Everything posted by ஏராளன்
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டு கத்தார் சிறையிலிருக்கும் எட்டு இந்திய முன்னாள் கடற்படையினர் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பு, கத்தார் சிறையில் உள்ள எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை இந்திய தூதர் சந்தித்தார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை (டிசம்பர் 7) தெரிவித்தார். இந்த எட்டு இந்திய அதிகாரிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கத்தார் சிறையில் உள்ளனர். அக்டோபர் 26 அன்று, கத்தார் நீதிமன்றம் இந்த எட்டு இந்திய அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்தது. இந்த முடிவால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இதற்கு தீர்வு காண அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மரண தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் இந்த எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்திருந்தனர். ‘கைதிகளைச் சந்திக்க அனுமதி கிடைத்தது’ டிசம்பர் 7-ஆம் தேதி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்திய அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். “இது கைதிகளின் குடும்பம் சார்பாகச் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு விசாரணைகள் நடந்தன. ஒன்று நவம்பர் 30-ஆம் தேதியும் மற்றொன்று நவம்பர் 23-ஆம் தேதியும் நடந்ததாக நான் நினைக்கிறேன்,” என்றார். மேலும், அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடக்கும் என்று நினைப்பதாகவும், வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதற்கு அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். "இதற்கிடையில், டிசம்பர் 3 அன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள எட்டு பேரையும் சந்திக்க எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது," என்றார். ‘தி டெலிகிராஃப்’ செய்தி இணையதளத்தின்படி, இதற்கு முன்பே இந்திய தூதரக அதிகாரிக்கு தூதரக அணுகல் கிடைத்தது. கடந்த வாரம் துபாயில் நடந்த COP28 உச்சிமாநாட்டின் போது கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தபோது பிரதமர் மோதி இந்த விவகாரத்தை எழுப்பினாரா என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாக்சியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு நேரடியான பதிலை அளிக்காமல், சமூக வலைதளமான X-இல் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவை பாக்சி குறிப்பிட்டார். அந்தப் பதிவில், “இந்தியா-கத்தார் இருதரப்பு உறவுகள் குறித்தும், கத்தாரில் உள்ள இந்திய சமூகம் குறித்தும் நாங்கள் உரையாடினோம்,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி என்ன நடந்தது இச்சம்பவத்தில்? 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கத்தார் அரசாங்கம் 8 முன்னாள் இந்திய கடற்படையினரைக் கைது செய்தது. அவ்வாண்டு மார்ச் மாதம் அவர்கள் மீது உளவு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கைது செய்யப்பட்ட எட்டு இந்திய குடிமக்களும் முன்னாள் கடற்படை அதிகாரிகள். கத்தாரில் இருக்கும் ஜாஹிரா அல் அலாமி என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரைத் தவிர்க்கக்கூடிய இத்தாலிய உயர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். நிறுவனத்தில் 75 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரிகள். அந்நிறுவனம் 2022-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி நிறுவனத்தை மூடப்போவதாக கூறியிருந்தது. நிறுவனத்தின் பின்னணி அந்நிறுவனத்தின் இணையதளத்தில், அது கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உள்ளூர் வணிகப் பங்காளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தனியார் நிறுவனம் கத்தார் ஆயுதப்படைகளுக்கு பயிற்சி மற்றும் சேவைகளை வழங்கி வந்தது. பாதுகாப்பு உபகரணங்களை இயக்குதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் தன்னை ஒரு நிபுணராக இந்நிறுவனம் விவரிக்கிறது. இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் பல இந்தியர்களும் அடங்குவர். "பாதுகாப்பு உபகரணங்களை இயக்குவதிலும் மக்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் இது கத்தாரில் முன்னணியில் உள்ளது" என்று நிறுவனத்தின் LinkedIn பக்கம் கூறுகிறது. மேலும், "பாதுகாப்பு மற்றும் விண்வெளி விஷயங்களில் அல் ஜாஹிரா நிறுவனம் கத்தாரில் ஒரு சிறந்த நிலையில் உள்ளது," என்று கூறியிருக்கிறது. ஊடக அறிக்கைகளின்படி, இந்நிறுவனத்தின் தலைவர் காமிஸ் அல் அஜாமி மற்றும் கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்கள் மீதான சில குற்றச்சாட்டுகள் பொதுவானவை, சில தனித்துவமானவை. உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களும் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது சம்பள பாக்கியும் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், கத்தார் நிறுவனத்தை மூட உத்தரவிட்டது மற்றும் அதன் சுமார் 70 ஊழியர்களை 2023-ஆம் அண்டு மே மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கத்தாரின் உளவு நிறுவனம், இந்த உளவு வேலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மின்னணு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு கைது செய்யப்பட்ட ஊழியர்கள் இஸ்ரேலுக்கு முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய ஊடகங்கள் மற்றும் பிற உலகளாவிய ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்த முன்னாள் கடற்படையினர் மிகவும் மேம்பட்ட இத்தாலிய நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பான கத்தாரின் உளவுத் திட்டம் குறித்து இஸ்ரேலுக்கு தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது இந்த மாலுமிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்படலாம். கத்தாரின் உளவு நிறுவனம், இந்த உளவு வேலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மின்னணு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறது. கத்தாரின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஜாஹிரா அல் அலாமியில் பணியாற்றிய இந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள், கத்தார் கடற்படைக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்து வந்தனர். இந்தியா மற்றும் கத்தார் இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் நியமிக்கப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2015-ஆம் அண்டு கத்தாரின் மன்னருடன் பிரதமர் மோதி இந்தியா-கத்தார் உறவுகள் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் இந்த உறவில் முதல் சவால் ஜூன் 2022-ஆம் ஆண்டு வந்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களை வெளியிட்டார். அந்த நேரத்தில், இந்தியாவிடம் 'பொது மன்னிப்பு' கோரிய முதல் நாடு கத்தார். கத்தார் இந்திய தூதரை அழைத்து தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இஸ்லாமிய உலகில் கோபம் பரவாமல் இருக்க, பா.ஜ.க உடனடியாக நுபுர் ஷர்மாவை நீக்கியது. இப்போது எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை, இந்தியா-கத்தார் உறவுகளுக்கு இரண்டாவது பெரிய சவாலாக கருதப்படுகிறது. கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயற்சிக்கும். மேலும், இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. கத்தார், இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்வதில் மிகப்பெரிய நாடு. காஸாவில் இஸ்ரேலின் குண்டுவெடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில், கத்தார் இஸ்ரேலுடனும் பாலத்தீனத்துடனும் மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கும் நேரத்தில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cz92l1l3y44o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை களைந்து தடுத்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படையினர் - வெளியானது அதிர்ச்சி புகைப்படம் Published By: RAJEEBAN 08 DEC, 2023 | 01:09 PM இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை கைதுசெய்து முழங்காலில் அமர்த்தியிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனமொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை, எனினும் அந்த படத்தில் உள்ள சிலரை குடும்பத்தவர்கள் நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த படத்தில் காணப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் எந்த அமைப்புடனும் தொடர்பில்லாதவர்கள் என உறவினர்கள் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பா மத்திய தரை மனித உரிமை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட ஒருவரின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் பலரை கைது செய்து துஸ்பிரயோகம் செய்தனர் என பதிவிட்டுள்ளார். இட்பெயர்ந்த மக்களிற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான கைதுகளில் ஈடுபட்டுள்ளனர், மருத்துவர்கள் கல்விமான்கள் பத்திரிiயாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த கேள்விகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலளிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171253
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைகள்: ஐ.நா. தலைவர் கவலை தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்குப் பகுதியில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர். ஏழு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. தற்போது தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்து பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வது என தெரியாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காசா மக்கள் தொகையில் 18.7 இலட்சம் பேர் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கியமான வழித்தடம் துண்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் செயலிழந்துள்ளது. காசாவில் “ஒரு மனிதாபிமான பேரழிவை” தடுக்க ஐ.நா. பாதுகாப்பு பேரவை அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அரபு நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இரண்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் தீர்மானத்தை அமுல்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுத்த வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததாக தெரிவித்து டிசம்பர் 1 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளில் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு பேரவை போரை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என பாலஸ்தீன நாட்டிற்கான ஐ.நா. தூதர் வலியுறுத்தியுள்ளார். அரபு நாடுகளை சேர்ந்த 57 உறுப்பினர்கள் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் அமெரிக்க அதிபர்களை சந்திக்க இருக்கின்றனர். அப்போது போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த இருக்கின்றனர். வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. முகாம்கள் அல்லது உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை இல்லாத பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது பொது ஒழங்கை சீர்குலைக்கும் என ஐக்கிய நாடுகள் தலைவர்கள் எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/283912
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய படையினர் காசாவின் தெற்கு நகரத்துக்குள் பிரவேசித்துள்ளார்! இஸ்ரேலிய தரைப்படைகள், மூன்று நாட்கள் நடத்திய கடுமையான தாக்குதலை தொடர்ந்து காசாவின் தெற்கு பகுதிக்குள் பிரவேசித்துள்ளன. தெற்கு நகரமான கான் யூனிஸின் வடக்கில் தரைவழி நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கையின்போது, ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு வார கால போர்நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்ததில் இருந்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. போர் நிறுத்த காலத்தில் 240 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 110 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது. போரின் ஆரம்ப கட்டங்களில் காசாவின் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்துள்ள தெற்கு நகரான கான் யூனிஸில் ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையிலேயே, குறித்த தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/283417
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்ய பெண்கள் 8 இற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்: புட்டின் வலியுறுத்தல் ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990 இல் இருந்து குறைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நடைமுறையாக்க வேண்டும். அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷ்யாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என தெரிவித்துள்ளார். நம்முடைய பல இனத்தினர் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களைக் கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. ரஷ்ய குடும்பங்களில் ஏராளமான நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் ஏழு, எட்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நினைவில் கொள்வோம். இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். பெரிய குடும்பங்கள் நடைமுறையாகவும், ரஷ்யாவின் அனைத்து மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறையாகவும் வேண்டும். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம். ரஷ்யாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு. ரஷ்யாவின் மக்கள் தொகை 2023 ஜனவரில் 1 ஆம் திகதி கணக்கின்படி 14 கோடியே 64 இலட்சத்து 47 ஆயிரத்து 424 ஆகும். 1999 ஆம் ஆண்டு புட்டின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாகும். https://thinakkural.lk/article/283176
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல் - சர்வதேச அளவில் தேடி கொலை செய்ய திட்டம் Published By: RAJEEBAN 05 DEC, 2023 | 03:38 PM காசாவில் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சர்வதேச அளவில் ஹமாஸ் தலைவர்களை கொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவிற்கு வெளியே கத்தார் துருக்கி லெபனானில் வசிக்கின்ற ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களை படுகொலை செய்வதற்கான அனுமதியை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார் அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் இதனை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பல வருடங்களாக ஹமாஸின் முக்கிய தலைவர்களை கொலை செய்து வருகின்றது அதனை மேலும் விரிவுபடுத்தவுள்ளது. கத்தார் ரஸ்யா துருக்கி ஈரான் போன்ற நாடுகள் ஹமாஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளன, கடந்த காலங்களில் பெய்ரூட் லெபானில் இஸ்ரேல் பலரை கொலை செய்திருந்தது. ஹமாசின் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடு;க்குமாறு 22 ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் ஹமாஸ் தலைவர்கள் நீண்டகாலம் உயிர்வாழப்போவதில்லை என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார். அவர்கள் மரணத்திற்காக குறிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எதிரான போராட்டம் உலகளாவியது காசாவில் உள்ளவர்களுக்கும் விமானங்களில் பயணிக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பின்னர் சில இஸ்ரேலிய அதிகாரிகள் ஹமாஸ் தலைவர் காலித் மெசாலையும் வெளிநாட்டில் வசிக்கின்ற தலைவர்களையும் கொலை செய்வதற்கான உடனடி அனுமதியை கோரினார்கள் என விடயங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் துருக்கி கத்தாரில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை பாதித்திருக்கும். இதேவேளை இஸ்ரேலின் இந்த திட்டம் பிழையான ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டது என இஸ்ரேலின் மொசாட்டின் முன்னாள் தலைவர் எவ்ரெய்ம் ஹலேவி தெரிவித்துள்ளார். ஹமாசை சர்வதேச அளவில் தேடிக்கண்டுபிடித்து அதன் தலைவர்கள் அனைவரையும் அழிக்க முயல்வது பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது மூலோபாய நோக்கங்களை அடிப்படையாக கொண்டது இல்லை நம்பமுடியாதது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/171027
- thumb0-04-06-4034b773ea0e80b960976d68e038de1438d9a88cce86f1b75335003953483fee_d5aaf79017047c15.jpg
-
03/12/2023 புலர் அறக்கட்டளையால் ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள் நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள்
-
thumb0-04-06-4034b773ea0e80b960976d68e038de1438d9a88cce86f1b75335003953483fee_d5aaf79017047c15.jpg
-
thumb0-04-06-239ec5c7e7fbe9e5ee3a82630904f25c5a2627c0ae8a7da432216668ec08d378_cba0cee60d14a8ad.jpg
-
thumb0-04-06-33acd60af24fb7afba4c5f4ed99c58b9feac72192447e54b793726a773d00900_da0ad420b1120826.jpg
-
thumb0-04-06-4e1c4967fc6857d5af4ab2e72cd4cd7fea3d9aec5965178fd20c0bc4bc21ed1c_2097d1b0db69f5d9.jpg
-
thumb0-04-06-4b8a80fa7f4fadba84a1a82ef6c60ab6423bd6e21c31bba72dc35afae13a47e3_f36bfb63661cbc02.jpg
-
thumb0-04-06-1b3c3c5e19975abe700baadfe0ac275a90b03b1edfa84d0d10f96658b6cc14f6_f2eadbd68a25717e.jpg
-
thumb0-04-03-fd7a0931a5ce33a847a18d380510fcb5a107f5245600323200b97fe40e8dd274_667a981c49fdfe83.jpg
-
thumb0-04-03-a33314faf5317de30fdac4a14c37d2cbc81495dfbb37c09465f9eb41e8efb3df_5110a6c8a47e194a.jpg
-
0-04-06-f3cb0cf57254d1e3123bdcaf1ec193be22a30c3c5dfd50b90234c23e401f777d_f7a43d95ced00dce.jpg
-
0-04-06-ac0b2770480392fc57e4d7cdcdee9b8185c0523bccc4e9e7123f22d9e2ad5ce9_7f9dbb2e55a98459.jpg
-
0-04-06-8775065d2ca037b0584ec4c0c2e8a638f8050482713cb33dc695061dadfcbfd2_e1dca88b85acb4c2.jpg
-
0-04-06-4124475f8ade4827821bac2f456329e38527f824c1db684fcbab60bcdd771b2a_51f1aa1b13411f9e.jpg
-
0-04-06-243372dbfbbdbe4ef0c673cf67cfebcc9125c39cfd6e9c1dd1650b3f28e78d54_d48e8ac297b5d5.jpg
-
0-04-06-74838ab34698bb6a3a5c2ae03d9cd05af6d9a79ca87b3ddbc918bb878902ba21_7a241e3dc2719ea7.jpg
-
0-04-06-13689e1900c4aeeb3204cb81f8c48475b21add4d603729a118bf5a29a98a2019_c20ada7921a63ad2.jpg
-
0-04-06-8452ca943d1a645d690840a58a805a3473e66636372a3411e5bcd8ea4503e3d5_b2d96a0463dfbbe0.jpg
-
- thumb0-04-06-4b8a80fa7f4fadba84a1a82ef6c60ab6423bd6e21c31bba72dc35afae13a47e3_f36bfb63661cbc02.jpg
- thumb0-04-06-4e1c4967fc6857d5af4ab2e72cd4cd7fea3d9aec5965178fd20c0bc4bc21ed1c_2097d1b0db69f5d9.jpg
- thumb0-04-06-33acd60af24fb7afba4c5f4ed99c58b9feac72192447e54b793726a773d00900_da0ad420b1120826.jpg
- thumb0-04-06-239ec5c7e7fbe9e5ee3a82630904f25c5a2627c0ae8a7da432216668ec08d378_cba0cee60d14a8ad.jpg
- thumb0-04-03-a33314faf5317de30fdac4a14c37d2cbc81495dfbb37c09465f9eb41e8efb3df_5110a6c8a47e194a.jpg
- thumb0-04-03-fd7a0931a5ce33a847a18d380510fcb5a107f5245600323200b97fe40e8dd274_667a981c49fdfe83.jpg
- thumb0-04-06-1b3c3c5e19975abe700baadfe0ac275a90b03b1edfa84d0d10f96658b6cc14f6_f2eadbd68a25717e.jpg
- 0-04-06-8775065d2ca037b0584ec4c0c2e8a638f8050482713cb33dc695061dadfcbfd2_e1dca88b85acb4c2.jpg
- 0-04-06-ac0b2770480392fc57e4d7cdcdee9b8185c0523bccc4e9e7123f22d9e2ad5ce9_7f9dbb2e55a98459.jpg
- 0-04-06-f3cb0cf57254d1e3123bdcaf1ec193be22a30c3c5dfd50b90234c23e401f777d_f7a43d95ced00dce.jpg
- 0-04-06-243372dbfbbdbe4ef0c673cf67cfebcc9125c39cfd6e9c1dd1650b3f28e78d54_d48e8ac297b5d5.jpg
- 0-04-06-4124475f8ade4827821bac2f456329e38527f824c1db684fcbab60bcdd771b2a_51f1aa1b13411f9e.jpg
- 0-04-06-8452ca943d1a645d690840a58a805a3473e66636372a3411e5bcd8ea4503e3d5_b2d96a0463dfbbe0.jpg
- 0-04-06-13689e1900c4aeeb3204cb81f8c48475b21add4d603729a118bf5a29a98a2019_c20ada7921a63ad2.jpg
- 0-04-06-74838ab34698bb6a3a5c2ae03d9cd05af6d9a79ca87b3ddbc918bb878902ba21_7a241e3dc2719ea7.jpg
-
உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு இம்முறையும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்
01 DEC, 2023 | 05:30 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது. கடந்த வருடத்தில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது. 2022 (2023) ஆண்டில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரப் பயில்வதற்கு தகுதிபெற்றிருப்பது, அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்பது, குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவிற்கு குறைவாக இருப்பது இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது. இந்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையதளங்களில் தறவிறக்கம் செய்யலாம். அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது. https://www.virakesari.lk/article/170755
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அங்க போனீங்க.. இங்கயும் வாங்க.. எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த ஹமாஸ் காசா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார். “காசா எல்லைக்கு வந்து, காசா மக்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள அழிப்பு நடவடிக்கைகளை கண்கூடாக பார்த்து தெரிந்து கொள்ள அவரை நாங்கள் அழைக்கிறோம். 50 நாட்களுக்குள் பாதுகாப்பில்லா காசா மக்கள் வீடுகளின் மீது 40 ஆயிரம் தொன் வெடிபொருட்களை இஸ்ரேல் கொட்டித்தீர்த்துள்ளது.” “மேலும் இஸ்ரேல் உடனான உறவை நீடிப்பது குறித்தும், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டும்,” என ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஒசாமா ஹம்டன் தெரிவித்துள்ளார். முன்னதாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த எலான் மஸ்க், ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும் வெறுப்பு பரவுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். https://thinakkural.lk/article/283002