Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20104
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. இலங்கை நெருக்கடி: "அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை" - ஒரு போராட்டக்காரரின் கதை எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நூறு நாட்களைக் கடந்து விட்ட இலங்கையின் காலி முகத்திடல் போராட்டத்தில் அரசுக்கு எதிரான முழக்கங்களைக் கேட்கலாம். ஆனால் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கும் பலரது வேதனைக் குரல்கள் வெளியே அதிகமாகக் கேட்பதில்லை. அப்படியொரு குரல்தான் ரிஃபாஸ் முகமதுவுடையது. "அன்று நான் சாப்ட்வேர் இன்சினீயர், இன்று உள்ளாடை கூட இல்லாமல் நிற்கிறேன்" என்கிறார் அவர். காலி முகத்திடலில் அதிபர் செயலகத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் இருந்தபடி இவர் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வருவோரும், செய்தி சேகரிக்கச் செல்வோரும் ஒருமுறையேனும் இவரைச் சந்தித்திருப்பார்கள். "முதல்நாள் நான் போராட்டத்துக்கு வந்தபோது இங்கு பெரிய கூட்டம் எதுவும் இல்லை. அதிபர் செயலகத்தின் வாயிலில் மேடையும் கிடையாது. காவல்துறையின் தடுப்புக் கம்பிகளைப் பயன்படுத்தி போராட்டத்தைத் தொடங்கினோம்" என்கிறார் ரிஃபாஸ் முகமது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் - யாருக்கு வெற்றி சாத்தியம்? 'அதிகரிக்கும் கோபம்; ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்' - இலங்கை போராட்டத்தில் செய்தியாளர் கண்டவை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்? உதவிகள் மூலமாகக் கிடைக்கும் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டிகள் போன்றவற்றை போராட்டத்தில் வருவோருக்கு விநியோகிக்கும் பணிகளை தனது குழுவினரோடு சேர்ந்து மேற்கொண்டு வருகிறார் இவர். "கூட்டம் அதிகமாக இருக்கும் சில நேரங்களில் எங்களுக்கே உணவு கிடைக்காத நிலை ஏற்படும். அப்போதெல்லாம் பசியோடு படுத்துறங்கும் நிலைதான் ஏற்படுகிறது" காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் தரையில் ஓரிரு அங்குல உயரத்திலான பலகைகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் இடைவெளிகள் இருக்கும். வெயிலின் போது கடுமையான வெப்பத்தையும், மழை நேரத்தில் கடுங் குளிரையும் தாங்க வேண்டியிருக்கும். "போராட்டம் தொடங்கிய முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக இங்கு கூடாரம் கூடக் கிடையாது. உணவும் தண்ணீரும் கொடுப்பதற்கு யாரும் கிடையாது. கிடைத்ததை உண்டபடி முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தோம். உடைமைகளைக் கைகளில் பிடித்தபடி வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டேதான் போராட்டம் நடத்தினோம்" என்கிறார் ரிஃபாஸ் முகமது. காலி முகத்திடல் போராட்டம் அவருடைய வாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. அருகிலேயே குளிக்க வேண்டும். உடைகளைக் காய வைக்க வேண்டும். கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை. "எனது வீடு கொழும்பு நகரில் வசதியானவர்கள் வாழும் இடத்தில் உள்ளது. குளிரூட்டப்பட்ட அறையில் கை நிறைந்த சம்பளத்துடன் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். இப்போது காலில் போட நல்ல செருப்புகூட இல்லை. எனது செல்போன் உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. உள்ளாடைகளும் மாற்று ஆடைகளும்கூட இல்லை" என்கிறார் ரிஃபாஸ். போராட்டத்தில் பங்கேற்பது தெரியவந்ததால் ரிஃபாஸின் நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டது. காவல்துறையினர் வீட்டுக்குத் தேடி வருவதால் அங்கும் நெருக்கடி ஏற்படுவதாக அவர் கூறுகிறார். அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகிய பிறகு போராட்டக் களத்தில் கூட்டம் குறைவாகவே தென்படுகிறது. நீண்ட வரிசையில் உணவுக்காகக் காத்திருப்போர் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். உணவுப் பொருள்களும் உதவிகளும் குறைந்திருக்கின்றன என்பதை போராட்டக்காரர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ரிஃபாஸ் முகமது குழு நிர்வகிக்கும் கூடாரத்துக்கு நாம் சென்றபோது அங்கு வழக்கமாக விநியோகிக்கப்படும் தண்ணீர் பாட்டில்களும், உணவுப் பொட்டலங்களும் இல்லை. இதற்கு முன்பு அப்படி நேர்ந்ததில்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். எனினும் சில மணி நேரங்களுக்குப் பிறகு தண்ணீர் பாட்டில்கள் மட்டும் வந்து சேர்ந்தன. "நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்றுதான் போராட்டம் நடத்துகிறோம். தொடர்ந்து முழக்கங்களை எழுப்புவதால் எங்கள் எங்களது தொண்டை பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலை கூட ஏற்படும். அப்போதும் ஏதாவது மருந்து, நிவாரணிகளை எடுத்துக் கொண்டு முழக்கங்களைத் தொடருவோம். போராட்டத்தின்போது கண்ணீர்ப்புகைக் குண்டு பட்டு சில நாள்கள் மருத்துவமனையிலும் இருக்க நேர்ந்தது." ரிபாஸ் அகமதுவைப் போலவே காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். பலருக்கும் நூறு நாட்களுக்கும் மேலாக இதுவே வசிப்பிடம். சிலர் காய்கறிகளை வாங்கி களத்திலேயே சமைத்து உண்கிறார்கள். சிலர் வெளியில் இருந்து வரும் உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தில் ரிபாஸ் அகமது உள்ளிட்ட போராட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோட்டாபயவைப் போலவே ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டுக்கு நல்லது செய்யப் போவதில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடும் பலருக்கு தங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும், நாட்டிலும் எதிர்காலத்தை நோக்கிய அச்ச உணர்வு இருக்கிறது. எப்போது போராட்டத்தை முடித்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள் என்று கேட்டால், "எங்களிடம் கோரிக்கைகள் இருக்கின்றன. அவை நிறைவேற்றப்பட்டு நாட்டுக்கு நல்லது நடக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும்" என்கிறார் ரிஃபாஸ் முகமது. https://www.bbc.com/tamil/sri-lanka-62195373
  2. இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் - என்ன சொன்னார் ஜெய்சங்கர்? 19 ஜூலை 2022 இலங்கையில் தற்போது நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பிரதிபலிக்குமா என்று ஒப்பிடுவது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் விவாதிப்பதற்காக சிறப்புக் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), டி.ஆர். பாலு, எம்.எம். அப்துல்லா (திமுக), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), எம்.தம்பிதுரை (அதிமுக), வைகோ (மதிமுக), கேசவ ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி), ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ் கட்சி) விஜய்சாய் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர், இலங்கை தற்போது மிகவும் தீவிர நெருக்கடியை எதிர்கொண்டு வருதால் அங்குள்ள அசாதாரண சூழலை இந்திய எம்பிக்களிடம் விளக்குவதற்காக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்தியாவுக்கு வெகு அருகே உள்ள நாடு இலங்கை என்பதால் அங்கு ஏற்படும் விளைவு குறித்து இயல்பாகவே இந்தியா கவலை கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இலங்கையில் உள்ள நெருக்கடி, இந்தியாவிலும் ஏற்படுமா என்று அவரிடம் சில கட்சிகளின் தலைவர்கள் கேட்டபோது, அத்தகைய ஒப்பீடுகள் தவறான தகவல் அடிப்படையில் வருபவை என்று பதிலளித்தார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80க்கும் கீழே சரிந்த நாளில் இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எம்.பிக்கள் சிலர் அந்நாட்டின் நிலை தங்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினர். இதைத்தொடர்ந்து இந்திய அரசு சார்பில் இரு வகை செயல்முறை விளக்க காட்சி காண்பிக்கப்பட்டது. ஒன்று, அண்டை நாட்டுடனான இந்தியாவின் நல்லுறவு கொள்கை அடிப்படையிலும் மற்றொன்று இலங்கைக்கு இந்தியா செய்யும் அரசியல் ரீதியிலான உதவிகளை உள்ளடக்கியதாகவும் இருந்தன. பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியலை வெளியிட்ட இந்திய மக்களவை செயலகம் தடைசெய்யப்பட்ட வார்த்தைகள்: சொற்களைப் பார்த்து அஞ்சுகிறதா அரசு? நாடாளுமன்ற தேசிய சின்னத்தில் கோரைப் பல் சிங்கங்கள்: மாறுபடும் வடிவமைப்பும் விமர்சனமும் இலங்கைக்கு அசாதாரண உதவி இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உதவி வழங்கியுள்ளதாகக் கூறிய ஜெய்சங்கர், வேறு எந்தவொரு நாடும் இந்தியா செய்து வருவது போன்ற உதவியை இலங்கைக்கு வழங்கியதில்லை என்று தெரிவித்தார். இலங்கைக்கு கடன் தரும் சர்வதேச செலாவணி நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் அந்நாட்டுக்காக இந்தியா பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அதன் நெருக்கடி தீவிரமாகியிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அந்த நாட்டில் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 இந்த நிலையில், இலங்கை நெருக்கடி தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இந்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளும் கட்சியான திமுக, அதன் கூட்டணியில் உள்ள மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். அதற்கு ஏற்ப இந்த கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கிறது மத்திய அரசு. படக்குறிப்பு, டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் இந்த கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர். பாலு பேசும்போது தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் உதவி குறித்து விளக்கினார். 18-05-2022 அன்று சென்னை துறைமுகத்தில் இருந்து முதல் பேட்ச் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. அக்கப்பல் 9000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர், 25 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள் என 45 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது. நிவாரணப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க இலங்கை அரசு கால அவகாசம் கோரியதால், இரண்டாம் பேட்ச் கப்பல் 22-06-2022 அன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 14,700 மெட்ரிக் டன் அரிசியும், 250 மெட்ரிக் டன் பால் பவுடரும் 39 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்களும் என 65 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது, கடைசி பேட்ச் ஆக 16,300 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 45 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள் ஜூலை 23ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். அதன் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் ஆகும். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வழியாக இப்பொருட்கள் இலங்கை அரசிடம் விநியோகத்திற்காக ஒப்படைக்கப்படும் என்று டி.ஆர். பாலு கூறினார். இதேபோல, இலங்கை நெருக்கடியால் அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய வரும் இலங்கையர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாநில அரசு உதவி வருவதாகவும் அவர்களை மண்டபம் தற்காலி முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாலு கூறினார். 1983 முதல் 2009 வரை இலங்கையில் நீடித்த போர்ச்சூழலில் இருந்து பாதுகாப்பு வேண்டி வந்த இலங்கைத் தமிழர்கள் சுமார் 1 இலட்சம் பேர் தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். 39 ஆண்டுகளாக அவர்களுக்குப் பாதுகாப்பும் உதவியும் அளித்துத் தமிழ்நாடு விருந்தோம்பி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்திய மீனவர் பிரச்னை கடந்த 11 ஆண்டுகளில், 3,743 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,725 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 18 மீனவர்கள் இன்னமும் நாடு திரும்புவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்படுவதாலும், இயற்கைச் சூழல்களாலும் சீரமைக்க முடியாத அளவுக்குப் படகுகள் சேதமடைந்து நிரந்த வாழ்வாதார இழப்பு ஏற்படுகிறது. இன்றைய தேதி வரை, 91 தமிழ்நாட்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையில் உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இந்தப் படகுகளை மீட்பதற்குத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். படக்குறிப்பு, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் சித்ரவதை/தாக்குதல்/கைது ஆகியவற்றை அனுபவிப்பதைக் குறைக்க இரு தரப்பு உறவுகள் குறித்து உயர்மட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன. மீன்வளத் துறை, மீனவர்கள் குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு கைதின்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இவ்வகையில், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பல சிக்கல்களையும் சரிசெய்ய 25-03-2022 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டப்பட்டது. அரசுத் துறைகள் மூலமாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் மீறி, இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகள் பிடிக்கப்படுவது தொடரவே செய்கிறது. இது மீனவர்களின் பெருங்கவலையாக உள்ளது. ஆகையால், இந்திய பிரதமர் இலங்கை அரசிடம் பேசி நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும் படகுகள் கைப்பற்றப்படுவதற்கும் முடிவு காணவேண்டும் என்றும் டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டார். கச்சத்தீவை மீட்க கோரிக்கை இந்திய அரசு 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்பதே இந்தப் பிரச்னைக்கு ஒரே நிரந்தரத் தீரவாக அமையும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் பாலு கூறினார். 13ஆவது திருத்தம் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திடும் அதே வேளையில், அங்கு நிலவும் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, தமிழர்கள் மிகுதியாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிக தன்னாட்சியையும் அதிகாரப் பகிர்வையும் வழங்கும் வகையில் இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கையை உண்மையான அக்கறையுடன் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டார். தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசும்போது, "இலங்கை இறந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். நமது நிலைமை மோசமாக இல்லை, கையிருப்பு சிறப்பாக உள்ளது என்று நிதிச் செயலாளர் கூறினார். சீனாவின் கடன் திட்டம் மூலமாக மட்டுமின்றி பல இடங்களில் இலங்கை கடன் பெற்றுள்ளது. எனவே, சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) தலையீடின்றி அந்நாட்டுக்கு உதவ வேறு வழியில்லை. அந்த வகையில் இந்தியா உரிய வகையில் உதவும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார். ஆனால், இலங்கை நெருக்கடி பிரச்னை நீங்கலாக திமுக முன்வைத்த பிற பிரச்னைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த கருத்தும் கூட்டத்தில் பகிரப்படவில்லை. https://www.bbc.com/tamil/india-62228002
  3. தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் பிரச்னை தீருமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது மாநில அரசு. ஆனால், மின் துறையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதா? தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2014ஆம் ஆண்டு டிசம்பரில் கடைசியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது (2017ஆம் ஆண்டில் மிகச் சிறிய அளவில் மின் கட்டணம் திருத்தப்பட்டது). ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் வருடாந்திர இழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அவற்றின் ஒட்டுமொத்த இழப்பும், அந்த இழப்பை ஈடுகட்ட வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையும் தொடர்ந்து அதிகரித்துவந்தன. 2011 - 12ல் 18,954 கோடி ரூபாயாக இருந்த மொத்த இழப்பு தற்போது 1,13,266 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு, மின் வாரியத்தின் இழப்பை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். 2021ஆம் ஆண்டிலிருந்துதான் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதால், மின்வாரியம் தனது இழப்புகளைக் கடன் வாங்கியே சமாளித்து வந்தது. ஆகவே, மின் வாரியத்தின் மொத்த கடனானது 1,59,823 கோடி ரூபாயாக இருக்கிறது. இதற்கான வட்டித்தொகையாக மட்டும் வருடத்திற்கு 16,511 கோடி ரூபாயை மின்வாரியம் செலுத்தி வருகிறது. மின் கட்டண உயர்வுக்கான காரணம் என்ன? இந்தியா முழுவதுமே மின் வாரியங்கள் பெரும்பாலும் மிக நெருக்கடியான நிதி நிலையுடனேயே போராடி வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டத்தின் கீழ், மின் வாரியங்களின் கடன் தொகையில் 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு 2016ல் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது. 2017லிருந்து தற்போதுவரை 22,825 கோடி ரூபாய் மட்டுமே மின் வாரியத்தின் கடனுக்காக அளித்துள்ளது. மீதமுள்ள கடன் தொகையோடு மின்வாரியம் தொடர்ந்து போராடி வருகிறது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 மின் வாரியங்களை பொறுத்தவரை ஊரக மின் வசதிக் கழகம் (REC), மின்சார நிதிக் கழகம் (PFC) ஆகியவற்றிடமிருந்து கடன்களைப் பெறுகின்றன. தற்போது இந்த நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற, ஒவ்வொரு வருடமும் மின் கட்டணத்தைத் திருத்தம் செய்ய வேண்டுமென்பதை நிபந்தனை ஆக்கியுள்ளது. அதானிக்கு மின் திட்டம்: கோட்டாபய, மோதியின் அழுத்தம் பற்றி பேசிய அதிகாரி ராஜினாமா அணில் ஏறினால் உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து விடுமா? இந்தியாவில் மின்வெட்டு பிரச்னை: நிலக்கரி தட்டுப்பாடுக்கு காரணம் என்ன? அதேபோல, மத்திய அரசு மின் விநியோகத்தை வலுப்படுத்தும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் 10,793 கோடி ரூபாய் மானியத்தைப் பெற வேண்டுமானாலும் ஆண்டு தோறும் மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல, வணிக ரீதியில் செயல்படும் வங்கிகள் அரசின் மின் பகிர்மான நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும்போது, அந்த நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் மின் கட்டணத்தைத் திருத்தியதற்கான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 இந்த நிதி சிக்கலின் பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு நுகர்வோருக்கான மின் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. அதன்படி 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மாதத்திற்கு ரூ. 27.50 அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 800லிருந்து 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 565 ரூபாய் மாதம் அதிகரிக்கப்படும். அதேபோல வணிக ரீதியில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, செலவைக் குறைப்பதற்காக மற்றொரு திட்டத்தையும் மின் வாரியம் முன்வைத்துள்ளது. அதாவது, தற்போது வீட்டுப் பயன்பாட்டிற்கான மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், மிக வசதியானவர்களும் இந்த இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களில் யாராவது தாமாக முன்வந்து இந்த இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பினால், விட்டுக்கொடுக்கலாம். அதற்கான விரிவான பிரச்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் துவங்கவுள்ளது. அதிருப்தியில் பொறியாளர் சங்கம் ஆனால், இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்கிறார் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி. "முதலில் மின் வாரியத்திற்கு இந்தக் கடன் எப்படி வந்தது என்பதை வெளிப்படையாகப் பேச வேண்டும். மின்சார வாரியத்தின் பல தவறான நடவடிக்கைகளால்தான் இவ்வளவு பெரிய அளவில் கடன்கள் ஏற்பட்டன. குறிப்பாக, தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆகியவை banking என்ற பெயரில் செய்யும் முறைகேடுகள் இதில் மிக முக்கியமானது," என்கிறார் காந்தி. அதாவது, காற்றாலையைச் சொந்தமாக வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக உள்ள காலங்களின் மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்பனை செய்கின்றன. ஆனால், மின்சாரம் அதிகம் தேவைப்படும் கோடை காலங்களில் மின் வாரியத்திடமிருந்து மின்சாரத்தை வாங்கி அந்தக் கணக்கை நேர் செய்கின்றன. ஆனால், கோடை காலத்தில் மின் வாரியம் ஒரு யூனிட் 17 முதல் 19 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகிறது. ஆனால், காற்றாலை மின்சாரத்தின் விலை 3 -4 ரூபாய்தான். மின் வாரியத்திற்கு மின்சாரம் தேவைப்படாத காலத்தில் மின்சாரத்தைக் கொடுத்துவிட்டு, மின்தட்டுப்பாட்டு காலத்தில் பெறுவது எந்த வகையில் சரி?" என்கிறார் காந்தி. தமிழ்நாட்டில் வீட்டு நுகர்வோருக்கு கொள்முதல் விலையைவிட குறைவான விலைக்கே மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல, விவசாய பம்ப் செட்களுக்கான மின்சாரமும் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. வணிகப் பிரிவினருக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கும் மின்சாரம் கொள்முதல் விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் லாபம், மேலே சொன்ன செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தொழிற்சாலைகள் மின் வாரியத்திடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுப் பயன்படுத்துவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதனால், அவற்றிலிருந்து கிடைக்கும் லாபமும் குறைந்துவிட்டது. இதில் சில நிறுவனங்கள் முறைகேடுகளைச் செய்வதாகச் சொல்கிறார் காந்தி. "தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரத்தை வாங்கினால் மின்வாரியத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தியே அந்த மின்சாரம் கடத்தப்படுவதால், மின்வாரியத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பல தொழிற்சாலைகள் தங்களுக்குச் சொந்தமாக மின் உற்பத்தி நிலையங்கள் இருப்பதாகக் கூறி, மின் வாரியத்திடமிருந்து மின்சாரம் பெறுவதில்லை. ஆனால், பல தொழிற்சாலைகளுக்கு சொந்தமாக மின் உற்பத்தி ஆலைகள் தொழிற்சாலையிலேயோ, அவற்றுக்கு அருகிலேயோ இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் தனியார் ஆலைகளின் பங்குகளை வாங்கிக்கொண்டு அந்த ஆலைகளைத் தமது ஆலைகளாகக் காட்டி, மின்வாரியத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதிலிருந்து தப்புகின்றன. ஆகவே, சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் (Captive plants) எவை என்பது குறித்து மின்வாரியம் தெளிவான விதிகளை வகுக்க வேண்டும்." என்கிறார் காந்தி. அதேபோல, தற்போது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் ஒரு யூனிட் மூன்று ரூபாய் என்ற அளவுக்கு இருக்கும்போது, சில வருடங்களுக்கு முன்பாக ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒரு யூனிட் ரூ. 7.01 விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது குறித்தும் காந்தி கேள்வி எழுப்புகிறார். சந்தையில் மிகக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்போது, ஒரு நிறுவனத்திடமிருந்து 25 ஆண்டுகளுக்குக் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோல, 2013- 2014ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மின்தேவை இருப்பதாகக் காட்டி, ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ. 7 -9 விலையில் பல ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கப்பட்டது. ஆனால், மின் தேவை அந்த அளவுக்கு இல்லை என்பதால், நிலைக் கட்டணமாக (வாங்குவதாகச் சொன்ன மின்சாரத்தை வாங்காவிட்டால் செலுத்த வேண்டிய கட்டணம்) 3,500 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது என்கிறார் காந்தி. இத்தனைக்கும் அந்தத் தருணத்தில் எக்சேஞ்சில் ஒரு யூனிட் ரூ. 3.09க்குக் கிடைத்தது என்பதை சுட்டிக்காட்டுகிறார் காந்தி. மின் வாரியத்தின் கடன் ஏகத்திற்கும் உள்ள நிலையில், தற்போதைய கட்டண உயர்வால் மின் வாரியத்திற்கு கூடுதலாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதைப் பற்றி மின்சாரத் துறை அமைச்சர் ஏதும் சொல்லவில்லை. "இந்தக் கட்டண உயர்வின் மூலம் மின் வாரியத்திற்குக் கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்குமெனக் கருதலாம். ஆனால், மின் வாரியத்தின் கடன் ஒன்றே கால் லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் நிலையில், இனி வருடம் தோறும் மின் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம்" என்கிறார் அவர். இவை தவிர, மின்சாரத்தின் கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒவ்வொரு அமைப்பும் மாற்றி மாற்றிச் சொல்வதாகச் சொல்கிறார் காந்தி. மின் வாரியம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசம் ஒரு யூனிட்டிற்கு 1.26 ரூபாயாக இருக்கிறது. ரேட்டிங் ஏஜென்சிகள் இந்த வித்தியாசத்தை ஒரு யூனிட்டிற்கு 74 பைசா என மதிப்பிட்டுள்ளன. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி விலை வித்தியாசம் ஒரு யூனிட்டிற்கு ரூ. 2.14. இதில் எந்த புள்ளி விவரம் உண்மை எனக் கேள்வியெழுப்புகிறார் காந்தி. தமிழ்நாடு மின்வாரியத்தைப் பொறுத்தவரை 2024-25க்குள் மின் இழப்பை 11.92 சதவீதமாகக் குறைப்பது, மின்சார விலையில் உள்ள வித்தியாசத்தை பூஜ்யமாக்குவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பெரிய அளவில் இழப்பைச் சரிசெய்ய முடியுமென மின் வாரியம் கருதுகிறது. https://www.bbc.com/tamil/india-62225104
  4. இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் - யாருக்கு வெற்றி சாத்தியம்? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SRI LANKA PARLIAMENT இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 20) முற்பகல் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று தமது வேட்பு மனுவை, நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்தனர். இதற்கமைய, இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்காக மூன்று வேட்பாளர்களின் பெயர்கள், நாடாளுமன்றத்தில் இன்று (19) முன்மொழியப்பட்டன. வேட்பு மனு தாக்கலுக்காக நாடாளுமன்ற கூட்டத் தொடர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய போதே இந்த பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதன்படி, தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. படக்குறிப்பு, டளஸ் அழகபெரும ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமவின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததுடன், அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார். படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார். படக்குறிப்பு, அநுர குமார, தலைவர் - தேசிய மக்கள் சக்தி இந்த நிலையில், ஜனாதிபதி தேர்வுக்கான இரகசிய வாக்கெடுப்பு புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சபையில் அறிவிக்கப்பட்டது. போட்டியிடாமலேயே களத்தில் இருந்து விலகிய சஜித் இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட எதிர்பார்த்திருந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். எனினும், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ராஜபக்ஷ குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமவிற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளது. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிற்கு, ராஜபக்ஷ குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது ஆதரவை வழங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு, தற்போது அந்த கட்சி மாத்திரமே ஆதரவை வழங்கியுள்ளது. இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன? குலுக்கல் முறையில் இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? சட்டம் கூறுவது என்ன? இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, எந்தவொரு வேட்பாளரும் ஆதரவு வழங்காது. நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மெளனம் காக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இதுவரை தீர்மானத்தை எட்டவில்லை. மேலும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இன்று வரை சஜித் பிரேமதாஸவுடனேயே கூட்டணியாக செயற்பட்டு வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தீர்மானத்தை தாமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார். ஐக்கிய மக்கள் சக்தி, டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியாக செயற்படும் தாமும் அதற்கு ஆதரவாக இருப்பதாக அவi; கூறுகின்றார். நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இதுவரை தமது நிலைப்பாட்டை வெளிபடையாக அறிவிக்காத நிலையில், சில கட்சிகள் மாத்திரமே நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. எம்பிக்கள் கருத்து ஜனாதிபதியை தேர்வு செய்வது தொடர்பில், சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிபிசி தமிழ் பேசியது. ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், ''மக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றோம். தலைசிறந்த நோக்காக கொண்டு செயற்படுகின்ற அரசாங்கமொன்று தேவைப்படுகின்றது. அதனால், எந்தவித பிரச்சினையும் கிடையாது. நாங்கள் பொதுவான நிகழ்ச்சி நிரலொன்றை நடைமுறைப்படுத்துகின்றோம். போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் கடந்த காலங்களில் வெளியிட்ட பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. 19வது திருத்தம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை கூற வேண்டும். அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஒன்றிணைந்த திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதனாலேயே இந்த தீர்மானத்தை எடுத்தோம். உறுதியாக நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்படுவோம். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். அதனை தெரிந்துக்கொண்டே நாங்கள் இந்த விடயத்தில் களமிறங்கினோம்," என தெரிவிக்கின்றார். இந்த போட்டியில் களமிறங்கியுள்ள டளஸ் அழகபெரும, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் என்பதுடன், பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆதரவு வழங்கி வருகின்றது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்திம வீரக்கொடி, ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார். ''மக்கள் எதிர்நோக்குகின்ற ஒன்று இருக்கின்றது. மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நிறைவேற்றக்கூடியவர்களின் கொள்கைகளை கொண்டவர் யார் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். மக்கள் எதிர்பார்க்காத ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்த நாம் ஆதரவு வழங்க போவதில்லை" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, ஹர்ஷன ராஜகருணா, ஐக்கிய மக்கள் சக்தி டளஸ் அழகபெரும, ஜனாதிபதி பதவியை ஏற்கும் பட்சத்தில், சஜித் பிரேமதாஸ பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, விஜித்த ஹேரத், மக்கள் சக்தி இதேவேளை, தேசிய மக்கள் சக்தி தமது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியமை குறித்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ''மொட்டு கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒருவரை முன்மொழிந்தனர். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள், மொட்டு கட்சியுள்ளவர்களை முன்மொழிந்தனர். அவர்கள் அவ்வாறே பிரித்துக்கொண்டார்கள். எனினும், நாட்டு மக்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மக்களின் எண்ணத்துடன் தற்போதே வெற்றி பெற்று விட்டோம்" என விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, ஆரோக்கியநாதன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு கட்சி) மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், சிஸ்டம் சேஞ்ச் நாட்டில் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அருண் ஆரோக்கியநாதன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''எதை செய்தேனும், ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமே இங்கு காணப்படுகின்றது. எனினும், இறுதியாக இவர்கள் எதிர்பார்க்க சிஷ்டம் சேர்ன்ஜ் இதுவா என்ற கேள்வி எழுந்து நிற்கின்றது. மொட்டு கட்சியின் விஞ்ஞானபனங்கள் தோல்வி அடைந்துள்ளது, இனி மொட்டு கட்சிக்கு வர முடியாது என சஜித் பிரேமதாஸ கூறி வந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களும் அதே விடயத்தை கூறி வந்தார்கள். எனினும், ரணில் விக்ரமசிங்க என்ற தனி நபரை தோற்கடிப்பதற்காக இன்று அனைவரும் கைக்கோர்க்கின்றார்கள் என்று சொன்னால், அது ஒரு தனிநபரின் ஆளுமை மீதான அச்சமா? இல்லையென்றால், அரசியல் காழ்ப்புணர்வா? என்ற கேள்வி எழுகின்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பிலான பூரண அறிவும், தூர பார்வையும் கொண்ட ஒருவர் இருந்தால் தான் நல்லது. நெருக்கடியான நேரத்தில் வலுவான தலைவர் ஒருவரே இருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நல்ல விடயங்களை சாதித்தார்கள். இதையடுத்து, தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்ககூடிய ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் எண்ணுகின்றார்களா? ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால், அவர்கள் கூறுவதை இவர் செவிமடுக்க மாட்டார் என்று யோசிக்கின்றார்களா? இப்படியே போனால், போராட்டக்காரர்கள் எதிர்காலத்தில், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தலையீடு செய்ய முயற்சிப்பார்கள். ஒவ்வொன்றுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். யாருக்கும் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திற்கு பிரதிநிதிகளை நியமித்ததற்கு பிறகு, எந்த நேரமும் மக்களை கேட்டு கேட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. நெருக்கடிகளை நாடு சந்திக்கும் போது, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். அது தான் உண்மையான தலைமைத்துவத்திற்கு அழகு. வேண்டாம் என கூறிய இடத்திலேயே தற்போது சென்றிருக்கின்றார்கள். மீண்டும் மொட்டு கட்சியே ஆதிக்கம் செலுத்த போகின்றது. அப்படி ஒன்றால், சிஸ்டம் சேஞ்ச் அங்கு இருக்கின்றது." என மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அருண் ஆரோக்கியநாதன் தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-62225113
  5. கஜானாவில இருந்ததையே காணேலயாம்!(2019 இன் பின்) இதுக்க 2009 இருக்குமோ?!🤭
  6. லலித் மோதி உறவு: சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 18 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அழகு ராணிகளில் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடக உலகில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறார். 1994இல் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியரான சுஷ்மிதா சென், அதன் பிறகு வெற்றிகரமான பாலிவுட் நடிகையாக தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கினார். 46 வயதாகும் இவர், சுமார் 36 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஆர்யா' என்ற வெப்சீரிஸ் தொடரில் அவர் நாயகியாக நடித்திருந்தார். அது டிஜிட்டல் உலகிலும் ஓடிடி உலகிலும் சுஷ்மிதா சென்னுக்கு மேலதிக பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. புத்திசாலித்தனமும் நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்று பாலிவுட் உலகில் இவர் வருணிக்கப்படுகிறார். தமது திரை வாழ்க்கையில் அவர் பல மதிப்புமிக்க சினிமா விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில், 58 வயதான தொழிலதிபரும், உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முன்னாள் நிறுவனருமான லலித் மோதி, தனக்கும் சுஷ்மிதா சென்னுக்கும் இடையே உறவு இருப்பதாக கடந்த வியாழக்கிழமை இரவு சமூக ஊடக பக்கத்தில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து திரையுலகில் சுஷ்மிதா சென்னை போற்றிப் புகழ்ந்து வந்த ரசிகர்கள் பலரும் அவரது முடிவுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கினர். இந்த இருவருக்கும் இடையிலான உறவு குறித்து சமூக ஊடக பக்கங்களில் வெறுப்புத்தனமான நகைச்சுவைகள் பதிவிடப்பட்டன. லலித் மோதி, சுஷ்மிதாவின் டேட்டிங் படம் வைரல் - என்ன சொன்னார் முன்னாள் காதலர்? புத்தர் முதல் காமசூத்ரா வரை: இந்தியர்களோடு இணைந்த 'மாம்பழ' கதை லலித் மோதி, பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுபவர். வெற்றிகரமான ஐபிஎல் கருத்தாக்கம் இவரது சிந்தனையில் இருந்தே உருவானது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர், லலித் மோதியை நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இடைநீக்கம் செய்தது. அதன் பின்னர் தலைப்புச் செய்திகளில் அவர் அதிகமாகவே இடம் பிடித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளை எப்போதும் மறுத்து வரும் லலித் மோதி, கடந்த பத்து ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மாலத்தீவுகள் மற்றும் இத்தாலிய தீவான சர்டினியாவில் அவர் சமீபத்தில் தமது விடுமுறையை கழித்த அவர் அங்கு தன்னுடன் ஜோடியாக இருந்த சுஷ்மிதா சென்னுடனான நெருக்கமாக இருக்கும் காதல் படங்களை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தார். சுஷ்மிதாவுடனான உறவை பகிரங்கமாக்கிய மோதி முதலில் தன்னுள் "சிறந்த பாதி" சுஷ்மிதா சென்று வர்ணித்தார் லலித் மோதி. பின்னர் இந்த ஜோடியின் திருமணம் பற்றிய வதந்திகள் அதிகமாகவே "எனது சிறந்த பார்ட்னர்" என்று முந்தைய பதிவுக்கு திருத்தம் கொடுத்தார். முறைப்படி கரம் பிடித்த இவரது மனைவி 2018ஆம் ஆண்டில் புற்றுநோயால் இறந்தார். இந்த நிலையில், சுஷ்மிதா சென் உடனான தமது உறவு "ஒரு புதிய ஆரம்பம், இறுதியாக ஒரு புதிய வாழ்க்கை" என்று குறிப்பிட்டு இடுகையை பதிவிட்டார். Instagram பதிவை கடந்து செல்ல, 1 Instagram பதிவின் முடிவு, 1 ஒரே இரவில், இந்த இடுகைகள், இந்த ஜோடியின் உறவை உலக அளவில் வைரலாக்கியது. பல்வேறு பிரபல இணையதளங்கள், செய்தி முகமைகள் இவரது சமூக ஊடக இடுகைகளை மாறி, மாறி பல்வேறு கோணங்களில் செய்திகளாக்கின. அதன் பிறகு லலித் மோதிக்கும் சுஷ்மிதாவுக்கும் பல முனைகளில் இருந்தும் வாழ்த்துகள் குவியத் தொடங்கின. அவற்றுக்கு இணையாக இந்த ஜோடியை பலர் 'ட்ரோல்' செய்து கிண்டலடிக்கவும் தொடங்கினர். இருவரது வயது வித்தியாசத்தை சுட்டிக்காட்டியும் லலித் மோதியின் உருவத்தையும் சிலர் கேலி செய்து விமர்சித்தார்கள், அவரை "நாட்டை விட்டு தப்பியோடியவர்" என்று ஒரு சிலர் டேக் செய்து அழைத்தனர். ஆனால் மிகவும் மோசமான விமர்சனமாக சுஷ்மிதா சென்னை சிலர், "பேராசை பிடித்தவர்" மற்றும் "தங்க வெட்டியையே சுரண்டி எடுப்பவர்" என்று அழைத்தனர். பணத்திற்காகவே அவர் லலித் மோதியை டேட்டிங் செய்கிறார் என்று சிலர் அழைத்தனர். அவரது விமர்சகர்களில் முக்கியமானவராக வங்கதேச எழுத்தாளரும் செயல்பாட்டாளரான தஸ்லிமா நஸ்ரின் விளங்கினார். "சுஷ்மிதா சென் எதற்காக 'பொதுவெளியில் ஈர்க்கப்படாத ஒருவருடன் நேரத்தை செலவிடுகிறார்? அவர் பணக்காரர் என்பதாலா? அப்படியென்றால் பணத்துகாக தன்னை விற்று விட்டாரா?" என்று கடுமையான முறையில் தஸ்லிமா விமர்சித்திருந்தார். இத்தகைய விமர்சனம், மிகவும் பிரச்னைக்குரியதுதான் என்கிறார் 'ஆர்டிகிள் 14' என்ற செய்தி இணையதளத்தின் பாலின விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் நமிதா பண்டாரே கூறியுள்ளார். "பெரியவர்கள் இருவருக்கு இடையிலான உறவில் என்ன நடக்கிறது என்பது மற்றவர்களின் வேலை இல்லை. எனவே ட்ரோலிங் மற்றும் தனி நபர்களை மதிப்பிடும்போது எப்போதும் விஷயம் பிரச்னை ஆகும்தான். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஒரு மோசமான நிலையே. ஏனென்றால் பெண்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசும் இந்த மாதிரி விஷயத்தில் விரல் நீட்டி அந்த தனி நபரை விமர்சித்து விட்டால் அதில் இருந்து சம்பந்தப்பட்டவர் மீள்வது கடினம்," என்கிறார் நமிதா பண்டாரே. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1994இல் மிஸ் யூனிவர்ஸ் கிரீடத்தை சூடியதன் மூலம் அந்த கிரீடத்தை சுமந்த முதல் இந்திய பெண் ஆனார் சுஷ்மிதா சென். சுஷ்மிதா சென் ஒரு பிரபலமாக இருப்பதால், அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் கண்காணிக்கும் வகையில், இந்த உறவு பெறும் கவனம் பெறுவது முற்றிலும் எதிர்பாராதது அல்ல. தனது "வழக்கத்திற்கு மாறான" வாழ்க்கைத் தேர்வுகளுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்தவர் சுஷ்மிதா. 24 வயதில், மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வென்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு மகளை தத்து எடுத்தார். அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது மகளையும் தத்தெடுத்தார். தமது இரு மகள்களுடன் இருக்கும் படங்களை வழக்கமாகவே சுஷ்மிதா சென் பகிர்ந்து வருகிறார். அந்த மகள்களுடனான உறவை அவர் ஒருபோதும் மறைக்கவில்லை. பல ஆண்டுகளாக, அவர் தமது சக நடிகர்களை சில சமயங்களில் சில காலத்துக்கு டேட்டிங் செய்துள்ளார். வெகு சமீபத்தில், மாடல் நடிகரான ரோஹ்மான் ஷால் உடன் டேட்டிங் செய்து விட்டு கடந்த ஆண்டு பிரிந்தார். சுஷ்மிதா டேட்டிங் செய்தவது பற்றிய தகவல்களை இதுநாள் வரை பத்திரிகைகள் 'கிசுகிசு' மற்றும் சில துணுக்கு செய்திகளாகவே வெளியிட்டு வந்தனஸ்ரீ ஆனால், லலித் மோதியுடனாந இவரது தொடர்பு இந்தியாவில் இந்த அளவுக்கு பெரிதாகும் என்பதை லலித் மோதியே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் என்கிறார் நமிதா பண்டாரே. " 'வியாழக்கிழமை இரவு ட்வீட்டுகள் மூலம் சுஷ்மிதாவுடனான உறவை கசிய விட்டார் லலித். லண்டனில் ஆடம்பமில்லாத வாழ்க்கையையே நடத்தி வருகிறார். ஆனால், இந்தியாவில் எல்லோருடைய கவனமும் இப்போது சுஷ்மிதா சென் பக்கமே திரும்பியிருக்கிறது. எல்லோரும் அவரைப் பற்றியே பேசுகிறார்கள்," என்கிறார் நமிதா. இதேவேளை, சமூக ஊடகங்களில் சுஷ்மிதா சென்னுக்கு பலரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில், பணம் குறைவாக உள்ள ஆண்களுடன் டேட்டிங் செய்தபோது அந்த நபர்களை யாரும் 'தங்க வெட்டிகளாக' அழைத்ததில்லை என்றும் நமிதா நினைவுகூர்கிறார். இந்த நிலையில் லலித் மோதியுடனான உறவைப் பற்றிய அதிகப்படியான பொதுவெளி மதிப்பீடும் விமர்சனமும் தொடர்வதால் சுஷ்மிதா சென் ஞாயிற்றுக்கிழமை இரவு தமது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் எதிர்வினையாற்றினார். "நம்மைச் சுற்றியுள்ள உலகம் எந்த அளவுக்கு பரிதாபமாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் மாறுகிறது என்பதை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். "எனக்கு இதுவரை இல்லாத நண்பர்கள் மற்றும் நான் சந்தித்திராதவர்கள்.... அனைவரும் தங்கள் சிறந்த கருத்துக்களையும், எனது வாழ்க்கை மற்றும் குணநலன்கள் தொடர்பாக ஆழமான ஞானத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்... 'தங்கம் வெட்டி'யிடம் பணம் சம்பாதிக்கிறார்!!! 😄👍 என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் இந்த மேதாவிகள்!!! " என்றும் சுஷ்மிதா கூறியுள்ளார். லலித் மோதியை பணத்துக்காக நான் டேட்டிங் செய்வதாக கூறுவர்களுக்கு இதை சொல்லிக்கொள்கிறேன். நான் தங்கத்தைக் கடந்து மேலும் ஆழமாக தோண்டுபவள். காரணம், நான் தங்கத்தை விட வைரங்களையே விரும்புவேன். இப்போதும் நான் அதையே வாங்குகிறேன், என்றும் சுஷ்மிதா குறிப்பிட்டுள்ளார். Instagram பதிவை கடந்து செல்ல, 2 Instagram பதிவின் முடிவு, 2 சுஷ்மிதாவின் இந்த பதிவு, அவருக்கு இந்தியாவில் பெரும் கைதட்டலைப் பெற்றுக் கொடுத்துள்ளது."சுஷ்மிதா பற்றிய வாட்ஸ்அப் நகைச்சுவைகள் மற்றும் கருத்துக்கள் இழிவானவை. பெண்களை கேலி செய்வது பரவாயில்லை என்ற பாரம்பரிய கருத்தை பிரதிபலிப்பது போல அவை உள்ளன" என்று நமிதா பண்டாரே கூறுகிறார்."ஆனால் இந்த சூழலில் மிகவும் முதிர்ச்சியுடனும் மேன்மையுடனும் பதிலளித்திருக்கிறார் சுஷ்மிதா. தன்னை நேசித்தவர்களுக்கும், நேசிக்காதவர்களுக்கும் அன்பையே பதிலாக அளித்துள்ளார் அவர்," என்று குறிப்பிடுகிறார் நமிதா பண்டாரே. https://www.bbc.com/tamil/arts-and-culture-62212463
  7. நீட் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக புகார் - தேசிய தேர்வு முகமை விளக்கம் இம்ரான் குரேஷி பிபிசி ஹிந்தி சேவைக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளை, உள்ளாடைகளை அகற்றுமாறு சொன்னதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் ஒருவர் புகார் செய்த பிறகு இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியே வந்துள்ளது. தேர்வு மையத்தில் நடந்த சம்பவத்தை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய மாணவியின் புகாரை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். "தான் படித்ததை எல்லாம் மறந்துவிட்டதாக அவள் தெரிவித்தாள்" என்று பிபிசியிடம் பேசிய மாணவியின் தந்தை கோபகுமார் சூராநத் தெரிவித்தார். தனது புகாரில் , தனது மகளிடம் உள்ளாடையை கழற்ற வேண்டும் என்று கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "தேசிய தேர்வு முகமையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில் எனது மகளிடம் உள்ளாடையை கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, பரீட்சை எழுத அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்," என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். "ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் கொண்டு செல்லப்பட்டன என எனது மகள் தெரிவித்தாள். பலர் அழுது கொண்டிருந்தனர். நீட் தேர்வு என்பது முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கிறது. அப்படியிருக்க இம்மாதிரியான கடுமையான நடத்தைகளின் மூலம் மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். பலர் தங்கள் உள்ளாடைகளில் உள்ள ஊக்குகளை அகற்றி அதை கட்டிக் கொண்டனர்," என அந்த புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலான திருமண ஒப்பந்தம் 18 வயதில் 13 மொழிகள்: காணாமல் போனவரை கண்டறிய உதவிய மாணவி மாணவியின் உறவினரான அஜித் குமார் பிபிசியிடம் பேசுகையில், "முதலில் அவர்கள் உள்ளாடையை கழற்றும்படி கூறியுள்ளனர். பின் அவள் அழத் தொடங்கிவிட்டாள். அதன்பின் அவளை ஒரு அறைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு மாணவ மாணவிகள் கூடி இருக்கும்போது இவ்வாறு கூற வேண்டிய அவசியம் என்ன?" என்றார். "நாங்கள் மாணவியின் கூற்றை பதிவு செய்து கொண்டோம். சிறிது நேரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வோம்," என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிற மாணவிகளின் பெற்றோரும் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்கவுள்ளதாக கோபகுமார் தெரிவித்தார். "இது ஒரு அவமரியாதை செயல் என்பதால் இதுகுறித்து மத்திய அரசிற்கும், தேசிய சோதனை முகமைக்கும் கடிதம் எழுதவிருப்பதாக கேரளாவின் சமூக நலத்துறை அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்துள்ளார். இம்மாதிரியான செயல்கள் மாணவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இது முதல்முறை அல்ல நீட் தேர்வின் போது நடத்தப்படும் சோதனைகள் சர்ச்சையாவது இது முதல் முறையல்ல. 2017ஆம் ஆண்டு கன்னூரில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் கருப்பு கால்சட்டை அணிந்திருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அந்த ஞாயிற்றுக் கிழமையில் அந்த மாணவியும் அவரின் தாயும் சில கிமீ தூரம் நடந்து புதிய கால்சட்டை ஒன்றை வாங்கியுள்ளனர். அதன்பின் தேர்வு எழுத உள்ளே சென்றபோது, மெட்டல் டிடக்டர் சோதனையில் சத்தம் வந்தது. பின் அவரின் உள்ளாடையில் உள்ள ஊக்கால் அந்த சத்தம் வந்துள்ளது. எனவே அவர் தனது தாயிடம் அதை கழற்றி கொடுத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது அதற்கு அடுத்த வருடம், பாலக்காட்டில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய தேர்வு முகமையின் மறுப்பு தேசிய தேர்வு முகமை இந்த புகார் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்வு நடைபெற்ற மையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர், நகர ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மாணவி தேர்வு எழுதியுள்ளார். தேர்வு சமயத்திலோ அல்லது அது முடிந்த பிறகோ இது மாதிரியான எந்த புகாரும் வரவில்லை. தேசிய தேர்வு முகமைக்கும் இதுபோன்ற எந்த மின்னஞ்சலோ அல்லது புகாரோ வரவில்லை. மாணவியின் பெற்றோர் கூறுவது போன்ற எந்த நடவடிக்கையும் நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/india-62217833
  8. சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? இதனால் பூமிக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சூரிய கிளர்ச்சி இன்று ஜூலை 19ஆம் தேதி பூமியை solar flare என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சூரிய கிளர்ச்சி ஒன்று தாக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா எச்சரித்துள்ளது. சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? சூரியனில் இருந்து அவ்வப்போது நெருப்புக் குழம்பு விண்ணில் உமிழப்படும். இது கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (coronal maas ejection) எனப்படுகிறது. அந்தப் பிழம்பு சூரிய பொருட்களை விண்ணில் உமிழும். அந்தத் துகள்கள் பூமியை வந்தடைய 3 முதல் 5 நாட்களாகும் என்கிறது நாசா. சூரியனில் இருந்து வெளியாகும் துகள்கள் பூமியை நெருங்கும்போது செயற்கைக்கோள்களின் மின்னணு பாகங்கள் பாதிக்கப்படும். இதனால் ரேடியோ, ஜிபிஎஸ் போன்ற சிக்னல்கள் கிடைப்பது சற்று பாதிக்கும். பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனில் அடர்த்தியான புள்ளிகள் தென்படும். அவை 'சன் ஸ்பாட்ஸ்' எனப்படுகின்றன. இந்த சூரியப் புள்ளிகள் அல்லது சூரியப் பொட்டுகள் அருகே இருக்கும் காந்தப் புலக் கோடுகள் ஒன்றை ஒன்று கடக்கும்போதோ, அவற்றின் அமைவிடம் மறுசீரமையும்போதோ சூரியக் துகள்கள் வெளிப்படும் சூரிய கிளர்ச்சி வெடிப்புச் சம்பவங்கள் நிகழும் என்கிறது நாசா. ஜேம்ஸ் வெப் புதிய படங்கள்: நட்சத்திரங்களின் பிரசவ விடுதி, 5 உடுத்திரள்களின் அண்டவெளி நடனம் சூப்பர் மூன் என்றால் என்ன? எப்போது காணலாம்? பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படத்தை வெளியிட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமது சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய வெடிப்புச் சம்பவம் இந்த சூரிய கிளர்ச்சி நிகழ்வுகள்தான். சூரிய கிளர்ச்சியிலிருந்து வெளியாகும் ஆற்றல் மிக்க துகள்கள் மற்றும் கதிர்வீச்சு பூமியில் உள்ள உயிரிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்த வல்லவை. ஆனால், நாம் கவலைப்பட வேண்டாம். புவியின் காந்தப் புலம் மற்றும் வளி மண்டலம் ஆகியவை அவற்றைத் தடுத்து நமக்கு பாதுகாப்பளிக்கும். எப்படி செயல்படுகிறது? சூரியனில் நடக்கும் அதிதீவிர காந்தப்புல மாறுபாடுகளின் விளைவாகவே இந்த சூரியக் கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிகழ்பவை கிடையாது. சூரியனிலிருந்து வெளிவரும் பிளாஸ்மா உமிழ்வுகளுடன் இணைந்து, எப்போது வேண்டுமானாலும் தன்னிச்சையாக நடைபெறக்கூடியவை. பட மூலாதாரம்,TAHAR AMARI ET AL / CNRS-ECOLE POLYTECHNIQUE படக்குறிப்பு, கயிறு போன்ற அமைப்புகளால் உருவான கூண்டுகள், அதற்குள் அடுத்தடுத்த கூண்டுகள் இந்த நிகழ்வுகள் சூரியனில் நடக்கும்போது, காந்தப்புல வடிவில் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய அமைப்புகளும் உண்டு. ஒன்று கயிறு போன்றது மற்றொன்று கூண்டு போன்றது. எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமானால், கயிறு போன்ற அமைப்புகளால் உருவான கூண்டுகள், அதற்குள் அடுத்தடுத்த கூண்டுகள் என இந்த கட்டுப்பாட்டு முறை அமைந்திருக்கும். கடந்த 2014ஆம் ஆண்டு, அக்டோபர் 24ஆம் தேதி சில மணி நேரங்களில் உருவான சூரியக்கிளர்ச்சியை ஆய்வாலர்கள்கூர்ந்து கவனித்தனர். இந்த கிளர்ச்சி சூரியனின் கொரோனாப்பகுதியிலிருந்து (வெளிப்புற அடுக்கு) வரும் தீப்பொறியுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது கொரோனாப்பகுதியின் சூரியனின் மேற்பரப்பை விட சூடான பகுதி. இதன் அதீத வெப்பத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இந்த வெப்பத்தின் காரணமாக இங்கிருக்கும் காந்தப்புலம் குறித்து ஆய்வு செய்ய முடிவதில்லை. பட மூலாதாரம்,TAHAR AMARI ET AL / CNRS-ECOLE POLYTECHNIQUE ஆனால், கொரோனாப்பகுதிக்கு 1690 கி.மீட்டர்கள் மேலே என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய சூரியனின் மேற்பரப்பிலிருந்து கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தினர். நாசாவின் சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு விண்கலத்தின் தரவுகள் மூலம், சூப்பர் கம்ப்யூட்டர்களில் சில மெய்நிகர் மாதிரிகளையும் உருவாக்கினர் ஆராய்ச்சியாளர்கள். அதிலிருந்து, கூண்டுகளை உடைக்கும் அளவுக்கும் கயிறுகளுக்கு திறன் போதவில்லை என்பதைக் கண்டறிந்தனர். ஒன்றொடொன்று இறுக்கி சுற்றப்பட்டுள்ள கயிறுகள், மொத்தமாக ஆற்றலை வெளிப்படுத்தும்போது ஒரு பெருவெடிப்பு போன்ற சூரியக்கிளர்ச்சி ந்டைபெறுகிறது என்றும் அவர்கள் கண்டறிந்தனர். https://www.bbc.com/tamil/global-62219260
  9. இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? நிதின் ஸ்ரீவஸ்தவா பிபிசி செய்தியாளர், கொழும்பில் இருந்து 19 ஜூலை 2022, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி மாளிகையை பார்க்க குவிந்த கூட்டம் இப்போது இரண்டு பெரிய ஆடம்பர வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வாயில்களில் 'கோட்டா போனார்' மற்றும் 'ராஜபக்ஷ இல்லாத இலங்கை' என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த வாயில்களுக்குள் இருக்கும் பிரமாண்டமான அதிபர் மாளிகை ஒரு அருங்காட்சியகம் போல் இருந்தது. முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பதை பார்ப்பதற்காக கொழும்பு மற்றும் வெளி நகரங்களில் இருந்து வந்த இலங்கை மக்கள் ஒன்றரை கிலோமீட்டர் வரை நீண்டிருக்கும் வரிசையில் அமைதியாக காத்திருக்கின்றனர். வந்தவர்களில் சிங்களர்கள், தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். அங்கு நான் குணசேகராவை சந்தித்தேன். அவர் கையில் ஒரு சிறு குழந்தையும் இருந்தது. "இங்கே நிற்கும் நாங்கள் அனைவரும் இலங்கையின் குடிமக்கள். மதம், சாதி, வரலாறு அனைத்தும் இனி புதிய முறையில் எழுதப்படும்" என்றார் அவர். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தீர்வதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படாத நிலையில், இங்குள்ள சமூக மற்றும் மத உறவுகளில் ஒரு தனித்துவம் காணப்படுகின்றது என்பதே யதார்த்தம். அதுதான் அதிகாரத்தில் இல்லாத ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான ஒற்றுமை. மத்திய கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலுக்குப் பின்னால் ஒரு அழகான ஏரியின் கரையில் ஒரு பெரிய புத்தர் கோவில் உள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம்; தீவிரமடையுமா, தணியுமா? - கள நிலவரம் கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? அவரை நீக்க சபாநாயகரால் முடியுமா? இரண்டேகால் கோடி மக்கள் சில மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் வாரந்தோறும் இந்த புத்தர் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆனால் இப்போது கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், மஹிந்த ராஜபக்ஷ யாருக்கும்தெரியாத இடத்தில் வசித்து வருகிறார். விலைவாசி உயர்வு, உணவு மற்றும் எரிப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், பிரதமர் அலுவலகம் முதல் அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் வரை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். தற்போது இந்த கட்டடங்கள் காலி செய்யப்பட்டுவிட்டன. இலங்கையின் இரண்டரை கோடி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர்,பௌத்த மதத்தைப் பின்பற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். படக்குறிப்பு, பெரும்பான்மை வர்க்க அரசியலின் ஆதிக்கத்தால், இலங்கையின் சிறுபான்மை பிரிவினரிடையே அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, வெறுப்பு அதிகரித்துள்ளது. 'நாட்டில் நிலவிய வெறுப்புணர்வு' ஏறக்குறைய எல்லா முந்தைய அரசுகளும் பெரும்பான்மை வகுப்பினரின் நலன்களைக் கவனித்தன. இது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. தமிழர் உரிமைகளுக்கான உள்நாட்டுப் போர் பல தசாப்தங்களுக்கு நீடித்தது. 2009ல், அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் அதை முடிவுக்கு கொண்டுவந்த பெருமையை பெற்றனர். உடனடியாக நடந்த தேர்தல்களில், சிங்கள தேசியவாதத்தின் மீது சவாரி செய்து ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. "இந்த தேர்தலில் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றுவிடுவேன் என்று எனக்குத்தெரியும்," என்று தனது வெற்றிக்குப் பிறகு கோட்டாபய கூறினார். "நாட்டில் பரஸ்பர பிரிவினை சூழல் நிலவியது உண்மைதான். 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப்போரும் இதற்கு காரணமாக அமைந்தது. அரசியலுக்காக மனிதன் அல்லது மதம் பயன்படுத்தப்படுகிறது."என்று கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபோதி கோவிலின் தலைமை பூசாரி யதகாம ராகுல் கூறினார். "நாங்கள் மதத்தை விட மனித நேயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். எந்த ஊருக்கு சென்றாலும் பௌத்த குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தால், அதற்கு அருகில் முஸ்லிம் குடும்பம், எதிரே தமிழ் குடும்பம் இருக்கும். நாடு மேலும் முன்னேற வேண்டுமானால், அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும்,"என்று அவர் மேலும் குறிப்பிட்டார். கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் மதவாத பதற்றங்கள் அதிகரித்து வந்தன. 2019 ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புகளில் 250 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். படக்குறிப்பு, ஸ்ரீபோதி கோவிலின் தலைமை பூசாரி யதகாம ராகுல் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை இந்த தாக்குதலுக்குப்பின்னால் ஐஎஸ் அமைப்பின் சில உள்ளூர் பிரிவுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது என இங்கு வாழும் பல தமிழ் முஸ்லிம்கள் கூறுகின்றனர். "நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அது மேலும் அதிகரித்தது. முஸ்லிம் சமூகத்திற்கும் அந்தத் தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேர்தலில் வெற்றி பெற நாங்கள் குறிவைக்கப்பட்டோம்,"என்று கொழும்பில் உள்ள அக்பர் ஜும்மா மசூதியின் இமாம் ரிஃப்கான் கூறுகிறார். "கோவிட் வந்த பிறகு இறந்தவர்களை புதைக்க ராஜபக்ஷ சகோதரர்கள் அனுமதிக்கவில்லை. உடல்கள் எரியூட்டப்பட்டன. அவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்."என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,NITIN SRIVASTAVA/BBC அரசுக்கு எதிரான போராட்டங்களின் மையமாக இருந்த 'கால் ஃபேஸில்' நான் அஷ்ஃபக் என்ற கல்லூரி மாணவரை சந்தித்தேன். "முந்தைய அரசுகள் மாணவர் சேர்க்கையில்கூட முஸ்லிம்களின் சதவிகிதத்தை குறைவாக வைத்திருந்தன. இப்போது நிலைமை மேம்படக்கூடும்," என்கிறார் அவர். கணிசமான சிங்கள மக்கள் தங்களை எதிர்பார்கள் என்று சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்திய ராஜபக்ஷ குடும்பம் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் சிறுபான்மை சமூகத்தை 'வெளியாட்கள்' என்று கண்மூடித்தனமாக கருதிய பலரும்அதில் இருந்தனர். 'நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்' குமாரா பரேரா செல்போன் கடை நடத்திவருகிறார்."நாட்டின் நிலை இப்படியாகிவிட்டதே" என்று அவர் வேதனைப்படுகிறார். "இலங்கையில் தமிழர் உரிமைக்காக உள்நாட்டுப் போர் நடந்தது. அது புரிகிறது. அதன்பிறகு நாட்டில் அமைதி திரும்பியது. அதுவும் புரிகிறது. ஆனால் திடீரென்று ஒரு விசித்திரமான தேசியவாதம் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் பலர் இதை சரியானது என்று கூட கருதியிருக்கலாம். ஆனால் உணவு தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் மக்கள் அதைப் பற்றி சிந்திப்பதுகூட இல்லை,"என்கிறார் அவர். ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான அமைதியான போராட்டத்தில் ராணுவத்தின் நிலைப்பாடும் சற்று வித்தியாசமாகவே இருந்தது. ராணுவத்தில் உள்ள பெரும்பாலான வீரர்கள் மற்றும் தளபதிகள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தபோதிலும் இதுவரை போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை மிகவும் சாதாரணமாகவும், மென்மையாகவும் இருக்கிறது. படக்குறிப்பு, அரசியல் ஆய்வாளர் பவனி ஃபொன்சேகா "நாட்டில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது" என்று கொழும்பில் உள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் அரசியல் ஆய்வாளர் பவனி ஃபொன்சேகா கூறுகிறார். "மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சமூகங்கள் மத்தியில் மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக, பரஸ்பர கருத்து, உரையாடல் மற்றும் விவாதம் ஆகியவற்றின் புதிய வழிகள் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் மக்கள் கருத்துக்களை பறிமாறிக்கொண்டு, பிரச்சனைகளை தீர்க்கமுடியும்," என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/sri-lanka-62204679
  10. இலக்கிய சிகரம் பேட்டி - பகுதி 1 2021 டிசம்பரில் இலக்கிய சிகரம் எனும் இதழில் வெளியான பேட்டி இது. நான்கு பகுதிகளாக வெளியிடப் போகிறேன். முதற் பகுதி இங்கே: சொல்வனம், இலக்கிய சிகரம் பேட்டி - ஆர். அபிலாஷ் உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? பதில்: என் அப்பாவுக்கு சொந்த ஊர் நாகர் கோயில் அருகிலுள்ள பத்மநாபபுரம் எனும் சிற்றூர். அம்மாவுக்கு விளவங்கோடு தாலுகாவில் உள்ள காஞ்சாம்புறத்தில் உள்ள, கடலை ஒட்டிய, வைக்கலூர் எனும் பகுதி. நான் பள்ளிக் கல்வி பயின்றது தக்கலையில். கல்லூரிக் கல்வியில் இளங்கலையை நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரியிலும், முதுகலையை சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியிலும், முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் முடித்தேன். இப்போது பெங்களூரில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக உள்ளேன். இந்த வேலைக்கு எப்படி வந்தேன் என்பது சுவாரஸ்யமான கேள்வி: எனக்கு தொழில்பூர்வமான வாழ்வில் மிகுதியான ஈடுபாடு காட்டுவதில் நம்பிக்கை இல்லை. அது என் இயல்புக்கு ஏற்றதல்ல. நிறைய பணம், அதிகாரத்தை அடைவதில் எனக்கு ஆர்வம் ஏற்படுவதில்லை. மாறாக எழுத்துக்கு இடையூறு இல்லாத வேலை என்பதே என் இலக்காக எப்போதும் இருந்தது. படிப்பை முடித்த பிறகு கல்லூரி ஆசிரியராக விரும்பினேன். ஆனால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்காலிகமாக ஒரு காப்பி எடிட்டராக வேலை செய்தேன். பின்னர் அவ்வேலை பிடித்துப் போய் ஆசிரியராகும் விருப்பத்தை மறந்து போனேன். அறிவியல் சார்ந்து வாசிக்க அந்த வேலை உதவியது. ஏஸியில் இருந்து கொண்டு கணினியில் வேலை செய்வது, இளைஞர்கள் மத்தியில் இருப்பது, கார்ப்பரேட் கலாச்சாரம் பிடித்திருந்தது. ஆனால் ஒருநாள் என்னுடைய அணியிலுள்ளவர்களுக்கு மொழி சார்ந்த எடிட்டிங் பயிற்சி அளிப்பதற்கு சொன்னார்கள். நான் அதை அவ்வளவு மகிழ்ச்சியுடன் செய்தேன். அதன் பிறகு என்னை மொழிப் பயிற்சியாளனாக்கி வாரம் சில வகுப்புகள் எடுக்க சொன்னார்கள். நான் அதை உள்ளுக்குள் கொண்டாடினேன். அந்த நிறுவனத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்து எங்கள் அணி கலைக்கப்பட்டது. நான் அப்போது தான் பாடம் சொல்லித் தருவது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிற செயலாக உள்ளது, அதனால் இனி ஆசிரியர் வேலைக்கு முயலலாம் என முடிவெடுத்தேன். ஆரம்பத்தில் ஏற்பட்ட தடைகளைக் கடந்து கல்லூரி ஒன்றில் வேலையும் பெற்றேன். அது என் வாழ்வின் மிகச்சிறந்த காலகட்டம் எனச் சொல்வேன். ஒரு புத்தம் புதிய மனிதனாக, புத்துயிர்ப்பு பெற்றவனாக உணர்ந்தேன். எழுதுவதற்கு, படிப்பதற்கு கூடுதல் நேரம் கிடைத்தது. தினமும் நிறைய மாணவர்கள் மத்தியில் இருப்பது அவ்வளவு உற்சாகத்தை அளித்தது. அந்த காலகட்டத்தில் தான் நான் என்னுடைய முதல் நாவலான “கால்களை” எழுத ஆரம்பித்தேன். அந்த நாவல் தான் எனக்கு சாகித்ய அகாதெமி யுவ புரஷ்கார் விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால் ஆசிரிய வேலையில் ஸ்திரத்தன்மை வேண்டுமெனில் முனைவர் பட்டம் அவசியம். அதற்காக ஆய்வுக்காக வேலையை விட்டு விட்டு பகுதிநேர வேலைகளை (பெரும்பாலும் எடிட்டிங்) செய்தேன். நான் என் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து விட்டு பட்டம் கிடைக்கும் இடைவேளையின் போது ஒரு நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத்துக்கு சென்றேன். என்னை நேர்முகம் செய்தவர்களில் முக்கியமானவர் பின்னாளில் எனக்கு மேலாளராக வந்தவர். அவரை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. (அவரைப் பற்றி பின்னர் ஒரு சிறுகதை எழுதினேன்.) அதனாலே வேறு வேலை வாய்ப்புகளை விட்டு விட்டு அங்கேயே சேர்ந்து கொண்டேன். அந்த வேலையும் எனக்கு முக்கியமான திறப்புகளைத் தந்தது. அது புத்தகங்களை எடிட் செய்யும் வேலை. இலக்கிய, தத்துவம், சினிமா கோட்பாட்டு புத்தகங்களை என்னிடம் தந்து விடுவார்கள். (நான் அங்கு எடிட் செய்த கோட்பாட்டு புத்தகம் பின்னாளில் நான் இப்போது பணி செய்யும் பல்கலைக்கழகத்தில் பாடநூலானது.) ஒவ்வொரு நூலையும் ஊன்றி வாசித்து நிறைய பரிந்துரைகள், திருத்தங்களுடன் அனுப்புவேன். பொதுவாக எனக்கு நேர்மறையான எதிர்வினைகள் கிடைக்கும் என்பதால் எனக்கு அங்கு நல்ல பெயர் இருந்தது. அங்கு தான் நான் ஹைடெக்கர் குறித்த ஒரு முக்கியமான நூலைப் படித்தேன். அது பின்னமைப்பியல் பற்றின என் பார்வையை மாற்றி அமைத்தது. என் வாழ்க்கைப் பார்வையையும், இலக்கிய அணுகுமுறையையும் நிச்சயம் மாற்றியது. அங்கும் நான் மொழிப் பயிற்சியாளனாக கூடுதல் பணி செய்தேன். என் சகோதரி பங்களூரில் இருந்தார். அவர் என்னை அங்கு ஒரு பல்கலையில் வேலைக்கு விண்ணப்பிக்க சொன்னார். அவருடைய வற்புறுத்தலின் பெயரில் நான் அதைச் செய்தேன். அங்கிருந்து நேர்முகத்துக்கு அழைப்பு வந்த போது எனக்கு போக மனமில்லை. சென்னையை விட்டுப் போக மனமில்லை. பெரிய சம்பளமும் தேவையில்லை. நான் வேலை பார்த்த இடத்தில் கூட இருந்த அணியில் நல்ல நண்பர்கள் இருந்தார்கள்; அந்த மேலாளர் மீதிருந்த நன்மதிப்பு வேறு. எனக்கு அங்கிருந்து கிளம்பவே பிடிக்கவில்லை. ஆனால் அப்போது பார்த்து அலுவலக நடைமுறைகள் மாறின. கடுமையான அழுத்தம், வேலை இலக்கை இரட்டிப்பாக்கினார்கள். சரி முயன்று பார்ப்போமே என நேர்முகத்துக்கு கிளம்பினேன். ஒரு பக்கம் மனத்தில் இந்த வேலை கிடைக்காது என்றும், மறுபக்கம், இப்போதைய வேலையின் அழுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியும், வேறு வேலை அவசியம் என்றும் தோன்றிக் கொண்டிருந்தது. இருகூறாக பிரிந்து தத்தளித்துக் கொண்டிருந்தேன். வேலை கிடைத்ததும் நான் ஒரே சமயம் மிகவும் வருத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன் - பெங்களூருக்கு இடம் பெயர வேண்டுமே எனும் நிரந்தர வருத்தம், நேர்முகத்தில் வெற்றி கிடைத்த தற்காலிக மகிழ்ச்சி இன்னொரு பக்கம். அப்போது கூட இன்னொரு வேலை கிடைத்தால் சென்னையிலே கிடைத்தாலே அங்கேயே இருந்து விடலாம் என நினைத்தேன். அந்த மூன்று வாரங்கள் கடுமையாக அதற்கு முயன்றேன். ஆனால் வேலை ஏதும் சென்னையில் அமையவில்லை. அதனால் கசப்புடன் கவலையுடன் பெங்களூருக்குப் புறப்பட்டேன். அந்த தருணம் என் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடும் என அப்போது எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு முறை ஒரு முக்கியமான மாற்றம் என் தொழில்வாழ்வில் நிகழும் போதும் அது என் தனிப்பட்ட வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கும். இந்த முறையும் அப்படியே நடந்தது - சென்னையில் இருந்து வந்தது என் குடும்பத்துடனான என் உறவை உடைத்தது. குடும்பத்தை இழந்து தனிமையானேன். கடுமையான விரக்திக்கும் துக்கத்துக்கும் ஆளானேன். பிறகு அது என்னை அன்றாடத்தில் ஆர்வமற்றவனாக, கடுமையான எதிர்மறை எண்ணம் கொண்டவனாக்கியது. **** பற்றி நிறைய யோசித்தேன். நேரில் யாராவது லேசாக சீண்டினாலே தன்னை மறந்து கோபம் கொள்ளுகிறவனாக மாறினேன். ஒருநாள் மாலையில் நான் வேலை முடித்து விட்டு வெளியே வந்து ஒரு கடைக்கு சென்று விட்டு வரும் போது என்னுடைய வண்டியை நிறுத்தி இருந்த இடத்தில் அதை மறித்தபடி யாரோ இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்கள். ஒரு சின்ன விசயம் தான் - ஆனால் உலகமே என்னை தடை செய்யும் நோக்கில் அங்கு மறித்து நிற்பதாகத் தோன்றியது. சொல்லப் போனால் இதையெல்லாம் யோசிக்கக் கூட அவகாசம் இல்லாமல் என் மனம் செயல்பட்டது. ஒரு ஆவேச அலை என்னை அடித்து சென்றது. அந்த வாகனத்தை என்ன செய்வது என யோசித்து அதன் கண்ணாடியை முஷ்டியால் குத்தி உடைத்தேன். அது அவ்வளவு சீக்கிரம் உடைந்து தெறிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. கூடவே என் முஷ்டியும் கிழிந்து ரத்தம் பெருகிக் கொட்டியது. ஆனால் எனக்கு வலி மட்டும் ஏற்படவில்லை. வீடு செல்லும் வரை வழியெல்லாம் ரத்தம் சிந்தியபடி சென்றேன். அன்றிரவு தான் இது ஒரு பிரச்சனை என நான் உணர்ந்தேன். என் அதிர்ஷ்டம் வண்டியின் சொந்தக்காரர் அப்போது அங்கில்லை. இல்லாவிட்டால் பெரிய சண்டை ஆகியிருக்கும். இன்னொரு சந்தர்பத்தில் யாரிடமாவது நேரடியாக முரண் ஏற்பட்டு நான் கையை நீட்டி விட்டால் என்னவாகும்? இதற்கு முன்பு யாரிடமும் வன்முறையை காட்டியதில்லையே என யோசித்தேன். நான் முன்பு என்னைச் சுற்றி நிகழ்பவனவற்றால் சீண்டப்படாமல் சாமநிலையை கடைபிடிக்கிறவனாக இருந்தவன் தானே என நினைவுபடுத்திக் கொண்டேன். இந்த இயல்பு மாற்றம் பற்றி, அதன் உளவியல் பற்றி புத்தகங்கள் சில வாசித்தேன். கோபம், வன்முறை சார்ந்த எண்ணங்களை பிடிவாதமாக மாற்றிக் கொண்டு ஒருவிதமாக மீண்டு வந்தேன். இந்த கொடுமையான காலம் எனக்கு முதிர்ச்சியையும் அளித்தது. கூட இருப்பவர்களின் அன்பு, அக்கறை போன்றவை எவ்வளவு பெரிய இழப்பில் இருந்து மீண்டு வர உதவும் என புரிந்து கொண்டேன். என்னுடைய எழுத்து என்னுடன் எப்போதும் இருந்தது. நமக்கு என நிரந்தர இயல்பு என ஒன்று இல்லை; யாரும் எப்படியும் மாறலாம், பலவீனப்படலாம், அழியலாம், அங்கிருந்து மீண்டும் வரலாம் என தெளிவு வந்தது. நாம் எல்லாரும் ஒரு திரியின் நுனியில் காற்றில் அணைந்து அணைந்து எரிகிற தீபம் தானே என இப்போது அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். 2. தற்போது நடக்கும் கோவிட் அமளி துமளிகளுக்கு நடுவே உங்களின் வாசிப்பு எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது? அன்றாடக் குழப்பங்களின் தாக்கத்தினால் படிப்பது மாறியிருக்கிறதா? பதில்: கோவிட் அமளி துமளிகள் எளிய மக்களை நிர்கதியாக்கி இருக்கிறது. என்னைப் போன்ற நீலக்காலர் ஊழியர்களை அது பெரிதாக பாதிக்கவில்லை. வாசிக்க, எழுத கூடுதல் நேரம் கிடைத்துள்ளது. Posted Yesterday by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2022/07/1.html
  11. கோலியின் பிரச்சனை என்ன? விராத் கோலி பற்றிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அஷ்வினுடையதே. அவர் கோலி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாக மட்டையாடி வருவதாகக் கூறி இருக்கிறார். இது சரி தான். ஒரு மட்டையாளர் தன ஆட்டநிலையை இழக்கும் போது மூன்று விசயங்கள் நடக்கும்: 1) தொழில்நுட்ப பிரச்சனை ஒன்று அம்பலமாகி அதில் இருந்து வெளிவரத் தெரியாமல் தவிப்பார்கள். (காம்ப்ளி, லஷ்மண், திராவிட், ஸ்டீவ் வாஹில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வரை ) 2) உடற்தகுதியின்மை ஏற்படும். (கங்குலி, சச்சின்) 3) பந்து விழும் நீளத்தை கணிக்க முடியாமல் போகும் - சிலருக்கு பார்வைக் குறைபாட்டினாலும் வேறு சிலருக்கு தசைகளுக்கும் நரம்புகளுக்குமான தொடர்புறுத்தல் தாமதமாவதாலும் இது நேரும். (திராவிட் இரண்டுக்கும் உதாரணம்) ஆனால் கோலிக்கு இந்த பிரச்சனைகள் இல்லை. அவருக்கு நான்காவது, ஐந்தாவது குச்சியில் விழும் முழுநீளப் பந்துகளை விரட்டிச் சென்று ஸ்லிப்பில் அவுட் ஆகும் வழக்கம் இருந்தது. அதையும் கட்டுப்படுத்த கற்றுக் கொண்டார். தேவையான போது சிறப்பாக கவர் டிரைவ் செய்வதும் உதவியது. கால்சுழலையும் ஆப் ஸ்பின்னையும் ஆடும் போது பந்தின் திசையை கணிப்பதில் ஒரு சிக்கல் இருந்தது. இதையும் பந்தை தடுத்தாடும் யுக்தியால் எதிர்கொண்டார். இருந்தும் அவர் தொடர்ந்து முதலாவது அல்லது இரண்டாவது ஸ்லிப்பில் அவுட் ஆகிறார். அல்லது பவுல்ட ஆகிறார். அவர் சதமாடித்து 77 இன்னிங்ஸ் மேலாகிறது. ஏன்? டெஸ்டிலோ ஒருநாள் போட்டிகளிலோ டி20களிலோ கோலி அவுட் ஆவதில் ஒரு ஒழுங்குமுறை உள்ளது - ஒருநாள் / டி-20 போட்டிகள் என்றால் முதல் 10-15 நிமிடங்கள் நன்றாக ஆடுவார். வெளியே போகும் பந்து விசயத்தில் கவனமாக இருப்பார். நேராக பந்தை விரட்டுவார். பவுண்டரிகள், ஒற்றை, இரட்டை ஓட்டஙக்ள் சரளமாக வரும். அடுத்து புதிய பந்து வீச்சாளர் வருவார். கோலி இப்போது கவனம் இழந்து, நான்காவது குச்சியில் விழுந்து மேலும் வெளியே போகும் பந்தை உடம்புக்கு வெளியே பந்து விரட்டவோ திருப்பி விடவோ முயன்று கீப்பருக்கோ ஸ்லிப்பிலோ கேட்ச் கொடுப்பார். டெஸ்ட் போட்டி என்றால் மேற்சொன்ன முறையிலோ சுழற்பந்தை தவறாக அடிக்க முயன்றோ வெளியேறுவார். இதைப் பார்க்கும் போது பிரச்சனை கோலியின் மனத்தில் தான் இருக்கிறது, அவரது கவனம் முழுக்க ஆட்டத்தில் இல்லை எனத் தெரிகிறது. 2017இல் இது துவங்குகிறது எனில் அப்போது ஒரு அணித்தலைவராக கோலிக்கு அணிக்குள்ளிருந்தும் வெளியே வாரிய நிர்வாகத்தினரிடம் இருந்து வந்த அழுத்தங்களினால் அவர் தன் ஆட்ட அக்கறையை இழந்து அதுவே பின்னர் ஒரு பழக்கமானதா? ஆட்டத்தின் அரசியலின் பால் அதிகமாக ஈடுபட்டதால் அடிப்படைகளில் ஆர்வம் இழந்து பின்னர் கிரிக்கெட் ஆடுவது அலுவலகம் போவதைப் போல ஒரு பழக்கம் மட்டும் ஆனதா? இக்கேள்விகளுக்கு கோலி மட்டுமே பதிலளிக்க இயலும். ஆட்டத்தின் போக்கில் முழுமையாக இருப்பது அவசியம். இதுவும் ஒரு பழக்கமே. கோலியின் மட்டையாட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவே இப்படி ஒரு கவனச்சிதறல் வந்து அது ஒரு அமைவாக நிலைப்பெற்று விட்டது. இதை சரி செய்வதற்கு அவராக முயன்றே சரி செய்ய முடியும். மேலும், எதனால் அவர் தன் கவனத்தை ஆட்டத்தில் இருந்து வேறெங்கோ உலவ அனுமதிக்கிறார் என்றும் அவர் யோசித்து கண்டுபிடிக்க வேண்டும். முன்பு சச்சின் அணித்தலைவராக இருந்த அணியில் அசருதீன் இப்படி விதவிதமாக அவுட் ஆகிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரை அணியில் இருந்து நீக்கினார்கள். 98இல் திரும்ப வந்து வெகு சிறப்பாக ஆடினார். சச்சினும் தன் அணித்தலைமையில் இருந்து விலகிய பின்னர் அசரூதீனின் தலைமையின் கீழ் வெகு அற்புதமாக புதிய ஆற்றலுடன் ஆடிக் காட்டினார். ஆனால் தன் தலைமை கோலி அந்தளவுக்கு ஒரு நிதானதத்துடன் உறுதியுடன் கைவிட்டதாகக் கூற முடியாது. அதனாலோ ஏனோ அவர் ஒரு வீரராகவும், தனிமனிதராகவும் ஒருமுகமாக இல்லை எனத் தோன்றுகிறது. ஆம் களத்தில் முழு ஈடுபாடு காட்டுகிறார், ஆனால் ஆட வரும் போது அந்த பழைய துடிப்பு, ஈடுபாடு இல்லை. அதனால் தான் ஓரு சில தொடர்களில் ஓய்வு பெற்று திரும்ப வந்தாலும் கோலியின் முகத்திலும் உடல்மொழியிலும் ஆட்டத்திலும் ‘ஆன்மா’ இல்லை. மருமகளிடம் கோபித்துக் கொண்டு பூஜை, டிவி சீரியல் என ஒதுங்கி விட்ட மாமியாரைப் போல் தென்படுகிறார். இப்போதைக்கு அவர் தன் மனக்குதிரை மீது அமர்ந்து அது எங்கோ போகிறது என்றே அக்கறையில்லாமல் காடுமேடென திரிந்து கொண்டிருக்கிறார். ஒரு ஆட்டத்தில் அரை சதம் அடித்தாலும் அடுத்த ஆட்டத்தில் மீண்டும் தறிகெட்டு ஓடுகிறது மனக்குதிரை. கோலியிடம் இன்னும் 4 ஆண்டுகள், 40 சதங்கள் மீதமுள்ளன. அற்பமான பிரச்சனைகளுக்காக அவர் தன் திறனை, அனுபவத்தை வீணடிக்கப் போகிறாரா இல்லை மனதைக் கட்டுப்படுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து பழையது போல சவாரி பண்ணுவாரா? Posted Yesterday by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2022/07/blog-post_17.html
  12. கலவரங்களாக்கப்படும் போராட்டங்கள் - காவல்துறையின் பிளான் பி காவல்துறை மக்கள் போராட்டங்கள் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பதை விரும்புவதில்லை. போலிசாரின் பேச்சைக் கேட்டு போராட்டத்தை கைவிட வில்லை என்றால் போலீஸார் தம் பிளான் பியை வெளியே எடுப்பார்கள். அல்லது ஆளுங்கட்சிக்கு தன் அதிகாரத்தை வலுப்படுத்த, உட்கட்சி தலைமைகள் சிலவற்றை பலவீனப்படுத்த ஒரு மக்கள் போராட்டம் அவசியப்படும். ஆனால் இப்போராட்டங்களுக்கு ஒரு காலக்கெடுவை போலிசார் வைத்திருப்பார்கள். அது முடிந்ததும் அப்போராட்டத்தை முடித்து வைக்க ஒரு பிளான் பியை தயாராக வைத்திருக்கும் நம் போலீஸ் துறை. அதென்ன பிளான் பி? அண்மையில் ஜல்லிக்கட்டு போராட்டங்களில், தில்லியில் விவசாயிகள் போராட்டத்திலும், ஜெ.என்.யுவில் மாணவர் போராட்டங்களில், கூடங்குளத்தில் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் என்ன நடந்தது? போலிசார் தமது கூலிப் படை கலவரக்காரர்க்ளை அனுப்பி கல்லெறியவும் அடித்து நொறுக்கவும் செய்து விட்டு அதை கலவரமாக சித்தரித்து போராடும் மக்களை கைது பண்ணினர். அல்லது சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர். இந்த கலவரங்களின் பொதுப்பண்பு என்னவெனில் கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்படும் போதும் வாகனங்கள் கொளுத்தப்படும் போதும் காவல்துறையினர் வேடிக்கைப் பார்ப்பார்கள். ஊடகங்களில் உள்ள காவல்துறை ஏஜெண்டுகள் (சவுக்கு சங்கரைப் போன்றோர்) காவல்துறை மிகுந்த பொறுமையுடன் போராட்டக்காரர்களை எதிர்கொண்டது, ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி தடியடி பண்ணி கைது பண்ணினார்கள் என்பார்கள். இது ஒரு மீள மீள நிகழும் கதையாடல். இந்தியாவில் மட்டுமல்ல அண்மையில் இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை போராளிகள் ஆக்கிமித்து அங்கு படுத்துறங்கி சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து கொண்டாடிய போது இலங்கைப் போலீசும் ராணுவமும் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் இந்த அரசு அனுமதி பெற்ற “மக்கள் போராட்ட சிற்றுலா” ஜனாதிபதி தன் ராஜினாமாவை அளித்ததும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எம்ர்ஜென்ஸி கொண்டு வரப்ப்பட்டு ராணுவம் கடுமையாக போராட்டங்களை ஒடுக்கியது. ஏன் அதுவரை காத்திருந்தார்கள்? ஏனென்றால் ஜனாதிபதியை முழுகையாக அதிகார புலத்தில் இருந்து நீக்க பிரதமருக்கு அந்த போராட்டங்களின் அழுத்தம் தேவைப்பட்டது. ஆனால் இலங்கையிலோ இந்தியாவிலோ இந்த அரசு சதித்திட்டத்தை ஊடகங்கள் அம்பலப்படுத்துவதே இல்லை. அவர்கள் இப்போராட்டங்கள் தன்னிச்சையாக நடந்தேறி, தன்னிச்சையாகவே வன்முறை வெடித்தது எனப் பேசிப் பேசி ஓய்வர். அது தான் ஊடகங்களுக்கு அரசும் போலீஸ் துறையும் அளிக்கும் திரைக்கதை. தென்னமெரிக்க நாடுகளில் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்க உளவுத்துறை இவ்வாறே மக்கள் போராட்டங்களை ஊடகங்களின் துணை கொண்டு ஒருங்கிணைத்து தமக்கு உடன்படும் பொம்மைத் தலைமைகளை அரியணை ஏற்றுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆக நாடு முழுக்க உள்ள ஒரு பிளான் பி தான் இது. போலீஸ்காரகளே நேரடியாக களத்தில் இறங்கி “கலவரங்கள்” பண்ணுவதும் உண்டு - 98ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் 46 பேர் இறந்தனர். ஆனால் இந்த குண்டுவெடிப்புக்கான ஏற்பாடுகளை அல் உம்மாவினர் பண்ணுவது உளவுத்துறைக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் இதை ஊக்குவிக்கவும் செய்தனர். குண்டுவெடிப்புகள் நடந்ததும் அப்போது ஏற்பட்ட பதற்றத்தை, பீதியை பயன்படுத்தி இஸ்லாமியரின் வணிகவளாகங்களை போலிசாரே சூறையாடியதற்கு, தீக்கிரையாக்கியதற்கு நேரடி சாட்சியங்கள் உள்ளன. அடுத்து இந்த கலவரங்களை பயன்படுத்தி இஸ்லாமியரை பார்த்த இடத்தில் எல்லாம் தாக்கியும் சுட்டுக் கொன்றும் ஒழித்தனர். நிறைய இஸ்லாமியரை கைது பண்ணியதுடன் எளிய இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளை தொடர்கண்காணிப்பிலும் வைத்தனர். இதன் மூலம் இஸ்லாமிய வணிகர்களின் இருப்பு இல்லாமல் ஆக்கப்பட்டு அந்த இடத்தில் பனியா வணிக சமூகத்தினர் நுழைந்து ஆக்கிரமித்தனர். அந்த ஒட்டுமொத்த கலவர புரோஜெக்டை திட்டமிட்டது இந்த பனியாக்களும் இந்துத்துவர்களும் போலிசாரும் இணைந்தே. இந்த சதித்திட்டத்தில் சிக்கி பலியான இஸ்லாமிய இளைஞர்கள் உண்மையை உணர்ந்த போது மிகவும் தாமதமாகி விட்டது. இம்முறை கள்ளக்குறிச்சியில் ஶ்ரீமதியின் மரணம் நிகழ்ந்த பின்னர் போலிசார் அப்பள்ளி நிர்வாகத்தினரை கைது பண்ண தயங்குகிறது. இதுவும் வழக்கம் தான். பத்மசேஷாத்ரியிலும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி விவகாரங்களிலும் இத்தகைய தயக்கத்தை துவக்கத்தில் பார்த்தோம். ஆனால் குற்றம் சுமத்திய மாணவிகள் உயிருடன் இருந்ததால் போலிசால் நிர்வாகத்தை முழுக்க காப்பாற்ற முடியவில்லை. ஒரு மனைவி தற்கொலை பண்ணினால் அவருடைய பெற்றோர் புகார் அளித்தால் உடனடியாக கணவர் கைதாவார். ஆனால் ஏன் தனியார் பள்ளி நிர்வாக விசயத்தில் மட்டும் அத்தகைய துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றால் அதுவே தனியார் பள்ளி முதலாளிகளின் பணத்தின் அரசியல் செல்வாக்கின் ஆற்றல். அதுவே கள்ளக்குறிச்சியில் கணியாமூரில் இயங்கி வரும் அப்பள்ளி நிர்வாகம் குற்றம் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டை போலிஸார் விசாரணை முடியும் முன்பே எடுத்ததே ஶ்ரீமதியின் அம்மா மற்றும் உறவினர் தொடர்ந்து போராட பிரதான காரணம். போராட்டம் ஊடக கவனம் பெறவே போலீஸ் பிளான் பியை வெளியே எடுக்கிறது. பள்ளியைச் சுற்றி கற்கள் குவிக்கப்படுகின்றன, ஆயுதங்கள், உருட்டுக்கட்டைகளும் பதுக்கப்படுகின்றன. கலவரம் பண்ணுவதற்காக வெளியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பைக்கிலும் வேறு வாகனங்களிலும் வருகிறார்கள். இதெல்லாம் போலீசுக்குத் தெரிந்தே நடக்கிறது. ஒட்டுமொத்தமாக பள்ளிக் கட்டிடங்களும் வாகனங்களும் நாசமாக்கப்பட்ட பின்னர் பள்ளியின் செயலாளர் “இதற்கெல்லாம் மொத்த பொறுப்பு ஶ்ரீமதியின் தாயார் தான்” எனச் சொன்னதை கவனியுங்கள். கலவரங்கள் பண்ணியது தம் உறவினரோ ஊர்க்காரர்களோ அல்ல வெளியாட்கள் என ஶ்ரீமதியின் அம்மா சொன்னார். ஆக பழியை அமைதி வழியில் போராடியவர்கள் மீது போதுவதே பள்ளி நிர்வாகம் மற்றும் போலிசாரின் திட்டம், திரைக்கதை. அதன் வழியே சாந்தியும் இப்போது பேசுகிறார். இப்போது மகளுக்காக ஒரு தாய் நடத்திய போராட்டம் வன்முறையாக சித்தரிக்கப்பட்டு திசைதிருப்பப்பட்டதை கவனியுங்கள். இதுவே பள்ளி நிர்வாகத்தும் போலிசுக்கும் தேவை. பெரும்பாலான ஊடகங்களில் அப்பள்ளியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதையும் கவனியுங்கள். சாட்சியங்களை அழிப்பதற்காககோ கலவரம் நடத்துவதற்காகவோ நிர்வாகமோ பாஜகவோ இக்கலரவங்களை நடத்தியதாக சிலர் கூறுவதில் உண்மையில்லை என்பது தெளிவு. சாட்சியங்களை அப்பெண்ணின் உடலை ஒப்படைக்கும் முன்னரே அழித்திருப்பார்கள். மதக்கலவரம் பண்ணுவதற்கான சாத்தியங்கள் இக்கலவரத்தில் இல்லை என்பதால் பாஜக இதைச் செய்ய வேண்டிய அவசியம். இது முழுக்க முழுக்க போலிசின் பிளான் பி மட்டுமே. மூன்றாம் உலக நாடுகளோ, இலங்கையோ, இந்தியாவில் தில்லியோ தமிழ்நாடோ ஆள்வது பாஜகவோ அதிமுகவோ திமுகவோ போலிசின் பிளான் பி மட்டும் மாறுவதில்லை. Posted 48 minutes ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2022/07/blog-post_19.html
  13. இணைய வசதி முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் ஆண்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். நிச்சயம் இப்போதிருப்பதைவிட வித்தியாசமானதாகவே இருக்கும். அதற்காக இணையம் முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று அர்த்தமல்ல. இரு எழுத்தில் தொடங்கிய பயணம் 1969 அக்டோபர் 29. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், அந்த 21 வயது மாணவி மிக மிக கவனமாக தன் கணிணி முன் அமர்ந்திருந்தாள். கணிப்பொறி அறிவியல் படிக்கும் அந்த மாணவியின் கணிணியில் ஒரு பாப்பப் மெசேஜ் வந்தது. 'L O' என்று தொடங்கிய அந்தச் செய்தி, இந்தக் கணிணி இருக்கும் இடத்திலிருந்து சுமார் 560கி.மீக்கு அப்பால், ஸ்டான்பார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்தது. லாகின் என்பதுதான் முழு மெசேஜ். அதை படிப்பதற்கான நேரம் கூட இல்லாமல் கணிணி கோளாறாகிப்போனது. ஆனாலும், இரண்டு முனைகளிலும் வெற்றிக்கொண்டாட்டமாக இருந்தது. காரணம் அந்த மெசேஜ். ஆம். உலகில் முதல்முறையாக இரண்டு கணிணிகள் பேசிக்கொண்ட சம்பவம் இது. அதுமட்டுமல்ல இன்று நம் கைகளில் இருக்கும் இன்டர்நெட்டின் தொடக்கப்புள்ளி இதுதான். அமெரிக்காவின் ராணுவ தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தப்பட்ட இந்த முறைமை, அப்போது அர்பாநெட் என்று அழைக்கப்பட்டது. அந்த நெட்வொர்க்தான், சுமார், 50 ஆண்டுகளுக்குப்பின் இப்படி உலகத்தை உள்ளங்கையில் தரும் மிகப்பெரிய நெட்வொர்க்காக மாறியுள்ளது. இன்று இருக்கும் இணையம் உங்களை வந்து சேர்வதற்கு ஆயிரக்கணக்கான கரங்களின் உழைப்பு பின்னணியில் இருக்கிறது. அவற்றில் பெரும்பாலானோர் பெண்கள். குறிப்பாக ராடியா பேல்மென், கேரென் ஸ்பொர்க் ஜோன்ஸ், சோபீ வில்சன் ஆகியவர்களைச் சொல்லலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES 1960இல் பெண்களால் நடத்தப்பட்ட மென்பொருள் நிறுவனம் இன்று இருக்கும் கணிப்பொறியியல் மற்றும் நிரலாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை பெண்களின் உழைப்பு பெருமளவு இருக்கிறது என்கிறார் இல்லியொனொஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை பேராசிரியர் மார் ஹிக்ஸ். ஆனால், "அவர்களது முயற்சி மிகக்குறைவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்கிறார் ஸ்டெஃபனீ ஷீர்லி. இவர், 1960களிலேயே முழுக்க முழுக்க பெண்களால் இயங்கும் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்தவர். "இணையத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்ததாக அவர் கூறுகிறார்." இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், இணையத்தை வடிவமைத்ததில் பலர் சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து (அமெரிக்காவின் கலிஃபோர்னியா) வந்தவர்கள். ஆனால், மிகவும் பன்முகத்தன்மை கொண்ட குழுவால் (அனைத்து நிறங்கள், பாலினங்கள் மற்றும் பாலியல் சார்பு கொண்டவர்கள் ) உருவாக்கப்பட்டிருந்தால் இணையம் எப்படி இருக்கும்? பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மேசையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டு, அதன் வடிவமைப்பில் பெரிய பங்களிப்பைப் பெற்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இணையத்தை முடக்குவதில் 'டிஜிட்டல்' இந்தியா முதலிடம்: 'அரசிடம் தரவுகள் இல்லை' போர் குற்றங்களை ஆவணப்படுத்த இணையம் எவ்வாறு உதவுகிறது? - விளக்கும் சட்ட வல்லுநர்கள் பழைய நோக்கியா கைபேசிகளுக்கே திரும்பும் மக்கள் – ஸ்மார்ட்ஃபோன் சலிப்பு தட்டிவிட்டதா? பின்னோக்கிச் சென்று வரலாற்றை மாற்றுவது சாத்தியமற்றது என்றாலும், இணையத்தில் ஆண்கள் எப்படி அழியாத தடங்களை பதித்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தக் கேள்வி நிரூபிக்கிறது. இணையம் கட்டமைக்கப்பட்ட விதம் மற்றும் அதன் தோற்றம், நம் இணைய அடையாளம், மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் முறை மற்றும் இவற்றுக்கான வழிமுறைகள் வரை அனைத்திலும் மாற்றம் இருந்திருக்கும். பெண்களும் சிறுபான்மையினரும் வேறுவிதமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமல்ல. ஆனால் அவர்கள் செய்திருப்பார்கள் என்று பலர் நம்புகிறார்கள். அப்படியானால், இந்த மாறுபட்ட முடிவுகள் எப்படி இருந்திருக்கும்? மேலும் அனைவருக்கும் சிறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு மாற்று இணையத்தை நாம் வைத்திருக்க வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES லாபம் மட்டுமே நோக்கமா? லண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் இணையச் சமத்துவத்தைப் போதிப்பவரும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் இணை நிறுவனரான சார்லோட் வெப், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மூலம் அமைக்கப்பட்டால் ஒரு மாறுபட்ட வணிக மாதிரியை இணையம் பெற்றிருக்கும் என நம்புகிறார். இன்று, பெரும்பாலான ஆன்லைன் தளங்களுக்கு ஒரே நோக்கம்தான். பயனர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பது, விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டுவது. "சமூக ஊடகங்களின் விளம்பரங்கள், வருவாய், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது" என்று கூறும் வெப், இது "ஆணாதிக்க", "முதலாளித்துவ", மனநிலையிலிருந்து எழுகிறது என்று அவர் நம்புகிறார். பெண் மற்றும் சிறுபான்மை தலைமை நிர்வாகிகளும் கூட லாபநோக்கம் கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு (சில நாடுகளில் அதிக பெண் குழு உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஆண்களால் ஆதிக்கம் செலுத்துவதை விட சிறப்பாக செயல்படுகின்றன). ஆனால் வெப் அவர்கள் வித்தியாசமான பரந்துபட்ட ஒரு வணிக மாதிரியை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கலாம். உதாரணமாக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமூக நீதி, பெருநிறுவன பொறுப்பு, மனித உரிமைகள் மற்றும் கூட்டு விடுதலை ஆகியவற்றுக்கும் முன்னுரிமை தரப்பட்டிருக்கும்."மாறுபட்ட பார்வைகள், மரபுகள் மற்றும் பின்னணியிலிருந்து வருவோர் வரும் அதிகாரப் பதவிகளில் இருந்தால் இந்த மாதிரியான மாறுதல்கள் வெளிப்பட வாய்ப்பு அதிகம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். தர்ம சங்கட நிலை அப்படி ஒரு பரந்துபட்ட குழு இருந்திருந்தால் அது, அதிக கவனம் கொண்ட ஒன்றாகவும் அதேசமயம், தர்மசங்கடத்தை உருவாக்கவல்ல மேற்கத்திய கலாச்சாரத்தை சாராததாகவும் இருந்திருக்கும். அப்படித்தான் ஒரு தர்ம சங்கடம் 2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தது. உச்ச நீதிமன்றம் கூகுள், யாகூ மற்றும் மைக்ரோசாப்ட் பிங் போன்றவற்றில் அல்ட்ராசவுண்ட் மற்றும் மகப்பேறுக்கு முற்பட்ட பாலியல் சோதனைக்கான சேவைகளை வழங்கும் விளம்பரங்களை நீக்குமாறு உத்தரவிட்டது. சமநிலையற்ற பாலின விகிதங்கள் மற்றும் உலகிலேயே அதிக பெண் சிசுக்கொலை விகிதம் கொண்ட இந்தியாவுக்கு இந்த விளம்பரங்கள் பொருந்தாதவை. பின்னர், அத்தகைய விளம்பரங்கள் தொடர்பான 43 வார்த்தைகள் இணையத்தில் தடை செய்யப்பட்டன.ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் தொழில்நுட்ப பேராசிரியரான அனுபம் சந்தர் கூறுகையில், ஒரு நாட்டில் செயல்படும் போது, அதன் உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கான நிபுணத்துவம் நமக்கு இருக்க வேண்டும். அதற்காக பல்வேறு கலாசார பின்னணி கொண்டவர்கள் இருக்க வேண்டும் என்கிறார். மொழி தற்போது, இணையத்தில் ஆங்கிலம் மற்றும் ஒரு சில மொழிகள் ஆதிக்கம் செலுத்துவதாக விமர்சனம் உள்ளது. உலகில் ஏறக்குறைய 7,000 மொழிகள் உள்ளன. ஆனால் இவற்றில் 10 மட்டுமே அனைத்து ஆன்லைனில் உள்ள கிட்டத்தட்ட 80% உள்ளடக்கத்தின் மொழியாக இருக்கின்றன. அதுபோக, சுயபாதுகாப்பு வழிமுறைகளும் மாறியிருக்கும். இன்று அலைபேசி எண் இல்லாமல் ஃபேஸ்புக் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் ஒரு பயனர் தன் கணக்கை சரிபார்க்க முடிவதில்லை. இதன்மூலம் தங்கள் தகவல்கள் கசிவதற்கான வாய்ப்பு இருப்பதை பெரும்பாலானோர் விரும்பவில்லை. அதேபோல, தங்கள் உண்மையான பெயருக்கு மாற்றாக வேறு பெயர் வைத்துக்கொள்வதும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு அது தேவையாக இருக்கிறது என்கிறார் Internet Democracy Project என்ற இந்திய தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அஞ்சா கொவாக்ஸ். பெண்கள்தான் இலக்கு ஆன்லைன் தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால் பாதிக்கப்படுவதில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்தான் அதிகம். சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த 14,000க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகளவில் 10 பெண்களில் ஆறு பேர் ஏதேனும் ஒரு வகையான ஆன்லைன் வன்முறையை அனுபவிப்பதாக தெரிய வந்துள்ளது.1,600 க்கும் மேற்பட்ட ஆபாச வழக்குகளின் (பழிவாங்கும் எண்ணத்துடன் பதிவேற்றப்பட்ட படங்கள் விடியோக்கள் தொடர்பான வழக்குகள்) மற்றொரு ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களில் 90% பெண்கள் என்று தெரியவந்துள்ளது.2020 ஆம் ஆண்டில், பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதில் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டது. இதே நேரத்தில், அவர்கள் இணையத்தை உருவாக்கும் பொறுப்பில் இருந்திருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு செய்திருக்கலாம். உதாரணமாக, Facebook, Twitter மற்றும் Reddit போன்ற சமூக ஊடக தளங்கள், இப்போது தங்கள் தளங்களில் பழிவாங்கும் நோக்கிலான ஆபாச பதிவுகளை தடை செய்துள்ளன. ஆனால் அவர்கள் 2015ல் தான் அதைச் செய்தன. முன்னணி பெண் ஆர்வலர்களின் அழுத்தத்தை எதிர்கொண்ட பிறகுதான் அது நடந்துள்ளது. ஆனால், "இது ஆரம்பத்திலிருந்தே கொள்கையாக இருந்திருக்க வேண்டும்." என்கிறார் சந்தர். இது தொடர்பாக பிபிசி தொடர்பு கொண்ட எந்த தளமும் கொள்கைகளை செயல்படுத்த 10 ஆண்டுகள் எடுத்தது ஏன் என்பதை விளக்க தயாராக இல்லை. நிஜ உலகில் மாற்றம் வேண்டும் பெண்களும் சிறுபான்மையினரும் மேலே உயர்ந்தால் ஆண்களை விட வித்தியாசமாக செயல்படுவார்களா என்பதை கூற இயலாது. அது சூழலுக்கு ஏற்ப மாறுபடலாம். அதேசமயம் "எங்கள் சமூகங்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ள வகையில் ஒரு ஏற்பாடு இருந்தால், அவர்கள் விரும்பியதைச் செய்யலாம், அதன் விளைவுகள் திண்ணமாக இருக்கும்," என்கிறார் பேராசிரியர் ஹிக்ஸ்.ஒரு மாற்று இணையம் "இன்னும் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்" என்று ஒட்டாவாவின் கார்லேடன் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவரான அபிகாயில் கர்லேவ் கூறுகிறார்.ஏனென்றால், இணையத்தின் பெரும்பாலான சிக்கல்கள் நிஜ உலகில் இருந்துதான் உருவாகின்றன. "சமூக ஊடகங்கள் சமூகத்தின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே" என்கிறார் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் சட்டம், புதுமை மற்றும் சமூகம் பற்றிய பேராசிரியர் லிலியன் எட்வர்ட்ஸ். பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆன்லைனில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க, அவர்கள் ஆஃப்லைனில் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் வன்முறையை நாம் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.இது சிறந்த கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் பலவற்றிற்கான அணுகலை வழங்குவதாகும். "சமூகத்தில் பங்கு உள்ளவர்கள் பொதுவாக அதைத் தோண்டி எடுப்பதில்லை" என்கிறார் எட்வர்ட்ஸ்.கர்லேவ் ஒப்புக்கொள்கிறார். "சமூகங்கள் வலுவடையும் போது, மக்கள் வன்முறை மற்றும் மோதலால் உந்துதல் குறையும்.""இணையத்தில் பெரிய மாற்றங்களைப் பெறுவதற்கு, நிஜ வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். அப்போதுதான், எந்த பாலினம் அல்லது குழு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல், இணையமானது முதலில் தனது "எல் ஓ" என்ற இரு எழுத்து செய்தியை அனுப்பியபோது எதனால் மகிழ்ந்ததோ, அந்த நோக்கத்தின்படி ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கான ஆரோக்கியமான வழிமுறையாக மாறும். https://www.bbc.com/tamil/global-62204677
  14. என்னை மிகவும் பாதித்த இயக்குனர் ஜீவாவின் மரணம் - S.Ramakrishnan |CWC-SOCIAL TALK| PART 10
  15. சினிமாவுக்கு என்னை முதலில் அழைத்தவர் கே. பாலசந்தர் - S.Ramakrishnan |CWC-SOCIAL TALK| PART 9
  16. பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் புதுவாழ்வு: இலவச சிகிச்சையால் திரும்பிய இயல்பு வாழ்க்கை ரியாஸ் சுஹைல் பிபிசி செய்தியாளர், கராச்சி 14 ஜூலை 2022 பட மூலாதாரம்,@AFSHEEN GUL "அவள் பிறந்தபோது நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் அவளுக்கு எட்டு அல்லது பத்து மாதங்கள் இருக்கும் போது அவள் கழுத்து சாயத்தொடங்கியது. இதற்கு முன்பு தனது சகோதரியின் கைகளில் இருந்து அவள் தவறி விழுந்துவிட்டாள். அதுதான் காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். உள்ளூர் மருத்துவரிடம் கொண்டு சென்றோம். மருத்துவர் மருந்துடன் கழுத்துக்கு பெல்ட்டையும் கொடுத்தார். நாங்கள் ஏழைகள் என்பதால் மேற்கொண்டு சிகிச்சை பெற முடியவில்லை." பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தார் பாலைவனத்தில் வசிக்கும் 13 வயது அஃப்ஷீனின் தாயார் ஜமீலா பீபி இதை தெரிவித்தார். குழந்தை பருவத்திலிருந்தே அவரது மகளின் தலை இடதுபுறமாக 90 டிகிரி சாய்ந்திருந்தது. ஆனால், இப்போது அஃப்ஷீன் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்தியாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு இந்திய மருத்துவர் அஃப்ஷீனின் வாழ்க்கையில் ஒரு 'தேவதூதன்' போல வந்தபோது இது சாத்தியமானது. அஃப்ஷீனின் குனிந்த தலையை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அவருக்குப் புதிய வாழ்வைக் கொடுத்தார். வெறுப்புணர்வு பரவும் காலத்தில் குழந்தைகளுக்கு அன்பின் பாடத்தைக் கற்பிப்பது எப்படி? 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்? தாய்ப்பால் பரிசுத்தமானதா? ஃபார்முலா பாலை குழந்தைகளுக்கு தரலாமா? கடந்த 12 ஆண்டுகளாக அஃப்ஷீன் இந்த நிலையில் இருந்ததால், நடக்கவும், சாப்பிடவும், பேசவும் முடியாமல் சிரமப்பட்டார். "சிறுவயதில் இருந்தே அவள் தரையில் படுத்துக்கொண்டே இருப்பாள். அங்கேயே சாப்பிடுவாள்," என்று அஃப்ஷீனின் தாயார் ஜமீலா பீபி தெரிவித்தார். அஃப்ஷீனின் தந்தை ஒரு மாவு ஆலையில் வேலை செய்து வந்தார். ஆனால் புற்றுநோயால் அவதிப்படும் அவர் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார். பட மூலாதாரம்,AHSAN KHAN "சிறுவயதில் குழந்தையின் கழுத்தை நாட்டு வைத்தியர் போன்ற ஒருவரிடம் காட்டினேன். அவர் கழுத்தை திருப்பியதால் பிரச்னை அதிகரித்தது. முன்பு அவளால் கழுத்தை நகர்த்த முடிந்தது. ஆனால் அதன் பிறகு அவள் கழுத்து ஒரு பக்கமாக சாய்ந்துவிட்டது," என்று அவரது தந்தை கூறினார். அஃப்ஷீனுக்கு நான்கு சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். மருத்துவ முகாம் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் மட்டி நகரில் வசிக்கும் 13 வயது அஃப்ஷீன், 2017 ஆம் ஆண்டு, உள்ளுரில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டபோது, டாக்டர் திலீப் குமார் அவளைப் பரிசோதித்தார். அதன் பிறகு அவளது நோய் மற்றும் பிரச்னைகள் குறித்த செய்திகள், ஊடகங்களில் வர ஆரம்பித்தது. நடிகர் அஹ்சான் கான் ஃபேஸ்புக்கில் அஃப்ஷீனின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் இந்த பெண்ணின் வலி மற்றும் நோய் குறித்து பேசியதோடு, "அஃப்ஷீனுக்கு நம் உதவி தேவை. இது தவிர அவரது தந்தைக்கும் புற்றுநோய் உள்ளது" என்று எழுதினார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி சேனலான ARY இன் 'தி மார்னிங் ஷோ' நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சனம் பலோச், அஃப்ஷீனையும் அவரது தாயார் ஜமீலா பீபியையும் நிகழ்ச்சிக்கு அழைத்தார். அதன் பிறகு அஃப்ஷீனின் வேதனை மற்றும் நோய் குறித்து சமூக ஊடகங்களில் நிறைய பேச்சு தொடங்கியது. பட மூலாதாரம்,NAZ BALOCH ஆரம்ப உதவிக்குப் பிறகு காணாமல் போன சிந்து அரசு சமூக வலைதளமான ட்விட்டரில் அஃப்ஷீனின் படங்கள் வைரலானபோது, பிடிஐ கட்சியில் இருந்து பிபிபியில் இணைந்த தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாஸ் பலோச், "அஃப்ஷீனின் முழுமையான சிகிச்சையை சிந்து அரசு மேற்கொள்ளும்," என்று ட்விட்டரில் ஒரு செய்தியை எழுதினார். இதையடுத்து ஆகா கான் மருத்துவமனையில் அஃப்ஷீன் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பிபிபி தலைவர் ஃபர்ஹல் தால்பூர் முழு விஷயத்தையும் கேட்டறிந்திருப்பதாகவும், இப்போது அஃப்ஷீனின் முழு சிகிச்சையையும் அவர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருவதாகவும் மருத்துவமனையில் பிபிசியிடம் நாஸ் பலோச் கூறினார். அஃப்ஷீன் ஆகா கான் மருத்துவமனையில் சிறிது காலம் தங்கியிருந்தார். அதன் பிறகு அவளது பெற்றோர் அவளை அழைத்துச் சென்றுவிட்டனர். "இந்த அறுவை சிகிச்சையின் போது அவர் உயிர் பிழைக்க 50 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக ஆகா கான் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்று அஃப்ஷீனின் சகோதரர் யாகூப் கம்பர் பிபிசியிடம் கூறினார். அஃப்ஷீனின் பெற்றோர் இதைப் பற்றி சிந்திக்க மருத்துவர்களிடம் நேரம் கோரினர். அதன் பிறகு தங்கள் மற்றொரு மகளின் திருமணத்தில் மும்முரமாகிவிட்டனர். இதனால் அஃப்ஷீனின் சிகிச்சையை முடிக்க முடியவில்லை. "தங்கையின் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் பெற்றேன். பின்னர் PPP தலைவர்களையும், சிந்து அரசையும் தொடர்பு கொண்டேன். ஆனால் சாதகமான பதில் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தேன்," என்று அஃப்ஷீனின் சகோதரர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,@AFSHEENGUL 'தேவர்கள் போல வந்த இந்திய மருத்துவர்கள்' ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாளின் செய்தியாளரான அலெக்ஸாண்ட்ரியா தாமஸ், 2019 இல் அஃப்ஷீன் கம்பரின் உடல்நிலை மற்றும் அவரது குடும்பத்தின் நிதி நிலை குறித்து ஒரு செய்திக்கதையை வெளியிட்டார். அதன் பிறகு அஃப்ஷீன் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார். "ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் என்னைத்தொடர்பு கொண்டு, அஃப்ஷீனை அங்கு அழைத்து வர வேண்டும் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கராச்சியில் உள்ள தாருல் சுகூன் சன்ஸ்தாவைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்," என்று யாகூப் தெரிவித்தார். "நாங்கள் தாருல் சுகூனுக்குச் சென்றோம். பாஸ்போர்ட்டை பெறுமாறு அவர்கள் கூறினர். அதன் பிறகு விசா செயல்முறை தொடங்கியது. இந்த நேரத்தில், கோவிட் தொற்றுநோய் உலகில் பரவியது. எங்கள் பயணம் அங்கேயே நின்றுவிட்டது." பட மூலாதாரம்,@AFSHEENGUL "கடந்த ஆண்டு, அலெக்ஸாண்ட்ரியா தாமஸ், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள டாக்டர் கோபாலன் கிருஷ்ணனைத் தொடர்புகொண்டார். அவர் உங்களுடன் பேசுவார் என்றும் கூறினார். பின்னர் டாக்டர் எங்களிடம் ஸ்கைப்பில் பேசினார். நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள். இங்கே இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று சொன்னார்," என்று யாகூப் குறிப்பிட்டார். " அறுவை சிகிச்சையின் போது அஃப்ஷீனின் இதயம் துடிப்பதை நிறுத்தலாம். நுரையீரல் வேலை செய்வதை நிறுத்தலாம் என்றும் அவர் கூறினார். மேலும் நாங்கள் பார்ப்பதற்கு சில யூடியூப் வீடியோக்களையும் அனுப்பினார்" என்றார் யாகூப் கம்பர். ரத்த உறவு திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு குறைபாடா? எச்சரிக்கும் மருத்துவர் மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன? நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி? "நாங்கள் மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விசாவிற்கு விண்ணப்பித்தோம். எங்களுக்கு விசா கிடைத்தவுடன் நாங்கள் டெல்லிக்கு புறப்பட்டோம். எங்களுக்கு பாகிஸ்தான் அரசோ அல்லது வேறு எந்த அமைப்போ உதவவில்லை. வெளிநாட்டிலிருந்து மக்கள் எங்களுக்கு உதவினார்கள். இதன் மூலம் நாங்கள் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா வந்தோம்." பட மூலாதாரம்,@AFSHEEN GUL இந்தியாவில் அறுவைசிகிச்சை மற்றும் உதவிக்கு முறையீடு யாகூப் கம்பர் நிதி திரட்டும் இணையதளமான 'Go Fund for Me' இல் உதவி கோரினார். முதல் கட்டமாக அவருக்கு 29 ஆயிரம் டாலர்கள் கிடைத்தது. இந்தியாவில் சிகிச்சை மற்றும் செலவுக்காக மீண்டும் அவர் முறையிட்டார். அஃப்ஷீனின் சாய்ந்த கழுத்தில் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு முன் இரண்டு சிறிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இக்காலகட்டத்தில் தனக்கு பல மருத்துவர்களுடன் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் டாக்டர் கிருஷ்ணனைப் போன்ற சிறந்த மற்றும் கருணையுள்ளம் கொண்ட மருத்துவரைப் பார்த்ததில்லை என்றும் யாகூப் கம்பர் கூறுகிறார். அவரது முயற்சியால், இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பட மூலாதாரம்,@AFSHEEN GUL சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருந்தது அஃப்ஷீனை சந்தித்த பிறகு, அவளுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அவள் நீண்ட காலம் வாழ முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது என்று அறுவை சிகிச்சை வெற்றியடைந்த பிறகு, டாக்டர் கிருஷ்ணன் ஊடகங்களிடம் கூறினார். "உலகில் இதுபோன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டது அநேகமாக இது முதல்முறையாக இருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்," என்றார் அவர். மூளை பிரச்னை காரணமாக ஆறாவது வயதில் நடக்கவும் பேசவும் கற்றுக்கொண்ட அஃப்ஷீனின் கழுத்து, ஒரு வயதில் இருந்தே சாயத்தொடங்கியது. கழுத்து சிறிது நேரம் நேராக ஆவதற்காக முதலில் ஹேலோ க்ராவிட்டி ட்ராக்ஷனை அவர் பயன்படுத்த வேண்டியிருந்தது. டாக்டர் மனோஜ் ஷர்மா, டாக்டர் ஜெயலலிதா, டாக்டர் சேத்தன் மெஹ்ரா மற்றும் டாக்டர் பானு பந்த் ஆகியோர் அடங்கிய டாக்டர் கிருஷ்ணன் தலைமையிலான குழு, பிப்ரவரி 28 அன்று ஆறு மணி நேர அறுவை சிகிச்சையின் போது அஃப்ஷீனின் கழுத்தை அவரது முதுகு தண்டுவடத்தில் இணைத்தது. இதற்குப் பிறகு, கழுத்தை நேராக வைத்திருக்க ஒரு தடி மற்றும் திருகை பயன்படுத்தி கழுத்து,செர்வைக்கல் முதுகெலும்புடன் இணைக்கப்பட்டது. அஃப்ஷீன் புன்னகைக்கும் படத்தை ட்விட்டரில் பதிவிட்ட யாகூப் கம்பர், "இந்தப் புன்னகைக்கான பெருமை, அறுவை சிகிச்சை மூலம் கழுத்தை நேராக்கிய டாக்டர் கோபாலன் கிருஷ்ணனுக்குச் சேரும்" என்று தலைப்பு அளித்துள்ளார். "நீங்கள் மிகவும் நல்லவர். எல்லா ட்ரீட்மென்ட்டும் இலவசம். எங்களுக்காக தேவதூதனைப்போல வந்துள்ளீர்கள் என்று அவரிடம் நாங்கள் சொன்னோம். டாக்டர் கிருஷ்ணன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஸ்கைப்பில் அஃப்ஷீனை பரிசோதிப்பார்." இடையூறுகள் மற்றும் சிரமங்கள் இருந்தபோதிலும், யாகூப் மனதை தளரவிடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தார். பாகிஸ்தானின் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனது சகோதரிக்கு அறுவை சிகிச்சை செய்வதில் இறுதியாக வெற்றியடைந்தார். இப்போது அஃப்ஷீன் சிரிக்கிறாள், நன்றாக பேசுகிறாள் என்று யாகூப் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். காணொளிக் குறிப்பு, "எனக்கு 12 முறை அறுவை சிகிச்சை நடந்தது", - தன்னம்பிக்கையால் புற்றுநோயை வென்ற புவனா https://www.bbc.com/tamil/science-62154705
  17. என் கதையைத் திருடிவிட்டு அதற்கு என்னிடமே அனுமதி கேட்பார்கள்- S.Ramakrishnan |CWC-SOCIAL TALK| PART 8
  18. குடியரசு தலைவர் தேர்தல் ஹைலைட்ஸ்: பிபிஇ ஆடையுடன் ஓபிஎஸ், நிர்மலா - தனி விமானத்தில் வந்த உதயநிதி - சர்ச்சையான சுயேச்சை எம்எல்ஏ ஓட்டு - ஹைலைட்ஸ் 43 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பிபிசி கவச ஆணையுடன் வாக்குரிமை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் (இடது) இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை (ஜூலை 18) மாலையில் நிறைவடைந்தது. இந்த தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். அன்றே முடிவகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்த குடியரசு தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்பார். இந்திய குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை முடிவடைந்தது, 99.12 சதவீத வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்குரிமையை பதிவு செய்தனர் என்று தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியும் மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலுமான பி.சி. மோதி தெரிவித்தார். இந்த தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்தனர். நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்களிலும் வாக்குப்பதிவு நடந்தது. குடியரசு தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மூவும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், வாக்குப்பதிவு நடந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி பி.சி. மோதி, "இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட 771 எம்பிக்களில் 763 எம்.பிக்களும் 4,025 எம்எல்ஏக்களில் 3,991 எம்எல்ஏக்களும் வாக்குரிமை செலுத்தினர்," என்று கூறினார். இந்திய குடியரசு தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் இந்திய குடியரசுத்துணை தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? முக்கிய ஹைலைட்ஸ் படக்குறிப்பு, பிபிஇ கவச ஆணையுடன் வாக்குரிமை செலுத்திய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (இடது) குடியரசு தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனை கட்சியில் இருந்து தலா இரண்டு எம்பிக்களும், காங்கிரஸ், சிவசேனை, சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒருவரும் வாக்களிக்கவில்லை. ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான முர்மூவுக்கு ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு மட்டுமின்றி ஒடிஷாவில் ஆளும் நவீன் பட்நாயக்கின் ஆதரவும் கிடைத்தது. இதேபோல, பிகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனை கட்சியில் இரு துருவங்களாக பிரிந்து கிடக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணியும் முர்மூவுக்கே தங்களுடைய ஆதரவு என்று அறிவித்திருந்தனர். ஆரம்பத்தில் உத்தவ் தாக்கரே அணி, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருக்கே தங்களுடைய ஆதரவு என்று கூறிய வேளையில், அக்கட்சியின் 16 எம்.பிக்கள் உத்தவை சந்தித்து முர்மூவை ஆதரிக்கப் போவதாக கூறியதால் தமது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டார். பட மூலாதாரம்,CONGRESS படக்குறிப்பு, சோனியா காந்தி (இடது), ராகுல் காந்தி (வலது) எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்ய, ஆரம்பம் முதல் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் சரத் பவார். அவர் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதேபோல ஃபரூக் அப்துல்லாவும் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8ஆவது பிரிவின்படி அனந்த் குமார் சிங், மஹேந்திர ஹரி தால்வி ஆகியோர் இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறவில்லை. மாநிலங்களவையில் தற்போது ஐந்து உறுப்பினர்களுக்கான இடங்களும் மாநில சட்டமன்றங்களில் ஆறு இடங்களும் காலியாக இருந்தன. அதனால், வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக நாடு முழுவதும் 4,796 உறுப்பினர்கள் (எம்.பி, எம்எல்ஏக்கள்) தகுதி பெற்றிருந்தனர். அதில் 4,754 எம்.பிக்கள் வாக்குரிமை செலுத்தினர். 44 எம்பிக்கள் அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத்திலேயே வாக்குரிமை செலுத்தினர். 9 எம்எல்ஏக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குரிமை செலுத்தினர். இரண்டு எம்எல்ஏக்கள் அவர்கள் வசிக்காத வேறு மாநில சட்டமன்றத்தில் வாக்குரிமை செலுத்தினர். தமிழ்நாடு, சிக்கிம், புதுச்சேரி, மணிப்பூர், மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, இமாச்சல பிரதேசம், குஜராத், கோவா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவாயின. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எதிர்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மருத்தவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் சட்டமன்ற வளாகத்துக்கு வந்து இரண்டு நேரம் காத்திருந்து பிறகு தமது வாக்குரிமையை செலுத்திச் சென்றார். அவர் வருவதையொட்டி சட்டமன்ற வளாகத்தில் வாக்குச்சாவடி அறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் பிபிசி கிட் எனப்படும் பாதுகாப்பு கவச ஆடையை அணிந்திருந்தனர். ஓபிஎஸ் வந்து சென்றதும் அந்த அறை மற்றும் இயந்திரங்கள் முற்றிலுமாக சுத்திகரிப்பான்கள் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. படக்குறிப்பு, வாக்குரிமை செலுத்துவதற்காக தனி விமானத்தில் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இதேபோல, இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வரும் 'மாமன்னன்' படத்தில் ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடிப்பதையொட்டி அதில் கலந்து கொள்ள உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் வாக்களிக்க வரமாட்டார் என்று காலையில் இருந்தே தகவல்கள் வெளியாயின. ஆனால், சென்னைக்கு தனி விமானத்தில் வந்த உதயநிதி, பிற்பகல் 3.30 மணிக்கு மேல் தலைமைச் செயலகத்துக்கு வந்து வாக்குரிமையை செலுத்தினார். புதுச்சேரியில் வாக்குச்சீட்டில் முத்திரை குத்தாத எம்எல்ஏ படக்குறிப்பு, நேரு எம்எல்ஏ (இடது), என்.ரங்கசாமி, புதுச்சேரி முதல்வர் (வலது) புதுச்சேரியில் அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்குரிமை செலுத்திய நிலையில், உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு வாக்குரிமை செலுத்தி விட்டு வெளியே செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. காரணம், வாக்குரிமை செலுத்தச் சென்ற அவர், வாக்குச்சீட்டில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்கும் வகையில் முத்திரையை குத்தாமல் வெறும் வாக்குச்சீட்டை வாக்குப்பெட்டியில் போட்டு விட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து காரணம் கேட்டதற்கு, "பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிகளுக்கு வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் நடுநிலை ஆக இருக்கும் நான் எனது ஜனநாயக கடமையை ஆற்றும் விதமாக எனது வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டிக்குள் போட்டேன், ஆனால் யாருக்கும் ஆதரவாக முத்திரை குத்தவில்லை," என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62208899
  19. 70 வயதில் புகைப்பட கலைஞர்: உலகம் சுற்றும் கொள்ளுப்பாட்டி நிக்கோலா பிரையன் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JENNY HIBBERT வயது வெறும் எண்ணிக்கைதான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வாழ்ந்து காட்டி நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜென்னி பாட்டி. மனவலி நிறைந்த தமது விவாகரத்துக்குப் பின், தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாறிய அவர், அந்த புகைப்படக்கலையே பிற்காலத்தில் தன்னை உலகம் முழுக்க சுற்றுப்பயணத்துக்கு அழைத்துச் செல்லும் என்றோ, உலகின் மிகப்பெரிய கொன்றுண்ணிகளை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் என்றோ எண்ணவில்லை. ஆனால் இந்த அனுபவங்கள் தன்நை தொடர்ந்து இந்தத் துறையில் பயணிக்கத் தூண்டுகின்றன என்கிறார் அவர். யோசித்துப் பாருங்கள். மைனஸ் 25 டிகிரி குளிரில் 19 மைல் தூரம் மங்கோலியாவில் நடந்தே சென்று பல அரிய காட்சிகளை உலக மக்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் இந்த மூதாட்டி. விளம்பரம் 18 வயதில் 13 மொழிகள்: காணாமல் போனவரை கண்டறிய உதவிய மாணவி கிரிப்டோ ராணி: அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அதிகம் தேடும் 10 பேரில் ஒருவரானது எப்படி? பேகம் ஹஸ்ரத் மஹால்: ஆங்கிலேயர்களை அலற விட்ட ஆஃப்ரிக்க அடிமையின் மகள் ஜப்பான், போலாந்து, ஆர்க்டிக் பகுதிக்கும் இவர் பயணம் செய்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், ஆர்க்டிக் பகுதியில் துருவக்கரடி ஒன்று விரட்டிய அனுபவமும் இவருக்கு உண்டு. அந்த சமயத்தில் உயிர் பயத்துடன் ஓடி தப்பியிருக்கிறார். இந்த பாட்டிக்கு பிடித்த இடம் பின்லாந்து என்கிறார். ஏனெனில் அங்குதான் கீழ்கண்ட இந்தப் படத்தை அவர் எடுத்தார். ஐரோப்பாவின் மிகப்பெரிய கொன்றுண்ணிகளில் ஒன்றான பிரெளன் பியர் படத்தை அவர் எடுத்தது இங்குதான். பட மூலாதாரம்,JENNY HIBBERT இவரது படங்களில் ஒன்று தற்போது கண்காட்சியாக பிரிட்டன் முழுக்க வலம் வருகிறது. ஜுலை 17ஆம் தேதி ஸ்வான்சீயில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த படம் இடம்பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் இவர் பின்லாந்து போனபோது எடுத்ததுதான் இந்த கொன்றுண்ணும் கரடியின் படம். யார் இவர்? தற்போது 70 வயதாகும் 'ஜென்னி ஹிப்பர்ட்'டுக்கு 4 குழந்தைகள், 10 பேரக்குழந்தைகளுடன் சேர்த்து இரண்டு கொள்ளுப் பேரக்குழந்தைகளும் உண்டு. தன் சிறுவயது முதலே புகைப்படக்கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு, 11 வயதில் ஒரு கிறிஸ்துமஸ் நாள் பரிசாக கிடைத்ததுதான் அவரது வாழ்வின் முதல் கேமரா. ஆனால், முதல் முதலில் அவர் கைகளுக்கு டிஜிட்டல் கேமரா வந்து சேரும்போது அவரது வயது 62. "மிகவும் குழப்பமானதொரு விவாகரத்துதான் என்னுடையது. எல்லா விவகாரத்துகளும் கெட்ட கனவுகள்தான். ஆனால், என்னை அது முழுமையாக பாதித்தது. அதிலிருந்து விடுபடவே நான் என்னை புகைப்படக்கலையில் ஈடுபடுத்திக் கொண்டேன்," என்கிறார் தற்போது மார்காம் பகுதியில் வசித்து வரும் ஜென்னி பாட்டி. பட மூலாதாரம்,JENNY HIBBERT அப்போதிலிருந்து, இயற்கை காட்சிகள், காட்டுயிர், வெளிநாட்டு பயணங்கள் என் தன் காமிராக் கனவுகளை கழுத்திலும் சுமந்தபடி படமெடுத்து வந்த இவருக்கு, கண்காட்சிகளில் வைக்கப்படும் அளவுக்கான படங்களை எடுப்பது மட்டும், சிரமமான காரியமாகவே தொடர்ந்தது. காத்திருப்பின் பலன் தன் சிறந்த படம் குறித்து பேசும் ஜென்னி, "ஒரு 16 மணி நேரம் நான் அங்கு ஒளிந்திருந்தேன்," என்கிறார். மேலும் "இந்த மறைவிடத்துள்ளேயே நீங்கள் உறங்க வேண்டும். அது கடுமையான குளிர். தோராயமாக மைனஸ் 20 டிகிரி இருக்கலாம். அங்கு நான் உணர்ந்த ஒரே வெப்பம் என்றால் வெறும் 9 மெழுகுவர்த்திகள் மட்டுமே. நீங்கள் அங்கேயே தொடர்ந்து இருக்கிறீர்கள். ஒன்று அல்லது இரண்டு கரடிகள் வரலாம் என்ற வெறும் நம்பிக்கையில். அதுவும் நம்மை நோக்கித் திரும்பினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற கூடுதல் நம்பிக்கையுடன்" என்கிறார் ஜென்னி. ஆனால், இவரது நம்பிக்கை பொய்க்கவில்லை. அந்த காத்திருப்புக்கு பலன் கிடைத்தது. "இந்தக் கரடி அதிகாலையில் வந்தது. ஆனால், அந்த சமயத்தில் மூடுபனி மறைத்திருந்தது" என்று அந்த நாளை நினைவுகூரும் பாட்டி, "இறந்துபோன, துருவப்பகுதியின் மான் ஒன்றுடன் சேர்த்து அந்த கரடியை படமெடுக்க கிடைத்த வாய்ப்பு குறித்தும் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறார். 2020ஆம் ஆண்டு இவர் பின்லாந்து சென்றிருந்தபோது, இதேபோல ஒரு மறைவிடத்தில் பதுங்கியிருந்தபோது, இவர் வைத்திருந்த சாக்லேட்டை மோப்பம் பிடித்த கரடி மறைவிடத்திற்கு அருகிலேயே வந்துள்ளது. பட மூலாதாரம்,JENNY HIBBERT படக்குறிப்பு, மறைவிடத்தை மோப்பம் பிடித்த கரடி அந்த அனுபவம் குறித்து பேசும் ஜென்னி, "அந்த கரடி மோப்பம் பிடித்து வந்து விட்டது. அது மறைவிடத்துக்குள் நுழைய முயற்சிக்கிறது. பதிலுக்கு, அந்த கரடியை பயமுறுத்துவதற்காக நீங்கள் மறைவின் உள்லிருந்து அந்த கதவில் அடித்துக்கொண்டிருப்பீர்கள். அதுபோன்ற வனப்பகுதிகளில் உங்கள் செல்போன் வேலை செய்யாது. அது மிக மிக பயமான அனுபவம்" என்கிறார். பட மூலாதாரம்,JENNY HIBBERT மங்கோலிய நாடோடிகளுடன் நாடு, காடு, நாடோடிகள், காடோடிகள் என இவரது பயணம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 2016ஆம் ஆண்டு மங்கோலியாவில் கஸக் என்ற நாடோடிப் பழங்குடி இனக்குழுவுடன் பயணித்தார். அதற்காக, தன்னால் மக்களுடன் ஒன்றி வாழ முடியும் என்றும் அந்த குளிரில் நாளொன்றுக்கு 19 மைல் தூரம் நடக்க முடியும் என்றும் அவர் நிரூபித்துத்தான் இந்த பயணத்துக்கு தேர்வாகியிருந்தார் ஜென்னி பாட்டி. பட மூலாதாரம்,JENNY HIBBERT குழந்தைகள் மற்றும் விலங்குகளின் படங்கள்தான் இதுவரை தான் எடுத்ததிலேயே தான் விரும்பக்கூடியவை என்கிறார் ஜென்னி. ஒருமுறை ஒட்டகம் ஒன்றைப் படமெடுத்தபோது அது எழுப்பிய ஓலம் இதயத்தை நொறுக்கியதாம். தன் குட்டியைத் தொலைத்த தாய் ஒட்டகத்தின் கதறல் அது. தன் குட்டியை பெருங்குரலெடுத்து கதறி தன் குட்டியை அடைந்துவிட வேண்டும் என்ற அந்த ஓலம் நிஜமாகவே இதயத்தை நொறுக்குவதுதான். நல்வாய்ப்பாக கஸக் மக்கள் அந்தக் குட்டியை கண்டுபிடித்து தன் தாயுடன் சேர்த்துவிட்டனர். 'மிஸ் செப்டம்பர்' இரண்டு முறை செப்டம்பர் மாதங்களில் இவரது படங்கள் பிபிசியின் தொகுப்புகளில் வெளியானதையடுத்து இவரது குழுவில் மிஸ் செப்டம்பர் என்று செல்லப்பெயரும் உருவாகிவிட்டது. பட மூலாதாரம்,JENNY HIBBERT குளிர்காலத்தில் யெல்லோஸ்டோன் தெசிய பூங்கா செல்லவேண்டும் என்றும் அலாஸ்காவில் சால்மன் மீன்களைப் பிடிக்கும் கரடிகளை தன் காமிராவில் பிடிக்க செல்ல வேண்டும் என்பது இவரது விருப்பம். கரடியின் படத்துக்காக அவர் காத்திருந்தபோதும், அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. காத்திருப்புக்கும் நல்ல பலன் கிடைத்தது. இப்போதும் அவர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். https://www.bbc.com/tamil/global-62199419
  20. இலங்கையில் அவசர கால சட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
  21. கள்ளக்குறிச்சி மாணவி உடலுக்கு மறு பிரேத பரிசோதனை - உயர் நீதிமன்றம் 43 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் ஜூலை 13ஆம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரது மகளின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக நீதிபதி சதீஷ் குமார் பிறப்பித்த உத்தரவில், மருத்துவர்கள் குழு மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது மாணவியின் தந்தைக்கான வழக்கறிஞர் கே.கேசவன் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்கலாம் என்று கூறினார். உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிய போராட்டக்காரர்களின் செயலுக்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை ஒரு சோதனை வழக்காகக் கருதி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யுமாறு காவல்துறையினரைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் ஒரு சமிக்ஞையை அனுப்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள் நடந்தால், அந்த வழக்கை மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு சிஐடி (சிபிசிஐடி) விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, 3 மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES அரசு விளக்கம் இந்த நிலையில், மாணவி உயிரிவந்த வழக்கை சிபிசிஐடி ஞாயிற்றுக்கிழமையே எடுத்துக்கொண்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார். அவரது நிலைப்பாட்டை நீதிபதி பதிவு செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் தரப்பு ஊடகங்களுக்கு அளிக்கும் சர்ச்சை பேட்டிகளால் போலீஸ் விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம் என்று காவல்துறையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்? கல்விகூடங்களில் மரணம் ஏற்பட்டால் சிபிசிஐடி விசாரணை அவசியம்: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் உத்தரவு தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம் கூடாது - எச்சரிக்கும் அரசு மகளின் மறு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற்றுக் கொண்டு அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்தவும் பெற்றோருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.திடீரென வன்முறையாக மாறிய அமைதிப் போராட்டம் எதேச்சையாக நடக்கவில்லை என்றும் அது "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போல் தோன்றுகிறது" என்றும் நீதிபதி சதீஷ் குமார் விசாரணையின்போது கூறினார். சட்டத்தை மீறி செயல்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த சிறப்புக் குழுக்களை அமைக்குமாறும் காவல்துறையினரை நீதிபதி கேட்டுக் கொண்டார்.சிறுமியின் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் இணை விசாரணை மற்றும் விவாதங்கள் நடத்தி வன்முறையைத் தூண்டும் நபர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசுக்கு உத்தரவிட்டார். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு குண்டர்கள் போல ஒரு கும்பல் செயல்படுமானால், பிறகு சட்டத்தை நிலைநாட்ட நீதிமன்றமும் அதை பராமரிக்க காவல்துறையும் எதற்கு என்றும் நீதிபதி சதீஷ் குமார் கேள்வி எழுப்பினார். போலி காணொளி: எச்சரிக்கும் காவல்துறை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து ஜூலை 13ஆம் தேதி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கடலூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இந்த விவகாரத்தில் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் சந்தேகம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதேவேளை, மாணவிக்கு மரணத்துக்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சியில் உள்ளூர் அரசியல் மற்றும் மாணவர் அமைப்புகள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அதன் உச்சமாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவி படித்த தனியார் பள்ளிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர்களில் சிலர் பள்ளி அறைகளுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். ஏராளமான பள்ளி வாகனங்கள் மற்றும் காவல்துறை பேருந்துக்கு தீ வைத்தனர். இந்த நிலையில், மாணவி படித்த பள்ளியில் முன்தினம் இரவு ஒரு நபர் சிசிடிவி கேமராவை பார்த்தவாறு நுழைவதாக கூறி ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாயின. ஆனால், போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த லேப்டாப் திருட்டு தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறை எஸ்பி செல்வகுமார், "கனியாமூர் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி சமூக ஊடகங்களில் போலியான காணொளி மற்றும் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என எச்சரித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-62208900
  22. இந்திய அகதி முகாமில் இருந்து இலங்கை திரும்பி இன்று சாதனை படைக்கும் பெண் முயற்ச்சியாளர். A motivation story about a woman entrepreneur who returns to Sri Lanka from an Indian refugee camp.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.