Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்த WPL ஆரம்பப் போட்டியில் கடைசிப் பந்தில் வென்றது மும்பை 24 FEB, 2024 | 01:19 PM (நெவில் அன்தனி) பெங்களூரில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்த 2024 மகளிர் பிறீமியர் லீக் (WPL) கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் கடைசிப் பந்தில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. கணிசமான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட இந்தப் போட்டியில் தனது முதல் பந்தையும் போட்டியில் கடைசிப் பந்தையும் எதிர்கொண்ட அறிமுக வீராங்கனை சஜீவன் சஜானா வெற்றிக்கு தேவைப்பட்ட 5 ஓட்டங்களை சிக்ஸ் மூலம் பெற்று மும்பை இண்டியன்ஸின் வெற்றியை உறுதி செய்தார். இரண்டு அணிகளினதும் விளையாட்டு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்தது. அந்த அணிகளின் ஆரம்பங்கள் சிறப்பாக அமையாததுடன் தலா 3 வீராங்கனைகளின் சிறப்பான துடுப்பாட்டங்களே மொத்த எண்ணிக்கைகளுக்கு வலு சேர்த்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீராங்கனை ஷபாலி வர்மா ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். ஆனால், அணித் தலைவி மெக் லெனிங்குடன் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸுடன் 3ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் அலிஸ் கெப்சி பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தார். கெப்சி 53 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸ் 24 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களையும் லெனிங் 31 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்களைவிட மாரிஸ்ஆன் கெப் 16 ஓட்டங்களைப் பெற்றார். மும்பை பந்துவீச்சில் நெட் சிவர் ப்றன்ட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமேலியா கேர் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 172 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஹெய்லி மெத்யூஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததால் மும்பையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. எனினும் நெட் சிவர் ப்றன்ட், யஸ்டிக்கா பாட்டியா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். நேட் சிவர் ப்றன்ட் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோருடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 56 ஓட்டங்களை பாட்டியா பகிர்ந்தார். பாட்டியா 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களை விளாசினார். தொடர்ந்து ஹாமன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கேர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கர் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (160 - 5 விக்.) ஆனால், மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹாமன்ப்ரீத் கோர் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கடைசிப் பந்துக்கு முந்திய பந்தில் 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இந் நிலையில் கடைசிப் பந்தை எதிர்கொண்ட சஜீவன் சஜானா எல்லா சக்தியையும் பிரயோகித்து கெப்சியின் பந்தை சுழற்றி அடித்து சிக்ஸாக்கி மும்பைக்கு அபார வெற்றியை ஈட்டடிக்கொடுத்தார். பந்துவீச்சில் அலிஸ் கெப்சி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/177189
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்படும் எடைதூக்கும் கருவிகளான கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா சமீபத்தில் எடுத்த முடிவை சீனா விமர்சித்துள்ளது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று (பிப்ரவரி 23) செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அமெரிக்காவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது,” என்றார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்காவின் பைடன் அரசாங்கம், உள்நாட்டிலேயே கிரேன்களை தயாரிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1.65 லட்சம் கோடி ரூபாய்) செலவிடவுள்ளதாக கூறியது. மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் தொடர்பான சைபர் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க கடலோர காவல்படை புதிய அறிவுறுத்தல்களை வெளியிடும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்தது. உலகின் மிகப்பெரிய கிரான் ஏற்றுமதியாளரான சீனா கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், துறைமுகங்களில் கொள்கலன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வது, கப்பல்களில் அவற்றை ஏற்றி இறக்குவது போன்ற பணிகளுக்கு கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 'டவர் கிரேன்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச வர்த்தகத்தில் பணிகளை விரைவுபடுத்த இத்தகைய ராட்சத கிரேன்களுக்கான இடம் இன்றியமையாதது. சமீப காலங்களில், தானியங்கி கிரேன்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை தங்களின் வேலையை விரைவாக செய்து முடிக்கின்றன. ஸ்டேடிஸ்டா அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் உலக சந்தையில் கிரேன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருந்தது. ஜெர்மனி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் இருந்தன. பட மூலாதாரம்,WWW.FMPRC.GOV.CN படக்குறிப்பு, மாவோ நிங் சீனா கூறியது என்ன? பிப்ரவரி 23-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த, சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் சீனாவில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தேச பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். "தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகைப்படுத்துவதையும், சீன தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்றார். "பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்னைகளை ஆயுதமாக பயன்படுத்துவது என்பது சர்வதேச அளவில் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு ஆபத்தானது என்பதோடு பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று கூறிய அவர், சந்தை பொருளாதாரத்தின் கோட்பாடுகளையும் நியாயமான போட்டிகளையும் அமெரிக்கா மதிக்க வேண்டும். சீன நிறுவனங்கள் செயல்பட நியாயமான, பாரபட்சமற்ற சூழலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சீன நிறுவனங்களின் நலன்களுக்காகவும் அவற்றின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் சீன தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் மாவோ நிங் கூறியுள்ளார். ராட்சத கிரேன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முன்னணியில் இருந்தாலும், சீன கிரேன்களின் பயன்பாட்டை நிறுத்துவது உலக வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,CAROLINE BREHMAN/EPA-EFE/REX/SHUTTERSTOCK என்ன நடந்தது? சமீபத்தில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தி ஒன்றில், பைடன் நிர்வாகம் உள்நாட்டிலேயே கிரேன்கள் தயாரிக்கப் பல பில்லியன் டாலர்களை (பல நூறு கோடி ரூபாய்கள்) முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்று கூறியிருந்தது. இதற்கிடையே, அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியன்று பைடன் நிர்வாகம் அறிவித்தது. இந்த வாரம், பிப்ரவரி 21 அன்று, பைடென் நிர்வாகம் அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தை அறிவித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசாங்கம் 20 பில்லியன் டாலர்களை (1.65 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது. அமெரிக்காவில் உள்ள புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் சீன கிரேன்கள் தொடர்பான சைபர் பாதுகாப்பு குறித்த கடல் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை அமெரிக்க கடலோர காவல்படை வெளியிடும் என்றும் வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய கிரேன்களின் உரிமையாளர்களும் அதனை இயக்குபவர்களும் புதிதாக வெளியிடப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதற்கேற்ப கிரேன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கிரேன்கள் குறித்து கவலை ஏன்? சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்களில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நவீன மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறும் அமெரிக்கா அவற்றுக்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேன்களைப் பயன்படுத்த விரும்புவதாக சீனாவின் அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டது. கடந்த ஜனவரி மாதம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பின்போது, 'சீனாவால் அச்சுறுத்தல் என்று சில அரசியல்வாதிகள் பூதாகரமாக கூறி வருகிறார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் தேச பாதுகாப்பு என்ற பெயரில் சீனாவில் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே' என்று கூறியதாகவும் குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது. இசட்.பி.எம்.சி. நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கிரேன்களை ட்ரோஜன் ஹார்ஸ் உடன் ஒப்பிட்டு அவற்றில் கொள்கலன்களின் சேருமிடத்தை பதிவு செய்து கண்காணிக்கும் அதிநவீன சென்சார்கள் உள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் பெண்டகன் அதிகாரிகள் சிலர் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டதாகவும் தனது செய்தியில் குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டியிருந்தது. ஷாங்காய் ஜினஹாவ் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (ZPMC) என்பது துறைமுகங்களுக்கான கிரேன்களை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கிரேன் உற்பத்தி நிறுவனமாகும். இந்த சீன நிறுவனம் சுவிஸ் நிறுவனமான எபிபி உடன் நெருக்கமாக செயல்படுகிறது. இது அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கிரேன்களில் எபிபி நிறுவனத்தின் கருவுகளை பொருத்தி அனுப்புகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவை இந்த இரண்டு நிறுவனங்களின் பணியின் பாதுகாப்பு குறித்து விசாரித்து வருகின்றன. சீ ட்ரேட் மேரிடைம் நியூஸ் (Seatrade Maritime News) பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, 'நாங்கள் பல நாடுகளுக்கு கிரேன்களுக்கான மென்பொருளை வழங்குகிறோம், சீனா உட்பட உலகின் பல நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிரேன்களில் அவற்றை நிறுவுகின்றன. அனைவருக்கும் ஒரேமாதிரிதான் வேலை செய்கிறோம்' என எபிபி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜப்பானின் மிகப்பெரிய துறைமுகமான நகோயாவில் பணம் பறிக்கும் நோக்குடன் ஒரு இணைய தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக துறைமுகத்தின் பணிகள் 48 மணி நேரம் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கன்டெய்னர்கள் இந்த துறைமுகம் வழியாக செல்கின்றன. இந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான வல்லுநர்கள் கடல்சார் தொழில் குறித்து கவலை தெரிவித்ததோடு, சைபர் தாக்குதலை எதிர்கொள்ள இந்தத் தொழில் முழுமையாக தயாராக இல்லை என்று கூறினர். வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட 200 கிரேன்கள் அமெரிக்காவில் உள்ளதாகவும் இது அமெரிக்காவில் உள்ள மொத்த கிரேன்களின் எண்ணிக்கையில் 80% என்றும் என்.பி.ஆர் ஊடகம் கூறுகிறது. கடலோர காவல்படை சைபர் செக்யூரிட்டி கமாண்டின் தலைவரான அட்மிரல் ஜே வான் கருத்துப்படி, தொலைதூரத்தில் இருந்து இயக்க முடியும் என்பதால், அவற்றின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. கடலோர காவல்படை அவற்றின் பாதுகாப்பை சரிபார்த்து வருகிறது, மேலும் அவை தொடர்பாக சில விதிகளை உருவாக்க வேண்டும் என்கிறார். சி.என்.என் வெளியிட்ட செய்தி ஒன்றில், அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு குழுவிடம், 'சீன ஹேக்கர்கள் அமெரிக்க உள்கட்டமைப்பில் வலுவான பிடிப்பை கொண்டிருக்கிறார்கள், எனவே, அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்க குடிமக்களுக்கு அழிவையும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடும்' என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கிரேன் சந்தை கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, விநியோகச் சங்கிலி சீரானது, கட்டுமானத் துறையில் ஏற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் அதிகரிப்பு போன்றவை காரணமாக கிரேன்களின் தேவை அதிகரித்தது. ஜப்பான், சீனா மற்றும் ஜெர்மனி ஆகியவை உலகின் மிகப்பெரிய கிரேன் ஏற்றுமதியாளர்களாக உள்ளன. 2022-இன் தரவுகளின்படி, கிரேன்கள் இறக்குமதியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. சுரங்கத் தொழில் மற்றும் நகரமயமாக்கல் அதிகரிப்பு போன்றவை காரணமாக அந்நாட்டில் கிரேன்களுக்கான தேவை அதிகரித்தது. 2022-இல் அமெரிக்கா $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 12,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள கிரேன்களை வாங்கியது. அதே காலகட்டத்தில் இந்தியா 700 மில்லியன் டாலர் (சுமார் 5,800 கோடி ரூபாய்) மதிப்புள்ள கிரேன்களையும், ஜெர்மனி 600 மில்லியன் டாலர் ( சுமார் 4,900 கோடி ரூபாய் ) மதிப்பிலான கிரேன்களையும் வாங்கியது. எனினும் 2021-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது கிரேன் இறக்குமதியில் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது. https://www.bbc.com/tamil/articles/ckrdxg8g537o
  3. அக்கா உங்களுடைய ஈமெயிலும் பாஸ்வேர்ட்டும் தெரிந்தால் புதிய போனிலும் தொடர்பு எண்களும் பெயரும் தானாவே வருமே?!
  4. 24 FEB, 2024 | 06:08 PM சீனாவில் சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த அமைப்பு 2003 ம் ஆண்டு முதன்முதலில் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் . ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு 16 அடி நீளம் கொண்டதாகவும் கடந்த காலத்தில் வாழ்ந்ததாக நீர்வாழ் உயிரினத்தின் அமைப்பு எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்து விலங்கினுடைய கழுத்து பகுதியைப் பார்க்கும் போது ட்ரேகன் விலங்காக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது . இந்த விலங்கு அறிவியல் ரீதியாக "டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ்" என்று அழைக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/177196
  5. அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து மொஹமட் ஷமி விலகல்! 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொஹமட் ஷமி வெளியேறியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொஹமட் ஷமி குறித்த தொடரிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொஹமட் ஷமி இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://thinakkural.lk/article/292917
  6. உலகின் மிக உயரமான ஆணும், மிகவும் குள்ளமான பெண்ணும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் இர்வினில் நேரடியாக சந்தித்து அளவளாவி இருக்கின்றனர். உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். அதே போன்று உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அறியப்படுகிறார் ஜோதி ஆம்கே. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நேரடியாக சந்தித்து மகிழ்ச்சி பரிமாறி உள்ளனர். மேலும், புகைப்படங்களுக்காக அணுகிய கேமராக்களுக்கு இருவரும் அலுக்காது போஸ் தந்துள்ளனர். இருவருக்கும் இது முதல் சந்திப்பல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் இதே போன்று போட்டோ ஷூட் சந்திப்பில் இருவரும் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். எகிப்து பிரமிடுகள் முன்பாக இருவரும் தோன்றும் புகைப்படங்கள் இன்றளவும் பகிரப்பட்டு வருகின்றன. கின்னஸ் உலகச் சாதனை ஆவணங்களின்படி, இருவருக்கும் இடையே ஆறடிக்கும் அதிகமான உயர வித்தியாசம் உள்ளது. 2009-ம் ஆண்டில், கோசென் 8 அடி 3 அங்குல உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மனிதராக சாதனை படைத்தார். அதே ஆண்டு, ஆம்கேக்கு உலகின் ‘உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்போது 15 வயதான ஆம்கே உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது. அடுத்ததாக ஆம்கேக்கு 18 வயதாகும்போது, மீண்டும் அளவிடப்பட்டபோது அவரது உயரம் 2 அடி 0.7 அங்குலம் என்பதாக இருந்தது. இதன் மூலம் ஆம்கே உலகின் உயரம் குறைந்த பெண் என்ற சாதனையை படைத்தார். ஆம்கேயின் உயரக் குறைவுக்கு அவரை பீடித்த அகோன்ட்ரோபிளாசியா என்ற, குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளர வாய்ப்பில்லாத குறைபாடு காரணமாகும். மறுபுறம், கோசனின் சாதனை உயரத்துக்கு அவரது பிட்யூட்டரி சுரப்பி காரணமாக நேர்ந்த ஜிகாண்டிஸம் பாதிப்பு உள்ளது. https://thinakkural.lk/article/293037 கோசனா? கோசானா?!
  7. இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது; நாட்டின் சட்டத்துக்கமையவே கைதுகள் இடம்பெறுகின்றன - கடற்படைத் தளபதி Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 06:22 PM (இராஜதுரை ஹஷான்) மீனவர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சனிக்கிழமை (24) நிறைவடைந்தது. திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வருடாந்த திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய மீனவர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் சட்டத்துக்கு அமையவே கைதுகள் இடம்பெறுகின்றன. சட்டத்தை மீறும்போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். அடுத்த திருவிழாவுக்கு முன்னர் முரண்பாடற்ற தீர்வு ஒன்று காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் வழமை போல் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/177207
  8. இரத்தினபுரி வெப்பமாக மாறுகிறது! காற்றின் ஓட்டம் குறைந்ததன் காரணமாக சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 36c டிகிரியாகவும், கண்டியில் 30c மற்றும் நுவரெலியாவில் 21c டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. காற்றின் ஓட்டம் குறைந்ததால் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது வழமையான நிகழ்வு எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை நிபுணர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/293029
  9. Autism Child: கணக்கில் 'கில்லாடி' Google-க்கே சவால்விடும் திறமை? இந்த வியப்பூட்டும் சிறுவன் யார்? திருப்பூரைச் சேர்ந்த சாய் சர்வேஷ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன். ஆனால், இவரது காலண்டர் நினைவாற்றலோ அபாரம். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வரும் எந்த தேதியையும், மாதத்தையும் கூறினாலும், அது என்ன கிழமையில் வரும் என சரியாகச் சொல்லிவிடுகிறார்.
  10. 24 FEB, 2024 | 09:43 AM தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. மீனவர் ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்களும், ஜான்சன் விடுதலையான பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டால் ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இது சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசு செய்யும் அத்துமீறலாகும். தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிப்பது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த 4-ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், கடந்த 16-ஆம் நாள் தீர்ப்பளித்த இலங்கை நீதிமன்றம், 20 மீனவர்களை விடுதலை செய்ததுடன், இரு மீனவர்களுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து தான் நேற்று மீனவர் ஜான்சனுக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் சிங்கள அரசு மற்றும் நீதிமன்றங்களின் புதிய அத்துமீறல், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் அடுத்தகட்ட அணுகுமுறையாகவே தோன்றுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே தமிழக மீனவர்களைக் கைது செய்வது, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வந்தது. ஆனால், அவற்றின் மூலம் தமிழக மீனவர்களை நிலைகுலையச் செய்ய முடியாததால் மீனவர்களை மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் சிறையிலடைக்கும் அணுகுமுறையை இலங்கை அரசு கையில் எடுத்திருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக கடந்த காலங்களிலும் இத்தகைய உத்திகளை இலங்கை பயன்படுத்தியிருக்கிறது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பவர்களுக்கு ரூ.25 கோடி தண்டம் விதிக்கும் சட்டத்திற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. இப்போது அதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது. வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது. மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப் படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா புறக்கணிப்பு என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/177169
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல மேற்கத்திய நாடுகள் தங்கள் விசா கொள்கைகளை மாற்றியுள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புலம்பெயர்ந்தோர் பல்வேறு வகையான விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கியுள்ளன. கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளன. இதனால், அந்நாடுகளில் பணிபுரிவோர் தங்களது வாழ்க்கைத் துணையை உடன் அழைத்துச் செல்வது இனி கடினமாகலாம். இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கனடாவில் குடியேற இந்தியர்கள் பலரும் முயற்சிக்கின்றனர். அவ்வாறு, தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல வாழ்க்கைத் துணைக்கான விசா தேவை. வாழ்க்கைத் துணை விசாவைப் பெற வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றன. வாழ்க்கைத் துணை விசா என்பது ஒரு வகையான சார்பு விசா அல்லது அனுமதிப் பத்திரமாகும். இது உங்களை குறிப்பிட்ட அந்த நாட்டில் வாழ அனுமதிக்கிறது. வாழ்க்கைத் துணை விசா என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் வாழ்க்கைத் துணை விசாவைப் பெற விண்ணப்பதாரர் மற்றும் சார்ந்திருப்பவர் இருவரும் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இது தவிர, இருவருக்கும் திருமண சான்றிதழ் இருக்க வேண்டும். கூடுதலாக, ஒவ்வொரு நாடும் தனது துணையை அழைத்துக் கொள்பவருக்கு (ஸ்பான்சர் பார்ட்னர்) குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் இதற்கு வெவ்வேறு அளவு உள்ளது. இது மாறுபடலாம். இது தவிர, ஸ்பான்சர் செய்யும் பார்ட்னர் தனது மனைவியுடன் வாழ போதுமான ஏற்பாடுகளை வைத்திருக்க வேண்டும். சார்ந்திருக்கும் துணைவர், அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழித் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுவதும் அவசியம். இதுதவிர, சம்பள சான்றிதழ், வங்கி விவரங்கள், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் ஆவணம், திருமணச் சான்றிதழ் ஆகியவை வாழ்க்கைத் துணை விசாவிற்கு தேவை. விவாகரத்து செய்திருந்தால், விவாகரத்து சான்றிதழ் மற்றும் குழந்தைகள் இருந்தால், அவர்களின் விவரங்களும் தேவை. இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதிகளின்படி ஆவணங்களை அளித்தல் வேண்டும். நேரடி விசா நிர்வாக இயக்குனர் குர்பிரீத் சிங் கூறுகையில், "வாழ்க்கைத் துணை விசா பெறுவதற்கு, ஒருவர் விண்ணப்பதாரராகவும் மற்றொருவர் சார்ந்திருப்பவராகவும் இருப்பர். விண்ணப்பதாரர் தன் வாழ்க்கைத் துணைக்குத் தேவையான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வெவ்வேறு நாடுகளுக்கு அந்த விதிமுறைகள் வேறுபட்டிருக்கலாம். வாழ்க்கைத் துணை விசா பெற வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கால அவகாசம் எடுக்கலாம்” என்றார். கனடா என்ன மாற்றங்களைச் செய்துள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கனடாவில் வாழ்க்கைத் துணை விசாவிற்கு விண்ணப்பித்து பெற எட்டு-ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும். இருப்பினும், அது பின்னர் ஏழு மாதங்களாகவும் பின்னர் ஆறு மாதங்களாகவும் இறுதியாக இரண்டு மாதங்கள் என்றும் குறைக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் இந்த விசாக்கள் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், முதுநிலை அல்லது முனைவர் பட்டத்திற்கு படிக்கும் சர்வதேச மாணவர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கைத் துணையை அழைக்க வாழ்க்கைத் துணை விசாவைப் பயன்படுத்த முடியும் என்று கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கும் குறைந்த படிப்புகளில் படிக்கும் மாணவர்கள், இந்த விசாவில் தங்கள் வாழ்க்கைத் துணையை கனடாவுக்கு அழைக்க முடியாது. கூடுதலாக, ஸ்பான்சர் செய்யும் பார்ட்னர், கனடா குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ இருக்க வேண்டும். இயலாமை தவிர வேறு காரணங்களுக்காக அவர்கள் சமூக உதவியைப் பெறவில்லை என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். அவர் தன் வாழ்க்கைத் துணையின் நிதித் தேவைகளை மூன்று வருடங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கனடாவின் ஐஆர்சிசி அமைச்சர் மில்லர் கூறும்போது, “கனடாவுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வீடு, சுகாதாரம் மற்றும் பிற வசதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இங்கு வரும் மாணவர்கள் தீய சக்திகளின் வலையில் சிக்காமல் இருக்கவும் கனடாவின் மக்கள்தொகை நிலையானதாக வளரவும் வேண்டும் என்பதே எங்கள் முயற்சி” என்றார். இந்த புதிய விதி குறித்து பிபிசியிடம் பேசிய குர்பிரீத் சிங், “கனடா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் அதை இன்னும் செயல்படுத்தவில்லை. எனவே விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, மக்கள் விண்ணப்பிக்க இன்னும் நேரம் உள்ளது” என்றார். பிரிட்டன் என்ன மாற்றங்களைச் செய்துள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் வாழ்க்கைத் துணை விசா பெறுவதற்கான விதிகளை பிரிட்டனும் கடுமையாக்கியுள்ளது. இத்தகைய கடுமையான சட்டங்களால் நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று பிரிட்டன் அரசு நம்புகிறது. பிபிசியின் செல்சியா வார்டு மற்றும் விக்டோரியா ஷியர் கூறுகையில், ஏப்ரல் 2024 முதல் தங்கள் விசா மூலம் வாழ்க்கைத் துணையை பிரிட்டனுக்கு அழைத்துக்கொள்ள விரும்புவோருக்கு ஊதிய விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, பிரிட்டனில் ஸ்பான்சர் பார்ட்னர், வாழ்க்கைத் துணை விசாவுக் விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 18,600 பவுண்டுகளாக இருந்தது. இருப்பினும், புதிய விதிகள் இந்த குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை ஏப்ரல் 2024-ல் 29,000 பவுண்டுகளாகவும், ஆண்டின் இறுதியில் 34,500 பவுண்டுகளாகவும் அதிகரிக்கும். இந்த குறைந்தபட்ச வருமானம் இறுதியாக 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்படும். மற்ற நாடுகளின் அரசாங்கங்களும் தொடர்ந்து தங்கள் விதிகளை மாற்றிக்கொண்டு இந்த விதிகளை மிகக் கடுமையாக்குகின்றன என்கிறார் குர்பிரீத் சிங். https://www.bbc.com/tamil/articles/cyx7zze9xqgo
  12. Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 03:21 PM இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய - இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலுயே, அந்த அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன் அவர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்த வேளை, எமதா கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில் பயணித்த மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இப்போது இந்திய அரசாங்கம், அந்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு எமது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எங்களுடைய வளங்களை அழித்தவர்களை எப்படி விடுதலை செய்ய முடியும்? அவர்களுக்குரிய தக்க தண்டனை கொடுத்த பின்னரே அவர்களை விடுதலை செய்யலாம். ஏனென்றால் எங்களது வளங்கள் எத்தனையோ காலமாக அழிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய வளங்களை சூறையாடி தங்களது பிழைப்புகளை நடத்தியவர்கள், தங்களது மீனவர்களை எமது அரசாங்கம் பிடித்து வைத்துள்ளபோது அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். அடுத்த வாரத்தில் எமது கடல் தொழிலாளர்கள் இணைந்து கறுத்தக்கொடி போராட்டம் ஒன்றினை இலங்கை - இந்திய கடல் எல்லையில் நடாத்த உள்ளோம். எங்களது அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய கூடாது. கைது செய்த மீனவர்களுக்கு தக்க தண்டனையை கொடுக்க வேண்டும்ஹ எக்காரணம் கொண்டும் அவர்களிடம் மண்டியிடக் கூடாது என்பதை நாங்கள் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/177201
  13. Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 11:46 AM மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை, நெடியமடு கற்பானைக்குளம் போன்ற கிராமங்களுக்குள் இன்று சனிக்கிழமை (24) அதிகாலை சில காட்டு யானைகள் ஊடுருவி அங்குள்ள இரண்டு வீடுகளையும் விவசாயிகளின் தென்னை மரங்களையும் அழித்து துவம்சம் செய்துள்ளது. யானை பாதுகாப்பு மின்சார வேலிகள் இருந்தும், அவ் வேலிகளைத் தாண்டி மாலை கிராமங்களுக்குள் ஊடுருவி தமது பயிர்களையும் வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தி வருவதாகவும், இம்மாதம் 12ம், 16ம் திகதிகளில் வயோதிபப்பெண் ஒருவரையும் விவசாயி ஒருவரையும் நெடியமடு, களிக்குளம் கிராமத்தில் வீதியால் சென்றே போது யானை தாக்கி தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என இப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த காட்டு யானை அனர்த்தங்களில் இருந்து எங்கள் பகுதி மக்களை பாதுகாப்பதற்கு இன்று வரை அரசாங்கம், ஒரு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இங்குள்ள காந்திநகர், உன்னிச்சை போன்ற சில கிராமங்களில் உள்ள சிறு காடுகளுக்குள் இரவு பகலாக யானைகள் நிற்கின்றது. இரவிலும் பகலிலும் நாங்கள் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு விழித்த கண்ணுடன் வாழ வேண்டிய சூழலில் இருக்கின்றோம். இதனை கவனத்தில் எடுத்து, யானை பாதுகாப்பு மின்சார வேலிகளுக்கு உள்ளே இருக்கும் யானைகளையும் வேலிகளுக்கு வெளியே இருக்கும் யானைகளையும் இங்கிருந்து வெளியேற்றி பெரும் காடுகளுக்குள் துரத்தி, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் இம் மக்கள் அரசாங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/177179
  14. Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 09:34 AM இந்தியாவில் சிலிகுரி மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிருகக்காட்சி சாலையில் ஒரே பகுதியில் சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்களை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் விஹெச்பி தாக்கல் செய்த மனுவின் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. திரிபுரா மாநிலம் செபஹிஜாலா மிருகக்காட்சி சாலையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் மிருகக்காட்சி சாலைக்கு பெப்ரவரி 12-ம் திகதி இரண்டு சிங்கங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த இரண்டு சிங்கங்களில் ஏழு வயதுள்ள சிங்கத்துக்கு ‘அக்பர்’ என்றும், 6 வயதுள்ள சிங்கத்துக்கு ‘சீதா’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியது. மனுவில், "சிங்கத்துக்கு சீதா எனப் பெயர் சூட்டியத்தை மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்த விஸ்வ ஹிந்து பரிஷத், "மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு பெயரிட்டுள்ளது. அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா வால்மீகியின் இராமாயணத்தில் ஒரு பாத்திரம். மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, 'அக்பர்' உடன் 'சீதா'வை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது" என்று கோரியது. விஸ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையின்போது, "உங்களது செல்லப் பிராணிக்கு இந்து கடவுள் அல்லது இஸ்லாத்தின் நபிகள் பெயரைச் சூட்டுவீர்களா?" என்று மேற்கு வங்க மாநில அரசின் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “இந்தப் பெயரை யார் வைத்தது? நீங்கள் ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல, நானும் ஆதரிக்கவில்லை. அக்பர் மிகவும் திறமையான மற்றும் உன்னதமான முகலாய பேரரசராக இருந்தார். மிகவும் வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசர் அவர். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு சூட்ட வேண்டாம். சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு சிங்கங்களின் பெயர்களை மாற்றுங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். https://www.virakesari.lk/article/177168
  15. ஐ.பி.எல்.லில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பெட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார். அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கெபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கெப்டனாக செயற்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறியதாவது:- 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு ரிஷப்பண்ட் கெப்டனாக செயற்படுவார். ஆனால் முதல் 7 ஆட்டங்களில் விக்கெட் கீப்பிங் பணியை செய்யமாட்டார். அவர் தனது விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை தொடங்கியுள்ளார். பெட்டிங் மற்றும் ஓட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐ.பி.எல். போட்டிக்கு ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பார். முதல் போட்டியில் இருந்தே அவர் தலைமை தாங்குவார். ஒரு பெட்ஸ்மேனாக மட்டுமே அவரது உடல் எவ்வாறு செயற்படுகிறது என்பதை பொறுத்து மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது பற்றி முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/292949
  16. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா : 4454 இலங்கையர்கள் பங்கேற்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு! 24 FEB, 2024 | 07:36 AM இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடந்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன. வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று சனிக்கிழமை (24) காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் .இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை. இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்றைய திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள் ஜனாதிபதியின் செயலாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/177165
  17. 23 FEB, 2024 | 10:05 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் தேசிய அடையாளம் மற்றும் நாட்டின் சட்டத்தின் ஆட்சி ஆகிய இரண்டு விடயங்களையும் பாதுகாத்துக்கொண்டால், இந்த நாடு சிங்கப்பூரையும் மிஞ்சிய நாடாக இருந்திருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சின் கீழ் இருந்துவரும் தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்க பணியகத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற மாவட்ட சகவாழ்வு சங்கம் அமைக்கும் செயற்பாடுகளின் மூன்றாவது கட்ட நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எமது நாடு விழ முடியுமான இறுதிக்கட்டத்துக்கே விழுந்தது. இந்த நாட்டை பொறுப்பெடுக்க யாரும் இல்லாத அளவுக்கு நாடு சென்றது. அந்த சந்தர்ப்பத்தில் எந்த இடையூறுகள் இருந்தபோதும் நாங்கள் இந்த நாட்டை பொறுப்பெடுத்து இதுவரைக்கும் நாட்டின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம். உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், அமெரிக்க அரச திணைக்களம் ஆகிய அனைத்தும் வீழ்ச்சியடைந்திருந்த நாடொன்று இந்தளவு குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்கு வருந்திருப்பதை கண்டதில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றன. இதன் மூலம் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன என்பது அல்ல. எமக்கு தீர்த்துக்கொள்ள இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்தும் செயற்படுத்துவோம். அத்துடன் வடக்கில் யுத்தமொன்று இருந்தது. தெற்கிலும் யுத்தமொன்று இருந்தது. இவை அனைத்தின் மூலம் இந்த நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்கவிருந்த இளைஞர்களின் உயிர்களை இல்லாதொழித்தமை மாத்திரமே ஏற்பட்டது. இதற்கு காரணமாக இரண்டு விடயங்கள் இருந்தன. ஒன்றுதான், நாங்கள் இலங்கையர் என மார்தட்டிக்கொண்டாலும் எமது நாட்டின் தேசிய அடையாளத்தை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. மற்றது, இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளமை. இந்த இரண்டு விடயங்களையும் பாதுகாத்துக்கொண்டால், அரசியல்வாதிகளின் கற்பனைக் கதைகளை கேட்காமல் செயற்பட்டிருந்தால் இந்த நாடு சிங்கப்பூரையும் மிஞ்சிய நாடாக இருந்திருக்கும். மேலும், இந்த வருடத்தின் ஆரம்ப பாராளுமன்ற அமர்வின்போது தேசிய ஐக்கியம் மற்றும் மறுசீரமைப்புக்கான சட்டமூலத்தை அனுமதித்துக்கொண்டோம். இந்த புதிய சட்டத்தின் கீழ் அரசியலமைப்பின் ஊடாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் சகவாழ்வு சமூகம் ஒன்றை அமைத்து, அதன் தலைமைத்துவத்தை கிராமத்தின் மதத்தலைவர்களுக்கு, அதேபோன்று தலைமைத்துவம் வகிக்க முடியுமான நபர்களுக்கு வழங்குவோம். கிராமத்தின் முன்னேற்றத்துக்கான தேவையான தீர்மானங்களை எடுக்க அவர்களுக்கு முடியும். இந்த முறைமை முறையாக செயற்பட்டால் அரசியல்வாதிகளின் பின்னால் அடிமைகள் போன்று செல்வதற்கு யாருக்கும் தேவை ஏற்படாது. அத்துடன் கிராமங்களின் நடவடிக்கைகளை இன, மத பேதங்கள் இன்றி, அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வதன் மூலம் கிராமத்தின் பிரச்சினைகள் போன்று வீழ்ச்சியடைந்திருக்கும் உற்பத்தி பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியும் என்றார். https://www.virakesari.lk/article/177119
  18. பகிர்விற்கு நன்றி கிருபன் அண்ணை.
  19. மத்திய வங்கி ஊழியர்களின் அபரிமிதமான சம்பள உயர்வு தொடர்பில் விமர்சனங்கள்! மத்திய வங்கி ஊழியர்களின் அபரிமிதமான சம்பள உயர்வு தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில் பாராளுமன்ற அனுமதியின்றி சம்பள அதிகரிப்புக்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து மத்திய வங்கியிடம் இருந்து உயர்மட்ட நாடாளுமன்ற குழு அறிக்கையை கோரியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கி அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, சம்பள உயர்வு தொடர்பான விடயம் எழுப்பப்பட்டதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். இதன்படி சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய வங்கி அடுத்த வாரம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன் மத்திய வங்கியும் அதன் நாணயச் சபையும் அழைக்கப்படும் எனவும் வலேபொட தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மத்திய வங்கி ஊழியர்களின் 70 சதவீத சம்பள அதிகரிப்பு குறித்து, தமது குழு கடும் விமர்சனங்களை கொண்டுள்ளது. அத்துடன் இது ஒழுக்கக்கேடான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/293005
  20. சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி Published By: RAJEEBAN 24 FEB, 2024 | 07:12 AM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா். இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன. 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னர், சாந்தனின் வேண்டுகோளை அடுத்தும், உயா் சிகிச்சைக்காகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் கூறினா். இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது. https://www.virakesari.lk/article/177164 சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி! முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர். முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது. மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/292993
  21. தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் மட்டுவில் அண்ணமார் கோவிலில் பெளர்ணமி தினப் பொங்கல் Published By: VISHNU 24 FEB, 2024 | 07:21 AM மட்டுவில் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு அண்ணமார் ஆலயத்தின் அருகில் உள்ள நிலப்பரப்பை புதிதாக வாங்கியவர் மதம் மாறியதால் தனது வீட்டு வேலியோடு இருக்கும் அண்ணமார் ஆலயத்தினை அகற்றக்கோரி பிரதேச சபைக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து கோவிலில் வழிபாட்டுக்கு தடைவிதிப்பதாக பிரதேச சபையால் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரார் நேரடியாக சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனின் வீட்டிற்கு சென்று தமது மரபுசார் வழிபாட்டை மீட்டுத்தரும்படி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா தலைமையில் இன்று அண்ணமார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. https://www.virakesari.lk/article/177162
  22. ஈ – சிகரட்டுக்கள் என்ற இலத்திரனியல் புகையிலை பயன்பாடு காரணமாக கண்கள் மற்றும் மூளையில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு வகையான பழங்களின் வாசனை வெளிப்படும் வகையில் தயாரிக்கப்படும் ஈ – சிகரட்டுக்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் அந்த சபை கோரியுள்ளது. இதேவேளை, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஈ – சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர், மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஸ்மார்ட் வோட்ச் என்ற நவீனரக கைக்கடிகாரம் போன்று தயாரிக்கப்பட்ட ஈ – சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த சில காலமாக இணையத்தளம் ஊடாக குறித்த நபர் இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஈ – சிகரட்டுக்கள் அதிகம் விரும்பப்படுகின்றமை தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/293019
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES 23 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன ஆராய்ச்சிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 22) மாலத்தீவு சென்றடைந்தது. இந்தக் கப்பல் கடந்த ஒரு மாதமாக இந்தியப் பெருங்கடலில் இருந்தது. இது குறித்து மாலத்தீவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியா மற்றும் இலங்கையின் கடலோர காவல்படை கப்பல்களும் ராணுவ பயிற்சிக்காக அப்பகுதியை வந்தடைந்த அதே நாளில் சீனக் கப்பல் மாலத்தீவை அடைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தக் கப்பல் குறித்து இந்தியா முன்னர் கவலை தெரிவித்திருந்ததுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலை நிறுத்த மறுக்கும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருந்தது. மாலத்தீவு ஊடகக் குழு பதிப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சீன ஆராய்ச்சிக் கப்பல் வியாழக்கிழமை மாலத்தீவு சென்றடைந்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் எழுதியுள்ளது. பிற்பகலில் திலாஃபுஷி அருகே கப்பல் காணப்பட்டது. சீன கப்பல் ஒரு மாதம் மறைந்திருந்தது ஏன்? பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV படக்குறிப்பு, முய்சு சமீபத்தில் சீனாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார் மாலத்தீவு செய்தி இணையதளமான ஆதாதூவை (Aadhadhoo) மேற்கோள் காட்டி, செய்தி நிறுவனமான பி.டி.ஐ., ஜனவரி மாதம் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவுக்குச் சென்ற 24 மணி நேரத்திற்குப் பிறகு இந்த சீனக் கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியதாக எழுதியுள்ளது. மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் சுமார் ஒரு மாத காலம் கழித்து அந்தக் கப்பல் பிப்ரவரி 22 அன்று மாலே அருகே காணப்பட்டது. ஜனவரி 22-ஆம் தேதி முதல் இந்த சீனக் கப்பல் ரேடாரில் எங்கும் தென்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கப்பலின் கண்காணிப்பு அமைப்பு 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. முய்சு சீனாவுக்கு ஆதரவானவராகக் கருதப்படுகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்றார். 'இந்தியா வெளியேறு' என்ற முழக்கத்தை தேர்தலின்போது பயன்படுத்தியிருந்தார் முய்சு. மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு, முய்சு இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. அவர் சமீபத்தில் சீனாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனின் அழைப்பின் பேரில் அவர் துருக்கிக்கு விஜயம் செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முய்சு சீனாவுக்கு ஆதரவானவராகக் கருதப்படுகிறார் அமெரிக்க சிந்தனை திணைக்களத்தின் குற்றச்சாட்டு என்ன? சீனா 'அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்' என்று அழைக்கும் கப்பல் உண்மையில் கடலில் இருந்து தரவுகளை சேகரிக்கிறது என்று அமெரிக்காவின் சிந்தனை திணைக்களம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் கப்பல் ராணுவ நோக்கங்களுக்காக, குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கிறது என்று அந்தச் சிந்தனை திணைக்களம் கூறியது. இந்த குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்து வருகிறது. இந்தக் கப்பல் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் தொடர்பான சட்டத்தின் கீழ் மட்டுமே இயங்குகிறது என்கிறார். இந்த ஆராய்ச்சிக் கப்பலுக்கு இந்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி மாலத்தீவு அரசு அனுமதி வழங்கியது. இந்தக் கப்பல் மாலத்தீவு கடற்பரப்பில் தங்கியிருந்து எந்தவிதமான ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ளாது என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. எனினும், இந்த கப்பலின் நகர்வுகளை இந்தியா கண்காணித்து வருவதாக இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பான ஆதாரங்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ எழுதியிருந்தது. இம்மாதம், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், "கடந்த சில ஆண்டுகளில் சுற்றியுள்ள கடல்களில் சீனாவின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் அமைதியின் நோக்கத்திற்காகவும், மனிதகுலத்தின் பார்வையில் இருந்து அறிவியல் புரிதலை மேம்படுத்துவதற்காகவும் உள்ளன," எனக் கூறினார். சீனக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை படக்குறிப்பு, சீனக் கப்பல் ஷியாங் யாங் ஹாங் 3, ஹவாயில் இருந்தபோது எடுக்கப்பட்ட படம் முன்னதாக சீனக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் தரையிறங்க அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி, சீனக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை தடை விதித்ததுடன், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுக் கப்பல்கள் வருவதற்கு ஓராண்டு தடை விதித்துள்ளதாகவும் கூறியது. முன்னதாக, அண்டை நாடுகளின் எல்லைக்குள் சீனக் கப்பல்கள் செல்வது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது. 2022-ஆம் ஆண்டு யுவான் வாங் 5 என்ற சீன ராணுவக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது. ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை கண்காணிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது. இதனை 'உளவுக்கப்பல்' என்று கூறிய இந்தியா, இலங்கை அரசிடம் முறைப்படி தனது ஆட்சேபனையை தெரிவித்தது. இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், "பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது, இது நியாயமற்றது," என்று சீனா கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு, முய்சு இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை மாலத்தீவு குறித்து இந்தியாவின் கவலை என்ன? மாலத்தீவு இந்தியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து 300 கடல் மைல் தொலைவில் உள்ளது, அதே சமயம் இந்தியாவின் லட்சத்தீவு குழுமத்தின் மினிகாய் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் உள்ளது. புவியியல் ரீதியாக, மாலத்தீவின் இருப்பிடம் இந்தியாவிற்கும் உலகளாவிய வர்த்தகத்திற்கும் மிகவும் முக்கியமானது. இது இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியில் உள்ளது, அங்கு உலகளாவிய கப்பல் பாதைகள் கடந்து செல்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக மாலத்தீவு இருந்து வருகிறது. அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் கொள்கை மற்றும் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் வளர்ச்சி (சாகர்) போன்ற மோதி அரசாங்கத்தின் பிரச்சாரங்களில் இது ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மாலத்தீவுகள் சீனாவின் பக்கம் சாய்வது இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயம். ஜனாதிபதியான பிறகு, தனது அனைத்து படைகளையும் திரும்பப் பெறுமாறு இந்தியாவிடம் முய்சு கேட்டுக் கொண்டார், ஆனால் சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் ஒரு தளத்தில் இருந்தும், மே 10-ஆம் தேதிக்குள் மீதமுள்ள இரண்டு தளங்களில் இருந்தும் இந்திய ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று கூறியது. இதன் பிறகு, விமான தளத்தை இந்திய வீரர்களுக்கு பதிலாக இந்திய தொழில்நுட்ப குழு கையாளும். மாலத்தீவில் தற்போது 77 இந்திய வீரர்கள் உள்ளனர், அவர்கள் கடல் கண்காணிப்புக்காக ஒரு டொனேர் 228 விமானத்தையும், மருத்துவ உதவிக்காக இரண்டு ஹெச்.ஏ.எல் துருவ் ஹெலிகாப்டர்களையும் இயக்குகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு இந்தியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து 300 கடல் மைல் தொலைவில் உள்ளது மாலத்தீவு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடலோர காவல்படையினர் மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கினர். தோஸ்தி-16 என பெயரிடப்பட்ட இந்த ராணுவ பயிற்சியில் பார்வையாளராக பங்களாதேஷ் பங்கேற்றது. இத்தகவலை சமூக வலைதளங்களில் அளித்துள்ள மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை (எம்.என்.டி.எஃப்), “இந்தியா மற்றும் இலங்கை கப்பல்கள் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ‘தோஸ்தி-16’ என்ற மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதை வரவேற்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பயிற்சியில், மூன்று நாடுகளின் ராணுவத்தினரிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், கடலில் நடக்கும் சம்பவங்களை கூட்டாக கையாள்வதற்கான வழிகளை கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்," எனக் கூறியுள்ளது. தோஸ்தி ராணுவப் பயிற்சிகள் 1991-இல் தொடங்கின. கடந்த 2012-ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கை இதில் கலந்து கொண்டது. முன்னதாக, இந்த ராணுவப் பயிற்சி 2021-இல் நடந்தது. https://www.bbc.com/tamil/articles/clj9l256rj9o
  24. பட மூலாதாரம்,FAKHRUL ALAM கட்டுரை தகவல் எழுதியவர், தாரிக் ஸமன் ஷமல் பதவி, பிபிசி பங்களா சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பத்து வயது சிறுவன் ஒருவன், ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் போது (சுன்னத்) உயிரிழந்தார். அஹ்னாஃப் தஹ்மீத் என்ற அச்சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்களின் அனுமதியைப் பெறாமலேயே 'முழு மயக்க மருந்து' கொடுத்த காரணத்திலேயே அச்சிறுவன் உயிரிழந்ததாக சிறுவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில், அயன் அகமது என்ற சிறுவனும் இதேபோன்று ஆணுறுப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். அப்போதும் இதே குற்றச்சாட்டை அச்சிறுவனின் குடும்பத்தார் எழுப்பினர். வங்கதேசத்தில் கடந்த பல பத்தாண்டுகளாக, முடிதிருத்துவோர் மயக்க மருந்து இல்லாமல் இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக, மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து எவ்வளவு முக்கியம்? அதில் என்ன ஆபத்து இருக்கிறது? டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மயக்கவியல் நிபுணரான டாக்டர் ஷா ஆலம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மயக்க மருந்து தேவை என்று பிபிசி வங்க மொழிச் சேவையிடம் கூறினார். "ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இச்சம்பவத்தில் மயக்க மருந்து தேவைப்பட்டதா என்பதை தீர்மானிக்க வேண்டும்," என்று டாக்டர் ஆலம் கூறுகிறார். முறையான உடல் பரிசோதனை செய்யாமல் தவறான நேரத்தில் தவறான மயக்க மருந்து கொடுத்தால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர் ஷா ஆலம் தெரிவித்துள்ளார். அஹ்னாஃப் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு பட மூலாதாரம்,FAKHRUL ALAM படக்குறிப்பு, தன் மகனுடன் ஃபக்ருல் ஆலம் பத்து வயது அஹ்னாஃப் தஹ்மித், டாக்காவின் மாலி பாக் சௌதரி படாவில் உள்ள ஜே.எஸ். நோயறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனை மையத்திற்கு அறுவை சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) இரவு 8 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டதாக குழந்தையின் தந்தை ஃபக்ருல் ஆலம் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். அறுவை சிகிச்சை 8:30 மணிக்கு முடிவடைந்தது, ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் சிறுவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை. இதனால் ஃபக்ருல் ஆலம் கோபமடைந்தார். அவர் பிபிசி வங்க மொழிச் சேவையிடம், “எனது மகனுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த உறுதியான பதிலும் கொடுக்கப்படவில்லை. சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பும் என்று கூறினார்கள்,” என்றார். பத்து மணியளவில் மகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஆலமிடம் கூறப்பட்டது. சிறுவனை உடனடியாக மற்றொரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) அழைத்துச் செல்ல வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறப்பட்டது. எனெனில் அந்த மருத்துவ மையத்தில் ஐ.சி.யூ இல்லை. இதைத்தொடர்ந்து, சிறுவனை ஐ.சி.யூ-வுக்கு அழைத்துச் செல்ல அருகிலுள்ள தனியார் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டனர். இரவு 10:30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் அதற்குள் அஹ்னாஃப் இறந்துவிட்டார். ஃபக்ருல் ஆலம் தனது மகனுக்கு அனுமதியின்றி 'முழு மயக்க மருந்து' கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். அவர் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுவன் 'முற்றிலும் மயக்கமடைந்து' இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். அதனால்தான், என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, என் மகனுக்கு 'முழு மயக்க மருந்து' கொடுக்க வேண்டாம் என்று மருத்துவரிடம் சொன்னேன்,” என்றார். 'என் மகனை கொன்றுவிட்டனர்' பட மூலாதாரம்,FAKHRUL ALAM படக்குறிப்பு, அஹ்னாஃப் தஹ்மித் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு, சிறுவனின் குடும்பத்தார் செவ்வாய்க்கிழமை இரவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர், அதில் மருத்துவமனை உரிமையாளர் மற்றும் பணியில் உள்ள மருத்துவர் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஃபக்ருல் ஆலம் கூறுகையில், “என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்றார். அஹ்னாஃப் தஹ்மித் டாக்காவில் உள்ள மோதி ஜீல் ஐடியல் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். அஹ்னாஃப்பின் குடும்பம் முன்பு டென்மார்க்கில் வசித்து வந்தது. அஹ்னாஃப் அங்குதான் பிறந்தார். தொழிலதிபர் ஃபக்ருல் ஆலம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 2017-இல் வங்கதேசம் திரும்பினார். மயக்க மருந்து எப்போது ஆபத்தானது? படக்குறிப்பு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம், பதிவு செய்யாமலேயே இந்த ஆபத்தான கட்டுமானக் கட்டடத்தில் சுகாதார சேவைகளை அளித்து வந்தனர். ஒரு காலத்தில் மயக்கமருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது. நவீன மருத்துவ முறையில், மனித உடலில் சிறிய அல்லது பெரிய அறுவை சிகிச்சை செய்யும் முன் மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்கிறார்கள். மயக்க மருந்து உடல் அல்லது அதன் ஒரு பகுதியை மரத்துப்போகச் செய்கிறது. எனவே அறுவை சிகிச்சையின் போது நோயாளி எந்த வலியையும் உணர்வதிவில்லை. டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மயக்கவியல் நிபுணரான ஷா ஆலம், பிபிசி பங்களாவிடம், "இதை எந்த பிரச்னையும் இல்லாமல் செய்ய முடியும்,” என்று கூறினார். ஷா ஆலம் கூறுகையில், “மயக்க மருந்துகளில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை செய்யும்போது, அந்த பகுதி மட்டுமே மரத்துப்போகும். இது 'லோக்கல் அனஸ்தீசியா’ என்று அழைக்கப்படுகிறது” என்றார். பெரிய அறுவை சிகிச்சைக்கு முன், உடல் முழுவதும் மரத்துப் போவதற்கு மயக்க மருந்து செலுத்தப்படும் என்று கூறினார். இந்த நிலையில் நோயாளி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மீண்டும் எழுந்திருப்பார். யாருக்கும் மயக்க மருந்து கொடுப்பதற்கு முன், அவரது ரத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பெற பல பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்கிறார் ஷா ஆலம். எந்த வகையான மயக்க மருந்து இதற்கு பாதுகாப்பானது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது. இதுதவிர காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், இதய நோய் உள்ளவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கக் கூடாது என, டாக்டர் ஷா ஆலம் அறிவுறுத்தினார். இதுபோன்ற சமயங்களில் மயக்க மருந்து கொடுப்பது பாதுகாப்பானது அல்ல என்றார். அவரைப் பொறுத்தவரை, அத்தகைய சூழ்நிலை இருந்தால், ஒரு சிறப்பு மருத்துவரின் கருத்துடன் நோய் குணமடைந்தபின் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம். ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆணுறுப்பின் முன்தோலை நீக்கும் சிகிச்சை மத மரபுகளுக்கு முன்பே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தோல் மென்மையானது மற்றும் அதன் உட்பரப்பு மேலும் மென்மையானது. அமெரிக்காவைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் அன்னா மரியா பிபிசியுடன் பேசுகையில், இந்த மென்மையான தோலின் செயல்பாடு, ஆணுறுப்பின் நுனிப்பகுதியைப் மூடுகிறது என்று விளக்குகிறார். ஆணுறுப்பின் நுனிப்பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதால், இந்த தோல் சில பாதுகாப்பு செயல்பாட்டைக் கொண்டிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆரம்ப நாட்களில், காற்று பட்டாலோ, அல்லது துணி பட்டால் கூட வலி ஏற்படுவதற்கு இதுவே காரணம். ஆனால் காலப்போக்கில், இந்தப் பகுதி சற்றுக் கடினமாகி, அதன் உணர்திறனை இழக்கிறது. இந்த அறுவை சிகிச்சை பொதுவாக இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் அதாவது மென்மையான தோலை கூர்மையான சவரக்கத்தி அல்லது பிளேடால் வெட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது. இரண்டாவது முறை 'ஸ்டேப்பிள் கன்’ எனப்படும் கருவியால் செய்யப்படுகிறது. கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள், வயதான ஆண்களுக்கு ‘லோக்கல் அனஸ்தீசியா’ மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் அதிக வலி இருக்காது. இந்த அறுவை சிகிச்சையை எப்போது செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,REUTERS மதக் காரணங்களை விட்டுவிட்டு, ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் மட்டுமே பேசினால், இந்தக் கேள்விக்கு பல பதில்கள் உள்ளன. ஒருபுறம், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் குழந்தை பிறந்தவுடன் இந்த அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்று கருதுகின்றனர். அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் படி, இந்த அறுவை சிகிச்சை, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், ஆண்குறி புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட பல பால்வினை நோய்களைத் தடுக்க உதவுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் வயதான காலத்தில் ஏற்படும் சிக்கல்களை விட மிகக் குறைவு என அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூறுகிறது. எந்த வயதில் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது இந்த அமைப்பின் கருத்து. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. எனவே, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்று அரச மருத்துவ சங்கம் ஒரு மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளது. அந்த அமைப்பின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு உறுதியான மருத்துவக் காரணம் இருக்கும் போது மட்டுமே செய்யப்பட வேண்டும். பரவலான கருத்துக்கு மாறாக, இந்த அறுவை சிகிச்சை மருத்துவ மற்றும் உளவியல் சிக்கல்களின் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று இந்த அமைப்பு கூறுகிறது. இதில் ரத்தப்போக்கு, தொற்று மற்றும் சிறுநீர் பாதை சுருங்குதல் மற்றும் பீதி தாக்குதல்கள் ஆகியவை அடங்கும். https://www.bbc.com/tamil/articles/c0xl3901vqgo
  25. Published By: VISHNU 23 FEB, 2024 | 09:56 PM (நெவில் அன்தனி) உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் பிறீமியர் லீக்கின் (WPL 2024) இரண்டாவது அத்தியாயம் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகிறது. ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன. கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்திவரும் வீராங்கனைகள் பலர் இவ் வருட மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றனர். இன்றைய போட்டிக்கு முன்பதாக சினிமா நட்சத்திரங்களின் பங்கேற்புடன் பிரமாண்டமான ஆரம்ப விழா வைபவம் பெங்களூருவில் நடைபெற்றது. இம்முறை டெல்ஹி கெப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இண்டியன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், யூபி வொரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இரண்டு சுற்றுகளில் விளையாடுகின்றன. இந்த அணிகளின் தலைவிகளாக முறையே மெக் லெனிங், பெத் மூனி, ஹாமன்ப்ரீத் கோர், ஸ்ம்ரிதி மந்தானா, அலிசா ஹீலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டிகள் பெங்களூருவிலும் டெல்ஹியிலும் நடைபெறும். https://www.virakesari.lk/article/177158

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.