Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. லிங்கன் முதல் ரீகன் வரை: கொலைத் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க அதிபர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பேரணியின் போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதன் போது டிரம்பின் வலது காதை உரசியபடி ஒரு தோட்டா சென்றது. அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல்வாதி மீது கொலை முயற்சித்தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல அமெரிக்க அதிபர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களில் சிலர் உயிரிழந்தனர், சிலர் உயிர் பிழைத்தனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தாக்குதலில் ஆளான அதிபர்கள் ஜான் எஃப். கென்னடி (1963) ஜான் எப்.கென்னடி அமெரிக்காவின் 35-ஆவது அதிபர். 1963 நவம்பர் 25 ஆம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். டல்லாஸ் பயணத்தின் போது திறந்த காரில் சென்றுகொண்டிருந்த போது அவர் சுடப்பட்டார். கென்னடியின் கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு இருந்ததாக துப்பாக்கி சூடு நடந்த போது அவருடன் காரில் இருந்த, ரகசிய சேவை ஊழியர் கிளின்ட் ஹில் கூறினார். ஆனால் அதிபரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. கென்னடியின் படுகொலைக்காக லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜான் எஃப். கென்னடி மீதான தாக்குதலுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம். அவர் தன்னை நிரபராதி என்று கூறினார். லீ ஹார்வி ஓஸ்வால்ட் ஒரு முன்னாள் கடற்படை வீரர். அவர் தன்னைத்தானே மார்க்சிஸ்ட் என்று அறிவித்துக்கொண்டவர். அவர் 1959 இல் சோவியத் யூனியனுக்குச் சென்று 1962 வரை அங்கேயே இருந்தார். அவர் மின்ஸ்கில் ஒரு வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். கென்னடி படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹார்வி, கியூபா மற்றும் ரஷ்யாவின் தூதரகங்களுக்குச் சென்றிருந்ததை வாரன் விசாரணைக் கமிஷன் கண்டறிந்தது. லீ ஹார்வி ஓஸ்வால்ட், டெக்சாஸ் பள்ளி புத்தக வைப்பு கட்டடத்தில் (Texas school book depository building) இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக,1964 செப்டம்பரில் வெளியிடப்பட்ட வாரன் கமிஷன் அறிக்கை கூறியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓஸ்வால்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கு இரண்டாவது துப்பாக்கி ஏந்திய நபர் இருந்திருக்காலாம் என்று சிலர் சொல்கின்றனர். கென்னடி பின்னால் இருந்து சுடப்படவில்லை, முன்னால் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஓஸ்வால்டின் கன்னங்களில் பாரஃபின் சோதனை செய்யப்பட்டதில் அவர் துப்பாக்கியால் சுடவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், இந்த சோதனையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. கென்னெடியின் கொலை பற்றி இன்றும்கூட சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆபிரகாம் லிங்கன் (1865) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆபிரகாம் லிங்கன் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-ஆவது அதிபராவார். 1865 ஏப்ரல் 15 ஆம் தேதி வாஷிங்டன் டிசியில் உள்ள ஃபோர்டு தியேட்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆபிரகாம் லிங்கன் தனது தேர்தல் பரப்புரைகளில் அடிமை முறைக்கு தனது எதிர்ப்பை வெளிப்படையாக தெரியப்படுத்தினார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு லிங்கன் அடிமைத்தனத்தை ஒழித்துவிடுவாரோ என்று அமெரிக்காவின் தென் மாகாணங்களில் பலர் பயந்தனர். அமெரிக்காவின் தெற்கில் அமைந்துள்ள ஏழு மாகாணங்கள் தங்களின் தனி கூட்டமைப்பை உருவாக்கியதற்கு ஒரு வேளை இது காரணமாக இருந்திருக்கலாம். பின்னர் மேலும் நான்கு மாகாணங்கள் இந்த கூட்டமைப்பில் இணைந்தன. இந்த மாகாணங்கள் அனைத்தும் ஒன்றாக ’கூட்டுக்குழு’ (Confederacy) என்று அழைக்கப்பட்டன. 1861-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இது நான்கு ஆண்டுகள் நீடித்தது. போரில் 6 லட்சம் அமெரிக்கர்கள் இறந்தனர். 1865 ஏப்ரல் 9 ஆம் தேதி கான்ஃபெடரேட் ஜெனரல் ராபர்ட் ஈ லீ சரணடைந்த பின்னர் போர் முடிவுக்கு வந்தது. வடக்கு மற்றும் தென் அமெரிக்க மாமாகாணங்களுக்கு இடையிலான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த ஒரு வாரத்தில் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையாளி ஜான் வில்க்ஸ் பூத், தெற்கு மாகாணங்களின் வலுவான ஆதரவாளராக இருந்தார். வில்லியம் மெக்கின்லி (1901) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெள்ளை மாளிகையில் வில்லியம் மெக்கின்லி. வில்லியம் மெக்கின்லி அமெரிக்காவின் 25-ஆவது அதிபர். படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் 1897 மார்ச் 4 முதல் 1901 செப்டம்பர் 14 வரை அமெரிக்க அதிபராக இருந்தார். மெக்கின்லியின் ஆட்சிக் காலத்தில் நடந்த 100 நாள் போரில் அமெரிக்கா, கியூபாவில் ஸ்பெயினை தோற்கடித்தது. பிலிப்பைன்ஸின் மணிலா மற்றும் போர்ட்டோ ரிக்கோ ஆகியவை கைப்பற்றப்பட்டன. 1901 செப்டம்பரில் ஒரு கண்காட்சியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது அவர் துப்பாக்கியால் இரண்டு முறை சுடப்பட்டார். எட்டு நாட்களுக்குப் பிறகு அவர் காலமானார். மிச்சிகனில் வசிக்கும் லியோன் சோல்கோஸ் (Leon Czolgosz) என்ற நபர் அதிபர் மெக்கின்லியை படுகொலை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். "அதிபர் மெக்கின்லியைக் கொன்று நான் என் கடமையை செய்துள்ளேன். ஒருவரிடம் இத்தனை அதிகமான வேலையும், வேறு ஒருவரிடம் வேலையே இல்லாமல் இருப்பதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை,” என்று கைது செய்யப்பட்டபோது அவர் கூறினார். ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட் (1881) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜேம்ஸ் கார்பீல்ட் மீதான தாக்குதலை சித்தரிக்கும் ஓவியம். ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் அமெரிக்காவின் 20-ஆவது அதிபராக இருந்தார். அவர் 1831 இல் ஓஹியோவில் பிறந்தார். 1881 ஜூலை 2 ஆம் தேதி அவர் வாஷிங்டன் ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு நபரால் சுடப்பட்டார். பலத்த காயமடைந்த கார்பீல்ட் பல நாட்கள் வெள்ளை மாளிகையில் இருந்தார். தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தனது இயந்திரம் ஒன்றின் உதவியுடன் அதிபரின் உடலில் புதைந்திருந்த தோட்டாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. செப்டம்பர் 6 ஆம் தேதி கார்பீல்ட் நியூ ஜெர்சிக்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில நாட்களுக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் 1881 செப்டம்பர் 19 ஆம் தேதி காயங்கள் மற்றும் உள் ரத்தப்போக்கு காரணமாக அவர் காலமானார். அதிபர் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்றவர் சார்லஸ் ஜே கைடோ என்று அடையாளம் காணப்பட்டார். கொலை முயற்சித் தாக்குதலில் உயிர் தப்பிய அமெரிக்க அதிபர்கள் ரொனால்ட் ரீகன் (1981) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரொனால்ட் ரீகன் மீதான தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவரை பிடிக்கும் முயற்சி. ரொனால்ட் ரீகன் அமெரிக்காவின் 40-ஆவது அதிபர். சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் பனிப்போரின் முடிவு ஆகியவற்றில் அவர் ஒரு முக்கிய நபராக கருதப்படுகிறார். ரீகன் 1911 பிப்ரவரி 6 ஆம் தேதி இல்லினாயில் உள்ள டாபின்கோவில் பிறந்தார். ரீகன் ஒரு ஹாலிவுட் நடிகர் மற்றும் 50 படங்களில் நடித்துள்ளார். 1942-45 காலகட்டத்தில் அவர் ராணுவத்திலும் பணியாற்றினார். 1981 மார்ச் 30 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்ற 69 நாட்களுக்குப் பிறகு அவர் கொடூரமாக தாக்கப்பட்டார். வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே அவர் சுடப்பட்டார். ஆனால் அவர் உயிர் பிழைத்தார். தாக்குதலில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். சுடப்பட்ட நபர் ஜான் ஹிங்க்லி ஜூனியர் என அடையாளம் காணப்பட்டார். தியோடர் ரூஸ்வெல்ட் (1912) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேரணியில் உரை நிகழ்த்தும் தியோடர் ரூஸ்வெல்ட். அமெரிக்காவின் 26வது அதிபராக இருந்தவர் தியோடர் ரூஸ்வெல்ட். இவர் 1858 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நியூயார்க்கில் பிறந்தார். அவர் குடியரசுக் கட்சியின் தலைவராக இருந்தார். 1898 இல் ரூஸ்வெல்ட் நியூயார்க்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், 1900 இல் அவர் அமெரிக்காவின் துணை அதிபரானார். 1901 இல் அதிபர் மெக்கின்லி படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர் அமெரிக்காவின் அதிபராக நியமிக்கப்பட்டார். ரஷ்ய-ஜப்பானிய போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றியதற்காக அவருக்கு 1906 இல் நோபல் சமாதான விருது வழங்கப்பட்டது. 1912 அக்டோபர் 14 ஆம் தேதி அமெரிக்க நகரமான மில்வாக்கியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு அடிப்படைவாதியால் அவர் மார்பில் சுடப்பட்டார். தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு ரூஸ்வெல்ட் குணமடைந்தார். ரூஸ்வெல்ட்டைத் தாக்கியவர் வில்லியம் எஃப். ஷ்ராங்க் என அடையாளம் காணப்பட்டார். டொனால்ட் டிரம்ப் (2024) - அதிபர் வேட்பாளர் பட மூலாதாரம்,AFP 2024 ஜூலை 14 ஆம் தேதி பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற பேரணியின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத்தாக்குதலில் டிரம்பின் காதை உரசியபடி தோட்டா சென்றது. தாக்குதலுக்குப் பிறகு டிரம்பின் முகத்தில் ரத்தம் காணப்பட்டது. முன்னாள் அதிபர் டிரம்பை தாக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டார். அந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள நர்ஸிங் ஹோமில் சமையல் அறையில் வேலை செய்து வந்தார். டிஎன்ஏ மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாக்குதல் நடத்தியவரை பாதுகாப்பு அமைப்புகள் அடையாளம் கண்டன. அந்த இளைஞர் பயன்படுத்திய துப்பாக்கி 6 மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது. அது அவரது தந்தைக்கு சொந்தமானது. https://www.bbc.com/tamil/articles/c03l73g1jydo
  2. ஞானசார தேரர் பிணையில் விடுதலை Published By: DIGITAL DESK 3 18 JUL, 2024 | 12:13 PM நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டிருந்த பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கூர­கல தொல்­லியல் அமை­விடம் தொடர்­பாக 2016 இல் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஊடக மாநா­டொன்றில் இஸ்லாமிய மதத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை தெரி­வித்­த­மைக்­காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டது. அத்­துடன் அவ­ருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது. https://www.virakesari.lk/article/188753
  3. Published By: DIGITAL DESK 3 18 JUL, 2024 | 09:45 AM கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை வெள்ளிக்கிழமை (19) முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் நலனுக்காகவும் செயல்முறையை சீரமைக்கவும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கடவுச் சீட்டு வழங்கும் புதிய முறை வெள்ளிக்கிழமை (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188734
  4. Published By: VISHNU 18 JUL, 2024 | 02:00 AM கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையிலான குழுவினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (17) இடம்பெற்றிருந்தது. புதன்கிழமை (17.07.2024) மாலை 3 மணியளவில் சிறிகோத்தாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை நிர்வாக குழுவின் அழைப்பினை ஏற்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைப்பீடம் கருணா அம்மான் தலைமையில், உபதலைவர் ஜெயா சரவணா மற்றும் செயலாளர் செந்தூரன் ஆகிய குழுவினர், ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சராக உள்ள அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையில் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாகவும், சிறப்பான முடிவுகளுடன் ஆராயப்பட்டுப் பேசப்பட்டதாகத் தெரியவருகிறது. https://www.virakesari.lk/article/188728
  5. ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. 81 வயதான ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அவருக்கு இருதடவைகள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக வௌ்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, Las Vegas-இல் இடம்பெறவிருந்த ஆதரவாளர்களுடனான சந்திப்பும் பிரசார நடவடிக்கையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜனாதிபதி அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/306285
  6. யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு: பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே கண்டிக்கு விஜயம் Published By: VISHNU 18 JUL, 2024 | 01:53 AM யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Audrey Azoulay) புதன்கிழமை (17) காலை கண்டிக்கு விஜயம் செய்துள்ளார். கண்டிக்கு சென்றுள்ள பணிப்பாளர் நாயகத்தை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே வினால் வரவேற்கப்பட்டார். இங்கு குறுகிய விஜயத்தை மேற்கொண்ட பணிப்பாளர் நாயகம், ஸ்ரீ தலதா மாளிகை, பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்றவற்றுக்குச் சென்று அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள உள்ளார். https://www.virakesari.lk/article/188727
  7. பட மூலாதாரம்,RICK DALLAWAY/GETTY IMAGES படக்குறிப்பு,மருத்துவ சோதனையின் ஒரு பகுதியாக ரிக், வாராந்திர மல மாற்று சிகிச்சைக்கு உட்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், சுனெத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 18 ஜூலை 2024, 02:41 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் "மல மாற்று சிகிச்சையின் முழு யோசனையும் நிச்சயமாக வித்தியாசமானது" என்று ரிக் டாலோவே கூறுகிறார். தானம் செய்யப்பட்ட மலம் தொடர்பான மருத்துவ சோதனையில் சேர முதலில் அழைக்கப்பட்ட தருணத்தை நினைவு கூர்ந்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 50 வயதான ரிக், ப்ரைமரி ஸ்க்லரோசிங் கோலாஞ்சிடிஸ் எனப்படும் அரிய நாள்பட்ட கல்லீரல் நோயின் அறிகுறிகளை நிர்வகிக்க, பிரிட்டனின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வாராந்திர மல மாற்று சிகிச்சையின் இரண்டு மாதத் திட்டத்தை முடித்துள்ளார். "அது வெறும் மலம் அல்ல," என்று சிரிப்புடன் கூறிய அவர் மாற்று சிகிச்சை செயல்முறையை விவரிக்கிறார். "அதில் மாற்றம் செய்யப்படுகிறது. அது ஆய்வகத்தில் நடக்கிறது." என்றார் அவர். ரிக்கின் அரிய நோய்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர தற்போது வேறு எந்த சிகிச்சையும் இல்லை. இது பிரிட்டனில் 100,000 பேரில் ஆறு முதல் ஏழு பேரை பாதிக்கிறது. மேலும் ஆயுட்காலம் சுமார் 17 முதல் 20 ஆண்டுகள் வரை குறைகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிக்கின் 42 வது வயதில் அவருக்கு இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். "ஒரு மலை உச்சியில் இருந்து விழுவதுபோல அது இருந்தது," என்று அவர் குறிப்பிட்டார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் மல மாற்று சிகிச்சை என்றால் என்ன? பட மூலாதாரம்,MTC/UNIVERSITY OF BIRMINGHAM படக்குறிப்பு,மல மாற்று சிகிச்சையில், உறைந்த மலத்தின் உறைவு நீக்கப்பட்டு. வடிகட்டப்பட்டு, சிரிஞ்சில் வைக்கப்படுகிறது. மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சை (FMT), மல மாற்று சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. பல நாடுகளில் குடல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயினும் பெரும்பாலும் மருத்துவ சோதனைகளின் ஒரு பகுதியாகவே இது உள்ளது. ஆரோக்கியமான மல நன்கொடையாளர்கள் சோதிக்கப்பட்டு, அவர்களின் மாதிரிகளில் இருந்து குடல் பாக்டீரியாக்கள் எடுக்கப்பட்டு நோயாளியின் குடலில் இடமாற்றம் செய்யப்படுகின்றன. பொதுவாக கோலொனோஸ்கோபி, எனிமா அல்லது நாசோகாஸ்ட்ரிக் குழாய் வழியாக இது செலுத்தப்படுகிறது. ரிக் சோதனை அடிப்படையில் பிஎஸ்சி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் தற்போது பிரிட்டனில் இந்த நோய்க்கு மட்டுமே இந்த செயல்முறை அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்படுகிறது என்று தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்புக் கழகத்தின் (NICE) வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் (சி. டிஃப்) தொற்று உள்ள நோயாளிகள் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை (NHS) மூலம் சிகிச்சை பெறலாம். க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் (சி. டிஃப்) என்பது ஒரு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா ஆகும். இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். மேலும் நீண்ட காலமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (ஆண்டிபயாடிக்ஸ்) பயன்படுத்துபவர்களை அது அடிக்கடி பாதிக்கிறது. தேசிய சுகாதார சேவையான NHS க்கு, 50 மில்லி லிட்டர் திரவ மல மாதிரிக்கு 1300 பவுண்டுகள் (1684 டாலர்கள்) செலவாகிறது. மீண்டும் மீண்டும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கான செலவைக் காட்டிலும் இது குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சில சூழ்நிலைகளில், எஃப்எம்டியை ஒருமுறை மட்டுமே கொடுக்க வேண்டியிருக்கும். மனித மலத்தில் காணப்படும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களால் தயாரிக்கப்பட்ட வாய்வழி காப்ஸ்யூல்களையும் சில மருத்துவமனைகள் வழங்குகின்றன. மலத்தை கொடையாகப் பெற வேண்டியது ஏன்? புதிதாக கல்லீரல், சிறுநீரகம் அல்லது இதயம் தேவைப்படுபவர்கள் தகுந்த கொடையாளரைக் கண்டுபிடிக்க பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த முக்கிய உறுப்புகளைப் போலல்லாமல், மனித மலம் பரவலாகக் கிடைக்கிறது. இருப்பினும் மற்றவரின் மலம் பற்றிய எண்ணம் சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். ஆனால் ரிக் இந்த சங்கடத்தைப் புறந்தள்ளி அறிவியலை நம்புகிறார். மேலும் அவரது மனைவியும் நண்பர்களும் அவரது இந்தப்பயணத்தை ஆதரிக்கிறார்கள். "அதில் எந்த சங்கடமோ அதிர்ச்சியோ இல்லை" என்று ரிக் கூறுகிறார். "இது பலனளிக்கும் என்றால் ஏன் செய்யக்கூடாது என்பதே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நான் பெற்ற கருத்து,” என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,MTC/UNIVERSITY OF BIRMINGHAM படக்குறிப்பு,ஆரோக்கியமான மல மாதிரிகள் பர்மிங்காமில் உள்ள மைக்ரோபயோம் சிகிச்சை மையத்தில் -80°C உறைவிப்பான் ஒன்றில் சேமிக்கப்படுகின்றன. மல வங்கிகள் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் இருக்கும் இந்த மைக்ரோபயோம் சிகிச்சை மையம் (MTC), பிரிட்டனில் உள்ள முதலாவது மூன்றாம் தரப்பு FMT சேவையாகும். நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு C.diff தொற்றுக்காக பாதுகாப்பாக சிகிச்சையளிப்பதற்கும், ஆராய்ச்சி சோதனைகளை நடத்துவதற்கும் மல மாதிரிகளை இந்த மையம் வழங்குகிறது. இந்த மையத்தில் விரிவான மருத்துவ வரலாறு, வாழ்க்கை முறை மதிப்பீடுகள் மற்றும் அவர்களின் ரத்தம் மற்றும் மலத்தில் உள்ள நோய்க்கிருமிகளை பரிசோதித்தல் உள்ளிட்ட கடுமையான ஸ்கிரீனிங் செயல்முறைக்கு மல தானம் செய்பவர்கள் உட்படுகிறார்கள். முழுமையான சோதனைக்குப் பிறகு, ஆரோக்கியமான மல மாதிரிகள் 12 மாதங்கள் வரை -80°C உறைவிப்பான்களில் சேமிக்கப்படும். ஒரு நோயாளிக்கு மல மாற்று சிகிச்சை தேவைப்படும்போது, உறைந்த வடிகட்டிய மலம் உறைவு நீக்கப்பட்டு சிரிஞ்சில் போடப்படுகிறது. "மல வங்கி இல்லாத நாடுகளில் இது கடினம். ஆனால் உண்மையில், உறைந்த எஃப்எம்டியைப் பயன்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நபர்களை சரியாகப் பரிசோதிக்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்,” என்று மைக்ரோபயோம் சிகிச்சை மையத்தின் இயக்குனர் பேராசிரியர் தாரிக் இக்பால் பிபிசியிடம் கூறினார். வெற்றிகரமான 10 நாள் நன்கொடைக் காலத்தின் முடிவில் அவர்கள் விரும்பும் அன்பளிப்பு அட்டையில் 200 பவுண்டுகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பிஎஸ்சியில் எஃப்எம்டியின் பங்கு ரிக் போல பிஎஸ்சி உள்ள நோயாளிகளில் 70 முதல் 80% பேர் குடல் அழற்சி நோயால் (IBD) பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் நீண்ட கால அழற்சி நிலை அதாவது கிரோன்ஸ் டிஸீஸ் மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் ஆகியவை இதில் அடங்கும். மக்களுக்கு பிஎஸ்சி ஏன் ஏற்படுகிறது அல்லது குடல் அழற்சியுடன் அதற்கு ஏன் தொடர்பு உள்ளது என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை என்று நாள்பட்ட கல்லீரல் நோய் மருத்துவரும் (hepatologist), இரைப்பை குடல் மருத்துவும் (gastroenterologist) மற்றும் ரிக் இன் மருத்துவச் சோதனைக்குப் பொறுப்பானவருமான மருத்துவர் பலக் திரிவேதி கூறுகிறார். "ஆரோக்கியமான குடல் மைக்ரோபயோட்டா கலவை மலத்தை பி.எஸ்.சி நோயாளிகளின் குடலுக்கு மாற்றி அது அவர்களின் கல்லீரல் நோய் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மல தானம் செய்பவர்கள் ரத்தம் மற்றும் மலம், நோய்க்கிருமி சோதனைகள் உட்பட கடுமையான ஸ்க்ரீனிங்கிற்கு உட்படுத்தப்படுகின்றனர். மல மாற்று சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் தற்போது மல மாற்று சிகிச்சை என்பது நோயின் எந்த நிலைக்கும் அளிக்கப்படும் முதல் சிகிச்சை ஆப்ஷன் அல்ல என்கிறார் டாக்டர். ஹோரேஸ் வில்லியம்ஸ். லண்டன் இம்பீரியல் கல்லூரியின் இரைப்பைக் குடலியல் நிபுணரான அவர் FMT இல் முறையான வழிகாட்டுதல்களுக்கு பங்களித்துள்ளார். பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு, தீவிரமான க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் (C. டிஃப்) நோய்த்தொற்றுகளுக்கு மட்டுமே FMT ஐ வழங்குகிறது, மற்ற நோய்களுக்கு அல்ல என்று டாக்டர் வில்லியம்ஸ் குறிப்பிட்டார். மேலும் மற்ற காரணங்களுக்காக சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் ரிக் செய்தது போல், மருத்துவ ஆய்வுகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். ”பலர் எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் தானாகவே மல மாற்று சிகிச்சையை செய்கிறார்கள். இது நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானது,” என்று லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் இரைப்பைக் குடலியல் நிபுணரும், பிரிட்டிஷ் சொசைட்டி ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியின் (பிஎஸ்ஜி) எஃப்எம்டி வழிகாட்டுதலின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் பெஞ்சமின் முல்லிஷ் பிபிசியிடம் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டீவ் பிகோ உயிரியல் அறிவியல் மையத்தில் மருத்துவ உயிரியல் நிபுணரான டாக்டர் ஹாரியட் எதரெட்ஜ், ”அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் செய்யப்படும் மல மாற்று சிகிச்சை, குறிப்பாக சுகாதார வசதி வளங்கள் குறைவாக உள்ள ஏழை நாடுகளில் தீங்கு விளைவிக்கும்" என்று குறிப்பிட்டார். இந்த சிகிச்சையானது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர். உறவினரின் மலமா அல்லது அந்நியரின் மலமா? அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தவிர, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் சோதனை ரீதியாக மல மாற்று சிகிச்சை பயன்படுத்தப்பட்டது. சில நோயாளிகள் மலம் மீதான வெறுப்பு மற்றும் பல்வேறு கலாசார, சமூக மற்றும் மத நம்பிக்கைகள் காரணமாக சிகிச்சையை ஏற்க தயங்குகின்றனர். "இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படும்போது மக்கள் சில சமயங்களில் மிகவும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். மேலும் மருத்துவர் கேலி செய்கிறார் அல்லது சீரியஸாக இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று இந்தியாவில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் கல்லீரல் இரைப்பை குடல் மற்றும் கணைய பிலியரி அறிவியல் கழகத்தின் டாக்டர் பீயூஷ் ரஞ்சன் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எஃப்எம்டி பொதுவாக கொலோனோஸ்கோபி, எனிமா அல்லது நாசோகாஸ்ட்ரிக் குழாய் மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. ஒரு அந்நியர் நன்கு பரிசோதனை செய்யப்பட்டவராக, ஆரோக்கியமானவராக இருந்தாலும் கூட அவரிடமிருந்து இல்லாமல் உறவினர்களிடமிருந்து மலத்தை ஏற்றுக்கொள்வது "ஓரளவு சரி" என்று சில நோயாளிகள் கருதுவதாக டாக்டர் ரஞ்சன் தன் அனுபவத்தின் அடிப்படையில் தெரிவித்தார். இதற்கு நேர்மாறாக பிரிட்டனில் க்ரோன்ஸ் நோய் மற்றும் கோலைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் , அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்து மலத்தை எடுக்காமல், அறியப்படாத சரிபார்க்கப்பட்ட மூலத்திலிருந்து மலத்தை பெற விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. அதே கேள்வித்தாளில் பதிலளித்தவர்களில் 37% பேர் முதலில் மல மாற்று சிகிச்சையை ஏற்கத் தயார் என்று கூறினார்கள். ஆனால் செயல்முறை பற்றி மேலும் அறிந்த பிறகு அந்த எண்ணிக்கை 54% ஆக அதிகரித்தது. "கல்வி எப்போதுமே நிறைய தடைச்சுவர்களை தகர்க்கிறது" என்று ஆய்வை நடத்திய டாக்டர் பிரட் பால்மர் பிபிசியிடம் கூறினார். இந்த சோதனை முயற்சி தனது அரிய நோயை குணப்படுத்த வழிவகுக்கும் என்று ரிக் நம்புகிறார். "மனித மலம் சில நோய்களை குணப்படுத்தும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது என்னிடம் கூறியிருந்தால் நான் அதை நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இப்போது அது உண்மையாகிவிட்டது. நடைமுறையிலும் உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c1e574zed5eo
  8. சட்டவிரோத மீன்பிடித்தலால் ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் பாலூட்டிகளின் உயிர்கள் பெரும் ஆபத்தில் உள்ளன. தற்போது சிலர் பொட்டம் ட்ரோலிங் போன்ற சட்டவிரோத யுக்திகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஆமைகள், டொல்பின்கள் போன்ற விலங்குகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேற்கு கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகளின் உடல்களை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இறந்த ஆமைகளில் பெரும்பாலனாவைக்கு சுவாசிப்பதில் சிரமம், ஷெல் வெடிப்பு மற்றும் காயங்களால் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை அதிகாரிகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதால் மீன்பிடித் துறையும் சுற்றுலாத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்குப் பிராந்திய கால்நடை வைத்தியர் சுஹதா ஜயவர்தன தெரிவித்தார். https://thinakkural.lk/article/306301
  9. உங்கள் பேரன் திரேனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
  10. இங்க கள்ளிறக்க தடை இல்லை தானே அண்ணை?! பனை மரங்களைத் தான் களவாக வெட்டுகிறார்கள். பகிர்வுகளுக்கு நன்றி அண்ணை.
  11. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வடக்குகிழக்கு தமிழர்களை தனித்துவமான தேசமாக அங்கீகரிக்கும் தீர்வை முன்வைக்கவேண்டும் - தேசிய கிறிஸ்தவ மன்றம் வேண்டுகோள் Published By: RAJEEBAN 17 JUL, 2024 | 08:31 PM இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வடகிழக்கில் உள்ள தமிழர்களை தனித்துமவமான தேசமாக அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் ஐக்கிய இலங்கைக்குள் குறிப்பிடத்தக்க சுயாட்சியையும், அதிகாரப்பகிர்வையும் வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளது. இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்த வருடம் பிற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவேண்டியதன் அவசியத்தை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதை இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் வரவேற்கின்றது. அடிப்படை உரிமைகள், வாக்களிப்பதற்கான உரிமைகள் உள்ளடங்கிய தங்கள் இறைமையை இலங்கை மக்கள் புத்திசாலித்தனதுடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்தவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகள் குறித்து மக்களிற்கு தெரியப்படுத்துவதும், அவர்கள் அறிந்திருப்பது அவசியம். மேலும் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர்களை விமர்சன அடிப்படையில் மதிப்பிடவேண்டும். இது அரசமைப்பு ரீதியான பலகட்சி ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சமாகும். அனைத்து சமூகத்தினரையும் பாதித்துள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படை காரணங்கள் அரசியல் ரீதியிலானவை என்பதை இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் பொதுமக்களிற்கு நினைவுபடுத்த விரும்புகின்றது. நாட்டை கடந்த சில வருடங்களாக பாதித்துள்ள, பொருளாதாரத்தை பிழையான விதத்தில் நிர்வகித்தமை, ஊழல், பொருளாதார ரீதியில் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத திட்டங்களிற்கான செலவீனங்கள், போன்றவை அரசியல் அதிகாரத்தை அனுபவித்தவர்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பதற்கான உரிய ஏற்பாடுகள் இல்லாதமையினால் ஏற்பட்ட விளைவுகளே. வலுவான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றது. ஒரு தனிநபர், பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி, தனிநபருக்கு அப்பால் பாரிய அளவு அதிகாரம் தனிநபரிடம் குவிந்துள்ளமை அரசியலமைப்பு வாதம், ஜனநாயக நியமங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது. வல்லமைக்கு மேலான ஜனாதிபதிமுறை ஏனைய ஜனநாயக ஸ்தாபனங்களை செயல் இழக்கச் செய்கின்றது. கடந்த காலங்களின் தொடர்ச்சியான ஜனாதிபதி தேர்தல்களில; அனேக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதியளிப்பதையும், ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலகுவாக மறந்துவிடுவதையும் நாங்கள் அவதானித்துள்ளோம். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது குறித்து அனைத்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களும் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும், பின்னர் அதிலிருந்து பின்வாங்காமல் நடைமுறைப்படுத்தவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற மிக முக்கியமான விடயங்கள் குறித்த தங்கள் நிலைப்பாட்டினை கொள்கைகளை வெளியிடவேண்டியது அனைத்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிற்கும் முக்கியமான விடயமாகும். பொருளாதார நெருக்கடி, சட்டத்தின் ஆட்சி போன்ற விடயங்கள் குறித்த தங்கள் நிலைப்பாட்டினை அவர்கள் முன்வைக்கவேண்டும். வடக்குகிழக்கு தமிழ்மக்களின் நியாயபூர்வமான பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாத நிலையில் இலங்கையின் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் காணப்பட்டமையே யுத்தத்திற்கும், நாட்டின் இனக்குழுக்கள் மத்தியில் ஏற்பட்ட துருவயமப்படுத்தலிற்கும் காரணம் என்பதை இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் பல வருடங்களாக தெரிவித்துவந்துள்ளது. வடக்குகிழக்கு தமிழ்மக்களின் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள், அவர்கள் எதிர்கொண்ட பாரபட்சங்கள், ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை பிரச்சினைகளிற்கு தீர்வை காணக்கூடிய அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுடியும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் உறுதியாக நம்புகின்றது. அரசியல் தீர்வு என்பது ஐக்கியமான தேசம் என்ற கட்டமைப்பிற்குள், வடக்குகிழக்கை ஒரு தேசமாக கருதுவதுடன், குறிப்பிடத்தக்க சுயாட்சி, வடக்குகிழக்கிற்கான அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படவேண்டும். மலையக மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளிற்கும் தீர்வை காண்பது அவசியம். அவர்கள் பல தசாப்தங்களாக கௌரவமும் ஏனைய மனித உரிமைகளும் பறிக்கப்பட்ட சமூகமாக காணப்படுகின்றனர். இனமோதல் மற்றும் யுத்தத்தின் விளைவுகளிற்கு பதிலளிப்பதற்கான நியாயபூர்வமான முயற்சிகள் இடம்பெறவேண்டும். பலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை, அரசியல் கைதிகளிற்கான நீதி, படுகொலைகள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளுதல், பாலியல் வன்முறைகள் ஏனைய பாரிய யுத்தகால அநீதிகள் போன்றவை இனமோதல் மற்றும் யுத்தத்தின் விளைவுகள். மேலும் இது படையினராலும் பல அரச நிறுவனங்களாலும முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகள், யுத்தத்தினால் உயிரிழந்தவர்கைள நினைவுகூருவதை தடுத்தல், குழப்புதல், கட்டுப்படுத்தல், அச்சுறுத்தல் மற்றும் மாற்றுக்கருத்தினை ஒடுக்குதல், போன்றவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. ஆகவே நீண்டகாலமாக நீடிக்கும் இனமோதலிற்கு - யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களான பின்னரும் தீர்வு காணப்படாமலிருக்கும் இனமோதலிற்கு தீர்வை காண்பதற்கு நிரந்தரமான முடிவை காண்பதற்கான தங்கள் கொள்கைகளை அனைத்து வேட்பாளர்களும் தெளிவாக முன்வைக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். https://www.virakesari.lk/article/188717
  12. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் அடையாளமாகவே பனை மரம் உள்ளது. வளமான வாழ்க்கையை வாழ்ந்த பனையேறிகள், இப்போது பொருளாதார அடுக்கில் ஆபத்தான இடத்தில் இருக்கின்றனர். இதற்கான தீர்வுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தேடி வருகின்றனர்.
  13. 'சண்டாளர்' என்பவர் யார்? அந்த வார்த்தையின் பின்னணி என்ன தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 16 ஜூலை 2024 'சண்டாளர்' என்ற வார்த்தையை வசைச் சொல்லாகவும் கேலிச் சொல்லாகவும் பயன்படுத்துவது குறித்து தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் நலத்துறை கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த வார்த்தையின் பின்னணி என்ன? 'சண்டாளர்' சர்ச்சை தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியை 'சண்டாளர்' என்ற சொல்லைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒரு பாடலை பாடி, இழிவுபடுத்தியதால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதற்குப் பிறகு, இதுபோன்ற சொற்களை பயன்படுத்துவோர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் எச்சரித்திருக்கிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பாடல் உருவான பின்னணி திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் டால்மியா சிமென்ட் ஆலை நிறுவப்பட்ட பிறகு, அந்தப் பகுதியின் பெயர் 'டால்மியாபுரம்' என மாற்றப்பட்டது. இந்தப் பெயர் மாற்றத்தை எதிர்த்து 1953ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி மு. கருணாநிதி தலைமையில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்தப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, 1970களின் துவக்கத்தில் மு. கருணாநிதி குறித்து 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்ற பாடல் எழுதப்பட்டு, நாகூர் ஹனீஃபாவால் பாடப்பட்டது. தி.மு.கவின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அனைத்திலும் இந்தப் பாடல் ஒலித்துவந்தது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக, அந்தப் பாட்டின் மெட்டிலேயே, மு. கருணாநிதியை வசைபாடும் வகையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டது. அந்தப் பாடல் அ.தி.மு.கவினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்தப் பாடலில் 'சண்டாளர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. பூரி ஜெகந்நாதர் கோவில் தங்கம், வைர பொக்கிஷ அறை திறப்பு - நகைகளை மதிப்பிடும் பணி எத்தனை நாள் நீடிக்கும்?16 ஜூலை 2024 “பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை30 ஜூலை 2023 பட மூலாதாரம்,SAATTAIDURAI/X சாட்டை துரைமுருகன் கைதும் கட்சிகள் கருத்தும் இந்தப் பாடலைத்தான் விக்கிரவாண்டி தேர்தல் பிரசார மேடையில் பாடினார் சாட்டை துரைமுருகன். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நீதிமன்றக் காவலில் அனுப்பாமல் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நானும் அதே வார்த்தையைச் சொல்கிறேன். முடிந்தால் அரசு கைதுசெய்யட்டும். அந்தப் பாடலை எழுதியது வேறு யாரோ.. அவர்கள் எழுதியதைத்தான் நாங்கள் பாடினோம்" என்று குறிப்பிட்டார். இதற்கு அமைச்சர் கீதாஜீவன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை இந்த நிலையில்தான் இது தொடர்பாக ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்தது. அந்த எச்சரிக்கையில், "பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன்படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இந்தியாவிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48ஆம் இடத்தில் இருக்கிறது. அண்மைக் காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடங்களில் அழுத்தமாக பேசப்படுவதைக் காண முடிகிறது. எனவே இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 1989ன் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரைக்கிறது" என்று கூறப்பட்டிருக்கிறது. பட மூலாதாரம்,TNDIPR சண்டாளர்கள் யார்? தமிழ்நாட்டின் பட்டியல் பிரிவினரில் 48வது சாதியாக சண்டாளர் என்ற சாதி பட்டியலிடப்பட்டிருக்கிறது. 1971ஆம் ஆண்டின் இந்திய சென்சஸ் ஆவணத்தில் தமிழ்நாட்டின் பட்டியலினத்தினர் குறித்த இனவியல் குறிப்புகளில் "தர்ம சாஸ்திரங்களின்படி சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையே சண்டாளர் என அழைக்கப்படும் என்றும் அவர்கள் கிராமங்களுக்கு வெளியில் வசிக்க வேண்டும். மரண தண்டனைகளை நிறைவேற்றுவது இவர்களது வேலை" என்று கூறுவதாக சுட்டிக்காட்டுகிறது. பொதுவாக சடலங்களை எரிப்பது இவர்களது பணியாக சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியா முழுவதுமே சில இடங்களில் இந்த சாதியினர் வசிக்கிறார்கள். பொதுவாக, இந்துக்களில் பிற சாதியினர் இவர்களை தீண்டத்தகாத சாதியினராக கருதுகிறார்கள். மேற்குவங்கத்தில் இந்த சாதியினர் தற்போது நாமசூத்திரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இப்போது அங்கே ஒருவரை சண்டாளர் என அழைப்பது இழிவுபடுத்துவதற்காகவே அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது. "சீமான் இயக்கிய படத்தில் சண்டாளன் என்ற வார்த்தை" "சமீப காலங்களில் சாதி பெயர்களைச் சொல்லி ஒருவரை கேலி செய்வது, இழிவுபடுத்துவது போன்றவை அதிகரித்துவருகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் சர்வசாதாரணமாக சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். பொதுவெளியில் யாராக இருந்தாலும் சாதிப் பெயர்களைச் சொல்லி கேலியாகவோ, இழிவாகவோ பேசுவது ஏற்க முடியாத ஒன்று. அதனால்தான் அத்தகைய அறிக்கை வெளியிடப்பட்டது" என்கிறார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினரான குமாரதேவன். சண்டாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக கண்டனம் எழுவது இது முதல் முறையல்ல. 2006ஆம் ஆண்டுவாக்கிலேயே அப்போது இயக்குநராக இருந்த சீமான் தனது திரைப்படத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியது குறித்து அவரிடம் சுட்டிக்காட்டியதாக சொல்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன். "சீமான் இயக்கி 2006ஆம் ஆண்டில் வெளிவந்த 'தம்பி' படத்தில் வடிவேலுவின் பாத்திரம் உட்பட பல பாத்திரங்கள் இந்த வார்த்தையை சகஜமாக பயன்படுத்துவார்கள். அந்தப் படத்தைப் பார்த்த போது எனக்கு மிக வருத்தமாக இருந்தது. அந்தத் தருணத்தில் நான் 'தலித் முரசு' ஆசிரியர் குழுவில் இருந்தேன். நான் சீமானை தொலைபேசியில் அழைத்து அந்த வார்த்தையை இப்படிப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னேன். இதைக் கேட்ட அவர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, எனக்கு ஒரு கடிதத்தையும் எழுதினார். அந்த சமயத்தில் மு. கருணாநிதி கூட ஒரு கண்டன அறிக்கையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். ஒரு கட்சிப் பத்திரிகையிலும் இந்த வார்த்தை இடம்பெற்றிருந்தது. படக்குறிப்பு,அழகிய பெரியவன், எழுத்தாளர் "யாரையும் இழிவாகப் பார்ப்பது சரியானதல்ல" இதையெல்லாம் சேர்த்து, சண்டாளர் என்ற வார்த்தையை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டு தலித் முரசுவில் ஒரு தலையங்கம் புனித பாண்டியனால் எழுதப்பட்டது. யார் சண்டாளர்கள் என மனு ஸ்மிருதி வரையறுக்கிறது. அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்றால் அந்த மனநிலையில் இருந்துதானே பயன்படுத்துகிறோம் என்று அர்த்தம்? அந்த சாதியினர் இங்கே வசிக்கிறார்களா, இல்லையா என்பது பிரச்னையே இல்லை. ஒரு சாதிப் பெயரை இழிவுபடுத்துவதற்காக பயன்படுத்துவது ஏற்கத்தக்கதே அல்ல. அதுவும் ஒரு இயக்கம் நடத்துபவர்கள் இதனை செய்யக்கூடாது" என்கிறார் அழகிய பெரியவன். முன்பு பேசினார்கள், பாடினார்கள் அதனால் இப்போது அதைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறோம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிடும் அழகிய பெரியவன், யாரையும் இழிவாகப் பார்ப்பது சரியானதல்ல என்கிறார். நாம் தமிழர் கட்சி கருத்து நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, இந்த வார்த்தையை யாரையும் இழிவுபடுத்துவதற்காகச் சொல்லவில்லை என்கிறார்கள். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் முன்பே இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான பாக்கியராசன். "யாரையும் இழிவுபடுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. இது எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தையாகத்தான் இருந்தது. அந்தப் பாடலும்கூட அந்த அர்த்தத்தில் பாடப்படவில்லை. கருணாநிதியை விமர்சிக்கும் வகையில் பாடுவதற்காக விளையாட்டாகத்தான் சொல்லப்பட்டது. ஆனால், அந்தப் பாடல் காரணமாக, இப்படி ஒரு அறிக்கை வெளிவந்திருப்பது மகிழ்ச்சிதான். அவர்கள் இதை முன்பே செய்திருக்கலாம்" என்கிறார் பாக்கியராசன். https://www.bbc.com/tamil/articles/cx92nnywgk1o
  14. வட மாகாண சுகாதாரத் துறையிலுள்ள ஆளணிப் பற்றாக்குறையை தீர்க்குமாறு சுகாதார அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை 17 JUL, 2024 | 08:15 PM வட மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் இன்று புதன்கிழமை (17) நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் P.G. மஹிபால, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். அத்துடன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த விசேட கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள், “சுகாதார மற்றும் கல்வித் துறைகளே நாட்டில் மிகவும் சிக்கல் வாய்ந்தவைகளாக காணப்படுகின்றன. இந்த இரண்டு துறைகளிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர். எனினும் மாகாணத்தை பொறுத்தவரையில் எங்களுக்கு பல சவால்கள் காணப்படுகின்றன. வளப்பற்றாக்குறை காணப்படுவதுடன், எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றன. சுகாதார துறையில் பல விடயங்களை மேம்படுத்த வேண்டிய தேவைக் காணப்படுகின்றது. நோய் தடுப்புக்களை மேற்கொள்வதுடன் நோயாளர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறே எனது அதிகாரிகளுக்கு நான் கூறி வருகின்றேன். வரையறுக்கப்பட்ட வளங்களை பயன்படுத்தி சிறந்த சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மாகாண சுகாதார துறையை மேம்படுத்துவது தொடர்பில் எனது அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றேன். அத்துடன் ஜனாதிபதி அவர்களால் நான்கு வைத்தியசாலைகளில் திறந்துவைக்கப்பட்ட விசேட பிரிவுகளிலும் வளங்களை பகிர்ந்து பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகிறது. முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளின் குறைபாடுகள் தொடர்பில் அறிந்துள்ளோம். குறித்த வைத்தியசாலைகள் தொடர்பான முன்மொழிவுகள் தயார் செய்யப்பட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளன. மக்களை பாதுகாப்பதற்கான அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வுகளை வழங்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தேன். இந்த விடயம் தொடர்பில் விரைவில் தீர்வுகளை பெற்றுத்தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.” எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188709
  15. கோவாவோட உருளைக்கிழங்கு போட்டு அம்மா குழம்பு வைக்கிறவ!
  16. ஓமான் எண்ணெய் கப்பல் விபத்து – ஒரு இலங்கையரும் 8 இந்தியர்களும் மீட்பு ? 17 JUL, 2024 | 09:24 PM ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய்க்கப்பலின் பணியாளர்கள் 9 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 8 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/188719
  17. அமெரிக்க அதிபர் தேர்தல்: மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றாலும் ஒருவர் வெற்றி பெறுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நவம்பர் 2024-ல் நடைபெறவுள்ள தேர்தலில் புதிய அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் நபர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக செல்வாக்கை கொண்டிருப்பார் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தற்போது அமெரிக்க அரசியலில், இரு கட்சிகளின் ஆதிக்கமே உள்ளது. நவீன காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அதிபர்களும் இந்த இரு கட்சியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தாராளவாத அரசியல் கட்சியான ஜனநாயக கட்சியின் கொள்கை, சிவில் உரிமைகள், பரந்த அளவிலான சமூகப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன. தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் இந்த கட்சியைச் சேர்ந்தவர். இரண்டாம் முறை அமெரிக்க அதிபராவதற்கு அவர் முயற்சிக்கிறார். குடியரசு கட்சி, பழமைவாத அரசியல் கட்சியாகும். பழம்பெரும் கட்சி எனவும் இது அறியப்படுகிறது. குறைந்த வரி, அரசின் அதிகாரத்தைக் குறைப்பது, துப்பாக்கி உரிமை, குடியேறிகள் மற்றும் கருக்கலைப்புக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக இக்கட்சி உள்ளது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிற்கிறார். வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்கு குடியரசுக் கட்சியில் போதுமான ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். எப்போது அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்? அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெறவுள்ளது. வெற்றி பெறும் நபர் அடுத்த நான்கு ஆண்டுகள் அதிபராக இருப்பார். ஜனவரி 2025 முதல் அவரது பதவிக்காலம் தொடங்கும். வேட்பாளர்கள் யார்? 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் 15 வேட்பாளர்களுடன் தொடங்கியது. ஒன்பது குடியரசு கட்சி வேட்பாளர்கள், நான்கு ஜனநாயக கட்சி வேட்பாளர்கள், இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் இருந்தனர். பெரும்பாலோனோர் போட்டியிலிருந்து விலகிவிட்டனர். இரண்டு பிரதான கட்சிகளும் தங்களது அதிபர் வேட்பாளரை, மாகாண அளவில் தொடர்ச்சியாக நடக்கும் ப்ரைமரிஸ் மற்றும் காவ்கசஸ் எனப்படும் நடைமுறை மூலம் தேர்ந்தெடுக்கின்றன. வேட்பாளர் தேர்வு நடைமுறையைப் பொருத்தவரை, இரு கட்சிகளிலும் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்கு வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்க அதிபர் பைடன் சில சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வாக போதுமான ஆதரவைப் பெற்றார். குடியரசுக் கட்சியில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைசியாக எஞ்சியிருந்த போட்டியாளரான முன்னாள் ஐ.நா தூதர் நிக்கி ஹேலியை எதிர்கொண்டார். இறுதியாகக் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்குத் தேவையான ஆதரவை பெற்றார். முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் சகோதரரின் மகனான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் உட்பட சில சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்? அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதை பணியாகக் கொண்ட ஒரு குழுவினரின் (தனிப்பட்ட வாக்காளர்கள் அல்ல) வாக்குகளைப் பெறுவதற்கு இரு வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள். இதனை எலக்டோரல் காலேஜ் வாக்குகள் என குறிப்பிடுகின்றனர். மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட வாக்குகள் இருக்கும். மொத்தமுள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் நபர் அதிபராவார். அப்படியென்றால், வாக்காளர்கள் மாகாண அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்; தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல. அதனால்தான் 2016-ல் ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியைத் தழுவினர். இரண்டு மாகாணங்களில் மட்டுமே 'வெற்றி பெற்றவர் அனைத்து வாக்குகளையும் எடுத்துக்கொள்வார்' என்ற விதி உள்ளது. அந்த மாகாணங்களில் எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். பெரும்பாலான மாகாணங்கள் இரு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. ஆனால், கடும் போட்டி நிலவும் டஜன்கணக்கான மாகாணங்களிலே கூடுதல் கவனம் உள்ளது. இந்த மாகாணங்கள் 'போர்க்கள' மாகாணங்கள் என அழைக்கப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES வேறு யார் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்பது குறித்த கவனமே அனைவருக்கும் உள்ளது. ஆனால், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வாக்காளர்கள் இப்போது தேர்ந்தெடுப்பார்கள். 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெறும். பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள நிலையில், செனட் சபையில் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையாக உள்ள கட்சி அதிபரின் திட்டங்களுக்கு முரண்பட்டால், அது அதிபருக்குத் தலைவலியாக இருக்கும். யார் வாக்களிக்கலாம்? ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிபர் தேர்தலில், 18 வயதை நிரம்பிய அமெரிக்க குடிமக்கள் வாக்களிக்கலாம். தேர்தல் முடிவு எப்போது வெளியாகும்? வழக்கமாக தேர்தல் நடந்த அன்றிரவே வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார். ஆனால், 2020-ல் அனைத்து ஓட்டுகளையும் எண்ண சில நாட்கள் ஆயின. அதிபர் மாறும் நிலை ஏற்பட்டால் தேர்தலுக்குப் பிந்தைய காலம் 'மாறுதல் காலம்' என அழைக்கப்படும். புதிய நிர்வாகத்தினர், புதிய திட்டங்களை உருவாக்கும் நேரம் இதுவாகும். ஜனவரி மாதம் வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அதிபர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார். https://www.bbc.com/tamil/articles/c3grjj20vd7o
  18. 17 JUL, 2024 | 05:40 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று புதன்கிழமை (17) வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும், மேம்படுத்தப்பட வேண்டிய சுகாதார விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன். சிவஞானம் ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும் வைத்தியர்.அசேல குணவர்த்தன மற்றும் வைத்தியர்கள், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/188707
  19. Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 04:43 PM 1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (17) விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கையில் 24,000 பேர் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள். வெகுவிரைவில் 3,500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேர் வைத்தியர்களாக வெளியேறுகின்றனர், இதனால் அரச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்பக்கூடியதாக இருக்கின்றது. தற்போது 24 ஆயிரம் வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர். எனினும் தற்பொழுது துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் நட்டைவிட்டு வெளியேறியமை பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த சில மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10-15 வரையிலான வைத்தியர்கள் நாட்டிற்கு மீளவும் வருகைதந்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது எமக்கு நல்ல ஆரோக்கியமான விடயமாக அமைந்திருக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/188683
  20. தனது ‘சிங்கபாகு’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியமை தொடர்பாக, திரைப்பட இயக்குநரும் இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் (FDGSL) தலைவருமான சோமரத்ன திஸாநாயக்க திரையரங்குகளில் போன்கள் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். . “தேவையற்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க எங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். திரையரங்குகளில் மொபைல் போன்களை தடை செய்வதுதான் நாம் செய்ய முடியும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள திரையரங்குகளில் இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏன் பின்பற்ற முடியாது ” என்று திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “ஒரு திரைப்படத்தை ரசிக்க மக்கள் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் உணர்ச்சிகரமான காட்சியை நீங்கள் ரசிக்கும்போது, அவர்கள் தங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சனைகளை மறந்துவிடுவார்கள். ஃபோன் ஒலிப்பதைக் கேட்கும் போதெல்லாம் உங்கள் மனநிலையை இழக்கிறீர்கள். தொலைபேசியில் யாரேனும் அரட்டை அடிப்பதைக் கேட்கும்போது நீங்கள் கவனம் சிதறிவிடுவீர்கள். திரையரங்குகளுக்கு மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதற்கு இதுவே காரணம்,” என்றார். மேலும் அவர் சமூக ஊடகங்களில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவு செய்தல் மற்றும் பதிவேற்றுதல் ஆகியவற்றை இதன் மூலம் தடுக்க முடியும் என்றார். பிரபல சிங்கள திரைப்படமான ‘சிங்கபாஹு’வை வீடியோ பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றியதாக 24 வயது இளைஞன் ஜூன் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கண்டியைச் சேர்ந்த சந்தேக நபர், கட்டுகஸ்தோட்டை சிகிரி திரையரங்கில் பதிவு செய்த திரைப்படத்தின் காணொளியை யூடியூபில் வெளியிட்டதையடுத்து பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/306260
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஓமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்களை காணவில்லை. அவர்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் ஓமன் கடல் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து வருவதாக பிபிசியிடம் பேசிய இந்திய அதிகாரி தெரிவித்தார். ஓமனின் ராஸ் மத்ரக்கா தீபகற்பத்தில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் பிரஸ்டீஜ் ஃபால்கன் (Prestige Falcon) என்ற எண்ணெய் டேங்கர் கவிழ்ந்ததாக ஓமன் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன 16 பணியாளர்களில் 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். எண்ணெய் கப்பல் யாருடையது? கொமரோஸ் கொடியுடன் கூடிய அந்த கப்பல் ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. கப்பல் இன்னும் தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மைய அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்துள்ளனர். இந்த மையத்தை நடத்தும் ஓமானின் பாதுகாப்பு அமைச்சகம், டேங்கரில் இருந்த பொருட்கள் கடலில் கலந்ததா என்பது போன்ற பிபிசியின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. marinetraffic.com இணையதள தகவல்படி, 117.4 மீட்டர் நீளமுள்ள அந்த எண்ணெய் டேங்கர் 2007-ம் ஆண்டில் கட்டப்பட்டது. கப்பல் கவிழ்ந்த பகுதி ஓமனில் உள்ள துக்ம் மாகாணத்திற்குள் வருகிறது. அங்கு ஓமனின் பெரிய தொழில்துறை துறைமுகம் உள்ளது. கப்பல் விபத்துகளில் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? உலகளாவிய கடல்சார் தொழிலாளர்களில் இந்தியர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இதுபோன்ற விபத்துகள் அல்லது கடற்கொள்ளையர்களால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏப்ரல் மாதம் ஈரான் துருப்புகள் இஸ்ரேலுடன் தொடர்பு கொண்ட MSC ஏரீஸ் என்ற வணிகக் கப்பலை சிறைபிடித்த போது, அதில் 17 இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 2022 ஆம் ஆண்டில், ஒரு கப்பலின் 16 இந்திய பணியாளர்கள் ஈக்குவடோரியல் கினி கடற்படையால் 9 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டனர். https://www.bbc.com/tamil/articles/cydv8vn9vy5o
  22. 17 JUL, 2024 | 05:20 PM யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இன்று புதன்கிழமை (17) திறந்துவைக்கப்பட்டது. அத்தோடு, வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வாகன தரிப்பிடம், நலன்புரிச் சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதி பல காலமாக இயங்காமல் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி எஸ்.செந்தூரனின் கடின முயற்சி காரணமாக இந்த விடுதி மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டது. வைத்திய அதிகாரி எஸ்.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மஹிபால, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பதவி நிலை வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள், நலன்புரிச் சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/188702
  23. யாழில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தவர் கைது Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 04:31 PM யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றது. இதன்போது கூட்டத்தில் அநாமாதேயமாக பங்கேற்ற ஒருவர் கலந்துரையாடலை முகநூல் வழியாக நேரலையில் ஒளிபரப்பியிருந்தார். இதனையடுத்து முகநூல் நேரலை செய்யவேண்டாம் எனவும் அவரை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கவே அதனை மறுத்து தொடர்ந்து அமர்ந்திருந்தார். இதன்போது கூட்டநிறைவில் அங்கு சுகாதார அமைச்சருடன் பேச முற்பட்ட நிலையில் அமைச்சர் அங்கிருந்து செல்லவே, கூட்டத்தில் நின்ற அதிகாரிகளுடன் குழப்பத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து சத்தமிட்டவாறே ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடிய பிரதம செயலக அலுவலகத்தில் சென்று முரண்பாட்டில் ஈடுபட்டார். அதிகாரிகள் வெளியேறச் சொல்லியும் தொடர்ந்து முரண்பாட்டை ஏற்படுத்தவே பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாவகச்சேரி பொலிஸார் குழப்பத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். சந்தேக நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடலில் அநாமதேயமாக குறித்த நபர் நுழைந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கலந்துரையாடலில் சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவும் அழையா விருந்தாளியாக பங்கேற்று முகநூல் நேரலை செய்தமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/188694
  24. தோட்டங்களை கிராமங்களாக அங்கீகரிப்பதால் காணி உரிமத்தை இலகுவாக வழங்க முடியும் - அமைச்சர் ஜீவன் Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 04:52 PM (எம்.மனோசித்ரா) பெருந்தோட்டத்துறையில் புதிய குடியிருப்பு கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழுள்ள தோட்டங்கள் நேரடியாக அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம் அவர்களுக்கு காணி உரிமத்தை வழங்கும் வேலைத்திட்டத்தை இலகுவாக முன்னெடுக்க முடியும். காணி உரிமத்தை வழங்கினால் அந்த மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் நிரந்த தீர்வினைக் காண முடியும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து 1,350 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான முன்மொழிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இது குறித்து எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு மலையக மக்கள் தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அதனை புறக்கணித்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இம்முறை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அதனை நாம் வரவேற்கின்றோம். மலையக மக்களுக்கு பிரச்சினைகள் காணப்பட்டாலும் நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு கடந்த வாரம் 9 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்திருந்தன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை ஒன்பதுக்கும் மேற்பட்டதாக உயர்வடைந்துள்ளது. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து கடிதமொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 1,350 ரூபா சம்பளம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன் போது தீர்வொன்றை எட்ட முடியும் என்று நாம் நம்புகின்றோம். பெருந்தோட்டத்துறையில் புதிய குடியிருப்பு கிராமங்களை அமைத்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வாரம் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட போது மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை காணப்படவில்லை. இதனால் அவர்கள் இலங்கையர்களாக அந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பெருந்தோட்டங்களில் 8,000 குடும்பத்துக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் மாத்திரமே காணப்படுகின்றார். இவ்வாறான நிலைமையின் காரணமாகவே அரசாங்கத்தின் வரப்பிரசாதங்கள் நேரடியாக அந்த மக்களை சென்றடைவதில்லை. 8,000 மக்களை ஒரு கிராம உத்தியோகத்தர் நிர்வகிப்பதென்பது சாத்தியமற்றது. எனவே தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பெருந்தோட்டங்களில் பெருந்தோட்ட வீடுகளை குடியிருப்பு கிராமங்களாக அங்கீகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெருந்தோட்டங்கள் கிராமங்களாக அங்கீகரிக்கப்படும் போது அந்த மக்களுக்கு புதிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கிடைக்கப்பெறும். அத்தோடு அரசாங்கத்தின் வரப்பிரசாதங்கள் நேரடியாக அந்த மக்களை சென்றடையும். எவ்வாறிருப்பினும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் லைன் அறைகள் அங்கீகரிக்கப்பட்டு விட்டால் மக்கள் அதே நிலைமையிலேயே இருப்பர். எனவே வீடுகளை வழங்கிய பின்னர் காணிகளை வழங்கினால் அது சிறந்த திட்டமாக இருக்கும் என்று இந்த கலந்துரையாடலின் போது சிலர் தமது யோசனைகளை முன்வைத்தனர். ஆனால் வீட்டுரிமை வேறு, காணி உரிமை வேறாகும். வீடொன்றை நிர்மாணித்து காணி உரிம பத்திரத்தை வழங்குவதும், காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதும் வெவ்வேறானதாகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு நாட்டிலும் பின்தங்கிய சமூகத்துக்கு காணி உரிமை காணப்பட்டால் மாத்திரமே அவர்களால் முன்னேற்றமடைய முடியும். தற்போது ஒரு இலட்சத்து 76,000 குடும்பங்கள் பெருந்தோட்டப்பகுதிகளில் வீடுகள்இன்றி இருக்கின்றனர். 2020ஆம் ஆண்டளவில் வருடத்துக்கு 2,000 வீடுகளை நிர்மாணிக்கக் கூடிய நிலைமை காணப்பட்டது. அன்று ஒரு வீட்டின் மதிப்பு 9 இலட்சத்து 50,000 ஆகும். கொவிட் தொற்று, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் இந்த பெறுமதியானது 32 இலட்சம் வரை உயர்வடைந்தது. பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வரும் நாடொன்றுக்கு 32 இலட்சம் செலவில் எவ்வாறு 176,000 வீடுகளை அமைத்து கொடுக்க முடியும்? எனவே அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று எந்த அரசாங்கம் கூறினாலும் அது முற்றிலும் பொய்யான வாக்குறுதியாகவே அமையும். எனவே தான் காணி உரிமையை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்தோம். 115,000 மலையக மக்கள் மாத்திரமே இன்று பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடுகின்றனர். எஞ்சியுள்ள 8 இலட்சத்து 50,000 பேர் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். புறக்கோட்டையில் சுமார் 7,500 பேர் தொழில் புரிகின்றனர். இவர்கள் எண்ணினால் தமது பெற்றோருக்கு வீடொன்றை நிர்மாணித்துக் கொடுக்க முடியும். இன்று மலையகத்துக்கு 35,568 மலசலகூடங்கள் தேவைப்படுகின்றன. மலையக மக்களால் அவற்றை நிர்மாணித்துக் கொள்ள முடியாமல் இல்லை. அதற்கான வசதிகள் அவர்களுக்கு காணப்பட்டாலும், காணி உரிமை இன்மையால் ஒரு செங்கல்லைக் கூட நாட்ட முடியாத நிலைமையில் அவர்கள் காணப்படுகின்றனர். எனவே தான் கடந்த ஆண்டு வரவு - செலவு திட்டத்துக்கு முன்னர் அமைச்சரவை பத்திரமொன்று தயாரிக்கப்பட்டு, அங்கீகாரமும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதற்காக ஜனாதிபதியால் 4,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி முகாமைத்துவம் தொடர்பான தரவுகள் இலங்கை நில அளவை திணைக்களத்துக்கு வழங்கப்படுகிறது. அதற்கமைய ஏற்கனவே 1,000 காணி உறுதி பத்திரங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. காணி இல்லாதவர்களுக்கு மாத்திரமின்றி, 1972இலிருந்து நிர்மாணிக்கப்பட்ட 66,000 வீடுகளில் காணி உறுதி பத்திரங்களைக் கொண்ட 15,000 வீடுகளைத் தவிர எஞ்சிய 51,000 வீடுகளுக்கும் இந்த காணி உறுதி வழங்கப்படும். இரு முதன்மை வங்கிகள் உள்ளிட்ட 5 வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னடுத்துள்ளோம். அவற்றில் இரு வங்கிகள் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதி காணப்படுமாயின் அவர்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. பெருந்தோட்டங்கள் கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் லையன் வீடுகள் இல்லாமலாக்கப்பட்டு, அந்த காணிகள் அங்குள்ள இளைஞர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு வழங்கப்படும். கிராமங்களாக்கும் திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழுள்ள தோட்டங்கள் நேரடியாக அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். அவ்வாறு கொண்டு வரப்பட்டால் காணி உரிமத்தை வழங்குவது இலகுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/188698

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.