Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20104
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. வாய்மொழிக் கதைகள் வாய்மொழிக் கதைகள் நீக்கமற நிறைந்திருந்த காலமென்பது உண்டு. சற்றேறக்குறைய 1990கள் வரையிலும் அவை இருந்தன. காரைவாசல், கோவில் மேடைகள், மரத்தடிகள், குளத்தேரிகள், கிணத்துமேடுகள் முதலான இடங்களிலும், ஆடு மாடு மேய்க்கும் போதான தரிசு நிலங்களிலும் வாய்மொழிக்கதைகள் புழங்குவதும் உயிர்ப்பதுமாக இருந்தன. வயது ஐம்பதைக் கடந்தோர் தன் அனுபவங்களைச் சாதனைகளாக வெளிப்படுத்துவதாகவும் அவை இருந்தன. இளையோருக்கு அவை சுவாரசியம் ஊட்டக் கூடியதாகவும் கேளிக்கையாகவும் இருக்கும். வின் - வின் என்பதான அடிப்படையில் இருதரப்புக்குமே இலாபம். நிறையப் பேருக்குத் தாம் பேச வேண்டும். மற்றவர் கேட்க வேண்டுமென்கின்ற ஆவல் உண்டு. அது மனித இயல்பு. அவ்வாறான வேட்கையைத் தணிப்பவையாக இருந்தன வாய்மொழிக் கதைகள். ஊரில் சித்தப்பா ஒருவர் இருக்கின்றார். பேசித் தீர்க்க வேண்டுமென்கின்ற தணியாத ஆசை உள்ளவர். பேசுங்களெனச் சொல்லி உட்கார்ந்து விட்டேன். ஓரிரு நாட்கள் கழித்துக் கிளம்பும் வேளை வந்து விட்டது. மீண்டும் எப்போது வருவாய்? அடுத்த வாரம் வர முடியுமா என்கின்றார் குழந்தையைப் போலே! எதொ அமெரிக்கா என்பது ஆட்டையாம்பாளையத்துக்கு அருகில் இருப்பதைப் போலே!! நண்பர் அலெக்ஸ் இருக்கும் வரையிலும் மாதமொருமுறையாவது ஃபோன் செய்து விடுவேன். அவர்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பார். ஸ்பீக்கர் ஃபோனில் போட்டுவிட்டு மற்ற மற்ற வேலைகள் கூடச் செய்து கொண்டிருப்பேன். அடிக்கடி அழையுங்கள் என்பார். அம்மாவிடம் ஊரைப் பற்றியும் ஊர் மக்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். இடைக்கிடையே பேசிக் கொண்டிருப்பதினின்று கிளைத்து மற்றொரு விசியத்துக்கு மாறிவிடுவார். சிலமுறை வெட்டி, பேசுபொருளுக்குள் இழுத்து வருவேன். சிலமுறை போக்கில் விட்டுவிடுவதும் உண்டு. அப்படி விட்டுவிட்டால்தாம் அவர்களுக்கான மனநிறைவு கிட்டும். எதிர்பாராத விதமாக அந்தப் பெண்மணியைச் சந்தித்தேன். நான் பாலகனாக இருந்த போது எப்படியெல்லாம் குறும்புகள் செய்தேன், என் பெற்றோர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்களென்றெல்லாம் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் என் முகவாய்க்கட்டையைத் தொட்டுத் தடவினார். கவனிப்பாரற்ற மக்களுக்கானவை வாய்மொழிக் கதைகள். அப்படியான ஒரு கதையைக் கேட்கின்றோமென்றால், சொல்பவரின் வாழ்வின் பயனை நீட்டிக்கின்றோமென்பதே பொருள். http://maniyinpakkam.blogspot.com/2022/07/blog-post_17.html
  2. இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் - கோட்டாபய இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'அசைக்க முடியாத ஆட்சி' என்று ஒரு காலகட்டத்தில் - பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின் அதிகாரமானது, மக்கள் போராட்டம் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், நாட்டின் அரசியல் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. 'கோட்டா வீட்டுக்கு போ' போராட்டத்தின் விளைவாக, இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், 'ரணில் வீட்டுக்குப் போ' (Ranil Go Home) எனக் கூறி, போராட்டக்காரர்கள் தமது கோஷத்தை மாற்றியிருக்கின்றனர். மஹிந்த, பசில், கோட்டா என ராஜபக்ஷவினரை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவதற்கு, கொழும்பு - காலிமுகத்திடலில் ஒன்று திரண்ட மக்கள் பெரும் பங்காற்றினார்கள். ஆனால், தலைநகருக்கு வெளியேயும் தொலைதூர பிரதேசங்களிலும் உள்ள மக்களில் அதிகமானோர், இந்த விவகாரங்களை பெரும்பாலும் ஊடகங்கள் வழியாகவே அறிந்து கொள்கின்றனர். இந்த நிலையில், ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ராஜிநாமா செய்தமை, அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி தேர்வு போன்றவற்றை, தலைநகரிலிருந்து மிகவும் தூரத்திலுள்ள மக்கள் எப்படிப் பார்க்கின்றார்கள்? அவர்களது கருத்துக்கள் எவ்வாறு உள்ளன என்பதை தொகுத்து பிபிசி தமிழ் இங்கே வழங்குகிறது. கோட்டாவின் முடிவு - மக்களின் சாபம் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டமையினை, அவர் செய்த பாவத்துக்கான தண்டனையாகவே தான் பார்ப்பதாகக் கூறுகின்றார், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். ஹரி பிரதாப். "இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை அவர் கொன்றார். இறந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு எவ்வளவு மன வலி இருந்திருக்கும். அவர்களின் சாபம்தான் அவருக்கு இப்படி நடந்துள்ளது என நான் நம்புகிறேன்" எனவும் அவர் தெரிவிக்கின்றார். இறுதி யுத்தத்தில் இறந்த மக்களின் கதறலும் அழுகையும் கண்ணீரும்தான் கோட்டாவின் இந்த நிலைக்குக் காரணமாகும் எனவும் அவர் சொல்கின்றார். "69 லட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர், மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறு விரட்டப்படுவதென்பது நடக்கக் கூடிய விடயமல்ல. ஆனால் நடந்திருக்கிறது. மனித மனங்களுக்குள்ள சக்தியினால்தான் இது சாத்தியமாகியுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம்; தீவிரமடையுமா, தணியுமா? - கள நிலவரம் கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? அவரை நீக்க சபாநாயகரால் முடியுமா? "கோட்டாபய ராஜபக்ஷ - தனது அண்ணன் மஹிந்தவை நம்பி அரசியலுக்குள் வந்தவர். கோட்டா ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்தன. அது கோட்டாவின் ஆட்சியிலும் தொடர்ந்தபோது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உள்ளதல்லவா? எங்காவது போய் முட்ட வேண்டுமல்லவா? அதுதான் நடந்துள்ளது". இதன்போது புதிய ஜனாதிபதி தெரிவு குறித்துப் பேசிய அவர், "ரணில் போன்ற ஒரு திறமைசாலிதான் புதிய ஜனாதிபதியாக வரவேண்டும். ஆனாலும் ரணிலுடைய கடந்த ஆட்சிக் காலத்தில் - அவர் பிரதமராக இருந்த போது, அவருடன் இருந்தவர்கள் - மத்திய வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு பிழைகளைச் செய்தார்கள் எனச் சொல்லப்படுகிறது, அவற்றினை ரணில் தட்டிக் கேட்கவில்லை. அந்தப் பிழைகளை ரணில் தடுத்திருந்தால் அவருக்கு இவ்வளவு எதிர்ப்பு வந்திருக்காது" என்கிறார். "ஆனாலும் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ரணில்தான் தகுதியானவராகத் தெரிகின்றார். சஜித் பிரேமதாஸவுக்கு வெளிநாட்டு ராஜதந்திர உறவில் எந்தளவுக்கு அனுபவமும் ஆற்றலும் உண்டு எனத் தெரியவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவை இருக்கின்றன". "ரணில் விக்ரமசிங்க அமைச்சராக இருந்தபோதுதான் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது. அதில் அவருக்கும் பங்கிருக்கும்தானே. சில நாட்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டபோது, அங்கிருந்த அவரின் புத்தகங்கள் அழிந்து போயின எனக் கவலைப்படுகிறார். ஆனால், யாழ்ப்பாண நூலகத்தில் இருந்த புத்தகங்கள் - அவரின் வீட்டில் இருந்ததாகக் கூறப்படும் புத்தகங்களின் எண்ணிகையிலும் பல மடங்கு அதிகம்" எனக் கூறிய ஹரி பிரதாப்; "இப்படி ரணில் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளபோதும், அவரின் அறிவு, திறமை, வெளிநாடுகளுடனான தொடர்புகள் போன்றவற்றின் நிமித்தம், அடுத்த ஜனாதிபதியாக அவரை ஏற்றுக் கொள்ள முடியும்," என்கிறார். "அரசியலில் ரணில் நரி" நாட்டில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் போது ஏற்பட்டிராத பொருளாதார நெருக்கடி, கோட்டாவின் காலத்தில் ஏற்பட்டு, முழு நாட்டினையும் பாதித்துள்ளது என்கிறார் - அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும் அரச உத்தியோகத்தருமான எம்.எப். நவாஸ். மக்களின் எதிர்பார்ப்பினை கோட்டா நிறைவேற்றவில்லை எனக் கூறும் அவர்; மக்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையே கோட்டாபய ராஜபக்ஷ பதவியிழக்கக் காரணமாக அமைந்தது என்கிறார். "ராஜபக்ஷவினரின் ஆட்சியை - பல தசாப்தங்களுக்கு அசைக்க முடியாது என்றார்கள். ஆனால் மக்கள் போராட்டத்தின் முன்பாக அதுவெல்லாம் நின்று பிடிக்காது". "நாட்டில் யுத்தம் நடந்தபோது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிகள் கூட, சில எல்லைகளுக்குள்தான் இருந்தன. ஆனால், கோட்டாவின் ஆட்சியில் - முழு நாடுமே பொருளாதார சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டாவுக்கு எதிரான இந்தப் போராட்டம் உணர்வு ரீதியானதாகும்" எனவும் நவாஸ் கருத்து வெளியிட்டார். எதிர்வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவு குறித்து அவர் கூறுகையில்; "ரணில் விக்ரமசிங்கவே அதற்குப் பொருத்தமானவராகத் தெரிகிறார்" என்றார். "நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்களால் அவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது". "ரணில் விக்ரமசிங்க - கடந்த காலங்களில் பிரதமராக இருந்து இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். அப்போது தந்திரோபாய ரீதியில் இனங்களுக்கிடையில் அவர் பிரச்சினைகளை மூட்டி விட்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆனாலும் அவரின் ஆட்சியில் மக்களுக்கு வாழ்க்கைச் செலவு சுமையாக இருந்ததில்லை" என கூறினார். சர்வதேச ரீதியில் ரணில் பிரபல்யம் மிக்கதொரு நபர் எனக் குறிப்பிடும் ஊடகவியலாளர் நவாஸ்; "அவர் அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்டவர், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் கூட அமைச்சராக இருந்தவர், பல தடவை அவர் பிரதமராகவும் பதவி வகித்தவர். அரசியலில் அவரை நரி என்கிறார்கள். அதனால் அவர் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர்" என்கிறார். சஜித் நல்லதொரு தெரிவாக அமையும் இதேவேளை, "ஆட்சியாளர்களாக இருந்தவர்களைத் தவிர்த்து, புதியவர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வது தற்போதைய நிலைமையில் பொருத்தமாக இருக்கும்" என்றும், "அதன்படி சஜித் பிரேமதாஸ நல்ல தெரிவாக அமையும்" எனவும் - கீரை வியாபாரத்தில் ஈடுபடும் கே. ஜெகநாதன் கூறுகிறார். இவர் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். "ராஜபகஷவினரை ராஜாக்கள் எனக் கூறிக் கொண்டிருந்தவர்கள்தான், கோட்டாவை விரட்டியிருக்கின்றனர். ஆனாலும், இதனை அவருக்கு கடவுள் கொடுத்த தண்டனையாகவும் தீர்ப்பாகவும் நான் பார்க்கிறேன். அந்தளவுக்கு அவர் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார். இதனை மக்கள் தீர்ப்பு என்பதை விடவும் இறைவனின் தீர்ப்பு என்று கூறுவதே பொருத்தமாகும்" எனவும், ஜெகநாதன் தெரிவித்தார். ஆட்சியாளர்களாக இருந்தவர்களைத் தவிர்த்து - புதியவர் ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும் எனக் குறிப்பிடும் அவர்; அரசாங்கமும் அவ்வாறுதான் அமைய வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பாகும் எனவும் கூறினார். "இதற்கு பொருத்தமானவராக சஜித் பிரேமதாஸ உள்ளார். அவர் நல்லதொரு தெரிவாக இருப்பார்". "ரணில் விக்ரமசிங்கவின் கடந்த கால ஆட்சிகளிலும் பிரச்சினைகள் இருந்தன. இதுவரையும் அவை தொடர்கின்றன" எனவும் ஜெகநாதன் கருத்து வெளியிட்டார். சுப்ரமணிய சுவாமி சொல்வது போலில்லை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வியாபார நிறுவனமொன்றை நடத்தி வரும் சுபைர், நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்; "ராஜபக்ஷவினரின் குடும்ப ஆட்சி, இன ரீதியாக மக்களை கொடுமைப்படுத்தியமை மற்றும் கொவிட் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமை போன்ற விடயங்கள், கோட்டா மீது கடுமையான கோபத்தை மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது" என்கிறார். அந்த வகையில் அவரை பதவியிலிருந்து விரட்டியமை - போராட்டக்காரர்கள் செய்த நல்லதொரு விடயம் எனவும், மக்கள் பாற்சோறு வழங்கி அதனைக் கொண்டாடுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்தியாவின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணிய சுவாமி; '69 லட்சம் மக்களின் ஆதரவுடன் வந்த கோட்டாவை எப்படி பதவி விலக்க முடியும்' என்று கேட்டிருந்தார். ஆனால், கோட்டாவை விரட்டியவர்களில் பெரும்பாலானோர் அவருக்கு ஆதரவளித்த 69 லட்சம் வாக்காளர்கள்தான்". "கோட்டாவுக்கு எதிரான போராட்டம் உச்சமடைந்தபோது, இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட வேண்டும் எனவும் சுவாமி கூறியிருந்தார். கோட்டாவை விரட்டியவர்கள் தீவிரவாதிகளல்லர்; மக்கள்தான். அதனால் இங்கு ஏன் இந்திய ராணுவம் அனுப்பப்பட வேண்டும்" எனவும் சுபைர் கேள்வியெழுப்பினார். "அரசாங்கம் என்பது மக்கள். மக்கள் என்பது அரசாங்கம். மக்களுக்கு விருப்பமில்லை என்றால், ஆட்சியாளர்கள் போய்விட வேண்டும். ஆனால், இது தொடர்பாக கோட்டா இறுதியில் எடுத்த முடிவு தவறானது. அவர் முன்கூட்டியே போயிருக்க வேண்டும்". "ரணில் விக்ரமசிங்கவை 'கோட்டாவின் ஆள்' என மக்கள் கூறுகின்றனர். 'ராஜபக்ஷ குடும்பத்தினரை மீண்டும் ரணில் காப்பாற்றுவாரா' என்கிற கேள்வி மக்களிடையே இருக்கிறது. 'அதிகரிக்கும் கோபம்; ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்' - இலங்கை போராட்டத்தில் செய்தியாளர் கண்டவை இலங்கை: பிரதமர் அலுவலகம் முன்னே திரண்ட மக்கள்; கண்ணீர் புகைகுண்டு வீச்சு - விளக்கும் புகைப்படங்கள் "இலங்கையின் நிலை மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம்" - மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் எச்சரிக்கை ஆனாலும் புதிய ஜனாதிபதி வெற்றிடத்தை நிரப்புவதற்கு ரணிலைத் தவிர வேறு தேர்வுகள் இல்லை. அதனால் ரணிலை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. சஜித், டலஸ் போன்றவர்களை விடவும் ரணில் பொருத்தமானவர். அவர் அரசியல் அனுபவத்தில் முதிர்ந்தவர், வெளிநாட்டுத் தொடர்புகளைக் கொண்டவர், அதனால் அவர் இப்போதைய பிரச்சினைக்கு ஏதாவது நல்ல தீர்வினைப் பெற்றுத் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்" என சுபைர் மேலும் கூறினார். https://www.bbc.com/tamil/sri-lanka-62199417
  3. ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, இப்போது கள்ளக்குறிச்சி போராட்டம்: 'கும்பல்' மனநிலைக்கு வசப்படும் இளைஞர்கள் - உளவியல் பார்வை பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளியில் மாணவி இறந்ததற்கு நீதி கேட்பதாக கூறி, போராட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் திரண்டு, வன்முறையில் ஈடுபட்டனர். பள்ளி வாகனம், காவல்துறை வாகனம் போன்றவற்றை சேதப்படுத்தியதோடு, கற்களை வீசி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் வைரல் ஆயின. இதில் கூட்டம், கூட்டமாக இளைஞர்கள் பள்ளி வளாகத்திற்கு திரண்டு வந்தது எப்படி என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், ஒன்று சேர்ந்த கூட்டம் மோசமாக சேதம் விளைவித்தது குறித்தும் சமூகவலைதளங்களில் பேசப்படுகிறது. பள்ளி மாணவியின் தாயார் அமைதியான முறையில் தனக்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். தமிழக டிஜிபி காணொளியில் பதிவான காட்சிகளை வைத்து கைது நடக்கும் என எச்சரிக்கை விடுக்கிறார். கூட்டமாக திரண்ட இளைஞர்கள் சேதம் விளைவிப்பதோடு, அதனை பலரும் செல்போனில் படம் எடுப்பது , வீடியோ எடுக்கும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. இந்த கும்பல் மனப்பான்மை குறித்தும் இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றியும் நிபுணர்களிடம் பேசியது பிபிசி தமிழ் . கும்பல் மனநிலை சென்னையைச் சேர்ந்த மனநலஆலோசகர் ஷர்மிலி ராஜகோபால் இந்த இளைஞர் கூட்டம் ஒன்றுகூடியதற்கான சாத்தியங்களை விளக்குகிறார். ''கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்தை பொறுத்தவரை இது ஒரு உணர்ச்சிமயமான பிரச்னையாக தொடங்குகிறது. பின்னர் அந்த மாணவியின் உறவினர், உற்றார் என பலரும் இதில் இணைகிறார்கள். ஒரு கட்டத்தில், அந்த ஊரில், பலரும் இந்த சம்பவத்தை விவாதிக்கிறார்கள். தலைமைக்கு ஒரு நபர் தேவை என்பதை விட, அந்த மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்ற சிந்தனை தலைவனாகிவிடுகிறது. இதில் நாம் பார்க்கவேண்டியது, 'செண்டிமெண்ட்' மனநிலையில்தான் முதலில் மக்கள் ஒன்றுசேர்கிறார்கள், பின்னர் அவர்களே கும்பல் மனநிலைக்கு செல்கிறார்கள்,''என்கிறார். கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்? கடலூரில் அதிர்ச்சி சம்பவம்: 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக சக மாணவர்கள் கைது அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடப்பது என்ன? மதமாற்றக் குற்றச்சாட்டு நிலை என்ன? அதாவது, "ஒவ்வொரு மனிதனும் தன்னை தனிநபராக பார்ப்பதில் இருந்து விலகி, பல நபர்கள் சேர்ந்து ஆற்றல் வாய்ந்த கூட்டமாக மாறுகிறார்கள்" என்கிறார் ஷர்மிலி. படக்குறிப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் (கோப்புப்படம்) "அவர்களுக்கு பயம், குற்றஉணர்வு ஆகியவை இருக்காது. தனிநபராக இருக்கும் அதே நபர், கும்பலில் செயல்படும்போது, பயம், குற்ற உணர்வை துறந்து, தன்னை ஒரு ஹீரோவாக பார்க்கும் மனநிலைக்கு மாறுகிறார். அதாவது பொறுப்பற்ற நிலைக்கு வருகிறார். ஒரு தனிநபர் கல் எறிவது, பொருட்களை உடைப்பது அல்லது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துவது என்பது சவாலான ஒன்று. ஆனால் ,கும்பலாக இருக்கும்போது, அது எளிதாகிவிடுகிறது. அதிலும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருக்கும் அந்த கும்பலுக்கு கூடுதலான தைரியம் பிறக்கிறது. அவர்கள் எதையும் செய்ய தயாராகிவிடுகிறார்கள். கும்பல் மனநிலை என்பது ஆதிமனிதன், கூட்டம் கூட்டமாக வாழ்ந்தபோது இருந்த மனநிலை. அதில் சரி, தவறு என்ற பாகுபாடுகள் அவ்வளவாக இருப்பதில்லை,''என்கிறார் ஷர்மிலி. நல்ல வகையிலும் பயன்படுத்த முடியும் படக்குறிப்பு, கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்த பகுதியை நோக்கிச் செல்லும் மக்கள் கும்பல் மனநிலையுடன் இந்த சம்பவத்தில் இளைஞர்களின் சக்தி ஒன்றிணைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடுகிறார் ஷர்மிலி. ''பதின்பருவ மற்றும் இளவயது கூட்டத்தினர் ஒன்று சேர்ந்துள்ளனர். இதில் பலரும் உணர்ச்சிவசத்துக்கு ஆளாவது வசப்படுவது மிகவும் எளிது. உற்றுநோக்கினால், இவர்களில் பலர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தொடங்காதவர்களாக இருக்கிறார்கள். ராணுவத்திற்கு கூட, மிக இளவயதில்தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இளவயதில் உடற்பயிற்சி மட்டுமல்ல, மனதிற்கு பயிற்சி அளித்துவிட்டால் அந்த மனநிலையில் இருந்து மாறுவது கடினம்தான். இளமையில், நாட்டுக்காகத்தான் உன்வாழ்வு, அதுதான் உயர்ந்தது என்ற சிந்தனையை ஏற்படுத்திவிட்டால், அந்த எண்ணம் வேரூன்றி, பலகாலம் அந்த நபரின் வாழ்வில் நீடிக்கும்,''என்கிறார் அவர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் (கோப்புப்படம்) கும்பல் மனநிலை என்பது வெறும் மோசமான வன்முறை சம்பவங்களில் மட்டும் காணப்படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார். ''சுதந்திர போராட்ட காலங்களில், பல ஆயிரம் மக்கள், ஆண்கள்,பெண்கள் என்ற பேதமின்றி, ஒன்று கூடினார்கள். தலைவர் ஒருவர் இருந்தால், அவர் பின் எந்த கேள்வியும் இன்றி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கும்பல் மனநிலையில் ஒரு தனிநபர் தனக்கான சிந்தனை என்பதை மறந்து , கூட்டத்தின் ஆற்றலை வெளிப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறார். இந்த கும்பல் சக்தியை பல நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தமுடியும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில்கூட காணப்பட்டது இந்த கும்பல் மனநிலைதான். ஆனால் அந்த போராட்டம் இட்டுச்சென்ற தீர்வு வேறுமாதிரியாக அமைந்தது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில், வன்முறையாக வெடித்துள்ளது,'' என்கிறார் ஷர்மிலி. படக்குறிப்பு, ஷர்மிலி பொது இடத்தில் கலவரம் கூட்டமாக கூடி வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் இதற்கு முன்னர், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களாகவோ, தொடர்ந்து கலவரம் ஏற்படுத்தும் நபர்களாக இல்லை என்றபோதும், அவர்கள்மீது தண்டனை பாயும் என்கிறார் ஒய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி. ''வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி கூறியுள்ளார். பலரின் முகம் தெளிவாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதோடு, தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதளங்களில் காணப்படுகிறது. இந்த வன்முறை தொடர்பாக கூட்டம் கூட்டமாக கைதாகியுள்ளனர். சட்ட ரீதியாக வழக்கு நடந்து, முடிவதற்கு பல காலம் ஆகும் என்றாலும், வன்முறையில் பங்கேற்ற காரணத்திற்காக நீதிமன்றம் செல்லவேண்டும், தண்டனை அனுபவிக்கவேண்டும் என்பதை மாற்றமுடியாது. இந்த கும்பலில் கூடிய நபர்கள் பலரும் முன்கூட்டி திட்டமிட்டு ஒன்றுசேர்ந்தது என்பது போல தெரிகிறது. இவர்களில் பலரும் நீதி வேண்டும் என்பதற்கு பதிலாக, பொது இடத்தில் கலவரத்தில் ஈடுபடுவதை விரும்பியுள்ளனர்," என்கிறார் கருணாநிதி. இறந்த மாணவியின் தாயார் அமைதியான தீர்வை எதிர்நோக்கும்போது, ஜாதி ரீதியாக ஒன்று சேர்வது, கும்பலாக மக்கள் ஒன்று கூடி வன்முறையில் இறங்குவது தேவையற்றது" என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/india-62203010
  4. இலங்கையில் அமலுக்கு வந்த அவசரகால சட்டம் - ஒரு விளக்கம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அவசர கால சட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக இந்த அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்பான ஸ்திரமன்ற நிலைமை மற்றும் போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையிலேயே, கடந்த 14ம் தேதி அவசர கால நிலையை, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அவசரகால நிலைமை என்றால் என்ன? பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை அமுல்படுத்தும் வகையில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 155ஆவது உறுப்புரையினூடாக அவசரகாலச் சட்டத்தினை பிரகடனப்படுத்தப்படும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் 100 நாள் போராட்ட கொண்டாட்டம் - புகைப்பட தொகுப்பு ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம்; தீவிரமடையுமா, தணியுமா? - கள நிலவரம் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் என்பது சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இலங்கையில் இருந்து வருகிறது. அவசர காலம் என்பதனை - விதிவிலக்கான சந்தர்ப்பம், ஆபத்து அல்லது அனர்த்தம் தெளிவானதாக காணப்படும் சந்தர்ப்பம் என பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் வரைவிலக் கணப்படுத்துகிறது. இச்சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தலைக் கையாளும் பொருட்டு சாதாரண சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படாத விசேட அதிகாரங்கள் அரசுக்கு வழங்கப்படுகின்றன என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள ஆவணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியவசியத் தேவைகள் என்பனவற்றைப் பேணும் பொருட்டு - அவசரகால நிலையை, ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம். அவசரகால நிலைமையின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகளை உருவாக்குவதற்கான தத்துவம் ஜனாதிபதிக்கு உள்ளது. யார் யாருக்கு என்னென்ன அதிகாரங்களை வழங்குவது, எவ்வாறான நடைமுறைகளையெல்லாம் அமுல்படுத்துவது அல்லது நீக்குவது என்பது தொடர்பிலான ஒழுங்கு விதிகளை அவர் உருவாக்க முடியும். அல்லது வலுவில் இருக்கின்ற ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மாத காலத்துக்கு வலுவிலிருக்கும் வகையிலேயே அவசரகால நிலைமையினை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம். அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி 14 நாட்களுக்குள் அதற்கான அனுமதியை நாடாளுமன்றில் பெற்றுக் கொள்தல் வேண்டும். அனுமதி கிடைக்காது விட்டால், அவசரகால நிலை இல்லாமல்போகும். ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றின் அனுமதியைப் பெறுவதன் ஊடாகவே, அவசர கால நிலையை நீடிக்க முடியும். அவசர நிலையை அறிவிக்கும் அதிகாரம் எங்கிருந்து வருகிறது, யாரால் அறிவிக்க முடியும்? அரசியலமைப்பின் 155வது பிரிவின் கீழ் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த ஜனாதிபதிக்கு முழு அதிகாரமும் உள்ளது. அந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும், அதற்காக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். இந்த அறிவிப்பு நான்கு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. அவசரகாலச் சட்டத்தின் பிரகடனம், அவசரகாலச் சட்டங்களை உருவாக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் உட்பட, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் வேறு எந்த சட்டத்தையும் மீறலாம். அதே சமயம், அவை அரசியலமைப்பை மீற முடியாது. அவசரநிலை எவ்வளவு காலம் நீடிக்கும்? ஜனாதிபதியால் பிறப்பிக்கப்படும் அவசரநிலை நடவடிக்கை, ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். (ஒரு மாதம் கடக்கும் முன் அவர் அதை ரத்து செய்யலாம் என்றாலும்). இந்த அறிவிப்பு நான்கு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படும். அவசரகால நிலைமை ஒவ்வொரு 30 நாட்களுக்கும் நீட்டிக்கப்படலாம். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். https://www.bbc.com/tamil/sri-lanka-62204066
  5. கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்? #GroundReport முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 18 ஜூலை 2022, 01:50 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மரணமடைந்ததையடுத்து ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த கலவரத்தில் பள்ளிக்கூடச் சொத்துகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கலவரத்தை நடத்தியது யார், அவர்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டனர்? கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்துவந்தார். கடந்த 13ஆம் தேதி காலையில் அந்தப் பெண் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. அவரது மகள் பள்ளிக்கூடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாயாரிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்துவந்த மாணவி, கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் பள்ளிக்கூட விடுதியில் சேர்க்கப்பட்டதாக அவரது தாயார் செல்வி ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், அவரது சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, சின்ன சேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 பிரிவின் கீழ் (சந்தேக மரணம்) வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யத் தொடங்கினர். கள்ளக்குறிச்சி வன்முறை: மாணவி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம் கூடாது - எச்சரிக்கும் அரசு தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டினார். இதற்குப் பிறகு பெற்றோரும் அவரைச் சார்ந்தவர்களும் சிறுமியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் ஒரு பகுதி வெளியான நிலையில், நேற்று மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமையன்று மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டுத் துவங்கியதாக சொல்லப்படும் போராட்டம் பெரும் வன்முறையில் முடிவடைந்தது. போராட்டம் துவங்கியது எப்படி? ஞாயிற்றுக் கிழமையன்று காலை. சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தின் முன்பு பாதுகாப்பிற்காக சுமார் 40 காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். காலை சுமார் 9 மணியளவில் இரு சக்கர வாகனங்களிலும் சிறிய சரக்கு வாகனங்களிலும் சிறிது சிறிதாக இளைஞர்கள் அந்தப் பகுதியில் கூட ஆரம்பித்தனர். சுமார் 500 இளைஞர்கள் வரை திரண்ட நிலையில், இறந்த மாணவிக்கு நீதி கோரி கோஷங்களை இட்டதோடு, பள்ளிக்கூடத்திற்கு முன்பாகவே சாலை மறியலில் அமர்ந்தனர். காவல்துறை அவர்களை அகற்றியதால், சாலையின் எதிர்ப்புறம் சென்று அமர்ந்து போக்குவரத்தைத் தடைசெய்தனர். அங்கிருந்தும் காவலர்கள் அவர்களை அகற்ற முற்பட்டபோது மெல்ல மெல்ல தள்ளுமுள்ளு ஏற்பட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் பெரிய எண்ணிக்கையில் காவல்துறையினர் அங்கு இல்லாததால், மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு பக்கத்து மாவட்டங்களிலிருந்து சேமக் காவல் படையினரை வரழைக்கும் பணிகள் துவங்கின. ஆனால், பள்ளி முன்பாகக் கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. சுமார் ஆயிரம் பேர் அந்தப் பகுதியில் திரண்ட நிலையில், அவர்கள் காவல்துறையினர் மீது கல்வீசும் வேகம் அதிகரித்தது. விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் கண்ணீர் புகை குண்டுகளை சுட்ட நிலையில், அவர் மீதும் கல்வீச்சுத் தாக்கல் நடந்தது. அதில் அவர் காயமடைந்தார். விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உள்ளிட்ட சுமார் 70 காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டது. காவல்துறையினரை மீறி பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த கூட்டம், ஒவ்வொரு பகுதியாக முன்னேறி தாக்குதல் நடத்தியது. முதலில் சென்றவர்கள் வாசலில் இருந்த சிசிடிவி கேமராக்களை நொறுக்கினர். அந்த பள்ளியின் ஒவ்வொரு அறையிலும் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. பிறகு பள்ளி வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைக்க ஆரம்பித்தனர். இருசக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்ட நிலையில், மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளின் மீது போராட்டக்காரர்களின் கவனம் திரும்பியது. அங்கேயிருந்த டிராக்டர்களை ஓட்டிவந்து அந்தப் பேருந்துகளை சேதப்படுத்திய அவர்கள், முடிவாக அவற்றுக்கும் தீ வைத்தனர். பள்ளிக்கூடத்தை நோக்கி வந்த தீயணைப்பு வாகனங்கள், காவல்துறையினரை மீட்பதற்காக வந்த ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றை பள்ளிக்கூடம் அருகில் செல்ல போராட்டக்கரார்கள் அனுமதிக்கவில்லை. பிறகு ஒரு வழியாக இந்த வாகனங்கள் பள்ளிக்கூடத்தை நெருங்கின. வேறு மாவட்டங்களில் இருந்த வந்த காவலர்கள் மெல்ல மெல்ல அப்பகுதியில் வந்து இறங்கினாலும், பள்ளிக்கூடத்தை முழுமையாகச் சூறையாடிவிட்டே போராட்டக்காரர்கள் கலைந்தனர். இதற்குள் வேறு சிலர், பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து சேதமடைந்த பொருட்கள், எஞ்சிய மேஜை நாற்காலிகள் ஆகியவற்றை தங்களது இரு சக்கர வாகனங்களிலும் பிற வாகனங்களிலும் ஏற்றிச்சென்றனர். பிற்பகல் சுமார் 2 மணியளவில் காவல்துறை நிலைமையை ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், அதற்கள் பள்ளிக்கூடம் முழுமையாக சேதப்படுத்தப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டது எப்படி? யார் இவர்கள்? பள்ளிக்கூட தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவே இருந்தனர். 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள் சிலரும்கூட அந்தக் கூட்டத்தில் காணப்பட்டனர். இவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதில் தெளிவில்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் அக்கம்பக்கத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்தக் கலவரத்தை நேரில் பார்த்த உள்ளூர்க்காரர்கள் சொல்கிறார்கள். நேற்றைய சம்பவத்தைப் பார்த்த அனைவருக்கும் எழக்கூடிய ஒரு கேள்வி, இந்தப் போராட்டக்காரர்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டனர், அவர்கள் இந்த அளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் எப்படி காவல்துறைக்குத் தெரியாமல் போனது என்பதுதான். கடந்த இரண்டு நாட்களாகவே உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும் என்று கூறும் ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது. பெரும்பாலும், திரை நட்சத்திரங்களை முகப்புப் படமாகக் கொண்ட டிவிட்டர் ஐடிகளே இந்த ஹாஷ்டாகின் கீழ் பதிவுகளை வெளியிட்டனர். கலவரம் வெடித்த பிறகு, அந்த ஹாஷ்டாகுடன் கலவரக் காட்சிகளை இந்த டிவிட்டர் ஐடிகள் தொடர்ந்து இப்போதும் வெளியிட்டு வருகின்றன. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 இந்த ஹாஷ்டாகுடன் பதிவுகளை வெளியிட்ட ஒன்றிரண்டு ஐடிகளில், ஞாயிற்றுக் கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாணவிக்கு நீதி வேண்டும் என்பது போன்ற தலைப்பிலான போஸ்டர்களை இந்த ஐடிகள் பகிர்ந்திருந்தன. ஆனால், அப்படிப் பகிர்ந்த ஐடிகளுக்கு பெரிய அளவில் பின்தொடர்பவர்கள் இல்லை. ஆகவே, ட்விட்டர் மூலம் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படியிருந்தும் ஞாயிற்றுக்கிழமையன்று பெரிய அளவில் இளைஞர்கள் திரண்டதற்கு வாட்ஸப் குழுக்கள் மூலம் பரப்பப்பட்ட அழைப்புகளே காரணமாக இருக்கலாம் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், இம்மாதிரி ஆட்கள் ஒருங்கிணைக்கப்படுவதை காவல்துறையோ, உளவுத் துறையோ எப்படி அறியாமல் போனது என்ற கேள்விக்கு இதுவரை விடைகிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும்கூட, பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் அங்கு நிறுத்தப்படாதது ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தை நோக்கி சாரைசாரையாக வாகனங்களில் போராட்டக்காரர்கள் வர எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கும் விடையில்லை. படக்குறிப்பு, நேற்று வன்முறை நடந்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறியும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி கலவரமெல்லாம் ஓய்ந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தை நோக்கி இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை நிறுத்திய காவல்துறை, அவர்களது செல்போனில் கலவரக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருந்தாலோ வாட்சப் ஸ்டேட்டசாக வைக்கப்பட்டிருந்தாலோ, அவர்களை விசாரிக்க ஆரம்பித்தது. இதற்குப் பிறகு முழு வீச்சிலான கைது நடவடிக்கைகள் துவங்கின. பல இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கி கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதால், அவர்களது இருசக்கர வாகனங்களின் எண்களை வைத்து தேடப்பட்டு வருகின்றனர். மேலும், ஊடகங்களில் வெளியான காட்சிகளில் இடம் பெற்றவர்களையும் காவல்துறை விரைவில் தேடக்கூடும். இந்த கலவரத்தின்போது எந்த அமைப்பின் கொடியோ, அமைப்பு சார்ந்து கோஷங்களோ எழுப்பப்படவில்லை. இளைஞர்களில் பலர் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்பதைத் தவிர, இந்தக் கூட்டத்தில் இருந்தவர்களிடம் பொதுவான ஒற்றுமை ஏதும் இருக்கவில்லை. எந்த ஒரு ஜாதி அமைப்பும் வெளிப்படையாகப் பங்கேற்றதாகவும் தெரியவில்லை. மரணமடைந்த சிறுமியின் சடலம் இன்னும் பெற்றோரால் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில், பிரச்னையின் தீவிரம் நீடிக்கவே செய்கிறது. தற்போது பள்ளிக்கூட நிர்வாகிகள் மூவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். தனியார் பள்ளிக்கூடங்களைத் திங்கட்கிழமை முதல் மூடுவதற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றன. திங்கட்கிழமைக்குப் பிறகு இந்த விவகாரத்தை அரசு எப்படிக் கையாளப்போகிறது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. https://www.bbc.com/tamil/india-62202511
  6. Sri Lanka Protest Celebration: இலங்கையில் 100வது நாளை எட்டிய போராட்டம்.. கொண்டாட்டத்தில் மக்கள்
  7. இலங்கையில் 100 நாள் போராட்ட கொண்டாட்டம் - புகைப்பட தொகுப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர் இலங்கையின் ஆளும் அரசு எதிர்ப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை 100வது நாளை எட்டியது. பதவியில் இருந்த நாட்டின் ஜனாதிபதியை பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றிய பிறகும் அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. இந்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வரும் தலைவர் நாட்டை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் போராட்ட களத்தில் உள்ள மக்கள் உள்ளனர். கடந்த வார இறுதியில் போராட்டக்காரர்கள், தமது மாளிகையை ஆக்கிரமிப்பதற்கு சற்று முன்னதாகவே கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறினார். கடந்த வியாழக்கிழமை அவர் ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அவரது தவறான நிர்வாகமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே இலங்கை உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், தங்களின் போராட்டத்தின் விளைவாக கோட்டாபய நாட்டை விட்டு வெளியே சென்றதை 100ஆம் நாள் போராட்டத்தில் மக்கள் கொண்டாடினர். அங்குள்ள கள நிலவர படங்களை கொழும்பில் முகாமிட்டுள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன் மற்றும் இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்திகளை வழங்கும் ரஞ்சன் அருண் பிரசாத்தும் பதிவு செய்துள்ளனர். அவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை காலையில் காலி முகத்திடலின் காட்சி படக்குறிப்பு, பதில் ஜனாதிபதி ரணிலை பதவி விலக வலியுறுத்தி சாலை சந்திப்பு கட்டட சுரில் பொருத்தப்பட்டிருக்கும் பலகை படக்குறிப்பு, குடியிருப்புப் பகுதிகளில் இனிப்புகளை பரிமாறிக் கொள்ளும் பொதுமக்கள் https://www.bbc.com/tamil/sri-lanka-62200465
  8. இலங்கை நெருக்கடி: "கடனில்லாத நாடு வேண்டும்" - 100வது நாள் போராட்டத்தில் மக்கள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம், இன்றுடன் 100 நாட்களை அடைந்திருக்கிறது. இந்த நிலையில், மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய, பிறகு தமது பதவியில் இருந்து விலகி, புதிய அரசு அமைய வழியேற்படுத்தியிருக்கிறார். நூறாவது நாளாக தொடர்ந்து நடக்கும் தங்களுடைய போராட்டத்தை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே காரணம் என்று கூறி, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியன்று கொழும்பு - காலி முகத்திடலில் பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் ஆரம்பம் முதலே வலுவாக இருந்தது. இந்த நிலையில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய பிறகு, ரணில் நாட்டின் பிரதமரானதும் மக்கள் போராட்டம் சற்றே தணிந்து காணப்பட்டது. ஆனால், வலுவிழக்கவில்லை. இந்த நிலையில், நாட்டில் எரிவாயு விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை போன்வை ஏற்றத்துடனேயே இருந்ததால் மக்களின் கோபம் மீண்டும் தீவிரம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்தினர், மக்கள் போராட்டம் மூன்று மாதங்களைக் கடந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி தலைநகர் கொழும்பை லட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர். முன்னதாக, ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த மக்கள், அதற்குள்ளாகவும் செல்ல முற்பட்டபோது, அவர்களை நோக்கி போலீஸார் தொடர்ச்சியாக கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகங்களை நடத்தி கட்டத்தைக் கலைக்க படையினர் நடவடிக்கை எடுத்தனர். எனினும், அதிகரித்து வந்த மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்புப்படையினர் தோல்வி அடைந்தனர். இதையடுத்து ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் இல்லத்தை கடந்த 9ஆம் தேதி போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இலங்கை வரலாற்றிலேயே மக்கள் இப்படி போராட்ட உணர்வை வெளிப்படுத்துவது அசாதாரணமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குலுக்கல் முறையில் இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? சட்டம் கூறுவது என்ன? ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம்; தீவிரமடையுமா, தணியுமா? - கள நிலவரம் கோட்டாபய விலகலால் சமாதானம் அடையாத மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இவ்வாறான பின்னணியில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி நாட்டை விட்டு தப்பிச் சென்ற அவர், முதலாவதாக மாலத்தீவுக்கும் அதற்கு மறுநாள் சிங்கப்பூருக்கும் சென்றார். இதேவேளை, தாம் வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாக கோட்டாபய அறிவித்தார். இதன் பின்னர், சிங்கப்பூரில் உள்ள இலங்கைக்கான தூதர் மூலம் தமது பதவி விலகல் கடிதத்தை ஜூலை 14ஆம் தேதி அனுப்பி வைத்தார் கோட்டாபய. அவரது கடிதத்தை உரிய பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜூலை 15ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து இலங்கையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி புதிய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு முறைப்படி நடைபெறவுள்ளது. இது ஒருபுறமிருக்க, கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியபோதும் அந்த செயல்பாடு போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தவில்லை. கோட்டாபய, மஹிந்த குடும்பத்தினருக்கு நெருக்கமானவராக ரணில் விக்ரமசிங்க கருதப்படுவதால், அவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே இந்த மக்கள் போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 "இது வாழ்வதற்கான போராட்டம்" இதையொட்டி கொழும்பு - கொச்சிகடை பகுதியில் இன்று பல்வேறு இடங்களில் நூறாம் நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. படக்குறிப்பு, ஹிமாஷி ரெஹானா அப்போது, "வாழ்வதற்கான போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும்," என இந்த 100 நாள் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று வெற்றி கொண்டாட்டங்களை நடத்தி வரும் சிங்கள மொழி யுவதியான ஹிமாஷி ரெஹானா தெரிவித்தார். ''போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த போராட்டம் இத்துடன் முடிவடைந்துள்ளதா என கேட்டால் இல்லை என்பதே எங்களுடைய பதில். இந்த நாட்டிற்கு சாதகமான மாற்றம் கிடைக்கும் நாளிலேயே இந்த போராட்டம் முடிவடையும். சிஸ்டம் சேஞ்ச் ஒன்று ஏற்படும் தினத்திலேயே போராட்டம் முடிவடையும். அவ்வாறு நடக்குமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆம் அவ்வாறு நடக்கும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எதிர்காலத்திலும் இவ்வாறு ஒன்றிணைய வேண்டும். அரசியல், கட்சி பேதங்கள் எதுவும் வேண்டாம். நாட்டிற்கு உண்மையாகவே நன்மை நடக்கும் என்றால், அதை யார் செய்தாலும், எந்த கட்சியினர் செய்தாலும் அதனை நாம் வரவேற்க வேண்டும். யாராவது தவறு இழைக்கும் போது, அதற்கு எதிராக குரல் எழுப்பும் இடத்திற்கு நாம் வர வேண்டும். அதற்கான முதுகெலும்பு எமக்கு இருக்க வேண்டும். எமக்கு நாடு வேண்டும். வாழ்வதற்கான நாடு வேண்டும். கடன் இல்லாத நாடு வேண்டும். எமது குழந்தைகளுக்கு கையளிக்க முடிந்த நாடொன்று வேண்டும். எமக்கு வாழ வேண்டும். நீங்களும் வாழ வேண்டும். அதற்காகவே இந்த போராட்டத்தை நடத்துகிறோம். காலி முகத்திடலில் மாத்திரமே போராட்டம் நடக்கின்றது. எதிர்காலத்தில் போராட்டத்தை வெற்றி கொள்ள முடியுமா என பலரும் கேட்கின்றார்கள். முடியும் என்றே நான் கூறுகின்றேன். 'காலி முகத்திடல்' என்பது போராட்டத்திற்கான ஒரு அடையாளம் மாத்திரமே. சில சந்தர்ப்பங்களில் அது தொடர்ச்சியாக இருக்காது. ஆனால், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைவோம். அம்மாவை வெற்றி பெற செய்வோம். அம்மா வெற்றி பெற்றால், நாமும் வெற்றி அடைவோம். வாழ்வதற்காக போராட்டம் வெற்றி பெறட்டும். மக்களுக்கு வெற்றி" என்கிறார் ஹிமாஷி ரெஹானா. புதிய கலசாரத்தின் எழுச்சி புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியே, இந்த போராட்டத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட இன்ஸ்டின் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். படக்குறிப்பு, இன்ஸ்டின் ''கோட்டாபய அரசாங்கம் இன ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்தி, மக்களை பிரித்துத்தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள். அதேபோல இன்று மக்கள் ஒற்றுமை ஆகி அவர்களை அனுப்பி இருக்கிறார்கள். எந்த இனங்களை பிரித்து இந்த ஆட்சிக்கு வந்தார்களோ, அந்த அத்தனை இனங்களும் ஒன்றாக இணைந்து, அவர்களை துரத்தி அடித்திருக்கிறது. இந்த போராட்டக்களம், அத்தனை மக்களையும் ஒன்றிணைத்துவிட்டது. இனி எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் பிரிய மாட்டோம் என்ற அளவிற்கு இந்த போராட்டம், மக்களின் உள்ளங்களை பலப்படுத்தி இருக்கின்றது. அரசியல் ரீதியில் பிரித்தாலும் சக்தியானது, இவர்கள் இனி அரசியல் செய்ய முடியாது என்ற இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ போக வேண்டும் என்று வந்தவர்கள், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் போக வேண்டும் என்ற இடத்திற்கு வந்தார்கள். இந்த போராட்டத்தின் முதல் வெற்றியானது, கோட்டாபய ராஜபக்ஷவை துரத்தி அடித்தது. இந்த வெற்றியை இன்று கொண்டாடி வருகின்றனர். ராஜபக்ஷ குடும்பத்திற்கு சாதகமாக செயற்படும் ரணில் விக்ரமசிங்க தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார். அவரையும் துரத்தி, இந்த அரசியல் சிஸ்டத்தை முற்றுமாக துடைத்தெறிவோம். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கிய பிறகே இந்த போராட்டத்தை விட்டு வெளியேறுவோம்" என போராட்டத்தில் ஈடுபட்ட இன்ஸ்டின் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். நாட்டை இழிவுப்படுத்தி, சீரழித்து, சுகபோக வாழ்க்கையை வாழ்ந்த அரசியல்வாதிகள், நாட்டை விற்றுள்ளதாகவும், இனி அவ்வாறு இடம்பெற இடமளிக்க போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபடும் விக்னேஷ்வரன் கூறுகின்றார். படக்குறிப்பு, விக்னேஷ்வரன் ''இந்த போராட்டத்தின் வெற்றி இலக்கை இன்று நாம் அடைந்திருக்கின்றோம். அதேபோன்று, இங்கிருக்கின்ற அரசியல்வாதிகள் அனைவரையும் குறைக்கூற முடியாது. அதேபோன்று அனைவரையும் சரி என்றும் கூற முடியாது. இவ்வளவு நாள் இலங்கையர்களாக இருக்கக்;கூடிய நாங்கள், இரண்டு மொழிகளாலும், 4 மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தோம். இனவாதத்தையும், மதவாதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைவரும் அரசியல் செய்தார்கள். அனைவரையும் பிளவுப்படுத்தி அரசியல் செய்திருக்கின்றார்கள். நாங்கள் அதனை ஒட்டு மொத்தமாக ஒழித்து இன்று இலங்கையர் என்று வாழ்வதற்கான அடிப்படை தளத்தை இட்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடக்கூடியவர்களுக்கு இது அச்சுறுத்தலாக அமையும். சரியாக அரசியல் செய்பவர்களுக்கு இது பலமாக அமையும். எதிர்காலத்தில் இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். இதுவரை அரசியல்வாதிகளாக இருந்தவர்கள், ஒட்டு மொத்த இலங்கையையும் சூரையாடி, நாட்டை இழிவுப்படுத்தி, சீரழித்து, தமது சுகபோக வாழ்க்கைக்காக முழு நாட்டையும் விற்றிருக்கின்றார்கள். இனி இவ்வாறு இடம்பெறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்." என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்ட விக்னேஷ்வரன். https://www.bbc.com/tamil/sri-lanka-62198486
  9. இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜெகதீப் தன்கரை என்டிஏ வேட்பாளராக அறிவித்த பாஜக - யார் இவர்? 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMO INDIA இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான என்டிஏ வேட்பாளர் ஆக மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் பெயரை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோரை ஜெகதீப் தன்கர் சந்தித்துப் பேசினார். ஆனால், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும் ஆளும் முதல்வர் மமதா பானர்ஜிக்கும் பல்வேறு நிர்வாகம் மற்றும் அரசியல் விவகாரங்களில் தலைவலியை கொடுத்து வந்தவராக ஜெகதீப் தன்கரை அம்மாநில ஆளும் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வந்தனர். பல்கலைக்கழகங்கள் முதல் மாநிலத்தில் அரசியல் வன்முறை வரையிலான பிரச்னைகள் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியுடன் அடிக்கடி இவர் நேரிலும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மோதல் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், இவரது பெயரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக ஜே.பி. நட்டா அறிவித்தபோது, "தன்கர் ஒரு "விவசாயியின் மகன்" என்றும் அவர் தன்னை "மக்கள் ஆளுநராக" நிலைநிறுத்திக் கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டினார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ஜெகதீப் தன்கரை கட்சி மேலிடம் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தவுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு தமது ட்விட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். "ஜெகதீப் தன்கருக்கு நமது அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றிய சிறந்த ஞானம் உள்ளது. அவர் நாடாளுமன்ற விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். மாநிலங்களவையில் அவர் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவையின் நடவடிக்கைகளை அவர் வழிநடத்துவார் என நான் உறுதியாக நம்புகிறேன்," என்று நரேந்திர மோதி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எப்போது? குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய வேட்புமனுவை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க ஆணையம் அனுமதித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 19ஆம் தேதி ஆகும். இந்திய குடியரசு தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் இந்திய குடியரசுத்துணை தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? களத்தில் உள்ளவர்கள் யார், யார்? 2017ஆம் ஆண்டில், இந்திய குடியரசு தலைவர் போட்டிக்கு அப்போதைய பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை பாஜக மேலிடம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவித்தது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் முதல் குடிமகனுக்கான தேர்தலில் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதியாக ராம்நாத் கோவிந்த்தை குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்புவோம் என்று கூறி தேர்தல் பரப்புரை செய்தது தேசிய ஜனநாயக கூட்டணி. அதே போல குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகவும் பிறகு மத்திய அமைச்சராகவும் இருந்த மூத்த நாடாளுமன்றவாதியான எம். வெங்கய்ய நாயுடுவை பாஜக மேலிடம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவித்தது. ராம்நாத் கோவிந்த், வெங்கய்ய நாயுடு ஆகிய இருவரும் நாட்டின் மிக உயரிய அரசியலமைப்பு பதவிகளை வகிப்பதற்காக நடந்த தேர்தல்களில் எளிதாகவே வெற்றி பெற்றனர். எதிர்வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரெளபதி முர்மூவை பாஜக மேலிடம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக களமிறக்கியுள்ளது. பட மூலாதாரம்,NARENDRA MODI இதற்கிடையே, மத்திய அமைச்சரவையில் ஒரே சிறுபான்மை சமூக அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தபோது, அவருக்கு வேறு மாநிலத்தில் இருந்து எம்.பி ஆகும் வாய்ப்பு தரப்படவில்லை. அதனால், அவரை பாஜக மேலிடம் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளராக முன்னிறுத்தி முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கவர முயலலாம் என அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜெகதீப் தன்கரை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக மேலிடம் அறிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. குடியரசு தலைவர் தேர்தலில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவர். அதேபோல, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் தற்போதைய பலமான 780இல், பாஜகவுக்கு மட்டும் 394 எம்பிக்கள் உள்ளனர். இது பெரும்பான்மையான 390ஐ விட அதிகமாகும். தற்போது குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. யார் இந்த ஜெகதீப் தன்கர்? படக்குறிப்பு, ஜெகதீப் தன்கர் மேற்கு வங்க மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கிதானா கிராமத்தில் கோகல் சந்த், கேசரி தேவி தம்பதிக்கு 1951ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மகனாகப் பிறந்தார் ஜெகதீப் தன்கர். குடும்பம்: இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. மூத்த சகோதரர் குல்தீப் தன்கர், இளைய சகோதரர் ரந்தீப் தன்கர், சகோதரி இந்திரா. ஜெகதீப் தன்கர் மனைவியின் பெயர் சுதேஷ் தன்கர். இந்த தம்பதியின் மகள் காம்னா, ராஜஸ்தானில் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்தவர். இவர், மறைந்த விஜய் சங்கர் வாஜ்பேயியின் மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கார்த்திகேய வாஜ்பேயியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு கவியேஷ் என்ற மகன் இருக்கிறார். கல்வி: முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, கிதானா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்தார் ஜெகதீப். ஆறாம் வகுப்புக்காக 4-5 கிமீ தொலைவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு நடந்தே சென்று படித்தார். 1962ஆம் ஆண்டில், சைனிக் பள்ளியில் உயர்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.எஸ்சி ஹானர்ஸ் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு அதே பல்கலைக்கழகத்தில் 1978-79ஆம் ஆண்டில் சட்டப்படிப்பை முடித்தார். தொழில்முறை வாழ்க்கை: பிறகு ராஜஸ்தான் வழக்கறிஞர் சங்கத்தில் 1979ஆம் ஆண்டில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு தொழில்முறை வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 1987ஆம் ஆண்டில் ராஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவரானார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 1990ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி இவர் மூத்த வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டார். பிறகு உச்ச நீதிமன்றத்தில் எஃகு துறை, நிலக்கரி, சுரங்கம், சர்வதேச வணிக வழக்குகளுக்காகவும், சர்வதேச நீதிமன்றங்களிலும் ஆஜராகி வழக்காடினார். 1988ஆம் ஆண்டில் இவர் ராஜஸ்தான் பார் கவுன்சில் உறுப்பினரானார். இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அரசியல் தொடர்புகள் காரணமாக, 1989ஆம் ஆண்டில் ஜுன்ஜுனு மக்களவை தொகுதியில் இருந்து ஜெகதீப் தன்கர் உறுப்பினராக தேர்வானார். அப்போது அவர் ஜனதா தளம் கட்சியில் இருந்தார். 1990ஆம் ஆண்டில் மத்தியில் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் இவர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக இருந்தார். பிறகு 1993-1998ஆம் ஆண்டுவரை ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷண்கர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார். 2003ஆம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். https://www.bbc.com/tamil/india-62192051
  10. மசாஜ் பெயரில் பாலியல் துன்புறுத்தல் - வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள் எலெனோர் லேஹே & ஹன்னா பிரைஸ் பிபிசி 16 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டனில் வீடுகளுக்கே வந்து மசாஜ் செய்வது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆனால், இத்தகைய மசாஜ் தெரபிஸ்டுகள் சிலரால் தங்களின் வீடுகளுக்குள்ளேயே டஜன் கணக்கிலான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது பிபிசிக்கு தெரியவந்துள்ளது. பெரிதும் கண்காணிக்கப்படாத இந்த தொழிலை ஒழுங்குமுறைப்படுத்த கடும் விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில பகுதிகள் மனதுக்கு சங்கடத்தை தரலாம். வீட்டுக்கே வந்து மசாஜ் சேவை வழங்குவதாக சமூக ஊடகங்களின் வாயிலாக, கேலம் உர்கார்ட் விளம்பரப்படுத்தினார். அதன் வாயிலாக, யாஸ் (உண்மை பெயர் அல்ல) என்பவர் மசாஜ் சேவை கேட்டு பதிவு செய்தார். ஆரம்பத்தில் அவருடைய மசாஜ் சேவை தொழில்முறையில் இருந்ததாகவும், உடலின் சில பகுதிகளில் மசாஜ் செய்வதற்கு முன்பு தன்னிடம் உர்கார்ட் ஒப்புதல் கேட்டதாகவும் கூறுகிறார் யாஸ். ஆனால், பிறகு யாஸை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் உர்கார்ட். "அந்த மாதிரியான சூழலில் உண்மையில் இப்படி நடக்கிறது என்பதை உங்களால் நம்ப முடியாது. அந்த சமயத்தில் அதீதமாக எதிர்வினையாற்றி விடக் கூடாது என உங்கள் மூளையின் ஒரு பக்கம் சொல்லும். ஆனால், அவர் கொஞ்ச நேரத்திலேயே கரடு, முரடாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான் என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. என்னை அவர் பாலியல் வன்புணர்வு செய்யப் போகிறாரா அல்லது கொல்லப் போகிறாரா என்பது தெரியவில்லை" என்கிறார் யாஸ். பாலுறவு உச்சநிலையில் எல்லாப் பெண்களும் திரவத்தை வெளியேற்றுகிறார்களா? கன்னித்திரை என்பது என்ன? உண்மையும் கட்டுக்கதைகளும் முத்த வரலாறு: மனிதர்கள் ஏன் முத்தம் கொடுக்கிறார்கள்? நடந்தவை குறித்து போலீசிடம் புகார் அளித்தபின் தான், மசாஜ் தெரபியில் உர்கார்ட் எந்த தகுதிகளையோ எவ்வித பயிற்சியையோ பெற்றிருக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை நடைபெற்ற பின்னரும், அவர் மசாஜ் தொழிலை தொடர்ந்து செய்துவருகிறார் என்பதும் தன் வாடிக்கையாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்பதையும் பிபிசி கண்டறிந்துள்ளது. பிரிஸ்டலில் நான்கு பெண் வாடிக்கையாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக உர்கார்ட் கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். மசாஜ் தொழிலை தொடருவதிலிருந்தும் மற்ற பெண்களை துன்புறுத்துவதிலிருந்தும் உர்கார்ட்டை எதுவும் நிறுத்த முடியாது என்பது தன் "இதயத்தை நொறுக்குவதாக உள்ளது" என்கிறார் யாஸ். மசாஜ் துறையில் மாற்றங்கள் தேவை என நம்பும் அவர், "இத்துறையில் கட்டுப்பாடுகள் இருந்தால் தற்போது அவர் விசாரணைக்கு ஈடுபடுத்தப்பட்டிருப்பார் அல்லது மசாஜ் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டிருப்பார்" என்கிறார் அவர். "அப்போதுதான் அவருடைய செயல்களுக்கு சில பின்விளைவுகள் இருந்திருக்கும்," எனும் அவர், "இதனை நான் வெளியில் சொல்வது, மற்ற யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தத்தான்" என்றும் தெரிவித்தார். ஒழுங்குமுறை இல்லாமை பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டனில் தற்போதுள்ள விதிமுறைகளின்படி, மசாஜ் தெரபிஸ்டுகள் அதனை தொழிலாக தொடர, எவ்வித உரிமமோ முறையான பயிற்சியோ தேவையில்லை. எனவே எவர் ஒருவரும் தெரபிஸ்டாகலாம். மசாஜ் தொடர்பான அங்கீகாரம் பெற்ற பதிவொன்றில், மசாஜ் தெரபிஸ்ட் ஆணா அல்லது பெண்ணா என்பதை பொதுவில் அறிய முடியும். ஆனால், இது தாமாக முன்வந்து பதிவு செய்வது, ஆதலால் மிக சிலரே இதில் பதிவு செய்கின்றனர் என நிபுணர்கள் கூறுகின்றனர். 'மசாஜ் தெரபி' வழங்கும் இடங்களுக்கு தொழில் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது சில உள்ளூர் கவுன்சில்களில் விதியாக இருக்கிறது, குறிப்பிட்ட நிறுவனம் பாதுகாப்பற்றது என கருதப்பட்டால் அந்த உரிமம் ரத்து செய்யப்படும். பொதுமக்களுக்கு ஆபத்து என்ற ரீதியில், பிசியோதெரபிஸ்டுகளைப் போல மசாஜ் தெரபிஸ்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் கருத வேண்டும். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக மசாஜ் தொழிலை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் செய்தது உள்ளிட்ட டஜன் கணக்கிலான குற்ற வழக்குகளை பிபிசி கண்டறிந்துள்ளது. மிதமான கொரோனா பாதித்தாலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை - ஐ.ஐ.டி ஆய்வு சொல்வது என்ன? முதல்முறையாக பாலியல் உறவில் ஈடுபட சரியான வயது என்ன? 'பாலியல் கற்பனைகள்' திருமண உறவை பாதிக்குமா? இவற்றில், மசாஜ் தெரபிஸ்டுகள் கைதான பின்னரும் மசாஜ் சேவை மூலம் பாலியல் குற்றங்களில் மீண்டும் ஈடுபட்டு வந்ததும் அடக்கம். தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதன் தாக்கம் இன்னும் நீடிப்பதாக யாஸ் தெரிவித்தார். "வெகு காலமாக என்னால் படுத்துத் தூங்க முடியவில்லை. ஏனெனில், அது பற்றிய கனவு வந்து விடுமோ என்கிற பயம் இருந்தது. பதற்றம், நடுக்கம் போன்றவற்றால் நான் பாதிக்கப்பட்டேன். என்னுடைய முடிவுகள் குறித்தே நான் சந்தேகப்படும் நிலைக்கு சென்றேன். ஏனெனில், அந்த நபர் என்னுடைய வீட்டுக்கே வரும் அளவுக்கு நான் நம்பினேன். இனி யாரையும் நம்பக்கூடாது என்று நினைக்கிறேன்," என்கிறார் யாஸ். செல்பேசி செயலிகளின் (apps) வளர்ச்சி, வீட்டுக்கே வந்து மசாஜ் சேவை வழங்குவதை முன்பை விட இப்போது எளிதாக்கியிருக்கிறது. அப்படி, மசாஜை சுயதொழிலாக மேற்கொண்டு வரும் தெரபிஸ்டுகளை வாடிக்கையாளர்கள் கண்டறியும் ஒரு செயலியாக 'அர்பன்' (Urban) என்ற செயலி இருக்கிறது. இதில் மசாஜ் தெரபிஸ்ட் சேவைக்கு பதிவு செய்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அவர்கள் வீட்டுக்கு வந்து விடுகின்றனர். இத்தகைய செயலி மூலம் வீட்டுக்கே வந்து மசாஜ் செய்பவர்களில் எப்போதும் பெண்களையே மசாஜ் செய்வதற்கு தேர்ந்தெடுப்பார் டேய்லர் (உண்மையான பெயர் அல்ல). ஆனால், அக்டோபர் 2019இல், ஒருமுறை ஆழமான அழுத்தத்தை பிரயோகித்து மேற்கொள்ளப்படும் Deep tissue மசாஜை எடுத்துக்கொள்ள அவர் விரும்பியபோது, எந்தவொரு பெண் தெரபிஸ்டுகளும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, ஒரு ஆண் தெரபிஸ்ட் மட்டுமே அந்த சமயத்தில் இருந்தார். அந்த செயலியில் அவருக்கு நூற்றுக்கணக்கில் நேர்மறையான கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தன, பலரும் 5 ஸ்டார்களை வழங்கியிருந்தனர். "பலரின் நம்பிக்கைக்குரிய ஒருவர், அந்த செயலியால் நம்பப்படும் ஒருவரை மசாஜுக்கு அழைப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என கருதினேன்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், மசாஜ் செய்ய ஆரம்பித்த உடனேயே, ஏதோ சரியாக இல்லை என்பதை அவர் உணர்ந்தார். "ஒரு தொழில்முறை பெண் ஒருவரால் மசாஜ் செய்யப்படும்போது உங்கள் உடலின் எந்தவொரு பகுதியும் குறிப்பாக வெளிப்படுவது போல் நீங்கள் உணர மாட்டீர்கள்," என்கிறார் அவர். "என் உடலுக்குக் கீழ்பகுதியில் இருந்த துண்டு முழுவதையும் அவர் உருவிவிட்டார்." பட மூலாதாரம்,URBAN APP பின்னர், மசாஜ் செய்த நபர் கடும் பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு முன்பு, டேய்லரின் ஒப்புதல் இன்றி தனது அந்தரங்க பகுதிகளை தொட்டதாக கூறுகிறார். தான் எதிர்வினையாற்றினால் அந்த நபர் என்னை ஏதாவது செய்து விடுவாரோ என்ற பயத்தில் தான் "உறைந்தேன்" என்கிறார் டேய்லர். கடைசியில் அந்த நபரை நிறுத்துமாறு கூறியபோது, அந்த நபர் மறுத்துவிட்டதாக டேய்லர் கூறுகிறார். வயாகரா சாப்பிட்டால் மறதி பிரச்னை நீங்குமா? ஆய்வாளர்கள் விளக்கம் மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம் நியாண்டர்தால்களுடன் உடலுறவு கொண்ட நவீன மனிதன் - வாயடைக்க வைக்கும் வரலாறு "உடைந்து அழுதேன்" "என்னுடைய வீட்டிலிருந்து அவர் சென்ற பின், என்னுடைய வரவேற்பறையில் உடைந்து போய் அழுதேன். நானே சென்று அறையை உள்பக்கமாக பூட்டினேன்." அர்பன் செயலி நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார் டேய்லர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி போலீசார் விசாரணையை கைவிட்டனர். குறிப்பிட்ட அந்த நபரை தங்கள் செயலியில் இருந்து நீக்கிவிடுவதாக அந்நிர்வாகம் தெரிவித்தாலும், இரண்டு வாரங்கள் கழித்து அதே நபர் அச்செயலியில் தொடர்புகொள்ளக் கூடியவராக இருந்தார் என்று டேய்லர் கூறுகிறார். தொழில்நுட்ப கோளாறு "உடனடியாகத்" தீர்க்கப்படும் என்று கூறினாலும், சம்பவம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் கழித்தும் அந்த நபரின் விவரங்கள் அச்செயலியில் உள்ளதை பிபிசி கண்டறிந்தது. இது தொடர்பாக 'அர்பன்' நிர்வாகத்தை பிபிசி தொடர்புகொண்டு கேட்ட நிலையில், அவருடைய விவரங்கள் முற்றிலும் நீக்கப்பட்டன. டேய்லர் புகாரைத் தொடர்ந்து அந்த நபரின் சுயவிவரம் செயலியில் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அவரை அழைக்க முடியாது என அச்செயலி நிர்வாகம் தெரிவித்தது. அதேபோன்று, அச்செயலியில் மசாஜ் தெரபிஸ்டாக இருந்த காஸ்மின் டுடோசே என்பவருக்கு, பெண் வாடிக்கையாளர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை கடந்தாண்டு விதிக்கப்பட்டது. மசாஜ் தெரபிஸ்டுகள், 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிபிஎஸ் சரிபார்ப்பு உட்பட கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அர்பன் நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது. இதனால் குறைந்த அளவிலேயே பாலியல் புகார்கள் வருவதாகவும் தெரிவித்தது. அனைத்துப் புகார்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தது. மசாஜ் தெரபிஸ்டுகளுக்கான பொதுக்குழுவின் துணைத்தலைவர் யோனே பிளேக் பிபிசியிடம் கூறுகையில், தற்போதிருக்கும் விதிமுறைகளின்படி, எவ்வித பரிசோதனைகளும் இன்றி "யார் வேண்டுமானாலும்" மசாஜ் தொழிலை செய்யலாம் என தெரிவித்தார். மசாஜ் தெரபிஸ்டுகள் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் நிபுணத்துவ சாட்சியாக அழைக்கப்படும் பிளேக் கூறுகையில், "தகுதியை யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்கலாம். ஆனால், 'அந்த' விஷயங்களை செய்வதை யாரும் தடுக்க எந்த ஒழுங்குமுறையும் இல்லை" என தெரிவித்தார். இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால், இந்த துறையின் விதிமுறைகள் யாருடைய பொறுப்புக்குக் கீழ் வருகிறது என்பதில் குழப்பங்கள் ஏற்பட்டன. அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், "பாலியல் குற்றங்கள் கடுமையான குற்றங்களாகும். இலவச உதவி மற்றும் ஆலோசனைகளை நாடுமாறு, இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டோரை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். போலீஸ் நடவடிக்கையுடன் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை கையாள்வதற்கு, அத்தகைய நிறுவனங்கள் பாதுகாப்பற்றவை என கருதினால் அவர்களின் உரிமத்தை நீக்க வேண்டும்" என கூறினார். கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், பெண்கள் மற்றும் சமத்துவக் குழுவின் தலைவருமான கரோலின் நோக்ஸ் பிபிசியிடம் கூறுகையில், இதுதொடர்பாக அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறினார். "ஆடைகள் ஏதுமின்றி நம்பமுடியாத அளவுக்கு பாதிக்கப்படக்கூடிய நிலையில் பெண்கள் இருக்கும்போது, வேட்டையாடும் குணம் கொண்ட நபருக்கு இது சிறந்த தொழிலாக உள்ளது. அரசாங்கத்தில் இதுகுறித்து அதிக புரிதல் இருப்பது மிகவும் முக்கியமானது" என்றார். மசாஜ் துறையில் கூடுதல் விதிமுறைகளை தாங்கள் வரவேற்பதாக அர்பன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், டேய்லரை பொறுத்தவரை அச்சம்பவத்தின் அழிவுகரமான தாக்கம் இன்னும் நீடிக்கிறது. "இதிலிருந்து வெளியே வர முடியாத நிலையில் உள்ளேன்," என அவர் கூறுகிறார். "இது என்னை முழுவதுமாக மாற்றி விட்டது. என் தோளில் பெரும் சுமையை ஏற்றியது போல் உள்ளது, இதிலிருந்து மீள்வேன் என நினைக்கவில்லை." https://www.bbc.com/tamil/global-62170336
  11. ஆடம் ஹாரி: விமானியாகும் கனவை நினைவாக்க போராடும் திருநம்பியின் கதை இம்ரான் குரேஷி பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP முதல் முதலாக விமானத்தில் காலடி வைத்தபோது ஆடம் ஹேரிக்கு வயது 11தான். அந்த விமானப்பயண அனுபவத்தின் விளைவாக, அவருக்குள் விமானியாக வேண்டும் என்ற கனவு முளைத்தது. கேரளாவைச் சேர்ந்த அந்த 11 வயது சிறுவனின் கனவு நனவாக, அவரது குடும்பமும் அப்போது பக்கபலமாக நின்றது. தென்னாப்ரிக்காவில் உள்ள விமானப்பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அவருக்கு, மாதந்தோறும் பணம் அனுப்பி வந்த குடும்பம், ஒரு புள்ளியில் பணம் அனுப்புவதை நிறுத்திக் கொண்டது. காரணம், படிப்பின் பாதியில் அவர் ஒரு மாற்றுப்பாலினத்தவராக மாறினார். இதுகுறித்து பேசியபோது, "நான் எப்படி இருக்கிறேனோ என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள என் குடும்பம் தயாராக இல்லை" என்கிறார் ஆடம். இந்தியாவில் 20 லட்சம் மாற்றுப்பாலின மக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகம் என்று செயற்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எல்லா பாலினத்தவரையும் போலவே இவர்களுக்கும் அனைத்து உரிமையும் உண்டு என்று 2014 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் விதி ஒன்றை பிறப்பித்தது. திருமணத்துக்கு பின் மாறுபட்ட பாலியல்பை உணர்ந்தால் என்ன செய்வது? வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையை அழைத்து வந்து மஞ்சள் நீராட்டு நடத்திய குடும்பம் 'என்னைக் கொன்றுவிடுங்கள்': கருணைக் கொலை செய்ய கோரி அரசின் கவனத்தை பெற்ற திருநங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனாலும், கல்வி, மருத்துவம், வேலை என எதைப் பெறுவதிலும் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் என அவர்களது இடர்பாடுகள் தொடந்து கொண்டேதான் இருக்கின்றன. சமூகத்தின் பழமைவாத எண்ணங்களாலும், தவறான புரிதல்களாலும் பலர் வீட்டை விட்டும் வெளியேற்றப்படுகின்றனர். குடும்ப உதவியுடன் நனவாகத் தொடங்கிய ஆடமின் விமானி கனவும் இப்படித்தான் இடைநிற்றலை நோக்கி பயணித்தது. தென்னாப்ரிக்காவில் படித்தபோது, தனிநபர் விமானிக்கான உரிமத்தை (private pilot licence) அவர் பெற்றிருந்த போதும், குடும்ப உதவி இல்லாமல் படிப்பை முடிக்க முடியாத நிலை உருவானது. கைகொடுத்த கேரள அரசு திரும்பி தன் வீட்டுக்கே வந்த ஆடம், கேரள அரசின் நிதியுதவியுடன் ஒரு உள்ளூர் அகாடமியில் சேர்ந்து வணிக விமானி உரிமத்தை பெற்றார். அதற்குபிறகும் விமானிக் கனவு நனவாகவில்லை. பாலின மாறுதலுக்காக அவர் ஹார்மோன் தெரபி சிகிச்சையில் இருந்ததால், பறப்பதற்கு தகுதியற்றவர் என்று மருத்துவ சோதனைக்குப் பிறகு அதிகாரிகள் அறிவித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஏரோஸ்பேஸ் மெடிசின் நிறுவனம் இவரிடம் மேற்கொண்ட மருத்துவ சோதனை அறிக்கையின்படி, இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் காலம் முழுக்க அவர் ஜெண்டர் டிஸ்ஃபோரியாவால் கஷ்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 அதாவது, பாலின அடையாளத்துக்கும் பிறப்பின்போதான பாலினத்துக்கும் இடையிலான பொருத்தமின்மையால் வரும் மனஅழுத்தம் மற்றும் கோபத்தை மருத்துவ உலகில் இந்த பெயரால் குறிக்கின்றனர். இந்த மருந்துகளை எடுத்துகொள்வதை நிறுத்திய பிறகே இவர் மீண்டும் சோதனைக்கான கோரிக்கையை வைக்க முடியும் என்று இவருக்கு சொல்லப்பட்டது. இதன்பிறகு சில மாதங்களுக்கு இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டு தனக்கு சொல்லப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியதாக அவர் கூறுகிறார். ஆனால், இந்த மருந்துகளை இவர், வாழ் நாள் முழுக்க உட்கொள்ள வேண்டும் என்று அதற்கு பிறகுதான் இவரது ஹார்மோன் நிபுணர் (endocrinologist) கூறியுள்ளார். இதனை "தன் பாலின அடையாளத்துக்கும், கனவுக்கும் இடையில் ஏதாவதொன்றை நான் தேர்வு செய்ய வேண்டிய நிலை" என்கிறார் ஆடம். களமிறங்கிய சமூகநலத்துறை இது தொடர்பாக பிபிசி எழுப்பிய கேவிகளுக்கு, விமான போக்குவரத்துத்துறை தலைமை இயக்குநர் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. ஆனால், ஆடமின் குற்றச்சாட்டுகளில் பலவற்றுக்கான மறுப்பை ஒரு செய்தி ஊடகத்தில் அத்துறை தெரிவித்துள்ளது. "இந்த உலகம் முழுக்க ஏராளமான விமானிகள் தங்கள் சொந்த பாலின அடையாளத்துடன் பணியாற்றி வருகின்றனர். நான் தென்னாப்பிரிக்காவின் விமானப்போக்குவரத்துறையின் இரண்டாம் நிலை மருத்துச் சான்றும் பெற்றுள்ளேன். என்னை என் உடல் ரீதியிலான மாறுபாட்டிலிருந்தோ என் மருத்துவ சிகிச்சையிலிருந்தோ அவர்கள் தடுக்கவில்லை" என்கிறார் ஆடம். பட மூலாதாரம்,AFP இந்த செய்தி, ஊடகங்களில் வெளியானபிறகு, இந்திய அரசின் சமூகநலத்துறை விமானப்போக்குவரத்து துறைக்கு ஒரு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், விமானத்துறையின் நடவடிக்கைகள் "ஒடுக்குமுறையானது" என்று குறிப்பிட்டதோடு மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமையை மீறும் செயல் என்றும் தெரிவித்தது. இப்போது, ஆடமை மாற்றுப்பாலினத்தவர் என்று பெயருடன் பதிவு செய்து கொண்டபிறகு மீண்டும் மருத்துவ சோதனைக்கு பதிவு செய்யுமாறு விமானப் போக்குவரத்துத்துறை அழைத்துள்ளது. மேலும், ஹார்மோன் சோதனை உள்ளிட்ட சில கூடுதல் சோதனைகளுக்கும் தயாராக வரும்படி தெரிவித்துள்ளதோடு, அவரது ஹார்மோன் மருத்துவர் மற்றும் உளவியல் மருத்துவரையும் அந்த சோதனையின்போது அழைத்துள்ளது. இந்தியாவின் முதல் நபர் இந்தியாவில் மாற்றுப்பாலின விமானிகளுக்கென்று தனித்த கொள்கை வரைவுகள் ஏதும் இதுவரை இல்லை. ஒருவேளை, ஆடம் இந்த சோதனையில் வென்று விமானியானால் இந்தியாவின் முதல் மாற்றுப்பாலின விமானியாக அவர் இருப்பார். மாற்றுப்பாலின விமானிகளை அங்கீகரிப்பதற்கான, அமெரிக்க கூட்டமைப்பின் விமான நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களின்படி ஆடமின் தேர்வுமுறை நடைபெறும் என்று இந்திய விமானப்போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தன் கனவு நனவாகப்போகும் இந்த காலகட்டத்தில் அவர் செய்து வரும் பிற வேலைகளுக்கெல்லாம் அவர் விடை கொடுக்கலாம். உள்ளுர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வெலை செய்து வரும் அவர், கல்லூரிகளில் பாலின முக்கியத்துவம் குறித்தும் பேசி வருகிறார். இதற்கிடையில் உணவு டெலிவரி செய்யும் ஆப்களிலும் வேலை செய்துவருகிறார். ஆடம் ஹாரியின் இந்த போராட்டத்திற்கு ஆசிரியர்கள் நண்பர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் பலர், அவரை பள்ளிக்காலத்தில் கிண்டல் செய்தவர்கள். அவரது குடும்பம் இன்னும் அவரிடம் பேசக்கூட இல்லை. "நான் என் குடும்பத்தை குறை சொல்லி ஒன்றும் ஆவதில்லை. பாலினம் குறித்தோ, பாலியல் தேர்வு குறித்தோ வரும்போது, அவற்றை உள்ளபடியே ஏற்றுக்கொள்வதற்கான போதிய புரிதல் இந்த சமூகத்தில் இல்லை. என் உறவினர்களால் அவர்கள் அவமதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கும் என்னுடைய இந்த மாறுதலை நிறுத்துவதற்காக அழுத்தம் தரப்பட்டிருக்கும்" என்கிறார் ஆடம். அத்துடன், "நான் அவர்களது நினைவாகவே இருக்கிறேன். அதேவேளை, எனக்கு மாற்றுப்பாலின சமூகத்திலும் இப்போது ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது" என்கிறார் ஆடம். https://www.bbc.com/tamil/india-62190259
  12. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான போராட்டத்தில் தாக்குதல்: 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் - காவல்துறை 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. இதில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரது ஆடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருப்பதாகத் தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியான நிலையில், அந்த அறிக்கை தவறானது என்று கூறி அவரது உறவினர்கள் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனாலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். "கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள்" - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் இந்த நிலையில் இன்று மாணவியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன சேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளாகம் அருகே 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். "போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முற்பட்ட போது காவல் துறையினர் தடுப்பை மீறி‌ பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் மறுமுனையில் இருந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை கொண்டு தாக்க தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதில் போலீசார் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தை கற்களை கொண்டு போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்," என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். படக்குறிப்பு, பள்ளியின் முகப்பு (கோப்புப் படம்) இந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பிற மாணவர் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள் நீட் தேர்வு பயம்: அரியலூரில் மாணவி விபரீத முடிவு- நடந்தது என்ன? பள்ளியின் உள்ளே போராட்டக்காரர்கள் புகுந்து பள்ளியின் கண்ணாடிகள் மற்றும் பள்ளி வாகன கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மாவட்ட காவலர்கள் பாதுகாப்பாக அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக போலீஸார் தடியடி மற்றும் மற்றும் போராட்டக்காரர்கள் தாக்குதலால் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர். பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில் இதுவரை காவல் துறை தரப்பில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 20 காயமடைந்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தின் போது காவல் துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் எரித்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து பள்ளி பேருந்துகளையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் கலவரம் தீவிரமடையும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து காவல்துறையினரை கூடுதல் பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/india-62195386
  13. அமெரிக்காவின் 'ஹைதர் அலி' பிரிட்டிஷாரை வெறும் 26 நிமிடங்களில் தோற்கடித்த கதை ஃபைசல் முகமது அலி பிபிசி செய்தியாளர், டெல்லி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HULTON ARCHIVE இது 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று. அமெரிக்க சுதந்திரப் போரின்போது, ஒரு அமெரிக்க போர்க்கப்பல், மிகப் பெரிய பிரிட்டிஷ் கப்பலான ஜெனரல் மாங்க்கை 26 நிமிட போரில் தோற்கடித்து சரணடையச்செய்தது. அமெரிக்கக் கப்பலின் பெயர் ஹைதர் அலி(Hyder Ally). மைசூர் ஆட்சியாளரான ஹைதர் அலியின் நினைவாக சிறிய மாற்றத்துடன் இது பெயரிடப்பட்டது. 'Ally' என்ற ஆங்கில வார்த்தைக்கு நண்பன் அல்லது கூட்டாளி என்று பொருள். 1782 ஏப்ரல் 8 ஆம் தேதி காலை நடந்த இந்த போரின் சம்பவம் அமெரிக்க கடற்படையின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெலாவேர் வளைகுடாவில் நடந்த இந்த போர் தொடர்பான ஓவியம் அமெரிக்க கடற்படை அகாடமியில் மாட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் போர்கப்பலின் கேப்டன் ஜோஷூவா பர்னியின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர். அமெரிக்க கடற்படை வரலாற்றில் 'இது அமெரிக்கக் கொடியின் கீழ் நிகழ்த்தப்பட்ட மிகவும் பிரமிக்கவைக்கும் நிகழ்வுகளில் ஒன்று', என்று ஜேம்ஸ் ஃபெனிமோர் கூப்பர் விவரித்தார். ஒருவேளை இது 'பிரிட்டனுக்கு எதிரான அமெரிக்காவின் முதல் பெரிய கடற்படை வெற்றி' என்பதால் இப்படி விவரிக்கப்பட்டிருக்கலாம். "தரைப் போரில் பிரிட்டிஷ் ஜெனரல் லார்ட் சார்லஸ் கார்ன்வாலிஸ் ஏற்கனவே 1781 ஆம் ஆண்டு அமெரிக்கத் தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் முன் மண்டியிட்டுவிட்டார்." ஹைதர் அலியின் பெயர் அமெரிக்காவிற்கு எப்படி வந்தது? "தென்னிந்திய மாநிலமான மைசூரு 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவிய அடையாளத்தைக் கொண்டிருந்தது" என்கிறார் மைசூர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசப். "1757 பிளாசி போருக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனி, வட இந்தியாவில் ஒரு பிராந்திய சக்தியாக உருவெடுத்தது. ஆனால் ஹைதர் அலியும் அவருக்குப் பின் வந்த திப்பு சுல்தானும் 30 ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக நான்கு போர்களை நடத்தினர். சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வெற்றியை பறைசாற்றும் ஓவியங்கள் கர்நாடகாவின் ஷாஹி மசூதி ஒரு காலத்தில் அனுமன் கோயிலாக இருந்ததா? மராட்டிய மன்னர் சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா? மேலும் தெற்கின் பெரும்பகுதியிலிருந்து அவர்களை விலக்கி வைத்திருந்தனர். இதற்கிடையில், அமெரிக்காவின் சுதந்திரப் போர் 1783 இல் முடிவடைந்து. அமெரிக்கா என்ற ஒரு புதிய நாடு பிறந்தது," என்று பிபிசியுடனான உரையாடலில் பேராசிரியர் ஜோசப் கூறினார். பட மூலாதாரம்,PRINT COLLECTOR இருப்பினும், வரலாற்றாசிரியர் ராஜ்மோகன் காந்தி தனது ' மார்டன் சவுத் இண்டியா: எ ஹிஸ்டரி ஃப்ரம் தி செவண்டீந்த் சென்சுரி டு அவர் டைமஸ்' என்ற புத்தகத்தில், அரபி கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் காரணமாக போர்ச்சுகல், ஹாலந்து, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மற்றும் அதன் காரணமாக அவர்களின் தொடர்பு பற்றிக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் கேள்வி என்னவென்றால், இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவிற்கு ஹைதர் அலியின் பெயர் எப்படி வந்தது? பிரிட்டனில் திப்பு மற்றும் ஹைதர் என்ற பெயர்கள் ஏன் வைக்கப்பட்டன இது இரண்டு ஆதாரங்களில் இருந்து உருவாகிறது: அமெரிக்க சுதந்திரப் போரின் முக்கிய வீரர்களுக்கு பிரெஞ்சு ராணுவ அதிகாரிகள் எழுதிய கடிதங்கள் மற்றும் குதிரைகள் என்கிறார் கனடாவின் எட்மண்டனில் இருந்து தொலைபேசியில் பிபிசியிடம் பேசிய வரலாற்றாசிரியர் அமீன் அகமது. பிரிட்டிஷ் ராணுவத்தில் ஜெனரலாகவும் லெப்டினன்ட் ஜெனரலாகவும் இருந்த என்காஸ்டரின் டியூக் ப்ரெக்ரீன் பெர்டி, குதிரைப் பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தனது ஒரு குதிரைக்கு ஹைதர் அலி என்று பெயரிட்டார் (1765). இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹைதர் அலி மைசூரின் ஆட்சியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இதற்கிடையில் கிழக்கிந்திய கம்பெனி திரிவாதியில் (பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள இடம்) தோற்கடிக்கப்பட்டது. திப்பு சுல்தானும் சிறு வயதிலிருந்தே கிழக்கிந்திய கம்பெனியின் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கினார். இதன் போது இங்கிலாந்தில் பந்தய குதிரைகளை வளர்ப்பவர் ஒருவர், பிறந்த குதிரைக்குட்டிக்கு திப்பு சாஹேப் என்று பெயர் சூட்டினார். பின்னர் இந்த குதிரைகளின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குதிரை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அங்கும் மைசூர் ஆட்சியாளர்களின் பெயரை குதிரைகளுக்கு சூட்டும் செயல்முறை தொடங்கியது. ஹைதர் அலி என்ற குதிரையின் வழித்தோன்றலைப் பற்றி, அமெரிக்காவின் போர்ட்ஸ்மவுத் நகரில் அச்சிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் பற்றி அமீன் அகமது எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் நகல் அமெரிக்க நாடாளுமன்ற நூலகத்தில் உள்ளது. பட மூலாதாரம்,BONHAMS 'துணிச்சலான முகலாய இளவரசர்' ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நீண்ட காலமாகப் போரிட்டபோதும், ஹைதர் அலி ஆங்கிலேயர்களுடன் வணிக மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை வைத்திருந்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்று அமீன் அகமது கூறுகிறார். சில ஆங்கிலேயர்கள் தங்கள் வளர்ப்புப்பிராணிகளுக்கு மைசூர் ஆட்சியாளர்களின் பெயரை சூட்ட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆங்கிலேயர்கள் தங்கள் பந்தய குதிரைகளுக்கு, எதிரிகளின் பெயரை ஏன் வைக்கிறார்கள் என்ற பிபிசியின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய வீரர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் குறித்த 1777 ஆம் ஆண்டின் குறிப்பு உள்ளது.அதில் பிரெஞ்சு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் நெகோம்டே டி டிரசான், பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு அனுப்பிய கடிதத்தில் 'துணிச்சலான முகலாய இளவரசர்' என்று அவரை அழைத்துள்ளார். ஹைதர் அலியுடன், பணிபுரியும் ஐரோப்பியர்களுடன் அவரை தொடர்பு கொள்ளச்செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,SOTHEBY'S அமெரிக்காவின் முதல் துணை அதிபராகவும், பின்னர் அதிபராகவும் இருந்த ஜான் ஆடம்ஸ் போன்ற அமெரிக்க போர் வீரர்களில் இருந்து, அமெரிக்காவின் ஆறாவது அதிபரான ஜான் குயின்சி ஆடம்ஸ், பின்னர் நான்காவது அதிபராக வந்த ஜேம்ஸ் மேடிசன் வரை அனைவருமே இந்தியப் போராட்டத்தை கூர்ந்து கவனித்தனர். பேரரசு விரிவாக்க லட்சியம் காரணமாக, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இந்தியத் துணைக்கண்டம் தொடர்பாக நீண்ட சண்டையும், போரும் நிகழ்ந்தன. இதில் கடைசியாக பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நீண்ட போர் நிலவியது. இறுதியில் பிரிட்டன் வெற்றிபெற்றது. அமெரிக்கப் புரட்சியின் கவிஞர் எழுதிய ஹைதர் அலி பற்றிய கவிதை பட மூலாதாரம்,SOTHEBY'S "அமெரிக்க சுதந்திரப் போருக்கும் மைசூர் ஆட்சியாளர்களுக்கும் இடையே பிரான்ஸ் ஒரு பெரிய பாலமாக இருந்தது. அங்கு பிரெஞ்சு நிதி மற்றும் ராணுவ உதவியால் அமெரிக்கப் போர் சாத்தியமானது. அதே நேரத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் ராணுவ பயிற்சி மற்றும் ராணுவ தொழில்நுட்பம் ஆகியவற்றைப்பெற பிரான்சுடன் மிக நெருக்கமான உறவுகளை பேணிவந்தனர்," என்று பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசப்பின் கூறுகிறார். பகிரப்பட்ட நட்பு மற்றும் பொது எதிரி (பிரிட்டன்) ஆகியவற்றின் விளைவாக அமெரிக்கப் புரட்சியின் கவிஞராக அறியப்படும் பிலிப் ஃப்ரீனோ, ஹைதர் அலி பற்றி எழுதிய கவிதையின் சில வரிகள் இதோ: கிழக்கின் இளவரசர் ஒருவரின் பெயர் இது அவர் இதயத்தில் சுதந்திர ஜோதி பற்றி எரிந்தது தன் நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கினார் ஆங்கிலேயர்களை பெரிதும் அவமானப்படுத்தினார்….. 1781 அக்டோபர் 19 ஆம் தேதி அமெரிக்கப் போராளிகள் பிரிட்டிஷ் ராணுவத்தை தோற்கடித்த பின்னர், நியூ ஜெர்சியின் ட்ரண்டனில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மது கோப்பைகளை முட்டி ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக்கொண்ட வாழ்த்துகளில் ஹைதர் அலியின் பெயராலும் வாழ்த்து கூறப்பட்டது. https://www.bbc.com/tamil/global-62181186
  14. எரிபொருள் விலையை குறைப்பதோடு சகலருக்கும் எரிபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட சுகவீனத்திற்காக விசேட தேவையுடைய சிறுவனை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வர ஓட்டோவிற்கு 8000ரூபா எடுத்திருக்கிறார்கள்.
  15. இலங்கை நெருக்கடி: குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? - அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம்தான் புதிய அதிபரைத் தேர்வு செய்யப்போகிறது. ஆனால் அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற தெளிவான முடிவு கிடைக்காத நிலையில், குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்வு செய்யும் சூழல் ஏற்படும். அதிபர் பதவிக்கான வேட்பு மனுக்கள் வரும் 19-ஆம் தேதி பெறப்படுகிறது. 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும். அன்றே யார் அதிபர் என்பது தெரிந்துவிடும். இலங்கை அரசியல் வரலாற்றில் அதிபர் பதவியில் இருந்து விலகி அதன் பிறகு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம்; தீவிரமடையுமா, தணியுமா? - கள நிலவரம் நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்தது ஏன்? 'வைரல் போட்டோ' போராட்டக்காரர் கூறுவது என்ன? 'அதிகரிக்கும் கோபம்; ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்' - இலங்கை போராட்டத்தில் செய்தியாளர் கண்டவை இந்த வாக்கெடுப்பில் போட்டி இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. தற்போது அதிபரின் பொறுப்புகளை தற்காலிகமாக மேற்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த டலஸ் அழகம்பெரும உள்ளிட்ட பலர் இதில் போட்டியிடுவார்கள் என்பது தெரியவருகிறது. இலங்கை அரசியல் சட்டப்படி இடைக்காலத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்படும் அதிபர், முந்தைய அதிபரின் பதவிக் காலத்தை நிரப்பும் வகையிலேயே செயல்படப் போகிறார். அதனால் முழு பதவிக் காலமும் புதிய அதிபருக்குக் கிடைக்காது. அதிபர் பதவி காலியானது முதல் ஒரு மாதத்துக்குள்ளாக புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று இலங்கை அரசியல் சட்டம் கூறுகிறது. இந்த நடைமுறைகள்தான் இப்போது தொடங்கியிருக்கின்றன. அதிபர் தேர்வுக்கான வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? அறிவிக்கப்பட்டபடி வரும் 20-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பெட்டி வைக்கப்படும். பின்னர் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் அழைத்து அவர்களுக்கு நாடாளுமன்ற தலைமைச் செயலாளர் வாக்குச் சீட்டு ஒன்றை அளிப்பார். இதில் வேட்பாளர்கள் பெயர்களும் அவற்றுக்கு எதிரே கட்டங்களும் இருக்கும். இந்த வாக்கெடுப்பு விருப்ப வாக்கு முறையில் (Preferential voting) நடக்கும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடும்போது ஒவ்வொருக்கும் ஒன்று முதல் எண்கள் முறையில் வரிசைப்படுத்தி விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் எந்த வேட்பாளர் அதிபராக வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரது பெயருக்கு நேரே உள்ள கட்டத்தில் ஒன்று எனக் குறிப்பிட வேண்டும். இதேபோல அடுத்தடுத்த விருப்பங்களை இரண்டு, மூன்று என வரிசைப்படுத்த வேண்டும். ராமசாமி, குப்புசாமி என இருவர் போட்டியிடுகிறார்கள் என்றால் ராமசாமிக்கு 1 என்றும் குப்புசாமிக்கு 2 என்றும் தனது விருப்பத்தேர்வை அளிக்கலாம். இதற்கு என்னவென்றால், ராமசாமி தனது முதல் விருப்பம் என்றும் குப்புசாமி இரண்டாவது விருப்பம் என்பதும் இதற்குப் பொருள். வாக்குப் பதிவு முடிந்த பிறகு ஒன்று என்ற விருப்பத் தேர்வின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படும். 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் அவரே அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார். மாறாக யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்க வில்லை என்றால், குறைந்த எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். அவரது வாக்குகளில் இரண்டாவது விருப்பத் தேர்வு யாருக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் அந்த வாக்குகள் மற்றவர்களுக்குப் பிரித்து அளிக்கப்படும். அதனால் ஒரே ஒரு முறை அளிக்கப்பட்ட வாக்குகள் அடுத்தடுத்த சுற்றுகளாக எண்ணப்படும். பட மூலாதாரம்,PM OFFICE எப்போது குலுக்கல் முறையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார்? விருப்பத் தேர்வு முறையின் இறுதியில் வாக்குகள் எண்ணப்படும்போது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அப்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றவர் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டும அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்து சமநிலை ஏற்பட்டால் குலுக்கல் முறையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார். அதாவது சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அதிலிருந்து ஒருவரை அதிபராகத் தேர்வு செய்யும் நிலை ஏற்படும். "இதுவரை இலங்கை வரலாற்றில் யாரும் குலுக்கல் முறையில் அதிபராகத் தேர்வு செய்யப்படவில்லை. இந்த முறையும் அப்படி நடப்பதற்கான வாய்ப்புக் குறைவுதான்" என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாள்தோறும் புதிய திருப்பங்களைக் காண்டும் இலங்கை அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் பல முனைப் போட்டியாக அதிபர் தேர்தல் மாறும் சூழலில் இது நடக்கவே நடக்காது என்று உறுதியாகக் கூற முடியாது. அப்படியொரு சூழல் ஏற்படக்கூடும் என்றுதான் இலங்கையின் அரசியல் சட்டமே குலுக்கல் முறையில் அதிபர் தேர்ந்தெடுக்கும் முறையை வரையறுத்திருக்கிறது. https://www.bbc.com/tamil/sri-lanka-62195368
  16. 18 வயதில் 13 மொழிகள்: போஜ்புரியில் பேசி காணாமல் போனவரை கண்டறிய உதவிய மாணவி பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 18 வயதில் 13 மொழிகள் கற்ற சென்னை கல்லூரி மாணவி ஒருவர், திருப்பூரில் காணாமல் போன வடமாநில இளைஞரை கண்டறிய போஜ்புரி மொழியில் பேசி, ரயில்வே காவல்துறைக்கு உதவி, அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளார். பிறப்பால் கேரளாவைச் சேர்ந்த ஆர்த்ரா, தனது தாயாரின் பணி இடமாற்றம் காரணமாக இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் பேசும் மொழிகளை கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். சிறு வயதில் இருந்து பல்வேறு மொழிகளின் பரிச்சயம், இவரது மொழி ஆர்வத்தைத் தூண்டவே, தனது சொந்த முயற்சியால், 13 மொழிகளில் பேசும் திறனை வளர்த்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனது பன்மொழித் திறமைக்காக படிக்கும் வாய்ப்பை பெற்ற மாணவி ஆர்த்ரா, காணாமல் போன உத்தர பிரதேச இளைஞர் ஒருவரை கண்டறிய அவரது குடும்பத்துடன் போஜ்புரி மொழியில் பேசி காவல்துறைக்கு தகவல் கொடுத்து உதவியுள்ளார். ஆர்த்ரா தயார் விமலாவிடம் பேசி போஜ்புரியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தகவல்களுடன், காணாமல் போன பங்கஜ்ஜின் புகைப்படத்தை இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். கிரிப்டோ ராணி: அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அதிகம் தேடும் 10 பேரில் ஒருவரானது எப்படி? தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 24 நாள்களில் 9வது முறையாக தொழில்நுட்பக் கோளாறு உபி இளைஞரை கண்டுபிடிக்க உதவி கோவை ரயில் நிலையத்தில் உத்தர பிரதேசம் செல்லும் ரயிலை தவறவிட்டு, வேறு ரயிலில் ஏறிய பங்கஜ், புதுடெல்லி ரயில் நிலையத்தில் இறங்கியதும், அங்குள்ள காவல்துறையினர் அவரது புகைப்படத்தை வைத்து அடையாளம் கண்டனர். விசாரணைக்கு பின்னர், பங்கஜ் அவரது ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பங்கஜ்ஜை மீட்கும் பணியில் ஈடுபட்டது குறித்து பேசிய ஆர்த்ரா ''எனக்கு 13 மொழிகள் தெரியும் என கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தேன். காணாமல் போன பங்கஜ் கெளதமின் தாயார் விமலா தேவிக்கு போஜ்புரி மொழிமட்டும்தான் பேச தெரியும். எனது கல்லூரியில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மன்றம் மூலமாக போஜ்புரி பேச தெரிந்தவர்கள் யார் என விசாரித்தபோது, நான் முன்வந்தேன். ரயில்வே காவல்துறையிடம் மொழி தெரியாமல் சிரமப்பட்ட விமலாவிடம் பேசி தேவையான தகவல்களை மொழிபெயர்த்து உதவினேன். எனது மொழிபெயர்ப்பு திறன் ஒருவரை மீட்க உதவியது என்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. என் தாயார் பெருமை அடைந்துள்ளார்,'' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்த்ரா பேசும் மொழிகளின் பட்டியலை கேட்டோம். ''மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், கோர்ட்டா, போஜ்புரி மகி, இந்தி, ஆங்கிலம், மார்வாடி போன்ற மொழிகளை பேசுவேன். நாக்புரி, சந்தாளி, பிகாரி ஆகிய மொழிகளில் சரளமாக பேசமுடியாது என்றாலும் அந்த மொழிகளில் பரிச்சயம் உண்டு. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நன்றாக எழுதுவேன். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் எழுத்து பயிற்சி எடுத்துவருகிறேன்,''என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஆர்த்ரா. பலமொழிகளை கற்பதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டபோது, ''எனது பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால், தாய்மொழி மலையாளம். ஐந்து வயது வரை நான் கேராளாவில்தான் இருந்தேன். மலையாளம் எனக்கு நன்றாக பேச தெரியும். அதோடு, அவ்வப்போது நாங்கள் கேரளாவுக்கு வந்து தங்கி செல்வது வழக்கம். மூணார் பகுதியில் நான் வளர்ந்ததால், அங்கு பணியாற்றும் பலரும் தமிழர்கள் என்பதால் தமிழ் மக்களிடம் பேசி தமிழ் கற்றுக் கொண்டேன். அடுத்ததாக, என் தயார் ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா ஆகிய பகுதிகளில் பணியாற்றினார். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு வரை திருப்பதி மற்றும் ராமகுண்டம் பகுதியில்தான் நாங்கள் வாசித்தோம். அங்கு தெலுங்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழியை கற்றார் என் சகோதரி தெலுங்கு பேசுபவரை திருமணம் செய்துள்ளார் என்பதால்,நாங்கள் தெலுங்கு பேசுவதில் சிரமம் இருந்ததில்லை,''என தென்னிந்திய மொழிகளை கற்ற அனுபவத்தை பகிர்ந்தார். அடுத்ததாக அவர் சென்றது மத்திய பிரதேசம். ''மத்திய பிரதேசத்தில் சிவபுரி பகுதியில் மூன்று ஆண்டுகள் அங்கிருந்தோம். நான் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தேன். அங்குதான் நான் இந்தி மொழியை நன்றாக கற்றேன். இடையில் சில காலம் பெங்களுருவில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு கன்னடம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், நாங்கள் ஜார்கண்ட்டில் மூன்று ஆண்டுகள் வசித்தோம். நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன் என்பதால், ஜார்கண்ட்டில் பேசப்படும் கோர்ட்டா மொழியை பேசக்கற்றுக்கொண்டேன். அதோடு, இந்தியின் தழுவலாக இருக்கும் நாக்புரி, சந்தாலி மொழியில் பேசும் திறனை வளர்த்தேன். ஆனால் பெரும்பாலான வடஇந்திய மொழிகளில் எழுத்து நடை இல்லை என்பதால், இந்த மொழிகளை பேசுபவர்களோடு தொடர்பில் இருந்தால்தான் கோர்வையாக பேசமுடியும். அதனால் நாக்புரி மற்றும் சந்தாளியில் முழுமையாக பேசமுடியாது. 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் வரை நாங்கள் பிகாரில் இருந்தோம். அங்கு போஜ்பூரி,மகி மொழிகளை கற்றுக்கொண்டேன்,''என வட இந்திய மொழிகள் கற்றுக்கொண்டதன் பின்னணி பற்றி குறிப்பிட்டார். உணவு வேட்கைக்கும் மன அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு? எப்படி தடுக்கலாம்? பேகம் ஹஸ்ரத் மஹால்: ஆங்கிலேயர்களை அலற விட்ட ஆஃப்ரிக்க அடிமையின் மகள் ''என் தாயார் பல மாநிலங்களில் பணியாற்றினார். அவருடன் நானும் செல்லவேண்டிய கட்டாயம், அங்குள்ள பள்ளிகளில்தான் படித்தேன் என்பதால், அங்குள்ள மொழியை கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போதுதான் அந்த மொழிகளை கற்றுக்கொண்டதன் பயனை தெரிந்து கொள்கிறேன். மேலும் மொழிகளை கற்பதில் ஆர்வமாக இருக்கிறேன். என் பட்டப்படிப்பு பயில மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் இருப்பேன். அதனால் தமிழ் மொழியை பேச மட்டும் தெரிந்த நான், இனி அதை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொள்வேன்,'' என்கிறார் ஆர்த்ரா. ஆர்த்ராவின் திறமையை மேம்படுத்தும் வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக அவர் பயிலும், செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி நிர்வாகமும் தெரிவித்துள்ளது. ''ஆர்த்ராவின் மொழி புலமையை அதிகரிக்க நாங்கள் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவோம். மேலும் ஆள் கடத்தல் தடுப்பு கிளப்பின் செயல்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்கிறார் கல்லூரியின் தலைவர் ஸ்ரீதேவி. ஆள் கடத்தலை தடுப்பதற்காக தமிழகத்தில் 80 கல்லூரிகளில் மாணவர்களின் பங்களிப்புடன் கிளப் செயல்பட்டு வருவதாக கூறும் சமூகஆர்வலர் ஹரிஹரன், ''ஆர்த்ரா போல பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வந்து தங்கி படிக்கும் மாணவ,மாணவிகள் மூலம் வடமாநில மொழிபெயர்ப்பு செய்யும் வசதி மேம்படும். அவர்களை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கியுள்ளோம். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பணியாளர்கள், கடத்தப்பட்டு வரும் சிறுவர், சிறுமிகள், பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் நபர்களை மீட்பதற்கு இந்த மாணவ மொழிபெயர்ப்பாளர்கள் மிகவும் உதவுவார்கள்,'' என்கிறார் ஹரிஹரன். https://www.bbc.com/tamil/india-62185695
  17. ஒரு வேளை இவர்களுக்கு எழுதிய கடிதமோ?! சீன வானொலி அறிவிப்பாளர்கள் கலைமகள் மற்றும் நிலானி.
  18. இந்து திருமணச் சட்டம்: 'மனைவி தாலியை கழற்றியதால் மன உளைச்சல்’ எனக் கூறி கணவன் விவாகரத்து பெறலாமா? பத்மா மீனாட்சி பிபிசி தெலுங்கு செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "தன் கணவர் மனைவியின் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது" ஆகியவை கொடூரமான செயல்களாக கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தாலியை அகற்றுவது திருமண உறவைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது என்பதை நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது . வழக்கின் பின்னணி ஈரோட்டை சேர்ந்த சிவகுமார் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், கருத்துவேறுபாடின் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு சிவகுமார் ஈரோடு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தன் மனைவி தன்னை சந்தேகித்துக் கொண்டே இருப்பதாகவும், தான் கட்டிய தாலியை அணியாமல் மறுப்பது தனக்கு மன உளைச்சலை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் சிவகுமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் சிவகுமார். பாஜக எதிர்ப்பை மீறி தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார் குஜராத்தின் ஷாமா பிந்து 'கண்கள் மட்டுமே சந்தித்தன, காதல் தொடங்கியது' – ஒரு தன்பாலின தம்பதியின் கதை தம்பதிகள் விருப்பம் இல்லாமல் சேர்ந்து வாழ நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியுமா? ஸ்ரீ வித்யாவுடன் சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று சிவக்குமார் மேல்முறையீடு செய்துள்ளார். தன்னை விட்டு வெளியேறும் போது திருமண உறவின் அடையாளமாக கருதப்படும் தாலியை ஸ்ரீவித்யா நீக்கியதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ வித்யா உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது கணவர் தனது சக ஊழியர்களுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருப்பதாகவும், அவர் தினமும் அதிக மணிநேரம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை வைத்துள்ள பெண்ணிடம் பேசுவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அதே புகாரில், தங்கள் மகளின் எதிர்காலம் கருதி அவருடன் தான் இன்னும் வாழ விரும்புவதாகவும் ஸ்ரீவித்யா கூறியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் சிவகுமார்-ஸ்ரீவித்யா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆனால், விவாகரத்து வழங்குவதற்கான காரணங்களாக நீதிமன்றம் கூறியது தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES தன் கணவர் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது ஆகியவை இந்து திருமண சட்டம் 13(1)(ia) என்ற பிரிவின் கீழ் வருவதால் இத்தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயல்கள் கணவரின் நற்பெயருக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இத்துடன் மனைவி தனது தாலியை கழற்றுவது என்பது திருமண உறவைத் தொடர்வதில் அவருக்கு உள்ள ஆர்வமின்மையைக் குறிக்கிறது என்று நீதிமன்றம் காரணம் கூறியது. "நம் சமூகத்தில் நடக்கும் திருமணச் சடங்குகளில் தாலி கட்டுவது இன்றியமையாத சடங்காக இருக்கிறது. தாலியை அகற்றுவது பெரும்பாலும் சம்பிரதாயமற்ற செயலாகக் கருதப்படுகிறது. திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தாலியை அகற்றுவது போதுமானது என்று கூறவில்லை, ஆனால் பிரதிவாதியின் சொல்லப்பட்ட செயலானது, இருதரப்பினரின் நோக்கங்களைப் பற்றி ஒரு அனுமானத்தை வரைவதற்கான ஒரு சான்றாக விளங்குகிறது. பிரிவின் போது தாலியை அகற்றும் பிரதிவாதியின் செயல் மற்றும் பதிவில் கிடைக்கப்பெறும் பல்வேறு சான்றுகள், இரு தரப்பினருக்கும் சமரசம் செய்தும் திருமண பந்தத்தைத் தொடரும் எண்ணம் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வருமாறு எங்களை நிர்பந்திக்க வைக்கிறது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. சட்டம் என்ன சொல்கிறது? "ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொதுவெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படும்" என்று ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் சிந்தலா கூறியுள்ளார். "பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது" என்று ஸ்ரீகாந்த் சிந்தலா கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES "தாலி என்பது மதச் சடங்கு. பரஸ்பர சம்மதத்துடன் அல்லது நாகரீக நோக்கத்திற்காக தாலியை அகற்றுவது வேறு விஷயம். நீதிமன்றங்களும் தாலியை அகற்றுவதன் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் சூழலையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தாலியை அகற்றுவது மட்டும் கொடூர செயலாக கருதப்பட்டு விவாகரத்து வழங்குவதற்கான காரணமாக சொல்லப்படாது" என்று ஸ்ரீகாந்த் சிந்தலா கூறியுள்ளார். "இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கூடுதல் ஆதாரங்களை கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தாலியை கழற்றுவது மட்டுமே கொடூரச் செயலாகாது," என்கிறார் ஸ்ரீகாந்த் அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் வல்லபா v/s ஆர். ராஜா சபாஹி 2016 தீர்ப்பை மேற்கோள் காட்டியது. "வல்லபா மற்றும் ஆர். ராஜா சபாஹி வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் காரணம் திருமணமான எந்த இந்து பெண்ணும் தன் கணவனின் வாழ்நாளில் எந்த நேரத்திலும் தாலியை அகற்ற மாட்டார்கள் என்பது தெரிந்ததே. மனைவியின் கழுத்தில் உள்ள தாலி என்பது திருமண வாழ்க்கையின் தொடர்ச்சியைக் குறிக்கும் புனிதமான விஷயம். கணவனின் மரணத்திற்குப் பிறகுதான் தாலி என்பதே அகற்றப்படும். எனவே, மனுதாரர் மனைவியால் "தாலி" அகற்றப்பட்டதை மிக உயர்ந்த மன உளைச்சலை பிரதிபலிக்கும் செயலாகக் கூறலாம். ஏனெனில் அது வேதனையை உண்டாக்கி, பிரதிவாதியின் உணர்வுகளைப் புண்படுத்தும்". என நீதிபதி தெரிவித்திருந்தார். தாலி என்பது உறவுக்கு அடிப்படையா? "தற்போதைய வழக்கை எடுத்துக் கொண்டால் தாலியை அகற்றுவது என்பது ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது இது நாம் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது," என்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சாய் பத்மா கூறியுள்ளார். "பழங்காலங்களில் சிறுமிகளுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது மற்றும் தாலி, மெட்டி போன்ற திருமண அடையாளங்கள் பெண்களை அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறையாக கருதப்பட்டன. நவீன உலகில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தாலியை கூட அணிவதில்லை" என்று சாய் பத்மா கூறினார். "உறவை நிர்ணயிப்பதில் அடையாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது. பரஸ்பர நம்பிக்கை, பொறுப்பு, புரிதல் இல்லாததால் முறிந்து போன திருமண அமைப்பை தாலி மூலம் உயிர்ப்பிக்க முடியும் என்று சொல்வது வேடிக்கையானது. அது சரியல்ல. தாலி அணிவதையும் அணியாததையும் வேறு ஏதோ ஒரு நோக்கமாக பார்க்க வேண்டும். இந்த தீர்ப்பு தாலி அணியாதவர்கள் தங்கள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று சொல்வது போல் தோன்றுகிறது" என்று சாய் பத்மா கருத்து தெரிவித்துள்ளார். முஸ்லிம் பலதார மணம் இந்தியாவில் பெரிய பிரச்னையா? அதற்கு எதிராக வழக்கு ஏன்? ஜார்கண்டில் ஒரு பாரம்பரியம்: வாழ்ந்து பார்த்த பிறகு திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES சில திருமண மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமல் இருப்பது, வேண்டுமென்றே திருமண உறவைப் புறக்கணிப்பதாகும் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்ரா லேகா கூறியுள்ளார். "திருமணமானவர் மற்றும் திருமணமாகாதவர்களை வேறுபடுத்துவதற்காக தாலி அணிதல் என்ற நடைமுறை பண்டைய காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்." "தற்போதைய நவீன யுகத்தில் தாலி அணிவது எவ்வளவு முக்கியம் என்பதும் சிந்திக்க வேண்டியது அவசியம். தாலி அணியாமல் மனைவியாக இருக்கலாம். தாலி அணிவது மனைவிமீது கணவருக்கு உரிமை வழங்குகிறதா?" சித்ரா கேள்வி எழுப்பியுள்ளார். பட மூலாதாரம்,PUNEET BARNALA/BBC ஆணாதிக்கத்தின் அடையாளங்கள் "தாலி மற்று மெட்டி அணிவது, நெற்றியில் குங்குமமிடுவது ஆகியவை திருமணத்தின் அடையாளங்கள் . ஆனால், அதை அணியாதது தனது கணவர்மீது ஏற்படும் விருப்பமின்மை மற்றும் அன்பின் குறைவு என்று சொல்ல முடியாது" என்று பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குனர் ஏ.எல்.சாரதா கூறியுள்ளார். மேலும், இந்த அடையாளங்கள் பெண்களுக்கு மட்டும் ஏன்? என்று கேள்வி எழுப்பினார். "இவை ஆணாதிக்கத்தின் அடையாளங்கள் . அவற்றை அணிவது அல்லது அணியாதது உறவின் வலிமையை தீர்மானிக்காது, என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-62180834
  19. நீட் தேர்வு பயம்: அரியலூரில் மாணவி விபரீத முடிவு- நடந்தது என்ன? ஆர்.அருண்குமார் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் நீட் தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்ததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? அரியலூர் ரயில்வே நிலையம் அருகே நடராஜன், உமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் கடந்த ஆண்டு பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். இதையடுத்து இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். இன்று அதிகாலை மாணவி தூக்கில் தொங்குவதை அவரது தாய் உமா பார்த்துள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட அரியலூர் நகர போலீசார் மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர். அதில், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், வெளிநாட்டில் இருக்கும் தனது தந்தை, அங்கிருந்து வந்து ஊரிலேயே தங்கி இருக்க வேண்டும் எனவும் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர். தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது? தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி? தமிழக காவலர்களின் தற்கொலை விகிதம் அதிகரிப்பு - அதிர்ச்சியூட்டும் காரணங்கள் இதைத்தொடர்ந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து பேசிய அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, "நிஷாந்தி 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்துள்ளார். பிறகு நீட் தேர்வு கோச்சிங் செண்டருக்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நாளை நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், நேற்று இரவு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், மாணவி எழுதி ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது," என்றார். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 மாணவி நிஷாந்தி கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். தற்போது இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும், நீட் தேர்வு பயத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார். தற்கொலை எண்ணமும் பார்வையும் பட மூலாதாரம்,AURUMARCUS மன நல மருத்துவர் ரம்யா சம்பத், தற்கொலை எண்ணம் பற்றிய தமது பார்வையை சில ஆண்டுகளுக்கு முன்பு பிபிசி தமிழிடம் பகிர்ந்திருந்தார். அதில் சிலவற்றை இங்கே வழங்குகிறோம். நம்மிடையே தற்கொலையை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது. மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை. பொதுவாக, அந்த நபர் தனது தற்கொலை உணர்வுகளை யாரேனும் ஒருவரிடமாவது பகிர்ந்து கொள்கிறார். அது நிராகரிக்கப்படும்போதே, நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். 'எனக்கு வாழப் பிடிக்கவில்லை", "நான் பாரமாகி விட்டேன்", "நான் இறப்பதே மேல்" என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை 'சும்மா சொல்கிறார்கள்", 'தானாகவே சரியாகிவிடும்" என்று எண்ணிவிடாதீர்கள். அவர்களுடைய மனச்சோர்வின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள் இருக்கலாம். நீங்களும் தற்கொலையை தடுக்கலாம் பட மூலாதாரம்,DOMOSKANONOS ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும். சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. இந்த வருடம் உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் "Working together to Prevent Suicide" என்பதே. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு முதல்படி, தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்துங்கள். மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள். உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள். என்ன செய்வது என்று தெரியமால் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு என்கிறார் மன நல மருத்துவர் ரம்யா சம்பத். தற்கொலை எண்ணம் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி உதவி எண் '104' பட மூலாதாரம்,GETTY IMAGES அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் அக்கறையுடன் இருப்பார்கள். வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக '104' என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இதன் அடுத்தகட்டமாக, `மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. `இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும். https://www.bbc.com/tamil/india-62189298
  20. தடைசெய்யப்பட்ட வார்த்தைகள்: சொற்களைப் பார்த்து அஞ்சுகிறதா அரசு? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ஆம் தேதிவரை நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தகாத வார்த்தைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் பயன்படுத்தத் தகாத வார்த்தைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், அரசியல்வாதிகள் விவாதத்தின்போது பயன்படுத்தும் மிகச் சாதாரணமான வார்த்தைகள்கூட இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஆத்திரமூட்டியிருக்கிறது. மக்களவைச் செயலகம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தகாத வார்த்தைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், சகுனி, சர்வாதிகாரி, ஜூம்லாஜீவி, கோவிட்டை பரப்புபவர், காதுகேட்காத அரசு, அகங்காரம், கறுப்பு தினம், குண்டர்களின் அரசு, இரட்டை வேடதாரி, காலை நக்குபவர், நாடகம், ஊழல், திறமையற்ற உள்ளிட்ட பல வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வார்த்தைகள் தடையை மீறி பயன்படுத்தப்பட்டால், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிடக்கூடும். ஆனால், இந்தத் தடை எதிர்க்கட்சிகளை ஆத்திரமடைய வைத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள், எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்கப் பயன்படுத்திய வார்த்தைகளின் தொகுப்பு என்கின்றன எதிர்க்கட்சிகள். 'மனைவி தாலியை கழற்றியதால் மன உளைச்சல் ஆகிறது’ எனக் கூறி கணவன் விவாகரத்து பெறலாமா? வசியம் செய்யும் உயிரிகளின் பிரமிக்க வைக்கும் வரலாறு "மோடி அரசு குறித்த உண்மையைத் தெரிவிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. விஸ்வகுரு, அடுத்த என்ன?" எனக் கேட்டிருக்கிறார் ஜெய்ராம் ரமேஷ். திருணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மொஹுவா மைத்ரா, இன்னும் கடுமையாக அரசைச் சாடியிருக்கிறார். "நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் பட்டியலில் சங்கி என்ற வார்த்தை இல்லையே? இந்தியாவைக் காப்பாற்ற பா.ஜ.க. எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைச் சொல்ல எதிர்க்கட்சிகள் பயன்படுத்திய வார்த்தைகள் அனைத்தையும் அரசு தடைசெய்துவிட்டது" என்கிறார் மொஹுவா. பட மூலாதாரம்,GETTY IMAGES நாடாளுமன்ற செயலகம் இதுபோல, பயன்படுத்தத்தகாத வார்த்தைகளின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் வார்த்தைகள் பல்வேறு விதங்களில் தொகுக்கப்படுகின்றன. இந்திய மாநிலங்களின் சட்டப்பேரவைகளால் அறிவிக்கப்பட்ட வார்த்தைகள், காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களில் பயன்படுத்தத்தகாத வார்த்தைகளாக அறிவிக்கப்பட்டவை ஆகியவற்றை மக்களவை செயலகம் தொடர்ந்து தொகுத்து வருகிறது. 2018லிருந்து தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டாலும், இந்த ஆண்டுதான் இந்தப் பட்டியல் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இப்போது வெளியிடப்பட்டிருக்கும் வார்த்தைகளின் தொகுப்பு கடந்த 2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவைகளாலும் மக்களவை, மாநிலங்களவை சபாநாயகர்களாலும் பயன்படுத்தத்தகாத சொற்களாக அறிவிக்கப்பட்டவை. மேலும், 2020ஆம் ஆண்டில் காமல்வெல்த் நாடுகளின் பாராளுமன்றத்தில் பயன்படுத்தத்தகாத வார்த்தைகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சில வார்த்தைகளைத் தனியாகப் பார்க்கும்போது தகாத வார்த்தைகளாக இல்லாவிட்டாலும்கூட, வேறு வார்த்தைகளுடன் சேர்த்துப் பார்க்கும்போது தகாத பொருளைத் தரலாம் என்பதால் அவை இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறது நாடாளுமன்றச் செயலகம். இந்தத் தகாத வார்த்தைகளின் பட்டியல், இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பட்டியல் ஆங்கில வார்த்தைகளின் பட்டியல். இரண்டாவது, இந்தி வார்த்தைகளின் பட்டியல். பிற மொழிகளில் உள்ள தகாத வார்த்தைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, முதல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. " துரோகம், ஊழல், முதலைக் கண்ணீர், ஏமாற்று, இழிவான, நாடகம், இரட்டைத் தன்மை, கண் துடைப்பு, போலி, பொய், மோசடி, வதந்திகள், பேராசை, முதிர்ச்சியின்மை, லாலிபாப், குழப்பம், தவறான தகவல், தவறாக வழி நடத்துவது, வெட்கம் - இவை எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லையே. இந்த வார்த்தைகள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாதே. இந்தப் பட்டியலை தயாரித்தவர்களை பாராட்டலாம். இந்த அரசின் மீது என்ன விமர்சனங்கள் வரும் என்பதை யோசித்து வார்த்தைகளை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்தச் சொற்கள் இல்லாமல் போனால் யாரும் கவலைப்பட போவதில்லை. உங்கள் பெயர்களே போதுமானது" என்கிறார் மதுரைத் தொகுதியின் சிபிஎம் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்தக்கூடாது என்று சொல்லியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான நேரடித் தாக்குதல் இது. ஜனநாயகத்தின் குரல்வளை இந்த அரசால் நெரிக்கப்படுகிறது." என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES நாடாளுமன்ற நடைமுறைகள் கடந்த சில ஆண்டுகளாக அர்த்தமற்றதாக, பொருளற்றதாக மாற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியான நடவடிக்கைதான் இது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார். "வார்த்தைகளுக்கு என தனியான அர்த்தம் கிடையாது. அது வரும் இடத்தைப் பொறுத்துதான் அர்த்தத்தைப் பெறுகிறது. ஒரு சூழலில் ஒரு பொருளைத் தரும் வார்த்தை இன்னொரு சூழலில் இன்னொரு அர்த்தத்தைத் தரும். இந்தப் பட்டியல் எந்திரத்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது" என்கிறார் அவர். சபாநாயகரைப் பார்த்து வழக்கமாக உறுப்பினர்கள் சொல்லும் வாக்கியங்களையும் தடைசெய்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ரவிக்குமார். "நீங்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதைத் தடை செய்திருக்கிறார்கள். இப்படி வழக்கமாகப் புழங்கும் சொற்களையே தடை செய்தால், எதைத்தான் பேசுவது? இப்படி பேசக் கூடாத சொற்களைப் பட்டியலிடுவதற்குப் பதிலாக, இதைத்தான் பேச வேண்டும் என்று சொல்லி அதற்கான சொற்களை பட்டியலிட்டால் பிரச்சனையில்லாம்ல இருக்கும். தொடர்ந்து நாடாளுமன்ற மரபுகள் மோசமாக்கப்பட்டு வருகின்றன. எந்த மசோதா மீதும் சரியாக விவாதம் நடப்பதில்லை. குறைந்தபட்ச நேரம்கூட ஒதுக்காமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. நாடாளுமன்ற நடைமுறை பலவிதங்களிலும் முடக்கப்படுகிறது. பொருளற்றதாக மாற்றப்படுகிறது. ஆகவேதான், இந்தத் தடைசெய்யப்பட்ட சொற்களின் பட்டியல் நம்மைப் பெரிய நெருக்கடியாக உணர வைக்கிறது" என்கிறார் ரவிக்குமார். இந்தப் பட்டியலுக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமொன்றை அளித்திருக்கிறார். "இந்தக் கையேடு வெளியிடுவது 1954ஆம் ஆண்டிலிருந்து இருக்கும் நடைமுறைதான். எந்த வார்த்தையும் தடைசெய்யப்படவில்லை. எம்.பிக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகத் தெரிவிக்கலாம். அந்த உரிமையை யாரும் பறிக்கவில்லை. ஆனால், சபையின் மாண்புக்கு ஏற்ப பேச வேண்டும். ஆளும் கட்சிகள் பயன்படுத்திய வார்த்தைகளும் கடந்த காலத்தில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்திருக்கிறார். தடைசெய்யப்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அந்த வார்த்தையை மட்டும் நீக்குவதா, வரியையே நீக்குவதா அல்லது அந்த ஒட்டுமொத்தப் பேச்சையும் நீக்குவதா என்பதை சபாநாயகர்தான் முடிவெடுப்பார். ஜூலை 18ஆம் தேதி அவை துவங்கும்போது, இந்தத் தடையின் அர்த்தம் என்ன என்பது தெளிவாகிவிடும். https://www.bbc.com/tamil/india-62188903
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.