Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
துவாரகா உரையாற்றியதாக...
என்னத்தை சொல்ல? துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள். (முகப் புத்தக தடைகள் வரலாம் எனும் நிலையில் பல விடயங்களை தவிர்க்கிறேன். பொறுத்தருள்க) அதிலிருந்தே அனைவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் போல உள்ளது. அது இந்த வீடியோவை உருவாக்கியோருக்கு கிடைத்த வெற்றிதான். காரணம் வெளியாகியுள்ள வீடியோவில் உள்ள நபர் சுவிசில் வாழும் பெண் என்பது அநேகருக்கு தெரியும். அவர் குறித்த விபரங்கள் மற்றும் படங்கள் ஏற்கனவே வந்து விட்டன. முக்காடு போட்டுக் கொண்டு போய் துவாரகா சிலரைச் சந்தித்தார் எனும் பேச்சு வந்த போதே அவர் குறித்த அனைத்து தகவல்களும் சமூக வலைத் தளங்களில் வெளியாகி , அவை இன்றும் உள்ளன. எனவே உண்மையான துவாரகா போல ஒருவரை AI தொழில் நுட்பம் மூலம் உருவாக்க வேண்டிய தேவையில்லை. அது ஒரு புறத்தே பண விரயம். அடுத்து ஏற்கனவே சுவிற்சர்லாந்தின் துர்காவ் (Thurgau) மாநிலத்தில் வாழும் மித்துஜா என அவர் குறித்த விபரங்கள் பரவலாக தெரிய வந்து சில காலம் ஆகிவிட்டது. அவரது தொலைபேசி உரையாடல் குரல் கூட பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விட்டன. இந்த நிலையில் வேறொருவரையோ அல்லது வேறொருவரது குரலையோ பயன் படுத்தினால் , மித்துஜாவை , துவாரகா எனக் காட்டியவர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம். எனவே வெளியாகியுள்ள வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படவில்லை. ஆனால் Green Screen Background அல்லது Chromakey தொழில் நுட்பத்தை பாவித்தே துவாரகா வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அந்த வீடியோவை அவதானித்தால் மித்துஜா நிறுத்தி , நிறுத்தி பேசுவதை அவதானிக்க முடியும். கமரா ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால் அநேகமுறைகள் Jump ஆவதோடு , ஒரே இடத்தில் நிற்காமல் சற்று விலகி விலகி நிற்கிறார். அந்த வீடியோவை பாருங்கள். அதை பார்த்து முடிவெடுங்கள். அதனால்தான் அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படவில்லை என முடிவு செய்ய இலகுவாகிறது. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கினால் இந்த தவறை அதை உருவாக்குவோர் விட மாட்டார்கள். செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என்றால் வீடியோவில் பேசும் சம்பந்தப்பட்டவரை தேட மாட்டார்கள். அவருக்கு பிரச்சனையும் வராது. இது சிலருக்கு பரப்பும் கதை! ஆனால் அவர்தான் பேசினார் என நம்புவோருக்கு சொல்ல நினைத்தது வேறு கதை. இன்னொன்று இலங்கையில் மாநிலங்கள் முறை இல்லை. மாகாண முறையே உள்ளது. ஆனால் அவரது பேச்சில் மாநிலங்கள் என அவர் சொல்கிறார். எனவே அவரது பேச்சை , தமிழகத்தில் அல்லது இந்தியாவில் உள்ள ஒருவரே எழுதிக் கொடுத்துள்ளார். அதை இந்த குழுவினர் கூட அவசரத்தில் அவதானிக்கமால் விட்டு விட்டார்கள். பொதுவாக அவரது பேச்சை , ஆரம்ப காலங்களில் அன்டன் பாலசிங்கம் அவர்களே எழுதிக் கொடுத்தார். அதன் பின் எழுதிய பேச்சு பாலக்குமார் அவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்டது. பாலசிங்கம் அவர்களது எழுத்துக்களில் இருந்த வீரியம் , பாலக்குமார் அவர்களது எழுத்தில் இருக்கவில்லை. புதிய வீடியோவில் இந்திய - தமிழக ஆதரவாளர்களது பேச்சிலும் , எழுத்திலும் வரும் வார்த்தை பிரயோகங்களே உள்ளன. அவர்களது பரப்புரை என்பதை யாரும் தவறு சொல்ல முடியாது. ஆனால் ஈழ தலைவர்களது பேச்சில் அவர்களது எண்ணக் கருத்துகள் வந்தால் , அங்கே உள்ள இடைவெளியை அனைவரும் உணருவார்கள். அதை இங்கே உணர முடிகிறது. அடுத்து சிலர் டப் (யாரோ குரல் கொடுத்துள்ளார்கள்) பண்ணியது சரியில்லை என எழுதியிருந்தார்கள். குரல் வாயசைப்புக்கு ஏற்ற விதத்தில் சிங் ஆகவில்லை (பொருந்தவில்லை) என்பது உண்மைதான். அதற்கு காரணமே பலமுறை நிறுத்தி நிறுத்தி மித்துஜா பேசியதால் , அதை எடிட்ங்கில் கோர்க்கும் அல்லது இணைக்கும் போது , ஒலியை சரியாக சிங் பண்ணாமல் அலட்சியமாக இருந்துள்ளார்கள். ஆனால் அதில் உள்ளது மித்துஜாவின் குரல்தானே தவிர வேறு யாரும் டபிங் கொடுக்கவில்லை. இப்படியான அநேக குளறுபடிகளால் , அநேகரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான காணோளி (விடியோ) நகைப்புக்கு இலக்காகிவிட்டது. அடுத்த மேடையில் சந்திக்கலாம். Better Luck Next Time - ஜீவன் 📸 Look at this post on Facebook https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035Tm5SGWCepFit6VYNCnw5dtM2nQm9SfwPuHSxBpbbWT3a2gQXe4eUK3cjoZ9wCZGl&id=823993901&mibextid=WC7FNe
-
துவாரகா உரையாற்றியதாக...
பவுடர் டப்பாவுக்கு கட்டியம் கூறிய சிலரை பற்றி..
-
துவாரகா உரையாற்றியதாக...
பொட்டம்மான் இல்லை.. இயேசு கிறிஸ்த்துவாம்… சண்டை இஸ்ரேலுக்கும் பாலஸ்த்தினுக்கும் நடக்குரதால இண்டர் நாசனல் லெவல்ல பிளான் போட்டிருக்கிறாங்கள்.. வாற கிறிஸ்மஸ் ஓட காசி லோக்கல் பிரச்சினைக்கு எல்லாம் தலையிடாது.. ஒன்லி இண்டெர்ன்நெஷனல் ப்ராப்ளம்ஸ்…
-
துவாரகா உரையாற்றியதாக...
சரி இப்ப உங்களுக்கு தலைவரும் குடும்பமும் வீரச்சாவடையவில்லை என்பதுதான் உண்மை.. அதன் மூலம்தான் மக்களுக்கான இலட்சியங்களை கொன்றொழிக்க முடியாது.. இல்லையா.. அப்படி என்றால் நீங்களும் உங்களைபோன்ற சிந்தனையில் இருப்பவர்களும் என்ன செய்திருக்கவேண்டும்..? துவாரக இருக்கிறார் ஆனால் இந்த பவுடர் டப்பா துவாரகா இல்லை என்று சொல்லி இருக்கவேண்டும்.. ஒரு பவுடர் டப்பாவை வைத்து ஒரு குழு செய்யும் பித்தலாட்டத்தை எதிர்த்து நிஜமான துவாரக வருவார் என்று எழுதி இருக்கவேண்டும்.. ஆனால் இந்த கூட்டம் துவாரகா என்ற அடையாளத்தையே காமடி ஆக்குவதை மெளனமாக கடந்து சென்றுகொண்டு துவாராக இருக்கிறார் அவர்தான் இவர் என்பது இந்த வீடியோ தயாரித்த போட்டோ சொப் குரூப்புக்கு ஆதரவு கொடுப்பதுதான..
-
துவாரகா உரையாற்றியதாக...
"தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன் களத்தில் நிற்பாள்" -காசியானத்தன் “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்.. இந்தியாவும் புலம் பெயர் தீய சக்திகளும் சேர்ந்து தமிழர்களையும் மாவீரத்தையும் களங்கப்படுத்த உதயமானதுதான் இந்த துவாராக ஒப்பிறேசன… ஆனால் அது தமிழ்நாடு ஈழம் புலம்பெயர் தேசம் என்று ஒட்டு மொத்த தமிழ் மக்களாலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு எதிர்ப்புடனும் கேலி கிண்டலாகவும் கடந்து செல்கிறது.. அதேவேளை மறுவளத்தில் மாவீரர்களையும் போராட்டத்தையும் மனதில் சுமக்கும் லட்சோப லட்சம் சாதாரண பொதுமக்கள் இம்முறை வழமைக்கு மாறாக தாமாக தமிழர் தேசமெங்கும் அதிகளவாக கூடி மாவீரத்தை போற்றி உள்ளனர்… இது தமிழர்களின் தணியாத வேட்கையினை உலகுக்கு பறை சாற்றுவதாக உள்ளது.. இவளவு உயிர் போயும் விடுதலை இல்லையே என சில வேடீக்கை மனிதருள்ள பூமியின் நூறு வருடங்களைக் கடந்து விடுதலை அடைந்த அடையப் போராடும் மனித குலம் பற்றிய சரிதத்தை எடுத்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது… அந்தத் தேவையின் ஆணிவேரில் தழைத்த பூஞ்செடிகளே இன்று துயிலுமில்லம் தோறும் ஏற்றப்பட்ட பல்லாயிரம் அக்னிச் சுடர்கள் என்பதை உலகறியும்.. இத்தகு தருணத்தில் எம்மைக் கொன்றொழித்த இந்திய மத்திய அரசும் அதன் ஒத்தோடிகள் செய்யும் துரோகமும் இனியும் எடுபடாது என்பதை இம் மாவீரர்தினம் உணர்த்தியுள்ளது இன்னும் உணர்த்தும்…
-
துவாரகா உரையாற்றியதாக...
விசுகண்ணையும் உதிலை ஓராள்..😂 உத நம்பி இதுக்கு விசுகண்ணை குடுத்த பில்டப் இருக்கே..🤦🏻
-
துவாரகா உரையாற்றியதாக...
இப்படி நீங்கள் கேட்பதுதான் இந்த வீடியோ தயாரித்தவர்களின் நோக்கத்திற்கு துணை போகிறது.. அறிவார்ந்த பகுத்தறிவுள்ள எவரும் இதை ஒரு பொருட்டாகவே எடுக்க மாட்டார்கள்..
-
1115C5F1-3692-45D3-BF72-03962BCEE914.jpeg
From the album: ஓணாண்டி
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
குஷ்பு தனக்கு வந்தா ரத்தம் மன்சூர் அலிகானுக்கு வந்தா தக்காளி சட்னி.. விதி வலியது.. மன்சூர் அலிகானை மகளிர் ஆணையத்தில் மாட்டிவிட்டு விடியுறதுக்குள்ள இந்தம்மாவு மன்னிப்பு கேட்கிற நிலமை ஆச்சு..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது மாதிரி கிறுக்குத்தனமா பேசற ஆளுங்கள பாக்கிறப்போ ஆளு செட் அப் பண்ணி கூட்டத்துல உருள விடுர போதகர்மார் மைண்ட் வாய்ஸ்- அப்பாடா நம்ப பொழப்புக்கு பிரச்சனை இல்லை…🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பால் தினகரன் குறை தீர்க்கும்கூட்டத்துக்கு போயிட்டு வாணே…!!! எல்லாம் சரி ஆயிடும்..🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
திருடனும் கூட்டத்தோட சேந்து ஜயோ திருடன் திருடன் எண்டு கத்தினமாதிரி இருக்கு..🤣 சீ சீ இஸ்ரேல் அப்பிடி எல்லாம் செய்யாது.. குருசோ படிச்ச பைபிள்ள உதெல்லாம் இல்ல.. மூட நம்பிக்கை உது.. உலக அமைதிக்கு சிக்கலான விடயம் நீங்கள் எழுதுறது..🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தல அதை செய்யுங்கோ முதல்ல… நீங்கள் வாங்கி விக்கும் பங்குகளையும் இணையுங்கோ.. பாத்து எனக்கு ஒரு தெளிவு வரட்டும்.. கண்ணை கட்டி காட்டில விட்டமாரி இருக்கு இந்த பங்கு வர்த்தக விடயங்கள் எனக்கு.. ஆசை நிறைய இருந்தும் விளங்காததால செய்ய முடியல..🥲🥲
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆரோ நல்லா மண்டைய கழுவி விட்டிருக்கானுவள்…😂
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இத எங்கையோ கேட்டிருக்கனே…. ஆ ஞாபகம் வந்திட்டு… இது சண்டை என்றால் ஜனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தமிழர்களின் அழிவை நியாயப்படுத்தி சட்டசபையில் முழங்கிய ஜெயலிதாவின் குரல்… 👍 👍
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்யாவுக்கு வந்தா தக்காளி சட்னி..
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
காலாடுது… உசிரோடதான் இருக்கிறாங்கள் போல..🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் இறைமை உள்ள ஒரு ஜனநாயக நாடு.. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு.. யாருக்கும் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.. ஆனால் இஸ்ரேல் அப்படி அல்ல.. ஹமாசைபோல அப்பாவி மக்களை கண்ணைமூடிக்கொண்டு கொன்று அளிக்க முடியாது.. ஒரு இறைமை உள்ள ஜனநாயக அரசு அப்பாவி மக்களை கொல்லாமல் மாற்றுவழிகளை கண்டுபிடிக்கவேடும் கமாசை அளிக்க.. இப்படி நீங்கள் எழுதுவது போல் எல்லாம் ஒரு ஜனநாயக நாடு பேசமுடியாது..
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முள்ளிவாய்க்காலை நக்கலடித்து எள்ளி நகையாடிய இன்றும் அதை சொல்லி சமூகவலைத்தளங்களில் நக்கல்டிக்கும் சிங்களவர்கள் மற்றும் இலங்கை முஸ்லீம்களை ஞாபகப்படுத்துகின்றனர்..
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
இவரது ஓவியங்களை பாத்திட்டு அப்பவும் நான் நினைச்சன் இவர் யாழில் மட்டும் சும்மா கீறிவிட்டு போற ஆள் இல்லை இவர் இதில் பலவருட அனுபவமுள்ள தொழில் நேர்த்தியான கலைஞராக இருக்கவேண்டும் என்று.. நான் நினைச்சது சரிதான்.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜயா..
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட 32 வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா அபு நாடா எழுதிய கடைசிக் கவிதை.. என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது நண்பர்கள் சின்னச் சின்ன சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள் ஏவுகணைகளைவிட வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை என்னால் மீட்க முடியவில்லை காக்க முடியவில்லை எனக்கு அழ முடியவில்லை எனக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது இது வெறும் பெயர்கள் அல்ல வேறு பெயர்களிலும் முகங்களிலும் இருந்த அவர்களும் நானே நானும் அவர்களே அல்லாவே மாபெரும் இச் "சா" விருந்தில் நான் என்ன செய்யமுடியும் எந்தக் கொம்பனாலும் கனவிலுங் கூட என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது - ஹெபா அபு நாடா ஹெபா புனித மெக்கா நகரில் 1991ல் பிறந்தவர். காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் biochemistry படித்தவர். பின் master in clinical nutrition காசாவிலுள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஒக்சிசன் இறந்தவர்களுக்கானதல்ல என்ற அரபு நாவலின் ஆசிரியர். ஹெபாவின் முகநூல் இணைப்பு https://www.facebook.com/profile.php?id=100002457890081&mibextid=ZbWKwL. அவர் கொல்லப்படுவதற்கு முதல் நாள் தன் முகநூலில் அறபியில் போட்ட பதிவுக்கு முகநூல் தந்த ஆங்கிலத்தைதே நான் மேலே தமிழில் தட்டுத்தடுமாறி தமிழில் மொழிபெயர்த்தேன். போர்க்களத்திலிருந்து அவா அவலத்தில் போட்ட ஒரு பதிவே கவித்துவமாகியிருக்கிறது. - Arun ampalavanar ஆறுதலா ஒருத்தன் அணைச்சதும் அந்த சிறுவனோட அழுகை... Palestinian child in shock after surviving Israeli attack in Gaza | AJ #shorts
- திண்ணை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எனக்கு வெளிநாட்டில் அதுவும் போரின் சுவடுகளே இல்லாத மேலைநாடுகளில் இருந்து கொண்டு நன்னி( நன்னி வெளியில் இப்படி உள்ள பலரின் யாழ் பிரதி நிதி) போன்றவர்கள் எழுதுவது போரின் ரொம்ப தொலைவில் கண்டி கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கொண்டு எமது பாடசாலைகள் சந்தைகள் கோவில்கள் தேவாலயங்கள் வைத்தியசாலைகள் மீது சிங்களப்படைகள் குண்டுவீசியபோது பலநூறு பொதுமக்கள் இறந்ததை ஆங்கில ஊடகங்கள் எழுதியபோது இறந்தவர்களவ தமிழர்கள் அல்ல புலிகள் என்றும் தாக்கப்பட்டது புலிகள் முகாம் என்றும் அப்பாவி தமிழர்களை புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற போராடும் ராணுவத்தினர் என்றும் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி எழுதிய சிங்களவர்கள் நாபகம் வருகின்றனர்..