Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 15 JAN, 2024 | 10:43 AM யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் இளவாலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இளவாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகித்து, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக இளவாலை பொலிஸார் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். இதன்போது அவரது வீட்டில் இருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/173977
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 14 ஜனவரி 2024 கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இருந்தது. இதுபோல் ஒரு வினோத பழக்கம் தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் இருந்துள்ளது. சோழர் காலத்தில் அரசர்கள் இறந்த பிறகு தமக்குப் பிடித்தமான நபர்களையும் தங்களது உடலுடன் சேர்த்து புதைக்கச் செய்துள்ளனர். இறந்த பின்பும் தன்னுடன் அவர்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் அதைச் செய்து சோழர்கள் ஆட்சியில் கல்வெட்டிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். அப்படி சோழர்கள் ஆட்சியில் நடைபெற்ற ஒரு வினோத சம்பவம் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம். குலோத்துங்க சோழன் அரசாட்சியில் திருவண்ணாமலை அருகே சிற்றரசன் பிரிதிகங்கன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இந்த வினோதமான சம்பவம் பற்றித் தெரிந்துகொள்ள தாமரைப்பாக்கம் கிராமத்திற்குச் சென்றோம். இறந்த அரசருடன் உயிரோடு புதைக்கப்பட்ட 3 பெண்கள் கோவிலின் உள்ளே நுழைவதற்கு முன்பாகவே கல்வெட்டு பதிவு குறித்து பிபிசி தமிழுடன் வந்திருந்த திருவண்ணாமலை வட்டாட்சியரும், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலருமான பாலமுருகன் விவரித்தார். பாடகர்களான மூன்று பெண்கள் பிருதிகங்க மன்னன் இறந்தபோது அவரோடு சேர்த்து உயிருடன் புதைக்கப்பட்ட செய்தியைக் கூறும் மூன்று கல்வெட்டுகள் தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அக்னீசுவரர் கோவிலில் உள்ளதாக அவர் கூறினார். அதில், "முதல் கல்வெட்டு தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோவில் முன்மண்டப கிழக்குச் சுவர் மற்றும் அரைத்தூணில் உள்ள 14 வரிக் கல்வெட்டாக உள்ளது. 'ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவந சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10வது சோமனான பிருதி கங்கனேன் எங்களய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கர் உடன் பள்ளிகொண்ட பாடும் பெண்...' எனத் தொடங்கும் கல்வெட்டைப் படித்துக் காண்பித்து விளக்கம் கூறினார் பாலமுருகன். இழப்பீடாக வழங்கப்பட்ட நிலம் மூன்றாம் குலோத்துங்கனின் 10ஆம் ஆட்சி ஆண்டான கி.பி. 1188இல் அரசர் பிருதிகங்க சோமநாதன் இந்தக் கல்வெட்டை வெட்டியதாகக் கூறுகிறோர் பாலமுருகன். அதில், "தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனுடன் புதைகுழியில் உயிருடன் புதைக்கப்பட்ட பாடும் பெண்டிர் மூவர் குடும்பத்தாருக்கு இழப்பீடாக நிலம் வழங்கியதாக" கூறப்பட்டுள்ளது. அவர்களுடைய இழவு வருத்தத்தை தீர்க்கவும் பிள்ளைகள் இல்லாமல் போனதற்கு இழப்பீடாகவும் 16 சாண் கோலால் அளந்துவிட்ட ஒரு வேலி நிலம் அந்தப் பெண்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டதாக விவரித்தார் பாலமுருகன். அந்த நிலம் அவர்களது வம்சம் உள்ளவரையில் அவர்களுக்கு உரிமையாக இருக்கும் என அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தன் வம்சத்தார் பிற்காலத்தில் யாரேனும் கொடையாகக் கொடுத்த நிலத்தில் வில்லங்கம் செய்தால், அவர்கள் 'மதுராந்தக வேளான் குண்டி கழுவிய மல தண்ணீரைக் குடித்து எச்சில் கலத்தில் சோறு உண்டவராவார்' என வசைமொழிந்திருப்பதையும் கல்வெட்டு ஆதாரம் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்த பாவங்களையும் வில்லங்கம் செய்பவர் கொள்வார் என்று அரசர் பிருதிகங்க சோமநாதன் கல்வெட்டில் சபித்துள்ளதாக பாலமுருகன் விளக்கினார். இதுகுறித்த கல்வெட்டு ஆதாரங்கள் 'தாமரைப்பாக்கம் கல்வெட்டு' என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. புதைக்கப்பட்ட மூன்று பெண்கள் யார்? கோவிலின் முன் மண்டப கிழக்குச் சுவரில் இருந்த 4 வரிக் கல்வெட்டைக் காட்டினார் வட்டாட்சியர் பாலமுருகன். அதில் இருந்த, "ஸ்வஸ்தி... பிருதிகங்க எங்களய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கருடன் பள்ளிகொண்ட ஆடும் ஆழ்வார்க்கும், சதுர நடைப்பெருமாள்க்கும், நிறைதவந் சேதாளுக்கும்" என்ற வரிகளைப் படித்துக் காட்டி விளக்கினார். அதன்படி, மூன்றாம் குலோத்துங்கனின் 10ஆம் ஆட்சி ஆண்டான கி.பி. 1188இல் சிற்றரசர் சோமநாத பிருதிகங்கன் "தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனோடு சவக்குழியில் உயிருடன் புதைக்கப்பட்டவர்கள் ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைத்தவஞ்சேதாள் ஆகிய மூன்று தேவரடியார் குலப் பெண்கள்" என்று விளக்கினார். மேலும், அந்தப் பெண்களுக்கு பிள்ளையின்றிப் போனதற்கு, அதாவது அவர்களுடைய வம்சம் அழிந்து போனதற்கு "இழப்பீடாக வழங்கப்பட்ட நிலம் பதினாறு சாண் அளவுகோலால் அளந்து தரப்பட்டது," என்றும் கூறுவதாகத் தெரிவித்தார். இந்தக் கல்வெட்டில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் முன் மண்டப தென்புறச் சுவரில் 5 வரிக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. "ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10வது ஆடும் ஆழ்வாரும்..." எனத் தொடங்கும் அந்த மூன்றாவது கல்வெட்டைப் படித்து விளக்கினார் பாலமுருகன். "சோழன் மூன்றாம் குலோத்துங்கனின் 10ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 1188இல் ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைதவஞ்சேதாள் ஆகிய மூன்று பாடும் தேவரடியார் குலப் பெண்களின் வீட்டில் பிள்ளை இல்லாமல் போனதற்காக திருவங்கீசுவரமுடைய நாயனார் கோவில் தேவரடியார் ஐவருக்கு இத்துயர உடன்பாட்டிற்காக பதினாறு சாண் கோலால் அளந்து ஆயிரம் மேற்பட்ட குழி நிலத்தை பிருதிகங்க அரசன் சோமநாத தேவன் கொடுத்தான். இதை இல்லாமல் செய்பவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்யும் பாவத்தைக் கொள்வான் என்று இழப்பீடு நிலம் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்பது தெளிவாக இந்தக் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது." ஆனால், இங்கு அந்த மூன்று பெண்களின் பட்டப் பெயர்கள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன, அதேவேளையில் இங்கு இழப்பீடு நிலம் வாங்கிய ஐந்து தேவரடியார்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய வட்டாட்சியர் பாலமுருகன் தாமரைப்பாக்கம் கோவில் கல்வெட்டுகள் மிக வித்தியாசமான வினோத சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். இந்தக் கல்வெட்டு ஆதாரங்களின் மூலம் அக்காலத்தில் பெண்களின் நிலைமை மற்றும் அவர்களின் சமூக நிலையை நாம் அறியலாம் என்கிறார் பாலமுருகன். அதோடு, எல்லாக் காலத்திலும் பெண்கள் துன்பத்திற்கு ஆளானார்கள் என்பதற்குச் சான்றாகவும் இது விளங்குவதாகக் கூறினார். ஆந்திரா, கர்நாடகாவிலும் இருந்த 'உடன் புதைக்கும்' பழக்கம் இத்தகைய வினோத பழக்க, வழக்கங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்துப் பேசிய விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், "வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான கல்வெட்டுகள் ஒரு சில இடங்களிலேயே காணக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற கல்வெட்டுகள் இருப்பதாக" கூறினார். மைசூர் மாவட்டம், தொட்ட ஹூண்டி கிராம குளத்தில் உள்ள 24 வரி கல்வெட்டு, இறந்த கணவனுடன் மனைவி பள்ளிகொண்டதைத் தெரிவிக்கிறது. அதேபோல் பெல்லாரி மாவட்டம் கலுகோடு கிராமத்திற்குத் தெற்கே உள்ள பலகையில் வெட்டிய 25 வரி கன்னட கல்வெட்டு இறந்த மன்னருடன் படைவீரன் ஒருவரும் சேர்த்துப் புதைக்கப்பட்டதாகக் கூறினார் பேராசிரியர் ரமேஷ். மேலும் வெளிநாடுகளிலும் இதுபோன்ற கல்வெட்டுப் பதிவுகள் காண கிடைக்கின்றன. அக்கால மக்களின் அதீத நம்பிக்கை அல்லது அரசர்களின் வானளாவிய அதிகாரத்தின் ஒரு வெளிப்பாடு என்றுகூட இதைச் சொல்லலாம் என்கிறார் பேராசிரியர் ரமேஷ். மேலும், "அக்காலத்தில் மன்னர்கள் இறைவனுக்கு நிகராக மதிக்கப்பட்டனர். அவர்களுடைய வார்த்தை இறை வார்த்தைக்கு இணையாக மதிக்கப்பட்டதும் ஒரு காரணம். ஆகையால், இதை அறியாமையின் செயல் அல்லது அதிகாரத்தின் வெளிப்பாடு எனக் கருதலாம்," என்றார் பேராசிரியர் ரமேஷ். அதிகார பண்பாட்டின் நீட்சி இதுபோன்ற வினோத சம்பவங்கள் குறித்தும் இதுபோன்ற வினோத பழக்கங்களை அக்கால மக்கள் பின்பற்றியது குறித்துப் பேசிய மருத்துவர் உதயகுமார், "உடன்கட்டை ஏறுதல், பள்ளிக்கொள்ளல், தன்னைப் பலியாக்கிக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் அனைத்தையும் மனப் பிறழ்வு எனக் கூற முடியும் என்னும் அவர், இதற்கு "அதிகாரத்தின் உச்ச வெளிப்பாடு என்பது சரியான சொல்" என்று கூறினார். இது மூட நம்பிக்கையின் உச்சம் என்று கூறும் உதயகுமார், "விலைமதிக்க முடியாத தனது உயிரையே துறத்தல் என்பது வேதனைக்குரியது," என்றார். அக்காலத்தில் இறந்த பின்பும் வேறொரு உலகம் உள்ளதாகச் சொல்லும்போது தனக்குப் பிடித்தமானவர்களுடன் சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்ததுகூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர். "இறந்த உடலுடன் அவர்களுக்கு விருப்பமான பொருட்களைப் புதைத்து வந்ததைப் போல் அவர்களுக்கு விருப்பமான மனிதர்களையும் சேர்த்துப் புதைக்கும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. இதை உயிர்த் தியாகம் என்று சொல்லப்பட்டாலும் மூடநம்பிக்கை என்று சொல்வதுதான் சரி," என்கிறார் மனநல மருத்துவர் உதய்குமார். https://www.bbc.com/tamil/articles/cg3xe3lw314o
  3. மனித உரிமை விவகாரங்களில் இரட்டை வேடம்போடும் உலக தலைவர்கள் - பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களிற்கு ஆபத்து - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: RAJEEBAN 14 JAN, 2024 | 12:59 PM உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனித உரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை நிறைவேற்றவேண்டிய தங்கள் கடப்பாட்டினை உலக தலைவர்கள் புறக்கணிப்பதால் உலகம் முழுவதும் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தனது வருடாந்த அறிக்கையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச அளவில் அதிகரிக்கும் மனித உரிமை நெருக்கடிகள் குறித்து கடுமையாக எச்சரித்துள்ளது. யுத்தகால அநீதிகள் பலமடங்காக அதிகரிக்கின்றன, மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறை சர்வதேச மனித உரிமை கொள்கைகள் சட்டங்கள் தாக்குதலிற்குள்ளாகின்றன, அரசாங்கங்கள் அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்து அரசியல் தலைவர்கள் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதை சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிவுசெய்து சீற்றத்தை வெளிப்படுத்துதல் பரிவர்த்தனை இராஜதந்திரம் சர்வதேச மனித உரிமைகள் மற்றும சட்டங்களை அங்கீகரிப்பதில் இரட்டை நிலைப்பாடுகள் போன்றவற்றினால் ஆயிரக்கணக்கான உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குறுகியகால ஆதாயங்களிற்காக அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பான சட்டபூர்வமான கடமைகளில் இருந்து விலகி அதிகாரத்தை உறுதிப்படுத்த முயல்வதால் உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் டிரான ஹசன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் வெளிப்படையாக தெரியும் இரட்டை நிலைப்பாடுகளிற்கு அப்பால் ஏனைய பல மனித உரிமை விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. மனித குலத்திற்கு எதிரான சீன அரசாங்கத்தின் குற்றங்கள் தொடர்பில் மௌனம் கடைப்பிடிக்கப்படுகின்றது. உக்ரைனில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறலும் நீதியும் அவசியம் என உரத்த குரலில் வேண்டுகோள்கள் விடுக்கப்படும் அதேவேளை ஆப்கானில் அமெரிக்காவின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்து மௌனம் காக்கப்படுகின்றது என அவர்தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173931
  4. உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வை கண்ட பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க செல்லுங்கள் - கர்தினால் மல்கம் ரஞ்சித் Published By: RAJEEBAN 15 JAN, 2024 | 08:50 AM அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார். சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர் உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். பொரளைதேவலாயத்தில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் கைக்குண்டு மீட்கப்பட்டதை குறிப்பதற்காக இடம்பெற்ற விசேட ஆராதனையின்போது இதனை தெரிவித்துள்ள அவர் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கைக்குண்டினை வைத்த உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறிவிட்டனர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார் ஊடகங்களை துன்புறுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படுவார்களா என்பதை பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம். பிரகீத் எக்னலிகொடவின் கொலைக்கு யார் காரணம் என்பதும் லசந்தவை யார் கொலை செய்தார்கள் என்பதும் எவருக்கும் இதுவரை தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்தும் மூடிமறைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு பதில் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு தேர்தல்களின் ஆண்டு என அறிகின்றோம். இந்த தடவை சரியான தலைவர்களிடம் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173975
  5. Published By: RAJEEBAN 15 JAN, 2024 | 08:21 AM ஒரு சீனா கொள்கையில் உறுதியாகயிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் அந்த நாட்டின் இறைமையை வலியுறுத்தும் வில்லியம் லாய் சிங் வெற்றிபெற்றுள்ள நிலையிலேயே இலங்கை மீண்டும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. தாய்வானில் தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது ஒரு சீனா கொள்கைகளை முன்னிறுத்துவதில் பின்பற்றுவதில் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். சீனாவின் இணக்கமான மீள்ஒருங்கிணைப்பை விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173974
  6. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, பெங்களூருவில் உள்ள ஆங்கில பலகைகளை கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் சேதப்படுத்தினர். கட்டுரை தகவல் எழுதியவர், நிகிலா ஹென்றி பதவி, பிபிசி நியூஸ், டெல்லி 14 ஜனவரி 2024 உலகளவில் பல முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகம், ‘இந்தியாவின் சிலிகான் வேலி’ என அழைக்கப்படும் பெங்களூருவில் புத்தாண்டு நெருங்கும் வேளையில் நடைபெற்ற போராட்டத்தில், பெயர்ப் பலகைகளில் உள்ளூர் மொழியான கன்னடத்தில் எழுத வேண்டும் என வலியுறுத்தி, ஆங்கில பலகைகளை போராட்டக்காரர்கள் கிழித்து எறிந்த சம்பவங்கள், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. பெங்களூருவில் உள்ள ஒவ்வொரு காட்சிப் பலகையிலும் 60% கன்னடம் இருக்க வேண்டும் என சட்டம் அமல்படுத்த வேண்டும் என, அரசாங்கத்தை வலியுறுத்தி கர்நாடக ரக்ஷனா வேதிகே (கே.ஆர்.வி) என்ற அமைப்பு போராட்டம் நடத்தியது. இந்த போராட்டங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை கண்டனம் தெரிவித்த இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள், அதேவேளையில், கன்னட மொழியை முதன்மைப்படுத்த கோருவதில் எந்த தீங்கும் இல்லை என, கே.ஆர்.வி அமைப்புக்கு ஆதரவும் தெரிவித்தன. ஆளும் பாஜகவின் மத்திய அமைச்சர் ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் பேசுகையில், "ஆங்கிலத்தைத் தவிர கன்னடத்தில் எழுதுவதால் என்ன தீங்கு நேரப் போகிறது? இது பிரிட்டன் அல்ல" என்று கூறினார் . 300-க்கும் மேற்பட்ட மொழிகளின் தாயகமான இந்தியாவில், மொழியியல் அடையாளங்களை வலியுறுத்துவது பொதுவானது என்பதால் இவை எதுவும் ஆச்சரியமாக இல்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் தமிழ் மொழி ஆதரவு போராட்டக்காரர்கள் 1930-களில் இருந்து "தமிழ்நாடு தமிழர்களுக்கே" என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ”முதலில் கன்னடம்” 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரே மொழி பேசும் பகுதிகளை ஒன்றிணைத்து மொழிவாரியாக நாட்டில் பல மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. கர்நாடகம் 1956-இல் உருவாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். கடந்த மாதம் ஆங்கில விளம்பரப் பலகைகளைக் கிழித்த கே.ஆர்.வி அமைப்பு இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வேலை செய்யும் பெருநகரத்தில் கன்னட மொழியும் அதனை பேசுபவர்களும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று பல தசாப்தங்களாக கூறி வருகிறது. பெங்களூருவில், 10 பேரில் நான்கு பேர் இந்நகரத்திற்கு வெளியில் இருந்து வருகிறார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன, இருப்பினும் இந்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு கர்நாடகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள். புலம்பெயர்ந்தோரின் வருகை சில உள்ளூர் மக்கள், தாங்கள் விரைவில் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் என நினைக்கும் அதே வேளையில், கே.ஆர்.வி-யின் "முதலில் கன்னடம்" எனும் கோரிக்கை பல தசாப்தங்களாக உள்ள ஒரு மொழியியல் தேசியவாதத்திலிருந்து உருவாகிறது. பண்பாட்டு வரலாற்றாசிரியர் ஜானகி நாயர் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கன்னடம் பேசுபவர்கள் 1920-களில் தனி மாநிலத்தை முதன்முதலில் கோரியதாகக் கூறுகிறார். ஆரம்பத்தில், கன்னட தேசியவாதிகள் ஆங்கிலம் உட்பட பிற மொழிகளுக்கு இணங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். கன்னட தேசியவாதிகளில் ஒருவர், "ஆங்கிலம் நமது கலாசார மற்றும் அரசியல் மொழி, சமஸ்கிருதம் நமது ஆன்மிக மற்றும் செம்மொழி, கன்னடம் எங்கள் தாய்மொழி மற்றும் பேசும் மொழி" என்று கூறியதாக ஜானகி நாயர் எழுதுகிறார். மொழிப் போராட்ட வரலாறு பட மூலாதாரம்,K VENKATESH படக்குறிப்பு, அறிவிப்புப் பலகைகளில் கன்னடம் முதன்மையாக இருக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். "ஆரம்பத்தில், மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சியை முக்கியமாகக் கோரியதால், இந்த மொழியியல் போராட்டம் பலம்பெறவில்லை. பின்னர்தான் இந்த இயக்கத்தில் தீவிரமான போராட்டங்கள் இடம்பிடித்தன," என்று கன்னட அறிஞர் முசாபர் அசாதி பிபிசியிடம் கூறினார். ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1980-களில் கடுமையான போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக, கன்னட தேசியவாதிகள் மற்ற இந்திய மொழிகளான சமஸ்கிருதம், தமிழ், உருது மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர். பள்ளிகளில் சமஸ்கிருதத்திற்குப் பதிலாக கன்னடம் மட்டுமே முதல் மொழியாக இருக்க வேண்டும் எனக்கூறி, 1982-ல் நடந்த கோகாக் போராட்டம் தீவிரமான போராட்டங்களில் முதன்மையானது. இந்த போராட்டத்திற்கு ராஜ்குமார் தலைமையில், கன்னட திரையுலகினர் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, 1991-ல் தமிழ்நாட்டிற்கு எதிராக பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. இரு மாநிலங்கள் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தமிழ் பேசுபவர்களோ அல்லது கன்னட மொழி பேசுபவர்களோ எதிர்தரப்புக்கு அதிகளவு நீர் பங்கீடு செல்வதை விரும்பவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தி மொழிக்கு எதிர்ப்பு பின்னர், 1996-ஆம் ஆண்டில், அரசு ஊடகமான தூர்தர்ஷன் உருது மொழியில் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தபோது பெரும் எதிர்ப்புகள் வெடித்தன. பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2017-இல், கே.ஆர்.வி தலைமையிலான கன்னட தேசியவாதிகள் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெங்களூரு மெட்ரோ வழித்தடத்தில் உள்ள பலகைகள் மற்றும் பொது அறிவிப்புகளில் இந்தி மொழியை அகற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். "நம்ம மெட்ரோ, ஹிந்தி பேடா", அதாவது 'எங்கள் மெட்ரோவில் இந்தி இல்லை' என்பது சமூக வலைதளங்களில் பல நாட்களாக ட்ரெண்டானது. 1990-களில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்கிய நிலையில், ஆங்கிலம் பேசும் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்த பிறகுதான் கன்னட தேசியவாதிகள் ஆங்கிலத்திற்கு எதிராக போராடத் தொடங்கினர். ஒதுக்கீட்டுக்கு வலியுறுத்தல் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆங்கிலம் பேசுபவர்கள் தங்கள் வேலையைப் பறிக்கிறார்கள் என்ற பொதுவான கவலை பல கன்னடர்களிடையே இருந்தது. மேலும் கே.ஆர்.வி அமைப்பு 1980-களின் சரோஜினி மகிஷி கமிட்டியின் பரிந்துரையின்படி "மண்ணின் மைந்தர்கள்" ஒதுக்கீட்டை அமல்படுத்த அல்லது உறுதியான நடவடிக்கையை கோரத் தொடங்கியது. இந்தியாவின் கூட்டாட்சியானது பிராந்திய சுயாட்சியில் வேரூன்றியிருப்பதாலும், ஆங்கிலப் பலகைகள் அதற்குத் தடையாக இருப்பதாலும், பிற மொழிகளை விட பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறோம் என்று கே.ஆர்.வி அமைப்பினர் கூறுகின்றனர். வேலைக்கு ஆங்கிலம் முக்கியமாக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்கள் கூறுகிறார்கள். "கன்னடத்திற்கும் அதன் மக்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மட்டுமே நாங்கள் நினைக்கிறோம்," என்று ஐ.டி. துறையில் பணிபுரியும் கே.ஆர்.வி-யின் நிறுவன செயலாளர் அருண் ஜவ்கல் கூறுகிறார். 'இந்தியாவின் சிலிகான் வேலி' என்ன ஆகும்? பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, டிசம்பர் 2023-ல் நடைபெற்ற போராட்டத்தில் ஆங்கில பலகையை கிழிக்கும் போராட்டக்காரர். கன்னட தேசியவாதத்தின் பெரும்பாலான வெளிப்பாடுகள், கன்னட மொழி பேசுபவர்களில் ஒரு பிரிவினர் கே.ஆர்.வி-யின் கோரிக்கைகளை தீவிரமாக ஆதரிப்பதால் மாநிலத்தில் எதிர்க்கப்படாமல் போய்விட்டது. பெங்களூரு உட்பட கர்நாடகாவில் தங்கள் அமைப்புக்கு பெரும் ஆதரவு இருப்பதாக அருண் ஜவ்கல் கூறுகிறார். ஆனால், சமீபத்திய எதிர்ப்புகள் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து கன்னடத்திற்கு பலகைகள் மாற்றப்பட்டிருப்பது பெங்களூருவின் உலகளாவிய பிம்பத்தை பாதிக்குமா?. பாதிக்காது என, மாநிலத்தில் வணிக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FKCCI) கூறுகிறது. "பெங்களூருவில் விடாமுயற்சியுடன் கூடிய பணியாளர்கள்தான் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் பெயர்ப்பலகைகள் மாறினாலும் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக வேலை செய்வார்கள்" என்று FKCCI தலைவர் ரமேஷ் சந்திரா கூறுகிறார். மேலும், "வணிக நிறுவனங்கள் சட்டத்தைப் பின்பற்றி கன்னடத்தை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்" என தெரிவித்தார். அடையாளங்களை மாற்றுவதற்கான காலக்கெடு பிப்ரவரி 28. கே.ஆர்.வி-ஐப் பொறுத்தவரை, அதன் தலைவர்கள் கூறுகையில், "ஐரோப்பிய நாடுகள் தங்கள் உள்ளூர் மொழிகளில் விளம்பரப் பலகைகளை வைத்திருக்க முடியும் என்றால், 6.11 கோடி மக்கள்தொகை கொண்ட, பெரும்பான்மையாக கன்னடம் பேசுபவர்கள் உள்ள கர்நாடகாவிலும் அதனை செய்ய முடியும்." என்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c04yr5j1rp5o
  7. பரீட்சைக்கு முன்னரே வினாத்தாள் வெளியான விவகாரம்: அம்பாறை ஆசிரியர் கைது! 14 JAN, 2024 | 07:35 PM க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியான சம்பவம் தொடர்பில் அம்பாறையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறையைச் சேர்ந்த ஆண் ஆசிரியர் ஒருவரே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173967
  8. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - இந்தாண்டு புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தென் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடி, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த மூன்று நாளும் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது மதுரை அவனியாபுரத்தில் 3 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சாதியினரும் இடம்பெறுவது தொடர்பான பிரச்னை நீதிமன்ற படியேற நேரிட்டது. இதில் தீர்வு எட்டப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகமே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கு இல்லை. அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்தாண்டைப் போல இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாத நபர்கள் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவு 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், ஆயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிகட்டு உறுதி மொழி ஏற்க, அமைச்சர் மூர்த்தி போட்டிகளை கொடியசைத்து போட்டி துவங்கி வைத்தார்.. தற்போது நடைபெறும் முதல் சுற்றில் 50 பேர் களத்தில் உள்ளனர். படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் கூறும் விதிமுறைகள் என்ன? ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர். அரசு வழங்கிய டோக்கன்கள் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே களத்திற்குள் அவிழ்க்க அனுமதிக்கப்படும். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. பிடித்தால் வீரருக்கு எச்சரிக்கை அளிக்கப்படும், அதனையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வெற்றி பெற்றதா அல்லது மாடுபிடி வீரர் வெற்றி பெற்றாரா என்பது குறித்து கமிட்டியினர் தான் முடிவு செய்வார்கள், அதேபோல், நீதிமன்றம் அறிவித்துள்ள சாதிப் பெயர்களை குறிப்பிடுவது கிடையாது என்கிறார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன். சாதி பெயர் குறிப்பிடப்படாது மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளை அதன் உரிமையாளரின் சாதி பெயரை குறிப்பிட்டு அவிழ்க்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அமைச்சர் மூர்த்தியும் உறுதி செய்தார். அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜல்லிக்கட்டு போட்டியில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சாதிப்பெயர் குறிப்பிடப்படாமல் காளையின் பெயர், ஊர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும். ", என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES காவல்துறை அறிவிப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அளித்த அனுமதிச் சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி. காளைகளுடன் வரும் உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது. காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதி சீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மதுபோதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்து இருக்கிறது. ”காளையை களத்தில் சந்திக்க தயார்” ”கடந்தாண்டில் நடைபெற்ற பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றேன். இதில், அலங்காநல்லூர், சத்திரக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் மற்றும் இருசக்கர வாகனம் என பல்வேறு பரிசுபொருட்களை வென்றேன். இந்த ஆண்டும் அதேபோல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்த வீரராக விளங்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "நான் சிவகங்கை மாவட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவன் எனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறேன். அவர்களும் மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்து இருக்கிறார்கள். காளைகளை களத்தில் இறங்கி சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்", என்கிறார் அவர். ”மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட காளைகள் தயார்” பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த என்பவர் தனது இரண்டு காளைகளை அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக டோக்கன் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கான டோக்கன் முன்பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. “எனது இரண்டு காளைகளையும் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் இறக்குவதற்காக தயார் செய்து இருக்கிறேன். மாடுபிடி வீரர்களுக்கு எனது காளைகள் களத்தில் ஆட்டம் காட்டி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்", என கூறுகிறார். இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு அதன் மீதான தடை நீங்கிய பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதிலும், ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறங்கி விளையாடுவதில் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. இதனை முறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கொண்டுவரப்பட்டன. அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் அரசு அறிவித்த இணையதளத்திற்கு சென்று மாட்டின் உரிமையாளர், மாடுபிடிவீரர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து உடல் தகுதியை உறுதி செய்து அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்த வேண்டும். அரசு சார்பில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். இந்தாண்டு ஜல்லிக்கட்டில் போட்டிகளில் பங்கேற்க காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர். எத்தனை பேர் பங்கேற்பார்கள்? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை நிர்வாகத்தின் சார்பில் இணையதளம் முன்பதிவு கடந்த 10-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 11-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. இதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2,400 காளைகள், 1,318 காளையர்கள், பாலமேட்டில் 3,677 ஜல்லிக்கட்டு காளைகள், 1,412 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். இந்த இரண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை விட உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 6,099 காளைகள், 1,784 மாடுபிடி வீரர்கள் என மொத்தமாக இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் சேர்த்து பங்கேற்க 12,176 ஜல்லிக்கட்டு காளைகளும் அவற்றுடன் போட்டியிட 4,514 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த வீரர்கள், காளைகள் ஜல்லிக்கட்டு நாட்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு களத்தில் 50 வீரர்கள் என்ற சுழற்சி முறையில் களமிறக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டி எப்போது? மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் 66 ஏக்கர் பரப்பளவில் 61.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏது தழுவுதல் அரங்கம் இந்த மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9x26l32pkjo
  9. யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
  10. Published By: VISHNU 14 JAN, 2024 | 04:07 PM அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம் சரியாக அவதானித்தால் கடந்த பாராளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் யார் என்பது புலப்படும். குருணாகலில் ஜோன்ஸ்டன், கண்டியில் மஹிந்தானந்த, இரத்தினபுரியில் சொக்கா மல்லி, களுத்துறையில் ரோஹித அபேகுணவர்தன, அதைப் போலவே, கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்க போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர். பிரசன்ன ரணதுங்க கப்பம் வாங்கியமைக்காக நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க. தேசிய மக்கள் சக்தியின் கண்டி தொகுதி மகாநாடு நேற்று (13) கண்டியில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், மேலும், அநுராதபுரத்தில் எஸ்.எம்.சந்திரசேனவும் தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் பலவந்தமாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தவர்கள் அல்லர். நாட்டு மக்களின் வாக்குகளாலேயே இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். எனவே, பொருளாதாரத்தில் மாத்திரமா சீரழிவு இருக்கிறது? எமது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. மனித சிந்தனைகள் சீரழிந்திருக்கின்றன. எனவே, எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும். நாம் ஒரு தீர்வுகட்டமான திருப்புமுனைக்கு வந்துள்ளோம். இந்த ஆட்சியாளர்களினால் இன்று நாட்டில் அரிசி, எரிபொருள் மற்றும் ஔடதங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு தோன்றியுள்ளது. கடன் செலுத்தமுடியாத நாடாக மாறியிருக்கிறோம். வாழ முடியாத ஒரு நாடாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது. சட்டம் அமுலாக்கப்படாத, ஒழுக்கமில்லாத, போதைவஸ்துக்கள் நிரம்பிய மற்றும் குற்றச் செயல்கள் மலிந்த ஒரு நாடே இன்றைய பெறுபேறு இருக்கிறது. இதே பயணப்பாதையில் சென்று நாம் செத்து மடியப் போகிறோமா? இல்லையென்றால் ஒன்றாக எழுச்சிபெற போகின்றோமா? மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். எம்மிடம் சுலபமான வழியும் இருக்கிறது. அதாவது, எவ்வித பிரச்சினையும் இன்றி எல்லோரும் இதே அழிவுப் பாதையில் சுடுகாட்டை நோக்கி பயணிக்கவும் முடியும். இல்லையென்றால், நாம் திடசங்கற்பத்துடன், ஒன்றாக எழுச்சி பெற வேண்டும். சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை நிராகரித்து நாம் எழுச்சி பெறுவோம் என்ற பிரேரணையை முன்வைக்கவே கண்டி நகரில் நாமனைவரும் திரண்டிருக்கிறோம். இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து இதைவிட எவ்வாறன பெலென்ஸ் சீட் கிடைக்கப்போகிறது. எந்த துறையில் நாம் வென்றிருக்கிறோம்; எந்த துறையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த துறையை பற்றிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்று எவராவது கூற முயுமா? இப்பொழுதும் நீங்கள் விழித்தெழாவிட்டால் இனி ஒருபோதுமே எழுச்சிபெற மாட்டீர்கள். https://www.virakesari.lk/article/173948
  11. அரச சேவையாளர்களின் செலவுகளை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை வெளியானது: சலுகைகளிலும் மட்டுப்பாடுகள்! 14 JAN, 2024 | 03:48 PM (இராஜதுரை ஹஷான்) அரச செலவுகள் உயர்வடைந்துள்ள நிலையில், அரச வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதால் அரச சேவையாளர்களின் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையில் நிதியமைச்சு விசேட புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அரச சேவையாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு அவர்களின் அடிப்படை சம்பளத்தை அண்மித்ததாக அமையக் கூடாது. அத்துடன் அரச சேவையாளர்களுக்கு வழங்கபட்ட எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட பல சலுகைகளுக்கு மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் அல்லது அந்த நிறுவனங்களை மூடுவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச செலவுகள் உயர்வடைந்துள்ள நிலையில் அரச வருமானம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அரச சேவையாளர்களின் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையில் திறைச்சேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன விசேட சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், திணைக்களத்தின் பிரதானிகள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசியலமைப்பு சபை அல்லது அரச நிறுவனங்களின் பிரதானிகள் அனைவருக்கும் புதிய சுற்றறிக்கை நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரச செலவுகள் உயர்வடைந்துள்ள நிலையில் அரச வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதால் அரச சேவையாளர்களின் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையில் திறைசேரி செயலாளர் விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கமைய அரச சேவையாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவு, விடுமுறை தின கொடுப்பனவு, பயணச் செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் என்பன விசேட மானியங்கள் திட்டமிடலுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். அத்துடன் சேவையில் இருத்தல் அல்லது சேவைக்கு சமூகமளித்தலை உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில் மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது. மாதாந்த மேலதிக கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தை விட அதிகமாக கூடாது. சாதாரண கடமைகளுக்கு வருகை தருதல் அல்லது வேறு போக்குவரத்து வசதிகளுக்காக இனிமேல் அரச நிதியை பயன்படுத்த முடியாது. சொந்த வாகனம் உள்ள அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக செலவுகளை பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள் இனி எந்தச் சந்தர்ப்பத்திலும் இருப்பில் உள்ள வாகனத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்துடன் எரிபொருள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரச அதிகாரிகள் வெளிநாடு செல்லும் போது அதனுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனம் அல்லது உரிய தரப்பினர் அந்த வெளிநாட்டு பயணத்துக்கான செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அரச நிதியை இனி வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்த முடியாது. திறைசேரியின் முழுமையான அனுமதி இல்லாமல் அரச தேவைகளுக்காக கட்டிடங்களை வாடகை அடிப்படையில் பெறுவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கைக்கு அமைய தேசிய நிதியத்தை பாவிக்கும் போது புதிய செயற்திட்டங்கள் ஏதும் மறு அறிவித்தல் விடுக்கும் வரை ஆரம்பிக்க கூடாது. முகாமைத்துவ திணைக்களத்தின் முறையான வழிகாட்டலின்றி அரச சேவைக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அரச சேவையாளர்களுக்கான கூட்டங்கள், செயற்திட்ட தெளிவூட்டல்கள், மாநாடு மற்றும் பயிற்சி வழங்கல் என்பன நிகழ்நிலை முறைமை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். அரச நிறுவனங்களில் மின்சாரம், நீர், தொலைபேசி சேவை, எரிபொருள் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட சேவைகளுக்கான செலவுகளை மட்டுப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கை நிறுவன மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். கொள்கை அடிப்படையில் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதற்கமைய நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் அல்லது அந்த நிறுவனங்களை மூடுவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுப்பதுடன், சாதாரண சேவைகளுக்காக நிறுவனங்களை ஒன்றிணைத்தல், கூட்டிணைக்கப்பட்ட சேவைகளை பயனுடையதாக்குதல், அரச முயற்சியாண்மையின் நிதி நிலைமையை உறுதிப்படுத்தல் அத்தியாவசியமானது என புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/173947
  12. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்! 14 JAN, 2024 | 03:37 PM சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (13) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்து கலந்துரையாடினர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்தக் கலந்துரையாடலில் பீட்டர் ப்ரூயர் (சிரேஷ்ட பணித் தலைவர்), சர்வத் ஜஹான் (IMF வதிவிடப் பிரதிநிதி), சோபியா ஜாங் (சிரேஷ்ட பொருளாதார நிபுணர்), ஹுய் மியாவ் (சிரே்ஷ்ட நிதித்துறை நிபுணர்), ஹோடா செலிம் (சிரேஷ்ட பொருளாதார நிபுணர்), டிமிட்ரி ரோஸ்கோவ் (சிரேஷ்ட பொருளாதார நிபுணர்), சந்தேஸ் தூங்கானா (பொருளாதார நிபுணர்), மற்றும் மனவே அபேயவிக்ரம (உள்ளூர் பொருளாதார நிபுணர்) ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/173944
  13. 14 JAN, 2024 | 11:47 AM வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரை இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 23 இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நெல்லியடி பொலிஸ் பிரிவினுள் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 நபர்களிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/173918
  14. 14 JAN, 2024 | 12:47 PM கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்திப் பகுதிலுள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நீர்ப்பாசன வாய்க்காலுக்கு பாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்று (13) இரவு இடம்பெற்றதாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுஷன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஷ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜமீல் விசாரணைகளை மேற்கொண்டார். சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதனையடுத்து அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டன. https://www.virakesari.lk/article/173930
  15. மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் பாதியளவு வெளியாட்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் எம்.பி.க்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் வழங்கப்படுவதுடன் இந்த வீடுகளை பராமரிக்க அரசாங்கம் வருடாந்தம் பல கோடி ரூபாவை செலவிடுகின்றது. வெளியாட்களுக்கு வீடுகள் வழங்கக் கூடாது என எத்தனை சுற்றறிக்கைகள் கொடுத்தாலும், வீடுகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது என கூறும் அந்த வட்டாரங்கள், எம்.பி.க்களின் சம்மதத்தின் பேரில் இவர்கள் தங்கியுள்ளதால் வெளியாட்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே வேளை அந்த அறிக்கையின்படி, எம்.பி.யின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியை நடத்துவதற்கான செலவும் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த காலங்களில் இங்கு சில சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் அவையில் எம்.பி,கள் அல்லாத வெளியாட்கள் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. https://thinakkural.lk/article/288142
  16. வரலாறு காணாத விலை உயர்வு! நுவரெலியாவில் ஒரு கிலோ கரட் 1100 ரூபாவுக்கு விற்பனை! நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை நேற்று (13) இரவு முதல் 1000 – 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் . நுவரெலியா பிரதேசத்தில் உள்ள மரக்கறி விவசாயிகளிடம் இருந்து காரட்டை 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்ததாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். லீக்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் ஆகியவை ரூ.450-500க்கும், பீன்ஸ், கறி மிளகாய் ஆகியவை ரூ.750-800க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1600க்கும், முள்ளங்கி கிலோ ரூ.350க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ காரட் 350-400 ரூபாவிற்கும், ஒரு கிலோ ப்ரோக்கோலி 750 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினத்தில் ப்ரோக்கோலி ஒரு கிலோ 7000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. lankadeepa https://thinakkural.lk/article/288139
  17. வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானி வெளியீடு! Published By: VISHNU 14 JAN, 2024 | 11:31 AM வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு தேவைப்படும் அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, கல்வி அமைச்சுக்கு இரண்டு பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. சுகாதார அமைச்சுக்காக 21 டபிள் கெப் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும். நடமாடும் மகப்பேறு சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் 3 வாகனங்களும், தொழில் அமைச்சுக்கு ஒரு வாகனமும் கொண்டுவரப்படவுள்ளன. விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கு தேவையான 3 வாகனங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இறக்குமதி செய்யும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வெளிநாட்டு உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு மாத்திரமே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மாத்திரமே அது தொடர்பான இறக்குமதி நடவடிக்கைகளை தனது சொந்தப் பணத்தில் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/173920
  18. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க பேருந்துகளில் சிசிடிவி அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களிலும் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவித்ததன் பின்னர், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும் அறிவிக்கப்பட்டு பஸ்களில் சிசிடிவி கமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். கமராக்கள் பொருத்தப்பதுவதன் மூலம் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களுக்கு வழங்கப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கமராக்கள் பொருத்துவது உரிம நிபந்தனையாக உள்ளடக்குவது தொடர்பான யோசனை பொறுப்பு தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/288135
  19. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்ததில், காற்று மாசு சராசரியைவிட இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய தகவலின்படி, இன்று காலை 7 மணிக்கு சென்னையில் காற்றுத் தரக் குறியீட்டின் சராசரி அளவு 378 ஆக உயர்ந்தது. இதில், அதிகபட்சமாக சென்னை ராயபுரத்தில் காற்றுத் தரக் குறியீடு 770 ஆகவும், அரும்பாக்கத்தில் 501 ஆகவும் இருந்தது. காற்று மாசு காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த சிங்கப்பூர் மற்றும் லண்டன் விமானங்கள் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டன. அதேபோல, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபத், பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டன. காலை 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கியது. பனி மூட்டத்துடன் காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளதால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் எதிரே வரும் வாகனங்கள்கூடத் தெரியாமல் சிரமப்பட்டனர். சென்னையை ஸ்தம்பிக்க வைத்த காற்று மாசு தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பாக சென்னையில் உள்ள ஒன்பது காற்று மாசு கண்காணிப்பு நிலையங்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இன்று காலை 8 மணிக்கு பெருங்குடியில் அதிகபட்சமாக காற்று மாசுக் குறியீடு 289 ஆக இருந்தது. அதேபோல, மணலி பகுதியில் காற்று மாசுக் குறியீடு 272 ஆகவும், எண்ணூர் காந்தி நகர் பகுதியில் 232 ஆகவும், அரும்பாக்கத்தில் 216 ஆகவும், ராயபுரத்தில் 207 ஆகவும், கொடுங்கையூரில் 156 ஆகவும் இருந்தது. ஆனால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மிகக் குறைந்த இடங்களிலேயே காற்றுமாசு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு கட்டடங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்கள் அமைத்து கண்காணித்தால்தான் துல்லியமாக காற்று மாசுபாட்டைக் கண்டறிய முடியும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். காற்று மாசைக் கண்காணிக்கும் தனியார் நிறுவனமான ஏ.க்யூ.ஐ(AQI) தரவுகளின்படி, ராயபுரத்தில் அதிகபட்சமாக காற்றுத்தரக் குறியீடு 770 ஆக இருந்தது. மேலும், பெருங்குடி பகுதியில் 609, பொத்தேரியில் 534, ஆலந்தூர் பகுதியில் 511, அரும்பாக்கத்தில் 501 என காற்றின் மாசுபாட்டு அளவு பதிவாகியுள்ளது. காற்றுத்தரக் குறியீட்டின் அடிப்படையில் அவற்றின் தன்மையை மாசுக் கட்டுபாட்டு வாரியம் வகைப்படுத்தியுள்ளது. அதன்படி, காற்றுத் தரக் குறியீடு 0-50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம் 51-100 வரை இருந்தால், அது திருப்திகரமானது 101 முதல் 200 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமாக உள்ளது அதுவே 201-300 வரை இருந்தால், அது மிக மோசமான காற்றுத்தரத்தை குறிக்கும். காற்றின் தரம் 301-400 இருந்தால், காற்று மாசு மிகக் கடுமையாக மோசமாக உள்ளதாகக் குறிக்கும் 401-500 வரை இருந்தால், காற்று மாசு அபாயகரமான நிலையில் இருப்பதைக் குறிக்கும் கடந்த ஆண்டுகளைவிட பல மடங்கு அதிகரித்த காற்று மாசு கடந்த 2023ஆம் ஆண்டு போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு போகி பண்டிகை அன்று சென்னையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வைக்ப்பட்டுள்ள எட்டு காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களிலும், காற்றுத் தரக் குறியீடு 100இல் இருந்து 200க்குள் தான் பாதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஆலந்தூர் காற்று தரக் கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு 197 ஆக பதிவாகியிருந்தது. தனியார் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகள்படி, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் காற்றுத் தரக் குறியீடு 277 ஆகவும், அண்ணா நகரில் 135 ஆகவும் பதிவாகியிருந்தது. ஆனால் இதுவே 2022இல், சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலுமே காற்று மாசுத் தரக்குறியீடு 50 முதல் 100க்குள் தான் இருந்துள்ளது. அதில், குறைந்தபட்சமாக தேனாம்பேட்டை பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 61 ஆகவும், அதிகபட்சமாக மாதவரம் பகுதியில் 91 ஆகவும் பதிவாகியிருந்தது. காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டும் சென்னை விமான நிலையத்தில் 60 விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின. இந்த ஆண்டு எத்தனை விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின, தாமதமாகப் புறப்பட்டன என்ற தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை. பண்ணாட்டு விமானங்களான, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் ஹைதராபத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு, 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை முதல் எந்த விமானங்களும் புறப்படாமல், அனைத்து விமானங்களும் தாமதமாக காலை 9 மணிக்கு மேல் கிளம்பின. காற்று மாசு எப்போது குறையும்? பனிமூட்டத்துடன் காற்று மாசும் சேர்ந்துள்ளதால், இது மாசுத் துகள் அதிக நேரம் காற்றில் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன். "இந்த குளிர்ந்த தன்மை விலகி, வெயில் வரத் தொடங்கும்போது, காற்று மாசு குறையும். ஆனால், மக்கள் மீண்டும் பழைய பொருட்களை எரிக்கத் தொடங்கினால், காற்று மேலும் மாசடையும்,” என்றார் அவர். மேலும், போகி பண்டிகைகளுக்கு முன்பே மக்கள் எரிக்கக்கூடாது என்று எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல், அதை மீறி பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். “நீங்கள் எச்சரிக்கை கொடுப்பதால், எந்தப் பயனும் இல்லை. செய்பவர்கள் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மக்கள் போகி கொண்டாடுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், ஒருவர் பழையப் பொருட்களை எரிப்பதால், அது அவர்களோடு முடிவதில்லை. மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை கோருகிறோம்,” என்றார். போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசு எதிர்பார்க்காத ஒன்றுதான் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தெரிவித்தனர். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மாசுக் கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர், “கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு காற்று மாசு அதிகமாக உள்ளது. இன்று காலை முதல் பதிவான காற்றுத் தரக் குறியீட்டை வைத்துப் பார்த்தாலே, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது தெரிகிறது. ஆனால், இதுவரை பதிவானதிலேயே இது அதிகமான அளவா என்பதை முழுமையான தரவுகளை ஆராய்ந்துதான் சொல்ல முடியும்,” என்றார். போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் கூறியது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் கேட்டோம். ஆனால், இதுபோல் தனிநபர்கள் காற்றை மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித விதிகளும் இல்லையெனத் தெரிவித்தார். காற்று மாசுபாட்டால் என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள சூழலில் முன்னதாகவே சுவாசக் கோளாறு உள்ளவர்களும், இதய நோய் பாதிப்பில் உள்ளவர்களும் கூடுமானவரை வெளியே செல்வதைட்ப தவிர்க்க வேண்டும் என இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். “பெரும்பாலும் கரும்புகையாக இருக்கும் மாசுபட்ட காற்றில் நுண் துகள்களின் அளவு அதிகமாக இருக்கும். அவை நாம் சுவாசிக்கும் மூக்கின் வழியாக உள்ளே செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மிகச் சிறிய அளவிலான நுண் துகள்கள் எளிமையாக நாம் சுவாசிக்கும் போதே உள்ளே சென்றுவிடும். நீண்ட நேரம் இப்படியான காற்று மாசுபட்டுள்ள சூழலில் இருந்தால், மூச்சுத் திணறல் மற்றும் நீண்டகால சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்,” என்றார். அதேபோல குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் தோல்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “இந்தக் காற்று மாசு பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் துணி உள்ளிட்டவையை எரித்ததால் ஏற்பட்டிருக்கும். இந்தப் புகையால், ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பகள் உள்ளது. அதேபோல, அவர்களின் தோல்கள் மிகவும் இலகுவாக இருப்பதால், தோல் எரிச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cxwd7v9k3xeo
  20. 100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் 14 JAN, 2024 | 10:40 AM (ஆர்.சேதுராமன்) பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் 100 ஆவது நாளாக தொடர்­கின்றன. கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலின் தென் பிராந்­திய நக­ரங்கள் மீது ஹமாஸ் போரா­ளிகள் ஊடு­ருவி தாக்­கு­தல்­களை நடத்­தினர். அதை­ய­டுத்து, ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் யுத்தப் பிர­க­டனம் செய்­த­துடன், ஹமாஸின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது. இம்­மோ­தல்கள் ஆரம்­பித்து, இன்று 14ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 100 நாட்­க­ளா­கு­கின்­றன. 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்­கப்­பட்ட பின்னர், பலஸ்­தீ­னர்­­க­ளுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான மிக நீண்­டதும் அதிக உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­து­மான யுத்தம் இது­வாகும். ஒக்­டோபர் 7ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களால் 23,708 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்ளனர் என காஸா­வி­லுள்ள சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்த எண்ணிக்கை காஸா­வி­லி­ருந்த மக்கள் தொகையின் சுமார் ஒரு சத­வீதம் ஆகும். அதே­வேளை, காஸாவில் சுமார் 80 சத­வீ­த­மான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். ஒக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களால் இஸ்­ரேலில் சுமார் 1140 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 250 பேர் பண­யக்­கை­தி­க­ளாக பிடிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் இன்னும் 132 பேர் தொடர்ந்து பணயக்கைதி­க­ளாக உள்­ளனர் என இஸ்­ரே­லிய அதிகா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். காஸா­வி­லுள்ள மக்­களில் நான்கில் ஒரு பங்­கினர் பட்­டி­னியால் வாடு­கின்­றனர் என ஐ.நா. மதிப்­­பிட்­டுள்­ளது. காஸாவின் 36 வைத்­தி­ய­சா­லை­களில் 16 வைத்­தி­ய­சா­லை­களே அதுவும் பகு­தி­ய­ளவில் இயங்­கு­கின்­றன என ஐ.நா. தெரி­வித்­துள்­ளது. மாண­வர்கள் பல மாதங்­க­ளாக பாட­சா­லைக்கு செல்ல முடி­யாத நிலையில் உள்­ளனர். சர்­வ­தேச நீதி­மன்ற வழக்கு விசா­ரணை காஸாவில் இஸ்ரேல் இனப்­ப­டு­கொலை செய்­வ­தாகக் குற்­றம்­சு­மத்­திய தென் ஆபி­ரிக்கா, காஸா மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறு உத்­த­ர­விடக் கோரி, நெதர்­லாந்தின் ஹேகு நக­ரி­லுள்ள சர்­வ­தேச நீதிமன்­றத்தில் வழக்குத் தொடுத்­துள்­ளது. இவ்­வழக்கின் ஆரம்ப 2 நாள் பகி­ரங்க விசா­ர­ணைகள் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்­களில் நடை­பெற்­றன. இவ்­வ­ழக்கில் தென் ஆபி­ரிக்­காவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சட்டக் குழு­வுக்கு, தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த சர்­வ­தேச சட்­டத்­துறை பேரா­சி­ரியர் கிறிஸ்­டோபர் ஜோன் டுகார்ட் தலைமை தாங்­கு­கிறார். இக்­கு­ழு­வினர் சர்­வ­தேச நீதி­மன்ற நீதி­ப­திகள் முன்­னி­லையில் முன்­வைத்த சமர்ப்­ப­ணத்தில், இஸ்­ரேலின் வான்­வழித் தாக்­கு­தல்கள் மற்றும் தரை­வ­ழி­யான படை­யெ­டுப்­பினால் காஸா மக்கள் எதிர்­கொண்­டுள்ள அவ­ல­நிலையை எடுத்­து­ரைத்­தனர். பலஸ்­தீன மக்­­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை பயங்கரங்கள் உல­கெங்கும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பாகி வரு­வ­தாக அயர்­லாந்து சட்­டத்­த­ரணி பிளின்னே நீ ஹார்லீ கூறி­ய­துடன், காஸாவில் இஸ்­ரேலியப் படை­யி­னரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தற்கு அவ­சர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினார். இஸ்ரேல் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­­த­ர­ணிகள் தென் ஆபி­ரிக்­காவின் இன அழிப்பு குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­தனர். இஸ்­ரே­லிய சட்­டத்­த­ரணி டெல் பெக்கர் வாதா­டு­கையில், இஸ்ரேல் தற்­காப்பு நட­வ­டிக்­கை­யி­லேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அந்­ந­ட­வ­டிக்கை காஸா­வி­லுள்ள பலஸ்­தீன மக்­களை இலக்­கு­ வைக்­க­வில்லை எனவும் கூறி­னார். ஹமாஸ் இயக்­கத்­தினர், பெற்­றோர்களின் முன்­னி­லையில் சிறார்­க­ளையும் சிறார்கள் முன்­னி­லையில் பெற்­றோர்­க­ளையும் சித்­தி­ர­வதை செய்­தனர், மக்­களை தீக்­கி­ரை­யாக்­கினர், வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினர் எனவும் அவர் கூறினார். இன அழிப்பு குற்­றச்­சாட்டு தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்றம் இறுதித் தீர்ப்பை அறி­விப்­ப­தற்கு பல வரு­டங்கள் செல்லும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. எனினும் காஸா­­வில் கொலை­­­க­ளை­யும் அழி­வு­க­ளை­யும் நிறுத்­து­வ­தற்கு அவ­சர உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட வேண்டும் என்ற தென் ஆபி­ரிக்­காவின் கோரிக்கை தொடர்­பி­லேயே, நீதி­மன்­றத்தின் ஆரம்ப விசா­ர­ணை­களின் கவனம் குவிந்­தி­ருந்­தது. இவ்­வ­ழக்கில் இடைக்­கால தீர்ப்பொன்று சில வாரங்களுக்குள் வெளி­யிடப்படலாம் என நிபுணர்கள் தெரி­வித்துள்ளனர். தென் ஆபிரிக்க சட்டத்தரணி ஆதிலா ஹசிம் இது தொடர்பாக கூறுகை­­யில், இன அழிப்பு தொடர்­பான இறுதித் தீர்ப்பை இந்நீதி­மன்றம் தற்போது அறிவிக்கத் தேவை­யில்லை. ஆனால், குறைந்தபட்சம் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள், இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. சம­ வாயத்தின் வரைவிலக்கணத்துக்கு உட்படுகின்றன என்பதை ஏற்­றுக­்­­கொண்டு இதில் நீதிமன்றம் தலை­யீடு செய்ய முடியும் என்றார். https://www.virakesari.lk/article/173910
  21. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV 6 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 13 ஜனவரி 2024 மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்கள் மீது அதிக்கம் செலுத்த பிறருக்கு உரிமத்தை தந்துவிடாது என்று அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முய்சு தாயகம் திரும்பியுள்ளார். தலைநகர் மாலேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய பெருங்கடலில் மாலத்தீவு மிகச்சிறிய நாடாக இருந்தாலும் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு பிரத்யேக பொருளாதார மண்டலத்தை கொண்டுள்ளோம். இந்திய பெருங்கடலில் இத்தகைய சிறப்பு பெற்ற நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தியப் பெருங்கடல் குறிப்பிட்ட எந்தவொரு நாட்டிற்கும் சொந்தம் கிடையாது. அது பெருங்கடலைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் சொந்தமானது. மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்கள் மீது அதிக்கம் செலுத்த பிறருக்கு உரிமத்தை தந்துவிடாது" என்று பேசியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து அந்நாட்டு அமைச்சர்கள் ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் மாலத்தீவு அதிபர் முய்சு இவ்வாறு பேசியுள்ளார். அவரது பேச்சில் மறைமுகமாக இந்தியாவையே விமர்சித்ததாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 5 நாள் பயணமாக திங்கள்கிழமை சீனா சென்ற முய்ஸுவை சீன மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் முய்ஸு அவரது மனைவி சஜிதா முகமது மற்றும் உயர்மட்டக் குழுவுடன் சென்றுள்ளார். இந்தியாவை புறக்கணித்து முய்சு துருக்கி, சீனா பயணம் முன்னதாக, மாலத்தீவின் புதிய அதிபர் முய்சு இந்த மாதம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று சீனா தெரிவித்திருந்தது. அதிபராக பதவியேற்ற பிறகு வெளிநாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை பயணம் இது என்கிறது சீனா. முகமது முய்சுவின் மாலத்தீவு முற்போக்கு கட்சியில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது கட்சி 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்துப் பிரசாரம் மேற்கொண்டதுடன் மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாகவும் கூறியது. முய்சுவுக்கு முன், மாலத்தீவு அதிபர் யாராக இருந்தாலும் பதவியேற்றதும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதே வாடிக்கையாக இருந்தது. முய்சு இந்த பாரம்பரியத்தை மாற்றியுள்ளார். தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு துருக்கியை தேர்ந்தெடுத்த அவர் தற்போது சீனாவை அடைந்துள்ளார். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் புகைப்படங்கள் குறித்து மாலத்தீவு தலைவர்கள் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலத்தீவு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கருத்து தெரிவித்த தலைவர்கள் அரசாங்கத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES முய்சுவின் வருகை குறித்து சீனா என்ன கூறியது? சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான உறவுகள் குறித்தும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வாங் வென்பின் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பழமையானவை என்றும் அவர் கூறினார். "இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜ தந்திர உறவுகள் 52 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. அன்றிலிருந்து, இருநாட்டு உறவுகளில் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இது வெவ்வேறு அளவில் இரு நாடுகளுக்கு இடையிலான சமத்துவம் மற்றும் பரஸ்பர நலன்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.” 2014 ஆம் ஆண்டில், அதிபர் ஷி ஜின்பிங் மாலத்தீவுக்கு பயணம் செய்ததாகவும் அவர் கூறினார். “அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும், எதிர்கால நலன்களை நோக்கமாகக் கொண்டும் பேச்சுகள் நடந்தன.” தொடர்ந்து பேசிய அவர், “கடந்த பத்தாண்டுகளில், மாலத்தீவு சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு ஆழமடைந்துள்ளது,” என்றார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முய்சுவின் சீனப் பயணம் குறித்து வாங் வென்பின் மேலும் கூறுகையில், “மாலத்தீவு அதிபரான பிறகு முய்சுவின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்,” என்றார். இருப்பினும், இதற்கு முன்னர் முய்சு துருக்கி நாட்டுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்தார். மாலத்தீவு அதிபர் அலுவலகத்தின் தகவலின்படி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவானின் அழைப்பின் பேரில் முய்சு மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டனர் எனத் தெரியவருகிறது. பரஸ்பர நலன் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அப்போது இருவருக்கும் இடையே விவாதம் நடந்தது. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV படக்குறிப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற முய்சு பல்வேறு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். துபாயில் நடைபெற்று வந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு (COP 28) முய்சு துருக்கி நாட்டுக்குச் சென்றார். அங்கு அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை முறைப்படி சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியதும், மாலத்தீவில் உள்ள வேலனா விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய முய்சு, மாலத்தீவு மக்களின் விருப்பத்தை வரவேற்பதாகவும், தங்கள் வீரர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைப்பதாக இந்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். கடந்த ஆண்டு, சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில், 'சீனா-இந்தியப் பெருங்கடல் பிராந்திய வளர்ச்சி ஒத்துழைப்புக்கான மன்றக் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாலத்தீவு சார்பில் அதிபருக்குப் பதிலாக, துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப் பங்கேற்றார் . மாலத்தீவுடனான சீனாவின் உறவுகள் சீனாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு 1972 ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்குப் பிறகு, மாலத்தீவு 2009 இல் சீனாவில் தனது தூதரகத்தையும் , சீனா 2011 இல் மாலத்தீவில் தனது தூதரகத்தையும் திறந்தது. 2014 ஆம் ஆண்டில், மாலத்தீவுக்கு சீனா 16 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியது. இந்த ஆண்டு, மாலத்தீவு சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்தது. 2017 இல், மாலத்தீவு சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. முகமது முய்சுவின் மாலத்தீவின் முற்போக்குக் கட்சியில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது கட்சி 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்ததுடன் மாலத்தீவில் நிலைகொண்டிருந்த இந்திய வீரர்களை திரும்பப்பெறுமாறும் இந்தியாவைக் கேட்டுக்கொண்டது. முன்னதாக, மாலத்தீவு ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது இப்ராகிம் சோலி, ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ என்ற முழக்கத்தை முன்வைத்திருந்தார். அவர் இந்தியாவுக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். 2018ல், இப்ராகிம் சோலி மாலத்தீவு அதிபராகப் பதவியேற்ற போது, பிரதமர் நரேந்திர மோதி அந்த விழாவில் கலந்து கொண்டார். அவரது ஆட்சியின் போது, மாலத்தீவு கடந்த ஆண்டு 'இந்தியப் பெருங்கடல் பிராந்திய மன்ற பேச்சுவார்த்தையில்' பங்கேற்க மறுத்துவிட்டது. பட மூலாதாரம்,MV.CHINA-EMBASSY.GOV.CN படக்குறிப்பு, மாலத்தீவிற்கான சீனாவின் முதல் தூதர் யு ஹோங்யாவோ, 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் நஷீத்திடம் ஒரு முக்கிய கடிதத்தை அளித்தார். முய்சுவின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடந்தது என்ன? 30 செப்டம்பர் 2023 - தேர்தலில் 46 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று நாட்டின் புதிய அதிபராக முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 நவம்பர் 2023 - பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு மாலத்தீவின் 8வது அதிபரானார். 17 நவம்பர் 2023 - மாலத்தீவில் இருந்து இந்தியப் படைகளை அகற்றுவது தொடர்பாக கிரண் ரிஜிஜூவிடம் பேசினார் . 26 நவம்பர் 2023 - தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக துருக்கி நாட்டுககுப் பயணம் மேற்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 10 அன்று, துருக்கியுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக மாலத்தீவு அங்காராவில் தனது தூதரகத்தைத் திறக்கும் என்று அறிவித்தார். 30 நவம்பர் 2023 - COP 28 இல் பங்கேற்க துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார். 01 டிசம்பர் 2023 - துபாயில், COP 28-ல் பங்கேற்க வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை முய்சு சந்தித்தார் . 03 டிசம்பர் 2023 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கான அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துககொண்டு மாலத்தீவுக்குத் திரும்பினார் . இந்தியா - மாலத்தீவு உறவு எப்படி? மாலத்தீவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1965 இல், இந்தியா மாலத்தீவில் தனது அதிகாரப்பூர்வ உறவுகளைத் தொடங்கி, அவ்வாறு செய்த முதல் நாடு என்ற இடத்தைப் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில், மாலத்தீவின் அரசாங்கங்கள் இந்தியாவை நோக்கி அல்லது சீனாவை நோக்கி சாய்ந்தன. இந்த சிறிய தீவின் பாதுகாப்பில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. 1988-ல் ராஜீவ் காந்தி ராணுவத்தை அனுப்பி மௌமூன் அப்துல் கயூமின் அரசைக் காப்பாற்றினார். கடந்த 2018-ம் ஆண்டு மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்ட போது, பிரதமர் மோடி தண்ணீரை அனுப்பி வைத்தார். இதற்குப் பிறகு மோடி அரசும் மாலத்தீவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பலமுறை கடன் கொடுத்தது. இந்தியா 2010 மற்றும் 2013 இல் இரண்டு ஹெலிகாப்டர்களையும், 2020 இல் ஒரு சிறிய விமானத்தையும் மாலத்தீவுக்கு பரிசாக வழங்கியது. இந்த விமானங்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ அவசரநிலைகளில் பயன்படுத்தப்படும் என்று இந்தியா கூறியிருந்தது. 2021 ஆம் ஆண்டில், இந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை இயக்க சுமார் 75 இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருப்பதாக மாலத்தீவு பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மாலத்தீவுக்கு இந்தியா ராணுவ தளவாடங்களையும் வழங்கி வருகிறது. மாலத்தீவு கடற்படைக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க இந்தியாவும் உதவி வருகிறது. இந்தியாவும் சீனாவும் மாலத்தீவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாகத் தெரிகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முய்சு சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்தியா மற்றும் மாலத்தீவுகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜதந்திர, ராணுவ, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV படக்குறிப்பு, டிசம்பர் 1, 2023 தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் மாலைதீவு அதிபர் முகமது முய்சு ஆலோசனை நடத்தினார். மாலத்தீவு பிரச்னையில் இந்தியா vs சீனா இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் 2018 இல் மிகவும் கசப்பானதாக மாறின. இந்த நிலை பிப்ரவரி 1, 2018 அன்று மாலத்தீவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புடன் தொடங்கியது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்ததன் மூலம் அரசியல் சாசனம் மற்றும் சர்வதேச விதிகளை மீறியதாக மாலத்தீவு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. முன்னாள் அதிபர் முகமது நஷீத் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க அதிபர் யாமீன் மறுத்துவிட்டார் என்பதுடன் இதைத் தொடர்ந்து அவர் மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் செய்தார். இந்த அவசரநிலை 45 நாட்கள் நீடித்தது. இதை இந்தியா எதிர்த்தது. "மாலத்தீவில் அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவசரநிலை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்," என்று இந்தியா கூறியது. மாலத்தீவில் ஏற்பட்ட வியத்தகு அரசியல் நெருக்கடி இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் கவலையளித்தது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், சீனாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அப்துல்லா யாமீன், சீனா, பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியாவுக்கு தனது தூதர்களை அனுப்பியிருந்தார். இதையடுத்து, மாலத்தீவின் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிடக் கூடாது என்று எச்சரித்த சீனா, மாலத்தீவின் இறையாண்மையை எந்தச் சூழலிலும் மீறக் கூடாது என்றும் கூறியது. அதே நேரம், மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் நஷீத், நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு இந்தியாவிடமிருந்து ராணுவத் தலையீட்டை எதிர்பார்த்தார். இதற்கிடையில், சீன செய்தி இணையதளத்தை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், சீன போர்க்கப்பல்கள் மாலத்தீவை நோக்கி நகர்ந்ததாக செய்தி வெளியிட்டது. இருப்பினும், அந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் இப்ராகிம் சோலி வெற்றி பெற்றார். அவர் இந்தியாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இருப்பினும், அவரது அரசாங்கம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயன்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதியை மாலைதீவு முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலி சந்தித்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டது. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,200 தீவுகளைக் கொண்ட ஒரு நாடாகும். அதன் மக்கள் தொகையில் 98 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். மாலத்தீவு குடியுரிமைக்கு யாராவது விண்ணப்பித்தால், அவர் முஸ்லிமாக இருப்பது அவசியம். மாலத்தீவு வெறும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு குடியரசு. இந்திய மற்றும் சீன நாடுகளின் உத்தி ரீதியிலான பார்வையில் இந்தியப் பெருங்கடலில் ஒரு புவியியல் முக்கியத்துவம் பெற்ற இடத்தில் இருக்கும் இந்த நாடு மிகவும் முக்கியமானது. மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவிடமிருந்து பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது. ஆனால் வியூக ரீதியாக அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக சீனாவிற்கு இந்த நாடு மிகவும் முக்கியமானது. https://www.bbc.com/tamil/articles/cp938knypzjo
  22. இலகு ரயில் திட்டம் எமது ஆட்சியில் நிச்சயம் ஆரம்பிக்கப்படும் - ஜப்பான் நிதி அமைச்சரிடம் எதிர்க்கட்சி தலைவர் உறுதி Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 09:29 PM (எம்.மனோசித்ரா) ராஜபக்ஷ அரசாங்கத்தில் எவ்வித அடிப்படை காரணிகளும் இன்றி இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை தமது ஆட்சியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பான் நிதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. ஜப்பான் தனது பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாக்கல் மூலம் அதன் ஏற்றுமதித் துறையை எவ்வாறு மேம்படுத்த முடிந்தது என்பது உட்பட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஜப்பானின் புனரமைப்பு அனுபவத்திலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் சஜித் பிரேமதாச இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். இலகு ரயில் திட்டத்தை திடீரென இரத்துச் செய்வதற்கு முன்னைய ராஜபக்ச அரசாங்கம் எடுத்த தொலைநோக்குப் பார்வையற்ற தீர்மானத்திற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது கட்சியின் கீழ் அமைக்கப்படும் அரசாங்கத்தில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் நிதியமைச்சரிடம் உறுதியளித்தார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் அல்லது ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து பல வருடங்களாக பெற்ற ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பான் நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். ஜப்பானின் வட பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/173888
  23. Published By: VISHNU 14 JAN, 2024 | 10:10 AM யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா 15 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்பதற்காகவே நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். https://www.virakesari.lk/article/173902
  24. அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது 14 JAN, 2024 | 09:44 AM யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 3 இழுவை படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடற்படையினர் கைப்பற்றிய 3 மீன்பிடி இழுவை படகுகளையும் கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையையும் மேற்கொண்டனர் . கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி இழுவை படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173901

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.