Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20094
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெற்றார் திரெளபதி முர்மூ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர். திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. வெற்றிப் பெற்ற திரெளபதி முர்மூவிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 "திரெளபதி முர்மூவிற்கு ஆதரவளித்த எம்எல்ஏ மற்றும் எம்.பிகளுக்கு நன்றி. திரெளபதி முர்மூவின் மகத்தான் வெற்றி நமது ஜனநாயகத்தின் நல்ல வெளிப்பாடு" என மோதி தெரிவித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் திரெளபதி முர்மூவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக , எந்தவித அச்சமும் பாகுபாடும் இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராக முர்மூ செயல்படுவார் என தான் நம்புவதாக யஷ்வந்த் சின்ஹா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். திரெளபதி முர்மூவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வரும் முர்மூ, அரசியலைப்பு ஜனநாயகத்தை உறுதிப்படுத்த ஒடுக்கப்பட்ட குரல்களின் பக்கம் நிற்பார் என தான் நம்புவதாக ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 மூன்றாம் சுற்று மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரெளபதி முர்மூ 812 வாக்குகளை பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹா 521 வாக்குகளை பெற்றுள்ளார். இரண்டாம் சுற்று இரண்டாம் சுற்றில் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டன (எழுத்து வரிசையில்). அதில் 1138 வாக்குகள் செல்லும் வாக்குகளாக இருந்தன. அதன் மதிப்பு ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 575 ஆகும். இதில் திரெளபதி முர்மூ 809 வாக்குகளை பெற்றிருந்தார். எனவே அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 299 ஆகும். எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா 329 வாக்குகளை பெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 44 ஆயிரத்து 276 ஆகும். முதல் சுற்று முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திரெளபதி முர்மூ 540 எம் பிக்களின் வாக்குகளை பெற்றிருந்தார். அதன் மதிப்பு 3 லட்சத்து 78 ஆயிரம். எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 208 எம்பிக்களின் வாக்குகளை பெற்றிருந்தார் அதன் மதிப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 600. யார் இந்த திரெளபதி முர்மூ? பட மூலாதாரம்,GETTY IMAGES திரௌபதி முர்மூ, புவனேஷ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் 1979 இல் பி.ஏ. தேர்ச்சி பெற்றார். ஒடிஷா அரசில் எழுத்தராக (clerk) தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது நீர்ப்பாசனம் மற்றும் எரிசக்தி துறையின் இளநிலை உதவியாளராக இருந்தார். பிற்காலத்தில் அவர் ஆசிரியராகவும் பணியாற்றினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் திரெளபதி முர்மூவின் கிராமம் எப்படி உள்ளது? - கள நிலவரம் இந்திய குடியரசு தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் ராய்ரங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கௌரவ ஆசிரியராக அவர் இருந்தார். அவர் பணிபுரிந்த நாட்களில், ஒரு கடின உழைப்பாளியாக அவர் அங்கீகரிக்கப்பட்டார். திரௌபதி முர்மு 1997ஆம் ஆண்டு ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்து தேர்தலில் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நகர பஞ்சாயத்தின் துணைத் தலைவராக ஆக்கப்பட்டார். அதன்பிறகு அவர் அரசியலில் தொடர்ந்து முன்னேறினார். மேலும் இரண்டு முறை (2000 மற்றும் 2009 ஆண்டுகள்) ராய்ரங்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பாஜக டிக்கெட்டில் எம்எல்ஏ ஆனார். முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன பிறகு, 2000 முதல் 2004 வரை நவீன் பட்நாயக் அமைச்சரவையில், சுயேச்சைப் பொறுப்புடன் மாநில அமைச்சராக இருந்தார். அவர் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக சுமார் இரண்டாண்டுகளும், மீன்வளத் துறை மற்றும் கால்நடை வளத் துறை அமைச்சராக சுமார் இரண்டு ஆண்டுகளும் பதவி வகித்தார். அப்போது ஒடிஷாவில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக இருந்தவர் 2015 மே 18 ஆம் தேதி அவர் ஜார்கண்டின் முதல் பெண் மற்றும் பழங்குடி ஆளுநராக பதவியேற்றார். அவர் ஆறு ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் 18 நாட்கள் இந்த பதவியை வகித்தார். ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்த பிறகும் பதவியில் இருந்து நீக்கப்படாத ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநர் இவர். அவர் இங்கு பிரபலமான ஆளுநராக இருந்தார். ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் ஆகிய இரு தரப்பிலுமே அவருக்கு நற்பெயர் இருந்தது. அவர் தனது பதவிக்காலத்தில் பல முக்கிய முடிவுகளை எடுத்தார். சமீப ஆண்டுகளில், சில ஆளுநர்கள் அரசியல் ஏஜெண்டுகள் போல் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், ஆளுநராக இருந்த திரௌபதி முர்மு இது போன்ற சர்ச்சைகளில் சிக்காமல் விலகியிருந்தார். காணொளிக் குறிப்பு, திரெளபதி முர்மூ: பாஜக கூட்டணி அறிவித்துள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் - யார் இவர்? அவரது பதவிக்காலத்தின்போது, பாஜக கூட்டணியின் முந்தைய ரகுபர் தாஸ் அரசிடமும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் தற்போதைய ஹேமந்த் சோரேன் அரசிடமும், தங்கள் சில முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். அத்தகைய சில மசோதாக்களை அவர் தாமதமின்றி திருப்பி அனுப்பினார். இதுவரை குடியரசு தலைவராக இருந்தவர்கள் யார், அவர்களின் பதவிக்காலம் என்ன? ராம்நாத் கோவிந்த் - (பிறந்த தினம்: 1945 அக்டோபர் 1)பதவிக்காலம்: 2017 ஜூலை 25 முதல் தற்போதுவரை பிரணாப் முகர்ஜி (1935-2020)பதவிக்காலம்: 25 ஜூலை, 2012 முதல் 25 ஜூலை, 2017 வரை பிரதிபா தேவிசிங் பாட்டீல் (பிறப்பு - 1934)பதவிக்காலம்: 25 ஜூலை, 2007 முதல் 25 ஜூலை, 2012 வரை ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (1931-2015)பதவிக்காலம்: 25 ஜூலை, 2002 முதல் 25 ஜூலை, 2007 வரை கே. ஆர். நாராயணன் (1920 - 2005)பதவிக்காலம்: 25 ஜூலை, 1997 முதல் 25 ஜூலை, 2002 வரை ஷங்கர் தயாள் சர்மா (1918-1999)பதவிக்காலம்: 25 ஜூலை, 1992 முதல் 25 ஜூலை, 1997 வரை ஆர் வெங்கட்ராமன் (1910-2009)பதவிக்காலம்: 25 ஜூலை, 1987 முதல் 25 ஜூலை, 1992 வரை கியானி ஜைல் சிங் (1916-1994)பதவிக்காலம்: 25 ஜூலை, 1982 முதல் 25 ஜூலை, 1987 வரை நீலம் சஞ்சீவ ரெட்டி (1913-1996)பதவிக்காலம்: 25 ஜூலை, 1977 முதல் 25 ஜூலை, 1982 வரை ஃபக்ருதீன் அலி அகமது (1905-1977)பதவிக்காலம்: ஆகஸ்ட் 24, 1974 முதல் பிப்ரவரி 11, 1977 வரை வராஹகிரி வெங்கட கிரி (1894-1980)பதவிக்காலம்: 3 மே, 1969 முதல் 20 ஜூலை, 1969 மற்றும் 24 ஆகஸ்ட், 1969 முதல் 24 ஆகஸ்ட், 1974 வரை ஜாகிர் உசேன் (1897-1969)பதவிக் காலம்: 13 மே, 1967 முதல் மே 3, 1969 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975)பதவிக்காலம்: 13 மே, 1962 முதல் 13 மே, 1967 வரை டாக்டர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) இரண்டு முறை பதவி வகித்தார்பதவிக்காலம்: 26 ஜனவரி, 1950 முதல் 13 மே, 1962 வரை https://www.bbc.com/tamil/india-62256021
  2. இலங்கையில் போராட்டம் போதும்... முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கை ஜனாதிபதி தேர்வு நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள் உரையாடினர். அப்போது அவர் கூறியது என்ன? நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். பிபிசி சிங்கள சேவையும் அவரிடம் சில கேள்விகளை எழுப்பியது. கேள்வி: ரணில் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: அவர் அதிக வாக்குகளைப் பெற்றார், அதனால் ஜனாதிபதி ஆகியிருக்கிறார். ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் - தாக்குப்பிடிப்பாரா? மேலவளவு கிராமத்தில் "25 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை" - கொல்லப்பட்ட முருகேசன் மனைவி கேள்வி: அவர் உங்களது நெடுங்கால அரசியல் எதிரியாக இருந்தவர். நீங்களும் அவருக்கு வாக்களித்தீர்களா? பதில்: அப்படியும் சொல்ல முடியாது... (சிரிக்கிறார்) பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்க கேள்வி: இப்போது அமைச்சரவையிலும் அரசாங்கத்திலும் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பதில்: என்ன நடக்கப் போகிறதென்று நாங்களும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். கேள்வி: புதிய அரசாங்கத்தில் உங்கள் பங்களிப்பு இருக்குமா? பதில்: அதைப்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதைச் செய்வோம். கேள்வி: உங்கள் கட்சித் தலைவர் டளஸ் அழகபெருமவுக்கு ஆதரவளித்தார். ஏன் இந்த கருத்து வெறுபாடு? பதில்: நாங்களும் அவருக்குத்தான் வாக்களித்தோம். ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டார். யாராவது ஒருவர்தானே வெற்றிபெற முடியும்... (பிபிசி கேள்வி): ரணில் மீது பல விமர்சனங்கள் உள்ளன — போராட்டக்காரர்கள் மற்றும் பிறரிடமிருந்து. மக்களின் உண்மையான குரல் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கவில்லை என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்து? பதில்: பல்வேறு கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அவர்கள் (போராட்டக்காரர்கள்) அவர்களது குரல்தான் மக்களின் குரல் என்று சொல்கிறார்கள். நாங்கள் எங்களது குரல்தான் மக்களின் குரல் என்று சொல்கிறோம். கேள்வி: மக்களின் போராட்டத்தைப் பற்றி உங்கள் கருத்து? பதில்: போரட்டம் போதுமென்று நினைக்கிறேன். போராட்டத்தை அவர்கள் முடித்துக்கொள்ள வேண்டும். https://www.bbc.com/tamil/sri-lanka-62249346
  3. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: "போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANANDA KUMAR படக்குறிப்பு, கங்காராமை விஹாரையில் ரணில். போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பு - கங்காராமை விஹாரைக்கு நேற்றிரவு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக, வீடுகளை தீக்கிரையாக்கி, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்ட விரோத செயல் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறு சட்டவிரோதமாக செயற்படுவோருக்கு எதிராகத் தான் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,PMD ஆனால், எதிர்காலமொன்றை அமைக்க வேண்டும் என போராடுவார்களாயின், அதற்கு முழுமையான ஆதரவை நான் வழங்குவேன். அமைதியாக போராடுவோருக்கு நான் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளேன். வேண்டுமென்றால், அமைதியாக போராடுவோருக்கு மற்றுமொரு மேடையை நான் அமைத்துக்கொடுப்பேன். இந்த நாட்டின் நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு, ஒத்துழைப்புடன் செயற்பட நான் எதிர்பார்க்கின்றேன். ஒன்றாக இணைந்து பணியாற்ற ஏன் முடியாது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டை இல்லாதொழிப்பதற்காகவே நாம் எதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம் என இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது மிக முக்கியமான கேள்வி. நானும் அது குறித்து சிந்தித்து பார்த்துள்ளேன். அப்படியென்றால், இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். இளைஞர்களின் குரல் மற்றும் ஏனையோரின் குரல்களை நாம் செவிமடுக்க வேண்டும். தற்போதுள்ள நடைமுறைக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறையை மாற்றுமாறு கூறுகின்றார்கள். அமைதியாக கருத்துக்களை வெளிப்படுத்துவோருக்கு, அவர்களின் கருத்துக்களை வெளியிட நாம் இடமளிக்க வேண்டும். எமக்கும் அதற்கு பதிலளிக்க முடியும். அமைதியாக இருப்போரின் கருத்துக்களையும் நாம் கேட்டறிந்துக்கொள்ள வேண்டும். பட மூலாதாரம்,PMD இதேவேளை, இலங்கையின் 8வது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை இந்தப் பதவியேற்பு நடந்தது. பின்னணிமேலவளவு கிராமத்தில் "25 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை" - கொல்லப்பட்ட முருகேசன் மனைவி இலங்கையில் கடந்த ஏப்ரல் முதல் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, மக்கள் வீதிக்கு வந்துப் போராடத் தொடங்கினர். அவர்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவையும் வெளியேற்றவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் - தாக்குப்பிடிப்பாரா? மேலவளவு கிராமத்தில் "25 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை" - கொல்லப்பட்ட முருகேசன் மனைவி இந்த நிலையில், முதலில் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் பதவி விலகி வெளியில் தெரியாக இடத்தில் பாதுகாப்பாக இருந்து வருகிறார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யாக இருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஆக்கினார் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டைவிட்டுத் தப்பி மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார். அங்கிருந்து தமது விலகல் கடிதத்தையும் அவர் அனுப்பிவைத்தார். பட மூலாதாரம்,PMD இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அரசமைப்புச் சட்டத்தின்படி பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இலங்கையில் ஜனாதிபதிகள் மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். ஆனால், அசாதாரண சூழ்நிலையில், ஜனாதிபதி விலக நேர்ந்தால், அவரது மீதமிருக்கும் பதவிக் காலத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக நாடாளுமன்றமே தேர்ந்தெடுக்க அரசமைப்புச் சட்டம் வழி செய்துள்ளது. இந்த அடிப்படையில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, தனது பதவிக் காலத்துக்கு முன்பே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் பதவி விலகினார். இதனால், இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ஆனார் ரணில் விக்கிரமசிங்க. இவர் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் மீதமுள்ள காலத்துக்கு இந்தப் பதவியை வகிப்பார். கடந்த ஜனாதிபதி தேர்தல் 2019ம் ஆண்டு நடந்ததால் இந்தப் பதவிக் காலம் 2024 வரை நீடிக்கும். ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும, அநுர குமார திஸாநாயக்க ஆகியோ போட்டியிட்டனர். https://www.bbc.com/tamil/sri-lanka-62249341
  4. மேலவளவு கிராமத்தில் "25 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை" - கொல்லப்பட்ட முருகேசன் மனைவி பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முருகேசனின் மனைவி மணிமேகலை "ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக எனது கணவர் முருகேசனை கொன்றுவிட்டார்கள். அன்றிலிருந்து தற்போது வரை எங்கள் காலனி பகுதிக்கு எந்தவிதமான சலுகையும் செய்து கொடுக்கவில்லை" என்கிறார் படுகொலை செய்யப்பட்ட மேலளவு முருகேசன் மனைவி. ஆனால், சுடுகாட்டுப் பாதை போன்ற பிரச்சனையில் சிக்கல் இருந்தாலும், எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை என்பதை ஊராட்சித் தலைவர் மறுக்கிறார். தமிழ்நாட்டின் சில ஊர்களில் ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்ததை ஆதிக்க சாதியினர் எதிர்த்துவந்தனர். சில ஊர்களில் தேர்தலே நடத்த முடியாத சூழ்நிலை இருந்துவந்தது. சில ஊர்களில் தேர்தல் முடிந்த உடனே தலைவர்கள் பதவி விலகுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மேலவளவு கிராமத்தில் தேர்தல் மூலம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் சாதியை சேர்ந்த முருகேசன் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டை அதிர வைத்தது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு கிராமம். தலித் சாதியை சேர்ந்த முருகேசன் இங்கே ஊராட்சித் தலைவரானதை அந்த ஊரைச் சேர்ந்த மற்றொரு சாதியினரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தேர்தலில் போட்டியிடும்போதே முருகேசனை எதிர்த்தனர். அவரைக் கொலை செய்து விடுவதாக மொட்டை கடுதாசி அனுப்பியுள்ளனர். இதை மீறி முருகேசன் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். ஓடும் பேருந்தில் வெட்டிப் படுகொலை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனும் அவரது சாதியைச் சேர்ந்த 5 பேரும் 1997 ஜூன் 29ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் பேருந்தை வழிமறித்து பேருந்துக்குள் ஏறி முருகேசனை வெட்டினர். மேலும் ஐந்து பேரையும் பேருந்திலேயே வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரையும், அதேநாளில் படுகொலை செய்தனர். படக்குறிப்பு, ஊர்ப் பகுதி பேருந்து இந்த படுகொலை தொடர்பாக சிறைத் தண்டனை பெற்ற சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகிய 13 பேரும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய பிரதேசம்: பழங்குடியினர் படுகொலையில் பஜ்ரங் தளத்துக்கு பங்கு உள்ளதா? சாதிக் கயிறு விவகாரத்தில் மாணவர் கொலை: சிக்கலைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? 25 ஆண்டு காலமாக காலனி பகுதி புறக்கணிப்பு இந்த படுகொலை சம்பவம் நடந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும் மேலவளவு காலனி பகுதி இன்னும் அடிப்படை வசதிகளில் வளர்ச்சி பெறாமலே தனித்து விடப்பட்டுள்ளது. காலனியில் பெரும்பாலான வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை வசதி இல்லாததால் இன்னும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர். படக்குறிப்பு, குடிநீர் இணைப்பு இங்கு அடிகுழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் வராது. சுமார் மூன்று அடி குழிக்குள் இறங்கிதான் தண்ணீர் பிடிக்கிறார்கள். சுடுகாடு செல்லும் பாதை வசதியும் இல்லை. யாராவது இறந்து விட்டால் குடியிருப்புக்கு பகுதிக்குள் செல்ல வேண்டியுள்ளது. மேலும் சுடுகாட்டு பாதையில் கழிவு நீரால் சேரும் சகதியுமாக இருக்கிறது. சாக்கடை, சாலை, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வழங்கப்படும் குடிநீர் தெருக்களுக்கு முறையாக வருவதில்லை. காலனி பகுதிக்குள் ஊராட்சித் தூய்மை பணியாளர்கள் வருவதில்லை, காலனிப் பகுதி முழுவதுமே சுகாதாரமற்ற நிலையில்தான் காணப்படுகிறது. புதிதாக நுாலகம், பேருந்து நிறுத்தம், நியாய விலைக் கடை புனரமைப்பது போன்ற எந்த பணிகளும் செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. "அனாதையாய் மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறோம்" "பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக எனது கணவர் முருகேசனை கொன்றுவிட்டார்கள். அன்றிலிருந்து தற்போது வரை எங்கள் காலனிப் பகுதிக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனின் மனைவி மணிமேகலை. "சாலை, குடிநீர், மயானப் பாதை, சாக்கடை, பேருந்து நிறுத்தம் போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் எங்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எங்கள் பகுதி இளைஞர்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை மனு கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் அதிகாரிகள் யாரும் செவி சாய்ப்பதாய் தெரியவில்லை. படக்குறிப்பு, மயானம் செல்லும் பாதை எனது கணவர் படுகொலை செய்யப்படாமல் உயிரோடு இருந்திருந்தால் தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருந்திருப்போம். என் கணவர் இறந்த பிறகு எனது நான்கு பிள்ளைகளை மிகவும் சிரமப்பட்டு ஆளாக்கி உள்ளேன். பாதிக்கப்பட்ட அவர்களுக்காக அரசு எந்த சலுகையும் செய்யவில்லை. யாரும் உதவ முன் வரவில்லை. வெட்டி படுகொலை செய்தவர்கள் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட நாங்கள் எங்கள் பிள்ளைக்குட்டிகளோடு தற்போது அனாதையாய் மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறோம்," என்றார். எதற்காக கழிவறை கட்டிக் கொடுத்தார்கள்? "பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் கழிவறை வசதி இல்லாமல் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகிறார்கள்," என் பிபிசி தமிழிடம் கூறினார் படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி பச்சையம்மாள். படக்குறிப்பு, குழிக்குள் இருந்து தண்ணீர் எடுக்கும் மூதாட்டி "அரசு சார்பில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீட்டுக்கு ஒரு கழிவறை கட்டிக் கொடுத்தார்கள். எதற்காக எந்த கழிவறை கட்டிக் கொடுத்தார்கள் என தெரியவில்லை. அரைகுறையாக கட்டிக் கொடுத்த இந்த கழிவறையை தற்பொழுது யாரும் பயன்படுத்தவில்லை. உறைகுழி கூட எடுக்காமல் கழிவறையை கட்டி பாதிலே விட்டுச் சென்றுள்ளனர். கழிவறை வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகிறார்கள். வேலை முடித்துவிட்டு வீடு திரும்பினால், நிம்மதியாய் குளிக்க கூட முடியவில்லை. வீதிக்கு வீதி கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு முறையாக கொடுக்கப்படவில்லை. அதனால் பள்ளத்தில் இருந்து தான் தற்பொழுது குடிநீர் எடுத்துக்கிறோம். வயதானவர்கள் இரவு நேரத்தில் பள்ளத்துக்குள் இறங்கி தண்ணீர் எடுப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. அரசு அதிகாரிகள் எங்கள் காலனியில் முறையாக ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை எங்களுக்கு செய்து கொடுக்க முன்வர வேண்டும்," என்றார். தலித் பகுதிக்கு ஏன் சுடுகாட்டுப் பாதை இல்லை "சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கடந்த 60 ஆண்டு காலமாக போராடி வருகிறோம், இதுவரை 30க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் பாதைக்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை", என்கிறார் சுப்பிரமணியன். மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது; "சுடுகாட்டுக்கு பாதை வேண்டி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு அளித்து வருகிறோம். இருந்த போதும் எங்களுக்காக பாதை அமைத்து தர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை. குடியிருப்பு வழியே பிணத்தை தூக்கி வரும் பொழுது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம். மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சேரும் சகதியமாய் கழிவுநீர் நிரம்பி காணப்படுகிறது. வேறு வழியில்லாத காரணத்தினால் பிணத்தை அந்த வழியேதான் கொண்டு செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு உள்ளது. தலித் பகுதிக்கு ஏன் சுடுகாட்டுக்கு பாதை இல்லை? என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பொழுதும் அதிகாரிகள் அது குறித்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்," என்றார். அரசின் அடிப்படை சலுகைகள் அனைத்தும் கானல் நீர் "படுகொலை சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ 25 ஆண்டு காலம் கடந்து விட்டது. இருந்தபோதும் தற்போது வரை எங்கள் காலனி பகுதியில் ஒரு முறை கூட கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை," என்கிறார் முருகேசன். மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது; "மேலவளவு காலனி மக்களுக்கு அரசின் அடிப்படை சலுகைகள் அனைத்தும் கானல் நீராக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் சாதியில் இருந்து ஊராட்சி மன்றத் தலைவராக முருகேசன் வெற்றி பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக ஆதிக்க ஜாதியினர் அரசுப் பேருந்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேரை வெட்டி படுகொலை செய்தனர். இது நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும் ஊராட்சியில் காலனியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிப்படை வசதி கேட்டு அரசாங்கத்திடம் மனு கொடுத்தால் அது நிறைவேறுவதற்கு குறைந்தது மூன்று அல்லது ஐந்து வருடங்கள் ஆகிறது. ஊர் பகுதிக்கு கிடைக்கும் அரசின் அனைத்து சலுகைகளும் காலனி பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை. ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஊர் பகுதிக்குள் சென்று ஒவ்வொரு வீடுகளில் இருக்கக்கூடிய குப்பைகளை வாங்குகிறார்கள் ஆனால் காலனி பகுதியில் உள்ள தெருகளுக்கு கூட தூய்மை பணியாளர்கள் வருவது கிடையாது. பேருந்து நிறுத்தம், குடிநீர் வசதி, பசுமை வீடு, மயானப் பாதை, நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை. தற்போது வரை சம்பந்தப்பட்ட காலனிப் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. தற்போது அரசு அறிவித்துள்ள பள்ளி மேலாண்மை குழுவில் காலனி மக்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. காலனி பகுதியைச் சார்ந்த படித்த இளைஞர்களுக்கு சுற்றுவட்டாரத்தில் வேலை கொடுப்பதில்லை," என்றார். "மேலவளவு காலனி பகுதியில் சுடுகாட்டு பாதை தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியே செல்வதால் அதை கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்கிறார்" மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் தங்கம். பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரான இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது: "ஊராட்சி நிதியை 11 சிற்றூர்களின் வளர்ச்சிக்கு பிரித்து செலவு செய்ய வேண்டும். காலனி பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுதான் வருகிறது. பேருந்து நிறுத்தம் தற்பொழுது கட்டப்படுகிறது. ஓரிரு மாதங்களில் அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும். குடிநீரைப் பொருத்தவரை நாள் ஒன்றுக்கு ஊராட்சி சார்பாக இரண்டு முறை நீர் வழங்கப்படுகிறது. சுடுகாட்டுப் பாதைக்கான நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தி கொடுத்தால் ஊராட்சி சார்பாக பாதை உடனே போட்டு கொடுக்கப்படும்," என்றார். மேலவளவு காலனியில் அடிப்படை வசதிகளின் நிலை என்ன என்பது குறித்து தகவல் தற்போது தான் கிடைக்கப்பெற்றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இது குறித்து கலந்து ஆலோசித்து அப்பகுதியில் முறையாக ஆய்வு அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தரப்பினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். மேலவளவு காலனியில் என்ன அடிப்படை வசதி இல்லை என்பது குறித்து துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62240134
  5. இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, வரலாற்றில் முதல் தடவை நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக, ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார். இலங்கை பிரஜைகளின் வாக்குகளினாலேயே, ஜனாதிபதி ஒருவரின் தெரிவு இடம்பெறுவது அரசியலமைப்பில் கூறப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஒருவரின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர், அந்தப் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பொறுப்பு நாடாளுமன்றம் வசமாகும். இதன்படி, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட, இரண்டு ஜனாதிபதிகள் அவ்வாறு நாடாளுமன்ற வாக்குகளின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1993ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாஸ, தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததை அடுத்து, வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு, டீ.பீ.விஜேதுங்க நியமிக்கப்பட்டதுடன், இன்று பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்தமையின் ஊடாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, டீ.பீ.விஜேதுங்கவை நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட அதேவேளை, ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் இன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு தெரிவாவதற்கு, இலங்கையில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகலுக்குக் காரணமாக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களும், ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்திற்கு எதிராகக் கடும் குரல் எழுப்பி வந்தனர். "அன்று பொறியாளர், இன்று உள்ளாடை வாங்கவும் காசில்லை" - போராட்டக்காரர்கள் இலங்கை: "சிஸ்டத்தை மாற்றுவோம்" - 100வது நாள் போராட்டத்தில் மக்கள் போராட்டக்காரர்கள் நடத்திய பல கட்ட ஆலோசனை இதற்கமைய, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் பல முறை சந்தித்து, கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். எனினும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களும் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் அறிக்கையின் ஊடாக அறிவித்த நிலையில், மற்றுமொரு தரப்பு அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது. அதேநேரம், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார். இவ்வாறான நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவதற்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறான ஆதிக்கத்தைச் செலுத்தினார்கள் என்பது குறித்து பிபிசி தமிழ் இன்று ஆராய்கின்றது. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகளை மாத்திரம் கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 10 ஆசனங்கள் காணப்படுகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், முஸ்லிம் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகள் வசம் 10 ஆசனங்கள் காணப்படுகின்றன. அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வசமும் பல ஆசனங்கள் காணப்படுகின்றன. தனித்து இயங்கும் எம்பிக்கள் படக்குறிப்பு, சஜித் பிரேமதாஸ ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்திருந்த பல தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று, சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வசம் ஒரு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. இந்நிலையில், சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தார்களா என்ற கேள்வி எழுந்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாஸவிற்கே ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அழகபெரும ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிலைப்பாட்டை எட்டியிருந்தது. அவ்வாறாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ரணில் தரப்பைச் சேர்ந்த ஹரின் பெர்ணான்டோ இன்று காலை அறிவித்திருந்தார். இலங்கை பதில் ஜனாதிபதி முழு நேர ஜனாதிபதி ஆன முந்தைய வரலாறு இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு: டளஸ் , அநுர குமார இருவரையும் வீழ்த்தினார் இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? என்ன சொன்னார் ஜெய்சங்கர்? அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரும், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். ரணிலுக்கு ஆதரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவோரும் ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு தெரிவித்தனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெளிப்படையாகவே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் யார் சார்பாக வாக்களித்தனர் என்பது இதுவரை வெளிவரவில்லை. ரகசிய வாக்கெடுப்பு என்பதன் காரணமாக, யார், யாருக்கு வாக்களித்தனர் என்பது வெளிவராது. எனினும், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகளவிலான வாக்குகளை ரணில் விக்ரமசிங்க தன்வசப்படுத்தினார். 134 வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொண்டார். இதனூடாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்துள்ளமை உறுதியாகின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-62246087
  6. பிரஸ்திகா: நான்கு அறுவை சிகிச்சைளுக்குத் தயாராகும் 3 வயது குழந்தை - பாதயாத்திரையில் பெற்றோர் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, குழந்தை பிரஸ்திகா, மகனுடன் நிமால், சரண்யா தம்பதி பிரஸ்திகாவுக்கு இப்போதுதான் மூன்று வயதாகிறது. எதிர்வரும் மாதங்களில் அந்தக் குழந்தைக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில், குழந்தை பிரஸ்திகாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் குணமாகவும் சிகிச்சைகள் சிறப்பாக நடைபெறவும் வேண்டிக் கொள்வதற்காக, பிரஸ்திகாவை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு, அந்தக் குழந்தையின் பெற்றோர் கதிர்காமம் ஆடிவேல் திருவிழாவுக்கு, சுமார் 250 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். இதில் நூறு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம், காட்டு வழிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரஸ்திகாவுக்கு இதயத்தில் பல பிரச்னைகள் உள்ளதாக குழந்தையின் தாய் சரண்யா கூறுகிறார். இதற்காக மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இது தவிர, உயர் ரத்த அழுத்தம் காரணமாக அந்தக் குழந்தையின் கண் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்காகவும் அறுவை சிகிச்சையொன்று செய்ய வேண்டியுள்ளதாகவும் சரண்யா குறிப்பிடுகின்றார். இந்த அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாக, கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்திர ஆடிவேல் திருவிழா உற்சவத்தில் கலந்து கொண்டு, தமது குழந்தையின் ஆரோக்கியத்துக்காக அங்கு பிரார்த்திக்கும் பொருட்டு, இந்தப் பாத யாத்திரையை இவர்கள் மேற்கொள்கின்றனர். குழந்தை பிரஸ்திகாவின் - தாய் சரண்யா; தந்தை நிமால். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டம், கல்லடி பிரதேசத்தில் வசிக்கின்றார்கள். "எனது கணவர் சிங்களவர். 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக நான் கொழும்புக்குச் சென்று விட்டேன். அதனால் எனக்கு சிங்களம் தெரியும். நானும் - எனது கணவரும் காதலித்து 16 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டோம்" என்கிறார் சரண்யா. நம் குழந்தைகளுடன் நாமும் வளர்வோம் - மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் சந்தித்த கோவை அக்கா, தம்பி - ஒரு நெகிழ்ச்சி கதை எப்போதும் இளமையாக இருப்பது எப்படி? - முதுமை 'நோயை' போக்க வழி நிமாலின் சொந்த இடம் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஹொரவப்பொத்தானை. அவர் கூலிவேலை செய்கிறார். மதம் கடந்த இவர்களின் திருமணம் காரணமாக, குடும்பத்தவர்கள் இவர்களுடன் பேசுவதில்லை. சரண்யா - நிமால் தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் இருவரும் ஆண்கள், மூத்தவருக்கு 15 வயது. இரண்டாமவர் பெற்றோரின் பாதயாத்திரையில் இணைந்து கொண்டுள்ளார், மூன்றாவது குழந்தை, பிரஸ்திகா. பிரஸ்திகாவுக்கு என்ன பிரச்னை? படக்குறிப்பு, தள்ளுவண்டியில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை பிரஸ்திகா குழந்தை பிரஸ்திகாவின் இதயத்தில் ஐந்து பிரச்னைகள் உள்ளன என்று வைத்தியர்கள் கூறியுள்ளதாகக் கூறுகிறார் தாய் சரண்யா. "பிரஸ்திகாவின் இதயத்தில் பெரிய ஓட்டைகள் இரண்டு உள்ளன. இடது பக்க இதயத்தில் வீக்கம் உள்ளது, இதயத்திலிருந்து ரத்தம் தள்ளப்படும் அளவு குறைவு. நுரையீரலுக்கு ரத்தம் செல்லும் குழாய் சுருங்கியுள்ளது, சுவாசக்குழாய் வாசலில் அடைப்பும் உள்ளது," என்கிறார் சரண்யா. மேலும் குழந்தை பிரஸ்திகாவுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளதாகவும் இதனால் அவரின் இடது கண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் தாய் சரண்யா கூறுகிறார். "பிள்ளையின் இதயத்தில் இவ்வாறான பிரச்னைகள் உள்ளமையினால் அவரின் உடலுக்குத் தேவையான ஒக்சிசன் முழுவதுமாகக் கிடைப்பதில்லை. அதனால், பிள்ளை அதிகமாக அழுதால் அல்லது சிரித்தால் இதயத்துடிப்பு அதிகமாகி, ஒக்சிசன் கிடைப்பது தடைப்படும். அதனால் அவரின் உடல் நீல நிறமாகி விடும். இரண்டு தடவை அப்படி நடந்துள்ளது. அந்த வேளைகளில் குழந்தைக்குக் கிட்டத்தட்ட உயிர் இருக்காது. சிகிச்சைகளுக்குப் பின்னர்தான் உயிர் திரும்பியிருக்கிறது," என சரண்யா விவரித்தார். படக்குறிப்பு, சரண்யா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆகியவற்றில் குழந்தை பிரஸ்திகா சிகிச்சை பெற்று வருகின்றார். "இதய அறுவை சிகிச்சைகளை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையிலும், கண் அறுவை சிகிச்சையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் என மொத்தமாக நான்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வற்குத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று சரண்யா கூறினார். சத்திர சிகிச்கைகள் நடைபெறவுள்ள இடங்கள் இரண்டும் அரசு மருத்துவமனைகளாகும். படக்குறிப்பு, நிமால் பிரஸ்திகா 6 மாத குழந்தையாக இருந்தபோது அவருக்கு நிமோனியா தாக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் உயிர் பிழைக்க மாட்டார் என அப்போது கூறப்பட்டுள்ளது. "குழந்தைக்கு நிமோனியா ஏற்பட்டதையடுத்து அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை வைக்கப்பட்டது. ஆனாலும் குழந்தை பிழைக்காது என்றுதான் கூறப்பட்டது. இந்நிலையில் டாக்டர் சித்ரா உள்ளிட்டோர் எடுத்துக் கொண்ட பெரும் பிரயத்தனம் காரணமாக எங்கள் பிள்ளை பிழைத்தது," என்றார் சரண்யா. கதிர்காமம் முருகன் கோயில் சிறப்புகள் கதிர்காமம் முருகன் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். இந்தக் கோயிலில் நடைபெறும் வருடாந்திர ஆடிவேல் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகப் பெரும்பாலானனோர் நடந்தே பயணிப்பர். இது 'கதிர்காம யாத்திரை' என அழைக்கப்படுகிறது. படக்குறிப்பு, கதிர்காமம் மருகன் கோயில் இம்முறை கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்திர ஆடிவேல் விழா உற்சவம் எதிர்வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைகிறது. கடந்த 21 வருடங்களாக கதிர்காமம் ஆடிவேல் திருவிழாவுக்குத் தொடர்ச்சியாகச் சென்று வருபவரும் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாதயாத்திகர்கள் சங்கத்தின் செயலாளரகவும் பணியாற்றும் ஏ. ஜீவராஜா, கதிர்காமம் முருகன் கோயில் குறித்தும் கதிர்காமம் பாத யாத்திரை தொடர்பிலும் பிபிசி தமிழிடம் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். இவர் ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது. "உலகிலுள்ள எந்த ஆலயங்களுக்கு யாத்திரை சென்றாலும், கதிர்காமத்துக்கு யாத்திரை செல்லாமல் எந்தவொரு யாத்திரையும் முழுமையடையாது என, திருவிளையாடல் புராணத்தில் சூத முனிவர் கூறியுள்ளார். இது பற்றி 'கதிர்காம கிரிப்படலம்' எனும் தலைப்பில் நூலொன்று எழுதப்பட்டது. அந்த நூலை நான் மீள்பதிப்பு செய்திருக்கிறேன்," என்கிறார் ஜீவராஜா. கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கான பாதயாத்திரை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அநேகமாக இந்து கோயில்கள் கிழக்கு அல்லது வடக்கை நோக்கி அமைந்திருந்திருக்கும். ஆனால், கதிர்காமம் முருகன் கோயில் தெற்குத் திசை நோக்கி இருப்பதாகவும் ஜீவராஜா கூறினார். பழனியில் முருகன் சிலையை அமைத்த போகர் மாமுனிவர், கதிர்காமத்துக்கு வந்ததாகவும் அவர் முருகனைத் தியானித்து கதிர்காமத்தில் நீண்ட காலம் இருந்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் திருவிழாவுக்கான கொடியேற்றம், அங்கு அமைந்துள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றிலேயே இடம்பெறுவதாகவும் இங்கு பல்லின மக்களும் வருகை தருவதாகவும் ஜீவராஜா விவரித்தார். "கந்தபுராணத்தில் குறிப்பிடப்படும் சூரன் போர், கதிர்காமத்திலிருந்து சிறிது தூரத்திலேயே நடந்ததாகக் கூறப்படுகிறது. சூரனை வென்ற பின்னர் அங்குள்ள கங்கைக் கரையில் முருகனை வைத்து தேவர்களும் முனிவர்களும் வழிபாடு செய்ததாகவும் கதிர்காமம் முருகன் கோயிலின் தோற்றுவாய் அங்கிருந்தே உருவானதாகவும் புராணங்கள் கூறுகின்றன," என்கிறார் ஜீவராஜா. இலங்கையின் தமிழ் மன்னன் எல்லாளனுடன், சிங்கள மன்னன் துட்டகெமுனு (அல்லது துட்டகைமுனு) போர் புரிவதற்கு முன்னர், துட்டகெமுனு கதிர்காமம் சென்று முருகனை வணங்கி நேர்ச்சை செய்ததாகவும் பின்னர் போரில் வென்ற துட்டகெமுனு, கதிர்காமம் கோயிலுக்கு பல்வேறு உதவிகளையும் அன்பளிப்புகளையும் வழங்கியதாகவும் வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. துட்டகெமுனு மன்னன் கி.மு 161 முதல் 137 வரை, அனுராதபுரத்தை ஆட்சி செய்தார். உதவிக்கான கோரிக்கை தற்போது கதிர்காமம் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாக பிரஸ்திகாவின் தாய் சரண்யா கூறுகிறார். பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பெருமாள் பார்த்திபன், செவ்வாய்க்கிழமைன்று (19) குழந்தைக்குத் தேவையான பால்மா மற்றும் உணவுகளையும், இவர்களுக்குப் பண உதவியையும் வழங்கியதாக சரண்யா தெரிவித்தார். இதேவேளை, குழந்தை பிரஸ்திகாவுக்கு அதிகளவிலான மருத்துவச் செலவுகள் உள்ளதாகவும் அவற்றை ஈடு செய்ய முடியாதுள்ளதாகவும் கூறும் தாய் சரண்யா, மனித நேயமுள்ளவர்களிடமிருந்து உதவிகளைத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கோரிக்கை விடுக்கின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-62245573
  7. இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து... 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை ஜனாதிபதியாகி இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறார். நாட்டில் இருக்கும் சூழலைப் பார்க்கும்போது அவரது பதவிக்காலம் நெருக்கடிகள் மிகுந்ததாகவே இருக்கப் போகிறது. அவருக்கு என்னென்ன நெருக்கடிகள் இருக்கப் போகின்றன? அரசியல் நிபுணர் நிக்சனுடன் பேசியவற்றில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல்களைப் பார்க்கலாம். ரணிலுக்கு அரசியல் ரீதியிலான நெருக்கடி எப்படி இருக்கும்? இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர். தற்போது அதிபராகி விட்டதால் அந்த உறுப்பினர் பதவியை தனது கட்சியைச் சேர்ந்த வேறொருவருக்கு விட்டுத் தரலாம். அந்த ஒரேயொரு உறுப்பினரை வைத்துக் கொண்டு தனது திட்டங்களை ரணில் விக்கிரமசிங்கவால் செயல்படுத்த முடியாது. அனைத்துக்கும் எஸ்எல்பிபி கட்சியை நம்பி இருக்க வேண்டும். அதிபர் தேர்தலில் நடந்திருப்பது ரகசிய வாக்கெடுப்பு. ஆனால் நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தப்படும். அதனால் எம்.பி.க்கள் ரணிலின் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. "அன்று பொறியாளர், இன்று உள்ளாடை வாங்கவும் காசில்லை" - போராட்டக்காரர்கள் இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தன்னுடைய உறுப்பினர்களைக் கொண்டு ரணிலின் திட்டங்களை நாடாளுமன்றத்தில் தடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இது ரணிலின் பதவிக் காலத்தில் அவருக்கு பெரும் சிக்கலாக இருக்கப் போகிறது. நிதியுதவி தரும் அமைப்புகளின் அழுத்தங்கள் எப்படிப்பட்டவை? நிதியுதவி செய்யும் நாடுகள், அமைப்புகள் ஆகியவற்றுடன் இணக்கமாகப் பேசி அவற்றிடம் இருந்து நிதியைப் பெறும் ஆற்றல் கொண்டவர் என்று ரணிலைப் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் ஐஎம்எஃப், உலக வங்கி போன்ற அமைப்புகள் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன. அவை என்னென்ன நிபந்தனைகளை விதிக்கின்றன என்று ரணிலோ அல்லது மற்றவர்களோ இதுவரை நாடாளுமன்றத்தில் இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் அவை விதிக்கும் சில நிபந்தனைகள் கடுமையாக இருக்கப் போகின்றன என்பது மட்டும் தெரியவருகிறது. உதாரணமாக அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது முதன்மையான நிபந்தனையாக இருக்கும். தற்போது 24 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் பொதுமக்கள் மத்தியில் எதிப்பு கூடும். அதே போல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை சுயேச்சையான நிதிக்குழுவின் உதவியுடன் தயாரித்து அதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதலையும் பெற வேண்டும். மக்களுக்கான சலுகைகள் அளிப்பதை நிறுத்த வேண்டியிருக்கும். இலவசங்களை வழங்க முடியாது. நஷ்டத்தில் இயங்கும் சில அரசு நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்துவிடும்படி நிதி வழங்கும் அமைப்புகள் வலியுறுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக இன நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஐஎம்எஃப் போன்ற நிதி வழங்கும் அமைப்புகள் வலியுறுத்தும். தனியார், ஏர்லைன்ஸ், மின்சார சபையின் சில பகுதிகளை தனியார் மயமாக்கவும் நிதி வழங்கும் அமைப்புகள் நிபந்தனைகளை விதிக்க வாய்ப்பிருக்கிறது. இது பௌத்த தேசிய வாதிகளைக் கொந்தளிக்க வைக்கும். புவிசார் அரசியல் அழுத்தத்தை சமாளிக்க முடியுமா? இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் காலத்தில் இந்தியா நிதியுதவி செய்து வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறது இந்தியா. தற்போதைய சூழலைப் பயன்படுத்தி இந்த முதலீடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடும். அதே நேரத்தில் சீனாவும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் முக்கியத் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான போட்டிகளில் ஈடுபடக்கூடும். பலவீனமான பொருளாதாரச் சூழல் காரணமாக இவ்விரு நாடுகளின் அழுத்தங்களுக்கு இலங்கை பணிய வேண்டியிருக்கும். போராட்டக்காரர்கள் என்னென்ன சவால்களை அளிப்பார்கள்? கொழும்பு நகரின் காலி முகத்திடலில் தொடங்கிய மக்களின் போராட்டம் முதலில் பிரதமரையும், பிறகு ஜனாதிபதியையும் பதவியில் இருந்து அகற்றும் அளவுக்கு வலிமையானதாக இருந்திருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதுமே, போராட்டத்தைத் தொடரப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துவிட்டார்கள். அதிபரின் அதிகாரபூர்வ அலுவலகம் தற்போது போராட்டக்காரர்களின் வசமிருக்கிறது. அதை மீட்பதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவாலானதாக இருக்கும். அதே நேரத்தில் காலி முகத்திடலில் அமைந்திருக்கும் பண்டாரநாயக சிலையில் இருந்து 50 மீட்டர் சுற்றளவுக்கு எந்தக் கூட்டத்துக்கும் அனுமதியில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி ரணிலின் நிர்வாகம் போராட்டக்காரர்களை ஒடுக்க முற்படலாம். இது கூடுதலான கோபத்தை ஏற்படுத்தக்கூடும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற முடியுமா? ரணில் விக்கிரமசிங்கவின் செயல்பாடுகள் அதி புத்திசாலித்தனமானவை என்ற கருத்து இருக்கிறது. அவருடைய நகர்வைப் புரிந்து கொள்பவர்கள் குறைவு என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். நாட்டில் பெரும்பாலும் பௌத்த தேசியவாதம் பேசுபவர்களே அதிகம். இவையெல்லாம் ஏற்கெனவே தற்போதிருக்கும் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டதே. அதுவே ரணிலுக்கு இப்போது மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவதற்குப் பெரும் சவாலாக இருக்கும். தமிழர்களின் ஆதரவு ரணிலுக்குக் கிடைக்குமா? மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் 13-ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழர்கள் கோருகிறார்கள். ஆனால் இதுவரையிலான அரசுகள் அனைத்துமே பௌத்த தேசியவாதத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரங்களை வழங்க முயன்றால் அது பௌத்த தேசிய வாதிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அமல்படுத்தவில்லை என்றால் தமிழர்களின் ஆதரவை பெறுவதில் ஒருபடிகூட முன்னேற முடியாது. https://www.bbc.com/tamil/sri-lanka-62195374
  8. கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை 5 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வு தொடர்பான தகவலை உயிரிழந்த மாணவி வீட்டில், குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரண விவகாரத்தில், உடற்கூராய்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், உடலைப்பெற்றுக்கொள்ளும்படி மாணவியின் இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று (19.07.2022) மறு உடற்கூராய்வு பரிசோதனை நடைபெறுவதால் பெற்றோர் தரப்பில் ஆஜராக வேண்டும் என்று வட்டாட்சியர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. குறிப்பாக வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தாய் செல்விக்கும், அவர்கள் தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் யாரும் ஆஜராகவில்லை.இந்த நிலையில் மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது உடலை நல்லடக்கம் செய்ய பெற்றுக் கொள்ளும்படி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி சார்பில் இறந்த மாணவியின் வீட்டில் நேற்றிரவு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பின்னணி என்ன? கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த 13ஆம் தேதி காலையில் அந்தப் பெண் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. அவரது மகள் பள்ளிக்கூடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாயாரிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்துவந்த மாணவி, கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் பள்ளிக்கூட விடுதியில் சேர்க்கப்பட்டதாக அவரது தாயார் செல்வி ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், அவரது சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டினார். இதற்குப் பிறகு பெற்றோரும் அவரைச் சார்ந்தவர்களும் சிறுமியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் ஒரு பகுதி வெளியான நிலையில், நேற்று மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, பள்ளி வளாகம், வாகனங்கள் கொளுத்தப்பட்டன. பெரும் கலவரமாக மாறிய நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு தமிழக காவல்துறை டிஜிபி, உள்துறை செயலர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 உடற்கூராய்வு இந்த நிலையில், மாணவியின் உடலுக்கு மறு-உடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (ஜூலை 19) பிற்பகல் 4.15 மணியளவில் தொடங்கியது. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பரிசோதனை மாலை 7.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த உடற் கூராய்வை விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி மருத்துவர் ஜூலியட் ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல்நாத், தடவியல் நிபுணர் சாந்தகுமார் ஆகிய அடங்கிய குழுவினர் மறு பரிசோதனை செய்தனர். மேலும் இந்த பரிசோதனையானது சிபிசிஐடி எஸ்பி ஜியாஉல் ஹக் மற்றும் ஏடிஎஸ்பி கோமதி முன்னிலையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்? அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடப்பது என்ன? மதமாற்றக் குற்றச்சாட்டு நிலை என்ன? கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்? முன்னதாக மாணவியின் பெற்றோருக்கு உடற் கூராய்வு தொடர்பாக தகவல் அறிக்கை உயிரிழந்த மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டது. அதில் மாணவி பெற்றோர் சார்பில் தந்தை இந்த இந்த பரிசோதனையில் பங்கு பெறலாம் என்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெற்றோர் தரப்பில் இந்த மறு உடற்கூராய்வு பரிசோதனையில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 19) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு உடற்கூராய்வு செய்யும்படியும் அதுவரை மறு-உடற்கூராய்வு செய்யாமல் நிறுத்திவைக்கும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை ஜூலை 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என்றும் தெரிவித்தது. நேற்று உடற்கூராய்வு நடத்தப்பட்டபோதும் பிணவறை பகுதிக்கு மாணவியின் பெற்றோர் வரவில்லை. இதையடுத்து பெற்றோர் இல்லாமல் உடற்கூராய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-62233238
  9. CWG 2022: ஊக்கமருந்து சோதனையில் தோல்வி - தனலட்சுமி, ஐஸ்வர்யா பாபு இடைநீக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ். தனலட்சுமி எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேபோல, தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடகாவைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை செலுத்திக் கொண்டது பரிசோதனை முடிவில் கண்டறியப்பட்டுள்ளதால் அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 36 பேர் கொண்ட இந்திய தடகள அணியில் 24 வயதான தனலட்சுமி சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில். சர்வதேச தடகள ஒருமைப்பாட்டு பிரிவு (AIU) நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்ட் ஊக்க மருந்தை எடுத்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. தனலட்சுமி 100மீ அணியிலும், 4x100 மீட்டர் தொடர் ஓட்ட அணியிலும் டூட்டி சந்த், ஹிமா தாஸ் மற்றும் ஸ்ரபானி நந்தா ஆகியோருடன் இடம்பெற்றிருந்தார். ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியின் போது எடுக்கப்பட்ட ஐஸ்வர்யாவின் மாதிரிகளில் செலக்டிவ் ஆன்ட்ரோஜன் ரிசெப்டர் மாடுலேட்டர் (SARM) எனப்படும் Ostarine என்ற வகை மருந்தும், தனலட்சுமியின் ஊக்க மருந்து பரிசோதனையில், அவர் அனபோலிக் ஸ்டீராய்டுகளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தனலட்சுமிக்கு இரு முறை சோதனைகள் நடத்தப்பட்டன - ஒன்று, உலக தடகளத்தின் தடகள ஒருமைப்பாடு பிரிவு (AIU) மூலமும் மற்றொன்று தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) மூலமும் நடத்தப்பட்டது. ஏஐயு அமைப்பு, முதல் மாதிரியை துருக்கியில் சேகரித்தது. அங்கு அவர் ஏப்ரல்-மே மாதங்களில் இந்திய அணியின் அங்கமாக பயிற்சி பெற்றார். இரண்டாவது மாதிரி அவர் திருவனந்தபுரத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டது, இந்த இரண்டு பரிசோதனைகளிலும் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டதால் அவருக்கு எதிராக இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஊக்கமருந்து பரிசோதனை எப்படி நடக்கிறது? – ரஷ்யாவுக்கு தடை நிலவுவது ஏன்? கமிலா வலீவா: 15 வயது ரஷ்ய வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி கஞ்சா பயன்படுத்தும் ஒலிம்பிக் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன்? எண்ணிக்கையை குறைத்த ஒலிம்பிக் சங்கம் தனலட்சுமி இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக எம்.பி.ஜில்னா என்ற தடகள வீராங்கனை 4x100 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, தொடர் ஓட்ட அணியில் டூட்டி சந்த், ஹிமா தாஸ், ஸ்ராபானி நந்தா, என்.எஸ். சிமி, ஜில்னா ஆகியோருடன் தனலட்சுமி இந்திய அணி சார்பில் பங்கேற்பார்கள் என்று இந்திய தடகள கூட்டணைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், 37 பேர் கொண்ட அணியின் எண்ணிக்கையை 36 ஆக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தியது. இதையடுத்து பட்டியலில் இருந்த ஜில்னாவின் பெயர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது தனலட்சுமி மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து மீண்டும் அணிக்குள் வந்துள்ளார் ஜில்னா. பட மூலாதாரம்,GETTY IMAGES தனலக்ஷ்மி, அமெரிக்காவின் யூஜினில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார், ஆனால் விசா பிரச்னைகள் காரணமாக, அவரால் அதில் பங்கேற்கச் செல்ல முடியவில்லை. இதேவேளை கடந்த ஜூன் மாதம் துருக்கியில் உள்ள எர்சுரம் என்ற இடத்தில் உள்ள அட்டாடர்க் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த சர்வதேச ஸ்பிரிண்ட் மற்றும் ரிலே கோப்பையில் 200 மீ ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்றார் தனலட்சுமி. கடந்த ஜூன் 26ஆம் தேதி கஜக்ஸ்தானின் அல்மாட்டியில் நடந்த கோசனோஃப் நினைவு தடகள போட்டியில் 200 மீட்டர் தங்கம் வென்ற தனலட்சுமி குறிப்பிட்ட இலக்கை 22.89 விநாடிகளில் பதிவு செய்தார். 24 வயதான ஐஸ்வர்யாவின் இரண்டு ஊக்க மருந்து மாதிரிகள் ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் சென்னையில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப்பின் போது 'நாடா' எனப்படும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டது. ஜூன் 13ஆம் தேதி நடந்த டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் 14.14 மீட்டர் தூரத்தை எட்டி தேசிய அளவிலான சாதனையை படைத்தார் ஐஸ்வர்யா. மறுநாள் நீளம் தாண்டுதல் விளையாட்டில் அவர் தங்கத்தை வென்றார். இந்த நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியின் போது எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா பாபுவின் மாதிரிகள் பரிசோதனை முடிவில் அவர் ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் (ஜூன் 10-14) ஈடற்ற நட்சத்திரமாக உருவெடுக்க ஐஸ்வர்யா, 14.14 மீட்டர் தூரத்தை தாண்டி டிரிபிள் ஜம்ப் தேசிய சாதனையை முறியடித்தார். சென்னை போட்டியின் போது நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் 6.73 மீட்டரை அவர் எட்டினார். இந்திய முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கு 6.83 மீ எட்டி சாதனை படைத்தார். அவருக்குப் பிறகு இந்திய வீராங்கனை ஒருவர் நீளம் தாண்டுதலில் செய்த இரண்டாவது சிறந்த சாதனை ஆக ஐஸ்வர்யாவின் சாதனை கருதப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/sport-62242653
  10. ஒரு அமைச்சர் பதவி உறுதி! மற்ற பிரதி/ராஜாங்க அமைச்சுக்கு முயற்சி! நம்ம அயலூர் அண்ணன் ஒருத்தர் உவர நம்பி முன்னாள் அதிபரை போற்றிப் பாடுவார்!🤭 இனி எப்படி போகுது என்று பொறுத்திருந்து பாப்பம்.
  11. இலங்கை நெருக்கடி: "இந்த நாட்டில் பிரசவிக்க பயமாக இருக்கிறது" - கர்ப்பிணிகள் நிலை என்ன? சுனேத் பெரேரா பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தக்ஷிலாவின் குடும்பம் "நான் ஒரு 8 மாத கர்ப்பிணி. இலங்கையில் என் பிரசவம் குறித்து நினைத்தாலே மரணபயமாக இருக்கிறது". இலங்கை வவுனியாவில் வசித்து வரும் 27 வயதான கர்ப்பிணி தக்ஷிலா நிரோஷினியின் வார்த்தைகள் இவை. "என் இரும்புச்சத்து அளவு குறைவாக இருக்கிறது. என் கருவில் உள்ள சிசுவும் போதுமான அளவுக்கு வளரவில்லை. குழந்தைக்கான ஊட்டச்சத்து மருந்துகள் எல்லாம் எனக்கும் பரிந்துரைக்கபட்டன. ஆனால், இங்கிருக்கும் பொருளாதார நிலையில், அதை வாங்க முடியவில்லை. நாளொன்றுக்கு ஒரே ஒரு வேளை உணவுண்டு மீதி வேளைகளில் பட்டினியால் அவதிப்படுகிறோம் நாங்கள்." பணமும் இல்லை உணவும் இல்லை வீட்டிலிருக்கும் தன் 9 வயது மகளுக்கும் வயிற்றிலிருக்கும் 8 வயது கருவுக்கும் உணவளிக்க இயலாமல், இலங்கையின் மற்ற தாய்மார்களைப் போலவே இவரும் தவித்து வருகிறார். பெரும்பாலான நாட்களில் ஒருவேளை சோறுதான். இவரிடம் இருக்கும் குறைந்த அளவு பணத்தில் 100கி சோயா உருண்டைகளை வாங்குகிறார். இப்போதைக்கு, அதுதான் அவருக்கு புரதத்துக்கான எளிய வழியாக இருக்கிறது. தக்ஷிலாவின் கணவர் நாளொன்றுக்கு 1500 ரூபாய் சம்பாதித்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக அவருக்கு வேலையில்லை. அரசு நடத்தும் மகப்பேறு மருத்துவ மையங்களில் இருந்து இணை உணவுகள் வந்துகொண்டிருந்தன. அதிகமான தட்டுப்பாடு குறைவான கையிருப்பு படக்குறிப்பு, ஜனவரி முதல் ஜூன் வரை உயர்ந்த விலை நிலவரம் இலங்கை மத்திய வங்கியின்படி, நாட்டின் உணவுப்பற்றாக்குறை 57.4% என்ற உச்சத்தை மே மாதம் தொட்டது. அந்நிய செலாவணி நிலவரம் மிக மோசமடைந்து, அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்து மற்றும் எரிபொருள் இறக்குமதி ஆகியவற்றுக்காக இலங்கை போராடி வருகிறது. எரிபொருளுக்காக நாட்கணக்காக வரிசையில் காத்திருக்கின்றனர் மக்கள். 'அதிகரிக்கும் கோபம்; ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்' - இலங்கை போராட்டத்தில் செய்தியாளர் கண்டவை இலங்கை: பிரதமர் அலுவலகம் முன்னே திரண்ட மக்கள்; கண்ணீர் புகைகுண்டு வீச்சு - விளக்கும் புகைப்படங்கள் "இலங்கையின் நிலை மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம்" - மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் எச்சரிக்கை எரிபொருளில்லை. எப்படி மருத்துவமனை செல்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பொதுப்போக்குவரத்தின் நிலை எரிபொருள் பற்றாக்குறையால் தக்ஷிலாவை போன்ற தாய்மார்களின் தட்டுக்கு உணவு வருவது மட்டும் இங்கு பிரச்னை அல்ல. "என் பிரசவத்துக்கு மாவட்ட பொது மருத்துவனை செல்ல வேண்டும். இங்கிருந்து அது 8 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு அவசரம் என்றால் கூட, என்னால் விரைந்து அங்கு செல்ல முடியாது" என்கிறார் தக்ஷிலா. கடந்த வாரம் ஸ்கேன் பார்க்க செல்ல வேண்டி இருந்தது. ஆனால், பஸ் இல்லை. வந்த பஸ்களும் கூட கூட்டமாகவே இருந்தன. இப்போதிருக்கும் ஒரே வழி, மணிக்கணக்கில் காத்திருந்து ஒரு லாரியோ, டிரக்கோ பிடித்து செல்வதுதான். இந்த கவலைகளெல்லாம் ஒன்று கூடி, இவரை, இதுவரை பிறக்காத தன் குழந்தையை எண்ணி வருத்தப்பட வைத்துள்ளன. ஏதாவது அவசரம் என்றால் எனக்கு அழையுங்கள் என்று மகப்பேறு பணியாளர் எனக்கு சொல்லியிருந்தார். அதேவேளை, பெட்ரோல் இருந்தால்தான் என்னாலும் வரமுடியும் என்றும் அவர் சொல்லிவிட்டார். இதனால் பிரசவ வலி வரும் என்று எதிர்பார்க்கப்படும் தேதிக்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே மருத்துவமனையில் சேர்ந்து விட எண்ணிக்கொண்டிருக்கிறார் தக்ஷிலா. அவசர சேவைகள் திணறுகின்றன படக்குறிப்பு, இலங்கையில் 2017 ஆம் ஆண்டு மகப்பேறு மரணங்கள் குறைவாக இருந்தன. மகப்பேறு மரண விகிதம் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் ஆகியவற்றில் இலங்கையின் தரவுகள் சிறப்பாக இருந்தன. ஆனால், தற்போது, நாட்டில் 23 லட்சம் குழந்தைகள் உட்பட சுமார் 57 லட்சம் பேருக்கு, பொருளாதார நெருக்கடியால், மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது. இலங்கையில் குறைந்த வருமானமுள்ள ஏராளமான குடும்பங்கள் நம்பியிருக்கக்கூடிய, பொது இலவச மருத்து முறைமையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சேவையின் கூற்றுப்படி, 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடைபெறுகின்றன. ஆனால், சில மருத்துவமனைகளில் மருந்து இருப்பும் இல்லை வரத்தும் இல்லை. "இரும்புச்சத்து குறைபாடு கொண்ட ஏராளமான தாய்மார்களை இலங்கையில் பார்க்க முடிகிறது" என்கிறார் ருஹான பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் மருத்துவருமான இரேஷா மம்பிட்டியா. மேலும், இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மகப்பேறு மருத்துவ மையங்களுக்கு ஊட்டச்சத்து இணை உணவுகளை கொண்டுசேர்ப்பதிலும், வழங்குவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் "ரத்தம் ஏற்ற வேண்டிய தேவையுடனும் இரும்புச்சத்து ஏற்ற வேண்டிய தேவையுடனும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. நாட்டின் எரிபொருள் தட்டுப்பாட்டால் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளுக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,1990 SUWA SERIYA படக்குறிப்பு, அவசர ஊர்தி சேவை இலங்கையின் அவசர ஊர்தி சேவையான '1990' இல் 297 அவசர ஊர்திகள் உள்ளன. ஆனால், ஜூலை 11ஆம் தேதி, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை, அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததாகவும் அந்தச் சேவை தெரிவித்தது. "எப்போதுமே மக்களுக்கு உதவ எங்களால் இயன்ற அளவு முஅய்ற்சி செய்கிறோம். எங்கள் பணி நேரத்தை கடந்தும் பலநாட்கள் வேலை செய்துள்ளோம். அண்மைக்காலமாக கர்ப்பிணி பெண்களின் அழைப்புகள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கும் கூட எப்படியாவது உதவ முயற்சி செய்கிறோம்" என்கிறார் '1990 ஆம்புலன்ஸ் சேவை'யின் ஓட்டுநர் ஒருவர். அச்சுறுத்தும் நாட்கள் படக்குறிப்பு, தக்ஷிலா ஒருபக்கம் எரிபொருளோ அல்லது பயணத்துக்கான ஏற்பாடோ ஏதாவது செய்ய குடும்பத்தினர் முயற்சித்துவரும் நிலையில், சில தாய்மார்கள் வீட்டிலேயே பிரசவிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். மருத்துவமனை செல்லும் வழியில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் ஆட்டோவில்தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். இன்றைய சூழலில் ஆட்டோவில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்கிறார் மருத்துவர் மம்பிட்டிய. இரண்டு வாரங்களுக்கு முன்பு, எங்கள் மருத்துவமனை வாசலில், ஆட்டோவுக்குள் இருந்தபடி, பிரசவவலியில் ஒரு அம்மா துடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஏற்கனவே குழந்தை வெளிவரத் தொடங்கிவிட்டது. நாங்கள் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்னுக்கு உதவினோம். வீட்டில் பிரசவம் பார்க்கும்போது திடிரென பெரும் இரத்தப்போக்கு ஏற்பட்டு அதன்பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். ஒருவேளை நோஆளிகள் மருத்துவமனைக்கு வந்துவிட்டாலும், அவர்களுக்கு சிகிசையளிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனைக்கு வரவேண்டுமே. அதற்கும் சிரமமாகவே இருக்கிறது. மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் சிரமம் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுப்போக்குவரத்தும் சிரமமாகி எரிபொருளும் வாங்கமுடியாத நிலையால் சில மருத்துவர்கள் சைக்கிளில் வரத்தொடங்கி விட்டனர். இந்த நெருக்கடிகளால் மகப்பேறு மரண விகிதமும் நோயுள்ளவர்களின் எண்னிக்கையும் நாட்டில் அதிகரித்து விடுமோ என்பதுதான் பெருங்கவலையாக இருக்கிறது என்றும் மருத்துவர் மம்பிட்டிய தெரிவிக்கிறார். எந்த சூழ்நிலையிலும், வீடுகளில் பிரசவம் பார்ப்பதை இலங்கை அரசு பரிந்துரைப்பதில்லை என்று அரசு குடும்ப நல சேவை அதிகாரிகள் குழு தெரிவிக்கிறது. இந்தக்குழுவின் தலைவர் பிபிசியிடம் பேசியபோது, "மருத்துவப்பணியாளர்களுக்கும் குறிப்பாக மகப்பேறு பணியாளர்களுக்கும் எரிபொருளை உறுதிசெய்வது மிகவும் கடினமாக இருக்கிறது" என்று தெரிவித்தார். இந்த நெருக்கடிக்கு முன்பு மகப்பேறு பணியாளர்கள் நேரடியாக கர்ப்பிணிகளின் வீடுகளுக்கு சென்று தாய்-சேய் நலத்தை உறுதி செய்வர். ஆனால், இப்போது எரிபொருள் தட்டுப்பாட்டால் இந்தப் பணியும் சிரமமாகியுள்ளது. அவசரகால பட்ஜெட் இந்த நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கையின் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவரது உதவியாளரும் முன்னாள் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் பிபிசியிடம் இதுகுறித்து கூறுகையில், "ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்படும் அவசர வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்கு தற்காலிக ஜனாதிபதி முயற்சி செய்வதாக தெரிவித்தார். சுகாதார அமைச்சர் உட்பட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் புதன்கிழமை வாக்கெடுப்பின் பின்னர், அடுத்த சுற்று தேர்தல் வரை பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியை நியமிக்க வேண்டும். ஆனால் நெருக்கடி தொடர்வதால், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறக்காத குழந்தைகள் மட்டுமல்ல. போக்குவரத்து வசதியின்மையால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இளைய தலைமுறையினரின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. நான்காம் வகுப்பு படிக்கும் தக்ஷிலாவின் மகள், பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பல இலங்கை குழந்தைகளில் ஒருவர். "எனக்கு என் மகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது. அரசியல்வாதிகளின் தவறுகளால் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஆனால் எங்களைப் போன்ற ஏழைகள் என்ன செய்ய முடியும்? இதுதான் எங்கள் கதி என்றும் நினைக்கிறோம்." https://www.bbc.com/tamil/sri-lanka-62219794
  12. இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு: டளஸ் அழகபெரும, அனுர குமார இருவரையும் வீழ்த்தினார் 20 ஜூலை 2022, 07:11 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். இதையடுத்து, சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 14ம் தேதி தனது விலகல் கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார். இந்த நிலையில், அரசமைப்புச் சட்டப்படி, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, கடந்த 15ம் தேதி, பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்திய பிரமானம் செய்துக்கொண்டார். இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. தனியொரு எம்.பி, ஆனாலும் இலங்கை ஜனாதிபதி ஆன ரணில் விக்கிரமசிங்க - யார் இவர்? விரும்பியோ, விரும்பாமலோ ரணிலை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது ஏன்? இதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். இந்தப் போட்டியில் வென்று, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் என முக்கிய கட்சிகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவை வழங்கியிருந்தன. ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பதவியில் இருந்த ஜனாதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறி, பதவி விலகியதும் தற்போது நடந்ததுதான் முதல் முறை. ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள ஒரே எம்.பி. அவர் மட்டுமே. ஒரே எம்.பி.யாக உள்ளவர் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்று தற்போது ஜனாதிபதி ஆகியிருக்கிறார். ரணில் கடந்து வந்த அரசியல் பாதை 1994 - 2022 (ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்) 1977 - முதல் முறை நாடாளுமன்றம் பிரவேசம் 1978 - இளையோர் விவகார அமைச்சராக பதவியேற்பு (இலங்கையின் மிக இளைய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்.) 6 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தார். எதிர்கட்சித் தலைவர் பதவியை வகித்தார். 2020 - ஐ.தே.கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, நாடாளுமன்றத்திற்கு தேர்வு. 2022 - பதில் ஜனாதிபதி - ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் ரணில் விக்ரமசிங்க பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு, ரணில் விக்ரசிங்க, ஜனாதிபதியாக தெரிவானதை அடுத்து, சபையிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை விடுத்தார்.தமிழ் கட்சிகளையும் தம்முடன் கைக்கோர்த்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தனது பதவி பிரமான நிகழ்வை, நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தனக்கு அனுமதியை வழங்குமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். காலியான ரணில் எம்.பி. பதவி ரணில் ஜனாதிபதியானமையை அடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-62234577
  13. இலங்கை பதில் ஜனாதிபதி முழு நேர ஜனாதிபதி ஆன முந்தைய வரலாறு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க, இலங்கை புதிய ஜனாதிபதி இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரின் பதவி, இடைநடுவில் வெற்றிடமாகும் பட்சத்தில், அதற்கு மற்றுமொரு ஜனாதிபதியை தேர்வு செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இன்று இடம்பெற்றது. இலங்கையில் இதற்கு முன்பு முதல் முறையாக நாடாளுமன்றத்தால் 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி' தெரிவு 1993ஆம் ஆண்டு இடம்பெற்றது. அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாஸ, 1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி, கொழும்பில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தருணத்தில், விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த நிலையில், இடைக்கால ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்வதற்கான முதலாவது சந்தர்ப்பம், இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஏற்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர், தனது பதவிக் காலத்தில் உயிரிழக்கும் பட்சத்தில், அரசியலமைப்பின் 38 (01) (அ) ஷரத்திற்கு அமைய, புதிய ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும். இதன்படி, 1993ஆம் ஆண்டு நாடாளுமன்றம் ஏகமனதாக டீ.பீ.விஜேதுங்கவை, இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நியமித்தது. இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு: டளஸ் , அநுர குமார இருவரையும் வீழ்த்தினார் இலங்கை நெருக்கடி: "இந்த நாட்டில் பிரசவிக்க பயமாக இருக்கிறது" - கர்ப்பிணிகள் நிலை என்ன? அவர், 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி முதல் 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி வரை இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்தார். 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, டீ.பீ.விஜேதுங்க பதவியை துறந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அதையடுத்து, நாட்டை ஆட்சி செய்ய சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, தனது இரண்டு பதவி காலங்களையும், மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டு பதவி காலங்களையும், மைத்திரிபால சிறிசேன, தனது ஒரு பதவி காலத்தையும் முழுமையாக நிறைவு செய்திருந்தனர். எனினும், 2019ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸ, மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு தப்பிச் சென்று, பின்னர் தனது ராஜினாமாவை அறிவித்திருந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர், தனது பதவிக் காலத்தில் ராஜினாமாவை அறிவிக்கும் பட்சத்தில், அரசியலமைப்பின் 38 (01) (ஆ) ஷரத்திற்கு அமைய, புதிய ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும். இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர், தனது பதவி காலத்தில் ராஜினாமா கடித்தை கையளித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதையடுத்து, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, கடந்த 15ஆம் தேதி கடமைகளை பொறுப்பேற்றார். எனினும், வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு ஒருவரை நாடாளுமன்றம் உடனடியாக கூடி, தெரிவு செய்ய வேண்டும். இம்முறை ரணில் விக்ரமசிங்கவையோ வேறு ஒருவரையோ ஏகமனதாக தெரிவு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை நடத்தி, ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்தார். இதையடுத்து, நேற்றைய தினம் வேட்பு மனுக்கள் கோரப்பட்டன. ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர், ஜனாதிபதி தேர்வுக்கான போட்டிக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தனியொரு எம்.பி, ஆனாலும் இலங்கை ஜனாதிபதி ஆன ரணில் விக்கிரமசிங்க - யார் இவர்? விரும்பியோ, விரும்பாமலோ ரணிலை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது ஏன்? இந்த நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவரை வாக்கெடுப்பில் மூலம் தெரிவு செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. இலங்கை வரலாற்றில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டது முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். டீ.பி.விஜேதுங்க ஏகமனதாக தெரிவாகியிருந்ததுடன், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வாக்குகளின் ஊடாக இன்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். டீ.பி.விஜேதுங்க, ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் என்பது சிறப்பம்சமாகும். ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ரணசிங்க பிரேமதாஸ உயிரிழந்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக 1993ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி பதவிக்காக, அதே கட்சியின் பெரும்பான்மை ஆதரவுடன், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-62241632
  14. இலங்கை நெருக்கடி: "அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை" - ஒரு போராட்டக்காரரின் கதை எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நூறு நாட்களைக் கடந்து விட்ட இலங்கையின் காலி முகத்திடல் போராட்டத்தில் அரசுக்கு எதிரான முழக்கங்களைக் கேட்கலாம். ஆனால் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கும் பலரது வேதனைக் குரல்கள் வெளியே அதிகமாகக் கேட்பதில்லை. அப்படியொரு குரல்தான் ரிஃபாஸ் முகமதுவுடையது. "அன்று நான் சாப்ட்வேர் இன்சினீயர், இன்று உள்ளாடை கூட இல்லாமல் நிற்கிறேன்" என்கிறார் அவர். காலி முகத்திடலில் அதிபர் செயலகத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் இருந்தபடி இவர் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வருவோரும், செய்தி சேகரிக்கச் செல்வோரும் ஒருமுறையேனும் இவரைச் சந்தித்திருப்பார்கள். "முதல்நாள் நான் போராட்டத்துக்கு வந்தபோது இங்கு பெரிய கூட்டம் எதுவும் இல்லை. அதிபர் செயலகத்தின் வாயிலில் மேடையும் கிடையாது. காவல்துறையின் தடுப்புக் கம்பிகளைப் பயன்படுத்தி போராட்டத்தைத் தொடங்கினோம்" என்கிறார் ரிஃபாஸ் முகமது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் - யாருக்கு வெற்றி சாத்தியம்? 'அதிகரிக்கும் கோபம்; ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்' - இலங்கை போராட்டத்தில் செய்தியாளர் கண்டவை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்? உதவிகள் மூலமாகக் கிடைக்கும் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டிகள் போன்றவற்றை போராட்டத்தில் வருவோருக்கு விநியோகிக்கும் பணிகளை தனது குழுவினரோடு சேர்ந்து மேற்கொண்டு வருகிறார் இவர். "கூட்டம் அதிகமாக இருக்கும் சில நேரங்களில் எங்களுக்கே உணவு கிடைக்காத நிலை ஏற்படும். அப்போதெல்லாம் பசியோடு படுத்துறங்கும் நிலைதான் ஏற்படுகிறது" காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் தரையில் ஓரிரு அங்குல உயரத்திலான பலகைகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் இடைவெளிகள் இருக்கும். வெயிலின் போது கடுமையான வெப்பத்தையும், மழை நேரத்தில் கடுங் குளிரையும் தாங்க வேண்டியிருக்கும். "போராட்டம் தொடங்கிய முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக இங்கு கூடாரம் கூடக் கிடையாது. உணவும் தண்ணீரும் கொடுப்பதற்கு யாரும் கிடையாது. கிடைத்ததை உண்டபடி முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தோம். உடைமைகளைக் கைகளில் பிடித்தபடி வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டேதான் போராட்டம் நடத்தினோம்" என்கிறார் ரிஃபாஸ் முகமது. காலி முகத்திடல் போராட்டம் அவருடைய வாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. அருகிலேயே குளிக்க வேண்டும். உடைகளைக் காய வைக்க வேண்டும். கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை. "எனது வீடு கொழும்பு நகரில் வசதியானவர்கள் வாழும் இடத்தில் உள்ளது. குளிரூட்டப்பட்ட அறையில் கை நிறைந்த சம்பளத்துடன் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். இப்போது காலில் போட நல்ல செருப்புகூட இல்லை. எனது செல்போன் உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. உள்ளாடைகளும் மாற்று ஆடைகளும்கூட இல்லை" என்கிறார் ரிஃபாஸ். போராட்டத்தில் பங்கேற்பது தெரியவந்ததால் ரிஃபாஸின் நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டது. காவல்துறையினர் வீட்டுக்குத் தேடி வருவதால் அங்கும் நெருக்கடி ஏற்படுவதாக அவர் கூறுகிறார். அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகிய பிறகு போராட்டக் களத்தில் கூட்டம் குறைவாகவே தென்படுகிறது. நீண்ட வரிசையில் உணவுக்காகக் காத்திருப்போர் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். உணவுப் பொருள்களும் உதவிகளும் குறைந்திருக்கின்றன என்பதை போராட்டக்காரர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ரிஃபாஸ் முகமது குழு நிர்வகிக்கும் கூடாரத்துக்கு நாம் சென்றபோது அங்கு வழக்கமாக விநியோகிக்கப்படும் தண்ணீர் பாட்டில்களும், உணவுப் பொட்டலங்களும் இல்லை. இதற்கு முன்பு அப்படி நேர்ந்ததில்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். எனினும் சில மணி நேரங்களுக்குப் பிறகு தண்ணீர் பாட்டில்கள் மட்டும் வந்து சேர்ந்தன. "நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்றுதான் போராட்டம் நடத்துகிறோம். தொடர்ந்து முழக்கங்களை எழுப்புவதால் எங்கள் எங்களது தொண்டை பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலை கூட ஏற்படும். அப்போதும் ஏதாவது மருந்து, நிவாரணிகளை எடுத்துக் கொண்டு முழக்கங்களைத் தொடருவோம். போராட்டத்தின்போது கண்ணீர்ப்புகைக் குண்டு பட்டு சில நாள்கள் மருத்துவமனையிலும் இருக்க நேர்ந்தது." ரிபாஸ் அகமதுவைப் போலவே காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். பலருக்கும் நூறு நாட்களுக்கும் மேலாக இதுவே வசிப்பிடம். சிலர் காய்கறிகளை வாங்கி களத்திலேயே சமைத்து உண்கிறார்கள். சிலர் வெளியில் இருந்து வரும் உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தில் ரிபாஸ் அகமது உள்ளிட்ட போராட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோட்டாபயவைப் போலவே ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டுக்கு நல்லது செய்யப் போவதில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடும் பலருக்கு தங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும், நாட்டிலும் எதிர்காலத்தை நோக்கிய அச்ச உணர்வு இருக்கிறது. எப்போது போராட்டத்தை முடித்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள் என்று கேட்டால், "எங்களிடம் கோரிக்கைகள் இருக்கின்றன. அவை நிறைவேற்றப்பட்டு நாட்டுக்கு நல்லது நடக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும்" என்கிறார் ரிஃபாஸ் முகமது. https://www.bbc.com/tamil/sri-lanka-62195373
  15. இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் - என்ன சொன்னார் ஜெய்சங்கர்? 19 ஜூலை 2022 இலங்கையில் தற்போது நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பிரதிபலிக்குமா என்று ஒப்பிடுவது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் விவாதிப்பதற்காக சிறப்புக் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), டி.ஆர். பாலு, எம்.எம். அப்துல்லா (திமுக), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), எம்.தம்பிதுரை (அதிமுக), வைகோ (மதிமுக), கேசவ ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி), ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ் கட்சி) விஜய்சாய் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர், இலங்கை தற்போது மிகவும் தீவிர நெருக்கடியை எதிர்கொண்டு வருதால் அங்குள்ள அசாதாரண சூழலை இந்திய எம்பிக்களிடம் விளக்குவதற்காக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்தியாவுக்கு வெகு அருகே உள்ள நாடு இலங்கை என்பதால் அங்கு ஏற்படும் விளைவு குறித்து இயல்பாகவே இந்தியா கவலை கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இலங்கையில் உள்ள நெருக்கடி, இந்தியாவிலும் ஏற்படுமா என்று அவரிடம் சில கட்சிகளின் தலைவர்கள் கேட்டபோது, அத்தகைய ஒப்பீடுகள் தவறான தகவல் அடிப்படையில் வருபவை என்று பதிலளித்தார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80க்கும் கீழே சரிந்த நாளில் இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எம்.பிக்கள் சிலர் அந்நாட்டின் நிலை தங்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினர். இதைத்தொடர்ந்து இந்திய அரசு சார்பில் இரு வகை செயல்முறை விளக்க காட்சி காண்பிக்கப்பட்டது. ஒன்று, அண்டை நாட்டுடனான இந்தியாவின் நல்லுறவு கொள்கை அடிப்படையிலும் மற்றொன்று இலங்கைக்கு இந்தியா செய்யும் அரசியல் ரீதியிலான உதவிகளை உள்ளடக்கியதாகவும் இருந்தன. பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியலை வெளியிட்ட இந்திய மக்களவை செயலகம் தடைசெய்யப்பட்ட வார்த்தைகள்: சொற்களைப் பார்த்து அஞ்சுகிறதா அரசு? நாடாளுமன்ற தேசிய சின்னத்தில் கோரைப் பல் சிங்கங்கள்: மாறுபடும் வடிவமைப்பும் விமர்சனமும் இலங்கைக்கு அசாதாரண உதவி இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உதவி வழங்கியுள்ளதாகக் கூறிய ஜெய்சங்கர், வேறு எந்தவொரு நாடும் இந்தியா செய்து வருவது போன்ற உதவியை இலங்கைக்கு வழங்கியதில்லை என்று தெரிவித்தார். இலங்கைக்கு கடன் தரும் சர்வதேச செலாவணி நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் அந்நாட்டுக்காக இந்தியா பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அதன் நெருக்கடி தீவிரமாகியிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அந்த நாட்டில் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 இந்த நிலையில், இலங்கை நெருக்கடி தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இந்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளும் கட்சியான திமுக, அதன் கூட்டணியில் உள்ள மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். அதற்கு ஏற்ப இந்த கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கிறது மத்திய அரசு. படக்குறிப்பு, டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் இந்த கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர். பாலு பேசும்போது தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் உதவி குறித்து விளக்கினார். 18-05-2022 அன்று சென்னை துறைமுகத்தில் இருந்து முதல் பேட்ச் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. அக்கப்பல் 9000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர், 25 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள் என 45 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது. நிவாரணப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க இலங்கை அரசு கால அவகாசம் கோரியதால், இரண்டாம் பேட்ச் கப்பல் 22-06-2022 அன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 14,700 மெட்ரிக் டன் அரிசியும், 250 மெட்ரிக் டன் பால் பவுடரும் 39 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்களும் என 65 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது, கடைசி பேட்ச் ஆக 16,300 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 45 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள் ஜூலை 23ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். அதன் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் ஆகும். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வழியாக இப்பொருட்கள் இலங்கை அரசிடம் விநியோகத்திற்காக ஒப்படைக்கப்படும் என்று டி.ஆர். பாலு கூறினார். இதேபோல, இலங்கை நெருக்கடியால் அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய வரும் இலங்கையர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாநில அரசு உதவி வருவதாகவும் அவர்களை மண்டபம் தற்காலி முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாலு கூறினார். 1983 முதல் 2009 வரை இலங்கையில் நீடித்த போர்ச்சூழலில் இருந்து பாதுகாப்பு வேண்டி வந்த இலங்கைத் தமிழர்கள் சுமார் 1 இலட்சம் பேர் தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். 39 ஆண்டுகளாக அவர்களுக்குப் பாதுகாப்பும் உதவியும் அளித்துத் தமிழ்நாடு விருந்தோம்பி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்திய மீனவர் பிரச்னை கடந்த 11 ஆண்டுகளில், 3,743 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,725 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 18 மீனவர்கள் இன்னமும் நாடு திரும்புவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்படுவதாலும், இயற்கைச் சூழல்களாலும் சீரமைக்க முடியாத அளவுக்குப் படகுகள் சேதமடைந்து நிரந்த வாழ்வாதார இழப்பு ஏற்படுகிறது. இன்றைய தேதி வரை, 91 தமிழ்நாட்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையில் உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இந்தப் படகுகளை மீட்பதற்குத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். படக்குறிப்பு, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் சித்ரவதை/தாக்குதல்/கைது ஆகியவற்றை அனுபவிப்பதைக் குறைக்க இரு தரப்பு உறவுகள் குறித்து உயர்மட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன. மீன்வளத் துறை, மீனவர்கள் குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு கைதின்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இவ்வகையில், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பல சிக்கல்களையும் சரிசெய்ய 25-03-2022 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டப்பட்டது. அரசுத் துறைகள் மூலமாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் மீறி, இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகள் பிடிக்கப்படுவது தொடரவே செய்கிறது. இது மீனவர்களின் பெருங்கவலையாக உள்ளது. ஆகையால், இந்திய பிரதமர் இலங்கை அரசிடம் பேசி நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும் படகுகள் கைப்பற்றப்படுவதற்கும் முடிவு காணவேண்டும் என்றும் டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டார். கச்சத்தீவை மீட்க கோரிக்கை இந்திய அரசு 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்பதே இந்தப் பிரச்னைக்கு ஒரே நிரந்தரத் தீரவாக அமையும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் பாலு கூறினார். 13ஆவது திருத்தம் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திடும் அதே வேளையில், அங்கு நிலவும் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, தமிழர்கள் மிகுதியாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிக தன்னாட்சியையும் அதிகாரப் பகிர்வையும் வழங்கும் வகையில் இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கையை உண்மையான அக்கறையுடன் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டார். தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசும்போது, "இலங்கை இறந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். நமது நிலைமை மோசமாக இல்லை, கையிருப்பு சிறப்பாக உள்ளது என்று நிதிச் செயலாளர் கூறினார். சீனாவின் கடன் திட்டம் மூலமாக மட்டுமின்றி பல இடங்களில் இலங்கை கடன் பெற்றுள்ளது. எனவே, சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) தலையீடின்றி அந்நாட்டுக்கு உதவ வேறு வழியில்லை. அந்த வகையில் இந்தியா உரிய வகையில் உதவும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார். ஆனால், இலங்கை நெருக்கடி பிரச்னை நீங்கலாக திமுக முன்வைத்த பிற பிரச்னைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த கருத்தும் கூட்டத்தில் பகிரப்படவில்லை. https://www.bbc.com/tamil/india-62228002
  16. தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் பிரச்னை தீருமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது மாநில அரசு. ஆனால், மின் துறையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதா? தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2014ஆம் ஆண்டு டிசம்பரில் கடைசியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது (2017ஆம் ஆண்டில் மிகச் சிறிய அளவில் மின் கட்டணம் திருத்தப்பட்டது). ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் வருடாந்திர இழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அவற்றின் ஒட்டுமொத்த இழப்பும், அந்த இழப்பை ஈடுகட்ட வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையும் தொடர்ந்து அதிகரித்துவந்தன. 2011 - 12ல் 18,954 கோடி ரூபாயாக இருந்த மொத்த இழப்பு தற்போது 1,13,266 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு, மின் வாரியத்தின் இழப்பை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். 2021ஆம் ஆண்டிலிருந்துதான் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதால், மின்வாரியம் தனது இழப்புகளைக் கடன் வாங்கியே சமாளித்து வந்தது. ஆகவே, மின் வாரியத்தின் மொத்த கடனானது 1,59,823 கோடி ரூபாயாக இருக்கிறது. இதற்கான வட்டித்தொகையாக மட்டும் வருடத்திற்கு 16,511 கோடி ரூபாயை மின்வாரியம் செலுத்தி வருகிறது. மின் கட்டண உயர்வுக்கான காரணம் என்ன? இந்தியா முழுவதுமே மின் வாரியங்கள் பெரும்பாலும் மிக நெருக்கடியான நிதி நிலையுடனேயே போராடி வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டத்தின் கீழ், மின் வாரியங்களின் கடன் தொகையில் 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு 2016ல் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது. 2017லிருந்து தற்போதுவரை 22,825 கோடி ரூபாய் மட்டுமே மின் வாரியத்தின் கடனுக்காக அளித்துள்ளது. மீதமுள்ள கடன் தொகையோடு மின்வாரியம் தொடர்ந்து போராடி வருகிறது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 மின் வாரியங்களை பொறுத்தவரை ஊரக மின் வசதிக் கழகம் (REC), மின்சார நிதிக் கழகம் (PFC) ஆகியவற்றிடமிருந்து கடன்களைப் பெறுகின்றன. தற்போது இந்த நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற, ஒவ்வொரு வருடமும் மின் கட்டணத்தைத் திருத்தம் செய்ய வேண்டுமென்பதை நிபந்தனை ஆக்கியுள்ளது. அதானிக்கு மின் திட்டம்: கோட்டாபய, மோதியின் அழுத்தம் பற்றி பேசிய அதிகாரி ராஜினாமா அணில் ஏறினால் உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து விடுமா? இந்தியாவில் மின்வெட்டு பிரச்னை: நிலக்கரி தட்டுப்பாடுக்கு காரணம் என்ன? அதேபோல, மத்திய அரசு மின் விநியோகத்தை வலுப்படுத்தும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் 10,793 கோடி ரூபாய் மானியத்தைப் பெற வேண்டுமானாலும் ஆண்டு தோறும் மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல, வணிக ரீதியில் செயல்படும் வங்கிகள் அரசின் மின் பகிர்மான நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும்போது, அந்த நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் மின் கட்டணத்தைத் திருத்தியதற்கான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 இந்த நிதி சிக்கலின் பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு நுகர்வோருக்கான மின் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. அதன்படி 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மாதத்திற்கு ரூ. 27.50 அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 800லிருந்து 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 565 ரூபாய் மாதம் அதிகரிக்கப்படும். அதேபோல வணிக ரீதியில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, செலவைக் குறைப்பதற்காக மற்றொரு திட்டத்தையும் மின் வாரியம் முன்வைத்துள்ளது. அதாவது, தற்போது வீட்டுப் பயன்பாட்டிற்கான மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், மிக வசதியானவர்களும் இந்த இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களில் யாராவது தாமாக முன்வந்து இந்த இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பினால், விட்டுக்கொடுக்கலாம். அதற்கான விரிவான பிரச்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் துவங்கவுள்ளது. அதிருப்தியில் பொறியாளர் சங்கம் ஆனால், இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்கிறார் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி. "முதலில் மின் வாரியத்திற்கு இந்தக் கடன் எப்படி வந்தது என்பதை வெளிப்படையாகப் பேச வேண்டும். மின்சார வாரியத்தின் பல தவறான நடவடிக்கைகளால்தான் இவ்வளவு பெரிய அளவில் கடன்கள் ஏற்பட்டன. குறிப்பாக, தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆகியவை banking என்ற பெயரில் செய்யும் முறைகேடுகள் இதில் மிக முக்கியமானது," என்கிறார் காந்தி. அதாவது, காற்றாலையைச் சொந்தமாக வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக உள்ள காலங்களின் மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்பனை செய்கின்றன. ஆனால், மின்சாரம் அதிகம் தேவைப்படும் கோடை காலங்களில் மின் வாரியத்திடமிருந்து மின்சாரத்தை வாங்கி அந்தக் கணக்கை நேர் செய்கின்றன. ஆனால், கோடை காலத்தில் மின் வாரியம் ஒரு யூனிட் 17 முதல் 19 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகிறது. ஆனால், காற்றாலை மின்சாரத்தின் விலை 3 -4 ரூபாய்தான். மின் வாரியத்திற்கு மின்சாரம் தேவைப்படாத காலத்தில் மின்சாரத்தைக் கொடுத்துவிட்டு, மின்தட்டுப்பாட்டு காலத்தில் பெறுவது எந்த வகையில் சரி?" என்கிறார் காந்தி. தமிழ்நாட்டில் வீட்டு நுகர்வோருக்கு கொள்முதல் விலையைவிட குறைவான விலைக்கே மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல, விவசாய பம்ப் செட்களுக்கான மின்சாரமும் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. வணிகப் பிரிவினருக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கும் மின்சாரம் கொள்முதல் விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் லாபம், மேலே சொன்ன செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தொழிற்சாலைகள் மின் வாரியத்திடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுப் பயன்படுத்துவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதனால், அவற்றிலிருந்து கிடைக்கும் லாபமும் குறைந்துவிட்டது. இதில் சில நிறுவனங்கள் முறைகேடுகளைச் செய்வதாகச் சொல்கிறார் காந்தி. "தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரத்தை வாங்கினால் மின்வாரியத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தியே அந்த மின்சாரம் கடத்தப்படுவதால், மின்வாரியத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பல தொழிற்சாலைகள் தங்களுக்குச் சொந்தமாக மின் உற்பத்தி நிலையங்கள் இருப்பதாகக் கூறி, மின் வாரியத்திடமிருந்து மின்சாரம் பெறுவதில்லை. ஆனால், பல தொழிற்சாலைகளுக்கு சொந்தமாக மின் உற்பத்தி ஆலைகள் தொழிற்சாலையிலேயோ, அவற்றுக்கு அருகிலேயோ இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் தனியார் ஆலைகளின் பங்குகளை வாங்கிக்கொண்டு அந்த ஆலைகளைத் தமது ஆலைகளாகக் காட்டி, மின்வாரியத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதிலிருந்து தப்புகின்றன. ஆகவே, சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் (Captive plants) எவை என்பது குறித்து மின்வாரியம் தெளிவான விதிகளை வகுக்க வேண்டும்." என்கிறார் காந்தி. அதேபோல, தற்போது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் ஒரு யூனிட் மூன்று ரூபாய் என்ற அளவுக்கு இருக்கும்போது, சில வருடங்களுக்கு முன்பாக ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒரு யூனிட் ரூ. 7.01 விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது குறித்தும் காந்தி கேள்வி எழுப்புகிறார். சந்தையில் மிகக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்போது, ஒரு நிறுவனத்திடமிருந்து 25 ஆண்டுகளுக்குக் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோல, 2013- 2014ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மின்தேவை இருப்பதாகக் காட்டி, ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ. 7 -9 விலையில் பல ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கப்பட்டது. ஆனால், மின் தேவை அந்த அளவுக்கு இல்லை என்பதால், நிலைக் கட்டணமாக (வாங்குவதாகச் சொன்ன மின்சாரத்தை வாங்காவிட்டால் செலுத்த வேண்டிய கட்டணம்) 3,500 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது என்கிறார் காந்தி. இத்தனைக்கும் அந்தத் தருணத்தில் எக்சேஞ்சில் ஒரு யூனிட் ரூ. 3.09க்குக் கிடைத்தது என்பதை சுட்டிக்காட்டுகிறார் காந்தி. மின் வாரியத்தின் கடன் ஏகத்திற்கும் உள்ள நிலையில், தற்போதைய கட்டண உயர்வால் மின் வாரியத்திற்கு கூடுதலாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதைப் பற்றி மின்சாரத் துறை அமைச்சர் ஏதும் சொல்லவில்லை. "இந்தக் கட்டண உயர்வின் மூலம் மின் வாரியத்திற்குக் கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்குமெனக் கருதலாம். ஆனால், மின் வாரியத்தின் கடன் ஒன்றே கால் லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் நிலையில், இனி வருடம் தோறும் மின் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம்" என்கிறார் அவர். இவை தவிர, மின்சாரத்தின் கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒவ்வொரு அமைப்பும் மாற்றி மாற்றிச் சொல்வதாகச் சொல்கிறார் காந்தி. மின் வாரியம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசம் ஒரு யூனிட்டிற்கு 1.26 ரூபாயாக இருக்கிறது. ரேட்டிங் ஏஜென்சிகள் இந்த வித்தியாசத்தை ஒரு யூனிட்டிற்கு 74 பைசா என மதிப்பிட்டுள்ளன. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி விலை வித்தியாசம் ஒரு யூனிட்டிற்கு ரூ. 2.14. இதில் எந்த புள்ளி விவரம் உண்மை எனக் கேள்வியெழுப்புகிறார் காந்தி. தமிழ்நாடு மின்வாரியத்தைப் பொறுத்தவரை 2024-25க்குள் மின் இழப்பை 11.92 சதவீதமாகக் குறைப்பது, மின்சார விலையில் உள்ள வித்தியாசத்தை பூஜ்யமாக்குவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பெரிய அளவில் இழப்பைச் சரிசெய்ய முடியுமென மின் வாரியம் கருதுகிறது. https://www.bbc.com/tamil/india-62225104
  17. இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் - யாருக்கு வெற்றி சாத்தியம்? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SRI LANKA PARLIAMENT இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 20) முற்பகல் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று தமது வேட்பு மனுவை, நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்தனர். இதற்கமைய, இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்காக மூன்று வேட்பாளர்களின் பெயர்கள், நாடாளுமன்றத்தில் இன்று (19) முன்மொழியப்பட்டன. வேட்பு மனு தாக்கலுக்காக நாடாளுமன்ற கூட்டத் தொடர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய போதே இந்த பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதன்படி, தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. படக்குறிப்பு, டளஸ் அழகபெரும ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமவின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததுடன், அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார். படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார். படக்குறிப்பு, அநுர குமார, தலைவர் - தேசிய மக்கள் சக்தி இந்த நிலையில், ஜனாதிபதி தேர்வுக்கான இரகசிய வாக்கெடுப்பு புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சபையில் அறிவிக்கப்பட்டது. போட்டியிடாமலேயே களத்தில் இருந்து விலகிய சஜித் இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட எதிர்பார்த்திருந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். எனினும், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ராஜபக்ஷ குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமவிற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளது. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிற்கு, ராஜபக்ஷ குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது ஆதரவை வழங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு, தற்போது அந்த கட்சி மாத்திரமே ஆதரவை வழங்கியுள்ளது. இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன? குலுக்கல் முறையில் இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? சட்டம் கூறுவது என்ன? இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, எந்தவொரு வேட்பாளரும் ஆதரவு வழங்காது. நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மெளனம் காக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இதுவரை தீர்மானத்தை எட்டவில்லை. மேலும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இன்று வரை சஜித் பிரேமதாஸவுடனேயே கூட்டணியாக செயற்பட்டு வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தீர்மானத்தை தாமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார். ஐக்கிய மக்கள் சக்தி, டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியாக செயற்படும் தாமும் அதற்கு ஆதரவாக இருப்பதாக அவi; கூறுகின்றார். நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இதுவரை தமது நிலைப்பாட்டை வெளிபடையாக அறிவிக்காத நிலையில், சில கட்சிகள் மாத்திரமே நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. எம்பிக்கள் கருத்து ஜனாதிபதியை தேர்வு செய்வது தொடர்பில், சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிபிசி தமிழ் பேசியது. ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், ''மக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றோம். தலைசிறந்த நோக்காக கொண்டு செயற்படுகின்ற அரசாங்கமொன்று தேவைப்படுகின்றது. அதனால், எந்தவித பிரச்சினையும் கிடையாது. நாங்கள் பொதுவான நிகழ்ச்சி நிரலொன்றை நடைமுறைப்படுத்துகின்றோம். போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் கடந்த காலங்களில் வெளியிட்ட பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. 19வது திருத்தம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை கூற வேண்டும். அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஒன்றிணைந்த திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதனாலேயே இந்த தீர்மானத்தை எடுத்தோம். உறுதியாக நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்படுவோம். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். அதனை தெரிந்துக்கொண்டே நாங்கள் இந்த விடயத்தில் களமிறங்கினோம்," என தெரிவிக்கின்றார். இந்த போட்டியில் களமிறங்கியுள்ள டளஸ் அழகபெரும, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் என்பதுடன், பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆதரவு வழங்கி வருகின்றது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்திம வீரக்கொடி, ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார். ''மக்கள் எதிர்நோக்குகின்ற ஒன்று இருக்கின்றது. மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நிறைவேற்றக்கூடியவர்களின் கொள்கைகளை கொண்டவர் யார் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். மக்கள் எதிர்பார்க்காத ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்த நாம் ஆதரவு வழங்க போவதில்லை" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, ஹர்ஷன ராஜகருணா, ஐக்கிய மக்கள் சக்தி டளஸ் அழகபெரும, ஜனாதிபதி பதவியை ஏற்கும் பட்சத்தில், சஜித் பிரேமதாஸ பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, விஜித்த ஹேரத், மக்கள் சக்தி இதேவேளை, தேசிய மக்கள் சக்தி தமது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியமை குறித்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ''மொட்டு கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒருவரை முன்மொழிந்தனர். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள், மொட்டு கட்சியுள்ளவர்களை முன்மொழிந்தனர். அவர்கள் அவ்வாறே பிரித்துக்கொண்டார்கள். எனினும், நாட்டு மக்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மக்களின் எண்ணத்துடன் தற்போதே வெற்றி பெற்று விட்டோம்" என விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, ஆரோக்கியநாதன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு கட்சி) மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், சிஸ்டம் சேஞ்ச் நாட்டில் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அருண் ஆரோக்கியநாதன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''எதை செய்தேனும், ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமே இங்கு காணப்படுகின்றது. எனினும், இறுதியாக இவர்கள் எதிர்பார்க்க சிஷ்டம் சேர்ன்ஜ் இதுவா என்ற கேள்வி எழுந்து நிற்கின்றது. மொட்டு கட்சியின் விஞ்ஞானபனங்கள் தோல்வி அடைந்துள்ளது, இனி மொட்டு கட்சிக்கு வர முடியாது என சஜித் பிரேமதாஸ கூறி வந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களும் அதே விடயத்தை கூறி வந்தார்கள். எனினும், ரணில் விக்ரமசிங்க என்ற தனி நபரை தோற்கடிப்பதற்காக இன்று அனைவரும் கைக்கோர்க்கின்றார்கள் என்று சொன்னால், அது ஒரு தனிநபரின் ஆளுமை மீதான அச்சமா? இல்லையென்றால், அரசியல் காழ்ப்புணர்வா? என்ற கேள்வி எழுகின்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பிலான பூரண அறிவும், தூர பார்வையும் கொண்ட ஒருவர் இருந்தால் தான் நல்லது. நெருக்கடியான நேரத்தில் வலுவான தலைவர் ஒருவரே இருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நல்ல விடயங்களை சாதித்தார்கள். இதையடுத்து, தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்ககூடிய ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் எண்ணுகின்றார்களா? ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால், அவர்கள் கூறுவதை இவர் செவிமடுக்க மாட்டார் என்று யோசிக்கின்றார்களா? இப்படியே போனால், போராட்டக்காரர்கள் எதிர்காலத்தில், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தலையீடு செய்ய முயற்சிப்பார்கள். ஒவ்வொன்றுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். யாருக்கும் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திற்கு பிரதிநிதிகளை நியமித்ததற்கு பிறகு, எந்த நேரமும் மக்களை கேட்டு கேட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. நெருக்கடிகளை நாடு சந்திக்கும் போது, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். அது தான் உண்மையான தலைமைத்துவத்திற்கு அழகு. வேண்டாம் என கூறிய இடத்திலேயே தற்போது சென்றிருக்கின்றார்கள். மீண்டும் மொட்டு கட்சியே ஆதிக்கம் செலுத்த போகின்றது. அப்படி ஒன்றால், சிஸ்டம் சேஞ்ச் அங்கு இருக்கின்றது." என மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அருண் ஆரோக்கியநாதன் தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-62225113
  18. கஜானாவில இருந்ததையே காணேலயாம்!(2019 இன் பின்) இதுக்க 2009 இருக்குமோ?!🤭
  19. லலித் மோதி உறவு: சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 18 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அழகு ராணிகளில் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடக உலகில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறார். 1994இல் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியரான சுஷ்மிதா சென், அதன் பிறகு வெற்றிகரமான பாலிவுட் நடிகையாக தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கினார். 46 வயதாகும் இவர், சுமார் 36 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஆர்யா' என்ற வெப்சீரிஸ் தொடரில் அவர் நாயகியாக நடித்திருந்தார். அது டிஜிட்டல் உலகிலும் ஓடிடி உலகிலும் சுஷ்மிதா சென்னுக்கு மேலதிக பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. புத்திசாலித்தனமும் நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்று பாலிவுட் உலகில் இவர் வருணிக்கப்படுகிறார். தமது திரை வாழ்க்கையில் அவர் பல மதிப்புமிக்க சினிமா விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில், 58 வயதான தொழிலதிபரும், உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முன்னாள் நிறுவனருமான லலித் மோதி, தனக்கும் சுஷ்மிதா சென்னுக்கும் இடையே உறவு இருப்பதாக கடந்த வியாழக்கிழமை இரவு சமூக ஊடக பக்கத்தில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து திரையுலகில் சுஷ்மிதா சென்னை போற்றிப் புகழ்ந்து வந்த ரசிகர்கள் பலரும் அவரது முடிவுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கினர். இந்த இருவருக்கும் இடையிலான உறவு குறித்து சமூக ஊடக பக்கங்களில் வெறுப்புத்தனமான நகைச்சுவைகள் பதிவிடப்பட்டன. லலித் மோதி, சுஷ்மிதாவின் டேட்டிங் படம் வைரல் - என்ன சொன்னார் முன்னாள் காதலர்? புத்தர் முதல் காமசூத்ரா வரை: இந்தியர்களோடு இணைந்த 'மாம்பழ' கதை லலித் மோதி, பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுபவர். வெற்றிகரமான ஐபிஎல் கருத்தாக்கம் இவரது சிந்தனையில் இருந்தே உருவானது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர், லலித் மோதியை நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இடைநீக்கம் செய்தது. அதன் பின்னர் தலைப்புச் செய்திகளில் அவர் அதிகமாகவே இடம் பிடித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளை எப்போதும் மறுத்து வரும் லலித் மோதி, கடந்த பத்து ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மாலத்தீவுகள் மற்றும் இத்தாலிய தீவான சர்டினியாவில் அவர் சமீபத்தில் தமது விடுமுறையை கழித்த அவர் அங்கு தன்னுடன் ஜோடியாக இருந்த சுஷ்மிதா சென்னுடனான நெருக்கமாக இருக்கும் காதல் படங்களை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தார். சுஷ்மிதாவுடனான உறவை பகிரங்கமாக்கிய மோதி முதலில் தன்னுள் "சிறந்த பாதி" சுஷ்மிதா சென்று வர்ணித்தார் லலித் மோதி. பின்னர் இந்த ஜோடியின் திருமணம் பற்றிய வதந்திகள் அதிகமாகவே "எனது சிறந்த பார்ட்னர்" என்று முந்தைய பதிவுக்கு திருத்தம் கொடுத்தார். முறைப்படி கரம் பிடித்த இவரது மனைவி 2018ஆம் ஆண்டில் புற்றுநோயால் இறந்தார். இந்த நிலையில், சுஷ்மிதா சென் உடனான தமது உறவு "ஒரு புதிய ஆரம்பம், இறுதியாக ஒரு புதிய வாழ்க்கை" என்று குறிப்பிட்டு இடுகையை பதிவிட்டார். Instagram பதிவை கடந்து செல்ல, 1 Instagram பதிவின் முடிவு, 1 ஒரே இரவில், இந்த இடுகைகள், இந்த ஜோடியின் உறவை உலக அளவில் வைரலாக்கியது. பல்வேறு பிரபல இணையதளங்கள், செய்தி முகமைகள் இவரது சமூக ஊடக இடுகைகளை மாறி, மாறி பல்வேறு கோணங்களில் செய்திகளாக்கின. அதன் பிறகு லலித் மோதிக்கும் சுஷ்மிதாவுக்கும் பல முனைகளில் இருந்தும் வாழ்த்துகள் குவியத் தொடங்கின. அவற்றுக்கு இணையாக இந்த ஜோடியை பலர் 'ட்ரோல்' செய்து கிண்டலடிக்கவும் தொடங்கினர். இருவரது வயது வித்தியாசத்தை சுட்டிக்காட்டியும் லலித் மோதியின் உருவத்தையும் சிலர் கேலி செய்து விமர்சித்தார்கள், அவரை "நாட்டை விட்டு தப்பியோடியவர்" என்று ஒரு சிலர் டேக் செய்து அழைத்தனர். ஆனால் மிகவும் மோசமான விமர்சனமாக சுஷ்மிதா சென்னை சிலர், "பேராசை பிடித்தவர்" மற்றும் "தங்க வெட்டியையே சுரண்டி எடுப்பவர்" என்று அழைத்தனர். பணத்திற்காகவே அவர் லலித் மோதியை டேட்டிங் செய்கிறார் என்று சிலர் அழைத்தனர். அவரது விமர்சகர்களில் முக்கியமானவராக வங்கதேச எழுத்தாளரும் செயல்பாட்டாளரான தஸ்லிமா நஸ்ரின் விளங்கினார். "சுஷ்மிதா சென் எதற்காக 'பொதுவெளியில் ஈர்க்கப்படாத ஒருவருடன் நேரத்தை செலவிடுகிறார்? அவர் பணக்காரர் என்பதாலா? அப்படியென்றால் பணத்துகாக தன்னை விற்று விட்டாரா?" என்று கடுமையான முறையில் தஸ்லிமா விமர்சித்திருந்தார். இத்தகைய விமர்சனம், மிகவும் பிரச்னைக்குரியதுதான் என்கிறார் 'ஆர்டிகிள் 14' என்ற செய்தி இணையதளத்தின் பாலின விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் நமிதா பண்டாரே கூறியுள்ளார். "பெரியவர்கள் இருவருக்கு இடையிலான உறவில் என்ன நடக்கிறது என்பது மற்றவர்களின் வேலை இல்லை. எனவே ட்ரோலிங் மற்றும் தனி நபர்களை மதிப்பிடும்போது எப்போதும் விஷயம் பிரச்னை ஆகும்தான். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஒரு மோசமான நிலையே. ஏனென்றால் பெண்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசும் இந்த மாதிரி விஷயத்தில் விரல் நீட்டி அந்த தனி நபரை விமர்சித்து விட்டால் அதில் இருந்து சம்பந்தப்பட்டவர் மீள்வது கடினம்," என்கிறார் நமிதா பண்டாரே. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1994இல் மிஸ் யூனிவர்ஸ் கிரீடத்தை சூடியதன் மூலம் அந்த கிரீடத்தை சுமந்த முதல் இந்திய பெண் ஆனார் சுஷ்மிதா சென். சுஷ்மிதா சென் ஒரு பிரபலமாக இருப்பதால், அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் கண்காணிக்கும் வகையில், இந்த உறவு பெறும் கவனம் பெறுவது முற்றிலும் எதிர்பாராதது அல்ல. தனது "வழக்கத்திற்கு மாறான" வாழ்க்கைத் தேர்வுகளுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்தவர் சுஷ்மிதா. 24 வயதில், மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வென்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு மகளை தத்து எடுத்தார். அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது மகளையும் தத்தெடுத்தார். தமது இரு மகள்களுடன் இருக்கும் படங்களை வழக்கமாகவே சுஷ்மிதா சென் பகிர்ந்து வருகிறார். அந்த மகள்களுடனான உறவை அவர் ஒருபோதும் மறைக்கவில்லை. பல ஆண்டுகளாக, அவர் தமது சக நடிகர்களை சில சமயங்களில் சில காலத்துக்கு டேட்டிங் செய்துள்ளார். வெகு சமீபத்தில், மாடல் நடிகரான ரோஹ்மான் ஷால் உடன் டேட்டிங் செய்து விட்டு கடந்த ஆண்டு பிரிந்தார். சுஷ்மிதா டேட்டிங் செய்தவது பற்றிய தகவல்களை இதுநாள் வரை பத்திரிகைகள் 'கிசுகிசு' மற்றும் சில துணுக்கு செய்திகளாகவே வெளியிட்டு வந்தனஸ்ரீ ஆனால், லலித் மோதியுடனாந இவரது தொடர்பு இந்தியாவில் இந்த அளவுக்கு பெரிதாகும் என்பதை லலித் மோதியே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் என்கிறார் நமிதா பண்டாரே. " 'வியாழக்கிழமை இரவு ட்வீட்டுகள் மூலம் சுஷ்மிதாவுடனான உறவை கசிய விட்டார் லலித். லண்டனில் ஆடம்பமில்லாத வாழ்க்கையையே நடத்தி வருகிறார். ஆனால், இந்தியாவில் எல்லோருடைய கவனமும் இப்போது சுஷ்மிதா சென் பக்கமே திரும்பியிருக்கிறது. எல்லோரும் அவரைப் பற்றியே பேசுகிறார்கள்," என்கிறார் நமிதா. இதேவேளை, சமூக ஊடகங்களில் சுஷ்மிதா சென்னுக்கு பலரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில், பணம் குறைவாக உள்ள ஆண்களுடன் டேட்டிங் செய்தபோது அந்த நபர்களை யாரும் 'தங்க வெட்டிகளாக' அழைத்ததில்லை என்றும் நமிதா நினைவுகூர்கிறார். இந்த நிலையில் லலித் மோதியுடனான உறவைப் பற்றிய அதிகப்படியான பொதுவெளி மதிப்பீடும் விமர்சனமும் தொடர்வதால் சுஷ்மிதா சென் ஞாயிற்றுக்கிழமை இரவு தமது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் எதிர்வினையாற்றினார். "நம்மைச் சுற்றியுள்ள உலகம் எந்த அளவுக்கு பரிதாபமாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் மாறுகிறது என்பதை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். "எனக்கு இதுவரை இல்லாத நண்பர்கள் மற்றும் நான் சந்தித்திராதவர்கள்.... அனைவரும் தங்கள் சிறந்த கருத்துக்களையும், எனது வாழ்க்கை மற்றும் குணநலன்கள் தொடர்பாக ஆழமான ஞானத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்... 'தங்கம் வெட்டி'யிடம் பணம் சம்பாதிக்கிறார்!!! 😄👍 என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் இந்த மேதாவிகள்!!! " என்றும் சுஷ்மிதா கூறியுள்ளார். லலித் மோதியை பணத்துக்காக நான் டேட்டிங் செய்வதாக கூறுவர்களுக்கு இதை சொல்லிக்கொள்கிறேன். நான் தங்கத்தைக் கடந்து மேலும் ஆழமாக தோண்டுபவள். காரணம், நான் தங்கத்தை விட வைரங்களையே விரும்புவேன். இப்போதும் நான் அதையே வாங்குகிறேன், என்றும் சுஷ்மிதா குறிப்பிட்டுள்ளார். Instagram பதிவை கடந்து செல்ல, 2 Instagram பதிவின் முடிவு, 2 சுஷ்மிதாவின் இந்த பதிவு, அவருக்கு இந்தியாவில் பெரும் கைதட்டலைப் பெற்றுக் கொடுத்துள்ளது."சுஷ்மிதா பற்றிய வாட்ஸ்அப் நகைச்சுவைகள் மற்றும் கருத்துக்கள் இழிவானவை. பெண்களை கேலி செய்வது பரவாயில்லை என்ற பாரம்பரிய கருத்தை பிரதிபலிப்பது போல அவை உள்ளன" என்று நமிதா பண்டாரே கூறுகிறார்."ஆனால் இந்த சூழலில் மிகவும் முதிர்ச்சியுடனும் மேன்மையுடனும் பதிலளித்திருக்கிறார் சுஷ்மிதா. தன்னை நேசித்தவர்களுக்கும், நேசிக்காதவர்களுக்கும் அன்பையே பதிலாக அளித்துள்ளார் அவர்," என்று குறிப்பிடுகிறார் நமிதா பண்டாரே. https://www.bbc.com/tamil/arts-and-culture-62212463
  20. நீட் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக புகார் - தேசிய தேர்வு முகமை விளக்கம் இம்ரான் குரேஷி பிபிசி ஹிந்தி சேவைக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளை, உள்ளாடைகளை அகற்றுமாறு சொன்னதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் ஒருவர் புகார் செய்த பிறகு இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியே வந்துள்ளது. தேர்வு மையத்தில் நடந்த சம்பவத்தை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய மாணவியின் புகாரை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். "தான் படித்ததை எல்லாம் மறந்துவிட்டதாக அவள் தெரிவித்தாள்" என்று பிபிசியிடம் பேசிய மாணவியின் தந்தை கோபகுமார் சூராநத் தெரிவித்தார். தனது புகாரில் , தனது மகளிடம் உள்ளாடையை கழற்ற வேண்டும் என்று கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "தேசிய தேர்வு முகமையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில் எனது மகளிடம் உள்ளாடையை கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, பரீட்சை எழுத அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்," என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். "ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் கொண்டு செல்லப்பட்டன என எனது மகள் தெரிவித்தாள். பலர் அழுது கொண்டிருந்தனர். நீட் தேர்வு என்பது முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கிறது. அப்படியிருக்க இம்மாதிரியான கடுமையான நடத்தைகளின் மூலம் மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். பலர் தங்கள் உள்ளாடைகளில் உள்ள ஊக்குகளை அகற்றி அதை கட்டிக் கொண்டனர்," என அந்த புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலான திருமண ஒப்பந்தம் 18 வயதில் 13 மொழிகள்: காணாமல் போனவரை கண்டறிய உதவிய மாணவி மாணவியின் உறவினரான அஜித் குமார் பிபிசியிடம் பேசுகையில், "முதலில் அவர்கள் உள்ளாடையை கழற்றும்படி கூறியுள்ளனர். பின் அவள் அழத் தொடங்கிவிட்டாள். அதன்பின் அவளை ஒரு அறைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு மாணவ மாணவிகள் கூடி இருக்கும்போது இவ்வாறு கூற வேண்டிய அவசியம் என்ன?" என்றார். "நாங்கள் மாணவியின் கூற்றை பதிவு செய்து கொண்டோம். சிறிது நேரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வோம்," என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிற மாணவிகளின் பெற்றோரும் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்கவுள்ளதாக கோபகுமார் தெரிவித்தார். "இது ஒரு அவமரியாதை செயல் என்பதால் இதுகுறித்து மத்திய அரசிற்கும், தேசிய சோதனை முகமைக்கும் கடிதம் எழுதவிருப்பதாக கேரளாவின் சமூக நலத்துறை அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்துள்ளார். இம்மாதிரியான செயல்கள் மாணவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இது முதல்முறை அல்ல நீட் தேர்வின் போது நடத்தப்படும் சோதனைகள் சர்ச்சையாவது இது முதல் முறையல்ல. 2017ஆம் ஆண்டு கன்னூரில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் கருப்பு கால்சட்டை அணிந்திருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அந்த ஞாயிற்றுக் கிழமையில் அந்த மாணவியும் அவரின் தாயும் சில கிமீ தூரம் நடந்து புதிய கால்சட்டை ஒன்றை வாங்கியுள்ளனர். அதன்பின் தேர்வு எழுத உள்ளே சென்றபோது, மெட்டல் டிடக்டர் சோதனையில் சத்தம் வந்தது. பின் அவரின் உள்ளாடையில் உள்ள ஊக்கால் அந்த சத்தம் வந்துள்ளது. எனவே அவர் தனது தாயிடம் அதை கழற்றி கொடுத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது அதற்கு அடுத்த வருடம், பாலக்காட்டில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய தேர்வு முகமையின் மறுப்பு தேசிய தேர்வு முகமை இந்த புகார் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்வு நடைபெற்ற மையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர், நகர ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மாணவி தேர்வு எழுதியுள்ளார். தேர்வு சமயத்திலோ அல்லது அது முடிந்த பிறகோ இது மாதிரியான எந்த புகாரும் வரவில்லை. தேசிய தேர்வு முகமைக்கும் இதுபோன்ற எந்த மின்னஞ்சலோ அல்லது புகாரோ வரவில்லை. மாணவியின் பெற்றோர் கூறுவது போன்ற எந்த நடவடிக்கையும் நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/india-62217833
  21. சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? இதனால் பூமிக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சூரிய கிளர்ச்சி இன்று ஜூலை 19ஆம் தேதி பூமியை solar flare என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சூரிய கிளர்ச்சி ஒன்று தாக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா எச்சரித்துள்ளது. சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? சூரியனில் இருந்து அவ்வப்போது நெருப்புக் குழம்பு விண்ணில் உமிழப்படும். இது கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (coronal maas ejection) எனப்படுகிறது. அந்தப் பிழம்பு சூரிய பொருட்களை விண்ணில் உமிழும். அந்தத் துகள்கள் பூமியை வந்தடைய 3 முதல் 5 நாட்களாகும் என்கிறது நாசா. சூரியனில் இருந்து வெளியாகும் துகள்கள் பூமியை நெருங்கும்போது செயற்கைக்கோள்களின் மின்னணு பாகங்கள் பாதிக்கப்படும். இதனால் ரேடியோ, ஜிபிஎஸ் போன்ற சிக்னல்கள் கிடைப்பது சற்று பாதிக்கும். பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனில் அடர்த்தியான புள்ளிகள் தென்படும். அவை 'சன் ஸ்பாட்ஸ்' எனப்படுகின்றன. இந்த சூரியப் புள்ளிகள் அல்லது சூரியப் பொட்டுகள் அருகே இருக்கும் காந்தப் புலக் கோடுகள் ஒன்றை ஒன்று கடக்கும்போதோ, அவற்றின் அமைவிடம் மறுசீரமையும்போதோ சூரியக் துகள்கள் வெளிப்படும் சூரிய கிளர்ச்சி வெடிப்புச் சம்பவங்கள் நிகழும் என்கிறது நாசா. ஜேம்ஸ் வெப் புதிய படங்கள்: நட்சத்திரங்களின் பிரசவ விடுதி, 5 உடுத்திரள்களின் அண்டவெளி நடனம் சூப்பர் மூன் என்றால் என்ன? எப்போது காணலாம்? பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படத்தை வெளியிட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமது சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய வெடிப்புச் சம்பவம் இந்த சூரிய கிளர்ச்சி நிகழ்வுகள்தான். சூரிய கிளர்ச்சியிலிருந்து வெளியாகும் ஆற்றல் மிக்க துகள்கள் மற்றும் கதிர்வீச்சு பூமியில் உள்ள உயிரிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்த வல்லவை. ஆனால், நாம் கவலைப்பட வேண்டாம். புவியின் காந்தப் புலம் மற்றும் வளி மண்டலம் ஆகியவை அவற்றைத் தடுத்து நமக்கு பாதுகாப்பளிக்கும். எப்படி செயல்படுகிறது? சூரியனில் நடக்கும் அதிதீவிர காந்தப்புல மாறுபாடுகளின் விளைவாகவே இந்த சூரியக் கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிகழ்பவை கிடையாது. சூரியனிலிருந்து வெளிவரும் பிளாஸ்மா உமிழ்வுகளுடன் இணைந்து, எப்போது வேண்டுமானாலும் தன்னிச்சையாக நடைபெறக்கூடியவை. பட மூலாதாரம்,TAHAR AMARI ET AL / CNRS-ECOLE POLYTECHNIQUE படக்குறிப்பு, கயிறு போன்ற அமைப்புகளால் உருவான கூண்டுகள், அதற்குள் அடுத்தடுத்த கூண்டுகள் இந்த நிகழ்வுகள் சூரியனில் நடக்கும்போது, காந்தப்புல வடிவில் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய அமைப்புகளும் உண்டு. ஒன்று கயிறு போன்றது மற்றொன்று கூண்டு போன்றது. எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமானால், கயிறு போன்ற அமைப்புகளால் உருவான கூண்டுகள், அதற்குள் அடுத்தடுத்த கூண்டுகள் என இந்த கட்டுப்பாட்டு முறை அமைந்திருக்கும். கடந்த 2014ஆம் ஆண்டு, அக்டோபர் 24ஆம் தேதி சில மணி நேரங்களில் உருவான சூரியக்கிளர்ச்சியை ஆய்வாலர்கள்கூர்ந்து கவனித்தனர். இந்த கிளர்ச்சி சூரியனின் கொரோனாப்பகுதியிலிருந்து (வெளிப்புற அடுக்கு) வரும் தீப்பொறியுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது கொரோனாப்பகுதியின் சூரியனின் மேற்பரப்பை விட சூடான பகுதி. இதன் அதீத வெப்பத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இந்த வெப்பத்தின் காரணமாக இங்கிருக்கும் காந்தப்புலம் குறித்து ஆய்வு செய்ய முடிவதில்லை. பட மூலாதாரம்,TAHAR AMARI ET AL / CNRS-ECOLE POLYTECHNIQUE ஆனால், கொரோனாப்பகுதிக்கு 1690 கி.மீட்டர்கள் மேலே என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய சூரியனின் மேற்பரப்பிலிருந்து கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தினர். நாசாவின் சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு விண்கலத்தின் தரவுகள் மூலம், சூப்பர் கம்ப்யூட்டர்களில் சில மெய்நிகர் மாதிரிகளையும் உருவாக்கினர் ஆராய்ச்சியாளர்கள். அதிலிருந்து, கூண்டுகளை உடைக்கும் அளவுக்கும் கயிறுகளுக்கு திறன் போதவில்லை என்பதைக் கண்டறிந்தனர். ஒன்றொடொன்று இறுக்கி சுற்றப்பட்டுள்ள கயிறுகள், மொத்தமாக ஆற்றலை வெளிப்படுத்தும்போது ஒரு பெருவெடிப்பு போன்ற சூரியக்கிளர்ச்சி ந்டைபெறுகிறது என்றும் அவர்கள் கண்டறிந்தனர். https://www.bbc.com/tamil/global-62219260
  22. இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? நிதின் ஸ்ரீவஸ்தவா பிபிசி செய்தியாளர், கொழும்பில் இருந்து 19 ஜூலை 2022, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி மாளிகையை பார்க்க குவிந்த கூட்டம் இப்போது இரண்டு பெரிய ஆடம்பர வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வாயில்களில் 'கோட்டா போனார்' மற்றும் 'ராஜபக்ஷ இல்லாத இலங்கை' என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த வாயில்களுக்குள் இருக்கும் பிரமாண்டமான அதிபர் மாளிகை ஒரு அருங்காட்சியகம் போல் இருந்தது. முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பதை பார்ப்பதற்காக கொழும்பு மற்றும் வெளி நகரங்களில் இருந்து வந்த இலங்கை மக்கள் ஒன்றரை கிலோமீட்டர் வரை நீண்டிருக்கும் வரிசையில் அமைதியாக காத்திருக்கின்றனர். வந்தவர்களில் சிங்களர்கள், தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். அங்கு நான் குணசேகராவை சந்தித்தேன். அவர் கையில் ஒரு சிறு குழந்தையும் இருந்தது. "இங்கே நிற்கும் நாங்கள் அனைவரும் இலங்கையின் குடிமக்கள். மதம், சாதி, வரலாறு அனைத்தும் இனி புதிய முறையில் எழுதப்படும்" என்றார் அவர். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தீர்வதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படாத நிலையில், இங்குள்ள சமூக மற்றும் மத உறவுகளில் ஒரு தனித்துவம் காணப்படுகின்றது என்பதே யதார்த்தம். அதுதான் அதிகாரத்தில் இல்லாத ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான ஒற்றுமை. மத்திய கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலுக்குப் பின்னால் ஒரு அழகான ஏரியின் கரையில் ஒரு பெரிய புத்தர் கோவில் உள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம்; தீவிரமடையுமா, தணியுமா? - கள நிலவரம் கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? அவரை நீக்க சபாநாயகரால் முடியுமா? இரண்டேகால் கோடி மக்கள் சில மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் வாரந்தோறும் இந்த புத்தர் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆனால் இப்போது கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், மஹிந்த ராஜபக்ஷ யாருக்கும்தெரியாத இடத்தில் வசித்து வருகிறார். விலைவாசி உயர்வு, உணவு மற்றும் எரிப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், பிரதமர் அலுவலகம் முதல் அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் வரை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். தற்போது இந்த கட்டடங்கள் காலி செய்யப்பட்டுவிட்டன. இலங்கையின் இரண்டரை கோடி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர்,பௌத்த மதத்தைப் பின்பற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். படக்குறிப்பு, பெரும்பான்மை வர்க்க அரசியலின் ஆதிக்கத்தால், இலங்கையின் சிறுபான்மை பிரிவினரிடையே அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, வெறுப்பு அதிகரித்துள்ளது. 'நாட்டில் நிலவிய வெறுப்புணர்வு' ஏறக்குறைய எல்லா முந்தைய அரசுகளும் பெரும்பான்மை வகுப்பினரின் நலன்களைக் கவனித்தன. இது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. தமிழர் உரிமைகளுக்கான உள்நாட்டுப் போர் பல தசாப்தங்களுக்கு நீடித்தது. 2009ல், அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் அதை முடிவுக்கு கொண்டுவந்த பெருமையை பெற்றனர். உடனடியாக நடந்த தேர்தல்களில், சிங்கள தேசியவாதத்தின் மீது சவாரி செய்து ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. "இந்த தேர்தலில் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றுவிடுவேன் என்று எனக்குத்தெரியும்," என்று தனது வெற்றிக்குப் பிறகு கோட்டாபய கூறினார். "நாட்டில் பரஸ்பர பிரிவினை சூழல் நிலவியது உண்மைதான். 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப்போரும் இதற்கு காரணமாக அமைந்தது. அரசியலுக்காக மனிதன் அல்லது மதம் பயன்படுத்தப்படுகிறது."என்று கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபோதி கோவிலின் தலைமை பூசாரி யதகாம ராகுல் கூறினார். "நாங்கள் மதத்தை விட மனித நேயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். எந்த ஊருக்கு சென்றாலும் பௌத்த குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தால், அதற்கு அருகில் முஸ்லிம் குடும்பம், எதிரே தமிழ் குடும்பம் இருக்கும். நாடு மேலும் முன்னேற வேண்டுமானால், அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும்,"என்று அவர் மேலும் குறிப்பிட்டார். கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் மதவாத பதற்றங்கள் அதிகரித்து வந்தன. 2019 ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புகளில் 250 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். படக்குறிப்பு, ஸ்ரீபோதி கோவிலின் தலைமை பூசாரி யதகாம ராகுல் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை இந்த தாக்குதலுக்குப்பின்னால் ஐஎஸ் அமைப்பின் சில உள்ளூர் பிரிவுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது என இங்கு வாழும் பல தமிழ் முஸ்லிம்கள் கூறுகின்றனர். "நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அது மேலும் அதிகரித்தது. முஸ்லிம் சமூகத்திற்கும் அந்தத் தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேர்தலில் வெற்றி பெற நாங்கள் குறிவைக்கப்பட்டோம்,"என்று கொழும்பில் உள்ள அக்பர் ஜும்மா மசூதியின் இமாம் ரிஃப்கான் கூறுகிறார். "கோவிட் வந்த பிறகு இறந்தவர்களை புதைக்க ராஜபக்ஷ சகோதரர்கள் அனுமதிக்கவில்லை. உடல்கள் எரியூட்டப்பட்டன. அவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்."என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,NITIN SRIVASTAVA/BBC அரசுக்கு எதிரான போராட்டங்களின் மையமாக இருந்த 'கால் ஃபேஸில்' நான் அஷ்ஃபக் என்ற கல்லூரி மாணவரை சந்தித்தேன். "முந்தைய அரசுகள் மாணவர் சேர்க்கையில்கூட முஸ்லிம்களின் சதவிகிதத்தை குறைவாக வைத்திருந்தன. இப்போது நிலைமை மேம்படக்கூடும்," என்கிறார் அவர். கணிசமான சிங்கள மக்கள் தங்களை எதிர்பார்கள் என்று சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்திய ராஜபக்ஷ குடும்பம் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் சிறுபான்மை சமூகத்தை 'வெளியாட்கள்' என்று கண்மூடித்தனமாக கருதிய பலரும்அதில் இருந்தனர். 'நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்' குமாரா பரேரா செல்போன் கடை நடத்திவருகிறார்."நாட்டின் நிலை இப்படியாகிவிட்டதே" என்று அவர் வேதனைப்படுகிறார். "இலங்கையில் தமிழர் உரிமைக்காக உள்நாட்டுப் போர் நடந்தது. அது புரிகிறது. அதன்பிறகு நாட்டில் அமைதி திரும்பியது. அதுவும் புரிகிறது. ஆனால் திடீரென்று ஒரு விசித்திரமான தேசியவாதம் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் பலர் இதை சரியானது என்று கூட கருதியிருக்கலாம். ஆனால் உணவு தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் மக்கள் அதைப் பற்றி சிந்திப்பதுகூட இல்லை,"என்கிறார் அவர். ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான அமைதியான போராட்டத்தில் ராணுவத்தின் நிலைப்பாடும் சற்று வித்தியாசமாகவே இருந்தது. ராணுவத்தில் உள்ள பெரும்பாலான வீரர்கள் மற்றும் தளபதிகள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தபோதிலும் இதுவரை போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை மிகவும் சாதாரணமாகவும், மென்மையாகவும் இருக்கிறது. படக்குறிப்பு, அரசியல் ஆய்வாளர் பவனி ஃபொன்சேகா "நாட்டில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது" என்று கொழும்பில் உள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் அரசியல் ஆய்வாளர் பவனி ஃபொன்சேகா கூறுகிறார். "மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சமூகங்கள் மத்தியில் மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக, பரஸ்பர கருத்து, உரையாடல் மற்றும் விவாதம் ஆகியவற்றின் புதிய வழிகள் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் மக்கள் கருத்துக்களை பறிமாறிக்கொண்டு, பிரச்சனைகளை தீர்க்கமுடியும்," என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/sri-lanka-62204679
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.