Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. ஓ இண்டைக்கு தலயின்ர பிறந்தநாளா.. அப்ப வீட்டுல வெறிக்கூத்தாதான் இருக்கும்.. ஜக்டானியல் நண்டுப்பிரட்டல் கணவாய்ப்பொரியல் குடல்கறி புட்டு எண்டு பெரிய லிஸ்ட்டா இருக்கும்.. குடியும் குடித்தனமுமாய் குடிச்சு வெறிச்சு குதூகலமா நூறாண்டு வாழ்க..👍
  2. குடும்பகாரன் எனக்கென்ன விசரே வீட்டில சாப்படு இருக்க உதுகள மேய.. நானா பாக்கிரன் வாட்ஸ் அப் பேஸ்புக்குன்னு சும்மா சும்மா குருப்புவள்ள அட்பண்ணி வலுக்கட்டாயமா அனுப்புறாங்கள்.. மேற்கொண்டு விசாரணை செய்தால் உண்மை தெரியும்..😂
  3. முதல்ல ஆண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெண்களை ஓவர் அக்டிங் பண்ணாமல் எடுக்க சொல்லுங்கள்..😡😡😡
  4. துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி... // துவாரகாவின் பெயரால் நவம்பர் 27 (2023) அன்று வெளிவந்திருக்கும் வீடியோவில் இருப்பது துவாரகா அல்ல. நான் அறிந்தவரையில், இயக்கப் பணிகளில் இருந்த துவாரகா இறுதிப் போர்க்காலத்திலே தியாகச்சாவு அடைந்துவிட்டார். துவாரகா மற்றும் அவரது அப்பாவின் பெயர்களால் முன்னெடுக்கப்படும் 'மோசடி' நடவடிக்கைகள், கடுமையான கண்டனத்திற்குரியவை. அவை தனியாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை. துவாரகாவின் பெரியப்பாவின் மகன் (கார்த்திக் மனோகரன்) டென்மார்க் நாட்டில் இருக்கிறார். மரபணுப் பரிசோதனை மூலம் உண்மையான துவாரகாவை அடையாளம் காணக்கூடிய பொறிமுறைக்குத் தனது தந்தையும் தானும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். துவாரகா பெயரில் வரக்கூடியவர் யாராயினும், முதலில் மரபணுப் பரிசோதனை மூலம் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. துவாரகா பெயரில் ஆள் மாறாட்டமும் அரசியல் மோசடியும் செய்யத் துணிபவர்கள், நம்பகத்தன்மை கொண்ட மரபணுப் பரிசோதனைக்கு உடன்படமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். குளறுபடிகள் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மரபணுப் பரிசோதனை முறைப்படியாக நடக்குமெனில், 'கூட்டுக் களவாணிகள்' அம்பலப்பட்டுவிடுவார்கள். துவாரகாவின் தியாகச்சாவு இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்துவிட்டதையோ அவரது குடும்பத்தினரின் பங்கேற்புடன் இறுதி நிகழ்வுகள் நடந்ததையோ அப்போது வெகு சிலரே அறிந்திருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் எவருமே இறுதிப் போரில் இருந்து தப்பிப்பிழைக்கவில்லை. ஆக, துவாரகாவோ அவரது குடும்பத்தினரோ இப்போது இல்லை இதை எழுதத்தொடங்கிய பின்னர், துவாரகாவை நன்கு அறிந்த, துவாரகாவின் அண்ணனோடு (சாள்ஸ் அன்ரனி) இயக்கப் பணிகளில் இறுதிவரை இருந்த, எனது நீண்டகால நெருங்கிய நண்பர் ஒருவருடன் நீண்ட நேரம் உரையாடினேன். வெற்றுச் சடங்குகளாகவோ அடையாள அரசியலின் வினைத்திறன் குன்றிய செயற்பாடாகவோ பொருளாதார வளங்களை வீணடிக்கும் கொண்டாட்டங்களாகவோ அஞ்சலி நிகழ்வுகள் அமைந்துவிடக்கூடாது. அஞ்சலி நிகழ்வுகளில், அரசியல் முதிர்ச்சியும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தேசிய ஒருமைப்பாடும் சனநாயகப் பண்புகளும் அவசியமானவை. உயிர்த்தியாகிகளை நினைவுகூர்ந்து அஞ்சலிப்பது, ஒருங்கிணைந்த 'விடுதலை அரசியல்' முன்னெடுப்புகளின் பகுதியாக அமைய வேண்டும். கடந்த காலத்தின் கசடுத்தனங்கள், போலி நம்பிக்கைகள், அடிப்படைவாத நிலைப்பாடுகள், இயக்க முரண்பாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து காவியபடி விடுதலை அரசியல் வழியில் ஆரோக்கியமாக முன் நகர முடியாது. // மேலதிக இணைப்பு (2023-12-07) // வி பு தலைவரை நன்கு அறிந்திருக்கிறேன் என்பதால், அவரது உடல் சார்ந்த காட்சிகளைப் பார்க்க முடிந்த காலத்திலேயே அவரது மரணம் சார்ந்த உண்மைகளை என்னளவில் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. அவர் இருப்பதாக வலிந்து பொய்களை விதைப்பவர்களும் அவற்றை நம்பக்கூடிய சுயசிந்தனை அற்றவர்களும் அவரை வைத்துப் பிழைப்பும் இழிவரசியலும் செய்ய முனைவோரும் பெருகியிருக்கும் நிலையில், மறுக்கவே முடியாத துல்லியமான ஆதாரங்களையும் தர்க்க நியாயங்களையும் சுய அனுபவங்களையும் முன்வைத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தி எடுத்துரைக்க வேண்டியுள்ளது. அவரது மரணம் தொடர்பான பல்வேறு தரவுகளையும் ஆவணங்களையும் நீண்டகாலமாகச் சேகரித்துவருகிறேன். கிடைத்திருக்கும் ஆவணங்களைப் பல்வேறு தரவுகளுடன் ஒப்பாய்வு செய்து மேலும் சில மறைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. இதுவரை யாரும் அறிந்திராத முக்கியமான சில புள்ளிகள் என்னிடம் உள்ளன. வருங்காலத்தில் வாய்ப்புள்ளபோது, வி பு தலைவரின் மரணம் தொடர்பான 'புலனாய்வு ஊடகவியல்' (Investigative Journalism) வகைப்பட்ட விரிவான ஆய்வை அறிக்கையாகவோ வீடியோப் பதிவாகவோ வெளியிட முடியும். ஊடகவியல் அறங்களின் அடிப்படையில் அது அமையும். எதுவும் தப்பாகிவிடக் கூடாது என்பதிற் கவனமாக இருக்கிறேன். இறுதிப் போர் முடிவடைந்த பின்னர், காயமடைந்திருந்த நான் தென் இலங்கைப் பகுதிகளில் இராணுவ வைத்தியர்களின் வைத்தியப் பராமரிப்பில் இருக்க நேர்ந்தது. அப்போது சில இந்திய வைத்தியர்களும் இருந்தார்கள். போரின் முடிவில் இராணுவத்தினராற் பதிவுசெய்யப்பட்டிருந்த போர்க்குற்ற ஆவணங்கள் பலவற்றை அப்போது பார்க்க முடிந்தது. இறுதிப் போரில் நான் ஊடகப் பணிகளில் ஈடுபட்டிருந்ததை எப்படியோ அறிந்திருந்த சிலர், தாமாகவே முன்வந்து பல்வேறுபட்ட பிரத்தியேகமான அவலக் காட்சிகளைக் கண்பித்தார்கள். அவற்றுள்ளே பிரபாகரனின் உடல் சாந்த காட்சிகளும் அடங்கியிருந்தன. வெவ்வேறு தரப்பினரால் வெவ்வேறு நிலைகளில் அவரது உடல் கையாளப்பட்டிருக்கக்கூடும். இராணுவ வைத்தியர்கள், அவரது தலையில் இருந்து சில பகுதிகளை எதற்காகவோ பிரித்தெடுத்துப் பாதுகாத்திருக்கிறார்கள். அது நடந்த பிறகுதான், வேறு தரப்பினரால் அவரது உடல் திரு. கருணாவுக்கும் திரு. தயாநிதிக்கும் வேறு ஊடகங்களைச் சார்ந்தவர்களுக்கும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. முழு நிகழ்வுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை எப்போதாவது வெளிவரக்கூடும். இக் கட்டுரையினை எழுதி முடித்தபின்னர், இறுதிவரை மேல் மட்ட இயக்கப் பணிகளில் இருந்து போரின் முடிவில் இராணுவப் பாதுகாப்பில் இருந்துவிட்டு வந்த 'தம்பி' ஒருவர் என்னுடன் உரையாடினார். (மிக நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்.) ஒரு இராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசியில் இருந்து அவர் பார்த்த அந்தரங்கமான வீடியோப் பதிவைக் குறித்து விபரித்தார். அந்தக் கைத்தொலைபேசியின் வகை அவருக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அவரது வாக்குமூலமும் எனது அனுபவங்களும் ஆய்வுகளும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன. வி பு தலைவரின் உடல் சார்ந்த மூன்று பிரத்தியேகமான படங்களை, இந்திய இராணுவத் தரப்பிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகர் ஒருவர் எப்படியோ பெற்றிருக்கிறார். முன் அறிமுகம் இல்லாத அவரைப் பல மாதங்களுக்கு முன்னரே தொடர்புகொண்டு உரையாடியிருக்கிறேன். எது எப்படியிருந்தாலும், வி பு தலைவரின் மரணம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகிவிட்ட துன்பியல் நிகழ்வு. அவரது மரணம், இனி ஒருபோதும் மர்மமாக இருக்க முடியாது. // -அமரதாஸ்.(https://www.facebook.com/amara.thaas) இக் கட்டுரையினை பின்வரும் இணையத்தள இணைப்பில் முழுமையாகப் படிக்கலாம். https://widevisionstudio.com/archives/3671
  5. அதெல்லாம் முடியாது.. இதெல்லாம் பத்து பதினைஞ்சு வருசத்துக்கு முன்னமே பலர் கேட்டு களைச்சது.. மோகன் அண்ண யாரிடமும் கடமைப்படமாட்டேன் எண்டு சொல்லிவிட்டார்.. அதுதான் யாழின் மோட்டோவே “ யாமார்க்கும் குடி அல்லோம்” எண்டு போட்டிருக்கிறாரே..
  6. அருமையான பேட்டி.. என்ன ஒரு நிதானம் தெளிவு.. நல்ல ஒரு உறவு.. he made me cry… இங்கு இப்பவும் வந்தது துவாரகதான் என்று எழுதுபவர்களால் எப்படி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இன்றி ஒரு பிடி சோற்றைத்தன்னும் உண்ண முடிகிறது.. அந்த தலைவனும் அவன் குடும்பமும் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்துட்டு போயிருக்கிறார்கள் .. 30 வருடத்துக்கும் மேலாக இந்த இனத்துக்கு ஓயாமல் உழைத்த அந்த குடும்பத்தை இனியாவது நிம்மதியாக உறங்க விடுங்கள்..🙏
  7. இலங்கை பாதுகாப்பு படையினரது புலனாய்வு துறை , துவாரகா எனும் பெயரில் தோன்றிய ராஜரத்தினம் மிதுஜாவின் பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு) மற்றும் ஏனைய குடும்ப விபரங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்...
  8. மித்திஜா மீது ஏற்கனவே ஆழ் மாறாட்டவழக்கு மற்றும் பழ வழக்குகள் சுவிசில் போடப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது..
  9. 10 ஆவது நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.. போனில் பேசுபவர் இது றோவின் செயலோ எந்த ஒரு அரச அமைப்புகளின் செயலோ அல்ல சுவிஸ் மற்றும் சில புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஒரு குழுவின் செயல் இந்த வீடியோ எடுத்த ஆக்கள் இடம் அனைத்தும் தெரியும் என்கிறார்..
  10. என்னத்தை சொல்ல? துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள். (முகப் புத்தக தடைகள் வரலாம் எனும் நிலையில் பல விடயங்களை தவிர்க்கிறேன். பொறுத்தருள்க) அதிலிருந்தே அனைவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் போல உள்ளது. அது இந்த வீடியோவை உருவாக்கியோருக்கு கிடைத்த வெற்றிதான். காரணம் வெளியாகியுள்ள வீடியோவில் உள்ள நபர் சுவிசில் வாழும் பெண் என்பது அநேகருக்கு தெரியும். அவர் குறித்த விபரங்கள் மற்றும் படங்கள் ஏற்கனவே வந்து விட்டன. முக்காடு போட்டுக் கொண்டு போய் துவாரகா சிலரைச் சந்தித்தார் எனும் பேச்சு வந்த போதே அவர் குறித்த அனைத்து தகவல்களும் சமூக வலைத் தளங்களில் வெளியாகி , அவை இன்றும் உள்ளன. எனவே உண்மையான துவாரகா போல ஒருவரை AI தொழில் நுட்பம் மூலம் உருவாக்க வேண்டிய தேவையில்லை. அது ஒரு புறத்தே பண விரயம். அடுத்து ஏற்கனவே சுவிற்சர்லாந்தின் துர்காவ் (Thurgau) மாநிலத்தில் வாழும் மித்துஜா என அவர் குறித்த விபரங்கள் பரவலாக தெரிய வந்து சில காலம் ஆகிவிட்டது. அவரது தொலைபேசி உரையாடல் குரல் கூட பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விட்டன. இந்த நிலையில் வேறொருவரையோ அல்லது வேறொருவரது குரலையோ பயன் படுத்தினால் , மித்துஜாவை , துவாரகா எனக் காட்டியவர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம். எனவே வெளியாகியுள்ள வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படவில்லை. ஆனால் Green Screen Background அல்லது Chromakey தொழில் நுட்பத்தை பாவித்தே துவாரகா வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அந்த வீடியோவை அவதானித்தால் மித்துஜா நிறுத்தி , நிறுத்தி பேசுவதை அவதானிக்க முடியும். கமரா ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால் அநேகமுறைகள் Jump ஆவதோடு , ஒரே இடத்தில் நிற்காமல் சற்று விலகி விலகி நிற்கிறார். அந்த வீடியோவை பாருங்கள். அதை பார்த்து முடிவெடுங்கள். அதனால்தான் அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படவில்லை என முடிவு செய்ய இலகுவாகிறது. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கினால் இந்த தவறை அதை உருவாக்குவோர் விட மாட்டார்கள். செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என்றால் வீடியோவில் பேசும் சம்பந்தப்பட்டவரை தேட மாட்டார்கள். அவருக்கு பிரச்சனையும் வராது. இது சிலருக்கு பரப்பும் கதை! ஆனால் அவர்தான் பேசினார் என நம்புவோருக்கு சொல்ல நினைத்தது வேறு கதை. இன்னொன்று இலங்கையில் மாநிலங்கள் முறை இல்லை. மாகாண முறையே உள்ளது. ஆனால் அவரது பேச்சில் மாநிலங்கள் என அவர் சொல்கிறார். எனவே அவரது பேச்சை , தமிழகத்தில் அல்லது இந்தியாவில் உள்ள ஒருவரே எழுதிக் கொடுத்துள்ளார். அதை இந்த குழுவினர் கூட அவசரத்தில் அவதானிக்கமால் விட்டு விட்டார்கள். பொதுவாக அவரது பேச்சை , ஆரம்ப காலங்களில் அன்டன் பாலசிங்கம் அவர்களே எழுதிக் கொடுத்தார். அதன் பின் எழுதிய பேச்சு பாலக்குமார் அவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்டது. பாலசிங்கம் அவர்களது எழுத்துக்களில் இருந்த வீரியம் , பாலக்குமார் அவர்களது எழுத்தில் இருக்கவில்லை. புதிய வீடியோவில் இந்திய - தமிழக ஆதரவாளர்களது பேச்சிலும் , எழுத்திலும் வரும் வார்த்தை பிரயோகங்களே உள்ளன. அவர்களது பரப்புரை என்பதை யாரும் தவறு சொல்ல முடியாது. ஆனால் ஈழ தலைவர்களது பேச்சில் அவர்களது எண்ணக் கருத்துகள் வந்தால் , அங்கே உள்ள இடைவெளியை அனைவரும் உணருவார்கள். அதை இங்கே உணர முடிகிறது. அடுத்து சிலர் டப் (யாரோ குரல் கொடுத்துள்ளார்கள்) பண்ணியது சரியில்லை என எழுதியிருந்தார்கள். குரல் வாயசைப்புக்கு ஏற்ற விதத்தில் சிங் ஆகவில்லை (பொருந்தவில்லை) என்பது உண்மைதான். அதற்கு காரணமே பலமுறை நிறுத்தி நிறுத்தி மித்துஜா பேசியதால் , அதை எடிட்ங்கில் கோர்க்கும் அல்லது இணைக்கும் போது , ஒலியை சரியாக சிங் பண்ணாமல் அலட்சியமாக இருந்துள்ளார்கள். ஆனால் அதில் உள்ளது மித்துஜாவின் குரல்தானே தவிர வேறு யாரும் டபிங் கொடுக்கவில்லை. இப்படியான அநேக குளறுபடிகளால் , அநேகரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான காணோளி (விடியோ) நகைப்புக்கு இலக்காகிவிட்டது. அடுத்த மேடையில் சந்திக்கலாம். Better Luck Next Time - ஜீவன் 📸 Look at this post on Facebook https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035Tm5SGWCepFit6VYNCnw5dtM2nQm9SfwPuHSxBpbbWT3a2gQXe4eUK3cjoZ9wCZGl&id=823993901&mibextid=WC7FNe
  11. பவுடர் டப்பாவுக்கு கட்டியம் கூறிய சிலரை பற்றி..
  12. பொட்டம்மான் இல்லை.. இயேசு கிறிஸ்த்துவாம்… சண்டை இஸ்ரேலுக்கும் பாலஸ்த்தினுக்கும் நடக்குரதால இண்டர் நாசனல் லெவல்ல பிளான் போட்டிருக்கிறாங்கள்.. வாற கிறிஸ்மஸ் ஓட காசி லோக்கல் பிரச்சினைக்கு எல்லாம் தலையிடாது.. ஒன்லி இண்டெர்ன்நெஷனல் ப்ராப்ளம்ஸ்…
  13. சரி இப்ப உங்களுக்கு தலைவரும் குடும்பமும் வீரச்சாவடையவில்லை என்பதுதான் உண்மை.. அதன் மூலம்தான் மக்களுக்கான இலட்சியங்களை கொன்றொழிக்க முடியாது.. இல்லையா.. அப்படி என்றால் நீங்களும் உங்களைபோன்ற சிந்தனையில் இருப்பவர்களும் என்ன செய்திருக்கவேண்டும்..? துவாரக இருக்கிறார் ஆனால் இந்த பவுடர் டப்பா துவாரகா இல்லை என்று சொல்லி இருக்கவேண்டும்.. ஒரு பவுடர் டப்பாவை வைத்து ஒரு குழு செய்யும் பித்தலாட்டத்தை எதிர்த்து நிஜமான துவாரக வருவார் என்று எழுதி இருக்கவேண்டும்.. ஆனால் இந்த கூட்டம் துவாரகா என்ற அடையாளத்தையே காமடி ஆக்குவதை மெளனமாக கடந்து சென்றுகொண்டு துவாராக இருக்கிறார் அவர்தான் இவர் என்பது இந்த வீடியோ தயாரித்த போட்டோ சொப் குரூப்புக்கு ஆதரவு கொடுப்பதுதான..
  14. "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன் களத்தில் நிற்பாள்" -காசியானத்தன் “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்.. இந்தியாவும் புலம் பெயர் தீய சக்திகளும் சேர்ந்து தமிழர்களையும் மாவீரத்தையும் களங்கப்படுத்த உதயமானதுதான் இந்த துவாராக ஒப்பிறேசன… ஆனால் அது தமிழ்நாடு ஈழம் புலம்பெயர் தேசம் என்று ஒட்டு மொத்த தமிழ் மக்களாலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு எதிர்ப்புடனும் கேலி கிண்டலாகவும் கடந்து செல்கிறது.. அதேவேளை மறுவளத்தில் மாவீரர்களையும் போராட்டத்தையும் மனதில் சுமக்கும் லட்சோப லட்சம் சாதாரண பொதுமக்கள் இம்முறை வழமைக்கு மாறாக தாமாக தமிழர் தேசமெங்கும் அதிகளவாக கூடி மாவீரத்தை போற்றி உள்ளனர்… இது தமிழர்களின் தணியாத வேட்கையினை உலகுக்கு பறை சாற்றுவதாக உள்ளது.. இவளவு உயிர் போயும் விடுதலை இல்லையே என சில வேடீக்கை மனிதருள்ள பூமியின் நூறு வருடங்களைக் கடந்து விடுதலை அடைந்த அடையப் போராடும் மனித குலம் பற்றிய சரிதத்தை எடுத்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது… அந்தத் தேவையின் ஆணிவேரில் தழைத்த பூஞ்செடிகளே இன்று துயிலுமில்லம் தோறும் ஏற்றப்பட்ட பல்லாயிரம் அக்னிச் சுடர்கள் என்பதை உலகறியும்.. இத்தகு தருணத்தில் எம்மைக் கொன்றொழித்த இந்திய மத்திய அரசும் அதன் ஒத்தோடிகள் செய்யும் துரோகமும் இனியும் எடுபடாது என்பதை இம் மாவீரர்தினம் உணர்த்தியுள்ளது இன்னும் உணர்த்தும்…
  15. விசுகண்ணையும் உதிலை ஓராள்..😂 உத நம்பி இதுக்கு விசுகண்ணை குடுத்த பில்டப் இருக்கே..🤦🏻
  16. இப்படி நீங்கள் கேட்பதுதான் இந்த வீடியோ தயாரித்தவர்களின் நோக்கத்திற்கு துணை போகிறது.. அறிவார்ந்த பகுத்தறிவுள்ள எவரும் இதை ஒரு பொருட்டாகவே எடுக்க மாட்டார்கள்..
  17. குஷ்பு தனக்கு வந்தா ரத்தம் மன்சூர் அலிகானுக்கு வந்தா தக்காளி சட்னி.. விதி வலியது.. மன்சூர் அலிகானை மகளிர் ஆணையத்தில் மாட்டிவிட்டு விடியுறதுக்குள்ள இந்தம்மாவு மன்னிப்பு கேட்கிற நிலமை ஆச்சு..
  18. பையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
  19. இது மாதிரி கிறுக்குத்தனமா பேசற ஆளுங்கள பாக்கிறப்போ ஆளு செட் அப் பண்ணி கூட்டத்துல உருள விடுர போதகர்மார் மைண்ட் வாய்ஸ்- அப்பாடா நம்ப பொழப்புக்கு பிரச்சனை இல்லை…🤣
  20. பால் தினகரன் குறை தீர்க்கும்கூட்டத்துக்கு போயிட்டு வாணே…!!! எல்லாம் சரி ஆயிடும்..🤣
  21. திருடனும் கூட்டத்தோட சேந்து ஜயோ திருடன் திருடன் எண்டு கத்தினமாதிரி இருக்கு..🤣 சீ சீ இஸ்ரேல் அப்பிடி எல்லாம் செய்யாது.. குருசோ படிச்ச பைபிள்ள உதெல்லாம் இல்ல.. மூட நம்பிக்கை உது.. உலக அமைதிக்கு சிக்கலான விடயம் நீங்கள் எழுதுறது..🤣
  22. தல அதை செய்யுங்கோ முதல்ல… நீங்கள் வாங்கி விக்கும் பங்குகளையும் இணையுங்கோ.. பாத்து எனக்கு ஒரு தெளிவு வரட்டும்.. கண்ணை கட்டி காட்டில விட்டமாரி இருக்கு இந்த பங்கு வர்த்தக விடயங்கள் எனக்கு.. ஆசை நிறைய இருந்தும் விளங்காததால செய்ய முடியல..🥲🥲
  23. இத எங்கையோ கேட்டிருக்கனே…. ஆ ஞாபகம் வந்திட்டு… இது சண்டை என்றால் ஜனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தமிழர்களின் அழிவை நியாயப்படுத்தி சட்டசபையில் முழங்கிய ஜெயலிதாவின் குரல்… 👍 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.