Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
தொடர்ந்து அவதானித்ததில் உங்களின் சிலகருத்துகளுக்கு பதில் சொல்வதும், பதில் சொல்லுபவர்கள் தாங்களே தங்கள் சட்டையை கிழித்துவிட்டு பைத்தியம் என்று சொல்வதும் ஒன்றுதான் என்ற சங்கடமான நிலமையை உருவாக்குகிறது ஜயா..🥲🥲🙏
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
என்னைக்கேட்டால் இதை எதிர்க்கவும் தேவை இல்லை ஆதரிக்கவும் தேவை இல்லை.. இதை கலாச்சாரமாக ஊக்குவிப்பது நிச்சயம் தவறு.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. அவரவர் தெரிவு அவரவர்க்கு.. இதை ஊக்குவித்து ஒரு பஷன் ஆக்கி ரெண்ட் ஆக்குவது புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதுபோல் மிகத்தவறான செயற்பாடு.. அதே நேரம் இதை இயற்கையின் தெரிவாக அமைந்தவர்களை நாம் ஏற்றுக்கொண்டு அரவணைத்து செல்லவேண்டும்.. எங்களைப்போல் அவர்களுக்கும் தம் ஆசைபோல் வாழ எல்லா உரிமையும் உண்டு.. அதே நேரம் இயற்கையாக உடலில் இந்த ஹோர்மோன் மாற்றங்கள் இல்லாத பிள்ளைகளுக்கும் மூளைச்சலவை செய்வதுபோல் இதை ரெண்ட் ஆக்குவது பல்வேறு பால்வினை நோய்களுக்கும் சமூக மற்றும் குடும்ப கட்டமைப்புகளின் சீர்குலைவுக்கும் காரணமாகிவிடும்..
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
பிரபாகரன் தலைவன் என்று சொல்லலாம் ஆனால் அவர் படங்களை வைக்ககூடாது.. ஈழவிடுதலைப்போராட்டம் வடுக்களை சுமந்ததால் யாரும் அதை எடுத்து பேசகுடாது.. ஒன்றுக்கொன்று முரணான ஒரு தெளிவில்லாத கருத்துக்கள்.. விடுதலைப்போராளி சேகுவாரா படாத துயரம் இல்லை போராடாத போராட்டம் இல்லை அதற்காக யாரும் சேகுவாராவை பேசாமல் இருந்ததில்லை படத்தை கூட்டங்களில் வைக்காமல் இருந்ததில்லை.. அடையாளங்களை சுமக்காத அரசியல்வாதிகள் இல்லை.. காந்தி, நெல்சன் மண்டேலா, லெனின், மாவோ, பெரியார் என்று எல்லோருமே போராடியவர்கள்தான்.. எல்லோர் போராட்டமும் எம்மைபோலவே துயரங்களையும் இழப்புகளையும் உள்ளடக்கியதுதான்.. ஆனாலும் இன்று உலகமெல்லாம் அவர்களை விரும்புவர்களுக்கு அவர்கள் அடையாளமே… வழிகாட்டிகளே.. அவர்கள் படங்களை சின்னங்களை யார் யாரோ உலகின் ஏதோ மூலையில் ஏதோ ஒரு மொழிபேசுபவர்களும் காவுகிறார்கள்.. பிரபாகரனும் அவர் போராட்டமும் புலிகளின் சின்னங்களும் ஆயிரம் நூற்றாண்டுகள் ஆனாலும் அவரை விரும்புவர்களுக்கு அடையாளமே.. அவற்றை அவர்கள் காவத்தான் போகிறார்கள்.. காகங்கள் திட்டி மாடுகள் சாவதில்லை…
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
ஓ அப்ப சண்டையில் விருப்பமில்லாட்டியும் சண்டையில் ஈடுபடும் எந்த தரப்பும் தமது பாதுகாப்புக்கு சாதாரண பொதுமக்களை தடுத்துவைத்திருக்கலாம் என்பது ஜெர்மனிக்கு ஓடிவந்து பாதுகாப்பாய் இருந்துகொண்டு எழுதும் உங்கள் கருத்து..உங்கட பிள்ளையள் அப்படி வைக்கப்பட்டிருந்தால் தெரிந்திருக்கும் உங்களுக்கு.. ஜெனிவா உடன்படிக்கையின் ஒரு சரத்து சொல்லுது போரில் அப்பாவி மக்கள் பணயக்கைதிகள் ஆக்கப்படக்குடாது என்பது.. அந்த உடன் படிக்கையின் பிரகாரம் அகதி அந்தஸ்து எடுத்து பாதுகாப்பா வாழ்ந்து கொண்டு இருக்கிறியள்..கொஞ்சமாவது மெச்சூரட்டா எழுதுங்கப்பா.. உங்ககிட்ட எல்லாம் என்னா பேசமுடியும்.. உங்களுக்கு பதில் எழுதுறவங்க எல்லாம் உங்ககிட்ட எப்புடி சிக்கிட்டிருக்காங்க பாத்தியளா.. முதலில் திறந்துவிட்டு போறவர்கள் போகலாம் என்றுவிட்டு உண்மையில் விருப்பப்பட்டு நிக்கும் மக்களுடன் நின்று சண்டைபிடித்திருக்கவேண்டும் பேரழிவு வரப்போகுது என தெரிந்த கிளிநொச்சி வீழ்ந்ததன் பிந்தைய நாட்களில்.. நமக்கு பிடித்தவர்களாய் இருந்தாலும் அது தவறுதான்.. அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு ஒரு வெட்கமும் இல்லை..
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இப்ப விளங்குதா நான் ஏன் பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மன் அயர்லாந் என வலதோ இடதோ நடுவோ அந்த அந்த மண்ணின் மக்களின் அரசியல் தெரிவை ஆதரிக்கிறேன் என..
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
நீங்க யாரு.. புறாவுக்கே பெல் அடிச்சவர் ஆச்சே..😂😂
-
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
நாம் தமிழர் கட்சியினர் சொல்லித்தான் கேட்டதாக சொல்லி இருக்கிறார்
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
வணக்கம் ஜஸ்ரின் அண்ணா.. நான் நலம் நீங்கள் நலமா..? இப்ப கொஞ்ச நாளா யாழ் லோடாக நிறைய நேரம் எடுத்திச்சு அப்பிடி லோடாகி உள்ளவந்தாலும் திரியை திறந்தா பாதி திரி வரும் மீதி திரி லோடாகி பிளாங்கா நிக்கும்.. கடுப்பாகும்..எழுதக்கிடைக்கிறதேகொஞ்ச நேரம் இதுல திரிவேற லோட்டாகி சாவடிச்சா எப்பிடி எழுத முடியும்.. அதான் கடுப்பில எழுதுறேல்ல.. பேசாம மூடிட்டு வேற நியூஸ் சைட்ட பாத்திட்டு போயிடுறது.. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஓப்பின் பண்ணி பாப்பன் போட்டாலும் பாதியிலையே விட்டிட்டு போயிடுவன்.. இப்ப ரெண்டு நாளாதான் பழைய படி பாஸ்ற்ரா திறக்குது அதான் எழுதக்கூடியதா இருக்கு..
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
சீமான் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எந்த கட்சியுமே கூட்டணி வைக்ககூடாது.. பாஜக ஒரு தீண்டதகாத கட்சியாக உருவாகவேண்டும்.. பாஜகவை கண்டதுமே கூட்டணி வேண்டாம் இந்த சனியுடன் சேர்ந்தால் இருக்கும் நமது நாலுவாக்கும் இல்லாமல் போய்விடும் என்று அலறி அடித்துக்கொண்டு ஆளைவிடுடா சாமி என்று அலறிஅடித்துக்கொண்டு ஓடும் நிலை வரவேண்டும்.. மதவாதிகள் அடிப்படை முட்டாள்கள்..அவர்களால் பரந்து சிந்திக்கமுடியாது.. நாட்டை மூட நம்பிக்கைகளாலும் முட்டால்தனங்களாலும்நிரப்பி ஜந்தாறு நூற்றாண்டு பின்னோக்கி கொண்டு சென்று விடுவார்கள்.. மதவாதிகள் ஆளும் தாலிபான் போன்ற அரபுநாடுகள் எல்லாம் எத்தனை நூற்றாண்டு பின்னோக்கி இருக்கின்றன என்று பார்த்தாலே தெரியும்.. மதவாதிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு..
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் இந்த மாற்றம் நிகழத்தொடங்கி இருக்கிறது.. கட்டற்ற குடியேற்ற கொள்கைகளால் பலநாடுகளின் கலாச்சாரம் பண்பாடு மொழி அடையாளங்கள் அவர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்கள் என்று எல்லாமே மாறி அவர்கள் வாழ்நாளில் பார்த்தறியாத வேறு ஒரு நாட்டின் சமய கலாச்சார பண்பாட்டு விழுமிய கொண்டாட்டங்கள் தமது நாட்டின் அடையாளமாக மெல்ல மெல்ல மாறுவதை பார்க்கும்போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் தமது இன்னும் ஒரு தலை முறையிலேயே தாம் தம் சொந்த மண்ணில் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.. ஆம் அவர்களின் அந்த அச்சம் நியாயமானது.. கரிசனைகொள்ளவேண்டியது.. பூர்வக்குடிகளாக வாழ்ந்த ஒரு மண்ணில் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் எப்படி நாம் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டோம் அதன் பின் அதற்கு 50 வருடங்களுக்கு மேலாக நாம் இழந்தவற்றை மீளப்பெற நாம் இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் விலைகள்.. இத்தனை விலை கொடுத்தும் நம்மால் இழந்தவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியாத நிலை.. என்று எல்லாவற்றையும் கண்முன்னே சாட்சியாக பார்த்துக்கொண்டும் அனுபவித்துக்கொண்டும் இருக்கும் ஒரு இனத்தை சேர்ந்த நாம் எப்படி பாலஸ்த்தீனத்துக்கு ஆதரவு கொடுக்கிறோமோ அப்படி நியாயமான இந்த மக்களின் கோரிக்கைக்கு இனசுத்திகரிப்பு சாயம் பூசாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. அதுதான் தார்மீகம்.. அண்மையில் ரிசிசுனக் அரசு ருவாண்டா பில் அமுலாக்கியபோது அதிலிருந்து தப்ப சாரை சாரையாக அயர்லாந்து வந்து இறங்கியவர்களை பார்த்து அயர்லாந்தே மிரண்டு போய் இருந்தது..அவர்கள் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நின்று பேசியும் பொழுதுபோக்கியும் நேரத்தை செலவழித்துக்கொண்டிருந்த போது ஜரிஸ்காரர் ஆகிய தாம் வீதிக்கு வர பயத்தில் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததாக எழுதுகிறார்கள்.. விடுமுறை நாட்களில் பார்க் முழுவதும் வேறு மொழி பேசும் வேறு கலாச்சார உடைகளை அணிந்திருந்த முஸ்லிம் ஆண் பெண்களால் நிரம்பி வழிந்த போது தாங்கள் யாரும் பயத்தில் வழமையாக உடற்பயிற்சி செய்யும் பார்க்கிற்க்கு கூட செல்கவில்லை என்று எழுதுகிறார்கள்.. உங்கள் ஊரில் உங்கள் மொழிபேசாத இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் பியர்குடித்துக்கொண்டும் புகைத்துக்கொண்டும் இருந்தால் இயல்பிலேயே உங்களிற்கு பயம் வரத்தானே செய்யும் என்கிறார்கள்.. என்னைக்கேட்டால் கண்டிப்பாக என் பெண் ஆண் பிள்ளைகளைக்கூட புதியவர்கள் நிற்குமிடத்தால் தனிய வெளிய அனுப்பமாட்டேன்.. இதே தங்கள் நாட்டு இளைஞர்கள் தம்மொழி பேசுபவர்கள் கூட்டமாக நிற்கும்போது நம்பிக்கையோடு ஒரு முகமன் கூறிவிட்டு கடந்து செல்ல முடிகிறது என்கிறார்கள்.. ஏனெனில் அவர்கள் ஊரவர்கள் தெரிந்தவர்கள் ஒரே மொழி பேசுபவர்கள்.. அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளமுடிகிறது.. ஒருவர் எழுதுகிறார் மெதுவாக தள்ளாடி தள்ளாடி நடந்துபோய் வெள்ளிக்கிழமைகளில் தபாலகங்களில் பென்சன் எடுக்கும் முதியவர்கள் கூட பயத்தில் தங்கள் ஊரில் பென்சன் எடுக்க வீட்டை விட்டு போகவில்லை ஏன் என்றால் அன்று பென்சன் எடுக்கும் நாள் என்பதால் பல முதியவர்களிடம் அடித்து தள்ளிவிழுத்தி பணத்தை பறித்திருக்கின்றனர்.. எந்த காலத்திலும் தம் ஊரில் இது நிகழ்ந்ததில்லை என்கின்றனர்.. யாராவது முதியவர் எடுத்த பணத்தை மறந்துபோய் விட்டுவிட்டாலும் அதை தேடிக்கொண்டுபோய் குடுக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த மக்கள்.. இத்தனைக்கும் ஜரோப்பாவிலேயே இனவெறி குறைவான நட்புடன் புன்னகைக்கும் குணமுள்ளவர்கள் ஜரிஸ் மக்கள்.. இன்று அவர்களாலேயே மூச்சுவிட முடியவில்லை குடியேற்ற தொல்லையால்.. ஏன் இந்த மக்கள் இப்படி மாறி இருக்கின்றனர் என்றால் ஏன் நாங்கள் இப்படி எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்தால் விடைகிடைக்கும்.. ஒரே விடை உங்கள் சொந்த நாட்டிலேயே நீங்கள் சிறுபான்மையினர் ஆனால் அப்புறம் கதை முடிந்தது.. சிறிராம ஜெயம் சொல்லு என்று ஜரிஸ் வீதியில் ஒரு இந்திய சங்கி ஜரிஸ்காரனை போட்டு அடிப்பதை கூட நாம் கண்ணால் காணலாம்..
-
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை!
அங்க மனுசன் போவானா.. அதிலும் போட்டில.. நாங்கள் ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகோணும்..?
-
நன்றி கெட்ட உலகமிது 😡
நீங்கள் இங்கு வரமுன்னமே அவர்கள் முன்னேறிவிட்டார்கள். அவர்கள் முன்னேறியதால்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள். நீங்கள் அவர்களுக்கு உழைக்கவும் பிள்ளைபெறவும் பாடம் எடுக்க அவசியம் இல்லை. நீங்கள் இல்லாமலே அவர்கள் உலகின் வல்லரசு ஆனவர்கள். பத்து பிள்ளை பெத்தவளுக்கு ஒத்த பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டினாளாம் என்டமாதிரி இருக்கு உங்கட கதை.. ஆட்டை மேச்சுதாம் கோழி அண்னாந்து பாத்துதாம் சேவல்.. ஆருக்கு ஆர் வகுப்பு எடுக்கிரது.. ஒன்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிச்சாம்.. அந்த நாட்டில வாழ்ந்து கொண்டு அவனுக்கு பிள்ளை பெறத்தெரியாது உழைக்க தெரியாது என்டு நக்கலும் நையாண்டியும்.. இப்ப விளங்குதே சீமானும் ,மரின் லு பென்னும்,பிரிக்சிற் காரரும் ஏன் வாக்கு வீதத்தில் முன்னேறி இருக்கின்றனர் இனியும் முன்னேறுவார்கள் என்டு..
-
நன்றி கெட்ட உலகமிது 😡
நீங்கள் மரின் லு பென்னையும், லு பென்னையும் போட்டு குழப்பி உள்ளீர்கள்.. மரின் லு பென், லு பென் வழி சென்றிருந்தால் நிச்சயம் அவர் இந்த எலெக்சனில் தூக்கி வீசப்பட்டிருப்பார் மாறாக மரின் லு பென் எப்பவோ அறிவித்துவிட்டார் பிரெஞ்சுக்காரர் வேறு பிரெஞ்சு குடியேற்றகாரர்கள் வேறு என்று. நீங்கள் என்ன கலராகவும் இருக்கலாம் அதுவல்ல பிரச்சினை நீங்கள் பிரெஞ்சு குடி உரிமை உள்ளவரா அல்லது பிரெஞ்சில் வதிவிட உரிமை உள்ளவரா என்பதுதான் பிரச்சினை. பிரெஞ்சின் கடல் கடந்த நிர்வாகப்பிரதேசங்களான ரீயூனியன் பிரென்ச் கஜானா இங்கெல்லாம் பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் மரின் லு பென் வாக்குகளை வாங்க முன்னரே கடந்த பல தேர்தலிகளிலேயே மரின் லு பென் மிக மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் அந்த பிரதேசங்களில் வென்று இருந்தார். அந்த பிரதேச மக்கள் ஒட்டுமொத்தமாக மரின் லு பென்னை ஆதரித்திருந்தனர். இத்தனைக்கும் அங்கு வசிப்பவர்கள் பெரும்பான்மை கருப்பர்கள் மற்றும் இந்தியவமசாவளி தமிழர்கள்தான். மரின் லு பென் இனவாதத்தை எப்பொழுதோ கைவிட்டுவிட்டார். அவர் இப்பொழுது முன்வைத்திருப்பது பிரென்ச் பிரென்ச் காரருக்கே என்பதே. இதில் பிரான்சில் வாழும் பிரெஞ்சு முஸ்லீம்களுக்கு கூட சம்மதம் இருப்பதை பல சமூக வலைத்தள காணொளிகளில் பாத்திருக்கிறேன். நிறவேறுபாடு இனவாதம் வேறு கட்டற்ற புலம்பெயர்தலை கட்டுப்படுத்து என்பது வேறு; நீங்கள் இரண்டையும் போட்டு குழப்புகிறீர்கள்.
-
நன்றி கெட்ட உலகமிது 😡
அப்போ பிரான்சில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அதுவும் படித்த ஜனநாயகத்தை விரும்புகின்ற உலகத்துக்கே புரட்சியை அறிமுகப்படுத்திய பிரெஞ்சு மக்கள் இனவாதிகள் என்றால் தமிழர்களும் நாம் தமிழரும் இனவாதிகளாகவே இருந்திட்டு போகட்டும்.. நீங்கள் குடியேறிகளால் உருவான ஒரு நாடு கனடாவில் இருந்துகொண்டு பூர்வீகக்குடிகள் வாழும் நாடுகளில் அவர்கள் சமூகங்களும் மொழியும் விழுமியங்களும் பண்பாடும் சுதேச குழந்தைகளின் எதிர்காலமும் பொருளாதாரமும் பற்றிய அந்த சுதேச மக்களின் கவலைகளை புரிந்து கொள்ள முடியாமல் என்னில் பிழை காண்கிறீர்கள்.. கிரவுண்ட் றியாலிற்றி என்ற ஒன்றை மறுதலித்து நீங்கள் என்ன பேசினாலும் இப்படியான தேர்தல்களின் முடிவுகளில் அந்தந்த நாடுகளின் பூர்வகுடி உள்ளூர் மக்களின் யதார்த்தம் வந்து உங்கள் போன்றவர்களின் முகத்தில் அடிக்கும்..
-
நன்றி கெட்ட உலகமிது 😡
தமிழ்தேசியம் எழும்.. சீமான் வாக்கு இன்னும் அதிகரித்துக்கொண்டே போகும்…!! இன்றைய ஜரோப்பிய ஒன்றிய தேர்தலில் பிரான்ஸில் யாரும் நினைத்துப்பார்க்காத ஒன்று நிகழ்ந்திருக்கிறது.. ஆம் மரின் லூ பென் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று ஜரோப்பிய ஒன்றிய தேர்தலில் வெற்று பெற்றிருக்கிறது.. பிரான்ஸ் பிரான்ஸ் இனற்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர்.. ஏன் வெற்றி பெற்றார்..? தமிழ் நாட்டில் திருப்பூர் பங்களாதேஸ் ஆகிவிட்டதாக அங்கு வாழும் தமிழர்களால் சொல்லப்படுகிறது இன்னொரு இடத்தில்( பெயர் மறந்துவிட்டது) விரட்டி விரட்டி வடநாட்டவர்களால் அவ்வூர்க்காரர்கள் அடிக்கப்பட்ட காணொளிகள் வெளிவந்தன.. மத்திய அரசு தமிழை புறக்கணித்து கிந்தியை திணிப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறது மத்திய அரசின் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இருந்து அனைத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றனர்.. மெல்ல மெல்ல சீமான் வளர்கிறார் இந்த இடத்தில்.. இனியும் இந்த வளர்ச்சி நிகழத்தான் போகிறது.. கிறவுண்ட் றியாலிற்றியை கீபோர்ட் கிறுக்கர்களால் உணரமுடியாது.. இலங்கையில் யுத்ததின் பின்னும் இனவாதத்தால் தமிழர்களின் கலை கலாச்சாரம் வேலைவாய்ப்புக்கள் அனைத்திலும் புறக்கணிப்படுவதாக உணர்வதால் தொடர்ந்தும் பிழைகளை பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தமிழ்தேசிய கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனர்.. இது தொடரும்.. மேற்கு நாடுகளில் கட்டற்ற புலம்பெயர்வால் அந்நாடுகளின் சமநிலை குழம்பி கலை கலாச்சாராம் மொழி மதம் என அனைத்திலும் பூர்வகுடியான தாம் சிறுபான்மையினராவதாக உணர்கின்றனர்.. லண்டன் வீதிகளில் ஆங்கிலத்தை கேட்கமுடியவில்லை என்று ஆங்கிலேயர் கூறினர்.. பிரான்சில் அராபிய நாட்டு கலாச்சாரமும் மொழியும் எங்கும் பிரான்சின் விழுமியங்களை குக்கிராமங்களில் மட்டும்தான் காணப்படுகின்றது என்று பொங்கினர்.. குடியேற்ற வாசிகளின் அதிகரிப்பு, பொருளாதாரத்தில் ஜரோப்பிய நாட்டவர்களின் சரிவு நிலை, வெளிநாட்டு கொள்கை, வெளிநாட்டவர்களால் பறிக்கப்படும் ஜரோப்பிய நாட்டவர்களின் வேலைவாய்ப்பு, ஜரோப்பிய மக்களின் வரிப்பணத்தில் வெளிநாட்டில் நடத்தப்படும் தேவையற்ற போர் என அனைத்தும் அம்மக்களின் அந்தந்த ஜரோப்பிய பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் சுதேச இனங்களின் அடிப்படை இருப்பையே சீரழிக்க ஆரம்பிந்திருக்கிறது.. விளைவு.. பிரித்தானியா ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தது.. சுனக் புலம்பெயர்தலுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.. பிரான்ஸ் frexit இற்கு தயாராகிறது.. இன்றைய ஜரோப்பிய ஒன்றிய தேர்தலில் வலதுசாரிகள் வென்றதை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவொட்டது.. 2026 இல் நடக்க வேண்டிய தேர்தல் இந்த மாத இறுதியில் நடக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. இது அந்தந்த நிலத்தின் மக்கள் தம் மொழியை பற்றி உரிமைகளை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கும் காலம்.. புறநிலை அழுத்தங்கள் அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.. தமிழ் நாட்டிலும் இது நிகழும்.. தமிழ்தேசியம் எழும்.. இது அந்தந்த மண்ணின் மக்களின் காலம்..
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சீமான் மட்டுமல்ல உலகத்தில் வாழும் யாரும் புலிகளையும் தலைவரையும் அதன் கொள்கைகளையும் பேசலாம்.. அது ஒரு தத்துவம்.. தலைவர் தமிழ்தேசிய உலகிற்கு தந்துவிட்டு போனது.. மார்க்சியம் போல லெனினியம் போல் பெரியாரிசம் அம்பேத்கரிசம் போல் பிரபாகரனும் புலிகளும் அந்த சோரம்போகாத போராட்டம் மூலம் வாழ்ந்துகாட்டிவிட்டு போன தத்துவமும் இந்த உலகம் முழுதுக்குமானது.. நீங்கள் வெளிநாடுகளில் துரோகிப்பட்டம் கொடுக்கும் புலிகளை குத்தகைக்கு தாம் மட்டுமே எடுத்துவிட்டோம் என்பதுபோல் செயல்படும் புலிகளின் காசை ஆட்டையப்போட்டவர்கள் போல பேசுகிறீர்கள்.. அவர்களுக்கு பலம் சேர்ப்பதுபோல் இருக்கிறது புலிகளையும் அவர்கள் தத்துவத்தையும் யாரும் பேசக்கூடாது என்பது.. புலிகளையும் அவர்கள் கட்டமைத்து வாழ்ந்து காட்டிவிட்டுபோன அந்த தமிழ்தேசிய தத்துவமும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் நாம் இறந்த பின்னாலும் இன்னும் சில நூற்றாண்டுகளில் திராவிடம்போல் ஒரு பெரும் தத்துவமாக எழுச்சி பெறும்.. வரலாறு அதன் தடங்களில் காலம் சென்றாலும் உண்மைக்கும் அதன் வழி நின்று செய்யப்பட்ட தியாகங்களுக்கும் பெரும் பக்கங்களை அதன் வழிநெடுக ஒதுக்கி வைத்திருக்கிறது.. அவற்றை இன்றும் நாம் படித்து புளகாங்கிதம் அடைகிறோம்... அது போல் புலிகளின் போராட்டமும் தியாகமும் பேசப்படும்.. தமிழ் தேசியம் எழும்..
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
வாழ்த்துக்கள் நாம்தமிழர்.. என்னைப்போன்று உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ்த்தேசியவாதிகளிற்கு இது உற்சாகம் தருகிறது..
-
சாமி சிறீ பாஞ்
வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம் போர்களதான் மாறுமா…? சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் பீனிக்ஸ்போல எழுந்து வந்திருக்கும் பாஞ் அண்ணா என்றும் இதே வைத்தியர்கள் தந்த மறு ஆரோக்கியத்தை பேணி காக்கவேண்டும்.. நீடுழி நலமுடன் வாழ சந்தோசமாக வாழ்த்துகிறேன்.. யாழில் தொடர்ந்து இணைந்திருங்கள்..
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சம்பவம் செய்திருக்கிறியள் சடங்கு வீட்டில..😂
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
அதே… வாயள்ளி தின்றதும் தமிழே என் வாசலில் வந்ததும் தமிழே நோயள்ளும் போதிலும் தமிழே நான் நீறாகி எரிகின்ற போதிலும் தமிழே தமிழே தமிழே… இது என் மண்.. இதை யாருக்கும் எதற்காகவும் விட்டு போகமுடியாது… பிள்ளைகள் முடிவு அவர்களது.. ஆனால் எனது முடிவு தெளிவானது.. குழப்பமற்றது.. ஆழ சிந்தித்து எடுத்தது.. அது மாறாது..
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
மாற்றம் இல்லை கந்தப்பு.. அப்படியே இருக்கட்டும்..
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
ரெண்டுமே நியாயமான கருத்துக்கள்..
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
முகவரி ஒன்டும் தேவை இல்லை..ஆள் ரூட்டிங் பக்கமா பக்கத்தில்தான் இருக்கு.. சீலன் கடை இல்லா யாழ் கபேக்கு வரேக்க குடுக்கிறன் போத்தல் முழுவதையும் என்னிடம் தரவும்.. நேரில் வந்து வாங்குகிறேன் அப்புடியே டென்மார்க் கொலிடே வந்ததும் ஆகுது..
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) -2 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) -3 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)-2 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் - 1 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)- 2 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)- 2 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)-2 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)-1 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)-1 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)-2 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)-1 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )-3 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)-2 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)-2 15) தயாநிதிமாறன் திமுக)-1 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)-1 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)-3 18)ரி ஆர் பாலு ( திமுக)-1 19)எல் முருகன் (பிஜேபி)-4 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)-2 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்)-1 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)-1 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)-3 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? ஆம் 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒன்றும் இல்லை 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒன்று 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? தெரியாது 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? குறைந்தது மூன்று 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? ஒன்றும் இல்லை 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பத்து 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( 0 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 25 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 15 40) 9 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 3 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 0 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 0