Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அததெரண கருத்துப் படம்.
  2. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வைஃபை ரூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு (radiation) குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன. கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "படுடா செல்லமே, மணி இரவு 12 ஆகிறது, இன்னும் எவ்வளவு நேரம் மொபைல் ஃபோன் பார்ப்பாய்?" "ஒரு படம் மட்டும் முடிச்சிடறேன், பகலில் வைஃபை கிடைக்காதே!" "இந்த வைஃபை-க்கு ஏதாவது செய்யணும்!" டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சரிதாவுக்கும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அக்ஷருக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் ஒரு வழக்கமான நிகழ்வு. வாரத்தில் மூன்று, நான்கு இரவுகள் இது நடக்கும். சிலர் வைஃபை (Wi-Fi) என்பதன் முழு வடிவம் 'வயர்லெஸ் ஃபிடலிட்டி' (Wireless Fidelity) என்பார்கள். அதேபோல, ஹை-ஃபை (Hi-Fi) என்பதன் முழு வடிவம் 'ஹை ஃபிடலிட்டி' (High Fidelity) என்பதாகும். ஆனால், வைஃபை அலையன்ஸ் என்ற தொழில் கூட்டமைப்பு வைஃபைக்கு என்று எந்த விரிவாக்கமும் இல்லை என்று கூறுகிறது. எளிமையாகக் கூறுவதானால் வைஃபை என்பது கேபிள்கள் மற்றும் இணைப்புகளின் சிக்கலில் சிக்காமல், நம்மை இணையத்துடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இதன் மூலம் நாம் இணையத்திலிருந்து தகவல்களைப் பெறவும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் முடியும். இரவில் வைஃபையை இயக்கத்தில் வைப்பதால் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவு நேரங்களில் பொழுதுபோக்கு அல்லது வேலைக்காக இணையத்தைப் பயன்படுத்தும்போது வைஃபை ரூட்டர்கள் இரவிலும் அணைக்கப்படாமல் அப்படியே இருந்து விடுகின்றன. வைஃபை என்பது கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை கேபிள்கள் இல்லாமல் ஒரு நெட்வொர்க்குடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது வயர்லெஸ் ரூட்டரைப் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கை (WLAN) உருவாக்குகிறது. மொபைல் ஃபோன் பழக்கம் நமக்கு எல்லோருக்கும் தெரியும். இப்போது வைஃபை ஒரு புதிய பழக்கமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இதைப்பற்றி அதிகம் விவாதிக்கப்படாத ஒரு அம்சம் இப்போது விவாதத்திற்கு வந்துள்ளது. யாராவது இரவு தாமதமாக மொபைல் ஃபோன், டேப்லெட், கணினி அல்லது லேப்டாப்பில் பொழுதுபோக்கு அல்லது வேலைக்காகச் செயல்படும்போது, வைஃபை ரூட்டரும் இரவு முழுவதும் அப்படியே இயக்கத்தில் இருக்க வாய்ப்பு அதிகம். அப்படியானால், வைஃபை ரூட்டரை அணைக்காமல் வைத்திருப்பதால் நம் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது அதை அணைப்பதால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? இந்தக் கேள்வியை இன்னும் கூர்மையாகக் கேட்டால், இரவில் வைஃபை ஆன் செய்து வைப்பதால் மனித உடலின் நரம்பியல் அம்சங்களுக்கு அல்லது மூளைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள யசோதா மெடிசிட்டியில் ஆலோசகராகப் (குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட நரம்பியல் அறுவை சிகிச்சை) பணிபுரியும் மருத்துவர் திவ்ய ஜோதியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, அறிவியல் ரீதியாக இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், நேரடியாக அப்படிச் சொல்ல முடியாது என்று கூறினார். "தர்க்கரீதியாகப் பார்த்தால், மூளையின் தூண்டல்கள் மின் தூண்டல்கள் என்பதால், அப்படி நினைக்கலாம். வைஃபை அல்லது பிற சாதனங்கள் மின்காந்த அலைகளை (electromagnetic fields -EMF) சார்ந்துள்ளன," என மருத்துவர் மேலும் தெரிவித்தார். "எனவே, இது மூளையின் தூண்டல்களுடன் குறுக்கிட வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி யோசிப்பதற்கு எந்தவொரு அறிவியல் காரணமோ, விளக்கமோ அல்லது முடிவோ இதுவரை இல்லை. ஆனால், முடிந்தவரை அதிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்றுதான் தர்க்கம் கூறுகிறது." மூளைத் தூண்டுதல்கள் என்றால் என்ன? மூளைத் தூண்டுதல்கள் (Brain impulses) என்பவை, நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளவும், தகவல்களைப் பறிமாறவும் உதவும் மின்னணு - வேதியியல் சமிக்ஞைகள் (electrochemical signals) ஆகும். இந்த நரம்புத் தூண்டுதல்கள், செயல் ஆற்றல் (action potential) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தத் தூண்டுதல்களை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புக்கு உணர்ச்சி நரம்பு (sensory nerve) என்று பெயர். இந்த நரம்புகள் மூளைக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால்தான், நம்மால் தொடு உணர்ச்சி, சுவை, வாசனை ஆகியவற்றை உணர முடிகிறது. இரவு மற்றும் பகல் நேரங்களில் வைஃபை ரூட்டரின் விளைவு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவு மற்றும் பகலில் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகளில் என்ன வித்தியாசம் உள்ளது என்ற கேள்வி அடிக்கடி மனதில் எழுகிறது இரவில் வைஃபை ரூட்டரை அணைத்து வைப்பது அவசியம் என கூறினால் பகலில் ஏன் அணைத்து வைக்க தேவையில்லை? இந்தக் கேள்விக்கு பிபிசியிடம் பதிலளித்த மருத்துவர் திவ்ய ஜோதி, "பகல் மற்றும் இரவில் உடலின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. இரவில் உடலின் அலைகள் வேறுபட்டவை, அவை தூக்க அலைகள். இரவில் நல்ல தூக்கம் பெறுவது மிகவும் முக்கியமானது. அது தூக்க சுழற்சியால் தீர்மானிக்கப்படுகிறது." "அதனால்தான், இரவில் அதை அணைத்து வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால், மூளைக்கு முழுமையாக ஓய்வு கிடைத்து, நல்ல தூக்கம் கிடைக்கும். ஆனால், பகல் நேரத்தில் நாம் வேலை செய்ய வேண்டும் என்பதால், தூக்கத்தில் குறுக்கீடு இல்லை. ஆனால், இந்த வெளிப்பாடு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது என்பதுதான் தர்க்கம்." ஆனால், இரவில் வைஃபையை மட்டும் தவிர்ப்பது போதுமா? நாம் அடிக்கடி தலையணைக்கு அருகில் வைத்துத் தூங்கும் மொபைல் ஃபோன்கள் பாதிப்பை ஏற்படுத்தாதா? இதற்கு மருத்துவர், மொபைல் ஃபோன்களும் மைக்ரோவேவ்களை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறுகிறார். அவையும் ஒரு வகையான கதிர்வீச்சை உருவாக்குகின்றன. ஆனால், அவற்றின் அதிர்வெண் (frequency) வேறுபட்டது. தர்க்கரீதியாகப் பார்த்தால், இவை கூட தூக்கத்தில் குறுக்கிடலாம். நீங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட, மின்காந்த அலைகள் இருந்துகொண்டே இருக்கும். "பின்னணிக் கதிர்வீச்சோடு ஒப்பிடும்போது, மொபைல் ஃபோன் மற்றும் வைஃபை ஆகியவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சு மிகக் குறைவு. இவை இரண்டிலிருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு அதிகமாகுமா என்றால், இல்லை. இதற்கு மாறாக, நம் மீதான பின்னணிக் கதிர்வீச்சின் தாக்கம் மிகவும் அதிகம்," என்று மருத்துவர் திவ்ய ஜோதி தெரிவித்தார். நிபுணர்களின் கூற்றுப்படி, நம் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து வகையான சாதனங்களிலிருந்தும் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. டிவி, பிரிட்ஜ் முதல் ஏசி வரை. எந்த மின் சாதனமாக இருந்தாலும், மின்காந்த அலைகள் அதனுடன் தொடர்புடையவை. சில நிபுணர்கள், மின்காந்த அலைகள் அளவுக்கு அதிகமாக வெளிப்படுமோ என்று பயந்தால், நீங்கள் தூங்கும் அறையில் ரூட்டரை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அல்லது அது சாத்தியமில்லை என்றால், படுக்கையிலிருந்து ரூட்டரை சற்றுத் தள்ளி வைக்கலாம். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் மொபைல் ஃபோனின் வரலாறு சுமார் 30 ஆண்டுகள் பழமையானது மருத்துவத் துறை நிபுணர்களைத் தவிர, தொழில்நுட்பத் துறை நிபுணர்களுடனும் நாங்கள் பேசினோம். இந்த விஷயம் குறித்து துல்லியமான தகவல்கள் எதுவும் இல்லை. இதனால், குழப்பம் அதிகமாக உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். தொழில்நுட்ப நிபுணர் முகமது ஃபைசல் அலி, "நல்ல தூக்கத்தைப் பெற இரவில் வைஃபையை அணைக்க வேண்டும் என்பதை நிரூபிக்க எந்த ஆய்வும் இல்லை" என்றார். "அல்லது வைஃபையை ஆன் செய்து வைத்திருப்பது நமது நரம்பியல் அல்லது வேறு எந்த அமைப்பையும் பாதிக்கிறது என்பதை நிரூபிக்கவும் ஆய்வு இல்லை. ஆனால், எந்தவொரு அலைகளின் தாக்கமும் நீண்ட காலத்திற்கு ஏற்படும் போது விளைவை ஏற்படுத்தலாம் என்று கூறலாம். இது ஒரு பொதுவான விஷயம்." "கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மொபைல் மற்றும் வைஃபையின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது," என அலி பிபிசியிடம், கூறினார். "எனவே, எதிர்காலத்தில் ஒரு ஆய்வு நடத்தப்படலாம். அதில், இந்த விஷயங்களால் இந்தந்த பாதிப்புகள் ஏற்படலாம் ஆகவே, அவற்றைக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால், இதுவரை அப்படி எதுவும் இல்லை." மொபைல் ஃபோன்களில் சொந்த இணைய வசதியும் உள்ளது. இந்தத் தர்க்கம் அவற்றுக்கும் பொருந்துமா? "மின்காந்த அலைகளோ அல்லது ரேடியோ அலைகளோ, எதுவாக இருந்தாலும் அதிகமாக அவற்றின் தாக்கத்திற்கு உள்ளாவது நல்லதல்ல என்று ஒரு உணர்வு உள்ளது. இப்போது நம்மிடம் சிறந்த தரவுகள் இருப்பதால் இப்போது இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். எனக்கு தெரிந்தது மற்றும் புரிதலின்படி, பல நேரங்களில் அதைப் பார்த்து பயப்படும் அளவு இவற்றால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது" என்று கூறினார் அலி. கதிர்வீச்சு, அலைகள் அல்லது மின்காந்த அலைகளால் உடலில் என்னென்ன மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று நிபுணர்களிடம் கேட்கப்பட்டது "கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், இது நல்ல தூக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம். அப்படி நடந்தால், பகல் நேரத்தில் நமது செயல்திறன் பாதிக்கப்படும். கவனம் குறையும். மேலும், உடலில் கட்டிகள் உருவாகுவதற்கும், வளர்வதற்கும் கதிர்வீச்சுக்கும் தொடர்புள்ளது," என மருத்துவ திவ்ய ஜோதி தெரிவித்தார். வைஃபை உடன், மொபைல் ஃபோன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு குறித்தும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் பல மொபைல் ஃபோன்கள் இப்போது 5G நெட்வொர்க்கில் இயங்குகின்றன. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இது ஐரோப்பாவில் வந்தபோது, புதிய தொழில்நுட்பம் தொடர்பான உடல்நல அபாயங்கள் குறித்த கேள்விகள் எழுந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7r0ge2nn0o
  3. அததெரண கருத்துப் படம்.
  4. அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை(நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர், தேர்தல் விஞ்ஞாபனம் "எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்ற உள்ளோம். அதில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும். 2029ஆம் ஆண்டுக்கு முன் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும். ஜனாதிபதி அநுரவுக்கு பின்னர் ஜனாதிபதி யாரும் இருக்க மாட்டார்கள். நாங்கள் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்கள் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்துள்ளதா என நினைத்து பாருங்கள். இதை நேர்மறையாக நோக்குங்கள். ஒரு நாடு என்ற வகையில் சாதகமான விடயமாகும். நாங்கள் அரசியலுக்கு வரும் போது எவ்வளவு சொத்து இருந்தது. விட்டுச் செல்லும்போது எவ்வாறு என்று மக்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகள் வரும் போது இருந்த சொத்தின் மதிப்பும் பின்னரும் எவ்வாறு அதிகரித்தது என்பதில் எமக்கிடையில் ஒரு உரையாடல் மட்டுமே இருந்தது. நாங்கள் வெளிப்படை தன்மையுடன் செயற்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225321
  5. 17 Sep, 2025 | 03:53 PM கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 25 வயதுடைய தேரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட தேரர்கள் இருவரும் கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/225321
  6. 17 Sep, 2025 | 06:14 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சட்டவிரோத மணல் அகழ்வினை மேற்கொண்டு வரும் கும்பலொன்று தினமும் பல டிப்பர்களில் மண்ணை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக ஏற்றிச்சென்று விற்பனையில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக பல ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மணல் அகழப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருதங்கேணி பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது. ஆனாலும் மணல் அகழ்வு விடயத்தில் இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் அகழ்வால் வடமராட்சி கிழக்கின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமன்றி, மக்கள் குடியிருக்க முடியாதளவுக்கு கடல் நீர் உட்புகக்கூடிய நிலைமையும் தோன்றியுள்ளது. https://www.virakesari.lk/article/225316
  7. பதியப்பட காத்திருக்கிறது அண்ணோய்....
  8. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தனியான தமிழீழ கோரிக்கையில் இருக்கவில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் நந்தன வீரரத்ன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பட்டலந்த வதைமுகாம் நூல் தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனியான ஈழம் இல்லை “1993ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்த போது நான் கேட்ட கேள்வி, “இப்போது உங்களின் தனியான ஈழம் கிடைக்கும் தானே? ஆதலால் பாணமையில் இருந்து மன்னார் வரை எல்லையை நிறுவினால் எவ்வாறு எல்லையில் பாதுகாப்பு வழங்குவீர்கள் மேலும் அதற்கான ஆள்பலம் போதுமா? அதன் தூரம் சுமார் 400 கிலோமீட்டராகும். இந்தியாவில் இருந்து கூலிக்கா ஆட்கள் கொண்டுவரப் போகிறீர்கள்” என நான் கேட்டேன்'. அவர் சிரித்துக் கொண்டு, மச்சான் தனியான ஈழம் இல்லை அதற்கு கீழே தான் எமது எதிர்பார்ப்பு என்றார். ஆனால் தனி ஆட்சியொன்றை கோரிய அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் வேறு யாராக இருந்தாலும் கற்பனையில் இருந்தனர். மேலும் ஜே.ஆர் மற்றும் பிரேமதாச ஆகியோரும் அவ்வாறே செயற்பட்டனர். இந்தியாவை புரிந்து கொள்ளாத ஜே.ஆர் மற்றும் பிரேமதாசா இந்தியாவுடன் அவர்கள் மென்மையான போக்கை கடைப்பிடித்திருக்க வேண்டும். ஈழம் என்ற இராச்சியம் இலங்கையில் ஏற்பட்டால் இந்தியா பல துண்டுகளாக உடைந்து விடும். ஆதலால் டில்லி எந்த காலத்திலும் ஈழம் என்ற இராச்சியத்தை விரும்பாது. இதை ஜே.ஆர் அறிந்திருந்தால் ஈழப்போரை சுமுகமாக முடித்திருக்கலாம். ஆனால், டில்லியுடனான இணைப்பை ஜே.ஆருக்கு சரியான முறையில் பேண முடியவில்லை. இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு 'சலூட்' எனக்கு தெரிந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், அதாவது இந்தியாவில் ரோவில் பயிற்சி எடுத்தவர்கள், பயிற்சிக்கு போகும் போது முதலில் இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு 'சலூட்'அடிக்க வேண்டுமாம். ஏன் இவ்வாறு என அவர்களுக்கு புரியவில்லை. எனது கருத்து இந்தியாவை, அதாவது டில்லியை இவர்கள் யாரும் நன்றாக புரிந்து வைத்திருக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/sinhala-journalist-exposed-balasingham-tamil-eelam-1758106045
  9. 9) திரு திருமதி செந்தமிழ்ராஜா ராஜமலர் குடும்பம் (சுழிபுரம் கிழக்கு) சுவிஸ் 35000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 17/09/2025 இன்று வரை மொத்தமாக 320070 ரூபா திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் கருணைகொண்ட நல்லுள்ளங்களால் வைப்பிடப்பட்டுள்ளது.
  10. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்குள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார். கட்டுரை தகவல் பால் ஆடம்ஸ் பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் போர் தொடர்கிறது. மறுபுறம், இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகத் தெரிகிறது. இஸ்ரேல், நிறவெறி கொள்கை காரணமாக உலகளவில் புறக்கணிக்கப்பட்ட 'தென்னாப்ரிக்கா' காலத்திற்கு மீண்டும் செல்கிறதா? அந்நேரத்தில் அரசியல் அழுத்தமும், பொருளாதாரம், விளையாட்டு, கலாசார தளங்களில் தென்னாப்ரிக்காவுக்கு விதிக்கப்பட்ட புறக்கணிப்பும், அந்தக் கொள்கையை கைவிட நிர்பந்தித்தன. அல்லது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கத்தால் தனது நாட்டின் சர்வதேச நிலையை நிரந்தரமாக சேதப்படுத்தாமல், இந்த ராஜீய சிக்கலை சமாளித்து, காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தனது இலக்குகளைத் தொடர முடியுமா? முன்னாள் பிரதமர்களான எகுட் பராக் மற்றும் எகுட் ஓல்மெர்ட் ஆகியோர், நெதன்யாகு இஸ்ரேலை உலகளவில் புறக்கணிக்கப்பட்ட நாடாக மாற்றி வருவதாக ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த கைது வாரண்ட் காரணமாக, கைது பயமின்றி நெதன்யாகு பயணம் செய்யக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையில், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா உள்ளிட்ட பல நாடுகள் அடுத்த வாரம் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கோபமடைந்த வளைகுடா நாடுகள், தோஹாவில் கூடி ஆலோசித்தன. மேலும், கடந்த கோடைகாலத்தில், காஸாவில் இருந்து பஞ்சம் குறித்த படங்கள் உலகுக்கு வெளிப்பட்டதும், இஸ்ரேல் காஸா நகரத்தில் தாக்குதல் நடத்தத் தயாரானதும், ஐரோப்பிய அரசுகள் பலவும் வெறும் அறிக்கைகள் வெளியிடுவதைக் கடந்து, வெளிப்படையான அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பெல்ஜியம் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, சர்வதேச கண்டனங்களைப் பொருட்படுத்தாமல், இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல்களைத் தொடர்கிறது. இந்த மாத தொடக்கத்தில், மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத யூதக் குடியிருப்புகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தடை, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான ஒப்பந்த கொள்கைகளை மறுஆய்வு செய்தல், மேலும் அந்த குடியிருப்புகளில் வசிக்கும் பெல்ஜிய குடிமக்களுக்கான தூதரக சேவைகளை நிறுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பெல்ஜியம் அறிவித்தது. மேலும், கடும்போக்கு இஸ்ரேலிய அமைச்சர்களான இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட யூதர்களும் பெல்ஜியமுக்குள் நுழைவதற்கு வருவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்திருந்தன. ஆனால், மேற்குக் கரையில் குடியேறும் யூதர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் பைடன் நிர்வாகம் விதித்த தடைகளை, அதிபராக மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே டொனால்ட் டிரம்ப் நீக்கியிருந்தார். பெல்ஜியத்தின் அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, ஸ்பெயின் தனது நடவடிக்கைகளை அறிவித்து, நடைமுறையில் இருந்த ஆயுதத் தடையை சட்டமாக்கியது. இந்த நடவடிக்கைகளில், காஸாவில் இனப்படுகொலை அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஸ்பெயினுக்குள் நுழைவதற்குத் தடையும் அடங்கும். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஸ்பெயின் துறைமுகங்கள் மற்றும் வான்வெளியில் நுழையாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், ஸ்பெயின் யூத எதிர்ப்புக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஆயுத வர்த்தகத் தடை, இஸ்ரேலை விட ஸ்பெயினுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு கவலையளிக்கும் மாற்றங்கள் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, இஸ்ரேலிய எம்.பி.க்கள் இடாமர் பென்-க்விர் (எல்) மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆனால், இஸ்ரேலுக்கு மேலும் கவலைக்குரிய அறிகுறிகள் வெளிப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில், நோர்வேயின் மிகப்பெரிய 2 டிரில்லியன் டாலர் நிதிகொண்ட Norwegian Sovereign Wealth Fund என்ற நிதியம், இஸ்ரேல் நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை விற்க போவதாக அறிவித்தது. இந்த மாத நடுப்பகுதிக்குள் 23 நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த முதலீடுகள் விற்கப்பட்டன. மேலும், நிதியமைச்சர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இன்னும் பல நிறுவனங்களில் இருந்து முதலீடுகள் நீக்கப்படலாம் என்று கூறினார். இதற்கிடையில், இஸ்ரேலின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான ஐரோப்பிய ஒன்றியம், வலதுசாரி அமைச்சர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கவும், இஸ்ரேலுடனான கூட்டுறவு ஒப்பந்தத்தின் சில வர்த்தக அம்சங்களை ஓரளவு நிறுத்தி வைக்கவும் திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற தனது "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லீன், காஸாவில் நடந்த நிகழ்வுகள் "உலகின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன" என்று குறிப்பிட்டார். அடுத்த நாளே, 314 ஐரோப்பிய முன்னாள் தூதர்கள் மற்றும் அதிகாரிகள், உர்சுலா வான் டெர் லீனுக்கும், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கயா கிளாஸுக்கும் கடிதம் எழுதி, கூட்டுறவு ஒப்பந்தத்தை முற்றிலும் நிறுத்துவது உட்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினர். 1960களிலிருந்து 1990ல் நிறவெறி முடிவுக்கு வரும் வரை தென்னாப்ரிக்காவுக்கு விதிக்கப்பட்ட தடைகளில், கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளைப் புறக்கணிப்பது முக்கிய அம்சமாக இருந்தது. இப்போது, அதே மாதிரியான அறிகுறிகள் இஸ்ரேல் தொடர்பாகவும் வெளிப்படுகின்றன. இந்தச் சூழலில், யூரோவிஷன் பாடல் போட்டி பெரிதாகத் தெரியாமல் இருந்தாலும், இஸ்ரேலுக்கு அதனுடன் ஆழமான பிணைப்பு உள்ளது. 1973 முதல் நான்கு முறை அந்தப் போட்டியில் வென்றுள்ளது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, இதில் பங்கேற்பது யூத தேசம் சர்வதேச குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால், அயர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா, 2026 போட்டியில் இஸ்ரேல் பங்கேற்க அனுமதிக்கப்பட்டால் தாங்கள் விலகிவிடுவதாகக் கூறியுள்ளன அல்லது சுட்டிக்காட்டியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவு டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறக்கணிப்புகளைச் சந்திக்கும் இஸ்ரேல் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, 1970களில் இருந்து இஸ்ரேல் யூரோவிஷனில் வழக்கமாகப் பங்கேற்று வருகிறது, ஆனால் சில நாடுகள் அடுத்த ஆண்டு போட்டியைப் புறக்கணிப்பதாக அச்சுறுத்தியுள்ளன. ஹாலிவுட்டில் பரவிய ஒரு கடிதம், இஸ்ரேலிய தயாரிப்பு நிறுவனங்கள், விழாக்கள், ஒளிபரப்பாளர்களை புறக்கணிக்க அழைத்துள்ளது. ஒரே ஒரு வாரத்தில் 4,000க்கும் மேற்பட்டோர் அதில் கையொப்பமிட்டுள்ளனர். இதில் எம்மா ஸ்டோன், ஜேவியர் பார்டெம் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இஸ்ரேல் திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஸ்விகா கோட்லீப், இந்த மனுவை "முழுமையாக தவறானது" எனக் குறிப்பிட்டார். "பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுக்கும் எங்களை குறிவைப்பதன் மூலம், இவர்கள் தங்களின் சொந்தக் குரல்களையே பாதித்துள்ளனர்," என்றும் அவர் கூறினார். விளையாட்டு உலகிலும் எதிர்ப்புகள் பரவின. இஸ்ரேலின் பிரீமியர் டெக் அணிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் காரணமாக வுல்டா டி எஸ்பானா சைக்கிள் பந்தயம் பலமுறை தடைபட்டது. இதனால் போட்டி சனிக்கிழமை முன்கூட்டியே முடிவடைந்து, விழா ரத்து செய்யப்பட்டது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்தப் போராட்டங்களை "பெருமை" எனக் குறிப்பிட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள், அரசின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டின. ஸ்பெயினில், ஏழு இஸ்ரேலிய சதுரங்க வீரர்கள் தங்கள் நாட்டுக் கொடியின் கீழ் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதால் போட்டியில் இருந்து விலகினர். இந்த நிலையை ஊடகங்கள் "டிப்ளமடிக் சுனாமி" (இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் எடுக்கும் அதிகமான ராஜீய ரீதியிலான முடிவுகள்) என்று அழைத்துள்ளன. இஸ்ரேல் அரசும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நெதன்யாகு, ஸ்பெயின் "வெளிப்படையாக இனப்படுகொலை அச்சுறுத்தல் விடுக்கிறது" என்று குற்றம் சாட்டினார். பெல்ஜியம் தடை அறிவித்ததையடுத்து, " ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்த்து இஸ்ரேல் போராடும் வேளையில், சில யூத விரோதவாதிகள் இன்னும் தங்கள் வெறித்தனத்தை கைவிட முடியாதது துயரம்" என இஸ்ரேல் அமைச்சர் கிடியோன் சார் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, முக்கிய வருடாந்திர போட்டிகளில் ஒன்றான வுல்டா டி எஸ்பானா சைக்கிள் பந்தயம், பாலத்தீன ஆதரவு போராட்டங்களால் பலமுறை தடைபட்டது. ஆனால், வெளிநாடுகளில் இஸ்ரேலை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் தூதர்களிடையே ஆழ்ந்த கவலை நிலவுகிறது. 2017 முதல் 2021 வரை ஜெர்மனிக்கான இஸ்ரேலிய தூதராக இருந்த ஜெர்மி இஸ்ஸகாரோஃப், "இஸ்ரேலின் சர்வதேச நிலைமை இவ்வளவு பலவீனமாக இருந்து எனக்கு நினைவில்லை" என்று கூறினார். பல தடைகள் மற்றும் நடவடிக்கைகள் "வருந்தத்தக்கவை" என அவர் தெரிவித்தார், ஏனெனில் அவை அடிப்படையில் அனைத்து இஸ்ரேலியர்களையும் குறிவைப்பதாகப் பார்க்கப்படுகின்றன. "அரசின் கொள்கைகளை மட்டும் குறிவைப்பதற்கு பதிலாக, இது பல இஸ்ரேலியர்களை ஒதுக்குகிறது " என்றும் அவர் கூறினார். பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் நடவடிக்கைகள் கூட "ஸ்மோட்ரிச், பென் க்விர் போன்றோருக்கு அதிகாரம் கொடுத்து, மேற்குக் கரையை இணைப்பதற்கான அவர்களின் வாதங்களை வலுப்படுத்தும்" என்பதால், எதிர்மறையாகப் போகக்கூடும் என அவர் எச்சரித்தார். இருப்பினும், இஸ்ஸகாரோஃப், இஸ்ரேலின் ராஜீய தனிமைப்படுத்தலை மாற்ற முடியாத ஒன்று என்று நம்பவில்லை. "நாம் இன்னும் தென்னாப்ரிக்கா காலகட்டத்தில் இல்லை. ஆனால் ஒருவேளை அதன் பிரதிபலிப்பு காலத்தில் இருக்கலாம்," என்றார். மற்ற முன்னாள் தூதர்கள், இஸ்ரேல் உலகில் புறக்கணிக்கப்பட்ட நாடாக மாறுவதைத் தடுக்க ஆழமான மாற்றங்கள் அவசியம் என நம்புகின்றனர். முன்னாள் தூதர் இலன் பருச், நிறவெறி பிரச்னை முடிந்த பின் தென்னாப்ரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். 2011ல் தூதரக சேவையிலிருந்து விலகிய பிறகு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை இனியும் காக்க முடியாது எனக் கூறி, இரு நாடுகள் தீர்வுக்கு வலுவான ஆதரவாளராக மாறினார். சமீபத்திய தடைகள் அவசியம் என்று நம்பும் அவர், "தென்னாப்ரிக்காவை மண்டியிட வைத்த ஒரே வழி இதுதான்," என்றார். இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை வழங்கும் அமெரிக்கா பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது, வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இந்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் செய்கிறார். "இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் உள்ள எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். அத்தகைய முறைகள் வரவேற்கப்படவேண்டும்," என்று பருச் கூறினார். "தேவைப்பட்டால், விசா விதிகளில் மாற்றங்கள் மற்றும் கலாசார புறக்கணிப்பும் இதில் அடங்க வேண்டும். அந்த வலியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார். சில அனுபவமிக்க விமர்சகர்கள், இஸ்ரேல் பெரிய அளவிலான ராஜீய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்ற கருத்து தொடர்பான சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். "ஸ்பெயின் போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ள நாடுகள் இன்னும் விதிவிலக்குகளாகவே உள்ளன" என்று இஸ்ரேலிய அமைதிப் முன்னாள் பேச்சுவார்த்தையாளர் டேனியல் லெவி கூறினார். இஸ்ரேலுக்கு இன்னும் வலுவான அமெரிக்க ஆதரவு கிடைக்கிறது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, அதிகாரப்பூர்வ பயணத்திற்காக புறப்படும் முன், "இஸ்ரேலுடன் அமெரிக்காவின் உறவு வலுவாகவே தொடர்கிறது" என்று குறிப்பிட்டார். இருப்பினும், சர்வதேச அளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுவது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என லெவி நம்புகிறார். டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவு தொடர்ந்தாலும், காஸாவில் நிகழ்வுகளின் போக்கை மாற்றும் நிலைமை இன்னும் உருவாகவில்லை என்றார். "நெதன்யாகுவுக்கு முன்னேற இடம் குறைந்து வருகிறது. ஆனால், இன்னும் நாம் இறுதிக்கட்டத்தை அடையவில்லை," என்று லெவி குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dr1x1kv1do
  11. 8) திரு திருமதி செல்வராசா ராணி குடும்பம் (சுழிபுரம் கிழக்கு) சுவிஸ் 35000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். திரு திருமதி செல்வராசா ராணி குடும்பத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
  12. படக்குறிப்பு, சார்லஸ் மெவேசிகா தனது பிரிட்டன் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினார், மேலும் தான் ஒரு முன்னாள் லண்டன் பேருந்து ஓட்டுநர் என்று கூறினார். கட்டுரை தகவல் ருனாகோ செலினா பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன் 16 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் தற்கொலை குறித்த விவரங்கள் உள்ளன துபையின் மிக கவர்ச்சியான பகுதிகளில் செயல்பட்டு, பெண்களை சுரண்டி வரும் ஒரு பாலியல் வர்த்தகக் கும்பலின் தலைவர் பிபிசி புலனாய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டன் முன்னாள் பேருந்து ஓட்டுநர் என சொல்லிக் கொள்ளும் சார்லஸ் மெவேசிகா, மாறுவேடத்தில் இருந்த எங்களது செய்தியாளரிடம் ஒரு பாலியல் ரீதியான விருந்துக்கு பெண்களை 1,000 டாலர்கள் ஆரம்ப விலையில் வழங்க முடியும் என்று கூறினார். பல பெண்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் "எல்லாவற்றையும் செய்வார்கள்" என்றும் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த மோசமான பாலியல் விருந்துகள் பற்றிய வதந்திகள் பல ஆண்டுகளாக பரவி வருகின்றன. டிக் டாக்கில் 450 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட #Dubaiportapotty என்ற ஹேஷ்டேக், மிக மோசமான பாலியல் கோரிக்கைகளையும் ரகசியமாக நிறைவேற்றுவதன் மூலம் ஆடம்பரமான வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சேகரிக்கும் பணத்தாசை பிடித்த பெண்கள் என குற்றம்சாட்டப்படும் பெண்களை பற்றிய கிண்டல்கள் மற்றும் ஊகப்பூர்வமான தகவல்களை காட்டுகிறது. ஆனால், பிபிசி உலக சேவையின் புலனாய்வில் உண்மை அதைவிட இருண்டது என்று தெரியவந்தது. இளம் உகாண்டா பெண்கள், மெவேசிகாவிற்காகப் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று எங்களிடம் தெரிவித்தனர். சில சந்தர்ப்பங்களில், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சூப்பர் மார்க்கெட் அல்லது ஹோட்டல்கள் போன்ற இடங்களில் வேலைக்குச் செல்வதாக நம்பியிருந்தனர். பாதுகாப்பு கருதி "மியா" என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு பெண், மெவேசிகாவின் வலையில் தான் சிக்கியதாகக் கூறினார். அவரின் கூற்றுப்படி, மெவேசிகாவின் வாடிக்கையாளர்களில் ஒருவர், பெண்களின் மீது மலம் கழிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை மெவேசிகா மறுக்கிறார். நில உரிமையாளர்கள் மூலம் பெண்கள் தங்குவதற்கு உதவுவதாகவும், துபையில் தனக்கு உள்ள வசதி படைத்தவர்களின் தொடர்புகளால் பெண்கள் தன்னைப் பின்தொடர்வதாகவும் அவர் கூறுகிறார். மெவேசிகாவுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உயரமான குடியிருப்புகளில் இருந்து விழுந்து இறந்ததையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். அவர்களின் இறப்புகள் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டாலும், அவர்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் காவல்துறை மேலும் விசாரித்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து துபை காவல்துறை விசாரித்ததாகவும், மேலும் தகவல்களுக்கு அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் மெவேசிகா எங்களிடம் கூறினார். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. உயிரிழந்த பெண்களில் ஒருவரான மோனிக் கருங்கி, மேற்கு உகாண்டாவிலிருந்து துபை வந்தார். மெவேசிகாவிற்காகப் பணிபுரியும் பல டஜன் பெண்களுடன் அவர் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்ததாக, 2022-ல் மோனிக்குடன் அங்கு வசித்ததாகக் கூறும் "கீரா" என்ற ஒரு பெண் எங்களிடம் கூறினார். "[அவருடைய] இடம் ஒரு சந்தை போல இருந்தது... சுமார் 50 பெண்கள் இருந்தனர். அவள் மகிழ்ச்சியாக இல்லை, ஏனென்றால் அவள் எதிர்பார்த்தது அவளுக்குக் கிடைக்கவில்லை," என்று கீரா எங்களிடம் கூறினார். மோனிக் துபையில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யப்போவதாக நினைத்ததாக அவரது சகோதரி ரீட்டா கூறினார். "நான் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் என்று அவரிடம் (மெவேசிகாவிடம்) கூறியபோது, அவர் வன்முறையாக நடந்துகொண்டார்," என்று துபையில் மோனிக்கை அறிந்திருந்த மியா கூறுகிறார். அவர் முதலில் வந்தபோது, தனக்கு 2,711 டாலர்கள் கடன்பட்டிருப்பதாக மெவேசிகா கூறியதாகவும், இரண்டு வாரங்களுக்குள் அந்தக் கடன் இருமடங்காக மாறியதாகவும் மியா கூறுகிறார். "விமான டிக்கெட்டுகளுக்கான பணம், விசா, நீங்கள் தங்கும் இடம், உணவு ஆகியவற்றுக்கான பணம்" என்று மியா கூறுகிறார். "அதன் பொருள், நீங்கள் கடினமாக, மிகக் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் உங்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு ஆண்களை கெஞ்ச வேண்டும்." சில வாரங்களுக்குப் பிறகு, மெவேசிகாவிற்கு மோனிக் 27,000 டாலருக்கும் அதிகமாகக் கடன்பட்டிருந்ததாக, அவரது உறவினர் மைக்கேல் கூறினார். மோனிக்கிடமிருந்து கண்ணீர் மல்கும் குரல் பதிவுகளை பெற்றதாகவும் மைக்கேல் கூறினார். பட மூலாதாரம், Family handout படக்குறிப்பு, உகாண்டாவின் ஒரு கிராமப்புறத்தில், மோனிக் தனது 10 உடன்பிறப்புகளுடன் வளர்ந்தார். 'மலத்தை சாப்பிட சொன்ன வாடிக்கையாளர்' வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெள்ளையர்கள், ஐரோப்பியர்கள் என்றும், அவர்களில் தீவிர காமக் கிளர்ச்சி கொண்டவர்களும் அடங்குவார்கள் என்றும் மியா எங்களிடம் கூறினார். "ஒரு வாடிக்கையாளர் இருந்தார், அவர் பெண்கள் மீது மலம் கழிப்பார். அவர் மலம் கழித்து அதைச் சாப்பிடச் சொல்வார்," என்று அவர் மெதுவாக விளக்கினார். வேறு ஒரு கும்பலால் ஏமாற்றப்பட்டதாகக் கூறும் "லெக்சி" என்ற மற்றொரு பெண், மியாவின் கதையை எதிரொலித்தார். "போர்ட்டா பாட்டி" கோரிக்கைகள் அடிக்கடி வருவதாகக் கூறினார். "ஒரு வாடிக்கையாளர், 'உங்களை வன்மையாகக் குழு பாலியல் வன்புணர்வு செய்ய, உங்கள் முகத்தில் சிறுநீர் கழிக்க, உங்களை அடிக்க, நாங்கள் 15,000 அரபு எமிரேட்ஸ் திர்ஹம் (4,084 டாலர்கள்) செலுத்துகிறோம்' என்று கூறினார். அதோடு, மலத்தைச் சாப்பிடுவதை வீடியோ எடுப்பதற்கு மேலும் 5,000 (1,361 டாலர்கள்) தருவதாகவும் கூறினார். இந்த தீவிர காமக் கிளர்ச்சிக்குப் பின்னால் ஒரு இனவெறி அம்சம் உள்ளது என்று அவரது அனுபவங்கள் அவரை நம்பவைத்துள்ளன. "நான் அதைச் செய்ய விரும்பவில்லை என்று ஒவ்வொரு முறையும் சொன்னபோது, அது அவர்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றியது. அவர்கள் அழுகிற, கத்துகிற, ஓடுகிற ஒருவரை விரும்புகிறார்கள். மேலும், அந்த நபர் ஒரு கறுப்பினத்தவராக இருக்க வேண்டும் [அவர்களின் பார்வையில்]." லெக்சி, தனக்கு உதவக்கூடியவர்கள் காவல்துறையினர் மட்டும்தான் என்று நினைத்து அவர்களிடம் உதவி பெற முயன்றதாகக் கூறுகிறார். ஆனால், அவர்கள் அவரிடம், " ஆப்பிரிக்கர்களான நீங்கள் ஒருவருக்கொருவர் சிக்கல்களை உருவாக்குகிறீர்கள். நாங்கள் இதில் தலையிட விரும்பவில்லை," என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டிப்பார்கள் என்று அவர் கூறுகிறார். இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் துபை காவல்துறையிடம் வைத்தபோது, அவர்கள் பதிலளிக்கவில்லை. கடைசியில் லெக்சி தப்பித்து உகாண்டாவுக்குத் திரும்பிச் சென்றார். இப்போது இதேபோன்ற சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு உதவவும், அவர்களை மீட்கவும் உதவி செய்து வருகிறார். படக்குறிப்பு, மே 2022-ல் மோனிக் கருங்கி மேலிருந்து கீழே விழுந்த துபையில் உள்ள வார்சன் கோபுரம் மெவேசிகாவை கண்டுபிடித்தது எப்படி? சார்லஸ் மெவேசிகாவை கண்டுபிடிப்பது எளிதாக இல்லை. ஆன்லைனில் நாங்கள் ஒரு புகைப்படத்தை மட்டுமே காண முடிந்தது – அதுவும் அவர் பின்புறத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர் சமூக வலைத்தளங்களில் பல பெயர்களைப் பயன்படுத்துகிறார். ஆனால், ஓபன் சோர்ஸ் புலனாய்வு, ரகசிய ஆய்வு, மற்றும் அவரது கும்பலின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் மூலம், துபையில் நடுத்தர மக்கள் வசிக்கும் ஒரு பகுதியான ஜுமேரா வில்லேஜ் சர்க்கிளில் அவரைக் கண்டறிந்தோம். இழிவான பாலியல் செயல்களுக்குப் பெண்களை வழங்குவதுதான் அவரது தொழில் என எங்களிடம் கூறப்பட்டதை உறுதிப்படுத்த, நாங்கள் ஒரு செய்தியாளரை மாறுவேடத்தில் உயர்தர விருந்துகளுக்குப் பெண்களை ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வு அமைப்பாளர் போல அனுப்பினோம். மெவேசிகா தனது வியாபாரம் பற்றிப் பேசும்போது அமைதியாகவும், நம்பிக்கையுடனும் காணப்பட்டார். "எங்களிடம் சுமார் 25 பெண்கள் இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார். "அவர்களில் பலர் திறந்த மனம் கொண்டவர்கள்... அவர்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்." ஒரு பெண்ணுக்கு ஒரு இரவுக்கு 1,000 டாலர் செலவாகும் என்று அவர் விளக்கினார். மேலும், "பைத்தியக்காரத்தனமான செயல்களுக்கு" கூடுதலாக செலவாகும் என்றும் கூறினார். எங்கள் செய்தியாளரை ஒரு "சேம்பிள் இரவு"க்கு அவர் அழைத்தார். "துபை போர்ட்டா பாட்டி" பற்றி அவரிடம் கேட்டபோது, "அவர்கள் திறந்த மனம் படைத்தவர்கள் என நான் உங்களிடம் சொன்னேன், திறந்த மனம் படைத்தவர்கள் என நான் சொன்னால் என்னிடம் உள்ள மிகவும் பைத்தியக்காரத்தனமானவர்களை நான் உங்களுக்கு அனுப்புவேன்," என அவர் பதிலளித்தார்: பேச்சின்போது, மெவேசிகா முன்பு லண்டன் பேருந்து ஓட்டுநராக இருந்ததாகக் கூறினார். 2006-ல் கிழக்கு லண்டனில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அவர் அந்தத் தொழிலைக் குறிப்பிட்டதற்கான ஆதாரத்தை நாங்கள் பார்த்துள்ளோம். பின்னர் அவர் எங்கள் செய்தியாளரிடம், தனக்கு இந்தத் தொழில் பிடிக்கும் என்று கூறினார். "நான் லாட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்றாலும், நான் அதைத்தான் செய்வேன்... அது என் ஒரு அங்கமாக மாறிவிட்டது." வேசிகாவின் கும்பலின் செயல்பாட்டு மேலாளராகத் தான் பணிபுரிந்ததாகக் கூறும் "டிராய்" என்ற ஒரு நபர், அது எப்படி நடத்தப்படுகிறது என்பது குறித்து எங்களுக்கு மேலும் தகவல் அளித்தார். படக்குறிப்பு, டிராய், தான் முதலில் ஓட்டுநராகவும், பின்னர் சார்லஸ் மெவேசிகாவிற்கு செயல்பாட்டு மேலாளராகவும் பணிபுரிந்ததாகக் கூறுகிறார். மெவேசிகா பல இரவு விடுதிகளில் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பணம் செலுத்துவார், அதனால் அவர்கள் அவரது பெண்களை உள்ளே சென்று வாடிக்கையாளர்களைப் பிடிக்க அனுமதிப்பார்கள் என்று அவர் கூறுகிறார். "நான் என் வாழ்க்கையில் பார்த்திராத வகையான பாலியல் உறவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது பணக்காரர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வரை நீங்கள் எதை அனுபவிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல... [பெண்களுக்கு] தப்பிக்க வழி இல்லை... அவர்கள் இசைக்கலைஞர்களைப் பார்க்கிறார்கள், கால்பந்து வீரர்களைப் பார்க்கிறார்கள், ஜனாதிபதிகளைப் பார்க்கிறார்கள்." மெவேசிகா இந்தச் செயலைச் செய்துவிட்டு தப்பவும் முடிகிறது என்று டிராய் கூறுகிறார். தனது சொந்தப் பெயர் ஆவணங்களில் வராமல் இருக்க, கார் மற்றும் குடியிருப்புகளை வாடகைக்கு எடுக்க டிராய் என்ற பெயரையும் மற்ற பிறரின் பெயர்களையும் மெவேசிகா பயன்படுத்துகிறார் என்று அவர் கூறுகிறார். 27 ஏப்ரல் 2022 அன்று, மோனிக் துபையில் உள்ள அல் பர்ஷா என்ற வெளிநாட்டினருக்கான பிரபலமான ஒரு குடியிருப்பு பகுதியிலிருந்து ஒரு செல்ஃபியைப் பதிவிட்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு, அவர் இறந்துவிட்டார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே இருந்தார். மியா கூற்றுப்படி, மோனிக் வெளியேறுவதற்கு முன்பு மோனிக்கிற்கும் மெவேசிகாவிற்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வந்தன. மோனிக் மெவேசிகாவின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்து, அவரது கும்பலிலிருந்து வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடித்திருந்ததாக மியா கூறுகிறார். "அவளுக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்தது. அவள் மிகவும் உற்சாகமாக இருந்தாள். அவளுக்கு இப்போது ஒரு உண்மையான வேலை கிடைத்திருப்பதால் இனி ஆண்களுடன் பாலியல் உறவில் வேண்டியதில்லை என்றும் விடுதலையாகி தனது வாழ்க்கையைத் திரும்பப் பெறப் போவதாகவும் நினைத்தாள்," என்று மியா கூறுகிறார். மோனிக் சுமார் 10 நிமிட நடை தூரத்தில் உள்ள வேறு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறிச் சென்றார். மே 1, 2022 அன்று இந்தக் குடியிருப்பின் பால்கனியிலிருந்து தான் அவர் விழுந்து இறந்தார். பட மூலாதாரம், Instagram படக்குறிப்பு, மோனிக் இறப்பதற்கு முன் பதிவிட்ட கடைசி செல்ஃபி. மோனிக் இறந்தபோது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்த அவரது உறவினர் மைக்கேல் பதில்களைப் பெற முயற்சித்தார். மோனிக் விழுந்த குடியிருப்பில் போதைப்பொருள் மற்றும் மதுபானம் இருந்ததாலும், பால்கனியில் அவரது கைரேகைகள் மட்டுமே இருந்ததாலும் தங்கள் விசாரணையை நிறுத்திவிட்டதாக காவல்துறை அவரிடம் கூறியதாக அவர் கூறுகிறார். மோனிக்கிற்கான இறப்புச் சான்றிதழை ஒரு மருத்துவமனையிலிருந்து அவர் பெற்றார், ஆனால் அந்த சான்றிதழ் அவர் எப்படி இறந்தார் என்பதை கூறவில்லை. அவரது குடும்பத்தினரால் அவரது நச்சுயியல் அறிக்கையைப் (உடலில் போதை மருந்து, மது, விஷம் இருந்ததா என கண்டறியும் அறிக்கை) பெற முடியவில்லை. ஆனால், அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் கானாவைச் சேர்ந்த நபர் உதவியாக இருந்ததாகவும் மோனிக்கின் முதலாளி என்று கூறியவரைச் சந்திக்க வேறு ஒரு கட்டடத்திற்கு அவரை அழைத்துச் சென்றதாகவும் மைக்கேல் கூறுகிறார். அங்கு அவர் சென்று பெண்களைத் தங்க வைத்திருந்த இடத்தைப் பார்த்தபோது நடந்த காட்சியை மைக்கேல் விவரிக்கிறார். ஷிஷா புகையின் நடுவில், மேஜையில் கோகெய்ன் போன்ற ஒன்றை பார்த்ததாகவும், நாற்காலிகளில் பெண்கள் வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு கொள்வதையும் பார்த்ததாக அவர் கூறுகிறார். நாங்கள் முன்பு சார்லஸ் மெவேசிகா என்று அடையாளம் கண்ட நபரை இரண்டு பெண்களுடன் படுக்கையில் கண்டதாகவும், அவரை காவல்துறைக்கு இழுத்துச் செல்ல முயன்றபோது, மெவேசிகா, "நான் துபையில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். துபை என்னுடையது... நீங்கள் என்னைப் பற்றி புகார் செய்ய முடியாது... தூதரகம் நான் தான், நான் தான் தூதரகம்" என்று கூறியதாகவும் அவர் கூறுகிறார். "(மோனிக்) முதலில் இறந்தவள் அல்ல. மேலும், அவள் கடைசிப் பெண்ணாகவும் இருக்க மாட்டாள்," என்று அவர் மேலும் கூறினார் என்று மைக்கேல் கூறுகிறார். மியா மற்றும் கீரா இருவரும் இந்த உரையாடலை கண்டதாக தனித்தனியாக தெரிவித்ததுடன், இருவரும் அந்த உரையாடலின் வார்த்தைகளை உறுதிப்படுத்தினர். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என மெவேசிகாவிடம் கேட்டபோது, அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுத்தார். மோனிக்கின் மரணம், அவர் வசித்த அதே பகுதியில் வசித்த மற்றொரு உகாண்டா பெண்ணான கெய்லா பிரங்கியின் மரணத்துடன் சில மர்மமான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. கெய்லா 2021-ல் துபையில் ஒரு உயரமான குடியிருப்பிலிருந்து விழுந்து இறந்தார். அந்த குடியிருப்பு சார்லஸ் மெவேசிகாவால் நிர்வகிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. கெய்லாவின் குடும்பத்தினர் எங்களிடம் பகிர்ந்த அவரது நில உரிமையாளரின் தொலைபேசி எண், மெவேசிகாவின் எண்களில் ஒன்றாக இருந்தது. இந்த ஆய்வின் போது நாங்கள் பேசிய வேறு நான்கு பெண்களும், மெவேசிகா அந்த குடியிருப்பைப் நிர்வகித்ததாக உறுதிப்படுத்தினர். பட மூலாதாரம், Instagram படக்குறிப்பு, மற்றொரு உகாண்டா பெண்ணான கெய்லா பிரங்கியும் துபையில் உள்ள உயரமான கட்டடத்திலிருந்து விழுந்து இறந்தார். மோனிக்கின் குடும்பத்தைப் போலவே, கெய்லாவின் குடும்பத்தினரும் கெய்லாவின் மரணம் மது மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடையது என்று கேள்விப்பட்டதாகக் கூறினர். ஆனால் பிபிசி பார்த்த ஒரு நச்சுயியல் அறிக்கை, அவர் இறந்த நேரத்தில் அவரது உடலில் இவை எதுவும் இல்லை என்று காட்டுகிறது. கெய்லாவின் குடும்பத்தினரால் அவரது உடலைத் தாயகம் கொண்டுவந்து அடக்கம் செய்ய முடிந்தாலும், மோனிக்கின் உடல் ஒருபோதும் திருப்பி அனுப்பப்படவில்லை. மோனிக், துபையில் உள்ள அல் குசைஸ் கல்லறையில் "அடையாளம் தெரியாதவர்கள்" என்று அறியப்படும் ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று எங்கள் விசாரணை கண்டறிந்துள்ளது. இங்கு அடையாளமற்ற கல்லறைகள் வரிசையாக உள்ளன. இவை பொதுவாக, குடும்பத்தினரால் உடலைத் தாயகம் கொண்டு செல்ல முடியாத புலம்பெயர்ந்தோருடையவையாக கருதப்படுகிறது. மோனிக் மற்றும் கெய்லா, உகாண்டாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பெண்களைக் கொண்டு செல்லும் ஒரு பரந்த அதிகாரபூர்வமற்ற வலைப்பின்னலின் ஒரு பகுதியாக இருந்தனர். உகாண்டாவில் இளைஞர்களுக்கு வேலையின்மை அதிகரித்து வருவதற்கு மத்தியில், வெளிநாடுகளில் - குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்வது ஒரு பெரிய தொழிலாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நாட்டுக்கு 1.2 பில்லியன் டாலர்கள் (885 மில்லியன் பவுண்டுகள்) வரி வருவாயை ஈட்டித் தருகிறது. ஆனால், இந்த வாய்ப்புகள் அபாயங்களைக் கொண்டவையாக இருக்கலாம். சுரண்டலுக்கு எதிரான உகாண்டா ஆர்வலரான மரியம் முவிசா, வளைகுடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மக்களை மீட்க உதவியுள்ளதாகக் கூறுகிறார். "சூப்பர் மார்க்கெட்டில் வேலை என வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் பாலியல் தொழிலாளியாக விற்கப்பட்டவர்களின் வழக்குகள் எங்களிடம் வருகின்றன," என்று அவர் எங்களிடம் கூறினார். படக்குறிப்பு, உகாண்டாவின் கிராமப்புறத்தில் வசிக்கும் மோனிக்கின் குடும்பத்தினர், மோனிக்கிற்கு எப்போதும் ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடும் லட்சியம் இருந்தது என்று கூறுகிறார்கள். மோனிக்கின் குடும்பத்தினருக்கு, துயரத்துடன் இப்போது பயமும் சேர்ந்துள்ளது. எதுவும் செய்யப்படாவிட்டால், மற்ற குடும்பங்களும் இதேபோன்ற இழப்பைச் சந்திக்கக்கூடும் என்ற பயம். "நாம் அனைவரும் மோனிக்காவின் மரணத்தைப் பார்க்கிறோம்," என்று அவரது உறவினர் மைக்கேல் எங்களிடம் கூறினார். "ஆனால், இன்னும் உயிருடன் இருக்கும் பெண்களுக்காக யார் இருக்கிறார்கள்? அவர்கள் இன்னும் அங்கேயே இருக்கிறார்கள். இன்னும் அவதிப்படுகிறார்கள்." இந்த ஆய்வில் கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்குமாறு சார்லஸ் "அபே" மெவேசிகாவை பிபிசி கேட்டது. அவர் ஒரு சட்டவிரோத பாலியல் தொழில் கும்பலை நடத்துவதை மறுத்தார். "இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். நான் ஒரு விருந்து பிரியன், நிறைய பணம் செலவு செய்யும் நபர்களை எனது மேஜைகளுக்கு அழைக்கிறேன். அதனால் பல பெண்கள் எனது மேஜையில் குவிகிறார்கள். இது எனக்கு பல பெண்களை அறியச் செய்கிறது. அவ்வளவுதான்" என்று அவர் கூறினார். "[மோனிக்] தனது பாஸ்போர்ட்டுடன் இறந்தார். அதாவது, அவளை அழைத்துச் சென்றதற்காக யாரும் பணம் கோரவில்லை. அவள் இறப்பதற்கு நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு முன்பிருந்து அவளை நான் பார்க்கவில்லை," என அவர் மேலும் கூறினார். "எனக்கு [மோனிக் மற்றும் கெய்லா] தெரியும். அவர்கள் வெவ்வேறு நில உரிமையாளர்களிடம் வாடகைக்கு இருந்தார்கள். இரண்டு குடியிருப்புகளில் இருந்தவர்களில் யாரும் அல்லது நில உரிமையாளர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றால், அதற்கு ஒரு காரணம் இருந்தது. இரண்டு சம்பவங்களும் துபை காவல்துறையால் விசாரிக்கப்பட்டன. ஒருவேளை அவர்கள் உங்களுக்கு உதவலாம்" என்றார். மோனிக் கருங்கி மற்றும் கெய்லா பிரங்கியின் வழக்கு கோப்புகளைக் கோரி, பிபிசி அல் பர்ஷா காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டது. ஆனால், அந்த கோரிக்கைக்கோ, மோனிக் மற்றும் கெய்லாவின் மரணங்கள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கோ அவர்கள் பதிலளிக்கவில்லை. மோனிக் கருங்கியின் நச்சுயியல் அறிக்கைகளை பிபிசி-யால் பார்க்க முடியவில்லை. மேலும், அவர் இறந்தபோது வசித்த குடியிருப்பின் நில உரிமையாளருடன் பேசவும் முடியவில்லை. இந்த விசாரணையில் சேர்க்க நீங்கள் ஏதாவது தகவல் வைத்திருந்தால், தயவுசெய்து runako@bbc.co.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். பாலியல் வன்புணர்வு அல்லது மனச்சோர்வு குறித்த தகவல் அல்லது ஆதரவு வழங்கும் நிறுவனங்களின் விவரங்கள் bbc.co.uk/actionline இல் உள்ளன. தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள... மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0r05rzz90eo
  13. 17 Sep, 2025 | 04:26 PM வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் துறை சார் அதிகாரிகளினால் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை (16) உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் அப்பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஆராயப்பட்டபோது துறைசார் அதிகாரி ஒருவரினால் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது. அந்த அதிகாரி இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 32 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 5 பாடசாலைகளில் போதைப் பொருளை பயன்படுத்துகின்ற மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப விவரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, அந்த மாணவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களும் போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களாக உள்ளமை தெரியவந்துள்ளது. உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முப்பது கிராம சேவையாளர் பிரிவுகளில் 5 கிராம சேவையாளர் பிரிவு போதைப்பொருள் தொடர்பான அடையாளப்படுத்தப்பட்ட பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளது. மேலும் இவ்வருடம் தை மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் தொடர்பான முறைப்பாடுகளாக குறிப்பாக, பாடசாலை இடைவிலகல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொடர்பு, குடும்ப வன்முறை உள்பட 67 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முறைப்பாடுகள் மீதான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே குறித்த பிரதேச பகுதிகளில் வழி தவறி செல்லுகின்ற பாடசாலை மாணவர்களை சரியான வழியை காட்டுவதற்கும், ஏனைய மாணவர்களை விழிப்படையச் செய்வதற்கும் அனைத்து தரப்பி னர்களையும் உள்ளடக்கிய ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பு உருவாக்கப் பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/225315
  14. யாழ். நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் நீடிப்பு! 17 Sep, 2025 | 01:54 PM யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் ஆகஸ்ட் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் நாளை வியாழக்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் இன்று (17) யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே இவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 03.09.2025 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில், அன்றைய தினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் இன்று (17) வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார். அதன்படி, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7 மீனவர்களது விளக்கமறியலை நாளை (18) வரை நீடித்து நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவு பிறப்பித்தார். https://www.virakesari.lk/article/225308
  15. திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் 17 Sep, 2025 | 01:28 PM தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (17) நடத்தப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், 12ஆவது நாளான 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு தியாக தீபம் உயிர் நீத்தார். https://www.virakesari.lk/article/225305
  16. காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்: "காசா பற்றி எரிகிறது" என்கிறார் இஸ்ரேல் அமைச்சர் 17 Sep, 2025 | 09:31 AM இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "காசா பற்றி எரிகிறது" என்று தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரியவந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர்16) முதல் காசா முழுவதும் இஸ்ரேல் இராணுவம் தீவிர வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், "பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஹமாஸைத் தோற்கடிப்பதற்கும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்" என்று தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதால், காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில், பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அதிகாரிகள் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு முன்பாகவே, காசா நகரை முழுமையாகக் கைப்பற்றுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களைத் தனது தற்காப்பு நடவடிக்கையாக நியாயப்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச அளவில் பதற்றத்தையும் அதிகரித்துள்ளன. https://www.virakesari.lk/article/225281
  17. ஆப்கானிஸ்தானை 8 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ் அணி Published By: Vishnu 17 Sep, 2025 | 01:33 AM அபுதாபியில் 16ஆம் திகதி இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தானை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. இளம் துடுப்பாட்ட வீரர் தான்சித் ஹசன் அரைசதம் (52 ஓட்டங்கள்) எடுத்தார். பதில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 146 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. https://www.virakesari.lk/article/225268
  18. பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images கட்டுரை தகவல் ஜஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமது சருமத்தில் உள்ள நுண்துளைகள் மற்றும் மூச்சுக்காற்று மூலம் பல்வேறு வேதிப்பொருட்களை நாம் வெளியிடுகிறோம். இவற்றில் சில நாம் நோய்வாய்ப்படவிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நோய்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியவும் இவை பயன்படுத்தப்படலாம். "இது முற்றிலும் முட்டாள்தனம்." பார்கின்சன் நோயை முகர்ந்து கண்டறியும் திறன் தனக்கு இருப்பதாக ஒரு ஸ்காட்லாந்துப் பெண்மணி கூறியதைப் பற்றி உடன் பணிபுரியும் ஒருவர் கூறிய போது, பகுப்பாய்வு வேதியியலாளர் பெர்டிடா பாரன் இப்படித்தான் எதிர்வினையாற்றினார். "அவர் வயதானவர்களின் வாசனையை முகர்ந்து, பார்கின்சன் நோயின் அறிகுறிகளை அடையாளம் கண்டு, ஏதோ ஒன்றை தொடர்புபடுத்தியிருக்கலாம்" என்று நினைத்ததாக பாரன் நினைவு கூர்ந்தார். ஜாய் மில்னே என்ற 74 வயதான ஓய்வுபெற்ற செவிலியர், 2012-ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி திலோ குனாத் என்பவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது அவரை அணுகினார். மில்னே, பல ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் லெஸ் உடலில் ஒரு புதிய வாசனை தோன்றியதை முதன் முதலில் கவனித்த பிறகு, தனது திறனைக் கண்டறிந்ததாகக் குனாத்திடம் தெரிவித்தார். பின்னர், நடுக்கம் மற்றும் பிற இயக்க அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும் ஒரு படிப்படியாக அதிகரிக்கும் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோயால் அவரது கணவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த் நகரில் பார்கின்சன் நோயாளிகளின் குழு கூட்டத்தில் மில்னே கலந்து கொண்ட போதுதான், அவரால் அந்தத் தொடர்பைக் கண்டறிய முடிந்தது: அனைத்து நோயாளிகளுக்கும் அதே வாசனை இருந்தது. "அதனால், அவர் சொன்னது சரியா என்று சோதித்துப் பார்க்க நாங்கள் முடிவு செய்தோம்" என்று அந்த நேரத்தில் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த பாரன் கூறுகிறார். தற்போது அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். மில்னே சொன்னது நேரத்தை வீணடிக்கும் விஷயம் இல்லை என்பது தெரியவந்தது. குனாத், பாரன் மற்றும் அவர்களது சகாக்கள் மில்னேவை 12 டி-ஷர்ட்களை முகர்ந்து பார்க்கச் சொன்னார்கள். அதில், ஆறு பார்கின்சன் நோயாளிகளால் அணியப்பட்டவை. மேலும் ஆறு அந்த நோய் இல்லாத மற்றவர்களால் அணியப்பட்டவை. அவர் ஆறு நோயாளிகளையும் சரியாக அடையாளம் கண்டார். அடுத்த ஒரு வருடத்திற்குள் பார்கின்சன் நோய் பாதிக்கப்படவிருந்த ஒருவரையும் அவர் அடையாளம் கண்டார். "இது ஆச்சரியமாக இருந்தது," என்று பாரன் கூறுகிறார். "அவர் தனது கணவரிடம் செய்தது போலவே, அந்த நிலையையும் முன்கூட்டியே கண்டறிந்தார்." 2015-ல், அவரது இந்த அற்புதமான திறன் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாகின. மில்னேவின் கதை நீங்கள் நினைப்பது போல் விசித்திரமானது அல்ல. மக்களின் உடல்கள் பல்வேறு நாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. ஒரு புதிய வாசனை உடலில் ஏதோ மாற்றம் அல்லது தவறு நடந்திருப்பதைக் குறிக்கலாம். இப்போது, பார்கின்சன் நோய் மற்றும் மூளைக் காயங்கள் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நிலைகளைக் கண்டறிவதை விரைவுபடுத்தக் கூடிய வாசனைகளைக் கண்டறியும் நுட்பங்களில் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். அவற்றைக் கண்டறியும் திறன் நம் மூக்கின் அடியிலேயே மறைந்திருந்திருக்கலாம். பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images படக்குறிப்பு, நாற்றங்கள் நமது மூக்கில் உள்ள வாசனை வாங்கிகளுடன் தொடர்பு கொள்ளும் வேதிப்பொருட்களால் ஏற்படுகின்றன. "ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய, அவர்களின் பின்புறத்தில் ஊசிகளைச் செருகுகிறோம். ஆனால், அதைக் காட்டும் சமிக்ஞை ஏற்கனவே வெளியே உள்ளது. அதை நாய்களால் கண்டறிய முடியும் என்கிற நிலையில் மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது என்னைக் கோபப்படுத்துகிறது," என்கிறார் ஆண்ட்ரியாஸ் மெர்ஷின். இவர், வாசனை அடிப்படையில் நோய்களைக் கண்டறிய ஒரு ரோபோ மூக்கை உருவாக்கி வரும் ரியல்நோஸ்.ஏஐ (RealNose.ai) என்ற நிறுவனத்தின் இயற்பியலாளர் மற்றும் இணை நிறுவனர் ஆவார். ஒரு நோயின் ஆரம்ப கட்டங்களில் தோன்றும் இந்த உயிர் வேதியியல் பொருட்களைக் கண்டறிய போதுமான சக்திவாய்ந்த மூக்கு சிலரிடம் மட்டுமே இருப்பதால், இத்தகைய தொழில்நுட்பம் அவசியமானது. ஜாய் மில்னே, அந்தச் சிலரில் ஒருவர் என்பது தெரியவந்தது. அவருக்கு மரபுவழி ஹைபரோஸ்மியா உள்ளது. இதனால் அவரது வாசனை உணர்வு சராசரி மனிதரை விட மிகவும் அதிக உணர்திறன் கொண்டது – அதாவது அவருக்கு ஒரு வகையான அதீத முகர்ந்து பார்க்கும் திறன் இருக்கிறது. சில நோய்கள் மிகவும் வலுவான, தனித்துவமான வாசனையை வெளியிடுகின்றன. பெரும்பாலான மனிதர்களால் அவற்றின் வாசனையை முகர்ந்து பார்க்க முடியும். உதாரணமாக, நீரிழிவு நோயாளிகளின் மூச்சு அல்லது தோலில், ரத்த ஓட்டத்தில் கீட்டோன்கள் எனப்படும் பழ வாசனை கொண்ட அமில வேதிப்பொருட்கள் அதிகமாகச் சேர்வதால், ஒரு பழ வாசனை அல்லது "அழுகிய ஆப்பிள்" வாசனை வரலாம். உடல் குளுக்கோஸுக்குப் பதிலாகக் கொழுப்பை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தும்போது இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சு அல்லது சிறுநீரில் ஒருவித கந்தக வாசனை வெளிப்படலாம். அதே சமயம், உங்கள் மூச்சில் அமோனியா வாசனை வீசினால் அல்லது "மீன் போன்ற" அல்லது "சிறுநீர் போன்ற" வாசனை இருந்தால், இது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். சில தொற்று நோய்களும் தனித்துவமான வாசனையை வெளியிடுகின்றன. இனிப்பு மணம் கொண்ட மலம் காலரா அல்லது குளோஸ்ட்ரிடியோய்ட்ஸ் டிஃபிசில் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். இது வயிற்றுப்போக்கிற்கு ஒரு பொதுவான காரணமாகும் - இருப்பினும், ஒரு ஆய்வில், ஒரு மருத்துவமனை செவிலியர்கள் குழுவால் மலத்தை முகர்ந்து நோயாளிகளின் நோய்களை சரியாகக் கண்டறிய முடியவில்லை என தெரியவந்தது. இதற்கிடையில், காசநோய் ஒரு நபரின் மூச்சில் பழைய பீர் போன்ற துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் தோல் ஈரமான பழுப்பு நிற அட்டை மற்றும் உப்புக் கரைசல் போன்ற வாசனையை வெளிப்படுத்தலாம். இருப்பினும், மற்ற நோய்களைக் கண்டறிய ஒரு சிறப்பு வகையான மூக்கு தேவைப்படுகிறது. உதாரணமாக, நாய்களுக்கு மனிதர்களை விட 100,000 மடங்கு வலுவான வாசனை உணர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. நுரையீரல், மார்பகம், கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை மக்களிடம் முகர்ந்து கண்டறிய நாய்களுக்கு விஞ்ஞானிகள் பயிற்சி அளித்துள்ளனர். உதாரணமாக, புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த ஒரு ஆய்வில், சிறுநீர் மாதிரிகளில் நோயைக் கண்டறிய நாய்களால் 99% வெற்றிகரமாகச் செயல்பட முடிந்தது. பார்கின்சன் நோய், நீரிழிவு நோய், வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் மற்றும் மலேரியா ஆகியவற்றின் ஆரம்ப அறிகுறிகளை வெறும் வாசனையை வைத்து கண்டறியவும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எல்லா நாய்களுக்கும் ஒரு நோய்க் கண்டறிதல் நாயாக மாறத் தேவையான திறமை இல்லை. அத்தகைய திறமை இருக்கும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்க நேரம் எடுக்கும். சில விஞ்ஞானிகள், நாய்கள் மற்றும் மில்னே போன்றவர்களின் அற்புதமான வாசனை திறன்களை ஆய்வகத்தில் உருவாக்கி, ஒரு எளிய துணியின் மூலம் நோயை கண்டறியும் வாய்ப்பை வழங்கலாம் என்று கூறுகிறார்கள். உதாரணமாக, பார்கின்சன் நோயாளிகளிடமிருந்து செபத்தை (மக்களின் தோலில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் போன்ற பொருள்) பகுப்பாய்வு செய்ய பாரன், வாயு நிற மூர்த்தம்-நிறை நிறமாலைமானியைப் (gas chromatography-mass spectrometry) பயன்படுத்துகிறார். வாயு நிறமூர்த்தம் சேர்மங்களைப் பிரிக்கிறது. நிறை நிறமாலைமானி அவற்றின் எடையை அளவிடுகிறது. அதில் உள்ள மூலக்கூறுகளின் தன்மையைத் துல்லியமான தீர்மானிக்க இது உதவுகிறது. உணவு, பானம் மற்றும் வாசனைத் திரவியத் தொழில்கள் ஏற்கனவே இந்த வாசனைப் பகுப்பாய்வு முறையை வழக்கமாகப் பயன்படுத்துகின்றன. மனித தோலில் பொதுவாகக் காணப்படும் சுமார் 25,000 சேர்மங்களில், சுமார் 3,000 சேர்மங்கள் பார்கின்சன் நோய் உள்ளவர்களிடம் வித்தியாசமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்று பாரன் கூறுகிறார். "பார்கின்சன் நோய் உள்ள அனைவரிடமும் தொடர்ந்து வித்தியாசமாக இருக்கும் சுமார் 30 சேர்மங்களை நாங்கள் வகைப்படுத்தியுள்ளோம்." பல சேர்மங்கள் கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் என்று அவர் கூறுகிறார். உதாரணமாக, ஒரு ஆரம்ப ஆய்வு, இந்த நோயினால் ஏற்படும் வாசனைக்கு தொடர்புடைய மூன்று கொழுப்பு போன்ற மூலக்கூறுகளில் கவனம் செலுத்தியது. அவை, ஹிப்பியூரிக் அமிலம், ஈகோசேன் மற்றும் ஆக்டாடெகானல். முந்தைய ஆய்வுகள், அசாதாரண கொழுப்பு வளர்சிதை மாற்றம் பார்கின்சன் நோயின் ஒரு முக்கிய அம்சம் என்று கூறுவதால், இது சரியான முறையாக தோன்றுகிறது. "பார்கின்சன் நோய் உள்ளவர்களிடம் கொழுப்பு அமிலங்களை மைட்டோகாண்ட்ரியாவுக்குள் கொண்டு செல்லும் செல்களின் திறன் குறைபாடுள்ளதைக் கண்டறிந்துள்ளோம்" என்று பாரன் கூறுகிறார். "எனவே, இந்த கொழுப்புகள் உடலில் அதிகமாக சுழன்று கொண்டிருக்கின்றன என்று எங்களுக்குத் தெரியும். அவற்றில் சில தோலின் வழியாக வெளியேற்றப்படுகின்றன, அதைத்தான் நாங்கள் அளவிடுகிறோம்." இந்த குழு இப்போது பார்கின்சன் நோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியக் கூடிய ஒரு எளிய பரிசோதனையை (skin swab test) உருவாக்கி வருகிறது. தற்போது, நடுக்கம் போன்ற அறிகுறிகளைக் காட்டும் நபர்கள் பொதுவாக ஒரு நரம்பியல் நிபுணரிடம் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அவர் பின்னர் ஒரு நோயறிதலைச் செய்வார். இதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். "ஒருவரை திறம்பட பரிசோதிக்க உதவும் ஒரு மிக விரைவான, ஊடுருவல் இல்லாத பரிசோதனை முறையை நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் அவர்கள் ஒரு நரம்பியல் நிபுணரைச் சந்தித்து, அவர் ஆய்வு செய்து 'ஆம்' அல்லது 'இல்லை' என்று சொல்ல முடியும்" என்று பாரன் கூறுகிறார். ஆனால், நோய்கள் ஏன் நமது உடல் நாற்றத்தைப் பாதிக்கின்றன? இதற்கு காரணம், கொந்தளிப்பான கரிம சேர்மங்கள் (volatile organic compounds - VOCs) எனப்படும் மூலக்கூறுகளின் ஒரு குழுவாகும். உயிருடன் இருக்க, நமது உடல் தொடர்ந்து உணவு மற்றும் பானங்களை ஆற்றலாக மாற்ற வேண்டும். நமது உணவில் உள்ள சர்க்கரைகளை நமது உடல் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றும் சிறிய கட்டமைப்புகளான நமது செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவுக்கு உள்ளே நிகழும் வேதிவினைகளின் தொடர் மூலம் இது நடக்கிறது. இந்த வேதிவினைகள் வளர்சிதை மாற்றங்கள் எனப்படும் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் சில அறை வெப்பநிலையில் எளிதில் ஆவியாகி, நமது மூக்குகளால் கண்டறியப்படலாம். பின்னர், இந்த VOC-க்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. "உங்களுக்கு ஒரு நோய்த்தொற்று அல்லது ஒரு நோய், அல்லது ஒரு காயம் ஏற்பட்டால், அது உங்கள் வளர்சிதை மாற்றத்தில் ஒரு விளைவை ஏற்படுத்தும் என்பது தர்க்கரீதியானது" என்று அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான மோனல் கெமிக்கல் சென்சஸ் மையத்தின் ரசாயன சூழலியலாளர் புரூஸ் கிம்பால் கூறுகிறார். "வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அந்த மாற்றம் உங்கள் உடலில் உள்ள வெவ்வேறு இடங்களில் உள்ள வளர்சிதை மாற்றப் பொருட்களின் விநியோகத்தில் உணரப்படும்." வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நோய் இருந்தால், அது உற்பத்தி செய்யப்படும் விஓசி-க்களை(ஆவியாகும் கரிம சேர்மங்கள்) மாற்றி, நமது உடல் நாற்றத்தில் ஒரு தனித்துவத்தை உருவாக்கும். பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images படக்குறிப்பு, எளிய பரிசோதனைகள் மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிவது, சில நிலைகளுக்கான சிகிச்சைகளை மாற்றியமைக்கக்கூடும். "நாங்கள் பல வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைப் பார்த்துள்ளோம். கணைய புற்றுநோய், ரேபிஸ் ஆகியவற்றைப் பார்த்துள்ளோம். இது ஒரு நீண்ட பட்டியல்," என்கிறார் கிம்பால். "ஒரு ஆரோக்கியமான நிலையுடன் ஒப்பிடும்போது, நாம் பார்க்கும் எந்தவொரு நிலையையும் ஆரோக்கியமான நிலையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் திறன் நமக்கு இல்லை என்பது மிகவும் அரிது என நான் சொல்வேன். இது மிகவும் பொதுவானது." ஆனால், மிக முக்கியமாக, இந்த நோய்களுடன் தொடர்புடைய பல விஓசி (ஆவியாகும் கரிம சேர்மங்கள்)மாற்றங்கள் மனிதர்களால் கண்டறிய முடியாத அளவுக்கு நுட்பமானவை. அதனால்தான் நாய்கள் - அல்லது நாற்றத்தை முகர்ந்து பார்க்கும் மருத்துவ சாதனங்கள் - எதிர்காலத்தில் சில தீவிரமான ஆனால் கண்டறிய கடினமான நிலைகளைக் கண்டறிய நமக்கு உதவக்கூடும். உதாரணமாக, விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளிடையே மூளைக் காயங்களைக் கண்டறிய, அவர்களின் உடலால் வெளிப்படுத்தப்படும் விஓசி-களில் (ஆவியாகும் கரிம சேர்மங்கள்)ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரிசோதனையை உருவாக்க கிம்பால் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 2016-ல், எலிகளுக்கு ஏற்படும் மூளைக் காயங்கள் ஒரு தனித்துவமான வாசனையை ஏற்படுத்துவதாகவும், அதை முகர்ந்து பார்க்க மற்ற எலிகளுக்குப் பயிற்சி அளிக்க முடியும் என்றும் அவர்கள் ஒரு ஆய்வை வெளியிட்டனர். விரைவில் வெளியிடப்படவுள்ள புதிய ஆய்வில், மூளை அதிர்ச்சி ஏற்பட்ட முதல் சில மணிநேரங்களில் மனித சிறுநீரில் உள்ள குறிப்பிட்ட கீட்டோன்களை கிம்பால் கண்டறிந்தார். இத்தகைய காயங்களுக்குப் பிறகு ஏன் வாசனைப் பொருட்கள் வெளியிடப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு கோட்பாட்டின்படி, மூளை தன்னைத்தானே சரிசெய்ய முயற்சிக்கும் போது, ஒரு துணைப் பொருளாக விஓசிக்களை வெளியிடுகிறது. "நாம் காணும் கீட்டோன்களின் வகை, அது மூளைக்கு அதிக ஆற்றலைப் கொண்டு செல்ல முயற்சிப்பதை அல்லது ஒருவேளை காயத்தை எதிர்த்துப் போராடுவது அல்லது மீள்வதை ஆதரிப்பதை தொடர்புடையது" என்று கிம்பால் கூறுகிறார். அப்படி நினைக்க காரணம் உள்ளது. மூளைக் காயத்திற்குப் பிறகு கீட்டோன்கள் மாற்று ஆற்றல் ஆதாரங்களாகச் செயல்பட முடியும் என்றும், அவை நரம்புப் பாதுகாப்பிற்கான குணங்களைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன. உடல் துர்நாற்றம் ஒருவருக்கு மலேரியா இருப்பதையும் வெளிப்படுத்தலாம். 2018-ல், மலேரியா நோய்த்தொற்று உள்ள குழந்தைகள் தங்கள் தோல் வழியாக ஒரு தனித்துவமான வாசனையை வெளியிடுவதாகவும், இது கொசுக்களை மேலும் கவர்வதாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேற்கு கென்யாவில் உள்ள 56 குழந்தைகளிடமிருந்து மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் பறக்கும், கடிக்கும் பூச்சிகளை ஈர்க்கும் ஒருவித "பழ மற்றும் புல்" வாசனையை குழு அடையாளம் கண்டது. இந்த மாதிரிகளின் கூடுதல் பகுப்பாய்வு, ஹெப்டானல், ஆக்டானல் மற்றும் நோனானல் எனப்படும் வேதிப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்தது. இவை தனித்துவமான வாசனைக்குக் காரணமாக இருந்தன. இந்த ஆராய்ச்சி மலேரியாவைக் கண்டறிய ஒரு புதிய பரிசோதனையை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். இப்போதைக்கு, விஞ்ஞானிகள் இந்த வாசனையை மீண்டும் உருவாக்கி, அதை ஒரு கொசுக்களை கவர்ந்திழுக்க ஒரு பொறியாக பயன்படுத்தி சமூகங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து வெளியே இழுத்துச் செல்ல பயன்படும் என நம்புகிறார்கள். எம்ஐடி-யில் ஒரு முன்னாள் ஆராய்ச்சியாளரான மெர்ஷின், இப்போது ரியல்நோஸ்.ஏஐ-ல் பணிபுரிகிறார். அவர் மற்றும் அவரது குழு, புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய ஒரு வாசனை-கண்டறியும் சாதனத்தை உருவாக்க முடியும் என நம்புகிறார்கள். புரோஸ்டேட் புற்றுநோய், 44 ஆண்களில் ஒருவரை கொல்லும் ஒரு நோய். "டிஏஆர்பிஏ (டிபன்ஸ் அட்வான்ஸ்டு ரிசர்ச் புராஜெக்ட் ஏஜென்சி) கண்டறிதலின் உச்சத்தில் இருக்கும் நாயின் மூக்கைத் தோற்கடிக்க என்னிடம் சொன்னபோது, நான் எம்ஐடி-யில் 19 வருடம் நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த நிறுவனம் உருவானது," என்று மெர்ஷின் கூறுகிறார். " அடிப்படையில் உயிரியல்-சைபோர்குகளை உருவாக்க எங்களிடம் சொல்லப்பட்டது." பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images படக்குறிப்பு, பல விதமான வாசனைப் பொருட்களை பரிசோதனை செய்யக்கூடிய ஆய்வக அடிப்படையிலான பரிசோதனையை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ரியல்நோஸ்.ஏஐ தற்போது உருவாக்கி வரும் சாதனத்தில் உண்மையான மனித வாசனை வாங்கிகள் (olfactory receptors) உள்ளன. அவை ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களால் வளர்க்கப்படுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோயுடன் தொடர்புடைய ஏராளமான வாசனை மூலக்கூறுகளைக் கண்டறிய அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இயந்திர கற்றல் (machine learning), ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு, பின்னர் வாங்கிகளின் செயல்பாட்டில் உள்ள வடிவங்களை தேடுகிறது. "ஒரு மாதிரியின் உள்ளே உள்ள கூறுகளை அறிவது மட்டும் போதாது," என்று மெர்ஷின் கூறுகிறார். "ஒரு கேக்கை உருவாக்க பயன்படும் பொருட்கள் அதன் சுவை அல்லது வாசனையைப் பற்றி நமக்குக் குறைவாகவே கூறுகின்றன. அது உங்கள் சென்சார்கள் இந்த பொருட்களுடன் தொடர்பு கொண்ட பிறகுதான் நடக்க வேண்டும். உங்கள் மூளை அந்தத் தகவலைச் செயலாக்கி அதை ஒரு புலனுணர்வு அனுபவமாக மாற்றுகிறது. "ஒரு மனம், ஒரு மூளை செய்வதைப் போலவே, உணர்ச்சி செயல்பாட்டில் உள்ள வடிவங்களை நாங்கள் தேடுகிறோம்," என்று மெர்ஷின் கூறுகிறார். இதற்கிடையில், ஜாய் இப்போது பாரனின் ஆராய்ச்சிக் குழுவில் பணிபுரிந்து வருகிறார். பார்கின்சன் மற்றும் பிற நிலைகளுக்கு ஒரு கண்டறிதல் சோதனையை உருவாக்க அவருக்கு உதவுகிறார். "நாங்கள் இப்போது அவரை வாசனை கண்டறிதலுக்கு அதிகம் பயன்படுத்துவதில்லை," என்று பாரன் கூறுகிறார். "அவரால் ஒரு நாளில் அதிகபட்சம் 10 மாதிரிகளைச் செய்ய முடியும், அது அவருக்கு உணர்வு ரீதியாக மிகவும் சோர்வளிக்கிறது. அவருக்கு 75 வயதாகிறது, அவர் மிகவும் மதிப்பு வாய்ந்தவர்." இருப்பினும், பாரனின் நுட்பம் ஜாயின் திறனைப் பிரதிபலிக்க முடியுமானால், பார்கின்சன் நோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறிய முடியுமானால், அது ஜாய் மற்றும் லெஸ்ஸுக்கு ஒரு சிறந்த மரபுரிமையாக இருக்கும். "ஜாய் மற்றும் லெஸ் மருத்துவப் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், இந்த அவதானிப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது என்று நான் நினைக்கிறேன்" என்று பாரன் கூறுகிறார். "ஆனால், இங்குள்ள கதை என்னவென்றால், எல்லோரும் தங்கள் ஆரோக்கியம் அல்லது தங்கள் நண்பரின் ஆரோக்கியம் அல்லது தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் குறித்து உறுதியாக தெரிந்தவர்களாக உணர்ந்து, ஏதாவது தவறு இருப்பதாக உணர்ந்தால் அதற்கேற்ப செயல்பட வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gk60y523go
  19. Published By: Digital Desk 3 17 Sep, 2025 | 11:36 AM பாகிஸ்தானின் பிரபல குழந்தை நட்சத்திரமான உமர் ஷா ( Umar Shah) தனது 15 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் அந்நாட்டு ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல 'ஜீதோ பாகிஸ்தான்' (Jeeto Pakistan) தொலைக்காட்சி தொடர் உட்பட பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்த உமர் ஷா, தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது என்பது மிகவும் அரிதானது. இந்நிலையில், சிறு வயதிலேயே உமர் ஷா உயிரிழந்தது பாகிஸ்தானில் உள்ள ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உமர் ஷாவின் சகோதரரும், பிரபல டிக்டொக் நட்சத்திரமுமான அகமது ஷா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த துயர செய்தியை வெளியிட்டுள்ளார். உமர் ஷாவின் மரணச் செய்தி வெளியானதும், பல பிரபலங்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 'ஜீதோ பாகிஸ்தான்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஃபஹத் முஸ்தஃபா, "உமர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டான் என்பதை நம்ப முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். 'ஷான்-இ-ரமழான்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரான வசீம் பதாமீ, மருத்துவர்களிடம் பேசியதாகவும், உமர் ஷா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் அத்னான் சித்திக்கி, உமர் ஷாவை "மகிழ்ச்சி மற்றும் அப்பாவித்தனத்தின் ஒளிக்கதிர்" என்று குறிப்பிட்டு, அவரது மறைவு குறித்து கவலை தெரிவித்துள்ளார். உமர் ஷா தனது புன்னகை மற்றும் துடிப்பான இயல்புக்காக அறியப்பட்டவர். அவரது மரணம் பாகிஸ்தான் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆழமான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/225292
  20. பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தற்போது கடைபிடிக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் பயணம் எப்படித் துவங்கியது? இந்த இயக்கம் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? தமிழ்நாட்டின் அரசியலிலும் பண்பாட்டுத் தளத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. வாழ்வின் எல்லா தளங்களிலும் சுயமரியாதையை முன்னிறுத்திய இந்த இயக்கம், அதற்குப் பிந்தைய பல தசாப்தங்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகே பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார் என்று புரிந்துகொள்ளப்பட்டாலும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே இதற்கான விதை ஊன்றப்பட்டுவிட்டது. தனது சிந்தனைகளை பரப்புவதற்காக குடிஅரசு என்ற இதழை அதே ஆண்டு மே மாதத்தில் பிரசுரிக்க ஆரம்பித்தார் பெரியார். "அந்த காலகட்டம் வரை பெரியார் காங்கிரசின் கருத்தையே எதிரொலித்துவந்தார். ஆனால், அதற்குப் பிறகு அவரது கருத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, அவருடைய சிந்தனைகளுக்கு, எண்ணங்களுக்கு காங்கிரஸ் சார்பான இதழ்களில் இடம்கிடைக்கவில்லை. ஆகவேதான் தனக்கென ஒரு இதழை அவர் துவங்க வேண்டியிருந்தது. அப்படி அவர் குடிஅரசு இதழைத் துவங்கிய காலகட்டத்தையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமாகக் கொள்ளலாம்" என்கிறார் "நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்" நூலை எழுதியவரும் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ஆ. திருநீலகண்டன். 1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு காங்கிரசின் 31வது மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். "ராஜீய சபைகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணரல்லாதர், தீண்டாதார் எனக் கருதப்படுவோர் என இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடு தங்கள் சமூகத்திலிருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது" என்றது அந்தத் தீர்மானம். ஆனால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, "காங்கிரஸால் பிராமணரல்லாதார் நன்மை பெற முடியாது. காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை" எனக் கூறிவிட்டு அந்த மாநாட்டை விட்டு வெளியேறினார் பெரியார். சிலர் இந்த நாளையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்க நாளாகக் கருதுவதும் உண்டு. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் துவக்க விழாவோ, பொதுக்கூட்டமோ நடக்கவில்லை. இந்த இயக்கம் தோன்றியது குறித்து, 1937ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி குடிஅரசு இதழில் 'சுயமரியாதை இயக்கம்' என்ற பெயரில் பெரியார் ஒரு கட்டுரையை பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் "சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925ல் என்னால் துவங்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும்" என்று குறிப்பிடுகிறார். ஆனால், அந்த இயக்கத்தின் வரலாற்றை அவர் அந்தக் கட்டுரையில் எழுதவில்லை. ஆகவே இந்த இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக ஒரு தினத்தைக் குறிப்பிட முடியாது. பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது போன்ற விஷயங்களை தொடர்ந்து பேசிவந்தார். இதற்குப் பிறகு, 1926ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பட்டியலிட்டார். "மனிதர்களிடம் ஏற்றத் தாழ்வு கூடாது, தீண்டாமை - சேர்க்காமை போன்றவற்றுக்கு இடமேயில்லை, மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கும் சடங்குகளும் ஜாதிகளும் வேறோடு களையப்பட வேண்டும். தன்மான உணர்ச்சியும் சிந்திக்கும் ஆற்றலும் ஒவ்வொருவருக்கும் வேண்டும், எதிர்காலம் அறிவியலுக்கு உரியதே அல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல" உள்ளிட்டவை அந்தக் கொள்கைகளாக இருந்தன. பெரியாரின் பேச்சும் செயல்பாடுகளும் ஒரு இயக்கமாக மாறியதை இந்த மாநாடு குறித்தது. காங்கிரசைவிட்டு வெளியேறியிருந்தாலும் 1925-26 காலகட்டத்தில் காந்தியின் கொள்கைகளையும் பெரியார் ஆதரித்துவந்தார். "நூல் நூற்றல், தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு ஆகியவற்றை காந்தி வலியுறுத்துவது ஊக்கமூட்டுவதாக இருந்ததாக பெரியார் கருதினார்" என 'அயோத்தி தாசிலிருந்து பெரியார் வரை பிராமணரல்லாதோர் ஆயிரமாண்டு காலத்தை நோக்கி' (Towards a non-Brahmin millennium from Iyothee Thass to Periyar) என்ற நூலில் வ. கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும் குறிப்பிடுகின்றனர். அதே காலகட்டத்தில் நீதிக் கட்சிக்கும் ஆதரவு காட்டினார் பெரியார். இந்த நிலையில், 1927ல் பெங்களூரில் மகாத்மா காந்தியை பெரியார் சந்தித்துப் பேசினார். அப்போது, பிராமணர்கள் குறித்தும் இந்து மதம் குறித்தும் பெரியார் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். அதனைக் காந்தி ஏற்கவில்லை. இந்தக் கட்டத்திலிருந்து காந்தியிடமிருந்து விலக ஆரம்பித்தார் பெரியார். இதற்குப் பிறகு தொடர்ந்து சுயமரியாதைக் கொள்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பல சிறு கூட்டங்களில் பேச ஆரம்பித்தார் பெரியார். பல இடங்களில் சுயமரியாதைச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆங்காங்கே சில மாவட்ட மாநாடுகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில்தான் மாகாண சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. "அதுவரை சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக நடைபெற்றுவந்த பணிகளை மதிப்பீடு செய்யும் ஒரு மாநாடாகவும் சட்டதிட்டங்கள், கொள்கை, குறிக்கோள்கள், நிர்வாக அமைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் மாநாடாகவும் இது அமைந்தது" என்கிறது கி. வீரமணி எழுதிய திராவிடர் கழக வரலாறு நூல். இந்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி ஆகியவற்றில் பணியாற்றிய பலரும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கொள்கை தொடர்பான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த மாகாண மாநாடு கூடும்வரை இந்த இயக்கத்திற்கு டபிள்யு.பி.ஏ. சவுந்திரபாண்டியன் தலைவராகவும் பெரியாரும் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோர் துணைத் தலைவர்களாக இருப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு இரண்டாவது, மூன்றாவது மாநாடுகள் ஈரோட்டிலும் விருதுநகரிலும் நடைபெற்றன. 1932ல் பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவந்த பிறகு, சுயமரியாதை இயக்கத்தின் மூலம் சமதர்மக் கொள்கைகளையும் பரப்ப விரும்பினார். 1932 டிசம்பர் 17, 18-ல் கூடிய மாநாட்டிற்கு ம. சிங்காரவேலர் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் சமதர்மக் கொள்கையும் முக்கியமான ஒன்று என தீர்மானிக்கப்பட்டது. இயக்கத்தைச் சேர்ந்த சிலர், சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து சமூகச் சீர்திருத்தத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினாலும் இறுதியில் அந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்த, இயக்கத்தின் பெயர் 'சுயமரியாதை சமதர்ம இயக்கம்' என பெயர் சூட்டப்பட்டது. இதற்கிடையில் குடியரசு இதழில் இடம்பெற்ற கட்டுரைகளுக்காக அந்த இதழ் தடைசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு 1933ல் புரட்சி என்ற புதிய இதழ் துவக்கப்பட்டது. பிறகு அதுவும் தடைசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு 1934ல் பகுத்தறிவு என்ற புதிய இதழ் துவங்கப்பட்டது. இந்த நிலையில், 1933ல் குடியரசில் இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியதற்காக சிறை தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பெரியார் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் அங்கு அடைக்கப்பட்டிருந்த ராஜாஜியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அப்போது, அவர் பெரியாரை மீண்டும் காங்கிரசிற்குத் திரும்ப வேண்டுமென அழைத்தார். பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam ஆனால், பெரியாரின் செயல்திட்டத்தை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்ட நிலையில் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. அதேநேரத்தில், பொப்பிலி அரசர் போன்றவர்கள் அவர் நீதிக்கட்சிக்கு வர வேண்டுமென்றும் கூறிவந்தனர். இந்த நிலையில், 15 செயல்பாடுகள் அடங்கிய ஒரு பட்டியலை அளித்த பெரியார், அந்தச் செயல்திட்டத்தை ஏற்கும் கட்சியில் இணைவதாகக் கூறினார். நீதிக் கட்சி அதனை முழுமையாக ஏற்றது. இருந்தபோதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர்களில் சிலர் அதனை ஏற்கவில்லை. நீதிக் கட்சி பணக்காரர்கள், ஜமீன்தார்கள் போன்றாரின் ஆதிக்கம் நிரம்பிய கட்சி எனக் கருதினர். இதனால் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பலர் அதிலிருந்து விலகி காங்கிரசில் சேர முயன்றனர். ம. சிங்காரவேலர், ப. ஜீவானந்தம், கோவை அய்யாமுத்து போன்றோர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் 1934-ல் நடந்த தேர்தலில் நீதிக் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த மேலும் பலர் விலகினர். 1937ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றிபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பதவியேற்ற ராஜாஜி, எல்லா உயர் நிலைப்பள்ளிகளிலும் இந்தியை கட்டாயமாக்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து பெரியார் ஏராளமான அளவில் இந்தி எதிர்ப்பு கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார். இந்த காலகட்டத்தில்தான் ஈ.வெ. ராமசாமிக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சென்னை ஒற்றை வாடை நாடகக் கொட்டகையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து நடத்திய நிலையில் பெரியார் கைது செய்யப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட நடராஜனும் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார்கள். 1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜாஜி பதவி விலகினார். இதற்குப் பிறகு பம்பாய் (தற்போது மும்பை) சென்ற பெரியார், அங்கே அம்பேத்கர் போன்ற தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகும் பல ஊர்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்தார் பெரியார். 1943ஆம் சேலம் செவ்வாய்ப் பேட்டையில் நடந்த நீதிக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை, தென்னிந்திய திராவிடர் கழகம் என மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். அடுத்த மாநாட்டில் பெயரை மாற்றுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்தில் நீதிக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. ஏ.பி. பத்ரோ, பி. பாலசுப்ரமணியம், சுந்தர்ராவ் நாயுடு ஆகியோர் இதற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் தனித்தும் செயல்பட ஆரம்பித்தனர். இந்த நிலையில், 1944 ஆகஸ்ட் 27ஆம் தேதி சேலத்தில் 16வது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு நடந்தது. இதில் இரு தரப்பினருக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் பெயர் மாற்றத் தீர்மானம் சி.என். அண்ணாதுரையின் பெயரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகும் நீதிக் கட்சியைச் சேர்ந்த சிலர், நீதிக் கட்சி என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட்டனர். சிலர் சுயமரியாதை சங்கம் என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட்டனர். "நீதிக் கட்சியும் சுயமரியாதை இயக்கமும் 1944-ல் ஒன்றாக இணைந்தன. அதற்குப் பிறகும் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகள் நீடித்தன என்றாலும்கூட, சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் மிகத் தீவிரமாக பெரியார் இயங்கிய காலகட்டமாக இந்த இரு தசாப்தங்களைக் குறிப்பிடலாம்" என்கிறார் ஆ. திருநீலகண்டன். பட மூலாதாரம், Facebook/Dravidar Kazhagam சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக உருவான தருணத்தில் இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் அந்த காலகட்டத்தில் விடுதலை இயக்கமும் உச்சத்தில் இருந்தது. ஆகவே, அப்போது தமிழ்நாட்டில் அரசியல் விடுதலையும் பூகோள விடுதலையுமே மிகத் தீவிரமாக பேசப்பட்ட காலகட்டமாக இருந்தது. "இந்த காலகட்டத்தில் பெரியார் சமூக விடுதலையையும் அரசியல் விடுதலையையும் சேர்த்துப் பேச ஆரம்பித்தார். பிரிட்டிஷார் இந்த நாட்டில் இருக்கும்போதே, தமிழர்கள் தங்களுக்கான அரசியல் - பூகோள விடுதலையைப் பெற வேண்டும் என அவர் கூறிவந்தார். எல்லோரும் இந்திய தேசிய விடுதலையைப் பேசியபோது, இவர் அதற்கு எதிர் திசையிலான அரசியல் - பூகோள விடுதலையைப் பேசினார்" என்கிறார் அவர். காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கி நூறாண்டுகள் ஆகிவிட்டன. பெரியார் மறைந்து ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த இயக்கம் தமிழ்நாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? "சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த இயக்கம் இல்லாத மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும். வட இந்திய மாநிலங்களில் இங்கிருப்பதைப் போல சாதி சார்ந்த வன்முறைகள் கிடையாது. காரணம், யாரும் அங்கே சாதி கட்டமைப்பைக் கேள்வி கேட்பதே கிடையாது. ஆனால், இங்கே சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிரான குரல்கள் எழுகின்றன. அதைப் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். அடுத்ததாக, இங்கே சாதிமறுப்புத் திருமணங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நடக்கின்றன. அதற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்படுவதற்குக் காரணம், ஆதிக்க சக்திகளுக்கு அவை கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. இதற்கு பெரியாரின் சிந்தனைகள்தான் காரணம். தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அது சமூக தளத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றம்" என்கிறார் வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி. பட மூலாதாரம், Facebook/Dravidar Kazhagam வேறு சில விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ஆ. திருநீலகண்டன். "இந்த இயக்கத்தின் காரணமாகவே தமிழ்நாடு சமூக - பண்பாட்டு விடுதலையில் மிக முக்கியமான இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. சாதிப் பட்டம் ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ந்திருக்கிறது. பெரியார் தமிழ் மீது வைத்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களால் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. பகுத்தறிவு சார்ந்த நவீன இலக்கியம் வெளியாகத் துவங்கியது. அம்பேத்கரின் எழுத்துகள் தமிழில் வெளியாயின. சுயமரியாதை இயக்க காலகட்டத்தில்தான் பெரியார் தன் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பட்டத்தை நீக்கினார். 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான முதல் இதழ் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்ற பெயரும் வெளியானது. அதற்கு அடுத்த இதழில் வெறும் ஈ.வெ. ராமசாமி என்று மட்டுமே அவரது பெயர் இடம்பெற்றது. அதேபோல, 1929-ல் நடந்த செங்கல்பட்டு மாநாட்டில் சாதிப் பட்டத்தை ஒழிக்கும் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அப்படி சாதிப் பட்டத்தை ஒழித்தவர்களின் பெயர்கள் அடுத்த குடிஅரசு இதழில் வெளியாயின. 1929லேயே பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. சுயமரியாதை இயக்கம் தோன்றும்வரை, தமிழ்நாட்டின் வரலாற்றுப் பண்பாட்டுப் பதிவுகள் பெரும்பாலும் வைதீகம் சார்ந்தவையாகவே இருந்தன. இவற்றையெல்லாம் அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்கினார். அவர் எழுப்பிய எதிர்ப்புகள்தான் எதிர் வைதீக நூல்கள், அவைதீக ஆராய்ச்சிகள், எதிர் பண்பாட்டு நூல்கள் வர வழிவகுத்தன. தமிழைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதன் மூலம் ஒரு முற்போக்கு பண்பாட்டு நகர்வை செய்தார். அடிப்படையில், சுயமரியாதை இயக்கம் பார்ப்பனரல்லாத சாதியினரை முற்போக்கு திசையில் நகர்த்தியது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பே வள்ளலார், வைகுண்டர், சென்னை வியாக்கியான சங்கம் ஆகியோர் முற்போக்கு சிந்தனை மரபை உருவாக்கினார்கள். பெரியார் ஐரோப்பிய நவீன சிந்தனையை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இயக்கமாக முன்வைத்தார் என்பதுதான் முக்கியம்" " என்கிறார் ஆ. திருநீலகண்டன். சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பாக, இந்தியாவில் அதுபோன்ற இயக்கங்களுக்கு மிகச் சில உதாரணங்களே இருந்தன என்கிறார்கள் வ. கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும். அவர்களது பிராமணரல்லாதோர் ஆயிரமாண்டு காலத்தை நோக்கி (Towards a Non - Brahmin Millennium) என்ற நூலில் இந்த இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பைப் பற்றிக் கூறும்போது, "மகாத்மா ஜோதிபா பூலே ஒரு முன்னோடிதான்; ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்ற தேசம் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை. ஆனால், சுயமரியாதைக்கார்களைப் பொறுத்தவரை அவர்கள், தேசியவாத அரசியலின் உச்சகட்டத்தில் செயல்பட வேண்டியிருந்தது. அவர்கள் காந்தியை எதிர்த்து நின்றது மட்டுமல்ல, உரிமை, அதிகாரம், நீதி ஆகியவற்றை பற்றிய தனித்துவமான ஒரு சிந்தனைக் கட்டமைப்பையும் முன்வைத்தனர். சுயமரியாதை என்ற லட்சியத்தால் மட்டுமே பிணைக்கப்பட்ட புதிய வரலாற்றுப் பொருளை உருவாக்கினர்" என்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg2rg9eqrlo
  21. இலங்கை மீதான புதிய பிரேரணை: சீனா, பாகிஸ்தானின் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்தது Published By: Vishnu 17 Sep, 2025 | 03:45 AM (நா.தனுஜா) பிரிட்டன் தலைமையிலான தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை குறித்து நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது. அதுமாத்திரமன்றி அங்கு கருத்துரைத்த இலங்கை பிரதிநிதி, நாட்டில் இனப்பிரச்சினை நடைபெறவில்லை எனவும், மாறாக பயங்கரவாத மோதலே நடைபெற்றது எனவும் தெரிவித்துள்ளதுடன் அதனைத் தீர்ப்பதற்கு சிறப்புப் பொறிமுறைகள் எவையும் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது. அதேவேளை இலங்கை தொடர்பில் பேரவையில் ஏற்கனவே காலநீடிப்பு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்த 57ஃ1 தீர்மானம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இம்முறை கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் திருத்தங்கள் உள்வாங்கப்படாத 60ஃஎல்.1 எனும் முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பிரேரணை தொடர்பான உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) இலங்கை நேரப்படி பி.ப 1.00 மணிக்கு ஜெனிவாவில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரிட்டன், வட அயர்லாந்து, கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா ஆகிய நாடுகளின் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதிகளும், பேரவையில் அங்கம்வகிக்கும் இலங்கைக்கு ஆதரவான மற்றும் எதிரான சில நாடுகளின் பிரதிநிதிகளும், ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி உள்ளிட்ட அதிகாரிகளும், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதன்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட வதிவிட அலுவலகப் பிரதிநிதி, இலங்கையில் இனப்பிரச்சினை நடைபெறவில்லை எனவும், மாறாக பயங்கரவாத மோதலே நடைபெற்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறப்புப் பொறிமுறையொன்று அவசியமில்லை என்றும், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் நீதிக்கட்டமைப்பின் ஊடாகவே இதற்குத் தீர்வுகாணமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்தல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தைத் திருத்தியமைத்தல் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர். இக்கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் இணையனுசரணை நாடுகளிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக தாம் புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பைக் கோராதிருப்பதாக 'பேரம் பேசியதாகவும்', இருப்பினும் அதனை பிரிட்டன் மறுத்துவிட்டதாகவும் அறியக்கிடைத்தது. அதேபோன்று நேற்று முன்தினம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரிட்டன் மறுத்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது. இது இவ்வாறிருக்க இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு தற்போது சமர்ப்பித்திருக்கும் புதிய பிரேரணையை நிறைவேற்றுவதில் தாம் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்திய பிரிட்டன் உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கை வாக்கெடுப்பைக் கோரினாலும், புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் போதுமான வாக்குகள் தம்வசம் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளன. மேலும் இக்கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையொன்று மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/225270
  22. 16 Sep, 2025 | 12:00 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்காக 2024ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் உண்மைக்கு புறம்பானதாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான் செல்லவுள்ள வீட்டின் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை நிறைவடைந்த பின்னர் வெகு விரைவில் இந்த வீட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன் எனத் தெரிவித்த அவர், பொலன்னறுவைக்கு செல்ல விரும்பினாலும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொலன்னறுவையிலிருந்தே ஆட்சி செய்யதாகவும் குறிப்பிட்டார். இந்த வீட்டிலிருந்து செல்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளைத் தவிர மேலும் பல அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள் இந்த அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டாலும், அவை பயன்பாடின்றி கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. தற்போது அவற்றில் குரங்குகள் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் தொடர்பில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளை நான் சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை. அவை முற்று முழுதாக போலியான தரவுகளாகும் என்றும், பாதுகாப்பு செலவுகளைக் கூட அவர்கள் எமது செலவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டார். உலகின் ஏனைய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வாறான பாதுகாப்புக்களும் கௌரவமும் வழங்கப்படுகிறது என்பதை அரசாங்கத்தினர் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எனது ஆட்சி காலத்தில் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட முக்கிய பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை. நான் உயிர் வாழும் வரை சுதந்திர கட்சி அங்கத்தவனாகவே இருப்பேன். அரசியலில் இருந்தாலும் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225217
  23. லண்டன் போராட்டங்கள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது? பட மூலாதாரம், EPA / Shutterstock படக்குறிப்பு, 'ஸ்டாண்ட் அப் டு இனவெறி' பிரச்சாரக் குழுவின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்டுரை தகவல் Nadia Suleman South Asia Regional Journalism 3 மணி நேரங்களுக்கு முன்னர் லண்டனில் தொடங்கிய மற்றொரு தீவிர வலதுசாரி கூட்டம், பல தசாப்தங்களில் பிரிட்டன் கண்டிராத வகையில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக மாறியது. 2025 செப்டம்பர் 13-ஆம் தேதி, தீவிர வலதுசாரியான டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த "யுனைட் தி கிங்டம்" பேரணிக்காக 1,10,000-க்கும் மேற்பட்டோர் மத்திய லண்டனில் கூடினர். யூனியன் ஜாக், பிரிட்டனின் செயின்ட் ஜார்ஜ் கிராஸ், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக சோதித்தனர். முதலில் "சுதந்திர பேச்சு விழா"( "festival of free speech") என்று அறிவிக்கப்பட்ட இந்தப் பேரணி, விரைவில் இனவாத சதிக் கோட்பாடுகளை நோக்கி நகர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரமாக மாறியது. மிகப்பெரிய அளவில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், வன்முறை வெடித்தது. அதில், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த நிகழ்வு, குடியேற்றம் எவ்வளவு தூரம் ஒரு பிரச்னையாக மாறியுள்ளது என்பதை நினைவூட்டுவதாக அமைந்தது. இது அடையாளம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்த ஆழமான முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியது. பட மூலாதாரம், Christopher Furlong/Getty Images படக்குறிப்பு, செப்டம்பர் 13, 2025 அன்று, மத்திய லண்டனில் குறைந்தது 110,000 பேர் கூடி 'யூனைட் தி கிங்டம்' பேரணியை நடத்தினர். வார இறுதியில் லண்டனில் ஏன் 110,000 பேர் அணிவகுத்துச் சென்றனர்? குடியேற்றம் மீதான கோபம் மற்றும் நாட்டின் எல்லைகளில் அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்ற கருத்தின் மீதான நம்பிக்கையால், லண்டனில் பெருமளவில் மக்கள் திரண்டனர். பல ஆர்ப்பாட்டக்காரர்கள், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து, அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் விதிகளை கடுமையாக்குவதன் மூலம், பிரிட்டன் தனது "கட்டுப்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்" என்று கூறினர். பிரித்தானிய கலாசாரம் அழிந்து வருவதாகவும், அதைப் பாதுகாக்கவே தாங்கள் வந்ததாகவும் சிலர் தெரிவித்தனர். பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. குடியேற்றத்திற்கு எதிராகப் பேசும் சாதாரண மக்களுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்று பலரும் குறிப்பிட்டனர். பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை குறிவைத்து, கோஷங்கள் மற்றும் பதாகைகளுடன் பெரிய அரசியல் மாற்றத்திற்கான கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. ராபின்சனைத் தவிர, அமெரிக்க கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் காணொளி மூலம் பங்கேற்றார். பட மூலாதாரம், Mark Kerrison/In Pictures via Getty Images படக்குறிப்பு, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெற்காசிய சமூகம் பிரிட்டனின் இரண்டாவது பெரிய இனக்குழுவாகும். பிரிட்டனில் குடியேறிய தெற்காசிய சமூகத்தை இது எவ்வாறு பாதிக்கிறது? 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிரிட்டனில் தெற்காசிய மக்கள் இரண்டாவது பெரிய இனக்குழுவாக உள்ளனர். இதில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், சிங்களர்களும் நேபாளிகளும் சிறிய அளவில் உள்ளனர். போராட்டங்கள் கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் கொள்கைகளை நோக்கி இருந்தாலும், பல தலைமுறைகளாக பிரிட்டனில் வாழும் இந்த தெற்காசிய சமூகங்கள் இதன் தாக்கத்தை உணர்கின்றன. குறிப்பாக இஸ்லாம் மற்றும் சீக்கிய சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன. 2024-ல் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டியதாக 'டெல் மாமா' அமைப்பு அறிக்கை வெளியிட்டது. கடந்த வாரம், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் இளம் சீக்கிய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை காவல்துறை "இன ரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்" எனக் கருதுகிறது. கடந்த சில மாதங்களாக, தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு குழுக்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள், சமூகத்தில் பயத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன. கடந்த வார இறுதி போராட்டங்களில், "வீட்டிற்கு திரும்புங்கள்", "சட்டவிரோதமாக வந்தவர்களை நாடு கடத்துங்கள்" என்ற பதாகைகள், வெறுப்பு மற்றும் எதிர்ப்பு உணர்வுகளை மேலும் தூண்டுவதாக இருந்தன. பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவது ஏன் ? புலம்பெயர்ந்தோர் நீண்ட காலமாக பிரிட்டனின் மக்கள் தொகை, கலாசாரம் மற்றும் பொருளாதார அடையாளத்தை தகவமைத்து வருகின்றனர். ஆனால், பிரெக்ஸிட்-க்குப் பிறகு, தீவிர வலதுசாரி குழுக்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான விரோதப் போக்கை அதிகரித்துள்ளன. ரிஷி சுனக் அரசாங்கத்தின் கீழ் நிகர இடப்பெயர்வு புதிய உச்சத்தை எட்டியது, இது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் படி, 2022-ல் நிகர இடம்பெயர்வு (சட்டப்பூர்வமாக வருவோருக்கும் வெளியேறுவோருக்கும் இடையிலான வித்தியாசம்) 7,45,000 ஆக இருந்தது. இது பிரெக்ஸிட்-க்கு முந்தைய அளவை விட மூன்று மடங்கு அதிகம். மார்ச் 2025-ல் முடிவடைந்த ஆண்டில், 1,09,343 பேர் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்தனர், இது சமீப ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கைகளில் ஒன்று. விண்ணப்பதாரர்களில் அல்பேனியர்கள் முதலிடத்தில் இருந்தனர், பின்னர் ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள், இரானியர்கள் மற்றும் வங்கதேசத்ததவர். பட மூலாதாரம், Rasid Necati Aslim/Anadolu via Getty Images படக்குறிப்பு, காவல்துறையினரின் கூற்றுப்படி, போராட்டத்தின் போது வன்முறை வெடித்து, அதில் இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர். வளங்களின் பங்கீடு மற்றும் பொது பாதுகாப்பு குறித்த கவலைகளை தூண்டியுள்ள தவறான தகவல்கள், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரங்களை மேலும் தீவிரமாக்கியுள்ளன. லண்டன், பர்மிங்காம் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள மக்கள்தொகையில், கிட்டத்தட்ட 40% புலம்பெயர்ந்தவர்கள். இதனால், அவர்கள் வாய்ப்புகளையும் வளங்களையும் கைப்பற்றுவதாக ஒரு உணர்வு பரவியுள்ளது. தீவிர வலதுசாரிகள் இதை நாடு "முற்றுகையில்" இருப்பதற்கான அடையாளமாக சித்தரிக்கின்றனர். அதேநேரம், பொருளாதார அழுத்தங்கள், அதிகரிக்கும் செலவுகள், வீடுகள் பற்றாக்குறை, அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை குடியேற்றத்தை எளிதாக குற்றம் சாட்டக்கூடிய இலக்காக மாற்றியுள்ளன. தெருக்களில் வரையப்பட்ட யூனியன் ஜாக் கொடிகள், லண்டனில் நடைபெறும் அணிவகுப்புகள் போன்ற தேசியவாத சின்னங்கள் இந்த பதற்றங்களை வெளிப்படையாக காட்டுகின்றன. பட மூலாதாரம், Vuk Valcic/SOPA Images/LightRocket via Getty Images படக்குறிப்பு, ஸ்டாண்ட் அப் டு ரேசிசத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி சுமார் 5,000 மக்களை ஈர்த்தது, இந்த சூழல் இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதா ? மிகப் பெரிய பிளவுகளையும், பதற்றமான கட்டத்தையும் நோக்கி பிரிட்டன் செல்கிறது என்பதை வார இறுதி நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. 'ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் 5,000 மக்களை ஈர்த்தது. இது ராபின்சன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஒரு சிறிய பகுதி தான். இனவெறி எதிர்ப்பு இயக்கத்துடன் ஒப்பிடுகையில், குடியேற்ற எதிர்ப்பு இயக்கம் வேகமாக வலுவடைவதை இந்த வித்தியாசம் வெளிப்படுத்துகிறது. லண்டனில் இவ்வளவு பெரிய பேரணி நடக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அதில், 26 அதிகாரிகள் காயமடைந்தனர், 25 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பல போராட்டங்களால், புகலிட விடுதிகளை விரைவாக மூடும் திட்டங்களை வேகப்படுத்துமாறு பிரிட்டன் அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. மறுபுறம், புகலிட விடுதிகள் மூடப்படும் போது, தொடர்பில்லாத குழுக்கள் ஒரே வீட்டில் வசதிகளைப் பகிர்ந்து கொள்ள நேரிடலாம். இது புதிய எதிர்வினையைத் தூண்டலாம் என்ற கவலை நிலவுகிறது. பிரிட்டனின் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு, குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகள் வெறும் குரலாக இல்லாமல், முக்கிய அரசியல் பாதையாக மாறிவரும் சூழலைச் சமாளிப்பதே பெரும் சவாலாக மாறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89dp8q3qqxo
  24. Published By: Priyatharshan 17 Sep, 2025 | 10:15 AM இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு புதிதாக வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினரை (Peace Corps) வரவேற்றுள்ளார். இந்த தன்னார்வலர்கள், வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மூன்று மாத காலப் பயிற்சிக்குப் பிறகு சேவை செய்ய உள்ளனர். இந்த அமைதிப் படையினர், இலங்கை மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்வதற்காக, மூன்று மாதங்களுக்கு முன்-சேவை பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள். பயிற்சிக்குப் பின்னர், அவர்கள் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள சமூகங்களுடன் இணைந்து, ஆங்கிலம் கற்பித்தல் மற்றும் சமூக வாழ்க்கையின் அங்கமாகச் செயல்படுவார்கள். அமெரிக்காவின் மதிப்புகளான சேவை, அமைதி மற்றும் நட்பு ஆகியவற்றை இந்தத் தன்னார்வலர்கள், நட்புறவை வளர்ப்பதன் மூலமும், உண்மையான அயல் வீட்டாராக வாழ்வதன் மூலமும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அமைதிப் படையினரின் வருகை, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மக்கள் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும். https://www.virakesari.lk/article/225284

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.