Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
தவறு.. வெட்டினவர் மருத்துவர் வெட்டு வாங்கியவர் கவின்சிலர்.. செய்தியை வாசிக்கும் ஆர்வக்கோளாறில் தப்பு தப்பா வாசிச்சு தள்ளி இருக்கிறியள்.. 😂
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
ஒட்டவைக்க முடியாது எண்டு நினைக்கிறன்.. ஒட்டினாலும் ஒண்டுக்கு இருக்கலாம் ஆனால் முந்தினமாதிரி ஓடி ஆடி விளையாட முடியாது எண்டு நினைக்கிறன்.. உடைஞ்சு போம்..😮
-
சம்பந்தர் காலமானார்
- சம்பந்தர் காலமானார்
யாழ்ப்பாணத்துக்கு ட்க்ளஸ் மாதிரி மட்டக்கிளப்புக்கு கருணா பிள்ளையான்.. இவர்களோடு ஒப்பிடும்போது அந்தளவுக்கு சம்பந்தர் செய்யவில்லை.. டகளஸ் கருணா ஓட ஒப்பிடேக்க பாவம் நல்ல மனுசன் சம்பந்தர்..- சம்பந்தர் காலமானார்
ஒரு வேளை டக்ளஸ் இறந்தால் இதைவிட மோசமாக திட்டுவார்கள்.. இந்த சோசல்மீடியா இணையம் இதைப்பற்றி எதுவுமே தெரியாத எங்கள் ஊரில் இருக்கும் பல அம்மா அப்பா பாட்டி தாத்தா அப்பத்தாக்கள் எவ்வளவு கேவலமாந்திட்டுவார்களோ அவ்வளவு கேவலமாக திட்டுவார்கள்.. எனக்கு தெரிஞ்சு மட்டும் சமாதான காலத்தின் இறுதிப்பகுதிகளில்(2004-2006) மட்டும் ஒரு முப்பது பேரை ஸ்கூட்டி பெப்பில் வந்து ஈபிடியினர் ராணுவப்புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து சுட்டிருப்பார்கள்.. சீலன் உட்பட எனது நண்பர்கள் மூன்று பேரை சுட்டிருந்தனர்.. என்னைக்கூட ஆள்மாறி தேடி வந்திருந்தனர்.. ஒரு மயிரிழையில் நான் வன்னிக்கு பின் காணியால் வெளிகிட்டு பஸ் ஏறி போனதால் தப்பினன்.. தேத்தண்ணிக்கடை கண்ணன், பலசரக்குக்கடை சின்ராசண்ணை, பிரபாகரன் பிறந்த நாளுக்கு பொங்கல் பொங்கிய எங்கூரு வர்த்த்க சங்கர்தலைவர், கப்பம் குடுக்காததால் சுடப்பட்ட நகைக்கடை அண்ணை, பஸ் ஓனர் பாலா அண்ணை, ஆட்டோ ஓடுற பொடியள் மட்டும் ஒரு பத்து பேர் வரும் எங்கட ஏரியாவில்.. வரலாற்றின் இடியமின் யாழ்ப்பாண மக்களுக்கு இந்த டக்ளஸ் உம் அவன் கூட்டமும்..- சம்பந்தர் காலமானார்
சம்பந்தன் திருகோணமலையில் இன்னொரு புதிய அரசியல் பிரதிநிதித்துவம் வருவதற்குத் தடையாய் இருந்த ஒருவர்...பத்து வருசத்துக்கு முதலே செய்திருக்கவேண்டியது...தன் மூப்பு தெரிந்து கடந்த தேர்தலில் ஆவது சம்பந்தன் போட்டியிட்டிருக்ககூடாது...திருகோணமலையில் ஏற்கனவே இருந்த பாஉ ஆக இருந்த நேமிநாதன் எந்தவித செயற்பாடும் இல்லாதவர்... அதுபோலவே சம்பந்தனும் செயல் திறன் அற்ற மனிதர்... தான் ஆளுமையில் இருக்கும்போதே இன்னொரு தலைவரை திருகோணமலைக்கு அடையாளம் காட்டி தூக்கி விட்டிருக்கவேண்டும்.. 70 வருடங்களாக அசையாமல் இருக்கும் தலைவர்கள் சொல்வது மட்டுமே சரி என்ற சிந்தனை மட்டுமே இப்போது வரை தொடர்கிறது மாற்று சிந்தனைகள் இல்லாமே போய்விடுகிறது , புதிய இளம் தலைவர்கள் உருவாகாமலே போய்விட்டது ஆயுத போராட்டத்திலும் ஐனநாயக போராட்டத்தலும் இடம்பெற்ற மிகப்பெரிய பிழை...இதை அடுத்த தலைமுறை தலைவர்களாவது சரிசெய்ய வேண்டும்...- சம்பந்தர் காலமானார்
அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு தாறம் என்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்.. பிரியாணியும் 1000 ஓவாயும் கோட்டரும் குடுக்கும் திமுகா அதிமுகா மாதிரி இனப்பிரச்சினை தீர்வை சொல்லியே பேய்க்காட்டி ஓட்டு வாங்குறாங்கள்.. மனநிலை குழம்பியவர்கள் போல் கேள்வி கேட்க வேண்டாம்... கடுப்பாகுது முடியல...- சம்பந்தர் காலமானார்
மூடிட்டு இருக்கவும் என்ற சொல்லை தமிழந்தான் பாவிப்பான் ஆங்கிலேயன்shut up your mouth என்ற சொல்லை பாவிப்பான்.. 😃- சம்பந்தர் காலமானார்
ஒரு தொகுதி பணக்கார தமிழர்கூட்டம் நாட்டை விட்டு வெளியேற இன்னொரு புறம் போராடி இன்றும் ஏழைகளாக வாழவழி இன்றி வாடும் முன்னால் போராளிகள் ஒரு புறம்... தமிழர் பகுதிகளில் கல்வி வேலை வாய்ப்புகள் இன்றி வாடும் ஏழைகள் ஒரு புறம்.. ஏழைகளுக்கு உதவி செய்ய இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒருபோதும் வருவதும் இல்லை அந்த மக்களின் துயரங்களை காது கொடுத்து கேட்பதும் இல்லை.. ஓட்டு கேட்டு வந்ததுக்கு அப்புறம் இவர்களை அந்த மக்கள் பார்த்ததும் இல்லை.. எங்காவது ஆமிக்கு எதிரா எதாவது போராட்டம் என்டால் உசுப்பேத்தல் கதை சொல்லிக்கொன்டு விறைப்பாய் போட்டோக்கு போஸ் குடுத்துகொன்டு நிப்பாங்கள்.. சரி இனப்பிரச்சினைக்காவது ஏதாவது தீர்வு வாங்கி கொடுத்தாங்களா என்றால் இன்று வரை ஒரு துரும்பைகூட செய்யவில்லை... தமிழர்களுக்கு இருப்பது இனப்பிரச்சினை "மட்டுமே" என்பதுபோல் அதைப்பற்றி மட்டுமே பேசி தமிழ்மக்களை உசுப்பேத்தி சுயலாப அரசியல் செய்யும் "அரசியல் மாஃபியா" குழு ஒன்றின் தலைவர் இறந்துபோயிருக்கிறார்... அவ்வளவுதான்... அதுக்கு பந்தி பந்தியா ரைட்டப்பெல்லாம் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள் மக்களே.. இனிமேலாவது இனப்பிரச்சினை தாண்டி அன்றாட பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளை பேசுபொருளாக்குங்கள்...- சம்பந்தர் காலமானார்
முரட்டு முட்டு..- சம்பந்தர் காலமானார்
நான் சம்பந்தரை மட்டுமல்ல சைக்கிள் ரீமை இதைவிட மோசமாக திட்டுவேன்.. கள்ளனுவள்.. தமிழ்தேசியத்தை காட்டி உசுப்பேத்தி எப்பிடி பேய்க்காட்டுராணுவள்.. நிற்க.. அரசியல்வாதிகள் சாகும்போது ஒருபகுதி அனுதாபம் தெரிவிக்கும் வேளை இன்னொரு பகுதி திட்டத்தான் செய்யும்.. அரசியலுக்கு வரும்போதே இதை அறிந்துதான் வருகிறார்கள்.. கருணாநிதி யெயலலிதாகூட இதுக்கு விதி விலக்கல்ல.. ஏன் தலைவர் பிரபாகரனுக்கே மண்டை பிளந்து கிடகிறான் என்று ஒருமையில் திட்டிய மாற்றுக்கருத்தாளர்கள் இருக்கின்றனர்.. எனவே சம்பந்தனை திட்டுபவர்கள் திட்டுவார்கள் அனுதாபம் தெரிவிப்பவர்கள் தெரிவிப்பார்கள்..- சம்பந்தர் காலமானார்
அப்ப இந்தியன் பற்றி நான் இலங்கையன் கதைக்ககூடாது எண்டு மூடிட்டு இருக்கவேணும் நீங்கள்..- சம்பந்தர் காலமானார்
இந்த அறிவு சீமானை குறை சொல்லும்போதும வந்திருக்கணும் உங்களுக்கு..- சம்பந்தர் காலமானார்
தமிழ் இனத்தின் வரலாற்றுத்துயரங்களில் ஒன்று விடைபெற்றது.. ஆழ்ந்த அனுதாபங்கள் சார்ந்தவர்களுக்கு..- பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
செலன்ஸ்கி வெகுவிரையில் எல்லோராலும் கைவிடப்படும் நாள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகிறது.. பிரான்சில் பிரித்தானியாவில் ஜேர்மனியில் அமெரிக்காவில் என முக்கிய வல்லரசு நாடுகளில் வலதுசாரிகள் கைகள் மேலோங்குகின்றன.. அவர்கள் உள்ளூர் மக்களின் குரலாக ஒலிக்கிறார்கள்.. இடதுசாரிகளும் நடு நிலைவாதிகளும் உள்ளூர் மக்களின் கஸ்ரங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்காமல் உக்கிரேனுக்கு பில்லியன்களில் அள்ளிவழங்கும் அறிவிப்பை வெளியிடும்போது எண்ணெய்க்கும் கரண்டுபில்லுக்கும் அல்லாடும் உள்ளூர் வெள்ளைகள் செம காண்டாகிறார்கள.. அனைத்து வலதுசாரிகளின் முக்கிய அறிவுப்புகளில் ஒன்று உக்கிரேன் போருக்கு ஆதரவு இல்லை என்பது..- இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
சரியாக சொன்னீர்கள் .. இந்த விடயத்தில் அருணாச்சலம் மீது குறைபட ஏதுமில்லை.. அவர் வெறும் அம்புதான்.. சீமான் என்று வரும்போது மட்டும் எதிர்ப்பு நிலை எடுக்கும் மற்றைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்று வரும்போது மட்டும் நடுநிலை எடுத்து நக்கல் நையாண்டி சீண்டல் கருத்துக்களை சரியாக செய்ற்பட்டு நீக்கும் யாழ்மீதுதான்(ஜ மீன் மட்டிறுத்தினர்கள்) எமது வருத்தமும் கோபமும் கண்டனமும்..- இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
உங்களிடம் நான் விளக்கம் கேட்கவில்லை.. நான் யாழை நோக்கித்தான் அந்த கேள்வியை முன்வைத்திருக்கிறேன்.. சீமான் மட்டும்தான் எங்களது பிரச்சினையை தமிழ்நாட்டில் பேசுகிறாரா?சீமான் பேசினால் மட்டும்தான் உங்களுக்கு அரசியல் லாபமா..? சீமானுக்கு முன்னாடியே பலவருடங்களில் இருந்து இன்றுவரை வைகோ, தொல்திருமாவளவன், திமுக, அதிமுக, ராமதாஸ்,வேல்முருகன்,ect.. செய்வதெல்லாம் தக்காளி தொக்கா..? சீமானுக்கு மட்டும்தான் யாழில் நக்கல் நையாண்டி கருத்துக்கள் கருத்துபடங்கள் வரும் அனுமதிக்கப்படுமா..? சீமான் என்று வந்தால் இங்கு பலருக்கு தமிழக அரசியலில் ஈடுபாடு வந்துவிடும் மற்றும்படி தமிழக அரசியலில் அவர்கள் நவதுவார்ங்களையும் பொத்திக்கொண்டு தீக்கோழிபோல் தலையை மண்ணில் புதைத்துவிடுவார்கள்.. லங்காபுவத்துபோல் பொய்யை மூலதனமாக்கி உங்கள் வெறுப்பை போகிறபோக்கில் அடித்து விட்டிருக்கிறீர்கள்.. யாழில் எழுதுபவர்கள் வாசிப்பவர்கள் பேபிகள் அல்ல.. கருத்துக்கள் இல்லாமல் தான் திரிக்கு திரி சீமானுக்கு படங்கள் வரைகிறீர்கள்.. நம்புகிறோம்.. இதுக்கு ஸ்டாலினுக்கு மோடிக்கு கருணாநிதிக்கு ஜெயலிதாக்கு வைகோவுக்கு, ராமதாசுக்கு, திருமாக்கு என்று தலா ஒவ்வொரு கருத்துப்படம் போட்டுவிடுங்கோ.. சீமானுக்கு அல்ல.. ஆட்சியில் இருந்தவர்கள் இருப்பவர்கள், பங்கெடுத்தவர்கள் பங்கெடுப்பவர்கள் இவர்களே.. ஆமியை அடித்த மீனவன் சீமான் உசுப்பேத்திதான் நான் அடிச்சேன் என்று எங்காவது சொல்லி இருக்கிறாரா? அவனுக்கும் அந்த ஆமிக்காரனுக்கும் என்ன தள்ளுமுள்ளோ..? யாருக்கும் ஏன் என்று தெரியாது ஊரில் முன்பு இயக்கம் றோட்டில் ஆமிக்கு குண்டெறியும்போது கண்டபாட்டுக்கு சுட்டுவிட்டு செத்த அப்பாவி மக்களை குண்டெறிந்த புலிகள் என்று சொல்வதுபோல் இருக்கு உங்கள் உருட்டும் பிரட்டும்.. எதோட எதை கோத்து விடுறியள் உங்கள் வெறுப்பை நியாயப்படுத்த.. ஒரு சிங்கள ஆமி செத்ததுக்கு எவ்வளவு ரத்தம் துடிக்குது உங்களுக்கு.. ஒரு சகதமிழனுக்கு நக்கல் நையாண்டி.. ம்ம்ம்… காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது.. எப்பவுமே பல்வீனமானவர்களைத்தான் எல்லோரும் நக்கலடிப்பார்கள்.. ஒரு வகுப்பில் கூட ஏழைமாணவன் அல்லது படிப்பு கொஞ்சம் குறைவான மாணவனைத்தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள்.. இதுவே அவனிடம் பணம் இருந்தால் அல்லது ஆஜானபாகுவாக இருந்தால் மூச்சும் காட்டமாட்டார்கள்..இது மனித இனத்தின் உளவியல்.. இங்கு யாழிலும் பலர் ஆட்சியில் இருந்த இருக்கும் கட்சிகளை விட்டு விட்டு சீமானை பிடித்து தொங்கும் காரணமும் அதுதான்.. காலம் மாறும் அப்போ சந்திப்போம்..- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ரஷ்யா ஒரு சிறுபகுதிதான் ஜரோப்பாவில் உள்ளது மிகுதி பெரும்பகுதி ஆசியாவில் உள்ளது.. பல ஆசிய பூர்வீக இனங்களை விழுங்கி உருவானதுதான் ரஷ்யா.. ரஷ்யா என்றதும் எங்களுக்கு நினைவுக்கு வருவது வெள்ளை ரஷ்யர்கள்தான்.. ஆனால் அதுவல்ல நிஜம்.. ரஷ்யா பல ஆசிய மக்களின் முகங்களை விழுங்கி உருவாகி உள்ளது( நான் சொல்வது சப்பட்டை என்று நம்மாளுகள் சொல்லும் தென்கிழக்காசிய மக்கள்).(தமிழர்களை முழுங்கி உருவான சிறீலங்கா போல்) ஆக உண்மையில் ரஷ்யா ஜரோப்பாவா ஆசியாவா,,?- இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
தமிழக கட்சிகளின் பிரச்சார வீடியோக்கள் இணைப்புகள் யாழில் தடைசெய்யப்பட்டதுபோல் தேவை இல்லாத இடங்களில் எல்லாம் ஒரு கட்சியை பற்றியே வெறுப்பு பிரச்சாரங்களுக்கு அனுமதி உண்டா..?- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
அதெல்லாம் முடியாது.. இதுதான் அந்த சுண்டல் என்பதற்கு என்ன அத்தாட்சி..?- God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
ஒரு ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்து ஒரு பிள்ளையை தத்து எடுக்க முடியும் என்றால் மேஜர் ஆன அன்றே(18 வயசான உடன்) ஒரு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையை தத்து எடுக்க எல்லா உரிமையும் இருக்குத்தானே..? ஆணும் ஆணும்/ பெண்ணும் தத்தெடுத்தால் என்ன ஆண்/பெண் தனிய தத்தெடுத்தால் என்ன..? நாய் பூனை ஆடு மாட்டை யாரும் தத்தெடுப்பதுபோல் இதையும் ஏன் அனுமதிக்கவில்லை..?😳- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
அருமையான கட்டுரை தில்லை அண்ணா.. என் மனதில் இருந்ததை கூட்டிசேர்த்து எழுத தவித்துக்கொண்டிருந்ததை ஒரு அருவிபோல கொட்டி இருக்கிறீர்கள்..- வயகரா ஏற்படுத்தும் மாற்றம் : ஆய்வில் வெளியான புதிய தகவல்
வயக்காராவ குடிச்சுட்டு இங்கிலாந்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் எண்டு எழுதுவாங்கள்..- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
பொதுவேட்பாளரோ தனி வேட்பாளரோ சிங்கள வேட்பாளரோ யாராலும் அரசியல் பிரச்சினைக்கு ஒரு ஆணியும் புடுங்கப்போவதில்லை.. அஞ்சு சதத்துக்கு பிரஜோசனுமும் இல்லை.. ஆனால் புலத்தில் இருப்பவர்களுக்கு, நாளைக்கு உலையில அரிசி கொதிக்கவேணும், பொடியனுக்கு அரசாங்கவேலை ஒண்டு எடுக்கோனும், ஏதாவது உதவித்திட்டம் வருமோ, இந்தமாதம் வயல் தோட்டம் பயிர் அழிவுக்கு காசு தருவாங்களோ, சமூர்த்தி ஏதும் வருமோ, விதானை வேலைக்கு எடுப்பாங்களோ, எலெக்ரிக் போட்டில எடுப்பாங்களோ…?? இப்படி எந்த சிக்கலும் இல்லாததால் உலக நாடுகளுக்கு கெத்துக்காட்ட பொது வேட்பாளரை ஆதரிக்கவேணும் எண்டு ஃபன்னெடுப்பாங்கள்.. ஊரில் இருப்பவர்கள் வெல்லக்கூடிய அதேவேளை நமக்கும் மேல உள்ள அன்றாட பிரச்சினைக்கு தீர்வு ஏதும் கிடைக்கும் என்ற நோக்கில் சிந்தித்து பிரதான கட்சியின் வேட்பாளர்கள் யாருக்காவது போடத்தான் சான்ஸ் அதிகம்.. ஆனால் ஆர் வந்தாலும் அரசியல் தீர்வு எண்ட விடயத்தில் அஞ்சு சதத்துக்கும் பிரயோசனம் இல்ல.. பொறுத்திருந்து பாப்பம்..- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ரெண்ட் ஆக்குவது சட்டம் இயற்றுவதை அல்ல குறிப்பிடுவது.. தனது ஒவ்வொரு பிரசையையும் காக்கவேண்டியது அரசின் கடமை.. ஆனால் எல் ஜீ பி ரி பிரைட் மார்ச் சோ ஏதோவொண்டு ரீவி சமூகவலைத்தள விளம்பரங்களுடன் பெருமெடுப்பில் பேரணியாக நடத்துகிறார்கள்.. பல்வேறு ஆதரவு பிரச்சாரங்களை நடத்துகிறார்கள்.. உடுப்புகள் அடையாளங்கள் எல்லாம் விக்கிறார்கள்.. பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் பேசுகிறார்கள்.. ஓரின சேர்க்கை என்றால் என்ன..? அது தானாக உடலில் ஹோர்மன்களின் மாற்றங்களால் வருவது.. ஆணும் பெண்ணும் எப்படி பிறப்பால் ஹோர்மன்களால் தீர்மானிக்கப்படுகிறோமோ அதுபோல் அவர்களும்.. நாம் திணிக்கக்குடாது.. ஆகவே குமாரச்சமியோ கப்பிதனோ போன்ற பெற்றோர்கள் இந்த ரெண்டாக்கலை பார்க்கும்போது தமது பிள்ளைகளுக்கும் சமூக அக்கறை இருந்தால் சமூகத்துக்கும் இது உன் உடம்பில் இயற்கையாக வரவேணும் நீயாக திணிப்பதோ விரும்பி ஈடுபடுவதோ அல்ல என்பதை எழுத பேச எல்லா உரிமையும் இருக்கு.. உங்களுக்கு ஓரினசேர்க்கையை விளம்பரப்படுத்த உரிமை இருக்கு என்றால் இவர்களுக்கும் இயற்கையாக ஹோர்மன்களினால் நீ ஓரினச்சேர்க்கையாளனாக இல்லாமல் இயற்கைக்கு மாறாக நீ உனக்குள் அந்த எண்ணத்தை திணித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறு அதனால் வரும் நோய்கள் குடும்ப கட்டமைப்பு சிதைவு ஆகியவற்றைன்பேசவும் எழுதவும் உரிமை இருக்கிறது.. - சம்பந்தர் காலமானார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.