Everything posted by ஏராளன்
-
மூதூர் யுவதி கொலை: சந்தேக நபர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
சேருவில தங்கநகர் யுவதி கொலை; வழக்கு விசாரணையில் இருவருக்கு பிணை Published By: DIGITAL DESK 7 16 AUG, 2024 | 03:53 PM (துரைநாயகம் சஞ்சீவன்) படுகொலை செய்யப்பட்ட தங்கநகர் யுவதியின் கொலைமீதான வழக்கு விசாரணை மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் முகமட் பௌசான் முன்னிலையில் விசாரணைக்காக இன்று வெள்ளிக்கிழமை (16) எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் சகோதரியான 7ஆம் எதிராளி மற்றும் 4ஆம் எதிராளிகளுக்கு பிணை வழங்கியும், ஏனைய 5 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலை மேலும் 14 நாட்கள் நீடித்தும் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கானது இன்றைய தினம் மூன்றாவது தடவையாக மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது எதிரிகள் சார்பில் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிபதி குறித்த தரப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான காதலனின் சகோதரியான 7ஆம் எதிராளியையும், ஜே.சி.பி இயந்திரத்தின் தரகரான 4ஆம் எதிராளியையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதோடு ஏனைய 5 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தும் முகமாக விளக்கமறியலை எதிர்வரும் 30ஆம் திகதிவரை நீடித்தும் கட்டளை பிறப்பித்திருந்தார். சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என்ற இளம் பெண் படுகொலை செய்யப்பட்டு கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாகவுள்ள கிணறு ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த யூலை மாதம் 5ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதான சந்தேகநபரான யுவதியின் காதலன் உட்பட சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே இன்றைய தினம் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது கடந்த ஜூலை 19 ஆம் திகதி அன்று வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு தொடுனரான மூதூர் பொலிஸார் நான்கு எதிரிகளை குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரியிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களையும், வழக்கு விசாரணைகளையும் ஆராய்ந்ததோடு குறித்த வழக்கில் பொலிஸாருடைய விசாரணையில் திருப்தி அடையாத நீதிபதி குறித்த வழக்கை திருகோணமலை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/191227
-
வவுனியாவில் வாள்வெட்டில் நால்வர் படுகாயம்!
16 AUG, 2024 | 01:32 PM வவுனியாவில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத்தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுளைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளநிலையில் பறயநாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/191217
-
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தில் விசாரணை!
16 AUG, 2024 | 01:27 PM காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று வெள்ளிக்கிழமை (16) விசாரணைகள் இடம்பெற்றது. உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களிடையே விசாரணைகள் இடம்பெற்றது. இவ்விசாரணைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாளை 17 ஆம் திகதி பருத்திதுறை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், நாளை மறுதினம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தோருக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும் விசாணைகள் இடம்பெறவுள்ளன. https://www.virakesari.lk/article/191214
-
தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத் தூபி - கனடா தூதுவரை அழைத்து கடும் அதிருப்தியை வெளியிட்டார் அலிசப்ரி 16 AUG, 2024 | 04:13 PM கனடாவின் பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டானது, தீங்கிழைக்கும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட புனையப்பட்ட மற்றும் தேசிய சர்வதேச அளவில் எந்தவொரு பொறுப்பான அதிகாரியாலும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு என அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களாக பொருளதார நெருக்கடி நிலவிய போதிலும், மோதல் முடிவிற்கு வந்த பின்னர் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது என தெரிவித்துள்ள அலிசப்ரி கனடா அரசாங்கம் தலையிட்டு குறிப்பிட்ட நினைவுத்தூபியை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/191237
-
தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு
16 AUG, 2024 | 02:24 PM தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வட்டிராவின் மகள் பேடொங்டர்ன் சின்வட்டிரா அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 37 வயதான இவர் தாய்லாந்தின் இளம் பிரதமர் என்பதுடன் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமரை அரசமைப்பு நீதிமன்றம் பதவி நீக்கம் செய்துள்ளதை தொடர்ந்தே இவர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் பியுதாய் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சி 2023 தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள போதிலும் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துள்ளது. தாய்லாந்தின் ஸ்தம்பித நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, முன்னைய அரசாங்கங்களிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய இராணுவசதிப்புரட்சி, நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்ப்பது போன்ற சவால்களை புதிய பிரதமர் எதிர்கொள்கின்றார். https://www.virakesari.lk/article/191220
-
தலித்துகள் முதலமைச்சராக முடியாது.! திருமாவளவனின் கருத்துக்கு சீமான் - கார்த்தி சிதம்பரம் ஆதரவு..!!
தலித் முதல்வர்: திருமாவளவனின் கருத்து திமுகவிற்கு வைக்கப்பட்ட குறியா? பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த சூழலிலும் எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. மாயாவதி உத்தரபிரதேச முதல்வரானது ஒரு விதிவிலக்கு. மாநில அரசில் தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதை நாம் தமிழர் கட்சியின் சீமான், கார்த்தி சிதம்பரம் எம்.பி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் 2009-ஆம் ஆண்டு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்தீர்ப்பு, "பட்டியலின சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்குவதாக" கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், "பட்டியல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கவேண்டும்" என்பதை வலியுறுத்தியும் கடந்த செவ்வாய் அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமாவளவன் பேசியது என்ன? அந்த ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் பதவியில் தலித் சமூகத்தினர் வர முடியாத சூழல் இருப்பதாக, திருமாவளவன் தெரிவித்தார். வன்னியர் 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் வேறு சாதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அரசியல் லாபத்துக்காக அறிவித்ததால்தான், சட்டப்படியான சிக்கலை அது சந்தித்ததாக திருமாவளவன் குறிப்பிட்டார். தொடர்ந்து, முதலமைச்சர் பதவி குறித்துப் பேசிய திருமாவளவன், " மாயாவதி, உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக வந்தது என்பது விதிவிலக்கு. எந்த சூழலிலும் ஒரு தலித், மாநில முதலமைச்சராக வர முடியாது. தி.மு.க அரசு மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், திமுக அரசு நிலையானது அல்ல. மாநில அரசுதான் நிலையானது. எந்த சூழலிலும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் நிலை இங்கே இல்லை" என்றார். சீமான், கார்த்தி சிதம்பரம் ஆதரவு திருமாவளவனின் கருத்தில் தாம் உடன்படுவதாகக் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தி.மு.க அரசு மீது நம்பிக்கை உள்ளதாக திருமாவளவன் கூறியதை எதிர்க்கிறேன். கல்வி அமைச்சராக ஆதி திராவிடரை நியமித்தால் படிப்பு ஏறாதா? அம்மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையைத் தவிர வேறு எந்த துறையை இவர்கள் கொடுத்துள்ளனர்?" என செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார். பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு,திருமாவளவனின் கருத்தை சீமான் வரவேற்றுள்ளார் ''பல மாநிலங்களில் தலித் தலைமையை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறார்கள், அதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அந்தவகையில் திருமாவளனின் கருத்தில் உடன்படுகிறேன். தமிழ்நாட்டில் கக்கனுக்குப் பிறகு தலித் ஒருவர் முக்கியமான அமைச்சர் பொறுப்புக்கு ஏன் வர முடியவில்லை என்பதை ஆட்சியாளர்களிடம் தான் கேட்க வேண்டும்'' என ஊடக நிருபர்களிடம் பேசிய போது காங்கிரஸ் கட்சியின் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். மாநில கட்சிகள் தயங்குகின்றன- ரவிக்குமார் "தமிழ்நாட்டை மையப்படுத்திதான் திருமாவளவன் பேசினார். பட்டியலின சமூக வாக்குகள் மடை மாறுவது என்பது ஆட்சியை தீர்மானிக்கிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் அது எதிரொலிக்கிறது. அப்படி இருந்தும் அவர்களுக்கு கட்சி மற்றும் ஆட்சியில் அதிகாரத்துவம் உள்ள பதவிகளை வழங்குவதற்கு மாநில கட்சிகள் தயங்குகின்றன. அனைத்துக் கட்சிகளிலும் இதுதான் நிலை" என பிபிசி தமிழிடம் கூறினார் வி.சி.க. பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பியுமான ரவிக்குமார். பட மூலாதாரம்,RAVIKUMAR படக்குறிப்பு,தமிழ்நாட்டை மையப்படுத்தி திருமாவளவன் பேசியதாக ரவிக்குமார் கூறுகிறார் "அ.தி.மு.க., என்ற கட்சி தொடங்கப்படும் வரையில் தலித் மக்களின் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. அம்மக்கள் காங்கிரஸை வெகுவாக ஆதரித்தனர். எம்.ஜி.ஆர் அரசின் கவர்ச்சிகர திட்டங்கள், பட்டியலின மக்களுக்கு நேரடியாக பலன் அளிக்கக் கூடியவையாக இருந்தன. அதனால் அ.தி.மு.க.,வை நோக்கி அவர்கள் ஈர்க்கப்பட்டனர்" எனக் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். திருமாவளவன் பேச்சின் பின்னணி "பிற்படுத்தப்பட்டோர், அதிகாரத்தைத் தங்கள் கையில் குவித்து வைப்பதற்கான வாய்ப்பை மண்டல் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் உருவாக்கியது. மண்டல் பரிந்துரைகளை தலித் இயக்கங்கள் ஆதரித்தாலும் தலித்துகள் மீதான அடக்குமுறைகளும் அரசியல்ரீதியாக ஓரம்கட்டப்படுவதும் நடந்தது. இதன் விளைவாக, கட்சிகளிலும் ஆட்சிகளிலும் அதிகாரத்துவம் உள்ள பதவிகளில் அவர்களால் வர முடியவில்லை. இந்த சூழலை கவனத்தில் கொண்டுதான், 'தலித்துகளால் முதல்வராக வர முடியாது' என்ற தொனியில் திருமாவளவன் குறிப்பிட்டார்" என்கிறார் ரவிக்குமார் எம்.பி. தி.மு.க., மீதான கோபமா? " அ.தி.மு.க., தி.மு.க., என இரு கட்சிகளையும் இணைத்து அவர் சொல்கிறார். தற்போது அதிகாரத்தில் தி.மு.க., இருப்பதால் அவர்களை நோக்கி நேரடியாக சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். தி.மு.க., மீது தனக்குள்ள வருத்தத்தையே திருமாவளவன் வெளிப்படுத்துகிறார். " என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தி.மு.க., என்பது இடைநிலை சாதிகளுக்கான கட்சியாகவும் வாரிசு அரசியலை முன்னிறுத்தும் கட்சியாக மாறிவிட்டது. இதனால் தலித் மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. மத்திய அமைச்சரவையில் ஆ.ராசாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பை கருணாநிதி வழங்கினார். அதுவே, மாநில அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த யாருக்காவது முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளதா?" எனவும் ஆர்.மணி கேள்வி எழுப்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆ. ராசா மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்துள்ளார். அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த தனபாலுக்கு அ.தி.மு.க., அரசில் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டிய மணி, "தி.மு.க.,வில் இருந்து வி.பி.துரைசாமி உள்பட சிலர் வெளியேற காரணமே, சாதிப் பாகுபாடுகள்தான். தமிழ்நாடு அரசியலில் தி.மு.க.,வின் பங்களிப்பை மறக்க முடியாது. ஆனால், தலித் மக்களுக்கு அரசியலில் அதிக முக்கியத்துவத்தை அக்கட்சி கொடுக்கவில்லை.'' என்கிறார் மேலும் அவர்,''தலித் மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்காமல் இடைநிலை சாதிகளின் மேலாதிக்கத்தை தி.மு.க., தொடர்ந்து நிறுவுவது சரியானது அல்ல. அந்தக் கோபத்தைத்தான் திருமாவளவன் வெளிக்காட்டுகிறார்" என்கிறார். இந்தக் கருத்தில் முரண்படும் ரவிக்குமார் எம்.பி, "சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டாலும் ஒருவரால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. சபாநாயகருக்கு தனித்தன்மை, சுதந்திரம் உள்ளது என்றாலும் அதற்கேற்ற நபரை ஆளும் கட்சி முன்னிறுத்துவதில்லை. தங்களுக்கு வேண்டிய ஒருவரைத்தான் அப்பதவிக்கு கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் தி.மு.க.,வை மட்டும் குறைகூற வேண்டியதில்லை. இடதுசாரிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்கட்சி ஜனநாயகம் என்பது இல்லை" என்கிறார். தி.மு.க.,வே தலித் கட்சி தான்- ஆர்.எஸ்.பாரதி "கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை தி.மு.க., கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு சரியா?" என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். "தி.மு.க.,வே தலித் கட்சிதான். இப்படியொரு பேச்சை அண்ணா, கருணாநிதி காலத்தில் இருந்தே கேட்டு வருகிறோம். தலித் மக்களின் முன்னேற்றத்துக்கு தி.மு.க., பாடுபட்டு வருவது குறித்து பலரும் கூறியுள்ளனர்" என்கிறார். "ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு. ஒரே நிலைப்பாட்டில் இரு கட்சிகளும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தி.மு.க., எப்போதுமே தலித் இயக்கம் தான்" என்கிறார், ஆர்.எஸ்.பாரதி. பட மூலாதாரம்,DMK OFFICIAL FACEBOOK PAGE படக்குறிப்பு,இப்படியொரு பேச்சை அண்ணா, கருணாநிதி காலத்தில் இருந்தே கேட்டு வருகிறோம் என்கிறார் ஆர்.எஸ். பாரதி உள்ஒதுக்கீடு தீர்ப்பின் தொடர்ச்சிதான், இதுபோன்ற பேச்சுகளுக்கு தொடக்கமாக இருக்கிறதா? என, ரவிக்குமாரிடம் கேட்டபோது, ''முன்னாள் முதல்வர் கருணாநிதி விதிவிலக்கான ஒரு தலைவர். இந்தியாவில் யாரும் சிந்திக்காத ஒன்றை சிந்தித்து, உள்ஒதுக்கீடு வழங்கினார். ஆனால், இன்று இதர மாநிலங்களைப் பார்க்கும்போது, 'இது ஒரு பெரிய ஆபத்து' என்பதை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. எஸ்.சி இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான முயற்சி இது" என்கிறார். அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக, 2009 ஆம் ஆண்டில் தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு காட்டாமல் இப்போது வி.சி.க., எதிர்ப்பது குறித்து பேசிய அவர்,"கருணாநிதியின் நேர்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரித்தோம். இதன்பின்னர், கல்வி, வேலை ஆகியவற்றில் முதல் முன்னுரிமையை அருந்ததிய மக்களுக்கு எனக் கொண்டு வந்துவிட்டனர். இதனால் இதர சாதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது" என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c4gx9xy7nd7o
-
சிரிக்க மட்டும் வாங்க
அண்ணை மனைவிக்கு புரிந்தால் ஊஊஊஊ தான்!
-
சொந்தபந்தமா சொத்து சுகமா?! பட்டிமன்றம் - நடுவர் சண்முகவடிவேல் ஐயாவின் பேச்சு
அக்கா சிரிப்புக் குறி தானே எனக்கு கறுப்பு வெள்ளையாகத் தெரிகிறது! அதனால விளங்கவில்லை.
-
தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கு அமைய ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் - இலங்கை மத்திய வங்கி
Published By: DIGITAL DESK 3 16 AUG, 2024 | 11:26 AM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர் படையின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு முதலிரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையில் உள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை முதன்மை பணவீக்கம் குறைவானதாக பேணப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நாணயக்கொள்கை (2024 ஆகஸ்ட்) அறிக்கையில் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழான பணவீக்க இலக்கு தொடர்பான சிறப்புக் குறிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது. அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மை பொருளாதார மீட்சியின் மீதான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் அதேவேளை, திறமைசாலிகளின் உயர்ந்தளவான வெளியேற்றமானது தொழிலாளர் பற்றாக்குறைகளுக்கும், குறைந்த உற்பத்தித் திறனுக்கும் வழிவகுக்கும் இது பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்கான இடர்நேர்வாக அமையும் என்றும் இலங்கை மத்திய வங்கி கூறுகின்றது. 2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் உயர்வடைந்துள்ள பணவீக்கத்தை 5 வீதம் நிலையாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்புள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது. பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர்படையின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. வாழ்க்கை செலவு உயர்வுக்கும், ஊழியர்களின் சம்பள வீதத்துக்கும் இடையில் நீண்ட இடைவெளி காணப்படுவதாகவும் சம்பள அதிகரிப்பு நாணய கொள்கை செயற்திட்டத்துக்கு பாதகமானதாக இருக்காது என்றும் இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது. இதேவேளை, ஆட்சி மாற்றத்துக்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை இனி மாற்றியமைக்க முடியாது எனவும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/191199
-
குரங்கம்மை பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம் - எப்படிப் பரவுகிறது?
அவசரநிலை பிரகடனம் : ஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பரவக்கூடும் - உலக சுகாதார ஸ்தாபனம் Published By: DIGITAL DESK 3 16 AUG, 2024 | 10:05 AM குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் புதன்கிழமை (14) அறிவித்து இருந்தது. குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்படக்கூடிய தொற்று நோய் ஆகும். ஆபிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் இந்த புதுவகையான வைரசானது, கொங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரசானது ஆபிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று சமீபத்தில் கூறினார். இந்த சூழலில் உலக சுகாதார ஸ்தாபனம், குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், ஆபிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக சுவீடன் நாட்டில் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசானது, கிளாட் 1 என்ற வகையைச் சேர்ந்தது. இதுபற்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய மண்டலத்திற்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவீடனில் கிளாட் 1 வைரசின் பரவலானது, நம்முடைய உலகில் ஒன்றோடொன்று நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு ஆகும். வருகிற நாட்களில் மற்றும் வாரங்களில் ஐரோப்பிய பகுதிகளில் கிளாட் 1 பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. https://www.virakesari.lk/article/191189
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் தகுதி 2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307951
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம் 16 AUG, 2024 | 10:28 AM ரஸ்யாவின் கேர்ஸ்க்கில் தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தனது இராணுவ அலுவலகத்தை திறந்துள்ளது. ரஸ்யாவின் மேற்கில் உள்ள கேர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊருடுவியுள்ள உக்ரைன் அங்கு தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் இராணுவ அலுவலகத்தை திறந்துள்ளதாக உக்ரைனின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த அலுவலகம் சட்டமொழுங்கை பேணுவதற்காகவும் மக்களின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்திசெய்வதற்காகவும் இந்த அலுவலகத்தை திறந்துள்ளதாக உக்ரைனின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வியாழக்கிழமை தனது படைகள் மேலும் முன்னேறியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கேர்க்ஸ் பிராந்தியத்திற்குள் உக்ரைன் படையினர் உள்ளே முன்னேறியுள்ளனர், 12 குடியிருப்புகள் உட்பட 1500 சதுரகிலோமீற்றரை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றனர் என ஜெனரல் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் ரஸ்யாவின் பகுதிகளை கைப்பற்றும் நோக்கம் இல்லை என தெரிவிக்கும் உக்ரைன் ரஸ்யாவை சமாதானத்திற்கு இணங்கச்செய்வதற்காகவே இந்த நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளது. உக்ரைனின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191192
-
வெற்றிக்காக போட்டியிடவில்லை; தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்தவே போட்டியிடுகிறேன் - பா.அரியநேத்திரன்
Published By: VISHNU 16 AUG, 2024 | 03:16 AM (இராஜதுரை ஹஷான்) தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு சக்தியாக இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் என தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சிங்கள அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை, கடந்த கால பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இதன் காரணமாகவே இம்முறை தனித்து போட்டியில் இறங்கியுள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தமிழ் பொது கட்டமைப்பின் ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படுகிறது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெகு விரைவில் வெளியிடுவோம். அத்துடன் தேர்தல் பிரச்சாரங்களையும் முன்னெடுப்போம். இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம். எமது வெற்றி அரசுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/191182
-
குரங்கம்மை பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம் - எப்படிப் பரவுகிறது?
அவசர நிலையை அறிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் உலக சுகாதார அமைப்பு ஆபிரிக்காவில் உள்ள mpox வைரஸ் நோயின் புதிய மாறுபாட்டின் காரணமாக, சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது, இது அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையென தெரிவிக்கப்பட்டுளளது. 13 ஆபிரிக்க நாடுகளில் mpox வைரஸ் நோய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் புதிய வடிவம் மிக வேகமாக பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. கடந்ந இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாக இந்த நோய்க்கான எச்சரிக்கையை அமைப்பு வெளியிட்டுள்ளது. https://thinakkural.lk/article/307940
-
நாட்டின் ஒற்றையாட்சியை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - நாமல் ராஜபக்ஷ உறுதி
Published By: VISHNU 16 AUG, 2024 | 12:15 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்தி ஆகியவற்றை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும். தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவதால் எவரும் எமக்கு சவாலல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (15) வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்திகளை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும். இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். நபர்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் செயற்படவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம். நாங்கள் செயற்படுகிறோம். அரசியலில் நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள். ஆகவே எம்மை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைவார்கள் என்றார். இதன்போது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்பாக ஒன்றுக்கூடி நாமல் ராஜபக்ஷவை வரவேற்றார்கள். பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள். ஆதரவாளர்கள் மத்தியில் வந்த நாமல் ராஜபக்ஷ தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். https://www.virakesari.lk/article/191181
-
கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா: ஜிப்லைனில் ஆற்றைக் கடக்கும் துணிச்சல் எப்படி வந்தது?
படக்குறிப்பு,செவிலியர் சபீனாவின் பணியைப் பாராட்டி கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 15 ஆகஸ்ட் 2024 ரெயின்கோட் மட்டுமே அணிந்திருக்கிறார். கையில் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய ஒரு பையை இறுகப் பற்றியுள்ளார். கீழே ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்றை ஜிப்லைன் வாயிலாகக் கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது சூரல்மலையில் இருந்து இப்படி ஜிப்லைன் மூலமாக ஒரு செவிலியர் முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார். அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா. ஜிப்லைன் வாயிலாகச் செல்வது அவருக்கு இதுவே முதன்முறை. மழை பெய்துகொண்டிருக்கிறது, மீண்டும் நிலச்சரிவுக்கான எச்சரிக்கை. ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை என்பது அவரிடம் பேசியதில் புரிந்தது. பிபிசி தமிழ் சார்பில் அவரிடம் “ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளிப்பதற்குப் பயமில்லையா?” எனக் கேட்டபோது, “பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. பயம் இல்லை” என பதிலளித்தார். அவருடைய பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி சுதந்திர தின விழாவில் கௌரவித்தது. செவிலியர் சபீனா, ஷிஹாப் தங்கல் மனிதநேய மையம் எனும் தொண்டு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கிக் கிடப்பவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் பணியை அவர் செய்து வருகிறார். ஜூலை 29 அன்று கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சூரல்மலை, முண்டகை எனும் இரண்டு பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இரு கிராமங்களையும் இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது மீட்புப் பணிகளில் குறிப்பிடத்தக்க தடங்கல்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, சூரல்மலையில் இருந்து முண்டகைக்கு அந்தப் பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே, முண்டகைக்குச் சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தாமதமானது. எனவே, ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட மீட்புக் குழுவினர் சூரல்மலையில் இருந்து ஜிப்லைன் அமைத்து அதன் வாயிலாக முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டியிருந்தது. இப்படி ஜிப்லைன் வாயிலாக முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்திருக்கிறார் செவிலியர் சபீனா. ஆபத்தை மீறி உதவி “ஜூலை 29ஆம் தேதி நள்ளிரவு நிலச்சரிவு ஏற்படுகிறது. 30ஆம் தேதி முதலுதவி உபகரணங்களை எடுத்துக்கொண்டு உடனடியாக வருமாறு எங்கள் குழுவிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது." "எங்கள் குழுவிலிருந்து ஏற்கெனவே பிந்து, சிந்தியா என்ற இரு செவிலியர்கள் அங்கு சென்றிருந்தனர். காலை 10-10.30 மணிக்கு நாங்கள் சூரல்மலைக்குச் சென்றபோது, ‘யாரும் இங்கு நிற்க வேண்டாம், ஆபத்து. மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம்’ என எச்சரித்தனர்” என்கிறார் பிபிசியிடம் பேசிய சபீனா. சபீனாவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. “நாம் வந்தது உதவுவதற்காகத்தானே, ஏன் திரும்பிச் செல்ல வேண்டும், காத்திருக்கலாம் என எனக்குத் தோன்றியது” என்கிறார் அவர். பட மூலாதாரம்,SABEENA படக்குறிப்பு,ஜிப்லைன் மூலம் முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளார் சபீனா. அப்போது மீட்புக்குழுவினர், சூரல்மலையிலிருந்து முண்டகைக்கு ஜிப்லைன் வாயிலாகச் சென்று சிகிச்சை அளிக்க ஆண் செவிலியர்கள் யாரும் இருக்கின்றனரா எனக் கேட்டுள்ளனர். ஆனால், சபீனாவின் குழுவில் ஆண் செவிலியர்கள் இல்லை. பெண் செவிலியர்கள் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என மீட்புக்குழுவினர் கூறியதாக சபீனா தெரிவிக்கிறார். “ஆனால், நான் ஜிப்லைன் வாயிலாகச் சென்று முதலுதவி அளிக்க முன்வந்தேன். ஜிப்லைன் மூலமாக ஆற்றைக் கடந்து, முண்டகைக்குச் சென்று சுமார் 30-35 பேருக்கு முதலுதவி அளித்தேன்” என்கிறார் சபீனா. “ஜிப்லைனில் செல்லும்போது நானே பெல்ட் அணிந்தேன். பெல்ட் இறுக்கமாக இல்லை என மீட்புக்குழுவினர் பயந்தனர். இருந்தாலும் சென்றேன். முதலுதவி உபகரணங்கள் உள்ள பை கீழே விழுந்துவிடப் போகிறது என ஆரம்பத்தில் பயந்தேன்” எனக் கூறுகிறார் அவர். நள்ளிரவிலும் முதலுதவி சூரல்மலை - முண்டகை இடையே மீட்புப் பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 1 அன்று இந்திய ராணுவத்தின், ‘மெட்ராஸ் சாப்பர்ஸ்’ எனும் மெட்ராஸ் இன்ஜினியர் குழு குறுகிய நேரத்தில் ‘பெய்லி பாலம்’ எனப்படும் தற்காலிக இரும்புப் பாலத்தைக் கட்டினர். அப்பிரிவின் மேஜர் சீதா ஷெல்கே எனும் அதிகாரியின் கண்காணிப்பில்தான் அப்பாலம் 31 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு வரை மீட்கப்படும் சடலங்கள், காயமடைந்தவர்கள் என எல்லோரையும் ஜிப்லைன் வாயிலாகத்தான் கட்டி மீட்புக் குழுவினர் அனுப்பினர். பட மூலாதாரம்,SABEENA படக்குறிப்பு,ப்நள்ளிரவு 12 மணிவரைகூட முதலுத பணிகளை மேற்கொண்டதாகக் கூறுகிறார் செவிலியர் சபீனா. பாலம் அமைக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் கூடலூரில் வீட்டிலிருந்து சூரல்மலைக்கு முதலுதவி உபகரணங்களுடன் வந்து, முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் கூடலூர் திரும்ப வேண்டும் என்று அப்போதைய சூழலை விவரித்தார் சபீனா. "முதல் நாள் மட்டும்தான் முண்டகைக்கு ஜிப்லைனில் சென்று அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். அப்போது இரவு 12 மணிவரை அங்கே இருந்தோம். அடுத்தடுத்த நாட்கள் சூரல்மலையில், மீட்புப் பணியின் போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தோம்.” 'பயம் இல்லை' இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒருவரைத் தங்கள் குழுவைச் சேர்ந்த செவிலியர் சி.பி.ஆர். எனப்படும் உயிர்காக்கும் சிகிச்சையளித்து காப்பாற்றியதாக அவர் கூறுகிறார். “எனக்கு எந்தப் பயமும் அந்தச் சூழலில் இல்லை. விரைந்து சென்று காப்பாற்ற வேண்டும் என்றுதான் தோன்றியது. ஏற்கெனவே மீட்புக் குழுவினர் அங்கு சென்று திரும்பினர். அதனால் எனக்கும் பயம் ஏற்படவில்லை” என்கிறார் அவர். சடலங்களும் காயமடைந்தவர்களும் ஒரே இடத்தில் கிடந்ததாகவும் சில நேரத்தில் சடலத்தைத் தாண்டியும், (அறியாமல் சடலங்களை மிதித்தும் செல்ல வேண்டியிருந்ததாக) கூறும் அவர், அந்தச் சூழல் தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறுகிறார். பட மூலாதாரம்,SABEENA படக்குறிப்பு,காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே முதன்மையாக இருந்ததாககக் கூறுகிறார் சபீனா. தான் முன்பு பணியாற்றிய தனியார் நிறுவனம் ஒன்றில் தாம் மிகவும் மதித்த ஒரு நபர் புற்றுநோயால் இறக்கவே, அதன் காரணமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி செய்ய முடிவெடுத்துள்ளார் சபீனா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்த சபீனா, வயநாடு நிலச்சரிவு துயரத்தையும் கனத்த மனதுடன் தாங்கிக்கொண்டு பணியை மேற்கொள்ள முடிந்ததாகக் கூறுகிறார். ஒற்றைப் பெற்றோரான சபீனா, தனது ஒரே மகளையும் செவிலியர் படிப்பைப் படிக்க வைத்திருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cd9dld80zw0o
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையைத் தொடர்ந்து பேணும் கனடாவின் நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேற்பு Published By: DIGITAL DESK 3 16 AUG, 2024 | 08:42 AM (நா.தனுஜா) கனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் அடங்கிய பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் உள்ளடக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை அரசாங்கம் வரவேற்பு வெளியிட்டுள்ளது. கனேடிய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கியது. அப்பட்டியல் 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். அதற்கமைய இவ்வருடம் ஜுன் மாதம் 7 ஆம் திகதி அப்பட்டியல் மீளப்புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு வரவேற்பு தெரிவித்து வெளிவிவகார அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் 'கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிய உலகத்தமிழ் அமைப்புடன் இணைந்ததாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் தொடர்ந்து உள்ளடக்குவதற்கு கனேடிய அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பித்தல் மீளாய்வின் பிரகாரம், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எச்சங்கள் சர்வதேச ரீதியில் நிதி திரட்டலிலும், இயங்குகையிலும் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 'உலகத்தமிழ் அமைப்பு தொடர்பில் கனேடிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில், அவ்வமைப்பானது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாக புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்வமைப்புக்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதன் காரணமாகவே அவற்றைத் 'தடை பட்டியலில்' பேணுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது' எனவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/191187
-
சொந்தபந்தமா சொத்து சுகமா?! பட்டிமன்றம் - நடுவர் சண்முகவடிவேல் ஐயாவின் பேச்சு
சரி அக்கா, இனி குறைவாக இணைக்கிறேன். 20 நிமிடத்திற்கு பின்னர் குடும்ப மரத்தைப் பற்றி பேசி இருந்தார். ஜப்பானியர்களுக்கு 25 தலைமுறையின் பெயர்கள் தெரிந்திருக்குமாம்!
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் விதித்துள்ள புதிய நிபந்தனை போர் அமைதிக்கு ரஷ்யா(Russia) சம்மதம் தெரிவித்தால் ஊடுருவலை நிறுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் (Ukraine) - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்துக்கொண்டிருக்கையில் அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் படைகள் ஊடுருவியது. உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000க்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் குறித்த பகுதியில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ஊடுருவல் இரண்டாம் உலக போருக்கு பிறகு ரஷ்ய நிலப்பரப்பிற்குள் நடந்த மிகப்பெரிய ஊடுருவலாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா போர் அமைதிக்கு ஒப்புக் கொண்டால், ரஷ்யாவில் உக்ரைனிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Georgiy Tykhy தெரிவித்த தகவலில், போர் அமைதிக்கு ரஷ்யா எவ்வளவு விரைவாக சம்மதம் தெரிவிக்கிறதோ, அவ்வளவு விரைவாக ரஷ்யாவிற்குள் உக்ரைனிய பாதுகாப்பு படைகளின் தாக்குதல் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் நிபந்தனை எனினும், ரஷ்யாவுக்குள் (Russia) ஊடுருவி வரும் உக்ரைனிய (Ukraine) படைகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு தாக்குல்களை ரஷ்ய படைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னிணியில், குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைனிய வீரர்களுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 420 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதேவேளை, குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகளால் ஏவப்பட்ட 4 ஏவுகணைகளை ரஷ்யா தாக்கி அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது. https://ibctamil.com/article/ukraine-offers-peace-for-end-to-incursion-1723655761?itm_source=parsely-api
-
சொந்தபந்தமா சொத்து சுகமா?! பட்டிமன்றம் - நடுவர் சண்முகவடிவேல் ஐயாவின் பேச்சு
பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்களின் பேச்சு 16.33 வரை, அதன் பின்பு நடுவரின் பேச்சு. குடும்ப மரம் (Family tree) என்பது குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை ஆகும். இதை கொடிவழி என்றும் கூறுவர். இது மரத்தின் அமைப்பினை தலைகீழாக மூதாதை முதல் பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது.[1][2][3] இதில் குடும்ப நபர்களின் பெயர், புகைப்படம், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தேதி மற்றும் தொடர்பு குறிப்புகள் இருக்கும். இதனை தாய்வழி உறவு முறை, தந்தைவழி உறவு முறை, கணவன், மனைவி, மகன், மகள், மணவழிக் குடும்பம், உறவுமுறைகளை விரிவுபடுத்தி கொள்ளலாம்.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் : சிந்துஜாவின் மரணம் குறித்து நீடிக்கும் சர்ச்சை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா என்பவரின் மரணம் குறித்து ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம் அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்க வில்லை என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயமானது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் அபிவிருத்திக்குழு ஊடாக ஊடகங்களுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (15) மாலை அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “28.07.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த ஆ.சிந்துஜா என்ற இளம் தாயின் மரணம் வைத்தியர்களாகிய எங்களையும் வேதனைப்படுத்தியது மட்டுமன்றி உங்களைப் போன்று அதே அளவு மன அமைதியின்மையையும் ஏற்படுத்தியது உண்மை. நிறுவனத்தில் பணி ஆயினும், ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம். அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்கவில்லை ஆனால் நிறுவனத்தின் தலைவர் என்ற அடிப்படையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் இவ் விடயத்திற்கு நாங்கள் பொறுப்பு கூற கடமைப்பட்டிருக்கிறோம் ஆகவே பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற்று உண்மைகள் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார். சம்பவம் நடந்த தினத்திலிருந்து நிறுவன ஊழியர்களாகிய நாம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தோம், 28-07-2024 - தாயின் மரணம் 29-07-2024 – பாதிக்கப்பட்ட குடும்பத்தை உள்ளடக்கிய வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையிலான மீளாய்வு நடைபெற்றது அத்தோடு தாயின் மரணம் வைத்தியசாலையின் பணிப்பாளரால் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது. 30-07-2024 - வைத்தியசாலை பணிப்பாளரால் ஆரம்பகட்ட புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டது. 31-07-2024 - பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரால் மரண விசாரணை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 01-08-2024 - வைத்தியசாலை பணிப்பாளரால் மாகாண சுகாதார பணிமனையின் சுயாதீனமான விசாரணைக்காக விண்ணப்பிக்கப்பட்டது. 02-08-2024 - பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரின் ஆரம்ப புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டது. 03-08-2024 - மாகாண சுகாதார பணிமனையின் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. 08-08-2024 - சுகாதார அமைச்சின் விசாரணை மீளாய்வு நடைபெற்றது. பொது அமைப்பு மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கையில் அது தொடர்பான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் பொது அமைப்புகளுக்கும் கலந்துரையாடல்கள் மூலம் அறிய தரப்பட்டு கொண்டிருந்தன. இவற்றிலிருந்து அன்பானதும் பொறுப்பு மிக்கதுமான மன்னார் மாவட்ட மக்களுக்கு நாம் தெரியப்படுத்துவது, நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைந்து நாம் கருத்து வெளியிடாமல் இருந்ததென்பது எதையும் மூடி மறைக்கும் நோக்கில் இழுத்தடிக்கும் நோக்கிலோ அல்லது பிழைகளுக்கு துணை போகும் நோக்கிலோ அல்ல. இது தொடர்பான தற்போதைய நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சின் மூலம் தீர்மானிக்கப்படும் என்பதால் இறந்த இளம் தாய்க்கு நீதி வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை கடிதம் மூலம் சுகாதார அமைச்சிற்கு அறிக்கை இட்டுள்ளோம். வைத்திய சேவை தற்சமயம் பல்வேறு காரணங்களால் மக்களுக்கும் வைத்திய சேவைக்கு இடைப்பட்ட இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை அல்ல. ஆகவே வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளையோ முன்னேற்றங்கள் தொடர்பான கருத்துக்களையோ எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறியத்தருவது மக்களான உங்களின் தார்மீகக் கடமையாகும் என்பதையும் இவ்வறிக்கை மூலம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இது உங்கள் வைத்தியசாலை, நாங்கள் உங்கள் சேவையாளர்கள் இங்கு இடம்பெற்ற பிழை ஒன்றை வைத்து அனைவரையும் பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டுவது என்பது ஒட்டுமொத்த வைத்தியசாலையையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி கவலையடையச் செய்கிறது. எனினும் நாம் உங்களுடன் சேர்ந்து பயணிப்போம் இந்த விடயத்தில் மட்டுமன்றி எதிர்வரும் சந்தர்ப்பங்களிலும் உங்களுடன் இணைந்து வைத்தியசாலையை முன்னேற்றுவதை எமது மனப்பூர்வமான கடமையாக கருதுகின்றோம். இந்த அறிக்கையானது பொதுமக்களுக்கு தெளிவினை ஏற்படுத்தி மக்களுக்கும் வைத்தியசாலைக்கும் இடையிலான நம்பிக்கையை மீளக் கட்டி எழுப்பும் செயற்பாடுகளில் ஒன்றாகவே வெளியிடப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/information-about-the-death-of-mother-in-mannar-1723726108
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
கைகொடுத்தார் ரணில்: கும்பிட்டார் சஜித் தேர்தல்கள் ஆணைக்குழுவில் 2024 தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி வியாழக்கிழமை (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பகல் 11 மணியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்க, காலை 11 மணி முதல் 11.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தமாக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். எனினும், வேட்பு மனுக்களை 39 பேர் மட்டுமே தாக்கல் செய்தனர். அதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்து எழும்பி பின்னால் சென்றார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்துவதற்கு கையை நீட்டினார். எனினும், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்திலேயே அமர்ந்திருந்த சஜித் பிரேமதாச கையை கொடுக்காது, கைக்கூப்பி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வணக்கம் செலுத்தினார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ககடததர-ரணல-கமபடடர-சஜத/150-342216
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை நடத்துமாறு ஐசிசி விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது 15 AUG, 2024 | 02:38 PM (நெவில் அன்தனி) மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னின்று நடத்துமாறு ஐசிசி விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷில் அக்டோபர் மாதம் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற அரச விரோத வன்முறைகளாலும் அதனால் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களாலும் இப் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஐசிசி எண்ணியுள்ளது. இது தொடர்பாக இந்த மாதம் 20ஆம் திகதி முடிவெடுக்கவுள்ளது. இப் போட்டியை நடத்துவதற்கு இந்தியா மறுத்துள்ளதால் பெரும்பாலும் இலங்கையில் அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இப்போட்டிகள் நடத்தப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது. 'உலகக் கிண்ணத்தை நடத்த முடியுமா என அவர்கள் (ICC) எம்மிடம் கேட்டது. நான் முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டேன்' என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 'இப்போது பருவமழைக் காலத்தில் இருக்கிறோம். அதனைவிட அடுத்த வருடம் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியை நடத்தவுள்ளோம். தொடர்ச்சியாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவேண்டும் என்ற ஒப்புதலைக் கொடுக்க நான் விரும்பவில்லை' என்றார் அவர். இதேவேளை, பங்காதேஷின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அனைத்து விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 'பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினர், அவர்களது பாதுகாப்பு முகவர்கள், எமது சுயாதீன பாதுபாப்பு ஆலோசர்கள் ஆகியோருடன் இணைந்து பங்களாதேஷின் முன்னேற்றங்களை ஐசிசி உன்னிப்பாக அவதானித்துவருகிறது' என ஐசிசி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'போட்டியில் பங்குபற்றும் அனைவரினதும் உயிர் பாதுகாப்பு மற்றும் நலன்களே எம் முன் உள்ளே இருக்கும் பிரதான விடயமாகும்' என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தவேண்டும் என்பதில் பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கம் இறுதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எவ்வாறாயினும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகியன விடுத்துள்ள கடுமையான பயண பாதுகாப்பு ஆலோசனைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு உள்ள பிரதான சவாலாகும். பாதுகாப்பு சவால்கள் ஒருபுறமிருக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பெரும் நெருக்கடியில் உள்ளது. அவாமி லீக் அரசாங்கம் கடந்த 5ஆம் திகதி கவிழ்க்கப்பட்டதை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான நஸ்முல் ஹசன் பதவியிலிருந்து விலகினார். அத்துடன் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய பல சபைத் தலைவர்களுக்கு இடையிலான தொடர்புகளும் அற்றுப்போயுள்ளது. இந் நிலையில், 'இப்போதைக்கு அவர்களுடன் (பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள்) நாங்கள் எதுவும் பேசவில்லை' எனக் குறிப்பிட்ட ஷா, 'ஒரு புதிய அரசு அங்கு பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் எங்களை அணுகக்கூடும். அல்லது நான் அவர்களை அணுகுவேன். இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான தொடர் எங்களுக்கு முக்கியமானது' என்றார் பங்களாதேஷ் ஆடவர் அணி தற்போது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ளதுடன் அங்கு 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப்பில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு விஜயம செய்யவுள்ளது. https://www.virakesari.lk/article/191152
-
உப்பு, சர்க்கரையிலும் பிளாஸ்டிக் துகள்கள் - தூத்துக்குடி, மரக்காணத்தில் நடந்த ஆய்வில் தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பத்து வகையான உப்புகளும் 5 வகையான சர்க்கரைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக இக்கட்டுரை கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் 'மனித வாழ்வில் பிரிக்க முடியாதது எதுவோ?' என திருவிளையாடல் திரைப்படத்தின் தருமி பாணியில் கேட்டால், 'உப்பும் சர்க்கரையும்' என ஒரே வரியில் பதில் அளித்துவிடலாம். சராசரி இந்தியர் நாளொன்றுக்கு 10.98 கிராம் உப்பை உட்கொள்வதாக ‘டாக்ஸிக் லிங்க்’ ஆய்வறிக்கை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் சொல்லும் அளவைவிட இது இரு மடங்கு அதிகம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அளவுகோல்களின்படி, சராசரியாக ஒரு மனிதர் நாளொன்றுக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 10 ஸ்பூன் சர்க்கரையை உட்கொண்டால், ஒரு சராசரி இந்தியர் ஆண்டுக்கு 18 கிலோ சர்க்கரையை உட்கொள்வதாகப் பொருள். ‘அதற்கேற்ப, மனித உடலில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாக' டாக்ஸிக் லிங்க் (Toxics Link) என்ற அரசுசாரா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், 'உப்பு, சர்க்கரையில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்' (Microplastics in Salt and Sugar) என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளில் இருந்து, உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, இந்நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி, மரக்காணம் உள்படப் பல பகுதிகளில் உப்பு, சர்க்கரை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? 'டாக்ஸிக் லிங்க்' நிறுவனத்தினர் மேற்கொண்ட ஆய்வில், கடல் உப்பு, பாறை உப்பு, கல் உப்பு உள்பட 10 வகையான உப்புகளும் 5 வகையான சர்க்கரைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆய்வு முடிவில், உப்பு மற்றும் சர்க்கரையில் 0.1 முதல் 0.5 மில்லிமீட்டர் வரை பல்வேறு வடிவங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. உப்பு தொடர்பான ஆய்வில், 1 கிலோவுக்கு 6.71 முதல் 89.15 வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகவும் அயோடின் உப்பில் அதிகபட்சமாக 89.15 பிளாஸ்டிக் துகள்களும் சாதாரண கல் உப்பில் 6.7 என்ற அளவிலும் துகள்கள் இருந்ததாகக் கூறுகிறது. சர்க்கரையைப் பொறுத்தவரை, ஒரு கிலோவுக்கு 11.85 முதல் 68.25 வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, மரக்காணத்தில் ஆய்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆய்வு முடிவில் உப்பு மற்றும் சர்க்கரையில் 0.1 முதல் 0.5 மில்லிமீட்டர் வரை பல்வேறு வடிவங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடல் உப்பு, கிணற்று உப்பு (Borewell) ஆகியவற்றில் இருந்து தலா 7 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. மரக்காணம் மற்றும் பரங்கிப்பேட்டையில் நடத்தப்பட்ட ஆய்வில், உப்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், கடைகளில் விற்கப்படும் உப்புகள் என தலா 6 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், பிளாஸ்டிக் நார்கள் (fibre) இருந்ததாக கட்டுரை தெரிவிக்கிறது. 'இந்த பிளாஸ்டிக் துகள்கள், மூன்று வழிகளில் மனித உடலுக்குள் செல்கிறது. ஒன்று, நேரடியாக உள்ளே செல்லுதல், மூச்சு இழுத்தல் மற்றும் நேரடியாகத் தோல் மூலம் செல்வது ஆகியவற்றின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எச்சில், நுரையீரல், கல்லீரல், தாய்ப்பால், வயிற்றிலுள்ள குழந்தை, ஆகியவற்றில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' என ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. "நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் குறித்து அறிவியல்ரீதியான தரவுகளில் பங்களிப்பைச் செலுத்தும் நோக்கிலும் உலகளவில் பிளாஸடிக் பயன்பாடு குறித்த பிரச்னையைத் துல்லியமாக அணுகுவதற்கும் உதவுவதே இந்த ஆய்வின் நோக்கம்" என்கிறார், 'டாக்ஸிக் லிங்க்' நிறுவனத்தின் இயக்குநர் ரவி அகர்வால். ஹார்மோன்களில் பாதிப்பா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் (சித்தரிப்புப் படம்) "எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் 15 முதல் 51 டிரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம். மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை மனிதர்கள் முதல் விலங்குகள் வரை உட்கொள்வது உணவுச் சங்கிலியையே சிதைக்கிறது" என்கிறார், டாக்டர் பெருமாள் பிள்ளை. இவர், சென்னை மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியராக இருக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக பிளாஸ்டிக் உள்ளது. அதைச் சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடல், மண் உள்பட அனைத்திலும் பிளாஸ்டிக்கின் தாக்கம் இருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ அதை அன்றாடம் உட்கொண்டு வருகிறோம். காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி ஆகியவற்றில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் பாதிப்பு இருக்கிறது" என்கிறார். உப்பு, சர்க்கரையில் உள்ளதாகக் கூறப்படும் பிளாஸ்டிக் துகள்கள், மனித ஆரோக்கியத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிடும் டாக்டர் பெருமாள் பிள்ளை, "இவை ஹார்மோன் அமைப்புகளைப் பாதிக்கும். இதை என்டோகிரைன் (endocrine) சீர்குலைவு என்பார்கள். இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள், மரபணு மாற்றங்களைத் தூண்டுவதாக உள்ளது. இதனால் புற்றுநோய், பக்கவாத பாதிப்புகளும் ஏற்படும்" என எச்சரிக்கிறார். மாற்று வழிகள் என்ன? படக்குறிப்பு, பிளாஸ்டிக் துகள்கள் மனித ஆரோக்கியத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்கிறார் டாக்டர் பெருமாள் பிள்ளை இவற்றைத் தவிர்ப்பதற்கு மாற்று வழிகளையும் 'டாக்ஸிக் லிங்க்' கட்டுரை முன்வைக்கிறது. அதாவது, உணவுப் பொருள்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகப் பயன்பாட்டில் பிளாஸ்டிக் துகள்களைத் தவிர்ப்பது, உற்பத்தியின்போது கழிவுநீர் சுத்திகரிப்பை மேம்படுத்துவது, உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் அடைப்பதற்குப் பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துவது ஆகியவை முக்கியப் பரிந்துரைகளாகக் கூறப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டும் டாக்டர் பெருமாள் பிள்ளை, "பாலிதீன் பைகள் உள்பட பிளாஸ்டிக் தொடர்பான பொருள்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதற்காக, 'மீண்டும் மஞ்சப்பை இயக்கம்' என்ற விழிப்புணர்வுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை” என்கிறார். 'மஞ்சப்பை இயக்கம்' என்பது சுதந்திர தினத்துக்கு கொடி ஏற்றுவதைப் போல ஒருநாள் நிகழ்வாக மாறிவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் (சித்தரிப்பு படம்) "பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக கண்ணாடிக் குடுவைகள், பீங்கான் பொருள்கள் என மாற்று வழிகளை யோசித்தால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்" என்கிறார் டாக்டர் பெருமாள் பிள்ளை. பொதுவாக, இந்தியாவில் சர்க்கரை, உப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களின் அளவுகள் பெரிதாகக் கண்காணிக்கப்படுவதில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், உணவுப் பொருள்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களைக் கட்டுப்படுத்துவது குறித்து சில நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (EFSA), உணவுப் பொருள்களில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயத்தைக் குறைப்பது தொடர்பான வழிமுறைகளை உருவாக்கி வருவதாகவும், உணவுப் பொருள்களில் பிளாஸ்டிக் துகள்கள் ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மதிப்பீடு செய்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் 'டாக்ஸிக் லிங்' நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? "தொலைக்காட்சிகளில், 'உங்க பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?' என்ற விளம்பரம் வரும். தற்போது. 'உங்கள் உப்பில் மைக்ரா பிளாஸ்டிக் இருக்கிறதா?' என்று கேட்கும் நிலை உருவாகிவிட்டது" என்கிறார் சூழல் ஆர்வலரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான பொறியாளர் சுந்தர்ராஜன் கடலில் பிளாஸ்டிக் பொருள்கள் சேரும்போது, அதன் துகள்கள் மீன்களின் உடல்களுக்குள் செல்வதாகவும் அதைச் சாப்பிடும் மனிதர்களின் உடலுக்கு உள்ளேயும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் செல்வதாகவும் சுந்தர்ராஜன் விளக்குகிறார். பட மூலாதாரம்,DRJRADHAKRISHNAN/FACEBOOK படக்குறிப்பு, தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஏனெனில், "உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆகையால், அவற்றிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலக்கின்றன." பல்வேறு ஆய்வுகளில் மனிதக் கழிவு, தொப்புள் கொடி வரையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிலம், கடல், நீர்நிலைகள் என அனைத்திலும் பிளாஸ்டிக் பொருள்கள் நீக்கமற நிறைந்துவிட்டன. பிளாஸ்டிக் கழிவுகளால் நிலம் மாசுபடுவது பல கட்டங்களில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், "பிளாஸ்டிக் கழிவு நிறைந்த அதே நிலத்தில்தான் கரும்பு விளைகிறது. அந்தக் கரும்பில் இருந்தே சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. அதை பிளாஸ்டிக் பைகளில் அடைப்பது தொடங்கி அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் துகள்களின் ஆதிக்கம் இருக்கிறது. உப்பும் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளாத மனிதர்கள் இல்லை. ஆகவே, இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் ரத்தத்தில் சேர்கிறது. அதன் விளைவாக புற்றுநோய் உள்படப் பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு மனிதர்கள் ஆளாக நேரிடும்," என்கிறார். "தமிழ்நாட்டில் உணவுப் பொருள்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். அப்போது அவர், "உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆராய்வதற்கு அதிகாரிகள் உள்ளனர். இந்த துறைக்கென்று தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உள்ளனர். உணவுப் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகளில் தனித்தனி துறைகள் உள்ளன. இதுகுறித்து அந்தந்த துறைகளில் இருந்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டால், அதைப் பற்றி நிபுணர் குழுவிடம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cy8435lj92eo