Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகோல தெரிவித்துள்ளார். “இணையத்தளம் மூலம் ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்துள்ளன, அதே போல் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் கிரிப்டோ-கரன்சி மோசடிகள் மற்றும் பிரமிட் மோசடிகள் அதிகரித்துள்ளன. 2023 இல் 1,609 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் , ஜனவரி மாதத்தில் மாத்திரம் இதுபோன்ற 110 மோசடிகள் பதிவாகியுள்ளன. பெப்ரவரியில் 213 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன, மார்ச் மாதத்தில் இதுவரை 100 மோசடிகள் பதிவாகியுள்ளன. சில பண மோசடி முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளித்து, கணினி குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இணையத்தில் நிகழும் கணினி குற்றங்கள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இணையத்தளம் ஊடாக நிர்வாண புகைப்படங்கள் வெளியிடப்படும் என விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2023ல் இதுபோன்ற 775 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்தோடு 1609 இணையதள மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடர்பில் 5,188 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் சம்பந்தப்பட்ட 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், தனிநபர்கள் கணக்குகளுக்குள் ஊடுருவியமை தொடர்பில் 7,499 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஊடுருவியமை மற்றும் போலி கணக்குகளின் முறைப்பாடுகளே அதிகரித்துள்ளன.” என்றார். https://thinakkural.lk/article/295572
  2. மே வரை வெப்பமான காலநிலை தொடரும் நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை இந்த ஆண்டு மே மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன, வரட்சியான காலநிலை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் இறுதி வரை தொடரும். மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதுதான் வெப்பமான காலநிலை முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295542
  3. ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் கையளிப்பு இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார். இன்று கையளிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சரின் இணக்கப்பாட்டைப் பெறுவது கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295620
  4. யாழில் இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் மீட்பு! Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 02:48 PM யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து திங்கட்கிழமை 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (12), யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/178622
  5. வெடுக்குநாறிமலை சம்பவம்; கைதுசெய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம்!! Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 02:45 PM வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் நேற்றையதினம் மாலை அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் தங்களை விடுதலைசெய்யகோரி அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக நேற்றயதினம் காலை நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படும் போதே அவர்கள் உணவினை எடுத்திருக்கவில்லை. இந்நிலையில் இன்றையதினமும் அவர்கள் உணவினை உட்கொள்வதற்கு மறுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில் ஆலய பூசாரியார் த.மதிமுகராசா மற்றும் து. தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன், சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/178625
  6. கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற வசதிகளைச் செய்து கொடுத்தேன்! -ஓமல்பே சோபித தேரர் 13 MAR, 2024 | 01:38 PM அன்றைய தினம் (அரகலய) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தான் வசதிகளைச் செய்து கொடுத்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தேவையான வசதிகளை அவருக்கு தான் ஏற்படுத்திக் கொடுத்ததனை கோட்டாபய ராஜபக்க்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார். "நாங்கள் கோட்டாபயவுக்கு எதிரானவர்கள் அல்லர். தற்போதுள்ள முறைமைக்கு எதிரானவர்கள்" என கூறிய சோபித தேரர், கோட்டாபயவை நாட்டை விட்டு வெளியேற்றும் சதி என்ன என்பதை தற்போதைய தலைவரால் ஒரு வார்த்தையில் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178616
  7. செவிப்புலனற்றோருக்கான உலக கிண்ணம் : சம்பியனானது பாகிஸ்தான்; உப சம்பியனானது இலங்கை 13 MAR, 2024 | 02:47 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) செவிப்புலனற்ற சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருந்த (Deaf International Cricket Council - DICC) செவிப்புலனற்றோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செவிப்புலனற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக சம்பியன் பட்டத்தை வென்றதுடன், செவிப்புலனற்ற இலங்கை கிரிக்கெட் அணி உப சம்பியன் பட்டத்தை ‍கைப்பற்றியது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய 6 நாடுகள் பங்கேற்ற இப்போட்டித் தொடர் கடந்த 6ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமானது. லீக் முறையின் கீழ் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு தடவை எதிர்த்தாடியிருந்ததுடன், லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. அவுஸ்திரேலியாவுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவுடனான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியும் வெற்றியீட்டிக்கொண்டு உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இலங்கை நேரப்படி, நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 151 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 89 ஒட்டங்களால் தோல்வியைத் தழுவியது. கிமந்து மெல்கம் தலைமையிலான செவிபுலனற்ற இலங்கை அணியில் பாலகிருஷ்ணன் தர்மசீலன், அலன்ரோஸ் காலேப் ஆகிய தமிழ் பேசும் வீரர்கள் விளையாடிருந்தனர். அத்துடன், ரஜித்த அசங்க, தாரக்க சம்பத், சுமுது லங்கா, கொயும் வெல்கமகே, அசங்க மஞ்சுள, உதய லக்மால், தினுக்க சச்சின், சச்சித் பெரேரா, நதுன் சமீர, எஸ். மதுரங்க, ஹசித்த பெரேரா, லக்சான் பெர்னாண்டோ ஆகியோரும் செவிப்புலனற்ற இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தனர். https://www.virakesari.lk/article/178623
  8. கூரிய ஆயுதங்களால் சித்திரவதை செய்யப்பட்டே யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை : உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தகவல் 13 MAR, 2024 | 12:06 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கடத்தப்பட்டு, உயிரிழந்த இளம் குடும்பஸ்தரை சித்திரவதைக்கு உட்படுத்தியே படுகொலை செய்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் பொன்னாலை பாலத்துக்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த வன்முறை கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் சென்றவர்கள் கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக வீசிச் சென்றிருந்தனர். மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். படுகாயங்களுடன் விட்டுச் செல்லப்பட்ட கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, உயிரிழந்த நபரின் உடல்களில் வெட்டுக்காயங்கள், கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்கள் ஏற்பட்டதாலும், மூச்சுக் குழாய்க்குள் இரத்தம் சென்றதாலுமே மரணம் நேர்ந்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/178605
  9. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை இந்தியா இப்போது பரிசோதித்தது ஏன்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அக்னி-5 13 மார்ச் 2024, 07:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக இந்தியா அறிவித்தது. இது கடந்த திங்கள் கிழமை (மார்ச் 11-ஆம் தேதி) அன்று நிகழ்த்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருகிறது. இதற்கு ‘மிஷன் திவ்யாஸ்திரம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஒடிஷாவில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவு என்றழைக்கப்படும் சிறிய தீவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அக்னி-5 ‘எம்.ஐ.ஆர்.வி’ எனப்படும் ‘மல்டிபிள் இன்டிபென்டெண்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி’ தொழில்நுட்பத்துடன் கூடியது. இது பல இலக்குகளைத் தாக்குவதற்கான ஆயுதங்களை தாங்கிச்செல்லும் ஒரே ஏவுகணையைக் குறிக்கும். உலகில் ஒரு சில நாடுகளே இந்தத் தொழில்நுட்பத்தை வைத்திருக்கின்றன. இது இந்தியாவுக்கு ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, ஒரு நாடு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல இலக்குகளை ஒரே ஏவுகணை மூலம் குறிவைத்துத் தாக்க முடியும். அக்னி-5 சோதனை வெற்றியடைந்தது குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தனது சமூக வலைதளங்களப் பக்கங்களில் இதில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். "எம்ஐஆர்வி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5-ஐ ‘மிஷன் திவ்யாஸ்திரத்தில்’ வெற்றிகரமாக சோதனை செய்ததில் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் பெருமிதம் கொள்கிறார்கள்," என்று பிரதமர் மோதி தெரிவித்திருக்கிறார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அக்னி-5 அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் திறன்கொண்டது எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் என்றால் என்ன? அக்னி-5 ஏவுகணை 5,000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இந்தியாவின் நீண்ட கால பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டால் அக்னி-5 நாட்டுக்கு மிக முக்கியமானது என்று PTI செய்தி முகமை தெரிவித்துள்ளது. அக்னி-5 கிட்டத்தட்ட முழு ஆசியாவையும், சீனாவின் முனையில் இருக்கும் வடக்குப் பகுதிகளையும், ஐரோப்பாவின் சில பகுதிகளையும் சென்று தாக்கும் அளவுக்குத் திறன்வாய்ந்தது. முன்னதாக அக்னி-1 முதல் அக்னி-4 வரையிலான ஏவுகணைகள் 700கி.மீ முதல் 3,500கி.மீ தூரம் மட்டுமே சென்று தாக்கும் திறன் கொண்டிருந்தன. தனது இலக்கை ஒரு சிறிய தவறும் இல்லாமல் சென்று தாக்கும் வகையில் அக்னி-5இல் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்று இந்தியா கூறுகிறது. இந்தியாவில் 1990 முதல் அக்னி ஏவுகணைகள் உள்ளன. அப்போதிருந்து அதன் நவீன வடிவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அக்னி-5 ஏவுகணையில் உள்ள எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது, ஆனால் இப்போது வரை அது சில நாடுகளில் மட்டுமே உள்ளது, என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்திருக்கிறது. அக்னி-5 அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் திறன்கொண்டது. இதுவரை எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகள் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறுகிறது. இந்த ஏவுகணைகளை நிலத்தில் அல்லது கடலில் நிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவ முடியும். இதே வகையான ஏவுகணை அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இஸ்ரேலிடம் இந்த ஏவுகணை அமைப்பு உள்ளது, அல்லது அதை உருவாக்க முயற்சித்து வருகிறது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பத்தை உருவாக்குவது மிகவும் கடினம். அதனால்தான் சில நாடுகளிடம் மட்டுமே இது உள்ளது. இதை உருவாக்க, பெரிய ஏவுகணைகள், சிறிய குண்டுகள், சரியான வழிகாட்டுதல், மற்றும் பறக்கும் போதே குண்டுகளை விடுவிக்கும் திறன் ஆகியவை தேவை. 1970- ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா இந்தத் தொழில்நுட்பத்தை வைத்திருந்தது. அதன்பிறகு சோவியத் யூனியனும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்தப் படியலில் இந்தியா புதிதாக இணைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் பெண் விஞ்ஞானிகள் அக்னி ஏவுகணைகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் அக்னி-4 ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ் இருக்கிறார். இவர் ‘அக்னிபுத்ரி’ என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவிடம் இருக்கும் அக்னி ஏவுகணைகளின் திறன் என்ன? கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணைகள் பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது. 700கி.மீ. தூரம் வரை செல்லக்கூடிய அக்னி-1 ஏவுகணையிலிருந்து, 5,000கி.மீ. வரை செல்லக்கூடிய அக்னி-5 வரை இது முன்னேறியிருக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம், டிஆர்டிஓ அக்னி-P (ப்ரைம்) ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது. இது 1,000கி.மீ. முதல் 2,000கி.மீ. வரையிலான தூரம் செல்லக்கூடியது. இதனை சாலையிலிருந்தோ, ரயில் தளத்தில் இருந்தோ ஏவ முடியும். 2007-ஆம் ஆண்டு அக்னி-5-ஐ உருவாக்குவதாக இந்தியா அறிவித்திருந்தது. அக்னி-5-இன் முதல் வெற்றிகரமான சோதனை 2012-ஆம் ஆண்டு செய்யப்பட்டது. அப்போது டிஆர்டிஓ டைரக்டர் ஜெனரல் வி.கே.சரஸ்வத், இந்தியா எம்ஐஆர்வி தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வருவதாகக் கூறினார். அக்னி-5 திட்டத்தின் வெற்றியில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை இந்திய பாதுகாப்புப் படைகளிடம் இருக்கும் அக்னி-1 700கி.மீ. தூரம் செல்லக்கூடியது, அக்னி-2 2,000கி.மீ. செல்லக்கூடியது, அக்னி-3 2,500 கி.மீ. தூரம் செல்லக்கூடியது, அக்னி-4 3,500 கி.மீ. செல்லக்கூடியது. அக்னி-5 நீண்ட தூரம் செல்லக்கூடியதாலும், அணுசக்தி திறன் கொண்டிருப்பதாலும், சீனாவை மனதில் வைத்தே இந்தியா இந்த ஏவுகணையை வடிவமைக்கத்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், பாகிஸ்தான் போன்ற நெருங்கிய இலக்குகளுக்கு பழைய அக்னி ஏவுகணைகள் போதுமானது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணைகள் பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருக்கின்றன இந்தியாவின் நோக்கம் என்ன? அக்னி-5 மூலம் சீனாவின் விடுக்கும் ராணுவ, பாதுகாப்புச் சவால்களை முறியடிக்க முடியும் என இந்தியா நம்புகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ஆராய்ச்சியாளர்கள் ஜோசுவா டி வைட் மற்றும் கைல் டெமிங் ஆகியோர், இந்தியாவின் எம்.ஐ.ஆர்.வி திட்டம் சீனாவுடனான பிராந்திய போட்டியின் வெளிப்பாடு என்று கருதுகின்றனர். இதிலிருந்து இந்தியா மூன்று நன்மைகளைப் பெற முடியும் என்றனர்: சீனாவின் நகரங்களைக் குறிவைக்கக்கூடிய ஏவுகணைகள் இந்தியாவிடம் குறைவாகவே இருப்பதாக நம்பப்படுவதால், நிலத்திலிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கடலில் இருந்து இயக்கப்படக்கூடிய, அணு ஆயுதங்களைத் தடுக்கக் கூடிய தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கி விடாமல் இருப்பது. அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களில் (SSBNS) இந்தியாவை விட சீனா மிகவும் முன்னேறியுள்ளது. சீனா பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அதாவது பி.எம்.டி-யை (BMD) உபயோகிக்க நினைத்தால், அதற்கு அக்னி-5 மூலம் பதிலடி கொடுக்க முடியும் என்று இந்தியா கருதுகிறது. இந்தியா 1998-இல் பொக்ரான்-2 சோதனையைச் செய்தது. அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை, முதலில் அதனை தாம் பயன்படுத்தப்படுவதில்லை, அதாவது முதலில் பயன்படுத்துவதில்லை (‘No First Use’) என்ற கொள்கையை கடைப்பிடிப்பதாகக் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவுக்கு எதிராக இந்தியா தனது ராணுவத் திறன்களை வெளிப்படுத்தப் போராடி வருகிறது, என்று நிபுணர்கள் கருதுகின்றனர் சீனாவுக்கு சவால் விட முடியுமா? ‘தி ஹிந்து’ நாளிதழிடம் பேசிய அல்பானி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் கிறிஸ்டோபர் கிளியரி, “சீனாவுக்கு எதிராக இந்தியா தனது ராணுவத் திறன்களை வெளிப்படுத்தப் போராடி வருகிறது. சீனாவின் பல ராணுவத் தளங்கள் இந்தியாவின் எல்லைக்கு அப்பாற்பட்டவை. அக்னி-5 இந்த இலக்குகளை எட்டுவதற்கு உதவுகிறது.,” என்றார். அக்னி-5 சோதனை நடத்துவதற்காக வங்காள விரிகுடாவின் மீது விமானங்கள் பறக்கக்கூடாது என்று இந்தியா அறிவித்தபோது, சீனா அதைக் கண்காணித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. அந்தச் செய்தித்தாளிடம் பேசிய மூலோபாய விஷயங்களில் நிபுணரான ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.துத்தா, "நாங்கள் அடிக்கடி டிஆர்டிஓவை விமர்சிக்கிறோம். ஆனால் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை அந்நிறுவனம் பல வெற்றிகரமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சீனாவும் தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா பின்தங்க முடியாது,” என்று கூறியிருக்கிறார். சர்வதேச அரசியல் விவகாரங்களில் நிபுணரான பிரம்மா செல்லானி, தனது சமூக ஊடகப் பக்கத்தில், "அக்னி -5 ஏவுகணை, எதிரியின் தாக்குதலுக்கு எதிராக இந்தியா தனது அணுசக்தித் திறனை வெளிப்படுத்த உதவும் பாதுகாக்க உதவும். எதிரியின் ஏவுகணை அமைப்பை மறுபக்கத்தில் இருந்து முறியடிக்க இது உதவும். இந்தப் புதிய திறனை நிலைநிறுத்துவதற்கு முன் இந்தியா மேலும் பல சோதனைகளை நடத்த வேண்டும்,” என்று எழுதியிருக்கிறார். தெற்காசிய ராஜதந்திர விவகாரங்களைப் பிந்தொடர்ந்து வரும் டெரெக் ஜே கிராஸ்மேன், தனது சமூக ஊடகப் பக்கத்தில், "எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் இப்போது ஏன்? எம்.ஐ.ஆர்.வி அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைய விரும்புகிறது. மேலும் தேர்தல்கள் நெருங்கிவிட்டன,” என்று பதிவிட்டிருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/c51j2771206o
  10. காஸா போர் நிறுத்தத்தை இன்னும் நெருங்கவில்லை: கட்டார் Published By: SETHU 12 MAR, 2024 | 06:09 PM காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் இஸ்ரேலும் ஹமாஸும் இன்னும் நெருங்கிவரவில்லை என பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்ததை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் பலவாரங்களாக முயன்றன. இதற்காக எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்ததைகள் நடைபெற்றன. புனித ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இணக்கப்பாட்டை நாம் நெருக்கவில்லை என கட்டார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றபோதிலும், அதற்கான போர்நிறுத்தத்துக்கான காலவரம்பு எதனையும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் யுத்தத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31184 ஆக அதிகரித்துள்ளது என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178555
  11. 15 பேருடன் பறந்த ரஷ்ய இராணுவ விமானம் தீப்பற்றி வீழ்ந்தது Published By: SETHU 12 MAR, 2024 | 04:40 PM ரஷ்ய இராணுவ சரக்கு விமானமொன்று இன்று தீப்பற்றி வீழ்ந்துள்ளது. இவ்விமானத்தில் 15 பேர் இருந்தனர் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐ.எல்.-76 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில், மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஐவானோவா பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/178544
  12. Published By: RAJEEBAN 12 MAR, 2024 | 03:06 PM டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முகநூல் மக்களின் எதிரி என குறிப்பிட்டுள்ளார். டிக்டொக்கினால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதுவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் எனினும் இதனை தடை செய்வதை நான் ஆதரிக்கமாட்டேன் ஏன் என்றால் அதனை தடைசெய்தால் மக்களின் எதிரியான முகநூலின் ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சிஎன்பிசி நேர்காணலில் டிக்டொக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கே நான் அவ்வாறே நம்புகின்றேன். நாங்கள் அமெரிக்க மக்களின் அந்தரங்கள் மற்றும் தரவு உரிமைகளை பாதுகாக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என டிரம்ப் பதிலளித்துள்ளார். டிக்டொக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வதை டிரம்ப் முதலில் ஆதரித்திருந்தார். எனினும் இதற்கான ஆதரவை தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார். ஏன் டிக்டொக்கினை தடை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு எனது ஆட்சிக்காலத்தில் அதனை தடைசெய்திருக்க முடியும் ஆனால் காங்கிரஸே அதனை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். டிக்டொக்கினை தடை செய்வது மக்களின் எதிரி என கடுமையாக விமர்சிக்கப்படும் முகநூலிற்கான ஆதரவை அதிகரிக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிக்டொக்கினால் நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன. ஆனால் டிக்டொக் பிடிக்காத விடயம் என்னவென்றால் டிக்டொக்கினை இல்லாமல் செய்தால் அது முகநூலை பெரிய விடயமாக்கிவிடும் ஏனைய ஊடகங்கள் பலவற்றுடன் நான் முகநூலை மக்களின் எதிரியாக கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் சமூக ஊடகங்களில் முகநூலை டிரம்ப் மக்களின் எதிரி என வர்ணித்திருந்தார். https://www.virakesari.lk/article/178531
  13. Published By: RAJEEBAN 13 MAR, 2024 | 11:45 AM இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தமது சமீபத்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜிபுட்டியில் உள்ள அதன் இராணுவதளத்தையும் கம்போடியாவில் உள்ள அதன் கடற்படை தளத்தையும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா இதற்கு அப்பால் இலங்கை உட்பட பல நாடுகளில் தனது தளங்களை உருவாக்க முயல்கின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என ஐஏன்என்எஸ் தெரிவித்துள்ளது. சீனா 2035 ஆண்டளவில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ படையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துகின்றது 2049ம் ஆண்டுக்குள் சீன இராணுவத்தை உலகதரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. இதேகாலப்பகுதியில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது இறையாண்மை பிரதேசம் என கருதும் பகுதிகளை பாதுகாப்பதற்கு சீன இராணுவத்தை பயன்படுத்தவும் பிராந்திய விவகாரங்களி;ல் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் சர்வதேச அளவில் தனது வலிமையை வெளிப்படுத்தவும் நீரிணை மோதலின் போது அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவும் எதிர்க்கவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178603
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புக்கான படம் கட்டுரை தகவல் எழுதியவர், லூ நியூட்டன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கு ஜப்பானில் உள்ள புகுயாமா நகரம் ஒரு பூனையைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை. அந்தப் பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம்தான். ஒரு தொழிற்சாலையின் விஷத்தன்மைமிக்க ரசாயனம் இருந்த தொட்டியில் இந்தப் பூனை விழுந்தது. அதன்பின் அது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதனிடமிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதியின் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நடந்த தொழிற்சாலையில் பணிசெய்யும் ஒரு தொழிலாளி, ரசாயனத் தொட்டியில் இருந்து மஞ்சள் காலடிச் சுவடுகள் வெளியே செல்வதைக் கண்டிருக்கிறார். அதன்பிறகே இந்த எச்சரிக்கை வந்துள்ளது. அங்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்தபோது, ஒரு பூனை தப்பி ஓடுவதைக் காண முடிந்தது. புகுயாமாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை இந்தப் பூனையிடம் இருந்து விலகி இருக்குமாறும், அது எங்கேனும் காணப்பட்டால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். பட மூலாதாரம்,PROVIDED BY NOMURA PLATING படக்குறிப்பு, ஒரு தொழிலாளி, ரசாயனத் தொட்டியில் இருந்து மஞ்சள் காலடிச் சுவடுகள் வெளியே செல்வதைக் கண்டிருக்கிறார் இவ்வளவு ஆபத்தான ரசாயனமா? ஹெக்ஸாவலன்ட் குரோமியம் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது. மிக அதிக அமிலத்தன்மை கொண்டது. புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. இப்படிப்பட்ட ரசாயனத்தில் தான் இந்தப் பூனை விழுந்துள்ளது. பட மூலாதாரம்,PROVIDED BY NOMURA PLATING நமுரா முலாம் பூசும் புகுயாமா தொழிற்சாலை என்ற இடத்தில் நேற்று பணிக்கு வந்தபோது ஒரு ஊழியர் பூனையின் காலடித் தடங்களைக் கண்டறிந்ததாக ஆசாஹி செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. புகுயாமா நகரின் சுற்றுச்சூழல் குழு, ‘அசாதாரணமாகத் தோன்றும் பூனைகளை’ பொதுமக்கள் தொட வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறது. ஆனால் இச்சம்பவத்தின் விளைவாக அந்தப் பூனை இறந்திருக்கக்கூடும் என்றும் கூறியது. பட மூலாதாரம்,PROVIDED BY NOMURA PLATING படக்குறிப்பு, ஹெக்ஸாவலன்ட் குரோமியம் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது எங்கே தவறு நிகழ்ந்தது? இந்தத் தொழிற்சாலையை நடத்தும் நிறுவனம், இந்த ரசாயனத் தொட்டி தாள்போன்ற ஒரு விரிப்பால் மூடப்பட்டிருந்ததாகக் கூறியது. ஆனால் பூனை உள்ளே விழுந்த அந்தப் பகுதி திறந்திருந்ததாகவும் கூறியது. “பூனைகள் போன்ற சிறிய விலங்குகள் தொழிற்சாலைக்குள் வருவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் எங்களுக்கு நினைவுறுத்துகிறது. இது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று," என அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாக AFP செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஹெக்ஸாவலன்ட் குரோமியம் தோல் எரிச்சல், சுவாசப் பிரச்சனைகள், மற்றும் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதன் அருகில் பணிசெய்யும் ஊழியர்கள் முகமூடிகள் மற்றும் ரப்பர் கையுறைகளை அணிவது கட்டாயம். செவ்வாய்கிழமை வரை இந்தப் பூனை எங்கும் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். https://www.bbc.com/tamil/articles/cd19gv9p5r0o
  15. எனது கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் - யாழில் கடத்திக் கொல்லப்பட்டவரின் மனைவி குற்றச்சாட்டு 13 MAR, 2024 | 11:48 AM எனது கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். காரைநகர் பகுதிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் வழியில் கடத்திச் சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்தது. இது தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், காரைநகருக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர். அவ்வேளை, நானும் கணவரும் அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமுக்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள். "எங்களை கடத்த போறாங்க, எங்களை காப்பாற்றுங்க" என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால், அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள். அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்திச் சென்றனர். கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு, எமக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், எனது கணவரின் உயிர் பிரிந்திருக்காது. எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார். உயிரிழந்தவரின் உறவினர்கள் கூறுகையில், கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காமல் இருந்தாலும், தமது முகாமுக்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்திவிட்டு, இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கலாம். கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் சென்றபோதும், கடற்படையினர் அதனை தடுக்காமலும், கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமலும் இருந்ததால், கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/178600
  16. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரையும் இலங்கை தூதரகத்திற்கு அழைப்பு Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 10:12 AM முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்துவாழ விரும்புகிறோம். எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், முருகனின் நோ்காணலுக்காக புதன்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது. முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா். எனவே, புதன்கிழமை அவா்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா் என தெரிவித்தாா். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடா்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா். https://www.virakesari.lk/article/178590
  17. Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 08:52 AM (நா.தனுஜா) சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களைத் தாம் தொடர்ந்து கண்காணிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கையைத் தொடர்ந்து பிரிட்டன், கனடா, வடமெசிடோனியா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் அமெரிக்கா ஆகிய இணையனுசரணை நாடுகளால் இலங்கை நிலைவரம் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தன. இந்நிலையில் இணையனுசரணை நாடுகளின் அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், 'சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களை நாம் தொடர்ந்து கண்காணிப்போம்' எனத் தெரிவித்துள்ளார். அதேபோன்று அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகளாலும், ஏனைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் 'நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமானது கருத்து வெளிப்படுத்தலைக் குற்றமாக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும்' என்ற பொதுவான கரிசனை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/178583
  18. Published By: VISHNU 13 MAR, 2024 | 02:46 AM வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (12) கையளித்தார். இலங்கை நிர்வாகச் சேவையின் தலைசிறந்த அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகும் பணியாற்றியுள்ளார். எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறும் வரை, வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178576
  19. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ல் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 12 மார்ச் 2024 குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்போவதில்லை என இந்தியாவின் சில மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. குடியுரிமை மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், அது சாத்தியமா? குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமையன்று வெளியிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், அஃப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, பௌத்தம், பார்சி, கிறிஸ்தவர், சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் 2014ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால், அவர்கள் இந்திய குடிமகனாக மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த தேதியை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த விண்ணப்பத்தைச் செய்யலாம். பிரிவு 1 A, பிரிவு 1 B என இரண்டு பிரிவுகளில் இதற்கான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1 A-வைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழங்கிய பிறப்புச் சான்றிதழ், வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம், அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், கல்விச் சான்றிதழ்கள் போன்றவை ஆவணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. 1 B-ஐப் பொறுத்தவரை, இந்திய அரசு வழங்கிய விசா, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்ட ஒப்புகைச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பொது விநியோக அட்டை, PAN அட்டை, திருமணச் சான்றிதழ் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே 2014க்கு முன் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதற்கென உள்ள https://indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 'தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட மாட்டாது' பட மூலாதாரம்,MK STALIN / FACEBOOK இந்தச் சட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகியவை எதிர்கின்றன. முன்னதாக இந்தச் சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.கவும் இப்போது இதனை எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருமென சில வாரங்களுக்கு முன்பாக மத்திய அமைச்சர் ஷாந்தனு தாக்கூர் தெரிவித்தபோது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, அந்தச் சட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார். பட மூலாதாரம்,@MKSTALIN/X பினராயி விஜயன் எதிர்ப்பு அதேபோல மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மேற்கு வங்கத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது எனக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகள் திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார். "இஸ்லாமியச் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் செயல்படுத்த மாட்டோம் என இடது ஜனநாயக முன்னணி அரசு பல முறை தெரிவித்திருக்கிறது. அந்த நிலையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத, பிரிவினைவாத சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒற்றுமையுடன் செயல்படும்," என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார் பினராயி விஜயன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பினராயி விஜயன் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? ஆனால், குடியுரிமை வழங்குவது என்பது மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வரும் நிலையில், மாநில அரசு ஒன்று குடியுரிமை தொடர்பான சட்டங்களை அமல்படுத்த முடியாது என அறிவிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது பிரிவு எந்தெந்த விவகாரங்கள் மத்தியப் பட்டியலிலும் மாநிலப் பட்டியலிலும் பொதுப் பட்டியலிலும் வருகின்றன என்பதை வரையறுக்கின்றது. இதில் மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 விவகாரங்கள் இருக்கின்றன. இதில் 17வது அம்சமாக குடியுரிமையைக் குறிப்பிடும் 'Citizenship, naturalisation and aliens' என்ற விவகாரம் வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து சட்டமியற்றும் உரிமை முழுக்க முழுக்க நாடாளுமன்றத்திற்கே உரியது. மத்தியத் தொகுப்பில் உள்ள இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை மாநிலங்கள் மீற முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கபில் சிபல் மாநில அரசு தடுக்க முடியுமா? காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாட்டின் குறிப்பிடத்தகுந்த வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில் சிபல், 2020ஆம் ஆண்டில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கேரள மாநிலத்தில் நடந்த கேரள இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்ட அவர், "சிஏஏ நிறைவேற்றப்பட்டுவிட்டால், நான் அதைச் செயல்படுத்த மாட்டேன் என எந்த மாநிலமும் சொல்ல முடியாது. நீங்கள் எதிர்க்கலாம். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரலாம், அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும்படி மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால், அதைச் செயல்படுத்த மாட்டேன் எனச் சொல்வது அரசியல்சாசன ரீதியாக சிக்கலானது," என்று தெரிவித்தார். மேலும், குடியுரிமை கோருபவர்கள் இதற்கென மத்திய அரசு வடிவமைத்துள்ள இணையதளத்தில் முன்பே பெற்ற ஆவணங்களோடு நேரடியாக விண்ணப்பிப்பார்கள் என்பதால், இதனை மாநில அரசு எப்படித் தடுக்க முடியும் அல்லது செயல்படுத்தாமல் இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 'இது அரசியல் ரீதியான எதிர்ப்பு' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இதனை ஒரு வகையான அரசியல் எதிர்ப்பு என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன். "இது ஒரு அரசியல் ரீதியான எதிர்ப்பு, அவ்வளவுதான். இந்தியாவில் குடியுரிமை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. இது தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்றும். இந்திய குடியுரிமை தொடர்பான சட்டம் 1955இல் இயற்றப்பட்டுவிட்டது. அதில்தான் இப்போது திருத்தம் செய்யப்படுகிறது. இதில் மாநிலங்கள் ஏதும் செய்ய முடியாது என்றாலும், இப்படிச் சொல்வது ஜனநாயக ரீதியில் ஆரோக்கியமானதுதான். இது ஒருவகையான எதிர்ப்புதான். "மத்திய அரசின் அலுவல் மொழி விவகாரம்கூட இப்படித்தான். மத்திய அரசு இந்தியை தன் அலுவலில் முழுமையாகப் பயன்படுத்தலாம் என்றாலும் மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பின் மூலம் அதனைத் தடுத்து வைத்திருக்கின்றன. அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்," என்கிறார் ஹரி பரந்தாமன். 'இதை முழுமையாகச் செயல்படுத்த முடியாது' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் குடியுரிமை என்பதும் குடியுரிமை வழங்காமல் இருப்பதும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது என்றாலும் மாநில அரசின் உதவியில்லாமல் எதையும் செய்ய முடியாது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டன்டீன். "சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுதான். குடிமக்கள் பதிவேட்டை மாநில அரசின் உதவியின்றி உருவாக்கிவிட முடியுமா? உதாரணமாக, இந்த சிஏஏ சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை பெற முடியாது. அதற்காக, தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என சொன்னால், அதை மாநில அரசுதானே செய்ய வேண்டும்? அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம்," என்கிறார் கான்ஸ்டைன்டீன். ஆனால், இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசு அரசியலுக்காகத்தான் உருவாக்குகிறது என்கிறார் அவர். "இது பா.ஜ.கவின் மற்றும் ஒரு ஜும்லா. வட இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் வலுவாக உள்ள பகுதிகளில் தாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் காட்டி, மத பிரிவினையைச் செய்ய முயல்கிறார்கள். இதையெல்லாம் அவர்களால் முழுமையாகச் செயல்படுத்த முடியாது," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் 'இதற்கான தேவை என்ன?' இதனை சட்ட ரீதியாகப் பார்ப்பதைவிட, இதற்கான தேவை என்னவெனப் பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த வழக்கறிஞரான கே.எம். விஜயன். "1947- 48-இல் இந்தியாவுக்கு வந்தவர்கள், 50களில் இந்தியாவில் வசித்தவர்கள் இந்தியக் குடிமக்கள் என ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. இப்போது புதிதாக இதைச் செய்வதற்கான நோக்கம், இஸ்லாமியர்களை ஒதுக்குவதாகக் காட்டுவதற்குத்தான். தேசிய குடிமக்கள் பதிவேட்டையெல்லாம் மாநில அரசுகளின் உதவியோடுதான் செய்ய வேண்டும். அதெல்லாம் எப்படி நடக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்," என்கிறார் விஜயன். ஆனால், இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டவை அல்ல என்பதால், அசாம் போன்ற மாநிலங்களில் உள்ள எதிர்ப்பை வேறு மாதிரி பார்க்க வேண்டும் என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2v9xvxepq5o
  20. ஜப்பான் கடந்த வருடம் இரண்டு நோயாளர் காவு வண்டிகள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு வழங்கியிருந்தது.
  21. 12 MAR, 2024 | 09:57 PM மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்க பட்டதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்தார். மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணையானது திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் CID யினரால் சட்ட வைத்தியர் கேவகேயின் அறிக்கை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்தார். திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதிகள் மேற்கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கோரியதாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் மே மாதம் 13 திகதி அழைப்பதற்காக திகதியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178556
  22. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை நேற்று (11) மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகளுக்கு இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அக்னி-5 ஏவுகணை இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளால் பெருமை கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த அக்னி1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் 700 கிலோ மீற்றர் முதல் 3,500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. அக்னி-5, சுமார் 5000 கிலோ மீற்றர் தூரம் வரை செல்லக் கூடியது. இதன் மூலம் சீனாவின் வடக்கு பகுதி உட்பட முழு ஆசியாவையும் தாக்கும் எல்லைக்குள் கொண்டு வர முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://ibctamil.com/article/first-successful-test-of-a-missile-made-in-india-1710225591?itm_source=parsely-api
  23. செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை 12 MAR, 2024 | 11:47 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிபுலனற்ற கிரிக்கெட் அணிகள் இன்று (12) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலக சம்பியனை தீர்மானமிக்கவுள்ள இறுதிப் போட்டியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணியானது, சுப்பர் ஓவரில் 9 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடந்த 6 ஆம் திகதியன்ற ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமான இப்போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (11) நடைபெற்றன. இப்போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை , இந்திய அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குகே்கவே போட்டியில் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு சுப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடி இலங்கை அணி 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சுப்பர் ஓவரில் இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட கிமந்து மெல்கம், பாலகிருஷ்ணன் தர்மசீலன் களமிறங்கினர். இலங்கை அணி 14 ஓட்டங்களை குவித்து, இந்திய அணிக்கு 15 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சுப்பர் ஓவரில் இந்திய அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதால், 9 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டிக்கு முன்னதாக நடை‍பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (12) நடைபெறவுள்ள உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளவுள்ளன. https://www.virakesari.lk/article/178508
  24. பாரிஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு தடையில்லை: - சர்வதேச ஒலிம்பிக்குழு Published By: SETHU 12 MAR, 2024 | 10:03 AM (ஆர்.சேதுராமன்) காஸா யுத்தம் காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என சர்வதேச ஒலிம்பிக்குழு தெரிவித்துள்ளது. உக்ரேன் யுத்தத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் போட்டியாளர்கள் அவ்விரு நாடுகளின் சார்பாக போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. அவர்கள் நடுநிலை போட்டியாளர்களாகவே பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஸா யுத்தம் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஒலிம்பிக்கில் தடை விதிக்குமாறு பலஸ்தீன செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரான்ஸின் இடதுசாரி எம்.பிகள் சிலரும் ஐ.ஓ.சி.யை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்தவாரம் பாரிஸுக்கு விஜயம் மேற்கொண்ட, பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (ஐ.ஓ.சி.) இணைப்புக் குழுத் தலைவர் பியர் ஒலிவியே பெக்கர்ஸ் வியூஜன்ட்டிடம், காஸா யுத்தம் காரணமாக இஸ்ரேலுக்குத் தடை விதிக்கப்படுமா என நேற்றுமுன்தினம் கேட்கப்பட்டது. அப்போது, அவர் பதிலளிக்கையில், இஸ்ரேலுக்கு தடைவிதிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனத் தெரிவித்தார். ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கும் பின்னர் ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் தனித்துவமானைவ. ரஷ்யாவும், ரஷ்ய ஒலிம்பிக் குழுவும் ஒலிம்பிக் சாசனத்தின் அத்தியாவசியமான பகுதிகளை பலவீனப்படுத்தின. பலஸ்தீன ஒலிம்பிக் குழு அல்லது இஸ்ரேலிய குழு விடயத்தில் இந்நிலைமை இல்லை, அவை அமைதியாக ஒருங்கிருக்கின்றன' என அவர் கூறினார். 2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடைந்து 4 நாட்களின் பின், அதாவது 2022 குளிர்கால பராலிம்பிக் ஆரம்பமாகுவதற்கு 9 நாட்களுக்கு முன் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனால் ஒலிம்பிக் கால போர் நிறுத்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக ஐ.ஓ.சி தலைவர் தோமஸ் பாக் கூறியிருந்தார். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களைச் சேர்ந்த பிராந்திய விளையாட்டு அமைப்புகளையும் தனது அங்கத்தவர்களாக ரஷ்ய ஒலிம்பிக்குழு உள்ளடக்கியதையடுத்து, ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் ஐ.ஓ.சி. கடந்த ஒக்டோபர் மாதம் தடை விதித்தது. https://www.virakesari.lk/article/178492
  25. ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் என்ற ஸ்ரீஹரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் நாளைய தினம்(13) இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார். முருகன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு மதியம் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிய இவர்கள் 2022ஆம் ஆண்டளவில் விடுதலையாகியமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/santhan-death-rajiv-gandhi-murder-india-srilanka-1710243159

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.