Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை! Published By: Digital Desk 2 20 Dec, 2025 | 02:57 PM நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1100 முதல் 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 முதல் ரூ. 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 550 முதல் 800 வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் கோவா ரூ.300 முதல் 500 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233942
  2. "முழு நாடுமே ஒன்றாக" போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது! Published By: Digital Desk 1 20 Dec, 2025 | 11:06 AM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 428 கிராம் ஹெரோயின், 536 கிராம் ஐஸ், 03 கிராம் கொக்கெய்ன், 527 கிராம் கஞ்சா, 14,502 கஞ்சா செடிகள், 02 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 56 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 348 போதை மாத்திரைகள், 146 கிராம் 300 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 517 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 846 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 896 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 16 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233918
  3. பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம் 20 Dec, 2025 | 11:05 AM யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களிற்கும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 05 குடியிருப்பாளரிற்கும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 07 குடியிருப்பாளரிற்கும் எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றினால் உரிமையாளர்களிற்கு தலா 5,000 தண்டப்பணம் வீதம் 110,000 தண்டப்பணம் அறவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/233917
  4. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை! Published By: Digital Desk 2 20 Dec, 2025 | 02:27 PM ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபிக் ஆகிய இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு நிதியில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர மேலும் பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன.அதில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சவுதி மன்னரிடம் பரிசுப்பொருளாக நகை பெற்றது தொடர்பான 2வது ஊழல் வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233939
  5. ரி20 உலகக் கிண்ண முன்னோடி குழாத்தில் யாழ். மைந்தன் வியாஸ்காந்த் Published By: Vishnu 19 Dec, 2025 | 08:01 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இறுதி குழாத்தை தெரிவுசெய்யும் பொருட்டு பெயரிடப்பட்டுள்ள 25 வீரர்களைக் கொண்ட முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரும் தமிழ் யூனியன் வீரருமான விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். தமிழ் யூனியன் கழகத்திற்காக அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசி வரும் வியாஸ்காந்த் 60 ரி20 போட்டிகளில் 67 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த முன்னோடி குழாத்தில் அனுபசாலிகளுடன் இளம் வீரர்கள் பலரும் இடம்பெறுகின்றனர். முன்னோடி குழாத்தில் இடம்பெறும் வீரர்கள் வருமாறு:- தசுன் ஷானக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், காமில் மிஷார, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ஜனித் லியனகே, சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மிலன் ரத்நாயக்க, நுவன் துஷார, ஏஷான் மாலிங்க, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுஷான், மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷன்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமன்த, விஜயகாந்த் வியாஸ்காந்த், ட்ரவீன் மெத்யூ. https://www.virakesari.lk/article/233876
  6. Rebuilding Sri Lanka நிதியத்திற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை 20 Dec, 2025 | 02:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உதவிகளாக நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, பிரதேச அபிவிருத்தி வங்கி, 25 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்கியது. இதற்கான காசோலையை பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தார். பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அசந்த தென்னகோனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/233938
  7. தமிழர் தீர்வு விடயத்தில் எம்மாலான அழுத்தங்களை வழங்குவோம் -புதுடில்லிக்குக் கொண்டுசெல்வது பற்றி ஆராய்வதாக தமிழக முதலமைச்சர் கஜேந்திரகுமார் தரப்பிடம் உறுதி Published By: Vishnu 20 Dec, 2025 | 03:33 AM (நா.தனுஜா) தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், அதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம். இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர். அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக விடுதலைச் சிறுத்கைள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முதலமைச்சரின் செயலாளரும், முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். இச்சந்திப்பில் மத்திய அரசாங்கத்தின் இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து, 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவ இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஜேந்திரகுமார் தலைமையிலான தரப்பினர் வலியுறுத்தினர். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், இவ்விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், இதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார். அதனையடுத்து இன்னமும் தீர்வுகாணப்படாமல் தொடரும் இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் கஜேந்திரகுமார் தரப்பு முதலமைச்சரிடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியது. அதனை செவிமடுத்த ஸ்டாலின், 'இவ்விடயத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?' என்று வினவினார். அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், 'இந்தியாவுடனும், தமிழகத்துடனும் நெருங்கிய நட்புறவு பேணப்படவேண்டும் எனத் தமிழ்த்தரப்புக்கள் வலியுறுத்திவருகின்றன. ஆனால் இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் மீனவர் பிரச்சினையினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே நன்மையடைகின்றது. மீனவர் பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படாததன் காரணமாக, அதனால் அதிருப்தியுற்ற மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளது. இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வகையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத்தூதரகம் அகற்றப்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்கு புதுடில்லி ஊடாகவே தீர்வுகாணமுடியும் என்றாலும், எமது மீனவர்களைப் போன்றே இந்தியத்தரப்பில் பாதிக்கப்படும் மீனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆகவே அம்மக்களின் தலைவர் என்ற ரீதியில் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு உங்களது நேரடித்தலையீடு அவசியமாகும்' என வலியுறுத்தினார். அதனை செவிமடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/233893
  8. சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான் Published By: Vishnu 20 Dec, 2025 | 03:29 AM (எம்.ஆர்.எம்.வசீம்) நான் பாராளுமன்றத்தில் ஒரு போதும் இனரீதியாக பேசியதில்லை. ஆனால் இப்போது சொல்கின்றேன், சிங்கள சமூகம் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்தவாரம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிவில் அமைப்புகள் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஒரு முன்மொழிவை தயாரித்து சமர்ப்பித்தார்கள். புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, தீர்வு தொடர்பான முன்மொழிவே அது. அதனை இந்த சபையில் நான் சமர்ப்பிக்கின்றேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக எங்களால் முடிந்த உதவியாக எம்மால் சேகரிக்கப்பட்ட 60 இலட்சம் ரூபா பணத்தில் பாதிக்கப்பட்ட 2137 குடும்பங்களுக்கு நாம் உதவி செய்துள்ளோம். இதற்கு உதவியவர்களுக்கு இந்த சபையில் நன்றி கூறுகின்றேன்.எமது உதவி தொடர்பான கணக்கு விபரங்களையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். என்றாலும் நாம்செய்த இந்த உதவி போதாது. கடந்த பாராளுமன்ற அமர்வில் கொத்மலையில் நடந்த அசாதாரண சம்பவம் தொடர்பில் நான் உரையாற்றினேன்.அதில் முக்கியமானதொரு பிரச்சினையாக அந்த பகுதியிலிருந்த பிரதேச செயலாளர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்ற விடயத்தை முன்வைத்தேன். இது தொடர்பில் அரசு. அமைச்சர்கள் அல்லது எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் நான் கூறியபோதிருந்ததை விட இப்போது அந்த பிரச்சினை அதிகரித்துள்ளது . நேற்றைய தினம் ( வியாழக் கிழமை)அதே பகுதியிலிருக்கின்ற மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே அந்த பிரதேச செயலாளர் தம்மை முழுமையாக நிராகரிப்பதாக கூறியுள்ளார்கள். நான் எனது பாராளுமன்ற நாட்களில் ஒரு உரையைக்கூட இனரீதியாக ஆற்றியதில்லை. ஆனால் இன்று உண்மையான விடயம் கொத்மலை பிரதேசம் மட்டுமல்ல கொத்மலை, உடப்புசல்லாவ என சிங்கள சமூகம் எங்கு அதிகமாக வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்று நன் அந்த குற்றச்சாட்டை வைத்தமைக்கு காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க சொன்னார்கள். நான் அந்த குற்றச்சாட்டை முன்வைத்ததால் இன்று அங்குள்ள தமிழ் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதே நிலைமைதான் அனைத்துப்பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது. இது அமைச்சரின் நோக்கம் கிடையாது. எனவே தயவு செய்து இது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள். எல்லோரும் மோசமானவர்கள் என நான் சொல்லவில்லை. ஒரு சிலரின் செயற்பாடுகளினால் அரசாங்கத்துக்கு மட்டும் கெட்ட பெயர் கிடையாது. நாட்டுக்கே கெட்ட பெயர் .அதேமாதிரி கிராமசேவகர்களைப் பார்த்தால் அவர்கள் நிறைய இடங்களுக்கு பெயருக்கே செல்கின்றார்கள். பெயர்களை எடுக்கின்றார்கள் .ஆனால் எதுவும் செய்ய மாட்டேன் என்கின்றார்கள். 9 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடந்தது அதில் ஜனாதிபதி ஒன்றரை இலட்சம் மக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு 9 இலட்சம் பேர்ச் காணி தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். அப்படிப்பார்த்தால் ஒரு குடும்பத்துக்கு 6 பேர்ச் காணிதான். திகாம்பரம் எம்.பி. இருக்கும்போது 7 பேர்ச் காணி என சட்டம் கொண்டுவரப்பட்டது.நாங்கள் இருக்கும்போது 10 பேர்ச் காணி என சட்டம் கொண்டு வரப்பட்டது.இப்போது 6 பேர்ச் எனப்படுகின்றது எனவே இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்னவென ஜனாதிபதி இந்த சபையில் தெளிவு படுத்தியேயாக வேண்டும். அதேவேளை சந்தாப்பணத்தில் நான் நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ்வோடு நான் சென்ற போது அவருடன் கூட்டு சேர்ந்து விட்டதாக கூறினார்கள். எல்லோரும் சந்தாப்பணம் வாங்குகின்றார்கள்.எத்தனைபேர் கணக்கு வழக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் ? ஆனால் நான் சமர்ப்பித்துள்ளேன். நான் அனைத்து கட்சித்தலைவர்களிடமும் நுவரெலியா மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனக்கூறினேன். எனக்கு ஆளும் கட்சியா எதிர்கட்சியா, சிவில் அமைப்புக்களா என்ற பிரச்சினை கிடையாது. அந்த வகையில்தான் நாமல் ராஜபக்ஷ் அங்கு வந்து உதவிகளை வழங்கினார் என்றார். https://www.virakesari.lk/article/233892
  9. ஆட்டத்தை மாற்றிய 15 பந்துகள்: அதிரடியில் மிரட்டிய தென் ஆப்ரிக்கா தடம் புரண்டது எப்படி? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-1 எனக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்தியா 231 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங்கில் அரைசதம் அடித்ததோடு பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார். மீண்டும் சாம்சன் - அபிஷேக் ஜோடியின் அதிரடி கில் காலில் காயமடைந்த காரணத்தால், மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார் சஞ்சு சாம்சன். கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவரும், அபிஷேக்கும் சேர்ந்து ஒரு அதிரடியான தொடக்கத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அபிஷேக், இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். யான்சன் வீசிய அந்த ஓவரில் சாம்சனும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். அதன் பின்னும் அவர்கள் தங்கள் அதிரடியைத் தொடர, 4.4 ஓவர்களிலேயே இந்தியா 50 ரன்களைக் கடந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை இருவரும் நாலாப்புறமும் அடித்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 5.4 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தது. பவர்பிளேவிலேயே அவுட் ஆன அபிஷேக் ஷர்மா, 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பத்தாவது ஓவரில் அவுட்டான சாம்சன், 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் 81.7% ரன்களை பவுண்டரிகள் மூலமே எடுத்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என இந்தியா கைப்பற்றியது. நான்காவது போட்டி கைவிடப்பட்டது. கடைசி 8 ஓவர்களில் மிரட்டிய திலக் - ஹர்திக் ஜோடி இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 5 ரன்கள்) தவிர்த்து, அனைத்து இந்திய பேட்டர்களுமே களமிறங்கியது முதலே அதிரடி காட்டினர். அபிஷேக், திலக் இருவரும் தங்களின் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க, ஹர்திக்கும் துபேவும் தாங்கள் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார்கள். குறிப்பாக திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் காட்டிய அந்த அதிரடி அணுகுமுறை இந்தியாவை ஒரு மிகப் பெரிய இலக்கை நோக்கி பயணப்பட வைத்தது. வேகம், சுழல் என எந்த பந்தாக இருந்தாலும் இருவரும் தங்கள் அதிரடியைத் தொடர்ந்தனர். திலக் வர்மா மைதானத்தின் நாலாபுறமும் 360 டிகிரியில் பந்துகளை விளாசினார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 'ரிவர்ஸ் ஸ்வீப்' என்றால், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 'ரேம்ப் ஷாட்' ஆடினார். பந்துகள் ஒவ்வொன்றையும் சரியாக அவர் அடிக்க, எல்லாம் பவுண்டரிக்குப் பறந்தன. அதனால், 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் அவர். மறுபுறம் தன் அசாத்திய பலத்தால் பவுண்டரிகள் விளாசிக் கொண்டிருந்தார் ஹர்திக் பாண்டியா. தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், பதினாறு பந்துகளிலேயே அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த இரண்டாவது அதிவேக அரைசதம் இது. இந்த ஜோடி களத்தில் இருந்தது 7.2 ஓவர்கள் தான். ஆனால், அதில் அவர்கள் அடித்தது 105 ரன்கள். அவர்கள் ஜோடி சேரும்போது 9.45 ஆக இருந்த இந்தியாவின் ரன்ரேட், கடைசி ஓவரில் அவர்கள் பிரியும்போது 11.28 ஆக உயர்ந்திருந்தது. அதனால் தான் இந்தியாவால் 231 என்ற இமாலய ஸ்கோரை எட்ட முடிந்தது. ஹர்திக் பாண்டியா 63 ரன்களிலும் (25 பந்துகள்), திலக் வர்மா 73 ரன்களிலும் (42 பந்துகள்) கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹர்திக் மற்றும் திலக் இருவரின் அதிரடியால் 231 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா 15 பந்துகளில் ஆட்டம் மாறியது எப்படி? பெரிய இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு குவின்டன் டி காக் பெரும் நம்பிக்கை கொடுத்தார். முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், அந்த அதிரடியைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். அதனால், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஒருபக்கம் தடுமாறிய போதும் கூட பவர்பிளேவிலேயே அந்த அணி 67/0 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸை வருண் சக்கரவர்த்தி வெளியேற்ற, அதன்பிறகு களமிறங்கிய இளம் வீரர் டெவால் பிரெவிஸ், டி காக் உடன் இணைந்து அதிரடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். வருண் வீசிய இன்னிங்ஸின் 9வது ஓவரில் இருவரும் இணைந்து 23 ரன்கள் எடுத்தனர். ஹர்திக் வீசிய அடுத்த ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட, 10 ஓவர்கள் முடிவில் 118/1 என நல்ல நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா. தேவைப்படும் ரன்ரேட்டை விட அந்த அணியின் ரன்ரேட் அதிகமாக இருந்ததாலும், கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்ததாலும், அவர்களால் இலக்கை சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் அடுத்த ஓவர் பந்துவீச வந்த ஜஸ்ப்ரித் பும்ரா உடைத்தார். 11வது ஓவரை வீசிய பும்ரா, டி காக் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் பிரெவிஸ் சிங்கிள் எடுக்க, டி காக் ஸ்டிரைக்குக்கு வந்தார். அப்போது பும்ரா ஒரு பவுன்சரை வீச, நடுவர் அதை வைட் என அறிவித்தார். அடுத்ததாக யார்க்கர் லென்த்தில் சற்று மெதுவாக பந்தை வீசி பேட்டருக்கு அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா. 'அரௌண்ட் தி ஸ்டம்ப்' வந்து பும்ரா ஏற்படுத்திய கோணத்தால், பந்து பேட்டரை நோக்கி உள்ளே வந்தது. டி காக்கால் அதை சரியாக அடிக்க முடியாமல் போக, பந்து எட்ஜாகி பும்ராவின் கையிலேயே விழுந்தது. இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருந்த டி காக் 65 ரன்களில் (35 பந்துகள்) வெளியேறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் 10 ஓவர்களில் இந்திய பௌலர்கள் ரன்களை வாரி வழங்கியிருக்க, 11வது ஓவரில் பும்ராவை அழைத்துவந்தார் கேப்டன் சூர்யகுமார். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. அந்த ஒரு விக்கெட் தென்னாப்பிரிக்காவை சீட்டு கட்டு போல் சரியச் செய்தது. அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக்கின் பவுன்சரை, பிரெவிஸ் 'புல்' செய்ய, அது மிட்விக்கெட் திசையில் இருந்த வாஷிங்டன் சுந்தர் கையில் தஞ்சமடைந்தது. 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார் பிரெவிஸ். அதற்கடுத்த ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை பெரும் சரிவுக்குள்ளாக்கினார் வருண் சக்கரவர்த்தி. 12வது ஓவரின் மூன்றாவது பந்தில் மார்க்ரம் எல்பிடபிள்யூ ஆக, அடுத்த பந்திலேயே டானவன் ஃபெரீரா போல்டாகி வெளியேறினார். 10.1 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 120/1 என்ற நல்ல நிலையில் இருந்தது. அடுத்த 15 பந்துகளில், 135/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது அந்த அணி. பத்தாவது ஓவர் முடிவில் 11.4 ஆக இருந்த அந்த அணியின் தேவைப்படும் ரன்ரேட், 13வது ஓவர் முடிவில் 13.71 ஆக உயர்ந்தது. அந்த 15 பந்துகள் அந்த அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தன் இரண்டாவது ஓவரில் 23 ரன்கள் கொடுத்திருந்த வருண், தன்னுடைய மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியா வலுவான நிலையை அடைய உதவினார் அதன்பிறகு மீண்டுவர முடியாத தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன் மட்டும் எடுத்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மொத்தம் 432 ரன்கள் அடிக்கப்பட்ட இந்தப் போட்டியில், 4.25 என்ற எகானமியில் பந்துவீசி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் வீசிய 24 பந்துகளில் 15 டாட் பால்கள். வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் 252 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 63 ரன்கள் எடுத்ததோடு, பிரெவிஸ் விக்கெட்டையும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் காரணமாக, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-1 என (நான்காவது போட்டி கைவிடப்பட்டது) இந்தியா கைப்பற்றியது. இந்தத் தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce86pryl38ko
  10. பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர் Published By: Vishnu 19 Dec, 2025 | 10:57 PM இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, டித்வா புயலின் அனர்த்தத்தினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை (19) ஆந் திகதி குறைநிறப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் கூடியுள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்பட்ட நவம்பர் 27 ஆம் திகதி, அரசாங்கம், அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸார், இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவினாலும்தான் எமக்கு இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வர முடிந்தது. அதேபோல், ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தினால்தான் நாடு இன்று இருக்கும் நிலையை அடைய முடிந்தது. இதனாலேயே தான் குறிப்பாக, உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றை இன்றைய நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருப்பதற்கும், நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதற்கும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். இந்தப் பேரனர்த்தம் வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு மாறும் சூழ்நிலை. மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் மூட வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மழைவீழ்ச்சி கூட ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நிலச்சரிவுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். அந்தப் பகுதிகளுக்குச் சென்ற எவருக்கும் அந்த நிலைமை விளங்கும். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கிறோம். எனவே, முதல் சந்தர்ப்பங்களைப் போலவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலைபேறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கிராமங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம். இது இரண்டு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் திட்டம் என்று நாம் நினைக்கிறோம். 2026 ஆம் ஆண்டிற்காக இந்த குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதில் நாங்கள் திட்டமிட்டுத் தான் தலையிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே 2026 ஆம் ஆண்டிற்கான ரூபா 500 பில்லியனுக்கான குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். விரிந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு மீண்டும் கடனால் மூழ்கடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதிருக்க, இந்தத் திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார முகாமைத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தியதால்தான், இந்த நோக்கத்திற்காக 75 பில்லியனை ஒதுக்கவும், பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டை முன்வைக்க முடிந்தது. குறிப்பாக எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு பொருள், உழைப்பு மற்றும் பணத்தின் அடிப்படையில் பெரிதும் பங்களித்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இதை நாங்கள் பயமின்றி ஆதரவளிக்க முடிந்தது என்று எங்களுக்கு உதவிய மக்களும், சர்வதேச சமூகமும் கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒன்றிணைக்க முடிந்திருப்பதும், சர்வதேச சமூகம் இவ்வாறு எங்களுக்கு உதவுவதற்குக் காரணமும், நாங்கள் முன்வைத்துள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைதான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். கல்வித் துறையின் நிலைமை குறித்தும் நாம் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். இந்த தகவல் டிசம்பர் 17 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது. இது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலைமை. எனவே, இது இறுதியான தரவு அல்ல. இருப்பினும், இந்த தரவுகளின்படி, சுமார் 1382 பாடசாலைகள் அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, 666 பாடசாலைகளைத் தவிர மற்ற அனைத்து பாடாசாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இன்று, மத்திய மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், பல பாடசாலைகள் பராமரிப்பு மையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டுதான், பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. பாடசாலைகளைத் திறப்பதன் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு வசதிகளைப் போன் றே பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்தாலாகும். குறிப்பாக, பிள்ளைகளை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக்கப்படுத்த விரும்பினோம். குடும்பத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு பாடசாலையை விடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், இந்தக் காலகட்டத்தை வழமையான முறையிலன்றி, இந்த நாட்களை பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். மேலும், இந்த பேரனர்த்தம் ஏற்பட்டபோது உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளும் இருந்தனர். மீதமுள்ள 7 நாட்களை நாங்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளோம். அந்த பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் பிள்ளைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 என மொத்தம் ரூ. 25,000 வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படுவது வெறுமனே கற்பிப்பதற்காக மட்டுமன்றி, அனர்த்தத்திற்குப் பின்னர் பிள்ளைகளின் உளநிலையைப் பற்றி சிந்தித்தும் செய்யப்பட்டதாகும். மேலும் பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களும் சேதமடைந்தன. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் கடுமையாக சேதமடைந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, சர் ஐவர் ஜென்னிங்ஸால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட சேதமடைந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. அதாவது, நாம் முறையாக திட்டமிட்டு, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சரியான இடங்களில் கட்டிடங்களை அமைத்தால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளால்தான், இதுபோன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மீண்டும், ஆபத்தை குறைக்கும் வகையில் இவற்றை அமைக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். எதிர்க்கட்சியும் இதனை ஆதரிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விஞ்ஞானபூர்வமாக, படிப்படியாக இதைச் செய்துவருகிறோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தே இதைச் செய்ய வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம், இந்த நாட்டை அதன் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233884
  11. 'இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுவரை 4286 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது - ஹர்ஷன சூரியப்பெரும 19 Dec, 2025 | 06:07 PM (எம்.மனோசித்ரா) 'இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுரையில் 4286 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் 3400 மில்லியன் ரூபாவுக்கு அதிக நிதி கிடைக்கப் பெற்றிருந்தது. தற்போது அந்த தொகை 4286 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இதன் பெறுமதி 13.8 மில்லியன் டொலராகும். இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தொகை பொருள் மற்றும் சேவை ஒத்துழைப்புகளுக்கு அப்பால் கிடைக்கப் பெற்றதாகும். இதுவரையில் 4 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய உதவிகள் பொருட்களாகவும், சேவையாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 43 நாடுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா, ஜேர்மன், பூட்டான், இத்தாலி, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், நியூசிலாந்து, மாலைத்தீவு, சவுதி, பிரான்ஸ், கொரியா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளை வழங்கியுள்ளன. இதேவேளை ஸ்ரீலங்கள் எயாலைன்ஸ் கடன் மறுசீரமைப்பிற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/233842
  12. மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு 19 Dec, 2025 | 02:39 PM (எம்.ஆர்.எம்.வசீம்) மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரிடத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (19) பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் புதிய அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு, அது மக்களிடம் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடல்களுடன் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி செயற்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதன்படி இதற்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை மற்றும் ஏனைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் ஆராயப்படுவதுடன், அது தொடர்பான ஆரம்பகட்ட யோசனை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. எமது கொள்கை பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை அமைத்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியை நியமித்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. புதிய அரசியலமைப்பு இன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய முடியாது. இது தொடர்பான அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதுடன், இந்த விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இது தொடர்பான காலப்பகுதி தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும். அத்துடன் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. 2017/17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திற்கமைய எல்லை நிர்ணயம் தொடர்பிலும், தேர்தல் தொகுதிகள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னர் அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்த பின்னர் தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும். இதுவரையில் எல்லை நிர்ணய நடவடிக்கை முடிவடையாத காரணத்தினால் மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாமல் இருக்கின்றது. இதனால் இதில் திருத்தங்களை மேற்கொண்டு பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். 2026ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்தின் குற்றப்பத்திரிகை அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக பரிந்துரைகளுடனான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியிலான குழுவொன்றுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய அது தொடர்பான சட்டவரைபுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/233835
  13. தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சந்திப்பு Published By: Vishnu 19 Dec, 2025 | 10:27 PM இலங்கை மற்றும் தமிழ்நாட்டு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் சென்னையில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் வைத்தியர் கணேசநாதன் கேதீஸ்வரனும் கலந்துகொண்டார். இந்த சந்திப்பின் போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதியமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக ஆலோசிக்கப்பட்டது. மலையக மக்களின் கலை, கலாசாரம் மற்றும் கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்து தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும் என முதல்வர் உறுதியளித்தார். கடந்த 27ஆம் திகதி வீசிய தித்வா புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவும், அவர்களின் அடுத்த கட்ட நகர்வுக்காக தமிழக அரசின் குறுகிய கால மற்றும் நீண்டகால ஒத்துழைப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மலையக மக்களுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகள் குறித்து தமிழக முதல்வருக்கு விளக்கமளிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமைக்காக தமிழக முதல்வர் இலங்கை அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233882
  14. “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் இதுவரை 47,703 பேர் கைது! 19 Dec, 2025 | 04:40 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 47703 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது இதுவரை 48085 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 276 கிலோ 374 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 1002 கிலோ 923 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 05 கிலோ 736 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 1411 கிலோ 936 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2899514 கஞ்சா செடிகளும், 65 கிலோ 836 கிராம் குஷ் போதைப்பொருளும், 40 கிலோ 370 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 101201 போதை மாத்திரைகளும், 17 கிலோ 571 கிராம் 861 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 86 கிலோ 373 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் 1130 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/233860
  15. வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் 19 டிசம்பர் 2025, 11:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழ்நாடு முழுவதும் என்ன நிலவரம்? தொடர்ந்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அளவிலான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களைத் தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 6,41,14,587 எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை: 5,43,76,755 தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை: 97,37,832 தற்போது உள்ள வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள்: சுமார் 2. 77 கோடி ஆண் வாக்காளர்கள்: சுமார் 2. 66 கோடி மூன்றாம் பாலினம்: 7,191 மாற்றுத் திறனாளிகள்: சுமார் 4.19 லட்சம் பட மூலாதாரம்,TNelectionsCEO சென்னை, கோவை, தஞ்சாவூர், திருவள்ளூரில் என்ன நிலவரம்? அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் 35.58% வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 40.04 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் இருந்த நிலையில், தற்போதைய வரைவுப் பட்டியலில் 25.79 லட்சம் பெயர்களே உள்ளன. மொத்தம் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதோடு, 1,19,489 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர், 1,08,360 வாக்காளர்கள் முகவரியில் இல்லாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 3,99,159 வாக்காளர்கள் குடிபெயர்ந்தவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர், 23,202 வாக்காளர்கள் இரட்டைப் பதிவுகளைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோலவே, விருதுநகர் மாவட்டத்தில், 1,89,964 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி விருதுநகர் மாவட்டத்தில் 14,36,521 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் வரைவுப் பட்டியலைப் பொருத்தவரை, 20,98,561 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், 2.06 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் மொத்தம் 6,19,777 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 29,62,449 வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன. இதேபோல, ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 23% பெயர்கள் நீக்கம் தூத்துக்குடியில், வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 1,62,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான கணக்கின்படி, அம்மாவட்டத்தில் 13,28,158 வாக்காளர்கள் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு 12,54,525 வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதாகவும், 1,39,587 பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில், 3,24,894 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரைவுப் பட்டியலில் தற்போது 16,09,553 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 23% பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் மணிஷ் நாரணவரே வெளியிட்ட வரைவுப் பட்டியலின்படி, தற்போது 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பட்டியலில் 18,81,144 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை மதுரையில், 23,69,631 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம், 3.80 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 12,03,917 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், 81,515 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு,கோப்புப் படம் தொடங்கியது எப்போது? இந்தியாவில், தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 4ஆம் தேதியன்று வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 4 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இரண்டு முறை இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இறுதியாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்கும் பணிகள் தமிழ்நாட்டில் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,035-ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என்ற கணக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. வரைவுப் பட்டியலில் இல்லாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? குறைந்தபட்சம் மூன்று முறை சென்று விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையிலேயே வரைவுப் பட்டியலை உருவாக்கியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என்று ஆட்சேபங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18 வரை தெரிவிக்கலாம். அதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இடம் மாறியவர்கள் படிவம் 8, புதிதாகப் பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25171yzy9o
  16. அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 19 Dec, 2025 | 05:38 PM அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்க க்ரீன் கார்ட் விசா லொட்டரி திட்டத்தை நிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டின்போது போர்த்துக்கீசரான நெவ்ஸ் வாலண்டே என்ற நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அந்த நபர் 2017ஆம் ஆண்டில் பன்முகத்தன்மை லொட்டரி விசா திட்டத்தின் (DV1) மூலம் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு க்ரீன் கார்ட் பெற்றுக்கொண்ட ஒருவரென தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டே ட்ரம்ப், இவ்விசா லொட்டரி திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய திட்டத்தால் இனி அமெரிக்கர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ட்ரம்பின் வழிகாட்டுதலின் கீழ் க்றீன் கார்ட் விசா திட்டத்தை இடைநிறுத்த அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) உத்தரவிட்டுள்ளார். அத்துடன் “நெவ்ஸ் வாலண்டே போன்ற கொடூரமான நபர் நம் நாட்டுக்குள் வர ஒருபோதும் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது” என்றும் நோயம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக பன்முகத்தன்மை விசா லொட்டரி திட்டத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த ட்ரம்ப். அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தை நிறுத்துவதாக உறுதிபட அறிவித்திருக்கிறார். https://www.virakesari.lk/article/233868
  17. 19இன் கீழ் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் Published By: Vishnu 19 Dec, 2025 | 07:58 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் விளையாட்டுத்துறை நகரில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முன்னாள் சம்பியன்களான இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதிபெற்றுள்ளன. துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று நடைபெற்ற 20 ஓவர்களாக மட்டுப்படுத்தபட்ட முதலாவது அரை இறுதியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை 8 விக்கெட்களால் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி வெற்றிகொண்டது. அப் போட்டியில் ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்கள் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தன. துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணியை 8 விக்கெட்களால் 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணி வெற்றிகொண்டது. இந்தப் போட்டியில் அப்துல் சுப்ஹானின் 4 விக்கெட் குவியல், சமீர் மின்ஹாஸ் குவித்த அரைச் சதம் என்பன பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. சீரற்ற காலநிலை காரணமாக இந்த இரண்டு போட்டிகளிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டன. இலங்கை - இந்திய அரை இறுதி முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை இளையோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இப் போட்டி 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதால் அதிரடியைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த இலங்கை இளையோர் அணியினர் ஆரம்பத்திலிருந்தே ஓட்டங்களை வேகமாகக் குவித்த வண்ணம் இருந்தனர். துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல 42 ஓட்டங்களையும் அணித் தலைவர் விமத் தின்சார 32 ஓட்டங்களையும் செத்மிக்க செனவிரட்ன 30 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 19 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹெனில் பட்டேல் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கனிஷ்க் சௌஹான் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இந்திய இளையோர் அணியின் ஆரம்பம் மோசமாக இருந்தது. அதிரடி ஆட்டக்காரர்களான அணித் தலைவர் ஆயுஷ் மஹாத்ரே (7), வைபவ் சூரயவன்ஷி (9) ஆகிய இருவரையும் முதல் நான்கு ஓவர்களுக்குள் விமத் நிம்சார ஆட்டம் இழக்கச் செய்தார். ஆனால், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 87 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை வெற்றி அடையச் செய்தனர். விஹான் மல்ஹோத்ரா 61 ஓட்டங்களுடனும் ஆரோன் ஜோர்ஜ் 58 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் விமத் நிம்சார 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பாகிஸ்தான் - பங்களாதேஷ் அரை இறுதி இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 26.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சமியுன் பசிர் 33 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஸிஸுல் ஹக்கிம் 20 ஓட்டங்களையும் ரிபாத் பெக் 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களைத் தொடவில்லை. பந்துவீச்சில் அப்துல் சுப்ஹான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 6 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹுசெய்பா அஹ்சான் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முதலாவது ஓவரிலேய ஹம்ஸா ஸஹூர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (1 - 1) ஆனால், மற்றைய ஆரம்ப வீரர் சமீர் மின்ஹாஸ், உஸ்மான் கான் (27) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமடையச் செய்தனர். தொடர்ந்து சமீர் மின்ஹாஸ், அஹ்மத் ஹூசெய்ன் ஆகிய இருவரும் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். சமீர் மின்ஹாஸ் 69 ஓட்டங்களுடனும் அஹ்மத் ஹுசெய்ன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். https://www.virakesari.lk/article/233875
  18. 3ஆவது ஆஷஸ் டெஸ்டில் பலம்வாய்ந்த நிலையில் அவுஸ்திரேலியா; மற்றொரு தோல்வியை நோக்கி இங்கிலாந்து? Published By: Vishnu 19 Dec, 2025 | 06:14 PM (நெவில் அன்தனி) அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் அலெக்ஸ் கேரியும் பின்னர் ட்ரவிஸ் ஹெட்டும் குவித்த அபார சதங்களின் உதவியுடன் அவுஸ்திரேலியா 356 ஓட்டங்களால் முன்னிலை பெற்று பலமான நிலையில் இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முறையே 2 நாட்களிலும் 4 நாட்களிலும் தோல்வி அடைந்த இங்கிலாந்து மற்றொரு தோல்வியை எதிர்நோக்கி இருக்கிறது. அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 371 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் 85 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து மேலும் 73 ஓட்டங்களைப் பெற்று கடைசி இரண்டு விக்கெட்களை இழந்தது. தமது இன்னிங்ஸ்களைத் தொடர்ந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் ஆகிய இருவரும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைக் குவித்தனர். அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பென் ஸ்டோக்ஸ் தனது 118ஆவது டெஸ்டில் 37ஆவது அரைச் சதத்தைப் பெற்றதுடன் ஜொவ்ரா ஆர்ச்சர் தனது 18ஆவது டெஸ்டில் கன்னி அரைச் சதத்தைப் பெற்றார். பென் ஸ்டாக்ஸ் 198 பந்துகளை எதிர்கொண்டு 83 ஓட்டங்களையும் ஜொவ்ரா ஆச்சர் 105 பந்துகளை எதிர்கொண்டு 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத சதம், அலெக்ஸ் கேரி பெற்ற ஆட்டம் இழக்காத அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் பலமான நிலையில் இருக்கிறது. அலெக்ஸ் கேரி மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி நடப்பு ஆஷஸ் தொடரில் இரண்டாவது சதத்தைக் குவித்தார். 196 பந்துகளை எதிர்கொண்ட ட்ரவிஸ் ஹெட் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 142 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த அலெக்ஸ் கேரி இரண்டாவது இன்னிங்ஸில் 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். வெள்ள நிவாரண பொருட்கள் ட்ரவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்களை விட உஸ்மான் கவாஜா 40 ஓட்டங்களைப் பெற்றார். எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 371 (அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82, மிச்செல் ஸ்டாக் 54, ஜொவ்ரா ஆச்சர் 53 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 89 - 2 விக்., வில் ஜெக்ஸ் 105 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 286 (பென் ஸ்டோக்ஸ் 83, ஜொவ்ரா ஆச்சர் 51, ஹெரி ப்றூக் 45, ஸ்கொட் போலண்ட் 45 - 3 விக்., பெட் கமின்ஸ் 69 - 3 விக்., நேதன் லயன் 70 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 271 - 4 விக். (ட்ரவிஸ் ஹெட் 142 ஆ.இ., அலெக்ஸ் கேரி 52 ஆ.இ., உஸ்மான் கவாஜா 40, ஜொஷ் டங் 59 - 2 விக்.) https://www.virakesari.lk/article/233870
  19. போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ! Published By: Digital Desk 2 19 Dec, 2025 | 03:29 PM பசுபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்திச் சென்ற கப்பல்கள் மீது அமெரிக்கப் படையினர் நேற்று (18) நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் நடவடிக்கைகளின்போது சுமார் 104 பேர் வரையில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் (18) பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு பசிபிக் பகுதியில் 2 கப்பல்கள் மீது அமெரிக்க பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு கப்பலில் 3 பேரும், மற்றைய கப்பலில் 2 பேரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை (19) அறிவித்துள்ளது. மேலும், கிழக்கு பசுபிக் பகுதியில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் மற்றொரு கப்பலின் மீது நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 9 பேரும் ஆண்கள் எனவும் அவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/233839
  20. 'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் வேலூரை பூர்வீகமாகக் கொண்ட மணிஷா மனோகரனுக்கு திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், முன்பெல்லாம் ஒவ்வொரு முறை திரையரங்கம் செல்லும்போதும் தன்னைப் பதற்றம் தொற்றிக் கொண்டதாகக் கூறுகிறார். அதற்குக் காரணம், அவரது கட்டுப்பாடின்றி தன்னியக்கமாக ஏற்படும் டிக்ஸ் (tics) என்ற உடல் இயக்கங்கள் அல்லது குரல் ஒலிகளே. "நான் படம் பார்க்கும்போது, உணர்ச்சி மிகுதியில் என் உடலில் தன்னியக்கமாக ஏற்படும் அசைவுகள் அல்லது எழுப்பப்படும் ஒலிகள் தங்களைத் தொந்தரவு செய்வதாகவும் அதைக் கட்டுப்படுத்துமாறும் பிறர் கூறுவதுண்டு." ஆனால், "அதைக் கட்டுப்படுத்த முடிந்தால் செய்ய மாட்டேனா?" என்று பதற்றமும் கோபமும் தனக்கு ஏற்படும் எனக் கூறுகிறார். அவர் மட்டுமின்றி, கேரளாவை சேர்ந்த பாடகி எலிசபெத் மேத்யூவும் தனக்கு இருக்கும் டூரெட்ஸ் குறைபாட்டால் (Tourette's Syndrome) ஏற்படுகின்ற தன்னியக்கச் செயல்பாடுகளால் இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் எதிர்கொண்டுள்ளார். டூரெட்ஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன? உளவியல் நிபுணர் ராஜ்குமாரின் கூற்றுப்படி, டூரெட்ஸ் சிண்ட்ரோம் என்பது ஒரு நரம்பியல் குறைபாடு. இது பிறவியிலேயே இருக்கும் என்றாலும், அது இருப்பது, "பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுக்குள், குழந்தைப் பருவத்தில் தெரியத் தொடங்குகிறது. உடல் இயக்கங்கள் அல்லது குரல் ஒலிகளைத் தன்னிச்சையாக மேற்கொள்வது, அதையே திரும்பத் திரும்பச் செய்வது இதன் முதன்மையான அறிகுறி" என்று விளக்கினார். அதாவது நிபுணர்களின் கூற்றுப்படி, மூளை திடீரென ஒரு சமிக்ஞையை உடலுக்கு அனுப்புகிறது, அதற்கு உடல் டிக்ஸ் வடிவில் உடனடியாக எதிர்வினையாற்றுகிறது. "இந்த நிலை காரணமாகத் தங்களது உடல் ஏற்படுத்தும் அசைவுகளையோ ஒலிகளையோ ஒருவரால் கட்டுப்படுத்த முடியாது." என்கிறார் ராஜ்குமார். "அப்படிக் கட்டுப்படுத்த முயலும்போதுதான் நிலைமை மிகவும் மோசமாகும். ஓர் எறும்புப் புற்றின்மீது நிற்கிறீர்கள், அங்குள்ள எறும்புகள் உங்கள் கால்களைக் கடுமையாகக் கடிக்கின்றன. ஆனால், நீங்கள் அங்கிருந்து நகரவே முடியாது என்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்தத் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முயலும்போது எங்களுக்கு இருக்கும். அது அவ்வளவு கடினமானது," என்கிறார் மணிஷா. படக்குறிப்பு,மணிஷா மனோகரன் டூரெட்ஸ் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகள் உடல் அசைவுகள், குரல் ஒலிகள் என டூரெட்ஸ் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகள் இரண்டு வகைப்படுகின்றன. உடல் அசைவுகளாக ஏற்படும் டிக்ஸ்களை பொருத்தவரை, "கண்களைப் பலமுறை சிமிட்டுவது, தோள்களைக் குலுக்குவது, முகத்தைச் சுருக்கிக் கொண்டே இருப்பது, கை கால்களைத் திடீர் திடீரென அசைப்பது ஆகியவை தன்னிச்சையாக அடிக்கடி நிகழக்கூடும்." என்கிறார் உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி. உதாரணமாக, வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர் ஒருவர், தொடர்ந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருப்பதைத் தன்னைக் கேலி செய்யும் செயலாக ஆசிரியர் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஆனால், "இந்தக் குறைபாடு உடைய அந்த மாணவரின் சுயக் கட்டுப்பாடின்றி அது நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்," என்று விளக்கினார் அனிஷா. அதேபோல, தொண்டையை திரும்பத் திரும்பச் செருமுதல், நோய்க் காரணி ஏதுமின்றி இருமுதல், சிறு சத்தங்களை எழுப்புதல், ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறுவது ஆகியவை குரல் ஒலி டிக்ஸ்களுக்கான சில உதாரணங்கள். "நான் படிப்பை முடித்து முதன்முதலில் வேலைக்குச் சென்ற காலகட்டத்தில், தோள்களை திடீர் திடீரெனக் குலுக்குவது, அடிக்கடி குரலொலிகளை எழுப்புவது போன்ற என் உடலில் நடக்கும் தன்னியக்கச் செயல்பாடுகளை, பிறரின் கவனத்தை ஈர்க்க நான் செய்பவை என்று சக பணியாளர்கள் கருதியதுண்டு. ஆனால், அவை தன்னியக்கமாக நிகழ்பவை. எனது கட்டுப்பாட்டில் நடப்பவையல்ல. என் உடலில் நடக்கும் இத்தகைய செயல்பாடுகள், பிறரின் கவனத்தை அதிகமாக ஈர்த்த காரணத்தால், நான் மிகவும் சங்கடமாகவும் பதற்றமாகவும் உணர்ந்தேன். அதனால் டிக்ஸ்கள் அதிகமானதே தவிர குறையவில்லை," என்று கூறுகிறார் மணிஷா. உளவியல் நிபுணர்கள் ராஜ்குமார், அனிஷா ரஃபி இருவருமே, "இதுபோன்று திடீர் திடீரென நடக்கும் உடல் இயக்கங்கள், எழுப்பப்படும் குரலொலிகளை டூரெட்ஸ் சிண்ட்ரோம் இருப்பவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்கள். படக்குறிப்பு,உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி சமூகத்தில் ஏற்படும் அழுத்தம் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வரும் மணிஷா மனோகரன், டூரெட்ஸ் குறைபாட்டால் பள்ளிப் பருவத்தின்போது பல சவால்களை எதிர்கொண்டதாகக் கூறுகிறார். "முதன்முதலில் டிக்ஸ் ஏற்படத் தொடங்கியபோது, எனக்கு 6 வயது இருக்கும். என்னை அறியாமல் நான் கண் சிமிட்டிக்கொண்டே இருந்தேன். நான் ஏதோ அதிகமாக டிவி பார்ப்பதாலேயே இப்படி இருப்பதாக கண் மருத்துவர்கள் கூறினர். பல ஆண்டுகளாக என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளாமலே வளர்ந்தேன்." பிறகு 2021-ஆம் ஆண்டுதான், தனக்கு இருப்பது ஏதோ வினோதமான பழக்கம் கிடையாது, அதுவொரு குறைபாடு என்பதை முழுமையாக உணரத் தொடங்கியதாகக் கூறுகிறார் மணிஷா. ஒரு பெண் இந்தச் சமூகம் கருதும் "சாதாரணமான, அழகான, ஆரோக்கியமான" என்ற வகைப்பாட்டின் கீழ் வரவில்லை என்றால், அவர் ஒருவித "சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடும். அதை நானும் எதிர்கொண்டேன்" என்கிறார் மணிஷா. தனது பெற்றோர் இந்தக் குறைபாட்டைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு வினோதமான பிரச்னையாகப் பார்த்தாலும், எப்போதாவது அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்ததாகக் கூறுகிறார் அவர். ஆனால், "டூரெட்ஸ் சிண்ட்ரோமை உளவியல் சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடியுமே தவிர அதைக் குணப்படுத்த முடியாது," என்கிறார் உளவியல் நிபுணர் ராஜ்குமார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தக் குறைபாட்டால் ஏற்படும் உடலின் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது எறும்புப் புற்றின் மீது நிற்பதைப் போல் மிகவும் கொடுமையானது என்கிறார் மணிஷா மனோகரன் சமூகத்தில் தொடர்ந்து வினோதமாகப் பார்க்கப்படுவதைத் தவிர்க்க, "இயன்ற அளவுக்கு உடலில் நிகழும் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முயன்றேன். இப்படித் தொடர்ந்து முகமூடியுடன் வாழ்ந்தது, என் மனநலனைப் பெரியளவில் பாதித்தது. நான் போலியானவளைப் போல் உணரத் தொடங்கினேன்" என்று தான் எதிர்கொண்டதை விவரித்தார் மணிஷா. பிறரின் அடிப்படைப் புரிதலற்ற அறிவுரைகள் மற்றும் கேலிகளால் மிகுந்த மனச்சோர்வை எதிர்கொண்ட மணிஷா, மிகப்பெரிய உளவியல் போராட்டத்திற்குப் பிறகு, "இதுகுறித்து முதலில் நானே புரிந்து, உணர்ந்து, அங்கீகரிக்க வேண்டும்" என்பதையும் "இந்தக் குறைபாட்டுடன் சேர்த்து என்னை நானே முழுமையாகக் காதலிக்க வேண்டும்" என்பதையும் உணர்ந்ததாகக் கூறினார். பலவீனத்தை பலமாக மாற்றிய பாடகி கேரளாவை சேர்ந்த பாடகியான எலிசபெத் எஸ். மேத்யூ, தனது டூரெட்ஸ் குறைபாட்டை ஒரு பலவீனமாகப் பார்க்காமல் அதையே பலமாகக் கருதித் தனது பாடல்களைப் பாடி வருகிறார். மேட்ச் பாயின்ட் ஃபெயித் என்ற இசை நிறுவனத்துடன் இணைந்து பாடல்களைப் பாடி வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் பாடும் பாடல்களுக்கு, பலராலும் இடையூறாகப் பார்க்கப்படும் டிக்ஸ்களே, ஒரு தனி அழகூட்டும் அம்சமாக மாறியுள்ளது. "நான் பத்து வயதாக இருந்தபோது, எனக்கு டூரெட்ஸ் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. அப்போது அதுகுறித்த புரிதல் இல்லாததால், அதை நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை." பட மூலாதாரம்,Elizabeth/IG படக்குறிப்பு,பாடகி எலிசபெத் எஸ். மேத்யூ அதற்கு மாறாக, "எனது பெற்றோர் இப்படியொரு அரிய குறைபாடு தங்கள் மகளுக்கு இருப்பதை நினைத்து மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள். ஆனால் அவர்களும் இப்போது இதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்" என்கிறார் எலிசபெத். இந்தக் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகளை, "நான் பிறரது கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்வதாகவும், வலிய வேண்டுமென்றே செய்வதாகவும், உறவினர்கள் உள்படப் பலர் குறைகூறத் தொடங்கினார்கள். இதன் விளைவாக என் சுயத்தை மறைத்துக் கொள்ளத் தொடங்கினேன். பள்ளிப் பருவத்தில், எப்போதும் ஒருவித கோபத்துடனும், ஆதங்கத்துடனுமே இருப்பேன். மனப் பதற்றம், அச்சம், குழப்பம் எனப் பல எதிர்மறை உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்டிருந்தேன். இந்தப் பிரச்னைகளை டூரெட்ஸ் குறைபாடு இருப்பவர்கள் பலரும் எதிர்கொள்கின்றனர்," எனக் கூறிய எலிசபெத், இந்தக் குறைபாட்டுடன் வாழ்வது அவ்வளவு எளிய விஷயமல்ல என்றார். அதையெல்லாம் கடந்து, "எனக்கு பாடுவது பிடிக்கும் என்பதால், தன்னிச்சையாக ஏற்படும் டிக்ஸ்களை பொருட்படுத்தாமல், அதனூடாகவே பாடத் தொடங்கினேன்." தனது பாடல்களை லட்சக்கணக்கானோர் ரசிக்கக் காரணம், அவரது திறமை மட்டுமில்லை எனக் கூறும் எலிசபெத், "இந்தக் குறைபாட்டால் ஏற்படும் டிக்ஸ்களை இடையூறாகக் கருதாமல், அவற்றின் ஊடாகவே நான் எனது பாடல்களைப் பாடுவதுதான் என் வளர்ச்சிக்குக் காரணம்," என்றார். பட மூலாதாரம்,Getty Images சமூக விழிப்புணர்வு மிகவும் அவசியம் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடான டூரெட்ஸ் சிண்ட்ரோம் இருப்பவர்களுக்கு ஏற்படும் டிக்ஸ்கள் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் நடப்பதில்லை என்ற விழிப்புணர்வு "சமூகத்தில் மிகவும் குறைவாக இருப்பதாக" கூறுகிறார் உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி. டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள், தங்களுக்கு ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகளை பிறர் வினோதமாகப் பார்ப்பதால், "தன்னம்பிக்கை குறைவு, மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்," என்றும் கூறுகிறார் அவர். பொதுவாக, இதுகுறித்து முதன்மையாக பெற்றோர்களுக்குக் கற்பிக்கப்படும் எனக் கூறுகிறார் அனிஷா. "தங்களது குழந்தைகள் இத்தகைய செயல்பாடுகளை வேண்டுமென்றே செய்வதில்லை. இது அவர்களின் கட்டுப்பாட்டை மீறிய இயக்கம் என்பதை பெற்றோருக்குப் புரிய வைக்க வேண்டும்." மேலும் அவரது கூற்றுப்படி, அதற்கு அடுத்தகட்டமாக பெற்றோர் வாயிலாக ஆசிரியர்கள் உள்பட அவர்களின் சுற்றத்தாருக்கு இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இதன் மூலம், "டூரெட்ஸ் குறைபாடு இருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏதுவான சமூக சூழ்நிலையை ஆசிரியர்கள் உதவியுடன் ஏற்படுத்த முடியும்" என்பதை வலியுறுத்துகிறார் உளவியல் நிபுணர் அனிஷா. பட மூலாதாரம்,Getty Images குழந்தைகளோ, பெரியவர்களோ, டூரெட்ஸ் இருப்பவர்களுக்கு டிக்ஸ் ஏற்படும்போது, "அவர்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே" அவர்களுக்கு நேர்மறையான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிறார் அவர். ஒருவேளை, இதற்கு நேர்மாறாக, இந்தக் குறைபாடு உடையவர்கள் தொடர்ச்சியாக கேலிக்கு உள்ளாவது, கண்டிக்கப்படுவது, வினோதமாக நடத்தப்படுவது, மனரீதியான கொடுமைகளைச் சந்திப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள நேர்ந்தால், அது அவர்களின் வளர்ச்சியைப் பெரியளவில் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். 'தன்னிலை அறிதலே என்னைக் காப்பாற்றியது' டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்களுக்குப் பிறர் செய்யக்கூடிய சிறந்த உதவி அவர்களைப் புரிந்துகொள்வதுதான் என்கிறார் அனிஷா ரஃபி. "அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் திட்டுவது, கேலி செய்வது, டிக்ஸ்களை நிறுத்துமாறு வலியுறுத்துவது போன்ற செயல்பாடுகள் அதை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். அதற்கு மாறாக, அவர்களிடம் பொறுமையைக் கடைபிடித்து, இந்த டிக்ஸ்கள் அடங்கும் வரை அவர்களுக்கு உளவியல் ரீதியாகப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது, அவர்களின் நிலைமையை மேம்படுத்தும்," என்றும் விளக்கினார். "நீண்ட காலமாக, இந்தக் குறைபாட்டின் காரணமாகவே எனக்குள் ஏதோ தவறு இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்" என்கிறார் மணிஷா. ஆனால், "எப்போது அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, பிறரைப் பற்றிக் கவலைப்படாமல், என் உடலில் நிகழும் தன்னியக்கச் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேனோ, அதன் பிறகுதான் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கினேன்," என்று கூறியபோது மணிஷாவின் முகம் மகிழ்ச்சியில் பூரித்தது. "இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, நீங்கள் முதலில் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் உடலை, மனதை, அவற்றிலுள்ள சிக்கல்களை, முழுதாக அப்படியே நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்." "அன்று முதல் டூரெட்ஸ் குறைபாட்டின் விளைவாக நான் எதிர்கொண்ட சவால்களும் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கின" என்கிறார் அவர். இதையே வழிமொழியும் வகையில் பேசிய பாடகி எலிசபெத், "தன்னைப் பற்றி ஏற்படும் சுய உணர்வுகளை மேம்படுத்திக் கொண்டபோதுதான், தன் மீதான நம்பிக்கையும் மேம்பட்டது" என்கிறார். மேலும், அதுவே தனது பலவீனத்தை பலமாக மாற்றவும் வித்திட்டதாகக் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3d0m9xr1dvo
  21. அத தெரண கருத்துப்படம்.
  22. இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி Dec 19, 2025 - 10:06 PM சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயலினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நாட்டின் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்த நிதியுதவி இலங்கைக்குப் பக்கபலமாக அமையும். புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு IMF ஆதரவுத் திட்டம் எவ்வாறு சிறந்த முறையில் உதவ முடியும் என்பதை ஆராய்வதற்கும் மேலதிக காலம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக, நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjd3cy9t02xmo29nbrwlvvuh
  23. தமிழக முதல்வரை சந்தித்த பிரதியமைச்சர் பிரதீப் Dec 19, 2025 - 08:13 PM இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (19) சென்னையில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தமது நன்றியை தமிழக முதல்வரிடம் தெரிவித்துக் கொண்டார். இதன்போது மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. சபரிமலை ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவிகளை வழங்கவும் கலை, கலாச்சார கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்தும் தமிழக அரசு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை நல்குவதாகவும் இதன் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். இச்சந்தர்ப்பத்தில் சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயரஸ்தானிகர் கலாநிதி கணேசன் கேதீஸ்வரனும் கலந்து கொண்டார். இலங்கையில் கடந்த 27ஆம் திகதி முதல் இரு நாட்கள் வீசிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் வாழும் பகுதிகள் பாரிய அளவில் மண் சரிவினால் பாதிக்கப்பட்டன. பேரிடரில் இருந்து இலங்கையை மீட்க இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசும் எமக்கு உதவிக்கரம் நீட்டின. காலம் உணர்ந்து செயல்பட்ட இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் மலையக மக்களுக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது. நீண்ட நேர கலந்துரையாடலின் போது இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் மலையக மக்களின் வாழ்வு அவர்களின் எதிர்காலம் அதற்காக இலங்கை அரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகளால் செயல்படுத்தக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjczbsdx02xio29nmjpq7na5
  24. சோற்றுக்காக சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா! Dec 19, 2025 - 07:04 PM பாராளுமன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் மதிய போசனத்திற்கு போதியளவான உணவு வகைகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் தொனியில் சபையில் இன்று குற்றஞ்சாட்டினார். மதிய போசனத்திற்காக தாம் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற போது, அங்கு சிவப்பரிசியும், சொதியும் மாத்திரமே இருந்ததாக கவலைத் தெரிவித்தார். பாராளுமன்ற நிர்வாகக் குழுவின் மீது இதன்போது தமது அதிருப்தியையும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வௌிப்படுத்தினார். அவரது இந்த முறைப்பாட்டை சபாநாயகருக்கு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmjcwvot702xgo29nkgkwhgst

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.