Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. 14 JAN, 2024 | 11:47 AM வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரை இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 23 இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நெல்லியடி பொலிஸ் பிரிவினுள் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 நபர்களிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/173918
  2. 14 JAN, 2024 | 12:47 PM கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்திப் பகுதிலுள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நீர்ப்பாசன வாய்க்காலுக்கு பாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்று (13) இரவு இடம்பெற்றதாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுஷன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஷ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜமீல் விசாரணைகளை மேற்கொண்டார். சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதனையடுத்து அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டன. https://www.virakesari.lk/article/173930
  3. மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் பாதியளவு வெளியாட்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் எம்.பி.க்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் வழங்கப்படுவதுடன் இந்த வீடுகளை பராமரிக்க அரசாங்கம் வருடாந்தம் பல கோடி ரூபாவை செலவிடுகின்றது. வெளியாட்களுக்கு வீடுகள் வழங்கக் கூடாது என எத்தனை சுற்றறிக்கைகள் கொடுத்தாலும், வீடுகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது என கூறும் அந்த வட்டாரங்கள், எம்.பி.க்களின் சம்மதத்தின் பேரில் இவர்கள் தங்கியுள்ளதால் வெளியாட்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே வேளை அந்த அறிக்கையின்படி, எம்.பி.யின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியை நடத்துவதற்கான செலவும் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த காலங்களில் இங்கு சில சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் அவையில் எம்.பி,கள் அல்லாத வெளியாட்கள் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. https://thinakkural.lk/article/288142
  4. வரலாறு காணாத விலை உயர்வு! நுவரெலியாவில் ஒரு கிலோ கரட் 1100 ரூபாவுக்கு விற்பனை! நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை நேற்று (13) இரவு முதல் 1000 – 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் . நுவரெலியா பிரதேசத்தில் உள்ள மரக்கறி விவசாயிகளிடம் இருந்து காரட்டை 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்ததாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். லீக்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் ஆகியவை ரூ.450-500க்கும், பீன்ஸ், கறி மிளகாய் ஆகியவை ரூ.750-800க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1600க்கும், முள்ளங்கி கிலோ ரூ.350க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ காரட் 350-400 ரூபாவிற்கும், ஒரு கிலோ ப்ரோக்கோலி 750 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினத்தில் ப்ரோக்கோலி ஒரு கிலோ 7000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. lankadeepa https://thinakkural.lk/article/288139
  5. வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானி வெளியீடு! Published By: VISHNU 14 JAN, 2024 | 11:31 AM வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு தேவைப்படும் அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, கல்வி அமைச்சுக்கு இரண்டு பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. சுகாதார அமைச்சுக்காக 21 டபிள் கெப் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும். நடமாடும் மகப்பேறு சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் 3 வாகனங்களும், தொழில் அமைச்சுக்கு ஒரு வாகனமும் கொண்டுவரப்படவுள்ளன. விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கு தேவையான 3 வாகனங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இறக்குமதி செய்யும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வெளிநாட்டு உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு மாத்திரமே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மாத்திரமே அது தொடர்பான இறக்குமதி நடவடிக்கைகளை தனது சொந்தப் பணத்தில் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/173920
  6. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க பேருந்துகளில் சிசிடிவி அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களிலும் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவித்ததன் பின்னர், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும் அறிவிக்கப்பட்டு பஸ்களில் சிசிடிவி கமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். கமராக்கள் பொருத்தப்பதுவதன் மூலம் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களுக்கு வழங்கப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கமராக்கள் பொருத்துவது உரிம நிபந்தனையாக உள்ளடக்குவது தொடர்பான யோசனை பொறுப்பு தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/288135
  7. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்ததில், காற்று மாசு சராசரியைவிட இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய தகவலின்படி, இன்று காலை 7 மணிக்கு சென்னையில் காற்றுத் தரக் குறியீட்டின் சராசரி அளவு 378 ஆக உயர்ந்தது. இதில், அதிகபட்சமாக சென்னை ராயபுரத்தில் காற்றுத் தரக் குறியீடு 770 ஆகவும், அரும்பாக்கத்தில் 501 ஆகவும் இருந்தது. காற்று மாசு காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த சிங்கப்பூர் மற்றும் லண்டன் விமானங்கள் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டன. அதேபோல, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபத், பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டன. காலை 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கியது. பனி மூட்டத்துடன் காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளதால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் எதிரே வரும் வாகனங்கள்கூடத் தெரியாமல் சிரமப்பட்டனர். சென்னையை ஸ்தம்பிக்க வைத்த காற்று மாசு தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பாக சென்னையில் உள்ள ஒன்பது காற்று மாசு கண்காணிப்பு நிலையங்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இன்று காலை 8 மணிக்கு பெருங்குடியில் அதிகபட்சமாக காற்று மாசுக் குறியீடு 289 ஆக இருந்தது. அதேபோல, மணலி பகுதியில் காற்று மாசுக் குறியீடு 272 ஆகவும், எண்ணூர் காந்தி நகர் பகுதியில் 232 ஆகவும், அரும்பாக்கத்தில் 216 ஆகவும், ராயபுரத்தில் 207 ஆகவும், கொடுங்கையூரில் 156 ஆகவும் இருந்தது. ஆனால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மிகக் குறைந்த இடங்களிலேயே காற்றுமாசு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு கட்டடங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்கள் அமைத்து கண்காணித்தால்தான் துல்லியமாக காற்று மாசுபாட்டைக் கண்டறிய முடியும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். காற்று மாசைக் கண்காணிக்கும் தனியார் நிறுவனமான ஏ.க்யூ.ஐ(AQI) தரவுகளின்படி, ராயபுரத்தில் அதிகபட்சமாக காற்றுத்தரக் குறியீடு 770 ஆக இருந்தது. மேலும், பெருங்குடி பகுதியில் 609, பொத்தேரியில் 534, ஆலந்தூர் பகுதியில் 511, அரும்பாக்கத்தில் 501 என காற்றின் மாசுபாட்டு அளவு பதிவாகியுள்ளது. காற்றுத்தரக் குறியீட்டின் அடிப்படையில் அவற்றின் தன்மையை மாசுக் கட்டுபாட்டு வாரியம் வகைப்படுத்தியுள்ளது. அதன்படி, காற்றுத் தரக் குறியீடு 0-50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம் 51-100 வரை இருந்தால், அது திருப்திகரமானது 101 முதல் 200 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமாக உள்ளது அதுவே 201-300 வரை இருந்தால், அது மிக மோசமான காற்றுத்தரத்தை குறிக்கும். காற்றின் தரம் 301-400 இருந்தால், காற்று மாசு மிகக் கடுமையாக மோசமாக உள்ளதாகக் குறிக்கும் 401-500 வரை இருந்தால், காற்று மாசு அபாயகரமான நிலையில் இருப்பதைக் குறிக்கும் கடந்த ஆண்டுகளைவிட பல மடங்கு அதிகரித்த காற்று மாசு கடந்த 2023ஆம் ஆண்டு போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு போகி பண்டிகை அன்று சென்னையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வைக்ப்பட்டுள்ள எட்டு காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களிலும், காற்றுத் தரக் குறியீடு 100இல் இருந்து 200க்குள் தான் பாதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஆலந்தூர் காற்று தரக் கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு 197 ஆக பதிவாகியிருந்தது. தனியார் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகள்படி, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் காற்றுத் தரக் குறியீடு 277 ஆகவும், அண்ணா நகரில் 135 ஆகவும் பதிவாகியிருந்தது. ஆனால் இதுவே 2022இல், சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலுமே காற்று மாசுத் தரக்குறியீடு 50 முதல் 100க்குள் தான் இருந்துள்ளது. அதில், குறைந்தபட்சமாக தேனாம்பேட்டை பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 61 ஆகவும், அதிகபட்சமாக மாதவரம் பகுதியில் 91 ஆகவும் பதிவாகியிருந்தது. காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டும் சென்னை விமான நிலையத்தில் 60 விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின. இந்த ஆண்டு எத்தனை விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின, தாமதமாகப் புறப்பட்டன என்ற தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை. பண்ணாட்டு விமானங்களான, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் ஹைதராபத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு, 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை முதல் எந்த விமானங்களும் புறப்படாமல், அனைத்து விமானங்களும் தாமதமாக காலை 9 மணிக்கு மேல் கிளம்பின. காற்று மாசு எப்போது குறையும்? பனிமூட்டத்துடன் காற்று மாசும் சேர்ந்துள்ளதால், இது மாசுத் துகள் அதிக நேரம் காற்றில் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன். "இந்த குளிர்ந்த தன்மை விலகி, வெயில் வரத் தொடங்கும்போது, காற்று மாசு குறையும். ஆனால், மக்கள் மீண்டும் பழைய பொருட்களை எரிக்கத் தொடங்கினால், காற்று மேலும் மாசடையும்,” என்றார் அவர். மேலும், போகி பண்டிகைகளுக்கு முன்பே மக்கள் எரிக்கக்கூடாது என்று எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல், அதை மீறி பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். “நீங்கள் எச்சரிக்கை கொடுப்பதால், எந்தப் பயனும் இல்லை. செய்பவர்கள் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மக்கள் போகி கொண்டாடுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், ஒருவர் பழையப் பொருட்களை எரிப்பதால், அது அவர்களோடு முடிவதில்லை. மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை கோருகிறோம்,” என்றார். போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசு எதிர்பார்க்காத ஒன்றுதான் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தெரிவித்தனர். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மாசுக் கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர், “கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு காற்று மாசு அதிகமாக உள்ளது. இன்று காலை முதல் பதிவான காற்றுத் தரக் குறியீட்டை வைத்துப் பார்த்தாலே, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது தெரிகிறது. ஆனால், இதுவரை பதிவானதிலேயே இது அதிகமான அளவா என்பதை முழுமையான தரவுகளை ஆராய்ந்துதான் சொல்ல முடியும்,” என்றார். போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் கூறியது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் கேட்டோம். ஆனால், இதுபோல் தனிநபர்கள் காற்றை மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித விதிகளும் இல்லையெனத் தெரிவித்தார். காற்று மாசுபாட்டால் என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள சூழலில் முன்னதாகவே சுவாசக் கோளாறு உள்ளவர்களும், இதய நோய் பாதிப்பில் உள்ளவர்களும் கூடுமானவரை வெளியே செல்வதைட்ப தவிர்க்க வேண்டும் என இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். “பெரும்பாலும் கரும்புகையாக இருக்கும் மாசுபட்ட காற்றில் நுண் துகள்களின் அளவு அதிகமாக இருக்கும். அவை நாம் சுவாசிக்கும் மூக்கின் வழியாக உள்ளே செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மிகச் சிறிய அளவிலான நுண் துகள்கள் எளிமையாக நாம் சுவாசிக்கும் போதே உள்ளே சென்றுவிடும். நீண்ட நேரம் இப்படியான காற்று மாசுபட்டுள்ள சூழலில் இருந்தால், மூச்சுத் திணறல் மற்றும் நீண்டகால சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்,” என்றார். அதேபோல குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் தோல்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “இந்தக் காற்று மாசு பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் துணி உள்ளிட்டவையை எரித்ததால் ஏற்பட்டிருக்கும். இந்தப் புகையால், ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பகள் உள்ளது. அதேபோல, அவர்களின் தோல்கள் மிகவும் இலகுவாக இருப்பதால், தோல் எரிச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cxwd7v9k3xeo
  8. 100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் 14 JAN, 2024 | 10:40 AM (ஆர்.சேதுராமன்) பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் 100 ஆவது நாளாக தொடர்­கின்றன. கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலின் தென் பிராந்­திய நக­ரங்கள் மீது ஹமாஸ் போரா­ளிகள் ஊடு­ருவி தாக்­கு­தல்­களை நடத்­தினர். அதை­ய­டுத்து, ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் யுத்தப் பிர­க­டனம் செய்­த­துடன், ஹமாஸின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது. இம்­மோ­தல்கள் ஆரம்­பித்து, இன்று 14ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 100 நாட்­க­ளா­கு­கின்­றன. 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்­கப்­பட்ட பின்னர், பலஸ்­தீ­னர்­­க­ளுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான மிக நீண்­டதும் அதிக உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­து­மான யுத்தம் இது­வாகும். ஒக்­டோபர் 7ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களால் 23,708 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்ளனர் என காஸா­வி­லுள்ள சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்த எண்ணிக்கை காஸா­வி­லி­ருந்த மக்கள் தொகையின் சுமார் ஒரு சத­வீதம் ஆகும். அதே­வேளை, காஸாவில் சுமார் 80 சத­வீ­த­மான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். ஒக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களால் இஸ்­ரேலில் சுமார் 1140 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 250 பேர் பண­யக்­கை­தி­க­ளாக பிடிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் இன்னும் 132 பேர் தொடர்ந்து பணயக்கைதி­க­ளாக உள்­ளனர் என இஸ்­ரே­லிய அதிகா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். காஸா­வி­லுள்ள மக்­களில் நான்கில் ஒரு பங்­கினர் பட்­டி­னியால் வாடு­கின்­றனர் என ஐ.நா. மதிப்­­பிட்­டுள்­ளது. காஸாவின் 36 வைத்­தி­ய­சா­லை­களில் 16 வைத்­தி­ய­சா­லை­களே அதுவும் பகு­தி­ய­ளவில் இயங்­கு­கின்­றன என ஐ.நா. தெரி­வித்­துள்­ளது. மாண­வர்கள் பல மாதங்­க­ளாக பாட­சா­லைக்கு செல்ல முடி­யாத நிலையில் உள்­ளனர். சர்­வ­தேச நீதி­மன்ற வழக்கு விசா­ரணை காஸாவில் இஸ்ரேல் இனப்­ப­டு­கொலை செய்­வ­தாகக் குற்­றம்­சு­மத்­திய தென் ஆபி­ரிக்கா, காஸா மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறு உத்­த­ர­விடக் கோரி, நெதர்­லாந்தின் ஹேகு நக­ரி­லுள்ள சர்­வ­தேச நீதிமன்­றத்தில் வழக்குத் தொடுத்­துள்­ளது. இவ்­வழக்கின் ஆரம்ப 2 நாள் பகி­ரங்க விசா­ர­ணைகள் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்­களில் நடை­பெற்­றன. இவ்­வ­ழக்கில் தென் ஆபி­ரிக்­காவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சட்டக் குழு­வுக்கு, தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த சர்­வ­தேச சட்­டத்­துறை பேரா­சி­ரியர் கிறிஸ்­டோபர் ஜோன் டுகார்ட் தலைமை தாங்­கு­கிறார். இக்­கு­ழு­வினர் சர்­வ­தேச நீதி­மன்ற நீதி­ப­திகள் முன்­னி­லையில் முன்­வைத்த சமர்ப்­ப­ணத்தில், இஸ்­ரேலின் வான்­வழித் தாக்­கு­தல்கள் மற்றும் தரை­வ­ழி­யான படை­யெ­டுப்­பினால் காஸா மக்கள் எதிர்­கொண்­டுள்ள அவ­ல­நிலையை எடுத்­து­ரைத்­தனர். பலஸ்­தீன மக்­­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை பயங்கரங்கள் உல­கெங்கும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பாகி வரு­வ­தாக அயர்­லாந்து சட்­டத்­த­ரணி பிளின்னே நீ ஹார்லீ கூறி­ய­துடன், காஸாவில் இஸ்­ரேலியப் படை­யி­னரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தற்கு அவ­சர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினார். இஸ்ரேல் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­­த­ர­ணிகள் தென் ஆபி­ரிக்­காவின் இன அழிப்பு குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­தனர். இஸ்­ரே­லிய சட்­டத்­த­ரணி டெல் பெக்கர் வாதா­டு­கையில், இஸ்ரேல் தற்­காப்பு நட­வ­டிக்­கை­யி­லேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அந்­ந­ட­வ­டிக்கை காஸா­வி­லுள்ள பலஸ்­தீன மக்­களை இலக்­கு­ வைக்­க­வில்லை எனவும் கூறி­னார். ஹமாஸ் இயக்­கத்­தினர், பெற்­றோர்களின் முன்­னி­லையில் சிறார்­க­ளையும் சிறார்கள் முன்­னி­லையில் பெற்­றோர்­க­ளையும் சித்­தி­ர­வதை செய்­தனர், மக்­களை தீக்­கி­ரை­யாக்­கினர், வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினர் எனவும் அவர் கூறினார். இன அழிப்பு குற்­றச்­சாட்டு தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்றம் இறுதித் தீர்ப்பை அறி­விப்­ப­தற்கு பல வரு­டங்கள் செல்லும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. எனினும் காஸா­­வில் கொலை­­­க­ளை­யும் அழி­வு­க­ளை­யும் நிறுத்­து­வ­தற்கு அவ­சர உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட வேண்டும் என்ற தென் ஆபி­ரிக்­காவின் கோரிக்கை தொடர்­பி­லேயே, நீதி­மன்­றத்தின் ஆரம்ப விசா­ர­ணை­களின் கவனம் குவிந்­தி­ருந்­தது. இவ்­வ­ழக்கில் இடைக்­கால தீர்ப்பொன்று சில வாரங்களுக்குள் வெளி­யிடப்படலாம் என நிபுணர்கள் தெரி­வித்துள்ளனர். தென் ஆபிரிக்க சட்டத்தரணி ஆதிலா ஹசிம் இது தொடர்பாக கூறுகை­­யில், இன அழிப்பு தொடர்­பான இறுதித் தீர்ப்பை இந்நீதி­மன்றம் தற்போது அறிவிக்கத் தேவை­யில்லை. ஆனால், குறைந்தபட்சம் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள், இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. சம­ வாயத்தின் வரைவிலக்கணத்துக்கு உட்படுகின்றன என்பதை ஏற்­றுக­்­­கொண்டு இதில் நீதிமன்றம் தலை­யீடு செய்ய முடியும் என்றார். https://www.virakesari.lk/article/173910
  9. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV 6 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 13 ஜனவரி 2024 மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்கள் மீது அதிக்கம் செலுத்த பிறருக்கு உரிமத்தை தந்துவிடாது என்று அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முய்சு தாயகம் திரும்பியுள்ளார். தலைநகர் மாலேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய பெருங்கடலில் மாலத்தீவு மிகச்சிறிய நாடாக இருந்தாலும் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு பிரத்யேக பொருளாதார மண்டலத்தை கொண்டுள்ளோம். இந்திய பெருங்கடலில் இத்தகைய சிறப்பு பெற்ற நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தியப் பெருங்கடல் குறிப்பிட்ட எந்தவொரு நாட்டிற்கும் சொந்தம் கிடையாது. அது பெருங்கடலைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் சொந்தமானது. மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்கள் மீது அதிக்கம் செலுத்த பிறருக்கு உரிமத்தை தந்துவிடாது" என்று பேசியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து அந்நாட்டு அமைச்சர்கள் ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் மாலத்தீவு அதிபர் முய்சு இவ்வாறு பேசியுள்ளார். அவரது பேச்சில் மறைமுகமாக இந்தியாவையே விமர்சித்ததாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 5 நாள் பயணமாக திங்கள்கிழமை சீனா சென்ற முய்ஸுவை சீன மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் முய்ஸு அவரது மனைவி சஜிதா முகமது மற்றும் உயர்மட்டக் குழுவுடன் சென்றுள்ளார். இந்தியாவை புறக்கணித்து முய்சு துருக்கி, சீனா பயணம் முன்னதாக, மாலத்தீவின் புதிய அதிபர் முய்சு இந்த மாதம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று சீனா தெரிவித்திருந்தது. அதிபராக பதவியேற்ற பிறகு வெளிநாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை பயணம் இது என்கிறது சீனா. முகமது முய்சுவின் மாலத்தீவு முற்போக்கு கட்சியில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது கட்சி 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்துப் பிரசாரம் மேற்கொண்டதுடன் மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாகவும் கூறியது. முய்சுவுக்கு முன், மாலத்தீவு அதிபர் யாராக இருந்தாலும் பதவியேற்றதும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதே வாடிக்கையாக இருந்தது. முய்சு இந்த பாரம்பரியத்தை மாற்றியுள்ளார். தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு துருக்கியை தேர்ந்தெடுத்த அவர் தற்போது சீனாவை அடைந்துள்ளார். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் புகைப்படங்கள் குறித்து மாலத்தீவு தலைவர்கள் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலத்தீவு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கருத்து தெரிவித்த தலைவர்கள் அரசாங்கத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES முய்சுவின் வருகை குறித்து சீனா என்ன கூறியது? சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான உறவுகள் குறித்தும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வாங் வென்பின் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பழமையானவை என்றும் அவர் கூறினார். "இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜ தந்திர உறவுகள் 52 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. அன்றிலிருந்து, இருநாட்டு உறவுகளில் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இது வெவ்வேறு அளவில் இரு நாடுகளுக்கு இடையிலான சமத்துவம் மற்றும் பரஸ்பர நலன்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.” 2014 ஆம் ஆண்டில், அதிபர் ஷி ஜின்பிங் மாலத்தீவுக்கு பயணம் செய்ததாகவும் அவர் கூறினார். “அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும், எதிர்கால நலன்களை நோக்கமாகக் கொண்டும் பேச்சுகள் நடந்தன.” தொடர்ந்து பேசிய அவர், “கடந்த பத்தாண்டுகளில், மாலத்தீவு சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு ஆழமடைந்துள்ளது,” என்றார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முய்சுவின் சீனப் பயணம் குறித்து வாங் வென்பின் மேலும் கூறுகையில், “மாலத்தீவு அதிபரான பிறகு முய்சுவின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்,” என்றார். இருப்பினும், இதற்கு முன்னர் முய்சு துருக்கி நாட்டுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்தார். மாலத்தீவு அதிபர் அலுவலகத்தின் தகவலின்படி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவானின் அழைப்பின் பேரில் முய்சு மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டனர் எனத் தெரியவருகிறது. பரஸ்பர நலன் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அப்போது இருவருக்கும் இடையே விவாதம் நடந்தது. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV படக்குறிப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற முய்சு பல்வேறு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். துபாயில் நடைபெற்று வந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு (COP 28) முய்சு துருக்கி நாட்டுக்குச் சென்றார். அங்கு அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை முறைப்படி சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியதும், மாலத்தீவில் உள்ள வேலனா விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய முய்சு, மாலத்தீவு மக்களின் விருப்பத்தை வரவேற்பதாகவும், தங்கள் வீரர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைப்பதாக இந்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். கடந்த ஆண்டு, சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில், 'சீனா-இந்தியப் பெருங்கடல் பிராந்திய வளர்ச்சி ஒத்துழைப்புக்கான மன்றக் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாலத்தீவு சார்பில் அதிபருக்குப் பதிலாக, துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப் பங்கேற்றார் . மாலத்தீவுடனான சீனாவின் உறவுகள் சீனாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு 1972 ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்குப் பிறகு, மாலத்தீவு 2009 இல் சீனாவில் தனது தூதரகத்தையும் , சீனா 2011 இல் மாலத்தீவில் தனது தூதரகத்தையும் திறந்தது. 2014 ஆம் ஆண்டில், மாலத்தீவுக்கு சீனா 16 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியது. இந்த ஆண்டு, மாலத்தீவு சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்தது. 2017 இல், மாலத்தீவு சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. முகமது முய்சுவின் மாலத்தீவின் முற்போக்குக் கட்சியில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது கட்சி 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்ததுடன் மாலத்தீவில் நிலைகொண்டிருந்த இந்திய வீரர்களை திரும்பப்பெறுமாறும் இந்தியாவைக் கேட்டுக்கொண்டது. முன்னதாக, மாலத்தீவு ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது இப்ராகிம் சோலி, ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ என்ற முழக்கத்தை முன்வைத்திருந்தார். அவர் இந்தியாவுக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். 2018ல், இப்ராகிம் சோலி மாலத்தீவு அதிபராகப் பதவியேற்ற போது, பிரதமர் நரேந்திர மோதி அந்த விழாவில் கலந்து கொண்டார். அவரது ஆட்சியின் போது, மாலத்தீவு கடந்த ஆண்டு 'இந்தியப் பெருங்கடல் பிராந்திய மன்ற பேச்சுவார்த்தையில்' பங்கேற்க மறுத்துவிட்டது. பட மூலாதாரம்,MV.CHINA-EMBASSY.GOV.CN படக்குறிப்பு, மாலத்தீவிற்கான சீனாவின் முதல் தூதர் யு ஹோங்யாவோ, 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் நஷீத்திடம் ஒரு முக்கிய கடிதத்தை அளித்தார். முய்சுவின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடந்தது என்ன? 30 செப்டம்பர் 2023 - தேர்தலில் 46 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று நாட்டின் புதிய அதிபராக முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 நவம்பர் 2023 - பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு மாலத்தீவின் 8வது அதிபரானார். 17 நவம்பர் 2023 - மாலத்தீவில் இருந்து இந்தியப் படைகளை அகற்றுவது தொடர்பாக கிரண் ரிஜிஜூவிடம் பேசினார் . 26 நவம்பர் 2023 - தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக துருக்கி நாட்டுககுப் பயணம் மேற்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 10 அன்று, துருக்கியுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக மாலத்தீவு அங்காராவில் தனது தூதரகத்தைத் திறக்கும் என்று அறிவித்தார். 30 நவம்பர் 2023 - COP 28 இல் பங்கேற்க துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார். 01 டிசம்பர் 2023 - துபாயில், COP 28-ல் பங்கேற்க வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை முய்சு சந்தித்தார் . 03 டிசம்பர் 2023 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கான அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துககொண்டு மாலத்தீவுக்குத் திரும்பினார் . இந்தியா - மாலத்தீவு உறவு எப்படி? மாலத்தீவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1965 இல், இந்தியா மாலத்தீவில் தனது அதிகாரப்பூர்வ உறவுகளைத் தொடங்கி, அவ்வாறு செய்த முதல் நாடு என்ற இடத்தைப் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில், மாலத்தீவின் அரசாங்கங்கள் இந்தியாவை நோக்கி அல்லது சீனாவை நோக்கி சாய்ந்தன. இந்த சிறிய தீவின் பாதுகாப்பில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. 1988-ல் ராஜீவ் காந்தி ராணுவத்தை அனுப்பி மௌமூன் அப்துல் கயூமின் அரசைக் காப்பாற்றினார். கடந்த 2018-ம் ஆண்டு மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்ட போது, பிரதமர் மோடி தண்ணீரை அனுப்பி வைத்தார். இதற்குப் பிறகு மோடி அரசும் மாலத்தீவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பலமுறை கடன் கொடுத்தது. இந்தியா 2010 மற்றும் 2013 இல் இரண்டு ஹெலிகாப்டர்களையும், 2020 இல் ஒரு சிறிய விமானத்தையும் மாலத்தீவுக்கு பரிசாக வழங்கியது. இந்த விமானங்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ அவசரநிலைகளில் பயன்படுத்தப்படும் என்று இந்தியா கூறியிருந்தது. 2021 ஆம் ஆண்டில், இந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை இயக்க சுமார் 75 இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருப்பதாக மாலத்தீவு பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மாலத்தீவுக்கு இந்தியா ராணுவ தளவாடங்களையும் வழங்கி வருகிறது. மாலத்தீவு கடற்படைக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க இந்தியாவும் உதவி வருகிறது. இந்தியாவும் சீனாவும் மாலத்தீவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாகத் தெரிகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முய்சு சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்தியா மற்றும் மாலத்தீவுகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜதந்திர, ராணுவ, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV படக்குறிப்பு, டிசம்பர் 1, 2023 தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் மாலைதீவு அதிபர் முகமது முய்சு ஆலோசனை நடத்தினார். மாலத்தீவு பிரச்னையில் இந்தியா vs சீனா இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் 2018 இல் மிகவும் கசப்பானதாக மாறின. இந்த நிலை பிப்ரவரி 1, 2018 அன்று மாலத்தீவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புடன் தொடங்கியது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்ததன் மூலம் அரசியல் சாசனம் மற்றும் சர்வதேச விதிகளை மீறியதாக மாலத்தீவு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. முன்னாள் அதிபர் முகமது நஷீத் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க அதிபர் யாமீன் மறுத்துவிட்டார் என்பதுடன் இதைத் தொடர்ந்து அவர் மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் செய்தார். இந்த அவசரநிலை 45 நாட்கள் நீடித்தது. இதை இந்தியா எதிர்த்தது. "மாலத்தீவில் அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவசரநிலை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்," என்று இந்தியா கூறியது. மாலத்தீவில் ஏற்பட்ட வியத்தகு அரசியல் நெருக்கடி இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் கவலையளித்தது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், சீனாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அப்துல்லா யாமீன், சீனா, பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியாவுக்கு தனது தூதர்களை அனுப்பியிருந்தார். இதையடுத்து, மாலத்தீவின் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிடக் கூடாது என்று எச்சரித்த சீனா, மாலத்தீவின் இறையாண்மையை எந்தச் சூழலிலும் மீறக் கூடாது என்றும் கூறியது. அதே நேரம், மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் நஷீத், நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு இந்தியாவிடமிருந்து ராணுவத் தலையீட்டை எதிர்பார்த்தார். இதற்கிடையில், சீன செய்தி இணையதளத்தை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், சீன போர்க்கப்பல்கள் மாலத்தீவை நோக்கி நகர்ந்ததாக செய்தி வெளியிட்டது. இருப்பினும், அந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் இப்ராகிம் சோலி வெற்றி பெற்றார். அவர் இந்தியாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இருப்பினும், அவரது அரசாங்கம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயன்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதியை மாலைதீவு முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலி சந்தித்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டது. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,200 தீவுகளைக் கொண்ட ஒரு நாடாகும். அதன் மக்கள் தொகையில் 98 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். மாலத்தீவு குடியுரிமைக்கு யாராவது விண்ணப்பித்தால், அவர் முஸ்லிமாக இருப்பது அவசியம். மாலத்தீவு வெறும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு குடியரசு. இந்திய மற்றும் சீன நாடுகளின் உத்தி ரீதியிலான பார்வையில் இந்தியப் பெருங்கடலில் ஒரு புவியியல் முக்கியத்துவம் பெற்ற இடத்தில் இருக்கும் இந்த நாடு மிகவும் முக்கியமானது. மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவிடமிருந்து பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது. ஆனால் வியூக ரீதியாக அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக சீனாவிற்கு இந்த நாடு மிகவும் முக்கியமானது. https://www.bbc.com/tamil/articles/cp938knypzjo
  10. இலகு ரயில் திட்டம் எமது ஆட்சியில் நிச்சயம் ஆரம்பிக்கப்படும் - ஜப்பான் நிதி அமைச்சரிடம் எதிர்க்கட்சி தலைவர் உறுதி Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 09:29 PM (எம்.மனோசித்ரா) ராஜபக்ஷ அரசாங்கத்தில் எவ்வித அடிப்படை காரணிகளும் இன்றி இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை தமது ஆட்சியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பான் நிதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. ஜப்பான் தனது பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாக்கல் மூலம் அதன் ஏற்றுமதித் துறையை எவ்வாறு மேம்படுத்த முடிந்தது என்பது உட்பட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஜப்பானின் புனரமைப்பு அனுபவத்திலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் சஜித் பிரேமதாச இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். இலகு ரயில் திட்டத்தை திடீரென இரத்துச் செய்வதற்கு முன்னைய ராஜபக்ச அரசாங்கம் எடுத்த தொலைநோக்குப் பார்வையற்ற தீர்மானத்திற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது கட்சியின் கீழ் அமைக்கப்படும் அரசாங்கத்தில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் நிதியமைச்சரிடம் உறுதியளித்தார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் அல்லது ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து பல வருடங்களாக பெற்ற ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பான் நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். ஜப்பானின் வட பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/173888
  11. Published By: VISHNU 14 JAN, 2024 | 10:10 AM யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா 15 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்பதற்காகவே நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். https://www.virakesari.lk/article/173902
  12. அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது 14 JAN, 2024 | 09:44 AM யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 3 இழுவை படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடற்படையினர் கைப்பற்றிய 3 மீன்பிடி இழுவை படகுகளையும் கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையையும் மேற்கொண்டனர் . கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி இழுவை படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173901
  13. பட மூலாதாரம்,P.T.V. 13 ஜனவரி 2024 கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை தனது காவலில் எடுத்துக்கொண்டது. அதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்ஜீய மற்றும் எல்லைப் பதற்றம் புதிய எச்சத்தை எட்டியது. பிப்ரவரி 27 அன்று என்ன நடந்தது என்பது மீண்டும் தற்போது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த இரவு பற்றிய சில புதிய விஷயங்கள் வெளிவந்துள்ளன. இதற்குக் காரணம், அப்போது பாகிஸ்தானில் பதவியேற்றிருந்த இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியாவின் ‘ஆங்கர் மேனேஜ்மென்ட்’ என்ற புத்தகம். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜோஹ்ரா பலோச் வியாழக்கிழமையன்று தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் இந்தக் கூற்றுகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர், “இந்தப் புத்தகம் பிப்ரவரி 2019 பற்றிய இந்தியாவின் இட்டுக்கட்டப்பட்ட கதையைப் பரப்ப முயல்வதைப் போல் தெரிகிறது,” என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், பிப்ரவரி 2019இல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது தெளிவாகிறது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ‘நெவர் கிவ் அன் இன்ச்’ என்ற புத்தகத்தில்கூட, இந்தப் பதற்றம் இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போர் அச்சம் உண்டாகும் அளவுக்கு அதிகரித்ததாகக் கூறினார். கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் குஜராத்தில் நடந்த கூட்டத்தில், போர் விமானியைத் திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. அது நடக்கவில்லையெனில், “தாக்குதல் நடத்த மோதி 12 ஏவுகணைகளுடன் தயாராக இருந்தார். அது நடந்திருக்கும்.” பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நரேந்திர மோதியின் அறிக்கை பொறுப்பற்றது, போர் வெறி அடிப்படையிலானது என்று விவரித்தது. “பாலகோட் தாக்குதலுக்கு உடனடியாக, பயனுள்ள பதிலடி கொடுத்து, விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, விமானியைக் கைது செய்தது ஆகியவை தமது ஆயுதப் படைகளின் தீர்மானம், திறன் மற்றும் தயார்நிலைக்குச் சான்று,” என்று பாகிஸ்தான் கூறியது. இந்திய விமானி அபிநந்தன் கைது செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தைக் குறைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச விரும்பினார். ஆனால், அதற்கு “எந்தவொரு ஆர்வமும் காட்டப்படவில்லை” என்று பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியா தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த மோதலின் தீவிரத்தைக் கண்டு பாகிஸ்தான் உண்மையில் “பயந்ததாகவும்” அவர் கூறினார். இதுதொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜோஹ்ரா பலோச் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், “அபிநந்தன் திரும்பியதன் மூலம் பதற்றங்களைக் குறைப்பதில் பாகிஸ்தான் பொறுப்பான அணுகுமுறையைக் காட்டியது. அதேநேரத்தில் இந்தப் புத்தகம் “பிப்ரவரி 2019 பற்றிய இந்தியாவின் புனையப்பட்ட கதையைப் பரப்ப முயல்கிறது,” என்று கூறினார். பிப்ரவரி 27 அன்று என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் வெடிமருந்துகளை வீசிவிட்டு, பாகிஸ்தான் மண்ணில் உள்ள தீவிரவாத பதுங்குமிடங்கள் மீது ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியதாகக் கூறியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் மிக்21 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதுடன் இந்திய விமானி அபிநந்தனைக் கைது செய்தது. பின்னர் “பதற்றத்தைக் குறைக்க” அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான அஜய் பிசாரியா சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்திலும் பிப்ரவரி 27 குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அவர் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்தார். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது அவர் டெல்லியில் இருந்தார். அவர் தனது புத்தகத்தில், “பிப்ரவரி 26 அன்று காலை பாகிஸ்தானில் இந்தியா குண்டுகளை வீசியது குறித்து சமூக ஊடகங்களில் பேசப்பட்டபோது, டெல்லியில் எழுந்தேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அன்று காலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது சக ஊழியர் ஒருவர், ஐஎஸ்பிஆர் செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கஃபூரின் ட்வீட்டை பகிந்தார். அதில் இந்தியா போர் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்து வெடிகுண்டு வீசியதாகக் குறிப்பிட்டிருந்ததைக் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் உள்ள ராணுவ இலக்குகளுக்கு அருகே வெடிகுண்டுகளை வீசியதன் மூலம் மறுநாள் பாகிஸ்தான் பதிலடி கொடுத்ததாக அவர் எழுதியுள்ளார். பின்னர், சில பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்ததை இந்திய அறிக்கை உறுதிப்படுத்தியது. பிப்ரவரி 27 அன்று கப்பல்களுக்கு இடையிலான சண்டையின்போது இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனின் விமானம் பாகிஸ்தான் ஏவுகணைக்கு இலக்கானது. அவரது விமானம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஏழு கி.மீ தொலைவில் விழுந்தது. அபிநந்தன் கைது செய்யப்பட்டார். கடந்த 2019 பிப்ரவரியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த சண்டை அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும் என்பதை உலகம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ எழுதிய ‘நெவர் கிவ் அன் இன்ச்’ புத்தகத்தில் எழுதியுள்ளார். அவர் வியட்நாமில் இருந்தபோது, பாகிஸ்தான் ஒரு தாக்குதலுக்கு அணு ஆயுதங்களைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டது என பயந்த இந்தியப் பிரதிநிதி தன்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பியதாகவும் இந்தியாவே அணு ஆயுத மோதலுக்கான தயாரிப்புகள் குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். தான் பாகிஸ்தானின் ‘உண்மையான தலைவர்’ ஜெனரல் பஜ்வாவை தொடர்புகொண்டதாக மைக் பாம்பியோ எழுதியுள்ளார். அவர் அதை மறுத்ததாகவும் ஆனால் இந்தியா அணு ஆயுதங்களை நிலைநிறுத்தத் தயாராகி வருவதாக அஞ்சியதாகவும் மைக் பாம்பியோ குறிப்பிட்டார். அந்தப் பதற்றத்தைக் குறைக்க, ‘பி-ஃபைவ்’ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் அழைத்ததாக முன்னாள் இந்திய தூதர் அஜய் பிசாரியா தனது நூலில் எழுதியுள்ளார். பிரதமர் மோதியுடன் இம்ரான் கான் பேச முயன்றாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானம் தாக்கிய பின்னர், பாகிஸ்தானின் பதிலடியில் இந்திய விமானி பிடிபட்ட பிறகு, “ராஜதந்திரிகளின் பார்வையில், பதற்றம் அதிகரிக்கும் சாத்தியம் குறித்து பாகிஸ்தான் உண்மையில் பயப்படுவதாகத் தோன்றியதாக” பிசாரியா தனது புத்தகத்தில் கூறுகிறார். இதைப் பற்றி பிசாரியா தனது நூலில், “அந்தச் சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் தெஹ்மினா ஜன்ஜூவா மாலை 5:45 மணிக்கு ராணுவத்திடம் இருந்து வந்த செய்தியை விவரிப்பதற்காக உரையாடலை நிறுத்தினார். அந்த செய்தியில் இந்தியா 9 ஏவுகணைகளை ஒரே நாளில் எந்த நேரத்திலும் ஏவக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது. ராஜதந்திரிகள் தங்கள் நாட்டுத் தலைவர்களுக்கு இதைத் தெரிவிக்க வேண்டும் என்றும் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும் இந்தியாவிடம் கேட்டுக்கொள்ள வேண்டுமென தஹ்மினா ஜன்ஜுவா விரும்பினார். இதன் காரணமாக, இஸ்லாமாபாத் மற்றும் புது டெல்லியின் தூதரகங்களில் பரபரப்பு ஏற்பட்டது,” என்று எழுதியுள்ளார். பி-5 ராஜதந்திரி ஒருவரை மேற்கோள் காட்டி, “பாகிஸ்தான் தனது கவலைகளை நேரடியாக இந்தியாவிடம் தெரிவிக்க வேண்டுமென்று அந்த ராஜதந்திரிகளில் ஒருவர் கூறியதாகவும்” அவர் எழுதியுள்ளார். அந்த நேரத்தில் இஸ்லாமாபாத்தில் இருந்த இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் மெஹ்மூத்திடம் இருந்து நள்ளிரவில் தனக்கு அழைப்பு வந்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச விரும்புவதாகவும் பிசாரியா குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,ANI “நான் மூத்த அதிகாரிகளுடன் அதைப் பற்றிப் பேசினேன். அவர்கள் எங்கள் பிரதமர் தற்போது இங்கு இல்லையென பதிலளித்தனர். ஆனால், இம்ரான் கான் ஏதேனும் முக்கியமான செய்தியைத் தெரிவிக்க விரும்பினால், அவர் அதை நிச்சயமாக என்னிடம் கொடுக்கலாம்.” அதன் பிறகு அன்றிரவு தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் பிசாரியா எழுதியுள்ளார். இதற்கிடையில் பதற்றத்தைக் குறைக்கவும் இந்தியாவின் ஆவணத்தைச் செயல்படுத்தவும் தீவிரவாத பிரச்னையைத் தீர்க்கவும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அமெரிக்கா, பிரட்டனின் தூதர்கள் இந்தியாவுக்குத் தெரிவித்தனர். பாகிஸ்தான் பிரதமரே இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் விமானி அபிநந்தன் மறுநாள் இந்தியா திரும்புவார் என்றும் தூதர்கள் இந்தியாவிடம் தெரிவித்தனர். மார்ச் 1ஆம் தேதி, விமானி அபிநந்தன் திரும்புவதற்கான செயல்முறையை இந்தியா இறுதி செய்யத் தொடங்கியது எனக் கூறும் அவர், “அபிநந்தன் திரும்புவது குறித்து ஊடக நாடகத்தை உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் கேட்க முடிவு செய்ததாகவும்” எழுதியுள்ளார். மேலும், “அபிநந்தனை அழைத்து வர இந்திய விமானப்படை விமானத்தை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இருந்தன. ஆனால், பாகிஸ்தான் அனுமதிக்க மறுத்தது. அவர் மாலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இறுதியாக இரவு 9 மணிக்கு விடுவிக்கப்பட்டார்,” என்றும் கூறியுள்ளார். ‘இது இந்தியாவின் இட்டுக்கப்பட்ட கதை’ பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK கடந்த வியாழனன்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜோஹ்ரா பலோச், இந்தப் புத்தகம் பிப்ரவரி 2019 பற்றிய இந்தியாவின் இட்டுக்கட்டப்பட்ட கதையைப் பரப்ப முயல்வதைப் போல் இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது பாகிஸ்தான் பிரதமரின் அழைப்பை இந்தியா ஏற்க மறுத்ததாக அஜய் பிசாரியா கூறியதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டார். மும்தாஜ் ஜோஹ்ரா பலோச், “இந்தியாவிலுள்ள அரசாங்கம் புல்வாமா சம்பவத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியது. இந்தி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதும், இந்திய விமானியை பாகிஸ்தான் கைது செய்ததும் என பாலகோட் இந்தியாவின் ராணுவ தோல்வி என்பது பிசாரியாவுக்கு நன்றாகவே தெரியும். அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்து கொண்டது. ஆனால் ஒரு தூதரக அதிகாரி பலத்தை வெளிப்படுத்துவது பற்றிப் பேசுவது வருந்தத்தக்கது,” என்றார். பிப்ரவரி 28ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தனை மார்ச் 1ஆம் தேதி விடுதலை செய்வதாக அறிவித்தார். அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “இன்று இந்தியா புல்வாமா பற்றி ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், அதற்கு முன்பு அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்,” என்று சபையில் கூறினார். நாம் உறவுகளை மேம்படுத்த முயன்று வருகிறோம் என்றும் அவர் கூறினார். “நேற்றும் நான் மோதியுடன் பேச முயன்றேன். இந்தச் செயலை பலவீனமாகக் கருதக்கூடாது. நீங்கள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நான் இந்தியாவிடம் கூற விரும்புகிறேன். ஏனெனில், இதுபோன்ற சூழ்நிலையில் நாங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c3gyd538d2go
  14. 13 JAN, 2024 | 09:30 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை இன்று சனிக்கிழமை (13) முன்வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீளாய்வு செய்து,சிவில் மற்றும் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் மின்கட்டணம் திருத்தம் தொடர்பான அறிக்கை மின்சார சபையிடம் சமர்ப்பிக்கப்படும் என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைத்துள்ள நிலையில் நீர்மின்னுற்பத்தியின் ஊடாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது. இதற்கமைய மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆனைகுழுவிடம் முன்வைத்துள்ளது.மொத்த மின்கட்டணத்தை 3.34 சதவீதத்தால் குறைக்க மின்சார சபை பரிந்துரைத்துள்ளது. 30 இற்கும் குறைவான மின்னலகினை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மாத கட்டணத்தை 8.3 சதவீதத்தாலும்,120 இற்கும் குறைவான மின்னலகை பாவிக்கும் பாவனையாளர்களின் மின்கட்டணத்தை 05 சதவீதத்தால் குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மின்கட்டண குறைப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகள் நகைப்புக்குரியது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். மின்சார சபை கடந்த ஆண்டு 60 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ள நிலையில் மின்கட்டணத்தை பகுதியளவில் குறைப்பதற்கு பதிலாக ஒற்றை இலக்க சதவீதத்தில் குறைப்பதற்கு பரிந்துரைத்துள்ளமை இந்த ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாக கருத வேண்டும் என்றார். மின்கட்டணம் திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள தரவுகளை பரிசீலனை செய்து எதிர்வரும் மாதளமவில் மின்கட்டணத்தை குறைப்பதற்கு அனுமதி வழங்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது. https://www.virakesari.lk/article/173883
  15. பட மூலாதாரம்,STEPHEN ROSTAIN படக்குறிப்பு, பழங்கால வீடுகளுக்கு அடிப்படையாகக் கருதப்படும் 6,000 மேடுகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 29 நிமிடங்களுக்கு முன்னர் காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு அமேசானில் வாழும் மக்களின் வரலாற்றைப் பற்றிய நமது புரிதலை மாற்றுவதாக அமைந்துள்ளது. கிழக்கு ஈக்வடாரில் உள்ள உபானோ பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பொதுவெளிகள், சாலைகள் மற்றும் கால்வாய்களின் அற்புதமான வலையமைப்பால் இணைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வளமான மண்ணை உருவாக்கிய எரிமலை, இந்தச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம். பெருவில் உள்ள மச்சு பிச்சு போன்ற தென் அமெரிக்காவின் மலைப் பகுதிகளில் உள்ள நகரங்களைப் பற்றி நாம் அறிந்துள்ள நிலையில், அமேசானில் மக்கள் நாடோடிகளாக அல்லது சிறிய குடியிருப்புகளில் மட்டுமே வாழ்கிறார்கள் என்றும் நம்பப்பட்டது. "அமேசானில் எங்களுக்குத் தெரிந்த மற்ற தளங்களைவிட இது பழமையானது. ஐரோப்பியர்களை மையப்படுத்தியே நாகரிகம் பற்றிய பார்வை உள்ளது. ஆனால், கலாசாரம் மற்றும் நாகரிகம் பற்றிய நமது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இது காட்டுகிறது," என்கிறார், பிரான்சில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு இயக்குநரும் ஆராய்ச்சியை வழிநடத்தியவருமான பேராசிரியர் ஸ்டீஃபன் ரோஸ்டைன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 2,500 ஆண்டுகள் பழமையானது "இது அமேசானிய கலாசாரங்களை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது. பெரும்பாலான மக்கள் சிறிய குழுக்களாக, அநேகமாக நிர்வாணமாக, குடிசைகளில் வாழ்ந்திருக்கிறார்கள். இது பழங்கால மக்கள் சிக்கலான நகர்ப்புற சமூகங்களாக வாழ்ந்ததைக் காட்டுகிறது," என்கிறார், இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியர் அன்டோயின் டோரிசன். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த நகரம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. மேலும், இங்கு மக்கள் சுமார் 1,000 ஆண்டுகள் வரை வாழ்ந்தனர். இங்கு எத்தனை பேர் வாழ்ந்தார்கள் என்பதைத் துல்லியமாக மதிப்பிடுவது கடினம். ஆனால், விஞ்ஞானிகள் அது நிச்சயமாக லட்சங்களில் இல்லாவிட்டாலும் 10 ஆயிரங்களில் இருக்கும் என்று கூறுகிறார்கள். அகழ்வாராய்ச்சியாளர்கள் 300 சதுர கி.மீ. (116 சதுர மைல்) பரப்பளவில் அகழ்வாராய்ச்சி மற்றும் விமானத்தின் மூலம் லேசர் சென்சார் எடுத்துச் செல்லப்பட்டு அடர்ந்த செடிகள் மற்றும் மரங்களுக்கு அடியில் இந்த நகரின் எச்சங்களை அடையாளம் கண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த LiDAR தொழில்நுட்பத்தின் மூலம் 20மீ (66 அடி) x 10மீ (33 அடி) மற்றும் 2-3மீ உயரம் கொண்ட 6,000 செவ்வக தளங்கள் கண்டறியப்பட்டன. மூன்று முதல் ஆறு அலகுகள் கொண்ட குழுக்களாக ஒரு மைய மேடையுடன் கூடிய பொதுவெளியைச் சுற்றி அவை அமைந்திருந்தன. இந்தத் தளங்களில் பல வீடுகள் இருந்திருக்கலாம் எனக் கூறும் விஞ்ஞானிகள், சில சடங்கு நோக்கங்களுக்காக இருந்திருக்கலாம் என்கின்றனர். கிழமோப்பேவில் உள்ள ஒரு வளாகம் 140மீ (459 அடி) x 40 மீ (131 அடி) மேடையை உள்ளடக்கியிருந்தது. குன்றுகளை வெட்டி அதன் மேல் மேடை உருவாக்கப்பட்டன. ஈர்க்கக்கூடிய சாலைகள் படக்குறிப்பு, ரேடார் சென்சார்களால் கண்டறியப்பட்ட குடியிருப்புகளின் பரவல் நேரான சாலைகள் மற்றும் பாதைகளின் வலையமைப்பு, 25 கி.மீ. (16 மைல்கள்) வரை நீட்டிக்கப்பட்ட தளம் உட்பட பல தளங்களை இணைக்கிறது. இந்த சாலைகள் ஆராய்ச்சியின் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்று டாக்டர் டோரிசன் கூறினார். "சாலை வலையமைப்பு மிகவும் அதிநவீனமானது. இது ஒரு பரந்த தூரத்திற்கு நீண்டுள்ளது. அனைத்து சாலைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. சரியான கோணங்களில் அமைந்த இந்த சாலைகள் மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளன," என்று அவர் கூறுகிறார். நிலப்பரப்புடன் பொருந்தக்கூடிய ஒன்றைவிட நேரான சாலையை உருவாக்குவது மிகவும் கடினம் என்று அவர் விளக்குகிறார். அங்கு கண்டுபிடிக்கப்பட்டவற்றில் சில "மிக வலுவான அர்த்தம்" கொண்டிருப்பதாக நம்பும் அவர், அவை ஒருவேளை ஏதேனும் சடங்கு அல்லது நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றார். விஞ்ஞானிகள் இருபுறமும் பள்ளங்கள் கொண்ட தரைப்பாதைகளை அடையாளம் கண்டுள்ளனர். அவை இப்பகுதியில் ஏராளமான தண்ணீரை நிர்வகிக்க உதவும் கால்வாய்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். நகரங்களுக்கு அச்சுறுத்தல்களின் அறிகுறிகள் தென்பட்டன. சில பள்ளங்கள் குடியேற்றங்களுக்குள் நுழைவு வாயில்களைத் தடுத்தன. அவை, அருகிலுள்ள மக்களிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்களுக்கான ஆதாரமாக இருக்கலாம். 'சிக்கலான சமூகம்' பட மூலாதாரம்,GETTY IMAGES ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் 1970களில் ஒரு நகரத்தின் ஆதாரங்களைக் கண்டறிந்தனர். ஆனால், 25 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை. மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள நன்கு அறியப்பட்ட மாயன் சமூகங்களைவிட பெரிய, சிக்கலான சமூகத்தை இந்நகரம் வெளிப்படுத்துகிறது. "முற்றிலும் மாறுபட்ட கட்டடக் கலை, நில பயன்பாடு, மட்பாண்டங்களுடன் மாயன் நாகரிகம் போன்ற மற்றொரு நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்," என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியர் ஜோஸ் இரியார்டே கூறுகிறார். சில கண்டுபிடிப்புகள் தென் அமெரிக்காவுக்கு "தனித்துவம் வாய்ந்தவை" என்று அவர் விளக்குகிறார். எண்கோண மற்றும் செவ்வக தளங்கள் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். சமூகங்கள் தெளிவாக ஒழுங்கமைக்கப்பட்டவை, அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. இதற்கு அவர் குடியேற்றங்களுக்கு இடையிலான நீண்ட பள்ளமான சாலைகளை எடுத்துக்காட்டுகிறார். ஆனால், அங்கு வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சமூகம் எப்படி இருந்தது என்பது பற்றிப் பெரிதாகத் தெரியவரவில்லை. மக்கள் என்ன சாப்பிட்டனர்? பட மூலாதாரம்,STEPHEN ROSTAIN படக்குறிப்பு, நடைமேடைகளை இணைக்கும் சாலைகள், பாதைகள் மற்றும் கால்வாய்கள் அமேசானின் ஒரு பெரிய பகுதி பயன்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. மேடைகளில் குழிகளும் அடுப்புகளும் காணப்பட்டன. அத்துடன் ஜாடிகள், செடிகளை அரைக்க கற்கள் மற்றும் எரிந்த விதைகள் காணப்பட்டன. அங்கு வாழும் கிலாமோபே மற்றும் உபனோ மக்கள் பெரும்பாலும் விவசாயத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம். மக்கள் மக்காச்சோளம் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கை சாப்பிட்டனர். மேலும் "சிச்சா" என்ற இனிப்பு பீர் வகையை குடித்திருக்கலாம். ஆரம்பத்தில் இந்த ஆராய்ச்சிக்கு எதிராக தான் எச்சரிக்கப்பட்டதாகக் கூறும் பேராசிரியர் ரோஸ்டைன், அமேசானில் எந்த பழங்கால குழுக்களும் வசிக்கவில்லை என விஞ்ஞானிகள் நம்பியதாகத் தெரிவித்தார். "ஆனால் நான் எப்படியாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தேன். இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என நான் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறுகிறார். இப்பகுதிக்கு அருகிலுள்ள, ஆய்வு செய்யப்படாத 300 சதுர கி.மீ. (116 சதுர மைல்) பகுதியில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஆராய்ச்சியாளர்களின் அடுத்தகட்டமாக உள்ளது. https://www.bbc.com/tamil/articles/cw4emv8mgnpo
  16. 14 JAN, 2024 | 06:42 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளதுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிரக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன் போதே உத்தேச தேசிய தேர்தல்களுக்கான கால அட்டவணையை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் வஜிர அபேவர்தன, ருவான் விஜேவர்தன, ரவி கருணாநாயக்க, மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ, கித்சிறி மஞ்சநாயக்க மற்றும் தினொக் கொலம்பகே உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடம் என்பதை அனைவரும் அறிவார். ஏனெனில் ஏற்கனவே நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளேன். இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாராளுமன்றம் தேர்தல் நடாத்தப்படும். அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் அனைத்து மாகாணங்களுக்குமான மாகா சபை தேர்தல் நடைப்பெறும். தேர்தல்கள் குறித்த முறையான தகவல்களை மக்கள் மையப்படுத்துங்கள். எவ்விதத்திலும் தவறான கருத்துக்கள் மக்களை சென்றடைய கூடாது. தேர்தல்கள் குறித்த தகவல்களை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கும் கொண்டு செல்லும் பொறுப்பை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கின்றேன் என கூறினார். இதனை தொடர்ந்து இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் பரந்துப்பட்ட கூட்டணிக்கான தீர்மானம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்தும் தீர்மானம் ஆகியவை முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு அங்கிகாரம் அளித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பிகாரம் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிரங்க உள்ளார். அதே போன்று உத்தேச அரசியல் கூட்டணிக்கான சின்னம் மற்றும் பெயர் ஆகிய விடயங்களில் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புக்கள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/173898
  17. அரகலய : ஒரு வருடம் கழிந்த நிலையில் - பகுதி II Published By: VISHNU 11 JAN, 2024 | 01:40 PM சத்திய மூர்த்தி கோட்டாகோகமவில் பல மாலை நேரப் பேச்சாளர்கள் கோட்டா தலைமைத்துவமும் அரசாங்கமும் வெளியேற வேண்டும் என்ற உடனடித் தேவைகளைத் தவிர வேறு எதனையும் பேசவில்லை. அவர்களில் புத்திக்கூர்மையானவர்கள் ஏற்கனவே போராட்டத் தளத்தின் ஓரங்களில் தங்களுக்குள் கோத்தா வெளியேறிய பிறகு கிடைக்கக்கூடிய மாற்று வழி தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்ததுடன், அவர்கள் தீர்மானிப்பதும் உடனடியாக, சுயமாக மக்கள் எதிர்ப்பின் அழுத்தத்தின் கீழ் ஏற்பட உள்ளதாகும். ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டால், கோட்டா ஜனாதிபதி பதவியின் எஞ்சிய காலத்தை நிறைவு செய்வதற்கு பாராளுமன்றம் யாரையாவது தெரிவு செய்வதற்கு பிரதமர் முன்வருவார் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, பிரதமர் மஹிந்தவை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோட்டாவின் கோரிக்கையை அவர்கள் மனதார வரவேற்றனர். அவர்களின் பார்வையில், பதவியில் இருந்த கோட்டா செய்தது போல், அவர் ஒரு "மக்கள் சதி"யில் இருந்து தப்பிக்க முடியும் என அவர்கள் நம்பாததால், அது தேசத்திற்கு ஒரு நல்ல நகர்வாக இருந்தது. அவர்களின் கணக்கிடுகையில், முதலில் அவர்கள் மஹிந்தவின் இடத்தில் ஒரு "நல்ல / சிறந்த" பிரதமரைப் பெறுவார்கள், பின்னர் பாராளுமன்றம் அவரை முறையாகத் தேர்ந்தெடுத்தவுடன் அவர் வெளியேறும் ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கு முதலில் தற்காலிகமாகவும் பின்னர் நிரந்தரமாகவும் கோட்டாவின் இடத்தை பிரதியீடு செய்வார், அல்லது அவர்கள் அவ்வாறே நம்பினார்கள். SJB அல்லது எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச என்பது அவர்களின் இயல்பான தேர்வாகும். நிர்வாகம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார முகாமைத்துவம் (விலை, கட்டணங்கள் மற்றும் வரி உயர்வு போன்றவை) ஆகியவற்றின் தற்போதைய தேக்கநிலைக்கு சஜித்தின் தயக்கமே முக்கியக் காரணம் என்று தொடர்ந்து விமர்சனங்கள் இருந்த போதிலும், அவர் தனது கணக்கீடுகளைச் சரியாக மேற்கொண்டதாகத் தெரிகிறது. சுற்றயலில் இருந்து கனவு காண்பவர்களைப் போலல்லாமல், அந்த இடத்தின் மீதும் அந்த இடத்திலும் இருப்பவர், பிரதமராக இருந்தாலும் சரி, அதற்கும் மேலாக ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற பெரும்பான்மையை தன்னால் திரட்ட முடியாது என்பதை அறிந்திருந்தார். நாட்டை ஆளும் நோக்கத்திற்காக அல்ல, ஒரு வழி அல்லது வேறு. ஓராண்டுக்கு மேலாகியும், ஒரு காலத்தில் தேசிய அரசியலின் தந்திரக்கார நரியாக இருந்த தனது மறைந்த உறவினரான ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்குப் பிறகு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், ஒரு காலத்தில் வேறு பெயரில் ஐ.தே.க முத்திரையின் கீழ் இருந்த எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி கூட்டணியை பிளவுபடுத்த முடியவில்லை. தனிப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ராஜபக்ச (வாசிக்க: மஹிந்த) தலைமைத்துவத்திற்கு மோசமான மதிப்பெண் இருந்தபோதிலும், "ஆளும்" SLPP கூட்டணியை அவரால் பிரிக்க முடியுமா என்ற வினா பலமாக இருந்தாலும், அது எழவில்லை. முடிவில், அரகலய எதிர்ப்பாளர்களின் நோக்கமும் இலக்கும் தலைமைத்துவ மாற்றமா? ஆம் மற்றும் இல்லை. அந்த நேரத்தில் கூட, கோட்டாகோகம மைதானத்தில் வெகுசனங்களுடன் திறம்பட கலந்திருந்த ஜே.வி.பி தலைமையும் அங்கத்தவர்களும் "தலைமைத்துவ மாற்றம்" அல்லது அதேயளவு நம்பிக்கையுடன் குறைந்தபட்சம் "அமைப்பு மாற்றத்தை" விரும்பினர். அதிலும், கடந்த தசாப்தத்தில் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த பிரிவான, அதிகம் அறியப்படாததும் விரைவில் மறக்கப்படக் கூடியதுமான முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP), ஒரு காலத்தில் போராளியாக இருந்த பிரேம்குமார் குணரட்னத்துடன், இதன் தலைவரான அவுஸ்திரேலிய பிரஜையான நோயல் முதலிகே என்ற சந்தேகப் பெயருடன் ஸ்தாபிக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் மாணவர் மற்றும் ஆசிரியர் பிரிவு அனைத்தையும் FSP தன்னால் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று அதிகமாக கூறினாலும், அவர்களின் பலம் உணவு மற்றும் எரிபொருளைக் கோரி, கொழும்பில் நடந்த பன்முகப்படுத்தப்பட்ட அரகலய வீதிப் போராட்டங்களில், எதுவித அதிகாரமும் உரிமையும் இல்லாமல் வெளிப்பட்டதுடன், கோட்டகோகம கிராம கைகலப்பில் மட்டும் இணைந்தது. அப்படியானால், அனைத்து வன்முறை மற்றும் தீக்குளிப்புகளுக்குப் பின்னால் யார் இருந்தனர்? சரத் வீரசேகர இனவாதமாக தமிழர்களை அடிக்கடி நியாயப்படுத்த முடியாத வகையில் இலக்கு வைத்து கூறும் பலவற்றை நீங்கள் ஏற்காமல் இருக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அரகலய வன்முறை பற்றிய அவரது வினாக்களுக்கு, தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பின் பாரிய நலன் அடிப்படையில் ஊக்குவிப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பதில்கள் அவசியமாகும். "சமூகப் புரட்சி" தளத்தில், வாக்குப்பெட்டி மூலமாக சட்டப்பூர்வமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஜே.வி.பி.க்கு ஒரு விடயமாகும். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து போட்டியிடுவதன் மூலம் கட்சி அதைத்தான் செய்து வருகிறது. சில முகம் தெரியாத தலைவர் அல்லது தலைவர்கள் ஒரு "நகர்ப்புற கிளர்ச்சியை" உருவாக்க முயற்சிப்பதும் அதைவிட மோசமானதுடன், கடந்த ஆண்டு இடம்பெற்ற மே 9 தீவைப்பு மற்றும் பிற விடயங்கள் அவ்வாறு தோற்றமளிக்கத் தொடங்கியது. ஜே.வி.பி., ஜனநாயக முன்னெடுப்புகளுக்கானது என்று தொடர்ந்து சுட்டிக்காட்டும் போது, அதுவே இலக்காக இருந்தால் "சமூகப் புரட்சி"க்கான அவர்களின் அழைப்பும் தோட்டா மூலம் அல்லாது வாக்குச் சீட்டில் இருந்து பாய வேண்டும், வேறு எந்த சக்தி அதை வேறு வழியில் விரும்பியது. அரசாங்கம் தனது கட்டளையின் பேரில் பரந்த மற்றும் ஆழமான புலனாய்வு இயந்திரத்தின் மூலம் முதலில் கண்டறிந்து, அடுத்ததாக தேசத்தை நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாத வரை, யாரையும் குறிப்பிடுவது முறையற்றதுடன் சாத்தியமற்றதாகும். சில மாதங்களுக்கு முன், ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க அமைச்சர்கள், நவம்பர் மாதம் நடந்த வன்முறைக் கிளர்ச்சி குறித்த உளவுத்துறைத் தகவல் தங்களிடம் இருப்பதாகவும், அதற்காக சதி-அமைப்பாளர்கள் பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்தியதாகவும் பதிவு செய்தனர். அரசாங்கம் குறிப்பிட்ட காலக்கெடு வந்தது, ஆனால் அதுபோன்ற குறிப்பிடப்பட்ட செயற்பாடு எதுவும் இருக்கவில்லை. எண்பதுகளின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் நகர்ப்புறக் கிளர்ச்சியில் இத்தகைய முயற்சிகளை முறியடித்ததற்காக நீங்கள் உளவுத்துறை பொறிமுறைக்கு நன்றி கூறுவதுடன், நீங்கள் குறைந்தபட்சம் இப்போதைக்கு கட்சியின் ஈடுபாட்டையும் தவிர்க்க முடியும். FSP க்கு அதற்கான உள்நோக்கமும் பொறிமுறையும் இருக்கிறதா அல்லது மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் வேறு கூறுகள் தங்களின் நேரம் நன்றாக இருக்கும்போது தாக்குவதற்காக இறக்கைகளில் காத்திருக்கின்றனவா? என்பதுதான் வினாவாகும். கோட்பாட்டளவில், அவர்கள் சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதிகள் உட்பட தீவிர வலதுசாரிகளாக இருக்கலாம். குறைந்த பட்சம், LTTE யின் மறுமலர்ச்சி அல்லது புதிய தமிழ் போராளிக் குழுக்களின் நுழைவு பற்றி யாரும் பேசவில்லை, அவை கிளர்ச்சி செயன்முறையில் குறைவாகவும், அதிகளவில் பயங்கரவாத அமைப்புகளாகவும் செயற்படுகின்றன. தொண்ணூறுகளில் யாழ்ப்பாண நகரப் பகுதியில் LTTE அதைத்தான் முயற்சித்து, பிரதேசத்தையும் நகர்ப்புற-பணயக் கைதிகளையும் நீண்டகாலமாக வைத்திருக்க தவறிய போதிலும், நகர்ப்புற கொரில்லாக்களிடமிருந்து அவர்களின் நோக்கங்களும் முறைகளும் எப்படி, ஏன் முற்றிலும் வேறுபட்டவை என்பதை வல்லுநர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். LTTE க்குப் பின்னரான பகுப்பாய்வுகள், எந்தவொரு சர்வதேச அங்கீகாரமும் இல்லாமல் பிரதேசத்தை வைத்திருப்பதும், நிர்வாக அமைப்பை நடாத்த விரும்புவதும் அதன் ஆரம்பகாலத் தோல்விகளில் ஒன்றென்பதுடன், இது இறுதியில் அதன் முடிவைத் தேடியது என வெளிப்படுத்துகின்றன. அப்படியானால், யார் அதனை செய்தார்கள், ஏன்? இது பரந்த அர்த்தமும் தலைப்பும் கொடுக்கப்பட்ட "ஆட்சி மாற்றத்திற்கான" ஒரு பாரிய திட்டமாக இருந்ததா, அது முந்தையதை விடவும் பிந்தையதை விட அதிகமாகவும் விரும்பும் உள்ளூர் நலன்களை ஈர்க்க மட்டுமே இருந்ததா? அப்படியானால், இது வேறு ஒரு பெயரில், அதிகமான உள்ளூர் அரசியல் மற்றும் மக்கள் கண்ணுக்குத் தெரியாத (வெளிநாட்டு?) கைகளால் இயக்கப்பட்ட வேறு வடிவத்திலான, "ஆட்சி மாற்றம்" மட்டும்தானா? 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியது போல், மாறாக கௌரவமாக? அப்படியானால், வரவிருக்கும் "அமைப்பு-மாற்றம்" பற்றிய இந்த விரிவான திட்டங்கள் மற்றும் கிசுகிசுப்பான பிரச்சாரம் ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக, கோட்டாகோகம மைதானத்தில் கூடியிருந்த, ஆனால் சோர்வாக இருந்த திரளான மக்கள் கரகோசத்துடன் அல்லது மகிழ்ச்சியாக, கோட்டாபய நாட்டை விட்டு (தாய்லாந்து செல்லும் வழியில் மாலைத்தீவுக்கு) வெளியேறினார் என்ற நிமிடச் செய்தி தெரிய வந்ததும் பரவலடைந்து செல்ல ஆரம்பித்தனர். அப்போது, அவர்கள் திடீரென்று தோன்றியதால், போராட்டத் தளத்தில் இருக்கத் தீர்மானித்த அமைப்பு மாற்றகாரர்களும், பாதுகாப்புப் படையினரின் அனுதாபமற்ற சில தூண்டுதலுக்குப் பிறகு, சென்று விட்டனர். அரகலய வென்றது, ஆனால் அது வெல்லவும் இல்லை. இது நம்மை விக்கிரமசிங்கவின் ஜனாதிபதிப் பதவி விடை காண்பதாக உறுதியளித்த கடைசி வினாவிற்கு அழைத்துச் செல்கிறது. அவரது குடும்ப வீட்டை தீக்கிரையாக்கியது உட்பட, பல தீவைப்பு சம்பவங்கள் தொடர்பான முழு அளவிலான விசாரணைகளுக்கு உத்தரவிடுவதன் மூலம், ஜனாதிபதி சில வட்டாரங்களில் சில நம்பிக்கைகளையும், மற்றவர்களுக்கு சாத்தியமான வெளிப்பாடுகள் பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்தினார். அரசாங்கத்தின் வாக்குறுதி மற்றும் அத்தகைய விசாரணைகளின் ஆரம்ப முன்னேற்றத்தைத் தொடர்ந்து, SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கோரி நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர், அரகலய போராட்டங்கள் வன்முறையாக மாற ஆரம்பிக்கும் போது, மேலிருந்து கீழாக, மோசமான கீழ்ப்படியாமையின் மீதுள்ள கட்டளை தோல்வி பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆயுதப்படைகளின் சிரேஷ்ட தலைவர்களின் மூவரை கொண்ட குழுவின் அறிக்கையும் சமமாக மறக்கப்பட்டு உள்ளது. இந்த கண்டறிவு தீவைப்புச் சம்பவங்களில் சிலவற்றைத் தணிக்குமாறு பொலிசாரால் கோரப்படும்போது, உள்ளூர் களக் குழுக்களின் விருப்பமின்மையை ஓரளவுக்கு விளக்கலாம். தீவைக்கப்பட்ட இடங்களில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் முடக்கப்பட்ட இருப்பினும் தாமதமான செய்தி அறிக்கைகள் கூட, பதவியில் உள்ள அமைச்சர்களின் வீடுகளுக்கு வெகு தொலைவில் அல்லாத இடங்களில் நிலை கொண்டிருந்த இராணுவப் பிரிவுகள் சொத்துக்கள் தீயிடப்படும் போது குடும்ப உறுப்பினர்களோ அல்லது ஏன் உள்ளூர் பொலிசார் கேட்ட போது கூட குறுக்கிட மறுத்துவிட்டதுடன், குற்றவாளிகள் தங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு தங்களுடைய செயலைச் செய்தனர். இங்கிருந்து எங்கே? இவை அனைத்தும் பல வினாக்களை எழுப்புகின்றன. அரகலய போராட்டத்தின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகள் மற்றும் அது எடுத்த அல்லது எடுக்கப்பட்டதாகக் காணப்பட்ட வடிவம் போன்றவற்றை ஆராய்வதற்கு ஜனாதிபதி / பாராளுமன்றம் ஏன் ஒரு ஆணைக்குழுவை நியமிக்கவில்லை? 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக குறைந்தது இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்ற விசாரணைகள் இடம்பெற்றன (தற்போதைய ஜனாதிபதி ரணில் குறைந்த மக்கள் ஆதரவுள்ள அதிகமாக தலையிடுகின்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் கீழ் சக்திவாய்ந்த பிரதமராக இருந்த போது சட்டமன்றம் நிறைவேற்று அதிகாரத்தை நம்பாதது போல்? ஏன், சிறிசேனா மற்றும் அவரது உயர்மட்ட உதவியாளர்கள் மீது கோவையிடப்படாத சித்திரவதை சட்டங்களின் கீழ் சட்டப்பூர்வ மற்றும் நிதியியல் பொறுப்புக்கூறலை நிர்ணயிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூட இப்போது உள்ளது.) நேர்மையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை அப்போது ஆட்சியிலிருந்த , இன்னமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை சீர்குலைக்கும் இயலளவுடைய ராஜபக்ஷக்களின் குற்றத்தை அம்பலப்படுத்தக்கூடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறதா / பயப்படுகிறதா? அல்லது, இவ்வாறான விசாரணைகள் அனைத்தையும் தாண்டி, முன்னாள் ஆளும் முன்னணி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கும் ஒரு வெளிநாட்டுக் சக்தி / சக்திகளை "அம்பலப்படுத்த" போகின்றதா? அப்போதைய பாதுகாப்புப் படைகளின் பிரதானியான (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா, அச் சந்தர்ப்பத்தில் செயற்படவில்லை என்பது மட்டுமல்லாமல், பாதுகாப்புச் செயலாளரும், ஒரு காலத்தில் சக ஊழியருமான ஜெனரல் கமல் குணரத்ன, மேலும் ஆயுதப் படைகளின் அதிஉச்ச தளபதியாக இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்தி அல்லது புறக்கணித்துவிட்டார் என்ற மூன்று உறுப்பினர்களைக் கொண்ட படைத்தரப்பின் விசாரணை தொடர்பாக புலனாகும் நடவடிக்கை ஏன் இல்லை? அல்லது அது இந்த விடயத்தில் வரையறுக்கப்பட்ட நிர்வாக அதிகாரங்கள் உள்ள சம்பிரதாயப் பதவி மாத்திரமா? தேசிய பத்திரிக்கையின் ஒரு பிரிவினால் "தேர்ந்தெடுக்கப்பட்ட" அறிக்கையை விட ஜெனரல் சில்வா வேறொரு பதிப்பை வழங்குகிறாரா? தற்போதைய ஜனாதிபதி விக்கிரமசிங்க உட்பட அரசியல்வாதிகளின் சொத்துக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தொடர் தீவைப்பு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் பல விசாரணைகளுக்கு என்ன நடந்தது? விக்கிரமசிங்க வீட்டின் மீதான தீவைப்புத் தாக்குதலுக்கு தலைமை தாங்கியதற்காக/பங்கேற்றதற்காக ஒரு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை, நீதிமன்றங்கள் அவருக்கு பிணை வழங்கும் வரையில் (அவர் மீது வேறு வழக்குகளும் இருந்தன) அரசாங்கம் தடுத்து வைத்துள்ள போது, ஏன் அந்த வழக்குகளில் ஒன்று நீதித்துறையின் மனநிலையையும் செயன்முறையையும் சோதிப்பதற்காக ஆவது நீதிமன்றங்களுக்கு, எடுக்கப்படவில்லை?. முன்னர் அறியப்படாத அரகலயா வகையின் வெகுஜன இயக்கங்களுக்கு மத்தியில் குற்றவியல் தவறை சரிசெய்வதில் குறைந்தளவு முக்கியத்துவமாக உள்ளதா? இந்த வினாக்களுக்கான பதில்கள், அரகலய ஆட்சி மாற்றத்திற்கான ஓர் அப்பாவி இயக்கம் மட்டுமே வேறு ஒன்றுமல்ல, ஓர் அமைப்பு மூலமான ஒரு "சமூகத் தீர்மானத்தை" தூண்டுவதற்கான அல்லது அமைப்பு-மாற்றம் மூலமாக "சமூகப் புரட்சியை" வசதிப்படுத்துகின்ற கருத்தியல் முன்முயற்சியா அல்லது அதனுள் அறியப்படாத பல விடயங்கள் உள்ளனவா? ஆகியவற்றில் எதைப் பற்றியது என்பது தொடர்பான அறிவை வழங்குவதாக இருக்க வேண்டும். ஆயுதப் படைகளில் இருந்து வெளியேறுவது அதிகரித்து வருவதாகவும், தப்பியோடியவர்கள் குற்றவாளி குழுக்களில் சேர்வது அல்லது அவற்றை உருவாக்குவது குறித்த கரிசனங்கள் மற்றும் துப்பாக்கிகளை வாடகைக்கு எடுப்பதை அவர்கள் செய்வது போல் வருகின்ற செய்திகளுக்கு மத்தியில், வெளிப்படையானதை விட அதிகமாக அடையாளப்படுத்தக்கூடிய இந்த பல சமிக்ஞைகளில் எதையும் தேசம் புறக்கணிக்கவோ அல்லது ஓரம்தள்ளவோ முடியாது. "ஆளும்" SLPP இன் அதிருப்தி உறுப்பினரான கடந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும, கடந்த இரண்டு ஆண்டுகளில் முப்படைகளிலிருந்தும் 27,000 இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர் என்று சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது "ஆபத்துகளை" ஏற்படுத்தினால், இப்போது பல வாரங்களாக பதவிகளில் CDS இல்லை, இது ஒட்டுமொத்த இராணுவ நிர்வாகத்திலும் ஒரு பரந்த இடைவெளியை விட்டுச்செல்கிறது. வெளிப்படையான சாத்தியக்கூறு என்னவென்றால், அரசியல்-உந்துதல் கொண்ட இலக்கு-நடைமுறைகளைத் தவிர பணத்திற்கான-கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு அப்பால், இந்த தப்பியோடியவர்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இயல்பில் தங்களது சேவைகளை வழங்குவதில் உண்மையான ஆபத்து உள்ளது. இனப் போரின் முடிவிலும் அதற்கு அப்பாலும், சில மேற்கத்திய நாடுகள் உடனடியாக பல படைப்பிரிவுகளை குறைக்க அல்லது கலைக்க சிபாரிசு செய்தபோது, அது இலங்கைக்கு “உயர்வாக பத்திரப்படுத்தப்பட்ட தேசம்" என்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. நிச்சயமாக, அந்த ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நாடு என்ன செய்ய முடியும் என்பதற்கு மேற்கு நாடுகளிடம் பதில் இல்லை. தலைநகர் கொழும்பில் ஆரம்பித்து நகர்ப்புற புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தல் போன்ற குடியியல் செயற்திட்டங்களில் அவர்களின் சேவைகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும், போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாவின் முடிவு அவர்களை கவர்வதற்கு தவறிவிட்டது. நிச்சயமாக, அந்த உத்தரவுகளை சவாலுக்குட்படுத்தாத படையினர், விடுதலைப்புலிகளை ஒழிப்பதற்கான தேசிய நோக்கத்திற்காக கையெழுத்திடவில்லை என்பதில் தெளிவாக இருந்ததுடன், நகரின் சாக்கடைகளை நிர்மாணித்து சரிசெய்வதில் நிறைவாக இணைந்தனர். 2010ஆம் ஆண்டு போருக்குப் பின்னரான ஜனாதிபதித் தேர்தலில், படையினரின் ஒருகாலத்தில் தலைவராக இருந்தவரான, “பீல்ட் மார்ஷல்” சரத் பொன்சேகா மற்றவருக்கு சவால் விடுத்தபோது, இலகுவாக வெற்றிபெற்ற அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவுக்கு அந்த வாக்குகள் 2015 இல் கிடைக்கவில்லை. 2010 இல் மஹிந்த வெற்றி பெற்றார், 2015 இல் தோல்வியடைந்தார். ஜனாதிபதிக்கும் அரசியலமைப்புச் சபைக்கும் (CC) இடையே நடந்து கொண்டிருந்த பல்நிலையான, பல் அடுக்கான கடுமையான போருடன் ஒப்பிடும் போது, உள்ளக, வெளியக அல்லது இரண்டாக இருந்தாலும், பாதுகாப்புப் துறையில் முதற் தடவையாக நாட்டின் உயர்நிலை பொலிஸ் அதிகாரியான பொலிஸ்மா அதிபர் (IGP)க்கு மீண்டும் மீண்டும் நீட்டிப்பு வழங்கப்பட்டதும் தவிர்க்க முடியாத வகையில் அவருக்கு பதிலாக "பதில் பொலிஸ்மா அதிபர்" நியமிக்கப்பட்டதாக பாராளுமன்றுக்கு அறிக்கை இடப்பட்டமை, ஓர் சிறிய சமரசமாக இருக்கலாம். இவை அனைத்திற்கும் இடையே இறுதியான வினாவான, அரகலய ஒரு தவறான நிர்வாகத்தால் துளிர்விட்ட புரட்சியா, அல்லது ஒரு சீர்குலைந்த பாதுகாப்பு நிர்வாகமா, ஆனால் வெளிப்படுத்தப்படாத அளவிற்கு தெளிவற்ற இலக்குகள் மற்றும் வாக்குறுதிகள் எதுவாக இருந்தாலும் சரி, எதற்காக வெகுசனப் போராட்டம் அது அங்கிருந்து அடைய வேண்டியதை அடையவில்லை? என்பதற்கான பதிலில் தங்கியிருக்கின்றது. இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. https://www.virakesari.lk/article/173671
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிராண்டன் லைவ்சே பதவி, பிபிசி நியூஸ் 15 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபரில் பெரு நாட்டின் தலைநகர் லிமா விமான நிலையத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு 'ஏலியன் மம்மிகள்' மனிதனால் உருவாக்கப்பட்டவை என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். லிமாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெருவின் கலாச்சார அமைச்சகம் இந்த மம்மிகள் மனித உருவ பொம்மைகள் என்று கூறியது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று டிஎன்ஏ சோதனை முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பெருவின் நாஸ்கா பகுதியில் காணப்படும் மற்றொரு 'மூன்று விரல் கை'யையும் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். நிபுணர்களைப் பொறுத்தவரை, அந்த உயிரினத்திற்கும் வேற்றுகிரகவாசிகளுடன் எந்த தொடர்பும் இல்லை. பெருவின் சட்ட மருத்துவம் மற்றும் தடயவியல் அறிவியல் கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர் ஃபிளேவியோ எஸ்ட்ராடா, "அவை வேறொரு உலகத்தைச் சேர்ந்தவை அல்ல. பூமியின் விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட பொம்மைகள், நவீன செயற்கை பசையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை வேற்றுகிரகவாசிகள் என்று நம்பப்படுகிறது. ஆனால், அது முற்றிலும் புனையப்பட்டது,"என்றார். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, லிமா விமான நிலையத்தில் அமைந்துள்ள டிஹச்எல்(DHL) என்ற கூரியர் நிறுவனத்தின் அலுவலகத்தில் அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு மம்மிகளும் கண்டெடுக்கப்பட்டன. அவை ஏலியன் மம்மிகளாக இருக்கலாம் என்று பல ஊடக நிறுவனங்கள் ஊகித்தன. கடந்த ஆண்டு செப்டம்பரில், மெக்சிகோ நாடாளுமன்றத்தில் நீண்ட தலைகள் மற்றும் மூன்று விரல்களைக் கொண்ட இரண்டு சிறிய மம்மிகள் ஏலியன்களின் உடல்களா இல்லையா என்பது குறித்து விவாதம் நடந்தது. ஆனால் பெரும்பாலான வல்லுநர்கள் அன்னியக் கோட்பாட்டை நிராகரித்துள்ளனர். இதுகுறித்து நாசாவும் ஒரு அறிக்கையை அப்போது வெளியிட்டிருந்தது. என்ன சொன்னது நாசா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாசா நிர்வாகி பில் நெல்சன், அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அதன் தரவுகளும் வெளிப்படைத்தன்மையோடு மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாகக் கூறினார் இது வரையில் தென்பட்ட நூற்றுக்கணக்கான யுஎப்ஒ-க்களை ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, இந்த விவரிக்கப்படாத நிகழ்வுகளுக்கு பின்னால் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது. ஆனால், அப்படி வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. உண்மையை சொல்லப்போனால் நீண்டகாலமாக எதிர்பார்கப்பட்ட இந்த நாசாவின் அறிக்கை எந்த உறுதியான ஆதாரத்தையும் அளிக்கவில்லை. ஆனால், இந்த அறிக்கையில் யுஏபி எனப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை எப்படி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டும், செயற்கை நுண்ணறிவைக் கொண்டும் நாசா ஆய்வுக்கு உட்படுத்துகிறது என விவரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய நாசா நிர்வாகி பில் நெல்சன், அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அதன் தரவுகளும் வெளிப்படைத்தன்மையோடு மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாகக் கூறினார். நாசாவின் அந்த 36 பக்கங்கள் கொண்ட அறிக்கை மிகவும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியிலான தன்மையில் இருப்பதால், அதில் முக்கியமாகக் கூறப்பட்டுள்ளவை இங்கே உள்ளன. பட மூலாதாரம்,US NAVY படக்குறிப்பு, கேமராவில் பதிவானவை வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா ? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரிய குடும்பத்தில் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் உயிரினங்கள் இருப்பதாக நாசா முடிவு செய்யவில்லை நாசாவின் அறிக்கையின் கடைசிப் பக்கத்தில், நூற்றுக்கணக்கான யுஏபி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கான எந்த காரணமும், ஆதரமும் இல்லை என்று கூறியுள்ளது. "இருப்பினும், அந்த பொருட்கள் இங்கு வருவதற்கு நமது சூரிய குடும்பத்தின் வழியாக பயணித்திருக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறுயுள்ளது. சூரிய குடும்பத்தில் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் உயிரினங்கள் இருப்பதாக நாசா முடிவு செய்யவில்லை, இருப்பினும், புவி வளிமண்டலத்தில் அறியப்படாத வேற்றுகிரக தொழில்நுட்பத்தின் சாத்தியம் உள்ளது என்றும் கூறியுள்ளது. ஏலியன்ஸ் குறித்த ஆய்வுக்கு தரவுகள் உண்டா ? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதுவரை நாம் பார்த்திடாத ஒரு மிகப்பெரிய மர்மங்களில் இந்த யுஏபி ஒன்று நாசாவின் அறிவியல் இயக்க இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா பாக்ஸ் கூறுகையில், “இதுவரை நாம் பார்த்திடாத ஒரு மிகப்பெரிய மர்மங்களில் இந்த யுஏபி ஒன்று. இதற்கு காரணம், நம்மிடம் அவை தொடர்பாக எந்த ஒரு தரவுகளும் இல்லை,” என்றார். அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் பலவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டு வந்தாலும், அவை குறித்து போதுமான தரவுகள் நம்மிடம் இல்லை என்கிறார் பாக்ஸ். "யுஏபி.யின் தன்மை மற்றும் அவற்றின் தோற்றம் குறித்து உறுதியான அறிவியல் ரீதியிலான முடிவுகளை எடுக்க நம்மிடம் போதுமான தரவுகள் இல்லை,” என்றார் பாக்ஸ் இதுபோன்று அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளின் எதிர்கால தரவுகளை மதிப்பிடுவதற்கும், ஒரு வலுவான தரவுத்தளத்தை நிறுவுவதற்கும் இந்த புதிய இயக்குநரை நியமித்துள்ளதாக பாக்ஸ் கூறினார். மெக்ஸிகோவில் இருந்து வைரலான 'ஏலியன்' புகைப்படங்கள் உண்மையா ? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுஎஃப்ஒ நிபுணரான ஜெய்ம் மவுசன், இரண்டு பழைய "மனிதர் அல்லாத" அன்னியர்களின் சடலங்களை அவர் ஆய்வுக்கு கொண்டு வந்தார். மெக்சிகோ அதிகாரிகளால் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த வேற்று கிரகவாசிகளின் புகைப்படங்கள் குறித்து பிபிசி செய்தியாளர் சாம் கம்பரால் நாசா அதிகாரிகளிடம் கேட்டார். யுஎஃப்ஒ நிபுணரான ஜெய்ம் மவுசன், இரண்டு பழைய "மனிதர் அல்லாத" அந்நியர்களின் சடலங்களை அவர் ஆய்வுக்கு கொண்டு வந்தார். 2017 ஆம் ஆண்டில் பெருவின் குஸ்கோ பகுதியில் அந்த மனிதர் அல்லாத சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ரேடியோகார்பன் சோதனையில் 1,800 ஆண்டுகள் பழமையான பொருள்கள் அவை என்றும் அவர் கூறினார். இந்த மாதிரிகளின் நம்பகத்தன்மை அறிவியல் வட்டாரங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு முறை மௌசானே வேற்று கிரகவாசிகள் மற்றும் அவர்கள் வாழ்க்கை குறித்த நம்பிக்கைகளை நிராகரித்திருந்தார். நாசா விஞ்ஞானி டேவிட் ஸ்பெர்கெல் பிபிசியிடம் பேசுகையில், “உலக அறிவியல் சமூகத்திற்கு இந்த மாதிரிகளை ஆய்வுக்காக கிடைக்கச் செய்யுங்கள, அங்கே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்," என்றார். விஞ்ஞானிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் ! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாசாவின் ஆராய்ச்சிக்கான உதவி நிர்வாகியும் விஞ்ஞானியுமான டேனியல் எவன்ஸ், ஆராய்ச்சி குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார். யுஏபி ஆராய்ச்சிக்காக நாசா சார்பில் புதிய இயக்குனர் இருப்பார், ஆனால், அவரின் அடையாளம் தற்போதைக்கு வெளியிடப்படாது. யுஏபி ஆராய்ச்சியில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என நாசா அறிவித்திருந்தபோதிலும், புதிய இயக்குனர் பற்றிய விவரங்கள், அவருக்கு எவ்வளவு மாதச் சம்பளம், அவர் என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார் போன்ற தகவல்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடந்த கூட்டத்தில் பகிரப்படவில்லை. புதிய இயக்குநரை வெளியில் இருந்து வரும் அழுத்தங்கள் மற்றும் இடையூறுகளில் இருந்து பாதுகாக்க இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாசாவின் ஆராய்ச்சிக்கான உதவி நிர்வாகியும் விஞ்ஞானியுமான டேனியல் எவன்ஸ், ஆராய்ச்சி குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார். புதிய இயக்குநரின் பெயரை வெளியிடாததற்கு நாசா குழுவின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக கருதுவதும் ஒரு காரணம் என்று அவர் கூறினார். AI கருவிகளைப் பயன்படுத்த நாசா பரிந்துரைக்கிறது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவின் துணை மிகவும் அத்தியாவசியனது நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவின் துணை மிகவும் அத்தியாவசியனது என அந்த அறிக்கை கூறுகிறது. ஏனெனில், யுஏபியை புரிந்துக்கொள்ள முக்கியமான அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு மிகவும் அவசியமாக நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். யுஏபி.களை நன்கு புரிந்துகொள்வதற்கும் அடையாளம் காண்பதற்கும் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று தரவு பற்றாக்குறை என்று கூறிய நாசா, அந்த இடைவெளியை 'க்ரவுட் சோர்சிங்' நுட்பங்கள் மூலம் சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், ஓப்பன் சோர்ஸ் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் "உலகளவில் பல பார்வையாளர்களின் பிற ஸ்மார்ட்போன் மெட்டாடேட்டாவும் அடங்கும். தற்போது வரை பொது மக்களால் கூறப்படும் அல்லது பார்க்கப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஒழுங்கமைக்க தரப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் இல்லை, அதன் விளைவாக குறைவான மற்றும் முழுமையற்ற தரவுகளே உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/cgle4d0j8e8o
  19. அமெரிக்கா - சீனா போட்டா போட்டியில் புதிய தைவான் அதிபர் யார் பக்கம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வாங் பதவி, பிபிசி நியூஸ், தைபே 13 ஜனவரி 2024, 16:38 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் தைவானில் நடந்து முடிந்துள்ள ஒரு வரலாற்றுத் தேர்தலில் வில்லியம் லாய் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது சீனாவிடம் இருந்து தைவான் தள்ளி நிற்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தைவான் தேர்தல் முடிவால் சீனா கோபமடையக் கூடும். சுதந்திரம் குறித்த கருத்துகளுக்காக லாயை ஒரு "தொந்தரவு தரும் நபர்" என்று சீனா அழைக்கிறது. தைவானை தனக்கானது என்று சீனா தொடர்ச்சியாக உரிமை கொண்டாடுகிறது. சீனா "அமைதியான மறு ஒருங்கிணைப்புக்கு" அழைப்பு விடுத்தாலும், அது ராணுவ பலத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புகளையும் நிராகரிக்கவில்லை. தைவான் தேர்தலை "போருக்கும் அமைதிக்கும்" இடையேயான போட்டியாக சீனா சித்தரித்தது. சீனாவை ஆளும் கம்யூனிச அரசு, எட்டு ஆண்டுகளாக தைவானில் ஆட்சி செய்த லாயின் இறையாண்மைக்கு ஆதரவான ஜனநாயக முற்போக்குக் கட்சியை (DPP) எதிர்க்கிறது. தீவைச் சுற்றிலும் சீனா தனது இராணுவ நடமாட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது, இது இரு நாடுகளுக்கு இடையிலான சாத்தியமான மோதலின் அச்சத்தை அதிகரிக்கிறது. வரலாறு படைத்த லாய் தனது கட்சிக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதிபர் பதவியை வென்றதன் மூலம் லாய் புதிய வரலாறு படைத்துள்ளார். எதிர்க்கட்சியினரே ஒப்புக்கொண்ட பிறகு அவர் தனது முதல் கருத்துகளில், இது ஒரு மீளமுடியாத பாதை என்று அடையாளம் காட்டினார். "நாடு சரியான பாதையில் முன்னோக்கி செல்லும். நாங்கள் பின்னோக்கிப் பார்க்க மாட்டோம்" என்று உலக ஊடகங்கள் முன் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். பின்னர் தைபே நகர தெருக்களில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களிடம் உரையாற்றிய லாய், தனது வெற்றியை ஜனநாயகத்தின் வெற்றியாகக் குறிப்பிட்டார். "நாங்கள் சரியானதை செய்துள்ளோம். வெளிப்புற சக்திகள் எங்கள் தேர்தலில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கவில்லை. எங்கள் அதிபரை நாங்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று நாங்கள் முடிவு செய்ததால் தான் இது சாத்தியமானது," என்று அவர் கூறினார். வாக்கெடுப்புக்கு முன்னதாக, தைவான், "சீனா இந்த செயல்முறையில் தலையிட முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES லாய் சீனாவுக்கு கூறிய சேதி என்ன? அதேநேரத்தில், "தற்போதைய நிலையை அப்படியே பேணுவார்" என்று எதிர்பார்க்கப்படுகிறது. "சுதந்திரம் அல்லது சீனாவுடன் ஐக்கியத்தை நாடுவதில்லை" என்ற அவர் "சீனாவின் அச்சுறுத்தல்களிலிருந்து தைவானைப் பாதுகாப்பதாக" உறுதியளித்தார். சீனாவை ஆத்திரமூட்டும் வகையில் தைவான் சுதந்திரத்தை ஆதரிப்பதாக கடந்த மாதங்களில் கூறிய லாய், ஆனாலும், கூட அதிபரானால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாட்டேன் என்று சமீபத்திய மாதங்களில் தெரிவித்தார். கடந்த காலங்களில் தைவான் சுதத்திரத்தை ஆதரித்தமைக்காக லாயை ஒரு 'பிரிவினைவாதி' என்றும் 'பிரச்னையை உருவாக்குபவர்' என்றும் சீனா வர்ணித்திருந்தது. ஆனால் லாய், சீனாவிற்கும் ஒரு செய்தியைக் கூறினார். அவர் செய்தியாளர்களிடம், தற்போதுள்ள தடைகள் மற்றும் மோதல்கள் தொடர்பாக அதிகப்படியான உரையாடல்களை விரும்புவதாக கூறினார், சீனாவுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுத்தார். தைவான் தேர்தல் முடிவு என்ன? லாய் 40% வாக்குகளை பெற்றதால், பிரதான எதிர்க்கட்சியான கோமிண்டாங் (KMT) கட்சியைச் சேர்ந்த ஹூ யூ இ (Hou Yu-ih) ஐ விட நல்ல முன்னிலை பெற்றார். 2000ஆம் ஆண்டு முதல், தைவான் ஜனநாயக முற்போக்கு கட்சி (DPP) மற்றும் கோமிண்டாங் கட்சி (KMT) ஆகிய கட்சிகளுக்கே மாறிமாறி வாக்களித்துள்ளனர். தைவான் மக்கள் கட்சியைச் சேர்ந்த கோ வென்-ஜே, இளம் வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். அவர் நான்கில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றார். சனிக்கிழமையும் வாக்காளர்கள் புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்தனர். தைவான் ஊடக அறிக்கைகளின்படி, நாடாளுமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதன் மூலம் ஜனநாயக முற்போக்கு கட்சி அதன் பெரும்பான்மையை இழந்துள்ளது. ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த அதிபர், எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் ஆகியவற்றால் தைவானில் வரும் காலம் மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சீனா-தைவான் உறவுகளில் என்ன மாற்றம் வரும்? தற்போதைய துணைத் தலைவரும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளருமான வில்லியம் லாய் தைவானின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக, தைவானின் தற்போதைய அதிபரான சாய் இங்-வென்னை சீனா கடுமையாக விமர்சித்து வருகிறது. அவரது ஆதரவாளர்கள் இதற்கு நேர்மாறாக வாதிடுகின்றனர். கேஎம்டி கட்சியைச் சேர்ந்தவர் அதிபர் பதவிக்கு வருவது தான் உண்மையான ஆபத்து என்று அவர்கள் கூறுகிறார்கள். சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சூடான உறவுகளுக்கு தீர்வு காண மாட்டார்கள் என்றும் தைவானை ஒருங்கிணைக்கும் நிலையை உருவாக்குவார்கள் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். தைவான் பல காரணங்களுக்காக உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான உறுதிப்பாட்டை நிரூபிக்கும் ஜனநாயகம் அங்கு உள்ளது. மேலும், தைவானின் செமிகண்டக்டர் தொழிலுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது இடையூறுகள் ஏற்பட்டாலோ, நமது கணினிகள், தொலைபேசிகள், கார்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வழங்கும் சிலிக்கான் சிப்கள் கிடைக்காது. அமெரிக்க-சீனா உறவின் மையப் புள்ளிகளில் ஒன்றாக தைவான் விளங்குகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கா மற்றும் சீனா சவால் என்ன? தைவான் தீவு தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து 161 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 1949 ஆம் ஆண்டில், உள்நாட்டுப் போரின் போது சீனாவில் உள்ள தேசியவாதக் கட்சியான கோமிண்டாங் (KMT) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியடைந்தபோது, அது தைவான் தீவுக்குப் பின்வாங்கி புதிய அரசாங்கத்தை அமைத்தது. அப்போதிருந்து, இந்த தீவு தனியாக ஆளப்பட்டது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, தைவான் சர்வாதிகாரத்திலிருந்து விலகி புதிய அரசியலமைப்புடன் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டது. இங்குள்ள மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்த தீவை சீன நிலப்பரப்பில் இருந்து தனியாக இருப்பதாக கருதுகின்றனர். ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ தைவான் மீதான கட்டுப்பாட்டை தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் "ஒருங்கிணைத்தல்" நடக்கும் என்று பலமுறை கூறியும், அதை அடைய ராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை. அத்தகைய இராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளை உள்ளடக்கிய தீவு நாடுகளின் சங்கிலியில் தைவான் முதல் தீவு ஆகும், அதனால்தான் இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமானது. சீனா தைவானைக் கைப்பற்றினால், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமாக தனது அதிகாரத்தைச் செலுத்தி, குவாம் மற்றும் ஹவாய் போன்ற தொலைதூர அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று சில மேற்கத்திய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் சீனா தனது நோக்கம் முற்றிலும் அமைதிக்கானது என்று கூறுகிறது. சீனா தொடர்ந்து அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, அது கிட்டத்தட்ட தினசரி தைவானுக்கு போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்பியது. தைவானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் தனது கொள்கைகளை முடிவு செய்யும் போது சீனாவையும் அமெரிக்காவையும் மனதில் வைத்துக் கொள்வார். https://www.bbc.com/tamil/articles/c72ygw5nz91o
  20. Published By: VISHNU 09 JAN, 2024 | 02:43 PM சத்திய மூர்த்தி ஒரு வருடத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டின் அரகலய சமூகப் புரட்சியின் ஆரம்பமா அல்லது குறிப்பாக ஆயுதப் படைகள் (வேண்டுமென்றே?!) தங்களின் கடமையைச் செய்யத் தவறியதால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடா என ஒரு பொது விவாதம் உருவாக ஆரம்பித்துள்ளது. ஒரு வகையில், இது ஓர் கல்விசார் பயிற்சி அல்லது நிகழ்வுக்கு பின்னரான அறிக்கை மட்டுமே, ஆனால் அத்தகைய பயிற்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளதுடன், அதை ஊக்கப்படுத்தாமல் விடக்கூடாது. பாராளுமன்றத்தில் அண்மையில், "ஆளும்" பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் ஒரு தடவை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, 9 மே 2022 அன்று மாலை இடம்பெற்ற தீவைப்பு சம்பவங்கள் குறித்து பிரத்தியேகமாக கவனம் செலுத்தினார். அந்தச் சம்பவத்தில், வடக்கைத் தவிர்த்து நாடு முழுவதிலும் பல இடங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட சொத்துக்களுக்குச் ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்த, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலமாக தீவைக்கப்பட்டிருந்தது. வீரசேகர, அரகலய போராட்டத்தைப் போலவே முன்னெப்போதும் இல்லாத மே 9 தீவைப்புக்கு முந்தைய இரண்டு சம்பவங்களை சுட்டிகளாகக் குறிப்பிட்டார். முதலாவது சம்பவம் ஏப்ரல் 19 அன்று, எரிபொருள் பவுசருக்கு தீ வைக்கும் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தனது உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை கைது செய்வதற்கு அரசாங்கம் உத்தரவிட்டமையாகும். உதவிக்காக பொலிஸார் முறையிட்ட போதிலும் அருகில் நின்ற ஆயுதப்படைகள் தலையிட மறுத்துவிட்டதாக அவர் கூறினார். இராணுவம் தலையிட மறுப்பதும், கடமைக்கு கட்டுப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கும்பல்களின் அழைப்புக்கு அரசாங்கம் செவிசாய்த்தமையும் முழு பொலிசாரையும் மனச்சோர்வடையச் செய்தது என்று அவர் வாதிட்டார். SLPP பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பொலிஸ் மெய்க்காப்பாளர் கொல்லப்பட்டதுடன் தொடர்புடைய இரண்டாவது சம்பவத்தை வீரசேகர நினைவு கூர்ந்ததுடன், அது நாடு தழுவிய ரீதியில் தீவைக்கப்பட்ட காலையிலேயே, இடம்பெற்றது. நிச்சயமாக, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்றத்தின் மேற்பார்வைக் குழுவின் தலைவரான வீரசேகர, ஒரு விவரத்தை விட்டுவிட்டதாகத் தெரிகிறது, அது ஒருங்கிணைந்த தீவைப்பின் காலையில், டசின் கணக்கான பேருந்துகளில் தலைநகர் கொழும்புக்கு வந்த அவரது கட்சியினர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை ராஜினாமா செய்வதிலிருந்து தடுக்க, இளைய சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாவின் கோரிக்கையின்படி, தங்களது கோபத்தையும் விரக்தியையும் வெளிக்கொணருவது போல், கண்ணில் தென்பட்ட அனைவரையும் அடித்து நொருக்கியதாகும். அதற்குப் பதிலாக நகரம் முழுவதும் அவர்கள் அடி வாங்கினார்கள் என்பது வேறு விடயம். தங்களது பேருந்துகளில் "வெளியாட்களை" தாக்கியவர்கள், அன்று காலை சென்ற அந்த வாகனங்களின் பதிவு இலக்கங்களின் நீண்ட பட்டியலை வைத்திருந்தமை நினைவுகூரத்தக்கதாகும். மீண்டும், ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையா அல்லது சில மணிநேரங்களுக்கு மட்டுமான அவர்களுக்கும் அவர்களின் தலைவர்கள் அனைவருக்கும் காத்திருந்த ஓர் வெள்ளோட்ட நடவடிக்கையா? தீவிரமான சிங்கள-பௌத்த பெரும்பான்மையின் சமகால அடையாளமான வீரசேகர உண்மையில் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த கடினமான நாட்களில் பொலிஸாரின் மன உறுதியை அரசாங்கம் உயர்த்தத் தவறியதுடன் இராணுவம் உதவிக்கு விரைந்து செல்லத் தவறியமை இதனை விளைவாக்கியதுடன், பொலிஸாரிற்கான உதவி கிடைத்திருப்பின், அரகலய முன்னணியில் விடயங்கள் வேறுபட்டிருக்கலாம். நிச்சயமாக, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை "கும்பலாக ஆக்கிரமித்தமையையும்" பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை எரித்தமையையும் அவர்கள் நிறுத்தியிருக்கலாம். சிலநாட்களாக ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்களின் முற்றுகைக்கு ஜனநாயக அங்கீகாரம் கிடைத்ததைக் கூட வழங்குவது இதுதான். இலக்கு மற்றும் நோக்கம் அரகலயவின் போது கூட, தாமதமாக ஆனால் ஒரே இரவில் ஜனாதிபதி கோட்டா முதலில் நாட்டை விட்டு வெளியேறியதும், அதனைத் தொடர்ந்து அவரது ராஜினாமா என்பதை மக்கள் போராட்டம் உண்மையில் அடைந்ததை, இராணுவ எல்லையின் கவனமற்ற மெத்தனப் போக்குடனான கடமையின் அலட்சியமே அடையவைத்ததாக பலவீனமான குரல்கள் இருந்தன. சில வாரங்களுக்குப் பிறகு அவர் நாடு திரும்பியபோது மக்கள் நடந்துகொண்ட விதம் அல்லது தவறாக நடந்துகொள்ளாத தன்மை (!) மக்கள் போராட்டம் என்பது கோத்தாவைத் தாக்குவதற்காக அல்ல, ஆனால் அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக மட்டுமே என்பதைக் காட்டுகிறது. இது போராட்டத்தின் குறிக்கோள் மற்றும் நோக்கம் குறித்து சில வினாக்களை எழுப்பியது. அந்த வினாக்களுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. இது தற்செயல் நிகழ்வாயினும் அல்லது என்னவாக இருப்பினும், ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்க, தெஹிவளையின் புறநகர் பகுதியில் நடைபெற்ற அரசியல் பேரணியில் உரையாற்றும் போதே, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய அரசியல்-தேர்தல் உரையாடலில் "சமூகப் புரட்சியை" மீண்டும் புகுத்தலாம் என்று நினைத்திருக்கலாம். செய்தி அறிக்கைகளின்படி, AKD, என பிரபலமாக அறியப்பட்ட அவர், ஒவ்வொரு நாளிலும், நாட்டின் "அரசியல் ஒரு சமூகப் புரட்சியை நோக்கி விரைவாக முன்னேறுகிறது" என்று கூறினார். “அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம் சமூகப் புரட்சிகளை அடைய முடியாது. சமூகப் புரட்சியின் மாற்றத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள்” என்று கூறினார். ஏற்கனவே மறக்கப்பட்ட அரகலய போராட்டத்தின் நீண்ட வாரங்களில் என்ன நடைபெற்றது மற்றும் இன்னும் சொல்லப்பட்டவை அனைத்தின் மறைந்துபோகும் நினைவுகளை மீளப்பெறவும், புதுப்பிக்கவும், ஜே.வி.பி மற்றும் AKD ஆகியவை வெகுசன இயக்கத்தை அமைப்பு மாற்றத்திற்கான ஓர் "சமூகப் புரட்சி" என்று குறிப்பிட்டு பேசின. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இறுதியில் ஜனாதிபதி கோட்டாபாய ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்த பின்னரும், அவர்கள் "சமூகப் புரட்சி" என்ற கோஷத்தை தொடர்ந்து முழங்கினர். கோட்டாவின் இடத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் கூடியபோதும், பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதியான விக்கிரமசிங்கவின் SLPP-UNP வேட்புமனுவை அங்கீகரித்த போதும், அவர்கள் மட்டும் கடந்த காலத்தில் செய்ததைப் போலவே, தங்களது துப்பாக்கிகளுடன் தொடர்ந்தும் விடாப்பிடியாகவும் சிக்கிக்கொண்டதுடன், ஜே.வி.பி. கடந்த 60 வருடங்களாக கட்சியாக முதலில் ஒரு பிரத்தியேக-கிளர்ச்சிக் குழுவாகவும் பின்னர் ஒரு சராசரியான, மெலிந்த ஜனநாயகப்படுத்தப்பட்ட பதிப்பாகவும் இருப்பில் இருந்து வந்துள்ளது. நாட்டின் அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு "சமூகப் புரட்சி" தொடர்பான திசாநாயக்கவின் புத்துயிர் பெற்ற குறிப்பு அதிக கவனத்தை கோருகின்றது. வெளியிடப்பட்ட சில தனியார் உளஎண்ணம் தொடர்பான தேசிய கருத்துக்கணிப்பின்படி, அவர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைகளில் புதிய உயரங்களை எட்டியுள்ளார். நாட்டின் வாக்காளர்களில் 51 சதவீதம் பேர் இப்போது AKD அடுத்த ஜனாதிபதியாக வருவதை விரும்புகிறார்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பாளர் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை கணிசமானதாகும், ஏனெனில் அது தனித்த பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் முதல் முழு அளவிலான சோசலிச ஜனாதிபதியாக ஆவதற்கான குறைந்தபட்சமான 50%+1 வாக்குகளை விட இந்த எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. ஜே.வி.பி.யின் மற்ற தோல்விகள் எதுவாக இருந்தாலும், குறைந்தபட்சம் இப்போதைக்கு, சோசலிச சித்தாந்தத்தில் முற்றுமுழுதாக வளர்ந்த ஒரே அரசியல் கட்சி அவர்களுடையது தான். நிச்சயமாக, இந்த குறிச்சொல் ஒரு காலத்தில் SLFP க்கு சொந்தமானது என்பதுடன், பின்னர் பிரிந்த SLPP க்கு சொந்தமானது, ஆனால் பாதையில் நீண்ட காலமாக, அவர்களின் சோசலிச நிலைகள் நீர்த்துப்போயின. இது அவ்வப்போது நிதியியல் உதவிக்காக கடந்த IMF நிபந்தனைகளை ஏற்கும் தவிர்க்க முடியாத தன்மையை குறிப்பிடவில்லை அல்லது தொடர்புபடுத்தவில்லை - அல்லது, மாறாக, அங்கேயே முடிவடைகிறது. நிச்சயமாக, ஜே.வி.பி.யும், கடந்த காலத்தில் SLFP தலைமையிலான ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க-குமாரதுங்க, சி.பி.கே, மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சியின் ஒரு பகுதியாக, சில கருத்தியல் விழுமியங்களில் சமரசம் செய்து கொண்டது, ஆனால் அவை முற்றிலும் "மாசுபடுத்தப்படுவதற்கு" முன்பே வெளியேறியது. இன்றைய வினா என்னவெனில், அதன் பாரம்பரியமான 3-5 சதவீத வாக்குப் பங்கை 50-க்கும் மேற்பட்ட சதவீதத்திற்கு கொண்டு செல்லுகின்ற சாத்தியமற்ற உயரத்தை எட்டும் முயற்சியில், ஜே.வி.பி, அவர்களின் அடிப்படைக் கொள்கைகளை இல்லையென்றால் சித்தாந்தத்தை அதற்க்கு நடுநிலைப்படுத்த வேண்டும் அல்லது சமரசம் செய்ய வேண்டும். நாட்டின் தேர்தல் கடந்த காலம் வெளிப்படுத்தியபடி, நடுத்தரப் பாதையில் செல்வதன் மூலம் மட்டுமே அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் ஜனநாயக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். நிச்சயமாக, ஒரு தொலைதூர முன்மாதிரி உள்ளது. 1956 ஆம் ஆண்டு SLFP தலைமையிலான முதலாவது அரசாங்கம், அங்கு அனைத்து இடதுசாரி சார்புக் கட்சிகளும் --- ஜேவிபியினதும் உருவாக்கம் ஒரு தசாப்த தூரத்தில் இருந்த நிலையில், ஜனாதிபதி S. W. R. D. பண்டாரநாயக்கா, அதனை ஒரு நீல இரத்தம் கொண்ட சோசலிச ஆட்சி என்று அழைத்தார். மிகவும் வழமையான இடதுசாரி/சோசலிச கடந்த காலத்தைக் கொண்ட அவரது SLFP யின் சக பயணிகளில் சிலர் சர்வதேச கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து விலகி, "சிங்களம் மட்டும்" சட்டம் என்ற மேலாதிக்க காரணத்துடன் அடையாளம் காணப்பட்டதைக் கருத்தில் கொண்டு, அங்கு "சோசலிசப் புரட்சி" ஏற்கனவே அதன் தூய்மையை இழந்துவிட்டது. அழகு அல்லது பரிதாபம் என்னவென்றால், அந்த பாரம்பரிய இடதுசாரிகள், அவ்வப்போது, மூன்று மொழி கொள்கை போன்றவற்றைப் பற்றி பேசுகிறார்கள். SLFP/SLPP அரசாங்கத்திற்கு அவர்களில் யாரேனும் அல்லது அனைவரும் கையொப்பமிட்ட போதெல்லாம், அவர்கள் ஒரு கருத்தை நிரூபிப்பது போல உத்தியோகபூர்வ மொழிகள் அமைச்சு அவர்களில் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை உறுதிசெய்தனர். இலங்கை வாக்காளர்கள் இப்போதும், வாக்களிக்கும் நாளுக்கும் இடையில் புதிய ஜனாதிபதிக்காக வேறு எங்கு தேடினாலும், வரவிருக்கும் வாரங்கள், மாதங்கள் மற்றும் சில ஆண்டுகளில் AKD மற்றும் JVP பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே இருவேறுபட்ட கருத்தாகும். ஒன்று அவர்கள் தங்கள் வேரூன்றிய இடதுசாரி நிலையிலிருந்து விலகி, குறிப்பாக பொருளாதாரப் பிரச்சினைகளில் மிதமான நடுத்தர பாதைக்கு நகர்கிறார்கள் அல்லது பெரிய வாக்காளர்களை குறுகிய மற்றும் நடுத்தர பாதையில் தங்கள் சிந்தனைக்கு மாற்றுவதுடன், சுயமாக பேச்சுவார்த்தை நடாத்த அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எது அதிகமாக எவ்வாறு அடையக்கூடியது என்பதை அவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். வேறொன்றுமில்லை என்றாலும், "முதலாளித்துவ, வலது பிற்போக்குத்தனமான" அமெரிக்காவிற்குச் செல்வதற்கான AKDயின் விருப்பம், அமெரிக்கத் தூதர் ஜூலி சுங்கைச் பலமுறை சந்திப்பதற்கான அவரது ஆர்வம் மற்றும், IMF உடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் வெளிப்படுத்திய விருப்பத்திற்கு அப்பால் (நிபந்தனைகளை மறு வரைவு செய்வது) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜே.வி.பி.யின் தலைமை ஒரு கட்டம் வரையில் கூட பேச்சுவார்த்தை நடத்த மற்றும்/அல்லது முன்னெடுக்கத் தயாராக இருக்கும் எதிர்காலப் போக்கைக் குறிக்கிறது. யோசனைகள், சித்தாந்தங்கள் மற்றும் விவரங்கள் ஆகியன கலந்துரையாடப்பட்டு தீர்மானமெடுக்கப்பட வேண்டியிருக்கும் போது, பல தடைகள் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் மறைக்கப்பட்ட தீர்வுகள், விபரிப்புகள் மற்றும் நியாயப்படுத்தல்களை கொண்டு வரலாம், இருப்பினும் கட்சியின் கடந்தகால ஒருதலைப்பட்ச விருப்பத்தால் நம்பத்தகாததாகும். வெற்றி அல்லது தோல்வி? இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு அப்பால் உள்ள ஜே.வி.பி.யின் உருவாக்கம், சித்தாந்தம் மற்றும் செயன்முறை ஆகியவை ஒரு தேசத்திற்கு அவர்களால் உருவகப்படுத்தப்பட்ட மற்றும் குறிப்பிடப்பட்ட (இருப்பதற்கு) "சோசலிச இலங்கைக்கு" உரியவை உட்பட, அதன் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் இன்னமும் ஜேவிபிக்கு மட்டுமே பொருந்துகிறது. பிந்தையது, இலங்கை அரசு அவர்களின் இரண்டாவதும் இறுதியுமான கிளர்ச்சியை நசுக்கியதுடன் கட்சி மிக நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டதுடன், இது கட்சி / இயக்கத்தின் ஸ்தாபகரான ரோஹன விஜேவீரவின் மரணத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. கட்சியானது அதன் இடத்தை மிதவாதிகள் கைப்பற்ற அனுமதித்ததுடன், உள்ளடக்கலான ஜனநாயக அரசியல் மற்றும் தேர்தல்கள் எப்பொழுதும், ஒரு புதிய முகமான ஜேவிபிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக, ஜே.வி.பி ஜனநாயக மிதவாதம் அல்லது மிதவாத ஜனநாயகத்தின் பயனையும் பொருத்தப்பாட்டையும் கண்டறிந்துள்ளதுடன், இல்லாவிடின், தமிழ் இன முன்னணியில் புலிகளுக்கு நடந்தது போல், 2009 ஆம் ஆண்டு மே மாதம் போருக்குப் பின்னராக, நிறுவுனர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒழிப்புடன், நூற்றுக்கணக்கான, இல்லாவிடின் ஆயிரக்கணக்கான அவரது கடைசிக் குழு உறுப்பினர்களும் அழிக்கப்பட்டது போல கிளர்ச்சிக்குப் பின்னராக இயக்கம் அழிக்கப்பட்டிருக்கும். உரையாடல் இன்னும் அரகலயவைப் பற்றியதாக இருக்கும்போது, அது வெற்றியடைந்ததா அல்லது தோல்வியடைந்ததா, அல்லது அது அடைய விரும்பியதை அடைந்ததா என்ற வினா இன்னமும் உள்ளது. இது அரகலயாவின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் பற்றிய முதன்மையான மற்றும் ஆரம்பநிலை வினாவிற்கு இட்டுச் செல்கிறது. இது இன்னமும் ஓர் அடிப்படையான வினாவிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது: அரகலயவின் ஒழுங்கமைப்பாளர்கள் யார்? அரகலய ஒரு சுய-தீர்க்கதரிசனமும், சுய-உந்துதலும் கொண்ட வெகுசன இயக்கம் மற்றும் அது தானே உருவானது என்பது இப்போது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 'அரபு வசந்தம்", "ஆரஞ்சுப் புரட்சி" போன்றவற்றில் சமீபத்திய உதாரணங்களை மேற்கோள் காட்டலாம், ஆனால் அவற்றின் வெற்றிகள் (அல்லது, சில சந்தர்ப்பங்களில் தோல்வி) மேற்கத்திய நாடுகளின் கூற்றுகளால் தகுதி பெற்றதுடன், குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் புலனாய்வு அமைப்புகள் ஜனநாயகக் காரணத்தை நிறுவுதல் அல்லது மீட்டெடுப்பதற்கான தங்களது அர்ப்பணிப்புடன் திரைக்குப் பின்னால் இருந்தன (முந்தைய நூற்றாண்டில் நடந்த இரண்டு பெரும் போர்களுக்குப் பிறகு பல தசாப்தங்களில் மேற்குலகம் புரிந்துகொண்டு பிரச்சாரம் செய்தது போல). இலங்கையைப் பொறுத்தவரை, அரகலய என்பது தலைநகரின் "நகர்ப்புற நடுத்தர வர்க்கம்" மற்றும் நகரத்தின் "படித்த உயரடுக்கினரால்" வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்ததுடன், அவர்கள் கடந்த பல தசாப்தங்களாக, மற்றும் பல நூற்றாண்டுகளாக காலனித்துவ அதிகாரத்தின் கீழ் இருந்ததுடன், உள்ளூர் விடயங்களைப் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டனர். அரசியல் மற்றும் பொது நிர்வாகம் அவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அவ்வப்போது, முக்கியமாக மேற்கத்திய நாடுகளால் நிதியளிக்கப்பட்ட INGOக்கள் மற்றும் NGOக்கள் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையை தூண்டிவிட்டன. உள்ளூர் ஊடகங்களின் ஒரு பகுதியும் சேர்ந்து செயற்பட்டது. இவை அனைத்தும் ஒருபுறம் நகர்ப்புற உயரடுக்கலும் மறுபுறம் கிராமப்புற வெகுசனங்களின் நடத்தையிலும் அணுகுமுறையிலும் ஆழமான பிளவை பிரதிபலித்தது. கடந்த கால அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, அது முதலாளித்துவமாகவோ அல்லது சோசலிசமாக இருந்தாலும், நாட்டின் அபிவிருத்திப் பாதையில், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்தில், கிராமப்புற மக்களுக்கு பகுதியளவான திறனுடைய வேலை வாய்ப்புகளை வழங்கல் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளில் வாழ்க்கை முறை மேம்பாடு ஆகியவற்றில் அவர்கள் செய்த பங்களிப்புகளில் அவர்கள் அனைவரும் குறிப்பாக அரசியல் வர்க்கம் அதை கவனிக்காமல் கடந்த பத்தாண்டுகளில் ஒரு புதிய "கிராமப்புற நடுத்தர வர்க்கத்தை" உருவாக்குவதற்கு பங்களித்துள்ளனர். தகவல் தொடர்பாடல் என்பது சாதனைகளுக்கு மட்டுமல்லாது, அபிலாஷைகளுக்கும் முக்கியமாகவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில், ஒரு எண்கணித முன்னேற்றமாக ஆரம்பித்து வடிவியல் நிலைகளை அடைந்தது. எவ்வாறு வீதிகளில் இருந்த போராட்டக்காரர்கள், பசுமையான காலி முகத்திடல் கடற்பரப்பிற்குச் சென்று ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றி வளைத்தார்கள் என்பதுதான் வினாவாகும். இத்தகைய செயற்பாட்டின் ஆரம்ப நாட்களில் கூட, பல போராட்டக்காரர்கள் இரவு முழுவதும் தங்கியதாக எந்த அறிக்கையும் இருக்கவில்லை. உண்மையில், சில சமூக ஊடகப் பதிவுகள் குடும்பங்களுக்கான கடற்கரை முகப்பில் உல்லாசப் பயணம் என்று கூட விவரித்தன, ஏனெனில் அவர்கள் தங்களின் பிள்ளைகளையும், ஏன் கைக்குழந்தைகளையும் கூட, வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் கொண்டு வந்தனர். இது இன்னுமொரு முன்னணியில் இலங்கை அரசின் முழுமையான தோல்வியில், அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்த நிலையில் கோபம், வேதனை மற்றும் எரிச்சல் ஆகியவற்றின் உண்மையான வெளிப்பாட்டை காட்டும் ஒரு மோசமான, மாறாக மதிப்பற்ற முறையாகும். ஏற்கனவே, கொழும்பு நடுத்தர வர்க்கத்தினர் அரசியல் வர்க்கத்தை பல காரணங்களுக்காக முற்றிலுமாக வெறுக்கிறார்கள் அல்லது, இல்லையெனில், அவர்களுக்கெதிராக முறையிடுகிறார்கள். ஆயினும்கூட, சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் அவர்களின் நிரல்களில் இல்லை, இருப்பினும் எப்போதும் அதிகரித்து வரும் விலைகள் குறித்து முணுமுணுப்புகள் இருந்தன. அவர்கள் தினசரி இரவு உணவு-மேசை கலந்துரையாடல்களில் அல்லது உள்ளக உரையாடலின் நோக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அது "எப்படியும் ஒரு உலகளாவிய நிகழ்வு" என்றும், அவர்களும் "அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்... மற்றும் வரும் ஆண்டுகளில் இன்னும் மோசமாகலாம்" என்று தீர்மானிக்கும் கல்வி வெளிப்பாடுகளின் மூலமும் திருப்திப்படுவார்கள். ஆரம்பத்தில், அறிக்கைகளின்படி, நகர்ப்புற நடுத்தர வர்க்கம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பக்கற்றுக்கள் மற்றும் பின்னர் அவர்களின் காலை உணவான பாண் மற்றும் பிற கோதுமை பொருட்கள், கடை அலமாரிகளில் இருந்து மறையத் தொடங்கிய போது பீதியடைந்தது. தீவின் பிரதான உணவாக அரிசி இருந்த போது கொழும்பின் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஐரோப்பிய காலை உணவை எவ்வாறு, எப்போது தங்களது சொந்த உணவாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர் என்பது அனைவரும் யூகிக்கக்கூடியதாகவுள்ளது. சுதந்திரத்திற்கு உடன் முன்னாகவும் பின்னரும் சில வருடங்களில், லண்டனில் குளிர்காலமாக இருக்கும் போது, கொழும்பு மேல்தட்டு மக்கள் தங்களது கம்பளிகளை வெளியே எடுப்பார்கள் என்று சொல்லப்படுவது வழக்கமாகும். பிந்தைய தசாப்தங்களில், அவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், அவர்கள் அட்லாண்டிக் முழுவதும், வாஷிங்டனிலும் குளிர்காலமாக இருக்கும் போது தங்களது கம்பளிகளை தூசி தட்டி உலர்த்துவார்கள். அந்தளவிற்கு, அவர்களின் பிரதான உணவின் திடீர் வெளியேற்றத்தின் போதான அவர்களின் பீதி புரிந்துகொள்ளத்தக்கது. சமைப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் எரிபொருள் முதலில் பற்றாக்குறையாகத் தொடங்கியதும், பின்னர் உடனடியாக கிடைக்காமல் போன போது அவர்களின் அவல நிலையும் அப்படித்தான் இருந்தது. இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் கூற்றுப்படி, பாரம்பரிய உணவுகளான புட்டு, அப்பம் மற்றும் இடியப்பம் மற்றும் உள்நாட்டு தேநீர் (பாலுடன் அல்லது பால் இல்லாமல்) நாட்டின் தெற்கு மற்றும் வடக்கில், எந்த விலை உயர்வும் இல்லாமல் மிக அதிகமாகக் கிடைக்கும் என்பது அவர்கள் நாடு முழுவதும் சென்றமையால், கடந்த கால வருகை மற்றும் அறிக்கையிடல் மூலம் அவர்களில் பலருக்கு நன்கு தெரிந்திருந்தது. உண்மையில், கொழும்பு கடற்கரை முகப்பில் நாளாந்த கூட்டங்கள் ஒவ்வொரு நாளும் பெரிதாகவும், அதிக நோக்குடையதாகவும், உறுதியாகவும் ஆரம்பித்தமையால், "மோசமான விடயம்" கூரையைத் தாக்கும் என்று காத்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ “கோட்டாகோகம” எதிர்ப்பு தளம் தோன்றியதுடன், அது பொதுவாக "கம" அதாவது "கிராமம்"என்ற சிங்கள வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அவர்கள் தங்களுடைய இலக்குகளை அடையும் வரை இங்கேயே இருந்தார்கள். கொழும்பின் தெருக்களில் தமக்கு அறிமுகம் இல்லாத, தமக்குத் தெரியாத மனிதர்களால் தாங்கள் மூழ்கியிருப்பதாக நகரவாசிகள் உணர ஆரம்பித்ததும் அப்போதுதான். அவர்களில் சிலர் பின்வாங்கினர், மற்றவர்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை, இன்னும் சிலர் நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதற்கு சாட்சியாவதால் மிகவும் பயந்து தங்களது இருப்பு நடவடிக்கைகளை மிதப்படுத்தும் என்று நம்புவதற்கு குறைந்தபட்சம் தேவை ஏற்பட்டது. தேசத்தின் பிரதான பேரணித் தளமாக விளங்கும் காலி முகத்திடலில் மக்களின் கோபத்தின் வெளிப்பாட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகத்தின் "ஏற்றுக்கொள்ளக்கூடிய" முற்றுகை வரை வன்முறை மற்றும் தீ வைப்பு வரை, அவர்கள் ஏதோ தவறாக இருப்பதையும், தங்களது கைகள் முற்றிலுமாகப் பிடித்துக் கொள்ளப்பட்டிருப்பதையும் கண்டறிய ஆரம்பித்தனர். இவர்கள் யார், அவர்களை வழிநடாத்தியது யார்? அவர்களுக்கு யார் என்ன செய்தி(களை) கொடுத்தனர், ஏன், எவ்வாறு? என்பதுதான் வினாவாகும். நகரவாசிகள், ஆரம்ப கட்டங்களில், தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த அடையாளம் காணக்கூடிய குறிக்கோளையும் கொண்டிருக்கவில்லை, இது சுமார் ஒரு வாரம் அல்லது இரு வாரமாக முற்றிலும் உதவியற்றதாக காணப்பட்டது. அவர்களின் தலைமுறை தலைமுறையாக நன்கு வளர்க்கப்பட்ட ஜனநாயக விழுமியங்களுக்கும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நாடு தழுவிய தேர்தல்கள் மூலம் மட்டுமே அரசாங்கங்களையும் ஜனாதிபதிகளையும் மாற்றும் செயன்முறைக்கும் வெளிச் சென்று, யாரேனும் அவர்களிடம் கோத்தா இப்போது இங்குதான் போக வேண்டும் என்று அவர்கள் காதுகளில் சொன்னாலோ அல்லது கிசுகிசுத்திருந்தாலோ கூட அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த விடயம் வேறுவிதமாக போய்க்கொண்டிருந்தது. https://www.virakesari.lk/article/173504
  21. Ayalaan Review: தமிழ் பேசும் Alien; SK-ன் ஆக்‌ஷன் அவதாரம் - அயலானை ரசிகர்களுக்கு பிடிக்குமா?
  22. Published By: VISHNU 12 JAN, 2024 | 11:32 AM வினோத் மூனசிங்க நவம்பர் 2, 1917 இல், பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலரான ஆர்தர் பால்ஃபோர் ரோத்ஸ்சைல்ட் அரசருக்கு பாலஸ்தீனத்தில் யூத தேசிய இல்லத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து ஓர் கடிதத்தை எழுதினார். ஒரு வாரம் கழித்து, அரசாங்கம் இந்த பால்ஃபோர் பிரகடனத்தை பகிரங்கப்படுத்தியதுடன், இது சியோனிச நோக்கத்திற்கான ஆதரவின் முதலாவது பொது வெளிப்பாடாக அமைந்தது. இது குறிப்பாக பால்ஃபோர் ஒரு யூத-விரோதியாக அறியப்பட்டதால், பாலஸ்தீனியர்களிடையே மட்டுமல்லாது, பிரிட்டிஷ் யூத சமூகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியது. செப்ரெம்பர் 5, 1918 அன்று, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் அமெரிக்க சியோனிஸ்ட் அமைப்பின் துணைத் தலைவரான ரப்பி ஸ்டீபன் S.வைஸுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டதுடன், அதில் அவர் சியோனிச திட்டத்தை வலியுறுத்தி பால்ஃபோர் பிரகடனத்தை முனைப்பாக ஆதரித்தார். உண்மையில், அவர் பால்ஃபோர் பிரகடனத்திற்கு தனது முன் அனுமதியை வழங்கியிருந்ததுடன், ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக அதனை ரகசியமாக வைத்திருந்தார். பால்ஃபோர் பிரகடனத்திற்கு, வெளியுறவுத் திணைக்களங்கள் மற்றும் அமெரிக்க யூத சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ராபர்ட் லான்சிங் வில்சனிடம் அமெரிக்கா ஜெர்மனியுடன் போரில் ஈடுபட்டது ஆனால் பாலஸ்தீனத்தை ஆண்ட ஒட்டோமான் பேரரசுடன் அல்ல என்றும் பல யூதர்கள் அதை எதிர்த்தனர்; மேலும் பல கிறிஸ்தவர்களும் அதனை எதிர்ப்பார்கள் என்று சுட்டிக்காட்டினார். ஓர் பிரதான யூத வில்சன் ஆதரவாளரும், ஒட்டோமான் பேரரசின் முன்னாள் தூதுவருமான ஹென்றி மோர்கெந்தாவ் பால்ஃபோர் பிரகடனத்தைப் பற்றி பின்வருமாறு எழுதினார்: "யூத மக்களின் உலகிற்கும் அவர்களின் மதத்திற்கும் முதன்மையான செய்தி சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சர்வதேச மனப்பான்மையாக இருக்கும்போது, ஒரு வரையறுக்கப்பட்ட தேசியவாத அரசை அமைத்து அதன் மூலம் அவர்களின் மதச் செல்வாக்கிற்கு ஒரு பௌதீக எல்லையை உருவாக்குவது போல் தோன்றுவதில் என்ன தவறு இருக்கின்றது”. அமெரிக்க யூத மதத்தலைவர்களின் மத்திய மாநாடு தீர்மானத்தின் மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், யூத இலட்சியம் "யூத அரசை நிறுவுவது அல்ல - நீண்டகாலமாக வளர்ந்த யூத தேசியத்தை மீண்டும் வலியுறுத்துவது அல்ல" என்று உறுதியாக கூறியது. பல யூத மதத்தலைவர்கள் "சியோனிசத்தை எதிர்க்கும் யூத மதத்தலைவர்களின் தேசியக் குழுவை" உருவாக்கியதுடன், அவர்களில் ஒருவரான ரபி சாமுவேல் ஷுல்மேன், "யூதர்களின் விதி பாலஸ்தீனத்தில் சிறிய மக்களாக உருமாறக்கூடாது" என்று கூறினார். இந்த உணர்வானது, பாலஸ்தீனத்தில் ஒரு யூத தாயகத்தை நிறுவுவதற்கான முயற்சியானது, "விரும்பத்தகாத" குடித்தொகையிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வதற்கான யூத-விரோதவாதிகளின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்ற அவர்களின் (சரியான) பகுப்பாய்வை பிரதிபலித்தது. 1921 ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் அவசரகால ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றியதுடன், இது யூத குடியேற்றத்தை (மற்றும் பொதுவாக கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய குடியேற்றம்) கணிசமாகக் குறைத்ததுடன், 1924 குடியேற்றச் சட்டத்தின் மூலம் அதை மேலும் குறைத்தது. கிங்-கிரேன் ஆணைக்குழு ஆயினும்கூட, காஸ்மோபாலிட்டன் ரோத்ஸ்சைல்ட் வங்கிக் குடும்பம் மற்றும் பிற யூத வங்கியாளர்களிடமிருந்தும், உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் டி. பிராண்டீஸ் போன்ற முக்கிய யூத தாராளவாதிகள் மற்றும் தொழிலதிபர் வில்லியம் இ பிளாக்ஸ்டோன் போன்ற கிறிஸ்தவ சியோனிஸ்டுகளிடமிருந்தும் பெற்ற ஆதரவின் காரணமாக சியோனிச சிறுபான்மையினர் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதன் விளைவாக, கிங்-கிரேன் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சியோனிச சார்பு யோசனைகளுடன் ஆரம்பித்தார்கள். 1919வது பாரிஸ் சமாதான மாநாட்டிலிருந்து உருவான உத்தியோகபூர்வமாக "துருக்கியில் உள்ள ஆணைகளுக்கான 1919 நேச நாடுகளுக்கிடையிலான ஆணைக்குழு" எனப்படும் இந்த ஆணைக்குழுவானது, முன்னாள் ஒட்டோமான் மாகாணங்களுக்குள் தங்களது பேரரசுகளை விரிவுபடுத்த முயன்ற பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மற்றும் அவர்களின் நோக்கங்களில் சந்தேகம் கொண்ட அமெரிக்காவின் நிலைகளை சமரசம் செய்யும் முயற்சியாகும். ஜனாதிபதி வில்சன் இறையியலாளரான ஹென்றி சர்ச்சில் கிங் மற்றும் தொழிலதிபர் சார்லஸ் ரிச்சர்ட் கிரேனை ஆணைக்குழுவுக்கு நியமித்ததுடன், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆணையாளர்களை நியமிக்க மறுத்ததுடன் அவர்களை மட்டுமே உறுப்பினர்களாக விட்டுவிட்டனர். அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஆணைக்குழு, "பாலஸ்தீனத்தின் தற்போதைய யூதர்கள் அல்லாத குடிமக்களை நடைமுறையில் முழுமையாக அகற்றுவதை சியோனிஸ்டுகள் எதிர்பர்த்துள்ளனர்" என்று குறிப்பிட்டதுடன், "யூத நோக்கத்திற்கான ஆழ்ந்த அனுதாப உணர்வு" இருந்தபோதிலும், பின்வருமாறு பரிந்துரைத்தது: "... பாரியளவில் குறைக்கப்பட்ட சியோனிச நிகழ்ச்சித் திட்டம் மட்டுமே சமாதான மாநாட்டின் மூலம் முயற்சிக்கப்படுவதுடன், அதுவும் கூட, மிக படிப்படியாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. இது யூதர்களின் குடியேற்றம் கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட வேண்டியதுடன், பாலஸ்தீனத்தை யூதர்களின் பொதுநலவாய நாடாக மாற்றும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் அர்த்தப்படுத்துகிறது. ஆணைக்குழுவின் கண்டறிவுகள் பல ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டன, அத்துடன் துருக்கிய கொள்ளைகளை அவர்களுக்கு இடையே பிரிப்பதற்கான ஆங்கில-பிரெஞ்சு திட்டங்களுடன் முன்னேறிய பாரிஸ் சமாதான மாநாட்டால் புறக்கணிக்கப்பட்டன. அமெரிக்காவில், 1922ல் பாலஸ்தீனத்தில் யூத தாயகம் அமைப்பதற்கு ஆதரவாக காங்கிரசு வாக்களித்த பிறகுதான் இந்த அறிக்கை வெளிச்சத்திற்கு வந்தது. சியோனிஸ்டுகளின் தீவிர பரப்புரையைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் மாசசூசெட்ஸ் செனட்டர் ஹென்றி கபோட் லாட்ஜ் மற்றும் குடியரசுக் கட்சியின் நியூயோர்க் பிரதிநிதி ஹாமில்டன் ஃபிஷ் III அமெரிக்க காங்கிரஸின் கூட்டுத் தீர்மானத்தை "யூத இனத்தின் தேசிய வீடாக பாலஸ்தீனத்தை மீண்டும் உருவாக்குவதற்கு ஆதரவாக" அறிமுகப்படுத்தினர். அதன் நிறைவேற்றம் முன்கூட்டியே நிறைவடைந்திருந்தாலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழு இந்த விடயத்தில் ஒரு விசாரணையைக் கூட்டியது. தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் பாலஸ்தீனியர்களை நாகரிகமற்றவர்கள் என்று இழிவுபடுத்தியதுடன் பாலஸ்தீனத்தை "அபிவிருத்தியற்ற மற்றும் குறைந்த குடித்தொகை கொண்ட" "பாலைவனமான நாடு" என்று அழைக்கிற காலனித்துவ வாதத்தை பயன்படுத்தினர். சில அரசியல்வாதிகள் யூத குடியேற்றவாதிகளை வட அமெரிக்காவின் வெள்ளையின குடியேற்றக்காரர்களுக்கும், "நாடோடி" பாலஸ்தீனியர்களை அமெரிக்க இந்தியர்களுடனும் ஒப்பிட்டு “Manifest Destiny” என்று அழைத்தனர். இருப்பினும், சீர்திருத்தப்பட்ட யூத மதத்தின் உலகளாவிய மனிதநேயக் கண்ணோட்டத்தில் நீள் தீவின் ரப்பிஸ் ஐசக் லேண்ட்மேன் மற்றும் சின்சினாட்டியின் டேவிட் பிலிப்சன் ஆகியோர் சியோனிசத்தை எதிர்த்தனர். யூத சமூகம் இவ்விடயத்தில் ஆழமாகப் பிளவுபட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினார்கள் ((லாபி சூழ்ச்சியைப் போல தேர்தல் அரசியல் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கான மேலதிக சான்றாகும்). இரண்டு பாலஸ்தீனிய பிரதிநிதிகளும் முன்னாள் யூதரான ஆங்கில இலக்கியப் பேராசிரியர் எட்வர்ட் பிளிஸ் ரீட்டும், பாலஸ்தீனியர்களைப் பற்றிய எதிர்மறையான பிரச்சாரத்தை மறுத்து, உண்மையான களமட்ட நிலைமையை முன்வைத்தனர். பாலஸ்தீனத்தில் இருந்த ரீட், கிங்-கிரேன் ஆணைக்குழு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் பாலஸ்தீனியர்களின் எண்ணங்களை குறிப்பிட்டார். அவர்களின் முயற்சிகள் சியோனிச சார்பு உணர்வை சமாளிக்க போதுமானதாக இருக்கவில்லை, ஆனால் "யூத மக்களுக்கான ஓர் தேசிய இல்லத்தை பாலஸ்தீனத்தில் நிறுவுவதற்கு ஆதரவானதாக" தீர்மானத்தை மாற்ற முடிந்தது. எண்ணெய் மற்றும் கொள்கை கிங்-கிரேன் ஆணைக்குழுவும் (ஆச்சரியமற்ற வகையில்) "முழு சிரியாவிற்கும் ஒரே ஆணையை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் கேட்கப்பட வேண்டும்" என்று பரிந்துரைத்தது. ஆணையாளர்கள் நேர்மையானவர்களாகவும் அவர்கள் தீர்மானங்களை எடுப்பதில் தார்மீகக் கண்ணோட்டத்தை எடுத்ததாகவும் தெரிகிறது, ஆனால் புவிசார் அரசியல் பரிசீலனைகள் அவர்களின் மனசாட்சியின் மீது தடையாக இருக்கவில்லையா என்று ஆச்சரியப்படுத்துகின்றது. 1919 ஆம் ஆண்டில், நியூயோர்க் ஸ்டாண்டர்ட் ஆயில் (சோகோனி, பின்னர் மொபில்) மற்றும் நியூ ஜெர்சி ஸ்டாண்டர்ட் ஆயில் (எஸ்ஸோ, பின்னர் எக்ஸான்) ஆகிய நிறுவனங்கள் "மெசப்பதேமியா-பாலஸ்தீனம்" பகுதியில் பெட்ரோலிய சலுகைகளுக்கு உரிமை கோர முயன்றன, ஆனால் பிரிட்டன், மத்திய கிழக்கில் முக்கிய சக்தியாக இருந்ததுடன், இரண்டாம் உலகப் போரின் இறுதி வரை அவர்களைத் தடுத்தது. சோகோனி, எஸ்ஸோ, கல்வ் ஆயில் மற்றும் கலிபோர்னியா ஸ்டாண்டர்ட் ஆயில் (சோகல்) ஆகிய நிறுவனங்கள் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் களங்களை சுரண்ட ஆரம்பித்தமையால், 1928 வரை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மத்திய கிழக்கில் ஊடுருவத் தொடங்கவில்லை. பல்வேறு அரபு நாடுகளின் ஆட்சியாளர்களின் நல்லெண்ணத்தில் தங்கியிருந்த இந்த பெட்ரோலிய நலன்கள், இப்பகுதிக்கான வெளியுறவுத்துறையின் நிகழ்ச்சி நிரலை வகுத்தன. எனவே, யூத தாயகம் அமைப்பதற்கு எதிராக வெளியுறவுத் திணைக்களம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. இந்த நிலைப்பாடு பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் ஆணை முடியும் வரை காணப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன், மிகவும் பலவீனமடைந்து, போர்க் கடன்களின் சுமையால், வெளிநாட்டு இராணுவப் பிரசன்னத்தைத் தக்கவைக்க முடியாமல், மத்திய கிழக்கில் தனது "பொறுப்புகளை" அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஆரம்பித்தது. 1939 காலப்பகுதியில், பாலஸ்தீனிய புரட்சியைத் தொடர்ந்து, பிரித்தானியர்கள் பாலஸ்தீனியர்களின் நியாயமான கரிசனங்களை ஆராயத் தொடங்கியதுடன், யூத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். அதிகரித்த நாஜி பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொண்டாலும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட குடியேற்றச் சட்டங்களால் விலக்கப்பட்ட யூத அகதிகள் பாலஸ்தீனத்திற்குள் வெள்ளமாக புகுந்ததுடன், 1946 ஆம் ஆண்டில் யூத குடித்தொகையை 500,000 ஆக உயர்த்தியது. இர்குன் த்ஸ்வாய் லியூமி (Etzel) மற்றும் லெஹுமெய் ஹெருட் யிஸ்ரேல் (Lehi) போன்ற சியோனிச போராளிக் குழுக்கள் பாலஸ்தீனியர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் எதிராக பயங்கரவாத பிரச்சாரங்களை ஆரம்பித்ததுடன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரும்பான்மையான ஹகனா பிரிவினர் இணைந்தனர். பயங்கரவாதிகள் அமெரிக்கப் போர் உபரிப் பொருட்களைக் கொள்வனவு செய்வதால் (அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும்), பிரித்தானியர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும், பிராந்தியத்தைக் கைவிடுவதற்கு அவர்களை உந்துவதற்கும் இயலுமாகவிருந்தது. இது பிரிட்டிஷ் மூலோபாய நலன்களுக்கு இன்றியமையாத அரபு நாடுகளின் மக்களுடன் மோதலை ஏற்படுத்தாது என்பதால், ஒன்றிணைந்த ஒரே பாலஸ்தீனிய-யூத அரசை நிறுவுவதற்கு பிரித்தானியர்கள் விரும்பினர். அவர்கள் அரபு-யூத சகவாழ்வில் செல்வாக்கு செலுத்தும் நம்பிக்கையில், பாலஸ்தீனத்தை மேற்பார்வையிடுவதற்கு அமெரிக்க நிதி மற்றும் இராணுவ ஆதரவு அவசியம் என்று நம்பினர். எவ்வாறாயினும், யூத அகதிகள் பிரச்சினையை ஆராய்ந்த அமெரிக்க வழக்கறிஞர் ஏர்ல் G. ஹாரிசனின் பரிந்துரைகளை பின்பற்றி அமெரிக்க அரசாங்கம், மேலும் 100,000 நாஜி இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்த யூதர்களை பாலஸ்தீனத்திற்குள் அனுமதிக்குமாறு பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. இந்த அகதிகளில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது எடுத்துக் கொள்ளுமாறு அமெரிக்காவை வற்புறுத்த பிரிட்டிஷ் முயற்சித்தாலும் ஆனால் பலனளிக்கவில்லை. யூத தாயகத்தை நிறுவுவதற்கு நாஜி இனப்படுகொலையை பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்திய சியோனிஸ்டுகள், அமெரிக்காவில் அவர்களை மீள்குடியேற்றுவதை விட அவர்களின் இடமாற்றத்தை தாமதப்படுத்த விரும்பினர். போருக்கு முன்னர் சியோனிசத்தை எதிர்த்த அமெரிக்காவின் யூதர்கள் தொடர்பான அபிப்பிராயம், நாஜி இனப்படுகொலை காரணமாக கடினமாகி, பாலஸ்தீனத்தில் யூத தாயகத்திற்கு மிகவும் இணக்கமானது. சுயாட்சி அல்லது பிரிவினை பாலஸ்தீனக் கொள்கைக்காக அமெரிக்காவுடன் பகிரப்பட்ட பொறுப்பை நிலைநாட்டும் முயற்சியில் மற்றும் பாலஸ்தீனத்திற்குள் யூத குடியேற்றவாசிகளின் அதிகரித்த ஊடுருவலுக்கு அரேபிய எதிர்ப்பை எதிர்பார்த்து, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு கூட்டு விசாரணையை முன்மொழிந்தது. இந்த விசாரணைக்கு தலைமை தாங்குவதற்கான அமெரிக்க தீர்மானம், நிலைமையை ஒரு பரந்த யூத அகதிகள் பிரச்சினையாக வடிவமைத்து அரசியல் சியோனிசத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான ஒரு மூலோபாய நடவடிக்கையாகக் கருதப்படலாம். பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆங்கில-அமெரிக்க விசாரணைக் குழு 1946 ஜனவரியில் வாஷிங்டனில் கூடியது. கட்டாய பாலஸ்தீனத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை ஆராய்வதுடன், பிராந்தியத்தில் வசிப்பவர்களின் நல்வாழ்வை மதிப்பீடு செய்தல், அரேபிய மற்றும் யூத சமூகங்களின் பிரதிநிதிகளுடன் ஈடுபடுதல் மற்றும் கையில் உள்ள சவால்களுக்கான இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீடித்த தீர்வுகள் ஆகிய இரண்டிற்கும் முக்கியமான பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவற்றிற்கு அதன் பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டன. ஆங்கில-அமெரிக்க ஆணைக்குழு 100,000 யூத அகதிகளை உடனடியாக பாலஸ்தீனத்திற்குள் அனுமதிக்க பரிந்துரைத்ததுடன், இதனை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் வரவேற்றார். எவ்வாறாயினும், அவர் யூதர்களோ அல்லது பாலஸ்தீனியர்களோ ஆதிக்கம் செலுத்தாத, ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சுதந்திர அரசை பாலஸ்தீனத்தில் நிறுவுவது உள்ளிட்ட பிற பரிந்துரைகளை வரவேற்கவில்லை. பிரிட்டிஷ் துணைப் பிரதம மந்திரி ஹெர்பர்ட் மோரிசன் மற்றும் அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி எஃப் கிரேடி ஆகியோர் அடங்கிய புதிய கூட்டுக் குழு, பரிந்துரைகள் எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்தது. ஜூலை மாதம், அவர்கள் மாகாண சுயாட்சி திட்டம் என்று அழைக்கப்படுகின்ற மோரிசன்-கிரேடி திட்டத்தை அறிவித்ததுடன், இது ஐ.நா-வால் நியமிக்கப்பட்ட அறங்காவலரின் கீழான ஒரு சமஷ்டி பாலஸ்தீனத்தை உருவாக்குவதற்கும், சுயாட்சியான யூத மற்றும் பாலஸ்தீனிய பிராந்தியங்கள் மற்றும் ஜெருசலேம், பெத்லஹேம் மற்றும் நெகேவ் ஆகியவற்றுடன் அமைந்திருந்தது பாலஸ்தீனியர்கள் இந்த திட்டத்தை நிராகரித்தனர், அதற்கு பதிலாக யூத சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதி செய்யப்படும் ஓர் ஒற்றை பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தனர். சியோனிஸ்டுகள் அதை முற்றிலுமாக நிராகரித்து, பாலஸ்தீனத்தைப் பிரிவிடுவதற்கான புதிய திட்டத்தை விரும்பினர். ஜனாதிபதி ட்ரூமன் ஆரம்பத்தில் வெளியுறவுத் திணைக்களம் ஆதரவளித்த இந்த திட்டத்தை வரவேற்றார், ஆனால் சியோனிச உரையாடல் அதற்கு எதிராக ஒரு ஆவேசமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. ட்ரூமன் மோரிசன்-கிரேடி தீர்வைத் தான் விரும்புவதாக தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டாலும், அவர் சியோனிச உரையாடலை எதிர்த்துப் போராடுவதை வெளியுறவுத் திணைக்களத்திற்கு விட்டுட்டு பாலஸ்தீனப் பிரச்சினையிலிருந்து பின்வாங்கினார். அவரது நிலைப்பாட்டை பாதித்த ஒரு பிரச்சினை வளர்ந்து வரும் பனிப்போரின் மத்தியில், அமெரிக்கா ஐரோப்பிய பாதுகாப்பில் கவனம் செலுத்தியதுடன், பாலஸ்தீனத்திற்காக பணத்தை செலவிடலாம் ஆனால் படையினரை அல்ல என்ற புவிசார் அரசியலில் இருந்து உருவாகியிருந்தது. மோரிசன்-கிரேடி தீர்வுக்கு பாலஸ்தீனியர்களோ அல்லது சியோனிஸ்டுகளோ உடன்பட மாட்டார்கள் என்பதால், படையினரே அதனைச் செயற்படுத்த வேண்டும், குறிப்பாக சியோனிச பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும். பிரிவிடல் இப்போது பிரிட்டன் சியோனிசப் படைகளுடனான மோதலில் இருந்து படையினரை அகற்றுவதற்கு வசதியாக பாலஸ்தீனப் பிரச்சினையை ஐ.நா.வுக்கு இடம்மாற்றுவதற்கு முயன்றது. அமெரிக்க அரசாங்கம் ஓர் பிரிவிடல் திட்டத்தை ஆதரித்ததுடன், 181 தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ஐ.நா உறுப்பினர்களை வற்புறுத்தியது, இது குடித்தொகையில் 31%ஆக இருந்த யூதர்களுக்கு 55% பாலஸ்தீனத்தை வழங்கியது. மே 14, 1948 இல், ட்ரூமன் அதன் சுதந்திரப் பிரகடனத்திற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு புதிய இஸ்ரேல் அரசை அங்கீகரித்தார். சியோனிச அரசு பாலஸ்தீனத்தின் மேலும் 22% பகுதியை இணைத்துக்கொண்டு, 750,000 பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்த போதிலும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் யூத நிறவெறி அரசை தொடர்ந்து ஆதரித்தன. அந்த நேரத்தில், இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் USD 323 மில்லியனாகும் (இன்று 4.0 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமனானது). புதிய அரசாங்கம் பாலஸ்தீனியப் பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலமும், பாலஸ்தீனியச் சொத்துக்களை அபகரித்ததன் மூலமும் கணிசமான செல்வத்தைப் பெற்றது. 2008 இல், McMaster பல்கலைக்கழகத்தின் அதிஃப் கபுர்சி, பாலஸ்தீனியர்களிடம் இஸ்ரேல் கொள்ளையடித்த்த 1948 மதிப்பில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 2008 மதிப்பில் கிட்டத்தட்ட 300 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிட்டார். ஆயினும்கூட, அமெரிக்கா இஸ்ரேலுக்கு 135 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இன்று 1.684 பில்லியன் டொலர்களுக்கு சமனானது) மூன்று ஆண்டுகளுக்கு உதவியாக வழங்குவதற்கு உத்தரவாதமளித்தது. இது வாஷிங்டனில் இருந்து டெல் அவிவ் வரை பாய்ந்த பண உதவி வெள்ளத்தில் முதல் துளிகள் என்பதை நிரூபித்தது. அடுத்த 72 ஆண்டுகளில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு 318 பில்லியன் அமெரிக்க டொலர்களை (பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்டது) உதவியாக வழங்கியது. 2023 ஆம் ஆண்டளவில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இராணுவ உதவியாக வழங்குகிறது. இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு அமெரிக்க ஆதரவு பின்ணனி இன்றியமையாததாக நிரூபிக்கப்பட்டது. உடைக்கப்படாத அமெரிக்க பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவு அதன் இருப்புக்கும், அதன் இராணுவ சாகசங்கள் மற்றும் பாலஸ்தீனத்தில் எஞ்சியிருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, அத்துடன் சிரிய மற்றும் லெபனான் பிரதேசங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பிற்கும் உத்தரவாதம் அளித்துள்ளது. இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. https://www.virakesari.lk/article/173761
  23. Dhanush-ன் Captain Miller-ஐ பாத்தவங்க சொல்லும் Review என்ன? படம் பிடித்திருக்கிறதா?
  24. Published By: RAJEEBAN 13 JAN, 2024 | 07:50 PM சீனாவினால் பிரச்சினைக்குரியவராக கருதப்படுபவரும் தாய்வானின் இறைமை ஆதரவு ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய்சிங் தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். 2020 முதல் தாய்வானின் ஜனாதிபதியாக பதவிவகிக்கும் லாய்சிங் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சீனாவின் கொள்கைக்கு எதிராக இறைமையுள்ள தாய்வானையும் தேசிய அடையாளத்தையும் முன்னிறுத்தும் அரசாங்கம் தொடர்ந்து தாய்வானை ஆட்சிபுரியும் நிலையை உருவாக்கியுள்ளது. லாய்சிங்கிற்கு 40 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. சீனாவுடனான எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் 19.5 மில்லியன் மக்கள் இன்று வாக்களித்துள்ளனர்.. ஜனாதிபதி வில்லியம் லாய் பிரச்சினைகளை உருவாக்குகின்றார் என தெரிவித்துள்ள சீனா அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173895
  25. Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 03:49 PM நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது நீண்டகால காதலரான கிளார்க் கெய்ஃபோர்டை இன்று சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு 43 வயதான ஜெசிந்தா ஆர்டெர்னும் 47 வயதான கிளார்க் கெய்ஃபோர்டும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமணம் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றையதினம் நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் 325 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகிய ஹாக்ஸ் பே பகுதியில் திருமணம் நடைப்பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து காதலித்துவந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார்கள். ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017 ஆம் ஆண்டில் 37 வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது உயரிய பதவியை பெற்ற உலகின் இளைய பெண் தலைவர் என்று அறியப்பட்டார். பதவியேற்று ஒரு வருடம் கழித்து, அவர் குழந்தை பெற்றுகொண்டபோது, பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றுகொண்ட இரண்டாவது பெண் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும், அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் தனது குழந்தையுடன் அவர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173874

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.