Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஈரானின் பதிலடி இவ்வாரம் - வெள்ளை மாளிகை Published By: RAJEEBAN 13 AUG, 2024 | 12:26 PM இஸ்ரேல் மீது ஈரானும் அதன் ஆதரவு குழுக்களும் இவ்வாரம் தாக்குதலை மேற்கொள்ளலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க தாக்குதல்களிற்காக நாங்கள் தயாராகயிருக்கவேண்டும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நாங்கள் கடந்த சில நாட்களாக பிராந்தியத்தில் எனது பிரசன்னத்தை வலுப்படுத்தி வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர், ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஈரான் எவ்வேளையிலும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் காண்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஈரான் அடுத்த சில நாட்களில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கிற்கு ஏவுகணைகளை செலுத்தக்கூடிய நீர்மூழ்கிகளை அனுப்புமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார். பென்டகன் இதனை தெரிவித்துள்ளது. எவ்35 போர்விமானங்களுடன் கூடிய யுஎஸ்எஸ் ஏபிரஹாம் லிங்கனை மத்திய கிழக்கிற்கு வேகமாக செல்லுமாறும் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார் இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ்கலன்ட் ஈரானின் இராணுவதயாரிப்புகள் அந்த நாடு இஸ்ரேலிற்கு எதிராக பாரிய தாக்குதலை திட்டமிடுவதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்த தனது அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள அன்டனி பிளிங்கென் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் மத்திய கிழக்கில் அமெரிக்கா படையினரை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பிராந்திய ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிற்கு எதிராக பொருத்தமான தடுக்கும் நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை ஈரானிற்குள்ளது என ஈரானின் பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190983
  2. சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்; சிந்துஜாவின் தாயும், பிள்ளையும் பங்கேற்பு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கறுப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்த திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர். குறித்த பதாதைகளில் பணத்துக்கு மனித உயிரை விலை பேசலாமா? அரசே இலங்கையின் மருத்துவத்துறையை மறுசீரமைப்புச் செய், உயிர் காக்கும் வைத்தியர்களே மனித நேயத்தை மதியுங்கள், மருத்துவத்துறையின் அறம் எங்கே?, சிந்துஜாவின் மரணம் இறப்பா?, கொலையா?, நீதி நிழலாடுகிறதா?, மாபியாக்களின் கூடாரம் ஆகலாமா வைத்தியத்துறை போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். எனவே உயிரிழந்த சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் குறித்த மரணத்துடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளடங்கலாக அனைவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். குறித்த போராட்டத்தில் சிந்துஜாவின் தாய், சிந்துஜாவின் பிள்ளை கலந்து கொண்டதோடு, பெண்கள் அமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட் தந்தையர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். https://thinakkural.lk/article/307803
  3. ஆரம்பமானது இலங்கை - இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி! இந்திய - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ர சக்தி (MITRA SHAKTI) இன் 10வது அத்தியாயம் இலங்கையில் (Sri Lanka) ஆரம்பமாகியுள்ளது. மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சி பாடசாலையில் நேற்று (12) ஆரம்பமாகிய இந்த பயிற்சியானது, எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், இரு தரப்புகளின் இராணுவத் திறனை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமென கூறப்படுகின்றது. ஆயுதப் படை குறித்த கூட்டு இராணுவப் பயிற்சியானது கடந்த வருடம் இந்தியாவில் இடம்பெற்றது. அந்தவகையில், இவ்வருடம் இலங்கையில் நடைபெறும் பயிற்சியில், இந்தியாவை (India) பிரதிநிதித்துவப்படுத்தி ராஜ்புதானா ரைபிள்ஸ் (Rajputana Rifles ) மற்றும் பிற ஆயுதப் படைகளை சேர்ந்த 106 படையினரும், சிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் (Gajaba Regiment of Sri Lankan Army) வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். https://ibctamil.com/article/india-sri-lanka-mitra-shakti-begins-1723521409
  4. எனக்கு இப்பவே அப்படித்தான் இருக்கிறது கவி ஐயா!!
  5. 12 AUG, 2024 | 11:09 AM டி.பி.எஸ். ஜெயராஜ் ரணில் விக்கிரமசிங்க முதலில் பிரதமராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் அதிகாரத்துக்கு வந்த நேரம் தொடக்கம் எதிரிகளும் விமர்சகர்களும் அவரைப்பற்றி பல தவறான கதைகளை கட்டிவிடுவதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சுகிறார் என்பதும் அவர் வழமைக்கு மாறான நடவடிக்கைகள் மூலமாக தேர்தலைப் ஒத்திவைப்பார் என்பதும் அந்த்கதைகளில் ஒன்று. இந்த போலிக்கதை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் திகதியை வர்த்தமானியில் வெளியிட்டபோது அம்பலமானது. விக்கிரமசிங்கவே ஒரு சுயேச்சை வேட்பாளராக முதலில் தனது கட்டுப்பணத்தையும் செலுத்தினார். இந்த உண்மை முகங்கொடுக்க இயலாத அவரது எதிரிகள் தற்போது "பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு முன்னர் அவர் எதையாவது செய்வார்" என்று கூறி ஆறுதல் அடைகிறார்கள். இன்னொரு தவறான கதை ரணிலுக்கும் ராஜபக்சாக்களுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. ரணில் முதலில் பிரதமராகவும் பிறகு பதில் ஜனாதிபதியாகவும் அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார் என்பது நிச்சயமாக உண்மை. கோட்டா பதவியைத் துறந்த பிறகு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 134 பேரினால் ஜனாதிபதியாக தெரிவானார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள். ரணிலின் அமைச்சரவையின் மிகவும் பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களே. பிரதானமாக தாமரை மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவின் விளைவாகவே பட்ஜெட்டுகளும் சட்டமூலங்களும் சபையில் நிறைவேறின. ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவில் தங்கியிருப்பவராக கருதப்பட்ட போதிலும், ஜனாதிபதி விக்கிரமசிங்க எப்போதும் தனது எண்ணப்படி செயற்படுபவராகவே இருந்துவருகிறார். ராஜபக்சாக்களுடன் சுமுகமான உறவுகளை பேணியதுடன் அவர்களின் வேண்டுகோள்களில் சிலவற்றுக்கு விட்டுக்கொடுத்த அதேவேளை, அவர்களிடம் இருந்து ரணில் மிகவும உறுதியாக சுதந்திரமானவராகவே இருந்துவந்தார். இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து விக்கிரமசிங்க ராஜபக்சாக்களிடம் இருந்து சுதந்திரமான பொருளாதார பொருளாதார கொள்கை ஒன்றை வகுத்துச் செயற்பட்டார். அவரின் பொருளாதார நடவடிக்கைகளில் பலவற்றை ராஜபக்சாக்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் தயக்கத்துடன் ஒத்துப்போனார்கள். ராஜபக்சாக்களுக்கு ரணில் எந்தளவுக்கு தேவையோ அதேயளவுக்கு ரணிலுக்கு ராஜபக்சாக்கள் தேவைப்பட்டதே இதற்கு காரணமாகும். 'ரணில் ராஜபக்ச' உண்மைநிலை இவ்வாறிருந்த போதிலும் எதிரிகள் அவரை ராஜபக்சாக்களின் ஒரு உருவாக்கம், பொம்மை அல்லது கையாள் என்று தொடர்ச்சியாக தாக்கிப்பேசினர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் உருவாக்கப்பட்ட ' ரணில் ராஜபக்ச' என்ற பதத்தை அருவருக்கத்தக்க அளவுக்கு பலரும் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தனர். விக்கிரமசிங்க ராஜபக்சாக்களுடன் அணிசேர்ந்து நிற்கிறார் என்ற அரசியல் மாயை ஐக்கிய மக்கள் சக்தியின் பிடிக்குள் தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு சஜித் பிரேமதாசவின் கைகளில் ஒரு வலிமையான கருவியாக இருந்து வந்திருக்கிறது. தவறாக உருவகிக்கப்பட்ட ரணில் - ராஜபக்ச இணைப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைவதை தடுக்கும் இரு பிரதான காரணங்களில் ஒன்று ஒன்றாகும். ரணில் பொதுஜன பெரமுனவின் அனுசரணையிலான ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படப்போகிறார் என்று அவர்களுக்கு கூறப்பட்டது. தங்களது தாய்க்கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மீண்டும் ஐக்கியப்பட தயங்குவதற்கு இரண்டாவது காரணம் 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு மகத்தான ஒரு வெற்றி கிடைக்கப்போகிறது என்று எதிர்வு கூறும் புதிரான ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பாகும். ராஜபக்சாக்களுடனான ரணிலின் உறவுமுறை பற்றிய தவறான கதை அண்மைய நிகழ்வுகளினால் தற்போது நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் எனது கட்டுரையில் விரிவாக கூறப்பட்டதைப் போன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிப்பதில்லை என்று பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு தீர்மானித்திருக்கிறது. தங்களது சொந்தத்தில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் அந்த கட்சிக்கும் ரணிலுக்கும் இடையிலான பிளவை மேலும் உறுதிப் படுத்தியிருக்கிறது. நீண்டநாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொய்ப் பிரசாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டு விட்டன . ஆனால் இதை ஜீரணிக்க முடியாத ரணில் விரோத சக்திகள் இருக்கின்றன. அதனாால் இவையெல்லாம் ஒரு நாடகம் என்றும் மிக விரைவில் ராஜபக்சாக்களும் ரணிலும் மீண்டும் இணைவார்கள் என்று இந்த பிரிவினர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். பொதுஜன வேட்பாளர் இந்த அபத்தப் பிரசாரம் கூட உண்மையான கள நிலைவரங்களினால் இப்போது மறுதலிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறியதைப் போன்று, விக்கிரமசிங்கவை ஆதரி்காமல் கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன எடுத்த உத்தியோகபூர்வ தீர்மானம் தாமரை மொட்டை மீது மிகவும் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட நூறுக்கும் அதிகமான பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உத்தரவையும் மீறி ரணிலுக்கு ஆதரலளிப்பதற்கு உறுதி பூண்டிருக்கிறார்கள். மேலும் பொதுஜன பெரமுனவின் பல மாவட்ட குழுக்களும் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றன. பொதுஜன பெரமுனவின ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் மூலமாக நிலைவரம் மேலும் குழப்பமான மாறியிருக்கிறது. கசீனோ உரிமையாளரும் பெரிய தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்கப்படவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் தனிப்பட்ட காரணங்களைக் கூறி அவர் பின்வாங்கிவிட்டார். அதற்கு பிறகு மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின ஜனாதிபதி வேட்பாளராக முறைப்படி நியமிக்கப்பட்டார். நாமல் ராஜபக்சவின் பிரவேசத்தை அடுத்து 2024 ஜனாதிபதி தேர்தலின் களநிலைவரத்தின் அரசியல் சமநிலை மாறத் தொடங்கியிருக்கிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்க அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களையும் ஊடக நிறுவனங்களின் உயரதிகாரிகளையும் சந்தித்தபோது அவரிடம் பல கேள்விகள் தொடுக்கப்பட்டன.' தமிழன் ' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா பின்வரும் கேள்வியை ஜனாதிபதியிடம் கேட்டார். கேள்வி - தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொண்டதையடுத்து ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் உங்களை ஆதரிக்கும் நிலையில் நாமல் ராஜபக்சவிடம் இருந்து ஒரு வலிமையான சவாலை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒரு கணம் யோசித்துவிட்டு பின்வருமாறு பதிலளித்தார். "போட்டி எத்தகைய தன்மையானதாக இருக்கும் என்று என்னால் எதிர்வு கூறமுடியாது. ஒரு போட்டியில் ஈடுபடுவது அல்ல, நாட்டை எவ்வாறு எம்மால் முன்னேற்ற முன்னேற்றலாம் என்பதை மக்களுக்கு காட்டுவதும் மக்களுக்கு எனது கொள்கைளை முன்வைப்பதுமே எனது இலக்கு. எனது நோக்கை நீங்கள் இணங்கிக் கொண்டால் எனக்கு வாக்களிக்கலாம். மற்றையவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி என்பது பற்றி நான் கவனம் செலுத்தவில்லை. நாமல் வரவிரும்பினால் எனக்கு ஆட்சேபனை இல்லை. உண்மையில் அவர் தனது செய்தியை தெளிவாகக் கூறவேண்டும். "நாமல் ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவும் பாராளுமனனறத்தில் நடைபெற்ற ஜனாதிபநி தெரிவில் என்னை ஆதரித்தார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றியுடையவனாக இரு்கிறேன். கடந்த இரு வருடங்களாக என்னுடன் சேர்ந்து பணியாற்ற அவர்கள் இணங்கினார்கள். அந்த காலகட்டம் இப்போது கடந்துவிட்டது. "ஒரு வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஒரு வேட்பாளரை நியமிப்பதா என்பது தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை தீர்மானிப்பது இப்போது அவரைப் பொறுத்தது. தனது யோசனைகளை நாட்டுக்கு முன்வைப்பது அவரது பொறுப்பு. "இது எனது தனிப்பட்ட போட்டியல்ல. தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பது மக்களைப் பொறுத்தது. அவர்கள் விரும்பினால் எனது செயற்திட்டத்தை ஆதரித்து அதன்படி எனக்கு வாக்களிக்கலாம். அல்லது இன்னொரு வேட்பாளரை ஆதரிக்கலாம்." சினேகபூர்வ முரண்பாடுகள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பதில் நழுவல் தன்மை வாய்ந்ததாக தோன்றினாலும் கூட 2022ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டு பொருளாதார நெருக்கடியின் சவாலை ஏற்றுக்கொண்டதில் உள்ள அவரின் அரசியல் தத்துவத்தின் உட்கருத்தை பிரதிபலிக்கிறது. ரணிலின் கருத்துக் கோணத்தில் பொதுஜன பெலமுனவுடன் அவருக்கு இருக்கும் வேறுபாடுகள் சினேகபூர்வமானவையும் குறைந்தளவு முரண்பாடுகளைக் கொண்டவையுமாகும். கடந்த இரு வருடங்களில் ரணிலின் ஜனாதிபதி பதவி உண்மையில் பொதுஜன பெரமுனவுடனான ஒரு கூட்டுப் பங்காண்மையாகும். ரணிலுடன் மோதல் தன்மையான போக்கு ஒன்றைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக அவரின் சாதனையில் தங்களுக்கும் பங்கிருக்கிறது உரிமைகொண்டாடி அவருக்கு ஆதரவாக நடந்துகொண்டிருந்தால் அது பொதுஜன பெரமுனவின் நலன்களுக்கு உகந்ததாக இருந்திருக்கும். நாமலின் நடவடிக்கைகளில் தவறானவை என்று தான் கருதுகின்றவைக்காக அவரை தனது பதிலில் சற்று கடிந்துகொண்ட ரணில் நேரடியாக விமர்சிப்பதை சாதுரியமாக தவிர்த்துக்கொண்டார். பொதுவில் பொதுஜன பெரமுனவுக்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுக்கு முக்கியமானவையாக இருப்பவை வேறு விடயங்களாகும். தாஙகள் அலட்சியப்படுத்தப்பட்டதால் ராஜபக்சாக்கள் சீற்றமடைந்தனர். முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும், தினேஷ் குணவர்தனவுக்கு பதிலாக நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், எதிர்கால அரசாங்கம் ஒன்றில் தாமரை மொட்டு கட்சிக்கு அமமைச்சுப் பதவிகளில் பெரும்பங்கை வழங்க வேண்டும் என்பன போன்ற தக்களின் கோராக்கைகளுக்கு இணங்கவில்லை என்பதால் ரணில் மீது பசிலுக்கும் நாமலுக்கும் கடுமையான எரிச்சல். ஜனாதிபதி தொடர்பில் புதிய யதார்த்தநிலையை எதிர்நோக்கியபோது ராஜபக்சாக்கள் கடுமையான கோபமடைந்தனர். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர் தலைமைத்துவத்தை அலட்சியம் செய்துகொண்டு ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். பரிதாபமான நிலைவரம் இப்போது பொதுஜன பெரமுனவின் கட்சிக் கட்மைப்பின் பல மாவட்ட குழுக்களும் ரணிலுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கி்ன்றன. ராஜபக்சாக்கள் தாங்கள் தாபித்த கட்சிக்குள் கட்டமைப்பு அதிகாரத்தை மாத்திரம் தக்கவைத்துக் கொண்டிருக்கிற அளவுக்கு அவர்கள் ஒரு பரிதாப நிலையில் இருக்கிறார்கள். உறுப்பினர்களில் கணிசமான ஒரு பிரிவினர் ரணிலின் பக்கத்துக்கு சென்று விட்டதால் கட்சியின் செயற்பாட்டு அதிகாரம் கடுமையாக அரித்தெடுக்கப்பட்டுவிட்டது. அதனால் நாமல் ராஜபக்ச எதிர்நோக்கும் சவால் விசித்திரமான ஒன்று. அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப் போவதில்லை. தனது குடும்பத்தின் தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கே கூடுதலான அளவுக்கு மககள் ஆதரவு இருக்கிறது என்றும் ரணில் ஆதரவாளர்களாக மாறி துரோகம் செய்துவிட்ட பாராளுமன்ற உறுபாபினர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றும் காட்டுவதே நாமலின் குறிக்கோள். அதனால் பொதுஜன பெரமுவில் இருந்து பிரிந்து விக்கிரமசிங்கவின் பக்கத்துக்கு சென்றவர்களினால் திரட்டப்படக்கூடிய வாக்குகள் தாமரை மொட்டினால் பெறக்கூடிய வாக்குகளை விடவும் பெருமளவுக்கு குறைந்ததாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு நிலை ஏற்படுமானால் ரணில் தோல்வியடையும் நிலை உருவாகும். ஆனால் அது குறித்து ராஜபக்சாக்கள் கவலைப்படுவா்கள் என்று தோன்றவில்லை. ராஜபக்சாக்களை பொதுத்தவரை நாமல் வெற்றிபெறுவதை விடவும் ரணில் தோற்றுப்போவதே மிகவும் முக்கியமானது. "சஜித் ராஜபக்ச" விக்கிரமசிங்க மீதான வெறுப்பு இப்போது நாமல் ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் பொதுவானதாக இருக்கிறது. இரு்முனானாள் பிரதமர்களளினதும் ஜனாதிபதிகளினதும் இரு மகன்கள் தங்களது சொந்த வெற்றிகளையும் விட ரணிலின் தோல்வியில் குதூகலிப்பார்கள். சஜித்துக்கும் நாமலுக்கும் ஓத்த நலன்கள் இல்லாவிட்டாலும் கூட இது விடயத்தில் அவர்களுக்கு இடையிலான நலன்கள் சங்கமிக்கின்றன. இந்த பின்னணியில் " சஜித் ராஜபக்ச " என்ற பதம் பிரபல்யமாகிறது. சஜித் பிரேமதாசவுக்கும் நாமல் ராஜபக்சவும்கும் இடையிலான ஒரு அரசியல் " புரிந்துணர்வு " பற்றிய பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. விக்கிரமசிங்கவை " ரணில் ராஜபக்ச " என்று குறிப்பிட்டதைப் போன்று பிரேமதாச " சஜித் ராஜபக்ச " என்று குறிப்பிடப்படுகின்றார். இந்த முழுப்பிரசாரமும் ரணில் ஆதரவு இயந்திரத்தின் ஒரு புத்தாக்கமாக தோன்றுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி கொல்லப்பட்டபோது கறுப்பின தலைவரான மல்கம் எக்ஸ் " கோழிக்குஞ்சுகள் கூரையில் ஏறிக் கூவுவதற்கு வந்துவிட்டன " என்று கூறினார். ரணிலுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களினால் உருவாக்கப்பட்ட தவறான கதை இப்போது திரும்பிவந்து அவர்களைத் தாக்குகின்ற தற்போதைய பின்புலத்தில் அந்த பிரபல்யமான கூற்று நினைவுக்கு வருகிறது. ரணில் ராஜபக்ச தேய்ந்து சஜித் ராஜபக்ச உரத்துப் பேசப்படுகிறார். ஒருவருக்கு ஒரு சூழ்நிலையில் பொருத்தமாக அமைவது இன்னெருவருக்கு வேறு ஒரு சூழ்நிலையில் பொருத்தமாக இருக்கும். தம்மிக்க பெரேரா தொழிலதிபர் தம்மிக்க பெரேராவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாராகப்போகிறார் பேசப்பட்டது.ரணிலுக்கும் ராஜபக்சாக்களுக்கும் இடையில் கசப்புணர்வு ஏற்படத்தொடங்கிய நேரத்தில் இருந்து பொதுஜன பெரமுன வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பசிலும் நாமலும் தம்மிக்க பெரேராவை விரும்பினர். அவர் இணங்கவில்லையானால் தான் களத்தில் இறங்கத் தயாராக இருப்பதாக நாமல் கூறினார். பொதுஜன பெரமுனவின் ஜூலை 29 அரசியல் குழு கூட்டத்துக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தம்மிக்க பெரேராவே கட்சியின் தெரிவாக இருப்பார் வெளிப்படையாக தெரிந்தது. பொதுஜன பெரமுனவின் வாக்குகளுக்கு புறம்பாக தம்மிக்க தனது சொந்தத்தில் பெருமளவு வாக்குகளை திரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தம்மிக்க தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி துரிதமாக ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். சுவரொட்டிகள் அச்சிடப்பட்டன. பிரசார கீதமும் இயற்றப்பட்டது. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தான் நியமிக்கப்படும் அறிவிப்பு ஆகஸ்ட் 6 நெலும் பொக்குணவில் வைத்து செய்யப்படவேண்டும் என்று சோதிடரின் ஆலோசனையின் பிரகாரம் தம்மிக்க விரும்பினார். முன்னதாக அந்த அறிவிப்பு ஆகஸ்ட் 7 செய்யப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன விரும்பியது. திடீரென்று எல்லாமே மாறியது. தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தன்னால் இயலாமல் இருப்பதாக தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். என்ன நடந்தது என்பதைப் பற்றி பெருமளவு ஊகங்கள் கிளம்பின. அவரின் மனமாற்றத்துக்கு சாத்தியமான பல காரணங்கள் குறித்து பொதுவெளியில் பேசப்பட்டன. ஒரு மருத்துவ அவசரநிலை காரணமாக பெரேராவின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாவும் அவரின் மனமாற்றத்துக்கு அதுவே காரணம் என்றும் கூறப்பட்டது. அவர் போட்டியிடுவதை மனைவியும் பிள்ளைகளும் கடுமையாக ஆட்சேபித்ததாகவும் கூட கூறப்பட்டது. தம்மிக்கவின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை முன்னெடுக்கவேணடும் என்று வர்த்தக கூட்டாளிகள் கூறிய கடுமையான ஆலோசனை அவர் பின்வாங்கியதற்கு சாத்தியமான காரணமாக இருக்கக்கூடும். பொதுஜன பெரமுனவின் முக்கியமான உறுப்பினர்கள் பெருமளவில் கட்சியை விட்டு வெளியேறியதால் தம்மிக்க கலங்கிப் போய்விட்டார் அவருக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் அபிப்பிராயப்பட்டன. பலவீனப்பட்டுவிட்ட பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்று பயந்து அவர் பின்வாங்கிவிட்டார். நாமல் ராஜபக்சவின் பிரவேசம் காரணம் எதுவாக இருந்தாலும், தம்மிக்க பெரேராவின் வெளியேற்றம் நாமல் ராஜபக்சவின் பிரவேசத்துக்கு வழிவகுத்தது. அவர் இப்போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர். விக்கிரமசிங்க மீதான வெறுப்பு அவரை எதிர்ப்பதில் நாமல் மீது பெருமளவுக்கு செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்கிற அதேவேளை மெதமுலான முடிக்குரிய இளவரசருக்கு இன்னொரு காரணமும் ஊக்கத்தைக் கொடுக்கிறது. பொதுஜன பெரமுன வலிமையான ஒரு அரசியல் சக்தியாக தொடர்ந்தும் இருக்கவேண்டுமாக இருந்தால் கட்சி 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாமல் மெய்யாகவே நம்புகிறார். விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுன ஆதரித்தால் கட்சிக்கும் தனக்கும் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் என்று அவர் உணர்ந்தார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவேண்டியது இப்போது நாமல் ராஜபக்சவின் விதியாகிப் போய்விட்டது.அது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் ஆகஸ்ட் 7 ஒரு சுபநேரத்தில் செய்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் மிகவும் எளிமையான முறையில் அந்த வரலாற்று முக்கியத்துவ நிகழ்வு நடந்தது. சாகர காரியவாசத்துடன் கைகுலுக்கிய நாமல் தந்தையார் மகிந்த மற்றும் சிறிய தந்தையார் பசில் முன்னிலையிலும் தாழ்பணிந்து அவர்களது ஆசீர்வாதங்களை (முத்தங்களை) பெற்றுக் கொண்டார். அதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் நாமலைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். நாமலின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது. அந்த நிகழ்வில் நாமலின் பெரிய தந்தையார் சமாலும் இன்னொரு சிறிய தந்தையார் கோட்டாபயவும் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை அவரின் மைத்துனர் நிபுன ரணவக்க நிகழ்வில் காணப்பட்டார். நாமலின் ஒன்றுவிட்ட சகோதரர் மொனராகலை பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்ச அங்கு வரவில்லை. நாமலின் தாயார் சிராந்தியும் சகோதரர்கள் யோஷிதவும் றோஹிதவும் கூட அங்கு காணப்படவில்லை. ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் வருகை தராமல் இருந்தது குறித்து பலவிதமான கதைகள் கூறப்படுகின்றன. பெரிய தந்தையார் சமால் ராஜபக்சவும் சகோதரர்கள் யோஷிதவும் றோஹிதவும் பொதுஜன பெரமுன ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிக்கவேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் மீதான நாமலின் பகைமையானால் அவர்கள் குழப்பத்துக்கு உள்ளாகியிருப்தாகவும் கூறப்படுகின்றது. ஆனால் அந்த நிகழ்வு ஒரு குடும்ப விவகாரமாக அல்லாமல் கட்சி விவகாரமாகவே அமையவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்று நாமலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. எதுவாக இருந்தாலும் தஙமகளுக்குள் என்னதான் சச்சரவுகள் இருந்தாலும் ”“வெளியாருக்கு" எதிராக ராஜபகசாக்கள் எப்போதும் நெருக்கமாக அணி சேர்ந்து விடுவார்கள் என்பது நன்கு தெரிந்ததே. வரலாற்றின் குப்பைக்கூடை இந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பது நாமல் ராஜபக்சவுக்கு தெரியும். ஆனால் கணிசமான வாக்குகளைப் பெற்று ராஜபக்சாக்கள இன்னமும் வரலாற்றின் கூப்பைக்கூடைக்குள் வீசப்படவில்லை என்று உலகிற்கு காட்ட வேண்டும் என்பதே அவரது நோக்கம். தனது தந்தையார் முதுமையடைந்து சுகவீனமுற்றிருக்கின்ற போதிலும் அவரது வசீகரமும் செல்வாக்கும் இன்னமும் சுருங்கிவிடவில்லை என்று காட்ட நாமல் விரும்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக பொதுஜன முக்கியஸ்தர்களின் வெளியேற்றம் கட்சியை பலிவீனப்படுத்திவிடவில்லை என்றும் அது இன்னமும் மக்கள் மத்தியில் வலுவுடைய ஒரு சக்தியாக இருக்கிறது என்றும் காட்டுவதற்கு நாமல் விரும்புகிறார். ஒரு பருமளவு வாக்குகளை திரட்டுவதில் நாமல் வெற்றி பெறுவாரேயானால், பொதுஜன பெரமுனவுக்குள் தனது தலைமைத்துவ நிலையை அவர் வலுப்படுத்துவதற்கு அது உதவும். பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ரணில் பக்கம் சென்றுவிட்டதால் இனிமேல் நாமலின் அதிகாரம் பெருமளவுக்கு மேம்படுத்தப்படும். ஜனாதிபதி தன்னால் பெறப்படக்கூடிய வாக்குகளை ஒரு தளமாகக் கொண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நாமல் கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி ஒரு பெரும் எண்ணிக்கையான ஆசனங்களைை பெறக்கூடியதாகவும் இருக்கும். அது அவர் கூட்டரசாங்கம் ஒன்றின் பிரதமராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் கூடும். பிறகு 2029 ஜனாதிபதி தேர்தலில் நாமல் போட்டியிட்டு வெற்றி பெறவும் உதவலாம். உண்மையில் அவர்களின் திட்டப்படி நடந்தால் எல்லாமே நன்றாக இருக்கும். ஆனால் எலியும் மனிதர்களும் சிறந்த திட்டங்கள் அடிக்கடி குழம்பிப்பிப் போய்விடுகின்றன என்று ஸ்கொட்லாந்து கவிஞர் றொபேர்ட் பேர்ண்ஸ் கூறியது நினைவுக்கு வருகிறது. 2024 ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச பரிதாபத்துக்குரிய வகையில் வாக்குகளை எடுத்தால் என்ன நடக்கும்? இதிகாசத்தில் வரும் பீனிக்ஸ் பறவை போன்று சாம்பலில் இருந்து மீண்டும் எழுவதற்கு ரணிலின் துணிச்சலும் மீண்டெழும் ஆற்றலும் நாமலுக்கு இருக்கிறதா? https://www.virakesari.lk/article/190870
  6. தேர்தலில் வாக்களிப்பது எப்படி? : தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்துக்கள் பொதுமக்களின் குழப்பத்தை அதிகப்படுத்துகின்றன - அம்பிகா சற்குணநாதன் Published By: VISHNU 13 AUG, 2024 | 03:31 AM (நா.தனுஜா) தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பொதுமக்களின் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார். 'எமது வாக்காளர்கள் புள்ளடி இடுவதற்குப் பழகியிருக்கிறார்கள். எனவே வாக்குச்சீட்டில் எவரேனும் புள்ளடி இட்டால், அதனை நாம் '1' எனக் கருதுவோம். அதேபோன்று இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்கு தொடர்பில் மக்கள் மத்தியில் போதியளவு தெளிவில்லை' என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியிருப்பதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியுடன் வெளியிடப்பட்டிருக்கும் வரைபடத்தில் விருப்பு வாக்கு அளிப்பதெனில் 1,2,3 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தலாம் எனவும், இல்லாவிடின் முதலாவதாக வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கு நேராகப் புள்ளடி இட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்கை 2,3 என இலக்கமிட்டு அடையாளப்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தியை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன், 'எமது வாக்கு செல்லுபடியாகவேண்டுமெனில், நாம் சரியாக வாக்களிக்கவேண்டும். இருப்பினும் எவ்வாறு வாக்களிக்கவேண்டும் என்பது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தவறான தகவல்கள் பகிரப்படுவதானது, இதுகுறித்த குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆங்கில நாளிதழொன்றில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் மேற்கோளுடன் வெளியாகியிருக்கும் வரைபடத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த தவறான வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். 'ஜனாதிபதித்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் விருப்பு வாக்கு இடுவதெனின் 'புள்ளடி' குறியீட்டைப் பயன்படுத்தக்கூடாது. மாறாக 1,2,3 என்ற இலக்கங்களே பயன்படுத்தப்படவேண்டும் என அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வரைபடத்திலும் புள்ளடி மற்றும் இலக்கங்கள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வாக்களித்தால், அது செல்லுபடியற்ற வாக்காகக் கருதப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது' என்றும் அம்பிகா சற்குணநாதன் அவரது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190951
  7. Published By: VISHNU 13 AUG, 2024 | 03:20 AM (நா.தனுஜா) எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச புதன்கிழமை (14) தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அழைப்புவிடுத்துள்ளார். ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் பொதுக்கட்டமைப்பினால் தமிழ்மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கான குறியீடாகவே இப்பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ் பொதுக்கட்டமைப்பு, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவிருக்கும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்துடன் தம்மை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்த விரும்பினால், அவர்களுடன் பேசுவோம் என அறிவித்திருக்கிறது. அதற்கமைய இம்முறை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பொதுக்கட்டமைப்பினருடனான சந்திப்புக்கு அழைப்புவிடுத்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அச்சந்திப்பில் தமிழ் பொதுக்கட்டமைப்பின் சார்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்றிருந்ததுடன், அவர்களுடன் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ புதன்கிழமை (14) தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு அழைப்புவிடுத்துள்ளார். இச்சந்திப்பு புதன்கிழமை (14) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/190948
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி முண்டோ பதவி, பிபிசி நியூஸ் 12 ஆகஸ்ட் 2024 1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் சாக்ஸ் (Alexander Sachs), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். ஓவல் அலுவலகத்திற்கோ, அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கோ சாக்ஸ் புதியவர் அல்ல. ஆனால் அன்று அவர் பேச வந்த தலைப்பு புதிது. பொதுவாக பொருளாதாரத்தைப் பற்றி அதிபரிடம் பேசும் அவர், அன்றைய தினம், அவர் அதிபரிடம் பேச இன்னொரு விஷயமும் இருந்தது. அன்று, வரலாற்றின் போக்கை மாற்றியமைத்ததாக நம்பப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதத்தை அவர் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் விற்பனைக்கு வரும் இந்தக் கடிதத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை (4 முதல் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்று மதிப்பிடுகிறது கிறிஸ்டியின் ஏல நிறுவனம். இது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு சொந்தமான கலைப்பொருட்கள் ஏலத்தின் ஒரு பகுதியாகும். அவர் 2018-இல் 65 வயதில் இறந்தார். கணினி இயலில் அவரது ஆர்வத்தையும் செல்வாக்கையும் பிரதிபலிக்கும் பல்வேறு பொருட்கள் இருந்தாலும், இந்தக் கடிதம் அவற்றின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கையொப்பமிட்டவர் மிக முக்கியமானவராக இருந்த போதிலும், ரூஸ்வெல்ட் ஆரம்பத்தில் அதன்மீது அதிக கவனம் செலுத்தவில்லை. மற்ற விஷயங்கள் அவரது மனதை ஆக்கிரமித்திருந்தன. அந்தச் சந்திப்பிற்கு 15 நாட்களுக்கு முன்பு, ஜெர்மனி போலந்தின் மீது படையெடுத்திருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவு கொண்ட ஒரு போர் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்தது. லியோ சிலார்ட் என்ற அதிகம் அறியப்படாத ஹங்கேரிய புலம்பெயர்ந்த இயற்பியலாளர் எழுதிய கடிதத்தை ரூஸ்வெல்டுக்கு சாக்ஸ் படித்துக் காட்டினார். உண்மையைச் சொல்வதானால், அணுசக்தி, சங்கிலி விளைவுகள், மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றல் ஆகியவை அவர்கள் இருவருக்கும் மிகச் சிக்கலானதாக இருந்தன. அக்கடிதத்தில் இதுபோன்ற பத்திகள் இருந்தன: "கடந்த நான்கு மாதங்களில், யுரேனியத்தின் ஒரு பெரிய திரளில் இருந்து சங்கிலி விளைவை நிறுவுவது சாத்தியமாகியிருக்கிறது (...), இதன் மூலம் அதிக அளவு ஆற்றல் மற்றும் ரேடியம் போன்ற புதிய தனிமங்கள் பெரிய எண்ணிக்கையில் உருவாகும்." ஆனால் இதனை அதிபர் ரூஸ்வெல்ட் சட்டை செய்யவில்லை. அதிபர் தனது பழைய நண்பரை மறுநாள் காலை காபி சாப்பிட அழைத்தார். நிகழும் போது பெரிதாகத் தோன்றாத சில சம்பவங்கள் உலகையே மாற்றிவிடும். இதுவும் அதுபோன்ற ஒன்றுதான். சில மாதங்களுக்கு முன்… அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த செய்திகள் சில மாதங்களாக சிலார்ட்டை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. 1939-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாஜி ஜெர்மனியில், அவரது சக ஊழியர்களாக இருந்த விஞ்ஞானிகள் அணுவைப் பிரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர். இது அணுப்பிளவு என்று அழைக்கப்படுகிறது. சிலார்ட் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதை முன்னறிவித்திருந்தார். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அணு யுத்தம் இனியும் ஒரு கற்பனை மட்டுமே அல்ல. நாஜிக்கள் மற்ற எல்லோரையும் விட அணு ஆராய்ச்சியில் மேலும் முன்னேறலாம் என்று அவர் அஞ்சினார். ஆனால் யாரும் தன் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதற்கு முன் சில ஆண்டுகளாக, அவர் விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் ஆகியோர் தனது பேச்சை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போராடி வந்தார். அணுப்பிளவு சாத்தியமா என்று அவர்கள் சந்தேகித்தனர். ஆனால் அவர் சொன்னது சரி என்று நிரூபிக்கப்பட்டது. இருப்பினும், அணுப்பிளவு பற்றிய செய்தி வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் அவரது நண்பரும் சக ஊழியருமான என்ரிகோ ஃபெர்மி இந்தப் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய கவலைகளை நிராகரித்திருந்தார். குறைந்தது 25 ஆண்டுகளுக்கு, ஒருவேளை 50 ஆண்டுகளுக்கு வணிக அல்லது ராணுவ நோக்கங்களுக்காக யாரும் அணுப்பிளவுகளைப் பயன்படுத்த முடியாது, என்று அவர் கணித்திருந்தார். இது நம்ப முடியாத, அறிவியல் புனைகதை என்று கருதப்பட்டது. அணுப்பிளவில், ஓரு அணு பிளக்கப்படுகிறது. அது ஆற்றலை வெளியிடுகிறது, அவ்வளவுதான். இருப்பினும், ஒரு நிலையற்ற அணுவை பிளக்க முடிந்தால், அது அதிக எண்ணிக்கையிலான நியூட்ரான்களை வெளியிடும். அவை மற்ற நிலையற்ற அணுக்களைப் பிளவுபடுத்தி, மேலும் நியூட்ரான்களை வெளியிடும். இப்படி நடக்கும் ஒரு சங்கிலி எதிர்வினை ஒரு அசாதாரண அளவிலான ஆற்றலை வெளியிடும். இயற்பியலாளர் சிலார்ட்டுக்கு பதில்கள் தேவைப்பட்டன. அவற்றை அவர் 1939-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது சக ஊழியர் வால்டர் ஜின்னுடன் கண்டடைந்தார். அவர் புதிய மற்றும் சாத்தியமற்ற அறிவியல் சோதனைகளைச் செய்வதில் நிபுணர். சிலார்ட் சொன்னது சரிதான் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். "உலகம் வலிமையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது," என்று அவர் பின்னர் எழுதினார். அதிர்ஷ்டவசமாக, அணுப்பிளவு சங்கிலி எதிர்வினையை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு தடை இருந்தது. அணுப்பிளவு வெளியிடும் நியூட்ரான்கள் அதிவேகமாகப் பயணித்தன. மற்ற அணுக்களால் அவற்றை உறிஞ்சுவது கடினமான இருந்தது. ஆனால் அந்த விவரம் நாஜிகளை நிறுத்தப் போவதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நார்வேயில் கன நீர் தயாரிக்கப்பட்டு வந்த இடம். இதனை 1943-இல் நாஜிக்கள் தகர்த்தனர் ஜெர்மனி-பிரான்ஸ் இடையே நீருக்கான போட்டி நியூட்ரான்களை மெதுவாகச் செல்லவைப்பது எப்படி? இதற்கு தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் அது பல நியூட்ரான்களை உறிஞ்சி, அவற்றை ஒரு சங்கிலி எதிர்வினையில் பயனற்றதாக ஆக்கி விடுகிறது. இருப்பினும், H₂O இன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஒரு கூடுதல் நியூட்ரான் (D₂O) கொண்ட ஹைட்ரஜன் ஐசோடோப் பயன்படுத்தப்பட்டால், இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும். இது ‘கன நீர்’ (heavy water) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதனை உற்பத்தி செய்வது கடினம். எனவே நாஜி அரசாங்கம் நார்வேயில் உள்ள வேமோர்க் என்ற நீர்மின் நிலையத்திற்குத் தனது பிரதிநிதிகளை அனுப்பியது. அங்கு அவர்கள் தங்கள் தினசரி வேலையின் துணை விளைபொருளாக கனரக நீரை உற்பத்தி செய்தனர். ஜெர்மனியர்கள், அங்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து கன நீரையும் மிக அதிக விலைகொடுத்து வாங்க முன்வந்தனர். அந்த ஆலையை மேலும் அதிகமாக கன நீர் உற்பத்தி செய்யவும் வலியுறுத்தினர். ஆனால் நார்வேஜியர்கள் இதனை நிராகரித்தனர். ஹிட்லரின் திட்டங்கள் என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், அவற்றின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை. பிரெஞ்சு ரகசிய போலீஸ் குழு ஒன்று அதன் பின்னர் அந்த ஆலையை அணுகி, அவர்களது ரசாயன துணைத் தயாரிப்புகளின் சாத்தியமான ராணுவ நோக்கம் குறித்து நார்வேஜியர்களை எச்சரித்தது. நார்வேஜியர்கள் கன நீரை இலவசமாக பிரெஞ்சு அதிகாரிகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் ஜெர்மனியர்கள் இதனைக் கண்டுபிடித்தனர். இரவோடு இரவாக 26 கனரக நீர் கேன்கள் கடத்தப்பட்டன. இது ஒரு பதற்றமான நடவடிக்கை. நாஜி போர் விமானங்கள் தயாராகக் காத்திருந்தன. அவர்கள் பிரெஞ்சு அதிகாரிகள் ஏறிய விமானத்தைக் குறிவைத்து அதனைத் தரையிறக்கக் கட்டாயப்படுத்தினர். ஆனால், நாஜிக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. விமானத்தில் கன நீர் கேன்கள் இல்லை. அவை ரயில் மூலம் பாரிஸுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன. அங்கு ஒரு விஞ்ஞானிகள் குழு அவசரமாகப் பரிசோதனையைத் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபருக்கு அனுப்பப்பட்ட அசல் கடிதம் நியூயார்க்கில் உள்ள ஹைட் பார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஏலம் விடப்படும் இரண்டாவது பதிப்பு, கையொப்பமிடப்பட்ட சிறிய பதிப்பு ஐன்ஸ்டீனின் கையொப்பம் அணுஆயுதப் போட்டி உச்சத்தில் இருந்தது. ஒரு அணுகுண்டு இருக்குமோ என்று சிலார்ட் அஞ்சினாலும், அவர் நாஜி வெடிகுண்டு பற்றி அதிகம் பயந்தார். இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத இந்த ஆயுதம் உண்மையில் இருக்கிறது என அவர் நம்பினார். அதனால் நிகழப்போகும் அழிவுகள், அடக்குமுறைகளைக் கற்பனை செய்து பார்த்தார். அவர் ஒரு எளிய முடிவுக்கு வந்தார்: அமெரிக்கர்கள் அதை ஜெர்மனியர்களுக்கு முன்பாக உருவாக்க வேண்டும். அதைச் செய்ய அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் அவர்களுக்கு உச்ச அதிகாரத்தை வழங்க வேண்டியிருந்தது. அவருக்கு ஒரு கூட்டாளி மற்றும் சிந்தனை தேவை: உலகில் மிகவும் சக்தி வாய்ந்தவர் கூட புறக்கணிக்காத விஞ்ஞானி யார்? ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் தெரியும். பெர்லினில் உள்ள ஒரு மாநாட்டு அறையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை சிலார்ட் சந்தித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. மேலும் 15 வருடங்களாக அவர்கள் ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒன்றாக வீட்டிற்கு நடந்து செல்கையில், இயற்பியல், தத்துவம், மற்றும் அரசியல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இப்போது இருவரும் அமெரிக்காவில் குடியேறி, சில கிலோமீட்டர்கள் இடைவெளியில் வசித்து வந்தனர். ஆனால் 1939-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, உலகின் மிகவும் பிரபலமான விஞ்ஞானியான் ஐன்ஸ்டீன் அமெரிக்காவின் லாங் தீவில் ஒரு நண்பரின் அறையில் இருந்தார். அங்கு அவரைக் காண, சிலார்ட், தனது நண்பரும், சக ஊழியரும், சக ஹங்கேரியருமான யூஜின் விக்னருடன் சென்றார். ஐன்ஸ்டீனுக்கு அணுசக்திச் சங்கிலி எதிர்வினை பற்றி சிலார்ட் விளக்கி, அவரும் ஃபெர்மியும் சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறியபோது, ஐன்ஸ்டீன் அதிர்ச்சியடைந்தார். "இதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை," என்பதுதான் அவரது முதல் பதிலாக இருந்தது. இது சுவாரஸ்யமானது. ஐன்ஸ்டீனின் E=mc² சமன்பாடு செயல்பாட்டில் இருந்தது. ஆனால் நாஜி ஜெர்மனியில் இருந்து அகதியாக வந்து, உறுதியான சமாதானவாதியாகவும், அரசியல் உணர்வுள்ள நபராகவும் இருந்த ஐன்ஸ்டீன், ஜெர்மனியர்களின் கைகளில் அணு ஆயுதங்கள் இருந்தால் என்ன ஆகும் என்ற ஆபத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார். ஜெர்மனி போருக்குத் தயாராக இருந்த நிலையில், நிலைமை அவசரமானது என்று ஐன்ஸ்டீன் ஒப்புக்கொண்டார். பின்னாட்களில், அவர் தனது வாழ்க்கையின் பெரும் தவறு என்று அழைத்த ஒரு செயலைச் செய்தார். ரூஸ்வெல்ட்டுக்கு அனுப்ப சிலார்ட் தயாரித்திருந்த கடிதத்தில் கையெழுத்திட அவர் ஒப்புக்கொண்டார். ஐன்ஸ்டீனின் கடிதத்துடன் சிலார்ட் நியூயார்க் திரும்பினார். கடிதத்தை அதிபருக்கு அனுப்புவது மட்டுமே மிச்சம். இது நம்மை மீண்டும் அலெக்சாண்டர் சாக்ஸிடம் கொண்டு செல்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லாங் ஐலேண்டில் அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கான கடிதத்துடன் ஐன்ஸ்டீன் மற்றும் சிலார்ட் அணுகுண்டுடன் காலை உணவு ரூஸ்வெல்ட்டுடனான சாக்ஸின் முதல் சந்திப்பில் அவரிடம் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் இருந்தபோதிலும், அச்சந்திப்பு சரியாகச் செல்லவில்லை. "மிக விரைவில் யுரேனியம் ஒரு முக்கியமான புதிய எரிசக்தி ஆதாரமாக மாறக்கூடும்," என்று அக்கடிதம் துவங்கியது. "சூழ்நிலை குறித்து வெளிவந்துள்ள சில அம்சங்கள் விழிப்புடன் இருக்கக் கோருகின்றன. தேவைப்பட்டால், அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று அக்கடிதம் எச்சரித்தது. அணுசக்தி சங்கிலி எதிர்வினை "வெடிகுண்டுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும். இது சாத்தியமானது. உறுதியாக இல்லாவிட்டாலும், இந்த வழியில் மிகவும் சக்திவாய்ந்த புதிய வகை குண்டுகளை ஆயுதமாக்க முடியும்," ஐன்ஸ்டீன் எச்சரித்திருந்தார். நாஜிக் கட்டுப்பாட்டில் இருந்த செக்கோஸ்லோவாகிய சுரங்கங்களில் இருந்து யுரேனியம் தொடர்பான தகவல்களை அவர் குறிப்பிடுகிறார் என்றாலும், அதிகமான அறிவியல் தகவல்களால் அதிபர் குழம்பிவிட்டார் என்பதை சாக்ஸ் அறிந்திருந்தார். இருப்பினும், அடுத்த நாள் காலை உணவுக்கான அழைப்பு, உலகின் மிக சக்திவாய்ந்த மனிதனுக்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி புரிய வைப்பதற்கான இரண்டாவது வாய்ப்பாகும். சாக்ஸ் ஒரு திட்டத்தை வகுத்தார். அதிபரை விஞ்ஞானத்தால் வெல்ல வழி இல்லை என்றால், அவர் அவருக்கு ஒரு கதை சொல்ல முடிவெடுத்தார். போர்களுக்கு மத்தியில், ஒரு இளம் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் பிரஞ்சு அரசர் நெப்போலியனுக்கு நீராவிக் கப்பல்களை உருவாக்கிக் கொடுக்க முன்வந்தார். அது காற்றைப் பொருட்படுத்தாமல் இங்கிலாந்தில் தரையிறங்க உதவும் என்று அவர் விளக்கினார். பாய்மரம் இல்லாத கப்பல்களைப் பற்றிய யோசனை நெப்போலியனுக்கு மிகவும் அபத்தமாகத் தோன்றியது. அவர் கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஃபுல்டனை வேலையிலிருந்து நீக்கினார். ராபர்ட் ஃபுல்டன் நீராவிப் படகை மட்டுமல்ல, முதல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் முதல் நீர்மூழ்கி ஏவுகணைகளை உருவாக்கினார். ரூஸ்வெல்ட் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பின்னர், "அலெக்ஸ், நாஜிக்கள் நம்மைத் தாக்கித் தகர்க்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?" என்றார். "ஆம்," என்று சாக்ஸ் பதிலளித்தார். ஃபுல்டன் மற்றும் நெப்போலியன் கதை ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால் லியோ சிலார்ட் எழுதிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் அவரை அதை நம்ப வைத்தது. அக்கடிதத்தைப் பெற்ற அதே மாதம், ரூஸ்வெல்ட் யுரேனியம் ஆலோசனைக் குழுவை உருவாக்கினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ‘மன்ஹாட்டன் திட்டத்தை’ துவங்கியது. இது 1945-இல் ஜப்பானுக்கு எதிராக முதல் அணுகுண்டுகளைப் பயன்படுத்த வழிவகுத்தது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளுக்கும் ஐன்ஸ்டீனின் கடிதத்திற்கும் இடையே நேரடித் தொடர்பை வரைந்த வரலாற்றாசிரியர்கள் உள்ளனர். மற்றவர்கள் அத்தகைய நேரடி உறவு இருப்பதாக நம்பவில்லை. அக்கடிதம் இல்லாவிடினும் அமெரிக்கர்கள் எப்படியும் அணுகுண்டுகளைத் தயாரித்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள். ஐன்ஸ்டீன், தனது பங்கிற்கு, பல சந்தர்ப்பங்களில் அக்கடிதத்தில் கையெழுத்திட்டதற்காகப் பெரிதும் வருந்தினார். 1947-ஆம் ஆண்டு ‘நியூஸ் வீக்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் ‘அனைத்தையும் ஆரம்பித்து வைத்தவர்’ என்ற தலைப்பில் அவர் கூறியது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது: "ஜெர்மானியர்களால் அணுகுண்டு தயாரிக்க முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஒரு விரலைக் கூட உயர்த்தியிருக்க மாட்டேன்." https://www.bbc.com/tamil/articles/cr40r1e5zg5o
  9. ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றர் உக்ரைன் படையினரிடம் - 28 கிராமங்களையும் கைப்பற்றினர். Published By: RAJEEBAN 13 AUG, 2024 | 06:16 AM ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இரண்டரை வருடகால யுத்தத்தில் முதல்தடவையாக உக்ரைன் படையினர் ரஸ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை உக்ரைன் படையினர் தங்கள் கட்டுபாட்டின் கீழ் வைத்துள்ளதாக உக்ரைனின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். கேர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படையினர் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்யா யுத்தத்தை ஏனையவர்களின் வாசலிற்கு கொண்டு சென்றது, தற்போது அது ரஸ்யாவின் வாசலிற்கு சென்றுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலிடெமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தாக்குதலை பாரிய தூண்டும் நடவடிக்கை என வர்ணித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நாட்டிலிருந்து உக்ரைன் படையினரை உதைத்து வெளியே அனுப்பபோவதாக தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் மேற்கு பிராந்தியத்திலிருந்து பெருமளவு மக்கள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். 28 கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் விழுந்துள்ளன, 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது என உள்ளுர்ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190953
  10. ட்ரம்பின் சொத்துப் பெறுமதியிலும் வீழ்ச்சியை ஏற்படுத்திய கமலா ஹரிஸின் வருகை 12 AUG, 2024 | 06:20 PM (ஆர்.சேதுராமன்) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது புதிய போட்டியாளரான கமலா ஹரீஸை எதிர்கொள்ள திணறி வருகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட்டபோது, 81 வயதான பைடனின் தடுமாற்றங்கள், மறதி போன்றவற்றை தூக்கிப்பிடித்து அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார் 78 வயதான டொனால்ட் ட்ரம்ப். ஜூன் 27ஆம் திகதி நடைபெற்ற பைடன், ட்ரம்ப் விவாதத்தின்போது பைடனின் செயற்பாடுகள் மிக மந்தமாக இருந்ததால் ஜனநாயகக் கட்சி பெரும் பின்னடவை எதிர்கொண்டது. அதையடுத்து ட்ரம்பின் வெற்றி தடுக்க முடியாது என்றே பலர் கருதினர். கருத்துக் கணிப்புகளில் பைடனை விட ட்ரம்ப் முதலிடம் பெற்றிருந்தார் ஆனால், ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் ஒதுங்கி, அக்கட்சியின் வேட்பாளராக கமலா ஹரீஸ் அறிவிக்கப்பட்ட பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜோ பைடனை விட கமலா ஹரிஸை தோற்கடிப்பது இலகுவானது என்றுதான், கமலா ஹரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ட்ரம்ப் முதலில் கூறினார். ஆனால், அவர் எதிர்பார்த்தவாறு களநிலைவரம் இல்லை. கமலா ஹரிஸின் வருகையால் தனது பிரச்சாரத் திட்டத்தையே மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ட்ரம்ப்புக்கு ஏற்பட்டது. இது குறித்து ட்ரம்ப்பும் ஆத்திரமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பைடன் விலகிவிட்டதால் அனைத்து நடவடிக்கைகளையும் மீள ஆரம்பிக்க வேண்டியுள்ளதால், பைடனுக்கு எதிரான பிரச்சாரத்துக்காக குடியரசுக் கட்சி செலவிட்ட பணம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ட்ரம்ப் கூறினார். தனது சொந்த சமூக வலைத்தளமான 'ட்ரூத் சோஷல்' தளத்தில் ஜூலை 22 ஆம் திகதி ட்ரம்ப் வெளியிட்ட பதிவொன்றில், 'நேர்மையற்ற ஜோ பைடனுக்கு எதிராக பெருமளவு நேரத்தையும் பணத்தையும் செலவிட நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். இப்போதும் நாம் அனைத்தையும் மீள ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இந்த மோசடிக்காக குடியரசுக் கட்சிக்கு பணம் மீளளிக்கப்பட வேண்டியதில்லையா?' என ட்ரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார். நன்கொடைகள் பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தி, நன்கொடை வழங்குவதை இடைநிறுத்தி வைத்திருந்த அவரின் சொந்தக் கட்சி நன்கொடையாளர்கள் கமலா ஹரிஸின் வருகையால் பெரும் உற்சாகமடைந்தனர். இதனால் 24 மணித்தியாலங்களில் 81 மில்லியன் டொலர்கள் கமலா ஹரிஸின் பிரச்சாரத்துக்கு திரட்டப்பட்டது. அதிக நன்கொடை கிடைப்பது வேட்பாளருக்கான ஆதரவு நிலையை ஊகித்துக் கொள்வதற்கான ஓர் அளவுகோலாக கருதப்படுவதும், அமெரிக்கத் தேர்தல்களின் வேட்பாளர்கள் தமக்கு கிடைத்த நன்கொடைகளை பெருமையுடன் வெளிப்படுத்திக் கொள்வதற்கு ஒரு காரணமாகும். கடந்த ஜூலை மாதத்தில் தனக்கு 138.7 மில்லியன் டொலர் நன்கொடை கிடைத்ததாக டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரக் குழு அறிவித்தது. சில தினங்களில் கமலா ஹரிஸின் பிரச்சாரக் குழு ஜூலை மாத சேகரிப்பை அறிவித்தபோது அது ட்ரம்பின் கிடைத்த தொகையைவிட இரு மடங்கை விட அதிகமாக இருந்தது. ஜூலையில் 310 டொலர் கிடைத்ததாக அக்குழு அறிவித்தது. இதில் 200 மில்லியனுக்கும் அதிகமான தொகை கமலா ஹரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் திரட்டப்பட்ட தொகை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரம்பின் சொத்துக்களின் பெறுமதி வீழ்ச்சி பிரச்சாரத்துக்கான நிதி திரட்டலில் கமலா ஹரிஸ் தற்போது முன்னிலையில் இருக்கும் நிலையில், அவர் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இறங்கிய பின் ட்ரம்பின் தனிப்பட்ட சொத்துக்களிலும் 900 மில்லியன் டொலர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அது உண்மை. டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரம்புக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபரில் ட்ரூத் சோஷல் எனும் டுவிட்டர் பாணி சமூக வலைத்தளத்தை ட்ரம்ப் ஸ்தாபித்தார். இதன் உரிமையாளராக ட்ரம்ப் மீடியா அன்ட் டெக்னோலஜிஸ் குரூப் எனும் நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் 1114.75 மில்லியன் பங்குகளை வைத்திருக்கிறார் ட்ரம்ப். கமலா ஹரிஸ் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் களமிறங்கிய பின்னர், மேற்படி நிறுவனத்தில்; ட்ரம்புக்குச் சொந்தமான பங்குகளின் பெறுமதி 23 சதவீதம் குறைந்துவிட்டது. ஜூலை 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பைடன் போட்டியிலிருந்து விலகியதுடன், கமலா ஹரிஸை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். அதற்கு முந்தைய இறுதி பங்குச்சந்தை நாளான ஜூலை 19 ஆம் திகதி மேற்படி நிறுவனத்திலுள்ள ட்ரம்பின் பங்குகளின் 4 பில்லியன் டொலர்களைவிட சற்று அதிகமாக இருந்தது. ஆனால், அதன்பின் அப்பங்குகளின் பெறுமதி 3.1 பில்லியன் டொலர்களாக குறைந்துவிட்டது. ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தனது தீர்மானங்களை அறிவிப்பதற்கு டுவிட்டரை பயன்படுத்தியவர் ட்ரம்ப், அவர் ஜனாதிபதி தேர்தலில் வென்றால், ட்ரூத் சோஷல் வலைத்தளமே ஜனாதிபதியின் பிரதான தொடர்பாடல் தளமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனால் மேற்படி நிறுவனத்pன் பங்குகளின் பெறுமதி அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகுவாரா என்பது தொடர்பாக பங்குச்சந்தை வர்த்தகர்களின் ஒரு பந்தய விடயமாக ட்ரூத் சோஷல் நிறுவன பங்கு விலைகளின் ஏற்ற இறக்கங்கள் கருதப்படுகின்றன. கடந்த ஜூன் இறுதியில் ஜோ பைடனின் மந்தமான விவாதத்தின் பின்னர் மேற்படி நிறுவனப் பங்குகளின் விலை தற்காலிகமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உப ஜனாதிபதி வேட்பாளர்கள் உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவும் டொனால்ட் ட்ரம்புக்கு அதிகம் சாதகமாக அமையவில்லை எனக் கூறப்படுகிறது. ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான செனட்டர் ஜே.டி. வான்ஸை தனது உப ஜனாதிபதி வேட்பாளராக ஜூலை 15 ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்தார். ஜோ பைடனுடான போட்டியை கருத்திற்கொண்டே வான்ஸை ட்ரம்ப் தெரிவு செய்தார். ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்குள் தேர்தலிலிருந்து பைடன் விலகி, கமலா ஹரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் ட்ரம்பின் தந்திரோபாயங்கள் கேள்விக்குறியாகிவிட்டன. அத்துடன், ஜே.டி. வான்ஸ் புதிய வாக்காளர்களை கவரும் வகையில் இல்லை. ஏற்கெனவே உள்ள ட்ரம்பின் தீவிர ஆதரவாளர்களை மேலும் தூண்டிவிடக்கூடியராகவே வான்ஸ் உள்ளார் என விமர்சனங்கள் உள்ளன. உதாரணமாக, நிக்கி ஹாலே போன்ற ஒருவரை உப ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் தெரிவுசெய்திருந்தால் அவர் மிதவாத கொள்கையுடைய வாக்களர்களையும் கவர்ந்திருப்பார் என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். உப ஜனாதிபதி வேட்பாளர்களில் மிக மோசமான தெரிவு வான்ஸ் என ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தன்னை இனங்காட்ட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. 'இக்கட்டடத்தில் எமது தரப்பிலுள்ளவர்களிடம் கேட்டால், 10 பேரில் 9 பேர் அவர் ஒரு மோசமான தெரிவு எனக் கூறுவார்கள்' என மற்றொரு குடியரசுக் கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார். வாக்காளர்களிடம் சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்த வான்ஸ் தவறியமை குறித்து ட்ரம்ப் அதிருப்தியடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. மறுபுறம் கமலா ஹரிஸ் தனது உப ஜனாதிபதி வேட்பாளராக மினேசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்ஸை தெரிவுசெய்துள்ளார். 60 வயதான டிம் வால்ஸ், இராணுவ வீரராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர். கமலா ஹரீஸ் தன்னை இந்தியராகவும் கறுப்பினத்தராகவும் அடையாளப்படுத்தும் நிலையில், வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்கு டிம் வால்ஸ் உதவுவார் எனக் கருதப்படுகிறது. 2016ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஹிலாரி கிளின்டனைவிட அதிக மக்கள் பங்குபற்றும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியவர் டொனால்ட் ட்ரம்ப். (2020 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்கள் கொவிட் 19 பெருந்தொற்று பரவல்காலத்தில் நடைபெற்றன. அதனால் வேட்பாளர்கள், நேரடி பிரச்சாரக் கூட்டங்களை குறைத்துக்கொண்டனர்.) ஆனால், கடந்த வாரம் கமலா ஹரிஸும், டிம் வால்ஸும் பிலடெல்பியா, பீனிக்ஸ் நகரங்களில் நடத்திய பிரச்சாரக் கூட்டங்களில் 14,000 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். சுமார் ஒரு தசாப்தகாலத்தில் ட்ரம்பின் பிரச்சாரக் கூட்டங்களுக்கே இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரள்வார்கள் என்ற அபிப்பிராயம் நிலவியது. தற்போது கமலா ஹரிஸ், டிம் வோல்ஸ் அதனையும் தகர்க்க ஆரம்பித்துள்ளனர். கருத்துக்கணிப்புகளிலும் தற்போது டொனால்ட் ட்ரம்ப்பைவிட கமலா ஹரிஸ் முன்னிலையில் உள்ளார். ஆனால், இத்தேர்தலுக்கு இன்னும் சுமார் 3 மாதங்கள் உள்ளதையும் கருத்திற்கொள்ள வேண்டும். https://www.virakesari.lk/article/190936
  11. Published By: RAJEEBAN 12 AUG, 2024 | 03:39 PM https://www.scmp.com/ Dimuthu Attanayake தமிழில் ரஜீபன் இலங்கை 2022ம் ஆண்டின் மிகமோசமான நாட்டை முடக்கிய பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதலாவது தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்வேளையில் ராஜபக்ச குடும்பம் அதன் அரசியல் வாரிசினை அறிவித்துள்ளது. பல அரசியல் ஆய்வாளர்கள் இதனை அந்த குடும்பத்தின் அரசியல் மறுபிரவேச முயற்சியாக கருதுகின்றனர். இந்த வாரம் ராஜபக்சாக்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யுத்தகால தலைவர் மகிந்த ராஜபக்சவின் 38 வயது மகன் நாமல் ராஜபக்சவை செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பாளராக அறிவித்தது. 2022 போராட்டக்காரர்கள் கோரிய இளம் தலைவர் என அவரது தந்தையால் வர்ணிக்கப்பட்ட நாமல் ராஜபக்சவிற்கு மிகவும் கடினமான ஒரு பணி காத்திருக்கின்றது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். பிரிவினைவாத விடுதலைப்புலிகளுடனான மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இந்த குடும்பம் முன்னணிக்கு வந்தது – பிரபலமானது. 2009 இல் இலங்கை இராணுவத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் யுத்தவீரர்கள் என அழைக்கப்பட்டனர் குறிப்பாக இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினால். இரண்டு தசாப்தங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்திய பின்னர் இந்த பரம்பரை நாட்டின் பொருளாதார நெருக்கடியால் உருவான பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து தனது வீழ்ச்சியை சந்தித்தது. 2022 மே மாதம் மூன்றாவது தடவையாக பிரதமராக பதவிவகித்த காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ச தனது பதவியை துறந்துவிட்டு இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்படை தளத்திற்கு தப்பியோடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். தாங்க முடியாத வாழ்க்கை செலவு அத்தியாவசிய பொருட்களிற்கான தட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரது சகோதரர் நாட்டிலிருந்து தப்பியோடி பின்னர் இரண்டு மாதங்களின் பின்னர் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த நெருக்கடி காரணமாக விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சராக பதவிவகித்த நாமல் ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார். ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச கட்டிடங்களிற்குள் நுழைந்தனர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை ஆக்கிரமித்தனர், ஜனாதிபதி பிரதமரினது இல்லங்களையும் ஆக்கிரமித்தனர், அவர்கள் ஜனாதிபதியின் நீச்சல் தடாகத்தில் நீந்தினர், அவரது கட்டிலில் உறங்கினர் அவரது பியானோவை இசைத்தனர். 2023 இல் வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய இலங்கையின் உயர்நீதிமன்றம், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களே காரணம் என தெரிவித்தது. தற்போது நாமல் ராஜபக்ச தனது முதலாவது ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கின்றார், இலங்கையின் அரசியலின் முன்னரங்குகளிற்கு திரும்புவது குறித்த ஆசையை ராஜபக்ச பரம்பரை கொண்டுள்ளது என்கின்றனர் பல ஆய்வாளர்கள். நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அவர்களிற்கு அரசியல் எதிர்காலம் உள்ளதை வெளிப்படுத்துகின்றது என்கின்றார் கொழும்பை தளமாக கொண்ட மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து. எனினும் 2024 ஜனாதிபதி தேர்தலை விட அடுத்த ஜனாதிபதி தேர்தலே நாமல்ராஜபக்சவின் இலக்கு என்கின்றார் அவர். ஒரு ராஜபக்ச வேட்பாளர் போட்டியிடவில்லை என்றால் , அவர்களின் முழு பாரம்பரியம் மற்றும் வம்சத்தை உருவாக்கும் முயற்சிகள் முழுமையாக தோல்வியடையும் என்கின்றார் பாக்கியசோதி சரவணமுத்து. 2024 ஜனாதிபதி தேர்தலில் தன்னால் சிறப்பாக செயற்படமுடியும், தனது குடும்பத்திற்கு இன்னமும் ஆதரவுள்ளது என்பதை காண்பிப்பதற்காக நாமல் ராஜபக்ச ஒரு கடினமான சவாலை எதிர்கொள்கின்றார் என பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிடுகின்றார். ராஜபக்ச ஆட்சியை வீழ்த்திய ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான மெலானி குணதிலக இலங்கையர்கள் இந்த பரம்பரைக்கு எதிராக தொடர்ந்தும் போராடவேண்டும் என அழைப்பு விடுக்கின்றார். ஆர்ப்பாட்டங்களின் போது தாங்கள் எதற்காக போராடினார்கள் என்பதை இலங்கையர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன், என தெரிவிக்கும் அவர் இந்த முறையும் அவர்கள் ராஜபக்சாக்களை தோற்கடிப்பார்கள் இந்த முறை மாத்திரமல்ல எதிர்காலத்திலும் தோற்கடிப்பார்கள் என அவர் குறிப்பிடுகின்றார். ராஜபக்சாக்கள் தங்கள் வலுவை காண்பிக்க முயல்கின்றனர், தங்களிற்கு என்ன வாய்ப்புகள் உள்ளது என பார்க்க விரும்புகின்றனர் என்கின்றார் அவர். மகிந்த ராஜபக்ச நாமல் ராஜபக்சவிற்கு அவர்களது பரம்பரைக்கு ஆதரவு வழங்கும் இலங்கையர் குழுவொன்று காணப்படுகின்ற அதேவேளை அவர்கள் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பார்களா என்பது உறுதியாக தெரியவில்லை என்கின்றார் பாக்கியசோதி சரவணமுத்து. இளைய ராஜபக்சவிடம் அவரது தந்தையின் கவர்ச்சி இல்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். நாமல் ராஜபக்சவின் அரசியல் திறமையும் கட்சியின் மீள எழும் திறனும் கடுமையாக சோதிக்கப்படும் என்கின்றார் சிங்கப்பூர் பல்கலைககழகத்தை சேர்ந்த அரசியல் விஞ்ஞானி ராஜ்னி கமகே. இலங்கையர்களை கவர்வதற்காக 78 வயதான மகிந்த ராஜபக்சவை அவரது பரம்பரையை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதே அவரது வயதை கருத்தில் கொள்ளும்போது மிகவும் முக்கியமான பலவீனம் எனவும் அவ தெரிவிக்கின்றார். ராஜபக்ச வம்சாவளியின் அரசியல் எதிர்காலத்திற்காக கட்சியில் உள்ள முக்கிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கீழ் மட்டத்திலிருந்து மீண்டும் கட்சியை கட்டியெழுப்பவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/190855
  12. அண்ணை நீங்கள் அப்ப தப்பி பிறகு சிக்கிவிட்டீர்கள்! பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம் தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும். பெண்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். நீங்கள் விரும்பும் பெண்ணை மதிப்பிடுவதற்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவைப்படலாம். பெண்களை முழுவதும் புரிந்து கொண்டு. நமது உறவை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன. Read more at: https://tamil.boldsky.com/relationship/2013/11/10-tips-for-understanding-women-004379.html
  13. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,"இந்தியாவின் சுவர்" என்று அனைவராலும் அழைக்கப்பட்டார் ஸ்ரீஜேஷ் 34 நிமிடங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற அந்த தருணம், வீரர்கள் பெருமகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டாடினர். ஆனால் பிஆர் ஸ்ரீஜேஷ் மட்டும் அமைதியாக அந்த இடத்தை விட்டு நடந்து சென்று, மைதானத்தின் ஒரு முனையில் இருந்த கோல் போஸ்ட்டின் முன் தலைகுனிந்து நின்றார். அந்த காட்சி அவருக்கும் கோல் போஸ்டுக்குமான நீண்ட நெடிய ஆழ்ந்த உறவை பிரதிபலித்தது. ஆம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக கோல்போஸ்ட் தான் அவரின் உறைவிடமாக இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இனி இருக்க முடியாது. கோல் போஸ்டை அவர் எந்த அளவுக்கு `மிஸ்’ செய்கிறாரோ அதை விட இருமடங்காக இந்தியா அவரை `மிஸ்’ செய்யும். வியாழன் அன்று தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய `கோல்கீப்பர்’ ஸ்ரீஜேஷ், ஒரு புகழ் பெற்ற பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். "இந்தியாவின் சுவர்" என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஸ்ரீஜேஷ், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவரது அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்த ஸ்கோரை சமன் செய்ய ஸ்பெயின் கடுமையாக போராடியது. ஆனால் ஸ்ரீஜேஷ் அவர்களின் முயற்சிகளை முறியடித்தார், குறிப்பாக போட்டியின் இறுதி நிமிடங்களில் கோல்கீப்பராக கோல்போஸ்டுக்கு முன் இந்திய அணியின் அரணாக நின்றார். அவரது வழக்கமான சாதுர்யமான டைவ்ஸ் மற்றும் உள்ளுணர்வு விளையாட்டில் பிரதிபலித்தது. ஸ்பெயின் வீரர்கள் 9 பெனால்டி கார்னர்களைப் பெற்றனர், ஆனால் எதையும் அவர்களால் கோல் ஆக மாற்ற முடியவில்லை. கோல்கீப்பராக இந்த விளையாட்டில் அவரது திறனை புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீஜேஷ் மற்றும் அவரது குழு இறுதி வரை தங்கள் முன்னிலையை தக்கவைக்க போராடியது. முன்னாள் இந்திய கேப்டனான ஸ்ரீஜேஷ், இந்த ஒலிம்பிக்கில் இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறியதில் முக்கிய பங்காற்றினார். பிரிட்டனுக்கு எதிரான நாக்-அவுட் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டாக றியது. அந்த சமயத்திலும் இந்திய அணியின் சுவராக இருந்து கோல் விழாமல் தடுத்தார். அந்த ஆட்டத்தில் கோலாக மாற வேண்டிய இரண்டு சிறந்த பந்துகளை தடுத்து அணியை காப்பாற்றினார். கண்ணீரை வெற்றியாக மாற்றிய ஸ்ரீஜேஷ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்ரீஜேஷ் ஒருபோதும் கவனத்தையோ நட்சத்திர பிம்பத்தையோ துரத்தவில்லை அரையிறுதியில் ஜெர்மனியிடம் இந்தியா தோல்வி அடைந்த போது அவர் கண்ணீர் வடித்ததை அனைவரும் பார்த்தனர். அவர் இந்தளவுக்கு கவலை கொள்ள முக்கிய காரணம் இது அவரின் கடைசி ஆட்டம். இனி அவர் ஒருபோதும் தங்கப் பதக்கத்தை வெல்ல மாட்டார் என்பதை எண்ணி கண் கலங்கினார். ஆனால் அதில் இருந்து மீண்டு, தனது கவனத்தை வெண்கலப் பதக்கத்தின் பக்கம் திருப்பினார். வியாழன் அன்று, அவர் மீண்டும் அனைவரின் முன்னிலையிலும் கண்ணீர் வடித்தார் - ஆனால் இந்த முறை மகிழ்ச்சியில்! சுமார் இருபது ஆண்டுகளாக நாட்டின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்த அந்த மனிதருக்காக, இந்திய ரசிகர்களும் அவருடன் சேர்ந்து கண்ணீர் வடித்தனர் என்று சொன்னால் மிகையாகாது. சமூக ஊடகங்கள் அவரை பற்றிய நெகிழ்ச்சி பதிவுகளால் நிரம்பி வழிகின்றன. இந்திய தேசம் பொதுவாக கிரிக்கெட் பித்து பிடித்த ரசிகர்களின் கூடாரம் என்று அறியப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்த அதே கவனமோ, புகழோ அல்லது பணமோ மற்ற விளையாட்டு வீரர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஒரு ஹாக்கி கோல் கீப்பருக்கு இவை கிடைப்பது மிகவும் கடினம். "ஹாக்கி விளையாட்டில் ஒரு கோல் கீப்பர் மீது அதிக கவனம் விழாது. அவரை பிரத்யேகமாக நேசிக்கும் ரசிகர்கள் இருப்பதும் கடினம். அவர் கண்ணுக்கு தெரியாதவர், ஆனால் அவர் தவறு செய்யும் போது மட்டும் வெளிச்சத்துக்கு வருவார். நான் இளமையாக இருந்த போது, இந்தியாவின் கோல்கீப்பர் யார் என்று கூட எனக்குத் தெரியாது” என்று அவர் 2021 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஸ்ரீஜேஷ் ஒருபோதும் வெற்றியைத் தன் தலையில் ஏற்றி கொள்ளவில்லை பந்து வரும் திசையை நானோ விநாடிகளில் தீர்மானித்த ஸ்ரீஜேஷ் ஸ்ரீஜேஷ் ஒருபோதும் கவனத்தையோ நட்சத்திர பிம்பத்தையோ துரத்தவில்லை; அவர் வேலையைத் தொடர விரும்பினார். கசப்பான-இனிப்பான அனுபவங்களை ஒரே மாதிரியாக எடுத்து கொள்ளும் அவரின் அணுகுமுறைதான் அவரைத் தொடர வைத்தது. அவர் ஜூனியர் சர்க்யூட் விளையாட்டு போட்டிகளில் தனது விரைவான அனிச்சை உணர்வுகளால், ஒரு பந்து வரும் திசையை நானோ விநாடிகளில் தீர்மானிக்கும் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். ஆனால் 2006 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனியர் அணியில் ஸ்ரீஜேஷின் அறிமுகம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் இந்திய அணியின் பரம எதிரியான பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் முக்கியமான கோலை தவறவிட்டார். அதைத் தொடர்ந்து வந்த விமர்சனம் அவருக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. கடினமான நாட்களிலும் பயிற்சி அணியில் நிரந்தர இடம் கிடைக்காததால் அடுத்த சில வருடங்கள் அவருக்கு கடினமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்திய ஹாக்கியும் மோசமான கட்டத்தை கடந்தது. 2008 இல் பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறக்கூட அணியின் திறன் போதவில்லை. ஆனால் ஸ்ரீஜேஷ் தொடர்ந்து கடினமாக பயிற்சிகள் மேற்கொண்டார். அவர் மீண்டும் 2011 இல் அணிக்குள் காலடி எடுத்து வைத்தார். அது சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி. இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் மைதானத்தில் தோன்றினார். இரண்டு முக்கியமான பெனால்டி வாய்ப்புகளை முறியடித்ததன் மூலம் இந்தியாவை வெற்றி பெற செய்தார்.அந்த போட்டி முடிந்த உடனேயே ஸ்ரீஜேஷ் மீது மீண்டும் கவனம் திரும்பியது. அவர் 2012 இல் லண்டன் ஒலிம்பிக்கிற்கு இந்திய அணியுடன் பயணம் செய்தார். ஆனால் இந்தியா பதக்கம் இல்லாமல் திரும்பியது. அணியின் மோசமான ஆட்டத்தை தாண்டி, இந்திய கோல்போஸ்டின் பாதுகாவலராக ஸ்ரீஜேஷ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். அடுத்த பிரகாசமான தருணம் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொண்ட போது அவரது அடுத்த பிரகாசமான தருணம் அமைந்தது. ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் 16 ஆண்டுகால தங்கப் பதக்க வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர அற்புதமாக விளையாடி இரண்டு பெனால்டிகளைச் சேவ் (save) செய்தார். ஆனால் அவரது குணாதிசயம், துணிவு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை ஒன்றுபட பிரதிபலிக்கும் ஒரு கணம், 2015 இல் அமைந்தது. ஹாக்கி உலக லீக்கில் ஹாலந்து அணிக்கு எதிரான போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் ஸ்ரீஜேஷ் படுகாயமடைந்தார், அவரது தொடைகள் மீது ஐஸ் பேக் வைக்கப்பட்டிருந்தது. அவரது கட்டைவிரல் உடைந்த நிலையில் இருந்தது அவரது தோள்பட்டை சர்ஜிக்கல் டேப்களால் மூடப்பட்டிருந்தது. போட்டிக்கு முந்தைய நாள் இரவு அவரால் நடக்கவே முடியவில்லை. போட்டியின் போது அவர் கோல் போஸ்டில் நின்றபோது, அவர் ஒரு `மம்மி’ போல் இருக்கிறார் என்று கேலி செய்யப்பட்டார். ஆனால் எல்லா வலிகளுக்கும் நகைச்சுவைக்கும் பின்னால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய சர்வதேச போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது. பெனால்டி ஷூட் அவுட்டில் அவர் செய்த அசத்தலான சேவ்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற உதவியது. இந்திய ஹாக்கியில் ஒரு ஜாம்பவான் என்ற அவரது இடம் அப்போது உறுதிப்படுத்தப்பட்டது. ரியோ ஒலிம்பிக்கில் இந்திய அணியை வழிநடத்தும்படி நிர்வாகம் அவரிடம் கேட்டது. அந்த ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கத்தை வெல்லவில்லை, ஆனால் கால் இறுதி வரை முன்னேறியது. லண்டன் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டனர். சக வீரர்கள் மனதில் இடம் பிடித்த ஸ்ரீஜேஷ் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஸ்ரீஜேஷ் உடன் விளையாடிய சக வீரர்கள் அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தனர் ஸ்ரீஜேஷ் ஒருபோதும் வெற்றியைத் தன் தலையில் ஏற்றி கொள்ளவில்லை. அடக்கமாகவும் எப்போதும் அணுகக் கூடியவராகவும் இருந்தார். பொதுவாக விளையாட்டு நட்சத்திரங்கள் மத்தியில் காணப்படும் பிம்பம் இல்லாமல், தனது வாழ்க்கையை சாதாரணமாக வாழ்ந்தார். இது அவரது சக வீரர்களிடமும், இந்திய ரசிகர்களிடமும் அவருக்கென தனி இடத்தை ஏற்படுத்தியது. 2017 இல் ஏற்பட்ட காயம் அவரது விளையாட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு அச்சுறுத்தியது. எல்லாவற்றையும் மீறி, இரண்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் பல மாத ஓய்வுக்குப் பிறகு அவர் மீண்டு வந்தார். ஆனால் அவரது செயல்திறன் மீண்டும் பழையபடி இல்லை. அவரது வேகம் குறைந்துவிட்டதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். இளம் கோல் கீப்பர்களும் அவரது இடத்திற்கு போட்டியிட்டனர். ஆனால் எதிர்வினை ஆற்றாமல் ஒதுங்கி, கடுமையாக உழைத்து வந்தார். ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஹாக்கி பதக்கத்திற்காக 41 வருட காத்திருப்பு - மற்றொரு வறட்சி ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர அவர் மீண்டும் தயாராக இருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல அவர் உதவினார். மகனுக்காக பசுவை விற்ற தந்தை ஸ்ரீஜேஷ் வாழ்க்கையில் அடித்த புயல்கள் மீது ஏறி அவரை சவாரி செய்ய வைத்தது அவரின் குடும்ப பின்னணி தான். ஸ்ரீஜேஷ் தென் மாநிலமான கேரளாவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் விளையாட்டை நேசித்தார். ஆனால் ஓடுவது அவ்வளவாக பிடிக்காது. எனவே மற்ற விளையாட்டுகள் மற்றும் ஹாக்கியில் வெவ்வேறு விளையாட்டு நிலைகளை முயற்சித்த பிறகு, அதிக ஓட்டம் இல்லாததால் கோல் கீப்பிங் பிரிவை தேர்ந்தெடுத்தார். மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டார். 2003 இல் டெல்லியில் தேசிய சோதனைக்கு அழைக்கப்பட்டார். 48 மணி நேரத்திற்கும் மேலான ரயில் பயணத்திற்குப் பிறகு 15 வயதான அவர் இந்திய தலைநகரை வந்தடைந்தார். அங்கு முகாமில் பெரும்பாலான வீரர்கள் பேசும் மொழி ஹிந்தி. ஸ்ரீஜேஷுக்கு ஹிந்தி ஓரளவுக்கு தான் தெரியும். ஆனாலும் சமாளித்தார். ஹாஸ்டலில் பெரும்பாலும் ஹிந்தி பேசும் நபர்களுடன் தங்கியிருந்த அவர், சவாலை ஏற்றுக்கொண்டு மொழியைக் கற்றுக் கொண்டார். சில அழகான வார்த்தைகள் உட்பட, பிந்தைய ஆண்டுகளில் பதற்றமான போட்டிகளின் போது அவரின் ஹிந்தி வார்த்தைகள் அடிக்கடி கேட்கப்பட்டன. அவர் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு நல்ல `கிட்’ இல்லை. அவரது தந்தை மகனின் சூழலை அறிந்து, தனது பசுவை விற்று 10,000 ரூபாய் மதிப்பிலான அந்த கிட்-ஐ வாங்கினார். கடந்த வியாழன் அன்று அவரது மகன் தனது கடைசி போட்டியில் இந்தியாவுக்காக அற்புதமாக விளையாடி, பாராட்டுகளை வென்றதைக் காண அவரது தந்தையுடன் அவரது வீட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த தருணத்தில் ஸ்ரீஜேஷின் வாழ்க்கை முழுமை அடைந்தது. அடுத்த அத்தியாயம் ஆரம்பம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,சக வீரர்கள் அவரின் இறுதி ஆட்டத்தை ஆரவாரம் செய்து கொண்டாடி அன்பை வெளிப்படுத்தினர் ஸ்ரீஜேஷ் இனி இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார். இதனுடன் தன் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் அவரது முன்னுரிமையாக மாறும். "என் குழந்தைகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கான நேரம் இது, நான் என் பயணத்தை முடித்துவிட்டேன், அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது," என்று அவர் Olympics.com ஊடகத்திடம் கூறினார். அந்த உரையாடலில் அவர் தனது சாதனைகளைப் பற்றி பேச விரும்பவில்லை. "எப்போதும் சிரித்த முகத்துடன் மக்கள் என்னை ஒரு நல்ல மனிதராக நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் அவர் சொன்னதை மேற்கோள் காட்டியது. "இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்கள் ஹாக்கி மைதானத்தில் அடியெடுத்து வைக்கும் போது, ஸ்ரீஜேஷைப் போல நான் ஒரு கோல்கீப்பராக மாற வேண்டும் என்று அவர்கள் உணர வேண்டும்." https://www.bbc.com/tamil/articles/c5y5xe7e72ko
  14. 28 தொடர்சியான முடிவுகளின் பின்னர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த தென் ஆபிரிக்க - மே. தீவுகள் டெஸ்ட் Published By: VISHNU 12 AUG, 2024 | 08:21 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் ட்ரினிடாட், போர்ட் ஒவ் ஸ்பெய்ன் விளையாட்டரங்கில் மழையினால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்யின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் மழை காரணமாக கிட்டத்தட்ட 160 ஓவர்கள் வீசப்படவில்லை. 2023 ஜூலை மாதத்திலிருந்து இந்த வருடம் ஜுலை மாதம் வரை விளையாடப்பட்ட 28 டெஸ்ட் போட்டிகளில் முடிவு கிட்டிய நிலையில் இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது. அப் போட்டியின் கடைசி நாளன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு கடைசி இன்னிங்ஸில் 298 ஓட்டங்களை தென் ஆபிரிக்கா வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 298 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைவதைவிட 63 ஓவர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதிலேயே மேற்கிந்தியத் தீவுகள் குறியாக இருந்தது. ஏனெனில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அதன் கடைசி 6 விக்கெட்களை 16.1 ஓவர்களில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்திருந்தது. எவ்வாறாயினும் இரண்டாவது இன்னிங்ஸில் அலிக் அத்தானெஸ் பெற்ற 92 ஓட்டங்களின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 56.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இரண்டு அணிகளினதும் தலைவர் தீர்மானித்தனர். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியாகவும் அமைந்த இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான அணிகள் நிலையில் இந்த இரண்டு அணிகளும் அதே இடங்களில் இருக்கின்றன. தென் ஆபிரிக்கா 16 புள்ளிகளைப் பெற்று 26.67 சதவீசத புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் 20 புள்ளிகளைப் பெற்று 20.83 சதவீதப் புள்ளிகளுடன் 9ஆம் இடத்திலும் தொடர்ந்து இருக்கின்றன. கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று 11ஆம் திகதி நிறைவடைந்த இப் போட்டியில் எண்ணிக்கை சுருக்கம் வருமாறு:- தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 357 (அணித் தலைவர் டெம்பா பவுமா 86, டோனி டி ஸோஸி 78, வியான் முல்டர் 41, ஜோமெல் வொரிக்கன் 69 - 4 விக்., ஜேடன் சீல்ஸ் 67 - 3 விக்., கிமர் ரோச் 53 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 233 (கியசி கெர்த்தி 42, ஜேசன் ஹோல்டன் 36, அணித் தலைவர் க்ரெய்க் ப்றெத்வெய்ட் 35, மிக்கய்ல் லூயி 35, ஜோமெல் வொரிக்கன் 35 ஆ.இ., கேஷவ் மஹாராஜ் 76 - 4 விக்., கெகிசோ ரபாடா 56 - 3 விக்.) தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 173 - 3 விக். டிக்ளயார்ட் (ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 68, டோனி டி ஸோர்ஸி 45, ஏய்டன் மார்க்ராம் 38, டெம்பா பவுமா 15 ஆ.இ., ஜோமெல் வொரிக்கன் 57 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் (வெற்றி இலக்கு 298 ஓட்டங்கள்) 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது 201 - 5 விக். (அலிக் அத்தானேஸ் 92, கியசி கெர்த்தி 31, ஜேசன் ஹோல்டர் 31 ஆ.இ., கேஷவ் மஹாராஜ் 88 - 4 விக்.) ஆட்டநாயகன்: கேஷவ் மஹாராஜ் https://www.virakesari.lk/article/190943
  15. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் இது தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். பதிவுத் தபாலில் மகஜர் இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், சுகாதார திணைக்களம், காவல்துறை திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் பதிவுத் தபாலில் மகஜரை கையளித்துள்ளாதாக குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/threat-jaffna-teaching-hospital-victim-complains-1723459685
  16. 12 AUG, 2024 | 08:59 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டமை தமிழரசு கட்சியை பொது வேட்பாளர் விடயத்தில் எமது வழிக்கு கொண்டு வரும் ஒரு உத்தியே என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக அரசியல் கட்சி சார்பற்ற ஒருவர் நியமிக்கப்படுவார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இறுதியில் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒற்றுமையினை எதிர்பார்க்கின்றார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால், எங்களிடம் அது இல்லாதிருப்பது கவலைக்குரியது. இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளராக தமிழரசு கட்சிக்குள் இருந்து ஒருவரை தெரிவு செய்திருப்பது என்பது தமிழரசுக் கட்சியை வழிக்கு கொண்டுவரும் உத்தியாகவே நான் கருதுகின்றேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190929
  17. Published By: VISHNU 12 AUG, 2024 | 10:16 PM சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்தில் இலங்கை இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கான முதலாவது சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வேண்டுகோளின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுத்தார். இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மாத்திரமன்றி இலங்கைக்கும் பிராந்தியத்திற்கும் நன்மை பயக்கும் விடயமாக அமையும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்தின் சிறப்புப் பாடத்தில் உள்ள இலங்கை தூதர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டார். உலகளாவிய ரீதியில் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததுடன் டிஜிட்டல் சகாப்தத்தின் சாத்தியங்கள் மற்றும் சவால்கள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். https://www.virakesari.lk/article/190945
  18. ருமேனிய வீராங்கனை மேல் முறையீட்டில் வெற்றி - வினேஷ் போகாட் வெள்ளி வெல்ல வாய்ப்பு அதிகரிப்பா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு (இடது), இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் (வலது) 12 ஆகஸ்ட் 2024, 13:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக் 2024இல் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் 100 கிராம் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் (ஆகஸ்ட் 13). கடந்த வாரம், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஜோர்டான் சிலிஸ், ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆனால், ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு செய்த மேல்முறையீட்டில் சிலிஸின் வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டு பார்போசுக்கு வழங்கப்பட வேண்டுமென சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பின் தாக்கம் வினேஷ் போகாட் வழக்கிலும் எதிரொலிக்குமா என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிலிஸ் தொடர்பான வழக்கின் முழு விவரம் என்ன? வெண்கலப் பதக்கத்தை இழந்த ஜோர்டான் சிலிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஜோர்டான் சிலிஸ் பாரிஸில் கடந்த வாரம் திங்கட்கிழமை (05-08-2024) அன்று நடந்த ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜோர்டான் சிலிஸ் தொடக்கத்தில் 13.666 புள்ளிகள் ஐந்தாவது இடத்தில் இருந்தார். அப்போது 13.7 புள்ளிகள் பெற்றிருந்த ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அனா பார்போசு மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அரங்கில் இருந்த டிஜிட்டல் திரையிலும் அனா பார்போசு பெயர் மூன்றாம் இடத்தில் தோன்றியது. இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தை வென்ற மகிழ்ச்சியில் கொண்டாடத் துவங்கினார் அனா பார்போசு. ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் பயிற்சியாளர் சிசிலி லாண்டி, ஜோர்டான் சிலிஸ் பெற்ற புள்ளிகள் தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது என நடுவர்களிடம் முறையிட்டார். இதை பரிசீலித்த நடுவர்கள் சிலிஸ் பெற்ற புள்ளிகளை13.766 ஆக உயர்த்தினார்கள். இதையடுத்து ஜோர்டான் சிலிஸின் பெயர் திரையில் மூன்றாம் இடத்திற்கும், அனா பார்போசுவின் பெயர் நான்காம் இடத்திற்கும் நகர்ந்தது. இதைக் கண்டு, கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினார் அனா பார்போசு. இந்த மாற்றத்திற்கு ருமேனியாவின் ஒலிம்பிக் குழு கடுமையான எதிர்ப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் பதிவு செய்தது. “இது மிகவும் கண்டிக்கத்தக்கது.” என்று கூறிய ருமேனியாவின் பிரதமர் மார்செல் சியோலாகு, ஒலிம்பிக் நிறைவு விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்தார். ஒலிம்பிக்கில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு நிமிடத்திற்குள் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும், ஆனால் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் பயிற்சியாளர் நான்கு நொடிகள் தாமதமாக மேல்முறையீடு செய்தார் என்பதை விளையாட்டுக்கான நடுவர் மன்றத்திடம் சுட்டிக்காட்டிய ருமேனிய ஒலிம்பிக் கமிட்டி, சிலிஸின் புள்ளிகள் மாற்றப்பட்டது தொடர்பாக மேல்முறையீடு செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அனா பார்போசு இதை ஏற்றுக்கொண்ட நடுவர் மன்றம், ஜோர்டான் சிலிஸுக்கு 13.666 என்ற புள்ளிகளே இறுதியானது என அறிவித்தது. சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பும் (FIG) இதை உறுதிசெய்தது. வெண்கலப் பதக்கத்தை பார்போசுக்கு மீண்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. பதக்கத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியுடனும், மீண்டும் பதக்கம் வழங்குவதற்கான விழா நடத்துவது குறித்து ருமேனிய ஒலிம்பிக் கமிட்டியுடனும் ஆலோசனை நடத்தவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியது. கடந்த வாரம், அமெரிக்காவின் ஜோர்டான் சிலிஸுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்ட போது, அது இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ருமேனியாவின் அனா பார்போசுக்கு ஆதரவு தெரிவித்தும், சிலிஸை தாக்கியும் பதிவுகள் வெளியாகின. சிலிஸ் மீதான இணைய விமர்சனங்கள் குறித்து பேசிய அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி, “எந்தவொரு விளையாட்டு வீரரும் இத்தகைய மோசமான விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடாது. இழிவான இணையத் தாக்குதல்களையும், அதை ஆதரிப்பவர்களை அல்லது தூண்டுபவர்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நேர்மையுடன் நடந்துகொண்டதற்காக சிலிஸை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக நிற்போம்." எனத் தெரிவித்துள்ளது. இந்த ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பிரேசிலின் ரெபேகா ஆண்ட்ரேட் தங்கம் வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை சிமோனா பைல்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார். வினேஷ் போகாட் மேல்முறையீடு பட மூலாதாரம்,GETTY IMAGES பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போது, அவருக்கான வெள்ளிப் பதக்கம் உறுதியானது. அதுவும் ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று அவர் அசத்தியிருந்தார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை யுய் சுசாகி உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து, அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இறுதிப்போட்டிக்கு முன் மல்யுத்த வீராங்கனைகளின் எடை சோதனை செய்யப்படுவது வழக்கம். அவர்கள் எந்த எடைப் பிரிவில் போட்டியிடுகிறார்களோ, அதற்கான எடையுடன் இருப்பது அவசியம். பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் இறுதிப்போட்டி நடக்கவிருந்த நாளன்று காலையில் காலை எடையை அளவிடும்போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்திய குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோன் லேபெஸ் (Yusneylis Guzman Lopez) என்ற வீராங்கனையை வினேஷ் போகாட் தோற்கடித்திருந்தார். வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவரது வெள்ளிப் பதக்கம் குஸ்மோனுக்கு வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோன் லேபெஸ் (இடதுபுறம்) என்ற வீராங்கனையை வினேஷ் போகாட் தோற்கடித்திருந்தார். தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து, விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், வெள்ளிப் பதக்கத்தை தனக்கும் குஸ்மோனுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை நடுவர் மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில் சனிக்கிழமையன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் அது ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜோர்டான் சிலிஸ் வழக்கின் தீர்ப்பு, வினேஷ் போகாட் வழக்கிலும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த இரு வழக்குகளிலும், சூழ்நிலைகள் வேறுபடுகின்றன. சிலிஸ் வழக்கில், மேல்முறையீடு நேரம் தொடர்பான சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் (FIG) விதிகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டதால், வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக நடுவர் மன்றம் அறிவித்தது. இதற்கு நேர்மாறாக, வினேஷ் வழக்கில் மல்யுத்தத்தை மேற்பார்வையிடும் சர்வதேச அமைப்பு விதிகளை முறையாகக் கடைபிடித்தது. அதாவது வினேஷின் எடை குறித்த விவகாரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்கள் எதிர்பார்க்கும் இந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு நாளை வினேஷுக்கு சாதகமாக வெளிவந்தால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7ஆக உயரும். https://www.bbc.com/tamil/articles/c0e84w3nnv5o
  19. 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தல்; நாளையுடன் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: VISHNU 12 AUG, 2024 | 07:41 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (12ஆம் திகதி திங்கட்கிழமை) 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கட்டுப்பணம் செலுத்தல் நாளை புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறும். அத்துடன் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், எம் திலகராஜா, பா.அரியநேத்திரன் ஆகியோர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ளதுடன், ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மொஹமட் இன்பாஸ் போட்டியிடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. இதற்கமைய கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுக்களை பொறுப்பேற்றல் நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களாக புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், புதிய சீஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திரவும், மற்றும் ஜனசேனா முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும், அருனலு மக்கள் முன்னணியின் சார்பில் கே.ஆர்.கிறிஷானும், தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கவும், சோசலிச சமத்துவ கட்சி சார்பில் பானி விஜேசிறிவர்தன, நவ சமசமாஜக் கட்சி சார்பில் பிரியந்த புஸ்பகுமாரவும், எங்கள் மக்கள் சக்தி சார்பில் ஜே.டீ.கே.விக்கிரமரத்ன, இலங்கை சமசமாஜக் கட்சியின் சார்பில் மஹிந்த தேவகே, ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் அப்துல் மொஹமட் இன்பாஸ், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அனோஜ டி சில்வா ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்சா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இதேவேளை சுயேட்சை வேட்பாளர்களாக ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்தி ரத்ன, கே.கே.பியதாஸ, ஆனந்த குலரத்னஈ அக்மீமன தயாரத்ன தேரர், சிறிபால அமரசிங்க, சரத் பொன்சேகா, அன்டனி விக்டர் பெரேரா, ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், மானகே பேமசிறி, அனுர சிட்னி ஜயவர்தன, டீ.எம்.பண்டாரநாயக்க, எம்.திலகராஜா, ரொஷான் ரணசிங்க, பா.அரியநேத்திரன் ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/190941
  20. அண்ணை பிளாட்போர்ம் தாண்டித்தான் என்ஜின் பகுதி நிற்குமாம், வழமையாகவே வீதிக்கு வந்துவிடுமாம் என்ஜின் பகுதி! முகப்புத்தகத்தில் வாசித்தேன். என்றாலும் புகையிரதச் சாரதிகள் இடையில் தனிப்பட்ட தேவைகளுக்கு இறங்கி ஏற முடியாது.
  21. தங்க வரிசைப்படி தான் உத்தியோகபூர்வ தளத்தில் போட்டிருக்கு அண்ணை! https://olympics.com/en/paris-2024/medals அதனால் தான் ஒரு தங்கம் வென்ற பாகிஸ்தான் 62ஆம் இடத்திலும் ஒரு வெள்ளி 5 வெண்கலம் வென்ற இந்தியா 71ஆம் இடத்திலும் இருக்கிறது.
  22. Published By: DIGITAL DESK 7 12 AUG, 2024 | 05:20 PM வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியங்குளம் பீகிடியா பாம் கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை (12) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். செட்டிக்குளம் பீகிடியா பாம் கிராமத்தில் தனி நபரொருவர் சட்டவிரோதமாக குளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது. தனிநபர் ஒருவர் எந்தவித அனுமதியுமின்றி புதிதாக அணைக்கட்டு போடப்பட்டு குளம் அமைப்பதனால் அதற்கு கீழ் வாழுகின்ற 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் குளக்கட்டு உடைப்பெடுக்குமாயின் தமது வீடுகள் வெள்ளநீரில் மூழ்கிவிடும் எனவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு, வயல்களே இல்லாத இடத்தில் இந்தவித பொறிமுறையும் இன்றி குளக்கட்டு அமைப்பதனால் இதற்கு அருகாமையிலுள்ள பிரதேச மக்களின் வாழ்வு கேள்ளவிக்குறியாகியுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த அப்பிரதேசத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இது வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணி எனவே பிரதேச செயலகம் வனவள திணைக்களத்தோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. https://www.virakesari.lk/article/190918
  23. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் 12 AUG, 2024 | 05:32 PM இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு இணையவழி மூலம் விசா வழங்கப்படாததால் விசா பெற்றுக்கொள்ளுவதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் நீண்ட வரிசைகளாகக் காத்திருந்துள்ளனர். இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தருபவர்கள் இணையவழி விசா முறைமைக்கு மாறாக மீண்டும் பழைய முறைப்படி விமான நிலையத்திற்கு வருகை தந்து விசா பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. இதனால், விசா பெற்றுக்கொள்ளுவதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் நீண்ட வரிசைகளாகக் காத்திருக்க வேண்டியுள்ளது. கண்டி எசல பெரஹெராவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதால் விசா பெற்றுக்கொள்ளுவதற்குப் பயணிகள் நீண்ட வரிசைகளாகக் காத்திருப்பது சிரமத்திற்குள்ளாகியுள்ளது. https://www.virakesari.lk/article/190903
  24. விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து பயப்படக் கூடாது எனவும் புதியவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் போடியிடப் போவதில்லை என அறிவித்த அவர், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்தார். விரைவில் அக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: “தமிழகத்தில் இன்று நான்கு முனை போட்டி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, புதியதாக நடிகர் விஜய் வருகிறார். நடிகர் விஜய்யை நான் ஏற்கனவே அரசியலுக்கு வரவேற்றுள்ளேன். நிறையபேர் அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு வாய்ப்புகள் இருக்கும். அதனால் விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து பயப்படக்கூடாது. புதியவர்கள் வரட்டும். அண்ணன் சீமான் இருக்கிறார். அவரும் வலிமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மக்களிடம் எல்லா வாய்ப்பையும் வைப்போம். தமிழக அரசியல் 2026 இல் அடியோடு மாறப்போகிறது. இதனை எத்தனை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார். இதனைத் தொடரந்து, திருப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கூறியதாவது: “ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதியில் ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது. ஒரு பங்கு விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது. உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம். செபி தலைவர் குறித்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.” என்றார். https://thinakkural.lk/article/307719
  25. Published By: DIGITAL DESK 3 12 AUG, 2024 | 02:18 PM மியா லு ரூக்ஸ் என்ற செவித்திறன் குறைபாடுடைய பெண்ணொருவர் முதன் முறையாக தென்னாபிரிக்காவில் அழகு ராணி பட்டத்தை சூடியுள்ளார். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்னைப் போலவே வெறித்தனமான கனவுகளை அடைய தனது வெற்றி உதவும் என்று நம்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ விரும்புகிறேன் என மியா லு ரூக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய மியா லு ரூக்ஸ்க்கு ஒரு வயதில் ஆழ்ந்த செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்பு அவரது காதில் கோக்லியர் மின்னணு சாதனம் பொறுத்தப்பட்டது. அத்துடன், முதல் வார்த்தையை பேசுவதற்கு இரண்டு வருடங்கள் பேச்சு திறன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மியா லு ரூக்ஸ் தற்போது அவர் மொடல் மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளராகவுள்ளார். "நான் ஒரு தென்னாப்பிரிக்க செவித்திறன் குறைபாடுடைய பெண் என்பதில் பெருமையடைகிறேன், ஒதுக்கப்படுவதால் ஏற்படும் வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். நான் எல்லைகளை உடைப்பதற்காக இந்த கிரகத்தில் படைக்கப்பட்டுள்ளேன் என்பதை தற்போது அறிகிறேன். நான் அதை இன்றிரவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190889

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.