Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். 15 நிமிடங்களுக்கு முன்னர் ‘பாலு சத்தம் கேட்கவில்லை, ஏன் சும்மா நிற்கிறீர்கள்’ என சாத்தான்குளம் காவல் நிலையத்தின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் சொல்ல, ‘நீ செத்தாலும் பரவாயில்லை. என் சொத்தை வித்தாவது வெளியில் வந்துவிடுவேன்’ எனக் கூறிக்கொண்டே அந்தக் காவல்நிலையத்தின் முன்னாள் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அடித்தார்" என்பது நீதிமன்றத்தில் சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலம். இந்தக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உட்பட ஒன்பது காவலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணைக் காவலில் மரணமடைந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகின்றது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை முதலில் விசாரித்த அப்போதைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், கடந்த 25 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார். அவர் முதல் நாள் சாட்சியம் அளித்தபோது, சம்பவம் நடந்த ஜூன் 19 மற்றும் 20 ஆம் தேதி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் என்ன நடந்தது என்று தன் விசாரணையின் மூலம் அறிந்துகொண்டதை சாட்சியமாக அளித்தார். "ரத்தம் வடியவடிய அடித்த காவல்துறை" படக்குறிப்பு, அப்போது, ஏற்கனவே ரத்தக்கறைகள் மற்றும் முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்ட, பாரதிதாசன், காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரது லத்திகளையும் கைப்பற்றியுள்ளார். தந்தை மகன் மரணத்திற்கு பிறகு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டபோது காவல்நிலையத்தில் இருந்த இரண்டு பெண் காவலர்கள், நீதித்துறை நடுவர் பாரதிதசானிடம் ஜூன் 19 தேதி இரவு முழுவதும் என்ன நடந்தது என்பதை கூறியுள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் பாரதிதாசன் அளித்த சாட்சியில்,“அவர்(பெண் காவலர்) தனது வாக்குமூலத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இருவரையும் போலீசார் காவல்நிலைய மேஜையின் மீது படுக்க வைத்து ஒரு இரவு முழுவதும் லத்தியால் அடித்து இருவருக்கும் ரத்தக்காயம் ஏற்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கறைகளில் பெரும்பாலாவனை ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டதாகவும், லத்தி மற்றும் அந்த மேஜையினை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.” என்றார். அப்போது, ஏற்கனவே ரத்தக்கறைகள் மற்றும் முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்ட பாரதிதாசன், காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரது லத்திகளையும் கைப்பற்றியுள்ளார். “விசாரணையின் போது, காவலர் சாமதுரையிடம் அவரது லத்தியை கேட்டபோது, அவர் ஓடிச் சென்று காவல்நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த காரின் மீது ஏறி குதித்து இருட்டில் மறைந்துவிட்டார்,” என நீதிமன்றத்தில் வாக்குமூலமாக கொடுத்துள்ளார் பாரதிதாசன். காவல் நிலையத்தில் இருந்த பெரும்பாலான ரத்தக்கறைகள், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது ரத்தக்கறைதான் என்றும் பாரதிதாசன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். “காவல் நிலையத்தில் காணப்பட்ட இரத்தக்கறைகளில் பெரும்பாலானவை சுவற்றின் கீழ்பகுதியில் காணப்பட்டது. அது காயமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் பிட்டத்தில் இருந்த காயத்தின் உயரத்திற்கு ஒத்திசைவதாக அமைந்திருந்தது, என்றார் பாரதிதாசன். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சிறையில் எப்படி இருந்தார்கள்? படக்குறிப்பு, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர் ஜூன் 19 ஆம் தேதி இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் ஜெயராஜூம், பென்னிக்சும் நடக்கக்கூட முடியாமல் சிரமப்பட்டதாகவும், அவர்களின் பிட்டத்தில் இருந்து தண்ணீர் போல வடிந்துகொண்டே இருந்ததாக, அவருடன் இருந்த சிறைவாசிகள் நீதிமன்ற நடுவர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். “சிறையில் இருந்தபோது, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சுக்கும், பின்பக்கம் நிற்காமல் நீர் வடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் லேசான ஈரம் இருந்தது, மூன்றாம் நாள் தான் அதிகமாக நீர் வடிந்தது. சிறையில் அடைத்த முதல் இரண்டு நாட்கள் அவர்கள் கொஞ்சம் அருகில் இருந்த சுவரை பிடித்தும், கழிவறை சுவற்றை பிடித்தும் தான் நடக்க முடிந்தது. அனைத்து கைதிகளையும் மூன்று வேளை சாப்பிடும்போது வரிசையாக அமரச் சொல்லி எண்ணும்போது கூட பென்னிக்சாலும், அவரது அப்பாவாலும் தரையில் அமர முடியாமல் அருகில் உள்ள சுவற்றை பிடித்தபடியே நிற்பார்கள். மூன்றாவது நாள் பென்னிக்சால் கொஞ்சம் கூட நடக்க முடியாமலும், நிற்க முடியாமலும், படுக்க முடியாமலும், சாப்பிடும்போது கூட, இரண்டு கைகளையும் தரையில் ஊற்றி, இரண்டு கால் முட்டிகளையும் தரையில் முட்டி போட்டக் கொண்டும், மிகவும் சிரமப்பட்டு கொஞ்சமாக சாப்பிட்டு, மிச்சம் வைத்துவிடுவார்,” இவ்வாறு ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுடன் இருந்த சிறைவாசி ஒருவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ‘அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான்?’ படக்குறிப்பு, கிடைசியாக ஜெயராஜ் தனது குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளும்படி சொன்னதாகப் பகிர்ந்தார் பென்னிக்சின் நண்பர் சங்கரலிங்கம். ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இறந்து மூன்றாண்டுகளானாலும், தங்களால் இன்றளவும் அந்த சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை என்கிறார்கள் பென்னிக்சின் நண்பர்கள். “நாங்கள் இரண்டாம் வகுப்பிலிருந்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். வெவ்வேறு வேலைக்கு சென்றாலும், நாங்கள் தினமும் சந்தித்துக்கொள்வோம். இன்று அவன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதே ஊரு தான், இதே தெரு தான். நாங்க சேர்ந்து சுத்துன இடத்திற்கு இப்போது சென்றாலும், எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அழுகை வரும். அந்த கடைத்தெருவை கடக்கும்போதெல்லாம் விவரிக்க முடியாத பதற்றமும், அழுத்தமும் ஏற்படுகிறது,”என்றார் சங்கரலிங்கம். கடைசியாக ஜெயராஜ் தனது குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும்படி சொன்னதாகப் பகிர்ந்தார் சங்கரலிங்கம். “அம்மாவை பத்திரமாக பார்த்துக்கோடா, இதுதான் பென்னிக்ஸ் ஜெயிலுக்கு செல்லும் முன் கடைசியாக என்னிடம் சொன்னது. அவனுக்கு அம்மா என்றால் உயிர்,” என்றார் சங்கரலிங்கம். பென்னிக்சின் மற்றொரு நண்பரான ராஜ்குமார் கூறுகையில், பென்னிக்ஸ் தான் செய்த குற்றம் என்ன எனத் தெரியாமல் மிகவும் வேதனையடைந்ததாகக் கூறினார். “அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான் என்று தான் அவனுக்கு உறுத்திக்கிட்டே இருந்தது. எங்களுக்கும் அந்த ஒரு கேள்விதான் இப்போதும் இருக்கிறது. அவன் இரவு காவல்நிலையம் சென்றதில் இருந்து விடியும்வரை நாங்கள் வெளியே தான் இருந்தோம். அவனுக்கு பதிலாக நாங்கள் நண்பர்கள் ஆளுக்கு இரண்டு அடி வாங்கியிருந்தால் கூட, இந்நேரம் அவன் உயிருடன் இருந்திருப்பான்,” என்றார் ராஜ்குமார். ‘ஊருக்கு போகவே முடியலை; பயமாக இருக்கிறது’ படக்குறிப்பு, இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் நாங்கள் இத்தனை காலம்பட்ட கஷ்டங்களுக்க நீதி கிடைக்கிறதா இல்லையா எனத் தெரியும் என்றார் பென்னிக்சின் மைத்துனர் வினோத். அந்த சம்பவத்திற்கு பிறகு தங்களுடைய சொந்த ஊருக்கே செல்ல பிடிக்கவில்லை என்கிறார் பென்னிக்சின் மைத்துனரான வினோத். “நான் பென்னிக்சின் தங்கையை திருமணம் செய்துள்ளேன். எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடிதான். முன்பெல்லாம் எப்போது ஊருக்கு சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும், நல்ல நினைவுகள் இருக்கும். ஆனால், இப்போது ஊருக்கு செல்லும்போதெல்லாம், அந்த இருவரை இழந்தது மட்டும்தான் நினைவுக்கு வருகிறது,” என்றார். மேலும், பேசிய வினோத், “இப்போது வரை எந்த தரப்பில் இருந்தும் எந்த அழுத்தமும் வரவில்லை. ஆனால், இருந்தபோதும், அந்த சம்பவத்திற்கு பிறகு, எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியே தனியாக செல்வதற்கே பயப்படுகிறோம். மனைவியோ மற்ற உறவினர்களோ வெளியே சென்றால், அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார். இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் அவர்கள் இத்தனை காலம் பட்ட கஷ்டங்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா எனத் தெரியும் என்றார் வினோத். ஆனால், இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்திருந்தால், இன்னும் பலர் இதுபோல பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள் என்கிறார் மற்றொரு மைதுனரான பொன்சேகர். “இப்போதும் ஊருக்கு சென்றால், இதே நினைவுகள் தான் உள்ளது. ஆனால், இந்த வழக்கை மட்டும் எப்படியாவது நடத்திவிடுங்கள் என்று தான் ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். நாங்களும் நீதி கேட்காமல், சென்றிருந்தால், பல பேர் இன்னும் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என ஊர் மக்கள் எங்களிடத்தில் கூறுகிறார்கள்,” என்றார் பொன்சேகர். வழக்கின் நிலை என்ன? முதலில் தமிழ் நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பின் சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட காவலர்களை கைது செய்தது. பின், இவ்வழக்கு மத்திய புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. “அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, தற்போது நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாட்சியம் அளித்து வருகிறார். அவருக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசாரும், தமிழ்நாடு போலீசாரும் சாட்சியம் அளிப்பார்கள். பின், வழக்கின் வாதம், பிரதிவாதங்கள் நடைபெறும்,” என்றார் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ். இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது, வழக்கு நடந்துகொண்டிருப்பதால் கருத்துக் கூற விரும்பவில்லை என்றனர். https://www.bbc.com/tamil/articles/clje3xll33zo
  2. போர்க்கப்பலை அனுப்புவதன் மூலம் அமெரிக்கா பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் தன்னையும் இணைத்துக்கொள்கின்றது - ஹமாஸ் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 10:16 AM அமெரிக்கா தனது போர்க்கப்பலை அனுப்புவதன் மூலம் பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் ஆக்கிரமிப்பில் தன்னையும் இணைத்துக் கொள்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலை மத்தியகிழக்கிற்கு அமெரிக்கா அனுப்புவதன் மூலம் அமெரிக்கா பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் தன்னையும் இணைத்துக் கொள்கின்றது என தெரிவித்துள்ள ஹமாஸ் இவ்வாறான நடவடிக்கைகள் எங்கள் மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர் போர்ட் அணுவாயுத கப்பல் ஏவுகணை கப்பல்கள் ஏவுகணைகளை அழிக்கும் கப்பல்கள் மத்திய கிழக்கிற்கு புறப்பட்டுள்ளன. அமெரிக்கா மத்திய கிழக்கை நோக்கி தனது போர்விமானங்களையும் தயார்படுத்தியுள்ளது.ஹெஸ்புல்லா போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்பார்த்தே அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது. https://www.virakesari.lk/article/166429
  3. இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் தாக்குதல் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 06:41 AM இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. இஸ்ரேலியின் பிரதான விமான நிலையமான பென்குரியன் விமானதளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் வீடுகளை இலக்குவைத்தல் உட்பட ஏனைய குற்றங்களிற்காக இந்த தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நகரமான அஸ்கெலென் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166418
  4. இஸ்ரேலில்இசைநிகழ்வு இடம்பெற்ற பகுதியில் 260 உடல்கள் - மீட்பு பணியாளர்கள் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 06:29 AM இஸ்ரேலின் இசை நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் 260க்கும் மேற்பட்ட உடல்கள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள பகுதியில் இந்த இசைநிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை தாக்குதல் இடம்பெறும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் தப்பியோடுவதை வீடியோக்கள் காண்பிக்கின்றன- திறந்தவெளிகள் ஊடாக பலர் ஒடுவதையும் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காணமுடிகின்றது. நிலத்தில் விழுபவர்கள் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து தப்புவதற்காக நிலத்தில் விழுந்து படுக்கின்றார்களா அல்லது துப்பாக்கி சூட்டினால் விழுகின்றார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. மக்களுடன் தப்பியோட முயலும் வாகனங்கள் மீது போராளிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதால் ஏற்பட்ட பதற்றத்தை உயிர்தப்பிய ஓர்டெல் என்பவர் வர்ணித்துள்ளார். https://www.virakesari.lk/article/166417
  5. ஹமாஸ் தாக்குதல்: இஸ்ரேலுக்கு விரையும் அமெரிக்க போர்க் கப்பல்கள் பட மூலாதாரம்,PA MEDIA 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் மீது ஹமாஸ் குழு நடத்தியிருக்கும் தாக்குதலைத் தொடர்ந்து கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு ஒரு விமானம் தாங்கி கப்பல், கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கப்போவதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது. முன்னர், தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அமெரிக்க அதிபர் பிடன் ‘இதுவரை நடந்திராத பயங்கரமான தாக்குதல்’ என்று வர்ணித்திருந்தார். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களில் அமெரிக்கக் குடிமக்களும் அடங்குவர் என்று வெளியாகியிருக்கும் அறிக்கைகளைச் அமெரிக்கா சரிபார்த்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கிறார். இத்தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் கடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. காஸாவில், பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ‘தாக்குதலுக்கு இரான் உதவியது’ வரும் நாட்களில், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு என்ற விமானம் தாங்கிக் கப்பல், ஒரு ஏவுகணைக் கப்பல் மற்றும் நான்கு ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இப்பகுதியை நோக்கிச் செல்லும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். அமெரிக்க போர் விமானங்களும் அப்பகுதிக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு மேலும் ராணுவ உதவி அனுப்பப்படும் என்று கூறியிருக்கும் அமெரிக்க அசராங்கம், இஸ்ரேலின் எதிரிகள் இந்தச் சூழ்நிலையில் இருந்து ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கா செயல்படுவதாகக் கூறியது. இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹமாஸ் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து, பாலஸ்தீனப் பகுத்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தங்களது தாக்குதலை நடத்த இரானின் உதவி பெரிதும் பயன்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் குழுவினர், ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மற்றும் பாராகிளைடர்களின் மூலம், காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய எல்லைக் கோட்டைகளை உடைத்து தாக்குதல் நடத்தினர். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், இரானின் நேரடி தலையீட்டிற்கான ஆதாரங்களை அமெரிக்கா காணவில்லையெனினும், காஸாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் குழுவிற்கு இரான் பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது என்றார். “இரான் பல ஆண்டுகளாக அளித்துவரும் ஆதரவு இல்லாமல் ஹமாஸ் குழுவல் இயங்க முடியாது. இந்தக் குறிப்பிட்ட தாக்குதலுக்குப் பின்னால் இரான் இருந்ததற்கான நேரடி ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஹமாஸிற்கு இரான் பல ஆண்டுகளாக ஆதரவு கொடுத்து வருவது உறுதி," என்று அவர் அமெரிக்கத் தொலைகாட்சியில் தெரிவித்தார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் ஐ.நா தூதர் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பெண்ணின் படத்தைக் காட்டுகிறார் அமெரிக்கக் குடிமக்கள் சிக்கியுள்ளனரா? இந்தத் தாக்குதலில் அமெரிக்க குடிமக்கள் சிக்கியுள்ளனர் என்று வெளிவரும் தகவல்கள் பற்றி அமெரிக்க அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக பிளிங்கன் கூறினார். "இறந்தவர்களில் பல அமெரிக்கர்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அறிக்கைகளை சரிபார்க்க நாங்கள் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்," என்று அவர் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். இங்கிலாந்து, பிரான்ஸ், யுக்ரேன் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளும் தங்கள் குடிமக்கள் இந்தத் தாக்குதலில் இறந்திருப்பதாகப் பதிவு செய்துள்ளன. மேலும் பேசிய பிளிங்கன், "இது ஒரு மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதல். இதில் இஸ்ரேலிய குடிமக்கள் அவர்களின் நகரங்களில், அவர்களின் வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் காசாவின் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். உலகம் இதைக்கண்டு அதிர்ச்சியடைய வேண்டும்,” என்றார். மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 23 வயதான அமெரிக்க-இஸ்ரேலியர் ஹெர்ஷ் கோல்பெர்க்-பொலின் ஒருவர். அவர் ஒரு இசைவிழாவில் பங்கேற்ற போது ஹமாஸ் குழுவினர் அங்கு தாக்குதல் நடத்தினர். அவரிடமிருந்து ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘என்னை மன்னிக்கவும்’ என்ற இரண்டு குறுஞ்செய்திகள் வந்ததாக அவரது பெற்றோர் ‘ஜெருசலேம் போஸ்ட்’ இதழிடம் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸின் திடீர் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் பதிலடியைத் தொடர்ந்து இரு தரப்பிலும் 1,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் ராணுவ உதவிகள் அமெரிக்காவிற்கான இஸ்ரேலின் தூதர் மைக்கேல் ஹெர்சாக், தெற்கு இஸ்ரேலில் கடத்தப்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்களில் அமெரிக்கர்களும் இருப்பதாகத் தகவல்கள் வருவதாகவும் ஆனால் அதுபற்றி மேற்படி விவரங்கள் இல்லை என்றும் கூறினார். அமெரிக்கா, தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி டாலர்கள் அளவிலான இராணுவ உதவியை அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் அமெரிக்க வெளிநாட்டு உதவியைப் பெறும் மிகப்பெரிய நாடாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் காஸா வன்முறைகள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் நியூயார்க்கில் கூட உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c6pjgqeg399o
  6. இஸ்ரேலிய மக்கள், பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த துயரமான நேரத்தில், நான் அவர்களுக்கும், உலகுக்கும், எங்கெங்கும் உள்ள பயங்கரவாதிகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவெனில் இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
  7. நீண்ட கால யுத்தம் குறித்து காசா மக்கள் அச்சம் Published By: RAJEEBAN 08 OCT, 2023 | 07:55 PM Rushdi Abu Alouf BBC News, Gaza City நான் காசாவின் மத்தியபகுதிக்கு வாகனத்தில் சென்றேன் இஸ்ரேலின் விமானதாக்குதலில் இடிந்துவிழுந்துள்ள கட்டிடம் முக்கியமான வீதியின் போக்குவரத்தை தடைசெய்துள்ளது. காசா மக்களிற்கு இணையவசதிகளை வழங்கிவந்த முக்கியமான கட்டிடம் அழிக்கப்பட்டுள்ளதால் காசாவில் இணையவசதி இல்லாத நிலை காணப்படுகின்றது. தொடர்பாடல் என்பது கடினமாக உள்ளது. ஆனாலும் நான் தப்பியோடிக்கொண்டிருக்கின்ற பொதுமக்களுடன் உரையாடினேன், அனேகமானவர்கள் கலவையான உணர்வை கொண்டுள்ளனர். நேற்றைய தினம் பாலஸ்தீனியர்களிற்கு மகிழ்ச்சியை கொண்டுவந்தது, இஸ்ரேலின் தாக்குதலிற்கு ஹமாஸ் பழிவாங்குகின்றது என அவர்கள் தெரிவித்தனர், அதேவேளை இந்த யுத்தம் நீண்டநாள் நீடிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர். இஸ்ரேல் காசாவிற்கான மின்சாரம், எரிபொருள் விநியோகம் போன்றவற்றை துண்டிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. மக்கள் மனிதாபிமான நிலை குறித்து கரிசனை கொண்டுள்ளனர். பிரதான வீதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன, சில வெதுப்பகங்கள் மாத்திரம் திறந்திருக்கின்றன. https://www.virakesari.lk/article/166414
  8. பல அமெரிக்கர்கள் பலி-இராணுவ உதவியை வழங்குகின்றது அமெரிக்கா Published By: RAJEEBAN 08 OCT, 2023 | 07:22 PM ஹமாசின் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் கொல்லபட்டுள்ளனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் சி.என்.என்னிற்கு தெரிவித்துள்ளார். அமெரிக்க இது குறித்த விபரங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா இஸ்ரேலிற்கு வழங்கவுள்ள இராணுவ உதவி குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிற்கு என்ன தேவையோ அதனை வழங்குவதே எங்களின் முதல் தெரிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166413
  9. இஸ்ரேல் vs ஹமாஸ்: பலி ஆயிரத்தை நெருங்குகிறது - இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேல் விமானப்படை நடத்தும் தாக்குதல்களில் 370 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம், ஹமாஸ் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் இதுவரை 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸாவில் என்ன நடக்கிறது? காஸா மீது இரண்டாவது நாளாக குண்டுமழை பொழியும் இஸ்ரேல், அங்கே ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர். இஸ்ரேலுக்குள் ராணுவம் - ஹமாஸ் சண்டை இஸ்ரேல் எல்லைக்குள் அந்நாட்டு படைகளுக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் இடையே குறைந்தது 22 இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன. இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உரிம், பாரி, நஹல் ஓஸ், நேட்டிவ் ஹதாரா, ஜிகிம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற மீட்புப் பணிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் "நிலைமை மதிப்பீட்டிற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும்" என்று ராணுவம் கூறுகிறது. இதற்கிடையில், இஸ்ரேலிய அதிகாரிகள் தங்களது நாடு "இன்னும் போரைத்" தொடர்வதாகக் கூறியுள்ளனர். [மேலும்] ஹமாஸ் குழுவினரிடம் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை மீட்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக" தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்களைத் தொடங்கி 24 மணி நேரத்திற்கும் மேலாக நாட்டின் தெற்கு பகுதியில் வசிக்கும் சமூகங்களுக்குள் ஊடுருவிய நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் பார்ப்போம். தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலத்தீன ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் தென்பகுதியில் பெரும்பாலான பகுதிகளின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் காசா எல்லைக்கு அருகில் உள்ள பீரி மற்றும் ஸ்டெரோட் உள்ளிட்ட பகுதிகளில் சண்டை தொடர்கிறது. ஜேக் மார்லோ என்ற பிரிட்டிஷ் குடிமகன் காணாமல் போனதை இங்கிலாந்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்தபோது அவர் காசா எல்லைக்கு அருகிலுள்ள வெளிப்புற நடன விழாவில் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்ததாகத் தெரியவந்துள்ளது. 600 இஸ்ரேலியர்கள் பலி, 100 பேர் பணயக் கைதிகளாக சிறைபிடிப்பு யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல்வழி தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவத்தினர் என குறைந்தது 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடக்கத்தில் ஏவப்பட்ட 7,000 ராக்கெட்டுகளுடன் கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம் ஏற்கெனவே இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சாதாரண பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுப்படுத்திய நிலையில், லெபனானின் தெற்கு எல்லையில் உள்ள நிலைமை இப்போது அமைதியாக உள்ளது. ஆனால் இஸ்ரேல்-பாலத்தீன மோதலின் அச்சுறுத்தல் லெபனான் நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இரானிய ஆதரவு குழுவான ஹிஸ்புல்லா தனது இலக்கை கவனமாக தேர்ந்தெடுத்தது. சர்ச்சைக்குரிய 3 நிலைகளில் மட்டுமே அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஆனால், அதை விடப் பெரிய அளவில் அந்த அமைப்பு தாக்குதலை நடத்த முடியும். இரானைப் போலவே இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் குழுவினருக்கு தற்போதைய தாக்குதல் குறித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் முன்னேற்றம் குறித்து "ஆழமாகக் கவனித்து வருவதாகவும்" அந்த அமைப்பு கூறியுள்ளது. தற்போதைய தாக்குதல்கள் "பாலத்தீன மக்களின் இசைவைப் பெற்றுள்ளது" என்று அதன் அறிக்கை கூறுகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாகச் சென்று தாக்கக் கூடியவை. ஏவுதளம் மற்றும் பிற தளங்களை குறிவைத்து உடனடியாக பதிலடி கொடுத்த இஸ்ரேல், ஏற்கனவே தனது வடக்கு எல்லைக்கு வலுவான ராணுவ குழுக்களை அனுப்பியுள்ளது. அது ஒரு நீண்ட மோதலைத் திட்டமிடுவதாகவும், காஸாவில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறது. தற்போதைய தாக்குதல்களின் அளவு வரம்பிற்குட்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் தாக்குதல்களை கவனமாக அளவீடு செய்து மேற்கொள்கின்றனர். மேலும் முழு அளவிலான போரைத் தூண்டும் காரணிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகளில் உள்ள மறைமுகமான அச்சுறுத்தல், இதே நிலை நீடிப்பதற்குப் பதிலாக நிலைமை மோசடையும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு என்பது லெபனான் நாடு அல்ல. அந்த அமைப்பை எதிர்க்கும் பலர் நாட்டில் உள்ளனர். இன்னும் அரசியல் முடக்கத்தால் அந்த அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது - தற்போதைய நிலையில் அந்த அமைப்புக்கு சரியான தலைமையும் இல்லை என்பதுடன் கடும் பொருளாதார நெருக்கடியில் அந்த அமைப்பு சிக்கித் தவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசாவில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளும், அவர்களது எகிப்திய சுற்றுலா வழிகாட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நகரத்தில் இருந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரி தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடையாளம் தெரியாத பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி எக்ஸ்ட்ரா நியூஸ் தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களில் எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீதான இத்தகைய தாக்குதல் இதுவே முதல் முறையாகும். https://www.bbc.com/tamil/articles/c16755442elo
  10. இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 600 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. இந்த பதில் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர். இஸ்ரேலிய படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆய்ஹதக்குழுவினரும் இடையே குறைந்தது 22 இஸ்ரேல் இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன. யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அதோடு கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பதிலடி தாக்குதல்களுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் 230க்கும் மேற்பட்ட காசா மக்களும் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசாவில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் - துருக்கியில் உள்ள தூதரகம் இதுவரை குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 12க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று துருக்கியிலுள்ள இஸ்ரேலிய தூதரகம் இஸ்ரேலின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை இஸ்ரேலால் நேரடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. காசாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, சனிக்கிழமை முதல் இஸ்ரேலிய பதில் வான்வழித் தாக்குதல்களால் காஸாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட 2,000 பேர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பலி; பலர் கைது - இஸ்ரேல் காசாவில் இருந்து நடந்த தக்குதலுக்கு பிறகு, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, இஸ்ரேலிய சமூகங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையின்படி, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. இதுவரை எட்டு இடங்களில் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c16755442elo
  11. இஸ்ரேல் விமானதாக்குதல் - காசாவில் 256 பாலஸ்தீனியர்கள் 24 மணிநேரத்தில் பலி Published By: RAJEEBAN 08 OCT, 2023 | 12:12 PM இஸ்ரேலின் விமானதாக்குதல்களில் கடந்த 24 மணிநேரத்தில் 20 சிறுவர்கள் உட்பட 256 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 1800 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. காசா பள்ளத்தாக்கில் ஹமாசின் இலக்குகள் அமைந்துள்ள பகுதிகள் மீது தாக்குதல் இடம்பெறுவதாக தெரிவித்து பல படங்கள் வீடியோக்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. காசாவிலிருந்து தகவல்கள் மிகக்குறைந்தளவிலேயே வெளிவருகின்ற போதிலும் சமூக ஊடகங்களில் மதவழிபாட்டுத்தலங்கள் உட்ப பல கட்டிடங்கள் தரைமட்டக்கமாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் காசா மருத்துவமனைகளில் தஞ்சமடைவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/166371
  12. இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 480 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. இந்த பதில் தாக்குதலில் 230க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர். இஸ்ரேலிய படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆய்ஹதக்குழுவினரும் இடையே குறைந்தது 22 இஸ்ரேல் இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன. யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அதோடு கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பதிலடி தாக்குதல்களுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் 230க்கும் மேற்பட்ட காசா மக்களும் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை. அதற்கு ஹமாஸ் அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS பட மூலாதாரம்,REUTERS காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் "அத்துடன், இது ஒரு போர், இந்த போரில் நாங்கள் வெல்வோம். எங்கள் எதிரிகள் அவர்கள் இதுவரை அறிந்திராத பெரும் விலையை கொடுக்க நேரிடும்" என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, காசா பகுதியில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், பல ஆயிரம் ரிசர்வ் படை வீரர்களையும் இஸ்ரேல் ராணுவம் பணிக்கு அழைத்துள்ளது. இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் காசா பகுதியில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இதனால், காசா பகுதியில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் 17 ராணுவ முகாம்களையும், 4 மண்டல தலைமை அலுவலகங்களையும் குறிவைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. அதேவேளையில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் 161 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு இஸ்ரேல் மீது பாலத்தீன ஆயுதக் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எந்த வித காரணமும் இன்றி நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறினார். "பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாங்கள் இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுடன் உறுதியாக நிற்கிறோம், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்காக எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்." தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாச்சி ஹானெக்பியுடன் பேசியதாகவும், "எங்கள் இஸ்ரேலிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES பாலத்தீன தாக்குதலுக்கு இரான் ஆதரவு இரானின் தலைவர் அலி கமேனியின் ஆலோசகர், இஸ்ரேல் மீதான பாலத்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன. "பாலத்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக ISNA செய்தி நிறுவனம் கூறுகிறது. "பாலத்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலத்தீன போராளிகளுக்கு துணை நிற்போம்" என்று அவர் கூறினார். ஹமாஸ் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா ஆதரவு லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, காஸாவின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், "பாலத்தீன ஆயுதக் குழுவினரின் தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும்" கூறியுள்ளது. அது ஹமாஸ் தாக்குதல்களை "இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதில் மற்றும் இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு வர விரும்புவோருக்கான ஒரு செய்தி" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஆயுதக் குழு இஸ்ரேலின் முக்கிய எதிர்ப்பாளராகத் திகழ்ந்து வருவதாகவும், 2006 இல் அந்நாட்டுடன் போருக்குச் சென்றது என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் இராணுவ மற்றும் நிதி உதவியை நம்பிச் செயல்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறிய பிறகு நடந்த மோதல்கள் ஆகஸ்ட் 2005 - மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின. ஜன. 25, 2006 - பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின. ஜூன் 14, 2007 - மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது. டிசம்பர் 27, 2008 - தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நவம்பர் 14, 2012 - ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது. ஜூலை-ஆகஸ்ட் 2014 - மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மார்ச் 2018 - பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது. மே 2021 - ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். ஆகஸ்ட் 2022 - மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர். ஜனவரி 2023 - இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 2023 - தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c16755442elo
  13. காசாவிலிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் Published By: RAJEEBAN 08 OCT, 2023 | 07:28 AM காசாவின் மீதான பழிவாங்கும் தாக்குதலிற்கு முன்னதாக அங்கிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கின் மீது தொடர்ச்சியான விமானதாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது. இதுவரை 230 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முற்றுகைக்குள்ளாகியுள்ள காசா பள்ளதாக்கின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நகரத்தின் மத்திக்கு சென்று தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதுபல குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஐநாவின் தற்காலிக தங்குமிடங்களிற்கு செல்கின்றன. இஸ்ரேல் தொடர்ச்சியான பாரிய விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/166344
  14. இஸ்ரேல் தலையில் பேரிடி! ஹமாஸ்க்கு ஆதரவு-லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் சரமாரி 'ஏவுகணை' தாக்குதல்! டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை, காஸா பகுதிகளில் இருந்து ஹமாஸ் ஜிஹாதிகள் இஸ்ரேலை நிலைகுலைய வைத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவது அந்நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையேயான வரலாற்று கால யுத்தம் இப்போதும் நீடிக்கிறது. இஸ்ரேல் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் இயக்கம் அதிதீவிர தாக்குதலை நேற்று காலை தொடங்கியது. கடல், தரை, வான்வழி என மும்முனை தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய வீரர்களையும் பொதுமக்கள்- சுற்றுலா பயணிகளையும் ஹமாஸ் இயக்கத்தினர் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். தாங்கள் கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவ வாகனங்களை பாலஸ்தீனர்கள் தீயிட்டு எரித்து கொண்டாடி வருகின்றனர். சர்வதேச நிலை: இஸ்ரேல் மீதான இத்தகைய அதிரடியான ஹாமாஸ் தாக்குதல் அந்நாட்டையே நிலைகுலைய வைத்துவிட்டது. சர்வதேச நாடுகள் இஸ்ரேல் பக்கம் நின்று ஆதரவு குரல் எழுப்புகின்றன. ஆனால் துருக்கி, லெபனான், ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து ஹமாஸ் பாலஸ்தீனர்களுக்கான ஆதரவு கரம் நீள்கிறது. ஹமாஸ் இயக்க அழைப்பு: ஹமாஸ் இயக்கமும் அனைத்து அரபு நாடுகளின் ஆயுத குழுக்களும் தங்களுடன் இணையவும் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று இஸ்ரேலுக்கு எதிரான போரில் லெபனானின் ஹிஸ்புல் தீவிரவாதிகள் இணைந்துள்ளனர். இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரும் ஹமாஸ் இயக்க ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாக லெபனான் ஹிஸ்புல் தீவிரவாதிகள் அறிவித்திருந்தனர். ஹிஸ்புல்லாவின் இஸ்ரேல் மீதான தாக்குதல்: அத்துடன் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களையும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலடி தருவதற்காக லெபனான் எல்லையில் பெரும் எண்ணிக்கையில் படைகளைக் குவித்து வருகிறது இஸ்ரேல். லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளி நிலைகளை இலக்கு வைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கும் பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா: லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் உருவானதே, இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராகத்தான். இப்போது ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலை 'வேட்டையாடு'வதால் கொண்டாட்டத்துடன் ஹிஸ்புல்லா இயக்கமும் கைகோர்த்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்தின் பின்னணியில் ஈரான் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/international/hezbollah-join-the-fight-with-hamas-rockets-fired-from-lebanon-on-israel-546125.html?story=3
  15. இஸ்ரேல்: காசா தாக்குதலை தடுக்கத் தவறிய மொசாட் - உளவுத்துறை கூறும் விளக்கம் பட மூலாதாரம்,ISRAEL DEFENCE FORCES படக்குறிப்பு, மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் இஸ்ரேல் தான் மிகவும் விரிவான மற்றும் அதிக நிதியளிக்கப்பட்ட உளவு அமைப்பைக் கொண்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் 12 நிமிடங்களுக்கு முன்னர் "இது எப்படி நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை." இவ்வளவு பெரிய பலம் இருந்தும், இஸ்ரேலிய உளவுத்துறை இந்தத் தாக்குதல் வருவதை எப்படி கவனிக்கத் தவறியது என பிபிசி செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் கேட்ட கேள்விக்கு, இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த பதில் இதுதான். ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் உள்ள பலமான எல்லையைக் கடக்க முடிந்ததுள்ளது. அதேபாேல, ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேலிய உள்நாட்டு உளவுத்துறையான ஷின் பெட்(Shin Bet), அந்நாட்டின் வெளிநாட்டு உளவு அமைப்பான மொசாட் (Mossad) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அனைத்து அமைப்புகளுக்கும் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்பது தெரியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. அல்லது, ஒரு வேளை அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர். மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் இஸ்ரேல்தான் மிகவும் விரிவான மற்றும் அதிக நிதியளிக்கப்பட்ட உளவு அமைப்பைக் கொண்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேல் உளவுத்துறை தவறியது எங்கே? இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கு உள்ளும், லெபனான், சிரியா மற்றும் பிற இடங்களிலும் தனக்குத் தகவல் தரும் உளவாளிகளைக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில், ஆயுதமேந்திய குழுக்களுடைய தலைவர்களின் அனைத்து செயல்பாட்டுகளையும் முழுமையாக அறிந்து, அவர்களைக் குறித்த நேரத்தில் படுகொலை செய்ததுள்ளது இஸ்ரேல். சில நேரங்களில், தன்னுடைய உளவாளிகள் மூலம் கார்களில் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தி, ட்ரோன் தாக்குதல்கள் மூலம் தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில், இஸ்ரேல் உளவு அமைப்பின் உதவியோடு, அந்நாட்டின் பாதுகாப்புப் படை 'வெடிக்கும்' மொபைல் போன்களை கூட பயன்படுத்தித் தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. தரையில், காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பதற்றமான எல்லையில் கேமராக்கள், தரை-மோஷன் சென்சார்கள் மற்றும் வழக்கமான ராணுவ ரோந்துகள் உள்ளன. பட மூலாதாரம்,REUTERS இந்தத் தாக்குதலில் நடந்த ஊடுருவலைத் தடுக்க, முள்கம்பி வேலி ஒரு தடையாக இருந்திருக்கக்கூடும். ஆனால், ஹமாஸின் ஆயுதமேந்திய குழுவினர் வெறுமனே புல்டோசர் மூலமும், கம்பியில் துளைகளை வெட்டியும் தரை வழியாக நுழைந்துள்ளனர். அதேபோல, சிலர் கடலில் இருந்தும், பாராகிளைடர் மூலம் வான் வழியிலும் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். இஸ்ரேலின் இத்தனை காண்காணிப்புக்கு இடையில், ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை குவித்து வைத்து சுடுவதற்கும், இஸ்ரேலின் மீது இத்தகைய தாக்குதலை நிகழ்த்துவதற்கும், ஹமாஸ் அசாதாரணமாகச் செயல்பட்டு, ஒருங்கிணைந்து இந்தச் சிக்கலான தாக்குதலுக்கு தங்களைத் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். இஸ்ரேலுக்கு தற்போது எது முக்கியம்? பட மூலாதாரம்,REUTERS கடந்த 1973ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த யோம் கிப்பூர் போரின் 50வது ஆண்டு நினைவு நாளில், மற்றுமொரு திடீர் தாக்குதல் எப்படி நடந்தது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்பதில் ஆச்சரியமில்லை. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இஸ்ரேலிய அதிகாரிகள், இதுகுறித்து விரிவான விசாரணையைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், இந்த விசாரணை பல ஆண்டுகள் தொடரும் என்றும் கூறினர். இந்த விசாரணையைத் தாண்டி, இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் உள்ளன. இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் பல சமூகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதமேந்திய குழுக்களை அகற்றி, அதன் தெற்கு எல்லைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இஸ்ரேலுக்கு தற்போது மிக முக்கியமான வேலையாக இருக்கும். படக்குறிப்பு, ஆயுதமேந்திய மீட்புப் பணி மூலமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ சிறைபிடிக்கப்பட்ட தனது சொந்த குடிமக்களின் பிரச்னையை இஸ்ரேல் தீர்க்க வேண்டும். ஆயுதமேந்திய மீட்புப் பணி மூலமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ சிறைப்பிடிக்கப்பட்ட தனது சொந்த குடிமக்களின் பிரச்னையை இஸ்ரேல் தீர்க்க வேண்டும். இஸ்ரேல் மீது ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளுக்கான ஏவுதளங்களையும் கண்டுபிடித்து, அவற்றை அகற்ற முயலும். ஆனால், இது கிட்டத்தட்ட சாத்தியமற்ற பணி. ஏனென்றால், இதுவரை ஏவப்பட்ட ராக்கெட்டுகள் அனைத்தும், எந்த இடத்திலிருந்தும் தடம் தெரியாமல் ஏவக்கூடியவை. ஒருவேளை இஸ்ரேலுக்கு மிகப் பெரிய கவலை இதுவாக இருக்கலாம்: "ஹமாஸின் ஆயுதப் போராட்ட அழைப்பிற்கு மற்றவர்கள் பதிலளித்து செயலாற்றுவதை எப்படி நிறுத்துவது, மேற்குக் கரைப் பகுதியில் பரவும் இந்த மோதலை எப்படித் தவிர்ப்பது, லெபனானுடனான அதன் வடக்கு எல்லையில் ஹெஸ்பொல்லாவின் அதிக ஆயுதம் ஏந்திய குழுவினரை எப்படி ஈர்ப்பது?" https://www.bbc.com/tamil/articles/c0401j5lgdko
  16. அல்-அக்சா ஸ்டார்ம்: இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் இந்த பெயரை சூட்டியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ள திடீர் தாக்குதல் 2021-ம் ஆண்டு 11 நாள் போருக்குப் பிறகு அவை இரண்டையும் ஒரு போருக்குத் தள்ளியுள்ளன. இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசியதுடன், ஆயுதம் தாங்கிய ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாசுக்குப் பதிலடியாக இஸ்ரேலும் கடுமையான தாக்குதலை தொடங்கியுள்ளது. இரு தரப்பையும் மீண்டும் ஒரு போருக்கு தள்ளியுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு, 'ஆபரேஷன் அக் அக்சா ஸ்டார்ம்' என்று பெயரிட்டுள்ளது. அல் ஜசீரா தொலைக்காட்சியிடம் பேசிய ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் காலித் குவாடோமி, "கடந்த பல தசாப்தங்களாக பாலத்தீனர்கள் சந்தித்த ஒடுக்குமுறைக்குப் பதிலடியாக இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது." என்றார். மேலும் தொடர்ந்த அவர், "காசாவில் பாலத்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறையை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அதுபோல், எங்களது புனிதத் தலமான அல்அக்சா போன்ற இடங்களில் இஸ்ரேலின் அத்துமீறல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். எங்கள் தாக்குதலுக்கான காரணம் இவைதான்" என்று விளக்கம் அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மோதலுக்குப் பிறகு அல் அக்ஸா மசூதிக்கு வெளியே நிற்கும் பாதுகாப்புப் படையினர். பதற்றம் அதிகரிக்க காரணம் கடந்த காலங்களிலும் அல்-அக்ஸா மசூதி தொடர்பான சர்ச்சை காரணமாகவே பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே பல மோதல்கள் தொடங்கியுள்ளன. மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை 1948இல் இருந்து 1967இல் நடந்த ஆறு நாள் போர் வரை ஜோர்டன் ஆட்சி செய்தது. இந்த போருக்குப் பிறகு இஸ்ரேல் இந்தப் பகுதியில் மேலாதிக்கத்தை நிறுவியது. இருப்பினும், ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின்கீழ், ஜெருசலேமின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலங்களைக் கண்காணிக்க ஜோர்டனுக்கு உரிமை கிடைத்தது. கடந்த ஆண்டு மே மாதம், இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் நெஃப்தாலி பென்னட், அல்-அக்ஸா மசூதியின் நிர்வாகத்தில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிப்பதாகக் கூறினார். இந்த அறிக்கைக்குப் பிறகு, ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனியர்கள் கோபமடைந்தனர். புனிதத் தலங்களில் உள்ள 'பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமிக்கும்' திட்டத்தின் ஒரு பகுதி இது என்று ஜோர்டன் அழைத்தது. தற்போது, அதன் நிர்வாகப் பொறுப்பு ஜோர்டன் வக்ஃப் வாரியத்திடம் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அல்-அக்ஸா மசூதி ஏன் மிகவும் முக்கியமானது? ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே சர்ச்சை ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் இங்கு பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மோதல் தொடங்கியது. அல்-அக்ஸா மசூதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அல்-அக்ஸா மசூதி ஏன் இவ்வளவு முக்கியம்? அல்-அக்ஸா மசூதி கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள யூதர்களின் புனிதமான இடம். மேலும் இது இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது. யூதர்களால் 'டெம்பிள் மவுண்ட்' என்றும், முஸ்லிம்களால் 'அல்-ஹராம் அல்-ஷரீஃப்' என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் 'அல்-அக்ஸா மசூதி' மற்றும் 'டோம் ஆஃப் தி ராக்' ஆகியவை உள்ளன. 'டோம் ஆஃப் தி ராக்' கிற்கு யூத மதத்தில், அனைத்தையும்விட புனிதமான தலம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. முகமது நபியுடன் இணைந்திருப்பதால், இதை ஒரு புனித இடமாக முஸ்லிம்களும் கருதுகின்றனர். இந்த மத தலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் ஜோர்டனின் வக்ஃப் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நீண்ட காலமாக இங்கு முஸ்லிம்கள் மட்டுமே தொழுகை நடத்த முடியும். குறிப்பிட்ட நாட்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் இங்கு பிரார்த்தனை செய்ய முடியாது. 100 ஆண்டுகள் பழைமையான சர்ச்சை முதல் உலகப் போரில் உஸ்மானியா சுல்தானின் தோல்விக்குப் பிறகு, மத்திய கிழக்கில் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சிறுபான்மை யூதர்களும் பெரும்பான்மை அரேபியர்களும் இந்த நிலத்தில் இருந்து வந்தனர். யூத மக்களுக்கு பாலஸ்தீனத்தை 'நேஷனல் ஹோம்’ என்ற வகையில் நிறுவுமாறு சர்வதேச சமூகம் பிரிட்டனை பணித்தபோது இருவருக்கும் இடையே பதற்றம் தொடங்கியது. யூதர்களை பொருத்தவரை இது அவர்களின் மூதாதையர் வாழ்ந்த பகுதி. அதே நேரத்தில் பாலஸ்தீன அரேபியர்களும் அந்தப் பகுதி தங்களுடையது என்று சொல்லி இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். 1920 மற்றும் 1940க்கு இடையில் ஐரோப்பாவில் துன்புறுத்தல் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இனப்படுகொலையில் இருந்து தப்பிய பின்னர் ஏராளமான யூதர்கள் ஒரு தாயகத்தைத் தேடி இங்கு வந்தடைந்தனர். இந்த நேரத்தில் அரேபியர்கள், யூதர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு இடையேயும் வன்முறை தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES 1948க்கு பிறகு நிலைமை 1947 இல் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை யூதர்கள் மற்றும் அரேபியர்களின் தனி நாடுகளாகப் பிரிக்க வாக்களித்தது. மேலும் ஜெருசலேம் ஒரு சர்வதேச நகரமாக மாற்றப்பட்டது. இந்தத் திட்டம் யூத தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரபு தரப்பு அதை நிராகரித்தது மற்றும் அது ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. பிரச்னையைத் தீர்க்க முடியாமல் 1948இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதாக அறிவித்தனர். இதற்கு பல பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போர் தொடங்கியது. அரபு நாடுகளின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வீடுகளில் இருந்து பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதை அவர்கள் அல்-நக்பா அதாவது 'பேரழிவு' என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நேரத்திற்குள் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது. ஜோர்டனால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மேற்குக் கரை என்றும் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் காஸா என்றும் அழைக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜெருசலேமின் மேற்குப்பகுதி இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் கிழக்குப்பகுதி ஜோர்டனிய பாதுகாப்புப் படைகளுக்கும் பிரித்தளிக்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cjlx069n3x2o
  17. இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 200 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,REUTERS 48 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. இதில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி விட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலோ, ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை. அதற்கு ஹமாஸ் அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS பட மூலாதாரம்,REUTERS காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் "அத்துடன், இது ஒரு போர், இந்த போரில் நாங்கள் வெல்வோம். எங்கள் எதிரிகள் அவர்கள் இதுவரை அறிந்திராத பெரும் விலையை கொடுக்க நேரிடும்" என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, காசா பகுதியில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், பல ஆயிரம் ரிசர்வ் படை வீரர்களையும் இஸ்ரேல் ராணுவம் பணிக்கு அழைத்துள்ளது. இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் காசா பகுதியில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இதனால், காசா பகுதியில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் 17 ராணுவ முகாம்களையும், 4 மண்டல தலைமை அலுவலகங்களையும் குறிவைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. அதேவேளையில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் 161 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு இஸ்ரேல் மீது பாலத்தீன ஆயுதக் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எந்த வித காரணமும் இன்றி நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறினார். "பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாங்கள் இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுடன் உறுதியாக நிற்கிறோம், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்காக எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்." தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாச்சி ஹானெக்பியுடன் பேசியதாகவும், "எங்கள் இஸ்ரேலிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES பாலத்தீன தாக்குதலுக்கு இரான் ஆதரவு இரானின் தலைவர் அலி கமேனியின் ஆலோசகர், இஸ்ரேல் மீதான பாலத்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன. "பாலத்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக ISNA செய்தி நிறுவனம் கூறுகிறது. "பாலத்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலத்தீன போராளிகளுக்கு துணை நிற்போம்" என்று அவர் கூறினார். ஹமாஸ் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா ஆதரவு லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, காஸாவின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், "பாலத்தீன ஆயுதக் குழுவினரின் தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும்" கூறியுள்ளது. அது ஹமாஸ் தாக்குதல்களை "இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதில் மற்றும் இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு வர விரும்புவோருக்கான ஒரு செய்தி" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஆயுதக் குழு இஸ்ரேலின் முக்கிய எதிர்ப்பாளராகத் திகழ்ந்து வருவதாகவும், 2006 இல் அந்நாட்டுடன் போருக்குச் சென்றது என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் இராணுவ மற்றும் நிதி உதவியை நம்பிச் செயல்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறிய பிறகு நடந்த மோதல்கள் ஆகஸ்ட் 2005 - மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின. ஜன. 25, 2006 - பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின. ஜூன் 14, 2007 - மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது. டிசம்பர் 27, 2008 - தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நவம்பர் 14, 2012 - ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது. ஜூலை-ஆகஸ்ட் 2014 - மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மார்ச் 2018 - பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது. மே 2021 - ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். ஆகஸ்ட் 2022 - மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர். ஜனவரி 2023 - இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 2023 - தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c16755442elo
  18. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் : மேயர் உயிரிழப்பு : 100 இஸ்ரேலியர்கள், 200 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு : பலர் படுகாயம் 07 OCT, 2023 | 08:49 PM இஸ்ரேல் - பாலஸ்தீன நெருக்கடி நிலையை அடுத்து ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 100 இஸ்ரேலியர்களும் 200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், 'ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்' என்ற பெயரில் இன்று இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இதையடுத்து 'ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்' என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருக்கும் இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் 35 இஸ்ரேலிய இராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது. போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் ''நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம்" என்று பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/166341
  19. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல்; மேற்குகரையில் போர் பதற்றம் 07 OCT, 2023 | 04:59 PM இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ரொக்கெட்களை வீசியதாக அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன. தரை வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தார். 545 பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் விமானப்படை விமானங்கள் மூலம் காசா நகரில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுவினர் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு எதிராக போரை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்பினர், தங்களது நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அல் அக்சா பிளட்' என்ற பெயர் சூட்டி உள்ளனர். முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ரொக்கெட்களை ஏவியதாகவும் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு கட்டுவோம் எனவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ரொக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் ராக்கெட் விழும் சத்தம் கேட்டது. மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ், அஷ்க்கெலான் உள்ளிட்ட நகரங்களிலும் ரொக்கெட் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெருசலேம் நகர் முழுவதும் சைரன் ஒலித்தபடி உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்த நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது இதனையடுத்து, போருக்கு தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி செய்ததாக குற்றம்சாட்டி உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாராகிளைடர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சாலைகளில் சென்ற கார்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் காசா, பாலஸ்தீனத்தை நோக்கி முன்னேற இஸ்ரேல் ராணுவம் வியூகம் வகுத்து வருகிறது. காசாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீதும் விமானப்படை விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலை மற்ற நாடுகளுடன் இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் கடந்த 5 நாட்களாக இஸ்ரேலியர்கள் தங்கி உள்ளதாகவும், அவர்களுக்கு துணையாக இராணுவமும் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வெளியேறாத காரணத்தினால் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை துவக்கி உள்ளதாக தெரிகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்பதால், அச்சம் அடைந்துள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடல் வழியாகவும், தரை வழியாகவும் ஊடுருவிய ஹமாஸ் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர் . இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் 35 பேரை ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினரை பிடிக்கவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலில் 7 நகரங்களில் ஹமாஸ் குழுவினர் நுழைந்துள்ளனர். அவர்களுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர். ஜெருசலேமில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மேயர் அறிவுறுத்தி உள்ளார். நகர் முழுவதும் சைரன் ஒலிக்கப்படுகிறது. இராணுவ வீரர்கள் தங்கள் நிலைகளுக்கு உடனடியாக திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ, அமைச்சர்கள், ராணுவத்தினருடன் ரகசிய இடத்தில் ஆலோசனை நடத்தினார். இஸ்ரேல் மக்கள் போரை எதிர் கொண்டுள்ளதாகவும், ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறியுள்ளார். எதிரிகள் சிந்தித்து பார்க்க முடியாதபடி பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். பாலஸ்தீனத்தை விடுவிக்க இதுவே சரியான தருணம். இஸ்ரேலை அழித்து ஒழிப்போம். பாலஸ்தீனியர்கள் ஆயுதங்களுடன் இஸ்ரேலை நோக்கி முன்னேற வேண்டும் என ஹமாஸ் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். காசாவில் 16 டன் வெடிபொருட்களை இஸ்ரேலிய இராணுவம் வீசியுள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/166331
  20. 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர். காஸா பகுதியில் உள்ள இலக்குகளை ஹமாஸ் ஆயுதக் குழு தாக்கி வருவதாகவும் அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை மதிப்பிட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆப்பரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம் என்ற பெயரில் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலின்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன், டெல் அவிவ் மற்றும் காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அதன் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தும் பிரிவு 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவியதாக அறிவித்துள்ளது. "காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய ராக்கெட்டுகள் இலக்கு வைக்கப்பட்டன" என்றும் ஆயுதக் குழுவினர் "வெவ்வேறு இடங்களில்" இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது. இஸ்ரேலிய பொது ஊழியர்களின் தலைவர் "சூழ்நிலை மதிப்பீட்டை" நடத்தி வருவதாகவும், "இந்த நிகழ்வுகளுக்கான விளைவுகளையும் பொறுப்பையும் ஹமாஸ் எதிர்கொள்ளும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் "தற்காலிக முகாம்களுக்கு அருகிலேயே இருக்க" அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. பட மூலாதாரம்,ABED RAHIM KHATIB/ANADOLU AGENCY VIA GETTY IMAGES ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் மேகன் டேவிட் ஆடோம் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது. அஷ்கெலோன் நகரில் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காட்சிகள் காட்டுகின்றன. அதில் வாகனங்கள் எரிந்து கரும்புகை வெளியேறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,MOHAMMED SABER/EPA-EFE/REX/SHUTTERSTOCK காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் "அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்" ஊடுருவியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேலின் தற்காப்புப் படைக் குழுவின் ஆரம்ப அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை "நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்கள் - ஷபாத் மற்றும் சிம்சாட் தோராவின் விடுமுறை நாளில் சைரன்கள் ஒலிப்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வீசும் சத்தத்தையும் கேட்டுக் கண் விழித்தனர். நம்மை நாமே காத்துக் கொள்வோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்டன: ஹமாஸ் அறிவிப்பு பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, தாக்குதலுக்கு இலக்கான இடங்களில் எரியும் தீயில் இருந்து கரும்புகை வெளியாகி வருகிறது. இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவரான முகமது டெய்ஃப், "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம்" என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலைத் தொடங்க சனிக்கிழமை அதிகாலை 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவப்பட்டதாகவும் கூறினார். "இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று டெய்ஃப் கூறினார். “நாங்கள் ஏற்கெனவே எதிரியை எச்சரித்துள்ளோம். இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக நேர்ந்த குற்றங்களால் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான தியாகிகள் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்." "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்மின் தொடக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ கோட்டைகளைக் குறிவைத்த முதல் தாக்குதலில் 5,000 ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம்." பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டுள்ளது. "போருக்குத் தயார்நிலை" பிரகடனத்தை வெளியிட்ட இஸ்ரேல் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "போருக்கான தயார் நிலை" பிரகடனம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களை அழைக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது என்பதுடன் ஹமாஸ் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையே, தொடக்கத்தில் 5,000 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, மேலும் இரண்டாயிரம் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹமாஸ் தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த காட்சிகள் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஹமாஸ் ஆயுதக் குழு மிக மோசமான தவற்றைச் செய்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். யோவ் காலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இன்று காலையில் மிக மோசமான செயலைச் செய்துள்ளனர். இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்கியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது என்றும், இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவம் விரைவில் வெற்றிக்கொடி நாட்டும் என்றும் கூறியுள்ளார். ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் இந்த திடீர் தாக்குதலில் காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cp9xkn0rdldo
  21. ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..! மேற்கத்தேய நாடுகளின் ஆதரவு இல்லையென்றால் ரஷ்யா ஒரு வாரத்திற்கு மேலாக போரில் தாக்கு பிடித்திருக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நிதியுதவி “மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. நிதியுதவி மட்டுமல்லாமால், இராணுவ தளபாட உதவிகள் என அனைத்தும் நின்றுவிட்டால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும். தற்போது வரை ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், 90ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.” என்றார். https://ibctamil.com/article/putin-ukraine-last-western-military-support-stops-1696602987
  22. ஈரானிடமிருந்து கைப்பற்றிய 1 மில்லியன் துப்பாக்கி ரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியது அமெரிக்கா Published By: RAJEEBAN 05 OCT, 2023 | 11:25 AM ஈரானிடமிருந்து கைப்பற்ற 1.1மில்லியன் துப்பாக்கி ரவைகளை அமெரிக்கா உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் யுத்தங்களிற்கு பொறுப்பான அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் யேமனிற்கு சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்து துப்பாக்கி ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை இவற்றை உக்ரைனிற்கு அனுப்பிவைத்துள்ளதாக சென்ட்கொம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 9 ம் திகதி மர்வன் 1 எனப்படும் தேசம் குறிப்பிடப்படாத கப்பலில் இருந்து இந்த துப்பாக்கி ரவைகளை கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சொத்து ஒன்றின் உரிமையாளர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அதனை அரசாங்கம் கைப்பற்றலாம் என்ற சட்டத்தை பயன்படுத்தி கப்பலை தனதாக்கிய அமெரிக்கா அதிலிருந்த துப்பாக்கி ரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையின் கப்பலே அது என குற்றம்சாட்டியே அமெரிக்கா அந்த கப்பலை தனதாக்கிகொண்டது. உக்ரைன் வெடிபொருட்களை பயன்படுத்தும் வேகத்திற்கு தங்களது உற்பத்திகளால் இடம்கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாக உக்ரைன் மேற்குலக சகாக்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/166136
  23. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்விற்கு நிதிக் கையிருப்பு உள்ளது ; சட்டவைத்திய அதிகாரியின் கூற்றை மறுக்கும் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் Published By: VISHNU 05 OCT, 2023 | 07:25 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிக்குரிய நிதி இல்லை என முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் கடந்த ஒக்டோபர் (04)ஆம் திகதி தன்னிடம் தெரிவித்ததாகவும், ஏற்கனவே அகழ்வுப்பணிகள் மேற்கொண்டமைக்கான கொடுப்பனவுகளன வழங்கப்படவில்லை எனவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார். இந் நிலையில் சட்டவைத்திய அதிகாரியின் இத்தகைய கூற்றுக்கு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், அகழ்வாய்வுப் பணிக்கென முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6மில்லியன்ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப்பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளதாகவும், மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது தம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக தொடர்ந்தும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மேலதிகமான அகழ்வுப்பணி தொடர்பிலும், ஏற்கனவே அகழ்வின்போது எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் பரிசோதனை முடிவுகள் தொடர்பிலும் சட்ட வத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் வினவியபோது, முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் நிதி இல்லையென கடந்த ஒக்டோபர் (04) புதன்கிழமையன்று கூறியுள்ளதாகவும், அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந் நிலையில் இது தொடர்பில் முல்லைத்தீவுமாவட்டசெயலக பிரதம கணக்காளர் எம்.செல்வரட்ணத்திடம் தொடர்புகொண்டுவினவியபோது, தாம் நிதியில்லை என சட்டவைத்திய அதிகாரியிடம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்ததுடன், தாம் மாவட்டசெயலரின் அனுமதியின்றி இது தொடர்பில் மேலதிக தகவல் எதனையும் வழங்கமுடியாது எனவும் தெரிவித்தார். எனவே இது தொடர்பில் முல்லைத்தீவு மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரிடம் தொடர்புகொண்டு வினவியபோது, இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளுக்கென முதற்கட்டமாக 5.6மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், மனிதப் புதைகுழிக்கு பந்தல் இடுகிற செயற்பாடுகள், மலசலகூடம் அமைக்கும் செயற்பாடு உள்ளிட்டவற்றிற்கு இரண்டு மில்லியனுக்கு அதிகமாக நிதி செலவிடப்பட்டுள்ளது. அத்தோடு அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்ட ராஜ் சோமதேவ தலைமையிலான தொல்லியல் துறையைச் சார்ந்த குழுவினருக்குரிய பணக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவிட்டன. தற்போது சட்டவைத்திய அதிகாரிகளுடை பணக்கொடுப்பனவுகளே வழங்கவேண்டியுள்ளது. கடந்த ஒக்டோபர்(04) புதன்கிழமையன்றே அகழ்வாய்வுப்பணிகளில் ஈடுபட்ட தொல்லியல் துறையினரதும், வைத்தியர்களுடையதும் நிதியைப் பெறுவதற்கான பற்றுச்சீட்டுகள் அவர்களுடைய கையொப்பத்துடன், முத்திரை ஒட்டப்பட்டு உரிய முறையில் எமக்கு கிடைத்தன. அவ்வாறு பணத்தினைப் பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு எம்மிடம் கிடைத்தவுடனேயே, எம்மால் பணத்தினை வழங்கமுடியாது. ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள நிதியைப் பெறுவதற்கு சில நிதிநடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே எம்மால் அவர்களுடைய கொடுப்பனவுகளை வழங்கமுடியும். இருந்தும் எம்மிடமிருந்த வேறு வைப்புப் பணத்தினைப் பயன்படுத்தி தொல்லியல் துறையினருக்குரிய பணக்கொடுப்பனவை வழங்கியுள்ளோம். இனி சட்ட வைத்திய அதிகாரிகளுடைய நிதியே வழங்கப்படவேண்டியுள்ளது. குறித்த அகழ்வாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரிகளுக்கான பணக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இன்னும் ஓரிருநாட்களில் உரிய கட்டுநிதி எமக்கு கிடைக்கப்பெற்றவுடன், உரிய சட்டவைத்திய அதிகாரிகளுக்கான கசோலைகள் வழங்கப்படும். அத்தோடு முதற்கட்டமாக ஒதுக்கீடுசெய்யப்பட்ட 5.6மில்லியன்ரூபா நிதியில், 2.6மில்லியன் ரூபா நீதியே செவிடப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் மிகுதிப்பணத்தைப் பயன்படுத்தி குறித்த கொக்குத்தொடு மனிதப் புதைகுழி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகரப் பந்தலை மேலும் விஸ்தரித்து வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அத்தோடு குறித்த மனிதப்புதைகுழி வளாகத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு கமரா பொருத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறாக வேலைத்திட்டங்கள் அனைத்தும் கிரமமாக இடம்பெற்று வருகின்றன. நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கேற்ப அதற்குரிய மதிப்பீடுகளைச்செய்து தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவோம். நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக நிதி அமைச்சு நிதி தருவதற்கு தயாராக இருக்கின்றது. அதற்கமைய முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6மில்லியன்ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப்பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளது. மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது எம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும். எனவே நீதிமன்றத் தீர்மானத்துற்கு அமைவாக தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் என்றார். https://www.virakesari.lk/article/166212
  24. கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நிறுத்தப்படும் சூழலே காணப்படுகிறது - சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ 05 OCT, 2023 | 02:05 PM பாலநாதன் சதீஸ் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். மீண்டும் அகழ்வுப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17 உடற்கூற்றுக்கான பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கும் என முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை இன்று (05) தொடர்புகொண்டு வினவியபோது இவ்வாறு கூறினார். இதன்போது அவர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் நிதி இல்லை என நேற்றைய தினம் (04) கூறியுள்ளதாகவும், அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த மாதம் செப்டெம்பர் (06) ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இந்த அகழ்வுப் பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/166163

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.