Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 10:54 AM கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும் தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 91 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய மக்கள் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனும கோஷத்துடன் பெருந்திரளாக குவிந்து வருகின்றனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாக 92 ஆவது நாளான இன்றும் அதிகளவான மக்கள் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பவணியாக செல்வதுடன் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர். அத்துடன், குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/186807
  2. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய வரலாற்றில் மாலிக்காபூர் என்ற பெயர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குஜராத்தை சேர்ந்த ஓர் இந்துவான மாலிக்காபூர் சிறந்த போர் வீரர். கில்ஜி வம்சம் தென்னிந்தியாவில் கால் பதிக்க உதவிய படைத் தளபதியான மாலிக்காபூர், தமிழ்நாட்டில் குறிப்பாக நடுநாடு என்று அழைக்கப்படக்கூடிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட பகுதிகளுக்கும் படையெடுத்து வந்துள்ளதை உறுதி செய்யும் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சில நாட்களுக்கு முன்பாக கிடைத்த நடுகல்லுடன் கூடிய சதிக்கல் மிக முக்கிய ஆதாரமாக வரலாற்று ஆசிரியர்களால் பார்க்கப்படுகிறது. அது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். நடுகல் - சதிக்கல் மாலிக்காபூர் படையெடுத்து வந்ததை உறுதி செய்யும் நடுகல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அவிரியூர் கிராமத்தில் கடந்த 15-ம் தேதியன்று கிடைத்தது. அதில் உள்ள விவரங்கள் குறித்து நமக்கு விளக்கம் அளிக்க விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷூம் வந்திருந்தார். அந்த நடுகல்லை காண்பித்து மாலிக்காபூர் குறித்தும் அவர் தொடர்புடைய கல்வெட்டுகள் பற்றியும் விரிவாக பேசத் தொடங்கினார். “அவிரியூரில் சிவன் கோவில் அருகே கிடைத்த இந்த பலகை கல்வெட்டானது நடுகல்லுடன் கூடிய சதிக்கல்லாகும். இதுபோன்ற ஆதாரங்கள் சில இடங்களிலேயே காணக் கிடைக்கின்றன” என்றார் அவர். "நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை ‘வீரக் கற்கள்’ என்றும் கூறுவர். உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. சதிக்கல் என்பது இறந்துவிட்ட கணவனோடு தீப்பாய்ந்து (உடன்கட்டை ஏறுதல்) உயிரை மாய்த்துக் கொண்ட மனைவிக்கும், அவரது கணவனுக்கும் சேர்த்தே நடப்படும் நினைவுச் சின்னம் ஆகும். எனவே இங்கு காணப்படுவது நடுகல்லுடன் கூடிய சதிக்கல்லாகும்.” என்று கூறினார். "’ஸ்ரீ வீரபாண்டிய தேவருக்கு யாண்டு 14வது துலுக்கர் பூசலில் பட்டார் அடா தெல்லார் ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லண தேவியார் இ ஊரிலே தீப்பாய்ந்தாள்’ என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த கல்வெட்டானது, 'அவிரியூர் சிவன் கோவில் கற்களில் சேர்ந்தார் போல் சுமார் 5 அடி உயரம் கொண்ட தூணில் சிற்பங்களுடன் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.'" என்றார். படக்குறிப்பு,அவிரியூரில் கிடைத்த நடு கல்லுடன் கூடிய சதிக்கல் "கல்வெட்டில் பிற்கால பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் 14-ஆவது (பொதுஆண்டு-1311) ஆட்சி ஆண்டில் துலுக்கர் (துருக்கியர்) சண்டையில் அடாதெல்லா ராவுத்தர் என்பவர் இறந்ததையும், இதனால் இவருடைய மனைவி மல்லண தேவி என்பவர் இவ்வூரில் தீப்பாய்ந்து இறந்தார் என்பதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.” என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ். கில்ஜி வம்ச மன்னன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட வாரிசுரிமை போட்டியின் போது சுந்தர பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாட்டின் மீது படை எடுத்து வந்தபோது, அதனை எதிர்த்து சண்டையிட்டு இந்த வீரன் இறந்துள்ளார் என்பதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இதேபோன்று விழுப்புரம் அருகே உள்ள திருவாமத்தூர் சிவன் கோவிலில் 'துருக்கியர் படையெடுப்பு' பற்றி கல்வெட்டு கூறுவது குறிப்பிடத்தக்கது. இவை யாவும் மாலிக்காபூர் தமிழக படையெடுப்பு பற்றி கூறும் முக்கிய ஆதாரமாகும். இது குறித்து பேசிய பேராசிரியர் ரமேஷ், “பல பலகை கல்தூணின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இடதுபுறம் அடா தெல்லார் நின்ற நிலையில் வலது கையில் நீண்ட வாளை வைத்துள்ளார், இடது கை தொங்கவிட்டவாறு உள்ளது. வலதுபுறம் அவரது மனைவி மல்லண தேவி வலது கையை தொங்கவிட்ட வாரும் இடது கையை மேலே தூக்கிய நிலையிலும் உள்ளார். இருவருக்கும் நடுவில் சிவலிங்கம் காணப்படுகிறது. இத்தூணில் நடுகல்லும் சதிக்கல்லும் சேர்ந்தவாறு உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டு தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் பெற்றது” என்றார். முக்கியத்துவம் வாய்ந்த மாலிக்காபூர் படையெடுப்பு படக்குறிப்பு,விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் மாலிக்காபூர் பற்றி பேசிய பேராசிரியர் ரமேஷ், “தென்னிந்தியா மீதான மாலிக்காபூர் படையெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே முஸ்லிம்கள் வட இந்தியாவின் மீது படையெடுக்கத் தொடங்கி விட்டனர். கி.பி 712-இல் முகமது பின் காசிம் எனும் அரேபிய தளபதி சிந்துவை கைப்பற்றினார். ஆனால் அவரது ஆட்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகள் கழித்து முகமது கோரி கி.பி. 1191-இல் வட இந்தியாவின் மீது படையெடுத்து வந்து, முஸ்லிம்களின் ஆட்சியை நிறுவினார். தொடர்ந்து கி.பி.1290-இல் கில்ஜி வம்சம் அரியணை ஏறியது. இந்த வம்சத்தை சேர்ந்த அலாவுதீன் கில்ஜி கி.பி. 1296-இல் ஆட்சிக்கு வந்தார். இவர் கி.பி.1316 வரை டெல்லியை ஆட்சி செய்தார் என்ற போதிலும் தென் இந்தியாவில் அவ்வளவு எளிதாக நுழைய முடியவில்லை.” என்கிறார். படக்குறிப்பு,அவிரியூரில் கிடைத்த நடு கல்லுடன் கூடிய சதிக்கல்லில் உள்ள வாசகங்கள் குழப்ப சூழலில் உள்நுழைந்த மாலிக்காபூர் மதுரையை தலைநகராகக் கொண்டு பாண்டியர் தமிழக பகுதிகளை ஆண்டு வந்தனர். மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியின் (கி.பி.1268 -1311) காலத்தின் இறுதி பகுதி இறுதிக்காலம் குழப்பம் நிறைந்ததாக இருந்தது” என்று விளக்குகிறார் பேராசிரியர் ரமேஷ். தொடர்ந்து பேசிய அவர், “இவரது ஆட்சியின் போது இவரது மக்களான சடையவர்மன் வீரபாண்டியனும், சடையவர்மன் சுந்தர பாண்டியனும் இணை ஆட்சியாளர்களாக இருந்தனர். இருவருக்கும் இடையே பகை உணர்ச்சி அதிகரித்தது. ஆட்சியை கைப்பற்ற இருவரும் பல்வேறு வழிகளில் முயற்சிகள் செய்தனர். இதில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கொல்லப்பட்டார். இதனால் நாடு முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் சுந்தரபாண்டியன் டெல்லி சென்று அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார் என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி கில்ஜியின் முக்கிய தளபதியான மாலிக்காபூர் விழுப்புரம், கடலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வந்ததை பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.” என்கிறார். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாலிக்காபூர் மற்றும் துருக்கியர் படையெடுப்புகள் குறித்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்றும் கூறுகிறார். “அந்த வகையில் கள்ளக்குறிச்சி அருகே அவிரியூரில் கிடைத்த இந்த கல்வெட்டில் மாலிக்காபூர் படையை எதிர்த்து போரிட்டு இறந்த படைவீரனின் நடு கல் இதற்கு மிகப்பெரிய வரலாற்றுச் சான்றாக உள்ளது. எனவே இந்த நடு கல் உடன் கூடிய சதிக்கல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்” என்றார் பேராசிரியர் ரமேஷ். https://www.bbc.com/tamil/articles/c033dxg2w39o
  3. 23 JUN, 2024 | 07:17 PM நமது நிருபர் ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக்கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தொழிலாளர் திணைக்களத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக்கணக்குகளுக்கான குழுவின் கூட்டத்தின் போது இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 31, டிசம்பர் 2021இல் கிட்டத்தட்ட 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத தேக்க நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை அல்லது நிறுவனங்கள் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றமை, நிறுவனங்கள் முழுமையாக நாட்டைவிட்டு வெளியேறுதல் போன்ற காரணிகள் வழக்குகள் தேக்கமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளன. இதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊழியர் சேம இலாப நிதிக் கட்டமைப்புக்களுக்கு குறித்த நிதியைச் செலுத்துவதற்கு தவறிய உரிமையாளர்கள் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுக்கணக்குகளுக்கான குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186785
  4. 23 JUN, 2024 | 07:13 PM வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவரின் சொகுசு காரை, மோசடி செய்யும் நோக்கில் உரிம மாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பெயரில் சொகுசு கார் ஒன்றினை கொள்வனவு செய்து, அதற்கு சாரதி ஒருவரையும் நியமித்திருந்தார். தற்போது அந்தப் பெண் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில், வாகனத்துக்கு இந்த ஆண்டுக்கான வரி அனுமதி பத்திரம், புகை பரிசோதனை செய்வதற்கு வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என கூறி வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணிடம் சாரதி அவற்றை பெற்றுள்ளார். வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு, காரை தனது பெயருக்கு மாற்றம் செய்ய சாரதி முயற்சித்துள்ளார். இந்த விடயம் வாகன உரிமையாளருக்கு தெரிய வந்ததையடுத்து, அவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் சாரதியை கைது செய்து , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்ற விசாரணைகளில் சந்தேக நபர் தன் மீதான குற்றச்சட்டை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட வாகனம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் உரிமையாளரான பெண்ணிடம் மீள ஒப்படைக்க உத்தரவிட்டது. https://www.virakesari.lk/article/186788
  5. 23 JUN, 2024 | 07:19 PM தனது தாயும் சித்தப்பாவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி கொழும்பை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான். கொழும்பில் தனது தாய் மற்றும் சித்தப்பா (தாயின் இரண்டாவது கணவர்) ஆகியோர் அடித்து துன்புறுத்துவதால் வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் வந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் வேறு நபர்களை தெரியாத காரணத்தால் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரி வந்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/186783
  6. Published By: RAJEEBAN 23 JUN, 2024 | 01:14 PM அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள வணிகவளாகத்தில் ஆயுதத்துடன் நபர் ஒருவர் காணப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தென்அவுஸ்திரேலிய காவல்துறையினர் சம்பவம் ஒன்று உறுதிசெய்துள்ளதுடன் காவல்துறையினர் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் வணிகவளாகத்திற்குள் ஓடுவதை காணமுடிவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வணிகவளாகத்திலிருந்து வெளியேறுமாறு அவசர வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன. அவசர நிலை என யாரோ தெரிவிப்பதையும் காவல்துறையினர் உள்ளே ஒடுவதையும் பார்த்தோம் என சிலர் டுவிட்டரில் தகவல்களை வெளியிட்டுள்ளனர். பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். இருவருக்கு உதவிமருத்துவ பணியாளர்கள் சிகிச்சை வழங்கிவருகின்றனர் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வெல்ஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தை சுற்றி தற்காலிக வேலிகளை அதிகாரிகள் அமைத்துள்ளனர். ஆயுதமேந்திய குற்றவாளி தப்புங்கள் மறைந்துகொள்ளுங்கள் ஏனையவர்களிற்கு தெரிவியுங்கள் என்ற செய்தியை வெல்ஸ்பீட் வணிகவளாகத்தின் அறிவிப்பு பலகையில் காணமுடிகின்றது. https://www.virakesari.lk/article/186764
  7. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; சென்னையில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கைது Published By: RAJEEBAN 23 JUN, 2024 | 12:33 PM கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சிவகுமார் என்பவரை எம்ஜிஆர் நகரில் வைத்து போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்களை காவல்துறையினது தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதுவரை சிபிசிஐடி போலீசார் 9 பேரை கைது செய்து உள்ள நிலையில், நேற்று இரவு சென்னையில் அருகே உள்ள சிவகுமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விஷ சாராயம் அருந்தியதால் தற்போதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் முன்னதாகவே விஷ சாராயத்தை விற்பனை செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இரண்டாம் தரகராக மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணை செய்ததில் மாதேஷ் என்பவர்தான் தங்களுக்கு மெத்தனால் விற்பனை செய்பவர்என்ற தகவலை தெரிவித்தனர். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மாதேஷிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், கச்சிராப்பாளையத்தில் ராமர் என்பவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். இந்தவகையில், 55 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக விஷ சாராயத்திற்கு மெத்தனால்விற்பனை செய்பவர் செய்த முக்கிய குற்றவாளி சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சிவக்குமாரை நள்ளிரவில் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இவரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற தொடர் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தவகையில், இதுவரை 10 பேரை இந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186760
  8. 23 JUN, 2024 | 02:11 PM ஆர்.ராம் வடக்குக்குச் சென்று 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக பேசுவதற்கு ஜே.வி.பிக்கு அருகதையில்லை என்று விமர்சனம் வெளியிட்டுள்ள நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தேர்தல் அண்மிக்கின்றமையால் நாடகமாடுகின்றார் என்றும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் வடக்கு விஜயத்தின்போது தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த தருணத்தில்தான் வடக்கு, கிழக்கு மக்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் திடீர் கரிசனைகள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் சம்பந்தமாக எந்தவிதமான கவனத்தையும் கொண்டது கிடையாது. அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கூட திரும்பிப் பார்த்தது கிடையாது. குறிப்பாக, ஜே.வி.பி. 13ஆவது திருத்தத்துக்கு எதிராக இதுகாலம் வரையிலும் தமது கடுமையான எதிர்ப்பினையே வெளியிட்டு வந்தார்கள். அது நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதைக்காக படுகொலைகளைக் கூடச் செய்தார்கள். அத்தகையவர்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக பேசுவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை. அதேபோன்று தான் சஜித் பிரேமதசவும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைளின்போது எந்தவிதமான ஒத்துழைப்புக்களையும் செய்யாதே இருந்தார். தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் வடக்கு மக்களிடத்தில் சென்று 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாகவும் அதுபற்றி உரையாடுவதாகவும் கூறுகிறார். இதுவொரு தேர்தல் கால ஏமாற்று நாடகம். சஜித்தையும் அநுரவையும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்லர். சஜித்தும் அநுரவும் தமது அரசியல் சுயலாபத்துக்காகவே இப்போது வடக்கு, கிழக்கு நோக்கி வருகின்றார்கள் என்பதை அந்த மக்கள் நன்கு அறிவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/186767
  9. 23 JUN, 2024 | 12:21 PM பிரபல வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் வீடியோ பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் இந்த வர்த்தகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று (22) அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186758
  10. 23 JUN, 2024 | 12:10 PM குடல் அலர்ஜி ஏற்பட்டு 15 வயது சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (22) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இந்த சிறுவன் நேற்று முன்தினம் (21) வாந்தி போன்ற உடல் உபாதைக்குள்ளான நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அதன் பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே இடைநடுவில் உயிரிழந்துள்ளான். சிறுவனுக்கு குடல் அலர்ஜி ஏற்பட்டதாலேயே இந்த மரணம் நேர்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மரண விசாரணைகளில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் ஈடுபட்டதை தொடர்ந்து, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/186757
  11. 23 JUN, 2024 | 03:39 PM (எம்.மனோசித்ரா) முதுகெலும்பின் 'S' வடிவத்துக்கு வழிவகுக்கும் ஒரு நிலையான 'ஸ்கோலியோசிஸ்' எனப்படும் நோய் நிலைமை பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) விசேட பேரணியொன்று இடம்பெற்றது. தேசிய ஸ்கோலியோசிஸ் விழிப்புணர்வு தினம் ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இந்த நடைபேரணி இடம்பெற்றது. கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான பேரணியானது லிப்டன் சுற்றுவட்டத்தை கடந்து சுதந்திர மாவத்தையில் உள்ள சத்திர சிகிச்சை கல்லூரி வரை சென்றது. இந்த பேரணி இலங்கை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மற்றும் இலங்கை முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது. அணிவகுப்பைத் தொடங்குவதற்கு முன் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்கோலியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளின் நலம் குறித்தும் கேட்டறிந்தனர். ஸ்கோலியோசிஸ் என்பது முதுகெலும்பு 'S' வடிவத்தில் சிதைந்துவிடும் ஒரு நிலையாகும். இந்த குறைபாட்டின் தீவிரம் வயது மற்றும் குழந்தை வளரும்போது அதிகரிக்கலாம். இவற்றில், மிக அதிகளவு வளைவு கொண்ட சிதைவுகள் மார்புக் குழியின் சுருக்கம் மற்றும் இதயம் மற்றும் நுரையீரலின் செயற்பாட்டை பாதிக்கலாம். இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல் திறன்களைக் குறைக்கிறது. இந்த நிலை உடல் பலவீனம் மட்டுமல்ல, மனதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பேரணியில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, சீமாட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹெக்டர் வீரசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் விஜேசூரிய, இலங்கை எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், இலங்கை எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மற்றும் இலங்கை முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் விசேட நிபுணர்கள், வைத்தியர்கள், மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/186773
  12. 23 JUN, 2024 | 03:24 PM லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாயை பெற்று, மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை, லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், இளைஞனை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால், சந்தேகம் கொண்ட இளைஞன் தனது பணத்தை மீள தருமாறு கோரியுள்ளார். எனினும், அந்த லண்டன் பிரஜை பணத்தை திருப்பித் தராததால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/186772
  13. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் - இந்தியாவுக்கு என்ன சிக்கல்? பட மூலாதாரம்,GETTY IMAGES 23 ஜூன் 2024, 05:45 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 போட்டிகளைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தான் அணி கத்துக்குட்டி அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. டி20 தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் பலமான ஆஸ்திரேலிய அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் அணி வெல்வது இதுவே முதன் முறையாகும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை விழலுக்கு இறைத்த நீராய்ப் போனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி சாத்தியமாக்கியது எப்படி? ஆப்கானிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்? ஆப்கானிஸ்தான் வலுவான தொடக்கம் செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இந்த ஆட்டத்திலும் முத்திரை பதித்தார். அவருடன் மற்றொரு தொடக்க வீரர் ஜாத்ரனும் சிறப்பாக விளையாட, ஆஸ்திரேலிய அணி விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிப் போனது. ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக சுழன்று திரும்பியதுடன், பவுன்சும் ஆயின. இதனால், பேட்டிங் செய்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. இதனை உணர்ந்து கொண்டு நிதானமாக ஆடிய ஆப்கானிஸ்தான் தொடக்க ஜோடி பவர் ப்ளே ஓவர்களில் 40 ரன்கள் திரட்டியது. பேட்டிங்கிற்கு அவ்வளவாக ஒத்துழைக்காத ஆடுகளத்தில் பவுண்டரி, சிக்சர்கள் விளாசுவது கடினமாக இருந்ததால் ஆப்கானிஸ்தான் தொடக்க ஜோடி விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ஒன்றிரண்டு ரன்களாக சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினர். இது அந்த அணிக்கு வெகுவாக கைகொடுத்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தொடக்க ஜோடி சதம் அடித்து அசத்தல் குர்பாஸ் - ஜாத்ரன் ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறித்தான் போனார்கள். ஆட்டத்தின் 16-வது ஓவரில்தான் இந்த ஜோடியை பிரிக்க முடிந்தது. அந்த ஓவரின் 5-வது பந்தை ஸ்டாய்னிஷ் நல்ல லென்த்தில் வீச, ரஹ்மானுல்லா குர்பாஸ் கிரீசை விட்டு இறங்கி அடிக்க முயற்சித்தார். டைமிங் சரியாக இல்லாததால் பந்து பேட்டில் சரியாக படாமல், ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த வார்னரிடம் கேட்ச் ஆனது. குர்பாஸ் 49 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 60 ரன் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் - ஜாத்ரன் தொடக்க ஜோடி 118 ரன்கள் சேர்த்து அசத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகள் சரிவு தொடக்க ஜோடி பிரிந்ததும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓமர்ஜாய் 2 ரன்னில் ஆடம் ஜம்பா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த சில நிமிடங்களிலேயே, மறுமுனையில் நிலைத்து நின்ற தொடக்க வீரர் ஜாத்ரனும் 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஆடம் ஜம்பாவே வீழ்த்தினார். தொடக்க ஜோடி வீழ்ந்த பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால், அந்த அணியால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வங்கதேசத்திற்கு எதிரான கடந்த போட்டியைப் போலவே இம்முறையும் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். 18-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆப்கன் கேப்டன் ரஷித் கானை வீழ்த்திய அவர், 20-வது ஓவரின் முதலிரு பந்துகளில் முறையே கரீம் ஜானட், குல்புதீன் நயிப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். அவர் வீசிய அடுத்த பந்திலும் விக்கெட் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், முகமது நபி அடித்த பந்தில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் நழுவ விட்டார். வார்னர் கேட்ச் பிடித்திருந்தால் கம்மின்ஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தொடக்கம் 149 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் நவீன் உல் ஹக் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே கிளீன் போல்டானார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னரும் இம்முறை ஏமாற்றிவிட்டார். 8 பந்துகளில் 3 ரன் மட்டுமே சேர்த்த அவர் முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்த முற்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷாலும் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. 2 பவுண்டரிகளுடன் 12 ரன் சேர்த்த அவரை நவீன் உல் ஹக் அவுட்டாக்கினார். இதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் யாராலும் நிலைத்து ஆட முடியவில்லை. அவர்கள் வருவதும் அவுட்டாகி வெளியேறுவதுமாகவே இருந்தனர். ஆனால், ஒருமுனையில் கிளென் மேக்ஸ்வெல் மட்டும் நிலைத்து ஆடி அணியை கரை சேர்க்கப் போராடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நினைவில் வந்து போன ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டம் ஆஸ்திரேலிய அணி ஒருமுனையில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து கொண்டிருந்தாலும் மேக்ஸ்வெல் பேட்டில் இருந்து மட்டும் சிக்சர்களும், பவுண்டரிகளும் வந்த வண்ணம் இருந்தன. அதைப் பார்க்கையில், அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில், நடக்கவே சிரமப்பட்ட நிலையிலும் தனி ஒருவனாக இரட்டை சதம் அடித்து ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வெற்றி கொள்ள உதவிய அவரது ஆட்டம் ரசிகர்களின் நினைவில் வந்து போனது. ஆனாலும், மேக்ஸ்வெல்லின் சவாலை 15-வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முடிவுக்குக் கொண்டு வந்தனர். குல்ஹாதின் நயீப் பந்துவிச்சில் நூர் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். 41 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்களை சேர்த்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதல் வெற்றி ஆப்கானிஸ்தான் வீரர்கள் துல்லியமான பந்துவீச்சையும், துடிப்பான பீல்டிங்கையும் மீறி ஆஸ்திரேலிய வீரர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை. அதன் கடைசிக் கட்ட வீரர்களும் சொற்ப ரன்களில் சரணடைந்தனர். முடிவில், 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது. இதனால், 21 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்படாமல் தப்பியது. டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் வெற்றி இதுவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆப்கானிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு சிக்கல் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வெற்றி கொண்டிருந்தால், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சிக்கலின்றி எளிதில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும். தற்போது ஆப்கானிஸ்தானின் வெற்றி அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், குரூப் ஒன்றில் இந்தியா 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் இருக்கிறது. 2 போட்டிகளிலும் தோற்றுப் போன வங்கதேசம் கடைசி இடத்தில் உள்ளது. இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வென்றால் சிக்கலின்றி அரையிறுதிக்குள் நுழையும். ஒருவேளை இந்தியா தோற்றுப் போனால் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்கும் அதேநேரத்தில், வங்கதேசத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி இடத்தில் உள்ள வங்கதேசத்திற்குக் கூட அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் இல்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் மிகப்பெரிய வெற்றியை பெறும் அதேவேளையில், இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றால் வங்கதேசம், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்றிருக்கம். அவ்வாறான சூழலில் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதியில் நுழையலாம். https://www.bbc.com/tamil/articles/cv22dyyv0d5o
  14. உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா வான் தாக்குதல்! உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது இலக்கு வைத்து ரஷ்யா வான் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 18 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பை இலக்கு வைத்து ரஷ்யா நடத்தும் 8ஆவது தாக்குதல் இதுவாகும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த தாக்குதல்களினால் உக்ரைனில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இந்த புதிய தாக்குதலில் 12 ஏவுகணைகளையும் முறியடித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/304369
  15. பட மூலாதாரம்,BIERBATH கட்டுரை தகவல் எழுதியவர், நார்மன் மில்லர் பதவி, பிபிசி 22 ஜூன் 2024 ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சமீபகாலமாக 'பீர் ஸ்பாக்கள்' திறக்கப்பட்டுள்ளன. 'பீர் தேசம்' என்று கருதப்படும் செக் குடியரசின் முந்தைய வழக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டது தான் இந்த 'பீர் ஸ்பாக்கள்'. 1,000 லிட்டர் தண்ணீர் நிரம்பிய மிகப்பெரிய மரத்தினாலான குளியல் தொட்டியில் (oak tub) இறங்க நான் தயாரானபோது, வரலாற்றின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டேனிஷ் வானியலாளர் டைகோ ப்ராஹேவின் கறை படிந்த கண்ணாடி ஓவியம் என்னை உற்று நோக்கி கொண்டிருந்தது. நிகோலா ஸ்கைபலோவா என்பவர் எனக்குக் குளியல் தொட்டியில் இறங்க உதவினார். அவர் தண்ணீரில் சேர்க்கத் தேவையான பொருட்கள் நிறைந்த பெரிய மரக் கரண்டிகளை வைத்திருந்தார். "இது ஹாப்ஸ் (hops) - இது உங்கள் மன அழுத்தத்தை நீக்குகிறது, மற்றும் சருமத்தின் சிறு துளைகளையும் திறக்கிறது," என்று கூறியபடி அதைக் குளியல் தொட்டியில் ஊற்றினார். "மேலும் இது மதுபானம் தயாரிக்க பயன்படும் யீஸ்ட், இதில் நிறைய வைட்டமின் பி உள்ளது, உங்களை இளமையாகக் காட்டும்," என்று விளக்கினார். இதனுடன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 'மால்ட்’ சேர்க்கப்பட்டது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். நான் இருந்தது, செக் குடியரசின் மிகவும் செழுமையான பீர் ஸ்பாக்களில் ஒன்றான 'Chateau Spa Beerland’-இல். செக் குடியரசில் 1980-களில் இந்த தனித்துவமிக்க 'பீர் ஸ்பா’ என்னும் நவீன போக்கு ஆரம்பமானது. இது, ப்ராக் நகரில் உள்ள யு ஸ்லேட்டே ஹ்ருஸ்கி (U Zlaté Hrušky - At The Golden Pear) என்னும் தேசிய பாரம்பரிய கட்டிடத்தில் அமைந்துள்ளது, இங்குதான் டைகோ ப்ராஹே 1599-இல் வாழ்ந்தார். இன்று, அதன் பீர் ஸ்பா அறைகளில் கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள் முதல் வானியல் சுவரோவியங்கள் வரை கண்களைக் கவரும் அலங்கார அம்சங்களை கொண்டுள்ளன. குளியல் தொட்டிக்கு அடுத்ததாக ஒரு பெரிய வைக்கோல் படுக்கை இருந்தது, இது மகிழ்ச்சியான வெந்நீர் குளியலை அனுபவித்தப் பிறகு வைக்கோல் படுக்கை பாரம்பரிய உணர்வை வழங்குகிறது. குளியல் தொட்டியில் குளித்த பிறகு, வைக்கோல் படுக்கை அதன் கடினத்தன்மையின் மூலம் சருமத்தை மேலும் உற்சாகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே சமயம் வைக்கோல் மேற்பரப்பு, பயனரை இயற்கைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும். நோர்டிக் சானா (Nordic sauna) என்னும் நீராவி குளியல் முறையிலும் இதே முறை கையாளப்படுகிறது. பட மூலாதாரம்,NORMAN MILLER பீர் குளியல் எப்படி நடக்கிறது? நான் பீர் குளியலை மேற்கொண்ட போது, ஸ்கைபலோவா எனக்கு பல கரண்டி பீரை ஊற்றினார். இது சாதாரண பீர் அல்ல. வடிகட்டப்படாத, உயர்தர செக் பீர் (Czech Beer) ஆகும். இது யீஸ்ட் உட்பட அதன் அத்தியாவசியக் கூறுகளில் பலவற்றைத் தக்கவைத்து, 'உயிர்தனமையுடன்' அதிக வைட்டமின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. செக் மக்களுக்கு பீர் பற்றி நன்றாகத் தெரியும் - அவர்கள் ஆஸ்திரியா நாட்டினரை விட ஒரு நபருக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள். உலகளவில் அதிக பீர் விரும்பிகள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. குளியல் தொட்டியில் சிறந்த ப்ரீமியம் பீரைச் சேர்ப்பது வீணாவதாகத் தோன்றினால், குளியல் தொட்டியின் அருகில் அளவாக பீரை விநியோகிக்கும் குழாய்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் குளியல் தொட்டியில் இறங்கினதும், ஜக்குஸி பட்டனை (jacuzzi button) அழுத்தி, குமிழிகளை வரவைத்தேன். பின்னர் ஒரு குவளையில் ப்ரீமியம் டார்க் க்ருசோவிஸை (dark Krušovice) (1581-இல் அறிமுகமான ஒரு பாரம்பரிய செக் மதுபானம்) ஊற்றினேன். ஒரு பீர் ரொட்டியை சுவைப்பதற்காக (அதன் மாவில் பீர் கலந்து பிசையப்பட்டதால் பழுப்பு நிறத்தில் இருக்கும்) கையில் எடுத்தேன். பீர் குளியலின் விசித்திரமான அனுபவத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். காற்றில் பீரின் நறுமணம் நிறைந்திருந்தது. பட மூலாதாரம்,WEWANTMORE/BATH&BARLEY உலகளாவிய போக்கு இந்தக் குளியல் அனுபவத்தை ஆதரிப்பவர்கள், "உங்கள் சருமத்திற்குக் குமிழிகள் ஆரோக்கியமானவை. இறுக்கமான தசைகளை தளர்த்தும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மறுபுறம், ஹாப்ஸின் நறுமணங்கள் மனநிலையை உயர்த்தி இளைப்பாறுதல் உணர்வை கொடுக்கும். இந்த புதுமையான ஆரோக்கியக் குளியல் முறையில் மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம் இருப்பதால் இப்போது உலகம் முழுவதும் பீர் ஸ்பாக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது,” என்கின்றனர். சமீபத்தில் ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பீர் ஸ்பாக்கள் திறக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பால்டிமோர் அருகே 'BierBath’ திறக்கப்பட்டது. டென்வரில் 2021-ஆம் ஆண்டு 'Oakwell’ என்னும் பீர் ஸ்பா திறக்கப்பட்டது. இந்த ஆண்டு பிரிட்டனின் கிழக்கில் உள்ள நோர்போக் மீடில் முதல் பீர் ஸ்பா திறக்கப்பட உள்ளது. உலக அளவில் நிகழும் இந்த ஸ்பாவின் எழுச்சிக்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. இந்த ஸ்பா மக்களால் விரும்பப்படும் இரண்டு பொழுது போக்குகளை இணைக்கிறது: பீர், மற்றும் இளைப்பாறல். மேலும் ஸ்பாக்களின் இதமான ஐரோப்பிய வடிவமைப்புகள் கூடுதல் மகிழ்ச்சியூட்டுகிறது. உலகம் முழுவதும் பீர் ஸ்பாக்கள் பிரபலமடைந்து வருவதற்கான மற்றொரு விளக்கத்தை தி நார்ஃபோக் மீடில் ஸ்பா மேலாளரான எலிசா ஓக்டன் சொன்னார்: "இந்த ஸ்பாக்கள் பெண்களை அதிகம் ஈர்க்கின்றன. எனவே இது ஆண்கள் மற்றும் தம்பதிகளை ஈர்க்கும் என்று நாங்கள் நினைத்தோம்." பாத் & பார்லி (Bath & Barley) - பெல்ஜியத்தின் முதல் பீர் ஸ்பா, 2023-இல் ப்ரூக்ஸில் திறக்கப்பட்டது. பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தை மேம்படுத்த பீர் பிரியர்கள் தங்கள் விருப்பமான பீர் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் ஹாப் தாவர வகைகளைத் தேர்ந்தெடுத்துக் குளியல் தொட்டியில் நிறைக்கலாம் என்னும் அம்சத்தை இந்த ஸ்பாவில் அறிமுகப்படுத்தி உள்ளனர். பீர் கலாசாரம் "பெல்ஜிய விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்ட பல்வேறு ஹாப் தாவரங்களில் இருந்து தேர்ந்தெடுத்து உங்கள் குளியல் தொட்டிக்குத் தேவையான சாரத்தை நீங்களே உருவாக்கலாம். இந்த ஹாப்ஸ் வெவ்வேறு சாரங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் நன்மை பயக்கும் விளைவுகள் ஒரே மாதிரியானவை," என்று இணை நிறுவனர் லூயிஸ் ரேசோவ் விளக்குகிறார். "சில செக் ஸ்பாக்களை விட எங்களின் உட்புற வடிவமைப்பு ஆடம்பரமான அனுபவத்தை கொடுக்கும். பெல்ஜிய பீர்களுடன் நல்ல உணவையும் வழங்குகிறோம். குளியல் தொட்டியில் ஒரு 'ஹாப்’ ஸ்க்ரப்பையும் வழங்குகிறோம்,” என்றார். 2022-இல் நிறுவப்பட்டதிலிருந்து, ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள டாக்கா பீர் ஸ்பா (Taaka Beer Spa) பிரான்சில் உயர்தர பீர் ஸ்பா அனுபவத்தை பெற வழிவகுத்தது. "இந்த ஸ்பா உள்ளூர் மக்களிடையே நிறைய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது, இந்த ஸ்பாவை முயற்சிக்க கணிசமான எண்ணிக்கையில் மக்கள் வருகின்றனர்," என்கிறார் நிறுவனர் நவோமி க்ராவ்ஷா. "நாட்டின் பீர் கலாசாரத்தை அனுபவிப்பதற்கான ஒரு புதிய வழியாக இந்த ஸ்பா ஏற்றுக்கொள்ளப்பட்டது," என்றும் கூறினார். தற்போது மீண்டும் பீர் ஸ்பாக்களின் பூர்வீகமான செக் குடியரசுக்கு வருவோம். அதன் தலைநகரில் உள்ள சுமார் ஆறு சிறந்த பீர் ஸ்பாக்கள் உள்ளன. மேலும பல சிறிய அளவிலான பீர் ஸ்பாக்களும் உள்ளன. பட மூலாதாரம்,WEWANTMORE/BATH&BARLEY படக்குறிப்பு,பீர் ஸ்பா என்பது 1980களில் செக் குடியரசில் தொடங்கிய நவீன ஆரோக்கியப் போக்கு பீர் ஸ்பாக்கள் மகிழ்ச்சிக்கா அல்லது ஆரோக்கியத்திற்கா? பீர் குளியல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கலாசாரம் என்று பல பீர் ஸ்பாக்கள் கூறுகின்றன. இருப்பினும் இது பீர் மற்றும் ஸ்பாக்களின் வரலாற்று இருப்பை ஒன்றிணைப்பதாகத் தெரிகிறது. இவை பண்டைய காலத்தில் தோன்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதே போன்று செக் பீர் ஸ்பாக்கள் வென்செஸ்லேஸ் என்று அழைக்கப்படும் மன்னர்களில் ஒருவரை வழக்கமாக பீர் குளியல் எடுத்து கொள்வார் என்று குறிப்பிடுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, அதற்கும் எந்த ஆதரமும் இல்லை. "இது நிச்சயமாக உண்மையல்ல," என்று ப்ர்னோவில் உள்ள மசாரிக் பல்கலைக்கழகத்தின் ஐரோப்பிய மதுபானங்கள் வரலாற்று நிபுணரான லிபோர் ஜாஜிக் கூறுகிறார். அரசர் வென்செஸ்லேஸ்களில் ஒருவர் உண்மையில் செக் மதுபான உற்பத்தியாளர்களின் விளம்பரத் தூதராகப் பார்க்கப்படுகிறார் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். "இது பீர் ஸ்பாக்களை இயக்கும் நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் தந்திரம். பீர் ஸ்பா என்பது ஒரு நவீன கண்டுபிடிப்பு. இடைக்காலத்தில் பீர் குளியல் தொட்டியில் சேர்க்கப்பட்டிருக்கலாம், ஆனால் அதில் நிச்சயமாக எந்த ஆழமான நோக்கமும் இருந்திருக்காது," என்றார். ஆரோக்கியம் தருமா என்ற நோக்கில் பார்க்கும்போது பீர் ஸ்பாக்கள் நடத்துபவர்கள் சில வலுவான வாதத்தை முன்வைக்கின்றனர். "மால்ட் தானியங்கள், யீஸ்ட் மற்றும் ஹாப்ஸ் ஆகியவை பீரில் உள்ள மூன்று பொருட்களாகும், அவை உங்கள் சருமத்திற்கு நல்லது," என்று கொலராடோ அரோமேட்டிக்ஸின் உயிர்வேதியியல் நிபுணர் டாக்டர் சிண்டி ஜோன்ஸ் விளக்குகிறார். "யீஸ்ட் மற்றும் மால்ட் தானியங்கள் இரண்டிலும் பி வைட்டமின்கள் உள்ளன, அவை தோலில் கருந்திட்டுக்களை (hyperpigmentation) குறைக்கின்றன மற்றும் தோலின் ஈரப்பதம் மற்றும் மென்மையை மேம்படுத்துகின்றன,” என்றார். "குறிப்பாக, ஹாப்ஸில் ஏராளமாக சாந்தோஹுமுல் மற்றும் ஹுமுலோன் (xanthohumul and humulone) உள்ளன. முந்தையது அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு குணங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், பிந்தையது சருமத்தை குணப்படுத்தும் ஆண்டி-பாக்டீரியா தன்மைகளைக் கொண்டுள்ளது,” என்கிறார். நன்மைகள் உண்டா? "ஹாப்ஸ் தாவரத்தின் சாறுகள், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கும் என்று ஆய்வுகளில் காட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் தூக்கத்தை மேம்படுத்துவதில் ஹாப் தாவரம் நீண்டகால பயன்பாட்டை கொண்டுள்ளது என அறிவியல் ரிதியாக ஆதரங்கள் காட்டுகின்றன,” என்கிறார் சிண்டி ஜோன்ஸ். "ஹாப்ஸ் தாவரம் சமீபத்தில் தோல் பராமரிப்புக்காக அதிக அறிவியல் கவனத்தைப் பெறுகிறது," என்று ஜோன்ஸ் தொடர்ந்தார். "இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமச் சுருக்கங்களைக் குறைக்கும் மற்றும் தோலின் வீக்கத் தன்மையை குறைக்கும்," என்றார். உலகளாவிய மதுபான நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் (Carlsberg) 2015-ஆம் ஆண்டில் பீர் அழகுச்சாதன பொருள்களை அறிமுகப்படுத்தியபோது, ஒரு வித்தியாசமான விளம்பர வீடியோவின் ஆதரவுடன் பீர் அழகுசாதனப் போக்கை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. செக் குடியரசில் விற்கப்படும் பல பொருட்களில் ஹாப்ஸ் மற்றும் பார்லி சாறுகளுடன் கூடிய குளியல் உப்புகளும் விற்கப்படுகிறது. வீட்டிலேயே குளியல் தொட்டியில் பீரை சேர்த்து இந்த அனுபவத்தைப் பெற முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது சாத்தியமில்லை. வைக்கோல் மெத்தை, முடிவில்லா பிரீமியம் பீர் அல்லது சுவையான பீர் ரொட்டி போன்றவற்றுடன் இளைப்பாறும் சூழல் வீட்டில் இருக்காது. இது தான் பீர் ஸ்பாக்களை உண்மையான தனித்துவமான அனுபவம் கொடுக்கும் இடமாக மாற்றுகின்றன. https://www.bbc.com/tamil/articles/cn33dvd1zlko
  16. இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினைகள் – பேராயர் கர்தினால்! இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச பாலத்தின் ஊடாக எதிர்காலத்தில் இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பாலம் அமைப்பதன் ஊடாக 2,000 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட சுதந்திரம் இல்லாமல் போகக்கூடும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாலத்தை அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிடும். அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த பாலம் அமைக்கும் திட்டத்தை தாம் முற்றிலும் எதிர்ப்பதாகவும் இந்தியர்களும் இதனை எதிர்க்க வேண்டும் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/304362
  17. காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு கொண்டுசென்ற இஸ்ரேலிய படையினர் - வெளியானது அதிர்ச்சி வீடியோ Published By: RAJEEBAN 23 JUN, 2024 | 10:11 AM ஜெனினில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை இஸ்ரேலிய படையினர் தங்கள் முன்பகுதியில் கட்டிப்போட்டவாறு கொண்டு சென்றதை காண்பிக்கும் படம் வெளியாகியுள்ளது. வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த காட்சியை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். தேடுதல் நடவடிக்கையின் போது காயமடைந்த சந்தேக நபரையே இவ்வாறு தங்கள் வாகனத்தில் கட்டிப்போட்டு கொண்டு சென்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. நாங்கள் அம்புலன்சை கொண்டுவருமாறு கேட்டவேளை இஸ்ரேலிய படையினர் அவரை ஜீப்பின் பொனட்டின் கட்டுப்போட்டு கொண்டு சென்றனர் என அந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த நபரை இஸ்ரேலிய இராணுவத்தினர் சர்வதேச செம்பிறை சங்கத்திடம் கையளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. முஜாகெட் அஜ்மி என்ற ஒருவரையே இஸ்ரேலிய படையினர் இவ்வாறு கொண்டு சென்றனர் அவர் எந்த அமைப்பையும் சேராதவர் என பொதுமக்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/186741
  18. Published By: RAJEEBAN 23 JUN, 2024 | 11:49 AM பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்விடுத்த வேண்டுகோளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளது. இதன்படி விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தடை செய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீட்டு ஆணையம் பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த தூதர்கள் தலைமையில் தடை நீக்கத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கில் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது என அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தடை செய்யப்படவில்லை, என டுவிட்டரில் தெரிவித்துள்ள அலிசப்ரி அந்த அமைப்பு சாத்வீக வழிமுறைகள் ஊடாக தனது நோக்கங்களை அடைய முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். உலகநாடுகள் தங்கள் மீதான தடையை நீக்கச் செய்வதன் மூலம் தாங்கள் மீண்டும் உயிர்பெறும் நிலையை உருவாக்குவதே விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் மூலோபாய அணுகுமுறை என அலி சப்ரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186755
  19. பெட் கமின்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஹெட்-ட்ரிக்; ஆனால் ஆஸியை அதிரவைத்தது ஆப்கான்! 23 JUN, 2024 | 10:11 AM (நெவில் அன்தனி) சென். வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற குழு 1க்கான சுப்பர் 8 ஐசிசி உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலும் அவுஸ்திரேலியாவை விஞ்சிய ஆப்கானிஸ்தான் 21 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இருவகை உலகக் கிண்ண வரலாற்றில் (50 ஓவர் மற்றும் ரி20) அவுஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அரை இறுதிக்கு செல்வதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் போட்டி முடிவை அடுத்து குழு1 இல் இடம்பெறும் நான்கு அணிகளுக்கும் அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸ்தரான் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், 8ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட குல்பாதின் நய்பின் 4 விக்கெட் குவியல் என்பன ஆப்கானிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அத்துடன் இப்போட்டியில் பிடிகள், ரன் அவுட் வாய்ப்புகள், ஸ்டம்ப் வாய்ப்பு ஆகியன தவறவிடப்பட்டமை அவுஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் பொறுமையாகவும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடி 118 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்றதுடன் இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் அவர் குவித்த 3ஆவது அரைச் சதம் இதுவாகும். இப்ராஹிம் ஸத்ரான் 51 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், குர்பாஸின் விக்கெட் உட்பட முதல் 4 விக்கெட்கள் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய ஆப்கானிஸ்தான் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன் கடைசி ஓவரிலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. ஆரம்ப வீரர்களைவிட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதனிடையே பெட் கமின்ஸ் தனது 2ஆவது தொடர்ச்சியான ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்து வரலாறு படைத்தார். முன்னைய ஹெட் - ட்ரிக்கைப் போன்றே இந்த ஹெட் - ட்ரிக்கையும் அவர் இரண்டு ஓவர்களில் பதிவுசெய்தார். பெட் கமின்ஸ் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்பா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் க்ளென் மெக்ஸ்வெல் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 106 ஓட்டங்களாக இருந்தபோது மெக்ஸ்வெல் 6ஆவதாக ஆட்டம் இழந்ததும் அவுஸ்திரேலியாவின் எதிர்பார்ப்பு தகர்ந்தது. இறுதியில் அவுஸ்திரேலியா 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் குல்பாதின் நய்ப் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச ரி20 போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். ஆரம்ப பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கும் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: குல்பாதின் நய்ப். https://www.virakesari.lk/article/186743
  20. கொழும்பிற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் சாசெட் : இலங்கை கடற்படைக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதிரிப்பாகங்களை வழங்கியது! 23 JUN, 2024 | 07:53 AM இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பலான சாசெட் இரண்டு நாள் பயணமாக கடந்த 19 ஆம் திகதியன்று கொழும்பை வந்தடைந்த நிலையில் இலங்கையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மீண்டும் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய உதிரி பாகங்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பலான சுரக்ஷாவிற்கு இலவசமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய கடலோரக் காவல்படையின் கட்டளை அதிகாரி, பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.ராஜேஷ் நம்பிராஜ், இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டி.எஸ்.கே.பெரேரா மற்றும் இலங்கை கரையோர கடற்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான ஆகியோரை சந்தித்தார். இதன்போது இந்திய கடலோர காவல்படை கப்பலில் கொண்டுவரப்பட்ட உதிரிப் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டிஎஸ்கே பெரேரா, இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான மற்றும் மூத்த இலங்கை கடலோர காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர். எஸ்.எல்.சி.ஜி.எஸ் சுரக்ஷா கப்பலானது கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு கடல் ரோந்துக் கப்பலாகும். முன்னதாக ஜூன் 2021 மற்றும் ஏப்ரல் 2022 இல் இந்தியா சுரக்ஷா கப்பலுக்கான உதிரி பாகங்களை நன்கொடையாக வழங்கியது. ஜனவரி 2024 இல் ஹாலோன் சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கான உதவியையும் வழங்கியது. இந்த செயற்பாடானது, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடையாளப்படுத்துகிறது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்திய கடலோர காவல்படையின் சமர்த் மற்றும் அபினவ் ஆகிய கப்பல்கள் காலி மற்றும் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தன. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்வது இரு நாடுகளுக்கிடையே நட்புறவு மற்றும் இயங்குநிலையை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கோட்பாடு மற்றும் அயலவருக்கு முதலிடம் என்ற கொள்கைக்கு இணங்க இந்திய கடற்படைகள் மற்றும் கடலோரக் காவல்படை கப்பல்களின் விஜயங்கள் அமைந்துள்ளன. https://www.virakesari.lk/article/186737
  21. பிரதான கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்குவது உறுதி : மூடிய அறைக்குள் ஜெய்சங்கரிடம் கூறிய ரணில் - புதன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் ஜனாதிபதி 23 JUN, 2024 | 07:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் கூட்டணியில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும், தேர்தல் குறித்த அறிவிப்புக்கு பின்னர் மேலும் சாதகமான பல மாற்றங்கள் தேசிய அரசியலில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பிரத்தியேக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்த உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார சாதக தன்மைகள் குறித்து தெளிவுப்படுத்த உள்ளார். இதன் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் பெரும்பாலும் கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை டெல்லியில் சந்தித்து வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று முதலாவது விஜயமாக கடந்த வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியின் விசேட செய்தியுடனேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்தார். இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை இராஜதந்திர வழிமுறைகளுக்கு அமைய சந்தித்து கலந்துரையாடினார். இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில், இரு தரப்பு கலந்துரையாடலுக்கு அப்பால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கிடையில் மாத்திரம் பிரத்தியேகமான விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதன் போது உத்தேச தேர்தல்கள் மற்றும் நாட்டின் அரசியல் - பொருளாதார ஸ்தீரதன்மைக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தேச ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் கூட்டணியின் முன்னேற்றங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வினாவியுள்ளார். பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குறிய வகையில் வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளன. அந்த கூட்டணியில் பொது வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் குறிப்பிட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்புடன், மேலும் சாதகமான பல மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார். இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பினை விடுக்க உள்ளார். இந்த அறிவிப்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னெடுப்புகளில் உள்ள பன்னாட்டு கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளமையை அறிவிக்க உள்ளார். இலங்கையின் கடன் மேலாண்மை வசதிகளில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை அரசாங்கம் கோரியுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முழுமையான ஒத்துழைப்புகளுக்கு உறுதியளித்துள்ளன. குறிப்பாக சர்வதேச கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தம் இருநாட்களுக்குள் கைச்சாத்திடப்பட உள்ளது. இந்த தகவலையும், இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் நாடு அடைந்த பொருளாதார வெற்றிகளையும் நாட்டு மக்களுக்கு கூறவுள்ள ஜனாதிபதி ரணில், ஜனாதிபதி தேர்தல் குறித்தும் தெரியப்படுத்த வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186736
  22. டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வென்றாலும் இந்தியாவை ஆட்டிப் படைக்கும் பலவீனம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் 5-வது முறையாக இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. ஆன்டிகுவாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றின் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வாய்ப்பை பயன்படுத்தும் ரிஷப் பந்த் முதலில் பேட் செய்த இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா 11 பந்துகளில் ஒரு சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 23 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நட்சத்திர வீரர் விராட் கோலியும் அதிரடி காட்டினார். 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 24 பந்துகளில் கோலி 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் சிறப்பாக பேட் செய்து வரும் ரிஷப் பந்த் இந்த முறையும் அசத்தினார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ரிஷப் பந்த் இந்தத் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட 3வது இடத்தை சிறப்பாகச் செய்து வருகிறார். இந்திய அணி சரிவில் சிக்கியபோதெல்லாம் விக்கெட்டுகளை காப்பாற்றி ஸ்கோரை உயர்த்துவதில் ரிஷப் பந்த் பேட்டிங் பாராட்டுக்குரியது. இந்த ஆட்டத்திலும் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் என்றிருந்த இந்திய அணி, அடுத்த 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எனத் தடுமாறியது. அந்த நேரத்தில் துபே, ரிஷப் பந்த் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவிலிருந்து அணியைத் தடுத்து ஸ்கோர் செய்தனர். ஆன்டிகுவா ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளம் இல்லை, பந்து பேட்டரை நோக்கி மெதுவாகத்தான் வரும். ஆனால், நிதானமாக ஆடித்தான் ரன்களை சேர்க்க வேண்டிய நிலையில் அதை ரிஷப் பந்த் சிறப்பாகச் செய்தார். வங்கதேச பந்துவீச்சாளர்கள் வீசும் மோசமான பந்துகளை அவ்வப்போது சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் அனுப்பி ரிஷப் பந்த் ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்று, 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்திக்கின் அசத்தல் அரைசதம் ஹர்திக் பாண்டியா களமிறங்கிய போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களுடன் போராடியது. நிதானமாகத் தொடங்கிய பாண்டியா 7 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் அதிரடிக்கு மாறிய பாண்டியா, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். நீண்ட நாட்களுக்குப்பின் ஹர்திக் பாண்டியா பாராட்டக்கூடிய வகையில் அரைசதம் அடித்துள்ளார். வங்கதேச வீரர்கள் வீசிய யார்க்கர் பந்துகளைக் கூட பாண்டியா தனது வலிமையால் பவுண்டரிகளாக மாற்றினார். மெஹதி ஹசன் வீசிய 15-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என பாண்டியா 15 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபேயும் தனது பங்கிற்கு அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார். ரிசாத் ஹூசைன் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடித்த துபே 34 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதே ஓவரில் ஹர்திக்கும் ஒரு சிக்ஸர் விளாசினார். சகில் அல்ஹசன் வீசிய 19வது ஓவரில் சிக்ஸர், முஸ்தபிசுர் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள் என ஹர்திக் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்திக் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக 3 முறை மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். அதிலும் சமீபத்தில் 2022 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 33 பந்துகளில் 63 ரன்களை ஹர்திக் சேர்த்தும் இந்திய அணி தோல்வி அடைந்தது. அடுத்ததாக மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 30 பந்துகளில் 71 ரன்களை பாண்டியா விளாசி இருந்தார். 2022ல் சவுத்தாம்டனில் இங்கிலாந்துக்கு எதிராக பாண்டியாவின் 33 பந்துகளில் 51 ரன்கள் அரைசதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த 3 அரைசதத்துக்குப்பின் நேற்று ஹர்திக் 4வது அரைசதத்தை அடித்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள ஹர்திக் ஒரு அரைசதம் உள்பட 89 ரன்கள் சேர்த்துள்ளார், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஃபார்முக்கு வந்துவிட்டால் இந்திய அணிக்கு வலுவான, தடுக்கமுடியாத ஆயுதமாக மாறிவிடுவார். வங்கதேச கேப்டன் ஷாண்டோ டாஸ் வென்ற இந்த விக்கெட்டைப் பார்த்துவிட்டு 160 ரன்கள் சேர்த்தாலே நல்ல ஸ்கோர் என்று கூறியிருந்தார். ஆனால், அதே விக்கெட்டில் இந்திய அணி 196 ரன்கள் சேர்த்தமைக்கு ஹர்திக்கின் பங்களிப்பு மிக முக்கியக் காரணமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேச அணியின் பேட்டிங் மோசம் வங்கதேச தொடக்க பேட்டர்கள் இதுவரை இந்த டி20 போட்டிகளில் 13 ரன்களுக்கு மேல் நிலைத்திருக்கவில்லை. இந்த முறைதான் 35 ரன்கள்வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தமிம் ஹசன் மட்டும் 5 இன்னிங்ஸில் இருமுறை டக்அவுட் ஆகியிருந்தார். இந்த முறை 29 ரன்கள் வரை தாக்குப்பிடித்து குல்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவுக்குள் லிட்டன் தாஸ் 13 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.பாண்டியா வீசிய ஸ்லோ பாலில் மிட்விக்கெட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து தாஸ் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்த வங்கதேசம் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. பவர்ப்ளே ஓவர்கள் முடிந்தபின் குல்தீப், அக்ஸர் படேல், ஜடேஜா என மும்முனைத் தாக்குதலில் வங்கதேச பேட்டர்களால் ரன் சேர்க்கமுடியவில்லை. குறிப்பாக குல்தீப் யாதவின் ரிஸ்ட் ஸ்பின்னை பேட் செய்வது வங்கதேச பேட்டர்களுக்கு கடினமாக இருந்தது. குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சில் சிக்கிய பேட்டர்கள் மீளவில்லை. ஹிர்தாய் 4 ரன்னில் குல்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அனுபவ வீரர் சஹிப் அல் ஹசன் வந்தவேகத்தில் சிக்ஸர், பவுண்டரி அடித்து குல்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவுக்கு கைகொடுத்த ஹர்திக், குல்தீப் ஆன்டிகுவா ஸ்லோ விக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஹர்திக் பாண்டியாவின் குறிப்பிடத்தகுந்த அரைசதமும், குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. அதிலும் தேவைப்படும் நேரத்தில் அரைசதம் அடித்து 27 பந்துகளில் 50 ரன்களுடன்(3சிக்ஸர்,4பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை நிரூபித்துள்ளார். பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு தொடர்வதால் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்துவீச்சில் குல்தீப், பும்ரா இருவருமே மிகுந்த கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். இருவரும் 8 ஓவர்கள் வீசிய நிலையில் 26 டாட் பந்துகளை ஏறக்குறைய 4.2 ஓவர்களை டாட் பந்துகளாக வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES அரைசதம், சதம் தேவையில்லை வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ எங்களிடம் இருந்து எதை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ளோம் அதை வெளிப்படுத்தினோம். தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். சூழலை ஏற்றுக்கொண்டு காற்றின் வேகம், திசைக்கு ஏற்றார்போல் எங்கள் ஆட்டத்தை மாற்றிக்கொண்டோம். அனைத்து 8 பேட்டர்களும் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். எங்களின் டாப் ஸ்கோர் 50 ரன்கள்தான், ஆனாலும் 196 ரன்கள் சேர்த்துள்ளோம். டி20 போட்டிகளைப் பொருத்தவரை பெரிதாக அரைசதம், சதங்கள் தேவையில்லை. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தாலே போதும். அப்படித்தான் எங்கள் ஆட்டமும் இருந்தது. ஹர்திக் ஆட்டம் சிறப்பாக இருந்தது, ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டுவர அவரின் பேட்டிங் உதவியது. அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அதை சிறப்பாக செய்துவிட்டார். ஹர்திக் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டர்கள் மீது குற்றச்சாட்டு தோல்விக்குப் பின் வங்கதேச கேப்டன் ஷாண்டோ கூறுகையில் “ 160 முதல் 170 ரன்களுக்குள் சுருட்டிவிடுவோம் என நினைத்தோம் இந்த ஸ்கோரை எங்களால் சேஸிங்கும் செய்ய முடியும். ஆனால், இந்திய அணி பேட் செய்தவிதம் அருமையாக இருந்தது. காற்றின் வேகம், திசையைக் கணித்து ஷாட்களை ஆடினர் என நினைக்கிறேன். எங்களிடம் நல்ல பேட்டர்கள் பலர் இருந்தும் யாரும் முழு உறுதியுடன் பேட் செய்யவில்லை, தேவைப்படும் நேரத்தில் ஆடவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் பங்களிப்பு செய்ய முயல்கிறேன். தன்ஷிம் சஹிப் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பந்துவீசி வருகிறார். ரிஷத் சிறந்த லெக் ஸ்பின்னர் என்பதை நிரூபித்துள்ளார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா? இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் 2.425 என வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்று 2 புள்ளிகளுடன் 2.471 என இந்தியாவை விட வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வென்றால், 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் இந்தியாவை முந்தி முதலிடத்தைப் பிடித்துவிடும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணிகளைப் பொருத்துதான் குரூப்-1 பிரிவில் எந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும், அரையிறுதியில் எந்த அணியுடன் மோதும் என்பது தெரியவரும். இன்று நடக்கும் சூப்பர்-8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்டால், குரூப்-1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகள் அரையிறுதிக்குள் செல்லும். ஒருவேளை ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா தோற்றால்தான் அனைத்துக் கணிப்புகளும் மாறக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவை ஆட்டிப் படைக்கும் பலவீனம் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இதுவரை விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா பெரிய ஸ்கோர் ஏதும் அடிக்கவில்லை. அமெரிக்காவில் நடந்த ஆட்டங்களில் ரோஹித் மட்டுமே ஒரு ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தார், ஆனால், இதுவரை கோலியிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. இருவரும் இந்திய அணிக்காக பல ஆட்டங்களை வென்றுகொடுத்திருந்தாலும், ஆனால், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இருவரும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடுவதில் இருவருக்கும் இடையே குழப்பம் நீடிக்கிறது. மிட்விக்கெட்டில் தட்டிவிட்டால் ரன் எடுக்கலாமா என பலமுறை ரோஹித் யோசித்தார். பலமுறை இருவரும் குழப்பத்துடனே ரன் ஓடலாமா வேண்டாமா என்று யோசித்தே ஓடினர். தொடக்க வீரர்கள் வலிமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால்தான், நடுவரிசை பேட்டர்களுக்கு அழுத்தம் இல்லாமல் சுதந்திரமான மனநிலையில் பேட் செய்ய முடியும். ஆனால், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணியின் தொடக்க கூட்டணி பெரிதாக வலுவான அடித்தளத்தை அமைக்கவில்லை. இதனால் நடுவரிசை பேட்டர்களின் பங்களிப்போடுதான் ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்று வருகிறது. ரோஹித், கோலி இருவரில் யார் ஃபார்மில் இல்லை என்பது தெரியாமல் ஒவ்வொரு போட்டியிலும் மாறி, மாறி விரைவாக ஆட்டமிழந்து வருவது அணிக்கு ஒரு பெரிய பலவீனமாகும். கோலியிடமிருந்தோ, ரோஹித்திடமிருந்த இதுவரை “மேட்ச்வின்னிங் இன்னிங்ஸ்” வெளிப்படவில்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாகும். இன்னும் ஒரு சூப்பர்-8 ஆட்டம், அரையிறுதி இருப்பதால், இருவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் உறுதியாக வெளிப்படும் என்று நம்பலாம். https://www.bbc.com/tamil/articles/cv22dmg68vro
  23. இந்திய கோடீஸ்வர குடும்பத்தினருக்கு சுவிட்சர்லாந்தில் 4 ஆண்டு சிறைத் தண்டனை - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இமோஜென் ஃபாக்ஸ் பதவி, பிபிசி ஜெனிவா 22 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வீட்டுப் பணியாளர்களை கொடுமைபடுத்திய குற்றத்திற்காக பிரிட்டனில் வசித்து வரும் பணக்கார 'ஹிந்துஜா’ குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'ஹிந்துஜா’ குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள தங்களுடைய வீட்டில் பணிபுரிய சில பணியாளர்களை இந்தியாவில் இருந்து அழைத்து வந்துள்ளனர். பிரகாஷ் ஹிந்துஜா, கமல் ஹிந்துஜா, மற்றும் அவர்களது மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சட்டவிரோதமாகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது மற்றும் சுரண்டலில் ஈடுபட்டதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அவர் நான்கு முதல் நான்கரை ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இருப்பினும், ஆள்கடத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஹிந்துஜா குடும்பத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவரது வழக்கறிஞர் ராபர்ட் அசெல், "இது அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் இறுதிவரை போராடுவோம்," என்றார். ஹிந்துஜா குடும்பம் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்ததற்கு ஏழு பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.740) மட்டுமே வழங்கியதாகக் குற்றம் சாட்டினார் இந்தியாவிலிருந்து அவரால் அழைத்துச்செல்லப்பட்ட மூன்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுவிஸ் சட்டத்தின்படி, ஊழியர்களுக்கு இதற்கு குறைந்தபட்சம் 70 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7400) வரை வழங்கி இருக்க வேண்டும். தங்களது பாஸ்போர்டைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு, சுதந்திரமாக நடமாடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நீதிமன்றத்தில் விசாரணைக்கு செல்லும் ஹிந்துஜா குடும்பம் பணியாளர்களை விட நாய்களுக்கு அதிகம் செலவிட்டனர் ஜெனிவாவில் உள்ள ஒரு வீட்டில் ஊழியர்களைச் சுரண்டி வேலை வாங்குவது தொடர்பாக ஹிந்துஜா குடும்பத்திற்கெதிராக விசாரணை தொடங்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த குடும்பத்தை சுவிஸ் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. 47 பில்லியன் டாலர் (சுமார் 4 லட்சம் கோடி இந்திய ரூபாய்) வணிக மதிப்பு கொண்ட கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தைக் கொண்ட ஒரு குடும்பம், தங்கள் வேலையாட்களை விட அவர்களின் நாய்க்கு அதிக பணத்தைச் செலவழிப்பதாக வழக்குத் தொடரப்பட்டது. ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கையின்படி, அரசாங்க வழக்கறிஞர் யவ்ஸ் பெர்டோசா, நீதிமன்றத்தில், "ஹிந்துஜா குடும்பத்தினர் ஒரு பணியாளரை விட தங்கள் நாய்க்கு அதிகம் செலவழித்துள்ளனர்," என்று கூறினார். அந்த வீட்டில் ஒரு முதிர் பணிப்பெண் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்துள்ளார். அதற்கு அவருக்கு கொடுக்கப்படும் ஊதியம் வெறும் $7.84 (ரூ.655.13) தான். அதே நேரத்தில் அந்த குடும்பம் தங்கள் நாய்க்கான உணவு மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு $10,000 (ரூ.8,35,629.50) செலவழித்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன. பல வேலையாட்கள் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும், அவர்களது சம்பளமும் இந்திய ரூபாயில் தான் இருக்கும் என்றும் பிராங்க் நாணய மதிப்பில் கொடுக்கப்படுவதில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார். ஹிந்துஜா குடும்பத்தினர் தரப்பு வீட்டில் வேலைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு போதிய வசதிகளைச் செய்து கொடுத்ததாகவும், அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,10 டவுனிங் தெருவுக்கு அருகில் அமைந்திருக்கும் ஹிந்துஜா குழுமத்தின் ஹோட்டல் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பிபிசி ஜெனிவா செய்தியாளர் இமோஜென் ஃபாக்ஸ் (Imogen Fox) அறிக்கையின்படி, 'குறைந்த சம்பளம்’ என்ற குற்றச்சாட்டை ஹிந்துஜா குடும்பத்தின் வழக்கறிஞர்கள் மறுக்கவில்லை, ஆனால் பணியாட்கள் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டு கெளரவத்துடன் நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர். "சம்பளத்தை குறைக்கக் கூடாது," என்று வழக்கறிஞர் யேல் ஹயாத் கூறினார். பணியாட்களிடம் நீண்ட நேரம் வேலை வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் மறுக்கப்பட்டன, அதில் குழந்தைகளுடன் திரைப்படங்களைப் பார்ப்பதை வேலையாகக் கருத முடியாது என்று ஒரு வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், "பாதிக்கப்பட்டோம் எனக் கூறும் பலர் ஹிந்துஜா குடும்பத்திற்காக பல சந்தர்ப்பங்களில் பணிபுரிந்துள்ளனர். பணிச்சூழலில் அனைவரும் திருப்தி அடைந்திருப்பதை இது காட்டுகிறது," என்றனர். அக்குடும்பத்துக்காக வாதாடிய வழக்கறிஞர்கள், குடும்பத்திற்காக முன்பு பணியாற்றிய பலரையும் சாட்சியாக அழைத்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஹிந்துஜா குடும்பத்தை நன்னடத்தை கொண்டவர்கள் என்றும், அவர்கள் தங்கள் வேலையாட்களை மரியாதையுடன் நடத்தியதாகவும் தெரிவித்தனர். ஹிந்துஜா குடும்பத்தின் வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச கவனம் பெற்றுள்ள ஹிந்துஜா குடும்பம் இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட ஹிந்துஜா குடும்பம், அதே பெயரில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறது. கட்டுமானம், ஆடை, ஆட்டோமொபைல், எண்ணெய், வங்கி மற்றும் நிதி போன்ற துறைகளில் ஹிந்துஜா குழுமம் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஹிந்துஜா குழுமத்தின் நிறுவனர் பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜா, சுதந்திர இந்தியாவில் நன்கு அறியப்பட்ட சிந்தி நகரமான ஷிகர்பூரில் பிறந்தார். 1914-இல், அவர் இந்தியாவின் வர்த்தக மற்றும் நிதியின் தலைநகரான பம்பாய்க்கு (இப்போது மும்பை) பயணம் செய்தார். ஹிந்துஜா குழுமத்தின் இணையதளத் தகவலின்படி, அவர் அங்குள்ள வணிகத்தின் நுணுக்கங்களை விரைவாகக் கற்றுக்கொண்டார். சிந்துவில் தொடங்கிய அவரது வணிகப் பயணம் 1919-இல் இரானில் ஒரு அலுவலகத்தைத் தொடங்கி சர்வதேச அரங்கில் நுழைந்தார். குழுவின் தலைமையகம் 1979 வரை இரானில் இயங்கியது. அதன் பிறகு ஐரோப்பாவிற்கு மாற்றப்பட்டது. ஆரம்ப ஆண்டுகளில், ஹிந்துஜா குழுமத்தின் செயல்பாடுகளின் இரண்டு முக்கிய அடித்தளங்களாக வணிக வங்கி மற்றும் வர்த்தகம் செயல்பட்டன. ஹிந்துஜா குழும நிறுவனர் பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜாவின் மூன்று மகன்கள் -- ஸ்ரீசந்த், கோபிசந்த் மற்றும் பிரகாஷ் ஆகியோர் செயல்பாடுகளைக் கையிலெடுத்து, நிறுவனத்தை வெளிநாடுகளில் விரிவுபடுத்தினர். 2023-ஆம் ஆண்டில் ஸ்ரீசந்த் ஹிந்துஜாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது இளைய சகோதரர் கோபிசந்த் அவருக்குப் பதிலாக குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார். சுவிட்சர்லாந்தில் மனித கடத்தல் (human trafficking) வழக்கை எதிர்கொண்டிருந்த பிரகாஷ், மொனாக்கோவில் தேக்கமடைந்த ஒரு வணிகத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார். ஹிந்துஜா குடும்பம் பிரிட்டனில் பல மதிப்புமிக்க சொத்துக்களை வாங்கியுள்ளது. சகோதரர்களுக்கிடையே பிரச்னை ஹிந்துஜா குழுமம் செப்டம்பர் 2023-இல் லண்டனின் ஓல்ட் வார் அலுவலகமான வைட்ஹாலில் ராஃபிள்ஸ் (Raffles) ஹோட்டலைக் கட்டியது. இது முன்னர் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகமாக இருந்தது. இந்த ஹோட்டலின் தனித்துவமான அம்சம், இது கிரேட் பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் குழு கார்ல்டன் ஹவுஸின் மாடியில் ஒரு தளத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. அதில் பல அலுவலகங்கள், குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. தவிர, இது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களில் 2 லட்சம் பேர் பணிபுரிவதாக ஹிந்துஜா குழுமம் கூறுகிறது. ஜூன் 2020-இல் பிரிட்டன் நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாக்குமூலத்தின்படி, ஹிந்துஜா சகோதரர்களுக்கு இடையேயான உறவில் சில சிக்கல்கள் இருந்தது. சகோதரர்களில் மூத்தவரான ஸ்ரீசந்த், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள வங்கியின் உரிமையைப் பெறுவதற்காக தனது இளைய சகோதரருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன. ஜெனிவாவின் இருண்ட பக்கம் பட மூலாதாரம்,MEDIA உலக பணக்காரர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் மையமாக இருக்கும் ஜெனிவாவில் பணியாட்களை கொடுமைப்படுத்துவதாக பதிவு செய்யப்படுவது இது முதல் வழக்கு அல்ல. 2008-இல், லிபிய முன்னாள் சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன் ஹன்னிபால் கடாபியும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து அல்பைன் நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஹன்னிபால் கடாபியும் அவரது மனைவியும் தங்கள் வேலைக்காரரை அடித்து கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கு முடிக்கப்பட்டது, ஆனால் இதன் காரணமாக லிபியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் ராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டது, பழி வாங்கும் விதமான இரண்டு சுவிஸ் குடிமக்கள் திரிபோலியில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. கடந்த ஆண்டு, நான்கு பிலிப்பைன்ஸ் பணியாளர்கள், பல ஆண்டுகளாக தங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். https://www.bbc.com/tamil/articles/cv2261851glo
  24. 'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்தாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வாழும் ஒருவரின் இன்றைய வாழ்க்கை தொடர்பாக பிபிசி தமிழ் ஆராய்கின்றது. ''தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையைத் தவிர, ஏனைய அனைத்து கொள்கைகளையும் நான் இன்றும் பின்தொடர்ந்து வருகின்றேன்," என, முல்லைத்தீவைச் சேர்ந்த இராமலிங்கம் சத்தியசீலன் தெரிவிக்கின்றார். முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பகுதியில் வாழும் ராமலிங்கம் சத்தியசீலன், அந்தப் பகுதியில் பிரபல வர்த்தகராக விளங்கி வருகின்றார். இரும்பு வியாபாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது வர்த்தகத்தை வியாபித்துள்ள சத்தியசீலன், உள்நாட்டுப் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவராவார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சத்தியசீலன் வாழ்ந்தாலும், ஆயுதப் போராட்டத்தில் தான் ஈடுபடவில்லை எனக் கூறுகின்றார். ''போர் முடிவடைந்து முகாமிலிருந்து வெளியில் வரும் போது 300 ரூபாயுடன் வந்தேன். ஆனால் இன்று வியாபாரத்தில் சிறந்து விளங்குகின்றேன்," என அவர் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுக்க முயன்ற தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையைத் தனது வாழ்க்கையில் இன்றும் பின்பற்றி வருவதாகக் கூறுகிறார் சத்தியசீலன். தமது குடும்பத்திற்கான உணவு வகைகளை தானே விவசாயம் செய்வதுடன், அதனூடாகத் தனது அன்றாட உணவுத் தேவையை சத்தியசீலன் நிறைவு செய்கின்றார். உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் அமைப்பு ''1992 அல்லது 93-ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளில், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வந்தது. அந்நிறுவனமானது, 90-களுக்குப் பின்னர் என நினைக்கின்றேன், இலங்கை அரசாங்கத்தினால் வடக்குப் பகுதிக்கு அனைத்து விதமான பொருட்களும் மட்டுப்படுத்தப்பட்டு தான் விடுவித்துக் கொண்டிருந்தார்கள்,” என்கிறார் சத்தியசீலன். "அதனுடைய தடைகளை உடைக்க வேண்டும் என்று சொல்லி தமிழீழ விடுதலைப் புலிகளில், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினால் பொருண்மியம் சார்ந்த உள்ளுர் உற்பத்திகளை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டிருந்தது,” என்கிறார். "அந்தக் கட்டமைப்பின் ஊடாக வீடு வீடாக ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன. அதன்போது, நான் அவர்களுடன் சேர்ந்த இந்தப் பிரதேசத்தில் நான் வேலை செய்தேன். இதில் எங்களுடைய காணியொன்று இருக்கின்றது. அதில் நானும் அம்மாவும் சேர்ந்து காணியை துப்பரவு செய்தோம்," என்றார். வாசிப்பில் ஈடுபாடு மேலும் பேசிய சத்தியசீலன், "எங்களுக்கு அப்போது சரியான கஷ்டம். இந்த திட்டத்தில் ஊக்கமளிக்கப்பட்டவன் என்ற விதத்தில் அம்மாவை ஊக்கப்படுத்தி, அந்தக் காணியில் உளுந்து விதைத்தோம். உளுந்து மட்டுமல்ல எல்லா விதமான தானியங்களையும் விதைத்தோம். அந்த வருடத்தின் பின்னர் தான் மூன்று நேரமும் தானியங்களை அவித்துச் சாப்பிட்டோம். 1995-ஆம் ஆண்டுக்கு பிறகு தான் எங்களால் போஷாக்கான மனிதர்களாக உருவெடுக்க முடிந்தது," என அவர் குறிப்பிடுகின்றார். அன்று முதல் தொடர்ந்து இன்று வரை பொருண்மிய மேம்பாட்டுக் கொள்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறுகின்றார். விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட சுதந்திரப் பறவைகள், விடுதலைப் புலிகள், ஈழநாதம் போன்ற பத்திரிகைகளில் பொருண்மியம் சார்ந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டதாகவும், அந்தக் கட்டுரைகளை தான் தேடிச் சென்று வாசித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 'ஆயுதப் போராட்டத்தைப் பின்பற்றவில்லை' தொடர்ந்து பேசிய சத்தியசீலன், ''விடுதலைப் புலிகள் அமைப்பில் பல கட்டமைப்புக்கள் இருந்தன. நீதி நிர்வாகத்துறை, தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ நிர்வாகச் சேவை, என எத்தனையோ சேவைகள் இருந்தன. அந்த அனைத்துக் கட்டமைப்புக்களும் எனது மனதில் பதியப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்று ஒன்று விளங்கியது. அதன்மூலம் இந்தப் பிரதேசம் முழுவதும் தேக்கு மரங்களை நட்டார்கள். அப்போது எங்களுக்கு 100 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. அந்தத் தேக்கு மரங்களை தான் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள்,” என்றார் அவர். அதேபோன்று, கடந்த ஆண்டு தான் 1,500 தேக்கு மரங்களை நட்டதாகக் கூறும் அவர், இப்போது ஒரு மரத்தை நடுவதற்கு 100 ரூபாய் ஆகும் என்றும் கூறினார். “20 வருடம் அந்த தேக்கு மரம் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியாகும். அப்படியென்றால், 1,500 மரங்களுக்கு எவ்வளவு வருமானம். அதேபோன்று, எங்களுடைய காணிகள் சோலைகளாகக் காட்சியளிக்கும். பனை மரங்களை நட்டுள்ளேன். 400 தென்னை நட்டுள்ளேன். வாழை நட்டுள்ளேன்,” என்கிறார், சத்தியசீலன். மேலும் பேசிய அவர், “தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் பசுப்பால் உற்பத்தி என்று சொல்லி ஒரு பிரிவு இருந்தது. அதை மனதில் கொண்டு மூன்று மாடுகளை 9,000 ரூபாய்க்கு வாங்கினேன். 12 வருடங்களில் இன்று என்னிடம் 65 மாடுகள் வைத்திருக்கின்றேன். சகக் கட்டமைப்புகளையும் நான் சமநேரத்தில் உருவாக்கி வருகின்றேன்," என அவர் கூறுகின்றார். 'இதுவரை ஒரு சினிமா படம் கூட பார்த்ததில்லை' தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, தனது வாழ்க்கையில் ஒரு சினிமா படத்தைக்கூட இன்று வரை பார்த்ததில்லை என முல்லைத்தீவைச் சேர்ந்த சத்தியசீலன் தெரிவிக்கின்றார். ''நான் பிறந்ததில் இருந்து ஒரு படம் கூடப் பார்த்ததில்லை. நீண்ட காலமாக அந்த நிர்வாகத்திற்குள்ளே பின்னிப் பிணைந்திருந்தோம். அவர்களது நிர்வாகத்தைப் பார்த்துப் பார்த்து, இதுவரை நான் ஒரு சினிமா படம் கூட பார்த்ததில்லை. இனியும் பார்க்கப் போவதும் இல்லை,” என்கிறார். மேலும், “எங்களுடைய வீட்டில் ஒரு தொலைக்காட்சி கூட இல்லை. நான் பிள்ளைகளுக்குச் போனில் செய்திகளை மாத்திரம் பார்க்கச் சொல்வேன். வரலாறுகளை போனில் காட்டுவேன்," என சத்தியசீலன் குறிப்பிடுகின்றார். தான் இறுதி வரை இதே கொள்கையைப் பின்பற்றி வாழப் போவதாக ராமலிங்கம் சத்தியசீலன் குறிப்பிடுகின்றார். https://www.bbc.com/tamil/articles/cx003lzwyxeo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.