Everything posted by ஏராளன்
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
பிரேசில் மகளிர் கால்பந்து அணி வந்த விமானத்தில் மாஷா அமினி புகைப்படம்: கவனம் ஈர்த்த வாசகம் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பிரேசில் மகளிர் கால்பந்து அணியினர் ப்ரிஸ்பேன் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்திறங்கிய விமானம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், அவர்கள் வந்த விமானத்தின் வால் பகுதியில் இடம் பெற்றிருந்த இரண்டு புகைப்படங்கள். அதில் ஒன்று ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இறந்த இளம் பெண் மாஷா அமினியின் புகைப்படம். இன்னொன்று ஈரானிய கால்பந்தாட்ட வீரர் அமீர் நாசர் அசாதனியின் புகைப்படம். இவர் மாஷா அமினிக்கு நீதிகோரி நடந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரின் புகைப்படமும் அந்த விமானத்தின் வால் பகுதியின் இரண்டு புறங்களில் இடம்பெற்றிருந்தன. அவை கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தன. கூடவே விமானத்தில் ஒரு நீண்ட வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதில், “எந்த ஒரு பெண்ணையும் அவர் அவருடைய தலையை துணியால் மூடச் சொல்லி நிர்பந்திக்கக் கூடாது. அதேபோல் எந்த ஒரு ஆணும் இதை வலியுறுத்துவதற்காக தூக்கிலிடப்படக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதான் பிரேசில் கால்பந்து மகளிர் அணியினர் வந்த விமானம் சர்வதேச கவனம் பெறக் காரணமாக அமைந்துள்ளது. யார் இந்த மாஷா அமினி? ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு பொலிஸார் பொது இடங்களில் ரோந்தில் ஈடுபடுவர். கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை பொலிஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். பொலிஸ் காவலில் இருந்த அவர் கடந்த செப்டெம்பர் 16ஆம்திகதி உயிரிழந்தார். அதனைக் கண்டித்து மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அதனைக் கட்டுப்படுத்த சிறைத் தண்டனைகள், மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகவும், அதில் பெரும்பாலான தண்டனைகள் ஈரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டவை என்றும் அண்மையில் ஒரு மனித உரிமைகள் சார் அமைப்பு அறிக்கை வெளியிட்டது https://thinakkural.lk/article/261696
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
யானையை திரும்பப் பெற்ற தாய்லாந்து பறவைகளை அனுப்பி வைத்தது இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், தாய்லாந்தில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மூன்று “டபுள் வாட்டில்ட் காசோவரி” பறவைகள் அனுப்பப்பட்டன. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 9 மாத வயதுடைய இரண்டு ஆண் காசோவரி பறவைகளும் ஒரு காசோவரி குஞ்சும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. சுமார் 05 அடி உயரமும் சுமார் 60 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த cassowary பறவைகள் உலகில் அழிந்து வரும் பறவைகளில் இரண்டாவது பெரிய பறவைக் குழுவைச் சேர்ந்தவை. மிகவும் வண்ணமயமான இந்த பறவைகள் வானில் பறக்க முடியாது என்பது சிறப்பு. இதேவேளை இந்த விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து பல வகையான பாம்புகள் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் வருகை தந்த காசோவரி பறவைகளை பெறுவதற்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர் தம்மிகா தசநாயக்க, மிருகக்காட்சிசாலையின் மிருக பராமரிப்பாளர்களான அசோக ஜயலத், அசங்க பெர்னாண்டோ ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். https://thinakkural.lk/article/261669
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
முத்துராஜாவுக்கு தாய்லாந்தில் சிறப்பு சிகிச்சை தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையாக இருபத்தி இரண்டு வருடங்களாக நம் நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானையை கடந்த 2ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இலங்கையில் முத்துராஜா மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்து முத்துராஜாவை தாய்லாந்து அரசாங்கம் திரும்பப் பெற்றது . தற்போது முத்துராஜாவுக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
பெரஹரா கலாச்சாரத்திலிருந்து யானைகளை அகற்றுவதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் தீவிர முயற்சி- பௌத்தமதகுரு குற்றச்சாட்டு 05 JUL, 2023 | 03:50 PM பெரஹரா கலாச்சாரத்திலிருந்து யானைகளை அகற்றுவதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என அஸ்கிரிய பீடத்தின் நாரம்பனவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். முத்துராஜா நன்கு பழக்கப்பட்ட கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும் யானை என அவர் தெரிவித்துள்ளார். இது அரசசார்பற்ற அமைப்புகளின் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என தெரிவித்துள்ள பௌத்தமதகுரு ஒவ்வொரு பெரஹரா காலத்திலும் அரசசார்பற்ற அமைப்புகள் இதனை முன்னெடுப்பது வழமை என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் நாங்கள் யானைகளை பயன்படுத்துவது வழமை இங்கிலாந்தில் அரசகுடும்பத்தினரின் நிகழ்வுகளில் குதிரைகள் பயன்படுத்துவதை போன்றது இது என அவர் தெரிவித்துள்ளார். யானைகளை பராமரிப்பதற்குதொழில்சார் பயிற்சிகள் எவையும் தேவையில்லை என தெரிவித்துள்ள அவர் அவை பயிற்சியின் மூலமே பின்பற்றப்படும் விடயங்கள் என குறிப்பிட்டுள்ளார். எங்களுக்கே உரிய பெரஹரா கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக மக்கள் அரசசார்பற்ற அமைப்புகளின் கருத்துக்களை எதிர்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159276
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளின் நலப் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டது மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளின் அடிப்படையில் நலன்புரிப் பலன்களுக்குத் தகுதியான நபர்களின் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகங்களில் இது தொடர்பான பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது. இன்று முதல் அனைத்து செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் சிறுநீரகங்களுக்கான வழக்கமான கொடுப்பனவுகள், எந்த திருத்தங்களும் இல்லாமல், ‘அஸ்வெசுமா’ நலத்திட்ட உதவித் திட்டத்திற்குத் தகுதியானவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/261462
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஆளில்லா விமானதாக்குதல்- மொஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. Published By: RAJEEBAN 04 JUL, 2023 | 12:40 PM மொஸ்கோ விமானநிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானநிலையத்தை தொடர்ந்து மொஸ்கோ விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உக்ரைன் மொஸ்கோ விமானநிலையத்தின் மீது ஆளில்லா விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள ரஸ்ய அதிகாரிகள் இதன்காரணமாக நாட்டின் மிகப்பெரிய விமானநிலையத்தை தற்காலிகமாக மூடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். செவ்வாய்கிழமை தாக்குதலில் ஐந்து ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. அனைத்து ஆளில்லாவிமானங்களையும் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஸ்ய பாதுகாப்புஅமைச்சு தெரிவித்துள்ளது.உயிரிழப்புகள் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைன் இந்த தாக்குதலிற்கு பொறுப்பேற்கவில்லை. https://www.virakesari.lk/article/159176
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
பௌத்த தத்துவத்தை பின்பற்றும் நாங்கள் யானையை உரிய முறையில் பராமரிக்க தவறவிட்டோம் - பௌத்தமதகுரு கவலை Published By: RAJEEBAN 04 JUL, 2023 | 03:43 PM யானைகளை எவ்வாறு கையாள்வது எப்படி என்ற தொழில்முறை பயிற்சி இல்லாததன் காரணமாகவே சக்சுரின் யானையை தாய்லாந்திற்கு மீள வழங்கவேண்டிய நிலையேற்பட்டது என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். பௌத்தஆலயமொன்றில் வைக்கப்பட்டிருந்தவேளை மோசமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் யானை அதன் சொந்தநாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பதை கேள்விப்படுவது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் பௌத்தகலாச்சாரத்தினால் வளம் பெற்ற நாடு, ஆனால் யானையை உரிய முறையில் பராமரிக்க தவறிவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். யானையை திருப்பியனுப்புவதில் ஈடுபட்ட தாய்லாந்து அரசாங்கம் மற்றும் அதிகாரிகளிற்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். யானையை பராமரிப்பது குறித்த தொழில்சார் பயிற்சி இல்லாததன் காரணமாகவே பல யானைகள் துன்புறுகின்றன. செல்வந்தவர்கள், நிலமேக்கள், சிலவீடுகளில் உள்ள யானைகள் மாத்திரம் உரிய பராமரிப்பை பெறுகின்றன. பெரும்பாலன யானைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இந்த யானைகள் வருடத்திற்கு ஒருமுறை ஆலயதிருவிழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய நாட்களில் அவைகள் ஹோட்டல்கள் சுற்றுலாத்தலங்களில் காணப்படுகின்றன. அந்நிய செலாவணியை உழைப்பதற்காக அதனை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யானைகளை ஆலயங்களிற்கு வழங்குவதை நிறுத்தவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159204
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
இலங்கைக்கு தாய்லாந்து வழங்கிய மேலும் இரண்டு யானைகளின் உடல்நிலை குறித்து ஆராயும் குழு வெளிப்படுத்திய தகவல்கள்! Published By: DIGITAL DESK 3 04 JUL, 2023 | 03:45 PM தாய்லாந்து இலங்கைக்கு வழங்கிய மேலும் இரண்டு யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக காஞ்சனா சில்பா அர்ச்சா தலைமையிலான குழுவினர் பணியாற்றி வருவதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கதிர்காமத்தில் உள்ள விஹாரை ஒன்றுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கண்டியில் உள்ள விஹாரைக்கு தானமாக வழங்கப்பட்ட யானை வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக தாய்லாந்து ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், கதிர்காமத்திலுள்ள விஹாரைக்கு தானமாக அளிக்கப்பட்ட யானையின் உடல்நிலையை பரிசோதிக்க தூதுக்குழுவினருக்கு நேரம் எடுத்துக் கொண்டதாக பிபிஎஸ் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. 1979 ஆம் ஆண்டு தாய்லாந்து இந்த யானையை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதாகவும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கண்டி விஹாரைக்கு வழங்கப்பட்ட யானை சுகாதார காரணங்களுக்காக வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக விஹாரையின் நிர்வாகத்தினர் குறித்த குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/159205
-
களைத்த மனசு களிப்புற ......!
குழந்தையைத் தூக்குவது போல கொண்டு போறாங்க.
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
இலங்கை: முல்லைத்தீவில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி - சரணடைந்த விடுதலைப்புலிகள் கொலையா என சந்தேகம் படக்குறிப்பு, மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது. கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 2 ஜூலை 2023 இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் அவ்வப் போது அடையாளம் காணப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சுமார் ஒரு வார காலத்திற்குள் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலேயே இந்த மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில், நீர் வழங்கலுக்கான குழாய்களை பொருத்துவதற்காக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது, வெட்டப்பட்ட குழியிலிருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், அது குறித்து கொக்கிளாய் போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். குறித்த இடத்தில் மனித எச்சங்கள் மாத்திரமன்றி, ஆடைகள் சிலவற்றையும் காணக்கூடியதாக இருந்தது என அந்த இடத்திலிருந்தவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடத்தில் பெண்களின் உள்ளாடைகளும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது. இந்த நிலையில், அந்த பகுதியில் அகழ்வு நடவடிக்கைகளின் போது மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, அந்த இடத்திற்கு வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் விஜயம் செய்து, விடயங்களை ஆராய்ந்துள்ளார். படக்குறிப்பு, அடையாளம் காணப்பட்ட இடத்தில் பெண்களின் உள்ளாடைகளும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது அந்த இடத்தில் தான் நேரில் கண்ட விடயங்களை பிபிசி தமிழுக்கு, துரைராசா ரவிகரன் தெளிவூட்டினார்; '' தகவல் கிடைத்ததும் உடனடியாக நான் சென்றேன். போலீஸார் அந்த இடத்தில் நின்றார்கள். எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, நீர் வழங்கல் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தார்கள். என்னையும், என்னுடன் வருகைத் தந்த சிலரையும் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் ஒன்று இரண்டு பேர் இல்லை. அதற்கும் கூடுதலானோரின் எலும்பு எச்சங்கள் காணப்படுகின்றன. ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டதை அவதானித்து, மக்கள் கவலையடைந்திருந்தார்கள். அது விடுதலைப் புலிகளுடையது என்ற உறுதிப்பாடுடன் இருக்கின்றோம். இறுதி யுத்தத்தின் போது 2009ம் ஆண்டு காலப் பகுதியில் வட்டுவான் பகுதியில் சரணடைந்த ஆட்களாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. 84ம் ஆண்டிற்கு பிறகு கொக்கிளாய், கொக்குதொடுவாய் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் 2012,13,14 ம் ஆண்டு காலப் பகுதிகளிலேயே அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள். 2009ம் ஆண்டு சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் குழுவை ஏதாவது செய்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்படுகின்றது. இருந்தாலும், இது தொடர்பில் தாம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக போலீஸார் எம்மிடம் தெரிவித்தார்கள். நீதிமன்றத்தின் ஊடாகவே நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கொக்கிளாய் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னிடம் கூறினார்" என அவர் குறிப்பிட்டார். படக்குறிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான ஆடைகளை ஒத்த ஆடைகள் குறித்த பகுதியில் காணப்பட்டதை தான் அவதானித்ததாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் குறிப்பிடுகின்றார் இந்த நிலையில், குறித்த பகுதியில் தற்போது நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் மேலதிக அகழ்வு பணிகள் எதிர்வரும் 6ம் தேதி முன்னெடுக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அகழ்வு பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொக்கிளாய் போலீஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்ற இடத்தில் தற்போது போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தடயங்களை மறைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ள போதிலும், தான் நேரில் கண்ட தடயங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்க முடியாது என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறுகின்றார். படக்குறிப்பு, அகழ்வு பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொக்கிளாய் போலீஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான ஆடைகளை ஒத்த ஆடைகள் குறித்த பகுதியில் காணப்பட்டதை தான் அவதானித்ததாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் குறிப்பிடுகின்றார். ''பெண்களின் ஆடைகள், விடுதலைப் புலிகளின் ஆடை என்பதை என்னால் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது. பச்சை நிற உடுப்பு. ராணுவ ஆடையிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. ஆனால், இது விடுதலைப் புலிகளின் ஆடை என்பதை உறுதிப்படுத்த முடியும். பெண்களின் ஆடைகளும் காணப்பட்டன. குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டன. இதனை அங்கிருந்து வெளியான படங்களில் காணக்கூடியதாகவும் உள்ளது." என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார். இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மக்கள் வெளியிட்டு வருகின்றனர். எனினும், விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c3g7jzy9078o
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
ஐந்து மணிநேரப்பயணத்தின் பின்னர் யானை தாய்லாந்தை சென்றடைந்தது. 03 JUL, 2023 | 07:12 AM இலங்கையிலிருந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சக்சுரின் யானை நேற்று தாய்லாந்தை சென்றடைந்துள்ளது. ஐந்து மணிநேர விமானபயணத்தின் பின்னர் யானை தாய்லாந்தின் சியாங்மாய் நகரின் விமானநிலையத்தை சென்றடைந்தது. தாய்லாந்தின் இயற்கைவள சூழல் விவகார அமைச்சர் அதிகாரிகள் மிருகவைத்தியர்கள் வரவேற்றனர். லம்பாங் மருத்துவமனையின் வைத்தியர்கள் யாiனையை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் யானை 30 நாள் தனிமைப்படுத்தலிற்கா யானை காப்பகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. விமானநிலையத்தில் யானையை பார்ப்பதற்காக பெருமளவு சுற்றுலாப்பயணிகளும் பொதுமக்களும் திரண்டிருந்தனர். யானை பாதுகாப்பாக வருவதற்கான தார்மீக ஆதரவை வழங்குவதற்காக தான் வந்ததாக சுற்றுலாப்பயணியொருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/159083
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதம்? இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் படகு சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட துறைமுகம் மாற்றப்பட்டதால், இந்த பயணிகள் கப்பல் சேவை தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் கப்பல் சேவைக்காக, தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் வசதிகளை அதிகரிக்க இந்தியா மேலும் கால அவகாசத்தை கோரியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. https://thinakkural.lk/article/261104
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கு இரகசிய சதி திட்டம் - உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் Published By: RAJEEBAN 02 JUL, 2023 | 11:39 AM வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜென்ஜி பிரிகோஜினை கொல்வதற்கான ரஸ்யாவின் சதிமுயற்சி குறித்து உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். வாக்னர் குழுவினர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியதை தொடர்ந்தே அவரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான எவ்எஸ்பியிடம் வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ரஸ்ய புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே இதற்கான திட்டங்களை வகுக்கதொடங்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரிகோஜினை கொல்வதற்கான உத்தரவு எவ்எஸ்பிக்கு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம், ஆனால் அவர்கள் அதில் வெற்றிபெறுவார்களா என்பதை காலமே தெரிவிக்கும் என உக்ரைனின் புலனாய்வு துறையின் தலைவர் தெரிவித்துள்ளார். சில முக்கியமான கேள்விகள் உள்ளன அவர்களால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா, அவர்களிற்கு அதற்கான துணிச்சல் உள்ளதா எனவும் உக்ரைனின் புலனாய்வு துறையின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி புட்டினிற்கு நெருக்கமான வட்டாரங்களும் இதனை உறுதி செய்துள்ளன. வாக்னர் கூலிப்படையின் தலைவருக்கு நஞ்சூட்டப்படலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. skynews https://www.virakesari.lk/article/159036
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
சக்சுரினுடன் ரஸ்ய விமானம் தாய்லாந்து புறப்பட்டது Published By: RAJEEBAN 02 JUL, 2023 | 10:26 AM சக்சுரின் யானையுடன் விசேட ரஸ்ய விமானம் சற்று முன்னர் தாய்லாந்து பயணமாகியது. இலங்கையிடம் வழங்கிய யானையை தாய்லாந்து சிகிச்சை புனர்வாழ்விற்காக மீளப்பெற்றுக்கொண்டுள்ளது. சியாங்மாய் நகரத்தை சென்றடையும் யானைக்கு அங்கு மிருகவைத்தியர்கள் சிகிச்சையளிக்கவுள்ளனர். ரஸ்யாவிலிருந்து வந்த விசேடவிமானம் 4000 கிலோ யானையை கொண்டு சென்றுள்ளது. இதற்கான செலவு 700,000 டொலர் என தகவல்கள் வெளியாகின்றன. இல்யுசின் ஐஎல்76 சரக்கு விமானம் இன்று காலை 7.30 மணிக்கு கொழும்பு விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்கள்பௌத்த ஆலயத்தில் வாழ்ந்த யானையை தாய்லாந்திற்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை மிருகவைத்தியர்கள் இந்த வாரம் மேற்கொண்டனர். தாய்லாந்தின் அரச குடும்பம் அன்பளிப்பாக இந்த யானையை இலங்கைக்கு வழங்கியிருந்தது, அரசாங்கம் அதனை பௌத்த ஆலயத்திற்கு வழங்கியது. பௌத்தஆலயம் அதனை முத்துராஜ என பெயரிட்டு ஆலய உற்சவங்களில் பயன்படுத்தியது. எனினும் ரார் எனப்படும் விலங்குகள் நலன் அமைப்பு யானையின்பராமரிப்பு குறித்து கரிசனை வெளியிட்டது, யானையின் முன்னங்காலில் காணப்படும் பிரச்சினை நீண்டகாலமாக புறக்கணிக்கப்படுகின்றது என தெரிவித்தது. குறிப்பிட்ட அமைப்பு கடந்தவருடம் தாய்லாந்து அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிடவேண்டும் என பரப்புரை செய்தது, இதனை தொடர்ந்து தாய்லாந்து அதிகாரிகள் விகாரை அதிகாரிகளை யானையை தாய்லாந்திற்கு கொண்டுசெல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட பௌத்த ஆலயம் யானையை கடந்த வருடம் தெகிவளை மிருகக்காட்சி சாலைக்கு அனுப்ப சம்மதித்தது, அங்கு யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டதுடன் அதனை விமானம் மூலம் தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கான பயிற்சிகளும் இடம்பெற்றன. யானை மிருகக்காட்சிசாலைக்கு வந்தவேளை இரண்டு பெரிய புண்கள் காணப்பட்டன. அவை குணமாகிவிட்டன எனினும் மிருகக்காட்சிசாலையில் போதிய வசதிகள்இல்லாததால் முழுமையான கிசிச்சையை வழங்கமுடியவில்லை தகவல்கள்வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் யானைக்கு அக்குபன்சர், லேசர் கிசிச்சை, ஹைட்டிரோதெரபி போன்றவற்றை வழங்கவுள்ளதாக தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த மிருகவைத்தியர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159026
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
சக்சுரின் யானை தாய்லாந்திற்கான பயணத்தை ஆரம்பித்தது- விமானத்தில் ஏற்றப்பட்டது 02 JUL, 2023 | 07:40 AM சக்சுரின் யானை தாய்லாந்திற்கு அனுப்புவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட கூண்டுடன் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 22 வருடங்களிற்கு முன்னர் இலங்கைக்குக்கு வழங்கிய யானையை மீளப்பெற்று சிகிச்சைக்கு உட்படுத்த தாய்லாந்து தீர்மானித்துள்ள நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் யானை விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை விசேட வாகனமொன்று சக்சுரின் யானையை தெகிவளை மிருக்கக்காட்சி சாலையிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் யானைக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில் மிகமெதுவாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை யானையை கூண்டுடன் ரஸ்ய தயாரிப்பு இலுசன் 76க்குள் ஏற்றும் நடவடிக்கைககள் ஆரம்பமாகியுள்ளன. https://www.virakesari.lk/article/159020
-
டியாகோகார்சீயாவில் 20 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் - 12 பேர் தற்கொலைக்கு முயற்சி
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் சட்டவிரோதமானது - பிரிட்டன் நீதிமன்றம் Published By: RAJEEBAN 29 JUN, 2023 | 03:15 PM குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரிட்டனின் திட்டம் சட்டவிரோதமானது என பிரிட்டனின்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்தநாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படும் ஆபத்துள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ருவாண்டா திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/158843
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
Published By: RAJEEBAN 29 JUN, 2023 | 07:55 PM கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் பிரதான வீதியில் பாடசாலைக்கு அருகாமையில் நீர் வழங்கல் அதிகாரசபையில் நீர் வழங்கல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொக்குளாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு நாளை நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் தெருவித்தனர். https://www.virakesari.lk/article/158870
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
தேரிக்காடுகள் முதல் தென்மலை வரை: குற்றாலத்தைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 28 ஜூன் 2023 குற்றாலம் என்றாலே அனைவரது மனதிலும் தோன்றுவது அருவிகளும் அழகான மேற்கு தொடர்ச்சி மலையும் தான். பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி ஆகிய ஐந்து அருவிகள் மட்டுமே இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற இடங்கள். மற்ற அருவிகளான செண்பகா தேவி, தேனருவி, மற்றும் பழத்தோட்ட அருவிக்கு பொது மக்கள் செல்ல அனுமதி இல்லை. பெரும்பாலும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஐந்து பிரதான அருவிகளில் ஆசை தீர குளித்துவிட்டு கிளம்பி விடுவது வாடிக்கை. ஆனால் குற்றாலத்தை சுற்றி பல அழகான சுற்றுலா தலங்கள் உள்ளன. அத்தகைய அதிகம் அறியப்படாத இடங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். குண்டாறு அணை படக்குறிப்பு, அருவியில் குளிப்பது பிடிக்கும் ஆனால் கூட்டம் பிடிக்காது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது. குற்றாலத்திலிருந்து 13கி.மீ. தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு அணைக்கட்டு. இது 1983ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் பலர் தங்களது திருமண போட்டோ ஷூட்டுகளுக்கு இந்த இடத்தையே விரும்புகின்றனர். ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா, பலாப்பழம், மாம்பழம் என சுற்றியுள்ள மலைகளில் விளைந்த பழங்களை இங்குள்ள சிறு வியாபாரிகளிடம் வாங்கலாம். இந்த அணையை ஒட்டி இருக்கும் மலையில் இயற்கை எழில் கொஞ்சும் சில அழகிய அருவிகள் உள்ளன. அருவியில் குளிப்பது பிடிக்கும் ஆனால் கூட்டம் பிடிக்காது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது. அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களில் செல்ல முடியாது. மிகவும் கரடு முரடான காட்டு வழிப்பாதை என்பதால் வாகனங்களை மலை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும் அல்லது தனியார் ஜீப்புகள் மூலமாகவும் நீங்கள் செல்லலாம். ஜீப்பில் செல்ல ஒரு நபருக்கு 100 முதல் 200 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இந்த காட்டுப்பாதை வழியாக அருவிக்கு செல்வதே ஒரு சாகசப் பயணம் தான். பருவமழைக் காலங்களில் இந்த அணைக்கட்டு வேகமாக நிரம்பி விடும். அணை நிரம்பி மறுகால் பாய்வதை பார்க்க ரம்மியமாக இருக்கும். குற்றாலத்திலிருந்து செங்கோட்டை வழியாக பயணம் செய்தால் 30 நிமிடங்களில் இந்த அணைக்கட்டை அடையலாம். அடவிநயினார் அணை படக்குறிப்பு, நீங்கள் ஒரு புகைப்பட கலைஞர் என்றால் ஒரு முழு நாளையும் கூட இந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளை புகைப்படம் எடுப்பதில் செலவிடக்கூடும். குற்றாலத்திலிருந்து 21கி.மீ. தொலைவில், கேரள எல்லை அருகே அமைந்துள்ளது இந்த அணை. இந்த அணைக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் இருக்கும் பசுமையான வயல்வெளிகளை ரசித்தபடியே செல்லலாம். இயற்கை எழில் கொஞ்சும் இந்தச் சாலையை பாபநாசம், அந்நியன், தர்மதுரை போன்ற பல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஒரு புகைப்பட கலைஞர் என்றால் ஒரு முழு நாளையும் கூட அணையைச் சுற்றியுள்ள பகுதிகளை புகைப்படம் எடுப்பதில் செலவிடலாம். அவ்வளவு அழகான இடம் இது. அணைக்கு மேலே அருவி உண்டு, ஆனால் அங்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை. காரணம் ஆபத்தான காட்டு வழிப்பாதை மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். குற்றாலத்திலிருந்து பண்பொழி வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை அடைந்த பின் பிரதான சாலையிலிருந்து வலது புறம் திரும்பி 3 கி.மீ. தூரம் பயணித்தால் இந்த அணையை அடையலாம். கும்பாவுருட்டி அருவி படக்குறிப்பு, கும்பாவுருட்டி அருவிக்கான மலைப் பயணத்தின் போது மான்கள், மிளாக்கள், அரிய வகை பாம்புகள், காட்டு அணில்களை பார்க்கலாம். குற்றாலம்-அச்சன்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்தால் கேரள எல்லையை அடையலாம். அங்கிருக்கும் கேரள வனத்துறையின் சோதனைச் சாவடியில் உங்கள் வாகனம் குறித்த விவரங்களைப் பதிவு செய்த பின், கும்பாவுருட்டி அருவிக்கான மலைப் பயணம் தொடங்குகிறது. அதிர்ஷ்டம் இருந்தால் மான்கள், மிளாக்கள், அரிய வகை பாம்புகள், காட்டு அணில்களை இந்த பயணத்தில் நீங்கள் பார்க்கலாம். இங்கு பயணிப்பது ஊட்டி, மசினகுடி போன்ற சாலைகளில் பயணிக்கும் உணர்வை தரும். வழியெங்கும் தென்படும் சிறு அருவிகளும், அழகிய நீரோடைகளும் நம்மை கவர்ந்து இழுக்கும். கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் என்பதால் சொந்த வாகனங்களில் செல்பவர்கள் சற்று கவனமாக ஓட்டிச் செல்ல வேண்டும். குற்றாலத்திலிருந்து 29கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. தென்காசி-அச்சன்கோவில் இடையே தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இதன் மூலமும் கும்பாவுருட்டி அருவிக்கு செல்லலாம். கும்பாவுருட்டி அருவி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்கு பின்பற்ற வேண்டிய விதிகள் அதிகம். ஒரு நபருக்கான நுழைவு கட்டணமாக 50 ரூபாய் செலுத்தி விட்டு, பிரதான சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி காட்டிற்குள் நடந்து சென்றால் இந்த அருவியை பார்க்கலாம். சற்று தொலைவு தான் என்றாலும் அருவியை கண்டவுடன் கிடைக்கும் அந்த புத்துணர்வு களைப்பை போக்கி விடும். அருவியை மிகச் சிறந்த முறையில் பராமரிக்கிறார்கள். வார நாட்களில் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும், அதிக நேரம் குளிக்கலாம். குடும்பத்துடன் செல்ல ஏற்ற அருவி. பாலருவி படக்குறிப்பு, ஜூலை-செப்டம்பர் மாதங்களில் சென்றால், பாலருவியில் 300 மீட்டர் உயரத்திலிருந்து பால் போன்ற நிறத்தில் தண்ணீர் விழுவதைப் பார்த்து ரசிக்கலாம் குற்றாலத்திலிருந்து 27கி.மீ. தூரத்தில் கேரளாவின் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது பாலருவி. புளியரை வழியாக கேரள எல்லையைக் கடந்து செங்கோட்டை-புனலூர் சாலையில் தொடர்ந்து பயணித்தால் ஆரியங்காவு ஊரை அடையலாம். அங்கு உள்ள சோதனைச் சாவடிக்கு அருகில் இடது புறம் திரும்பினால் இந்த அருவிக்கு செல்லும் பாதையின் நுழைவு வாயிலை பார்க்கலாம். செங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆரியங்காவுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருவி அமைந்திருக்கும் காட்டுப் பகுதிக்கு கேரளா வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். பிரதான சாலையிலிருந்து 4கி.மீ. தூரம் என்பதாலும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாலும் நடந்தோ அல்லது தங்கள் சொந்த வாகனங்களிலோ சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. ஒரு நபருக்கான நுழைவு கட்டணம் 50 ரூபாய். காடுகளின் வழியே செல்லும் ரம்மியமான சாலையில் பயணிக்கும் உணர்வை வார்த்தைகளால் விவரிப்பது சற்று கடினம் தான். அருவிக்கு 200 மீட்டர் தொலைவில், வனத்துறையின் வாகனத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால், இதமான சாரலை உணர முடியும். பருவமழைக் காலங்களின் போது திருவிதாங்கூர் மகாராஜாக்கள் இங்கு வந்து நீராடி செல்வது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக சிதிலமடைந்த கல் மண்டபத்தையும், குதிரை லாயங்களையும் இங்கு காணலாம். ஜூலை-செப்டம்பர் மாதங்களில் சென்றால், 300 மீட்டர் உயரத்திலிருந்து பால் போன்ற நிறத்தில் தண்ணீர் விழுவதைப் பார்த்து ரசிக்கலாம். தென்மலை அணை மற்றும் சூழலியல் சுற்றுலா பூங்கா படக்குறிப்பு, பருவமழைக் காலங்களின் போது பிரதான சாலையில் நின்றவாறே பிரம்மாண்டமான தென்மலை அணை நிரம்பி வழிவதை பார்த்து ரசிக்கலாம். ஆரியங்காவு ஊரிலிருந்து செங்கோட்டை-புனலூர் சாலையில் தொடர்ந்து பயணித்தால், 20 நிமிடங்களில் தென்மலை அணையை அடையலாம். பருவமழைக் காலங்களின் போது பிரதான சாலையில் நின்றவாறே பிரம்மாண்டமான தென்மலை அணை நிரம்பி வழிவதை பார்த்து ரசிக்கலாம். அணைக்கு முன்பாக மரத்தாலான ஒரு தொங்கு பாலம் உள்ளது. ஒரே சமயத்தில் 5 பேர் மட்டுமே இந்த பாலத்தில் செல்ல அனுமதி உண்டு. தொங்கு பாலத்தில் நடந்தவாறு அணையை மிகவும் அருகிலிருந்து பார்ப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அணைக்கு அருகில் அமைந்துள்ள தென்மலை சூழலியல் சுற்றுலா பூங்கா, குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்கு ஏற்ற இடம். இங்கு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 70 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வண்ணத்துப்பூச்சி பூங்கா, நடனமாடும் இசை நீரூற்று, காட்டிற்குள் சைக்கிள் ஓட்டுவது முதல் அணையில் படகு சவாரி செல்வது வரை, இயற்கை விரும்பிகளை குதூகலப்படுத்தும் வகையில் பல அம்சங்கள் இங்கு உள்ளன. இங்குள்ள மான் பூங்காவில் சாம்பார் மான்கள் மற்றும் அழகான புள்ளி மான்களை அதிகம் பார்க்க முடியும். மான் பூங்கா செல்வதற்கான நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இரவில் தங்குவதற்காக கேரள சுற்றுலாத்துறையின் சார்பாக இங்கு சிறப்பு விடுதிகள் உள்ளன. Thenmalaecotourism.com என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம். வர்கலா படக்குறிப்பு, வர்கலாவின் அழகே, ஒரு மலையிலிருந்து கடலை ரசிப்பது போன்று அமைந்திருக்கும் நிலப்பரப்பு தான். கேரளாவின் கோவா என அழைக்கப்படுகிறது வர்கலா, காரணம் இங்குள்ள அழகான கடற்கரைகள். ஒருநாள் பயணமாக குற்றாலத்திருந்து 104கி.மீ. தொலைவில் இருக்கும் வர்கலாவிற்கு சென்று வரலாம். பல வருடங்களாக கோவா செல்ல திட்டமிட்டு ஆனால் செல்ல முடியாத இளைஞர்களுக்கு வர்கலா சிறந்த ஆறுதலாக இருக்கும். வர்கலாவின் அழகே, ஒரு மலையிலிருந்து கடலை ரசிப்பது போன்று அமைந்திருக்கும் நிலப்பரப்பு தான். வருடம் முழுவதும் இங்குள்ள கடற்கரைகளில் வெளிநாட்டினர் சூரியக் குளியல் எடுப்பதை காணலாம். கோவாவின் ஹிப்பி கலாசாரத்தை வர்கலாவிலும் பார்க்க முடியும். ஹிப்பி பொருட்களை வாங்குவதற்கென்றே ஒரு சந்தை கடற்கரை அருகே உள்ளது. இங்குள்ள ரெஸ்டோ கஃபேக்களில் காபி குடித்தவாறே அரபிக் கடலின் அழகை பார்த்து ரசிக்கலாம். இரவு நேரங்களில் கடற்கரை உணவகங்களில் நாம் தேர்வு செய்யும் மீன் வகைகளை உடனடியாக நமக்கு சமைத்து தருவார்கள். விலை சற்று அதிகம் என்றாலும் மலையும் கடலும் சங்கமிக்கும் அந்த பகுதியில் அமர்ந்து இரவு உணவு உண்ணும்போது, விலை பற்றிய கவலை பறந்து விடும். உவரி மற்றும் மணப்பாடு படக்குறிப்பு, கூட்டம் அதிகம் இல்லாத அமைதியான கடலோர கிராமம் உவரி, குற்றாலத்திலிருந்து 116கி.மீ. தூரத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு அமைதியான கடலோர கிராமத்தில் அமர்ந்து கடலை ரசிக்க விரும்பினால், உவரி மிகச் சிறந்த இடம். உவரியின் கப்பல் மாதா கோயில் உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம். போர்த்துகீசிய மற்றும் ஸ்பானிஷ் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்ட சில கட்டிடங்கள், தேவாலயங்களை இங்கு பார்க்க முடியும். குற்றாலத்திலிருந்து 116கி.மீ. தூரத்தில் உள்ளது உவரி. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து உவரிக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படக்குறிப்பு, கப்பல் மாதா கோயில் உவரி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம். உவரியிலிருந்து அழகான தேரிக்காடுகள் வழியாக 30 நிமிடங்கள் பயணம் செய்தால் மணப்பாடு கிராமத்தை அடையலாம். மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்பம் போன்ற அமைப்பில் உள்ளது மணப்பாடு. மீன் ஏற்றுமதிக்கு பெயர்பெற்ற ஊர் இது. கடற்கரை குன்றின் மேல் அமைந்துள்ள திருச்சிலுவை ஆலயம், 400 வருடங்களுக்கு முன் போர்த்துகீசிய மாலுமியர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வந்து செல்லும் ஒரு இடமாக இந்த ஆலயம் உள்ளது. அதிகம் வெயில் இல்லாத பருவமழைக் காலங்களின் போது, பனைமரங்கள் நிறைந்த சாலைகளின் வழியாக இந்த இரு கடலோரக் கிராமங்களுக்கு பயணம் செய்தால், ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். எனவே அடுத்த முறை குடும்பத்துடன் குற்றாலம் செல்கிறீர்கள் என்றால், அங்குள்ள அருவிகளில் மட்டுமே குளித்து விட்டு வராமல், மேலே குறிப்பிட்டுள்ள இடங்களுக்கும் செல்வதன் மூலம் பசுமையான காடுகள், மலைகள், கடல்கள், தேரிக்காடுகள் என பல்வேறு வகையான நிலப்பரப்புகளை காணக்கூடிய ஒரு அருமையான அனுபவம் கிட்டும். https://www.bbc.com/tamil/articles/cy0jdngymnxo
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
டைட்டன் நீர்மூழ்கி மீட்பு: உள்ளே என்னென்ன கிடைத்திருக்கின்றன? பட மூலாதாரம்,SHUTTERSTOCK 28 ஜூன் 2023, 23:17 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர். டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் கனடாவின் செயின்ட் ஜான்ஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டன. டைட்டனின் தரையிறங்கும் சட்டமும் பின்புற உறையும் இந்தப் பாகங்களில் அடங்கும் என கடலோரப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் இந்தச் சிதைவுகளை முறையான பகுப்பாய்வு செய்வார்கள் என்று கடலோரப் படை தெரிவித்துள்ளது. வடக்கு அட்லாண்டிக்கில் 3,800 மீ (12,500 அடி) ஆழத்தில் மூழ்க்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக ஜூன் 18-ஆம் தேதி சென்ற 5 பேரும் இறந்தனர். இந்த விபத்துக்குப் பிறகு முதல் முறையாக டைட்டனின் பாகங்கள் வெளி உலகுக்குக் காட்டப்படுகின்றன. புதன்கிழமை கனடாவின் செயின்ட் ஜான்ஸில் உள்ள ஹொரைசன் ஆர்க்டிக் கப்பலில் இருந்து டைட்டன் நீர்மூழ்கியின் உலோகச் சிதைவுகள் இறக்கப்பட்டன. பட மூலாதாரம்,REUTERS என்னென்ன கிடைத்திருக்கின்றன? உடல்கள் எதுவும் மீட்பதற்கான வாய்ப்பு குறித்து அதிகாரிகள் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தனர். "இது கடற்பரப்பில் நம்பமுடியாத அளவுக்கு கடினமான முடியாத சூழல்" என்று கடலோரப் படையின் ஜான் மாகர் கூறினார். இதுவரை டைட்டானிக் கப்பலுக்கு அருகில் உள்ள ஒரு பெரிய குப்பைக் களத்தில் நீர்மூழ்கியின் 5 பெரிய துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ஒரு டைட்டானியம் எண்ட் கேப், டைட்டானியம் வளையம், தரையிறங்கும் சட்டகம், கருவிகள் வைக்கும் பெட்டி ஆகியவை அடங்கும் என்று பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ் தெரிவித்தார். டைட்டனின் மீட்பு பணிக்கு கனடா கப்பலான ஹொரைசன் ஆர்க்டிக் தலைமை ஏற்றது. தற்போது மீட்புப் பணிகளை முடித்துவிட்டு தளத்துக்குத் திரும்புவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டைட்டனை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக விமர்சிக்கப்பட்டது. இதன் பாதுகாப்பு பற்றி முன்னாள் ஊழியர்கள் பலரும் குறை கூறியுள்ளனர். என்ன நடந்தது? ஜூன், 111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி நசுங்கி நொறுங்கியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்தது டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து நிகழ்ந்த வெடிப்பு(implosion) இந்த இழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க கடலோர காவல் படை கூறுகிறது. இதற்கிடையே டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்பே வெளிப்படுத்தி கடல் தொழில்நுட்ப சமூகம் என்ற அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஜேம்ஸ் கேமரூனும் இதுகுறித்து முன்பே கணித்ததாகக் கூறுகிறார். இந்த விஷயத்தில் அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன. பட மூலாதாரம்,SHUTTERSTOCK நீர்மூழ்கியில் இருந்தவர்கள் யார்யார்? காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர். ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார். ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர். சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர் பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி. பட மூலாதாரம்,SHUTTERSTOCK பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி. பட மூலாதாரம்,OCEANGATE டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த 19 வயதேயான சுலேமான் தாவூத், உலக சாதனையை முறியடிக்க விரும்பியதால், தனது ரூபிக்ஸ் கியூப்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாய் கிறிஸ்டின் தாவூத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ரூபிக் கியூப்பை கொண்டு உலக சாதனையை பதிவு செய்வதற்காக தந்தை ஷாஜதா தனது கேமராவைக் கொண்டு சென்றிருக்கிறார். கின்னஸ் உலக சாதனைக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார். டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளான நேரத்தில் கிறிஸ்டின் தாவூதும் கடலின் மேற்பரப்பில் நீர்மூழ்கிக்கு உதவுவதற்காக நின்று கொண்டிருந்த போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்தனர். அப்போதுதான் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. "அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு அந்த நேரத்தில் புரியவில்லை. பின்னர் நீர்மூழ்கி அங்கிருந்து கீழ்நோக்கிச் சென்றது," என்று கிறிஸ்டின் கூறினார். பட மூலாதாரம்,DAWOOD FAMILY டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குப் பிறகு தாவூத் குடும்பத்தினர் அளித்த முதல் பேட்டி இதுவாகும். டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்க்க தனது கணவருடன் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். "நான் பின்வாங்கிவிட்டு, [சுலேமானை] அழைத்துச் செல்ல இடம் கொடுத்தேன். ஏனென்றால் அவன் உண்மையில் செல்ல விரும்பினான்” என்றார் கிறிஸ்டின். சுலேமான், அவரது தந்தை ஷாஜதா தாவூத், மேலும் மூன்று பேர் நீர்மூழ்கியில் இறந்தனர். டைட்டனுக்குச் சொந்தமான ஓஷன்கேட்டின் 61 வயதான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படையின் முன்னாள் ஆழ்கடல் வீரர் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் அந்த மூவர். தனது மகன் சுலேமான் ரூபிக்ஸ் கியூப்பை மிகவும் நேசித்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின் தாவூத். போகுமிடமெல்லாம் ரூபிக்ஸ் கியூபை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்ட சுலேமான். 12 வினாடிகளில் கியூபை சரி செய்து பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES டைட்டன் நீர்மூழ்கி எப்படிப்பட்டது? கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர் ஆழத்தை அடையும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ‘டைட்டன் நீர்மூழ்கியும்’ ஒன்று. இத்தகைய திறன்கொண்ட நீர்மூழ்கியை, ஓஷன்கேட் என்ற தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது. ‘டைட்டன் நீர்மூழ்கியை’ போலவே ‘சைக்ளாப்ஸ்’ என்ற நீர்மூழ்கியையும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓஷன்கேட் நிறுவனம் இயக்கி வருகிறது. ஆனால் ’டைட்டானிக் சேதத்தை’ பயணிகள் பார்வையிடுவதற்காகவே அந்த நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ‘டைட்டன் நீர்மூழ்கி’. ’டைட்டன் நீர்மூழ்கி சுமார் 10,432 கிலோ எடையளவைக் கொண்டது. மேலும் இரண்டு குவிமாடம் கொண்ட கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானிய மூடிகளோடு,13 செ.மீ அளவிற்கு ஏரோஸ்பேஸையும் இது கொண்டுள்ளது. இதனால் கடலுக்கு அடியில் சுமார் 4000 மீட்டர் (13,123 அடி) ஆழத்திற்கு டைட்டன் நீர்மூழ்கியால் செல்ல முடியும். 'டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள்' கடலின் மேற்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன. டைட்டன் நீர்மூழ்கியால் அதைச் சென்றடைய முடியும். பட மூலாதாரம்,OCEANGATE டைட்டன் நீர்மூழ்கி எப்படி இயங்கும்? ’மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போல் அல்லாமல், டைட்டன் நீர்மூழ்கி குறைந்த அளவு சக்தியைக் கொண்டே இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம், அது தன்னுடைய இயக்கத்தைத் தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் மற்றொரு தனி கப்பலின் துணையும், ஆதரவும் அதற்குத் தேவைப்படும்’ என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, டைட்டன் நீர்மூழ்கி முதன்முதலாக அதன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது. அதன் பின் 2021ஆம் ஆண்டு முதல் அதன் அதிகாரப்பூர்வ பயணம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் டைட்டன் நீர்மூழ்கி 10 ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பயணங்கள் அனைத்துமே டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குச் சென்றவை அல்ல. கப்பல் ஏவுதளத்திலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் மேற்பரப்புக்குத் திரும்புவது வரை மணிக்கு சுமார் 4 கிமீ வேகத்தில் ‘டைட்டன் நீர்மூழ்கி’ பயணிக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cd1z5ewlp2po
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேனிய நகரில் ரஷ்யாவின் தாக்குதலில் நால்வர் பலி Published By: SETHU 28 JUN, 2023 | 09:05 AM உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள கிரமடோர்ஸ்க் நகரில் ரஷ்ய படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் நால்வர் உயிரழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு விடுதியொன்றும் வணிகப் பகுதியொன்றும் நேற்றிரவு தாக்கப்பட்டது. இந்நகரம் உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், ரஷ்ய படையினர் ஆக்கிரமித்துள்ள உக்ரேனிய பகுதிகளுக்கு அருகில் இந்நகரம் உள்ளது. உயிரிழந்தவர்களில் 17 வயது சிறுமியும் அடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/158734
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீற்றர் உயரமும், 3.2 கிலோ மீற்றர் நீளமும் கொண்டது. சுமார் 7 இலட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர். இங்கு மிகப்பெரிய நீர்மின் நிலையம் செயல்படுகிறது. இந்தநிலையில் கடந்த 5ஆம்திகதி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ககோவ்கா அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த சம்பவத்துக்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சம்பவத்தால் உலகளாவிய உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் எனவும், இலட்சக்கணக்கானோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையே பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வெள்ளத்தில் மூழ்கி 15இற்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/260093
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அரசின் கொள்கைக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள் - என்ன காரணம்? படக்குறிப்பு, நேபாளத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கட்டுரை தகவல் எழுதியவர்,ஸ்வச்சா ராவத் பதவி,பிபிசி நேபாளி சேவை 40 நிமிடங்களுக்கு முன்னர் நேபாள இளைஞரான ரமேஷ் (அவர் கேட்டுக் கொண்டதன்படி அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்க விரும்பினார். அதன் காரணமாக மாணவர் விசாவில் உயர்கல்வி பயில ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு அவர் விரும்பியபடி படிப்பை நல்லபடியாக முடித்தார். இருப்பினும் அதன் பின்னர் ரஷ்யாவிலேயே நல்ல வேலைத் தேடி கொள்வதா அல்லது நேபாளத்துக்கு திரும்பி அங்கே வேலைத் தேடுவதா என்ற கேள்வி எழுந்ததால் அவர் ஒருவித மன போராட்டத்துக்கு ஆளானார். நேபாள அரசின் 2017 -18 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அந்நாட்டில் வேலை இல்லாதோர் விகிதம் 11.4 சதவீதமாக இருந்தது. அதற்கு முன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, நேபாளத்தில் பெரும்பாலான பணிகள் அமைப்பு சாரா துறைகளில் தான் கிடைக்கப் பெறுவதாகவும் இந்தப் பணிகளை மேற்கொள்வோருக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. வேலை கிடைப்பதில் சிக்கல் "வெளிநாடுகளில் படித்துவிட்டு நேபாளத்திற்கு வரும் அனைத்து இளைஞர்களும் நல்ல வேலையை பெறுவதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதில்லை" என்று பிபிசி நேபாளி உடனான ஆன்லைன் உரையாடலின்போது ரமேஷ் தெரிவித்தார். இப்படி ரமேஷ் போன்ற நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ வீரரின் சித்தரிப்பு படம் ரஷ்ய ராணுவத்தில் சேர வெளிநாட்டவருக்கு வாய்ப்பு ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் இறந்தனர். அதன் விளைவாக ரஷ்ய ராணுவத்துக்கு நிறைய படை வீரர்கள் தேவைப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, வெளிநாட்டவரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வகைச் செய்யும் விதத்தில், குறிப்பிட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதிக ஊதியம், ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவது என ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர் ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொன்னான வாய்ப்பை தான் பயன்படுத்தி கொள்ள ரமேஷ் விரும்பினார். தான் விரும்பிய படியே ரஷ்ய ராணுவத்தில் ரமேஷ் இணைந்தார். அதற்காக அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டியிருந்தது. இந்தத் தேர்வுகளை எழுத 1,00,000 நேபாளி ரூபாயை செலவழித்தார். இவ்வளவு பெரிய தொகையை தனக்கு அளித்து உதவியவர் யார் என்ற தகவலை பகிரங்கமாக கூற அவர் மறுத்துவிட்டார். ரஷ்ய ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்த தனது மகிழ்ச்சியை ‘டிக்டாக்’ பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார். “வாழ்வில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் பணியை தேர்ந்தெடுத்துள்ளேன்” என்றும் அந்தப் பதிவில் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளது எவ்வளவு கடினமான முடிவு என்பது குறித்தும் அவர் தன் வீடியோ பதிவுகளில் தெரிவித்திருந்தார். "செய் அல்லது செத்து மடி" என்பது ராணுவ வீரர்களுக்கான தாரக மந்திரம். எனவே இதனை உணர்ந்து, ராணுவத்தில் சேர்வதற்கு விருப்பம் இருந்தால் மட்டும் அதில் இணையுங்கள்" என்றும் டிக்டாக் வீடியோவில் அவர் கூறியிருந்தார். ‘தகவல்’ என்ற தலைப்பில் ரமேஷ் மற்றொரு வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். “ ராணுவப் பணியில் இங்கு நிறைய சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. நிலைமை எதிர்பார்த்தது போல் இல்லை. ஏனெனில் ரஷ்யா மோதுவது யுக்ரேன் உடன் என்பதால், இதை வாழ்வின் மிகவும் கடினமான தருணம் என்று எண்ணுகிறேன்,” என அந்த வீடியோவில் ரமேஷ் உருக்கமாக கூறியிருந்தார். பிபிசி அவரை கடைசியாக தொடர்பு கொண்டபோது, தான் பயிற்சிக்காக பெலாரஸுக்கு அழைத்து செல்லப்படுவதால், உரையாடுவதற்கு போதிய நேரம் இல்லை என்று ரமேஷ் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் பிபிசி அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரமேஷ் மட்டுமல்ல. அவரை போன்று நிறைய இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்ற தகவல் பிபிசியின் ஒரு வார கால கள ஆய்வில் தெரிய வந்தது. படக்குறிப்பு, நேபாள அரசின் 2017 -18 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அந்நாட்டில் வேலை இல்லாதோர் விகிதம் 11.4 சதவீதமாக இருந்தது. சட்டவிரோதம் என்று அறியாத நேபாள இளைஞர் இதனிடையே, ராஜ் என்ற நேபாளத்தை சேர்ந்த இளைஞரும், ரமேஷை போல உயர் கல்வி பயில்வதற்காக ரஷ்யாவுக்கு சென்றிருந்தார் என்று தெரிய வந்தது. அங்கு அவர் இருந்தபோது தான், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை ராணுவத்தில் சேர்ப்பது குறித்த அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியான உடனே, நேபாளத்தில் இருந்து பலர் ராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு ரஷ்ய மொழி அவ்வளவு சரளமாக தெரியவில்லை என்பதால், அந்நாட்டு ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் ராஜின் உதவியை நாடினர். எனக்கு அறிமுகமான சில நேபாளிகளுக்கு, அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி புரிந்துள்ளேன். அதன் பின்னர் அவர்களே, இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளும்படி பலரிடம் எனது தொலைபேசி எண்ணை பகிர்ந்தனர்” என்று பிபிசி நேபாளியிடம் ராஜ் கூறினார். ரஷ்யாவில் உயர் கல்வி பயில விரும்பும் நேபாளத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை ராஜ் வழக்கமாக கொண்டிருந்தார். அதன்பின் நேபாள மாணவர்களுடன் தற்போது, ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பிய அந்நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களும் ராஜின் உதவியை நாடினர். பட மூலாதாரம்,OFFICIAL PUBLICATION OF LEGAL ACTS/RUSSIA படக்குறிப்பு, வெளிநாட்டவரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வகை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்ட ரஷ்ய அதிபர் விளாதிர் புதின். முத்தரப்பு ஒப்பந்தம் “நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைவது நாட்டின் கொள்கைக்கு இணக்கமானது அல்ல,” என்று நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சேவா லாம்சல் பிபிசி நேபாளியிடம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். நேபாள குடிமக்கள் வெளிநாடுகளின் ராணுவத்தில் சேர்வது தொடர்பாக, 1947 இல் நேபாளம், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. நேபாள மக்கள் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்படும் நேபாளிகள் “கூலிப்படைகளாக கருதப்படமாட்டார்கள்” என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டனை தவிர, பிற நாடுகளின் ராணுவத்தில் நேபாளிகள் சேர்வதை ஆதரிக்கும் கொள்கை இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மாஸ்கோவில் உள்ள நேபாள தூதர் மிலன்ராஜ் துலாதரை பிபிசி நேபாளி சேவை தொடர்பு கொண்டது. “சுற்றுலா விசாவிலும், மேற்படிப்பு பயிலவும் ரஷ்யாவுக்கு வருகை தரும் நேபாள நாட்டினர், இங்கு வேறு எந்த பணியிலும் சேர முடியாது. தங்களின் குடிமக்கள் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வது தொடர்பாக மட்டுமே அந்த நாடுகளுடன் நேபாள அரசு ஒப்பந்தம் புரிந்துள்ளது. இதுபோன்ற ஒப்பந்தம் ரஷ்ய அரசுடன் மேற்கொள்ளப்படவில்லை” என்று பிபிசி நேபாளி சேவையிடம் கூறினார் மிலன்ராஜ். நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளது தொடர்பான டிக்டாக் வீடியோக்களை தம்மால் ஆய்வு செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆவணப்படங்கள் ஆய்வு இருப்பினும், ரஷ்ய ராணுவ பயிற்சி முகாம்களில் படமாக்கப்பட்ட இதுபோன்ற சில வீடியோக்களை சரிபாக்கும் பணியை பிபிசி மேற்கொண்டது. ரஷ்ய ராணுவம் தொடர்பான ஆவணப்படங்களை கொண்ட வீடியோக்கள் பதிவிடப்பட்ட குறைந்தபட்சம் இரண்டு டிக்டாக் கணக்குகளை பிபிசியின் ரஷ்ய சேவையை சேர்ந்த செய்தியாளர் ஆன்ட்ரி கோசென்கோ சரிபார்த்தார். “ரமேஷ் உள்ளிட்ட இரண்டு நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதை அந்த வீடியோக்கள் மூலம் அறிய முடிந்தது” என்று கூறினார் கோசென்கோ. சம்பந்தப்பட்ட நபர்கள் ராணுவத்தில் வகிக்கும் நிலை (Rank), அவர்களின் முழு பெயர், உயரதிகாரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஆவணப்படங்களில் இடம்பெற்றிருந்தன. அத்துடன் ராணுவத்தில் அவர்கள் பணிபுரியும் பிரிவுகள் குறித்த தகவல்களும் அவற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம், காத்மாண்டுவில் உள்ள ரஷ்யாவுக்கான தூதரை பிபிசி மின்னஞ்சலில் தொடர்பு கொண்டது. இருப்பினும். இந்த கட்டுரை வெளியிடும் வரை ரஷ்ய அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர என்ன காரணம்? படித்த இளைஞர்களுக்கு நேபாளத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் தான் அவர்கள் வெளிநாடுகளின் ராணுவத்தில் சேர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “சுற்றுலா, மேற்படிப்பு போன்ற காரணங்களை சொல்லி நேபாளிகள் வெளிநாடுகளுக்கு பயணித்தாலும், அங்கு வேலை தேடி கொள்வதே அவர்களது பயணத்தின் பிரதான நோக்கமாக உள்ளது” என்று கூறுகிறார் திரிபுவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியலாளரான திகாரம் கௌதம். “ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள சில மாதங்களில் சம்பாதிக்கும் பணத்தை, பிற வழிகளில் சம்பாதிக்க அவர்களுக்கு சில ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாக அவர்கள் ரஷ்ய ராணுவத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்” என்றும் அவர் கூறினார். ரஷ்யா -யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக மொத்தம் 1,729 நேபாளிகள் ரஷ்யாவுக்கு பயணித்துள்ளனர் என்று நேபாள அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 749 நேபாள மாணவர்கள் மேற்படிப்புக்காகவும், 356 பேர் வேலைக்காகவும் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று நேபாள அரசின் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது. ராஜ் உள்ளிட்ட ரஷ்யாவில் இருக்கும் நேபாளிகளிடம் பிபிசி பேசியபோது, ரஷ்யா வந்ததற்காக அவர்கள் கூறிய காரணங்கள், சமூகவியலாளர் கௌதமின் கருத்தை பிரதிபலிப்பவையாக இருந்தன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சித்தரிப்பு படம் “பணம் சம்பாதிப்பதற்காக தான் நாங்கள் ரஷ்யாவுக்கு வந்தோம்” என்று நேபாள இளைஞர் ஒருவர் பகிரங்கமாக தெரிவித்தார். இதன் காரணமாக தான் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்ததாகவும். அதுகுறித்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட தாகவும் அவர் கூறினார். “ரஷ்யாவில் நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை நேபாளத்திலோ, வேறு எந்த நாட்டிலோ எங்களால் சம்பாதிக்க முடியாது. எனவே இதயம் சம்பந்தமான நோய்கள் இல்லாதவர்கள் தாராளமாக ரஷ்யாவுக்கு வரலாம்” எனவும் அந்த இளைஞர் தெரிவித்தார். “எங்கள் வாழ்வு மீதான அன்பின் காரணமாக நாங்கள் நேபாளத்திற்கு திரும்பலாம். ஆனால் அங்கு எங்களின் வேலைக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?” என்று மற்றொரு இளைஞர் கேள்வி எழுப்புகிறார். யுக்ரேன் போரில் பங்கேற்றுள்ள ராணுவ வீரர்களுக்கு அதிக ஊதியம் தருவதாக ரஷ்ய அரசு உறுதியளித்துள்ளதாக கூறினார் ராஜ். அதன்படி, ராணுவ பயிற்சி காலத்தில் 60 ஆயிரம் நேபாள கரன்சிக்கு இணையான ஊதியம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். பயிற்சி காலம் முடிந்ததும், தங்களுக்கு மாதாந்திர ஊதியமாக 1.95 லட்சம் ரூபிள்கள் வழங்கப்படும் என்று வேலைக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் மற்றொரு நேபாள இளைஞர் தெரிவித்தார். இந்த தொகை மூன்று லட்சம் நேபாள கரன்சிகளுக்கு இணையானது என்கிறார் ராஜ். அத்துடன் ஓராண்டு ஒப்பந்தம் முடிந்த பிறகு, ராணுவ வீரர்கள் ரஷ்ய நாட்டின் பாஸ்போர்ட்டை பெற இயலும். அத்துடன் அவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை ரஷ்யாவுக்கு அழைத்து வர முடியும் என்றும் கூறுகிறார் நேபாள இளைஞரான ராஜ். https://www.bbc.com/tamil/articles/cll0p77m7yzo
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
அஸ்வெசும தொடர்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இறுதியான பெயர் பட்டியல் அல்ல - ஷெஹான் சேமசிங்க Published By: VISHNU 27 JUN, 2023 | 08:42 PM (எம்.மனோசித்ரா) அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88,794 ஆட்சேபனைகளும் , 3300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு கிடைக்கப்பெறும் ஆட்சேபனைகள், எதிர்ப்புக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு பொறுத்தமானவர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நீரிழிவு நோயாளர்கள் , முதியோர் மற்றும் அங்கவீனமுற்றோர் தொடர்பான பெயர் பட்டியல் இவ்வார இறுதியிலேயே வெளியிடப்படும். எனவே இந்தக் கொடுப்பனவுகளைப் பெறுவோர் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நீரிழிவு நோயாளர்கள், முதியோர் மற்றும் அங்கவீனமுற்றோர் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்ற போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் அவர்களது பெயர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வார இறுதியில் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்படும். எனவே இது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதல்ல. ஆட்சேபனைகள், எதிர்ப்புக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு அதன் பின்னரே இறுதியான பயனாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இந்த திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள பயனாளிகள் குறித்த தகவல்கள் வீடுகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. மாறாக வீடொன்றில் வசிக்கும் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்பட்டால் அவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். வெளிப்படை தன்மையுடனேயே இந்த தெரிவுகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் ஆகஸ்டில் அடுத்த வருடத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படும். இவ்வாறு வருடாந்தம் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்படும். சமூர்த்தி உள்ளிட்ட ஏனைய சகல அரச கொடுப்பனவுகளும் இந்த வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படும். இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஒரு இலட்சத்து 88,794 ஆட்சேபனைகளும், 3300 எதிர்ப்புக்களும் கிடைத்துள்ளன. 20 இலட்சம் பேருக்கு இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது. எனினும் 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், அவற்றை மதிப்பாய்வு செய்த பின்னர் 33 இலட்சம் பேர் தற்போது பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் இது இறுதியான எண்ணிக்கை அல்ல என்றார். https://www.virakesari.lk/article/158715
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
கூண்டிற்குள் அடைக்கப்பட்ட யானையை கிரேன் மூலம் தூக்குவதற்கான பயிற்சிகள் - ஒருவாரத்தில் தாய்லாந்து செல்கின்றது சக்சுரின் Published By: RAJEEBAN 27 JUN, 2023 | 06:52 AM இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள சக்சுரின் யானையை இன்னமும் ஒருவார காலப்பகுதிக்குள் தாய்லாந்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் கூண்டினில் பயணிப்பதற்காக சக்சுரினை பழக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன யானை தாய்லாந்தை சேர்ந்த பாகன்களுடன் நல்லவிதத்தில் நடந்துகொள்கின்றது என தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள் வனவிலங்கு தாவர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளா நாயகம் தெரிவித்துள்ளார். இரவில் கூண்டிற்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் கூண்டின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் காலின் கதவுகள் பிணைக்கப்பட்டு இரண்டுமணித்தியாலங்கள் உள்ளே நிற்பதற்கும் முத்துராஜவிற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த கட்டமாக யானை உள்ளே இருக்கும்போது கூண்டை மூடி அதனை கிரேனை பயன்படுத்தி தூக்கும் பயிற்சி இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் இந்த பயிற்சியை அதிகாரிகள் மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டும் இந்த பயிற்சி இரண்டாம் திகதி யானை தாய்லாந்திற்கு கொண்டுசெல்லப்படும் வரை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். முதலாம் திகதி முத்துராஜவை தெகிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு கொண்டு செல்வார்கள் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாய்லாந்திலிருந்து விமானம் கொழும்பை வந்தடையும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஜூலை 2ம் திகதி தாய்லாந்தின் சியாங்மாய் விமானநிலையத்தில் யானைப்பாகன்களும் மிருகவைத்தியர்களும் காத்திருப்பார்கள் அவர்கள் யானையின் நிலையை ஆராய்வார்கள். யானை நல்லநிலையில் காணப்பட்டால் அதனை நேரடியாக அன்றைய தினமே லம்பாங்கில் உள்ள பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்வார்கள் ஆறுமணித்தியால விமானநிலையம் அதனை அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்தால் ஓய்விற்காக சியாங் மாய் சபாரிக்கு அனுப்புவார்கள். https://www.virakesari.lk/article/158661
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணா.