Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 12K views · 319 reactions | அனைத்து போக்குவரத்து பொலிஸாரு...அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் - சிக்கப்போவது யார்..? #SriLankanPolitician #Srilankanpolice #TrafficPolice #tamilwin.https://tamilwin.com/article/another-procedure-to-implemented-next-two-weeks-1757487619
  2. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 செப்டெம்பர் 2025, 02:29 GMT இந்தியாவில் இனி முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்கள் சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அலுவல் உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. "இது மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்" என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், செப். 8 தேதியிட்ட அந்த உத்தரவில், திட்ட அளவை பொறுத்து அல்லாமல், அனைத்து திட்டங்களும் மத்திய அரசு மட்டத்தில் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வியூக ரீதியான (strategic considerations) காரணங்களுக்காக இத்தகைய திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, 2006 அறிவிப்பாணையின் (திருத்தம்) விதிமுறைகளின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. "மத்திய அரசு திட்டங்களில் பிரிவு பி-யில் (section B) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அணுக் கனிம சுரங்க திட்டங்கள் மற்றும் பிரிவு டி-யில் (section D) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய கனிமங்கள் (critical minerals) (சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் முதல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள) சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது." என அதில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், டங்ஸ்டன் முக்கிய கனிமங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி துறையின் கோரிக்கை என்ன? சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு 04.08.2025 தேதியிட்ட கோரிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம், ரேடார் மற்றும் சோனார் போன்ற கண்காணிப்பு சாதனங்கள், லேசர், மானிட்டர் போன்ற தொடர்பியல் கருவிகள், ஏவுகணைகளின் இலக்கை கட்டுப்படுத்தும் வழிகாட்டு அமைப்புகளின் தயாரிப்புகளில் இத்தகைய முக்கிய கனிமங்கள் பயன்படுவதாக தெரிவித்துள்ளது. "இந்தியாவில் இத்தகைய கனிமங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதன் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. இதனால் நாட்டில் அதன் விநியோகம் அபாயத்தில் இருப்பதால், உள்நாட்டிலிருந்து இக்கனிமங்கள் நிலையாக விநியோகம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது" என அதில் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. எனவே, முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்களை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக கருதி அவை சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று கோரியிருந்தது. அதேபோன்று, 29.08.2025 தேதியிட்ட கடிதத்தில் அணுசக்தி துறை, மோனசைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தோரியம், மூன்றாம் நிலை அணுசக்தித் திட்டத்தில் சாத்தியமான அணுசக்தி எரிபொருள் ஆதாரமாக உள்ளது என கூறியுள்ளது. அதேபோன்று, முதல்நிலை அணுசக்தித் திட்டத்தில் யுரேனியம் முக்கியமானதாக கருதப்படுகிறது என்றும், இதுதொடர்பான திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது. முக்கிய கனிமங்கள் என்னென்ன? 2023ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதன்படி, கோபால்ட், தாமிரம், டங்ஸ்டன், காட்மியம், செலினியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதேபோன்று, யுரேனியம், தோரியம் போன்ற 6 வகையான அணுக் கனிமங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டைட்டானியம், லித்தியம், டாண்டலம் உள்ளிட்ட ஆறு கனிமங்களை அணுக் கனிமங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அதை தோண்டி எடுப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட வழிவகுத்து 2023ம் ஆண்டில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பொதுமக்கள் கருத்துக் கேட்பு ஏன் முக்கியம்? சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அம்சமாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உள்ளது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையின் முக்கியமான பகுதியாக, பொதுமக்கள் கருத்துக் கேட்பு உள்ளது. தங்கள் பகுதிகளில் வரவிருக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை இத்தகைய கூட்டங்களில் எடுத்துரைப்பார்கள். பொதுமக்களின் பெரும்பான்மை கருத்துகளின் அடிப்படையில் தான் அந்த திட்டம் அமையும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, பொதுமக்கள் கருத்துக் கேட்பு இவையிரண்டும் அனைத்து விதமான சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கும் மிக முக்கியம் என்றும், மத்திய அரசின் தற்போதைய உத்தரவு அதன் முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வதாக இருப்பதாகவும் கூறுகிறார், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். பட மூலாதாரம், m.vetriselvan/Instagram படக்குறிப்பு, 'இதனால் கதிர்வீச்சு அபாயம் கூட ஏற்படும்' என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் "சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் 1994ம் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை கொண்டு வந்தனர். 1992ல் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் உலக நாடுகளின் முக்கிய கருத்துகளின் அடிப்படையிலும் இது கொண்டு வரப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் மிக முக்கிய அம்சமே பொதுமக்கள் கருத்துக் கேட்புதான்." என்கிறார் அவர். ஓர் திட்டம் வருகிறதென்றால், அதனால் சூழல் மீது எந்த தாக்கம் ஏற்படும் என்ற ஆய்வு நடத்தப்படும் . அதனடிப்படையில் தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்படும். "எந்தவொரு திட்டத்துக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கு முன்னதாகவே இந்த அறிக்கையை அந்தந்த மொழிகளில் மொழிப்பெயர்த்து மக்களிடத்தில் பரவலாக்கியிருக்க வேண்டும். அதைன்பின் தான், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தும். அதில், பெரும்பான்மை மக்கள் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும். இப்போதைய உத்தரவின்படி, முக்கிய கனிமங்கள், அணுக் கனிமங்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது" என தெரிவிக்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். எதிர்ப்பு ஏன்? மத்திய அரசு 2014ம் ஆண்டு தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை மாற்றியமைப்பதற்காக, முன்னாள் அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அக்குழு, தொழில்கள் எளிதாக செயல்படும் வகையில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் உள்ள தடைகளை நீக்குவதற்காக, பல பரிந்துரைகளை அளித்திருந்தது. ஆனால், அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதை நாடாளுமன்ற நிலைக்குழு 2015ம் ஆண்டு நிராகரித்தது. இதைச் சுட்டிக்காட்டிய வெற்றிச்செல்வன், "2020ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில்தான் முதன்முதலாக சில திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தேவையில்லை என்று கொண்டு வந்தது. அதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், அதிலுள்ள விதிமுறைகளை தனித்தனியே செயல்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது" என கூறுகிறார். மேலும், இந்த உத்தரவை சட்டத்திருத்தமாக கொண்டு வராமல், அலுவல் உத்தரவாக கொண்டு வருவதும் ஏற்புடையதல்ல என்கிறார் வெற்றிச்செல்வன். "இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு அல்லாமல், அணுக்கதிர்வீச்சு அபாயமும் இருப்பதாக" கூறுகிறார் அவர். இனி என்ன நடக்கும்? படக்குறிப்பு, அதிகளவில் கனிமங்களை தோண்டி எடுக்கும் நிலை இதனால் உருவாகலாம் என்கிறார், சு.ப. உதயகுமார் "கருத்துக் கேட்பு நடத்தப்படாமல் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும்போது மக்கள் நில உரிமையை இழந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்." என்கிறார் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகித்த சு.ப. உதயகுமார். தமிழ்நாட்டில் என்ன தாக்கம் ஏற்படும்? "கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. இப்போது, பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமே வேண்டாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அதேபோல், பழனி, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, கவுத்தி மலை, வேடியப்பன் மலையில் இரும்பு தாது உள்ளது. அவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் தோண்டி எடுக்கலாம் என்ற நிலை இதனால் உருவாகலாம். ஏனெனில், இத்தகைய கனிமங்கள் தான் இனி 'புதிய எண்ணெய் வளம்' என்கின்றனர். மக்கள் தான் தேசம், அவர்களின் அடிப்படை தேவைகள் தான் முக்கியமே தவிர, தனியார் நிறுவனங்களுக்காக விதிமுறைகளை மாற்றக் கூடாது" என்றார் சு.ப. உதயகுமார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx23plpp16do
  3. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் நேற்று கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நடக்கும் முதல் உத்தியோகபூர்வ இராஜதந்திர சந்திப்பு இதுவாகும். பிணையில் விடுதலை இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். அத்துடன், சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது, முன்னாள் ஜனாதிபதிகளுடனான சீனத்தூதுவரின் சந்திப்பானது உள்நாட்டு அரசியலில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/meeting-between-ranil-and-chinese-ambassador-1757659599#google_vignette
  4. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? அவுஸ்திரேலியா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? பெங்களூர் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? தென்னாபிரிக்கா 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து தடித்த எழுத்துகளில் எனது பதில்களை பதிந்துள்ளேன் @கந்தப்பு அண்ணை. போட்டிகள் பெங்களூரில் நடைபெறுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதா கந்தப்பு அண்ணை.
  5. @கந்தப்பு அண்ணை எத்தனையாம் திகதிக்கு முன் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்ற தகவலையும் போடுங்கோ.
  6. கமாண்டோ சாலிந்தா தனக்கு 1.5 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து எல்எம்ஜி துப்பாக்கியை கோரியதாக அவர் கூறினார். பல்வேறு காரணங்களுக்காக இராணுவ சேவையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் தலைமறைவான உறுப்பினர்களின் விவரங்களை இந்த இராணுவ அதிகாரி கமாண்டோ சாலிந்தாவுக்கு வழங்கியதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் அவர்களை ஒன்றிணைத்து ஒரு தனி குழுவை உருவாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இராணுவ அதிகாரி இரண்டு கிளேமோர் குண்டுகளையும் குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு வழங்கியதாக பாதுகாப்புப் படையினரிடையே சில சந்தேகங்கள் உள்ளன. இந்த இராணுவ அதிகாரி அதிக அளவில் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், அடிக்கடி இரவு விடுதிகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் தெரியவந்துள்ளது. மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
  7. மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் சமீபத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கமாண்டோ சாலிந்தா'வுக்கு ரி-56 தோட்டாக்களை விற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கேணலிடமிருந்து பல குற்றவியல் விஷயங்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியபோது, மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார், மேலும் அவர் ஒரு பாதாள உலகக் குழுவிற்கு 260 ரி-56 தோட்டாக்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஒன்றரை கோடிக்கு மேலும் விசாரித்ததில், கமாண்டோ சாலிந்தா தனக்கு 1.5 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து எல்எம்ஜி துப்பாக்கியை கோரியதாக அவர் கூறினார். இருப்பினும், லெப்டினன்ட் கேணல் அதை வழங்க முடியாது என்றும், கமாண்டோ சாலிந்தா தன்னிடம் 2 கிளேமோர் குண்டுகளை வழங்குமாறு கோரியதாகவும் கூறியுள்ளார். இராணுவ சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்கள் பல்வேறு காரணங்களுக்காக இராணுவ சேவையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் தலைமறைவான உறுப்பினர்களின் விவரங்களை இந்த இராணுவ அதிகாரி கமாண்டோ சாலிந்தாவுக்கு வழங்கியதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் அவர்களை ஒன்றிணைத்து ஒரு தனி குழுவை உருவாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இராணுவ அதிகாரி இரண்டு கிளேமோர் குண்டுகளையும் குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு வழங்கியதாக பாதுகாப்புப் படையினரிடையே சில சந்தேகங்கள் உள்ளன. இந்த இராணுவ அதிகாரி அதிக அளவில் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், அடிக்கடி இரவு விடுதிகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் தெரியவந்துள்ளது. https://ibctamil.com/article/lt-colonel-arrested-illegal-weapons-1757612476
  8. சீனத் தூதுவர் அதேவேளை பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஜெயந்தி மாவத்தையில் ஒரு ஆடம்பர வீட்டை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க மற்றுமொரு தொழிலதிபர் உறுதியளித்துள்ளார். இதேவேளை கொழும்பில் ஆடம்பர வீடொன்றை வழங்க சீனா முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்றையதினம் மகிந்தவை சந்தித்த சீனத் தூதுவர் தேவையான அனைத்து விடயங்களை செய்து தருவதாக உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/german-man-gifting-a-luxury-house-for-mahinda-1757642501
  9. அது வழமையான துண்டு போடும் நடவடிக்கை அண்ணோய்!(ஆட்சிமாறினால்)
  10. உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விடைபெற்ற மஹிந்தவின் பதிவு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள பதிவு பின்வருமாறு, "ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமை நீக்க சட்டமூலம் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து நான் நேற்றைய தினம் (11) வெளியேறினேன். விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற ஊடகங்களில் சிலர் இதற்கு முன்னர் வௌியிட்ட பல்வேறு கருத்துக்களை நான் அவதானித்தேன். மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது மிகக் குறுகிய காலத்தில் நாளுக்கு நாள் மக்களின் அதிருப்தி சம்பாதித்து வரும் குழு தங்கள் திறமையின்மையை மறைக்க ஊடகங்களில் வெளியிட்ட அந்த கருத்துகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. இருப்பினும், பின்னர், அவர்களால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் விஜேராம இல்லத்திற்கு விடைகொடுத்தேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ என்ற நான், சட்டத்தின் முன்பும், என் மக்கள் முன்பும் மட்டும் தான் தலை வணங்குவேன். தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட ஒழுக்கமற்ற, தொழில்முறையற்ற அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால், அது தொடர்பாக எழுந்த நிகழ்வுகளின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போராடினேன். சுவாசம் நம் அனைவருக்கும் பொதுவானது. இனம் அல்லது மத வேறுபாடு இல்லை. எமது சுவாசத்திற்காக தங்களின் மூச்சை இழந்தவர்கள் இராணுவ வீரர்களே. அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாங்கள் அனைவரும் புனித நகரமான அனுராதபுரத்தில் சந்த ஹிரு சேயவை உருவாக்கினோம். சந்திரனும் சூரியனும் இருக்கும் வரை, எங்கள் தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை இது குறிக்கிறது. எனது மூத்த மகன் நாமல் கூறியது போல நான் எல்லாம் தொடங்கிய எனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். நாங்களே கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வந்தேன். இப்போது கிராமத்தில் புளிப்பு மீன் குழம்பை அனுபவிக்க முடியும். அதை கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இது அனைத்தும் இந்த பூமியிலிருந்து தொடங்கியது. மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிருவாவிலிருந்து போட்டியிட்டார். எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. ஒரு இளம் எம்.பி.யாக நான் பின்பற்ற வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவராகவும் தாயாகவும் இருந்தார் என்று சொல்வது உண்மைதான். அரசியலில் சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம். ருஹுணு எம்.பி.யாக இருந்த எனது மறைந்த அன்புக்குரிய தந்தை, நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்காவின் பின்னால் எப்போதும் இருந்தார். ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளை என் தந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இளைய எம்.பி.யாக 1970 இல் மக்கள் அரசாங்கத்தின் முதல் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை உரையை நான் நிகழ்த்தினேன். ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளைப் பற்றிப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. இருண்ட காலங்களில் இருந்த அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கல்களைத் தாண்டி, காணாமல் போனவர்களின் சார்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றவர் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணாமல் போதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்னிலையாகி சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரியான "சட்டத்தரணி மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் - மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்காலை". என்பதை எனது நண்பர்களுக்கு நான் மீண்டும் நினைப்படுத்த விரும்புகிறேன். பாதயாத்திரைகள், பொதுமக்கள் கூக்குரல், மனித சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள். யாரும் தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பதட்டங்களை சமாளிக்க ஜனநாயகத்திலிருந்து விலக முடியாது. தவறான தகவல்களை பிரச்சாரம் செய்து பிரதான எதிர்க்கட்சி சித்தாந்தவாதிகளை அடக்குவதற்கான முயற்சி வருந்தத்தக்கது. மக்கள் நம் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அதிகமாக இருந்தன. அந்த நம்பிக்கைகளின் தீவிரத்தினால்தான் கடந்த காலங்களில் சில சம்பவங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ தனது இதயத்திற்கு ஏற்பவும் நாட்டிற்காகவும் முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது எதுவுமில்லை. கடந்த காலத்திலும் இன்றும் நான் பெற்ற அதே மக்களின் அன்பைப் பெறுவது எனது பாக்கியம். அந்த வரப்பிரசாதத்தை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது. எங்கள் மரியாதைக்குரிய மதத்தலைவர்களிடம் இருந்து நான் எப்போதும் பெற்ற ஆசீர்வாதங்கள் பொருள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவை. என் அன்பு மனைவி ஷிராந்தி அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை எனக்கு வழங்குவதன் மூலம் எப்போதும் எனக்கு பலத்தை அளித்து வருகிறார். அன்றும் இன்றும் என் பக்கத்தில் இருந்த, இருக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து நான் பெறும் பாதுகாப்பு, வேலைக்கு அப்பாற்பட்ட மிகவும் அன்பான பிணைப்பாகும். நான் தங்காலையில் இருந்தாலும் விஜேராமவில் இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தான். நான் உயிருடன் இருக்கும் வரை, நாம் அனைவரும் வாழும் சிங்கக் கொடியின் நிழலில் இருக்கும் இந்த ஒன்றுபட்ட தாய்நாட்டை யாராவது காட்டிக் கொடுத்தால், எவ்வளவு துன்புறுத்தல்கள் வந்தாலும் நான் எழுந்து நிற்பேன் என்று அறிவிக்கிறேன். அந்த நாள் வந்தால், ஆதரிப்பதற்கு மகா சங்கத்தினருடன் இந்த நாட்டின் அன்பான மக்கள் இருப்பார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கிருவாப்பத்துவைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் கர்ச்சிப்பினை நன்கு அறிந்தவர்." என பதிவிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmfgq82sk00cwqplpmebt7dbn
  11. Published By: Digital Desk 3 12 Sep, 2025 | 11:35 AM மன்னார் - சிறுத்தோப்பு கடற்கரைக்கு அருகில் இந்த வாரம் 91 பறவைகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் ஆவர். கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டை கோழிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். பறவைகள் மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/224884
  12. Published By: Priyatharshan 12 Sep, 2025 | 10:46 AM வத்தளை, ஹெந்தலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) விஜயம் செய்தார். 1708 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகத்தால் தூதுவர் இசொமதா அன்புடன் வரவேற்கப்பட்டு வைத்தியசாலை வரலாறு குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முதலில் காலனித்துவ கால புகலிடமாக நிறுவப்பட்ட இந்த வைத்தியசாலை, இப்போது குறைந்து வரும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதியாக செயல்படுகிறது. 1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த தொழுநோயை வெற்றிகரமாக ஒழித்த போதிலும், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் நோயாளிக்கான ஆதரவில் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சுகாதார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. தொழுநோய் தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஜப்பான் தூதர் இசொமதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் சர்வதேச அமைப்புகளுக்கான ஜப்பானின் நிரந்தர மிஷனில் பணியாற்றிய காலத்தில், தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ண தூதரும், அப்போதைய நிப்பொன் அறக்கட்டளையின் தலைவருமான திரு. யோஹெய் சசகாவாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கவுன்சிலில் , தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதற்கு இருவரும் இணைந்து பணியாற்றினர், இது இந்த நூற்றாண்டுகள் பழமையான பிரச்சினை தொடர்பான முதல் தீர்மானமாகும். வைத்தியசாலை, சுகாதார அமைச்சகம் மற்றும் குறிப்பாக பல தசாப்தங்களாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தூதுவர் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இலங்கையுடனான ஜப்பானின் தொடர்ச்சியான நட்பு மற்றும் ஒற்றுமையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். https://www.virakesari.lk/article/224878
  13. இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது. இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இலங்கை முழுவதும் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இயக்கம், நகர்ப்புற-கிராமப்புற இணைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்த திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு 151 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. திட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், திட்டமிடப்பட்ட அனைத்து பாலங்களின் கட்டுமானமும் பிப்ரவரி 2026 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கத்தில், இலங்கை அரசாங்கம் நெதர்லாந்தின் Coöperatieve Rabobank U.A. உடன் 41.8 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது திட்ட செலவில் 75% ஐ ஈடுகட்டுகிறது. நெதர்லாந்து வெளிநாட்டு முதலீட்டு வங்கியான “முதலீட்டு சர்வதேச வங்கி” மீதமுள்ள 25% அல்லது யூரோ 13.9 மில்லியனை மானியம் மூலம் வழங்கியது. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை உணர்ந்த நெதர்லாந்து, 2024 ஆம் ஆண்டில் அதன் மானிய பங்களிப்பை மொத்த திட்ட செலவில் தோராயமாக 35% ஆக அதிகரித்தது, இது தோராயமாக யூரோ 5.3 மில்லியன் அதிகரிப்பு. இந்த சரிசெய்தல் நிலுவையில் உள்ள கடன் நிலுவையில் ஒரு பகுதியை ரத்து செய்ய உதவியது மற்றும் நாட்டின் கடன் சுமையை மேலும் குறைத்தது. சமீபத்திய €730,000 மானியத்துடன், திட்டத்திற்கான மொத்த மானியம் €18,912,335.72 ஆகும், இது மொத்த திட்ட செலவில் சுமார் 37% ஆகும். இந்த ஆதரவைப் பாராட்டி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நெதர்லாந்தின் பதில் தூதர் இவான் ருட்ஜென்ஸ், அவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது நெதர்லாந்து அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பதில் தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் சந்திப்பன்போது எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சலுகை நிதியுதவியை தொடர்ந்து வழங்க விருப்பம் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmfghzlvl00cpqplpt5sbk6dy
  14. சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். மகாவலிக்கு சொந்தமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தீ வைத்து அழித்ததற்காக சட்டவிரோதமாக 8,850,000 ரூபாய் பணத்தை இழப்பீடாக பெற்றமை ஊடாக "ஊழல்" என்ற குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmfgh7p9i00coqplpp6l3wrut
  15. 12 Sep, 2025 | 10:08 AM “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், “கெஹெல்பத்தர பத்மே” வுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் அண்மையில் குற்ற புலனாய்வு அதிகாிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224874
  16. நேபாளத்தின் 'ஜென் Z' போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இப்போது வருந்துவது ஏன் - கள ஆய்வு 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது – கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 17 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், மழைதான் முதலில் கண்ணில் பட்டது. மேகங்கள் மிகவும் தாழ்வாகவும் நெருக்கமாகவும் தெரிந்ததால், விமான நிலையத்தைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு அவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது போல் தோன்றியது. ஜென் Z போராட்டங்களின் போது சேதமடையாமல் இருந்த ஒரே அரசு நிறுவனம், இந்த விமான நிலையம்தான் என்று சொல்லலாம். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், ஒரு பெரிய புயல் கடந்த பின்பு நிலவும் அமைதியையைத்தான் உணர்ந்தோம். இடையில், எல்லாம் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லும் விதமாக ராணுவ வாகனங்கள் சாலையில் தென்பட்டன. முழு நகரத்திலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இரண்டு நாட்கள் நடந்த போராட்டங்களில் நேபாள அரசாங்கம் சரணடைந்துள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தலைவர்கள் ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல், நேபாளம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் பல இடங்களில் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டது. அப்போது நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று சொன்னபோது, அவர்கள் எங்களை அனுமதித்தனர். என் அருகில் அமர்ந்திருந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒரு நண்பர், "ராணுவ ஆட்சியின் கீழ் உள்ள நேபாளத்திற்கு வருக" என்றார். செவ்வாய்க்கிழமை நேபாள நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டது. குறிவைக்கப்பட்டுள்ள ஊடகங்கள் 'ஜென் Z' போராட்டத்தின் போது ஊடகங்களும் குறிவைக்கப்பட்டன. நேபாளத்தின் முன்னணி நாளிதழான காந்திபூரின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. போராட்டத்தின் போது, ரபி லாமிச்சானேவின் ஆதரவாளர்கள் அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். காத்மாண்டுவில் உள்ள நக்ஹூ சிறையிலிருந்து அவர் மட்டும் அல்ல, அங்கிருந்த பல கைதிகளும் வெளியே வந்தனர். நேபாளத்தின் பல சிறைகளிலிருந்தும் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். காத்மாண்டுவின் பனேஷ்வர் பகுதியில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து இன்னும் எரிந்த வாசனை வருகிறது. இந்த நாடாளுமன்றம், நேபாளத்தில் 239 ஆண்டுகள் நீண்ட மன்னராட்சி முடிவுக்கு வந்ததற்கான அடையாளமாகவும், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் கதையைச் சொல்லும் சின்னமாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்று, அந்தக் கட்டடத்திலிருந்து புகை மட்டுமே எழுகிறது. 2008-ஆம் ஆண்டு நேபாள மக்கள் முடியாட்சியை ஒழித்தபோதும், நாராயண்ஹிட்டி அரச அரண்மனை தீக்கிரையாக்கப்படவில்லை. அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, வளாகத்தில் குடியரசு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது. ஆனால் அதே நேபாள மக்கள், வெறும் 17 ஆண்டுகள் பழமையான ஜனநாயகத்தின் நாடாளுமன்றத்தைத் தீயிட்டு சிதைத்தனர். நாடாளுமன்ற சுவர்களில் தேவநாகரி எழுத்தில் கே.பி. ஒலி மற்றும் பிரசண்டாவை அவமதிக்கும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அந்த சுவர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், 'ராஜா மீதுகூட இத்தனை வெறுப்பு இல்லை' என்றார். காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இடைக்கால அரசாங்கம் குறித்து இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்திய ஊடகங்கள் மீது வெளிப்படும் கோபம் சுமார் 48 வயதான தீபக் ஆச்சார்யா, தனது மகனுடன் எரிந்த நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளியே நின்றிருந்தார். நாங்கள் சில பெண்களிடம் பேச முயன்றபோது, அவர்கள் இந்தியைக் கேட்டவுடன் கோபமடைந்துவிட்டனர். அப்போது தீபக் ஆங்கிலத்தில்,'தயவுசெய்து நிறுத்துங்கள். இந்திய ஊடகங்களும் மோதி பிரசாரத்தின் ஓர் பகுதி' என்று கூறினார். அவர் அதை மிக உரத்த குரலில் சொன்னதால், அருகிலிருந்தவர்கள் கூட எங்களை நோக்கிப் பார்க்கத் தொடங்கினர். தீபக்கின் கோபத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், அவருடன் நீண்ட உரையாடலும் நடந்தது. "இந்திய ஊடகங்கள் ஜனநாயகத்தையே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதோடு எங்களது ஜனநாயகத்தையும் சிதைக்கின்றன. யார் பிரதமராக வேண்டும் என்பதை நேபாள மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால் இந்திய ஊடகங்கள் சுஷிலா கார்கி பிரதமராவார் என்று சொல்கின்றன. மோதியின் ஆட்சி நேபாளத்திலும் இருப்பது போல இந்திய ஊடகங்கள் நடந்து கொள்கின்றன. இந்திய அரசாங்கமோ, அங்குள்ள ஊடகங்களோ நேபாளத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாகப் பார்க்கவில்லை. இங்கே உள்ள இந்திய ஊடக செய்தியாளர்களின் பின்னணியைப் பாருங்கள், எல்லோரும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவுடன் தொடர்புடையவர்கள்தான்" என்று தீபக் கூறினார். இது, தீபக் ஆச்சார்யாவின் கோபம் மட்டும் அல்ல, இந்திய ஊடகங்களுக்கு எதிரான அதிருப்தி நேபாளத்தில் பொதுவாகக் காணப்படும் ஒன்று. இங்குள்ள மக்கள் வெளிநாட்டு சதித் திட்டங்கள் பற்றியும் பேசுகிறார்கள். அதில் அமெரிக்காவின் பெயரும் அடிபடுகிறது. காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டிடமும் எரிந்து நாசமானது. தீர்வை விட அதிகமாகக் காணப்படும் குழப்பம் நாங்கள் நாடாளுமன்றத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் வந்து அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும் பிஸ்கட்டுகளையும் வழங்கத் தொடங்கினர். ஒருவர் தன்னை கிஷன் ரௌனியர் என்றும், மற்றொருவர் சோமன் தமாங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். 'ஏன் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் கொடுக்கிறீர்கள்'? என்று கேட்டபோது, "அவர்கள் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள். எங்களிடம் அதிக பணம் இல்லை, ஆனாலும் நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்தோம். நாங்கள் ஒரு சலூன் நடத்துகிறோம்" என்றார் தமங். கிஷன் ரௌனியர் ஒரு மாதேசி இந்து மற்றும் தமாங் ஒரு பஹாடி பௌத்தர். இருவரும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள். அதிகமான சேதம் ஏற்பட்டதற்காக கிஷன் இப்போது வருந்துகிறார். "ஒவ்வொரு அரசு கட்டடமும் தீக்கிரையாக்கப்பட்டது. இது பெரிதாகிவிட்டது. இப்போது நாங்கள் வருந்துகிறோம். அடுத்து வரும் அரசு, ஊழல் இல்லாததாக இருக்குமா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை," என்று கிஷன் கூறினார். ஜென் Z போராட்டத்தில் பங்கேற்ற பலரும் இப்போது கட்டடங்களை எரிப்பது தவறு என்று நினைக்கிறார்கள். திங்களன்று 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலை, செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவங்களுக்குப் பிறகு சற்று தளர்ந்தது போல தெரிகிறது. இருப்பினும், நேபாளத்தின் அனைத்துத் தலைவர்களும் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டடத்தின் முன் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்த அந்தக் கட்டடத்தின் ஜன்னல்களிலிருந்து இப்போது புகை மட்டும் வெளியேறுகிறது. புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நேபாள மாவட்ட அலுவலகம். அங்கிருந்து இன்னும் புகை எழுகிறது. நேபாள அரசியலின் திருப்புமுனை நிராஜன் குன்வர், விஷ்ணு சர்மா மற்றும் சுபாஷ் சர்மா ஆகிய மூன்று ஜென் Z போராட்டக்காரர்கள் சோகமான நிலையில் அமர்ந்திருந்தனர். மூவரும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள். போராட்டத்தில் நிராஜன் குன்வர் காயமடைந்திருந்தார். "அரசு கட்டடங்களுக்கு தீ வைத்தது நாங்கள் அல்ல, வேறு சிலர்தான். நிறைய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. உண்மையைச் சொல்லப் போனால்,இப்போது நாங்கள் வருந்துகிறோம். இந்தக் கட்டடங்களை அமைக்க நேபாளத்துக்குபல ஆண்டுகள் எடுத்தது. அதனால் நாங்கள் மிகவும் சோகமாக உள்ளோம்" என்று நிராஜன் கூறுகிறார். அந்த 'மற்றவர்கள்' யார்? என்று கேட்டபோது, நிராஜனும் விஷ்ணுவும், ரவி லாமிச்சானேயின் ஆதரவாளர்கள் மற்றும் ஆர்பிபி (RPP) ஆதரவாளர்கள் என்று சொன்னார்கள். ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) முடியாட்சி ஆதரவு கட்சியாக அறியப்படுகிறது. அது நேபாளத்தை ஒரு இந்துத் தேசமாக்க கூறுகிறது. பின்னர் நிராஜன் மற்றும் விஷ்ணுவிடம் 'ஜனநாயக நேபாளமா வேண்டுமா, முடியாட்சி வேண்டுமா? மதச்சார்பற்ற நேபாளமா வேண்டுமா, இந்துத் தேசம் வேண்டுமா?' என்று கேட்கப்பட்டது. இருவரும் வெளிப்படையாகவே, 'முடியாட்சி முறை, இந்துத் தேசம்' என்றனர். ஆனால் அங்கு இருந்த சுபாஷ் சர்மா, தான் ஜனநாயக நேபாளத்தை ஆதரிக்கிறேன் என்று தெளிவாகச் சொன்னார். காத்மாண்டுவில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு சர்மா. இவர், 'ஜென் z ' போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது–கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. அதனால், யார் என்ன நினைத்தார்களோ அதைச் செய்தார்கள். இளைஞர்களுடன் பேசினால், அவர்கள் குழப்பமடைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள். நேபாளத்தில் அடுத்த அரசு எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கியின் பெயர் அடிபடுகிறது, ஆனால் இளைஞர்களிடையே அதற்கு ஒருமித்த ஆதரவு இல்லை. வியாழக்கிழமை, 'ஜென் Z' போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் சுசிலா கார்க்கியின் பெயரை எதிர்த்து ராணுவத் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். ஜென் Z போராட்டக்காரர்கள் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா முன்வர வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், முதலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நாடாளுமன்றம் ஏன், எப்படிக் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கான பதில் அரசியலமைப்பில் இல்லை. அடுத்து என்ன? 239 ஆண்டுகளாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்த நேபாள மக்கள், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், அதை இனி எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான பதில் கிடைக்கவில்லை. நிலத்தால் சூழப்பட்ட நாடான நேபாளம், இன்று தனது ஜனநாயகமும் பல பக்கங்களில் இருந்து நெருக்கடிகளால் முற்றுகையிடப்பட்டதைப் போலவே காட்சியளிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9ndqqyengo
  17. Published By: Priyatharshan 12 Sep, 2025 | 09:52 AM ( வீ. பிரியதர்சன் ) பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11 ) நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், TikTok மூலம் கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்தல், கல்வியை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான பின்புலத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, சமமான அணுகல், எதிர்காலத்திற்கு ஏற்றதும் குழந்தைகளுக்குத் தாங்குபிடிக்கக்கூடியதுமான ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தனியார் துறை பங்காளிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்ட ஒரு செயலணியை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வலியுறுத்தினார். தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து STEM துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவை பெறுவதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் TikTok போன்ற உலகளாவிய சமூகத் தளங்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர், ஒரு புதிய, சமநிலையான மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு கலை மற்றும் மனிதநேயத் துறைகள் உட்பட STEAM துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து பாதுகாப்பது நமது பணியல்ல, மாறாக, அதனை புத்திசாலித்தனமாகவும், விமர்சன ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி வளர்ச்சிக்கு உதவும் ஒரு கருவியாக மாற்ற அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார். இலங்கையின் கல்வி முறையை அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான, மற்றும் உறுதியானதாக மாற்றுவதற்காக, அரசாங்கம் ஒரு பல்துறை சார்ந்த பணிக்குழுவை அமைத்துள்ளதை வலியுறுத்தினார். இந்த பணிக்குழுவில் அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் பொது உறவுகளின் தலைவர் Ferdous Mottakin, இலங்கையில் STEM Feed ஐ அறிமுகப்படுத்துவது கல்வி உள்ளடக்கங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் Ferdous Mottakin, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224872
  18. ENS ரங்கீலா படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 11 செப்டெம்பர் 2025 தமிழ் சினிமா மாத்திரமன்றி தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வரவேற்பை பெற்றவர் ஸ்வர்ணலதா. கேரளாவின் பாலக்காடு பகுதியில் 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி ஸ்வர்ணலதா பிறந்தார். ஸ்வர்ணலதாவின் தந்தை பிரபல இசை கலைஞர் என்ற ரீதியில், ஸ்வர்ணலதாவிற்கும் இசை மீது அபூர்வ ஆர்வம் சிறு வயதிலிருந்தே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதனின் ஊடாக திரை இசைத்துறைக்குள் ஸ்வர்ணலதாகால் தடம் பதித்தார். பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினத்தை (செப்டம்பர் 12) ஒட்டி, தனக்கு பிடித்த 10 ஸ்வர்ணலதா பாடல்களை இலங்கையை சேர்ந்த மூத்த மற்றும் புகழ்வாய்ந்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் பிபிசி தமிழுக்கு பட்டியலிட்டார். இதில் அவர் எழுதிய பாடலும் இடம்பெற்றுள்ளது. 1. போறாளே பொன்னுத் தாயி Rajshri Tamil ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல். 1994-ஆம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இந்த பாடல் வெளியாகியிருந்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார். இந்த பாடலை பாடியமைக்காக ஸ்வர்ணலதாவிற்கு 1994-ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழக அரசு விருதும், இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. இந்த பாடல் அன்று முதல் இன்று வரை பலரது பாடல்கள் விருப்ப பட்டியலில் உள்ளமை விசேட அம்சமாகும். 2. மாலையில் யாரோ Ayngaran பானுப்பிரியாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதாவின் குரல் பொருந்திப் போயிருந்தது. 1990-ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ''மாலையில் யாரோ'' பாடலும் பலரது விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்துள்ளது. வாலியின் வரிகளில், இளையராஜாவின் இசையில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார். திரையில் பானுப்பிரியாவின் காட்சிகளில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு, காட்சிகளை விடவும், ஸ்வர்ணலதாவின் மெல்லிய குரலே உயிரை வழங்கியிருந்தது. 3. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் FB/KSChithra 2010-ஆம் ஆண்டு செப். 12-ஆம் தேதி ஸ்வர்ணலதா காலமானார்(வலம்). ஊரெல்லாம் உன் பாட்டு திரைப்படத்தில் வெளியான பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. கே.ஜே.யேசுதாஸின் குரலில் தனியாக இந்த பாடல் வெளியாகியிருந்ததுடன், ஸ்வர்ணலதாவின் குரலில் வேறொரு பாடல் தனியாக உருவாக்கப்பட்டிருந்தது. வாலியின் வரிகளில் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு, இளையராஜா இசை அமைத்திருந்தார். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல், அந்த காலப் பகுதியில் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்திருந்தது. 4. என்னுள்ளே என்னுள்ளே Sun Music என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த், பிரியா ராமன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் வள்ளி. 1993-ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கான வரிகள் வாலி எழுதியிருந்ததுடன், இளையராஜா இசையமைத்திருந்தார். ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலித்த இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை வரவேற்பு காணப்படுகின்றது. 5. ஹய் ராமா 1995ம் ஆண்டு வெளிவந்த படமே ரங்கீலா. இந்த படத்திற்கான இசையை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார். ரங்கீலா திரைப்படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது. ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். ஸ்வர்ணலதாவின் பாடல்கள் வரிசையில் இந்த பாடலுக்கும் இன்று வரை முக்கிய இடம் இருக்கின்றது என்பதே உண்மை. 6. பூங்காற்றிலே Track Musics India 'உயிரே' படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் உருவான பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல். உயிரே திரைப்படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் வெளியான பாடல்கள் வரிசையில் பூங்காற்றிலே பாடல் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. உன்னிமேனன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோரின் குரல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த பாடலுக்கான வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். பாடலுக்கான இசை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார். மணிரத்னத்தின் இயக்கத்தின் 1998-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இன்றும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. 7. காதல் எனும் தேர்வெழுதி API Tamil Songs காதலன் தினம் படத்தின் பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்தார். காதலர் தினம் திரைப்படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அறிமுக கதாநாயகன் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோரின் நடிப்பில், கதிரின் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பிடித்திருந்த நிலையில், அனைத்து பாடல்களுக்கும் சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது. அனைத்து பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்ததுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் வெளியான ''காதல் எனும் தேர்வெழுதி'' பாடல் இன்றும் இளைஞர் யுவதிகளின் உதடுகளில் முனுமுனுக்கும் பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு ஈடாக ஸ்வர்ணலதாவின் குரலும் அமைந்திருந்த அதேவேளை, இந்த பாடலின் காட்சிகளுக்கு அந்த குரல்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது என்பது மிகையாகாது. 8. திருமண மலர்கள் Star Hits ஜோதிகாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார். அஜித் மற்றும் ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே பூவெல்லாம் உன் வாசம். குடும்ப நண்பர்கள் எப்படி காதல்களாக மாறி இணைகின்றார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் 6 பாடல்கள் இடம்பிடித்திருந்ததுடன், அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிபதிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாடலாக திருமண மலர்கள் தருவாயா பாடல் அமைந்துள்ளது. ஜோதிகாவின் காட்சிகளுக்கு, ஸ்வர்ணலதாவின் குரல் அவ்வாறே இணைந்ததாக காணப்படுவதுடன், அந்த காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார். 9. மயிலிறகே மயிலிறகே 2002- ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே தென்காசி பட்டணம். இந்த திரைப்படத்தில் மயிலிறகே மயிலிறகே பாடலை, மனோ மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருப்பார்கள். இந்த பாடலுக்கு பீட்டர்ஸ் இசையமைத்திருந்ததுடன்,பாடலுக்கான வரவேற்பு இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றது. 10. சிஞ்ஞோரே சிஞ்ஞோரே API Tamil Songs 'சிஞ்ஞோரே சிஞ்ஞோரே' பாடலை, மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்தே எழுதியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், இலங்கை போர் களத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு திரைப்படமாக காணப்படுகின்றது. மணிரத்னத்தின் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு, 2002-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றிருந்த போதிலும், பி.எச்.அப்துல் ஹமீத்திற்கு இந்த பாடல் அவரது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பாடலாக விளங்குகின்றது. காரணம் அவரே இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். தமிழ் வரிகளுடன், சிங்கள வரிகள் அடங்களாக எழுதப்பட்ட இந்த பாடலை, ஸ்வர்ணலதாவின் குரலிலும் கேட்கும் போது, அனைவருக்குமே ஆச்சரியம் தருகின்றது. பி.எச்.அப்துல் ஹமீத் எழுதிய சிஞ்ஞோரே சிஞ்ஞோரே பாடலுக்கு ஸ்வர்ணலதா குரல் கொடுத்திருந்தார் ஸ்வர்ணலதா உலகை விட்டு விடை பெற்று 15 வருடங்கள் இந்திய சினிமாத்துறையில் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற ஸ்வர்ணலதா, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி தனது 37வது வயதில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். 1987-ஆம் ஆண்டு இசை ரசிகர்களுக்கு தனது குரலில் விருந்து வழங்கிய ஸ்வர்ணலதாவின் குரல் 2010-ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும், அந்த குரலின் பதிவுகள் என்றென்றும் ரசிகர்களின் காதுகளில் ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07vkydy3jyo
  19. 12 செப்டெம்பர் 2025, 04:48 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் iPhone 17 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே உள்ள பிற ஐபோன்களை விட வடிவத்தில், தோற்றத்தில் பெரிய வித்தியாசங்கள் கொண்டிருக்கவில்லை. செல்போனின் பின்புறம் கேமராவுக்கான கூடுதல் லென்ஸ் அமைக்கும் வகையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர தோற்றத்தில் வேறு மாற்றங்கள் இல்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய அம்சங்களை இந்த செல்போன் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்கும் போது, எத்தனை பேர் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃப்ரேம் சரி செய்துக் கொள்ளப்படும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது தான் மிகவும் ஒல்லியான ஐஃபோன் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8jvn60ym4o
  20. உப்பிடித்தான் 2015 ல ஹெலில போய் இறங்கினவர், 2025 ல கார்ல போயிருக்கிறார்.
  21. நேபாளத்தில் கொந்தளிப்பு இந்தியாவின் நெருக்கடியை அதிகரிப்பது ஏன்? Getty Images இந்தியாவும் நேபாளமும் வரலாற்று ரீதியாகப் பகிரப்பட்ட வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன . கட்டுரை தகவல் அன்பரசன் எத்திராஜன் உலக விவகார செய்தியாளர் 11 செப்டெம்பர் 2025, 13:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சமீபத்திய ஆண்டுகளில் எழுச்சியால் தனது அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது நெருங்கிய அண்டை நாடாக நேபாளம் மாறியுள்ளது. சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், காவல்துறையினருடனான மோதல்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததுடன், பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயற்சிக்கிறது. நேபாளத்தில் நடந்த சம்பவங்கள், கடந்த ஆண்டு வங்கதேசத்தையும், 2022 இல் இலங்கையையும் ஆட்டிப்படைத்த கொந்தளிப்பை பலருக்கும் நினைவூட்டின. தெற்காசியாவில் வங்கதேசமும் இலங்கையும் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் தொடர்புகள், பொருளாதார மற்றும் உத்தி சார்ந்த உறவுகளின் காரணமாக நேபாளத்துடனான இந்தியாவின் உறவு தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் 1,750 கிலோமீட்டர் (466 மைல்) க்கும் அதிகமான எல்லையை, நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. எல்லையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளை இந்தியா மிக நெருக்கமாகக் கவனித்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, வேகமாக எதிர்வினையாற்றுகிறார். "நேபாளத்தில் நடக்கும் வன்முறை மனதைப் பிளக்கிறது. பல இளைஞர்கள் உயிரிழந்தது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது," என்று மோதி செவ்வாயன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். Getty Images நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். "நேபாளத்தின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிக முக்கியமானவை" என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோதி, "நேபாளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவரும் அமைதியை ஆதரிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். செவ்வாயன்று, சூழலை மதிப்பீடு செய்வதற்காக தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடைபெற்ற அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கும் மோதி தலைமையேற்றார். 2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அப்போதைய அதிபர் கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைப் போலவே, நேபாளத்தில் ஏற்பட்ட இச்சம்பவமும் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, டெல்லிக்குப் பயணம் செய்ய நேபாள பிரதமர் ஒலி திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ராஜினாமா செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேபாளம் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், ஏற்படும் எந்தவொரு பதற்றமும் இந்தியாவை கவலையில் ஆழ்த்துகிறது. "சீனாவின் பெரிய ராணுவ தளமான Western Theatre Command நேபாளத்தின் மறுபக்கத்தில்தான் உள்ளது. இந்தோ - கங்கை சமவெளிகளுக்கான (வட இந்தியாவின் சமவெளி) நேரடி வழி நேபாளம்தான்," என்று நேபாளம் தொடர்பான நிபுணரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா பிபிசி-க்கு தெரிவித்தார். Getty Images நேபாள கூர்க்காக்கள் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்தியாவில் நேபாளத்தில் இருந்து புலம் பெயர்ந்தோர் அதிகளவில் உள்ளனர். அவர்களையும் இந்த அமைதியின்மை பாதிக்கிறது. இந்தியாவில் சுமார் 3.5 மில்லியன் நேபாளிகள் வேலை செய்கிறார்கள் அல்லது வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நேபாளம் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. எல்லையைத் தாண்டிய சமூகங்கள் நெருங்கிய குடும்ப உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளுக்குமிடையே மக்கள் விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் சுதந்திரமாகப் பயணம் செய்கிறார்கள். 1950 ஒப்பந்தத்தின் கீழ் நேபாளிகள் இந்தியாவில் எந்தத் தடையும் இன்றி வேலை செய்யலாம். இந்த ஏற்பாடு பூட்டானுடன் சேர்த்து இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் மட்டுமே உள்ளது. மேலும், நேபாளத்தைச் சேர்ந்த 32,000 புகழ்பெற்ற கூர்க்கா வீரர்கள், பல ஆண்டுகளாக அமலில் உள்ள சிறப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். "எல்லை திறந்திருப்பதால், சமூகங்கள் ஒருங்கிணைந்த வாழ்க்கையை அனுபவிக்கின்றன. இரு தரப்பிலும் உள்ள குடும்பங்கள் தினமும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன" என்கிறார் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சங்கீதா தப்லியால். இமயமலைக்கு அப்பால் அமைந்துள்ள முக்திநாத் கோயில் உட்பட பல முக்கிய இந்து புனிதத் தலங்களும் நேபாளத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான இந்து யாத்திரிகர்கள் இந்தக் கோவிலுக்குச் செல்கின்றனர். இதற்கிடையில், நேபாளம் இந்திய ஏற்றுமதிகளை குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்தியா– நேபாளத்தின் ஆண்டு இருதரப்பு வர்த்தகம் சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. Getty Images நேபாளம் முக்திநாத் கோயில் உட்பட பல முக்கியமான இந்து புனிதத் தலங்களைக் கொண்டுள்ளது. புதன்கிழமை காத்மாண்டுவில் ஓரளவு அமைதி திரும்பியிருந்தாலும், நாட்டை ஆண்ட மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் மீதும் போராட்டக்காரர்களிடையே கோபம் நிலவி வருவதால், இந்தியா மிக எச்சரிக்கையுடன் ஒரு ராஜ்ஜிய சமநிலையைப் பேண வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவுக்கு, ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (CPN–UML), ஷேர் பகதூர் தியூபாவின் நேபாள காங்கிரஸ், பிரசந்தா (புஷ்ப கமல் தஹால்) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஆகிய மூன்று கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இமயமலையால் பெரிதும் சூழப்பட்ட நாடான நேபாளத்தின் உத்தி சார்ந்த முக்கியத்துவத்தை முன்னிட்டு, இந்தியாவும் சீனாவும் அங்குள்ள செல்வாக்குக்காக போட்டியிடுகின்றன. இதனால், வலிமையான இந்த இரண்டு ஆசிய நாடுகளும் நேபாளத்தின் உள்நாட்டுக் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒலிக்குப் பதிலாக எந்த விதமான நிர்வாகம் உருவாகப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது போராட்டக்காரர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. புதிய அரசாங்கத்தின் வடிவம் நிச்சயமற்றதாக இருப்பதால், "இந்தியா எச்சரிக்கையாக இருக்கும்" என்றும் "நேபாளத்தில் வங்கதேசம் போன்ற இன்னொரு சூழ்நிலை அவர்கள் விரும்பவில்லை"என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார். வங்கதேசத்தின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருந்தது. ஆனால், ஹசீனாவுக்கு இந்தியா புகலிடம் வழங்கிய முடிவால், தற்போதைய வங்கதேச இடைக்கால நிர்வாகத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் முன்பே சில வேறுபாடுகள் இருந்துள்ளன. அவற்றையும் இப்போது மிகுந்த கவனத்துடன் நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், சீன எல்லைக்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் நேபாளம் உரிமை கோரிய பகுதிகளை தனது வரைபடத்தில் இந்தியா இணைத்தது. இதனால் நேபாளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பின்னர், அந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை கொண்ட தனது சொந்த வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே ராஜ்ஜிய மோதல்கள் மேலும் தீவிரமடைந்தன. சமீபத்தில், நேபாளம் உரிமை கோரும் எல்லைப் பகுதிகளில் ஒன்றான லிபுலேக் கணவாயில் இந்தியா – சீனா வர்த்தகத்தை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன. கடந்த மாதம் சீனாவுக்கு சென்றிருந்தபோது, இந்தக் கணவாயை வர்த்தகப் பாதையாக பயன்படுத்துவதை எதிர்த்து, சீனத் தலைமையிடம் ஓலி இந்த பிரச்னையை எழுப்பியிருந்தார். எந்தவொரு முரண்பாடுகளையும் சரி செய்ய இந்தியா புதிய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். மேலும், தங்கள் அரசியல் அமைப்பின் மீது கோபமாக இருக்கும் நேபாள இளைஞர்களுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். "நேபாளத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நேபாள மாணவர்களுக்கு உதவித் திட்டங்களை அதிகரிப்பது, வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்," என்று பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார். இந்நிலையில், பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் (SAARC) பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருப்பது, அண்டை நாடுகளில் உருவாகும் அரசியல் மாற்றங்கள் மற்றும் உறுதியின்மையை கையாள்வதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்தியா ஏற்கனவே அண்டை நாடுகளுடன் சந்தித்து வரும் சிக்கல்களின் நடுவே வெடித்துள்ளது. பாகிஸ்தானுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன நிலையில், ஒருபுறம் வங்கதேசத்துடனான உறவுகள் பதற்றத்தில் உள்ளன, மறுபுறம் மியான்மர் உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது. "இந்தியா தனது பெரும் அதிகாரக் கனவுகளில் கவனம் செலுத்தி, அண்டை நாடுகளை புறக்கணித்துவிட்டது. ஆனால் அந்த இலக்கை அடைய விரும்பினால், முதலில் ஒரு பாதுகாப்பான, நிலையான அண்டை நாட்டைக் கொண்டிருக்க வேண்டும்" என்கிறார் அசோக் மேத்தா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lx0rjkpk9o
  22. மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது Published By: Vishnu 11 Sep, 2025 | 06:33 PM இலங்கையின் பாதாள உலக குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைகள் ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: "இந்த குற்றவாளிகள் தற்போது அந்தந்த நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை நிறைவடைந்தவுடன், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்," என்றார். இதேவேளை, ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதாள உலக குற்றங்களை ஒழிக்க பெரும் பங்களிப்பு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை தொடர்பில் நாட்டில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. https://www.virakesari.lk/article/224853
  23. இலங்கை: திருட வந்ததாக கருதி தாக்கப்பட்ட இளைஞர் தற்கொலை - என்ன நடந்தது? LOGESH ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 செப்டெம்பர் 2025 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இளைஞர் ஒருவரின் தற்கொலை, நாட்டில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. திருட வந்ததாக கருதி பிரதேச மக்களினால் தாக்குதல் நடத்தப்பட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டி - புசல்லாவை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸ் ஊடகப் பிரிவு பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றது. எனினும், இந்த இளைஞரின் உயிரிழப்புக்கு தாக்குதல் சம்பவமா அல்லது சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டமை காரணமா என்பது இதுவரை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது. நடந்தது என்ன? மலையகத்தின் புசல்லாவை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் (முரளி), கொழும்புவில் வேலை செய்து வந்துள்ளார். ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு கடந்த 6ம் தேதி இரவு கொழும்புவிலிருந்து வெலிமடை நோக்கி பயணிக்கும் பேருந்தில் வருகைத் தந்துள்ளதாக அவரது நண்பரான ஸ்ரீகுமார், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''இவ்வாறு வருகைத் தந்த ரவிச்சந்திரன் புவனேஸ்வரன், பேருந்தில் அசந்து தூங்கியுள்ளார்.'' Getty Images சித்தரிப்புப் படம் ''தனது சொந்த ஊரான புசல்லாவை தாண்டி, ரம்பொடை எனும் இடத்தில் வைத்தே ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் எழுந்துள்ளதுடன், தான் இறங்கும் இடத்தை தாண்டி பயணித்துள்ளமையை உணர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ரம்பொடை பகுதியில் இறங்கிய அவர், தனது உறவினர் வீடொன்றை நோக்கி சென்றுள்ளார்.'' என்கிறார் ஸ்ரீகுமார் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது உறவினர் வீட்டை நோக்கி சென்ற ரவிச்சந்திரன் புவனேஸ்வரனுக்கு, உறவினர் வீட்டை தேடிக்கொள்ள முடியாத நிலையில், அவர் வேறொரு வீட்டை தட்டியுள்ளார் என்கிறார் ஸ்ரீகுமார். ''அந்த வீட்டிலுள்ளவர்களிடம் தனது உறவினர்கள் குறித்து வினவிய நிலையில், அவர்கள் உறவினர்கள் என கூறப்படும் நபர்களை அழைத்து வினவியுள்ளனர். எனினும், உறவினர்கள் என கூறப்படுவோர், ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை தெரியாது என கூறிய நிலையில், பிரதேச மக்கள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை திருடன் என கூறி அவரை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.'' என்கிறார் ஸ்ரீகுமார். இவ்வாறு பிரதேச மக்கள் தாக்கிய நிலையில், அங்குள்ள இளைஞர்கள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை தாக்கும் காட்சிகளை தமது தொலைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்து, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், கொத்மலை போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், போலீஸார் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் புவனேஸ்வரனிடம் விசாரணைகளை நடத்திய நிலையில், அவரின் புசல்லாவையிலுள்ள உறவினர்களுக்கு விடயம் தொடர்பில் அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, போலீஸ் நிலையத்திற்கு சென்று அவரை வீட்டுக்கு அழைத்ததாகவும் அப்போது இந்த தகவலை அவர் பகிர்ந்ததாகவும் ஸ்ரீகுமார் கூறுகிறார். அதனைத் தொடர்ந்தே, அடுத்த நாள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். Getty Images சித்தரிப்புப் படம் ''போலீஸிலிருந்து கூட்டிக் கொண்டு வரும் போதே அவர் எங்களிடம் , 'மாமா வீடு இருக்குனு சொல்லி தான் இரவில் போயிட்டேன். இவ்வளவு காலத்துக்கு நான் இப்படி அடி வாங்கியது இல்லை. அவமானமாக்கிட்டேன்.' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.'' என ஸ்ரீகுமார், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன் புவனேஸ்வரன், இரவு உணவு கூட உட்கொள்ளாத நிலையிலேயே இவ்வாறு தவறான முடிவை எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறுகின்றார். தாக்குதல் நடத்தியமை மற்றும் தாக்குதல் நடத்திய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார். போலீஸார் கூறுவது என்ன? ரவிச்சந்திரன் புவனேஸ்வரனின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில், பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியது. தாக்குதல் நடத்தி, வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டமை, இந்த மரணத்திற்கான காரணம் என்பது இதுவரை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என கூறிய போலீஸார், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் புசல்லாவை போலீஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். முக்கிய குறிப்பு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை உருவாகுமேயானால், உடனடியாக தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ளன. 0707 308 308, 1333, 1926 போன்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக, தமது மனநிலையை சரி செய்துகொள்ள முடியும். இந்த இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக தற்கொலைகளை தடுக்க முயற்சி செய்ய முடியும். இந்தியாவில் உதவியை நாடுபவர்கள் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.virakesari.lk/article/224853 Sri Lanka SumithrayoSri Lanka SumithrayoSri Lanka Sumithrayo is a government approved charity founded in 1974, by late Mrs. Joan De Mel and was incorporated by Act of Parliament No.10 of 1986.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.