Everything posted by ஏராளன்
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
அண்ணைமார் தேர்தல் திணைக்களத்திற்குள் தமிழர்களும் பணியாற்றுவினம் தானே? அதில யாரோ ஒரு குறும்பர் செய்த வேலையா இருக்கும்! ரணில் ஐயாவுக்கு சிலிண்டர் கொடுத்ததும் திட்டமிட்டோ தெரியல!
-
கடவுளும் கண்ணனும்
அண்ணை தாய்மொழியில் வழிபடுவதை சுட்டுகின்ற அதேவேளை புலத்தில் வளர்ந்த பிள்ளைகள் தங்கள் சிந்தனைகளை பரந்து விரிந்து படரச் செய்கிறார்கள் என நான் கதையினூடாகப் புரிந்து கொள்கிறேன். நேரமிருக்கையில் அரைவாசிக்கு கீழ்/முடிவை மட்டும் வாசித்துப் பாருங்கள்.
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
Taliban Parade: அமெரிக்கா முன்னாள் Airbase-ல் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக தாலிபன்கள் புதன் கிழமை ராணுவ அணிவகுப்பு நடத்தினர்.
-
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்.
15 AUG, 2024 | 05:13 PM இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் நாடு திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜஸ்டின் ரெய்மெண்ட் ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை ஜூலை 23ம் தேதி அன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். 3 படகுகளிலிருந்த காளீஸ்வரன் 22 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் 6-ம் தேதியன்று ஊர்காவல்துறை நீதிமன்றம் 22 மீனவர்களில் 19 மீனவர்களை விடுதலை செய்தும் 3 விசைப்படகு ஓட்டுநர்களான காளீஸ்வரன் கருப்பையா ஜெகன் ஆகிய மூவருக்கு அபராதமும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களில் தீபன் சுதாகரன் ஆகிய இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மீதமுள்ள 17 மீனவர்கள் மட்டும் புதன்கிழமை மாலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புதன்கிழமை இரவு சென்னைசென்றடைந்தனர் பின்னர் மீனவர்கள் 17 பேரும் மீன்வளத் துறையினர் மூலம் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்துக்கு இன்று (ஆக.15) அழைத்து செல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/191168
-
யாழ். மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்
15 AUG, 2024 | 02:35 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடத்தப்பட்டது. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், யாழ். மாநகர சபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மடம் அறக்கட்டளையின் பொறுப்பாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண இராசதானி காலத்துக்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. எனினும், மந்திரி மனை அமைந்துள்ள காணி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக காணப்படுகிறது. இந்நிலையில் மந்திரி மனையை புனரமைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், கலந்துரையாடலில் உரிய தீர்மானங்கள் எட்டப்படாமையால் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட கலந்துரையாடலின்போது சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மந்திரி மனையை புனரமைத்து பாதுகாப்பதற்கு மடம் அறக்கட்டளை பொறுப்பாளர் இணக்கம் தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்தின் திட்ட முன்மொழிவுக்கு அமைய, திணைக்கள மேற்பார்வையுடன் அறக்கட்டளையின் நிதியில் மந்திரி மனையை புனரமைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கை அடங்கிய கடிதம் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/191151
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
கைது செய்த ரஸ்ய படையினரை மனிதாபிமான ரீதியில் நடத்துகின்றோம் - அந்த நாட்டிடம் ஒப்படைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் - உக்ரைன் Published By: RAJEEBAN 15 AUG, 2024 | 12:40 PM கடந்த வாரம் உக்ரைன் படையினர் கைப்பற்றிய ரஸ்யாவின் போர்கைதிகள் குறித்து ரஸ்ய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுள்ளதாக மனித உரிமைகளிற்கான உக்ரைனின் நாடாளுமன்ற ஆணையாளர் டிமிட்ரோ லுபினெட்ஸ் தெரிவித்துள்ளார். நீங்கள் ரஸ்ய படையினர் சரணடைவதை பார்த்திருப்பீர்கள்என தெரிவித்திருப்பீர்கள் என குறிப்பிட்டுள்ள அவர் உக்ரைன் படையினர் ஜெனீவா சாசனத்தின் படி போர்கைதிகளை கையாள்வதை பார்த்திருப்பீர்கள்ரஸ்ய படையினரின் யுத்த கால உரிமைகளை உறுதி செய்வதை பார்த்திருப்பீர்கள் என தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட ரஸ்ய படையினரை எவரும் சித்திரவதை செய்வதில்லைஎவரும் சுடுவதில்லைஆனால் ரஸ்ய படையினர் அதனை செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட ரஸ்ய படையினரை விசேட முகாமிற்கு கொண்டு சென்றுள்ளோம்இ அவர்களை ரஸ்ய அரசாங்கத்திடம் ஒப்படைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்யாவிற்குள் நுழைந்துள்ள உக்ரைன் படையினர் பல திசைகளில் தொடர்ந்தும் முன்னேறிவருகின்றனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரஸ்யாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தின் மீது தீடிர் தாக்குதலை மேற்கொண்ட உக்ரைனிய படையினர் சில பகுதிகளை கைப்பற்றியதை தொடர்ந்து அந்த பகுதியில் ரஸ்யா அவசரகால நிலைமையை அறிவித்துள்ளது. புதன்கிழமை காலை முதல் தனது படையினர் கேர்க்ஸ்கி;ல் மேலும் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் முன்னேறியுள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 100 ரஸ்ய படையினரை கைதுசெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் உக்ரைன் படையினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் படையினர் எவ்வளவு பகுதியை கைப்பற்றியுள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியாமலுள்ளதாக தெரிவித்துள்ள பிபிசி இருதரப்பும் முரண்பாடான தகவல்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/191139
-
குரங்கம்மை பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம் - எப்படிப் பரவுகிறது?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,நூற்றுக்கானக்கானோர் குரங்கம்மை நோயால் உயிரிழந்துள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் & சிமி ஜோலாசோ பதவி, பிபிசி செய்திகள் 15 ஆகஸ்ட் 2024, 10:31 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் குரங்கம்மை (எம்-பாக்ஸ்) நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எம்-பாக்ஸ் அல்லது குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் காங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர். தற்போது, இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸின் புதிய வகை திரிபு (Variant) மக்கள் மத்தியில் பரவும் வேகம் மற்றும் இதனால் அதிகரிக்கும் இறப்பு விகிதம் குறித்து விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர். ஆப்பிரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். "நோய்த்தொற்று பரவுவதைத் தவிர்த்து, உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உலக நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்," என்றும் அவர் கூறியுள்ளார். மிகவும் ஆபத்தான எம்-பாக்ஸ் வைரஸின் புதிய திரிபு இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 100 பேரில், நால்வர் உயிரிழக்கும் அளவிற்கு இது மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எம்- பாக்ஸ் வைரஸில் கிளேட் 1, கிளேட் 2 (Clade 1 மற்றும் Clade 2) என இரண்டு வகைகள் உள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டு, குரங்கம்மை பரவியதால் அறிவிக்கப்பட்ட பொது சுகாதார நெருக்கடியானது, கிளேட் 2 வகை வைரஸால் ஏற்பட்டது. ஆனால் இம்முறை அதைவிட மிகவும் ஆபத்தான கிளேட் 1 வைரஸ் பரவி வருகிறது. இது இதற்கு முன் நோய்த்தொற்று பரவுவதைக் காட்டிலும் 10% வரை அதிக நோயாளிகளின் உயிரிழப்பிற்குக் காரணமாக உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த வைரஸில் நடந்த மாறுபட்டால் கிளேட் 1பி என்ற புதிய வைரஸ் திரிபு உருவானது. இந்தப் புதிய மாறுபட்ட வைரஸ் ‘இன்னும் அதிக ஆபத்தானது’ என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து காங்கோ நாட்டில் சுமார் 13,700க்கும் மேற்பட்ட மக்களுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு அதில் குறைந்தது 450 பேர் உயிரிழந்துள்ளனர். புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கென்யா, ருவாண்டா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ‘சரியான நேரத்தில் வந்த அறிவிப்பு’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குரங்கம்மை நோய்த்தொற்றை பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. குரங்கம்மை நோய்த்தொற்றை பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவு இந்நோயைச் சரி செய்யத் தேவையான ஆராய்ச்சி, நிதியுதவி மற்றும் சர்வதேசப் பொது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் “இந்த அறிவிப்பு ஒரு வலுவான குறிப்பாக இருப்பதாக,” வெல்கம் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் ஜோசி கோல்டிங் கூறினார். "இது இந்த நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துவதாக," எமோரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் போகுமா டைட்டான்ஜி கூறினார். இந்த அறிவிப்பு "மிகவும் முக்கியமானது மற்றும் சரியான நேரத்தில் வந்துள்ளது," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச சுகாதாரக் கூட்டமைப்பின் இயக்குநரான பேராசிரியர் ட்ரூடி லாங் கூறினார். ஆனால் இந்த வைரஸின் புதிய திரிபு குறித்துப் பல அறியப்படாத விஷயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், கிளேட் 2 வகை குரங்கம்மை ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் உட்பட சுமார் 100 நாடுகளுக்குப் பரவியது. இவ்வகை வைரஸ் பரவியதன் மூலம் 87,000க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகள் மற்றும் 140 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன. யார் வேண்டுமானாலும் குரங்கம்மையால் பாதிக்கப்படலாம். குறிப்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையேதான் இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த நோய்த்தொற்று அப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. செவ்வாக்கிழமையன்று, ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களில் உள்ள விஞ்ஞானிகள் குரங்கம்மை பரவுவதால் பொது சுகாதார நெருக்கடியை அறிவித்தனர். இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தற்போது பரவி வரும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்று இந்த அமைப்பின் தலைவர் ஜீன் கசேயா எச்சரித்தார். "இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த நாம் சிறப்பான மற்றும் வலிமையான முயற்சிகளுடன் செயல்பட வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். தாய் மட்டுமல்ல, தந்தை மது குடித்தாலும் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் - எச்சரிக்கும் புதிய ஆய்வு11 ஆகஸ்ட் 2024 உங்கள் ஆரோக்கியத்தைக் காட்டும் இடுப்புச் சுற்றளவு - எப்படி அறியலாம்?6 ஆகஸ்ட் 2024 குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்படக்கூடிய பிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது குரங்கம்மை நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளில், காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி ஆகியவை அடங்கும். காய்ச்சல் நின்றவுடன் தடிப்புகள் தோன்றலாம். பெரும்பாலும், முகத்தில் இது தொடங்கி, பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். பொதுவாக உள்ளங்கைகள், பாதங்கள் வரை பரவும். அதிகப்படியான அரிப்பு அல்லது வலியுடன் கூடிய இந்த தடிப்புகள், பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக பொருக்குகளாக மாறும். அவை விழுந்த பின்னர் அவை இருந்த இடத்தில் வடுக்கள் தோன்றும். இந்தத் தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்கள் வரை நீடித்தபின் தானே மறையும். தீவிரமான தொற்றுகளில், காயங்கள் உடல் முழுதும் தோன்றும். குறிப்பாக, வாய், கண்கள், மற்றும் பிறப்புறுப்புகளையும் அவை தாக்கலாம். எம்-பாக்ஸ் வைரஸ் எப்படிப் பரவுகிறது? குரங்கம்மை நோய்த்தொற்று உள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகினால் இது பரவும். அதாவது, இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வது, தோலோடு தோல் உரசுவது, அல்லது அந்த நபருடன் நெருக்கமாகப் பேசுவது, சுவாசிப்பது ஆகிய செயல்களின் மூலம் இந்தத் தொற்று பரவும். தோலில் இருக்கும் பிளவுகள், சுவாசக்குழாய் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலில் நுழையும். இந்த வைரஸ் படிந்திருக்கும் படுக்கை, ஆடைகள், துண்டுகள் போன்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது. இந்த வைரஸ் பரவும் மற்றோரு வழி: குரங்குகள், எலிகள், அணில் போன்ற இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவது. 2022இல் இந்தத் தொற்று உலகளாவிய அளவில் பரவியபோது, அது பெரும்பாலும் பாலியல் உறவு மூலம் பரவியது. காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த தொற்றுநோய்ப் பரவல் பாலியல் தொடர்பு மூலம் உண்டாகியிருக்கிறது. ஆனால் இது மற்ற சமூகங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c303m5dd6g6o
-
சங்கே முழங்கு ! - சுப.சோமசுந்தரம்
நாமும் பாராட்டி வாழ்த்துகின்றோம் பேராசானே. ஓய்வு காலத்திலும் ஓயாது உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
வேட்புமனுக்களை கையளிக்க ரணில், சஜித் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை! Published By: DIGITAL DESK 3 15 AUG, 2024 | 10:10 AM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பதற்காக இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனர். https://www.virakesari.lk/article/191126
-
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது - சிறிதுங்க
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது - இந்த விடயத்தில் ஏனைய கட்சிகளை போல ஐக்கிய சோசலிச கட்சி தடுமாறவில்லை - சிறிதுங்க Published By: RAJEEBAN 15 AUG, 2024 | 11:34 AM வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினருக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய இந்த விடயத்தில் கட்சி ஒருபோதும் ஏனைய கட்சிகளை போல தடுமாறியதில்லை என தெரிவித்துள்ளார். தேர்தல்களின் போது சிறுபான்மை இனத்தவர்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்காக கருவியாக 13 வது திருத்தம் பயன்படுத்தப்படுகின்றது. பார்வையாளர்களின் மனவிருப்பத்திற்கு ஏற்ப அரசியல்வாதிகள் அவ்வப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிவருகின்றனர். எனினும் ஐக்கிய சோசலிச கட்சியை சேர்ந்த நாங்கள் நிலையான உறுதியான கொள்கையை கொண்டுள்ளோம். வடக்குகிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினருக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். எங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு நாட்டின் சில பகுதிகளில் ஆதரவில்லாமல் இருக்கலாம், ஆனால் இது நியாயமானது நீதியானது என நாங்கள் கருதுகின்றோம். தற்போதைய 13 வதுதிருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து வடக்குகிழக்கு மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என நாங்கள் கருதவில்லை. அவர்களின் கரிசனைகளிற்கு தீர்வை காணும் நீண்டகால தீர்வே அவர்களிற்கு அவசியம். தமிழ்மக்களிற்கு சுயநிர்ணய உரிமையை வழங்குவது நாட்டை பிளவுபடுத்தும் என நாங்கள் கருதவில்லை. மாறாக அது மேலும் ஐக்கியப்பட்ட நாட்டை உருவாக்கும் என நாங்கள் கருதுகின்றோம். ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளில் இதுவே வரலாறு. இந்த விடயத்தில் ஏனைய கட்சிகளை போல ஐக்கிய சோசலிச கட்சி தடுமாறவில்லை. உதாரணத்திற்கு ஜேவிபி ஒரு காலத்தில் 13 வது திருத்தத்தை கடுமையாக எதிர்த்தது அதற்கு எதிராக வன்முறைகளை கூட பயன்படுத்தியது. ஆனால் அவர்கள் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டனர். தாங்கள் முன்னர் எதிர்த்த கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என தற்போது தெரிவிக்கின்றனர். இந்த நிலையான தன்மையின்மை அரசியல்கட்சிகளின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/191132
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
ஆட்சி கவிழ்ப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல; ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கா தனது ராஜினாமாவில் அமெரிக்காவின் தலையீடு இருந்ததாக ஷேக் ஹசீனா குற்றம்சாட்டிய நிலையில் இதனை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5-ம் திகதி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, பங்களாதேஷிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு, அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் கானை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் கான் பதவியேற்றார். மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை இந்த ஆட்சி தொடரும் என்ற செய்தியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பதவி விலகிய பின் ஷேக் ஹசீனா அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி பதவி விலகல் குறித்தும் அதற்கு பின்னால் உள்ள சதி குறித்தும் முதல்முறையாக ஷேக் ஹசீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “மார்ட்டின் தீவுகளையும் வங்காள விரிகுடாவையும் அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் நான் பதவியில் நீடித்திருக்க முடியும். ஆனால் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை. தற்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன். ஒருபோதும் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு விட்டுத்தர இயலாது. பிரதமர் பதவியில் நீடித்திருந்தால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்திருக்கும். அதனால் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும். நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். எனவேதான், பதவியை ராஜிநாமா செய்தேன்.” என ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார். மேலும் “ மக்களின் வாக்குகளால்தான் நான் வெற்றிபெற்றேன். என்னுடைய வலிமையே மக்களாகிய நீங்கள் தான். நான் வேண்டாம் என நீங்கள் முடிவெடுத்ததால் நாட்டைவிட்டு வெளியேறினேன். மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த வேளையில் நான் கூறிய வார்த்தைகள் திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. போராட்டம் நடத்தும் மாணவர்களை பயங்கரவாதிகள் என ஒருபோதும் கூறவில்லை. அந்த நாளில் வெளியான காணொலிகளை மீண்டும் ஒருமுறை நீங்கள் பார்த்தால் உண்மை புரிய வரும். அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொல்லப்படுவதாகவும் அவர்களின் வீடுகள் சூறையாடப்படுவதாகவும் வெளிவந்த செய்திகளைக் கேட்டு துயரடைந்தேன். கடவுளின் கருணையால் மீண்டும் வங்கதேசம் திரும்புவேன் என நம்புகிறேன். எந்த நாட்டுக்காக என் தந்தையும் குடும்பத்தினரும் உயிர்த்தியாகம் செய்தார்களோ அந்த நாட்டின் நலனுக்காக எப்போதும் பிரார்த்திக்கிறேன். போராட்ட சூழலை பயன்படுத்தி சில குழுக்கள் மக்களை திசை திருப்பினர். இதை ஒருநாள் கண்டிப்பாக உணர்வீர்கள் என நம்புகிறேன்” என ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார். பதவி விலகலில் அமெரிக்காவின் தலையீடு தொடர்பாக ஷேக் ஹசீனாவின் கருத்து உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவிற்கு கருத்திற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான வேதாந்தா படேல் தெரிவித்ததாவது.. ”ஷேக் ஹசீனாவின் கருத்துக்கள் நகைச்சுவையை வரவழைக்கிறது. ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவில் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளது என்பது முற்றிலும் தவறானது. நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/307938
-
மோசமான வெப்ப அலையால் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிப்பு
மோசமான வெப்ப அலையால் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக காலநிலையில் பெரிதளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஒருபுறம் வெயில் அதிகரித்துக் காணப்படுகிற அதேவேளை காலநிலை தப்பிப் போவதால் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு உலகம் முழுக்க மக்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. 2024ம் ஆண்டும் மற்றும் அடுத்தடுத்த வருடங்களில் பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் உலகத்தின் பல பகுதிகளில் கோடை காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விடுகிறது. அதேபோல மழைகாலமும் தப்பிப் போய் மோசமான அளவு பேரிடரை சந்திக்க நேரிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்பில் அதிகாமானோர் உயிரிழப்பதாகவும் அதிலும் குறிப்பாக உயிரிழப்போரில் 20%க்கும் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்கிற அதிர்ச்சி தரக்கூடிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. பொதுவாக வெப்ப அலையால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள குழந்தைகள் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 12.3 கோடி குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பகுதியில் 95 டிகிரி அல்லது அதற்கு அதிகமாக வெப்பத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 50கோடிக்கு அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்கு அதிக வெப்பத்தை எதிர்கொள்வதாகவும் அது அவர்களது தாத்தா பாட்டிகளை எதிர்கொண்டதை விட அதிகம் என ஐ.நா எச்சரித்துள்ளது. உலக அளவில் வெப்ப நிலை உயர்ந்து வரும் நிலையில் 5ல் ஒரு குழந்தை 60வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு வெப்பத்தை ஒவ்வொரு வருடமும் எதிர்கொள்வதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் வெப்ப அலையால் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகளை பாதிக்கும் சராசரி வெப்ப அளவாக 95டிகிரி செல்சியஸை அளவுகோலாக வைத்துள்ளது. யுனிசெஃப் -ன் புள்ளிவிவரங்கள் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள 39 சதவீத குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பகுதியில் 95 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப நிலையை எதிர்கொள்கின்றனர். மாலி நாட்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் 95 டிகிரி அல்லது அதற்கு மேல் வெப்பநிலையை எதிர்கொள்கின்றனர். லத்தீன் அமெரிக்காவில், 48 மில்லியன் குழந்தைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இருமடங்கு வெப்பநிலையை எதிர்கொள்கின்றனர். https://thinakkural.lk/article/307935
-
பரத அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த 13 வயது சீன சிறுமி
சீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் அந்த நாட்டின் குருவிடம் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என லீ முசி அறியப்படுகிறார். அண்மையில் நடந்த இந்த அரங்கேற்ற நிகழ்வில் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய பிரதிநிதிகள் சிலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை அனைவரும் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு காலமாக பரத கலையில் பயிற்சி பெற்று வந்துள்ளார் லீ முசி. அவருக்கு சீனாவின் ஜின் ஷான் என்ற பரத கலைஞர் பயிற்சி கொடுத்துள்ளார். கடந்த 1999-ல் டெல்லியில் ஜின், அரங்கேற்றம் செய்திருந்தார். மேலும், இந்த மாத இறுதியில் சென்னையில் அவர் நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜின் ஷான் கூறியதாவது : “வார இறுதி நாட்களில் லீ, எங்கள் வீட்டுக்கே வந்து பயிற்சி பெற்றார். அவரது இந்த அரங்கேற்றத்தை பார்க்கும் போது மன நிறைவு எனக்கு ஏற்பட்டது. எங்கள் இருவரையும் ஒருவகையில் நெருங்க செய்தது இந்த கலைதான்” என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக லீ முசி கூறியதாவது : “பரதநாட்டியத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். என் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இந்த கலை மாறியுள்ளது. பரதநாட்டியம் ஒரு அழகான கலை மற்றும் நடன வடிவம் மட்டுமல்ல இது இந்திய கலாச்சாரத்தின் உருவகமாகவும் இருக்கிறது. இதன் மூலம் இந்திய கலாச்சாரத்தின் எனக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது” என லீ முசி தெரிவித்தார். https://thinakkural.lk/article/307929
-
தமிழினப் படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
14 AUG, 2024 | 11:42 PM (நா.தனுஜா) புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உங்களது பிரம்டன் நகர கவுன்சில் அலுவலகத்தில் உங்களை முதன்முறையாகச் சந்தித்ததையும், இலங்கையில் சுமார் 30 வருடகாலமாக நீடித்த யுத்தம் தொடர்பில் நாம் கலந்துரையாடியதையும் இப்போது நினைவுகூருகிறேன். அதன்படி கனேடியவாழ் இலங்கையர் குழுவொன்று உங்களது நிர்வாகத்தின்கீழ் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி எனக்கூறப்படும் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும், அதற்கு பிரம்டன் நகர கவுன்சில் அனுமதி அளித்திருப்பதாகவும் பல்வேறு கனேடிய இலங்கையர் அமைப்புக்கள் எமது அவதானத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக எவ்வித இன, மதபேதங்களுமின்றி அனைத்து இலங்கையர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறிருக்கையில் இத்தகைய நினைவுத்தூபியை நிர்மாணிப்பது பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவ்வமைப்புக்கள் கரிசனை வெளியிட்டிருக்கின்றன. அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது கனேடிய இலங்கையர் சமூகத்தினிடையேயான இனநல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிலும், இலங்கையின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையிலும் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளை இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட எந்தவொரு அமைப்புக்களினாலும் வெளியிடப்படவில்லை. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அவசியமான அத்தியாவசியப்பொருட்களும், அரச கட்டமைப்புக்கள் இடையூறின்றி இயங்குவதற்கு அவசியமான நிதியும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டமை தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், ஏனைய அரச மற்றும் தனியார் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்கள் உள்ளடங்கலாக சகலராலும் சமத்துவமான முறையில் அனுபவிக்கப்படுகின்றன. சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று, இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இலங்கை முகங்கொடுத்த போதிலும், யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளைக் களைந்து, அதன் பின்னரான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்திருக்கின்றது. எனவே தமிழர்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பல்லின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும், கனேடியவாழ் இலங்கையர்களுக்கும் நன்மையளிக்கக்கூடியவகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு தமிழினப்படுகொலை நினைவுத்தூபி நிர்மாணம் போன்ற பிரிவினைகளை ஏற்படுத்தவல்ல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குப் பதிலாக, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு உதவுமாறும் உங்களிடம் வலியுறுத்துகின்றேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/191094
-
நாட்டின் சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் - தரவரிசை எப்படி அளிக்கப்படுகிறது, விமர்சனம் என்ன?
பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி காமகோடி கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 14 ஆகஸ்ட் 2024 இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் முதலிடத்தை ஐஐடி மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு(NIRF) பட்டியலை சமீபத்தில் வெளியிடப்பட்டது. வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தபிரிவில் , 2019 முதல் ஆறாவது முறையாக இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்களன்று 2024 NIRF தரவரிசை விவரங்களை வெளியிட்டார். ஐஐடி மெட்ராஸ் 2016 முதல் ஒன்பதாவது ஆண்டாக பொறியியல் கல்வி நிறுவனங்களில் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளின் கீழ் சிறந்த நிறுவனமாக உள்ளது. இந்த ஆண்டு 16 பிரிவுகளில் தரவரிசைகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட மூன்று பிரிவுகள் அதிகம். திறந்தவெளி பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் ஆகிய மூன்று புதிய பிரிவுகள் உள்ளன. இந்த தரவரிசைப் பட்டியலுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பட மூலாதாரம்,IIT MADRAS ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் இந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் பெங்களூரு ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் கழகம்) உள்ளது. கடந்த ஆண்டும் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது இந்திய அறிவியல் கழகம். இந்தப் பட்டியலில் நாட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களே முதல் பத்து இடங்களில் பெரும்பாலான இடங்களை பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தில் ஐஐடி பாம்பே, நான்காவது இடத்தில் ஐஐடி டெல்லி, அதற்கு அடுத்து, ஐஐடி கான்பூர், ஐஐடி கரக்பூர் இடம் பெற்றுள்ளன. ஏழாவது இடத்தை டெல்லி எய்ம்ஸ் பிடித்துள்ளது. ஐஐடி ரூர்கி எட்டாவது இடத்தையும், ஐஐடி குவஹாத்தி ஒன்பதாவது இடத்தையும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஒட்டுமொத்த தரவரிசை தவிர, பதினான்கு பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலிலும் ஐஐடி மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இந்த இடத்தை ஐஐடி மெட்ராஸ் தக்க வைத்துள்ளது. பல்கலைகழகங்கள் பிரிவில் பெங்களூரூ இந்திய அறிவியல் கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கல்லூரிகள் பிரிவில் டெல்லி இந்து கல்லூரி, நிர்வாக மேலாண்மை பிரிவில் ஐ ஐ எம் அகமதாபாத், மருந்து சார்ந்த படிப்புகளில் ஜாமியா ஹம்தராத், மருத்துவக் கல்வியில் டெல்லி எய்ம்ஸ், பல் மருத்துவக் கல்வியில் சென்னை சவிதா கல்லூரி, சட்டப்படிப்பில் பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம், கட்டிடக்கலை படிப்பில் ஐஐடி ரூர்க்கி, வேளாண் படிப்பில் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளன. கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஐஐடி பாம்பே முதலிடம் பிடித்துள்ளது. திறந்த நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான தர வரிசைப் பட்டியலில் இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகமும், திறன் மேம்பாட்டு படிப்புகளை சொல்லித்தரும் கல்வி நிறுவனங்களை புனேவில் உள்ள சிம்பயோசிஸ் பல்கலைக்கழகமும், மாநில பல்கலைக் கழகங்களுக்கான தர வரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடம் பட மூலாதாரம்,IIT MADRAS ஐஐடி மெட்ராஸ், கல்வி நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த தர வரிசைப் பட்டியலில் 86.42 புள்ளிகள் பெற்று, ஆறாவது ஆண்டாக தொடர்ந்து முதல் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 86.69 புள்ளிகள் பெற்றிருந்தது. பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பிரிவில் இந்த ஆண்டு 89.46 புள்ளிகளும், கடந்த ஆண்டு 89.79 புள்ளிகளும் பெற்றிருந்தது ஐஐடி மெட்ராஸ். புதிய முயற்சிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தையும், ஆராய்ச்சி பிரிவின் கீழ் இரண்டாவது இடத்தையும், பிடித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி காமகோடி, NIRF தரவரிசை உலகில் உள்ள பிற மதிப்பீட்டு முறைகளை விட சிறந்த மதிப்பீட்டு முறை என்று கூறினார். “இந்த மதிப்பீட்டு முறையில் அவுட்ரீச் எனப்படும் புறசமூகத்தை பங்குக்கொள்ள வைப்பது, மற்றும் அனைவரையும் உள்ளடக்கி இயங்குவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஐஐடி மெட்ராஸ்-ல் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பி. எஸ். டேட்டா சையன்ஸ் (வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, ஆன்லைன் மூலம் இந்த படிப்பை தொடரலாம்) படிக்கிறார்கள். அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள், அவர்களின் கல்விக் கட்டணத்தை ஐஐடி ஏற்றுக் கொண்டுள்ளது. இது போன்ற முயற்சிகளுக்கு NIRF தரவரிசையில் மதிப்பெண்கள் (புள்ளிகள்) வழங்கப்படுகின்றன.” என்றார் காமகோடி. உயர்க்கல்விக்கான இடம் தமிழ்நாடு - ஸ்டாலின் மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் படி, இந்தியாவில் உள்ள 926 தலைசிறந்த கல்வி நிறுவனங்களில், அதிகபட்சமாக 165 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்று தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 100 இடங்களில் 18 கல்வி நிறுவனங்கள், முதல் 100 பல்கலைகழகங்களில் 22 பல்கலைகழகங்களும், முதல் 100 கலைக்கல்லூரிகளில் 37 கல்லூரிகளும் தமிழ்நாட்டில் உள்ளன என்று அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். “NIRF தரவரிசைப்படி தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் அதிகமானவற்றை கொண்டுள்ள தமிழ்நாடு, பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது, தரமான கல்விக்கான அளவுகோலை நிர்ணயிக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார் பட மூலாதாரம்,X/@MKSTALIN எனினும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், சாதி பாகுபாடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, “கடந்த ஓராண்டில் நல்வாய்ப்பாக மாணவர் தற்கொலை ஏதும் நடைபெறவில்லை. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கான பல முயற்சிகள் எடுத்து வருகிறோம். எந்த பிரச்னையாக இருந்தாலும் எந்த மாணவரும் என்னை ஐந்து நிமிடங்களுக்குள் தொடர்புக் கொள்ளலாம். behappy.iitm.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்களுக்கு தேவையான விவரங்கள் உள்ளன, மன நல ஆலோசகருடன் மாணவர் விருப்பப்பட்டால் உடனே பேசலாம். பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பிள்ளைகளுடன் வாரம் இருமுறையாவது பேசினார்களா என்று கேட்கிறோம். மாணவர்கள் பேசவில்லை என்று தெரிந்தால், அவர்களை அழைத்து பேசுகிறோம்.” என்றார். NIRF தரவரிசை எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது? NIRF (National Institute of Ranking Framework )என்பது மத்திய அரசின் கல்வித் துறை கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அளவில் வழங்கும் வருடாந்திர மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீடு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, அனைவரையும் உள்ளடக்குதல், என பல்வேறு அலகுகளின் கீழ் கல்வி நிறுவனங்களின் மதிப்பிடப்படுகின்றன. ஆனால், கல்வி நிறுவனங்கள் தரும் தரவுகளை கொண்டுதான் மதிப்பீடு செய்யப்படுகிறது. “கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் தரவுகள் சரி பார்க்கப்படும். வருடாந்திர கட்டணம் ரூ.10 லட்சம் கொண்ட கல்வி நிறுவனம், தங்களின் 80% மாணவர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என்று கூறினால் அது முரண்பாடானது. இது போன்ற தரவுகளையும் பிற தரவுகளை NIRF சரி பார்க்கும்” என்ற விளக்கத்தையும் NIRF தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கிறது. அதிக மதிப்பெண்கள் கொண்ட ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தரவுகள் இணையதளங்களிலிருந்து சரி பார்க்கப்படும் என்று NIRF கூறுகிறது. முனைவர் பட்டப் படிப்புக்கான மாணவர்கள் உட்பட மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்- மாணவர் சதவீதம், முனைவர் பட்டம் அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதி மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, நிதி ஆதாரங்கள் மற்றும் அவற்றை செலவு செய்யும் விதம், வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரம், காப்புரிமைகள், பல்கலைகழகத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுபவர்களின் எண்ணிக்கை, பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து படிக்கும் மாணவர்களின் சதவீதம் மாணவிகளின் சதவீதம், சமூக பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள், மாற்று திறனாளி மாணவர்களுக்கான வசதிகள், கல்வியாளர்கள் மற்றும் வேலை நிறுவனங்களின் முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசை வழங்கப்படுகிறது. பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,தமிழ்நாட்டில் ஒரு லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எல்க்ட்ரானிக்ஸ் குறித்த அடிப்படை பயிற்சி வழங்குவதாக ஐஐடி மெட்ராஸ் கூறுகிறது ஐஐடியில் முதல் முறையாக ஸ்போர்ட்ஸ் கோட்டா இந்தியாவில் உள்ள 23 ஐஐடிகளில், ஐஐடி மெட்ராஸில் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை குறிப்பிட்டு மத்திய கல்வி அமைச்சர் பாராட்டியதாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தெரிவித்திருந்தார். “ஐஐடி மெட்ராஸில் 32 இடங்கள் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்காக உள்ளன. இதில் தற்போது ஐந்து தேசிய விளையாட்டு வீரர்கள் படித்து வருகின்றனர். தேசிய அளவில் விளையாடினால் ஐஐடியில் படிக்கலாம் என்ற உந்துதல் பிள்ளைகளுக்கு கிடைக்கும்” என்றார். ஐஐடி மெட்ராஸ் பொறியியல் படிப்பதற்காக மட்டுமே என்ற நிலையை மாற்றி அனைவருக்குமானதாக உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக இயக்குநர் காமகோடி சுட்டிக்காட்டினார். “கணக்கு, அனைத்து அறிவியல் படிப்புகளுக்கும் அடிப்படையானது. பள்ளிகளில் கணக்கு டீச்சர் தேர்ந்தவராக இருப்பது அவசியமாகும். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சையன்சஸ் உடன் இணைந்து, பி எஸ் சி கணிதவியலுடன் சேர்ந்த பி எட் ஆசிரியர் படிப்பை அறிமுகப்படுத்தவுள்ளோம். ஓராண்டுக்கு 500 நல்ல கணக்கு ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்பது இலக்காகும். என் ஐ டி (NIT-National Institute of Technology)-யில் ஒவ்வொரு பாடப்பிரிவிலிருந்தும் 10% மாணவர்கள், தங்கள் நான்கு வருட படிப்புக் காலத்தில் ஒரு வருடம் ஐஐடி மெட்ராஸ்-ல் படிக்கலாம். இங்கு நல்ல மதிப்பெண்கள் பெற்றால், பிஎச்டி சேர்க்கைக்கு முன்னுரிமை வழங்குகிறோம். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எல்க்ட்ரானிக்ஸ் குறித்த அடிப்படை பயிற்சி வழங்குகிறோம். பிற கல்வி நிறுவனங்களுக்கு நிர்வாக ரீதியாக பயிற்சிப் பட்டறைகள் வழங்குகிறோம்.” என்றார். கல்வி நிறுவனங்கள் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில்தான் மதிப்பீடு செய்யப்படுகிறது என்றும் இந்த தரவரிசைப் பட்டியலுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறை வெளிப்படையானதாக இல்லை என்றும் சென்னையில் உள்ள கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் குற்றம் சாட்டுகிறார். “ஐஐடி மெட்ராஸ் மூன்றரை லட்சம் வரை கட்டணம் பெற்றுதான் டேட்டா சையன்ஸ் படிப்பை நடத்துகிறது. பிட்ஸ் பிலானியை விட பல தனியார் கல்லூரிகள் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளன, இது எப்படி உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்? இதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.” என்றார் அவர் https://www.bbc.com/tamil/articles/c3rdw5d99plo
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
நாகபட்டினம் - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீள ஆரம்பம் Published By: VISHNU 15 AUG, 2024 | 01:29 AM நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை நாளை வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது. தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புயல் மற்றும் வட, கிழக்கு பருவமழையைக் காரணங்காட்டி, அச்சேவை ஒக்டோபர் 23 ஆம் திகதி திடீரென இடைநிறுத்தப்பட்டது. இக்கப்பல் போக்குவரத்து வெகுவிரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி 'சிவகங்கை' பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட 'சிவகங்கை' பயணிகள் கப்பல், அன்று நண்பகல் 12.00 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை நாளைய தினத்திலிருந்து மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/191118
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ரஷ்ய மண்ணில் யுக்ரேனின் அசாத்திய நடவடிக்கை - அடுத்து என்ன நடக்கும், புதின் என்ன செய்ய போகிறார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தைரியமான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊருடுவல் மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை யுக்ரேன் கைப்பற்றியது கட்டுரை தகவல் எழுதியவர், பிராங்க் கார்ட்னர் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் கடந்த ஒரு வாரமாக கைப்பற்றிய சிறிய பகுதியை நிரந்தரமாக ஆக்கரமிக்கப்போவதில்லை என யுக்ரேனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு அறிவிப்பை யுக்ரேன் வெளியிட்டிருந்தாலும், அது ஒரு கடினமான தேர்வினை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்யா மீதான அழுத்ததை அதிகரிக்க படைகளை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டுமா அல்லது தனது ராணுவத்தை பின்வாங்க வேண்டுமா? என்பதுதான் அது ஒவ்வொரு நாளும் ரஷ்யவின் டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை யுக்ரேனின் ராணுவப்படையினர் எதிர்கொண்டது. இதனால் ஊக்கமிழந்த யுக்ரேனின் ராணுவத்தின் முன்களப்படை, டான்பாஸில் பின்னடைவை சந்தித்தது. இத்தகைய சூழலில், கோடை காலத்தில் ஒரு நல்ல செய்திக்காக யுக்ரேன் காத்திருக்க வேண்டியிருந்தது. தைரியமான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊருடுவல் மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை யுக்ரேன் கைப்பற்றியது அந்த காத்திருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது. நிகரற்ற ஒருங்கிணைப்பு பிரிட்டிஷ் ராணுவத்தை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் பேசியபோது, "இந்தத் தாக்குதலின் மிகவும் சுவாரஸ்யமான விஷயம், யுக்ரேனிய ராணுவத்தின் அசாதாரண ஒருங்கிணைப்புதான். காலாட்படை, வான் பாதுகாப்பு, மின்னணு போர் அமைப்புகள் மற்றும் பீரங்கிகளும் இந்த தாக்குதல் நடவடிக்கையில் இடம்பெற்றிருந்தன. இது ஒரு சிறப்பான செயல்பாடு ." என கூறினார். யுக்ரேன் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெற்ற நவீன ஆயுதங்களை பயன்படுத்தி இருப்பது போல தெரிகிறது. கடந்த ஆண்டு கோடைகாலத்தில் யுக்ரேனின் தென்-கிழக்கு மாகாணங்களில் இருந்து ரஷ்ய ராணுவத்தை வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்த யுக்ரேன்,இம்முறை இந்த ஆயுதங்களை சிறந்த முறையில் உபயோகப்படுத்தி உள்ளது ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துள்ள யுக்ரேனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? யுக்ரேன் புதினின் வீட்டுக்குள் (ரஷ்யா) போரை எடுத்துச்செல்ல விரும்பியது, இதன் மூலம் புதினின் மக்களும் சண்டையின் வலி என்ன என்பதை உணர்வார்கள் என கருதியது. மேலும், சமீபத்தில் டான்பாஸ்-இல் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு யுக்ரேன் தன்னால் இன்னும் வெற்றிகரமாக தாக்குதலை நடத்த முடியும் என்பதை வெளிக்காட்ட விரும்பியது. இந்த நடவடிக்கை மூலம், அதிநவீன ஆயுதங்கள் உதவியுடன், தங்களால் போரில் ஈடுபட முடியும் என்பதை யுக்ரேன் நிரூபித்துள்ளது. இப்போது ரஷ்யா மீண்டும் தனது முழு படையுடன் யுக்ரேன் வீரர்களை கொல்வதற்கு முன் அல்லது யுக்ரேன் ஆக்கிரமித்த இடத்தை கைப்பற்றும் முன், மரியாதையுடன் யுக்ரேன் ரஷ்ய எல்லைகளில் இருந்து திரும்ப வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை யுக்ரேன் ராணுவம் பின்வாங்கினால், இரு குறிக்கோள்கள் சாதிக்க முடியாமல் போகலாம். ரஷ்யா மீது கூடுதல் அழுத்தம் செலுத்தி, அதன் படைகளை டான்பாஸ் பகுதியில் இருந்து பின்வாங்க செய்வது, மற்றொன்று, ரஷ்யாவின் நிலத்தை கையகப்படுத்தி, எதிர்கால அமைதிப் பேச்சுக்களில் அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, உக்ரைன் ரஷ்ய பகுதிகளில் எவ்வளவு காலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று சொல்வது கடினம். உக்ரைனின் இந்த நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளதா? இங்கிலாந்தின் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் பிளாக்டன் இதுகுறித்து கூறுகையில், "யுக்ரேன் ரஷ்ய மண் மீது கொண்டிருக்கும் தனது பிடியை இறுக்கும் பட்சத்தில், ரஷ்ய ஆக்கிரமித்திருக்கும் தனது நிலத்தை திரும்பப்பெற அழுத்தம் செலுத்த முடியும். ரஷ்ய மக்கள் இடைய இருக்கும் சக்திவாய்ந்த தலைவர் புதினின் என்ற பிம்பத்தை இதன் மூலம் யுக்ரேன் உடைக்க முடியும்." இங்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. யுக்ரேன் ஒரு சுதந்திர நாடாக இருக்கவே கூடாது என கருதும் புதினால், ரஷ்ய மண்ணை யுக்ரேன் ஆக்கிரமித்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. புதின் தன்னால் முடிந்த வரை இதைத் தவிர்க்கவும், டான்பாஸில் தனது ராணுவம் வலுவாக இருக்க வேண்டும் எனவும் விரும்புவார். அங்கு ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி யுக்ரேனின் தாக்குதலுக்கு டான்பாஸின் உள்ளூர் மக்களை தண்டிப்பார். ஒருவேளை யுக்ரேன் தொடர்ந்து ரஷ்ய பகுதிகளில் ஆக்கிரமிப்பை பலப்படுத்த முயற்சித்தால், ரஷ்யாவின் முழு பலத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இவ்வளவு பெரிய பகுதியைப் ஆக்கிரமித்து பாதுகாக்க யுக்ரேனுக்கு நிறைய ஆட்பலம் தேவைப்படும் என்று டாக்டர் பிளாக்டன் எச்சரிக்கிறார். ஆனால், ஒரு விஷயத்தை மறுக்க முடியாது - இதுதான் இந்த ஆண்டின் யுக்ரேனின் தைரியமான நடவடிக்கை மற்றும் அபாயகரமானதும் கூட. https://www.bbc.com/tamil/articles/cvg4pn0ygxzo
-
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறையின் பின்னர் கொலை - எதிர்ப்பு தெரிவித்து இரவில் பெண்கள் பெரும் ஆர்ப்பாட்டம் - நாங்கள் கால்நடைகளை விட பெறுமதியற்றவர்கள் என வேதனை Published By: RAJEEBAN 15 AUG, 2024 | 10:53 AM கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். ரீக்லைட் என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கடந்த ஒரு வாரகாலமாக கொல்கத்தாவில் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை தொடர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பையும் சேர்ந்த பெண்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர். இந்தியாவின் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக பிபிசி தெரிவித்துள்ளது. இதேவேளை கொல்கத்தாவில் பொலிஸாருக்கும் சிறிய குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. பாலியல் வன்முறை சம்பவம் இடம்பெற்ற மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் மருத்துவமனையின் அவசரசேவை பிரிவை சேதப்படுத்தியுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகத்தில் ஈடுபட்டனர், சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன. கொல்கத்தாவின் ஏனைய பகுதிகளில் இரவில் மொபைபோனின் வெளிச்சத்தினையும்,மெழுகுதிரிiயையும் வேறு வெளிச்சங்களையும் ஏந்தியவாறு பெண்கள் பேரணியாக சென்றுள்ளனர். சிலரின் கரங்களில் தேசிய கொடி காணப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆண்களும் இணைந்து கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் நீதி வேண்டும் என கோசமிட்டதுடன் சங்கொலியை எழுப்பியுள்ளனர். இரவு 12 மணியானதும் இந்தியாவின் சுதந்திர பிறப்பை குறிக்கும் விதத்தில ஆர்ப்பாட்டத்தின் போக்கு மாறியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர். அதன் பின்னர் கடும் மழையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நாங்கள் இவ்வாறு பெருமளவு பெணகள் அணிவகுத்தை பார்த்ததில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நள்ளிரவின் பின்னர் தனது 13 வயது மகளுடன் கலந்துகொண்ட பெண் ஒருவர் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மூலம் நிலைமையை சரிசெய்ய முடியுமா என மகள் பார்க்கட்டும்,அவள் தனது உரிமைகள் குறித்து விழிப்புணர்வை பெறட்டும் என குறிப்பிட்டுள்ளார். பெண்களிற்கு மதிப்பில்லை நாங்கள் காலநடைகளை விட மதிப்பற்றவர்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191128
-
ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மனு தாக்கல்
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஷான் ரணசூரிய உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பை ஜனாதிபதி வேண்டுமென்றே மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ள மனுதாரர், எனவே இடைகால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/307921
-
பனிக்கரடி தாக்கி ஆர்க்டிக் ரேடார் தளத்தின் ஊழியர் உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 05:11 PM கனடாவின் வடக்கு நுனாவட் பகுதியிலுள்ள ஆர்க்டிக் ரேடார் தளத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர் இரண்டு பனிக் கரடிகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் பாஃபின் தீவின் தென்கிழக்கே உள்ள ப்ரெவூர்ட் தீவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கனேடிய அரசாங்கத்தின் சார்பாக ரேடார் பாதுகாப்பு தளங்களை இயக்கும் நிறுவனமான நாசிட்டுக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்தவராவார். தாக்குதல் நடத்திய கரடிகளில் ஒன்றை மற்றைய ஊழியர்கள் கொன்றுள்ளனர். இந்த பகுதிகளில் மனிதர்கள் மீது பனிக் கரடி தாக்கும் சம்பவம் மிகவும் அரிதாகவே நிகழும். இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது. "எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு முக்கியமாக ஒன்றாகும். மேலும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதில் நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்." என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மனிதர்களை பனிக் கரடி தாக்கிய சம்பவத்திற்கு பிறகு பதிவான இரண்டாவது சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு அலாஸ்கன் கிராமத்தில் ஒரு பெண் மற்றும் அவரது 1 வயது மகன் பனிக் கரடி தாக்கி கொல்லப்பட்டனர். உலகிலுள்ள பனிக் கரடிகளில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 17,000 கரடிகள் கனடாவில் உள்ளன. பனிக் கரடிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இதற்கு புவி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி அவைகள் வேட்டையாடுவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கான இடங்கள் அழிவதே காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் முகாமிலுள்ள கூடாரத்திலிருந்த மூன்று வயது சிறுமியை கறுப்புக் கரடி ஒன்று இழுத்துச் சென்றது. சிறுமியை இழுத்துச் சென்ற கரடியை வனவிலங்கு அதிகாரிகள் பொறிகளை அமைத்து கருணைக்கொலை செய்துள்ளனர். கறுப்புக் கரடிகள் துருவ கரடிகளை விட மிகவும் சிறியவை, ஆனால் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை. 2023 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஒரு பெண்ணை வீட்டில் கரடி தாக்கி அவரை உட்கொண்டுள்ளது. கலிபோர்னியாவில் கரடியால் தாக்கப்பட்டு மரணம் நிகழ்ந்த முதலாவது சம்பவம் இதுவாகும். https://www.virakesari.lk/article/191098
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
13 இல் வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் - ரணிலிடம் சுமந்திரன் வலியுறுத்தல் Published By: VISHNU 14 AUG, 2024 | 09:32 PM (நா.தனுஜா) அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள விடயங்களை உள்ளடக்கி அண்மையில் சுமந்திரனிடம் கையளித்த ஆவணத்தை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேவேளை அந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்படவேண்டிய சட்டங்கள், நீக்கப்படவேண்டிய சட்டங்கள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர். அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கவேண்டும் எனவும் இதன்போது சுமந்திரன் வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அதனை செனெட் சபை மூலமாகச் செய்வதாக அல்லவா ஏற்கனவே கலந்துரையாடினோம் என வினவினார். அதனை ஆமோதித்த சுமந்திரன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னர் கலந்துரையாடிய வேளையில், மேற்குறிப்பிட்டவாறு வழங்கிய அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு செனெட் சபையை நிறுவுவது குறித்துத் தாம் பேசியதாகவும், இருப்பினும் அதுகுறித்து பகிரங்கமாகத் தெரியக்கூடியவகையில் ஜனாதிபதி உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் தேசிய கொள்கைகள் முழு நாட்டுக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதன்கீழ் உரிய கட்டமைப்புக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும் எனவும், விசேட சட்டங்களுக்கான தேவைப்பாடுகள் உள்ளபோதிலும், அவை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படாதவண்ணம் அவற்றை மாற்றியமைக்கவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதுபற்றியும் சுமந்திரனுடன் விரிவாகக் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/191115
-
இந்தியாவிடம் இருந்து அண்டை நாடுகள் விலகிச் செல்கின்றனவா? என்ன காரணம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பிரதமர் நரேந்திர மோதி கட்டுரை தகவல் எழுதியவர், ஷுப்ஜோதி கோஷ் பதவி, பிபிசி செய்திகள் வங்காள சேவை, டெல்லி 14 ஆகஸ்ட் 2024, 02:43 GMT சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோதி முதல்முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றபோது அவர் பல அண்டை நாடுகளின் அரசு அல்லது நாட்டின் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அண்டை நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பதவியேற்ற முதல் நாளிலிருந்தே மோதி அரசு கூறி வருகிறது. இந்தக் கொள்கையானது அதிகாரபூர்வமாக 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற பெயரில் அறியப்படுகிறது. நரேந்திர மோதி அரசின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை இதுதான் என்று மத்திய அமைச்சர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புவியியல் ரீதியாக தொலைதூரத்தில் இருக்கும் (அமெரிக்கா அல்லது நைஜீரியா) நாடுகளைக்காட்டிலும் தெற்காசியாவில் இருக்கும் அண்டை நாடுகளுடனான (இலங்கை, வங்கதேசம், மியான்மர் மற்றும் நேபாளம் முதலியன) உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் மற்றும் அவற்றின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்பதே 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்பதன் அடிப்படை சாராம்சம் ஆகும். வாய்வார்த்தையில் இதைச்சொல்வது வேறு விஷயம். ஆனால் நரேந்திர மோதி அரசின் செயல்பாட்டில் இது உண்மையிலேயே பிரதிபலிக்கிறதா? ஒருபுறம் டெல்லி பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மறுபுறம் சீனாவைப் பற்றியும் அதிகம் சிந்திக்கிறது. விலகிச்செல்லும் அண்டை நாடுகள் பிரதமர் நரேந்திர மோதி நேபாளம் (ஆகஸ்ட், 2014), இலங்கை (மார்ச், 2015) மற்றும் வங்கதேசம் (ஜூன், 2015) ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட முதல் பயணத்தின் போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் பெருமளவு ஆர்வத்துடன் அதில் கலந்துகொண்டனர். ஆனால் அந்த நிலை இப்போது நீடிப்பதுபோல காணப்படவில்லை. பாகிஸ்தானுடனான உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பெரும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித்தவித்தபோது இந்தியா அந்த நாட்டிற்கு பெருமளவு உதவிகளை அளித்தது. இருப்பினும் அது இந்தியாவின் சந்தேக பார்வையை புறக்கணித்து தன் துறைமுகத்தில் சீன கப்பலை நங்கூரமிட அனுமதித்துள்ளது. ’அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த சூழல் காணக்கிடைக்கிறது. நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் அமலாக்கத்தின் போது இந்தியாவின் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்ட 'பொருளாதார முடக்கத்திற்கு' எதிராக நேபாள மக்கள் இந்திய எதிர்ப்பு போராட்டங்களில் இணைந்தனர். தற்போது நேபாளத்தில் ஆட்சியில் இருக்கும் கே.பி. ஷர்மா ஓலி, ஒரு தீவிர இந்திய எதிர்ப்பாளர் என்று கருதப்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2014ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் பிரதமர் மோதி மாலத்தீவிலும் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய ஆதரவு அரசை ஆட்சியில் இருந்து அகற்றி அதிபரான முகமது முய்சு, இந்திய ராணுவ வீரர்கள் தனது நாட்டிலிருந்து உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். அவரது கட்சியால் தொடங்கப்பட்ட 'இந்தியா வெளியேறு ' பிரசாரம் அதிக ஆதரவைப் பெற்றது. மேலும் அதிபர் முய்சு எந்த தயக்கமும் இல்லாமல் சீனாவின் பக்கம் சாய்ந்தார். செயல் உத்தி, வெளியுறவு, பொருளாதாரம் என ஏறக்குறைய அனைத்து விஷயங்களிலும் இந்தியாவைச் சார்ந்து இருக்கும் பூடான் கூட சீனாவுடன் எல்லைப் பேச்சு வார்த்தைகளை தானே தொடங்கிவிட்டது. தூதரக உறவுகளை ஏற்படுத்தும் சீனாவின் முன்மொழிவையும் நேரடியாக அது நிராகரிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் ஆளும் அரசுகளுடன் இந்தியாவுக்கு நல்லுறவு உள்ளது என்றும் கூற முடியாது. தாலிபன்களுடன் இந்தியா முழுமையான தூதரக ரீதியிலான உறவை இன்னும் ஏற்படுத்தவில்லை. இந்த இரு நாடுகளிலும் பல்வேறு துறைகளில் இந்தியா செய்துள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகள் இப்போது நிச்சயமற்ற சுழலில் சிக்கித் தவிக்கின்றன. இந்தப்பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ள பெயர் வங்கதேசம். இந்தியாவின் நெருங்கிய நண்பராக விளங்கிய, கடந்த ஒன்றரை தசாப்தங்களாக அங்கு ஆட்சியில் இருந்த அரசு கிட்டத்தட்ட ஒரே இரவில் அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இந்தியாவின் நண்பர்கள் என்று சொல்ல முடியாத சில சக்திகள் இப்போது அங்கு ஆட்சிக்குள் வந்துள்ளன. இது தவிர சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோதியின் வங்கதேசப் பயணத்தின்போது அவருக்கு எதிரான போராட்டங்களும் வன்முறைகளும் உச்சத்தில் இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான், மியான்மரில் பல்வேறு துறைகளில் இந்தியா செய்துள்ள பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது வங்கதேசத்தில் சமீபத்திய இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கங்களும் வலுவான இந்திய எதிர்ப்பு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருந்தன என்று பல பார்வையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக அண்டை நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் தலை தூக்கும் இந்த சுழலில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சில கடுமையான குறைபாடுகள் உள்ளதா அல்லது தெற்காசியாவின் புவிசார் அரசியல் கட்டமைப்பு காரணமாக இந்தியாவின் இந்த தலைவிதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய, சர்வதேச உறவு ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், முன்னாள் தூதர்கள் மற்றும் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் உள்ள வெளியுறவுக் கொள்கை விவகார நிபுணர்களிடம் பிபிசி வங்காள சேவை விரிவாகப் பேசியது. அவர்கள் அனைவரின் கருத்துகளும் இந்தக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கதேசத்தில் சமீபத்திய இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கங்களும் வலுவான இந்திய எதிர்ப்பு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருந்தன என்று பல பார்வையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் இந்திய வெளியுறவுக் கொள்கையில் குறுகிய கால நலன்களுக்கு முன்னுரிமை - இர்ஃபான் நூருதீன் டாக்டர். இர்ஃபான் நூருதீன் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் ஃபாரின் சர்வீஸில் இந்திய அரசியல் பேராசிரியராக உள்ளார். அவர் பொருளாதார மேம்பாடு, உலகமயமாக்கல், ஜனநாயகம் மற்றும் உள்நாட்டு மோதல்கள் குறித்து ஆய்வு செய்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், ''தெற்காசியா உலகின் மிகக் குறைவான ஒருங்கிணைந்த பகுதி என்பதை நான் முன்கூட்டியே சொல்ல விரும்புகிறேன். இங்கே, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்வது அல்லது சர்வதேச எல்லை உறவுகள், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இருப்பதைக்காட்டிலும் கடினமானதாகவும் சிக்கலானதாகவும் இருக்கிறது. வர்த்தகத்தைப் பற்றி பேசினால், சப்-சஹாரா பிராந்தியத்தின் ஏழை ஆப்பிரிக்க நாடுகளிடையே நடைபெறும் வர்த்தகத்தின் அளவை ஒப்பிடுகையில் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் அளவு குறைவாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளில் இரண்டு பில்லியன் அதாவது 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அந்த நிலையில் இது உலகின் முக்கிய பொருளாதார மையமாக மாறியிருக்கவேண்டும். எனவே பிராந்தியத்தில் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நாட்டிற்கு இடையிலான உறவுகள் சுமூகமாகவும் இயல்பாகவும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பகுப்பாய்வு செய்தால் மாலத்தீவு, இலங்கை அல்லது நேபாளம் போன்ற எந்த அண்டை நாடுகளுடனும் நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, எந்தவொரு பல்வேறு அம்சங்களைக் கொண்ட கொள்கையையும் இந்தியா ஒருபோதும் முன்னோக்கி நகர்த்தவில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த விஷயத்தில், குறுகிய கால நலன்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தக் காரணத்திற்காகவே, ஒரு குறுகிய மற்றும் கேள்விக்குரிய ’ஒற்றை அம்ச கொள்கை’ ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போதைய இந்திய அரசு தனது 'இந்து அடையாளத்தை' தன் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூணாக நிறுவ விரும்புகிறது. வங்கதேசம் போன்ற பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் வழக்கம் போல் இது எதிர்விளைவை ஏற்படுத்தியது. நரேந்திர மோதி அரசால் அமல்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் இந்தியாவை இந்துக்களின் கடைசி புகலிடமாக காட்டுவதாகும். இந்தியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சட்டவிரோத முஸ்லிம் ஊடுருவல்காரர்களுக்கு 'பங்களாதேஷிகள்' என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மறுபுறம் வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தியதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த இரண்டு விஷயங்களுக்கிடையில் ஒரு பெரிய முரண்பாடு உள்ளது. இதை நீண்ட காலத்திற்கு அடக்கிவைக்க முடியவில்லை. இந்தச் சூழலில் கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பல அண்டை நாடுகளில் அங்குள்ள அரசு இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதையும், ஆனால் அங்குள்ள மக்கள் இந்தியாவுக்கு எதிராக கொதித்துக்கொண்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது என்பதையும் நான் சொல்ல விரும்புகிறேன். வங்கதேசம் தவிர நேபாளம் மற்றும் மாலத்தீவுகளிலும் இதே நிலை காணப்படுகிறது. ஆனால், ஸ்திரத்தன்மைக்காகவோ, ஜனநாயகத்திற்காகவோ அந்த நாட்டு மக்களின் கோபத்தை நீக்க இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக அந்நாட்டு அரசுகளுடன் ஒத்துழைத்தால் தனது (இந்தியாவின்) நலன்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறது. அண்டை நாடுகளின் குறுகிய கால நலன்களை மனதில் கொண்டு இந்தியா எப்போதும் நகர்ந்து வருகிறது. நீண்ட கால நலன்களைப் பற்றி ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஒன்றன் பின் ஒன்றாக பல நாடுகளில் அதன் விளைவுகளை இந்தியா சந்தித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் தெற்காசியாவின் சிறிய நாடுகள் இந்தியாவை ஒரு பிராந்திய மேலாதிக்க சக்தியாகப் பார்க்கின்றன என்றால் அதற்கு ஒரு திட்டவட்டமான பார்வையும் காரணமும் உள்ளது. இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக நிலைநிறுத்த விரும்புகிறது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் அவ்வாறு செய்வதற்கு இந்த அண்டை நாடுகளுக்கான சில பொறுப்புகளை இந்தியா நிறைவேற்ற வேண்டியிருக்கும். இதன் மூலம் பல்வேறு அம்சங்களை கொண்ட உறவுகள் நிறுவப்படும். ஆனால் தற்போதுவரை அதை எங்கும் பார்க்கமுடியவில்லை.'' என்றார். பட மூலாதாரம்,WILSON CENTER படக்குறிப்பு,டாக்டர் இர்ஃபான் நூருதீன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி - எஸ் டி முனி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல கல்வி நிறுவனங்களில் சர்வதேச உறவுகள் குறித்த பேராசிரியராக டாக்டர் முனி இருந்துள்ளார். தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் சிறப்புத் தூதுராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவர் டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான ஐடிஎஸ்ஏவில் உறுப்பினராகவும் உள்ளார். தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அவர்,'' நரேந்திர மோதி அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே அறிவித்த 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையில் தொடக்கத்திலேயே குறைபாடுகள் இருந்தன. அந்த அறிவிப்புக்கு முன் எந்த தீவிர ஆலோசனையும் செய்யப்படவில்லை என்று நான் கூறுவேன். அது ஒரு திடீர் முடிவு. மோதியின் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்ட சில நாட்களிலேயே, பாகிஸ்தானில் இருந்து டெல்லி வந்த வர்த்தகக்குழு, காஷ்மீர் ஹூரியத் தலைவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படாததை நாம் கண்டோம். ஆனால் ஹூரியத் தலைவர்கள் ஏற்கனவே டெல்லிக்கு வந்து அந்த சந்திப்பிற்காக காத்திருந்தனர். பாகிஸ்தான் பிரதிநிதிகளை சந்திக்க ஹூரியத் தலைவர்களை அனுமதிக்கப்போவதில்லை எனும்பட்சத்தில் அவர்களை ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு வர அனுமதித்திருக்கக்கூடாது. மேலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விரும்பவில்லை என்றால் மோதி அரசின் பதவியேற்பு விழாவுக்கு நவாஸ் ஷெரீப்பை அழைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது இந்தக்கொள்கையின் நோக்கமாக இருந்ததில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டும் பல உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும். எளிமையாகச் சொன்னால், இது 'இந்தியா முதன்மை ' கொள்கை. மோதியின் ஆட்சியில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்துவதில் மேலும் இரண்டு பெரிய தவறுகளை செய்தது என்று நான் கருதுகிறேன். முதலாவது, உளவு அமைப்புகளின் மீது அதிக சார்பு. புலனாய்வுத் தகவல்கள் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் உளவு அமைப்புகளின் கண்களால் அண்டை நாட்டைப் பார்த்து, அதன் அடிப்படையில் ஒரு கொள்கை அல்லது உத்தியை உருவாக்க முயற்சித்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதுதான் இப்போது நடந்துள்ளது. இரண்டாவதாக, வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆளும் கட்சி தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டதை, மோதி அரசுக்கு முன்பு எந்த அரசிலும் நான் பார்த்ததில்லை. மோதியின் முதல் மற்றும் இரண்டாவது ஆட்சியின் போது கூட, நேபாளம், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஓரளவு பாகிஸ்தானுடனும் இந்தியா என்ன கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதை வெளியுறவு அமைச்சருக்கு பதிலாக ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் மாதவ் முடிவு செய்தார். அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உத்தியை தீர்மானிக்கும் பொறுப்பு இந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த முடிவு இந்தியாவின் நலனுக்கானது அல்ல என்பது இப்போது தெளிவாகிவிட்டது. வங்கதேசத்தின் தற்போதைய நிலைமையைப் பற்றி நாம் விவாதித்தால் அங்கும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்விக்கான பல காரணங்களை பார்க்க முடிகிறது. உதாரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா சரியான பாதையில் செல்லவில்லை என்பதையும் அவர் மீது சாமானிய மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது என்பதையும் இந்தியா ஒருபோதும் அவரிடம் தெளிவாக எடுத்துக்கூறவில்லை. அவர் இந்தியாவின் சிறந்த நண்பராக இருக்கும்பட்சத்தில் இதை அவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இது செய்யப்படவில்லை. இது தவிர தீவிர உளவுத்துறை தோல்வியும் ஏற்பட்டது. ஷேக் முஜ்பூர் ரஹ்மான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இந்திரா காந்தியின் அரசியல் செயலர் பிஎன் ஹக்சர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெலிகாப்டர் மூலம் அவரை அங்கிருந்து வெளியேற்ற முன்வந்தார். இதற்கு ரஹ்மான் தயாராக இருக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை இந்தியா அறிந்திருந்தது. ஆனால் ஷேக் ஹசீனாவை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பது பற்றிய இந்தியாவுக்கு எந்த தகவலும் இருக்கவில்லை.'' என்றார். பட மூலாதாரம்,S D MUNI படக்குறிப்பு,அரசியல் ஆய்வாளர் எஸ்.டி.முனி நான்கு அண்டை நாடுகளில் இந்திய எதிர்ப்பு அரசுகள் - சௌமென் ராய் சௌமன் ராய் பல நாடுகளுக்கான இந்திய தூதராகவும் இருந்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் வங்கதேசம், அவரது முக்கிய ஆராய்ச்சி மற்றும் ஆர்வமுள்ள பகுதிகளாக இருந்தன. தன் கருத்துக்களை முன்வைத்த அவர் ''இந்தியாவின் அண்டை நாடுகளில் நடக்கும் சம்பவங்களை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகவோ நான் கருதவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளும் பல்வேறு காரணங்களால் அரசியல் குழப்பத்தை சந்தித்து வருகின்றன. தெற்காசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நேபாளம், மாலத்தீவு அல்லது வங்கதேசத்தின் அரசியல் படம் மாறினால் அல்லது அதிகாரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டால், அவற்றுக்கு அந்த நாடுகளின் உள் நிலைமையே அடிப்படைக் காரணம். இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் ஒருவர் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கிறார், அங்கு அவருக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவோ அல்லது அதன் வெளியுறவுக் கொள்கையோ விரும்பினாலும் எதையும் செய்ய முடியாது. அங்குள்ள அரசியல் நிலைமை மற்றும் திசையின் அடிப்படையில் மட்டுமே அந்த நாடு முன்னே நகரும். எனவே அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று நான் சொல்ல விரும்புகிறேனா?அதுதான் இல்லை.'' பட மூலாதாரம்,SOUMEN ROY படக்குறிப்பு,சௌமென் ராய் ''இந்த உறவுகளில் பல விரிசல்கள் உள்ளன. இவை சில நேரங்களில் வளர்ந்து கடுமையான சிக்கல்களை உருவாக்குகின்றன. ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகளின் பரப்பளவு, ராணுவம், பொருளாதார சக்தி அல்லது உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றில் உள்ள மிகப்பெரிய வேறுபாடு காரணமாக இந்த விரிசல் நீடிக்கும். இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் இந்த உண்மைகளை மனதில் வைத்து முன்னேற வேண்டும். உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம் ஒரு நாட்டில் எதிர்பாராத பெரிய மாற்றம் ஏற்பட்டால் மற்ற எந்தக் காரணிகளையும் விட உள்நாட்டு நிகழ்வுகளே அதில் மிகப் பெரிய பங்கை வகிக்கின்றன. இப்போது நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசத்தில் என நான்கு இந்திய எதிர்ப்பு அரசுகள் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு வந்துள்ளன என்பதை நாம் கவனித்தால் அதை வெறும் தற்செயல் நிகழ்வாகவே நான் கருதுகிறேன். பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தற்போது மூன்று அல்லது நான்கு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் சவாலான கட்டத்தில் உள்ளன. இது எப்போது வேண்டுமானாலும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தியாவின் அண்டை நாடுகளில் (பாகிஸ்தான் தவிர) எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் டெல்லியுடனான பேச்சுவார்த்தையின் பாதை ஒருபோதும் மூடப்படவில்லை என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். மாலத்தீவின் முய்சு அரசு கூட இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது. நேபாளத்துடனான ஒத்துழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்தது. வங்கதேசத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையே தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை பேணியே ஆகவேண்டும். இதற்கு மாற்று இல்லவே இல்லை. இந்த 'பணி உறவை' பேணுவது டெல்லிக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். 'எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்துவிட்டது' என்று பலர் வங்கதேசம் தொடர்பாக இந்தியாவை விமர்சிக்கிறார்கள். அதாவது ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கப்பட்டது. இன்று இந்தியா அதற்கான விலையை கொடுக்க வேண்டியுள்ளது என்பதே இதன் பொருள். ஆனால் அப்படிப்பட்டவர்களிடம் எனது கேள்வி என்னவென்றால், உண்மையில் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு இன்னொரு மாற்று 'கூடை' இருந்ததா என்பதுதான். எளிமையாகச்சொன்னால், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இந்திய எதிர்ப்பு உணர்வுகள் அரசியலில் நிறைந்துள்ளன. அத்தகைய சக்திகளுடன் கைகோர்ப்பது இந்தியாவுக்கு சாத்தியமில்லை. இதை கொள்கையின் தோல்வி என்றோ அல்லது வேறு விதமாகவோ விவரித்தாலும் அதுதான் உண்மை.'' என்றார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மாலத்தீவு அதிபர் முகமது முய்முய்சு உலகளாவிய சக்தியாக மாற விரும்பும் இந்தியா - சஞ்சய் பரத்வாஜ் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வு மையத்துடன் நீண்ட காலமாக தொடர்புடைய சஞ்சய் பரத்வாஜ், அந்த நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் பற்றி அவர் நீண்ட காலமாக ஆய்வு செய்துள்ளார். அவர் வங்கதேசத்திலும் நீண்ட காலம் இருந்திருக்கிறார். அவர் பேசியபோது ''இந்தியா ஒரு பெரிய பிராந்திய வல்லரசு மற்றும் அது படிப்படியாக உலகளாவிய சக்தியாக மாற விரும்புகிறது. இந்த இலக்கை எட்டுவதில் அண்டை நாடுகளுக்கு பெரும் பங்கு உள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால், தன் புவியியல் பகுதியில் அண்டை நாடுகளிடமிருந்து அங்கீகாரம் அல்லது மரியாதை கிடைக்காவிட்டால், சர்வதேச அளவில் ஒரு நாடு மரியாதை பெறுவது கடினமாகிவிடும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் இது கூறப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது குறித்து அது பேசுகிறது. இப்போது பேசப்படும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை என்பது முற்றிலும் புதிய விஷயம் அல்ல. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் தெற்காசியாவில் குஜ்ரால் கோட்பாட்டைப் பின்பற்றுவது பற்றி பேசினார். அண்டை நாடு என்ன செய்தது அல்லது செய்யவில்லை என்பதைப் பற்றி சிந்திக்காமல், உறவுகளை மேம்படுத்த ஒருதரப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது அதன் அடிப்படைக் கொள்கை. அதன் பிறகு மன்மோகன் சிங் காலத்தில் இது வேறு விதமாகச் சொல்லப்பட்டது. அப்போது அண்டை நாடுகளிடம் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. இது தானாகவே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் என்று கூறப்பட்டது.'' பட மூலாதாரம்,UNIVERSITY OF DELHI படக்குறிப்பு,சஞ்சய் பரத்வாஜ் ''இந்த சூழலில் வங்கதேசத்துடனான வரலாற்றுச் சிறப்புமிக்க நில ஒப்பந்தம் அல்லது உத்தேச டீஸ்டா ஒப்பந்தத்தின் வரைவு மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை நினைவுகூர்வது அவசியம். பின்னர் நரேந்திர மோதியின் ஆட்சிக் காலத்தில் இதற்கு அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என பெயரிடப்பட்டது. ஆனால் அண்டை நாடுகளுடனான உறவுகளின் அடிப்படை சாராம்சம் அப்படியே உள்ளது. சீனாவைப்போல அண்டை நாடுகளில் பெரிய அளவில் முதலீடு செய்யவோ அல்லது அங்கு இலவச உதவிகளையோ வழங்கும் அளவிற்கு இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பலம் இல்லை. இந்தியாவின் ஏறக்குறைய எல்லா அண்டை நாடுகளும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களாக இருந்தாலும் அவற்றுக்கான சொந்த எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற சீனா தனது கருவூலத்தை அவர்களுக்காக திறந்து வைத்துள்ளது. அண்டை நாடுகள் இந்தியாவுடன் கலாசார ரீதியாகவோ அல்லது புவியியல் ரீதியாகவோ எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், பொருளாதாரத் தேவை காரணமாக அவை சீனாவின் செல்வாக்கின் கீழ் வருவதற்கு இதுவே காரணம். இதுபோன்ற விஷயங்களில் இந்தியா விரும்பினாலும் அதிகம் எதுவும் செய்ய முடியாது.'' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2024 ஜூலையில், சீனா மற்றும் வங்கதேச உயர்மட்ட தலைமைப் பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. ''முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது ஆட்சிக் காலத்தில், ’அனைத்தையும் மாற்றலாம் ஆனால் அண்டை நாடுகளை மாற்ற முடியாது. இந்த புவியியலுடன் மட்டுமே நாம் செல்ல வேண்டும்,’என்று கூறியிருந்தார். இந்தியாவின் அண்டை நாடுகளின் விஷயத்திலும் இதுதான் உண்மை. இந்தியா எங்கு இருக்கிறதோ, அங்கேயேதான் இருக்கும். அவர்கள் விரும்பினாலும் இந்தியாவை தங்களிடமிருந்து விலக்கி வைக்க முடியாது. எனவே இந்த பொறுப்பு பரஸ்பரம் உள்ளது. உறவுகளில் ஏற்படும் சீர்குலைவுக்கு ஒரு நாட்டின் கொள்கையை காரணமாக சொல்லமுடியாது. அதற்கு இரு நாடுகளும் பொறுப்பு. இருவரின் பரஸ்பர நலன்களும் ஒரே திசையில் இருந்தால் உறவு சுமூகமாக இருக்கும். அவற்றில் முரண்பாடு ஏற்படும் போது ஒவ்வொரு அடியிலும் முட்டுக்கட்டைகள் இருக்கும். பல்வேறு நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான அதிருப்தி ஏன் நிலவுகிறது? நடைமுறை காரணிகள் தவிர கட்டமைப்பு காரணிகளும் இதில் உள்ளன என்று நான் கூறுவேன். வங்கதேசம் முஸ்லிம் பெரும்பான்மை நாடு. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்த ஒரு வன்கொடுமை சம்பவமும் அங்கு அதிருப்தியை ஏற்படுத்தும். இது ஒரு நடைமுறை காரணி. இது தவிர இந்தப்பிராந்தியத்தில் இந்தியாவின் கட்டமைப்பு வேறுபாடு காரணமாக அண்டை நாடுகள் அதை ஒரு மேலாதிக்க சக்தியாகக் கருதுகின்றன. அந்த நாடுகளில் உள்ள சில சக்திகள் தங்கள் சொந்த நலன்களுக்காக இந்திய எதிர்ப்பு உணர்வைத் தூண்டுகின்றன. இதை ஒரு கட்டமைப்பு காரணி என்று அழைக்கலாம். இதில் புதிதாக எதுவும் இல்லை. இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. அது இனியும் தொடரும். ஆனால் எந்த ஒரு அண்டை நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வு எழுவதற்கு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தவறு கண்டுபிடிப்பது சரியாக இருக்காது என்று நான் கருதுகிறேன்.' 'என்கிறார் https://www.bbc.com/tamil/articles/c990y8k2d2vo
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
கமலா ஹரிஸை விவாதத்திற்கு அழைத்த எலான் மஸ்க் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸையும் நேர்காணல் செய்ய தயார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார். ஜனாதிபதி தேர்தலில், டிரம்பை ஆதரிப்பதாக அறிவித்த உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் டிரம்பின் தேர்தல் நிதியாக 375.80 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை எலான் மஸ்க் நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேஸில் நடைபெற்றது. அதில் பல கேள்விகளுக்கு டிரம்ப் பதிலளித்தார். இந்த நேர்காணலில் கமலா ஹாரிஸ் குறித்து அவர் பேசியதாவது; “கமலா ஹாரிஸ் அமெரிக்காவை அழித்து விடுவார். அவருடைய பொருளாதாரச் சிந்தனைகள் நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். ஏற்கெனவே பணவீக்கத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்கர்கள் மத்தியில் சேமிப்பு குறைந்துவிட்டது. மேலும் அமெரிக்கர்கள் கடன் வாங்கி செலவழிக்க ஆரம்பித்துவிட்டனர். கமலா ஹாரிஸ் அதிபரானால் இது மேலும் மோசமாகும். கமலா ஹாரிசை வரவேற்றுள்ள சட்டவிரோத நபர்களின் எண்ணிக்கை நாம் நினைப்பதை விட அதிகம். அவரைத் தேர்ந்தெடுத்தால் நாட்டில் வணிகம் இல்லாமல் போய்விடும்” என கமலா ஹாரிஸை தாக்கிப் பேசினார். இந்நிலையில், ‘கமலா ஹாரிஸை எக்ஸ் ஸ்பேஸஸிலும் நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சி’ என எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/307860
-
அதானியை தொடர்ந்து செபி தலைவர் மீது குற்றச்சாட்டு - ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுவது என்ன?
ஹிண்டன்பர்க் அறிக்கை- செபி தலைவர் மாதபியிடம் இருந்து இந்தக் கேள்விக்கான பதில் எதிர்பார்க்கப்படுகிறது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் கட்டுரை தகவல் எழுதியவர், கீர்த்தி துபே பதவி, பிபிசி செய்தியாளர் 31 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோருக்கு எதிராக அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. அதானி குழுமத்தின் பங்குசந்தை முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர், பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் தனிநபர் ஆவணங்களை மேற்கோளிட்டு தெரிவித்தது. ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி 2023 இல், அதானி குழுமம் 'கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி' செய்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வரி புகலிட நாடுகளில் (முதலீட்டிற்கு வரி செலுத்த வேண்டியதில்லை அல்லது மிகக் குறைந்த வரி செலுத்த வேண்டிய நாடுகள்) உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அதானியின் பங்குகளின் விலை முறைகேடாக உயர்த்தப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டது. ஹிண்டன்பர்க் இவ்வாறு அறிக்கை வெளியிட்டதற்குப் பிறகு, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன, மேலும் அதானி குழுமமும் பெரிய இழப்பைச் சந்தித்தது. அதன் பின்னர் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி ஒரு அறிக்கையை வெளியிட்டார், அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் அதானி குழுமத்தை "தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன்" குறிவைக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். உச்ச நீதிமன்ற குழுவுக்கு 'செபி’ ஆணையம் அளித்த பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆண்டு மே மாதம், 6 பேர் கொண்ட குழு நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், அதானி வழக்கில் எந்த முறைகேடுகளையும் செபியால் கண்டறிய முடியவில்லை என்று கூறியது. ஜனவரி மாதம் அறிக்கை வெளியான பிறகு இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம், இந்த குழு நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், அதானி வழக்கில் எந்த முறைகேடுகளையும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் (செபி) கண்டறிய முடியவில்லை என்று கூறியது. அந்த 173 பக்க அறிக்கையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோக்களில் சந்தேகத்திற்குரிய நிதி நடவடிக்கைகள் இருப்பதாக செபி ஆணையம் நம்புவதாகக் கூறியது, ஆனால் எப்படி விதிமீறல்கள் நிகழ்ந்தன என்பதைக் கண்டறிய முடியவில்லை. இப்போது ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று, செபி தலைவருக்கும் அவரது கணவருக்கும், அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பங்குகள் இருப்பதாகக் ஹிண்டன்பர்க் கூறுகிறது. செபி தலைவர் மாதபி புச், அதானி மீதான வழக்கை விசாரிக்கும் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. "அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாதபி பூச் வைத்துள்ள பங்குகள் காரணமாக இருக்கலாம்” என்று ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர், தேவையான அனைத்துத் தகவல்களும் செபியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர். பதில் கிடைக்காத கேள்வி பட மூலாதாரம்,@ADANIONLINE படக்குறிப்பு,ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் இந்த பதிலை அளித்துள்ளது. சமீபத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, மாதபி புச்சிடம் எழுப்பப்படும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், அதானி குழும வழக்கை விசாரிக்கும் செபி குழுவில் அவர் அங்கம் வகித்தாரா இல்லையா? இந்தக் கேள்விக்கான பதிலை செபி ஆணையமோ அல்லது மாதபி தரப்போ இன்னும் தெளிவாகக் கூறவில்லை. இருப்பினும், ஊடக செய்திகளின்படி , அதானி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவிற்கு செபி தலைவர் மதாபி புச் விளக்கம் அளித்ததாக கூறுகின்றன. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், மாதபி புச் செபி ஆணையத்தின் தலைவராக விசாரணையின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறார். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த பத்திரிகையாளர், "இந்த முழு விஷயத்திலும் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன - முதலாவதாக, மாதபி மற்றும் தவல் புச் தங்களுக்குச் சொந்தமானதாகக் கூறும் நிறுவனத்தில் தனிப்பட்ட முதலீடுகளைச் செய்துள்ளனர். அதானி வழக்கு விசாரணையில் மாதபி புச் பங்கேற்றாரா இல்லையா என்பது தீர்க்கப்படாத இரண்டாவது கேள்வி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனத்துடன் கடந்த காலத்தில் முதலீடு செய்திருந்தால், சம்பந்தப்பட்டிருந்தால், விசாரணையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த கேள்விக்கான தெளிவான பதில் இன்னும் வெளிவரவில்லை. ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கை சொல்வது என்ன? வரி புகலிட நாடான பெர்முடாவை தளமாகக் கொண்ட குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் நிறுவனம், கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்று என்று லாப நோக்கற்ற 'அதானி வாட்ச்' என்ற அமைப்பு 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறுவதாக ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ளது. ''இந்த நிறுவனம் பங்குச் சந்தையை செயற்கையாக உயர்த்தவும், அதானி குழுமத்தின் பங்குகளின் விலையை உயர்த்தவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் மொரிஷியஸ் நிறுவனமான ஐபிஇ பிளஸில் முதலீடு செய்து, இதன் வழியாக இந்திய பங்குச் சந்தைக்குள் பணம் முதலீடு செய்யப்பட்டது. மொரிஷியஸ் மற்றும் பெர்முடாவில் உள்ள அதானி குழுமத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனங்களை விசாரிப்பதில் `செபி’ அதிக ஆர்வம் காட்டவில்லை'' என்று ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது. ''ஒரு 'விசில்ப்ளோயர்’ (சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் பற்றித் தகவல் அளிப்பவர்) கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் இந்த வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்தனர் என்பதை உறுதியானது. இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கவும் அதன் மூலம் சந்தை நிலையை மாற்றியமைக்கவும் பயன்படுத்தப்பட்டது'' என ஹிண்டன்பர்க் கூறுகிறது. "மாதபி மற்றும் தவல் புச் ஜூன் 2015 இல் `ஐபிஇ பிளஸ்’ நிறுவனத்தில் தங்கள் முதல் முதலீட்டைச் செய்தனர். இது 2017 இல் மாதபி புச் செபியின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நடந்துள்ளது. ஆனால் செபியில் அவரது மனைவி மாதபி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், தவல் புச் மொரிஷியஸ் நிறுவனத்தின் பங்குகளை தனது பெயருக்கு மாற்றி கொண்டார்.'' என ஹிண்டன்பர்க் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES மாதபி புச் தரப்பு விளக்கம் ஹிண்டன்பர்க்கின் அறிக்கையின்படி, பிப்ரவரி 2018 இல், மாதபி புச் தனது தனிப்பட்ட ஜிமெயில் கணக்கிலிருந்து தனது கணவருக்கு குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் (GDOF) நிறுவனத்தில் உள்ள பங்குகளை மீட்டெடுக்க வேண்டும் அல்லது விற்க வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியதாக கூறியுள்ளது. ஆனால், மாதபி புச் தம்பதி வெளியிட்ட பதில் அறிக்கையில், “ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதியில் செய்யப்பட்ட முதலீடு 2015-இல் அவர்கள் [மாதபி மற்றும் தவல் புச்] இருவரும் சிங்கப்பூர் குடிமக்களாக இருந்தபோது செய்யப்பட்டது,” என்று கூறப்பட்டுள்ளது. “தலைமை முதலீட்டு அதிகாரியான அனில் அஹுஜா, பள்ளி மற்றும் ஐஐடி டெல்லி காலத்திலிருந்தே தவலின் நண்பர் என்பதாலும், சிட்டி பேங்க், ஜேபி மோர்கன், மற்றும் 3ஐ குரூப் பிஎல்சி ஆகியவற்றின் முன்னாள் ஊழியர் என்பதாலும், பல தசாப்தங்களாக வலுவான முதலீட்டுத் தொழிலைக் கொண்டிருந்ததாலும் இந்த நிதியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது,” என்கிறது. மாதபி குறிப்பிட்ட அந்த `அனில் அஹுஜா’ என்னும் நபர் தொடர்பாக ஹிண்டன்பர்க் அறிக்கையில், அவர் 2017 வரை அதானி எண்டர்பிரைசஸ் இயக்குநராக இருந்ததாகக் கூறுகிறது. அதானி பவர் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் மாதபி புட்ச் தனது அறிக்கையில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை. செபி ஆணையத்தின் அறிக்கை ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையின் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு செபி தனது எதிர்வினையை பதிவு செய்துள்ளது. அதில், ஹிண்டன்பர்க் அதானி குழுமத்திற்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள், செபியால் முறையாக விசாரிக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. அதானி குழும விவகாரத்தில், 24 விசாரணைகளில் 23 விசாரணைகளை செபி முடித்துள்ளதாகவும், கடைசி விசாரணையும் முடிவடைய உள்ளதாகவும் செபி தெரிவித்துள்ளது. செபியின் கூற்றுப்படி, அதானி குழுமத்திற்கு 100 க்கும் மேற்பட்ட சம்மன்கள் மற்றும் சுமார் 1,100 கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. இது தவிர, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டுப்பாட்டு ஆணையங்களுடன் செபி 300க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தவிர, 12,000 பக்க ஆவணங்களும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டது. மேலும், “சுய பிரதிபலன்கள் சார்ந்து செய்யப்படும் செயல்களை விசாரிக்க செபியிடம் முறையான வழிமுறைகள் உள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளனர். பிரதமர் மோதி கன்னியாகுமரியில் 45 மணி நேரம் தியானம் செய்த போது விடுப்பில் இருந்தாரா?7 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா - ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் - திரைக்குப் பின்னே ரகசியமாக நடந்தது என்ன?3 ஆகஸ்ட் 2024 எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கூறுகையில், சமீப காலமாக இந்தியப் பங்குச் சந்தையில் அதிகளவானோர் தங்களது வருமானத்தை முதலீடு செய்து வருகின்றனர். அவர்களின் முதலீடுகள் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வது ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பு என்றும் கூறியுள்ளார். "பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் இந்தியாவின் ஆணையமான செபி மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பு ஆபத்தில் உள்ளது, எனவே இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்றார். "இது மூன்று பெரிய கேள்விகளை எழுப்புகிறது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகும் மாதபி ஏன் ராஜினாமா செய்யவில்லை? "இரண்டாவது,பங்கு சந்தையில் ஏதேனும் தவறு நடந்தால், முதலீட்டாளர்கள் பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள், செபி தலைவரா, பிரதமர் நரேந்திர மோதியா அல்லது அதானியா?" "மூன்றாவது, இந்த விவகாரம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இப்போது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகு, இந்த விஷயத்தையும் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமா?" ``இந்த விவகாரம் முழுவதையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்று கொள்ள பிரதமர் மோதி ஏன் பயப்படுகிறார் என்பது இப்போது தெளிவாகிறது.” என்று கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறுகையில், "செபி தலைவர், அதானி குழுமத்தில் முதலீட்டாளராக இருப்பது செபி ஆணையத்துக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள கலங்கம் ஆகும்” எனவே அதானி தொடர்பாக செபிக்கு அனுப்பப்பட்ட புகார்கள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்படாமல் போனதில் ஆச்சரியமில்லை. மஹுவா மொய்த்ரா மற்றொரு ட்வீட் பதிவில், “மாதபியின் தலைமையில் அதானி மீது செபி நடத்தும் எந்த விசாரணையையும் நம்ப முடியாது. இந்த தகவல் பகிரங்கமான பிறகு, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என்றார். https://www.bbc.com/tamil/articles/cpdlx769n4go
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும்,தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிக திகதியாக செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/307875