Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. @செம்பாட்டான் அண்ணை உங்களை குறிப்பிட மறந்துவிட்டேன், மன்னிச்சு.
  2. 27 Sep, 2025 | 05:02 PM (எம்.மனோசித்ரா) இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது. அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள் என முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நிலைமை மாற்றப்பட்டால் மாத்திரமே இலஞ்ச, ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணைகள் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவு தொடர்புடையது பொலிஸார் என எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய பட்டியலில் முறையே பொலிஸார், அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள், காணி பதிவு அலுவலகம், மாகாணசபைகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், பிரதேச செயலகம், பதிவாளர் நாயக அலுவலகம் மற்றும் நீதிமன்றம் என்பன காணப்படுகின்றன. மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இவை இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய முதல் 10 நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய 5 பிரதான நிறுவனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது சுங்க திணைக்களம், இரண்டாவது உள்நாட்டு வருமான திணைக்களம், கலால் வரி திணைக்களம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் என்பன முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. இவை தவிர மேலும் பல நிறுவனங்கள் பண சுத்தீகரிப்பிற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுகின்றன. எம்மால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் ஊழல், மோசடிகு ஏதுவான காரணிகளாக மக்கள் கூறியவற்றில் பல முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. அதற்கமைய நாட்டில் சட்டம், அமைதி முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை, மோசடி கலாசாரம் நாட்டில் தலைதூக்கியுள்ளமை, அரச சேவையில் வழங்கப்படும் மிகக்குறைந்த சம்பளம், இலஞ்சம் , ஊழல் தொடர்பில் மக்கள் உரிய நடவடிக்கை எடுக்காமை என்பனவாகும். எனவே இவற்றை இல்லாதொழிப்பதறக்கான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/226254
  3. ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4இல் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றி; மூவகை கிரிக்கெட்டிலும் சதம் குவித்த 4ஆவது இலங்கையரானார் நிஸ்ஸன்க Published By: Vishnu 27 Sep, 2025 | 12:48 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. இலங்கையும் இந்தியாவும் ஒரே எண்ணிக்கையை பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் இலங்கை 2 விக்கெட்களையும் இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அர்ஷ்தீப் சிங் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். பதிலுக்கு சப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஒரே பந்தில் 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அப் போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் கன்னி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. பெத்தும் நிஸ்ஸன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 58 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 107 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இப் போட்டியில் சதம் குவித்ததன் மூலம் மூன்று வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் குவித்த நான்காவது இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் முழு கிரிக்கெட் உலகிலும் மூவகை கிரிக்கெட்டிலும் சதம் குவித்த 28ஆவது வீரரானார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 58 ஓட்டங்களைப் பெற்றதுடன் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 3ஆவது விக்கெட்டில் 127 ஓட்டங்களை பகிர்ந்தார். அவர்கள் இருவரை விட தசுன் ஷானக்க ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் மற்றைய வீரர்கள் மீண்டும் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறினர். இந்த வருட ஆசிய கிண்ணத்தில் இந்தப் போட்டிpல் விளையாடிய ஜனித் பெரேரா ஆட்டம் இழக்காமல் 2 ஓட்டங்களைப் பெற்றார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஓர் அணி 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அபிஷேக் ஷர்மா மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆசிய கிண்ணத்தில் தனது 2ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைக் குவித்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட திலக் வர்மா 49 ஓட்டங்களையும் சஞ்சு செம்சன் 39 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, சரித் அசலன்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/226205
  4. பங்களாதேஷை வீழ்த்தி ஆசிய கிண்ண இறுதியில் இந்தியாவை எதிர்த்தாட பாகிஸ்தான் தகுதி பெற்றது Published By: Vishnu 26 Sep, 2025 | 12:49 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (25) இரவு நடைபெற்ற தீர்மானம் மிக்க ரி20 ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான முறையில் 11 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை பாகிஸ்தான் ஈட்டியது. இந்த வெற்றியை அடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிரத்தாட பாகிஸ்தான் தகுதிபெற்றுக்கொண்டது. இதற்கு அமைய பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது முறையாக ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. இன்றைய சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றபோதிலும் அதன் பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக பந்துவீசி அந்த மொத்த எண்ணிக்கையைத் தக்கவைத்து தமது அணியை வெற்றிபெறச் செய்தனர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷின் பந்துவீச்சாளர்களிடம் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் முதல் 11 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஷஹிப்ஸதா பர்ஹான் (4), சய்ம் அயூப் (0), பக்கார் ஸமான் (13), ஹுசெய்ன் தலாத் (3), அணித் தலைவர் சல்மான் அகா (19) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். மத்திய வரிசையில் மொஹம்மத் ஹரிஸ் (31), ஷஹீன் ஷா அப்றிடி (19), மொஹம்மத் நவாஸ் (25) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். மொஹம்மத் ஹரிஸ், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் பாகிஸ்தான் ஓரளவு நல்ல நிலையை அடைந்தது. பின்வரிசையில் பாஹிம் அஷ்ரவ் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெஹெதி ஹசன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பாகிஸ்தானைப் போன்றே துடுப்பாட்டத்தில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் 12 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் முதலாவது ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். தௌஹித் ஹிர்தோய் (5), சய்ப் ஹசன் (18), மஹெதி ஹசன் (11), நூருள் ஹசன் (16) ஆகியோர் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. பதில் அணித் தலைவரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான ஜாக்கர் அலி களம் புகுந்த சற்று நேரத்தில் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தது பங்களாதேஷுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. மத்திய வரிசை வீரர்களான ஷமின் ஹொசெய்ன், தன்ஸிம் ஹசன் சக்கிப் ஆகிய இருவரும் பங்களாதேஷை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால், ஷமின் ஹொசெய்ன் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது விக்கெட்டை அனுபவசாலியான ஷஹீன் ஷா அப்றிடி வீழ்த்தியதும் பங்களாதேஷின் இறுதி ஆட்ட வாய்ப்பு நழுவத் தொடங்கியது. தொடர்ந்து தன்ஸிம் ஹன் சக்கிப் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். மத்திய பின்வரிசையில் ரிஷாத் ஹொசெய்ன் கடுமையாகப் போராடி 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சய்ம் அயூப் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/226090
  5. மூன்றாவது நாளாகவும் தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம்! 27 Sep, 2025 | 05:04 PM இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரித்து தமிழின அழிப்பு, வலிந்து காணமால் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதை குழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் சனிக்கிழமை (27) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. வலிந்து காணமால் ஆக்கபட்பவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இந்த உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணா விரத போராட்டத்தில் மன்னார் மாவட்ட காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள், இளைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமானது எதிர் வரும் முதலாம் திகதி வரை மாவட்ட ரீதியில் தொடர்ந்து இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226255
  6. பட மூலாதாரம், Anadolu via Getty Images கட்டுரை தகவல் அத்னான் எல்-பர்ஷ் பிபிசி அரபிக் மர்வா கமால் பிபிசி அரபிக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "பழைய ராணுவ வாகனங்கள் ராட்சத நடமாடும் குண்டுகளாக மாற்றப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளின் நடுவில் வைத்து தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யப்படுகின்றன. அவை முழு கட்டடங்களையும் தரைமட்டமாக்கி, அருகில் உள்ள எவரையும் நொடிகளில் துண்டு துண்டாக்கிவிடுகின்றன - அவற்றின் தாக்கம் வான்வழித் தாக்குதல்களை விடவும் மோசமானது மற்றும் பேரழிவு தரக்கூடியது." காஸா மக்கள் 'வெடிகுண்டு ரோபோக்கள்' என்று அழைக்கும் ஆயுதத்தை அங்கு வசிக்கும் ஆலம் அல்-கூல் இப்படித்தான் விவரித்தார். தாங்கள் இதுவரை சந்தித்த எந்தப் போரிலும் இதுபோன்ற ஆயுதத்தை பார்த்ததில்லை என்றும், இதைப் பயன்படுத்தி நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். "இந்த ரோபோக்கள், இனி பயன்படுத்த முடியாத பழைய டாங்கிகள் அல்லது கவச வாகனங்களாக இருக்கலாம்," என்று அல்-கூல் கூறினார். "அவற்றைக் கொண்டு சென்று, வெடிபொருட்களால் நிரப்பி, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி காஸா நகரத்தின் தெருக்களில் செலுத்துகிறார்கள்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "குறிப்பிட்ட பகுதியில் அவை வைக்கப்பட்ட சில நிமிடங்களில், ஒரு பெரும் வெடிப்பு நிகழ்கிறது." என்று அவர் கூறினார். "வெடிப்பு நடந்த இடத்தில் மக்கள் இருந்தால், அவர்களின் எந்தத் தடயமும் கண்டுபிடிக்கப்படாது. உடல் பாகங்கள் கூடச் சிதறிவிடும், அவற்றை முழுமையாக எங்களால் கண்டுபிடிக்க முடியாது," என்று காஸாவில் போரில் பலியானவர்களின் உடல்களை மீட்க அவ்வப்போது தன்னார்வத் தொண்டு செய்யும் அல்-கூல் கூறினார். வெடிப்பு எவ்வளவு அருகாமையில் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து கட்டடங்கள் முழுமையாக இடிந்து அல்லது சேதமடைந்து விடுகின்றன. இதனால் இஸ்ரேல் படைகள் அப்பகுதியைக் "அழிக்கும் நடவடிக்கையை" மேற்கொள்ள எளிதாகிறது என்றும் அல்-கூல் கூறினார். பேரழிவின் விளைவுகளை நேரில் கண்ட அவர், "முழு குடும்பங்களும் அழிந்துவிட்டன" என்று பிபிசி-யிடம் தெரிவித்தார். அழிவின் வரம்பு 300 முதல் 500 சதுர மீட்டர் வரை இருப்பதாக கூறிய மூன்று பேருடன் நாங்கள் பேசினோம். "இவை வெடிக்கும்போது குடும்பங்கள் வீட்டில்தான் இருக்கின்றன, அவர்களின் வீடுகள் அவர்கள் மீது இடிந்து விழுகின்றன. அல்-ஜைதூன், ஷேக் ராத்வான் மற்றும் ஜபாலியா போன்ற பகுதிகளில் சிலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர்." ஹமாஸ் நடத்தும் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் (ஜிஎம்ஓ) செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் காஸா நகரம் மற்றும் வடக்கு காஸாவில் குறைந்தது 1,984 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஜிஎம்ஓ வெளியிட்ட ஓர் அறிக்கையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் போர் விமானங்கள் மூலம் 70-க்கும் மேற்பட்ட நேரடி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும், கூடுதலாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு ரோபோக்கள் வெடிக்கச் செய்யப்பட்டன என்றும், இது பரவலான கட்டாய இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் காஸா நகரில் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வெடிப்புகளின் தாக்கம், 70 கி.மீ தொலைவில் உள்ள டெல் அவிவ் நகரத்திலும் உணரப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராணுவம் இந்த ஆயுதங்களைச் பொதுமக்கள் மீது பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்க, பிபிசி நியூஸ் அரபி, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அவிசாய் அட்ராய்-ஐ தொடர்பு கொண்டது. அட்ராய் பிபிசி-யிடம், "நாங்கள் செயல்பாட்டு முறைகள் குறித்து விவாதிப்பதில்லை. ஆனால், எங்கள் நோக்கங்களை அடையவும், ஹமாஸ் பயங்கரவாதிகளை அகற்றவும், இஸ்ரேல் வீரர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறோம், அவற்றில் சில மிகவும் புதுமையானவை மற்றும் முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன" என்று கூறினார். பேரழிவு ஏற்படுத்தும் வெடிப்பு காஸா நகரம், இஸ்ரேலிய ஆயுதங்களைச் சோதிக்கும் களமாக மாறியுள்ளதா என மற்றொரு காஸா நகரவாசியான நிதால் ஃபவ்ஸி கேள்வி எழுப்பினார். இந்த ரோபோக்கள் "குறிப்பாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே பீதியை ஏற்படுத்துகின்றன, மேலும் மக்களைத் தப்பி ஓடச் செய்கின்றன" என்று கூறினார். ஒரு முந்தைய ராணுவ நடவடிக்கையின் போது இந்த ஆயுதம் செயல்படுவதை நேரில் பார்த்ததாக அவர் பிபிசி-யிடம் தெரிவித்தார். "நள்ளிரவு நேரம். ஒரு ராட்சத, செவ்வக வடிவ 'ரோபோ' ராணுவ வாகனத்தால் இழுத்து வரப்படுவதைப் பார்த்தேன். அதை ஒரு சுவரின் அருகில் விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். எனது குடும்பத்தினரை உடனடியாக வெளியேறும்படி நான் கத்தினேன். நாங்கள் தப்பி ஓடிய சில நிமிடங்களில், நான் இதற்கு முன் கேட்டிராத ஒரு வெடிப்பு நிகழ்ந்தது." இந்த வெடிப்பு பேரழிவை ஏற்படுத்துவதாக ஃபவ்ஸி கூறுகிறார். "அல்-ஜைதூன் பகுதியில், உடல் பாகங்கள் மிகச் சிறிய துண்டுகளாகச் சிதைந்திருப்பதைக் கண்டேன். 100 மீட்டருக்கு அப்பால் இருந்த மக்கள் கூட வெடிப்பால் ஏற்பட்ட அழுத்தத்தாலும், மூச்சுத் திணறலாலும் இறந்தனர். இந்தப் போரில் நாங்கள் கண்ட மிகவும் பயங்கரமான ஆயுதம் இதுதான்." "வெடிப்பதற்கு முன் தப்பி ஓடிய மக்கள், 'வெடிக்கும் இரும்பு அரக்கனிடம்' இருந்து தப்பிப்பது பற்றி மட்டுமே யோசித்தனர்," என்று ஃபவ்ஸி நினைவுகூர்ந்தார். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் பலத்தீனர்களை காஸா நகரிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஏராளமானோர் அங்கேயே தங்கியுள்ளனர். ராணுவ நடவடிக்கைக்கான செலவைக் குறைத்தல் கத்தாரில் உள்ள ஜோஆன் பின் ஜாசிம் பாதுகாப்பு ஆய்வு அகாடமியின் பாதுகாப்பு நிபுணரும், முன்னர் காஸா பகுதியில் பணியாற்றியவருமான பேராசிரியர் ஹானி அல்-பசௌஸ், "ராணுவ நடவடிக்கையின் செலவைக் குறைக்கவும், இஸ்ரேலியப் படையினரின் இழப்புகளைத் தவிர்க்கவும் இஸ்ரேல் ராணுவம் இந்தத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் வெடிகுண்டு வாகனங்களைப் பயன்படுத்துகிறது'' என்று பிபிசி-யிடம் தெரிவித்தார். இவை பெரும் அளவிலான வெடிபொருட்களைக் கொண்டு செல்கின்றன என்றும், சுரங்கங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் பயன்படுத்தப்பட்டு, பெரும் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். ஏப்ரல் 2025-ஆம் ஆண்டு, காஸா நகரத்தின் கிழக்கில் உள்ள ஒரு பல மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது இந்த ஆயுதம் செயல்படுவதை நேரில் பார்த்ததாக காஸாவைச் சேர்ந்த கரீம் அல்-கரப்லி பிபிசி-யிடம் தெரிவித்தார். "நான் வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இருந்தேன், இருப்பினும், அனைத்து சிதறல்களும், கற்களும் எங்கள் வீட்டை வந்தடைந்தன," என்று அல்-கரப்லி நினைவு கூர்ந்தார். "வானம் சிவப்பாக மாறியது மற்றும் ஒளி கண்களைப் பறித்தது. அது மிகவும் பயங்கரமாக இருந்தது." பாலத்தீன சுகாதார அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் முனீர் அல்-பர்ஷ், இஸ்ரேலிய ராணுவம் இப்போது காஸா நகருக்குள் இந்த வெடிக்கும் 'ரோபோக்களை' தினசரி நம்பியுள்ளது என்றும், இது "பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மற்றும் மனிதாபிமானப் பேரழிவை மோசமாக்கும் ஒரு உத்தி" என்றும் கூறினார். ஒவ்வொரு ரோபோவும் ஏழு டன் வெடிபொருட்களைக் கொண்டு செல்கிறது என்றும், தினசரி ஏழு முதல் பத்து ரோபோக்கள் வெடிக்கச் செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார். இது பெரிய அளவிலான இடப்பெயர்வுக்கு வழிவகுத்து, மேற்கு காஸாவில் மக்கள்தொகை அடர்த்தியை ஒரு சதுர கிலோமீட்டருக்கு 60,000 பேராக அதிகரித்துள்ளது என்று முனீர் அல்-பர்ஷ் கூறினார். *காஸாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் படங்கள் அல்லது வெடிப்புக்குப் பிந்தைய உடனடிப் படங்களை நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கட்டுரையில் உள்ள புகைப்படங்கள், இஸ்ரேலின் சமீபத்திய காஸா நகரத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்டவை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2z1kyn8zlo
  7. கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் மயக்கம் - சமீபத்திய தகவல் 27 செப்டெம்பர் 2025, 14:52 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்கிடையே கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் மருத்துவனைக்கு வந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மீ. தங்கவேல், "கரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்போது வேறு எதுவும் கூற முடியாது" எனக் கூறினார். கரூர் அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாது, ஒரு தனியார் மருத்துவமனையிலும் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பரப்புரை நடந்த இடத்தில் பொதுமக்கள் அணிந்து வந்த ஆயிரக்கணக்கான செருப்புகள், துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் சிதறி கிடப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது. தமிழக அரசு கூறியது என்ன? பட மூலாதாரம்,@mkstalin இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என கூறியுள்ளார். "கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்." என்று கூறியுள்ளார். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் திருச்சியில் இருந்து மருத்துவ குழு கரூர் செல்கிறது. அதேபோல நானும் இன்று இரவு கரூர் செல்கிறேன்" என்று கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2j4nx9pyxo
  8. பொலிஸ் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னாரை நோக்கி : மக்கள், அருட்தந்தையர்கள் மீது பொலிஸார் தாக்குதல்! 27 Sep, 2025 | 06:16 AM ( மன்னார் செய்தியாளர் ) மக்களின் எதிர்ப்பையும் மீறி நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் கலகம் அடக்கும் பொலிஸாரின் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில் மன்னார் நகரை நோக்கி கொண்டு வெள்ளிக்கிழமை (26) இரவு முதல் இன்று (27) அதிகாலை வரை வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்தினர். கலகம் அடக்கம் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது . இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. மன்னாரில் நேற்று (26) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பொலிசார் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர். மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடிவருகின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம்பெற்றது. இந்த நிலையில் குறித்த காற்றாலை உதிரிப்பாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்ட நிலையில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் செயற்படுத்த மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி கடந்த மாதம் குழு ஒன்றை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல ஒரு தீர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார். இவ்வாறான பின்னனியில் ஜனாதிபதி மக்களின் எதிர்பை மீறியும் மக்களின் கருத்துக்களை மதிக்காது தொடர்சியாக காற்றாலை செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை (26) இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக அமைதியான முறையில் காற்றாலை உதிரிப்பாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப்பட்டது . அதனை தொடர்ந்து 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொது மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் வீதிகளில் இறங்கி தடுக்க முற்பட்ட நிலையில் பொலிஸார் கொடூரமாக பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி ஆயுத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிப்பாகங்களை கொண்டு சென்றுள்ளனர். குறிப்பாக சில பெண்கள் மீது கால்களால் மிதித்தும் தடிகலால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/226209
  9. Published By: Vishnu 27 Sep, 2025 | 01:59 AM இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சித் தொடர் இன்று, 2025 செப்டம்பர் 26, அன்று அநுராதபுரம் புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகியது. இந்த மத நிகழ்ச்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ருவன்வெலி மகா சேய முன்பிருந்து ஆரம்பமாகிய இராணுவக் கொடிகளை ஏந்திய ஊர்வலம், ஜய ஸ்ரீ மஹா போதிக்குச் சென்று அங்கு ஆசீர்வாதங்களைப் பெற்றது. இந்த மதச் சடங்குகள் எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான (அடமஸ்தந்திபதி) பிரதம தேரர் அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரின் தலைமையில் நடைபெற்றன. மேலும் இராணுவக் கொடிகளுக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் வளாகத்தில் இராணுவத் தளபதியின் தலைமையில் இந்து மத சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்கள் சிகிச்சை பெறும் நல விடுதியான 'அபிமன்சல 1' நலவிடுதியினை சிறப்பு விஜயம் மேற்கொண்டு அவர்களின் நலம் குறித்து விசாரித்தார். இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/226208
  10. பட மூலாதாரம், Serenity Strull/ BBC கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 27 செப்டெம்பர் 2025, 04:07 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பயம் என்பது உயிர் பிழைப்பதற்கான ஒரு பரிணாம வழியாகும். ஒரு சிலருக்கு ஒரு அரிய நோய் உள்ளது, அதனால் அவர்கள் எதற்கும் பயப்படுவதில்லை. பயம் இல்லாமல் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? விமானத்தில் இருந்து குதித்த பின்னர் எதையும் உணராமல் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அட்ரினலின் உந்துதல் இல்லை, இதயத் துடிப்பு அதிகரிக்கவில்லை. அட்ரீனல் சுரப்பிகள் அதிகப்படியான கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) ஐ உற்பத்தி செய்யும் ஒரு அரிய நோயான குஷிங்ஸ் நோய்க்குறி (Cushing's syndrome) காரணமாக ஏற்படும் பதற்றத்தைக் குறைக்க, தனது அட்ரீனல் சுரப்பிகளை அகற்றிக் கொண்ட பிரிட்டிஷ் நபரான ஜோர்டி செர்னிக்-இன் உண்மை நிலை இதுதான். அந்த சிகிச்சை, சற்று அதிகமாகவே பலனளித்தது. ஜோர்டிக்கு பதற்றம் குறைந்தது – ஆனால் ஏதோ சரியில்லை. 2012-ஆம் ஆண்டு டிஸ்னிலேண்டிற்குச் சென்றபோது, அவர் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்குச் சென்றார், தனக்கு எந்தப் பயமும் இல்லை என்பதை உணர்ந்தார். அதைத் தொடர்ந்து அவர் ஒரு விமானத்திலிருந்து ஸ்கைடைவ் செய்தார், நியூகாஸ்டிலில் உள்ள டைன் பாலத்தில் இருந்து ஜிப்-வயர் சவாரி செய்தார், லண்டனில் உள்ள ஷார்ட் (Shard) கட்டிடத்தின் உச்சியில் இருந்து கயிற்றில் தொங்கி இறங்கினார் - இவையனைத்தையும் சிறிதளவு கூட இதயத் துடிப்பு கூடாமல் செய்தார். செர்னிக்-இன் அனுபவம் அரிதானது, ஆனால் தனித்துவமானது அல்ல. உர்பாக்-வைத்தே நோய் (Urbach-Wiethe disease - லிபாய்ட் புரதப் பற்றாக்குறை) எனப்படும் ஒரு மரபணு நிலை உள்ள எவருக்கும் இது பரிச்சயமாகத் தோன்றலாம். இது மிகவும் அரிய நோய்; இதுவரை சுமார் 400 பேர் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. எஸ்எம் என்று அறியப்பட்ட ஒரு பிரபலமான உர்பாக்-வைத்தே நோயாளி, 1980-களின் நடுப்பகுதியிலிருந்து அமெரிக்காவின் அயோவா பல்கலைக் கழகத்தில் அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 2000-களின் முற்பகுதியில் ஜஸ்டின் ஃபைன்ஸ்டீன் என்ற முதுகலை மாணவர் அந்த ஆய்வுக் குழுவில் சேர்ந்த போது, எஸ்எம்-ஐ பயமுறுத்துவதற்கான வழிகளைத் தேடத் தொடங்கினார். "எங்களால் கண்டுபிடிக்க முடிந்த அனைத்து திகில் திரைப்படங்களையும் அவரிடம் காட்டினோம்," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். இவர் இப்போது ஃப்ளோட் ரிசர்ச் கலெக்டிவ் நிறுவனத்தில் மருத்துவ நரம்பியல் உளவியலாளராக உள்ளார். இந்த நிறுவனம், வலி, மன அழுத்தம், பதற்றம் மற்றும் அது தொடர்பான நிலைமைகளுக்கான சிகிச்சையாக ஃப்ளோட்டேஷன்-குறைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தூண்டுதல் சிகிச்சையை (REST) ஊக்குவிக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உணரப்படும் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு நமது எதிர்வினை, நம்முடைய தப்பிப்பிழைக்கும் உள்ளுணர்வின் ஒரு பகுதியாகும். ஆனாலும், 'பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்', 'அரக்னோஃபோபியா', 'தி ஷைனிங்', அல்லது 'சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ்' போன்ற எந்தப் படமும் அவரிடம் பயத்தை உருவாக்கவில்லை. பேய் உலவுவதாக கூறப்படும் வேவர்லி ஹில்ஸ் சானடோரியத்தை சுற்றிப் பார்த்ததும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. "நாங்கள் அவளைப் பாம்புகள் மற்றும் சிலந்திகள் போன்ற நிஜ வாழ்க்கை அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுத்தினோம். ஆனால் அவர் பயம் இல்லை என்பதை காட்டியது மட்டுமல்லாமல், அவற்றை அவர் நெருங்குவதைத் தவிர்க்க முடியவில்லை," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். "அவர் அந்த உயிரினங்களைத் தொட்டுப் பழக வேண்டும் என்ற கிட்டத்தட்ட ஒரு அடக்க முடியாத ஆர்வத்தைக் கொண்டிருந்தார்." உர்பாக்-வைத்தே நோய், குரோமோசோம் 1-இல் காணப்படும் இசிஎம்1 மரபணுவில் ஏற்படும் ஒற்றை பிறழ்வால் ஏற்படுகிறது. இசிஎம்1 என்பது புறச்செல் அணியைப் (extracellular matrix - ECM) பராமரிக்க மிகவும் அவசியமான பல புரதங்களில் ஒன்றாகும். புறச்செல் அணி என்பது செல்கள் மற்றும் திசுக்களை அவற்றின் இடத்தில் வைத்திருக்கும் ஒரு அமைப்பாகும். இந்த மரபணு சேதமடையும் போது, கால்சியம் மற்றும் கொலாஜன் உடலில் குவியத் தொடங்குகின்றன, இது செல் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் செயல்பாட்டிற்கு குறிப்பாக எளிதில் பாதிக்கப்படும் ஒரு பகுதி, அமிக்டலா (Amygdala) ஆகும். இது மூளையின் பாதாம் வடிவப் பகுதியாகும், இது பயத்தை செயலாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக நீண்ட காலமாக நம்பப்படுகிறது. எஸ்எம்-இன் விஷயத்தில், உர்பாக்-வைத்தே நோய் அவரது அமிக்டலாவை அழித்தபோது அவர் பயத்தை உணர்வது நின்று போனது. "இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இது பயத்திற்கு மட்டுமே பொருந்துகிறது - மகிழ்ச்சி, கோபம் அல்லது சோகம் என மற்ற வகையான உணர்வுகளைச் வெளிப்படுத்தும் அவரது திறன் பெரும்பாலும் அப்படியே உள்ளது," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். பயத்தின் வெவ்வேறு வகைகள் இருப்பினும், நிலைமை இதைவிடச் சிக்கலானது. அமிக்டலா ஒரு குறிப்பிட்ட வகை பயத்தில் மற்ற வகைகளை விட அதிகப் பங்கு வகிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பய நிலையை எதிர்கொள்ள தயார்படுத்துவதற்கு (Fear conditioning) இது மிகவும் முக்கியமானது. எலிகளிடம் செய்யப்பட்ட சோதனைகள், சத்தம் கேட்டவுடன் மின்சார அதிர்ச்சியை அனுபவிக்கும் விலங்குகள், சத்தம் மட்டும் கேட்கும்போது "உறைந்து போகக் கற்றுக்கொள்கின்றன" என்பதைக் காட்டுகிறது. ஆனால், அடுப்பிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட சூடான பாத்திரத்தைத் தொடக்கூடாது என்று எஸ்எம்-க்கு தெரிந்திருந்தாலும், அவர் பய நிலையை எதிர்கொள்ள தயாராக முடியவில்லை – அதாவது, வலி தொடர்புடைய தூண்டுதல்களை அவர் எதிர்கொள்ளும் போது, அவருக்கு இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது அட்ரினலின் பெருகுவது போன்ற அனுபவங்கள் ஏற்படுவதில்லை. எஸ்எம்-ஆல் மற்றவர்களின் பயந்த முகபாவனைகளை அடையாளம் காணவும் முடியவில்லை, இருப்பினும் அவரால் மகிழ்ச்சி மற்றும் சோகத்தின் வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் மிகவும் வெளிப்படையானவர் மற்றும் சமூகத்துடன் பழகக்கூடியவராக இருந்தாலும், அதே நேரத்தில் ஆபத்தான சூழ்நிலைகளை அடையாளம் கண்டு தவிர்ப்பதில் சிரமம் உள்ளது. இதன் விளைவாக, அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கத்தி மற்றும் துப்பாக்கி முனையில் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாம் நெருங்கி அணுகப்படும்போது பெரும்பாலும் பதற்றத்தை உணர்கிறோம். ஆனால், சேதமடைந்த அமிக்டலா உடையவர்கள் இந்த உணர்வை அவ்வளவு தீவிரமாக உணருவதில்லை. "அவர் தவிர்க்க வேண்டிய நபர்களை அணுக முனைகிறார், தனிநபர்களின் நம்பகத்தன்மையை உணர முடியாததால் அவர் பல சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளார்," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். மற்றொரு ஆய்வில், எஸ்எம்-ஐ அணுகும்படி ஒரு அந்நியரை அணுகுமாறு ஆராய்ச்சியாளர்கள் கேட்டனர், அவருக்கு மிகவும் வசதியாக இருக்கும் தூரத்தை அவர் சுட்டிக் காட்டினார். அவர் தேர்ந்தெடுத்த தூரம் 0.34 மீ (1.1 அடி) ஆகும். இது மற்ற தன்னார்வலர்களின் விருப்பமான தூரத்தில் கிட்டத்தட்ட பாதியாகும். இது, தனது தனிப்பட்ட இடைவெளியில் மக்கள் இருப்பது அவருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. "அந்தச் சூழ்நிலையில், எஸ்எம் மற்றும் அமிக்டலா சேதம் அடைந்த மற்ற நபர்கள் ஒப்பீட்டளவில் அறிமுகமில்லாத சோதனையாளருடன் முகம் ஒட்டி நிற்பார்கள். இதை அமிக்டலா சேதமடையாத ஆரோக்கியமானவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்." என்று அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் அலெக்சாண்டர் ஷாக்மேன் கூறுகிறார். இந்தக் கண்டுபிடிப்பு, நாம் சமூகத்தில் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதை ஒழுங்கமைப்பதில் அமிக்டலா ஒரு பங்கு வகிக்கலாம் என்று அறிவுறுத்துகிறது. இருப்பினும், அமிக்டலாவைச் சாராமல் சில வகையான பயங்கள் ஏற்படுகின்றன. ஒரு பரிசோதனையில், ஃபைன்ஸ்டீனும் அவரது சகாக்களும் எஸ்எம்-ஐ கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கச் சொன்னார்கள். இது சிலருக்குப் பயம் மற்றும் மூச்சுத்திணறல் உணர்வைத் தூண்டுகிறது. விஞ்ஞானிகள் அவர் பயப்பட மாட்டார் என்று எதிர்பார்த்தனர், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவர் பதற்றமடைந்தார். அமிக்டலா சேதமடைந்த மேலும் இரண்டு நோயாளிகளும் இந்தப் பரிசோதனையின் போது தீவிர பயத்தை அனுபவித்தனர். "எஸ்எம்-இன் விஷயத்தில், அது அவருக்கு ஒரு முழுமையான பீதியைத் (Panic Attack) தூண்டியது," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். "அது அவர் தனது வாழ்க்கையிலும் உணர்ந்த மிகவும் தீவிரமான பயம்." இந்தக் கண்டுபிடிப்பு, பயத்தில் அமிக்டலாவின் பங்கு பற்றிய உண்மை தேடலைத் தூண்டியது. அச்சுறுத்தல் வெளிப்புறமாக இருக்கிறதா அல்லது உள்முகமாக இருக்கிறதா என்பதைப் பொறுத்து மூளையில் உண்மையில் இரண்டு வெவ்வேறு பயப் பாதைகள் உள்ளன என்று தெரியவந்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நோயாளி எஸ்எம் தனது நிலையால் ஸ்கைடைவிங்கில் விமானத்திலிருந்து குதித்தபோது எந்தப் பயத்தையும் உணரவில்லை. வெளிப்புற அச்சுறுத்தல்களைப் பொறுத்தவரை அமிக்டலா ஒரு இசைக்குழு நடத்துநர் (orchestra conductor) போலச் செயல்பட்டு, மூளை மற்றும் உடலின் மற்ற பாகங்களை ஒரு எதிர்வினையாற்றும்படி வழிநடத்துகிறது. முதலில் இது பார்வை, வாசனை, சுவை மற்றும் கேட்டல் ஆகியவற்றைச் செயலாக்கும் மூளைப் பகுதிகளிலிருந்து தகவலைப் பெறுகிறது. நெருங்கும் ஒரு திருடன், பாம்பு அல்லது கரடி போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்தால், அமிக்டலா ஹைபோதலாமஸ் (Hypothalamus) பகுதிக்குச் செய்திகளை அனுப்புகிறது. ஹைபோதலாமஸ் பின்னர் பிட்யூட்டரி சுரப்பியுடன் (Pituitary gland) தொடர்பு கொள்கிறது. இது அட்ரீனல் சுரப்பிகளை ரத்த ஓட்டத்தில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் வெளியிடச் செய்கிறது. "இது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், மற்றும் வழக்கமான பயத்திற்கான எதிர்வினைகளான போராடு-அல்லது-தப்பிச் செல் (fight-or-flight) போன்ற அறிகுறிகளும் தூண்டப்படும்," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். அதே நேரம் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதைக் கண்டறிவது போன்ற உள் அச்சுறுத்தல்களைப் பொறுத்தவரை, மூளை விஷயங்களை வேறு வழியில் நிர்வகிக்கிறது. மூளையில் ஆக்ஸிஜன் சென்சார்கள் இல்லாததால், கார்பன் டை ஆக்சைடின் உயர்வை உடனடி மூச்சுத்திணறலுக்கான அறிகுறியாக உடல் புரிந்துகொள்கிறது. சுவாசத்தைப் போன்ற தன்னிச்சையான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு பகுதியான மூளைத் தண்டு (Brainstem), கார்பன் டை ஆக்சைடின் உயர்வை உணர்ந்து பீதி உணர்வை ஏற்படுத்துகிறது என்று ஃபைன்ஸ்டீனின் ஆராய்ச்சி காட்டுகிறது. அமிக்டலா இந்த எதிர்வினைக்குத் தடையை ஏற்படுத்தி, பயத்தைத் தடுக்கிறது; அதனால்தான் எஸ்எம் போன்ற அமிக்டலா இல்லாத நோயாளிகள் மிகைப்படுத்தப்பட்ட எதிர்வினையை கொண்டுள்ளனர். (எனினும், அமிக்டலா ஏன் இப்படி நடந்துகொள்கிறது என்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெரியவில்லை.) "இது ஒரு மிக முக்கியமான அறிவியல் முடிவு, ஏனெனில் இது, பயம், பதற்றம் மற்றும் பீதி ஆகியவற்றின் எல்லா வடிவங்களுக்கும் அமிக்டலா முக்கியமானது அல்ல என்பதை நமக்குக் கற்பிக்கிறது," என்று ஷாக்மேன் கூறுகிறார். "வழிப்பறித் திருடன், பாம்பு, சிலந்தி போன்ற வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக பயத்தை ஒழுங்கமைப்பதில் இது மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது. ஆனால், இந்த உள்முகத் தூண்டுதலுக்குப் பதிலளிக்கும் விதமாக ஒரு மிகக் கடுமையான பீதி உணர்வைத் தூண்டுவதற்கு இது பொறுப்பாக இருப்பதாகத் தெரியவில்லை." பரிணாம வளர்ச்சியில் பயத்தின் முக்கியத்துவம் எஸ்எம்-மின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. இருப்பினும், அமிக்டலாவைப் பாதித்து மற்ற பகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டது இவரின் அரிய நோயின் தனித்துவமான அம்சமாகும். எனினும், ஒரே மாதிரியான மூளைக் காயத்திற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் எதிர்வினையாற்றலாம். மூளை சேதம் எந்த வயதில் ஏற்படுகிறது என்பதும் ஒரு நபர் அதிலிருந்து எவ்வாறு குணமடைகிறார் என்பதில் பங்கு வகிக்கலாம். ஆனாலும், எஸ்எம்-இன் குறிப்பிடத்தக்க கதை, நாம் ஏன் பயத்தை முதலில் உருவாக்கிக் கொண்டோம் என்பதை (பரிணாம ரீதியாக) எடுத்துக்காட்டுகிறது. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் மீன்கள் உட்பட அனைத்து முதுகெலும்பிகளுக்கும் அமிக்டலா உள்ளது. இது உயிர்வாழ்வதற்கு ஒரு பெரிய உதவியாக உள்ளது என்பது தெளிவாகிறது. "நீங்கள் அமிக்டலாவைச் சேதப்படுத்தி, விலங்கை மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்பும்போது, அந்த விலங்கு பொதுவாக ஒரு சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் இறந்துவிடும்," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். "வெளி உலகைச் சமாளிப்பதற்கான இந்த முக்கியமான சுற்று இல்லாமல், இந்த விலங்குகள் தங்களைத் தாங்களே ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்க வைக்கின்றன." ஆயினும், நோயாளி எஸ்எம், சில அபாயகரமான சூழ்நிலைகளில் இருந்த போதிலும், தனது அமிக்டலா இல்லாமல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ முடிந்தது. "அவரது விவகாரம் எழுப்பும் கேள்விகளில் ஒன்று என்னவென்றால், பயத்தின் இந்த அடிப்படை உணர்ச்சி நவீன வாழ்க்கையில் உண்மையில் அவசியமில்லை" என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg6k636y27o
  11. 76 ஆவது ஆண்டு நிறைவு சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இலங்கையில் அமைந்துள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த ஆண்டு விழா வரவேற்பு நிகழ்வில், இராஜதந்திரிகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://web.facebook.com/Deranatamil/posts/1353905240072086?ref=embed_post https://adaderanatamil.lk/top-picture/cmg0og7qk00nnqplpm1s73b58
  12. பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் உரிய தரம் அல்லாத வீட்டு மின்சார உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளிலும், குளிரூட்டிகளினாலும் ஏற்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தக் கூடிய உரிய தரத்தில் இல்லை. இதன் காரணமாக, மாதத்திற்கு 100 அலகுகளுக்கும் மேல் மின்சார நுகர்வு ஏற்படுகின்றது. அத்துடன் இலங்கைக்குள் உரிய தரம் அல்லாத மின் உபகரணங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டிகளுக்கும் இந்த விதிமுறைகள் கடுமையாக்கப்படவுள்ளதாக ஹர்ஷ விக்ரமசிங்க தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmg24f9ya00o3qplp4bk7xv0w
  13. ஹொட்டல் கதவை உடைத்த வெள்ளம்! குடையால் தப்பிய மனிதர்!
  14. Published By: Digital Desk 1 26 Sep, 2025 | 10:33 AM சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக, மலேசிய நபரொருவர் துக்கிலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என அந்த நாட்டில் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வருடத்தின் 11வது மரணதண்டனையாக இது பதிவாகியுள்ளது. 39 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையா என்பவருக்கே இவ்வாறு மரணதண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெரோயின் கடத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு அவர் தூக்கிலிடப்படவிருந்தார், ஆனால் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டமையால் தடை ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய சட்டத்தரணி நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்;. இருப்பினும், சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் மரணதண்டனை தொடரும் என்றும், இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடலை சேகரிக்குமாறும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு அறிக்கையில் அவரது மரணதண்டனையை தொடர்பான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தது. அவருக்கு முழு சட்ட நடைமுறையும் வழங்கப்பட்டதாகவும், ஜனாதிபதியின் கருணை மனுக்கள் தோல்வியடைந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் எடுத்துச் சென்ற போதைப்பொருட்களின் அளவு சுமார் 540 பேரை ஒரு வாரத்திற்கு அடிமையாக்கக்கூடும் என்றும் அறிக்கை கூறியது. மேலும், “தனிப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும் பரந்த சமூகத்திற்கும் மிகவும் கடுமையான தீங்கு விளைவிக்கும் கணிசமான அளவு போதைப்பொருட்களைக் கடத்துவது போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனையை எதிர்த்து இந்த வார தொடக்கத்தில் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை தூக்கிலிடப்பட்ட மூன்றாவது மலேசியர் மற்றும் 11வது நபர் இவர் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வாரம் 30க்கும் மேற்பட்ட மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் சிங்கப்பூர் மரணதண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளன. எவ்வாறாயினும், சிங்கப்பூர் அரசாங்கம் அதன் குடிமக்களைப் பாதுகாக்க இவ்வாறான தண்டணைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/226102
  15. பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக ஆசிய கிண்ண இறுதிக்குள் நுழைந்தது; இலங்கை ஏமாற்றத்துடன் வெளியேற உள்ளது Published By: Vishnu 25 Sep, 2025 | 02:53 AM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) இரவு நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. அபிஷேக் வர்மாவின் அதிரடி அரைச் சதம், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின. பங்களாதேஷுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து நடப்பு ரி29 ஆசிய கிண்ண சம்பியன் இலங்கையின் இறுதி ஆட்ட வாய்ப்பு பறிபோனது உறுதிசெய்யப்பட்டது. இந் நிலையில் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் வியாழக்கிழமை (25) நடைபெறவுள்ள சுப்பர் 4 போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்த்தாட தகுதிபெறும். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. அபிஷேக் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 38 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், ஷுப்மான் கில் 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் இந்தியா ஆட்டம் காணத் தொடங்கியது. கில்லைத் தொடர்ந்து ஷிவம் டுபே (2) வெளியேறினார். மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களை விளாசினார். அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகிய இருவரும் தலா 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (129 - 5 விக்.) எனினும், ஹார்திக் பாண்டியா முதலில் நிதானத்துடனும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 29 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்றதுடன் அக்சார் பட்டேலுடன் 6ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். அக்சார் பட்டேல் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையாததுடன் இருவரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை. ஆரம்ப வீரர் தன்ஸித் ஹசன் 2ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். (4 - 1 விக்.) சய்வ் ஹசன், பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். ஏமொன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் தௌஹித் ஹிரிதோய் 7 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களை எட்டியதைத் தொடர்ந்து 53 பந்துகளில் 53 ஓட்டங்களுக்கு கடைசி 7 விக்கெட்கள் சரிந்தன. ஆரம்ப வீரர் சய்ப் ஹசன் தனி ஒருவராகப் போராடி 51 பந்துகளில் 3 பவுண்டறிகள். 5 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: அபிஷேக் ஷர்மா. https://www.virakesari.lk/article/226004
  16. பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 27 செப்டெம்பர் 2025, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 27 செப்டெம்பர் 2025, 02:01 GMT (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை.) 'அடுத்த ஸ்பீல்பெர்க்' ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படத்தில் இப்படி ஒரு தலைப்புடன், இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன் இடம்பெற்றிருந்தார். எந்தவொரு இயக்குநருக்கும் அது மிகப்பெரிய ஒரு அங்கீகாரம் என்றே சொல்லலாம், காரணம் உலகம் முழுவதும் இருக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்களால் மதிக்கப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநர் ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க். ஜுராசிக் பார்க், இந்தியானா ஜோன்ஸ், ஷிண்ட்லர்'ஸ் லிஸ்ட், ஈ.டி என பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியவர். அது மட்டுமல்லாது, மனோஜ் நைட் ஷியாமளனின் முன்மாதிரியும் அவரே. மனோஜ் நைட் ஷியாமளனின் திரைப்பயணம் குறித்த பதிவான 'The Man Who Heard Voices' புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் பாம்பெர்கர் இந்த சம்பவம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார். "அந்த அட்டைப்படம் வெளியான பிறகு, ஸ்பீல்பெர்க்கிடம் பேசிய மனோஜ், 'நியூஸ்வீக் இதழில் அந்தத் தலைப்பை எழுதியவர்கள் அறியாவிட்டாலும் கூட எனக்கு நன்றாகத் தெரியும், நான் அடுத்த ஸ்பீல்பெர்க் அல்ல' எனக் கூறினார்". பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படம். இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில், ஆகஸ்ட் 6, 1970ஆம் ஆண்டு பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன். அவரது தந்தை, டாக்டர் நெல்லியாட்டு சி. ஷியாமளன், மாஹேவைச் சேர்ந்தவர், தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். மனோஜ் பிறந்த சில வாரங்களில், அவரது குடும்பம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திற்கு புலம்பெயர்ந்தது. பென்சில்வேனியாவில் வளர்ந்த போது தங்களைப் போல ஷியாமளனும் ஒரு மருத்துவர் ஆவார் என்றே அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர். "அப்பா, நான் நியூயார்க்கில் உள்ள திரைப்படப் பள்ளியில் சேர்ந்துள்ளேன். அதுதான் சிறந்த திரைப்படப் பள்ளி. எனக்கு உதவித்தொகையும் கிடைக்கும்' என்று என் தந்தையிடம் கூறினேன். அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. பிறகு நான் என் அம்மாவிடம் சொன்னேன், அவருக்கு சிறுவயதில் கலைகள் மீது ஆர்வம் இருந்ததால், மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்." என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் ஷியாமளன். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தனது 21வது வயதில், 'பிரே வித் ஆங்கர்' (1992) என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கி, அதில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார் ஷியாமளன். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. ஆனால் அந்தப் படம், பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டது. "என்னுடைய முதல் திரைப்படத்தின் கதை இந்தியாவில் நடக்கும். நான் அதில் இந்திய அமெரிக்கராக நடித்திருப்பேன். ஆனால் அந்தப் படத்தை என் குடும்பத்தரைத் தவிர யாரும் பார்க்கவில்லை. அப்போது என் அப்பா ஒரு ஆலோசனை வழங்கினார், 'உன் படத்தில் வெள்ளையர்களை நடிக்க வை, அதன் பிறகு பார்' என்றார். அதை பின்பற்றினேன், வெற்றி கிடைத்தது" என்று ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் மனோஜ் நைட் ஷியாமளன். இயக்குநர் ஷியாமளனை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற திரைப்படம் என்றால், அது 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்' (The Sixth sense). 'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என இத்திரைப்படத்தில் கோல் சியர் என்ற 9 வயது சிறுவன் பேசும் வசனம் இன்றுவரை அமெரிக்காவில் மிகவும் பிரபலம். "சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் வெளியானவுடன், 'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என்ற வரி டி-சர்ட்களில், விளம்பரங்களில், மேடை நாடகங்களில், புத்தகங்களில் என எங்கும் இருந்தது. இரவில் மக்கள் உணவகங்களில் அமர்ந்துகொண்டு, 'நானும் இறந்தவர்களை பார்க்கிறேன்' என கிசுகிசுப்பார்கள்." என்று 2006இல் வெளியான 'The Man Who Heard Voices' புத்தகத்தில் விவரித்துள்ளார் மைக்கேல் பாம்பெர்கர். பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 1991இல் சென்னையில் நடைபெற்ற 'பிரே வித் ஆங்கர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஷியாமளன். குறிப்பாக 'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்தின் எதிர்பாரா முடிவு ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது என்றும், மனோஜ் நைட் ஷியாமளனுக்கென ஒரு பிரத்யேக திரைப்பட பாணியையும், அவரது திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தையும் இப்படம் உருவாக்கியது என்றும் மைக்கேல் பாம்பெர்கர் குறிப்பிடுகிறார். "உலகளாவிய டிக்கெட் விற்பனை, டிவிடி விற்பனை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் சாதனை படைத்தது." "மனோஜ் நைட் ஷியாமளன் அதை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். அவர் நடிக்கவும் செய்திருந்தார். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' படத்திற்குப் பிறகு, மக்கள் நைட்டை 'அடுத்த ஹிட்ச்காக்' என்று அழைத்தனர், அவருக்கு அப்போது முப்பது வயது கூட ஆகவில்லை. நடிகர்களிடம் திறன்பட வேலை வாங்கும் ஒரு இயக்குனராக அவர் பாராட்டப்பட்டார். குறிப்பாக ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸிடமிருந்து ஒரு சிறப்பான நடிப்பை அவர் பெற முடிந்ததால். 1999இல், நைட் ஒரு 'ராக் ஸ்டார்' போல மக்களால் கொண்டாடப்பட்டார்." என மைக்கேல் பாம்பெர்கர் எழுதியுள்ளார். ஹாலிவுட்டில் தொடர் வெற்றிகள் பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின. 'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்திற்கு பிறகு, ஷியாமளன் இயக்கி அடுத்தடுத்து வெளியான, அன்பரேகபிள் (Unbreakable- 2000), சைன்ஸ் (Signs- 2002), தி வில்லேஜ் (The Village- 2004) ஆகிய மூன்று திரைப்படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றன என மைக்கேல் பாம்பெர்கர் கூறுகிறார். 'இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் திரைக்கதைத் திருப்பங்களை உள்ளடக்கிய உளவியல் த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படங்கள்'- இதுவே மனோஜ் நைட் ஷியாமளனின் பாணி என்ற பிம்பம் உருவானது. "விமர்சகர்கள் தான் அத்தகைய பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள் என நினைக்கிறேன். எனது எல்லா திரைப்படங்களின் இறுதியிலும் ஒரு எதிர்பாரா திருப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென நினைத்து நான் திரைக்கதை எழுதுவதில்லை. ஆனால் அத்தகைய ஒரு எதிர்பார்ப்பு தான் எனக்கு பயமே. அதனால் தான் லைஃப் ஆஃப் பை (Life of Pi) போன்ற திரைப்படத்தை இயக்குவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் ஷியாமளன். ஆங் லீ இயக்கத்தில் 2012இல் வெளியான 'லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தின் நாயகன் இந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்தவனாக இருப்பான். லைஃப் ஆஃப் பை என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு ஒருமுறை கிடைத்ததாகவும் ஷியாமளன் அந்த நேர்காணலில் கூறியிருப்பார். எதிர்மறை விமர்சனங்களும் ட்ரோல்களும் பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 'அடுத்த ஸ்பீல்பெர்க்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின. ஆனால், அதற்கு அடுத்த நான்கு திரைப்படங்கள் 'தி லேடி இன் தி வாட்டர்' (2006), 'தி ஹாப்பனிங்' (2008), 'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' (2010), 'ஆஃப்டர் எர்த்' (2013) ஆகியவை எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. தனது வழக்கமான 'எதிர்பாரா திருப்பங்கள்' என்ற பாணியிலிருந்து சற்று விலகியே அவர் இந்த நான்கு திரைப்படங்களையும் இயக்கியிருந்தார். குறிப்பாக 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்திற்காக, மோசமான திரைப்படங்களை பகடி செய்து வழங்கப்படும் 'கோல்டன் ராஸ்பெர்ரி விருது' வழங்கப்பட்டது. 'மோசமான இயக்குநர்', 'மோசமான துணை கதாபாத்திரம்' இரு விருதுகள் மனோஜ் நைட் ஷியாமளனுக்கு வழங்கப்பட்டன. அதேபோல, 'தி ஹாப்பனிங்' திரைப்படத்திற்கு மோசமான திரைப்படம், மோசமான நடிகர், மோசமான இயக்குநர், மோசமான திரைக்கதை என நான்கு 'கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகள்' வழங்கப்பட்டன. 'அடுத்த ஸ்பீல்பெர்க்', 'அடுத்த ஹிட்ச்காக்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார். "ஒரு திரைப்படத்தை எழுதும்போதே அதை எப்படி சந்தைப்படுத்துவது என்பதையும் யோசித்தே எழுத வேண்டும். 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்தில் அதை நான் செய்யவில்லை. எனக்குப் பிடித்ததை செய்தேன். ஆனால் இன்றும் கூட மக்கள் அந்தப் படத்தைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன். பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, மனோஜ் நைட் ஷியாமளனின் தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். 'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்' என்ற பிரபல அனிமேஷன் தொலைக்காட்சித் தொடரை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஆசியர்களின் கதாபாத்திரங்களுக்கு 'வெள்ளையின' நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இதை இயக்குநர் ஷியாமளனும், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் மறுத்தது. அதற்கு பிறகு, ஷியாமளன் இயக்கத்தில் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான 'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் மிக மோசமாக ட்ரோல் செய்யப்பட்டது. நடிகர் வில் ஸ்மித் 2015இல் அளித்த ஒரு நேர்காணலில், "'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் என் திரை வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி. என்னுடைய பையனையும் அதில் நடிக்க வைத்தது தான் இன்னும் வேதனையானது. நான் ஒன்றரை வருடத்திற்கு நடிப்பதையே நிறுத்திவிட்டேன்." எனக் கூறியிருந்தார். 'தி விசிட்' மீட்டுக்கொடுத்த அடையாளம் பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 2015இல் வெளியான 'தி விசிட்' திரைப்படம் "என்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி, 'மெயின்ஸ்ட்ரீம்' திரைப்பட பாணியில் பொருந்திப் போவதற்கு சில திரைப்படங்களை எடுத்தேன். அது தவறு என பின்னர் புரிந்தது. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திரைப்படங்கள் அவை அல்ல என்பதும் புரிந்தது" என தனது தோல்விப் படங்கள் குறித்து ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன். தனக்கு கிடைத்த தோல்விகளால், தனது அடுத்த திரைப்படத்தை சொந்தமாகவே தயாரிக்க முடிவு செய்த ஷியாமளன், ஒரு சிறு பட்ஜெட் திரைப்படத்தை இயக்கினார். 2015இல் வெளியான 'தி விசிட்' என்ற அந்த திரைப்படம் மூலம் மீண்டும் தனது 'எதிர்பாரா திருப்பங்கள் கொண்ட கிளைமாக்ஸ்' என்ற பாணிக்கு திரும்பினார் ஷியாமளன். தங்கள் அம்மா வழி, தாத்தா- பாட்டியின் பண்ணை வீட்டில் 5 நாட்கள் விடுமுறையைக் கழிக்க, பெக்கா ஜேமிசன் என்ற சிறுமியும் அவளது தம்பி டைலரும் வருகிறார்கள். முதல் முறையாக தங்கள் தாத்தா- பாட்டியை சந்திக்கும் பெக்கா மற்றும் டைலர், அவர்களுடன் தங்கும்போது சில அசாதாரணமான நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள், அவர்களின் 'தாத்தா பாட்டி' பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மையையும் கண்டறிகிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை. 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட 'தி விசிட்' திரைப்படம், 98.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மிகப்பெரிய அளவிலான வசூலைக் குவித்தது. அதன் பிறகு, அவர் எடுத்த 'ஸ்ப்ளிட்' (2016), 'கிளாஸ்' (2019) திரைப்படங்கள் மீண்டும் ஷியாமளனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தின. "ஹாலிவுட்டில் என்னைப் போல புகழையும் ட்ரோல்களையும் பார்த்த இயக்குநர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை. 'தி விசிட்' திரைப்படம் எடுக்கும்போது, 'நான் அனைத்தையும் இழக்கப் போகிறேன்' என்ற பயமும் இருந்தது, மறுபுறம் காமெடியும் ஹாரரரும் கலந்த ஒரு கதை நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் இருந்தது. வெற்றி என்பது எப்போதும் ஒரு கத்தி முனையில் நிற்பது போல தான்" என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன். மனோஜ் நைட் ஷியாமளன், இந்திய இயக்குநர்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் மிகப்பெரிய ஒரு நம்பிக்கை என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். "இந்தியர்கள் என்றாலே காதல், 5 பாடல்கள் அல்லது நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் நிலவும் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஹாலிவுட்டில் மிக எளிய த்ரில்லர் கதைகளால் பிரபலமடைந்தவர் மனோஜ். 'சைன்ஸ்', 'தி வில்லேஜ்' போன்ற திரைப்படங்களில், நம் நாட்டு கதைகளையே ஹாலிவுட்டுக்கு ஏற்றார் போல வடிவமைத்திருப்பார். 'ஒரு இந்தியராக இருப்பது' என்ற தடையையே தனது பலமாக மாற்றி ஹாலிவுட்டில் வெற்றி பெற்றவர் என்ற வகையில், அடுத்த தலைமுறை இந்தியக் கலைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி தான்" என்று ஜா.தீபா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ed01yv466o
  17. 2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு பொருந்தும். வரி செலுத்துவோர், செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் அல்லது இணையவழி வரி செலுத்தும் வசதி (OTPP) மூலமும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. கொடுப்பனவுக்கான இறுதித் திகதியான செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர் செலுத்தப்படும் தொகைகள், வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், தாமதமான செலுத்துதல்களாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், வரியைச் செலுத்தாமல் விடுதல் அல்லது தாமதமாகச் செலுத்துதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் தண்டப்பணம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmg1xxc3100p1o29nh1dwm90n
  18. Published By: Vishnu 24 Sep, 2025 | 07:22 PM (நெவில் அன்தனி) பிரான்ஸ் நியூஸ் மெகஸின் (பிரான்ஸ் செய்தி சஞ்சிகை) மற்றும் பிரெஞ்சு கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றினால் வருடாந்தம் வழங்கப்படும் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழக வீரரும் பிரான்ஸ் தேசிய வீரருமான உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார். அதி சிறந்த வீராங்கனைக்கான பெலன் டி'ஓர் விருதை மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்தார். பிரான்ஸ் தேசத்தில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள தியேட்டர் டு சாட்லே அரங்கில் கடந்த திங்கட்கிழமை இரவு 69ஆவது பெலன் டி'ஓர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ் விழாவில் அதி சிறந்த வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார். இந்த விருதை அவர் முதல் தடவையாக வென்றதுடன் அவ்விருதை கன்னீர்மல்க பெற்றுக்கொண்டார். நடந்து முடிந்த 2024 - 2025 கால்பந்தாட்ட பருவ காலத்தில் தனது அதிசிறந்த கால்பந்தாட்ட நுட்பத்திறன்மூலம் பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழகத்திற்கு நான்கு சம்பியன் பட்டங்களை உஸ்மான் டெம்பிலி கிடைக்கச் செய்திருந்தார். ஐரோப்பிய சுப்பர் கிண்ணம், ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், உள்ளூர் இரட்டைப் பட்டங்களான லீக் 1, கூப் டி பிரான்ஸ் ஆகிய நான்கு சம்பியன் பட்டங்களையே பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் வென்றிருந்தது. மூன்றாவது தொடர்ச்சியான விருது பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பெலன் டி'ஓர் விருதை வென்று வரலாறு படைத்தார். 2014இலிருந்து பார்சிலோனா கழகத்தில் தொடர்ந்து விளையாடி வரும் பொன்மாட்டி, நடந்து முடிந்த கால்பந்தாட்ட பருவகாலத்தில் தனது கழகத்தின் மூன்று பிரதான வெற்றிகளில் பெரும் பங்காற்றி இருந்தார். லீகா எவ், கொப்பா டி லா ரெய்னா, சுப்பர்கோப்பா ஆகிய சம்பியன் பட்டங்களை பார்சிலோனா கழகம் வென்றிருந்தது. அத்துடன் 2025 யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் முன்னேறுவதில் பொன்மாட்டி முக்கிய பங்காற்றி இருந்தார். 2023 பீபா மகளிர் உலகக் கிண்ண சம்பியனான ஸ்பெய்ன் அணியில் இடம்பெற்ற பொன்மாட்டி, மகளிர் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் பட்டங்களை 3 தடவைகள் வென்றெடுத்த பார்சிலோனா அணியிலும் அங்கம் வகித்திருந்தார். ஏனைய விருதுகள் * உயிராபத்துக்களை எதிர்நோக்கும் சிறுவர்களுக்கும் இளையவர்களுக்கும் உதவும் காருண்ய மன்றத்துக்கான சொக்ரேட்ஸ் விருது - ஸானா காருண்ய மன்றம் * வருடத்தின் அதிசிறந்த ஆடவர் கழகம் - பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் * வருடத்தின் அதிசிறந்த மகளிர் கழகம் - ஆர்சனல் கழகம் * அதிக கோல்களைப் போட்ட வீரருக்கான ஜேர்ட் முல்லர் விருது - விக்டர் ஜியோக்ரஸ் (ஸ்போட்டிங் சி பி ஃ சுவீடன் - 52 போட்டிகளில் 59 கோல்கள்) அவர் இப்போது ஆர்சனல் கழகத்திற்காக விளையாடி வருகிறார். * அதிக கோல்களைப் போட்ட வீராங்கனைக்கான ஜேர்ட் முல்லர் விருது - ஈவா பஜோர் (பார்சிலோனா ஃ போலந்து - 46 போட்டிகளில் 43 கோல்கள்) * வருடத்தின் அதிசிறந்த ஆடவர் அணி பயிற்றுநருக்கான ஜொஹான் க்ருய்வ் விருது - லூயி என்ரிக் (பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழகம் - 4 சம்பியன் பட்டங்கள்) * வருடத்தின் அதிசிறந்த மகளிர் அணி பயிற்றுநருக்கான ஜொஹான் க்ருய்வ் விருது - சரினா வீக்மான் (இங்கிலாந்து - ஐரோப்பிய கிண்ண சம்பியன்) https://www.virakesari.lk/article/225994
  19. அததெரண கருத்துப் படங்கள்.
  20. கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர் 26 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செயல்படாத வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 42 கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக போலி ஆவணங்களை மேரி ஃபிரான்சிஸ்கா தயாரித்தார் என்பது குற்றச்சாட்டு. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர்கள் மறுக்கின்றனர். என்ன நடந்தது? எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன? சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த மேரி ஃபிரான்சிஸ்கா என்ற 45 வயது இலங்கைப் பெண், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், விமான நிலையத்தில் பணியில் இருந்த குடியேற்ற பணியகத்தின் அதிகாரி (Bureau of Immigration) சதாசிவம், மேரி ஃபிரான்சிஸ்கா குறித்து சில தகவல்களை சென்னை கியூ பிரிவு போலீஸிடம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து மும்பை செல்வதற்கு மேரி ஃபிரான்சிஸ்கா திட்டமிட்டிருந்ததாகவும் அவரிடம் இந்திய பாஸ்போர்ட், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, இலங்கை பாஸ்போர்ட்டின் அசல் ஆவணம் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் குடியேற்ற பணியக அதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த ஒருவர், முறைகேடான வழியில் இந்திய அரசின் ஆவணங்களை வைத்திருந்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த தகவலை சென்னை கியூ பிரிவு சிஐடி காவல் ஆய்வாளர் வேலவனிடம் குடியேற்ற அதிகாரி சதாசிவம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே தகவல், தமிழ்நாடு அரசின் அரசிதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. 2021-ல் மேரி ஃபிரான்சிஸ்கா கைது "இலங்கையைச் சேர்ந்த மேரி ஃபிரான்சிஸ்கா, இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார். அவர் சென்னை அண்ணா நகரில் தங்கியுள்ளார். அவரின் சுற்றுலா விசா காலாவதியாகிவிட்டதால் இந்தியாவில் வசிப்பதற்கான ஆதாரங்களை முறைகேடாக பெற்றுள்ளார்" என்று கியூ பிரிவு சி.ஐ.டி குற்றம் சுமத்தியது. இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மேரி ஃபிரான்சிஸ்காவை கைது செய்து நீதிமன்றக் காவலில் கியூ பிரிவு சி.ஐ.டி போலீஸ் அடைத்துள்ளது. காவல்துறையில் மேரி ஃபிரான்சிஸ்கா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 7 பேர் வெவ்வேறு தருணங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். '42 கோடி ரூபாயை சட்டவிரோதமாக எடுக்க திட்டம்' காவல்துறை நடத்திய விசாரணையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான பாலைய்யா, உமாகாந்தன் ஆகியோருடன் இணைந்து மேரி ஃபிரான்சிஸ்கா குற்றச்செயலில் ஈடுபட்டதாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது. இவர்கள் இந்தியா வந்ததற்கான பின்னணி குறித்தும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ஹமீதா ஏ லால்ஜி, அர்ஷியா ஏ லால்ஜி மற்றும் இஸ்கந்தர் ஏ லால்ஜி (Iskander-A-Laljee) ஆகியோரின் செயல்படாத வங்கிக் கணக்குகளில் (Inoperative bank accounts) இருந்து 42 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 172 ரூபாயை மோசடியாக எடுக்க முயற்சித்ததாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கவும் அந்த அமைப்பை ஒருங்கிணைப்பதற்காகவும் இந்த பணத்தை எடுக்க முயன்றதாக கியூ பிரிவு சி.ஐ.டி கூறுகிறது. புழல் சிறையில் மேரி ஃபிரான்சிஸ்காவிடம் விசாரணை இந்த வழக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு மறுவழக்கு பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் புழல் பெண்கள் சிறையில் மேரி ஃபிரான்சிஸ்கா அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதானவர்களில் மேரி ஃபிரான்சிஸ்கா தவிர மற்ற அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக பணப் பரிவர்த்தையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேரி ஃபிரான்சிஸ்காவிடம் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதற்காக, பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதியைப் பெற்றனர். கடந்த செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் புழல் சிறையில் வைத்து சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக மேரி ஃபிரான்சிஸ்காவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. 'ஜாமீனில் எடுக்க கூட ஆள் இல்லை' படக்குறிப்பு, மேரி ஃபிரான்சிஸ்காவை ஜாமீனில் எடுக்க உறவினர்கள் வரவில்லை என்கிறார் அவரது வழக்கறிஞர் பா புகழேந்தி "வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் மேரி பிரான்சிஸ்கா ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் புழல் பெண்கள் சிறையில் இருக்கிறார்" எனக் கூறுகிறார், மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர் பா.புகழேந்தி. மேரி ஃபிரான்சிஸ்காவின் உறவினர்கள் கனடாவில் வசிப்பதாகக் கூறும் பா.புகழேந்தி, "தமிழ்நாட்டுக்குள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக அவர் வந்துள்ளார். அவருடன் கைதான நபர்கள் பலரும் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர். ஆனால், அவரை ஜாமீனில் எடுப்பதற்குக் கூட உறவினர்கள் முன்வரவில்லை" என்கிறார். அவரது மனநலன் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பா.புகழேந்தி, "புழல் பெண்கள் சிறையில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போது முன்னுக்குப்பின் முரணாகவே அவர் பேசினார்" எனத் தெரிவித்தார். 'எந்த ஆதாரமும் இல்லை' போலி பாஸ்போர்ட் மற்றும் மோசடி வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக மேரி ஃபிரான்சிஸ்கா உள்ளதை மேற்கோள் காட்டிப் பேசிய பா.புகழேந்தி, " ஹவாலா பணம் கைமாறியுள்ளதாக காவல்துறை கூறினாலும் அதனை புலிகள் அமைப்புடன் தொடர்படுத்திப் பேசுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்கிறார். "வழக்கில் கைதானவர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் பணம் அனுப்பியதாக என்.ஐ.ஏ கூறுகிறது. பொதுவாக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், தங்களின் உறவினர்களுக்குப் பல்வேறு வழிகளில் பணம் அனுப்புவது இயல்பு. அதை வைத்தே இந்த வழக்கைக் கையாள்வதாகவே பார்க்கிறேன்" எனவும் குறிப்பிட்டார். மேரி ஃபிரான்சிஸ்கா தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக மேரி ஃபிரான்சிஸ்காவிடம் அமலாக்கத்துறை விசாரணை 'பணத்தை எடுக்கவில்லை' மேரி ஃபிரான்சிஸ்கா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரும் அதே காலகட்டத்தில் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். "அனைவரும் சேர்ந்து கூட்டம் போட்டதாகவும் சொத்துகளை வாங்குவதற்கு முயற்சி செய்ததாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது. இவர்களை உமா காந்தன் என்ற நபர் இயக்கியதாகக் கூறுகின்றனர். ஆனால், மும்பை வங்கியில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை இவர்கள் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், பாஸ்கரனின் வழக்கறிஞர் ஷர்புதீன். இந்த வழக்கில் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என, கைதான நபர்கள் கூறுவதாகவும் சர்புதீன் தெரிவித்தார். மேரி ஃபிரான்சிஸ்கா மீதான வழக்கு குறித்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் மத்திய அரசின் வழக்கறிஞர் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. "வழக்கு குறித்து கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd72z8lpwqlo
  21. இதுவரை 6 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளார்கள். 1) ஏராளன் 2) alvayan 3) வாத்தியார் 4) vasee 5) சுவி 6) கிருபன்
  22. வழமையான போட்டியாளர்கள் விரைவாக பங்கு பற்றுங்கோ, பஸ் வெளிக்கிடப்போகிறது. @வாதவூரான், @கறுப்பி, @Eppothum Thamizhan, @தமிழ் சிறி, @வீரப் பையன்26, @நிலாமதி, @புலவர், @nilmini, @சுவைப்பிரியன், @Ahasthiyan, @நந்தன், @goshan_che, @நீர்வேலியான், @ரசோதரன், @குமாரசாமி, @ஈழப்பிரியன், @முதல்வன், @பிரபா, @nunavilan @kalyani அண்ணாக்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கச்சிகள் எல்லோரும் ஓடி வாங்கோ.
  23. 25 Sep, 2025 | 01:34 PM (எம்.மனோசித்ரா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? கடந்த காலங்களில் இந்த திட்டத்தை முன்வைத்தவர்கள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அரசாங்கத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள கஞ்சா உற்கபத்தி திட்டம் தொடர்பில் அகில இலங்கை மகா பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த, மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட காரணி தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கஞ்சா உற்பத்தியை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டும் ஒரு வருமான மூலமாகப் பார்ப்பதை அங்கீகரிக்க முடியாது. அப்போதைய இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதில் பிரதான காரண கர்த்தாவாக செயற்பட்டார். கடந்த அரசாங்கத்தால் இதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்ட போது மகா சங்கத்தினர் உட்பட சகல மதத் தலைவர்களும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். இறுதியில் இந்த யோசனையை முன்வைத்தவர்கள் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர். இது குறித்து அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பினார். 'இந்த கஞ்சா உற்பத்தி வெற்றியளிக்கும் வேலைத்திட்டம் என நீங்கள் கூறினால் அதற்கான சந்தை என்ன எனக் கூறுங்கள்? , எந்தெந்த நாடுகள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றன? , எந்த அளவுகளில் அவர்கள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றனர்? , ஏதேனுமொரு வகையில் வெளிநாடுகள் இவற்றை கொள்வனவு செய்யாவிட்டால் உற்பத்திகளுக்கு என்னவாகும்?' என்ற கேள்விகளே அவரால் அப்போதைய அரசாங்கத்திடம் கேட்கப்பட்டன. ஆனால் இதில் எந்தவொரு கேள்விக்கும் அன்று பதில் கிடைக்கவில்லை. இன்று நாம் அதே கேள்விகளை ஜனாதிபதி அநுரவிடம் கேட்கின்றோம். அன்று இந்த கேள்விகளை எழுப்பிய சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் இன்று நிறைவேற்றதிகாரம் கொண்;ட ஜனாதிபதியாவார். அன்று நிராகரிக்கப்பட்ட சடலங்களை இன்று மீண்டும் உயிர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா? தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிப்பதற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகக் காணப்பட்டது. எனவே ஆட்சியாளர்கள் இதனை மறந்து விடக் கூடாது. நிராகரிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க தீர்மானித்தால் அரசாங்கம் அது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எமக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் 7 நிறுவனங்களுக்கு இது குறித்த பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவற்றுடன் ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன. மீரிகம பிரதேசத்தில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு பகிரங்க கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் எமக்கு இது குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் நாம் எமது போதை;பொருள் எதிர்ப்பு பிரிவுடன் சென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தோம். ஒரு இலை கூட வெளிச் செல்லாமல் கடுமையான பாதுகாப்புடனேயே இந்த உற்பத்தியை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். எமது நாட்டுக்கு இது உகந்ததல்ல என்றால், ஏனைய நாடுகளுக்கு மாத்திரம் எவ்வாறு சிறந்ததாகும்? இது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா என நாம் அமைச்சிடம் கேட்டோம். எதற்காக நாம் தவறான முறைமையின் கீழ் வருமானம் ஈட்டுகின்றோம்? இந்த திட்டத்தை முன்வைக்கப்பட்டாதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்த பெண் தற்போது அரசாங்கம் தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகின்றார். அவர் அதற்கு வாழ்;த்துக்களையும் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? எனவே தூய்மையாகக் கழுவிய ஆடையை மீண்டும் சேற்றில் இட வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/226048
  24. பட மூலாதாரம், NASA படக்குறிப்பு, ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன். கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்தைத் தொடங்க உறுதி பூண்டிருந்த நாசா, இப்போது இந்தப் பணியை முன்கூட்டியே செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளது. 50 ஆண்டுகளாக எந்த நாடும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பயணத்தை மேற்கொண்டதில்லை. நாசா நான்கு விண்வெளி வீரர்களை அங்கு அனுப்பி, அமைப்புகளைச் சோதிக்க உள்ளது. ஆர்டெமிஸ் II திட்டம் என்பது ஆர்டெமிஸ் திட்டத்தின் இரண்டாவது ஏவுதல் ஆகும். இந்த திட்டத்தின் நோக்கம் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்க வைப்பதும், இறுதியில் நிலவின் மேற்பரப்பில் நீண்ட கால இருப்பை ஏற்படுத்துவதுமாகும். பட மூலாதாரம், NASA படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்: ஆர்டெமிஸ் II, பல ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் செல்லும் முதல் நிலவுப் பயணமாக இருக்கும். நாசாவின் (பொறுப்பு) துணை நிர்வாகி லாகீஷா ஹாக்கின்ஸ், இது மனிதர்கள் மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என்று கூறினார். "வரலாற்று நிகழ்வுக்கு மிக நெருக்கமான ஒரு தருணத்தில் நாம் உள்ளோம்," என்று அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். "ஏவுதலுக்கான வாய்ப்பு பிப்ரவரி ஐந்தாம் தேதிக்கு முன்னதாகவே ஏற்படலாம், ஆனால் பாதுகாப்புதான் எங்கள் முதன்மை முன்னுரிமை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்." விண்வெளி வீரர்களை நிலவுக்குக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பான விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS), "ஏறக்குறைய ஏவுவதற்குத் தயாராக உள்ளது" என்று ஆர்டெமிஸ் ஏவுதல் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் விளக்கினார். எஸ்எல்எஸ் உடன் இணைக்கப்படும் ஓரியன் (Orion) எனப்படும் விண்வெளி வீரர் காப்ஸ்யூல் தயாரிப்பு மற்றும் தரைவழி சோதனைகளை நிறைவு செய்வது மட்டுமே மீதமுள்ளது. ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் பணி 25 நாட்கள் நீடித்தது. அது 2022 நவம்பர் மாதம் ஆட்கள் இல்லாத விண்கலத்தை ஏவியது. அந்த விண்கலம் நிலவைச் சுற்றி பயணம் செய்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. அந்தப் பணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இருப்பினும், விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது வெப்பக் கவசத்தில் சில சிக்கல்கள் இருந்தன. அவை இப்போது சரி செய்யப்பட்டுள்ளன. ஆர்டெமிஸ் II ஏவுதலில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றுவர பத்து நாள் பயணம் மேற்கொள்வார்கள். நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி அமைப்பைச் சேர்ந்த ஜெரெமி ஹேன்சன் ஆகியோர் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இருப்பினும், 1972-ஆம் ஆண்டு அப்போலோ 17-க்குப் பிறகு குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் பயணிக்கும் முதல் குழுவினர் இவர்களாகத்தான் இருப்பார்கள். ஆர்டெமிஸ் II இன் தலைமைப் பயண இயக்குநர் ஜெஃப் ரடிகன், விண்வெளி வீரர்கள் இதுவரை யாரும் சென்றிராத அளவு தொலைவுக்கு விண்வெளியில் பயணிப்பார்கள் என்று விளக்கினார். "அவர்கள் நிலவுக்கு அப்பால் குறைந்தது 5,000 கடல் மைல்கள் (9,200 கி.மீ) பயணம் செய்வார்கள், இது முந்தைய பயணங்களைவிட மிக அதிகம்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திட்டத்தின் நோக்கம் நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ராக்கெட் மற்றும் விண்கலத்தின் அமைப்புகளைச் சோதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். விண்வெளி வீரர்கள் ஓரியன் காப்ஸ்யூலில் நுழைவார்கள். இது அவர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு வீடாக இருக்கும். இது எஸ்எல்எஸ்-இன் உச்சியில் அமர்த்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது, இரண்டு திட ராக்கெட் பூஸ்டர்களின் உதவியுடன் புவி சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படும். அவை கனமான உந்துவிசையை அளித்த பின் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு வந்துவிடும். ஏவப்பட்ட உடன் என்ன நடக்கும்? ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டின் பிரமாண்டமான கோர் ஸ்டேஜ், இடைக்கால க்ரையோஜெனிக் உந்துவிசை அமைப்பு (Interim Cryogenic Propulsion System - ICPS) மற்றும் ஓரியன் விண்வெளி வீரர் பகுதியிலிருந்து பிரிந்து செல்லும். ஓரியனின் சூரிய மின் தகடுகள் விரிந்து விண்கலத்தின் பேட்டரிகளுக்குச் சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் வழங்கத் தொடங்கும். தொண்ணூறு நிமிடங்களுக்குப் பிறகு ஐசிபிஎஸ் தனது என்ஜின்களை இயக்கி வாகனத்தை ஒரு உயர் புவி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும். அடுத்த 25 மணி நேரத்துக்கு ஒரு முழு அமைப்புகள் சரிபார்ப்பு நடைபெறும். எல்லாம் சரியாக இருந்தால், ஓரியன் ஐசிபிஎஸ்-இலிருந்து பிரிந்து செல்லும். விண்வெளி வீரர்கள், நிலவில் தரையிறங்குவதற்கான ஒரு வாகனத்துடன் இணைக்கும் செயல்முறைகளை ஒத்திகை பார்க்க, ஓரியனின் நகர்வுக்கான உந்துகருவியை (Manoeuvring thruster) கட்டுப்படுத்தி ஐசிபிஎஸ்-ஐ நோக்கிச் செல்வார்கள். இருபத்தி மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஓரியனின் சேவை அமைப்பு ஒரு 'நிலவு நோக்கி உந்துதல் (TLI) எரியூட்டலை' நடத்தும் - இது விண்கலத்தை நிலவை நோக்கி குறிவைக்கும் ஒரு உந்துவிசையாகும். அதற்குப் பிறகு ஓரியன் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து 2,30,000 மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்லும். பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் தொடர்ந்து அமைப்புகள் சரிபார்ப்புகளை மேற்கொள்வார்கள். ஒரு வகையில், குழுவினர் சோதனை எலிகளாக இருப்பார்கள். அவர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்கும் சோதனைகள் நடத்தப்படும். விஞ்ஞானிகள் விண்வெளி வீரர்களின் ரத்தத்திலிருந்து அவர்களின் பயணத்துக்கு முன்னும் பின்னும் பெறப்பட்ட திசு மாதிரிகளை அதாவது ஆர்கனோய்ட்ஸை, வளர்ப்பார்கள். விண்வெளி வீரர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஆர்கனோய்ட்ஸின் இரண்டு தொகுப்புகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று நாசாவின் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் தெரிவித்தார். "எங்களிடம் அந்த விண்வெளி வீரர்களே இருக்கும்போது ஏன் இதையெல்லாம் செய்கிறோம் என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த மாதிரிகளின் மீது புவியீர்ப்பு விசை இல்லாத சூழல் மற்றும் கதிர்வீச்சின் விளைவை ஆழமாக ஆய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். நான் நிச்சயமாக ஒரு விண்வெளி வீரருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை! ஆனால், இந்தச் சிறிய ஆர்கனோய்ட் மாதிரிகளை அறுத்து, வித்தியாசத்தை உண்மையில் பார்க்க முடியும்." என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார். விண்கலம் நிலவைத் தாண்டி செலுத்தப்பட்டபின் பூமியின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் பூமி திரும்பும் நான்கு நாள் பயணத்தைத் தொடங்குவார்கள். பூமியை வந்தடைந்ததும், விண்கலத்தின் முதன்மை உந்துவிசையமைப்பைக் கொண்ட சேவை அமைப்பு, குழு அமைப்பிலிருந்து பிரிந்துவிடும். விண்வெளி வீரர்கள் பின்னர் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்து, கலிபோர்னியாவின் கடற்கரையில் பாராசூட் மூலம் தரையிறங்குவார்கள். இது பயணத்தின் மிகவும் ஆபத்தான பகுதியாகும். பட மூலாதாரம், NASA/Robert Markowitz படக்குறிப்பு, ஓரியன் விண்கலத்துக்குள் நான்கு குழு உறுப்பினர்கள் ஏவுதலுக்கு எவ்வாறு அமர வைக்கப்படுவார்கள் என்பதை பொறியாளர்கள் (spacesuit engineers) விளக்குகிறார்கள், இவர்களே விண்வெளி வீரர்களுக்கான உயிர்காக்கும் கருவிகளை வடிவமைக்கின்றனர். இந்தப் பயணத்தின் வெற்றி, நாசா எப்போது ஆர்டெமிஸ் III-ஐ ஏவ முடியும் என்பதையும், உண்மையில் நிலவில் தரையிறங்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும். ஆனால், இந்தப் பயணம் சரியாக நடந்தாலும் கூட, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் "2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக இல்லை" என்ற இலக்கு, ஓபன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிமியோன் பார்பரின் கூற்றுப்படி, யதார்த்தமற்றது. "'முன்னதாக இல்லை' என்பது நாசாவுக்கு நன்கு தெரிந்த ஒரு சொல்தான், அதற்கு அதுதான் அர்த்தம். அதுதான் மிக விரைவான சாத்தியமாக உள்ளது," என்று அவர் கூறினார். ஆர்டெமிஸ் III-ஐ சரியான பாதையில் வைத்திருப்பதற்கான செலவு காரணமாக அது கூட அதிக நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார். "[ஈலோன் மஸ்க்கின்] ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும் தேவைப்படும். சமீபத்திய மாதங்களில், பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைப் பயணத்தை அடையவே ஸ்டார்ஷிப் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனும் நிலையில் விண்வெளி வீரர்களை அதில் அமர்த்துவது மிகவும் கடினம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czrpkd625m0o
  25. முத்து நகர் காணி அபகரிப்பு: எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதி Published By: Vishnu 25 Sep, 2025 | 10:31 PM (செ.சுபதர்ஷனி) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது. புதன்கிழமை அன்று சுமார் 12 மணித்தியாலங்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள் அன்றைய தினம் இரவு பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுமார் 800 ஏக்கர் விவசாய காணி சூரிய மின்சக்தி திட்டத்துக்காக அரசாங்கத்தால் இந்திய தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விளை நிலங்களை தமக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் புதன்கிழமை (24) முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.30 மணியளவில் ஒன்று கூடிய ஆர்பாட்டக்காரர்கள் அன்றைய தினம் இரவு வரை உரிமைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்களை அழைத்து கலந்துறையாடியிருந்ததுடன், விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்துள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். போராட்டத்துக்காக 2 பேருந்துகளில் பொதுமக்கள் வருகைத் தந்திருந்ததுடன், சுமார் 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் அம்மக்கள் முத்து நகர் நோக்கி பயணமானார்கள். விவசாயிகளிடமிருந்த காணியை அரசாங்கம் பறித்து வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய காணியை அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளதோடு மாற்றுக் காணிகளை வழங்காது விவசாயத்துக்கு பயண்படுத்தப்பட்ட குளங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முத்துநகர் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/226089

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.