Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வாழ்த்துக்கள் உக்ரேனுக்கு… மேற்கின் அரசியல் ஆதாயத்துக்கு தம்மை பலிக்கடா ஆக்காமல் ரஷ்யாவிற்கு எதிராக போராடி இருந்தால் ஒட்டுமொத்த உலகின் ஆதரவும் உக்ரேனுக்காக மட்டுமே இருந்திருக்கும்.. இப்பவும் ஒண்டும் லேட் இல்லை.. மேற்கு மட்டும் இல்லை உலகின் உதவிகளை பெற்றுக்கொண்டு ஆனால் மேற்கின் சூழ்ச்சிக்குள் விழுந்து தமது சுயத்தை இழந்துவிடாமல் தனித்து போராடி வெற்றிபெற வாழ்த்துக்கள்..
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஹஹஹா உண்மை..
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தலைவரே எந்த நேரமும் யாழில் எழிதிக்கொண்டிருக்க நான் பென்சன் எடுத்த பின்புதான் முடியும்.. ஏதோ நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் எழுதுகிறேன்.. எத்தனையோ திரிகளுக்கு வாசிக்கும்போதே கருத்தெழுத தோன்றும் ஆனால் வேறு வேலை எதிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பலநேரங்களில் முடிவதில்லை. அப்புறம் அது அப்படியே மறந்து போயிருக்கும்.:
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கந்தையாண்ணை சொல்வது சிறிலங்கன் ஆமியின் குரலாக என்காதுகளில் ஒலித்து தேன் வந்து பாயுது என் காதினிலே.. ”புலிப்பயங்கரவாதிகள் சிவிலியன்களுக்குள் மறைந்திருந்து தாக்குகின்றனர்.. அதனால் அவர்களை அளிக்க அவர்கள் மறைந்திருந்த பாடசாலையின் மீது குண்டு வீசப்பட்டது..” “புலிப்பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த சந்தையில் குண்டு வீசியதில் 80 புலிப்பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” “புலிப்பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின்மீது குண்டு வீசி தாக்கியதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் வெள்ளைப்பொஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக இப்பொழுது ஊடகங்களில் செய்தி வருகின்றது.. வெடிக்கும் இடத்தில் கடைசி சொட்டு ஒக்சிசனும் முடியும் வரை எரிந்து தீர்க்கும் மனித உடலில் பட்டால் அவ்விடத்தில் ரசாயன தாக்கம் புரிந்து பொஸ்போரிக் அமிலத்தை உருவாக்கி இறப்பவரின் கடைசி நிமிடம் வரை நரகவேதனையை கொடுக்கும் கொடிய விசக்குண்டு.. ஈழத்தமிழரால் இலகுவில் மறந்து போய்விட முடியாத பெயர் இது.. சிங்கள அரசுக்கும் இவர்கள்தான் இந்த குண்டுகளை வழங்கி வீசும்படி வழிகாட்டி இருப்பார்களோ என்று யோசிக்க தோன்றுகிறது.. எதனாலும் நியாயப்படுத்த முடியாத அரச பயங்கரவாதம் இது.. இந்த அரசபயங்கர வாதத்தினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு அப்பாவி பாலஸ்த்தீன குழந்தைகளும் மக்களும் இன அழிப்பு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் உறவுகளும் வேறல்ல..
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அது மட்டுமல்ல அவர்களில் பலர் இஸ்ரேல் அரசியலில் இருக்கிறார்கள்.. பாராளுமன்றில் இருக்கிறார்கள்.. நம்மவர் ஜரோப்பா அமெரிக்காவில் வாழ்வதுபோல் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.. ஆனால் ஆகக்குறைந்தது பாலஸ்த்தீனர்கள் தம்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காஸா மற்றும் வெஸ்ட் பாங்கிலாவது ஒரு அரசை அமைத்து இஸ்ரவேலை போல் அபிவிருத்தி அடைந்த நாடாக இத்தனை வருடங்களாக மாற்றி அமைக்க முடியவில்லை.. இஸ்ரேலை முற்றாக அழித்து பால்ஸ்தீனத்தை உருவாக்கினால்கூட அந்த நிலத்தில் இவர்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கப்போவதில்லை.. ஆப்கானிஸ்த்தான் ஈரான் ஈராக் போன்ற பெண்களைகூட படிக்க விடாத அடிமுட்டாள் மதவாதிகள் வாழும் முஸ்லீம் நாடுகளை பாருங்கள்.. ஒன்றுமே இல்லாமல் வந்து உழைப்பால் உருவாக்கி ஜனநாயகத்துடன் வாழும் இஸ்ரேலை பாருங்கள்.. மதவா திகள் மற்ற இனத்துக்கு மட்டுமல்ல சொந்த இனத்துக்கு கூட துரோகிகள்..
- A1E248ED-EFE9-469B-9AD3-3B44155161F7.jpeg
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
15C02877-E150-4FAC-AEC1-7BCFA3633BEA.jpeg
From the album: ஓணாண்டி
-
18B14DBF-0792-45D7-BA6B-D787BF7D263B.jpeg
From the album: ஓணாண்டி
-
0845035C-BE55-4E12-826A-6B7407ECB85C.jpeg
From the album: ஓணாண்டி
-
3FA9708B-B8C1-462A-B50F-760AF0277023.jpeg
From the album: ஓணாண்டி
-
35BEA18A-81DB-4899-8C33-72D254F9091A.jpeg
From the album: ஓணாண்டி
-
7CE53A02-2625-48C1-AC49-DF972702FE61.jpeg
From the album: ஓணாண்டி
-
970E02C1-D81E-408D-9AD1-96BEC22D25E2.jpeg
From the album: ஓணாண்டி
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அட கெதியெண்டு எழுதப்பா மிச்சத்தை.. அடுத்த வீட்டு புதினம் கதைக்கிறதெண்டாலே அன்னம் தண்ணி இல்லாமல் திண்ணையில இருக்கிற ஆக்கள் நாங்கள்..
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சுமோ தொடர்ந்து எழுதுங்கள்.. யாழில் நீண்டகால்ங்களுக்கு பிறகு ஒரே மூச்சிலும் அடுத்த பாகங்களுக்கு காத்திருந்து படிக்கும் பகுதி ஆகிவிட்டது உங்கள் தொடர்.. வெளிநாட்டுக்காரர் விலாசாம் காட்டும் இடங்களாகவும் பூசாரிகள் வயிறு வளர்க்கும் மற்றும் காசு பார்க்கும் இடமாக கோவில்கள் மாறி இருப்பதாலும் கோயிலில் சாதி குறைந்தவர்களை வேலை செய்யவோ கோயிலில் முக்கியமான இடங்களில் எதையாவது தொடவோ அனுமதிப்பது இல்லை என்பதாலும் பிற்போக்குதனங்களையும் தன் சக மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகளையும் கற்பிக்கும் இப்படியான பெரிய கோவில்களுக்கு நான் என் குழந்தைகளை கூட்டிப்போவதில்லை நானும் போவதில்லை.. என் பிள்ளைகளும் இப்படியான பழக்கங்களை பழகக்குடாது என்பதில் கவனமாக உள்ளேன்.. ஊரில் ஒதுக்குப்புரமாக உள்ள இந்த பிராமண பூசாரிகளின் கால்தடம்படாத அண்ணமார் வைரவர் போன்ற கோவில்களுக்கு கூட்டி சென்று இவைதான் தமிழர்களின் சாமிகள் இதுதான் உண்மையான பழந்தமிழர்களின் வழிபாட்டு முறை ஆகமப்பூசைகள் சமஸ்கிருதத்தில் சொல்லி ஊரை ஏமாற்றி காசு புடுங்கும் கோவில் வழிபாட்டு முறை வேற்று மதத்தவர்களினது என்று சொல்லி வைத்திருக்கிறேன்...
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சுப்பிரமணியம் பிரபா சுமந்திரன் வலது கை எல்லோ.. கலியாண வீடெல்லாம் முன்னிண்டு நடத்தினவர் சும்ச்ந்திரன்.. பேஸ்புக்கில் மகா உத்தமன் வேடம்போடுவான் எல்லாரையும் குற்றம் சாட்டுவான்.. அவனை எல்லாம் நம்பி காசு அனுப்பின சுமேக்கு காலுக்கு கீழ அலம்பல் சுள்ளியால மனுசன்காரனும் மகளும் சுபிரமணி வீட்டுல வச்சு குடுத்திருக்கோணும்..
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சரி கொஞ்ச நாளைக்கு சண்டை அடிபிடி எண்டு யாழ்களை கட்டப்போகுது.. இனி நானும் அடிக்கடிவரோனும் சண்டை பாக்க.. தொடருங்கள்.. ஆவலுடன்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது..
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.. ஆடத்தெரியாதவன் மேடை சரி இல்லை எண்டமாதிரிதான் போகவிருப்பமில்லாதவன் கூறும் ஒவ்வொரு சாட்டும்.. ஏதோ அமெரிக்கா ஜரோப்பாவில் வாழுறவன் மட்டும் நூறு இரு நூறு வயசு வரையும் வாழுறாங்கள் சிறிலாங்காவில் இருப்பவன் அஞ்சு வயதில் மருந்து இல்லாமல் சாகிறான்.. இஞ்ச யாழ்ப்பாணத்தில சகல மருந்தும் இருக்கு.. காசிருந்தா சரி.. ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கோ எனக்கு பொருளாதாரம் போதுமானதா இல்லை அதால சிறீலங்கா வந்து செற்றிலாக விருப்பமில்லை எண்ட உண்மைக்காரணத்தை.. மற்றதெல்லாம் சும்மா சப்பை கட்டு.. காசு இருந்தா ராஜவாழ்க்கை சிறீலங்காவில.. காசில்லாட்டி பிச்சைக்கார வாழ்க்கை பிரித்தானியா கனடாவிலையும்.. தற்ஸ் ஆல் யுவரானர்.. உதாரணத்துக்கு எவ்வளா காசிருந்தாலும் வெளிநாட்டில் டிறைவர் வீட்டு வேலை சமையலுக்கு ஆள் வைக்கேலா.. தன் வேலைய தான் தான் செய்யோணும்.. சம்பளம் குடுத்து கட்டாது.. ஆனால் இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ ஒரு வைத்தியர் அல்லது பொலிஸ் அதிகாரி அல்லது பிஸினஸ்மான் வீட்டில் இதுக்கு எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்.. அதுக்குத்தான் சொன்னன் காசுஇருந்தா இங்கைதான் சொர்க்கம் வெளிநாட்டில் அல்ல.. அங்கு பிச்சைக்கார வாழ்க்கை.. அவசர சிகிச்சைக்கு அப்பலோவுக்கு கூட போகலாம்.. அதால ஊருக்கு போய் இருக்க என்னட்ட காசில்லை எண்டு நேர்மையா சொல்லுங்கோ.. அதவிட்டிட்டு மற்றதெல்லாம் உங்களை நீங்களே ஆறுதல்படுத்த சொல்லிக்கொளவது..- திரும்பும் வரலாறு!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நன்றி தலைவரே இந்த கண்கொள்ளா காணொளிக்கு… ஞான் முக்தி அடைஞ்சு..😂- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி வசி.. அருமையான எளிமையான விளக்கம்கள்.. - ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
Important Information
By using this site, you agree to our Terms of Use.