Everything posted by ஏராளன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Biggest Drone Attack நடத்திய Russia; Ukraine கொடுத்த பதிலடி... தீவிரமாகிறதா Ukraine - Russia War? யுக்ரேன் தலைநகர் கீயவில் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை ரஷ்யா தொடுத்திருப்பதாக கீயவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ரஷ்யா மீது யுக்ரேன் குறைந்தது 24 டிரோன்கள் மற்றும் 2 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடுத்ததாகவும் அதனை ரஷ்ய வான் படை முறியடித்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
World Biggest Iceberg: 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘பயணத்தை ’ தொடங்கியது A23a; இனி என்ன ஆகும்? சென்னையை விட 4 மடங்கு பெரியதான உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று 37 ஆண்டுகளுக்கு பிறகு நகரத் தொடங்கியுள்ளது. A23a என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை, 1986-இல் அண்டார்டிக் கடற்கரையிலிருந்து பிரிந்தது. Weddell Sea-யில் தரைதட்டிய இந்த பனிப்பாறை பனித்தீவாக மாறியது. கடந்த ஆண்டு வேகமாக விலகத் தொடங்கிய இந்த பனிப்பாறை தற்போது அண்டார்டிக் கடற்பரப்பைக் கடக்கவிருக்கிறது.
-
இலங்கையில் 10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிப்பு
நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 27 NOV, 2023 | 05:53 PM நாட்டில் 1300 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் நாட்டில் 1,256 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது . கொழும்பில் 256 தொழுநோயாளர்களும் மட்டக்களப்பில் 130 தொழுநோயாளர்களும் களுத்துறையில் 92 தொழுநோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . நாட்டில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/170401
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா - பின்னணியில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத் டைட்டன்ஸ்அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார்? மும்பை இந்தியன்ஸ் அணி அன்று 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி ஹர்திக் பாண்டியாவை திரும்பப் பெற தற்போது எவ்வளவு பணம் கொடுத்துள்ளது? பின்னணியில் நடந்தது என்ன? ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் டிசம்பர் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே பரஸ்பரத்துடன் நடந்து வருகிறது. ஐ.பி.எல். மினி ஏலம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த பரஸ்பர பரமாற்றம் டிசம்பர் 12ம் தேதிவரை நடத்திக்கொள்ளலாம். அதன்பின் டிசம்பர் 19ம் தேதி நடக்கும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் வசம் இருக்கும் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் விலைக்கு வாங்க முடியும். அந்த வகையில் நேற்று ஐபிஎல் அணிகளுக்கு இடையே வீரர்களைப் பரிமாற்றம் செய்தல், விடுவித்தல், விலைக்கு வாங்குதல் போன்றவை நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் வாங்க குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் விருப்பம் தெரிவித்தது. ஹர்திக் பாண்டியா - பின்னணியில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இது தொடர்பாக இரு அணிகளின் நிர்வாகிகளுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவில் எந்த உறுதியான முடிவும் எட்டாததையடுத்து, மாலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியே ஹர்திக் பாண்டியாவை தக்கவைப்பதாக அறிவித்தது. ஆனால், கடைசி கட்டப் பேச்சுவார்த்தையில் ஹர்திக் பாண்டியாவை வாங்கிய ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து வாங்க மும்பை இந்தியன்ஸ் முன்வந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வது குறித்து மும்பை அணி நிர்வாகவோ, குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகமோ இன்று காலை வரை அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா பட மூலாதாரம்,GETTY IMAGES இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி “ குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2 சீசன்களாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, தான் முதன்முதலாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்புகிறார். இது தொடர்பாக இரு அணி நிர்வாகிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிந்தது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2 சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டார். முதன் முதலில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து கடந்த சீசனில் பைனல்வரை அணியைஅழைத்துச் சென்றார். மற்றொரு தனி வர்த்தகத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை ஆர்.சி.பி. அணி விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் பட மூலாதாரம்,EMPICS மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா எம் அம்பானி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் அவரை இணைப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம். மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான ஹர்திக் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அவரின் வருகை எங்களுக்கு உற்சாகமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “ மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியான தாய்வீடு திரும்புதல், ஹர்திக் அணியில் இருந்தாலே அணிக்குள் சமநிலையான போக்கு எந்த அணிக்கும் ஏற்படும். மும்பை அணியில் ஹர்திக் இருந்த போது வெற்றிகரமாக இருந்தது, 2வது முறையாக அணிக்குத் திரும்பிய ஹர்திக் பெரிய வெற்றியைத் தருவார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார் ஹர்திக் பாண்டியாவுக்கு 15 கோடி ரூபாய் தவிர , பரிமாற்றக் கட்டணத்தையும் சேர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்று ரூ.10 லட்சம் இன்று ரூ.15 கோடி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டு, 30 இன்னிங்ஸ்களில் 833 ரன்கள் சேர்த்துள்ளார். ஹர்திக் பாண்டியா சராசரி 41.65 ஆகவும், 133 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார், 11 விக்கெட்டுகளையும் ஹர்திக் வீழ்த்தியுள்ளார். 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.10 லட்சத்துக்கு ஹர்திக் பாண்டியா அன்கேப்டு வீரராக வாங்கப்பட்டார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் அணியில் முக்கியமான இடத்தை ஹர்திக் பாண்டியா பெற்றார். இதையடுத்து, 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை விடுவித்து அவரை ஏலத்தில் மும்பை அணி எடுத்து பின்னர் 2022ம் ஆண்டு விடுவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் விடுவித்தது அனைவருக்குமே வியப்பாக இருந்தது. 2021 ம் ஆண்டு ஏலத்தில் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொலார்ட் ஆகியோரை மட்டும் தக்கவைத்து பெரும்பாலான வீரர்களை விடுவித்தது. இதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்து தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது. கேப்டனாக செயல்பட்ட முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். கடந்த சீசனில், பைனல் வரை குஜராத் அணியை அழைத்துச் சென்ற பெருமை ஹர்திக் பாண்டியாவையே சாரும். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கிய வீரர்கள் இல்லாமல் மிகவும் மோசமாகச் செயல்பட்டது. நாக்அவுட் சுற்றுக்குள்கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 19 மினி ஏலத்துக்குள் ஏதேனும் பெரிய முடிவுடன் மும்பை இந்தியன்ஸ் வரும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியை மீண்டும் அணிக்குள் கொண்டுவருவதற்காக 11 வீரர்களை விடுவித்து ரூ.15.25 கோடியை பெற்றுள்ளது. இது தவிர கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு ஆர்சிபி அணியிடம் விலைக்கு விற்பதால் கூடுதலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கையிருப்பு அதிகரிக்கும். குஜராத் அணிக்கு புதிய கேப்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா சென்றுவிட்டதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2024 சீசனில் யார் தலைமையில் களமிறங்கும் என்ற கேள் வி எழுந்தது. இதனிடையே, 2024 ஐபிஎல் சீசனுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக சுப்மான் கில்லை குஜராத் அணிநிர்வாகம் நியமித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அவர் இருந்துள்ளார். சீனியர் கிரிக்கெட்டில் சுப்மான் கில் முதல்முறையாக கேப்டன் பதவியை ஏற்க உள்ளார். அணி கேப்டனாக குஜராத் அணி நிர்வாகம் நியமித்தது குறித்து சுப்மான் கில் கூறுகையில் “குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்பதில் பெருமை கொள்கிறேன். என்னை அணித் தலைவராக நியமித்த அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இரு சீசன்கள் அற்புதமாக இருந்தது. எங்களின் அற்புதமான அணியை வழிநடத்திச் செல்ல அடுத்த சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுப்மான் கில்லின் கேப்டன் அனுபவம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மான் கில்லுக்கு ஏற்கெனவே கேப்டன் அனுபவம் இருந்துள்ளது. 2018ம் ஆண்டு நடந்த 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தது பிரித்வி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த துலீப் டிராபி கோப்பைக்கான தொடரில் இந்தியா ப்ளூ அணிக்கு கேப்டனாகவும் சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடந்த தியோதர் டிராபியிலும், இந்தியா –சி பிரிவு அணிக்கும் கேப்டனாக சுப்மான் கில் இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். இளம் வயதிலேயே இந்திய அணியை வழிநடத்திய பெருமை சுப்மான் கில்லுக்கு உண்டு. இதற்கு முன் விராட் கோலி 21 வயது 124 நாட்களில் 2009-10ம் ஆண்டு தியோதர் டிராபில் கேப்டனாக இருந்திருந்தார். அவரை முறியடித்த சுப்மான் கில் 20 வயது 57 நாட்களில் தியோதர் டிராபியில் இந்திய –சி அணிக்கு கில் கேப்டனாக செயல்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c4n02z16xypo
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ 26 NOV, 2023 | 06:46 PM விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்று மதிமுக செயலாளர் வைகோ கூறி உள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர்களுக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் இன்னும் எண்ணத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பழ நெடுமாறன் போன்றோர் விடுதலைப் புலிகளுடன் பல ஆண்டுகளாக இருந்தவர்கள் அவர்கள் யாரும் பொய் சொல்ல வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது. பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே எங்களது கருத்து என வைகோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/170322
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதாக காணப்படுகின்றது. 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஜோ ரூட் விளையாடி வந்தார். ஜோ ரூட்டின் இந்த தீர்மானத்தினை ஏற்றுக்கொள்வதாக ராஜஸ்தோன் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/282464
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை மிதக்கத் தொடங்கியுள்ளது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய பனிப்பாறை A23a என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 1,540 சதுர மைல் அளவு கொண்டது. பனிப்பாறையின் தடிமன் 1,312 அடி. இந்த பனிப்பாறை கடந்த 30 ஆண்டுகளாக கடற்பரப்புடன் இணைந்திருந்ததாகவும், தற்போது புவி வெப்பமடைதல் மற்றும் பனி உருகுவதன் விளைவாக உடைந்து மிதந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் மேலும் விளக்கமளிக்கின்றனர். https://thinakkural.lk/article/282455
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
ஐந்து மனித எலும்பு கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு! முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் ஆறாம் நாள் அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன. இதன்போது, ஐந்து மனித எலும்பு கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இதுவரையில் 35 மனித உடற்கூற்று தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படாது எனவும் அந்த பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பணிகள் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தடயவியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் மற்றும் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://thinakkural.lk/article/282416
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 19 நிமிடங்களுக்கு முன்னர் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ‘சேரி’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது. ‘சேரி’ என்ற சொல்லை அவர் குறிப்பிட்ட விதம் ‘இழிவான’ விதத்தில் இருந்தது என்பது தான் அதை எதிர்ப்பவர்களின் வாதம். அதைவிட, ‘சேரி’ (Cheri) என்பதற்கு பிரெஞ்சு மொழியில் `அன்புள்ள` என்றுதான் பொருள், அதைத்தான் நகைச்சுவையாகக் குறிப்பிட்டதாகவும் குஷ்பூ விளக்கம் தந்திருந்தார். `வேளச்சேரி`, `செம்மஞ்சேரி` போன்ற வார்த்தைகள் அரசு பதிவுகளிலேயே இருப்பதாகவும் தன்னுடைய பதிவுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்பதும் குஷ்பூவின் வாதமாக உள்ளது. உண்மையில் `சேரி` என்ற வார்த்தையின் ஆதி என்ன? அதுவொரு இழிச்சொல்லா? நற்சொல் என்றால், ஏன் அதுவொரு இழிவான சொல்லாகப் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது? வரலாற்று ரீதியில் அந்த வார்த்தையை எதற்காகப் பயன்படுத்தினர்? இந்தக் கேள்விகளுக்கான விடையை இங்கு விரிவாகப் பார்ப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் `சேரி` என்ற சொல் சமூக - பொருளாதார காரணிகளில் பின்தங்கியவர்கள் வசிக்கும் இடங்களைக் குறிப்பதாக சமகாலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை எந்த இடத்தில், எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அதன் அர்த்தமும் மாறுகிறது. குஷ்பூ `சேரி` எனக் குறிப்பிட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தலித்திய ஆதரவாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் `சேரி` என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிப்பதாக இருப்பதால், அவர்களை குஷ்பு `இழிவுபடுத்திவிட்டதாக` அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேரி என்றால் என்ன? பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் `கூடிவாழும் இடம்` என்ற பொருளைக் கொண்டதாகவே `சேரி` என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சோழர் காலத்தில்தான், அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் வசிக்கும் இடங்களைக் குறிக்கும் விதமாக மாறியது என்பதே தமிழ் அறிஞர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் நமக்குத் தரும் விளக்கமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதன்முதலில் சோழர்கள் காலத்தில் ‘தீண்டாச்சேரி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகளிலும் அதுபற்றிய குறிப்புகள் உள்ளன. சோழர்கள் காலத்தில் (குறிப்பாக, கி.பி. 12ஆம் நூற்றாண்டு) ‘தீண்டாச்சேரி’யில் வாழ்பவர்களை கிணறு வெட்டுதல், விவசாயம் உள்ளிட்ட பணிகளில் அமர்த்தக்கூடாது என்ற விதிகள் இருந்திருக்கின்றன. அதாவது, தண்ணீர், உணவு போன்றவை சார்ந்த தொழில்களில் `தீண்டாச்சேரி`யில் இருப்பவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற விதிகள் இருந்திருக்கின்றன. பெரியபுராணத்திலும் ‘தீண்டாச்சேரி’ என்ற வார்த்தை, நந்தனார் குறித்துக் குறிப்பிடப்படும் இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தி இலக்கியங்கள் பலவற்றில் ‘சேரி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சோழர் காலத்தில்தான் மக்களை அவர்கள் சார்ந்த பிரிவு அல்லது தொழிலின் அடிப்படையில் வெவ்வெறு படிநிலைகளாகப் பிரித்ததாகவும் அதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இடமாக `சேரி` இருந்ததாகவும் முனைவர் முத்து வெ. பிரகாஷ் கூறுகிறார். சேரி என்ற சொல் இழிசொல்லாக மாறியது எப்படி? பட மூலாதாரம்,@KHUSHSUNDAR “சேரி என்பது மக்கள் கூடி வாழும் இடம். சோழர் காலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் விதமாக இந்தச் சொல் மாறியுள்ளது. ராஜராஜ சோழன் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் நிர்வாக ரீதியாக ஒரு ஊரை வெவ்வேறு படிநிலைகளாகப் பிரித்தனர். கோவிலை மையமாக வைத்துதான் ஊர் உருவாகும். கோவிலை சுற்றித்தான் தெருக்கள் பின்னப்படும். அப்படி, ‘சேரி’ என்பது சமூக படிநிலையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இருக்கும் இடமாக கால மாற்றம் அடைந்தது," என்கிறார் முத்து வெ. பிரகாஷ். வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், சிந்து சமவெளி நாகரிகத்திலும் இத்தகைய பகுப்புகள் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது, முத்து வெ. பிரகாஷின் கூற்றுக்கு வலுசேர்க்கிறது. சோழர் காலத்தில் ஏற்பட்ட இந்தப் பிரிவினை, விஜய நகர காலத்தில் இன்னும் தீவிரமாகியுள்ளது. 150-200 ஆண்டுகால வரலாறு கொண்ட இந்த வார்த்தை, 19வது நூற்றாண்டில் குறிப்பிட்டதொரு புழக்கத்திற்கு வருகிறது. `குடியிருக்கும் இடம்` என்னும் பொருளை உடைய `சேரி` என்ற சொல்லை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட பிரிவினருக்காகப் பயன்படுத்தி அதை இழிசொல்லாக மாற்றிய போக்கு நிகழ்ந்திருக்கிறது என்கிறார், முனைவர் வெ. பிரகாஷ். சோழர் காலத்தில் 'சேரி' இழிசொல்லாக மாறியதா? பட மூலாதாரம்,GETTY IMAGES தொழில், பண்பாடு, பொருளாதாரம் சார்ந்தும் அந்தப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. `பாக்கம்` என்பது கடற்கரை பகுதிகளைக் குறிப்பது போன்று, `சேரி` என்பது பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிதான் இருக்கும். `பாக்கம்`, `பேட்டை` என்ற பெயர்கள் பொதுமக்கள் அதிகம் அறியாத, புழக்கத்தில் இல்லாத வார்த்தையாக இல்லாதபோதும் சமகாலத்திலும் `சேரி` என்ற வார்த்தை இழிசொல்லாகப் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்விக்கு முத்து வெ. பிரகாஷ் பதிலளித்தார். “பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறாத மக்கள் அங்கு இருந்துள்ளனர். இந்த வார்த்தை, பண்பாட்டு ரீதியிலான சொலவடையாக மாறிவிட்டது. ஒடுக்கப்பட்ட சாதியினர் குடியிருக்கும் இடம்தான் சேரி. இதற்கு பொருள் மாற்றம் ஏற்பட்டு சோழர் காலத்தில் அது தீவிரப்படுத்தப்பட்டு மக்களின் சிந்தனைக்குள் வேரூன்றி இப்படி மாறியுள்ளது," என்றார். தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் `சேரி` என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் நேர்மறையாக `ஊர், குடில்` என்ற பொருளிலேயே அவற்றில் வழங்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் `சேரி` படக்குறிப்பு, ஆ. சிவசுப்பிரமணியன் “கலித்தொகையில் ‘நம்சேரி` என்ற வார்த்தை வருகிறது. தொல்காப்பிய உரையில் ‘சேரி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஊர் எனக் குறிப்பிடுவதற்காக சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருவிருத்தத்தில் `சேரிகை` என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது," என சங்க இலக்கிய ஆதாரங்களைக் கூறுகிறார் முத்து வெ. பிரகாஷ். வேறு மொழியில் `சேரி` என்ற வார்த்தை இல்லை என்பதே இருந்திருந்தால் மலையாளம் மொழியில் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார் அவர். இன்னும் சில உதாரணங்களை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியம் பகிர்ந்துகொண்டார். “சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் இளங்கோவடிகளும் மதுரையை நோக்கி வரும்போது, மாதரி என்ற பெண்ணின் வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காதை உள்ளது. அதற்கு ‘புறஞ்சேரி இறுத்த காதை’ என்று பெயர். `புறத்தே இருக்கக்கூடிய சேரியில் அவர்களைத் தங்கச் செய்தல்’ என்பது இதன் பொருள். பிராமணர்கள் இருக்கக்கூடிய இடம் ‘பார்ப்பன சேரி’ என்றும் சிலப்பதிகாரத்தில் உள்ளது," எனக் குறிப்பிடுகிறார் ஆ.சிவசுப்பிரமணியம். ஊரும் சேரியும் பட மூலாதாரம்,BHAKTAVATCHALA BHARATHI பேராசிரியரும் மானுடவியல் ஆய்வாளருமான பக்தவத்சல பாரதி `தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்` என்னும் நூலை எழுதியுள்ளார். தமிழ் சமூகம் திணை சார்ந்தது. ஒவ்வொரு திணைக்கும் ஒரு குறிப்பிட்ட ஊர்ப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், `சேரி` என்பது முல்லைத் திணைக்கு உரியதாக பக்தவத்சல பாரதி குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் `சேரி` முல்லை திணையில் காணப்பட்டாலும் பின்னர் கடற்கரையோர நகரங்களிலும் அவை இருந்துள்ளதாகச் சுட்டுகிறார். அதேபோன்று, `வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்` என்ற தமது நூலில் நொபுரு கரோஷிமா பல சேரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். கம்மாளச்சேரி, ஈழச்சேரி, தலைவாய்ச் சேரி, வண்னாரச்சேரி, பறைச்சேரி, தீண்டாச்சேரி, அறுவை வாணியச்சேரி உள்ளிட்ட பல சேரிகள் இருந்துள்ளன. `மக்களின் வாழிடம்` என்பதே `சேரி` என்ற சொல்லுக்குப் பொருளாக இருந்து வந்த நிலையில், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே குறிப்பிட்ட பிரிவினர் வாழும் இடமாக `இழிசொல்லாக` பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர் அந்தப் புத்தகத்தில் நிறுவியுள்ளார். மேலும், ஊர் மேற்கிலும் சேரி கிழக்கிலும் அமைந்திருப்பதற்கு, பொதுவாக ஊரின் நில அமைப்பில் மேற்கு உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் இருக்கும், அதன் பொருட்டே ஊர் மேற்காகவும் சேரி கிழக்காகவும் அமைந்திருப்பதாக விளக்கியுள்ளார். சேயை வசவுச் சொல்லாகப் பயன்படுத்துவது சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES சமகாலத்தில் `சேரி` என்ற சொல் பெரும்பாலும் இழிசொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. கிராமங்களில் என்றால் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் இடங்களையும் நகரங்களில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் வாழும் பகுதியைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. சமூக - அரசியல்ரீதியாக `சேரி` என்ற சொல்லின் பயன்பாடு குறித்துப் பேசிய `தலித் முரசு` இதழின் ஆசிரியர் புனித பாண்டியன் கூறுகையில், “காலனி, சேரி இரண்டுமே குடியிருப்புதான். ‘ஏற்கெனவே இழிவானவர்கள் என சித்தரிக்கப்பட்டவர்கள் குறித்துப் பேசும்போது அதைக் கவனமாகத்தான் பயன்படுத்த வேண்டும். `சேர்ந்து வாழும் இடம்` என்பதை வசவுச் சொல்லாக ஆக்கிவிட்டனர். எப்போதிருந்து தலித்துகள் இழிவானவர்களாகக் கருதப்பட்டார்களோ, மோசமாக நடத்தப்பட்டார்களோ அப்போதிருந்து அவர்களின் மொழி, உடை, பண்பாடு எல்லாமே இழிவானதாகத்தான் கருதப்படுகிறது. வார்த்தைகளை மாற்றத் தேவையில்லை. அதன் பொருளைத்தான் மாற்றிவிட்டனர்," என்றார். https://www.bbc.com/tamil/articles/cy7259nvg1po
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போர் நிறுத்தத்திற்கு பின்னர் ஹமாசின் சுரங்கங்கள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் காசா மீதான 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் தீவிரமாக சண்டையை தொடர திட்டமிட்டுள்ளோம். இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது. அவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் பல சுரங்கங்கள் அழிக்கப்படும். மேலதிக இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் 27 ஆம் திகதி காலாவதியாகும். காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது” என்றார். https://thinakkural.lk/article/282390
-
களைத்த மனசு களிப்புற ......!
இந்த திரியையும் கவனியுங்கோ பையா.
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
Published By: DIGITAL DESK 3 24 NOV, 2023 | 03:50 PM 30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து ஏ23 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது தற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில் ஒரு பனித் தீவாக மாறியது. 4,000 சதுர கிலோ மீட்டர் நீளம் கொண்ட லண்டனை விட இரண்டு மடங்கு பெரிய இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது. சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள்ளார். இந்த பனிப்பாறை 400மீ (1,312 அடி) தடிமன் கொண்டது. 310 மீ உயரம் கொண்ட லண்டன் ஷார்ட், ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடங்களின் உயரத்தை விட உயரம் கூடுதலாக உள்ளது. இது ஒரு பிரமாண்மான பனிப்பாறை என தெரிவிக்கப்படுகிறது. பனிப்பாறை கடந்த ஆண்டு வேகமாக நகர தொடங்கியது. அண்டார்டிக் கடற்பரப்பிற்கு அப்பால் கசியவுள்ளது. பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் என்றழைக்கப்படும் வெள்ளைக் கண்டம் இக்கண்டத்தின் பனி அடுக்கில் இருந்து பெருமளவில் வெடித்த பெரும் பாறைகளின் ஒரு பகுதியாகும். https://www.virakesari.lk/article/170152
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாக செல்லும் சாத்தியக்கூறுகள் : முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி 25 NOV, 2023 | 09:44 AM கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐந்தாவது நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனா மாக்கர் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்கானர் மூலம் இந்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நாளையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும். இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும் நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகள் என்னால் உறுதியாக கூறமுடியும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/170195
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நேற்று 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு : இன்று ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை 24 NOV, 2023 | 09:54 AM முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை (23) நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது. நேற்று மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன் துப்பாக்கி குண்டு சன்னங்கள் மற்றும் குண்டு சிதறல்கள் இலக்கத் தகடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தமாக 26 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. நான்காவது நாளான நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 24 அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்ற சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/170109
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது நாங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது – அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 23 NOV, 2023 | 01:13 PM காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரமான பாலஸ்தீனம் கடலில் இருந்து ஆற்றிற்கு பாலஸ்தீனியர்கள் சுதந்திரமடைவார்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு அவுஸ்திரேலியாவின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். காசாவிலும் மேற்குகரையிலுமிருந்து இஸ்ரேலிய படையினரை வெளியேற்றவேண்டும் இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை அவுஸ்திரேலியா நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. உணர்வுபூர்வமான உரைகளும் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களை நோக்கி உணர்வுபூர்வமாக உரையாற்றிய மாணவர் ஒருவர் காசாமீதான இஸ்ரேலின்; ஆக்கிரமிப்பும் குண்டுவீச்சும் படுகொலை என தெரிவித்துள்ளார். காசாவில் இடம்பெறுவது பெரும் அநீதி என்பதாலேயே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 14000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இது இனப்படுகொலை ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என்பதை தெரிவிக்கவே நாங்கள் பாடசாலைகளில் இருந்து வெளியே வந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். மற்றுமொரு மாணவன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து கண்ணீருடன் உரையாற்றியுள்ளதுடன் காசா மோதலில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கண்டித்துள்ளார். https://www.virakesari.lk/article/170052
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்தியா சதித் திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES 24 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. ‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் வாழும் ஒரு காலிஸ்தான் ஆதரவு சீக்கியரை கொலை செய்வதற்கு இந்தியா சதித்திட்டம் தீட்டியதாகவும், அதை அமெரிக்கா முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதியில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் அமெரிக்காவால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. செய்தியறிக்கையின்படி, இந்த சதித் திட்டத்தின் இலக்கு குர்பத்வந்த் சிங் பன்னு. இவர் சீக்கிய தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதி. காலிஸ்தானை உருவாக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள 'நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பின் வழக்கறிஞர். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் வைத்திருக்கிறார். இவர் 2020ஆம் ஆண்டு இந்தியாவால் 'பயங்கரவாதி' என்று அறிவிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் வான்கூவரில் சுட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் மாதம், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு குறித்து 'நம்பகமான குற்றச்சாட்டுகள்' இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றது, அபத்தமானது’ என்று கூறியிருந்தது. இருப்பினும், இந்த முறை, அமெரிக்காவில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்துக் கூறப்படும் செய்திகள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இந்தியா கூறியுள்ளது. பட மூலாதாரம்,NIA/SOCIAL MEDIA படக்குறிப்பு, இந்தியாவில் இருக்கும் பன்னுவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மீது என்ன குற்றச்சாட்டு? பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு, பன்னுவை கொல்ல நடந்த சதித் திட்டம் பற்றிய தகவல்களை அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது. ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு பயணம் செய்த பிறகு, இது தொடர்பாக அமெரிக்கா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அமெரிக்கா, ராஜ்ஜீய மட்டத்தில் இந்தியாவை எச்சரித்தது. மேலும் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ஒருவர் மீது நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது, என்று அந்த செய்தித்தாள் ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது. தற்போது, இந்த வழக்கை பகிரங்கப்படுத்த வேண்டுமா அல்லது நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான விசாரணையை கனடா முடிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை விவாதித்து வருவதாகவும் அந்தச் செய்தியறிக்கை கூறுகிறது. வான்கூவரில் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனேடிய அதிபர் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அமெரிக்கா இது பற்றிய விரிவான தகவல்களை அதன் நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது. இந்த வழக்குகளின் ஒரே மாதிரியான வடிவம் குறித்து இந்த நாடுகள் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கையின்படி, அமெரிக்க நீதித்துறை மற்றும் எஃப்.பி.ஐ இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதோடு 'சட்ட விஷயங்கள்' மற்றும் 'ரகசிய இராஜதந்திர தகவல்தொடர்புகள்' குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதில்லை என்றும் கூறியது. இந்தியா ஆட்சேபனை தெரிவித்த பிறகு சதித்திட்டம் தீட்டியவர்கள் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டார்களா, அல்லது எஃப்.பி.ஐ தலையிட்டு சதித்திட்டத்தை முறியடித்ததா என்பதை இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை என்றும் பைனான்சியல் டைம்ஸ் செய்தியறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம்,X படக்குறிப்பு, நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராகவும் பன்னு அறியப்படுகிறார். யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னு? குர்பத்வந்த் சிங் பன்னு காலிஸ்தான் ஆதரவாளரான அமெரிக்க வழக்கறிஞர். அவரது வயது 40 முதல் 50 வயது வரை இருக்கலாம். இவர் அமிர்தசரஸ் அருகே உள்ள கான்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மகிந்தர் சிங் பஞ்சாப் மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் பணிபுரிந்தவர். பன்னு 1990களில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இப்போது அமெரிக்காவில் வழக்கறிஞராக உள்ளார். கனடாவில் காலிஸ்தான் சார்பு நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அவர் அடிக்கடி காணப்படுகிறார். நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராகவும் இவர் அறியப்படுகிறார். பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, அவரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து அமெரிக்க நிர்வாகம் அவருக்குத் தெரிவித்ததா இல்லையா என்பதைக் கூற பன்னு மறுத்துவிட்டார். அவர், “அமெரிக்க மண்ணில் இந்திய ஏஜெண்டுகளால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா என்பதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்தட்டும்,” என்றார். பன்னு மேலும், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். பைடன் நிர்வாகம் இதுபோன்ற சவால்களைச் சமாளிக்கும் திறன் கொண்டது என்று நான் நம்புகிறேன்," என்றார். கடந்த வாரம், பன்னு, ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று சீக்கியர்களுக்கு எச்சரித்திருந்தார். அவ்வாறு செய்வது ‘உயிருக்கு ஆபத்தானது’ என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை பன்னு மீது ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இது இந்தியாவின் தேசப் பாதுகாப்பினையும் பாதிப்பதாகவும், அதனால் இதை இந்தியா தீவிரமாக விசாரித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது இந்தியாவின் பதில் என்ன? பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீபத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, குழுவாகச் செயல்படும் குற்றவாளிகள், சட்டவிரோத துப்பாக்கி வியாபாரிகள், பயங்கரவாதிகள், மற்றும் பலர் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது,’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், "இந்தத் தகவல் இரு நாடுகளுக்கும் கவலையளிக்கும் விஷயம். இது குறித்துத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்," என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், இது இந்தியாவின் தேசப் பாதுகாப்பையும் பாதிப்பதாகவும், அதனால் இந்தியா இதைத் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்கா வழங்கிய தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகள் விசாரித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c2q21lpx6d9o
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் ஐந்து மனித எச்சங்கள், துப்பாக்கிச்சன்னம் உள்ளிட்டவை மீட்பு Published By: DIGITAL DESK 3 23 NOV, 2023 | 10:31 AM முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய அகழ்வுப் பணியின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் இன்றுடன் 24 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது. நாளை நான்காம் நாள் அகழ்வு பணி இடம்பெறவுள்ளது. அத்துடன் நேற்றையதினம் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு - இ0043, O+ எனவும் மற்றுமொரு குறியீடும் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/170027
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பெண் பணியாளர் இஸ்ரேலின் தாக்குதலில் குடும்பத்துடன் பலி Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 03:14 PM உலக சுகாதார பணியகம் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் தனது பெண் பணியாளர் டிமா அப்துல்இலத்தீவ் முகமட் அல்ஹாஜ்; கொல்லப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது. காசா நகரிலிருந்து இடம்பெயர்ந்து காசாவின் தென்பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தவேளை இடம்பெற்ற குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளார் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குண்டுவீச்சின் காரணமாக டிமாவும் கணவரும் ஆறுமாத குழந்தையும் இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்த 50 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. ஓக்டோபர் ஏழாம் திகதி முதல் ஐநாவும் மனிதாபிமான சமூகமும் பலரை இழந்துள்ளன இன்று எல்லைகள் அற்ற வைத்தியர்கள அமைப்பு இரண்டு மருத்துவர்களை இழந்துள்ளது பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு 108 பேரை இழந்துள்ளது இவர்கள் வெறுமனே பணியாளர்கள் இல்லை ஏனையவர்களின் சிறந்த வாழ்க்கைக்காக பணியாற்றியவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டிமாவின் மரணம் அர்த்தமற்ற இந்த யுத்தத்திற்கான மற்றுமொரு உதாரணம் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் வெளியேற்றப்படும்போதும் பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தங்கள் கரங்களில் அதிகாரங்களை வைத்துள்ளவர்களை இந்த மோதலை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள் கேட்டுக்கொள்கின்றோம்எனவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/169974
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 05:14 PM அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும் நபரே இலக்குவைக்கப்பட்டார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு திட்டத்தை முறியடித்தனரா என்ற விபரம் தெரியவரவில்லை என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/169991
-
விமானத்தில் செல்லும்போது ஏன் உங்களுக்கு மெதுவாக வயதாகிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் லின்டோட் பதவி, விண் இயற்பியலாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நேரம் எல்லோருக்கும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக தான் கடந்து செல்கிறதா? பூமியில் இருக்கும் ஒருவர் விண்வெளிக்கு சென்று ஆறு மாதங்கள் கழித்து திரும்பி வந்தால், அவருக்கு வயது கூடியிருக்குமா? குறைந்திருக்குமா? அல்லது மாற்றமே இருக்காதா? இது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லாவிட்டாலும், சில விளக்கங்களை அளிக்கிறது ஐன்ஸ்டீனின் சார்பியல் (relativity) கோட்பாடு. அந்த கோட்பாட்டின் படி நேரம் உலகளாவியது அல்ல. அதாவது நேரம் என்பது நிலையான ஒன்று இல்லை, அதில் முன்னும் பின்னும் செல்லக்கூடும், சூழல்களை பொருத்து நேரம் வேகமாகவும், மெதுவாகவும் செல்லக் கூடும். நீங்கள் வேகமாக செல்லும் போது நேரம் மெதுவாக செல்லும் என்று ஐன்ஸ்டீன் சரியாக கூறுகிறார். ஆனால் அதை சிறப்பாக உணர நீங்கள் கருந்துளைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் விண் இயற்பியலாளர் கிறிஸ் லின்டோட். கடிகார சோதனை எனக்கு பிடித்த அறிவியல் சோதனைகளில் ஒன்று உலகத்தை இருமுறை சுற்றி நான்கு கடிகாரங்களை பறக்க விடுவது. (வேகமாக பயணிக்கும் போதும் நேரம் அதே மாதிரி தான் இருக்கிறதா, அல்லது வேகமாகவோ மெதுவாகவோ கடக்கிறதா என கண்டறிய துல்லியமாக மணி சொல்லும் நான்கு கடிகாரங்கள் விமானங்களில் உலகில் கிழக்கிலிருந்து மேற்கும், மேற்கிலிருந்து கிழக்கும் பறக்கவிடப்பட்டன) 1971 ஆம் ஆண்டில், இயற்பியலாளர்கள் ஜோசப் ஹஃபேல் மற்றும் ரிச்சார்ட் கீட்டிங் ஆகியோர் அணு கடிகாரங்களை எடுத்துக் கொண்டனர் - ஒவ்வொரு 30 மில்லியன் ஆண்டுகளுக்கும் ஒரு நொடிக்கும் குறைவாக இழக்கக்கூடியவை , அவ்வளவு துல்லியமான கடிகாரங்கள் அவை. ஒரு வணிக ஜெட் விமானத்தில், முதலில் மேற்கு நோக்கி பின்னர் கிழக்கு நோக்கி உலகம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்து, பின்னர் வாஷிங்டன் டிசிக்கு அவர்களின் ஆய்வகத்திற்குத் திரும்பினர். அங்கு, அவர்கள் தங்கள் நன்கு பயணம் செய்த நேரக்கடிகாரங்களின் நேரத்தை ஸ்திரமாக இருந்த கடிகாரங்களின் நேரத்துடன் ஒப்பிட்டனர். கடிகார நேரங்கள் ஒத்துப்போகவில்லை: பயணம் செய்வது நேரம் கடந்து செல்லும் வேகத்தை மாற்றியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'நேரம் உலகளாவியது அல்ல' நேரம் உலகளாவியது அல்ல என்ற ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் ஒரு முக்கிய கொள்கையை சோதிப்பதே இந்த சோதனையின் நோக்கமாகும். நீங்கள் வேகமாக பயணம் செய்தால், நேரம் உங்களுக்கு மெதுவாக கடந்து செல்லும். விளைவு சிறியது தான் - லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு கடல் கடந்த விமானத்தில் செல்லும் போது, உங்கள் கடிகாரம் தரையில் இருப்பதை விட, பத்து மைக்ரோநொடிகள் (ஒரு நொடியின் மிக மிக சிறிய அளவு) பின்தங்கியிருக்கும். ஆனால் நீங்கள் வீட்டில் இருப்பதை விட ஒரு பகுதி மெதுவாக வயதாகியிருப்பீர்கள். ஹஃபேல் மற்றும் கீட்டிங் கடிகாரங்களால் நீங்கள் எவ்வளவு வயதாகியுள்ளீர்கள் என்பதை கணிக்க முடியும். வேறு ஒரு கணிப்பு ஈர்ப்பு விசையின் விளைவையும் கூறுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகினால், நேரம் வேகமாக செல்லும் என்று அந்த கணிப்பு கூறுகிறது. இது நம் உடல்களையும் பாதிக்கிறது: உங்கள் தலை உங்கள் கால்களை விட சற்று வயதானதாக இருக்கலாம். இதன் விளைவும் மிகவும் சிறியது தான். ஆனால் பூமியிலிருந்து அதிக தூரம் செல்லும்போது, அதன் தாக்கங்களை புரிந்து கொள்ள முடியும். நம் அனைவரையும் வழிநடத்தும் GPS அமைப்பு, அதன் செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 20,000 கிமீ (12,400 மைல்கள்) உயரத்தில், இதை சரியாக செயல்பட கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வுகளையும் மீறி, பூமி ஒரு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு சிறிய கிரகம்தான். எந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையையும் விட அதிகமான ஈர்ப்பு விசையை பெற்றிருக்கும் பெரிய பொருள்கள் உள்ளன. அவற்றை கொண்டுள்ள கருந்துளைகளை சுற்றி, இந்த சார்பியல் விளைவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. பட மூலாதாரம்,ALAMY கருந்துளைக்குள் பயணம் செல்லலாம் இது ஏன் நடக்கிறது என்று புரிந்து கொள்ள, கருந்துளைக்கு விழுவது போல் கற்பனை செய்துக் கொள்ளுங்கள். (கருந்துளைக்கு அருகில் செல்லும் போது அதன் அதீத ஈர்ப்பு விசை காரணமாக பொருட்கள் ஒரு பக்கமாக நீட்டப்படும். ஆனால், நீங்கள் அப்படி நடைபெறாத வகையில் ஒரு அதிசய விண்கலத்தில் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளலாம்) நீங்கள் விழும் போது, உங்களுக்கோ அல்லது உங்கள் அருகிலுள்ள சூழலுக்கோ நேரத்தில் எந்த வித்தியாசமும் கவனிக்க மாட்டீர்கள். உங்கள் கடிகாரத்தைப் பார்த்து அல்லது உங்கள் இதயத் துடிப்பைப் பார்த்து, நேரம் அதே போல் ஓடிக் கொண்டிருக்கிறது என கருதலாம். ஆனால் உங்கள் விண்கலத்திலிருந்து நீங்கள் பின்னால் திரும்பி கருந்துளைக்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தைக் கவனிக்க முடியும் என்றால், நீங்கள் விசித்திரமான ஒன்றைக் கவனிக்கலாம் - அங்கே நிகழ்வுகள் உங்களுக்கு வேக வேகமாக தென்படும். நீங்கள் தொலைநோக்கி மூலம் பூமியைக் கவனித்தால், நீங்கள் நமது கிரகம் மற்றும் இனத்தின் எதிர்காலத்தை கண்டு ரசிக்கலாம். ஒரு வேகப்படுத்தப்பட்ட படம் ஓடுவது போல இருக்கும். உங்களுக்கு தொலைக்காட்சி சிக்னல் கிடைத்தால், மீதமுள்ள பிக் பாஸ் சீசனை பார்த்து முடித்து விடுவீர்கள். ஆனால் வேக வேகமாக. இப்போது கண்ணோட்டத்தை மாற்றுங்கள். கருந்துளைக்கு வெளியே ஒரு பாதுகாப்பான தூரத்தில் சுழன்று கொண்டிருக்கும் விண்கலத்தில் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள், உங்கள் தைரியமான அல்லது அதிர்ஷ்டமற்ற நண்பர் விழுந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். கருந்துளையின் நிகழ்வு எல்லை கருந்துளையின் விளிம்பு தான் நிகழ்வு எல்லை. ஒளி வேகத்தில் பயணிக்கும் பொருட்களாலும் கூட தப்பிக்க முடியாத புள்ளி இதுவே ஆகும். எனவே கீழே விழுந்து கொண்டிருக்கும் நமது நண்பரும் இந்த புள்ளியை அடைந்து பின்னர் மறைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் நீங்கள் பார்ப்பது விசித்திரமானது - அவர்கள் நம்மை பார்த்து கைகளை அசைத்தால், அவர்கள் கருந்துளையின் ஈர்ப்புப் பள்ளத்தில் ஆழமாக விழ விழ, நமக்கு அவர்கள் மெதுவாக கைகளை அசைப்பது போல் தெரியும். அவர்கள் விண்கலத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட ஒரு கடிகாரம் நம் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுவப்பட்ட ஒன்றை விட மெதுவாக இயங்குவதைப் போலத் தெரியும். இந்த நிகழ்வை Interstellar திரைப்படம் தெளிவாக விளக்குகிறது. கருந்துளைக்கு அருகிலுள்ள கிரகத்தில் ஆய்வு செய்த விண்வெளி வீரர்கள், பணி முடித்து வரும் போது, தங்கள் பிரபஞ்சம் அவர்களை விட்டு முன்னேறி சென்று விட்டதை பார்த்து அதிசயித்து போவார்கள். அந்தப் படம் கூறுவது போல, கருந்துளைக்கு அருகில் அல்லது தொலைவில் கடந்து செல்லும் நேரம்- எது "சரியான" நேரம் என்று கேட்பதில் அர்த்தமில்லை; ஏனென்றால் சார்பியல் அப்படி சரியான நேரம் என்று எதுவும் இல்லை என சொல்கிறது. எந்த ஒளியும், பொருளும் இந்தப் புள்ளியை கடக்க முடியாத கருந்துளையின் நிகழ்வு எல்லையை நமது நண்பர் அடைவார். எனினும், நாம் அதை வெளியிலிருந்து பார்க்க முடியாது. இந்த எல்லைக்கு சென்றால் மீண்டும் திரும்ப முடியாது, இந்த எல்லையை கடந்தால், நமது நண்பர் கருந்துளையின் மைய பகுதி நோக்கி அனுப்பப்படுவார். அதன் அர்த்தம் அவர்களின் நேர அனுபவம் முற்றிலும் மாறியிருக்கும். அவர்கள் நேரத்தில் முன்னும் பின்னும் கூட செல்ல முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES கருந்துளை ஒரு கால இயந்திரம் அது ஏன்? நமது அன்றாட வாழ்வில், கருந்துளைக்கு வெளியே பாதுகாப்பாக, நாம் எப்படி வேண்டுமானாலும் இடத்தின் மூன்று பரிமாணங்களில் நகரலாம், ஆனால் நான்காவது பரிமாணத்தில்: அதாவது நேரத்தில், தொடர்ந்து முன்னோக்கியே பயணம் செய்ய வேண்டும். ஆனால் கருந்துளையின் நிகழ்வு எல்லைக்குள் விஷயங்கள் பின்னோக்கி செல்கின்றன. உள்ளே, ஒரு விண்வெளி வீரர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் - கருந்துளையின் மையத்தை நோக்கி - அவர்கள் நேரத்தில் முன்னும் பின்னும் நகர முடியும் என்று நினைக்கிறார்கள். அப்படி பார்த்தால், ஒரு கருந்துளை ஒரு கால இயந்திரம் போல செயல்பட முடியும், நிகழ்வு எல்லைக்குள் நுழையும் துணிச்சலான எவரும், கருந்துளை உருவானதிலிருந்துஅவர்கள் நிகழ்வு எல்லைக்குள் நுழைந்த நேரம் வரை, திரும்பிச் செல்ல அனுமதிக்கிறது. ஒரே ஒரு அம்சம் என்னவென்றால், கருந்துளையை விட்டு வெளியேற எந்த வழியும் இருக்காத. எனவே எதிர்காலத்திலிருந்து வரும் எந்த நேர பயணியும் இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி புவி மேற்பரப்பில் நம்மை வந்து பார்க்க முடியாது. ஆனால் என்ன சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்வது - கருந்துளைகள் அவற்றைச் சுற்றியுள்ள இடம் மற்றும் நேரத்தை எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பற்றி சிந்திப்பது - இயற்பியலாளர்களுக்கு ஐன்ஸ்டீன் கோட்பாடுகளின் மிக துல்லியமான சோதனைகளை வழங்க முடியும். மேலும் நாம் நேரம் என்று அழைக்கும் இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக புரிந்து கொள்ள வழிவகுக்கும். அருகே இயக்கப்பட்ட அணு கடிகாரத்துடன் உலகத்தைச் சுற்றிப் பறப்பதை விட இது சிறப்பாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/c4n478xjxl0o
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி : களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் ஆய்வு! முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றையதினம் அகழ்வாய்வு நிறைவடையும் போது இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது குறித்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ”எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது?உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளதாக” முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார். https://thinakkural.lk/article/282026
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யாஹ்யா சின்வார்: இஸ்ரேல் ராணுவம், மொசாத் இரண்டும் இவருக்கு குறி வைப்பது ஏன்? எங்கே போனார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங் கார்ட்னர் பதவி, பிபிசி பாதுகாப்புச் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் யாஹ்யா சின்வாரைக் காணவில்லை. இஸ்ரேல் ராணுவம் பல ஆயிரம் துருப்புகள், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஒட்டுக்கேட்கும் சாதனங்கள், மற்றும் மொசாத் உளவாளிகள் ஆகியோர் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயன்று கொண்டிருக்கையில் அவர் காணாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வெள்ளை முடி மற்றும் கருப்பு புருவங்களைக் கொண்ட சின்வார், காஸாவில் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராகவும், இஸ்ரேலால் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். இதற்குக் காரணமானவர்களில் ஒருவராக சின்வாரையும் இஸ்ரேல் சேர்த்திருக்கிறது. "யாஹ்யா சின்வார் தான் தளபதி... அவருக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி அக்டோபரில் அறிவித்தார். "இந்த அருவருப்பான தாக்குதலை நடத்த யாஹ்யா சின்வார் தான் முடிவு செய்தார்," என்று ஐ.டி.எஃப் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி கூறினார். "ஆகையால் அவர் மீதும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் மீதும் குறிவைத்திருக்கிறோ,” என்றார். அதில் ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப் என்பவரும் அடங்குவார். அக்டோபர் 7-ஆம் தேதியின் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதற்குப் பின்னால் டெய்ஃப் மூளையாக இருந்தார், ஏனெனில் அது ஒரு இராணுவ நடவடிக்கை. ஆனால், சின்வார் ‘திட்டக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்,’ என்று ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளர் ஹக் லோவாட் கூறுகிறார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கும் சின்வார், தனது சிக்னல் கண்காணிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல், காஸாவிற்கு கீழே எங்கோ சுரங்கப்பாதையில் தனது மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. யார் இந்த சின்வார்? அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படும் 61 வயதான சின்வார், காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். அவரது பெற்றோர் இன்று இஸ்ரேலில் இருக்கும் அஷ்கெலோன் நகரைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் அகதிகளானார்கள். 1948-இல் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்ப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர். அவர் கான் யூனிஸில் ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அந்த நேரத்தில், கான் யூனிஸ் இஸ்லாமிய சகோதரத்துவ ஆதரவிற்கான கோட்டையாக இருந்தது என்று கூறுகிறார், கிழக்கு நாடுகள் கொள்கைக்கான வாஷிங்டன் மையத்தின் ஆராய்ச்சியாளர் எஹுட் யாரி. இவர் சின்வாரை நான்கு முறை சிறையில் பேட்டி கண்டவர். அந்த இஸ்லாமியச் சகோதரத்துவக் குழு "அகதி முகாமில் வறுமையின் பிடியில் வாழ்ந்த, மசூதி செல்லும் இளைஞர்களுக்கான ஒரு பெரிய இயக்கமாக இருந்தது," என்று யாரி கூறுகிறார். பின்னாளில் அது ஹமாஸுக்கும் முக்கியமானதாக மாறும் என்கிறார். சின்வார் முதன்முதலாக, 1982-இல், தனது 19 வயதில், இஸ்ரேலால் அவரது ‘இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக’ கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985-இல் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் அவர் ஹமாஸின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார். இருவரும் ‘மிகமிக நெருக்கமானார்கள்’ என்று டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் கூறுகிறார். அமைப்பின் ஆன்மீகத் தலைவருடனான இந்த உறவு பின்னர் சின்வாருக்கு இயக்கத்திற்குள் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது, என்கிறார் அவர். ஹமாஸ் 1987-இல் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அக்குழுவின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை நிறுவினார். அப்போது அவருக்கு வயது 25 தான். அல்-மஜ்த் அமைப்பு ‘தார்மீகக் குற்றங்கள்’ என்று அழைக்கப்படுபவற்றைத் தண்டிப்பதில் பிரபலமடைந்தது. இந்த அமைப்பு பாலியல் வீடியோக்களை விற்ற கடைகளை குறிவைத்ததாக கூறுகிறார் மைக்கேல். அத்துடன் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் எவரையும் வேட்டையாடிக் கொன்றது. இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்படும் பல நபர்களை ‘மிருகத்தனமாக கொலை செய்ததற்கு’ சின்வார் தான் பொறுப்பு என்று யாரி கூறுகிறார். "அதில் சில கொலைகளை அவர் தனது கைகளால் செய்ததாக என்னிடமும் மற்றவர்களிடமும் பேசிப் பெருமைப்பட்டார்," என்று கூறினார். இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைக் கூறுகின்றனர். பின்னாளில் அவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அதில் உளவாளி என்று அவர் சந்தேகப்பட்ட ஒருவரை, அந்த நபரின் சகோதரரை வைத்தே உயிருடன் புதைக்க வைத்தார். மண்வெட்டிக்குப் பதிலாக ஒரு ஸ்பூனை வைத்து அந்த வேலையைச் செய்ய முடிக்க வைத்தார். "அவர் தன்னைச் சுற்றிப் பல தொண்டர்கள், ரசிகர்கள், பேன்றவர்களைச் சேர்த்தார். அவர்களில் பலரும் அவரைக் கண்டு பயப்படுபவர்கள். அவருடன் எந்த பிரச்னையையும் வைத்துக்கொள்ள விரும்பாதவர்கள்," என்று யாரி கூறுகிறார். 1988-இல், சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. படக்குறிப்பு, யாஹ்யா சின்வார் சிறை வாழ்க்கை சின்வார் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார். 1988 முதல் 2011 வரை. அங்கு அவர் தனிமைச் சிறையில் இருந்த காலம், அவரை மேலும் தீவிரமாக்கியதாகத் தெரிகிறது. "அவர் தனது அதிகாரத்தை இரக்கமின்றிப் பயன்படுத்தினார்," என்கிறார் யாரி. அவர் கைதிகள் மத்தியில் ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர்கள் சார்பாக சிறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் கைதிகளிடையே ஒழுக்கத்தை அமல்படுத்தினார். சின்வார் சிறையில் இருந்தபோது அவரை மதிப்பீடு செய்த இஸ்ரேலிய அரசு, அவரது குணாதிசயத்தை "கொடுமை, அதிகாரம், செல்வாக்கு, வலியைத் தாங்கும் திறன், தந்திரம் மற்றும் சூழ்ச்சியின் அசாதாரண திறன்கள், கொஞ்சம் கிடைத்தாலே மன நிறைவடையும் தன்மை... மற்ற கைதிகள் மத்தியில் சிறைக்குள் கூட ரகசியங்களை வைத்திருப்பது... திறமை உள்ளது. கூட்டத்தைத் தக்கவைப்பது,” என்று வரையறுத்தது. சின்வாரைச் சந்தித்துப் பேசிய யாரியின் மதிப்பீடு, ‘அவர் ஒரு மன நோயாளி’ என்பதுதான். "ஆனால் 'சின்வார் ஒரு மனநோயாளி’, என்று பொதுப்படையாகச் சொல்வது தவறு" என்று அவர் கூறுகிறார், "ஏனென்றால் அந்த விசித்திரமான, சிக்கலான மனிதரை நீங்கள் புரிந்துகொள்ளாமல் போகக்கூடும்," என்கிறார். யாரியின் கூற்றுப்படி, சின்வார் ‘மிகவும் தந்திரமானவர், புத்திசாலி - ஒரு வகையான தனிப்பட்ட வசீகரம் கொண்டவர்’. சின்வார் யாரிஒயிடம் ‘இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும்’ என்றும், பாலத்தீனத்தில் யூத மக்களுக்கு இடமில்லை என்றும் கூறியபோது, கேலியாக, ‘உங்கள் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்காகச் செய்கிறேன்,’ என்பாராம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எகிப்து எல்லையில் சின்வார் (படத்தின் நடுவே இருப்பவர்), 2017-இல் எடுக்கப்பட்ட படம் சிறையிலிருந்து விடுதலை சிறையில் இருந்த சின்வார் இஸ்ரேலிய செய்தித்தாள்களைப் படித்து ஹீப்ரு மொழியில் சரளமாக பேசக் கற்றுக்கொண்டார். யாரி அரபு மொழியில் சரளமாக இருந்தபோதிலும், சின்வார் தன்னுடன் எப்பொழுதும் ஹீப்ருவில் பேச விரும்புவதாக யாரி கூறுகிறார். "அவர் தனது ஹீப்ருவை மேம்படுத்த முயன்றார்," என்று யாரி கூறுகிறார். "சிறைக் காவலர்களை விட நன்றாக ஹீப்ரு பேசும் ஒருவரிடமிருந்து அவர் பயனடைய விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் அவர். சின்வார் 2011-இல் ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்டார். அதில் 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டிற்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதியான சின்வாரின் சகோதரரால் கடத்தப்பட்டு ஐந்து வருடங்களாக ஷாலித் சிறைபிடிக்கப்பட்டிருந்தார். சின்வார் மேலும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைக் கடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அந்தத் தருணத்தில், இஸ்ரேல் காஸா பகுதியில் தன் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்று, அதன் போட்டியாளர்களான யாசர் அராஃபத்தின் ஃபத்தாஹ் கட்சியின் பல உறுப்பினர்களை உயரமான கட்டிடங்களின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சின்வாரின் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக நிற்கும் ஆயுதமேந்திய போராளி ‘கொடூரமும் கவர்ச்சியும் கலந்த நபர்’ சின்வார் காஸாவிற்கு திரும்பியதும், அவர் உடனடியாக ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், என்று மைக்கேல் கூறுகிறார். இஸ்ரேலிய சிறைகளில் தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை தியாகம் செய்த ஹமாஸின் ஸ்தாபக உறுப்பினர் என்ற பெருமை பெற்றார். ஆனால், "மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். இவர் தனது கைகளால் மக்களைக் கொன்றவர் என்ற முறையில்," என்று மைக்கேல் கூறுகிறார். "அவர் மிகவும் கொடூரமானவர், ஆனால் அவரிடம் ஒரு கவர்ச்சி இருந்தது," என்கிறார். "அவர் ஒரு சொற்பொழிவாளர் அல்ல," என்கிறார் யாரி. "அவர் பொது மக்களிடம் பேசும் போது, ஒரு கும்பலைச் சேர்ந்தவர் போலப் பேசுவார்." சிறையை விட்டு வெளியேறிய உடனேயே, சின்வார் இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படை மற்றும் அதன் தலைமைப் பணியாளர் மர்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்று யாரி கூறுகிறார். 2013-இல், அவர் காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2017-இல் அதன் தலைவராக ஆனார். சின்வாரின் இளைய சகோதரர் முகமதுவும் ஹமாஸில் பங்கு வகித்தார். 2014-இல் ஹமாஸால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பல இஸ்ரேலிய படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக அவர் கூறிக்கொண்டார். ஆனால், ஊடக அறிக்கைகள், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், காஸாவின் அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் மறைந்திருக்கும் ஹமாஸின் இராணுவப் பிரிவில் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம் என்றும், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதல்களில் பங்கு வகித்திருக்கலாம் என்றும் கூறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் ஆன்மீகத் தலைவர் ஷேக் அகமது யாஸீனின் படம் தாங்கிய சுவரோவியம் ‘மூர்க்கத்தனமான விதிகளை விதிப்பவர்’ சின்வாரின் இரக்கமற்ற தன்மை மற்றும் வன்முறைப் போக்கு ‘கான் யூனிஸின் கசாப்புக்காரன்’ என்ற புனைப்பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது. "அவர் மூர்க்கத்தனமான ஒழுக்க விதிகளை விதிப்பவர்," என்று யாரி கூறுகிறார். "ஹமாஸில் அனைவரும் அறிந்த ஒன்று, நீங்கள் சின்வாருக்கு கீழ்ப்படியாவிட்டால், உங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறீர்கள்." மோசடி மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஹ்மூத் இஷ்டிவி என்ற ஹமாஸ் தளபதி 2015-இல் சிறைப்பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கு அவர்தான் பொறுப்பு என்று கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டில், சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில், அமெரிக்கா தன் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதை எதிர்த்து, இஸ்ரேலில்-காஸா எல்லை வேலியை உடைத்துக்கொண்டு செல்ல ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களுக்கு அவர் தனது ஆதரவை சமிக்ஞையாகத் தெரிவித்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், மேற்குக் கரையில் இருக்கும் போட்டி அமைப்பான பாலஸ்தீன அதிகாரத்திற்கு (PA) விசுவாசமானவர்கள் நடத்திய படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாகக் கூறினார். ஆயினும்கூட, அவர் சில சமயங்களில் நடைமுறையில் சாத்தியமான பார்வைகளையும் முன்வைத்தார். இஸ்ரேலுடன் தற்காலிக போர் நிறுத்தங்களை ஆதரித்தார், கைதிகள் பரிமாற்றங்கள் மற்றும் பாலத்தீன அதிகாரத்துடன் நல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்தார். இதனால் அவரது போக்கு மிகவும் மிதமானது என்று அவரது எதிரிகள் சிலர் விமர்சித்தனர் என்று மைக்கேல் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகள் படங்களைத் தாங்கிய போஸ்டர்கள் இரானுடன் நெருக்கம் இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் காவல் அமைப்பில் உள்ள பலர், கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சின்வாரை சிறையில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறார்கள். ஹமாஸுக்குப் பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் வேலைக்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம், அந்த இயக்கம் போர் செய்வதறகான உந்துதலை இழந்துவிடும் என்ற தவறான கணிப்பில் அந்தக் கைதிகள் பரிமாற்றத்தைச் செய்ததாக இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர். அது மிகத் தவறான கணிப்பாகிப் போனது. "பாலத்தீனத்தை விடுவிக்க வந்த நபராக அவர் தன்னைப் பார்க்கிறார். காஸாவின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதோ, சமூக சேவைகள் செய்வதோ அவரது நோக்கம் இல்லை, " என்று யாரி கூறுகிறார். 2015-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை, சின்வாரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காஸா பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தைக் குறிவைத்தன. 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு தொலைக்காட்சி உரையில், கிடைக்கக் கூடிய எந்தவொரு வழியிலும் இஸ்ரேலைத் தாக்குமாறு மக்களை அவர் ஊக்குவித்தார். ஹமாஸின் அரசியல் பணியகத்தை அதன் ஆயுதப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படையுடன் இணைக்கும் முக்கிய நபராக சின்வாரை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் அமைப்புதான், தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ம் தேதி நடந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியது. அக்டோபர் 14 அன்று, இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட், சின்வாரை ‘தீமையின் முகம்’ என்று குறிப்பிட்டார். மேலும் "அந்த மனிதரும் அவரது முழு குழுவும் எங்கள் பார்வையில் உள்ளனர். நாங்கள் அவருக்கு பதிலடி கொடுப்போம்,” என்றார். சின்வார் இரானுக்கும் நெருக்கமானவர். ஒரு ஷியா நாட்டிற்கும் சன்னி அரபு அமைப்புக்கும் இடையிலான கூட்டு என்பது வெளிப்படையான ஒன்றல்ல. ஆனால் இருவருக்கும் உள்ள ஒரே நோக்கம், இஸ்ரேல் அரசை முடிவுக்குக் கொண்டு வந்து, ஜெருசலேமை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து ‘விடுவிப்பது’. இருவரும் ஒன்றாக வேலை செய்கின்றனர். இரான் ஹமாஸுக்கு நிதியுதவி அளித்து, பயிற்சியும் ஆயுதங்களும் வழங்குகிறது, அதன் ராணுவத் திறன்களை கட்டமைக்க உதவுகிறது, மற்றும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளைக் கொடுக்கிறது. இது இஸ்ரேலிய நகரங்களை குறிவைக்க பயன்படுத்துகிறது. சின்வார் 2021-இல் ஒரு உரையில் இரானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். "இரான் இல்லாதிருந்தால், பாலத்தீனத்தின் எதிர்ப்பு இவ்வளவு வலுவாக இருந்திருக்காது," என்றார். எதிர்காலம் என்னவாகும்? ஆயினும்கூட, சின்வாரைக் கொல்வது இஸ்ரேலுக்கு ஒரு "விளம்பர வெற்றியாக’ இருக்குமே தவிர, அது ஹமாஸ் இயக்கத்தை உண்மையில் பாதிக்காது என்று லோவாட் கூறுகிறார். அரசு எதிர்ப்பு நிறுவனங்களில் ஒரு தளபதியோ தலைவரோ கொல்லப்பட்டால், அவர்களுக்கு பதில் மற்றொருவர் வருவார். அடுத்து வருபவர்களுக்கு அதே அனுபவம் அல்லது நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அமைப்பு வேறு வடிவத்தில் தன்னை மீண்டும் உருவாக்கிக் கொள்ளும். "அவர் கொல்லப்பட்டால், அது ஹமாஸுக்கு இழப்பாகத்தான் இருக்கும்," என்று லோவாட் கூறுகிறார். "ஆனால் அவருக்குப் பதில் இன்னொருவர் வருவார். அதற்கான கட்டமைப்புகள் உள்ளன. இது பின்லேடனைக் கொல்வது போல் இல்லை. ஹமாஸுக்குள் மற்ற மூத்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் உள்ளனர்," என்றார். ஆனால், மிகப்பெரிய கேள்வி, ‘இஸ்ரேல் ஹமாஸை ஒழிப்பதற்கான தனது தாக்குதலை இராணுவப் பிரசாரத்தை முடிக்கும்போது, காஸாவுக்கு என்ன நடக்கும், இறுதியில் யார் பொறுப்பேற்பார்கள்?’ என்பதுதான். மேலும், ‘காஸா மீண்டும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கான ஏவுதளமாக மாறுவதைத் தடுக்க முடியுமா? அப்படித் தடுப்பதன் மூலம் தற்போது நடப்பது போன்ற பெரும் மனிதாபிமானப் பேரழிவுகளைத் தடுக்க முடியுமா?’ https://www.bbc.com/tamil/articles/cd1pqqrp1pdo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தம் - மிகவிரைவில் சாத்தியமாகலாம் என ஹமாஸ் தெரிவிப்பு Published By: RAJEEBAN 21 NOV, 2023 | 12:02 PM இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இதனை தெரிவித்துள்ளார் யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 7ம் திகதி ஹமாசினால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்ற நிலையிலேயே ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது. பணயக்கைதிகள் விடுதலைக்கான முயற்சிகளில் கட்டார் தீவிரமாக ஈடுபட்டுள்ளது - கட்டாரில் ஹமாசின் அரசியல் அலுவலகம் உள்ளதும் ஹனியே கட்டாரில் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது. சில சிறிய விவகாரங்கள் காரணமாகவே பணயக்கைதிகள் விடுதலை தாமதமாவதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை பணயக்கைதிகள் விவகாரத்தில் இணக்கப்பாட்டை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/169845
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவிலிருந்து வெளியேற முயன்ற பாலஸ்தீன கவிஞர் இஸ்ரேலிய படையினரால் கைது Published By: RAJEEBAN 21 NOV, 2023 | 04:00 PM காசாவிலிருந்து வெளியேறமுயன்றவேளை பாலஸ்தீன கவிஞர் மொசாப் அபு டொகா இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கவிஞரின் பிள்ளைகளில் ஒருவர் அமெரிக்கர் என்பதால் அவர் எகிப்திற்கு செல்லலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர் எகிப்திற்கு செல்ல முயன்றவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார். வடகாசாவிலிருந்து தென்காசாவை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ரவா எல்லையை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை அவரையும் ஏனைய பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேலிய படையினர் கைதுசெய்துள்ளனர் என அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார் அமெரிக்க தூதரகமே அவரது குடும்பத்துடன் ரபாவிற்கு செல்லுமாறு கே;ட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் அவரது மகனிற்கே எகிப்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது கவிஞருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனினும் பின்னர் அவருக்கும் குடும்பத்தினருக்கும் அனுமதி கிடைத்தது என அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்கள் தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்ல முயன்றவேளை அவரையும் பலரையும் இஸ்ரேலிய படையினர் தடுத்துநிறுத்தினர் அவர்களை கைகளை உயர்த்தச்சொன்னார்கள் மகனை கீழே இறக்கிவிடச்சொன்ன பின்னர் இஸ்ரேலிய இராணுவத்தினர் அவரையும் 200 பேரையும் இழுத்துச்சென்றனர் என கவிஞரின் மனைவி தெரிவித்துள்ளார். அமெரிக்கா இஸ்ரேலிய படையினரோ இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். அபுடோகா வடகாசாவில் குண்டுவீச்சிற்கு மத்தியில் வாழ்வது குறித்த தனது அனுபவத்தை நியுயோர்க்கர் சஞ்சிகைக்கு எழுதிவந்துள்ளார். https://www.virakesari.lk/article/169886
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 5,600 சிறுவர்கள் பலி! இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 13,300 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, காசாவில் ஹமாஸின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 5,600 பேர் சிறுவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/281847