Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. 16 Sep, 2025 | 11:43 AM அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் எனது வாழ் நாளில் அதிகளவான நேரத்தை மக்களுக்காக செலவிட்டேன். காலம் சென்றாலும் மக்கள் அன்பு குறையாது. அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். மக்களும் குழந்தைகளும் என்னை சூழ்ந்திருந்திருக்கிறார்கள். மக்களின் மனதில் நான் இடம் பிடித்திருக்கிறேன். மக்கள் மனதில் இடம் பிடிக்காத ஒருவர் தலைவன் ஆக முடியாது. நான் அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்த போது என்னை பார்வையிட பல மக்கள் ஒன்று திரண்டனர். அரசியல் பலத்தை விட என்னிடம் மக்கள் பலம் உண்டு. இது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. https://web.facebook.com/PresidentRajapaksa https://www.virakesari.lk/article/225216
  2. 15 Sep, 2025 | 05:43 PM பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதென்று பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று திங்கட்கிழமை (15) தீர்மானித்துள்ளனர். பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நகரசபை தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலைமையில் நகர வர்தகர்களுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லையென்றும், அதற்கு பதிலாக வாழையிலையை பயன்படுத்துவதெனவும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை உணவகங்களில் உணவுப்பொதி செய்வதற்கு ஜனவரி முதலாம் திகதிவரை அனுமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225154
  3. வழியெங்கும் கூட்டம்; Vijay பிரசாரத்தை பற்றி மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தனது தேர்தல் பிரசாரத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி இருக்கிறார். விஜய்க்கு பெரும் கூட்டம் திரண்டது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. அதே நேரம், செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் அது வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். #Vijay #TVK #Tamilnadu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  4. நாய்கடிக்கு சிகிச்சை பெற்றும் 40 நாட்களுக்கு பிறகு பலி - முறையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை ராயப்பேட்டை பகுதியில் வெறிநாய் கடித்த பிறகு சிகிச்சை பெற்றும், 40 நாட்களுக்குப் பிறகு நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசிகளை எப்படி முறையாகச் செலுத்துவது? ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏ. முகமது நஸ்ருதீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரை கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி மீர் சாகிப் பேட்டை மார்க்கெட் அருகே அவரது வலது காலில் வெறி நாய் ஒன்று கடித்திருக்கிறது. இதையடுத்து அவர் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரேபிஸ் தொற்று உறுதியானதை அடுத்து தனியறையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையிலும் அவர் செப்டம்பர் 14-ஆம் தேதியன்று உயிரிழந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மருத்துவர்கள் பரிந்துரைத்த இடைவெளியில் தடுப்பூசிகளைப் செலுத்தியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். "அவருக்கு நாய் கடிபட்ட உடன் அன்று மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். அவரது உடலில் இரண்டு பல் பதிந்திருந்தது. மருத்துவமனையில் காயத்தைச் சுற்றி ஊசி போட்டார்கள். முதல் ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டது. அதற்குப் பிறகு அவர்கள் சொன்ன இடைவெளியில் தடுப்பூசிகளைப் போட்டுவந்தோம். நன்றாகக் குணமடைந்துதான் வந்தார்." என்று அவருடைய மருமகள் ஹர்ஷத் நிஷா பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமையிலிருந்து சிக்கல்கள் ஆரம்பித்ததாகவும் அவர் விவரித்தார். "முதலில் முதுகில் வலி ஏற்பட்டது. அடுத்த நாள் இடுப்பு போன்ற பகுதிகளில் வலி அதிகரித்தது. அரிப்பும் ஏற்பட்டது. ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு காய்ச்சல் வந்தது." எனக் கூறினார். பின் வெள்ளிக்கிழமையன்று ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டது என்கிறார் அவர். "அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. அன்று இரவு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். சில மணி நேரங்களில் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துவிட்டார்" என ஹர்ஷத் நிஷா விவரித்தார். முகமது நஸ்ருதீனைப் பொறுத்தவரை அவர், நாய் கடித்த பிறகு செலுத்திக்கொண்டிருக்க வேண்டிய எல்லா தடுப்பு ஊசிகளையும் முறையாகப் போட்டுக்கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இருந்தபோதும், அவருக்கு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது? இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருவதாக தமிழக பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் பிபிசியிடம் தெரிவித்தார். இது குறித்து பேசுகையில், "இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தவருகிறோம். வெறிநாய்க் கடியைப் பொறுத்தவரை, அன்றைய தினமே முதல் ஊசியைப் போட வேண்டும். பிறகு நான்கு ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதனைச் சரியாகச் செய்ததாகச் சொல்கிறார்கள்." என சோமசுந்தரம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு ஊசியும் எப்போது போடப்பட்டது என்பது குறித்து பரிசோதிக்க வேண்டும். ஏதாவது ஒரு நாள் தவறியிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அவருக்கு வேறு ஏதாவது உடல் நலப் பிரச்னைகள் இருந்தனவா என்பதையும் அறிய வேண்டும்." என்றார். "ஒருவேளை தடுப்பூசிகள் சரியாகப் போடப்பட்டிருந்தால் இப்படி நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருந்தாலும் விசாரணையின் முடிவில்தான் விவரங்கள் தெரியவரும்" என பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டில் ரேபிஸ் நோயால் ஏற்பட்டிருக்கும் 22வது மரணம் இது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசிகளைப் போட்ட பிறகும் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த மரணம், இந்த தடுப்பூசிகளை எப்படிப் போட்டுக்கொள்ள வேண்டும், எந்தக் கால இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. நாய்க் கடித்த பின் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? ஒருவரை நாய் கடித்த பிறகு, சரியான முறையில் சிகிச்சை மேற்கொண்டால் ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாகத் தப்பலாம். அதில் தவறுகள் நிகழும்பட்சத்தில் நோய் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படுகிறது என்கிறார் ரேபிஸ் தடுப்பு மருந்து உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் இயக்குநரான பி. சேகர். நாய்க் கடிகளின் வகை, சிகிச்சை முறை என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர். இது குறித்து பேசிய அவர், "பொதுவாக நாய்களின் தாக்குதலை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும். முதல் வகை வெறும் நக்குதல். நாய்களின் எச்சிலில்தான் ரேபிஸ் வைரஸ் இருக்கும் என்றாலும், உடலில் திறந்தவெளி காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், நாய்கள் நக்குவதற்கு சிகிச்சை தேவையில்லை." என்றார். இரண்டாவது ரத்தம் இல்லாத கீறல். இதற்கு கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறும் அவர், "மூன்றாவது, கடுமையான காயங்கள். இதற்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதோடு, இம்யூனோகுளோபுலின்களையும் செலுத்த வேண்டும்" என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாய் கடித்த உடன், காயத்தை ஓடும் நீரில் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல். மேலும் நாய் கடித்ததும் செய்யவேண்டிய முதலுதவி குறித்தும் விளக்கினார் பி. சேகர். நாய் கடித்த உடன், காயத்தை ஓடும் நீரில் கழுவிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார் அவர் மேலும், "ரேபிஸ் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தோலுக்கு உள்ளே போடுவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 28வது நாள் என நான்கு ஊசிகளைச் செலுத்த வேண்டும். தசைக்குள் செலுத்துவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14வது நாள், 28வது நாள் என ஐந்து ஊசிகளைச் செலுத்த வேண்டும்." என்றார். "மூன்றாவது வகை காயம் அதாவது மிகப் பெரிய காயமாக இருந்தால், கடிபட்ட இடத்தில் இம்யூனோகுளோபுலின்களைச் செலுத்த வேண்டும். இதை முதல் நாளே செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு தொடர்ச்சியாக ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால்தான் வெறிநாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸைத் தடுக்க முடியும்" என்கிறார் பி. சேகர். ரேபிஸ் வைரஸைப் பொறுத்தவரை, மனித உடலில் ஒரு மணி நேரத்தில் முன்று மில்லி மீட்டர் தூரத்திற்கு நகரும் தன்மையுடையது. அந்த வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தைச் சென்றடைவதற்குள் இந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சேகர். தெரிவித்தார். மேலும், எல்லா நாய் கடி சம்பவங்களையும் வெறி நாய் கடி சம்பவமாகவே அணுக வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டின் பொது சுகாதாரத் துறை அளிக்கும் தகவல்களின்படி, மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரேபிஸ் நோயால் 43 பேர் இறந்துள்ளனர். 2023-ஆம் ஆண்டில் 121 பேர் இறந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvlkyzx7yno
  5. வேலணையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவேந்தல் 15 Sep, 2025 | 01:44 PM தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத்தூபியில் நடைபெற்றன. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/225134
  6. புதிய 2 ஆயிரம் ரூபா தாள் குறித்து இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு! 15 Sep, 2025 | 12:29 PM இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்த அறிக்கையொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அன்று 2000 ரூபா சுற்றோட்டத்திற்கு விடப்படும் நாணயத்தாளை வெளியிட்டுள்ளது. புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன. இச் செயன்முறையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படையாக சுற்றோட்டத்திற்கு விடப்படும். மாறுதலடைகின்ற இக்காலப்பகுதியில் பொதுமக்களின் உத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி மெச்சுவதுடன் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றிப் பயன்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கின்றது. இது குறித்த விபரங்களை அறிந்துகொள்ள, நாயணத்திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கோ அல்லது மத்திய வங்கியின் சமூக ஊடகத்தளங்களை பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225128
  7. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உச்சிமாநாட்டிற்கு முன்பாக கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினர். கட்டுரை தகவல் சந்தீப் ராய் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்கும் முயற்சி வேகமெடுத்து வருவதாகத் தெரிகிறது. கத்தாரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தோஹாவில் இன்று அவசர உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் இன்று நடக்கும் மாநாட்டில் அந்நாட்டின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன், இராக் பிரதமர் முகமது ஷியா-அல் சூடானி மற்றும் பாலத்தீன அதிகாரசபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உட்பட பல உயர்மட்ட தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே, நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்க எகிப்து ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது. "எகிப்தின் முன்மொழிவு நேட்டோ போன்ற ராணுவ கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கோருகிறது. அதன் தலைமைப் பொறுப்பு 22 அரபு லீக் நாடுகளிடம் சுழற்சி முறையில் ஒப்படைக்கப்படும். அதன் முதல் தலைவர் எகிப்தை சேர்ந்தவராக இருப்பார்" என நேஷன் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது தி நியூ அரபு ஊடக செய்தியின்படி, இதுபோன்ற திட்டம் முதன்முதலில் 2015-ல் முன்வைக்கப்பட்டது. அப்போது யேமனில் உள்நாட்டுப் போர் தொடங்கி ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சனாவை கைப்பற்றினர். மறுபுறம் தோஹா மீதான தாக்குதலுக்குப் பிறகு துருக்கி மீதான பதற்றமும் அதிகரித்துள்ளது. கத்தாரில் செய்தது போல இஸ்ரேல் அதன் கண்மூடித்தனமான தாக்குதல்களை அதிகரிக்கக்கூடும். அது இஸ்ரேலையும் முழு பிராந்தியத்தையும் பேரழிவை நோக்கித் தள்ளக்கூடும் என துருக்கி பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் எச்சரித்துள்ளார். எகிப்தின் திட்டம் என்ன? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, செப்டம்பர் 9-ஆம் தேதி தோஹாவில் உள்ள கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. எகிப்தின் முன்மொழிவில் ராணுவம், விமானப்படை மற்றும் கமாண்டோ பிரிவுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன் பயிற்சி, தளவாடங்கள் மற்றும் ராணுவ அமைப்புகளை ஒருங்கிணைப்பதும் அடங்கும். ராணுவ படையை பயன்படுத்துவதற்கான அனுமதி உறுப்பு நாடுகள் மற்றும் ராணுவத் தலைமையுடன் கலந்தாலோசித்து வழங்கப்படும். லெபனான் ஊடகமான அல் அக்பரின் கூற்றுப்படி, அத்தகைய ராணுவக் கூட்டணிக்கு 20,000 வீரர்களை வழங்குவதாக எகிப்து தெரிவித்துள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இது குறித்து பல நாடுகளுடன் பேசியுள்ளார். தோஹா உச்சிமாநாட்டில் இந்த திட்டம் குறித்தும் விவாதம் நடத்த வாய்ப்பு உள்ளது. அதே நேரம் இது போன்ற ராணுவ கூட்டணி இந்த பிராந்தியத்தில் முன்பும் இருந்திருக்கிறது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பாக்தாத் ஒப்பந்தம் என அறியப்பட்ட Central Treaty Organisation என்ற ராணுவ கூட்டணி 1955 முதல் 1979 வரை நீடித்தது. கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்வினை வந்துள்ளன, இந்த பிராந்தியத்தில் இஸ்ரேலுடன் ராஜிய உறவை கொண்டுள்ள ஒரே நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது இராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானியும் இஸ்லாமிய ராணுவ கூட்டணியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். காஸா மற்றும் கத்தாரில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களுக்கு கூட்டு பதிலடி அவசியம் என அவர் கூறியதாக துருக்கி அரசு ஊடகமான TRT World தெரிவித்துள்ளது. இஸ்ரேலை தண்டிக்க வேண்டும் எனக் கூறும் கத்தார் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உச்சி மாநாட்டை ஒட்டி இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ், கத்தார் பிரதமரை சந்தித்தார். "சர்வதேச அமைப்பு தங்களின் இருதரப்பட்ட நிலைப்பாட்டை புறந்தள்ளிவிட்டு, இஸ்ரேலை தண்டிக்க வேண்டிய நேரமிது" என திங்கட்கிழமை அன்று நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக கத்தார் பிரதமர் கூறியதாக பிபிசி பெர்ஷிய சேவை குறிப்பிட்டுள்ளது. "எங்களின் சகோதரத்துவ மக்களான பாலத்தீனத்தின் மீது போர் தொடுத்து, அவர்களின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் இஸ்ரேல் எண்ணம் பலிக்காது" எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் ஏற்கனவே கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மேலும் தற்போது எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், எந்த விதமான சூழலை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தோஹா தாக்குதல் தொடர்பாக தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் இது அமெரிக்கா இஸ்ரேல் இடையிலான பலமான உறவை பாதிக்காது எனவும் கூறினார். பட மூலாதாரம், Israel Prime Minister's Office படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நேட்டோ மாதிரியான ஒரு கூட்டணி உருவாவது சாத்தியமானதா? அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ராணுவக் கூட்டணியை உருவாக்கும் யோசனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து நிபுணர்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை. ''அரபு நேட்டோ தொடர்பான யோசனை முன்பே விவாதிக்கப்பட்டது. செளதி அரேபியா அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தலைவர் ரஹீல் ஷெரீப் கூட அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை'' என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் Nelson Mandela Centre for Peace and Conflict Resolution மையத்தை சேர்ந்த பிரேமானந்த் மிஸ்ரா. தொடர்ந்து இது பற்றி விளக்கிய அவர், ''அனைத்து நாடுகளின் பாதுகாப்பு நலன்கள் மிகவும் வேறுபட்டவை, அவற்றுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினமான வேலை. உதாரணமாக, சௌதி அரேபியாவும் இரானும் தங்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய முடியுமா? ஏனெனில் ராணுவக் கூட்டணி உருவாக வேண்டுமானால், உளவுத்துறை பகிர்வும் நடைபெறும்'' என்றார். எனினும் சௌதி அரேபியா மற்றும் இரான் இடையிலான உறவை இயல்பாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. "இந்தத் திட்டம் எகிப்திலிருந்து வந்துள்ளது, அது செயல்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற எந்தவொரு குழுவையும் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ செயல்படுத்த அனுமதிக்குமா?" என்கிறார் பிரேமானந்த் மிஸ்ரா. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியரான முதாசிர் கமர், அரபு நாடுகள் அரபு லீக், OIC, GCC என பல அமைப்புகளைக் கொண்டுள்ளன என்கிறார். இது தவிர, செளதி அரேபியா தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ கூட்டமைப்பும் உள்ளது. ஆனால் இங்கு சிக்கல் என்பது அரபு நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர வேறுபாடுகளை கையாள்வதே. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். https://www.bbc.com/tamil/articles/cdxqkvq590ro
  8. தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு 15 Sep, 2025 | 12:07 PM தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது. குறிப்பாக தியாகதீபம் திலீபனின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் மாவீரர் ஒருவரின் தாயாரான செ.தவராணி ஈகைச்சுடரினை ஏற்றி குறித்த நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225122
  9. காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 53 பேர் உயிரிழப்பு: பல கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன! Published By: Digital Desk 1 15 Sep, 2025 | 09:01 AM காசா மீது நேற்றையதினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், பல கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. காசா நகரத்தின் மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சு தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலிக்போது, மூன்று கோபுரங்கள் உட்பட 16 கட்டிடங்கள் தரைமட்டமாக்கியுள்ளன. மேலும், இந்த தாக்குதல்களில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு நகர்ப்புற மையத்தைக் கைப்பற்றி அதன் மக்களை இடம்பெயரச் செய்வதற்கான தாக்குதலை இஸ்ரேலியப் படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசா பகுதியில் 53 பாலஸ்தீனியர்களைக் கொல்லப்பட்டுள்ளனர் இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் பசியிலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசா நகரில், இஸ்ரேலிய இராணுவம் தெற்கு ரெமால் சுற்றுப்புறத்தில் உள்ள அல்-கவ்தர் கோபுரத்தை இலக்குவைத்து, இரண்டு மணி நேரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இடைவிடாத குண்டுவீச்சு தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடியுள்ளனர். https://www.virakesari.lk/article/225105
  10. திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு 15 Sep, 2025 | 12:08 PM ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” என அழைக்கப்படும் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின. இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திலீபன் முன்வைத்த கோரிக்கைகளான 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2) சிறைக்கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225126
  11. கைகுலுக்காத வீரர்கள்: டாஸ் முதல் பரிசளிப்பு வரை நீடித்த இறுக்கம் - பஹல்காம் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பையில் குரூப் ஏ பிரிவில் துபாயில் நடைபெற்ற ஆறாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 11 முறை பாகிஸ்தானை வீழ்த்தி (11-3) தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் முதல் கடைசியில் கைகுலுக்காதது வரையிலும் விளையாட்டைத் தாண்டிய ஒருவித இறுக்கம் இரு அணி வீரர்களிடையே தென்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சி வரையிலும் அது நீடித்தது. பஹல்காம் தாக்குதல் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன? பாகிஸ்தான் பயிற்சியாளர் என்ன சொன்னார்? நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்த கேப்டன்கள் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமர், டாஸ் நிகழ்விலேயே தொடங்கிவிட்டது. இரு அணி கேப்டன்களும் நேருக்கும் நேர் பார்ப்பதை தவிர்த்ததோடு சம்பிரதாயத்துக்கு கைகுலுக்குவதையும் கூட தவிர்த்தனர். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி 8 ஆட்டங்களில் 7 இல் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்ற போதிலும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, பேட்டிங்கை தேர்வுசெய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இரு அணிகளும் தத்தமது முந்தைய ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடனே களமிறங்கினர். பாகிஸ்தானின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப்புக்கு இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் ரோஹித், கோலி, ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் ஓய்வுபெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியும் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இல்லாத ஓர் இளம் அணியுடன் இம்முறை களமிறங்கியது. பட மூலாதாரம், Getty Images பவர்பிளேவில் பட்டையை கிளப்பிய பாண்ட்யா-பும்ரா சல்மான் அகாவின் டாஸ் முடிவு தவறு என்பது ஆட்டத்தின் முதல் பந்திலேயே நிரூபணமானது. இன்னிங்ஸை 'வைடு'டன் தொடங்கிய பாண்ட்யா, அடுத்த பந்தில், அதிரடி இளம் பேட்டர் சைம் அயுப்பை 'கோல்டன் டக்' ஆக்கினார். அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட லென்த் பந்தை ஸ்கொயர் டிரைவ் ஆட முயன்ற சைம், சரியான டைமிங் இல்லாததால் பாயிண்ட் திசையில் பும்ராவிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இது அவருக்கு இரண்டாவது 'கோல்டன் டக்'. மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய, அதிரடி பேட்டர் முகமது ஹாரிஸ், பும்ரா பந்தில் பிக்-அப் ஷாட் விளையாடுகிறேன் என்று, டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இப்படியாக, பாண்ட்யாவும் பும்ராவும் ஒருவர் பந்தில் மற்றொருவர் கேட்ச் பிடித்து தங்கள் நன்றியை பரிமாறிக் கொண்டனர். பட மூலாதாரம், Getty Images பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் 42/2 முதல் ஓவரில் விக்கெட் எடுத்த பாண்ட்யா இரண்டாவது ஓவரில் லைனையும் லெங்த்தையும் தவறவிட, ஸமான் இரு பவுண்டரிகளை விளாசினார். தனது இரண்டாவது ஓவரில் பும்ரா வீசிய முழு நீள பந்தை, ஃபர்ஹான் லாங்-ஆன் திசையில் ஒரு அபாரமான சிக்ஸரை பறக்கவிட்டு, சோர்ந்து போயிருந்த பாகிஸ்தான் ரசிகர்களை தலைநிமிரச் செய்தார். முதல் நான்கு ஓவர்களில், ஆடுகளத்தில் கிடைத்த ஸ்விங்கை பும்ராவும் பாண்ட்யாவும் சரியாகப் பயன்படுத்தி வீசினர். கடந்த ஆட்டத்தை போலவே இந்தமுறையும் பவர்பிளேவிலேயே மூன்று ஓவர்களை பும்ரா வீசி முடித்தார். தட்டுத்தடுமாறி இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் ஸமான், ஃபர்ஹான் கைகொடுக்க பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் என்ற நிலைக்கு நகர்ந்தது. பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் மும்முனை சுழலில் சிக்கிய பாகிஸ்தான் பவர்பிளேவுக்கு பிறகு இருமுனையும் சுழல் தாக்குதலை கையிலெடுத்தார் சூர்யகுமார் யாதவ். கிரீஸில் இருந்து இறங்கிவந்து சுழற்பந்து வீச்சாளர்களை ஆடிக் கொண்டிருந்த ஸமான், அக்சர் படேல் பந்தில் அதேபோல விளையாடி சிக்ஸர் அடிக்க முயன்று, லாங்-ஆன் திசையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய சுழலர்களின் பந்துகள் உள்ளே வருகிறதா வெளியே செல்கிறதா என்ற குழப்பத்தில், பாகிஸ்தான் பேட்டர்கள் குத்துமதிப்பாக விளையாடுவதை பார்க்க முடிந்தது. குறைவேக பிட்ச் என்பதால், வழக்கமாக வேகமாக வீசும் அக்சர் படேல் கூட, வேகத்தை மாற்றி மாற்றி வீசினார். முதல் ஓவரில் ஸமான் விக்கெட்டை தூக்கிய அக்சர், இரண்டாவது ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆடப் பார்த்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவை பெவிலியனுக்கு அனுப்பினார். 10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பட மூலாதாரம், Getty Images ஒன்றிரண்டாக ரன் சேர்க்க தவறிய பாகிஸ்தான் ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஃபர்ஹான், 12-வது ஓவரில் அக்சர் படேல் பந்தில் தனது மூன்றாவது சிக்ஸரை அடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு கிடைத்த அனுகூலத்தை பார்த்த சூர்யகுமார் யாதவ், நான்காவது சுழலராக அபிஷேக் சர்மாவை கொண்டுவந்தார். கடந்த ஆட்டத்தில் யூஏஇ அணியை நிலைகுலைய செய்த குல்தீப், இந்த ஆட்டத்தில் தனது முதல் விக்கெட்டாக, அபாயகரமான பேட்டர் ஹசன் நவாஸை வீழ்த்தினார். கேப்டன் சல்மான் அகா போலவே, தேவையின்றி ஸ்லாக் ஸ்வீப் ஆடப் பார்த்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அவர். ஹசன் நவாஸை அனுப்பி வைத்த கையோடு, அடுத்த பந்திலேயே இன்னொரு நவாஸை (முகமது) எல்பிடபிள்யூ ஆக்கினார் குல்தீப். இந்திய சுழலர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான பந்துகளை ஸ்டம்ப் லைனிலேயே வீசினர். கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளித்து விளையாடி ஓரிரு ரன்களாக சேர்க்கும் திறனற்றவர்களாக பாகிஸ்தான் அணியினர் காணப்பட்டனர். பட மூலாதாரம், Getty Images கடைசி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்த ஷஹீன் அஃப்ரிடி பாபர், ரிஸ்வான் இல்லாத வெறுமையை பாகிஸ்தானின் ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. ஓரளவுக்கு தாக்குப்பிடித்த ஃபர்ஹான் 40 ரன்களுக்கு லாங்-ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து, குல்தீப்பின் 3-வது இரையாக மாறினார். 20 ஓவர்களை முழுமையாக விளையாடி 100 ரன்களை பாகிஸ்தான் கடக்குமா என்பதே சந்தேகமாக இருந்த நிலையில், ஷஹீன் ஷா அஃப்ரிடி, 2 சிக்சர்களை வெளுத்தார். தனது கடைசி ஓவரில் நோ பால் உள்பட 12 ரன்களை விட்டுக்கொடுத்த பும்ரா, ஸ்பெல்லின் கடைசி பந்தில் முகீம் (10) விக்கெட்டை தூக்கினார். குல்தீப், அக்சர் வரிசையில் வருண் சக்ரவர்த்தியும் தன் பங்குக்கு ஆல்ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரஃப் விக்கெட்டை கைப்பற்றினார். இன்னிங்ஸின் கடைசி ஓவரில் பாண்ட்யா பந்துவிச்சில் அஃப்ரிடி மேலும் 2 சிக்ஸர்களை அடிக்க, பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது. கடைசி கட்டத்தில் அஃப்ரிடி (33*), முகீம் (11) அதிரடி கைகொடுத்திருக்காவிட்டால், பாகிஸ்தான் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கும். மொத்தமாக 20 ஓவர்களில் 63 பந்துகளை டாட் பந்துகளாக இந்தியா வீசியது. பட மூலாதாரம், Getty Images பவர்பிளேவில் பாகிஸ்தானை பதம் பார்த்த அபிஷேக் சர்மா 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய் அணிக்கு அபிஷேக் சர்மா, நம்ப முடியாத தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். முழு நீளத்தில் ஷஹீன் அஃப்ரிடி வீசிய முதல் பந்தை ஸ்ட்ரைட் டிரைவ் செய்த அவர், அடுத்த பந்தை கவர் திசையில் அநாயசமாக சிக்ஸருக்கு அனுப்பினார். பேட்டிங்கில் சொதப்பிய சைம் அயுப், அதற்கு பரிகாரமாக ஒரு அட்டகாசமான கேரம் பந்தில் கில் விக்கெட்டை எடுத்தார். அடுத்தடுத்து இறங்கிவந்து இரு பவுண்டரிகளை விளாசிய கில், மூன்றாவது முறையும் முயன்று ஸ்டம்பிங் ஆனார். நேரம் செல்லசெல்ல பிட்ச் சுழலுக்கு சாதமாக மாறும் என்பதை புரிந்துகொண்ட அபிஷேக் ஷர்மா, ஷஹீன் பந்துவீச்சை குறிவைத்து தாக்கினார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் பாயிண்ட் திசையில் பந்தை வெட்டி பவுண்டரி அடித்த அவர், அதே ஓவரில் மிட் விக்கெட் திசையில் பிரமாதமான ஒரு சிக்ஸரை அடித்தார். தனது இரண்டாவது ஓவரிலும் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை வழங்கிய சைம் அயுப், அடுத்த பந்திலேயே அபாயகரமான அபிஷேக் சர்மா (31) விக்கெட்டை கைப்பற்றினார். பட மூலாதாரம், Getty Images பேட்டிங் பாடமெடுத்த சூர்யாகுமார்-திலக் ஜோடி தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானுக்கு எதிராக 20 ரன்களை தாண்டியதில்லை என்ற குறையை போக்கும் திட்டத்துடன் களம்புகுந்தார். ஆறாவது ஓவரில் முகமது நவாஸ் ஓவரை குறிவைத்த திலக் வர்மா, 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் குவித்து, பவர்பிளேவில் இந்திய அணி 60 ரன்களை கடக்க உதவினார். பாகிஸ்தான் பேட்டர்கள் போல பவுண்டரி, சிக்ஸர் மட்டும்தான் அடிப்பேன் என்று முரண்டு பிடிக்காமல், ஓடி ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினர். திலக் வர்மா-சூர்யகுமார் யாதவ் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை சேர்க்க, பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் அப்ரார் அஹமது சிக்கனமாக பந்துவீசி 16 ரன்கள் மட்டும் கொடுத்து தன் கோட்டாவை முடித்தார். டி20 கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 50 சராசரி வைத்துள்ள திலக் வர்மா, சைனாமேன் சுழலர் முகீம் பந்தில் அதிரடியாக சிக்ஸரை விளாசினார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக குறைவேக ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு பாடம் எடுக்கும் விதமாக இந்திய பேட்டர்கள் விளையாடினர். 30 ரன்களில் திலக் வர்மா கொடுத்த எளிமையான காட் & பவுல்ட் (caught & bowled) வாய்ப்பை முகமது நவாஸ் கோட்டைவிட்டார். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத திலக், சைம் அயுப் வீசிய அடுத்த ஓவரிலேயே பவுல்டானார். பட மூலாதாரம், Getty Images ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற குல்தீப் இடக்கை பேட்டர் என்றால் ஆஃப் பிரேக், வலக்கை பேட்டர் என்றால் கேரம் பந்து என்ற வியூகத்துடன் சைம் வீசினார். 13-வது ஓவர் முடிவில் இந்தியா 100 ரன்களை எட்டியது. முகமது நவாஸின் ஓவரில் பேக்புட்டில் இரண்டு பவுண்டரிகளை வெட்டிய சூர்யகுமார் யாதவ், வெற்றிக்கு தேவையான ரன்களை 18 ஆக குறைத்தார். சைம் அயுபின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் துபே இறங்கிவந்து கோடு போட்டது போல ஒரு மகத்தான் சிக்ஸர் விளாச, வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 16-வது ஓவரில் 25 பந்துகள் மீதமிருந்த நிலையில், முகீம் பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு அபாரமான சிக்ஸர் அடித்து, சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை முடித்துவைத்தார். சூர்யகுமார் யாதவ், தனக்கு தானே கொடுத்து கொண்ட பிறந்தநாள் பரிசாக இந்த இன்னிங்ஸ் அமைந்த்தது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்துவீசிய போதும், பவர்பிளேவில் அபிஷேக் சர்மாவின் ருத்ர தாண்டவத்தால் வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்ட இந்திய அணி, மிடில் ஓவர்களில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மாவின் பேட்டிங் கைகொடுக்க எளிதாக இலக்கை எட்டியது. பேட்டிங்கில் பவர்பிளேவில் சொதப்பியதும் மிடில் ஆர்டரில் பேட்டிங் வரிசையில் இருந்த அனுபவ குறைவும் பாகிஸ்தானுக்கு பாதகமாக முடிந்துவிட்டது. துபாயில் சேஸ் செய்யும் அணி வெற்றிபெறவே வாய்ப்பிருந்தும் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பேட்டிங் தேர்வு செய்தது முதல் கோணலாக அமைந்து பாகிஸ்தானுக்கு ஆட்டத்தை காவு வாங்கிவிட்டது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக குல்தீப் யாதவ் (3/18) ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். பட மூலாதாரம், Getty Images பஹல்காம் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன? சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்ததும் கேப்டன் சூர்யகுமார், மறுமுனையில் நின்றிருந்த ஷிபம் துபேவை அழைத்துக் கொண்டு உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். பாகிஸ்தான் வீரர்களுடன் வழக்கமான கைகுலுக்கல் ஏதும் நிகழவில்லை. பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது இந்திய வீரர்களின் டக்அவுட்டை நோக்கி நடந்து வருவது போல் தோன்றியது. ஆனால் இந்திய வீரர்கள் அதற்கு முன்னதாகவே ஓய்வறைக்குத் திரும்பிவிட்டனர். இந்த ஆட்டத்தில் டாஸ் போடப்பட்ட போதும் சூரியகுமார் - பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா ஆகிய இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய சூர்யகுமார் வெற்றியை "இந்தியாவுக்கு ஒரு சரியான பரிசு" என்றார். "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம், இன்றைய வெற்றியை மிகுந்த துணிச்சலைக் காட்டிய எங்கள் ராணுவத்தினருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம்." என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறியது என்ன? பரிசளிப்பு நிகழ்ச்சியில் எந்தவொரு பாகிஸ்தான் வீரர்களும் பேசவில்லை. பின்னர் பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் ஹெசன்"நாங்கள் கைகுலுக்க அங்கு சென்றோம். ஆனால், அவர்கள் ஏற்கனவே உடை மாற்றும் அறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்," என்று கூறினார். "ஒரு போட்டியை இந்த வகையில் முடிப்பது ஏமாற்றமளிக்கும் ஒன்று. நாங்கள் விளையாடிய விதத்தில் நாங்கள் ஏமாற்றமடைந்தோம். ஆனால் நிச்சயமாக நாங்கள் சென்று கைகுலுக்க தயாராக இருந்தோம்." என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சைக்கு வாய்ப்புள்ளதா? 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, புள்ளிகள் பட்டியலில் குரூப் ஏ பிரிவில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2 ஆட்டங்களில் 1 இல் மட்டும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் 2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. புதன்கிழமை (செப்டம்பர் 17) யுஏஇ அணியுடன் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெறும்பட்சத்தில் பாகிஸ்தான் அணியால் எளிதாக சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆகவே, மீண்டும் ஒன்று அல்லது இருமுறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துவதை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும். இந்திய அணி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தனது அடுத்த ஆட்டத்தில் கத்துக்குட்டியான ஓமனை எதிர்கொள்ளவுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 14 ஆட்டங்களில் 11 இல் இந்தியாவும் 3 இல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. நாளை நடைபெறும் ஆட்டங்களில் (double-header) குரூப் ஏ பிரிவில் யூஏஇ, ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஹாங்காங் அணிகளும் மோதுகின்றன. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr5qd9ll6qpo
  12. 15 Sep, 2025 | 11:03 AM கடந்த ஆட்சியின்போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அதனை இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டுவர முடிந்தது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் கூறுகையில், ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டதற்கான உண்மையான நோக்கம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும், தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசதிகளை வழங்க ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவ உதவிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அது அறிவு நிறைந்த ஒரு நல்ல எதிர்கால மனித வளத்தை உருவாக்க பங்களிக்கும். ஒரே கட்டமைப்பின் கீழ் இருக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, பல்வேறு துறைகளைப் பார்க்கும் மற்றும் திறந்த மனதைக் கொண்ட மனித வளத்தை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இது மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும். வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களது சலுகைகள் மற்றும் நலன்களை அதிகரித்துக்கொள்ளவே இந்த நிதியம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது. ஆயினும் இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறி, ஜனாதிபதி நிதியத்தின் உண்மையான நோக்கத்திற்காக அதை 100% பயன்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிதியம் இப்போது மக்களுக்கு நெருக்கமாகி, மக்கள் தங்கள் பிரதேசத்திலேயே அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மாறிவரும் உலகில் வித்தியாசமான விதத்தில் சிந்திக்கக்கூடிய, ஒரு விடயத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்க்கக்கூடிய, உலகத்தை மாற்றக்கூடிய மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கே நாம் முயற்சிக்கிறோம் என்றார். இவ்விழாவில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, மனித வளங்களை வளர்ப்பதை போல் உலகில் வெற்றி பெறக்கூடிய வேறு எதுவும் இல்லை. நாட்டின் இளைஞர்களுக்கு அவற்றை முறையாகவும் திறம்படவும் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. ஜனாதிபதி நிதியம் இன்று அந்தப் பணிக்கு பங்களிக்கிறது. மனித வளங்களை வளர்ப்பதன் மூலம் நாடு வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவும் விழாவில் உரையாற்றினார். கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, மத்திய மாகாண பிரதம செயலாளர் எம்.ஏ. பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பாக மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் துறைசார் அலுவலர்களுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு சனிக்கிழமை (13) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஜனாதிபதி நிதியத்தை கையாளும் துறைசார் அலுவலர்களுக்கு இந்த நிகழ்வில் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் முறைகளை அறிமுகப்படுத்தவும் மற்றும் விரைவான சேவைகளை வழங்கத் தேவையான அறிவு மற்றும் பயிற்சி வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225113
  13. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1982ம் ஆண்டில் பிரபாகரன் முதலும் கடைசியுமாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்தார் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர். இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2008ம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையே அவருடைய கடைசி உரையாக பதிவாகியுள்ளது. அதற்கடுத்த சில மாதங்களில் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று யாரும் நினைக்கவில்லை, ஆனால் அவருடைய வாழ்வின் கடைசி தருணம் வரை அவருடைய மனோபாவம் மாறவே இல்லை. 1976-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தொடங்கினாலும் கூட பிரபாகரன் நீண்ட காலமாக பெரிதும் அறியப்படாத ஒருவராகவே திகழ்ந்தார். 1982 மே மாதம் சென்னையில் முதலும் கடைசியுமாக பிரபாகரன் பிடிபட்ட போது, இந்திய அரசு அவர் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத்திற்கு சவால் விடுவதற்கும் தயங்காத வகையில், பிரபாகரனின் செல்வாக்கு மற்றும் நம்பிக்கை அபரிமிதமாக அதிகரித்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் ராணுவ சக்திக்கு சவால் விடுக்கும் அளவுக்கு பிரபாகரனின் செல்வாக்கு இருந்தது பிரபாகரனின் பாணி இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தில் சிங்களர்கள் கொலைக்குப் பிறகு, பிரபாகரன் குறித்து பெரும் விவாதம் எழுந்தது. அதன்பிறகு, இலங்கையில் போட்டி தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது, தமிழர்கள் மத்தியில் தனிப்பெரும் தலைவராக உருவாவதற்கான முயற்சியாகவே நம்பப்பட்டது. பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி தன்னுடைய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' (The Route of Prabhakaran) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம் போன்றது. அவரை யாரும் சவால் செய்ய முடியாது. அவருக்கு முன் தலை தாழ்ந்து, அவர் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்களால் தமிழ் ஈழத்துக்காக போராட முடியும்," என எழுதியுள்ளார். "அவருடன் உடன்படவில்லையென்றால், ஒன்று நீங்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேற வேண்டும், அல்லது உலகை விட்டு நீங்க வேண்டும். அவரை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர் 'துரோகி' என அறிவிக்கப்படுவார். சோவியத் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தன்னுடைய எதிரிகளை எப்படி நடத்தினாரோ, அவர் அப்படி நடத்தப்படுவர்." பட மூலாதாரம், konark படக்குறிப்பு, பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி எழுதிய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' புத்தகம் அடுத்தடுத்து நடந்த கொலைகள் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் குறிப்பிட்ட சிலருக்கு குறிவைத்தது. பிரபாகரனுக்கோ அல்லது விடுதலைப் புலிகள் அமைப்புக்கோ சில சமயங்களில் உதவியிருந்தவர்களும் கூட இலக்காயினர். பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அனிதா பிரதாப், தன்னுடைய 'ஐலாண்ட் ஆஃப் பிளட்' (Island of Blood) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், பாரிஸில் தன்னுடைய இல்லத்தின் முன்பாக சுட்டு கொலை செய்யப்பட்டார்." என எழுதியுள்ளார். இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார். வெளியுறவு அமைச்சர் (தமிழர்) ஒருவர் நீச்சல் குளத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இலங்கை ஜனாதிபதி ஒருவரும் மே தின பேரணியில் உரையாற்றியபோது கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ராஜிவ் காந்தி கொலையிலும் பிரபாகரன் தொடர்புபடுத்தப்படுகிறார். பிரபாகரனின் சரிவு ஒரு கட்டத்தில், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரபாகரனின் கட்டுப்பாடு ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு சுருங்கும் நேரம் வந்தது. "முதன் முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் கண்களில் நான் பயத்தை பார்த்தேன். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளை நெருங்கி பார்த்துவரும் எனக்கு இது முற்றிலும் புதிய விஷயமாக இருந்தது," என பெயர் குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறினார். "மே 17 அன்று, பிரபாகரன் தன் நெருங்கிய கூட்டாளிகளிடையே, தான் போர்க்களத்திலிருந்து ஓடவோ அல்லது ஆயுதங்களை கைவிடவோ மாட்டேன் என்றும், யாராவது போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ள விரும்பினால், அதை அவர்கள் தாராளமாக செய்யலாம் என்றும் கூறினார். குடிமக்களுடன் இணைய யாராவது விரும்பினால், அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அங்கே செல்லலாம். எதிரியின் கைகளால் வீழ்த்தப்படுவதை தவிர்க்கும் விதமாக யாரேனும் இறக்க விரும்பினால், சயனைடை உட்கொண்டு இறக்கலாம்." சூரிய கடவுளின் அவதாரம் என்றும் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்றும் தன் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட ஒருவருக்கு இது மோசமான பிரியாவிடையாக இது இருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல. பிரபாகரனும் எட்டாம் எண்ணும் தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல. பிரபாகரனின் பழைய கூட்டாளியான ராஜேஷ் குமார் பிரிட்டனில் வசிக்கிறார், அவர் தற்போது ராகவன் எனும் பெயரில் அறியப்படுகிறார். அவர் கூறுகையில், "பிரபாகரன் 8 எனும் எண்ணை துரதிருஷ்டவசமான எண்ணாக கருதினார். பிரபாகரன் எந்தவொரு வேலையையும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் செய்வதை தவிர்ப்பார், அது எதிர்காலத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என கருதினார். இந்த நாட்களில் மறைவிடத்திலேயே நாள் முழுவதும் பதுங்கியிருந்து அடுத்த நாளே வெளியில் வரும் அளவுக்கு அவருக்கு அதன் மீது வலுவான மூடநம்பிக்கை இருந்தது" என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மெய்க்காப்பாளருடன் பிரபாகரன் தோல்விகளால் குலைந்த மன உறுதி 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மன்னார் மாவட்டம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பின், நவம்பர் மாதத்தில் விடுதலைப் புலிகள் வியூக ரீதியாக தங்களின் முக்கிய இடங்களான பூநகரி மற்றும் மாங்குளத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. 2008-ஆம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி கந்தையா பாலசேகரன் எனும் பால்ராஜ் மாரடைப்பில் இறந்தது பிரபாகரன் பெரும் பின்னடைவாக அமைந்தது. பாலசேகரனின் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. பாலசேகரன் இறந்திருக்காவிட்டால், இலங்கை ராணுவத்துடனான போரின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என, அந்த அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் நம்புகின்றனர். 2009-ஆம் ஆண்டுவாக்கில் பிரபாகரன் மேலும் அதிகமான பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்தார். இலங்கை அரசுப் படைகள், முதலில் பரந்தன் நகரத்தையும் பின்னர் அதன் அருகிலுள்ள கிளிநொச்சியையும் கைப்பற்றின. இதில், கிளிநொச்சி, விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிகளின் தலைநகரமாக கருதப்பட்டது. கிளிநொச்சியில் தோல்வியடைந்தது, விடுதலைப் புலிகள் அமைப்பினரின் மன உறுதியை கடுமையாக குலைத்தது. இந்த நகரத்தில் தான் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பிரபாகரன் சந்தித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த ராணுவப் பிரிவு தலைவராக கந்தையா பாலசேகரன் இருந்தார். இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடி விடுதலைப் புலிகளின் முக்கியமான ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த வேலாயுதன் தயாநிதி எனும் தயா மாஸ்டர் மற்றும் பிரபாகரனின் உரைகளை மொழிபெயர்த்த குமார் பஞ்சரத்னம் எனும் ஜார்ஜ் இருவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததால் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. அப்போது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸவும், அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைமை வகித்தார். எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவிடமிருந்து கோட்டாபய ராஜபக்ஸ பெரும் அழுத்தத்தை சந்தித்தார். அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க பிரதிநிதிகளிடம் எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. எனினும், இதுதொடர்பான தன்னுடைய கவலைகளை ராணுவ தளபதிகளிடம் மே 14-ஆம் தேதி பகிர்ந்துகொண்டார்," என எழுதியுள்ளார். "இன்னும் எவ்வளவு காலம் இந்த போர் தொடரும் என அவர் கேள்வியெழுப்பினார். இந்த போர் கூடிய விரைவில் வெற்றியுடன் முடிவுற வேண்டும், இல்லையெனில், அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொள்வது கடினமாகிவிடும்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அப்போது கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் சண்டையை தொடர பிரபாகரன் முடிவு மே 16 அன்று, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி கட்ட பாதுகாப்பையும் அழித்தது. ஜி-11 மாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த செய்தியை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்டதாக முன்கூட்டியே அறிவித்தார். விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்கள் தலைவர் குமரன் பத்மநாதன் எனும் கேபி, கோலாலம்பூரில் அதே நாள், "சண்டை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. எங்களது துப்பாக்கிகளை கைவிடுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்." என தெரிவித்தார். பிரபாகரன் இந்த சண்டையை தொடர முடிவெடுத்ததால், மஹிந்த ராஜபக்ஸவும் குமரன் பத்மநாதனும் இவ்வாறு பேசியதாக தெரிகிறது. விடுதலைப் புலிகள் பல நாட்களாக குளிக்கக் கூட முடியாத அளவுக்கு சண்டை கடுமையானதாக இருந்தது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையினர் (எதிரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்துபவர்கள்) சிலர், இலங்கை படையினரால் பிடிக்கப்படக் கூடாது என்பதற்காக, தற்கொலை செய்துகொண்டனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்டது எப்போது? மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. இலங்கை ராணுவம் மூன்று புறங்களில் சூழ்ந்திருந்தது. நான்காவது பக்கத்தில், இலங்கை கடற்படை தொடர்ந்து கண்காணித்து வந்த நந்திக்கடல் இருந்தது. மே 17 அன்று விடுதலைப் புலிகளின் பல தளபதிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து, அந்நாள் அந்த அமைப்புக்கு மிகவும் துரதிருஷ்டவசமான நாளாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையை சேர்ந்த 'எஸ்கே' பின்னொரு நாளில் அளித்த நேர்காணலில், "மே 17 அன்று கடைசியாக பிரபாகரன் உயிருடன் காணப்பட்டார். 6 மணிக்கு பிரபாகரன் இருந்த இடத்தை நான் அடைந்தேன். எங்களுடைய உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது" என்றார். "நம்பினால் நம்புங்கள், தமிழ் ஈழம் எனும் கனவு சிதைய போகிறது என்பதை உணர்ந்திருந்த போதிலும், பிரபாகரன் மிகவும் சாதாரணமாகவே காணப்பட்டார்." பட மூலாதாரம், Getty Images பிரபாகரனின் மகன் மரணம் அடுத்த நாள், மீதமுள்ள விடுதலைப் புலிகள், ராணுவ முற்றுகையை தகர்க்க முயற்சித்தனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தனர், ஆனால், 30 நிமிடங்களில் இலங்கை படையினர் மீண்டும் குழுக்களாக இணைந்தனர். இந்த முறை இலங்கை படையின் எதிர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் படையை சேர்ந்த தளபதிகள் பலரும் பிரபாகரனின் 24 வயது மகன் சார்லஸ் ஆண்டனியும் கொல்லப்பட்டார். ஆண்டனியின் உடலை இலங்கை படையினர் தேடியபோது, அவரிடம் 23 லட்சம் இலங்கை பணம் இருந்ததை கண்டறிந்தனர். 53வது பிரிவின் படைத்தளபதியாக இருந்த கமல் குணரத்ன, அச்சமயத்தில் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் சூசை தவிர விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பில் இருந்த பலரும் அழிக்கப்பட்டதாக கூறினார். இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரன் குறித்த செய்தி வரும் வரை சண்டை தொடரும் என தெளிவாக கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி (வலதுபக்கம் உள்ளவர்) பிரபாகரன் மரணம் குறித்த செய்தியை பெற்ற குணரத்ன மே 19 அன்று வரை பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற செய்தி மேஜர் குணரத்னவுக்கு சிறிதும் தெரியவில்லை. இதையடுத்து, நந்திக்கடல் பகுதியின் சேறு நிறைந்த உவர் நீரில் கடுமையான சண்டை வெடித்ததாக இளநிலை அதிகாரி ஒருவர் அவரிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை சேர்ந்த பலரும் அங்கே சிக்கியிருந்தனர். அவர்களுள் யாரும் ஆயுதத்தைக் கைவிட தயாராக இல்லை. இறுதியில் சண்டை முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, தான் காத்திருந்த செய்தி குணரத்னவுக்கு கிடைத்தது. தன்னுடைய 'தி கேஜ், தி ஃபைட் ஃபார் ஸ்ரீ லங்கா அண்ட் தி லாஸ்ட் டேஸ் ஆஃப் தமிழ் டைகர்ஸ்' (The Cage, The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers) எனும் தன் புத்தகத்தில் கார்டன் வெய்ஸ், "கர்னல் ரவிப்ரியா மேஜர் ஜெனரல் குணரத்னவிடம், 'சார், நாங்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டோம்'. என கூறினார்," என எழுதியுள்ளார். ஆச்சர்யமடைந்த குணரத்ன, 'உறுதியாக கூறுகிறீர்களா' என கேட்டதற்கு, 'ஆமாம், உறுதியாக,' என பதிலளித்துள்ளார். ஆனால், குணரத்ன இதனை உறுதியாக அறிய விரும்பியதால், கர்னல் லலிந்த கமகேவை சம்பவ இடத்துக்கு அனுப்பினார். சில நிமிடங்களிலேயே கமகேயின் குரல் ராணுவ தொலைபேசியில் ஒலித்தது: 'சார், அது சரியான செய்திதான், பிரபாகரன் தான்.' என தெரிவித்தார். பிரபாகரனின் உடல் கண்டறியப்பட்டது பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெனரல் சரத் பொன்சேகா முற்றிலும் உறுதிப்படுத்திய பின் குணரத்ன இந்த செய்தியை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பினார். அதற்கு முன்பு, பிரபாகரனின் உடலை கொண்டு வருமாறு படையினரை கேட்டுக்கொண்டார். எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அந்த சமயத்தில் இலங்கை படையினர் சுமார் மூவாயிரம் பேர் பிரபாகரனின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் திரண்டிருந்தனர். சேறு நிறைந்த ஆழமற்ற நீரில் இறங்கி படையினர் உடலை வெளியே எடுத்தனர்." என குறிப்பிட்டுள்ளா. "பிரபாகரனின் உடலை படையினர் பார்த்த உடனேயே, அவர்கள் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். படையினரை ஒருங்குபடுத்த அதிகாரி முயற்சி மேற்கொண்டார், ஆனால் அவரின் வார்த்தைகளுக்கு பயனில்லாமல் போனது." ஜெனரல் பொன்சேகா இந்த செய்தியை அறிந்தபோது இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தார். பொன்சேகாவிடம் குணரத்ன சிங்கள மொழியில் தொலைபேசியில், 'மஹா எஸ் இவராய்' என்றார், அதாவது, 'பெரியவன் முடிந்து விட்டான்'. அடையாள அட்டை பட மூலாதாரம், Ministry of Defence Sri Lanka படக்குறிப்பு, பிரபாகரனின் அடையாள அட்டை பிரபாகரன் சுமார் 9.15 மணியளவில் இறந்தார். அவருக்கு அப்போது வயது 54. எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அவருடைய நெற்றியில் பெரிய காயம் இருந்தது, இதனால் அவருடைய தலை இரண்டு பாகங்களாக பிளவுபட்டிருந்தது. அவருடைய வாய் திறந்திருந்தது, அவருடைய கண் மேல் நோக்கி இருந்தது. அவருடைய தாடி வெள்ளை நிறத்தில் இருந்தது." என எழுதியுள்ளார். "குணரத்ன அவருடைய உடலை தொட்ட போது, அது இன்னும் சூடாக இருந்தது. அவருடைய நெற்றி தவிர வேறெங்கும் துப்பாக்கி குண்டு காயம் இல்லை. பிரபாகரன் அப்போது ராணுவ உடையில் இருந்தார். அவருடைய பாக்கெட்டில் தேடியபோது, 001 எனும் வரிசை எண்ணுடன் விடுதலைப் புலிகளின் அடையாள அட்டை கண்டறியப்பட்டது, அந்த அடையாள அட்டை ஜனவரி 1, 2007 அன்று வழங்கப்பட்டது." இதுதவிர, நீரிழிவு மருந்துகள் சிலவும் கண்டறியப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து வாங்கப்பட்ட திராட்சை மணத்துடன் கூடிய லோஷனும் (hand lotion) இருந்தது. அவரின் தலையில் இருந்த காயம் நீல நிற துணியால் மூடப்பட்டிருந்தது. கார்டன் வெய்ஸ் எழுதுகையில், "12.7 எம்எம் தோட்டாவால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார். இலங்கை ராணுவத்தின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனின் ராணுவ உடையை கழற்றுமாறு உத்தரவிட்டார். இலங்கை படையினரை தவிர, ராணுவ உடையணிய யாருக்கும் உரிமை இல்லை என்பது அவரின் வாதமாக இருந்தது. பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது நாராயண் சுவாமி எழுதுகையில், "பிரபாகரனின் உடலை அடையாளம் காண கர்னல் கருணா மற்றும் தயா மாஸ்டர் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களை அனுப்புவதாக பொன்சேகா குணரத்னேவிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார். "இருவரும் ராணுவ விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அந்த உயிரற்ற உடலை அடையாளம் காண அவர்கள் ஒரு நொடி கூட எடுத்துக்கொள்ளவில்லை." பிரபாகரனின் மரணத்தால் தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டமும் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvrppzdgno
  14. இங்கை தடை இல்லாதபடியால VPN பாவிப்பதில்லை அண்ணை.
  15. Published By: Digital Desk 3 14 Sep, 2025 | 05:11 PM மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார். மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நிதி நிறுவன முகாமையாளரை கைது செய்தனர். இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளர் எதிராக பொலிஸார் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த முகாமையாளருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார். எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார். https://www.virakesari.lk/article/225077
  16. டிரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன என்பது குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
  17. காணொளி: லண்டனில் ஈலோன் மஸ்க் பேசிய பேரணியில் வன்முறை : நடந்தது என்ன? 55 நிமிடங்களுக்கு முன்னர் சனிக்கிழமை லண்டனில் 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் பேரணி ஒன்றை முன்னெடுத்தார். சுமார் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. சிலர் போலீசார் மீது பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசியதாகவும், இதன் காரணமாக 26 போலீசார் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது? முழு விவரம் காணொளியில்.. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wgd9w9x11o
  18. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது. கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தினமும் காலை தூக்கத்தில் இருந்து விழிக்கும்போது என்ன நினைப்பீர்கள்? இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என்றுதானே. ஆனால், அந்த நாள் அழுகையுடன் தொடங்கினால் எப்படி இருக்கும்? மனித வாழ்க்கையில் சிரிப்பு எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவிற்கு அழுகையும் முக்கிய பங்கு வகிக்கிறதுதானே. மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது. இது சோகமான நிகழ்வுகள், இழப்பு என பல்வேறு காரணங்களால் வெளிப்படும். சில சமயங்களில் காரணமே இன்றியும் இந்த உணர்வு வெளிப்படும். இன்னும் சொல்லப்போனால் நம் மனதில் இருக்கும் நெருடல்கள், பாரங்கள், குமுறல்களை பல சமயங்களில் கண்ணீர் மூலம் வெளியேற்றுகிறோம். சிரிப்பு நம்மை எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக்குகிறதோ அதே அளவிற்கு அழுகையும் நம்மை உணர்வுப்பூர்வமாக ஆக்குகிறது. இருப்பினும் இத்தகைய ஓர் உணர்வை நாம் ஏன் எதிர்மறையான உணர்வாக பார்க்கிறோம்? அழுவதால் நம் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன? கண்ணீர் வெளிப்படுவதற்கான காரணம்: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அழுகை ஒரு வகையில் விளித்திரையை மேம்படுத்தி பார்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. மனித பிறவிக்கு மட்டுமே தனித்துவமான உணர்வு சார்ந்த திரவமாக கண்ணீர் உற்பத்தி ஆகிறது என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் (The neurobiology of human crying) என்ற ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் ஜே.எட்.டிஃபானி, கடந்த 2003ஆம் ஆண்டில் உடல்நலனிலும் நோயிலும் கண்ணீரின் பங்கு (Tears in health and disease) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். "நாம் விழித்திருக்கும் சமயத்தில் கண்ணீர் சுரக்க உதவும் லேக்ரிமல் க்ளாண்ட் தொடர்ச்சியாக கண்ணீரை உற்பத்தி செய்துகொண்டிருக்கும். இது கண்ணின் ஓரங்களிலும், மேல் இமைக்குக் கீழும் இருக்கும். கண்ணை இமைக்கும்போது, கண்ணீரை மெல்லிய பாதுகாப்பு படலமாக கண்ணின் மேல் பரப்புகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். "கண் இமைகளில் உள்ள டார்சல் தகடுகளுக்குள் அமைந்துள்ள மெய்போமியன் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படும்போது விளிம்பில் எண்ணெய் போன்ற திரவம் ஏற்படும். இது கண்ணீர் படலத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது. இதன் மூலம் வெளிப்படும் கண்ணீர் கார்னியா மற்றும் வெண்படலத்தின் செல்லுலார் மேற்பரப்புகளை சீராக்கும். இது விளித்திரையை மேம்படுத்தி நமது பார்க்கும் திறனை அதிகரிக்கிறது" என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள் அழுவது ஏன்? மனிதர்கள் அழுவது குறித்து 2 நேரெதிர் கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைப்பதாக தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் ஆய்வறிக்கை மேற்கோள்காட்டுகிறது. ஒன்று துயரத்தால் ஏற்படும் தூண்டுதலால் அழுவது. உதாரணமாக ஒருவர் அதீத சோகமாகவோ, கோபமாகவோ இருக்கும்போது இயற்கையான ஓர் உணர்வாக கண்ணீர் வெளிப்படுகிறது என்பதாகும். மற்றொன்று அழுகை ஒரு ஆறுதல் செயலாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒருவர் நன்றாக அழுத பின்பு அவர் மிகவும் இலகுவாக உணர்கிறார். மனதின் பாரங்கள் குறைந்து நிதானமாகிறார் என்பது ஆகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மனிதர்கள் அழுவதற்கு 2 கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர். 'இங்கே அழலாம்' பெரும்பாலும் பொதுஇடங்களில் நாம் அழுவதில்லை. தனி அறையிலோ, மறைவான பகுதிகளிலோ, ஆள் இல்லாத தனிமையான இடங்களில்தான் இந்த உணர்வை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்வோம். ஏனென்றால் இதைவைத்து நம்மை யாரும் மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதே இதற்கு காரணம். ஆனால் அழுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சுதந்திரமாக இந்த உணர்வை வெளிப்படுத்த இதற்கென்றே சில மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை சூரத் நகரில் 2017ஆம் ஆண்டு அழுகை கிளப் (Cry Club) ஒன்று தொடங்கப்பட்டது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கிளப்பின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி அழுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அழுகை மன அழுத்தத்தை அகற்றி, மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்று இவர்கள் நம்புகின்றனர். இது பின் மும்பையிலும் விரிவுப்படுத்தப்பட்டது. சமீபத்தில் கடந்த ஜூன் 15ஆம் தேதி மும்பையில் 'தி க்ரை கிளப்' எனப்படும் ஒருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'உங்களின் உணர்வுகளை அரணவணைத்துக் கொள்ளுங்கள்' என்ற வாசகத்துடன் இருந்தது. இது வழக்கமான பார்டியோ, இசைநிகழ்ச்சியோ அல்ல. முன்பின் தெரியாதவர்கள் கூடி, அழுவதற்கு சுதந்தரமான ஒரு சூழலை கொண்ட இடம். 399 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே சென்று உங்களின் மனக்குமுறல்களை கொட்டலாம். யாரும் உங்களை எடைபோட மாட்டார்கள். டிஷ்யூ பேப்பர், தேநீர் மற்றும் உங்களின் மனநிலைக்கு ஏற்ற இசையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேண்டுமென்றால் சாய்ந்து அழுவதற்கும், யாரையேனும் கட்டியணைத்து புலம்பி அழுவதற்குமான வசதியும் அங்கு இருந்தது. இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் குறித்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Small World என்ற நிறுவனத்திடம் கேட்டோம். இந்த நிகழ்ச்சிக்கான யோசனை எங்கிருந்து வந்தது எனக் கேட்டபோது, ருய்காட்சு (Ruikatsu) என்ற ஜப்பானிய பழக்கத்தில் இருந்து ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சவுரவ். ருய்காட்சு என்பது கண்ணீரை வெளியேற்றும் ஒரு ஜப்பானிய நடைமுறை ஆகும். பட மூலாதாரம், Healthy Crying Club Surat படக்குறிப்பு, சூரத்தில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அழுகை மன்றம். "மக்கள் தங்கள் உணர்ச்சிகளை சரிசெய்யவோ அல்லது பகுப்பாய்வு செய்யவோ வேண்டிய கட்டாயம் இல்லாமல், எவ்வித ஆலோசனைகளும் இல்லாமல், அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதை அப்படியே வெளிப்படுத்த உதவுவதே எங்களின் நோக்கமாக இருந்தது" என்றார் சவுரவ். "அழுவது பலவீனமான அறிகுறி அல்ல என்பதை உணர்த்தவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதில்லை. இதில் பங்கேற்ற ஒரு விருந்தாளி, என்னை நானே கட்டியணைத்து, எதுவும் சரியாக நடக்காவிட்டாலும் பரவாயில்லை எனத் தேற்றிக்கொள்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாக விவரித்தார்" என சவுரவ் நம்மிடம் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிரித்தும், புலம்பியும், அழுதும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது வெளிப்படையாக அழுவது புத்துணர்சி அளித்ததாக ஒருவர் கூறினார். "ஒரு பாதுகாப்பான சூழலில் நாம் புரிந்துகொள்ளப்படுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது மாதிரியான வாய்ப்பு கிடைப்பது அரிதானது" என பலரும் கருத்து தெரிவித்ததாக சவுரவ் கூறினார். உளவியல் ரீதியாக என்ன பலன்? படக்குறிப்பு, அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா. "அழும்போது நமது உடலின் நரம்பு மண்டலத்தை சீர்செய்து, நமது உணர்ச்சிகளை மீட்பதுதான் நரம்பியல் அமைப்பின் வேலை. நாம் அழும்போது ஆக்ஸிடோசின், எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியேறும். இந்த ஹார்மோன்கள் நம் உடல் மற்றும் மனரீதியான வலிகளை குறைத்து, நம்மை ஆசுவாசப்படுத்தும் ஹார்மோன்கள் என்பதால் இவை வெளியேறியபின் நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்" என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா. மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது "அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்கள் அழும்போது நமக்கு அக்கறை, இரக்கம் ஏற்படும். இந்த இரக்க குணம் சமூகத்திற்கே மிகவும் முக்கியமாக உள்ளது." என்கிறார். மேலும் பேசிய அவர், "அழுகை என்ற உணர்ச்சி நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் ஒன்று. உடலளவில் நமக்கு ஏற்படும் காயங்களை சரிசெய்ய மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால் நமக்கு கஷ்டம் ஏற்படும்போது நம்மை நாமே தேற்றிக்கொள்வதுதான் இந்த அழுகை" என விளக்குகிறார். அடிக்கடி அழுதால் ஆபத்தா? அதேசமயம் அதீத அழுகையும், மனஅழுத்தம், பயம் போன்ற பிரச்னைக்கான அறிகுறியாக பார்க்கப்படலாம் எனவும் எச்சரிக்கிறார். "ஒருவர் அதிகமாக அழுதுகொண்டே இருப்பது க்ரையிங் ஸ்பெல் (Crying Spell) எனப்படுகிறது. இது ஒருவரை பலவீனமடையச் செய்யும். ஒரு கட்டத்தில் ஏன் அழுகிறோம் என்பதே தெரியாமல் அழுகை ஒரு பழக்கமாக மாறிவிடக் கூடும்" எனக் கூறினார். "உணர்ச்சிகள் அடக்கப்படுவது போல தோன்றும்போது, மனதில் பாரம் ஏற்படும்போது அதை குறைப்பதற்கு அழுவது தவறில்லை. ஆனால், சிரிப்பு சிகிச்சை (laughter therapy) போல இதையும் ஒரு பழக்கமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இதுவே மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கும்" எனக் கூறுகிறார். ஆண்களுக்கும் பொருந்துமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம் என்கிறார் அபிலாஷா பெரும்பாலான ஆண்கள் அழுகை என்ற உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது குறித்து கேட்டபோது "காலம் காலமாக வீரத்திற்கு எதிர்ப்பதமாக அழுகை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அழுகைக்கும் வீரத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. சங்க கால மன்னர்கள் கூட வலிமையானவர்கள்தான். ஆனால் உணர்ச்சிவசப்பட்டால் அவர்களும் அழுதுள்ளனர். இது அவர்களின் இரக்க குணத்தை தான் காட்டுகிறதே தவிர கோழைத்தனம் கிடையாது" என்கிறார். "இப்போது பெரும்பாலும் அனைவருக்கும் அதிக மனஉளைச்சல் ஏற்படுகிறது. தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வலி ஏற்படும்போது அதை வெளிப்படுத்தாமலேயே இருந்தால் மாரடைப்பு வரை கொண்டு செல்லும் அபாயமும் உள்ளது" என எச்சரிக்கிறார். மேலும் "ஆண்கள் பலரும் அழக்கூடாது என நினைத்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இழப்போ, மனசோர்வோ, தாங்கிக்கொள்ள முடியாத பிரச்னைகளோ ஏற்படும்போது அழுவது தவறில்லை. மனிதர்கள் அனைவருக்கும் அழுகை வேண்டும் என்பதால்தான் நாம் அனைவருக்கும் பாலின வேறுபாடின்றி Tear Duct எனப்படும் கண்ணீர் சுரபி உள்ளது. அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம்." எனவும் கூறினார். "அழும்போது நம் கண்களும் புத்துணர்ச்சி பெறுகிறது. உடலில் இருக்கும் தண்ணீர் கண் வழியே வெளியேறும்போது இந்த புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதனால் தேவைப்படும்போது அழுவது என்பது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நல்லதே" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7v1zvpjndeo
  19. Innings break 6th Match, Group A (N), Dubai (DICS), September 14, 2025, Men's T20 Asia Cup Pakistan(20 ov) 127/9 India Pakistan chose to bat. Current RR: 6.35 • Last 5 ov (RR): 49/3 (9.80) PAK 20.68% • IND 79.32%
  20. அண்ணை, எனக்கொரு டவுட் இருந்தது! இந்த செய்திகளை அறம்புறமா இணைக்கிறன் என்றதால எனக்கு மட்டும் கொஞ்சம் வேகத்தடை போட்டிருக்கினமோ என்று!! (நகைச்சுவைக்காக) தொழிநுட்பக் காரணங்கள் நிறைய இருக்கும், நாங்கள் இப்ப எல்லாம் வேகவேகமா வேணும் என்று விரும்புகிறோம். முதன்முதல் 2006 இல் கொழும்பில் இணையம் பாவிக்க தொடங்கையில் 512 kb/s என்ற வேகம் தான். இப்ப கொஞ்சம் வேகமாக இயங்குவதாக உணர்கிறேன் @மோகன் அண்ணை. மிக்க நன்றி. இணைய வழங்கி நெருக்கடி ஏற்பட்டதோ?!
  21. Published By: Vishnu 14 Sep, 2025 | 07:12 PM இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இன்று (14) இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் மட்டக்களப்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது பயண வாகனம் களுவாஞ்சிகுடி பகுதியில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. https://www.virakesari.lk/article/225082
  22. ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக தடகள செம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் வூடன், பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்யை 10.61 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில், ஜமைக்காவின் ஒப்லிக் செவில்லே ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியை 9.77 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmfjr9skw00e9qplpmdrbz4zp
  23. 14 Sep, 2025 | 11:27 AM சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளும் முகமாக இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தியாக்கப்பட்டுள்ளன. குறித்த நிறுவனம் கடல்தொழில் சார் பொருட்களை உற்பத்தி மற்றும் பரும்படியாக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலை அதிக கேள்வியுள்ள ஏனைய பைபர் மூலப்பொருள்சார் பொருட்களையும் தயாரிக்கத் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் கடற்றொழில் சார் உபகரணத் தேவைகளைத் தன்நிறைவோடு வழங்கும் நிலையமாக இது அமையும். இதன்வழி சுமார் 100 - 150 திறன் வேலைவாய்ப்புகள் உருவாகச் சாத்தியமுள்ளது. தற்போதைய நிலையில், சாதாரண கட்டுமரம் அளவிலான தோணி முதல் 30 அடி நீளமான படகுகள் வரை, 1 - 2 மீற்றர் வரையான விட்டம் கொண்ட மீன் வளர்ப்புத் தொட்டிகள், மீன் விற்கும் வண்டிகளில் பொருத்துவதற்கான குளிரூட்டக்கூடிய பெட்டி என்பன இங்கு தயாரிக்க ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி மாலை குறித்த தொழிற்சாலையானது, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/225040
  24. நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் ஜெனிவா விஜயம் Published By: Digital Desk 3 14 Sep, 2025 | 11:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் இறுதியில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. இந்த குழுவில் நீதி அமைச்சர் ஹர்ஷண ராஜகருணா மற்றும் பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உட்பட நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சின் முக்கிஸ்தர் ஒருவர் குறிப்பிட்டதுடன், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இந்த விஜயம் திட்டமிட்டுள்ள போதிலும், அதற்கு முன்னர் பெரும்பாலும் நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு கடந்த திங்கட்கிழமை ஜெனிவா சென்று, இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், நீதி அமைச்சின் சிறப்பு குழு மீண்டும் ஜெனிவா செல்கிறது. இவ்வாறானதொரு நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அறிக்கை ஒரு கலவையான உணர்வைப் பிரதிபலித்திருந்தது. இலங்கை அரசு அண்மையில் அளித்த வாக்குறுதிகளை அவர் அங்கீகரித்தாலும், அவை வெறும் வார்த்தைகளாக நின்றுவிடாமல், உறுதியான நடவடிக்கைகளாக மாற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார். கடந்தகால மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு (Impunity) உருவாக்கிய காயங்களை ஆற்றுவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க முடியும் என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கைக்கு விஜயம் செய்தபோது செம்மணி மனிதப்புதைகுழி, மற்றும் கணவனுக்காகக் காத்திருக்கும் தெற்கைச் சேர்ந்த ஒரு பெண் என பாதிக்கப்பட்ட பலரிடமிருந்து நேரடியாகக் கேட்ட துயரங்களை வெளிப்படுத்தினார். சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுவது ஒரு நல்ல முயற்சி எனப் பாராட்டிய ஆணையாளர் வோல்கர் டேர்க், இதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேலும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான, பிரத்யேக நீதிப் பொறிமுறையின் அவசியம், பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும். அத்துடன், நிகழ்நிலைக்காப்புச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம் உள்ளிட்ட மீறல்களுக்கு வழிவகுக்கும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்கொண்டு வரும் உள்நாட்டு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குதல், இணையவழி பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்நாட்டுப் பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனோர் விவகாரங்களை விரைவுபடுத்த மேலதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஒரு உறுதியான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் அதே வேளையில், இலங்கை அரசு உள்நாட்டு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைத் தவிர்க்க முயல்கிறது. இந்த முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது. https://www.virakesari.lk/article/225034

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.