Everything posted by ஏராளன்
-
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள், 6 மடிக்கணினிகளுடன் மூவர் கட்டுநாயக்கவில் கைது!
11 AUG, 2024 | 11:58 AM இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகள் ஆகியவற்றுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தைானவர்கள் கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 - 45 வயதுக்குட்பட்ட வர்த்தகர்கள் ஆவர். இந்த சந்தேக நபர்கள் நேற்று (10) நள்ளிரவு 12.30 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-649 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது, அவர்களது பயணப்பைகள் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டது. அவ்வேளை மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கண்டெடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கைதான மூவரையும் சட்டவிரோதமாக கொண்டு வந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவற்றையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, சுங்கத்துறை அதிகாரி, சோதனை நடத்தியதன் பின்னர் கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்ததோடு, கைதான மூவருக்கும் 16 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/190803
-
தந்தையின் மதுப்பழக்கம் குழந்தையை கருவிலேயே பாதிக்கும் ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அமண்டா ருகேரி பதவி, பிபிசி 11 ஆகஸ்ட் 2024, 05:56 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாக ஒரு பெண் கருவுறும்போது அவர் என்ன சாப்பிடுகிறார், அருந்துகிறார் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவது வழக்கம். எனவே கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு புதிய ஆராய்ச்சி, தந்தையின் மதுப்பழக்கமும் கருவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்னும் கருத்தை முன் வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். கருவுற்றிருக்கும் பெண் வாரம் ஒருமுறை மது அருந்தினாலும், அது குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவாற்றல் செயல்பாடு, நடத்தை மற்றும் முக வடிவத்தைப் பாதிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. மேலும், பல ஆண்டுகளாக, பொது சுகாதார அதிகாரிகள், கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான அளவில் ஆல்கஹால் அருந்தலாம் என்னும் கூற்று தவறானது என்று பிரசாரம் செய்து வருகின்றனர். எனவே கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் மது அருந்த வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் மது அருந்துவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், அதிக குடிப்பழக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அளவு மது உட்கொள்வது அபாயத்தைக் குறைக்குமா என்ற ரீதியில் சில கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கர்ப்பிணிப் பெண் மது அருந்துவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் சாத்தியமான பிரச்னைகளில் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள், குறிப்பிட்ட முக அம்சங்களில் மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அவை மது அருந்துவதால் கருவில் ஏற்படும் கோளாறுடன் (foetal alcohol spectrum disorders - FASD) தொடர்புடையவை. அதே நேரம் நடத்தை, அறிவாற்றல் மற்றும் கற்றல் சிக்கல்களும் இதில் அடக்கம். எனவே FASD பிரச்னையின் கீழ் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தந்தையின் மதுப்பழக்கம் கண்டு கொள்ளப்படவில்லையா? தாய் மது அருந்துவதால் குழந்தைக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றி சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், FASD பிரச்னைக்குப் பங்களிக்கும் மற்றொரு சாத்தியமான காரணி பெரும்பாலும் கவனிக்கப்படாமல் உள்ளது: `தந்தையின் மதுப்பழக்கம்’ ஆம், கருவில் இருக்கும் குழந்தையின் தந்தையுடைய குடிப்பழக்கம் பற்றிப் பெரிதாக யாரும் கண்டுகொள்வது இல்லை. கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய ஆராய்ச்சி "பெண்களை மையமாகக் கொண்டது. தாய்வழிப் பிரச்னைகளை மையமாகக் கொண்டுள்ளது. உண்மையில் நாம் ஆண்கள் தரப்பில் கருவை பாதிக்கும் சாத்தியமான பிரச்னைகளை பற்றி இன்னும் அதிக ஆய்வுகளை நடத்தவில்லை” என்று டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் உடலியல் நிபுணர் மைக்கேல் கோல்டிங் கூறுகிறார். இருப்பினும் கோல்டிங் போன்ற ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக குழந்தையின் ஆரோக்கியத்தில் தந்தையின் பங்கை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். "பல ஆண்டுகளாகப் பெண்கள் பலர், 'கர்ப்ப காலத்தில் நான் ஒருபோதும் குடித்ததில்லை, ஆனால் என் குழந்தைக்கு மது அருந்துவதால் கருவில் ஏற்படும் கோளாறு (FAS) உள்ளது - மேலும் எனது கணவர் நாள்பட்ட மதுப்பழக்கம் கொண்டவர்’ என்று கூறும் கதைகளை நாங்கள் கேட்டு வருகிறோம்," என்று அவர் கூறுகிறார். ஆனால் இதுபோன்ற கதைகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படவில்லை. இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சி, ஒரு சாத்தியத்தை முன்வைக்கிறது: "கணவருக்கு மதுப் பழக்கம் இருந்தது என்று சொன்ன இந்தத் தாய்மார்களின் கூற்றுக்கும் குழந்தைகளின் உடல்நலனுக்கும் சம்பந்தம் இருக்கலாம்." சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை பட மூலாதாரம்,SERENITY STRULL/GETTY IMAGES/BBC படக்குறிப்பு,சமீபத்திய ஆய்வுகளில், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்குப் பல்வேறு மோசமான உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கருத்தரிப்பதற்கு முன் தந்தையின் மதுப்பழக்கம் அவரது சந்ததியினரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் அசாத்தியமாகத் தோன்றலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்குப் பல்வேறு மோசமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சீனாவில் 2021இல் 5 லட்சத்துக்கும் அதிகமான தம்பதிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் கருத்தரிப்பதற்கு முன் கணவருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால், பிறக்கும் குழந்தைக்கு மேல்வாய்ப் பிளவு (cleft palate), பிறவி இதய நோய், செரிமான மண்டலத்தில் கோளாறுகள் போன்ற பிறப்புக் குறைபாடுகளின் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கருவை சுமக்கும் தாய் கர்ப்ப காலத்தில் மது அருந்தவில்லை என்றாலும் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன. சீனாவின் மற்றொரு மக்கள் தொகை ஆய்வில், பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள 5,000 குழந்தைகள், குறைபாடு இல்லாத 5,000 குழந்தைகளுடன் ஒப்பிடப்பட்டனர். ஒட்டுமொத்த ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. குடிப்பழக்கம் இல்லாத தந்தையை ஒப்பிடுகையில், மனைவி கருத்தரிப்பதற்கு முன் மூன்று மாதங்களில் கணவர் ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர்களுக்கு மேல் மது அருந்தி இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பிறவியிலேயே இதயக் கோளாறு ஏற்படும் அபாயம் தோராயமாக மூன்று மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு. பட மூலாதாரம்,SERENITY STRULL/GETTY IMAGES/BBC படக்குறிப்பு,தந்தைவழி குடிப்பழக்கம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் சிக்கல்களுடன் தொடர்புடையது பிறப்புக் குறைபாடுகளின் ஒட்டுமொத்த ஆபத்து இன்னும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 2021ஆம் ஆண்டு சீனாவில் பல்வேறு பிறப்புக் குறைபாடுகள் பற்றிய ஆய்வில், எடுத்துக்காட்டாக, தீவிர பிரச்னையான மேல்வாய்ப் பிளவு (cleft palate) கொண்ட 164,151 குழந்தைகளில் வெறும் 105 குழந்தைகளின் தந்தைகளுக்கு குடிப்பழக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அதே நேரம் மதுப்பழக்கம் இல்லாத தந்தைகளை ஒப்பிடுகையில், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மேல்வாய்ப் பிளவு பிரச்னை ஏற்படும் அபாயம் 1.5 மடங்கு அதிகம். "எங்கள் ஆய்வு முடிவுகளின்படி, 31.0 சதவிகிதம் தந்தையின் குடிப் பழக்கம் பிறப்புக் குறைபாடுகள் தொடர்பான வாய்ப்பை கணிசமாக அதிகரித்திருப்பதால், எதிர்கால தந்தைகள் தங்கள் மது உட்கொள்ளலைக் குறைக்க அறிவுறுத்தப்பட வேண்டும்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். தந்தைவழி குடிப்பழக்கத்தின் தாக்கம் பற்றி ஆராய்வதில் என்ன சிக்கல்? பட மூலாதாரம்,SERENITY STRULL/GETTY IMAGES/BBC படக்குறிப்பு,தந்தையின் மதுப்பழக்கம் மட்டும்தான் இந்தப் பிரச்னைகளுக்குப் பங்களித்ததா அல்லது அதுவும் ஒரு காரணமாக இருந்ததா என்பதைத் தீர்மானிப்பது சவாலானது. இதற்கிடையில், ஜூலை 2024இல், ஓர் ஆய்வில் மனைவி கருத்தரிப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் ஆண் மது அருந்தினால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும், தந்தையின் மதுப்பழக்கம் மட்டும்தான் இந்தப் பிரச்னைகளுக்குப் பங்களித்ததா அல்லது அதுவும் ஒரு காரணமாக இருந்ததா என்பதைத் தீர்மானிப்பது சவாலானது. தந்தையின் புகைப்பழக்கம் போன்ற பிற பிரச்னைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனாலும், சாத்தியமான ஒவ்வொரு காரணத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வது சிரமம்." "மனித ஆய்வுகள் மிகவும் குழப்பமானவை - ஒவ்வோர் ஆய்விலும் குழப்பமான காரணிகள் நிறைய உள்ளன" என்கிறார் கோல்டிங். "ஒவ்வொரு தனிநபரின் உணவுமுறை, உடற்பயிற்சி என கணக்கில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன" என்கிறார் அவர். ஆல்கஹால் பயன்பாடு மற்றும் கர்ப்பம் என்று வரும்போது, அறிவியல் ஆய்வின் தங்கத் தரமான (gold standard), சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையை (randomised controlled trial RCT) நடத்துவது சாத்தியமில்லை. ஆய்வுக்காகக் கருத்தரிப்பதற்கு முன் சில தந்தையர்களிடம் குடிக்கச் சொல்வது நெறிமுறையாக இருக்காது. அது அவர்களின் குழந்தைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே விலங்குகளுக்கு அத்தகைய ஆர்சிடி சோதனையை நடத்தலாம், குறிப்பாக எலிகள். எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு அதைத்தான் கோல்டிங் செய்தார். முதலில், மனிதர்களில் மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுடன் (FASD) தொடர்புடைய சிறிய கண்கள் மற்றும் சிறிய தலை அளவு போன்ற பிரச்னைகளுடன் இணைக்கப்பட்ட உடற்கூறியல் குறைபாடுகளை அடையாளம் காண அவரது குழு ஒரு எலியின் மாதிரியைப் பயன்படுத்தியது. பின்னர் அவர்கள் எலிகளை குழுக்களாகப் பிரித்தனர், அவற்றில் ஒரு குழுவுக்கு கர்ப்பமாக இருக்கும் பெண் எலிகளுக்கு மது வழங்கப்பட்டது; அடுத்ததாக பெண் எலிகள் கருத்தரிப்பதற்கு முன்பு தந்தை எலிகளுக்கு மது வழங்கப்பட்டது. அதன் பின்னர் பெண், ஆண் எலிகளுக்கு மது வழங்கப்பட்டது. அந்தக் குழுக்களின் சந்ததிகளின் அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவர்கள் தெளிவான முடிவுகளைக் கண்டறிந்தனர். ஒரு தாய் எலி கர்ப்ப காலத்தில் மது அருந்தினால், அதன் குட்டிகளிடம் மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுகள் இருக்கும் சில உடலியல் அறிகுறிகள் இருந்தன. ஆனால் ஆண், பெண் எலிகள் மது அருந்திய குழுவில் பிறந்த குட்டிகளுக்கு மண்டையோடு-முக அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சில மாற்றங்கள் மோசமாக இருந்தது. தந்தை எலிகளுக்கு மது வழங்கப்பட்ட குழுவில், அதன் குட்டிகளுக்கு தாடை, பற்கள் இடைவெளி, கண் அளவு மற்றும் கண்களின் இடைவெளி ஆகியவற்றில் சில அசாதாரணத் தோற்றங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இவை மனிதர்களில் தோன்றும் மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுடன் ஒத்து போயின. இதில் அதிர்ச்சி தரும் முடிவுகள் என்னவெனில் மதுக் கொடுக்கப்பட்ட பெண் எலிகள் பிரசவித்த குட்டிகளைவிட, மது வழங்கப்பட்ட ஆண் எலிகளின் துணைகள் பிரசவித்த குட்டிகள் பல உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டிருந்தன. அவை FASDஇன் அறிகுறிகளோடு ஒத்துப்போனது. அதிர்ச்சி தரும் முடிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆய்வு முடிவுகளைப் பார்த்து கோல்டிங் அதிர்ச்சியடைந்தார். "எனது மாணவர்களை மீண்டும் இதே ஆய்வை செய்யச் சொன்னேன்," என்று சிரிப்புடன் கூறினார். ஒவ்வொரு முறை அவர்கள் ஆய்வை மீண்டும் செய்யும்போதும் அதே முடிவுகளைப் பெற்றனர். ஜூலை 2024இல், அவரது குழு மேலும் இரண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டது, இது குட்டிகளின் தந்தை எலிகளின் வழியே ஏற்படும் மதுவின் விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டியது. பெற்றோர் இருவருமே மது அருந்திய எலிகள் குழுவில் பிறந்த குட்டிகளின் மூளை மற்றும் கல்லீரலில் செல்லுலார் முதுமை அதிகரிப்பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பதை ஓர் ஆய்வு வெளிப்படுத்தியது. பெற்றோர் இருவருமே மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் எனில் விளைவுகள் அதிகமாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. இது மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைப் போலவே சில நுண்ணறிவை வழங்கலாம். இது மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுடன் (FASD) இருக்கும் நபர்கள் மற்றவர்களைவிட 42% குறைவான ஆயுட்காலம் கொண்டவர்கள் என்கிறது ஆய்வு. மேலும் அவர்கள் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. கூடுதலாக கோல்டிங்கின் குழு, எலியின் முக அமைப்பு அதன் தந்தை உட்கொண்ட மதுவின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது என்பதையும் கண்டறிந்தது. "மதுவின் அளவு அதிகமாகும்போது, குழந்தைகளில் மோசமான விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பதே இதன்மூலம் நாம் தெரிந்து கொண்ட தகவல்" என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கோல்டிங்கின் ஆராய்ச்சிப்படி, தந்தையின் மது அருந்தும் பழக்கம் அவரது விந்தணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, எலிகளில் கருவின் வளர்ச்சியைப் பாதிக்கும். நீண்ட கால மது அருந்தும் பழக்கம் விந்தணுவில் உள்ள மரபுவழி ஆர்என்ஏ-களின் விகிதத்தைப் பாதிக்கிறது என்பதை அவரும் அவரது குழுவும் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களை பொறுத்தவரையில், தந்தை ஆல்கஹால் உட்கொள்வதால் அவரின் குழந்தைக்கு ஏற்படும் எபிஜெனெடிக் தாக்கங்கள் (epigenetic effects) பற்றிய ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகள் இரண்டிலும் மரபணுப் பொருட்களில் (genetic material) புகைப் பிடித்தலின் தாக்கம் இருப்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, புகைப் பிடிக்கும் அப்பாக்களின் குழந்தைகளுக்கு பிறப்புக் குறைபாடுகள், லுகேமியா மற்றும் கூடுதல் உடல் கொழுப்பு ஆகிய பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். இது எபிஜெனெடிக் செயல்முறைகளின் விளைவாகவும் இருக்கலாம். குழந்தையின் ஆரோக்கியத்தில் ஆணின் குடிப்பழக்கம் எவ்வளவு பங்கு வகிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற போதிலும், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் கரு வளர்ச்சியில் தாயின் மதுப்பழக்கம், தந்தைகளின் மதுப் பழக்கத்தைவிடப் பெரிய பங்கு வகிப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். "கருவுற்ற பெண்ணின் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் நஞ்சுக்கொடியின் வழியாக நேரடியாக கருவுக்குள் செலுத்தப்படுகிறது, எனவே இது வளர்ச்சியில் மிகவும் நேரடியான விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தின் குழந்தை மற்றும் இளம்பருவ சுகாதாரப் பேராசிரியரும் குழந்தை மருத்துவருமான எலிசபெத் எலியட் கூறுகிறார். அவர் நீண்ட காலமாக கருவில் மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுகள் (FASD) பற்றிய ஆராய்ச்சியாளராக இருந்து வருகிறார் மற்றும் FASDஇன் சமீபத்திய கல்வி மதிப்பாய்வின் மூத்த இணை ஆசிரியராக உள்ளார். "இது முகத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மூளைப் பகுதியை பாதிக்கிறது. மேலும் உறுப்பு அமைப்புகள், நுரையீரல், இதயம், காதுகள், கண்கள் மற்றும் பலவற்றின் வளர்ச்சியைப் பாதிக்கிறது." பெற்றோர்களின் குடிப்பழக்கத்தால் மரபியல் பிரச்னைகள் வருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் மனிதர்களுக்கு நிச்சயமாக முழுமையாகப் பொருந்தாது. எலிகளின் சோதனை மாதிரிகள் மனித செயல்முறைகளின் அடிப்படையில் என்ன நடக்கிறது என்பது பற்றிய சில யோசனைகளை மட்டுமே நமக்கு வழங்கக்கூடும். ஆனால் நிச்சயமாக என்ன நடக்கும் என்பதை அவை அர்த்தப்படுத்துவதில்லை. மனிதர்களில் தந்தையின் மது அருந்தும் பழக்கம் பிறக்கும் குழந்தையை எப்படி பாதிக்கும் என்று நிச்சயத்தோடு தீர்மானிக்கும் முன் அதிக ஆராய்ச்சி தேவை. இருப்பினும், ஒரு தந்தையின் குடிப்பழக்கம் கருவின் ஆரோக்கியத்தில் வகிக்கக்கூடிய பங்கை முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கூடாது என்று எலியட் மற்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பெண்கள் மீது சுமத்தப்படும் சுமை ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. ஆனாலும் பொது சுகாதார அமைப்புகள் இந்த விவகாரத்தில் தந்தையாகப் போகும் ஆணின் மதுப்பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்று பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும். நான் சொல்வது, தந்தையின் மதுப்பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்பதால் மட்டுமல்ல, கர்ப்ப காலத்தில் ஒரு பெண் குடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அவரது கணவரும் குடிப்பதுதான். எனவே இருவரும் குடிப்பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது" என்று அவர் கூறுகிறார். இதுவரை நடந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிடும் தம்பதியினரில் ஆண் எவ்வளவு மது அருந்துவது "பாதுகாப்பானது" என்பதற்கான தரவு நம்மிடம் இல்லை. ஆனால் கோல்டிங், அவரது பங்கிற்குச் சொல்வதாக இருந்தால், "எப்போதாவது மிகவும் அரிதாக, மிகவும் குறைவாக மது அருந்துவது” பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது” என்று நம்புகிறார். குறிப்பாக ஒரு தந்தை தனது குடிப்பழக்கத்தைக் குறைத்துக்கொண்டால், உடற்பயிற்சி செய்தல் மற்றும் நன்றாகச் சாப்பிடுவது போன்றவற்றைப் பின்பற்றினால், அவரது சந்ததியினரில் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார். அவர் மேலும் கூறுகையில், "என் மகன்களாக இருந்தால், குடிப்பதை முழுவதுமாக நிறுத்தச் சொல்வேன்" என்று கூறுகிறார். தந்தைவழி குடிப்பழக்கத்தின் சரியான தாக்கம் இன்னும் விளக்கப்படவில்லை என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார்கள். "பெண்கள் மீது மட்டும் பெரிய சுமை சுமத்தப்படுகிறது. ஆனால் கருவின் வளர்ச்சிக்கு ஆணின் ஆரோக்கியமும் முக்கியம். குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரு தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது" என்கிறார் கோல்டிங். https://www.bbc.com/tamil/articles/cd1jjnz29x9o
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
தினேஸ் குணவர்த்தன, காமினி லொக்குகே, சாகரவை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்தோம்; விஜயதாசவிற்கு ஆதரவளித்திருப்போம் - பசில் Published By: RAJEEBAN 11 AUG, 2024 | 12:14 PM தம்மிக பெரேரா போட்டியிலிருந்து விலகிய பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே உட்பட பலர் குறித்து ஆராய்ந்தோம் எனதெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தம்மிக பெரேரா போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாங்கள் பல பெயர்களை ஆராய்ந்தோம். பிரதமர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர் காமினிலொகுகே கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்தோம். கட்சியின் பிரதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக நாமல் ராஜபக்சவை நியமிக்க தீர்மானித்தோம். நாமல் அதற்கு இணங்கினார். எங்களிடம் தகுதியான ஏனைய வேட்பாளர்கள் இருந்தனர். விஜயதாச ராஜபக்சவை கூட நாங்கள் ஆதரித்திருப்போம், அவர் வேறு கட்சியின் கீழ் போட்டியிட்டாலும் அவர் இன்னமும் நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரே என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை கட்சியின் முடிவை நிராகரித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என மாவட்ட மட்ட பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அவ்வாறான முடிவை எடுத்தால் நீதிமன்றம் அதற்கு ஆதரவளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் இது அதற்கான நேரமில்லை என தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு நாங்கள் தேர்தல் குறித்து கவனம் செலுத்துவோம் பலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மீள வருவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கட்சியின் நலனிற்கு எதிராக செயற்படுபவர்கள் குறித்து நீண்டநாட்களாக எங்களிற்கு தெரியும் மேலும் இருவர் உள்ளனர், அவர்கள் என்ன செய்ய திட்டமிடுகின்றனர் என்பதும் எங்களிற்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190805
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முதலில் நம்பவில்லை! அதனால் தேடிப்பார்த்தேன் விடை கிடைத்தது. The Cheetah's Wild LifeThe gestation (pregnancy) period for the cheetah is 93 days, and litters range in size from one or two up to six cubs (the occasional litter of eight cubs has been recorded, but it is rare).
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் & சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லைக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல்முறையாக அதனை ஒப்புக்கொண்டுள்ளார். "ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் (Kursk) பகுதிக்குள் தனது ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை வெளியிட்ட வீடியோவில், யுக்ரேனிய ராணுவம் ஆக்கிரமிப்பாளரின் நிலத்தில் மோதலை முன்னெடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். யுக்ரேன் செவ்வாயன்று ரஷ்ய எல்லைக்குள் தனது தாக்குதலைத் தொடங்கியது. ரஷ்யாவிற்குள் 10 கிமீ (ஆறு மைல்கள்) தூரத்துக்கு முன்னேறியுள்ளது. பிப்ரவரி 2022 இல் ரஷ்யா யுக்ரைனில் முழு அளவிலான தாக்குதலை தொடங்கிய பிறகு ரஷ்யாவுக்குள் யுக்ரேன் மேற்கொள்ளும் மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். யுக்ரேனில் தலைநகர் கீவ் மற்றும் பல பகுதிகள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் அதிபரின் வீடியோ உரை தனது உரையில், அதிபர் ஜெலென்ஸ்கி யுக்ரேனின் "போர் வீரர்களுக்கு" நன்றி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து யுக்ரேனின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியுடன் ஆலோசனை செய்ததாகக் கூறினார். "யுக்ரேன் நீதியை மீட்டெடுக்க முடியும் என்றும் ஆக்கிரமிப்பாளர் மீது தேவையான அழுத்தத்தை கொடுக்க முடியும் என்பதையும் நிரூபித்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,TELEGRAM ZELENSKIY / OFFICIAL ரஷ்யாவில் பாதுகாக்கப்படும் லெனின் உடல் 100 ஆண்டுகள் கடந்து எப்படி உள்ளது தெரியுமா?3 ஆகஸ்ட் 2024 பாதுகாப்பு தேடும் ரஷ்ய மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனிய படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ள போதிலும் பலன் கிடைக்கவில்லை. இதனால், அந்த பிராந்தியத்தில் இருந்து சுமார் 76 ஆயிரம் மக்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்துவிட்டனர். குர்ஸ்க், பெல்கோரோட், பிரையன்ஸ் ஆகிய பிராந்தியங்களில் பயங்கரவாத எதிர்ப்பு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், அந்த பிராந்தியங்களில், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்தலாம். தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது, கண்காணிப்பது போன்ற பிற நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள முடியும். பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK யுக்ரேனின் "துரோக" தாக்குதல் ரஷ்ய எல்லைக்குள் ரஷ்யா - யுக்ரேன் ராணுவ வீரர்களுக்கும் இடையிலான மோதல்கள் சனிக்கிழமை இரவு முதலே நடந்து வருவதாகத் தெரிகிறது. குர்ஸ்க் ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதலில் மக்கள் காயமடைந்ததை சுட்டிக்காட்டி, யுக்ரேனின் "துரோக" தாக்குதல் என்று குறிப்பிட்டார். சனிக்கிழமை பிராந்திய தலைநகர் குர்ஸ்கில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது யுக்ரேனிய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் 13 பேர் காயமடைந்ததாக அவர் முன்னதாக தெரிவித்திருந்தார். யுக்ரேன் எல்லையே ஒட்டியுள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் மற்றும் வோரோனேஜ் பிராந்தியங்களிலும் ஒரே இரவில் யுக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக அவற்றின் ஆளுநர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் சேதங்கள் பற்றி அவர்கள் ஏதும் குறிப்பிடவில்லை. அதேநேரத்தில், யுக்ரேன் தலைநகர் கீவ் பகுதியில் ராக்கெட் பாகம் ஒன்று குடியிருப்பு மீது விழுந்ததில் 35 வயது ஆணும் அவரது நான்கு வயது மகனும் கொல்லப்பட்டதாக அவசர சேவை அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. 13 வயது குழந்தை உட்பட மேலும் 3 பேர் காயமடைந்தனர். கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டெலிகிராமில் வான் பாதுகாப்புப் படைகள் தீவிரமாக "செயல்படுகின்றன" என்றும் பொதுமக்களை வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்தார். பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE படக்குறிப்பு,டாங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள் ஆகியவற்றை ரஷ்யா குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது யுக்ரேனிய படைகள் திடீர் ஊடுருவல் ரஷ்யாவுக்குள் யுக்ரேனின் `அரிதான’ ஊடுருவல் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. அப்போது 1,000 வீரர்கள் அடங்கிய படை, டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் நுழைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. யுக்ரேனியர்கள் பல கிராமங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது, மேலும் சுட்ஜா நகரையும் அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். வெள்ளியன்று, ஆயுதமேந்திய யுக்ரேனியப் படை வீரர்கள் நகரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறும் வீடியோவும், காஸ்ப்ரோம் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு முக்கிய ரஷ்ய எரிவாயு மையத்தையும் கைப்பற்றிவிட்டதாக காட்டும் வீடியோவும் வெளியானது. யுக்ரேன் எல்லையில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள சுட்ஷாவின் வடமேற்கு புறநகரில் எடுக்கப்பட்ட வீடியோ அது என்பதை `பிபிசி வெரிஃபை’ உறுதிப்படுத்தியுள்ளது. முழு நகரத்தையும் யுக்ரேனிய துருப்புகள் கைப்பற்றியதாகக் கூறப்படும் வீடியோவை பிபிசி சரிபார்க்கவில்லை. பட மூலாதாரம்,UNKNOWN படக்குறிப்பு,ரஷ்ய நகரமான சுட்ஷாவில் உள்ள காஸ்ப்ரோம் எரிவாயு நிலையத்தில் யுக்ரேனிய வீரர்கள் நிற்கும் காட்சி ரஷ்ய ராணுவம் சொல்வது என்ன? ரஷ்ய ராணுவ வீடியோ பதிவுகள், சுட்ஜா நகரம் இன்னும் ரஷ்யாவின் கைகளில் இருப்பதாக கூறுகிறது. வெள்ளிக்கிழமை காலை ஆன்லைனில் வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவின் இருப்பிடத்தை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியது. ரஷ்யாவின் எல்லையில் இருந்து சுமார் 38 கிமீ தொலைவில் உள்ள ஒக்டியாப்ர்ஸ்கோ நகரத்தின் வழியாக ஒரு சாலையில் 15 வாகனங்கள் கொண்ட ரஷ்ய கான்வாய் சேதமடைந்ததால் கைவிடப்பட்டதை அந்த வீடியோ காட்டுகிறது. இந்த காட்சிகளில் ரஷ்ய வீரர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் காயமடைந்தவர்கள், சிலர் இறந்திருக்கலாம் - மேலும் சிலர் வாகனங்களில் இருப்பதும் வீடியோவில் தெரிகிறது. குர்ஸ்க் பிராந்தியத்திற்கு டாங்கிகள் மற்றும் ராக்கெட்-லாஞ்சர் அமைப்புகள் உட்பட கூடுதல் ஆயுத தளவாடங்களை ரஷயா அனுப்பியுள்ளது. ரஷ்ய துருப்புகள் யுக்ரேனியப் படைகளின் "முயற்சியை முறியடிக்கத் தொடர்ந்து முன்னேறுகின்றன" என்று ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. ரஷ்ய தரப்பு வீடியோ பிபிசியால் இன்னும் சரிபார்க்கப்படவில்லை. அதானி, செபி தலைவரை குறி வைக்கும் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் குழுமத்தின் பின்னணி2 மணி நேரங்களுக்கு முன்னர் மோதல் நடக்கும் இடத்தில் அணுமின் நிலையம் இருப்பதால் அச்சம் வெள்ளிக்கிழமையன்று, ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளையும் "அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு" ஐநா அணுசக்தி அமைப்பு வலியுறுத்தியது. ஏனெனில் மோதல்கள் நடக்கும் பகுதி குர்ஸ்க் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இது ரஷ்யாவின் மிகப்பெரிய அணுசக்தி தளங்களில் ஒன்று. சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி, "கடுமையான கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அணுசக்தி விபத்தைத் தவிர்க்க" நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். சுட்ஜாவிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிமீ தொலைவில் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cm23e1lvz4do
-
ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
10 AUG, 2024 | 04:12 PM ஆர்.ராம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் புதன்கிழமையன்று (14) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (10) இந்தச் சந்திப்புக்கான நேர ஒதுக்கீடு குறித்த தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்புக்களின் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சுமந்திரன் எம்.பிக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு உயர்நீதிமன்றத்தில் ஹரீன், மனுஷவின் வழக்குத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதாக விடுக்கப்பட்ட அழைப்பால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் இந்த வார இறுதிக்குள் இந்த சந்திப்பு மீண்டும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவுடனான சந்திப்பொன்றிலும் சுமந்திரன் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த சந்திப்பு தொடர்பிலான எந்த உறுதிப்படுத்தல்களையும் செய்துகொள்ள முடியவில்லை. https://www.virakesari.lk/article/190759
-
அதானியை தொடர்ந்து செபி தலைவர் மீது குற்றச்சாட்டு - ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுவது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செபி தலைவர் மதாபி புச் (கோப்புப்படம்) 49 நிமிடங்களுக்கு முன்னர் அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பெர்க் தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மதாபி புச் மற்றும் அவருடைய கணவர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்தக் குற்றாச்சாட்டை இருவரும் மறுத்துள்ளனர். அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் தனிநபர் ஆவணங்களை மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது. செபி தலைவர் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இருவரும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களுடைய வாழ்க்கையும் நிதிப் பரிமாற்றங்களும் திறந்த புத்தகம் போல வெளிப்படையானவை” எனத் தெரிவித்துள்ளனர். ஹிண்டன்பெர்க் அறிக்கை சொல்வது என்ன? அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா இன்ஃபோலைனின் ‘இ.எம். ரீசர்ஜண்ட் ஃபண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்’ நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES செபி தலைவர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இவ்வாறு செயல்பட்டுள்ளதால், செபியின் வெளிப்படைத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. செபி தலைமை மீது இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி தொடர்பான தகவல்கள் மிகவும் தெளிவற்றதாகவும் சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டதாகவும் இருப்பதாக ஹிண்டன்பெர்க் கூறியுள்ளது. மதாபி பூரி புச்சின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் செபியின் தலைவராக அவருடைய பங்கு ஆகியவை குறித்து இந்த அறிக்கை கேள்விகளை எழுப்பியுள்ளது. அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஹிண்டன்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,X படக்குறிப்பு,செபி குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக தனிநபர் ஒருவரிடமிருந்து ஹிண்டன்பெர்க் பெற்ற ஆவணங்களின்படி, செபி தலைவராக மதாபி நியமிக்கப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, மொரீஷியஸை சேர்ந்த நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடென்ட் டிரஸ்டுக்கு, ‘குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட்’இல் தானும் தனது மனைவி செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக தவல் புச் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். குற்றச்சாட்டுகளை மறுத்த மதாபி மற்றும் தவல் பிடிஐ செய்தி முகமையின்படி, மதாபி புச் மற்றும் அவரது கணவர், “தங்களுக்கு எதிரான இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைத் தாங்கள் மறுப்பதாக” தெரிவித்துள்ளனர். அவர்கள், “எங்களுடைய வாழ்க்கை மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் திறந்த புத்தகம் போன்றவை. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து தேவையான தகவல்களும் செபியிடம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர். “நாங்கள் தனிநபர்களாக இருந்தபோது உள்ள ஆவணங்கள் உட்பட மேலும் தேவைப்படும் நிதி ஆவணங்களை வெளிப்படுத்துவதற்கு எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என இருவரும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மைக்காக, உரிய நேரத்தில் இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். “செபி அமைப்பு ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சிக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுத்தது. நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியது. அதற்குப் பதிலாக, ஹிண்டன்பெர்க் செபியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயன்றுள்ளது” என்று அவர்கள் கூறியுள்ளனர். எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன? ஹிண்டன்பெர்க்கின் புதிய அறிக்கை வெளியான பின்னர், காங்கிரஸ், “அதானியின் பெரும் ஊழலின் அளவு குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. இதனிடையே, செபி தலைவர் மதாபி புச் பதவி விலக வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 2022ஆம் ஆண்டு மதாபி புச் செபி தலைவரான உடனேயே, அவரை கௌதம் அதானி சந்தித்தது குறித்த கேள்விகளை இது எழுப்புகிறது. அந்த நேரத்தில் அதானி நிறுவனத்தின் பரிமாற்றங்கள் தொடர்பாக செபி விசாரித்து வந்தது நினைவிருக்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சர்ச்சை தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிலுவையிலுள்ள விசாரணையைக் கருத்தில் கொண்டு, செபி தலைவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அவரும் அவரது கணவரும் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும், இன்டர்போலிலும் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பெர்க் தனது முதல் அறிக்கையை வெளியிட்டு 18 மாதங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிராக ஜனவரி, 2023இல் வெளியான அந்த அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. பட மூலாதாரம்,X படக்குறிப்பு,இந்த சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை “பங்குச் சந்தையில் திருகு வேலை செய்து மோசடியில் ஈடுபட்டதாக” அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பெர்க் அறிக்கை குற்றச்சாட்டு தெரிவித்தது. துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. சிபிஐ அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து, உண்மை வென்றுவிட்டதாக அதானி குழுமம் தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c0e8w9r7wylo
-
சமல், சசீந்திர ரணிலுக்கு ஆதரவு - ராஜபக்ச குடும்பத்துக்குள் விரிசல்
11 AUG, 2024 | 10:37 AM ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன எடுத்துள்ள தீர்மானம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்த ராஜபக்ச குடும்பத்தவர்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தவர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்சவும் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதுடன் அவருக்கே கட்சி ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்சவின் ஏனைய புதல்வர்களும் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. யோசித ரோகிதவின் சந்தைப்படுத்தல் நிறுவனத்தை சேர்ந்த குழுவிடம் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் நாமல் ராஜபக்ச கட்சி தனது சொந்த வேட்பாளரை களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக காணப்படுகின்றார். https://www.virakesari.lk/article/190799
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
11 AUG, 2024 | 09:59 AM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலாவது விடயமாக தமிழ் பொதுவேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள அரியநேத்திரனின் விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அவர் மீது நடவடிக்கைகளை எடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. எவ்வாறாயினும், அரியநேத்திரனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, தான் தமிழ் அரசுக் கட்சியை விட்டுச் செல்லவில்லை. சுயேட்சையாக போட்டியிடுகின்றேன். கட்சி எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை. அதனால் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டவன் என்று குற்றஞ்சாட்ட முடியாது உள்ளிட்ட வாதங்களை முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதேபோன்று, மாவை.சோ.சேனாதிராஜாவும் உடனடியாக அரியநேத்திரன் மீது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடமளிப்பார் என்று கூற முடியாது. அதேபோன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுவேட்பாளருக்கு ஆதரவான கூட்டத்தில் சிறிதரனின் வகிபாகம் சம்பந்தமாகவும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, சுமந்திரன் தென்னிலங்கை தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள், மாகாண சபை தேர்தல்கள் திருத்தச்சட்டம் உள்ளிடட இதர விடயங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளதோடு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பதற்கான தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/190754
-
சட்டமா அதிபருக்கு அப்பால் சுயாதீன சட்டவாதியை நியமிப்பது ஆட்சி நிர்வாகப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு உதவும் - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரதிப்பணிப்பாளர் சுட்டிக்காட்டு!
10 AUG, 2024 | 09:03 PM (நா.தனுஜா) பொறுப்புக்கூறல் சார்ந்த செயற்பாடுகளை அரசாங்கத்தின் ஓரங்கமாகவுள்ள சட்டமா அதிபரிடம் கையளிப்பதைவிட, சுயாதீன சட்டவாதி ஒருவரை நியமிப்பதானது ஆட்சி நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் மிகமுக்கிய நகர்வாக அமையும் என மனித உரிகைள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் உள்நாட்டு சஞ்சிகையொன்றின் கட்டுரையில் மீனாக்ஷி கங்குலி மேலும் கூறியிருப்பதாவது, இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் குறித்து அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதை முன்னிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தொடர்ச்சியாகக் காலந்தாழ்த்தி வந்திருக்கிறது. நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நிலவிய குறைபாடு ஆட்சி நிர்வாகத்தின் சகல பகுதிகளுக்கும் வியாபித்தது. வன்முறைப்போக்கு, ஊழல் மோசடிகள் மற்றும் நிர்வாகத்திறனின்மை என்பன அரச வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், தீவிர பொருளாதார நெருக்கடிக்கும் தோற்றுவாயாக அமைந்தது. மனித உரிமை மீறல் சம்பவங்களில் அரசியல்வாதிகளோ அல்லது பாதுகாப்புத்தரப்பினரோ தொடர்புபட்டிருப்பதாகக் கண்டறியப்படும் வேளையில், அதுகுறித்த சுயாதீன விசாரணைகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே நாட்டின் நீதித்துறையில் நிலவும் அரசியல் தலையீடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொறுப்புக்கூறல் சார்ந்த செயற்பாடுகளை அரசாங்கத்தின் ஓரங்கமாகவுள்ள சட்டமா அதிபரிடம் கையளிப்பதைவிட, சுயாதீன சட்டவாதி ஒருவரை நியமிப்பதானது ஆட்சி நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் மிகமுக்கிய நகர்வாக அமையும். அதேபோன்று அரசியல்வாதிகள் எதேச்சதிகாரிகளாக மாறுகையில், அவர்கள் தமது ஊழல் மோசடிகள் மற்றும் குற்றங்களை மறைத்து, தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏதுவாக ஏனைய கட்டமைப்புக்களை 'வளைத்து' விடுவார்கள். எனவே முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாத்து வலுப்படுத்துவதற்கு, அதற்குரிய அரசியல் தன்முனைப்பு இன்றியமையாததாகும். குறிப்பாக அண்மையில் கொண்டுவரப்பட்ட ஊழல் எதிர்ப்புச்சட்டம் எழுத்துவடிவில் மிகச்சிறந்ததாக இருப்பினும், உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அதனை உரியவாறு நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும். மேலும் அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு சிவில் சமூகங்கள் முயற்சித்த மிகநீண்ட வரலாறு இலங்கைக்கு உண்டு. அவ்வாறிருக்கையில் தற்போது அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலம் சிவில் சமூகங்களின் நிலைத்திருப்புக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், ஆர்ப்பாட்டங்களையும் ஒடுக்குவதற்குப் பதிலாக, நாட்டுமக்கள் அனைவரினதும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/190744
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ் - ஒரே வார்த்தையால் அமெரிக்க தேர்தல் களத்தை புரட்டிப் போட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பில் மெக்கவுஸ்லேண்ட் பதவி, பிபிசி செய்தி, நியூயார்க் 16 நிமிடங்களுக்கு முன்னர் "விசித்திரமானவர்கள்" அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த எளிய விமர்சன வார்த்தைகளுடன் கமலா ஹாரிஸ் செய்து வரும் பிரசாரம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வாக்கியம் அதிபர் ஜோ பைடனின் பலவீனங்கள் பற்றிய உரையாடலை திசை மாற்றியிருப்பதுடன், அவரது போட்டியாளரான டொனால்ட் டிரம்ப் மீது கவனத்தை திருப்பியுள்ளது. இந்த வாரம் நடந்த பிரசார பேரணிகளில் கமலா ஹாரிஸின் தொனியில் காணப்பட்ட மாற்றம் தெளிவாக தெரிந்தது. அவர் தனது துணை அதிபர் வேட்பாளரான மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸுடன் பிரசாரத்தில் தோன்றினார். "பியோனஸ் ஃப்ரீடம்” என்னும் பாடலின் பின்னணி இசையுடன் மேடையில் தோன்றிய இந்த ஜோடி அமெரிக்க மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகக் கூறியது. பிலடெல்பியாவில் ஒரு உற்சாகமான கூட்டத்திற்கு மத்தியில் "நாங்கள் பின்வாங்கமாட்டோம்," என்று சூளுரைத்தார் கமலா ஹாரிஸ். அவரின் முழக்கம் மக்கள் மத்தியில் எதிரொலித்தது. அதுவே பிரசாரத்தின் முழக்கமாகவும் மாறியது. இது இதற்கு முந்தைய தேர்தலில் டிரம்பை "ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்" என்ற பைடன் விமர்சனத்தின் சற்று இலகுவான பதிப்பாகும். இது முன்னாள் அதிபர் டிரம்பை அமெரிக்காவின் யதார்த்தத்திலிருந்து மாறுப்பட்டவர் என்ற பிம்பத்தை காட்டுகிறது. அதிபர் பைடனுக்கு துணை அதிபராக பணிபுரிந்த போது, கமலா ஹாரிஸ் வெளியிட்ட பிரசார செய்திக் குறிப்புகள் கூட, ஆழ்ந்த தீவிரமான தொனியில் இருந்து இன்னும் லேசான தொனிக்கு மாறுவதைப் பிரதிபலிக்கின்றன. பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்கிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளர் டிரம்ப் பற்றி பேசுகையில் "அவரின் பேச்சு நீங்கள் உணவகத்தில் அருகில் உட்கார விரும்பாத ஒருவரின் பேச்சு போல ஒலித்தது” என்று கேலி செய்யும் தொனியில் குறிப்பிட்டார். டிரம்பை விசித்திரமானவர் போன்று சித்தரிக்கும் இந்த புதிய பிரசாரம், கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பது ஒரு விவேகமான தேர்வாக மக்களை நினைக்க வைக்கிறது என்று பிரசார உத்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், சமீப காலம் வரை, அமெரிக்க வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் போராடிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது உருவாகியிருக்கும் நல்லெண்ணம், நவம்பர் தேர்தல் நாள் வரை நீடிக்குமா என்று கூறுவது கொஞ்சம் கடினம். இவ்வளவு சீக்கிரமாக அதனை முடிவு செய்ய முடியாது. கமலா ஹாரிஸை நெருங்கிய நண்பராகக் கருதும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா லெப்டினன்ட் கவர்னர் எலினி கவுனலகிஸ், இந்தப் பிரசாரத்தின் புதிய சொல்லாடல், ஹாரிஸின் "சிறந்த நகைச்சுவை உணர்வையும்", "அடிப்படை அளவில் ஒரு நல்ல பேச்சாளராகவும்" இருக்கும் அவரது திறனையும் பிரதிபலிக்கிறது என்றார். "உண்மை என்னவென்றால், இந்த விஷயங்கள் அவருடைய பலம் என்பதை நிரூபிக்கின்றன, மேலும் அவருடைய உற்சாகமான பேச்சுகள், டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளரின் அச்சுறுத்தும் தொனியினால் உருவாகும் இருளை உடைக்கிறது" என்றார். பதிலடி தர முடியாமல் தவிக்கும் டிரம்ப் இதற்கிடையில், 2016 அதிபர் தேர்தல் பிரசாரத்தின் வாயிலாக அரசியலில் நுழைந்ததில் இருந்து ஆற்றல் மிக்க பிரசாரகர், குறிப்பாக அரசியல் எதிரிகள் பற்றி அவதூறாக பேசி தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வதில் திறன் பெற்றவர் என்று நீண்ட காலமாக அறியப்பட்ட டிரம்ப், கமலா ஹாரிஸின் "விசித்திரமானவர்" என்ற விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறுகிறார். “அவர்கள் தான் விசித்திரமானவர்கள். இதுவரை என்னை யாரும் விசித்திரமாக நடந்து கொள்கிறேன் என்று சொன்னதே இல்லை. என்னை பலவாறாக விமர்சிக்கலாம். ஆனால் ’`weird’ என்று என்னை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்” என்று கடந்த வாரம் கன்சர்வேட்டிவ் வானொலி தொகுப்பாளர் கிளே டிராவிஸுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஊடகங்களில் கவனம் பெறும் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் டிரம்பை பின்னுக்கு தள்ளி கமலா ஹாரிஸ், தற்போது முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 4-6 தேதிகளில் நடத்தப்பட்ட சமீபத்திய `YouGov’ கருத்துக் கணிப்பு, கமலா மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்பதை பிரதிபலித்தது. கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் 45% பேர் நவம்பரில் கமலா ஹாரிசுக்கு வாக்களிப்பதாகக் கூறினர், டிரம்பிற்கு 43% ஆதரவு இருந்தது. இது ஒரு முக்கியமான திருப்பம். திசை மாறியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு `YouGov’ நடத்திய இதேபோன்ற கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்றார். புளோரிடாவின் குடியரசுக் கட்சி ஆளுநர் ரான் டிசாண்டிஸின் 2024 அதிபர் தேர்தல் பிரசாரத்தின் துணை பிரசார மேலாளராகப் பணியாற்றிய டேவிட் பாலியாங்க்ஸி, டிரம்பின் சொந்த களத்தில் அவரை ஹாரிஸ் தோற்கடித்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். அவர் முதன்முதலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டதில் இருந்து, டிரம்ப் நாட்டின் மு க்கிய அரசியல் பிம்பமாக இருந்து கவனம் பெற்று வருகிறார். ஊடகங்களில் அவரை பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளாகின. ஆனால், தற்போது ஊடகங்களின் கவனம் கூட ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பில் இருந்து கமலா ஹாரிஸின் பக்கம் திரும்பியுள்ளது. சமீபத்திய வாரங்களில் தலைப்புச் செய்திகளிலும் அவர் இடம்பிடித்துவிட்டார். அவரை பற்றிய செய்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர் எந்த ஒரு பெரிய ஊடகத்துக்கும் நேர்காணல் கொடுக்காமலே இந்த பெயரை சம்பாதித்துவிட்டார். துணை அதிபர் தேர்வால் உற்சாகமான அரங்கம் சமீபத்தில் ஒரு படுகொலை முயற்சியை எதிர்கொண்ட முன்னாள் அதிபர் டிரம்பை மேடையேற்றுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்று பாலியன்ஸ்கி கூறினார். "இது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்," என்று அவர் கூறினார். வால்ஸை தனது துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்ததன் மூலம் கமலா ஹாரிஸ் பிரசாரம் மேலும் உற்சாகமாகிவிட்டது. இந்த பிரசாரங்கள் மக்கள் மத்தியில் என்ன விளைவை ஏற்படுத்தி உள்ளது என்பதை இவ்வளவு சீக்கிரம் கணித்துவிட முடியாது. ஆனால் அரிசோனா, நெவேடா மற்றும் ஜார்ஜியா போன்ற முக்கிய மாநிலங்களில் அரசியல் ஆய்வாளர்கள் குடியரசுக் கட்சிக்கு சாதகமாக சூழல் இருப்பதாக கணித்துள்ளனர். உண்மையில், வால்ஸ் தான், கமலா ஹாரிஸின் புதிய வேட்புமனுவுக்கு ஆதரவாக பேச கடந்த மாதம் ஊடகங்களில் தோன்றியபோது "விசித்திரமான" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஹாரிஸுடன் சேர்ந்து பிலடெல்பியா பேரணியில் குடியரசுக் கட்சியின் எதிர்ப்பாளர்களைப் பற்றி பேசும்போது அவர் அதை மீண்டும் அழுத்தமாக பயன்படுத்தினார்: "இவர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் மற்றும் வினோதமானவர்கள்." என்றார். வால்ஸின் பிரசார பாணி பிபிசியிடம் பேசிய பல வாக்காளர்களிடம் எதிரொலித்தது. மினசோட்டா கவர்னர் வெளிப்படையாக பேசக் கூடியவர் என்பதால் அவரைப் பிடித்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள். புளோரிடாவின் செயின்ட் அகஸ்டின் நகரில் விடுமுறையில் இருக்கும் ஓஹியோ மாகாண வாக்காளர் டைலர் ஏங்கல், வால்ஸ் "ஒரு சாதாரண மனிதர், இயல்பானவர் போல் தெரிகிறது" என்று கூறினார். "இந்த நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று, இயல்பாக, சாதாரணமாக இருக்கும் ஆட்சியாளர்கள் தான்" என்று ஏங்கல் மேலும் கூறினார். மற்றொரு வாக்காளர், பென்சில்வேனியாவின் ஜான் பேட்டர்சன், "வால்ஸ் மிகவும் உண்மையான நபர்" என்று கூறினார். வாக்காளர்களின் மனதில் இடம் பிடித்த அந்த வார்த்தை சில அரசியல் ஆலோசகர்கள் "விசித்திரமான" என்னும் வார்த்தையின் செயல்திறனைக் கண்டு வியந்தனர். இது இயல்பாக அனைவரின் மனதிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வார்த்தை. ட்ரம்ப் மற்றும் ஜே.டி.வான்ஸை "விசித்திரமானவர்கள்" என்று அழைப்பது, அதிபர் பைடனின் "ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்" என்ற கருப்பொருளை "மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய இலகுவான மற்றும் பேச்சுவழக்கு வார்த்தை என்று பிரையன் ப்ரோகாவ் கூறினார். இவர் கமலா ஹாரிஸின் பிரசாரங்கள் மற்றும் 2020 இல் அவரது அதிபர் பிரசாரத்தை ஆதரித்த சூப்பர் பிஏசியை நடத்தியவர். அவரைப் பொறுத்தவரை, ஜோ பைடனின் நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்ததைப் பற்றிய விமர்சனத்திலிருந்து பிரசாரத்தின் மையத்தை மாற்றுவதற்கு இந்த வார்த்தை உதவியது. குடியரசுக் கட்சி கருத்துக்கணிப்பாளர் ஃபிராங்க் லண்ட்ஸ் அவரின் கட்சியின் செயல்பாடு மீதான சந்தேகம் உணர்வை வெளிப்படுத்தினார். செவ்வாயன்று பிபிசி நியூஸ்நைட்டில், ஹாரிஸை முன்னணி போட்டியாளராக குறிப்பிட்டார், கமலா ஹாரிஸ் ஒரு புதிய "வேகத்தை" பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால் அவர் "விசித்திரமான" என்னும் முத்திரையை நிராகரித்தார், இது வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கவில்லை என்று கூறினார். பிபிசி நேர்காணல் செய்த பல நடுநிலையான வாக்காளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸின் சொல்லாடல் தாக்கம் ஏற்படுத்தி இருப்பது போல் தெரிகிறது. அட்லாண்டாவைச் சேர்ந்த ஒரு சுயாதீன வாக்காளர் ஜேக்கப் ஃபிஷர், டிரம்ப் மற்றும் வான்ஸை "விசித்திரமானவர்கள்" என்று அழைப்பது பொருத்தமானது என்று கூறினார். "இது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்," ஃபிஷர் கூறினார். "இது மிகவும் கடுமையான விமர்சனம் என்று நீங்கள் சொல்ல முடியாது, ஏனென்றால் குடியரசுக் கட்சியினர் மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்” என்றார். இருப்பினும், டிரம்பை ஆதரிப்பதாகக் கூறிய வாக்காளர்கள் பலர் பிரசாரத்தின் சமீபத்திய வார்த்தைகளால் ஈர்க்கப்படவில்லை. பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா "நரகத்திற்குச் செல்கிறது" என்ற கருத்தை இல்லினாய்ஸின் ஃபிராங்க் மற்றும் தெரசா வாக்கர் பகிர்ந்து கொண்டனர். புளோரிடாவில் டிரம்ப் ஆதரவு வாக்காளரான ஜெம் லோவரி ஹாரிஸின் சொல்லாடல் பிடிக்கவில்லை என்று கூறினார். "ஜனநாயகக் கட்சியினர் தான் வித்தியாசமானவர்கள். எனவே குடியரசுக் கட்சியினரை 'விசித்திரம்’ என்று அழைப்பது சரியானது அல்ல " என்று லோரி பிபிசியிடம் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cql35r2q716o
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
இப்ப போயிருப்பினமே!!
-
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில்; ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்!
நாட்டின் மறுமலர்ச்சி திட்டங்களுக்குள் கல்வி மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும்; வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்! 10 AUG, 2024 | 08:28 PM புதிய கல்வி சீர்திருத்தத்தில் முன் பள்ளிகளுக்கான செயற்பாடுகள் மற்றும் உங்களை சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். நாட்டின் பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களுக்குள் கல்வி மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் ஆறுதல் அமைப்பினரால் பயிற்றுவிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் கள் வழங்கும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளை உருவாக்குவது என்பது பாரிய ஒரு பணி. ஒரு சிற்பத்தை செதுக்குவதற்கும், குழந்தைகளை உருவாக்குவதற்கும் பாரிய வித்தியாசங்கள் இல்லை. குழந்தை பிறந்தது முதல் 7 வயதுக்குள் தனக்கு தேவையான அத்தனை விடயங்களையும் கற்றுக் கொள்வதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே, குழந்தைகளின் முக்கியமான காலப்பகுதியை நீங்கள் உங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் ஆற்றுகின்ற பணி மிக முக்கியமானது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்று, குடும்பச் சுமையையும் தாங்கிக் கொண்டு நீங்கள் ஒரு பாரிய பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்காக வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அத்தனை முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கௌரவத்துடன் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கான மறுசீரமைப்புகளை கல்வி அமைச்சு தற்போது மேற்கொண்டு வருகிறது. உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சுடன் பல தடவைகள் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். புதிய கல்வி சீர்திருத்தத்தில் முன் பள்ளிகளுக்கான செயற்பாடுகள் மற்றும் உங்களை சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். நாட்டின் பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களுக்குள் கல்வி மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் “ஆறுதல்” நிறுவனத்தின் ஊடாக வடக்கு, கிழக்கில் சேவையாற்றக்கூடிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பாடநெறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக அனுசரணை வழங்கும் ரோட்டரி நிறுவனத்திற்கும் அதேபோல இந்த செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் “ஆறுதல்” நிறுவனத்திற்கும் வடக்கு மாகாணம் சார்பில் எமது நன்றிகளை கூறிக்கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/190781
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
நாமல் வந்த ரகசியம்! ஐந்தாவது முனை என்ன செய்யும்? - Kuna kaviyalahan/ Namal president candidate
-
அமெரிக்க பசிபிக் விமானப்படைகளும் இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சி
அண்ணை வெயில் கூடவாம்!!
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் - மலையக தமிழர், முஸ்லிம் ஆதரவு யாருக்கு? படக்குறிப்பு,தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து 10 ஆகஸ்ட் 2024, 13:52 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளன. இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக ஒருவர் களமிறக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த நிலையில், மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜூம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில், அவர்கள் மலையக தமிழ் சமூகத்தை கவனத்தில் கொள்ளாததை அடுத்தே, தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக மயில்வாகனம் திலகராஜ், பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதற்கு முன்னர் தமிழ் வேட்பாளர்கள் தனித்து ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும், கணிசமான வாக்குகளை பெற முடியவில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களம் கண்டுள்ள தமிழ் வேட்பாளர்கள் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன? தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் வகையில் கடந்த காலங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதித் தேர்தலின் தமிழ் பொது வேட்பாளராக பா.அரிநேத்திரன் அறிவிக்கப்பட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பா.அரியநேத்திரன், 2004ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டி, நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார். பா.அரியநேத்திரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார். மகிந்த ராஜபக்ஸவின் மகன் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு சவால் விடுவாரா?9 ஆகஸ்ட் 2024 படக்குறிப்பு,''தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வுகளை கொண்டு வருவதற்கான நகர்வு" என்கிறார் சுரேஷ் பிரேமசந்திரன் தேர்தல் ஆணையகம் வேட்பாளர் நியமனங்கள் செய்யப்பட்டதன் பிறகு அதற்கான சின்னத்தை ஒதுக்கும். "அதுவரை என்ன சின்னம் என்பது எங்களுக்கு தெரியாது" என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார். ''தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வுகளை கொண்டு வருவதற்கான ஒரு நகர்வை ஏற்படுத்தும் முறையில் அந்த வெற்றியை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என கருதுகின்றோம். தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒன்றை சர்வதேச வெளிக்கு கொண்டு செல்லும் அளவில் இது மிகப்பெரிய உதவிகளை செய்யும்." என அவர் குறிப்பிடுகின்றார். பா.அரியநேத்திரன் என்ன சொல்கின்றார்? தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே வேட்பாளராக களமிறங்குகின்றேனே தவிர, ஜனாதிபதியாவதற்கு அல்ல என்று தமிழ் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார். ''எதிர் வருகின்ற 9வது ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்கான ஒரு வேட்பாளராக என்னை நிறுத்தியுள்ளனர். நான் வெறும் அடையாளம். அதாவது தமிழ்த் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேனே தவிர, ஸ்ரீலங்கா சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்கு அல்ல" என தெரிவித்தார். இனப் படுகொலை நிகழ்ந்ததிலிருந்து தமிழ் மக்கள் உரிமையற்ற இனமாக இருப்பதாக கூறிய அவர், தங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திற்கும், ஸ்ரீலங்காவிற்கும் வலியுறுத்துகின்ற ஒரு அடையாளத்திற்காக மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம் என்ன? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான கட்சியாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவில்லை. இந்தநிலையில், பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை வழங்கியுள்ளனர். வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியானது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கியுள்ளது. மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.திலகராஜ் மறுபுறம், தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பில், மலையக தமிழர்களை கருத்திற் கொள்ளாததாலேயே, ஜனாதிபதித் தேர்தலில் தாம் களமிறங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,"மலையக மக்களின் கோரிக்கைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என்கிறார் எம்.திலகராஜ் இலங்கையின் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இறுதி 30 வருட காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்ட அளவிற்கு, மலையக தமிழர் பிரச்னை பேசப்படவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார். "தமிழ் பொது வேட்பாளர் என்ற கோஷம், மலையக தமிழரை உள்ளடக்கவில்லை என்பது அந்த பொது வேட்பாளர் கருத்துகளில் இருந்தே வெளிப்பட்டது. தமிழ் பொது வேட்பாளர் என பெயரை வைத்துக்கொள்கின்றார்களே தவிர, மலையக மக்கள் தொடர்பில் எதுவும் பேசவில்லை" என திலகராஜ் தெரிவித்தார். கொள்கை வகுப்பாளர்களும் இந்த மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியே தான் போட்டியிடுவதாக கூறினார். தென் பகுதி தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் பலவும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், தென் பகுதியிலுள்ள தமிழ் கட்சிகள், தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணப்பாட்டிற்கு ஆதரவை வழங்கவில்லை. மலையகம் உள்ளிட்ட நாட்டின் தென் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளது. ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை முடிவை அறிவிக்கவில்லை. படக்குறிப்பு,"மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு பொறுத்தமானது" என கூறுகிறார் செந்தில் தொண்டமான் இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு பொருத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழிடம் கூறினார். இந்த காலத்திற்கு பொருத்தமற்ற நகர்வாவே, தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தான் பார்ப்பதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,"பொறுத்தமற்ற நகர்வு" என்கிறார் உமாச்சந்திரா பிரகாஷ் ''தமிழர் தரப்பு அரசியலில் பேசும் தரப்பாக இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக 30 வருட கால யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர், 2009ம் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் முடிவடைந்தும். வடக்கு, கிழக்கு, மலையகத்தை மையப்படுத்தி, தமிழர்கள் ஒருமித்த திசையிலே பேரம் பேசும் சக்தியை இழந்திருக்கின்றார்கள் என்ற நிலை கவலைக்குரிய ஒரு விடயம்" என்கிறார் உமாச்சந்திரா பிரகாஷ். தமிழர்களின் இருப்பு இலங்கையில் மிக முக்கியமான ஒரு விடயம் என்ற வகையில் காலத்தில் பொருத்தமற்ற ஒரு அரசியல் நகர்வாக பொது வேட்பாளர் நகர்வை பார்ப்பதாக அவர் கூறுகிறார். "இது, ஒட்டு மொத்த தமிழ் இனத்தினுடைய இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழர் தரப்பு தற்போது மிக புத்திசாலித்தனமாக சிந்தித்து, அரசியலில் எந்த பக்கமாக இருந்தாலும், வெற்றி கிடைக்கும் பக்கம் பேரம் பேசும் சக்தியாக இருந்து தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். உரிமையுடன் கூடிய இலக்கத்தை கொள்ள வேண்டும்." என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார். அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார். ஊடகவியலாளர் என்ன சொல்கின்றார்? தமிழர்களின் பலத்தை காண்பிப்பதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவர் களமிறங்குவது இந்த தருணத்தில் பொருத்தமற்றது என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,மூத்த ஊடகவியலாளர் கே.எம். ரசூலும் உமாச்சந்திரா பிரகாஷின் கருத்தையே வலியுறுத்துகிறார். ''இலங்கை தமிழர்கள் குறிப்பாக நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் விடயங்களில் தீர்க்கமான கட்டங்களில் தங்களின் வாக்குகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்த நிலையில், இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் வடக்கு, கிழக்கு, மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு களமிறங்கியிருந்தாலும், அவர் ஜனாதிபதியாவதற்கு எந்தளவு வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று கேட்டால், அதற்கு மிக தெளிவாக அவரால் ஜனாதிபதியாக முடியாது என திட்டவட்டமாக கூறிக்கொள்ள முடியும்" என்றார் ரசூல். தமிழ் மக்களின் தனித்துவத்தை அல்லது தமிழ் மக்களின் பலத்தை நிருபிப்பதற்கான தருணம் இதுவென எண்ணி அவர் களமிறங்கியிருந்தால், நிச்சயமாக இது அதற்கான தருணம் கிடையாது எனவும் அவர் கூறுகிறார். "காரணம், தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அது நாடாளுமன்றத் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல்களாக இருக்கலாம். அந்த இடங்களில் தமிழர்களின் பலத்தை காட்ட வேண்டும். அதனூடாக உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான வலுவை பெற முடியும். ஜனாதிபதித் தேர்தலில் அந்த பலத்தை காண்பிப்பது, அதற்கான தருணம் கிடையாது என நினைக்கின்றேன்" என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் வாக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக வடக்கு மாகாணம் அமைந்துள்ளது. தேர்தல் காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மாவட்டம் எனவும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வன்னி மாவட்டம் எனவும் கருதப்பட்டு வாக்கு பதிவு இடம்பெறும். இந்த நிலையில், வட மாகாணத்தில் மாத்திரம் 8,99,268 வாக்குகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தை பொருத்தவரை திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல (அம்பாறை) ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. இந்த மூன்று மாவட்டங்களிலும் 13,21,043 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை தவிர, முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர். தென் பகுதியை பொருத்தவரை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமையினால் தமிழர்கள் வாக்கு எண்ணிக்கையை சரியாக கணிப்பிட முடியவில்லை. https://www.bbc.com/tamil/articles/cgrj08vr0yxo
-
அர்ச்சுனா பேசுவதும் பேசாததும் - குணா கவியழகன்
அர்ச்சுனா பேசுவதும் பேசாததும்/kuna kaviyalahan/ Dr Archchuna
-
யாழ் போதனை வைத்தியசாலையில் தவறிழைக்கும் சில வைத்தியர்கள்: உண்மையை உடைக்கும் முன்னாள் அதிகாரி
யாழ் போதனா வைத்தியசாலைமீது குற்றம் சுமத்தும் முன்னாள் அதிகாரி | பணபலம் வென்றதா?
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
நீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் - பதவி விலகினார் பங்களாதேசின் பிரதம நீதியரசர் 10 AUG, 2024 | 05:50 PM ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பங்களாதேசின் பிரதம நீதியரசர் ஒபதுல் ஹசன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் உயர்நீதிமன்றத்தை சூழ்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் பிரதம நீதியரசர் பதவி விலகுவதற்கு ஒரு மணிநேர அவகாசத்தை வழங்கிய நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார். ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர் 65 வயது பிரதம நீதியரசர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாட்டின் அனைத்து நீதிபதிகளுடனும் நீதிபதி சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்த பின்னரே இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. இந்த நடவடிக்கையை நீதித்துறையின் சதிபுரட்சி முயற்சி என ஆர்ப்பாட்டக்காரர்கள் வர்ணித்தனர். கடந்த வருடம் நியமிக்கப்பட்ட ஹசன் பதவி விலகி பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசுவாசி என கருதப்படுகின்றார். https://www.virakesari.lk/article/190773
-
தமிழ்நாடு: குற்றம் செய்து சிறை செல்ல விரும்பும் இளைஞர்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
அண்ணை அப்பிடி என்றால் இது போலத்தான் முன்னுக்கு கட்டிட்டு ஓடவிடணும்!
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
வங்கதேச ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா, பாகிஸ்தானா? ஹசீனாவின் மகன் பேட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES/SAJEEB WAZED FACEBOOK படக்குறிப்பு,வங்கதேசத்தில் ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகன் சஜீப் வாஜித் ஜாய் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறிய ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாய், தனது தாயின் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததற்கு நாட்டில் உள்ள ஒரு சிறு குழுவினரின் சதியும், ஐஎஸ்ஐயும் தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். தனது தாயின் உயிரை காப்பாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனாவின் விசாவை மேற்கத்திய நாடுகள் ரத்து செய்ததாக வெளியான தகவலும், அவர் பிற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியதாக வெளியான செய்திக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஎன்ஐ (ANI) செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், வங்கதேசத்தின் ஒரு சிறிய குழு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தான் நம்புவதாக சஜீப் வாஜித் கூறியுள்ளார். ஏனென்றால், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எந்த முகாந்திரமும் இல்லை. போராட்டக்காரர்கள் கோரியபடி இட ஒதுக்கீட்டை அரசு வெகுவாகக் குறைத்துவிட்டிருந்தது. இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் முடிவு எடுத்தது ஹசீனா அரசாங்கம் அல்ல, நீதிமன்றம் தான் என்று அவர் கூறினார். "போராட்டத்தில் காவல்துறையை அத்துமீறி தாக்குதல் நடத்துமாறு அரசு ஒருபோதும் உத்தரவிடவில்லை. அத்துமீறி அதிகாரத்தை பயன்படுத்திய காவல்துறை அதிகாரிகளை அரசாங்கம் உடனடியாக இடைநீக்கம் செய்தது, ஆனால் போராட்டக்காரர்கள் திடீரென எனது தாயாரின் அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரத் தொடங்கிவிட்டனர்" அவர் விவரித்தார். "மேலும், போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன? அவர்கள் மாணவர்கள் அல்ல, கலவரக்காரர்கள். அவர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க தூண்டப்பட்ட பயங்கரவாதிகள். நாட்டில் இனப் படுகொலை சூழலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற காரணத்தினால் எனது தாயார் பதவி விலகினார்.” என்று சஜீப் வாஜித் ஜாய் கூறியுள்ளார். அமெரிக்கா குறித்து சஜீப் வாஜித் ஜாய் கூறியது என்ன? பட மூலாதாரம்,FB/SAJEEB WAZED படக்குறிப்பு,மகள் மற்றும் மகனுடன் ஷேக் ஹசீனா ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சஜீப் வாஜித் ஜாய், `இதில் அமெரிக்கா ஈடுபட்டதா இல்லையா என்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை என்று கூறினார். ஆனால் நிலைமையைக் கூர்ந்து கவனித்தால், போராட்டக்காரர்களை அரசுக்கு எதிராக யாரோ தூண்டிவிட்டதை உணரமுடியும் என்றார். மேலும் கூறுகையில், “ஆரம்பத்தில் போராட்டம் அமைதியாக நடந்தது. முதல்கட்ட போராட்டத்திற்கு பிறகு இடஒதுக்கீட்டை அரசு குறைத்தது. வன்முறையைத் தடுக்க தேவையான எல்லாவற்றையும் அரசாங்கம் செய்தது. இந்த வன்முறை சில அடையாளம் தெரியாதக் குழுக்களால் பரப்பப்பட்டது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளால் இந்த வன்முறை தூண்டப்பட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.” என்றார். பிரதமர் மோதிக்கு சஜீப் நன்றி சஜீப் வாஜித், தனது தாயார் ஷேக் ஹசீனாவின் உயிரைக் காப்பாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார். அப்போது அவர், “இந்திய அரசின் உடனடி நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோதிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைந்து சீக்கிரம் முடிவெடுத்ததால்தான் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.” என்றார். ''உலகளவில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும். எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் அண்டை நாடுகளில் ஆதிக்கம் செலுத்த அவர் அனுமதிக்கக் கூடாது. வங்கதேசம் இந்தியாவின் கிழக்கு அண்டை நாடு. எனவே, இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ” என்றார். ஷேக் ஹசீனாவின் அரசு வங்கதேசத்தை பொருளாதார முன்னேற்றத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றதை யாராலும் மறுக்க முடியாது என்றார். "தீவிரவாதிகளை கட்டுப்படுத்தி இந்திய துணைக் கண்டத்தின் கிழக்கு எல்லையில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டினார். நாங்கள் நினைத்ததைச் செய்ய முடியும் என்பதை நிரூபித்தோம். ஆனால் நாட்டின் மற்ற அரசுகள் தோல்வியடைந்தன." என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,SAJEEB WAZED FACEBOOK படக்குறிப்பு,சஜீப் வாஜித் ஜாய் 'இடைக்கால அரசாங்கம் அரசியலமைப்புக்கு முரணானது' வங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு அரசியலமைப்பிற்கு முரணானது என சஜீப் வாஜித் தெரிவித்தார். வங்கதேச அரசியலமைப்பின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எந்த அரசாங்கமும் ஆட்சியில் நீடிக்க முடியாது என்று அவர் விளக்கினார். தொண்ணூறு நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும், எனவே இடைக்கால அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை தேர்தலை நடத்துவதாக இருக்க வேண்டும். வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 அன்று, அவருக்கும் இடைக்கால சபை உறுப்பினர்களுக்கும் குடியரசுத் தலைவர் முகமது ஷஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். யூனுஸை இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக்கியது குறித்து பேசிய சஜீப் வாஜித் "இவர்களுக்கு ஆதரவாக இந்நாட்டில் இங்கு ஒரு சிறிய குழு செயல்படுகிறது. சமூகத்தில் உள்ள மேல் தட்டு மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் உள்ளது" என்று கூறினார். "அரசாங்கத்தில் ஆலோசகராகப் பணியாற்றிய எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன், விருப்பத்தின் பேரில் ஒருவரை பதவியில் நியமிப்பது வேறு, அரசாங்கத்தை நடத்துவது வேறு. அரசியல் மற்றும் ஆட்சி அனுபவம் இல்லாத ஒருவர் நாட்டை வழிநடத்துவது மிகவும் கடினம். அவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். அவரால் ஆட்சியை நடத்த முடியுமா?” என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆகஸ்ட் 8 அன்று இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து சஜீப் வாஜித் கூறுகையில், "இந்த நாட்டின் வரலாற்றில் சிறுபான்மையினரின் பாதுகாப்பில் நம்பகத்தன்மையை நிலைநாட்டி, இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரே ஒரு அரசுதான் உள்ளது. வங்கதேசத்தின் வரலாற்றில் கடந்த 15 வருடங்கள் சிறுபான்மையினருக்கு மிகவும் பாதுகாப்பான காலமாக இருந்தது. ஷேக் ஹசீனாவின் காலத்தில் நாடு மிக விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை விமர்சிப்பவர்கள் கூட மறுக்க முடியாது. தற்போதைய தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்திற்கு வங்கதேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. அவரால் சிறுபான்மையினரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமா? சிறுபான்மையினர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நான் அவர்களைப் பற்றி கவலைப்படுகிறேன். சிறுபான்மையினரைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன். ஜனநாயகத்தை மீட்டு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் செய்ய விரும்புகிறேன். இதுவே எங்களின் இலக்கு." என்றார். https://www.bbc.com/tamil/articles/clyw2w1qpyro
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
இந்தியாவில் இருந்து வெள்ளோட்டத்திற்காக யாழ்ப்பாணம் வந்த பயணிகள் கப்பல்! நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது. அந்தவகையில், இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக இன்றையதினம்(10) 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. https://tamilwin.com/article/passenger-ship-came-to-jaffna-from-india-sailing-1723284876
-
தமிழ்நாடு: குற்றம் செய்து சிறை செல்ல விரும்பும் இளைஞர்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, ஒருவர் தனது கையில் உள்ள செல்போனில் கூகுள் மேப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தார். அக்கம் பக்கம் யார் வருகிறார்கள் என்று கவனிக்காமல் மேப் காட்டும் வழியைப் பார்த்துக் கொண்டே சென்றார் அவர். திடீரென அவரருகே ஓடி வந்த இளைஞர் அவரது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தார். செல்போனை இழந்தவர் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார். “கூகுள் மேப் பார்த்துக்கொண்டு நடப்பவர்களிடம்தான் சுலபமாகத் திருட முடியும். செல்போன், சட்டை மேல் பாக்கெட்டில் இருந்தாலும் சுலபமாகத் திருடிவிடலாம்,” என்று கூறுகிறார், சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர். கடந்த மூன்று ஆண்டுகளில் 600 செல்போன்களை தான் திருடியுள்ளதாகக் கூறும் அவர், சில நேரங்களில் திருட வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்கிறார், சில நேரங்களில் திருடும் எண்ணம் இல்லாவிட்டாலும், கைக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் செல்போன்கள் மாட்டுவதால் பழக்கத்தில் திருடுவதாகக் கூறுகிறார். இதில் ஈடுபடுவதற்கு வேகமாக ஓடுவது ‘அவசியமான திறன்’ என்று அவர் கருதுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னைப் பல்கலைக்கழக ஆய்வில், தண்டனை பெறுவது எந்த வகையிலும் தவறு செய்வதிலிருந்து தடுக்கவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது. ‘சிறையைப் பார்க்காவிட்டால் எப்படி?’ மற்றொரு இளைஞர், ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையில் பார்த்த ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். தொலைபேசியில் யாரோ அழைத்ததால் வண்டியை ஓரமாக நிறுத்திப் பேசிக் கொண்டிருந்தார். லிஃப்ட் கேட்டவரும் கீழே இறங்கி நின்றுள்ளார். அவர் பேசி முடிப்பதற்குள், லிஃப்ட் கேட்டவர், அவரது கண் முன்னே அந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். தனது வாகனத்தைத் தொலைத்த சோகத்திலும் கோபத்திலும் இருந்தவர், அன்று மாலையே மற்றொருவரின் இரு சக்கர வாகனத்தை இதே போன்று திருடியுள்ளார். தற்போது 100 இரு சக்கர வாகனங்களைத் திருடியுள்ளதாகக் கூறுகிறார் அவர். “முதல்முறை சிறைக்குச் சென்றுவரும்போது தான் கஷ்டமாக இருந்தது. அதன்பின் பழகிவிட்டது,” என்கிறார் அவர். “புழல்லியே இருந்துட்டு ஜெயிலுக்கு வரலைன்னா எப்படி?” “ஸ்கூட்டி எல்லாம் யார் கை வைப்பா? எடுத்தா ரேஸிங் போற வண்டிதான்.” “என் பொண்டாட்டி இப்பதான் வந்து பாத்துட்டுப் போனா. இனிமே திருட மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்கேன்.” “மிடில் கிளாஸ் வீட்ல திருட மாட்டேன். பெண் குழந்தைகளிடம் திருட மாட்டேன்.” இவை சென்னைப் பல்கலைக்கழக ஆய்வில் பங்கேற்ற தொடர் குற்றங்களில் ஈடுபடும் விசாரணைக் கைதிகளின் கதைகளும் கூற்றுகளும். தண்டனை பெறுவது எந்த வகையிலும் அவர்களைத் தவறு செய்வதிலிருந்து தடுக்கவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது. புழல் மத்திய சிறையில், கடந்த ஏப்ரல் மே மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நீதி அமைப்பும், சீர்திருத்த நிறுவனங்களும் குற்றவாளிகளின் நடத்தைகளைச் சீர்திருத்தவோ அல்லது மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவோ இல்லை என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அதிகம் செய்யப்படும் குற்றம் எது? சென்னைப் பல்கலைகழகத்தின் குற்றவியல் துறையால் நடத்தப்பட்ட ஆய்வில், வாடிக்கைக் (habitual) குற்றவாளிகள் சிறார்களாக அல்லது இளைஞர்களாக இருக்கும்போது குற்றங்களைச் செய்ய ஆரம்பித்தனர் என்பதும், நீண்ட காலமாக குற்றங்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மத்திய சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்ட 100 கைதிகளிடம் நேர்காணல் நடத்திய முதுகலை மாணவி பி.ஷரோன், அவர்களில் 81% பேர் திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதைக் கண்டறிந்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கிய போதிலும், குற்றம் சாட்டப்பட்ட பலர் கணிசமான காலம் விசாரணைக் கைதிகளாக இருந்துள்ளனர். பதிலளித்த மொத்த நபர்களில் 37% பேர் 90 நாட்களுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக இருந்தனர் என்பது முடிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மேலும் 37% பேர் 31-90 நாட்கள் சிறையில் இருந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள உடைமைக் (property) குற்றங்களில் ஈடுபட்ட 173 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 71 பேரில் 55 பேர் ஏற்கனவே உடைமை சார்ந்த வழக்கில் ஈடுபட்டவர்கள் என்று முதுகலை மாணவர் நல்லப்பு நிஹாரிகா கண்டறிந்தார். விசாரணைக் கைதிகளிலும் வாடிக்கையான குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தண்டனை பெற்ற பிறகும் குற்றச் செயலில் ஈடுபட்ட 157 பேரில், 46% பேர் 10-க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் உடைமை குற்றங்களைச் செய்துள்ளனர், 38% பேர் மீது இரண்டு முதல் நான்கு வழக்குகள் உள்ளன. விருப்பப்பட்டு சிறைக்குச் செல்கின்றனரா? சிறைக்குச் செல்வது அவமானமாக, அசௌகரியமாக கருதப்படலாம். ஆனால், ஆதரவற்ற பலர் அதை ஒரு பாதுகாப்பான இடமாகக் கருதுகின்றனர். தண்டனை முடிந்து வெளியே வருபவர்களுக்கு மறுவாழ்வுக்கான பயிற்சியும் நம்பிக்கையும் கிடைக்காததே இதற்கு காரணம் என்கிறார் சிறை கைதிகளின் மறுவாழ்வுக்காக தற்காலிக இல்லங்கள் நடத்தி வரும், டி.என்.பி.சி ப்ரிசன் மினிஸ்ட்ரி என்ற அமைப்பின் செயலாளர் ஏ.ஜேசுராஜா. “தொடர்ந்து திருடி வந்த 28 வயது இளைஞர் ஒருவர், பொன்னேரி சப்-ஜெயிலில் அடிக்கடி தண்டனை அனுபவித்து வந்தார். அவர் ஏன் தொடர்ந்து குற்றங்களைச் செய்கிறார் என்று விசாரித்த போது, அவருக்கு குடும்பமோ வீடோ இல்லை என்பது தெரிய வந்தது. சிறைக்கு வந்தால் மூன்று வேளை உணவும், பாதுகாப்பான இடமும் கிடைக்கும் என்பதால் எத்தனை முறை வெளியே சென்றாலும், மீண்டும் உள்ளே வருவதற்கு வழி தேடுவார். சில நேரங்களில், காவல்துறையினர் அவர் மீது வேறு சிலரின் வழக்குகளைப் பதிவதும் உண்டு,” என்கிறார் ஜேசுராஜா. பொதுவாக, ஆதரவற்ற சிறுவர்கள், சிக்கலான உறவுகள் கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகள் ஆகியோரே மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்வதாக அவர் கூறுகிறார். “இது போன்ற சிறார்கள் தான் ரவுடிகளின் கையில் சிக்கிக் கொள்கின்றனர். சிறார்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களைக் குற்றச் செயலில் ஈடுபடுத்துகிறார்கள். நாளடைவில் சிறார்கள் குற்றம் செய்யப் பழகிவிடுகின்றனர். மாதம் ரூ.15,000-க்கு வேலை கிடைத்தாலும், அந்தப் பணம் தனக்கு ஒரே நாளில் கிடைத்து விடும் என்று நினைத்து அவர்கள் வேலைக்குச் செல்வதில்லை,” என்றார். 100 ஆண்டுகளுக்குப் பிறகு லெனின் உடல் எப்படி இருக்கிறது?3 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,JESURAJA படக்குறிப்பு,ஏ.ஜேசுராஜா, செயலாளர், ப்ரிசன் மினிஸ்ட்ரி ‘மறுவாழ்வுத் திட்டங்கள் இல்லை’ ஆய்வை நடத்திய சென்னைப் பல்கலைகழக மாணவி பி.ஷாரோன், “பட்டறையில் வேலை பார்த்த ஒரு இளைஞர், லாரி போன்ற பெரிய வாகனங்களின் பாகங்களை எடுத்து, யாருக்கும் தெரியாமல் சிலருக்கு கத்தி செய்து கொடுத்ததாக கூறினார்,” என்கிறார். மேலும் பேசிய ஷாரோன், “நான் சந்தித்த விசாரணைக் கைதிகளுக்கு நாள் முழுவதும் செய்வதற்கு என்று வேலைகள் கிடையாது. எனவே முழு நாளும் அவர்கள் சுற்றி இருப்பவர்களுடன் பேசியபடிதான் கழிக்கின்றனர். அப்படி பேசிப் பழகியதில் ஒரு பைக் திருடுபவரும், ஒரு செல்போன் திருடுபவரும் நண்பர்களாகி, சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஒன்றாக இணைந்து திருடியுள்ளனர்,” என்றார். “சிறையில் இருப்பவருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்து விரிவாக எழுத்தில் உள்ளது, ஆனால் நடைமுறையில் இல்லை. காலையில் இருந்த கைதிகள் அனைவரும் ஒருவர் குறையாமல் மாலையிலும் இருக்கின்றனரா என்று உறுதி செய்வதே சிறைத்துறையின் முக்கிய கவலையாக உள்ளது,” என்கிறார் ஜேசுராஜா. பட மூலாதாரம்,RAVI PAUL படக்குறிப்பு,ப்ரிசம் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ரவி பால் முதல் முறை இளம் குற்றவாளிகளுக்கு சிறப்பு கவனம் முதல் முறை தவறு செய்த 18-24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்ள், தொடர் குற்றங்கள் செய்யும் நபர்களாக மாறுவதிலிருந்து தடுக்கச் சிறைத்துறையும் ப்ரிசம் (PRISM) என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து ‘பட்டம்’ என்ற திட்டத்தை நடத்தி வருகின்றனர். திருட்டு உள்ளிட்ட ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை பெறும் குற்றங்கள் புரிந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள எட்டு மத்தியச் சிறைகள், சென்னை சைதாப்பேட்டை சிறை, சென்னை மற்றும் மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள், வேலூரில் உள்ள பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ப்ரிசம் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ரவி பால், “2018-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை சிறையில், முதல் முறை குற்றவாளிகள் அனைவரும் பிற குற்றவாளிகளிடமிருந்து பிரித்து வைக்கப்படுகின்றனர். இது மிக மிக அவசியம். சாதாரண குற்றம் செய்து, முதல் முறை சிறைக்கு வருபவரிடம் இனி குற்றம் செய்து பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி, அடுத்தடுத்த குற்றங்கள் செய்வதற்கு சிறைக்கு உள்ளேயே, ‘ஆள் சேர்ப்பு’ நடக்கும். தற்போது மத்தியச் சிறைகளிலும் முதல் முறை குற்றவாளிகளைப் பிரித்து வைக்கத் துவங்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு என சில சிறைகளில், தனியாக ‘பட்டம்’ பிளாக் அமைக்கப்பட்டுள்ளது,” என்கிறார் அவர். “அவர்களது பின்னணியை தெரிந்து கொண்ட பிறகு, சமூகப்பணியாளர்கள், மனநல ஆலோசகர்கள் அவர்களைச் சந்தித்து ஆலோசனை வழங்குவர். அவர்களுக்குத் தேவைப்படும் திறன்கள் கற்றுத்தரப்படும். இவை இரண்டு வாரங்களுக்கு நடைபெறும். அவர்கள் வெளியே வந்த பிறகு ஆறு மாதத்துக்கு அவர்களை கண்காணிப்போம்,” என்கிறார். “2018-ஆம் ஆண்டு முதல் பட்டம் திட்டத்தின் கீழ் முதல் முறை குற்றவாளிகள் 9,000 பேர் உள்ளனர். அவர்களில் மீண்டும் குற்றம் செய்தவர்களின் எண்ணிக்கை 1%-க்கும் குறைவாக இருப்பதாகச் சிறைத்துறையினரின் தரவுகள் கூறுகின்றன,” என்கிறார் ரவி பால். https://www.bbc.com/tamil/articles/cd101lm818po
-
மேட்டூரில் அணை வெள்ளத்திற்கு நடுவே சிக்கிய நாய்கள்: டிரோன் மூலம் அளிக்கப்படும் உணவு - மீட்கப்படுவது எப்போது?
6 நாய்களும் பத்திரமாக மீட்பு மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேறும் பகுதியில் வெள்ளத்திற்கு நடுவே சிக்கியிருந்த 6 நாய்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. நாய்களுக்கு டிரோன் மூலமாக உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், 16ஆம் எண் மதகில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்பட்டது. இதனால், இன்று காலை 5 மணியளவில் வெள்ளம் குறைந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் மணல் திட்டிற்குச் சென்று நாய்களை மீட்டனர். மீட்கப்பட்ட நாய்கள் அனைத்தும் கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக மேட்டூர் தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cx2xxqw5x0xo
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அண்ணை சிறியண்ணையின் தரகுக் கட்டணம் 5வீதமா? 3வீதமா?