Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 10:35 AM இந்தியாவின் சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரமைப்பு (NIA) சிறப்பு நீதிமன்ற அழைப்பாணையொன்றை இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடமைபுரியும் அதிகாரியொருவருக்கு அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றைத் தாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டே குறித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தற்போது இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த அதிகாரி, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரி அமீர் சுபைர் சித்திக் (Amir Zubair Siddiqui) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் என்றும் தற்போது கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் விசா ஆலோசகராகப் பணிபுரிகிறார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் இந்தியாவிற்குள் சதி வேலைகளைச் செய்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த முகமது சாகிர் ஹுசைன் (Mohammed Sakir Hussain) என்ற நபரை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் உயர் தரமான கள்ள நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை Q பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு ( CID ) இந்த வழக்கை முதலில் பதிவு செய்தது. பின்னர், இது தேசிய புலனாய்வு முகவரமைப்பின் ஹைதராபாத் கிளைக்கு மாற்றப்பட்டது. அமீர் சுபைர் சித்திக் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ், குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போரைத் தொடுப்பது, போலியான அல்லது கள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முகமது சாகிர் ஹுசைன் ஏற்கனவே தண்டனை பெற்றுள்ளார். இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில், சித்திக் மீது தேசிய புலனாய்வு முகவரமைப்பு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது, அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செய்தி மூலம் : The New Indian Express https://www.virakesari.lk/article/224969
  2. 13 Sep, 2025 | 01:55 PM (எம்.மனோசித்ரா) கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியை அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்காக வெளியிட்டுள்ளது. அதில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைத் திகதிகளும் குறிப்பிடப்பிட்டுள்ளன. அதற்கமைய புதிய ஆண்டின் முதல் தவணை 2026 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்கள பாடசாலைகள் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணையின் கல்வி செயற்பாடுகள் முதற்கட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மே மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் மே மாதம் 4ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மே 27 முதல் 31 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜூன் முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை விடு;முறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்துக்கமைய வருடத்துக்கு 210 நாட்கள் கல்வி செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. எனவே 2026ஆம் ஆண்டு 197 நாட்கள் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய பரீட்சைகள் மேலும் 2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை ஆகஸ்ட்டிலும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை டிசம்பரிலும் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு இவ்வாண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரியில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224976
  3. பட மூலாதாரம், NASA/JPL படக்குறிப்பு, பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன. கட்டுரை தகவல் ரெபேக்கா மோரல் அறிவியல் ஆசிரியர் 13 செப்டெம்பர் 2025, 01:53 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன. நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன. இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது. இந்த கண்டுபிடிப்புகள், நாசாவின் 'சாத்தியமான பயோசிக்னேச்சர்கள்' அதாவது (Potential Biosignatures) என்று அழைக்கப்படும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை உயிரியல் தோற்றம் கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவை என்பதே இதன் பொருள். "இதுவரை இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பெற்றதில்லை, அதனால் இதுதான் முக்கியமான விஷயம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி பேராசிரியர் சஞ்ஜீவ் குப்தா கூறினார். இவர் இந்த ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவர், இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. "நாங்கள் பாறைகளில் கண்டறிந்த அம்சங்களை ஒருவேளை பூமியில் பார்த்தால், உயிரியல் - நுண்ணுயிரி செயல்முறைகளால் விளக்க முடியும். எனவே, நாங்கள் உயிரைக் கண்டறிந்தோம் என்று கூறவில்லை, ஆனால் இது உண்மையிலேயே எங்களுக்கு பின்தொடர வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது" என்று அவர் கூறினார். "இது ஒரு எஞ்சிய புதைபடிவத்தைப் பார்ப்பது போன்றது. ஒருவேளை இது ஒரு எஞ்சிய உணவாக இருக்கலாம், ஒருவேளை நாம் பார்த்தது வெளியேற்றப்பட்ட கழிவாக கூட இருக்கலாம்" என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாறைகளுக்கு 'சிறுத்தை தடங்கள்' மற்றும் 'பாப்பி விதைகள்' என புனைப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதை முழுமையாக உறுதிப்படுத்த ஒரே வழி, பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வது மட்டுமே. நாசாவும் ஈசாவும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) செவ்வாயிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து வரும் திட்டத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் 2026 பட்ஜெட்டில், அமெரிக்க விண்வெளி முகமையின் அறிவியல் பட்ஜெட் மிகவும் குறைவாகவே முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. இன்று, செவ்வாய் ஒரு குளிர்ந்த மற்றும் வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆனால் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது வளிமண்டலத்தையும் நீரையும் கொண்டிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இது கடந்த காலத்தில் வாழ்ந்த உயிரைத் தேடுவதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக உள்ளது. 2021இல் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், உயிரியல் அறிகுறிகளைத் தேட அனுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது ஜெஸிரோ பள்ளம் என்ற பகுதியை ஆராய்ந்து வருகிறது, இது ஒரு காலத்தில் ஒரு நதி பாயும் ஏரியாகவும் இருந்தது. கடந்த ஆண்டு பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷன் என்ற பகுதியில் ஆற்றால் உருவான ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் சிறுத்தை தடம் என்ற பாறைகளை ரோவர் கண்டறிந்தது. இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் களிமண்ணால் உருவான பாறைகளான 'மட்ஸ்டோன்' என்று அழைக்கப்படும் பாறை வகைகள். "இந்த பாறைகளில் சில சுவாரசியமான ரசாயன மாற்றம் நடந்திருப்பதை அறிந்தோம், இதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம்," என்று நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இவர் பெர்சிவரன்ஸ் திட்ட விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆவார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாறைகளில் உள்ள தாதுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ரோவர் அதன் உள்ளக ஆய்வகத்தில் உள்ள பல கருவிகளைப் பயன்படுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை ஆய்வு செய்தது. இந்த தரவு பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டது. "நாங்கள் கண்டறிந்தவை, ஒரு ஏரியின் அடிப்பகுதியில் படிந்த மண்ணில் நடந்த ரசாயன எதிர்வினைகளுக்கான ஆதாரம் என்று நினைக்கிறோம். இந்த ரசாயன எதிர்வினைகள் மண்ணுக்கும் கரிமப் பொருளுக்கும் இடையே நடந்ததாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு பொருட்களும் எதிர்வினையாற்றி புதிய தாதுக்களை உருவாக்கியுள்ளன," என்று ஹுரோவிட்ஸ் விளக்கினார். பூமியில் இதே போன்ற சூழ்நிலையில், தாதுப் பொருட்களை உருவாக்கும் ரசாயன எதிர்வினைகள் பொதுவாக நுண்ணுயிரிகளால்தான் நிகழ்கின்றன. "இந்த அம்சங்கள் இந்த பாறைகளில் எவ்வாறு உருவாயின என்பதை விளக்க இது ஒரு சாத்தியமான விளக்கமாக இருக்கும்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். "நாம் இதுவரை கண்டறிந்தவற்றில் இதுவே வலிமையான மற்றும் மிகவும் உறுதியான பயோசிக்னேச்சர் எனத் தோன்றுகிறது" விஞ்ஞானிகள் இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகள் இல்லாமல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்தனர். இயற்கையான புவியியல் செயல்முறைகளும் இந்த ரசாயன எதிர்வினைகளுக்கு பின்னால் இருக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் இவற்றிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படும், ஆனால் பாறைகள் சூடாக்கப்பட்டவை போல் தெரியவில்லை. "உயிரியல் அல்லாத சாத்தியங்களுக்கு சில சிரமங்களை நாங்கள் கண்டோம். ஆனால் அவற்றை முற்றிலும் நிராகரிக்க முடியாது," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். பட மூலாதாரம், NASA/JPL படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் பாறைகளின் அற்புதமான மாதிரிகளை சேகரித்துள்ளது. பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராயும் போது பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷனில் கண்டறியப்பட்ட பாறைகள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இவை குப்பிகளில் சேமிக்கப்பட்டு, பூமிக்கு திருப்பி அனுப்பக் கூடிய விண்கலத்திற்காக செவ்வாய் மேற்பரப்பில் வைக்கப்படும். நாசாவின் இத்தகைய முயற்சிக்கான திட்டங்கள், டிரம்பின் பட்ஜெட் குறைப்பு அச்சுறுத்தலால் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், மாதிரிகளை எடுத்து வரும் ஒரு திட்டத்தை 2028ஆம் ஆண்டில் தொடங்க சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாசா பட்ஜெட் குறைப்பு முடிவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த பாறைகளை தங்கள் கைகளில் பெற ஆவலாக உள்ளனர். "இந்த மாதிரிகளை நாம் பூமியில் வைத்து பார்க்க வேண்டும்," என்று பேராசிரியர் குப்தா கூறினார். "உண்மையான நம்பிக்கையை பெற, பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த பாறைகளை பூமியில் பார்த்து ஆய்வு செய்ய விரும்புவார்கள். இது பூமிக்கு எடுத்து வர வேண்டிய மாதிரிகளில் அதிக முன்னுரிமை கொண்ட மாதிரிகளில் ஒன்றாகும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xr4vzrkqpo
  4. ஆசிய கோப்பை 2025 எப்போது, எங்கே நடக்கும்? - முழு விவரம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2025 ஆசிய கோப்பை போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கியது. கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025 ஆசிய கோப்பை போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கி நடந்துவருகிறது. இந்தநிலையில், எந்த அணி எந்த பிரிவில் உள்ளது, இந்தியா–பாகிஸ்தான் ஆட்டம் எப்போது, முக்கிய அணிகளின் பலம், பலவீனம் உள்ளிட்ட ஆசிய கோப்பை குறித்த முக்கிய தகவல்கள் இங்கே. ஆசிய கோப்பை வரலாறு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2023இல் நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. ஆசிய கோப்பை முதல்முதலில் 1984 இல், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடையே நடத்தப்பட்டது. 2004 முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த நிலையில், 2020-ல் கொரோனா காரணமாக தடைப்பட்டது. கடைசியாக 2023இல் நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி,10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை இந்திய அணி, எட்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. அடுத்தபடியாக, இலங்கை அணி ஆறு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டா? டி20 கிரிக்கெட்டா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக, 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒருநாள் போட்டியாக நடைபெற்று வந்த ஆசிய கோப்பை, சமீப காலமாக ஒருநாள், டி20 என மாறிமாறி நடத்தப்பட்டு வருகிறது. அடுத்து நடைபெறும் உலகக் கோப்பை எந்த வடிவம் (format) என்பதைப் பொறுத்து ஆசிய கோப்பையின் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது. 2026இல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு இந்த ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் நடத்தப்படுகிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்த முறை எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன. துணை அணிகளுக்கான 2024 ACC ஆடவர் பிரீமியர் கோப்பையில், முதல் மூன்று இடங்களை பிடித்த யூஏஇ, ஓமன், ஹாங்காங் அணிகளும் போட்டியில் பங்கேற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை எப்போது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செப்டம்பர் 14 அன்று, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. எட்டு அணிகளும் இரு குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யூஏஇ, ஓமன் அணிகள் இடம்பிடித்துள்ளன. . குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தமது குரூப்பில் இடம்பெற்றுள்ள பிற அணிகளுடன் ஒருமுறை மோதும். குரூப் சுற்றில் முதலிரு இடங்களைப் பிடித்த நான்கு அணிகளும் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும். அந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள், இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக, இருதரப்பு தொடர்களில் விளையாட மாட்டோம் என இந்திய அணி அறிவித்துள்ளது. அதேசமயம், உலகக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகள், சாம்பியன்ஸ் டிராஃபி, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் விளையாடும் என தெளிவுபடுத்தியுள்ளது. செப்டம்பர் 14 அன்று (ஞாயிற்றுக்கிழமை) துபையில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும் பட்சத்தில் இரு அணிகளும் மீண்டும் ஒருமுறை மோதும் சூழல் ஏற்படும். ஆசிய கோப்பையில், இதுவரை ஒருமுறை கூட இரு அணிகளும் ஃபைனலில் நேருக்கு நேர் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் பலம் எப்படி உள்ளது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலகக் கோப்பைக்கு பிறகு முதல்முறையாக பும்ரா டி20 தேசிய அணிக்கு திரும்பியுள்ளார். டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி, சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, டி20 தரவரிசையில் முதன்மை பேட்டராக உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வேலைப்பளுவை கருத்தில்கொண்டு 3 டெஸ்ட்களில் மட்டும் விளையாடிய பும்ரா, உலகக் கோப்பைக்கு பிறகு முதல்முறையாக டி20 தேசிய அணிக்கு திரும்பியுள்ளார். பாகிஸ்தானை பொறுத்தவரை, நட்சத்திர வீரர்கள் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இல்லாத நிலையில், புத்தம் புதிய அணுகுமுறையுடன் புத்தம் புதிய அணியாக களமிறங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் இலங்கையை வீழ்த்திய வங்கதேச அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் அணி மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. எப்போது, எங்கே நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரேயொரு நாள் மட்டும் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. 17-வது ஆசிய கோப்பை போட்டி, செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் இந்த போட்டியின் (Tournament) ஆட்டங்கள் துபை, அபுதாபியில் நடக்கின்றன. உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு ஆட்டங்கள் தொடங்குகின்றன. அதாவது இந்திய நேரப்படி இரவு 8.30 மணி ஆகும். ஒரேயொரு நாள் மட்டும் இரு போட்டிகள் (Double-Header) நடைபெறுகின்றன. உள்ளூர் நேரப்படி முதல் ஆட்டம் மாலை 4 மணிக்கும் இரண்டாவது ஆட்டம் 6.30 மணிக்கும் (இந்திய நேரப்படி மாலை 5.30 மணி மற்றும் இரவு 8 மணி) தொடங்குகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் போது, இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இந்தமுறை ஆசிய கோப்பையை இந்தியா நடத்தினாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எல்லா ஆட்டங்களும் நடைபெறுகின்றன. பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாக பிரச்னைகள் தொடர்வதால், இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களில் அந்த நாடு விளையாட முடியாத சூழல் உள்ளது. பாகிஸ்தானில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் போது, இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோல, ஏற்பாடு வசதிகளை கருத்தில்கொண்டு, எல்லா ஆட்டங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகின்றன. கவனம் ஈர்க்கும் இந்திய வம்சாவளி வீரர்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, யூஏஇ அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் சிம்ரன்ஜீத் சிங். ஆசிய கோப்பையில் இந்தமுறை, இந்திய வம்சாவளி வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளில் தலா ஆறு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர ஹாங்காங் அணியிலும் 3 இந்திய வம்சாவளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யூஏஇ(ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் சிம்ரன்ஜீத் சிங் கவனம் ஈர்த்துள்ளார். பஞ்சாபில் பிறந்த இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். கொரோனா காலத்தில் துபையில் மாட்டிக்கொண்ட சிம்ரன்ஜீத் சிங், யூஏஇ அணியையே தனது தேசிய அணியாக மாற்றுக்கொண்டுவிட்டார். யூஏஇ அணியின் பேட்டர் ஆர்யான்ஷ் சர்மாவும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய வம்சாவளி வீரர்கள் வரிசையில் உள்ளார். உத்தரபிரதேசம் காஸியாபாத்தை சேர்ந்த இவர், சிறு வயதிலேயே, குடும்பத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்துவிட்டார். புனேவை பூர்விகமாக கொண்ட பராஷர் மீதும் கிரிக்கெட் உலகின் பார்வை திரும்பியுள்ளது. நான்கு வயதிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய அவர், தற்போது யூஏஇ அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார். பஞ்சாபின் லூதியானாவில் இருந்து ஓமனுக்கு குடிபெயர்ந்த ஜடிண்டர் சிங், ஓமன் அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 3000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அவர் மீது கிரிக்கெட் உலகின் பார்வை விழுந்துள்ளது. போபாலில் இருந்து கிளம்பிச் சென்று தற்போது ஓமன் அணியின் லெக் ஸ்பின்னராக உள்ள ஸ்ரீவஸ்தவாவும் அந்நாட்டு ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற வீரராக மாறியுள்ளார். போட்டி அட்டவணை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செப். 10, 14, 19ஆம் தேதிகளில் இந்தியாவுக்கான போட்டிகள் உள்ளன. இந்திய அணி விளையாடும் ஆட்டங்களின் அட்டவணை (குரூப் ஏ பிரிவு) செப்டம்பர் 10 : இந்தியா Vs யூஏஇ, துபை– இரவு 8.00 IST செப்டம்பர் 14: இந்தியா Vs பாகிஸ்தான், துபை– இரவு 8.00 IST செப்டம்பர் 19: இந்தியா Vs ஓமன் , அபுதாபி– இரவு 8.00 IST பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்களின் அட்டவணை (குரூப் ஏ பிரிவு) செப்டம்பர் 12: பாகிஸ்தான் Vs ஓமன், துபை – இரவு 8.00 IST செப்டம்பர் 14: பாகிஸ்தான் Vs இந்தியா, துபை– இரவு 8.00 IST செப்டம்பர் 17: பாகிஸ்தான் Vs ஐக்கிய அரபு அமீரகம், துபை– இரவு 8.00 IST சூப்பர் ஃபோர் அட்டவணை செப் 20: B1 Vs B2 (துபை) - இரவு 8:00 IST செப் 21: A1 Vs A2 (துபை) - இரவு 8:00 IST செப் 23: A2 Vs B1 (அபுதாபி) - இரவு 8:00 IST செப் 24: A1 Vs B2 (துபை) - இரவு 8:00 IST செப் 25: A2 Vs B2 (துபை) - இரவு 8:00 IST செப் 26: A1 Vs B1 (துபை) - இரவு 8:00 IST இறுதிப்போட்டி எப்போது? செப் 28: ஃபைனல் (துபை) - இரவு 8:00 IST ஆசிய கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி கோப்பை வெல்லும் அணிக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் சுமார் 2.6 கோடி) இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 150,000 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் சுமார் 1.3 கோடி) கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. களமிறங்கும் வீரர்கள் யார் யார்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்குறிது. இந்திய அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது , ஃபஹீம் அஷ்ரப் , ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவுஃப் , ஹசன் அலி, ஹசன் நவாஸ் , ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா , முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது சவாஸ், முகமது நவாஸ், முகமது வஸீம் ஜுனியர், ஃபர்ஹான், சைம் அயூப் , சல்மான் மிர்சா, ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் சுஃப்யான் மொகிம் இலங்கை அணி: சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநாகே, கமில் மிஷாரா, தாசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, மஹீஸ் தீக்‌ஷனா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ, நுவான் துஷாரா, மதீஷா பதிரானா - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9z23kmmw3o
  5. Published By: Digital Desk 3 10 Sep, 2025 | 09:21 AM சமகால சமூகப் பிரச்சினைகளில் உயிர்மாய்ப்பு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. உயிர் மாய்ப்பு நிகழாத காலமோ சமூகமோ உலகில் எங்கும் இல்லை. உயிர் மாய்ப்பில் ஈடுபடுவதானது ஒரு தனிமனிதனது செயலாகக் காணப்பட்டாலும் அது ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இதன்படி ஒரு மனிதன் பிரச்சினையை எதிர்நோக்குகின்றபோது, அப்பிரச்சினைக்கு முகங்கொடுக்கத் தெரியாமல் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்கிறான். இதனால்தான் உயிர்மாய்ப்பு தடுப்பு முறையானது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உயிர்மாய்ப்பு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சுமித்ரயோ அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் இருவர் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வி வருமாறு............ 01.எமது நாட்டில் உயிர் மாய்ப்பு பாதிப்பு எந்த அளவில் உள்ளது? பொலிஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்திற்கமைய 2022 ஆம் ஆண்டு 3406 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு 09 தொடக்கம் 10 பேர் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தேசிய மனநல நிறுவனத்தின் ஆராய்ச்சியின் புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் உள்ள சனத்தொகையில் ஒரு இலட்சம் பேரில் 15 பேர் உயிர்மாய்ப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு, 10 பேர் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வி அடைகின்றாா்கள். இந்த சம்பவங்கள் அவர்களை சார்ந்தவர்களையும் பாதிக்கின்றது. 02.உயிர்மாய்ப்பு நிகழ்வதற்கு காரணம் என்ன? உயிர்மாய்ப்பு நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை சொல்ல முடியாது. ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டால் ஏன் இவ்வாறு செய்தார் என்பது தான் எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வி. ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள இறுதியாக என்ன காரணமாக இருந்ததோ அதுதான் காரணம் என்று எல்லோரும் நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் அவர் அந்த நிகழ்வு நடப்பதற்கு முதலே அவருடைய உடல், உள, சமூக, பொருளாதார, உறவுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் போன்ற காரணிகளால் அவர் போராடிக்கொண்டு இருந்திருக்கக்கூடும். இவ்வாறு போராடிக்கொண்டிருந்த சூழ்நிலையில் இறுதியாக நடந்த ஒரு நிகழ்வினால் தான் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். ஆகவே, நாங்கள் உயிர் மாய்ப்புக்கு, ஒரு காரணம் மாத்திரம் இருக்கலாம் என குறிப்பிடமுடியாது. எல்லோரும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். எல்லோரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பதும் இல்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் இல்லை. ஒரு சிலர் தான் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்வதற்கு 3 முக்கிய காரணிகள் ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. 01.பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சமாளிக்கக்கூடிய திறமை எல்லோருக்கும் இருப்பதில்லை. 02.உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கும் குணநலம். 03.அவர்களுக்கு தெரியாமல் மனநலம் பாதிக்கப்படுதல். பெரிதளவானதோ, சிறிதளவானதோ பாதிப்போடு போராடுவது முக்கிய காரணியாக உள்ளது. அதை விட வாழ்க்கையில் திடீரென நிகழும் விடயங்கள். நெருங்கிய ஒருவரை அல்லது தொழில், பணம், சொத்து போன்றவற்றை திடீரென இழக்கும்போது அதற்கு அவர்கள் சமாளிக்க முடியாமல் போகும் ஒரு முடிவாக இருக்கலாம். 03.இவ்வாறான இழப்புகள் இடம்பெறும்போது நாம் என்ன செய்யவேண்டும்? யாராவது ஒருவர் ஒரு இழப்பில் இருந்தால் “ஐயோ பாவமே” என குறிப்பிடுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், அவர்களுக்கு மேலதிகமாக அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கு என்ன செய்யலாம்? முக்கியமாக இழப்பு நேரிட்டால் மனதளவில் கஷ்டமான விடயமாகத்தான் இருக்கும். எனவே அதிலிருந்து விடுபட எங்களோடு வந்து கதைக்கலாம். இழப்பினால் ஏற்பட்ட வேதனையை தாங்க முடியாமல்தான் அந்த முடிவை எடுக்கின்றார்களே தவிர அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை. அதிலிருந்து தப்பிக்க ஒரு வழியாக செயற்படுகிறார்கள். ஒருவர் கஷ்டப்படும்போது ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என கேட்கவேண்டும். அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும். 04. உயிர் மாய்ப்பை தடுக்க முடியுமா? நிச்சயமாக முடியும். எங்கள் சுமித்ரயோ அமைப்பின் முக்கிய நோக்கமே சமூகத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைப்பது தான். ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலையில் இருக்கிறார் என்றால் அவருடன் அக்கரையாக பேசி புரிதலுடன் செவிமெடுத்தால் அவர்களின் மனதிலுள்ள பாரம் குறையும். அவர்களும் பிரச்சினைகளும் ஒரு இருட்டு அறைக்குள் இருப்பது போன்ற எண்ணத்தில் இருப்பார்கள். அவர்களுடன் வேறொருவர் பேசினால் மனதில் இருக்கின்ற அனைத்து சுமைகளையும் இறக்கியவுடன் அவங்களுக்கே தெளிவு வரும். வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வரும். எங்களை போன்ற அமைப்புகளிடம் அவர்களை தொடர்புபடுத்தி கொடுக்கலாம். அப்படி செய்தால் உயிர் மாய்ப்புகள் தவிர்க்கப்படலாம். 05. உயிர் மாய்ப்பு தடுப்பில் சுமித்ரயோ அமைப்பின் பங்களிப்பு என்ன? எங்களிடம் வருபவர்கள் பாரிய பிரச்சினைகளை தலையில் சுமந்துகொண்டுதான் வருவார்கள். அவ்வாறான சூழ்நிலைகளில் இந்த பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வும் இல்லாத மாதிரிதான் அவர்களின் மனநிலை இருக்கும். அப்போது நாங்கள் பொறுமையோடு நிதானமாக, எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அவர்களின் கதைகளை கூறச் சொல்வோம். அதை கூறும்போது அவர்கள் பெரிய ஆறுதல் அடைவார்கள். அப்போது, பிரச்சினை மாறாது. ஆனால் அந்த பிரச்சினையை பார்க்கும் விதம் மாறிவிடும். ஏனென்றால் அவர்களின் கதையை பொறுமையாக செவிமடுக்க, ஒரு தீர்வும் சொல்லாமல் கேட்பதற்கு சமூகத்தில் ஒருவரும் இல்லை. ஆனால் நாங்கள் அதனைத்தான் செய்கிறோம். நிதானமாக அவர்களின் கதைகளை செவிமடுக்கின்றோம். அது மாத்திரமல்ல, எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் எந்த விதமான அறிவுரையும் கொடுப்பதில்லை. விமர்சனம் ஒன்றும் செய்வதில்லை. அதற்கு ஒரு காரணம் அவர்களின் பிரச்சினைகளை அவர்கள் தான் தீர்க்க வேண்டும். ஆனால், நாங்கள் அவர்களின் நிலைவரத்தை விளங்கிக்கொள்ளவும். அந்த நிலைவரத்தை இன்னொரு விதத்தில் பார்ப்பதற்கும், சமாளிப்பதற்கும் நாங்கள் அவர்களுக்கு உதவியாக இருப்போம். ஏனென்றால் அவர்களுக்கு அந்த பிரச்சினைகளுக்கு இன்னொரு முறை கதைக்க வேண்டும் என்றால் எங்களிடம் வரமுடியும். எங்களிடம் வருபவர்களின் கையில் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளது. ஆனால், அந்த உணர்வு அந்த நேரத்தில் அவர்களுக்கு அந்த பிரச்சினையை பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்களின் தலை உணர்வாக தான் இருக்கும். நாங்கள் அவர்களுடன் கதைக்கும் போது அவர்களின் பிரச்சினை மூலம் உணர்வுகளை விளங்கிக்கொள்கிறோம். அவர்கள் கதைக்கும் போது அவர்களின் தலை தெளிவாகும். அதனால் அந்த பிரச்சினையை வேறு விதமாக பார்க்க முடியும். அந்த தெளிவூணர்வுதான் அவ்விடத்தில் நடக்கின்றது. நாங்கள் அவர்களின் பிரச்சினைகைளை கவனமாக கேட்டுக் கொள்வோம். அவர்களுக்கு எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் கேட்டுக் கொண்டு இருப்பதால் அவர்களுக்கு ஒரு சுதந்திரம் மற்றும் பாரிய பாரத்தை இறக்கியது போன்ற உணர்வு ஏற்படும். எங்களிடம் வருபவர்கள் அவர்களை பற்றி எந்தவொரு விபரத்தையும் சொல்லத் தேவையில்லை. அவர்களின் பெயர் சொல்ல தேவையில்லை. அவை எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை.அவர்கள் சொல்லும் கதைகள் எங்கள் அமைப்பை தவிர வேறு எங்கும் வெளியில் செல்லாது. அதனால் தான் மக்கள் எங்களிடம் வந்து பேசுகிறார்கள். 07. இவ்வாறு உங்களிடம் வந்து கதைத்து விட்டு போகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் சில நேரம் எங்களை விழுந்து வணங்குவார்கள். அதற்கு காரணம் அவ்வளவு தெளிவு கிடைக்கிறது. வருடக்கணக்காக அவர்களுக்கு இருந்த பிரச்சினை மூலம் அவர்கள் அடையும் நிம்மதி வார்த்தைகளால் சொல்ல முடியாது. 08. உயிர்மாய்ப்பு தடுப்பில் சமூகம் எவ்வாறு உதவ முடியும்? எங்களுக்கு இருக்கிற உணர்வு, பிரச்சினைகள் ஒரு மனநோய் என எமது சமூகத்தில் பிழையான கருத்து உள்ளது. அது ஒரு பிழையான ஒரு விமர்சனம். அது மாற வேண்டும். எங்கள் உடம்பில் நோய்கள் ஏற்படுவது போன்று எங்களின் மனதிலையும் தலையிலையும் நோய்கள் ஏற்படலாம். அப்போது நாங்கள் உடல் பிரச்சினைக்கு வைத்தியரிடம் போக வேண்டும் என்றால் இதற்கும் யாருடையாவது போய் கதைத்தால் தான் தீர்வு என்றால் அதை ஏன் நாங்கள் ஒரு பாரிய பிரச்சினையாக கருத வேண்டும். அப்படி கருத தேவையில்லை. கூடுதலாக இந்த பிரச்சினைகளுக்கு காரணம் எங்களுடன் இருப்பவர்கள் எங்களின் கதைகளை கேட்பதில்லை. கேட்பது மாத்திரமல்ல அவர்களின் கதைகளை சரியாக புரிந்து கொண்டு அதற்கு தீர்வு சொல்லாமல் கூர்ந்து கவனிப்பதும் இல்லை. அதனால் அவர்கள் எங்களிடம் வருகிறார்கள். அதனால் நாங்கள் சமூகத்துக்கு சொல்வது என்னவென்றால், உங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் அல்லது உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் சோகமாக இருந்தால் கேளுங்கள். கொஞ்சம் மற்றைய மனிதர்கள் பத்தி யோசியுங்கள். அந்த கேள்வியை கேட்பதால் தெளிவு பெறுவார்கள். கையடக்கத் தொலைபேசி பாவனை மனிதர்களிடம் இருந்து எம்மை தனிமையாக்கும். எங்களுக்கு ஏனையவர்களுடனான தொடர்பு முழுமையாக குறையும். எனவே மனம் விட்டு பேச வேண்டும். மனம் விட்டு பேசுவதற்காக சூழ்நிலையை நாங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உயிர்மாய்ப்பை தடுக்கக்கூடியது அனைவரின் பொறுப்பு. 09. உயிர்மாய்ப்பு எண்ணம் கொண்ட ஒருவரை அடையாளம் காண்பது எப்படி? ஒருவர் தங்களை தனிமைப்படுத்த பார்ப்பார்கள். பேசும்போது தனக்கு யாரும் இல்லை. தனிமையை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாத மாதிரி, வாழ்ந்து என்ன பிரயோசனம். என்னால் எந்த பிரயோசனமும் இல்லை. நான் உதவாக்கரை போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். எவற்றிலும் ஒரு நம்பிக்கை இருக்காது. எதையுமே சாதிக்க முடியாது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நாம் அடையாளம் காணலாம். அவர்களை தடங்கல் செய்யும் ஒரு பிரச்சினையை முடிவே இல்லாத பிரச்சினையை திருப்பி திருப்பி பேசுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்த மற்றும் பொக்கிஷமாக வைத்திருந்த விடங்களை மற்றையவர்களுக்கு கொடுப்பார்கள். அவர்கள் வாழ்க்கையை முடித்து கொள்ள தயார் செய்வார்கள். தற்போது உள்ள பிள்ளைகள் கூகுள் மற்றும் சமூக ஊடகங்களில் எப்படி உயிரை மாய்த்து கொள்ளலம் என்ற தகவல்களை தேடுகிறார்கள். அதை பற்றி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் ஏதாவது ஒரு சந்தேகம் எழுந்தால் உடனடியாக சுற்றி இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிதாக ஒன்றும் செய்ய தேவையில்லை. என்னது? ஏன் இப்படி செய்கின்றீர்கள்? ஏன் தேடுகின்றீர்கள், என்ன காரணம்? என கேட்டால் போதும். இவ்வாறு அவர்கள் ஒவ்வொரு விடயங்களை செய்வது தனக்கு யாரும் உதவி செய்ய மாட்டாங்களா? என கேட்க வழியில்லை. அவை அனைத்தும் ஒரு வகையான அழுகை. 10. உயிர்மாய்ப்பு தோற்றுவிக்கக்கூடிய சூழ்நிலைகள் என்ன? இழப்பு, உறவுகளில் விரிசல், பாடசாலை மாணவர்களால் தாழ்த்தப்படுவதால் மனதளவில் பாதிக்கப்படுதல், கஷ்டப்படுத்துதல், வாழ்க்கையில் தாங்கமுடியாத அதிர்ச்சி தரக்கூடிய செயல், இழப்புகளை தாங்கி கொள்ள முடியாமல் மனதில் வைத்து கொண்டு இருத்தல், நோய்கள், பயம், குடும்பத்தில் ஒருத்தர் உயிரை மாய்த்து கொண்ட சூழ்நிலை இருந்தால் இந்த சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். இவ்வாறான சூழ்நிலைகளில் இருப்பவர்களிடம் அருகில் இருப்பவர்கள் மனம் விட்டு பேச வேண்டும். 11.சுமித்ரயோ அமைப்பை எவ்வாறு தொடர்பு கொள்வது? சுமித்ரயோ அமைப்பு வருடத்தில் 365 நாட்களும் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 8.00 மணிவரைத் திறந்திருக்கும்.(விடுமுறை நாட்கள் உட்பட) தொடர்பு எண்: சுமித்ரயோ - 011-2692909,011- 2683555,011- 269666 முகவரி : 60பி, ஹோட்டன் பிலேஸ், கொழும்பு 7 (சுமித்ரயோ) மின்னஞ்சல்: sumithra@sumithrayo.org / sumithrayo@sltnet.lk இணையத்தளம்: www.sumithrayo.org 12. சுமித்ரயோ அமைப்பின் சேவைகள் என்ன? நாங்கள் நட்புடன் செவிமெடுக்கின்றோம் (with friendly). உயிர்மாய்ப்பு தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நாளாந்தம் வாழ்க்கையில் அழுத்தங்கள் அதாவது, உயிர் மாய்ப்பு அல்லாத பல பிரச்சினைகளுக்கு எங்களை நாடி வருபவர்களுக்கு திறன் விருத்தி நிகழ்வுகள் செய்கின்றோம். 13.சுமித்ரயோ அமைப்புக்கு எந்த வயதுடையவர்கள் வருகை தருகிறார்கள்? 20 வயதுக்கு மேற்பட்டவர்களும் வயது கூடியவர்களும் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது பாடசாலை பிள்ளைகளும் வருகை தருகிறார்கள். அவர்களை பெற்றோர்கள் அழைத்து கொண்டு வருகிறார்கள். உயர் தர மாணவர்கள், புலமை பரீட்சைக்கு தோற்றுவிக்கும் பிள்ளைகளும் வருகிறார்கள். மன அழுத்தத்தில் தூக்குவதில்லை. படிக்கிறார்கள் இல்லை என பெற்றோர் தெரிவிக்கிறார்கள். வயது எல்லைகள் இன்றி அனைவரும் வருகிறார்கள். முன்று நான்கு வருடங்களாக சிறுவர்கள் வருவது அதிகரித்துள்ளது. தற்போது கையடக்க தொலைபேசி போன்ற பாவனைகள் அதிகரித்துள்ளமை, படிப்பு, மற்றைய விடயங்களுக்கு நேரத்தை சமாளிக்க அவர்களுக்கு தெரியவில்லை. https://www.virakesari.lk/article/224278
  6. ஆசியக் கிண்ணம் : ஹொங்கொங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்ட பங்களாதேஷ் 12 Sep, 2025 | 06:32 AM ஆசியக் கிண்ணத் தொடரில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற குழு ‘ஏ’பிரிவில் இடம்பெற்றுள்ள ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 17-வது ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் இடம்பெற்று வருகின்றது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், கொங்கொங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் அபுதாபியில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் - ஹொங்கொங் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதையடுத்து ஹொங்கொங் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஹொங்கொங் அணி சார்பாக ஷீஷான் அலி, நிஷாகத் கான் மற்றும் யாசிம் முர்தாசா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அவர்கள் முறையே 30 ஓட்டங்கள், 42 ஓட்டங்கள் மற்றும் 28 ஓட்டங்களை எடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் 20 ஓவர்கள் நிறைவில் ஹொங்கொங் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. பங்களாதேஷ் அணியின் தலைவர் லிட்டன் தாஸ் அரைச் சதமடிமத்து அதிகபட்சமாக 59 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில் பங்களாதேஷ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. https://www.virakesari.lk/article/224867
  7. Published By: Vishnu 12 Sep, 2025 | 06:25 PM (எம்.மனோசித்ரா) இந்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி நிறுவனமான, மத்திய கடலோரப் பொறியியல் மற்றும் மீன்வள நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர், கடந்த 8 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்தனர். இந்த விஜயம், வடக்கு மாகாணத்தில் முன்மொழியப்பட்ட பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த குழுவினர், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரைச் சந்தித்து, அமைச்சின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொருத்தமான வழிமுறைகள் குறித்து இந்த கலந்துரையாடல்கில் மையப்படுத்தப்பட்டன. இந்தக் குழுவினர் கடந்த 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய உள்ளுர் பங்குதாரர்களுடன் இணைந்து, பருத்தித்துறையில் முன்மொழியப்பட்ட திட்ட இடத்திற்கு தொழில்நுட்ப விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த முயற்சி, இலங்கையில் மீன்பிடி துறைமுகங்களின் அபிவிருத்தி குறித்த ஒத்துழைப்புக்காக, 2022 மார்ச் மாதம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகும். இது மீன்வள உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி ஆகியவற்றில் வளர்ந்து வரும் இந்தியா-இலங்கை பங்காளித்துவத்தை எடுத்துக்காட்டுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/224944
  8. அண்ணை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அண்ணை, நிப்பாட்டுவதை விட சைகை மொழியில் பழக்கிவிடுவார்கள்! இப்பவே ஆட்கள் கூட எனின் கையில் காசு வாங்குவதில்லை, பதிவு புத்தகத்தில் மறைவாக வைக்கச் சொல்வார்கள்.
  9. இலங்கை போரில் பல லட்சம் தமிழர்களை காப்பாற்றிய வட்டுவாகல் பாலம் அழிக்கப்படுமா? கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அடையாள சின்னமாக காணப்படும் முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படுவது தற்போது பேசுப் பொருளாகியுள்ளது. இறுதிக் கட்ட போரின் போது பல லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை இந்த பாலம் பாதுகாத்ததாக ஈழத் தமிழர்கள் கூறி வருகின்றனர். இன்றைய சூழ்நிலையில் இந்த பாலத்தை திருத்தியமைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்லும்போது ஒரு வாகனம் மாத்திரமே ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பாலத்தை கடக்க முடியும். அவ்வளவு குறுகிய நிலையில் இந்த பாலம் அமைந்துள்ளதுடன், கடந்த சில வருடங்களாக பாலத்தின் பல இடங்களில் உடைப்புக்களை அவதானிக்க முடிந்தது. நாளொன்றிற்கு சுமார் 3000 வரையான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றமையினால், இந்த பாலத்தில் புனரமைப்பானது இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் இந்த பாலத்தை புதுபித்து நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட பின்னணியில், தமது வரலாற்று சான்றை இல்லாதொழிக்க வேண்டாம் என தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் பிரதான வீதியில் நந்தி கடலை ஊடறுத்து இந்த வட்டுவாகல் பாலம் அமையப் பெற்றுள்ளது. சுமார் 410 மீட்டர் தூரத்தை இந்த பாலம் கொண்டமைந்துள்ளது. முல்லைத்தீவு நகரம் மற்றும் புதுகுடியிருப்பு நகரம் ஆகியவற்றை இணைக்கும் பிரதான பாலமாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் நீடித்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி மௌனிக்கப்பட்டது. இறுதி போர் முடிவடைந்த இடமாக இந்த பாலம் அமைந்துள்ள பகுதி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. முல்லைத்தீவு நகர் பகுதி பக்கத்தில் இலங்கை ராணுவத்தினரும், மறுபுறமான புதுகுடியிருப்பு பகுதி பக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிலைக் கொண்டு இறுதி போரை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில், புதுகுடியிருப்பு பக்கத்திலேயே தமிழர்கள் நிலைத்திருந்ததுடன், புதுக்குடியிருப்பை அண்மித்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர் என தமிழர்கள் கூறிவருகின்றனர். புதுகுடியிருப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த பொதுமக்கள், தமது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்குடன் இந்த வட்டுவாகல் பாலத்தை பயன்படுத்தியே ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் பிரவேசித்திருந்தனர். இவ்வாறு இறுதிப் போரில் பல லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு வட்டுவாகல் பாலம் பாரிய உதவிகளை வழங்கியதாக கூறப்படுகின்றது. உள்நாட்டு போரில் இந்த வட்டுவாகல் பாலம் சேதமடைந்திருந்ததாக அந்த காலப் பகுதியில் அங்கு வாழ்ந்த மக்கள் பிபிசி தமிழிடம் கூறியிருந்தனர். அதேபோன்று, சுனாமியின் போதும் இந்த பாலம் சேதமடைந்திருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல், இந்த பாலத்தை அண்மித்த ஒரு பகுதியிலிருந்தே மீட்கப்பட்டிருந்ததாக ராணுவம் அந்த சந்தர்ப்பத்தில் அறிவித்திருந்தது. தமிழர்களுக்கு இவ்வாறு பல வரலாறுகளை கூறும் பாலம் இந்த உடைக்கப்பட்டு, புது பாலம் அமைக்கப்படும் தருவாயில் உள்ளமை பேசுப் பொருளாக மாறியுள்ளது. பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த பாலம் தொடர்பான அரசாங்கத்தின் கவனம் மீளத் திரும்பியிருந்தது. இந்த வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு கடந்த அரசாங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், அந்த நடவடிக்கைகள் செயற்பாட்டு ரீதியில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே, புதிய அரசாங்கத்தின் முயற்சியுடன் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 2-ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஜயம் மேற்கொண்டு இந்த பாலத்தில் நிர்மாணிப் பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த பாலத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக 1.4 பில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 2027-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 2-ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார். பாலத்தை உடைக்க வேண்டாம் - முல்லைத்தீவு தமிழர்கள் கோரிக்கை வட்டுவாகல் பழைய பாலத்தை அழிக்காது புதிய பாலம் அமைத்து தரப்படும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே புதிய பாலம் அமைக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் நடனலிங்கம் கோரிக்கை விடுக்கின்றார். ''புதிய பாலம் அமைப்பதற்கு நாங்கள் பல வருடங்கள் முயற்சி செய்தோம். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் சென்ற துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தின் முன்வைத்த கேரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த வருடம் அந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த பாலம் அவ்வாறே நிரந்தரமாக இருக்க வேண்டும். எமது அடையாளத்தை அவ்வாறே விட்டு விட்டு தான், புதிய பாலம் அமைக்க வேண்டும். 300 மீட்டர் தூரத்தில் குறுக்கே ஒரு பாலம் செல்லும் என்றும், பழைய பாலம் அவ்வாறே இருக்கும் என்றும் தான் எங்களுக்கு சொல்லப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் பழைய பாலம் அழிக்கப்படாது என கூறினார்கள். பாலத்தை உடைக்காது பார்த்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். எமக்கு சொன்ன உறுதிமொழிக்கு அமைய தான் அவர்கள் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.'' என அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம், ANNALINGAM படக்குறிப்பு, அன்னலிங்கம் நடனலிங்கம், வட்டுவாகல் புதிய பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு இல்லை என்ற போதிலும், வரலாற்றை அழிக்காத வகையில் பழைய பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதை நாங்கள் நூறு வீதம் வரவேற்கின்றோம். அது எங்களுக்கு தேவையான ஒரு பாலம். பல ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் பயணம் செய்கின்றார்கள். இந்த பாலத்தில் நிறைய வரலாறு பொறிக்கப்பட்டிருக்கின்றது. பாலத்தை முழுமையாக உடைப்பதற்கு எங்களுடைய மக்களுக்கு விருப்பம் இல்லை. புதிய பாலம் செய்வதற்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், பழைய பாலம் பாதுகாக்கப்பட வேண்டும்.'' என குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, செல்லையா யோகேந்திரராசா, முல்லைத்தீவு தமிழர்களின் அடையாளமாக விளங்கும் வட்டுவாகல் பாலத்தை இல்லாது செய்து, புதிய பாலத்தை அமைக்க இடமளிக்க மாட்டோம் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் தெரிவிக்கின்றார். பழைய பாலம் அவ்வாறே பாதுகாக்கப்பட்டு, அதனை அண்மித்து புதிய பாலம் அமைக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ''வட்டுவாகல் பாலம் என்பது 75 வருடங்களுக்கு மேலாக வரலாற்றை கொண்ட பாலம். இறுதி போரில் எல்லா மக்களும் அதனூடாக சென்ற பாலம். இறுதி போருக்கு அடையாளமாக, எச்சமாக இருக்கும் ஒரே ஒரு இடம் அந்தபாலம் மட்டும் தான். அபிவிருத்தி என்ற போர்வையில் அடையாளங்கள் இல்லாது செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டுவாகல் பாலம் கடைசி போரில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஆதாரமாக பார்க்கின்றோம். இப்போதுள்ள பாலத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. பழைய பாலம் உடைக்கப்பட்டு, புதிய பாலம் அமைக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய அநீதிகளுக்கு அடையாளம் இல்லாது போய்விடும். இருக்கின்ற பாலத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.'' என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் கூறுகின்றார். வட்டுவாகல் பாலம் உடைக்கப்படுமா? படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஈழத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் வட்டுவாகல் பாலம் முழுமையாக உடைத்து அகற்றப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். புதிய பாலம் நிர்மாணிக்கப்படும் சந்தர்ப்பத்தில், பழைய பாலத்தின் ஒரு பகுதி மாத்திரம் சேதப்படுத்தப்படும் எனவும், பழைய வட்டுவாகல் பாலம் தமிழர்களின் அடையாள சின்னமாக பாதுகாக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ''பழைய பாலத்தை முற்று முழுதாக உடைத்து விட்டு புதிய பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஒரு கருத்து நிலவியது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த புதிய பாலம் இவ்வாறு தான் நிர்மாணிக்கப்படுகின்றது என வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேரடியாக விளக்கங்கள் வழங்கப்பட்டன. அந்த கூட்டத்திலேயே நான் மறுத்திருந்தேன். பழைய யாழ்ப்பாண நூலகம் இப்படி தான் இருந்தது என்பதை எமது புதிய சந்ததியினருக்கு காட்டக்கூடியதாக இல்லை" என்று அவர் கூறினார். மேலும், " புதிய நூலகம் தான் இருக்கின்றது, பழைய நூலகத்தின் அடையாளங்களோ எச்சங்களோ இல்லாது போயுள்ளன. இப்படியான உதாரணங்களை சொல்லி காட்டி வட்டுவாகல் பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறியிருந்தேன். வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியாவது இருக்க வேண்டும் என்பதை ஆணித்தனமாக அன்றைய தினமே கூறியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு பகுதி மாத்திரம் இந்த பாலத்தில் இருக்கும். குறிப்பிட்ட சில இடங்களில் புதிய பாலம் அமைக்கும் போது இடையில் அழிக்க வேண்டி வரும். அந்த பாலம் நிச்சயம் இருக்கும் என்பதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறிப்பிட்டனர். பிரதி அமைச்சர், மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது விளக்க படங்களும் காண்பித்து இந்த கருத்து சொல்லப்பட்டது. தனிப்பட்ட ரீதியிலும் என்னிடம் உறுதி வழங்கப்பட்டது. சபையிலும் உறுதி வழங்கப்பட்டது'' என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார். இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரை தொடர்புக் கொள்ள பல முறை முயற்சி செய்த போதிலும், அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் விடயம் தொடர்பில் வினவிய போது, அது குறித்து தலைவருடன் பேச வேண்டும் என பதில் வழங்கி இருந்தார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dr8v423j9o
  10. 12 Sep, 2025 | 05:49 PM (எம்.மனோசித்ரா) சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை. மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் என்றும், இன்று நாட்டில் அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். வியாழக்கிழமை (11) விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியியேறியிருந்த அவர் வெள்ளிக்கிழமை (12) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்ட மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வியாழன் (11) மாலை நான் வெளியேறினேன். இதற்கு முன்னர், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு சிலர் ஊடகங்கள் முன் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்ததை நான் கண்டேன். மக்களுக்கு எதையும் செய்ய இயலாமல் மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், அவர்கள் புதிய சட்டங்களை இயற்றிய பிறகு, 24 மணி நேரத்திற்குள் நான் விஜேராம இல்லத்திற்கு விடை கொடுத்தேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன். தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை இல்லாத அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் காரணமாக, அதன் விளைவாக எழுந்த பல சம்பவங்களின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக நான் ஒருபோதும் வருந்த மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போர் புரிந்தேன். சுவாசம் என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. இதில் இன, மத பேதங்கள் இல்லை. நம் சுவாசத்திற்காக தங்கள் சுவாசத்தை இழந்தவர்கள் இராணுவ வீரர்கள். அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாம் அனைவரும் சேர்ந்து அநுராதபுரம் புனித நகரத்தில் சந்த ஹிரு சேயவை (சந்திரன் மற்றும் சூரியன் தாதுகோபுரம்) உருவாக்கினோம். சந்திரன், சூரியன் இருக்கும் வரை நமது தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை அது குறிக்கிறது. எனது மூத்த மகன் நாமல் கூறியது போலவே, எல்லாம் தொடங்கிய எனது கிராமத்திற்கு நான் திரும்ப வந்துள்ளேன். நாம் கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகவே நான் வந்தேன். இப்போது கிராமத்தில் புளிக்குழம்பில் உள்ள மீனை ருசித்து மகிழ என்னால் முடியும். கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எது எப்படி இருந்தாலும், எல்லாம் இந்த மண்ணிலிருந்துதான் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் போட்டியிட்டான். அதற்கான வாய்ப்பை சிறிமாவோ பண்டாரநாயக்க வழங்கினார். ஒரு இளம் அமைச்சராக நான் பயணிக்க வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவியாகவும், தாயாகவும் இருந்தார் என்றால் அது சரியானது. அரசியலில் சரியான வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்கவுக்கு பின்னால், ரூ{ஹணுவின் மக்கள் பிரதிநிதியாக இருந்த எனது அன்புக்குரிய தந்தை எப்போதும் காணப்பட்டார். எனது தந்தை ரூ{ஹணுவின் பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பாராளுமன்றத்தின் இளைய உறுப்பினராக, 1970 ஆம் ஆண்டு மக்கள் அரசாங்கத்தின் முதல் சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன். அங்கு பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி நான் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. இருண்ட காலங்களில் நிலவிய அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கலை எதிர்த்து, காணாமல் போனவர்களுக்காக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றதும் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணாமல் போனவர்கள், மனித உரிமைகள் மீறல்களுக்காக சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரி 'வழக்கறிஞர் மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் - மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்கல்லை' என்பதை எனது சகோதரர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். பாதயாத்திரைகள், பொதுமக்கள் கண்டனப் போராட்டம், மனிதச் சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள். தங்கள் அரசியல் அழுத்தங்களையும், பதற்றங்களையும் தவிர்ப்பதற்காக யாரும் ஜனநாயகத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது. தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்க முயற்சிப்பது வருத்தத்திற்குரியது. மக்கள் எங்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளின் தீவிரம் காரணமாகவே கடந்த காலத்தில் சில சம்பவங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மஹிந்த ராஜபக்ஷ தன் மனசாட்சிக்கு இணங்க நாட்டிற்காக முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது வேறு எதுவும் இல்லை. கடந்த காலத்தில் பெற்ற அதே மக்கள் அன்பை இன்றும் அதே போல் பெறுவது எனக்குக் கிடைத்த பாக்கியம். அந்த பாக்கியத்தை யாரிடமும் இழக்க முடியாது. மதத் தலைவர்களிடமிருந்து இடமிருந்து தினமும் நான் பெறும் ஆசீர்வாதம், பௌதீக வரப்பிரசாதங்களை விட மேலானது. எனது அன்பு மனைவி சிரந்தி, அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை அளித்து எனக்கு எப்போதும் பலமாக இருந்தார். அப்போதும், இப்போதும் என் அருகில் இருந்த மற்றும் இருக்கும் எனது பிரதான பாதுகாப்பு அதிகாரி உட்பட எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பு, பணியைத் தாண்டிய ஒரு பாசமான பிணைப்பாகும். மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான். மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதாக எனக்குத் தெரியவந்தது. தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைப்பது குறித்து நான் பதிலளிக்கவில்லை. ஆனால் நான் வாழும் வரை, நாம் அனைவரும் வாழும் அல்லது ஒருநாள் அடக்கம் செய்யப்படும் சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன் என்று நான் அறிவிக்கிறேன். அன்று தேவைப்பட்டால் எனக்குத் தோள் கொடுக்க இந்த நாட்டில் மகா சங்கரத்தினத்தை உள்ளடக்கிய அன்பு மக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை. https://www.virakesari.lk/article/224932
  11. பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 12 Sep, 2025 | 07:08 AM பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (11) அவருக்கு இந்தத் தீர்ப்பை வழங்கியது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், போல்சனாரோ பதவியில் இருந்து விலக மறுத்து, இராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவில், நான்கு நீதிபதிகள் போல்சனாரோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர். சட்ட ஆட்சியை ஒழித்தல், ஆயுதமேந்திய குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பு, பிரேசிலின் அரசியல் பிரிவுகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. போல்சனாரோ ஆதரவாளர்கள் இதனை "அரசியல் பழிவாங்கல்" என்று கண்டித்து வருகின்றனர். அதேசமயம், தற்போதைய ஜனாதிபதி லூலா டா சில்வா, போல்சனாரோ பிரேசிலின் ஜனநாயகத்திற்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை மேற்கொண்டதற்கான "நூற்றுக்கணக்கான ஆதாரங்கள்" இருப்பதாகவும், இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். போல்சனாரோ, ஏற்கனவே மற்றொரு வழக்கில் 2030 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அது வெற்றிகரமாக அமைய வாய்ப்பு குறைவு என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போல்சனாரோவுக்கு நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தத் தீர்ப்பு "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இது ஒரு "சூனிய வேட்டை" (witch hunt) என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/224868
  12. 12 Sep, 2025 | 04:35 PM பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் (12) அடிக்கல் நாட்டப்பட்டது. 41 அடி உயரம் கொண்ட பூசாந்திர சித்திரத் தேருக்கான புதிய தேர் இருப்பிடத்தின் கட்டுமான வேலைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்போது விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. https://www.virakesari.lk/article/224920
  13. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 12K views · 319 reactions | அனைத்து போக்குவரத்து பொலிஸாரு...அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் - சிக்கப்போவது யார்..? #SriLankanPolitician #Srilankanpolice #TrafficPolice #tamilwin.https://tamilwin.com/article/another-procedure-to-implemented-next-two-weeks-1757487619
  14. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 செப்டெம்பர் 2025, 02:29 GMT இந்தியாவில் இனி முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்கள் சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அலுவல் உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. "இது மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்" என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், செப். 8 தேதியிட்ட அந்த உத்தரவில், திட்ட அளவை பொறுத்து அல்லாமல், அனைத்து திட்டங்களும் மத்திய அரசு மட்டத்தில் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வியூக ரீதியான (strategic considerations) காரணங்களுக்காக இத்தகைய திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, 2006 அறிவிப்பாணையின் (திருத்தம்) விதிமுறைகளின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. "மத்திய அரசு திட்டங்களில் பிரிவு பி-யில் (section B) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அணுக் கனிம சுரங்க திட்டங்கள் மற்றும் பிரிவு டி-யில் (section D) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய கனிமங்கள் (critical minerals) (சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் முதல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள) சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது." என அதில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், டங்ஸ்டன் முக்கிய கனிமங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி துறையின் கோரிக்கை என்ன? சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு 04.08.2025 தேதியிட்ட கோரிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம், ரேடார் மற்றும் சோனார் போன்ற கண்காணிப்பு சாதனங்கள், லேசர், மானிட்டர் போன்ற தொடர்பியல் கருவிகள், ஏவுகணைகளின் இலக்கை கட்டுப்படுத்தும் வழிகாட்டு அமைப்புகளின் தயாரிப்புகளில் இத்தகைய முக்கிய கனிமங்கள் பயன்படுவதாக தெரிவித்துள்ளது. "இந்தியாவில் இத்தகைய கனிமங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதன் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. இதனால் நாட்டில் அதன் விநியோகம் அபாயத்தில் இருப்பதால், உள்நாட்டிலிருந்து இக்கனிமங்கள் நிலையாக விநியோகம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது" என அதில் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. எனவே, முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்களை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக கருதி அவை சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று கோரியிருந்தது. அதேபோன்று, 29.08.2025 தேதியிட்ட கடிதத்தில் அணுசக்தி துறை, மோனசைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தோரியம், மூன்றாம் நிலை அணுசக்தித் திட்டத்தில் சாத்தியமான அணுசக்தி எரிபொருள் ஆதாரமாக உள்ளது என கூறியுள்ளது. அதேபோன்று, முதல்நிலை அணுசக்தித் திட்டத்தில் யுரேனியம் முக்கியமானதாக கருதப்படுகிறது என்றும், இதுதொடர்பான திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது. முக்கிய கனிமங்கள் என்னென்ன? 2023ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதன்படி, கோபால்ட், தாமிரம், டங்ஸ்டன், காட்மியம், செலினியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதேபோன்று, யுரேனியம், தோரியம் போன்ற 6 வகையான அணுக் கனிமங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டைட்டானியம், லித்தியம், டாண்டலம் உள்ளிட்ட ஆறு கனிமங்களை அணுக் கனிமங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அதை தோண்டி எடுப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட வழிவகுத்து 2023ம் ஆண்டில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பொதுமக்கள் கருத்துக் கேட்பு ஏன் முக்கியம்? சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அம்சமாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உள்ளது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையின் முக்கியமான பகுதியாக, பொதுமக்கள் கருத்துக் கேட்பு உள்ளது. தங்கள் பகுதிகளில் வரவிருக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை இத்தகைய கூட்டங்களில் எடுத்துரைப்பார்கள். பொதுமக்களின் பெரும்பான்மை கருத்துகளின் அடிப்படையில் தான் அந்த திட்டம் அமையும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, பொதுமக்கள் கருத்துக் கேட்பு இவையிரண்டும் அனைத்து விதமான சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கும் மிக முக்கியம் என்றும், மத்திய அரசின் தற்போதைய உத்தரவு அதன் முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வதாக இருப்பதாகவும் கூறுகிறார், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். பட மூலாதாரம், m.vetriselvan/Instagram படக்குறிப்பு, 'இதனால் கதிர்வீச்சு அபாயம் கூட ஏற்படும்' என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் "சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் 1994ம் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை கொண்டு வந்தனர். 1992ல் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் உலக நாடுகளின் முக்கிய கருத்துகளின் அடிப்படையிலும் இது கொண்டு வரப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் மிக முக்கிய அம்சமே பொதுமக்கள் கருத்துக் கேட்புதான்." என்கிறார் அவர். ஓர் திட்டம் வருகிறதென்றால், அதனால் சூழல் மீது எந்த தாக்கம் ஏற்படும் என்ற ஆய்வு நடத்தப்படும் . அதனடிப்படையில் தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்படும். "எந்தவொரு திட்டத்துக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கு முன்னதாகவே இந்த அறிக்கையை அந்தந்த மொழிகளில் மொழிப்பெயர்த்து மக்களிடத்தில் பரவலாக்கியிருக்க வேண்டும். அதைன்பின் தான், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தும். அதில், பெரும்பான்மை மக்கள் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும். இப்போதைய உத்தரவின்படி, முக்கிய கனிமங்கள், அணுக் கனிமங்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது" என தெரிவிக்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். எதிர்ப்பு ஏன்? மத்திய அரசு 2014ம் ஆண்டு தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை மாற்றியமைப்பதற்காக, முன்னாள் அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அக்குழு, தொழில்கள் எளிதாக செயல்படும் வகையில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் உள்ள தடைகளை நீக்குவதற்காக, பல பரிந்துரைகளை அளித்திருந்தது. ஆனால், அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதை நாடாளுமன்ற நிலைக்குழு 2015ம் ஆண்டு நிராகரித்தது. இதைச் சுட்டிக்காட்டிய வெற்றிச்செல்வன், "2020ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில்தான் முதன்முதலாக சில திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தேவையில்லை என்று கொண்டு வந்தது. அதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், அதிலுள்ள விதிமுறைகளை தனித்தனியே செயல்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது" என கூறுகிறார். மேலும், இந்த உத்தரவை சட்டத்திருத்தமாக கொண்டு வராமல், அலுவல் உத்தரவாக கொண்டு வருவதும் ஏற்புடையதல்ல என்கிறார் வெற்றிச்செல்வன். "இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு அல்லாமல், அணுக்கதிர்வீச்சு அபாயமும் இருப்பதாக" கூறுகிறார் அவர். இனி என்ன நடக்கும்? படக்குறிப்பு, அதிகளவில் கனிமங்களை தோண்டி எடுக்கும் நிலை இதனால் உருவாகலாம் என்கிறார், சு.ப. உதயகுமார் "கருத்துக் கேட்பு நடத்தப்படாமல் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும்போது மக்கள் நில உரிமையை இழந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்." என்கிறார் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகித்த சு.ப. உதயகுமார். தமிழ்நாட்டில் என்ன தாக்கம் ஏற்படும்? "கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. இப்போது, பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமே வேண்டாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அதேபோல், பழனி, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, கவுத்தி மலை, வேடியப்பன் மலையில் இரும்பு தாது உள்ளது. அவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் தோண்டி எடுக்கலாம் என்ற நிலை இதனால் உருவாகலாம். ஏனெனில், இத்தகைய கனிமங்கள் தான் இனி 'புதிய எண்ணெய் வளம்' என்கின்றனர். மக்கள் தான் தேசம், அவர்களின் அடிப்படை தேவைகள் தான் முக்கியமே தவிர, தனியார் நிறுவனங்களுக்காக விதிமுறைகளை மாற்றக் கூடாது" என்றார் சு.ப. உதயகுமார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx23plpp16do
  15. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் நேற்று கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நடக்கும் முதல் உத்தியோகபூர்வ இராஜதந்திர சந்திப்பு இதுவாகும். பிணையில் விடுதலை இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். அத்துடன், சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது, முன்னாள் ஜனாதிபதிகளுடனான சீனத்தூதுவரின் சந்திப்பானது உள்நாட்டு அரசியலில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/meeting-between-ranil-and-chinese-ambassador-1757659599#google_vignette
  16. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? அவுஸ்திரேலியா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? பெங்களூர் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? தென்னாபிரிக்கா 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து தடித்த எழுத்துகளில் எனது பதில்களை பதிந்துள்ளேன் @கந்தப்பு அண்ணை. போட்டிகள் பெங்களூரில் நடைபெறுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதா கந்தப்பு அண்ணை.
  17. @கந்தப்பு அண்ணை எத்தனையாம் திகதிக்கு முன் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்ற தகவலையும் போடுங்கோ.
  18. கமாண்டோ சாலிந்தா தனக்கு 1.5 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து எல்எம்ஜி துப்பாக்கியை கோரியதாக அவர் கூறினார். பல்வேறு காரணங்களுக்காக இராணுவ சேவையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் தலைமறைவான உறுப்பினர்களின் விவரங்களை இந்த இராணுவ அதிகாரி கமாண்டோ சாலிந்தாவுக்கு வழங்கியதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் அவர்களை ஒன்றிணைத்து ஒரு தனி குழுவை உருவாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இராணுவ அதிகாரி இரண்டு கிளேமோர் குண்டுகளையும் குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு வழங்கியதாக பாதுகாப்புப் படையினரிடையே சில சந்தேகங்கள் உள்ளன. இந்த இராணுவ அதிகாரி அதிக அளவில் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், அடிக்கடி இரவு விடுதிகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் தெரியவந்துள்ளது. மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
  19. மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் சமீபத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கமாண்டோ சாலிந்தா'வுக்கு ரி-56 தோட்டாக்களை விற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கேணலிடமிருந்து பல குற்றவியல் விஷயங்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியபோது, மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார், மேலும் அவர் ஒரு பாதாள உலகக் குழுவிற்கு 260 ரி-56 தோட்டாக்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஒன்றரை கோடிக்கு மேலும் விசாரித்ததில், கமாண்டோ சாலிந்தா தனக்கு 1.5 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து எல்எம்ஜி துப்பாக்கியை கோரியதாக அவர் கூறினார். இருப்பினும், லெப்டினன்ட் கேணல் அதை வழங்க முடியாது என்றும், கமாண்டோ சாலிந்தா தன்னிடம் 2 கிளேமோர் குண்டுகளை வழங்குமாறு கோரியதாகவும் கூறியுள்ளார். இராணுவ சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்கள் பல்வேறு காரணங்களுக்காக இராணுவ சேவையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் தலைமறைவான உறுப்பினர்களின் விவரங்களை இந்த இராணுவ அதிகாரி கமாண்டோ சாலிந்தாவுக்கு வழங்கியதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் அவர்களை ஒன்றிணைத்து ஒரு தனி குழுவை உருவாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இராணுவ அதிகாரி இரண்டு கிளேமோர் குண்டுகளையும் குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு வழங்கியதாக பாதுகாப்புப் படையினரிடையே சில சந்தேகங்கள் உள்ளன. இந்த இராணுவ அதிகாரி அதிக அளவில் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், அடிக்கடி இரவு விடுதிகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் தெரியவந்துள்ளது. https://ibctamil.com/article/lt-colonel-arrested-illegal-weapons-1757612476
  20. சீனத் தூதுவர் அதேவேளை பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஜெயந்தி மாவத்தையில் ஒரு ஆடம்பர வீட்டை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க மற்றுமொரு தொழிலதிபர் உறுதியளித்துள்ளார். இதேவேளை கொழும்பில் ஆடம்பர வீடொன்றை வழங்க சீனா முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்றையதினம் மகிந்தவை சந்தித்த சீனத் தூதுவர் தேவையான அனைத்து விடயங்களை செய்து தருவதாக உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/german-man-gifting-a-luxury-house-for-mahinda-1757642501
  21. அது வழமையான துண்டு போடும் நடவடிக்கை அண்ணோய்!(ஆட்சிமாறினால்)
  22. உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விடைபெற்ற மஹிந்தவின் பதிவு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள பதிவு பின்வருமாறு, "ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமை நீக்க சட்டமூலம் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து நான் நேற்றைய தினம் (11) வெளியேறினேன். விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற ஊடகங்களில் சிலர் இதற்கு முன்னர் வௌியிட்ட பல்வேறு கருத்துக்களை நான் அவதானித்தேன். மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது மிகக் குறுகிய காலத்தில் நாளுக்கு நாள் மக்களின் அதிருப்தி சம்பாதித்து வரும் குழு தங்கள் திறமையின்மையை மறைக்க ஊடகங்களில் வெளியிட்ட அந்த கருத்துகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. இருப்பினும், பின்னர், அவர்களால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் விஜேராம இல்லத்திற்கு விடைகொடுத்தேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ என்ற நான், சட்டத்தின் முன்பும், என் மக்கள் முன்பும் மட்டும் தான் தலை வணங்குவேன். தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட ஒழுக்கமற்ற, தொழில்முறையற்ற அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால், அது தொடர்பாக எழுந்த நிகழ்வுகளின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போராடினேன். சுவாசம் நம் அனைவருக்கும் பொதுவானது. இனம் அல்லது மத வேறுபாடு இல்லை. எமது சுவாசத்திற்காக தங்களின் மூச்சை இழந்தவர்கள் இராணுவ வீரர்களே. அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாங்கள் அனைவரும் புனித நகரமான அனுராதபுரத்தில் சந்த ஹிரு சேயவை உருவாக்கினோம். சந்திரனும் சூரியனும் இருக்கும் வரை, எங்கள் தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை இது குறிக்கிறது. எனது மூத்த மகன் நாமல் கூறியது போல நான் எல்லாம் தொடங்கிய எனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். நாங்களே கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வந்தேன். இப்போது கிராமத்தில் புளிப்பு மீன் குழம்பை அனுபவிக்க முடியும். அதை கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இது அனைத்தும் இந்த பூமியிலிருந்து தொடங்கியது. மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிருவாவிலிருந்து போட்டியிட்டார். எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. ஒரு இளம் எம்.பி.யாக நான் பின்பற்ற வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவராகவும் தாயாகவும் இருந்தார் என்று சொல்வது உண்மைதான். அரசியலில் சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம். ருஹுணு எம்.பி.யாக இருந்த எனது மறைந்த அன்புக்குரிய தந்தை, நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்காவின் பின்னால் எப்போதும் இருந்தார். ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளை என் தந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இளைய எம்.பி.யாக 1970 இல் மக்கள் அரசாங்கத்தின் முதல் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை உரையை நான் நிகழ்த்தினேன். ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளைப் பற்றிப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. இருண்ட காலங்களில் இருந்த அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கல்களைத் தாண்டி, காணாமல் போனவர்களின் சார்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றவர் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணாமல் போதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்னிலையாகி சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரியான "சட்டத்தரணி மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் - மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்காலை". என்பதை எனது நண்பர்களுக்கு நான் மீண்டும் நினைப்படுத்த விரும்புகிறேன். பாதயாத்திரைகள், பொதுமக்கள் கூக்குரல், மனித சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள். யாரும் தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பதட்டங்களை சமாளிக்க ஜனநாயகத்திலிருந்து விலக முடியாது. தவறான தகவல்களை பிரச்சாரம் செய்து பிரதான எதிர்க்கட்சி சித்தாந்தவாதிகளை அடக்குவதற்கான முயற்சி வருந்தத்தக்கது. மக்கள் நம் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அதிகமாக இருந்தன. அந்த நம்பிக்கைகளின் தீவிரத்தினால்தான் கடந்த காலங்களில் சில சம்பவங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ தனது இதயத்திற்கு ஏற்பவும் நாட்டிற்காகவும் முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது எதுவுமில்லை. கடந்த காலத்திலும் இன்றும் நான் பெற்ற அதே மக்களின் அன்பைப் பெறுவது எனது பாக்கியம். அந்த வரப்பிரசாதத்தை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது. எங்கள் மரியாதைக்குரிய மதத்தலைவர்களிடம் இருந்து நான் எப்போதும் பெற்ற ஆசீர்வாதங்கள் பொருள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவை. என் அன்பு மனைவி ஷிராந்தி அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை எனக்கு வழங்குவதன் மூலம் எப்போதும் எனக்கு பலத்தை அளித்து வருகிறார். அன்றும் இன்றும் என் பக்கத்தில் இருந்த, இருக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து நான் பெறும் பாதுகாப்பு, வேலைக்கு அப்பாற்பட்ட மிகவும் அன்பான பிணைப்பாகும். நான் தங்காலையில் இருந்தாலும் விஜேராமவில் இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தான். நான் உயிருடன் இருக்கும் வரை, நாம் அனைவரும் வாழும் சிங்கக் கொடியின் நிழலில் இருக்கும் இந்த ஒன்றுபட்ட தாய்நாட்டை யாராவது காட்டிக் கொடுத்தால், எவ்வளவு துன்புறுத்தல்கள் வந்தாலும் நான் எழுந்து நிற்பேன் என்று அறிவிக்கிறேன். அந்த நாள் வந்தால், ஆதரிப்பதற்கு மகா சங்கத்தினருடன் இந்த நாட்டின் அன்பான மக்கள் இருப்பார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கிருவாப்பத்துவைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் கர்ச்சிப்பினை நன்கு அறிந்தவர்." என பதிவிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmfgq82sk00cwqplpmebt7dbn
  23. Published By: Digital Desk 3 12 Sep, 2025 | 11:35 AM மன்னார் - சிறுத்தோப்பு கடற்கரைக்கு அருகில் இந்த வாரம் 91 பறவைகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் ஆவர். கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டை கோழிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். பறவைகள் மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/224884

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.