Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. Drinks 6th Match, Group A (N), Dubai (DICS), September 14, 2025, Men's T20 Asia Cup Pakistan (10/20 ov) 49/4 India Pakistan chose to bat. Current RR: 4.90 • Last 5 ov (RR): 15/2 (3.00) Live Forecast: PAK 131
  2. வெளிநாட்டு சினிமா பார்த்தால் சுட்டுக் கொலை; வட கொரியாவில் நடப்பது என்ன? பட மூலாதாரம், KCNA via EPA படக்குறிப்பு, கிம் ஜாங் உன் ஆட்சியில் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டதாகவும், மக்கள் மேலும் பயத்துடனும் வாழ்கின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. கட்டுரை தகவல் ஜீன் மேக்கன்சி சியோல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாட்டுப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்களுக்கு, வட கொரிய அரசாங்கம் மரண தண்டனையை அளித்திருப்பதாக ஒரு ஐ.நா. அறிக்கை கூறுகிறது. உலகிலிருந்து பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த சர்வாதிகார ஆட்சி, அதன் மக்களின் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தி அதிக அளவில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகிறது என்றும் ஐநா அறிக்கை கண்டுபிடித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக வட கொரிய அரசு "குடிமக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களின் மீதான" கட்டுப்பாட்டை இறுக்கியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது. "இன்றைய உலகில் வேறு எந்த மக்களும் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லை" என்று அது முடிவு செய்தது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உதவியால் கண்காணிப்பு "அதிகமாகப் பரவியுள்ளது" என்றும் அது கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், இந்த நிலைமை தொடர்ந்தால், வட கொரியர்கள் "அவர்கள் நீண்ட காலமாக அனுபவித்துவரும் அதிக துன்பம், கொடூரமான அடக்குமுறை மற்றும் பயத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்" என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, மரண தண்டனை அடிக்கடி பயன்படுத்தப்படுவதாகக் கண்டறிந்துள்ளது. மரண தண்டனை விதிக்க அனுமதிக்கும் குறைந்தது ஆறு புதிய சட்டங்கள் 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் வெளிநாடுகளிலிருந்து மக்கள் தகவல்களைப் பெறுவதற்கான வழிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதால், வெளிநாட்டு ஊடக உள்ளடக்கங்களான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றை பார்ப்பது மற்றும் பகிர்வது போன்ற செயல்களுக்காகவும் இப்போது மரண தண்டனை விதிக்கப்படலாம். 2020-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு உள்ளடக்கத்தைப் பரப்பியதற்காக அதிக மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. ஆராய்ச்சியாளர்களிடம் தப்பி வந்தவர்கள் கூறினர். மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும், அவர்கள் சட்டத்தை மீறுவதைத் தடுக்கவும், துப்பாக்கிச் சூடு குழுவால் இந்த மரண தண்டனைகள் பகிரங்கமாகத் நிறைவேற்றப்படுகின்றன என்று அவர்கள் விவரித்தனர். 2023-ம் ஆண்டு தப்பிச் வந்த காங் கியூரி, தென் கொரிய உள்ளடக்கத்துடன் பிடிபட்ட தனது மூன்று நண்பர்கள் கொல்லப்பட்டதாக பிபிசியிடம் கூறினார். 23 வயதான ஒரு நண்பருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது காங் கியூரி நீதிமன்றத்தில் இருந்தார். "அவர் போதைப்பொருள் குற்றவாளிகளுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டார். இந்தக் குற்றங்கள் இப்போது ஒரே மாதிரியாகக் கருதப்படுகின்றன" என்று அவர் கூறினார். மேலும், 2020 முதல் மக்கள் அதிக அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். 2011-ல் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன் பதவிக்கு வந்தபோது, அவர்கள் இனி "வயிற்றைக் கட்டிக்கொள்ள" (அதாவது, போதிய உணவு இல்லாமல்) வேண்டியதில்லை என்று உறுதியளித்திருந்ததால், தங்கள் வாழ்க்கை மேம்படும் என்று நம்பியதாக நேர்காணல் செய்யப்பட்ட தப்பி வந்தவர்கள் கூறினர். பொருளாதாரத்தை வளர்ப்பதாகவும், அதே நேரத்தில் அணு ஆயுதங்களை மேலும் மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் காப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், கிம் 2019-ல் மேற்கு நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் ராஜதந்திர பேச்சுக்களைத் தவிர்த்து, தனது ஆயுதத் திட்டத்தில் கவனம் செலுத்தியதால், மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் மனித உரிமைகள் "சீர்குலைந்துவிட்டன" என்று அறிக்கை கண்டறிந்தது. நேர்காணல் செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்களுக்குப் போதிய உணவு இல்லை என்றும், ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது ஒரு "ஆடம்பரமான" விஷயம் என்றும் கூறினர். கோவிட் பெருந்தொற்று காலத்தில், கடுமையான உணவுப் பற்றாக்குறை இருந்ததாகவும், நாடு முழுவதும் மக்கள் பட்டினியால் இறந்ததாகவும் தப்பி வந்தவர்கள் கூறினர். அதே நேரத்தில், குடும்பங்கள் வர்த்தகம் செய்யும் முறைசாரா சந்தைகளை அரசு முடக்கியது. இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடுவது கடினமாகியது. மேலும், சீனாவுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்கியதன் மூலமும், எல்லையைக் கடக்க முயற்சி செய்பவர்களைச் சுட்டுத் தள்ள படையினருக்கு உத்தரவிட்டதன் மூலமும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாறியது. 2018-ம் ஆண்டு 17 வயதில் தப்பி ஓடிய ஒரு இளம் பெண், "கிம் ஜாங் உன்-னின் ஆரம்ப நாட்களில், எங்களுக்கு சில நம்பிக்கைகள் இருந்தன, ஆனால் அந்த நம்பிக்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை" என்று கூறினார். "அரசாங்கம் படிப்படியாக மக்கள் சுயமாக வாழ்வாதாரத்தை தேடுவதைத் தடுத்தது. மேலும், வாழ்வது என்பதே ஒரு தினசரி துன்பமாக மாறியது" என்று அவர் ஐ.நா ஆய்வாளர்களிடம் சாட்சியம் அளித்தார். "கடந்த 10 ஆண்டுகளில், அரசாங்கம் மக்களின் மீது கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. பொருளாதார, சமூக அல்லது அரசியல் முடிவுகளை அவர்களால் சொந்தமாக எடுக்க முடியவில்லை" என்று ஐ.நா. அறிக்கை கூறியது. கண்காணிப்புத் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட மேம்பாடுகள் இதற்கு உதவியுள்ளன என்றும் அறிக்கை கூறியது. "மக்களின் கண்களையும், காதுகளையும் தடுப்பதே" இந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கம் என்று தப்பி ஓடிய ஒருவர் ஆராய்ச்சியாளர்களிடம் கூறினார். "இது அதிருப்தி அல்லது புகாரின் சிறிய அறிகுறியையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒருவகையான கட்டுப்பாடு " என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறினர். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பியாங்யாங்கில் கிம்மின் தந்தை மற்றும் தாத்தாவின் ஓவியத்தின் முன் மக்கள் தலை வணங்கி மரியாதை செலுத்துகின்றனர். (புகைப்படம் செப்டம்பர் 9 அன்று எடுக்கப்பட்டது) அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிக அளவில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கை கண்டறிந்தது. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கட்டுமானம் அல்லது சுரங்கத் திட்டங்கள் போன்ற கடினமான வேலைகளைச் செய்ய "ஷாக் பிரிகேட்ஸ்" என்ற குழுக்களில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த வேலை, தங்கள் சமூக நிலையை மேம்படுத்தும் என்று தொழிலாளர்கள் நம்புகிறார்கள். ஆனால், வேலை மிகவும் ஆபத்தானது. மரணங்கள் சாதாரணமாக நிகழக்கூடியவை. எனினும், தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் மரணத்தை கிம் ஜாங் உன்-னுக்கு செய்த ஒரு தியாகமாகக் கூறி மகிமைப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான அனாதைகள் மற்றும் வீதியோர சிறுவர்களைக் கூட அது வேலைக்கு சேர்த்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 2014-ல் வெளிவந்த ஒரு முக்கியமான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. 2014 அறிக்கையில், வட கொரிய அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்வதாக முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. நாட்டின் மோசமான அரசியல் சிறை முகாம்களில் மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டது. அங்கு மக்கள் வாழ்நாள் முழுவதும் அடைக்கப்பட்டு "காணாமல் போவார்கள்". இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை, குறைந்தது நான்கு முகாம்கள் இன்னும் செயல்படுகின்றன என்றும், சாதாரண சிறைகளில் உள்ள கைதிகள் இன்னும் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர் என்றும் கண்டறிந்துள்ளது. மோசமான சிகிச்சை, அதிக வேலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் கைதிகள் இறப்பதை நேரில் கண்டதாக பல தப்பி ஓடியவர்கள் கூறினர். இருப்பினும், "காவலர்களின் வன்முறையில் ஒரு சிறிய குறைவு" உட்பட வசதிகளில் "சில குறைந்த அளவு மேம்பாடுகளை" ஐ.நா. கண்டது. பட மூலாதாரம், KCNA via Reuters படக்குறிப்பு, ரஷ்யாவின் புதின், சீனாவின் ஷி மற்றும் வட கொரியாவின் கிம் இந்த மாதத் தொடக்கத்தில் பெய்ஜிங்கில் சந்தித்தனர். நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. அழைப்பு விடுக்கிறது. எனினும், இது நடப்பதற்கு, ஐ.நா. பாதுகாப்பு சபையால் இது பரிந்துரைக்கப்பட வேண்டும். 2019 முதல், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா மற்றும் ரஷ்யா, வட கொரியா மீது புதிய தடைகளை விதிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மீண்டும் மீண்டும் தடுத்துள்ளன. கடந்த வாரம், கிம் ஜாங் உன், சீனத் தலைவர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் பெய்ஜிங்கில் நடந்த ஒரு ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றார். இது, வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அதன் குடிமக்களை நடத்தும் விதத்தை இந்த நாடுகள் அமைதியாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, வட கொரிய அரசாங்கம் தனது அரசியல் சிறை முகாம்களை ஒழிக்க வேண்டும், மரண தண்டனையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் மற்றும் அதன் குடிமக்களுக்கு மனித உரிமைகள் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது. "குறிப்பாக வட கொரிய இளைஞர்களிடையே மாற்றத்திற்கான தெளிவான மற்றும் வலுவான விருப்பம் இருப்பதாக எங்கள் அறிக்கை காட்டுகிறது" என்று ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் டர்க் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd07257xkx8o
  3. பரீட்சைகளுக்கான கால அட்டவணை வௌியீடு 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன்படி, 2025 (2026) கல்வி பொது தராதர (சாதாரண தரப்) பரீட்சை 2026-02-17 முதல் 2026-02-26 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர (உயர்தரப்) பரீட்சை 2026-08-10 முதல் 2026-09-05 வரை நடைபெற உள்ளது. அதேநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026-08-09 திகதியன்று இடம்பெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026-12-08 முதல் 2026-12-17 வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfjeof0r00e1qplpt6ooy0xs
  4. 14 Sep, 2025 | 05:03 PM மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட வடிகால்களினை தூர்வாருவதற்கு இடையூறாக வடிகால்களுக்குமேல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் வீதிகளில் போக்குவரத்து மற்றும் வெள்ள நீராட்டத்திற்கு இடையூறாக காணப்படுகின்ற நிலக்கற்கள், கட்டுமாணங்கள், பூச்செடிகள் என்பவற்றையும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் பதினான்கு நாட்களுக்குள் அகற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள். நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலுக்கு ஏற்ப மேற்படி இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை குடியிருப்பாளர்கள் அகற்றப்படாவிடின் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து எவ்வித முன்அறிவித்தலுமின்றி நல்லூர் பிரதேச சபை அவற்றினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கன் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225070
  5. ஸ்டீவ் ஜொப் இல்லாத வெற்றிடம் தெரிகிறது. அவங்கள் ஒரு தராதரத்தை வைத்து மக்களை அந்த மாயைக்குள் வைத்திருக்கிறார்கள், புதுமைகள் வரவர குறைகிறது. அதன் மீதான ஈர்ப்புள்ளவர்கள் தொடர்ந்து வாங்குகிறார்கள்.
  6. நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டுபாயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. போட்டி இடம்பெறும் டுபாய் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு பொலிஸாரினால் பார்வையாளர்களுக்கு புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொலிஸாரின் விதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்தப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சுப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmfjrvrwz00eaqplp154r6vrb
  7. பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி Published By: Vishnu 13 Sep, 2025 | 11:51 PM இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையே 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 140 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 14.4 ஓவர்களில் 04 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 140 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் பதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்கள், குசல் மெண்டிஸ் 03 ஓட்டங்கள், குசல் பெரேரா 09 ஓட்டங்கள், கமில் மிஷாரா ஆட்டமிழக்காமல் 46* ஓட்டங்கள், சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 10 * ஓட்டங்கள் எடுத்தனர். மஹேதி ஹசன் 02 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் தன்சிம் ஹசன் சாகிப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கெப்டன், பங்களாதேஷை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார், பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகள் இழந்து 139 ஓட்டங்களை எடுத்தது. அதன்படி, களத்தில் இறங்கிய பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் 28 ஓட்டங்களையும், தௌஹித் ஹிரிடோய் 8 ஓட்டங்களையும், மஹேதி ஹசன் 9 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 41* ஓட்டங்களையும் , ஷமிம் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 42* ஓட்டங்களையும் எடுத்தனர். தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய தன்சித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் எந்த ரன்களையும் எடுக்க முடியவில்லை. பந்துவீச்சில், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/225020
  8. பெரும் பொறுப்புகளுடன் இந்தியப் பெருங்கடலின் இதயத்தில் இலங்கை - பாதுகாப்பு செயலாளர் Published By: Digital Desk 1 14 Sep, 2025 | 09:24 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகில் பாதுகாப்புச் சவால்கள் மிகவும் சிக்கலானவையாகவும், எல்லை தாண்டியவையாகவும் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பன்முகப் பயிற்சிகள் இராணுவங்களுக்கு இடையிலான கூட்டுறவின் தேவையை உணர்த்துகின்றன. கூட்டுத் தயார்நிலை என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் உலகப் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமான மையமாகத் திகழ்கிறது. கடல் வழிப் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் நாடுகளை இணைத்து வர்த்தகத்தைத் தக்கவைக்கின்றது. இருப்பினும், இவை இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்ற அபாயங்கள், எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறன. இத்தகைய சூழலில், இந்தியப் பெருங்கடலின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் பொறுப்பு, பிராந்தியத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மீள்திறனை உறுதி செய்வதாகும். பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துகின்றன. பசிபிக் ஏஞ்சல் 2025 பயிற்சியின் வெற்றிக்கு பங்களித்த அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் இராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன். திறன்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அப்பால், இந்த பயிற்சியின் உண்மையான மதிப்பு, வளர்த்த நட்புறவில் உள்ளது. இங்கு ஏற்பட்ட பரஸ்பர புரிதலும், மனிதப் பிணைப்புகளும் எதிர்கால நெருக்கடிகளின் போது பெரிதும் உதவும். அமெரிக்கா மற்றும் அனைத்து பிராந்திய பங்காளர்களுடனும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட இலங்கை உறுதிபூண்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இணைந்து செயல்படுவதன் மூலம், பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/225022
  9. '5 கி.மீ.யை கடக்க 5 மணி நேரம்': திருச்சியில் கூடிய கூட்டமும் விஜயின் பேச்சும் உணர்த்துவது என்ன? பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, திருச்சியில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கினார் தவெக தலைவர் விஜய் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திருச்சியில் சனிக்கிழமையன்று (செப்டெம்பர் 13) மக்கள் சந்திப்புப் பயணத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தொடங்கினார். 'தி.மு.க ஆட்சியை விமர்சித்தாலும் கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு தவெக பலம் பெறவில்லை' எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். 'செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய்க்கு திருச்சியில் கூடி மக்கள் திரள் எதைக் காட்டுகிறது? அதுகுறித்து கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் என்ன சொல்கிறார்கள்? ஐந்து மணிநேர தாமதம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியில் சனிக்கிழமை (14/09/2025) தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் பேசவிருந்த மரக்கடை என்ற இடத்திற்கு விஜய் வந்து சேரவே ஐந்து மணிநேரத்துக்கும் மேல் தாமதமானது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் பயணம் என விஜய் அறிக்கை வெளியிட்டார். பட மூலாதாரம், TVK காலை 10.30 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட மரக்கடையில் அவரால் மாலை சுமார் 4 மணியளவில்தான் பேச்சைத் தொடங்க முடிந்தது. " போருக்குப் போவதற்கு முன்பாக போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வக் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள். அதுபோல ஜனநாயகப் போருக்காக இங்கு வந்துள்ளேன்" என்றார் விஜய். மக்களை மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.கவையும் பா.ஜ.கவையும் கேள்வி கேட்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறிய விஜய், "மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.கவையும் தி.மு.கவையும் விட மாட்டோம்" என்றார். தொடர்ந்து விஜய் பேசுவதை சரிவர கேட்க முடியாமல் ஒலிபெருக்கியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அங்கிருந்த தொண்டர்கள் சரிவர கேட்கவில்லை எனக் கூறியும் தனது பேச்சை விஜய் தொடர்ந்தார். தி.மு.க, பா.ஜ.கவை சாடிய விஜய் பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்வை தவெக எப்போதும் எதிர்க்கும் என விஜய் குறிப்பிட்டார். இந்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் சாடிய விஜய், "இதன்மூலம் தேர்தலில் தவறுகள் தான் நடக்கும். அதற்காகவே மத்திய பா.ஜ.க அரசு இதைக் கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார். மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்விலும் தென்னிந்தியாவுக்கு எதிராக மிகப் பெரிய சதி உள்ளதாகவும் இதை தவெக எப்போதும் எதிர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதி, கீழடி ஆய்வு முடிவுகள், பேரிடர் நிதி ஆகியவற்றில் மத்திய அரசு வஞ்சிப்பதாகக் கூறிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அடையும் துன்பங்களை பா.ஜ.க அரசு கண்டுகொள்ளவில்லை. கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் வேடிக்கை பார்க்கிறது" எனப் பேசினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக விஜய் விமர்சித்தார். தொடர்ந்து, 'கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலையில் மூன்று ரூபாய் குறைப்பு, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து ஆகியவற்றை செய்தீர்களா?' என தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். 'கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றம், ஆண்டுக்கு பத்து லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை, மாதம்தோறும் மின் கட்டணம், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை செய்வதாகக் கூறினீர்களே.. செய்தீர்களா?' எனவும் விஜய் கேள்வி எழுப்பினார். "தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க அரசு செய்வது துரோகம் என்றால் தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் அரசு செய்வது நம்பிக்கை மோசடி" எனவும் தவெக தலைவர் விஜய் விமர்சித்தார். "இரண்டுமே தவறு தான். இரண்டுமே ஏமாற்று வேலை தான். இரண்டு பேருமே ஏமாற்றுவதில் ஒரே வகையறா தான். இவர்கள் இருவரும் மறைமுக உறவுக்காரர்கள் என்று ஏன் சொல்கிறோம் என இப்போது புரிந்திருக்கும்" எனவும் விஜய் சாடினார். விஜய் பேச்சு பற்றி திருமாவளவன் கருத்து விஜயின் பிரசாரம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "களப்பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். இதன்மூலம் தேர்தல் அரசியலில் என்ன தாக்கம் ஏற்படப் போகிறது என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது" எனக் கூறினார். "தி.மு.க அணியை வீழ்த்துவோம் என பலமுனைகளில் இருந்து வரும் குரல்களில் விஜயின் குரலும் ஒன்று" எனக் கூறிய திருமாவளவன், "இது தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்" எனக் கூறினார். தவிர, தி.மு.க கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு விஜய் பலம் பெறவில்லை எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார். ' பார்வையாளர்கள் மட்டுமே' படக்குறிப்பு, இந்த கூட்டத்தை நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை என்கிறார் ஷ்யாம். "தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை விஜய் காட்டிக் கொள்வதாகவே இந்தக் கூட்டத்தைப் பார்க்க வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " எம்.ஜி.ஆர் நடத்திய கூட்டங்களில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றாலும் சித்தாந்தங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அங்கு இருந்தது" எனக் கூறுகிறார். "ஆனால், தவெக கூட்டத்தில் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அடுத்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல், தனித்துவம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு இருக்கிறது. அதற்கான பயிற்சியும் நெறிப்படுத்துதலும் தவெகவில் இல்லை" என்கிறார் ஷ்யாம். விஜயின் கூட்டத்துக்கு வருகிறவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆரின் முகத்துக்குக் கவர்ச்சி இருந்தாலும் அவருக்குப் பின்னால் சித்தாந்தத்தை வலிமையாக கொண்டு செல்வதற்கான படை இருந்தது" எனவும் குறிப்பிட்டார். திருச்சியில் கூடிய கூட்டம் குறித்துப் பேசும் ஷ்யாம், " கூட்டத்துக்குச் சென்றோம். செல்ஃபி எடுத்தோம் என்ற மனநிலையில் தொண்டர்கள் இருந்ததையே பார்க்க முடிந்தது. இது நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை" என்கிறார். இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ரசிகர் கூட்டம், வாக்குகளாக மாறும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கூட்டத்தை வழிநடத்திச் செல்வதற்கான கட்டமைப்பும் திட்டமிடலும் தவெகவில் இல்லை" என்கிறார். 'வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை' பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, நிபந்தனைகளே விதிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என குபேந்திரன் கேள்வி எழுப்புகிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரம் செல்வதற்கு சுமார் ஐந்து மணிநேரம் விஜய்க்கு தேவைப்பட்டதாகக் கூறும் குபேந்திரன், "இதைப் பெருமையாக அக்கட்சியினர் நினைக்கலாம். மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் எழுந்துள்ளது" எனத் தெரிவித்தார். "தொண்டர்களை நெறிப்படுத்தியிருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்காது" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், " கூட்டங்களுக்கு எம்.ஜி.ஆர் தாமதமாக வரும் நிகழ்வுடன் இதனை ஒப்பிட்டு சிலர் பேசுகின்றனர். அன்றைய காலகட்டம் வேறு. " என்கிறார். "மின் மாற்றிகள், கட்டடங்கள் மீது ரசிகர்கள் ஏறி நின்றனர். நல்லவேளையாக முன்கூட்டியே மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?" எனக் கேள்வி எழுப்பும் குபேந்திரன், "கூட்டத்தைக் கூட்டுவதால் ஏற்படும் அசம்பாவிதங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்" எனக் கூறுகிறார். "கூட்டத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் அது வெற்றிக்கான வாக்குகளாக மாறாது. ஐந்து கோடி வாக்குகள் பதிவாகும் மாநிலத்தில் வெறும் லட்சங்களில் விழும் வாக்குகளால் வெற்றி கிடைக்காது" எனக் கூறும் ஷ்யாம், " இவை வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார். தவெகவுக்கு என்ன பலன்? "திருச்சி கூட்டத்தின் மூலம் தவெகவை நோக்கி சிலர் கூட்டணிக்கு வருவார்கள்" எனக் கூறும் ஷ்யாம், " அது கட்சிக்கு லாபமாக இருக்கும். ஆனால், தனது வாக்காளர்கள் யார் என்பதை விஜய் முடிவு செய்ய வேண்டும். தன்னைப் பார்க்க வந்தவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதா என்பதை அவர் பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். தவெகவின் விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு, திருச்சி பிரசாரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய ஷ்யாம், "மூன்று கூட்டங்களிலும் அரசியல்மயப்படுத்தும் வேலைகள் என எதுவும் இல்லை. திரைக் கவர்ச்சிக்கு பின்னால் கற்றுக் கொண்டது என்ன என்பது தான் முக்கியமானது" என்கிறார். "ஆளும்கட்சிகள் மீது விமர்சனம் வைப்பது தான் தவெகவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பலன் இல்லை என விஜய் பேசினார். ஆனால், அவை என்னென்ன எனப் பட்டியல் போட்டுப் பேசியிருக்க வேண்டும்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். 'அண்ணா, எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்' படக்குறிப்பு, எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை என்கிறார் லயோலா மணி பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி, "இதுபோன்ற கூட்டம் அண்ணா, எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்க்கு வந்து சேர்கிறது. இது தானாக சேர்ந்த கூட்டமாக உள்ளது" என்கிறார். "போக்குவரத்து நெரிசலை காவல்துறை சரியான முறையில் கையாளவில்லை" எனக் கூறும் லயோலா மணி, "கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் கட்சியின் நிர்வாகிகளும் தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்" எனக் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் அரசியல்மயப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், "இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளோம். எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce8421nkdlno
  10. 14 Sep, 2025 | 12:24 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. மேலும் சில கட்டட தொகுதிகள் அமைக்கப்பட்டு விடுதிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225045
  11. வேறு அரசு மாறிவிட்டால் ஓய்வூதியம் போன்ற சலுகைகள் திரும்ப வரலாம். அரச ஊழியரின் சம்பளத்தில் ஓய்வூதியத்திற்கு என பணம் கழிக்கப்பட்டே 60 வயதின் பின் வழங்குகிறார்கள். எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்கள் போல மொத்தமாக வழங்கலாம்.
  12. யாழ் இணையம் மிகமிக மெதுவாக இயங்குகிறது!!! செய்திகளை தேடுவதற்கும் பிறகு இணைப்பதற்கும் நீண்ட நேரம் எடுக்கிறது, நோட்டிபிகேசனை தட்டினால் சுழலுதே ஒழிய ஒன்றும் காட்டாதாம்?! @மோகன் அண்ணா கொஞ்சம் கவனியுங்கோ. அதேவேளை பிபிசி, வீரகேசரி தட்ட தட்ட திறக்குது, என்னுடைய இணைய இணைப்பு காரணமில்லை என நினைக்கிறேன்.
  13. விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார். கல்முனை ஆதரவைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 13.09.2025 காலமானார். https://www.kalmunainet.com/archives/111299 கண்ணீரஞ்சலிகள், ஓம் சாந்தி.
  14. சுதந்திர பாலத்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா - ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் கூறியது என்ன? பட மூலாதாரம், MENAHEM KAHANA/AFP via Getty Images படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 3 மணி நேரங்களுக்கு முன்னர் தனி மற்றும் சுதந்திரமான பாலத்தீன தேசத்தை நிறுவும் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 193 உறுப்பு நாடுகளில் 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகின. இந்தியா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், யுக்ரேன், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் 'நியூயார்க் பிரகடனம்' எனப்படும் இந்த முன்மொழிவை ஆதரித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உட்பட மொத்தம் 10 நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்துள்ளன. முன்னதாக, மேற்குக் கரையில் உள்ள அடுமிம் குடியேற்றத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஒருபோதும் பாலத்தீன நாடு உருவாகாது, இந்த இடம் எங்களுடையது" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், பாலத்தீனர்கள் உரிமை கோரும் நிலத்தில் புதிய குடியேற்றங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் அவர் கையெழுத்திட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இதன் கீழ், பாலத்தீனியர்கள் உரிமை கோரும் நிலத்தில் குடியேற்றங்கள் கட்டப்படும். செப்டம்பர் 22 ஆம் தேதி நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியமான கூட்டம் நடைபெற உள்ள நேரத்தில் இந்த திட்டம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அக்கூட்டத்தில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், பாலத்தீனுக்கு முறையான தேசிய அந்தஸ்து வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதேபோல், நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இதே போன்ற நடவடிக்கை குறித்து பரிசீலித்து வருகின்றன. நியூயார்க் அறிக்கையில் என்ன இருக்கிறது? பட மூலாதாரம், news.un.org படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பின் முடிவு ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது சபை அமர்வில் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியபோது, "மத்திய கிழக்கில் அமைதிக்கான முக்கிய படி, இரு நாடு தீர்வை செயல்படுத்துவதாகும். சுதந்திரம், இறையாண்மை, ஜனநாயகம் கொண்ட இரண்டு நாடுகளாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் அமைதி, பாதுகாப்புடன் அருகருகே வாழ வேண்டும்" என்று தெரிவித்தார். 'நியூயார்க் பிரகடனம்' என அழைக்கப்படும் இந்த ஏழு பக்க ஆவணம், இரு நாடுகள் தீர்வை நோக்கி "உறுதியான, நேர்மையான, மாற்ற முடியாத" நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது. இதில், காஸா போரை நிறுத்த கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இஸ்ரேல்–பாலத்தீன மோதலுக்கு நியாயமான, அமைதியான தீர்வை ஏற்படுத்த வேண்டும், எதிர்கால காஸா நிர்வாகத்தில் ஹமாஸுக்கு இடமில்லை, "ஹமாஸ் உட்பட அனைத்து பாலத்தீனக் குழுக்களும் தங்கள் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைத்து, ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்கு பாடுபட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து பாலத்தீனப் பிரச்னை தொடர்பாக சர்வதேச கூட்டம் நடத்தியது. அப்போதிருந்தே நியூயார்க் பிரகடனத்துக்கான விவாதம் தொடங்கியது. மேலும், இந்த முன்மொழிவை அரபு லீக் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. 17 ஐ.நா. உறுப்பு நாடுகள் (பல அரபு நாடுகள் உட்பட) இதற்கு கையெழுத்திட்டுள்ளன. முன்மொழிவுக்கான எதிர்வினைகள் ஐ.நா. பொது சபையில் பாலத்தீன் தேசம் குறித்த தீர்மான விவாதத்தின் போது, இஸ்ரேல் தூதர் டேனி டானன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். "இது ஒருதலைப்பட்சமான அறிவிப்பு. இது அமைதிக்கான படியாக இல்லை. மாறாக, இந்த சபையின் நம்பகத்தன்மையை குறைக்கும் ஒரு வெற்று சைகை," என்று அவர் தெரிவித்தார். அவர், "இந்தத் தீர்மானத்தால் யாராவது வெற்றி பெற வாய்ப்பு இருக்குமானால், அது ஹமாஸ் தான். இதை அவர்கள் 'அக்டோபர் 7 தாக்குதலின் விளைவு' என்று அழைப்பார்கள்," என்றார். இதற்கிடையில், கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விரைவில் இஸ்ரேல் செல்ல உள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், அவரது பயணத்தின் போது, "ஹமாஸ் பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கும் பாலத்தீன் அரசை ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பது உள்ளிட்ட, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவதில் அமெரிக்காவின் நிலைப்பாடு" குறித்து ரூபியோ விவாதிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு பட மூலாதாரம், Kiyoshi Ota/Bloomberg via Getty Images படக்குறிப்பு, இஸ்ரேல்-பாலத்தீன விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இரு நாடுகள் கோட்பாடாக இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமை ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது. இதே நேரத்தில், இந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல்–காஸா போர் நிறுத்தம் குறித்த வாக்கெடுப்பில் இந்தியா விலகியிருந்தது. அந்த நிலைப்பாடு அப்போது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த வாக்களிப்பில் இருந்து விலகிய 19 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இத்தகைய பின்னணியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா ஆதரவு தெரிவித்திருப்பது, ஒரு முக்கிய ராஜ்ஜீய நடவடிக்கை எனக் கருதப்படுகிறது. ஐ.நா.வில் இந்தியாவின் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், "இஸ்ரேல் மற்றும் பாலத்தீன பிரச்சினையில், பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் அமைதியாக வாழக்கூடிய இறையாண்மை மற்றும் சுதந்திரமான பாலத்தீன அரசை நிறுவும் இரு நாடுகள் தீர்வை இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். பாலத்தீனப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு, நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என வெளியுறவு அமைச்சகம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. இதை வலியுறுத்தி, "பாலத்தீன மக்களுக்கு சொந்த எல்லைகளுடன் கூடிய, சுயாட்சி கொண்ட ஒரு நாடு அமைவது அவசியம். அங்கு அவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும்; அதே நேரத்தில் இஸ்ரேலுடனும் அமைதியாக இணைந்து வாழ வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசு, டிசம்பர் 2024 இல், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் பிரச்சினையில் இரு நாடுகள் தீர்வை இந்தியா ஆதரிக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியது . பாலத்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக வேண்டும் என்று இந்தியாவும் நம்புகிறது. ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் இதேபோன்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக , இந்திய அரசாங்கம் இரு நாடுகள் தீர்வுக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது. பட மூலாதாரம், IndiaUNNewYork @x படக்குறிப்பு, காஸாவில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையில் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்தார். முன்னதாக ஏப்ரல் 2023 இல் , ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது, அதில் இஸ்ரேல் 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும், புதிய குடியேற்றங்களை நிறுவுவதையும் ஏற்கனவே உள்ள குடியேற்றங்களை விரிவுபடுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்தது. இந்த ஆண்டு அக்டோபரில் , காஸாவில் 'பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிப்பதற்கும் சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும்' ஒரு தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜோர்டான் கொண்டு வந்த இந்த முன்மொழிவு மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இதன் பின்னர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஆண்டு டிசம்பரில் , மனிதாபிமான அடிப்படையில் காஸாவில் போர்நிறுத்தத்தை அமல்படுத்தும் திட்டத்தை இந்தியாவும் ஆதரித்தது. இருப்பினும், கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பிரதேசத்தில் மனித உரிமைகள் நிலைமை குறித்த தீர்மானத்தில் இந்தியா ஜனவரி 2023 இல் வாக்களிக்கவில்லை . அமெரிக்காவும் இஸ்ரேலும் வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன, அதே நேரத்தில் இந்தியா உட்பட பிரேசில், ஜப்பான், மியான்மர் மற்றும் பிரான்ஸ் ஆகியவை வாக்களிப்பில் இருந்து விலகின. பாலத்தீனம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பாலத்தீன பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு, நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் அங்கமாகக் கருதப்படுகிறது. இதனை வெளியுறவு அமைச்சகம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. பாலத்தீனத்திற்கான இந்தியாவின் ஆதரவு பல ஆண்டு கால பழமையானது. 1974 ஆம் ஆண்டில், பாலத்தீன விடுதலை அமைப்பை பாலத்தீன மக்களின் ஒரே மற்றும் சட்டபூர்வமான பிரதிநிதியாக அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடாக இந்தியா ஆனது. 1988 ஆம் ஆண்டில், பாலத்தீன அரசை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியது. 1996 ஆம் ஆண்டில், இந்தியா தனது பிரதிநிதி அலுவலகத்தை காஸாவில் திறந்தது, பின்னர் அது 2003 இல் ரமல்லாவிற்கு மாற்றப்பட்டது. பல பன்முக மன்றங்களில் பாலத்தீனக் கோரிக்கையை ஆதரிப்பதில் இந்தியா தீவிர பங்காற்றியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 53வது பொதுச் சபை அமர்வின் போது, பாலத்தீனியர்களின் சுயநிர்ணய உரிமை குறித்த வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவாகவும் வாக்களித்தது. இஸ்ரேலின் பிரிவினைச் சுவரைக் கட்டும் முடிவை எதிர்த்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானத்தையும் 2003 அக்டோபரில் இந்தியா ஆதரித்தது. 2011 ஆம் ஆண்டில், பாலத்தீனம் யுனெஸ்கோவில் முழு உறுப்பினராக ஆவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. 2012 ஆம் ஆண்டில், பாலத்தீனம் ஐ.நா.வில் வாக்களிக்கும் உரிமைகள் இல்லாமல் "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக" இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்திற்கு இந்தியா இணை அனுசரணை வழங்கியது. செப்டம்பர் 2015 இல், ஐ.நா. வளாகத்தில் பாலத்தீனக் கொடியை நிறுவுவதையும் இந்தியா ஆதரித்தது. பாலத்தீனியர்களுக்கு பல திட்டங்களைக் கட்டுவதில் இந்தியாவும் உதவி வருகிறது. பிப்ரவரி 2018 இல், பாலத்தீனப் பகுதிக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆனார். அந்த நேரத்தில், பாலத்தீன நிர்வாகத் தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம், பாலத்தீன மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளதாக உறுதியளித்ததாக மோதி கூறினார். "பாலத்தீனப் பகுதி ஒரு இறையாண்மை கொண்ட, சுதந்திரமான நாடாக அமைதியான சூழலில் வாழ்வதை இந்தியா காண விரும்புகிறது" என்று பிரதமர் மோதி கூறியிருந்தார். இந்தியாவுக்கும் இஸ்ரேலுடனும் இடையே உள்ள ஆழமான உறவுகள் பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images படக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டில் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரதமர் மோதி . இந்தியா இஸ்ரேலிடமிருந்து முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து வருகிறது. இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே வழக்கமான பரிமாற்றமும் உள்ளது. பாதுகாப்பு விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பணிக்குழுவும் உள்ளது. பிப்ரவரி 2014 இல், இந்தியாவும் இஸ்ரேலும் மூன்று முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தங்கள் குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி செய்துகொள்வது, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களைப் பாதுகாப்பது தொடர்பானவை. 2015 முதல், இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலின் தேசிய போலீஸ் அகாடமிக்கு ஒரு வார கால பயிற்சிக்காக வருகை புரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும்,இரு நாடுகளிலிருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் வந்து செல்கின்றனர். இந்தியா தொடர்பான பல படிப்புகள் டெல் அவிவ் பல்கலைக்கழகம், ஹீப்ரு பல்கலைக்கழகம் மற்றும் ஹைஃபா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce320rgqk9vo
  15. பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது Published By: Vishnu 13 Sep, 2025 | 01:55 AM 2025 ஆசிய கோப்பையின் 04வது போட்டியாக 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஓமன் அணியை 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் வெள்ளிக்கிழமை (12) தொடங்கிய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டை தெரிவு செய்யத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் 43 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார், சாஹிப்சாதா ஃபர்ஹான் 29 ஓட்டங்கள், ஃபக்கர் ஜமான் ஆட்டமிழக்காமல் 23* ஓட்டங்கள் எடுத்தார், ஹசன் நவாஸ் 09 ஓட்டங்கள் எடுத்தார், பாகிஸ்தான் அணிக்காக முகமது நவாஸ் 19 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சில் ஓமன் அணியினர் ஷா பைசல் மற்றும் ஆமிர் கலீம் தலா 03 விக்கெட்டுகளையும், முகமது நதீம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 161 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய ஓமன் அணி 16.4 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. ஆமிர் கலீம் 13 ஓட்டங்கள் எடுத்தார், கேப்டன் ஜதிந்தர் சிங், சுஃப்யான் மெஹ்மூத் மற்றும் ஷா பைசல் தலா ஒரு ஓட்டங்கள் எடுத்தார்கள், ஹம்மத் மிர்சா 27 ஓட்டங்கள் எடுத்தார், முகமது நதீம் 3 ஓட்டங்கள் எடுத்தார், விநாயக் சுக்லா 2 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப், சுஃபியான் முகீம், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது நவாஸ், அப்ரார் அகமது, ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/224952
  16. பட மூலாதாரம், Zona Arqueológica Caral படக்குறிப்பு, பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர்,ஹீதர் ஜாஸ்பர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். இது அமெரிக்க நாகரிகத்தின் தொடக்கத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை மாற்றக்கூடும். லிமாவிலிருந்து நான்கு மணி நேர வடக்கில் உள்ள சூப் பள்ளத்தாக்கு, காற்று வீசும் வெறிச்சோடிய சமவெளி, இடிந்து போன அடோப் சுவர்கள், வெப்பம் மிளிரும் வறண்ட மலைச்சரிவுகள் போன்ற அனைத்தும் அங்கு வாழ்வதற்கே பொருத்தமில்லாத சூழலை உருவாக்குகின்றன. ஆனால், இவ்வளவு வறட்சியான நிலத்தில் ஒருகாலத்தில் உலகின் முதல் பெரிய நாகரிகங்களில் ஒன்று மலர்ந்திருந்தது என்பதை கற்பனை செய்வதே கடினம். அந்த மணலுக்கு அடியில் புதைந்து கிடந்த ஒரு புதிய கண்டுபிடிப்பு, இப்போது அமெரிக்காவின் வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. ஜூலை 2025-ல், பெருவிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் முனைவர் ரூத் ஷாடி, கேரல் நாகரிகத்தைச் சேர்ந்த பெனிகோ என்ற நகரத்தை வெளிக்கொண்டுவந்தார். இந்த 3,800 ஆண்டு பழமையான நகரத்தில், கோயில்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் உட்பட 18 கட்டமைப்புகள் உள்ளன. முக்கியமாக, இந்த நகரம் ஒரு புதிய உண்மையை வெளிப்படுத்துகிறது. கேரல் மக்கள், போர் புரியும் மனநிலைக்கு மாறவில்லை என்பது தான் அந்த உண்மை. அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த அமைதியான வாழ்வியல் உத்தி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பும் எவ்வாறு வியப்பூட்டியதோ, இன்றும் அதே போல் வியப்பூட்டுகிறது. "மோதல்கள் இல்லாத வாழ்க்கை என்பதையே கேரல் நாகரிகம் எப்போதும் முன்னிறுத்தியது. பெனிகோ அந்த பார்வையைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது." என்று சூப் பள்ளத்தாக்கில் முப்பது ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்திவரும் முனைவர் ஷாடி கூறினார். அமெரிக்காவின் அமைதியான நாகரிகம் ஆஸ்டெக், மாயா, இன்கா நாகரிகங்களுக்கு முன்னரே, பெருவின் வறண்ட கடற்கரைப்பகுதி கேரல் மக்களின் தாயகமாக இருந்தது. உலகின் மிகவும் பழமையான மற்றும் அமைதியான சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இவர்களின் முக்கிய குடியேற்றம் கேரல்-சூப். அமெரிக்க நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்படும் இந்த இடம், 2009 முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, இது மெசபடோமியா மற்றும் எகிப்தின் ஆரம்ப நகரங்களுடன் இணைந்து செழித்து வளர்ந்தது. "கேரல் [கிமு 3000 முதல் கிமு 1800 வரை] மக்கள் வசித்த இடமாக இருந்தது," என்று தொல்பொருள் ஆய்வாளர் முனைவர் ரூத் ஷாடி விளக்குகிறார். பட மூலாதாரம், Zona Arqueológica Caral படக்குறிப்பு, பெனிகோவின் கண்டுபிடிப்பு கேரலின் நிலை குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால், பழைய உலக நாகரிகங்களைப் போல அல்லாமல், கேரலில் தற்காப்புச் சுவர்களும், ஆயுதங்களுக்கான சான்றுகளும் இல்லை. 1994-இல் ஷாடி அகழ்வாய்வை தொடங்கியபோது, அவர் வர்த்தகம், இசை, சடங்கு மற்றும் ஒருமித்த கருத்து அடிப்படையில் அமைந்த ஒரு சமூகத்தை கண்டுபிடித்தார். ஷாடியின் ஆய்வின்படி, கேரலில் சுமார் 3,000 பேர் வாழ்ந்தனர். அருகிலுள்ள பல சிறிய கிராமங்களும் அதனுடன் இணைந்திருந்தன. சூப் பள்ளத்தாக்கின் நிலப்பகுதி, பசிபிக் கடற்கரை, வளமான ஆண்டியன் பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைவிலுள்ள அமேசான் பகுதியை இணைக்கும் முக்கிய இடமாக இருந்தது. இதனால், கலாசாரம் மற்றும் வர்த்தகத்தின் பரிமாற்றம் நடைபெறும் ஒரு வலையமைப்பு உருவானது. கேரல் மக்கள் பருத்தி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், பழங்கள் மற்றும் மிளகாய்களை வளர்த்தனர். மலைப் பகுதிகளில் இருந்து கனிமங்கள், அமேசானில் இருந்து சிறு குரங்குகள் மற்றும் மக்காவ் போன்ற விலங்குகளை செல்லப்பிராணிகளாகப் பெற்றனர். கடற்கரையில், அவர்கள் நத்தைகள், கடற்பாசி மற்றும் மீன்களை சேகரித்தனர். "அவர்கள் காடு, மலை, மேலும் ஈக்வடார், பொலிவியா வரை உள்ள மக்களுடன் கலாச்சார தொடர்புகளை வைத்திருந்தனர். ஆனால் அந்த உறவுகள் எப்போதும் அமைதியானவையாகவே இருந்தன," என்கிறார் ஷாடி. இதற்கு மாறாக, ஆஸ்டெக், மாயா, இன்கா நாகரிகங்கள் ராணுவ வலிமையை நம்பிய நாடுகளாக இருந்தன. அவை அண்டை இனக்குழுக்களுக்கு எதிராக, அடிக்கடி நீண்டகாலப் போர்களை மேற்கொண்டன. கேரல் நாகரிகத்தின் புத்திசாலித்தனம், கட்டிடக்கலை மற்றும் கலைகளிலும் வெளிப்பட்டது. நகரின் ஆம்பிதியேட்டர் (வட்ட அரங்கு), பசிபிக் விளிம்பில் ஏற்படும் கடும் நிலநடுக்கங்களையும் தாங்கும் வகையில் கட்டப்பட்டது. அதில் பெரிய இசை நிகழ்ச்சிகளுக்கான சிறப்பான ஒலி வடிவமைப்பும் இருந்தது. அகழ்வாய்வுகளில் 32 நீளமான புல்லாங்குழல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில பெலிகன் எலும்புகளில் செதுக்கப்பட்டவை, சில குரங்கு மற்றும் காண்டோர் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டவை. இது தொலைதூர வர்த்தகமும் கலாச்சார இணைப்பும் நடந்ததற்கான பொருட்சான்றாகக் கருதப்படுகிறது. "இந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, அவர்கள் கடற்கரை, மலை மற்றும் காடுகளில் இருந்து வந்த மக்களை சடங்குகள் மற்றும் விழாக்களில் வரவேற்றனர்," என்று ஷாடி விளக்கினார். பட மூலாதாரம், Zona Arqueológica Caral படக்குறிப்பு, கேரல் மற்றும் பெலிகோவின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று அவற்றின் சுற்று மைய பிளாசாக்கள் ஆகும். பாலைவனத்தின் சரிவு சமூக ரீதியாக வெற்றிகரமாக இருந்தாலும், கேரல் நாகரிகம் ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டது. அதுதான் காலநிலை மாற்றம். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் தாக்கம் செலுத்திய ஒரு பருவநிலை மாற்றத்தின் காரணமாக 130 ஆண்டுகள் நீடித்த வறட்சி ஏற்பட்டது. இதனால் பயிர்கள் நாசமாயின, பஞ்சம் ஏற்பட்டது. கேரலின் பிரமாண்டமான பிளாசாக்களும் பிரமிடுகளும் பாலைவனத்துக்குள் மறைந்தன. "காலநிலை மாற்றம் கேரலில் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆறுகளும் வயல்களும் வறண்டு போனதால், அவர்கள் நகரங்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோன்ற நிலை மெசபடோமியாவிலும் ஏற்பட்டது," என்று ஷாடி கூறுகிறார். பல ஆண்டுகளாக, பசியால் வாடிய மக்கள் கடற்கரைக்குச் சென்று மட்டியும் மீனும் சேகரித்து வாழ்ந்ததாக ஷாடியின் குழு நினைத்தது. ஹுவாரா பள்ளத்தாக்கில் உள்ள விச்சாமா எனும் இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி இதை உறுதிப்படுத்துவதாகத் தோன்றியது. ஆனால், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெனிகோ நகரம், அந்தக் கதைக்கு மாற்றாக ஒரு புதிய வரலாற்றைச் சொல்கிறது. பெனிகோ: உயிர் வாழ உதவிய புதிய அணுகுமுறை கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில், கேரல் -சூப்பிலிருந்து வெறும் 10 கி.மீ தூரத்தில், ஆற்றின் மேல்பகுதியில் பெனிகோ நகரம் அமைந்துள்ளது. பனிப்பாறைகளில் இருந்து வரும் நீருக்கு அருகில் குடியேறிய சில கேரல் மக்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட சூப் பள்ளத்தாக்கில் தங்களைத் தக்கவைத்துக் கொண்டனர். ஆறுகள் வற்றிய நிலத்தில், மலை உருகும் நீருக்கு அருகில் வாழ்வதே அவர்கள் உயிர் வாழ்வதன் முக்கிய காரணமாக இருந்தது. இதில் வியக்கத்தக்கது, அவர்கள் இடமாற்றம் செய்தது மட்டுமல்ல.அந்த மாற்றத்திற்கு சமூகம் எப்படி பதிலளித்தது என்பதும் தான். பெனிகோவில் போர், ஆயுதங்கள், அல்லது கோட்டைச் சுவர்களுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. பற்றாக்குறை காலத்தில் இது மிகவும் அரிதான நிகழ்வாகும். பட மூலாதாரம், Zona Arqueológica Caral படக்குறிப்பு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன சிலைகள் மற்றும் சிற்பங்களை கண்டுபிடித்துள்ளனர். "பெனிகோ, இயற்கையுடன் இணக்கமாகவும், பிற கலாச்சாரங்களை மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளும் கேரல் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது," என்று முனைவர் ரூத் ஷாடி கூறினார். அகழ்வாய்வுகள், கலை மற்றும் சடங்குகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் வெளிப்படுத்துகின்றன. ஷாடியின் குழு அழகாக வடிவமைக்கப்பட்ட களிமண் சிலைகள், மணிகள் கொண்ட நெக்லஸ்கள், மற்றும் செதுக்கப்பட்ட எலும்புகளை கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒன்று மனித மண்டை ஓட்டின் வடிவில் இருந்தது. ஒரு குறிப்பிடத்தக்க சிற்பம், சிகை அலங்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் தலை, ஹெமடைட் நிறமியால் சிவப்பாக வண்ணமிடப்பட்ட முகத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருட்கள், மக்கள் தொகை குறைந்திருந்த போதிலும், அந்தச் சமூகம் தனது அடையாளத்தையும் ஒற்றுமையையும் காப்பாற்ற கலாச்சார வெளிப்பாட்டில் முக்கியத்துவம் கொடுத்ததை காட்டுகின்றன. இந்த தொல்பொருள் தளம் ஏற்கனவே பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அங்குள்ள சடங்கு கோயில்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களை நேரில் சென்று காணலாம். விளக்கக் கண்காட்சிகளுடன் கூடிய புதிய பார்வையாளர் மையம், கேரல் மற்றும் பெனிகோவின் தனித்துவ அம்சமான வட்ட மைய பிளாசாக்களை பிரதிபலிக்கும் வட்ட வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த பிளாசாக்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிர்வாகப் பகுதிகள் என்று கருதும் இடங்களில் அமைந்துள்ளன. இதுவே அந்த சமூகம் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இயங்கியிருக்கலாம் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அது, சுமார் 2,000 ஆண்டுகள் கழித்து தோன்றிய பண்டைய கிரேக்க ஜனநாயக அமைப்பை போன்றதாக இருந்திருக்கலாம். கேரல் நகரத்தில் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரியும் காஸ்பர் சிஹு, இந்த இடங்கள் இன்னும் பரவலாக அறியப்படுவதற்கு முன்பே பயணிகள் வர வேண்டும் என்று ஊக்குவிக்கிறார். "சூப் பள்ளத்தாக்கில் வழிகாட்டுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில் இது முக்கிய சுற்றுலா பாதையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். பெனிகோவில் அகழ்வாராய்ச்சிகள் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளன. பல கட்டிடங்கள் இன்னும் பாலைவன மணலின் கீழே புதைந்திருக்கின்றன. "நாம் இன்னும் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது"என்று ஷாடி கூறுகிறார். பட மூலாதாரம், Zona Arqueológica Caral படக்குறிப்பு, பெனிகோவில் அகழ்வாராய்ச்சிகள் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளன. கடந்த காலத்திலிருந்து பெற்ற பாடங்கள் பெனிகோவின் பிளாசாக்களில் நிற்கும்போது, ஒரு பண்டைய சமூகம் போரால் அல்லாமல், புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி, நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டது என்பதை நினைக்கும்போது வியப்பாய் உள்ளது. உயிர்வாழ அவர்கள் தேர்ந்தெடுத்த உத்திகள்: தண்ணீருக்கு அருகில் குடியேறுதல், வர்த்தக வலையமைப்புகளைப் பேணுதல், கலை மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தல் 3,800 ஆண்டுகளுக்கு முன், கடுமையான அழுத்தத்திலும் ஒத்துழைப்பால் ஒரு சமூகம் நிலைத்திருக்க முடியும் என்பதை இவை நினைவூட்டுகின்றன. இந்தப் பாடம் இன்று மிகவும் அவசரமாக உணரப்படுகிறது. பெரு, இன்னும் தனது நீர் விநியோகத்திற்காக, ஆண்டியன் பனிப்பாறைகளையே நம்பியுள்ளது. ஆனால், கடந்த 58 ஆண்டுகளில் அதன் வெப்பமண்டல பனியின் 56% இழந்துவிட்டது என்று அரசாங்க பனிப்பாறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். "காலநிலை மாற்றத்தைக் கையாள பல விஷயங்களை நாம் செய்ய வேண்டும். மனித சமூகம் நல்ல வாழ்க்கை தரத்துடனும் பரஸ்பர மரியாதையுடனும் தொடர, வாழ்க்கையை நாம் எப்படிப் பார்க்கிறோம், நம் கிரகத்தில் நடக்கும் மாற்றங்களை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில் மாற்றம் அவசியம்," என்று முனைவர் ஷாடி கூறுகிறார். பெருவின் பாலைவன மணலில் பாதியாக புதைந்து கிடந்தாலும், பெனிகோ நகரம் உலகிற்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கூறும் வரலாற்று கண்டுபிடிப்பாகவே உணரப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5jzwvd987o
  17. பேருந்துகளை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் அந்த சுற்றுநிருபம் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் மேலதிக பாகங்களை நிறுவுவது தொடர்பான பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmfi1h7g400diqplppvu5a3f9
  18. இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா? - புதிய ஐஃபோன் 17 ஏன் இவ்வாறு உள்ளது? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கிரஹாம் ஃப்ரேசர் தொழில்நுட்ப செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்மார்ட்ஃபோன்களின் விஷயத்தில், ஆப்பிள் என்ன செய்தாலும் மற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் அதையே பின்பற்றும். எனவே, இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் பாரம்பரிய சிம் கார்டு இல்லாத ஐபோனை அறிமுகப்படுத்தியிருப்பது, அனைவரும் அறிந்த இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அனைத்து ஃபோன் பயனர்களுக்கும், தங்கள் சாதனங்களைச் செயல்பட வைக்க செருக வேண்டிய சிறிய பிளாஸ்டிக் கார்டுகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள், ஆனால், ஐபோன் ஏர்-ஐ வாங்குபவர்களுக்கு அது பழங்கால விஷயமாகிவிடும். இந்த ஐபோன் இ-சிம் உடன் மட்டுமே இயங்கும். இது பயனர்கள் தங்கள் நெட்வொர்க்கை அல்லது திட்டங்களை மாற்ற, சிம் கார்டு ட்ரே-ஐத் திறக்க ஒரு குண்டூசியைக் கொண்டு குடைந்து சிரமப்படத் தேவையில்லை. CCS இன்சைட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கெஸ்டர் மான், பிபிசி செய்தியிடம், ஆப்பிளின் இந்த அறிவிப்பு "பொருள்ரீதியான சிம் கார்டின் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது" என்று கூறினார். ஆனால், நாம் அனைவரும் நமது சிறிய சிப் உள்ள பிளாஸ்டிக் துண்டுகளை நிரந்தரமாகக் கைவிட எவ்வளவு காலம் ஆகும்? அது நமது ஃபோன்களைப் பயன்படுத்தும் விதத்தில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்? 'சிம் கார்டு ட்ரே மறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பல ஆண்டுகளாக சிம் கார்டுகள் ஸ்மார்ட்ஃபோன்களுடன் இணைந்ததாக இருந்துள்ளன. சிம் என்பதன் விரிவாக்கம் Subscriber Identity Module (பயனர் அடையாள மாதிரி) என்பதாகும். இந்தச் சிப் உங்கள் ஃபோனின் ஒரு முக்கியப் பகுதியாகும். இது உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநருடன் இணைய, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்த, உங்கள் டேட்டாவை இயக்க உதவுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இ-சிம் ஒரு மாற்று வழியாக உருவெடுத்துள்ளது. புதிய ஃபோன்களில் பயனர்களுக்கு ஒரு பாரம்பரிய சிம் அல்லது இ-சிம் இரண்டையும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. செவ்வாய்க்கிழமை, ஆப்பிள் குடும்பத்தின் புதிய, மற்றும் மிக மெல்லிய தயாரிப்பான புதிய ஐபோன் ஏர் பற்றிய அறிவிப்பில், அது இ-சிம்-ஐ மட்டுமே கொண்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று அந்த தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனம், கூறியது. இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன் உலகம் முழுவதும் கிடைப்பது இதுவே முதல்முறை. அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்கள் 2022 முதல் இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஆப்பிள் நிறுவனம் கூட வழக்கமான சிம் கார்டை முழுமையாகக் கைவிடவில்லை. இந்த வாரம் அது அறிவித்த மற்ற புதிய ஐபோன்களான – 17, 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை சில சந்தைகளில் இ-சிம் மட்டுமே கொண்டவையாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரும்பாலான நாடுகளில் அவை வழக்கமான சிம் கார்டு ஸ்லாட்டுகளைத் தக்கவைத்துக் கொள்ளும். சாம்சங் மற்றும் கூகிள் போன்ற பிற பெரிய உற்பத்தியாளர்களும், இ-சிம்களை ஒரு தேர்வாக ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலான இடங்களில் வழக்கமான சிம் கார்டுகளை இன்னும் பராமரித்து வருகின்றனர். இருப்பினும், முன்னேற்றம் எந்த திசை நோக்கி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். CCS இன்சைட்டின் சமீபத்திய கணிப்பின்படி, 2024 இறுதிக்குள் 1.3 பில்லியன் இ-சிம் ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்பாட்டில் இருந்தன. இந்த எண்ணிக்கை 2030 க்குள் 3.1 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "காலப்போக்கில், சிம் ட்ரே முற்றிலும் மறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்," என்று PP ஃபோர்சைட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வாளர் பாலோ பெஸ்காடோர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் ஏர், இதுவரை உருவாக்கப்பட்ட மிக மெல்லிய ஐபோன் ஆகும். இ-சிம்-ன் நன்மைகள் என்ன? இ-சிம்-க்கு மாறுவது "பல நன்மைகளை" வழங்குவதாக பெஸ்காடோர் கூறினார். மிக முக்கியமாக, ஃபோனின் உட்புறத்தில் சிறிது இடத்தை மிச்சப்படுத்துவதால், பெரிய பேட்டரிகளைச் பயன்படுத்த முடியும். பிளாஸ்டிக் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படாததால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும் அவர் வலியுறுத்தினார். மேலும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் மக்கள் இ-சிம்-ஐப் பயன்படுத்தும்போது அதிக சேவை வழங்குநர் விருப்பங்கள் கிடைக்கும் என்றும் "கட்டண அதிர்ச்சிகள்" இருக்காது என்றும் அவர் நம்புகிறார். இது புதிய வாடிக்கையாளர் நடத்தைகளைக் கொண்டுவரும் என்றும், "மக்கள் தங்கள் மொபைல் வழங்குநருடன் தொடர்புகொள்ளும் விதத்தை மெதுவாக மாற்றும்" என்றும் கெஸ்டர் மான் கூறினார். உதாரணமாக, சில வாடிக்கையாளர்கள் தங்கள் வழங்குநருடன் சிம் குறித்துப் பேச, ஒரு கடைக்குச் செல்லத் தேவையில்லை. ஒரு கடைக்கு நேரடியாக செல்லும் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கலாம். ஆனால், எல்லா மாற்றங்களைப் போலவே, இது அனைவராலும் வரவேற்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் அவர் கூறினார். "இந்த மாற்றம் வயதானவர்கள் அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு குறிப்பாக முக்கியமானது. இ-சிம்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கத் தொழிற்துறை கடினமாக உழைக்க வேண்டும்" என்று மான் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15kq82vqweo
  19. Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 02:06 PM இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 39 பந்துகளில் இந்த சதத்தை எட்டினார். இதற்கு முன்பு, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதம் அடித்திருந்ததே இங்கிலாந்தின் அதிவேக சதமாக இருந்தது. இந்தப் போட்டியின் சதம், பில் சால்ட்டிற்கு சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் நான்காவது சதமாகும். இதன் மூலம், அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த இரு வீரர்களும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் சர்மா மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆரம்ப ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர், 30 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 83 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்தனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, 158 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. https://www.virakesari.lk/article/224991
  20. இலங்கையில் உழைக்க வருபவர்கள் முதலீடு செய்து உழைக்கிறார்கள் என ராஜித ஒரு முறை சொன்னவர் அண்ணை. இம்முறை என்பிபி புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியதே!
  21. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ உச்சிமாநாட்டில் புதின், மோதி, ஜின்பிங் கட்டுரை தகவல் டாம் லேம் பிபிசி மானிட்டரிங் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டிற்காக தலைவர்கள் சீனாவின் தியான்ஜினில் சந்தித்தபோது புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டது. சீனா நீண்ட காலமாக இதனை முன்னிறுத்தி வருகிறது. எஸ்சிஓவின் இந்த வளர்ச்சி வங்கிக்கான சாத்தியங்களை சீன ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. இந்த வங்கி இயற்கை வளம் மிக்க எஸ்சிஓ உறுப்புநாடுகளில் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வங்கி சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்குமான பொருளாதார இணைப்பை வலுப்படுத்தி, யூரேசியாவில் (ஆசியா மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்கிய பகுதி) சீனாவின் பட்டுப்பாதையின் இருப்பை வலுப்படுத்தும். ரஷ்யாவின் கடந்தகால ஆட்சேபனைகளை மேற்கொள் காட்டும் செய்திக் குறிப்புகள், யுக்ரேன் போரைத் தொடர்ந்த மேற்கத்திய பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் நிலைப்பாடு மாறியிருப்பதாக தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளால் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்கிற நிலையில் இருக்கும் இரானும் இந்த வங்கியை நிறுவுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது, மேற்கத்திய பொருளாதார தடைகளைத் தவிர்ப்பதற்கான சாத்தியமான வழி என்றும் இதனை இரான் கூறியுள்ளது. சில ஊடகச் செய்திகள் இந்தப் புதிய வங்கியை "நிதி விவகாரங்களில் மேற்கத்திய ஆதிக்கத்தை" எதிர்கொண்டு சீன நாணயமான யுவானின் சர்வதேச செல்வாக்கை அதிகரித்து உலகளாவிய நிதியமைப்பில் பல்முனைப் போட்டியை ஊக்குவிப்பதற்கான வழியாகப் பார்க்கின்றன. அதே சமயம் இந்தச் செய்திகளில் இந்தியா தயக்கம் காட்டுவதும் அமெரிக்காவிடமிருந்து அச்சுறுத்தல் வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்சிஓ வங்கி என்றால் என்ன? அது என்ன செய்யும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ அமைப்பில் 9 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "வங்கி நிறுவுவதற்கான அரசியல் ஒப்புதல்" தான் எஸ்சிஓ உச்சிமாநாட்டின் முக்கிய முடிவாகும் என்றும் சீனாவின் முன்மொழிவு இறுதியாக நிஜமாகிறது என்றும் தெரிவித்தார். இந்த வங்கி யூரேசியாவில் பல்தரப்பு ஒத்துழைப்புக்கு புதிய தளம் அமைத்து எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் எனத் தெரிவித்தார். "இது உறுப்பு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியமும் கொண்டாடுவதற்கான காரணம்" என்றும் குறிப்பிட்டார். சீன அரசு ஊடகமான சீனா நியூஸ் சர்வீஸ் (சிஎன்எஸ்) தனது செய்தியில், எஸ்சிஓ வங்கி முதலில் சீனாவால் 2010-இல் முன்மொழியப்பட்டது என்றும் 2025-இல் தான் அதனை நிறுவுவதற்கான பணி வேகம் எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூன் 2025-இல் எஸ்சிஓ நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் சந்திப்பில் ஏற்பட்ட "குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்" மற்றும் ஜூலையில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் ஏற்பட்ட "கொள்கையளவு ஒப்புதல்" உள்ளிட்டவை அடங்கும். இயற்கை வளங்கள் நிறைந்துள்ள எஸ்சிஓ நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் உள்ள கஷ்டங்களே இந்த வங்கிக்கான தேவையை உணர்த்துவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வங்கி உறுப்பு நாடுகளிடையே பிராந்திய அளவில் பொருளாதார ஒத்துழைப்பையும் வேகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசு செய்தித்தாளான தி பேப்பர், எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் இரும்பு தூது நிறைந்திருக்கும் ரஷ்யா மற்றும் கசகஸ்தானில் "ஒளிமயமான வளர்ச்சி வாய்ப்புகளை" வழங்குகிறது. ஆனால் இந்த நாடுகளிள் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த போதிய நிதி ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது இத்தகைய நிதி நெருக்கடி தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் உள்ளது. இந்த நாடுகளில் நீர்மின் திட்டம், கனிம வளங்கள் மற்றும் எரிபொருள் உற்பத்தி போன்ற துறைகளில் வளர்ச்சி இலக்குகளை அடைய பெரிய அளவிலான நிதியுதவி தேவைப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த நாளிதழான பெய்ஜிங் நியூஸ் செப்டம்பர் 2-ஆம் தேதியன்று வெளியான தலையங்கத்தில், புதிய வங்கி உறுப்பு நாடுகளுக்கு இடையேயான எல்லை கடந்த உள்கட்டமைப்பு திட்டங்களான எரிபொருள், போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பிராந்திய வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும். அதே வேளையில் எஸ்சிஓ நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்புக்கான நடைமுறையும் துரிதப்படுத்தப்படும். அதே தலையங்கத்தில், இந்த வங்கி சீனா மற்றும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும், இதன்மூலம் யூரேசியாவில் சீனப் பட்டுப்பாதையின் இருப்பை வலுப்படுத்தும். பிரிக்ஸின் புதிய வளர்ச்சி வங்கியிலிருந்து வேறுபடுத்தி பார்ப்பதற்கு ஏதுவாக இந்த வங்கி மத்திய ஆசியாவில் இடம்பெற வேண்டும் என்றும் பெரிய அளவிலான எரிபொருள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மூலதனம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மீது தற்போது கவனம் ஏன்? பட மூலாதாரம், Getty Images சீன அரசின் நிதிசார் செய்தித்தாளான செக்யூரிடீஸ் டைம்ஸ், எஸ்சிஓ வளர்ச்சி வங்கி திட்டத்தை சீனா 2010-இல் முன்மொழிந்திருந்தாலும் அப்போதே சில உறுப்பு நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஏனென்றால் அப்போதைக்கு அமைப்பின் முக்கியத்துவமானது பிராந்திய பாதுகாப்பை ஊக்குவிப்பதிலே இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் நாளிதழான சௌத் சீனா மார்னிங் போஸ்டை மேற்கோள் காட்டி குவான்சாவில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரஷ்யா முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு மாறாக தனது யூரேசியன் வளர்ச்சி வங்கியை விரிவுபடுத்த விரும்பியது. எஸ்சிஓ-வுக்கு உள்ளுமே சீனா மற்றும் ரஷ்யாவின் நலன்களில் வேறுபாடு உள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது. சீனா மத்திய ஆசியாவில் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவித்து எரிபொருள் இறக்குமதியைப் பன்மைப்படுத்த விரும்புகிறது, ஆனால் ரஷ்யா இந்தப் பிராந்தியத்தில் தனது பொருளாதாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்த விரும்புகிறது. ஆனால் யுக்ரேன் போரால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் ரஷ்யாவை 'கிழக்கு நோக்கி சாயும் (leaning towards the east)' கொள்கையை ஏற்றுக்கொள்ள நிர்பந்தித்துள்ளது. இதனால் தான் ரஷ்யா எஸ்சிஓ வங்கி மீதான தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக ஒரு சீன வல்லுநரை மேற்கோள்காட்டி சௌத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதார தடைகள் 'நிதி ஆயுதங்களின்' வலிமையை உலகுக்குக் காட்டியுள்ளது. அதோடு மேற்கத்திய நிதியமைப்பை அதிகம் சார்ந்திருப்பதன் ஆபத்தையும் உலகிற்கு உணர்த்தியுள்ளது என பெய்ஜிங் நியூஸ் தலையங்கம் தெரிவித்துள்ளது. "நிதியமைப்பில் மேற்கத்திய ஆதிக்கத்தைக்" கட்டுப்படுத்த தேவையான புதிய நிதி கட்டமைப்பிற்கான தேவையும் மேற்கத்திய தடைகளை தவிர்ப்பதற்கான அவசியமும் அந்த தலையங்கத்தில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிசார் பல்முனைப் போட்டியை ஊக்குவிப்பதற்கு ஒரு வழியாக எஸ்சிஓ வங்கியை வளர்க்க வேண்டும் எனவும் அதில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சிஓ அமைப்பு இந்த வங்கி மூலம் பாதுகாப்பு என்பதோடு மட்டும் தங்களை நிறுத்திக் கொள்ளாது பொருளாதார ஒத்துழைப்பு என்கிற களத்தில் வளரலாம் என பெய்ஜிங் நியூஸ் தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் எஸ்சிஓவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும். இந்த வங்கி மேற்கத்திய நாணயமான டாலர் மற்றும் யூரோ மீதான சார்பைக் குறைக்கும் எனவும் அந்த தலையங்கத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் யுவானின் செல்வாக்கு அதிகரிக்கவும் உலகளாவிய அமைப்பை பல்முனை திசையை நோக்கி நகர்த்தவும் உதவும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. சீன அரசு சார் நிறுவனமான சைனீஸ் அகாடமி ஆஃப் சோசியல் சயின்ஸைச் சேர்ந்த லீ ரூய்க்ஸி தற்போதைய சர்வதேச சூழல் புதிய பல்தரப்பு வங்கியை உருவாக்குவதற்கு முன்பு எப்போதையும்விட சாதகமான நேரமாக இருப்பதாகக் கூறுகிறார் என குவான்சா செய்தியில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images மற்ற உறுப்பு நாடுகளின் நிலை என்ன? இரான் பல மேற்கத்திய பொருளாதார தடைகளைச் சந்தித்து வருகிறது. எஸ்சிஓ வளர்ச்சி வங்கியின் உருவாக்கத்தை ஆதரிக்கும் நாடாக இரானின் பெயரை சீன ஊடகங்கள் பரவலாகப் பதிவு செய்துள்ளன. ஜூன் மாதம் சீனாவில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட இரானின் மத்திய வங்கி ஆளுநர் முகமது-ரேசா ஃபர்சின், எஸ்சிஓ வங்கி மற்றும் அது சார்ந்த நாணய முறை என்பது நீண்டகாலமாக உள்ள ஒருசார் அமைப்பிலிருந்து வெளி வர உதவும் எனத் தெரிவித்ததாக குவான்சா செய்தி குறிப்பிடுகிறது. இரானிய அரசியல் ஆய்வாளரான பேமன் சலேஹி சௌத் சீனா மார்னிங் போஸ்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், எஸ்சிஓவின் நிதியமைப்பில் இரான் சேர்க்கப்பட்டது புதிய பொருளாதார தடைகளைச் சமாளிக்க அந்நாட்டிற்கு அவசியமாகிறது என்றுள்ளார். எஸ்சிஓ வங்கி இரானுக்கு ஒரு 'அரசியல் கவசமாக' மாறலாம், பொருளாதார தடைகள் என்பது ஒருநாட்டை பணியச் செய்வதற்கான உத்தரவாதம் கிடையாது என்பதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய ஆசிய எஸ்சிஓ உறுப்பு நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் யுஸ்பெகிஸ்தானும் புதிய வங்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குவான்சா செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய அரசு ஊடகமான ஸ்புட்னிக்கின் சீனப் பிரிவுக்கு மாஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் மஸ்லோவ் அலெக்ஸி அலெக்ஸாண்டோவிச் அளித்த நேர்காணலில், எஸ்சிஓ வங்கி என்பது முதலீட்டு திட்டங்களுக்காகவும் பாதுகாப்பான நாணய வர்த்தக முறைக்கும் அவசியமாகிறது எனத் தெரிவித்துள்ளார். எஸ்சிஓ வங்கி பல்வேறு நாடுகளுக்கு இந்த அமைப்பை கவர்ச்சிகரமானதாக்கும் என்கிறார். இனி வரக்கூடிய நாட்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கூட இந்த அமைப்பில் சேர்க்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். "பெரிய உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் அதிக செலவுகளால் திணறி வரும் ஆப்ரிக்காவிற்கு எஸ்சிஓ வங்கி, மற்ற வங்கிகளின் விதிகளுக்குக் கட்டுப்படாத புதிய நிதிமாடலை வழங்குகிறது" என நெய்ரோபியைச் சேர்ந்த சௌத்-சௌத் டயலாக் அமைப்பின் இணை இயக்குநரான ஸ்டீபன் எண்டேக்வா சீனா டெய்லியிடம் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ வங்கிக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கலாம் என சீன ஊடகங்கள் கூறுகின்றன. அதே போல் இந்தியாவின் சாத்தியமான ஆட்சேபனை பற்றியும் சௌத் சீனா மார்னிங் போஸ்டை மேற்கோள்காட்டி குவான்சா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் ஒன்று, இந்தியாவின் பல அணிசார் ராஜதந்திரம் என்பது 'சீனாவின் பிராந்திய நோக்கங்களைச் சமாளிக்கும் அதே வேளையில், அந்நாட்டை ஒரு முக்கியமான வர்த்தக கூட்டாளியாக வைத்திருப்பது என்பதை நோக்கியது எனத் தெரிவிப்பதாக குவான்சா செய்தி கூறுகிறது. அதே போல், அமெரிக்க அதிபர் டிரம்பின் எதிர்வினையையும் புறந்தள்ளிவிட முடியாது என குவான்சா செய்தி கூறுகிறது. முன்னதாக பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்கும் திட்டங்களை கைவிடவில்லை என்றால் 100 சதவிகிதம் வரிகள் விதிக்கப்படும் என அவர் எச்சரித்ததும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gkdyj0n12o
  22. அண்ணை, சலுகைகளுக்காக இல்லாமல் சேவை செய்யக்கூடியவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் வருவார்கள் என எண்ணுகிறேன்.
  23. Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 12:38 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தில் தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மேலும் அவர் குறிப்பிடுகையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, தேசிய வரி வருமான திணைக்களம், மதுவரி திணைக்களம், சுங்க திணைக்களம் உள்ளிட்டவை தமக்கான இலக்கிற்கு அப்பால் இலாபமீட்டியுள்ளன. மறுபுறம் அநாவசிய செலவுகளை குறைத்திருக்கின்றோம். இவற்றின் ஊடாக வரவு – செலவு திட்டத்தின் இடைவெளியை படிப்படியாக சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றோம். உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியைக் காண்பிக்க தவறியுள்ள போதிலும், இலங்கை அதனை செய்து காண்பித்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளில் வங்குரோத்தடைந்திருந்த நாடு இன்று இந்நிலைமையை அடைந்துள்ளது. வரிவருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமையவே, கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் இதற்கு வாக்களித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. மாறாக இந்த விடயத்தை மறைப்பதற்காக மறுநாள் சபையில் வேறொரு விடயத்துக்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அதேபோன்று வெகுவிரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும். அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/224980
  24. 13 Sep, 2025 | 03:10 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள், இடமாற்றல் என வெளியேறியமையால், வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், நோயாளர்கள், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர், எம்.ஆர்.ஐ உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவற்றை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எடுப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுவதால், அதற்குள் நோயின் தீவிரம் அதிகரிப்பதாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலையில் அவற்றை எடுப்பதற்காக பெருமளவு பணம் செலவு செய்கின்றனர். இதனால் யாழ் . போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்திய பற்றாக்குறையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/225001

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.