Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சௌரப் நேத்ரவால்கர்: சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை சுருட்டிய மும்பை வீரர் - இந்தியாவுக்குப் பதிலாக அமெரிக்க அணியில் ஆடுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி செய்தியாளர் 7 ஜூன் 2024, 04:33 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் அனுபவமில்லாத அமெரிக்க அணியுடன் தோல்வியைத் தழுவியிருக்கிறது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் உள்ள புள்ளிப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வெற்றியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சௌரப் நேத்ரவால்கர் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வெற்றி பெறவிடாமல் சுருட்டினார். அவர் அமெரிக்க அணியில் இடம்பெற்ற கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. மும்பையைச் சேர்ந்த சௌரப், ஒரு காலத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் (Under-19) இடம் பிடித்திருந்தார். அதன்பிறகு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றபோது தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அதேநேரம் கிரிக்கெட் மீதான அவரது காதல் அப்படியே இருந்தது. அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் போதுகூட, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இறுதியில், அவருக்கு ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான கதவுகள் திறக்கப்பட்டது. மும்பை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சௌரப் தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடுவது அவரின் கிரிக்கெட் மீதான காதல் மற்றும் ஆர்வத்திற்குக் கிடைத்த வெகுமதி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் சௌரப் எப்படி விளையாடினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2015இல், செளரப் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். செளரப் 1991ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மலாட்டில் வளர்ந்த அவர் 10 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டார். கடந்த 2008-09 காலக்கட்டத்தில் முதல் முறையாக அவரது பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹார் கோப்பை (Cooch Behar Trophy) கிரிக்கெட் போட்டியில் ஆறு போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தக் காலக்கட்டத்தில் மும்பையில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனவே ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்திய நிகழ்வு, அங்கு உடனடியாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. சௌரப், உயரமான மற்றும் ஒல்லியான இடதுகை பந்துவீச்சாளர் என்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு 2010இல் தென்னாப்பிரிக்காவில் நடந்த முத்தரப்பு தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய சௌரப், நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES அப்போது, சௌரப் உடன், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றிருந்தனர். அதன் பிறகு இவர்கள் மூவரும் இந்திய அணியில் இடம்பிடித்தனர். ஆனால் சௌரப்பால் அது முடியவில்லை. செளரப் கிரிக்கெட் மட்டுமின்றி படிப்பிலும் ஆர்வம் காட்டினார். 2009-13இல் மும்பை சர்தார் படேல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் படிப்பை முடித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "2013இல் புனேவில் பொறியியல் துறை தொடர்பான வேலை கிடைத்தது. அதன் பிறகு குறைந்தது இரண்டு ஆண்டுகள் எந்தப் பணிக்கும் செல்லாமல் கிரிக்கெட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மும்பை அணியில் தேர்வாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆண்டு மும்பை ரஞ்சி அணியில் அறிமுகமானேன்," என்றார். சௌரப் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து முயன்ற போதிலும், கிரிக்கெட் அணியின் பிரதான 11 வீரர்களில் ஒருவராகத் தேர்வாகவில்லை. அப்போது அணியில் இடம் பிடிப்பதில் கடுமையான போட்டி நிலவியதால் அவரால் தனக்கான இடத்தைத் தக்க வைக்க முடியவில்லை. கிரிக்கெட் செயலி உருவாக்கிய செளரப் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை 22-23 வயதில்தான் தொடங்குகிறது. ஆனால் இந்த வயதில் செளரப் கிரிக்கெட்டில் இருந்து விலகும் முக்கிய முடிவை எடுத்தார். இதுகுறித்து சௌரப் பேசுகையில், "அந்த நேரத்தில் நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன். கிரிக்கெட்டை விட்டுவிட்டு படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டுமா என்ற சந்தேகத்தில் தவித்தேன்," என்கிறார். அந்த நேரத்தில் மும்பை ரஞ்சி அணியில் அவரது இடம் உறுதியாகவில்லை. மேலும் அவர் எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கும் வாய்ப்பில்லை. எனவே படிப்பில் கவனம் செலுத்த சௌரப் முடிவு செய்தார். செளரப் கூறுகையில் “2015இல், கிரிக்கெட்டுக்கு மாற்றாக நான் அமெரிக்காவில் முதுகலை நுழைவுத் தேர்வில் பங்கேற்றேன். என் சக பொறியியல் மாணவர்கள் பலர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்ததால் அவர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். முதுநிலைப் படிப்பிற்காக, கணினி அறிவியலுக்கான உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES செளரப் 2015ஆம் ஆண்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். பின்னர் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த நேரத்தில், செளரப் கிரிக்கெட் தொடர்பான ஒரு செயலியையும் உருவாக்கினார். அதன் பிறகு அவரது யோகா மற்றும் பாட்டு பாடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பிரபலமானது. அமெரிக்கா போன பிறகு கிரிக்கெட் விளையாட்டைத் தொடர முடியாது என்று நினைத்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை. "கல்லூரியில் சில மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட் விளையாடுவார்கள். அவர்கள் கல்லூரியில் கிரிக்கெட் கிளப்பை உருவாக்கினர். கல்லூரி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன" என்கிறார் சௌரப். ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை கிடைத்த பிறகு, சௌரப் கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஒவ்வொரு வார இறுதியிலும் கிளப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. சௌரப் ஐந்து நாட்கள் வேலை செய்யவும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் திட்டமிட்டிருந்தார். சௌரப் கூறுகையில், “அங்கு நடந்த போட்டிகள் இந்தியா அளவுக்கு இல்லை. இங்கு சாதாரண கிரிக்கெட் பிட்ச்கள்தான் இருந்தன். இன்றளவும் அப்படித்தான். இந்தியாவில் இருப்பது போல் சரியான மண் பிட்ச்கள் இங்கு இல்லை. இங்கு சின்தட்டிக் மேட் போன்ற ஆடுகளங்கள்தான் உள்ளன். இருப்பினும், லாஸ் ஏஞ்சல்ஸில் மும்பையைப் போலவே ஒரு பூங்காவில் மூன்று அல்லது நான்கு ஆடுகளங்கள் உள்ளன. அவை அனைத்தும் நல்ல பிட்ச்கள். நாங்கள் விளையாடுவதற்கு அங்குதான் செல்வோம்,” என்றார். கிரிக்கெட் விளையாட 6 மணிநேரம் பயணித்த செளரப் பட மூலாதாரம்,GETTY IMAGES லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஆறு மணிநேர பயண தூரத்தில் உள்ளது. எனவே செளரப் வெள்ளிக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு காரில் சென்று, சனிக்கிழமை அங்கு விளையாடிவிட்டு ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோவுக்கு திரும்புவது வழக்கம். “அந்த கிளப்பில் விளையாடும்போது என்னுடன் விளையாடியவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் அமெரிக்க அணியில் இருந்தனர். உண்மையில், அமெரிக்காவிலும் ஒரு கிரிக்கெட் அணி உள்ளது என்பதை அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்" என்கிறார் செளரப். இருப்பினும் சௌரப்புக்கு அமெரிக்க தேசிய அணிக்காக விளையாடும் நம்பிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. காரணம் அங்குள்ள அணிக்கான தேர்வு விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தன. அப்போதைய சூழல் குறித்து சௌரப் கூறுகையில், “ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராக இருக்க வேண்டும், நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். நான் அப்போது மாணவர் விசாவில் அங்கு தங்கியிருந்தேன், அதோடு பணி விசாவில் இருந்தேன். எனவே, அமெரிக்காவுக்காக விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தது. கிரிக்கெட் மீதிருந்த காதலால் நான் விளையாடினேன்,” என்றார். வருடங்கள் கடந்தன. ஐசிசி ஏழு வருடம் அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும் என்னும் விதியை மூன்று ஆண்டுகளாகக் குறைத்தது. பயிற்சிக்காக அமெரிக்க அணி லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தபோது, அங்குள்ள பயிற்சியாளர் செளரப்பின் ஆட்டத்தைக் கவனிக்கத் தொடங்கினார். மெல்ல மெல்ல அவருக்கு அமெரிக்க அணியின் கதவுகள் திறக்கத் தொடங்கியது. அதன் பின்னர் அவர் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் சர்வதேச லீக் டி20 ஆகியவற்றில் பங்கேற்றார். கிரிக்கெட் பிரபலமில்லாத நாட்டு அணிகளிலும் இடம் எளிதாகக் கிடைத்துவிடாது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செளரப் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் சர்வதேச லீக் டி20 ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். கிரிக்கெட்டில் எல்லாம் எளிதில் கிடைக்கும் என்றும் சிறிய அணிகளுக்கு விளையாடுவது சுலபம் என்றும் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இங்கும் பெரிய போராட்டம் நடக்கிறது என்கிறார் செளரப். “அசோசியேட் நாடுகளில் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினம். ஏனெனில் வசதிகள் மிகவும் குறைவாக இருக்கும். பல இடங்களில் பயிற்சிக்கான வசதிகளோ அல்லது சாதாரண ஆடுகளங்களோ இல்லை. நாங்கள் ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியேறி, இரவு ஏழு முதல் ஒன்பது வரை வீட்டிற்குள்ளேயே பயிற்சி செய்வோம். 2019இல், ஐசிசி அனைத்து அசோசியேட் உறுப்பினர்களுக்கும் டி20 சர்வதேச அணி அந்தஸ்தை வழங்கியது. 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்குள் நுழைந்ததன் மூலம் அமெரிக்கா தற்காலிக ODI அந்தஸ்தையும் பெற்றது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் கிரிக்கெட் வேகமாக விரிவடையப் போகிறது,” என்கிறார் சௌரப். அவர் மேலும் கூறுகையில், “நல்ல மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் அகாடமிகள் வடிவம் பெறுகின்றன, அவற்றில் இருந்து புதிய வீரர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர். எங்கள் ODI அணியில் ஆரம்பம் முதல் இங்கிருக்கும் சிலர் இருக்கிறார்கள். இங்கு 13-14 வயதுடைய வீரர்களும் உள்ளனர், அவர்களின் தரம் அடுத்த நான்கு-ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கும். சர்வதேச போட்டிக்கு அவர்களைத் தயார்படுத்துவது இங்கு அடுத்த சவாலாக உள்ளது,’’ என்றார். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உணர்வுப்பூர்வமான சவால் டி20 உலகக்கோப்பைக்கு முன், டி20 தொடரில் வங்கதேசத்தை அமெரிக்கா தோற்கடித்தது. அந்த வெற்றி தனது அணிக்குப் புதிய நம்பிக்கையை அளித்தது என்கிறார் சௌரப். தற்போது, கனடா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் மூலம் அந்த அணி சிறப்பான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. அடுத்ததாக ஜூன் 12ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும் என்று செளரப் கூறுகிறார். அவர் கூறுகையில், “நான் இந்தியாவுக்காக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடி இருக்கிறேன். ஒரு காலத்தில் என்னுடன் விளையாடிய பலர் இப்போது இந்திய அணியில் உள்ளனர். அவர்களை மீண்டும் சந்திக்கப் போவது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார். இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து செளரப் கூறுகையில், "டி20-இல் எதுவும் நடக்கலாம். நாங்கள் நேர்மறையாக இருக்கிறோம். அதே நேரம் அந்த ஒரு போட்டியைப் பற்றி மட்டும் மிகவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். https://www.bbc.com/tamil/articles/cd11ddd4pz3o
  2. ரோயல் பார்க் கொலையாளி சிங்கப்பூரில் இருக்கலாம் என சந்தேகம் - நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் Published By: RAJEEBAN 07 JUN, 2024 | 12:32 PM நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து ரோயல்பார்க் கொலையாளி டொன்சமந்த ஜூட் அன்டனி ஜெயமகவை வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். ரோயல்பார்க் கொலையாளி சிங்கப்பூரில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் நாடு கடத்தல் தொடர்பான உடன்படிக்கைகள் எதுவும் இல்லை என்பதால் குற்றவாளியை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படலாம். இருநாடுகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் மாத்திரமே நாடு கடத்தல் தொடர்பான உடன்படிக்கை சாத்தியமாகும் ,இலங்கை வேறு பல நாடுகளுடன் இவ்வாறான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. ரோயல்பார்க் கொலையாளி ஜெயமஹ 2019 நவம்பர் 15ம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறினார் என தெரிவித்துள்ள பொலிஸார் ஜனாதிபதி பொதுமன்னிப்பு நவம்பர் 13ம் திகதி வழங்கப்பட்டது அவர் உடனடியாக கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது வெளிநாட்டில் அனேகமாக சிங்கப்பூரில் இருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் குற்றவாளியை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச உதவியை பெறமுயல்வதாக தெரிவித்துள்ளனர். அவர் இலங்கையிலிருந்து உரிய முறைப்படி வெளியேறியுள்ளதால் அவர் தற்போது தேடப்படும் கைதி என தெரிவித்து அவரைநாடு கடத்த உதவுமாறு வேண்டுகோள் விடுக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/185521
  3. Published By: DIGITAL DESK 7 07 JUN, 2024 | 12:22 PM கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 64 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் இன்று வெள்ளிக்கிழமை (07) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் எஸ்.குமரவேல் மற்றும் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் த.காண்டீபன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களை கையளித்திருந்தார். மேலும், நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன, யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன், செந்தில்குமரன் நிவாரண நிறுவன ஸ்தாபகர்.டி.செந்தில்குமரன், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் போதனா மருத்துவமனையின் ஆலோசகர் வைத்தியர் ஆ.தங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி, இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களின் உதவியுடன் நாளாந்தம் 4 நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு சேவையை வழங்க முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. https://www.virakesari.lk/article/185517
  4. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இதனைத் தெரிவித்தார். இன்று மக்கள் ஓரளவுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், எமது பகுதிகளில் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அரசாங்கத்தின் பாரிய வேலைத் திட்டங்கள் நடந்து வருகின்றன. ஜனாதிபதி, வீழ்ச்சியடைந்திருந்த இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியுள்ளார். இதனால் பொருளாதார ரீதியில் நலிவடைந்த மக்களின் வாழ்வு சீராகி வருகிறது. அத்துடன், மக்களுக்கு காணி உரிமைகளையும் ஜனாதிபதி வழங்கி வருகிறார். 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் “ உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கு நேரடியாக வந்து, அந்த மக்களுக்கான முழு உரிமையுடைய காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 18000 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் சுமார் 10,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் சுமார் 12,000 பேருக்கும் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. காணிகளை துரிதமாக வழங்கும் பணிகளில் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதாக நாம் ஜனாதிபதியிடம் கூறியிருந்தோம். அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். மேலும், கைவிடப்பட்டுள்ள குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் சேதமடைந்துள்ள வீதிகளைப் புனமைக்கும் பணிகளும் எமது அமைச்சின் ஊடாக நடைபெற்று வருகின்றது. அதேபோன்று வாழ்வாதாரத்திற்கான ஆடுகள், தானியப் பயிர்ச்செய்கைக்கான விதைகள் போன்றவற்றை வழங்கும் வேலைத்திட்டமும் நடைபெற்று வருகின்றது. வெளிநாட்டு நிதிஉதவியுடன் கூடிய அபிவிருத்திப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. பொருளாதார நெருக்கடியின்போது இடைநடுவே கைவிடப்பட்ட சுமார் 15 கிலோமீற்றர் வீதியின் அபிவிருத்திப் பணியும் நடைபெற்று வருகிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கி அனைவரையும் ஒன்றிணைத்து இப்பணிகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார். மேலும், யுத்த காலப்பகுதியில் அடர்ந்த காடுகளாக அன்றி, வனப்பகுதியாக அடையாளமிடப்பட்ட, மக்கள் வாழ்ந்து வந்த காணிகளின் விடுவிப்பு பணிகளும் தற்போது படிப்படியாக நடைபெற்று வருகின்றது. தற்போது நாட்டின் பெரும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதேபோன்று எமது பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் குறித்தும் ஜனாதிபதியின் வடமகாண விஜயத்தின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக புத்தளம் இழவங்குளத்தின் ஊடாக செல்லும் மரிச்சுக்கட்டி – மன்னார் யாழ்ப்பாண வீதியை திறக்க வேண்டிய தேவையும் இருப்பதாக நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303281
  5. 07 JUN, 2024 | 10:56 AM மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (06) இரவு பெருந்தொகை பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு பின்புறமாக உள்ள வீட்டிலேயே இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் திருச்சடங்கில் கலந்துகொள்வதற்காக அவ்வீட்டில் வசிப்பவர்கள் வீட்டினை பூட்டி, சாவியை வீட்டினருகே ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், வீடு திரும்பியவர்கள், வீட்டின் படுக்கையறையில் இருந்த அலுமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் நான்கரை பவுண் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டதை பார்த்துள்ளனர். அத்தோடு, அங்கு பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி கமராவின் கார்ட் டிஸ்க்கும் களவாடப்பட்டிருந்தது. வீட்டின் மதில் மீதேறி, பாய்ந்து, மறைத்துவைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டினுள் புகுந்து, கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பக்தர்கள் ஆலயத்துக்கு சென்றுவரும் நேரங்களை அவதானிக்கப்பட்டே கொள்ளைக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185508
  6. இத்தால் சகலருமறிக அண்ணன் @goshan_che அவர்கள் அரசியலில் ஒரு __!, கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் __!!
  7. நமிபியாவை 5 விக்கெட்களால் வென்றது ஸ்கொட்லாந்து! 07 JUN, 2024 | 10:52 AM (நெவில் அன்தனி) பார்படோஸ், பிறிஜ்டவுனில் நடைபெற்ற (இலங்கை நேரப்படி இன்று காலை) பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண போட்டியில் நமிபியாவை 5 விக்கெட்களால் ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டது. சுமாரான மொத்த எண்ணிக்கை பெறப்பட்ட இப் போட்டியில் நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் ஸ்கொட்லாந்து 3 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை அடைந்துள்ளது அவுஸ்திரேலியா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கிறது. இது இவ்வாறிருக்க நமிபியாவுக்கு எதிராக முதல் தடவையாக வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து தரவரிசையில் நமிபியாவை முந்தியுள்ளது. இப் போட்டியின் இறுதியில் ஸ்கொட்லாந்து இலகுவாக வெற்றிபெற்ற போதிலும் முதல் 11 ஓவர்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 4 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (47 ஆ.இ.), மைக்கல் லீஸ்க் (17 பந்துகளில் 4 சிக்ஸ்களுடன் 35) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர். அவர்களைவிட மைக்கல் ஜோன்ஸ் 26 ஓட்டங்களையும் ப்றெண்டன் மெக்முலன் 19 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அணித் தலைவர் ஜேர்ஹாட் இரேஸ்மஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய நமிபியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 31 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஸேன் க்றீனுடன் 5ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஸேன் க்றீன் 28 ஓட்டங்களையும் நிக்கலஸ் டெவின் 20 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினர். வேறு எவரும் 15 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை. பந்துவீச்சில் ப்றட் வீல் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றட் கியூரி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மைக்கல் லீஸ்க் https://www.virakesari.lk/article/185507
  8. ரோயல் பார்க் கொலையாளியை உடனடியாக கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும் - கொல்லப்பட்ட சுவீடன் யுவதியின் குடும்பத்தினர் வேண்டுகோள் Published By: RAJEEBAN 07 JUN, 2024 | 11:11 AM ரோயல்பார்க் கொலையாளியை உடனடியாக கண்டுபிடித்து அவரை சிறையில் அடைக்கவேண்டும் என கொலை செய்யப்பட்ட சுவீடன் யுவதியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ரோயல் பார்க் கொலையாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்துச்செய்யும் நீதிமன்றத்தின் உத்தரவை இலங்கையில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களிற்குமான குறிப்பிடத்தக்க தீர்ப்பு என கொலை செய்யப்பட்ட சுவீடன் யுவதி இவோன் ஜோன்சனின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவான்ஜோன்சனின் குடும்பத்தவர்கள் சார்பில் அவரது சகோதரி கரோலின் ஜோன்சன் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில்பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பு என குறிப்பிட்டுள்ள அவர் தன்னிச்சையான முடிவுகளால் அவர்களின் உயிரையும் கண்ணியத்தையும் சமரசம் செய்ய முடியாது என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார். இவான் ஜோன்சனின் கொலையாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு தன்னிச்சையானது சட்டத்தின்கீழ் செல்லுபடியற்றது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆழ்ந்த நிம்மதியையும் நீதியையும் தருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவானின் துயரமான மற்றும் கொடுரமான இழப்பு எங்களின் இதயங்களில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது இது எங்களிற்கு மிகப்பெரிய தொடரும் வலியை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ள கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி முன்னாள் ஜனாதிபதி கொலையாளிக்கு மன்னிப்பை வழங்கியது மிகப்பெரும் துரோகமிழைக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தி எங்களின் வேதனையை மேலும் அதிகரித்தது எனவும் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு நீதிமற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தைமீள வலியுறுத்தியுள்ளதுடன் பொதுமன்னிப்பு போன்ற தீர்மானங்களை ஒரு தனிநபர் தனது விருப்பங்களிற்கு ஏற்ப எடுக்க முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அயராது உழைத்து இந்த விவகாரம் முழுவதும் நேர்மையைக் கடைப்பிடித்த நீதித்துறைக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கொலையாளியை விரைவாக கண்டுபிடித்து சிறையில் அடைக்க வேண்டியது அவசியம். ; நீதி உண்மையாக வழங்கப்படுவதை உறுதி செய்வதில் இது முக்கியமானது.என அவர் தெரிவித்துள்ளார். ஒப்படைப்பு ஒப்பந்தங்களில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி நீதியைப் பின்தொடர்வதைத் தடுக்க அனுமதிக்க முடியாது. கொலையாளி எங்கு மறைந்திருந்தாலும் அவர் அவரது செயலுக்காக பொறுப்புகூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் -இதில் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை.என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/185511
  9. மின் கட்டணம் குறைக்கப்பட்ட பின் 40 இலட்ச மின்பாவனையாளர்கள் பயனடைவார்கள் - மின்சாரத்துறை மற்றும் வலு சக்தி அமைச்சர் Published By: DIGITAL DESK 3 07 JUN, 2024 | 09:34 AM (இராஜதுரை ஹஷான்) மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று அல்லது நாளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைப்போம். எதிர்வரும் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணம் குறைக்கப்படும். 68 இலட்ச மின்பாவனையாளர்களில் 40 இலட்சம் மின்பாவனையாளர்கள் பயனடைவார்கள் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மின்னுற்பத்திக்கான செலவுகளை ஈடு செய்யும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யாமல் இருந்திருந்தால் மின்விநியோக கட்டமைப்பில் எழுந்த பிரச்சினைகளுக்கு இன்றும் தீர்வு கண்டிருக்க முடியாது.மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை இன்று அல்லது நாளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைப்போம். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் திருத்தம் தொடர்பான கொள்கை காணப்படுகிறது.இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதனை புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது.இதற்கமைய மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை கடந்த வாரம் நிறைவு செய்தோம். இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும்.குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும்,வீட்டு மின்பாவனையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். 0-30 வரையான அலகுகளை கொண்ட மின்பாவனைகளில் ஒரு அலகுக்கு தற்போது அறவிடப்படும் 8 ரூபாவை 6 ரூபாவாக குறைப்பதற்கும், 30 -60 மின்பாவனையில் ஒரு அலகுக்காக அறவிடப்படும் 20 ரூபாவை 09 ரூபாவாகவும், 60-90 வரையான அலகுகளில் ஒரு அலகுக்கு அறவிடப்படும் 30 ரூபாவை 18 ரூபாவாக குறைப்பதற்கும்,120 மின்பாவனையில் ஒரு அலகுக்கு அறவிடப்படும் 50 ரூபாவை 30 ரூபாவாக குறைப்பதற்கும் திருத்தங்கள் முன்வைக்கப்படும். 68 இலட்ச மின்பாவனையாளர்களில் ஏறத்தாழமாக 40 இலட்சம் மின்பாவனையாளர்களுக்கு மின்கட்டணம் திருத்தம் ஊடாக நிவாரணம் வழங்கப்படும். அதேபோல் மத தலங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் மின்கட்டணம் குறைக்கப்படும். எமது யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைப்போம்.கட்டணம் மேலும் குறைக்க வேண்டும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டால் அதனையும் ஏற்போம் என்றார். https://www.virakesari.lk/article/185496
  10. Published By: VISHNU 07 JUN, 2024 | 02:08 AM இந்தியாவின் அயல்நாடான இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருக்கும் இனப்பிரச்சினையை தீர்த்துவைத்து சுயகொளரவத்துடன் வாழ பாரத பிரதமர் வழிசெய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிரு முருகன் பாரத பிரதமருக்கான வாழ்த்துரையில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; பாரத தேசத்தின் பிரதமராக மூன்றாவது தடவையாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் தங்களை வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகின்றேன். தாங்கள் ஆற்றுகின்ற உன்னதமான சேவைக்கு மக்கள் தந்த பரிசாகக் கருதுங்கள் இதேவேளை இந்தியாவின் அயல் நாடாகிய இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருக்கின்ற இனப்பிரச்சினையே தீர்த்து வைத்து சுய கௌரவத்தோடு தமிழினம் வாழ தாங்கள் வழிசெய்யவேண்டும். பல லட்சம் மக்களின் உயிரை இழந்த நிலையில் செல்லெண்ணா துயருடன் வாழும் தமிழர்களின் அவலத்தை நிரந்தரமாகப் போக்குவதற்கு தாங்கள் வழி செய்யவேண்டும். பாரத தேசத்தை உலக அரங்கில் உயர் நிலைக்குக் கொண்டு வரும் பாரியைப் பொறுப்பு உங்களுக்குரியது அதற்கு ஆணை தந்த மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அனைத்து மக்களையும் சமமாக நேசித்து தங்கள் பணி தொடர அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/185486
  11. பப்புவா நியூ கினியை வீழ்த்தி ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது உகண்டா Published By: DIGITAL DESK 3 06 JUN, 2024 | 09:22 AM (நெவில் அன்தனி) கயானா ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை நடைபெற்ற சி குழுவுக்கான 9ஆவது ரி20 உலகக் கிண்ண போட்டியில் பப்புவா நியூ கினியை 3 விக்கெட்களால் உகண்டா வெற்றிகொண்டது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்த வருடம் அறிமுகமான உகண்டா இதன் மூலம் தனது முதலாவது உலகக் கிண்ண வெற்றியைப் பதிவு செய்தது. 78 ஓட்டங்கள் என்ற குறைந்த மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா சிரமத்திற்கு மத்தியில் 18.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ரியாஸத் அலி ஷா 33 ஓட்டங்களையும் ஜீமா மியாகி 13 ஓட்டங்களையும் பெற்றனர். உதிரிகளாக 15 ஓட்டங்கள் உகண்டாவுக்கு கிடைத்தது. பந்துவீச்சில் அலெய் நாஓ 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நோமன் வனுவா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பப்புவா நியூ கினி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட மிகக் குறைந்த இணை மொத்த எண்ணிக்கை இதுவாகும். தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கையும் 77 ஓட்டங்களையே பெற்றிருந்தது. பப்புவா நியூ கினி துடுப்பாட்டத்தில் ஹிரி ஹிரி (15), செசே பாவ் (12), கிப்லின் டோரிகா (12) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். உதிரிகளாக 13 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு கிடைத்தது. பந்துவீச்சில் ப்ராங்க் என்சுபுகா 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 4 ஓவர்களில் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜுமா மியாகி 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்பேஷ் ராம்ஜானி, கொஸ்மஸ் கியூவுட்டா ஆகியோர் தலா 17 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ரியாஸத் அலி ஷா. https://www.virakesari.lk/article/185415
  12. கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் காவலர் பணி இடைநீக்கம் – என்ன நடந்தது? பட மூலாதாரம்,KANGANA RANAUT/X 6 ஜூன் 2024 சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, இந்த வழக்கை மேலும் விசாரிக்க சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கங்கனா ரனாவத் டெல்லி வரவிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், தான் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு நான் இரண்டாவது கேபின் வழியாகச் சென்றபோது சிஐஎஸ்எஃப் காவலராக இருந்த ஒரு பெண் என் முகத்தில் அறைந்தார்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, தான் விவசாயிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக அந்தப் பெண் பதில் கூறியதாக கங்கனா தெரிவித்துள்ளார். மேலும், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை எப்படிச் சமாளிப்பது என்று கவலையாகவும் உள்ளேன்” என்றும் கங்கனா வீடியோவில் கூறியுள்ளார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சிஐஎஸ்எஃப் காவலர் இடைநீக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கங்கனா ரனாவத்தை அறைந்ததாகக் கூறப்படும் காவலரின் பெயர் குல்விந்தர் கவுர். குல்விந்தரின் சகோதரர் ஷேர் சிங் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், குல்விந்தர் சண்டிகர் விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் 15-16 ஆண்டுகளாக சிஐஎஸ்எஃப்-இல் பணிபுரிவதாகவும் தெரிவித்தார். ஷேர் சிங் அனைத்திந்திய கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியுடன் தொடர்புடையவர். இதுகுறித்து பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், குல்விந்தர் கவுர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அழைப்பு விடுத்த ஒபிஎஸ்,சசிகலா: நிராகரித்த அதிமுக - இரு அணிகளும் ஒன்றிணைவது சாத்தியமா?6 ஜூன் 2024 நரேந்திர மோதி: மூன்றாவது ஆட்சியில் இந்தியாவை வல்லரசாக மாற்றுவாரா? - காத்திருக்கும் சவால்கள்6 ஜூன் 2024 அரசியல் எதிர்வினைகள் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள ஹரியாணா முதல்வர் நையப் சைனி சிங், பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்ட ஓர் ஊழியர் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார். ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் கர்னால் தொகுதி மக்களவை உறுப்பினருமான மனோகர் லால் கட்டார், இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார். “பாதுகாப்பு அமைப்புகளின் பணி பாதுகாப்பு கொடுப்பது. அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய வேண்டும். பொது மக்களின் உணர்வுகளுடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. சிஐஎஸ்எஃப் துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்,” என்றார். மண்டி தொகுதியில் இருந்து கங்கனாவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இது யாருக்கும், குறிப்பாக இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது. விவசாயிகள் போராட்டம் குறித்து புகார்கள் வந்தாலும், ஒருவரை இப்படி அடிப்பது துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலைக் கண்டிப்பதாகவும் இதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் குறித்த கங்கனாவின் சர்ச்சைக் கருத்து பட மூலாதாரம்,KANGANA RANAUT/FB கடந்த 2020ஆம் ஆண்டில், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய ஓராண்டு போட்டத்தின்போது கங்கனா கூறிய கருத்துகள் சர்ச்சையாகின. செப்டம்பர் 2020இல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பற்றி கங்கனா பதிவிட்ட ஒரு ட்வீட்டில், “கலவரத்திற்கு வழிவகுத்த சிஏஏ பற்றித் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பிய அதே நபர்கள், இப்போது வேளாண் சட்டங்கள் பற்றியும் தவறான தகவல்களைப் பரப்புகிறார்,” என்று குறிப்பிட்டார். மேலும், “அவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் ‘பயங்கரவாதிகள்” என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கங்கனா மீண்டும் ட்வீட் செய்து, விவசாயிகளை தான் ‘பயங்கரவாதிகள்’ எனக் குறிப்பிட்டதாக யாராவது நிரூபித்தால் தனது ட்விட்டர் கணக்கையே நீக்கிவிடுவதாக விளக்கம் அளித்தார். வேளாண் மசோதா குறித்து வதந்தி பரப்புபவர்களைத்தான் ‘பயங்கரவாதிகள்’ என்று தான் அழைத்ததாகவும், விவசாயிகளை அல்ல என்றும் கங்கனா தனது பதிவில் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cl44z5red05o
  13. 04 JUN, 2024 | 05:16 PM உலக சுற்றுச்சூழல் தினமானது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களையும், நிறுவனங்களையும் ஒன்று திரட்டவும், சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் ஓர் உலகளாவிய தளமாக செயற்படுகின்றது. இயற்கையும், சுற்றுச்சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்விற்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் எந்த தேவைக்கும் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெல்லாம் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. இந்த விடயத்தில் உள்ள சிக்கல் தன்மை. பாதகத்தன்மை மற்றும் இதன் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. சுற்றுச்சூழல் என்ற விடயத்திற்கும், அபிருத்திக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாகவும், விளங்கிக் கொள்வதற்கு கடினமானதாகவும் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் மனிதன் சுற்றுச்சூழலின் இயற்கைச் சமனிலையைப் பற்றி பூரணமாக அறியாமல் இருப்பதாகும். அண்மைக் காலங்களில் விஞ்ஞானத்துறையானது மிகவும் முன்னேற்றம் அடைத்துள்ள போதிலும் எம்மால் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவை இன்னும் பூரணமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல இந்த அறிவை வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவற்றினைப் பேணுதல் போன்றவற்றிலும் அபிவிருத்தி, நின்று நிலைக்கும் பயன்பாடு போன்றவற்றிலும் கூட எம்மால் பூரணமாக பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் அநேக துறைகளில் இன்று சூழல்க்கல்வி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் அண்மைக் கால உலக சூழல் நெருக்கடியாகும். சர்வதேச சமூகத்தின் சூழல் பற்றிய ஈடுபாட்டை இனங்காண ஐக்கிய நாடுகள் சபையால் 1972ஆம் ஆண்டு ஸ்ரோக்கம் நகரில் நடைபெற்ற சூழல் மகாநாட்டில் சுற்றுச்சூழலை ஒருங்கிணைப்பது பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது உலக சுற்றுச்சூழல் தினமானது “ஒரே ஒரு பூமி” எனும் கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து யூன் மாதம் ஐந்தாம் திகதி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஆய்வுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான (2024) ஆய்வுப்பொருள் அல்லது தொனிப்பொருள் “நிலமறுசீரமைப்பு, பாலைவனமாதலும் வரட்சியைத் தாங்கும் திறனும்” என்பதாகும். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் 150இற்கும் மேற்பட்ட நாடுகள் சுற்றுச்சூழல் தினத்தில் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு (2024) உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்துவதற்கான தொகுப்பாளராக சவூதி அரேபியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குறித்த ஐக்கிய நாடுகள் தசாப்தத்தின் (2021-2030) முக்கிய தூணாக “நிலமறுசீரமைப்பு” உள்ளது. சூழல் மாசடைதல் உலகளாவிய ரீதியில் நாடுகளை பொதுவாக அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என இரண்டாக வகைப்படுத்தலாம். இத்தகைய இரண்டு வகையான நாடுகளிலும் குடித்தொகை அதிகரிப்பு, நகராக்க விருத்தி, கைத்தொழில் மயமாக்கம் என்பன பொதுவாகக் காணப்படுகின்றது. குடித்தொகை அதிகரிப்பிற்கேற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே மனிதன் தனது தேவைகளை நிவர்த்தி செய்ய முற்படும் போது அதன் விளைவாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளில் ஒன்றாகவே சூழல் மாசடைதல் காணப்படுகின்றது. இயற்கைச் சமநிலை ஏதாவது ஒரு காரணத்தால் குழப்பப்படும் போது அது சூழல்த் தொகுதியில் அல்லது சுற்றாடத் தொகுதியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் சூழல் தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான பெரும்பாலும் மீள முடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும். அபிவிருத்தி நோக்கிய மனித நடத்தையினால் இன்று சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது. மனிதர்களின் அலட்சியப் போக்குக் காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல், குடித்தொகைப் பெருக்கம் ஆகிய காரணங்களால் சூழல் பலவகையாக மாசுபடுகின்றது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காடழிப்பினால் இயற்கை மழையைப் புவி இழந்துள்ளது. போர் சூழலினாலும், அணுப் பரிசோதனைகளினாலும் அழிவுகளைப் புவி எதிர் நோக்குகிறது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. நகரங்களில் வசதிவாய்ப்புக்கள். அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக கிராமப்புற வசதிபடைத்த மக்கள் நகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயருகின்றனர். இதன் காரணமாக நகர்ப் பகுதிகளில் கிராமங்களை விட சூழல் மாசடைதல் அதிகமாகக் காணப்படுகின்றது இந்த வகையில் சூழலில் உள்ள பல்வேறு கூறுகளும் அதாவது நிலம், நீர், வளி ஆகிய கூறுகள் மனிதனுடைய பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மாசடைகின்றன. தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலவாழ்வை அச்சுறுத்தும் ஏராளமான சுற்றுச்சூழல் சவால்களை உலகம் எதிர்கொள்கின்றது. அதில் சில காலநிலை மாற்றம், உயிர்பல்வகைமைப் பாதிப்பு, வளங்கள் குறைவடைதல், மாசுபாடுகள், பச்சை வீட்டு விளைவும், பூகோள வெப்பமாதலும், ஓசோன் படைத் தேய்வு, காடழிப்பும், பாலைவனமாதல், அமில மழை போன்றனவற்றைக் குறிப்பிடலாம். நவீன விஞ்ஞான, தொழினுட்ப, கைத்தொழில் துறையின் வளர்ச்சி காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகின்றது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர்நிலைகள், நிலம், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் அது உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகின்றது. மனிதன் சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்கவே கடமைப்பட்டவன். தான் நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலை பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கி விட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளப்பெருக்கு, சூறாவளி என்று இயற்கை அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டே இருக்கின்றன. சீரற்ற காலநிலை நிலவும் குளிர் பிரதேசங்களில் தாவரங்களை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் கண்ணாடியிலான முடிய அமைப்பு முறையையே ‘பச்சை வீடு’ என அழைக்கப்படுகின்றது. பூமி அதிகளவில் வெப்பமடைவதால் ‘பச்சை வீட்டு விளைவானது’ நிகழ்கின்றது. இத்தாக்கம் பற்றி முதன் முதலில் 1827இல் டீயசழn துநயn டீயளவளைவந குயரசiநெச என்பவரால் விபரிக்கப்பட்டது. இத்தாக்கமானது பூமியை வெப்பமாக்கும் காபனீரொட்சைட்டினதும், மெதென், நைதரசன் ஒட்சைட்டு, ஓசோன், நீராவி, குளோரோபுளோரோ காபன்கள் ஆகியவற்றின் பொறிமுறை செயற்பாடாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் மனித நடவடிக்கைகளினால் வெளிவிடப்படும் வாயுக்களின் பங்களிப்பினை மாற்றியமைப்பதோடு இவ்வாயுக்களின் செயற்பாட்டையும் பாதிக்கின்றது. இதனால் வளி மண்டலம், உயிர் மண்டலம், நீர் மண்டலம், நில மண்டலம் என்பவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. இவ்வாயுக்களின் அதிகரிப்பினால் வெப்பநிலை அதிகரித்தல், மழைவீழ்ச்சி மாதிரியில் வேறுபாடு, காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, நீரியல் வட்டத்தில் பாதிப்பு, சூறாவளிகள், புயல்கள் போன்றவற்றின் உருவாக்கம், சமுத்திர நீரோட்டங்களின் திசை மாறுதல், தாவரங்கள், விலங்குகளில் ஏற்படும் தாக்கம் போன்றன ஏற்படுவதோடு மனிதனின் சமூக, பொருளாதார கட்டமைப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. கோள வெப்ப அதிகரிப்புக் காரணமாக முனைவுப் பகுதியிலுள்ள பனிப்பாறைகள் உருகும் வேகம் படிப்படியாக அதிகரித்துள்ளது. ஆட்டிக், அந்தாட்டிக் பகுதிகளில் மட்டுமன்றி இமயமலையிலுள்ள பனிக்கவிப்புகளும் உருகத் தொடங்கி உள்ளன. 1999ஆம் ஆண்டுத் தகவலின் படி இமயத்தின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் பனி உருகி வழிந்ததில் அதன் உயரத்தில் 1.3 மீற்றர் குறைந்துள்ளது. இப்போது ஆண்டிற்கு சராசரியாக 0.1மீற்றர் என்ற அளவில் பனி உருகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டளவில் சீனாவிலுள்ள பனிமலைகளில் 65வீதம் உருகிவிடும். கோள வெப்ப அதிகரிப்பு காரணமாக பசி, பட்டினியாலும், மலேரியா, வயிற்றுப்போக்குப் போன்ற வெப்ப மண்டல நோய்களாலும் ஏழை நாடுகளில் ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் இறந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்பு 2030ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக உயரும் என அஞ்சப்படுகிறது. இதில் அனுதாபதிற்குரிய விடயம் கோள வெப்ப உயர்வால் அதிகம் தண்டிக்கப்படும் இவர்கள் பூகோளத்தை வெப்பப்படுத்தும் செயல்கள் எதிலும் தொடர்புபடாத அப்பாவி ஏழைமக்கள் என்பது தான். இக்கோள வெப்ப அதிகரிப்புக் காரணமாக ஓசோன் படையில் துவாரம் ஏற்பட்டுள்ளதோடு ஓசோன் படை தேய்வடைந்தும் செல்கின்றது. ஓசோன் படையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் வளர்ந்த, வளர்முக நாடுகளில் அமில மழை உருவாக்கம், பாலைவன பரவலாக்கம் என்பன அதிகரிக்கும். பூகோள சூழற் பிரச்சினைகளில் ஒன்றாக விளங்கும் அமிலமழையானது இன்றைய காலகட்டத்தில் சூழலை மாசடையச் செய்து மக்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகக் காணப்படுகிறது. இது 1980களின் பின்னரே தீவிரமடைந்த ஒரு நிகழ்வாகும். அமில மழை என்பது எரிபொருட் படிமங்களை எரிக்கும் போது உருவாக்கப்படும் சல்பரொக்சைட், நைதரசன் போன்ற பிரதான வாயுக்களை உள்ளடக்கிய மாசுப் பொருட்கள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகி அமிலத் தன்மையடைந்து வளிமண்டலத்தினூடாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் மழையாகப் பொழிதலைக் குறிக்கின்றது. இவ் அமிலமழைப் பொழிவினால் நீர்ச் சூழல்பாதிக்கப்படல், மண்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படல், மண்ணின் வளம் குறைவடைதல், மனித சுகாதாரம் பாதிக்கப்படல், கட்டடங்கள் ஓவியங்கள் பாதிக்கப்படல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. உயிர்ப்பல்வகைமை என்பதில் புவியில் காணப்படும் சகல விதமான உயிரினங்களும் அவற்றின் வாழ்விடங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இந்த வகையில் புவியில் 30 மில்லியன் முதல் 100 மில்லியன் வரையிலான அளவில் அங்கிகள் காணப்படலாம் என மதிக்கப்பட்டுள்ளது. இவ்அங்கிகளிடையே சுமார் 1.5 மில்லியன் மாத்திரமே விஞ்ஞர்ன ரீதியாக சிறப்பாக ஆராய்ந்தறிந்து பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூமியில் வாழும் மொத்த அங்கிகளில் 50 சதவீதமானவை அயன மண்டலத்தினுள் இனங்காணப்பட்டுள்ளன. அதேநேரம் இவ்வயனமண்டலக் காடுகள் வருடாந்தம் மனிதநடவடிக்கைகளினால் ஒரு சதவீதம் என்ற அளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அயன மண்டலத்தில் 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உயிரினப் பல்வகைமையானது துரிதமாக அழிவிற்குட்பட்டு வருவது தெளிவாக இனங்காணப்பட்டதன் விளைவாக 1992ஆம் ஆண்டு உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு மற்றும் நிலைத்திருக்க் கூடிய விதத்தில் அவற்றைப் பயன்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைச் சூழல் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. இம்மாநாட்டில் 160ற்கும் மேற்பட்ட நாடுகள் உயிரின வளங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை நிலையான அடிப்படையில் பாதுகாப்பதற்கு உறுதி பூண்டு கையொப்பமிட்டன. உயிரினப் பல்வகைமையானது உயிரியல், பொருளாதார, கல்வி, கலாசார, மனோத்துவம், அழகியல் எனப் பல்வேறு விதங்களில் முக்கியம் பெறுகின்றது. எனினும் இவ்வுயிர்ப் பல்வகைமையானது மனிதனது நேரடியான தாக்கங்களிற்கு உட்பட்டு வருவதுடன் திட்டமிடப்படாத நிலப்பயன்பாடு, இயற்கை வளங்களின் அதிகரித்த பாவனை என்பன காரணமாகவும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. மனிதன் உட்பட்ட சூழல்த் தொகுதியில் வாழ்கின்ற ஒவ்வொரு அங்கியும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டு ஒரு வலையமைப்பில் வாழ்ந்து வருகின்ற அதே நேரம் இவை ஒவ்வொன்றும் முக்கிய பங்களிப்புகளை அவற்றின் வாழ்க்கையில் நிலைப்பிற்காகச் செய்து கொண்டிருக்கின்றன. சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கான வழிகள் பூமியில் உள்ள கூறுகள் மாசடைதலைத் தடுப்பதற்கு சர்வதேச ரீதியாக இப்பிரச்சினை இன்று ஆராயப்படுகிறது. மேற்குலகில் சூழல் தொடர்பான விடயங்கள் அரசியலில் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாரளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப்பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாக்குவதற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றன. உலக நாடுகளின் அரசாங்கங்களோடு இவ்வெண்ணக் கருவை கவனமெடுக்கும் விஞ்ஞான நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் பல ஆய்வுகளை நடத்தி வருகின்றன. சூழல் மாசடைதல் தொடர்பான விழிப்புணர்ச்சிச் செயற்பாடுகள் கையாளப்படுகின்றன. சிறப்பாக சூழல் மாசடைதலைத் தடுக்கும் இந்த நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக இருக்கக் கூடிய பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் சூழல் பற்றிய கல்வியுறிவு, மாசடைதலைத் தடுக்கும் எச்சரிக்கைகள், பிரசாரங்கள் என்பனவெல்லாம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கையின் முக்கிய வளங்களான நீர், காற்று, நிலம், வனம், கனிமங்கள் போனவற்றின் அழிவினை தடுப்பதற்கான பரிகார நடவடிக்கைகளில் எல்லாத் தரப்புகளும் கவனம் செலுத்தி வருவது நல்லதொரு செயற்பாடு ஆகும். அந்த வகையில் மரங்களை நடுதல், இயற்கைப் பசளைகளை பயன்படுத்துதல், குப்பைகூழங்கள் எரிப்பதை தவிர்த்து மண்ணிணுள் புதைத்தல், உக்காத பொருட்களை பொருத்தமான முறையில் அகற்றுதல், பொலித்தீன் பயன்பாட்டினை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் சூழலை மாசடைவதை தடுக்கலாம். இந்தவகையில் 2025 ஆம் ஆண்டு சுற்றாடல்தின ஆய்வுப்பொருளாக “பிளாஸ்ரிக் மாசுபாட்டிற்கான முடிவு” என்பதாகும். 2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்துவதற்கான தொகுப்பாளராக கொரியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்திந்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகச் சிந்தித்து செயற்படும் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கும். பொதுவாக நாம் மகிழுந்து, மோட்டார் சைக்கிள் என ஆளுக்கொரு வாகனத்தில் பயணிக்கிறோம். நூறு பேர் நூறு வாகனங்களில் செல்வதற்குப் பதிலாக அனைவரும் பொதுப் போக்குவரத்தாகிய பேரூந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 99 வாகனங்கள் புகை வெளிவிடுவதை தடுக்க முடியும். அதேபோல் புகை வெளிவிடும் வாகனங்களுக்குப் பதிலாக மிதிவண்டியை கூடுமானவரை பயன்படுத்தலாம். இதனால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும். செய்தித்தாள் ஒன்றை ஒன்பது முறை மறுசுழற்சி செய்ய முடியும். எனவே செய்தித்தாள்களைப் படித்துவிட்டு கீழே வீசவேண்டாம். ஒரு மீற்றர் உயரத்திற்கு அடுக்கப்பட்ட செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் ஏழு மீற்றர் உயரமுள்ள மரம் ஒன்று வெட்டப்படுவதைத் தடுக்கலாம். ஆகவே சூழல் மாசடைவதைத் தடுக்க வேண்டியது மனிதராய் பிறந்த எங்கள் ஒவ்வொருவருடைய பெறுப்பும், கடமையும் ஆகும். கலாநிதி திருமதி சுபாஷினி உதயராசா சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியற்றுறை, யாழ்.பல்கலைக்கழகம்
  14. மேற்கு வங்கம்: மமதாவின் மாயாஜாலத்திற்கு முன் பலிக்காமல் போன மோதியின் மேஜிக் பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் மணி திவாரி பதவி, பிபிசி இந்திக்காக, கொல்கத்தா. 3 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் மேஜிக் மீண்டும் வெற்றியைத் தந்துள்ளது. மறுபுறம் பிரதமர் நரேந்திர மோதியின் பிரமாண்டமான தேர்தல் பிரசாரங்கள், பதினைந்துக்கும் அதிகமான பேரணிகள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு பிறகும் பாஜக கடந்த முறை பெற்ற இடங்களைக்கூட இந்த முறை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் மாநில வாக்காளர்கள் மீதான திரிணாமுல் காங்கிரஸின் பிடி தளர்வதற்குப் பதிலாக வலுப்பெற்றுள்ளது என்பதை மமதா, அபிஷேக் ஜோடி மீண்டும் நிரூபித்துள்ளது. பாஜக முன்வைத்த மிகப்பெரிய விஷயங்களான சந்தேஷ்காலி, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை சூழ்நிலை மாறியபோதும் தனது அரசியல் ஆதாயத்திற்காக மமதா பயன்படுத்திக் கொண்ட விதம், கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு மமதா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜியை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வாக்காளர்கள், பாஜகவின் முதுகெலும்பை உடைத்துள்ளனர். இது மோதிக்கு எதிரான வாக்கு. பல அரசியல் கட்சிகளை மோதி உடைத்துள்ளார். இந்த முறை பொதுமக்கள் அவரது கட்சியையே உடைத்துள்ளனர். இந்த முறை மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாக தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். மோதியும் அமித்ஷாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்,” என்றார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் மோதிஜி, உங்கள் மேஜிக் முடிந்துவிட்டது: மமதா "மோதிஜி, உங்கள் மேஜிக் முடிந்துவிட்டது. நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார். தேர்தல் ஆணையத்தை விமர்சித்த மேற்கு வங்க முதல்வர், "ஆணையம் தனது தலைவரின் குரலாகச் செயல்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் மன உறுதியை உடைக்க முயன்றனர். அந்த அறிக்கைகள் அனைத்தும் பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டவை" என்று கூறினார். "இந்த வெற்றி சாமானிய மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இந்தியா'வின் வெற்றி. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடன் இருப்பவர்களுக்கும், சேர விரும்புபவர்களுக்கும் என் ஆதரவு உண்டு. எம்.எல்.ஏ.க்களை உடைக்க பாஜக மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் கடைசி வரை அது வெற்றிபெறவில்லை,” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார். சந்தேஷ்காலி விவகாரம் குறித்த ஸ்டிங் வீடியோ, குடியுரிமை திருத்தச் சட்டம், மமதா பானர்ஜி அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகிய இந்த மூன்றும் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் மகத்தான வெற்றிக்கும், பாஜகவுக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவுக்கும் மிகப்பெரிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேர்தலில் திரிணாமுல் தளபதி என்று அழைக்கப்படும் எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும், பாஜகவின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஷுபேந்து அதிகாரி ஆகிய இரு தலைவர்களின் நன்மதிப்பு சோதனைக்கு உள்ளானது. தேர்தல் முடிவுகள் அபிஷேக்கின் தளபதி பதவியை வலுப்படுத்தியுள்ள நிலையில், ஷூபேந்துவின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மமதா பானர்ஜிக்கு இந்த வெற்றி எப்படி கிடைத்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி அதன் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் தொகுதிகளை அதிகரிக்க முயன்ற பாஜகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவை அளித்துள்ளது. இடங்களை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, கடந்த முறை பெற்ற இடங்களைக்கூட அக்கட்சியால் தக்கவைக்க முடியவில்லை. காங்கிரஸுக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆனால் காங்கிரஸின் வலிமையான கோட்டையாகக் கருதப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பஹரம்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரியின் தோல்வி அக்கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள டிஎம்சி வேட்பாளரும் ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதானிடம் அவர் தோல்வியடைந்தார். அதீர் இதற்கு முன் அந்தத் தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மற்றும் மமதா அலையின்போதுகூட தனது இடத்தை அவர் காப்பாற்றி வந்தார். அதேநேரம் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு களமிறங்கிய சிபிஎம் கட்சிக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை. மமதா பானர்ஜியை தவிர அபிஷேக் மட்டுமே கட்சியின் தேர்தல் பிரசாரப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்தார். கொல்கத்தாவை ஒட்டியுள்ள டயமண்ட் ஹார்பர் தொகுதியில் அவரும் போட்டியிட்டார். தனது வெற்றி குறித்து அத்தனை உறுதியுடன் இருந்த அவர், மற்ற வேட்பாளர்களுக்காகத் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். கட்சிக்குக் கிடைத்துள்ள இந்த அபார வெற்றி காரணமாக கட்சியில் வாரிசுரிமை குறித்து எழுந்துள்ள கேள்விகளும் தற்போது குறைய வாய்ப்புள்ளது. பாஜக எழுப்பிய முக்கிய விவகாரம் ’சந்தேஷ்காலி’ படக்குறிப்பு,தேர்தலுக்கு முன்பு அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்கூட இங்கு பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை சந்தேஷ்காலி நிலப்பறிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு விவகாரத்தை பாஜக தனது பிரசாரத்தில் முக்கிய விஷயமாக முன்வைத்தது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த விவகாரம் தொடர்பாக தீவிர போராட்டத்தை அக்கட்சி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோதியும் தனது பாராசாத் பேரணியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். பின்னர் அவர்களில் ஒருவரான ரேகா பாத்ரா, பஸீர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆரம்பக் கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இந்தப் பிரச்னையால் கவலைகொண்டது. சேதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அக்கட்சி துவக்கியது. ஆனால் இந்த விஷயத்தில் பாஜகவுக்கு தெளிவான முன்னிலை காணப்பட்டது. அதன்பிறகு திடீரென வெளிவந்த ஒரு ஸ்டிங் வீடியோ ஒட்டுமொத்த நிலைமையையும் மாற்றியது. இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு இருந்த முன்கை, திரிணாமுல் காங்கிரஸுக்கு சென்றுவிட்டது. அந்த வீடியோவில் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர், ’இந்த விவகாரம் முழுவதும் கட்டுக்கதை என்றும் இதன் பின்னணியில் ஷுபேந்து அதிகாரி இருப்பதாகவும்’ சொல்வதைக் கேட்க முடிந்தது. அதன்பிறகு மமதா அதை வங்காளப் பெண்களின் தன்மானத்துடன் இணைத்தார். இதன்மூலம், மமதாவின் மகளிர் வாக்கு வங்கியை உடைக்க பாஜகவின் மிகப் பெரிய ஆயுதமாக இருந்திருக்க வேண்டிய விவகாரம், இந்த வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்தும் மமதாவின் ஆயுதமாக மாறியது. தேர்தலுக்கு முன்பு அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்கூட இங்கு பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதை என்ஆர்சியுடன் இணைத்த மமதா, இதன் கீழ் பலர் ஊடுருவல்காரர்களாக அறிவிக்கப்பட்டு வங்காளத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தொடர்ந்து கூறினார். ஆசிரியர் பணி நியமன ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களும் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றிக்குத் தடையாக இருக்கவில்லை. மாறாக மமதா அரசின் நலன் சார்ந்த திட்டங்கள் வெற்றிக்குக் கைகொடுத்தன. ஷூபேந்து அதிகாரியின் பங்கு பற்றிய கேள்வி பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்கு வங்கத்தின் மூத்த தலைவர்கள் மத்திய தலைமையின் மீது கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். மேற்கு வங்க வெற்றியுடன் ஒருபுறம் திரிணாமுல் வாரிசுரிமை தொடர்பான அபிஷேக் பானர்ஜி பற்றிய விவாதம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பாஜகவில் ஷூபேந்து அதிகாரியின் பொறுப்புகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. "மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரப் பொறுப்பை ஷூபேந்து அதிகாரியிடம் கட்சி ஒப்படைத்திருந்தது. கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திலீப் கோஷின் தொகுதியை மாற்றியது, சந்தேஷ்காலி சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரேகா பாத்ராவுக்கு பஸீர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதி அளிக்கப்பட்டது உட்பட வேட்பாளர் பட்டியல் தொடர்பான மத்திய தலைமையின் எல்லா முடிவுகளும் அவரது பரிந்துரையின்படியே எடுக்கப்பட்டன,” என்று மாநில பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். "இதுபோன்ற பெரும்பாலான முடிவுகள் கட்சிக்கு எதிராகச் சென்றுள்ளன என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. திலீப் கோஷின் தொகுதி மாற்றத்தால் அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது மட்டுமல்லாமல், கடந்த முறை அவர் வென்ற மேதினிபூர் தொகுதியும் கைவிட்டுப்போய்விட்டது,” என்றார் அவர். இப்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்கு வங்கத்தின் மூத்த தலைவர்கள் மத்திய தலைமையின் மீது கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். "ஷூபேந்து அதிகாரியை மட்டுமே நம்பி கட்சியின் உயர்மட்டத் தலைமை தவறு செய்தது. இது தவிர கட்சிமாறி வருபவர்களுக்கு சீட்டு கொடுத்து, உள்ளூர் கட்சிக்காரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்," என்று தன் பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் பேசிய கட்சியின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். "மேலும் முன்னாள் மாநில தலைவர் திலீப் கோஷின் தொகுதி மாற்றப்பட்டது. இதனால், அவர் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட மத்திய தலைமையின் முடிவுகள் காரணமாக கட்சியில் அதிருப்தி ஏற்பட்டது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்றார் அவர். திட்டங்களின் பலனைப் பெற்ற டிஎம்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"இந்தத் தேர்தல் மோதிக்கும் மம்தாவுக்கும் இடையே நடைபெற்றது. எனவே இந்த முடிவுகளுக்கான பொறுப்பையும் மோதிதான் ஏற்கவேண்டும்,” என்கிறார் ஷிகா முகர்ஜி. "மமதா பானர்ஜி அரசின் தோல்விகள் மற்றும் மாநிலத்தில் பெண்களின் அவலநிலை என்று கூறப்படும் பிரச்னைகளை முன்னிறுத்தி பாஜக இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. மேற்குவங்கத்தில் இந்தத்தேர்தல் மோதிக்கும் மம்தாவுக்கும் இடையே நடைபெற்றது. எனவே இந்த முடிவுகளுக்கான பொறுப்பையும் மோதிதான் ஏற்கவேண்டும்,” என்று அரசியல் ஆய்வாளர் ஷிகா முகர்ஜி கூறினார். ”மமதா பானர்ஜி மீதும் அவரது கட்சி மீதும் நம்பிக்கையை மாநில மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். சந்தேஷ்காலி, ஆசிரியர் பணி நியமன ஊழல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற பாஜக முன்வைத்த விவகாரங்கள் முற்றிலும் பலனளிக்கவில்லை." "இதுதவிர மதரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சியும் முன்போலவே பலன் கொடுக்கவில்லை. மறுபுறம் மமதா அரசின் எல்லா திட்டங்களில் இருந்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பயனடைந்தது,” என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 2019ஆம் ஆண்டில் பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. ஆனால் அதன் பிறகு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்குகள் குறைந்தன. எதிர்பார்த்தபடி முடிவுகள் இருக்கவில்லை. இம்முறை அது மேலும் குறைந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cnll92z2k1jo
  15. மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம் Published By: VISHNU 06 JUN, 2024 | 06:31 PM (இராஜதுரை ஹஷான்) எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும், புதிய அரசாங்கத்துக்கு அதன் பொறுப்பை வழங்க வேண்டும் என கடந்த வாரம் அறிக்கை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் புறக்கணித்திருந்தன. அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஆகியோரும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு வியாழக்கிழமை (6) இடம்பெற்றது. மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் 54 ஏற்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் பெரும்பாலான சரத்து விதிகள் அரசியலமைப்புக்கு முரண் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியிருந்தது. அத்துடன் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் விதிகளை மீறும் வகையில் ஒருசில ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே இதனை அலட்சியப்படுத்த முடியாது. சட்டமூலத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதனால் உடனடியாக நிறைவேற்ற வேண்டாம். இரு நாள் விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். சட்டமூலம் மீதான இரு நாள் விவாதத்தை நடத்துவது கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கலாம் என சபாநாயகர் குறிப்பிட்டிருந்த நிலையில் ஆளும் தரப்பு அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் நேற்று காலை முதல் சபையில் ஆளும் தரப்புக்கும், எதிர்கட்சிகளுக்குமிடையில் இது தொடர்பில் கடும் சர்ச்சை மற்றும் தர்க்கம் ஏற்பட்ட நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் இரு கோரிக்கைகளையும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் சட்டமூலத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இவ்வாறான நிலையில் விவாத முடிவில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல வாக்கெடுப்பைக் கோரினார். இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 44 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 162 பேர் வாக்களிப்பில் கலந்துக் கொண்டனர். 62 பேர் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை. https://www.virakesari.lk/article/185475 புறக்கணித்தவை எதிர்த்து வாக்களித்தால் தோல்வி உறுதி, இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் தீமைகளுக்கு இவர்கள் பொறுப்பேற்கவேண்டும்.
  16. Published By: DIGITAL DESK 7 06 JUN, 2024 | 05:15 PM ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) தொடக்கம் வியாழக்கிழமை வரை (13) யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பிரதிச் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) கிளிநொச்சி தொகுதி பிரதம அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் தலைமையில் கிளிநொச்சி பாரதி வித்தியாலயம், யாழ்ப்பாண தொகுதி பிரதம அமைப்பாளர் வெற்றிவேலு யஜேந்திரன் தலைமையில் வைத்தீஸ்வரா கல்லூரி, நல்லூர் தொகுதி பிரதம அமைப்பாளர் அ. கிருபாகரன் தலைமையில் சென். பெனடிக்ற் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார். எதிர்வரும் திங்கட்கிழமை (10) பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார். அன்றைய தினம் காங்கேசன்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தலைமையில் அளவெட்டி அருணோதயா கல்லூரிக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர், ஊர்காவற்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் குருபரன் மதன்ராஜ் தலைமையில் நெடுந்தீவு மகாவித்தியாலம், மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் அனோஜன் அருந்தவநாதன் தமையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, புனித. ஹென்றியரசர் கல்லூரி இளவாலை ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார். எதிர்வரும் புதன் (12) கோப்பாய் தொகுதிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார். தொடர்ந்து வட்டுக்கோட்டை தொகுதி பிரதம அமைப்பாளர் சதாசிவன் தலைமையில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரிக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார். மேலும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், பஸ் வண்டி ஒன்றை அன்பளிப்பு செய்யவுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை (13) சாவகச்சேரி தொகுதி பிரதம அமைப்பாளர் கந்தையா மயில்வாகனம் தலைமையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி் தொகுதி அமைப்பளர் மொகமட் காசிம் தலைமையில் இரணைதீவு றோ. க. த. க ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார். பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மற்றும் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோருடன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பல சமூக, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது விஜயத்தின்போது, அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/185465
  17. Published By: DIGITAL DESK 7 06 JUN, 2024 | 04:52 PM யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் ஆலய உப தலைவர் மீது கோடாரியினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் வேலைக்கு செல்வதற்காக இன்று வியாழக்கிழமை (06) காலை, தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, உலவிக்குளம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் நபரை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டு, கோடரியினால் தாக்கி படுகாயம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலாளிகள் தங்கள் முகங்களை கறுத்த துணியினால் மூடிக்கட்டி இருந்தனர் என தாக்குதலுக்கு இலக்கான நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். காயமடைந்த நபர் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை, குறித்த ஆலயத்திற்கு சொந்தமான ஆலயத்துடன் உள்ள காணியினை அறிக்கைப்படுத்தி, ஆலய நிர்வாகத்தினரால் வேலி அமைக்கப்பட்ட போது, ஆலய காணியையும், அருகில் உள்ள காணியையும் இணைத்து மைதானமாக பாவித்து விளையாடி வந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் காணியை சுற்றி அடைக்கப்பட்டு இருந்த வேலி இனம் தெரியாத நபர்களால் பிடுங்கி எறியப்பட்டு இருந்தது. அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையில் முன்னெடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185461
  18. 3வது முறையாக விண்வெளிக்கு பயணித்த சுனிதா வில்லியம்ஸ்! இந்திய வம்சாவளியினரான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 3ஆவது முறையாக விண்வெளிக்குப் பயணித்துள்ளார். நேற்றைய தினம் (06) இரவு 8.22 மணியளவில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. குறித்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகிய இருவரும் புறப்பட்டனர். போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் இன்றையதினம் (06) இரவு 9.45 மணியளவில், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என நாசா தெரிவித்துள்ளது. குறித்த இவரும் சுமார் ஒருவார காலம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் செயற்பாடுகள் தொடர்பில், ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/303261
  19. 06 JUN, 2024 | 06:53 PM (எம்.நியூட்டன்) இன்றைய சமுதாயத்தில் தலைமைத்துவத்துக்கு வெற்றிடம் நிலவுகிறது என யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமார் தெரிவித்தார். செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடத்தப்பட்ட இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02) தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இன்றைய சமுதாயத்தில் தலைமைத்துவத்துக்கு பெரும் வெற்றிடம் நிலவுகிறது. இந்த வெற்றிடம் அரசியல் தலைமைத்துவத்திலும் சமுதாய தலைமைத்துவத்திலும் நிலவுகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். ஒரு சமுதாயம் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டு, அது முறையாக நிர்வகிக்கப்பட்டு வந்தால்தான் எதிர்கால சமுதாயத்தை நிலையாக உருவாக்க முடியும். இன்றைய சூழலில் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அது அவர்களுடைய தவறு அல்ல. அவர்களுக்கான சரியான பாதையை காட்டமுடியாததுதான் இதற்கு காரணம். வெளிநாடுகளில் உள்ள தமது சகோதரர்கள், நண்பர்கள் போல் தாமும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனை தவறு என்று கூறமுடியாது. ஆனால், அவர்கள் சமுதாயத்துக்கு உதவிகளை செய்யவேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றைய கல்வி முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். தற்போதைய கல்வி முறையானது லிகிதர்களையும் நிர்வாக உத்தியோகத்தர்களையுமே உருவாக்குகிறது. சிந்திக்கத்தக்க தத்துவ ஞானிகளையும் விஞ்ஞானிகளையும் பொருளாதார வல்லுநர்களையும் உருவாக்குவதற்கான கல்வி முறை அவசியம். வெளிநாடுகளில் இதனையே செய்கிறார்கள். இளையோரை வழிநடத்தும் கட்டமைப்புகள் கொண்ட நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். இன்றைய இளைய தலைமுறை ஆற்றலாளர் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியர் ஆவார். அவருடைய சேவை எவ்வாறு உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. அவர் கொழும்பில் சிறந்த பணிகளை செய்து வருகிறார். மற்றொருவர் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்த சிறுவன். இந்த சிறுவனை ஊக்கப்படுத்திய பெற்றோரை பாராட்டவேண்டும். நீச்சலில் மட்டுமல்ல, கல்வியிலும் அவன் சிறந்து விளங்க வேண்டும். நீச்சல் வீரர் எனும்போது ஆழிக்குமரனை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால், இன்று எங்கு நீச்சல் தடாகம் உள்ளது. ஆழிக்குமரன் உறவுகளிடம் உள்ளது. யாழில் மத்திய கல்லூரியில் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அது இன்று பயன்பாடின்றி, சேதமடைந்த நிலையில் உள்ளது. நீச்சல் விளையாட்டில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. அதன் சாதகங்களை ஆராய்வதும் இல்லை. வயோதிபர்களுக்கு நீச்சல் சிறந்த உடற்பயிற்சியாகும். இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். சமூகத்துக்கு செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. சமுதாயத்தில் அறப்பணி செய்யும் அமைப்புகளுக்கு உதவும் மனப்பான்மை வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு இருப்பது போல் உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை இருக்க வேண்டும். சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்கு கலாநிதி ஆறுதிருமுருகன் போல் பலர் தேவைப்படுகின்றனர். அவர்களை இனங்கண்டு உற்சாகப்படுத்தவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/185459
  20. 12 இடங்களில் ஒரு லட்சம் வாக்கு - சின்னம் மாறினாலும் மாநிலக் கட்சி அந்தஸ்தை எட்டும் நாம் தமிழர் கட்சி பட மூலாதாரம்,X/ நாம் தமிழர் கட்சி கட்டுரை தகவல் எழுதியவர், சிவகுமார் இராஜகுலம் பதவி, பிபிசி தமிழ் 6 ஜூன் 2024, 14:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் "நீதிமன்றம் சென்றும் கிடைக்காத சின்னத்தை மக்கள் மன்றம் தந்த தீர்ப்பின் மூலம் பெறப் போகிறோம்" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி. ஆம். தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே வரும் நாம் தமிழர் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதைச் சாதித்துக் காட்டியுள்ளது. இதன் மூலம் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை பெறும் அளவுக்கான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள், தமிழ்நாட்டில் வேரூன்ற சகல வழிகளிலும் முயலும் பாஜக ஆகியவற்றின் சவால்களைத் தாண்டி நாம் தமிழர் கட்சி தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து அதிகரித்தது எப்படி? நாம் தமிழர் கட்சி இந்த மைல்கல்லை எப்படி எட்டியது? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி 2010இல் தொடங்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியது. நாம் தமிழர் கட்சி அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி தொகுதிகளை ஒதுக்கியது. அதாவது, அக்கட்சி சார்பில் 20 தொகுதிகளில் ஆண்களும், 20 தொகுதிகளில் பெண்களும் வேட்பாளர்களாகக் களமிறங்கினர். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3.9 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அந்தத் தேர்தலில் முதன் முறையாகக் களமிறங்கிய டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 5.5 சதவிகித வாக்குகளையும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளையும் பெற்றன. அடுத்து வந்த 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 170க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றனர். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் உருவெடுத்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பட மூலாதாரம்,GETTY IMAGES நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் நாம் தமிழர் கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையிலேயே அமைந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 32 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். மற்ற 35 தொகுதிகளிலும் அக்கட்சி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய மற்றும் டெல்டா பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை, சிவகங்கை தொகுதியில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சி வேட்பாளர் எழிலரசி 1,63,412 வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி குறைந்த அளவாக 52,721 வாக்குகள் பெற்றுள்ளது. ஆனாலும்கூட, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி அக்கட்சி வேட்பாளர் மரியா ஜெனிபர் கிளாரா மைக்கேல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரிசையில் நாம் தமிழர் கட்சி சந்தித்த நான்காவது பொதுத் தேர்தல் இது. மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வாக்கு சதவீதமான 8%-ஐ இந்தத் தேர்தலில் எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது. புளூடூத் ஹெட்போன் எப்போது வெடிக்கும்? வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?9 மணி நேரங்களுக்கு முன்னர் மாநிலக் கட்சி அங்கீகாரம் - தேர்தல் ஆணைய விதிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கிறது. அதன்படி, மாநிலக் கட்சி, தேசியக் கட்சி என இரண்டு வகையாக கட்சிகளை தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கிறது. அரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேன்டும். ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தைப் பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 25 இடங்களுக்கு ஒன்று வீதம் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும். மேற்கூறிய விதிகளில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்துள்ளது. சின்னம் ஒதுக்குவதில் சர்ச்சை பட மூலாதாரம்,NAAM TAMILZHAR நாம் தமிழர் கட்சி முந்தைய தேர்தல்களில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கிவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், “தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் என்ன தவறு இருக்கிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற ஆணையத்தின் நடைமுறையை எந்தக் கட்சிக்காகவும் மாற்ற முடியாது. நாம் தமிழர் கட்சி இன்னும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படியிருக்கும்போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும்?" எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தை நாடியும் விரும்பியது கிடைக்காததால் வேறுவழியின்றி மைக் (ஒலி வாங்கி) சின்னத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அப்போது பிபிசி தமிழிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, "கரும்பு விவசாயி சின்னத்தைக் கொடுத்தால் அதிக வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாவதைத் தடுக்கவே, இப்படி சதி செய்துள்ளார்கள்,” என்று குற்றம் சாட்டியிருந்தார். மோதி, யோகி ஆகியோருக்கு மக்களவைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?5 ஜூன் 2024 'நீதிமன்றம் தராததை மக்கள் மன்றத்தின் மூலம் பெறுகிறோம்' பட மூலாதாரம்,IDUMBAVANAM KARTHIK/X தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பின்னர் பிபிசி தமிழிடம் பேசிய இடும்பாவனம் கார்த்தி, "நாடாளுமன்றத் தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கீட்டில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது," என்றார். "நாங்கள் தேர்தலில் சின்னங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்க்கிறோம். அதற்குப் பதிலாக, மேற்கத்திய நாடுகளைப் போல் ஒவ்வொரு வேட்பாளருக்கு ஒரு எண்ணை ஒதுக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சிகளின் சின்னத்தை மாற்ற வேண்டும். அதுதான் தேர்தல் களத்தில் சரிசமமான போட்டிக்கு வழிவகுக்கும்." சின்னங்கள் வேட்பாளர்களுக்கு சில சாதகங்களை அளிக்கின்றன என்பதை மறுக்க முடியாது என்கிறார் அவர். "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது வெற்றி எளிதாகக் கிடைக்கும். அதேநேரத்தில், பானை சின்னத்தில் களம் காணும் போது வெற்றி கடினமாவதைப் பார்க்க முடிகிறது." இது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கும் பொருந்துவதாகக் கூறும் அவர், சின்னங்கள் பயன்பாட்டிற்கு எதிரானவர்கள் என்ற போதிலும் நம் நாட்டு நடைமுறையைப் பின்பற்றி தங்கள் கொள்கைக்கு கரும்பு விவசாயி சின்னமே பொருத்தமானது என்று தீர்மானித்தே அதைத் தேர்வு செய்ததாகக் கூறினார். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக வளர்ந்துள்ளதா? கோவை உணர்த்துவது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் களம் எப்படி இருந்தது? பட மூலாதாரம்,YOUTUBE/NAAM THAMIZHAR KATCHI நாடாளுமன்றத் தேர்தல் களம் நாம் தமிழர் கட்சிக்கு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, "இது நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பதால் சற்று சவாலானதாகவே இருக்கும் என்று கருதினோம். ஏனெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரே பிரதானம். நாங்களோ பாஜகவையோ, காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியையோ ஆதரிக்கவில்லை. ஆகவே, மோதி, ராகுல் போன்ற யாரையும் எங்களால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடியாது." ஆனால், "எங்கள் எண்ணத்திற்கு மாறாக தேர்தல் களம் எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக அமைந்திருந்தது. முன்பெல்லாம் இளைஞர் மத்தியில் எங்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். இப்போது குடும்பம் குடும்பமாகப் பலரும் தாமாகவே விரும்பி வந்து கட்சியில் சேர்கின்றனர்." "அவர்கள் அனைவரும் தேர்தலில் எங்களை ஆதரித்தனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளைப் போல் எங்களிடம் இல்லாத ஒன்று பணம் மட்டும்தான். ஒவ்வொரு தொகுதியிலும் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் சர்வசாதாரணமாக கோடிகளில் பணத்தைச் செலவழிக்கும்போது எங்களால் லட்சங்களில்கூடச் செலவழிக்க முடியாது," என்றார். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி சாத்தியமானது எப்படி? நாம் தமிழர் கட்சி சந்தித்த 4 பொதுத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாகத் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி வந்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் கேட்டபோது, "மதவாதம் போல் இனவாதமும் உணர்ச்சி ரீதியாக மக்களை ஈர்க்கக் கூடியது. வளர்ந்த நாடுகளில்கூட இந்தப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் டிரம்பை கூட நீங்கள் இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அது போலவே தமிழ்நாட்டிலும் இனவாதம் பேசும் நாம் தமிழர் கட்சி மக்களை ஈர்க்கிறது," என்றார். மேலும், சுய பெருமை பேசுவது ஒன்றும் குற்றம் இல்லை. ஆனால், பிற மாநிலத்தவர் குறிப்பாக வட மாநிலத்தவர் மீது வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் பேசுவது தவறு என்றும் அதைத்தான் இனவாதம் எனக் கூறுவதாகவும் குறிப்பிடுகிறார் சிகாமணி. அதேபோல், "எதிலும் தூய்மைவாதம் பேசும் மக்களின் தேர்வாகவும் நாம் தமிழர் கட்சி இருக்கிறது. அதீத தூய்மைவாதம் பேசும் இவர்கள் கற்பனை உலகில் வாழ்பவர்கள், நிகழ்காலத்தில் எதிலுமே திருப்தி கொள்ளாதவர்கள்." "இனவாதம், தூய்மைவாதம் தாண்டி, இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று தேடும் மக்களில் ஒரு பிரிவினரும் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கின்றனர். வைகோ, விஜயகாந்த் வரிசையில் இன்று நாம் தமிழர் கட்சியும் அந்த வாக்குகளை அறுவடை செய்கிறது," என்று கூறினார். மேலும் பேசிய அவர், "இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக உள்ள தமிழ்நாட்டால் சீமான் பேசுவது போல மத்திய அரசைப் புறக்கணித்துவிட்டு எதையும் கண்டுகொள்ளாமல் தனித்து இயங்க முடியாது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் வலிமை மிக்க கட்சியாக இருந்தாலும் திமுகவால் கூட மத்திய அரசுக்குப் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில், சீமான் மேடைகளில் பேசுவதையெல்லாம் நாம் தமிழர் கட்சியால் செயல்படுத்திவிட முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பினார். பாஜகவுக்கு ஓரிடம் கூட தராமல் மாறுபட்டு நிற்கும் தமிழ்நாடு - என்ன காரணம்?7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அதிமுக வாக்குகள் பாஜக பக்கம் திரும்பியுள்ளதா?5 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் நிரந்தர சின்னமாக எது இருக்கும்? பட மூலாதாரம்,SEEMAN/X கரும்பு விவசாயிக்குப் பதிலாக புதிதாகப் பெற்ற மைக் சின்னத்தை மக்களிடையே சென்று சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, "எங்கள் கட்சியில் சேர்பவர்கள் நல்ல அரசியல் புரிதலுடன், விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். அவர்கள் நாம் தமிழர் கட்சி எங்கே என்றுதான் தேடுகின்றனர். இதுபோன்ற அரசியல் விழிப்புணர்வுள்ள தொண்டர்களுக்கு சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் எங்களுக்குப் பெரிய சிரமம் இருக்கவில்லை," என்று கூறினார் இடும்பாவனம் கார்த்தி. அப்படியென்றால், நாம் தமிழர் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் உங்கள் கட்சியின் சின்னமாக எதைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு, "வேளாண் அடிப்படையிலான தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைக்கு கரும்பு விவசாயி சின்னமே பொருத்தமானது என்பதால் அதையே தேர்வு செய்வோம்" என்று பதிலளித்தார். நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி தொடருமா என்று கேட்டபோது,"நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி கவனிக்கத்தக்க ஒன்றுதான் என்றாலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பெரிய கட்சியாக வளரும் என்று சொல்ல முடியாதுஎனச் சொல்ல முடியாது" என்கிறார் பத்திரிகையாளர் சிகாமணி. "இதுவொரு இடைக்கால வளர்ச்சிதான். வைகோ, விஜயகாந்த் போல மாற்று தேடும் மக்களுக்கும், இனவாத பேச்சுகளால் கவரப்படும் இளைஞர்களுக்கும் வடிகாலாக நாம் தமிழர் கட்சி இருக்கும்." அடுத்த கட்டத்திற்கு வளர்வது என்பது நாம் தமிழர் கட்சிக்கு சிரமமான விஷயமாகவே இருக்கும் என்று தெரிவித்தார் சிகாமணி. https://www.bbc.com/tamil/articles/c3ggk39979xo
  21. Published By: VISHNU 06 JUN, 2024 | 07:07 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 9000 கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. இக்காலப்பகுதியில் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனப் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மின்சார சபையை 12 கூறுகளாகப் பிரித்து அவற்றைத் தனியார் தரப்பினருக்கு வழங்கும் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். அரச சேவை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 1200 அரச நிறுவனங்கள் காணப்படுகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 10 அரச நிறுவனங்கள் மாத்திரமே இருந்தன. அரச நிறுவனங்களின் மொத்த செயலாற்றுகை தொடர்பில் மதிப்பாய்வு செய்ய வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் மறுசீரமைப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை மற்றும் பொது கோட்பாடுகள் தொடர்பில் நாணய நிதியம் முன்வைத்த பொதுவான அறிவுறுத்தல்களை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை. மறுசீரமைப்புக்கள் வெளிப்படைத்தன்மையுடன் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். பெயர் பலகைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மூட வேண்டும். ஒரு சேவையை மூன்று அல்லது நான்கு அரச நிறுவனங்கள் முன்னெடுக்கின்றது, இவற்றை ஒன்றிணைக்க வேண்டும். அத்துடன் அரச மற்றும் தனியார் பங்குடைமையுடன் அரச நிறுவனங்களின் சேவையை வினைத்திறனாக்க வேண்டும். இவ்வாறான முறையான வழிமுறைகளை விடுத்து தமது விருப்பத்துக்கு அமைய அரச நிறுவனங்களை மறுசீரமைத்தால் அல்லது தனியார் மயப்படுத்தினால் முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெறும். இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் 9000 கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டிக் கொண்டுள்ளது. இக்காலப்பகுதியில் மாத்திரம் 75 இலட்சம் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். மின்சார சபையின் நட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்காக மின்கட்டணம் பலமுறை அதிகரிக்கப்பட்டது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 இலட்சம் மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் செயலாற்றுகையை வினைத்திறனான முறையில் முன்னெடுக்காமல் மின் கட்டமைப்பைச் சீரமைக்க முடியாது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினால் எவ்வித மாற்றமும் ஏற்படாது தனியார் தரப்பினரது பிரவேசத்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் திருத்திக் கொள்ள முடியாத அளவுக்கு எதிர்காலத்தில் மின் கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார். https://www.virakesari.lk/article/185480
  22. 06 JUN, 2024 | 04:14 PM மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11, 12 ஆகிய திகதிகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர்களது வீடுகளுக்கு சென்று மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மாவட்ட தமிழ் அரசுக் கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான லோ. திபாகரனை எதிர்வரும் 11ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு கடிதம் ஒன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கியுள்ளனர். அதேவேளை, தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜீவரெத்தினம் தவேஸ்வரனையும் எதிர்வரும் 11, 12 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கடந்த காலம் ஒரே நாளில் 11 மணித்தியாலம் 45 நிமிடங்கள் தடுத்துவைக்கப்பட்டு மட்டக்களப்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் இந்த புதிய அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185453
  23. 7 இடங்களில் டெபாசிட் காலி - அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்காலம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிவக்குமார் ராஜகுலம் பதவி, பிபிசி தமிழ் 5 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் அதிமுகவை பொருத்தவரை உண்மையாகியுள்ளன. அந்தக் கட்சிக்கு ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை. அதையும் தாண்டி அதிமுகவின் வாக்கு வங்கியில் கடும் சரிவு ஏற்பட்டிருப்பதையும் புள்ளிவிவரம் காட்டுகிறது. அதிமுகவின் வாக்கு வங்கி சரிவும், பாஜகவின் வாக்கு வங்கி உயர்வும் உணர்த்துவது என்ன? அதிமுகவுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் அளவுக்கு பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளதா? நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பதவிக்கு நெருக்கடி வருமா? அதிமுவின் எதிர்காலம் என்ன ஆகும்? 7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்த அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தேர்தல்களில் தடுமாறி வரும் அதிமுகவின் போக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது. ஜெயலலிதா தலைமையில் கடைசியில் அதிமுக எதிர்கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகள் என்ற வரலாறு காணாத வெற்றியை ருசித்த அதிமுக அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாமல் போயுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டையே பறிகொடுத்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அதிமுக செல்வாக்கு பெற்ற தொகுதியாகப் பார்க்கப்படும் கோவை தொகுதியில் நூலிழையில் அதிமுக டெபாசிட்டை தக்க வைத்தது. அண்ணாமலை இரண்டாவது இடம் பிடித்த அந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்றார். டெபாசிட் பெற 16.67 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிலையில், அதிமுக வேட்பாளர் 17.2 சதவீத வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தார். அதிமுக கூட்டணி 27 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதிமுக 24 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக 3 இடங்களிலும் இரண்டாவது இடத்தில் வந்தன. தமிழ்நாட்டில் மற்ற 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாது இடத்தைப் பிடித்தது. கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் அதிமுக நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. திமுகவுக்கு அதிமுக கூட்டணி நெருக்கடி அளித்த தொகுதிகள் தமிழ்நாட்டில் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன. மாநிலத்திலேயே திமுக கூட்டணிக்கு அதிமுக கூட்டணி கடும் சவால் அளித்த தொகுதி என்றால் அது விருதுநகர்தான். முன்னிலை நிலவரம் மாறி மாறி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக கூட்டணி வேட்பாளரான தேமுதிகவின் விஜயபிரபாகரனை 38,877 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் தோற்கடித்தார். விருதுநகர் தவிர, கொங்கு மண்டலத்தில் சேலம், நாமக்கல் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் திமுகவுக்கு சவால் தரும் வகையில் வாக்குகளைப் பெற்றிருந்தனர். தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரும் சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுகவை பொருத்தவரை இம்முறை தென் மாவட்டங்களில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றார். தொடக்கத்தில் முன்னிலை பெற்றிருந்த அவர், வாக்கு எண்ணிக்கையின் இரண்டாவது பாதியில் பின்தங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியை நூலிழையில் முந்தி அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் அதிக செல்வாக்கு பெற்ற தொகுதியான கன்னியாகுமரியில் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசம். அங்கே அதிமுகவை பின்னுக்குத் தள்ளி நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவரும் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தத்தமது தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். குறிப்பாக, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், இரண்டாவது இடம் பிடித்த தினகரன் ஆகியோரும் முன்னாள் அதிமுகவினரே. இதேபோல், மதுரை தொகுதியிலும் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அங்கே பாஜக இரண்டாவது இடம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. சசிகலா, ஓ.பன்னீசெல்வம், டிடிவி தினகரன் ஆகியோரின் வெளியேற்றத்தால் அதிமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக வேறு கட்சிகளுக்கு மாறியிருப்பதைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கணிசமான தொகுதிகளை வென்ற கொங்கு மண்டலத்திலும்கூட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் நிலை மிகச்சிறப்பாக இருந்ததாகக் கூற முடியாது. சேலம், நாமக்கல் தொகுதிகளில் மட்டுமே அதிமுகவால் திமுக கூட்டணிக்கு ஓரளவுக்கு சவால் கொடுக்க முடிந்தது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. வெறும் 5,267 வாக்குகளை மட்டுமே பெற்று அதிமுக வேட்பாளர் ராணி, டெபாசிட்டை இழந்தார். 'அதிமுக வாக்கு வங்கியில் வரலாறு காணாத சரிவு' பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுக வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், "நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அதிமுக கூட்டணி 23 சதவீதமும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.2 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன. அதிமுக ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதா தலைமைப் பதவியை வகித்தபோதுகூட அது நடந்திருக்கிறது. ஆனால், அதிமுக கூட்டணி ஒருபோதும் 30 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றதில்லை," என்று தெரிவிக்கிறார். ஆனால், "இந்த முறை அதிமுக கூட்டணி அதற்கும் கீழே 23 சதவீதமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும்கூட திமுக கூட்டணியும் 3 சதவீதம் வரை வாக்குகளை இழந்தே இருக்கிறது. அதேநேரத்தில், பாஜக கூட்டணி மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியும் தனது வாக்கை 2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது." கடந்த தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் இருந்தாலும்கூட தனது அடிப்படையான வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார் எஸ்.பி.லட்சுமணன். "வாக்கு சதவீதம் 25 சதவீதத்திற்கும் கீழே குறைந்தால் அந்தச் சரிவில் இருந்து மீண்டெழுவது மிகவும் கடினம். 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டை இழந்துள்ளது. 12 தொகுதிகளில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. குமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நான்காவது இடத்திற்கு அதிமுக சரிந்துள்ளது," என்று கூறினார். '2026 தேர்தலுக்கு பாடமும் படிப்பினையும் தந்துள்ளது' நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டார். அதோடு, "இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவை அச்சுறுத்தும் அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES நாடாளுமன்ற தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அதிமுகவின் எதிர்காலம், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமைப் பதவியில் நீடிப்பாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசியபோது, "இந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை எடப்பாடி தலைமையில் அதிமுக பெற்ற 9வது தோல்வி என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்புகிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை இதுவொரு இடைக்காலம் மட்டுமே. 10 இடங்களில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டதால் மட்டுமே அக்கட்சி வளர்ந்துவிட்டதாகக் கருத முடியாது," என்றார். நாம் தமிழர் கட்சி 6 இடங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதையெல்லாம் அதிமுகவுக்கு ஒரு இடைக்கால சரிவாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார். "தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகள்தான் பெரிய கட்சிகள். இவற்றில் ஒன்று ஆளுங்கட்சியாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் மாறிமாறி வரும்." பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியதற்காக எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டிய அவர், "அதிமுக ஒரு நல்ல விஷயத்திற்காக பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்திருக்கிறது. இல்லையென்றால் அந்தக் கட்சியைச் சிதைத்துவிடுவார்கள்; அழித்து விடுவார்கள். மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா, நிதிஷ்குமார் கட்சி ஆகியவற்றுக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்" என்றவர், இப்படிப்பட்ட சூழலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நெருக்கடி கொடுப்பார்கள் என்பது தெரிந்தும் விலகி வந்த எடப்பாடியை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, "எதிர்க்கட்சி அந்தஸ்து பாஜகவுக்கு கிடைத்துவிட்டது என்ற குரல் வந்தால் அதை நாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்ததற்காக அதிமுக கவலைப்பட வேண்டியதில்லை. கண்டிப்பாக அதிமுகதான் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி," என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். 'எடப்பாடி பழனிசாமி உத்தியை மாற்றுவது அவசியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுகவின் எதிர்காலம் குறித்துப் பேசியபோது, "பாஜக அணியில் போட்டியிட்ட, முன்னாள் அதிமுகவினரான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்று தத்தமது தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒற்றுமையே பலம் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்துகிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன். நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பின்னர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'இந்த தேர்தல் முடிவு 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடத்தையும் படிப்பினையையும் தந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரும் படிப்பினை என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதே இல்லை. ஆகவே அவர் சூழலை உணர்ந்து உத்திகளை வகுப்பார் என்று நம்பலாம் எனவும் அவர் கூறுகிறார் "சட்டப்படி, எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச் செயலாளர் என்று நீதிமன்றமே உறுதி செய்துவிட்ட நிலையில், அவரது பதவிக்கு ஆபத்து ஏதும் இல்லை. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பேசி, அவர்களையும் கட்சியில் இணைத்துக் கொண்டு பயணிப்பதே அதிமுகவுக்கு நன்மை தரும்." "இல்லாவிட்டால் ஜூன் 4க்கு பிறகு அதிமுகவே இருக்காது என்ற அண்ணாமலையின் பேச்சு காலப்போக்கில் உண்மையாகிவிடும். அதற்கு சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அது நடக்கவே நடக்காது என்று புறந்தள்ளிவிட முடியாது," என்று எச்சரிக்கிறார் எஸ்.பி.லட்சுமணன். https://www.bbc.com/tamil/articles/cn006kegn37o
  24. 06 JUN, 2024 | 01:19 PM கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்றுத்தருவதாக இளைஞர் ஒருவரிடம் 31 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று, மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரிடம் இருந்து 31 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். பணத்தை பெற்று நீண்ட நாட்களாகியும், இளைஞரை கனடாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், இளைஞர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185440

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.