அவர் பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் பணியாற்றத் தொடங்கினார். இந்த சமயத்தில், அவர் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோருடன் தொடர்பு கொண்டார். அண்ணா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்தே இந்த அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வரும் அதிஷி தற்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக உள்ளார். 2013-ஆம் ஆண்டு, அதிஷி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர் 2015 முதல் 2018 வரை அப்போதைய கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக பணியாற்றினார். ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக இருந்தபோது, டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையை மேம்படுத்தவும், பள்ளி நிர்வாகக் குழுக்களை உருவாக்கவும் அவர் பணியாற்றினார் என்றும், தனியார் பள்ளிகள் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கடுமையான விதிகளையும் அவர் நடைமுறைப்படுத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் அதிஷி இருக்கிறார். தற்போது அவர் டெல்லி அரசாங்கத்தில் கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பப் பயிற்சி, பொதுப்பணித் துறை, எரிசக்தி, வருவாய், திட்டக்குழு, நிதி, லஞ்ச ஒழிப்பு, நீர் மேலாண்மை, மக்கள் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி போன்ற இலக்காக்களில் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் டெல்லியில் உள்ள கல்காஜி பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2013-ஆம் ஆண்டு, அதிஷி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர் ஏன் தனது குடும்பப்பெயரை நீக்கினார்? 2019-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் அவர் கிழக்கு டெல்லி தொகுதிக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக களம் இறங்கினார். அப்போது அவரது பெயர் அதிஷி மர்லினா என்று இருந்தது. முன்னதாக, அதிஷி களத்திற்கு பின்னால் உட்கட்சி விவகாரங்களில் மட்டும் செயல்படும் தலைவர்களுள் ஒருவராக கருதப்பட்டார். 2019-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது, திடீரென பொது மக்கள் முன்னிலையில் அதிஷி மைக்கில் உரையாற்றியதைப் பார்த்த பிறகு, அவர் அரசியலில் முக்கியமான பெண் பிரமுகராக உருவெடுப்பார் என்று கருதப்பட்டது. அந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதிஷி தனது குடும்பப் பெயரான 'மர்லினா' என்பதை அனைத்து கட்சி பதிவுகள் மற்றும் தேர்தல் பிரசாரம் தொடர்பான ஆவணங்களிலிருந்தும் நீக்கினார். அப்போது, பாரதிய ஜனதா கட்சி அதிஷியை ஒரு வெளிநாட்டவர் என்றும் அவரது குடும்பப்பெயரை சுட்டி அவரை ஒரு கிறிஸ்தவர் என்றும் குறிப்பிட்டு வந்தது. அதற்கு, தனது அடையாளத்தை நிரூபிப்பதில் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் தனது குடும்பப்பெயரை நீக்குவதாக அதிஷி கூறியிருந்தார். அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் இருந்தும் தனது குடும்பப்பெயரை நீக்கினார். அதிஷியின் பெற்றோர் இடதுசாரிகளாக இருந்ததால், கார்ல் மார்க்ஸ் மற்றும் விளாடிமிர் லெனின் பெயர்களின் எழுத்துக்களைச் சேர்த்து அதிஷிக்கு 'மார்லினா' என்ற குடும்பப்பெயரை வழங்கியதாக எண்ணப்படுகிறது. அதிஷியின் குடும்பப்பெயர் குறித்த சர்ச்சைக்கு நடுவே, மணீஷ் சிசோடியா அவருக்கு ஆதரவாக நின்று அவரை ஒரு 'ராஜ்புதானி' என்று அழைத்தார். "எங்கள் கட்சியின் கிழக்கு டெல்லி வேட்பாளர் அதிஷியின் மதத்தைப் பற்றி பாஜகவும் காங்கிரஸும் இணைந்து பொய்யான கருத்துக்களை பரப்புவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவரது முழுப் பெயர் அதிஷி சிங். அவர் ஒரு ராஜ்புதானி. ஜான்சி ராணியைப் போல அவர் ஒரு வலுவான பெண்மணி. அவர் வெற்றி பெற்று சரித்திரம் படைப்பார்", என்று மணீஷ் சிசோடியா கூறினார். 2019-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் அதிஷி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் போட்டியிட்ட கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்ட கௌதம் கம்பீர் வெற்றி பெற்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdxrvn2pry7o
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் திரள்வோம்: யாழ்.பல்கலைக்கழக சமூகம் அழைப்பு தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை ஆதரித்து இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தமிழ் மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தேசமாக பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து எழுச்சியடைவதிலிருந்தும் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ் மக்கள் நாங்கள் சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ் அரசியற்கட்சிகளையும் உதிரிகளாக்கி எங்களின் கூட்டு – மனவலுவைத் தகர்த்தெறிவதில் சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனக்கச்சிதமாக செய்து முடித்துள்ளன. பொருளாதார நல்லிணக்க மாயைகள் பொருளாதார நல்லிணக்க மாயைகள் சூழ்ந்த இவ்வாறான சூழ்நிலைகளில் தமிழ் அரசியல் தரப்புக்கள் ஏற்ற உத்தரவாதங்களோ வாக்குறுதிகளோ இன்றி சிங்கள வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை அடகு வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதனை பல்கலைக்கழகச் சமூகத்தினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இவ்வாறானதொரு சூழலில் தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழியென்றும், 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தினுள்ளும், ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பின் உள்ளும் தமிழ் மக்களின் அரசியலை சுருக்குவதில் சிங்கள தலைமைகளிற்கு விலைபோன தமிழ் அரசியல்வாதிகள் முயன்று வருவதையும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த செயற்பாடுகளினையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகச் சமூகத்தினர் குறிப்பிட்டிருந்தனர். https://tamilwin.com/article/jaffna-university-community-calling-jafna-people-1726587740#google_vignette
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
கைபேசிகள்(நடமாடும் வெடிகுண்டுகள்!!) அடிக்கடி வெடிக்கின்றன தானே அண்ணா!
-
இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர்
வங்கதேசத்திற்கு எதிரான தனது 101-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதிப்பாரா?- அவருக்கு நிறைவேறாத ஒரே ஆசை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “எனக்காக நான் எந்த இலக்கும் நிர்ணயிப்பதில்லை. கும்ப்ளே அவருடைய சாதனையை நான் முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொருத்தவரை இலக்குகளை நிர்ணயித்து, அதை அடைந்தபின் கிரிக்கெட் மீதான காதலை நான் இழக்க விரும்பவில்லை. கடினமான காலங்களுக்குப் பின் என் வாழ்க்கை மாறிவிட்டது என்பதை நான் அறிவேன். கிரிக்கெட் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை இறுகப்பிடித்துள்ளேன். எப்போது அந்த பிடி தளர்கிறதோ அப்போது விலகுவேன்”, என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்தும், கிரிக்கெட் மீதான காதல் குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் இன்று (செப்டம்பர் 17) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு 38 வயதாகிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்களோடு சேர்ந்து கடந்த சில நாட்களாக அஸ்வின் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை அஸ்வின் 1986-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று சென்னையில் பிறந்தார். அவரது தந்தை ரவிச்சந்திரன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த அஸ்வின், பிடெக் தகவல்தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அஸ்வின் தனது 9 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அஸ்வினுக்கு சந்திரசேகர் ராவ், சி.கே.விஜயகுமார் ஆகியோர் கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளனர். சுழற்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும் முன், மித வேகப்பந்து வீச்சாளராகவே அஸ்வின் பயிற்சி எடுத்து வந்தார். சிஎஸ்கே முதல் சர்வதேச போட்டிகள் வரை 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சைப் பார்த்த பிசிசிஐ (BCCI) தேர்வுக்குழுவினர் இந்திய அணிக்காக விளையாட அஸ்வினை தேர்ந்தெடுத்தனர். 2010-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கினார். அதன்பின் 2010 ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின், உள்நாட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் தேர்வானார். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இரு போட்டிகளில் மட்டுமே விளையாட அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அஸ்வின் விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் முதன்முதலாக இந்த வகை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகினார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை அஸ்வின் வென்றார். மும்பையில் நடந்த இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். 1962-ஆம் ஆண்டிற்கு பின், ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். அனில் கும்ப்ளே இடத்தை நிரப்பிய அஸ்வின் இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது. அனில் கும்ப்ளேயின் கிரிக்கெட் பயணம் முடிந்து அடுத்ததாக ஒரு வலுவான பந்துவீச்சாளரை இந்திய அணி தேடியபோது அஸ்வினை கண்டுபிடித்தது. ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் தவிர சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாத காலகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் வந்த அஸ்வின், கும்ப்ளே இடத்தை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார். அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது. 500 விக்கெட்டுகள் சாதனை அஸ்வின் தனது 98வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய அளவில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச அளவில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் இவருக்கு முன் இந்த சாதனையை படைத்துள்ளனர். கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின் அனில் கும்ப்ளே உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த சாதனையை அஸ்வின் முறியடித்து, தற்போது 363 விக்கெட்டுகளுடன் அடுத்த போட்டியில் களம் காண உள்ளார். இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இடக்கை பேட்டர்களின் எதிரி அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் தனது 516 விக்கெட்டுகளில் 256 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் எடுக்கும் சதவீதம் 46.6% ஆக இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் தன்னை காலத்துக்கு ஏற்றார்போல் வளர்த்துக் கொண்டு, தகவமைத்துக் கொண்டு நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், பந்தை டாஸ் செய்வது, நக்குல் பால் என வெவ்வேறு முறைகளில் அஸ்வின் பந்து வீசக்கூடியவர். இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். காத்திருக்கும் சாதனைகள் உள்நாட்டு மண்ணில் கும்ப்ளே 476 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்து வருகிறார். அதை முறியடிக்க அஸ்வினுக்கு தற்போது 22 விக்கெட்டுகள்தான் தேவைப்படுகிறது. இதுவரை வங்கதேசத்குக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா அணி பந்துவீச்சாளராக ஜாகீர்கான் உள்ளார். அவர் எடுத்த 31 விக்கெட்டுகளை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. அஸ்வின் ஒரே ஆசை என்ன சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின் தனக்கு ஒரே ஒரு சாதனையை மட்டும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அது குறித்து அவர் கூறுகையில் “ டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் எடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இனிமேல் அது நடக்கப்போவதும் இல்லை” என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwye5jyq5dlo
-
டெல்லியின் அடுத்த முதல்வராகிறார் அதிஷி: பெயரை முன்மொழிந்தார் கேஜ்ரிவால்
17 SEP, 2024 | 03:58 PM புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) பேசும்போது, “முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்’’ என்றார். இதன்படி இன்று கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இதற்காக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனாவை மாலை 4.30 மணிக்கு சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளிக்க உள்ளார். இதனிடையே, அரவிந்த் கேஜ்ரிவாலும் அவரது முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவும் கேஜ்ரிவாலின் இல்லத்தில் சந்தித்து, டெல்லி அரசை அடுத்து வழிநடத்தக்கூடியவர் யார் என்பது குறித்து விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடி விவாதித்தது. முன்னதாக,"அரவிந்த் கேஜ்ரிவாலைப் போலவே நானும் மக்கள் மன்றத்திடம் போக இருக்கிறேன். தேர்தலில் மக்கள் என் நேர்மையை அங்கீகரித்தால், மீண்டும் நான் பதவியில் அமர்வேன்" என்று மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார். இந்தநிலையில் எம்எல்ஏகளுடன் நடந்து வரும் கூட்டத்தில், அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முக்கிய பொறுப்புகளில் அதிஷி: அரவிந்த் கேஜ்ரிவாலால் அடுத்த முதல்வராக முன்மொழியப்பட்டுள்ள அமைச்சர் அதிஷி, டெல்லி அரசின் அமைச்சராக உள்ளார். அவர் தன்னிடம் கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல முக்கியத் துறைகளைத் தன்னிடம் வைத்துள்ளார். டெல்லியின் கல்காஜி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிஷி கடந்த 2013 -ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வருகிறார். https://www.virakesari.lk/article/193946
-
கோயபல்ஸின் காதல் கூடமாக திகழ்ந்த ஆடம்பர மாளிகை தற்போது எப்படி இருக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போகன்சீ வில்லா 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒரு அழகிய ஏரிக் கரையில் 17 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட பிரமாண்ட பாரம்பரிய மாளிகை ஒன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்த மாளிகை துரதிர்ஷ்டவசமாக வரலாற்றில் மிகவும் கொடூரமான நபராக கருதப்பட்ட ஒருவருடையது. அவர் அடால்ஃப் ஹிட்லரின் நாஜி பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ். 2000ஆம் ஆண்டு முதல் இந்த வீடு கைவிடப்பட்ட சொத்தாகி விட்டது. அதை பராமரிக்க அரசுக்கு பெரும் தொகை செலவாகும், யாரும் அதை வாங்க விரும்பவில்லை. இருக்கும் ஒரே வழி, அதை யாருக்காவது கொடுப்பது மட்டும் தான்! ஜோசப் கோயபல்ஸின் கோடைகால ஓய்வு இல்லமாக இருந்த இந்த வீட்டை என்ன செய்வதென்று தெரியாமல் நீண்ட காலமாக திணறிய பெர்லின் அதிகாரிகள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். "பொருத்தமான முன்மொழிவுடன் யாரேனும் முன்வந்தால், பெர்லின் நிர்வாகத்தின் பரிசாக அதனை வழங்க தயாராக இருக்கிறோம்" என்று மாகாண சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் ஸ்டீபன் எவர்ஸ் கூறினார். பெர்லின் பெருநகரப் பகுதிக்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த பாரம்பரிய மாளிகைக்கு கோயபல்ஸ் "போகன்சீ வில்லா" எனப் பெயரிட்டார். அந்த வீட்டின் அருகே போகன்சீ என்னும் அழகான ஏரி இருந்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடு இடிந்து விழுந்து கைவிடப்பட்ட சொத்தாக மாறிவிட்டது. அதன் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பணம் செலுத்த வேண்டும் என்பதால் இது உள்ளூர் அரசாங்கத்திற்கு நிதிச் சுமையாகிவிட்டது, இருப்பினும், ஒரு காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட ஆடம்பரமான மாளிகையாக இருந்த இந்த வீட்டை தற்போது அந்த வழியாக செல்லும் மக்கள் வேடிக்கை பார்த்து விட்டு செல்கின்றனர். ஐரோப்பிய யூதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பு, அதை தகவல் தொடர்பு மற்றும் அரசியல் உளவியலுக்கான மையமாக மாற்றவும், வெறுப்புப் பிரசாரத்தை எதிர்த்துப் போராடவும் முன்மொழிகிறது. "திருப்திகரமான தீர்வு காணப்படவில்லை என்றால், மாளிகையை முழுவதுமாக இடித்து அகற்றிவிடலாம், இதற்கு உள்ளூர் அரசாங்கம் ஏற்கனவே தயாராக உள்ளது” என்று ஸ்டீபன் எவர்ஸ் கூறுகிறார். வில்லா போகன்சீ வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போகன்சீ ஏரிக்கு அருகே ஒரு ஆடம்பரமான மாளிகை இருந்தது ஜோசப் கோயபல்ஸ், ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர். அவர் நாஜி பிரசார அமைச்சராக பதவி வகித்தார். சிறப்பான சொற்பொழிவுக்காக அறியப்பட்ட ஒரு பேச்சாளரான அவர், யூத எதிர்ப்பு மற்றும் முழுமையான போர் சித்தாந்தத்தை பரப்பினார். இந்த மாளிகைக்கு அருகில் உள்ள போகன்சீ ஏரி, இயற்கை எழில் நிறைந்த பூங்காவால் சூழப்பட்டுள்ளது. இது 1936 இல் பெர்லின் நகர நிர்வாகத்தால் கோயபல்ஸுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு 39 வயது. மாளிகை பற்றி நாஜி அமைச்சர் கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டீபன் எவர்ஸ் போகன்சீ அருகே ஒரு ஆடம்பரமான மாளிகை இருந்தது, அதில் சுமார் 40 அறைகள், விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஏர் கண்டிஷனிங் வசதி, நீர் சுத்திகரிப்பு நிலையம், 100 சதுர மீட்டர் கொண்ட ஒரு தனியார் திரையரங்கம் மற்றும் ஒரு பதுங்கு குழி ஆகியவை அதனுள் இருந்தன. இந்த மாளிகை அவரின் ஆறு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு விடுமுறை இல்லமாக மாறியது. பெர்லினில் இருந்து வெகு தொலைவில், தொலைபேசி அழைப்புகள் இன்றி , கடிதங்களைப் பெறாமல் மன அமைதியாக இருப்பதாக தன் நாட்குறிப்பில் கோயபல்ஸ் எழுதியிருக்கிறார். அமைதியாக வேலை செய்வதிலும் வாசிப்பதிலும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் எழுதியுள்ளார். இந்த மாளிகையில் நாஜிக் கட்சி தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் சமூக நிகழ்வுகளும் நடந்தன. கோயபல்ஸ், அதிக பாலியல் ஆசை கொண்டவர் என்று பெயர் பெற்றவர். அந்த இடம் அவரின் ஆசைகளை தீர்த்து கொள்ளும் ரகசிய காதல் கூடமாகவும் (love nest) பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவில், கோயபல்ஸ் தனது ஆறு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் அந்த போகன்சீ மாளிகை கிட்டத்தட்ட ஒரு வருடம் ரஷ்ய செம்படையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக ராணுவ மருத்துவமனையாக செயல்பட்டது. ஜெர்மனி பிரிக்கப்பட்ட காலகட்டத்தில், கிழக்கு ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவால் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த அமைப்பு ஒரு பயிற்சி மையம் மற்றும் பல குடியிருப்புத் தொகுதிகளுடன் கூடிய ஒரு பள்ளியை நிறுவியது. 1990-இல் ஜெர்மன் மீண்டும் ஒன்றிணைந்த பிறகு, இந்த நிலம் பெடரல் மாகாணமான பெர்லினிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பெர்லினால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோசப் கோயபல்ஸ், ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர். கடந்த காலத்தின் சுவடுகளை சுமக்கும் நிலத்தை என்ன செய்வது? 2015-ஆம் ஆண்டில், கட்டடத்தைப் பாதுகாக்க ஒரு மேம்பாட்டு சங்கம் நிறுவப்பட்டது. கல்விக்கான சர்வதேச முகமையாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த சில காலத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் மாளிகையை மறுசீரமைக்கும் முயற்சியை பெர்லின் நிர்வாகம் கைவிட்டது. இந்த முன்னாள் ஆடம்பர மாளிகைக்கு வெளியே, கோயபல்ஸ் தனது பிரசாரப் படங்களைத் திரையிட ஒரு திரையரங்கை நிறுவினார். தற்போது, அந்த பகுதிக்குள் நுழைய முடியாத அளவுக்கு புதர் மண்டிக் கிடக்கிறது. ஜன்னல்களில் சிலந்தி வலை நிறைந்துள்ளது. மாளிகை முழுவதும் தூசி ஆக்கிரமித்துள்ளது. கட்டடங்கள் முழுவதுமாக சரிந்துவிடாமல் பராமரிக்க, உள்ளூர் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு $300,000 வரை செலவாகும். இந்த பாரம்பரிய மாளிகையை என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். "பெர்லின் இந்த கட்டடத்தை ஒருபோதும் ஒரு தனியாரின் கைகளில் கொடுக்காமல் இருப்பதற்கு இந்த நிலத்தின் வரலாறு முக்கிய காரணம். அது தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது" என்று அமைச்சர் ஸ்டீபன் எவர்ஸ் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த மாளிகையில் நாஜி தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் சமூக நிகழ்வுகளும் நடந்தது. எதிர்பாராத முன்மொழிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்டிடங்களில் ஜன்னல்களில் சிலந்தி வலைகள் நிறைந்துள்ளது. மாளிகை முழுவதும் தூசி ஆக்கிரமித்துள்ளது. மாளிகையையும் நிலத்தையும் கொடுக்க பெர்லின் நிர்வாகம் தீர்மானித்ததால், ஒரு தோல் பராமரிப்பு மையத்தைத் திறக்க விரும்பிய ஒரு தோல் மருத்துவர், பல ரியல் எஸ்டேட் வணிகர்கள் இதுகுறித்து விசாரித்தனர். அவை எதுவும் பொருத்தமானதாக கருதப்படவில்லை என்று எவர்ஸ் கூறினார். `ரீச்ஸ்பெர்கர் இயக்கம் ’என்ற தீவிர வலதுசாரிக் குழுவும் ஆடம்பர மாளிகையை பெற முயன்றது. ஆனால், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்ததற்காக அதன் சில உறுப்பினர்கள் விசாரணையை எதிர்கொண்டிருந்ததால், அவர்களின் கோரிக்கை உடனடியாக நிராகரிக்கப்பட்டது. இவை அனைத்தையும் தாண்டி மிகவும் சுவாரஸ்யமான முன்மொழிவு ஒன்றும் முன்வைக்கப்பட்டது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான யூத சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய யூத சங்கம் (EJA), இந்த மாளிகையை சுதந்திரமான கருத்துகளை விவாதிக்கும் மையமாக மாற்றுவதற்கு முன்மொழிந்துள்ளது. வெறுப்பு பிரசாரத்திற்கு எதிராக போராடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதிலும் அது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய யூத சங்கம் (EJA) தலைவர் ரப்பி மெனசெம் மார்கோலின், பெர்லின் அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார், கோயபல்ஸின் முன்னாள் மாளிகையை தகர்ப்பதற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி, அனைத்து வகையான வெறுப்புணர்வையும் எதிர்த்துப் போராடும் ஒரு ஆய்வு மையமாக அதை மாற்ற முன்மொழிந்தார். “முழுமையான தீமையைப் பரப்பிய அந்த இடத்தை நன்மையைப் பரப்புவதற்கான மூலாதாரமாக மாற்றுவோம். இது ஒரு முக்கியமான தார்மீக வெற்றியாக இருக்கும்" என்று ரபி மார்கோலின் கடிதம் எழுதினார். இந்த முன்மொழிவை கவனிக்கத்தக்கது என்று எவர்ஸ் கூறினார், ஆனால் இந்த பிரச்னை நிதி சம்பந்தப்பட்ட ஒன்று என்றும், தகுந்த தீர்வு கிடைக்காவிட்டால் அதனை இடிக்கும் முயற்சி செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvyv4plmq4o
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
டிரம்ப் கொலை முயற்சி - 12 மணித்தியாலங்களாக காத்திருந்த சந்தேகநபர் Published By: RAJEEBAN 17 SEP, 2024 | 10:40 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் அந்த பகுதியில் காத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கிகள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். சந்தேகநபர் முன்னாள் ஜனாதிபதி மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளவில்லை, எனினும் ஆயுதமேந்திய நபர்களினால் இரண்டு தடவைகள் எவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை நெருங்கிச் செல்ல முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. டிரம்பின் கோல்ப் மைதானத்திற்கான விஜயம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒன்றில்லை என அமெரிக்க இரகசிய சேவைபிரிவின் இயக்குநர் ரொனால்ட் ரோவே தெரிவித்துள்ளார். டிரம்ப் அங்கு வருவாரா என்பது சந்தேகநபருக்கு தெரிந்திருந்ததா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரகசிய சேவைபிரிவின் முகவர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதிக்கு மிக அருகில் உள்ள பற்றைக்குள் இருந்து துப்பாக்கியொன்று தென்படுவதை பார்த்த பின்னர் இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். திடீரென துப்பாக்கி வேட்டுக்களின் சத்தத்தை கேட்டோம், நான்கைந்து சத்தங்கள் என டிரம்ப் சமூக ஊடக நிகழ்வில் தெரிவித்துள்ளார். இரகசிய சேவை பிரிவினருக்கு அது துப்பாக்கி சன்னங்கள் என்பது தெரியும் அவர்கள் உடனடியாக என்னை பிடித்து இழுத்தனர், அவர்கள் அற்புதமான விதத்தில் செயற்பட்டனர் என டிரம்ப் பாராட்டியுள்ளார். இதேவேளை தனது பாதுகாப்பிற்கு மேலும் பலர் தேவை என டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் வாகனத்தில் தப்பியோடினார், என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன. தயார் நிலையில் துப்பாக்கி, டிஜிட்டல் கமரா, போன்றவற்றை விசாரணையாளர்கள் மீட்டுள்ளனர். 40 நிமிடங்களின் பின்னர் ரையன் ரூத் என்ற 58 வயது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். அவர் வேறு காரிலிருந்து திருடிய இலக்க தகட்டினை தனது காருக்கு பயன்படுத்தியுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசி மூலம் சம்பவம் இடம்பெறுவதற்கு 12 மணித்தியாலங்களிற்கு முன்னரே அவர் கோல்ப் திடலில் காணப்பட்டதை உறுதி செய்ய முடிந்துள்ளது. https://www.virakesari.lk/article/193904
-
இந்தியாவில் இலங்கையர்கள் மூவர் படகுடன் கைது
Published By: DIGITAL DESK 3 17 SEP, 2024 | 04:56 PM ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா போதை பொருள் அடங்கிய மூட்டைகளை சட்டவிரோதமாக தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கி செல்ல காத்திருந்த போது நடுக்கடலில் படகு பழுதாகி நின்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடுக்கடலில் மீனவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர். எனினும் இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமில் வைத்து மீனவர்களிடம் முழுமையான விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் சட்ட விரோத நடவடிக்கை ஈடுபடுவதற்காக இந்திய கடல் பகுதியில் வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொண்டி அடுத்த மணல்மேல்குடியை சேர்ந்த மர்ம நபர்களிடம் இருந்து கஞ்சா மூட்டைகள் வாங்கி செல்லவதற்காக தொண்டியில் இருந்து சுமார் 15 நாட்டிக்கல் தூரம் நடுக்கடலில் காத்திருந்த போது திடீரென படகு எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் படகுடன் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த போது இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் இருந்த வீரர்கள் பிடித்துள்ளனர். இலங்கையர்கள் மூவரும் கரைக்கு வந்த அவர்களுடைய செல்போன்களை பறிமுதல் செய்து அதன் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் யார் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ய இருந்தார்கள் என்பது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும், தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்படவில்லை, எனவும் விசாரணைக்கு பின்னர் இவர்கள் மூவரும் மண்டபம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றம் ஊடாக புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/193948
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுச்சி கொண்ட மலைநாடு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (Ariyanethran) ஆதரவு தெரிவித்து மத்திய மலைநாட்டிலும் பிரசார கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பரப்புரை கூட்டமானது, இன்று (17.09.2024) இடம்பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து பா. அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கினர். பிரசார கூட்டம் செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, சில தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தமிழ் தலைவர்கள் பொதுவேட்பாளர் தெரிவுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் மத்திய மலைநாட்டில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அனந்தி சசிதரன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றதுடன் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/ariyanethran-lobby-meeting-at-upcountry-1726587545#google_vignette
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 2 17 SEP, 2024 | 03:18 PM வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகையில், வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தொகை 2 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் நபர்களுக்கு ஓராண்டுக்கு குறையாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் உரிய சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193925
-
ஆபத்தான நோயாளியை தகுதியற்ற மருத்துவரிடம் கையளிக்க வேண்டாம்: ரணில் எச்சரிக்கை
ஆபத்தான நிலையில் இருந்து “குணமடையும் நோயாளியை” செப்டம்பர் 21ஆம் திகதி அவசர சிகிச்சையின் போது தகுதியற்ற மருத்துவரின் கவனிப்புக்கு மாற்றி தவறு செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்களை எச்சரித்துள்ளார். நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவரின் அனுமதிப்பத்திரத்தை இலங்கை மருத்துவ சபை இரத்து செய்வது போன்று, 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடமையை கைவிட்ட அரசியல் வாதிகளை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நெருக்கடியான நிலை அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் மாநாட்டிலேயே இன்று(17.09.2024) இந்த கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார். இதேவேளை, நெருக்கடியான நிலையில் இருந்த பொருளாதாரம் இரண்டு வருடங்களுக்குள் முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காண்பிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருடன் ஒப்பிட்ட அவர், 2025 ஆம் ஆண்டில், குறித்த நோயாளியை ஒரு பொது அறைக்கு மாற்றும் நிலை ஏற்படும் என்ற எதிர்வை வெளியிட்டுள்ளார். அத்துடன், 2026 ஆம் ஆண்டில், இலங்கையின் பொருளாதாரம், மருத்துவமனையில் இருந்து முழுமையாக வெளியேற்றப்படும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/do-not-hand-over-patient-to-unqualified-doctor-1726590165#google_vignette
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
Published By: RAJEEBAN 17 SEP, 2024 | 08:29 PM தொலைத்தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச்சிதறியதில் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பின் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளிலும் லெபானின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பல பேஜர்கள் வெடித்துச் சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் தரையில் அமர்ந்திருப்பதையும் ஏனையவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கடைகளில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/193965
-
நாளையதினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
Published By: DIGITAL DESK 3 17 SEP, 2024 | 02:57 PM நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து நாளை புதன்கிழமை (18) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளைய தினம் காலை 8.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதனால் வைத்திய சிகிச்சை அளிப்பதில் இடையூறு ஏற்படலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளரும், உதவி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மீள் பரீசிலணை செய்வதற்கு சுகாதார அமைச்சுக்கு 14 நாள் கால அவகாசத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வழங்கும். அதற்கு சாதாகமான பதில் கிடைக்காவிடின் மாத இறுதியில் நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/193939
-
இன்று உலக நோயாளி பாதுகாப்பு தினம்
Published By: DIGITAL DESK 2 17 SEP, 2024 | 03:49 PM உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் இன்று செவ்வாய்கிழமை (17) அனுசரிக்கப்படுகிறது. 'நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயறிதலை மேம்படுத்துதல்' என்பது இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், குடும்பங்கள், பராமரிப்பாளர்கள், சமூகங்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் தலைவர்கள் ஆகியோர் நோயாளிகளின் பாதுகாப்பில் தங்களது அர்ப்பணிப்பைக் காட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த தினம் நியமிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/193931
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜோ அகாபாவுடன் ஜப்பான் வீரர் அகி ஹஷிடே கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட் பதவி, அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் இரண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெறும் எட்டு நாட்கள் தங்குவதற்காக பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) சென்றனர். ஆனால் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்பி வருவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த நாசா, அங்கே சென்ற ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோரின் வருகையை 2025-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. தற்போது, 6 படுக்கையறை அளவைக் கொண்டுள்ள சிறிய பகுதியில் ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஒன்பது பேருடன் இவர்களும் தங்கியுள்ளனர். மகிழ்ச்சியான இடம் இது என்று சுனிதா கூறுகிறார். வில்மோரோ அங்கே தங்கியிருப்பது சிறப்பானது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் பூமியில் இருந்து 400 கி.மீக்கு அப்பால் விண்வெளியில் இருப்பது எத்தகைய உணர்வை வழங்கும்? உடன் தங்கியிருப்பவர்களுடன் எப்படி இதனை சமாளிப்பீர்கள்? உங்களின் உடைகளை எப்படி துவைப்பீர்கள்? எப்படி உடற்பயிற்சி மேற்கொள்வீர்கள்? என்ன உணவு உட்கொள்வீர்கள்? முக்கியமாக விண்வெளியின் வாசம் எப்படி இருக்கும்? சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ற கேள்விகளை விண்வெளிக்கு சென்று திரும்பிய மூன்று முன்னாள் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டது பிபிசி நியூஸ். விண்வெளியில் ஒரு நாள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் ஒவ்வொரு ஐந்து நிமிடத்தையும் பூமியில் உள்ள ஆராய்ச்சிக் குழு நிர்வகிக்கிறது. அதிகாலையில் எழுவார்கள். ஜி.எம்.டி. நேரப்படி காலை 6.30 மணிக்கு, ஒரு போன் பூத் அளவே இருக்கும் படுக்கை அறையில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள். இதனை ஹார்மோனி என்று அழைக்கின்றனர் அவர்கள். மிகச்சிறந்த படுக்கைப் பை அது என்று கூறுகிறார் நிகோல் ஸ்டோட். நாசாவில் பணியாற்றிய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான அவர், 2009 முதல் 2011ம் ஆண்டுக்கு இடையே 104 நாட்கள் விண்வெளியில் அவர் தங்கியிருந்தார். அந்த படுக்கையறையில் மடிக்கணினிகள் வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் குடும்ப உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ள இயலும். தங்களின் தனிப்பட்ட பொருட்களான புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களை வைத்துக் கொள்ளவும் இடம் உள்ளது. படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள் தூங்குவது எப்படி? சிறுநீரை சேமித்து வைக்கும் ஐ.எஸ்.எஸ். அதன் பின்னர், உறிஞ்சும் அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் கழிப்பறையை அவர்கள் பயன்படுத்துவார்கள். பொதுவாக வியர்வை மற்றும் சிறுநீர் மறுசுழற்சி செய்யப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தற்போது ஆராய்ச்சிக் குழுவினர் சிறுநீரை சேமித்து வைக்கின்றனர். பிறகு அவர்கள் வேலை செய்ய வேண்டும். பக்கிங்ஹாம் அரண்மனை அல்லது அமெரிக்காவின் கால்பந்து மைதானம் அளவே இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பராமரிப்பது அல்லது அறிவியல் சோதனைகளில் ஈடுபடுவது என்று தங்களின் பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடுவார்கள். "பல பேருந்துகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பது போல் அதன் உட்பகுதி இருக்கும். பாதி நாள் வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காது" என்று கூறுகிறார் கனடாவைச் சேர்ந்த மற்றொரு ஆராய்ச்சியாளரான க்ரிஸ் ஹட்பீல்ட். அவர் எக்ஸ்பெடிஷன் 35 திட்டத்தில் 2012 முதல் 2014 வரை பணியாற்றியவர். "அந்த நிலையத்தில் மனிதர்கள் நடந்து கொண்டே இருக்க மாட்டார்கள். அது மிகவும் பெரியது. அமைதியானது," என்று அவர் குறிப்பிடுகிறார். படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் அளவு என்ன? 'ஓய்வு கிடைப்பதே அரிது' ஆராய்ச்சி பணிகளுக்கென ஆறு ஆய்வகங்கள் அங்கே உள்ளன. சவாலான சூழலுக்கு ஏற்ற வகையில் ஆராய்ச்சியாளர்கள் இதயம், மூளை அல்லது இரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க கருவிகளை அணிவார்கள். "நாங்கள் கினி பன்றிகள்," என்று கூறுகிறார் ஸ்டோட். "விண்வெளியில் எங்களின் எலும்புகளும் தசைகளும் துரிதமாக வயதாகிறது. அதன் மூலம் நாங்கள் கற்றுக் கொள்ளவும் இயலும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார். பூமியில் இருக்கும் குழு கணித்ததைக் காட்டிலும் வேகமாகவும் விண்வெளி வீரர்களால் இயங்க முடியும். "ஐந்து நிமிடம் ஓய்வு கிடைப்பதே அரிதான ஒன்று. அப்படி கிடைத்தால் நான் ஜன்னல் அருகே சென்று வேடிக்கை பார்ப்பேன். இசைக் குறிப்பை எழுதுவேன், புகைப்படம் எடுப்பேன் அல்லது என் குழந்தைகளுக்கு ஏதாவது எழுதுவேன்," என்று ஹட்பீல்ட் கூறினார். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, கனடாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் க்ரிஸ் ஹட்பீல்ட் விண்வெளிக்கு வாசனை இருக்கிறதா? அதிர்ஷ்டம் இருந்தால் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே சென்று விண்வெளியில் நடக்க சொல்வார்கள். ஹட்பீல்ட் இரண்டு முறை விண்வெளியில் இப்படி நடந்துள்ளார். அப்படி நடக்கும் போது விண்வெளியின் உலோக வாசனை என்ற புதுமையான ஒன்றின் அறிமுகம் கிடைக்கலாம். "பூமியில் நமக்கு பலவிதமான வாசனைகள் இருக்கின்றன. புதிதாக சலவை செய்த உடை அல்லது சுத்தமான காற்று போன்ற பல்வேறு வாசனைகள். ஆனால் விண்வெளியில் ஒரே ஒரு வாசனை தான். அதை விரைவாகப் பழகிக் கொள்கிறோம், ”என்று கூறுகிறார் ஹெலன் ஷர்மன். அவர் 1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மிர் விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்களைக் கழித்த முதல் பிரிட்டிஷ் விண்வெளி ஆராய்ச்சியாளராவார் "ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியேறும் உடை அல்லது ஆராய்ச்சிக் கருவிகள் போன்ற பொருட்கள் வலுவான கதிர்வீச்சால் பாதிக்கப்படுகின்றன. அவை விண்வெளி மையத்திற்குள் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து ஒரு உலோக வாசனையை உருவாக்குகின்றன," என்று அவர் கூறுகிறார். அவர் பூமிக்கு திரும்பி வந்த போது, உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க துவங்கினார். "விண்வெளியில் கால நிலை இல்லை. உங்கள் முகத்தில் மழையை உணரமாட்டீர்கள். உங்கள் முடியில் காற்றின் வேகத்தை உணரமாட்டீர்கள். இன்று வரை இது போன்ற சின்னசின்ன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்," என்று 33 ஆண்டுகள் கழித்து தன்னுடைய அனுபவத்தை நினைவு கூறுகிறார் அவர். படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் எப்படி இருக்கும்? நீண்ட நாட்கள் அங்கே தங்கியிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் வேலைக்கு மத்தியில் தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மூன்று வெவ்வேறு இயந்திரங்கள் ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் வாழ்வதன் விளைவை எதிர்கொள்ள உதவுகின்றன. ஈர்ப்பு விசை அற்ற பகுதி எலும்பு அடர்த்தியைக் குறைக்கிறது அட்வான்ஸ்டு ரெசிஸ்டிவ் எக்ஸர்சைஸ் டிவைஸ் (ARED) என்ற கருவி அமர்ந்து - எழுந்து செய்யும் உடற்பயிற்சி, எடை தூக்குவது போன்ற அனைத்து தசைகளுக்கும் வேலை அளிக்கும் உடற்பயிற்சிகளுக்கு ஏற்றது என்று கூறுகிறார் ஸ்டோட். அங்கே அவர்கள் மிதப்பதைத் தடுக்க இரண்டு டிரெட்மில்களையும், தாக்குப்பிடிக்கும் பயிற்சிக்காக எர்கோமீட்டரையும் பயன்படுத்துகின்றனர். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி மையத்தில் 104 நாட்கள் தங்கியிருந்தார் ஸ்டோட் மூன்று மாதங்களுக்கு ஒரே ஒரு கால் சட்டை நாங்கள் செய்யும் அனைத்து வேலைகளும் நிறைய வியர்வையை உருவாக்குவதால் துவைக்கும் வேலையை அதிகரிக்கிறது என்று கூறுகிறார் ஸ்டோட். சலவை செய்ய இயந்திரங்கள் கிடையாது. குமிழ் வடிவில் இருக்கும் நீரும் சில சோப்புகளையும் தான் பயன்படுத்துவோம் என்று கூறும் அவர், "ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வியர்வை உடலில் ஒரு படலம் போல மூடிக் கொள்ளும்," என்று விளக்குகிறார். "தலையில் வியர்வை வளர்வதைப் போல் உணர்வேன். நான் என்னுடைய தலையை கீழே தேய்க்க வேண்டும். தலையை அசைத்தால் அந்த வியர்வை அனைத்து இடங்களுக்கும் பரவும்," என்று விவரிக்கிறார் ஸ்டோட். "ஆடைகள் மிகவும் அழுக்கான பிறகு அதனை விண்வெளியில் எரிந்து கொண்டிருக்கும் சரக்கு வாகனத்தில் எறிந்துவிடுவோம். ஆனால் எங்களின் அன்றாட பயன்பாட்டிற்கான ஆடைகள் சுத்தமாக இருக்கும்" என்கிறார் ஸ்டோட். "ஈர்ப்பு விசை இல்லாத போது, ஆடைகள் உடலில் மிதக்கும். எண்ணெய் போன்ற எதுவும் அவற்றைப் பாதிக்காது. நான் மூன்று மாதங்களுக்கு ஒரே ஒரு கால்சட்டையை தான் அணிந்திருந்தேன், ”என்று அவர் விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் குணநலன்களுக்கு முக்கியத்துவம் நீண்ட உழைப்புக்கு பிறகு இரவு உணவுக்கான நேரம். பொதுவாக அனைத்தும் தனித்தனியாக வைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் வழங்கப்படும் உணவாக தான் இருக்கும். பல நாட்டு உணவுகள் அதில் இருக்கும். "முகாம்களில் அல்லது ராணுவத்தில் வழங்கப்படும் உணவு போன்று தான் இருக்கும். ஆனால் ஆரோக்கியமானது," என்று கூறுகிறார் ஸ்டோட். "எனக்கு பிடித்தது ஜப்பான் நாட்டு குழம்பு வகைகள் அல்லது ரஷ்யாவின் செரல் அல்லது சூப் வகைகள் தான். வீட்டில் இருந்து குடும்பத்தினர் அவர்களுக்கு பிடித்த உணவுகளை அனுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். என்னுடைய கணவரும் மகனும் எனக்கு சாக்லேட் கலந்த இஞ்சியை அனுப்பி இருந்தனர். குழுவினர் அனைவரும் பகிர்ந்துதான் உணவை உட்கொள்வோம்," என்று கூறுகிறார் ஸ்டோட். பொறுமை, அமைதி, குழுவாக பணியாற்றும் திறன் போன்ற தனிப்பட்ட குணநலன்கள் அடிப்படையில் தான் விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது சண்டை சச்சரவு போன்றவை ஏற்படுவதை குறைக்கிறது என்கிறார் ஷர்மன். "இது ஒருவரின் மோசமான நடத்தையை பொறுத்துக்கொள்வது மட்டுமல்ல, அதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதும் தான். நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க தோள்களில் தட்டிக் கொடுப்போம்,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,RIA NOVOSTI/SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, விண்வெளியில் இருந்து திரும்பிய ஹெலன் ஷர்மனுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு எட்டு மணி நேர தூக்கம் இறுதியாக தூக்கம். கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி ஆராய்ச்சியாளர்கள் சுவாசிக்க ஏதுவாக நாள் முழுவதும் மின்விசிறிகள் ஓடிக் கொண்டே இருப்பது சத்தமான சூழலை உருவாக்கும். நீண்ட நேரம் அந்த சூழலில் பணியாற்றிவிட்டு வந்த பிறகு படுக்கை தான். எட்டு மணி நேரம் தூங்க வழங்கப்படும். ஆனால் பெரும்பாலானோர் ஜன்னல் அருகே அமர்ந்து பூமியை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்கிறார் ஸ்டோட். மூன்று பேரும் பூமியை அதன் சுற்றுப்பாதையில் 400 கிமீ உயரத்தில் இருந்து பார்ப்பதன் உளவியல் தாக்கம் பற்றி பேசினர். விண்வெளியின் பரப்பில் நான் முக்கியமில்லை என்பதைப் போல் உணர்ந்தேன் என்கிறார் ஷர்மன். அங்கிருந்து பூமியின் மேகங்கள், சுழல்களைப் பார்ப்பது, நாம் கட்டமைத்திருக்கும் புவிசார் அரசியல் எல்லைகளைப் பற்றியும் உண்மையில் நாம் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்கிறோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வைத்தது. பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் சார்பாகவும் இந்த வேலையை ஒன்றாக செய்வது, பிரச்னைகளை சேர்ந்தே கையாள்வது என 6 வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த நபர்களுடன் தங்கியிருந்தது மகிழ்ச்சி அளித்தது என்று கூறுகிறார் ஸ்டோட். இங்கு முடியும் இந்த நிகழ்வு ஏன் பூமியில் சாத்தியமில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார் அவர். சுனிதாவும் வில்மோரும் அங்கே மாட்டிக் கொண்டதாக மக்கள் ஏன் நினைக்கிறார்கள் என்று தங்களுக்கு புரியவில்லை என்று 3 பேரும் கூறுகின்றனர். "விண்வெளியில் நீண்ட காலம் தங்க வேண்டும் என்ற நம்பிக்கையில் கனவு கண்டோம், உழைத்தோம், அதற்காக பயிற்சி செய்தோம்" என்று ஹட்பீல்ட் கூறுகிறார். "ஒரு விண்வெளி வீரருக்கு நீங்கள் அளிக்கும் மிகப்பெரும் பரிசு, அவர்களை நீண்ட காலம் அங்கே தங்க வைப்பது தான்" என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y99r9745eo
-
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
Published By: DIGITAL DESK 3 17 SEP, 2024 | 03:34 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த பாராளுமன்ற உறுப்பிரான ரவிராஜின் மனைவியான சசிகலா மற்றும் மாவை சேனாதிராஜாவின் மகனானா கலைஅமுதன் ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். https://www.virakesari.lk/article/193943
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவிலான் அண்ணா, தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி.