Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20 சதம் குவித்து சாதனை 27 FEB, 2024 | 04:54 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நமிபியா வீரர் ஜான் லொஃப்டி ஈட்டன் அதிவேக சதம் குவித்து புதிய உலக சாதனை நிலைநாட்டியுள்ளார். நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் லொஃப்டி ஈட்டன் 33 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்துள்ளார். நேபாள வீரர் குஷால் மல்லாவினால் நிலைநாட்டப்பட்ட சாதனையை ஈட்டன் முறியடித்திருப்பது விசேட அம்சமாகும். சீனாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டு விழா ரி20 கிரிக்கெட் போட்டியில் மொங்கோலியாவுக்கு எதிராக மல்லா 34 பந்துகளில் சதம் குவித்து முன்னைய உலக சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். 11ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் களம் புகுந்த 22 வயதான லொஃப்டி ஈட்டன் 36 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். கடந்த 32 ரி20 போட்டிகளில் அவர் வெறும் 182 ஓட்டங்களையே பெற்று 10.70 என்ற மிக மோசமான சராசரியைக் கொண்டிருந்தார். ஆனால், இன்றைய போட்டியில் சாதனை படைத்து ஹீரோவானார். ஆரம்ப வீரர் மாலன் க்ருஜர் 48 பந்துகளை எதிர்கொண்டு 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 135 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அப் போட்டியில் நமிபியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. ரி20 அதிவேக சதங்கள் (முதல் 5 வீரர்கள்) லொஃப்டி ஈட்டன் (நமிபியா) - 33 பந்துகளில் குஷால் மல்லா (நேபாளம்) - 34 பந்துகளில் டேவிட் மில்லர் (தென் ஆபிரிக்கா), ரோஹித் ஷர்மா (இந்தியா), இலங்கை வம்சாவளி சுதேஷ் விக்ரமசேகர (செக் குடியரசு) - மூவரும் 35 பந்துகளில் சதம். https://www.virakesari.lk/article/177436
  2. திமுக – மநீம தொகுதி பங்கீடு : கமல்ஹாசன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்! 27 FEB, 2024 | 02:20 PM திமுக – மநீம கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கமல்ஹாசன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது. இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிகளுக்கு ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இரண்டு இடதுசாரி கட்சிகளும் பேச்சுவார்த்தையில் இணக்கமாக அமைந்ததாக தெரிவித்தனர். இந்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2021 பொது தேர்தல்களில் 61 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 7.35 சதவீதம் முதல் 9.62 சதவீதம் வாக்கு பெற்றுள்ளதால் மக்கள் நீதி மய்யத்திற்கு குறைந்தது 2 தொகுதிகள் வேண்டும் என ம.நீ.ம கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல காங்கிரஸ் கட்சியுடன் ஓரிரு நாளில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை திமுக நடத்த உள்ளது. ஒரு வாரத்திற்குள் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அடையாளம் கண்டு தொகுதி பங்கீடை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. மார்ச் 2 வது வாரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்காண நேர்காணலை நடத்தவும் அக்கட்சி முடிவு செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/177426
  3. தமிழ்நாட்டில் கூட்டணி அமைவதில் சிக்கல்கள் நீடிப்பது ஏன்? பட மூலாதாரம்,MK STALIN / FACEBOOK படக்குறிப்பு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 27 பிப்ரவரி 2024, 04:49 GMT நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணிகளை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது? இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தை தேர்வுசெய்வதற்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாடளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்படும் நிலையில், இந்தியா முழுவதுமே அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகளில் தீவிரமாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - அ.தி.மு.க. தலைமையில் பிரதான கூட்டணிகளும் வேறு சில கட்சிகள் தனித்தும் போட்டியிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. தற்போது தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உருவாகியிருக்கிறது. இதில் தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சிக்குப் பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் இடம்பெறும்; அதைத் தவிர வேறு மாற்றங்கள் இருக்காது எனக் கூறப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டாலின்-ராகுல் (கோப்புப்படம்) பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை தற்போதுவரை இந்தக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழ்நாட்டில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் ஒரு இடம் என பத்து இட போட்டியிட்ட நிலையில் இந்த முறை எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. இந்த நம்பிக்கையில்தான் கடந்த ஜனவரி 28ஆம் தேதி சல்மான் குர்ஷித் தலைமையில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முகுல் வாஸ்னிக், அஜய் குமார் ஆகியோர் அறிவாலயத்திற்கு வந்து தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சு வார்த்தையில் இடங்களை அதிகரிக்க எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்பதை தெரிவித்த தி.மு.க குழுவினர், 7-8 இடங்களையே தர முடியும் என்றும் தொகுதிகளிலும் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறியது. இதற்குப் பிறகு அடுத்தகட்டப் பேச்சு வார்த்தை இதுவரை நடக்கவில்லை. தி.மு.கவுடன் பேச்சு வார்த்தையை இறுதி செய்து அறிவிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவரது வருகை ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரத்தில் பானைச் சின்னத்திலும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இந்த முறை தனது சின்னத்தில் போட்டியிடவும் கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிடவும் விரும்புகிறது அக்கட்சி. ஆனால், தி.மு.க. தரப்பில் கூடுதல் தொகுதிகளைத் தர மறுப்பதால் பேச்சு வார்த்தையில் பெரிய முன்னேற்றமில்லை. இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளையே எதிர்பார்க்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டனம், திருப்பூர் தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை கோயம்புத்தூர், திருப்பூர் தொகுதிகளில் தாமே போட்டியிட விரும்புகிறது தி.மு.க. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை கமல்ஹாசனின் நிலை என்ன? இந்த நிலையில் திங்கட்கிழமையன்று பேச்சு வார்த்தை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர், பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்ததாக மட்டும் தெரிவித்தனர். மார்ச் 3ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடக்குமெனக் கூறப்பட்டிருக்கிறது. ம.தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த முறை, மக்களவையில் ஒரு இடமும் மாநிலங்களவையில் ஒரு இடமும் அளிக்கப்பட்டன. ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். மாநிலங்களவைத் தொகுதி வைகோவுக்கு அளிக்கப்பட்டது. இந்த முறை ம.தி.மு.கவுக்கு ஒரு மக்களவை இடத்தை மட்டுமே அளிக்க தி.மு.க. முன்வந்திருக்கிறது. விருதுநகர் அல்லது திருச்சி தொகுதியை தி.மு.க. முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளுமே காங்கிரசின் தொகுதிகள் என்பதால் இழுபறி நீடிக்கிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை. கடைசி கட்டத் தகவல்களின்படி, இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் காங்கிரசுடனான கூட்டணி இறுதிசெய்யப்படும் என்றும் அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்திற்கான இடங்களும் முடிவுசெய்து அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. காங்கிரசிற்கு வழங்கப்படும் இடங்களில் இருந்து ம.நீ.மவுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் வகையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். சி.பி.ஐ.யைப் பொறுத்தவரை மக்களவை இடம் ஒன்றும் மாநிலங்களவை இடம் ஒன்றும் ஒதுக்கி, கூட்டணி இறுதிசெய்யப்படலாம். சி.பி.எம்மிற்கு மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளே திரும்ப வழங்கப்படலாம். அல்லது மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் அளிக்கப்படலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தெரியவருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்ட அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தற்போது தனித்தனியாகப் போட்டியிடுவதால் ரொம்பவும் திண்டாடிப் போயிருப்பது அந்தக் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் அதிமுக தீவிரம் காட்டுகிறது. அதிமுக, பாஜக என்ன செய்கிறது? அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில்தான் தீவிரம் காட்டுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தீவிரமாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. சில நாட்களில் அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தே.மு.தி.கவைப் பொறுத்தவரை பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனுமே பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. ஆனால், அக்கட்சியின் எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால் இரு கட்சிகளுமே இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. "அடுத்த திங்கட்கிழமையை ஒட்டி அறிவிப்புகள் வெளியாகலாம். பெரிய கட்சிகள் எங்களுடன்தான் கூட்டணி அமைப்பார்கள்" என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போது அந்த மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. இடம்பெறாவிட்டால், அக்கட்சிகள் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் அறிவித்திருக்கின்றன. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவ் இந்தக் கூட்டணியில் ஒரு இடத்தை எதிர்பார்க்கிறார். பிரதமர் நரேந்தர மோதி தமிழ்நாட்டிற்கு வரும்போது அவருடன் மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பெரிய கட்சிகளை கூட்டணிக் கட்சிகளாக மேடை ஏற்ற நினைத்தது பா.ஜ.க. ஆனால், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் மட்டுமே கூட்டணிக் கட்சிகளாக பிரதமரைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் கூட்டணிகள் எப்போது இறுதியாகும்? இதற்கிடையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடனும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற ஆர்வம் காட்டினாலும், அதே போன்ற ஆர்வம், பா.ஜ.க. தரப்பிலிருந்து வெளிப்படவில்லை. ஆனால், கூட்டணிகள் எல்லாம் இறுதிசெய்யப்பட இன்னும் காலம் இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். "இதையெல்லாம் தாமதம் என்றே சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம்வரை கூட்டணியை இறுதிசெய்யலாம். முன்பே கூட்டணிகளை அறிவித்து, இடங்களையும் அறிவிப்பதில் பல சிக்கல்கள் இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள கட்சிக்காரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள், வெளியேறுவார்கள். அதையெல்லாம் பெரிய கட்சிகள் தவிர்க்க நினைக்கும். ஆகவே இன்னும் பல நாட்கள் கழித்தே கூட்டணிகள் இறுதியாகும்" என்கிறார் ஷ்யாம். https://www.bbc.com/tamil/articles/c9040gp3y7do
  4. அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு சீனாவால் ஆபத்து - நாடாளுமன்றத்திற்கான தனது இறுதி உரையில் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்கொட்மொறிசன் Published By: RAJEEBAN 27 FEB, 2024 | 12:39 PM அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொறிசன் நாடாளுமன்றத்திற்கான தனது பிரியாவிடை உரையில் சீனாவால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவை கட்டாயப்படுத்த அல்லது ஆதாயம்தேட சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஸ்கொட் மொறிசன் தனது நாடாளுமன்ற உரையில் எச்சரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு சீனா ஆபத்தானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். சீனா 'மோதல் இராஜதந்திரத்தை மூலோபாய அடிப்படையில் தவிர்த்து வருவதை அடிப்படையாக வைத்து' அந்த நாட்டின் நோக்கங்கள் பற்றி குழப்பம் ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன் சீனா சுதந்திரத்தை விட அதிகாரத்தை பலத்தை விரும்பும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சீனா தனதுநோக்கங்கள் என வரும்போது தனது மக்கள் குறித்து அக்கறை கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே எனது அரசாங்கம் சீனாவின் ஆக்கிரமிப்பினை வற்புறுத்தல்களை மிரட்டல்களை எதிர்ப்பதில் உறுதியாகயிருந்தது எனவும் தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன் நாங்கள் அடிபணிவோம் என சீனா நினைத்தது எனவும் தெரிவித்துள்ளார். 2022 தேர்தல் முடிவுகள் காரணமாக சீனா தனது வற்புறுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டிருக்கலாம். ஆனால் நாம் ஏமாறக்கூடாது. அவர்களின் தந்திரோபாயங்கள் மாறலாம், ஆனால் மூலோபாயங்கள் மாற்றமடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/177416
  5. Published By: VISHNU 27 FEB, 2024 | 06:30 PM காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் செவ்வாய்க்கிழமை (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடகிழக்கில் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த காலப்பகுதியில் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் நீதி கேட்டு தொடர் போராட்டம் ஆரம்பித்து அதன் ஏழாவது ஆண்டு நிறைவு தினத்திலே மீண்டும் ஒரு கவனயீர்ப்பு போராட்ட பேரணியை நடத்தி ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இக் கோரிக்கைகள் நியாயமானது. உறவுகளை பறிகொடுத்த வலிகளோடு தொடர் போராட்டங்களை நடத்தி வரும் வடகிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் தமது முழுமையான ஆதரவை நடத்துவதோடு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுமாறு ஐ.நா மனித உரிமை பேரவையை வலியுறுத்துகின்றது. யுத்த காலத்தில் தமது உறவுகளை தேடி அலைந்த அவர்களின் உறவுகள் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அமைப்பு ரீதியில் நீதி கேட்டு தலைநகர் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் போராட்டங்களை நடாத்தியவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தன் உறவுகளை தேடி தேடித் மன வேதனைக்கு உட்பட்டவர்கள் பல்வேறு நோய் தாக்கத்தின் காரணமாகவும், வயது மூப்பினாலும், இரத்த உறவுகளின் பிரிவினாலும் இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதனை இயற்கை மரணம் என கடந்து விட முடியாது. இலங்கை அரசு நீதி மறுத்து இவர்களை கொலை செய்தது என்றே அடையாளப்படுத்தல் வேண்டும். இந்நிலை இனியும் தொடர சர்வதேச மனித உரிமை அமைப்புகளும்,ஐ.நா மனித உரிமை பேரவையும் இனியும் இடமளிக்கக் கூடாது என்பது எமது உருக்கமானதும் அளுத்தமானதுமான வேண்டுகோள். ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. இது விடயம் தொடர்பில் அரசின் செயற்பாடுகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்ல வடகிழக்கிற்கு வெளியே நீதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் நம்பிக்கை இல்லை. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும். இலங்கையில் நிகழ்ந்த பல்வேறு பாரதூர சம்பவங்கள் தொடர்பில் ஆழ ஆராய்ந்து அதன் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலை நாட்டுவதற்கும், அவ்வாறான நிகழ்வுகள் மீழ் நிகழ்வதை தடுப்பதற்கு என 1956 லிருந்து இதுவரை 36 வரை ஆணை குழுக்கள் அமைக்கப்பட்ட போதும் அவ் ஆணை குழுக்களின் அறிக்கைகள் முழுமையாக மக்கள் முன் வைக்காது மறைக்கவே ஆட்சியாளர்கள் முயற்சித்துள்ளனர். அது மட்டுமல்ல அவ் ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் எந்த ஒரு ஆட்சியாளருக்கும் துணிவு இருக்கவில்லை.காரணம் உண்மையை மூடி மறைத்து அரசியல் குளிர் காய்வதே அவர்களின் நோக்கம். அவ்வாறே யுத்தம் முடிவற்றதன் பின்னர் காணமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் பல்வேறு ஆணை குழுக்கள் நியமிக்கப்பட்டன.அவ் ஆணைக்குழுக்கள் நியாயமான பரிந்துரைகளை முன் வைத்த போதும் அதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியாளர்கள் துணியவில்லை. தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்களில் மண்ணை தூவி உள்நாட்டு பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டப் போவதாக அறிவிக்கலாம். இதற்கு வலிந்து காணாமலாக்கட்ட உறவுகளின் அமைப்போ நாமோ உடன்பட போவதில்லை என உரத்து கூறுகின்றோம். ஆதலால் இச்சந்தர்ப்பத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அளுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், இலங்கை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறப்படுகின்ற உதவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தேவையை நிறைவேற்றலாமே தவிர அதன் மூலம் எதிர்பார்க்கும் நீதியை அடைய முடியாது என்பதே உண்மை. எனவே சர்வதேச உதவி அமைப்புகளும்,நலன் விரும்பிகளும் வலிகளோடு வாழும் உறவுகளின் அமைப்பால் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம். தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்திலும், யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ,ஐ. நா மனித உரிமை பேரவையும் இலங்கை ஆட்சியாளர்களை இனியும் நம்பக் கூடாது என்பதோடு எனது வாலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அவசர உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என ஐநா மனித உரிமை பேரவையிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வதோடு யுத்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமாறும் தமிழர்கள் மீது தொடர்ந்து முன்னெடுக்கும் இன அழிப்பினை சர்வதேசம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது என்பது அதனை அங்கீகரிப்பதாக அமைந்து விடுமாதலால் ஆதலால் அதனை தடுப்பதற்கு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/177450
  6. தூத்துக்குடி வெள்ளம்: 70 நாட்களாகியும் வெள்ளநீர் வடியாத கிராமம் - கள நிலவரம் கட்டுரை தகவல் எழுதியவர், மு.சுப கோமதி பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 17 டிசம்பர் 2023 — தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை கனமழை புரட்டி போட்ட நாள். தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தின் போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை பாதிப்பிலிருந்து சுமார் பத்து நாட்களுக்குப் பிறகே இந்த மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின. ஆனால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 70 நாட்களுக்கு மேலாகியும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறுகின்றனர். இயல்பு நிலைக்கு திரும்பாத ஊர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல கிராமங்களின் ஒன்று தான் திருச்செந்தூர் தாலுகாவிலுள்ள வெள்ளாளன்விளை கிராமம். இந்த ஊரில், 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கால் இங்குள்ள வீடுகள் மற்றும் கால்நடைகள் மிகவும் பாதிப்பட்டன. உடன்குடி அருகிலுள்ள சடையநேரிகுளம் உடைந்ததன் காரணமாக வெள்ளாளன்விளை கிராமத்தின், மேற்கு தெரு மற்றும் வடக்கு தெருவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கின. பிற ஊர்களின் வெள்ள நீர் வடிந்து 70 நாட்களுக்கும் மேலாகியும் இங்கு மட்டும் வெள்ள நீர் வடியாமல் வீடுகளுக்குள் தேங்கி இருக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மழை பாதிப்பிலிருந்து இயல்பு நிலைக்கு இந்த கிராமம் திரும்பாத நிலையில், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது சொந்த வீட்டிலிருந்து வெளியேறி, உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீட்டிலும் தங்கி உள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் சாமுவேல் ஞானப்பால் பிபிசி தமிழிடம் பேசிய போது, "டிசம்பர் 18 அன்று சடையநேரிகுளம் உடைந்து வெளியேறிய தண்ணீரால் என் வீட்டின் பின்புறம் உள்ள சுற்று சுவர் இடிந்தது. பின்னர் தரை தளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து விட்டது. உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறி அருகிலிருந்த தேவாலயத்தில் தங்கி இருந்தோம். சில நாட்களுக்கு தண்ணீரின் அளவு குறைந்ததால் வீடுகளுக்கு திரும்பினோம். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் தண்ணீர் முழுமையாக வடியவில்லை," என்றார். போக்குவரத்து முடக்கம் வெள்ளான்விளை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் வடியாமல் சூழ்ந்திருக்கும் வெள்ளம், அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையையும் சூழ்ந்துள்ளது. இதனால் சில பகுதிகளில் இன்று வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளாளன்விளை முதல் மானாடு ரோடு வரை செல்லும் சாலை மற்றும் வட்டன்விளை முதல் பரமன்குறிச்சி வரை செல்லும் சாலையில் தண்ணீர் நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால், வட்டன்விளை, செட்டிவிளை, மருதூர்கரை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சாலையை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தச் சாலையின் வழியாக கல்லூரி மற்றும் அவசர வேலைக்காகச் செல்பவர்கள் அதிக நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. கல்லூரியில் படித்து வரும் சாமுவேல் கூறியபோது, "டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மழை வெள்ளம் ஏற்பட்டது. எனது புத்தகங்கள் அனைத்தும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் என்னால் தேர்வுகளை சரியாக எழுத முடியவில்லை. எங்கள் ஊரில் இருந்து கல்லூரிக்கு செல்வதற்கு ஒரே ஒரு பேருந்து தான் உள்ளது. எங்கள் ஊருக்கு செல்லும் இந்த சாலையில் 2 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியுள்ளதால் தற்போது அந்த பேருந்தும் இங்கு வருவதில்லை. அதனால் 10 நிமிடத்தில் செல்ல வேண்டிய கல்லூரிக்கு ஊரைச் சுற்றி செல்வதால் 30 நிமிடங்கள் ஆகிறது," என்கிறார். தேங்கியுள்ள தண்ணீரால் நோய்த் தொற்று பாதிப்பும் ஏற்படுவதாக இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். "எனக்கு நான்கு குழந்தைகள். என் வீட்டில் இடுப்பு வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகிறது. அதிக நோய் தோற்றும் ஏற்படுகிறது," என்கின்றார் அப்பகுதியைச் சேர்ந்த ரெஜினா. பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம் வெள்ளான்விளை கிராமத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர். குறிப்பாக பனை, தென்னை, வாழை ஆகியவற்றைச் சார்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். மழையினாலும், இரண்டு மாதங்களாக சூழ்ந்திருக்கும் வெள்ள நீராலும் விவசாய நிலங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன என்று விவசாயிகள் தெரிவித்தனர். குறிப்பாக பனை சார்ந்து பொருட்களை வைத்து பிழைத்து வந்த இந்த கிராமத்தைச் சேர்ந்த பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. "நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் கூலித் தொழில் செய்து வருகின்றேன். பனங்கிழங்கு வாங்கி திருச்செந்தூர் கோவிலில் விற்பனை செய்து வருகின்றேன். வெள்ளத்தின் போது எங்கள் வீட்டு நாய், 6 கோழிகள் மற்றும் குஞ்சுகள், 10,000 ரூபாய் மதிப்பிலான பனங்கிழங்குகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதற்கான இழப்பீடு எதுவும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை," என்றார் ஆனந்தன். மழை வெள்ளம் வடியாததால் தினசரி பிழைப்புக்காக வெளியூர் செல்வது சிக்கலாக இருக்கிறது என்கிறார் ராஜாமணி. "பனை ஓலைகளை கொண்டு பெட்டி, பாய் செய்து விற்பனை செய்து வருகின்றேன். மேலும் பனங்கிழங்குகளையும் விற்பனை செய்வேன். வெள்ளத்தின் போது ஓலைகள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இன்னும் மழை நீர் வடியாத நிலையில் தொழிலுக்கு செல்ல முடியாமல் பல நாட்களாக வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன்," என்றார். தண்ணீரை வெளியேற்றுவதில் தாமதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த கிராமத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அதன் பிறகு நீர் இறைக்கும் மோட்டார் மூலமாக கடந்த 5 நாட்களாக தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் தண்ணீர் குறையவில்லை. வெள்ளான்விளை கிராமத்தின் ஒரு பகுதி மேடாகவும், மற்றொரு பகுதி பள்ளமாகவும் இருப்பதால், வெளியேற்றும் நீர் மீண்டும் சுழற்சி முறையில் ஊருக்குள் வருவதால், தண்ணீர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிப்பதாக கிராமத்தினர் கூறுகின்றனர். "வெள்ளம் சூழ்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. உடுத்திய துணியுடன் வீட்டை விட்டு வெளியேறினோம். இன்று வரை வீட்டிற்கு திரும்பவில்லை. கணவன் கிடையாது. நான்கு குழந்தைகள் உடன் வாடகை வீட்டில் தங்கி இருக்கின்றேன். அங்கு தூங்குவதற்கு கூட இட வசதி கிடையாது," என்கிறார் ஜெய் சுதா. சேதம் அடைந்த வீடுகளுக்கும் தண்ணீர் சூழ்ந்த வீடுகளுக்கும் இன்றுவரை எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். "மழை வெள்ளத்தால் என் வீடுகள் முழுக்க தண்ணீர் சூழ்ந்துள்ளது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கூட கொண்டாட முடியவில்லை. வீட்டில் இருந்து ஒரு பொருட்கள் கூட மிஞ்ச வில்லை. இனி வாழ்க்கையை புதிதாக தான் ஆரம்பிக்க வேண்டும்" என்கின்றார் ராதா. அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் என் உறவினர் வீட்டில் தங்கி இருக்கின்றேன். 65 நாட்களாகியும் வெள்ள நீர் இன்றும் வடியவில்லை. வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளது. இதில் தங்குவது மிகவும் கடினம். 65 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்கியுள்ளதால் வீட்டின் உறுதித் தன்மை குறைந்துவிட்டது. எனவே அரசு மாற்று வீடு வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை," என்கிறார் சாமுவேல். அரசின் நிவாரணம் கிடைக்குமா? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா கடந்த மாதத்தில் வெள்ளான்விளை கிராமத்தை பார்வையிட்டுச் சென்றனர். அதன் பிறகு மணல் மூட்டைகளைக் கொண்டு ஆங்காங்கே தடுப்பு வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. இது குறித்து பிபிசிக்கு விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, "வெள்ளாளன்விளை கிராமத்தில் வடக்கு மற்றும் மேற்கு பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும். சடையநேரிகுளம் குளத்தின் உடைப்பின் காரணமாக வெள்ளாளன்விளை கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மின் மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணியைத் தொடங்கினோம். ஆனால் தண்ணீர் சுழற்சியாக குடியிருப்பு பகுதிக்குள் வந்ததால், தற்போது டீசல் பம்ப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். கூடிய விரையில் தண்ணீர் முற்றிலுமாக வெளியேற்றப்படும். பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணமும் வழங்கப்படும்," என்றார். இது குறித்து தூத்துக்குடி மாவட்டச் சேர்ந்த மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடன் கேட்டபோது, "மோட்டார் பம்புகள் கொண்டு தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. விரையில் சரி செய்யப்படும்," என்றார். அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்டம் வழக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், "வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அவற்றை பழுதுபார்க்க ரூ. 2 லட்சம் மற்றும் முற்றிலும் சேதமடைந்த வீடுகள் ரூ.4 லட்சம் வழங்கப்படவுள்ளது," என்றார். https://www.bbc.com/tamil/articles/c97872yvlpvo
  7. மன்னார் தீவில் அரசு காற்றாலைத் திட்டத்தை கைவிடாதபோதும் தொடர்ந்து நாம் போராடுவோம் - மன்னார் ஆயர் Published By: VISHNU 27 FEB, 2024 | 08:03 PM தமிழர் தாயகத்தில் இன்று எற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றது. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்தால் ஏற்படும் ஆபத்தை தெரிவித்தும் அரசு கவனிக்காது வருகின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லய்னல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார். வருடந்தோறும் மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட இறை மக்களுக்கு தவக்காலத்தில் விடுக்கும் செய்தியில் தெரிவித்திருப்பதாவது திருச்சபையின் திருவழிப்பாட்டு ஆண்டில் மீண்டும் ஒரு தவக்காலத்தில் கத்தோலிக்க மக்களாகிய நாம் காலடி பதித்துள்ளோம். இத்தவக்காலம் அருளின் காலமாகவும் , மனமாற்றத்தின் காலமாகவும் . ஊனியல்புக்குரிய பழைய பாவ இயல்புகளை களைந்துவிட்டு செபம் , தவம் . தானதருமம் வழியாக இறைவனோடும் தன்னோடும் அயல்வர்களோடும் ஒப்புரவாக வேண்டிய காலமாக இந்த தவக்காலம் அமைந்துள்ளது. இன்றைய நாட்டின் அரசியல் தொடர்பாக ஆயர் அவர்கள் இம்மடலில் தெரிவிக்கையில் தமிழர் தாயகத்தில் இன்று எற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன. தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்தும் இழுபறி நிலையே தொடர்கின்றது. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றது. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியில் உள்ளவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு காய்நகர்த்தல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே இந்நிலையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவும் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் தொடர்ந்து நாம் செபிப்போம். மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்போக நெல் அறுவடை நடைபெறும் இக்காலத்தில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாத சூழ்நிலையில் விவசாயிகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர். வறுமைக் கோட்டுக்குக்குகீழ் வாழும் குடும்பங்கள் நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் பாவனையின் தாக்கத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. மன்னார் தீவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள 250 மெகாவாட் காற்றாலை சக்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முனைப்போடு செயல்படுகின்றது. இத்திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் குறித்து எம்மாலும் பொது அமைப்புக்களாலும் பல சந்தர்ப்பங்களில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் அரசாங்கம் இத்திட்டத்தை கைவிடுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் நாம் நமது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவோமாக என இவ்வாறு மன்னார் மாவட்ட இறை மக்களுக்கு மன்னார் ஆயர் தனது தவக்கால மடலில் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177453
  8. இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்னால் தீக்குளிக்க முயன்ற அமெரிக்க விமானப்படை வீரர் மரணம் Published By: RAJEEBAN 27 FEB, 2024 | 04:32 PM வோசிங்டனில் இஸ்ரேல் தூதரகத்தின் முன்னால் தீக்குளிக்க முயன்றவேளை எரிகாயங்களுடன் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க விமானப்படைவீரர் உயிரிழந்துள்ளார். காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார் ஆரோன்புஸ்னெல் என்ற 25 வயது விமானப்படைவீரரே உயிரிழந்துள்ளார். தீயை அணைத்தபின்னர் இரகசிய சேவை பிரிவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர் இராணுவசீருடையில் காணப்படும் அந்த நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை என தெரிவிக்கும் இணையவீடியோவொன்று வெளியாகியுள்ளது. தன்மேல்எரிபொருளை ஊற்றி தனக்குதானே தீமூட்டிக்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டார் என டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177435
  9. கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை உண்மையில் இருந்ததா? PM Modi கடலுக்கு அடியில் மூழ்கி வழிபட்டது ஏன்?
  10. 27 FEB, 2024 | 03:49 PM தமிழக கடற்தொழிலாளர்கள் விடயத்தில் தனக்கு அழுத்தங்கள் அதிகரித்தால், அமைச்சு பதவியை துறந்து விட்டு எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (27) இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும். 2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர். என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன். அதற்காக எனது அமைச்சு பதவியை துறந்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/177432
  11. மாலைத்தீவில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்ள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாலைத்தீவில் இந்திய இராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலைத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது. இராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10 ஆம் திகதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்தில் இருக்கும் இராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், மே 10 ஆம் திகதிக்குள் ஏனைய இரண்டு விமானப் படைத் தளங்களில் உள்ள இராணுவ வீரர்களும் திரும்பப் பெறப்பட்டு, தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய படைகளுக்கு பதிலாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை கையாளவும் முதல் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் மாலைத்தீவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது சீனு கானில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்குப் பதிலாக ஹெலிகாப்டரை இயக்கும் குழுவினர் மாலைத்தீவு வந்தடைந்துள்ளனர் என கூறியுள்ளது. மேலும் இதற்கிடையில், லாமுகன் கத்தூ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையே கான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் இன்று அதிகாலை தொழில்நுட்ப பணியாளர்கள் குழுவிடம் தங்களது பணியை ஒப்படைக்கும் நடைமுறையை தொடங்கினர். https://thinakkural.lk/article/293332
  12. காசாவில் 10 கி.மீ. நீளமுள்ள ஹமாஸ் சுரங்கப்பாதை: நெட்வொர்க்கை இஸ்ரேல் இராணுவம் அழித்தது காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயற்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பாரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர். காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர். காசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது. இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/293307
  13. Tuticorin Flood: 2 மாதங்களாக நீரில் மூழ்கிக்கிடக்கும் ஊர். 'வீட்டை மீட்கவே முடியாது' தூத்துக்குடியின் வெள்ளாளன்விளை கிராமத்தின் நிலை இதுதான்.... இது இன்று நேற்று பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் அல்ல... கடந்த டிசம்பரில் பெய்த வரலாறு காணாத கனமழை பாதிப்பின் நீட்சி. 2 மாதங்களாகியும் வெள்ளநீர் இன்னும் வடிந்தபாடில்லை...
  14. பாலியல் குறித்த கல்வி – மார்ச் மாதம் வௌியீடு! முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயதுவந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் (20) கூடிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட இலங்கையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தனிநபர்களின் பாலியல் கல்வி தொடர்பில் கொண்டுள்ள குறைந்த அறிவை விருத்தி செய்யும் நோக்கில் இந்த பாலியல் கல்வி வெளியீடுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தனர். முன்பள்ளி மாணவர்கள் முதல் 13ஆம் தரம் வரையிலான பாடசாலை மாணவர்கள் வரையிலும், வயது வந்தவர்களுக்காகவும் இந்த வெளியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பாலியல் கல்வி வெளியீடுகள் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் முழுமையான மேற்பார்வை மற்றும் அவற்றின் அனுமதியுடன் துறைசார்ந்த நிபுணர்களால் தொகுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். முதல் கட்டத்தின் கீழ் பாலியல் கல்வி தொடர்பான வெளியீடுகள் இலத்திரனியல் வெளியீடுகளாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் பாலியல் பற்றிய அறிவை முறையாக வழங்குவதன் மூலம், சமூகத்தில் உருவாகி வரும் பல நெருக்கடிகளை களைய முடியும் என்றும், இதன் மூலம் பாடசாலை மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/293381
  15. 27 FEB, 2024 | 01:04 PM இவ்வருடத்தின் இரு மாத காலப்பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , இலங்கையில் இவ்வருடம் இரு மாத காலப் பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 1,180 திருட்டு சம்பவங்களும் 310 கொள்ளைச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு மாத காலப்பகுதிக்குள் 20 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 10 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் பாதாள உலக குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/177411
  16. பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திரா; தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,FACEBOOK / YSJAGAN படக்குறிப்பு, ஜெகன் மோகன் ரெட்டி கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 27 பிப்ரவரி 2024, 06:52 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று உடனடியாக தடையாணை பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை தமிழ்நாடு விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? கீழ்பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆந்திர அரசு செயல்படுகிறதா? தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? இந்த பிரச்னையின் பின்னணி என்ன? கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது பாலாறு. இந்த நதி, கர்நாடகாவில் 93 கி.மீ. தொலைவு ஆந்திராவில் 33 கி.மீ. தொலைவும் பாய்கிறது. தமிழ்நாட்டில் தான் அதிகமாக, 222 கி.மீ. தொலைவு பாலாறு பாய்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் பாலாற்றினால் பயன்பெறுகின்றன. விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது. சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய `நீர் எழுத்து` புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பகுதிகள் பாலாற்றின் முக்கியத்துவத்தை விளக்கும். அதில், "பாலாறு ஓர் ஆறு மட்டுமல்ல, அது பெரிய நீர்த்தேக்கம். ஆற்றின்கீழ் மற்றொரு ஆறு ஓடுகிறது என்பார்கள். ஒரே நேரத்தில் கால்வாயாகவும் நீர்த்தேக்கமாகவும் விளங்கும் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியோ கால்வாய் (California Aquaduct) நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இதையே பாலாறு என்ற பெயரில் இயற்கை நமக்கு இலவசமாக வடிவமைத்துத் தந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வைகோ எதிர்க்கும் தமிழ்நாடு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலாற்றில் சிறியதும் பெரியதுமாக 22 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. இப்போது 23-வது தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி ஒதுக்கி ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதிக்குட்பட்ட கணேசபுரம் என்ற பகுதியில்தான் தற்போது 22 அடி உயரத்தில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வைகோ தன் அறிக்கையில், "ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை 1892-ம் ஆண்டு மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையேயான நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி, குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானை வழித்தடம் ஆகும். யானைகள் வழித்தடத்தில் கணேசபுரம் எனும் இடத்தில் அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தடையானை வழங்கியுள்ளது. எனவே கணேசபுரத்திலிருந்து புல்லூர் வரை யானைகள் வழித்தடம் என்பதால் அந்தப் பகுதிகளில் புதிய திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது" என தெரிவித்துள்ளார். இதே கருத்தை தெரிவித்துள்ள வேல்முருகன், "எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால், ஆந்திர அரசு இதையெல்லாம் கடைபிடிக்காமல், பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனை அளிக்கிறது" என தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,FACEBOOK/M.K.STALIN பேச்சுவார்த்தையில் தொய்வு இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், "தடுப்பணை கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் அனைத்தும் ஆந்திர அரசு பகுதியில் கொண்டு சென்ற விஷயத்தை அறிந்த தமிழக பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இடைக்காலத் தடை வாங்கிய பிறகும் ஆந்திர அரசு வனப்பகுதியில் மேலும் 10 தடுப்பணைகளை கட்டியுள்ளது" என்றார். மேலும், இதுதொடர்பாக பாமகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த உத்தரவில், இரு மாநில அரசுகளும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் கூறியது. "பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு இதுவரை மேற்கொண்டதில்லை. தமிழக அரசை சார்ந்த அதிகாரிகளும் ஆந்திர அரசை சார்ந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. அதிமுக, திமுக அரசு இரண்டுமே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை" என்றார் அசோகன். ராமாதாஸும் தன் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். "உச்ச நீதிமன்றம் வரை சென்று பாமகவும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு பாலாற்றில் புதிய அணை கட்டமுடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அந்த வழக்கில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா?" என கேள்வி எழுப்பியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்த பிரச்னையை இப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பியபோது, "ஏற்கனவே கட்டிய தடுப்பணைகளை என்ன செய்வது? அவற்றை இடிக்க சொல்கிறீர்களா?" என்று கேட்டதாக அசோகன் குறிப்பிடுகிறார். புதிய தடுப்பணை கட்டாதவாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என வலியுறுத்துகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "தமிழகமும் தடுப்பணைகள் கட்ட வேண்டும்" இதுதொடர்பாக, பிபிசியிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த விவசாயி வடிவேலு சுப்பிரமணியம், "ஆந்திர அரசுக்கு தடுப்பணை கட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் நீராதாரத்தை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து தடுப்பணைகளை கட்டி வருகின்றனர்" என்றார். தடுப்பணை பிரச்னை தவிர்த்து, தோல் மற்றும் சாக்கடை கழிவுகளும் பாலாற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்திருப்பதாக அவர் வேதனை தெரிவிக்கிறார். பாலாற்றில் மணல் அள்ளுவதும் தொடர் பிரச்னையாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார். "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குப்பம் கணேசபுரத்தில் யானை வழித்தடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அரசாணை வாங்கி தடுத்து நிறுத்தினார். இதற்கான வழக்கு தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. அதையும் மீறி ஆந்திரா அரசு கட்டுவது சட்டத்தை மீறிய செயல்" என்றார். தமிழ்நாட்டுப் பகுதியிலும் சிறு சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுதொடர்பாக, திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகையில், "நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆந்திர அரசு எதுவும் செய்யக்கூடாது என ஏற்கனவே தெரிவித்திருந்தார்" என்றார். அனைத்து நதிகளினுடைய பாதுகாப்பும் மத்திய அரசின் கைகளில் உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார். சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c1v1vr7nxrko
  17. Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 12:38 PM யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி, விகாரையின் பின் பகுதிகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார். அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்தொழிலாளர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் அவர்களை அவ்விடத்தில் இருந்து துரத்தி வருகின்றனர் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/177414
  18. மத்திய வங்கி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - உதய கம்மன்பில Published By: VISHNU 27 FEB, 2024 | 12:02 AM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று உபதேசம் வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநர் தான் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை மத்திய வங்கியின் நிதி சபைக்கு முன்வைத்துள்ளார். மத்திய வங்கியின் பணியாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவ்வாறாயின் அனைவருக்கும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.முறையற்ற வகையில் செயற்படும் மத்திய வங்கி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பளம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவில் அதிகரிக்கப்படாத நிலையில் மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பளம் இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று உபதேசம் வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை மத்திய வங்கியின் நிதி சபைக்கு முன்வைத்துள்ளார். மத்திய வங்கியின் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காகச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியின் பணியாளர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளவில்லை தமது இலாபத்தில் தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிடுகிறது. மத்திய வங்கி ஏனைய வணிக வங்கிகளை போல் போட்டித்தன்மையுடன் செயற்படும் நிறுவனமல்ல, கூட்டிணைந்த நிறுவனம். நாணயம் அச்சிடல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை மத்திய வங்கிக்கு உண்டு. ஆகவே தமது நிதியிலிருந்து தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமது வளர்ச்சிக்காக மக்கள் மீதே வரி சுமத்தப்படுகிறது. ஆகவே மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு உடனடியாக இடைநிறுத்த வேண்டும். நாட்டு மக்களிடம் ஒன்றைக் குறிப்பிட்டு பிறிதொன்றை செயற்படுத்துதற்கு மத்திய வங்கி மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். புதிய மத்திய வங்கி சட்டத்தின் ஊடாக மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளதால் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தலையிட முடியாது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இதனையே நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். அப்போது ஆளும் தரப்பும், எதிர்தரப்பும் எம்மை விமர்சித்தார்கள். மத்திய வங்கி எவருக்கும் பொறுப்புக் கூற கடமைப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும் என்றார். https://www.virakesari.lk/article/177382
  19. 26 FEB, 2024 | 11:09 AM பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 30 வருடங்களுக்கும் அதிகமான சிறைத்தண்டனையை ஆர்க்டிக் பிராந்தியத்தின் தொலைதூர சிறையில் அனுபவித்துக் கொண்டிருந்த அலெக்சி நவால்னியின் மரணம் விளாடிமிர் புட்டின் கட்டியெழுப்பிய அரசில் எதிர்ப்பியக்கத்தினதும் மாறுபட்ட கருத்துக்களினதும் இன்றைய அந்தஸ்தை அதிர்ச்சிக்குரிய வகையில் நினைவூட்டுவதாக இருக்கிறது. பல வருடங்களாக கிரெம்ளினின் முக்கியமான எதிர்ப்பாளராக நவால்னி விளங்கி வந்திருக்கிறார். 2020ஆம் ஆண்டில் அவருக்கு நஞ்சூட்டிக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்றில் உயிர்தப்பிய அவர் சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார். 'சுதந்திரத்துக்காக போராடுவதற்காக' திரும்பிவந்த அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவரது மரணத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் தெரியவில்லை. நச்சுத் தாக்குதலுக்கு நவால்னிக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. சிறையில் அவருக்கு உகந்த சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் அதனால் உண்ணாவிரதம் இருந்ததாகவும் அவரது வழக்கறிஞர்கள் முறையிட்டிருந்தார்கள். தனது கணவரைப் புட்டின் கொலை செய்துவிட்டார் என்று கூறியிருக்கும் நவால்னியின் மனைவி ஜூலியா நவால்னாயா அவரது போராட்டத்தைத் தொடரப்போவதாகச் சூளுரைத்திருக்கிறார். நவால்னியின் மரணத்துக்கு காரணம் எதுவாக இருந்தாலும், இந்த துன்பியல் நிகழ்வுக்கான பழியில் இருந்து ரஷ்ய அரசு தப்பமுடியாது. நவால்னி கட்டியெழுப்பிய அரசியல் எதிர்ப்பியக்கத்தை நிர்மூலம் செய்வதில் ரஷ்ய அரசு உறுதியாக இருந்தது. ரஷ்யாவில் கட்டுப்பாடான முறையில் கையாளப்படும் ஆட்சி முறைமையில் கிரெம்ளினால் சகித்துக்கொள்ளப்படும் எதிர்க்கட்சிகளும் அரசினால் எதிரிகளாக நடத்தப்படும் எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். ஒரு வலதுசாரி இனத்துவ தேசியவாதியாக தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்த நவால்னி அரசினால் எதிரிகளாக நடத்தப்படும் எதி்ப்பாளர்கள் வகைக்குள் இருந்தார். இதே வகைக்குள் வரும் இன்னொரு எதிரணி அரசியல்வாதியான போறிஸ் நெம்ட்சோவ் 2015 ஆண்டு மாஸ்கோவில் சுட்டுக்கொல்லப்பட்டார். ரஷ்யாவை 24 வருடங்களாக ஆட்சி செய்துவரும் புட்டின் இவ்வருடத்தைய தேர்தல் மூலமாக மேலும் ஆறு வருடங்களுக்கு தனது ஆட்சியை நீடிக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கிறார். நவால்னியிடம் இருந்து எந்தவொரு பெரிய அரசியல் அச்சுறுத்தலையும் புட்டின் எதிர்நோக்கவில்லை. லெவாடா நிலையம் போன்ற சுயாதீனமான அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் புட்டினின் செல்வாக்கு உயர்ந்த மட்டத்திலேயே இருக்கிறது. தேர்தல்கள் மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. உக்ரெய்ன் போரை கடுமையாக கண்டித்த இரு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடைசெய்யப்பட்டிருக்கும் அதேவேளை, புட்டினின் எதிராளிகளும் அவரின் தலைமைத்துவத்தை மெச்சும் விசித்திரமான நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது. நவால்னி பல தசாப்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பியக்கங்களுக்கு வாய்ப்பு இருக்கவில்லை. என்றாலும் நவால்னி சிறையில் மரணமடைய வேண்டியிருந்த நிலைமை எதிர்ப்புக் குரல்களுக்கு அரசு எந்தளவுக்கு அஞ்சுகிறது என்பதைக் காட்டுகிறது. நவால்னியின் மூன்று வழக்கறிஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதேவேளை வேறு இரு வழக்கறிஞர்கள் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் செய்கிறார்கள். நவால்னியை சிறையில் அடைத்து வைத்திருந்ததன் மூலம் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு செய்தியைக் கூறுவதற்கு அரசு விரும்பியது. 'வழிக்கு வாருங்கள் அல்லது விளைவுகளுக்கு முகங்கொடுங்கள்' என்பதே அந்த செய்தியாகும். நச்சுத் தாக்குதலையடுத்து சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கூட்டிச்செல்லப்பட்ட பிறகு மீண்டும் ரஷ்யா திரும்பிவருவதற்கு விரும்பிய நவால்னி தனது அரசியல் செயற்பாட்டுக்கான உச்சவிலையைச் செலுத்தியிருக்கிறார். கிரெம்ளின் அதன் கைகளில் மேலும் மேலும் அதிகாரங்களைக் குவித்துக்கொண்டிருக்கின்ற அதேவேளை ரஷ்யா வெளிநாட்டில் நீண்ட போர் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது. எந்த விமர்சனக்குரலையோ அல்லது எதிர்பியக்கத்தையோ அரசு விரும்பவில்லை. பயமுறுத்துவதன் மூலமாக இதுவரையில் ஒழுங்கொன்றை அரசு நிலைநிறுத்தியிருக்கக்கூடும். ஆனால், அது நிலைபேறான ஆட்சிமுறையின் ஒரு வகைமாதிரி அல்ல என்பதை ரஷ்யாவின் சொந்த வரலாறே உணர்த்தி நிற்கிறது. (தி இந்து) https://www.virakesari.lk/article/177302
  20. Published By: RAJEEBAN 27 FEB, 2024 | 09:55 AM உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பாரிசில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பில் உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் படையினரை அனுப்புவது குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை வரை படையினரை உக்ரைனிற்கு அனுப்புவது குறித்து எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை ஆனால் இதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஸ்யா யுத்தத்தில் வெல்வதை தடுப்பதற்காக எங்களால் ஆனா அனைத்தையும் செய்வோம் என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி நான் இதனை மிகுந்த உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்குலக படையினரை ஒருபோதும் உக்ரைனிற்கு அனுப்பகூடாது என்று அன்று சொன்னவர்கள், விமானங்களையும், ஏவுகணைகளையும், டிரக்குகளையும் அனுப்பகூடாது எனவும் சொன்னார்கள். தற்போது உக்ரைனிற்கு அதிகளவு ஏவுகணைகள் டாங்கிகளை அனுப்பவேண்டும் என தெரிவிக்கின்றனர் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு ஏவுகணைகள் குண்டுகளை அனுப்புவதற்கான புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177392
  21. பதவியை இராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர் 26 FEB, 2024 | 02:57 PM பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து பாலஸ்தீனியர்களிடையே கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன ஜனாதிபதி பாலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துவருகின்ற நிலையில் இந்த இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/177338
  22. யாழ். புத்தூரில் வீடு தீக்கிரை ; பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 10:51 AM யாழ்ப்பாணத்தில் வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன. புத்தூர் கலைமதி பகுதியில் உள்ள வீடொன்றே நேற்று திங்கட்கிழமை (26) இரவு தீப்பற்றியுள்ளது. அதனை அடுத்து வீட்டார், வீட்டில் இருந்து வெளியேறிய அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பயனளிக்காத நிலையில், யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அவ்விடத்துக்கு விரைந்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாகவே வீடு தீப்பிடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/177400
  23. யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றார் Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 10:01 AM யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்று திங்கட்கிழமை (26) கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், டில்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டது. செவிதி சாய் முரளி இதற்கு முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராகப் பணியாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/177393
  24. பணத்தின் உளவியல்: குறைந்த வருமானம் பெறுவோரை கோடீஸ்வரர்களாக மாற்றும் உத்தி எது? - நிபுணரின் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனிநபர் நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் முதலீட்டுக் கொள்கைகள் அல்லது பங்குச் சந்தை நிலவரங்களை எவ்வாறு அளவிடுவது என்பதில் கவனம் செலுத்துகின்றன. வேறு சில புத்தகங்கள், பிரபல முதலீட்டாளர்கள் சிலரின் அனுபவங்களை அவர்கள் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பணம் அல்லது செல்வத்துடன் மனிதனின் மனநிலையின் தொடர்பை மிகச் சில படைப்புகளே விளக்குகின்றன. இந்த உறவு `நடத்தை நிதி` (behavioral finance) என்று அழைக்கப்படுகிறது. மோர்கன் ஹவுஸலின் `சைக்காலஜி ஆஃப் மனி` (Psychology of Money) என்பது அத்தகைய ஒரு புத்தகம். நடுத்தர வர்க்க அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஹவுஸல், தற்போது 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தில் முக்கியப் பதவியை வகிக்கிறார். செல்வத்துடன் மனிதனின் உறவைப் பற்றி விவாதிப்பதே இந்நூலின் மையம். ஹவுஸ்ல் 2018-ல் நிதி சார்ந்த முடிவுகளில், மிகவும் பொதுவான 20 தவறுகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இந்நூலிலும் இதே விஷயம் பல உதாரணங்களைச் சேர்த்து இன்னும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வருமானத்தை மதிக்காமல் கண்மூடித்தனமாக செலவு செய்த இருவர் எப்படி திவாலானார்கள் என்பதை புத்தகத்தின் அறிமுகமே குறிப்பிடுகிறது. மறுபுறம், சில தசாப்தங்களாக சேமித்த சிறு தொழிலாளி ஒருவர், ஓய்வு பெறுவதற்குள் எப்படி பல கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆனார் என்பதையும் விளக்குகிறார். இந்த இரண்டு மனநிலைகளையும் அலசும்போது, நமது எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவை வருமானத்தை விட நமது நிதி இலக்குகளையே அதிகம் பாதிக்கிறது என்ற செய்தியை ஹவுஸல் நமக்கு தருகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்குவது பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் அல்லது ஏழைகள்தான். முதல் அத்தியாயம் - சுவாரஸ்யமான உதாரணங்கள் பகுத்தறிவு இருந்தும் மக்கள் ஏன் தீங்கிழைக்கும் செயல்களை செய்கிறார்கள் என்பதை முதல் அத்தியாயம் சில சுவாரஸ்யமான உதாரணங்களுடன் விளக்குகிறது. அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கும் பெரும்பாலான மக்கள் குறைந்த நடுத்தர வர்க்கத்தினர் அல்லது ஏழைகளாக அடையாளம் காணப்படுகிறார்கள். பேரிடர் ஏற்பட்டால் செலவு செய்வதற்கு 400 டாலர்கள்கூட இல்லாதவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 412 டாலர்களை லாட்டரி சீட்டுகளுக்காகச் செலவிடுகிறார்கள். இந்த வளர்ச்சியை விளக்கும் மனிதனின் சிந்தனை முறையை ஆசிரியர் அலசுவது, சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கும் பொருந்தும். இரண்டாம் அத்தியாயம் - அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் பொதுவாகவே, தனிநபர் நிதி சார்ந்த புத்தகங்களில் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டத்திற்கு இடம் இல்லை. ஆனால், இந்த புத்தகத்தில் இரண்டாவது அத்தியாயம் முழுவதுமே அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டத்திற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்கப்பட்ட ஒரே புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். முதலீட்டாளர்களின் பயணத்தில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதனை எதிர்கொள்ள நிதி திட்டமிடல் மிகவும் அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதலீட்டாளர்களின் பயணத்தில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. மூன்றாவது அத்தியாயம் - செல்வத்தால் திருப்தி மூன்றாவது அத்தியாயம், ஒருவருடைய எல்லாச் செல்வங்களாலும் மனநிறைவு அடைவது குறித்து கையாள்கிறது. இந்திய அமெரிக்கர்கள் ரஜத் குப்தா, ராஜரத்தினம், அமெரிக்க பங்குச் சந்தை தரகர் பெர்னி மடோஃப் ஆகியோர் குறித்து இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். நூறு மில்லியன் டாலர் சொத்து வைத்திருக்கும் ரஜத் குப்தா பண பேராசையால் சிறையில் அடைக்கப்பட்டதை நாம் அறிவோம். பெரும் புகழ் பெற்ற பெர்னி மடோஃப் பின்னர் நிதிக் குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். வயது மற்றும் அந்தஸ்துக்கு ஏற்ப மாறும் நிதித் தேவைகளின் தீய விளைவுகள் எடுத்துக்காட்டுகளுடன் நன்கு விளக்கப்பட்டுள்ளன. நீண்ட கால தொலைநோக்கு, முதலீட்டு பாதுகாப்பு, முதலீட்டு விருப்பங்கள் அடுத்த மூன்று அத்தியாயங்கள் நீண்ட கால தொலைநோக்கு, முதலீட்டு பாதுகாப்பு மற்றும் பல்வேறு முதலீட்டு விருப்பங்களை நிலைநிறுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. உலகப் புகழ்பெற்ற வாரன் பஃபெட்டைப் போல் மூன்று மடங்கு வட்டி சம்பாதித்தவர், நீண்ட கால முதலீட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி இதில் அலசுகிறார். பஃபெட்டின் வருமானம் அவரது வருமானத்தில் 2% மட்டுமே என்பதை இந்த அத்தியாயங்களில் விளக்குகிறார். தனிநபர் நிதியின் மையத்தில் நீண்ட காலக் கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுவது ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மறுபுறம், பல்வேறு முதலீட்டு வழிகளில் முதலீடு செய்வது, எப்படி முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் என்பதை விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனிநபர் நிதியின் மையத்தில் நீண்ட காலக் கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுவது ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நிதி சுதந்திரமே இறுதி இலக்கு ஏழாவது அத்தியாயம் ஒட்டுமொத்த பொருளாதார சுயசார்பு பற்றி விவாதிக்கிறது. ஆசிரியரின் எண்ணங்கள் தனிப்பட்ட நிதியின் இறுதி இலக்காக நிதி சார்ந்த சுயசார்பின் அம்சங்களை பிரதிபலிக்கின்றன. ஆசிரியர் குறிப்பிடும் உதாரணங்களும் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் என்பது ஆசிரியரின் வாதத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. எட்டு மற்றும் ஒன்பதாம் அத்தியாயங்கள் நமது சமூகத்தில் அந்தஸ்து என்ற கற்பனைக் காரணி எவ்வாறு நமது நிதி முடிவுகளை பாதிக்கிறது என்பதை விளக்குகிறது. தொடர்ந்து வரும் அத்தியாயங்களில், நிதி ஒழுக்கத்தின் முக்கியத்துவம் பல அம்சங்களில் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் கூறப்பட்டுள்ளது. எல்லா முதலீட்டாளர்களும் இயற்கையாகச் செய்யும் பல தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைச் செய்யாமல் இருப்பதன் பலன்களைக் குறிப்பிடுகிறார். கடைசி அத்தியாயங்களில் ஆசிரியர் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி வாசகர்களிடம் கூறுகிறார். குறைந்த நடுத்தர வர்க்க மட்டத்திலிருந்து தொடங்கி, சரியான நிதி இலக்குகள் மற்றும் நேர்மறையான அணுகுமுறையுடன் தான் உயர்ந்ததை அவர் நன்றாக விளக்கியுள்ளார். பட மூலாதாரம்,THE PSYCHOLOGY OF MONEY பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பல தனிநபர் நிதி சார்ந்த புத்தகங்களைப் போலவே, இந்தப் புத்தகமும் வாரன் பஃபெட், சார்லி முங்கர் மற்றும் பெஞ்சமின் கிரஹாம் போன்ற பிரபலமானவர்களின் எண்ணங்களைக் குறிப்பிடுகிறது. மேலும், இந்நூலின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதுவரை அறியப்படாத பல நிகழ்வுகளை இது எடுத்துக்காட்டுகிறது. பில்கேட்ஸின் உயிர் நண்பர் கேட்ஸைப் போல கணினி குறியீட்டு முறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சஹாத்யாய், இளம் வயதிலேயே தற்செயலாக இறந்து போனார் என்பது பலருக்குத் தெரியாது. பெர்க்ஷயர் நிறுவனத்தில் மூன்றாவது பெரும்பான்மை பங்குதாரர், பஃபெட் மற்றும் முங்கருடன் சேர்ந்து, பஃபெட்டுக்கு குறைந்த விலையில் தனது பங்குகளை ஏன் விற்றார் என்பதும் அதிகமாக அறியப்படவில்லை. இவற்றோடு 1929 பொருளாதார மந்தநிலையிலிருந்து 2008 நிதி நெருக்கடி வரை நடந்த முக்கியமான நிகழ்வுகளிலிருந்து முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை ஆசிரியர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ஆசிரியர் பலமுறை குறிப்பிட்ட பேராசை தற்போதைய மோசடிகளுக்கும் பொருந்தும். பேராசையால் குற்றவாளிகளுக்கு தனிப்பட்ட தகவல்களைத் தரும் பாதிக்கப்பட்டவர்கள் நம்மைச் சூழ்ந்துள்ளனர். அந்த குற்றவாளியின் முக்கிய பலம் பாதிக்கப்பட்டவரின் பேராசை. குற்றவாளிகளின் கைகளில் மக்கள் எளிதான லாபத்தை பெற நினைப்பது பல பத்தாண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஒரு போக்கு. இந்நூலின் ஆசிரியர் ஹவுஸல் இந்த விஷயத்தை திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வாசகர்களின் மனநிலையை மாற்ற முயல்கிறார். https://www.bbc.com/tamil/articles/c80n0q8dg20o
  25. இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி தோல்வி Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 10:43 AM இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு தமிழகத்தில் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடரப்பட்டு தோல்வியில் முடிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, வியாழக்கிழமை (22) அதிகாலை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்களுடன் இணைந்து நாட்டுப்படகை மடக்கி பிடிக்க முயன்ற போது நாட்டுப்படகில் இருந்த மூவரில் ஒருவர் கடலில் குதித்து தப்பினர். மேலும், படகில் இருந்த இருவரை படகுடன் மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர்களை மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். நாட்டுப்படகு வேதாளையை சேர்ந்தது என்பதும், படகில் இருந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இலங்கையில் இருந்து சுமார் 10 கிலோ தங்கத்தை கடத்தி வந்த போது அதிகாரிகளை கண்டதும் தங்க கட்டிகள் அடங்கிய பொதியை கடலில் வீசியதையும் ஒப்புக்கொண்டனர். ஸ்கூபா வீரர்கள் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குளிக்கும் மீனவர்களை கொண்டு தங்கத்தை கடலுக்கு அடியில் தீவிரமாக தேடி வந்தனர். தங்கம் கிடைக்காததால் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கடலுக்கு அடியில் கிடக்கும் பொருட்களை ஸ்கேன் செய்யும் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி தொடர்ந்து தேடினர். இருப்பினும், தங்கம் குறித்து எந்தவிதமான தகவல் கிடைக்காததால் தேடும் பணியை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஐந்து நாட்களுக்குப் பின்பு நேற்று மாலை கைவிட்டனர். மேலும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த இருவரிடமும் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கி கொண்டு படகுடன் திருப்பி அனுப்பினர். வேதாளை, மறைக்காயர்பட்டினம் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டுபடகு மீனவர்கள் சட்டவிரோத கடத்தல் சம்பவங்களால் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். https://www.virakesari.lk/article/177398

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.